Search This Blog

Showing posts with label பொதுவானவை. Show all posts
Showing posts with label பொதுவானவை. Show all posts

18.4.13

பெரியார் திடலில் புத்தகச் சங்கமம் நூல்கள் பற்றிய சிந்தனை


எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்டபோது எந்த விடுதி நூலகத் திற்கு அருகில் உள்ளது எனக் கேட்டாராம்
                               ------------------------------- டாக்டர் அம்பேத்கர்


தான், தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம்
                            ------------------------------------------------ பகத்சிங்

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும் போது, வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்குப் புத்தகம் வாங்குவாராம்
                                  ------------------------------------- சார்லி சாப்ளின்

எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப் படுகின்றனவோ, அங்கே விரை வில் நல்ல மனிதர்களும் எரிக்கப் படுவார்கள்.              
                              ------------------------------------- சேகுவாரா
ஒரு புத்தகத்தை திறக்கும்போது உலகினை நோக்கிய ஒரு சன்னலைத் திறக்கிறோம்.
                         ------------------------------- தோழர் சிங்காரவேலர்

வாசிப்பதற்கு ஒரு புத்தகத்தைத் தேடும் மனிதனுக்கும், சோர்வில் கண் அயரப் புத்தக வாசிப்பை நாடும் மனிதனுக்கும் வேறுபாடு உண்டு.
                              -------------------------------------- சி.கே.செஸ்டர்டன்
புத்தகங்கள் மிகவும் ஆபத் தானவை. அவற்றின் மேல் கவனம், இது உங்கள் வாழ்வை மாற்றி விடக்கூடும் என எச்சரிக்கை வாசகம் பொறிப்பது நல்லது.
                                              ---------------------------------- எலன்எக்ஸ்லே
உங்களது தலைசிறந்த புத்தகங் களைத் திருடிச்செல்பவர்கள், உங்களது தலைசிறந்த நண்பர்களாகவே இருக்க முடியும்.

                                           ---------------------------------------- வால்டேர்
ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம்.

-                                 ----------------------------------------------- காந்தியார்

தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்கப்பட்ட போது புத்தகங்களு டன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தார்
                                               ----------------------------------------------- நேரு

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று

                                          ------------------------------------ பெட்ரண்ட்ரஸல்  

மனிதனின் மிகப் பெரிய கண்டு பிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் எனப்பதிலளித் தார்.           
                                        ---------------------------- - ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன்

கரண்டியைப் பிடுங்கிவிட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம்.

                                            --------------------------------- தந்தை பெரியார்

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம்.

                                      -------------------------- நெல்சன் மண்டேலா
பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிடக் குவிந்த புத்தகங் கள் பல லட்சம்.              
                         -------------------------------------- வரலாறு
குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப்பட்டபோது பேரறிஞர் இங்கர்சால் சென்ற இடம் நூலகம்.                         
                                         -------------------------------- வரலாறு
பதப்படுத்தப்பட்ட மனங்களின் வெளித்தோற்றத்தைப் புத்தகம் என்று அழைக்கின்றோம்.                 

                            ------------------------------------------------------- போவீ
புதிய புத்தகத்தை வாசிக்கும்போது புதிய நண்பன் ஒருவனைச் சந்திக் கிறோம் அதை மீண்டும் வாசிக்கும் போதோ நீண்ட கால நண்பனைச் சந்திக்கிறோம்.      -                        ---------------------------------------சீனப் பழமொழி

நீங்கள் ஒரு புத்தகத்தை விற்கும் போது நீங்கள் காகிதமும் கோந்தும் மையும் விற்கவில்லை ஒரு புதிய வாழ்வையே அவருக்கு விற்கிறீர்கள்

                                      --------------------------------- கிறிஸ்டோபர் மார்லே

ஒரு புத்தகத்தை இரவல் தருபவன் முட்டாள், அதைத் திருப்பித் தருபவன் அதைவிடப் பெரிய முட்டாள்.

