Search This Blog

31.5.08

எம்.பி.பி.எஸ். படிக்க சமஸ்கிருதம் வேண்டும்-பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் 'பிராமின் வார்டு'


இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும்

தந்தை பெரியாருடைய பணி எப்படிப்பட்டது என்பதை நம்முடைய இளைய தலைமுறையினருக்கோ ஏன் கலைஞரோ அல்லது எங்களைப் போன்றவர்களோ, பெரியார், பெரியார் என்று மூச்சுக்கு மூச்சு முந்நூறு முறை சொல்லுகிறோம் என்று சொன்னால், அது வெறும் நன்றி உணர்ச்சிக்காக மட்டுமல்ல, சமுதாயத்தினுடைய நிலை என்ன என்ற படப்பிடிப்பைத் தெரிய வேண்டும். நம்முடைய வேர்கள் எப்படிப்பட்டது என்பதை விழுதுகள் அறிந்துகொள்ள வேண்டும்.

பெரியார் பனகல் அரசருக்கு விண்ணப்பம்

ஒரு காலத்திலே நிலைமை எப்படி இருந்தது? டாக்டர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பார்கள். அவர்களுடைய நண்பர்கள் அவர்களோடு படித்தவர்கள் வந்திருப்பார்கள். நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தது. பார்ப்பனரல்லாதார் கட்சி ஆட்சிக்கு வந்தவுடேன தந்தை பெரியார் எழுதினார்.
பனகல் அரசருக்கு ஒரு விண்ணப்பத்தை கொடுத்தார். அன்றைய முதலமைச்சருக்கு.
எம்.பி.பி.எஸ். சேருவதற்கு சமஸ்கிருதம் முக்கியமாம்!

மெடிக்கல் காலேஜில் எம்.பி.பி.எஸ். சேர்வதற்கு முதல் தகுதி என்னவென்றால் நிறைய மார்க் வாங்குவது மட்டுமே தகுதி அல்ல. அந்த காலத்திலே முக்கியமாக சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும். உங்களிலே பலருக்கு இந்தச் செய்தி தெரியாது.

மெடிக்கல் காலேஜுக்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன சம்பந்தம்? அங்கு என்ன கருமாதி மந்திரம் சொல்லி புரோகிதம் செய்யப் போகிறார்களோ? அல்லது சமஸ்கிருதத்தில் இருந்து வேறு எந்தப் பாடத்தை அவர்கள் சொல்லிக் கொடுக்கப் போகின்றார்கள்? நூறு ஆண்டுகளுக்கு முன்னாலே சமஸ்கிருதம் படித்தி ருந்தால்தான் எம்.பி.பி.எஸ். சீட் என்ற நிலை இருந்தது. இது எவ்வளவு பெரிய கொடுமை? அப்படியானால், என்ன அர்த்தம்? சமஸ்கிருதம் படித்தவர்கள் யார்?

யாருக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்கும்?

வழக்கமாகப் பார்ப்பனர்கள்தான் உயர்ஜாதிக் காரர்கள்தான் சமஸ்கிருதம் படித்தவர்கள். மற்றவர்கள் டாக்டர்களாக வரக்கூடாது என்பதற்கு எவ்வளவு இலாவகமாக ஒரு சூழ்ச்சி பொறியை அவர்கள் அமைத்திருந்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இதை மாற்றிக் காட்டிய ஆட்சி திராவிடர் ஆட்சி. இதற்கு முயற்சி எடுத்தவர் தலைவர் தந்தை பெரியார் ஆவார்கள்.

உங்களுக்கு வியப்பாக இருக்கும்

பெரியார் பிறந்திருக்காவிட்டால் இன்றைக்கு நம்மவர்கள் இவ்வளவு டாக்டர்களாக வந்திருக்க முடியுமா? உங்களுக்கு வியப்பாக இருக்கும். சென்னையிலே மன நல காப்பகம் இருக்கிறது. அதற்கு முன்பெல்லாம் பைத்தியக்கார ஆஸ்பத்திரி, பைத்தியக்கார ஆஸ்பத்திரி கீழ்ப்பாக்திற்குப் போ என்று சொல்லுவார்கள் சிகிச்சை பெறுவதற்காக.
டாக்டர்களுக்கே தெரியாது

மனநலம் குன்றியவர்களை யாரும் கேலி செய்யக்கூடாது. அவர்களை நாம் பக்குவப்படுத்த வேண்டும். மென்ட்டல் ஹாஸ் பிட்டல் என்று சொல்லக்கூடிய அந்த மனநல காப்பகம் ஏறத் தாழ 150,170 ஆண்டுகள் ஆன ஒரு காப்பகம். டாக்டர்களுக்கே பல பேருக்கு இது தெரியாது. இதுபோன்ற செய்திகளை இந்த நேரத்திலே நாங்கள் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் பிராமின் வார்டு


நூறு ஆண்டுகளுக்கு முன்னாலே பிராமின் வார்டு என்று தனியாக பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்தது. அதாவது பார்ப்பனர்களுக்கென்று தனி வார்டு. நோயாளிகளில் பைத்தியம் பிடித்தவர்களுக்குக் கூட பார்ப் பனர்களுக்கென்று தனி வார்டு இருந்தது. இதில் பைத்தியத் திற்கான தனி இடம்? காரணம் என்ன? ஜாதியில் மேல் ஜாதி. ஆகவேதான் அவர்களுக்கு ஸ்பெசல் வார்டு.

மருத்துவத் துறையில் இருந்த நிலைகள்

அந்த வார்டுகளில் சூத்திரர்களைக் கொண்டு போய் வைக்க முடியாது. சூத்திரர்களோடு பார்ப்பனர்கள் இருக்கமுடியாது. இதெல்லாம் மருத்துவத்துறையிலே இருந்த நிலைகள். இவைகள் எல்லாம் மாற்றப்பட்டன என்றால் எப்படி மாற்றப்பட்டன?

சத்ய சாயிபாபா கையைத் தூக்கியவுடனே பொத்தென்று கீழே விழுந்ததா? அல்லது ஓம் சக்தி ஆதி பராசக்தி என்று சொன்ன வுடனே வந்துவிட்டதா? அல்லது முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிகள், கிண்ணரர், கிம்புருடர், அஷ்டதிக்க பாலகர் இவர்களில் யாராவது ஒருவர் போராடி இந்த வெற்றியைக் குவித்தார்களா? இல்லை.

பெரியார் - சுயமரியாதை இயக்கத்தினுடைய விளைவு

ஒரு பெரியார் பிறந்தார். சுயமரியாதை இயக்கம் பிறந்தது. அதனுடைய விளைவாகத்தான் மனிதர்களுக்குள்ளே இருக்கின்ற பேதம் மாற்றப்பட்டது. எனவேதான் இதைத் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும்

----------- தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள் சொற்பொழிவு -"விடுதலை"-31-5-08

கலைவாணரும் பழைய சோறும்

ஒரு நாள் காலையில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், தன்னுடைய வீட்டில் அமர்ந்து பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த அவரது நண்பரும் முன்னாள் அமைச்சருமான என்.வி. நடராசன், ``என்னங்க மதுரம் உங்களுக்கு டிபன் எதுவும் செய்து தரலையா? பழைய சோறு சாப்பிடுறீங்க...
கலைவாணர் எதுவும் பேசாமல், வேலைக்காரரைக் கூப்பிட்டு, ``இந்தா... இந்த ஒரு ரூபாய்க்கு பழைய சோறு வாங்கிட்டு வா என்றார். ரொம்ப நேரம் கழித்து வந்த வேலைக்காரர். ``ஐயா நானும் எங்கெங்கோ அலைஞ்சிட்டேன் ஒரு இடத்திலேயும் பழைய சோறு கிடைக்கல என்றார்.
``கேட்டீங்களா நடராசன்.. எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத அற்புதப் பொருள்.. அதனால்தான் இதை சாப்பிட்டேன்! என்று கலைவாணர் சொன்னதைக் கேட்டு நடராசன் மட்டுமின்றி மதுரமும் அசந்து விட்டார்.


----------------------- "தினத்தந்தி"- 3.5.2008

கடவுள் கெடுதியையே உருவாய்க் கொண்டவர்


கேள்வி: கடவுள் நன்மையே உருவாய்க் கொண்டவர் என்பதற்கு உதாரணம் சொல்லு!

பதில்: நல்ல காற்று, நல்ல தண்ணீர், வாசனை உள்ள புஷ்பம், ருசியுள்ள ஆகாரம், சத்துள்ள பழவகை, மழை, நதி, நந்தவனம், பால் பசு, நல்ல பெண்கள், சந்திரன், சூரியன் முதலிய அநேக அருமையான வஸ்துகள் உற்பத்தி செய்து நமக்குக் கொடுத்திருக்கிறார். ஆதலால் கடவுள் நன்மையே உருவாகக் கொண்டவர்.


கேள்வி: கடவுள் கெடுதியையே உருவாய்க் கொண்டவர் என்பதற்கு உதாரணம் சொல்லு!

பதில்: கெட்ட காற்று, விஷப்புகை, நோய்க் கிருமிகள் உள்ள தண்ணீர், துர்வாடையுள்ள மலம், கசப்பான ஆகாரம், உபயோகமற்றதும் நோயை உண்டாக்குவதுமான பழம், துஷ்டமிருகங்கள், விஷ ஜந்துக்கள், கொடிய வியாதி, கடும் வெயில், இடி, பூகம்பம், முரட்டு வெள்ளம், இருட்டு, நோய் உள்ள பெண்கள், தரித்திரம் முள்ளுள்ள புதர்க்காடுகள் முதலானவற்றை எல்லாம் கடவுள் உற்பத்தி செய்திருக்கிறார். ஆதலால் கடவுள் கெடுதியையே உருவாய்க் கொண்டவர்.

கேள்வி: இந்தக் கெடுதிகளையெல்லாம் கடவுள்தான் உற்பத்தி செய்தார் என்பதற்கு என்ன ருஜூ?

பதில்: முன் செய்யப்பட்ட நன்மைகளை எல்லாம் கடவுள்தான் உற்பத்தி செய்தார் என்பதற்கு என்ன ருஜூவோ அந்த ருஜூவைத்தான் கெடுதிகளையும் கடவுள்தான் உண்டாக்கினார் என்று சொல்வதற்கும் ருஜூவாக ஏற்றுக் கொள்ளக் கோருகிறேன். கடவுள் படைத்தான் படைப்பெல்லாம் மனிதனுக்காகவே; மனிதனைப் படைத்தான் தன்னை வணங்க என்று ஒரு மதம் சொல்லுகிறது. ஆகவே, கடவுளை வணங்குவதற்கு என்று கடவுளாலேயே மனிதன் படைக்கப்பட்டிருப்பானேயானால், கடவுளின் இழி தன்மைக்கு வேறு என்ன சாட்சியம் வேண்டும்? தன்னை வேறு ஒரு மனிதன் வணங்க வேண்டும் என்று ஒரு மனிதன் நினைத்தானேயானால், அவனை நாம் எவ்வளவு அயோக்கியன் என்றும், ஆணவக்காரனென்றும், இழிகுணம் படைத்தவனென்றும், ஈனன் என்றும் சொல்லுகின்றோமா இல்லையா? அப்படியிருக்க, ஒரு கடவுள் என்று சொல்லப்பட்டவர் தன்னை வணங்குவதற்கென்று பல கோடி மக்களை படைப்பித்து, அவர்களை பலவிதமான கஷ்டங்களும் குறைகளும் அனுபவிக்க விட்டு வேடிக்கை பார்த்தால், அப்படிப்பட்ட கடவுள் நல்லவர், பெருந்தன்மை உள்ளவர், தயாபரர், கருணாமூர்த்தி, விருப்பு வெறுப்பு தற்பெருமை இல்லாதவர் என்றெல்லாம் அறிவுள்ள மனிதனால் சொல்ல முடியுமா? அன்றியும், கடவுள் மனிதனைப் படைத்தது உண்மையாய் இருக்குமானால், அந்த ஒரு காரியமே பெரியதொரு அயோக்கியத்தனமும் அக்கிரமுமானதென்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில், மனிதனால் மற்ற மனிதர்களுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் எவ்வளவு துன்பங்கள் நிகழ்கின்றன? மனிதன் எவராவது யோக்கியமாய் இருக்க முடிகின்றதா? இவையெல்லாம் மனிதனைப் படைப்பதற்கு முன் கடவுளுக்குத் தெரியாதா? மனிதனுக்குக் கொடுத்திருக்கும் புத்தி, அறிவு என்பதை அவன் எப்படி உபயோகிப்பான் என்பதை கடவுளுக்கு ஆரம்பத்தில் அறிய முடியவில்லையா? அல்லது அறியும் சக்தி இருந்தும் கவலையீனமாய் இருந்து விட்டாரா? இவையெல்லாம் பார்த்தால் கடவுளின் யோக்கியதையும், அவர் இருக்கும் லட்சணமும் நன்றாய் விளங்கவில்லையா?--------- சித்திரபுத்திரன் எனும் புனை பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது, (குடிஅரசு 12.5.1935).

30.5.08

சோதிடத்தில் கோள்களின் வரிசையே தவறானது

சோதிடத்தில் கிரகங்களின் இருப்பிடத்தை வைத்த பலாபலன் சொல்லப் படுகிறது. சோதிட நூலில் கோள்களின் வரிசையில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் குரு (வியாழன்) சுக்கிரன் (வெள்ளி) சனி, ராகு, கேது என்று வரிசைப்படுத்தியுள்ளனர். சோதிடம் குறிப்பிட்டுள்ள இந்த வரிசையே தவறானது. சூரியன் என்ற நட்சத்திரத்தை மய்யமாகக் கொண்டு சுற்றிவரும் கிரகங் களின் நீள்வட்டப் பாதையில் சூரியனுக்கு அடுத்துயிருக்கும் கிரகம் புதன் அதைத் தொடர்ந்து வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய கிரகங்கள் இருக்கிறது. சோதிடம் காட்டும் வரிசை தவறாக இருக் கும்போது அதன் கணிப்பும் தவறாகத்தானே இருக்க முடியும்! சோதிடத்தில் சூரியனை ஒரு கிரகமாகவே எடுத்துக் கொள்ளப்பட் டிருக்கிறது.

சூரியனின் பேராற்றல்!

பேராற்றல் மிக்க சூரியனை கிரகங்கள் வரிசையில் வைத்துக் கணக்கிடுவது எவ்வளவு பெரிய தவறு! 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சூரியனில் ஹைட் ரஜன் வாயும், ஹீலியமும் சேர்ந்து அணுக்கதிர் வெடிப்பு உண்டாக்கி ஒரு நொடியில் 60 கோடி டன் ஆற்றலை வெளியிட்டு பிரமிக்கத் தக்க தீப்பிழம்பாகவும், காந்தப் புயலாகவும், கதிர் வீச்சாகவும் பாய்ந்து 15 கோடி கி.மீ. தொலைவிலுள்ள பூமியில் பல விளைவுகளை உண்டாக்குகிறது.

வானவியல் ஆய்வுப்படி சூரியனின் வெப்பம் அதிகரித்துக் கொண்டேயிருப் பதால் இன்னும் சில நூற்றாண்டுகளில் பூமியில் கடல் வற்றிப் போகுமாம்! புதன் வெள்ளி ஆகிய கிரகங்கள் ஆவியாகி விடு மாம்! இவ்வளவு பேராற்றல் மிக்க சூரியனை சோதிடத்தில் செத்துப்போன எரிமலையும், வறண்டு போன ஆறுகளும் கடுங்குளிரும் கொண்ட கிரகங்கள் வரிசையில் சேர்த்துக் கணக்கிடுவது எவ்வளவு பெரிய தப்பு! சோதிடத்தில் கிரகங்களின் வரிசையே தவறாக இருக்கும் போது சோதிடத்தின் கணிப்பு எப்படி சரியாக இருக்க முடியும்!

அறிவியலுக்கு மாறாத சோதிடர்கள்!

பூமியை மய்யமாக வைத்து சூரியனும் மற்றக் கிரகங்களும் சுற்றிவருவதாக ஆதியில் நம்பினார்களே அந்தத் தவறான நம்பிக் கையிலிருந்து சோதிடர்கள் அறிவியல் சிந் தனைக்கு இன்னும் மாறவில்லை. இதிலிருந்து அறிவியலுக்கும் சோதிடத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது தெளிவாகிறது! ஊகத்தின் அடிப்படையில் பூமியை மையமாகக் கொண்டு சூரியனும் மற்றக் கிரகங்களும் சுற்றுவதாக நம்பி அதையே அடிப்படை யாகக் கொண்டு ஊகத்தில் எழுதப்படு வதுதான் சோதிடம்!


அறிவியலை அடிப்படையாகக் கொண்டு சோதிடம் எழுதப்பட்டிருந்தால் பூமியின் துணைக்கிரகம் சந்திரனை சோதிடத்தில் சேர்த்து கொண்டது போல செவ்வாய் கிரகத்தின் 2 துணைக் கிரகங்களையும், வியாழன் கிரகத்திற்குள்ள 12 துணைக் கிரகங்களையும் சனிக்கிரகத்திற்குள்ள 9 துணைக் கிரகங்களையும் சோதிடக் கணக்கிலே சேர்த்திருக்க வேண்டும்! சோதிடருக்குத் தெரிந்தது பூமியின் துணைக் கிரகம் ஒன்றுதான்! மற்றது அவர்களுக்கு தெரியாது! மூன்று முக்கிய கிரகங்கஙகளான யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ கிரகங்கள்கூட அவர்கள் தெரிந்திருக்கவில்லை!

அறிவியலை அடிப்படையாகக் கொண்டு சோதிடம் எழுதப்பட்டிருந்தால் பூமியின் துணைக்கிரகம் சந்திரனை சோதிடத்தில் சேர்த்து கொண்டது போல செவ்வாய் கிரகத்தின் 2 துணைக் கிரகங்களையும், வியாழன் கிரகத்திற்குள்ள 12 துணைக் கிரகங்களையும், சனிக்கிரகத்திற்குள்ள 9 துணைக் கிரகங்களையும் சோதிட கணக் கிலே சேர்த்திருக்க வேண்டும்! சோதிடருக்குத் தெரிந்தது பூமியின் துணைக் கிரகம் ஒன்றுதான்! மற்றது அவர்களுக்கு தெரியாது! மூன்று முக்கிய கிரகங்களான யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ கிரகங்கள்கூட அவர்கள் தெரிந்திருக்கவில்லை!

வானவியல் அடிப்படையில்தான் கிரகங் களின் நிலையைக் கொண்டு சோதிடம் கணிக் கப்படுகிறதென்றால் முக்கிய கிரகங்கள் மூன்றும், துணைக் கிரகங்கள் 23-ம் சேர்க்கப்படாதது ஏன்? அக்கிரகங்கள் இருப் பதே சோதிடருக்குத் தெரியாது, மேலும் பல புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப் பதுவும் தெரியாது. அரைகுறையாகத் தெரிந்ததைக் கொண்டு சோதிடம் என்று பொய்யும் புரட்டும் சொல்லி மக்களை ஏமாற்றுகின்றனர்!

பூமியிலிருந்து கிரகங்களின் தூரம்!

புதன்கிரகம் உள்ள தூரம் 5 கோடி 70 லட்சம் மைல் வெள்ளி (சுக்கிரன்) கிரகம் உள்ள தூரம் 2 கோடி 60 லட்சம் மைல்
பூமி கிரகம் உள்ள தூரம் 9 கோடி 30 லட்சம் மைல் (சூரியனிலிருந்து)
செவ்வாய் கிரகம் உள்ள தூரம் 4 கோடி 85 லட்சம் மைல்
வியாழன் (குரு) கிரகம் உள்ள தூரம் 39 கோடி 3 லட்சம் மைல்
சனிக்கிரகம் உள்ள தூரம் 79 கோடி 31 லட்சம் மைல்
யூரேனஸ் உள்ள தூரம் 169 கோடி 40 லட்சம் மைல்
புளூட்டோ உள்ள தூரம் 357 கோடி மைல்

எல்லாக் கிரகங்களும் சூரியனை மையமாக வைத்து நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதால் கிரகங்கள் இருக்கும் இடத்தைப் பொருத்து தூரங்கள் சிறிது வித்தியாசப்படக் கூடும்!
புளூட்டோ கிரகத்தைத் தாண்டி 2004 ஆண்டு ஆரம்பத்தில் ஒரு புதிய கிரகமும், 28.5.2004-ல் சுமார் 12,700 ஒளியாண்டுத் தொலைவில் ஒரு புதிய கிரகமும் 2004-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மேலும் இரு கிரகங்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சூரியனைச் சுற்றி வரும் கிரகங்கள் இதுவரை கண்டுபிடிக்கப் பட்டது 13 ஆகும்! சோதிடத்தில் எடுத்துக் கொண்டதோ செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய 5 மட்டுமே! சோதிடம் அரைகுறையாகத் தெரிந்ததைக் கொண்டு சொல்லப்படுகிறது என்பதற்கு இதுவே போதும்!

