Search This Blog

30.9.15

இதுதான் இந்து மதம்!இந்துத்துவா பேசும் சகோதரிகாள், சிந்தியுங்கள்!


இந்து மதத்தைப் பொறுத்த வரை பெண் - ஒரு மானுடக் கூறேயல்ல! கூலி கூடக் கொடுக்காது ஆண் ஆதிக்க நுகத்தடியின் கீழ் மாட்டப் படும் மாட்டினும் கீழானவள்; அதனால்தான் கணவன் இறந்தவுடன் - அவனோடு வைத்து எரிக்கப்படவண்டி யவள் என்பதை சாத்திர ரீதியாகவே செதுக்கி வைத்து விட்டனர்.
இன்னும் விதவையா காமல், சுமங்கலிகளாய் இருக் கிற பெண்கள் விலை உயர்ந்த வாசனைத் திரவியங்களுட னும், மலர்ந்த முகத்துடனும், ஆபரணாதிகள் அணிந்தும் எவருக்கும் முன்னதாக சடலம் வைக்கப்பட்ட கட்டை யண்டை வருவர்.- (ரிக் வேதம், 4-11-17)
கருட புராணம் என்ன கதைக்கிறது? அதனையும் பார்த்துவிடலாமே!
மாசு மூடிய பொன்னை அக்னியானது அம்மாசை மாத்திரம் போக்கி, அப் பொன்னை கெடுக்காமை போல, கொழுநனோடு உயிர் விடும் புண்ணியவதியின் மேனியை மாத்திரம் அக்னி யானவன் தகிப்பானேயன்றி, அவளைச் சிறிதும் வருத் தான். தாய், தந்தை, மகன், பேரன், அண்ணன், தம்பி முதலியோரையும் மற்று முள்ள சுற்றத்தாரையும் மனை முதலிய பொருள்களையும், உயிரையும் துறந்து - கண வனே தெய்வம் அவனைப் பிரிந்து வாழ்வதென்பது அடுக்காது என்று, தனது கணவனுடனே துஞ்சும் உத் தமியை ஒப்பவர் உலகில் யாருள்ளார்? சாக மனம் (உடன்கட்டை) செய்த புண் ணியவதி மூன்றரைக் கோடி தேவ வருஷ காலமும் சுவர்க் கத்தில் கணவனோடு இன் பம் துய்ப்பாள். நாயகனோடு உடன்கட்டை ஏறாதவள் எந்த ஜென்மத்திலும் துக் கமே அடைவாள் என்கிறது விஷ்ணு புராணம் (14 ஆம் அத்தியாயம்).
கணவன் இறந்த பின்பு அவனுடைய சடலத்துடன் அக்னிப் பிரவேசம் செய்ய எத்தனிக்கும் பெண்கள் அசுவமேத யாகம் செய்த பலனை அடைகின்றார்கள் என்கிறது காசிக் காண்டம்.
இந்து மதத்தின் சீலங்கள் என்று கூறி ஏற்றுக்கொள்ளும் ஒரே ஒரு பெண்ணை இந்து ராஷ்டிர பேர்வழிகளே காட்டுங்கள் பார்க்கலாம்.
இங்கிலீஷ்காரன் - அவன் கிறிஸ்தவன் - இந்துக் கலாச் சாரத்தை நாசமாக்கி விட்ட வன் என்று நா சுளுக்கேறக் கூச்சலிடும் பேர்வழிகள் - இங்கிலீஷ்காரன் இந்த நாச மாகப் போகிற உடன்கட்டை ஏற்றுதலை சட்டம் போட்டு ஒழித்தானே - அதற்காக இந்துப் பெண்கள் ஆயிரம் சலாம் போட வேண்டாமா வெள்ளைக்காரனுக்கு?
1628 இல் மதுரை நாயக்க மன்னனுடன் 700 மனைவிகளும், திருமலை நாயக்கனுடன் 200 மனைவி மார்களும் உடன் வைத்துக் கொளுத்தப்பட்ட கொடு மையை அறிந்த பின்னும் இந்து மதத்தைத் தூக்கிப் பிடிக்கலாமா?
அது, 18 ஆம் நூற்றாண்டு; மராட்டியப் பார்ப்பனர் ஒரு வரின் மனைவி கோகிலா; அந்தப் பார்ப்பனன் மரணம் அடைந்தான். அவன் சடலம் சென்றது - அதற்குப் பின் னால் அந்தப் பெண் அலங் கரித்து ஊர்வலமாக சுடுகாட் டுக்கு அழைத்து வரப்பட்டாள்.
அதனை வேடிக்கைப் பார்த்த இராணுவத்தினர் மனம் இரங்கி, உள்ளே புகுந்து கொடியவர்களிட மிருந்து அப்பெண்ணை மீட்டனர். ஆனால், அந்தப் பெண்ணை வீட்டார் சேர்த்துக் கொள்ள மறுத்தனர்; ஜாதிப் பிரஷ்டம் செய்தனர்.
அந்தப் பெண்ணை இரா ணுவத் தலைவர் கர்னல் லிட் டில்டன் பங்களாவிலேயே வைத்து ஆளாக்கினர். கல்வி கொடுத்து இராயல் குளோரித் தாள் என்று பெயர் சூட்டி, நெல்லை மாவட்டத்தில் சுவிசேஷ ஊழியராக்கினர்.
மனிதப் பண்பு எங்கே இருக்கிறது?
இந்துத்துவா பேசும் சகோதரிகாள், சிந்தியுங்கள்!
------------------------------- மயிலாடன் அவர்கள் 30-09-2015 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

29.9.15

மகாபாரதத்தின் யோக்கியதை என்ன?-பிஜேபி, சங்பரிவார் சகோதரிகளே சிந்திப்பீர்!

மகாபாரதத்தின் யோக்கியதை என்ன?கல்வித் திட்டத்தில் இராமாயணம், மகாபாரதம், கீதை முதலிய நூல்கள் இடம் பெறச் செய்யப்படும் என்று மத்திய பிஜேபி அரசு அறிவித்துள்ளது.

இந்நூல்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவை என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு மதச் சார்பற்ற அரசு - இப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தின் நூல்களைக் கற்பிக்கத் திட்ட மிடுவது சரியா? என்பது நியாயமான கேள்வி.
பிற மதத்தவர்கள் மத்தியிலும் மத நம்பிக்கையற்ற வர்கள் மத்தியிலும் இத்தகு செயல்பாடுகள் எந்த அளவு மனப் புண்ணை ஏற்படுத்தும்? வாஜ்பேயி பிரதமராக இருந்த காலத்தில் இப்படித்தான் ஆரம்பித்தார்கள். கடவுள் வாழ்த்துப் பாடலாக சரஸ்வதி வந்தனா என்ற இந்துத்துவா பாடலை அறிமுகப்படுத்தி னார்கள்; பிஜேபி அரசு கூட்டிய மாநிலக் கல்வி அமைச் சர்கள் மாநாட்டிலேயே அதற்கு எதிர்ப்புக் கிளம்பியது; அம்மாநாட்டில் பங்கேற்ற  தமிழ்நாடு கல்வி அமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் அதனை எதிர்த்து மாநாட்டை விட்டே வெளியேறினார். பெரும் பாலான மாநிலக் கல்வி அமைச்சர்களும், எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.
காலம் கடந்து விட்டதால் மக்கள் மறந்து இருப்பார்கள் என்ற நினைப்போ என்று தெரியவில்லை. இப்பொழுது ஒருபடி மேலே சென்று இந்து மத இதிகாசங்களை கல்வித் திட்டத்தில் புகுத்த உள்ளனர்.

இராமாயணத்தின் தன்மைபற்றி நேற்றைய தலையங் கத்தில் குறிப்பிட்டு இருந்தோம். இன்று மகாபாரதத்தைப் பற்றி ஒரு வரைபடத்தைக் கொடுப்பது நமது கடமை.

