Search This Blog

Showing posts with label அண்ணா. Show all posts
Showing posts with label அண்ணா. Show all posts

7.4.15

தாலி கட்டுவது தேவையற்ற சடங்கு-அறிஞர் அண்ணா

தாலி கட்டுவது தேவையற்ற சடங்கு

- அறிஞர் அண்ணாவின் தெளிவுரை -

மக்கள் சடங்குகளைத் தள்ளி விடுவதைக் கண்டு சந்தேகப்படுவதும், பழைய பழக்கவழக்கங்களை விட்டு விட்டோமே என்பதற்காக பதைபதைப்பதும் அர்த்தமற்ற தாகும்!

திருமணத்தின்போது தாலிகட் டும் பழக்கம் மக்களிடையே இருந்துவருகிறது. தாலிக் கயிற்றில் புலியின் நகத்தைப் போலும் பல்லினைப் போலும் பொன்னால் சேர்த்துக் கட்டுகிறார்கள். இதற்கு என்ன அர்த்தம்?

நம்முடைய பெரியவர்களும் இதற்கு ஒருவிதமான விளக்கம் கூறு கிறார்கள்.

 அதாவது பழங்காலத்திலே காடுகள் அதிகம், நாடுகள் குறைவு. காட்டிலே புலிகளும் அதிகம். ஆதலால் ஒரு மங்கையை மணக்க விரும்பிடும் வாலிபன், காட்டிற்குச் சென்று புலியை வேட்டையாடிக் கொன்று அதனுடைய பல்லையும், நகத்தையும் கொண்டுவந்து, தான் காதலிக்கும் பெண்ணிடம் காட்டுவானாம்! இதோ பார்! நான் வேட்டையாடிக் கொன்ற புலியின் நகம். இதுதான் அதனுடைய பல் என்று அந்த மங்கை நல்லாளிடம் தன் வீரத்தை அறிவிப்பான். இதைக் கண்ட மங்கையும் இப்படிப்பட்ட வீரனைத்தான் நான் மணப்பேன் என்று கூறி அந்த வீரனையே மணந்து கொள்வாள். தனது காதலனின் வீரத்தின் சின்னமாக அந்த புலி நகத்தையும், பல்லையும் தன் கழுத்தில் அணிந்து கொள்வாள். இதுதான் தாலிகட்டுவதன் பொருள் என்று கூறுகின்றனர். அன்று காடுகள் அதிகம், நாடுகள் குறைவு. எனவே காட்டிலிருந்து நாட்டுக்குள் புகுந்து மனிதனை தாக்கிடும். புலியையும் எதிர்க்கும் உடல் வலிமையும் உள்ள உரமும் படைத்தவனைத்தான் பெண்கள் மணக்க வேண்டும் என்ற ஏற்பாடு - தீர்மானம் இருந்தது பொருத்தமாக இருந்திருக்கலாம்.


இதே ஏற்பாடு இன்றைக்கும் இருக்க வேண்டுமா? உண்மையில் எத்தனையோ பேர் திருமணம் செய்து கொள்வதற்காக, இத்தகைய புலிவேட்டைக்குப் போய்வரத் தயாராக இருப்பர், இந்த நாளில் ஒருவரும் இருக்க மாட்டார்கள்!


இன்று அத்தகைய ஏற்பாடும் பழக்கமும் ஒரு சிறிதும் இல்லையென்றாலும், தாலிக் கயிற்றில் மட்டும் பொன்னால் புலிநகமும் பல்லும் செய்து கோர்த்திட நாம் தவறுவதில்லை, இது தேவைதானா?


இன்றைக்கு நாடுகள் அதிகமாகவும் காடுகள் குறைவாகவும் இருக்கின்றன. இருக்கின்ற காடுகளிலும் புலிகள் காணப்படுவது குறைவு. அந்த நாட்களைப்போல இன்றும் நான் போய் காட்டில் புலி வேட்டையாடி, புலியைக் கொன்று அதன் பல்லையும், நகத்தையும் எடுத்துச் சென்று என் காதலியிடம் என் வீரத்தைக் காட்டி அவள் கழுத்தில் இவைகளைத் தாலியாகக் கட்டுவேன் என்று எந்த இளைஞனாவது இன்றைக்குக் கிளம்ப முடியுமா? அப்படிக் கிளம்பினால் காடுகள் அனைத்தும் சர்க்காரின் காட்டு ரிசர்வ் இலாகாவைச் சேர்ந்திருப்பதால் புலிவேட்டையாட விடமாட்டார்கள்!


பழைய காலத்தைப்போலவே இன்றும் புலி வேட்டையாடி காதலிக்குத் தன் னுடைய வீரத்தை வெளிப்படுத்திய பிறகே மணமுடிப்பேன் என்று எவனாவது ஒரு வாலிப வீரன், எப்படியோ ஒரு புலியைக் கண்டுபிடித்து அதனைக் கொன்று விடுகிறான் என்றே வைத்துக் கொள்ளுங்கள்.


தான் வேட்டையாடிக் கொன்ற புலியின் நகத்தையும் பல்லையும் காதலி யிடம் காட்டி, பெண்ணே இதோ பார்! நானே வேட்டையாடிய புலியின் நகம்! இதுதான் அதனுடைய பல்! என் வீரத்தைக் கண்டாயா! இவைகளை என் வெற்றிச் சின்னமாக உனக்குத் தருகிறேன். இவைகளைக் கயிற்றில் கோர்த்துக் கழுத்தில் தாலியாக கட்டுகிறேன் என்று கூறுவதனால் எத்தனை பெண்கள் சரி என்று ஏற்பர்! ஏற்கும் சூழ்நிலை இன்று இருக்கிறதா? இல்லையே!


புலியைக் கொன்றேன். இதோ அதன் பல்! அதன் அளவைப்பார்! நகத்தின் கூர்மையைக் கண்டாயா! என்று கேட்கும் காதலனின் வீரத்தையா இந்தக் காலத்துப் பெண் எண்ணிப் பெருமைப்பட முடியும்?


காதலனிடம் சிக்கிய காட்டுப்புலிக்கே இந்தக் கதி ஏற்பட்டுவிட்டதே! இப்படிப் பட்டவனிடம் நாம் சிக்கிவிட்டால் என்ன பாடுபட வேண்டியிருக்குமோ என்று தானே அஞ்சி நடுநடுங்குவாள்.


இந்தக் காலத்துப் பெண்கள் தங்கள் கணவன்மாரிடம் புலிவேட்டையாடும் அளவுக்கு வீரத்தை எதிர்பார்க்கவில்லை. எந்தக் கணவனும் புலி என்றவுடன் கிலி கொண்டிடும் நிலையில்தானே இருக் கிறார்கள். பெண்கள் இன்று தங்கள் கணவன்மார்களின் கட்டற்ற வீரத்தை மட்டுமே பெரியதாகக் கருதவில்லை.


அவர்கள் தங்களுக்கு வரப்போகும் கணவன் அழகாக இருக்க வேண்டும். அதோடு அன்புடையவனாக நடந்து கொள்ள வேண்டும. நல்ல குணவானாக பண்புள்ளம் படைத்தவனாக இருக்க வேண்டும். வெளியில் செல்லும்போது தங்களையும் அழைத்துச் செல்ல வேண்டும். நல்ல நாகரிகமுடையவனாக விளங்க வேண்டும். குடும்பத்தில் அக் கறையுடையவனாகத் திகழ வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.


எதிர்ப்பவர்களைத் தாக்கித் தகர்த் திடும் கட்டான உடலும், உள்ள உரமும், உருட்டு விழியும் உள்ளவனாக ஊரார் கண்டு நடுங்கிடும் மனிதனாகத் தங்கள்  கணவன்மார் இருக்க வேண்டும் என்பதைப் பெண்கள் விரும்பிய காலம் போய்விட்டது.


எனவே தாலி கட்டுவதிலும் நாம் செய்யும் அர்த்தமுள்ளதா? அறிவுக்குப் பொருத்தமானதுதானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.
அய்யரை அழைத்து மந்திரம் ஓதாமல், அம்மி மிதித்து அருந்ததி காட்டுவது போன்ற சடங்குகளைச் செய்யாமல் நடைபெற்று வரும் திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்று மக்களிடையே ஒரு பயம் முன்பெல்லாம் நிலவி வந்தது. சந்தேகம் உதித்து வந்தது.


நான் கேட்கிறேன், யாருக்கு சட்டத்தின் பாதுகாப்பு தேவையென்று? நாமெல்லாம் பெரும்பாலும் ஏழைகள் தானே! நமக்குப் பிறக்கும் பிள்ளை களுக்கு நமது சொத்து பற்றிய உரிமை ஏற்பட வேண்டும் என்பதற்குத்தானே சட்டம் தேவைப்படுகிறது.

---------------------------------------------ஆதாரம்: சுயமரியாதைத் திருமணம் - ஏன்?
- அண்ணா பேரவை வெளியீடு

22.1.15

அண்ணாவின் கடவுள் கொள்கை என்ன?

அண்ணாவின் கடவுள் கொள்கை என்ன?



இவ்வினாவை விடுத்திருக்கம் நண்பர் வேல்சாமி ஆடுதுறையைச் (தஞ்சை மாவட்டம்) சார்ந்தவர். கடவுள் பிரச்சினையில் அண்ணாவின் கொள்கை எப்படி இருந்தது என்று வீணாக நாம் ஆராயத் தேவை இல்லை. 2.1.1949 திராவிட நாடு இதழில் அண்ணா அவர்கள் எழுதிய கட்டுரை அப்படியே தந்து விட்டால் விவரம் புரிந்து விடும் என்று கருதி அக்கட்டுரையை இதோ தருகிறோம். - ஆ.ர்)

மக்களின் அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு பொருள் கடவுள் என்ற பெயரோடு நின்று இவ்வுலகத்தை இயக்குகின்றதென்பது மத நூலார் கொள்கை.
மத நூலார் இலக்கணப்படி கடவுள் உண்டு என்று கூறுவதே அவர்கள் கொள்கைக்குத் தவறு உண்டாக்கு வதாகும். அப்படியென்றால், ஓசை ஓலி எல்லாம் ஆனாய் நீ என்ற பின்னர் பேச இரண்டுண்டோ? என்பது மத நூற்றுணிவாகும்.

எனவே, உயிர்கள் அனைத்திற்கும் பொதுவாயும், தந்தையாயும், எல்லாமாயும், எங்குமாயும் உள்ள ஒரு பொருளை உண்டென்று கூறுவது போன்ற அறியா மையும் அதன் கவுரவத்தைக் காப்பாற்ற வேண்டும்; அதற்குச் சட்டமியற்ற வேண்டுமென்ற நெட்டுயிர்ப்பும் வேடிக்கையாகவே இருக்கிறது.
கடற்சிப்பியில் முத்து இருக்கிறது என்று ஒருவன் கூறுவது வியத்தற்குரியதும் இயற்கைக்கு மாறு படாததுமாகும்.

கடவுள் மறைந்து இருப்பவர் அல்ல

ஆனால், நமது கடவுள் அப்படிப்பட்டவரன்று; கடற் சிப்பி முத்துபோல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மறைந்து இருப்ப வருமன்று. ஒரு இடத்தில் இருப்பதும், மற்றைய இடங்களில் இல்லாததுமான ஒன்றைத்தான் அது இன்ன இடத்தில், இன்ன தன்மையோடு இருக்கிறதென்று அறியுந் தன்மையில் ஒருவன் அதனை அறியாதார்க்கு அறிவிக்க வேண்டும்.

அங்ஙனமின்றி, எல்லாமாய், எங்குமாய் அணுவுக் கணுவாய், அகண்டமாய், எதிலும் பிரிவற நிற்பதாகச் சொல்லப்படும் ஒன்றை ஒருவன் உண்டென்று கூறும் அறியாமையை அளப்பதற்குக் கருவியே இல்லை. ஒருவனால் உண்டென்று கூறப்படும் ஒரு பொருள், யாதொரு கருவியாலோ, அறிவாலோ அளந்தறிந்து உணரக் கூடியதாயும் இருத்தல் வேண்டும்.

ஆனால், கடவுள் அளப்பரும் இயல்பினதாய் - மறைமுதல் சொல் ஈறாக உள்ள எந்தக் குறைவிலா அறிவினாலும் அளந்தறிய முடியாதென்று முழங்கிய பின், ஒருவன் அதனைக் கண்டறிந்து அளந்தவனா வானா? அதன் கவுரவத்தைக் காப்பாற்றத்தான் முயல்வானா? முடியுமா?

கண்டதையே உண்டு எனக் கூறல் வேண்டும்

அன்றி, அப்பொருள் ஒருவனால் அளந்தறியப் படுவதற்கு அது எங்காவது ஒரு இடத்தில் தனித்திருந் தாலன்றி முடியுமா?
ஒருவன் ஒரு பொருளை உண்டென்று கூறுவானாயின், அவன் அப்பொருளைக் கண்டிருத்தல் வேண்டு மன்றோ!

எனவே, ஒருவனால் காணப்பட்டு, மற்றவர்களால் காணப்படாத ஒன்றைக் கடவுள் என்பது மத நூலார் கொள்கைக்கே மாறுபட்டதாகும். எப்படியென்றால், காண முடியாதது எதுவோ அதுவே கடவுள் மதநூலார் கொள்கை. எனவே, காணமுடியாதது எது என்று ஆராயுமிடத்து, எது இல்லாததோ அதுவே காண முடியாததுமாகும் என்ற உண்மை பெறப்படுகின்றது. அன்றியும், மக்களால் எளிதில் அறிந்து கொள்ள முடியாத கடற்சிப்பி முத்து போல கடவுளும், எங்காவது ஒரு மறைவிடத்தில் தனியாக இருப்பதாகக் கொள்ளவும் மத நூல்கள் இடந்தருவதில்லையே!

கடவுள் இல்லாத இடமே இல்லை என்பதுதான் அந்த நூல்களின் முடிந்த முடிவாகும்.

எனவே, கடவுளை அறிந்ததாகக் கூறுபவனும், கடவுளைக் காப்பாற்றாவிட்டால் அதன் கவுரவம் குறைந்துவிடுமென்றும் கருதும் நிறைமதியாளனும் மணற்சோற்றில் கல் ஆராய்பவனும் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்களேயாவார்கள்.


முன்னுக்குப்பின் முரண்

இனி, மத நூல்கள் சிலவற்றில் கூறியுள்ளபடி, தேடினால் கிடைப்பர்! என்ற முன்னுக்குப் பின் முரணான கொள்கைகளை நம்பி, அவ்வழிச் சென்றோர் எல்லாம் அத்துறையைக் காணாது சலிப்படைந்து, தங்கள் ஏமாந்த இயல்பினை இனிதியம்பி யுள்ளனர்.

பட்டினத்தார், நாவுக்கரசர், புத்தர் முதலானோர் அவ்வழிப்போய் மீண்ட பலருள் சிலராவர்.

ஈனா வாழை மரத்தின் மட்டைகளை ஒவ்வொன்றாக உரித்துப் பார்த்தால், உரிக்கப்பட்ட அம்மட்டைகளை தவிர, அதனுள்ளே வேறொன்றும் இல்லாமை புலப்படுவது போல், மத நூல்கள் கூறிய வழிகளிலே சென்றவர்கள் தாங்கள் கருதிப் போன கடவுள் காணப்படாமையைக் கருத்தோடு திருத்தமாகக் கூறியுள்ளார்கள்.

எனவே, இல்லாத ஒன்றை உண்டென்னும் கொள்கை என்றைக்குத் தோன்றியதோ அன்றிருந்தே அக்கூற்று மறுக்கப்பட்டும் வந்திருக்கிறது - வருகிறது.

