Search This Blog

31.10.08

பார்ப்பானை இந்த நாட்டை விட்டே அகற்றிவிடவேண்டும்


அகற்றிடவேண்டும்

"நாட்டில் பார்ப்பனர்கள் களைச்செடிகள் போன்றவர்கள். எப்படி வயலில் தேவை இல்லாத களைச் செடிகள் இருப்பதால் பயிருக்குச் சேதம் என்று கருதிக் களைச்செடியை அகற்றுகிறோமோ அதுபோல் நாட்டிற்குச் சமுதாயத்திற்குக் கேடு விளைவிக்கும் பயனில்லாத பார்ப்பானை இந்த நாட்டை விட்டே அகற்றிவிடவேண்டும்."

---------------------------- தந்தைபெரியார் - "விடுதலை", 10.7.1961

அக்கிரமக்கார அக்கிரகாரத்தின் ஆணவ - மனுதர்மக் கோட்டைகளை தூள் தூளாக்கும் வெடி மருந்து


தினமலர் அலுவலகம் திணறியது!

ஈழத்தமிழர் என்றால் வேப்பெண்ணெய்யைக் குடிப்பதுபோல் இருக்கிறது ஒரு கூட்டத்துக்கு - அந்தக் கூட்டம்தான் பார்ப்பனக் கூட்டம்.

குமுதம் ஏட்டில் ஒரு பார்ப்பனர் தெரிவிக்கிறார், தமிழ் ஈழம் தனியாட்சியாக மலர்ந்தால், அடுத்து தமிழ்நாட்டிலும் அது எதிரொலிக்கும் என்ற எண்ணம் ஒன்று இருக்கிறது என்று வெளிப்படுத்தியுள்ளார்.

உலகத்தில் சொந்த நாடே இல்லாத ஒரு இனம் உண்டென்றால், அது பார்ப்பன இனம்தான். அதனால் வேறு எந்த இனமும் சுயாட்சி உரிமைக்காகவோ, நாட்டுப் பிரிவினைக்காகவோ போராட்டம் நடத்தினால், இந்தக் கூட்டம் அதற்கு ஆதரவு தராது - குறுக்குச்சால் ஓட்டும்; பித்தலாட்டங்களையெல்லாம் சகட்டு மேனிக்கு அரங்கேற்றும். ஈழத்தமிழர்ப் பிரச்சினையிலும் அந்த நிலைதான் அவர்களுக்கு.

இந்து, தினமலர், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், துக்ளக் என்று ஒரு ஊடகப் பட்டியல் உண்டு. இவை அனைத்தும் பார்ப்பனர்களின் பர்ணசாலை.

தமிழ் உணர்வு உலகின் எந்த மூலையில் தலையெடுத்தாலும் அதனைக் கொச்சைப்படுத்துவது, தீவிரவாதம், குறுகிய வெறி (Chauvinism) என்று பெயர் சூட்டுவதுதான் இவர்களின் அன்றாட வேலை.

இலங்கைத் தீவில் செஞ்சோலையில் பச்சிளம் பாலகர்கள் குடியிருந்த விடுதியில் கூட இலங்கை சிங்கள இராணுவம் குண்டுமாரி பொழிந்து ஒரு நொடிக்குள் அத்தனைப் பிஞ்சு மலர்களையும் கொன்று குவித்துக் குதூகலம் அடைந்ததே - அதற்குக்கூட வக்காலத்து வாங்கி எழுதிய கொடூரமான கும்பல் இது.

இலங்கைத் தீவில் எந்த ஒரு பார்ப்பனரின் சிண்டு முடிகூட உதிர்ந்து போய்விடவில்லை. நாலு பார்ப்பனக் குடும்பம் சிங்களக் குண்டுக்கு இரையாகியிருந்தால், அய்.நா. மன்றம் ஏறி ஆச்சா போச்சா என்று அலறியிருப்பார்கள்.

ஆனால், ஈழத்தில் அவமானப்படுத்தப்படுவது, அன்றாட வாழ்வே கேள்வி குறியாக்கப்படுவது - அத்தியாவசியப் பொருள்களுக்கே அல்லாடுவது - வீட்டை விட்டு காடுகளை நோக்கி ஓடுவது எல்லாம் இந்தப் பாழாய்ப்போன தமிழ்க் குடிதானே!

அதனால்தான் அன்றாடம் அக்கிரகார ஊடகங்கள், ஏடுகள், இதழ்கள் ஆனந்த ராகம் பாடிக்கொண்டு இருக்கின்றன.

தமிழர்களைச் சீண்டுவதிலும், தமிழர்களுக்காகப் பாடுபட்ட, பாடுபட்டுவரும் தலைவர்கள்மீது மலத்தை வாரியிறைப்பதிலும் குறியாக இருக்கிறார்கள் - இட்டுக்கட்டி எழுதுகிறார்கள். அதில் முக்கியமான இடம் வகிப்பது தினவெடுக்கும் தினமலர்தான். தமிழர்கள் அவ்வப்பொழுது பாடம் கற்பித்தாலும் அதன் தடித்த தோலுக்கு உரைக்கவே உரைக்காது.

ஆனால், தமிழர்களின் தன்மான உணர்வு - தந்தை பெரியார் அவர்களால் ஊட்டப்பட்ட அந்த உணர்வு செத்துப்போய் விடவில்லை; பார்ப்பனர்கள் சீண்டச் சீண்ட அது சீறிடும் எரிமலையாக, நெருப்புக் குழம்பினை வாரியிறைத்துக் கொண்டுதானிருக்கும்.
அதனை திரைப்பட உலக இயக்குநர்கள் நிரூபித்துக் காட்டிவிட்டனர்.

சென்னை அண்ணாசாலை தினமலர் அலுவலகத்தின்முன் புரட்சி இயக்குநர் பாரதிராஜா தலைமையில் அணிவகுத்து நின்று கண்டன ஆர்ப்பாட்டத்தை முறுக்கேறிய புயலாக வெடித்துக் காட்டியிருக்கின்றனர்.

பாராட்டுகிறோம் - பார்ப்பன ஆதிபத்தியத்தின் அட்டகாசத்தை தமிழினக் கலையுலகினர் புரிந்துகொண்டதற்காகப் பாராட்டுகிறோம். பாராட்டுகிறோம் இந்த உணர்வை அவர்கள் தயாரிக்கும் திரைப்படங்களிலும், கலை வடிவங்களிலும் இடம்பெறச் செய்தால், தமிழின இளைஞர்கள் மத்தியில், இன உணர்வும், பகுத்தறிவுச் சிந்தனையும் வேர் பிடித்து வெடித்துக் கிளம்புமே!

தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு என்னும் வெடி மருந்துதான் அக்கிரமக்கார அக்கிரகாரத்தின் ஆணவ - மனுதர்மக் கோட்டைகளை தூள் தூளாக்கும்!


மீண்டும் கலையுலகச் செம்மல்களைப் பாராட்டுகிறோம் - அந்த உணர்வு மேலும் மேலும் வளர்வதாகுக!

தமிழா இன உணர்வு கொள்!

தமிழா தமிழினாக இரு என்றார் தமிழர் தலைவர் வீரமணி. அதன் வடிவத்தை இயக்குநர்களின் ஆர்ப்பாட்டம் மூலம் கண்டோம்.

தந்தை பெரியார் அவர்களின் கொள்கை சார்ந்த இந்த உணர்வை திக்கெட்டும் பரப்புவோம்! தீய சக்திகளின் தடயங்களை இல்லாது ஆக்குவோம்!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

----------------நன்றி: "விடுதலை"

"தினமணி" நாளிதழின் பத்திரிகா தர்மம்

இலங்கைத் தமிழர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கும், அங்கே நடைபெறும் இனப்படுகொலையைத் தடுப்பதற்கும், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காண்பதற்கும் முதல்வர் கருணாநிதிக்கு ஓர் அருமையான வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. முதல்வர் கருணாநிதியே முன்னின்று பேச்சு வார்த்தை நடத்தும்போது விடுதலைப் புலிகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் அவரது முடிவுக்குக் கட்டுப்படுவார்கள் என்பது உறுதி.

இலங்கை அதிபர் ராஜபக்சே அளித்திருக்கும் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்தி இலங்கைத் தமிழர்களின் துயரை நிரந்தரமாகத் தீர்ப்பதன் மூலம் மட்டும்தான் முதல்வர் கருணாநிதி தன்னைத் தமிழினத் தலைவர் என்று சரித்திரத்தில் நிலை நிறுத்திக் கொள்ள முடியும். இந்த பொன்னான வாய்ப்பை அவர் நழுவ விடக்கூடாது!

- என்று ராஜபக்சே வாக்குறுதிகளுக்கான அவரது கழுத்து தாங்காத அளவுக்குப் புகழாரம் சூட்டிவிட்டு - போனால் போகிறது என்று ஒரு கருணையோடு - கலைஞரையும் ராஜபக்சேவே பாராட்டிய கலைஞரை நாமும் பாராட்டி விட வேண்டியதுதான் என்று பாராட்டி - அவர் சரித்திரத்தில் தமிழினத் தலைவராக நிலை பெறவேண்டும் என்று அவாளுக்கே உரிய சமத்தோடு எழுதியிருக்கிறார்!

இதிலிருந்து என்ன தெரிகிறது?

அவாள் புதன்கிழமை ராஜபக்சேயை நம்பக் கூடாது என்பார்கள்; அதுதான் சரி.

வியாழக்கிழமை அன்று ராஜபக்சேயை நம்பியே ஆகவேண்டும் என்பார்கள்! அதுவும் சரியே!

அதுதான் அவாளின் ஆரிய தர்மப்படிக்கான நேர்மை - நாணயம் - பத்திரிகா தர்மம்; கத்திரிக்கா தர்மம் எல்லாமே!

-------------நன்றி: "முரசொலி"

30.10.08

பிராமணரல்லாதார் யாராவது பிராமணர்களை ஏதாவது சொல்லிவிட்டால் அது தேசத் துரோகமாகி விடுகிறதுபி. வரதராஜுலு நாயுடு - பிராமணர்களின் கொடுமையும் குறும்புத் தனமும்


மாயவரம் முனிசிபாலிட்டியில் சிறீமான் வரதராஜுலு நாயுடுவுக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுக்க வேண்டுமென்று ஒரு தீர்மானம் வந்தபொழுது, சில பிராமணர்கள் அதை எதிர்த்தார்கள். இவர்கள் எதிர்ப்பை அலட்சியம் செய்து மற்ற கவுன்சிலர்கள் ஒரேயடியாய் நிறைவேற்றி விட்டார்கள். தங்கள் ஆட்ேசபனை பலிக்கவில்லை என்று நினைத்த மேற்படி பிராமணர்கள் அதோடு சும்மாயிராமல் அரசாங்கத்தாருக்கு அடியிற் கண்டபடி தந்தி கொடுத்தார்கள். அதாவது "மாயவரம் முனிசிபாலிட்டியார் டாக்டர் வரதராஜுலு நாயுடுவுக்கு உபசாரப் பத்திரம் வாசித்துக் கொடுத்தால் மாயவரத்தில் சமாதானத்திற்கு மிகவும் பங்கம் வரும். ஆதலால், அரசாங்கத்தார் இத்தீர்மானத்தை நிராகரித்து விடவேண்டும் " என்று கண்டிருந்ததாம். இது எவ்வளவு அயோக்கியத்தனமான காரியம் என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்யவேண்டும்.

சிறீமான்கள் சீனிவாசய்யங்கார், கலியாணசுந்தர முதலியார், ராஜகோபாலாச்சாரியார் முதலியவர் களுக்கு வாசித்துக் கொடுக்கும் உபசாரப் பத்திரங்கள் சமாதானத்தை விளைவிக்கும்; டாக்டர் நாயுடுவுக்கு வாசித்துக் கொடுக்கும் உபசாரப் பத்திரம் சமாதானத்திற்கு பங்கம் விளைவிக்கும் என்றால், ஐயங்கார், ஆச்சாரியார், முதலியார் முதலானவர்களிடம் உள்ள எந்த குணம் டாக்டர் நாயுடுவிடம் இல்லை அல்லது அவர்களிடமில்லாத எந்த குணம் டாக்டர் நாயுடுவிடம் இருக்கிறது. எந்த விதத்தில் அம்மூவருக் கும் டாக்டர் நாயுடு இளைத்தவர். பின்னும் சிற்சில சமயங்களில் டாக்டர் நாயுடு அவர்கள் சில பிராமணர்களின் அயோக்கியத்தனத்தைப் பற்றிச் சொன்ன போதிலும், மறு சமயத்திலேயே அயோக்கியனாயிருந்தாலும் தேசீயவாதியாயிருந்தால் ஓட்டு கொடுங்கள் என்று கூட சொல்லி அயோக்கியர்களுக்கெல்லாம் வேஷம் போட்டுக்கொள்ள ஒரு போக்கிடமும் காட்டி இருக்கிறார். அதோடு சிறீமான் திரு.வி.க. முதலியாரவர்களைப் போலவே இவரும் ஒரு சமயத்தில் ஒரு மகாநாட்டில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானம் பிரேரேபித்திருந்தாலும் இப்பொழுது பிராமணர்களுக்கு அநுகூலமாக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டாமென்கிறார். இவ்வளவு நன்றி செய்தவர்களிடமும் நமது பிராமணர்கள் இம்மாதிரி நடந்து கொள்வார்களானால் இப்பிராமணர்களின் நன்றியறிதலை என்னென்று சொல்வது?

இதே டாக்டர் நாயுடுவை இந்த பிராமணக் கூட்டத்தார் வண்டியில் வைத்து இழுக்கவில்லையா? தென்னாட்டுத் திலகர் என்று சொல்ல வில்லையா? அவர் படத்தை ஆசாரத்திலும், படுக்கை இடத்திலும், பூஜை இடத்திலும் வைத்திருக்கவில்லையா? இப்பொழுது ஏன் அவர் பேரில் இவ்வளவு வெறுப்பு? எந்தப் பத்திரிகையாவது இப்பிராமணர் களின் நடத்தையைப் பற்றி ஒரு வார்த்தையாவது எழுதினதா? இம்மாதிரி சிறீமான்கள் சீனிவாசய்யங்காருக்கோ, ராஜகோபாலாச் சாரிக்கோ உபசாரப் பத்திரம் கூடாது என்று இரண்டு பிராமணரல்லாத கவுன்சிலர்கள் ஏதாவது வாயைத் திறந்திருந்தால் இந்த தேசீய பத்திரிகைகள் என்று சொல்லும் பித்தலாட்டப் பத்திரிகைகளும், அவர்களால் வயிறு வளர்க்கும் தொண்டர்களும் இப்பிராமணரல்லாதார் குடியை அடியோடு கெடுப்பதற்கல்லவா வகை தேடி இருப்பார்கள்.

வெள்ளைக்காரர்கள் எப்படி தங்கள் இனத்தாரை யாராவது ஒரு இந்தியர் தொட்டுவிட்டால் அதை சர்க்காரோடு யுத்தம் என்று ஆக்கி இராணுவச் சட்டத்தை அமுலில் கொண்டு வந்து விடுவதும், யாராவது ஒரு வெள்ளைக்காரன் இந்தியனைக் கொன்றுவிட்டால் அது அசால்ட்டாகி 10 ரூ. அபராதத்தோடு போய்விடுகிறதோ அது போலவே, பிராமணரல்லாதார் யாராவது பிராமணர்களை ஏதாவது சொல்லிவிட்டால் அது தேசத் துரோகமாகி அவர்களை அடியோடு ஒழிக்கப் பார்ப்பதும், பிராமணரல்லாதாரை பிராமணர் என்ன செய்தாலும் அது தேசச் சேவையாயும் ஆகிவிடுகிறது. இவர்கள் யோக்கிதையைப் பார்த்தால் வெள்ளைக்காரர் ஆயிரம் மடங்கு யோக்கியர்கள் என்று நெருப்பின் மேல் நின்று சொன்னாலும் கால் வேகாது என்று கூட சொல்லலாம். கேவலம் இந்த உபசாரப் பத்திரத்தைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. அதற்கு மதிப்பிருந்த முட்டாள் அபிப்ராயம் வெகு நாட்களுக்கு முன்னே போய்விட்டது. மகாத்மாவுக்கும் உபசாரப் பத்திரம், அன்னவரைக் கொலை செய்தவர்களுக்கும் தான் உபசாரப் பத்திரம், யோக்கியனுக்கும் உபசாரப் பத்திரம், திருடனுக்கும் உபசாரப் பத்திரம். உபசாரப் பத்திரம் வாங்க யோக்கியதை யில்லாதவன் இனி நமது இந்தியாவில் இல்லை என்பதே நமது அபிப்ராயம். ஆதலால், அதைப்பற்றி கவலை இல்லை. டாக்டர் நாயுடுவும் இதைப் பிரதானமாய் எண்ணியிருக்க மாட்டார். அவர் வீட்டு சமையலறைச் சுவர்கள் பூராவும் சட்டம் போட்ட உபசாரப் படங்களாலேயே மறைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த பிராமண மனப்பான்மையை இன்னும் நமது பாமர ஜனங்கள் அறியவில்லையே என்றுதான் நாம் விசனிக்கிறோம். தேசத்திற்காக மூன்று முறை ஜெயிலுக்குப் போனார்; கேப்பை மாவு அரைத்தார்; சிறீமான் சீனிவாசய்யங்காரைப் போலவே பதினாயிரக்கணக்காக ரூபாய் சிலவு செய்தார். ஆனால், சீனிவாசய்யங்காராவது கட்சிக்காரன் பணத்தில் கேஸுக்காகப் போய் உபசாரப் பத்திரம் பெற்று வருவார். இவர் தன் சொந்தப் பணத்தையே சிலவு செய்து கொண்டுபோய் உபசாரப் பத்திரம் பெறுவார்.

இதிலிருந்து நாம் நினைக்கவேண்டியது என்ன வென்றால், பிராமணர்களின் பேராசைக்கு விரோதமான ஒரு சிறு காரியத்தையாவது எந்த பிராமணரல்லாதாராயினும் செய்ய நினைத்து விட்டால் அவர் குடியைக் கெடுக்க இப்பிராமணர்களும் கொஞ்சமும் பயப்படமாட்டார்கள் என்பதும், இதற்குப் பயந்து கொண்டேதான் நமது பிராமணரல்லாதார் எவ்வளவு படித்தவர்களாயிருந்தாலும், எவ்வளவு பணக்காரராக இருந்தாலும் பிராமணர்களைக் கண்டால் நடுங்குகிறார்களென்பதும், அவர்கள் வாலைப் பிடித்துக்கொண்டு திரிகிறார்கள் என்பதும் விளங்குகிறது. படித்தவர்களும் பணக்காரர் களுமே இப்படி இருந்தால் வெறும் ஆசாமிகள் சங்கதியைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா? பிராமணரல்லாதார் நிலை பரிதாபம் ! பரிதாபம் !! பரிதாபம் !!!

--------------------- -சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை - "குடிஅரசு"-21.3.26

29.10.08

ஈழப்பிரச்சினையில் தமிழர்களும் - மும்பை பிரச்சினையில் பீகார் மக்களும் .....தமிழா, தமிழா உன் நிலை எப்போதும் தாழ்ந்த நிலைதானா?


மகாராஷ்டிராவில், வட இந்தியர்கள் எங்கள் வேலைகளைப் பறிக் கிறார்கள் என்று கூறி சிவசேனாவிலிருந்து பிரிந்த மகாராஷ்டிர நவநிர்மாண் கட்சி என்ற ராஜ்தாக்கரே கட்சியினர் ரயில்வே வேலைக்குத் தேர்வு எழுதப் போனவர்களை அடித்து விரட்டி வன் முறையில் இறங்கினார்கள்.

அதன் எதிரொலியாக, துப்பாக்கி எடுத்துக்கொண்டு, மும்பைப் பேருந்தில் ஏறி, ராஜ்தாக்கரேயைச் சுடச் சென்ற ஒரு பிகார் இளைஞனை போலீசார் விரட்டி, சுட்டுக் கொன்றுவிட்டனர்.

இப்படி பிகார் மக்களுக்கு எதிராக ஏற்பட்ட வன்முறையைக் கண்டித்து, பிரதமரிடம் சென்று முறையிட, பிகாரில் உள்ள அத் துணைக் கட்சித் தலைவர்களும் ஒன்று திரண்டு, பிரதமரைச் சந்தித்து கடுமையாக ஆட்சேபித்து, ஒரே குரலில் கண்டனம் தெரிவித்துள்ளனர் - தமது எதிர்ப்பை - உணர்வைக் காட்டுகின்றனர்.

மத்திய அமைச்சர் லாலுபிரசாத், பிகார் முதல்வர் நிதிஷ்குமார், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், மத்திய அமைச்சர் மீரா குமார் (காங்கிரஸ்) இப்படி பலரும் கட்சிக் கண்ணோட்டம், ஜாதி மதக் கண்ணோட்டமின்றி ஒன்று சேர்ந்து, தங்கள் மாநில மக்களைப் பாதுகாக்க முனைகின்றனர்.

பக்கத்து இலங்கையில், 3 லட்சம் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே குண்டு மழையில் சாகிறார்கள்; தப்பி, காடுகளிலும், வனாந்தரங் களிலும் பட்டினி கிடந்து வாடி வதைகிறார்கள் - மருந்துகள்கூட இல்லாத நிலை. இதைத் தடுத்திட தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டாலும், முடிவு எடுத்துள்ள நிலையில், ஒன்று சேராது, குறுக்கு சால் ஓட்டி, தமது அரசியல் லாபங்களை மட்டுமே கருதி இன்றும் விமர்சிக்கின்றனர். இதைவிட தமிழனுக்கு - தமிழ்நாட்டுக்கு அவமானம் வேறு உண்டா?


தமிழா! தமிழா! உன் நிலை இதுதானா?

நடக்கும் நல்ல முயற்சிகளைக்கூட திசை திருப்பிட தமிழர் விரோத ஏடுகளும், கட்சிகளும் முனைப்புடன் செயல்படும் அவலம் உள்ளதே!

----------- நன்ரி: "விடுதலை" 29-10-2008

இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா?


கவனிக்கவேண்டும்

"மதத்தைக் காப்பாற்றவே கோயில்களும், சொத்துக்களும் அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா, நீங்காதா என்பதைத்தான் கவனிக்கவேண்டும்."

------------தந்தைபெரியார் - "விடுதலை", 3.12.1967

ஜாதி இன்னும் சட்டப்படி ஒழிக்கப்படாத நிலையில், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படவேண்டும்


ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சி - முன்னேற்றம் என்ற
கண்ணோட்டத்தில் இது தேவையான ஒன்றே!

ஜாதி இன்னும் சட்டப்படி ஒழிக்கப்படாத நிலையில், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படவேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு வரவேற்கத்தக்கதே!


தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

நடக்க இருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் (Census) ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

நடக்கவிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, "ஜாதி” (Caste) என்ற கலத்தில் (Column) அதைக் குறிப்பிடுவது ஒடுக்கப்பட்டவர்களது வளர்ச்சி, முன்னேற்றம் ஆகிய கண் ணோட்டங்களில் மிகவும் தேவையான ஒன்றாகும்!

நீதிபதிகளின் தீர்ப்பு

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - மக்கள் தொகை உயர்வுக்கு ஏற்ப சமூகநீதி பெற்றிட, ஜாதி வாரி அடிப்படையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப் படவேண்டியது அவசியம்; இந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பை குறிப்பிட்ட கால வரம்புக்குள் மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எலிபெ தர்மாராவ் மற்றும் எஸ். தமிழ்வாணன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் தெளிவாகக் கூறியிருப்பதும் (26.10.2008) வரவேற்கத்தக்கதாகும்.

மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலைச் சந்தித்து 170 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, ஜாதி வாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தியுள்ளனர் என்பதும் நல்ல செய்தியே!

சட்டத்தில் ஜாதி ஒழிக்கப்படவில்லை

இன்று நாட்டில் உள்ள நிலையில், ஜாதியை ஒழிக்க நாம் கடுமையான முயற்சிகளை, பிரச்சாரங்களை, வேலைத் திட்டங்களை - ஜாதி மறுப்புத் திருமணங்கள் போன்ற பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுகிறோம் என்றாலும்கூட,

நமது நாட்டில் ஜாதிமுறை - சட்டப்படி ஒழியவில்லையே!