ஏகலைவன் என்ற வேட்டுவக் குலத்தைச் சேர்ந்தவன் வில் வித்தையில் திறமை உள்ளவனாக இருந்தான். நாய் குரைக்கும் ஒலியைக் கணித்து அம்பு எய்துக் கொன்றான் அந்த வேட்டுவக் குல ஏகலைவன். துரோணாச்சாரிக்கு மிகப் பெரிய ஆச்சரியம். தன் சீடன் அர்ச்சுனனால் தானே இது இயலக் கூடியது. இதனை எய்தவன் யார் என்று அவன் யோசித்தபோது அம்பை எய்த அந்த ஏகலைவன் துரோணாச்சாரியின் முன் வருகிறான்.
உனது குரு யார் என்ற கேள்வியைத் தொடுக்கிறான்? சுவாமி நான் உங்களிடம் வில் வித்தை கற்றுக் கொள்ள வந்தபோது, நான் தாழ்ந்த ஜாதி குலத்தில் பிறந்தவன் என்று கூறி வில் வித்தையைக் கற்றுக் கொடுக்க மறுத்தீர்கள்.
மனம் நொந்து போனேன்; ஆனால், முயற்சியைக் கைவிடவில்லை; உங்களைப் போல உருவம் செய்து தங்களையே என் குருவாகக் கருதி இந்த வில்வித்தையைக் கற்றுத் தேர்ந்தேன்! என்றான் பவ்யமாக.
அப்படியா சீடா? உன் குரு பக்தியை மெச்சினோம் என்று முதுகைத் தட்டிக் கொடுத்தாரா?
எப்படிப் பாராட்டுவார்? அவர்தான் உயர் குலத்தோர் ஆயிற்றே! - வருணாசிரமத்தைக் கட்டிக் காக்கும் காகப்பட்டராயிற்றே!
அவர் திருவாய் மலர்ந்தது என்ன? நீ என்னை குருவாக வரித்துக் கொண்டுதானே வில் வித்தை கற்றாய்?
ஆமாம் என்று அடி பணிந்து நின்றான் அந்த வேட்டுவக் குல ஏகலைவன்.
அப்படியானால் எனக்குக் குரு தட்சணை கொடுக்க வேண்டாமா? கொடுப்பாயா? என்று கேட்டார்.
எது கேட்டாலும் கொடுப்பேன் என்றான் அந்த ஏதுமறியாத அப்பாவி.
உன் கட்டை விரலை குருதட்சணையாகக் கொடு! என்றான் இரக்கம் என்னும் ஒரு பொருளில்லா அந்தக் குரூரனான துரோணாச்சாரி.
அக்கணமே வெட்டிக் கட்டை விரலைக் காணிக்கை யாகத் தந்தான். கட்டை விரலைக் காணிக்கையாகப் பெற்றால், அவன் வில்லை வளைத்து அம்பை எய்ய முடி யுமா? சூழ்ச்சியிலே பிறந்த கூட்டத்தின் தலைவனல்லவா - அந்தத் துரோணாச்சாரி பார்ப்பான்.
ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் இந்த மகாபார தத்தைத்தான் பள்ளிகளில் பாடத் திட்டத்தில் சேர்க்க  வேண்டுமாம்.
இதுபோல எத்தனை எத்தனையோ எடுத்துக்காட்டு களைக் கொண்டு வந்து முன்னிறுத்தலாம். இதனையும் தாண்டி மகாபாரதம் போதிக்கும் நீதிதான் என்ன? பாண்டவர்கள் கிருஷ்ணன் துணையோடு உறவினர் களுடன் போரிட நேரிட்டது பலன் கருதாப்பணியா? அவர் களைக் கொன்று வென்று நாட்டை ஆள வேண்டுமென விரும்பியது பலனை எதிர்பார்த்த பணிதானே?
துரோணரின் மகன் அசுவத்தாமன் இறந்து விட்டான் என்று தருமரை ஏவிப் பொய் சொல்ல வைத்தது ஏன்? கவுரவர்களுக்குப் போரில் பெருந் துணையாக இருக்கும் துரோணாச்சாரியாரைக் கொல்ல வேண்டுமென்ற சூழ்ச்சியால் தானே? தருமரைப் பொய் சொல்ல வைத்தது பலன் கருதாப் பணியா? கிருஷ்ணன் போரில் ஜயந்திரனை நோக்கி சூரியன் மறைந்து விட்டது என்று ஏன் பொய் சொல்ல வேண்டும்? பலன் கருதாப் பணியை வலி யுறுத்தும் கிருஷ்ணன், இதனைப் பலன் கருதாமலா சொன் னான்? மெய்க் காப்பாளர்கள் துணையின்றித் தனிமையி லிருந்த ஜயந்திரனை அம்பெய்து கொன்றது பலன் கருதாப் பணியா?
பெண்ணாகப் பிறந்தவரிடம் போர் செய்ய விரும்பாத பீஷ்மரை அவருக்கு எதிரேயிருந்த சிகண்டிக்குப்பின் நின்று கொண்டு அர்ச்சுனன் பீஷ்மரைக் கொன்றது பலன் கருதாப் பணியா? (நூல்: கீதையின் மறுபக்கம் ஆழமும் அகலமும் - பா. வீரமணி)
இத்தகு ஒழுக்கக் கேடான நூலை மாணவர்களுக்குப் போதிக்க வேண்டுமா?
தி இந்து இங்கிலீஷ் நாளேட்டின் ஆசிரியர் கடிதம் பகுதியில் ஒரு கடிதம் வெளி வந்தது. அதனை எழுதியவர் சென்னையைச் சேர்ந்த டி.ஆர். சுந்தரம். கடிதம் வெளிவந்த நாள்: 17.12.1988.
அந்தக் கடிதம் என்ன கூறுகிறது?

எமதர்மன்  வாயு பகவான்  ஆகியோரால் குந்திக்கு, தர்மர் முதலியோர் பிறக்கிறார்கள். தொலைக்காட்சியில் வாயுவைக் காட்டும்போது உடனே குழந்தைகள், அந்தப் பிறப்புப் பற்றி சில கேள்விகளைக் கேட்கத் துவங்கு கிறார்கள். பெற்றோர்களால் பிள்ளைகளின் அத்தகைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிவதில்லை; அது தெய்வ சம்பந்தப்பட்டது; எனவே அதுபற்றி எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது என்று பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. பாண்டவர்களும், கவுரவர்களும் சூதாடுவது பாண்ட வர்கள் தோற்பது, மனைவியை வைத்தே சூதாடுவது, திரவுபதையைத் துகில் உரிவது ஆகிய காட்சிகள் எல்லாம் வர இருக்கின்றன. இவைகளைக் குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படிப் பார்க்க முடியும்?
எனவே, தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் மகாபாரதம் தொடரை வீட்டில் குழந்தைகளை வைத்துக் கொண்டு பார்க்க முடியவில்லை. வயது வந்தவர்களுக்கு மட்டும்  என்று அறிவித்து நள்ளிரவு நேரத்தில் மகாபாரதத் தொடரை ஒளிபரப்ப வேண்டும் என்று இந்து ஏட்டில் கடிதம் எழுதப்படவில்லையா? அந்த மகாபாரதத்தை பள்ளியில் சொல்லிக் கொடுக்கப் போகிறதாம் பாரதிய ஜனதா அரசு; பெற்றோர்களே எச்சரிக்கை! எச்சரிக்கை!!

                     -----------------------------”விடுதலை” தலையங்கம் 29-09-2015
*********************************************************************************


இந்து மதம் பெண் களுக்கு இழைத்த கொடுமை போல வேறு எந்த நிறுவ னமும் இழைத்திடவில்லை. கணவன் இறந்தால் அவ னோடு கட்டி வைத்து பெண்ணை எரித்த கொடுமையை என்னென்று சொல்ல!

