Search This Blog

11.9.15

இறந்தவன் ஆவி எங்கே செல்லுகின்றது?

இறந்தவன் ஆவி எங்கே செல்லுகின்றது?


சாதாரணமாக, நம்நாட்டு மக்கள் இறந்த பிறகு இவர்களின் உயிர் மோட்சம், நரகம் என்ற இரண்டு இடங்களில் ஏதாவதோர் இடத்திற்குச் செல்வதாகவும்,
அதுவும் பாபம் செய்தால் நரகத்திற்குச் செல்வதாகவும் பாபம் என்ற துக்ககரமான இடத் திற்குச் செல்லவிடாமல் புண்ணிய மென்ற சந்தோஷகரமான இடத்திற்குப் போய்ச்சேருவதற்காகத் தங்களின் வாழ்க்கையை அவைகளுக்குச் சாதகமாக ஏற்படுத்தி அதன்படி ஒழுகி வருகின்றார்கள்.
எங்கள் மதம் சீர்திருத்தமுடையது; அது எக்காலத்திற்கும் பொருந்தியது. என்றுவாய்ப்பறையடிக்கும் மதங்களிலுங்கூட, மேற்கண்ட மூடநம்பிக்கைகளுக்கு இடமில்லாமலிருக்க வில்லை. இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வலியுறுத்தும் ஒவ்வொரு மதங்களையும் கடவுள் உண்டாக்கினார்,
அவர் குமாரன் உண்டாக்கினார்; தேவன் உண்டாக்கினார் என்று சொன்னால் அறிவுடைய மக்கள் ஆட்சேபியாதிருப்பார்களா? அல்லது இம் மூட நம்பிக்கைகளைப் போதிக்க வேறு கடவுள்களுண்டோ? என்று கேட்பதற்கு வருந்த வேண்டி யிருக்கின்றது.
இது விஷயத்தில் கல்வி இல்லா மக்களும், கல்வி இருந்தும் போதிய ஆராய்ச்சியில்லா மக்களுக்கான இப்படிப்பட்ட காரியங்களை உண்மையென நம்பி கைப்பொருளையுமிழந்து மோட்ச மென்ற பலனுக்குப் பதில் மோசமென்றபலனை அனுபவித்து வருகின்றார்கள்.
மோட்சம் எனபதையும் அதை அடையும் மார்க்கங்களாகிய சடங்கு முதலியவைகளின் தன்மையைப்பற்றியும். நம் இயக்கப்பத்திரிகைகளில் தெரிந்திருப்பார்களாகையால் அதைவிட்டு எடுத்த விஷயத்தை முடிப்போம்.
உலகத்திலுள்ள ஜீவராசிகள் அனைத்திற்கும் உயிர்வாழ் வதற்கு முக்கியமாக வேண்டியது வாயு, ஜலம், ஆகாரம் என்பது நீங்களெல்லோரும் அறிந்த விஷயமே. இம்முன்றினுள் பிரதானமானது வாயு என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆனால் இவ்வாயுவைப் பல்விதமாகப் பிரித்திருக்கின்றார்கள். உயிர் பிழைத்திருக்கவும், நெருப்பு எரியவும் ஆதாரமா யிருக்கப்பட்டது.
அய்ந்தில் ஒரு பாகமாகிப் பிராணவாயுவும் நான்கு பாகமாகிய உப்புவாயுவும் (நைட்ரஜன்) என்பதாகப் பிரபல ரசாயன ஆராய்ச்சிக்காரரான லவ்வாசியர் (Lavoisier) என்பவர் கண்டுபிடித்தார். ஏனெனில், முற்காலத்தில் வாயு கலப்பற்ற வஸ்து என எண்ணியிருந்தார்கள்.
பிராணவாயுவுடன் உப்புவாயு ஏன் சம்பந்தப்பட்டிருக்கிறதென்றால், பிராண வாயுவில் அதிக உஷ்ணம் நிறைந்திருப்பதால் அவ்வுஷ் ணத்தைத் தணிப்பதற்காகவே உப்புவாயு சம்பந்தப்பட்டி ருக்கின்றது.
உப்பு வாயுமை மாத்திரம் பிரித்துச் சுவாசிப்போமேயானால் மூச்சடைப்பு முதலியவை எற்படும். இன்னும் உப்புவாயு நிறைந்த இடத்தில் ஏதாகிலும் எரியும் வஸ்துவை வைத்தால் அவை உடனே நின்று விடக்காணலாம்.
