Search This Blog

31.12.14

பார்ப்பான் அவற்றைத் துதிக்கிறான் என்றால் நாம் எரிக்க வேண்டாமா?

மூலபலத்தோடு மோதுக!பி.ஜே.பி.யினராக இருக்கட்டும், அவர்களில் அப்பனும் அம்மையுமான ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்களாக இருக்கட்டும் - இவர்கள் வாய் திறந்தாலே நாராசம்தான் - நறநற என்று பற்களைக் கடித்துக் குதறும் குருரப் போக்குதான்.பிஜேபியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நிரஞ்ஜன்ஜோதி பேசியதும் இந்த அடிப்படையில்தான்.

டில்லி - சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது - டில்லியை ஆளப் போவது ராமன் மகனா? முறைகேடாகப் பிறந்தவனா? என்ற வினாவை எழுப்பி யிருக்கிறார்.

இந்த அம்மையாருக்கு ஓர் உண்மை தெரியாது. இவர் குறிப்பிட்ட ராமனே முறையாக தசரதனுக்குப் பிறந்தவனில்லை என்ற சேதி தெரியுமா?

சி.ஆர். சீனிவாசய்யங்காரால் வால்மீகி இராமாயணத்திலிருந்து மொழி பெயர்க் கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்களைப் புரட்டிப் பார்க்கட்டும்.
ராமன் பிறப்பின் வண்டவாளம் என்ன என்பது வண்ண வண்ணமாகப் புரியும்.
வெட்டுண்ட குதிரைகளுடன் ஓர் இரவு முழுவதும் தசரதனின் பத்தினிமார்கள் கழித்தனர் என்கிற ஆபாசத்தை எல்லாம் எடுத்து விட்டால் குமட்டிக் கொண்டுதான் வரும்.

இந்த ராமப் பக்தர்களா  - முறைகேடாகப் பிறப்பதைப்பற்றிப் பேசுவது?

இந்த லட்சணத்தில் ராமன் என்பவன் ஏதோ உத்தமப்புத்திரன் போலவும், மற்றவர்கள் எல்லாம் முறையற்ற முறையில் பிறந்தது போலவும் கதைப்பது புரியாத்தனமே!

ஆர்.எஸ்.எஸில் பெண் பேச்சாளர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் சாத்வி ரிதம்பரா;  என்ன பேசினார் தெரியுமா?

இந்து ஆண்களே, முஸ்லிம் பெண் களைக் கர்ப்பிணி ஆக்குங்கள்; அவர்கள் வயிற்றில் இந்துக் கரு ஜெனிக்கட்டும் - என்று பேசவில்லையா? மத்திய பிரதேசத்தில் ஜாபுலா கிராமத்தில் கிறித்தவர் நடத்தி வந்த மருத்துவமனையில் நள்ளிரவில் புகுந்த பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், (பஜ்ரங் என்றால் அதன் பொருள் குரங்கு - பொருத்தமானதுதான்) அம்மருத்துவ மனையில் பணியாற்றிய கன்னிகாஸ்திரி களை கதறக் கதற பாலியல் வேட்டை நடத்தினரே! 

பிஜேபியின் மக்களவை உறுப்பினரான பைகுந்தலால் சர்மா என்ன சொன்னார்? தேச விரோத சக்திகளுக்கு எதிரான தேசப் பற்று மிக்க இந்து இளை ஞர்களின் கோபம் என்றாரே!

இவற்றையெல்லாம் விட்டுத் தள் ளுங்கள். இன்றைய பிரதமரும் அன்றைய குஜராத் முதல் அமைச்சருமான நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்ன பேசினார் என்று நினைவிருக்கிறதா?


குஜராத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக அரசப் பயங்கரவாதமாக வன் முறை ஏவப்பட்ட நிலையில் ஆயிரக்கணக் கான இஸ்லாமியர்கள் கொன்று குவிக்கப் பட்டனர். கர்ப்பிணிப் பெண்களின் குடல்களும் கிழிக்கப்பட்டன; தந்தை முன் மகளும், சகோதரன் முன் தங்கைகளும் பதறப் பதற வன்புணர்ச்சி செய்யப்பட்டனர். அதைப்பற்றி எல்லாம் எழுத ஆரம்பித்தால் பக்கங்கள் போதாது - போதவே போதாது.

வாழ்க்கையே கேள்விக்குறியாகி அகதி முகாம்களில் முஸ்லிம்கள் குவிந்தனர்.

அந்த நேரத்தில்கூட தாம் ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சர் என்பதைக்கூட மறந்து, நாலாந்தர நிலையில் நாப்பறை கொட்டினாரே மோடி?

முசுலிம்கள் முகாம்களில் இனப் பெருக்கம் செய்து கொண்டுள்ளனர்! என்று கூறவில்லையா? அவர் மறுப்பதற்கு முன்பே அவர் பேச்சு ஒலி நாடாவாக வெளியிலே வந்து விட்டதே!

இந்த இந்துத்துவாவாதிகளுக்கு மூலாதாரம் கீதையும், மனுதர்ம சாஸ்திரம் தானே?

பிராமணர்கள் பிர்மாவின் முகத்தில் பிறந்தவர்கள் என்றும் சூத்திரர்கள்  பிர்மாவின் பாதங்களில் பிறந்தவர்கள் என்றும், இந்தச் சூத்திரன் யார் என்றால் விபசாரி மக்கள் என்றும் இவர்களின் மனுதர்ம சாஸ்திரம் கூறவில்லையா? (அத்தியாயம் 8 - சுலோகம் 415).

இந்தியப் பிரதமர் சீனா சென்றாலும் அங்குள்ள அதிபரிடம் இந்திய மக்களின் பரிசாக எதனைக் கொடுக்கிறார்? கீதையைத்தானே கொடுக்கிறார்.

அந்தக் கீதையில் கிருஷ்ண பரமாத்மா என்ன சொல்லி வைத்துள்ளார்?

பெண்களும், வைசியர்களும், சூத்திரர் களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கீதையிலே கூறப்பட்டுள்ளதே!!  (கீதை அத்தியாயம் 9 - சுலோகம் 32).

இப்படி சொன்னவர்களை எல்லாம் கடவுள்களாக ஏற்றுக் கொண்டு, பூமாலை சூட்டி பூஜை புனஷ்காரங்கள் செய்ய வில்லையா?

நிரஞ்ஜன் ஜோதி போன்றவர்கள் இப்படித்  தரம் தாழ்ந்து பேசுவதற்கு மூலகாரணமே அவர்கள் மதிக்கும் மூலவர்களான கடவுள்களின் இத்தகைய அ(ம)ருள் வாக்குகள்தான்.

கீதையை முட்டாளின் உளறல் என்று அண்ணல் அம்பேத்கர் சொன்னார். மனுதர்மத்தை தந்தை பெரியாரும் எரிக்கச் சொன்னார் - அம்பேத்கரும் அவ்வாறே சொன்னார்.

கயமையாகப் பேசியவர்கள் கடவுள்கள் என்றும் ஆபாசமாகப் பேசியவர்கள் ஆண்டவன் என்றும் நம்பிக் கொண்டு இருக்கும்வரை  இன்னும் என்னென்ன இழிவு மூட்டைகளைச் சுமந்து திரிய வேண்டுமோ?

மூலபலத்துடன் போர் புரிவதுதான் தந்தை பெரியார் அவர்களின் போர் முறை என்றார் அறிஞர் அண்ணா.

அந்த மூலம் என்பது இந்து மதத்தின் வேதங்களும், இதிகாசங்களும் (சுருதிகளும், ஸ்மிருதிகளும்) தான்.

இவற்றில் கை வைத்தாலொழிய நம்மீது திணிக்கப்பட்டுள்ள இழிவு ஒழியப் போவதில்லை; உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இந்துத்துவாவை எதிர்ப் பதில் ராமராஜ்யம் அறிவிப்பை ஆக்ரோசமாக எதிர்ப்பதில் முண்டா தட்டி முன்வரிசையில் நிற்க வேண்டியவர்கள் முஸ்லிம்கள்,  கிறித்தவர்களான சிறுபான்மை யினரை விட, இந்து மதத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிற தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும்தான். ஏன் உயர் ஜாதியினரான பார்ப்பனர் அல்லாதவர்கள் கூட இந்துத்துவாவை எதிர்ப்பதில் ஓரணி யில் நிற்க வேண்டியவர்களே!

இந்துத்துவாவில் இவர்கள் அத்தனைப் பேரும் சூத்திரர்கள்தானே! இவர்கள் இத்தனைப் பேரும் இந்துக் கோயில் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்ய அருகதையற்றவர்கள் தானே? இவர்கள் சாமி சிலையைத் தொட்டால் தீட்டாகி விடுமாம் - தோஷம் ஏற்பட்டு விடுமாம்.

இதனை உச்சநீதிமன்றம் சென்று இன்று வரை சொல்பவர்கள் பார்ப்பனர்கள்தானே!

பார்ப்பான் இந்து மதத்தைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுகிறான் என்றால் இந்து மதத் தத்துவப்படி அவன் பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் - பிர்மா இந்தப் பூமியைப் படைத்ததே பிராமணர்களுக்காகத் தான் என்று கூறுவதுதான் மனுதர்மம். அந்த மனுதர்மம் நம்மைச் சூத்திரன் என்று சொல்லும் பொழுது வேசி மக்கள் என்று கூறும்போது நாம் என்ன செய்ய வேண்டும்?
பார்ப்பான் அவற்றைத் துதிக்கிறான் என்றால் நாம் எரிக்க வேண்டாமா? அதற்குள்ளிருக்கும் நியாயம் இதுதானே? சிந்திப்பீர்.

------------------ மின்சாரம் 6-12-2014 "விடுதலை” யில் எழுதிய கட்டுரை
Read more: http://viduthalai.in/page-1/92414.html#ixzz3L89CrIlD

30.12.14

பிஜேபி - சங்பரிவார் கும்பலின் ஆபத்தான பாசிசப் பயணம்!


  • முற்போக்குத் திரைப்படத்திற்கு எதிர்ப்பு 
  • நாவல் எரிப்பு
  • கோட்சேக்குக் கோயில்
  • கல்வியாளர்களுக்கு அச்சுறுத்தல் நாளும்!

பிஜேபி - சங்பரிவார் கும்பலின் ஆபத்தான பாசிசப் பயணம்!

காந்தியார் நினைவு நாளை மதவெறி எதிர்ப்பு நாளாக நடத்துவோம்!

அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளே தயாராவீர்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுக்கும் அழைப்பு அறிக்கை


 தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் கருநாடகத்திலும், கேரளாவிலும் நதிகளின் குறுக்கே அணைகளைக் கட்டுவதா?  - கண்டன ஆர்ப்பாட்டம்!
மத்தியில் பாசிச பார்ப்பனீய ஹிந்துத்துவ ஆட்சி வந்து விட்டது என்ற தைரியத்தில் சங்பரிவார்க் கும்பல் ஹிந்துத்துவப் பாசிச நெருப்பைக் கையில் எடுத்துக் கொண்டு வெறியாட்டம் போடும் நிலையில், காந்தியாரின் நினைவு நாளை (ஜனவரி 30) மதவெறி எதிர்ப்பு நாளாக நடத்து வோம் என்று முற்போக்கு - ஜனநாயக சக்தி களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் 7 மாத கால ஆர்.எஸ்.எஸ். ஆட்சி, ஜனநாயகத்திற்கு - மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக  விடை கொடுக்கும் யதேச்சாதிகார - பாசிச ஆட்சியாக மாறி வருகிறதோ என்ற அய்யம் நாட்டில் உள்ள நடுநிலையாளர்களுக்கு கட்சிகளுக்கு அப்பாற் பட்டவர்களுக்கும் புரியத் தொடங்கி விட்டது!

பாசிச நடவடிக்கைகள்

இந்திய அரசியல் சட்டத்தின்மீது பிரமாணம் செய்த இவர்கள், அதன் முக்கிய அடித்தளத்தையே அகற்றிடும் வகையில் ஓர் இந்து இராஜ்ய பாசிச நடவடிக்கைகள் - முழு வீச்சில் துவங்கி, பல்வேறு முனைகளில் நாட்டின் பல பகுதிகளில் பரவ - குஜராத் முன்னிலையில் உள்ளது.

”பி.கே.” என்ற இந்தித் திரைப்படத்துக்கு எதிர்ப்பாம்

இன்று ஏடுகளில் வந்துள்ள மூன்று, நான்கு முக்கிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.

1.  P.K.  என்ற ஒரு ஹிந்தி திரைப்படம் மிகவும் பிரபல மாக ஓடிக் கொண்டுள்ளது.

விண்வெளியில் (Alien)  இருந்து வரும் ஒருவன் நம் கடவுள்களைப் பார்த்து வியப்பது, கடவுள் பெயரால் நடக்கும் புரட்டு - மோசடி வித்தைகள் - இவைகளைக் கண்டு தொடுக்கும் கேள்விகளால் நகைச் சுவை உணர்வுடன் இப்படம் அமைந்துள்ளது என்று அத்தனை திரைப்பட விமர்சகர்களும் எழுதியுள்ளனர்.