வரலாற்றாசிரியர் ஃபிலிப் மேசன் எழுதிய ஒரு கட்டு ரையில் இவ்வாறு கூறப்படு கிறது.


வங்காளத்தில் உடன் கட்டை ஏறிய பத்துப் பெண் களில் ஒன்பதுபேர் அச்சத் துடனும், நடுக்கத்துடனும் சிதையில் (நெருப்பில்) அமர்ந் தனர். (விருப்பத்துடன் அல்ல) உயிருடன் எரிக்கப்பட விருப்பதை அறிந்தவுட னேயே தன்னிலை இழந்து - தன் நினைவு இழந்து விடு கின்ற பெண்ணை அவனது கணவனின் சடலத்துடன் சேர்த்துக் கட்டி விடுவது வழக்கம். சிதையில் வைக்கப் பட்டால் எரியும் நெருப் பினால் கட்டுக்கள் தளர்ந்து விடும் நிலையில், அந்த பெண் சிதையிலிருந்து எழுந்து ஓடி வந்து விடுவாள் என்ற எதிர்பார்ப்புடன், அப்படி ஓடி வந்தால் அவளை சிதை நெருப்பில் தள்ளுவதற்காக ஆண்கள் பலரின் கைகளிலும் கம்பு களுடன் சிதையைச் சுற்றி நிற்பார்கள். சிதையில் ஏற்றப் பட்ட ஒரு பெண் - மழை பெய்து கொண்டிருந்த இரவில், சிதையிலிருந்து விடுபட்டு வெளியே வந்து, ஊரார் தன்னைப் பார்த்து விட்டால், மீண்டும் நெருப் பில் தள்ளி விடுவார்கள் என்று அஞ்சி ஒரு புதரில் ஒளிந்து கொண்டிருந்தாள். ஆனால், ஊரார் அப்பெண் ஒளிந்து கொண்டிருந்ததைக் கண்டு பிடித்து விட்டனர். அந்தப் பெண்ணினுடைய மகனே அந்தத் தாயை இழுத்துக் கொண்டு வந்து அவளது கைகளையும், கால்களையும் கட்டி, மீண்டும் நெருப்பில் தள்ளி விட்டுச் சென்றான்

- வரலாற்று ஆசிரியர் ஃபிலிஃ மேசன் தி வீக் 11- 17,1987).


இதுதான் அர்த்தமுள்ள இந்து மதம். பிஜேபி ஆட்சி கொண்டு வரத் துடிக்கும் ராமராஜ்ஜியம் - இந்து ராஷ்ட்டிரா!
வெகு தூரம் போக வேண்டாம். நாம் வாழும் காலத்திலேயே ராஜஸ்தானில் ரூப்கன்வர் என்ற பெண் ணுக்கு என்ன நேர்ந்தது? அந்தக் கருப்பு நாளில் (1987 செப்டம்பர் 4) கணவனோடு எரித்துக் கொலை செய்ய வில்லையா!?
சதி மாதா! ஆக்கப் பட்டுக் கோயில் கட்டிக் கும்பிட ஆரம்பித்தனரே! காணிக்கையாக ரூ.21 லட்சம் பூஜைப் பொருட்கள் விற் பனை மூலம் ரூ.20 லட்சமும் கிடைத்த தகவலை அதே தி வீக் இதழ்தான் அம்பலப் படுத்தியது.
இதில் கொடுமைக்குப் பொட்டு வைத்த கதை ஒன்று இருக்கிறது. அவரையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆஞ்ச நேயரின் வாலில் வைத்த நெருப்பு ஸீதையின் பதிவர்த்யத்தால் (சக்தியால்) அவரைப் பாதிக்காமலேயே இருந்தது. குமாரிலபட்டர் உமிக்காந்தல் அக்னியில் கருகின போது எதிரே நின்ற (சங்கர) ஆச் சாரியாரின் ஸாந்நியத்தால் அவருக்கு உஷ்ணமே தெரியாமல் ஜில்லென்று இருந்தது. அனேக பதி விரதைகளுக்கு அவருடைய பதிபக்தியினாலேயே சிதாக்னி (நெருப்பு) சந்தன மாக இருந்திருக்கிறது. அவர்கள் கட்டியிருந்த புடவை அத்துணை அக்னி யிலும் எரியாமல் இருக்கு மாம். அதை எடுத்துப் பூஜை பண்ணுவதுண்டு!
- காஞ்சி சந்திர சேகரேந்திர சரஸ்வதி
தெய்வத்தின் குரல் 2ஆம்பகுதி பக்கம் 967-968)
ஈவு இரக்கமற்ற இவர் தான் லோகக் குருவாம் - மகா பெரியவராம் - அருமை சகோ தரிகளே - இந்த இந்துத் துவா உங்களுக்கு வேண்டுமா?
பிஜேபி, சங்பரிவார் சகோதரிகளே சிந்திப்பீர்!

------------------------------  மயிலாடன் அவர்கள் 29-09-2015 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

28.9.15

பாடத் திட்டத்தில் பாரதம் - இராமாயணமா?-இந்து சகோதரிகாள்!


பி.ஜே.பி., மற்றும் ஆர். எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவாரைச் சேர்ந்த இந்துத் துவ அமைப்பில் இருக்கும் பெண்கள்  சிந்திப்பதற்கான உண்மைகள், தக வல்கள் ஏராளம் உண்டு!
வடமொழியிலிருந்து சுலோகம் ஒன்று ஆங்கி லத்தில் மொழி பெயர்க்கப் பட்டு இந்தியன் எக்ஸ் பிரஸ் ஏட்டில் முதல் பக்கத்தில் வெளி வந்தது.
Only when fire will cool, the moon Burn, or the ocean fill with tasty water will a woman pure.
(இந்தியன் எக்ஸ்பிரஸ் 24.12.1990)

எப்பொழுது தீ தென்ற லாக மாறுகிறதோ, நிலா நெருப்பாக மாறுகிறதோ, அல்லது கடல் சுவை நீரால் நிரப்பப்படுகிறதோ, அப் போதுதான் ஒரு பெண் ணும் தூய்மையான வளாக இருப்பாள் - இது தான் இந்தியன் எக்ஸ் பிரஸ் வெளியிட்ட ஆங்கி லத்தில் இருந்த சுலோகத் தின் பொருளாகும்.
விடுதலை வெளி யிட்டு இருந்தால் வேறு கண்ணோட்டத்தில் பேசக் கூடும்; வெளியிட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு அல்லவா?
பி.ஜே.பி. - இந்து முன்னணி வகையறாக்கள் என்பதைவிட இவ்வமைப் புகளில் உள்ள சகோதரிகள் சிந்திக்க வேண்டும். இந்த அமைப்புகள் கூறும் இந்து ராஜ்ஜியத்தில் இவைதானே சட்டாம்பிள்ளைகள்?
கணவன் இறந்தவுடன் மனைவியும் உடன்கட்டை ஏ(ற்)றும் கொடுமை இந்த அர்த்தமுள்ள (?) இந்து மதத்தில்தானே இருந்தது.
வெள்ளைக்காரன் கிறிஸ்தவன் - அவன் இந்த நாட்டைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விட்டான் என்று ஆக்ரோசமாக வார்த்தைகளைக் கொட்டு வார்கள்; அந்த வெள்ளைக் காரன் சதி என்ற உடன் கட்டை ஏ(ற்)றுதலை சட் டப்படி ஒழிக்காவிட்டால் ஒரு வசந்த்ரா ராஜே ராஜஸ் தான் முதல் அமைச்சராக இருக்க முடியுமா? ஒரு விஜயலட்சுமி பண்டிட் அய்.நா.வின் தலைவராக வந்திருக்க முடியுமா? ஒரு சிவசங்கரி எழுத்தாளராக  உலா வர முடியுமா?


கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங்கால் சதி (உடன்கட்டை) தடை செய்யப்பட்டபோது, இந்திய இராணுவத்தின் கமாண்டர் - இன் - சீஃப் சர் சார்லஸ் நேப்பியரை பார்ப்பனர் குழு ஒன்று சந்தித்து, இந்துக்களின் தேசிய பழக்க வழக்கங் களில், கலாச்சாரங்களில் தலையிடுவதில்லை என்று பிரிட்டீஷ் மகாராணி உறுதி அளித்திருப்பதை அவருக்கு நினைவுப்படுத் தினார்கள்.

அதற்குக் கமாண்டர் - இன் - சீஃப் நேப்பியர் சொன்ன பதில் தான் அலாதியானது. ஆம் அழகானது!
என்னுடைய நாட்டி லும் ஒரு பழக்கம் இருக் கிறது. பெண்களை உயி ருடன் எரிக்கும் ஆண் களைத் தூக்கில் தொங்க விடுவதுதான் அந்தப் பழக் கம். நாம் எல்லோரும் நமது தேசங்களின் வழக்கப்படி தான் நடக்கிறோம் என்று பதிலடி (தி வீக் - அக் டோபர் 11-17 (1987) கொடுத் தாரே பார்க்கலாம்! வந்த பார்ப்பனக் குழுவோ கப்-சிப்! என்ன சொல்கிறீர்கள் இந்துத்துவா சகோதரிகளே?
                   ----------------------- மயிலாடன் அவர்கள் “விடுதலை” 28-09-2015 இல் எழுதிய கட்டுரை
********************************************************************************************************

இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இராமாயணம், மகாபாரதம் இரண்டையும் சிறப்புப் பாடமாக சேர்ப்போம் என்று மத்திய அரசு கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.   இதுகுறித்து மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா புதுடில்லியில் கூறிய தாவது: கலாச்சார சீரழிவுகளால் நம்நாடு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நமது கலாச்சார பெருமைகளை இளம் தலை முறைகள் உணர வேண்டும் என்பதற்காக, நம் பழம்பெரும் இதிகாசங் களான இராமாயணம், மகாபாரதம் மற்றும், புனித நூலான பகவத் கீதையை, பள்ளி, கல்லூரிப் பாடத் திட்டங்களில் சேர்ப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. நமது கலாச்சாரத்தின் ஒரு அம்சமாகவே இத்திட்டம் வரவிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தத்தை அரசு திணிக்க உள்ளது போன்ற விமர் சனங்கள் வந்தாலும், இத்திட்டத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை. உலகமே போற்றிப்புகழும் நமது கலாச்சாரப் பெருமைகளை, இளம் தலைமுறைக்கு கற்பிப்பதில் ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் எங்கிருந்து வந்தது? என்று இணைஅமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவர் செப்டம்பர் 4 ஆம் தேதி பத்திரிகை யாளர்களிடம் இந்த நிகழ்ச்சி குறித்து மகேஷ் சர்மா பேசிய விவரம் குறித்து எகனாமிக் டைம்ஸ் செய்தி ஒன்றை வெளியிட்டுள் ளது. அதில் பாஜக கல்வி மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர்கள் நாடு முழுவதுமுள்ள அனைத்து கலாச்சார அமைப்புகள், மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் விரைவில் சந்திப்பு நடத்தவிருக்கிறோம். இதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு வரும் புதிய கல்வித் திட்டத்தை வரும் கல்வியாண்டிலேயே நடைமுறைக்குக் கொண்டுவர வேகப்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதற்கான தடைகள் மற்றும் எதிர்ப்புகளை எவ்வாறு கையாளவேண்டும் என்று ஆலோசனைகள் அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் கூறி இருக்கிறார்.
மத்தியில் உள்ள பிஜேபி அரசு பச்சையான பார்ப்பனீய அரசு என்று நாம் சொன்னால் உங்களுக்கு எப்பொழுதும் இது போன்ற பார்வைதான்! என்று பொத்தாம் பொதுவாகப் பேசும் புண்ணியவான்கள் இதற்குப் பிறகாவது கண்களைக் கொஞ்சம் கழுவி சுத்தம் செய்து விட்டு இதனைக் காண வேண்டும்.
இராமாயணமும், மகாபாரதமும் காவியங்கள் தானே? அவற்றைப் போதிப்பதில் என்ன தவறு? என்று மேலெழுந்த வாரியாகக் கேள்வி கேட்பவர்கள் உண்டு, விவரம் தெரியாத முறையில் இப்படிக் கேள்வி கேட்பவர்கள் உண்டு. விவரம் தெரிந்தும், இந்தப் பிரச்சினையில் வேர் வரை சென்று எவரும் வெடி வைத்து  விடக் கூடாதே என்ற ஜாக்கிரதைத் தனத்தோடு திசை திருப்பும் வகையில் இதே கேள்வியைக் கேட்பவர்கள் ஆபத்தானவர்கள்.
இராமாயணம், மகாபாரதம் குறித்து தந்தை பெரியார் அவர்களோ, கைவல்யம் போன்றவர்களோ, அறிஞர் அண்ணாவோ, மறைமலை அடிகள் போன்ற தமிழ்க் கடலோ கூறுவதைக்கூடக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம்!
வரலாற்று ஆசிரியர்கள் என்ன சொன்னார்கள் என்பதைக் கண்டிப்பாகக் கணக்கில் கொண்டு சிந்திக்க இணங்குவது தான் கண்ணியமானது.
வரலாற்றாளர்களில் மற்றவர்கள் சொல்லுவதைக்கூடப் பொருட்படுத்த வேண்டாம் விவேகானந்தர் யார்? இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று விநியோகம் செய்து வந்தவர்தானே? அவர் என்ன சொல்லுகிறார்?
தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும், அழைக்கப்பட்டிருக் கிறார்கள். (சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவுகளும் கட்டு ரைகளும் எனும் நூல் - இராமாயணம் என்ற தலைப்பு பக்கம் 587).
இதற்கு என்ன பதில் சொல்லுவார்கள்?
இராமாயணம், மகாபாரதம் என்னும் இரண்டு இதிகாசங் களும் ஆரியர் பரவிய பருவங்களை வெகு தெளிவாகக் குறிப்பிடுகின்றன. மகாபராதம் கங்கை நதிச் சமவெளியில் ஆரியர்கள் பரவியதையும், இராமாயணம் தென்னிந்தியாவை அவர்கள் கைப்பற்றியதையும் உணர்த்துகின்றன.
இவ்வாறு எழுதி இருப்பது திராவிடர் இயக்கச் சிந்தனை யாளர்கள் அல்லர் - எழுதி இருப்பவர் முன்பு கல்வி அமைச்ச ராக விருந்த சி.ஜே. வர்க்கி  - நூல் இந்திய சரித்திரப் பாகுபாடு - பக்கம் 15).
இராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாகக் கூறவும் திராவிடர்களை இழிவுபடுத்திக் காட்டவும் எழுதப் பட்ட நூலாகும்.
- (பண்டிதர் டி. பொன்னம்பலம் பிள்ளை மலபார் குவார்ட்டிர்லி ரிவ்யூ)
இதுபோல இன்னும் ஏராளமான எடுத்துக்காட்டுகளை வண்டி வண்டியாகக் குவிக்கலாம்.