கிரகங்களால் பாதிப்பா!


கிரகங்கள் இருக்கும் நிலையைக் கொண்டு தனி மனிதனின் வாழ்க்கையில் மாற்றங்களும், ஏற்றத் தாழ்வும் உண்டாகுமென்று சோதிடர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு கிரகத்திற்கும் ஈர்ப்பு விசை உண்டு! பூமியின் ஈர்ப்புவிசை கூட சிறிது உயரத்திற் கேயுண்டு! பூமியின் ஈர்ப்பு விசையில் 6-ல் 1 பங்குதான் துணைக் கிரகம் சந்திரனுக்கு. அதுபோலவே மற்றக் கிரகங்களுக்கும் ஈர்ப்பு விசை மாறுபடும்! துணைக்கிரகம் சந்திரன் பூமிக்கு மிக நெருக்கமாக இருப்பதால் அதன் ஈர்ப்பு விசையால் சில பாதிப்புகள் பூமியில் ஏற்படலாம்! மற்றக் கிரகங்கள் எல்லாம் வெகு தொலைவில் இருப்பதால் அக்கிரகங்களின் ஈர்ப்பு விசை சிறிது தூரத்திற்கேயுண்டு. பூமியை எட்ட வாய்ப்பில்லை. எனவே பூமியில் இருக்கும் மனிதர்களுக்கு கிரகங்களால் எந்த மாற்றத் தையும், ஏற்றத்தையும் உண்டாக்குவதற்கு வாய்ப்பு சிறிதும் இல்லை. வெகு தொலைவிலுள்ள செவ்வாய் கிரகமும், சனிக்கிரகமும் பூமிக்கு மிக நெருங்கி வந்தாலும் எந்தப் பாதிப்பும் பூமிக்கு ஏற்படாது என்கிறது அறிவியல்! 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் தேதி 38 கோடி கி.மீ. தூரத்திலுள்ள செவ்வாய் கிரகம் பூமிக்கு அருகில் ஐந்தரைக் கோடி கி.மீ. தூரத்திற்கு வந்தது. பூமியில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லையே! சனிக்கிரகம் 2003-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி 120 கோடி கி.மீ தூரத்திலிருந்து பூமிக்கு மிக அருகில் வந்தது. பூமியைவிட 755 மடங்கு பெரிய சனிக்கிரகத்தால் கூட அப்போது பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லையே! சனி கிரகத்தை முழுமையான பாபக்கிரகம் என்றும், சனி தசை 19 ஆண்டுகள் பாடாய் படுத்துமென்றும் சோதிடம் நம்மைப் பயம் காட்டுகிறது!
நம் காலத்தில்தானே இரு கிரகங்களும் பூமியை நெருங்கி வந்தது! செவ்வாய், சனி கிரகங்களால் எந்தப் பாதிப்பும் பூமிக்கு ஏற்படவில்லை என்பதை அறிந்திருந்தாலும் சோதிடர் செவ்வாய் தோஷமென்றும், சனி கெட்ட நேரம் என்றும் நம்மிடத்திலே கூறிப் பயங்காட்டுவதை நம்பலாமா? சிந்தித்துப் பாருங்கள். அறிவியல் முடிவுகளை ஏற்று துணிச்சலோடு சோதிடத்தை தூக்கி எறியுங்கள்!

---------- நன்றி: தூத்துக்குடி கவிஞர் தி. பொன்னுசாமி அவர்கள் எழுதிய -"சோதிட மறுப்பும் - வானவியல் சிறப்பும்" நூலிலிருந்து

சீதை, அகல்யை, தாரை, துரோபதை, அருந்ததி-முதல் நம்பர் விபசாரிகள்-நானும், எனது கழகமும் யார் என்றால் சமுதாயத் தொண்டு செய்து வருபவர்களே. எனக்கு வயது 82 ஆகின்றது. நான் அறிய இந்த நாட்டில் சமுதாயத் தொண்டு நடைபெறவில்லை. ஏதோ அரசியல் என்று பெயரை வைத்துக் கொண்டு பிழைப்புக்கு இடமாக்கிக் கொண்டவர்கள்தான் இருக்கின்றனர். அதற்கு முன் ஏதோ மதத்தொண்டு, பக்தித் தொண்டு என்ற பேரால் நம்மை மடமையில் ஆழ்த்தும் தொண்டுதான் நடைபெற்று வந்து இருக்கின்றன. அதற்கு முன் புராண காலத்தில் ஒருவரை ஒருவர் அடக்கி ஆதிக்கம் செலுத்தும்படியான தொண்டுதான் நடைபெற்று இருக்கின்றது. நமக்கு மக்கள் தொண்டு, சமுதாயத் தொண்டு அவசியம் என்ற எண்ணமே இல்லாமல் நடைபெற்று வந்து இருக்கிறது. நமக்கு எதையும் சிந்தித்து ஏற்றுக் கொள்ள உரிமை இல்லாத நிலைமையில்தான் இருந்து இருக்கின்றோம். மனித சமுதாயத்துக்குத் தொண்டு செய்ய வரவொட்டாமல் கடவுள், மதம், சாஸ்திரத்தால் கட்டுப்படுத்தப்பட்டு சிந்திக்க வகையற்றவனாகவே ஆக்கப்பட்டு இருக்கின்றான். நமது கடவுள் அமைப்பு 4,000, 5,000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது. இந்தக் கடவுள் காட்டுமிராண்டிக் காலத்தில் ஏற்பட்டதாகையால் காட்டுமிராண்டிக் குணங்களே கற்பிக்கப்பட்டுள்ளன. அதுபோன்றே நமது மதமும் ஆகும். அதுபற்றி எவனும் சிந்திப்பதே இல்லை. ஏதோ வெறியில் உளறுவான்கள். ஆனால், நமது மதம் என்ன, அது எப்போது ஏற்பட்டது. யார் ஏற்படுத்தியது என்று எவனுக்கும் தெரியாது. அதுபோலவே கடவுளைப் பற்றி எவனுக்காவது தெரியுமோ? சும்மா காட்டுமிராண்டி காலக் கடவுள் தன்மையை உளறுவானே ஒழிய கடவுள் என்றால் என்ன, அது எப்போது ஏற்பட்டது, அதனால் நாம் அடைந்த நன்மைகள் என்ன? என்று எவனும் சிந்திக்கவே இல்லை.

நாடகக்காரன் ராஜா வேஷம் போட்டுக்கொண்டு நடிப்பது போல இந்த மடையன்களும் சாம்பல் அடித்துக் கொள்கின்றான்; கொட்டை கட்டிக் கொண்டு பக்தன்போல வேஷம் போடுகின்றான். தோழர்களே! நான் சராசரி வயதுக்குமேல் இரண்டு பங்காக வாழ்ந்து விட்டேன். ஏதோ பூமிக்குப் பாரமாக இருக்கும் வரை நம்மால் ஆன சமுதாயத் தொண்டைச் செய்வோம் என்று நினைத்துத் தொண்டாற்றுகின்றேன். எங்கள் தொண்டு எதிர்நீச்சல் போன்றது. மலைமீது குண்டு ஏற்றுவது போன்றது. எங்கள் தொண்டு தோற்றால் எங்களுக்கு நஷ்டம்தான் என்ன? நாங்கள் மனித சமுதாயத்தில் பிரதிபலன் எதுவும் பார்க்கவில்லை; வயிறு வளர்ப்பவர்களும் அல்ல. நாங்கள் சொல்லுகின்றோம்; மக்களுக்கு புத்தி வந்தால் வரட்டும்; இல்லாமல் போனால் போகட்டும். இன்று இல்லாவிட்டாலும் இன்னும் கொஞ்சநாள் கழித்தாவது புத்தி வராதா என்ற நிலையில்தான் தொண்டு செய்கின்றோம்.

மனிதன் உயிர் ஒன்றும் கொழுக்கட்டையல்லவே; அவன் சிந்திக்கும் தன்மை உடையவனாயிற்றே? இன்று நமது நாட்டில் உள்ள கடவுள்கள் எல்லாம் காட்டுமிராண்டிக் காலத்தில் ஏற்பட்ட கற்பனைகள், மனிதத் தன்மைக்கு மாறானவை. அதுபோலத்தான் நம் முன்னோர்கள் என்பவர்களும்; 1800-இல் இருந்தவனுக்கும், 1900-த்தில் இருப்பவனுக்குமே வித்தியாசம் பல பார்க்கின்றோம். 1800-இல் இருந்தவன் ரயிலைக் கண்டானா? இந்த விஞ்ஞான அதிசய அற்புதங்களைக் கண்டானா? சக்கிமுக்கிக் கற்கள் காலத்தில் வாழ்ந்தவன்தானே? 2,000, 3,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் எப்படி இருப்பான்? சுத்தக் காட்டுமிராண்டியாகத்தானே இருந்து இருக்க முடியும்? நாம் வாழ்வது 20 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றாற்போல் வேண்டுமானால் கடவுளையும், மதத்தையும், சாஸ்திரங்களையும் அமைத்துக் கொள்ளவேண்டும். இன்றையச் சமுதாய தொண்டு என்பது இந்த நாட்டில் இருந்துவரும் காட்டுமிராண்டிக் கடவுள்களையும், மதங்களையும், சாஸ்திரங்களையும் ஒழித்து, மனிதன் மனிதத் தன்மை அடையும்படியான செயலில் ஈடுபட்டு உழைக்க வேண்டும் என்பதாகும்.

நம் கடவுள் எதை எடுத்துக் கொண்டாலும் எப்போது ஏற்பட்டது தெரியுமோ? மனிதன் மிருகப் பிராயத்தில் இருந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. அதுமுதல் இன்று வரைக்கும் இப்படி காட்டுமிராண்டி நிலையிலேயே இருக்கின்றது. எந்தக் கடவுளை வேண்டுமானாலும் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அவற்றின் யோக்கியதை என்ன? மனிதனுக்கு ஒழுக்கம் எது, எது ஒழுக்கமில்லாதது என்று தெரியாத காலத்தில் ஏற்பட்டது. மனிதனுக்கு அன்பு எது, கருணை எது என்று தெரியாது. மனிதனை மனிதன் கொன்று தின்ற காலத்தில் ஏற்பட்டதன் காரணமாக இந்தக் கடவுள்களுக்கு ஒழுக்கமோ, நாணயமோ, அன்போ, கருணையோ வைக்கப்படவில்லை. ஏன்? இவை இல்லாத காலத்தில் ஏற்பட்டது. இன்று நாம் நினைக்கின்றோம், மனிதனுக்கு மனிதன் அன்பாக, ஒழுக்கமாக, நாணயமாக இருக்க வேண்டுமென்று; பெயரளவில் வேண்டுமானாலும் கூறுகின்றோம். இந்தக் காலத்தில் கடவுள் ஏற்படுத்துவதாக இருந்தால் கடவுளை ஒழுக்கம் உடையதாக, நாணயம் உடையதாக, அன்பும், கருணையும் உடையதாகச் செய்வோம். மேலும், இன்றைக்கு இருக்கும் இந்தக் கடவுள்கள் ஏற்பட்ட காலத்தில் தாய், தங்கை, மகள் என்று கருதாமல் கட்டிக் கொண்டு வாழ்ந்தவர்கள். இவர்களின் கற்பனையில் உதித்த கடவுள் ஆனதனால் இந்தக் கடவுள்களும் தாய், தங்கையை, மகளை கட்டிக் கொண்டதாகக் கற்பனை பண்ணிக் கதையும் எழுதியிருக்கின்றான். எவ்வளவுக்கு எவ்வளவு பழைய கடவுள் என்கின்றானோ, அவ்வளவுக்கு அவ்வளவு காட்டுமிராண்டிக் கடவுள் ஆகும்.

சிவன் பழைய கடவுள் என்று கூறுவார்கள். இந்த சிவன் ஒழுக்கம் கெட்டவனாக எத்தனை பேர்களைக் கெடுத்து இருக்கின்றான். எத்தனை பேர்களின் புருஷன்மார்களால் இதற்காக சாபம் பெற்று இருக்கின்றான் என்பதைப் பார்க்கலாம். நேற்று சரஸ்வதி பூசை கொண்டாடினீர்கள். அந்த சரஸ்வதி யார்? பிரம்மா உண்டாக்கினான். பிரம்மாவினுடைய மகள். அவள் அழகைக் கண்டு கட்டிப்பிடிக்க முயன்றான். அவள், அப்பனுக்கு உடன்படுவதா என்று ஓடினான். அவனும் பின் தொடர்ந்தான். அவள் மானாக உருவெடுத்து வேகமாக ஓடி சிவனிடம் அடைக்கலம் புகுந்தாள். சிவனிடம், தன் தந்தையே தன்னைக் கட்டி அணைய நினைக்கின்றான் என்றாள். சிவன், ஏனடா இப்படி என்று கேட்டான். அதற்கு பிரம்மா, நான் என்ன பண்ணுவது; அவள் அழகாக இருக்கின்றாள்; நான் அவளை எப்படி அடையாமல் இருப்பது என்றான். சிவன் மத்தியஸ்தம் பண்ணி இருவரையும் கணவன் - மனைவியாக இருக்க அனுமதித்தான். அதுபோலவே, அப்பனும், மகளுமே புருஷன், பெண்டாட்டியாக இருந்து வருகின்றனர்.

சில கடவுள்கள் அம்மாளைக் கட்டிக் கொண்டு இருக்கின்றன. சில கடவுள்கள் தங்கையைக் கட்டிக் கொண்டு இருக்கின்றன. இந்த 10,000 வருஷமாக நமது கடவுளோ, மதமோ, சாஸ்திரமோ மாறுதல் அடையவில்லை; திருத்தம் அடையவே இல்லை. இவற்றுக்கு நாமும் கட்டுப்பட்டு இருப்பதனால் நாமும் மாறுதல் அடையவில்லை.

நமது சாஸ்திரத்தில் உலகம் பாராட்டத்தக்க பதி விரதையாக அய்ந்து பேரைக் குறிப்பிட்டுள்ளது. இவர்கள் சீதை, அகல்யை, தாரை, துரோபதை, அருந்ததி. இவர்களை நினைத்தால் புண்ணிய பாவம் எல்லாம் போய்விடும் என்று எழுதப்பட்டுள்ளது. இவர்கள் எல்லாம் எல்லாம் முதல் நம்பர் விபசாரிகள் . இவர்கள் மட்டும் அல்ல; அந்தக் காலத்து ரிஷிகள், தேவர்கள் என்பவர்களும் இவர்கள் போன்ற விபச்சாரத்தில் ஈடுபட்ட அயோக்கியர்கள்தான். அகல்யை என்பவளும் இந்திரனும் திருட்டுத்தனமாகக் கலவி செய்ததை புருஷன் கண்டு இருவருக்கும் சாபம் கொடுத்து இருக்கின்றான். அவள் பத்தினியாகிவிட்டாள்; அவன் தேவர்களுக்குத் தலைவன் ஆகிவிட்டான். அடுத்து தாரை. இவள் தன் புருஷனிடம் படிக்க வந்தவனிடம் சோரத்தனம் பண்ணி பிள்ளையும் பெற்றுவிட்டாள். பிள்ளையைக் கண்டு புருஷன் தன்னுடையது என்றான். சந்திரன், நான்தானே கொடுத்தேன், எனக்குத்தான் சொந்தம் என்று ரகளை பண்ணினான். புருஷன், நீ கொடுத்தாலும் என் நிலத்தில் விளைந்தது ஆகையால், எனக்கே சொந்தம் என்றான். இந்திரன் பஞ்சாயத்து பண்ணினான். பிள்ளை சந்திரனுடையது என்று அவனிடம் ஒப்படைக்கத் தீர்ப்பு செய்துவிட்டான். அடுத்து துரோபதை. இவள் அய்ந்து பேருக்கு மனைவியாக இருந்தவள், கோவாப்ரேட்டிவ் பாங்கு மாதிரி. அதுவும் பற்றாமல் ஆறாம் பேர்வழிமீதும் ஆசைப்பட்டாள் என்று கூறப்படுகின்றது. அடுத்து சீதை. இவள் இராவணனுக்கு கர்ப்பமானவள். காட்டில் வசிக்கும்போது வேண்டுமென்றே இராவணனுடன் போனவள். இராவணன் தன்னை விரும்பாத பெண்ணைத் தொட்டால் தலை வெடிக்கும் என்று சாபம் இருந்தது. ஆனால், அவளைத் தூக்கித் தொடைமீது வைத்துப் போகும்போது அவன் தலை வெடிக்காததனால், அவள் விரும்பியே அவன் பின் போய் இருக்கிறாள். பிறகு இராவணனைக் கொன்று இவளை மீட்டுக் கொண்டு வந்த பின் இவள் நான்கு மாத கர்ப்பம் என்று தெரிந்து இவள் கணவன் ராமன் இவளை காட்டுக்கு விரட்டி இருக்கின்றான். அங்கு போய் அவள் பிள்ளை பெற்றதும் அல்லாமல், மேற்கொண்டும் ஓர் பிள்ளை பெற்றுக் கொண்டு இரண்டு பிள்ளையோடு வந்திருக்கின்றாள். இப்படிப்பட்ட விபசாரிகள் எல்லாம் நமது பதிவிரதைகளாக - கடவுள்களாக ஆக்கப்பட்டு இருக்கின்றனர். காரணம், இவை ஏற்படுத்திய காலம் காட்டுமிராண்டிக் காலமாதலால் அந்தக் கால மக்கள் ஒழுக்கத்தினையே பதிவிரதைகளுக்கும் ஏற்படுத்தினார்கள்.

தோழர்களே! இன்று நாம் கும்பிடும் கடவுள்கள் எல்லாம் நம் நாட்டில் ஏற்பட்டதும் அல்ல; நம் நாட்டுக்காரன் மூளையில் முதலில் உதித்ததும் அல்ல. இவை எல்லாம் மேல்நாட்டில் அய்ரோப்பா தேசத்தில் மலைப் பிரதேசங்களில் உண்டாக்கப்பட்ட கடவுள்கள். அவற்றைத்தான் ஆரியர்கள் நம் நாட்டில் கொண்டு வந்து நமது தலையில் கட்டி விட்டனர். இன்று சிவன் மாட்டு மேலே இருக்கும் கடவுள் என்று கூறி வழிபடுகின்றோமே; இந்தக் கடவுள் இந்த நாட்டுக் கடவுள் அல்ல. சிரீஸ், பாபிலோனியா, எகிப்து, சிரியா முதலிய நாடுகளில் அவர்கள் காட்டுமிராண்டிகளாக இருந்த காலத்தில் வணங்கப்பட்டு வந்தவை ஆகும். அவர்கள் சிவனை தந்தைக் கடவுள் என்று அழைத்தார்கள். இந்தக் கடவுள் மாட்டுமேல் நின்று கொண்டு இருப்பதாகவும், கையில் சூலம், மழு, வில் போன்றவற்றை வைத்திருப்பதாகவும் சித்தரித்து இருக்கின்றனர். நாம் இன்று சிவனுடைய மனைவி காளி என்கின்றோம். இந்தக் கடவுள் அங்கு அதாவது தாய்க் கடவுள் என்று அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது. நாம் காளி சிங்கத்தின் மீது இருப்பதாக ஏற்பாடு செய்து இருக்கின்றோம். அவனும் அந்த நாட்டில் இந்தத் தாய்க் கடவுள் சிங்கத்தின்மேல் இருப்பதாகவே வைத்திருக்கின்றான். இந்த கடவுள் எல்லாம் மேல்நாட்டில் இருந்து இங்கு இறக்குமதி செய்யப்பட்டவையேயாகும். அவன் தாய்க் கடவுள், தந்தைக் கடவுள் என்று கூறுவதைத்தான் நமது சிவன், காளியை சைவன் அம்மையே அப்பனே என்று கூறிக் கும்பிடுகின்றான்

தோழர்களே! நாங்கள் வாயாலே புளுகிவிட்டுப் போகின்றவர்கள் அல்ல. எது கூறினாலும் ஆதாரத்தோடுதான் கூறுவோம். இது பற்றி வெள்ளைக்காரர்களும், நம் நாட்டு சரித்திரக்காரர்களும் எழுதி இருக்கின்றார்கள். மற்றபடி எமன், அக்னி, சூரியன், வருணன், வாயு, சரஸ்வதி, பிள்ளையார், சுப்ரமணியன் போன்றவர்களும் அங்கு இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களே. அவற்றை இங்கு கொண்டு வந்து புக வைத்து பெயர்களை மாற்றிக் கொடுத்து இருக்கின்றான்.