நமது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் "ஜாதி” (Caste) என்ற சொல் இடம் பெற்றிருக்கிறது என்பதை கர்நாடகத்தில் அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான எல்.ஜி. ஹாவனூர் கமிஷன் அறிக்கையிலேயே மிகவும் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது!

தந்தை பெரியார் கூட்டிய கடைசி மாநாட்டின் தீர்மானம்

அதனால்தான் ஜாதி ஒழிப்பையே தனது வாழ்நாள் தொண்டாகத் தம் மேல் போட்டுக்கொண்டு உழைத்த அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள், நமது இந்திய அரசியல் சட்டத்தில் 17 ஆவது பிரிவில் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது; அதனை எந்த ரூபத்தில் கடைப்பிடித்தாலும், சட்டப்பூர்வமாக தடைப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்படும் நிலையில்,

“Untouchability is abolished and its practice in any form is forbidden by law” (Article 17) என்பதில், ‘Untouchability’ என்ற சொல்லை நீக்கிவிட்டு, ஜாதி (Caste) - என்ற சொல்லைப் போட்டுவிட்டு, அடியில் விளக்கத்திற்காக (By way of Explanation - Caste includes “untouchability also) என்று போட்டுவிடலாம் என்று, தாம் நடத்திய கடைசி மாநாடான தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் (சென்னையில் 1973 டிசம்பர் 8, 9) முக்கிய தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு வெளிச்சத்தைத் தந்தார்கள்.
அதனை இத்தனை ஆண்டுகள் - 35 ஆண்டுகள் ஆகியும் மத்திய அரசு நடைமுறைப்படுத்தி, சுதந்திர நாட்டில் சூத்திரன் இல்லை, பஞ்சமன் இல்லை; பார்ப்பான் இல்லை; மனிதர்கள் - உண்டு என்று காட்ட எந்த முயற்சியையும் எடுக்கவில்லையே!

பெரும்பாலும் எல்லா திருமண விளம்பரங்களில்கூட, ஜாதி - கோத்திரம் பார்க்கப்படுகின்றன; கேட்கப்படுகின்றனவே!

நெருப்புக்கோழி மனப்பான்மை வேண்டாம்!

இந்துக் கோயில் கருவறைகளில் உயர்ஜாதி பார்ப்பனர் மட்டுமே அர்ச்சகராகி பூஜை செய்ய இயலும் என்று இதுவரை இருந்து வந்த நிலையை புதியதோர் சட்டம் கொண்டு வந்து நமது முதல்வர் கலைஞர் தலைமையில் உள்ள அரசு ஒரு சமூகச் சீர்திருத்தச் சட்டத்தை கொணர்ந்த நிலையில்கூட, அதையும் எதிர்த்து உச்சநீதி மன்றப் படையெடுப்புகள் நடைபெறாமலா இருக்கின்றன?

இந்நிலையில், சென்சஸ் - மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, மாத்திரம் ஜாதியைக் குறிக்காமல் விடுவதால் யாருக்கு லாபம்? முன்னேறிய ஜாதியரான - ஆதிக்க ஜாதியரான பார்ப்பனர் போன்றவர்களுக்குத்தானே அது கல்வி, உத்தியோகங்களை ஏகபோகமாய் அனுபவிக்க உதவிடும் - வாய்ப்புகளை ஏற்படுத்தும் மறைமுக வழியாகவிருக்கிறது?

ஜாதியை சட்டப்பூர்வமாக ஒழிக்க முன்வராத நிலையில், இப்படி ஒரு நெருப்புக்கோழி மனப்பான்மை எதற்குப் பயன்படக் கூடும்?

1931-க்குப் பிறகு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை

மத்திய கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம்பற்றிய வழக்கு வந்தபோது, இதை ஒரு முக்கிய காரணமாக சில நீதிபதிகள் சுட்டிக்காட்டினரே!

1931-க்குப் பிறகு சென்சஸ் - மக்கள்தொகை கணக்கெடுப்பு ஜாதி வாரியாக நடைபெறவே இல்லை; பழைய கணக்குப்படிதான், இந்த இட ஒதுக்கீடு உள்ளது என்று கூறி நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்று ஆக்கிக் கொள்ள முயற்சித்தனரே!

மார்பில் முப்புரி நூல் - பூணூல் அணிந்துகொண்டே, ஜாதி யெல்லாம் போட வேண்டாம் என்று உபதேசம் செய்வதனால் அவாள் ஜாதி ஒழிப்புப் புரட்சியாளர்களாகி(?) விட்டார்கள் என்று நம்மில் பெரும்பாலோர் நம்பி ஏமாற வேண்டுமா? கூடாது! கூடவே கூடாது!


போர்க்களத்தில் நாம் எடுக்கவேண்டிய ஆயுதம் எது? என்பதை நம்முடைய எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள் என்ற மாவோவின் பொன்மொழிதான் நமக்கு இப்போது நினைவிற்கு வருகிறது!

1962 இல் தந்தை பெரியார் சொன்னது...

1962 ஆகஸ்ட்டில் புதுச்சேரியில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டில் நிகழ்த்திய பேருரையில் தந்தை பெரியார் அவர்கள் கூறினார்கள், ஜாதிப் பட்டத்தை நீக்கிவிட்டு, கல்வி உத்தியோகங்களில் பார்ப்பனர்கள் அனுபவிக்க ஒரு முற்போக்கு வேஷம் போடுகிறார்கள் என்றால், அதைப் புரிந்துகொண்டோம் நாம் என்று காட்ட, நீங்கள் ஜாதிப் பட்டத்தையும் போட்டுக் கொள்ளத் தயங்காதீர்கள் என்று சொல்லவேண்டிய அவசியமும் கூட வரக்கூடும் என்று தெளிவாகச் சொன்னார்கள்!

சமூகநீதிக் கண்ணோட்டத்தில் இப்படி ஒரு நிலைப்பாடு எடுப்பதில் எவ்வித முரண்பாடோ, பின்னடைவோ கிடையாது!

பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் புதுடில்லியில் பலரையும் கூட்டி எடுத்த முயற்சி மிகவும் வரவேற்கத் தக்க முயற்சி! நாம் காலங்காலமாக எடுத்துச் சொன்ன கருத்துகளின் உருவாக்கமே அது!

எனவே, மற்ற அரசியல், சமூக இயக்கங்களும், எவ்விதக் குழப்பத்திற்கும் ஆளாகாமல், மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது, ஜாதியைக் குறித்தாகவேண்டும் என்பதை வலியுறுத்திட முன்வரவேண்டும்.

ஜாதி ஒழிப்பு சட்டப்பூர்வமானால், பிறகு இப்படி ஒரு நிலைப்பாடு தேவைப்படாது என்பதையும் ஜாதி ஒழிப்பு ஆர்வலர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

------------------ "விடுதலை" 29-10-2008

கோட்சே காலம்முதல் இன்றுவரை ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கூட்டத்தின் திரைமறைவுச் சதிகள்-கொலைகள்சங்பரிவார்க் கும்பல் முன்னின்று நடத்தும் வன்முறைகளை முசுலிம்கள் நடத்தியதாகப் பழிபோடும் சூழ்ச்சிகளை தக்க ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:-

அண்மைக்காலமாக இந்தியாவில் பல பகுதிகளிலும் குண்டு வெடிப்புகள் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டு இருக்கின்றன. விலை மதிப்பில்லா மனித உயிர்கள் பலியாகின்றன. வேதனை! வேதனை!! வெட்கம்!!

இந்தக் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் மதவெறித்தனம் கொம்பு சீவப்பட்டு இருக்கிறது.

பெரும்பாலும் இந்தக் குண்டுவெடிப்புகளுக்கெல்லாம் முசுலிம் தீவிரவாதிகள்தான் காரணம் என்பது போன்ற ஒரு தோற்றம் கொடுக்கப்பட்டும் வருகிறது!

ஊடகங்கள் கைகளில் இருக்கும் காரணத்தால்...

ஊடகங்களில் 71 சதவிகிதம் உயர்ஜாதி பார்ப்பனர்களின் கைகளில் அடைக்கலம் தேடியுள்ளதால், முஸ்லிம் தீவிரவாதம் என்ற தலைப்பில் திட்டமிட்ட வகையில் பிரச்சாரப்படுத்தி வருகின்றனர்.

ஆனால், அண்மையில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் சில தகவல்கள் - கண்டுபிடிப்புகள் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பல் இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, அந்தப் பழியை முசுலிம்கள்மீது சுமத்தும் ஒரு தந்திரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நிரூபித்து வருகின்றன!

இதன்மூலம் பெரும்பான்மை மக்களான இந்துக்களை சிறுபான்மைமக்களான முசுலிம்கள்மீது வன்முறையை ஏவிவிடுவதுதான் இதன் திரைமறைவு நோக்கமாகும்.

பார்ப்பனர்கள் - ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்தவர்கள் எப்போதும் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடக் கூடியவர்கள் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு.

காந்தியாரைக் கொன்ற கோட்சே!

1. உதாரணமாக தேசப்பிதா என்று மக்களால் மதிக்கப்பட்ட காந்தியாரைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பார்ப்பனன் என்ன செய்தான்? தனது கையிலே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக்கொண்டான்; முசுலிம்களின் மார்க்கப்படியான சுன்னத்தும் செய்துகொண்டிருந்தான் என்றும் கூறுகிறார்கள்!

காந்தியாரைச் சுட்டுக் கொன்றவன் ஒரு முசுலிம் என்று பழி சுமத்தி, பிரச்சாரம் செய்து, இந்துக்களை முசுலிம்கள்மீது மோதவிடும் சூழ்ச்சிதானே இது?

காந்தியாரைக் கொன்றது முசுலிம் அல்ல - ஒரு இந்துப் பார்ப்பனன் என்று தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தனர். அந்த உண்மை வெளிவருவதற்கு முன்பாக சில ஊர்களில் இந்துக்களால் முசுலிம்கள் தாக்கவும் பட்டனர்.


சதுமுகையில்...

2. தமிழ்நாட்டில் சத்தியமங்கலத்தையடுத்த சதுமுகை என்ற ஊரில் விநாயகன் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டு இருந்தது. இன்னொரு சாமி சிலை பீடத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு இருந்தது.

ஊரில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினரின் புத்திசாலித்தன மான விசாரணையில் சிக்கியவர்கள் யார் என்றால், அவ்வூர் இந்து முன்னணியைச் சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 17) மற்றும் செல்வக்குமார் (வயது 23) ஆகியோர்.

தாங்கள்தான் அவ்வாறு செய்ததாக இந்து முன்னணியைச் சேர்ந்த இருவரும் ஒப்புக்கொண்டனர். திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள்மீது பழியைப் போடுவதுதான் அவர் களின் நோக்கம் என்ற குட்டும் உடைபட்டது. (தி இந்து, 18.2.2002).

தென்காசியில்...


3. அதேபோல, திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். 2006 ஜனவரி 24 இல் இது நடந்தது.

இந்து - முசுலிம் மதக் கலவரத்தைத் தூண்டவேண்டும் என்ற பின்னணியில் இந்து முன்னணியினர் இருந்தனர்.

தென்காசி நகர இந்து முன்னணியின் தலைவர் குமார்பாண்டியன் என்பவர், முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டார். இதில் மூன்று முசுலிம்கள் கைது செய்யப்பட்டனர். மதக் கலவரம் ஏற்பட்டு, முசுலிம்களின் கடைகளும், வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

நோக்கம் மதக் கலவரத்தைத் தூண்டுவதே!


இதன் பின்னணியில் தென்காசியில் இந்து முன்னணி அலுவல கத்தில் குண்டுவெடித்தது. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப் பட்டனர். அத்தனைப் பேரும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள்.

குமார்பாண்டியன் கொலை செய்யப்பட்டபோது பெரிய அளவில் மதக்கலவரம் ஏற்படாததால், இந்தக் காரியத்தைச் செய்து அதன் மூலம் பெரிய அளவு கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்பதுதான் தங்கள் நோக்கம் என்று கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.

கடையநல்லூரைச் சேர்ந்த சிவா என்ற சிவானந்தம் தமிழக இந்து முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆவார். இவர் கேரளாவில் கல்குவாரியில் வேலை செய்தவர். பாறைகளை உடைக்கப் பயன்படும் அமோனியம் நைட்ரேட்டை வெடிகுண்டு தயாரிப்பதற்காக இவர் கொடுத்திருக்கிறார் என்பதும் கண்டுபிடிக்கப் பட்டது.

கான்பூரில் நடந்தது என்ன?

4. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 2008 பிப்ரவரி 24 இல் நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் சங் பரிவார்க் கும்பல் வெடிகுண்டு தயார் செய்யும் தொழிற்சாலையையே நடத்திவரும் சங்கதி வெளியில் வந்தது.

பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மிஸ்ரா மற்றும் பூபீந்தர் சிங் ஆகியோர் வெடிகுண்டுகளைத் தயாரிக்கும்பொழுது எதிர்பாராதவிதமாக அவை வெடித்து உடல் சிதறிப் போனார்கள்.

மிகப்பெரிய தொடர் குண்டுவெடிப்பு வன்முறைக்கு அவர்கள் திட்டம் தீட்டியிருந்தது தெரிய வந்தது. கான்பூர் காவல்துறை அய்.ஜி. எஸ்.என். சிங் செய்தியாளர்களிடம் இதுபற்றி விளக்கினார்.

வெடிகுண்டு தயாரிப்புக்குத் தேவையான ஏராளமான பொருள்களும் கைப்பற்றப்பட்டன.

இராணுவத்தில் பயன்படுத்தப்படக் கூடிய குண்டுகளுக்கு ஒப்பானவை அவை!

வரைபடங்களும், நாள்குறிப்பு, தாக்கப்படவேண்டிய முசுலிம்களுக்குச் சொந்தமான முக்கிய இடங்கள்பற்றிய விவரங்கள் எல்லாம் கிடைத்தன.

மகாராட்டிரத்தில்...


5. மகாராட்டிரத்தில் நந்தித் எனும் இடத்தில் இதேபோல, குண்டு களைத் தயார் செய்து கொண்டிருந்தபோது, வெடித்துச் சிதறியதால் பஜ்ரங்தள் தீவிரவாதிகளான நரேஷ்ராஜ் மற்றும் ஹிமான் ஷீ பான்சே ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர் (4.5.2006).

பெண் சாமியார் சிக்கினார்

6. மகாராட்டிர மாநிலம் மலேகானில் சிமி அலுவலகம் சக்தி வாய்ந்த குண்டுகளால் தகர்க்கப்பட்டது (29.9.2008). ஆறு இசுலாமியத் தோழர்கள் பலியானார்கள்; 90 பேர் படுகாயமடைந்தனர்.

மோட்டார் சைக்கிளில் மர்ம மனிதர்கள் வெடிகுண்டுகளை எடுத்துவந்து வெடிக்கச் செய்திருப்பது புலன் விசாரணையில் தெரிய வந்தது. டைமர் கருவி பொருத்தப்பட்டு இருந்த அந்த வெடிகுண்டு ஆர்.டி.எக்ஸ் மற்றும் அமோனியம் நைட்ரேட் கலவையால் தயாரிக்கப்பட்டு இருந்தது.

புலன் விசாரணையில் பெண் சாமியார் பிரக்யாசிங் பாரதி தாக்கூர் (வயது 38) என்பவர் இதன் பின்னணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைதும் செய்யப்பட்டுவிட்டார். வந்தே மாதரம் என்ற அமைப்பைத் தொடங்கிய இந்தப் பெண் சாமியாருக்கு உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று வருணிக்கப்பட்ட முதலமைச்சராகிய நரேந்திரமோடி, குஜராத் மாநில அரசின் உதவித் தொகையெல்லாம் கூட கிடைத்து வருகிறதாம்!

படிக்கும் காலத்தில் ஆர்.எஸ்.எஸின் மாணவர் பிரிவான ஏபிவிபியில் (ABVP) தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார். துர்காவாகினி, ஜாக்ரான் மஞ்ச் இவைகளில் தீவிர உறுப்பினராக இருந்திருக்கிறார் இந்தப் பெண் சாமியார்!

பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோரிடம் நெருக்கமானவர் இந்தப் பெண் சாமியார். மேடைகளில் இந்து வெறித்தன நெருப்பைக் கக்கும் பேச்சாளர் இவர். இவரோடு மேலும் மூவர் இந்த வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர். மூவரும் இராணுவத்தில் பணி யாற்றிய அதிகாரிகள். இருவர் கைது செய்யப்பட்டு விட்டனர்; இராணுவப் பணியில் இருக்கும் இன்னொருவரைக் கைது செய்ய இராணுவத் துறையிடமிருந்து அனுமதிக்காகக் காத்திருக்கின்றனர்.

குல்கர்னி, உபாத்யா ஆகிய முன்னாள் இராணுவ அதிகாரிகள் ஆவார்கள். நாசிக் அருகே இராணுவப் பயிற்சி மய்யம் ஒன்றினை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டுகளைத் தயார் செய்வது எப்படி? அவற்றைக் கையாளுவது எப்படி என்கிற பயிற்சிகளையெல்லாம் சங் பரிவார்க் கும்பலுக்கு இவர்கள் கற்றுத் தந்துள்ளனர்.

பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இராணுவத்திலும் ஏராளமான ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களை நுழைத்தனர். விமானப் படைத் தளபதி விஷ்ணு பகவத் இதனை அப்பொழுதே வெளிப்படுத்தியதுண்டு.

பா.ஜ.க. செயற்குழுக் கூட்டத்தில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள், தளபதிகள் கலந்துகொண்டு விளக்கம் அளித்ததையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

96 ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்க் கப்பட்டது ஏன் என்பது இப்பொழுது மகாராட்டிரத்தில் - வெடி குண்டு வழக்கில் இராணுவ அதிகாரிகள் மூவர் சம்பந்தப்பட்டதி லிருந்து தெரிந்துகொள்ளலாமே!

மகாராட்டிர மாநிலம் மலேகானில் குண்டுவெடித்த அதே நாளில் குஜராத் மாநிலம் மாடேகாவிலும் குண்டுவெடித்தது. இரண்டும் ஒரே ரகத்தைச் சேர்ந்தவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதற்குமுன் நடைபெற்ற அனைத்துக் குண்டுவெடிப்பு களின் பின்னணியில் சங் பரிவார்க் கும்பல் பெரும்பாலும் இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்று கருதப்படுகிறது.

இராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் பயிற்சி நிலையங் களையும், தொழிற்சாலைகளையும் வைத்து திட்டமிட்ட வகையில் இந்தக் கும்பல் செயல்பட்டதைப் பார்க்கும்பொழுது இந்த அபாயகரமானவர்கள் நாடு முழுவதும் வெடிகுண்டு வேலையை அரங்கேற்றுபவர்கள் என்பது எளிதில் விளங்கிவிடும்.

சூரத் நகரில் வெடிகுண்டு சேதத்தைப் பார்வையிட நரேந்திர மோடி வந்தபோது, பாதையில் மரங்களில் வைக்கப்பட்டிருந்த 18 வெடிகுண்டுகளைக் காவல்துறையினர் கண்டுபிடித்து எடுத் தனர். வைத்ததே அவர்களாகவே இருக்கக்கூடும் என்கிற அய்யம் நியாயமானதே!

சங் பரிவார்க் கும்பல் இப்படியெல்லாம் வன்முறைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்ய தொழிற்சாலை களையெல்லாம் வைத்துச் செயல்படும் பயங்கரமான தகவல்கள் அம்பலத்திற்கு வந்து கொண்டேயிருக்கின்றன. வழக்கம்போல் எங்கள்மீது அபாண்ட பழி என்று கூறி கூக்குரல் போடுகிறார்கள் சங் பரிவார் மற்றும் பா.ஜ.க.வினர்.

இந்த யோக்கியதையில் உள்ள ஒரு கூட்டம் சிறுபான்மை யினர்மீது வன்முறை முத்திரை குத்தி அவர்களுக்கு எதிரான வெறுப்பினைத் தூண்டும் ஒரு வேலையில் திட்டமிட்ட முறையில் இறங்கியுள்ளது என்பதுதான் உண்மை. இதுபோலவே ஒரிசாவிலும் கிறித்தவர்கள்மீது பழி - படுகொலைகள்.

நடவடிக்கைகள் தேவை


மத்திய - மாநில அரசுகள் இந்த அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்பு என்ற பட்டியிலில் வைத்து சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகளை உடனடியாகச் செய்யாவிட்டால், நாடு பெரும் விலையைக் கொடுக்கவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம்.


------------------- "விடுதலை" -28-10-2008

நிலவைத் துளைத்த தமிழன்!

சிறிஹரி கோட்டா சதீஸ்தவான் விண்வெளி மைய ராக்கெட் தளம், நேரம்: 22-10-2008 அதிகாலை 6.20 மணி - பரபரப்பாக இருக்கிறது. இந்திய விண்வெளி ஆராயச்சி நிறுவனமான (இஸ்ரோ!) விஞ்ஞானிகளின் இதயத் துடிப்பு ராக்கெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கிறது. நேரம் 6.22 அவ்வளவுதான். பி.எஸ்.எல்.வி. சி. ஐஐ ராக்கெட் தன் முதுகில் சந்திராயன் செயற் கைக்கோளை ஏற்றிக் கொண்டு தன் வாலில் தீப்பிழம்புகளைப் பற்ற வைத்துக்கொண்டு நொடிப்பொழுதில விண்ணிற்கு கிளம்பிவிட்டது. நிலவுக்கு இந்தியா அனுப்பிய முதல் ஆளில்லாத செயற்கைக்கோள் அனுப்பப்பட்டதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் கட்டி ஆரத்தழுவிக் கொண்டு உற்சாக மிகுதியில் கத்த.. ஒட்டுமொத்த இந்தியர்களும் மிகுந்த கர்வத்துடன் தங்கள் சட்டைக்காலரை தூக்கிவிட்டுக் கொண்டார்கள்.

சந்திராயன் செயற்கைக்கோளில் நிலவின் வரைபடம் உருவாக்கும்கேமராவும், நிலவில் உள்ள வாயுக்களையும் தண்ணீர் பனிக்கட்டி உள்ள பகுதிகளை கண்டறிந்து நமக்குப் படம் பிடித்துத்துத் தர கருவிகளும் இருக்கின்றன. இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கும் சந்திராயன் திட்ட இயக்குநர் ம. அண்ணா துரையின் சொந்த ஊர் கோவை கிணத்துக்கடவு தாண்டியுள்ள கோதவாடி என்ற குக்கிராமம்.


தொடர் தொலைபேசி வாழ்த்துகளிலும் உறவினர் வருகையாலும் திக்குமுக்காடிப் போயிருக்கும் அண்ணாதுரையின் அப்பா மயில்சாமியை பீளமேடு ராதாகிருஷ்ணன் மின் குவாட்டர்சில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்குங்க, என்ன சொல்றது...? நான் பட்ட கஷ்டத்திற்கான இன்பத்தை இப்போது அனுபவிக்கிறேன் என்றார். எங்க குடும்பம் நெசவு செய்யுற குடும்பம். அதைப்போல, தி.மு.க.வோட விசுவாச குடும்பம். அதனால்தான் அறிஞர் அண்ணா பேரை என் பையனுக்கு வெச்சேன். பேருக்குத் தகுந்தமாதிரியே பேச்சுப்போட்டி, நாடகப்போட்டியில் முதல் பரிசு கோல்டு மெடல்னு வாங்கிக் குவிப்பான். கோதவாடி அரசு நடுநிலைப் பள்ளியில் ஒண்ணாவது படிச்சிட்டிருந்த அண்ணா துரைக்கு நான்தான் ஆசிரியர். கண்ணும் கருத்துமாகப் படிப்பான்.