உண்மையை அறிய மதம் தடை

ஆனால், உண்மைக்கும் உலகுக்கும் உள்ள தொடர்பு மதக் கொள்கைகளால் பிரித்துப் பிளவுபட்டிருப்பதால் பொய்யைப் பொய்யெனக் கொள்ளும் பேதமையே பெருமை பெற்று வருகிறது. இதனால், உண்மைகளை உருவாக்கு வதற்குப் பெரு முயற்சியும், பேருழைப்பும், பெருந்துணிவும், இடுக்கண் வந்தால் ஏற்கும் இயல்பும் இன்றியமையாது வேண்டப்படு கின்றது.

இஞ்ஞான்றை உலகம் ஓரளவு வெற்றி பெற்றுவருவது கண் கூடு. காரணம், மக்களிடையே மங்கிக் கிடந்த பகுத்தறிவு வென்னும் பகலவன் தன் ஒளி அலைகளால், விரிந்த உலகின் சரிந்த கொள்கைகளை வீழ்த்தும் ஆராய்ச்சித் துறையின் அணிகலனாக விளங்குவதால் என்க.

        -------------------  திராவிட நாடு 2.1.1949

Read more: http://viduthalai.in/page-7/93127.html#ixzz3MM170W7m

15.9.14

ஆரியம் - மதம் - கடவுளுக்கு எதிராக அண்ணா எழுப்பிய கேள்விகள்


 

திராவிட நாடு இதழில் (16.1.1944)  மூடநம்பிக்கை, கடவுள், மதம், ஆரியத் திற்கு எதிராக அண்ணா எழுப்பிய கேள்விகள் வருமாறு:

1) நமது நாட்டில் சைவ சமயத்திற்கு முன்னால் ஏதாவது சமயம் இருந்ததா?
2) அது எது?
3) சைவ சமயம் என்பது எப்போது உண்டாயிற்று?
4) அதற்கு முதல் கர்த்தா அல்லது சமயாச்சாரி என்பவர் யாவர்?
5) சைவ சமயத்திற்கு மற்ற சமயத்தில் இல்லாத தனிக் கொள் கைகள் என்ன?
6) அதற்கு ஆதாரம் யாது?
7) சைவம் என்பது சிவன் என்னும் ஒரு உருவமுள்ள கடவுளை, வழிபடு கடவுளாகக் கொண்டதா?
8) அல்லது தனித் தெய்வமில் லாமல் ஏதாவது கொள்கைகளை மாத்திரமோ, அல்லது குணத்தை மாத்திரமோ அடிப்படையாகக் கொண்டதா?
9) சிவன் என்பது ஒரு கடவுள் பெயரா?
10) ஒரு தன்மையா?
11) ஒரு குணமா?
12) சிவனுக்கு உருவம் சொல்லப்படுகிறதே- அது ஏன்?
13)    அதற்குப் பெண்டு பிள்ளைகளும் இருப்பதாக காணப்படுகிறதே, ஏன்?
14) சைவ சமயம் சம்பந்தமான பல கடவுள்களுக்கு உள்ள ஆயிரக்கணக்கான பெயர்கள் வட மொழியில் இருப்பானேன்?
15) ஆயிரக்கணக்கான கடவுள்களுக்கும் அவர் களது பெண்டு பிள்ளைகளுக்கும் வேறு வேறு  பெயர்கள் ஏன்?
16) சைவத்திற்கும், சமணக் கொள்கைகளுக்கும், பவுத்த கொள்கைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
17)  ஆரிய வேதத்தையும், ஜீவபலி வேள்வியையும் சைவம் ஒப்புக் கொள்ளுகின்றதா? மறுக்கின்றதா?
18) சைவ சமயாச்சாரியர்கள் என்பவர்கள் ஆரிய வேதத்தையும், அதில் காணும் வேள்வி களையும் ஒப்புக் கொள்கின்றனரா? மறுக் கின்றனரா?
19)    சமணர்கள் வேத வேள்வியை நிந்தனை செய் தார்கள் என்றால் அது எந்த வேதத்தையும், வேள்வியையும்?
20) சைவ சமயத்திற்குள்ள சித்தாந்தமும், ஆகமமும் வடமொழியா? தென் மொழியா?
21)  சைவ சமயத்தையே சேர்ந்த சைவக் கடவுள்கள் இருக்கும் தனித்தனி ஊர்களுக்கு தனித்தனி பெருமை ஏன்?
22)    சமயாச்சாரிகள் என்போர்களால் பாடப்பட்ட ஊர்களுக்கும், பாடப்பட்ட கடவுள்களுக்கும் மாத்திரம் அதிக மதிப்பு ஏன்?
23)    சைவ சமயாச்சாரியார்களும், சைவ சமய பக்தர்களும், பவுத்தர்களையும், சமணர் களையும் துன்புறுத்தியதேன்?
24) துன்புறுத்தவில்லையானால் தேவாரம் முதலியவைகளில் அவர்களை கண்டபடி இழித்துக் கூறி வைத்திருப்பதேன்?
25)    வடமொழிக் கதைகளையும் வடமொழி புராணங்களையும் தள்ளி விட்டால் சைவர் களுக்கு ஏதாவது கடவுள் உண்டா?
26)    சைவத்திற்கு ஏகக் கடவுள் வணக்கமா? பல கடவுள் வணக்கமா?
27) எத்தனைக் கடவுள்கள் இது வரை கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன?
28) இதோடு தீர்ந்ததா? இனியும் உண்டாகுமா?
29) சைவ சமயத்திற்கு கோயில் கொள்கை உண்டா?
30) விக்ரக ஆராதனை உண்டா?
31) வேறு ஒருவன் அர்ச்சகனாக இருந்துதான் கடவுளை வணங்க வேண்டுமா?
32) ஆகிய இவைகளுக்கு ஆதாரம் ஏது?
33) சைவர்களில் ஒவ்வொருவரும் அவரவர் வணங்க வேண்டிய கடவுளை நேரில் பூசனை புரிய அவரவருக்கு உரிமையுண்டா?
34) சைவத்தில் ஜாதி வித்தியாசம் உண்டா?
35) சைவக் கோயில்களில் இப்போது ஜாதி வித்தியாசம் பாராட்டப்படுகின்றதா?
36)    அது சைவத்திற்கு முரணானது அல்லவா?
37)    முரணானால் அம்முரணுக்கு இதுவரை சைவர்கள் ஏதாவது பரிகாரம் செய்தார்களா?
38) கடவுளை வணங்க கற்பூரம் கொளுத்தி வைத்து வணங்க வேண்டும் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? எந்த ஆகமத்தில் சொல்லுகிறது?
39)    ஏதாவது ஓர் ஆகமத்தில் சொல்லப்பட்டால் அது  ஆரியர்களின் ஆகமமா? தமிழர்கள் ஆகமமா?
40) கற்பூரம் கொளுத்தும் வழக்கம் எது முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது?
41)    பிள்ளையார் என்ற ஒரு கடவுளுக்குச் சைவத்தில் இடம் இருக்கின்றதா?
42) கந்தபுராணத்தைச் சைவர்கள் ஒப்புக் கொள் ளுகின்றனரா?
43) ஒப்புக் கொள்ளுவதானால் அது சைவத்தில் பொருந்தியதுதானா?
44) சைவர்கள் சிவரகசியத்தையும் சிவ மகா புராணத்தையும், சிவபராக்கிர மத்தையும் ஒப்புக் கொள்ளுகின்றார் களா?
45)    நால்வர்கள் பிரம்மாவையும், விஷ்ணுவையும் ஒப்புக் கொள்ளுகின் றார்களா?
46)    அவை தனித்தனி கடவுள்களா?
47)    நால்வர்கள் விஷ்ணுவைத் தாழ்த்திப் பாடி இருந்தால் அது மதத் துவேஷம், அல்லவா?
48)    மனு ஸ்மிருதியையும், பராசர ஸ்மிருதியையும் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
49) சமணர்கள் கழுவேற்றப்பட்டதைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா? கோயில்களில் இன்னமும் திருவிளையாடல் புராண கதை உற்சவங்கள் நடக்கின்றதை மறுக்கின்றார்களா?
50) திருநீறு எதற்காகப் பூசுவது?
51)    இலிங்கத்திற்கும், ஆவுடையாருக்கும் சொல் லும் கதையை ஒப்புக் கொள்ளுகின்றார்களா, இல்லையா?
52) ஒப்புக் கொள்ளாவிட்டால் அந்தப் பழக்கம் உள்ள வடமொழி ஆதா ரத்திற்கு என்ன பதில் சொல்லக் கூடும்?
53)    இலிங்கம் எனும் வார்த்தை என்ன பாஷை? அதற்கு என்ன அர்த்தம்? எந்த ஆதாரப்படி?
54) கைலயங்கிரி எது? சுப்பிரமணியன் எது? கந்தன் எது? குமரன் எது?
55)    மலையரசன் மகனென்றால் என்ன?
56)    இப்பொழுது இதுவரை நடந்து வந்த கோயில் முறை, பூசை முறை, உற்சவ முறை முதலியவை களால் ஏற்பட்ட நன்மைகள் என்ன?
57) இவை இப்படியே நடக்க வேண்டியது தானா?
58)    இவைகளின் பேரால் பல லட்சம் ரூபாய்கள் செலவாகின்றதே நியாயம் தானா?
59)    அதை நிறுத்தி அச்செலவையும், காலத்தையும் வேறு வழியில் திருப்பலாமா? அல்லது இப் படியே இருக்க வேண்டுமா?
60)    சைவர்கள் மேல்லோகத்தை ஒப்புக் கொண் டார்களா?
61)    மறுபிறப்பை ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
62)    திதிகளை ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
63)    பிராமணர்களை ஒப்புக்கொள்ளுகின்றார்களா?
64)    சமயாச்சாரிகளின் அற்புதங்களை எல்லாம் அப்படியே நடந்ததாகவே ஒப்புக் கொள்ளு கின்றார்களா?
65) மற்றும் சைவப் புராணங்களில் உள்ள எல்லா அற்புதங்களையும் நடந்ததாகவே ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
66) ஒவ்வொரு கோயிலுக்கும், ஒவ்வொரு சாமிக்கும் ஏற்பட்ட ஸ்தல மூர்த்தி, தீர்த்த புராணங்களை உண்மை என்பதற்காக ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
67) சைவர்களுக்குச் சரியான முறை எது?
68)    சைவர்களுக்கு அல்லது சைவ சாமிகளுக்குத் தேவதாசி முறைகள் உண்டா?
69)    வருணாசிரமம் உண்டா?
70)    உண்டென்றால் ஆதாரம் எது?
71)    இல்லை என்றால் ஆதாரம் எது?
72) இப்பொழுது அமலில் இருப்பதற்குக் காரணம் என்ன?
73)    சைவ மடங்கள் எதற்கு?
74) அவை இதுவரைச் சாதித்த தென்ன?
75) அம்மடங்கள் இனியும் அப்படியே இருக்க வேண்டியதுதானா?
76)    இம்மடங்களைத் திருத்த இதுவரை எந்த சைவராவது முயற்சி செய்தது உண்டா?
77)    இப்பொழுதுள்ள சைவர்களில் சைவ சம யத்தைப் பற்றி அபிப்ராயம் சொல்ல நிபுணர் யார்?
78)    அருகதை உடையவர் யார்?
79)    பாரதம், இராமாயணம், பாகவதம் முதலிய வைணவப் புராணங்களில் வரும் சிவனைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
80) வடமொழியும், அம்மொழியில் உள்ள நூல் களும் இன்றி சைவத்தை விளக்க முடியுமா?

                                  -----------------நன்றி: திராவிட நாடு இதழ் 16.1.1944

2.2.14

அண்ணாவின் கடவுள் கொள்கை என்ன?



(இவ்வினாவை விடுத்திருக்கம் நண்பர் வேல்சாமி ஆடுதுறையைச் (தஞ்சை மாவட்டம்) சார்ந்தவர். கடவுள் பிரச்சினையில் அண்ணாவின் கொள்கை எப்படி இருந்தது என்று வீணாக நாம் ஆராயத் தேவை இல்லை. 2.1.1949 திராவிட நாடு இதழில் அண்ணா அவர்கள் எழுதிய கட்டுரை அப்படி தந்து விட்டால் விவரம் புரிந்து விடும் என்று கருதி அக்கட்டுரையை இதோ தருகிறோம். - ஆ.ர்)
மக்களின் அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு பொருள் கடவுள் என்ற பெயரோடு நின்று இவ்வுலகத்தை இயக்குகின்றதென்பது மத நூலார் கொள்கை.
மத நூலார் இலக்கணப்படி கடவுள் உண்டு என்று கூறுவதே அவர்கள் கொள்கைக்குத் தவறு உண்டாக்கு வதாகும். அப்படியென்றால், ஓசை ஓலி எல்லாம் ஆனாய் நீ என்ற பின்னர் பேச இரண்டுண்டோ? என்பது மத நூற்றுணிவாகும்.
எனவே, உயிர்கள் அனைத்திற்கும் பொதுவாயும், தந்தையாயும், எல்லாமாயும், எங்குமாயும் உள்ள ஒரு பொருளை உண்டென்று கூறுவது போன்ற அறியா மையும் அதன் கவுரவத்தைக் காப்பாற்ற வேண்டும்; அதற்குச் சட்டமியற்ற வேண்டுமென்ற நெட்டுயிர்ப்பும் வேடிக்கையாகவே இருக்கிறது.
கடற்சிப்பியில் முத்து இருக்கிறது என்று ஒருவன் கூறுவது வியத்தற்குரியதும் இயற்கைக்கு மாறு படாததுமாகும்.
கடவுள் மறைந்து இருப்பவர் அல்ல
ஆனால், நமது கடவுள் அப்படிப்பட்டவரன்று; கடற் சிப்பி முத்துபோல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மறைந்து இருப்பவருமன்று.
ஒரு இடத்தில் இருப்பதும், மற்றைய இடங்களில் இல்லாததுமான ஒன்றைத்தான் அது இன்ன இடத்தில், இன்ன தன்மையோடு இருக்கிறதென்று அறியுந் தன்மையில் ஒருவன் அதனை அறியாதார்க்கு அறிவிக்க வேண்டும். அங்ஙனமின்றி, எல்லாமாய், எங்குமாய் அணுவுக் கணுவாய், அகண்டமாய், எதிலும் பிரிவற நிற்பதாகச் சொல்லப்படும் ஒன்றை ஒருவன் உண்டென்று கூறும் அறியாமையை அளப்பதற்குக் கருவியே இல்லை.
ஒருவனால் உண்டென்று கூறப்படும் ஒரு பொருள், யாதொரு கருவியாலோ, அறிவாலோ அளந்தறிந்து உணரக் கூடியதாயும் இருத்தல் வேண்டும்.
ஆனால், கடவுள் அளப்பரும் இயல்பினதாய் - மறைமுதல் சொல் ஈறாக உள்ள எந்தக் குறைவிலா அறிவினாலும் அளந்தறிய முடியாதென்று முழங்கிய பின், ஒருவன் அதனைக் கண்டறிந்து அளந்தவனா வானா? அதன் கவுரவத் தைக் காப்பாற்றத்தான் முயல்வானா? முடியுமா?

கண்டதையே உண்டு எனக் கூறல் வேண்டும்
அன்றி, அப்பொருள் ஒருவனால் அளந்தறியப் படுவதற்கு அது எங்காவது ஒரு இடத்தில் தனித்திருந் தாலன்றி முடியுமா?

ஒருவன் ஒரு பொருளை உண்டென்று கூறுவா னாயின், அவன் அப்பொருளைக் கண்டிருத்தல் வேண்டு மன்றோ!
எனவே, ஒருவனால் காணப்பட்டு, மற்றவர்களால் காணப்படாத ஒன்றைக் கடவுள் என்பது மத நூலார் கொள்கைக்கே மாறுபட்டதாகும். எப்படியென்றால், காண முடியாதது எதுவோ அதுவே கடவுள் மதநூலார் கொள்கை. எனவே, காணமுடியாதது எது என்று ஆராயுமிடத்து, எது இல்லாததோ அதுவே காண முடியாததுமாகும் என்ற உண்மை பெறப்படுகின்றது.
அன்றியும், மக்களால் எளிதில் அறிந்து கொள்ள முடியாத கடற்சிப்பி முத்து போல கடவுளும், எங்காவது ஒரு மறைவிடத்தில் தனியாக இருப்பதாகக் கொள்ளவும் மத நூல்கள் இடந்தருவதில்லையே!
கடவுள் இல்லாத இடமே இல்லை என்பதுதான் அந்த நூல்களின் முடிந்த முடிவாகும்.
எனவே, கடவுளை அறிந்ததாகக் கூறுபவனும், கடவுளைக் காப்பாற்றாவிட்டால் அதன் கவுரவம் குறைந்துவிடுமென்றும் கருதும் நிறைமதியாளனும் மணற்சோற்றில் கல் ஆராய்பவனும் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்களேயாவார்கள்.