                                              --------------------------------------- அரேபியப் பழமொழி

உலகிலுள்ள அனைத்துவகைத் துயரங்களின் விடுதலை ஒரு புத்தகத்தில் உள்ளது

                                                   --------------------------------------- கூகிவா திவாங்கோ

போரில் கலந்து கொள்வதைவிட, கூடுதல் தைரியம் ஒரு சில புத்தகங் களை வாசிக்கத் தேவைப்படுகிறது.

                                                                      -----------------------  எல்பர்ட்கிரிக்ஸ்

புத்தகங்கள் இருந்தால் போதும் சிறைக் கம்பிகளும், கொட்டடிகளும் ஒருவரை அடைத்து வைக்க முடியாது.

                                                         ------------------------------------------ மாவீரன் பகத்சிங்

ஒரு புத்தகத்தின் பயன் அதன் உள்ளே தேடப்படுவதைவிட வெளியே 
ஏற்படுத்திய தாக்கத்தை வைத்தே இருக்கிறது. - பிரடெரிக் எங்கெல்ஸ்
காலக்கடலில் நமக்கு வழி காட்ட, அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கு புத்தகம்          
                           -------------------------------------------------- எட்வின் பி.விப்பிள்

ஒரு நாட்டின் வருங்காலச் சந்த தியினர் தேடித்தேடி அடைய வேண் டிய அற்புதப் புதையல்கள் புத்த கங்களே.          

                                                          ---------------------------------- ஹென்றிதொறோ

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம் தான் என்றார்.

                                       ---------------------------- வின்ஸ்டன் சர்ச்சில்
பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக்கேட்கப் பட்டபோது புத்ககங்கள் தான் என்றாராம்.

                                              ------------------------------------ மார்டின் லூதர்கிங்

புத்தகம் என்பது பையில் சுமந்து செல்ல முடிந்த ஒரு பூந்தோட்டம்.

                                     --------------------------------------------------- சீனப் பழமொழி

ஒரு நல்ல புத்தகம் வாசித்து முடிக்கப் படுவதே இல்லை.

                                              --------------------------------------- ஆர்.டி.கம்மிஸ்

ஒரு புத்தகத்தைவிடப் பொறுமையான ஆசிரியரை நான் பார்த்தது இல்லை.

                                         ---------------------------------- சார்லஸ் இலியட்

விமானத்தில் போகாமல் பம்பாய்க்குக் காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன்? என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது! எனப் பதிலளித்தாராம்.

                                                ---------------------------------- அறிஞர் அண்ணா

ஒரு மிகச்சிறந்த புத்தககத்தை நீங்கள் படிக்க விரும்புகிறீர்கள் ஆனால் அது இன்னும் யாராலும் எழுதப்படவில்லை என்கிற நிலை இருந்தால் அதற்கு ஒரே தீர்வு அதை நீங்கள் எழுத வேண்டியது தான்.

                                                               -------------------------------- டோனி மாரிஸன்
ஒரு நல்ல புத்தகம் முடிவில்லாதது. அது பல வாழ்க்கைகளைப் பற்றி உங்களை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.

                                                          ------------------------------------ ஆர்.டி.கம்மிங்

ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்காத வன், அந்த புத்தகத்தை படிக்கத் தெரியாதவனைவிட எந்த விதத் திலும் உயர்ந்தவன் அல்லன் 
                                             ------------------- மார்க் ட்வைன்.       - ஜேம்ஸ்ரஸல்

உன் மூளைக்குள் இருக்கும் சிந் தனை மகரந்தங்களை மற்றொரு மூளைக்குள் கொண்டு செல்லும் தேனீக்கள் தான் புத்தகங்கள்.
                                                ----------------------------------------- ஜேம்ஸ்ரஸல்

நம்மால் வேறு எப்படியும் பயணிக்க முடியாத உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் ஒரு மந்திரக் கம்பளம் புத்தகம்.
                                             ----------------------------------------- கரோலின் கோர்டன்

ஒரு நல்ல வாசகனைக் கொண்டே ஒரு நல்ல புத்தகம் அடையாளம் காணப்படுகிறது
                                      -------------------------------------- ஜார்ஜ் பெர்னாட்ஷா

தொகுப்பு: முனைவர் கடவூர் மணிமாறன், குளித்தலை, கரூர் மாவட்டம்.
நன்றி: விடுதலை - ஞாயிறு மலர், சனி: 11.08.2012

தமிழ்நாட்டு மாணவர்கள், பட்டதாரிகள், செக் குமாடாக இருக்க வேண்டாம், பந்தயக் குதிரையாக இருக்க வேண்டும்.

சிந்தனைதான் அறிவை வளர்க்கும்: அறிவுதான் மனித வாழ்வை உயர்த்தும்.
படிப்பு என்பது இந்நாட்டில் வயிறு வளர்ப்ப தற்காகவே பயன்படுத்தப்படுகிறது. படிப்பின் பயனெல்லாம் அறிவு பெறுவதற்காகவே இருக்க வேண்டும்.
கல்வியானது அறிவு வளர்ச்சிக்கும், புலமைக்குமே தவிர, மதப் பிரச்சாரத்துக்கு அல்ல என்பது கல்வியின் அடிப்படை தத்துவமாக இருக்க வேண்டும்.

பகுத்தறிவு மாறானதும், மூடநம்பிக்கையை வளர்ப்பதுமான எந்தச் செய்தியும் கல்வியில் பாடமாகக் கற்பிக்கக்கூடாது.
                                 ------------------------------------- தந்தை பெரியார்


உரமிடாத பயிரும், படித்து கூர்மையாக்கப்படாத அறிவும் வளர்ச்சி குன்றியவையே.

புத்தகங்களைப் படிப்பதை விட மனிதர்களை படிப்பது மிகமிக முக்கியம்.
மூளைக்கும் உணவு தேவைதானே? சிந்தனையைக் கூர்மைப்படுத்த சாணை தீட்ட, அறிவுள்ள நூல்களே தக்க உணவுகள் அதற்கு.

நூலைப் படித்து தகவல்களைப் பெற்று, ஆய்வு செய்து அறிவைப் பெருக்கினால் ஆயுள் வளரும், இயங்கினால் தான் மூளை, இன்றேல் அது வெறும் ஈளை


எல்லோரிடமிருந்தும் கற்றுக் கொள்பவனே சிறந்த மனிதன்.

- கி.வீரமணி
                         -------------------------------”விடுதலை” 18-4-2013

20.2.13

பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் மீதான படுகொலை ஊட்டும் உணர்வு

பாலச்சந்திரன்மீதான படுகொலை ஊட்டும் உணர்வு

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன் - பாலகன் பாலச்சந்திரனை சிங்கள இன வெறியன் இலங்கை அதிபர் ராஜபக்சே அரசு காட்டு விலங்காண்டித்தனமாக - குரூரமாக நெஞ்சில் ஒரு துளியும் இரக்கமுமின்றி சுட்டுக் கொன்ற விதம் உலக மக்களைப் பதைபதைக்கச் செய்துவிட்டது.

நேற்று இந்து ஏட்டில் முதல் பக்கத்தில் வெளிவந்த அந்தச் சிறுவனின் முகம் வெளிறிக் காணப்பட்ட காட்சி! படத்தைப் பார்த்தவர்களின் நெஞ்சில் வடிந்த ரத்தக் கசிவு எளிதில் உறையாது.

வேறு எந்தப் பிரச்சனையை நோக்கிக் கவனம் செலுத்தினாலும் இந்தக் காட்சி அவர்கள் நினைவில் குறுக்கே குறுக்கே வந்து நிற்கிறது.

சீ..... இப்படியும் சில மனிதர்களா? ஆட்சியாளர்களா? என்ற வினாக்கள்தான் எழுந்து நிற்கின்றன.

ஏதோ தின்பண்டம் கொடுத்து, பழுது ஏதும் அறியாத அந்தப் பால் வடியும் பாலகனைக் குரூரமாகக் கொன்றுள்ளார்களே!

அந்தப் பாலகனின் முன்னிலையிலேயே சிலரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று அதிர்ச்சி அடையச் செய்துள்ளனர் - அந்த மனித உருவத்தில் நடமாடும் மிருகங்கள்.

இலங்கை சிங்கள அரசு இதனைச் சிறிதும் எதிர்பார்த்திருக்காது. அதுவும் காலம் காலமாக ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் ஜெயவர்த்தனேயின் சீடராக இருந்து செயல்பட்டு வந்திருக்கிற இந்து ஏட்டில் படத்துடன் இந்தச் செய்தி வெளி வந்திருப்பதை ராஜபக்சே எதிர்பார்த்திருக்கக் கூட மாட்டார்.

ஆனாலும் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட நேரும் என்பது நடைமுறையில் வழங்கப்படும் பழமொழியாகும்.

பல நாடுகளில் ஆயுத உதவியைப் பெற்று ஈழ விடுதலைப்புலிகளை, ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து விட்டோம் என்று ஆணவத்தின் உச்சியில் நிர்வாணக் கூத்தாடிய ராஜபக்சே - தன்னை நோக்கிக் கடுமையான அம்புகள் பாயும் என்று நினைத்திருக்க மாட்டார்; காரணம் அதிகார வெறியும், ஆணவமும், அழித்து முடித்து விட்டோம் என்ற திமிரும் அந்தக் கொடியவனை அவ்வாறு நினைக்கச் செய்திருக்கும்.

தி.மு.க. அமைப்புச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான மானமிகு டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளது போலவே ராஜபக்சே போர்க் குற்றவாளிதான் என்பதற்கு பாலச்சந்திரன் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரம் ஒன்று போதாதா என்று வினா எழுப்பியுள்ளது மிகவும் சரியானதாகும்.

இதற்கு மேலும் எந்த ஒரு நாடாவது ஜெனிவாவில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட உள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க மறுக்குமேயானால், அந்த நாடுகளையும் ராஜபக்சேயின் பட்டியலில்தான் வைக்க வேண்டும் - வரலாறும் அவ்வாறுதான் எள்ளி நகையாடும்.
இலட்சக்கணக்கான யூதர்களை ஆரிய வெறியன் அடால்ப் ஹிட்லர் கொன்று குவித்துக் குதியாட்டம் போடவில்லையா? இறுதியில் நஞ்சு அருந்தித் தற் கொலை செய்து கொண்டான். அந்த நிலைக்கு ராஜ பக்சேயை விட்டு விடாமல், விரைந்து அதிகாரபூர்வமாக உலக நீதிமன்றத்தில் கொலைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அதற்கான தண்டனையை அனுப வித்தே தீர வேண்டும்.

ராஜபக்சே போர்க் குற்றவாளி என்பதற்கு எத்தனை எத்தனையோ ஆதாரங்கள் உண்டு. மருத்துவமனைகள், மத நிறுவனங்கள், குழந்தைகள் இல்லம் இவற்றின்மீது குண்டு மாரி பொழியவில்லையா?

பத்திரிகைக்காரர்களைத் தீர்த்துக் கட்டவில்லையா? 2006 முதல் 2009 வரை ஒன்பது பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 27 பேர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாகரன் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டது, கடத்தப்பட்டது குறித்து எழுப்பிய வினாவுக்குச் சம்பந்தப்பட்ட அமைச்சர் எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை.  உலகில் எங்கு போர் நடந்தாலும், அங்கெல்லாம் சென்று பொது மக்களுக்குத் தொண்டுக்கரம் நீட்டக் கூடிய செஞ்சிலுவைச் சங்கத்தினர்கூட அவர்களின் தொண்டினைச் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அடுக்கிக் கொண்டே போகலாம் போர்க் குற்றவாளி ராஜபக்சே என்பதற்கான காரணங்களை...

உலக நாடுகள் மதிப்புப் பெற - குறிப்பாக இந்தியா - மனித உரிமை காப்பாற்றப்படக் குரல் கொடுக்கும் நாடு தான் என்பதை நிலைநாட்ட - அய்.நா. தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள - நம் முன் எழுந்து நிற்கும்  அரிய வாய்ப்பு - அமெரிக்காவின் ஜெனிவா தீர்மானமாகும். சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட முறையில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் நடந்து கொள்ளட்டும்! பாலகன் பாலச்சந்திரன்மீதான படு கொலை இந்த உணர்வை ஊட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

           ---------------------” விடுதலை” தலையங்கம் 20-2-2013

19.2.13

பிரபாகரன் மகன் - பாலகன் படுகொலை செய்யப்பட்ட பெருங்கொடுமை!



சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன், தமிழீழத் தலைவர் பிரபாகரனின் மகன் ராணுவத்தின் பிடியிலிருந்தார். பிறகே அந்த  பாலகன் சுட்டுக் கொல்லப்பட்டார். கொடியவர்களால்
பிரிட்டனின் உள்ள சேனல் - 4 என்கிற தொலைக்காட்சி அண்மையில் ராணுவ நிலவறை ஒன்றில் தமிழீழத் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் தனது மறைவிடத்தில் சிறைபிடித்து வைத்திருந்ததை வெளியிட்டுள்ளது.
2009ஆம் ஆண்டில் மே மாதம், இலங்கை  உள்நாட்டுப் போர்,  முடிவுக்கு வரும் நிலையில் இருந்தபொழுது, பாலச்சந்திரன் சாகடிக்கப்படுவதற்குமுன் இந்தப் படங்கள் எடுக்கப்பட்டதாக இந்த சானல் - 4 குறிப்பிட்டுள்ளது. 2012ஆம் ஆண்டின் ஆவணப்படம் பாலச்சந்திரன், தரையில் மடிந்து கிடப்பதையும், நெஞ்சில் 5 துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த நிலையில் இருந்ததையும் காட்டியது.

அதன் தொடர்ச்சியாக இந்தப் படம் விரைவில் ஒளிபரப்பப்படும். இந்தப் படங்கள் மூன்றும் ஒரே கேமிராவில் எடுக்கப்பட்டதாகவும்,  பிரபாகரனின் மகன் ராணுவத்தின் பிடியில் இருந்தபோதுதான் கொல்லப்பட்டான் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
கால்லம் மக்ரே என்பவர் சின்ன வயது பாலகன் கொலை என்று இந்தக் கட்டுரைக்குத் தலைப்பிட்டுள்ளார்.
                   -----------------------------தி இந்து 19.2.2013 முதல் பக்கம் -”விடுதலை” 19-2-2013