கோதவாடி பள்ளியில் இருந்து மாற்றலானபேது இருந்த வீட்டை விற்றுவிட்டு நல்லட்டிப் பாளையத்தில் குடியேறினோம். அங்கிருந்து கிணத்துக்கடவு அரசு உயர்நிலைப்பள்ளி அய்ந்து கிலோமீட்டர் தள்ளியிருக்கிறது. அண்ணாதுரை நடந்தேதான் போவான். அப்போது பஸ் கட்டணம் 10 காசுதான் அதைக்கூட என்னால் தரமுடியாது. என்னைக்காவது தந்தாகூட பஸ்சுல போகாம கொடுத்த காசை சிறுசேமிப்பில் சேர்த்து வத்து அவனுக்கு வேண்டிய புத்தகத்தை வாங்கிக்குவான். மழை வந்தால் கூட தலைக்கு கெங்காடை (சாக்கு பை) போட்டுக்கிட்டு ஸ்கூலுக்கும் போயிடுவான் அவனும் சரி, அவன்தம்பிகளும் சரி அரசினுடைய ஸ்காலர்ஷிப் வாங்கித்தான் படிச்சாங்க.

ஜி.சி.டி. காலேஜில் பி.இ. எலக்ட்ரானிக்ஸ் முடிச்சதுமே, பி.பி.எல்.ல. வேலைகிடைச்சும் போகாம மேல படிக்கணும்னு பி.எஸ்.ஜி. கல்லூரியில் எம்.இ., படிச்சான். படிச்சு முடிஞ்சதும் இஸ்ரோவுக்கு விண்ணப்பிச்சு செலக்ட்டாயிட்டான். எப்பவுமே படிப்புன்னு இருந்த அவனுக்கு வற்புறுத்தித்தான் கல்யாணமே பண்ணி வைச்சோம். கல்யாணம் முடிந்ததும் பெங்களூரிலேயே செட்டிலாயிட்டான். சந்திராயன்கிற பேரே பிரதமராயிருந்த வாஜ்பாய் வெச்சதுதான். சந்திராயன்னா நிலவு தொடும் வாகனம்ன்னு அர்த்தமாம். அந்த சந்திராயனுடைய திட்ட இயக்குநரை தேர்ந்தெடுக்க டெஸ்ட் வெச்சப்போ எம் பையன்தான் ஃபர்ஸ்ட்டா வந்தான். அப்துல்கலாம் கூட இந்தத் திட்டம் எந்த நிலையில் இருக்குன்னு அடிக்கடி கேட்பாராம். இந்த திட்டத்தை சிறப்பா செய்யணும்னு சொல்லிகிட்டே யிருப்பாராம். அவர் சொன்னபடியே சாதிச்சுட்டான் என் மகன் என்கிறார் பெருமையோடு.

அம்மா பாலசரஸ்வதியோ, என் பையன் படிக்கும்போது ஏகப்பட்ட மெடல் வாங்கியதை பார்த்திருக்கிறேன். இப்போ தமிழக அரசாங்கத்துக்கிட்ட இருந்து விருது வாங்கணும், அந்தக் காட்சியை கடைசி காலத்துக்குள்ள கண்ணார பார்த்துரணும் என்றார் பொங்கிவரும் ஆனந்த கண்ணீரைத் துடைத்தபடியே. கற்பகம் இன்ஜினியர் காலேஜில் பிரின்ஸ்பாலாய் இருக்கும் அண்ணாதுரையின் தம்பி மோகனசுந்தரம், தங்கை மணிமேகலையும் - செயற்கைகோள்ல எந்தப் பிரச்சினையானாலும் அது என்னைத்தான் சேரும். அதனால் யாரும் போன்பண்ணி டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னு சொல்லுவாரு அண்ணன் அண்ணாதுரை. அவரது முயற்சிக்கும் அர்ப்பணிப்புக்கும் கிடைச்ச வெற்றிதான் இது. அப்பா சொன்னதுபோல சிறு சேமிப்புல சிக்கனமாய் இருந்த பழக்கம் தானோ என்னவோ 386 கோடி ரூபாயில் இந்த பிராஜெக்ட் எப்படி சாத்தியப்பட்டது என்று மற்ற விஞ்ஞானிகள் அண்ணனிடம் வியப்பா கேட்டிருக்காங்க என்று உணர்ச்சி வயப்பட்டார்கள்.

திட்ட இயக்குநர் அண்ணாதுரை அவர்களின் கருத்துகள்:

சந்திராயன் கோள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டபோது நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. நம்முடைய குழந்தைபோல போகிறது. அது சரியான பாதையில் நடக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டோம். இந்திய மக்களிடைய வரிப்பணத்தில் அதுவும் தமிழ்மொழியில் படித்த நான் இந்தியாவுக்காக ஏதாவது செய்யவேண்டுமென்று நினைக்கிறேன். செய்வேன். நிலவுக்கு சந்திராயன் செயற்கைக்கோளை அனுப்பிய ஆறாவது நாடு என்ற பெருமை இந்தியா பெற்றுள்ளதற்கு எல்லோரும் வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். கலைஞர் அவர்களும் வாழ்த்துகள் தெரிவித்திருக்கிறார். இதற்கு நான் அடையும் சந்தோசத்தைவிட சுப்பிரமணியன் என்ற ஜாதகப் பெயரை நீக்கிவிட்டு அண்ணாதுரை என்று பெயர் வைத்த என்னைப் பெற்ற ஜீவன்கள்தான். அளவுக்கு அதிகமாய் சந்தோசப்பட்டிருக்கும் என்றார் - நெஞ்சுருக.

எந்தவொரு இந்தியரின் இதயத்தைப் பிளந்தாலும் உள்ளே பொறிக்கப்பட்டிருக்கும் தேசியக் கொடியை இன்னும் சில நாட்களில் சந்திராயன் கோளில் உள்ள மூன் இம்பாக்ட் புரோப் என்ற கருவி நிலைவில் மேற்பரப்பை பிளந்து நிலவின் இதயத் தினுள் பொறிக்கவிருக்கின்றதாம். இதை சாத்தியப்படுத்திய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் அதை முன்னின்று சாதித்த தமிழன் அண்ணாதுரைக்கு ஒரு வணக்கம், நல்வாழ்த்துகள்.

-------------------நன்றி: "நக்கீரன்", 19.10.2008

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக 24 மணிநேர உறங்கா நிலைப் போராட்டம்
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக

சுவிஸ் தமிழ் இளைஞர்கள்
நடத்திய 24 மணிநேர உறங்கா நிலைப் போராட்டம்


சுவீஸ், அக். 28- சுவிசில் உள்ள தமிழ் இளைஞர்கள் அமைப்பினர் நடத்திய 24 மணிநேர உறங்காநிலைப் போராட்டத்தில் 35-க்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். 24.10.2008 அன்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்குத் தொடங்கி மறுநாள் (சனிக்கிழமை) இரவு 7 மணிவரை இந்தப் போராட்டம் நடைபெற்றது.

வன்னியில் சிறீலங்கா படையினரது போர் முன்னெடுப்புகளினால் இடம்பெயர்ந்து அல்லலுறும் தமிழ் உறவுகளை நினைவுகூர்ந்தும் மற்றும் தமிழ்நாடு முழுவதும் மாணவச் சமுதாயத்தால் மேற்கொள்ளப்படும் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்திற்கு ஆதரவைத் தெரிவித்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உறங்காநிலைப் போராட்டத்தின் தொடக்க நாளில் பங்கேற்ற இளையோர்களுக்கு எங்களையும் கொஞ்சம் பாருங்களேன் எனும் ஒளிப்பட நாடாவும் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் இன உணர்வாளர்களின் உரையும் காண்பிக்கப்பட்டது. இளையோர்களின் பெற்றோர்களினது உணர்வு மிக்க கருத்துகளோடு உறங்கா நிலைப் போராட்டம் நிறைவுபெற்றது.

மான உணர்வுள்ளவர்களாக ஆக்குவதே நமது வேலை
"மதச் சம்பந்தமான, கடவுள், புராண, இலக்கியச் சம்பந்தமான விஷயங்களில் மக்களுக்கு உள்ள மூட நம்பிக்கைகளைப் போக்கித் தெளிவு ஏற்படுத்தி அவர்களை ஒழுக்கம் உள்ளவர்களாக, மான உணர்வுள்ளவர்களாக ஆக்குவதே நமது முக்கிய வேலை."

--------------------- தந்தைபெரியார் - "விடுதலை", 2.4.1973

பார்ப்பனர்கள் பார்வையில் ஈழப் பிரச்சினை

பார்ப்பனர்களை அடையாளம் காண வேண்டுமானால் இரண்டு அளவுகோல்கள் இருக்கின்றன; அவற்றின் மூலம் அவர்களைப் பொறி வைத்துப் பிடித்துவிடலாம்.

ஒன்று - சமூகநீதி தொடர்பானது, இன்னொன்று தமிழன் என்ற இனக் கோட்பாடு; இரண்டிலும் அவர்கள் தங்களைப் பார்ப்பனர்கள் என்பதைக் காட்டிக் கொள்வார்கள்.


இப்பொழுது மிக முக்கியப் பிரச்சினையாக எழுந்துள்ள ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் அண்ணாவின் பெயரைத் தம் கட்சியில் பொறித்து வைத்துள்ள செல்வி ஜெயலலிதா வானாலும், மார்க்சியம் பேசுகின்ற இந்து ராம் ஆனாலும் பத்திரிகா தர்மம் பேசுகின்ற சோ ராமசாமியானாலும் - இந்த அக்ரகாரத் திருமேனிகள் இந்தப் பிரச்சினையில் சுருதி பேதம் இல்லாமல் ஒரே வாசிப்பாக இருப்பதை நாடு அறிந்து கொண்டுதானிருக்கிறது.

இலங்கையிலிருந்துகூட அரசு வானொலி சோ ராமசாமியைத் தேடிப் பிடித்துதான் பேட்டி காண்கிறது. அவர் போன்றவர்கள் கூறும் கருத்துகள்தானே அவர்களுக்குத் தேவை. இலங்கை அதிபரின் மூத்த ஆலோசகர்கூட கருணாநிதிக்கு எதிராக ஜெயலலிதா பேசியிருப்பதை நினைவில் வையுங்கள் என்று எடுத்துக்காட்டுவதையும் கவனித்தால், இந்தப் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் தமிழர்களால் பிழைத்துக் கொண்டிருந்தாலும்கூட, தமிழர்களைக் காட்டிக் கொடுப்பதில் எந்த அளவுக்கு ஆர்வ வெறி பிடித்தவர்களாக இருக்கின்றனர் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

ஈழத்தில் முதலில் செய்யவேண்டியது போராளிகளை ஒடுக்குவதுதானாம். அதன்பின் பாதிக்கப்படும் மக்களுக்காகச் செய்யவேண்டியதுபற்றி யோசிக்கலாம் என்கிற தோரணையில் பேசியும், எழுதியும் வருகிறார்கள்.

போராளிகளைப்பற்றி கொச்சைப்படுத்தவேண்டும் என்பதுதான் இந்தக் கும்பலின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இந்தப் போராளிகள் எந்தச் சூழ்நிலையில் தோன்றினார்கள்? எந்தக் காலகட்டத்தில் ஆயுதங்களை ஏந்தினார்கள் என்கிற திசையிலே தப்பித் தவறிக்கூட அவர்கள் சிந்திக்கமாட்டார்கள் - அந்த இடத்தின் பக்கமே தங்களின் பார்வையைச் செலுத்தமாட்டார்கள்.

ஏதோ இந்தப் போராளிகள் தோன்றி ஆயுதங்களைத் தூக்கியதற்குப் பிறகுதான் சிங்கள அரசு தமிழர்களைக் கொன்று குவிக்க ஆரம்பித்ததுபோல ஒரு பித்தலாட்டப் பிரச்சாரத்தைச் செய்துகொண்டு வருகிறார்கள்.

1938 இல் இருந்தே இலங்கைப் பிரச்சினை தொடங்கப்பட்டது. 1953-இல் 1983-இல் எல்லாம் என்ன நடந்தது என்பதைப்பற்றி இவர்கள் ஏன் வாயையோ, பேனாவையோ திறப்பதில்லை?

தமிழன் மாமிசம் இங்கே கிடைக்கும் என்று சிங்களவர்கள் விளம்பரம் செய்தது எல்லாம் எந்த அடிப்படையில் சிங்கள இராணுவம்!

இவ்வாறு அரசு, போராளிகளைத்தான் தாக்குகிறது; அங்குள்ள தமிழர்களையல்ல என்பது போன்ற தோற் றத்தை இவர்கள் உருவாக்க முயலுகிறார்கள் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

வீடு வீடாகச் சென்று தேடுதல் என்ற போர்வையில் தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தினார்களே - அதுகூட போராளிகள்மீதான எதிர்ப்புதானா?

தன் தாயையும், தன் மகளையும் தன்னெதிரே பாலியல் கொடுமைக்கு ஆட்படுத்தியபோது, மான உணர்ச்சி உள்ள எவரும் ஆயுதத்தைத் தூக்கமாட்டானா? பார்ப்பனர்களுக்கு வேண்டுமானால் அத்தகைய பிரச்சினைகளில் ரத்தம் சூடேறாது - ஒரு கரண்டி நெய்யின்மூலம் விபச்சார தோஷத்தைப் போக்கிக் கொள்வார்கள்! தமிழர்கள் அத்தகையவர்கள் அல்லவே!

ஏதோ ஈழத் தமிழர்கள்மீதுதான் பார்ப்பனர்களுக்குத் துவேஷம் என்று கருதிவிடக் கூடாது. ஈழத் தமிழர்கள் என்பது ஒரு குறியீடு; மற்றபடி எந்த நாட்டில் வாழும் தமிழர்களும் பார்ப்பனர்கள் கண்களில் கருவேல் முள்ளைப்போல உறுத்தத்தான் செய்யும்.

தைமுதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு என்றால், அவர்களின் நிலை என்ன? தமிழ் வழிபாட்டு மொழி என்றால் அவர்களின் பார்வை என்ன? தமிழனும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்றால், அவர்களின் செயல்பாடுகள் எத்தகையவை? அதே நிலைதான் ஈழத் தமிழர்ப் பிரச்சினையிலும்.

தமிழர்களே, பார்ப்பனர்களை இதற்கு மேலுமா அடையாளம் காணத் தயங்குகிறீர்கள்?


------------------- நன்றி:"விடுதலை" தலையங்கம் 28-10-2008

ஜெய் சிறீ ராம் எனக் கத்திக் கொண்டு தெருக்களில் கும்பலாக ஓடிவரும் கூலிப்படைகள்
வெறுப்பே வரலாறாய்....


கத்திகள், துப்பாக்கிகள், மண்ணெண்ணெய் டின்கள் முதலியவற்றைத் தூக்கிக் கொண்டு ஜெய் சிறீ ராம் எனக் கத்திக் கொண்டு தெருக்களில் கும்பலாக ஓடிவரும் கூலிப்படைகள் அடுத்த மதக்காரர்களை அடித்துக் கொல்வதைப் பார்க்கிறோம். ஏதோ, பழங்கால படைவீரர்களைப் போல இவர்கள் நடமாடுகிறார்கள்.

மதவெறுப்பு என்பது சமீபகாலங்களில் நாடு முழுவதும் ஏற்பட்டு வருகிறது. காலித்தனங்களில் ஈடுபடும் குண்டர்களுக்கு இது மத நம்பிக்கையின்பாற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றையெல்லாம் இந்தக் காலிகள் எங்கே கற்கிறார்கள்? நம் கல்வி முறையின் கோளாறாக இருக்கலாம். அல்லது கல்வி அறிவற்ற தன்மையால் இருக்கலாம். பள்ளிகளில் உள்ள வரலாறு பாடப்புத்தகங்கள் முழுக்கவும் புராணத்தையும் வரலாற்றையும் கலந்து அளிப்பதால் வேறுபாடு காண முடியாத நிலையில் நம் மாணவர்கள் உள்ளனர். பள்ளிக்கூட ஆசிரியர்களே வரலாறு எனப் புராணக் கதைகளை அள்ளி விடுகிறார்கள். மெய்யான வரலாற்றை கதை என்று கூறிவிடுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். மேற்கு டில்லியில் நடத்தும் சரசுவதி சிசுமந்திர் ஒன்றில் சண்டே டைம்ஸ் (ஏடு) ஆய்வு நடத்தியது. இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையே நடந்த சண்டைதான் வரலாறு என்றுதான் அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். தெற்கு டில்லியில் உள்ள சரசுவதி பாலமந்திரில் படிக்கும் மாணவர் களிடையே சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தபோது, இந்தியாதான் உலகிலேயே பழமையான நாகரிகத்தையும் கலாச் சாரத்தையும் கொண்டது என்றுதான் அவர்களுக்கு கூறப்பட்டுள்ளது.

அதேபோல டில்லியின் ஒக்லா பகுதியில் உள்ள (இசுலாமிய) மதரசாவில் படிக்கும் சிறார்கள் அசோகர் புத்தர், சந்திரகுப்தர் என்கிற பெயர்களைப் பற்றியே தெரியாமல் உள்ளனர். 1000-க்கும் மேற்பட்ட டில்லி மதரசாக்களில் இதுதான் நிலை. இந்த மாணவர்கள், கல்லூரிகளுக்குச் சென்று கணினி அறிவியல், இயற்பியல், இங்கிலீஷ் படித்தாலும் வரலாற்றைப் பொறுத்தமட்டில் அதே நிலைதான். இந்திய வரலாற்றின் முக்கிய சம்பவங்கள் குறித்தும் கூட ஒன்றும் தெரியாத நிலைதான்.

நேரு நகரிலுள்ள சரசுவதி பால மந்திரில் மத்திய அரசின் பாடப்புத்தகங்கள் சொல்லித் தரப்படுகின்றன. பள்ளிக்கூட முதல்வரின் அறையில் பாரத மாதா படமும், கோதண்டராமன் படமும் இருக்கின்றன. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கே கூட, ராமன் என்பது சரித்திர புருஷன் என்றே கற்பிக்கப்பட்டுள்ளது. அசோகரின் அகிம்சைக் கொள்கையைப் பற்றிக் கண்டித்துத்தான் பாடம் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கோழைகளை உருவாக்கும் கொள்கை என்றே கற்பிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஜெர்மனி சர்வாதிகாரி இட்லரை அவருடைய நாட்டுப்பற்றுக்காகப் போற்றிப் புகழ்கிறது. முசுலிம்களை இந்த நாட்டின்மீது படையெடுத்து வந்தவர்கள் எனக் கற்பிக்கப்பட்டுள்ளது. அதைவிட ஒன்று, ஈரானிலும், சீனாவிலும் முதன் முதலில் குடியே றியவர்கள் இந்தியச் சத்திரியர்கள் என்றுதான் கற்பிக்கப்பட்டுள்ளது!

சேது சமுத்திரக் கால்வாய்பற்றி ஒன்றுமே தெரியாத 12 ஆம் வகுப்பு மாணவன், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ராமன் பாலம் கட்டினான் என்கிறான். ராமன் சரித்திர மனிதன் என்பதற்கு அயோத்யா கோயில்தான் ஆதாரம் என்கிறான். ராம சரித மானஸ் தவிர வேறு என்ன ஆதாரம் கேட்கிறீர்கள் - ராமன் வாழ்ந்தான் என்பதற்கு? எனக் கேட்கிறார் ஆசிரியராக இருக்கும் ஒருவர். வித்யபாரதி எனும் அமைப்பால் இந்தியா முழுமைக்கும் நடத்தப்படும் 30 ஆயிரம் பள்ளிகளிலும் இந்த மாதிரியான உண்மைகள்தான் சொல்லித் தரப்படுகின்றன. இது ஆர்.எஸ்.எஸ்.ஸின் கல்வித் திட்டத் தலைமைப்பள்ளி. இந்த உண்மைகளை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 30 லட்சம் மாணவ - மாணவியர்க்கு இந்தக் கல்விக் கோயில்களின் மூலமாக கற்பித்து வருகின்றனர்.

உயர் கல்வியின் முக்கியத்துவம்பற்றி நேரு பண்டிதரின் காலத்தில் உணரப்பட்டு உயர் கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்டன. அய்.அய்.டி. அய்.அய்.எம். போன்ற நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. தர்மா மாஜேப் எனும் (இந்து, முசுலிம் சொற்கள்) சொற்கள் மிகவும் ஆபத்தானவை என்றும் அவை கல்விக் கூடங்களை நெருங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் நேரு கூறினார். தொடக்கக் கல்வியின் நேர்மை அவர் காலத்தில் உணரப்படவில்லை. இப்போது நிலைமை மோசமடைந்து விட்டது. வெறுப்பும் வரலாறும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையன. ஒவ்வொரு முறை வரலாறு திரும்பும்போதும், வெறுப்பின் அளவு கூடிக்கொண்டே போகிறது.

---------------- நன்றி: ஷோபன் சக்சேனா
" டைம்ஸ் ஆப் இந்தியா" - 27-10-2008

28.10.08

பெரியாரும் குடிஅரசு இதழும்நமது பத்திரிகை


'குடி அரசு' ஆரம்பமாகி ஒரு வருஷம் முடிந்து இரண்டாம் வருஷம் ஆரம்பமாகிவிட்டது. இவ்வொரு வருஷ காலமும் 'குடி அரசு' தன்னால் கூடியதை ஒளிக்காமல் உண்மையோடு உழைத்து வந்திருக்கிறது என்பதைப் பற்றி நாமே உணர்ந்து திருப்தி அடைகிறோம். 'குடி அரசை' ஆதரித்தும் ஆசி கூறியும் வரும் சமாசாரக் கடிதங்களிலிருந்தே இதை உணருகிறோம்.

இதுவரை 'குடிஅரசி' ன் தொண்டைப் பற்றிச் சிலாகித்து சுமார் முந்நூறு நானூறு கடிதங்களும் பிகுடிஅரசிபீன் மீது குற்றம் சுமத்தி சுமார் 3,4 கடிதங்களும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. சிலாக்கியமாய் எழுதியவர்களைப் பற்றி இதில் எழுத இடமில்லை; எழுதினாலும் தற்புகழ்ச்சியாக முடியும். ஆனாலும் குற்றங் கூறி எழுதியவர்களைப் பற்றி எழுதுவதற்கு இதில் இடமுண்டு. அதாவது, குற்றங்கண்டு எழுதிய கனவான்கள் நான்கு பேர் யாரென்றால்,

1. சிறீமான் எ. ரெங்கராம் நாயக்கர், ஆனைமலை.

2. சிறீமான் சுப்பிரமணிய ஐயர், நெரூர்.

3. சிறீமான் ராஜரெத்தின முதலியார், காஞ்சீவரம்.

4. சிறீமான் அ. குப்புசாமி முதலியார் , வேலூர்.

இவர்களுள் முதலாவதவர் எழுதியதாவது, "உமது பத்திரிகையின் நோக்கம் நல்லதேயாயினும் அதன் போக்கு நமக்குப் பிடிக்கவில்லை" என்றும், இரண்டாவதவர், "தாங்கள் செய்து வரும் வேலையை ஜஸ்டிஸ் கட்சியாரே செய்து வருவதால் இதை விட உபயோகமாகமுள்ளதான பழய ஒத்துழையாமையிலிறங்கி வேலை செய்வீர்களானால் நாங்கள் அநேகம் பேர் தங்களைப் பின்பற்றத் தயாராயிருக்கிறோம்" என்றும், மூன்றாவது, நான்காவதவர் மிகவும் கடினமான வார்த்தைகளால் அதாவது, "உமக்குப் புத்தி கெட்டுப் போய்விட்டது; ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கத் துவங்கி விட்டீர்கள்; நீர் யோக்கியர் அல்ல" என்று எழுதியதோடு ஜாக்கிரதையாயிருக்கும்படி எச்சரிக்கையும் செய்து எழுதியிருக்கிறார்கள்.

இதுவரை நமக்குள்ள சுமார் இரண்டாயிரம் சந்தாதாரர்களில் இந்நால்வர் அதிருப்திக்கே உள்ளாயிருக்கிறோம். இன்னும் அதிகமாயிருக்கலாமென்று சிலர் நினைக்கக் கூடுமென்றே அவர்கள் பெயரையும் காட்டி விட்டோம். அல்லாமலும் சுமார் 10,12 பேர் வரையிலும் காரணம் சொல்லாமல் பத்திரிகை இனி அனுப்ப வேண்டாம் என்று எழுதினார்கள்.

பத்திரிகைகளிலேயும் நமது போக்கை "பிராமணன்" என்கிற ஒரு கும்பகோணப் பத்திரிகையும் "தேசபந்து" என்கிற ஒரு சென்னைப் பத்திரிகையும்தான் இதுவரை அடிக்கடி பலமாய்க் கண்டித்து எழுதி வருகின்றன. சர்க்காராரும் நமது பத்திரிகை விஷயத்தில் கவனம் செலுத்தித்தான் வருகிறார்கள் என்பதற்கு உதாரணமாக நமக்கு எச்சரிக்கைகள் கொடுப்பதிலிருந்தும், நமது பத்திரிகையில் குறிப்பிடும் அரசாங்கம் சம்பந்தமானவையும் அரசாங்க உத்தியோகஸ்தர் சம்பந்தமான விஷயங்களையும் கவனித்து கடிதப் போக்குவரத்துக்கள் நடத்துவதிலிருந்தும் தெரிகிறோம்.

மற்றபடி நமது பத்திரிகையைப் பற்றி நம்மிடம் நேரில் பேசுகிறவர்களில் சிலர் "எல்லாம் சரி, பிராமணர்களைத் திட்டுகிறீர்கள். அது போனாலும் போகட்டும், அதிக கடினமான வார்த்தை களால் திட்டுகிறீர்கள். அது சில சமயங்களில் நமது 'குடிஅரசு' பத்திரிகையின் யோக்கியதையைக் கெடுத்து விடுகிறது" என்கிறார்கள். இவ்விரண்டும் உண்மையாயுமிருக்கலாம். அதற்கு நாம் என்ன செய்வது? இதன் ஆசிரியர் முதலில் சர்க்காருக்கு எவ்வளவு நல்ல பிள்ளையாக இருந்தாரோ அதைவிட அதிகமாகத்தான் பிராமணர்களுக்கு நல்ல பிள்ளையாக இருந்து வந்தவர். சர்க்கார் சார்பாக எத்தனையோ கலெக்டர்கள், நிர்வாகப் பதவி அங்கத்தினர்கள் முதலியவர்களின் சிநேகமும் கவர்னர் முதலியோரின் நன்றியறிதல் கடிதங்களும் பட்டம் முதலியவைகளுக்கு சிபார்சுகளும் பெற்றி ருந்தாரோ, அதுபோலவே அநேக பிராமணர்களின் சிநேகமும், உள்ளன்பும், உபசாரப் பத்திரங்களும், தலைவர் பட்டங்களும் பெற்றவர்தான். ஆனால், அவர் சர்க்காரின் குற்றங்களை எடுத்துச் சொல்லும் போதும், சர்க்காரை கடினமான வார்த்தைகளால் திட்டும்போதும், அதற்காக ஜெயிலுக்குப் போகும் போதும், "நாயக்கர் வெகு தைரியசாலி", "உண்மையான தேசபக்தர்", "வீரர்" என்கிற பெயர் பெற்றார். ஆனால், அவர் பிராமணர்கள் குற்றத்தை எடுத்துச் சொல்லும்போதும், அதற்கேற்ற 'கடினபதங்கள்' உபயோகிக்கும்போதும் பிராமணத் துவேஷியாகி விடுகிறார். 'கடினபதம்' என்றால் என்ன? பதங்களைப் பார்த்தால் போதுமா? குற்றங்களையும் குற்றம் செய்யும் ஆட்களையும் பார்க்க வேண்டாமா? குதிரையை அடிப்பதானால் கொரடாவை மேலே படும்படி வீசினால் போதும்; எருமையை அடிப்பதானால் பெரிய தடி எடுத்துத்தான் ஓங்கி அடிக்க வேண்டும்; யானையை அடிப்பதாய் இருந்தால் கூர்மையான இரும்புத்தடி (அங்குசம்) கொண்டு குத்த வேண்டும். இவற்றை அறியாமல் பேசுவதில் என்ன பலன்? பிராமணர்களிடம் நமக்குத் துவேஷமில்லை. அவர்கள் சூழ்ச்சிக்கு நமது நாட்டில் யோக்கியதை இருக்கும் வரை நமக்கு விடுதலையில்லை என்பது நமது துணிபு. ஆகவே, இவ்விரண்டில் பிராமணர் புன்சிரிப்பை எதிர்பார்ப்பதா? விடுதலையைஎதிர்பார்ப்பதா?


நமது மக்களுக்கு பிராமண சூழ்ச்சியை அறிய சக்தியில்லை. பிராமணர்களின் வெகுகாலத்திய சூழ்ச்சிப் பிரசாரத்தால் அவர்களிடம் ஏற்பட்டிருக்கும் 'பக்தி' காரணமாய் நமது பதங்கள் சிலருக்குக் கடினமாகக் காணப்படுகிறது. அவர்களால் நமது குடி கெடுவது நமக்குக் கடினமாய்த் தோன்றுவதில்லை. நாமும் முதலில் மரியாதையாகத்தான் எழுதினோம். அவர்களுக்கு அது சரியானபடி தைக்காததால் தைக்கும்படி எழுதுகிறோம். அதிலும் பிரயோஜனமில்லை. ஆதலால், நமது மக்களுக்குத் தெரியும்படி எழுதுகிறோம்.


'குடிஅரசு' எவருடைய தயவுக்கோ, முகஸ்துதிக்கோ, சுயநல வாழ்வுக்கோ, கீர்த்திக்கோ நடைபெறவில்லை. யோக்கியமாய் உண்மையாய் நடக்கக்கூடிய காலம் வரை நடக்கும். அவ்விதம் நடக்க அதற்கு யோக்கியதை இல்லையானால் தானே மறைந்து விடுமேயல் லாமல் மானங்கெட்டு விலங்குகளைப்போல் உயிர் வாழாது.

'குடி அரசு' தோன்றிய பிறகு அது ராஜீய உலகத்திலும் சமூக உலகத்திலும் பெரிய மாறுதல் ஏற்படுத்தியிருக்கிறது என்று பலர் நமக்கு எழுதியிருப்பதை நாமும் உபயோகப்படுத்திக் கொள்ளுகிறோம். 'குடிஅரசு' ஆசிரியர்களுக்கு உண்மை நண்பர்களாய் இருந்து வந்த சிறீமான்களான டாக்டர் வரதராஜூலு நாயுடு, திரு.வி. கலியாணசுந்தர முதலியார் முதலியவர்களின் கூட்டுறவு குடிஅரசு க்குக் கிடைத்திருக்குமேயானால் அல்லது குறைந்தபட்சம் அவர்களுடைய எதிர்ப்பாவது இல்லாதிருக்குமானால் இன்னும் பெரிய மாறுதல் ஏற்பட்டிருக்கும். என்ன செய்வது? உள்ளதைக் கொண்டு திருப்தி அடைய வேண்டியதுதான்.

இவ்வருஷத்தில் குடிஅரசுக்கு அதிக வேலையிருக்கிறது. அதாவது, வரப்போகும் தேர்தலுக்காக சிறீமான் திரு.வி. கலியாண சுந்தர முதலியார் அவர்கள் சென்னைப் பிரசங்கத்தில் காங்கிரஸின் பேரால் பிராமணர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க ஊரூராய், கிராமம் கிராமமாய், தெருத் தெருவாய்த் திரிந்து தனது தொண்டைக் கிழியும் வரை (கிழிந்தாலுங்கூட) பிரசாரம் செய்யப் போவதாய் சொல்லியிருக்கிறார். சிறீமான் சி.ராஜகோபாலாச்சாரியார் மதுவிலக்கின் பெயரால் பிராமணர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க பத்திரிகைகளில் கோடு கட்டிய குறள்களை எழுதிக்கொண்டு வருகிறார்.

சிறீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் தன் பணத்திமிராலும், மடாதிபதிகள் மகந்துகள் பணத் திமிராலும், கஞ்சிக்கில்லாத பிராமண ரல்லாத பிரசாரர்களை நியமித்து விஷமப் பிரசாரம் செய்வதன் மூலமும் பிராமணர்களுக்கு ஓட்டு வாங்கிக்கொடுக்க உறுதி கொண்டிருக்கிறார். டாக்டர் நாயுடு அவர்களோ, எந்தக் கட்சி ஜெயிக்கும் எந்தக் கட்சி தோற்கும் என்று ஜோசியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சிறீமான்கள் சர்க்கரைச் செட்டியார், சுரேந்திரநாத் ஆரியா , எஸ். ராமநாதன், தண்டபாணிப் பிள்ளை போன்றவர்கள் மனதில் மாத்திரம் வேகமாயிருக்கிறார்களே ஒழிய வெளியில் வந்து அவர்களைப் போல் வேலை செய்ய கவலையில்லாதவர்களாய் இருக்கிறார்கள். இந்த நிலைமையில் குடிஅரசுக்கு இருக்கும் பொறுப்பையும் கஷ்டத்தையும் நினைத்துப் பாருங்கள்.

'குடிஅரசின்' போக்கையும் அதன் தொண்டையும் விரும்புகிறவர்கள் இது சமயம் முன் வந்து உதவாவிடில் எதிர் பார்க்கும் பலனை அடைய முடியாது. அதாவது ஒவ்வொரு பட்டணங்களிலும் பிகுடி அரசுபீக்கு கெளரவ ஏஜெண்டுகள் முன்வர வேண்டும். அவர்கள் பத்திரிகையைத் தெருத் தெருவாய் விற்க வேண்டும். சந்தாதாரர்களைச் சேர்க்க வேண்டும். நமது முன்னேற்றத்திற்கு விரோதமான பத்திரிகைகளை விலக்கச் செய்யவேண்டும்.


இனி ஒன்றிரண்டு மாதங்களுக்குள் ஆயிரம் இரண்டாயிரம் சந்தாதாரர்கள் அதிகமாகச் சேரவேண்டும். ஆங்காங்கு உள்ளவர்கள் கிராமம் கிராமமாய்ச் சென்று சந்தாதாரர்களைச் சேர்க்க வேண்டும்.

இது சமயம் பிராமண சூழ்ச்சிகளைத் தைரியமாய் வெளிப்படுத்த இரண்டே பத்திரிகைகள் உழைத்து வருகின்றன. அதாவது 'திராவிடன்' என்னும் தினசரியும் 'குடிஅரசு' என்னும் வாராந்திரமுமேயாகும். 'திராவிடனும்' குடி அரசும் குறைந்தது கிராமத்திற்கு ஒன்றாவது போகும்படி வேலை செய்ய வேண்டும். பிராமணர்கள் தங்களை ஆதரித்து தங்களுக்கு ஓட்டுச் செய்யும்படி பிரசாரம் செய்ய முக்கிய பட்டணங்களிலும் பிராமணரல்லாதாரைக் கொண்டே பத்திரிகை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார்கள். சில இடங்களிலும் ஏற்பாடாகி விட்டது. இன்னும் பல இடங்களில் ஏற்படப் போகிறது. இதை உணருங்கள் இதற்குத் தகுந்தபடி நடவுங்கள்.

---------------------------- தந்தைபெரியார் - குடிஅரசு-2.5.26

27.10.08

நூற்றுக்கு நூறு மன நிறைவு இல்லையென்றாலும் இவ்வெழுச்சிமூலம் ஈழத் தமிழர் வாழ்வுரிமையில் மிகப்பெரிய திருப்பம் இது!* ஈழத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவுப் பொருள்கள், மருந்துகள் அனுப்பப்பட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது
* போரை நிறுத்தி அரசியல் தீர்வுகாண பேச்சுவார்த்தை நடத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
* முதலமைச்சரின் முதிர்ச்சியான அணுகுமுறையும், கட்சிகளைக் கடந்து தமிழர்கள் காட்டிய உணர்வுமே இதற்குக் காரணங்களாகும்
* உணர்ச்சிவயப்பட்டு உரையாற்றிய நமது சகோதரர்களை கருணை கொண்டு முதல்வர் விடுதலை செய்யக் கோருகிறோம்

நூற்றுக்கு நூறு மன நிறைவு இல்லையென்றாலும்
இவ்வெழுச்சிமூலம் ஈழத் தமிழர் வாழ்வுரிமையில் மிகப்பெரிய திருப்பம் இது!

இலக்குகளை முற்றிலும் அடைய
ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவோம்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் ஏற்பட்டுள்ள திருப்பங்கள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

கடந்த 14.10.2008 அன்று நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைச் செயல்படுத்திட மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, இலங்கையில் அப்பாவித் தமிழர்களான ஈழத் தமிழர்கள் அங்கே பொழியும் குண்டு மழைகளால் செத்து மடிவதும், பாதுகாப்புக் கருதி காடுகளிலும், பாலை சதுப்பு நிலங்களிலும் ஓடி, வானத்தையே கூரையாகக் கொண்டு, வயிற்றுக்குக் கஞ்சி, குழந்தைகளுக்குப் பால்கூட கிடைக்காது பட்டினியால் சாகும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஈழத்தில் அமைதி திரும்பிட வழி வகை செய்யவேண்டும் என்று வற்புறுத்தி, தமிழ்நாடே ஒன்று திரண்டு குரல் கொடுத்த நிலையில், உணர்ச்சிக் கொப்பளிக்க ஓரணியில் கைகோர்த்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது நின்ற மனிதச் சங்கிலி, உலக வரலாற்றிலேயே புதுமையானது - சாதனை படைத்த அமைதிப் புரட்சியாகும்!

முதலமைச்சர் எடுத்த முயற்சிகள் வீண்போகவில்லை


நமது முதல்வர் கலைஞர் அவர்கள் எடுத்த அடுக்கடுக்கான முயற்சிகள், தமிழ் மக்களின் எழுச்சி வீண்போகவில்லை; நல்ல விளைவுகளை உண்டாக்கியிருக்கின்றன!

சிங்கள அதிபராகவே நடந்துகொள்ளும் ராஜபக்சே நமது பிரதமரிடம் பேசியது; இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் இந்தியத் தூதுவரிடம் பேசி, இலங்கை அரசுக்கு இந்திய அரசின் கவலையையும், உணர்வுகளையும் தெரிவித்தது; அங்கிருந்து அவரது ஆலோசகர்களை ஒரு குழுவாக அனுப்பி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் பேச வைத்தது; அங்குள்ள தமிழர்களைக் கொல்லாமல், காப்பாற்றிட அவர்களுக்கு உணவு, மருந்துப் பொருள்களை உடனடியாக அனுப்பிட ஏற்பாடுகள் செய்திருப்பது உள்பட அரசியல் தீர்வு காண உடனடியான ஏற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் உத்தரவாத - உறுதி மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

திருமதி சோனியா அவர்களின் முயற்சி


அந்நிலையில்தான், நேற்று (26.10.2008) அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் நமது முதல்வர் கலைஞர் அவர்களுடன் இரண்டுமுறை தொலைப்பேசியில் உரையாடிய பிறகு, வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் முதல்வரைச் சந்திக்கச் செய்து, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை விளக்கியும் (தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு உட்படுவதைத் தடுக்கும் வகையிலும்) கூறச் செய்தார்கள்.

முதல்வருடன் பிரணாப் முகர்ஜி சந்திப்பு

நேற்று மாலை சென்னைக்கு வந்து நமது முதல்வர் அவர்களைச் சந்தித்தபோது, முதல்வர் அவர்கள் வற்புறுத்திய போர் நிறுத்தம், நார்வே நாடு போன்றவைகள்மூலம் பேச்சுவார்த்தைகளை மீண்டும் நடத்துதல், ஈழத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு, உலக அமைப்புகளான செஞ்சிலுவை மற்றும் பொது அமைப்புகள்மூலம் உணவுப் பொருள்கள், மருந்துகள் அனுப்புதல், உடனடியாகத் தொடங்குவது போன்ற பல முக்கிய கோரிக்கைகளை இலங்கை அரசு ஏற்றுள்ளது என்பதை விளக்கியதோடு, ராணுவ நடவடிக்கைகள் பலன் தராது; அரசியல் தீர்வுதான் பயன் தரும் என்ற கருத்தினை ஏற்றுக்கொண்டு அதற்கான தொடர் முயற்சிகளை இந்திய அரசு முனைப்பாகச் செய்யும் என்று தெரிவித்து செய்தியாளர்களிடையேயும் வெளியுறவுத் துறை அமைச்சர் இதை விளக்கி அறிவித்தும் உள்ளார்!

அத்தோடு, இந்நிலையில், தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களது ராஜினாமா தேவையில்லை; அம்முடிவைக் கைவிடச் சொல்லியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்!

கடந்த 14 நாள்களில் ஏற்பட்ட எழுச்சி ஆக்க ரீதியான பலன்கள் பலவற்றைத் தந்துள்ளது.

நூற்றுக்கு நூறு மன நிறைவு இல்லை


நமக்கு 100-க்கு 100 முழு மன நிறைவு இதன்மூலம் உடனடியாக ஏற்பட்டுவிட முடியாது என்றபோதிலும், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைப் போரில் இது ஒரு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்துள்ளது!

இதற்காக முழு முயற்சியை உணர்வுப்பூர்வமாக, அந்தரங்க சுத்தியுடன் செய்து, ஆத்திரம், ஆவேசம் கொள்ளவேண்டிய சில சந்தர்ப்பங்களில்கூட அமைதி காத்து, பொது நோக்கத்திற்குக் குந்தகம், கேடு விளைந்திடக் கூடாது என்பதற்காக மிகுந்த முதிர்ச்சியுடன் இப்பிரச்சினையைக் கையாண்ட நமது முதல்வர் கலைஞரின் அரசியல் அணுகுமுறை மிகவும் பாராட்டத்தகுந்ததாகும்!

தலையிருக்க வால்கள் ஆடிய நிலையிலும், நிதானித்து, தமிழ்நாட்டின் இந்த எழுச்சிக்கு எதிராகத் திட்டமிட்டே இவ்வுணர்ச்சியைத் திசை திருப்ப முயன்ற ஏடுகள், ஊடகங்கள், அரசியல்வாதிகள், இவர்களையெல்லாம் தலை கவிழச் செய்யும் அளவில், பெரும் பயனை - பாதுகாப்பினை ஈழத் தமிழர்களுக்கு உருவாக்கித் தந்துள்ளார் நமது முதல்வர்.

அவரது இந்நிலைக்கு ஒத்துழைப்புத் தந்த அனைத்துக் கட்சி அமைப்பின் தலைவர்களும் நமது பாராட்டுதலுக்கும் உரியவர்கள் ஆவார்கள்.

எங்கோ சில அபஸ்வரங்கள் கேட்டாலும், பெரும்பாலோர் கட்சி, ஜாதி, மதம், வயது, பால் வேற்றுமை பாராது ஒன்றுபட்டு நின்று - ஓங்கியது தமிழர் ஒற்றுமையும், உணர்வும் என்று 24 ஆம் தேதி கோத்த கரங்கள் தொடரவேண்டும் - தொய்வின்றித் தொடரவேண்டும்!

இணைந்த கைகள் பிரியக்கூடாது!

இவ்விளைவுகள் ஒரு தொடக்கமே தவிர, முடிவல்ல; முடிவின் முதல் தொடக்கமே இது!

போர் நிறுத்தம், அமைதிப் பேச்சுவார்த்தை, அமைதியான வாழ்வு எம் தமிழின உறவுகளுக்கு என்பதை உலகம் அறியுமட்டும் கோத்த கைகள் பிரியக்கூடாது. உயர்ந்த கோடிக் கைகளால்தான் உயரிய கோரிக்கைகளை மனிதாபிமானத்துடன், இன உணர்வுடன் வெற்றிகரமாக நிறைவேற்றிட முடியும்!

ராஜினாமா - மறுபரிசீலனை செய்யவேண்டும்

இந்நிலையில், தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்யும் முடிவை செயல்படுத்த இப்போது தேவை எழவில்லை என்பதால், நமது முதலமைச்சர் மானமிகு கலைஞர் அவர்கள் அதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன் உணர்ச்சி மேலீட்டால், உரை வீச்சுகளால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட நேர்ந்த, சிறையில் வதியும் எமது சகோதரர்களையும்கூட விடுதலை செய்யவேண்டும் என்று மனிதாபிமான அடிப்படையில் முதல்வருக்கு மிகுந்த வேதனையுடன் - வேண்டுகோள் விடுக்கிறோம்.

நம் கையைக் கொண்டு கண்ணைக் குத்தும் முயற்சிகளை இன எதிரிகள் செய்துகொண்டு இருக்கிறார்கள் என்றாலும், இப்பிரச்சினையில் - ஈழத் தமிழர் வாழ்வுரிமையில் எல்லை தாண்டியவர்கள்கூட அப்படி நாங்கள் ஏதும் பேசவில்லை; என்று மறுத்திடும் நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை தொடர்வது தேவையா? என்பதை நமது முதல்வர் அவர்களும், அரசும் கருணையோடு பரிசீலித்து நல்ல முடிவிற்கு வரவேண்டும்.கடுமையாய் அல்ல - கருணையால்!

தீவிரமான முயற்சிகளை முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சியினரும், அமைப்புகளும் - அரசியல் வேறுபாடுகளைத் தள்ளி வைத்துவிட்டு, ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கையில், அதனைத் திசை திருப்பும் முறையிலோ, கொச்சைப்படுத்தும் வகையிலோ சில நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் அரசியலில் ஈடுபட்டதால், கைது நடவடிக்கைகளை எடுக்காமல், தமிழக அரசோ, முதல்வரோ இருக்க முடியாது; என்றாலும்கூட, ஒரு சுமுகச் சூழல் ஏற்பட, இதனை நமது முதலமைச்சர் அவர்கள் மறுபரிசீலனை செய்வது நல்லது.

கடுமையினால் வெல்ல முடியாதவற்றை, தன் கருணையால் வெல்லும் உள்ளம் படைத்தவர் நமது முதல்வர் என்பதை அறிந்ததால்தான் இதனை வேண்டுகோளாக வைக்கிறோம். உறவுகள் உணரும் காலமும் வரவே செய்யும்.

அந்தச் சகோதரர்கள் ஒன்றை எண்ணிப் பார்க்கவேண்டும். தமிழ்நாட்டு அரசுக்கு தர்மசங்கடமான ஒரு நிலையை இந்த முக்கியமான காலகட்டத்தில் உருவாக்கலாமா?

முதல்வர் கலைஞர் அவர்களைப் போன்ற இன உணர்வுள்ள முதல்வரின் முயற்சியால்தான் - இந்த தி.மு.க. அரசு இருப்பதால்தான் - அசையாத மலைகள் அசைந்துள்ளன! ஓயாது பொழிந்த குண்டுமாரிகள் நிற்கும் வாய்ப்புகள், பேச்சுவார்த்தை என்ற வெள்ளி முளைத்தலும், கிழக்கு வெளுத்தலும்மூலம் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது!

செல்லவேண்டிய தூரம் உண்டு

இல்லையேல், இவ்வளவு பெரிய பலன் - இவ்வளவு குறுகிய காலத்தில் கிட்டியிருக்குமா என்று எண்ணிப் பார்க்கவேண்டும்.

இன்னும் செல்லவேண்டிய இலக்குகள் ஈழத் தமிழர் முதல் இங்குள்ள தமிழர் நலம்வரை எவ்வளவோ உள்ளது!

அதையும் எண்ணிப் பார்க்கவேண்டும் அனைவரும் ஓரணியில் நிற்கவேண்டும் - இப்பிரச்சினையில்!

----------------------- நன்றி: "விடுதலை" - 27.10.2008

மகாராட்டிரா, குஜராத் மாநிலங்களில் R.S.S. வைத்த வெடி குண்டு - பெண் சாமியார் கைது
மகாராட்டிரா, குஜராத் மாநிலங்களின்
இசுலாமியர் பகுதிகளில் குண்டு வெடிப்பு

ஓய்வு பெற்ற 2 ஆர்.எஸ்.எஸ். ராணுவ
அதிகாரிகளுடன் ஆர்.எஸ்.எஸ். பெண் சாமியார் கைது


புனே, அக். 27- மகாராட்டிர மாநிலம் மலேகானில் கடந்த மாதம் 29 ஆம் தேதி சிமி அலு வலகத்துக்கு முன்பு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்; 90 பேர் படுகாயமடைந்தனர்.