முன்னுக்குப்பின் முரண்
இனி, மத நூல்கள் சிலவற்றில் கூறியுள்ளபடி, தேடினால் கிடைப்பர்! என்ற முன்னுக்குப் பின் முரணான கொள்கைகளை நம்பி, அவ்வழிச் சென்றோர் எல்லாம் அத்துறையைக் காணாது சலிப்படைந்து, தங்கள் ஏமாந்த இயல்பினை இனிதியம்பியுள்ளனர்.
பட்டினத்தார், நாவுக்கரசர், புத்தர் முதலானோர் அவ்வழிப்போய் மீண்ட பலருள் சிலராவர்.
ஈனா வாழை மரத்தின் மட்டைகளை ஒவ்வொன்றாக உரித்துப் பார்த்தால், உரிக்கப்பட்ட அம்மட்டைகளை தவிர, அதனுள்ளே வேறொன்றும் இல்லாமை புலப்படுவது போல், மத நூல்கள் கூறிய வழிகளிலே சென்றவர்கள் தாங்கள் கருதிப் போன கடவுள் காணப்படாமையைக் கருத்தோடு திருத்தமாகக் கூறியுள்ளார்கள்.
எனவே, இல்லாத ஒன்றை உண்டென்னும் கொள்கை என்றைக்குத் தோன்றியதோ அன்றிருந்தே அக்கூற்று மறுக்கப்பட்டும் வந்திருக்கிறது - வருகிறது.
உண்மையை அறிய மதம் தடை
 
ஆனால், உண்மைக்கும் உலகுக்கும் உள்ள தொடர்பு மதக் கொள்கைகளால் பிரித்துப் பிளவுபட்டிருப்பதால் பொய்யைப் பொய்யெனக் கொள்ளும் பேதமையே பெருமை பெற்று வருகிறது. இதனால், உண்மைகளை உருவாக்கு வதற்குப் பெரு முயற்சியும், பேருழைப்பும், பெருந்துணிவும், இடுக்கண் வந்தால் ஏற்கும் இயல்பும் இன்றியமையாது வேண்டப்படுகின்றது. இஞ்ஞான்றை உலகம் ஓரளவு வெற்றி பெற்றுவருவது கண் கூடு.
காரணம், மக்களிடையே மங்கிக் கிடந்த பகுத்தறிவு வென்னும் பகலவன் தன் ஒளி அலைகளால், விரிந்த உலகின் சரிந்த கொள்கைகளை வீழ்த்தும் ஆராய்ச்சித் துறையின் அணிகலனாக விளங்குவதால் என்க.

21.1.14

ஆரியக் கடவுள்கட்கு ஓர் அறைகூவல்!-அறிஞர் அண்ணா



(இரண்டாம் உலகப் போர் காலத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் எழுதியது இந்தக் கட்டுரை.  வடக்கு, மேற்கு எல்லைகளில் இந்திய ராணுவம் விழிப்பாக இருக்க வேண்டிய அளவுக்கு இந்தியாவுக்குப் போர் அச்சுறுத்தல்கள் இருக்கத்தான் செய்கின்றன. எனவே, அண்ணாவின் சிந்தனையைத் தாங்கிய அந்த நாள் எழுத்துக்கு இன்றும் அவசியம் இருக்கிறது. படியுங்கள்; அது சரிதான் என்பது புரியும்)


மூவரே! தேவரே! சூரியசந்திராதியரே! இந்திரனே, வாயு வருண அக்னியாதிகளே! கந்தா, விநாயகா! காளி! வீரபத்திரா! நாரதா! மற்றுமுள்ள ஆரியக் கடவுள்களே! உங்கள் அனைவரையும், சுயமரியாதைக்காரர்கள், கண்டிக்கிறார்கள், மூடமதியிலே முளைத்த காளான்கள் என்று கூறுகின்றனர், ஆரியருக்காகக் கற்பிக்கப்பட்ட கரையான்கள் என்று செப்புகின்றனர். மக்களுக்குள் பேதத்தையும் பிளவையும் உண்டாக்கி, ஓர் இனம் உண்டு கொழுத்து ஊராள உற்பத்தி செய்யப்பட்ட உதவாக்கரைக் கருத்தோவியங்கள் என்று உங்கள் அனைவரையும் உரைக்கின்றனர்.

உங்களுக்கும் உக்கிரம் பிறக்கக் கூடுமானால், ஓடி வாருங்கள் பூலோகத்துக்கு, காளைமீது ஏற, கருடனைத் தேடு, அன்னத்தை நாடு, மயிலைப்பிடி, காக்கையைக் கூப்பிடு என்று உங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள வாகனாதிகளை வர்ணிக்க இங்கு காகிதாதிகள் இல்லை. ஆகவே, தத்தம் வாகனமேறித் தயக்கமின்றி வாருங்கள்! பாருங்கள். அசாமிலே குண்டு விழுந்துவிட்டது! நீங்களே, நெருப்பைக் கக்கும் கண், நீண்ட சூலம், சக்கரம், கதை, தண்டம், வாளாயுதம் வேலாயுதமாகிய ஏதேதோ தாங்கி நிற்பதாக ஏடுகள் கூறுகின்றன. எடுங்கள் உமது ஆயுதத்தை, விடுங்கள் ஜப்பானியர்மீது! ஆமாம்! பிரிட்டிஷாருக்கும், அமெரிக்கருக்கும், சீனருக்கும், இந்நாட்டுச் சேனையினருக்கும் ஏன் வீண் சிரமம்? கிளம்பி வாருங்கள், வானவீதியிலே நின்று உமது ஓங்காரக் கூச்சலைக் கிளப்புங்கள், ஓட்டுங்கள், வேட்டுக்காரரை!

இல்லையேல், பிரிட்டிஷ் அமெரிக்க சீன, இஸ்லாமிய, திராவிட நாட்டவரின் வேட்டுகள் வேலைசெய்து, அதன்பின்னர் விரோதி ஓடிய பிறகு, நீங்கள், அதிர்வேட்டு கிளப்பு, அக்கார வடிசல் போடு, ஆடும் அணங்குகளைக் கெண்டுவா, ஆறுகால பூசையைச் செய்து வா, ஆனைவாகன உற்சவம் செய், ஆபரணாதிகளைப் பூட்டு என்று மட்டும் கேட்டு, ஆரியரை எதிரிகளை ஓட்ட என்ற அவசரத் தபாலை எழுதி, தரலோகம், பிரம்மலோகம், இந்திர லோகம், கைலாயம், வைகுண்டம் என்ற விலாசமிட்டு தபால்களிலே சுயமரியாதைக்காரர்கள் போட்டால், இப்படி ஊர்களும் இல்லை, பேர்களும் கிடையாது என்று போஸ்ட் மாஸ்டர் கூறி, குப்பையில் போட்டார் கடிதத்தை. ஆனால் குளித்து முடித்ததுமே, குளத்தங்கரைக்குப் போகும்போதே, குளிக்கும் முன்பே, குடல்சரியத் தின்றபிறகு சம்போ மகாதேவா! முருகா! விநாயகா! என்று அவரே அழைக்க அப்படி ஓர் ஆசாமியும் இல்லை, இருப்பதாகக் கூறப்படுவதும் கிடையாது என்பது அறியாமையா? என்று சுயமரியாதைக்காரன் கேட்டால் வேதசாஸ்திர இதிகாசங்கள், படித்து வாழும் வேதியக்கூட்டம் என்ன பதில் கூறும்?

                        --------------------------(திராவிடநாடு 8.11.1942)


பஞ்சமாம் பஞ்சம்!

(திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கடந்த ஆண்டு(2013)பக்தர்கள் அளித்த காணிக்கை ரூ.723 கோடி மற்றும் 1200 கிலோ தங்கம். அதுவும் தெலங்கானா சிக்கலால் பக்தர்கள் வருகை 50 இலட்சம் பேர் குறைந்த நிலையிலேயே இவ்வளவு வசூலாம். இப்போது சொல்லுங்கள் இந்தியா ஏழை நாடா? அல்லது பணக்காரர்கள் வாழும் நாடா? உணவே கிடைக்காமலும், ஒருவேளை உணவு மட்டுமே உண்ணும் பல கோடி மக்களும் வாழும் இந்தியாவில் இன்றைய நிலை இதுவென்றால் அன்று எப்படி இருந்தது? இதோ அண்ணா எழுதியிருக்கிறார். படியுங்கள்:-)

பஞ்சம்! பசி! பட்டினி! என்று கூவுகிறார்கள்! யாருக்குப் பஞ்சம்? யார் பசியுடன் போராடுகின்றனர்? எங்கே தாண்டவமாடுகிறது, பட்டினி.

இதோ, பட்டி! பாருங்கள், இந்தப் பஞ்ச காலம், பஞ்சகச்சத்தைக் கண்டு பயந்தோடுவதை!

பிப்ரவரி 2- _ மன்னார்குடியில் மாத்வாவமி நடைபெற்றது, பிராமண சந்தர்ப்பணை நடைபெற்றது.

ஜனவரி 31- _ திருச்சி மலைக் கோவிலில் கும்பாபிஷேகம், பசுமடத்தில் பொது ஜன உதவியால் சுமார் 2000 பிராமணர்களுக்கு அன்னம் அளிக்கப்பட்டது.

பிப்ரவரி- 6 _ திருவனந்தபுரம் மகாராஜாவின் தந்தையின் சஷ்டியப்தபூர்த்தியை முன்னிட்டுப் பிராமணர்களுக்குத் (வைதீக முறைப்படி) தானம் வழங்கப்பட்டது.

பிப்ரவரி 4- _ பெரியகுளம், பாலசுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அய்ந்து நாட்களாக, ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்குப் போஜனம் அளிக்கப்பட்டது.

பிப்ரபரி 7-ஆம் தேதி காஞ்சிபுரத்தில், சங்கராச்சாரியார் நடத்திய கும்பாபிஷேகத்தை அனுசரித்துப் பிராமணர்களுக்குப் போஜனம் அளிக்கப்பட்டது.

ஜனவரி 30ஆம் தேதி தஞ்சை ஜில்லா கலியாணபுரத்தில், லட்சார்ச்சனை நடைபெற்றது. அதை அனுசரித்து பிராமணர்களுக்கு (நதியாராதனை) போஜனம் அளிக்கப்பட்டது.

பிப்ரவரி 5-ஆம் தேதி மாலை தியாகராய நகரில் இராமாயண உபன்யாசம் செய்து வந்த சாஸ்திரிகளுக்குப் பணமுடிப்பு அளிக்கப்பட்டது.

பஞ்சமும், பட்டினியும் இந்தப் `பரப் பிரம்ம சொரூபிகளைத் தீண்டிற்றா? திக்கற்ற தமிழர்களே! இந்தப் பட்டி புகட்டும் பாடம் என்ன? சிந்தித்துப் பாருங்கள்.

------------------------- (திராவிட நாடு - 13.-2.-1944  இதழில் அறிஞர் அண்ணா எழுதியது)

9.1.14

பொங்கலன்று பொங்குக புதுமை! - பேரறிஞர்அண்ணா



Annadurai_and_Periyar
பொங்குக புதுமை! - பேறிஞர்அண்ணா
ஞாயிறன்று பொங்கல்! அதனைத் தமிழர் திருநாளெனக் கொண்டு போற்றி வாழுபவர். தமிழரெல்லோருக்கும் நாம் பொங்கல் வாழ்த்து அனுப்பக் கடமைப்பட்டுள்ளோம். அனுப்புகிறோம் அன்புடன். தமிழர் வாழ்வே, நம் வாழ்வு எனக் கொண்டு பணியாற்றி, தமிழ் வாழத் தமிழர் வாழ்வர், தமிழர் வாழத் தமிழ்நாடு தழைக்கும் எனக்கூறி அதற்கெனப் பாடுபடும் நாம் தமிழரின் திருநாளன்று நமது அன்பு மொழியைத் தமிழர் இல்லந்தோறும் அனுப்பித் தமிழர் உள்ளமெல்லாம் செல்லச் செய்ய அவாவுகிறோம்.

தமிழரின் களிப்பைக் கண்ணாரக் கண்டால், வேண்டிய காட்சியைக் கண்டு தீர்ந்துவிட்டது என்று உள்ளூர எண்ணும் நாம், இவ்வாண்டுப் பொங்கற் புதுநாளன்று பொன், மணி தர முன்வரவில்லை! தமிழர் அதனை நாடார்; தேடார்; பிறர் கைநோக்கி நிற்கார்; ஆனால், நாம் நமது அன்பையே பொங்கல் வாழ்த்தாகத் தருகிறோம்.

சென்ற ஆண்டும் பொங்கல் வந்தது. இவ்வாண்டு வருவது போன்றே! ஆண்டுதோறுந்தான் பொங்கல் வந்து போகிறது. அந்நாள் புனலில் குளித்து, புத்தாடை உடுத்தி, பூரித்த உள்ளத்துடன், இல்லந்தோறும் இன்பத் தமிழரோடு, தமிழர் இருத்தலே முறை.

ஆனால், சென்ற ஆண்டு பொங்கலின்போது இன்பமா இருந்தது? இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டதற்காகக் காளைகளும், காரிகையரும் கடுஞ்சிறையில் கஞ்சியும் கூழும் உண்டு, கல் தரையில் படுத்துருண்டு, காய்ச்சலைத் தோழமை கொண்டு, கல் உடைத்து, கட்டைவெட்டி, நீர் மொண்டு நிலம் பெருக்கி, நிந்தை கேட்டுச் சிந்தை நொந்து வாழ்ந்தனர். அவர்கள் உள்ளம் உறுதிதான். ஆனால், திரேகம் அப்படியல்லவே! அவர்கள் பெற்றோரும், ‘பெறற்கரிய பேறு பெற்றான் எம் மகவு’ என்றுதான் உள்ளத்தில் கருதினர். ஆனால், தம்மனையில் பொங்கி, பொங்கற் புதுநாளன்று இருக்கவேண்டிய சிங்கமனையார், தமிழரைப் பங்கப் படுத்துவதையே தமது பணியெனக் கொண்டு வாழ்ந்த ஆட்சியினரின் – படுத்துவதையே தமது பணியெனக் கொண்டு வாழ்ந்த ஆட்சியினரின் கொடுஞ்செயலால், சிறைப்பட்டு, சோர்ந்து இருப்பதை எண்ணி, வாடினர்.

எத்தனை எத்தனை பிரிவுகள்! எங்கெங்கு வாட்டம்! இன்று எண்ணினாலும் ஏக்கமே வரும்.

அந்த ஆண்டு போயிற்று! அந்தப் பொங்கல் போய்விட்டது. இவ்வாண்டுப் பொங்கலில், இல்லம் தோறும் இன்பம் இருக்கவே மார்க்கம் கிடைத்தது.
ஆனால் இன்பம், பூரணமானதா? இல்லை! தமிழரின் இல்லங்களில், தமிழ் வாழ்வு பொங்குமா? இல்லை! தமிழ்நாட்டில் தமிழர் தழைக்கவா மார்க்கமிருக்கிறது! இல்லை! தமிழ்நாட்டில் தமிழர் வாழவா வழி பல இருக்கின்றன? இல்லை! இல்லை! ஆட்சி தமிழரிடமா? காணோம்! தமிழ்நாடு தமிழருக்கா? இல்லை! இப்போதுதான் அந்த மூலமந்திர முழக்கம் கிளம்பி இருக்கிறது. தமிழ்நாட்டில் இனி சாந்தி, சமாதானம், அமைதி, மனத்திருப்தி ஏற்படக் கூடிய விதத்திலே அரசியல் நடப்பு உள்ளதா? காணோம் அதுவும்!
எனவே, பூரணமான இன்பத்துக்கும் இடமில்லை இவ்வாண்டு. ஆனால், சென்ற ஆண்டு சிந்தை நொந்து வாழ்ந்ததைப் போல இருக்க வேண்டியதுமில்லை.
ஆனால், சென்ற ஆண்டுக்கு இவ்வாண்டு தமிழர் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதிலே சந்தேகமில்லை.