மனு தர்மத்தை எழுதியவன் மனு என்பவன். இவனும் கடவுள். இவனது அம்மாவை கட்டிக்கொண்டவன் இவன். மேல்நாட்டில் அம்மாவைக் கட்டிக்கொண்ட கடவுளைப் பார்த்து ஏற்படுத்தப்பட்டவன். வாயில் மட்டும்தான் அன்புக் கடவுள், அருள் கடவுள் என்கிறான். இப்படி கூறவேண்டிய அவசியம் அவன் கொண்டு வந்து புகுத்திய காலத்தில் இந்த நாட்டு மக்கள் அன்பும், அருளும் உடையவர்களாக இருந்ததனால் கடவுளுக்கும் கூற வேண்டியதாயிற்று. மேல்நாட்டவன் தோற்றுவித்த தங்கள் காட்டுமிராண்டிக் கடவுள்களையும், மதத்தையும், சாஸ்திரங்களையும் இப்போது ஒழித்துவிட்டு புதிதாகக் கடவுளையும், மதத்தையும் உண்டாக்கிக் கொண்டான். அதுதான் கிருஸ்தவன் கூறும் கடவுள், கிருஸ்தவ மதம்; அவனது ஒரே கடவுள், அது பிறப்பு இறப்பு இல்லாதது, எதுவும் வேண்டாதது. அதற்கு உருவம் இல்லை, அருளானது, அன்பானது என்று ஆக்கிக் கொண்டான். அதன் காரணமாக அறிவு பெற்றான். தாராளமாக தன் அறிவைச் செலுத்தி முன்னேறுகின்றான். அடுத்த நாட்டுக்காரன் முஸ்லிம். அவர்களும் காட்டுமிராண்டிகளாக கல்லைக் கட்டிக் கொண்டு அழுதவர்களாக இருந்தவர்கள்தான். முகமது நபி தோன்றி அவற்றையெல்லாம் ஒழித்து ஒரே கடவுளையும், அது பிறப்பு இறப்பு இல்லாததாகவும், ஒன்றும் வேண்டாததாகவும், அருளானதாகவும், அன்பானதாகவும் ஆக்கிக் கொண்டான். அதன் காரணமாகவே முன்னேறுகின்றான்.

நம் நாட்டில் இந்த காட்டுமிராண்டிக் கடவுளையும், மதத்தையும் ஒழிக்க எவனும் முன்வரவில்லையே. அதன் காரணமாகத்தானே நமக்கு இந்த இழிநிலை. தோழர்களே! இப்படி ஒரே கடவுள், உருவம் அற்ற கடவுள் உடையவர்களும், ஜாதி இல்லாதவர்களாக, உயர்வு - தாழ்வு அற்றவர்களாக உள்ள முஸ்லிமும், வெள்ளைக்காரனும் இந்த நாட்டை ஆண்ட காலத்தில்கூட நம்மைத் திருத்த முடியவில்லையே; தங்களைப்போல் நம்மையும் ஆக்க முடியவில்லையே. பார்ப்பானுடைய எதிர்ப்புக்கண்டு இவன்களும் நமக்கு ஏன் வம்பு என்று பார்ப்பானைப் பார்ப்பானாகவும் பறையனைப் பறையனாகவும் தானே வைத்துவிட்டுப் போனார்கள். இந்த நாட்டுக்கு சுதந்திரம் வந்து 13 ஆண்டுகள் ஆகியும் இந்த நாட்டில் இன்னமும் பார்ப்பான் இருக்கின்றானே. இந்த நாட்டு 636 ராஜாக்களையும் ஜமீன்தாரர்களையும், மிட்டாதார்களையும் ஒழித்து அவர்களை எல்லாம் இஸ்பேட்டு ராஜாவாக்கி சம்பளக்காரனாக தன் ஆட்சியில் வைத்துள்ளவர்கள் இந்தப் பார்ப்பானை மட்டும் ஏன் ஒழித்து இருக்கக் கூடாது? சுதந்திரம் வந்த நாட்டில் பார்ப்பான் ஏன்? ராஜாக்களை முடியைக் கழற்றி வைக்கச் சொன்னவர்கள் இந்த பார்ப்பானை ஏன் பூணூலையும், உச்சிக் குடுமியையும் கத்தரித்து எடுத்துவிட்டு மற்றவர்கள் போல் மண்வெட்டி எடுக்கவும், கல்லுடைக்கவும், மலம் எடுக்கவும் ஏன் கூறக்கூடாது? எதற்காக நமக்கு கோயில்? எதற்காக இந்த கடவுள்? இந்த மதம்? இந்த கடவுளையும் கோயிலையும் உடைத்தெறிய வேண்டாமா?

கிருஸ்தவ மதத்தை உண்டாக்கிய ஏசு கூறினார், ``கோயில் எல்லாம் திருட்டுப் பசங்கள் வாசம் பண்ணக்கூடிய குகை என்றார். காந்தியார் ஆயிரம் புரட்டு பித்தலாட்டம் பேசி இருந்தாலும், ஏதோ தவறி ஓர் இடத்தில் உண்மையையும் கூறி இருக்கின்றார்; ``இந்தக் கோயில்கள் எல்லாம் விபச்சார விடுதி'' என்றார். பார்ப்பான் திட்டினான். உன் கோயில் மட்டும் அல்ல, உன் கடவுளும் விபச்சாரம் செய்யக் கூடியதுதான் என்று கூறியுள்ளார்.

எதற்காக அய்யா மனிதனுக்கு இத்தனை ஆயிரம் கடவுள்கள்? பகுத்தறிவு படைத்த மனிதனுக்கு ஏன் அய்யா கடவுள்? வேண்டுமானால் கழுதைக்கு வேண்டும், மாட்டுக்கு வேண்டும், ஆட்டுக்கு வேண்டும்; இவை எல்லாம் வாயில்லாப் பூச்சிகள். கழுதை முதுகில் பாரத்தை ஏற்றி வைத்து மனிதன் அடிக்கின்றான்; ஆட்டை வெட்டி மனிதன் தின்கின்றான்; மாட்டுக் கழுத்தில் நுகத்தடியை வைத்து அடிக்கின்றான். இவற்றைக் கேட்க அவற்றிற்கு வாய் இல்லை. எனவே, இவற்றிற்கு கடவுள் இருக்க வேண்டும். அதைவிட்டு ஆறு அறிவு படைத்த மனிதனுக்கு ஏன் அய்யா கடவுள்? அதிலும் இத்தனை ஏன்? நம்மை முட்டாளாகவும், மடையர்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் ஆக்கி இருக்கும் காரணம் இந்த கடவுள் நம்பிக்கைகளேயாகும்.

நம்மைவிட காட்டுமிராண்டியாக இருந்த கிருஸ்தவனும், முஸ்லிமும் இன்று உயர்ந்த நிலையில் இருக்கின்றன. 1960 ஆண்டுகளுக்கு முன் கிருஸ்து தோன்றி கிருஸ்தவர்களின் காட்டுமிராண்டிதனத்தை எல்லாம் ஒழித்து ஒரு கடவுள் உண்டு பண்ணினார். 1,400 ஆண்டுகளுக்கு முன் முகமது நபி தோன்றி அவர்களின் மூடத்தனமான செய்கைகளையும், கடவுள்களையும் ஒழித்து ஒரு கடவுளை உண்டாக்கினார். உனக்கு அப்படியே உன் கடவுள் எப்போது ஏற்பட்டது? 10,000 ஆண்டுக் கணக்காக ஆகின்றது என்கிறாய். 10,000 ஆண்டுக்கு முன் என்றால் என்ன? காட்டுமிராண்டிக் காலம் குரங்காக இருந்த காலம் அல்லவா? இந்தக் காலத்து மனிதன் புத்தியில் ஏற்பட்ட கடவுள் இந்த விஞ்ஞான அதிசய அற்புதக் காலத்துக்கு ஏற்றதாகுமா? நமக்கு மதம் என்ன அழுகின்றது? எவனாவது சொல்லட்டுமே. தெருவில் போகும் பார்ப்பான் நாம் இந்து மதம் என்றால் நாம் ஏற்றுக் கொள்வதா? இதன் காரணமாகத்தானே நீ காட்டுமிராண்டி. கிருஸ்தவனுக்கு கிருஸ்து மார்க்கம் இருக்கின்றது; முஸ்லிமுக்கு முகமதிய மதம் இருக்கின்றது. ஆதாரம் என்ன என்றால், கிருஸ்தவனுடைய மதத்தை ஏற்படுத்தியது, ஏசு ஏற்பட்டு 1960 ஆண்டாகின்றது. இதற்கு ஆதாரம் என்ன என்றால், பைபிள் என்கின்றான். முஸ்லிமைக் கேட்டால் முகமது ஏற்படுத்தினார். 1,400 வருஷமாகின்றது, ஆதாரம் குரான் என்கின்றான். உன் மதம் யாரால் ஏற்பட்டது? எப்போது ஏற்பட்டது? அதற்கு ஆதாரம் என்ன? எவனாவது கூற முடியுமா? முட்டாளாகி நீதான் இந்து மதம் என்கின்றாய்.

சங்கராச்சாரி கூறுகின்றார், இந்த மதத்தை இந்து மதம் என்று கூறுவது தவறு; இதனை வைதீக மதம் அல்லது பிராமண மதம் என்றுதான் கூறவேண்டும் என்கின்றார். நம்மவன் எவனாவது இதுபற்றிச் சிந்திக்கின்றானா? இல்லையே! நமது இழிநிலையும், காட்டுமிராண்டித்தனமும் ஒழிய வேண்டுமானால் இவற்றுக்குக் காரணமான இந்த கடவுளும், மதமும், சாஸ்திரமும் ஒழிய வேண்டும். இவற்றை வைத்துக் கொண்டு ஒருநாளும் ஜாதியை ஒழிக்க முடியாது; நமது காட்டுமிராண்டித்தனம் ஒழியாது.


-----------தந்தைபெரியார் - "விடுதலை " -30.10.1960

29.5.08

கோழி முதல் உண்டானதா? அல்லது முட்டை முதல் உண்டானதா?

முதலில் உண்டானது கோழியா, முட்டையா? என்று வரைந்து அதனை விளக்குவோம். இந்த கேள்வி புராதனக் கேள்வி. உயிர்கள் உற்பத்தியைப் பற்றி, மெய்ஞ்ஞானம் தனது வெளிச்சத்தை வீசுவதற்கு முந்தி கேட்டுவரும் கேள்விகளில் இதுவும் ஒன்று.

ஜீவப் பொருள்கள் அதாவது தாவரங்களும், பிராணிகளும் வந்த விதத்தை அறிவதற்கு முன் இவ்விதக் கேள்விகள் கேட்கப்பட்டு வந்தன. உலகம் வந்தவிதமென்ன? உயிர்கள் வந்தவிதமென்ன? பிரபஞ்சம் வந்தவிதமென்ன? மனிதன் வந்தவிதமென்ன? ஆகிய இந்தக் கேள்விகளை பல அறிஞர்கள், பல தேசங்களில் கேட்டு வந்தார்கள். மதத்தர்கள் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே விடை அளித்து வந்தார்கள். அதாவது பிரபஞ்சம் ஈராகவுள்ள உயிர்கள் உள்பட சகல வஸ்துகளும் சிருட்டி என்றார்கள். ஆனால் சில தத்துவ ஞானிகள் ஆதிகாலம் முதல் பிரபஞ்சப் பொருள்கள் யாவும் பரிணாமத்தால் வந்தனவென்று யூகித்து வந்தார்கள். இதைத்தான், சத்தமாம் சோதி தன்னில், சொல்லிய விண்ணும் விண்ணில்.... என்று பிரபஞ்ச உற்பத்தியைப் பற்றி கைவல்ய அதிகாரி எழுதியுள்ளார். ஆனால், இவைகள் யாவும் வெறும் உத்தேசங்களாக இருந்து வந்தன.

சென்ற 100 வருடங்களுக்கு முன் நான் பிரபஞ்ச உற்பத்தியைப் பற்றியும், உலக உற்பத்தியைப்பற்றியும் மனித உற்பத்தியைப் பற்றியும் விஞ்ஞானம் விசாரிக்கப் புகுந்தது. அதுமுதல் தனது ஆராய்ச்சியாலும் பிரத்தியட்ச அனுபவத் தாலும் இந்தக் கேள்விகளுக்கு இயற்கையாயுள்ள விடைகளைக் கொடுத்துவர விஞ்ஞானம் சக்தி பெற்று வருகிறது. முட்டை முந்தியதா? அல்லது கோழி முந்தியதா? என்றால், கோழி முட்டையும், கோழியும், இவை இரண்டில் ஒன்றும் முந்தியவை அல்ல. நாம் பார்க்கும் கோழியும் அதன் முட்டையும் ஒரு காலத்தில் தோன்றியவைகள் அல்ல. பல கோடி வருடங்களாக இவை இரண்டும் வேறு உருவங்களாக இருந்து பரிணமித்து வந்தவை. கோழி, பட்சி வகையை சேர்ந்தது. பட்சிகள் ஓணான், பல்லி முதலிய ஊர்வன மூலமாக பெறப்பட்டவை. ஊர்வனங்கள், தவளைக் கூட்டங்களிலிருந்து மாறியவை. தவளைகள், மீன் வடிவங்களிலிருந்து உண்டானவை. மீன்கள் புழுப் பூச்சிகளாக இருந்து மாறியவை. புழுப் பூச்சிகள் சிறு சிறு கிருமிகளால் சையோகம் பெற்று வந்த உயிர்கள். கிருமி இன்னும் சிறு சிறு முட்டைகளால்தான் உலகிலுள்ள உயிர் பெற்ற பொருள்கள் யாவும் கட்டப்பட்டுள்ளன. நாமும் நமக்குக் கீழேயுள்ள மிருகாதிகள், பட்சி, பறவைகள், தவளை, மீன், புழுபூச்சி முதலியவை யாவும் சிறு சிறு முட்டைகளால் ஆக்கப்பெற் றுள்ளன. இந்த கோடானுகோடி கோடி முட்டைகளில் ஒன்று தமது தேகத்தினின்றும், அல்லது கோழி தேகத்தி னின்றும் சுக்கில சுரோணிதங்களாக மாறி சையோகத்தில் கர்ப்பத்தில் வந்து மனித உருவமாகவும் கோழி முட்டை யாகவும் அந்தந்த உயிருக்குத் தக்கப்படி வளர்கின்றன. எல்லா உயிர்களும் மேற்கூறிய முட்டை வடிவத்திலிருந்தே கர்ப்பத்தில் தரித்து அந்தந் உயிர் வகையாக வளர்கின்றன. மனிதன் ஈறாகவுள்ள சக உயிர்களும், செடி, புல், மரமாக இருந்தாலும் சரி கிருமி, மீன், கோழி, மிருகம், மனிதனாக இருந்தாலும் சரி, சகல உயிரும் விந்து அல்லது முட்டையிலிருந்தே உண்டாகின்றன.

தாவர விந்துக்கும், பிராணி முட்டைக்கும் வித்தியாசம் அதிகமில்லை. உயிர்கள் யாவும் அதனதன் முட்டையி லிருந்தே உற்பத்தியாகின்றன. உயிர்கள் உண்டாகும் முட்டைக்கு செல் என்று பெயர். கோழிமுட்டையில் உயிர் முட்டை நடுவில் கண்ணுக்கு எட்டாத வடிவமாக இருக் கின்றது. மற்ற வெள்ளை அம்பிலியும், மஞ்சள் அம்பிலியும் அந்தச் சிறு முட்டையிலிருந்தே பரிணமிக்கின்றன. நாமெல்லோரும் உற்பத்தியாகும் விந்து 120 பங்காக ஒரு அங்குலத்தை வகுத்து, அதில் ஒரு பாக மாத்திரையைக் கொண்டுள்ளது என அறிக. இந்த அற்ப உருவந்தான் புத்தராகவும், ஏசுவாகவும், மகம்மது ஆகவும் அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகராகவும் பரிணமித்து உலகில் இன்று வசித்துவரும் பலகோடி ஜீவராசிகள் ஆதியில் இச்சிறு முட்டையிலிருந்து பரிணமித்தவைகள் என்றால், அந்த ஆதி முட்டை ஆதியில் எங்கிருந்து பெறப்பட்டு இருக்கலாமெனக் கேட்கலாம். இதற்கு விடை அளிக்கத்தான் பிராணி விஞ்ஞானிகளும் யூத, பவுதிக விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி ஸ்தாபனங்களில் கண்டறியப் பாடுபட்டு வருகின்றார்கள். இதன் இரகசியம் எந்தக் காலத்தில் விளங்கினாலும் விளங்கட்டும். இப்பொழுது தெரிந்தவரையில் எல்லா உயிர்களும் சிறு கிருமியாகிய முட்டையிலிருந்தே உண்டா கின்றன. இரண்டாவது, எல்லா உயிர்களும் நாளடைவில் ஆதிகால உயிர்களிலிருந்து பெறப் பட்டவை. தற்கால உயிர்கள் முற்கால உயிர்களிலிருந்தும், முற்கால உயிர்கள் அவைகளுக்கும் சிறிய உயிர்களிலிருந்தும் உண்டானவை. அத்தகைய சிறிய உயிர்கள் ஆதியில் சிறு சிறு முட்டைகள் ஓர் சிறிய ஆதி முட்டையிலிருந்து வளர்ந் திருக்கவேண்டும்.

அந்த ஆதி முட்டை அதற்கும் சிறிய முட்டையிலிருந்தும் இவைபோன்ற உயிரும் உயிருமில்லாத பொருள்களிலிருந்தும் உற்பத்தியாகியிருக்கலாமென்பது தற்கால மெஞ்ஞான யுக்தி என்று சொல்லலாம். உலகம் ஒரு காலத்தில் உயிரற்று இருந்தது. உயிர் முளைக்க உலகம் பக்குவமடைந்த காலையில் கல்லாய்டு என்ற குழம்பிய பதார்த்தங்கள் உண்டாயிருக்க வேண்டும். அந்தப் பதார்த்தத்திலிருந்து பிரோடபிலாசம் என்ற ஆதி உயிர் கல்லாய்டு பொருள் பிறந்தது. அதிலிருந்து ஆதி முட்டை உண்டாகி அது பரிணமித்து பல்வேறு உயிர்களாகப் பரிணமித்தது என்பது மெய்ஞ்ஞான யூகை.

---------------------- ம. சிங்காரவேலர் அவர்கள் எழுதிய கட்டுரை -நன்றி:"விடுதலை" 29-5-08

27 சதவிகித இட ஒதுக்கீடு: சரியான தீர்ப்பா?


சட்ட வல்லுநர்கள் எழுப்பும் சர்ச்சை


மத்திய அரசின் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடுக்கு வழிவகை செய்யும் 93 ஆவது அரசியல் சட்ட திருத்தமும், அதையொட்டி கொண்டு வரப்பட்ட தனிச் சட்டமும் செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இத்தீர்ப்பிலுள்ள முக்கிய சாரம்சம் இட ஒதுக்கீடு, ஜாதி அடிப்படையில் இருப்பது தவறல்ல. மத்திய அரசின் வேலை வாய்ப்பு சம்பந்தமாக உள்ள கிரீமிலேயர் முறை, கல்விக் கூடங்களுக்கும் பொருந்தும். சிறுபான்மையினர் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு கிடையாது என்ற அரசியல் சட்டப் பிரிவு (30) சரியே என்கிறது.

இந்தத் தீர்ப்பை வரவேற்பவர்களில் பலரும் அதிலுள்ள கிரீமிலேயரை முற்றிலுமாக நீக்கவேண்டும் என்கின்றனர். ஒரு சாரர், இத்தீர்ப்பு அரசமைப்பு சட்டத்திற்கு முரணானது என்கின்றனர்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியும், கிரீமிலேயரை முற்றிலும் நீக்கவேண்டும் என்றே சொல்கிறார்.

மத்திய அரசின் கல்வி நிலையங்களில் 57 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட சமூகநீதி இந்தத் தீர்ப்பின் வாயிலாக கிடைத்துள்ளது. ஆனால், கிரீமிலேயர் ஒன்றைப் புகுத்தி, இட ஒதுக்கீட்டின் அம்சத்தையே சிதைத்துவிட்டனர். கிரீமிலேயரானது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எங்கும் இல்லாத ஒன்று.

முதலாம் அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வந்தபோது, கிரீமிலேயர் விவாதிக்கப்பட்டு, வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அது ஏற்கப்படாமல் போனதால், தள்ளுபடி செய்யப்பட்டது. அதை தற்போது உச்சநீதிமன்றம் திணித்திருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதாகும்.

மேலும், பொருளாதார அளவுகோல் ஆண்டுக்கு ஆண்டு மாறக்கூடியது. கிரீமிலேயரால் ஒரே குடும்பத்திற்குள் வேற்றுமைகள் வளரக் கூடும். அதாவது, ஒரு வீட்டிற்குள்ளேயே ஒருவர் பின்தங்கியவராகவும், மற்றொருவர் முன்னேறியவராகவும் கருதப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. இதனால் பின்தங்கியவர் இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்கவும், முன்னேறியவருக்கு மறுக்கப்படுவதுபோலவும் ஒரு ஆபத்தான நிலைமையை இத்தீர்ப்பு ஏற்படுத்தும்.

ஊழியர்களுக்கு எல்லாம் நிரந்தர வருமானம் உண்டு. ஆனால், விவசாய - கூலித் தொழிலாளர்களுக்கு நிரந்தர வருவாய் கிடையாது. ஆகையால், இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல. இது மண்டல் குழுவின் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஏழையாக இருப்பவர்களுக்கு பொருளாதார உதவிகள் செய்யலாமே தவிர, கல்வியில் கொண்டு வந்து திணிக்கக் கூடாது. பிற்படுத்தப்பட்டவர்களில் பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் எல்லாம் கல்வியிலும் முன்னேறி இருப்பார்கள் என்று உச்சநீதிமன்றம் எதை வைத்து கணித்தது? அதனிடம் அதற்கான புள்ளி விவரங்கள் ஏதும் இருக்கிறதா? ஏதோ குத்துமதிப்பாக கணக்குப் போட்டு கிரீமிலேயரை வெளியேற்ற வேண்டும் என்று கூறுவது சரியல்ல.

இப்போதுதான் மத்திய அரசின் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது. அதற்குள் அவர்களில் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களே 27 சதவிகிதத்தையும் அபகரித்துக் கொண்டார்கள் என எதை வைத்து உச்சநீதிமன்றம் தீர்மானித்து இருக்கிறது என்பது புரியவில்லை.

இதைவிட பெரிய கொடுமை, பட்ட மேற்படிப்புக்கு இட ஒதுக்கீடு கூடாதாம். கல்வி என்பது அனைவரும் பெறவேண்டிய ஒன்றாகும். வருமானம் அதிகமுள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று கூற உச்சநீதிமன்றத்துக்கு யார் அதிகாரம் கொடுத்தது? தன் வரம்பை மீறி அது செயல்படுகிறது.

இட ஒதுக்கீடு அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்யப்படவேண்டும் என்கிறபோது, உயர் வருமானம் உள்ள பிற்படுத்தப்பட்டோரை இட ஒதுக்கீட்டில் இருந்து நீக்கவேண்டும் என்பது எந்த அடிப்படையில் நியாயம்?

எந்தப் புள்ளி விவரங்களையும், ஆதாரங்களையும், சட்ட விதிகளையும் கொண்டு இந்த கிரீமிலேயர் எழுதப்படவில்லை. ஆகையால், அதை மத்திய அரசு முற்றிலுமாக நீக்கவேண்டும். இந்தக் கல்வி ஆண்டே அனைத்து மத்திய அரசின் கல்வி நிலையங்களிலும் 27 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தவேண்டும் என்கிறார் கி. வீரமணி.


---------- நன்றி: "ராணி", 25.5.2008

வானம் உள்ள வரை வையம் உள்ள வரை யார் இங்கு மறப்பார் பெரியாரை?


பெரியார் ஒருவர்தான் பெரியார்
அவர் போல் பிறர் யார் பெருமைக்கு உரியார் - தந்தை பெரியார்

பகைவர் தமை காட்டி வதைத்த கூர் ஈட்டி
தமிழர் புகழ்நாட்டி வாழ்ந்த வழிகாட்டி - தந்தை பெரியார்

மாட்டைத் தீண்டுவான் ஆட்டைத் தீண்டுவான்
மனிதனைத் தீண்ட மறுத்தானே!

நாட்டை உலுக்கினான் பெரியார் அவர் தொண்டன்
நரிகளின் வாலை அறுத்தானே!

கோடை எழில் கொஞ்சும் பெண்களை உலகினில்
கொடியவன் கூட்டில் அடைத்து வைத்தான்!

காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரை
கிழவன்; துடைத்து வைத்தான் - தந்தை பெரியார்

மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!

வானம் உள்ள வரை வையம் உள்ள வரை
யார் இங்கு மறப்பார் பெரியாரை - தந்தை பெரியார்


(கவிஞர் காசி ஆனந்தன்)

பெரியாரின் அருமை பெருமை தெரிய வேண்டும் என்றால் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நடித்து 1943 இல் வெளிவந்த 'பிரபாவதி' படத்தில் இடம்பெற்ற காட்சி போதுமானது. அடிமைத்தனமும் மூடத்தனமும் கொடி கட்டிப் பறந்த காலம் அது.

படுத்திருக்கும் அசுரன் ஒருவன் தலையை கலைவாணர் காலால் மிதிப்பார்.

"ஏண்டா என்னை மிதிச்சே?' கோபத்தோடு கேட்பான் அசுரன்.


"இப்படித்தான் பகவான் வாமன அவதாரத்திலே மகாபலிச் சக்ரவர்த்தி தலைமீது காலை வச்சு மிதிச்சார்' என்பார் கலைவாணர்.

"பகவான் இப்படியா மிதிச்சார்? அப்ப நல்லா மிதி' என்று கூறித் தலையைக் காட்டுவான் அசுரன்.

'நீ சூத்திரன். பிரமாவின் தொடையில் இருந்து பிறந்தவன். நான் பிராமணன். பிரம்மாவின் முகத்தில் இருந்து பிறந்தவன். உனது சுயதர்மம் ஏனைய மூன்று வர்ணத்தாருக்கும் அடிமை வேலை செய்வது.

ஒரு சாதியான் மற்றொரு சாதியானுடைய தர்மத்தை எவ்வளவு ஒழுங்காக நடத்தினாலும், அது நன்மையைப் பயக்காது. தன் தொழிலைக் செய்யாவிடினும் அவ்வளவாகக் குற்றமில்லை. ஆனால் பிறசாதியார் தொழிலை செய்யவே கூடாது.' (பகவத் கீதை அத்தியாயம் 3, பாடல் 35)

ஏமாற்றப்பட்ட தமிழன் வர்ண தர்மம் ஆண்டவன் கட்டளை, அழித்தெழுத முடியாத விதி என நம்பினான்.

சிந்திப்பது
எங்களுக்கு
எளிதாக இருக்கிறது!

நாங்கள்
தலையில்
இருந்து பிறந்தவர்கள்!

அவனை
ஓங்கி உதைத்தான்!

இவன்
சொன்னான்
உதைப்பது எங்களுக்கு
எளிதாக இருக்கிறது!

நாங்கள்
காலில்
இருந்து பிறந்தவர்கள்!என்று கவிஞர் காசி ஆனந்தனின் நறுக்குப்போல் அன்றைய தமிழனால் செய்ய முடியவில்லை.

ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் கீதையை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் இராசகோபாலச்சாரியார் 1956இல் தமிழ் நாட்டில் குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். பள்ளிக் கூடங்களில் அவனவனும் தனது குலத்துக்குரிய தொழிலைச் செய்யவதற்கு வேண்டிய கல்வி கற்பிக்கப்பட வேண்டும். சிரைக்கிறவன் பிள்ளை சிரைக்க வேண்டும். வெளுக்கிறவன் பிள்ளை வெளுக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆரிய தர்மத்தை நிலைநாட்ட பார்ப்பனியம் எடுத்த கடைசி முயற்சி இராசகோபாலச்சாரியாரின் குலக் கல்வித் திட்டமாகும்.

இந்த வர்ணதர்மத்தை மகாகவி பாரதியார் பொறுக்கி எடுத்த சுடு சொற்களால் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

சூத்திரனுக்கொரு நீதி தண்டச் சோறுண்ணும்
பார்ப்பாருக்கு இன்னொரு நீதி என்று
சாத்திரம் சொல்லுமேயானால் அது
சாத்திரம் அல்ல சதியெனக் கண்டோம்
. (பாரதியார் கவிதைகள்)

பெரியாரை சுயமரியாதைப் பாதைக்கு இட்டுச் சென்றதே பார்ப்பனர்கள் இந்த குலத்துக்கொரு நீதியை சமையல் கட்டுவரை கொண்டு சென்றதே.

1923இல் தந்தை பெரியார் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். சேரமாதேவி என்ற ஊரில் வ.வே.சு. ஐயர் குருகுலம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி ஒரு குருகுலத்தை நடத்தி வந்தது. அந்தக் குருகுலத்தில் பிராமண மாணவர்களுக்கு வேறாகவும் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு வேறாகவும் தனித் தனியாகப் பந்தி போடப்பட்டது.

அந்தக் காலம் பார்ப்பனர்களுடைய செல்வாக்கு அங்கிங்கு இன்னாதபடி எங்கும் கொடி கட்டிப் பறந்த காலம். கல்வி அவர்களது ஏகபோக உரிமையாக இருந்த காலம். நீதியரசர்கள் தொடங்கி சாதாரண அலுவலக எழுத்தர்வரை பிராமணர்களே பதவிக் கதிரைகளில் அமர்ந்து கோலோச்சிய காலம்.

தனிப் பந்தி உணவு பரிமாறும் முறையை பெரியார் எதிர்த்தார். ஆனால் அவரது எதிர்ப்பு வெற்றி அளிக்கவில்லை. பார்ப்பனர்கள் சாத்திரங்களைக் மேற்கோள் காட்டி தனிப் பந்தியை நிறுத்த மறுத்தனர்.

வேறு வழியில்லாமல் 1925 இல் பெரியார் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை உதறி எறிந்துவிட்டு அதிலிருந்து வெளியேறினார்.

பெரியாரின் வெளியேற்றம் அவரது வாழ்க்கைப் பாதையை மட்டுமல்ல தமிழினத்தின் தலைவிதியையும் மாற்றி அமைத்தது.

காங்கிரசில் இருந்து வெளியேறிய பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். பார்ப்பனீயத்தின் முகத் திரையைக் கிழித்து மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் தமிழ் மண்ணில் விதைக்கப்பட்டிருந்த நச்சுக் கருத்துக்களை, மூடநம்பிக்கைகளை, புராண இதிகாச புளுகு மூட்டைகளை, புரட்டுக் கதைகளை அக்குவேறு ஆணி வேறாகப் பிடுங்கி எறிந்தார்.

'கடவுளை மற மனிதனை நினை' என்பது பெரியாரின் முழக்கமாகும்.

1937 ஆம் ஆண்டு சென்னை சட்டசபைக்கு நடந்த தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. அதே ஆண்டு கட்டாய இந்தி பள்ளிக்கூடங்களில் திணிக்கப்பட்டது. கட்டாய இந்தியை எதிர்த்து தமிழகம் எரிமலையாக வெடித்தது. துப்பாக்கிகள் பேசியதில் இரண்டு தமிழர்களது உயிர் பறிக்கப்பட்டது. பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அவரது உருவப் படத்தை நாற்காலியில் வைத்து நீதிக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள்.

தனது கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்ல குடியரசு, புரட்சி, விடுதலை, உண்மை போன்ற ஏடுகளை ஆரம்பித்து அவற்றின் வாயிலாக பகுத்தறிவு பரப்புரை செய்தார்.

'பகுத்தறிவு' ஏட்டை ஆரம்பித்தபோது பெரியார் அதன் கொள்கைபற்றி பின் கண்டவாறு பிரகடனம் செய்தார்.

'பகுத்தறிவு ஏடு வேதத்திற்கோ, விமலத்திற்கோ, சரித்திரத்துக்கோ, சாத்தி;ரத்திற்கோ, பழக்கத்திற்கோ, வழக்கத்திற்கோ, பழமைக்கோ, புதுமைக்கோ அடிமையாகாமல் கொள்வன கொண்டு தள்வன தள்ளி தானே சுதந்திரமாய் தன்னையே நம்பி தனது அறிவையும் ஆற்றலையுமே துணையாகக் கொண்டு தன்னாலான தொண்டாற்றி வரும்.'

1935 ஆம் ஆண்டு தொடக்கப்பட்ட 'விடுதலை' இன்று மட்டும் சாதி ஒழிப்பில், இன நலத்தில், மொழி மீட்சியில், வகுப்புரிமையில், பண்பாட்டுப் புரட்சியில், பகுத்தறிவுப் பரப்புரையில், பார்ப்பன ஆதிக்க ஒழிப்பில் தமிழர் நலங்காக்கும் அரணாய், ஆயுதமாய், மாமருந்தாய் திகழ்கிறது!

தான் தொடக்கிய ஏடுகளுக்குத் தனித் தம்pழில் பெயர் சூட்டியதன் மூலம் தனித் தமிழ் இயக்க எழுச்சிக்கு பெரியாரே வழிகாட்டினார். தமிழிசையின் தந்தையும் அவர்தான்.

பெரியார் விதைத்த வித்துக்களில் ஒன்றேனும் சோடை போனது கிடையாது. அவர் விதைத்த விதைகள் இன்று ஆல்போல் தளைத்து அறுகுபோல் வேரோடி கனிதரும் கற்பகச் சோலைகளாகக் காட்சி தருகின்றன.

பெரியார் பார்ப்பனரல்லாதார்க்கு கல்வி வேண்டும் என்றார். பார்ப்பனரல்லாதார்க்கு அரச அலுவலகங்களில் இடம் வேண்டும் என்றார். பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்றார். ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்றார். பெண்களுக்கு மணவிலக்க உரிமை வேண்டும் என்றார். பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்றார். விதவைக்கு மறுமணம் வேண்டும் என்றார்.

இந்து மதத்தில் கறைபடிந்துபோன தேவதாசி முறை ஒழிய வேண்டும் என்றார். சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்றார். சாதி அடிப்படையில் யாரும் இழிதொழில் செய்யக் கூடாது என்றார்.

தேவதாசி முறை தமிழீழத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் தமிழகத்தில் பல நூற்றாண்டு காலம் இருந்திருக்கிறது. சுந்தரர் திருமணம் செய்து கொண்ட பரவை நாச்சியார் இந்த சாதியைச் சேர்ந்தவர்தான்.

தேவதாசி முறை சுலபத்தில் ஒழிக்கப்படவில்லை. அதற்குப் பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

'தோழர்களே! இந்நாட்டில் தேவதாசி முறை ஒழிக்கப்படது என்றால் எவரால்? எங்களால்தான். எங்கள் நீதிக் கட்சி ஆட்சியில் இருந்தபோது அது ஒழிக்கப்பட்டது. தேவடியாள் என்று ஒரு சாதியா? இவர்கள் எல்லாம் யார்? நமது அக்காள் தங்கையர்களாக இருந்தவர்கள்தானே! இப்படிப் பல சாதியிலிருந்தும் ஆண்டவன் பேரால் பொட்டுக்கட்டி விட்டனர். தாசித் தொழில் பழகித் தேவடியாள் ஆனார்கள்.

இந்தத் தேவதாசித் தடைச் சட்டம் சட்ட சபையில் வந்தபோது வைதீகர்கள் எல்லாம் எதிர்த்தனர். சத்தியமூர்த்தி ஐயர் 'இது கடவுள் காரியம் இதில் கை வைப்பதா?' என்றார். அதற்கு டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் எழுந்து 'அந்தக் காரியத்தை நாங்கள் ஏதோ இத்தனை நாள் பார்த்து வந்தோம். இனி அப் புண்ணிய காரியத்தை உங்கள் இனத்தார்களே பார்த்துக் கொள்ளுங்களேன்!' என்று கூறினார். பிறகுதான் அவர் வாயடைத்து நினறார்
(விடுதலை - 31.08.1959)

இதில் வேடிக்கை என்னவென்றால் பார்ப்பனர்களும் வைதீகர்கள் மட்டுமல்ல தேவடியாள்கள் என்பவர்களும் கூட்டம் போட்டு பெரியாரை வன்மையாகக் கண்டித்தார்கள். 'எங்கள் பிழைப்புப் போய் விட்டால் நாங்கள் என்ன செய்வது' என்றார்கள்.

இந்த அடிமை மனப் போக்கு இன்றும் தமிழரிடையே நிலவுகிறது. தமது மூளைக்குப் போட்ட விலங்குபற்றி மெத்தவும் சுய மகிழ்ச்சி அடைகிறவர்கள் இருக்கிறார்கள்.

"பகவான் இப்படியா மிதிச்சார்? அப்ப நல்லா மிதி' என்று கூறித் தலையைக் காட்டினானே அந்த அசுரன்? அவன்; போல பல சூடு சொரணை அற்ற அசுரர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

இவை ஒவ்வொன்றிலும் பெரியார் வெற்றி கண்டார். 'சூத்திரர்' 'சூத்திரச்சி' என்று உயர்சாதிப் பார்ப்பனர்களால் இழிவாக அழைக்கப்பட்ட மக்கள் இன்று நீதியரசர்களாய், அமைச்சர்களால், துணை வேந்தர்களாய், பேராசிரியர்களாய், மருத்துவர்களாய் உலா வருகிறார்கள் என்றால் அந்தப் பெருமை பெரியார் ஒருவரையே சேரும்.

1967 ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சியைக் கைப்பற்றியது. அறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனார். அப்போது 'திமுக ஆட்சியை பெரியாருக்கு காணிக்கை ஆக்குகிறேன்' என்று சொன்னார். சொன்னதோடு நிற்காமல் அமைச்சர்களை அழைத்துச் சென்று பெரியாரிடம் வாழ்த்தும் பெற்றார்.

பெரியாரையும் அவரது கொள்கைகளையும் செரிக்க முடியாதவர்கள் அவரை ஒரு அதி தீவிரவாதியாக, நாத்தீகனாகப் பார்க்கிறார்கள். ஆனால் தமிழினத்தை பீடித்துள்ள பெருநோய்க்கு தலையிடி மாத்திரை சரிப்பட்டு வராது ஊசிதான் வழி என்பது பெரியாரின் அசைக்க முடியாத நம்பிக்கை.அதனால்தான் பெரியார் பிள்ளையார் சிலைகளை தெருவில் போட்டு உடைத்தார். அறிஞர் அண்ணாவால் கூட அதனை ஒத்துக் கொள்ள முடியவில்லை. 'நாங்கள் பிள்ளையாரையும்உடைக்க மாட்டோம்! பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டோம்!' என்றார்.

பெரியாரின் பிள்ளையார் சிலை உடைப்பு கல்லு கடவுள் என்ற மூடத்தனத்திற்கு எதிரான ஒரு குறியீட்டு எதிர்ப்பு.

பெரியாரின் பிள்ளையார் சிலை உடைப்பு ஒரு நாளில் முடிந்து விட்டது. ஆனால் இன்று இந்த மத பக்தர்களே பிள்ளையார் சிலையை விநாயக சதுர்த்தியன்று கத்தி, கோடரி, வாள்களால் கண்ட துண்டமாக வெட்டிக் கடலில் கரைக்கிறார்கள். இந்த வெறித்தனமான முட்டாள்தனத்தைப் பார்த்து மனம் உடைந்துபோன கே.சி. அனந்த கிருஷ்ணன், கோவையிலிருந்து 'தினமலர்' ஏட்டுக்கு 'பிள்ளையார் உடைப்பு வேண்டாமே!' என்ற தலைப்பில் ஒரு மடல் வரைந்துள்ளார்.

'நான் 73 வயதான மிகவும் ஆசாரமான பிராமணன். நல்ல ஆஸ்திகன். மும்;பையைப் பின்பற்றி நமது தமிழகத்திலும் கடந்த 10 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி மும்பை மாடலில் வெறித்தனமாக நடக்கிறது.

சாஸ்திரங்களுக்கு விரோதமாக விநாயகரைச் சாக்கடை ஓரங்களிலும், சந்துகளிலும் ஆகம விதிகளில் கூறப்பட்ட எல்லா விதிகளையும் மீறி அசுத்தமான இடங்களில் சிலை அமைக்கிறோம்.

இதில் புரளும் பணம் லட்சம் மற்றும் கோடிகளில் மது அருந்தி மாமிசமும் சாப்பிட்டு, ஆவேசத்துடன் ஆடுகின்றனர். இதனால் நிரந்தரமாக உள்ள சிறிய கோயில்கள் மற்றும் அரச மரத்தடி விநாயகர்கள் அனாதையாகி விட்டனர். விநாயகர் சிலை ஊர்வலங்களும், விசர்ஜன விழாவும், விநாயகர் உருவச் சிலைகளைக் காலாலும், கையாலும் ஏறி மிதித்து கழிகளாலும் அடித்து உடைக்கும் அநாகரிகங்களும் அரங்கேறுகின்றன. தேவையா இந்த அசிங்கம்?

மேலும், கொழுக்கட்டை சுண்டல் செய்து படைத்து அதை ஏழை எளியோர்க்கெல்லாம் பிரசாதமாகக் கொடுக்கலாமே! ஈ.வெ.ரா.,வை விடக் கேவலமாக (அவர் 50ம் ஆண்டுகளில் களிமண் பிள்ளையாரை ஒருநாள்தான் உடைத்தார்) நாம் பிள்ளையார் உடைப்பு விழா (போலீஸ் பந்தோபஸ்துடன்) நடக்கிறது. இந்து முன்னணித் தலைவர் ராஜகோபாலன் மனம் வைத்தால் உடனே இதைச் சரி செய்யலாம். வேண்டாம் இந்த ஓட்டு வேட்டை அரசியல்!'


திரு. அனந்த கிருஷ்ணன் சொல்வது போல் இந்து மதத்தில் காணப்படும் மூட பக்தியே நாத்தீகர்களை உருவாக்க உதவுகிறது!

பெரியார் பற்றிக் குறிப்பிட்ட திரு.வி.க. 'பெரியார் இந்நாட்டின் முடிசூடா மன்னர்' என்றார்.

பேரறிஞர் அண்ணா சொன்னார் 'பெரியார் பணி, தற்குறிகள் நிரம்பிய தமிழகத்திலே, கல்வீச்சு மண்வீச்சுக்கிடையே என்பதை அறிய வேண்டும். அதிலும் சகலமும் உணர்ந்த கசலகலா வல்லுனர்களும், வெறும் சாமியாடிகளைக் கூடக் கண்டித்துப் பேசச் சக்தியற்றுக் கிடந்த காலை, பெரியாரின் பெருங்காற்றுத் தமிழகத்திவே வீசி. நச்சுமரங்களை வேரொடு கீழே பெயர்த்தெறிந்தது என்பதையும் உணர வேண்டும். தமிழகத்தின் தன்மானத்திற்கே வித்தூன்றிய தலைவர்.

பெரியார் தமிழினத்தின் இருண்ட வாழ்வில் ஒளி ஏற்றிய முழு நிலா! திசை காட்டும் கலங்கரை விளக்கு! மூடத்தனத்தை சுட்டெரித்த எழு ஞாயிறு! தமிழரின் மீளாத் துயில் நீக்கி அவர்களின் தலை விதியை மாற்றி எழுதிய பகுத்தறிவுப் பகலவன்.

---------- நக்கீரன் - " முழக்கம்" - செப்தெம்பர் 19, 2003

எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும், அது நமது நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரச்சாரம்தான்


எனது 93-வது ஆண்டு பிறந்தநாள் மலருக்கு ஒரு செய்தி வேண்டும் என்று நண்பர் திரு.வீரமணி அவர்கள் கேட்டார். சற்றேறக் குறைய 10 ஆண்டுகளாகவே எனது பிறந்த நாள் மலருக்குச் சேதி கொடுத்துக் கொண்டுதான் வருகிறேன்.

முதலாவதாக எனது பிறந்த நாள் என்பது எனது பிரச்சாரத்திற்கு ஒரு சாதனமாக - ஒரு ஆதாரமாக விளங்குகிறது என்பது ஒரு கல்லுப் போன்ற செய்தியாகும். நான் சமுதாய சமத்துவத்திற்குப் பாடுபடுகின்ற ஒரு தொண்டனாவேன். அதாவது, சாதி அமைப்பை அடியோடு ஒழிக்கப் பாடுபடுபவன். சாதி அமைப்பு என்பது 'கடவுள், மதம்' மற்றும் அவைகள் சம்பந்தமான எதையும் ஒழித்தாக வேண்டும் என்று கருதி அவைகளை ஒழிக்கப் பாடுபடுகிறவன். அதில் எந்த அளவும் மக்களுக்குச் சந்தேகமில்லாமல் நடந்தும் வருகிறேன்.மக்களோ பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் ஆவார்கள். கடவுள் ஒழிப்பு என்பது மக்களுக்கு ஆத்திரத்தையும் கோபத்தையும் உண்டாக்கக் கூடியதாகும். இது மாத்திரமல்ல; நம்மைச் சபிக்கவும் கூடியதாகும். ஆகையால், சபிக்கப்பட்டும் வருகின்றேன். சபிக்கும் மக்களோ கடவுளைச் சர்வசக்தி உடையவர் என்று பலமாக நம்புகின்றவர்கள். அவர்கள் சாபம் பலிக்காவிட்டாலும் கடவுள் என்னைச் சும்மா விட்டுக் கொண்டு இருக்கமாட்டார் என்றும் நம்புகிறவர்கள் ஆவார்கள்.நானோ எனது பிரச்சாரத்தில் கடவுளே இல்லை என்று சொல்லுவதற்காகவே சிறுமைப்படுத்தி, இழிவுபடுத்தி - செய்கையாலும், காட்டிக் கொண்டே, நடந்துகொண்டே வருபவன். இந்த நிலையில் எனது 92-வது வயதில் கடவுள் நம்பிக்கை ஒரு மூடநம்பிக்கையில் பட்டதென்பதை நல்லவண்ணம் மக்களுக்கு விளங்கும்படி, 'கடவுளைச் செருப்பால் அடிக்கும்படி' நான் சொல்லும் அளவுக்கு ஆளாகி இருக்கின்றேன். இந்த நிலையில், எனது 92-வது வாழ்நாள் முடிந்து 93-வது வாழ்நாள் தோன்றி விட்டது என்றால், கடவுள் இருந்தால் இப்படி நடக்குமா? விட்டுக்கொண்டு இருப்பானா? - என்று எந்த, எப்படிப்பட்ட கடவுள் நம்பிக்கை பக்தனும் நினைத்து - அவனுக்கு ஒரு சிறு அறிவிருந்தாலும், 'கடவுளாவது வெங்காயமாவது' என்று கருதி, ஓரளவுக்காவது தெளிவு பெற முடியும் என்பது எனது கருத்து. அதனாலேயே, எனது 93-வது வருஷப் பிறப்பு என்பது எனது பிரச்சாரத்திற்கு ஆதாரம் என்று கருதுகிறேன்.சென்ற எனது 92-ஆம் ஆண்டு மலருக்கு நான் எழுதிய எனது பிறந்த நாள் செய்தியில் 'எனது 91-வது ஆண்டு எனக்கு உற்சாகமாகவே கழிந்தது. மனச் சலிப்பு அடைய வேண்டிய அவசியம் இல்லாமல் இருப்பது மாத்திரம் அல்லாமல், இதுபோல் வாழ்நாள் நீண்டால் மேலும் பல முன்னேற்றகரமான காரியம் செய்ய வாய்ப்பு ஏற்படலாம் என்று தோன்றுகிறது. மற்றும், மக்களிடையில் ஒரு மாறுதலைக் காண்கிறேன். அதுவும் தீவிரமான மாறுதலுக்கு இணங்குபவர்கள் போல மக்களைக் காண்கின்றேன்.கடவுள், மதம், சாதி முதலிய விஷயங்களால், மக்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மாறுதல் அடையப் பக்குவமாய் இருக்கிறார்கள் என்றே காண்கின்றேன். இந்த நிலைதான் எனது உற்சாகத்திற்கும், மேலும் இருந்து தொண்டு செய்யலாம் என்ற நம்பிக்கைக்கும் ஆதரவிற்கும் காரணமாகும்.இந்தப்படி எழுதிய நான், முந்திய ஒரு ஆண்டில் எனக்கு மனச் சலிப்பு ஏற்பட்டு 'நான் ஏன் இருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றிற்று' என்று எழுதிச் சலிப்படைந்து இருக்கின்றேன். இந்தச் சலிப்பைக் கண்டு காலஞ்சென்ற மாண்புமிகு அறிஞர் அண்ணா அவர்களும் திரு.காமராசர் அவர்களும் எனக்கு ஆறுதல் எழுதி உற்சாகமூட்டினார்கள். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியவர்களது ஆட்சி ஏற்பட்டதற்குப் பிறகு தான் நான் உண்மையிலேயே நம்பிக்கையும் உற்சாகமும் அடைந்தேன்.

உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும், அது நமது நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரச்சாரமாகத் தான் முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடம் தான் சாதி ஒழிந்த இடமாகும். இவற்றில் எது மீறி இருந்தாலும் சாதி உண்மையிலேயே ஒழிந்ததாக ஆகாது. ஏன் எனில், சாதி என்பது இந்த நான்கில் இருந்தும் ஆக்கப்பட்டதே ஆகும். இப்போது சொல்லுவேன்; நாகரிகத்திற்காகச் சிலர் சாதி ஒழிய வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால், அவர்கள் மேற்கண்ட நான்கையும் ஒழிக்கத் துணிவு கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களால் நமக்கு ஒரு பயனும் ஏற்படாது. சில சமயங்களில் அவர்கள் நமக்கு எதிரிகளாகவும் ஆகக்கூடும்.

மனிதனை மடையனாக, அடிமையாக ஆக்கப்பட்ட பின்புதான் சாதி புகுத்தப்பட்டதாகும். சுதந்திர உணர்ச்சியும், அறிவும் ஏற்படாமல் சாதியை ஒழிக்க முடியாது. மடமைக்கும் அடிமைத் தன்மைக்கும் ஆக்கம் அளித்துச் சாதியை நிலை நிறுத்துவது தான், சாதியை ஒழியாமல் பாதுகாப்பதுதான் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் என்பவைகளாகும். உண்மையில் சாதி ஒழிய வேண்டும் என்று கருதுபவர்கள், இந்த நான்கு ஒழிப்புக்கும் சம்மதித்தவர்களாகவே தான் இருப்பார்கள். நமது மக்களில் பெரும்பாலோர் இன்று அப்படி ஆகிவிட்டார்கள் என்பது தான் எனது உற்சாகத்திற்கும் காரணமாகும். எதனால் இப்படிச் சொல்கிறேன் என்றால், சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டையும், அதனை அடுத்து நடந்த நமது தி.மு.க. தேர்தலையும் (பொதுத் தேர்தலையும்) கொண்டுதான் இப்படிச் சொல்லுகின்றேன்.அதாவது, 'கடவுளைச் செருப்பால் அடித்ததாக' 10 இலட்சக்கணக்கான பத்திரிகைகள், 10 இலட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள், மாணவர்கள், வக்கீல்கள், அதிகாரிகள், சில பெண்கள் மற்றும் காங்கிரஸ் இயக்கம், சுதந்திரா இயக்கம், ஜனசங்க இயக்கம் முதலிய - சாதித் துவேஷமற்ற தமிழ் உணர்ச்சிக்கு மாறான பல இயக்கங்களும் எதிராகப் பாடுபட்டு - 230 இடங்களில் சுமார் 200 இடங்களுக்கு மேல் (தி.மு.க.) வெற்றி பெற நேர்ந்தது என்றால்,சென்ற ஆண்டு பிறந்த நாள் செய்திக்கு நான் கொண்ட கருத்து - அதன் அளவுக்குமேல் மெய்யாகி வெற்றிபெற்றது என்பது யாருக்கும் விளங்கும். இனி, நமது சாதி ஒழிப்புக்கு மக்களில் யாரும் எதிர்ப்பு இல்லை என்பது உறுதியான செய்தியாகிவிட்டது.

இந்த நிலையில், நான் நமது மக்களை அடி பணிந்து வேண்டிக்கொள்வதெல்லாம் - கோயில்களுக்குப் போகாமல் இருக்கவேண்டும்; உற்சவங்களில் கலவாமல், மதப் பண்டிகைகள் கொண்டாடாமல், நெற்றிக் குறி அணியாமலும் இருக்கவேண்டும் என்பதேயாகும். மற்றும் நான் நினைக்கின்றேன்; அண்மையில் ஒரு மாநாடு கூட்டி, கோயில்களுக்குப் போகிறவர்களை அடிபணிந்து வேண்டிக் கொள்வது மூலம் போகாமல் இருக்கச் செய்யலாமா என்று, யோசனை கேட்டுக் காரியத்தில் தொடரலாமா என்று சிந்திக்கிறேன். இதுதான் எனது 93-வது பிறந்த நாள் விண்ணப்பம்.


---------- தந்தைபெரியார் - 93 -ஆம் பிறந்த நாள் விழா 'விடுதலை' மலர் 17.9.1971

28.5.08

கல்வி பற்றி தந்தைபெரியார்
கல்வி என்பது யாது?

கல்வி என்பது எந்த விஷயத்தையும் புரிந்து கொள்ளும் படியான ஆற்றல் பெறுவதே தவிரக் கற்பித்தவற்றை மனப் பாடம் செய்து ஒப்பிப்பதல்ல.

ஆனால் பலர் கல்வி அதனால் பெறப்பட வேண்டிய அறிவு ஆகியன பற்றி வேறு விதமாகக் கூறுகிறார்கள் போலிருக்கிறதே?

பெரும்பாலும் ஞானம் என்பதும், அறிவு என்பதும் கடவுளைக் காண்பதும், மோட்சத்தை அடைவதுதான் என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணம் குழந்தையிலிருந்தே நம் பிள்ளைகளுக்கு ஊட்டப் பட்டு வருவதால், மேன்மேலும் ஒரு மாணவன் தெளிவற்ற வனாகவே ஆக்கப்படுகிறான்.

நம் மக்களுக்கு அறிவில்லை என்று கூறமுடியுமா? அறிவிருக்கிறது என் றால் அவர்கள் ஏன் முன்னேற வில்லை?

பெரும்பாலான மக்கள் மவுடீகத்திலிருக்கிறார்கள். அறிவு எல்லாருக்கும் இருக்கிறது. பயன்படுத்துகிற விதத் தில்தான் கவலையின்றி இருக் கிறார்கள். இரும்பு போன்றது அறிவு. இரும்பைக் கொண்டு கடப்பாறை, கோடெறி, கம்பி, துப்பாக்கி, பீரங்கி, கத்தி எது வேண்டுமானாலும் செய்யலாம். பயன்படுத்துகிற, செயல் படுத்துகிற விதத்தில்தான் மாற்றம் இருக்கிறது

மக்களின் மவுடீகத்தைப் போக்கிப் பகுத்தறிவு போன்றவற்றை அவர்களுக்கு அளிக்க முடியுமா?

சகலத்திலும் பகுத்தறி வைப் பயன்படுத்தும் துணிவையும், சுதந்திரத்தையும் உண்டாக்கும் கல்வி இங்கு நாத்திக மாகவும், மத விரோதமாகவும், தேசியத்துக்கு விரோதமாகவும் கருதப்படுகிறதே.

தாங்கள் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு முன் நம் நாட்டில் கல்விக் கூடங்கள் பெருகியிருக்கவில்லையா?

முட்டாள்தனமாகக் கோயில் இல்லாத ஊரில் குடி இருக்காதே என்று கூறினார்களே ஒழியக் கல்விச் சாலை இல்லாத ஊரில் குடி இருக்காதே என்று கூறவே இல்லை.
நம் நாட்டுச் செல்வர்கள் இதில் தங்கள் ஆர்வத்தைக் காட்டவில்லையே ஏன்?
பசுவுக்கு மடம் கட்டி வைத்தான். படிக்கப் பள்ளிக் கூடம் கட்டவில்லை. நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் முன்பு சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் கடவுள் கொடுத்தது என்று கூறிக் கோயில் கட்டி வைத்தார்கள்.

நம் இன்றைய தேவை என்று எதைக் கூறலாம்?

இப்போது நமக்கு வேண் டியதெல்லாம் கோயிலில்லை. பள்ளிக் கூடம்தான். 1000 சாமிகள் கூடிக் கூட ஒரு மனிதனின் மயிரைக்கூட அசைக்க முடியாது. அறிவால் பல அதிசய அற்புதங்களைச் செய்யலாம். மேல் நாட்டார் செய்து காட்டுகின்றார்கள். அதனால் அறிவை வளர்ப்பதற்கு அடிப் படையான கல்விக் கூடங்கள் தான் இன்று நமக்கு மிகமிகத் தேவை.

உண்மையிலேயே கல்விக் கூடங்கள் மிகவும் அவசியமானவை என்று தாங்கள் கருதுகிறீர்களா?

எப்படி உடல் நோயை நீக்குவதற்கு மருத்துவம் அவசியமோ அது போல மக்களுக்கு மடமை நோய் நீங்கக் கல்வி ஸ்தாபனங்கள் அவசியம்.

கல்வி கற்பதன் குறிக்கோளாக நாம் எதைக் கருத வேண்டும்?

கல்வியினுடைய குறிக் கோள் என்பது பணம் சம்பாதிப்பது மாத்திரம் என்று நினைக்கக்கூடாது. அறிவை வளர்க்க நமது இழிவையும், முட்டாள் தனத்தையும், மூட நம்பிக்கையையும் ஒழிக்க என்பதாக இருக்க வேண்டும்.

கல்வி பெறுவதில் நம் மக்களுக்கு வேறு ஏதேனும் தடை உண்டா?

படிப்பு நமது நாட்டில் மிகவும் அவசியமாய் இருந்தும் எல்லோரும் சுளுவில் அடை யக் கூடியதாயில்லை. தகுதிக்கு மேலானதும், தாங்க முடியாத பணச் செலவு வைப்பதாயு முள்ளது. அதுவும் விஞ்ஞா னம், அறிவு, தன்மான உணர்ச் சியை பை அளிப்பதாயில் லாவிடில் பயனில்லை. எந்த விதமாயினும் இவைகளைப் பெறத்தக்க கல்வி பயில் வது அவசியம்.

கல்வியின் தேவை பற்றி அய்யா மேலும் ஏதேனும் கூற முடியுமா?

கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம், ஒருவன் தன் வாழ் நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்குத் தகுதிப் படுத்துவது என்பதேயாகும். அல்லது உலகில் நல் வாழ்க்கை வாழத் தகுதியுடைய வனாக்குவது என்பதாகும். அதாவது, ஒவ்வொரு காரியத் துக்கும் மற்றவர்களை எதிர் பார்த்தோ, மற்றவர்கள் ஆதிக் கத்தில் இருந்தோ அல்லது தனக்கு மற்றவர்கள் வழிகாட்டக்கூடிய நிலையிலோ மனிதன் இல்லாமல் சுதந்திரத்தோடு சுய அறிவோடு வாழத் தகுதியுடை யவர்களாக வேண்டும்.

புரட்சிக் கவிஞரும், தந்தை பெரியாரும்

(தஞ்சை தமிழ்ப் பல் கலைக் கழகத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அறக் கட்டளை சார்பில் மொழிப் புலக் கருத்தரங்கக் கூட்டத்தில் நடைபெற்ற பாரதிதாசன் கருத்தரங்கில் தந்தை பெரியாரும் - புரட்சிக் கவிஞரும் எனும் தலைப்பில் துரை சந்திரசேகரன் படித்தளித்த கட்டுரை)

பாரதிதாசன் - இருண்டு கிடந்த தமிழ்நாட்டு இலக்கிய வானில் ஒளிச்சுடர் என இருளைக் கிழித்துக் கொண்டு வெளிக் கிளம்பிய ஞானசூரியன் மருண்டு வாழ்ந்திருந்த தமிழ் மக்களை மடமைகளிலிருந்து வெளிக்கொணர்ந்த விடி வெள்ளி தன்மான உணர்வின்றி தளர்ந்து கிடந்திட்ட தமிழர் தம் நீடு துயில், நீக்கப் பாடிவந்த - நிலா பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைப்போருக்கு சங்காரமே நிசம் என்று போர்ச்சங்கு முழங்கிய புரட்சிப் பாவலர் 'புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்! என்று ஆர்ப்பரித்து போர் முரசு கொட்டிய புதுமைக் கவிஞன்.

'போர் வெறி கொண்டலையும் பேதை உள்ளத்தினர் இன்றைக்கும் இருக்கத்தானே செய்கின்றனர் உலகில்! இன்றைக்கும் தேவைப் படும் கவிஞன் புரட்சிக் கவிஞனே! இவரின் பாடல் வரிகள் உலகினை வழி நடத்தும் ஒப்பற்ற லட்சிய கீதங்கள்! பழைய கால புலவர்கள், பண்டித சிரோன்மணிகள் என்போரின் மரபுகளை உடைத்தெறிந்தவர் பாவேந்தர்

கைலாயம் சேர்ந்து கதி மோட்சம்பெற கடவுளைப் பாடியோர் உண்டு. பொன்னும் பொருளும் பெற மன்னரை வாழ்த்தியோர் உண்டு. பரிசில்கள் பல பெற்று வளத்தோடும் நலத்தோடும் வாழ்வு அமைய வள்ளல்களைப் பாடிப் போற்றியோர் உண்டு.

இப்படி பாரம்பரிய புலவர்களின் குணாம்சத்தை உதறித் தள்ளி மக்களின் அடிமை வாழ்வு அகல - அறியாமைப் பிணி நீங்க அறிவுப்பசி அடங்க - தக்கநெறி, பெரியார் தம் பகுத்தறிவு நெறியே 'சரி" என உணர்ந்து, தேர்ந்து தமது பாட்டுத் திறத்தை வெளிப்படுத்தியவர் பாரதிதாசன்.

சாக வேண்டிய தமிழர் சாகிலர்! வீழவேண்டிய தமிழர் வீழ்கிலர்! வறள வேண்டிய தமிழகம் வறண்டிலது. காரணம் பெரியார் கண்காணிப்பே! என்று பெரியாரை அடையாளப்படுத்தி - மொழி நலன், இன நலன் பேணிடப் பெரியாரை துணை கொள்வீர் என மக்களுக்கு புதுவழி காட்டியவர் புரட்சிக் கவிஞர்.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளரான தந்தை பெரியார் எந்த ஒரு கருத்தை பின்பற்ற வேண்டுமெனிலும், அமைப்பை - தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றாலும், எந்தவொரு லட்சியத்தை ஒழுகிடுவதென்றாலும், அதனை அறிவு - ஆராய்ச்சிக்கு உட்படுத்தி, ஆய்ந்து - தேர்ந்து - தெளிந்த பின்பே, அதாவது சொந்த பகுத்தறிவுக்கு சரி எனப்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டும், பின்பற்றி ஒழுகிடவேண்டும் என்பார்

"அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதற்காகவோ, 2000 ஆண்டுகட்கும் முந்தைய பழைமையானது என்பதற்காகவோ, மகான்களால், மகாத்மாக்களால் பேசப்பட்டது என்பதற்காகவோ, கடவுள்களால் அருளப்பட்டது என்பதற்காகவோ எந்தவொரு கருத்தையும் ஒத்துக்கொள்ளக்கூடாது" என்று பெரியார், பகுத்தறிவின் சிறப்பை வெளிப்படுத்தினார். இக்கருத்தினை அப்படியே வழிமொழிந்து புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதையாக்கிய விதம் நம்மை வியக்க வைக்கிறது.

"பழைய நூற்கள் இப்படிப் பகர்ந்தன என்பதால் எதையும் நம்பி விடாதே! உண்மை என்று நீ ஒப்பிவிடாதே! பெருநாளாகப் பின் பற்றப்படுவது வழக்கமாக இருந்து வருவது எதையும் நீ நம்பி விடாதே! உண்மை என்று நீ ஒப்பிவிடாதே! பெரும்பான்மையினர் பின்பற்றுகின்றனர் இருப்பவர் பலரும் ஏற்றுக்கொண்டனர் என்பதால் எதையும் நீ நம்பிவிடாதே! பின்பற்றுவதால் நன்மையில்லை! ஆண்டில் முதிர்ந்தவர் அழகியர் கற்றவர் இனிய பேச்சாளர் என்பதற்காக எதையும் நம்பிடேல் எதையும் ஒப்பேல்! ஒருவர் சொன்னதை உடன் ஆராய்ந்து பார் அதனை அறிவினாற் சீர்தூக்கிப்பார்! அறிவினை உணர்வினால் ஆய்க! சரி எனில் அதனால் உனக்கும் அனைவருக்கும் நன்மை உண்டெனில் நம்பவேண்டும். அதையே அயராது பின் பற்றி ஒழுகுக!

வள்ளுவப் பெருந்தகையின் வாக்கான, "எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண் பதறிவு! எப்பொருள் எத்தன் மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்னும் குறட்பாக்களுடன் புரட்சிக் கவிஞர் தம் பாடல் வரிகளை பொருத்திப் பார்த்தலும் ஈண்டு சிறப்பே ஆகும்.

மக்களின் சிந்தனையறிவாம் பகுத்தறிவை பயன் படுத்தவொட்டாமல் தடுத்திட்ட சூதுமதியினர் யார்? தமிழர் அறிவை பாழ்படுத்தி மூளைக்கு விலங்கு மாட்டிய கூட்டம் எது? அக்கூட்டத்தின் சூழ்ச்சிக்கான ஆயுதம் எது? ஒடுக்கப்பட்ட மக்களை மூட நம்பிக்கையில் ஆழ்த்திட்ட கற்பனை வடிவம் எது? 'கடவுள்.. கடவுள்...! ஆம்! மூடநம்பிக்கைகளின் தலைமையான மூடநம்பிக்கையே 'கடவுள்'தான் என்பது தந்தை பெரியாரின் கணிப்பு. கடவுள் கொள்கை தகர்க்கப்படும் அன்றேதான் கட்டற்ற சிந்தனையின் பிறப்பிடமாக இருக்கமுடியும் என்றார் பெரியார்!

கடவுள் இல்லை.. இல்லவே இல்லை.. என சாகும்வரை பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்திட்டார் பெரியார்! இல்லை என்போன் நானடா? அந்த தில்லை கண்டு தானடா! தீட்சதரின் சொல்லில் செயலில் - கடவுள் இல்லை என்பேன் நானடா? தில்லை கண்டு தானடா? கடவுள் கடவுள் என்றெதற்கும் கதறுகின்ற மனிதர்காள் கடவுள் என்ற நாம தேயம் கழறிடாத நாளிலும் உடைமை யாவும் பொதுமையாக உலகு நன்று வாழ்ந்த தாம் 'கடையர்" 'செல்வர்" என்ற தொல்லை கடவுள் பேர் இழைத்ததே.

இப்படி பல்வேறு பாக்கள் மூலம் கடவுளை மறுத்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், கடவுள் கொள்கையை உருவாக்கி மக்களின் அறிவு மேம்பாட்டை தடுத்திட்டவர்கள் பார்ப்பனர்களே என்றும் பறைசாற்றி பெரியாரின் கருத்துக்கு வலுவூட்டுவதைப் பாருங்கள்.

தென்கலைப் பார்ப்பான் வடகலைப் பார்ப்பான் சைவப் பார்ப்பான் எப்பார்ப்பாரும் தமிழர் தலை தடவப் பார்ப்பாரே!

பார்ப்பான் பால் படியாதீர் சொற்குக் கீழ்ப் படியாதீர்! உம்மை ஏய்க்கப் பார்ப்பான் தீதுறப் பார்ப்பான் கெடுத்துவிடப் பார்ப்பான் எப்போதும் பார்ப்பான் ஆர்ப்பான் உம் நன்மையிலே ஆர்வமிக உள்ளவன் போல் நம்ப வேண்டாம்..

தமிழர் கடன் பார்ப்பானைத் தரைமட்டம் ஆக்குவதே!

அடடா.. என்ன ஆவேசம்! ஊர்ப்பானை திருடுகின்ற கூட்டத்தை அம் பலப்படுத்துவதில் கவிஞருக்கு எத்துனை ஆர்வம்! பெரியார்தம் ஈரோட்டு கண்ணாடியை அணிந்து சமுதாயத்தைப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே இந்த ஆவேசம் சாத்தியம்!

மதம் யானைக்குப் பிடித்தால் காடே அழியும், மனிதனுக்குப் பிடித்தால் நாடே அழியும் என்பது புதுமொழி அண்மைக் காலமாக இந்திய துணைக் கண்டத்தில் மதம் பீடித்த மனிதர்களின் குருதி வெறியை குவலயமே கண்டு நாணிடவில்லையா? நகைத்திடவில்லையா? ஒரிசாவில் ஸ்டெயின்ஸ் பாதிரியார் எரிக்கப்பட் டதும், கன்னியாஸ்திரிகள் மத்திய பிரதேசத்தில் பாலி யல் பலதாத்காரம் செய் யப்பட்டதும், குஜராத்தில் மதக்கலவரத்தால் குருதிப் புனல் கொந்தளித்ததும் எதனால்? மதத்தினால் தானே!

அதனால்தான் பகுத் தறிவுப் பகலவன் பெரியார் சொன்னார்- "மதம் அற்ற இடத்திலேதான் மனித சமத்துவம் காணமுடியும் என்று! அக்கருத்தை வர வேற்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்-

"மத ஓடத்தில் ஏறிய மாந்தரேபலி
பீடத்திலே சாய்ந்தீரே!"


என்று அன்றே அடையாளப்படுத்தினார் போலும்!

மதம் ஏற்படுத்திய கேடு களில் மிகப்பெரிது ஜாதி, 'ஜாதி என்ற சொல்லே தமிழ்ச்சொல் அல்ல, 'ஜாதி ஆதியில் தமிழனுக்கு இல்லை ஜாதியைப் புகுத்தி மக்கள் ஒற்று மையை சிதைத்தது மதமே! வளர்ந்திட வேண்டிய தமி ழினம் வளராமல்தமக் குள்ளே பேதா பேதம் காட்டி அடித்துக் கொண்டு அவலத்தில் ஆழ்திடுவதற்கு 'ஜாதி தானே காரணம்!

எனவேதான் சிந்தனை யின் ஊற்றான பெரியார், ஜாதி ஒழிப்புப் போராட் டத்தை நடத்திபல்லாயிர வரை சிறை பெரியார் நெறியை பின்தொடர்ந்த பாவேந்தர் பாரதிதாசன்-

இருட்டறையில் உள்ள தடா உலகம்-ஜாதி
இருக்கின்ற தென் பானும் இருக்கின்றானே
மருட்டுகின்ற மதத் தலைவர் வாழ்கின்றாரே
சுருட்டுகிறார் தம் கையில் கிடைத்தவற்றை
சொத்தெல்லாம் தம தென்று சொல்வார்தம்மை
வெறுட்டுவதே பகுத் தறிவு இல்லையாயின்
விடுதலையும் கெடு தலையும் ஒன்றேயாகும்.


என்று ஜாதியை, மதத் தலைவரை, சுரண்டல் காரர்களை சாடினார் நம் அடிமைத்தனம் அகல வேண்டுமாயின் ஜாதி, மதம் ஒழிந்திட வேண்டும் என்றும் அறிவுறுத்துவதை பாருங்கள்.

"சாதிஅற்ற இட மல்லவோ அன்பு வெள் ளம்
அணைகடந்து விளை நிலத்தில் பாயக் கூடும்!
சர்க்கரைப்பந் தலிலே தேன் மாரி பெய்யும்
சாதிவெறி சமய வெறி தலைக விழ்ந்தால்""வென்று சாதிமதம் கான்றுமிழ்ந்தால்
அந்த நொடியே நமது மிடி பறக்கும்


எனப் பாடியவர் பாவேந்தர்.

பகவத்கீதையும், மனுஸ் மிருதியும் மக்களை நான்கு வர்ணத்தவர்களாகவும், பலநூறு கோத்திர குலங்களாகவும் பிரித்துதமிழர் அய்க்கியம் சாத்திய மற்றது என ஆக்கியது

பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர் பிராமணர், தோளில் பிறந்தவர், சத்தி ரியர், இடையில் பிறந்தவர் வைசியர், காலிற் பிறந்த வர்கள் சூத்திரர் என்று நான்கு வர்ணத்தவர்களாக அடையாளப் படுத்தியது டன் வர்ணத்தவர்களுக்கு அப்பாற்பட்ட 'அவர் ணஸ்த்தர்களாக தாழ்த்தப் பட்டவர்களை சுட்டின வேத சாத்திரங்கள் வெகுண்டெழுந்த பெரியார்'சூத்திரன்" என்றால் ஆத்திரங்கொண்டு அடி என சுயமரியாதை உணர்ச்சியை சூடேற்றினார்.

பெரியாரின் தன்மான உணர்வினை உள்வாங்கிக் கொண்ட பாரதிதாசன்

முகத்தில் பிறப்பதும் உண்டோ முட்டாளோ?
தோளிர் பிறப்பார் உண்டோ தொழும்பனே?
இடையிற் பிறப்பார் உண்டோ எருமையே?
காலிற் பிறப்பார் உண்டோ கழுதையே?
நான்முகன் என்பான் உளனோ நாயே?
புளுகடா புகன்றவை எல்லாம் போக்கிலியே!


என்று குமுறும் எரிமலையாய் வெடித்தார்.

உலக அளவிலேயே தந்தை பெரியார் அளவுக்கு பெண்ணுரிமை பற்றி சிந் தித்து தொண்டாற்றி யவர்கள் இல்லை என்பது அண்மைக்கால மதிப்பீடு பெண்கள் உரிமைக்கு பெரிதும் தடையாய் அமைந்திட்ட அடிமைத் தனங்கள் அனைத்தையும் சாடினார் பெரியார்.

பெண்கள் ஆண்களின் போகப் பொருளா?
பிள்ளை பெறும் எந்தி ரமா?
நகை மாட்டும் ஸ்டேண்டா?
வீட்டு சமையல் காரியா?

என்று கேள்விமேல் கேள்வி கேட்டு ஆணின் அனைத்து உரிமைகளும் பெண்களுக்கு உண்டு என சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார் பெண்களே! உங்கள் உரிமைக்கு நீங்களேதான் போராட வேண்டும்.- ஆண்களை நம்பி இருக்கக் கூடாது என்றார் ப+னைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? என்றும் கேட்டார்? பெண்கல்விக்கும், பெண்ணுரிமைக்கும் பெரியார் கொடுத்த குரலின் தாக்கமே பெண்களே மாநாடு கூட்டி 'பெரியார்" எனும் பட்டத்தை பெரியார் ஈ.வெ.ரா அவர்களுக்குக் கொடுக்க வைத்தது.

கோழி குஞ்சு பொரித்தால் -மாடு கன்று போட்டால் ஆடு குட்டி போட்டால் பெண்ணை வரவேற்கும் சமுதாயம், பெண் குழந்தையை மட்டும் வெறுத்து கள்ளிப்பாலும், பச்சை நெல்லும், பாழும் குப்பைத் தொட்டியும் தேடிச் செல்வது சரியா? என்று பெரியார் எழுப்பிய கேள்வியில்தான் எத்தனை நியாயம்!

மண்ணுக்கும் கீழாய் மதித்தீரோ பெண்ணினத்தை
பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில்
மண்ணடிமை தீர்தல் என்பது முயற் கொம்பே!


என்றும்,

அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள்
அழகிய தமிழ்நாட்டின் கண்கள்
நாணமும் அச்சமும் வேண்டுமெனில்
ஆணுக்கும் பெண்ணுக் கும் வேண்டும்


என்றும்

ஆண் உயர் வென்பதும் பெண் உயர்வென்பதும்
நீணிலத் தெங்கனும் இல்லை வாணிகம் செய்யலாம்
பெண்கள்நல் வானூர்தி ஓட்டலாம் பெண்கள்
ஏணை அசைத்தலும் கூடும்-அதை யார் அசைத் தாலுமே ஆடும்


எனவும்

பெண்கட்கு கல்வி வேண்டும்.. ஏனெனில்
உலகத்தைப் புரிந்து கொள்ள
குடும்பத்தை நடத்திட
குழந்தைகளை வளர்த் திட

என்றும்,

பெண்ணுரிமை பற்றிய புரட்சிக் கவிஞர் தம் பாடல்கள் உண்மையிலேயே புரட்சிகரமானவைதான் அந்நாளில்! பிள்ளைப்பேறு என்பதை கட்டுப்படுத்தி குடும்ப நலம், நாட்டு நலம் காக்க வேண்டும்.. பெண்ணடி மைத்தனத்துக்கு துணை சேர்ப்பது பிள்ளைப் பேறே அதனை கட்டுப் படுத்திட அரசே சிந்திக்காத வேளையில் பெரியார் சிந்தித்தார்! பல ஆண்டுகட்கு முன்னரே 'கர்ப்ப ஆட்சி" என்ற நூலினை வெளியிட்டு குடும்பநலம் பேணினார். பெரியார் புரட்சிக் கவிஞர் பெரியாரை அடியொற்றி ஒரு பெண்ணைப் பேசவிடுவதை பாருங்கள்.

'"இருக்கும் பிள்ளைகள் எனக்குப்போதும் அம்மா - என்
கருக்கதவை மூடிவிடுங்கள் அம்மா பெருத்த
வருமானம் எனக்கில்லைஇனிப் பிள்ளைபெறும் வலிவும் உடம்பில் இல்லை
மக்கள் தொகை பெருக் கத்தால் வரும் பஞ்சம் இங்கு
வரும் பஞ்சத்தால் ஒழுக் கக்கேடே மிஞ்சும்...
தோன்றியுள்ள மக்கள் நலம் யாவும் - இங்குத்
தோன்றாத மக்கள் தந்த தாகும்...."


என்ன அற்புதமான சிந்தனை வரிகள்! 5 ஆண்டுகட்கு முன்னமேயே மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரிடம் தனக்கு குடும்பநல அறு வைச் சிகிச்சை செய்யுமாறு தனக்குள்ள நியாயத்தைக் கூறி பேசுவதாக பாவேந்தர் கவிதை ஆக்கிய திறன் முன்னோக்கியச் சிந்தனை யின் வெளிப்பாடே எனலாம்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் அன்னைத் தமிழும் அர்ச்சனை மொழியாக வேண் டும் என்று நீண்ட கால மாக பெரியார் போராடி னார் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு நடத்திகோவில் கருவறை நுழைவுக் கிளர்ச்சியை அறிவித்தார் (தற்போது அரசின் ஆணைப்படி தமிழிலும் அர்ச்சனை செய்யலாம் என்றும், ஆகமக் கல்லூரியில் படித்துத் தேறிய எவரும் அர்ச்சகராகலாம் என்றும் ஆக்கப்பட்டுள்ளது.)

கோயில்களில் சமஸ்கிருதம் தேவையில்லை தாய்த்தமிழிலேயே வழிபாடு நடத்திடலாம் என்பதை பாவேந்தர்-

தெற்கோதும் தேவாரம்
திருவாய் நன்மொழி யான தேனிருக்கச்
செக்காடும் இரைச்ச லென
வேத பாராயண மேன்
திருக்கோயில் பால்?"


என்று கேட்டார்.

மடிகட்டிக் கோயி லிலே
மேலுடையை இடுப் பினிலே
வரிந்து கட்டிப்
பொடிகட்டி இல்லாது
பூசியிருகைகட்டிப்
பார்ப்பானுக்குப்
படிகட்டித் தமிழ ரெனப்
படிக்கட்டின் கீழ் நின்று
தமிழ் மானத்தை
வடிகட்டி அவன் வட சொல்
மண்ணாங்கட்டிக் குவப்பீர்
மந்தரம் என்றே!

வேற்றுவரின் வட மொழியை
வேரறுப்பீர் கோயி லிலே!"

என தமிழ்மக்களுக்கு ஆணையிடுகிறார் புரட்சிக் கவிஞர் தமிழ் வளர்ந் தால்தான் தமிழன் வளரு வான்.. பிறமொழி ஆதிக் கம் தமிழை அழிப்ப தோடுதமிழனையும் அழித்து விடும் அதனால் தமிழரை இப்படி வேண்டுகிறார் பாவேந்தர்.

தமிழனே இது கேளாய் - உன்பால்
சாற்ற நினைத்தேன் பல நாளாய்
கமழும் உன் தமிழினை உயிரென ஓம்பு
காணும் பிற மொழி களோ வெறும் வேம்பு
நமையெல்லாம் வட மொழி க்கிடும் தாம்பு
நம் உரிமைதனைக் கடித்ததப் பாம்பு.


என்று சொல்லிவிட்டு

வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார்
வாழ்வினில் உயர்ந்த பின் தமிழையே பழித்தார்


என இன்றைக்கும் வாழும் சில இனத் துரோ கிகளை அடையாளப் படுத்துகிறார் புரட்சிக் கவிஞர் தாய்மொழிக் கல்வி தமிழ்வழிக் கல்வியே தூய்மையை, நலத்தை, வீரத்தை, இன்பத்தை அளித்திட வல்லது என்பதனையும்,

இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்
துன்பங்கள் நீங்கும் சுகம்வரும் நெஞ்சினில்
தூய்மை உண்டாகி விடும்வீரம் வரும்


என அற்புதமாக வெளிப்படுத்தினார்.

கவிதை உலகில் ஷெல் லியால் பிரிட்டன் பெருமை பெற்றது போல, புஷ்கினால் ருசியா புகழ டைந்து போல, ஹீகோ வால் பிரான்சு வெற்றி யடைந்ததுபோல வால்ட் விட்மனால் அமெரிக்கா சீர் உற்றதுபோல புரட்சிக்கவிஞர் பாரதிதாசனால் நம் நாடும் பெருமை உற்றது.

உலகமானுடம் உய்விக்கவந்த உத்தமக்கவிஞன் பாரதிதாசன் தமிழரும் ஞாலம் முழுவதும் வாழும் மாந்தர்களும் ஏற்றத் தோடும், எழுச்சியோடும் புரட்சி மணங்கமழ வாழ வேண்டும் என்று விரும்பி யவர் அவர் பெரியாரின் கொள்கை மட்டுமே மனித சமுதாயம் மாண்புபெற வழிகாட்டும் கலங்கரை விளக்கு என்பது அவரின் கருத்து.

"தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்
!

என தந்தை பெரியாரை அழகாக தம் கவிதை வரிகளால் படம் பிடித்துக் காட்டியதும் அதனால் அன்றோ! பெரியாரின் மண்டைச் சுரப்பையான அவரின் கொள்கையை இந்த உலகமே ஏற்றுபின் பற்றும் என்பது கவிஞரின் முன்னோக்கிய சிந்தனை!

சாதி, மதம் கடவுள் கருத்துக்களை எதிர்த்துப் பாடியதிலும், பெண் ணடிமை நீக்கி பெண் உரிமைக் கீதங்களை இசைத்ததிலும், தமிழ்தமிழர் எழுச்சிப் பண் பாடியதிலும், தொழி லாளர் துயர் போக்கிட சமத்துவப் பாடல்கள் புனைந்ததிலும் வேதியர்தம் சூதுமதியினைச் சாடிய திலும், சுயமரியாதை உணர்வினை சுடர்விடச் செய்ததிலும் பாரதிதாசனுக்கு அடிப்படையாய் அமைந்தது பெரியாரின் லட்சியங்களே! புதுவையில் பிறந்து சுப்புரத்தினமாய் மலர்ந்துபாரதி தாசனாய் சுடர்முகம் காட்டிய பாவேந்தர் புரட்சிக் கவிஞராய் உலா வர தந்தை பெரியாரின் தத்துவப் பாட்டையே வழியாய் அமைந்தது என்பதை எவர்தான் மறுப்பர்? தந்தை பெரியாரை தத்துவ வழி காட்டியாய் வரித்துக் கொண்டு வலம் வந்த காரணத்தால் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாய் இன்றும் திகழ்கிறார் பெரியார், புரட்சிக்கவிஞர் கொள்கை வழியில் தமிழர் சமுதாயம் விழித்தெழுவ தாகுக.

---- நன்றி: "விடுதலை"

மநுதர்மத்தை பின் தொடர்ந்து செல்லும் பிராமணீயம்

மத உரிமைகளுக்காக. அவற்றை நிறைவேற்றுவதற்காக கன்னியாகுமரி முதல் கராச்சி வரை, அலைந்து.. பல்வேறு மடங்களையும் நேரில் அடைந்து, மடாதிபதிகளையும் மாநாட்டுக்கு அழைத்த கஷ்டமான காரியத்தை விளக்கினேன்.

டெல்லியில் இந்துமகாசபை என்ற இடத்தில் மாநாடு நடந்தது.

யார் யார் கலந்து கொண்டனர்? கல், காடு, மலை, வெயில் என கடந்துபோய் நாங்கள் சந்தித்த பாரதத்தின் நூற்றுக்கணக்கான மடங்களிலிருந்து எவரும் கலந்து கொள்ளவில்லை கராச்சி சிந்துநகர மடப்ரதிநிதியை தவிர.

சின்ன வருத்தம்தான் அதற்காக என்ன செய்வது? பேருக்குக் கூடிய அந்த மாநாட்டில்.

'‘Freedom of religion and maintaining religious institutions " வேண்டும் என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு கலைந்தோம் எங்கே? கலைவதற்குக்கூட ஆட்கள் இல்லை.

இதன் பிறகும் சளைக்காமல் மடங்களுக்கான தனியுரிமை குறித்து..Parliament Bill கொண்டுவர ஏற்பாடு செய்தோம். புது பார்லிமென்ட் வந்த பிறகு அந்த பில்லை யாரும் கண்டு கொள்ளவில்லை.

ஸ்வதந்த்ரம் பெற்று பாகிஸ்தான் - இந்தியா என தேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்தியாவான நமது தேசத்தில் 'All are equal. All religions are equal" என்று பிரகடனப்படுத்தப் பட்டது. அதாவது Secular Srate அரசமைப்பு சாசனம் அறிவித்தது.

அதாவது எத்தனை மதங்கள் எத்தனை தர்மங்களை பின்பற்றினாலும் இந்த தேசத்தின் பொதுதர்மம் All are equal என்பதுதான்.

நமது மதாசாரப்படி தர்மம் எல்லார்க்கும் ஒன்றுதான் அரசனும் தர்மத்துக்கு கட்டுப்பட வேண்டும் ஏன் பகவானேகூட தர்மத்துக்கு, தர்ம நெறிமுறைகளுக்கு எதிராக நடந்தால் பகவானையே தண்டிக்கவும் நமது மதக்கலாச்சாரம் கற்றுத்தருகிறது.

இதனைத்தான் 'தர்மவிகிக்ரமம்" என்கிறோம் அதாவது தர்மம் எல்லார்க்கும் ஒன்றுதான் யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு தண்டனை உண்டு.

இதனை விஸ்தாரமாக விவரிக்கும் ஒரு புராணக் காட்சியைப் பார்க்கலாமா?

இந்த காட்சி நிகழும் இடம் இன்றைய பஞ்சாப் மாநிலத்தில் ஓர் இடம் கதையைப் படிக்கும்போதே அந்த ஊரின் பெயர்க் காரணம் உங்களுக்கு விளங்கும்.

அந்த ஊரில் ஜலந்தர்-பிருந்தா என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். நல்ல கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த இவர்களுடையே ஒரேயொரு விஷயத்தில் மட்டும் கருத்து வேறுபாடு. என்ன விஷயத்தில் என்றால் கடவுள் விஷயத்தில்.

அப்படி என்ன கருத்து வேறுபாடு? பிருந்தா விஷ்ணுவை தவிர வேறு கடவுளே இல்லை என்னும் அளவுக்கு விஷ்ணு பக்தை. அவளது ஆம்படையான் ஜலந்தருக்கோ சிவன் மீது அபார நாட்டம்.

இந்த விசித்திரமான விஷயத்தை கேள்விப்பட்ட நாரதர், அந்த குடும்பத்தில் சிறிது விளையாடிப் பார்க்க நினைத்தார்.

ஒருநாள் ஜலந்தர் தனியாக இருக்கும்போது அவனை சந்தித்தார்.

என்ன ஜலந்தர்?.. நீயோ சிவனை வழிபாடு செய்கிறாய். உன் மனைவியோ விஷ்ணுவை வழிபடுகிறாள். நீ பின்பற்றும் சிவபக்தியால் சிவனுடைய மனைவி பார்வதி தேவியையே நீ அடையலாமே? எதற்கு இந்த பிருந்தாவுடன் போராடிக் கொண்டிருக்கிறாய்? இந்த பிருந்தாவை விட அந்த பார்வதி எவ்வளவு அழகு தெரியுமோ? என ஜலந்தரின் மனதில் பற்றவைத்து விடுகிறார் நாரதர்.

உடனே ஜலந்தரும்.. 'நான் பார்வதி தேவியை அடையமுடியுமா?’...எப்படி? என கேட்கிறான்.

அதற்கு நாரதரே யோசனையும் கொடுக்கிறார்.

சிவனுக்கு சாமவேதம் என்றால் உயிர் எங்கே சாமவேதம் ஒலித்தாலும் மயங்கி அந்தப் பக்கம் போய்விடுவார் நீ என்ன பண்ணு.. சாமவேதம் பாராயணம் செய்பவர்களை பிடித்து நல்ல சத்தமாக சாமவேதம் ஒலிக்கச் செய்.

அதனைக் கேட்டு சிவபெருமான் மயங்கியிருக்கும் வேளையில் கைலாயத்துக்கு சென்று காரியத்தை முடித்துவிடு சிந்திக்கத் தெரியாத ஜடமாகிவிட்ட ஜலந்தரும் நாரதரின் கலகயோசனையை காதுகொடுத்து கேட்டபின்,

அப்படியே.. சாமகானம் பாட ஏற்பாடு பண்ணினான் இதைக் கேட்டு சிவன் லயித்திருக்க.. அவர் இல்லாத நேரமாய்ப் பார்த்து கைலாயத்துக்குள் காலடி எடுத்து வைத்தான் அங்கே பார்வதி தேவி தனிமை அழகில் தத்தளித்துக் கொண்டிருக்க, நாரதர் கொடுத்த யோசனைப்படி பார்வதியை போய் கட்டிப்பிடித்து விட்டான் ஜலந்தர், பார்வதி.. தன் மேல் சிவன் அல்லாத ஒருவன் சில்மிஷம் செய்கிறான் என்பதை அறிந்து 'ஸ்வாமீ என ஏழுகடல் கொந்தளிக்க கத்துகிறாள் கைலாயத்தில் இப்படி...

ஜலந்தரின் வீட்டுத்தோட்டத்தில்? கணவனைக் காணாது மனைவி பிருந்தா தனித்துத் தவித்திருக்கிறாள் தனது பரம தெய்வமான விஷ்ணுவிடம் தன் கணவன் எங்கே என வேண்டுகிறாள்.

இதைப் பார்த்த விஷ்ணு.. 'நமது பக்தைக்கு நாம் ஏன் சந்தோஷம் தரக்கூடாது? தன் கணவனை காணோமே என பாவம் தேடிக்கொண்டிருக்கிறாள் நாமே ஜலந்தராக உருவெடுத்து அவனை மகிழ்ச்சிப்படுத்துவோம் என முடிவெடுத்து.. கணவன் ஜலந்தர் போலவே உருவம் எடுத்து பிருந்தாவை நெருங்கினார் விஷ்ணு.

'ஆஹா.. என் கணவர் வந்துவிட்டார் என சந்தோஷம் பொங்கிய பிருந்தா.. தன் கணவர் ரூபத்தில் வந்திருந்த விஷ்ணுவை கட்டிப்பிடித்துக் கொண்டாடினாள் இருவரும் தோட்டத்தில் ரொம்ப இஷ்டமாக இழைந்து கொண்டிருக்கும் நேரத்தில்...

'நெருக்கமாக இருக்கும் அவர்களுக்கு நெருக்கமாக வந்து பொத்’தென வந்து விழுந்தது ஒரு தலை ரத்தம் கொட்ட கழுத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட அந்தத்தலை, ஜலந்தரின் தலை.

ஆமாம்.. சாமவேதத்தில் சிவனை மயக்கிய ஜலந்தர்.. பார்வதியை கட்டிப் பிடிக்க இதனால் பார்வதி ஏழுகடல் அதிர சத்தம் போட்டாள் இல்லையா? வேதத்தின் மயக்கத்தை.. பார்வதியின் கூக்குரல் கலைக்க, ஓடிப்போய் பார்த்தார் சிவன் தன் மனைவியை இன்னொருவன் பலாத்காரப்படுத்துவதா?.. என ஜலந்தரின் தலையை சீவியெறிந்தார்.

அந்த ஜலந்தரின் தலைதான்.. பிருந்தாவும் ஜலந்தர் போல் ரூபம் எடுத்து வந்த விஷ்ணுவும் இழைந்து கொண்டிருந்தபோது இடையில் வந்து விழுந்தது.

பார்த்தாள் பிருந்தா.. உடலோடு விழுந்தவன் கணவனா? இல்லை தலைமட்டும் விழுந்தவன் கணவனா? சந்தேகம் அதிகரிக்க...

அப்போது திடுக்கென உடலோடு கூடிய ஜலந்தர் மறைந்து விஷ்ணுவாகிறார் 'நான்தான் பக்தையே... என அறிமுகம் கொடுக்கிறார்.

இதைக்கேட்டு பொங்கியெழுந்த பிருந்தா...’அடப்பாவி.. பக்தையை இப்படி பண்ணிவிட்டாயே? என் கணவன் ரூபத்தில் வர நீ யார்? தவறு செய்துவிட்டாய் பகவானாக இருந்தாலும் தவறு தவறுதான் உனக்கு சாபமிடுகிறேன் கடவுளாக இருந்தாலும் நீ கல்லாய் போவாயாக பிருந்தாவின் சாபம்தான் பகவானை சாலக்ராமம் என்ற சிலையாக்கிவிட்டது என்பது புராணம்.

அதாவது கடவுளே தர்மத்தை மீறி தவறு செய்திருந்தாலும் தண்டனை உண்டு என்பதுதான் இக்கதை சொல்லும் நீதி.

இப்போது நம் தேசத்தில் சட்ட பூர்வமாக தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது.

ஆனால் ஆகமரீதியாக இன்னும் இது உயிர் வாழ்ந்து வருகிறது.

ப்ராமண்யத்தின்படி பிராமணன்தான் தெய்வம். இது இப்போதைய நமது தேச தர்மத்துக்கு முரணானது If you follow Bhraminism, there is Sutra and Punchamas. So according to constituion Brahminsm is antistate .

அதனால்.. மநுதர்மத்தை பின் தொடர்ந்து செல்லும் பிராமணீயம் (நன்றாக புரிந்து கொள்ளவேண்டும் நான் சொல்வது கொள்கை தத்துவத்தை மட்டும்) என்பது நமது அரசியல் தர்மத்துக்கு அப்பாற்பட்டது.

---------- அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார் - நூல்: "இந்து மதம் எங்கே போகிறது?"
---------- நன்றி : "நக்கீரன்" - 30.11.2005

பகுத்தறிவுவாதியின் கொள்கை


பேய் இருக்கிறது என்பது எவ்வளவு பொய் சங்கதியோ அவ்வளவு பொய் சங்கதி கடவுள் இருக்கிறது என்பதும் தேவர்கள் என்பதும் பெரும் பொய்யேயாகும். மேல் உலகம் என்பதும் மகா மகா பொய்யேயாகும்.

ஏனெனில் இந்த உலகத்தில் இருந்து ஆகாய மார்க்கத்தில் சுமார் மூன்று கோடி மைல் தூரத்தில் சூரியன் இருக்கிறது. அதுவரை தூரதிருஷ்டிக் கண்ணாடியால் ஆகாயம் பார்க்கப்பட்டாகி விட்டது. எங்கேயும் உஷ்ணம் தவிர எந்த உலகமும் தென்படவில்லை. இது வான சாஸ்திரிகள் கண்டுபிடித்த செய்தி. இராட்சதர் என்பதும் சுத்தப் பொய். ஏனென்றால் இராட்சதர், அசுரர் என்போர் எல்லாம் இந்த பூமியில் இருந்ததாகத்தான் சொல்லப்படுகிறது. இதற்கு பாட்டி கதைகளை, புராணங்களைத் தவிர எந்த ஆதாரமும் இன்னமும் இல்லை. இவர்கள் கடவுள்களுக்கு எதிரிகளுக்கு இருந்து கொல்லப்பட்டார்கள் என்றால் `கடவுளுக்கு' எதிரி இருக்க முடியுமா?

ஜோசியம் என்பதும் பெரும் பொய், வெறும் ஏமாற்றுதலே ஆகும்.இராகு, காலம், குளிகை, எமகண்டம், நல்ல நேரம், கெட்ட நேரம் எல்லாம் பொய், பட்சி சாஸ்திரமும் பச்சைப் பொய்; நட்சத்திரப்பலன், கிரகப் பலன், வாரப் பலன், மாதப்பலன், வருடப்பலன் என்பவை யாவும் பொய். பல்லி விஷம் பலன், கனவு காணும் பலன், தும்மல் பலன் எல்லாம் பொய், கழுதை கத்துதல், ஆந்தை அலறுதல், காக்கை கரைதல், நாய் ஊளையிடுதல் ஆகியவற்றிற்கு பலன் என்பதெல்லாம் பொய். மந்திரம், மந்திரத்தால் அற்புதம் செய்தல் முதலிய எல்லாம் சுத்த பித்தலாட்டம் பொய். ``தெரியாத புரியாத கடவுளை மனிதன் நம்பித்தான் ஆக வேண்டும்'' என்பதான கட்டாயம் ஏற்பட்டு, மனிதன் நம்ப ஆரம்பித்ததன் பலனே இவ்வளவு பொய்களையும் மனிதன் நம்ப வேண்டியவனாகி விட்டான். நம்பினதன் பலனாக பலன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலைப்படாமல் அவற்றிற்குத் தன்னைச் சரிப்படுத்திக் கொள்ளுகிறான். பஞ்சேந்திரியங்களுக்குத் தட்டுப்படாத விஷயம், பொருள், நடப்பு எதுவானாலும் அது பொய். இதுதான் பகுத்தறிவுவாதியின் கொள்கை.-------------------தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம் - "விடுதலை", 9.2.1970

27.5.08

மக்களை ஏய்த்துவிட்டான் கம்பன்


திருவள்ளுவர் படத்தைத் திறக்க
தந்தை பெரியார் கூறிய இலக்கணம்


ஈரோடில் 1948 இல் நடைபெற்ற திராவிடர் கழக 19 ஆவது மாநாட்டில் திரு.வி.க. தலைமையில் தந்தை பெரியார் அவர்கள் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைத்து திருக்குறள்பற்றி அரிய உரை ஆற்றினார்.

திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைப்பதற்கு இலக்கணம் வகுத்துக் கூறிப் பேசிய பேச்சின் சிறு பகுதி:

"உண்மையாகவே ஒரு உணர்ச்சியுடன் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைப்பதாயிருந்தால், முதலில் கம்பனுடைய படம் ஒன்றைக் கொளுத்திச் சாம்பலாக்கிவிட்டுப் பிறகுதான் திருவள்ளுவரைப்பற்றிப் பேசத் தொடங்கவேண்டும். திருவள்ளு வருடைய கொள்கைகளையும், அவருடைய பாட்டின் அருமையை யும் அவற்றால் திராவிட நாடு பெற்றிருக்கவேண்டிய பலனையும் கம்பனது ராமாயணம் அடியோடு கெடுத்துவிட்டது. பார்ப்பன சூழ்ச்சிக்குப் பலியான கம்பனால் இந்நாட்டில் நிலவியிருந்த திராவிட கலாசாரமே பாழாக்கப்பட்டுப் போய்விட்டது. ஆரியப் பண்புகளையும், ஆரிய நடைமுறைகளையும் போற்றிப் புகழ்ந்து அவற்றை திராவிட மக்கள் ஏற்கும்படி அழகுற தமிழில் பாடி மக்களை ஏய்த்துவிட்டான் கம்பன்."

("விடுதலை", 5.11.1948)

முதல் பெண்ணியவாதிஇன்றைய பெண்கள் ரொம்பவே கொடுத்து வைத்தவர்கள்! நல்ல வாய்ப்புகள், வசதிகள், உரிமைகள், சமூக அந்தஸ்து என்று ஓரளவுக்கு மேன்மையாகவே இருக்கிறது. அவர்கள் வாழ்க்கை தரம். ஆனால், இந்த வளம் எல்லாம் ஆகாயத்திலிருந்து தானாய் வந்துக் குதித்துவிடவில்லை. எத்தனையோ மனிதர்களின் தொடர் போராட்டம் மற்றும் பிரச்சாரத்தின் விளைவாய்தான் இன்றைய பெண்கள் கொஞ்சமேனும் தன்மானத்தோடு இருக்கமுடிகிறது.
இப்படிப் பெண்களுக்காகப் போராடியவர்களில் பல பேர் பெண்கள். இவர்கள் தங்களுக்காகத் தாங்களே குரல் கொடுத்துக்கொண்டவர்கள். ஆனால், தனக்காக என்று இல்லாமல், தான் ஒரு ஆணாக இருந்தபோதும் மிகத்தீவிரமாக பெண்களின் உரிமைக்காகப் போராடிய ஒருவர் இருக்கிறார். அவர் தான் ராமசாமி!


ஆனால், ராமசாமி என்றால் யார் என்று இன்று யாருக்கும் தெரிவதில்லை. சாதாரண மனிதர்களைத் தான் இயற்பெயரால் அழைப்போம். செயற்கரிய செய்த பெரும் மனிதர்களை பிரத்தியேகச் சிறப்புப் பெயரால் தானே அழைப்போம். இப்படிச் சிறப்புப் பெயர் பயன்படுத்தியே பழகிவிட்டால் காலப்போக்கில் அன்னாரின் இயற்பெயரே மறந்துபோய், சிறப்புப் பெயரே நிரந்தரமாகி விடுகிறது. திருவாளர் ராமசாமியும் அப்படிப்பட்ட மகான் தான்! இயற்பெயரே மறந்துபோகும் அளவிற்குப் பிரசித்தமான அவரது சிறப்புப் பெயர் தான் தந்தை பெரியார்!
யோசித்துப் பார்த்தால், புத்தர், கிறிஸ்து, நபி, மஹாத்மா என்ற வரிசையில் தனக்கென்று ஒரு நிரந்தரச் சிறப்பு பெயர் பெற்றவர் பட்டியலில் தந்தை பெரியாரும் ஒருவர். மற்ற நால்வரை விட பெரியார் வித்தியாசமானவர், அவர்கள் எல்லாம் கடவுளின் பெயரால் பணியாற்றியவர்கள்; பெரியாரோ கடவுளே இல்லை என்று பகிரங்கமாய்ப் பிரச்சாரம் செய்ததற்காகப் பிரசித்திபெற்றவர். ஆனால், இந்தப் பெரியார் என்னும் மாமனிதனின் பாடல் பெறாத இன்னொரு முகம் ஒன்று உண்டு. இவர் தான் இந்தியாவின் முதலும், மிக மும்முரமுமான பெண்ணியவாதி.