நாசிக் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மோட் டார் சைக்கிளில் மர்ம மனிதர் கள் வெடிகுண்டுகளை கட்டி எடுத்து வந்து வெடிக்க வைத் திருப்பது தெரிந்தது. டைமர் கருவி பொருத்தப் பட்டிருந்த அந்த வெடிகுண்டு ஆர்.டி.எக்ஸ் மற்றும் அம்மோனியா நைட்ரேட் கலவையால் தயாரிக்கப்பட்டிருந்தது.

தீவிரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் இது பற்றி பல்வேறு கோணங்களில் விசா ரணை நடத்தினர். வெடிகுண்டு கொண்டு வரப்பட்ட மோட்டார் சைக்கிளை ஆய்வு செய்த போது, அது மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக சியாம் சாகு, திலீப் நாசர், சிவநாராயண்சிங் ஆகிய 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். குண்டு வெடிப்புக்குப் பயன் படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பெண் சாமியார் சாத்விபிரக்யா பெயரில் வாங்கப்பட்டிருப்பதும் தெரிந்தது. இதனால் பெண் சாமியார் பிரக்யா பற்றிய தகவல்களைத் திரட்டி காவல்துறையினர் விசாரித்தனர்.

பெண் சாமியார் பிரக்யா வின் சொந்த ஊர் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள பிந்த் என்ற கிராமம். ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே ராமஜென்மபூமி போராட்டங்களில் ஈடுபட்டவர். பிறகு இந்து ஜக்ரான் மஞ்ச் எனும் அமைப்பில் தீவிர உறுப்பினராக இருந்தார். அப்போது சாமியார் ஆனார்.


சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தே மாதரம் எனும் அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்புக்கு குஜராத் மாநில அரசு நிதி உதவி செய்து ஆதரித்தது. இதனால் பிரக்யா குஜராத் மாநிலம் சூரத் நகரில் குடியேறினார். பா.ஜ.க., விசுவ இந்து பரிசத் தலைவர்களுடன் அவருக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது.


பெண் சாமியார் பிரக்யாவுக்கும், குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இருப்பதற்கான கூடுதல் ஆதாரங்கள் திரட்டப்பட்டன. குறிப்பாக மலேகானில் குண்டு வெடித்த தினத்தன்று குஜராத் மாநிலத்தில் நடந்த குண்டு வெடிப்பும் ஒரே மாதிரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிமி இயக்கத்தினரைப் பழி வாங்க இந்த குண்டு வெடிப்புகளை பெண் சாமியார் உள்ளிட்ட குழுவினர் நடத்தி இருக்கலாம் என்று கருதி பிரக்யாவைக் காவல் துறை இன்று கைது செய்தது. இது இந்து பரிவார் அமைப்பு நிர்வாகிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


குண்டு வெடிப்புக்குப் பயன் படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து மற்றும் டைமர் கருவியை இந்து அமைப்பினர் எங்கிருந்து, எப்படி பெற்றனர் என்று தீவிரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது பெண் சாமியார் பிரக்யாவுடன் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 2 வீரர்கள் நெருக்கமாக இருப்பது தெரிந்தது. அவர்கள் இருவரும் நாசிக் அருகே ராணுவப் பயிற்சிப் பள்ளி நடத்தி வருகிறார்கள். இப்பள்ளியை இந்து ராணுவக் கல்விக் கழகம் நடத்தி வந்தது. இந்தப் பயிற்சிப் பள்ளியில் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி, வெடிகுண்டுகளைக் கையாள்வது எப்படி என்ற பயிற்சியையும் ஆயுதப் பயிற் சியையும் இந்த இரு ராணுவ முன்னாள் அதிகாரிகள் அளித்து வருவது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதான ராணுவ வீரர் களில் ஒருவர் பிரபாகர் குல்கர்னி; மற்றொருவர் பெயர் உபாத்யா. இவர் ராணுவத்தில் மேஜர் அந்தஸ்தில் பணியாற்றியவர். 2 ராணுவ வீரர்களும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் என்று தெரிய வந்துள்ளது. வெடிகுண்டு தயாரிக்க இவர்கள் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்தை சேகரித்து அனுப்பி இருக்கின்றனர்.

தற்போது கைதான பெண் சாமியார் பிரக்யா உள்பட 2 ராணுவ அதிகாரிகளையும் விசாரணை செய்வதற்காகக் காவல்துறையினர் மும்பை கொண்டு சென்றுள்ளனர்.

மலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக பெண் சாமியாரும், 2 முன்னாள் ராணுவ வீரர்களும் கைதாகி இருப்பது வடமாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


---------------------நன்றி: "விடுதலை" 27-10-2008

தீபாவளிக் கொண்டாட்டமானது ?தீபாவளி

"தீபாவளிக் கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும், முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்லாமல், தமிழர் (திராவிடர்கள்) இன்னமும் ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது கலைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ளப் போட்டிப் போடுகிறார்கள் என்பதேயாகிறது."

------------------------ தந்தைபெரியார் - "விடுதலை", 19.10.1954

பார்ப்பனப் பத்திரிக்கையின் யோக்கியதையைப் பாரீர்


("நடுநிலை" (!) ஏடுகளின் போக்கைக் கண்டித்துப் பொதுக் கூட்டம்

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் பத்திரிகை உலகில் நடுநிலையில் செய்திகளை தரவேண்டியதற்குப் பதில், பல பார்ப்பன ஏடுகள் ஒருதலைச் சார்புடன் செய்திகளை வெளியிடுவதையும், தமிழர்களின் நியாயமான இன உணர்வு - மனித நேயத்தையும் கொச்சைப்படுத்துகின்ற இப்போக்கைக் கண்டித்தும்,

தமிழ்நாட்டின் தலைநகரங்களில் நடுநிலை தவறும் பத்திரிகைகளைக் கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டங்கள் நவம்பர் மாதம் நடைபெறும்.

தேதி எதிர்பாருங்கள்.


---------------தலைமை நிலையம், திராவிடர் கழகம்,

மேற்கண்ட அறிவிப்பின் அடைப்படையில் தேடியதில் கிடைத்த செய்தியை அப்படியே தந்துள்ளேன்.)


பிராமணப் பத்திரிகைகளின் பிரசாரம்
உஷார் ! உஷார்!! உஷார்!!!பொது ஜனங்கள் தேசத்தின் உண்மை நிலையை உணருவதற்கு ஆதாரமாயிருப்பது வர்த்தமானப் பத்திரிகைகள் என்று சொல்லுவார்கள். ஆனால், அவை நமது நாட்டின் உண்மை நிலையை மறைத்துப் பொய்யைச் சொல்லி பாமர ஜனங்களை ஏமாற்றி, ஒருவரைக் கெடுத்து ஒருவர் பிழைப்பதற்குத்தான் அவை முழுவதும் ஆதாரமாயிருந்து வருகிறது. நமது நாட்டைப் பொறுத்தவரையில், பெரும்பான்மையான மக்கள் தங்கள் முன்னோர்கள் எவ்வளவு பெருமை உடையவர்களாயும், இத் தேசத்தையே ஆண்டவர்களாயும், பராக்கிரமசாலிகளாகவும் இருந்து வந்திருந்த போதிலும் இன்றையத் தினம் 'பிற்பட்டவர்'களாகவும், 'சூத்திரர்'களாகவும் இருப்பது ஏன்? இதற்குப் பொறுப்பாளி யார் என்று பார்த்தால் அது நமது நாட்டுப் பத்திரிகைகளேயாகும்.

தற்காலத்தில் நமது நாட்டில் செல்வாக்குப் பெற்று பெரும் பாலோர் கையிலும் ஊசலாடுவது பிராமணப் பத்திரிகைகளே அல்லவா? அப்பத்திரிகைகளுக்கு அவ்வவ்விடங்களின் சமாச்சாரங் களை எழுதியனுப்பும் நிரூபர்களும் பிராமணர்களே அல்லவா? அப் பத்திரிகைகளுக்கு ஏஜெண்ட்களாயிருந்து விற்றுக் கொடுப்பவர்களும் பெரும்பாலும் பிராமணர்களே அல்லவா? அப்படி இருந்தும் அதற்குப் பணம் கொடுத்து வாங்கிப் படித்து கெட்டுப்போகிறவர்களாகவே பிராமணரல்லாதவர்கள் இருக்கிறார்கள். பிராமணப் பத்திரிகைகள் இதுசமயம் நமது நாட்டில் ஒவ்வொரு பட்டிணங்களிலும், கிராமங்களிலும் பிரவேஷித்திருக்கின்றது. அங்குள்ள படிக்கத் தகுந்த ஒவ்வொருவரும் அப்பத்திரிகைகளைப் படிப்பதும், அவற்றை உண்மை என்று நம்புவதும், மற்றவர்களுக்கு அவற்றை எடுத்துச் சொல்லுவதுமான வழிகளில் பிராமணப் பத்திரிகைகளின் அபிப்ராயத்தை தேசமெல்லாம் பரப்பச் செய்துவிடுகின்றன. சாதாரண மாய் நமது கிராமங்களிலுள்ள பாமர ஜனங்களும் " சுதேசமித்திரன் " என்னும் பிராமணப் பத்திரிகையின் அபிப்பிராயத்தைத்தான் உண்மையான ராஜீய அபிப்ராயமென்றும், அது யார் யாரைத் தலைவர் என்று சொல்லுகிறதோ அவர்களைத் தலைவர்கள் என்றும், அது யார் யாரைத் தேசத் துரோகியென்று சொல்லுகிறதோ அவர்களைத் தேசத் துரோகி என்றும், அது சொல்லுகிற படியெல்லாம் நடப்பதும் நினைப்பதும்தான் தேச கைங்கரியமென்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுபோலவே மற்றும் "சுயராஜ்யா" என்னும் ஒரு தமிழ் தினசரிப் பத்திரிகையும் பிராமணர்களால் நடத்தப்பட்டாலும் பிராமணரல் லாதாரை ஏமாற்றுவதற்காக வேண்டி அதன் உண்மைப் பத்திராதிபர்கள் பெயரை மறைத்து பிராமணரல்லாதார் பெயரைப் போட்டு ஏமாற்றி வருகிறார்கள். உண்மையில் அதன் ஆசிரியர்கள் ஒரு ஐயங்கார் பிராமணரும் ஒரு விபூதிப் பிராமணருமாயிருக்க அது வெளியில் தெரிந்தால் அப்பத்திரிகையைப் பிராமணப் பத்திரிகையென்று பாமர ஜனங்கள் நினைத்து விடுவார்கள் என்று வேண்டு மென்றே மறைத்துவிட்டு, ஒத்துழையாமையில் ஈடுபட்டுத் தங்கள் உத்தியோகங்களை விட்டு கஷ்டப்பட்டதால் செல்வாக்கு ஏற்பட்டிருக் கும் சிறீமான்கள் கிருபாநிதி, திரிகூட சுந்தரம்பிள்ளை ஆகிய இருவர் பெயர்களைக் காட்டித் தங்கள் நன்மைக்கான அபிப்ராயங்களை மேற் படியார்கள் அபிப்ராயமென்று நினைக்கும்படி ஜனங்களுக்குள் புகுத்தி வருகிறார்கள். இந்த பிராமணரல்லாத கனவான்களும் கொஞ்சமும் கவலையில்லாமல் இவ்வித செய்கைக்குத் தங்கள் பெயரைக் கொடுத்திருக்கிறார்கள்.

பெரும்பாலும் இப்பத்திரிகைகளுக்கு மூலதனம் ஏறக்குறைய முக்கால் பாகம் பிராமணரல்லாதார்களுடையதே. அதை வாங்கி வாசித்து அவர்களுக்கு லாபம் கொடுக்கிறவர்களும் பிராமணரல்லாதார்களே. இவ்வளவு இருந்தாலும் இப்பத்திரிகைகளைக் கண்டால் பிராமணரல்லாத தலைவர்கள் என்போர்களிலும், பத்திராதிபர்கள் என்போர்களிலும் பெரும்பாலோர் பூனையைக் கண்ட எலி போல் நடுங்குகிறார்கள். தங்கள் ஜாதகத்தையே அவர்களிடம் ஒப்படைத்து விட்டு அந்த பிராமணப் பத்திரிகைகளையே தங்களுக்கு பலன் எழுதும்படி பல்லைக் கெஞ்சிக் கொண்டு திரிகிறார்கள். மகாத்மா போன்றவர்களே இப்பிராமணப் பத்திரிகைகளைக் கண்டால் சில சமயங்களில் பயப்பட்டு சமயோசிதமாய் நடக்க வேண்டியிருக்கிற தென்றால் ஐயோ! பாவம் மற்ற ஆகாசக் கோட்டைகளைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? அப்புறம் குட்டித் தலைவர்கள், தொண்டர்கள் என்போர்களைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா?

இம்மாதிரி ஒரு பெரிய சமூகத்தையே அதன் தலைவர்கள் என்போரையே இப்பத்திரிகைகள் அடக்கி ஆண்டுக்கொண்டு, தங்கள் ஆதிக்கத்தைப் பலப்படுத்திக் கொண்டு வருவதை எத்தனை நாள்களுக்குத்தான் சகித்துக் கொண்டு வருவதென நினைத்து சரியான மனிதர்கள் என்போர் யாராவது துணிந்து இதன் தந்திரத்தை வெளிப்படுத்தக் கொஞ்சம் பிரயத்தனப்பட்டால் அவர்களை அடியோடு ஒழிக்க பிராமணப் பத்திரிகைகளும், பிராமணத் தலைவர்களும், பிராமண அதிகாரிகளும் எல்லோரும் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள். அந்த சமயங்களில் ஐயர் - ஐயங்கார் - ஆச்சாரியார் - ராவு என்கிற பேதமே இல்லாமலும் மிதவாதி சுயராஜ்யக் கட்சி - ஒத்துழையாக் கட்சி -காந்தி சிஷ்யக் கட்சி - சர்க்கார் உத்தியோகஸ்தர் என்கிற வித்தியாசமே இல்லாமலும், ஒரே கட்டுப்பாடு - கம்பியில்லாத தந்திபோல் ஒரே அபிப்ராயம், ஆளுக்கொரு வேலை; பத்திரிகைகளில் வைவதொருவர்; பிரசங்கம் மூலம் வைவதொருவர்; பணம் கொடுத்து வையச் சொல்லுவது ஒருவர்; காந்தியிடம் சாடி சொல்லுவது ஒருவர்; சர்க்காருக்குக் காட்டிக் கொடுப்பது ஒருவர்; அதிகாரத்தைக் கொண்டு நசுக்குபவர் ஒருவர்; ஆக ஒவ்வொருவரும் தங்களாலானதை உடனே செய்யப் புறப்படுவதன் மூலம் எப்பேர்ப்பட்டவனையும் நடுங்கச் செய்து விடுகிறார்கள். உதாரணமாக, சிறீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் நிலைமையைப் பார்த்தாலே இதன் உண்மை பொது ஜனங்களுக்கு நன்றாய் விளங்கும். சென்ற வருஷமெல்லாம் சுயராஜ்யக் கட்சியை வைது கொண்டிருந்தவரும், கொஞ்ச நாளைக்கு முன்பெல் லாம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக்கொண்டு இருந்தவரும், செல்வச் செருக்கும் செல்வாக்குப் பெருக்கும் நிலைக்காது என்று சிறீமான் எஸ்.சீனிவாசய்யங்காருக்கு சாபம் கொடுத்தவரும் ......

........... தகுந்த இடம் என்று காஞ்சி அக்ராசனப் பிரசாரத்தில் சொன்னவரும், சிறீமான் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரானபோது, சிறீமான்கள் வ.வெ.ஸூ. ஐயர், சீனிவாசய்யங்கார் சிஷ்யர்கள் முதலியவர்கள் சிறீமான் நாயக்கர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த காலத்தில் ஒரு பிராமணரல்லாதாரான சிறீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் அக்ராசனம் வகிப்பதைப் பொறுக்க மாட்டாமல் பிராமணர்கள் இந்த நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள்; சட்டசபையில் செய்வது போலவே இங்கும் செய்கிறார்களாவென்று கேட்டவருமான நமது முதலியார், இப்போது தன்னை மாரீசன் என்று சொன்னவரும், காந்தியடிகளுக்குப் புத்தியில்லை என்று சொன்ன வரும், ஒத்துழையாமை சட்டவிரோதமென்று சொன்னவருமான சிறீமான் சீனிவாசய்யங்கார் பின்னால் திரிந்து கொண்டும், அந்த சிறீமான் சீனிவாசய்யங்காரையே தமிழ்நாட்டுக்குத் தலைவராக்கப் பாடுபட்டுக் கொண்டும், சுயராஜ்யக் கட்சி யோக்கியமான கட்சியென்றும், அதனிட மும் அதன் தலைவரிடமும் ஒத்துழையாமை வாசனை அடிக்கின்ற தென்றும், சட்டமறுப்பு அக்கட்சியில் தொக்கியிருக்கின்றதென்றும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கூடாது என்றும், முன் தான் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் கேட்டது கூட ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதற் கென்றும், காங்கிரஸில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்கக் கூடாது என்றும், சுயராஜ்யக் கட்சிக்கே வோட்டுக் கொடுங்களென்றும் சொல்லுவதானால், அதன் சக்தி எவ்வளவென்பது ஒருவர் சொல்லாமலே விளங்கும். இவ்வளவு பயமும், மாறுதலும் இப்பேர்பட்டவர் களுக்கெல்லாம் வரக் காரணமென்ன? பாமர ஜனங்கள் பிராமணப் பத்திரிகைகளை வாங்கிப் படிப்பதும், பிராமணத் தலைவர்களை கொண்டாடுவதும் அவர்கள் சூழ்ச்சிகளை அறியாமலிருப்பதும், அவர்கள் கையிலிருக்கும் அதிகாரங்களுக்குப் பயப்படுவதுமே அல்லாமல் வேறு என்ன? ஆதலால் ஆங்காங்குள்ள பிராமணரல்லாத பிரமுகர்கள் தங்கள் சமூகத்திற்கு நன்மை செய்ய வேண்டுமென்றிருந்தால், தங்கள் சமூகம் இம்மாதிரி ஏமாறியவர்கள் ஆகாமல் இருக்கவேண்டுமென்று விரும்பினால், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு குடிசையிலும் "திராவிடன்", "குடி அரசு" முதலியவைகள் போன்ற உண்மை உரைக்கும் பத்திரிகைகளை செலுத்த வேண்டும். உண்மை உரைப்பதன் மூலம் அதன் ஆசிரியர்கள் பிராமண அதிகாரத்தால் ஜெயிலுக்குப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் தயாராய்த்தான் இருப்பார்கள். ஆதலால் வஞ்சகப் பத்திரிகைகளைப் பார்த்து மோசம் போகாமலிருக்கச் செய்யவேண்டும்.

இந்தக் காரியங்களை நீங்கள் செய்யாமலிருந்தால் வரப்போகும் சட்டசபை எலெக்ஷனில் பிராமணரல்லாதார் கண்டிப்பாய் தோற்கடிக்கப்பட்டு போவார்கள். சிறீமான்கள் டி.எம்.நாயரும், ஸர்.பி.டி. செட்டியாரும் எவ்வளவோ அரும்பாடுபட்டு பிடித்துக் கொடுத்த கோட்டையை மறுபடியும் பிராமணர்கள் சுவாதீனப்படுத்திக் கொண்டு உங்களை வெளியாக்கிவிடப் போகிறார்கள். அப்புறம் 10 வருஷமோ, 100 வருஷமோ கடவுளுக்குத்தான் தெரியும். வீணாய் சர்க்காரை நம்பிக் கொண்டிருப்பதில் பிரயோஜனமில்லை. சர்க்கார் எந்தக் கை வலுக்குமோ அந்தக் கையில் சேர்ந்து விடுவார்கள். இப்பொழுதே சர்க்காருக்குப் பிராமணர்களிடத்தில் பயம் வந்து விட்டது. அவர்கள்தான் அடுத்த சட்டசபையில் ஜெயிக்கப் போகிறார்கள் என்று எண்ணிக் கொண்டு அவர்களை இப்பொழுது இருந்தே தடவிக்கொடுத்துக் கொண்டு வருகிறார்கள். பிராமணரல்லாதாரே எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!

----------------------சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் எழுதிய கட்டுரை - "குடிஅரசு" -28.2.26

26.10.08

பற்றி எரிகிறதே ஈழம்
இலங்கையில் எம் இனம் அழிந்து கொண்டிருப்பதைத் தடுக்க குரல்
கொடுத்தால் இனத் துரோகிகள் - நம்மை
குறுகிய மனப்பான்மையினர் என விமர்சிப்பதா?
சென்னை கூட்டத்தில் தமிழர் தலைவர் எழுப்பிய வினா


சென்னை, அக்.23- இலங்கையிலே ஈழத்திலே தமிழர்கள் சிங்கள இனவெறி அரசால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுக்காக நாம் போர்க் குரல் கொடுத்தால் இந்தப் பிரச்சினையில் என்றைக்குமே இன எதிரிகளாக இருப்பவர்கள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் என்று இரக்கமின்றி விமர்சிப்பதா? என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் காட்டமாக கேள்வி எழுப்பினார்.

திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் - பற்றி எரிகிறதே ஈழம் எனும் தலைப்பில் அக். 20 அன்று மாலை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரை வருமாறு:

பெரியார் திடலிலிருந்து பிரகடனம் புறப்பட்டால்


தமிழர்கள் உள்ளத்தில் ஒருவரே என்பதை உலகத்தார்க்கு பிரகடனப்படுத்தவேண்டிய நேரத்தில் பெரியார் திடலில் அந்தப் பிரகடனம் புறப்பட்டால்தான் எல்லா இடங்களுக்கும் போய்ச் சேரும். அதுவெற்றி வாகை சூடும் (கைதட்டல்) என்ற அளவிலே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்திலே என்னைப் போன்றவர்கள் அதிகம் பேசுவதற்கு அவசியம் இல்லையென்று நான் கருதுகின்றேன். காரணம் இங்கே வந்திருக்கின்ற நீங்கள் அத்துணைப்பேரும் உணர்ச்சிப் பூர்வமாக உணர்வுகளை தேக்கி வைத்திருப்பவர்களாக நாம் அனைவரும் ஆகியிருக்கின்றோம். தொடக்கத்திலே ஈழத்திலே எப்படிப்பட்ட கொடுமைகள் நடைபெறுகின்றன என்ற குறுந்தகடு காட்சி நம் எல்லோருடைய உள்ளத்தையும் உருக்கியிருக்கிறது.

முதல்வரின் மயிலை - மாங்கொல்லை உரை

அதைப் பார்த்து மனம் உருகாதார் மனிதர்களாக இருக்க முடியாது. இலங்கையில் சிங்களம் கோலோச்சிக் கொண்டிருக் கின்றது. கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. எனவே இந்தக் காட்சியைக் கண்ணுற்று அதற்குப் பிறகு தமிழர்களின் உலகப் பெரும் பாதுகாவலராகத் திகழ்ந்து கொண்டிருக்கின்ற நம்முடைய மானமிகு மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர் களுடைய மயிலை மாங்கொல்லையில் ஆற்றிய எழுச்சி யுரையையும் நாம் கேட்ட பிற்பாடு, இவைகளை எல்லாம் தாண்டி இப்போது எப்படிப்பட்ட சூழ்நிலைகள் இருக்கின்றன. அரசு சார்பாக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்கள் முடிவுகள் அதற்குப் பிறகு ஏற்பட்ட விளைவுகள் இவைகளைப் பற்றி அருமைச் சகோதரர் சுப. வீரபாண்டியன் அவர்கள் உணர்ச்சி மிக்க எழுச்சியுரையை முன்னாலே ஆற் றினார். அதைத் தொடர்ந்து ஒரு சில கருத்துகளைச் சொன்னாலே போதும் என்று கருதுகின்றேன்.