இராமாயணத்திலிருந்து ஒரே ஒரு எடுத்துக்காட்டை முன்னிறுத்தினாலே கூடப் போதுமானது. சம்பூகன்வதை என்ற ஒன்று போதாதா?
ஒரு நாள் ஒரு பிராமணன் இறந்துபோன தனது பிள்ளை யினுடைய உடலைத் தாங்கிக் கொண்டு அரச சபைக்கு வந்து, உனது கொடுங்கோலாட்சியில் நடந்த கதியைப் பார் என்று பலவிதமான வசைமொழிகளைப் பொழிந்து கதறினான். அரசன் ஒன்றும் தோன்றாமல் திகைத்திருக்கும்பொழுது, சம்பூகன் என்கிற ஒரு சூத்திரன் காட்டில் தவம் பண்ணு கிறான். அவனைக் கொல்லாமிலிருந்த குற்றத்தால், இக்குழந் தையின் உயிர் நீங்கிற்று. ஆயினும், காலங்கடவாமல் சென்று அவனைக் கொன்றால், குழந்தை திரும்பவும் உயிர் பெற்றெழும் என்று அசரீரி வார்த்தை மொழிந்ததாம். உடனே கோடை காலத்தில் காட்டுத்தீயின் நடுவில்  அகப்பட்டவன் மழையினால், எங்ஙனம் மகிழ்ச்சியுறுவானோ, அத்தகைய மகிழ்ச்சியோடு காட்டிற்குச் சென்று, அந்தத் துறவியைப் பார்த்து, நீ எதன் பொருட்டுத் தவம் பண்ணுகிறாய்? என வினவ, அதற்கு அவர், இவ்வுலகப் பொருள்கள் எதையும் நான் விரும்பவில்லை. உண்மை நிலை ஒன்றினையே விரும்பு கிறேன் என்று விடை பகர, ராமன் சற்றுத் தயங்கியும் உடனே, சூத்திரன் தவம் பண்ணலாமா? இதனாலன்றோ பிராமணச் சிறுவன் இறந்தான்! ஆதலால், துறவியாயினும் இந்தச் சூத்திரனைக் கொல்லுவது பாவமாகாது. எதிர்மறையாக, இவனைக் கொல்லுவதால், இறந்துபோன பிராமணச் சிறுவன் உயிர் பெற்றெழுந்து, அதனால், பெரும் புண்ணியத்தை அடைவோமே என்று எண்ணியவனாய்த் தன் கையைப் பார்த்து இங்ஙனம் கூறுகிறான்:-
ஹே! ஹஸ்த தக்ஷிண மருதஸ்யசி சோர்த்விஜஸ்ய
ஜிவாதலே விஸ்ருஜ சூத்ர முனௌக்ருபாணம்:
ராமஸ்ய காத்ரமஸி..............................................................................

பொருள்: ஓ! வலக் கையே, இறந்துபோன 1 பிராமணச் சிறுவன் மறுபடியும் உயிர் பெற்றெழுவதற்கு இந்தச் சூத்திரத் துறவியைக் கொல்லுவதே மருந்தாகையால், கூசாமல் இவனை வெட்டிவிடு, நீ இராமனது அங்கங்களில் ஒன்றன்றோ? இராமனால் சூத்திரன் சம்பூகன் வெட்டப்பட்டதும் செத்துப் போன பார்ப்பனக் குழந்தை உயிர் பெற்றது என்று எழுதி இருக்கிற அக்கிரமத்தை என்னவென்று சொல்ல!
இது அறிவுக்குப் பொருந்துமா என்பது ஒரு புறம் இருக் கட்டும். இதன் நோக்கம் பிறப்பின் அடிப்படையிலான வருண தர்மத்தை நிலை நிறுத்துவது தானே!
இந்த இராம ராஜ்ஜியத்தை உருவாக்கவே - மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி தோள் தட்டி எழுந்து நிற்கிறது. அதன் முதற் படியாகக் கல்வி திட்டத்தில் இந்த இரு இதிகாசங் களையும் வைக்கிறது என்றால் இதனைக் கண்டு கொள்ளாமல் இருக்க முடியுமா?
இராமாயணத்தையும் இராமன் படத்தையும் எரித்த இயக்க மட்டுமல்ல. இராவண லீலா நடத்திய தன்மான இனமான இயக்கம்தான் திராவிடர் கழகம். மத்திய அரசு இந்த இதிகாசங் களைக் கல்வித் திட்டத்தில் திணிக்குமானால், அதன் எதிர் விளைவு கடினமானதாகவே இருக்கும் என்று எச்சரிக்கிறோம்.
                              -------------------------------------"விடுதலை” தலையங்கம் 28-09-2015

26.9.15

புத்தர் மார்க்கத்தில் புகுந்தே நஞ்சு ஊட்டி சதி செய்து புத்தர்களை ஒழித்தனர் பார்ப்பனர்!

புத்தர் மார்க்கத்தில் புகுந்தே நஞ்சு ஊட்டி சதி செய்து புத்தர்களை ஒழித்தனர் பார்ப்பனர்!


உண்மையான ஒரு பொதுத் தொண்டு உண்டு என்றால், அது மக்கள் சமூதாயத்தில் இருக்கின்ற குறைபாடுகளை நீக்கி மக்களை அறிவு வழி நடக்கச் செய்யப்படுவது தான்.

2500- ஆண்டுகளாக மக்கள் மடமையை ஒழிக்க, மக்கள் இழிவை ஒழிக்க, எவருமே முன்வரவே இல்லை. சரித்திரம் சம்பந்தமாக யாரையாவது கூற வேண்டுமானால்,

மக்களை மக்களாக மதிக்கச் செய்ய, இழிவு கொடுமைகளை ஒழிக்க முன்வந்தவர் புத்தர் தான்.

அவர் அரச வாழ்வைத் துறந்தவர். அவரது போக்கில் சந்தேகம் இல்லாததனால் மக்கள் அவரது கொள்கையை எளிதில் ஏற்றுக் கொண்டனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அவர் கொள்கை பரவி இருந்தது.

ரோடு வசதி இல்லாத காலம், காடும் மேடுமாக இருந்த காலம், போக்குவரத்து வசதி இல்லாத காலம். அந்தக் காலத்தில் தோன்றிய அவனது அறிவுப் பிரச்சாரமானது நாடெங்கும் பரவி இருந்தது.

புத்தருடைய புரட்சிகரமான கொள்கை பரவி வருவது கண்டு பார்ப்னர்கள் நம் மட ராஜாக்களை வசப்படுத்திக் கொண்டு அந்த அறிவுமார்க்கத்தை ஒழித்து (புத்த) ஸ்தாபனங்களை எல்லாம் தரை மட்டமாகி விட்டார்கள்.

புத்தர் வேறு எதுவும் சொல்லவில்லை. "உன் அறிவுப்படி சிந்தித்து அதன்படி நட! மகான் சொன்னார்! ரிஷி சொன்னார்! பெரியவர்கள், முன்னோர்கள் சொன்னார்கள் என்பதை நம்பாதே! உன் புத்தியின்படி நட! என்று தான் சொன்னார்.

புத்த மார்க்கத்தின் செல்வாக்கை வீழ்த்த முடியாதது கண்டு தான் பார்ப்பனர்கள் தந்திரமாக புத்த மார்க்கத்தில் பிட்சுக்களாக சேர்ந்து, அந்த மார்க்கத்தில் நச்சுக்கருத்துகளைப் புகுத்தி நாசப்படுத்தி விட்டார்கள்.

புத்த மடாலயங்கள், கோயில்கள் இருந்ததை எல்லாம் தரைமட்டமாக்கி அங்கெல்லாம் ஆரிய மதக் கடவுள்கள், கோயில்களை எழுப்பினார்கள். இராமன், கிருஷ்ணன் அவதாரங்களைக் கூட எல்லாம் புத்தனுக்குப் பிறகு புத்த மார்க்கத்தை ஒழிக்க ஏற்படுத்தப்பட்ட அவதாரங்களேயாகும். இராமாயணம், விஷ்ணு புராணம் முதலியவைகளில் புத்தனைப் பற்றிய சங்கதிகள் வருகின்றன.

