Search This Blog

31.3.15

பார்ப்பனர் உணர்வில் இராமமூர்த்தி முதல் இராம கோபாலன் - பாண்டே வரை

பார்ப்பனர் உணர்வில்
இராமமூர்த்தி முதல் - பாண்டே  -  இராம. கோபாலன் வரை
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்!


பார்ப்பானையும் பாம்பையும் கண்டால்
முதலில் பார்ப்பானைக் கொல்லு


என்பது வடநாட்டு இந்தி  பழமொழி; இதனை (1944) இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்த பிரிட்டிஷ் பத்திரி கையாளர் பீவர்லி நிக்கலஸ் என்ற எழுத்தர் எழுதிய இந்தியாவைப் பற்றிய தீர்ப்பு ‘Verdict of India’ 1944 பதிப்பு பக்கம் 32) எனும் நூல் எடுத்துக்காட்டியுள்ளது.


இதோ அதே பகுதி:


The Brahmins, inspite of their lofty position, have not attracted much love to themselves in the long history of India. And ancient saying, still current, is ‘if you meet a snake and a Brahmin kill the Brahmin’. Perhaps this is due to the preposterous nature of their claims. For example, Manu, make of laws, ruled that to accuse a Brahmin of a crime was sinful even if the Brahmin was guilty.”
(பார்ப்பனர்கள் தங்களை எப்போதும் உயர்ந்தவர் களாக பாவித்து கொண்டனர். இந்திய வரலாற்றை பார்க்கும் பொழுது அவர்கள் எந்த ஒரு காலகட்டத்திலும் பார்ப்பனர்களைத் தாண்டி பிற மக்கள் மீது அன்பு கொண்டதாக சரித்திரம் இல்லை. இதனால் தான் தொன்றுதொட்டு ஒரு முதுமொழி உண்டு பார்ப்பானையும், பாம்பையும் கண்டால், முதலில் பார்ப்பானைக் கொல்லு என்று கூறுவார்கள்.


இந்த முதுமொழி பார்ப்பனர்கள் மூடத்தனத்தை ஊராரிடம் திணித்து, தனது வயிறு வளர்ப்பை கொள்கையாக கொண்டதால் ஏற்பட்டது ஆகும். மனு தர்மத்தில் பார்ப்பனர் தவறு செய்திருந்தாலும் அது தவறாக கருதப்படக்கூடாது என்றும், எந்த ஒரு பார்ப்பனரையும் குற்றவாளி என்று குற்றம் சுமத்துவது பாவகரமானது என்றும் எழுதி வைக்கப்பட்டது. அதாவது பார்ப்பான் எந்த குற்றத்தைச் செய்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று பீவர்லி நிக்கலஸ் எழுதிய நூலில் கூறப்பட்டுள்ளது)  தந்தி டி.வி.  செய்தியாளர் பெரியார் சொன்னார் என்று திரிபுவாதமாகக் கூறியதோடு அறிவு நாணயம் சற்றுமின்றி பார்ப்பனரைக் கொல்லச் சொன்னார் பெரியார் என்பதற்கு ஆதாரத்தைக் காட்ட முடியாமல் பார்ப்பனரை விரட்டச் சொன்னார் என்று எடுத்துக் காட்டியது. (Misquote)

மகா மகா வெட்கக்கேடல்லவா?


இவருக்கு முன் இதேபோல கம்யூனிஸ்ட் தலைவர் பி. இராமமூர்த்தி எழுதிய திராவிட மாயை நூலுக்குப் பதில் பேசி, எழுதிய ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அதே விளக்கத்தை - மறுப்பை 1985லேயே பதிய வைத்தார்.  (விடுதலைப் போரும், திராவிடர் இயக்கமும் - உண்மை வரலாறு) நூலில் 214-215 பக்கங்களில் கூறியுள்ளது கீழே தரப்படுகிறது!


திரு. ராமமூர்த்தி எழுதுகிறார்:


பிற்காலத்தில் பெரியார் பிராமணர் எதிர்ப்பிலும் இறங்கி யிருக்கின்றார். இந்த எதிர்ப்பு, பாம்பையும் பார்ப்பானையும் கண்டால், பாம்பை விட்டு விடு; பார்ப்பானை அடி என்று அவர் பேசும்  அளவுக்குப் போயிற்று என்கிறார் ராமமூர்த்தி.


இது ஒரு வடநாட்டுப் பழமொழி. தந்தை பெரியார் இதை என்றைக்குமே பயன்படுத்தியதில்லை. எந்த இடத்தில் பாம்பையும் பார்ப்பானையும் கண்டால், பாம்பை விட்டு விட்டுப் பார்ப்பானை அடி என்று பெரியார் சொல்லியிருந்தார்?


ஆதாரம் காட்ட வேண்டாமா?


அப்படி அவர் சொல்லியிருந்தால், இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஒரு பார்ப்பான்கூட மிஞ்சியிருக்க மாட்டானே! தந்தை பெரியார் பயந்து கொண்டு சொல்லாமலிருக்க வில்லை; அதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதை நாங்கள் சொல்லவில்லை. நீதிபதி சொல்கிறார். தந்தை பெரியாரைத் தண்டித்த நீதிபதி குத்து - வெட்டு வழக்கில் தீர்ப்பில் சொல்லும்போது, இப்போது குற்றமில்லையென்று சொன்னாலும், பெரியாரிடம் அவருடைய சொல்லை வேத வாக்காகக் கொண்டிருக்கக் கூடிய மிகப் பெரிய கட்டுப்பாடான லட்சக்கணக்கான தொண்டர்கள் நாட்டிலே இருக்கிறார்கள். அவர்கள் எப்படிப் புரிந்து கொள்கிறார்கள் என்பது சந்தேகம். எனவே, அவர்கள் உடனே நாளைக்கே ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது என்று தமது தீர்ப்பில் எழுதியிருக்கிறார்.


இங்கே 153-ஆம் பக்கத்தில் பாம்பையும் பார்ப் பானையும் கண்டால், பாம்பை விட்டு விட்டுப் பார்ப்பானை அடி என்று பெரியார் பேசுகிற அளவுக்குப் போயிற்று என்று எழுதுகிற இதே தோழர் பி.ராமமூர்த்தி, இன்னோர் இடத்தில் சொல்லும்போது, பெரியார் தனிப்பட்ட முறையில் வெறுப்பைக் காட்டியதே கிடையாது. ரொம்பவும் பொறுப்புணர்ச்சியோடு இருந்தார் என்றும் கூறுகின்றார்.