சுப. வீரபாண்டியன் சொன்னதை வழிமொழிகின்றேன்

சுப. வீரபாண்டியன் அவர்கள் எதையெல்லாம் சொன்னார் களோ, அதை முன்மொழிவாகக் கொண்டு அதை அப்படியே வழி மொழிவதற்காகத்தான் முன்னாலே நான் நிற்கிறேன் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு சொல்லிக் கொள்கிறேன். அதைவிடத் தெளிவு வேறு தேவையில்லை.
இன்னும் சிலபேர் இங்கு வம்பு தும்புகளுக்காகச் செய் கிறார்கள். நாங்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளாமலேயே ஒரே வகையான கருத்தைத்தான் செய்வது வழக்கம். காரணம் இரண்டும், இரண்டும் நான்கு என்பதை யார் கூட்டினாலும் சரியாகக் கூட்டினால் நான்காகத்தான் விடை கிடைக்குமே தவிர, வேறு விடை வருவதற்கு வழியே கிடையாது.

தமிழர்களின் எதிரிகளை அடையாளம் காண வேண்டும்

அதுபோல இன்றைக்குத் தமிழர்களுடைய எதிரிகளை நீங்கள் அடையாளம் காணவேண்டும். தமிழர்களுடைய எதிரிகள் அங்கேயும் இருக்கிறார்கள். இங்கேயும் இருக்கிறார்கள். இதை நினைவூட்டுவதுதான் எங்களுடைய பணியாக இருக்கவேண்டும்.

முதலிலே ஒரு யுத்தம் நடைபெறுகிற நேரத்திலே எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? அதை முதலிலே தெளிவாகத் தீர்மானித் துக் கொண்டால்தான் எதிரிகளை நாம் தவறாக நண்பர்கள் என்று கருதுவதோ நண்பர்களை எதிரிகள் என்று தவறாகக் கருதுவதோ கூடாது.
சிங்களவர்களின் கொடுமை - உச்சக்கட்டத்தில்
அந்த வகையிலே இன்றைக்கு அங்கே சிங்களவர்கள் கொடுமையினுடைய உச்சத்திற்குச் சென்றிருக்கின்றார்கள். அவர்கள் ஆணவத்தினுடைய உச்சாணிக் கொம்பிலே இருந்து ஆடுகிறார்கள் - முழக்கமிடுகிறார்கள். இப்பொழுது அவர்களுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் முழக்கங்கள் இங்கே வளர்ந்து கொண்டிருக்கின்றன.

தமிழர்கள் எழுச்சி பெற்றுவிட்டார்கள்

தமிழர்கள் எல்லாம் எழுச்சிபெற்றுவிட்டார்கள். எல்லோரும் உள்ளத்தால் ஒருவராக ஆகக் கூடிய உணர்வைப் பெற்றுவிட் டார்கள். இவர்களுக்கு இதைவிட்டால் வேறு வேலை கிடையாது என்று யார் யாரெல்லாம் அட்சியமாக ஏடுகளிலே எழுதினார் களோ, மேடைகளிலே பேசினார்களோ, அந்த சிலர் அவர்கள் மீண்டும் இப்பொழுது தங்களுடைய விஷம் தோய்ந்த பேனாக் களிலே அதை மறைத்து எழுத வேண்டிய ஒரு கட்டாயத்திற்கும் ஆளாகியிருக்கின்றார்கள்.

தமிழர்களின் உணர்வு எரிமலையாய்

ஆனால், அவர்கள் என்ன நினைத்தாலும் உணர்ச்சி பூர்வ மாகத் தமிழர்களுடைய உணர்வு என்பது எரிமலை போல பொங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் காட்டப் போகிறோம் - மனிதச் சங்கிலியின் பொழுது.

முதல்வர் சொன்னதுபோல சங்கற்பச் சங்கிலி

மனித சங்கிலி என்பதிருக்கிறதே அது சாதாரணமாக இருக் காது. நம்முடைய முதல்வர் அவர்கள் சங்கற்பச் சங்கிலி என்று சொன்னார்கள். அப்படி கை கோர்த்துக் கொண்டிருப்பதற்கு பொருள் என்னவென்று சொன்னால் எங்களிடையே ஜாதி இல்லை, மதம் இல்லை, ஏன் கட்சி வேற்றுமைகள் இல்லை (கைதட்டல்).

உலகுக்குப் பிரகடனப்படுத்த

தமிழர்கள் தமிழர்களாகத்தான் இருக்கின்றோம் என்று உலகுக்குப் பிரகடனப்படுத்த ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் இது வரையிலே என்ன நிலையிலே இருந்தார்கள் என்பதை மாற்றி அவர்களுக்கு இங்கே இருக்கின்ற தமிழர்கள் தாய் மண்ணிலே இருக்கின்ற தமிழர்கள் உணர்ச்சிப் பூர்வமான மக்களாக இன்றைக்கு மாறிக் கொண்டிருக்கின்றார்கள். விதைகளாகவே இருப்பதில்லை

காலமெல்லாம் விதைக்கப்பட்ட விதைகள் விதைகளாகவே எப்பொழுதும் இருப்பதில்லை. அது முளையாகக் கிளம்பி செடியாக வளர்ந்து அது பூத்து காய்த்து கனிந்திருக்கக் கூடிய காலகட்டத்தை நாம் விரைவிலே பார்க்கப்போகிறோம் என்பதற்கு அடையாளமாகத்தான் மனிதச் சங்கிலி நடத்தப்பட இருக்கிறது. பல்வேறு நிலைகளிலே அழுத்தம் தரக்கூடிய நிலை யிலே நாம் அனைவரும் சேர்ந்து உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வகையிலே தெளிவாக இருக்கின்றோம்.

கலைஞர் பெருந்தன்மையோடு சொன்னார்

இந்த நேரத்திலே நம் இனத்தவர்கள் யார்? நம் மனத்தவர்கள் யார்? புரிந்துகொள்ள வேண்டும். நாம் பிரித்துக்காட்டுவதைவிட அவர்களே பிரித்து கோடு போட்டிருக்கின்றார்கள்.
அதற்காக நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டிருக்கின்றோம். ஏனென்றால் நம்மிடையே அந்தக் குழப்பம் வரவேண்டிய அவசியமில்லை. இன்னும் தெளிவாகச் சொன்னால், இது ஏதோ அரசியலுக்காகத் துவக்கப்பட்டது அல்ல.

யாரையும் சங்கடப்படுத்தக்கூடாது

அதைத்தான் கலைஞர் அவர்கள் மிகுந்த பெருந்தன்மையோடு சொன்னார். அவர்கள் தந்தை பெரியாரின் ஈரோட்டு குருகுலத் திலே சரியாகப் படித்த காரணத்தாலே அந்த இன உணர்வி னுடைய உச்சக்கட்டத்திற்குச் சென்று அரசு கூட்டிய கூட்டத்தி லேயே இங்கே சகோதரர் சுப. வீரபாண்டியன் சுட்டிக்காட்டி யதைப்போல, யாரையும் சங்கடப்படுத்தக் கூடாது என்பதற்காக முதல்வர் கலைஞர் அவர்கள் கூட பழியைத் தன்மீது போட்டுக் கொண்டார்கள். தான் பொறுப்பேற்றுக் கொண்டு யாரையும் நீங்கள் பிரித்துப் பார்க்காதீர்கள். இந்தப் பிரச்சினையிலே மற்றவர்களை எல்லாம் வேறுபடுத்திக் காட்ட வேண்டிய அவசியமில்லை.

கோடுபோட வேண்டிய அவசியமில்லை

வந்தவர்கள் வராதவர்கள் என்று ஒரு கோடு போடவேண்டிய அவசியமில்லை என்று சொன்னார்கள். ஆனால், அவர்கள் சொன்னதைப் போல், நீங்கள் ஏன்அவ்வளவு பெருந்தன்மைக்கு ஆளாகிறீர்கள் என்று அவர்கள் கேட்பதைப்போல கொச்சைப் படுத்தக் கூடிய அளவுக்குப் பேசுகிறார்கள். ஆனால், உண்மையிலேயே தெளிவடைய வேண்டிய மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது நமது கடமையாக இருக்கிறது.

1956-லே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிதம்பரத்தில் நாங்கள் தீர்மானத்தை நிறைவேற்றினோம் என்று கலைஞர் அவர்கள் எடுத்துச் சொல்லி முரசொலியில் எழுதி யிருக்கின்றார்கள். அதை கலைஞர் அவர்கள் விளக்கிய நேரத் திலே அப்பொழுதிருந்தா இந்தப் பிரச்சினை? அப்பொழுதைய பிரச்சினையை இப்பொழுது ஏன் சொல்லுகின்றார்கள் என்று கேட்பவர்களும் உண்டு. நேற்றுகூட கலைஞர் அவர்கள் - முரசொலியில் எழுதியிருக்கின்றார்கள். மற்ற ஏடுகளிலும் வந்திருக்கிறது. என்னுடைய கையிலே 11-8-1939 -லே வந்த விடுதலை நாளேடு - ஈரோட்டிலே இருந்து வெளிவந்த நாளேடு.
பெரியார் மாளிகையில் நடந்த முக்கிய கூட்டம் அந்த நாளேட்டின் விலை அன்றைக்குக் காலணா விலை. நன்றாகத் தெரிந்துகொள்ளவேண்டும். 1939-ல் வெளிவந்த விடுதலை நாளேட்டில் முதல் பக்கத்தில் தென்னிந்திய நல உரிமைச் சங்க நிர்வாகக் கமிட்டிக் கூட்டம் ஈரோட்டில் பெரியார் மாளிகையில் நடந்தது. முக்கியமான முடிவுகள் - நமது நிருபர் என்று வந்த அந்த செய்தியில், நான் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு அதை அனுப்பியவுடனே அதை அவர்கள் பயன் படுத்தி அவர் எழுதிய கடிதத்திலே அறிக்கையிலே அவர்கள் தெளிவாக எழுதியிருக்கின்றார்கள்.

அப்பொழுது அது திராவிடர் கழகமாக ஆகவில்லை. ஜஸ்டிஸ் கட்சி அதனுடைய அதிகாரப் பூர்வமான பெயர். தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்பதுதான்.

நீதிக்கட்சி என்று மற்றவர்களாலே அழைக்கப்பட்ட அந்தக் கூட்டத்திலே தெளிவாக ஈழத் தமிழர்களுடைய பிரச்சினையைப் பற்றிச் சொல்லியிருக்கின்றார்கள்.

ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் பெரியார்

மாலை 3 மணியிலிருந்து 6 மணிவரை மாகாண நிர்வாகக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள் தலைமை வகித்தார் என்று அதிலே செய்தி வெளியிடப்பட்டு, முக்கியமான சில தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. அந்தக் கூட்டத்திலே விஜயம் செய்த நிர்வாகக் கமிட்டி அங்கத்தினர்கள் என்று போட்டிருக்கின் றார்கள். அந்தக் காலத்திலே அப்படித்தான் தமிழ் இருந்தது.

விஜயம் செய்தவர்கள் யார்? யார்?

விஜயம் செய்த நிர்வாகக் கமிட்டி அங்கத்தினர்கள் என்று ஒரு நீண்ட பெயர். பெரியார் ஈ.வெ. ராமசாமி, ஈரோடு குமாராஜா முத்தையா செட்டியார், சென்னை, சர் ஏ.டி. பன்னீர்செல்வம், செல்வபுரம், தோழர் டபிள்யூபி.ஏ. சவுந்திரபாண்டியன், பட்டி வீரன்பட்டி, ராவ்பகதூர், என்.ஆர். சாமியப்பா முதலியார், நெடும்பலம் ஏ. துரைசாமி முதலியார்- சென்னை (இவர் ராமசாமி முதலியாருடைய அண்ணார்). அது பலபேருக்குத் தெரியாது. கே.ஏ.பி. விசுவநாதம் - திருச்சி, டி.ஏ.வி. நாதன், சென்னை, பி. பாலசுப்பிரமணியம் (சண்டே அப்சர்வர் பத்திரிகை ஆசிரியராக இருந்தவர்). எஸ். நடேச முதலியார் - சென்னை, ஏ.கே. தங்கவேலு முதலியார் - காஞ்சி, சி.ஜி. நெட்டோ - சேலம், கே.வி. அழகிரிசாமி - பட்டுக்கோட்டை, பார்த்தசாரதி நாயுடு - திருவாரூர், கோவை டாக்டர் நடேசன், கிருஷ்ணசாமி முதலியார், உதகை, முருகேசன் -சென்னை, என்.வி. நடராஜன் - சென்னை, என் ஜீவரத்தினம் - சென்னை, ஜி. சாமிநாயுடு, திருப்பத்தூர், டி.எஸ். நடராஜப்பிள்ளை, சென்னை, அதற்குக் கீழே சி.என் அண்ணாதுரை (அண்ணா அவர்கள் இயக்கத்திலே சேர்ந்து, அங்கே ஒரு பேச்சாளராக இருந்தபொழுது - அந்த வரிசையிலே வருகின்றபொழுது வருகிறார்). டி.எம். சண்முகம் பிள்ளை, திருவொற்றியூர், சி.டி. நாயகம் - சென்னை, எம்.ஆர். திருமலை சாமி, நகர தூதன் ஆசிரியர் - திருச்சி டி.பி. வேதாச்சலம், டாக்டர் தர்மாம்பாள் - சென்னை, முத்துலிங்க ரெட்டியார், சிக்கய்யா நாயக்கர் - ஈரோடு வி.வி. ராமசாமி - விருதுநகர், ஏ. பொன்னம் பலனார், பூவாளூர், ராவ்சாகிய அய். குமராசாமிப் பிள்ளை - தஞ் சாவூர் இவர்கள் எல்லாம் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களாக கலந்துகொண்டார்கள்

ஈழப் பிரச்சினை 1939-லேயே ஏற்பட்டது

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற ஜஸ்டிஸ் கட்சி - நீதிக்கட்சி. - ஏனென்றால் வரலாற்றினுடைய பாதையை பின்னோக்கி பார்க்கவேண்டும். ஈழப் பிரச்சினை என்பது . இன்று, நேற்று தொடங்கிய பிரச்சினை அல்ல. மனிதச் சங்கிலிக்காக கைகோர்க்கப் போகின்றோமே, அந்தப் பிரச்சினையினுடைய ஆழம் - அதனுடைய வேர் எதிலிருந்து கிளம்பியது என்பதைத் தமிழர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

இது குறுகிய மொழிப் பார்வையா?

வரலாற்றுப் பார்வை தமிழர்களுக்குக் குறைவு. இது ஏதோ குறுகிய மொழிவெறி சுபாவம் அல்லது மொழி வெறி மனப் பான்மை, சாவனிசம் என்றெல்லாம் சில ஏடுகளில் எழுதி தங் களுடைய மன அரிப்பைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.
அப்படி நிறைவேற்றிய அந்தத் தீர்மானத்திலே முதல் தீர்மானமாகவே இலங்கையிலுள்ள தமிழ் மக்களை இலங்கை சர்க்கார் கொடுமையாக நடத்துவதையும், அவர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்த ஏற்பாடு செய்து வருவதையும் இந்தக் கமிட்டி வன்மையாய் கண்டிக்கிறது.

1939-லே எப்படிப்பட்ட சூழ்நிலை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அங்கே மலைய தமிழர்கள் உண்டு; வியாபாரத் தமிழர்கள் உண்டு. யாழ்ப்பாணத் தமிழர்கள் உண்டு.
பெரியார் தலைமையில் தூதுக்குழு சென்று பார்க்க நம்மைப் போன்ற பலர் பிறக்காத காலத்திலே தந்தை பெரியார் அவர்கள் மற்றும் பலர் நிறைவேற்றிய தீர்மானம். மேலும் விடுதலையில் எழுதப்பட்டிருக்கிறது. அதற்கு தோழர்கள் ஈ.வெ.ரா., ராவ்பகதூர் சாமியப்ப முதலியார், சர். ஏ.டி. பன்னீர் செல்வம், டபிள்யூ. பி.ஏ. சவுந்திரபாண்டியன் ஆகியோர்களை இலங்கைக்குச் சென்று அவர்களது நிலைமையை ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிடுமாறு இக்கமிட்டிக் கேட்டுக் கொள்கிறது என்றும் ஒரு தூதுக்குழு போகவேண்டும் என்று அந்தக் காலத்திலே தீர்மானம் போட்டிருக்கிறார்கள் என்றும் சொன்னால்இதனுடைய தொடக்கம் எங்கேயிருந்து தொடங்கி யிருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

-------------- "விடுதலை" 23-10-2008
இலங்கையில் பிரிவினைக்கு வித்திட்டவர்கள்
சிங்கள இனவெறி பிடித்தவர்களே!
சென்னையில் தமிழர் தலைவர் ஆதாரத்துடன் பேச்சுசென்னை, அக்.24- இலங்கை நாட்டிலே பிரிவினையைக் கேட்டவர்கள் தமிழர்களா? சிங்களவர்களா? பிரிவினைக்கு வித்திட்டவர்களே சிங்களவர்கள் தான்! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் - பற்றி எரிகிறதே ஈழம் எனும் தலைப்பில் அக். 20 அன்று மாலை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

தி.க. வானாலும் தி.மு.க.வானாலும்

இன்றைக்குத் திராவிடர் கழகமானாலும், திராவிட முன்னேற்றக் கழகமானாலும் இதுபோன்ற அமைப்புகள் ஆனாலும், எல்லாவற்றுக்கும் மூலம் எது என்று சொன்னால் நீதிக்கட்சி - திராவிடர் இயக்கம். ஆகவே திராவிடர் இயக்கத்திற்கு இந்த கவலை உண்டு. ஆகவே திடீரென்று நேற்று பெய்த மழையிலே முளைத்த காளான்கள் அல்ல.

தமிழர்கள் புரிந்துகொண்டால்தான்

இந்த நாட்டு ஏடுகள் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். விஷமிகள் விளங்கிக் கொள்ள வேண்டும். விஷமிகள் விளங்கிக் கொள்கிறார்களோ, இல்லையோ, தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் புரிந்துகொண்டால்தான் இதை மற்றவர்களுக்கு திண்ணைப் பிரச்சாரத்தின் மூலம் எடுத்துச் சொல்லமுடியும்; தெருமுனைப் பிரச்சாரத்தின்மூலம் எடுத்துச் சொல்லவேண்டும்.

2009-ல் ஒரு முற்றுப்புள்ளி வைத்தாகவேண்டும்

எனவே அன்றைக்குத் தொடங்கிய பிரச்சினை 2009-லே ஒரு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய காலத்திற்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்ற ஒரு வலாற்றுத் திருப்பத்தை உருவாக்க வேண்டும். நல்ல வாய்ப்பாக வேக வேகமாகப் பல நிலைகள் வந்திருக்கின்றன. ஆனால், இப்பொழுது ஏற்பட்ட நிலை என்ன? எப்படிப்பட்ட அளவுக்குத் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்பட் டிருக்கின்றார்கள்.?

ஊடகங்கள் திசை திருப்புகின்றன

வேதனையுடன் நான் சொல்லும்பொழுது அதைத் தலைகீழாக ஆக்கி திசை திருப்புகின்றனர் - இங்கே இருக்கின்ற ஊடகங்கள். இங்கே இருக்கின்ற ஏடுகள், இங்கே அவைகளின் பெயர்களை சொன்னார்கள். அத்தனையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்க வேண்டுமானால், பார்ப்பன ஏடுகள். தமிழர்களுக்கு இன உணர்வு என்பது துளிர்த்துவிடக் கூடாது என்று கருதுகிறார்கள்.
அதுவும் குறிப்பாக இந்த ஆட்சியில் தமிழர்களுடைய இன உணர்வு துளிர்க்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது என்ற வேதனை பார்ப்பனர்களுக்கும், பார்ப்பன பத்திரிகைகளுக்கும், ஊடகங் களுக்கும் இருக்கிறது. தமிழனுக்குப் புத்தாண்டு கிடைத்து விட்டது.

எதிர்காலத்தில் நம்முடைய நிலை என்ன?

தமிழனுக்கு செம்மொழி புரிந்துவிட்டது. தமிழர்கள் அனைவரும் அர்ச்சகராக வேண்டும் என்று வந்துவிட்டனர். தமிழர்களிடத்திலே ஜாதி இல்லை. தமிழனுக்கு உணர்வு உண்டு என்று ஆக்கப்பட்டுவிட்டது. இவ்வளவையும் தாண்டி தமிழன் என்ற உணர்வை இதன்மூலம் உண்டாக்கிவிட்டால் எதிர் காலத்தில் நம்முடைய கதி என்ன? இந்தக் கேள்வி அவர் களுடைய உள்ளத்தைக் குடைந்து கொண்டிருக்கின்றது. அதற்காகத்தான் அவர்கள் எங்கோ மனு போட்டுக் கொண்டி ருக்கின்றார்கள். அதோடு காலம், காலமாக நமக்கு எப்படி தொப்புள் கொடி உறவு என்பது மனிதாபிமான உண்மையோ அதுபோல சிங்களவர்கள் என்று சொன்னால், அவர்கள் ஒரிசாவிலிருந்து போன ஆரியர்கள் என்பதை அவர்களுடைய நாடாளுமன்றத்திலேயே பதிவு செய்திருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு தொப்புள் கொடி உறவு உண்டு.

தொப்புள் கொடி உறவு நமக்கு உண்டு

தொப்புள் கொடி உறவு நமக்கு உண்டு. அவர்களுக்கும் உண்டு. எனவேதான் இரண்டு இனம். அந்த இனத்தைப் பொறுத்த வரையிலே நேரடியாக இதுவரையில் போர்க்களத்தில் நின்று வென்ற வரலாறே கிடையாது. எனவே விபீஷணர்களை பிடித்து, சுக்ரீவர்களைப் பிடித்து, அனுமார்களைப் பிடித்து, குரங்குப் படைகளைப் பிடித்து துரோகிகளைப் பிடித்து அவர்களை வைத்துத்தான் சூழ்ச்சியினாலேதான் வென்றிருக்கின்றார்களே தவிர அவர்கள் வீரத்தால், விவேகத்தால் ஒருபோதும் வென்றதாக வரலாறு கிடையாது.

நமது அரசர்களை அசுரர்களாக ஆக்கி


அதற்காக நம்முடைய அரசர்களை எல்லாம் அசுரர்களாக ஆக்கினார்கள். கோரமானவர்களாக ஆக்கினார்கள். இது பண்பாட்டுத் துறைக்கும் அவர்கள் செய்த மிகப் பெரிய மாறுதல். எனவே இவைகளை எல்லாம் நாம் புரிந்து கொண்டால்தான் பிரச்சினையினுடைய அடிவேர் எங்கேயிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஏதோ திடீரென்று இன்றைக்கு இவர்கள் பிரிவினையை ஆதரிக்கிறார்கள். புலிகளைஆதரிக்கின்றார்கள், புலிகள்தான் அங்கேயிருக்கின்ற தமிழர்களை கேடயங்களாகப் பயன்படுத்து கின்றார்கள் என்றெல்லாம் அவர்கள் பேசுகிறர்கள், பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

திட்டமிட்ட விஷமப் பிரச்சாரத்தை செய்கிறார்கள் என்று சொன்னால், தயவு செய்து ஒன்றை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றீர்கள். நம்முடைய இனத்தைப் பொறுத்தவரையிலே இந்தப் பிரச்சினையில் புலிகள் இயக்கம் எப்பொழுது தோன்றியது? தமிழர்களுடைய உரிமைக் குரல் எப்பொழுது தோன்றியது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்

சுதந்திரம் வராததற்கு முன்பே கொடுமை ஆரம்பம்

அதற்கு ஆதாரம்தான் 1939-லேயே சிங்களவர்கள் தமிழர்களை கொடுமைப்படுத்தினார்கள். இலங்கையை அப்பொழுது வெள்ளைக்காரன் ஆண்டான். இலங்கைக்கு அப்பொழுது சுதந்திரம் வரவில்லை

இலங்கைக்கு தனி ஆட்சி வந்தது. 1948-ல். அந்த வரலாற்றை நீங்கள் மனதிலே பதியவைத்துக் கொள்ளவேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டிலே என்ன சொன்னார்களோ, அதே வாய்ப்புதான் தமிழ் நாட்டிலேயேயும் வரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.