நம் மக்களுக்கு எல்லோருக்கும் பாகவதம் தெரியும், இராமாயணம் மற்ற புராணங்கள் தெரியும், இந்த சங்கதிகள் அதில் உள்ளதை எவன் கவலையோடு சிந்தித்துப் பார்க்கிறான்?

இந்து மதம் என்றால் வேதமதம் என்று பெயர். இந்து என்று கூறிக் கொள்ளும் எந்த ஆளுக்கு வேதம் தெரியும்? சங்கராச்சாரியே சொல்லுகிறார் இந்து என்பது தப்பு. "வேதமதம்" என்று சொல்லுவது தான் சரி என்கிறார். வேதமே தெரியாத நமது முண்டங்கள் நான் இந்து என்று கூறிக் கொள்ளுகின்றார்களே?

முஸ்லிம் இருக்கிறான் உன் மதம் எது என்றால்? இஸ்லாம் மதம்... அதற்கு வேதம் குரான் என்கிறான். எப்போது எற்பட்டது? 1400- ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது என்கின்றான்.

கிறிஸ்தவன் என் மதம் கிருஸ்தவம், எனது வேதம் பைபிள் என்கிறான்; ஏற்பட்டு 1962- ஆண்டுகள் ஆகிறது என்கின்றான். இந்து என்கின்ற உன் மதத்துக்கு ஆதாரம் எது? எப்போது ஏற்பட்டது? வேதம் என்றால் நீதான் வேதத்தைக் காதால் கேட்கக் கூடாது என்று எழுதி வைத்திருக்கிறாயே இப்படி இருக்க நீ ஏன் இந்து என்று கூறிக் கொள்கின்றாய்?

இப்படிக் கேட்டு அறிவுப்படி, சொந்தப் புத்திப்படி நட என்று கூறுகின்றவர்களை எல்லாம் பார்ப்பான் நாஸ்திகர்கள் என்று எழுதி வைத்து விட்டார்கள்.

"சைவன்" எல்லாரும் சிவன் தென்னாட்டுக் கடவுள், தென்நாடு உடைய சிவன் தான் எந்நாட்டுக்கும் கடவுள் ஆனான் என்று பீற்றிக் கொள்ளுகின்றனர். இந்த சிவன் இந்நாட்டுக் கடவுளும் அல்ல. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. வெள்ளைக்கார நாட்டான் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில் ஏற்படுத்திய கடவுளாகும்.

மேல்நாட்டுக்காரன் காட்டுமிராண்டிக் காலத்தில் உண்டாக்கிய கடவுளை மாட்டு மேல் ஏற்றி வைத்துக் கொண்டு காண்பித்தான். இதற்குப் பேர் "Father God" என்று அழைத்தான். அதுபோலவே தான் மாட்டு மேல் ஏற்றி வணங்குகின்றோம்.

நாம் சிவன் மனைவி காளி என்கிறோம். இந்தப் பெண் பிள்ளைக் கடவுளைத் தான் வெள்ளையன் "Mother God" என்று அழைத்தான். சிங்கத்தின் மேல் ஏற்றி அதன் கையில் சூலாயுதத்தைக் கொடுத்து இருக்கிறான். அதைத்தான் நம் நாட்டில் காளி என்று பெயர் இட்டு சிங்கத்தில் ஏற்றி சூலாயுதத்தைக் கொடுத்து இருக்கிறார்கள்.

வெள்ளையன் "Father God, Mother God" என்று அழைத்ததைத் தான் நமது சைவன் அம்மையே! அப்பனே! என்று பாடித் திரிகிறான். வெள்ளையன் காட்டுமிராண்டிக் காலத்திய கடவுள்களை எல்லாம் விட்டு விட்டு இன்று ஒரே கடவுள் என்ற நிலைக்கு வந்து விட்டான்.

நாசமாப் போன நம் நாட்டவர்கள் தான் இந்தக் காட்டுமிராண்டிக் காலத்து கடவுள்களையெல்லாம் கட்டிக் கொண்டு அழுகிறார்கள். ஒரு கடவுள் இரண்டு கடவுளா? ஆயிரக்கணக்கான கடவுள்கள்! பல உருவங்கள்! கழுகு, குரங்கு, பன்றி, பாம்பு, இவை எல்லாம் கடவுள்!

முஸ்லிமும், கிறிஸ்தவனும் ஒரே கடவுள் ஒன்றும் வேண்டாதவர், உருவமற்றவர், அருளானவர்! அன்பானவர்! என்கின்றான்.

உன் கடவுள் அப்படியா? 6- வேளை சோறு! வருஷா வருஷம் கல்யாணம்!கருமாதி, வைப்பாட்டி இவை எல்லாம் செய்து கொடுக்கின்றானே!

அன்பே சிவம் வெங்காயம் என்று கூறிக் கொண்டு கடவுள் கையில் அரிவாள், கொடுவாள், வேலாயுதம், சூலாயுதம், கொட்டாபுளி, சக்கரம் இவற்றைத் தானே கொடுத்து இருக்கின்றாய்? அருளும் அன்புமான கடவுளுக்கு இவை ஏன்? கடவுளுடைய அருமை என்னடா என்றால், எங்கள் கடவுள் 1000- பேரைக் கொன்றது, 2000- பேரைக் கொன்றது என்று கூறுவது தான்!

    ---------------------------- 19.07.1962- அன்று நெல்லை மாவட்டம் களக்காட்டில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. "விடுதலை", 26.07.1962

25.9.15

என்னங்காணும் பார்ப்பனன் நீர் மாமிசம் சாப்பிடுகின்றீரே இது யோக்கியமா?

பார்ப்பனனுக்கும் சைவனுக்கும் சம்பாஷணை 
(சித்திரபுத்திரன் எழுதியது)


சைவன்: ஒய்! என்னாங்காணும் நீர் இப்போது மாமிசம் சாப்பிடுகின்றீரே! என்ன இப்படி கெட்டுப்போய் விட்டீர்.