எங்கு நோக்கினும் தமிழர் வாழ்க! தமிழ் வெல்க! தமிழ்நாடு தமிழருக்கே! என்ற பேரொலி கேட்கிறோம்.

யாரைக் கேட்பினும் —“ஆம்! நான் தமிழனே!” எனப் புன்சிரிப்புடன் மார்தட்டிக் கொண்டு கூறக் கேட்கிறோம். நாள்தோ-றும் ஊர்தோறும் தமிழர் கூட்டங்கள், தமிழர் பரணி, தமிழர் முழக்கம் நடந்தபடி உள்ளன. தமிழரின் தலைவர் தமிழர் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டுவிட்டார். தமிழர் தம்மை உணரத் தொடங்கிவிட்டனர். தம்மவரைத் தழுவத் தொடங்கி விட்டனர். தம் நாட்டில் தமது மொழியைக் காக்கத் தொடங்கிவிட்டனர். தம் நாட்டில் பிறனுக்கு ஆதிக்கமேன் எனக் கேட்கத் துணிந்து விட்டனர். தம் நாட்டில் தாமே வாழவேண்டும். அரசு தமதே ஆட்சி தமதே எனக் கூற உறுதி கொண்டு விட்டனர். தமிழர் விடுதலைப் போரிட முனைந்து விட்டனர்.
எனவே, இவ்வாண்டு பொங்கலன்று வீடுதோறும் செந்நெல் மணி வாடையுடன் செந்தமிழின் மணமும் சேர்ந்து கமழும் என நம்புகிறோம்.
அந்த நம்பிக்கையே நமது இன்பத்துக்குக் காரணம்.

பொங்கல் புது நாளின் கருத்து மிக அழகியது. பொருள் ததும்புவது.
ஆரியர் கொண்டாடும் ஆபாசப் பண்டிகைபோல எதிரியை எப்படியோ வதைத்து விட்டதற்காகக் கொண்டாடும் நாளன்று! ஆரியர் பண்டிகை, வெறியாட்டம்! அவை சூதும் சூழ்ச்சியும் வீரத்தை வாட்டி வதைத்ததை விளக்கும் பண்டிகைகள்; பொங்கற் புதுநாள் அத்தகைமைத்தன்று.
பாடுபட்டால் பயன் உண்டு! உழைத்தால் வாழ்வுண்டு! என்ற மூலக் கொள்கைக்கு ஏற்ற நாள் அது.

காட்டைத் திருத்தி, நிலமாக்கி, மேட்டை அகற்றிக் குளமாக்கி, கரடுமுரடைப் போக்கி வாய்க்கால்களாக்கி, வயல்கள் பலவும் அமைத்து, வரப்புகள் தொகுத்து, உழுது நீர்பாய்ச்சி, களை எடுத்துக் காப்பாற்றி, முற்றிய கதிரை அறுத்து வந்து முற்றத்தில் கொட்டி, அளந்து எடுத்து ஆனந்தத்துக்கு அடிகோலும் நாளாகும் அந்நாள்.

உழைப்பின் பயன் இதுவென உணர்ந்து, மகிழ்ச்சி பொங்குகிறது என்பதை மனத்தில் இருத்த வேண்டி, பாற்பொங்கலிட்டு, “பொங்கலோ! பொங்கல்!” எனத் தீந்தமிழ் மொழி புகன்று, தித்திக்கும் பண்டமுண்டு திருநாள் கொண்டாடும் நாளாகும்.

அந்நாள், தமிழர் தமது உள்ளத்தில் ஒரு விஷயத்தை நினைவிலிறுத்துவர் என நம்புகிறோம்.

திருந்தாத வயலில் உழவு இல்லை. நம்நாடு திருந்தாத வயலாகவே இன்னமும் உள்ளது. எனவேதான் இங்குத் தன்னாட்சி முளைக்கவில்லை.
வரம்பு கட்டாவிடில் வயலுக்கு வயல் வம்பு வளரும். அஃதே போலத்தான், தமிழர் தம்நாட்டின் வரம்பு கட்டத் தவறி, அதாவது தமிழ்மொழி, கலை, மார்க்கம் ஆகியவை ஆரியத்தால் சிதைக்கப் படாதிருக்க வேண்டித் தன்மானம் எனும் வரம்பு கட்டத் தவறியதால் இன்று நமது நாடு பிறருக்கே சந்தையாகிவிட்டது.

உழுது நீர்ப்பாய்ச்சிக் களை எடுக்கா முன்னம், பச்சைப் பயிர் பார்க்க முடியுமா? செந்நெல் தேட இயலுமா? நாம் இங்கே நம் நாட்டுக் களைகளைப் போக்கினோமா! இல்லையே! அதோ தீண்டாமை எனும் கோரமான களை இருக்கிறது. பார்ப்பனியம் எனும் பண்டைப் பயங்கரப் பாசி அடிமுதல் நுனிவரை படர்ந்திருக்கிறது. பித்தலாட்டக் கொள்கைகள் எவ்வளவு! பாமரர் ஏய்க்கப்படுவது எத்துணை. குருட்டுக் கொள்கையும், முரட்டுப் பிடியும், வரட்டு வீரமும், கிழட்டுப் போக்கும், பகட்டுப் பேச்சும், இங்கேயுள்ள களைகள்! இவை போக்கப்படா முன்னம், பயிர் எது? இவற்றைக் களைவதன்றோ, பண்ணையில் அக்கரை கொண்டோரின் கடன்.

எனவே, இவ்வாண்டு பொங்கலன்று, தமிழர் உள்ளத்திலே புதுமை பொங்கவேண்டும். தமிழரின் வாழ்வுக்கு எதிரிடையாக உள்ளவை யாவும் மங்கும்படி செய்தல் வேண்டும்.

ஒன்று மங்கிவிட்டது. மறுபிறப்பு எடுக்க எண்ணுகிறது. எனினும், மீண்டும் வரினும், மிக விரைவில் பங்கப்பட்டுப் போகும் என்பதிலே சந்தேகமில்லை.
ஒழிந்து போன காங்கிரஸ் ஆட்சியைத்தான் நாம் குறிப்பிடுகிறோம்.
உழவரையே பெரிதும் ஏய்த்து ஒட்டுப்பெற்ற ஆட்சி உழவர் சார்பில் ஒரு சிறு நலனும் செய்யவில்லை.

வரி எல்லாம் போகும் என்று கூறியவர்கள், வரிபல போட்டு வாட்டினர். நிலவரிவஜா விஷயத்தில் ஏதோதோ கூறினர். ஏதும் செய்ய இயலவில்லை எனக் கூறிவிட்டுப் போயும் விட்டனர். பள்ளிகள் மூடினர். மருத்துவ சௌகரியத்தை மாய்த்தனர். பண்டங்களின் விலை ஏறும்படி விற்பனை வரிபோட்டு ஏழைகளை வாட்டினர். தொழிலாளர் துயரம் பெருகிற்று. வகுப்புக் கலவரம் வளர்ந்தது. தீண்டாதார் துயரம் அதிகரித்தது. அப்பா! அவர்கள் ஆட்சி! “இன்னும் எத்தனை நாள்?” இன்னும் எத்தனை நாள்?” என்று கேட்டபடி இருந்தனர் தமிழர். இன்று இல்லை அவர்கள்! ஒழிந்தது அந்த ஆட்சி! தீர்ந்தது அவர்களின் தர்பார்! நாடு பூராவும், அவர்கள் போனதற்குப் புலம்பவில்லை. பூரித்தது, விடுதலை விழாக் கோண்டாடி, “போனாயா, ஒழிந்தாயா” என்று கூறி விட்டது.

எனவே, தமிழருக்கு ஆபத்தாக வளர்ந்த ஆட்சி மங்கி மடிந்தது.
பொங்கற் புதுநாளன்று, இச்சிந்தனையொன்றே தமிழரின் செந்தேனாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

அம்மட்டோ? அந்நாள், ‘இழந்த இடத்தை’ மீண்டும் பிடிக்க, எவ்வளவு இழிந்த செயலில் இறங்கவும் அவர்கள் இறங்கிவிட்டார்கள் என்பதை எண்ணி, அத்துடன், வந்த பதவியை வேண்டாம் எனக் கூறிய தமிழர் தலைவரின் தீரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழரின் நெஞ்சில் ஏன் துன்பம் பெருகாது எனக் கேட்கிறோம்.

அதோ அந்தக் கும்பல் இன்னமும் அலைந்து திரிகிறது அதிகாரத் துண்டுகளுக்கு. இதோ தமிழர் தலைவர், “எமக்கேன் இது, எமக்கு வேண்டியது தமிழ்நாடு” “தமிழ்நாடு தமிழருக்கே” என முழக்கம் செய்கிறார்.
ஆங்கிலக் கவி ஷேக்ஸ்பியர் கூறியபடி, “அந்தப் படத்தையும் பாருங்கள், இந்தப் படத்தையும் பாருங்கள்” என்று நாம் கூறுகிறோம்.

பொங்கற் புதுநாளன்று தமிழரின் மனக்கண் முன்பு இக்காட்சி தோன்றட்டும்.
தமிழ்நாட்டில் ஒற்றுமை பொங்குகிறது. தமிழரின் எதிரிகளின் கோட்டையில் புரட்சிச் சங்கமே ஓங்குகிறது.

தமிழர் கட்சியில், மேலும் மேலும் பலர் வந்து அணிவகுப்பில் நான் முன்னே நீ முன்னே என்று சேருகின்றனர். தமிழரின் எதிரிகளில், “போடாபோ, நரிமகனே எட்டிநில் நீ கவிழ்க்கப் பட்டாய்’ என்ற தண்டனைத் தாக்கீதுகள் பொங்கி வழிகின்றன.

காங்கிரஸ் ஆட்சி ஒழிந்ததற்குத் திருநாள் காந்தியார் வாழும் இடத்திலே நடந்தது. தமிழரின் தலைவர் பெரியார் தமிழ்நாட்டைத் தாண்டிச் சென்று, பம்பாய் மாகாணத்தில் தமிழர் இலட்சிய விளக்கம் செய்தார்.

“காங்கிரசிடம் நம்பிக்கை இல்லை, நாம் கூடி முடியாது, நம்பமாட்டோம்” என முஸ்லிம் லீகும், ஆதி திராவிடர்களும் கூறி விட்டனர். தமிழர் தலைவருடன் அளவளாவிப் பேசி, ஒத்துழைப்பதாக உறுதி கூறி, அகில இந்திய முஸ்லிம்லீக் தலைவர் ஜனாப் ஜின்னாவும், ஆதிதிராவிடப் பெருங்குடி மக்களின் அண்ணல் டாக்டர் அம்பேத்கரும் வாக்குக் கொடுத்தனர்.

புத்துலக வாழ்வுக்கு முட்டுக் கட்டையாக உள்ள காங்கிரஸ் என்னும் கூட்டத்தின் கொட்டத்தை அடக்க மூவரும் ஒன்று கூடியுள்ளனர்.
எனவே, தமிழருக்கு இனி இன்பம் பொங்க மார்க்கமேற்பட்டு விட்டது.
தமிழர்கள் யாவருக்கும் இனிப் புத்துலக வாழ்வு நிச்சயம். அதற்காகப் போரிட வேண்டும்; பாடுபட வேண்டும். களை எடுக்க வேண்டும். இக்கருத்தையே பெரிதும் உள்ளடக்கிய பொங்கற் புதுநாளன்று தமிழர்கள் உள்ளத்தில் இவ்வெண்ணங்கள் பொங்க வேண்டுமென விரும்புகிறோம்.

உமது இல்லந்தோறும், உள்ளம் தோறும் பொங்குக புதுமை என அன்புடன் வாழ்த்தி, உமது இன்பமே, எமது குறிக்கோள் என்பதை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழ்க தமிழர்!
வாழ்க தமிழ்நாடு!!
புதுமை பொங்குக!!!
தமிழ்நாடு தமிழருக்கே!!!!

-------------------------------அண்ணாதுரை "விடுதலை", 13-1-1940 ப.2

20.12.13

கம்பன் கவிதைகளிலே காமரசம் பற்றி...அன்று அண்ணாவிடம் கேட்ட ???

(திராவிட நாடு ஏட்டிலே அறிஞர் அண்ணா அவர்கள் கேள்வியும் பதிலும் என்ற பகுதியிலே வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு விடுத்த முக்கிய பதில்கள். ஆதாரம்: 21.11.1947, திராவிட நாடு)

கல்லூரி மாணவர்கள், மக்கள் மனதிலே பதிய  பகுத்தறிவு இயக்கத்துக்கு எந்த வகையில் பணியாற்ற முடியும்?

கட்சிமாச்சரியங்களை மறந்து, பகுத்தறிவு பரவ வேண்டும் என்ற ஒரு நோக்கத்துக்காக கூடி, நமது நாட்டு மக்களின் வாழ்க்கையிலே ஊறிப்போயுள்ள பழைய, பயனற்ற, கேடுதரும், எண்ணங்களை அகற்றும் வகையிலே பேசுவது, பாடுபடுவது, ஓவியங்கள் தீட்டுவது, பொருட் காட்சிகள் நடத்துவது, நாடகங்கள் நடத்துவது, விஞ் ஞானிகள், வீரர்கள், அறிஞர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக் கதை வடிவில் கூறுவது, உலகிலே எங்கெங்கு, என்னென்ன வகையான மூட நம்பிக்கைகள் இருந்து வந்ததை அவைகள் எப்படி அகற்றப்பட்டன என்பவற்றை விளக்குவது - இவ்விதமாகப் பணியாற் றலாம் - பலன் உண்டு.

கூடுமானவரையில் நடைமுறை அரசியல் பூசல்களிலிருந்து ஒதுங்கியிருந்து நடத்துவதே நல்லது. பெரிய நகர்களிலே நடத்தப்படுவதைவிட, கிராமங்களில் இந்தப் பிரச்சாரம் நடைபெற வேண்டும். எழுச்சியூட்டும் சொற்பொழிவு விழாக்களாக மட்டுமே அமையாமல் மக்கள் மனதிலே பதியக் கூடிய விதமான உரையாடல்களாக அமைவது நல்லது.

கம்பன் கவிதைகளிலே காமரசம் பற்றி...

கம்பன் கவிதைகளிலே காமரசம் அதிகம் என்று கண்டித்து எழுதிவிட்டு, ரோமாபுரி ராணிகள் என்ற புத்தகத்தில் காமரசத்தைக் கலக்கியது சரியா?

சரியல்ல, கலக்கி இருந்தால்! காமரசக் களஞ்சியம், அந்த அரசிகளின் வாழ்க்கை அதன்பயனாக அரசு அழிந்தது என்பதை முன்னுரையில் கூறிவிட்டு, வெறும் போக போக்கியத்தில் மிருக இயல்புடன் புரள்வோர் நாடாள்வோராக இருக்கக்கூடாதென்று எச்சரிக்கவே இப்புத்தகம் தீட்டுகிறேன் என்பதை விளக்கினேன். எனவே காமரசத்தைக் கலக்கிய குற்றம் என்பாலில்லை.