அத்வானியும் பாராட்டுகிறார்

பா.ஜ.க.வின் மூத்த தலைவரும்,ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் அமைப்பால் ஒதுக்கி ஓரங்கட்டப்பட்டவருமான எல்.கே. அத்வானி அவர்கள் இப்படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து மிக நேர்த்தியான, துணிச்சலுடன் எடுக்கப்பட்ட திரைப்படம் என்று வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

(BJP’s Seniormost Politician L.K. Advani had praised ‘PK’ as a wonderful Courageous film” Last Week - Times of India 30.12.2014)

முறைப்படி தணிக்கைக் குழுவின் சான்றிதழ் பெற்று சென்னை உட்பட பல நகரங்களில் ஓடிக் கொண்டிருக்கும் இத்திரைப்படம் பல கோடிக்கணக்கில் வசூலை அள்ளும் - அதாவது மக்கள் ஆதரவு பெற்று ஓடும் இத்திரைப் படத்துக்கெதிராக பிரதமர் மோடியின் குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரமான ஆகமதாபாத்திலும் மத்தியப் பிரதேச  (அங்கும் பா.ஜ.க. ஆட்சி) தலைநகர் போபாலிலும் தலைநகர் டில்லியிலும் இத்திரைப்படம் ஓடும் பல திரையரங்குகள்மீது தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.


என்றாலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் பஜ்ரங்தள், விசுவ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகள் 24 மணி நேரத்திற்குள், இந்து மத விரோத கருத்துக் காட்சிகளை உடனடியாக அகற்றிவிட்டு படத்தை ஓட்ட வேண்டும் என்று காலக் கெடு கொடுத்து மிரட்டியுள்ளனர்.


இவர்கள்மீது காவி ஆட்சிகள் கடும் நடவடிக்கை எடுத்து, சட்டம் ஒழுங்கை பராமரிக்கத் தவறியுள்ளார்கள்!


ஜனநாயகத்திற்கே உரித்தான கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளை நெறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்து அராஜக செயல்களுக்குக் கண் ஜாடை காட்டுவது! போல் நடந்து கொள்வது மகாவெட்கக் கேடு அல்லவா!


இஸ்லாமிய பேராசிரியர்களுக்கு அச்சுறுத்தல்


2. அகில இந்திய ஒரியண்டல் மாநாடு (AIOC) என்பது 1919 முதல் கல்வி அறிஞர்கள் பல்வேறு கீழ்த் திசைப் பகுதிகள் பற்றிய ஆய்வுக்காக கூடி விவாதிக்கும் மாநாடு.


பல நாடுகளிலிருந்தும் வந்து இந்த ஆய்வரங்க மாநாட்டில் கலந்து  ஆய்வுரைகளை நடத்துபவர்கள் - அறிஞர்கள், கல்வியாளர்கள்!
மகாராஷ்டிர - பூனேயில் - பிரபல வரலாற்று ஆய்வு மன்றம், பண்டர்கர் ஆய்வுக் கல்வியகம் (Bhandarkar Institute) அதைத் தாக்கி, அங்கு சில ஆண்டுகளாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பார்ப்பன - ஹிந்துத்துவ முக்கிய ஆவணங்களைப் பறித்தும், எரித்தும் மதவெறியை நடனமாட விட்டு வேடிக்கை பார்த்துள்ளனர்.


அந்த மாநாடு 2015 ஜனவரி 2 முதல் 4ஆம் தேதி வரை  (அடுத்த வாரம்) அசாம் கவுஹாத்தியில் நடைபெற விருக்கிறது.

அதில், அலிகார் முஸ்லீம் பல்லைக் கழகத்தி லிருந்து வரும் ஏழு பேராசிரியர்கள் - ஆய்வாளர்கள் வந்து கலந்து கொண்டால் அவர்கள் உயிருடன் திரும்பிப் போக மாட்டார்கள். இது உறுதி என்று  மாநாடு நடத்துவோருக்கு மிரட்டல் கடிதம் ராஷ்டிரிய ஹிந்து சேனா என்ற அமைப்பு, பாரத் விச்சார் சாதனா பப்ளிகேஷன்ஸ், ஆர்.எஸ்.எஸ். சங் காரியாலயா நாக்பூர் என்ற முகவரியிட்டு அனுப்பப்பட்டுள்ளது.


அந்த அறிஞர்கள் அங்கு செல்லத் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது!
‘Muslim scholars drop out of oriental meet threats were allegedly sent by Rastriya Hindu Sena’
(- ‘The Hindu’ (30.12.2014) 13ம் பக்கம்)

கோட்சேக்குக் கோயிலாம்!


3. அதே பக்கத்தில் அதே ஹிந்து நாளேட்டில் (ஆங்கிலம்) இன்று (30.12.2014) கோட்சேக்குக் கோயில் கட்ட லக்னோவில் இடம் தேர்வு செயயப்பட்டு விட்டது என்ற தலைப்பில் இரண்டு காலச் செய்தி!

‘Our plan is to install Godse’s bust at the site before January 30, which we will celebrate as ‘Shaurya Diwas’ to honour the ‘martyr’ (Godse)...

மிகப் பெரிய தியாகியான கோட்சேவுக்கு 2015 ஜனவரி 30க்குள் மார்பளவு சிலை வைக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறோம். காரணம் அந்த ஜனவரி 30  - காந்தியை கோட்சே (மராத்திப் பார்ப்பனர்) சுட்டுக் கொன்ற நாள் -சௌர்ய திவரஸ் நாளாம்!

மீரட் மற்றும் சித்தாபூரையடுத்து லக்னோவிலும் இதற்கான ஏற்பாடு நடப்பதாகக் கூறுகிறது. (இந்து மகாசபையை 1914இல் நிறுவியர்களில் முக்கியமான ஒருவர்தான் அண்மையில் மோடி அரசால் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட வர்ணாசிரமவாதி  பண்டித மதன்மோகன் மாளவியா என்ற பார்ப்பனர்)

நாவலை எரிக்கும் நாச காலிகள்


4. திருச்செங்கோடு கோயில் பக்தி - நடப்புகளை பின்னணியாகக் கொண்ட மாதொருபாகன் அர்த்த நாரீஸ்வரர் என்ற ஹிந்து கடவுள் ஆண் பாதி பெண் பாதி என்ற புராண வரலாறு கொண்ட திருவிழாவை மய்யப்படுத்தி நூல் ஒன்றை எழுதியுள்ளார் பெருமாள் முருகன் என்ற தமிழ் எழுத்தாளர்.

இந்தப் புதினம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், இப்போது அங்குள்ள சில காவியினர் (ஆர்.எஸ்.எஸ். காலிகள்) அப்பாவிப் பக்தர்களையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டு  அப்புத்தகத்தை எரித்தும், கண்டன ஊர்வலம் நடத்தியும் இப்புத்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை மிரட்டி யுள்ளனர்!


நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வராத கோபம் - ஆத்திரம் - மனம் புண்படுகிறது என்று திடுக்கென்று இப்போது குதிப்பது ஏன்?

புரியவில்லையா? - மத்தியில் தங்கள் ஆட்சி - பிரதமர் மோடி ஆட்சி இருக்கிறது என்ற துணிச்சல்தானே?


இப்படி பார்ப்பன மதவெறி ஹிந்துமத அமைப்புகள் மீண்டும் சனாதனத்திற்குச் சடகோபம் சாத்திடவே, காலிகளையும், கூலிகளையும் பிடித்து இப்படிப்பட்ட அராஜக வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்!


இவர்கள்மீது உரிய நடவடிக்கை தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக எடுக்க முன் வர வேண்டும்.

விரைவில் அந்தப் புதின எழுத்தாளர் திரு. பெருமாள் முருகனுக்கு- கருத்துரிமை எழுத்துரிமையைப் பாதுகாக்கும் வகையில் ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்திடவும் பரப்புரை செய்யவும் திராவிடர் கழகம் தயங்காது!

பாசிசத்தை நோக்கிப் பயணம்

இப்போது பாசிசத்தை, யதேச்சாதிகாரத்தை நோக்கி மோடிஆட்சி காரணமாக நாடு செல்வதைத் தடுக்க அனைத்து முற்போக்கு - ஜனநாயக சிந்தனையாளர்களும், கட்சிகளும், இயக்கங்களும், அமைப்புகளும் ஓர் அணியில் திரள வேணடும்.

காந்தியார் நினைவு நாளை மதவெறி எதிர்ப்பு நாளாக நடத்துவோம்!

ஜனவரி 30 காந்தியாரின் நினைவு நாளை - மதவெறி ஒழிப்பு நாளாக நடத்துவோம் நாடு முழுவதும் - ஆயத்தமாவீர்!

-------------------கி.வீரமணி   தலைவர்,   திராவிடர் கழகம் சென்னை 30-12-2014

தேவைப்படுகிறார் வீதிக்கு ஒரு பெரியார்!


தேவைப்படுகிறார் வீதிக்கு ஒரு பெரியார்!
கீதையா? திருக்குறளா? என்று ஒப்பிடுவதற்கு எவ்விதத்திலும் நாம் இடமே தந்துவிடக்கூடாது!
சென்னை பெரியார் திடலில் தோழர் தா.பாண்டியன் கர்ச்சனை!

சென்னை, டிச.28- திருக்குறளையும், கீதையையும் ஒப் பிட்டுப் பேசுவதற்கே நாம் இடம்தரக்கூடாது என்று கூறினார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் தா.பாண்டியன்.

12.12.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதா? என்ற தலைப்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:

விழிப்பை ஏற்படுத்துகின்ற பொறுப்பை
நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்


பல காலத்திற்குப் பிறகு இந்த மேடையில், கம்யூனிஸ்டு களும், கழகத்தாரும் ஒரே மேடையில் அமர்ந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது என்று சொன்னார்; அதை என் அருமைச் சகோதரர் சுப.வீரபாண்டியன் அவர்கள், நாமாகச் சேர்ந்திருந்தால், அது நல்லதாக இருந்திருக்கும். நம்மைச் சேர்ப்பதற்கும் சுஷ்மா சுவராஜ் தேவைப்படுகின்றார். அவர் சொன்ன பிறகுதான், நாம் இனியும் பிரிந்திருந்தால், நம்மை ஒழிப்பதற்கு எதிரி வரவேண்டியதில்லை, நாமே வீழ்ந்து விடுவோம் என்பதை உணர்ந்து, இந்த மேடை ஒரு நல்ல அறிவிப்பை இன்றைக்குத் தமிழகத்திற்கு வெளியிடுகிறது. எனவே, இங்கே வந்துள்ளவர்களைப் பொறுத்தவரை, விவரம் தெரிந்தவர்கள். தெரிந்த காரணத்தினால் வந்திருக் கிறீர்கள். ஆனால், நாம் செய்யவேண்டிய கடமை, இதைத் தெரியாது  இன்னும் வீட்டிலே நிம்மதியாக இருப்பவர்கள் உள்ளனர் எனவே அவர்களுக்கு விழிப்பை ஏற்படுத்துகின்ற பொறுப்பை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

வீதிக்கு ஒரு பெரியார் தேவைப்படுகிறார்!

இதை ஒரு முதற்கடமையாக ஏற்றுக்கொண்டு, இந்த வளாகத்திற்கும் அப்பால் வாழும், அந்த நற்றமிழருக்கு நம் புரிந்த தமிழில் சொல்லி விளக்கவேண்டும். ஒரே ஒரு தந்தை பெரியார் இருந்தார், அவர் கடைசி மூச்சு நிற்கின்றவரை சுவர் எழுப்பித்தான் பார்த்தார். ஆனால், வீதிக்கு ஒரு பெரியார் இப்பொழுது தேவைப்படும்போல் தெரிகிறது.

ஏனென்றால், இத்தனை காலத்திற்குப் பிறகும், எதிரிகள் பகிரங்கமாக அறிவித்த பிறகுதான், விழிப்படைகிறோமே தவிர, நாமே காலத்தை முன்கூட்டியே அறிந்து நம் கட மையை வகுத்துக் கொள்வதில் இன்னும் பின்தங்கியிருக் கிறோம்.

இதே மோடியின் அரசு, பாரதீய ஜனதா அரசு, தமிழ கத்தில், இந்தியாவில் ஆட்சியை நாங்கள் அமைக்கப் போகி றோம்; அடுத்த அற்புதங்களை விளைவிக்கப் போகிறோம் என்ற ஒரு அணிவகுப்பைத் தொடங்கியபொழுதே, இதை வரவிடாமல் தடுக்கவேண்டும் என்று முதல் இடத்தில் நின்றிருக்கவேண்டியதே தமிழகம்தான்.

ஏனென்றால், நானும் இந்தியாவில் பல மாநிலங் களுக்கும் சென்றிருக்கிறேன்; இந்தியாவை ஆண்ட பல தலைவர்களோடும் உரையாடியிருக்கிறேன். ஒரு சாதாரண கேள்வியை, இந்தியப் பிரதமராக இருந்தவர்; இந்த மேடையில் அவருடைய பெயரைச் சொல்ல விரும்ப வில்லை. சுயமரியாதைத் திருமணச் சட்டங்கள் தமிழகத்தில் 1967 ஆம் ஆண்டே வந்துவிட்டது.  அப்பொழுதைய முத லமைச்சராக இருந்த கலைஞர் ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்து, பிரதமரிடம் காட்டுங்கள் என்றார்.

தமிழகத்தைப் பண்படுத்தி
வைத்திருக்கிறார் பெரியார்!


நான் பிரதமராக இருந்த அவரிடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்துவிட்டு, இந்தியாமுழுமைக்கும் இந்தச் சட்டத்தை அமல்படுத்தலாமே என்றேன்.
அவர் வழக்கம்போல், அந்தக் கடிதத்தைப் படிப்பது போல கவனித்தாரேயன்றி, என்னுடைய கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. இருந்தாலும், பதில் வேண்டும் என்று நான் திரும்பத் திரும்பக் கேட்டதினால் அவர் சொன்னார்.
தமிழகத்திலிருந்த முட்புதர்களையெல்லாம் ஒரு மனிதர், ஒரு இயக்கமாக மாற்றி, அதைப் பண்படுத்தி வைத்திருக் கிறார். எனவே, பண்படுத்தப்பட்ட நிலத்தில், மிக எளிதாக 1967 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் வந்த பிறகு, சட்டத்தை நிறைவேற்றி விட்டீர்கள். ஆனால், உத்தரப்பிரதேசத்திலும், மத்திய பிரதேசத்திலும் இன்னும் காடுகள் வெட்டப்பட வில்லை. எனவே, இங்கே அந்த சட்டம் போட்டால், கங்கை யில் தண்ணீர் ஓடாது; ரத்தம்தான் ஓடும் என்றார். அப்படி சொன்னவர், நாட்டினுடைய பிரதமர். அவர் ஒரு வரலாற்று உண்மையை ஒப்புக்கொண்டு சொல்லியிருக்கிறார்.

