Search This Blog
21.8.09
"சித்தி" விநாயகராவது ? "சித்தப்பா" விநாயகராவது ?
கடவுள் இல்லை
மும்பையிலிருந்து ஒரு செய்தி. அங்குள்ள சித்தி விநாயகர் கோயில் நிருவாகிகள் எடுத்துள்ள முடிவு_ சித்தி விநாயகராவது சித்தப்பா விநாயகராவது என்று நினைக்கத் தோன்றுகிறது.
பன்றிக் காய்ச்சல் வைரஸ்கள் காற்று மூலம் பரவி வருகிறதாம். அதனை எப்படி தடுக்க முடியும்?
சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிசேகம் செய்யலாம் என்றோ, ஆயிரம் கொழுக்கட்டை; வைத்துப் படையல் போட்டால் சரியாகிவிடும் என்றோ, இலட்சார்ச்சனை செய்ய வேண்டும் என்றோ அவர்கள் சொல்லவில்லை; தீர்மானிக்கவில்லை.
சரி, என்னதான் தீர்மானித்தார்களாம்?
காற்றில் உள்ள வைரஸ்களை ஒழிக்கும் ஓசோன் இயந்திரங்களைப் பொருத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.
வடபழனியில் உள்ள பிரசித்தி பெற்ற (?) முருகன் கோயில் அர்ச்சகர் பார்ப்பான் முகமூடி (மாஸ்க்) அணிந்து தீராத வினை தீர்க்கும் பகவானுக்கு தீபார்த்தனை காட்டும் படத்தை தினமலர் (15.8.2009) ஏடே வெளியிட்டுள்ளது.
இதைவிட கடவுளை எப்படித்தான் அசிங்கப்படுத்த முடியும்? கடவுள்கூடயிருந்தே குழி பறிக்கிறார்களே!
கடவுளை மற- மனிதனை நினை என்றார் தந்தை பெரியார். அது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை பார்ப்பனர்களே - அர்ச்சகர்களே ஒப்புக் கொண்டு விட்டனர் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரமும் தேவைப்படாது.
அவனன்றி ஓரணுவும் அசையாது. பிண்டம் பிடிப்பதும், படைப்பதும் பகவான் என்கின்றனர். அது சரி, வைரஸ் கிருமி எப்படி உண்டானது? அதனைப் பிடித்தவன் படைத்தவன் பகவான் இல்லையோ!
கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்கிற விஷயம் பகுத்தறிவு வாதிக்குத் துல்லியமாகத் தெரிவதை விட, அர்ச்சகர்ப் பார்ப்பனர்களுக்குத் தான் அதிகம் தெரியும். காரணம் அர்ச்சகன்தானே சாமியை (பெண் சாமி உள்பட) குளிப்பாட்டுவதில் இருந்து, படையல் போடுவதிலிருந்து, அத்தனையையும் செய்யக்கூடிய ஆசாமி.
பகவானுக்கு என்ன பலம் என்பது பக்கத்தில் இருப்பவர்களை விட வெளியில் இருக்கும் பாமரர்களுக்கா தெரியப் போகிறது?
பகவானையும் சாமி என்றும், பார்ப்பன அர்ச்சகனையும் சாமி என்றும் பக்தர்கள் கூப்பிடுவதன் தாத்பரியம் இதுதான்.
ஒரு உண்மை இப்-பொழுது பட்டவர்த்தனமாகத் தெரிந்து விட்டது.அதை மறைத்து இனி பயன் இல்லை
கடவுள் இல்லை, இல்லவே இல்லை
என்பதை கறாராகக் கோயில் தர்ம கர்த்தாக்களாலும், அர்ச்சகர்களாலும் இதனைவிட வேறு எப்படித்தான் சிறப்பாகக் கூறமுடியும்?
----------- மயிலாடன் அவர்கள் 21-8-2009 "விடுதலை"யில் எழுதியுள்ள கட்டுரை
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
கலைஞர் டிவியில் ஞாயிறு சிறப்பு விடுமுறையாமே? எதுக்குன்னு தெரியுமா?
பிள்ளையார் (யானை) பிடிக்கப் போய் குரங்காக மாறிவிட்டதாம். அதான் விடுமுறை.
காரணம் போதுமா சுதாகர்
\\இதைவிட கடவுளை எப்படித்தான் அசிங்கப்படுத்த முடியும்? கடவுள்கூடயிருந்தே குழி பறிக்கிறார்களே!//
வயிறு வலிக்க சிரித்து விட்டேன் போதும் உங்கள் நையாண்டி
சுதாகர் said...
கலைஞர் டிவியில் ஞாயிறு சிறப்பு விடுமுறையாமே? எதுக்குன்னு தெரியுமா?//
மின்வெட்டு வேறு மின் தடை வேறு என்று அமைச்சர் ஆற்காடு நா.வீராஸ்வாமி சொன்னது போல், கொள்கை வேறு தொழில் வேறு என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
Post a Comment