அது போலவே, அந்த ரசத்தைப் போற்றியதாகவோக, பாராட்டுவதாகவோ, அதனை முன் மாதிரியாகக் கொள்ள வேண்டுமென்று சிபாரிசு செய்வதாகவோ என்மீது குற்றம் சுமத்தக்காரணம் இல்லை. குற்றம் ஏதேனும் சுமத்தலாம் என்று தேடிடும் போது இது மட்டுமா இன்னும் உருவற்ற பலனற்ற பல கிடைக்கும் தேவையுள்ளோர் அந்தத் திருப்பணியில் தாராளமாக ஈடுபடட்டும்.
நிற்க! ரோமாபுரி ராணிகள், கம்பன் ஏடுபோல, கடவுள் கதை அல்ல, பஜனை ஏடல்ல, புண்ணிய கதையாகவும், பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும் பெரும் துணையாகவும், பெருமானின் பொருளைப் பெற்றுத் தரவல்ல புனித ஏடாகவும் கூறப்படும் இராம கதையிலே ஏன் காமரசம் கலக்கினார் கம்பர் என்பது என்கேள்வி.

அந்தக் கேள்வியும் கண்டனமும், நான் ரோமாபுரி ராணிகள் வெளியிட்டதால் பயனற்றுப் போய்விடாது, பழி கூறு படலத்துக்குப் பரபரப்புடன் சிலபல தேடுவோர், என்மீது பழுதையை வீசிவிட்டு, பாம்பை வீசிவிட்டோம் என்று களிப்பதிலே, எனக்கோர் நஷ்டமும் இல்லை. அவர்கள் ஆசையும் தீர்ந்து போகட்டுமே, நமக்கென்ன நஷ்டம், என்ற கைவல்ய வாக்கியந்தான் கவனத்திற்கு வருகிறது.

வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும், என்று பகுத்தறிவுவாதிகளாகிய நீங்கள் கருதுகிறீர்கள்?

மாயப் பிரபஞ்சம் - நீர்மேற்குமிழி என்பன போன்ற கருத்துக்களை விரும்பாத பகுத்தறிவாளர்கள், வாழ்க் கையைப் பற்றிக் கொண்டுள்ள கருத்து, வெறும் மிருக இச்சை பூர்த்திதான் என்ற தப்புப் பிரச்சாரம் பரவி இருக்கம் இந்நாளில், இந்தக் கேள்வி கேட்கப்பட்டது பற்றி மிக மகிழ்ச்சி - உண்மையை விளக்க ஓர் வாய்ப்பு ஏற்படுவதால்.

இவ்வுலகில் உயிரோடு இருப்பது மட்டுமல்ல வாழ்க்கை - கல்வி கேள்விகளில் சிறந்து, மக்களை மக்களாக மதித்து நடந்து, சோம்பித்திரியாது சுறுசுறுப்பாக உழைத்து, செல்வத்தைப் பெருக்கி, தேவைக்கேற்ற அளவு பெற்று, இன்பம் பயக்கும் பல சாதனங்களையும் கண்டு வாழ்வதுதான் - மனித வாழ்வின் முடிந்த லட்சியம் என் பதை நாம் ஒவ்வொருவரும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

இந்த உயர்ந்த வாழ்வு நினைத்த மாத்திரத்தில் நினைப்புக் கொள்வதால் மட்டும் சித்தியாகிவிடாது. எடுத்து விளக்குவது முக்கியமாயினும், வெறும் விளக்க உரையால் மட்டும் சாத்தியமாகக் கூடியதென்று இந்த லட்சியத்தைப் பெறுவதற்காக நம்மில் பலரின் சுகபோகங்களை - கிடைத்தற்கரிய உயிர்களைப் பணயம் வைக்க வேண்டும்.

ஒரே நாளில் வெற்றிப் பெற்று விடக் கூடியதுமன்று. இந்த இன்ப வாழ்வைப் பெறமுடியாமல், மனிதனின் அறி வையும், முயற்சியையும் குலைப்பதற்கு அவனுக்குப் பூட்டப்பட்டுள்ள விலங்குகளோ அனைத்தும் வன்மை மிக்கது.  ஒவ்வொன்றாகத் தான் நொறுக்க முடியும் ஒரு விலங்கு ஒடிந்ததும், எதிர்பார்த்த லட்சியம் கூடவில் லையே என  மனச் சோர்வுக்கு இடங்கொடாமல் மேலும் மேலும் விலங்கொடிக்கும் வேலையில், முன்னிலும் மும்முரமாகப் பங்கு கொள்ள வேண்டும்.

இத்தகைய பணி எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறுகிய கால அளவில் முடிவுற்றாலும் முடியலாம் - நாள் கூடினாலும் கூடலாம் எதற்கும் இப்போராட்டத்தில் சம்மந்தப் பட்டுள்ள சக்தி - எதிர்ச் சக்தியின் பலத்தைப் பொறுத்திருக்கிறது.

அவதிக்குக் காரணம்

வாழ்க்கை இன்பம் சிலருக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய அவ்வளவு பொருள் பஞ்சம் பூமியில் இல்லை. அறிவுப் பஞ்சம் கூட அல்ல, இன்றுள்ள அவதிக்குக் காரணம் தன்னலம், பிறர் நலத்துடன் பிணைந் திருக்கிறது என்ற பேருண்மையை உணராததாலேயே, சுரண்டல் முறை வளருகிறது.
அதன் விளைவாக பெரும்பாலோர் வாழ்வு தேய்கிறது. தேயும் வாழ்வினருக்கு, எதையேனும் கூறித் திருப்தியைத் திணிக்க விரும்பும் தத்துவார்த்திகள் கிளம்பி, வாழ்க்கை வானவில் போன்றது, பொம் மலாட்டம் என்ற சில பல கூறி, வாழ்க்கையின் அடிப்படை உண்மையை மறைக்கின்றனர்.

9.12.13

ஆரியர் செய்த அக்கிரமம் - அறிஞர் அண்ணா




டாக்டர் அத்பேத்காரும் மற்றும் இன்று தீண்டப்படாதவர்கள் என்று அழைக்கப்படும் ஏனையோரும் இந்தியப் பூர்வ குடிகளின் சந்ததிகளே. ஆதிகாலத்தில், அந்தப் பூர்வ குடி மக்களே நாட்டுக்கு, அதிபதிகளாக சுதந்திர வாழ்வு நடத்தி வந்தார்கள். அவ்வாறு வாழ்ந்து வந்த இந்தியப் பூர்வகுடி மக்கள் பிற்காலத்து வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு கூட்டத்தாருக்கு அடிமைப்பட்டு சுதந்திரத்தையும், மானத்தையும் இழந்து மிருகங்கள் அனுபவிக்கும் சாமானிய சுதந்திரங்களுமில்லாமல் உயிர்ப் பாரம் தாங்கும் படி நேர்ந்திருக்கிறது. இது போன்ற சம்பவத்தை உலக சரித்திரத்திலேயே காண முடியாது.

குடி புகுந்த ஆரியர்கள் பூர்வ குடிகளை விட பளபளப்பான வர்ண முடையவர்களா யிருந்தனர். எனவே, வெள்ளையர்களான ஆரியர்கள் கறுப்பர்களான அதி இந்தியர்களை விட உயர்ந்தவர்கள் என ஒரு ஐதீகம் ஏற்பட்டது. அன்று முதற் கொண்டே வர்ண பேதக் கொடுமை ஆரம்பமாயிற்று. வர்ண பேதக் கொடுமையினால் இந்தியாவைப் போல் கஷ்டப்படும் நாடு உலகத்திலேயே வேறு இல்லை என்று சொல்லலாம். ஆரியர்கள் ஆதி இந்தியர்களைச் சந்தித்தபோதே அவர்களுக்கு `கறுப்பர்கள்’ என்ற இழிபெயரைச் சூட்டினார். போர்க் கடவுளான இந்திரனை ஒரு ஆரிய வீரன் பாராட்டிப் புகழ்வதைக் காண்க.

ஆரியர் சட்டத்துக்குக் கீழ்ப்படியாதவர் களைத் தண்டித்து கறுப்பர்களை மனுவுக்கு அடிமைப்படுத்தி மற்றும் நூற்றுக்கணக்கான உதவிகள் புரிந்து இந்திரன் ஆரியர்களைக் காப்பாற்றினான். (ரிக் வேதம் முதல் மண்டலம் 30-வது மந்திரம் 8-வது ஸ்லோகம்.)

ஆரியர் கொடுமை

ஆரியர்களுக்கும் ஆதி இந்தியர்களுக் கும் நடைபெற்ற போரைப் பற்றியும் ஆரியர் செய்த பற்பல கொடுமைகளைப் பற்றியும் வேதங்களில் பல குறிப்புகள் காணப்படுகின்றன. வெள்ளை ஆரியர்கள் கறுப்புப் பூர்வ குடிகளை எவ்வளவு குரூரமாக இம்சித்தார்கள் என்பதைக் கீழ்வரும் உதாரணங்களால் ஒருவாறு யூகித்துக் கொள்ளலாம்.

1

ஓ! உலகம் போற்றும் இந்திரனே! ஸுஷ்ரூ வனை எதிர்த்த இருபது கறுப்பு அரசர்களையும் அவர்களது அறுபதினாயிரத்துத் தொண்ணூற்றி யொன்பது படைகளையும் நீ உன் தேர் சக்கரத்துக்கு இரையாக்கி நசுக்கிக் கொன்று ஆரியர்களுக்கு உதவி புரிந்தாய்.

(ரிக் வேதம் மண்டலம் 1, மந்திரம் 53. ஸ்லோகம் 9)


2
ஓ! இந்திரனே! பிப்ரு மிருகய அசுர அரசர்களை ஆரிரிய மன்னனான விதாதின் பத்திரன் ரிஜீஷ்வனுக்கு அடிமைப் படுத்தினாய்! ஐம்பதினாயிரம் கறுப்புப் படைகளை செயித்தாய். முதுமை உயிரை மாய்ப்பது போல் அனேக கோட்டைகளையும் பாழாக்கினாய்.

(ரிக் வேதம் மண்டலம் 4 மந்திரம் 16 ஸ்லோகம் 18)
3
ஆரிய அரசன் தாபிதியின் தன்மைக்காக முப்பதாயிரம் தாசர்களை உன் மந்திரச் சக்தியி னால், ஓ! இந்திரனே! யமனுலகுக்கு அனுப்பினாய்!

(ரிக் வேதம் மண்டலம் 4 மந்திரம் 30 சுலோகம் 21)
4
``ஓ தீரனான இந்திரனே! உன் வலை பிரம்மாண்டமானது, மஹா பலாட்டியமானது, ஆயிரக்கணக்கானவர்களைச் சிக்க வைக்கும் ஆற்றலுடையது, ஒன்று, பத்து, நூறு, ஆயிரமாகப் பெருகும் சக்தியுடையது. அத்தகைய வலையில் தாசப் படையைச் சிக்க வைத்து நூற்றுக்கணக் கான ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கானவர் களைக் கொன்றாயே!

(அதர்வண வேதம் தாண்டம் 8 மந்திரம் 8 ஸ்லோகம் 7)


மேலே கூறிய உதாரணங்களால் ஆதி இந்தியர்கள் லட்சக்கணக்காகக் கொல்லப் பட்டதையும் சித்திரவதை செய்யப்பட்டதையும் ஊகித்து அறிந்து கொள்ளலாமல்லவா? எஞ்சிய ஆதி இந்தியர்கள், மீது ஆரியர்கள் கொண்டி ருந்த வெறுப்பும், வஞ்சகமும் அம்மா பெரிது! பெரிது!!
கீழ் வருவன ரிக் வேதம் 7-வது படலம் 104-வது மந்திரத்திலும் அதற்கான வேதம் கண்டம் 8, 4வது ஸ்லோகத்திலும் காணப்படுகின்றன.

ஸ்லோகம் 1

இந்திரனே ஸோமனே ராட்சகர்களை எரி, எரி! நசுக்கு, நசுக்கு! இடவனாந்திரங்களில் ஒன்று நூறாய் பெருகிவரும் அந்தக் கூட்டங்களை அடக்கு, அடக்கு! பின்னப்படுத்து, மடையர்களை அக்னி சுவாலையால் சுட்டுப் பொசுக்கு, வதை செய்! துண்டு துண்டாக வெட்டு!

ஸ்லோகம் 2


இந்திரனே, ஸோமனே, அரக்கக் கூட்டத்தை, துரோகிகளை, தீமையில் உருவான வர்களை, அக்னி குண்டத்தில் வைத்து, நீர் பானையில் வேகவைப்பது போல் அவித்துக் கொல்! துரோகிகளான அந்த பச்சை மண்ணைத் தின்னும் அரக்கர்களை மீளா நரகத்தில் தள்ளி இம்சிப்பாயாக!

ஸ்லோகம் 3


குகைகளிலும் வனாந்திரங்களிலும் அந்த சண்டிகளை கீறி, பிளந்து அரித்து சித்திரவதைச் செய்! இருண்ட காடுகளில் மறைந்து கிடக்கும் அவர்களுக்கு ஒரு உதவியும் செய்யாதே! அந்த வனாந்திரங்களில் அவர்கள் மீளாமல் போவார்களாக. பயங்கர பலத்தால் அவர்களை அடக்கி ஒடுக்குவீர்களாக!

ஸ்லோகம் 4


ஓ இந்திரனே, ஓ ஸோமனே. மேல் மண்டலத்திலிருந்து கொடியவர்களை கீழே சொரிவீர்களாக! அதிலிருந்து ஆயிரக்கணக்கான ஆரியர் கிளம்புமாறு கருணை புரிவீர்களாக! தினமும் பெருகிவரும் இந்தக் கூட்டங்களை எதிர்ப்பதற்காகவே வானிலிருந்து லட்சக்கணக் கான அஸ்திரங்கள் தோன்றும்படியாக செய்வீர்களாக!

ஸ்லோகம் 11

அசூரர்கள் ஒழிக! பிள்ளை குட்டிகள் நசிக்க! பிற்கால சந்ததிகள் அசூரக் கூட்டங்களை விழுங்கி விடட்டும்.

-------------------------- அறிஞர் அண்ணா - ”திராவிட நாடு”, 29-11-1942

20.11.13

ஆரியரின் அந்தரங்க அகராதி!

ஆரியரின் அந்தரங்க அகராதி!


(தமிழர்கள் நம்பும் பல கருத்துகளுக்கு ஆரியர் கொண்டுள்ள உண்மையான கருத்து)

கோயில்

கோவென மக்களை வெளியே அழ வைத்து வாழ்வதற்காக ஆரியர் தமிழரைக் கொண்டே கட்டிவைத்துக் கொண்ட இல்லங்கள்.

கும்பாபிஷேகம்


கும்பம்= வயது, அபிஷேகம்= ... செய்வது, ஆரியர் வயறு குளிர... வாழ்,ஓர் வழி.

அர்ச்சனை...


ஹர்- சேனை என்பதன் மருஉ. ஹர் என்ற கொள்ளைக் கூட்டத்தாரின் சேனை போல், தமிழரைக் கொள்ளையடிக்க உபயோகமாகும் தந்திரம்.

திராவிட மக்களின் செல்வத்தை வாழ்வையும் இந்த நாட்டிலே கரைக்க உபயோகித்த ஆயுதம். இன்று கொஞ்சம் கூர் மழுங்கிக் கிடக்கிறது.

அரன்.

அரம் என்பதன் திரிபு. தமிழர் வாழ்வைத் துண்டு துண்டாக்க உபயோகிக்கப்பட்ட அரம்= ஒரு ஆயுதம்.

கௌபீனம்.

தமிழருக்கு, அவர்கள் பட்டு பீதாம்பரம். பவுன்புட்டா சேலை முதலிய ஆடைவகைகள் செய்யும் திறமை உள்ளவர்களாக இருந்தாலும், யார் என்ன அணிய வேண்டும் என்பதைக் குறிக்கும் பதம். லகரம், னகரமாகி விட்டது. தமிழர்களுக்கு விஷயம் தெரியாமலிருக்க.