இங்கே ஒரு 60 ஆண்டுகாலம் பகுத்தறிவுப் பிரச்சாரத் தினால், மூட நம்பிக்கைகளை ஒழிக்க, ஜாதி ஏற்றத் தாழ்வு களை அகற்ற, எடுத்துக்கொண்ட ஒரு பெரிய முயற்சியின் விளைவு, இங்கே அரசியல் தளத்திலும், அதை விட்டுவிட்டு வேறு வேலைகள் செய்ய முடியாத சூழலை உருவாக்கி இருக்கிறது.

பாரதியின் பாடலை மேற்கோள் காட்டினேன்

சில சமயம் நான் மனம் விட்டு சில உண்மைகளைச் சொல்லுவதால், என் கட்சியினரே எனக்குப் பகைவர்களாக மாறிவிடுகிறார்கள். நேற்றைக்குக்கூட நான் ஒரு தொலைக் காட்சியில் உரையாற்றும்பொழுது, பாரதியின் பாடலைத் தான் மேற்கோள் காட்டினேன்.
சூத்திரனுக்கொரு நீதி
தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு
வேறு ஒரு நீதி
சாஸ்திரம் சொல்லுமாயின்
அது சாஸ்திரம் அன்று -
சதி என்று கண்டோம்!

என்று பேசிவிட்டு, காலையில் எழுந்தவுடன், அதிகம் படித்து, பட்டம் பெற்றவர் ஒருவர், என்னிடம், இந்தப் பாடலை மேற்கோள்காட்டி எங்கள் மனதைப் புண்படுத்தி விட்டீர்களே! என்றார்.

பொது மருத்துவமனைக்குச் செல்லுங்கள், டிஞ்சர் வாங்கிப் போட்டுக்கொள்ளுங்கள்

அப்படியா, உங்கள் மனம் அவ்வளவு மென்மையானது என்பது எனக்குத் தெரியவில்லை. இந்தப் பாடலை 1920 ஆம் ஆண்டுக்கு முன்பே பாரதி பாடியது. 2014 ஆம் ஆண்டில் நான் காலங்கடந்து, மேற்கோள்தான் காட்டி னேன். அதையும் நான் சொல்லவில்லை. இருந்தும் மனம் புண்பட்டு இருக்கிறீர்கள். பரவாயில்லை, நேராக பொது மருத்துவமனைக்குச் செல்லுங்கள், டிஞ்சர் வாங்கிப் போட்டுக்கொள்ளுங்கள் என்றேன்.
அவர் உடனே, இதுதான் உங்கள் பதிலா? என்றார்.

இல்லை, அங்கே போவதற்குச் சங்கடமாக இருந்தால், என் வீட்டிற்கு வாருங்கள்; மஞ்சள் பற்று போட்டுவிடு கிறேன், உங்கள் புண் ஆறிவிடும் என்றேன்.
எவ்வளவு ஆழமான வக்கிரம், படித்தவர்களின் மத்தி யிலும், பட்டம் பெற்றவர்களின் மத்தியிலும் இருக்கிறது!

அரசியல்வாதிகள் விழிப்போடு இல்லாததின் பலனாகத் தான் தமிழகத்தில்கூட அவர்கள் தலைதூக்கி, ஓரளவு தங்களது அணிகளை அமைத்தார்கள். பிறகு ஆட்சியை இந்தியாவில் அமைத்திருக்கிறார்கள்.
அதற்கும் ஓர் அந்நிய முதலீடு ஒருவேளை வரலாம்!
இப்பொழுது நாம் இதனை விவாதிக்கின்ற பொழுது, இந்தக் கீதை, சமஸ்கிருதம், குருபூஜை, ராமன் கோவில், இன்றுகூட டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு செய்தி வந்திருக்கிறது. கிறிஸ்துவர்களை மீண்டும் இந்துக்களாக மதம் மாற்றுவதற்கு ஒரு லட்சம்; இரண்டு லட்சம். இஸ்லாமி யர்களை மதம் மாற்றுவதற்கு அய்ந்து லட்சம். இதற்காக நன்கொடை வசூல் என்று உலகம் தழுவிய முறையில் வசூல் நடைபெறுகிறது. அதற்கும் ஓர் அந்நிய முதலீடு ஒருவேளை வரலாம்.

இந்த மதமாற்ற வேலைகளைப்பற்றி, நாடாளுமன்றத்தில் கடுமையாக இப்பொழுது விவாதிக்கப்படுகிறது.

வாரத்திற்கு ஒன்று வருவதும், அதனைப்பற்றி விவாதம் நடைபெறுவதும், கடைசியில், அவைத் தலைவருக்கே பொறுக்க முடியாமல், என்ன, ஒவ்வொருவரும் ஒன்றைப் பேசி, அதை மூன்று நாள்களுக்கு விவாதமாக்கி, நான்காவது நாள் மன்னிப்பு கேட்பதே, நம்முடைய நாடாளுமன்றத்தின் வேலையா? கொஞ்சம் பார்த்துப் பேசுங்களேன் என்கிற அளவிற்கு வந்துவிட்டார்.


நாம் இன்றைய விவாதத்தில், இப்பொழுது கீதையினு டைய காலத்தைப்பற்றி எனக்கு முன்னர் பேசியவர்களும் குறிப்பிட்டார்கள். பல புத்தகங்களிலும் இது விவாதிக்கப் பட்டு வருகிறது. இன்று, நேற்றல்ல!

திருச்சியில் தேர்தல் நேரத்தில் என்ன பேசினார் மோடி?

5151 ஆண்டு அல்லது இன்னும் மேலே சொல்லலாம்; சொல்லுகிறவன், சொல்லுகிறான், இன்னும் இரண்டு பூஜ் ஜியத்தைப் போட்டுச் சொன்னாலும், நாம் அதைப் போய் தடுக்கப் போவதில்லை. ஏனென்றால், வரலாற்றைப் பொறுத்தவரை எவ்வளவு கறாராகப் பேசுவார்கள் என்பதற்கு, எங்கோ அல்ல, திருச்சியில் தேர்தல் நேரத்தில் பேசினார், இன்றைய பிரதமர் மோடி.
திருச்சியிலிருந்து வேதாரண்யத்தை நோக்கி உப்பெடுக் கச் சென்ற சத்தியாகிரகப் போராட்டம்; கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் பிள்ளை தலைமையில் நடைபெற்றது என்றார்.

தமிழில் மொழி பெயர்த்த தமிழனுக்காவது தெரிய வேண்டாமா?

சரி, அவர்தான் கொஞ்சம் அவசரப்பட்டு சிதம்பரம் பிள் ளையையும், ராஜகோபாலாச்சாரியாரையும் மறந்து பேசி யிருக்கிறார் என்றால், அதனை தமிழில் மொழி பெயர்த்த தமிழனுக்காவது தெரிய வேண்டாமா? அவரும் அந்தத் தவறையே, சரியாக தமிழில் மொழி பெயர்த்தார்.
சிதம்பரம் உப்பு சத்தியாகிரகத்தை எதிர்த்தவர்; கண்டித்தவர். இந்த உப்புக்குப் போடுகிற வரியை எடுத்தால், பக்கிங்காம் அரண்மனை ஒன்றும் இடிந்துவிடாது என்று எழுதியவர். ஆனால், அதற்கு நேர்மாறாகத்தான் இந்த சரித்திர நாயகர் சொன்னார். அதையும் பத்திரிகையில் போட்டு, அப்படிப்பட்ட அவர்தான் இந்தியாவிற்குப் பிரதமராக ஆகவேண்டும் என்று சொன்னார்கள்.
அவர் வந்து ஆட்சி நடத்துகின்ற காலத்தில், வரலாற் றில் 5000 ஆம் ஆண்டா? 1500 ஆண்டா? என்றால், அது அவர் அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயம். எனவே, அவர்கள் 5000, 6000 ஆம் ஆண்டுகள் என்று சொல்லலாம். சொல்லுகிற பொழுதே ஒன்றை யோசிக்கவேண்டும்; தொன்மையான நூல்களை, இலக்கியப் பதிப்புகளை, காப்பியங்களை மதிக்கலாம், பாராட்டலாம், அதில் தவ றில்லை. இலக்கியம் என்கிற வகையில். அடடா, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்படி எழுதியிருக்கிறார்களா? இன்று எவ்வளவோ பல்கலைக் கழகங்களும், பல தொலைத் தொடர்புக் கருவிகளும், விஞ்ஞான அறிவும் வளர்ந்துள்ள நேரத்தில், ஒரு புதிய கருத்தை, மிகச் செம்மையாகச் சொல்வது என்பதுகூட எளிதாக இருக்கலாம்.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சரி, அந்தக் காலத் தின் தொன்மையை வைத்துத்தான், நாம் திருக்குறளுக்குக் கூட பல மடங்கு மதிப்பு கொடுக்கிறோம். இத்தனை பல் கலைக் கழகங்களும், இன்றைய விஞ்ஞானக் கருவிகளும் இல்லாத காலத்தில், சுயமாகச் சிந்தித்து, இந்த உலகத்தின் கருத்துகள் அனைத்தையும், மனித குலத்திற்கு வேண்டிய அனைத்தையும், பொது அறமாக மாற்றி, குறுகத் தரித்துக் கொடுத்த அந்த அறிய முடியாத அறிஞனை, இந்த விவா தத்தின்போதுகூட, நம்முடைய கோபத்தில்கூட, கீதையா? திருக்குறளா? என்று ஒப்பிடுவதற்கு இடமே நாம் தரக்கூடாது.
அது ஒப்பிட முடியாத உயரிய நூல்; உலகத்திற்குப் பொது நூல்; அதற்கு ஓர் அரசாங்க சான்றிதழ் தேவை யில்லை. அதனை இந்த உலகம் ஏற்கும்.
ஒரு பொறுப்புள்ள மத்திய அமைச்சர் அப்படி பேசலாமா?

ஆனால், இவன் சொல்லுகின்ற நூலைச் சொல்லுகிற பொழுது, இப்பொழுது மிக முக்கியமாக இந்த விவாதத்தில் நாம் எடுத்துக்கொள்ளவேண்டியது,  அப்படி சொல்லி யிருப்பவர், வெளியுறவுத் துறை அமைச்சர். இந்த வெளி யுறவுத் துறை அமைச்சர் ஒரு பெண்ணாக இருப்பது நமக்கு ஒரு பெருமைதான். ஆனால், அந்தப் பெண் கொஞ்சம் யோசித்துப் பேசியிருக்கவேண்டும். நாடாளுமன்றம் நடந்துகொண்டிருக்கிறது. அப்படி நடந்துகொண்டிருக்கும் பொழுது, ஒரு பொறுப்புள்ள அமைச்சர், நாடு முழு மைக்குமான ஒரு பொதுக் கருத்தை, அரசு சார்பில் அதி காரம் உள்ள ஒருவர் அறிவிக்கும்பொழுது, அதனை முதலில் நாடாளுமன்றத்தில் மரபுப்படி அறிவிக்கவேண் டும். நாடாளுமன்றத்தில் அதனை அறிவித்து, அதை ஒரு தீர்மானமாக துணிச்சல் இருந்தால் கொண்டுவரவேண்டும். விவாதிக்கவேண்டும். பிறகு, உங்கள் அதிகார பலத்தை வைத்து, உத்தரவுகூட போட்டுத் திணிக்கலாம்.

வெளியில், அசோக்சிங்கால் நடத்திய கூட்டத்தில், அசோக்சிங்கால் உரையாற்றும்பொழுது ஒரு வேண்டு கோளை வைக்கிறார். அசோக்சிங்கால் என்பவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய ஒரு பிதாமகர்.
அதற்குப் பதில் சொல்லும்பொழுதுதான், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் சுஷ்மா சுவராஜ் அம்மையார், தேசிய பொது நூலாக, புனித நூலாக அறிவிக்கவேண்டும் என்று சொன்னதோடு நிற்கவில்லை, அடுத்தபடியாக, யோகாவையும் சேர்த்துக் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி அதனை மறுக்கவில்லை!

அப்படியானால், இதற்கான நடவடிக்கையை எடுத் திருக்கிறோம் என்று ஒரு அழுத்தம் கொடுத்து அவர் சொல்கிறார்.

அப்படி அவர் சொன்னால், அதை ஆமாம் என்றோ, அல்லது அந்த அமைச்சர் அவசரப்பட்டு பேசியிருக்கிறார்; அது அரசின் கருத்தல்ல என்றோ ஒரு பிரதமர் சொல்லி யிருக்கவேண்டும். அவர் இதுவரையில், அதனை மறுக்கவும் இல்லை.

எனவே, அவர்கள் நோட்டம் விட்டுப் பார்ப்பார்கள். சுப்பிரமணியசாமியை விட்டு கொஞ்சம் பேசவிட்டுப் பார்ப்பார்; அதற்கு மறுப்பு வருகிறதா? இல்லையா? என்று.