பார்ப்பனன்:-வாரும் வாரும் பிள்ளைவாள் எனக்கு வர வர ஜீவ இம்சை என்றால் சற்றும் பிடிப்பதே இல்லை. இன்றைக்குச் சாகின்றோமோ நாளைக்குச்சாகின்றோமோ, சாவதற்குள் ஏன் அநியாயமாய் பல ஜீவன்களை இம்சை செய்யவேண்டும் என்பதாகக் கருதியே இனிமேல் காய்கறிகள் சாப்பிடுவதில்லை என்று தீர்மானித்து மாமிசம் சாப்பிடத் துணிந்து விட்டேன்
சைவன்: என்னங் காணும் பார்ப்பான் ஜீவ ஹிம்சை கூடா தென்கின்றீர். அதற்காக மாமிசம் சாப்பிடுகின்றேன் என்கின்றீர். இது என்ன போக்கிரித்தனமா அல்லவா.
பார்ப்பனன்:-கோபித்துக் கொள்ளாதீர் ஐயா! நீர் சைவரல்லவா? உமக்கு வெறும் கோபம்தான் வருமே யொழிய விஷயம் புலப்படுவது தான் கஷ்டம்
சைவன்:-என்ன பார்ப்பனக் குறும்பை நம்மிடமே காட்டு கிறாய். பார்ப்பான் மாமிசம் சாப்பிட்டுத்தான் இந்த நாடு பாழாச்சுது.
பார்ப்பான்: இந்த நாடு தான் பார்ப்பனன் மாமிசம் சாப்பிட்டு பாழாச்சுது சரி, வெள்ளைக்கார நாடு என்ன சாப்பிட்டு நல்லா ஆச்சுது? இந்தியாவில் உள்ள 33 கோடி மக்களில் மாமிசம் சாப்பிடுகின்றவர்கள் எத்தனைபேர்? சாப்பிடாதவர்கள் எத்தனை பேர் என்பது நமக்குத் தெரியுமா?
7 கோடி மகமதியர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். ஒரு கோடி கிருஸ்தவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். 6 கோடி தீண்டாத்தகாதோர் என்கின்றவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். சத்திரியர் என்கின்றவர்களில் சிங்கு சத்திரியர்கள் மராட்டிசத்திரியர், நாடாடர் சத்திரியர், வன்னிய சத்திரியர், நாயுடுசத்திரியர்,
செங்குந்த சத்திரியர் ஆகியவாள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். வாணிய வைசியர் மாமிசம் சாப்பிடுகிறார்கள். நாட்டுக்கோட்டை தன வைசிய வகுப்பார்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். வேளார்களில் கொங்கு வேளாளர்கள், கார்காத்த வேளாளர்கள், உடையார் வேளாளர்கள், மறவ வேளாளர்கள், படைத்தலை வேளார்கள்,
வடுக வேளாளர்கள், நாட்டார் வேளாளர் ஆகியவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். திருநெல்வேலி தஞ்சாவூரிலுள்ள சில வேளாளர்கள் தவிர மற்ற எல்லா வேளாளர்களும் மாமிசம் சாப்பிடுகிறார்கள். கடைசியாக பிராமணர்கள் என்பவர்களிலோ சௌராஷ்டிரப் பிராமணர்கள்,
விஸ்வப்பிராமணர்கள், தேவாங்கப் பிராமணர்கள் சாலிய பிராமணர்கள் கொங்கினி பிராமணர்கள், கவுடப்பிராமணர், காஷ்மீரப்பிராமணர்கள் மச்சப் பிராமணர்கள். அம்பஷட்டப் பிராமணர்கள் முதலிய பல பிராமணர்களும் மாமிசம் சாப்பிடு கின்றார்கள். இந்தியாவில் இவர்கள் எண்ணிக்கைளையெல்லாம் சேர்த்தால்,
குறைத்தது 15 கோடிக்குக் குறையாது. அடியோடு மாமிசம் சாப்பிடாதவர்கள் சுமார் ஒரு கோடி இருக்கலாமா என்பதே சந்தேகம் 35 கோடியில் ஒரு கோடி அதாவது 100க்கு மூன்று போகலாம். தவிர இந்தியர் தவிர உலக எல்லோரும் மாமிசம் சாப்பிடுகிறார்கள்.
எனவே மொத்த  ஜனத்தொகையில் 100க்கு 99.5 பேர்களை ஜீவகாருண்யமற்றவர்கள் என்று நீர் சுலபத்தில் சொல்லிவிட முடியுமா சொல்லும் பார்ப்போம்.
சைவன்:- என்னங்காணும் பார்ப்பனன் நீர் மாமிசம் சாப்பிடுகின்றீரே இது யோக்கியமா? என்றால் ஊர்க்கதையெல்லாம் பேசுகிறீர்
பார்ப்பனன்:- சொல்லுவதை கவனமாய் கேளும் சைவரே! வெறுங்கோபம் ஒரு காசுக்கும் உதவாது அதெல்லாம். அந்தக்காலம். இது அறிவு ஆராய்ச்சி சையன்சு காலம் தெரியுமா? நான் மாமிசம் சாப்பிடக்கூடாது என்று நினைத்து வெகுநாளாய் சாப்பிடாதிருந்தது உண்டு.
அது எதற்காக என்றால் ஜீவகாருண்யத்தை உத்தேசித்து தானே ஒழிய வேறில்லை பிறகு இத்தனைபேர் மாமிசம் சாப்பிடுவதை கணக்குப் பார்த்து உலகத்தில் 100-க்கு 99 பேருக்கு ஜீவகாருண்ணியமில்லாமல் இருக்குமா? இப்படியா ஒரு கடவுள் மக்களை பிறப்பித்திருப்பார் என்று யோசித்து யோசித்து மயங்கிக் கிடந்தேன்.
கடைசியாக திரு சர்.ஜகதீச சந்திரபோஸ் மரம் கொடி செடி புல் பூண்டு. ஆகியவைகளுக்கு உயிர் இருக்கின்றது. அவை தொட்டாலும், நாடினாலும், முறித்தாலும் பறித்தாலும் கஷ்டப்படுகின்றன என்பதைக்கண்டு பிடித்தபிறகு தான் சரி எது ஜீவகாருண்யம்? என்பதை ஆராயப் புகுந்தேன்.
காய்கறிகள் சாப்பிடுவதைவிட மாமிசம் சாப்பிடுவதுதான் அதிகமான ஜீவகாருண்யம் என்பதாக உணர்ந்தேன். எப்படி என்றால் உயிர் இருப்பதால் அது ஜீவனாகின்றது. ஜீவனை வதைத்துச் சாப்பிடுவது மாமிசமாகின்றது.
ஆகவே, ஒரு செடியின் தழைகளை கிள்ளிப் பிடுங்கும்போதும், காய்களை அறுக்கும் போதும், கிழங்குகளைப் பறித்து வாடவைக்கும் போதும்.அவை படும்பாடு சித்திரவதைக்கு ஒப்பாகிறது என்று போஸ் சொல்லுகிறார்.
எனவே ஒரு ஜீவனை தினந்தினம் பல தடவை வதைசெய்து அதை துன்புறுத்துகின்றோம் என்பதை உணர நேரிட்டது. இப்போதும். அதை நினைத்தால் சகிக்க முடியாத துக்கம் வருகிறது ஆனால் மாமிசம் அப்படியல்ல ஒரு ஜீவனை சாப்பிடு வதனால் ஒரு தடவைக்கு மேல் யாரும் தொந்திரவு செய்ய மாட்டார்கள்.
அதுவும் க்ஷணத்தில் முடிந்து போகும். ஆதலால் தான் கிழங்கு, கீரை, காய், கறியை விட மாமிசம் சாப்பிடுவது ஜீவகாருண்யமாகும் என்று சொன்னேன். ஆதலால் ஓய்! சைவரே நான் உம்மைவிட குறைந்த ஜீவகாருண்ணியமுடையவன் என்று எண்ணிவிடாதீர்.
தவிர திரு.போஸ் காய்கறிகளுக்கு உயிர் இருப்பதை இன்று கண்டு பிடித்துத்தான் மாமிசம் சாப்பிடுகின்றார்கள் என்பதாகத் தெரிகின்றது. அன்றியும், வேதமும் மனுதர்ம சாத்திரமும் கண்ணப்பநாயனாரை ஒப்புக்கொண்ட சைவப்புராணங்களும் இதை அறிந்து தான் மாமிசத்தை அனுமதித்திருப்பதோடு மாமிசத்தை மறுக்கும் பிராமணன் இருபத்தொரு தலை முறைக்கு நரகத்தை அடைவன் என்று மனுதர்மசாத்திரமும் வேதமும் கூறுகின்றன தெரிந்ததா? சைவரே
சைவன்:-ஓய் ஓய் பார்ப்பனரே சரிதான் நடையைக் கட்டுங் காணும் உம் ஆராய்ச்சியையும், சயன்சையும் சாஸ்திரத்தையும் வேதத்தையும் புராணத்தையும் கொட்டை அடுப்பில் என்றைக்கு ஆராய்ச்சியும், சையன் சும் உலகத்தில் தோன்றிற்றோ அன்றே எல்லாம் கெட்டுது/ கடைசியாக முழுமுதற் கடவுளான சிவன் தலையில் கை வைக்க வந்து விட்டது.
இந்தப் பாழும் அறிவும், ஆராய்ச்சியும் சயன்சும் என்றைக்கு ஒழியுமோ அன்றுதான் சைவம் தழைக்கும் ஆதலால் இவை ஒழிய தவம் கிடப்போம். உம்மைப் பார்த்ததற்கும் உம்பேச்சை கேட்டதற்கும் கண்களையும் காதுகளையும் கழுவவோண்டும்
பார்ப்பான்:-அய்யா சைவரே! நன்றாய் தவம் கிடங்கள். அதுவும் திரு. ஜகதீஸ் போசும் இயற்கை ஆராய்ச்சியும், சுயமரியாதை இயக்கமும் ஒழியட்டும் என்று தவம் கிடங்கள். இதில் எது மீதியானுலும் உங்கள் சைவரும் உங்கள் ஜீவகாருண்யமும் சிறிது கூட நிலைக்காது. தவிர என்னைப் பார்த்ததற்கும், என் பேச்சுகளை காதில் கேட்டதற்கும் மகா பாதகம் தீர்த்த குளத்தில் போய் குளியுங்கள் கழுவினால் மாத்திரம் போதாது.
--------------------------- தந்தைபெரியார் அவர்கள் சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் எழுதிய உரையாடல்- ”குடிஅரசு” 16.6.1929

24.9.15

பார்ப்பனர்கள் பின்புத்தியும் தந்தை பெரியாரின் தொலைநோக்கும்!

மலையாள நம்பூதிரிப் பார்ப்பனர்கள் தங்களைச் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என அறிவித்து இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளனர்.
குஜராத்தின் படேல் சமூகத்தினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி நடத்திய கிளர்ச்சி நாடு தழுவிய அளவில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு மாநிலங்களிலும் பல சமூகப் பிரிவினரும் இதேபோல் கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நிலச் சீர்திருத்தச் சட்டம் அமல் படுத்தப்பட்ட பிறகு கேரளாவில் நம்பூதிரிகளின் எண் ணிக்கை குறைந்துவிட்டதால், தங்களது சமுதாயத்துக்கு சிறுபான்மையினர் தகுதி வழங்கவேண்டும் என்று யோகஷேம சபா என்ற கேரள நம்பூதிரி பார்ப்பன அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் அக்கீரமன் கலாதாசன் பட்டாதிரிபாட் கோட்டயத்தில் கூறியதாவது: 
சிறுபான்மையினர் தகுதியை மாநில அளவில் கணக்கிட வேண்டும். தேசிய அளவில் கணக்கிடக் கூடாது. அண்மையில் வெளியிடப்பட்ட ஜாதி, மத கணக்கெடுப்பு அடிப்படையில், இடஒதுக்கீட்டு முறையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் நம்பூதிரி பார்ப்பனர் களுக்கு உரிய இடங்கள் முறையாக வழங்கப்படுவதில்லை.
நம்பூதிரிகளுக்குச் சிறுபான்மையினர் தகுதி வழங்கப் பட வேண்டும். இதுதொடர்பாக சனிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறும் மாநில மாநாட்டில் விவாதிக்கப்படும். இந்த மாநாட்டை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தொடங்கி வைக்கிறார். சிறுபான்மையினர் தகுதி, இடஒதுக்கீட்டு முறை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய அரசிடம் மனு கொடுக்க உள்ளோம். இவ்வாறு அக்கீரமன் கலாதாசன் பட்டாதிரிபாட் கூறினார்.

இட ஒதுக்கீடே கூடாது; அது திறமைக்குப் பங்கம் விளைவிக்கும் என்று கூப்பாடு போட்டவர்கள் இந்தப் பார்ப்பனர்கள்; அக்கருத்து உண்மைக்கு மாறானது.
இட ஒதுக்கீடு காரணமாக இடம் பிடித்தவர்கள் செயல்முறைகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்ப தெல்லாம் நிரூபிக்கப்பட்ட உண்மைகள். மயில்சாமி அண்ணாதுரை போன்ற தமிழர்கள், பெருமைப்படும் வகையில் சாதனை வீரர்களாக ஒளி வீசவில்லையா?
மதிப்பெண் தகுதியைப் பேசினால் ஓர் அம்பேத்கர் கிடைத்திருப்பாரா என்ற கேள்வியை உச்சநீதிமன்றத்தில் எழுப்பினாரே நீதிபதி இரவீந்திரன்.
அந்தக் கூப்பாடு பொய்யானது என்று தெரிந்த நிலை யில், அடுத்தகட்டமாக ஜாதி அடிப்படையில் இட ஒதுக் கீட்டால் ஜாதி உணர்வு மேலோங்குகிறது, தலைதூக்குகிறது என்று ஒப்பாரி வைத்தனர்.
எந்த ஜாதியின் அடிப்படையில் கல்வி உரிமை மறுக்கப்பட்டுக் கிடந்தார்களோ அந்த ஜாதியின் அடிப்படையில் கல்வி வாய்ப்பு அளிக்கப்படுவது என்பது நேர்மையையும், நீதியையும், சரியான வழிமுறையையும் சார்ந்ததாகும். கல்வி வளர்ச்சியால் ஜாதி உணர்வு குன்றுமே தவிர, தலைதூக்காது என்பது நிதர்சனமாகி விட்டது.
எதிர்த்துப் பார்த்து இட ஒதுக்கீட்டை ஒழிக்க முடியாது என்று திண்ணமாக உணர்ந்துவிட்ட நிலையில், பார்ப்பனர்கள் இப்பொழுது எங்களுக்கும் இட ஒதுக்கீடு தாருங்கள்! என்று விண்ணப்பம் போடும் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்; இது சமூகநீதிக்குக் கிடைத்திட்ட மகத்தான வெற்றியாகும்.
இந்தியாவிலேயே இட ஒதுக்கீடு அளித்த முதல் மாநிலம் தமிழ்நாடுதான் - நீதிக்கட்சி என்னும் திராவிட இயக்க ஆட்சிதான் (1928). மொத்தம் 14 இடங்களில் 2 இடங்கள் பார்ப் பனர்களுக்கு ஒதுக்கப்பட்டதே (அதாவது 14 விழுக்காடு) இதனை அன்றைக்கே எதிர்த்தவர்கள் இதே பார்ப்பனர்கள்தானே - மறுக்க முடியுமா?
14 விழுக்காடு கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டு விட்டு இப்பொழுது அதைவிடக் குறைவான விழுக்காட்டு இடங்கள் கேட்கும் நிலைக்கு அல்லவா ஆளாகியுள்ளனர்.

இந்த இடத்தில் ஒன்றை நினைவூட்ட வேண்டும். சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் மண்டல் குழுப் பரிந்துரைப்படி வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீடு - பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளித்தபோது, இதே கேரள நம்பூதிரிப் பார்ப்பனர்கள் பூணூலையும், தர்ப்பைப் புல்லையும் அனுப்பினார்கள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு. அந்தப் பார்ப்பனர்களுக்குக் காலணிகளை அனுப்பி வைத்தது திராவிடர் கழகம்!
இன்றைக்கு அதே பார்ப்பனர்கள் இட ஒதுக்கீட்டுக்கு மண்டியிடுவதை நினைத்துப் பார்க்கவேண்டும்.
பார்ப்பனர்களுக்கு முன்புத்தி கிடையாது என்று தந்தை பெரியார் கூறுவதுண்டு. இட ஒதுக்கீட்டைப் பார்ப்பனர்கள் எதிர்த்தால், அதே பார்ப்பனர்கள் இட ஒதுக்கீட்டைக் கேட்கும் காலம் வரும் என்று 1936 ஆம் ஆண்டிலேயே (குடிஅரசு, 14.6.1936, பக்கம் 11) தந்தை பெரியார் சொன்னாரே - அதுதான் எத்தகைய தொலைநோக்கு!
பார்ப்பனர்கள் தங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 3 சத விகிதம் இடம் கேட்கட்டும்; பிரச்சினைக்கு ஒரே அடியாக முடிவு ஏற்பட்டு விடுமே - சிந்திக்கட்டும்!
                   ----------------------------"விடுதலை” தலையங்கம் 24-09-2015