வினாயகன்

வினா- அகன், என்பதன் கூட்டுச் சொல். ஏன் இப்படி எங்களைத் துரத்தினீர் என்ற வினா தமிழர்களுக்கு தோன்றினாலும், அதை மனத்திற்குள்ளேயே முடங்கும்படி செய்வதற்காக ஏற்பட்ட கற்பனைத் தேவன், வினா அகன், என்பதை வினாயகன் என்று தொகுத்துத் தமிழருக்குத் தந்தோம்.

ராவணன்

ரா+வண்ணன், ராவணன் என்றாயிற்று, ரா= இரவு, வண்ணன்= நிறமுடையவன், அதாவது கரிய மேனியன், தமிழன்.

இதிகாசம்

இது, காசம், என்பது தமிழருக்குத் தெரியாதிருக்கும் பொருட்டு, இதிகாசம் என்று கூறப்பட்டது. இது= இந்தக் கதை, காசம்= கேட்டு நம்பினவருக்குக் கருத்து, காசநோய்க்காரரின் உடல் கெடுவது போல் கெட்டு விடும் என்பது புதைந்துள்ள பொருள்.

வேதம்

பேதம், என்பதையே, வேதம் என்று விளம்பினோம். நாட்டிலே பேதம் இருக்கவே, இந்த வேதம் பயன்படுவிதிலிருந்து, இந்த இரகசியம் விளங்கும்.

வைகுண்டம்

வை! முண்டம்! என்பதைத் திரித்து எழுதினோம். எம்மிடம், ஏமாறும் முண்டமே! வை, காசு பணம் என்று நம்மவர், திதி முதலிய காரியங்களின் போது தமிழரைக் கேட்க, வை குண்டம் என்ற இரகசிய கோட் (ஊடினந) உபயோகிக்கிறோம்.

கைலாயம்

தானை முன், என்பது முந்தானை என்று ஆயிற்று, தானை சேலை, முன்= முன்னால் இருக்கும் பாகம். அதுபோலவே லாயம் கை, என்பது கைலாயம் என்றாயிற்று. லாயம்= ஆரியருக்குச் செக்குமாடுகளாக உள்ள ஏமாளி களை அடைத்து வைத்திருக்கும் பட்டி, கை= நம்முடைய கையில் இருக்கிறது என்று, நம்மவர், தமிழரின் சடங்குகளிலே சொல்லுகிறோம். இதுவும் இரகசிய கோட் (ஊடினந) தேசிய சர்க்கார் எங்ஙனம் அமைப்பது, இங்கு மூன்று தேசங்கள் உள்ளனவே என்றுரைத்தாலோ, முப்புரிகள் முணு முணுக்கின்றன. பின்னர் எப்படித் தேசீய சர்க்கார் அமைப்பது! இதுசமயம் தேவை, தேசீய சர்க்காரால்ல, இன்று தேசீயம் என்பது, ஓர் கதம்பக் குழம்பாக இருக்கிறது. நாட்டுப் பிரிவினைக்குப் பிறகே, தெளிவான தேசீயம் தோன்ற முடியும்! இன்று அவசியமானது, போரைத் திறம்பட, வெற்றிகரமகா நடத்தித் தரக்கூடிய, பலமான சர்க்கார்- அதைப் பரிபூரண மாக ஆதரிக்கும் மக்கள்- அம்மக்களைக் சரியான வழியிலே நடத்திச் செல்லும் தலைவர்கள்- இவையே! இவைகட்குக் குறுக்கே நிற்பது, ஆச்சாரியார்ர் போன்றோர், அடிக்கடி விடும் அறிக்கைகள், சில சீமை மகாத்மாக்கள் விடும் யோசனைகள், பேட்டிகள் ஆகிய நிகழ்ச்கிகளே என்போம்.

தேசீய சர்க்கார் தேவை, தேவை என்று இன்று கூறும், ஆச்சாரியார், அதை அமைக்க, அவருக்கு இருந்த அருமையான சந்தர்ப்பங்களைத் தவற விட்டுவிட்டார் என்பதை, தர்க்கத் துக்காக அவர் மறுக்கலாமே தவிர, மனதார மறுக்க முடியாது!! போர் துவங்கிய உடனே, பிரிட்டனுடன் பேரம் பேசும் காரியத்திலே இறங்காது, பிணக்கு தீர, இங்குள்ள கட்சிகளைக் கலந்து சமரசம் உண்டாக்கியிருந்திருப்பின், இன்று ஆச்சாரியார் கோரும் சர்க்கார் இருந்திருக்கும்! அன்று அவரது ஆசை, வாலியை வீழ்த்த வேண்டும் என்பதன்றி வேறில்லை, இன்று விம்மிடுவது வீண் என்போம். இப்போதும், மூன்றாண்டுகட்கு முன்பு பேசியிருக்க வேண்டியதைப் பேசிக் கொண்டிருந்து பயன் இல்லை.

இன்று, ஆச்சாரியார் ஆங்கிலேயருக்கு, வேண்டுகோளோ, எச்சரிக்கையோ விடுவதை விட உண்மையிலேயே நாடு, ஜப்பானியரிடம் சிக்காமலிருக்க வேண்டுமென்ற எண்ணமிருப் பின், போர்க்காலத்திலே பேரம் பேசக்கூடாது என்று கூறிவிட்டு, களத்தை வேவல்கள் கவனிக்கட்டும், மக்களை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என்று கூறிவிட்டு, மற்றத் தலைவர்களுடன் கலந்து பேசி, மக்களிடையே, போரில் வெற்றிபெறுவதற்கான ஆர்வம் பிறக்கும் வேலையைச் செய்தலே, முறை என்போம்.

கல்கத்தாவிலே ஆச்சாரியார் பேசிய போது, தமது காங்கிரஸ் சகாக்களுக்குச் சொன் னார், ``பிரிட்டிஷ் ஆட்சியை இத்தனை வருஷ காலம் பொறுத்துக் கொண்டோம், இனி இரண்டாண்டு பொறுத்துக்கொள்வோம்’’ என்ற அருமையான போதனை! அத்துடன் ஒன்று சேர்த்து ஆச்சாரியாருக்கு நாம் அர்ப்பணம் செய்கிறோம், இந்த மூன்றாண்டுகளாக உமது சகாக்கள் ஒதுங்கி இருந்தது போல், இன்னும் இரண்டாண்டு, வெற்றி கிடைக்கும்வரை, ஒதுங்கி இருக்கட்டும், இந்தச் சமயத்திலே, அவர்களை உள்ளே புகுத்தும் முயற்சி வேண்ண்டாம்.’’

இதனை நாம், எட்டு கோடி முஸ்லீம், நாலு கோடி திராவிடர், ஆறு கோடிக்கு அதிகமான ஆதிதிராவிடர் சார்பாகக் கூறுகிறோம். ``பவதி பிஷாந்தேஹி’ என்று, சியாங்கே ஷெக்கிடமோ, ரூஸ்வெல்ட்டிடமோ சென்று பயனில்லை என்று சீரிய புத்திமதி கூறிய டாக்டர் அம்பேத்காரின் அறிக்கையையும், கண்டவர். காற்றாடியைப் பறக்க விடும் கபடம் வேண்டாம் என்று ஜனாப்ஜின்னா விடுத்த எச்சரிக்கையையும், கவனப்படுத்துகிறோம்.

--------------------------------------அறிஞர் அண்ணா- "திராவிட நாடு", 8-11-1942

16.9.13

ஆரியம் - மதம் - கடவுளுக்கு எதிராக அண்ணா எழுப்பிய கேள்விகள்

திராவிட நாடு இதழில் (16.1.1944)  மூட நம்பிக்கை, கடவுள், மதம், ஆரியத்திற்கு எதிராக அண்ணா எழுப்பிய கேள்விகள் வருமாறு:

1) நமது நாட்டில் சைவ சமயத் திற்கு முன்னால் ஏதாவது சமயம் இருந் ததா?
2) அது எது?
3) சைவ சமயம் என்பது எப்போது உண்டாயிற்று?
4) அதற்கு முதல் கர்த்தா அல்லது சமயாச்சாரி என்பவர் யாவர்?
5) சைவ சமயத்திற்கு மற்ற சமயத்தில் இல்லாத தனிக் கொள் கைகள் என்ன?
6) அதற்கு ஆதாரம் யாது?
7) சைவம் என்பது சிவன் என்னும் ஒரு உருவமுள்ள கடவுளை, வழிபடு கடவுளாகக் கொண்டதா?
8) அல்லது தனித் தெய்வமில் லாமல் ஏதாவது கொள்கைகளை மாத்திரமோ, அல்லது குணத்தை மாத் திரமோ அடிப்படையாகக் கொண்டதா?
9) சிவன் என்பது ஒரு கடவுள் பெயரா?
10) ஒரு தன்மையா?
11) ஒரு குணமா?
12) சிவனுக்கு உருவம் சொல்லப்படு கிறதே- அது ஏன்?
13)    அதற்குப் பெண்டு பிள்ளை களும் இருப்பதாக காணப்படுகிறதே, ஏன்?
14)    சைவ சமயம் சம்பந்தமான பல கடவுள்களுக்கு உள்ள ஆயிரக்கணக் கான பெயர்கள் வடமொழியில் இருப் பானேன்?
15)    ஆயிரக்கணக்கான கடவுள் களுக்கும் அவர்களது பெண்டு பிள்ளை களுக்கும் வேறு வேறு  பெயர்கள் ஏன்?
16)    சைவத்திற்கும், சமணக் கொள்கைகளுக்கும், பவுத்த கொள் கைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
17)    ஆரிய வேதத்தையும், ஜீவபலி வேள்வியையும் சைவம் ஒப்புக் கொள் ளுகின்றதா? மறுக்கின்றதா?
18)    சைவ சமயாச்சாரியர்கள் என் பவர்கள் ஆரிய வேதத்தையும், அதில் காணும் வேள்விகளையும் ஒப்புக் கொள்கின்றனரா? மறுக்கின்றனரா?
19)    சமணர்கள் வேத வேள்வியை நிந் தனை செய்தார்கள் என்றால் அது எந்த வேதத்தையும், வேள்வியையும்?
20)    சைவ சமயத்திற்குள்ள சித் தாந்தமும், ஆகமமும் வடமொழியா? தென் மொழியா?
21)    சைவ சமயத்தையே சேர்ந்த சைவக் கடவுள்கள் இருக்கும் தனித் தனி ஊர்களுக்கு தனித்தனி பெருமை ஏன்?
22)    சமயாச்சாரிகள் என்போர் களால் பாடப்பட்ட ஊர்களுக்கும், பாடப்பட்ட கடவுள்களுக்கும் மாத்திரம் அதிக மதிப்பு ஏன்?
23)    சைவ சமயாச்சாரியார்களும், சைவ சமய பக்தர்களும், பவுத்தர் களையும், சமணர்களையும் துன் புறுத்தியதேன்?
24)    துன்புறுத்தவில்லையானால் தேவாரம் முதலியவைகளில் அவர் களை கண்டபடி இழித்துக் கூறி வைத்திருப்பதேன்?
25)    வடமொழிக் கதைகளையும் வட மொழி புராணங்களையும் தள்ளி விட்டால் சைவர்களுக்கு ஏதாவது கடவுள் உண்டா?
26)    சைவத்திற்கு ஏகக் கடவுள் வணக்கமா? பல கடவுள் வணக்கமா?
27)    எத்தனைக் கடவுள்கள் இது வரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன?
28)    இதோடு தீர்ந்ததா? இனியும் உண்டாகுமா?
29)    சைவ சமயத்திற்கு கோயில் கொள்கை உண்டா?
30)    விக்ரக ஆராதனை உண்டா?
31)    வேறு ஒருவன் அர்ச்சகனாக இருந்துதான் கடவுளை வணங்க வேண்டுமா?
32)    ஆகிய இவைகளுக்கு ஆதாரம் ஏது?
33)    சைவர்களில் ஒவ்வொருவரும் அவரவர் வணங்க வேண்டிய கடவுளை நேரில் பூசனை புரிய அவரவருக்கு உரிமையுண்டா?
34)    சைவத்தில் ஜாதி வித்தியாசம் உண்டா?
35)    சைவக் கோயில்களில் இப் போது ஜாதி வித்தியாசம் பாராட்டப்படு கின்றதா?
36)    அது சைவத்திற்கு முரணானது அல்லவா?
37)    முரணானால் அம்முரணுக்கு இதுவரை சைவர்கள் ஏதாவது பரிகாரம் செய்தார்களா?
38)    கடவுளை வணங்க கற்பூரம் கொளுத்தி வைத்து வணங்க வேண்டும் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? எந்த ஆகமத்தில் சொல்லுகிறது?
39)    ஏதாவது ஓர் ஆகமத்தில் சொல்லப்பட்டால் அது  ஆரியர்களின் ஆகமமா? தமிழர்கள் ஆகமமா?
40)    கற்பூரம் கொளுத்தும் வழக்கம் எது முதல் அனுஷ்டிக்கப்பட்டு வரு கிறது?
41)    பிள்ளையார் என்ற ஒரு கட வுளுக்குச் சைவத்தில் இடம் இருக் கின்றதா?
42)    கந்தபுராணத்தைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றனரா?
43)    ஒப்புக் கொள்ளுவதானால் அது சைவத்தில் பொருந்தியதுதானா?
44)    சைவர்கள் சிவரகசியத்தையும் சிவ மகாபுராணத்தையும், சிவபராக்கிர மத்தையும் ஒப்புக் கொள்ளுகின்றார் களா?
45)    நால்வர்கள் பிரம்மாவையும், விஷ்ணுவையும் ஒப்புக் கொள்ளுகின் றார்களா?
46)    அவை தனித்தனி கடவுள் களா?
47)    நால்வர்கள் விஷ்ணுவைத் தாழ்த்திப் பாடி இருந்தால் அது மதத் துவேஷம், அல்லவா?
48)    மனு ஸ்மிருதியையும், பராசர ஸ்மிருதியையும் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
49)    சமணர்கள் கழுவேற்றப்பட்ட தைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின் றார்களா? கோயில்களில் இன்னமும் திரு விளையாடல் புராண கதை உற்சவங்கள் நடக்கின்றதை மறுக்கின்றார்களா?
50)    திருநீறு எதற்காகப் பூசுவது?
51)    இலிங்கத்திற்கும், ஆவுடையா ருக்கும் சொல்லும் கதையை ஒப்புக் கொள்ளுகின்றார்களா, இல்லையா?
52)    ஒப்புக் கொள்ளாவிட்டால் அந்தப் பழக்கம் உள்ள வடமொழி ஆதா ரத்திற்கு என்ன பதில் சொல்லக் கூடும்?
53)    இலிங்கம் எனும் வார்த்தை என்ன பாஷை? அதற்கு என்ன அர்த்தம்? எந்த ஆதாரப்படி?
54)    கைலயங்கிரி எது? சுப்பிரமணி யன் எது? கந்தன் எது? குமரன் எது?
55)    மலையரசன் மகனென்றால் என்ன?
56)    இப்பொழுது இதுவரை நடந்து வந்த கோயில் முறை, பூசை முறை, உற்சவ முறை முதலியவைகளால் ஏற்பட்ட நன்மைகள் என்ன?
57)    இவை இப்படியே நடக்க வேண் டியது தானா?
58)    இவைகளின் பேரால் பல லட்சம் ரூபாய்கள் செலவாகின்றதே நியாயம் தானா?
59)    அதை நிறுத்தி அச்செலவையும், காலத்தையும் வேறு வழியில் திருப்ப லாமா? அல்லது இப்படியே இருக்க வேண்டுமா?
60)    சைவர்கள் மேல்லோகத்தை ஒப்புக் கொண்டார்களா?
61)    மறுபிறப்பை ஒப்புக் கொள்ளு கின்றார்களா?
62)    திதிகளை ஒப்புக் கொள்ளுகின் றார்களா?
63)    பிராமணர்களை ஒப்புக்கொள்ளு கின்றார்களா?
64)    சமயாச்சாரிகளின் அற்புதங் களை எல்லாம் அப்படியே நடந்ததாகவே ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
65)    மற்றும் சைவப் புராணங்களில் உள்ள எல்லா அற்புதங்களையும் நடந்த தாகவே ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
66)    ஒவ்வொரு கோயிலுக்கும், ஒவ் வொரு சாமிக்கும் ஏற்பட்ட ஸ்தல மூர்த்தி, தீர்த்த புராணங்களை உண்மை என் பதற்காக ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
67)    சைவர்களுக்குச் சரியான முறை எது?
68)    சைவர்களுக்கு அல்லது சைவ சாமிகளுக்குத் தேவதாசி முறைகள் உண்டா?
69)    வருணாசிரமம் உண்டா?
70)    உண்டென்றால் ஆதாரம் எது?
71)    இல்லை என்றால் ஆதாரம் எது?
72) இப்பொழுது அமலில் இருப் பதற்குக் காரணம் என்ன?
73)    சைவ மடங்கள் எதற்கு?
74)    அவை இதுவரைச் சாதித்த தென்ன?
75)    அம்மடங்கள் இனியும் அப்படியே இருக்க வேண்டியதுதானா?
76)    இம்மடங்களைத் திருத்த இதுவரை எந்த சைவராவது முயற்சி செய்தது உண்டா?
77)    இப்பொழுதுள்ள சைவர்களில் சைவ சமயத்தைப் பற்றி அபிப்ராயம் சொல்ல நிபுணர் யார்?
78)    அருகதை உடையவர் யார்?
79)    பாரதம், இராமாயணம், பாகவதம் முதலிய வைணவப் புராணங்களில் வரும் சிவனைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளு கின்றார்களா?
80)    வடமொழியும், அம்மொழியில் உள்ள நூல்களும் இன்றி சைவத்தை விளக்க முடியுமா?