அப்படி மறுப்பு வந்துவிட்டால், சுப்பிரமணியசாமிக்கும், எங்கள் கட்சிக்கும் பொறுப்பில்லை என்று சொல்வார்.

ஆக, அவர்கள் விரும்புவதை, இந்த நாட்டு மக்கள் மத் தியில் விதைக்க முயல்கிறார்கள். இன்று உலக நாடுகளி லேயே அதிகமான நாடுகளோடு உறவு வைத்துக்கொண் டுள்ள, தூதுவர் உறவு வைத்துக்கொண்டுள்ள நாடு இந்திய நாடு. அமெரிக்காவிற்கு அடுத்தாற்போல.

162 நாடுகளுக்கும் அதிகமான நாடுகளில், ஒன்று அம்பாசிடர் என்ற பெயரில் வைத்திருக்கிறோம்; ஹை-கமி ஷனர் என்ற பெயரில் வைத்திருக்கிறோம்; மற்ற இடங் களில் எல்லாம் ஸ்டேட் கமிஷனர்களாகவும் இருக்கிறார்கள்.
மகாபாரதத்தில் நடுவில் திணிக்கப்பட்ட ஒரு கதையை...

உலகத்திலேயே அதிகமான தொடர்பு கொண்டுள்ள தோடு மட்டுமல்ல, தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டிலிருந்து, அடுத்த நாட்டு நாடாளுமன்றங்களிலும், அடுத்த நாட்டு அமைச்சர்களுடனும், தலைவர்களுடனும் நம்முடைய இந்தியப் பிரதமர் பேசி வருகிறார்; அவர்களை அழைக் கிறார். அவர்களுடைய முதலீட்டை எதிர்பார்க்கிறார். கொள்கை முழுவதையும் எதிர்பார்த்துப் பேசிக்கொண் டிருக்கின்ற ஒருவர், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குருச்சேத்திரப் போரில், ஒருவர் இன்னொரு வருக்குச் சொன்ன போதனை என்று, மகாபாரதத்தில் நடுவில் திணிக்கப்பட்ட ஒரு கதையை, தேசிய நூலாக அறிவிப்பதற்கு முன்பு, இன்று நாம் ஏற்றிருக்கிற இந்தியா, அந்த இந்தியா இருக்கிற உலகம் என்று எடுத்தால், இரண்டு முக்கியமான விஷயங்களை ஒரு வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, காரல் மார்க்ஸ், ஏங்கல்சும் நூல் எழுதுகிற காலத்தில்கூட, டார்வின் பரிணாம வளர்ச் சியைப்பற்றிய புத்தகத்தை எழுதி வெளியிட்டபோதுகூட, தெரியாமல், நிரூபிக்கப்பட முடியாமல் இருந்த ஒரு கருத்து, இப்பொழுது விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
ஜிலீமீ ஙிவீரீ ஙிணீஸீரீ ஜிலீமீஷீக்ஷீஹ்
ஓரணு உயிர் தோன்றி, பிறகு பரிணாம வளர்ச்சியில் அது மாறி, மாறி வளர்ந்து, மனித குலம் வளர்ந்தது, ஆறறிவு பெற்றது. பிறகு விஞ்ஞானத் தொழில்நுட்பப் புரட்சிகள் ஏற்பட்டன. பிறகு இந்த நான்கு நூற்றாண்டுகளுக்குள்ளாக, விஞ்ஞானப் புரட்சி என்பது விஞ்ஞானத் தொழில்நுட்பப் புரட்சியாக மாறியது. அந்த விஞ்ஞானத் தொழில்நுட்பப் புரட்சிக்குள் இப்பொழுது, மூலகாரணத்தை ஆராய்வ தற்காகத் தொடங்கப்பட்டது, ஏழாண்டு காலம், 5500 விஞ்ஞானிகள் உலகம் முழுமையிலிருந்தும் சேர்த்து, இரு பெரும் ஆழமான குழாய்களை அமைத்து, அங்கிருந்தே ஆராய்ச்சியை செய்து, ஜிலீமீ ஙிவீரீ ஙிணீஸீரீ ஜிலீமீஷீக்ஷீஹ்   முதன் முதலாக இந்த உலகம் மண்டலங்களாக, கோளங்களாக எவ்வாறு வெடித்தது? அண்ட கோளங்களாக அது பிரி வதற்கு முன்னால், எவ்வாறு மோதி நொறுங்கியது என்பது தான், தொடக்கத்திலிருந்து, இங்கே பாதிரியார்கள் இருக் கிறார்கள், அவர்கள் மன்னிக்கவேண்டும்; இது விஞ்ஞானக் கருத்தில் வந்தது. நான் மறுப்பைச் சொல்லவில்லை, விவாதத்தைக் கிளப்பவில்லை.

ஒரு உண்மையைக் கண்டறிந்தார்கள்!

அதை எழுப்பி, விவாதம் தொடங்கியபொழுதுதான், அதனை மறுத்து, விஞ்ஞானக் கருத்துகளைச் சொன்ன, கலிலியோவிலிருந்து, அதற்குப் பின்னரும் கடுமையாக அவர்கள் விமர்சிக்கப்பட்டார்கள். பல தவறுகளும் நடந்தன. ஆனால், இந்த விஞ்ஞான வளர்ச்சிகளுக்குப் பிறகு, ஓராண்டுக்கு முன்புதான், அந்த ஙிவீரீ ஙிணீஸீரீ ஜிலீமீஷீக்ஷீஹ் போல, விஞ்ஞானிகளால், எல்லா கோளங்களையும் இடிப்பதற்கு ஒரு அணுகுண்டை ஏவ முடியாது. உலகம் அழிந்துவிடும்.  அது அழியக்கூடாது. எனவே அவர்கள், பூமிக்குள்ளேயே, இரண்டு இடங் களிலிருந்து அணுசக்தியைப் பயன்படுத்தி, மோதவிட்டு, அதனை ஒரு பரிசோதனையாக நடத்திய பிறகுதான், ஒரு உண்மையைக் கண்டறிந்தார்கள்.


உடல் தோற்றம், பரிணாம வளர்ச்சி, ஒவ்வொரு உருவம் மாறுவது, உயிர்கள் தோன்றுவது, உயிரினம் பிறப்பது ஆகிய எல்லாவற்றையும் இதுவரையில் விஞ்ஞானம் நிரூபித்திருந்தாலும், எவ்வாறு உயிர் தோன்றுகிறது என்பதை, உங்களால் நிரூபிக்க முடிந்ததா? ஆகவேதான், ஆதியும், அந்தமும் இல்லாத, அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய், ஆனந்தமூர்த்தியாக, நீக்கமற நிறைந்துள் ளானே ஆண்டவன், அவன்தான் உயிரைப் படைக்கிறான். இந்த விஞ்ஞானியையும் அவன்தான் படைக்கிறான். அனைத்தையும் தீர்மானிக்கிறான் என்பது, ஆன்மிகவாதி களுடைய  ஆழமான நம்பிக்கை, அதைத்தான் சொன் னார்கள். மனிதகுலத்தில் பெரும்பான்மையானோர்கள் நம்பினார்கள்.

உயிர் எங்கிருந்து தோன்றுகிறது?

ஆனால், இன்று விஞ்ஞான உண்மையைக் கண்டு பிடித்த அந்த விஞ்ஞானிகள், 7500 பேர்; 17 ஆண்டுகால ஆய்வுக்குப் பிறகு, மோதவிட்ட பிறகு, உயிர் எங்கிருந்து தோன்றுகிறது? என்பதற்கு மூலம், பிளாக்ஸ்பாட் - தீண்டப் பட முடியாத ஒரு கருப்பு முடிவு. அதிலிருந்துதான் உயிர் தோன்றியது என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டார்கள்.
அப்படி நிரூபித்துக் காட்டிய பிறகும், மேற்கொண்டும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த முடிவுகள் வந்த பிறகு, போப் ஆண்டவரே பகிரங்கமாக அறிவித்தார்.

போப் ஆண்டவரே வருத்தப்பட்டார்!

விஞ்ஞான வளர்ச்சிகளை நான், எங்கள் மதம் ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளாமல், எடுத்த சில நடவடிக்கை களுக்காக வருந்துகிறேன். விஞ்ஞான உண்மைகளையும் நாங்கள் ஏற்கவும், ஏற்றுக்கொள்ளவும் இருக்கிறோம். இருப்பினும், இந்த விஞ்ஞானத்தையும், விஞ்ஞானிகளை யும் படைத்தவர் ஆண்டவர்தான் என்ற நம்பிக்கையில் நான் இருக்கிறேன்.
இதுதான் போப் ஆண்டவர், கடந்த வாரம் விடுத் திருக்கின்ற அறிக்கை. எனவே, அவரும் விஞ்ஞான மாற்றங்களை ஏற்றுக்கொண்டு சொல்லியிருக்கின்ற நேரத்தில், 162 நாடுகளுக்கும் மேலாக உறவு வைத்துள்ள, இந்தியாவின் 130 கோடி மக்களைக் கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர், இந்தக் கீதையை நாம் தேசிய நூலாக ஏற்றுக்கொள்ளலாம் என்று சொல்கிறார் என்றால்,

நான் ஆறு, ஏழு கேள்விகளாக, கோரிக்கைகளாகத்தான் வைக்கப் போகிறேன். அந்த ஆராய்ச்சிக்குள் இறங்கப் போவதில்லை.

நேற்று, நாடாளுமன்றத்தில் ஒருவர் கூறியுள்ளபடி, காந்தியும் ஒன்றுதான்; கோட்சேவும் ஒன்றுதான். ஏனென் றால், கண்ணபிரான் என்ன சொல்லியிருக்கிறான், எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன். எனவே, கோட்சே விலும் அவன்தான் இருக்கிறான்; காந்தியிலும் அவன்தான் இருக்கிறான். எனவே, இரண்டு பேரும் ஒன்று.
கொல்வதும் நானே; கொல்லப்படுவதும் நானே;
படைத்தவனும் நானே; அழிப்பவனும் நானே!
இதுதானே அவனுடைய முழு தத்துவம்.

எனவே, முதல் கேள்வி, இந்த உலகம் படைக்கப் பட்டதா? தோன்றியதா?
உயிர் படைக்கப்படுகிறதா? தோன்றுகிறதா?

இந்தக் கேள்விக்கு, இப்பொழுது அவர்கள் கண்ணனால் படைக்கப்பட்டதுதான்; இது தோன்றியது அல்ல என்றுதான் சுஷ்மா சுவராஜ் சொல்கிறார்.
ஆகவே, அந்தக் கண்ணனே எல்லா அநியாயங்களை யும் அழிப்பதற்கு, ஆண்டவனே அடிக்கடி அவதரிப்பானே!
அத்வானியே என்னிடம் நேரில் சொன்னார்!

இந்திய நாடு அடிமைப்பட்டபொழுது, அந்நிய நாடு களுக்கு அடிமைப்பட்டபொழுது, அது அவர்கள் கணக்குப்படி, முகலாயர்களுக்கு அடிமைப்பட்ட , 800 ஆண்டுகளுக்குமுன் அவர்கள் கணக்குப்படி, அதற்குப் பிறகு வெள்ளையர்களுக்கு அடிமைப்பட்டபொழுது, இதை வேறு யாரும் சொல்லவில்லை, அத்வானி அவர்களே என்னிடம் நேரில் சொன்னார்,
நம் நாட்டில் முதலில் ஆக்கிரமித்தவர்கள் முஸ்லிம்கள்; பின்னர் வந்தவர்கள்தான் வெள்ளையர்கள். பின்னர் வந்த வெள்ளையர்களை அனுப்பிவிட்டோம்; முன்னர் வந்தவர்களை இங்கேயே குடியிருக்க விட்டுவிட்டோம். அவர்களை வெளியேற்றினால்தான் முழு சுதந்திரம். இதைப் பச்சையாகவே சொன்னார்.

எனவே, அது அவருடைய தாய்மொழி; அதுதான் அவர்களின் முழு நம்பிக்கை.
                   -------------------------- தொடரும்-------28-12-2014
Read more: http://viduthalai.in/page-7/93555.html#ixzz3NCjW24w2
****************************************************************************************
இனியும் ஏமாற நாம் தயாராக இல்லை-எதிர்த்து முறியடிப்போம்!

பழைமைக்கு முலாம் பூசி அடிமைப்படுத்தப் பார்க்கின்றனர்
இனியும் ஏமாற நாம் தயாராக இல்லை-எதிர்த்து முறியடிப்போம்!
சென்னை சிறப்புக் கூட்டத்தில் தோழர் தா.பாண்டியன் முழக்கம்!

சென்னை, டிச.29- பழைய சடங்குகளை, சாத்திரங்களை, உபநிஷத்துகளைப் புகுத்தி நவீன முலாம் பூசி நம்மை அடிமைப்படுத்தப் பார்க்கிறார்கள் - நாம் அவர்களுக்குச் சவாலாக இருப்பதோடு, நம் முன்னோர்கள்தான் ஏமாந் தனர் என்றால், இனியும் நாம் ஏமாறுவதற்குத் தயாராக இல்லை; எதிர்த்து முறியடிப்போம் என்றார் தோழர் தா.பாண்டியன்.


12.12.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதா? என்ற தலைப்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
கீதையில் உபதேசித்த கண்ணனின் உபதேசம் உனக்கு உதவியதா? இல்லையா?


இப்பொழுது அவர்கள் தயவு செய்து சொல்ல வேண்டும். நீங்கள்தான் பகவத் கீதையைப் படித்தீர்கள்; நீங்கள் நல்லறிவு பெற்றீர்கள். எல்லா மன்னர்களுக்கும் அமைச்சர்களாக நீங்கள்தான் இருந்தீர்கள். எல்லாவற் றிற்கும் மேலாக, எல்லா தெய்வங்களுக்கும் பக்கத்தில், கோவிலுக்குள்ளிருந்து தேவபாஷையில் செல்போன் இல்லாமல் பேசிக்கொண்டிருந்தவர்கள் நீங்கள்தான்.


அவ்வளவு இருந்தும், ஒரு தராசு எடுத்துக்கொண்டு, கண்ணாடி விற்க வந்த ராபர்ட் கிளைவ் இந்தியாவைப் பிடித்து ஆளத் தொடங்கினானே, மன்னர்களுக்கும் புத்தி சொல்லி, ஆண்டவனுக்கும் அருகில் நீ இருந்தபொழுதும், இந்த நாடு அடிமைப்பட்டதே, ஏன்? அன்று இந்தக் கீதை யில் உபதேசித்த கண்ணனின் உபதேசம் உனக்கு உதவியதா? இல்லையே!


சக்கராயுதத்தை ராபர்ட் கிளைவுக்கு எதிராக ஏன் ஏவவில்லை?


ஒரு அர்ஜூனன் வேண்டாம்; அந்தக் கண்ணனே, அதர்மங்கள் தலைதூக்கும்பொழுது அவன் அவதரிப் பானே, ஏன் எங்கள் குலத்தில் எல்லாம் வேண்டாம்; உன் வயிற்றிலேயே ஏன் பிறக்கவில்லை? அவன் சக்கரா யுதத்தை ராபர்ட் கிளைவுக்கு எதிராக ஏன் ஏவவில்லை?.
சரி, அவன்தான் 250 ஆண்டுகாலம் ஏவவில்லை; யார் கடைசியில் போராடினார்கள்; உழைக்கின்ற சாதாரண மக்கள்; உன்னால், சூத்திரன் என்று அழைக்கப்பட்ட மக்கள் போராடிய பிறகுதான், இந்த நாடு விடுதலை பெற்றது. அப்படிப் பெற்ற காரணத்தினால், நீ ஆளுகின்ற பேற்றினைப் பெற்றிருக்கிறாய்.
சரி, கீதையேப் பின்பற்றலாம்; கீதையின் உபதேசத் தையே பின்பற்றி ஒரு காரியத்தைச் செய்யலாம். நம்மு டைய இந்திய ராணுவத்திற்கு, இப்பொழுது இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்துள்ளீர்கள். எதற்காக? கீதையில் இருக் கிறதே, ஏழு குதிரையைப் பிடி; ஒரு பெரிய சக்கரம் போட்ட தேரை தயார் செய்! வில்லையும், அம்பையும் நம்முடைய ராணுவ வீரர்களுக்குக் கொடு.


47 ஆண்டுகாலமாக - உன் கண்ணன் என்ன செய்தான்?


பயப்படாதே, அநியாயத்தை அழிக்கப் புறப்படு என்று கண்ணன்மாதிரி நீ உபதேசம் செய்! புறப்படட்டும்!


பக்கத்திலிருக்கின்ற பாகிஸ்தானே, உன் காஷ்மீருக் குள்ளே விரலை விட்டு ஆட்டுகிறான், தடுக்க முடிய வில்லை! 47 ஆண்டுகாலமாக - உன் கண்ணன் என்ன செய்தான்?


அந்நியன் வந்து அடிமைப்படுத்தும் பொழுதும், அவனும் தடுக்கவில்லை; அவனோடு பேசிக்கொண்டிருந்த நீயும் தடுக்கவில்லை. மாறாக, அவன் ஆட்சிக்கு வந்த பிறகு, அவன் கொடுத்த உயர் பதவிகள் அனைத்திலும் நீங்கள் தான் இருந்தீர்கள். இந்தியாவில் சுதந்திரத்திற்காகப் போரா டியவர்களை நாடு கடத்துகின்ற உத்தரவை போட்டதும் நீதான்; கைகளில் விலங்கு போடச் சொன்னதும் நீதான். அத்தனை அக்கிரமங்களையும் செய்தது நீதான்.
இப்பொழுது அவை அனைத்தும் முடிந்து, அதிகாரம் வந்த பிறகு, பழையபடியும் இப்பொழுது வேறு முனையில் இந்தத் தாக்குதலை எங்கள் பக்கம் திருப்பியிருக்கிறாய் என்பது தெரியும்.


நம்முடைய போராட்டம் இன்றோடு அல்ல. தொடர்ந்து நடத்தப்படவேண்டும்!
அவர்கள் இன்னும் நான்கரை ஆண்டுகள் இருக்கப் போகிறார்கள். எனவே, நம்முடைய போராட்டம் கடுமை யாக இருக்கப் போகிறது. அறுதிப் பெரும்பான்மை அவர் களுக்கு இருக்கிறது. அவர்களை ஆதரிக்கின்ற கட்சி களையும் சேர்த்தால், எந்தச் சட்டத்தையும் திருத்து வதற்குரிய பெரும்பான்மையும் இருக்கிறது. இன்னும் பலர் கொள்கை ரீதியாக எதிர்ப்பதாகத் தெரியவில்லை. ஆட்சி நாற்காலி மாறியிருக்கிறது என்ற அளவிலேதான் எதிர்க் கிறார்கள். சித்தாந்தப்படி, கொள்கைப்படி எதிர்க்கவேண்டி யவர்கள் இங்கேதான் இருக்கிறோம். நாம் வெளியில் இருக்கிறோம். எனவே, நம்முடைய போராட்டம் இன்றோடு அல்ல. தொடர்ந்து நடத்தப்படவேண்டும்; இன்னும் விரிவாக நடத்தப்படவேண்டும்.
இப்போது அவர்கள் இந்தியாவில் எல்லாத் துறை களிலும், பொதுத் துறை வேண்டாம்; தனியார் துறை வேண் டும். அதற்காக திட்டக்குழு வேண்டாம்; கலைத்திருக் கிறார்கள். இப்படி ஒவ்வொன்றாக செய்து வருகிறார்கள். இதன் உள்நோக்கம் என்ன? உள்நோக்கம் பொருளாதார சீர்திருத்தம் மட்டுமல்ல, இந்தியாவைப் பொறுத்தவரையில். பொதுத் துறை என்று கேட்டால், மண்டல் குழுப் பரிந் துரைக்குப் பின், பிறகு நம்முடைய வேண்டுகோளுக்கு இணங்க, இட ஒதுக்கீடு என்பது அரசின் நேரடிப் பார்வை யில் உள்ள எல்லாத் துறைக்கும் வேண்டும். தனியார்த் துறைக்கும் அது வேண்டும் என்ற கோரிக்கையை நாம் வலியுறுத்திக் கொண்டு வருகிறோம். ஆனால், அது இன்னும் ஒப்புக்கொள்ளப்படவில்லை.


இட ஒதுக்கீடே இல்லை என்று ஆக்குவதற்குத் தனியார் மயம்


இப்பொழுது தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று நாம் கேட்பதை நேரடியாக மறுக்காமல், பொதுத் துறையிலும் இட ஒதுக்கீடு இல்லாமல் செய்வதற்கு என்ன வழி? பொதுத் துறையை தனியார்த் துறையாக மாற்றிவிடுவது. ஏனென்றால், வேலை வாய்ப்புக்கு இட ஒதுக்கீடு 25 சதவிகிதமா? 40 சதவிகிதமா? 50 சதவிகிதமா? என்பதல்ல. இட ஒதுக்கீடே இல்லை என்று ஆக்குவதற்குத் தனியார் மயம் என்பதை செய்துகொண்டிருக்கிறார்கள்.


அவர்கள் வகுத்திருக்கின்ற ஒரு புதிய உபாயம்


வெள்ளைக்காரர்களின் ஆட்சிக் காலத்திலேயே அரசுடைமை ஆக்கப்பட்டது ரயில்வே துறை. இந்தியா விடுதலை பெற்ற பிறகு அல்ல. அந்த ரயில் நிலை யங்களை இப்பொழுது தனியாருக்குக் கொடுக்கலாம் என்று தொடங்கியிருக்கிறார்கள். எனவே, அது திறமையை வளர்ப்பதற்கு, சுத்திகரிப்பதற்கு, முன்னேற்றுவதற்கு என்பதற்காக அல்ல; நம்மை  அப்புறப்படுத்துவதற்கு அந்த வாய்ப்புக்குள்ளே நுழைய விடாமல் தடுப்பதற்கு அவர்கள் வகுத்திருக்கின்ற ஒரு புதிய உபாயம்.
நாம் ஒன்றைச் சொல்லலாம்; இப்பொழுது இந்த இட ஒதுக்கீடு வந்த பிறகுதான் திறமை குறைந்தது; நாடு முன்னேறத் தவறிவிட்டது. திறமையானவர்கள் வந்த பிறகுதான் இந்த நாடு சுத்தமாகும் என்கிறார்கள்.


பண்டாரங்கள் ஆண்டால், சங்குதான் ஊதுவார்கள்!


இரண்டே இரண்டு முக்கியமான காரியங்களை செய்ய லாம். கங்கையைச் சுத்தப்படுத்த  வேண்டும்; அதற்காக 1000 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறார்கள். இந்தியா முழுமையும் உள்ள நதிகளை இணைக்கவேண்டும். அதற்காக 100 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறார்கள். எனவே, இதிலிருந்தே அவர்களின் கருணை வெள்ளம் எந்தப் பக்கம் பாய்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரியும். பண்டாரங்கள் ஆண்டால், சங்குதான் ஊதுவார் கள். நாம் கொஞ்சம் சும்மாயிருந்தால், சேகண்டி அடிக்கவேண்டியதுதான்.


கங்கையை யார் அசுத்தப்படுத்துகிறார்கள்? நம்மில் அனேகமாக பலர் அங்கே சென்றியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நானும் இந்தக் கங்கை நதியைப் பார்ப்ப தற்காக பற்பல கனவுகளோடு சென்றேன். கங்கைக் கரை யில் இந்திர குமாரி, ரம்பை, திலோத்தமை இருப்பார்கள் என்று திரைப்படத்தில் வேறு காட்டிவிட்டார்கள்.  அங்கே சென்று பார்த்தால், இளம் வயது உள்ளவனும், துறவியாகி விடுவான். அந்தக் கங்கையில் நான் படகில் சென்றேன், என்னுடன் 10, 15 தமிழர்களும் வந்தார்கள். எங்களுக்கு முன்பாக, படகில்லாமல், சில உடம்புகள் செல்லுகின்றன. நீந்துவதுபோல செல்கிறது. நான் படகோட்டியைக் கேட்டேன், அது என்னப்பா? என்று.


அரிச்சந்திரன் காலத்திலிருந்து இதுதானே கதை!


கரையில் உடலை எரிப்பான்; பாதியில் எரிந்திருக்கும்; மீதி உடல் எரியாமல் இருக்கும்; விறகு இல்லை என்று சொல்லியிருப்பார்கள்; உடனே அந்த உடலை கங்கையில் தள்ளியிருப்பார்கள். எப்படியும் கங்கையில் கரைத்து விட்டாகி விட்டது என்றால், நேரே சொர்க்கத்திற்குச் செல்லலாம் என்பார்கள். அதனால், அவர் டிக்கெட் வாங்காமலேயே சொர்க்கத்திற்குச் சென்று கொண்டிருக் கிறார் என்றார். இது ஒரு நம்பிக்கை. இது இன்றைக்கு இல்லை, அரிச்சந்திரன் காலத்திலிருந்து இதுதானே கதை.

அந்த கங்கைக் கரையில் பறக்கும் கழுகுகளுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது; அந்த உடலின்மேல் 10 கழுகுகளுக்குமேல் உட்கார்ந்து, பலூன் போன்று பெரிதாக இருக்கும் வயிற்றின்மேல் உட்கார்ந்து பிய்த்து பிய்த்து சாப்பிடுகிறது.
உடனே நான் படகோட்டியிடம் சொன்னேன்; கங்கையை கடக்கவேண்டாம்; திருப்பிக் கொண்டுபோய் விட்டுவிடு என்று. ஏனென்றால், அந்தக் கழுகுகள் தவறிப் போய் நமது குடலையும் குத்திக் குதறிவிட்டால் என்னாவது!


பாதி எரிந்த உடல்களை கங்கையில் தள்ளாதே!


சரி, கங்கையை சுத்தப்படுத்தப் போகிறோம், சுத்தப் படுத்தப் போகிறோம் என்று சொல்கிறார்களே, அந்தக் கங்கோத்திரியிலிருந்து கடலுக்குச் செல்கின்ற வழி முழுவதும், கரையில் இதுபோன்ற மயானம் வைத்துக் கொளுத்தாதே, பாதி எரிந்த உடல்களை கங்கையில் தள்ளாதே! என்று சொல்லிவிட்டு, நாடாளுமன்றத்திற்கு வா பார்ப்போம்!


அப்படிச் சொல்வார்களா? சாமியார் சூலாயுதத்தை எடுத்துவிடுவான். மூன்று சூலாயுதத்தோடு தொகாடியா கிளம்பிவிடுவான். இது எந்த எந்த காலத்திலிருந்து எங்களுடைய மன்னர்கள் ஆண்ட காலத்திலிருந்து, தெய்வங்கள் எங்களுக்குக் கொடுத்த அதிகாரம், எனவே, கங்கையில் குளித்தால்தான் பாவம் போகும் என்பதல்ல; பாவியும் போவான்.
இதைச் சொல்லி, அவர்கள் செய்வார்களா? துணிச்ச லோடு அவர்கள் ஏற்றுக்கொண்டு அறிவிக்கட்டும்; பிறகு இந்தியாவை சுத்தப்படுத்துவதைப்பற்றி பேசலாம். அழுக்குப் படுத்துவது நீ; அதற்குப் பெருக்குமாறு எடுத்து வந்து சுத்தப்படுத்துவது நாங்கள். இதுதானே ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இந்த நாட்டில் செய்தீர்கள். மனிதக் கழிவை தலையில் தூக்க வைத்தீர்கள். அது அவனின் சமூகக் கருமம்; பிரதிபலனை எதிர்பார்க்காமல் செய்யவேண்டிய கடமை. அப்படிச் செய்தால், அவர்களில் சிலரை, அநேகமாக கடைசியில், அவன் ஆண்டவனைத் தரிசிக்கலாம்; ஆனாலும், இவன் குணத்தை இவனாலும் மாற்ற முடியாது. அவனே சொல்லியிருக்கிறான்.

ஏற்றுக்கொள்ளத் தயாரா? சொல்!


பிறகு கீதையை ஏற்றுக்கொள்ளலாமா? வேண்டாமா? என்று பார்க்கலாம்
சரி, நாங்கள் இதுவரைக்கும் அள்ளிக்கொண்டிருந் தோம், அதனால்தான், நாடு சுத்தமாகவில்லை. நாங்கள் அதனை விட்டுவிடுகிறோம். இடையில் கோவிலில் போய் மணி அடிப்பதையெல்லாம் நீங்கள் கேட்டபொழுது, நான்கூட சொன்னேன், ஏங்க, போகாமல் இருக்கின்ற வனை உள்ளே தள்ளுகிறீர்கள்; தயவு செய்து கேட்கா தீர்கள் அதை என்றேன். ஆனால், இப்பொழுது அதனை கேட்கலாம். அங்கேகூட வேண்டாம்; நாங்கள் இந்த வேலையை விட்டுவிட்டு வெளியேறி விடுகிறோம். இப்பொழுது வாங்கும் சம்பளத்தைவிட, மூன்று மடங்கு சம்பளம் தரச் சொல்லுகிறோம். நூற்றுக்கு நூறு வேலையை நீங்களே ஏற்றுக்கொள்ளுங்கள். உச்ச உயர்ஜாதியினர் பிராமணர்கள் மட்டுமே அதனை செய்யுங்கள்; உங்களோடு நாங்கள் பங்குக்கே வரவில்லை. ஏற்றுக்கொள்ளத் தயாரா? சொல்! பிறகு கீதையை ஏற்றுக்கொள்ளலாமா? வேண் டாமா? என்று பார்க்கலாம்.


அதேபோல், சமஸ்கிருத மொழி படிக்கவேண்டும்; ஜெர்மன் மொழி படிக்கக்கூடாது என்கிறார்கள். நீ வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கவேண்டியது தான்; கட்டாயம் அடுத்து ஜெர்மனிக்குப் போய்விட்டு வா. சமஸ்கிருதம் படிக்கவேண்டும், படிக்க வைக்கலாம் என்று சொல்கிறபொழுது, அதற்குப் பயன் இருக்கவேண்டும் அல்லவா? ஏதாவது ஒன்றை ஒரு மாணவன் படிக்கிறான் என்றால், பின்னர் அதனைப் பயன்படுத்தவேண்டும்; அறிவுக்குப் பயன்படுத்தவேண்டும்; தொழிலுக்குப் பயன்படுத்தவேண்டும்.

மருத்துவக் கல்லூரிக்கோ,பொறியியல் கல்லூரிக்கோ மனு போடவே கூடாது!


இப்பொழுது சமஸ்கிருதத்தை கட்டாயம் படிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், சமஸ்கிருத கல்லூரிகளை மத்திய அரசாங்கமோ, அல்லது அந்தக் கோவில்களோ அந்தக் கோவில்களுக்கு நன்றாக வருமானம் வருகிறது; அவர்களை வைத்து நடத்தச் சொல் லுங்கள். பிராமணர்களுடைய பிள்ளைகள் அத்தனை பேரும் அந்த சமஸ்கிருதத்தினை மட்டுமே படித்து, கோவில் பூசாரி வேலையை மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டும். மருத்துவக் கல்லூரிக்கோ, பொறியியல் கல்லூரிக்கோ மனு போடவே கூடாது.
கிராமத்தில் இருக்கும் பிள்ளைகள், சேரிகளில் இருக்கும் பிள்ளைகள் மருத்துவக் கல்லூரியிலோ, பொறியியல் கல்லூரிகளிலோ படிக்கட்டும்.
நீ புனிதமானவன்; கடவுளோடு போகவேண்டும்; சமஸ்கிருதம் தேவபாஷை; அதைப் போய் மனிதன் படிக்க முடியுமா? நீதான் தேவனோடு இருப்பவன், நீ அதனைப் படி; உன் பிள்ளைகளைப் படிக்க வை. நீ பிலடெல்பியா, சிகாகோ, நேராக பில்கேட்ஸ்சோடு சம்பந்தம், நாங்கள் உனக்கு மலம் அள்ளி இங்கே கழுவிக்கொண்டே இருப் பதற்கு, மீண்டும் கீதை என்று எடுத்தால், நாங்களெல்லாம் ஒன்று சேர்ந்து எழவேண்டிய நேரம் வந்துவிட்டது; எந்த முறையிலும் எழுவோம்.


நம்முடைய பணி கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கப் போகிறது


எனவே, இனி அர்ஜூனனுக்கு கண்ணன் போதித் தானோ இல்லையோ! நாம் நம்மவர்களுக்குப் போதிப் போம். வில்லை எடுக்கவேண்டிய நிலை வந்துவிட்டது; புல்லர்களை ஒழிப்பதற்கு நாம் அனைவரும் ஒன்று சேரவேண்டும். அவன் அதிகாரத்தைக் கட்டாயம் பயன்படுத்துவான். ஆணவம் இருக்கிறது; அறியாமல், பணத்திற்காக, பதவிக்காக அவனை ஆதரிக்கின்ற தொலைக்காட்சிகள் இருக்கின்றன. எனவே, நம்முடைய பணி கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கப் போகிறது.


அவர்கள் நான்கு வருணத்தை, பிறப்பை, மறுபிறப்பை, ஆண்டவன் படைப்பு என்கிற பெயரால், நம்மை அடிமை யாக்கக் கூடிய தத்துவத்தை அழுத்தமாகக் கூறியிருப்பது பகவத் கீதை. அதில் எந்த மாற்றமும், எந்தக் காலத்திலும் செய்யவே முடியாது. பகவத் கீதை என்று சொன்னாலே, ஆண்டவனுடைய கீதம். ஆண்டவன், பகவான் அது அவனுடைய கீதம். எனவே, ஆண்டவன் சொன்னதில், நாம் எந்த எழுத்துப் பிழையையும், இலக்கணப் பிழை யையும் திருத்த முடியாது. அவன் சொன்னதை அப்படியேதான் வைத்துக்கொள்ளவேண்டும், அட்சரம் பிறழாமல். இந்த விஞ்ஞான உலகத்தில், எல்லாம் பயின்ற பிறகு.


விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்!


அனேகமாக நம் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மாபெரும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். அனேகமாக நம்முடைய நண்பர்கள் படிக்கவேண்டும்; அவரையும் நம்முடைய மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டும். அவர் வாழ்வதே ஒரு பெரிய அதிசயமான செய்தி. 10 மாத குழந்தையாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பொழுதே, இன்னும் 10 நாள்களில் அந்தக் குழந்தை இறந்துவிடும் என்று சொன்னார்கள். காப்பாற்ற முடியாது என்று சொன்னார்கள். ஆனால், மருத்துவர்கள் சொன் னதுபோல், 10 நாள்களில் சாகவில்லை; இப்பொழுது 70 வயதைத் தாண்டி வாழ்ந்துகொண்டிருக்கிறார். ஆச்சரியத் திலும் ஆச்சரியம் என்னவென்றால், அவருக்கு கால்களால் நடக்க முடியாது; இரண்டு கைகளும் வேலை செய்யாது; உடலும் வேலை செய்யாது; நரம்புகள் இயங்குவதில்லை. மண்டையும், மூளையும் மட்டுமே வேலை செய்துகொண் டிருக்கின்றன. அவர் பேசுவதற்கு அவருடைய நாக்கும், உதடும் வேலை செய்யவில்லை. அதற்காக ஒரு கருவியை அவரே வடிவமைத்திருக்கிறார். அதற்கென்றே சிலருக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறார். ஆனால், உலகப் புகழ்பெற்ற ஒப்புக்கொள்ளப்பட்ட விஞ்ஞானியாக வாழ்கிறார்.


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதற்கு முன்பு இருந்த போப் ஆண்டவர், எல்லா மதத் தலைவர்களையும், விஞ்ஞானிகளையும் கொண்ட ஒரு பொது அரங்கத்தை, ரோமாபுரியிலேயே, பீட்டர்ஸ் ஸ்கொயரிலேயே கூட்டி னார். அதற்காக தனி விமானத்தில் ஸ்டீபன் ஹாக்கிங்கும் வரவேண்டும் என்று அழைத்தார். அவரும் அழைத்த படியே அங்கு போய்ச் சேர்ந்தார்.
அந்த விஞ்ஞானி முழுக்க முழுக்க கடவுள் மறுப்பாளர்; கடவுள் என்ற ஒரு சக்தி இருப்பதை, முழுக்க முழுக்க மறுக்கின்ற விஞ்ஞானி. ஆனால், அவர் நாற்காலியில்தான் அமர்ந்திருப்பார்; கருவியின்மூலமாகத்தான் அவர் பேசுவார்.


உலகம் முழுமையிலும் உள்ள கிறிஸ்தவர்களாகட்டும், அல்லது போப் ஆண்டவரைப் பார்க்கின்றவர்களாகட்டும், எல்லோரும் கடைசியில் எழுந்து போய் அவரிடம் ஆசீர் வாதம் பெறுவார்கள். அப்பொழுது போப் ஆண்டவர் நின்று, அவர்கள் எல்லோருக்கும் ஆசீர்வாதம் கொடுப்பார்.


விஞ்ஞானியிடம் போப் ஆண்டவர் ஆசீர்வாதம் கேட்டார்!


இந்த விஞ்ஞானியைப் பொறுத்தவரை நடக்க முடி யாது. எனவே, நாற்காலியில் கடைசியில் உட்கார்ந் திருக்கிறார். கூட்டத்தார் அத்தனை பேரும் வியக்கக்கூடிய வகையில், போப் ஆண்டவர் எழுந்து நேராக அவரிடம் சென்று, அந்த விஞ்ஞானியிடம் ஆசீர்வாதத்தை போப் ஆண்டவர் கேட்டார். அங்கே வந்திருந்த விஞ்ஞானிகள் உள்பட, அத்தனை பேரும் வியந்து போனார்கள்.


அப்பொழுதும் பழையபடி, ஸ்டீபன் ஹாக்கிங்கிடம், பத்திரிகையாளர்கள் கேட்டார்கள், கடவுள் இருக்கிறாரா? என்று.


கடவுள் மனிதனால் உருவாக்கப்பட்டது


அவருடைய நம்பிக்கையில் நான் குறுக்கிட விரும்ப வில்லை. என்னால், அவரை நம்ப வைக்க முடியாது. இல்லை என்பது தெரியும்; அதனைத்தான் அந்த விஞ்ஞான ஆய்வில் நாங்கள் கண்டிருக்கிறோம். அப்படி ஒன்று இல்லை; அது மனிதனால் உருவாக்கப்பட்டது. எனவே, அந்த விவாதத்திற்கு நான் வரவில்லை. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதைத் தெளிவாகச் சொன்னார்.


அப்பொழுது போப் ஆண்டவர், அதிலும் ஒரு கெட்டிக்காரத்தனமாக ஒரு பதிலை சொன்னார்.


இத்தனை ஆண்டுகாலம் உயிரோடு இருப்பதோடு மட்டுமல்ல, ஆரோக்கியமாக, அற்புதமாக இத்தகைய சிந்தனைகளைக் கொடுக்கிறீர்கள் என்றால், உங்களை ஆண்டவன் ஒருவனால்தான் படைக்க முடியும்; ஆகவே, இருக்கிறார் என்று நான் நம்புகிறேன் என்றார்.


எனவே, இந்த வாதங்களை வைத்துப் பார்த்தால், அது முடிவற்ற விவாதமாக இருக்கும். ஆனால், வாழ்க்கையில், நமக்கு இன்று என்ன? என்பதை வைத்துப் பார்த்தால், விஞ் ஞானத்தின் உதவியால்தான்,  மனிதகுலம் முன்னேறியிருக் கிறதே ஒழிய, நம்பிக்கைகளால், இவர்கள் அமைத்த சமய சடங்காச்சாரங்கள், விபத்துகளால் அல்ல.


இனியும் நாங்கள் ஏமாறுவதற்குத் தயாராக இல்லை


எனவே, இப்பொழுது அவர்கள் பழையபடி, சடங்கு களை, சாத்திரங்களை, உபநிஷத்துகளைப் புகுத்தி, ஒவ் வொன்றாகப் பழையபடியும், இதை ஒரு நவீன முலாம் பூசி நம்மை அடிமைப்படுத்தப் பார்க்கிறார்கள். நாம் அதற்கு இடம்தராமல் இருக்கவேண்டும் என்றால், இப்பொழுது அவர்களுக்கு பகிரங்கமான சவால் விடுவதோடு மட்டுமல்ல, நம்முடைய முன்னோர்கள்தான் ஏமாந்தார்கள் என்றால், இனியும் நாங்கள் ஏமாறுவதற்குத் தயாராக இல்லை. எதிர்த்து நின்று முறியடிக்க, அறிவுள்ள விஞ்ஞான அறிவு கொண்டு சிந்திக்கின்ற படை உண்டு என்பதை நாம் அனைவரும் சேர்ந்து நிரூபிக்கவேண்டும்; செயலாற்ற வேண்டும்.