18.6.12

தமிழ் இனையப்பயிலரங்கம் ஒரு பார்வை


17-6-2012 அன்று மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் ஊரக வளர்ச்சி உராய்வு மையம் இணைந்து நடத்தும் தமிழ் இனையப்பயிலரங்கத்திற்கு செல்வதன முடிவெடுத்து திண்டுக்கல் தோழர் வழக்குரைஞர் மானமிகு சாக்ரட்டீஸ் அவர்களுடன் சரியாக காலை 9.30 மணி அளவில் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரிக்குள் சென்றபோது ப.க.தலைவர் மானமிகு நேரு அய்யா,சுப.முருகானந்தம் அய்யா,வழக்குரைஞர் கணேசன் ஆகியோருடன் குடியரசுத் தலைவரின் "செம்மொழி இளம் அறிஞர் விருது" பெற்ற புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரி பேராசிரியர் முனைவர்.மு.இளங்கோவன் அய்யா அவர்களும் (நின்று கொண்டிருந்தனர்) எங்களை வரவேற்று,அறிமுகப்படலம் நடந்து கொண்டிருந்த போது மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி தமிழ்துறைத் தலைவர் பேராசிரியர் அய்யா நம்.சீனிவாசன் அவர்களும் வந்து கலந்து கொண்டார்.உடனே நிகழ்ச்சி நடக்கும் கணனி அறைக்கு (computer lab) அனைவரையும் அழைத்துச் சென்று அமர வைத்து தமிழ் இனையப்பயிலரங்க தொடக்க விழாவிற்கு ஆயத்தமானார்கள். சென்னையிலிருந்து ப.க. மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களும் வந்து சேர்ந்தார். கணிசமான அளவு பங்கேற்பாளர்கள்.பயிற்சியாளர்கள் என அரங்கம் நிரம்ப ஆரம்பித்தது.


தொடக்கவிழா


பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் வா.நேரு அவர்கள் தலைமையில்,தி.க.தலமைச் செயற்குழு உறுப்பினர் தே.எடிசன்ராசா, மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி சுயநிதிப்பிரிவு இயக்குனர் இராச.கோவிந்தசாமி, தி.க.மதுரைமண்டலத் தலைவர் வே.செல்வம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.ஜெகஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேரம் 10.30 யை நெருங்கி கொண்டிருந்ததால் பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் சுப.முருகானந்தம் அனைவரையும் வரவேற்று இணையம் தொடர்பான கருத்துக்களை நருக்குத் தெரித்தார் போல் எடுத்து வைத்து வரவெற்புரையை முடித்தார்.அடுத்து அறிமுகவுரையில் ப.க. மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இதர்கு முன் நடைபெற்ற இணையப்பயிலரங்கங்கள் பற்றியும்,அங்கு நடைபெற்ற சுவராசியமான நிகழ்வுகளையும் எடுத்துரைத்தார். அவரது உரையில் ”தமிழ் ஓவியா” வலைப்பூ பற்றி கூறி பாராட்டு தெரிவித்தார். அடுத்து தலைமை உரை நிகழ்த்திய பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் வா.நேரு அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்நிகழ்வு நடைபெற்று வருகிறது என்றும் அனைவரும் இப்பயிலரங்கத்தை நன்கு பயன்படுத்தி பெரியார் கருத்துக்களை உலகமயமாக்கும் பணியில் தங்களையும் இனைத்துக் கொள்ள வேண்டும் என்றும். பெரியாரையோ நமது இயக்கத்தையோ தவறாக விமர்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் அந்த வகையில் ”தமிழ் ஓவியா” வலைப்பூ சிறப்பாக் செயல்பட்டு வருவதையும் எடுத்துக்கூறி தமிழ் ஓவியா அவர்களுக்கு, குடியரசுத் தலைவரின் "செம்மொழி இளம் அறிஞர் விருது" பெற்ற புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரி பேராசிரியர் முனைவர்.மு.இளங்கோவன் அய்யா அவர்கள் பொன்னாடை அணிவிக்க கேட்டுக் கொண்டார்.(இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை -- தமிழ் ஓவியா)


தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது. விழா அரங்கம் இனி பேராசிரியர் முனைவர்.மு.இளங்கோவன் அய்யா அவர்களிடம் ஒப்படைக்கப் படுகிறது என்று கூறி தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.


முதல் அமர்வு:-தமிழ் இணையம் வளர்ச்சி வரலாறு



தமிழ் இணையம் தோற்றம், வளர்ச்சி, வரலாறு, மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி?அதன் பயன்பாடுகள், வலைப்பூ உருவாக்கம் அதன் பயன்பாடுகள்,அதை எப்படிப்பயன்படுத்துவது? தமிழ் விக்கிபீடியா பற்றியும் அதனை எப்படிப்பயன்படுத்துவது? தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? யுனிக்கோடு ,எழுத்துருச் சிக்கலை தீர்ப்பது எப்படி? ஏனைய இணைய இதழ்கள், நூலகங்கள் போன்ற தலைப்புகளில் பவர் பாயிண்ட் மூலம் பாடம் நடத்தினார் பேராசிரியர் முனைவர்.மு.இளங்கோவன்.இடையிடையே ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களும் விளக்கம் அளித்தார்.