இன்று ஆணுக்குப் பெண் சமம் என்பது எல்லாராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு சமூகக் கருத்து. இன்றைய பெண் ஆணுக்கு அடிமை இல்லை. அவளுக்குஆணைப் போலவே எல்லா சுதந்திரமும் உண்டு தான். இந்தப் பெண் விடுதலை எல்லாம் சென்ற நூற்றாண்டில் பெரியார் முன்பு நடத்திய பெரும் போராட்டத்தின் நேரடி விளைவு தான். கடந்த காலத்தின் கேவலங்களை ஒரு முறை நினைவு கூர்ந்தால்....அந்தக் காலத்தில் பெண்கள் பூப்பெய்வதற்கு முன்பே பால்லிய விவாகம் செய்யப் பட்டுவிடுவார்கள். இந்தக் குட்டி மாட்டுப்பெண்ணின் குட்டிக்கணவன், பாம்பு கடித்தோ, காலரா தாக்கியோ, வேறு எப்படியோ அற்ப ஆயுளில் மாண்டுபோனான் என்றால், இந்தக் குட்டி விதவைக்கு எல்லாச் சம்பிரதாயங்களையும் செய்வித்து, அவளை அமங்கலி ஆக்கி, முடிந்தால் உடன் கட்டை ஏற்றி, கணவனின் சிதையில் தள்ளிவிடுவார்கள். அப்படி இல்லை என்றால், அந்தக் குட்டிப்பெண் தன் மீத ஜீவனத்தை முழுப் பிரம்மச்சரியத்தில் கழித்திட வேண்டியது தான். இந்தக் குட்டிப் பெண்ணுக்கு மறு வாழ்வு, அடுத்த திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பெண்களின் உரிமை என்ற ஒன்றே அபச்சாரமான சொல்லாகத்தான் கருதப்பட்ட்து. அமங்கலியான பெண்ணின் கதி தான் இவ்வளவு மோசம் என்று பார்த்தால், சுமங்கலியாக இருந்த பெண்ணின் நிலையும் மட்டமாகவே இருந்தது. அந்தக் காலத்துப் பெண்களுக்கு எத்தனையோ தடைகள் இருந்தன. அவர்கள் தனியே வெளியே செல்லக்கூடாது; கல்விகற்கக்கூடாது; வேலைக்குப் போக முடியாது; சுயமாய்ச் சம்பாதிக்க முடியாது; சொத்துரிமை கிடையாது; சுயசம்பாதியத்திற்கு வழி இல்லை; சுயமாய் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் கிடையாது. ஆக அவளுக்கு என்று எந்தச் சுதந்திரமும் கிடையாது. அவள் ஒரு தனிப் பிரஜையாகவே கருதப்படவில்லை. அவளின் அடையாளம் அப்பா, அண்ணன், கணவன், மகன், என்று ஒரு ஆணின் அடையாளத்தோடே எப்போதும் பிணைக்கப்பட்டிருந்தது... காரணம், பெண்கள் எல்லாம் பலவீனமானவர்கள்; அதனால் அவர்களுக்கு ஒரு ஆணின் பாதுகாப்பு எப்போதுமே அவசியம் என்கிற நம்பிக்கை இருந்து வந்தது.அந்தக் காலத்து ஆண்களும் பெண்களைப் பற்றிப் பெரிதும் யோசிக்கவே இல்லை. உண்மையை சொல்லப்போனால், பெண்கள் இப்படி இழி நிலையில் இருப்பது தான் நம் கலாச்சார - பாரம்பரியம் என்று பெருமைப்பட்டுக்கொண்டார்கள். பால்லிய விவாகம் தான் சரி; அப்போது தான் பெண்ணின் கற்பு 100 சதவீதம் தூய்மையாய் இருக்கும் என்று பாலகங்காதர திலகரைப் போன்ற தேசதலைவர்களும் நினைத்தார்கள். ஆனால், பெரியார் ரொம்பவே வித்தியமான மனிதர். மதமெனும் மாயவலையில் மாட்டிக்கொள்ளாத சுயசிந்தனையாளர் அவர். புதிதாய் யோசிக்கத் தெரிந்த புரட்சியாளர் என்பதனால், ஜாதி, மதம், நிறம், பாலினம், போன்ற மாயைகளை எல்லாம் தாண்டி முதிர்ந்த பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட ஞானி அவர். என்னதான் வைணவச் சடங்குகள் வழிந்த குடும்பத்தை சேர்ந்ததவராய் இருந்தாலும், வாய் கிழிய சர்வம் பிரம்ம மயம் என்று அத்வைதத் தத்துவம் பேசிவிட்டு, அதே வாயால் ஜாதியின் பெயரால் பாரபட்சம் பேசும் பச்சோந்தித்தனத்தை சிறு வயதிலேயே சகித்துக்கொள்ள முடியாதவர் பெரியார்.

ஒரு சராசரி மனிதன் ஆகாயத்தில் பறக்கும் கலனை கற்பனை கூடச் செய்யமுடியாத காலத்திலேயே, ஹெலிகாப்டரை கண்டுபிடித்த லியோனார்டோ டாவின்சியைப் போல, பெரியாரும், தம் காலத்தை மீறி யோசிக்கும் தீர்க்கசிந்தனையாளராக இருந்தார். ஒரு சமூக விஞ்ஞானியாய், தம் சமகாலத்தவர் சிந்தித்துக்கூடப் பார்க்க முடியாத பல புதுமையான வாழ்க்கை முறைகளை முன்வைத்தார். பெண், இயற்கையிலேயே ஆணின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவள் தான் என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருந்த காலத்திலேயே, பெண் எல்லா விதத்திலும் ஆணுக்குச் சரி நிகர் சமானம் என்று முதன் முதலில் பெண்ணியம் பேசியவரே தந்தை பெரியார் தான். இந்த மகளிர் சமத்துவத்திற்காகப் பல நூதனப் போராடங்களை மேற்கொண்டு, சமூக அமைப்புகளை எதிர்த்துத் தாக்கினார். அவர் காலத்தில் பெண் என்றால், அவள் உடல் அழகு, பிள்ளை பெறும் தன்மை, பணிவு, சமையல் திறன், கற்பு, ஆகியவையே போற்றுதலுக்கு உகந்தவை எனக் கருதப்பட்டன. பெரியார் இந்தப் பட்டியலில் இருந்த எல்லாவற்றையும் சாடினார்.

ஆணுக்குப் பெண் சமம் என்ற பின், பெண் மட்டும் தன் உடலை அழகுப்படுத்திக் காட்டி ஆணின் அங்கீகாரத்திற்குக் காத்திருக்க வேண்டியதில்லையே. எப்படி ஆண்கள் ஒரு காலத்தில் தாங்கள் அணிந்திருந்த கடுக்கன், குண்டலம், ஆகியவற்றைக் கழற்றிவிட்டு, குடுமிகளை வெட்டிக்கொண்டு, திலகம் அணிவதை நிறுத்திக்கொண்டு, இதற்காகச் செலவிட்ட காலத்தை உருப்படியாக உபயோகிக்கிறார்களோ, அது போலவே பெண்களும் ஒப்பனைக்காகச் செலவிடும் நேரத்தைக் கொஞசம் பிரயோஜனமாக பயன்படுத்தினால் மேல். உடை, ஒப்பனை, ஜடை, அலங்காரம் போன்ற வெட்டி வேலைகளில் செலவிடும் நேரத்தைத் தங்கள் அறிவை மேம்படுத்தப் பயன்படுத்தினால் தான் பெண்கள் முன்னேற முடியும் என்றார் பெரியார். அதனால், ஆண்கள் அணிகளைத் துறந்ததைப் போலவே பெண்களும் செய்ய வேண்டும், முழம் முழமாய், புடவையைச் சுற்றிக்கொண்டு தலைப்பு சரியாக இருக்கிறதா, கொசுவம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்ப்பதிலேயே நேரத்தை வீணடிப்பதை விட, பெண்கள் எல்லாம், ஆண்களைப் போல, மேலை நாட்டுப்பெண்களைப் போல, பேண்ட்-சட்டை அணிந்துகொண்டு, முடியை வசதியாக கிராப்பு வெட்டிக்கொண்டு, பொட்டு வைக்கும் வெற்து வழக்கத்தை விடுத்து நிம்மதியாக இருக்கலாமே! என்று அறிவுரை சொன்னார் பெரியார்.

பெரியார் பல வெளி நாடுகளுக்கெல்லாம் போய், அங்குள்ள மனிதர்கள் வாழும் விதத்தைப் பரிசீலனை செய்து பார்த்து, எது முன்னேற்றத்திற்கு உகந்தது என்று சீர்தூக்கிப்பார்த்தவர். வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த பெண்கள் குட்டி முடியும், இலகு உடைகளையும் அணிவதனால், சவுகரியமாக உணர்வதைக் கவனித்த பெரியார், தன் துணைவி நாகம்மையையும் அவ்வாறே உடை அணிய சிபாரிசு செய்தார். 1930களிலேயே பழையன கழித்து, பிரயோஜனமான புதுமைகளை ஸ்வீகரித்துக் கொள்வதில் ஆர்வமுள்ள முற்போக்குச் சிந்தனையுள்ளவர் பெரியார். இது போலவே பிள்ளைப்பேறு பற்றியும், கீழ்படிதலைப் பற்றியும் பெரியார் மாறுபட்ட கருதுக்களை கொண்டிருந்தார். அவர் பெண்களை வெறும் குட்டிபோடும் இயந்திரங்களாகப் பார்க்கவில்லை, அவர்களை அறிவாளிகளாக பார்க்கவிரும்பினார். அதனால், ஆண்களைப் போலவே பெண்களும் நன்றாகப் படிக்கவேண்டும் என்று ஊக்குவித்தார். இது பற்றி பெண் ஏன் அடிமையானாள்? என்கிற அவருடைய புத்தகத்தில், பெண்ணின் அறியாமை தான் அவளை அடிமைபடுத்துகிறது, ஆனால், அறிவு அவளைச் சுதந்திரப்படுத்தும். அதனால், பெண்களை கல்வி பெற்று, பகுத்தறிவோடு வாழ்வேண்டும் என்றார். பெண் என்பவள் அடக்க ஒடுக்கமாய் இருக்க வேண்டியவள் என்கிற போன தலமுறை எதிர்பார்ப்பை எல்லாம் ஏளனம் செய்தார் பெரியார். தன்னம்பிக்கை இல்லாத கோழைதான் பெண்ணை அடக்கி தன் வீரத்தைக் காட்டிக்கொள்ள முயல்வான், மற்றபடி நிஜமான வீர ஆண்மகன், பெண்களிடம் கரிசனத்தோடு தான் நடந்து கொள்வான் என்றார்.


பெண்கள் சமையல் அறையிலேயே முடங்கிக் கிடப்பதைப் பற்றியும் பெரியாரிடம் எதிர்ப்பு இருந்தது. பெண்கள் அடுப்பூதிக்கொண்டு, சதா சமையலே கதி என்று இருப்பதனால்தான் அவர்களது அறிவை உபயோகமாகப் பயன்படுத்த முடியாமல் போகிறது. அப்படி இல்லாமல், உணவுக்காக என்று தனி மையங்கள் அமைத்து, அங்கிருந்தே எல்லோருக்கும் உணவு வழங்க ஏற்பாடு செய்துவிட்டால், சமையல் எனும் செக்கிலிருந்து விடுபட்டு, பெண்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்குமே என்று யோசனை தந்தார் தந்தை பெரியார்.
தமிழ்ப் பெண்களின் உச்சக்கட்ட உணர்வான கற்பைப் பற்றியும் பெரியார் தெளிவான கருத்துக்களைக் கொண்டிருந்தார். கற்பு நெறி என்பதெல்லாம், பெண்களை காலாகாலத்திற்கும் ஆணின் அடிமைகளாக்கும் பெரிய சதி. இந்தக் குறுகிய வட்டத்தை விட்டு பெண்கள் வெளியேறி சுயமரியாதையுடன் வாழவேண்டும் என்றார் பெரியார். இதற்காக சுயமரியாதைத் திருமணங்களைத் தோற்றுவித்தார். சாதாரணத் திருமணங்களில், பெண் வெறும் ஒரு பொருள் மாதிரி தகப்பனால் கன்னிகாதானம் செய்து தரப்பட்டு, கணவனிடம் ஒப்படைக்கப்படுவாள். ஆணுக்குப் பெண் சமம் என்ற நிலை வந்த பிறகு, பெண்ணைத் தொடர்ந்து ஏன் ஒரு பொருளாகவே நடத்தவேண்டும்? தனக்குப் பிடித்த துணைவனை தானே தேர்ந்தெடுக்கும் உரிமை அவளுக்கு இருக்க வேண்டுமே. அத்தோடு, அவளைத் தானமாக தருவதெல்லாம், பெண்ணை அவமானப்படுத்தும் செயல் என்பதால், ஆணும் பெண்ணும் சரி நிகராய் சம உரிமையுடன் ஒருவரை மற்றவர் இல்வாழ்க்கைத் துணையாய் ஒப்பந்தம் செய்து-கொள்ளும் ஒரு கவுரவமான, கண்ணியமான, நவீன திருமணத்தை அறிமுகப்படுத்தினார் பெரியார். இந்த முறையில் ஆணும் பெண்ணும் தங்கள் சுய கவுரவத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடிந்ததால், இது சுயமரியாதைத் திருமணம் என்று பிரபலமானது. ஒன்றும் புரியாத, எப்படியும் பின் பற்றாத வேதங்களை எல்லாம் ஓதிக்கொண்டிருக்காமல், சுயமரியாதை முறையில் சமகாலமொழியில், எல்லோருக்கும் புரியும் விதத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டு இல்வாழ்க்கையில் இணைந்-தவர்கள் பலர். இன்று வரை தமிழ்ப் படங்கள் எல்லாம் தாலி செண்டிமெண்டைப் பற்றி ஆஹா-ஓஹோ என்று பிதற்றிக்கொண்டிருக்க, அன்றே பெரியார்: கால் நடைகளுக்குத் தான் ஓடிவிடக்கூடாதென்று ஒரு மூக்கனாங்கயிறு கட்டுவார்கள், பெண் என்ன விலங்கா? அவளுக்கு எதற்கு ஒரு கழுத்துக் கயிறு என்றார். அப்படியே கயிர் கட்டித்தான் ஆகவேண்டும் என்றால், ஆணும் பெண்ணும் சமம் ஆகிவிட்ட காரணத்தினால், பெண்ணுக்கு ஆண் தாலி கட்டுவதைப் போல, ஆணுக்கும் பெண் தாலி கட்டலாம், அல்லது, இருவருமே, தாலி கட்டும் அபத்தச் சடங்கைக் கைவிடலாம், என்றார்.

தாலி இன்றி, வேத மந்திரங்கள் இன்றி, திருமணம் செய்தால் அமங்கலம் ஆகிவிடுமோ என்று பயந்தவர்க்கெல்லாம் சீதையையும், தமயந்தியையும், பாஞ்சாலியையும் உதாரணமாய்க் காட்டினார் பெரியார். இந்தப் பெண்கள் எல்லாம் சாஸ்திரச் சம்பிரதாயப்படி மணம் முடித்தவர்கள் தாம். ஆனால், அவர்கள் திருமணம் செழித்துவிடவில்லையே!. இந்தச் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப் படி செல்லுபடியாகுமா என்ற சிக்கலும் இருந்தது. ஆனால், அறிஞர் அண்ணா தமிழ்நாடு முதல் அமைச்சரானதும் முதல் வேலையாக இந்தச் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கிவிட்டதால், பெரியாரின் இந்த நவீனத் திருமணம் மிகப் பிரபலம் ஆனது. அறிவாளிகள் மத்தியில் இந்தத் திருமணம் அமோக வரவேற்பைப் பெற ஒரு புதிய சமூகப் புரட்சியை ஏற்படுத்தியது.


இத்தகைய சுயமரியாதைத் திருமணத்திற்குப் பிறகும், ஒரு பெண்ணுக்கு தன் கணவனைப் பிடிக்கவில்லை என்றால், வெறுமனே கல்லானாலும் கணவன் என்ற வெற்று செண்டிமெண்ட் பார்த்து தன் வாழ்வை வீணடித்துக்கொள்ளாமல், அந்த விவாகத்தை ரத்து செய்து கொள்ளும் உரிமை பெண்களுக்கு இருக்க-வேண்டும் என்று பெரிதும் போராடினார் பெரியார். அந்தக் காலத்தில் பெண்களுக்கு விவாகரத்து கோரும் உரிமையோ, மறுமணம் புரியும் உரிமையோ இல்லை. இதை எதிர்த்து பெரியார் பல காலம் பிரச்சாரம் செய்து, அந்த உரிமைகளையும் பெண்களுக்காகப் பெற்றுக்கொடுத்தார். அதுவும் தவிர கணவன், மனைவி என்ற சொற்களை பெரிதும் சாடினார் பெரியார். இருவரும் சரிசமம் என்ற பின், பெண்ணை மட்டும் மனையோடு கிடப்பவள் என்று அர்த்தப்படுகிற சொல்லால் அழைப்பதை அவர் விரும்பவில்லை. அதனால் தம்பதியினர் இருவருக்கும் பொதுவான விளிச்சொல்லாய், துணைவர், இணையர் என்ற சம நிலை அர்த்தப்படுகிற பதங்களைப் பயன்படுத்த ஊக்குவித்தார். இதே போல எல்லாத் துறைகளிலும் மகளிர்க்காக அயராது உழைத்தார் பெரியார். சம உரிமை, சம வாய்ப்பு, சம கல்வி, சம ஊதியம், சம சொத்துரிமை என்பவை மட்டும் இன்றி, விபச்சார ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு, பெண்களின் துஷ்பிரயோக ஒழிப்பு என்று பலப் பல சமுதாய மாறுதல்களை ஏற்படுத்தினார்.

அவரது சிந்தனைத் தெளியும், தர்க்கத் திறனும், எல்லாருடைய கண்களையும் திறந்து, மனதையும் விசாலமாக்க, படித்தவர்கள், புத்திசாலிகள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றார் பெரியார். அவரது கருத்துக்களைப் பல மேதாவிகள் பின்பற்ற ஆரம்பிக்க, படிப் படியாக, அதுவே நாகரிகத்தின் உச்சக்கட்ட வெளிபாடானது. பெண்களைக் கண்ணியமாய் நடத்துவதே நாகரிமானது.

பெரியாரின் நிழலில் பெண்கள் எல்லாம் புதுத் தெம்பும் தெளிவும் பெற்று, தங்கள் சுயமரியாதையை உணர்ந்துகொண்டு விழிப்-புற்றார்கள். பெரியாரும், பெண்களை ஊக்குவிக்கும் விதமாய், இந்தியாவிலேயே முதல் முறையாய், பெண்களின் மாநாடுகளை கூட்டினார். இப்படி 1938 ஆம் ஆண்டு அவர் கூட்டிய மாநாட்டில் தான், பெண்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, தங்களின் முன்னேற்றத்-திற்காகப் பெரிதும் பாடுபட்ட அவருக்குப் பெரியார் என்ற சிறப்புப் பெயரைச் சூட்டினர். அன்று முதல் ஈ.வெ.ராமசாமியாக இருந்தவர் தந்தை பெரியாராக மாறினார். இதே மனிதர் தான் ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, இந்தி எதிர்ப்பு, கடவுள் நிராகரிப்பு என்று பலப் பல சமூகச் சீர்திருத்தங்களைச் செய்திருந்தார். ஆனால், மகளிர் நலனுக்காக அவர் ஆற்றிய சேவை தான், வெறும் ராமசாமியாக இருந்தவரை தந்தை பெரியார் என்கிற மாமனிதன் ஆக்கியது. பெரியாரும், தான் இந்தப் பெயருக்கு மிகப் பொருத்தமானவர் என்பதை நிறுவித்தார். அவர் தோற்றுவித்த திராவிடர் கழகம் என்கிற சமூக நல அமைப்பை தன் துணைவி திருமதி மணியம்மையிடம் விட்டுச்சென்றார். அது வரை எந்தத் தலைவரும் தன் நிறுவனத்தின் பொறுப்பை பெண்களிடம் ஒப்படைத்தாகச் சரித்திரமே இல்லை. ஒரு வேளை பெண்களால் பெரிய பொறுப்பு வகிக்கமுடியுமா என்று மற்றவர்கள் சந்தேகப்பட்டார்களோ என்னவோ? ஆனால், பெரியாருக்கு பெண்ணின் திறன் மீது எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. அவர் நம்பிக்கையைக் காப்பாற்றி, பெரியாரின் பெண்ணியக் கருத்துக்களை அமல்படுத்தும் விதமாகவே, இந்தியாவின் முதல் - முற்றிலும் பெண்களுக்கான பொறியியல் கல்லூரி, தஞ்சை அருகே உள்ள வல்லம் எனும் ஊரில் கிட்டதட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கெல்லாம் சீருடையே பேண்ட்-சட்டை தான். யோசித்துப் பாருங்களேன், இன்று வரை தமிழ்க் கலாசாரத்தின் பெயரால், பெண்கள் கல்லூரிகளுக்கு பேண்ட்-சட்டை போட்டுக்கொண்டே வரக்கூடாது என்று மெத்தப்படித்த பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் எல்லாம் கறார் ஒடுக்குமுறை செய்வதைப் பார்த்தால் உடனே புரிகிறது, பெரியார், உண்மையிலேயே தன் காலத்தை மிஞ்சிய மாபெரும் முற்போக்குச் சிந்தனையாளர் தான். இந்தப் பெரிய மனிதருக்கு இன்றைய எல்லாப் பெண்களும் நன்றி சொல்லக்கடமைப் பட்டுள்ளோம், இன்று நாம் இந்த உயரத்தில் இருக்கக் காரணமே அவர் தான். பெண்களை அடக்குமுறைப் படுத்த முயலும் சாமானிய ஆண்களுக்கு மத்தியில் பெண்களின் மேம்பாட்டிற்காகப் போராடினாரே, அவர் தாம் பெரியார்! எப்பேர்ப்பட்ட பெரியார்!


--------- டாக்டர் ஷாலினி - மனநல மருத்துவர் - (மார்ச் 2008-The Ritz இதழில் வெளிவந்த "The male Feminist" கட்டுரையின் தமிழ் வடிவம்)

----- நன்றி: "உண்மை" மே 16-31