இந்தப் போரில் நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்!


எனவே, தேர்தல் களங்களுக்கு அப்பால், இந்த நாட் டையும், மக்களையும் காப்பாற்றுகிற, அவர்கள் பாணி யிலேயே சொல்லுகிறேன், இந்தப் போரில் நாம் அனை வரும் ஒன்றுபடுவோம்! இன்றிலிருந்து அதனைச் செய்வோம்! தொடருவோம் என்று கூறி முடிக்கிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் தா.பாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.

                                        -------------------------"விடுதலை” 29-12-2014
Read more: http://viduthalai.in/page-4/93606.html#ixzz3NI0BylRl

29.12.14

ஒப்பனை செயல்கொண்டு ஜொலிக்கிறது பி.ஜே.பி. என்னும் ஆரியம்!ஏமாந்து விடாதீர்கள்!


காந்தியார் நினைவு நாளில் மதவெறி எதிர்ப்பு பிரச்சார கூட்டங்கள் நடத்தப்படும்ஒப்பனை செயல்கொண்டு ஜொலிக்கிறது பி.ஜே.பி. என்னும் ஆரியம்!
தமிழர்களே ஏமாந்து விடாதீர்கள்!

தமிழர் தலைவர் எச்சரிக்கை

ஒகேனக்கல் போல குளிர்ந்த இந்த மூன்று நாள்கள்!
தமிழர் தலைவர் எச்சரிக்கை

ஒகேனக்கல், டிச.29- தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் என்றால், அந்த ரம்மியமான நீர் வீழ்ச்சி எல்லோர் நினைவுத் திரையிலும் வண்ண வண்ணப் பூக்களாக ஓடும்.


அந்த ஒகேனக்கல்லில்தான் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 27, 28, 29 ஆகிய மூன்று நாள்களிலும் நடை பெற்றது. 35 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக ஆண்டுதோறும் நடைபெறும் குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் கூட 100 இருபால் இளைஞர்கள்தான் பங்கேற்பர். (அந்த எண்ணிக்கைக்குமேல் போகக்கூடாது என்ற வரையறையும் இதற்கு முக்கிய காரணமே!) ஆனால், இந்த மூன்று நாள்களிலும் 150-க்கும் மேற்பட்ட இருபால் இளைஞர்கள் திரண்டது தித்திப்பான செய்தியே! (இதே ஒகேனக்கல்லில் 1995 இல் முதலாவதாகப் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது).


இந்தப் பயிற்சிப் பட்டறையில் கூர் தீட்டப்படும் இளை ஞர்கள் மிகப்பெரிய அளவில் சமுதாயப் பொறுப்புள்ளவர் களாக இருப்பார்கள். அரசியல், தேர்தல், பதவி என்ற பேராசைப் பேய்ப் பிடித்தவர்களாக ஒருபோதும் இருக்க மாட்டார்கள்; மாறாக, சமுதாய மாற்றத்திற்கான நெம்பு கோலாக மாறுவார்கள் - அத்தகு அடிப்படைப் பயிற்சி இங்கு அளிக்கப்படுகிறது.
மூன்று நாட்களும் முகாமிலேயே தங்கி வகுப்புகளை திராவிடர் கழகத் தலைவரே எடுப்பது என்பது இளைஞர் களுக்கு அரிய வாய்ப்பும், பேறும் ஆகும்.


இயக்க வரலாறு, சமூகநீதி, பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு, கடவுள் மறுப்பு, இதிகாச புராணப் புரட்டுகள், இந்துத்துவா, கழகப் போராட்டங்கள், சுயமரியாதைச் சுட ரொளிகள் எனும் தலைப்புகளில் வகுப்புகள் நடத்தப் பட்டன. வினா-விடைப் பகுதி தனிச் சிறப்பானது.

இந்தப் பயிற்சிப் பட்டறை நடந்துகொண்டிருக்கும் இதே கால கட்டங்களில் கிருட்டிணகிரியிலும் (28.12.2014), பென்னாகரத்திலும் (29.12.2014) திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடுகள், மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்பு. இதற்கிடையே 28.12.2014 ஞாயிறன்று காலை திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு!
கூட்டத்தில், தமிழகம் தழுவிய அளவில் 2000 திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடுகள் நடத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டது.


முதல் மாநாடு 26.12.2014 தென்சென்னை எம்.ஜி.ஆர். நகரில் தொடங்கப்பட்டது. இரண்டாவது மாநாடு கிருட்டிண கிரியிலும், மூன்றாவது மாநாடு பென்னாகரத்திலும் ஒழுங்கு செய்யப்பட்டது.பாரதீய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்த நிலையில், தனது இந்துத்துவா கோர முகத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, மதவாதக் கல்வித் திணிப்பு, கீதை இந்தியத் தேசியப் புனித நூலாக அறிவிப்பு, காந்தியாரைப் படு கொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் சிலை, ஒருபடி மேலாக கோட் சேவுக்குக் கோவில் என்கிற அளவுக்கு இந்துத்துவாவாதி களின் தலைகளில் கொம்புகள் முளைத்து முட்டித்தள்ள முற்பட்டுவிட்டன.


காந்தியாரைப் படுகொலை செய்த இந்து மகாசபை யைத் தோற்றுவித்த மதன்மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா விருதாம்!


சிறுபான்மை மக்கள் இந்த நாட்டில் வாழவே கூடாது என்கிற நெருக்கடிப் புயல்களை உருவாக்கி வருகின்றனர். சிறுபான்மை மக்களை அவர்கள் சார்ந்த மதங்களிலிருந்து இந்து மதத்திற்கு மாற்றம் செய்வதை ஒரு யாகமாக நடத்தத் தொடங்கிவிட்டனர். மதம் மாறும் கிறித்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் விலை நிர்ணயம் இலட்சக் கணக்கில் ரூபாய்; இதற்கு மேலும் வீட்டு மனைகள், ஆதார் அட்டைகள் இத்தியாதி இத்தியாதிப் பட்டியல் நீள்கிறது.


இரகசியமாக அல்ல; துண்டறிக்கைகள்மூலமாகவே இவை வெளியிடப்பட்டுள்ளன. இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
பாகிஸ்தானையும் இந்து மயமாக்குவோம் என்று ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.


அண்டை நாட்டையும் வீண்வம்புக்கு இழுக்கும் அபாயகரமான வேலையில் இந்துத்துவா சக்திகள் முண் டாசுக் கட்டிக் குதித்துள்ளன.


இவைபற்றியெல்லாம் அடுக்கடுக்கான கேள்விக் கணைகளால் இந்துத்துவா சக்திகளின் முகமூடிகளைக் கிழித்து வருகிறார் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.


1. பி.ஜே.பி., சங் பரிவார்களின் போக்கினால் நம் இளைஞர்கள் மத்தியில் அவர்களின் அடையாளங்களை எளிதில் உணர வைக்க முடிகிறது.


2. கீதையைப் புனித நூல் என்று அறிவிப்பதன்மூலம் நாட்டில் பார்ப்பான் தான் பிறப்பில் உயர்ந்தவன் - பிரம்மா படைத்த பிதாமகன்! சூத்திரன் பிறப்பால் இழிந்தவன், வேசி மகன் என்ற வருணாசிரமத்தை நிலை நிறுத்த முயல் கிறார்கள். கீதையில் நான்கு வருணங்களையும் நானே உண்டாக்கினேன். வருணாசிரம தருமத்தை உருவாக்கிய நானே நினைத்தாலும் அதனை மாற்றி அமைக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. அத்தகைய கீதையை இந்தியா வின் தேசியப் புனித நூல் என்றால், நம்மைச் சூத்திரர்கள் - வேசி மக்கள் என்று மீண்டும் உறுதிப்படுத்தும் திட்டம் என்றுதானே பொருள்!


3. ஏற்கெனவே மதுரையில் நடைபெற்ற விசுவ இந்து பரிஷத் மாநாட்டில், மனுதர்மம்தான் இந்தியாவின் அரசியல் சட்டம் என்று கூறவில்லையா?


4. இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டினால், நீ ஒழுங்காக வீடு திரும்ப முடியாது! என்று வன்முறை மொழியில் பேசு கின்றனர். நாங்கள் வீடு திரும்புகிறோமா என்பது முக்கிய மல்ல; நீங்கள் திருந்தவேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்று அடுக்கடுக்கான கருத்துக் கணைகளை அள்ளி வீசினார் தமிழர் தலைவர்.


5. ஆரியமாவது, திராவிட மாவது என்று குறுக்குச்சால் ஓட்டுபவர்களின் நெற்றிப் பொட்டில் அடிப்பதுபோல கருத்துக் கவண் வீசினார்.
 
பிறப்பில் பிராமணன், சூத்திரன் என்பது ஆரியம்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க் கும் என்பது திராவிடம்!6. உழுவார் உலகத்திற்கு அச்சாணி என்பது திராவிடம்; பிராமணன் ஏர் உழக்கூடாது, விவசாயம் பாவத் தொழில் என்பது ஆரியம் என்று பண் பாட்டு ரீதியாக ஆரியர் - திராவிடர் வேறுபாட்டை ஆதாரங்களுடன் அலசினார் ஆசிரியர்.


7. தமிழர்களே, அரிதாரத் தைக் கண்டு ஏமாறாதீர்கள்! அந்தக் காலத்தில் நாடகங் களில் ஸ்திரிபார்ட் (பெண் வேடம்) ஆண்கள்தான் போடு வார்கள். அப்படிப்பட்ட ஸ்திரி யைப் பார்த்து கல்யாணம் செய்துகொள்ள ஆசைப் பட்டால் என்னாகும்!
 
அதுமாதிரிதான் ஒப்பனை செயல் கொண்டு ஜொலிக் கிறது. பி.ஜே.பி. என்னும் ஆரியம்; தமிழர்களே! ஏமாந்து விடாதீர்கள் என்று எச்சரித்தார்.


8. இன்னும் ஒரு கூடு தலான தகவல் உண்டு. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக எவ்வளவோ எச்சரித்தோம்; படித்துப் படித்துச் சொன் னோம் - பி.ஜே.பி. நம் கொள் கைக்கு எதிரானது - இந்துத் துவா என்பது பிறவியில் பேதம் கற்பிப்பது - அதனுடன் வேண்டாம் பாசம் - அதனால் வருமே அந்திக்காசம் என்று எச்சரித்தோம்!

நம் சகோதரர்கள் கேளாக் காதினராக இருந்தார்கள்.

இந்த ஆறு மாதங்களில் பி.ஜே.பி.யின் உண்மையான இந்துத்துவா முகத்தைத் தெளி வாகத் தெரிந்துகொண்ட நமது அருமைச் சகோதரர் வைகோ இப்பொழுது இடிமுழக்கம் செய்யத் தொடங்கிவிட்டார். பி.ஜே.பி.யுடன் கொண்டிருந்த கூட்டணித் தொடர்பை அறுத்து எறிந்துவிட்டார். அவரின் முடிவு பாராட்டத் தகுந்தது - வரவேற்கத்தகுந்தது.


9. நமது பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர் களும் பட்டாங்கமாகப் போட்டு உடைத்துவிட்டார். தமிழ்நாட்டில் பி.ஜே.பி. என்ற கட்சி எங்கே இருக்கிறது? என்று அர்த்தமுள்ள வினா வை எழுப்பியுள்ளார். காலந்தாழ்ந் தாலும் உண்மையைப் புரிந்து கொண்டது வரவேற்கத்தக் கதே! இன்னும் எஞ்சி நிற்பது தேமுதிக தான்.


10. வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் தலை மையை பி.ஜே.பி. ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நண்பர் விஜயகாந்த் வைத்த கோரிக்கையை, மறைமுக மாகப் புறந்தள்ளி விட்டது பி.ஜே.பி. வரும் தேர்தலில் பி.ஜே.பி.யின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவித்துவிட்டுத் தேர்த லைச் சந்திப்போம் என்று பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா தமிழ் நாட்டுக்கு வந்தே சொல்லி விட்டுச் சென்றுள்ளார்.


எங்கள் தலைமையில் தான் கூட்டணி என்று பா.ம.க. வும், தே.மு.தி.க.வும் வைத்த நிபந்த னையை பி.ஜே.பி. நிராகரித்து விட்டது.


இதற்கு மேலும் இவர்கள் தான் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று தேர்தலுக்கு அப்பால் நின்று, அதே நேரத்தில் நேர்மையான கொள் கைப் பாதையை வகுத்துக் கொடுத்தார் தமிழர் தலைவர். இதனைப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சென்னையில் நடத் தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தெரிவித்த ஒரு கருத்து பல தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


மதச்சார்பற்ற - சமூகநீதி சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதுதான் அந்த வேண்டு கோள்! அதனை மானமிகு தொல்.திருமா வளவன் அவர்கள் வழி மொழிந்துள்ளார். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க் சிஸ்டு)யின் மாநில செய லாளர் தோழர் ஜி.இராம கிருஷ்ணன் அவர்களும், மதச்சார்பற்ற சக்திகள் ஓரணி யில் நின்று மதவாதத்தை விரட்டியடிக்கவேண்டும் என்று  வெண்மணியில் வீர உரையாற்றினார். இதே கருத்தை சென்னை யில் தோழர் தா.பாண்டியன் (சி.பி.அய். தமிழ் மாநில செயலாளர்) ஏற்கெனவே தெரிவித்தார்.


பாதை தெரிகிறது - பார்வை சரியாக இருக்க வேண்டும். நமது தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் விழுந்த இடத்திலேயே மீண்டும் மீண்டும் விழ ஆசைப்படக் கூடாது! அந்த ஆசை - ஆபத்துக்குக் கொடுக்கப் படும் அழைப்பாகும். விபரீதத் துக்கு வைக்கப்படும் விருந் தாகும்.