154ஆம் பக்கத்தில் என்ன சொல்லுகின்றார் என்பதைப் பாருங்கள். ஈ.வெ.ரா. பெரியாருக்கு அந்தக் காலத்தில் சாதிப் பாகுபாடுகளையும், வருணா சிரமத்தையும், அதில் பிராமணன் மற்றெல்லாரையும் விடப் பிறப்பால் மேலோன் என்றுள்ள பார்ப்பனீயத்தின் மேல்தான் கடுங்கோபமும் ஆவேசமுமே தவிர, தனிப்பட்ட எந்தப் பிராமணனிடமும் பகைமையோ துவேஷமோ இருந்த தாகச் சொல்ல முடியாது என்கிறார் பி. இராமமூர்த்தி.
யாருக்காகவோ வாதாட ஹிந்துத்துவத்தின் புதிய ஏஜெண்டுகள் பெரியாரைக் கொச்சைப்படுத்த நினைத்து முகத்தில் சேறு பூசிக் கொள்ள வேண்டாம்!


தமிழர் நடத்தும் தந்தி டி.வி.க்கு பார்ப்பான் சம்பாதித்து தரும் நற்பெயரா இது!?
ஊடக நெறிக்கே முறைகேடாக நடக்கலாமா? விரட்டுவதும் அடிப்பதும் கொல்லுவதும்கூட ஒரே பொருள்தானா? வெள்ளையனை விரட்டுவோம் என்றார் காந்தியார்; அதற்குக்  கொல்லுங்கள் என்று பொருள் கூறலாமா?
அத்தோடு நின்றதா தந்தி டிவி? இந்து முன்னணி தலைவர் இராம. கோபாலனிடம் பேட்டி கண்டு ஒளிபரப்பியுள்ளதே!


இராம. கோபாலன் பேட்டி


பார்ப்பனனையும் பாம்பையும் கண்டால், பார்ப் பனனை அடி, பாம்பை விட்டு விடு என்று பெரியார் எழுதியிருக்கிறார். நான் இளைஞனாக இருந்தேன்.  அப்போது நான் அதை படித்திருக்கிறேன். மானமுள்ள வராக இருந்தால் வீரமணி பதவி விலக வேண்டும்; அவர் விலக மாட்டார் என்பதுதான் ராமகோபாலனின் பேட்டி.


பார்ப்பனர் அல்லாத மக்களை சூத்திரன் என்றுகூறும் இந்துத்துவாவின் ஆணி வேரைச் சுட்டெரிக்கும் தன்மான இயக்கத்தின்  தலைவரைப் பார்த்து மானமி ருக்கிறதா என்று பார்ப்பானை விட்டு ஒரு பார்ப்பனர் பேட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளாரே!


தந்தை பெரியாருக்கு பல வகைகளிலும் ஆதரவுக் கரம் நீட்டிய சி.பா. ஆதித்தனாரின் நிறுவனம் இப்படி ஒரு நிலைக்குப் போகலாமா? பார்ப்பான் பண்ணயம் ஆகலாமா?


இராமமூர்த்தி முதல் இராம கோபாலன் - பாண்டே வரை திராவிடர் இயக்கம் என்றால் நெருப்பில் விழுந்ததுபோல் துடிக்கும் காரணத்தை தமிழர்கள் புரிந்து கொள்வார்களாக!

                               ---------------------------"விடுதலை” 31-03-2015
*********************************************************************************

அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாருமே
எங்கள் கொள்கை ஆசான்கள்

திராவிடர் கழகத்துடன் மோதவிடும் சூழ்ச்சி பலிக்காது!

திரிபுவாத சக்திகளுக்கு  எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் சாட்டையடி!
சென்னை, மார்ச் 31 அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் எங்கள் கொள்கை ஆசான்கள், திராவிடர் கழகத்தோடு உள்ள உறவை யாரும் பிரித்துவிட முடியாது என்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் எழுச்சித் தலைவர் தொல். திருமாவளவன்  அவர்களும் தெளிவுப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:


திராவிடர் கழகத் தலைவர் மான மிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் நேர்காணல் மார்ச் 28 அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப் பானது.  அவரை நேர்காணல் செய்த அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விடு தலைச் சிறுத்தைகளுக்கும் திராவிடர் கழகத்துக்கும் இடையிலான நட்புறவில் பாதிப்பை ஏற்படுத்தும் உள்நோக்கத் தோடு ஓரிரு கேள்விகளை எழுப்பி யதைக் காண முடிந்தது.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் அவர்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானவர் என்னும் கருத்தைப் பரப்புவதாக அந்நிகழ்ச்சியின் தொகுப் பாளர் கேள்வி எழுப்பினார். விடு தலைச் சிறுத்தைகளும் திராவிடர் கழகமும் கொள்கைப் புரிதலோடு ஒருங்கிணைந்து தொடர்ந்து செயல் பட்டுவருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத காழ்ப்புணர்வின் அடிப் படையிலேயே இக்கேள்வி எழுப்பப் பட்டதாகத் தெரிகிறது.


மூன்று குழல் துப்பாக்கி
 

தந்தை பெரியாரும் புரட்சியாளர் அம்பேத்கரும் எத்தகைய புரிதலோடும் நட்புறவோடும் இணைந்து பணியாற்றி னார்களோ அதே வகையில், அவ்விரு தலைவர்களின் வழியில் இன்றும் இவ்விரு இயக்கங்களும் தோழமை உணர்வோடு இணைந்து பணியாற்றி வருகின்றன.  குறிப்பாக, சாதி, -மதவெறி சக்திகளை எதிர்ப்பதில் பெரியாரிய சக்திகளோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து ஒருங் கிணைந்து களமாடி வருகிறது. திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழாய் துப்பாக்கி என அழைக் கப்படுவதுண்டு.


தற் போது விடுதலைச் சிறுத்தைகளையும் சேர்ந்து மூன்று குழல் துப்பாக் கியானோம் என ஆசிரியர் வீரமணி அவர்கள் மிகுந்த பூரிப்போடு அறி வித்திருக்கிறார்.  அந்த அளவுக்கு விடுதலைச் சிறுத்தைகளுக்கும் திரா விடர் கழகத்துக்கும் இடையிலான நட் புறவு வலுப்பெற்றிருக்கிறது.  அவ்வு றவில் சிறு கீறலையாவது ஏற்படுத்த வேண்டுமென்னும் தீய உள்நோக்கத் தோடு அத்தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் குதர்க்கமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.  அக்கேள்விக்குப் பதிலளித்த ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பி யவரின் திசை திருப்பும் முயற்சியை மிகச் சரியாக அம்பலப்படுத்தினார்.