ஆகையால் அவ்வுப்பு வாயுவை ... பிராணவாயுவோடு உப்புவாயு கலந்திராமலிருந் தால் எந்த ஜீவனும் உயிர்வாழ முடியாது. ஏனெனில் அக்னிவாயு நிறைந்த பாத்திரத்தில் தீக்குச்சைப்போட்டால் உடனே அக்குச்சு எரியக்காண்போம், நிற்க
பிராணவாயுவை நாம் உட்கொள்ளும் போது ஈரலின் வழியாக அங்குள்ள இரத்தம் ... சென்று ஜீவ அணுக்களை காக்கிறது. உடனே அச்ஜீவ அணுக்கள் அவ்வாயுவை கிரகித்துக் கொண்டு இதற்கு முன் வைத்திருக்கும் கரியமில வாயுவை வெளியே விடுகின்றது. மேலும் நாம் உட்கொள்ளும் பிராணவாயு ஆங்காங்குள்ள அசுத்தங்களைத் தாக்குவதனால் பிறகு வெளிவரும்போது கரியமிலவாயுவாக மாறுகின்றது.
இக்கரியமிலவாயு சாதாரணக் காற்றைவிட அதிக பளுவாதலால் ஆகாயத்தில் செல்ல மார்க்கமில்லை. உதாரணமாக ஒரு கண்ணாடி டம்ளரில் ஜலம் ஒரு பங்கும், பாதரசம் ஒரு பங்கும், கிரோஸினாயில் ஒரு பங்கும் ஊற்றிக் கலக்கிச் சற்றுநேரஞ் சென்று பார்த்தால் அதிக கனமாகி ரசம் அடியிலும் அதற்கு மேல் தண்ணீரும் அதற்குமேல் கிரோஸினாயிலும் இருப்பதைக் காணலாம்.
அது போலவே தான் காற்றின் தன்மையும் கரிய மிலவாயு அதிக கனமுள்ளதாகையால் சாதாரண வாயுவின் அடிப்பாகத்தில் அதாவது பூமியின்மேல் படிந்திருக்கின்றது.
ஒருவன் மரிக்கும்போது தான் உட்கொண்ட சுவாசத்தை வெளியில் விட்டுவிடுகின்றான். அச்சுவாசந்தான் கரியமில வாயு, நிற்க.
இறந்தவன் உயிர் விண்ணுலகம் என்ற ஓர் உலகிற்குப் போய்ச்சேருவதாகவும், அது எங்கேயோ வானத்திலிருக்கிற தென்றும் புளுகி மக்களை மண்ணாந்தைகளாக ஆக்கி விட்டார்கள்.
பூமியைச் சூழ்ந்துள்ள காற்றின் உயரம் 60 மைல்களுக்காப்பாலில்லை யென்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. இந்த 60 மைல்களுக்குள் எந்த உலக மிருக்கின்றது? என்பதை யோசித்துப் பாருங்கள்.
ஒவ்வொரு மதங்களும் மோட்சமென்னும் மோச வாழ்க்கையை வலியுறுத்தி இவை கடவுளால் சொல்லப்பட்டது. கடவுள்குமாரனால் சொல்லப்பட்டது. மதக்கட்டளை, சாஸ்திர சம்மதம் என்னும் பெயரால் அர்த்தமற்ற சடங்குகளை ஏற்படுத்தி மக்களை மாக்களாக்கி எழுதியிருப்பதை இனியாகிலும் உணருங்கள்.
இன்னும் இறந்தவர்களின் ஆத்மாவைத் திருப்தி செய்ய வேண்டி திதி முதலிய காரியங்கள் செய்வதும், அறிவுடை யோர்க்கழகாகுமா என்பதையும் யோசித்துப்பாருங்கள்.
கடவுள் சொன்னதென்று எழுதிவைத்திருந்தால் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்வதா? உண்மையை மறைத்தால் உலகம் நகையாதா? என்பதை உணர்ந்து ஏழைமக்களின் முன்னேற்றத்தைப் பின்பற்றி உழைக்க முன் வாருங்கள். மோட்சமென்பது புரரோகிதர் வயிறு!
--------------------------------------------எஸ்.சிவப்பிரகாசம்-"
புதுவை முரசு", 12.10.1931

0 comments: