Search This Blog

16.3.15

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களின் 37ஆவது நினைவு நாள் சிந்தனை

எங்கள் அன்னையாரின் நினைவு நாளில்....!


என்றென்றும் எங்கள் ரத்தங்களில் உறைந்து,
நினைவில் நிறைந்து வாழும் அன்னையே!
நம் அறிவு ஆசானின் வாழ்வை நீட்டி,
தொண்டறத்தை துவளாது காத்த
எங்கள் தூய தியாகச் சுடரே! திராவிடர் தாயே!
தம் வளமையை தந்தை நமக்காகத் துறந்தார்
துறவிகளுக்கும் மேலான நிலையில் தொண்டறம் நடத்தி,
மானமும், அறிவும் மனிதர்க்கழகு என்பதை அகிலத்திற்கு
அறிவுறுத்தியதோடு, திராவிடர்களுக்கு விழிப்பை
ஏற்படுத்திட, விடியலுக்கு வழிகண்டார்!
நீங்களோ, எந்த ஒரு பெண்ணும் இழக்கத்
துணியாத, இளமையை, இனமானம்
சொல்லித் தந்த தலைவருக்காக இழந்து,
அவருக்கு ஆற்றும் பணி, அவனியோருக்குச்
செய்யும் தொண்டு; காரணம், அவர் அகிலத்தின்
அழியாச் சொத்து என்று, பழியாய் பகை வந்த
போதிலும், அவற்றை அலட்சியத்தால் வென்று,
ஆயிரங்காலத்துப் பயிரான நம் கொள்கைகளை
விளையச் செய்து, வேலியும் அமைத்தீர்கள்!
உங்கள் தூய தொண்டறத்தினால் கல்வியும்,
வேலை வாய்ப்பும் பெற்று புதுவாழ்வு
பெற்றே பெண்களும், ஆண்களும்
பூமிப் பந்தின் பல திக்குகளிலும் - பல்
வேறு நாடுகளிலும் இன்று உள்ளனர்!
நன்றியை எதிர்பார்க்காத பணி
செய்த பெரியாருக்குப் பணி செய்தே, அணி
பெற்று சமுதாயப் பிணிபோக்கி, அய்யாவுக்குப்பின்
தலைமையேற்று வழிநடத்திட்ட தங்களது
காலம் ஒரு வரலாற்று வைர வரிகளை எழுதிய
காலம் என்றால், அது மிகையல்ல!
இந்தியாவை - உலகை உலுக்கிய
இராவண லீலா - இராமன், லட்சுமணன், சீதை உருவ
எரிப்பு - இராம லீலாவுக்கு எதிர்நடவடிக்கையாக
நடத்திக் காட்டினீர்கள்!
நெருக்கடி காலம் - மிசா என்ற
சுனாமி சூறையாடிய நேரத்தில், மூங்கில் போல
இந்த ஆலமரம் இருந்ததும் வழிநடத்தியதும்
தங்களது ஒப்பற்ற தலைமைத் தத்துவத்தின் தகைசால்பு ஆகும்!
தங்களது காலத்தை வென்ற கணிப்பு,
அறக்கட்டளை - தொண்டு என்றும்
ஒளிவீசித் திகழுகின்றன!
எந்தப் பெண்ணும் தங்களிடம் கற்க வேண்டிய
எளிமை, சிக்கனம், கடும் உழைப்பு,
உறுதி குலையா தலைமைத்துவம் - பாடங்களாகும்!
அடுத்து அய்ந்து ஆண்டுகால ஓட்டத்தின்பின்,
நூற்றாண்டு விழாவை ஒரு கொள்கை
வெற்றித் திருவிழாவாக அகிலமெங்கும் கொண்டாடிட
அரிமா நோக்குடன் திரும்பிப் பார்க்கும் நாங்கள்,
முன்னேயும் பார்த்து, முழுப் பரிமாணத்தையும்
காட்ட - நிறுவத் தயங்கோம் என்ற
உறுதியேற்கிறோம் -
மார்ச் 16-ல் சோகம் இருந்தாலும் சோர்வு இன்றி
விணீக்ஷீநீலீ என்று வேக நடைபோட்டு,
பற்றுடன் பணி முடிக்க அணிவகுத்துள்ளோம்!
வாழ்க பெரியார்!
வாழ்க நம் அன்னையார்!

-------------------கி.வீரமணி ,தலைவர்,   திராவிடர் கழகம்.  சென்னை,16.3.2015
 ****************************************************************************************


இன்று அன்னை ஈ.வெ.ரா. மணியம் மையார் அவர்களின் 37ஆவது நினைவு நாள்.

ஒரு பெண் - இந்தியாவின் சமூகப் புரட்சி இயக்கம் ஒன்றுக்குத் தலைமை யேற்று, அதனைத் திறம்பட நடத்தி வரலாறு படைத்தவர் என்ற பெருமைக் கும் பெருந் திறமைக்கும் எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தவர் நம் அன்னை யார்!
தமது இளமையை, வளமையைப் பெருக்கவோ, வாழ்வை ஆடம்பரம் மூலம் வளர்க்கவோ எண்ணாது, தூய தொண்டறத்தால் முத்திரை பதித்தவர். பாடமானவர்!


வசவுகளையெல்லாம், இசையாகச் சுவைத்து இடுக்கண் மட்டுமல்ல இழிவுப் பேச்சுகளும், இச்சகங்களும் கலந்து தம் மீது வீசப்பட்ட போதெல் லாம், அதை தொண்டுக்குத் தர வேண்டிய கடும் விலை என்று சகித்து அவற்றை தமது இலட்சிய வயலுக் குரிய உரமாக ஆக்கி உயர்ந்தவர்.


ஆடம்பரம் வெறுத்த அய்யாவின் அசல் அச்சு அவர்! எளிமை என்பது இப்படித்தான் இருக்கும் என்று எவரும் புரிந்து கொள்ளும் வகையில் வாழ்ந்து காட்டிய வாழ்வியலின் தனிப்பெரும் இலக்கியம் அவர்!

இன்னா செய்தாரையும் இனிதே வரவேற்று அவர்களை நாணிடச் செய்த நல்லதோர் மானம் பாராத நற்றொண்டர் அவர்!


வசதி - குடும்ப வசதி, அய்யா பெரியார் செய்த பாதுகாப்பு ஏற்பாடு என்ற வகையில் கொடுத்த தனது சொத்து - எல்லாவற்றையும் - தந்தை பெரியாரைப் போலவே, பொது அறக் கட்டளையாக்கி, பல்வேறு தொழில் நுட்பக் கல்லூரி மருந்தியல் கல்லூரி, பல்கலைக்  கழகங்கள் போன்றவை தழைத்தோங்க வழி செய்த தனக்கென வாழாப் பிறர்க்குரியரானவர்!


எல்லாவற்றிற்கும் மேலாக தாயன்பை அதிகம் அறிந்திராத எனக்கு என்னை வளர்த்தவருக்குப் பின் இயக்கத்தில் கொள்கைத் தொட்டிலில் தாலாட்டி வளர்த்த என்னைப் பெறாது பெற்ற என் அன்னை அவர்!

எளிமை பற்றி மற்றவரும் பேசுவோம்; ஆனால் வாழும் போது, உலகியலுக்கு அடிமையாகி விடும் சராசரித் தன்மை நம்முள் எப்படியோ புகுந்து விடும்.
ஆனால், அன்னை மணியம்மையார் உடைகூட ஒரு சிறு பைக்குள் - துவைத் துள்ள மாற்றுச் சேலை, ரவிக்கை, புன்ன கையும் பொறுப்புமே அவர் அணிந்த நகைகளாகும்!


நாட்டிலே தலைவராகத் தெரிந்தாலும் வீட்டிலோ அவரே  சமைத்து எவரையும் விருந்தோம்பல் மூலம் வியக்க வைத்த பணியாளராகவே ஆக்கிக் கொண்டவர்.


1957இல் அய்யா பெரியாருக்கு ஆறு மாதம் சிறை (தண்டனை மூன்று ஆறு மாதங்கள் - அனுபவத்தில் ஏக காலம் என்பதால் 6 மாத சிறை) அப்போது அய்யாவின் ஆணைப்படி நான் அன் னையாருடன் சுற்றுப் பயணம் செய்தேன் - அவர்தம் பாசத்தைப் பரிசாகப் பெற்றேன்.


அப்போது திருச்சி பெரியார் மாளிகை நீண்ட காலம் வெள்ளை அடிக்காமலே இருந்ததை நான் உரையாடியபோது சுட்டியதனால் மாளிகையை வெள்ளை அடித்து அய்யா வரும்போது மிகவும் தூய்மைத் தோற்றத்தோடு எழிலுடன் காட்சியளிக்கச் செய்யலாமே என்று கூறினேன்.


அன்னையாரும் அதனை ஏற்று, சுண்ணாம்பு வாங்கி வந்து வெள்ளை அடித்தார் - பளிச்செனத் தெரிந்தது - பெரியார் மாளிகை (திருச்சி)
அன்னையார் உற்சாக மிகுதியால் செலவுக்கு அனுமதியைப் பெறவும் வழி செய்யவும் - சென்னை பொது மருத்துவ மனையில் (சிறை) இருந்த தந்தை பெரியாருக்கு இப்படி மாளிகைக்கு வெள்ளை அடித்துள்ளோம் இப்போது மாளிகை மிகவும் அழகாகத் தோற்றமளிக் கிறது என்று எழுதியிருந்தார்கள் - குறைந்த செலவு செய்தமைக்கு அனுமதி யையும் கோரி இருந்தார்.
அய்யா அவர்கள் அதற்கு ஒரு கடிதம் பதிலாக அன்னையாருக்கு எழுதி அனுப்பினார்கள்.


அதில் அழகாக மாளிகை இருக்கிறது என்று எழுதியிருந்தீர் மகிழ்ச்சிதான். ஆனால் ஒன்று அழகு என்றால் பணச் செலவு என்று பொருள் எனவே பார்த்துச் செய்யவும் என்று எழுதியிருந்தார்!


நீண்ட காலம் வெள்ளையடிக்கா மலிருந்தமைக்காக சுண்ணாம்பு வாங்கிஅடித்ததற்கே (இப்போது இருப்பதுபோல சுனோசெம் வண்ண வண்ணக் கலவைகள் அன்று) என்ற நிலையில்கூட அய்யாவின் சிந்தனை அப்படி.

அய்யா என்ன சொல்வாரோ என்ற பயம் கலந்த வருத்தம் என்றாலும் ஒன்றும் தவறாக அய்யா சொல்லவில்லை.


உணவில்கூட தந்தை பெரியா ருக்கு ஒரு கறிதான். ஏகப்பட்ட அயிட்டங்கள் - வீட்டில் இருக்காது! மிளகு கலந்த ஆட்டிறைச்சி பக்குவத் துடன் வேக வைத்ததை  உண்ண அன்னையார் அனுமதி கொடுப்பார் - அதை மகிழ்ச்சியோடு நன்றாகவே  உண்பார் அய்யா.


இப்படி சிக்கனம் - எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்த இவர்கள் மக்களின் அறிவுத்தாகம், கல்வித் தாகம் தீர ஊருணியாக (பொது நீர் நிலையாக) இந்த பேரறிவாளர்களின் திருவான செல்வம் அமைந்தது!

யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற உறவுகளுக்கு விட்டுச் சென்ற கொள்கைகள்  அசையாச் சொத்து - தொண்டர்கள் அசையும் சொத்து! அவர்தம் நினைவைப் போற்ற எளிமை, சிக்கனம், தொண்டறம் மேற்கொள்ளுவதே நம் மரியாதை.

              ------------------------------------ கி.வீரமணி அவர்கள் எழுதிவரும் வாழ்வியல் சிந்தனைகளிலிருந்து ஒரு பகுதி

70 comments:

தமிழ் ஓவியா said...

புருஜ் புருஷஜ்ஞ


இதைப் படிக்கும் பொழுதே இது என்ன புதுச் சொல்? புரியவில் லையே என்ற குழப்பம் வரத்தான் செய்யும். இது ஒரு சமஸ்கிருத சொல். இதன் பொருள்: மனித னைக் கொன்று நடத்தப் படும் யாகம் என்பதாகும்.

மனுசனைக் கொன்று யாகமா? இது என்னடா கொடுமை என்று திகைக்க வேண்டாம். ஆரியப் பார்ப்பனக் கலாச்சாரத்தில் காட்டு விலங்காண்டித்தனம் என்பது சர்வ சாதாரணம்.

மனிதனையே கொன்று யாகம் நடத்திய கூட்டம் தான் - பசுவதை பற்றிக் கண்ணீர் வடிக் கிறது.

மனிதர்களைக் கொன்று யாகம் நடத் தியதற்கு ஏதாவது ஆதா ரம் உண்டா? என்ற கேள்வி எழலாம். ஆதார மின்றி என்றைக்காவது விடுதலை எழுதிய துண்டா?

யஜுர் வேதம் என் பதே முழுக்க முழுக்க யாகம் பற்றிய தாண்ட வம்தான். யஜூர் வேதம் என்னென்ன யாகங்கள் - எந்தெந்த உயிர்களைக் கொன்று நடத்தப்பட வேண்டும் என்பதற்கு ஒரு நீண்ட பட்டிய லேயே தந்துள்ளது. இதில் 30 வகை யாகங்கள் தரப்பட்டுள்ளன. அதில் 11ஆவது இடத்தில் இடம் பெற்றிருப்பதுதான் மனிதர்களைக் கொன்று நடத்தும் புருஷ ஜ்ஞ யாகமாகும்.

அரிச்சந்திரன் என்கிற அரசன் புத்திரப் பேறில் லாது வருந்திக் கொண் டிருக்கும்போது வருண தேவனின் கட்டளைக் கிணங்கி அஜீகர்த்த முனிவரின் புத்திரனான சுன:சேபன் என்பவனை விலைக்கு வாங்கி அவ னைக் கொன்று நர மேத யாகம் பண்ணத் தொடங்கியது ரிக் வேதத் தில் விரிவாக எழுதப் பட்டுள்ளது.

பசுவைக் கொல் லுவதா என்று பதை பதைக்கும் பார்ப்பனக் கூட்டம் யஜுர் வேதத் தில் கூறப்படும் கோண வம் என்னும் யாகத்தில் பசு மாடு, காளை மாடு இவைகளைக் கொல்லும் யாகம் என்று கூறப்பட் டுள்ளதே!

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஒரே கலாச்சாரம் பேசும் இந்துத்துவவாதிகளுக்கு ஒரு கேள்வி உண்டு. வங்காளத்துப் பார்ப்பனர் களுக்கு முக்கிய உணவு மீன்தானே இன்றைக் கும்? பார்ப்பனர்களுக் குள் கூட ஒரே கலாச் சாரம் - இல்லையே!

சிவன் கோயில் படையல்களை வைஷ் ணவன் சாப்பிடுவ துண்டா, சொல்லுங்கள் பார்க்கலாம். கால ஓட்டத் தில் எத்தனையோ கலாச் சாரங்கள் இருந்த இடம் தெரியாமல் புதையுண்டு போயின என்பதுதானே உண்மை. எத்தனைப் பார்ப்பனர்கள் உச்சிக் குடுமியோடு அலை கிறார்கள் - சொல்லட்டும் - பார்க்கலாம்.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/97977.html#ixzz3UYdDf7nR

தமிழ் ஓவியா said...

குரங்குப் படையின் (பஜ்ரங்தள்) மதவெறி அட்டகாசம்!

பழைமைவாய்ந்த தேவாலயம் இடிக்கப்பட்டு சிலுவை இருந்த பீடத்தில் அனுமான் சிலை குரங்குப் படையின் (பஜ்ரங்தள்) மதவெறி அட்டகாசம்!

ஹிஸ்ஸார் (அரியானா) மார்ச் 16_ அரியானா மாநி லத்தில் புதுப்பிக்கப் பட்டு வந்த தேவால யத்தை இடித்து சிலுவை இருந்த இடத்தில் அனு மான் சிலை நிறுவப்பட் டது. அந்த தேவாலயத் தின் தலைமை போதகர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அடையா ளம் தெரியாத சிலரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது -_ பஜ்ரங் தள் (குரங்குப்படை).

2014-ஆண்டு அக் டோபர் மாதம் முதல் டில்லி, ராஜஸ்தான், ஒரிசா, ஜார்கண்ட், போன்ற மாநிலங்களிலும் மங்களூரூ, வடோதரா, போபால் போன்ற நகரங் களில் உள்ள கிறிஸ்த வர்களின் மதவழிபாட் டுத்தலங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வந்தன. ஜனவரி மாதம் கிறிஸ்தவ அறக்கட்டளைகள் நடத்தும் பள்ளி ஒன்று தாக்குதலுக்கு ஆளானது. இந்தப்பள்ளி மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி படித்த பள்ளி யாகும். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அரி யானா மாநிலத்தில் உள்ள ஹிஸ்ஸார் நகருக்கு அருகில் உள்ள ஒரு தேவாலயத்தை இடித்து சிலுவை இருந்த பீடத்தில் அனுமான் சிலையும், ராமர் படமும், தேவால யத்தின் கோபுரத்தில் காவிக்கொடியும் பறக்க விடப்பட்டது. இன்னோரு கரசேவையா?

இது குறித்து கோவிலின் தலைமை போதகர் சுபாஷ் சந்த் என்பவர் கூறியதாவது, சுமார் 60 ஆண்டு பழைமையான இந்தத் தேவாலயம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. அதை சரிசெய்து புதுப்பிக்கும் பணியை கடந்த சில நாட்களாக நாங்கள் மேற்கொண்டு வந்தோம். நாங்கள் புதுப்பித்துக் கொண்டு இருக்கும் போதே பங்ரங் தள் அமைப்பினர், இப் பகுதியில் இந்துக் கோவிலைத் தவிர்த்து எதுவும் இருக்கக் கூடாது, அப்படி இருந்தால் நாங்கள் அதை உடைத் தெறிவோம் என்று மிரட்டிக்கொண்டு இருந் தனர். நேற்று ஞாயிற்றுக் கிழமை சிறப்பு வழிபாடு முடிந்த பிறகு நாங்கள் வீட்டுக்குத் திரும்பி விட்டோம். ஒரு சிலர் மாத்திரமே தேவாலயத் தில் இருந்தனர். அப் போது திடீரென 60க்கும் மேற்பட்டோர், தேவால யத்தில் நுழைந்தனர். என்ன நடக்கிறது என்ற ஊகிக்கும் முன்பே கண் ணாடிகளை உடைத்தனர். தேவாலயத்தில் உள்ள கிறிஸ்தவப் படங்கள் அனைத்தையும் உடைத் தனர். பிறகு தாங்கள் கொண்டு வந்திருந்த ராமர் படங்களை ஆங் காங்கே வைத்தனர். பிறகு சிலுவை இருந்த முக்கிய பீடம் அமைந்த பகுதியை தகர்த்துவிட்டு அங்கு அனுமார் சிலையை வைத்துவிட்டு அங்குள்ள வர்களிடம் இனிமேல் இது இந்துக்கோவில் இனிமேல் இந்த இடத் தில் கிறிஸ்தவ வழிபாட் டுத்தலம் இருந்தால் வழிபடுபவர்கள் அனை வரும் அதற்கான தக்க விலைதரவேண்டி இருக் கும் என்று மிரட்டி விட்டுச் சென்று விட் டனர்.

14 பேர்மீது வழக்கு

போதகரின் புகாரை அடுத்து அடையாளம் தெரியாத 14-பேர் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். அரியானா வில் நடந்த இந்தச் சம்பவத்தை அடுத்து அரியானாவில் கிறிஸ்த வர்கள் வாழும் பகுதி களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அரி யானா முதல்வர் எந்தவித கருத்தும் கூற மறுத்து விட்டார்.

Read more: http://viduthalai.in/e-paper/97979.html#ixzz3UYdTodIW

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?


இலை

விநாயகசதுர்த்தியன்று விநாயகருக்கு 21 இலைகள் கொண்டு பூஜை செய்ய வேண்டு மாம். ஏன் 22 இலைகளில் பூஜை செய்தால் விநா யகர் வேண்டாம் என் பாரா? அது என்ன 21 அரளி இலையில் படைத் தால் வெற்றியாம். எருக்கு இலையில் படைத்தால் தோல்வி ஏற்பட்டு விடுமோ! என்னே உளறல்!

Read more: http://viduthalai.in/e-paper/97980.html#ixzz3UYddqcJR

தமிழ் ஓவியா said...

விளை நிலங்கள் விலை நிலங்களா?

இந்தியா ஒரு விவசாய நாடு என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். விளைநிலங்கள்தான் விலை மதிப்பில்லா நிலங்கள் என்ற நிலை இருந்ததெல்லாம் உண்மைதான். ஆனால், அவை விலை நிலங்களாக மாறிப் போன கொடுமையை என்ன சொல்வது!

கிராமத்தில் ஒருவர் செல்வந்தர் என்று நினைப்பது அவர்களுக்கு நில உரிமை இருப்பதுதான். அந்தக் காலக் கணக்குப்படி ஒரு குழி நிலம் இருந்தாலே தலை நிமிர்ந்து நடப்பார்.

இந்த நிலை இன்று தலைகீழாகப் போய் விட்டது; விளை நிலங்கள் ரியல் எஸ்டேட் என்கிற வியாபார வலைக்குள் சிக்கி விட்டது. பயணம் செய்பவர்கள் பல விளம்பரப் பலகைகளைப் பார்க்கலாம்; ரியல் எஸ்டேட் விளம்பரம் - வீட்டு மனை விற்பனை என்று பதாகையைப் பார்க்க முடியும். நெல் வளர்ந்த வயல்களில் கான்கிரீட் வீடுகள் ஓங்கி நிற்கின்றன.

கிராமங்கள் நகர்ப்புறமாவது என்பது இந்த வகையில் தான் இருக்கிறது. 2001க்கும் - 2011க்கும் இடையில் 8,67,502 தமிழ் நாட்டின் விவசாயிகள் தங்களின் வேளாண் தொழிலைக் கை விட்டு விட்டனர்.

வீட்டு மனைகளாக விற்க வேண்டுமானால், அவை விளை நிலங்கள் அல்ல என்ற தடையில்லாச் சான்றிதழ் வேளாண் துறை இணை இயக்குநரிடம் பெற வேண்டும் என்றிருந்த நிபந்தனைகள் எல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய் ஆகி விட்டன.

குறிப்பாக தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் என்பது நலிந்த ஒன்றாகி விட்டது. காவிரி நீர் உரிமையைப் பறி கொடுத்ததால், நிலத்தை நம்பி வாழ்ந்த விவசாயிகள் கண்ணீர் உகுக்கும் நிலை. எத்தனை எத்தனையோ போராட்டங்கள் நடத்தப் பட்டன. அரசுகள் அனைத்துக் கட்சி மாநாடுகளைக் கூட்டித் தீர்மானங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்ட துண்டு.

அனைத்துக் கட்சிக் குழு இந்தியப் பிரதமர், குடியரசு தலைவரைச் சந்தித்து மனுக்கள் கொடுத்துக் கொடுத்து அலுத்துப் போனதுதான் மிச்சம்.

ஆணையங்கள் அமைக்கப்பட்டன - உச்சநீதி மன்றம் வரை சென்று பார்த்தாகி விட்டது; தீர்ப்புகள் எல்லாம் நியாயத்தின் அடிப்படையில், உரிமையின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு ஓரளவுப் பச்சைக் கொடிதான் காட்டப்பட்டன. ஆனால், சட்டத்தை, தீர்ப்புகளை மதிக்கும் மனப்பான்மை என்பது வற்றிப் போய் விட்டது. சட்ட ஆட்சி என்பது கேள்விக் குறியாகி விட்டது. உச்சநீதி மன்ற தீர்ப்பைக் குப்பைக் கூடையில் கசக்கி எறிந்து விட்டு கருநாடக மாநில அரசும், கேரள மாநில அரசும் அணைகளைக் கட்டும் வேலையைத் தொடங்கு கின்றன.

இதில் வெட்கப்படத்தக்கது என்னவென்றால் மத்திய அரசுக்கு உட்பட சுற்றுச்சூழல் துறை அத்தகைய சட்ட விரோத அணைகளைக் கட்டுவதற்குத் தடையில்லாச் சான்றுகளையும் வழங்குவதுதான்.

மத்திய அரசு, இதில் சட்டத்தையும், நீதிமன்ற தீர்ப்பையும் பொருட்படுத்துவதில்லை; மாறாக அரசியல் கண்ணோட்டம் என்பதுதான் எகிறி நிற்கிறது.

இதில் இன்னொன்றுண்டு; அகில இந்திய தேசியம் பேசும் கட்சிகள் இந்த விடயத்தில் மட்டும் மாநில உரிமை என்னும் கூண்டுக்குள் முகத்தைப் புதைத்துக் கொள்கின்றன.

தமிழ் ஓவியா said...

சரி, நதி நீர் தான் கிடைக்கவில்லை; நிலத்தடி நீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றால் மின்சாரப் பஞ்சம் இன்னொரு புறத்தில் இடி தாக்குதல்.

இவ்வளவையும் தாண்டி விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசையோ, எண்ணமோ எந்த விவசாயிக்குத்தான் ஏற்படக் கூடும்?

தமிழ்நாட்டில் உள்ள மூன்று கோடியே 25 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய நிலங்கள் மட்டும் ஒரு கோடியே 27 லட்சம் ஏக்கராகும். விளை நிலங்கள் காணாமற் போனது கடந்த 30 ஆண்டுகளில் 15 லட்சம் ஏக்கராகும். பாசன வசதியுள்ள நிலம் 2004ஆம் ஆண்டில் 52.44 லட்சம் ஹெக்டராக இருந்தது. அது இப்பொழுது 48 லட்சம் ஹெக்டராகக் குன்றிப் போனது.

இந்த லட்சணத்தில் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம். விவசாய நிலங்கள் விதி விலக்கல்ல. விவசாயிகளின் அனுமதியில்லாமலேயே அரசு அவர்களின் நிலங்களைப் பிடுங்கிக் கொள்ளலாம் நட்ட - ஈடு என்பது அரசு நிர்ணயித்ததுதான்.

விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கி கார்ப்ப ரேட்டுகளிடம் ஒப்படைக்கும் ஓர் அரசு மத்தியில் வந்துள்ளது. அப்படி ஒப்படைக்கப்பட்ட நிலங்களை முழுவதுமாக கார்ப்பரேட்டுகள் பயன்படுத்துவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

சிறீபெரும்புதூரில் 1000 ஏக்கருக்கு மேல் வெளிநாட்டு நிறுவனத்துக்குத் தாரை வார்க்கப்பட்டு, இன்று திடீரென்று ஆலையை இழுத்து மூடி விட்டது; அதனை நம்பி வாழ்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாளர்கள் நடுத் தெருவில் நிற்கின்றனர். திண்டுக்கல் சிப்காட்டுக்காக ஒதுக்கப்பட்ட 500 ஏக்கர் நிலம் தூங்கி வழிந்து கொண்டுள்ளது.

குஜராத்தில் துறைமுகத்திற்காக அதானிக்கு 5.47 கோடி சதுர மீட்டர் நிலம், சதுர அடி ஒன்றுக்கு ரூ.32 வீதம் தாரை வார்த்தார் அன்றைய குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடி. அதில் 98.6 லட்சம் சதுர அடிகளை மாத்திரம் பயன்படுத்திக் கொண்டு மீதி 4 கோடி சதுர அடிக்கு மேற்பட்ட நிலத்தை சதுர அடி ரூ.400க்கு விற்று கோடிக்கணக்கில் சுருட்டியது அதானிக் குழுமம்.

அதற்குக் காரணமான குஜராத் முதல்வர் மோடிதான் இப்பொழுது இந்தியாவுக்கான பிரதமர் - நாடு எங்குப் போய்க் கொண்டு இருக்கிறது?
சிந்தியுங்கள்!

Read more: http://viduthalai.in/page-2/97984.html#ixzz3UYdtcPYY

தமிழ் ஓவியா said...

தேர்வு காலம் என்பதால் கோயில் கலை நிகழ்ச்சிகள் தள்ளி வைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கொத்த மங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு கடந்த பிப். 1-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. 7.60 லட்ச ரூபாய் செலவு செய்து ஹெலிகாப்டர் கொண்டு வந்து வானத்தில் பறக்க விட்டு பூ தூவும் நிகழ்ச்சியெல்லாம் நடந்தது. அதன் பின்னர் 48 நாட்களுக்கு மண்டகப்படிதாரர்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அன்னதானம், இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடத்துவதென தீர்மானிக் கப்பட்டது. (அவ்வாறு 48 நாட்களுக்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தவில்லை என்றால் ஊருக்கு ஆகாதாம்) அதன்படி நிகழ்ச் சிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் சல தினங்களில் நிகழ்ச் சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இதுகுறித்து கொத்தமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டியன் கூறுகையில் மண்டலாபிஷேகத்திற்கு கோவிலில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது நிறுத்தப்பட்டது உண்மைதான். கொத்த மங்கலத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியானது கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பிளஸ்டூ மற்றும் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் முழுத்தேர்ச்சி பெறுவதோடு மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் சிறப்பு பெற்று வருகின்றன.

அதற்காக கடந்த காலங்களில் பொதுத் தேர்வுக்கு சிறப்பு வகுப்பு தொடங்கினாலே பொதுத்தேர்வு எழுதும் மாணவ - மாணவியரின் வீடுகளில் கேபிள் இணைப்பு துண்டிக்கப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு வகுப்புகளுக்கு கிராமத்தினரே முன்னின்று உதவிகளை செய்வதுபோன்ற பல்வேறு வகைகளில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கல்வியல் முன்னேற்றம் காண்பதற்கும் அதிக தேர்ச்சி பெறுவதற்கும் மாணவ - மாணவியரும் அவர்கள்தம் ஆசிரியர்களும் முழு முயற்சி எடுக்கிறார்கள் என்பதோடு கிராமத்தில் உள்ளவர்கள் தேர்வுக்கு முன்னும் தேர்வு முடிவுகளுக்குப் பின்னும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பாராட்டி பரிசுகள் ஏராளமாக வழங்கி வருகிறார்கள். மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ மாணவியருக்கு ரூபாய் 50-ஆயிரமும் அதற்குக் குறைவாகப் பெறும் மாணவ மாணவியருக்கு கடந்த ஆண்டைப் போலவே எனது சார்பில் அவர்களுக்கு உரிய பரிசுகளும் வழங்க உள்ளேன். இன்னும் பலரும் பரிசுகள் வழங்கக் காத் திருக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த 5-ம் தேதியி லிருந்து பிளஸ்டூ பொதுத்தேர்வு தொடங்கி யுள்ளது. இதில் இரண்டு பள்ளிகளிலும் சுமார் 400 பேர் தேர்வெழுதுகின்றனர். இந்நிலையில் இங்குள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஒலி பெருக்கிகளைக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் மாணவர்களின் கவனம் சிதறும். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால் அத்தகைய நிகழ்ச்சிகளை பொதுத்தேர்வு முடியும் வரை நடத்துவதில்லை என கிரா மத்தினரே முடிவெடுத்துள்ளனர் என்றார்.
கிராமத்தினரின் முற்போக்கான இத்தகைய முடிவினால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

- ம.மு.கண்ணன்

Read more: http://viduthalai.in/page-2/97987.html#ixzz3UYeIEcl7

தமிழ் ஓவியா said...

துக்கத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவே - படத்திறப்புகள்


எங்களுடைய குடும்ப உறுப்பினராக இருப்பவர் ஓட்டுநர் அசோக் குமார்

துக்கத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவே - படத்திறப்புகள்

அசோக் குமாரின் தந்தையார், பாட்டியார் படத்திறப்பு விழாவில் தமிழர் தலைவர் நெகிழ்ச்சியுரை


உரத்தநாடு, மார்ச் 16- எனது வாகன ஓட்டுநராக இருக்கக் கூடிய அசோக்குமார் எங்கள் குடும்பத்து உறுப்பினர், அவர்களுடைய தந்தையார், பாட்டியார் உருவப் படங்களைத் திறந்து வைப்பது என்பது - இழப்பால் ஏற்படும் துன்பத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவே என்று குறிப்பிட்டார் தமிழர் தலைவர்

ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

தமிழர் தலைவர் அவர்களின் ஊர்தி ஓட்டுநர் கு.அசோக் குமாரின் பாட்டி மெ.தங்கம்மாள், தந்தையார் சி.குப்புசாமி ஆகிய இருவரது படத் திறப்பு நிகழ்ச்சி 1.3.2015 அன்று மாலை 6.30 மணிக்கு உரத்தநாடு அருகிலுள்ள பாளம் புத்தூரில் நடைபெற்றது.

கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கு.அசோக்குமாரின் பாட்டி மெ.தங்கம்மாள், தந்தையார் குப்புசாமி ஆகியோரது படத்தினைத் திறந்து வைத்து, வீரம்மாள், அசோக்குமார் சகோதரர்கள் கு.கணேசன், கு.முருகேசன், கு.சிவசாமி, கு. அர்ச்சுனன், கு.அசோக்குமார் ஆகியோருக்கு ஆறுதல் கூறி நினைவுரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

மிகுந்த சோகத்திற்கிடையில் நடைபெறக்கூடிய இரு பெரும் பெரியவர்கள் இந்தப் பகுதியில் அன்பிற்குரிய ஒரு மூதாட்டியாக வாழ்ந்து, 104 வயதுவரை வாழ்ந்து, அதி லேயே ஒரு வரலாற்றை உருவாக்கி மறைந்த அருமைத் தங்கம்மாள் அவர்கள், அதுபோல, அவர்களால் தூக்கி வளர்க்கப்பட்டு, மிகப்பெரிய அளவில் சிறப்பான வகையில் வாழ்ந்து, ஒரு பெரிய குடும்பத் தலைவராக இருந்து மறைந்த அய்யா திரு.குப்புசாமி ஆகியோருடைய படத்திறப்பு நிகழ்ச்சிகள் என்கிற பெயரால், இந்தக் குடும்பத்தைப் பார்த்து ஆறுதல் கூறவும், அவர்கள் அனைவருக்கும் இந்தப் பிரிவாற்றாமையால் இருக்கக்கூடிய சோகத்தைத் தணிப்பதற்கும், இரங்கல் தெரிவித்து வீர வணக்கம் செலுத்தக்கூடிய இந்தப் படத்திறப்பு நிகழ்விற்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், முதுபெரும் பெரியார் தொண்டருமான அய்யா ராசகிரி கோ.தங்கராசு அவர்களே,

தமிழ் ஓவியா said...

இந்தக் குடும்பத்தைக் கட்டிக் காத்துக் கொண்டிருக்கக்கூடிய அன்பிற்குரிய அம்மையார் வீரம்மாள் குப்புசாமி

இந்நிகழ்ச்சியில், நேரிடையாக பாதிப்புக்கு ஆளாகி யிருக்கக்கூடிய, தன்னுடைய வாழ்விணையரை இழந்து, இந்தக் குடும்பத்தைக் கட்டிக் காத்துக் கொண்டிருக்கக்கூடிய எல்லா வகையிலும் சிறப்புடைய அத்துணை பிள்ளை களையும், பெயரப் பிள்ளைகளையும் கட்டிக் காத்துக் கொண்டிருக்கக்கூடிய அன்பிற்குரிய அம்மையார் வீரம்மாள் குப்புசாமி அவர்களே,

அவர்களுடைய அன்பு செல்வங்களாக, ஒரே நேரத்தில் இங்கே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நண்பர் சொன்ன தைப்போல, இழக்கக்கூடாத சோகம் ஒரு வீட்டில் நடை பெறுகிறது என்றால், அது அடுத்தடுத்து நடக்கும்பொழுது, எவ்வளவு வயதானவர்களாக இருந்தாலும், அதனை எளிதில் ஏற்றுக்கொள்வது என்பது மிகக் கடினமான ஒன்று. அந்தச் சூழ்நிலையை இங்கே ஏற்றிருக்கக்கூடிய அருமை நண்பர்கள் கணேசன் அவர்களே, முருகேசன் அவர்களே, சிவசாமி அவர்களே, அர்ஜுனன் அவர்களே, அசோக் குமார் அவர்களே, அவர்களுடைய சகோதரிகளே, குடும் பத்தார்களே, நண்பர்களே, இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பாக இரங்கலுரை ஆற்றி அமர்ந்துள்ள தெலுங்கன் குடிகாடு ஊராட்சி மன்றத் தலைவர் அருமை சகோதரர் மஞ்சு ராமச்சந்திரன் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் இணைச் செயலாளர் அருமை சகோதரர் ராமலிங்கம் அவர்களே, சி.பி.எம். ஒன்றியச் செயலாளர் சுரேஷ்குமார் அவர்களே, தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் அவர்களே, ஒன்றிய தொண்டரணிச் செயலாளர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மலர்மன்னன் அவர்களே, விவசாய அணியின் செயலாளர் இளங்கோவன் அவர்களே, திரா விடர் கழகத்தினுடைய மாவட்டச் செயலாளர் அருணகிரி அவர்களே, ஒன்றியச் தலைவர் லட்சுமணன் அவர்களே, ஒன்றிய செயலாளர் துரைராஜ் அவர்களே, நகரச் செயலாளர் அரசிளங்கோ அவர்களே, நகரத் தலைவர் ரவிச்சந்திரன் அவர்களே, நம்முடைய இந்தப் பகுதியைச் சேர்ந்த பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் நல்.இராமச்சந்திரன் அவர்களே, பகுத்தறி வாளர் கழகப் பொதுச்செயலாளர் வடசேரி இளங்கோவன் அவர்களே, கழகத்தின் பொதுச்செயலாளர்கள் ஜெயக் குமார் அவர்களே, குணசேகரன் அவர்களே, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சிட்டிபாபு அவர்களே, பல்வேறு அமைப்புகளிலிருந்தும் வந்திருக்கக்கூடிய அருமைப் பெரியோர்களே, தாய்மார்களே, தோழர்களே, நண்பர்களே உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே இரங்கலுரையாற்றியவர்கள் சொன்னதைப் போல, மிகப்பெரிய ஒரு சோகமான நிகழ்வில் வந்து இந்த ஊரில் உங்களையெல்லாம் சந்திக்கக்கூடிய அனுபவம் இப்பொழுது எனக்கு ஏற்பட்டிருக்கிறது. ஏறத்தாழ, ஓராண்டுக்கு முன்பு என்று நினைக்கின்றேன், இந்தக் குடும்பத்தில் நடைபெற்ற ஒரு மணவிழாவிற்கு ஒரத்த நாட்டிற்கு வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன். எனக்கு மிக நன்றாக நினைவிருக்கிறது. அசோக் அவர்களுடைய தங்கை என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு, அது மகிழ்ச்சிகரமான வாய்ப்பாகும். இது மிகவும் சோகமும், துன்பமும் நிறைந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும், இங்கே நண்பர்கள் சொன்னார்கள், நான் வந்ததைப்பற்றி, படத் திறப்பில் கலந்துகொள்வதைப்பற்றி. இந்தப் படத்திறப்பு நிகழ்ச்சி இல்லையென்று என்று சொன்னாலும்கூட, தஞ்சைக்கு வரும்பொழுது, இந்தக் குடும்பத்தவர்களைப் பார்த்து ஆறுதல் கூறிவிட்டுச் செல்லவேண்டும் என்றுதான் நான் திட்டமிட்டிருந்தேன். அதோடு இந்தப் படத் திறப் பையும் இங்கே வருகின்ற நேரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் சொன்னவுடன், நான் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அவசரமாக சென்னைக்குச் செல்லவிருக்கிறேன்.

இங்கே உரையாற்றிய நண்பர்கள், நாங்கள் நினைத்த கருத்தை எடுத்துச் சொன்னார்கள். பொதுவாக அசோக் அவர்களின் மூலமாகத்தான் இந்தக் குடும்பத்தைப்பற்றி எனக்குத் தெரியும். அதிலும், நம்முடைய ஒரத்தநாட்டைச் சேர்ந்த பொதுச்செயலாளர்கள் ஜெயக்குமார் அவர்களானா லும், குணசேகரன் அவர்களானாலும் மற்ற நம்முடைய தோழர்களானாலும் இந்தக் குடும்பத்தைப்பற்றி என்னிடத் தில் அதிகம் சொல்வார்கள். நான் முழுவதையும் தெரிந்து கொள்வது கிடையாது.

அசோக் அவர்கள் பெரியார் திடலுக்கு வருவதற்குக் காரணம் ராஜேஷ் கண்ணா அவர்கள்தான்

அசோக் அவர்கள், சென்னை பெரியார் திடலுக்குப் பணியாற்றுவதற்காக வந்தபொழுது, மறைந்த நினைவில் என்றைக்கும் இருக்கின்ற ராஜேஷ் கண்ணா அவர்கள் தான், அசோக் அவர்களை அழைத்து வந்து, இன்றைக்கு இந்த அளவிற்கு எங்களுக்குப் பயன்படக் கூடிய அளவில் செய்தவர். அவருடைய நினைவை இந்த நேரத்தில் நன்றி யோடு நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இந்தக் குடும்பத்தினுடைய சிறப்பு என்ன என்பதுபற்றி இங்கே உரையாற்றிய அனைத்து நண்பர்களும் மிகச் சிறப்பாக எடுத்துச் சொன்னார்கள்.

தமிழ் ஓவியா said...

இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிலும் அவர்களுடைய பாட்டியார் அவர்கள் 104 வயது வாழ்ந் திருக்கிறார். அதுவே சாதாரணமான வாழ்க்கை அல்ல. இன்றைக்கு 100 வயதைத் தாண்டுவது என்பது பெரிய செய்தியாகும். ஏனென்றால், இன்றைக்கு அப்படிப்பட்ட வாழ்க்கை முறை இருக்கிறது. ஆனால், அவர்கள் எல்லாம் கடுமையாக உழைத்தவர்கள், பாடுபட்டவர்கள், அது மட்டுமல்ல, இவ்வளவு பேர்களை அவர் தயாரித்திருக் கிறார். அவருடைய தந்தையாரை அவர்தான் வளர்த்தார் என்கிற வரலாற்றை இங்கே எடுத்துச் சொன்னார்கள்.

என்னுடைய தாயாரை நான் பார்த்ததே கிடையாது

பிறப்புத் தாயார், வளர்ப்புத் தாயார் என்று பிரிக்க வேண்டிய அவசியமில்லை. எப்பொழுதுமே பெற்றவர் களைவிட, வளர்த்தவர்களின்மீது பாசம் மிகவும் அதிகமாக இருக்கும். எனக்கும் அந்த அனுபவம் உண்டு. அதனால் தான் நான் தெளிவாகச் சொல்கிறேன். என்னுடைய தாயாரை நான் பார்த்ததே கிடையாது. நான் பிறந்த ஒரு சில மாதங்களிலேயே இறந்துவிட்டார். நான் கடைசி மகன், அசோக் போலவே; அதற்குப் பிறகு என்னுடைய தந்தை யார் அவர்கள் இரண்டாவது திருமணத்தை செய்த நிலை யில், அவர்கள்தான் என்னை ஆளாக்கி, வளர்த்தவர்கள். என்னுடைய 10, 15 வயதுவரையில் எந்தவிதமான வித்தியா சமே எங்கள் குடும்பத்தில் கிடையாது. எங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பம்தான். ஆனால், இந்தக் குடும்பம் அள விற்குப் பெரியதல்ல. மூன்றே பேர்தான் சகோதரர்கள்.

நீண்ட காலமாக அவர்தான் என்னை வளர்த்தவர். என்னுடைய தாயார் இறந்து போனார் என்ற தகவலே எனக்குத் தெரியாது. மற்றவர்கள் சொல்லித்தான், எனக்குத் தெரிய வந்தது. அதுபோல, பாசம் அதிகமாக இருந்தது. ஆகவேதான், பெற்றவர்கள், வளர்த்தவர்கள் என்று கோடு போடவேண்டிய அவசியமில்லை.

எங்களுடைய குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே இருப்பவர் அசோக்

அசோக் அவர்கள், என்னிடம் உள்ள மரியாதையின் காரணமாக, தங்களைப்பற்றி பேசமாட்டார்; தகவல்கள் சொல்லமாட்டார். மற்ற நண்பர்கள்மூலமாக இதுபோன்ற துயரச் செய்தி வந்தவுடன், அவருடைய குடும்பத்தைப்பற்றி விசாரித்துக் கொண்டிருந்தபோது சொன்னார். என்னைவிட, என்னுடைய துணைவியாரிடம் நன்றாகப் பேசுபவர். எங்களைப் பொறுத்தவரையில், அசோக் அவர்கள், குடும் பத்து உறுப்பினர் போன்றவர். இங்கே உரையாற்றியவர்கள் சொல்லும்பொழுது, மெய்க்காவலர் என்று சொன்னார்கள், என்னைப் பாதுகாக்கக் கூடியவர் என்று சொன்னார்கள், என்னுடைய பெருமைமிகுந்த ஓட்டுநர், சிறப்புமிகுந்த ஓட்டுநர் என்பதெல்லாம் இருந்தாலும்கூட, இவை எல்லா வற்றையும்விட, எங்களுடைய குடும்பத்தில் ஒரு உறுப்பின ராகவே அசோக் அவர்கள் என்றைக்கும் திகழக்கூடியவர். மிகவும் முரட்டுத்தனமானவர் என்று இங்கே சொன்னார் கள். அது மிகவும் உண்மை. நான் அவருக்கு லகான் போட்டு வைத்திருக்கிறேன்.

இரண்டு நாள்களுக்கு முன்பு அவரோடு பேசிக் கொண்டு வரும்பொழுதுதான் நான் அவருடைய குடும்பத் தைப் பற்றியும், தாயாரைப்பற்றியும் விசாரித்தேன். பிறகு நண்பர்கள்மூலம் விசாரித்தேன், அவர்களுடைய பாட்டி இறந்தவுடன், சில நாளிலேயே அவருடைய தந்தையார் இறந்ததைப்பற்றி அறிந்தேன்.

எடுத்துக்காட்டான குடும்பமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது

தமிழ் ஓவியா said...

எனக்கு அசோக் அவர்களுடைய குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் சொல்லவேண்டும் என்று நினைத்தேன். ஏனென்றால், இந்தக் குடும்பம் ஒரு கூட்டுக் குடும்பம்; அய்ந்து சகோதரர்; மூன்று பெண்கள். அதிலேயும் ஒரு பிள்ளைக்குக் கொஞ்சம் உடல்நிலை சரியில்லை. அதை யெல்லாம் அவர் கண்காணிக்கக்கூடிய அளவில் இருந்து கொண்டு, விவசாயத்தையும் கவனித்துக்கொண்டு, அசோக் அவர்களுடைய சகோதரர்களுக்கு எல்லாம் திருமணம் முடிந்து, குழந்தைகள் எல்லாம் பெற்று, இந்தக் குடும்பம் எடுத்துக்காட்டான குடும்பமாகத் திகழ்ந்து கொண்டிருக் கிறது என்பதைப் பெருமையோடு இந்த நேரத்தில் சொல்லவேண்டும். இந்த வட்டாரத்திற்கு மட்டுமல்ல, நாட்டுக்கே!

வாழ்வியல் சிந்தனையில் நான் எழுதினேன், பல குடும்பங்கள் கூட்டுக் குடும்பங்களாக அல்ல; பூட்டுக் குடும்பங்களாக உள்ளன. இப்பொழுது செல்போன், தொலைக்காட்சியெல்லாம் வந்த பிறகு, நம்மை நாசப்படுத்துகிற அளவிற்கு, குடும்பங்களைக் கெடுப்பதில் அதுவும் ஒரு காரணமாகும்.

நம்முடைய பெயரப் பிள்ளைகள் எல்லாம், எப்பொழுது பார்த்தாலும் தொலைக்காட்சியைத்தான் பார்த்துக் கொண் டிருப்பார்களே தவிர, அடுத்தவர்களிடம் பேசமாட்டார்கள். சாப்பிடும்பொழுதுகூட, என்ன சாப்பிடுகிறோம், என்ன உள்ளே போகிறது என்பதுகூட தெரியாமல் தொலைக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஒரு குடும்பத்தில் உள்ளவர்களே தனித்தனியாக வாழ்வது. இதுபோன்ற நவீன வாழ்க்கை. இது நகரத்தில் மட்டுமல்ல, கிராமங்களில்கூட இந்த மாதிரியான ஒரு நோய் பரவியுள்ள ஒரு காலகட்டத்தில், இந்தக் குடும்பம், அய்ந்து ஆண் பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி, மூன்று பெண்களுக்கும் திருமணமாகி, அவர்களுக்கு எல்லாம் பிள்ளைகள் பிறந்து, இன்னும் அசோக் அவர்களுடைய தாயார்தான், பொருளாதாரத்தில் நிதியமைச்சராக இருந்துகொண்டு இந்தக் குடும்பத்தை வழிநடத்துகிறார்கள் என்றால், அது பாராட்டத்தக்கது. இது ஒரு அதிசயிக்கத்தக்க ஒரு நிலை. பிள்ளைகள் அவ்வளவு கட்டுப்பாடாக இருக்கிறார்கள்.

அரிய பட்டங்கள் பெற்றவர்களுக்குக்கூட சுருக்கமான உள்ளம்தான் இருக்கிறது

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், அசோக் அவர்கள் இரண்டு நாள்களுக்கு முன்புதான் சொன்னார், அய்யா நாங்கள் எல்லாம் சிறிய பிள்ளைகளாக இருக்கும் பொழுது, எங்கள் தந்தையார் முரட்டுப்பிள்ளைகளாகத் தான் வளர்த்தார். ஊரிலே எங்கள் குடும்பம் என்றால், ஒருவித பயம்தான் இருக்கும். இவ்வளவு முரட்டுத்தனமாக வளர்க்கப்பட்ட பிள்ளைகள், தாயினுடைய சொல்லைத் தட்டாமல், இவ்வளவு பேரும் வந்திருப்பதை நாம் கண்டிப்பாகப் பாராட்டவேண்டும். அந்த அம்மையாரின் சிறந்த நிர்வாகத்தன்மைதான் காரணம். அவர்கள் ஒன்றும், கல்லூரியில், பல்கலைக் கழகத்தில் சென்று பட்டம் பெற்ற வர்களும் அல்ல. எவ்வளவுக்கெவ்வவு அரிய பட்டங்கள் பெற்றவர்களுக்குக்கூட சுருக்கமான உள்ளம்தான் இருக்கிறது, விரிவான உள்ளம் பெற்றவர்கள் அல்ல.
எனவே, படிப்பிற்கும், வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை, பல நேரங்களில். வாழ்க்கை என்பது ஒரு அனுபவம். அதற்கு இந்தக் குடும்பம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இதைவிட ஒரு நல்ல பல்கலைக் கழகம் வேறு எதுவும் கிடையாது. அப்பேர்ப்பட்ட ஒரு பெருமைக்குரிய குடும்ப மாகும் இது. அந்த அம்மையார் சொன்னால், பிள்ளைகள் யாரும் தட்டுவது கிடையாது. இன்னமும் வரவு - செலவு திட்டங்கள் எல்லாம் அவர்களிடம்தான் என்பதை இங்கே பெருமையாக எடுத்துச் சொன்னார்கள். இந்தப் பிள்ளைகள் எல்லாம் அவ்வளவு கட்டுப்பாடு மிக்கவர்கள். அடுத்து அவர்களின் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய வேண்டிய கட்டம் வந்தாலும், அந்த அம்மையார்தான் அதற்கு முதன்மையாக இருப்பார்கள் என்பதையும் இங்கே எடுத்துச் சொன்னார்கள். இதுதான் பழைய காலத்து முறையும்கூட.

தமிழ் ஓவியா said...

நான் அசோக் அவர்களிடம் பேசிக் கொண்டுவரும் பொழுது அவர் சொன்னார், அய்யா எங்களுடைய நில புலன்கள் எல்லாவற்றையும் எங்கள் பெற்றோர்கள்தான் கவனித்துக் கொண்டு வந்தார்கள். என்னுடைய சகோதரர் கள் அதற்கு உதவி செய்வார்கள். நாங்கள் யாரும் நில புலன்களைப் பிரிக்கவில்லை. சகோதரர்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள் என்று சொன்னார்.

நான் உடனே ஒரு கேள்வி கேட்டேன், மிகவும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. என்னுடைய சந்தேகத்தை உன்னிடம் கேட்கிறேன், நிறைய குடும்பத்தில் பிரச்சினை கள் ஏற்படுகின்றன. அதையும் நான் பார்த்திருக்கிறேன். அண்ணன், தம்பிகள் இருக்கின்ற குடும்பங்கள் ஒன்றாக இருந்தாலும், அவர்களுக்கு வருகின்ற மனைவிகளால் பிரச்சினைகள் வந்துவிடுகிறதே, பல குடும்பங்களில், இதுபோன்ற பிரச்சினைகள் உங்கள் குடும்பத்தில் இருக்கிறதா? என்று.

தமிழ் ஓவியா said...


அந்தப் பெருமை இங்கே படங்களாக இருப்பவர்களைத்தான் சேரும்

உடனே அசோக் சொன்னார், அப்படியெல்லாம் இல்லீங்க அய்யா என்று. ஆனால், சில சிறிய பிரச்சினைகள் அவ்வப்பொழுது வரும், அதனை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள் என்று.

அசோக் அவர்களுடைய சகோதரர்களைப் பாராட்டு வதைவிட, அவர்களுடைய துணைவியார்களைப் பாராட்ட வேண்டும். அதுதான் மிகவும் முக்கியமாகும். ஏனென்றால், பிள்ளைகள் சண்டை போட்டாலும், பழி பெண்கள்மீதுதான் வந்து சேரும்.

அசோக் சொன்ன பதிலால், எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. இது தொடரவேண்டும். எப்பொழுதும்போல, உங்கள் குடும்பம் எடுத்துக்காட்டான குடும்பமாகத் திகழ வேண்டும்.

அந்தப் பெருமை இந்த இரண்டு படங்களைத் திறந்து வைத்திருக்கிறேன் பாருங்கள், அவர்களுக்குத்தான் சேரும். இன்றைக்கு அவர்கள் இல்லை என்கிற குறைபாட்டினை, வீரம்மாள் அம்மையார் அவர்கள், இந்தக் குடும்பத்தினை முன்னின்று நடத்திக் கொண்டிருப்பது என்பது பாராட்டத் தகுந்தது. இதுபோன்ற ஒற்றுமையுள்ள குடும்பம், கடுமையாக உழைக்கின்ற குடும்பம், அதிலும் கிராமத்தில் இருக்கின்ற குடும்பம், எடுத்துக்காட்டான குடும்பமாகும்.

என்னதான் வயதாகி இருந்தாலும், அவர்களை இழப்பதற்கு யாருக்கும் துணிவு வராது

அசோக் அவர்களுடைய பாட்டி, 104 வயது வரை நிறை வாழ்வு வாழ்ந்திருக்கிறார்கள். என்னதான் வயதாகி இருந்தாலும், அவர்களை இழப்பதற்கு யாருக்கும் துணிவு வராது. அதேபோன்று, அசோக் அவர்களுடைய தந்தை யார், எல்லா பிள்ளைகளையும் ஆளாக்கியிருக்கிறார். அவருடைய கடமையை நன்றாக செய்திருக்கிறார். அசோக் அவர்களைப் பார்த்தீர்களேயானால், எங்களிடம் பணிக்குச் சேர்ந்த பிறகு, அமைதியாக, அடக்கமாக, எங்களுடைய வீட்டுப் பிள்ளைகளில் ஒருவராக இருக்கக் கூடிய அவருடைய இந்தக் குடும்பம் மிகவும் சிறப்பான குடும்பமாகும்.

தமிழ் ஓவியா said...

இந்தப் படத்திறப்பு நிகழ்ச்சியின்மூலம் அவருடைய குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் சொல்லவேண்டும்; இதுபோன்று ஒவ்வொரு குடும்பமும் இருக்கவேண்டும். ஏனென்றால், இப்பொழுது நம்முடைய நாட்டில் மிகவும் ஆடம்பரமாக திருமணங்கள் நடைபெறுகின்றன. அடுத்த மூன்று அல்லது ஆறு மாதங்களில் அந்தக் குடும்பங்களில் பிரச்சினைகள் எழுந்துவிடுகின்றன. அதுபோன்று இல்லாமல், இந்தக் குடும்பம் ஒரு பெரிய ஆலமரம் போன்று உள்ளது. விழுதுகள் போன்று பிள்ளைகள் அதனைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஒற்றுமையும், பரஸ்பர அன்பும், ஒருவருக்கொருவர் தாய்மார்கள், சகோதரிகள் உள்பட எல்லோரும் இருக்கவேண்டும். நம்முடைய வாழ்க்கை என்பது பிறருக்காகப் பாடுபடவேண்டும் என்பதுதான் மிக முக்கியமானதாகும். நமக்காக மட்டுமே நம்முடைய வாழ்வு என்பதல்ல. பகுத்தறிவு என்றால் என்ன? என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்லும்பொழுது ஒரே ஒரு கருத்தைச் சொன்னார்.

ஒரு குருவி கூடு கட்டுகிறது; யாருக்காக அது கூடு கட்டுகிறது? அதற்காக மட்டும்தான் கூடு கட்டுகிறது. இரை தேடுவதிலும் அப்படித்தான். ஆனால், நாம் வீடு கட்டுகிறோம், நமக்கு மட்டுமா வீடு கட்டிக் கொள்கிறோம். தச்சு வேலை செய்கிறவர்கள் அவர்களுக்காக மட்டுமா வேலை செய்கிறார்கள். துணி நெய்பவர்கள் அவர்களுக் காக மட்டுமா துணி நெய்து கொள்கிறார்கள். சமுதாய வாழ்க்கை என்பது ஒரு கூட்டு வாழ்க்கையாகும். அந்தக் கூட்டு வாழ்க்கை சிறப்பாக சமுதாயத்தில் நடைபெற வேண்டுமானால், அந்தக் கூட்டு வாழ்க்கை எங்கிருந்து தொடங்கவேண்டுமானால், குடும்பத்திலிருந்து அந்தக் கூட்டு வாழ்க்கை தொடங்கவேண்டும்.

துக்கத்தை ஒரு முடிவிற்குக் கொண்டு வருவதுதான் இதுபோன்ற படத்திறப்புகள்!

அந்தக் குடும்பமாக இந்தக் குடும்பம் சிறப்பான குடும்பமாக, எடுத்துக்காட்டான குடும்பமாக இருக்கிறது. எனவே, நம்முடைய உடலுறுப்புகள் செயலிழந்து போகு மானால், இறப்பு என்பது தவிர்க்க முடியாது. அவ்வளவு தானே தவிர, வேறொன்றும் கிடையாது. நாம் அதையே நினைத்துக்கொண்டு, துக்கப்பட்டுக் கொண்டிருக்காமல், இந்தப் படத்திறப்பின் நோக்கம் என்னவென்றால், துக் கத்தை ஒரு முடிவிற்குக் கொண்டு வந்துவிட்டு, அடுத்த படியாக, நம்முடைய பணிகளைச் செய்யவேண்டும் என்பது தான் அதனுடைய தத்துவமாகும். அந்த அடிப்படையில், தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்,

செத்துப் போனவர்கள் என்கிற வார்த்தையே எப்படி வந்தது என்றால், உயிர் இயங்கிக் கொண்டிருக்கும்பொழுது, மூச்சுக் காற்று நின்று போய்விட்டது. சத்துப் போனது. சத்துப் போனது என்பதைத்தான், செத்துப் போனது என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

ஆகவே, அப்படிப்பட்ட நிலையில், அவர்கள் மறைந் தாலும், அவர்களுக்கு என்ன பெருமை என்று சொன்னால், இந்தக் குடும்பம் சிறப்பான குடும்பம்; எடுத்துக்காட்டான குடும்பம்; ஊரிலேயே மற்றவர்கள் பின்பற்றத் தகுந்த அளவிற்கு சிறப்பான குடும்பம் என்ற பெயரை நீங்கள் கட்டிக்காத்து, நீங்கள் எல்லோரும் இன்றைக்குக் காணு கின்ற ஒற்றுமையையும், அன்பையும் என்றைக்கும் சிறப் பான அளவிற்கு, அந்தத் தாயார் இந்தக் குடும்பத்திற்குத் தலைவியாக இருக்கிறார்களோ, அந்தத் தலைமையை நீங்கள் என்றென்றும் ஏற்று, அவர்களை நீங்கள் ஆறுதல் படுத்தி, அவர்களுடைய சிறப்பான வழிகாட்டுதலைப் பின்பற்றி, மேலும் மேலும் இந்தக் குடும்பம் வளருவதுதான், படமாகி இருக்கிறவர்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய ஒரு வாய்ப்பு. அதனை நீங்கள் செய்ய வேண்டும் என்று உங்களைக் கேட்டு, சந்திக்கக்கூடிய வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

வணக்கம், நன்றி!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-4/97966.html#ixzz3UYejf3b2

தமிழ் ஓவியா said...

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் எலுமிச்சை

தெற்காசியாவிலும், தென் கிழக்காசியாவிலும், எலுமிச்சை தொற்று நீக்கியாகவும், நஞ்சு முறிப்பு மருந்தாகவும் பயன்பட்டு வருகிறது. இது முதலில் பாரசீகத்துக்கும், அங்கிருந்து ஈராக், பின்னர் கி.பி.700 அளவில் எகிப்துக்கும் அறிமுகமானது. இது குறித்து பதிவுகள் முதன் முதலில் கிபி 10ஆம் நூற்றாண்டின் வேளாண்மை தொடர்பான நூல்களில் காணப்படுகின்றன.

எலுமிச்சம் பழச்சாற்றில் 5 சதவீதம் அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது புளிப்புச்சுவை தருகிறது. எலுமிச்சை பழத்தில், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. இதை உணவில் அதிகம் சேர்த்தால், மிகப்பெரிய பிரச்சினையைக் கூட எளிதில் தீர்க்கமுடியும். உடல் பருமன், தொண்டைப்புண் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சினைகளைப் போக்கும்.

தினமும் காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து, தேன் சேர்த்து குடித்து வந்தால், குடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும்.

எலுமிச்சை ஜூஸில் சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் குணமாகும். இது பாதிப்படைந்த சரும செல்களை புதுப்பித்து, இளமையான தோற்றத்தை தக்க வைக்கும். இதில் பொட்டாசியம் உள்ளதால், உணவுகளில் எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட்டால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். வைட்டமின் சி நிறைந்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

எலுமிச்சை சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், உடலில் தேவையில்லாத கொழுப்பு கரைக்கப் படும். தினமும் உடற்பயிற்சிக்கு பின், ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றை குடிப்பது சிறந்த பலனைத் தரும்.

சிலருக்கு பயணம் மேற்கொள்ளும் போது, வாந்தி வருவது போல் உணர்வார்கள். அவ்வாறு குமட்டல் ஏற்படும் போது, எலுமிச்சையை முகர்ந்து பார்த்தால், குமட்டலைப் போக்கலாம். எலுமிச்சை சாற்றை அதிகம் பருகினால், அது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீரை சிறுநீராக வெளியேற்றிவிடும்.

எனவே, வாத நோய் உள்ளவர்கள், எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் நல்லது. தினமும் எலுமிச்சை ஜூஸ் குடித்தால், புற்றுநோய் அபாயத்தி லிருந்து விடுபடலாம்.

உடலில் சோர்வு மற்றும் மன அழுத்தம் காரணமாக வரும் தலைவலியைப் போக்க, எலுமிச்சை டீ மிகவும் சிறந்தது. குழந்தைகளின் வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களை வெளியேற்றுவதற்கு எலுமிச்சை பயன்படுகிறது. எலுமிச்சையில் எண்ணற்ற மருத்துவ குணாதிசயங்கள் உள்ளதால், தினமும் பயன்படுத்துவோம்.

Read more: http://viduthalai.in/page-7/98004.html#ixzz3UYfVUXLo

தமிழ் ஓவியா said...

சிறுநீரகத்தை காக்க நாம் அறிய வேண்டியவை!

மனித உடலில் உள்ள உறுப்புகளில் மிகவும் இன்றியமையாதது சிறுநீரகம் ஆகும். மனித உடலின் மிக முக்கிய உறுப்பாக செயல்பட்டு, சிறுநீரை பிரித்து வெளியேற்றி, உடலின் தட்ப வெப்பத்தை சீராக வைத்திருப் பதுதான் சிறுநீரகத்தின் வேலை. அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளன.

இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரிக்கும் மிக நுண்ணிய சுத்திகரிப்பு உபகரணம்தான் சிறுநீரகம் இந்த சிறுநீரகம் கருவின் நான்காவது மாதத்திலிருந்து அதனுடைய இயக்கத்தை தொடங்கி மனிதனின் மரணம் வரை இடைவிடாது இயங்குகிறது.

வயிற்றின் பின் பகுதியில் விலா எலும்பிற்குக் கீழே, பக்கத்திற்கு ஒன்றாக சற்று மேலும் கீழும் இறங்கி காணப்படுகிறது. சிறுநீரகம் சீராக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் சில மணி நேரங்களில் உயிரிழப்பு கூட நேரிட வாய்ப்புண்டு.

சிறுநீரகத்தின் செயல்பாடுகள்: இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்தத்தில் நான்கில் ஒரு பங்கு சிறுநீரகத்திற்கு சுத்திகரிக்க அனுப்பப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு அதில் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீராக வெளியேறுகிறது.

மீதி அனைத்தும் மீண்டும் இரத்தத்தில் கலந்து விடுகிறது. இதனால் உடலிலுள்ள அனைத்து கழிவுகளும் வெளி யேற்றப்படுகின்றன. இரத்தம் சுத்தமடைகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துதல் மட்டும் சிறுநீரகத்தின் வேலையல்ல. மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளை தூண்டுவதும் சிறுநீரகத்தின் வேலைதான்.

உடலின் திரவ நிலையை சம நிலையில் பராமரிக்கிறது. இரத்த அழுத்தத்தை சம நிலைப்படுத்துகிறது. இரத்த சிவப் பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான சுரப்பினை சுரக்கச் செய்கிறது. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை சமப்படுத்தும் தன்மை சிறுநீரகத்திற்கு உண்டு.

அமில, காரத்தன்மைகளையும், சோடியம் பொட்டாசியம், அம்மோனியம் போன்றவற்றை சரிவிகிதத்தில் சமன்செய்யும் பணியையும் சிறுநீரகம் சிறப்பாக செயல்படுத்துகிறது.

நெப்ரான்: இதுவே சிறுநீரகத்தின் முக்கிய வடிகட்டி. இது இரத்தத்தில் உள்ள வேதியல் பொருட்களில், தேவையுள்ள, தேவையில்லாதவற்றை பிரித் தெடுக்கிறது. சிறுநீரகத்தில் இந்த நெப்ரான்கள் பல கோடிகள் உள்ளன. மால்பிஜியன் குழாயின் மூலம் வடிகட்டி மீண்டும் உறிஞ்சி இரத்தத்துடன் கலக்க வைப்பதும், மீதத்தை சிறுநீர்க்குழாய் வழியாகவும் வெளியேற்றுகிறது.

சிறுநீரகம் சீராக செயல்படவில்லை யென்றால்: இரத்தம் அசுத்தமாகும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப் படும். தண்ணீர், யூரியா, சோடியம் மற்றும் வேதிப் பொருட்களின் சமநிலை பாதிக்கப்பட்டு, உடலின் அக, புற அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும். மூச்சுத் திணறல், நினைவிழத்தல் இரத்தக் கொதிப்பு ஆகியவை உண்டாகும்.

சிறுநீரகம் சரியாக செயல்படாததால் ஏற்படும் அறிகுறிகள்: யூரியா மற்றும் வேதிப் பொருட்கள் அதிகளவில் இரத்தத்தில் கலந்துவிடுவதால் சிறுநீர் சரியாக பிரியாது.

சிறுநீர் சரிவர பிரியாததால் மூச்சுத் திணறல், அதிக இருமல், நெஞ்சுவலி, சளியில் இரத்தம் வருதல், விக்கல், பசியின்மை, இரத்த வாந்தி, நினைவிழத்தல், குழப்பம், கை நடுக்கம், நரம்பு தளர்ச்சி, தோல் வறண்டு அரிப்பு ஏற்படுதல் போன்ற ஒருசில அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சிறுநீரகம் யாருக்கு அதிகம் பாதிப்படையும்: சிலருக்கு பிறக்கும்போதே சிறுநீரகம் சிறுத்து காணப்படும். பரம்பரையாகவும், பாதிக்கப் படலாம். இரத்தக் கொதிப்பு, பாம்புக்கடி, கதண்டு வண்டுக்கடி, மலேரியா, உயிர்க்கொல்லி மருந்து உட்கொண்டவர்கள், வயிற்றுப் போக்கு அடிக்கடி உள்ளவர்கள்,

தமிழ் ஓவியா said...

பிரசவ காலங்களில் உண்டாகும் இரத்தப் போக்கு, அடிக்கடி கருக்கலைப்பு செய்பவர்களுக்கும், நீர் அதிகம் அருந்தாதவர் களுக்கும், மது போதை பொருட்கள் உட் கொள்பவர்களுக்கும், அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துபவர்களுக்கும், உடல் பயிற்சி யில்லாதவர்களுக்கும் சிறுநீரகம் பாதிக்க வாய்ப்புண்டு.

சிறுநீரகத்தைக் காக்க:

* உடல் பருமன் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

* புகைப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். மது, போதை பழக்கம் இருக்கக் கூடாது.

* அடிக்கடி வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள் வதை தவிர்க்க வேண்டும்.

* எளிதில் சீரணமாகும் உணவுகளை உட்கொள்வது நல்லது. சிறுநீரை அடக்குதல் கூடாது.

* தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது.

* வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பொதுவாக வாழைத்தண்டு, 3 விரலளவு எடுத்து அதனுடன் சின்ன வெங்காயம் 4, சீரகம் 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, நல்ல மிளகு 4, பூண்டு பல் 4, கொத்துமல்லி இலை தேவையான அளவு, கறிவேப்பிலை 20 இலை,

இலவங்கப்பட்டை 2 கிராம் எடுத்து 3 குவளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 1 குவளை அளவு வந்தபின் எடுத்து காலை மாலை இருவேளை என வாரத்தில் 2 நாட்கள் அருந்தி வந்தால் சிறுநீரகக் கோளாறுகளை தவிர்க்கலாம். இது பக்க விளைவில்லாத மருந்தாகும். கழிவு நீக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் சிறுநீரகங்களை பாதுகாக்க மேற்கண்ட நடை முறைகளை பின்பற்றுவது நல்லது.

Read more: http://viduthalai.in/page-7/98005.html#ixzz3UYg5Xvv1

தமிழ் ஓவியா said...

அன்னை மணியம்மையார் நினைவு நாள்: மார்ச் 16

மிசா காலத்தில் எனது இணையரையும் (அ. இறையனார்) பிடிக்க உத்தரவு வந்துள்ள செய்தி காவல் நிலையத்தின் மூலமாக கிடைக்கப் பெற்றது. இவரோ அரசுப் பணியாளர்.

இவரின் பணிக்கு ஏதாவது தொல்லைகள் உண்டாகி விடும் என்ற எண்ணத்தில், இவரை வீட்டில் இருக்கவிடாமல் தெரிந்தவர் இல்லத்தில் தங்க வைத்துவிட்டு, திருப்பூரிலிருந்து அதிகாலையில் புறப்பட்டு மூன்று மணியளவில் திருச்சி பெரியார் மாளிகையை அடைந்தேன்.அன்னையாரைப் பார்த்தேன். முதலில் முகம் கழுவி சாப்பிட்டு வா என்று கூறி, பாலாவைக் கூப்பிட்டு சோறு போடு என்றார்கள். பதட்டத்தில் இருந்தாலும் பசி ருசியை அறிய வைத்தது. அருமையான வற்றல் குழம்பு அப்பளத்துடன் சாப்பிட்டு முடித்தவுடன் அம்மாவிடம் வந்தேன்.

அம்மா என் கழுத்தினைப் பார்த்து, இந்த கருகமணி மாலையைப் போட்டுக் கொண்டு வந்தாயே, உன்னை யாரும் பின்தொடரவில்லையா? என்று கேட்டுவிட்டு, உனக்குத் தைரியம் அதிகம் என்றார்கள். அந்த மாலையில் கருப்பு மணியுடன் அய்யாவின் படம் பொறித்த கல் இருக்கும்.

உட்கழுத்தில் அந்த மாலை இருக்கும். அன்றைய பெண்கள் சரசுவதி, இலட்சுமி போன்றவர்களின் உருவங்கள் பதித்த மாலையை அணிந்திருப்பார்கள். அப்பொழுதெல்லாம் என்னுடன் வேலை செய்பவர்களும், மேலதிகாரிகளும் பல வினாக்கள் தொடுத்தது உண்டு.

மானமிகு இறையனாரைப் பற்றிய செய்திகளை அம்மாவிடம் நான் கூற, பிடிபடாமல் இருப்பது நல்லது என்று சொன்னார்கள். தங்களைத் தேடி வருபவர்களின் முகபாவனை பார்த்து, நேரம் கெட்ட நேரத்தில் நுழைந்தால்கூட சாப்பிடச் சொல்ல வேண்டும் என்ற மனப் பக்குவத்தை அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

அவரின் உள்ளம் பாதிப்புக்கு ஆளாகும் போதெல்லாம், காண்டேகர் எழுதிய நாவல் வெறுங் கோயில் என்ற புத்தகத்தை பலமுறை படிப்பேன் என்றார்கள். அன்றைய காலப் பெண்களுக்கு (படித்த) அந்த நாவல் அருமருந்தாக பயன்பட்டிருக்கிறது.

கோவையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, ஈரோட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். போகும் வழியில் இல்லத்திற்கு வாருங்கள் என்றேன். அவர்கள், ஏன் உனக்கு அரசு வேலை பார்க்கப் பிடிக்கவில்லையா? என்றார்கள்.

அதற்குக் காரணம், மிசா காலம். அப்படிப் போனால் போகட்டும் என்று நான் கூற, உன் ஆசைக்கு அணை போட விரும்பவில்லை, வருகிறேன் என்று கூறினார்கள்.

அம்மாவைப் பார்க்க அக்கம் பக்கம் உள்ள மக்கள் கூடி திருப்பூரில் எங்கள் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தனர். அன்னை மணியம்மையாரோ எங்கள் வீட்டு சின்னஞ்சிறு அடுப்படியில் வந்து அடுப்புமேட்டில் உட்கார்ந்து கொண்டு எங்கள் பிள்ளைகள் பண்பொளி, இறைவி, மாட்சி, இசையின்பனிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அன்று பகலில் என் மகன் இசையின்பன் எங்கேயோ விளையாடி கல்லால் அடிபட்டு மண்டை உடைந்து கட்டுப்போட்டிருந்தான். அவனிடம், எப்படி மண்டை உடைந்தது என்று கேட்க, அவனோ, கீழே விழுந்து அடிபட்டுவிட்டது என்று சொன்னான்.

உடனே அம்மா, பொய் சொல்லாதே! கீழே விழுந்தால் இப்படி அடிபடாது என்று சொல்லிவிட்டு, பசங்களை மட்டும் நம்பவே கூடாது. பெண் குழந்தைகள் நல்ல பிள்ளைகள் என்று சொன்னார்கள்.

பிறகு தேநீர் போட்டுத் தந்து வெளியில் இருப்பவர்களுக்குக் கொடுக்கச் சொன்னார்கள். தாயன்பையே உணர்ந்திராத எனக்கு உண்மையான தாயின் வாஞ்சையுடன் தன் மகளின் இல்லத்தில் வேலையைப் பகிர்ந்து கொள்வதில் அவர்கள் ஆர்வம் காட்டிய நிலையை,

இந்த வினாடிவரையிலும் கழகமும் நம் குடும்பம் என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டவர் அன்னை மணியம்மையார் என்பதை அம்மாவிடம் அன்று உணர்ந்தேன்.

அவர்கள் நினைவாக எங்கள் இல்லத்திற்கு மணியம்மையார் மனை என்று பெயர் சூட்டப்பெற்று காலத்தாலும் நீக்கமுடியாத உறவாக எங்களுடன் தொடர்ந்து வருகிறார்கள்.

- திருமகள் இறையன்

தமிழ் ஓவியா said...

இந்துஜாவின் புரட்சி

தங்களுக்கு வரும் இணையர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற கனவு ஆண்களுக்கு மட்டும் இருக்கும் என்பதல்ல, பெண்களுக்கும் உண்டு என்பதைப் புரியவைத்துள்ளார் பெங்களூரைச் சேர்ந்த இந்துஜா.

marry.indhuja.com என்ற இணையதள முகவரி இந்துஜாவைப் பற்றியும் அவரது எதிர்பார்ப்பையும் பிரதிபலிக்கிறது.

திருமணத்திற்குப் பின் நீண்ட கூந்தல் வளர்க்காமல் ஆண்களைப் போல்தான் முடி வெட்டிக் கொள்வேன். எப்போதும் இருப்பதைப் போல எனது விருப்பப்படியே வாழ்க்கையினை வாழ்வேன். குடும்பப் பாங்கான மணமகனுக்கு முன்னுரிமை வழங்கப்பட மாட்டாது.

திருமணத்திற்குப் பின் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று கூறும் மணமகனுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என பல நிபந்தனை களைக் கூறியுள்ளார்.

இந்துஜாவின் நண்பர்களிடையே மட்டுமன்றி, உலகம் முழுவதுமிருந்து ஏராளமானோர் பாராட்டியுள்ளனர். இந்துஜாவின் இணைய தளத்தினை சுமார் 3 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இந்தப் புரட்சிகரமான முடிவுக்கு ஆதரவு தெரிவித் துள்ளனர். மேலும், பல்வேறு மகளிர் அமைப்பு களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித் துள்ளன. நாடு முழுவதிலுமிருந்து பலர் பூங்கொத்துகளையும் அனுப்பி வருகின்றனர்.

இந்தச் செய்தியினைக் குறித்து இந்துஜா, நான் திருமணத்திற்கு எதிரானவள் இல்லை. அடிப்படையிலே நான் பகுத்தறிவுவாதி என்பதால் எனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தேன்.

முதலில் இந்த இணையதளம் தொடங்கியதை எதிர்த்த எனது பெற்றோர், இப்போது என் விருப்பத்தைப் புரிந்து கொண்டனர். மிகச் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட இணையதளத்திற்கு இவ்வளவு வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

இத்தனை புதுமையினைச் செய்துள்ள இந்துஜாவின் இணையப் பக்கத்தில் அவருடைய பெயருடன் ஜாதிப் பெயரும் இடம் பெற்றிருப்பது தான் பொருந்தாமல் உள்ளது.

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?

சென்னை உயர் நீதிமன்றத்தில் 1948ஆம் ஆண்டுதான் முதன்முதலில் என்.சோமசுந்தரம் என்ற பார்ப்பனரல்லாத நீதிபதி, பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி நியமிக்கப்பட்டார் என்பதும், அதற்குமுன் பார்ப்பனரல்லாத நீதிபதியே உயர் நீதிமன்றத்தில் கிடையாது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

உற்சாக சுற்றுலாத் தொடர் 5

கிழக்கின் சங்கமம் - ஆங்கோர் வாட்

-மருத்துவர்கள் சோம & சரோ இளங்கோவன்

அடுத்து நாங்கள் சென்றது மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் ஆகும்.
கம்போடியா நாட்டில் சயாம் ரீப் நகரத்து விமான நிலையத்தில் மாலை 4 மணிக்கு வந்து இறங்கினோம். அனைவரும் ஊர் சுற்றிப் பார்க்க விசா வாங்கிக் கொண்டோம்.

அங்கிருந்து நேராக ஆங்கோர் கண்காட்சியகம் சென்றோம். அங்கு என்ன சிறப்பு என்றால், 1970ஆம் ஆண்டுகளில் இராணுவக் கட்டிடமாக இருந்த கட்டிடம் தற்போது கண்காட்சியகமாகிவிட்டது.

இன்னொரு சிறப்பு, இங்கு பல வித உலோகத்தினால் செய்யப்பட்ட ஆயிரம் புத்தர் சிலைகள் உள்ளன. கல்லில் செதுக்கப்பட்ட புத்தர் சிலைகள் தலை இல்லாமல் இருந்தன. மதங்களுக்குள் நடந்த போட்டியும் போராட்டமும்தான் இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

கண்காட்சியகத்தைப் பார்த்த பிறகு லீ கிராண்ட் என்ற விடுதிக்குச் சென்றோம். அந்த விடுதி பிரெஞ்சு பாணியில் கட்டப்பட்டிருந்தது. அறைகள் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு வசதியாக இருந்தன.

அறையில் தங்கிய ஆண்களுக்கு கம்போடிய சட்டையும், பெண்களுக்கு அழகிய பட்டுப் பாவாடையும் அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். அன்று இரவு அவற்றை அணிந்து கொண்டு வரவேற்பு விழாவில் கலந்து கொண்டோம்.

கம்போடிய உணவு சைவ அசைவ வகைகளாக இருந்தன. கொழுக்கட்டைகள், அரிசி உணவு நம் ஊரை நினைவுப்படுத்தின.

தமிழ் ஓவியா said...

கேமர் மிகவும் புகழ் பெற்ற கிழக்கு இனம். நம்மைப் போன்றே பழம்பெருமையினைப் போற்றுபவர்கள். அங்கே மதம், மொழி, கலை இவற்றின் சங்கமமாகத் திகழ்கிறது "ஆங்கோர் வாட்". அங்குள்ள கற்கள் எகிப்தின் பிரமிடுகளைவிட மிகுதியானவை.

பல்லவ, சோழ மன்னர்களின் தாக்கமும், சமஸ்கிருத இந்து, புத்த மதங்களின் கலவையும் நன்கு வெளிப்படுகின்றன. அன்றிருந்த கடல் வணிகத்தினால் பல முக்கியப் பொருள்கள் மட்டுமன்றி கலை, மதம், சிற்பங்கள் போன்றனவும் இந்து, புத்த மதக் கலப்பைக் காட்டுவதாக அமைந்திருந்தன.

தந்தை ஒரு மதத்தையும், மகன் ஒரு மதத்தையும் போற்றிப் படைத்துள்ள கலவையான இந்த உலகப் பெரிய கோவில், பூங்கா என்ற பாரிசு மாநகரத்தைவிடப் பெரிதான அமைப்பில் உள்ளது.

மேற்கு நாடுகள் இருளடைந்த காலத்தில் இருந்த போது கிழக்கு நாடுகள் நாகரிகத்தின் உச்ச கட்டத்தில் இருந்ததை பல கட்டிடங்களும், கலையினை வெளிப்படுத்தும் சிற்பங்களும் காட்டுகின்றன.

ஆங்கோர் காலகட்டம் என்பது கி.பி.802லிருந்து கி.பி.1432 வரை ஆகும். இந்தக் காலத்தில் கம்மர் அரசாட்சி தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் வலிமையாக இருந்தது. இரண்டாம் செயவர்மன் என்ற அரசன் கி.பி. 802_-50 வரை அரசாண்டான். இந்த அரசன் பல சிற்றரசுகளை ஒன்றுபடுத்தி கைமர் பேரரசினை உண்டாக்கினான்.

இவன் தன்னையே தேவஅரசன் என்று சொல்லிக் கொண்டு மேரு மலைக்கோவில் போல பல பெரிய கோவில்களைக் கட்டினான். இந்திரவர்மன் (877_-89) முதன்முதலாக நீர்த்தேக்கம் கட்டினான். முதலாம் சூர்யவர்மன் (கி.பி.1002_-49) ராச்சியத்தின் எல்லையை லாவோச், தாய்லாந்து வரை விரிவுபடுத்தினான்.

இரண்டாம் சூரியவர்மன்- (1112_-52) ஆங்கோர் வாட் என்ற பெரிய நகரத்தை உண்டாக்கினான். இந்த நகரத்தில் பல அரசர்களால் கட்டப்பட்ட மாபெரும் கோவில்கள் உள்ளன. கோவில்-களைச் சுற்றி சிற்றாறுகள் போல அகழிகளைத் தோண்டி வைத்திருக்கிறார்கள்.

கோவில் கட்டிடங்கள் பெரிய பெரிய கற்களை அடுக்கி மிக உயரமாகக் கட்டப்பட்டவை. கி.பி.1177இல் சாம்ச் என்ற தென் வியட்நாம் அரசு கைமர் ராச்சியத்தைக் கைப்பற்றியது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஏழாம் செயவர்மன் (1181_-1219) சாம்ச் இனத்தை விரட்டியடித்தான்.

இந்த அரசன் அவன் முன்னோர்கள் போன்று சிவ, விச்ணு பக்தி மார்க்கத்தை விட்டு புத்த மதத்தைத் தழுவினான். புத்த சிலைகள் ஏராளமான கோவில்களில் வைக்கப்பட்டன.

செயவர்மன் நாட்டு மக்களுக்காக நிறையத் திட்டங்களை வகுத்தான். சாலைகள், விவசாயத்திற்குப் பாசனக் கால்வாய்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் பெரிய பாலங்கள் போன்றவற்றைக் கட்டினான். .செயவர்மன் மறைவுக்குப் பிறகு கி.பி. 1219இல் கைமர் அரசு வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.

அரசும் புத்த மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியது. கோவில்களில் உள்ள புத்த சிலைகள் உடைக்கப்பட்டன, அல்லது அகற்றப்பட்டன. ஆங்கோர் நகரம் கைவிடப்பட்டது. காடுகளால் அந்த நகரமே மறைக்கப்பட்டது.

சுமார் 500 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரெஞ்சு நாட்டின் அறிஞர் கென்ரி மொகூட் என்பவரின் ஆர்வத்தால் 1860இல் காடுகளால் மூடிக் கிடந்த "ஆங்கோர்" நகரம் பக்கம் உலகத்தின் பார்வை திரும்பியது. தொடர்ந்து போர்த்துக்கீசு, சப்பான், ஸ்காட்லாந்து போன்ற நாடுகளும் ஆர்வம் காட்டத் தொடங்கின.

அதன் விளைவாக சுற்றுலாப் பயணிகள் உலகத்தின் பல்வேறு திசைகளிலிருந்தும் பல நாடுகளி-லிருந்தும் வந்து குவிய ஆரம்பித்தார்கள். கோவில்களும், புத்த மடங்களும் சுத்தம் செய்யப்பட்டு மக்கள் எளிதாகப் பார்க்க வகை செய்யப்பட்டது.

ஆங்கோர் கோவில்கள் உலக அதிசயங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. இதனால் கம்போடியப் பொருளாதாரம் உயர்வடைந்தது.

கோவில்களில் உள்ள அதிசயம் என்ன வென்றால், மிக உயரமான (300 அடிக்கு மேல் உயரம், 30 அடிக்கு மேல் சுற்றளவு) மரங்கள், அவற்றின் பலமான வேர்கள் (10 அல்லது 20 மலைப்பாம்புகள் பிணைந்த மாதிரி) காட்சி அளித்தன. அவற்றின் பக்கம் நாம் நின்றால் சிறு கடுகு மாதிரி தெரிவோம்.

இந்த அரசனுக்குப் பிறகு ஒன்பது அரசர்கள் கி.பி.1219 வரை ஆண்டுள்ளனர்.

அலங்கரிக்கப்பட்ட யானையின் மீதமர்ந்து அங்கு சுற்றி வந்தபோது அமர்வதற்குக் கடினமாக, ஆனால் நெஞ்சுக்கு இதமாக இருந்தது. அதில் அமர்ந்து சென்ற உழைப்பாளி-களையும், போர் வீரர்களையும் நினைத்தபோது, அவர்களின் அருமையையும், பெருமையையும் புரிந்துகொள்ள முடிந்தது.

யானைகள் வாழ்க! அடுத்து "பாண்டா கரடிகள்" பார்ப்போம்!

தமிழ் ஓவியா said...

இவ்விடம் அரசியல் பேசலாம்

கடவுள்களின் பேரன்கள்

-கல்வெட்டான்(தோழர் சந்தானத்தின் சவரக்கடையில் மீண்டும் கச்சேரி களை கட்டியது!)
"என்ன தோழர், நம்ம முத்து இருக்காரா?" என விசாரித்தபடியே தோழர் மகேந்திரன் உள்ளே நுழைந்தார்."இதோ இவர்தான் முத்து! நீங்க இம்புட்டு நாளா தேடிட்டு இருந்தவர் இன்னைக்குத்தான் நீங்க வர்ற நேரத்துல கடையில் இருக்கிறார்!" என்றபடியே முத்துவை அறிமுகம் செய்தார் சந்தானம்."வணக்கம் சார்" என்று சங்கோஜமாகக் கும்பிட்டு வரவேற்ற முத்துவிடம், "என்ன கூச்சம்... வெடிப்பா வணக்கம் சொல்லுங்க! என்னவோ மக்கள் முதல்வரைப் பார்த்த மாதிரி எதுக்குப் பம்முறிங்க!" என்றார் மகேந்திரன்!

"இவரு எப்பவுமே அப்படித்தான் சார்... ஆனால் அதுக்காக தன்னைத்தானே சிலுவையில் அடிச்சுக்கல்லாம் மாட்டாரு!" என்றார் சந்தானம்!

"அதானங்க... என்ன ஒரு பைத்தியக்காரத்தனமா இருக்கு! இவ்வளவு நாளா கராத்தே என்றால் மனவலிமை தரும் தற்காப்புக் கலைன்னு நம்பின மக்கள், அந்தாளு பண்ணின கூத்தால கராத்தே கத்துக்கிட்டால், அடிமைப் புத்தி வந்திடும்னும், மனப்பிறழ்வு வந்திடும்னும் நினைக்கத் தொடங்கிட்டாங்க!"

"அந்த ஹூஷைனி இப்படி ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு தோழர்! ஏற்கெனவே அந்தாளோட ரத்தத்தோட கூட இருந்தவங்களோட ரத்தத்தையும் உறிஞ்சி எடுத்து, அதை வைத்து ஜெயலலிதாவோட உருவத்தைச் செய்து பரிசா கொடுத்தது என்ன ஒரு கொடூரமான கோமாளித்தனம்ல!"

"கண்டிப்பா! பச்சைக் குழந்தைகள் பாலுக்காகக் காத்துகிட்டிருக்கறப்ப தன்னோட தலைவனின் கட் அவுட்ல பாலாபிஷேகம் பண்றேன்னும், சாமிக்கு ஆறு வேலை பாலாபிஷேகம் பண்றேன்னும் பாலை வேஸ்ட் பண்ற மாதிரிதான் இந்தாளு ரத்தத்தை உறிஞ்சி எடுத்து வீணடிச்சாரு... அவனவன் இந்த ரத்தத்துக்காக அல்லாடுறான்!"

"கராத்தேல ஸ்டண்ட் பண்றதை விட்டுட்டு நிஜ வாழ்க்கையில் அடிமைப்புத்தியைக் காட்டுறதுல ஸ்டண்ட் பண்ற ஆளுதான் சார் இவரு" என்றபடி முத்துவும் இவர்களின் விவாதத்தில் கலந்து கொண்டார்.

"சரியா சொன்னீங்க முத்து... ரத்தம்னு சொன்னதும்தான் எனக்கு அந்தாளு சிலுவையில் அறைந்துக்கிட்ட ஸ்டண்ட்ல ஒரு விஷயம் நினைவுக்கு வருது. அவரு ஆணி அடிச்சப்ப ஒரு சொட்டு ரத்தம்கூட வெளியேறல பார்த்தீங்களா?"

"அந்த ஆணியேகூட ஆணி மாதிரி இல்லாமல் கோணூசி மாதிரி, என்னவோ இந்த ஒரு நிகழ்வுக்காகவே ஆர்டர் கொடுத்து செஞ்சி வாங்கின மாதிரி இருந்தது பார்த்திங்களா தோழர்?"

"ஆமா தோழர், அந்தாளு, கொஞ்சம் ஒரு மாதிரியோ அல்லது ஸ்டண்ட் பார்ட்டி மாதிரியோன்னுதான் முதலில் நினைச்சிருந்தேன், ஆனால், ஜெயலலிதாவுக்காக வேண்டிக்கிட்டு முதலில் விமானத்தைத்தான் கடத்தலாம்னு திட்டம் போட்டேன்னு கொடுத்த பேட்டியைக் கேட்ட பிறகு, அந்தாளை வேற மாதிரித்தான் பார்க்கத் தோனுச்சி!"

தமிழ் ஓவியா said...


"அடக்கொடுமையே, விமானத்தைக் கடத்தவா?" என முத்து வாயைப் பிளக்க,

"ஆமா... அப்படியே இந்தாளு மேல காணாம போன மலேசிய விமானத்தைக் கடத்துனதா கேஸ் போட்டு, ஆயுள் தண்டனையா அப்படியே உள்ள தள்ளிடணும்! இல்லைன்னா அடுத்த வருஷ பிறந்த நாளுக்கு விமானத்தையோ, ரயிலையோ கடத்தி பரபரப்புக் காட்டினாலும் காட்டுவாரு!

"இந்தாளு ஒருபக்கம் பீதியைக் கிளப்பினாருன்னா, இன்னொரு பக்கம் நாம் தமிழர் கட்சி சீமான் பீதியக் கிளப்புறாரு பார்த்திங்களா?"

"ஆமா, ஆமா, இம்புட்டு நாளா ஈழத்தை வச்சு அரசியல் பண்ணிக்கிட்டு இருந்தாரு. இப்போ ஈழ அரசியலோட மவுசு குறைஞ்சுட்டதால கையில வேலைத் தூக்கிட்டு முருகனோட ஞானப்பழத்துக்கான போராட்டத்துல இறங்குறாரு!"

"ஓ! அப்படி ஒன்னு இருக்குல்ல? இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால, இனியும் ராஜபக்க்ஷேவைத் திட்டி அரசியல் பண்றது எடுபடாதுன்னு முடிவுக்கு வந்துட்டாரோ?"

"அதே! அதே! ஆனால் அவருக்கு எதாவது பிரச்சினை கையில இருந்தால்தான் அரசியலே பேச முடியும்... பிறகென்ன, சிவன் குடும்பத்துல இருக்குற பிரச்சினையைக் கையிலெடுத்துட்டார்!"

"அதுசரி, சர்க்கரையில்லாத ஊருல இலுப்பம்பூ சர்க்கரைங்கற மாதிரி, சிவன் குடும்பத்துலயே புகுந்துட்டாரா?!"

"அதுவும் பிஞ்சு மூஞ்சி மாதிரி இருக்குற முருகனை யுத்த கடவுள் மாதிரி கோபக்கார சாமியா காட்டுறதுக்கு இவரு விடுற டயலாக்குகள்தான் கண்ணுல கண்ணீர் வர்ற அளவுக்குச் சிரிக்க வைக்கும்!"

"அப்படியென்ன சொல்லிட்டாருன்னு சொல்லுங்க தோழரே!" என முத்து கேட்க,
அதற்கு சந்தானம், "திருவிளையாடல் திரைப்படத்தில் ஏ.பி.நாகராஜன் எழுதின டயலாக்கை, என்னவோ முருகனே சொல்லச்சொல்லக் கேட்டு அவரு எழுதின மாதிரி

"முருகன் அந்தக் காலத்துலயே தனிநாடு வேணும்னு போராடினாரு! அந்த நாட்டை அவரே ஆட்சி செய்தாருன்னு அக்மார்க் போராளி ரேஞ்சுல முருகனைப் பற்றின தகவல்களை அள்ளிக்கொட்டுறாரு சீமான்!"

"இப்படி படத்துல இருக்குற வசனமெல்லாம் உண்மைன்னு சொல்லி உளறிக்கிட்டிருந்தால் சீமான் சொல்றபடி பார்த்தால், அடுத்ததா வில்லனா நடிச்ச எம்.ஆர்.ராதாவிலிருந்து, நம்பியார், சத்யராஜ், ஆனந்தராஜ், பிரகாஷ்ராஜ்னு அத்தனை பேரையும் கற்பழிப்பு கேஸ்ல ஜெயிலுக்குள்ள தள்ளணும்னு சொல்வாரோ?!"

"அதுமட்டுமா, ரோபோ படத்துல வர்ற சிட்டி ரோபோவை திரும்பவும் அசெம்பிளிங் பண்ணி இந்திய ராணுவத்துல சேர்க்கணும், அதை உருவாக்குன ரஜினிக்கு ராணுவத்துல உயர்பதவி தர்றதோட, விஞ்ஞானிகள் அய்ன்ஸ்டைன்,

தாமஸ் ஆல்வா எடிசன் மாதிரி ரஜினியையும் தலைசிறந்த விஞ்ஞானிகளோட பட்டியலில் சேர்க்கணும்னும் போராட்டத்துல இறங்கிடுவாரு! அதைக் கேட்டு டைரக்டர் சங்கரே மெர்சலாயிடுவாருன்னா பாருங்களேன்!"

தமிழ் ஓவியா said...


"திருவள்ளுவரை முப்பாட்டன்னு சொன்னாரு சரி, அதோட நிறுத்தாமல், முருகனையும் முப்பாட்டன்னு சொல்றாரு, சிவனையும் முப்பாட்டன்னு சொல்றாரு... அவரு நடத்துறது வீரத்தமிழர் முன்னணியா,

இல்ல முப்பாட்டனார்கள் முன்னேற்ற முன்னணி-யான்னே தெரியல! அவரு வேலைக் கையில புடிச்சிருக்குற தோரணையப் பார்த்தாலே சிரிப்புதான் வருது! அந்தப் பழனி முருகன்தான் அவருக்கு நல்ல புத்தி கொடுக்கணும்!"

"ஆமா, ஆமா, எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்னு சொல்ற மாதிரி, உமாசங்கர் அய்.ஏ.எஸ்., ஏசு கூட பேசினேன், சுனாமி வந்தது ஏசுவுக்குத் தெரியும், அப்படி இப்படின்னு கதை விட ஆரம்பிச்சாரு, அடுத்து ஹூஷைனி,

நான் அல்லா கூட பேசினேன், நான்தான் அல்லாவோட பேரன்னு சொல்லி பீதியைக் கிளப்பினாரு! அடுத்து இப்போ நான்தான் முருகனோட பேரன்னு சொல்லி சீமான், சிவனோட குடும்பத்திலேயே கோல்ஃப் விளையாடுறாரு!

ஆக மொத்தம் அம்புட்டுப் பேரமாரும் ஒன்னு கூடிட்டாய்ங்க!" "முப்பாட்டனுங்க எந்தக் காலத்திலும் அவதரிக்கப் போறதில்லைங்கற உண்மை தெரிஞ்ச வெவரமான பேரனுங்களாச்சே!"

"மாட்டுக்கறிக்கு மஹாராஷ்ட்ராவுல தடையாமே பார்த்திங்களா?"

"அவங்களோட உயிர்நேயமெல்லாம் இஸ்லாமிய, கிறித்தவ மக்களைச் சீண்டிப் பார்க்கறதும், சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிட்டு, ஓட்டரசியல் நடத்துறதும்தான்...

நான் ஏற்கெனவே சொன்னேனே, கடவுளுக்கு அபிஷேகம் பண்றதுன்னு சொல்லி, கன்னுக்குட்டியோட பாலை முழுக்கத் திருடுறதே இந்தப் பயலுகதான்! பண்ற திருட்டெல்லாம் பண்ணிட்டு உயிர்நேயம் பேசுவானுங்க!"

"சரியாச் சொன்னீங்க தோழர், இந்த ப்ளூகிராஸ்காரங்களும் நாய்க்காக இரக்கப்-படுவாங்க, சர்க்கஸ்ல இருக்கற புலி கரடிக்காக குரல் கொடுப்பாங்க, ஆனால் இந்தப் பாலைத் திருடி அபிஷேகம் பண்ற கூட்டத்தைக் கண்டுக்க மாட்டாங்க,

கோவிலில் யானையைப் பிச்சையெடுக்க வைக்கிற கொடூர வதையைப் பற்றிக் கேள்வியெழுப்ப மாட்டாங்க. யாரு என்ன சாப்பிடணும்னு அவங்கவங்கதானே முடிவு பண்ணணும்?"

"கண்டிப்பா, நம்மூருல, தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள், தேங்காயைப் பறிச்சுப் போட்ட பிறகு, தென்னை மரத்திலிருக்கும் எலிகளையும் வேட்டையாடுவாங்க கேள்விப்பட்டிருக்கீங்களா?"

"அப்படியா?" என முத்து வியக்க, தோழர் மகேந்திரன் தொடர்ந்தார்...

"ஆமா, ஒரு தென்னந்தோப்புல ஒரு எலி இருந்தால்கூட நூற்றுக்கணக்கான தேங்காயைச் சேதப்படுத்திடும். அதனால அந்த எலிகளை விரட்டி, அடிச்சுப் பிடிப்பாங்க. அப்படிப் பிடிச்ச எலிகளுக்குத் தேங்காயையே கூலியா வாங்கிப்பாங்க.

அதோட அந்த எலிகளைத் தீயில சுட்டுச் சாப்பிடுவாங்க, நானும் கூட சாப்பிட்டிருக்கேன்... இதெல்லாம் ஒவ்வொருத்-தவங்-களோட பழக்கவழக்கம். இதுல தலையிடுறதெல்லாம் சர்வாதிகாரம்தான்"

"நீங்க சொல்றதும் சரிதான், சீனாவுல நாய், பாம்பு, தேள், பூரான்னு அம்புட்டையும் ரோஸ்ட் பண்ணிச் சாப்பிடுறாங்க, கொரியாவுல ஆக்டோபஸ அப்படியே உயிரோட சாப்பிடுறாங்க, அட, அது ஏன்,

இந்தக் காலத்து பிராமின்களே வீட்டுக்குள்ள மட்டும்தான் கறி சாப்பிடுறதில்ல, வெளில வந்துட்டால் ஃபாஸ்ட் ஃபுட்ல அத்தனையும் சாப்பிடுறாங்க! காலம் எவ்வளவோ மாறிட்டு வருது!"

"ஆமா, ஆமா, அய்.டி கம்பெனி, வெளிநாட்டில் வேலைன்னு உலகமே ஒரே குடைக்குள் வரத்தொடங்கிய பிறகு அவங்களும் நான்வெஜ்ல அப்படி என்ன இருக்குன்னு டேஸ்ட் பண்ணத்தொடங்கிட்டாங்கதான்! கேஎப்சில ஆர்டர் பண்றதும், பீச்சுக்குப் போனால் மீன்வறுவல் சாப்பிடுறதும் சகஜமாயிடுச்சு!"

"அப்போ பிராமின் இல்ல, பிராமீன்னு சொல்லுங்க!"

"யூ மீன் மைக்கேல் மதனகாமராஜன்?! ஹஹஹ!" என்றபடி அனைவரும் சிரிக்க அரட்டைக் கச்சேரி நிறைவடைந்தது!

தமிழ் ஓவியா said...

கண்டுபிடித்தது... கடவுள் அல்ல!

- மதிமன்னன்

சகலமானவற்றையும் படைத்தது கடவுள் எனும் நம்பிக்கை பலரிடத்தில் இருக்கிறது. உலகின் பலநாட்டு மக்களிடமும் இருக்கிறது. உலகின் பெரிய மதங்கள் எனப்படும் ஆறு மதத்தைச் சேர்ந்த மக்களிடமும் இந்த நம்பிக்கை இருக்கிறது.

நம்புங்கள் என்பதுதான் எல்லா மதங்களின் ஆரம்ப வாக்கியம். எதையும் நம்பி ஒருவன் தொடங்கினால் இறுதியில் அவனுக்குச் சந்தேகங்களே மிஞ்சும்; ஆனால் சந்தேகங்களுடன் தொடங்கினால், இறுதியில் உறுதியான கருத்து கிடைக்கும்.

இந்தக் கருத்தைத்தான் சாக்ரடீஸ், தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற அறிஞர் பெருமக்களின் வாழ்வும், செயலும், தத்துவக் கருத்துகளும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன.

எதையும் சந்தேகி என்ற மார்க்சின் சொற்களும், எதையும் ஏன், எதற்கு, எப்படி என்று கேள் என்ற மேற்கத்திய சாக்ரடீசும் கிழக்கத்திய பெரியாரும் சொன்ன சொற்களும் எண்பித்துக் கொண்டிருக்கின்றன.

வள்ளுவரும் புத்தரும் இதையேதான் உலகுக்கு அறிவித்தனர். ஆனால், குள்ள மனிதர்கள் நம்பு எனக் கூறி மக்களை மாக்களாகவே வைத்துவிட்டனர். எல்லாம் கடவுள் செயலாலே என அறிவித்து, மனிதனால் ஆவது எதுவுமே இல்லை என்ற எண்ணத்தை விதைத்துவிட்டனர்.

ஆனால், எல்லா மனிதர்களும் இதை ஏற்கவில்லை. ஆதாமும் ஏவாளும் அம்மணமாகத் திரிந்தது போல பின்னிட்ட சந்ததியினர் இருக்கவில்லை. வேட்டையாடிக் கொன்று தின்ற விலங்குகளின் தோலைக் கொண்டு ஆடை என்ற பெயரில் எதையோ அணிந்தனர்.

சாக்ரடீஸ்

மானத்தை மறைப்பது என்ற எண்ணம் இல்லாத நிலையில், குளிரில் இருந்து தம்மைக் காத்துக் கொண்டனர். தோலைத் தைப்பதற்கு எலும்பு ஊசிகளையும் ஆக்கினர். இத்தகைய கண்டுபிடிப்பு எண்ணம் எப்படி ஏற்பட்டது? மதப் போதனைகளைப் போலவே வாழ்ந்திருந்தால் இது முடிந்திருக்குமா?

தந்தை பெரியார்

அந்தக் காலத்தில் கடவுளும் இல்லை, அதைக் கட்டிக் காப்பாற்றிக் காசு பார்க்கும் மதங்களும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. இவை இரண்டும் பிற்காலப் பித்தலாட்டங்கள்!

இவை இல்லாத காலத்தில் கல் கருவிகள், தோல் ஆடைகள், நெருப்பில் வதக்கி உண்ணுதல் போன்றவை-யெல்லாம் மனிதனால் உருவாக்கப்பட்டவை; கடவுளால் அல்ல, இதற்கான தூண்டுதல் மனித மூளையின் செயல்பாடுகளால் விளைந்தவை.

கார்ல் மார்க்ஸ்

இத்தகைய தூண்டுதலை முதலில் புரிந்து செயல்பட்டவன் பாராட்டுக்குரிய மனிதன். இவனுக்கு வழிகாட்ட மோசே வரவில்லை. யேசு வரவில்லை. முகம்மது வரவில்லை. முப்பத்துமுக்-கோடி தேவன்களும் வரவில்லை.

தமிழ் ஓவியா said...

தாமஸ் ஆல்வா எடிசன்

பின் எது வந்தது? மனிதனின் தேவை வந்தது. தேவைதான் கண்டுபிடிப்பின் தாய். குளிரிலிருந்தும் பனிப் பொழிவிலிருந்தும் காத்துக் கொள்ள வேண்டிய தேவை, தோலாடையைக் கண்டுபிடித்தது.

வேட்டைச் சமூகத்தின் வயிற்றுப் பசி, பசி ஆற்ற வேண்டிய தேவை விலங்குகளைக் கொல்லும் கல் கருவிகள், ஆயுதங்களைக் கண்டுபிடித்தது. தற்செயலாக ஏற்பட்ட காட்டுத் தீயில் வெந்த இறைச்சியின் சுவையின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, அதுவே நெருப்பைக் கடைந்து ஏற்படுத்தும் சக்கிமுக்கிக் கல்லைப் பயன்படுத்தும் நுட்பத்தைக் கண்டுபிடிக்க உதவியது.

இப்படிக் கூறிக்-கொண்டே போகலாம். போதும் என்ற மனமே, பொன்செய்யும் மருந்து எனப்படுவதுபோலவே எல்லா மனிதர்களும் இருந்திருந்தால் கண்டுபிடிப்புகளே வந்திருக்காது.

எனவே, தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் என்றால், தந்தை வேண்டுமே! மதிநுட்பம் தந்தை எனலாம். மதி அனைவருக்கும் உண்டுதான். மதிநுட்பம் சிலர்க்கு மட்டுமே இருக்கிறது. இவர்கள் மதியைப் பயன்-படுத்துகிறார்கள். நுட்பம் சேர்கிறது. விதியை நம்பாததால், மதிநுட்பம் வளர்கிறது.

மதிநுட்பத்தால் கண்டுபிடிக்கப்பட்டவை, கருவிகளாகவோ பொருட்களாகவோ இருக்க வேண்டியது இல்லை. புதிய எண்ணம், புதிய கொள்கை, பாட்டு, நாட்டியம், இசை என்றும் இருக்கலாம்.

சமதர்மம், பொது உடைமை போன்ற புதிய எண்ணங்கள், மக்களாட்சி போலும் புதிய அரசமைப்புக் கொள்கைகள் கூட கண்டுபிடிப்புகளே எனலாம். தொல் பழங்காலக் கண்டுபிடிப்புகளான ஆடை, நெருப்பு, கூரிய கருவிகள், ஈட்டி போன்றவையும் ஆதிகாலக் கண்டுபிடிப்புகளே!

ஏழு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலைபெற்று இருந்த மெசபடோமிய நாகரிகத்தில், சக்கரம், அச்சு போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. சக்கரம், அச்சு போன்றவற்றைக் கண்டுபிடித்தவன்தான் முதல் விஞ்ஞானி! அவனது கண்டுபிடிப்புகளால்-தான் மனிதன் இடம் பெயரவும் புதிய இடத்தில் வாழவும் தொடங்கினான்.

முதல் அறிவியல் கண்டுபிடிப்பு எனச் சக்கரத்தைக் கொண்டாடும் நோக்கம் இதுதான்! அய்ந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நிலைபெற்றிருந்த சிந்துவெளி நாகரிகம் நீர்ப்பாசன முறைகளைக் கண்டுபிடித்தது.

இதுவே எகிப்து நாட்டின் நைல் நதிக்கரையில் சீன நாட்டின் மஞ்சள் ஆற்றின் கரையில் பரவிப் பெருமை பெற்றது. கட்டற்று ஓடும் காட்டாற்று நீரைக் கட்டுப்படுத்திப் பாசனம் செய்து வேளாண்மை செய்யும் கண்டுபிடிப்பு இன்றைய மானுட குலத்துக்குச் சிறப்பான கொடை.

2500 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியதரைக் கடல் பகுதி நாடுகளில், குறிப்பாக கிரீஸ், ரோம் ஆகிய நாடுகளில் தோன்றிய கணிதம், தத்துவம், அறிவியல் தொழில்நுட்பம் போன்ற அரிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன.

ஆர்கிமிடிஸ் கண்டுபிடித்த மிதவைத் தத்துவம் நீர்வழிப் பயணத்திற்கு உதவும் கப்பல், படகுகள் போன்றவை கண்டுபிடிப்பதற்கு உதவியது என்பது குறிப்பிடத்தக்கது. சிந்துவெளிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டவை வெளி-உலகுக்குத் தெரியாமலே இருக்கின்றன.

தமிழ் ஓவியா said...

ஆனால், சீன நாட்டின் முக்கிய நான்கு கண்டுபிடிப்புகள் அனைவர்க்கும் பயன்படுகின்றன; வெடிமருந்து, காகிதம், காம்பஸ் எனப்படும் திசைகாட்டும் கருவி, அச்சுத் தொழில்முறை ஆகிய நான்கும் மிகப் பெரிய கண்டுபிடிப்புகள் எனலாம்.

அய்ரோப்பிய நாடுகளில் 14ஆம் நூற்றாண்டுக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நுண்ஆடி (மைக்ராஸ்கோப்) தொலைநோக்காடி (டெலஸ்கோப்) ஆகியவை மனிதர்களின் அறிவியல் ஆய்வுகளுக்குப் பல வகையிலும் ஆற்றிய பங்கு அளவிட்டுக் கூறமுடியாதது.

16ஆம் நூற்றாண்டு பகுத்தறிவின் காலம் என வருணிக்கப்பட்டாலும், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் வானவியல், உயிரியல், இயற்பியல், வேதியியல், கணிதம் போன்றவற்றின் வளர்ச்சி சிறப்பான வகையில் அமைந்தது.

பலப்பல கருவிகள் -_ தெர்மா மீட்டர், ஹைட்ரோ மீட்டர் போன்றவை கண்டுபிடிக்கப்-பட்டதன் விளைவாக இயற்பியலில் பல சாதனைகளை மனிதன் செய்தான். மின்சாரம், காந்தசக்தி ஆகிய இரு முக்கிய சக்திகளை மனிதன் கண்டுபிடித்ததும் இந்தக் காலத்தில்-தான்.

நிலக்கரியைப் பயன்படுத்தி இரும்பை உருக்கி எடுக்கவும் புதிய பொறிகளை உருவாக்கவும் மனிதன் கற்றான். தொழில் புரட்சிக்கு அடிப்படையாக அமைந்த தொழில்நுட்பம் இதுதான். இதனால் பெரும்பலன் அடைந்தது இங்கிலாந்து நாடு.

தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்காக ஏராளமான மக்கள் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்து குடியேறியதும் இத்தகைய கண்டுபிடிப்புகளால்தான்.

பெரும்பாலான கண்டுபிடிப்புகளைச் செய்து சாதித்த மனிதர்கள் நிறைந்த நாடாக அமெரிக்கா விளங்குகிறது. பல நாடுகளி-லிருந்தும் வந்து குடியேறிய மக்கள் நிறைந்த நாடு அது.

அந்நாட்டின் தாமஸ் ஆல்வா எடிசன் என்பார் 1000 கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். இது எப்படி? யேவா கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களினத்தைச் சேர்ந்தவரா அவர்? அல்லவே! மனித அறிவை, ஆற்றலைப் பயன்படுத்திடக் கற்றவர், பயன்படுத்தியவர்! அவ்வளவே!

இப்படி எண்ணற்றவை! ஆற்றல்மிக்க இந்த மனிதர்கள் தம் அறிவைப் பயன்படுத்திக் கண்டுபிடித்துத் தந்த கண்டுபிடிப்புகளால் மனித குலம் முழுவதும் பயன்படுகிறது.

மனித குலத்துக்கு இத்தகைய மனிதர்களால் விளைந்த பயன்களில் ஒரு சிலவற்றையாவது நாம் அறிவது நலம்.

அதை விட்டுவிட்டு இந்தியத் தலைமை அமைச்சர் மோடி கூறுவதைப் போல பிளாஸ்டிக் சர்ஜரி பாரதத்தில் இருந்தது என்பதற்கு அடையாளம் விநாயகன் பொம்மை என்று பேசிக் கொண்டிருந்தால் மிஞ்சுவது என்ன?

மூடப் பைத்தியம் எனும் பட்டம்தான்! குந்தி குழந்தை பெற்றது, சோதனைக் குழாய்க் குழந்தை முறை இந்தியாவில் இருந்ததற்கான அடையாளம் என்று மோடி கூறியுள்ளதைத் திருப்பிக் கூறினால் சிரிப்பு பின்பக்கத் துளை வழியேதான் வருமே தவிர, புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஊக்கம் வரவே வராது!

குளோரஃபார்ம், அனஸ்தீசியா (மயக்க மருந்துகள்) கண்டுபிடிப்பதற்கு முன்னமேயே மயக்க மருந்து கொடுக்காமலே, ஆணின் விலா எலும்பை எடுத்து அதைக் கொண்டு ஏவா எனும் பெண்ணைப் படைத்தது எங்கள் கர்த்தர் என்றானாம் கிறித்தவன்.

ஒருவன், போடா போ! எங்கள் சிவன், தன் மகன் தலை காணாமல் போய்விட்ட நிலையில் யானைத் தலையை மனிதக் கழுத்தில் ஒட்டவைத்து மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையே செய்தது என்று சவடால் அடித்தானாம் இந்து ஒருவன்!

இவர்கள் இருவர் பேச்சைக் கேட்கும் ஒருவருக்கு என்ன நினைக்கத் தோன்றும்? இந்த இரண்டும் எந்தப் பைத்தியக்கார விடுதியிலிருந்து தப்பித்து வந்தன? என்ற அய்யம்தானே ஏற்படும்!

அதைப்போல பாரதப் பிரதமர் பேச்சைக் கேட்டுக் குழப்பிக் கொண்டிருக்காமல் நடைமுறை உலகுக்கு வருவோம்! நமக்குப் பலவற்றையும் கண்டுபிடித்துக் கொடையளித்த அறிவியல் அறிஞர்களை அறிந்து கொள்வோம்.

பல இலட்சக்கணக்கான அறிவியல் பட்டதாரிகள் இருக்கும் இந்தியாவில், அறிவியல் மனப்பான்மை கொண்ட, அறிவியல் வாழ்க்கை வாழும் மனிதர்களைக் காணோம்! அவர்களை உருவாக்க உதவிடும் சில செய்திகளை அடுத்த இதழில் பார்ப்போம்.

தமிழ் ஓவியா said...

கருத்து

மத்திய அரசு அமல்படுத்த நினைக்கும் நிலம் கையகப்-படுத்தும் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது. தொழிலதிபர்-களுக்குச் சாதகமானது. மக்கள் விரோதச் செயல்பாடுகளில் ஈடுபடுவதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

- நிதிஷ்குமார், பிகார் முதல் அமைச்சர்

நியூயார்க், மிசேரியில் கருப்பின இளைஞர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. அமெரிக்க காவல்துறையினரின் மனநிலை, நடைமுறைகளில் மாற்றம் அவசியம்.

- பராக் ஒபாமா, அமெரிக்க அதிபர்

நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான ஆவணப்படம் வெளியாவதால் நம் நாட்டின் பெருமைக்கு எந்தக் களங்கமும் ஏற்பட்டுவிடாது. ஆவணப் படத்துக்கு, இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். இது நமக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

- ஒமர் அப்துல்லா, தலைவர், தேசிய மாநாடு கட்சி.

மத்தியில் ஆட்சிபுரியும் கட்சி இந்தியாவை காவிமயமாக்கும் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. சரஸ்வதி பூஜை, பள்ளிகளில் குரு பூஜை, பசுமாட்டை வழிபட வேண்டும், பகவத் கீதை புனித நூல் என்று கூறி வருகின்றனர்.

அவர்களுக்கு யார் இந்த உரிமையைக் கொடுத்தது? இதனைப் புரிந்து கொண்டால் மனித உரிமைகள் என்ன வென்பது தெளிவடையும்.

- சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் வாக்களிக்கும் உரிமை அடிப்படை உரிமையில்லை என தெரிவித்-துள்ளது. ஆனால் வாக்களிக்கும் உரிமை அடிப்படை உரிமைதான் என பல நீதிபதிகள் கொண்ட அந்த அமர்வில் மாறுபட்ட தீர்ப்பை நான் வழங்கியுள்ளேன்.

மக்கள் வாக்களிப்பதில் தங்களுக்கு விருப்பமில்லையென்றால் சட்டத்தின் மூலம் அந்த உரிமையை ஆட்சியாளர்கள் திரும்ப எடுத்துக் கொள்ளலாம் என்பது என்னைப் பொருத்தவரையில் அபத்தமானது. இந்த உரிமை அரசியல் சாசனத்தின் அடிப்படையானது.

- செலமேஸ்வர், நீதிபதி, உச்ச நீதிமன்றம்.

.............

சொல்றாங்க

பாதுகாப்புத் துறைக்காக நிலம் கையகப்படுத்தும்போது அதுகுறித்து நில உரிமையாளர் களிடம் ஒப்புதல் வாங்கக் கூடாது என்று நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் சேர்க்க காங்கிரஸ் மறந்துவிட்டது.

- அருண் ஜெட்லி, மத்திய நிதியமைச்சர்

சொல்றேங்க: நீங்க மறக்காம முதலாளிகளுக்கு சேவகம் பண்றீங்களே... அதைப் பெருமையா சொல்றீங்களா?

சொல்றாங்க

அய்ந்து கண்டங்களுக்கு பயங்கரவாதிகளை ஈரான் அனுப்பியுள்ளது. உலகில் பயங்கரவாதத்திற்கு ஊக்கமளிக்கும் நாடுகளில் முதன்மையான இடத்தை வகிக்கிறது அந்நாடு.

அணு ஆயுதம் இல்லாத ஈரான் உலகை பயங்கரவாதிகளின் பிடியில் சிக்க வைத்துள்ளது. அணு ஆயுதம் இருந்தால் இனி என்ன செய்யும் என்பதைக் கற்பனை செய்து கொள்ளலாம்.

-பெஞ்சமின் நெதன் யாஹு, இஸ்ரேல் பிரதமர்.

சொல்றேங்க: உங்க கூட்டணி பயங்கரவாதம்தானே பாஸ், உலக பயங்கரவாதமே! எல்லாருக்கும் ஆயுத சப்ளையும் நீங்கதானே!

தமிழ் ஓவியா said...

சிந்துவெளியின் துறைமுகம்

லோதல்: சிந்து சமவெளியின் சான்று 3

சிந்துவெளியின் துறைமுகம்

-ச.தீபிகா, தொல்லியல்துறை ஆய்வு மாணவர்லோதல்: குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஹரப்பா நாகரிகத்து துறைமுக நகரமாகும். கேம்பே வளைகுடாவின் வாயிலில் அமைந்துள்ள இந்த நகரம் தொல்லியல் அகழ்வாராய்ச்சியில் சபர்மதி ஆற்றின் அருகே கண்டறியப்பட்டது.

லோதல் ஒரு முக்கியமான வணிக நகரமாகவும், தொழில் மய்யமாகவும் இருந்துள்ளது. மணிகள், பானைகள், கிளிஞ்சல்கள், மற்றும் இதர தாமிரக் கலைப் பொருள்கள் அங்கு தயாரிக்கப்பட்டுள்ளன.

தமிழ் ஓவியா said...


காம்பே வளைகுடாவில் அமைந்திருக்கும் லோதலின் புவியியல் அமைப்பு அங்கு துறைமுகத்துக்கும், படகுப் போக்குவரத்துக்கும் மிக உகந்த இடமாக அமையப் பெறவில்லை.

ஆதலால், லோதல் என்ற பெயருக்கு சவங்களின் மலை என்றே பொருள். காம்பே வளைகுடா பகுதியில் குடியிருப்பு அமைந்ததன் காரணமே, விலை உயர்ந்த ரத்தினக் கற்கள் கிடைக்குமிடம் அது என்பதுதான்.

தொடக்ககால ஹரப்பா நாகரிக மக்கள் இந்த இடத்தில் வாழ்ந்தனர் என்பதை அந்த இடத்தின் அகழாய்வு காட்டுகிறது. முதிர்வடைந்த ஹரப்பா நாகரிக காலம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

மற்ற ஹரப்பா நாகரிக நகரங்களின் திட்டங்களிலிருந்து லோதல் நகரத் திட்டம் மாறுபட்டதாக இருப்பதாகும். முதல் நிலையில் அது களிமண் கரையால் பாதுகாக்கப்பட்ட ஒரு சிறு கிராமமாக இருந்தது.

ஆனால் அதன் மக்கள் குடியிருப்பு வெள்ளத்தால் அழிக்கப்பட்டுவிட்டது. அதனால், இரண்டாவது நிலையில் இந்நகரம் உருவாக்கப்படும் போது, உட்புற அரண் மற்றும் வெளிநகரம் உள்ளிட்ட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தமிழ் ஓவியா said...

கி.மு. 1900இல் இந்தக் குடியிருப்பு முழுமையாக வெள்ளத்தால் அழிக்கப்பட்டுவிட்டது.

வெளிநகரம் _- கோட்டைப் பகுதி: (Agopolis): 125 ஜ் 118 மீட்டர் பரப்புக் கொண்ட உள்அரண், இந்த நகரத்தின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. 3.60 மீட்டர் உயரம் கொண்ட ஒரு மேடை மீது அமைந்திருந்த இந்த உள்அரணில் விரிவான வடிகால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதனை ஒட்டி அதன் தெற்குப் பக்கத்தில் இருக்கும் கிடங்கில் 9.20 மீட்டர் அகலப் பாதைகள் கொண்ட 12 வளாகப் பகுதிகள் இருக்கின்றன; அவற்றில் இருந்த 65 முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. முதிர்வடைந்த ஹரப்பா நாகரிக காலத்தில் சரக்கு வைக்கப்படும் இடமாக அது இருந்திருக்க வேண்டும்.

உள்நகரம் (Lower Town): வெளிநகரம் வளாகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அது போன்ற 7 பகுதிகள் கண்டுபிடிக்கப்-பட்டுள்ளன. 1.20 முதல் 3.60 மீட்டர் வரையிலான உயரம் கொண்ட மேடையின் மீது வீடுகள் வரிசையாகக் கட்டப்பட்டுள்ளன.

அவற்றுக்கும் விரிவான வடிகால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குளியல் அறைகளும், நிலத்துக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள நீர் உறிஞ்சும் பீப்பாய்களுக்குக் கழிவு நீரைச் செலுத்தும் சாக்கடைகளும் அனைத்து வீடுகளிலும் அமைக்கப்பட்டிருந்தன.

அங்கிருந்த சாலைகளில் பிரதான சாலை 12 மீட்டர் அகலம் கொண்டதாக இருந்தது. குறுகிய தெருக்கள் 3.60 மீட்டர் அகலத்தைக் கொண்டிருந்தன. அங்காடி நகரத்தின் மய்யத்தில் அமைந்திருந்தது. தொழிற்சாலைப் பகுதிகள் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து சற்றே தள்ளி அமைந்திருந்தன.

கிளிஞ்சல் வெட்டுபவர்கள், தந்தப் பொருள்கள் செதுக்குபவர்கள், உலோகப் பொருள்கள் தயாரிக்கும் கொல்லர்கள் தொழிற்சாலைப் பகுதிகளில் வாழ்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நகரம் முழுவதுமே 13 மீட்டர் அகலம் கொண்ட மண் மற்றும் செங்கற்கள் கொண்ட சுவரால் சூழப்பட்டிருந்தது.

கப்பல் கட்டுமிடம் (Dockyard): உள்அரணுக்குக் கிழக்குப் பக்கத்தில், மிகப் பெரிய கட்டுமானமாக (223 மீட்டர் நீளமும், 36 மீட்டர் அகலமும், 8 மீட்டர் ஆழமும் கொண்ட) கப்பல் துறைமுகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இத் துறைமுகத்துக்கு உள்ளே நீரைச் செலுத்துவதற்கான கால்வாய்கள் இரண்டு இருந்தன. இவற்றின் மூலம் கப்பல்துறைக்குள் இருக்கும் நீரின் ஆழத்தைக் கட்டுப்படுத்த இயலும். இந்தக் கட்டுமானம் மொத்தமும், நான்கு முறை சுடப்பட்ட செங்கற்களால் இரண்டாம் கட்டமைப்பு நிலையில் கட்டப்பட்டதாகும்.

தமிழ் ஓவியா said...

60 டன் எடை கொண்ட 30 கப்பல்களை இந்தத் துறையில் ஒரே நேரத்தில் நிறுத்த இயலும் என்று கூறப்படுகிறது. அந்த அமைப்பு கப்பல் கட்டுமிடம் அல்ல; தண்ணீர் சேமிக்கும் தொட்டி என்று சில கல்வியாளர்கள் வாதிடுகின்றனர்.

ஆனால் தண்ணீர்த் தேவையை நிறைவு செய்வதற்கான எண்ணற்ற கிணறுகள் லோதலில் உள்ளன என்பதால் அது நீர்த் தொட்டியாக இருக்க முடியாது. கப்பல் துறையினை அடுத்து மேற்குப் பக்கத்தில் அமைந்துள்ள 12.8 மீட்டர் ஜ் 243 மீட்டர் அளவு கொண்ட மண்ணாலான திறந்த நடைமேடை கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நடைமேடை சரக்குகளை ஏற்றும் மேடைதான் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது. மேலும், கடல்வாழ் உயிரினங்கள் அந்த இடத்தில் இருந்ததும் அது ஒரு கப்பல் துறைமுகம்தான் என்பதை அடையாளப்படுத்தி மெய்ப்பித்-துள்ளது.

கலைப் பொருட்கள்: குறிப்பாக, மிகச் சிறிய அளவிலான ரத்ன மணிகளுக்குப் புகழ் பெற்றது லோதல். அழகு நிறைந்த, சிறுசிறு மணிகள் கொண்ட, ஈடு இணையற்ற தங்க நெக்லஸ்களும் அங்கு செய்யப்பட்டன.

அவற்றில் சில 0.25 மில்லி மீட்டர் குறுக்களவு கொண்டவை. முலாம் பூசப்பட்ட தாமிர வயர்களில் கோர்க்கப்பட்டிருந்த சில மணி மாலைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

கிளிஞ்சல்கள், களிமண் ஆகியவற்றால் செய்யப்பட்ட நகைகளும் அகழாய்வின்போது அடையாளம் காணப்பட்டன. தாமிர கருமாரப் பணியும், பானை தயாரிப்பும் வெளிநகரத்தில் உயர்ந்த ஓரளவில் முன்னேற்றம் அடைந்-திருந்தன.

லோதல் கருமார்கள், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 100 சதவிகிதம் சுத்தமான தாமிரத்தைப் பயன்படுத்தினார்கள். தகரத்துடன் அதனைக் கலந்து அம்பு முனைகள், ஈட்டிகள், மீன் தூண்டில்கள், தளவாடங்கள் மற்றும் நகைகள் செய்யப்பட்டன.

பொதுவாக சிந்து சமவெளி நாகரிகத்தில், குறிப்பாக லோதல் நகரத்திலும் ஈடு இணையற்ற மிகச் சிறந்த அம்சம் என்னவென்றால், எடைகள் மற்றும் அளவுக் கருவிகள் ஒரே மாதிரி பயன்படுத்தப்பட்டதுதான்.

லோதல் அகழாய்வின்போது எண்ணற்ற எடை மற்றும் அளவுக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை அங்குள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

லோதல் அருங்காட்சியகத்தில் வெண்கலம் மற்றும் தாமிரத்தினால் செய்யப்பட்ட கண்ணாடிகளும், கற்கள், படிகங்கள், கிளிஞ்சல்கள், எலும்புகள் போன்றவற்றால் செய்யப்பட்ட பலவகைப்பட்ட கலைப் பொருட்களும் உள்ளன.

பானை தயாரிப்பின் சிறப்பம்சம்: லோதலில் இருந்த மற்றொரு முக்கியமான தொழில் பானை தயாரிப்பதுதான். மான்கள், எருதுகள், பசுக்கள், குதிரைகள், உட்கார்ந்திருக்கும் பறவைகள் ஆகிய ஓவியங்கள் தீட்டப்பட்ட அழகு மிகுந்த மண் ஜாடிகளும், சுடுமண் விளையாட்டுப் பொருள்களும், உருவங்களும் இவற்றில் அடங்கும்.

லோதலில் இரண்டு வகையான இரண்டு விதமான கலைப்பாணியில் தயாரிக்கப்பட்ட பானைகள் கண்டுபிடிக்கப்பட்டன. கைப்பிடி கொண்ட குழிவான பானையும், சிறுகழுத்துக் கொண்ட மண் கூஜாவும்தான் அவை.

பாத்திரங்களில் ஓவியம் தீட்டும்போது, படுக்கைவாட்டு, குறுக்குவாட்டு வடிவமைப்புகள் தீட்டப்-பட்டிருந்தன. சிவப்பு அல்லது பழுப்பு நிற முரட்டுத்தோல் போன்ற மேற்புறத்தில் கருப்பு வண்ணத்தில் மயில்கள், மலர்வடிவங்கள் தனியே வரைந்திணைக்கப்படும் பூத்தையல் வேலைகள் மிகவும் பிரபலமானவை. இவை லோதல் அருங்காட்சியகத்தில் உள்ளன.

சவஅடக்கம்: லோதலில் அகழாய்வு செய்யப்பட்ட 14 சவக்குழிகளும், அவற்றில் மூன்றைத் தவிர மற்றவை, நீண்டசதுர வடிவம் கொண்ட தனிநபரின் சவக் குழிகளாகவே இருந்தன.

மற்ற மூன்று மட்டும் Double burial எனப்படும் இரண்டு நபர்களைச் சேர்த்து அடக்கம் செய்யப்பட்ட சவக்குழிகளாக இருந்தன. இவ்வாறு இரண்டு நபர் சவக்குழிகளில் இருவரும் கட்டித் தழுவிய நிலையில் எலும்புக் கூடுகள் இருந்தன.

என்றாலும் இவர்கள் இரண்டு பேரும் எதிர்பால் ஆட்கள் என்பது இன்னமும் இறுதியாக மெய்ப்பிக்கப்படவில்லை.

- தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழ் ஓவியா said...

பெரிய கருந்துளை

விண்வெளியின் ஒரு பகுதியே கருந்துளை ஆகும். மிகவும் அடர்த்தி வாய்ந்த இதனுள் ஒளிகூட செல்ல முடியாது. தனக்கு அருகில் உள்ள அனைத்தையும் ஈர்க்கும் ஆற்றல் கருந்துளைக்கு உண்டு.

இதனால் ஏற்படும் வெப்பம் காரணமாக, ஒளித்துகள்கள் மின்னும் கதிர்களை வெளியிடும் தன்மை கொண்டவை யாக உள்ளன. இந்த ஒளிக்கதிர்கள் குவாசார் என அழைக்கப்படுகின்றன.

இத்தகு சிறப்புகள் வாய்ந்த, பூமியைவிட சுமார் 1200 கோடி அளவு பெரிய கருந்துளை ஒன்று விண்வெளியில் உள்ளது. சீனாவில் லிஜியாங் நகரில் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் 2.4 மீட்டர் குறுக்களவு கொண்ட தொலைநோக்கியின் உதவியுடன் இந்தக் கருந்துளையைக் கண்டுபிடித்து எஸ்டிஎஸ்எஸ்ஜெ0100 + 2802 என பெயர் வைத்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் சிலி நாடும் இந்தக் கருந்துளை இருப்பதை உறுதி செய்துள்ளன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருந்துளை-களி-லேயே மிகவும் பெரியதாகவும் ஒளிக்கதிர்கள் அதிக வெளிச்சம் கொண்ட-தாகவும் இருப்பது என்ற பெருமையினை இந்தக் கருந்துளை பெற்றுள்ளது.

கருந்துளையைக் கண்டுபிடித்த ஆய்வாளர்-களுள் ஒருவரான பெக்கிங் பல்கலைக்கழகப் பேராசிரியர் வூ சுபிங், பிரபஞ்சத்தில் பெருவெடிப்பு நிகழ்ந்து சுமார் 90 லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கருந்துளையை நாங்கள் கண்டு-பிடித்துள்ளோம்.

இதன்மூலம் கருந்துளைகள் எவ்வாறு தோன்றுகின்றன என்பது குறித்த ஆய்வு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

தயிர் ஷோரை தேஷிய உணவாக...

பகவான் மச்சாவதாரம் எடுத்தாரு அதனால் மீன் வதை தடை செய்யப்பட வேண்டும்.
வராக அவதாரம் எடுத்தாரு எனவே பன்றி வதை தடை செய்யப்பட வேண்டும்.

மேஷராசி அன்பர்கள் மனசு புண்படும் என்பதால் ஆடு வதை தடை செய்யப்பட வேண்டும்.

முப்பாட்டன் முருகன் கொடியில் சேவல் இடம்பெற்று இருப்பதால் கோழி வதை தடை செய்யப்பட வேண்டும்.

ஆக எல்லோரும் ஷைவத்துக்கு மாறி தயிர் ஷோரை தேஷிய உணவாக அறிவிக்க வேண்டும்.

- முகநூலில் யுவான் சுவாங்

தமிழ் ஓவியா said...

நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி தேவை


சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகளின் நியமனத்தில் சமூக நீதி கோரிய சிறப்புப் பொதுக் கூட்டம் ஆசிரியர் அவர்களின் தலைமையில் மார்ச் 3 அன்று பெரியார் திடலில் நடைபெற்றது.

வழக்குரைஞர் த. வீரசேகரன் வரவேற்புரையுடன் வழக்குரைஞர் அ. அருள்மொழி அறிமுக உரை ஆற்ற, வழக்குரைஞர் வீரமர்த்தினி இணைப்புரை வழங்கினார். பல்வேறு வழக்குரைஞர்கள் அமைப்புகளைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, எஸ்.பிரபாகரன்,ஆர்.சி.பால் கனகராஜ், கே.பாலு, பேராசிரியர் எஸ்.உதயபானு, வி.நளினி, எஸ்.ரஜினிகாந்த், ராஜா முகமது ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆசிரியர் அவர்கள் ஆற்றிய தலைமையுரையில்,இன்றைக்கு நடைமுறை அரசியலில் மூன்று பிரிவுகள் உண்டு.

1.நிர்வாகத் துறை 2.சட்டத்துறை 3.நீதித்துறை நிர்வாகத் துறை உத்தரவு போட்டு, சட்டமன்றம், நாடாளுமன்றம் சட்டத்தை நிறைவேற்றுவது. சட்டம் நிறைவேற்றுகிற இடத்தில், சமூகநீதி அடிப்படையில் விரும்-பினாலும்,

விரும்பாவிட்டாலும் எல்லாருக்கும் வாய்ப்புக் கிடைக்க வேண்டும். எல்லோருக்கும் வாய்ப்புக் கிடைக்கின்ற சூழல் வந்திருக்கிறது.

ஆனாலும், இந்த நீதித்துறை இருக்கிறது பாருங்கள், இது மட்டும் தனியே நிற்கிறது. இவர்கள் நாடாளுமன்றத்திலே நம்மால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற பிரதிநிதிகள், அவர்கள் விவாதித்து சட்டம் நிறைவேற்றிய பிறகு, அந்தச் சட்டத்தைச் செயல்படுத்துவது நிர்வாகத் துறை.

ஆனால், இவர்கள் கஷ்டப்பட்டு இவ்வளவையும் செய்த பிறகு, ஒரு சிவப்பு மையை வைத்துக்-கொண்டு, இது செல்லும், இது செல்லாது என்று எளிதில் அதை அடித்துத் திருத்தக் கூடிய இடத்தில் இருப்பவர்கள் நீதிபதிகள்.

ஆக, இந்த நாட்டை யார் ஆளுகிறார்கள் என்று சொன்னால், உண்மையில், நீதிபதிகள்-தான்.

அவ்வளவு பெரிய முக்கியத்துவமான இடத்தில் சமூகநீதி என்பது மிக முக்கிய-மல்லவா! JUSTICE, social, economic and political; இதுதான் அரசியல் சட்டம் வலியுறுத்தக் கூடியவை.

அதிலும்கூட, முதல் உரிமையாகச் சொல்லப்பட்டிருப்பது எது? சமூகநீதி, பிறகுதான் பொருளாதார நீதி, அதற்குப் பிறகுதான் அரசியல் நீதி.

எனவே, இந்த மூன்றையும் குழப்ப வேண்டாம். பொருளாதார நீதியையும், சமூக நீதியையும் ஒன்றாகச் சொன்னார்கள். அதற்கெல்லாம் இடம் என்று சொல்லித்தான், அரசியல் சட்டத்தை உருவாக்கும்பொழுதே, மூன்றாகப் பிரித்துவிட்டார்கள்.

சமூகநீதி என்பது ஒரு இடத்தில் அல்ல, பல இடங்களில் வரக்கூடிய வாய்ப்புகள் அரசியல் சட்டத்தில் இருக்கிறது என்பதை வழக்குரைஞர்களுடைய மாமன்றமாக இருக்கக்கூடிய இந்த அவைக்கு நான் விளக்கவேண்டிய அவசியமில்லை.

ஆனால், உலகத்திலுள்ள வேறு எந்த அரசியல் சட்டத்திலும் இல்லாத ஒரு சிறப்பு இந்த அரசியல் சட்டத்தில் இருக்கின்றது. காரணம், நம்முடைய சமுதாயத்தினுடைய நிலையை, அது பிரதிபலிக்கின்ற காரணத்தினால்-தான், அது தெளிவாக இருக்கிறது என்று சொல்லும்பொழுது, இதை உங்களுக்குச் சுட்டிக்காட்டக் கடமைப்-பட்டிருக்கின்றோம்.

தமிழ் ஓவியா said...

Nothing in this article shall prevent the State from making any provision for the reservation of appointments or posts in favour of any backward class of citizens which, in the opinion of the State, is not adequately represented in the services under the State. பிற்படுத்தப்பட்ட மக்களிடையே, அதிலும் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களை மிகுந்த அக்கறையோடு அமல்படுத்தவேண்டும்.

சமூக அநீதிகளிலிருந்தும், எல்லா வகையான சுரண்டல்களிலிருந்தும் அவர்களுக்குப் பாதுகாப்பளிக்கப்பட வேண்டும் என்கிறது அரசமைப்புச் சட்டம் 16(4).

இதனை நாம் சட்டப்பூர்வமாகவே எடுத்துக்காட்டி, வாதாடுவதற்கு, மக்கள் மன்றத்திலும் சரி, நீதிமன்றத்திலும் சரி வாதாடுகிறோம்.

அரசியல் சட்டத்தின்மீதுதானே பதவிப் பிரமாணம் எடுக்கிறார்கள், நீதிபதிகளானாலும். அந்த அரசியல் சட்டத்தைக் காப்பாற்றுவது முக்கியமானது அல்லவா!

அரசியல் சட்டத்தில் இருக்கிறபடிதான் இவர்கள் வாதாடுகிறார்கள். உலகத்திலேயே, இப்படி ஒரு வேண்டுகோள் வைத்து, சட்டத்தை அமல்படுத்து என்று சொல்வதற்கு ஒரு கூட்டம்; சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று சொல்வதற்கு இன்னொரு கூட்டம்.

எல்லாவற்றையும்விட முக்கியமான ஒன்றை அவர்கள் செய்யலாம்; செய்யவேண்டும். துணிச்சலுள்ளவர்கள் யாராவது இருந்தால், ஏற்கெனவே அதிகமாக இருக்கிற எந்த ஜாதியிலிருந்தும், மற்றவர்கள் சமமாக ஆக்கப்படுகிற வரையில், இனிமேல், நியமனத்தைச் செய்ய முடியாது என்று சொல்வதற்கு அரசியல் சட்டம் ஆணையிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.

அரசியல் சட்டத்தைச் சரியாகப் படித்துத் தெளிவாகப் புரிந்துகொண்டால், 16(4) இருக்கின்ற வாக்கியம் இருக்கிறதே, adequately representation. What is adequately representation? அதாவது, மற்றவர்கள் போதுமான அளவிற்கு சமப்படுத்துகின்ற அளவிற்கு,

சட்டநாதன் அவர்கள் தலைமையில், கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது, தமிழ்நாட்டில், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தை அமைத்த பொழுது, அதில் அவர் கொடுத்த அறிக்கையில் மிக அழகாக ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

எத்தனையோ மாறுபட்ட கருத்துகள் எல்லாம் உண்டு அதில். அரசியல் சட்ட 16(4) பிரிவுக்கு ஒரு விளக்கம் எழுதியிருக்கிறார். மிகத் தெளிவான, பாராட்டவேண்டிய ஒரு நுட்பமான விளக்கம் அது.

அது என்னவென்றால், What is adequately representation? என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்று சொல்லும்பொழுது, அந்த வார்த்தையின்மூலம் எதிலிருந்து வந்தது என்றால், adequatus என்ற இலத்தின்மொழி வார்த்தையிலிருந்துதான், அந்த ஆங்கிலச் சொல்லாக்கம் வந்தது.

அதற்கு என்ன பொருள்? அகராதியின் பொருள் என்று எடுத்துக்காட்டும்பொழுது, Till it equalize என்று அதற்குப் பொருள். மற்றவர்களோடு சமப்படுத்துகின்ற வரையில். என்றால், adequately representation மற்றவர்கள் முன்னே சென்றிருக்கிறார்கள் பாருங்கள், அவர்களோடு சமப்படுத்துகின்ற வரையில்.

Till it equalize என்று வரக்கூடிய அளவிற்கு வரும்பொழுது,adequately representation என்றால், ஏற்கெனவே பார்ப்பன சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் அல்லது முன்னேறிய சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் எவ்வளவு இருக்கிறார்களோ, அவர்களுக்குச் சமமாக மற்றவர்கள் நிரப்பப்படவேண்டும் என்பதுதான் அதற்குப் பொருள்.

அப்படி என்றால், அதற்கு அர்த்தம் என்ன? முன்னேறியவன் இருக்கின்ற வரையில், அதே ஜாதிக்காரனை அனுப்பக்கூடாது என்பதுதான் அதற்கு அர்த்தம்.

மற்றவர்களையும் சமப்படுத்த-வேண்டும் என்று பல தீர்ப்புகளை எடுத்துக் காட்டியும், பல வினாக்களை எழுப்பி அனைவரையும் சிந்திக்க வைத்தும் ஆசிரியர் உரையினை நிறைவு செய்தார்கள்.

இந்தப் பணியை முன்னெடுத்துச் சென்று ஆசிரியர் வழிகாட்ட வேண்டும் என்று உரையாற்றிய வழக்குரைஞர்கள் கேட்டுக் கொண்டனர்.

தமிழ் ஓவியா said...

பெண்ணியப் புரட்சிக்கு யார் காரணம்?


பெண்ணியத்தின் முக்கியக் கூறுபாடுகளான, பாலின சமத்துவம், பாலின சமவாய்ப்பு, சம படிப்புரிமை, உத்தியோக உரிமை, சம சொத்துரிமை எல்லாவற்றிற்கும் மேலான சம பிறப்புரிமை ஆகிய பலவற்றுக்கும் இன்னமும் போராடி வெற்றி பெறவேண்டிய இந்தப் பெண் சமுதாயத்தில்,அவற்றை அடைய எவை தடைகளாக உள்ளனவோ அவற்றைப் பற்றி வெளிப்படையாகப் பேசி, எழுதி கண்டிக்கும் துணிவைப் பெற்றால் ஒழிய, உண்மையான விடுதலை, மக்கள்தொகையில் சரிபகுதியாக உள்ள மகளிர்க்கானது எளிதில் கிட்டாது!

வயதுவந்த எல்லோருக்கும் வாக்குரிமை முதலில் 21 வயது; பிறகு 18 வயது என்று குறைக்கப்பட்டு, ஆண்_பெண், ஏழை_பணக்காரன், கற்றவன்_கல்லாதவன் என்ற எந்தப் பாகுபாடும் இன்றி தரப்பட்டுள்ளது உள்ளபடியே முந்தைய காலத்தினை ஒப்பிடுகையில் ஒரு அமைதிப் புரட்சிதான்!

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு வயது இப்போது 67-_68 ஆகிறது!

என்றாலும் இன்னமும் சமூகத்தில் உயர் ஜாதியினர் _ பார்ப்பனர் ஆதிக்கம் எப்படிப் பரவலாக உள்ளதோ, அதேபோல் நடைமுறையில் பெண்கள் சரிபகுதியாக இருப்பினும்கூட _ ஆண் ஆதிக்க நுகத்தடியின் கீழ் பூட்டப்பட்டவர்களாகவே மகளிர் இருக்கிறார்கள் என்ற பரிதாப நிலை தொடரவே செய்கிறது!

பெண்கள் உரிமைக்குப் பெரிதும் தடையாக இருப்பது ஹிந்துமதம் (பெரும்பான்மையாக உள்ள 87 சதவிகித மதத்தின் தாக்கம்) மற்ற மதங்களும் பெண் உரிமை பறிப்பு என்றாலும் இதன் அளவுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவாகவே உள்ளது!

தமிழ் ஓவியா said...


எடுத்துக்காட்டாக பழைய நிலையிலிருந்து மாறுதல் செய்ய ஹிந்து மதத்தவர் சனாதனத்தவர் பலத்த எதிர்ப்புக் காட்டி எளிதில் சட்டங்கள் நிறைவேறச் செய்யவிடவில்லை.

எளிதில் மணவிலக்குச் சட்டம் (Law of Divorce) நிறைவேற்ற விடவில்லையே! வெறுப்புடனும் வலியுடனும் கணவன் என்ற எஜமானனுடன் சேர்ந்து வாழ்ந்து தீரவேண்டும்; காரணம் ஹிந்து திருமணம் ஒரு புனிதக் கட்டு (Sacrament). விதவை மறுமணம், பால்ய மணத்தடை எளிதில் வரவில்லையே!

கத்தோலிக்க கிறிஸ்துவம், திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதால் மணவிலக்கு கூடாது. மதநெறிகளுக்கு விரோதமான பாவமாகும் என்றது!

பகவத்கீதையோ, எல்லாப் பெண்களும் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள் என்கிறது! (ஆண்கள் மட்டும் வேறு எப்படிப் பிறக்கிறார்கள் என்று கேட்காதீர்கள்).

முன்பு பெண்கள் சொந்தப் பெயரில் வங்கியில் பணம் போட்டுக் கணக்கு வைக்க முடியாத நிலையும் இருந்தது!

1930 முதல் சட்டப் போராட்டம்... 1941இல் அரசு இந்து சட்டக் கமிட்டி (Hindu Code Committee) ஒன்று நியமிக்கப்பட்டது மத்திய அரசால். இரண்டு மசோதாக்களைத் தயாரித்தது. ஆனால், வைதீக உலகம் _ சனாதனம் எதிர்த்து வெள்ளைக்கார அரசினைப் பயமுறுத்தி, மிரட்டி நிறைவேற்றவே விடவில்லை!

1943இல் திருத்தப்பட்ட மசோதா பி.என்.இராவ் தலைமையில் இந்தியப் பாராளுமன்றத்தில் தாக்கல் ஆனது. ஆனாலும், சிக்கல் தொடர்ந்தது.
பிறகு டாக்டர் அம்பேத்கரின் வழி-காட்டுதலில் சில மாறுதல்களுடன் கொண்டுவரப்பட்டது.

புதிய மசோதா 1948 ஆகஸ்ட் 16இல் தாக்கல் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளாக மூச்சுப் பேச்சின்றி கிடந்தது. பிறகு காரசார எதிர்ப்பு _ விவாதங்கள் எழுந்தன.

ஷியாம் பிரசாத் முகர்ஜி என்ற ஹிந்துமகா சபைத் தலைவர் இந்த மசோதாவைக் கடுமையாக எதிர்த்தார். (இந்து மதத் தலைவர் _ ஆர்.எஸ்.எஸ்.காரர்.).

புயலும் பூகம்பமும் வெடிக்கும் இந்தப் பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம் நிறைவேறினால்... என்றார். (இவர்தான் பா.ஜ.க.வின் முன்னோடியான பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனர்.) ஹிந்து சாமியார்கள், சாதுக்கள் திரண்டு ஊர்வலம் வந்து எதிர்க்குரல் கொடுத்தனர்.

195---1 செப்டம்பர் 18, பாராளுமன்றத்தில் விவாதம். கடைசியாக அம்பேத்கரின் இந்துப் பெண்கள் சொத்துரிமை மசோதா தோற்கடிக்கப்பட்டது நாடாளுமன்றத்தில்!

இராஜேந்திர பிரசாத் போன்ற முதல் குடியரசுத் தலைவரே எதிர்க்குரல் _ சனாதனக் குரல் கொடுத்தார்! என்னே கொடுமை!

பிரதமர் நேருவே கைபிசைந்து, வெறும் வேடிக்கை பார்த்தார். சட்ட அமைச்சர் அம்பேத்கருக்குத் தந்த வாக்குறுதியை மீறினார்.

மனம் நொந்து தமது சட்ட அமைச்சர் பதவியை இராஜினாமா செய்து அமைச்சரவையிலிருந்து இதற்காக வெளியேறினார் டாக்டர் அம்பேத்கர்.

கொள்கைக்காகப் பதவியை இராஜினாமா செய்து பெரும்புகழ் எய்தினார் இதன்மூலம் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்! பிறகு வரலாறு திரும்பியது.

ஆனால் தி.மு.க. இடம் பெற்ற அய்க்கிய முன்னணி அரசில் பெண்களுக்கு ஆணுக்கு நிகரான சம சொத்துரிமைச் சட்டம் 2006இல் நிறைவேறி வரலாறு படைத்தது!

(The Hindu Succession Act 1956) 130 of 1956 as amended by The Hindu Succession (Amendment Act 2005) 39 of 2005 (Effective 9th September, 2005) இந்து வாரிசுரிமைச் சட்டத்திருத்தம் (39 of 2005) நடைமுறைக்கு வந்தது 9-.9.2005 முதல்) தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் நடத்திய முதல் சுயமரியாதை மாநாடு 1929இல் செங்கற்பட்டில் நடைபெற்றது. நீதிக்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அதில் நிறைவேற்றப்பட்ட இத்தகைய பெண்ணுரிமைத் தீர்மானங்கள் பின்னாளில் சட்டங்களாக காய்த்துக் கனிந்தன!

உலகப் பெண்கள் நாளில் பெரியாரின் பெரும்பங்கு, சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கத்தின் முயற்சிகள், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் அரிய முயற்சிகள் - இவற்றையெல்லாம் மறக்காது மக்களுக்கு குறிப்பாக இளைய தலைமுறையான இந்த இணைய(Internet) தலைமுறை இளம் பெண்களுக்கும் சொல்லி நினைவூட்ட வேண்டும்.

வேரின் பெருமை அறியாவிட்டால் விழுதுகள் ஒருபோதும் நிலைக்கமாட்டா! மறவாதீர்!

கி.வீரமணி, ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

முகநூலில் கிளிமூக்கு அரக்கன்


கேள்வி :- மாட்டிறைச்சியைத் தடை செய்துள்ளதே மகாராட்டிர அரசு?

பதில் :- பசு/காளை மாட்டிறைச்சியைத்தான் தடை செய்துள்ளது. மாட்டினத்தில் தாழ்த்தப்பட்ட கருமை நிற எருமை மாட்டை வெட்டலாம் உண்ணலாம்.வெளிப்படையாகப் பார்த்தால் காவித்தனமாக இருந்தாலும் இதன் பின்னர் வியாபரத் தந்திரமொன்றுள்ளது. கோமாதா எங்கள் குலமாதா பாடும் நாம்தான், உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கின்றோம்.மராட்டியம் போன்ற பெரிய மாநிலத்தில் பசு/காளை மாட்டிறைச்சியைத் தடை செய்வதன் மூலம், உள்நாட்டுப் பயன்பாட்டை நிறுத்தி, வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து பெரும் லாபமீட்டலாம்.

உள்ளூரில் ஒரு பொருளை ஒரு ரூபாய்க்கு விற்பது லாபமா அல்லது அதே பொருளை வெளியூரில் ஒன்பது பவுண்டுகளுக்கு விற்பது லாபமா என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

காவி"யவாதம் என்பது சாக்கு, வர்த்தகம் என்பதே நிஜமான போக்கு. எருமை மாட்டிறைச்சியை விட்டுவைக்கக் காரணம், ஏற்கெனவே மராட்டியம் இந்திய அளவில் மிகப் பெரிய எருமை இறைச்சி ஏற்றுமதியாளர். லாபமில்லாத காவித்தனம் என்பதில்லை.

- முகநூலில் கிளிமூக்கு அரக்கன்

தமிழ் ஓவியா said...

ஊன்றிப் படிக்க: உண்மையை உணருக!

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

இலக்கணம்

இலக்கம்_-குறி. அஃதாவது, ஒருவன் எந்த இடத்தில் அம்புவிட வேண்டுமோ அந்த இடம் இலக்கம்; எந்த இடத்தை அடைய வேண்டுமோ அந்த இடம் இலக்கம்.

இலக்கம் தூய தமிழ்ச் சொல். எல்லே இலக்கம் என்பது தொல்காப்பிய நூற்பா. இனி அந்த இலக்கம் என்பது, அம் என்ற சாரியை குறைந்து இலக்கு என நிற்பதும், அணம் என்பதைச் சேர்த்துக் கொண்டு இலக்கணம் என நிற்பதுண்டு.

(இலக்கு+அணம்) இலக்கணம் என்றால் அதன் பொருள் எனில், இலக்கை நெருங்குவது என்பதாம். அணம்_அணுகுவது. ஈறு திரிந்த ஆகு பெயர் என்பார்கள் இதை. அண என்று மட்டும் இருந்தால் என்ன பொருள் எனில், நெருங்க என்பது.

இது செய எச்சம். (இலக்கு+அண) இலக்கண என்றால் இலக்கை நெருங்க என்று பொருள். இவ்வாறு சொற்றொடர் ஆட்சியில் வந்துள்ளதா எனில் மணிமேகலையில் 30_-வது பவத்திறம் அறுகெனப்படுவ நோற்றகாதை 18_-வது அடியில், இலக்கணத் தொடரில் (இலக்கு+அண) என வந்துள்ளது காண்க.

இதைத் தொடர்ந்தும், சொற்றகப்பட்டும் இலக்கணத் தொடர்பால் என வந்துள்ளது. இவற்றால் இலக்கணம் என்பது தூய தமிழ்ச் சொற்றொடர் என்பது பெற்றாம். இலக்கணம் என்பது லக்ஷணம் என்ற வடசொல்லினின்று வந்ததாம்.

இவ்வாறு தமிழாராய்ச்சி வல்லவர் என்று பிழையாக நம்மவரால் கருதப்படும் தெ.பொ.மீனாக்ஷி, அழகு, சேது முதலியவர்கள் கூட எழுதியும் பேசியும் வந்துள்ளார்கள்.

இவர்கள் பார்ப்பனரின் கூலிக்காக, வடமொழியினின்று வந்தது என்று பிதற்றும் ஆட்கள் என்பதையும், ஆங்கிலம் படித்து பிழைக்கத் தெரியாதென்று, தமிழ் தெரியும் என்றும் தமிழர்களை ஏமாற்றித் திரிகின்றனர் என்பதையும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும். (குயில், 8.-6.-1958)

நேயம்

இது நேசம் என்னும் வடசொல் சிதைவாம். சீவக சிந்தாமணியில் 3049_-ம் செய்யுள், நெய் போதி நெஞ்சு என வந்துள்ளதும், அது நேயம் என்பதையே குறிப்பதும் அறியாதார் பார்ப்பன, பார்ப்பன அடிவருடிகளும் கூறுவதைக் கொண்டு, நேயம் வடசொற் சிதைவு என்று கூறித் திரிகின்றார்கள்.

நெய் என்ற சொல்லினடியாகப் பண்புப் பெயர். ஆதலின் தூய தமிழ் என அறிக.

மீன்

இது கூட மீனம் என்று வடசொற் சிதைவாம். மின்னல் என்பது அல் இறுதி நிலைபெற்ற தொழிற் பெயர். அது அவ்விகுதி நிலை கெட்டு மின் என நிற்பதுண்டு. அந்நிலையில் அதை முதனிலை தொழிற்பெயர் என்பார்கள்.

அம் முதனிலையாகிய மின் என்பதும் முதல் நீண்டு மீன் என்று ஆகும். அந்நிலையில் அதை முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்பார்கள்.

எனவே, மீன் என்பதும் முதனிலை தொழிற்பெயர். அது தொழிலாகு பெயர் என்னும் கோளைக் குறிக்கும். எனவே, மீன் தூய தமிழ்ச் சொல் பெயர்.

கோள் மின்னும் மீன் சூழ் குளிர்மாமதித் தோற்றம் என்ற சான்றோர் செய்யுளையும் நோக்குக. மின்னுவது மீன் எனக் காரணப் பெயர் என்று உணர்க.

குயில் 28. 6. 1958

தமிழ் ஓவியா said...

சிறப்புச் சிறுகதை

விட்டு விடுதலையாகி

-கவின் மலர்

உனக்குப் புரியாது கவிதா. ஒரு நாள் பேசலைன்னாலும் ரொம்ப கஷ்டம். ஹூம். என்னைக் காப்பாத்திக் கொண்டு வந்து வச்சிருக்கான், அவன் இல்லேன்னா நான் என்னிக்கோ தற்கொலை பண்ணிக்கொண்டு செத்துருப்பேன் தெரியுமா? சொல்லும்போதே கண்களின் பயமும் மிரட்சியும் தெரிந்தன அவளுக்குள்.

ஏன் இவள் இப்படிச் சொல்கிறாள். அவள் வீட்டில் அப்படியென்ன கொடுமை அவளுக்கு? அன்றைக்கு அண்ணனைக்கண்டு அப்படிப் பயந்து நடுங்கினாள். இன்றைக்கு இப்படிச் சொல்கிறாள். பெற்ற பெண்ணை அப்படி யாராவது கொடுமைப்படுத்துவார்களா? கவிதா அவள் முகத்தையே பார்த்தாள்.

பால்வடியும் இந்த முகத்தைப் பார்த்தால் எப்படிக் கொடுமைப்படுத்தத் தோன்றும்? என்ன மனிதர்கள்?

என்னதான் ஆச்சு உன் வீட்டுல? சொல்லேன்!
இப்போ வேணாம். அப்புறமா சொல்றேன்.

அந்த அப்புறமா அவள் பிரான்ஸ் புறப்படும்வரை வரவேயில்லை. ஆனால் தினமும் ஏதோ சொல்ல எத்தனிப்பதுமாய் சொல்ல இயலாமல் உள்ளுக்குள் விழுங்குவதுமாய் அவள் தவிப்பதாய்ப் பட்டது கவிதாவுக்கு.

தமிழ் ஓவியா said...


ஆனாலும் புறப்படும் நாள்வரை அவள் எதுவும் சொல்லவேயில்லை. விமான நிலையத்தில் நிற்கையில் அடக்கவியலாமல் கண்ணீர் விட்டனர் இருவரும். சுதாவை வழியனுப்பி வைத்துவிட்டு வந்தபின்னர் கவிதாவிற்கு அறை வெறுமையாய்த் தெரிந்தது. சாப்பிடப் பிடிக்கவில்லை.

மறுநாள் அருகிலிருந்த எஸ்.டி.டி.பூத்திற்கு சில்லரை மாற்றச் சென்றபோது அங்கிருந்த பையன் கேட்டான் உங்களத்தேடி ரெண்டுபேர் ஹாஸ்டலுக்கு வந்திருப்பாங்களே? அவங்களைப் பார்க்காம நீங்க இங்கே வந்துட்டீங்களேக்கா? யாரு? என்னை யாரு பாக்க வந்தாங்க?

சுதாக்கா போட்டோவைக் காமிச்சு கடையாண்ட வந்து ஒரு அம்மாவும் இன்னொருத்தரும் கேட்டாங்கக்கா. அவங்க எங்கேயோ வெளிநாடு போயிட்டாங்க. கூட ஒரு அக்கா எப்பவுமிருக்கும். அத்தப் போயிப் பாருன்னு உங்க பேரு சொல்லி அனுப்பிச்சேன். இந்த ஹாஸ்டல்தான்னு சொல்லியனுப்பினேன். வரலயா?

கவிதாவிற்கு ஒரு நொடி உலகமே ஸ்தம்பித்தது. ஹாஸ்டல் நோக்கி ஏறத்தாழ ஓடினாள். அவள் உள்ளே நுழைந்தபோது விசிட்டர்ஸ் ரூமில் ஓர் அம்மாளும், இன்னுமொரு பெரியவரும் நின்றிருந்தனர். சுதாவின் அதே சாயல். பார்த்தவுடன் சொல்லிவிடலாம் அது சுதாவின் தாயென்று.

இதோ.. இவதான் கவிதா, -மஞ்சு அடையாளம் காண்பித்துவிட்டு அலுவலகம் கிளம்பினாள்.

அந்த அம்மாள் மெல்ல இவளை நெருங்கினாள். அம்மாடி! நீதான் சுதாவோட ஃபிரண்டாம்மா? ஆமாம்.. நீங்க..?

நான் சுதாவோட அம்மா. அவ இப்போ எங்கேம்மா? சொல்லு! அதட்டலாய் கேட்டாள் அந்த அம்மாள். கவிதாவுக்கு எரிச்சல் வந்தது. அமைதியாய் தெரியாது என்றாள்.

இங்கே யார்கிட்ட கேட்டாலும் எனக்குத் தெரியாதுங்குறாங்க.. பேசி வச்சிருக்கீங்களா சொல்லக்கூடாதுன்னு அந்தம்மாள் கத்தினாள்.

இங்க பாருங்கம்மா! இது ஹாஸ்டல். இங்க கத்தி கூப்பாடு போடாதீங்க

நான் திருநெல்வேலிலேர்ந்து கௌம்பி வந்துருக்கேன்மா. அவ எங்கே? எங்கேயோ வெளிநாடு போயிட்டதா அந்த எஸ்.டி.டி.பூத் பையன் சொன்னான். கட்டையில போறவ.. நாறச்சிறுக்கி.

இப்படிப் பண்ணிட்டுப் போயிட்டாளே... எங்க போனா அவ? சொல்லும்மா சொல்லு! எங்க குடும்ப மானத்தையே வாங்கிட்டு அவ எங்க போனா?

அவ பண்ணின காரியத்துக்கு அவ கையில் கிடைச்சா கண்டந்துண்டமா வெட்டிப் போட்ருப்பான் அவ அண்ணங்காரன் என சொல்லும்போது அழுதுகொண்டே சொன்னாலும் குரலில் வன்மம் தெறித்தது.

அந்த ஓடுகாலி சிறுக்கி ஓடுனாளே.. பெத்த புள்ளையை விட்டுட்டுல்ல ஓடிட்டா... அதெப்புடி ஒரு தாய்க்கு இப்புடிச் செய்ய மனசு வரும்?

அதிர்ந்து நின்றாள் கவிதா. அவளுக்கு அந்த வாக்கியத்தின் அர்த்தத்தை தான் சரியாகப் புரிந்து கொண்டோமா அல்லது அந்த அம்மாள் வேறு ஏதாவது சொல்லி தன் காதில் வேறு மாதிரி விழுந்துவிட்டதோ என்று குழப்பமாய் இருந்தது.

என்ன சொல்கிறாள் இந்த அம்மாள்? அம்மா! என்ன சொல்றீங்கம்மா? யாரு குழந்தை? குழந்தை இருக்கா? சுதாவுக்கா?

அந்தம்மாள் ஒரு புகைப்படத்தை எடுத்து வீசினாள். கழுத்தில் தாலி. கையில் குழந்தை. சுதாவேதான். குழந்தை... இது.. இது.. அவள் அண்ணன் குழந்தை சுகி என்றல்லவா சொன்னாள்?

இந்தக் குழந்தையின் படத்தைத்தானே அவள் எடுத்து வைத்துக்கொண்டு அழுதுகொண்டிருப்பாள். அருகில் யார்? இந்த முகம் கவிதாவுக்குத் தெரிந்த முகமாகத் தோன்றியது... யாரிது? அம்மா! இது யாரு? என்றாள் சன்னமான குரலில்.

அவ புருஷன் என்றாள் அம்மாள். சட்டென்று நினைவுக்கு வந்தது. இந்த முகத்தைத்தான் தி.நகரில் பார்த்து அன்றைக்கு மிரண்டாள் சுதா. அவளால் நம்ப முடியவில்லை. ஆனால் அவர்கள் நிச்சயமாக கணவன் - மனைவிதான் என்பதை படத்தில் தெரிந்த அவர்களின் நெருக்கம் சொல்லியது.

அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். சில நொடி மௌனத்திற்குப் பிறகு அந்தம்மாள் கேட்டாள். அவ எங்கேம்மா போயிருக்கா? அட்ரஸ் தர்றியா? போன் நம்பர் ஏதாச்சும் இருக்கா? அம்மா! அவ ஏன் வீட்டைவிட்டு வந்தா?

அந்தம்மாள் அழ ஆரம்பித்தாள். கிளி மாதிரி வளர்த்தேன் எம்பொண்ணை. ஒரு குரங்கு கையில புடிச்சுக் குடுத்தேன். அவ அப்பவே இந்த மாப்பிள்ளை வேணாம்னா. ஆனால் நல்ல வசதியான எடம்னு சொல்லி கட்டி வச்சோம்.

அந்தப் படுபாவி அவளைப் படாதபாடு படுத்தினான். சிகிரெட்டால மார்ல சுட்டுருக்கான். அவ மேல எப்பவும் சந்தேகம்தான். யார்கிட்டப் பேசினாலும் சந்தேகந்தான். தினமும் குடிதான். கண்ணு-மண்ணு தெரியாம அடிப்பான்.

எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டா குழந்தைக்காக. ஒரு தடவ அவளை அடிச்சதுல கை ஒடஞ்சு பிராக்சர் ஆயிடுச்சும்மா.. நான் எதச் சொல்வேன்... எத விடுவேன்.. என்புள்ளய சின்னாபின்னாப் படுத்திட்டான்மா.

அடிச்சு அவள வீட்டை விட்டுத்தள்ளி கதவச் சாத்திட்டான். அப்போ அந்த வழியா போன ஒருத்தன்தான் அவளைக் கூட்டிட்டுப் போயி ஆஸ்பத்திரில சேத்தான். அப்படித்தான் அந்தப் பையனோட பழக்கம் அவளுக்கு.

தமிழ் ஓவியா said...


ஒரு நா திடீர்னு மாப்பிள்ளை குடிச்சிட்டு வந்து அவளை அடிச்சப்போ அடிவயித்துல பட்டு மயங்கிட்டா. அன்னைக்கு அவளுக்கு உயிர்ப்பயம் வந்துடுச்சு. செத்துப்போயிட்டா என்ன செய்றதுன்னு நெனச்சுக் கௌம்பிட்டா.

குழந்தை அவ மாமியார் ரூம்ல இருந்துச்சு போலிருக்கு அன்னைக்கு. போய் எடுத்துட்டுப் போறதுக்கு அவளுக்குப் பயம், மாட்டிப்போமோன்னு. அப்படியே கிளம்பிட்டா.. கிளம்பினவ இங்கே எங்க வீட்டுக்கு வரவேண்டியதுதானே?.. நேரா அவனைப் பார்க்கப் போயிட்டா.

கண்ணீர் வழியப் பேசிக்கொண்டிருந்த அந்தம்மாள் திடீரென ஆவேசமானாள். ஆனா அதுக்காக அவன் பின்னாடி போயிரலாமா? ..அந்த நாறநாயை இந்த மூதேவிக்குப் பிடிச்சிருச்சி. கல்யாணம் ஆயிடுச்சே; புள்ளை வேற இருக்கேன்னு யோசிக்க வேணாமா? அந்தப் பயதான் ஆம்பள பல்ல இளிச்சுக்கிட்டு வருவான்.

இவளுக்கு எங்க போச்சு புத்தி.? களவாணிச் சிறுக்கி!... வாயில் வரக்கூடாத கெட்டவார்த்தை சொல்லித் திட்டினாள் அந்தம்மாள்.

அதுவரை அமைதியாய் இருந்த கூட வந்திருந்த அந்த மனிதர் கோபம் கொப்பளிக்கப் பேசினார். ஜாதிசனம் முன்னாடி தலகுனிய வச்சுட்டாம்மா! அவளை ஒனக்கு இப்பத்தானே தெரியும். இந்தக் கதையெல்லாம் சொன்னாளா உங்கிட்ட?

இல்லை..! கல்யாணம் ஆனதெல்லாம் எனக்குத் தெரியாது. சொல்லலை. ரொம்ப ஷாக்கா இருக்கு

எப்புடிச் சொல்வா? இதெல்லாம் தெரிஞ்சா மூஞ்சி குடுத்துப் பேசுவீங்களா யாராச்சும். அதான் சொல்லியிருக்கமாட்டா.

அவள எந்த ஊர்ல கட்டிக்குடுத்தீங்க? குழந்தை எங்க இருக்கு?

இந்த மெட்ராஸ்லதான். ஆவடியிலதான் வீடு. ஓடுகாலி பெத்ததா இருந்தாலும் நம்ம குடும்ப வாரிசாச்சேன்னு... இவ போனபிறகு நான் போய்க் கேட்டேன். குடுக்கலை. இவளும் போன் பண்ணி புள்ளயைக் கேட்டிருக்கா... குடுக்க மாட்டேன்னுட்டாங்க. அந்தாள் மறுகல்யாணம் ஒடனே பண்ணிக்கிட்டான்.

இவளத் தேடாத எடமில்ல. அவ அண்ணங்காரன் ஆத்திரத்துல குதிக்கிறான். எங்க இருக்கான்னே தெரியல. எங்க சொந்தக்காரரு ஒருத்தர் இந்த ரோட்டுல அவள ஆட்டோவுல பாத்ததா நேத்துச் சொல்லி அட்ரஸ் சொன்னாரு.

தமிழ் ஓவியா said...

சனியன அடிச்சு இழுத்துக்கிட்டுப் போயிருவோம்னு நெனச்சு வந்தோம். ஆனா நாட்டை விட்டே அவன்கூட ஓடிட்டா!.... மறுபடி கெட்ட வார்த்தை.

அம்மா! நீங்க பாத்துக் கல்யாணம் பண்ணிவச்ச ஆளுதான் அத்தனை கொடுமக்-காரனாயிருக்கானே.. அதான் இப்ப அவளா பாத்துக்கிட்டா... நீங்க அதுக்கு ஏன் அவளத் திட்டுறீங்க?

அவனோட வாழப்புடிக்கலைன்னு ரத்து பண்ணிட்டு வந்தா எங்க ஜாதியில நாங்க கல்யாணம் பண்ணி வச்சிருப்போம்ல.

கவிதா அவர்கள் இருவரையும் எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.
எங்கதான் போயிருக்கா அவ! சொல்லும்மா!

தெரியாது! எனக்குத் தெரியாது அழுத்தமாகச் சொன்னாள்.

அந்த அம்மாள் பட்டென்று அவள் காலில் விழுந்தாள். பதறி பின்வாங்கினாள் கவிதா. என்னதிது! இவ்வளவு பெரியவங்க... என் காலில் விழுந்துக்கிட்டு.. எழுந்திருங்கம்மா!

அட்ரஸ் போன் நம்பர் ஏதாச்சும் குடும்மா... இந்தக் காரியம் பண்ணிட்டுப் போயிருக்காளே... அவள.... கவிதாவின் காலைப் பிடித்துக் கண்ணீர்விட்டுக் கெஞ்சினாள் அந்தம்மாள்.

கண்களிலிருந்து மாலை மாலையாய் நீர் வழிந்தோட கெஞ்சிக்கொண்டே இருந்தாள் அவள். அந்த அம்மாள் பேசியது எதுவுமே அவள் காதில் விழவில்லை. அழுத முகம் மட்டுமே தெரிந்தது.

ஒருகட்டத்தில் தாங்க முடியாமல் அம்மா! ப்ளீஸ் என்றாள் சத்தமாக. இவ்வளவு பெரியவங்க நீஙக. உங்கள யாருன்னே தெரியாத என் கால்ல விழ வச்சுட்டாளே அவ. நீங்க உங்க நம்பர் குடுங்க.. ஊருக்குப் போங்க இப்போ.

அவ எனக்கு நிச்சயமா போன் பண்ணுவா. பண்ணினா அவளோட நம்பர் வாங்கி உங்களுக்குத்தர்றேன். சரியா?

அந்த அம்மாளின் முகம் பிரகாசமாகியது. கவிதா தன் கைப்பையைத் திறந்து ஒரு சின்ன டைரியை எடுத்துக் கொடுக்க அந்த அம்மாள் தன் செல்பேசி எண்ணை எழுதிக் கொடுத்தாள்.

உன் நம்பர் சொல்லும்மா! அந்த மனிதர் கேட்டார். அவள் சொல்ல தன்னுடைய செல்பேசியை எடுத்து அதிலிருந்து இவள் எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் செய்தார்.
என்னை நம்புங்கம்மா! அவ கண்டிப்பா கூப்பிடுவா.

கூப்பிட்டா நான் பேசி அவள் அட்ரஸும் போன் நம்பரும் வாங்கித்தரேன்
அவ எந்த ஊருக்குப் போயிருக்கா?
சிங்கப்பூர்.

சிங்கப்பூரா! சொந்தக்காரங்கள்ளாம் இருக்காங்க. பாத்துருவோம். கண்டுபிடிச்சுரு-வோம். போன் நம்பர் இருந்தாக்கூட போதும். ஒன்ன நம்பிப் போறேம்மா அவ போன் பண்ணினா நாங்க வந்துட்டுப்போனதைச் சொல்லாதே. உஷாராயிடுவா..

அந்தம்மாள் கையெடுத்துக் கும்பிட்டாள்.
சரிம்மா! நீங்க போயிட்டு வாங்க......!

அந்தம்மாளும், அவரும் புறப்பட்டனர். அறைக்குள்ளிருந்து நிர்மலா வந்து கேட்டாள். யார் கவிதா அவங்க? ஏதோ சத்தமா பேசினமாதிரி இருந்துது. காதுல சரியா விழலை. என்ன விஷயம்?

எனக்கு தூரத்துச் சொந்தம். சும்மா என்னப் பார்க்க வந்தாங்க. சொந்தக்காரங்க சண்டைதான். வேறென்ன. இவங்களுக்கு வேற வேலையில்ல. நகர்ந்தவள் நின்றாள். அப்புறம் நிம்மி! என் ஆபீஸ்மேட்ஸ் 3 பேரு வீடு எடுத்துத் தங்கியிருக்காங்க.

ஹாஸ்டலைக் காலி பண்ணிட்டு அங்க வரச்சொல்லிக்கிட்டு இருந்தாங்க ரொம்ப நாளா. கவிதாவும் போயிட்டா இல்லையா? அதனால நான் நாளைக்குக் காலைல ஹாஸ்டலை வெகேட் பண்றேன் சொல்லிக்கொண்டே வெளியேறிய கவிதா தன் செல்பேசியிலிருந்த சிம்கார்டைக் கழற்றிக் குப்பைத்தொட்டியில் எறிந்தாள்.

செல்பேசியினைக் கைப்பைக்குள் வைக்கையில் கண்ணில் தட்டுப்பட்டது அந்தப் புகைப்படம். கவிதாவும் சுதாவும் ஒரு மாலைப் பொழுதில் ஹாஸ்டல் மொட்டைமாடியில் எடுத்துக்-கொண்டது.

கலைந்த தலையுடனும், வியர்வை வழிந்த முகத்துடனும் இருக்கும் அந்தப் படத்தைப் பார்க்கும்போதெல்லாம் இந்தப் படத்தில் நான் நல்லாவே இல்ல.

வேற போட்டோ ஒன்னு எடுப்போம் கவிதா என்று சொல்லிக்கொண்டேயிருப்பாள் சுதா. ஆனால் அது நடக்காமலேயே போய்விட்டது.

அப்படத்தை இப்போது உற்றுப்பார்த்தாள் கவிதா. சுதா இப்பொழுது எப்போதையும்விட அழகாக இருப்பது போல் தோன்றியது

அன்று இரவு.. கவிதாவுக்கு லேண்ட்லைனில் அழைப்பு வந்தது. மறுமுனையில் சுதா.
சுதா! நல்லபடியா போய்ச் சேர்ந்தியா? ஒன்னும் பிரச்சினையில்லையே?

இல்ல கவி! இந்த ஊர் பிடிச்சிருக்கு. ராஜூ மட்டும்தான் இங்க எனக்குத் தெரியும். ஆனாலும் பிடிச்சிருக்கு. இவன்கூட இருக்குறதே எனக்கு சந்தோஷமா இருக்கு. நீ எப்பிடி இருக்கே?

இருக்கேன். உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..
என்ன?

உங்கம்மாவும் அப்பாவும் ஹாஸ்டலுக்கு வந்தாங்க
இரண்டு விநாடிகள் மௌனத்திற்குப் பிறகு துண்டிக்கப்பட்டது இணைப்பு.

அதன்பின் சுதாவிடமிருந்து ஒருபோதும் கவிதாவுக்கு தொலைப்பேசி அழைப்பு வரவேயில்லை.

தமிழ் ஓவியா said...


·

அன்னை மணியம்மையார் நினைவாக ….,

உடலுக்குத்தான் காதலென்றால்
ஒடியட்டும் மரபென்றே
கொள்கைக்கே மாலையிட்டு
எங்களைப் பிள்ளைகளாக்கிக் கொண்ட
அம்மாவே !
இன்று எங்களைத்
தனியேவிட்டு
எங்கே போனீர்கள் ?
உணர்வுகளை எங்கள்
உதிரத்தில் உறைய வைத்து
உடலை எடுத்துக்கொண்டு
எங்கேயம்மா போனீர்கள் !
வீரமுள்ள மணிகளை
விதைத்துவிட்டோம் என்றா ?

எழுபத்து மூன்றில்
ஒரு விடியலே இருளானபோது
உதயகிரணமாய்
ஒளி தந்து எங்களை
வழி நடத்திய அம்மாவே,
எங்களுக்கு
விடியலே விதவையா ?
விரக்தியே விதையா ?
இல்லையம்மா,
எங்கள் விழிகளில் வடிவது
கண்ணீரல்ல, சுடுநீர் !
அந்த விதை வளராது !
இன எதிரிகளே,
எங்களை அனாதைகள்
என்று மட்டும்
எண்ணிடாதீர்கள்,
எங்களின் விழிகளே
அய்யாவும் , அம்மாவும்தான் !
அந்தப் பார்வையின்
பாரம்பரியம்…,
எரித்தது இராமனைத்தான்
ஆனால்
எரிந்ததோ உங்கள் தேசியம் !
சரித்திரத்தைப்
புரட்டிப் பாருங்கள்,
எத்துனை
எமர்ஜென்சிகள் வந்தாலும்
எடுத்தெறிய முடியாத
வரலாற்று கட்டாயங்கள் அவை !
ஒன்றே ஒன்று,
தாய் எட்டடி என்றால்
நாங்களோ…, ?

16.03.1978, அன்னையாரின் உடல் பெரியார் திடலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கே ஒரு மரத்தடி மணல்திட்டில் உட்கார்ந்திருந்த போது எழுதி கவிஞரிடம் ( கலி.பூங்குன்றன் அவர்கள் ) கொடுத்தேன்.உண்மை இதழ்
01-15.04.1978,வெளியிடப்பட்டது.
நன்றி, நினைவுகளுடன்.கவுதமன். பசு

தமிழ் ஓவியா said...

நல்ல முடிவு!

இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஜாட் இனம் சேர்க்கப்பட்டது செல்லாது

உச்சநீதிமன்றம்

புதுடில்லி, மார்ச் 17- மத்திய அரசு கடந்த ஆண்டு ஜாட் இனத்தையும் இதர பிற்படுத்தப்பட் டோர் பட்டியலில் சேர்த்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (17.3.2015) விசாரணைக்கு வந்தது. அப்போது இதர பிற்படுத்தப் பட்டோர் (ஓ.பி.சி.) பட்டியிலில் ஜாட் இனத்தை சேர்த்த மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்று நீதிபதிகள் உத்தர விட்டனர்.

Read more: http://viduthalai.in/e-paper/98043.html#ixzz3Udy7jrAx

தமிழ் ஓவியா said...

காந்திமீதான அவமதிப்பு தொடர்கிறது
காந்தியார் பிறந்த நாள், கோவா அரசின் நாட்காட்டியில் இல்லை

பானாஜி மார்ச் 17_ கோவா அரசு தயார் செய்த நாட்காட்டி மற் றும் நாட்குறிப்பேடுகளில் காந்தியார் பிறந்தநாள் விடுபட்டிருந்தது. இதன் மூலம் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவா மாநில பாஜக அரசு, இந்த ஆண்டிற் கான நாட்காட்டி தயா ரித்து வெளியிட்டுள்ளது. இந்த நாட்காட்டியில் காந்தியார் பிறந்த நாள் குறிப்பிடப்படவில்லை. இதனால் கோவா மாநில அரசு அலுவலகங்களில் அக்டோபர் 2 ஆம் தேதி வேலை நாளாக கணக் கிடப்பட்டுள்ளது. கோவா மாநில அரசின் இந்த அவமதிப்பு நடவடிக்கைக்கு, கோவா மாநில காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள் ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர் பாளர் துர்காதாஸ் காமத் கூறும்போது, காந்தியார் பிறந்த நாளான அக்டோ பர் 2-ஆம் தேதியை கோவா மாநில அரசு விடுமுறை நாட்கள் பட் டியலிலிருந்து நீக்கி யுள்ளது.

இதன்மூலம் பாஜக அரசின் மறைமுகத் திட்டம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடக் கம்தான். வரும் காலத்தில் காந்தியாரைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட் சேவின் பிறந்த நாளை, விடுமுறை நாட்கள் பட்டியலில் சேர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார். இது தொடர் பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறும்போது, தேசத் தந்தையான காந்தி யாரின் பிறந்த நாள் தேசிய விடுமுறையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது தொடர வேண்டும். இந்த நாளை விடுமுறைப் பட்டியலிலி ருந்து நீக்கக் கூடாது. கடந்த ஆண்டும் காந்தி யார் பிறந்த நாளில் பள் ளிக்கு வருமாறு மாண வர்கள் கட்டாயப்படுத் தப்பட்டார்கள். இது போன்ற செயலைக் கை விட வேண்டும் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/98046.html#ixzz3UdyKWfqY

தமிழ் ஓவியா said...

அச்சுப்பிழை: சாக்கு சொல்லும் கோவா மாநில முதல்வர்

கோவா மாநில முதல் வர் லட்சுமிகாந்த் பார் சேகர் கூறும்போது, இந்த ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் பட்டியலில் காந் தியார் பிறந்த நாள் தவறு தலாக விடுபட்டுள்ளது. இது பதிப்பின் போது ஏற்பட்ட தவறாகும். காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் பி.சி.சாக்கோ கூறும்போது, இந்நிகழ்வு பாஜகவின் மோசமான மன நிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது. வேறு எந்த மாநில அரசாவது இது போன்ற நடவடிக் கையை எடுக்குமா? இதுபோன்ற முடிவு தேச விரோத மானது. நாட்டில் உள்ள எந்த அரசுக்கும் காந்தி யார் பிறந்த நாளை விடு முறை நாட்கள் பட்டிய லிலிருந்து நீக்கும் அதி காரம் இல்லை என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/98046.html#ixzz3UdyRGhTx

தமிழ் ஓவியா said...

நிலம் கையகப்படுத்தும் சட்டம் லாலு குதித்தார் களத்தில்

பீகார், மார்ச் 17-_ விவசாயிகளின் நலனுக்கு எதிராகச் செயல்படும் பாஜகவை, மத்திய ஆட் சிப் பொறுப்பிலிருந்து தூக்கியெறிய நாடு தழு விய அளவில் போராட் டங்கள் நடத்தப்படும்' என்று ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறினார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கைய கப்படுத்துதல் மசோ தாவை கண்டித்து, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினர், லாலு பிர சாத் யாதவ் தலைமையில், பிகாரில் ஆளுநர் மாளி கையை நோக்கி ஞாயிற் றுக்கிழமை கண்டனப் பேரணி நடத்தினர்.

இதுகுறித்து லாலு பிரசாத் யாதவ் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடி, "பாஜக ஆட்சி வந்தால், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட் டுள்ள இந்தியர்களின் ரூ.26.5 லட்சம் கோடி கருப்புப் பணம், சில மாதங்களுக்குள் மீட்கப் படும் என்றும், ஓராண் டுக்குள் 2 கோடி இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும்' என்றும் வாக்குறுதி அளித்தார்.

ஆனால், பாஜக ஆட் சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையிலும், மோடி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

மாறாக, முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், விவசாயிகளின் நலன் களை கருத்தில்கொண்டு, கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் மசோதாவை பெரு நிறு வனங்களுக்கும், முதலாளி களுக்கும் சாதகமாக்க முயன்று வருகிறார்.

விவசாயிகளுக்கு எதி ரான இந்தச் சட்டத்தை எதிர்த்து, ஆளுநர் மாளிகை நோக்கி நடத் தப்படும் இந்தப் பேரணி ஒரு தொடக்கம்தான். பாஜகவை மத்திய ஆட் சிப் பொறுப்பிலிருந்து தூக்கியெறிய, பிகாரிலும், நாடு தழுவிய அளவிலும் போராட்டங்கள் நடத்தப் படும் என்று லாலு பிர சாத் யாதவ் தெரிவித்தார். இதனிடையே, மத்திய அரசு கொண்டு வந் துள்ள நிலம் கையகப் படுத்துதல் மசோதாவை கண்டித்து, பிகார் முதல் வர் நிதீஷ் குமார், சனிக் கிழமை மேற்கொண்ட ஒரு நாள் பட்டினிப் போராட்டம், ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணிக்கு முடிவுக்கு வந்தது.
பிறகு, நிதீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறு கையில், "விவசாயிகளின் நலனுக்கு எதிரான, நிலம் கையப்படுத்துதல் சட்டம், பிகாரில் அமல்படுத்தப் படாது. இந்தச் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தப் படும்' என்றார் அவர்.

Read more: http://viduthalai.in/e-paper/98047.html#ixzz3UdyaIVGH

தமிழ் ஓவியா said...

இளைஞர்களே, பாடம் கற்றுக் கொள்ளுங்கள்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடந்த நான்கு நாள்களுக்கு முன் வெளிவந்த ஒரு செய்தி மிகவும் வேதனையையும் வெட்கத்தையும் தரக் கூடிய செய்தியாக அமைந்தது.

தேனி நகரத்தின் ஒரு பகுதி பழனிசெட்டிப்பட்டி என்பதாகும். அதில் ஓய்வு பெற்ற ஓர் ஆசிரிய மூதாட்டி வசித்து வருகிறார்.

அவருக்கு மகன், மருமகள், பேரப் பிள்ளைகள் இருவர் எல்லோரும் ஒன்றாகவே வாழுகிறார்கள்.

இந்த இரு பேரப் பிள்ளைகளும் படிக்கிறார்கள். பாட்டியிடம் பாசத் துடன் பழகக் கூடியவர்கள்தான். பாட்டி தரும் பணம் - எடுக்கும்பணம் - இவற்றால் ஆடம்பரமான, வாழ்க் கையை வாழுவது, வெளியில் தங்குவது, கண்டபடி செலவழிப்பது - இப்படி ஒரு உல்லாசப் பொழுது போக்கில் - ஆடம்பர வாழ்வு மோகத் தில் திளைத்திருக்கிறார்கள்.

தற்போதைய இளைஞர்களைத் தவறான முறையில் நுகர்வோர் கலாச்சாரத்திற்கு அடிமையாக்கியிருக்கும் சின்னத் திரை விளம்பரங்கள் (இதனால் பல குடும்பங்களில் குடும்ப இல்லத்தரசி களும்கூட சீரழியும்! செய்திகள் ஒரு தனி சோகக் காவியம் படைக்க வேண்டிய தாகும்) போதாக்குறைக்கு நாசப்படுத்தும் குடி - டாஸ்மாக் மதுக் கடைகள் - மதுப் பழக்க வழக்கங்கள் - இதனால் இவர் களுக்குப் பணத் தேவை அதிகமாகி யிருக்கிறது.

அதனைப் பெற இளைஞர்களேகூட பல தீய வழிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுகிறார்கள்!

தேனி - பழனி செட்டிப்பட்டி ஓய்வு பெற்ற ஆசிரியையின் பரிதாபக் கதைக்கு வருவோம்.

அந்தப் பாட்டியின் பணத்தைக் களவாடி செலவிட இந்த அண்ணனும் - தம்பியும் (பேரப்பிள்ளைகள்) திட்டம் போட்டனர். பாட்டி தூங்கும்போது முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொன்று விட்டு, இவர்களும் துக்கத்தில் பூனைகள் போல் கலந்து கொள்கிறார்கள். பிஞ்சு வயதில் ஏறிய நஞ்சு - மனப்பான்மை - வித்தியாசமான நடத்தை மூலம் - விசாரணையில் இவர்கள் அகப்பட்டுக் கொள்ளுகிறார்கள்.

தங்களது கொலைக் குற்றத்தை தாங்களே ஒப்புக் கொண்டு விடுகிறார்கள்!

இந்தச் செய்தி கேட்டு தன்னுடைய தாய், தன்னுடைய மாமியார் கொலை செய்யப்பட்டது - தனது இரு பிள்ளை களாலே என்ற வேதனை, குடும்பத்தில் இருந்த மூதாட்டியாரை இழந்ததை விடப் பெருத்த அவமானம் நிறைந்த கொடுமை என்பதால் அவ்விருவரும் தற்கொலை செய்து மாண்டு விடுகிறார்கள்!

என்னே விபரீதம்! வருந்தத்தக்க முடிவு. வேதனை இந்த வாழ்ந்த குடும்பத்திற்கு. இச்செய்தியால் இந்த இளை ஞர்கள் இனி, பாடம் பெற்று தான் என்ன பயன்?

இந்த சம்பவம் பலருக்குப் பாடமாக அமைய வேண்டிய நிகழ்வு ஆகும்!

ஆடம்பர வாழ்க்கை ஒரு மனிதனை கள்ளனாக்கும், குடிகார னாக்கும், சூதாடியாக்கும், சுய கவுரவம்பற்றி மறக்கச் செய்யும்; எந்தக் குற்றத்தையும் செய்யத் தயங்காத வெறித்தனத்திற்கும் தள்ளி விடும்.

எளிமை வாழ்வும், சிக்கனமும் மனிதர்களை வாழ வைக்கும்; தன் மானம் காக்கும்; தகைசால் மனிதர் களாக உயர்த்தும்!

எனவே இளை ஞர்களே, இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்!- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்

Read more: http://viduthalai.in/page-2/98030.html#ixzz3UdzFeQJ3

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி. உறுப்பினர் சேர்க்கும் யோக்கியதை இதுதான்!

நமது கழகத் தோழர் திருவொற்றியூர் கணேசன் அவர்களுக்கு பி.ஜே.பி. குறுஞ்செய்தி ஒன்றை (எஸ்.எம்.எஸ்.) அனுப்பியுள்ளது; என்ன தெரியுமா?

From Dm Member Welcome to BJP your primary membership no is 1073426799 sms your Name, Address & Pin Code (If possible Email & Voter ID) to 09242492424 to complete the process என்பதுதான் அந்த குறுஞ்செய்தி.

திராவிடர் கழகத் தோழருக்கே குறுஞ்செய்தி அனுப்பி முதற்கட்ட உறுப்பினராக ஆகியுள்ளீர் கள். மேலும் உங்கள் முகவரி உள்ளிட்ட தகவல் களை அனுப்புங்கள் என்று தகவல் தெரிவிக் கின்றனர் என்றால், மற்றவர்களை உறுப்பினர் ஆக்குவதுபற்றிக் கேட்கவேண்டுமா?

கையில் கிடைத்த கைப்பேசி எண்களைக் கொண்டு இந்தக் கைங்கரியத்தை நடத்தி வருவது வெட்கக்கேடு அல்லவா!

பி.ஜே.பி உறுப்பினர் சேர்க்கும் யோக்கியதை இதுதான்!

போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!

உஷார்! உஷார்!

இப்படி குறுஞ்செய்தி வந்தால், சம்பந்தப்பட்ட எண்ணுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கலாமே!

Read more: http://viduthalai.in/e-paper/98075.html#ixzz3UkGS75zp

தமிழ் ஓவியா said...

பத்தினி - பதிவிரதை

பத்தினி, பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள்தனத்திலிருந்தும், மூர்க்கத்தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்கு இயற்கையிலோ, நீதியிலோ, சமத்துவத்திலோ, சுதந்திரத்திலோ சிறிதும் இடமில்லை. இச்சொற்கள் தமிழ்ச் சொற்களுமல்ல. - (விடுதலை, 4.5.1973)

Read more: http://viduthalai.in/page-2/98061.html#ixzz3UkH51Slc

தமிழ் ஓவியா said...

எமது 38 ஆண்டுப் பணிகள் தோழர்களுக்கு நன்றி!


நம் அறிவு ஆசான் தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் வைத்த நம்பிக் கையை, கூட்டுப் பொறுப்போடு நடத்திடும் வாய்ப்பும் கடமையும் துவங்கிய நாள் என்பதை, கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களும் ஏராளமான கழகக் குடும்பத்தினரும் நேற்று முதல் (18.3.2015) நினைவூட்டி வாழ்த்துக்களைத் தெரி வித்தனர். நம் கவிஞர் ஒரு கட்டுரைகூட விடுதலையில் (18.3.2015) எழுதியுள்ளார்.

என்னைப் பாராட்டுவதை நாம் ஏற்றுக் கொள்ளுமுன், அதற்கு முழுக் காரணமாக இருந்த, இருக்கும் எண்ணற்ற எனது கழகக் குடும்பத் தினரை அல்லவா பாராட்டி, நன்றியை நான் குவிக்க வேண்டும்!

நம் அய்யாவும், அன்னையாரும் வைத்த நம்பிக்கையை நியாயப்படுத்திட, மானம் பாராது, நன்றியை எதிர் நோக்காது, சுயநலத்திற்கு இடம் தராது, துரோகத்தால் துவளாது, எதிர்ப்பில் ஒதுங்காது எடுத்த பணியை அவர்தம் ஆணைப்படி செய்து முடிக்கும் கடமையில் என்றும் கண்ணாக இருப்பவன் உங்களின் இந்த எளிய தோழன் - தொண்டன்.

எனக்கு எவ்வளவு மன நிறைவும், மகிழ்ச்சியும் தரும் பணி இந்த அரும் பணி! அய்யா, அன்னையார் காலத்திற்குப்பின் விதைத்தது முளைத்தது. காத்தது கிளைத்தது, கிளைத்தது விளைச்சலாகியது! இதை கண்ணெதிரில் பார்த்து பூரிப்பும் மகிழ்ச்சியும் பெறுவதை விடப் பெரும் பேறு வேறு ஏது?

நம் நிறுவனங்களில் பயின்று சென்று வாழ்வில் முன்னேறியுள்ளவர்களின் மகிழ்ச்சியைக் கண்டும் கேட்டும் பெறும் உற்சாகத்திற்கு ஈடு இணை உண்டா? எடுத்துக்காட்டாக, 7.3.2015 தஞ்சை வல்லத்தில் பெரியார் நூற்றாண்டு பழைய மாணவிகள் - பெற்றோர்களாகிய குழந்தை குட்டிகளுடன் வந்து உவகைக் கூத்தாடியது போல் உற்சாகப் பொங்கலில் திளைத்த காட்சி - (எழுத்துருவில் 7ஆம் பக்கத்தில் பார்க்க) எத்தகைய மாட்சியைத் தந்தது!

நாகம்மைக் குழந்தைகள் இல்லத்தில் - ஈழத்தில் இனக் கலவரத்தில் கையில் தீக்காயம்பட்டு, அகதியாய் குடும்பத்துச் சிறுமியாய் திருச்சிக்கு வந்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் படித்து முன்னேறிய நாசரம்மா என்ற பெண் மேல் நிலைக் கல்வி முடித்து, நமது தஞ்சை வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கிலும் படித்து, பட்டயம் பெற்று, பணியும் வாழ்க்கையும் பெற்ற நிலை எய்திய பின்னர் எழுதிய நன்றிக் கடிதம் ஒன்று 7ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது!

இவைகள்தான் எமது நேரிய பணியின் மூலம் கிடைத்த மதிப்பூதியம் என்று கூற வேண்டும்! எனவே, கழகமானாலும், கல்வி நிறுவனங்களா னாலும், ஏடுகள், வெளியீட்டகங்களினாலும், எல்லா இடத்திலும் உள்ள கூட்டுக் குழு மனப்பான்மை யுடன் பணியாற்றும்(Team Spirit) எல்லோருக்கும் இவ்வெற்றியில் பங்கு உண்டு

எனவே, இன்னும் நாம் உழைத்து பெரியாரின் தத்துவங்களை உலகம் முழுவதும் கொண்டு சென்று - வெற்றியடைய வீறுநடை போட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பெரியார் உலகம் என்ற மிகப் பெரிய திட்டம் - ரூபாய் 30 கோடி முதல் 100 கோடி வரை செல வாகும் மிக பிரம்மாண்டத் திட்டம்! விரிந்து கொண்டே செல்கிறது!

பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கென - தனித் தொலைக்காட்சி துவக்கும் திட்டம் - இரண்டும் நமது முக்கிய லட்சியத் திட்டங்கள்! அனைவரது ஆதரவு ஒத்துழைப்பு, நிதி சேகரிப்பு, அவை பற்றிய விளம்பரங்களைத் திட்டமிட்டு திக்கெட்டும் செய்ய வேண்டும் முனைப்போடு! திராவிடர் எழுச்சி மாநாடுகள் 150அய் நெருங்கி விட்டன!

இதுவரை நமது கொள்கைப் பிரச்சாரம் பாயாத பகுதியில்கூட, புது வெள்ளமென - பாய்ந்து, புதிய வரலாற்றை இணைக்கிறது!

உற்சாகத்தோடு களத்தில் நின்று போராடுவோம்! வெற்றி பெறுவோம்! எப்படி அறிவியல் ஒருபோதும் தோற்காதோ அதுபோலவே பெரியார் கொள்கை என்ற பகுத்தறிவியல் ஒரு நாளும் தோற்காது; துவளாது, வென்றே தீரும்!

இது உறுதி! உறுதி!

அனைவருக்கும் எமது தலை தாழ்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
19.3.2015

Read more: http://viduthalai.in/component/content/article/71-headline/98123--38-.html#ixzz3Updy5wuN

தமிழ் ஓவியா said...

மக்களை முட்டாள்களாக்கப் பசனை செய்யுமாறு பிரச்சாரம் செய்வதை விட்டு, மக்களை அறிவுள்ள மக்களாக்க அறிவுப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.(விடுதலை, 5.1.1972)

Read more: http://viduthalai.in/#ixzz3UpeYLlnP

தமிழ் ஓவியா said...

தாலியாம் தாலி!

இரண்டு அறிவிப்புகள்-. ஒன்று எந்தத் தாலியைப்பற்றி நீங்கள் பேசு கிறீர்கள். தந்தைபெரியார் அவர்கள் நீண்ட காலத்துக்கு முன்னால், சாதாரணமாக திருமணங்களிலே சொன்னார். தாலியாவது வெங்காய மாவது என்றார். அதை அப்படியே வைத்து நம்முடைய உவமைக் கவிஞர் சுரதா பாட்டு எழுதினார். தாலியாம், தாலியாம் பெண்ணுக்கு வேலியாம், வேலியாவது, வெங்காயமாவது என்றார் பெரியார் என்று பாட்டு எழுதினார். எத்தனைக் காலத்துக்கு முன்னாலே? எங்கள் கூட்டங்களிலே தாய்மார்கள் வந்து இந்த அடிமைச் சின்னம் வேண்டாம். இதை விலக்கு கிறோம் என்று சொல்லி மேடை களிலே அவர்கள் அகற்றி, அந்தக் காட்சிகள் நடந்துகொண்டிருக் கின்றனவே.

கணவன் முன்னாலே இறந்து விட்டால், பின்னாலேஎங்கள் சகோ தரிகளை எல்லாம் நீங்கள் அவமானப் படுத்துவதற்குத்தானே அந்த அடிமைச்சின்னத்தை, விதவைக் கோலம் என்று ஆக்கி இருக்கின் றீர்கள். இதைவிடக் கொடுமை வேறு என்ன? எனவே, நாங்கள் சொல்லுகிறோம். அருணன் அவர்கள் சொன்னதுமாதிரி அந்த ஊடகத்திலே இரண்டு பேருக்கும் வாய்ப்பு கொடுத்து, இன்னும் கேட்டால், பளிச்சென்று பச்சையாகக்கூட சொல்லவில்லை. ஏனென்றால் பச்சையாகப் பேசுவதில் இருக்கின்ற தயக்கம். இங்கேயே இருக்கும் சாதாரணமாக, இங்கே பேசிய சகோதரர்கூட புனிதம் என்று சொன்னார். அது அவருடைய கருத்து.

புனிதமாவது புடலங்காயாவது! (கைதட்டல்)

ஒன்றும் கிடையாது. புனிதமாக இருந்தால் சேட்டுக் கடைக்குப் போய் அடகு வைப்பானா? புனிதமாக இருந்தால் ஏனய்யா டாஸ்மாக் போவ தற்கு விற்பதற்காகப் போகிறான்? அதனாலே இது போலித்தனம்.

ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில்!

ஆனால், இங்கே அவர்கள் தவறாக சொல்லவில்லை, நீண்டகாலமாக கருதி வருவதைத்தான் சொன்னார்கள். எங்களை மாதிரி ஒன்றுமில்லாத மொட்டையான ஆட்கள் இல்லை. அவர்கள் வாக்கு வாங்க வேண்டும். அவர்கள் ஓட்டு கேட்க வேண்டி யவர்கள். எங்களுக்கும் ஒன்றும் கிடையாது. ஏறினால் ரயில், இறங் கினால் ஜெயில் (கை தட்டல்). அப்படி என்றால் சரி. அவ்வளவுதான். மூன்றாவதாக கொலை செய்கிறாயா? அதுக்கும் தயார். நோயினால் ஒருவன் சாகக் கூடாது, விபத்தினால் சாகக்கூடாது. கொள்கைக்காக செத்தால், அதைவிட வேறு கிடையாது.

தாலி அகற்றும் விழா, மாட்டுக்கறி விருந்து. இதுதான் இந்துத்துவா நோய்க்கும் மருந்து என்பதை சொல்லி விடை பெறுகிறேன். வணக் கம். நன்றி. வாழ்க பெரியார், வளர்க பகுத்தறிவு.
_இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்கள்

Read more: http://viduthalai.in/e-paper/98116.html#ixzz3Upg1AAWa
தாலி அகற்றும் விழா - மாட்டுக்கறி விருந்து வாரீர்!

இந்த சென்னையிலே ஒரு தொலைக்காட்சியிலே தாலிபற்றிய ஒளிபரப்பைக் காட்டக்கூடாது என்று சொல்கிறான்? மீறினால் டிபன்பாக்ஸ் குண்டு, வெடிகுண்டு என்கிறான். ஏப்ரல்-14 அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாள். அந்த நாளில் சென்னையில் பெரியார் திடலில் தாலி அகற்றுகின்ற விழாவை எங்களுடைய பெண்கள் நிகழ்த்திக் காட்டுவார்கள். (கைதட்டல்).

ஒத்த கருத்து உள்ளவர்கள் வரலாம். அன்றைக்கு மாலையிலேயே தாலியை அகற்றிய உடன், மாட்டுக்கறி விருந்து நடைபெறும். (கைதட்டல் ஆரவாரம்) மாட்டுக்கறி விருந்துக்கு யார்யார் வருகிறீர்களோ இப்போதே ரிசர்வ் செய்து கொள்ளுங்கள். குறிப்பிட்ட அளவுக்கு மட்டும்தான் உண்டு. ஏனென்றால், நான் என்ன சாப் பிடுவது என்பதை இராமகோபாலய்யர் முடிவு பண்ணுவதா? எங்கள் வீட்டில் என்ன செய்வது, அல்லது இராமகிருஷ்ணன் வீட்டிலே, முத்தரசன் வீட்டிலே, பீட்டர் அல்போன்ஸ் வீட்டிலே. என்ன சமைப்பது என்று இவர்கள் முடிவு செய்வார்களா?

எனக்கு டயாபடிசுங்க, தித்திப்பு வேண்டாம் என்றால், அது நியாயம். அதுமாதிரி சொல்லுங்கள். பசுவைமட்டும் பாதுகாப்பார்களாம். ஏன் எருமை மாடு என்னய்யா பாவம் பண்ணியது? ஒரே விஷயம் கருப்புத் தோல் என்பதாலா? (ஆரவாரம்) சிந்திக்க வேண்டாமா? ஆகவே, தான் நண்பர்களே, நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/98116.html#ixzz3Upg5mEhs

தமிழ் ஓவியா said...

மூடத்தனத்துக்கு அளவேயில்லையா?

வகுப்பறையில் மயங்கி விழும் மாணவர்கள் அரசு பள்ளியில் பேய் பீதியாம்!

தலைவாசல், மார்ச் 19_ தலைவாசல் அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மாணவமாணவிகள் திடீர் திடீரென மயங்கி விழுவ தால், அந்த பள்ளியில் பேய் நடமாடுவதாக பீதி ஏற்பட்டுள்ளது. இதனால், புத்தகப்பையில் மந்திரித்த வேப்பிலை மற்றும் எலு மிச்சம் பழத்தை மாண வர்கள் எடுத்து வரு கின்றனர். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே புளியங்குறிச்சி ஊராட் சியில் உள்ள இந்திராநகர் பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி யில், அந்த பகுதியை சேர்ந்த 28 மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக மருதமுத்து என்பவரும், ஓர் ஆசிரியரும் பணி யாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவி கள் வகுப்பறையில் அமர்ந்து பாடங்களைப் படித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென முதல் வகுப்பு மாணவர் சஞ்சய், 2 ஆம் வகுப்பு மாணவி ரம்யா, 3 ஆம் வகுப்பு மாணவர்கள் சதீஷ், சந்தோஷ், மாணவி யுவராணி ஆகியோர் திடீரென மயங்கி கீழே விழுந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் மருதமுத்து, உடனே பெற்றோர்களை வரவழைத்து, மயங்கி விழுந்த மாணவ, மாண விகளை மருத்துவம னைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக் கும்படி கூறி இருக் கிறார்.

மாணவ மாணவிகளைப் பரி சோதித்த டாக்டர்கள் குழந்தைகளுக்கு ஒன்றுமில்லை அவர்கள் நலமாக இருப்பதாக கூறி இருக்கின்றனர். இதற்கிடையே பள்ளியில் இருந்த மற்ற மாணவர் களில், அரவிந்த், தமிழ்ச் செல்வன், தமிழ்மணி, அருண், கவுதம் ஆகியோ ரும் திடீரென மயக்கம் அடைந்துள்ளனர். உடனே ஆசிரி யர்கள், அந்த குழந்தைகளையும் அவர் களின் பெற்றோரிடம் ஒப் படைத்து சிகிச்சை அளிக்கச் சொல்லி இருக் கின்றனர். இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் மருதமுத்து கூறும்போது, ''வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் வகுப்பறைக்குள் சென்ற 1 மணி நேரத்தில் மயங்கி விழுந்து விடுகிறார்கள். இதனால், அவர்களை மருத்துவர்களிடம் காட்டி சிகிச்சை அளிக்குமாறு பெற்றோரிடம் கூறினேன். ஆனால், பள்ளியில் பேய் நடமாடுவதாக தற்போது புரளியை கிளப்பி விட்டுள்ளார்கள்" என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/98119.html#ixzz3UpgP3Gmx

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சம்பிரதாயம்

ஒரு முறை அர்ச் சனை செய்தாலே தேங் காய் பிரசாதமாகி விடும். இதை நிர்மால்யம் என் பர். மீண்டும் அந்தத் தேங்காயைப் பயன் படுத்தி செய்த உணவை சுவாமிக்குப் படைப்பது கூடாது. ஓர் ஆன்மீக இதழ்

ஏன் படைத்தால் என்ன? எப்படியும் சுவாமி சாப்பிடப் போவதில்லை. அதில் என்ன சம்பிரதாயம்?

Read more: http://viduthalai.in/e-paper/98120.html#ixzz3UpgYTcmD

தமிழ் ஓவியா said...

காந்தி படுகொலைக்கு மூளையாக இருந்த
சவார்க்கர்தான் தேசத் தந்தையாம்!

காந்தியார் ஆங்கிலேயரின் ஏஜெண்டாம்!

பா.ஜ.க.வைச் சேர்ந்த சாத்விபிராச்சி கீழ்த்தரப் பேச்சு

கபூர்தலா(உபி) மார்ச் 19 வீர் சவார்க்கரின் தியாகத் தால் தான் சுதந்திரம் கிடைத்து காந்தி ஆங்கி லேயருக்காக இந்தியாவில் நடக்கும் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய தகவல்களை ரகசியமாகக் கூறும் உளவுப் பிரிவிற்காக பணியாற்றிவந்தார் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி கூறியுள்ளார். விஷ்வ இந்துபரிஷத் அமைப்பின் 50ஆம் ஆண்டு விழா தற்போது பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இந்துத்துவா தலைவர்களின் ஒவ்வொரு பேச்சும் சமூகத்தை பிளவு படுத்தும் வகையில் உள் ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பாயிரஜ் என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய சாத்வி பிராச்சி கூறிய தாவது: இந்தியாவின் சுதந்திரப்போராட்டம் என்பது இந்துக்களின் புனிதப் போராட்டமா கும், இந்த போராட்டத் தின் விளைவை ஆங்கி லேயருக்கு உளவுபார்த்து கூற இங்கே பலர் இருந் தனர். அவர்களின் சூழ்ச்சி எல்லாம் சுதந்திரப் போராட்டத்தை மழுங் கடிப்பதாகும். இராட்டை சுற்றுவதால் எங்காவது சுதந்திரம் கிடைக்குமா? இது ஒரு ஏமாற்றுவேலை அன்றைய காலகட்டத் தில் ஆங்கிலேயர் நடத் திய ஊடகங்கள் காந் தியை ஒரு நாயகன் போல் உலகம் முழுவதும் காட் டியது, காந்தியின் ஆங் கிலேய பாசத்திற்கு வெள் ளைக்காரர்கள் கொடுத்த சன்மானமாகும்,அவர் ஆங்கிலேயர்களின் ஏஜெண்டாக இருந்த காரணத்தால் உலகம் முழுவதும் காந்தி ஏதோ ஒரு புகழ்மிக்க தலை வரைப் போல் பார்க்கப் படுகிறார். உண்மையில் அவர் புகழ்மிக்க தலைவ ராவதற்கு தகுதியற்றவர்.

இந்து மக்களின் அடிமைத்தளைகளை ஒழிக்க அரும்பாடு பட்டவர் வீர் சவார்க்கர். அவர்தான் இந்தியாவின் தந்தை என்று புகழப் படவேண்டும். இந்துக்கள் அவரைத்தான் தேசத் தந்தையாக பார்க்க வேண் டும் என்று கூறினார். அதே நேரத்தில் அதிகம் குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பிற மதத் தவரின் உரிமைகளைப் பறிக்கவேண்டும். அவர் களுக்கு சலுகைகள் மற்றும் வாக்குரிமை கொடுக்கக்கூடாது. இதை எதிர்ப்பவர்கள் துணிச்ச லிருந்தால் இந்த மேடை யிலேயே என்னுடன் விவாதிக்கலாம், இஸ் லாமிய நடிகர்களின் திரைப்படங்களைப் புறக்கணியுங்கள் என்று நான் சொன்னது நன்மைக் காகத்தான். அவர்கள் இந்துப் பெண்களின் மனதில் நச்சை விதைக் கின்றனர். லவ்ஜிகாத்தின் விதை இஸ்லாமிய திரைப் பட நடிகர்களிடமிருந்து தான் ஆரம்பிக்கிறது பாகிஸ்தானில் ஒரு இந்து நடிகராக முடியுமா என்றும் கேள்வி எழுப்பி யுள்ளார்.

பசுவதையைத் தடை செய்யக்கோரி இந்திரா காந்தியைச் சந்திக்கச் சென்ற சாமியார்கள் மீது தடியடி நடத்த உத்தர விட்டார். அதனால் அவ ரது மரணம் இவ்வளவு மோசமாக இருந்தது. இந்துக்களின் மீது கைவைக்கும் அனைவரது முடிவும் இப்படித்தான் இருக்கும். மசூதிகளில் எந்த ஒரு கடவுளும் இல்லை, சுவரைப் பார்த்து வணங்குவது எப்படி கடவுள் வழிபாடாகும் ஆகவே மசூதிகள் எல் லாம் வெறும் கட்டடங்கள் மட்டுமே என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/98118.html#ixzz3Upgn20Et

தமிழ் ஓவியா said...

உயர் தர்மம்!

இன்று பார்ப்பனர்கள் எது எப்படிப் போனாலும் தங்களுக்குப் பெரிய சாதி என்கிற பட்டம், அந்தஸ்து இருந்தால் போதும்; அதற்காக எந்தக் காரியத்தையும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்பதை உயர் தர்மமாக அல்லவா கொண்டிருக் கிறார்கள்! - (விடுதலை, 11.9.1972)

Read more: http://viduthalai.in/page-2/98122.html#ixzz3UphJpjc0

தமிழ் ஓவியா said...

எமது 38 ஆண்டுப் பணிகள் தோழர்களுக்கு நன்றி!


நம் அறிவு ஆசான் தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் வைத்த நம்பிக் கையை, கூட்டுப் பொறுப்போடு நடத்திடும் வாய்ப்பும் கடமையும் துவங்கிய நாள் என்பதை, கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களும் ஏராளமான கழகக் குடும்பத்தினரும் நேற்று முதல் (18.3.2015) நினைவூட்டி வாழ்த்துக்களைத் தெரி வித்தனர். நம் கவிஞர் ஒரு கட்டுரைகூட விடுதலையில் (18.3.2015) எழுதியுள்ளார்.

என்னைப் பாராட்டுவதை நாம் ஏற்றுக் கொள்ளுமுன், அதற்கு முழுக் காரணமாக இருந்த, இருக்கும் எண்ணற்ற எனது கழகக் குடும்பத் தினரை அல்லவா பாராட்டி, நன்றியை நான் குவிக்க வேண்டும்!

நம் அய்யாவும், அன்னையாரும் வைத்த நம்பிக்கையை நியாயப்படுத்திட, மானம் பாராது, நன்றியை எதிர் நோக்காது, சுயநலத்திற்கு இடம் தராது, துரோகத்தால் துவளாது, எதிர்ப்பில் ஒதுங்காது எடுத்த பணியை அவர்தம் ஆணைப்படி செய்து முடிக்கும் கடமையில் என்றும் கண்ணாக இருப்பவன் உங்களின் இந்த எளிய தோழன் - தொண்டன்.

எனக்கு எவ்வளவு மன நிறைவும், மகிழ்ச்சியும் தரும் பணி இந்த அரும் பணி! அய்யா, அன்னையார் காலத்திற்குப்பின் விதைத்தது முளைத்தது. காத்தது கிளைத்தது, கிளைத்தது விளைச்சலாகியது! இதை கண்ணெதிரில் பார்த்து பூரிப்பும் மகிழ்ச்சியும் பெறுவதை விடப் பெரும் பேறு வேறு ஏது?

நம் நிறுவனங்களில் பயின்று சென்று வாழ்வில் முன்னேறியுள்ளவர்களின் மகிழ்ச்சியைக் கண்டும் கேட்டும் பெறும் உற்சாகத்திற்கு ஈடு இணை உண்டா? எடுத்துக்காட்டாக, 7.3.2015 தஞ்சை வல்லத்தில் பெரியார் நூற்றாண்டு பழைய மாணவிகள் - பெற்றோர்களாகிய குழந்தை குட்டிகளுடன் வந்து உவகைக் கூத்தாடியது போல் உற்சாகப் பொங்கலில் திளைத்த காட்சி - (எழுத்துருவில் 7ஆம் பக்கத்தில் பார்க்க) எத்தகைய மாட்சியைத் தந்தது!

நாகம்மைக் குழந்தைகள் இல்லத்தில் - ஈழத்தில் இனக் கலவரத்தில் கையில் தீக்காயம்பட்டு, அகதியாய் குடும்பத்துச் சிறுமியாய் திருச்சிக்கு வந்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் படித்து முன்னேறிய நாசரம்மா என்ற பெண் மேல் நிலைக் கல்வி முடித்து, நமது தஞ்சை வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கிலும் படித்து, பட்டயம் பெற்று, பணியும் வாழ்க்கையும் பெற்ற நிலை எய்திய பின்னர் எழுதிய நன்றிக் கடிதம் ஒன்று 7ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது!

இவைகள்தான் எமது நேரிய பணியின் மூலம் கிடைத்த மதிப்பூதியம் என்று கூற வேண்டும்! எனவே, கழகமானாலும், கல்வி நிறுவனங்களா னாலும், ஏடுகள், வெளியீட்டகங்களினாலும், எல்லா இடத்திலும் உள்ள கூட்டுக் குழு மனப்பான்மை யுடன் பணியாற்றும்(Team Spirit) எல்லோருக்கும் இவ்வெற்றியில் பங்கு உண்டு

எனவே, இன்னும் நாம் உழைத்து பெரியாரின் தத்துவங்களை உலகம் முழுவதும் கொண்டு சென்று - வெற்றியடைய வீறுநடை போட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பெரியார் உலகம் என்ற மிகப் பெரிய திட்டம் - ரூபாய் 30 கோடி முதல் 100 கோடி வரை செல வாகும் மிக பிரம்மாண்டத் திட்டம்! விரிந்து கொண்டே செல்கிறது!

பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கென - தனித் தொலைக்காட்சி துவக்கும் திட்டம் - இரண்டும் நமது முக்கிய லட்சியத் திட்டங்கள்! அனைவரது ஆதரவு ஒத்துழைப்பு, நிதி சேகரிப்பு, அவை பற்றிய விளம்பரங்களைத் திட்டமிட்டு திக்கெட்டும் செய்ய வேண்டும் முனைப்போடு! திராவிடர் எழுச்சி மாநாடுகள் 150அய் நெருங்கி விட்டன!

இதுவரை நமது கொள்கைப் பிரச்சாரம் பாயாத பகுதியில்கூட, புது வெள்ளமென - பாய்ந்து, புதிய வரலாற்றை இணைக்கிறது!

உற்சாகத்தோடு களத்தில் நின்று போராடுவோம்! வெற்றி பெறுவோம்! எப்படி அறிவியல் ஒருபோதும் தோற்காதோ அதுபோலவே பெரியார் கொள்கை என்ற பகுத்தறிவியல் ஒரு நாளும் தோற்காது; துவளாது, வென்றே தீரும்!

இது உறுதி! உறுதி!