அம்பேத்கர் - பெரியார் ஆகியோரே எங்கள் கொள்கை ஆசான்


விடுதலைச் சிறுத்தைகள் புரட்சியா ளர் அம்பேத்கர் அவர்களையும் தந்தை பெரியார் அவர்களையும் தமது கொள்கை ஆசான்களாக ஏற்றுக் கொண்டு கடந்த 25 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது.  சாதி, மதவெறி சக்திகளுக்கு எதிராகப் போராடிவரும் சான் றோர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக தந்தை பெரியாரின் பெயரில் விருது மற்றும் பொற்கிழி வழங்கி வருகிறது.  விடு தலைச் சிறுத்தைகளின் துண்டறிக்கைகள், சுவரொட்டிகள் உள் ளிட்ட அனைத்து வெளியீடுகளும் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகிய இரு பெரும் தலைவர்களின் திருவுருவப் படங்க ளோடுதான் வெளியிடப்பட்டு வரு கின்றன.  விடுதலைச் சிறுத்தைகளின் திருமண நிகழ்ச்சிகளில் மணமக்கள் இருவரும் 'புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் வழியில் சமூகப் பணி ஆற்றுவோம்!' என உறுதியேற்று வருகின்றனர்.


என் பயணத்தின் தொடக்கம் பெரியார் திடலே!
 

புரட்சியாளர் அம்பேத்கர் அவர் களின் திருவுருவச் சிலைகளை நிறுவும் இடங்களிலெல்லாம் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைகளையும் நிறுவ வேண்டும் என விடுதலைச் சிறுத்தை களுக்கு கட்சியின் தலைமையிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், எனது அரசியல் உந்து சக்திகளாக விளங்கும் மூவரில் ஒருவர் தந்தை பெரியார் என்பதை மிகுந்த பூரிப்போடு அறிவிப்புச் செய்திருக் கிறேன்.  அதாவது, புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மேதகு பிரபாகரன் ஆகிய மூவரும்தான் எனது பொதுவாழ்க்கைக்கு நம்பிக்கையும் ஊக்கமும் அளித்துவரும் தலைவர்கள் என்பதை வெளிப்படையாகப் பதிவு செய்திருக்கிறேன்.  பெரியார் திடலிலி ருந்துதான் என் அரசியல் பயணம் தொடங்கியது என்பதைப் பல முறை பதிவுசெய்திருக்கிறேன்.
இவ்வாறு பெரியாரின் கொள்கை களோடும் பெரியாரின் இயக்கங்க ளோடும் இரண்டறக் கலந்து ஒடுக்கப் பட்டோர் சிறுபான்மையினர் மற்றும் பிற விளிம்புநிலை மக்கள் யாவரையும் அமைப்பாக்குவதிலும் அரசியல்படுத்து வதிலும் தீவிரமாக ஈடுபட்டுவரும் விடுதலைச் சிறுத்தைகளின் மீதான நன்மதிப்பையும் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் வகையில், அந்த நேர் காணல் நிகழ்ச்சியில் கேள்விகள் எழுப் பியதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.


விடுதலைச் சிறுத்தைகளுக்கும் திராவிடர் கழகத்திற்கும் மற்றும் பிற பெரியார் இயக்கங்களுக்கும் இடையி லான நட்புறவை எவராலும் எக்காலத் திலும் சிதைக்க முடியாது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிகவும் அழுத்தமாகத் தெளிவுபடுத்த விரும்பு கிறது.  மேலும், சாதி-மதவெறி சக்தி களுக்கெதிராக பெரியாரிய, மார்க்சிய இயக்கங்களோடு என்றென்றைக்கும் விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து போராடும் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறது.
                 
                               ---------------------------"விடுதலை” 31-03-2015

பாண்டே வுக்கு பதிலடி -3

பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டுவிடு; பார்ப்பானை அடி என்றார் பெரியார் (நூல்:-இந்துத்துவாவின் படையெடுப்பு) என்று பாண்டே தந்தி தொலைக்காட்சியில்   பதிவு செய்துள்ளாரே இதில் ஏதாவது உண்மையா?

 இது குறித்து அந்த விவாதத்திலேயே  ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் தெளிவாகவே விளக்கம் அளித்து விட்டார்.  மேலும் அறிந்து கொள்ள வேண்டுமானால்   6-12-1992 லேயே “விடுதலை” ஞாயிறுமலர் கேள்வி-பதில் பகுதியில் விளக்கமளித்து விட்டார் ஆசிரியர் கி.வீரமணி.அதையெல்லாம் படிக்காமல்  ஏனோ தானோ என்று தத்துப்பித்து என்று கேள்வி கேட்டு மூக்கு உடைபட்டு போனார் பாண்டே. 


அதே போல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு திராவிடர்கழகம் ,என்ன செய்தது என்ற முட்டாள்தனமான கேள்வி வேறு? இதோ அந்தக் கேள்விக்கான  ஆதாரங்கள்.             --------- நூல்:- அறிந்து கொள்வீர்!புரிந்துகொள்வீர்!(தமிழர் தலைவர் மானமிகு கிவீரமணி எம்.ஏ.பி.எல். அவர்களின் பதில்கள், பக்கம் 3,4

30.3.15

தாலியைப்பற்றி புரட்சியாளர்அம்பேத்கரின் கருத்தென்ன? தாலி அறுப்பா? தாலி அகற்றமா?

தாலியைப்பற்றி புரட்சியாளர்அம்பேத்கரின் கருத்தென்ன?
புரட்சியாளர் அம்பேத்கர் அவர் களின் பிறந்த நாளில் (ஏப்ரல் 14) புரட்சிகரமான சிந்தனைகளை அரங் கேற்றுவதுதானே பொருத்தமானது!

தலைவரை மதிக்கிறோம் என் றால் தலைவரின் கொள்கைளை மதிப்பதில்தான் அதனைக் காட்ட வேண்டும்.

தாலியைப்பற்றிய விவாதத் தையே நடத்தக் கூடாது என்று இந்துத்துவாவாதிகள் மிரட்டும் போது, வன்முறையை ஏவும்போது, கருத்துச் சுதந்திரம் என்ற அடிப் படையில் நோக்கினாலும் சரி, பெண் ணுரிமைப் பார்வையில் பார்த்தாலும் சரி, அதனை எதிர் கொண்டு முறி யடிப்பதுதான் முற்போக்குச் சிந்தனை - அதனை வீழ்த்துவதுதானே புரட்சி! அம்பேத்கர் பிறந்த நாளில் தாலியை அகற்றுவதா என்று சில அருமைத் தோழர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆமாம். அண்ணலின் பிறந்த நாளில்தான் அவரின் இந்தப் புரட்சி கரமான சிந்தனையைத்தான் செயல் படுத்த வேண்டும்.

தாலியைப்பற்றி அண்ணலின் கருத்து என்ன? இதோ பாபாசாகேப் பேசுகிறார். சென்னை அரசாங்கத்தின் ஆணைப்படி வெளியிடப்பட்ட மலபார் அஞ்சேங்கோ (Malabar and Anjengo) கெஜட்டின் பதிப்பாசிரியர் சி.ஏ. கின்னஸ் அய்.சி.எஸ். பின்வரு மாறு சொல்கிறார்.