15.9.13

அறிஞர் அண்ணா தீட்டிய அந்த வசந்தம்

          அறிஞர் அண்ணா தீட்டிய அந்த வசந்தம்

அண்ணாவிடம் - கி. வீரமணி வேண்டுகோள்



(தந்தை பெரியார் பிறந்தநாளை ஒட்டி விடுதலை மலருக்குக் கட்டுரை வேண்டி அண்ணா அவர்களிடம் கேட்டேன்.

நான் கொஞ்சம் அதிகமாகவே அவருக்குத் தொல்லை  கொடுத்தேன்.

ஏனென்றால், அவருக்கு அவ்வளவு நெருக்கடிகள். அவர் பதவிக்கு வந்து கொஞ்ச நாள் ஆகிறது. 1967 மார்ச்சிலே அண்ணா அவர்கள் பதவிக்கு வந்தார். அடுத்து ஆறு மாதத்தில் செப்டம்பரில் அய்யா பிறந்த நாளை ஒட்டி அவரிடம் மலருக்குக் கட்டுரை கேட்டேன். செப் டம்பர் மாதத்தில் ஏராளமான கோப்பு களைப் பார்த்துக் கொண்டிருந்தார். மற்றவர்களையும் பார்த்துக் கொண்டு இருந்தார். நான் போய் அண்ணா அவர்களிடம் நின்றவுடனே, கட்டுரை தானே  எழுதி கொடுத்துவிடுகிறேனப்பா என்று ரொம்ப மகிழ்ச்சியாகச் சொன்னார்.

அண்ணா அவர்கள் அடுத்து மதுரைக்குச் சென்றார். அண்ணா அவர்களுக்குத் தெரியும் செப்டம்பர் 17 என்றால் அவருக்குத் தெரியும். அய்யா அவர்களுடைய விடுதலை மலரை 16ஆம் தேதியே வெளியிட்டுவிடுவோம். ஆகவே குறிப்பிட்ட காலத்திற்குள் மலர் வர வேண்டியது முக்கியம்.

மதுரை திருமங்கலம் என்ற திருநகர் பகுதிக்குச் சென்று ஆதித்தனார் அவர் களுடைய வீட்டில் அண்ணா அவர்கள் தனியே அமர்ந்து கட்டுரையை எழுதி விடுதலை அலுவலகத்தில் என்னிடம் நேரடியாகக் கொடுக்கும்படி ஒரு ஆளையே போட்டு அனுப்பினார்.

அண்ணா அவர்கள் எழுதிய அந்த கட்டுரையைப் படித்து விட்டு அய்யா அவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார். அந்த கட்டுரைக்குத் தலைப்பே அந்த வசந்தம். அந்தக் கட்டுரை வருமாறு:)

கலவரம் நடக்காத பொதுக்கூட்டம் எது?

எனக்கென்று ஒரு வசந்தகாலம் இருந்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு  ஆண்டு பலவற்றுக்குப் பிறகு  அந்த வசந்த காலத்தை நினைவிலே கொண்டு இன்றையக் கவலைமிக்க நாள்களிலே எழ முடியாத புன்னகையைத் தருவித்துக் கொள்ளுகிறேன். பெரியாருக்கு அந்த வசந்த காலமும் தெரியும்; இன்று நான் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதால் எழுந்துள்ள கவலையும் நன்கு புரியும்.

வசந்த காலம் என்றேனே, அந்த நாள்களில் நான் கல்லூரியிலிருந்து வெளியேறி, அவருடன் காடுமேடு பல சுற்றி வந்த நிலை. அந்தக் காடு மேடு களில் நான் அவருடன் தொண்டாற்றிய போது, வண்ண வண்ணப் பூக்கள் குலுங்கி மகிழ்வளித்ததைக் கண்டேன்; நறுமணம் எங்கும் பரவிடக் கண்டேன்.
அப்போது, கலவரம் எழாமல் ஒரு பொதுக்கூட்டத்தை ஒழுங்காக நடத்தி முடித்திட முடிந்தால் போதும், பெரிய வெற்றி என்றே பெருமிதம் தோன்றும். புறப்படு முன்னர், தலைபோகும்  தாடி போகும் தடி போகும்  உயிர்போகும் என்ற மிரட்டல் கடிதங்களைப் படித்திட வேண் டிய நிலை.

பெரியாரால் திருந்திய

தமிழரோ பலப்பலர்!


அண்ணாதுரை! இதைப் பார்த்தாயா! என்று ஒரு கடிதத்தை வீசுவார். ஆமாமய்யா! என்று ஒரு கடிதத்தைத் தருவேன். வருகிறாயா? என்று என்னைக் கேட்க மாட்டார்  வருவேன் என்பது அவருக்கு நன்கு தெரியுமாதலால். செல்வோம்; பெரியாரின் பேருரை நிகழ்த்தப்படும். வந்தவர்களில், உருட்டல், மிரட்டல் கடிதம் எழுதியவர் இருந் திருப்பின் அடுத்த கூட்டத்திற்கு அவர் அய்யாவிற்காக மாலை வாங்கிக் கொண்டு தான் வருவார்! அத்தகைய தெளிவும் வாதத்திறமையும் பேச்சில் கிடைக்கும். அத்தகைய தெளிவுரை பெற்றுப் பெற்று, தமிழரில் பலர், பலப்பலர் திருந்தினர் என்பது மட்டுமல்ல, தமிழகத்திலேயே ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுவிட்டிருக்கிறது.

வரலாற்றில் தனி இடம் பிடித்தவர்!

ஒருவர் புறப்பட்டு ஓயாது உழைத்து, உள்ளத்தைத் திறந்து பேசி, எதற்கும் அஞ்சாது பணியாற்றி ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் கொள்ளச் செய்வதில் வெற்றி பெற்ற வரலாறு இங்கன்றி வேறெங் கும் இருந்ததில்லை.
அந்த வரலாறு தொடங்கப்பட்ட போது நான் சிறுவன். அந்த வரலாற்றிலே புகழே டுகள் புதிதுபுதிதாக இணைக்கப்பட்ட நாள்களிலே ஒரு பகுதியில் நான் அவருடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறேன். அந்த நாள்களைத்தான் என் வசந்தம் என்று குறிப் பிட்டிருக்கிறேன். பெரியாருடன் இணைந்து பணியாற்றியவர், பற்பலர். அவருடன் மற்ற பலரைவிட இடைவிடாது இருந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தவன் நான். அந்த நாள்கள் எனக்கு மிகவும் இனிமையான நாள்கள்; இன்றும் நினைவிலே கொண்டு வரும்போது இனிமை பெறுகின்றேன்.

எதையும் தாங்கும் இதயத்தை எனக்குத் தந்தார்!

எத்தனை எத்தனையோ கருத்துகளை உரையாடலின் மூலம் தந்திருக்கிறார். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என் பதை நான் கற்றுணரும் வாய்ப்பும் தந்தார். பொதுத் தொண்டாற்றுவதில் ஓர் ஆர்வமும், அகமகிழ்வும், மனநிறைவும் பெற்றிடச் செய்தார்.

கோபத்துடன் அவர் பலரிடம் பேசிடக் கண்டிருக்கிறேன்; கடிந்துரைக்கக் கேட்டிருக் கிறேன்; உன்னை எனக்குத் தெரியும் போ! என்று உரத்த குரலில் கூறியதைக் கேட்டி ருக்கிறேன்; ஒருநாள் கூட அவர் என்னிடம் அவ்விதம் நடந்து கொண்டதில்லை. எப் போதும் ஒரு கனிவு, எனக்கென்று தனியாக வைத்திருப்பார். என்னைத் தனது குடும்பத் தில் பிறவாப் பிள்ளை எனக் கொண்டிருந்தார்.

தமிழன் வரலாற்றில் முக்கியக் கட்டம்!

நான் கண்டதும் கொண்டதும் அந்த ஒரே தலைவரைத்தான்.
இப்போது நான் உள்ள வயதில் அவர் இருந்தார். நான் அவருடன் இணைந்த போது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு.

அதற்குமுன் முப்பது ஆண்டுகள் அவர் பணியாற்றி வந்திருக்கிறார்.
இந்த ஆண்டுகள் தமிழரின் வரலாற்றிலே மிக முக்கியமான ஆண்டுகள். திடுக்கிட வைக்கிறாரே! திகைப்பாக இருக்கிறதே! எரிச் சலூட்டுகிறாரே! ஏதேதோ சொல்கிறாரே! என்று கூறியும், விட்டு வைக்கக் கூடாது! ஒழித்துக் கட்டியாக வேண்டும்! நானே தீர்த்துக் கட்டுகிறேன்! என்று மிரட்டியும் தமிழகத்துள்ளாரில் பலர் பேசினர்; ஏசினர்; பகைத்தனர்; எதிர்த்தனர்; ஏளனம் செய்தனர்; மறுப்பு உரைத்தனர். ஆனால், அவர் பேச்சைக் கேட்ட வண்ணம் இருந்தனர். மூலையில் நின்றாகிலும், மறைந்திருந்தாகிலும்! அந்தப் பேச்சு அய்ம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்தபடி இருந்தது. எதிர்த்தவர்கள், ஏளனம் புரிந்தவர்கள், ஏனோதானோ என்று இருந்தவர்கள் தத்தமது நிலை தன்னாலே மாறிடக் கண்டனர்; கொதித்தவர்கள் அடங்கினர்; மிரட்டினோர் பணிந்தனர்; அலட்சியம் செய்தோர் அக்கறை காட்டினர்! அவருடைய பேச்சோ  அது தங்கு தடை யின்றி வேகம் குறையாமல் பாய்ந்தோடி வந்தது  மலைகளைத் துளைத்துக் கொண்டு, கற்களை உருட்டிக் கொண்டு, காடு கழனிகளை வளம் பெறச் செய்து கொண்டு ஓசை நயத்துடன்  ஒய்யார நடையுடன்! அங்கே பேசுகிறார், இங்கே பேசுகிறார், அதைக் குறித்துப் பேசுகிறார், இது குறித்துப் பேசுகிறார்  என்று தமிழகம் இந்த அய்ம்பது ஆண்டுகளாகக் கூறி வருகிறது.

பெரியார் வாழ்வு முழுவதும் உரிமைப் போரே!

மனதிற்பட்டதை எடுத்துச் சொல்வேன்  எது நேரிடினும்  என்ற உரிமைப்போர் அவருடைய வாழ்வு முழுவதும், அதிலே அவர்கண்ட வெற்றி மிகப் பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று அனைவரும் பெற்றுள்ளனர் அந்த வெற்றியின் விளைவு களை. இந்தத் தமிழகத்தில் தூய்மையுடன் மனத்திற்குச் சரியெனப் பட்டதை எவரும் எடுத்துரைக்கலாம் என்ற நிலை உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது. அறிவுப் புரட்சியின் முதல்கட்ட வெற்றி இது! இதற்கு முழுக்க முழுக்கப் பொறுப்பாளர் பெரியார்! இந்த வெற்றி கிடைத்திட அவர் ஆற்றிய தொண் டின் அளவு, மிகப் பெரியது.

பெரியார் கண்ட தமிழகம்!

தமிழகத்தில் இன்று அவரால் ஏற்பட் டுள்ள இந்த நிலை இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாதது. பிற பகுதியினர் இதுபற்றிக் கேள்விப்படும்போது, வியர்த்துப் போகின்றனர். அப்படியா!  முடிகிறதா! நடக்கிறதா!  விட்டு வைத் திருக்கிறார்களா!  என்று கேட்கிறார்கள்  சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு.
அரித்துவாரம், கல்கத்தா, பாட்னா, கான்பூர், காசி, லாகூர், அலகாபாத், அமிர்தசரஸ் மேலும் இவை போன்ற நகர்களில் என்னையும் உடன் அழைத்துக் கொண்டு பெரியார் சுற்றுப்பயணம் செய்தபோது, ஒவ்வோர் ஊரிலும் இதுபோலத்தான் கேட்டனர். யார்? அந்த ஊர்களிலே உள்ள பகுத்தறிவுவாதிகள்!

அந்த இடத்துப் பகுத்தறிவுவாதிகள் படிப்பார்கள்  பெரிய பெரிய ஏடுகளை; எழுதுவார்கள் அழகழகான கட்டுரை களை; கூடிப் பேசுவார்கள் சிறிய மண்ட பங்களில், போலீசு பாதுகாப்புப் பெற்றுக் கொண்டு! இங்கு?
பழைமையின் பிடிவாதம் பொடிப்பொடியானது!

இங்கா இவர் பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழைமை உண்டா? எதைக்கண்டு அவர் திகைத்தார்? எதற்கு அவர் பணிந்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது?
ஏ அப்பா! ஒரே ஒருவர், அவர் நம்மை அக்குவேறு ஆணிவேறாக எடுத்தெடுத்து வீசுகிறாரே என்று, இந்நாட்டை என்றென்றும் விடப்போவதில்லை என்று எக்காளமிட்டுக் கொண்டிருந்த பழைமை அலறலாயிற்று! புதுப்புதுப் பொருள் கொடுத்தும், பூச்சுமெருகு கொடுத்தும் இன்று பழைமையின் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. என்றா லும், விழுந்த அடியால் அடித்தளம் நொறுங்கிப் போய்விட்டிருக்கிறது என்பதை அறியாதவர் இல்லை!
எனவேதான் பெரியாருடைய பெரும் பணியை, நான் ஒரு தனி மனிதனின் வரலாறு என்றல்ல; ஒரு சகாப்தம்  ஒரு கால கட்டம்,  ஒரு திருப்பம் என்று கூறுவது வாடிக்கை.

அக்கிரமம் தென்படும்போது, மிகப் பலருக்கு அது தன்னைத் தாக்காதபடி தடுத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமும், ஒதுங்கிக் கொள்வோம் என்ற பாதுகாப்பு உணர்ச்சியும்தான் தோன்றும்; எதிர்த்து நிற்க வேண்டும் என்ற எண்ணம் எளிதில் எழுவதில்லை.

நேர்மைக்காகப் போராடிய பெரியார்!

பெரியார் அக்கிரமம் எங்கு இருந்திடக் கண்டாலும், எந்த வடிவிலே காணப் படினும், எத்தனை பக்கபலத்துடன் வந்தி டினும் பெரியார் அதனை எதிர்த்துப் போராடத் தயங்குவதில்லை.