இரண்டாம் அமர்வு:-வலைப்பு உருவாக்கமும் பயன்பாடுகளும்



பங்கேற்பார்கள் அனைவரையும் (ஒருவருக்கு ஒரு கணனி என்ற அடிப்படையில்) கணனி முன் அமர வைத்து முதலில் மின்னஞ்சல் தொடங்குவது எப்படி?தொடங்கியபின் வலைப்பூ எப்படி தொடங்குவது? பின்பு அதில் தங்களது கருத்துக்கள தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? படம் இணைப்பது எப்படி? வீடியோ இணைப்பது எப்படி? திரட்டிகளில் இணைப்பது எப்படி? என்பதை பற்றி விரிவாக செயல் முறை பயிற்சி அளிக்கப்பட்டது. பல பயிற்சியாளர்கள் நன்கு கற்றுக் கொண்டனர்.


மூன்றாம் அமர்வு:- தமிழ் விக்கிபீடியா மற்றும் இணையதழ்கள்


மாணவர்கள் அதிகமாக வந்திருப்பதால் தமிழ் விக்கிபீடியா பற்றியும் அதில் எப்படி எழுதுவது என்பது பற்றியும் மீண்டும் விளக்கமாக எடுத்துரைத்தார்.அப்போது கிரந்த எழுத்துக்களை பார்ப்பனர்கள் தமிழ் எழுத்துக்களுடன் சேர்க்க இருந்த நிலையை சுட்டிக்காட்டி அதை ஆசிரியர் அய்யாவின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஒரு அறிக்கையின் மூலம் அதை தடுத்து நிறுத்தியவர் நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா வீரமணி என்றும் பெருமை பொங்க குறிப்பிட்டார் பேராசிரியர் முனைவர்.மு.இளங்கோவன். ”விடுதலை”, உண்மை பெரியார் பிஞ்சு ,மாடர்ன் ரேசனலிஸ்ட் போன்ற நமது இதழ்கள்,பெரியார் இணையதளம் மற்றும்பேஸ்புக் போன்ற சமூக இணையதளங்கள் பற்றிய சிறப்புகளை விளக்கி அனைவரும் சிறந்த வலைப்பதிவாளர்களாக வேண்டும் என்று கூறி நிறைவு செய்தார் பிரின்சு என்னாரெசு பெரியார்.


நிறைவு விழா:-


பங்கேற்பாளர்கள் சார்பாக சுசீலா வேல்முருகன், கவிஞர் கோ ஆகியோர் தங்களது கருத்துக்களை எடுத்துக்கூறினர். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.ஜெகஜோதி மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் நம்.சீனிவாசன்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியாக, ஓய்வு பெற்ற நீதிபதி பொ.நடராசன் அய்யா அவர்கள் சிறப்புரையாற்றி பங்குபெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்கள். மதுரை புற நகர் தி.க. மாவட்டச் செயலாளர் அ.வேல்முருகன் அவர்கள் நன்றி கூறினார்.

இணையப்பயிலரங்கில் 1996 இல் எழுத்தாளர் பயிச்சிப்பட்டறையில் கலந்து கொண்ட சோழவந்தான் வழக்கறிஞர் தோழர் கணேசன், கணனி வல்லுநர் திரு முத்துக்கண்ணன், மதுரை ஹோமியோ மருத்துவர் அன்புமதி போன்ற முகநூலில் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த பல தோழர்களை முகம் பார்த்து பேச வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அனைவருக்கும் நன்றி கூறி வீடு திரும்பினோம்.