மருமக்கள் தாயம் என்ற முறையையும், மக்கள் தாயம் என்ற முறையையும் கடைப்பிடித்து வந்த எல்லாப் பிரிவு மக்களிடையிலும் வேறொரு திருமணச் சடங்கு முறை காணப்பட்டது. அந்தத் திருமண முறை தாலி கட்டுத் திருமணம் என்று சொல்லப்பட்டது. மலையாளி களின் திருமணப் பழக்கங்களில், இந்தத் தாலி கட்டுத் திருமணம் என்பது தனித்தன்மை வாய்ந்தது. புதுமையானது; வேறுபட்ட தன்மை யுடையது என்றெல்லாம் சொல்லப் படுகிறது. ஒரு பெண் பூப்படைவதற்கு முன் அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டுவது தான் இந்தப் பழக்கத்தின் அடிப்படையாகும். அந்தப் பெண்ணின் ஜாதி அல்லது அவளைவிட உயர் ஜாதியைச் சேர்ந்த ஒரு மனிதனால் இந்தத் தாலி கட்டப்படுகிறது.
அதற்குப்பிறகுதான் அந்தப் பெண் சம்பந்தம் என்னும் மண ஒப்பந்தம் செய்வதற்குரிய உரிமையைப் பெறுகிறாள். தாலி கட்டுகிறவன்  அல்லது மணவாள னுக்கு அந்தப் பெண்ணுடன் இணையும் உரிமையை வழங்குவ தற்காகத்தான் தாலி கட்டும் திரு மணம் என்னும் சடங்கு நடத்தப் படுகிறது என்று பொதுவாகக் கருதப் படுகிறது. சத்திரியர்கள், அதற்கும் மேலாகப் பூதேவர்கள் என்று சொல் லப்பட்ட பிராமணர்கள் ஆகியோர் கீழ்ஜாதிப் பெண்களை முதலில் அனுபவிப்பதற்காக ஏற்பாடு செய் யப்பட்டதுதான் இந்தச் சடங்கு முறையின் தோற்றுவாயாக இருக்கக் கூடும் என்று சிலர் கருதுகிறார்கள். (தொகுதி (பக்.101)
(டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எழுதிய காங்கிரசும், காந்தியும் தீண்டத் தகாதவர்களுக்குச் செய்ததென்ன? என்ற நூலின் பக்.205-206)

இதற்கு விளக்கமும் வேண்டுமோ!
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எடுத்துக்காட்டிய இந்தக் கருத்துக்கும், தகவலுக்கும் பிறகு இணையதளத்தில் விளையாடும் நமது அருமைத் தோழர்கள் தெளிவு பெறுவார்களாக!

இந்து மதக் கொடுமை என்ற தளையிலிருந்து பெண்களை விடுதலை பெறச் செய்யத்தான் அன்று சட்ட அமைச்சராகவிருந்த டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்துத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார். அது நிறைவேற் றப்பட வாய்ப்பு இல்லை என்ற நிலையில் அமைச்சர் பதவியைத் தலையைச்சுற்றித் தூக்கி எறிந்தார்.

இந்தப் பின்புலத்தைப் புரிந்து கொண்ட எவருக்கும் அவர் பிறந்த நாளில் அடிமைத்தளையாம் தாலியை அகற்றுவதன் அவசியமும், பெரு மையும் அருமையாகப் புரியும்.

ஒரு புரட்சியாளர் பிறந்த நாளில் இது போன்ற புரட்சிகரத்தை அரங்கேற்ற வேண்டுமே தவிர - புளியோதரை செய்வது எப்படி? பொரி உருண்டை செய்வது எப்படி? என்பதையா கற்றுத் தர முடியும்?

சிந்திப்பீர்!
இந்த செயல் வெற்றி பெற வீங்கு தோள் கொண்டு எழுவீர்! எழுவீர்!!


- கருஞ்சட்டை
குறிப்பு: பெண்ணடிமைச் சின்னமாம் தாலியை அகற்றும் நிகழ்ச்சிகள் தாலி அறுக்கும் போராட்டம் என்று கொச்சைப்படுத்தும்  சிறுமதிக் கூட்டத்திடம் எச்சரிக்கை யாக இருங்கள் தோழர்களே!!
                   ---------------------------- "விடுதலை” 28-03-2015


Read more: http://viduthalai.in/e-paper/98721.html#ixzz3VgIUc8ug

********************************************************************************

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் (ஏப்ரல் 14) மாட்டுக் கறி விருந்து, தாலி அகற்றும் நிகழ்ச்சிகள் சென்னை - பெரியார் திடலில் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிவித்தார்.

இதனைக் கொச்சைப்படுத்தும் வகையில்  தாலி அகற்றும் என்பதை தாலி அறுப்புப் போராட்டம் என்று சில அனாமதேய மதவெறி அமைப்புகள் கொச்சைப்படுத்தி, காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்துள்ளனர். சில ஏடுகளும் தாலி அறுப்புப் போராட்டம் என்றே செய்திகள் வெளியிடுகின்றன  -விபீஷணத்தனமாக!


தாலி என்பது பெண்ணடிமைச் சின்னமே! இத்தகு பகுத்தறிவுச் சிந் தனை பெண்ணுரிமைச் சிந்தனைகள் தந்தை பெரியார் அவர்களின் அழுத் தமான கருத்து இன்று நேற்றல்ல; 75 ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் கருத்தை திராவிடர் கழகம் பிரச் சாரம்  செய்து  வருகிறது.


திராவிடர் கழக மேடைகளில், ஏற்கெனவே தாலி அணிந்திருந்த வர்கள் துணைவரின் விருப்பத்தோடு தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்று தான் வருகிறது.


அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது நிறை வேற்றப்பட்ட சுயமரியாதைத் திரு மணச் சட்டத்திலும் தாலி கட்டாய மில்லை. இந்த நிலையில் திராவிடர் கழகம் முன்னெடுக்கும் பெண் ணுரிமைச் சிந்தனைக் கோட்பாட்டை கொச்சைப்படுத்தும் வகையில் தாலி அறுப்புப் போராட்டம் என்று கூறுவது பித்தலாட்டப் பிரச்சாரமாகும்.


தாலி கட்டிக் கொண்ட பெண்கள், கணவனை இழந்த நிலையில் நடை பெறும் மூடச் சடங்குதான் தாலி அறுப்பு என்பது; தாலிஅகற்றலையும் அறுத்தலையும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது.  தாலி அடிமைத்தளை அது வேண்டாம் என்று கருதுகிறவர்கள் விரும்பி வந்து அகற்றும் நிகழ்ச்சி தான் அம்பேத்கர் பிறந்த நாளில் (ஏப்ரல் 14 - மாலை 4 மணி) சென்னை பெரியார் திடலில் நடக்க இருக்கிறது.


இது கட்டாயப்படுத்தி நடத்தப் படுவதல்ல - திராவிடர் கழகம் பகுத் தறிவு இயக்கம் - பெண்ணுரிமை இயக்கமாகும்!


பொய்ப் பிரச்சாரம் செய்தாலும் அது வேறு வகையில் பெரியார் திடல் நிகழ்ச்சிக்கு விளம்பரமாகத் தான் முடியும்.


தாலி புனிதம் என்பவர்களுக்கு ஒரு கேள்வி - கழுதைக்கும் கழு தைக்கும் கல்யாணம் என்று தாலி கட்டுகிறார்களே மத நம்பிக்கை யாளர்கள்  - இது தாலியைக் கொச் சைப்படுத்துவது ஆகாதா? அதற்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை யாம்?

                               ---------------------------”விடுதலை” 29-03-2015
Read more: http://viduthalai.in/e-paper/98755.html#ixzz3Vlx0RjHu

29.3.15

தலித் விடுதலை முன்னோடி பெரியார் - பாண்டேவிற்கு பதிலடி- 2
இதுதான் யானை என்று உருவகப்படுத்திக் கொண்ட விழி இழந்த அய்வர் கதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அது உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது.பகுத்தறிவு ஒளி மூலம் நமது விழிகளைத் திறந்த சமுதாய மருத்துவராம் தந்தைபெரியாரைப் பற்றி அந்த விழி இழந்தோர் உருவகப்படுத்தியதை விடவும் அதிகமான அளவில் பொய்யும், புனைவுமாக பல உருவகங்களை உலவவிட்டுள்ளனர் பார்ப்பனர்களும் ,பார்ப்பன அடிவருடிகளும்.

எடுத்துக்காட்டாக பெரியார் கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு வீட்டில் பிள்ளையாரை வணங்கினார், வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்தார்,பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபடவில்லை,அவர்களை இழிவாகப் பேசினார் என்பது போன்ற பல அவதூறுகளை அள்ளிவீசி வருகின்றார்கள். இந்த அவதூறுகள் பெரியார் உயிரோடு இருந்த போதிலிருந்தே சொல்லப்பட்டு வருகிறது. இந்த அவதூறுகளுக்கெல்லாம் பெரியாராலும், பெரியார் தொண்டர்களாலும் மற்றும் நேர்மையான வரலாற்று ஆய்வாளர்களாலும் தகுந்த ஆதாரங்களுடன் பதில் அளிக்கப்பட்டே வந்துள்ளது.

இருந்தாலும் திரும்பத் திரும்ப அதே அவதூறுகளை இப்போதும் சொல்லிவருகிறார்கள். அந்த வகையில் http://www.tamilhindu.com தளத்தில் பெரியாரின் மறுபக்கம் என்ற பெயரில் ஏற்கனவே புத்தகமாக வந்ததை பதிவு செய்து வருகின்றனர். அந்த தளத்தில் வரும் செய்திகளையொட்டி நாம் மறுமொழி அளித்தால் பதிவு செய்யப்படுவதில்லை. அதோடு நாம் பதில் அளிக்கவில்லை. நழுவி விடுகிறோம் என்ற மாய்மாலப் பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்து விடுகின்றனர். இவர்கள் வைத்த குற்றச்சாட்டுக்கெல்லாம் நாம் ஏற்கனவே நாம் http://thamizhoviya.blogspot.com “தமிழ் ஓவியா” வலைப்பூவில் பதில் அளித்துள்ளோம். குறிப்பாக பெரியார், பெரியார்-தலித், அய்யத்தெளிவு என்ற சுட்டியை சுட்டிப் படித்தால் உண்மையை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

பணிப்பளு மற்றும் குடும்பச் சுமை காரணமாக இந்தப் பார்ப்பனக்கும்பலுக்கு உடனுக்குடன் பதில் அளிக்க கால தாமதமாகிறது. அதோடு ஏற்கனவே இது குறித்து பதில் அளித்து விரிவான நூல்கள் வந்து விட்ட நிலையில் திரும்பத் திரும்ப எழுத வேண்டுமா? என்ற எண்ணமும் ஏற்படுகிறது.

அந்த வகையில் 2004 அம் ஆண்டு “உலகத் தமிழர் சக்தி” ஜூன் 2004 இதழில் “தலித் தலைமை –பெரியாரின் நிலை என்னவாக இருந்தது?” என்ற தலைப்பில் டாக்டர் வேலு அண்ணாமலை அவர்கள்,எழுதிய கட்டுரைக்கு மறுப்பாக நான் எழுதிய கட்டுரையை இங்கு தொடர்ச்சியாகப் பதிவு செய்கிறேன்.

சமூகப் பொறுப்பில் என்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்று கூறியதோடு இந்த கட்டுரையை தட்டச்சு செய்து கொடுத்த எனது இனிய தோழர் “ஆதிஆனந்த்அப்பா” அவர்களின் உதவிக்கு மிக்க நன்றி
****************************************************************************தலித் விடுதலை முன்னோடி – பெரியார்  என்ற தலைப்பில் 9 பகுதிகளாக 2009 ஆம் ஆண்டே  தற்போது தந்திதொலைக்காட்சியில் பாண்டே  எழுப்பிய அத்துணை கேள்விகளுக்கும் பதில் நம்மாலும்  மற்ற அறிஞர்களாலும் அதற்கு மேலாக பெரியாராலும் பதில் அளிக்கப்பட்டுளதை பதிவு செய்துள்ளோம். இதையெல்லாம் எதையும் பொருட்படுத்தாமல் திட்டமிட்டே மீண்டும் மீண்டும் பாண்டே போன்ற பார்ப்பன சக்திகளால் புதிய குற்றச்சாட்டுக்கள் போல் சுமத்தி வருகின்றனர். இதையெல்லாம் தோலுரித்துக் காட்டவே 2009 ஆம் ஆண்டு பதிவு செய்த கட்டுரைகளை தொகுத்து தந்துள்ளோம். இன்றைய சூழலில் மீண்டும் ஒரு முறை படியுங்கள்!சிந்தியுங்கள்!!

அதற்கான சுட்டி இதோ:-


http://thamizhoviya.blogspot.in/2009/09/blog-post_19.html


http://thamizhoviya.blogspot.in/2009/10/3.html
http://thamizhoviya.blogspot.in/2010/01/7_18.html

http://thamizhoviya.blogspot.in/2010/01/8_20.html

http://thamizhoviya.blogspot.in/2010/01/9_21.html

---------------------------------------------------------------------------------------------

இது போல் இன்னும் ஏராளமான செய்திகள்,தொடர்கட்டுரைகள் தமிழ் ஓவியா வலைப்பூவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. படியுங்கள்!!

பாண்டேவுக்கு பதிலடி! ஊன்றிப்படித்து உண்மைகளை அறியுங்கள்!!


 அன்பிற்கினிய தோழர்களே,

                                  வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே என்பவர்  ஊடகவியலாளர் அல்லது செய்தியாளர் என்ற போர்வையில்  எல்லாம் தெரிந்தவர் என்ற மமதையில்  கேள்விகள் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் நஞ்சுகளை  திராவிடர்கழகத்தலைவர் அய்யா கி.வீரமணி அவர்களிடம் வீசினார். ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்கள் அந்த நஞ்சுகளையே  மருந்தாக்கி திருப்பி பாண்டேவிடம்  கொடுத்து பாண்டேவேவை பிடித்த நோயை போக்கின்னார். பாண்டே போன்றவர்கள் தெளிவடைவதற்காகவும் ,பாண்டே போன்ற வர்கள் விதைத்த விச வித்துக்களை அகற்றவும், 


  உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற  ஆர்வத்தில் இருக்கும் நடுநிலையாளர்களும்,தோழர்களும் அவசியம் கீழ்கண்ட சுட்டியை சுட்டி படித்து உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டுகிறோம். இதோ அந்த சுட்டி 

 https://www.facebook.com/oviyathamizh 

 http://thamizhoviya.blogspot.in/

                    ***************************************** 
 http://thamizhoviya.blogspot.in/    ”தமிழ் ஓவியா”  வலைப்பூவில் உள்ள தேடு பொறியில் உங்களுக்கு ஏற்படும் அய்யங்களின் சொற்களை கொடுத்து தேடினால் உண்மைச் செய்திகள் உங்களுக்கு கிடைக்கும்.

படியுங்கள்! சிந்தியுங்கள்!!தெளிவடையுங்கள்!!!


                 **************************************************
சான்றாக  

நேற்று தந்தி தொலைக்காட்சியில்  பாண்டேயின் பார்ப்பன கூச்சலுக்கு அசராமல் விடையளித்தார் ஆசிரியர் கி.வீரமணி அய்யா.

மேலும்உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கும் நடுநிலையாளர்களும்,தோழர்களும் அவசியம் கீழ்கண்ட சுட்டியை சுட்டி படித்து உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டுகிறோம். இதோ அந்த சுட்டிகள்

 
http://thamizhoviya.blogspot.in/2010/07/blog-post_8919.html
http://thamizhoviya.blogspot.in/2011/06/blog-post_8356.html
http://thamizhoviya.blogspot.in/2014/12/6_6.html

                          ஏராளமான செய்திகள் கொட்டிக்கிடக்கின்றன :”தமிழ் ஓவியா”
 http://thamizhoviya.blogspot.in/  வலைப்பூ வில். தோழர்கள் நேரம் ஒதுக்கி படித்து உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டுகிறோம். நன்றி. வணக்கம்.

   
 

28.3.15

வீணாக சீண்ட வேண்டாம் திராவிடர் இயக்கத்தை!

சீண்ட வேண்டாம்
திராவிடர் இயக்கத்தை!


தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின்  மவுசு குறைந்து விட்டது; மக்கள் சலித்துப் போய் விட்டார்கள். திராவிட பூமி, திராவிடர் கொள்கை என்பதெல்லாம் கவைக்கு உதவாதவை திராவிடக் கட்சிகளுக்கு  நாங்கள் தான் மாற்று!


கடந்த மக்களவைத் தேர்தலில் நாங்கள் (பிஜேபி) 19 சதவீத வாக்குகளை அள்ளிக் குவித்து விட்டோம் - நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாருங்கள் - நாங்கள் குபீர் பாய்ச்சல் பாயப் போகிறோம் - ஆட்சி நாற்காலி எங்களுக்கே தான் என்று பிஜேபியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிற திருவாளர் இல. கணேசன் அவர்களின் பேட்டி ஒன்று துக்ளக் இதழில் (25.3.2015) மூன்று பக்க அளவில் வெளிவந்துள்ளது.


தன்னம்பிக்கை வேண்டியதுதான்; அது தலைக்கனமாக ஆகும்போது, தலைகுப்புற வீழ வேண்டியிருக்கும்.


நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பிஜேபிக்கு 19 சதவீத வாக்குகள் கிடைத்து விட்டனவாம். சில இடங்களில் சட்டமன்ற தொகுதிகளில் திமுகவைப் பின்னுக்குத் தள்ளி விட் டார்களாம்.


எத்தனைக் கட்சிகளோடு கூட்டணி வைத்து பிஜேபி மக்களவைத் தேர்தலில் 19 சதவீத வாக்குகளைப் பெற்றது என்பதைக் கூடக் கருத்தில்கொள்ள முடியாத அள வுக்கு நிதானத்தை இழந்தது தெளிவாகவே தெரிகிறது. பிஜேபிக்கு மட்டும் கிடைத்த வாக்குகளின் சதவீதம் 5.5. தான்.


ம.தி.மு.க. அதிகாரப்  பூர்வமாகக் கூட் டணியிலிருந்து விலகுவதாக அறிவித்து விட்டது. எங்கள் கட்சித் தலைமையில் தான் தமிழ்நாட்டில் கூட்டணி என்று பா.ம.க. பட்டவர்த்தனமாக அறிவித்த பிறகு அக்கட்சியுடன் பிஜேபி கூட்டணி என்பது இல்லை என்று உறுதியாகி விட்டது. எஞ்சி யிருப்பது தேமுதிக தான்; மக்களவையில் அக்கட்சி பிஜேபியோடு கூட்டணி அமைத் துக் கொண்டது வேறு; சட்டச பையில் கூட்டுச் சேர்ந்து அது தற்கொலை செய்து கொள்ளாது என்று உறுதியாக நம்பலாம்.


தமிழ்நாட்டில் பிஜேபிக்கு உறுப்பினர் எண்ணிக்கை 21 லட்சமாம். எப்படி தெரி யுமா? மிஸ்டு கால் கொடுத்து; ஒரு முறை விலா நோகச் சிரித்து முடித்து விடுங்கள்.


இவர்களின் உறுப்பினர் சேர்க்கையின் யோக்கியதைக்கு வெகு தூரம் போக வேண்டாம். தமிழ் மாநில இந்தியக் கம்யூ னிஸ்டுக் கட்சியின் செயலாளர் தோழர் முத்தரசன் அவர்களின் கைப்பேசிக்கு பிஜேபியிடமிருந்து குறுந்தகவல் வருகிறது. என்ன தெரியுமா? நீங்கள் பிஜேபியில் முதற்கட்ட  (Primary Member Ship)  உறுப் பினராக ஆகியுள்ளீர்கள்.


அதன் எண்   xxxxx உங்களுடைய மின்னஞ்சல் உள் ளிட்ட தகவலைத் தெரிவிக்கவும் என்று குறுஞ்செய்தி வருகிறது என்றால் பிஜேபி யின் யோக்கியதையை அதன் தரங்கெட்ட தன்மையை எளிதாகவே புரிந்து கொள்ள லாம். அடேயப்பா, அவர்கள் பேசும் தார்மீகப் பண்புகள் இருக்கின்றனவே - அவை பஞ்ச பூதங்களையும் மூக்கின்மேல் விரலை வைக்கச் செய்யும்.


வெளியில் பளபளப் பாகவும் உள்ளே புரையோடிய புண்ணை யும் வைத்திருக்கும் பிஜேபியின் முகமூடி - இந்த உறுப்பினர் சேர்க்கை முறையின் மூலம் கிழிந்து தொங்கிவிட்டது.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பி.ஜே.பி.யின் உண்மையான நிலை என்ன என்பது முக்கியம்.


2011 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு 201 இடங்களில் மண்ணைக் கவ்விய பிஜேபி கட்டிய பணத்தைக் கூடத் திரும்பப் பெற முடியவில்லை; ஆம், டெபாசிட் காலி! ஓர் இடத்தில்கூட வெற்றி கிட்டவில்லை. தமிழ்நாட்டில் 2014 மக்களவைத் தேர்தலில்கூட 7 இடங்களில் போட்டியிட்ட பிஜேபிக்கு 6 இடங்களில் டெபாசிட் காலியாகவில்லையா? சிறீரங்கம் இடைத் தேர்தலிலும் டெபாசிட் பறி போயிற்றே!


சிறீரங்கம் தொகுதியில் எத் தனையோ லட்சம் உறுப்பினர்கள் பிஜேபிக்கு என்று முஷ்டியைத் தூக்கினார் களே - அவர்கள் எல்லாம் ஓட்டுப் போட்டு இருந்தால், அந்தத் தொகுதியில் பிஜேபி அல்லவா வெற்றி பெற்று இருக்க வேண் டும் - வெத்து  வேட்டுகளுக்கு ஆரவாரம் ஒரு கேடா?


இதுதான் தமிழ்நாட்டில் பிஜேபியின் உண்மையான நிலை. நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை பத்தாண்டு காலம் காங்கிரஸ் தொடர்ந்து மத்தியில் ஆட்சியில் இருந்ததால் ஏற்பட்ட விரக்தி யின் விளைவை (Anti Incumbency) அறு வடையாக்கிக் கொண்டது பிஜேபி என்பது தான் உண்மை. பிஜேபி.யின் கொள்கைக் கோட்பாடு, அதன் உத்தமத்தனம் இவற்றின்மீது கொண்ட தீராத காதலால் கட்டிப் பிடித்து முத்தமிட்டு வெற்றி பெறச் செய்து விட் டனர் வெகு மக்கள் என்று நினைக்க வேண்டாம்!


மத்தியில் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே அதன் சாயம் வெளுத்து விட்டது. நடைபெற்ற இடைத் தேர்தல் அத் தனையிலும் மரண அடி வாங்கியதுதான் மிச்சம். இந்தியாவின் தலைநகரமான டில்லியில் மக்கள் சுழற்றிய சாட்டையின் வீச்சு சாதாரணமானதுதானா?


ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் தேர்தல் களில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி பெற்ற வாக்குகள் பெரும் அளவில் சரிந்து போய் விட்டனவே. ஜம்முவை பொறுத்தவரையில் நடந்து முடிந்த மக்கள வைத் தேர்தலோடு ஒப்பிடும்போது 11 விழுக் காடு வாக்குகளை சட்டமன்ற தேர்தலில் பிஜேபி இழந்து விட்டதே!


ஜார்க்கண்டைப் பொறுத்தவரை மக்க ளவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளின் விழுக்காடு 54 என்றால் அடுத்து நடை பெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 23.41 விழுக்காடாக கீழே விழுந்து சிதறியது.


மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள பல அரசியல் கட்சிகளையும் பிஜேபியையும் ஒன்று சேர்க்க வேட்டியை மடித்துக் காட்டிக் களத்தில் குதித்த திருவாளர் தமிழருவிமணியன் அவர்கள், தேர்தல் முடிவுக்குப்பின் மோடி தலைமை யிலான ஆட்சியின் அகவுரவத்தைக் கண்டு, நான் தூக்கு மாட்டிக் கொள்ள வேண்டியதுதான்! என்று ஒரு தனியார்த் தொலைக்காட்சியில் பிலாக்கணம் பாடியது ரசிக்கத்தக்கதே!


கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாதாவாக செயல்படும் மோடி தலைமை யிலான ஆட்சி பத்து மாதங்களுக்குள் ளாகவே மக்களின் முகச் சுழிப்பிற்கு ஆளாகி விட்டது.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் திரா விடர் கட்சிகளுக்கு மாற்றாக பிஜேபிதான் என்று மார் தட்டுவது மார்புக்கும் கைக்கும்தான் வலி!

திராவிட பூமி, திராவிடர் கொள்கை என்பதெல்லாம் கவைக்கு உதவாதவை என்று எந்தத் தைரியத்தில் சொல்லுகிறார்?


இந்த ஒரு வாக்கியம் போதும் - இதனை இவர்கள் தமிழ்நாடெங்கும் பட்டி தொட்டியெல்லாம் எடுத்துப் பிரசசாரம் செய்ய வேண்டும் - அவையே அவர்களின் முழு உருவத்தையும் அம்பலப்படுத்தி விடுமே!


திராவிடர் இயக்கத்தின் கொள்கைக் கோட்பாடுகள் என்ன? பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடமாகும்! பிறப்பில் பேதம் என்பதை முற்றாக முறியடிக்கும்  கொள்கைதான் தந்தை பெரியார் அவர்களின் திராவிடக் கொள்கை.


ஆனால், பிஜேபியின் கொள்கை என்ன? பிறப்பில் பேதம் வளர்க்கும் வருணாசிரமம் தானே - ஜாதியைத் தூக்கிச் சுமக்கும் சனாதனக்குப்பை தானே!
அவர்களின் குரு நாதரான எம்.எஸ். கோல்வால்கர் என்ன கூறுகிறார்?
சிலர் ஜாதியை நீண்ட காலமாக எதிர்த்து வருகிறார்கள். பழங்காலத்தில் ஜாதி அமைப்பு முறை இருந்தது. அதன் உச்சியில்நாம் இருந்தோம். ஆனால் இந்த ஜாதி நமது முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாக இருந்தது என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை (Bunch of Thoughts) என்று கூறி இருக்கிறாரே இவர்களின் குருநாதர்.


தமிழ்நாடு அப்படியா? ஜாதியைப் பாதுகாக்கும் கடவுள்களைக் காலில் இடறி, பராக்குக் கூறும் சாஸ்திரக் குப்பைகளைச் சாம்பலாக்கி, வேதக் கோட்டைகள்மீது விவேக வெடி குண்டுகளை வீசி, மதப் பாதுகாப்புப் போர்வை என்ற பெயரில் ஜாதியை ஜமக்காளம் போட்டு மூடிக் காப்பாற்றும் அரசமைப்புச் சட்டத்தையே எரியூட்டி, சமத்துவ சமதர்ம சங்கநாதம் முழங்கும் தந்தை பெரியாரின் திராவிடப் பூமி இது என்பது இல.கணேசர்களுக்குத் தெரியாதா என்ன?