அனைவருக்கும் எமது தலை தாழ்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
19.3.2015

Read more: http://viduthalai.in/page-2/98123.html#ixzz3UphVRQWX

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டைச் சேர்ந்த நோபல்விஞ்ஞானி வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் இங்கிலாந்து ராயல் சொசைட்டியில் தலைவரானது வரவேற்கத்தக்கது

மும்பையில் நடைபெற்ற இந்திய அறிவியல் காங்கிரஸில் மூடத்தனங்களுக்கு வக்காலத்தா? இராமகிருஷ்ணன் கண்டனம்

இளைஞர்களே விஞ்ஞான மனப்பான்மை கொள்வீர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி வெங்கட் ராமன் இராமகிருஷ்ணன் இங்கிலாந்தில் புகழ் பெற்ற ராயல் சொசைட்டியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்குப் பாராட்டுத் தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் வலியுறுத்திவரும் பகுத்தறிவு விஞ்ஞான மனப்பான்மையைப் பெறுங்கள் என்று இளைஞர்களுக்கு அறிவுறுத்தி வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இங்கிலாந்தில் உள்ள பிரபல ராயல் சொசைட்டியின் தலைவராக தமிழ்நாட்டில் படித்து பட்டம் பெற்ற ஒருவர், அறிவியலுக்காக நோபல் பரிசு பெற்றவர் திரு. வெங்கி ராமகிருஷ்ணன் என்று அழைக்கப்படும் வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் தேர்வு செய்யப் பெற்றுள்ளார் என்பது மிகவும் மகிழத்தக்கது ஆகும்.

இதற்குமுன் ஆங்கிலேயர்களான அறிவியல் மேதைகள் மட்டுமே இந்த பெயர் பெற்ற ராயல் சொசைட்டியின் (ஆராய்ச்சி நிறுவனம்) தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்; இப்போது தமிழ்நாட்டுக்காரர் (இவர் பார்ப்பனர்) ஒருவர் வந்துள்ளது ஒரு சிறப்பு வரலாறு ஆகும்.

அவர் தன் மனதில் பட்டதை அறிவியல் சிந்தனை களின் அப்பட்டமான பிரதிபலிப்பாக பளிச் என்று கூற என்றுமே தயங்கியதில்லை.

முன்பு அவருக்கு நோபல் பரிசு அறிவித்து, பெற்ற நிலையில், பலரும் அவரைப் பேட்டி கண்டபோது, அவர் மூடநம்பிக்கைகள் நம் இந்திய நாட்டில் மண்டிக் கிடப்பதைச் சாடினார்; அதோடு ஜோதிடம் என்பது ஒரு போலி விஞ்ஞானம்; அது அறிவியலோ உண்மையோ ஆகாது என்ற கருத்தினை அழுத்தத் திருத்தமாகக் கூறினார். நாமும் அதனை எடுத்துப் போட்டு, வரவேற்று எழுதியுள்ளோம்.

இப்போது அவர் இங்கிலாந்தின் ராயல் சொசைட்டியின் தலைவராகி - அறிவியல் உலகத்தின் தலை சிறந்த அறிவாளி என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார்.

வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் சாட்டையடி!

அவர் தேர்வு செய்யப்பட்டவுடன் லண்டனில் உள்ள ஹிந்து நாளேட்டின் செய்தியாளர் பார்வதிமேனன் அவர்களிடம் ஒரு கருத்தைக் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


அரசியலோ, அல்லது மதங்களின் லட்சியங்களோ, அறிவியலுக்குள் ஒரு போதும் வலுக்கட்டாய மாக நுழைந்து விடக் கூடாது.

மும்பையில் நடந்த இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில், கலந்து கொண்டு முட்டாள்தனமான பல கருத்துக்களை, அரசியல் கட்சியின் லட்சியங்களாகக் கொண்டுள்ள சிலர் ஊற்றுவாய் மாதிரிப் பேசியுள் ளார்கள் என்று கேள்விப்பட்டேன்.

எனக்கு என்ன ஆச்சரியமாக இருந்தது என்றால், இந்திய அறிவியல் மாநாட்டினை நடத்திய அந்த அமைப்பாளர் இதற்கு சரியான மறுப்புத் தெரிவிக்காமல், வாய்மூடி மவுனியாக இருந்துள்ளார்கள். அப்போதே ஒரு வெளிப் படையான மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். எனக்கு எந்த அரசாங்கத்துடனும், ஏன் இந்த (இந்திய) அர சாங்கத்துடன் கூட எந்தப் பிரச்சினையும் கிடையாது.

அரசியலும் மதக் கொள்கைகளும் அறிவியலுக் குள் உள்ளே வலுக்கட்டாயமாக நுழைக்கப்படுவதை எவரும் ஏற்கவே கூடாது என்று ஓங்கி மண்டையில் அடித்ததைப் போலக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி, அம்மாநாட்டில் மரபு அணுக்களும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையும் எங்கள் இந்து புராணங்களில் எங்கள் கடவுள்களாலேயே செய்து காட்டப்பட்டுள்ளது. இன்று விஞ்ஞானிகள் ஏதோ புதுமை போல கூறுகிறார்கள் என்று அறியாமையான கருத்தும், அறிவியல் துறை அமைச்சராக உள்ள ஒருவர் (பா.ஜ.க.) இதுபோல கருத்துக்களைக் கூறியும், திட்டமிட்டே சில புராணக் கருத்துக்களை மேற்கோள் காட்டி, அறிவியலுக்கு மதச் சாயம் பூசியது மகா வெட்கக் கேடு! உலகமே கை கொட்டிச் சிரிக்கும் நிலையை ஏற்படுத்தியது; இதைத்தான் நோபல் பரிசு பெற்று, இங்கிலாந்தில் ராயல் சொசைட்டி தலைவராக ஆகியுள்ள திரு. வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் என்ற இந்திய விஞ்ஞானியே துணிந்து கூறி இந்தப் புரட்டை உடைத்துத் தள்ளியுள்ளார்.

முதுகெலும்போடு இப்படி அப்பட்டமான உண்மை களை விஞ்ஞானிகள்தான் வெளியிட வேண்டும். இதற்குப் பிறகாவது ஹிந்துத்துவா கருத்துக்களை விஞ்ஞானத்திற் குள், ஊடுருவச் செய்யும் முயற்சிகளை மேற்கொள்ளாமல் தங்கள் மரியாதையையும், மதிப்பையும் ஆட்சிப் பொறுப் பில் உள்ளோர் காப்பாற்றிக் கொள்ள முன்வர வேண்டும்.

அதைவிட வேடிக்கை இன்று எப்படிப்பட்ட காவிகள் - நாடாளுமன்ற உறுப்பினர்களாகி அங்கே பேசுகிறார்கள் என்பதற்கு இதோ ஒரு எடுத்துக்காட்டு: நாடாளுமன்றத்தில் பி.ஜே.பி. கட்சி உறுப்பினர் பி.பி. சவுகான் என்பவர் நேற்று (19.3.2015) ஒரு கேள்வி கேட்டுள்ளார்.

புனித கங்கையைக் கொண்டு வந்தவர் யார்?

புனித கங்கை ஆற்றினை இந்த பூமிக்கு யார் அழைத்துக் கொண்டு வந்தது? ஏன் அவர் அதை அழைத்து வந்தார்? அப்படி அழைத்து வந்ததின்நோக்கம் என்ன? அதன் விளைவாக குளியலில் என்ன விளைவை அது ஏற்படுத்தியது? என்னே அறிவுக்கொழுந்து கேள்வி! பதிலளித்த இணையமைச்சர் சன்வார் லால் ஜாட் என்பவர் கங்கையை பகீரதன் என்ற ராஜா அழைத்து வந்தார் (மேல் உலகத்திலிருந்து) மக்களின் சேமத்திற்காக உடனே சபாநாயகரான அம்மையார் சுமித்ரா மகாஜன் (இவரும் பிஜேபிதான்) இது என்ன? இப்படி ஒரு கேள்வியா என்று குட்டி உள்ளார்!

மத்திய அரசு அலுவலகங்களில் பினாயிலுக்குப் பதிலாக மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார் - அதனால் செலவு மிச்சமாகுமாம். இப்படி மோடி தலைமையில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியாக நடக்கும் பா.ஜ.க.வின் ஆட்சி யின் அலங்கோலங்களை கண்டு அவனியும் அறிவுலகமும் நாணி, நகைக்கிறதே!

இளைஞர்களே, திருந்துவீர்!

இணையத்தினையே பார்த்து ஏமாந்து, வளர்ச்சி மாயையில், மயக்கத்தில் மோடிக்கு - மாற்றத்திற்கென வாக்களித்து குளிக்கப் போய் சேற்றை வாரி பூசிக் கொண்ட இளைஞர் உலகமே!

இனியாவது, இத்தகைய காட்சிகள், நிகழ்வுகள், விமர்சனங்களைக் கேட்டு, கண்ட பிறகாவது, பகுத்தறிவோடு, விஞ்ஞான மனப்பான்மையோடு விழித்து எழக் கூடாதா?

எவ்வளவு பெரிய தேசிய அவமானத்தை நம் நாடு சந்தித்துக் கொண்டுள்ளது என்பதை இனியாவது உணர்ந்து தக்க பரிகாரங்களைத் தேடுங்கள்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
20.3.2015

Read more: http://viduthalai.in/e-paper/98163.html#ixzz3Uw62fDJc

தமிழ் ஓவியா said...

சட்டம் ஒழுங்கு!

தமிழ்நாட்டில் நீதிபதி தாக்கப்படுகிறார் என்றால் மத்திய பிரதேசத்தில் அமைச்சரிடமே மிரட்டிக் கொள்ளை அடித்துள்ளனராம்! இந்த நாட்டுக்கு எந்த நாடு ஈடோ!

கஞ்சர்களா?

பிஜேபியைச் சேர்ந்த மத்திய கேபினட் அமைச்சர்கள் 27 பேர்களில் 11 அமைச்சர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இதுவரை ஒரு பைசாகூட செலவழிக்கவில்லையாம்!

மக்கள் நலத்தை அரசு நலன் (பணத்தை மிச்சப்படுத்தி விட்டார்கள் அல்லவா) தான் இவர்கள் குறிக்கோளோ! சரியான கஞ்சர்களப்பா!

கடும் எச்சரிக்கை!

சமூக வலை தளங்களில் பெண்களின்படத்தை உள் நோக்கத்துடன் பரப்புபவர்கள் கைது செய்யப்படுவார்கள் - 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்று காவல்துறை எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/e-paper/98172.html#ixzz3Uw6wMwRk

தமிழ் ஓவியா said...

இயற்கை


பிறப்பதும், சாகின்றதும் இயற்கை. ஆனால், மக்கள் பாராட்டுதலுக்கு உகந்த வகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரை சும்மா போற்ற மாட்டார்கள். நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரியமாற்றவேண்டும்.
(விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/98173.html#ixzz3Uw7CFfXQ

தமிழ் ஓவியா said...

இந்த ஏழிசை கேட்டு உயர்வோம்!

அமெரிக்காவில், இலியனாய் மாநிலத்தில் (சிகாகோ உள்ள மாநிலம்) பிரபல கல்வி வள்ளல்களில் ஒருவரும், மிகச் சிறந்த கொடையாளியுமான 104 வயது வரை வாழ்ந்தவர் டாக்டர் அர்னால்ட் பெக்மென் என்பவர். கருமான் என்ற கொல்லுப் பட்டறைத் தொழிலில் மிக எளிமையாகத் தன் வாழ்வைத் தொடங்கியவர்.

தெளிந்த சிந்தனை, தீர்க்கமான முடிவு, கடும் உழைப்பு - இவைகளாலும் அவரது கண்டு பிடிப்புகள் மூலம் தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்சாண்டர் பெல் - ஆகியோர் வரிசையில் வைத்து மிக உயர்வான அறிவியல் தொழில் நுட்ப மேதைகளில் ஒருவராக இன்றும் கருதப்படுகிறார்!

இலியனாய் மாநிலத்தில் சிறிய விவசாயப் பண்ணை ஒன்றைத் துவக்கினார். அதில் பல கருவிகளை தனது நுண்ணறிவின் திறத்தால் கண்டுபிடித்து, உலகம் பயன்படுத்திக் கொள்ளுமாறு செய்து புகழும் பொருளும் சம்பாதித்தார்!

ரசாயன அறிவியலில் பி.எச்.மீட்டர் என்ற ஒரு கருவியைப் பயன்படுத்திட Analytical chemistry -க்கு பெரிதும் உதவிடும் வாய்ப்பான கருவியை கண்ட றிந்து, ஏராளமான விருதுகளை அக்கண்டுபிடிப்பு களுக்காகப் பெற்றார்!

இவரது தொழில் திறமை, அறிவியல் தொழில் நுட்பச் சாதனைகளைத் தாண்டி, இவரது புகழ் நிலைத்த புகழாக வரலாற்றில் நிற்பதற்கு மற்றொரு மிக முக்கிய காரணம் இவர் ஒரு தலை சிறந்த கொடை வள்ளல் என்பதனால் ஆகும்!

டாக்டர் பெக்மென் அவர்களது தனித்த, படைப்பாற்றல், அறிவியல் நுண்மாண் நுழைபுலம் இவரது வாழ்வை வளப்படுத்தினால் மட்டும் போதாது: தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு, குடும்பம் என்ற சின்ன கடுகு உள்ளத்தை விரட்டிவிட்டே தொல்லுலக மக்கள் எல்லாம் எம்மால் பயன்பெற்று வாழ பணி செய்வதே தனது கடன் என்று எண்ணி, 1977-இல் இவர் சுமார் 40 கோடி டாலர்களை ஒதுக்கி தனது வாழ் விணையர் மேபல் என்ற அம்மையாரும் இணைந்த அர்னால்ட் அண்ட் மேபல் பெக்மேன் பவுண்டேஷன் என்ற ஒரு பொது அறக்கட்டளைத் துவக்கினார்.

இலியனாய் பல்கலைக் கழகத்திற்கு 4 கோடி டாலர் நன்கொடை அளித்து மிக பிரம்மாண்டமான 3,13,000 ச.அடி உள்ள மாபெரும் கட்டடம் ஒன்றை கட்டிடக் கொடுத்து, உலகம் முழுவதிலும் இருந்து ஆராய்ச்சி யாளர்கள் வந்து ஒன்றுக்கொன்று தொடர்புடைய அறிவியல் (Inter-disciplinary research) ஆராய்ச்சி நடைபெற உதவியுள்ளார்!

ஈதல் இசை பட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு! (குறள் - 231)

என்ற குறளுக்கேற்ப அவரது வாழ்க்கை அமைந்து விட்டது! நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதால் பெருமை வராது;

நாம் எவ்வளவு புகழ், பெருமைக்குரிய அறிவாளியாய் உயர்ந்துள்ளோம் என்பதாலும் உண்மையான சிறப்பு வராது; மாறாக, நாம் உலகத்திற்கும் சமுதாயத் தொண்டறத்திற்காகவும் எவ்வளவு உதவினோம் என்பதைப் பொறுத்ததே நிலைத்த புகழும் பெருமையும்!
அத்தகைய மாமனிதர்தம் வாழ்க்கையில் அவர் கையாண்டு உயர்ந்தமைக்குக் காரணமாக அமைந் தவை அவரால் கூறப்பட்ட ஏழு விதிகள்!

நம்மைப் பொறுத்தவரை நமக்கு அவை ஏழிசைகளாகவே இன்பத்தைப் பாய்ச்சுகின்றன!

பெக்மேன் அவர்கள் கூறுகிறார்:

1. எந்தக் கால கட்டத்திலும் நேர்மையையே(integrity) கடைப்பிடித்து ஒழுகுதல்.

2. எந்தப் பணியை எடுத்துக் கொண்டு செய்தா லும், அரை மனதோடு அதில் ஈடுபடாமல், முழு விருப்பத்தோடு செய்யவே பழக வேண்டும்.

எதில் முழுதாய் ஈடுபட முடியாதோ அதை ஏற்காமல் வெளியேறிட வேண்டும்.

விருப்பத்துடன் உள்ளே அல்லது விருப்ப மில்லா விட்டால் வெளியே என்பதே தம் கொள்கையாக இருக்க வேண்டும்.

3. பிறருக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய எதையும் செய்யாமல் இருப்பது முக்கியம்.

4. எந்தக் காரியத்தைச் செய்தாலும் பின்னால் அதனால் பிறகு அவமானம் ஏற்படக் கூடிய எதனையும் செய்ய முனையவே கூடாது.

5. எதையும் மிக நேர்த்தியுடன் (Excellence) (மற்றவர் மிக மிக விரும்புவதே நேர்த்தி) அதற்கு வேறு மாற்று கிடையவே கிடையாது!

6. எதிலும் தன்னடக்கமும் நிதானமும் கடைப் பிடித்தல் மிக நன்று.
(சிற்சில நேரங்களில் இது சற்று கூடுதல் ஆனாலும் பரவாயில்லை)

7. உங்களை நீங்கள் எப்போதும் பெரிய ஆளாக எண்ணி இறுமாறாதீர்கள்!

இப்படி இந்த ஏழு இசைகளை இசைத்த இந்தப் பெருமகனாரின் படத்துடன் அக்கட்டடத்தில் அவரது வாழ்வு : பிறப்பு: 10.4.1900 மறைவு: 18.5.2004 என்று செதுக்கப்பட்டுள்ளது.

இவைகளை நாமும் பின்பற்றலாமே!

(சிகாகோவிலிருந்து இதை அனுப்பிய திருமதி அருள்பாலுவுக்கு என் நன்றி!)

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/98184.html#ixzz3Uw7LlgY4

தமிழ் ஓவியா said...

அயோக்கியதனம் எது?

அயோக்கியதனம் எது? நன்றாய்க் கொழுக்கட்டை போலும், மணலில் பிடுங்கிய கிழங்கு போலும் இருந்து கொண்டு ஐயா மூன்று நாளாகக் கஞ்சியே காணவில்லை. காலணா தருமம் கொடுங்கோ என்று கேட்பது அயோக்கியத்தனம்.

ஆனால், அதுபோலவே இருந்து கொண்டு யாதொருவிதமான பாடும் படாமல் தன் பெரியோர்கள் சம்பாதித்து வைத்து விட்டுப்போனார்கள் என்றோ, பரம்பரை சொத்து பாத்தியத்தில் கிடைத்தது என்றோ பெரும் செல்வத்தை வைத்துக் கொண்டு சுகபோகமாய் இருப்பதாகக் கருதிக் கொண்டு சோம் பேறியாய் இருந்து வாழ்ந்து கொண்டு இருப்பது அதைவிட அயோக்கியத்தனம்.

பிந்தியவன் பாடுபடாமல் ஏராளமான சொத்தை வைத்துக் கொண்டு அனுபவித்துக் கொண்டு இருக்கும் போது முந்தியவன் பாடுபடாமல் பிச்சை கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?

தொல்லை எது? பிச்சைக்காரன் பிச்சை கேட்பது பெரும் தொல்லையாகவும் மனதிற்குச் சங்கடமாகவும் இருக்கிறது. அது போலவேதான் பணக்காரன் (தனது தேவைக்கு மேல் வைத்திருப்பவன்) பணத்தை வைத்துக் கொண்டு கோவில், மடம் கட்டிக் கொண்டு கும்பாபிஷேகம், உற்சவம், பிராமண சமாராதனை முதலியன செய்துகொண்டு இருப்பதும் பெரும் தொல்லையாகவும் மனதிற்குச் சங்கடமாகவும் நாட்டுக்குக் கேடாகவும் இருக்கிறது.

கடவுள் எது? பணக்காரனுக்குப் பணம் கடவுள் கொடுத்தார்:

ஏழைக்குத் தரித்திரம் கடவுள் கொடுத்தார். அப்படி இருக்க இது இரண்டையும் சமமாக்க வேண்டும் என்று சொல்லுகிறவன் நாஸ்தினாகத்தானே இருக்க முடியும்? அல்லது அவன் நாஸ்திகனாக இருந்தால்தானே கடவுள் செயலுக்கு விரோத மாக சமமாக்க முடியும்! ஆதலால் மக்களை எல்லாம் நாஸ் திகர்களாக ஆக்கி விட்டால் பணக்காரனும், தரித்திரனும் தானாகவே மறைந்துபோவார்களா மாட்டார்களா?

- தந்தை பெரியார், குடிஅரசு 28.10.1944

Read more: http://viduthalai.in/page-7/98187.html#ixzz3Uw9PtsMf

தமிழ் ஓவியா said...

ஒரு சமயவாதி பேசுகிறார்!

மக்களுள் கடவுளை வணங்குபவரை நான்கு வகுப்பினராக பிரிக்கலாம். முதல் வகுப்பினர் கடவுள் ஒருவர்தான் போற்றுதலுக்கு உரியவர் என்ற ஞானத்தைப் பெற்றவர். இரண்டாவது வகுப்பினர் மெய்ப் பொருளைப் பற்றி உள்ளவாறு தெரிந்து விரும்புபவர். இவ்விரு வகுப்பினர்களை உலகில் எளிதிற் காணமுடியாது.

அரிதாக யாரோ சிலர்தான் இருக்கின்றனர். மூன்றாவது வகுப்பினர் பொருள் வேண்டுமென்று ஆசைப்படுபவர். நான்காவது வகுப்பினர் தாங்கள் படும் கஷ்டத்தினின்று தப்பித்து கொள்ள முயலுபவர். பின் சொல்லிய இரு வகுப்பினரும் செய்யும் பூஜையை காமிய பூஜை எனலாம். இது பிரதிபலனைக் கோரிச் செய்யும் வழிபாடாம்.

கடவுளோடு இவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். இவர்கள் வேண்டுவதை வருவித்தும் வேண்டாததை விலக்கியும் அவர்கள் செய்து வைத்தால் அதற்குக் கைமாறாக அவருக்கு (கடவுளாக) ஏதேனும் செலுத்து வதாகப் பிரதிக்கினை பண்ணுகின்றனர்.

போதிய அளவு விவேகம் பெறாதிருக்கும் பாமரர் இவ்வாறு கோரிக்கை செய்வதில் குற்றம் ஒன்றும் இல்லையென்றே சொல்லலாம். கடவுளது இயல்பைப்பற்றி அன்னவர் ஆழ்ந்து ஒன்றும் அறிந்திலர்.

ஒருவரது உதவியை நாடினால் அவருக்கு பிரதியுபகாரம் ஏதாவது செய்வது முறையென்று அவர்கள் கருதுகின்றனர். தாங்கள் நாடுகின்ற உதவி எவ் வளவுக்கெவ்வளவு பெரியதோ அவ்வளவுக் கவ்வளவு அவர்களும் ஈடுகொடுக்க முற்படு கின்றனர்.

உதவி வேண்டி தெய்வத்தை அணுகுவதற்கு இதுதான் உகந்த முறையென்று அவர்கள் மனப்பூர்வமாக நம்புகின்றனர். கடவுளோடு வியாபாரம் செய்வதாக அவர்கள் ஒருபோதும் எண்ணுகிறதில்லை.

பணச் செருக்குடைய மற்றொரு கூட்டத்தார் உளர். அவர்களிற் பெரும்பாலர் வியாபாரிகள். ஆதலால் அவர்கள் தங்களுடைய மனப்பான்மையைக் கடவுள்மீது சுமத்தி அவருடன் வர்த்தகம் செய்கின்றனர். லஞ்சம் கொடுத்துக் கடவுளைக் கைவசப்படுத்த முயலுகின்றனர் என்றே சொல்லலாம்.

ஏனென்றால் அவர்கள் அடாத முறையில் பணம் சம்பாதிக்க முற்படுகின்றனர். அதற்குப் பரிகாரமாகத் தங்கள் ஊதியத்தின் ஒரு சிறுபகுதியைக் கடவுளுக்கு காணிக்கை செலுத்தி விடுவதாகக் கோரிக்கை செய்து கொள்கின்றனர். இவ்விதத்தில்தான் ஏராளமான திரவியங்கள் திருப்பதியிலும் ஏனைய ஸ்தலங்களிலும் நாள்தோறும் வந்து குவிகின்றன.

இதை ஒரு முழு மோசமான மூடநம்பிக்கையென்றும் மூட பழக்கவழக்கம் என்றும் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதற்கு அடிப்படையாக உள்ள எண்ணம் போற்றத்தக்கதன்று. அது கபடமும் வஞ்சகமும் நிறைந்துள்ளது. பணம் செலுத்திக் கடவுளைச் சரிப்படுத்தி விடலாம் என்றும் புண்ணியத்தை விலைக்கு வாங்கிவிடலாம் என்றும் எண்ணுபவர் ஒருநாளும் மன நேர்மையடையார்.

இவர்கள் செலவிடும் திரவியம் வீணாய்ப் போகின்றது. அது சமய வளர்ச்சி, கல்வி, சமுதாய முன்னேற்றம் முதலியவை களுக்குப் பயன்படுமாகில் நாம் பெரிதும் திருப்தியடையலாம். ஆனால் அதற்குப் பதிலாக ஆலயங்கள் பிணக்கையும் வறுமையையும் அதிகரிக்கச் செய்து வருகின்றன. பிடுங்கும் சுபாவம் கடவுளிடத்தில் என்றைக்கும் இல்லை.

கடவுளின் பெயரால் ஆலயங்களை நடத்துபவர் தங்களது மேலான பொறுப்பை மறந்துவிட்டு, பிடுங்கும் சுபாவமுடைய கீழ்மையை இந்நாளில் அடைந்திருக்கின்றனர். இவ்வாறு கடவுளின் பெயரால் ஒழுக்கத்தை இழப்பதையும் திரவியத்தை விரயம் செய்வதையும் கண்டிக்கத்தக்க மூடப்பழக்க வழக்கங்கள் என்போம்.

(பக்கம் 229), சிறீராமகிருஷ்ண விஜயம், 1935, சுவாமி சித்பவானந்தர்)

Read more: http://viduthalai.in/page-7/98187.html#ixzz3Uw9Z7gbh

தமிழ் ஓவியா said...

சொர்க்கமா - நரகமா?

தன்னை எதிர்த்து பார்லி மென்டிற்குப் போட்டியிடும் ஒருவர் நடத்தும் தேர்தல் கூட்டம் ஒன்றிற்கு ஆப்ரகாம் லிங்கன் சென்றிருந்தார். மேடை யில் பேசிக் கொண்டிருந்த பாதிரியார் லிங்கனைக் கண்டதும் அவரை அவமானப்படுத்த வேண்டும் என எண்ணினார்.

லிங்கன், சொர்க்கம் - நரகம் ஆகியவை மீது நம்பிக்கை அற்றவர் என்பது பாதிரியாருக்குத் தெரியுமாகையால், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சொர்க்கத்திற்குப் போக விரும்புபவர்கள் அனைவரும் தயவு செய்து எழுந்து நிற்கவும் என்றார். ஆப்ரகாமைத் தவிர, எல்லோரும் எழுந்து நின்றார்கள்.

மறுபடியும் பாதிரியார் சொன்னார். நரகத்திற்குப் போக விரும்பாதவர்கள் எழுந்து நிற்கவும் என்றார். இப்பொழுதும் லிங்கனை தவிர்த்து எல்லோரும் எழுந்து நின்றார்கள்.

உடனே பாதிரியார் லிங்கனை பார்த்துக் கேட்டார். நீங்கள் எங்கே போக விரும்புகிறீர்கள்? லிங்கன் சொன் னார், நான் பார்லிமெண்டிற்கு போக விரும்புகிறேன், பாதிரியார் வாயடைத்துப் போனார்.

Read more: http://viduthalai.in/page-7/98193.html#ixzz3Uw9zGwDX

தமிழ் ஓவியா said...

என்னை அழைக்கின்ற கோவிலின் சாமி
எனக் கிழிவாய்த் தெரியும் - சாதி

தன்னை விளக்கிடுமோ இதை யோசிப்பீர்
சமூக நிலை புரியும்.

என்னை அளித்தவர் ஓர் கடவுள் மற்றும்
ஏழையர்க்கோர் கடவுள் - எனில்

முன்னம் இரண்டையும் சேர்த்துருக்குங்கள் முளைக்கும் பொதுக் கடவுள்.

- புரட்சிக்கவிஞர்

Read more: http://viduthalai.in/page-7/98193.html#ixzz3UwA72nzs

தமிழ் ஓவியா said...

மக்களை ஏமாற்றும் பில்லி சூனியம், மாந்திரீகம் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் எங்கே?
பெரியார் மண்ணில் ஏன் கொண்டு வரவில்லை? தமுஎகச மாநாட்டில் கேள்வி

திருப்பூர், மார்ச் 20_ மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் 13 ஆவது மாநில மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது.

திருப்பூரில் வியாழனன்று பேரெழுச்சியுடன் துவங்கிய தமுஎகச மாநில மாநாட்டின் துவக்க விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

சமூகத்தில் நிலவும் பல்வேறு மூடப்பழக்க வழக்கங்களால் மக்களுக்கு பெரும் பொருட்செலவும், ஆரோக்கியக்கேடும், நம்பிக்கையின்மையும் ஏற் படுகிறது. நரபலி, பில்லி சூனியம், மாந்திரீகம் என்ற பல்வேறு பெயர்களில் மக்கள் ஏமாற்றப்படு கிறார்கள்.

இந்திய விஞ்ஞானிகள் செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்ய மங்கள்யான் செயற்கைக் கோளை அனுப்பிய பிறகும் செவ்வாய் தோஷம் என்ற பெயரில் சோதிடர்கள் இளம் பெண்களின் வாழ்வை கேள்விக் குறியாக்குகின்றனர்.

மராட்டிய மாநிலத்தில் மூட நம்பிக்கைகளுக்கெதிராக தன் வாழ்நாள் முழுவதும் போராடிய நரேந்திர தபோல்கர் 20.8.2013 அன்று மதவெறி சமூக விரோதக் கும்பலால் படு கொலை செய்யப்பட்டார். மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை மராட்டிய மாநில அரசு நிறைவேற்ற வேண்டுமென அவர் தொடர்ந்து போராடி வந்தார்.

தபோல்கர் படுகொலையைத் தொடர்ந்து பிருதி விராஜ் சவாண் தலைமையிலான முந்தைய மகா ராஷ்டிர மாநில அரசு 13 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த மூட நம்பிக்கை ஒழிப்புச்சட்டத்தை அவசரச் சட்டமாக பிறப்பித்து பின்னர் சட்டமாக இயற்றியது.

இதன்படி மூட நம்பிக்கை செயல்களில் ஈடுபடு வோர் கைதானால் பிணையில் வெளிவர முடியாது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கும். நரேந்திர தபோல்கரைத் தொடர்ந்து பொதுவுடைமை இயக்கப் போராளி தோழர் கோவிந்த் பன்சாரே 2015 பிப்ரவரி 16 ஆம் தேதி மதவெறி பிற்போக்குக் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தோழர் பன்சாரே, ஷ்ரமிக் பிர திஸ்தான் என்ற பண்பாட்டு அமைப்பை உருவாக்கி மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராடி வந்ததால்தான் கொல்லப்பட்டார். சித்தராமையா தலைமையிலான கருநாடக அரசு மூட நம்பிக்கை ஒழிப்புச்சட்டத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் தனது வாழ்நாள் முழுவதும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராடிய தந்தை பெரியார் பிறந்த மண்ணில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்படாதது வேதனைக்குரியது, வெட்கப்படத்தக்கது.

நாம் மீள வேண்டுமானால் சுயமரியாதை பெற்ற மக்களாக வாழவேண்டுமென்று நினைத்தால் அடிமைப்படுத்தும் மூட நம்பிக்கைகளையும், குருட்டுத்தனமான பழக்கவழக்கங்களையும் முதலில் விட்டுவிடவேண்டும் என்று 1923 ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 51-ஏ(எச்) ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அறிவியல் மனப் பான்மையை வளர்த்துக் கொள்வது அடிப்படைக் கடமை என்று அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் மத்தியில் அமைந்துள்ள மோடி அரசு மூடநம்பிக்கைகளுக்கு ஆதரவாக நடந்து கொள்வதை இந்த மாநாடு வன்மையாகக் கண் டிக்கிறது. இந்தப் போக்கை கைவிடவேண்டுமென மோடி அரசை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது. மூட நம்பிக்கை ஒழிப்புச்சட்டத்தை மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்றவேண்டும் என மாநாடு வலியுறுத்து கிறது.

பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூட நம்பிக்கைகளை எதிர்த்து தமுஎகச-வினர் பண்பாட்டுத்தளத்தில் அயர்வற்ற போராட்டத்தை நடத்துவது என்று இந்த மாநாடு உறுதி ஏற்கிறது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-8/98198.html#ixzz3UwAPweW4