அவர் கண்ட களம் பல; பெற்ற வெற்றிகள் பலப்பல! அவர் தொடுத்த போர் நடந்தபடி இருக்கிறது! அவர் வயது 89! ஆனால் போர்க் களத்திலேதான் நிற்கின்றார்!!

அந்தப் போரிலே ஒரு கட்டத்தில் அவருடன் இருந்திடும் வாய்ப்பினைப் பெற்ற நாள்களைத்தான் வசந்தம் என்று  குறிப்பிட்டேன். மேலும் பல ஆண்டுகள் அவர் நம் முடன், நமக்காக, வாழ்ந்திருக்க வேண் டும். தமிழர் வாழ்வு நல் வாழ்வாக அமை வதற்கு, பன்னெடுங் காலமாக இருந்து வரும் கேடுகள் களையப்படுவ தற்கு, அவருடைய தொண்டு தொடர்ந்து அளிக்கப்பட்டு வரும் என்பதில் அய்ய மில்லை. வாழ்க பெரியார்!

-----------------------------------பேரறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியார் 89ஆவது ஆண்டு விடுதலை மலருக்கு எழுதிய கட்டுரை

9.9.13

ஆரியக் கடவுள்கட்கு ஓர் அறைகூவல்! - அறிஞர் அண்ணா

புலித்தோல் போர்வை - அறிஞர் அண்ணா

இந்து மதத்திலே உள்ள இழுக்குகளைப் போக்கத்தான் வேண்டும் -_- அழுக்கு மூட்டைகளை ஒழிக்கத்தான் வேண்டும். ஜாதி பேதங்களைப் போக்கத்தான் வேண்டும் _- பழைய ஏற்பாடுகளை ஒழிக்கத்தான் வேண்டும். - இந்து மதத்திலே உள்ள கறைகளைப் போக்க வேண்டுமேயல்லாமல், அதையே ஒழிப்பது, அல்லது, நான் இந்து அன்று என்று கூறுவது கூடாது என்று சிலர் போவதுண்டு.

இஸ்லாமியருக்கு இடங்கொடுக்கக் கூடாது என்று எச்சரிப்பர், இந்து மார்க்கத்திலே பார்ப்பன ஆதிக்கம் இருப்பின் அதை ஒழிக்க முனைவோம், ஆனால், இந்து மார்க்கத்தை விட்டுவிடக் கூடாது என்று பேசுவர். இந்துக்களுக்கே இந்தியா சொந்தம்; -இந்தியாவில் இந்துக்களின் ஆட்சியே ஏற்படவேண்டும் என்று முழக்கமிடுவர். இவர்கள் வீரசவர்க்காரின் இராமசேனையினர்.
பாகிஸ்தானை எதிர்க்கப் படை திரட்டும் இவர்கள், தமதிஷ்டம் போல், இந்துஸ்தான் ஆட்சி ஏற்படுத்தினால், என்ன காண்போம் என்பதற்கு, இதுபோது ஓர் அருமையான எடுத்துக்காட்டுக் கிடைத்திருக்கிறது.
தந்திரத்தால் ஊரை ஏமாற்றித் திரிந்த ஒருவன், கழுதைமீது புலித்தோலைப் போர்த்து, இரும்புச் சங்கிலியால் கட்டி வீட்டுக்குள் வைத்துக்கொண்டு, வீதியில் வருவோர் போவோரிடம், புலியைக் கட்டிப்பழக்கும் என்னிடம் எந்தப் போக்கிரிப் பயலாவது வாலாட்ட முடியுமா? என்று கூறி மீசை முறுக்கி வந்தானாம். நெடுநாட்கள், அவன் கூறினதை நம்பினர் மக்கள். ஓரிரவு பூர்ணசந்திரன் அழகுடன் பிரகாசித்தான். வீதியிலே போன பெண் கழுதை தன் பெருத்த குரலெடுத்துப் பாடிற்று. உள்ளே புலித்தோல் போர்த்துக்கிடந்த ஆண் கழுதைக்குக் குஷி பிறந்துவிட்டது. அவ்வளவுதான், அது ஆரம்பித்தது பதில் கீதம்பாட. தந்திரக்காரன் தடிகொண்டு தாக்கினான். கீதம் அதிகப்பட்டது, கும்பல் கூடிவிட்டது, உள்ளே சிலர் சென்று பார்க்க, புலித்தோல் கீழே புரளக் கழுதையின் முதுகில் தடியடி நடந்திடக் கண்டு, தந்திரத்தால் ஊரை ஏய்த்தவனைக் காதைப் பிடித்திழுத்துக் கன்னத்திலறைந்தது. ஏடா போக்கிரி, புலித்தோல் போர்த்திய கழுதையைக் கொண்டா ஊரை ஏமாற்றி வந்தாய் என்று கண்டித்தனர் என ஒரு கதை கூறுவர்.
இந்த மார்க்கத்தைப் புனிதமாக்க, அவ்வப்போது தோன்றிய அடியார்கள், மகாத்மாக்கள், மகரிஷிகள், பாஷ்யக்காரர்கள், ஆச்சார்ய புருஷர்கள் ஆகியோர் செய்ததைவிட, அதிமேதாவித்தனமான காரியத்தைச் செய்யும் திறமை தமக்குண்டு என்று பேசிக்கொண்டுள்ள, இந்து மகாசபைத் தலைவருள் ஒருவரான பாய் பரமானந்தர் சின்னாட்களுக்கு முன்பு, டில்லி சட்ட சபையிலே, சட்ட மெம்பர், சர். சுல்தான் அகமத், இந்துக்களிலே பெண்களுக்கும் சொத்துரிமை தரப்படவேண்டும் என்ற மசோதாவை ஆதரித்துப் பேசுகையிலே, இந்து மார்க்கத்தைப் புனிதமாக்கி, இஸ்லாமியரின் ஆதிக்கத்தை ஒடுக்கப்போவதாக ஓங்காரக்கூச்சலிடும் பரமானந்தர், மிகுந்த சோகமுற்று, முகத்தைச் சுளித்துக் கொண்டு, மார்பிலே அடித்துக்கொண்டு அழுது, அத்தீர்மானத்தை எதிர்த்தார். பெண்களுக்குச் சொத்துரிமை கூடாதாம்! ஜாதி பேதமெனும் பித்தத்துடன், மாதரை இழிவு செய்யும் மடைமையும், இந்து மார்க்கமணியின் ஒளியன்றோ, அதை எங்ஙனம், பரமானந்தர் கைவிடுவார்? ஆளப்பிறந்தவன் ஆண் மகன், அவனிஷ்டத்துக்கு, ஆடிப் பிழைக்க வேண்டியவள்தானே பெண்.
அதோ, தலைமீது கூடையுடன் செல்லும் தையல் யார் தெரியுமோ? மகா உத்தமி, பெயர், நளாயினி.
கூடையிலே என்ன தெரியுமோ? அவள் புருஷன், அவனோர் ரிஷி, குஷ்டத்தால் வாதாடுகிறான், எனவே, அவனை அப்பத்தினி கூடையில் உட்காரவைத்துத் தூக்கிச் செல்கிறாள். தேவாலயத்துக்கா? இல்லை. திருக்குளத்துக்கா? இல்லை. வேறோர் ரிஷியின் பர்ணசாலைக்கா? இல்லை, இல்லை, அவருடைய தாசி வீட்டுக்கு!!
இந்து மார்க்கம் புனிதமானதாகச் சோலைகளிலே பர்ண சாலைகளும், அங்கு வேத ஒலியும் வேள்விப் புகையும் இருந்த அந்த நாட்களிலே, பெண்களின் நிலைமை, எப்படி இருந்ததென்பதற்கு, நளாயினி கதை ஓர் எடுத்துக்காட்டு. புருஷனின் மனதின்படி நடப்பதன்றி வேறு உரிமை கிடையாது. அத்தகைய அதியற்புதமான மார்க்கத்தின் தலைவர், மாதருக்குச் சொத்துரிமையா தருவார்.
அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பு ஏன்? கல்லென்றாலும் கணவன், புல் என்றாலும் புருஷன். பெண்களுக்குச் சுதந்திரம் கொடுத்தால், பேராபத்து வருமே, என்ற இன்னோரன்ன கூற முடியாதல்லவா, பெண்களுக்குச் சொத்துரிமை கொடுத்து விட்டால், உயர்வகுப்பென்று உறுமிக் கொண்டு, பிறரை அடக்கியாள்வதும், ஆண் என்று ஆர்ப்பரித்துப் பெண்ணை இழிவு செய்வதுந்தானே, பரப்பிரம்ம சொரூபிகளின் புனித இந்து மார்க்க நீதிகள். அதை இழக்க எப்படிப் பரமானந்தர் துணிவார், பாவம்.
1943இல், உலகு அதிவிரைவில் முன்னேறிய பிறகு, இந்த நாற்றத்தை, நாலாறு பேர் முன்னிலையில், வெட்கமின்றிப் பேசிட முன் வந்தாரே இந்த இந்து மகாசபை வீரர், இவரை எந்தக் கண்காட்சிச்சாலைக்கு அனுப்புவது, இந்து ஆட்சியிலே மாதருக்கு இதுதான் கிடைக்கும்.
ஒரே குடும்பத்தின் மணிகளிலே, ஒன்று மாணிக்கமாக்கப்பட்டு, மற்றொன்று, மண்ணாங்கட்டி-யாக்கப்படுகிறது. சொத்துத் சுதந்திரம் ஆணுக்கு. சமையற்கட்டிலே வேகவும், சயனக் கிரஹத்திலே சாயவும், பெண். இந்த அநீதியை நீக்கி, பெண்களுக்குச் சொத்துரிமைதர, சீர்திருத்தவாதிகள், நீதிவான்கள், வற்புறுத்திப் பேசத்தொடங்கி, ஆண்டுகள் பலவாயின. இன்று, இதை எதிர்க்கும் அவ்வளவு பஞ்சாங்கப்புத்தி படைத்தவராகத்தான், இந்து மகா சபைத்தலைவர் இருக்கிறார், இதைத் தீவிரவாதிகள் கவனிக்க வேண்டுகிறோம்.
வாதாடினார் அவ்வேதியர். விசித்திரமான வாதம், பெண்களுக்குச் சொத்துரிமை தந்தால், குடும்பச் சொத்துரிமை தந்தால், குடும்பச் சொத்துப் பங்கிடப்பட்டுச் சிதறுமாம், எவ்வளவு பேதைமை பாருங்கள். ஒரு குடும்பத்திலே எட்டு ஆடவர் பிறந்து சொத்துரிமையால், பாகப்பிரிவினை செய்து கொள்கின்றனர். ஏர் ஒருவனுக்கு, எருமை ஒருவனுக்கு, இடுப்பொடிந்த பசு மற்றொருவனுக்கு, கூரை கெட்டவீடு ஒருவனுக்கு, கரம்பான வெளி மற்றொருவனுக்கு, என்று சொத்துப் பிரிவினை நடக்கிறது, பாய் பரமானந்தரின் வாய் அது சமயம் மூடிக்கிடக்கிறது. ஆணுக்குத் தருவதுபோலப் பெண்ணுக்கும் சொத்துரிமை தர வேண்டும் என்று கேட்டால், தேள் கொட்டிய மந்தியின் தந்தினம் போல் ஆடுகிறார். மாதரை இழிவு செய்யும் இம்மகானுபவருக்கு, அங்கேயே ரேணுகா எனும் அம்மையார் சரியான சவுக்கடி கொடுத்தார். இந்து மகாசபையின், யோக்யதை எப்படி இருக்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொண்டனர்; புலித்தோல் கீழே வீழ்ந்ததும், தந்திரக்காரனின் சூது, ஊராருக்குத் தெரிந்த கதை போல்.

ஆரியக் கடவுள்கட்கு ஓர் அறைகூவல்!

மூவரே! தேவரே! சூரியசந்திராதியரே! இந்திரனே, வாயு வருண அக்னியாதிகளே! கந்தா, விநாயகா! காளி! வீரபத்திரா! நாரதா! மற்றுமுள்ள ஆரியக் கடவுள்களே! உங்கள் அனைவரையும், சுயமரியாதைக்காரர்கள், கண்டிக்கிறார்கள், மூடமதியிலே முளைத்த காளான்கள் என்று கூறுகின்றனர், ஆரியருக்காக கற்பிக்கப்பட்ட கரையான்கள் என்று செப்புகின்றனர், மக்களுக்குள் பேதத்தையும் பிளவையும் உண்டாக்கி, ஓர் இனம் உண்டு கொழுத்து ஊராள உற்பத்தி செய்யப்பட்ட உதவாக்கரைக் கருத்தோவியங்கள் என்று உங்கள் அனைவரையும் உரைக்கின்றனர்.

உங்களுக்கும் உக்கிரம் பிறக்கக்கூடுமானால், ஓடி வாருங்கள் பூலோகத்துக்கு, காளைமீது ஏறு, கருடனைத் தேடு, அன்னத்தை நாடு, மயிலைப்பிடி, காக்கையைக் கூப்பிடு என்று உங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள வாகனாதிகளை வர்ணிக்க இங்கு காகிதாதிகள் இல்லை. ஆகவே, தத்தம் வாகனமேறி தயக்கமின்றி வாருங்கள்! பாருங்கள், அசாமிலே குண்டு விழுந்து விட்டது! நீங்களோ, நெருப்பைக் கக்கும் கண், நீண்ட சூலம், சக்கரம், கதை தண்டம், வாளாயுதம் வேலாயுதமாகிய ஏதேதோ தாங்கி நிற்பதாக ஏடுகள் கூறுகின்றன. எடுங்கள் உமது ஆயுதத்தை, விடுங்கள் ஜப்பானியர் மீது! ஆமாம்! பிரிட்டிஷாருக்கும், அமெரிக்கருக்கும், சீனருக்கும், இந்நாட்டுச் சேனையினருக்கும், ஏன் வீண் சிரமம், கிளம்பி வாருங்கள், வானவீதியிலே நின்று உமது ஓங்காரக் கூச்சலைக் கிளப்புங்கள், ஓட்டுங்கள், வேட்டுக்காரரை!
இல்லையேல், பிரிட்டிஷ் அமெரிக்க சீன, இஸ்லாமிய, திராவிட நாட்டவரின் வேட்டுகள் வேலைசெய்து, அதன்பின்னர் விரோதி ஓடிய பிறகு, நீங்கள் அதிர்வேட்டு கிளப்பு, அக்கார வடிசல் போடு, ஆடும் அணங்குகளைக் கொண்டுவா, ஆறுகால பூசையைச் செய்து வா, ஆனைவாகன உற்சவம் செய், ஆபரணாதிகளைப் பூட்டு, என்று மட்டும் கேட்டு, ஆரியரை _ எதிரிகளை ஓட்ட என்ற அவசரத் தபாலை எழுதி, தரலோகம், பிரம்மலோகம், இந்திர லோகம், கைலாயம், வைகுண்டம் என்ற விலாசமிட்டு தபால்களிலே சுயமரியாதைக்காரர்கள் போட்டால், இப்படி ஊர்களும் இல்லை, பேர்களும் கிடையாது என்று போஸ்ட் மாஸ்டர் கூறி, குப்பையில் போட்டார் கடிதத்தை. ஆனால் குளித்து முடித்ததுமோ, குளத்தங்கரைக்குப் போகும்போதோ, குளிக்கும் முன்போ, குடல்சரியத் தின்றபிறகு சம்போ மகாதேவா! முருகா! விநாயகா! என்று அவரே அழைக்க அப்படி ஓர் ஆசாமியும் இல்லை, இருப்பதாகக் கூறப்படுவதும் கிடையாது என்பது அறியாமையா? என்று சுயமரியாதைக்காரன் கேட்பல் வேதசாஸ்திர இதிகாசங்கள், படித்துவாழும் வேதியக்கூட்டம் என்ன பதில் கூறும்?

                                     ----------------------- அறிஞர் அண்ணா (திராவிடநாடு - 8.11.1942)