1948-ல் இலங்கை நாடு சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் பெற்றதற்கு முன்னாலேயே சிங்கள ஆதிக்கம் இருந்தது. அந்த ஆதாரங்களைப் பதிவு செய்வதற்காகத்தான் இன்றைக்கு இருக்கின்ற பிரச்சினையைச் சொன்னோம்.

குடியுரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்டன

ஆனால், அதற்கு முன்னாலே, என்ன சூழ்நிலை? தலைமுறைத் தலைமுறையாக மலையகப் பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டன. இந்த வரலாற்றைக் கொஞ்சம் பின்னோக்கிப் பாருங்கள். இந்த வரலாற்றைத் தெரிந்துகொள்ளுங்கள். இவ்வளவு பெரிய இந்த சம்பவம் இந்த போர் எப்படி வந்தது? தமிழ் இனமொழி வெறியா?

பேசுகிறவர்கள் எண்ணுகிறவர்கள், தமிழ் இன வெறி, தமிழ் மொழிவெறி என்று நம்மைக் காட்டிக் கொடுக்கின்றவர்கள் - சொல்லக் கூடியவர்கள் இருக்கின்றார்களே, அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும், தெரிந்துகொள்ள வேண்டும். உண்மைகள் யுத்த காலங்களிலே போர்க் காலங்களிலே களப்பலியாகும். என்பது ஆங்கிலப் பழமொழி.

போர்க்களத்தில் முதல் களப்பலி உண்மையே

போர்க்களத்தில் முதல் களப்பலியாவது உண்மைதான் என் பது மிகப்பெரிய பழமொழி. இப்பொழுது அந்த உண்மை களைத்தான் களப்பலியாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே வருகின்ற செய்திகள் உண்மை அல்ல. ஆனால் வெட்கத்தோடு சொல்லவேண்டும். நம்முடைய நாட்டிலே இருக்கின்ற வானொலி, நம்முடைய நாட்டிலே இருக்கக் கூடிய தொலைக்காட்சிகள் அவர்கள் கொடுத்த செய்தியைத்தான் இவர்கள் பரப்புகிறார்கள். அரசாங்கமோ அல்லது இவர்களுடைய செய்தியாளர்கள் போய் அங்கே நடுநிலையில் நின்று செய்திகளைச் சொல்லுவதில்லை.

முடிந்தால் நடுநிலையில் இருந்து சொல்லுங்கள்

ஊடகங்களை நாம் எப்படி கண்டிக்கின்றோமோ அதே போல இதையும் சேர்த்து கண்டிக்கவேண்டியது தமிழர் களுடைய முழுப் பொறுப்பிலே முக்கிய கடமைகளில் ஒன்றாக இருக்கவேண்டும்.

சொன்னால் நடுநிலையில் இருந்து உங்களால் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள். சொல்ல முடியாவிட்டால் சொல் லாமல் விடுங்கள், மாறாக யாருக்காக நீங்கள் ஊதுகுழலாக இருக் கின்றீர்கள். சிங்களத்திலே ரூபவாஹினி என்ற பெயரில் ஏதோ சொல்லுவார்கள். அவன் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.

நமது வானொலி தொலைக்காட்சி செய்யலாமா?

ஆனால், சிங்களவர்களுடைய வரிப்பணத்தில் நடக்கின்ற ஊடகங்கள், அரசு ஊடகங்கள், வானொலிகள், தொலைக் காட்சிகள் இதைச் செய்யலாமா? இந்த கேள்வியும் முன்னாலே நிறுத்திப் பார்க்க வேண்டும்.

தலைமுறை தலைமுறையாக தமிழர்களுக்குக் குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டன. இதைத் தொடங்கி வைத்தவர் அன்றைய பிரதமர் சேனநாயகா. அதிலேயிருந்து ஆரம்பம். அடுத்து பண்டு தொட்டு தமிழர்கள் பூமியான வடக்கு, கிழக்கு மாநிலங்களில் சிங்களவர்கள் திட்டமிட்டுக் குடியேற்றப் பட்டனர்.

கற்பு சூறையாடப்பட்டது

தமிழ் மண்ணில் கற்பு சூறையாடப்பட்டது. தமிழ்ப் பெண் கற்பு சூறையாடப்படுவது இப்பொழுது. தமிழ் மண்ணின் கற்பு சூறையாடப்பட்டது அப்பொழுது. எங்கேயெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ, அங்கு தமிழர்கள் வாழக்கூடிய பகுதியாக இருக்கக்கூடாது என்று சொல்லி அவர்கள் மிகப் பெரிய அளவுக்கு இன வெறியோடு திட்டமிட்டுச் செய்தார்கள்.

சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி

தமிழர்கள் அப்பொழுதும் பொறுத்துக் கொண்டிருந்தார்கள். சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி. தமிழ்மொழி துணை மொழியாக இருக்கும் என்று அடுத்தக் கட்டத்திற்கு போனார்கள். அதையும் தமிழர்கள் கொஞ்சம் சலசலப்போடு ஏற்றுக் கொண்டார்கள்.

தமிழர்களை பூமியின் மைந்தர்களாக ஏற்க மறுத்தனர்

வேறு வழியில்லையே. இந்த நாடு முன்னேற நாம் இதற்காகவா உழைத்தோம் என்ற மன வேதனையோடு அவர்கள் இருந்தார்கள். பிறகு சிங்களப் பேரினவாதிகள் விடுவார்களா? அடுத்தபடியாக தமிழர்களை மண்ணின் மைந்தர்களாக, பூமியின் மைந்தர்களாக ஏற்க மறுத்தனர்.

ஒரு அமைச்சர் சொல்லுகிறார்

இது சிங்களவர் பூமி. நாங்கள், போராட உங்களை அனுமதித் திருக்கின்றோம் என்று சொல்லுகிறார்களே, இதோ நான் கையிலே வைத்திருக்கின்றேன் ஆதாரத்தை ஒரு அமைச்சர் சொல்லுகின்றார். நாங்கள் உங்களிடத்திலே அனுதாபத்தோடு இஸ்லாமியர்கள் உட்பட அவர்கள் அங்கேயிருந்து ஓடி வந்தார்கள். நாங்கள் அவர்களுக்குத் தஞ்சம் கொடுத்தோம். அவர்கள் எங்களுக்கு நன்றிகாட்ட மறுக்கிறார்கள் என்று ராஜபக்சே ஆட்சியிலே இருக்கிற ஒரு அமைச்சர் சொல்லி, அது இணையத்திலே வந்தது. விடுதலையில்கூட இரண்டு நாட்களுக்கு முன்னாலே எடுத்து தெளிவாகப் போட்டிருக்கின்றோம்.

தமிழர்களை அழிக்கத் திட்டமிட்டனர்

எனவே அந்த சிங்கள பேரினவாதிகள் இவர்களை பூமி புத்திரர்கள் அல்ல. மண்ணின் மைந்தார்கள் அல்ல. என்று நினைத்ததோடு மட்டுமல்ல, தமிழர்களை அழிக்கத் திட்ட மிட்டார்கள்.

முதலில் கல்விக் கண்ணைக் குத்தவேண்டும் என்று நினைத் தார்கள். அதுதானே ஆரியத்தின் நிலை. ஆரியம் என்ன சொன் னது? சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவைக் கொடுக்க லாகாது என்ற மனுதர்மத்தை எப்படிக் கையாண்டார் களோ, அதேபோல. ஏனென்றால் ஆரிய வம்சத்தின் தொடர்ச்சி தான் அங்கே நடைபெறுகிறது.


தமிழர் மாணவர்களுக்கு கல்வியில் வேறுபாடு

தமிழ் மாணவர்களுக்கு வேறு அளவுகோல், சிங்கள மாணவர்களுக்கு சலுகையான அளவுகோல். கிராம அளவிலே கூட தமிழர்கள் படிக்காத அளவு கோல். கிராம அளவிலே கூட தமிழர்கள் படிக்காத அளவிற்கு கல்வியைத் தரக்கூடாது என்று மண்ணைப் போட்டார்கள்.
சிங்களவர்களுக்கு 30 மார்க் இருந்தால்போதும். அவர்களுக்கு அனுமதி உண்டு. 80 மார்க் வாங்கினால்தான் தமிழர்கள் கல்வியில் உள்ளே போக முடியும். அதோடு பல்கலைக் கழகக் கதவுகள் மூடப்பட்டன. தமிழர் மாணவர்கள் போர்க்கோலம் பூண் டார்கள். இதிலிருந்துதான் பிரச்சினை தொடக்கம்.

தமிழகத்தில் இந்திப் போர் தொடங்கியதுபோல்

எப்படி இங்கு இந்திப் போர் மாணவர்களாலே தொடங்கப் பட்டதோ அதுவெறும் மொழிப் போராகத் தொடங்கவில்லை. மாறாக உணர்ச்சிப் பூர்வமாக வந்தது.

1974 ஆம் ஆண்டு யாழ் நகரில் உலகத் தமிழர் மாநாடு. பழைய வரலாறு இது. இதில் சிங்களவர்கள் கலகம். துப்பாக்கிச் சூடு. ஆறு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
கூட்டாட்சி உரிமை கேட்டார்கள்

பிறகு 1948 -லிருந்து 1972 வரை தனிநாடு என்ற கோரிக்கையை எழுப்பாத தமிழர்கள் பிறகு எங்களுக்குக் கூட்டாட்சி உரிமை வேண்டும் என்று இதைத்தான் கேட்டார்கள். எனவே எடுத்த எடுப்பிலேயே நாங்கள் தனியே போய்விட வேண்டும். எங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று கூட கேட்கவில்லை. மாறாக, எங்க ளுடைய உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும். எங்களுடைய கலாச்சாரத்திற்குப் பாதுகாப்பு வேண்டும். நாங்களும் இந்த மண்ணின் மைந்தர்கள். எனவே எங்களுக்குத் தேவை - கூட்டாட்சி என்று கேட்டார்கள்.

வட்டுக்கோட்டையில் தனிநாடு கோரும் தீர்மானம்

ஆனால், அதற்கு அவர்கள் இசையமாட்டோம் என்று சொன்னவுடனேதான் தந்தை செல்வா அவர்களுடைய தலைமையிலே நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள் மயிலை மாங்கொல்லை கூட்டத்திலே தெளிவாகக் குறிப்பிட்டுச் சொன்னதைப் போல செல்வா அவர்களுடைய தமிழரசு கட்சி மலையகத் தமிழர்கள் சேர்ந்து வட்டுக்கோட்டையில் தனிநாடு கோரும் தீர்மானத்தை 1976-ல் அவர்கள் முன்மொழிந்தார்கள்.

இந்த வரலாற்றைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஏனென்றால் இங்கு இருக்கிறவர்கள் ஏதோ இப்பொழுது இந்தப் பிரச்சினை தோன்றியதுபோல விடுதலைப் புலிகள்தான் இந்த நாட்டைப் பிடிக்க வேண்டும் என்று சொல்வதைப் போல் சாயம் பூசி பொய்யுரை பரப்புகிறார்கள்.

தேர்தல் அறிக்கையில் தனி நாடு கோரிக்கை

செல்வா மறைவுக்குபின் நடந்த இக்கோரிக்கை தேர்தலிலேயே வைக்கப்படுகிறது. உலகத்திலேயே ஒரு நாடு பிரிய வேண்டும் என்பதை அந்த நாட்டில் தேர்தல் அறிக்கையிலேயே ஒரு பிரச்சினையாக வைத்தார்கள். ஈழத்திலேதான் முதல் முறையாக நடந்தது என்ற வரலாற்றை இந்த நாட்டில் தெரிந்தும், தெரியாதது போல இருக்கக் கூடியவர்களுக்கு உணர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக, வரலாற்றுக் கட்டாயமாக இன்றைக்கு இருக்கின்றது.

அந்தத் தேர்தலிலே என்ன நடந்தது? 19 தொகுதிகளிலே இந்தப் பிரச்சினையை வைத்துப் போட்டியிடுகிறார்கள். 18 தொகுதிகளை தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றிபெற்று விட்டது. அங்குள்ள தமிழர்கள் தனிநாடு கோரிக்கைக்கு தேர்தல் மூலமாக ஆதரவு தெரிவித்தனர் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தி. எனவே மொழி, இனம், நாடு என்பது மூச்சாக நின்றது.

பிரிவினை கேட்க வைத்தவர்கள் சிங்களவர்கள்

இப்பொழுது தெளிவாகச் சொல்லுங்கள் தோழர்களே, விடுதலைப்புலிகள் இயக்கம் எப்பொழுது பிறந்தது? பிரிவினை எப்போது தொடங்கியது. பிரிவினை ஏன் தொடங்கியது? பிரிவினை கேட்க வைத்தவர்கள் தமிழர்களா? சிங்களவர்களா? ஆதிக்கம் எங்கே கொடிகட்டிப் பறக்கிறதோ, அங்கே அடிமைத் தனம் எவ்வளவு காலத்திற்கு சலாம் போட்டுக் கொண்டிருக்க முடியும்? நிச்சயமாக ஆதிக்கம் அதிகமாக அதிகமாக நுனிக் கொம்பு ஏறினால் - அதுவே உயிருக்கு இறுதியாகிவிடும் என்பதற் கொப்ப அவர்கள் உச்சாணிக் கொம்பிலே ஆடிக் கொண்டிருக் கின்றார்கள்.

--------------------------"விடுதலை" 24-10-2008மத்திய அரசே, உங்கள்மீது வைத்திருக்கின்ற
நம்பிக்கையைத் தகர்த்துவிடாதீர்கள்
சென்னை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் வேண்டுகோள்


சென்னை, அக். 25- மத்திய அரசே உங்கள்மீது வைத்திருக்கின்ற கடைசி நம்பிக்கையை தயவு செய்து தகர்த்து விடாதீர்கள் என்று சென்னை பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துப் பேசினார்.

திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் - பற்றி எரிகிறதே ஈழம் எனும் தலைப்பில் அக். 20 அன்று மாலை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

சமரசம் என்று சொல்லுகின்றபொழுது

சமரசம் என்று சொல்கிறபொழுது அரசியல் தீர்வு காணவேண்டும் - தமிழர்கள் மூலம் இங்கே கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக - நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்களுக்கு எப்பொழுது எந்த வியூகத்தை வகுப்பது என்பது மிகத் தெளிவாகத் தெரியும்.

ஆகவே அந்த வியூகம் வகுப்பதிலே அவர்கள் தெளிவாக எல்லோருடைய கருத்தையும் ஏற்று, அன்றைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எங்களுடைய தமிழ் இனம் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழினத்தைப் பூண்டோடு அழித்துவிடுவோம் என்று சிங்கள அரசு சொல்லுகின்றது.

காரணம் - தீவிரவாதமா?

இதற்கு காரணம் கேட்டால், தீவிரவாதம், தீவிரவாதம் என்று பதில் சொல்லுகின்றார்கள். விடுதலைப்புலிகள் தீவிரவாதத் தையோ, பிரிவினைவாதத்தையோ தொடங்கியவர்கள் அல்ல. அதைத் தொடங்க வைத்தவர்கள் சிங்களவர்கள். அப்பொழுது அதற்கு என்ன காரணம் இருந்ததோ, அதை விட ஆயிரம் மடங்கு காரணத்தை அதிகமாக இப்பொழுது பெருக்கியிருக்கின்றார்களே தவிர, வேறு கிடையாது.

இராணுவத் தீர்வு வேண்டும்; அரசியல் தீர்வு வேண்டாம்

அதுவும், நன்றாக வரலாற்றைப் புரிந்து கொள்ளவேண்டும். அதே நேரத்திலே தெளிவாக இப்பொழுது அரசியல் தீர்வு காணவேண்டும். இராணுவத் தீர்வினாலே வெற்றிபெற முடியாது. இன்றைக்கு நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் தெளிவாகச் சொல்கின்றார்கள்.
பிரதமர் அவர்கள் மட்டுமல்ல, வெளிநாட்டிலே இருக்கக் கூடிய அமெரிக்கா போன்ற பல வல்லரசுகள் இராணுவத் தீர்வு வேண்டாம். உங்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும் என்று சொல்கின்றார்கள்.

அரசியல் தீர்வு என்ற வார்த்தைக்குப் பின்னாலே என்ன இருக்கிறது? அதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

சுடுகாட்டைப் பார்த்தா தீர்வு சொல்வது?

அங்கு அரசியல் தீர்வு வருவதற்கு முன்னாலே என்ன நடக்கவேண்டும்? மக்களைப் பார்க்காமல் சுடுகாட்டைப் பார்த்தா தீர்வு சொல்லமுடியும்? (கைதட்டல்). அந்த மக்கள் காடுகளிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மிருகங்களை விட கொடுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

எங்களுடைய உள்ளமெல்லாம் இரத்தத்தால் வடிகிறது

ஏடுகள் வாயிலாகப் படிக்கும் பொழுது எங்களுடைய உள்ளமெல்லாம் இரத்தத்தாலே வடிகிறது. கொடுமையாக இருக்கிறது. பேச முடியவில்லை. தூங்க முடியவில்லை. எங்களுக்கு உணர்வு இருக்கின்ற காரணத்தால் தமிழனாகப் பிறந்த காரணத்தால் அப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கிறது.

காட்டிலே பாம்பு கடிக்கிறது


தாக்குதலிலிருந்து தப்பிக்கக் காட்டுக்குள் போகிறார்கள். அங்கு பாம்புகள் கடிக்கின்றன. விஷம் தாங்க முடியவில்லை. உயிரோடு மடிகிறார்கள் என்கிற செய்தி இரண்டு நாட்களுக்கு முன்பு வந்திருக்கிறது.

சிங்களவர்களுடைய விஷத்தைவிட பரவாயில்லை


ஆனால், எம் மக்கள் கருதிவிட்டார்கள் - சிங்களவர்களுடைய விஷத்தை விட பாம்பின் விஷம் பரவாயில்லை என்ற கருத்தில்தான் அவர்கள் எதையும் தாங்கத் துணிந்துவிட்டார்கள். அந்த அளவுக்கு ஒரு கொடுமையான சூழ்நிலை ஏற்பட்டிருக் கின்றது. அரசியல் தீர்வு என்று வருகின்ற பொழுது அந்த அரசியல் தீர்வு நெருங்குகிற நேரத்திலே ஆகா, அவர்கள் டெரரிஸ்ட் - பயங்கரவாதிகள். அந்தப் பயங்கரவாதிகளுக்காக இவர்கள் ஆதரவளிப்பதா? மொழி வெறியைத் தூண்டிவிடுவதா? என்று கேட்கின்றார்கள்.

கைகளைக் காட்டி அலைகளை நிறுத்த முடியாது

இன்றைக்குத் தமிழ்நாட்டிலே ஏற்பட்டிருக்கின்ற எரிமலை போன்ற உணர்ச்சியிருக்கின்றதே, அந்த உணர்ச்சியை நீங்கள் கையைக் காட்டி அலைகளை நிறுத்திவிடலாம் என்று நினைக் கின்ற நவீன கான்யூட் மன்னர்களாக நீங்கள் மாறலாம் என்று நினைக் கின்றீர்கள். இப்பொழுது வந்திருப்பது வெறும் கடல் அலையின் சீற்றமல்ல. தமிழர்களின் உணர்ச்சி எழுச்சி.
அடுத்து சுனாமி போன்ற அலையாக மாறும்!

அடுத்தக் கட்டத்தில் நாளைக்கு நீங்கள் காணப்போகின் றீர்கள். இது ஒரு சுனாமி போன்ற அலையாக இருக்கும் (கைதட்டல்). இப்பொழுதே உங்கள் இடத்தைப் பத்திரப்படுத்தி வையுங்கள் (கைதட்டல்). எனவே எதைவேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைக்காதீர்கள். பதில் தெரியவில்லை யென்றால் கேளுங்கள். நாங்கள் தீவிரவாதத்திற்கு ஆதரவானவர்கள் அல்ல. தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

தீவிரவாதத்திற்கு மூலம் - மதம்

தீவிரவாதத்திற்கு மூலாதாரம் எங்கே இருக்கிறது? மதம். அந்த மதத்தின் அடிப்படையிலேயே பெயரை வைத்து பத்திரிகை நடத்திக் கொண்டு அதிலேயே நீ தீவிரவாதத்தைப் பற்றிப் பேசுகிறாய் என்றால், இன்றைக்கு இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு மூலகாரணம் இந்துத் தீவிரவாதம்தானே (கைதட்டல்).

பாபர் மசூதியை இடித்ததன் விளைவு

நீ பாபர் மசூதி இடிக்காவிட்டால் அமெரிக்காவில் இரட் டைக் கோபுரம் இடிந்திருக்குமா? அந்தப் பிரச்சினைக்கு நாம் போனால் வேறு இடத்திற்கு நகர்ந்துவிடுவோம்.
ஆனால், தீவிரவாதம் என்று சொல்லுகின்ற நேரத்திலே எது தீவிரவாதம்? எல்லோரையும் தீவிரவாதிகள் என்று சொல்லு கின்றார்கள்! நோபல் பரிசு பெற்றிருக்கின்றாரே அந்த நெல்சன் மண்டேலா - சமீப காலம்வரையிலே அமெரிக்காவின் பட்டி யலிலே டெரரிஸ்ட்டு பட்டியலிலேதான் வைக்கப்பட்டிருக் கின்றார். என்னுடைய பெயர் அதிலே இருக்கிறது என்று சொல்கின்றார்.

எனவே நெல்சன் மாண்டேலாவே தீவிரவாதியாகப் பலருக்குத் தெரிந்திருந்தால் அப்புறம் உரிமை கேட்கிறவர்களுக்குக் கெல்லாம் அந்தப் பெயர் என்று சொன்னால் அந்தப் பெயருக்கு ஏற்ப உள்ளபடியே நாம் எல்லோரும் மாறுவதைத் தவிர, வேறு வழி கிடையாது (பலத்த கைதட்டல்).

ஆயுதம் ஏந்துவதில் நம்பிக்கை இல்லை


நமக்கு ஆயுதம் ஏந்துவதிலே நம்பிக்கை இல்லை (கைதட்டல்). அறிவாயுதத்திலே எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. உணர்ச்சியிலே நம்பிக்கையிருக்கிறது (கைதட்டல்). ஒற்றுமையிலே நம்பிக்கை இருக்கிறது.

மண்ணின் ஒருமைப்பாட்டைவிட
மக்களின் ஒருமைப்பாடு முக்கியம்


மண்ணின் ஒருமைப்பாட்டைவிட, மக்களின் ஒருமைப் பாட்டைபற்றி நாம் நினைக்கக் கூடியவர்களாக இருக்கின்றோம். காஷ்மீரிலே எல்லை தாண்டிய பயங்கரவாதம் அடிக்கடி நிகழவில்லையா? அதற்காக நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங்கோ அல்லது வெளியுறவுத்தறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியோ அல்லது இராணுவ அமைச்சராக இருக்கின்ற ஏ.கே. அந் தோணி அவர்களோ அல்லது அமைச்சரவையினரோ கூடி முடி வெடுத்து காஷ்மீரிலே குண்டு மழை பொழியலாம் என்று எங்காவது முடிவெடுத்து குண்டுமழை பொழிந்தார்களா?

பனி லிங்கத்திற்காக எவ்வளவு பெரிய போராட்டம்?

காஷ்மீரிலே மதவாதிகள் திட்டமிட்ட செயல். அங்கு உருகக் கூடிய பனி லிங்கம் - அது பனிகாலத்திலே லிங்கமாகும். பிறகு அந்த லிங்கம் உருகும். இதை வைத்து எவ்வளவு பெரிய போராட்டம் நடத்தினார்கள் - காஷ்மீரிலே. அதை வைத்து ஜம்முவிலே இருக்கக் கூடிய பண் டிதர்கள் - பார்ப்பனர்கள் - அய்யோ, காஷ்மீரத்திலே இருக்கக் கூடிய பண்டிதர்களின் கதி என்ன? என்று கேட்கிறார்கள். நீ ஆடாவிட்டாலும் உன் சதை ஆடுகிறதே...!