இவர்களின் அரசியல் குருநாதரான ஆச்சாரியார் (ராஜாஜி) பூணூலைப் பிடித்துக் கொண்டு பிராமணர்களே! திமுகவுக்கு - உதய சூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள்! என்று பட்ட வர்த்தனமாக வேண்டுகோள் விடவில்லையா?


வெற்றியின் கொடியை ஆச்சாரியாரின் பஸ்லுல்லா சாலைக்கு எடுத்துக் கொண்டா ஓடினார் அறிஞர் அண்ணா?


324 கிலோ மீட்டருக்கு அப்பால் திருச்சியில் இருந்த - அவர் கண்ட, கொண்ட ஒரே தலைவரான அய்யாவை -தந்தை  பெரியார் அவர்களை நோக்கித் தானே ஓடினார்!


ராஜாஜியின் ஆதரவு கிடைத்ததும் நல்ல பிள்ளைகளைப் போல அதுவரை பேசிவந்த கொள்கைகளை மூட்டை கட்டி வைத்து விட்டார்கள் என்கிறார் திருவாளர் இல. கணேசன் அய்யர்வாள்!


அது உண்மையா? அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் இறக்கிய இடி என்ன தெரியுமா?


புரோகித பார்ப்பானை அழைத்து அக்னி குண்டம் வளர்த்து மணமக்களை வலம் வரச் செய்து, அம்மி மிதித்து அருந்ததியைப் பார்க்கச் சொல்லி, அட்ட திக்குப்பாலகர் களையும், முனிபுங்கவர்களையும் சாட்சிக்கு அழைத்து மாரிக் காலத்துத் தவளைகள் என மந்திரங்களை ஓதினால் தான் திருமணம் என்ற பார்ப்பனீயப் பத்தாம் பசலிக் குப்பையைக் கூட்டித் தள்ளி, மாலை மட்டும் மாற்றினால் போதும் என்ற பகுத்தறிவுச் சுயமரியாதைத் திருமணத் திற்குச் சட்ட வடிவம் கொடுத்தாரே, முதல் அமைச்சர் அண்ணா.


அதுதான் ஆச்சாரி யாரிடம் அண்ணா சரண் அடைந்தார் என்பதற்கான அடையாளமா? திராவிடக் கொள்கையைத் துறந்ததற்கான அத் தாட்சியா?
அன்று 1937இல் இந்தியைத் திணித்த ஆச்சாரியாரையே இந்தியை எதிர்க்க வைத்ததுதான் திராவிடர் இயக்கம் என்பதை மறக்க வேண்டாம்.

1971இல் என்ன நடந்தது? சேலம்  ஊர்வலத்தில் தந்தை பெரியார்மீது ஜன சங்கத்தினர் (இன்றைய பி.ஜே.பி.)   வீசி எறிந்த செருப்புகளை - ராமன்மீது மடை மாற்றி அபிஷேகம் செய்து, ஊர்வல முடிவில் ராமனுக்கு அக்னி அபிஷேகம் செய்யப்பட்டதே நினைவிருக்கிறதா?


தேர்தல்  நேரமான அந்தக் கால கட்டத் தில் ராமனை செருப்பாலடித்த தி.க. ஆதரிக்கிற திமுகவுக்கா ஓட்டு என்று ஆச்சாரியாரும், அக்ரகாரமும் ஜனசங்கமும் அண்டங்காக்கையாகக் கத்தித் தீர்த்தனவே - முடிவு என்னவாயிற்று?


ராமனை செருப்பாலடிப்பதற்கு முந்தைய தேர்தலில் தி.மு.க.வுக்கு கிடைத்த சட்டமன்ற இடங்கள் 138, சேலம் நிகழ்வுக் குப்பின் திமுக வெற்றி பெற்ற இடங்கள் 184 என்பது நினைவிருக்கிறதா திருவாளர் இல. கணேசன் அவர்களுக்கு? அப்பொழுது அவாளின் குலதர்ம வீரர் ராஜாஜி என்ன அறிக்கை வெளியிட்டார் தெரியுமா?


தேசம் முழுமைக்கும் இன்று ஒரு துர்ப்பாக்கியம் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் துர்ப்பாக்கியம் தமிழகத்தை இரட்டிப்புத் தீவிரத்துடன் தாக்கி இருக்கிறது. மதம், சம்பிரதாயக் கட்டுப்பாடுகள், தெய்வ பக்தி இவற்றின் முழு எதிரி என்று தம்மை முழு மூச் சுடன் பகிரங்கப்படுத்திக் கொள்பவரின் திருமுன்னரே அவரது ஆசியும் அனுக் கிரகமும் பெற்றுப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறது தமிழக மந்திரிசபை; இனித் தமிழகம் ஆஸ்திகர்கள் வாழ  தகுதி இழந்து விட்டது;


இந்த ராஜ்ஜி யத்தை விட்டே வெளியேறிட வேண்டும் என்று சில மகாபுருஷர்கள் உள்படப் பலர் எண்ணத் தொடங்கி விட்டனர் (கல்கி 4.4.1971) என்று கையொப்பமிட்டே ராஜாஜி அறிக்கை வெளியிட்டாரே - ஆரியத்தின் தோல் விக்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாரே நினைவிருக்கிறதா? இந்தப் பூமி, திராவிடக் கொள்கை உடையது என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட வில்லையா?


தமிழக பிஜேபியின் தலைவராக இருந்தவர் ஒரு தாழ்த்தப்பட்டவர் (டாக்டர் கிருபாநிதி) என்ற காரணத்துக்காக அவரை அவமானப்படுத்தி வெளியேற்றியவர்கள் இந்த இல. கணேசன் வகையறாக்கள்தானே! என் கையைப் பிடித்து முறுக்கினர் ஜாதியைச் சொல்லி  திட்டினார் இல. கணேசன் என்று அந்தத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் பேட்டியே கொடுத்தாரே! (தமிழா தமிழா - ஏப்ரல் 2003).


வேண்டாம் வேண்டாம் திருவாளர் இல. கணேசன் அவர்களே! வண்டி வண்டியாக  இருக்கிறது உங்கள் சங்கதிகள் - சமாச் சாரங்கள்.

வீணாக திராவிட இயக்கத்தையும், திராவிடப் பூமியையும் சீண்ட வேண்டாம்!


                  -----------------------மின்சாரம் அவர்கள் 28-03-2015 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
Read more: http://viduthalai.in/page-1/98653.html#ixzz3Vg1je1rl