நீ ஆடாவிட்டாலும் உன் சதை ஆடுகிறதே (கைதட்டல்). உனக்கே அவ்வளவு உணர்வு இருந்தால் காலம் காலமாக இந்த மண்ணுக்குரிய தமிழர்களுக்கு எங்களுக்கு இந்த உணர்வு இருக்காதா? (கைதட்டல்).

காஷ்மீருக்கு ஒரு நீதி? கன்னியாகுமரிக்கு ஒரு நீதியா?

காஷ்மீருக்கு ஒரு நீதி, கன்னியாகுமரிக்கு ஒரு நீதியா? கேட்க மாட்டோமா? கேட்கக் கூடிய கட்டத்திற்குத் தமிழர்கள் வந்தி ருக்கிறார்கள். இப்பொழுது கேட்காவிட்டால் பின் எப்பொழு தும் தமிழர்களால் கேட்கமுடியாது (கைதட்டல்). இதுதான் அருமையான தருணம்.
சொந்த நாட்டின்மீது குண்டு வீசுகிறார்கள்

எந்த நாட்டில் தீவிரவாதம் என்ற பெயரில் சொந்த நாட் டின்மீதே குண்டு போடுவான்? நீயே அந்நியப்படுத்தி விட்டாயே? அரசியல் தீர்வு வேண்டும் என்று சொல்லுகின்ற மத்திய அரசின் காதுகள் இங்கே இருக்கின்றன. என்னுடைய பேச்சுகள் எல்லாம் மத்திய அரசுக்கு போகின்றன.
மத்திய அரசே! இன்றைக்கு இருக்கின்ற அய்க்கிய முற் போக்குக் கூட்டணி அரசே, உங்கள்மீதுதான் என்னுடைய கடைசி நம்பிக்கை இருக்கிறது.

கடைசி நம்பிக்கையைத் தகர்த்து விடாதீர்கள்

தயவு செய்து அந்த கடைசி நம்பிக்கையைத் தகர்த்து விடாதீர்கள். நீங்கள் ஓரளவுக்குத் தமிழ்நாட்டினுடைய உணர்வு களைப் புரிந்து கொண்டு செயல்பட ஆம்பித்திருக்கிறீர்கள். அதற்காக எங்களுடைய அச்சார நன்றியை முதலிலே தெரி வித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன். நம்பிக்கையோடு இருக்கின்றோம். ஏனென்றால் கலைஞர் நம்பினால் அந்த நம்பிக்கை வீண் போகாது

கலைஞருக்கு விடியல் தெரிந்தால், அந்த வெளிச்சம் தாராளமாக எல்லோருக்கும் தெரியும். காரணம், சூரியனையே அவர் சின்னமாகக் கொண்டிருக்கின்றவர். அவருக்கு வெளிச்சம் எப்படி எப்பொழுது கிளம்புகிறது என்பது தெளிவாகத் தெரியும்.

இந்திராகாந்தியே இனப்படுகொலை என்று சொன்னாரே

எப்படி குண்டு போடுகிறார்கள்? அதுவும் சாதாரண குண்டு அல்ல. அங்கே நடைபெறுவது இனப்படுகொலை. இந்திரா காந்தி அவர்கள் சொல்லவில்லையா? அங்கே நடைபெறுவது (Genocide) இனப்படுகொலை என்று. ராஜீவ்காந்தி அவர்கள் சொல்ல வில்லையா?
அதற்கு முன்னாலே இன ஒதுக்கல் நடைபெற்றது. இன ஒழிப்பு இப்பொழுது நடந்துகொண்டிருக்கின்றது.

தமிழ் ஈழம் கேட்க வேண்டிய நிர்ப்பந்தம் என்ன?

அவர்கள் தமிழ் ஈழம் என்று கேட்கவேண்டிய நிர்பந்தம் என்ன? ஈழத் தமிழர்கள் எல்லாவிதக் கொடுமைகளையும் அனுபவித்துவிட்டுத்தான். இந்த நிலைக்கு அவர்கள் வந்தார்கள், துரத்தப்பட்டார்கள். இந்த எல்லைக்குத் தள்ளப்பட்டார்கள். அவர்களை இப்படி நெருக்கிய காரணத்தால்தான் இப்பொழுது அவர்கள் வேறு நிலையான சூழ்நிலைக்கு ஆளாகியிருக் கின்றார்கள்.


----------------------------- "விடுதலை" 25-10-2008


நெல்சன் மண்டேலாவுக்காக, பாலஸ்தீனத்திற்காக குரல் கொடுக்கிற இந்திய அரசு - தமிழினம் அழிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதா?
சென்னை பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உணர்ச்சிகரப் பேச்சு


சென்னை, அக்.26- நெல்சன் மண்டேலாவுக்காகக் குரல் கொடுக்கின்ற அரசு, பாலஸ்தீனத்திற்காக குரல் கொடுக்கின்ற இந்திய அரசு தமிழக மக்களின் வாழ்வுரிமையைப்பற்றிக் கவலைப்படவில்லையே, தமிழர்கள் செத்து மடிவதைப் பற்றிக் கவலைப்படவில்லையே என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பி விளக்கவுரையாற்றினார்.

திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் - பற்றி எரிகிறதே ஈழம் எனும் தலைப்பில் அக். 20 அன்று மாலை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

பயங்கரவாதத்தைத் தடுக்க வேண்டும் என்றால்

எனவே பயங்கரவாதத்தைத் தடுக்க வேண்டும் என்று சொன்னால் அந்த பயங்கரவாதிகளுக்கு மக்கள் ஆதரவளிப் பார்களா? அவர்களால் எப்படி சமாளிக்க முடிகிறது? உள்ளூர் மக்கள் ஆதரவு இல்லாவிட்டால் யாராவது இவ்வளவு காலத்திற்குப் போரை நடத்த முடியுமா? நாக்கிலே நரம்பு இல்லாமல், நெஞ்சிலே நேர்மையில்லாமல் பேசுகிறார்களே.

நீங்கள் பயன்படுத்திய கேடயங்கள்

மனிதர்களைக் கேடயங்களாகப் புலிகள் பயன்படுத்து கின்றார்களாம். புலிகளுக்குக் கேடயம் எது என்பது உனக்குத் தெரியுமா? (கைதட்டல்). அதே நேரத்தில் நீங்கள் எதை எதை யெல்லாம் கேடயமாகப் பயன்படுத்தினீர்கள் என்ற வரலாற்றை நாங்கள் மேடை தோறும் சொல்ல ஆரம்பித்தால் நீங்கள் இந்த நாட்டில் வாழ முடியுமா? (கைதட்டல்) தயவு செய்து எண்ணிப் பாருங்கள்.

எங்கள் தரத்திற்கு அது உகந்தது அல்ல

உங்கள் கேடயங்கள் வெளிச்சத்திற்கு வராதவைகள் (கை தட்டல்). உங்கள் கேடயங்கள் வேறு வகையானவைகள். அது எங்கள் தரத்திற்கு சொல்லக் கூடியதும் அல்ல. எனவே அதை நாங்கள் சொல்லவும் மாட்டோம். (கைதட்டல்).

அந்த அடிப்படையிலே தெளிவாக எண்ணிப் பார்க்க வேண்டாமா? எவ்வளவுதான் நாங்கள் பொறுமை காப்பது? எவ்வளவுதான் நாங்கள் எங்கள் இனத்தைக் காப்பது?
நெல்சன் மண்டேலாவுக்கு நாம் ஆதரவு கொடுக்கவில்லையா? இனத்தை மறந்துவிடுங்கள். மனிதநேயம் சுயமரியாதை இயக்கம் என்றாலே மனிதநேயம் இயக்கம். பகுத்தறி வாளர்கள் என்றாலே மனிதநேயம் கொண்டவர்கள்.நெல்சன் மண்டேலா வுக்கு நாம் ஆதரவு கொடுக்கவில்லையா? நம்முடைய ஆதரவு எவ்வளவு தூரம் பயன்பட்டது என்பது வேறு செய்தி.

பாலஸ்தீனத்திற்கு குரல் கொடுக்கவில்லையா?

மனித நேயத்திற்காக இங்கிருந்து குரல் கொடுக்கவில்லையா? அதே போல பாலஸ்தீனத்திற்காக இங்கிருந்து குரல் கொடுக்கவில்லையா? உலகத்தில் எங்கே அநீதிகள் நடந்தாலும், அநீதிகள் கூடாது என்பதற்கு குரல் கிளம்பவில்லையா? அப்படிப் பார்க்கிற நேரத்தில்தான் நண்பர்களே தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்னவென்று சொன்னால், தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற பெயராலே, தமிழர்களை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதைத்தான் நாம் இப்பொழுது அடையாளம் காண வேண்டும்.
தீவிரவாதிகளை ஒழிக்க வேண்டுமானால்...!

தீவிரவாதிகளை ஒழிக்க வேண்டுமானால், நீ தீவிரவாதிகளோடு சண்டை போடு. முடிந்தால் வெற்றி பெற்றுப் போ. அது உனக்கும், அவர்களுக்கும் இருக்கின்ற பிரச்சினை.
ஆனால் தமிழர்களை ஏன் ஓட ஓட விரட்டுகிறாய். அப்பாவித் தமிழ் மக்களை ஏன் கொல்லுகிறாய்?

குண்டுமழை பொழிந்து அழிக்கிறார்கள்


குண்டுமழை பொழிந்து தமிழர்களை அழிக்கிறாய். உணவு அனுப்பாதே. பொருள்களை அனுப்பாதே என்று சாலைகளை மூடி - தமிழ் மக்களை சிங்கள இனவெறி பட்டினியால் கொல்லுகிறது. அங்கே மின்சாரம் இல்லை. மழையில், காடுகளில் சதுப்பு நிலங்களில் சிக்கிப் பட்டினியால் எம் தமிழர்கள் சாகின்றார்கள்.

இரண்டு இலட்சத்து முப்பதாயிரம் தமிழர்கள் காட்டிலே இருக்கிறார்கள் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் தலையங்கத்திலே வந்திருக்கிறது.

அவ்வளவு கொடுமையான சூழ்நிலை அங்கே நிலை கொண்டிருக்கின்றது. இதற்கு ஒரு பரிகாரம் தேட வேண்டாமா? என்று துடித்துக் கிளம்புகிற நேரத்திலே அதுவும் காலம் தாழ்ந்து துடித்துக் கிளம்புகிற நேரத்திலேகூட இன்றைக்கு இங்கே இருக்கிறவர்கள் என்ன பேசுகிறார்கள்?
கொச்சைத்தனமான பேச்சல்லவா?

திசை திருப்புகிறார் கலைஞர் - மின்வெட்டுக்காக இந்த ஈழப் பிரச்சினையை நடத்துகிறார் என்று எவ்வளவு கொச்சைத் தனமாக பேசுகிறார்கள்.

இப்படிப் பேசுகிறவர்களை வரலாறு மன்னிக்குமா? தமிழர் கள்தான் மன்னிப்பார்களா? ஏதோ இன்றைக்குக் கொஞ்சம் போதையில் இருக்கின்றார்கள். மயக்கத்தில் இருக்கின்றார்கள் என்று கருதாதீர்கள். போதையிலே இருப்பவன் என்றைக்குமே போதையிலே இருப்பானா? (கைதட்டல்).

பொழுது விடிந்தால் போதை தீரும். பொழுது விடிந்தால் விடியல் ஏற்படும். எனவே இதே போன்ற நிலை எப்பொழுதும் தமிழர்களுக்கு இருக்கும் என்று நினைக்காதீர்கள். அவனை உலுக்குகின்ற கரங்கள்தான் இங்கே இருக்கின்ற கரங்கள். ஆயிரம் ஆயிரம் கரங்கள். அந்த கரங்கள்தான் கைகோத்து நிற்கக் கூடிய கரங்கள். அதை மறந்து விடாதீர்கள்.

தமிழர்களே இனஉணர்வோடு இருங்கள்


எனவே தமிழர்களே! தமிழர்களே இன உணர்வுவோடு இருங்கள். இங்கே பேசிய சுப. வீரபாண்டியன் அவர்கள் தெளிவாகச் சொன்னார், தமிழன் என்று உன்னைக் காட்டுவதற்கு ஒரே ஒரு வாய்ப்பு. கடைசி வாய்ப்பு. அந்த வாய்ப்பை தமிழனாக இருக்கின்ற நீங்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இப்பொழுது இல்லாவிட்டால் பின் எப்பொழுது? Now or Never இதுதான் மிக முக்கியமான கேள்வி.

அந்த உணர்வுகள் வர வேண்டாமா? எனவேதான் அடுத்த கட்டத்தைப் பார்க்க வேண்டும்.
மனிதாபிமானம் வேண்டாமா?

உலக ரீதியாக மனிதாபிமானம் காட்ட வேண்டிய பிரச்சினை. மனிதாபிமான உரிமையுடன் நடந்து கொள்ள வேண்டிய பிரச்சினை. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள்தானே இருக் கின்றன அதனால் எம்.பி.க்கள் பதவி விலகுவது கண்துடைப்பு நாடகம் என்று பேசுகிறார்கள். ஏனப்பா இப்படி பேசுகிறாயே இதைவிடக் கேவலம் வேறு ஏதாவது உண்டா?

மானங்கெட்ட பிழைப்பு வேறு இருக்க முடியுமா?

இதைவிட மானங்கெட்ட பிழைப்பு வேறு ஏதாவது இருக்க முடியுமா? தயவு செய்து நினைத்துப் பார்க்க வேண் டாமா?அன்றைக்கு அனைத்துக் கட்சிகளையும் கேட்டு முடி வெடுத்து, கொஞ்சம்கூட பின் வாங்காமல், ஒரு முடிவை எடுத்திருக்கிறார். அதற்கு என்ன பொருள்? உடனே இன்னும் சில பேர். மைனாரிட்டி அரசு உடனே ராஜினாமா செய்து விட வேண்டும். உடனே தேர்தல் வையுங்கள். தேர்தல் ஆணையம் தயாராக இருக்க வேண்டுமென்று சொல்லுகின்றார்கள். நம்முடைய நாட்டிலே பழமொழியாகச் சொல்லுகின்றார்கள்.

அண்ணன் எப்பொழுது சாவான்?


அண்ணன் எப்பொழுது சாவான்; திண்ணை எப்பொழுது காலியாகும் என்று சில பேர் நினைக்கிறார்கள். தம்பி, அண்ணனும் சாக மாட்டான். திண்ணையும் காலியாகாது. (கைதட்டல்). அதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் (கைதட்டல்). அதன் காரணமாகத்தான் தந்தை பெரியார் நீண்ட காலத்திற்கு முன்னாலே சொன்னார். திண்ணை வைத்து வீட்டைக் கட்டாதே, அது சோம்பேறிகளுக்கானது என்று தெளிவாக தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள் (கைதட்டல்). இப்பொழுது எந்த வீட்டிலும் திண்ணை வைத்துக் கட்டுவதில்லை. எனவே நம்முடைய உணர்வுகள் திண்ணமாக இருக்கின்றன. தெளிவாக இருக்கின்றன. நம்முடைய இலட்சியம்.

அதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவேதான் தமிழர்கள் இந்தப் பிரச்சினையிலே மிகத் தெளிவாக - உண்மைகளை எண்ணிப் பார்க்க வேண்டும்.

என்ன இறையாண்மை?

இறையாண்மை, இறையாண்மை என்று சொல்லுகின் றார்கள். எங்களுக்கெல்லாம் இறையாண்மை என்பது தெரி யாதா? ஏனென்றால் நாங்கள் அரசியல் சட்டம் படிக்க வில்லையா? நாங்கள் அரசியல் சட்டத்தையே கற்காத தற்குறிகள் அல்லவா? மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுக்கள் எல்லாம் மிகப் பெரிய மேதைகள் அல்லவா? இறையாண்மை என்ன ஆவது? என்னய்யா இறையாண்மை? ஒருத்தருடைய இறையாண்மை என்ன?

இன்னொரு நாட்டில் தலையிடலாமா?


இன்னொரு நாட்டிலே இவர்கள் தலையிடலாமா? என்று கேட்கிறார்கள். சாதாரணமாக எளிய மக்களாக இருக்கிற வர்களுக்குக் கூடத் தெரியும். கொச்சை வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் - சில முண்டங்களுக்குக் கூடப் புரிகிற மாதிரி என்று சொல்லுவார்கள். முண்டம் என்றால் தலையில்லாதவன் என்று அர்த்தம்? அது தவறான சொல் அல்ல! கோபத்தோடு சொன்னாலே அதில் பொருள் வருகிறது. தலையில்லை என்பது அர்த்தம்.

அண்ணா சொன்ன உதாரணம்

பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார். கணவன், மனைவி இரண்டு பேர் இருக்கிறார்கள். அந்த வீட்டிற்குப் பக்கத்திலே பக்கத்துப் பக்கத்து வீடு இருக்கிறது.

கணவன், மனைவி மகிழ்ச்சியாக வாழும் பொழுது அதில் தலையிடுவதில் நமக்கு உரிமை இல்லை. அகம் நடக்கட்டும். அது அகத்துப் பிரச்சினை. அண்ணா அவர்கள் அடுத்து ஒரு உதா ரணம் சொன்னார். சரி அவர்கள் விசயத்தில் தலையிட மாட்டேன். அவர்கள் வீட்டில் என்ன சாப்பாடு செய்ய வேண்டும்? என்னக் குழம்பு வைக்க வேண்டும் என்று அவர்களுக்குள் சண்டை வந்தால் அது அவர்களுடைய பிரச்சினை. அதே நேரத்திலே மனைவியின் கழுத்தை கணவன் நெரித்தால் அய்யோ கொல்லுகிறானே! கொல்லுகிறானே! என்று சத்தம் போட்டால், அதைக் கேட்டுக் கொண்டு பக்கத்து வீட்டுக்காரன் எனக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை என்று சொன்னால் சும்மா இருக்க முடியுமா? எனவே தொலைந்திருப்பது மனிதாபிமானம். இதை அண்ணா அவர்கள் அந்தக் காலத்திலே சொன்னார்கள். எல்லை இருக்கிறது. இதையும் தாண்டி நமக்குள்ளே இருக்கிற உறவை மறந்து விடக் கூடாது. எனவே இறையாண்மை இறையாண்மை என்று பேசுவது இருக்கிறதே அது தெளிவில்லாத ஒரு நிலை.

சிங்கள வெறித்தனம் உச்சக்கட்டத்தில்

நம்முடைய இறையாண்மைக்கே கேள்விக்குறி சிங்கள வெறித்தனம் உச்ச கட்டத்திற்குப் போகுமேயானால், ஆபத்து ஏற்படுகிறது. ஒன்றுமில்லை இன்று காலையிலே வந்திருக்கின்ற ஒரு செய்தி. முழுக்க, முழுக்க தினமணி ஏட்டைப் பற்றிச் சொன் னார்கள் அல்லவா? அதே தினமணி ஏட்டிலே வந்திருக்கின்ற ஒரு செய்தி. இலங்கைப் பிரச்சினையில், இந்தியா தலையிட வேண்டும். இலங்கைத் தமிழர்களின் கோரிக்கை இப்படி ஒரு நிலை. அதாவது இலங்கைத் தமிழ் எம்பிக்களின் கோரிக்கை என்று எழுதியிருக்கின்றார்கள். தினமணி, டைம்ஸ் ஆஃப் இந்தியா இவைகள் எல்லாம் முழுக்க முழுக்க தமிழர்களுடைய உணர்வுகளுக்கு எதிரான பத்திரிகைகள்தான்.

இங்கே இவ்வளவு பிரச்சினைகளைப்பற்றிப் பேசுகிறோம். ஒரு செய்தி வருமா என்றால் மற்ற பத்திரிகைகளில் ஒரு செய்திகூட வராது.ஊடகங்களை நம்பி நாங்கள் இல்லை. நாங்கள் தினந்தோறும் மக்களை சந்தித்துக் கொண்டிருக் கின்றவர்கள். அண்ணா அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்னாலே இந்து பத்திரிகையைப் பற்றிச் சொன்னார்கள்.

அண்ணாதுரையும் பேசினார்

கூட்டத்திற்கு எங்கேயாவது செய்தியாளர்கள் வருவார்கள். கூட்டத்தில் பன்றி ஓடினால் - மாடு குறுக்கே ஓடினால் அதை பெரிதுபடுத்திப் போடுவார்கள். அல்லது கல் விழாதா என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். கல் விழுந்தால் கூட்டத்தில் கல் விழுந்தது என்று செய்தி போடுவார்கள்.

அதுவும் போடவில்லை என்று சொன்னால் Annadurai also spoke என்று போடுவார்கள். அதாவது அண்ணாதுரையும் பேசினார் என்று போடுவார்கள் என்று சொல்லிவிட்டு, அண்ணா அவருக்கே உரிய நகைசுவையான ஒரு செய்தியைச் சொன்னார்.

ஏன் அண்ணாதுரை ஆல்சோ ஸ்போக் என்று போடுகிறார்கள் என்று சொன்னால் - எங்கே அண்ணாதுரை பாடினார் என்று நினைத்துக் கொள்வார்களோ என்பதற்காக - பேசினார் என்று போடுவார்கள் என்று வேடிக்கையாகச் சொன்னார்.

அரசியல் தீர்வுக்கு ராஜபக்சே அரசு வருமா?

அதுபோல இன்று காலை வந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் ஒரு செய்தி.
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்படுகிறார்கள் என்று வைத்துக் கொண்டால் தோற்கடிக்கப்பட்ட பிற்பாடு அரசியல் தீர்வுக்கு ராஜபக்சே அரசு வருமா? என்றால் அது உறுதி இல்லை. சந்தேகப்படுகிறார்கள் தமிழர்கள் என்று இவர்களே எழுதக் கூடிய அளவுக்கு வந்திருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு அதில் அக்கறை இருக்கிறதா? நம்பிக்கை இருக்கிறதா?
எனவேதான் மத்திய அரசு இதில் தெளிவாக உறுதியாக இருக்க வேண்டும். அரசியல் தீர்வை நீங்கள் காணுங்கள். உடனடியாக போர் நிறுத்தம் செய்யுங்கள்.

அய்.நா. அதிகாரிகள் திரும்பி விட்டார்கள்

தமிழர்களுக்கு உணவு போவதில்லை. தமிழர்களுக்கு உணவு கொண்டு போன அய்.நா. அதிகாரிகள்கூட, அங்கே குண்டுச் சத்தம், வேட்டுச் சத்தம் இருக்கிற காரணத்தால் திரும்பி விட்டார்கள் என்ற செய்தியும் குறுக்கே ஊடாலே நடுவிலே இருக்கிறது. ஆகவேதான் மனிதநேய அடிப்படையிலே நம் முடைய கோரிக்கைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவை களுக்கு நல்ல அளவுக்கு அழுத்தத்திற்குப் பலன் ஏற்பட்டி ருக்கிறது. மத்திய அரசோ இப்போது கேளாக்காதாக இல்லை. மாறாக அவர்கள் வற்புறுத்த வேண்டியவர்களை அழைத்து அவர்கள் வற்புறுத்துகின்றார்கள்.

கின்னஸில் இடம் பெறும்


என்னதான் நீங்கள் பேசினாலும், நடக்க வேண்டியவைகள் நடக்கும் என்று சொல்லக் கூடிய அளவுக்கு அழுத்தங்கள் தரப்பட வேண்டிய நிலையிலே இருக்கிறது. எனவே நல்ல முடிவுகளை நம்பிக்கையோடு நாம் எதிர்பார்க்க வேண்டிய கட்டத்திலே இருக்கின்றோம்.
எனவே தமிழர்களே உறுதியாக நில்லுங்கள். உணர்வோடு நில்லுங்கள். ஒற்றுமையோடு நில்லுங்கள். மனிதச் சங்கிலியில் பங்கேற்கிறவர்களுக்கு கட்சி இல்லை; ஜாதி இல்லை; மதம் இல்லை. இதுவரை உலக வரலாற்றிலே கின்னஸ் புத்தகத்திலே இடம் பெறக் கூடிய அளவுக்கு இந்த சங்கற்பச் சங்கிலி இருந்தது என்பதற்காக வாருங்கள், வாருங்கள் என்று கேட்டு வணக்கம் கூறி முடிக்கிறேன். (பலத்த கைதட்டல்).

இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

---------------- “விடுதலை” 26-10-2008