தமிழ்நாட்டிலிருந்து நாம் கொடுக்கும் குரல் இந்தியத் துணைக் கண்டத்தில் அர சியல் விதானங்களில் எல் லாம் எதிரொலிக்கும்.

இணையட்டும் - சமூக நீதி மதச் சார்பற்ற சக்திகள்!

இடியட்டும் மதவாத பழைமைக் கோட்டைகள்!!
-------------------------------------------------------------------------------------------------------------------------------


  நற்செய்தி நம் தோழர்களுக்கு!

1. கோடையில் குற்றாலத்தில் பயிற்சி முகாம்


2. குளிர்காலத்தில் ஒகேனக்கல்லில் (இதே தேதிகளில்) 3. ஏலகிரி 4. சுருளி
ஆகிய இடங்களில் ஆண்டுதோறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் நடைபெறும்.

இவை நிரந்தரமானவை! இவையன்றி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஆங்காங்கே பயிற்சிப் பட்டறைகள் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் அறிவித்துள்ளார்.

(ஒகேனக்கல், 28.12.2014)
------------------------------------------------------------------------------------------------------------------------------

கழகத் தலைவருடன் நூற்றுக்கணக்கானோர் நிழற்படம் எடுத்துக்கொண்ட மாட்சி

 
ஒகேனக்கல், டிச.29- கிருட்டிணகிரி மாநாட்டை முடித்து வருகை தந்த கழகத் தலைவரை, கிருட்டிணகிரி இயக்கப் பற்றாளர் வளர்ந்து வரும் தொழிலதிபர் வழக்குரைஞர் நாராயண மூர்த்தி அவர்களும், அவர்தம் குடும்பத்தினரும் அன்புடன் வரவேற்று கழகத் தலைவருக்கும், கழகத் தோழர்களுக்கும் விருந்தளித்து சிறப்பாக உபசரித்தனர்.


நூற்றுக்கும் மேற்பட்ட கழகத் தோழர்களும், குடும்பத்தினரும் தமிழர் தலைவருடன் நிழற்படம் எடுத்துக்கொண்ட வண்ணமே இருந்தனர். ஒவ்வொருவரும் நிழற்படம் எடுத்துக்கொள்வதற்கு நன்கொடையும் அளித்தனர். இது தந்தை பெரியார் காலத்தில் நடந்த நிகழ்வுகளைப் பசுமையாக நினைவூட்டியது.

அய்யப்ப பக்தர்களும் திரண்டு வந்து தமிழர் தலைவருடன் நிழற்படம் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது.
 ---------------------------------------------------------------------------------------------------------------------------------

---------------------- மின்சாரம் அவர்கள் 29-12-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

28.12.14

இராமன் படத்தை செருப்பாலடித்த செயல் எப்படி ஏற்பட்டது?-பெரியார்

சேலம் ஊர்வலத்தில் செருப்படி சம்பவம் நிகழ்ந்ததற்குக் காரணம் என்ன?
சேலம் ஊர்வலத்தில் செருப்படி சம்பவம் நிகழ்ந்ததற்குக் காரணம் என்ன?

- தந்தை பெரியார்

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் வெற்றியை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எப்படி நிலைக்க வைக்க வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்திக்கவே இங்கு கூடி உள்ளோம். தற்போது ரொம்பப் பேருக்குப் பார்ப்பானை ஆசை தீர வைய வேண்டும்- அடிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும், என்கின்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.  இத்தேர்தலில் பார்ப்பனர் நடந்து கொண்ட விதம் மற்றவர்களை அப்படி எண்ணும்படியாகச் செய்துள்ளது.

பார்ப்பான் ஒழிய வேண்டுமானால் அவனை விரட்டுவது என்று பெயரா அல்லது அவனைப் பூண்டோடு ஒழிக்க வேண்டும் என்று பெயரா? பார்ப்பான் ஒழிக என்று வாயால் சொல்வதால் மட்டும் பார்ப் பானை ஒழிக்க முடியாது. பார்ப்பானைப் பூண்டற்றுப் போகும்படிச் செய்ய வேண்டு மானால் எதனால் அவன் வாழ்கின்றானோ- பிழைக்கின்றானோ அதனை ஒழிக்க வேண்டும். அதை விட்டு விட்டு வாயால் கத்துவதால் பயனில்லை.


பார்ப்பான் ஒழிய வேண்டியது மிக மிக அவசியமாகும். அவனால் இந்த நாடும் உலகமும் மிக மிகக் கேடடைந்து வருகிறது என்பதோடு, அவனால் நாம் இன்னமும் இழி மக்களாக இருந்து கொண்டிருக்கிறோம். பார்ப்பானை ஒழிக்க வேண்டுமானால் அவனுக்குப் பக்கபலமாக- ஆதரவாக- பாதுகாப்பாக இருக்கிற கடவுளை, - மதத்தை, - சாஸ்திரத்தை, - கோயில்களை எல்லாம் ஒழிக்க வேண்டும்.

ஒரு சமயம் சி.பி. இராமசாமி அய்யர் மதமும், ஒரு விரல் அளவு சாமி உருவம் இருந்தால் போதும்; எவராலும் பார்ப்பனரை ஒழிக்க முடியாது என்று சொன்னார்.

அவர் சொன்னது 100க்கு 100 உண்மை யாகும். மதமும் கடவுளும் இருக்கிறவரை பார்ப்பான் இருந்து தான் தீருவான். ஒருவன் எதனால் பார்ப்பான் என்றால் மதப்படி- கடவுள் அமைப்புப்படி என்று தான் சொல்கின்றான். நாம் ஏன் சூத்திரர்கள் என்றால் கடவுள் அப்படி அமைத்திருக் கிறார். சாஸ்திரத்தில் இருக்கிறது; மதப்படி தான் என்கின்றனர். எனவே நாம் சூத்திரத் தன்மைக்கும் பார்ப்பானின் உயர் சாதித் தன்மைக்கும் காரணமாக இருப்பது கடவுள் - மதம் - சாஸ்திரம் ஆகியவையேயாகும் என்பதால் அவை ஒழிக்கப்பட வேண்டும் என்கிறோம்.


சேலத்தில் நடைபெற்ற சம்பவத்தை எப்படித் திருத்தினான் என்றால், சாமி படத்தை நான் செருப்பால் அடித்தேன் என்பதாகவும், அப்படி அடிப்பதற்குத் தி.மு.கழக அரசு ஆதரவாக இருந்தது என்றும், சாமி படத்தை செருப்பாலடிக்க ஆதரவு கொடுத்த தி.மு.கழகத்திற்கு மக்கள் ஓட்டளிக்கக் கூடாது என்றும் பிரசாரம் செய்தார்கள்.


நான் இராமனையும், முருகனையும் செருப்பால் அடிப்பது போன்று படம் போட்டு ஊரெங்கும், தமிழ்நாடு முழுவதும் ஒட்டினார்கள். இதனை முதலில் செய்ய வில்லை. முதலில் இந்தச் செய்தியை வெளி யிட்டால் எல்லா மக்களும் இப்படிச் செய் தால் என்ன செய்வது என்று பயந்து விட் டனர். முதலில் அவர்கள் மக்களிடையே பிரசாரம் செய்தனர்; என்னவென்றால், சேலம் மாநாட்டில் எவன் மனைவியை எவன் வேண்டுமானாலும் அடித்துக் கொண்டு போகலாம் என்று தீர்மானம் போட்டார்கள். பெண்கள் கற்பிற்கு ஆபத்து வந்து விட்டது என்று பிரசாரம் செய்தனர்.


சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் பெண்கள் சுதந்திரத்திற்காக, விடுதலைக்காக ஒரு தீர்மானம் போடப்பட்டது. ஒருவன் மனைவி (அவனை விரும்பவில்லையா னால்) மற்றவனை விரும்புவது என்பதைக் குற்றமாக்கக் கூடாது என்பதேயாகும். இந்நிலை இன்றைக்கும் சட்டப்படிக் குற்ற மல்ல. பின் ஏன் இத்தீர்மானம் போட்டோம் என்றால், பெண்கள் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆகும்.


இத்தீர்மானத்தைத் திரித்துப் பிரசாரம் செய்தார்கள். நாம் மறுப்பு எழுதியதை அவர்கள் வெளியிடவில்லை. அதன் பின்தான் கோர்ட்டில் நாம் போட்ட தீர்மானத்தை மாற்றி வெளியிட்டு தம்மைத் தாழ்மைப்படுத்தப் பார்க்கிறார்கள், இதனைத் தடுக்க வேண்டும் என்று வழக்குப் போட் டோம். அந்த வழக்குப்  போட்ட பின்தான் அதை விட்டுவிட்டு இராமன் படத்தை செருப்பாலடித்ததைப் பெரிதுபடுத்திப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர்.


இந்தச் செருப்பாலடித்த செயல் எப்படி ஏற்பட்டது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். செருப்பினால் அடித் தது எனக்குத் தெரியாது. நம் திட்டத்திலும் அது இல்லை. முதலில் யாரும் செருப் பினால் அடிக்கவில்லை.


பின் அந்த நிகழ்ச்சி எப்படி ஆரம்பித் தது என்றால், சேலத்தில் தேவாலயப் பாதுகாப்பு மாநாடு என்று ஒன்று கூட்டி, அதில் என்னை மிகவும் கண்டித்துப் பேசி னார்கள். அந்த மாநாட்டிற்கு மக்கள் கூட்டம் இல்லை. அந்த மாநாடு நடக்கிற போது நான் சேலத்தில் இருந்தேன். அப்போது நம் தோழர்கள் வந்து அந்த மாநாட்டைக் கண்டித்து ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டார்கள். பின் அக்கூட்டத்தின் சார்பில் ஓர் ஊர்வலம் நடத்த வேண்டும் என்றார்கள். பிறகு கூட்டமும் ஊர்வலமும் நடத்துவதானால் ஒரு சிறு மாநாடே நடத்தி விடலாம் என்று சொன்னார்கள். நானும் ஒத்துக் கொண் டேன்.


அந்த ஊர்வலத்தில் நம் மக்கள் கடவுள் களாகக் கருதிக் கொண்டிருக்கிற சில கடவுள்களின் பிறப்புகளைப் படமாகப் போட்டு கொண்டு ஊர்வலம் போவதாக ஏற்பாடு செய்தார்கள். இது எப்படியோ தெரிந்து பார்ப்பனர்கள் கலெக்டரிடம் சென்று ஊர்வலத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.


அவர் பார்ப்பனர் ஆனதால், போலீஸ் சூப்பிரன்டிடம் சொல்லி ஊர்வலத்தைத் தடை செய்யச் சொல்லி இருக்கிறார். சூப் பிரன்ட் ஊர்வலத்தை நிறுத்தும்படியாகச் சொல்வதாக வந்து சொன்னார்கள். நான் அதற்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது தான் அவர்கள் வேலையே தவிர, நிறுத்து வதற்கு வேண்டுமானால் தடை போடட்டும் என்று சொன்னேன். 

தடைபோட்டாலும் கேட்க மாட்டார்கள் மீறி நடத்துவார்கள் என்று தெரிந்து ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டார்கள்.

ஊர்வலம் வந்து கொண்டிருக்கும்போது ஓரிடத்தில் 30, 40 பேர் கருப்புக் கொடியை வைத்துக் கொண்டு கத்திக் கொண்டிருந் தார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பாக 500 க்கு மேற்பட்ட போலீசார் வளைத்து நின்று கொண்டிருந்தனர். போலீஸ் பாதுகாப்பு இருக்கிறது என்கின்ற தைரியத்தில் கருப்புக் கொடி பிடித்துக் கொண்டிருந்த ஒருவன் ஒரு செருப்பை எடுத்து ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது வீசினான். ஊர்வலத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சென்று கொண்டிருக் கின்றனர். நான் கண்டிக்கா விட்டால் பெரிய கலகம் ஏற்பட்டிருக்கும். அவன் வீசிய அந்தச் செருப்பை எடுத்து ஒரு தோழர் ஊர்வலத்தில் வந்த இராமன் உருவத்தை அடித்தார். அதைப் பார்த்து மற்ற தோழர் களும் தங்கள் தங்கள் செருப்பாலடிக்க ஆரம்பித்தனர். இதுதான் நடந்த உண்மை யாகும்.


இதை அவர்கள் தி.மு.க அரசு உத்தரவு கொடுத்தார்கள். அந்த உத்தரவின் பெய ராலேயே அடித்தோம் என்று பிரசாரம் செய்தான்; பத்திரிகைகளில் எல்லாம் எழுதினான். நான் அதை மறுக்கவில்லை; காரணம் மறுத்தால் நம் தோழர்கள் செருப்பால் அடிப்பது தவறு என்று கருதி விடுவார்களே என்று மறுக்கவில்லை. அதன் பலனாக இச்சம்பவம் இந்தியா பூராவும் விளம்பரம் ஆகும்படியாக ஆயிற்று. நாம் எவ்வளவு பாடுபட்டாலும், செலவு செய்தாலும் இவ்வளவு விளம்பரம் செய்ய முடியாது. அந்த அளவிற்கு விளம்பரம் நடைபெற்றிருக்கிறது. அதற்காக நன்றி தெரிவிக்க வேண்டும்.

-----------------------28.03.1971 அன்று மதுரையில் தந்தை  பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு -("விடுதலை", 11.05.1971)

ராமன் செருப்பாலே அடிக்கப்பட்டான் என்பது திட்டமிட்ட செய்கை அல்ல!-கி.வீரமணி


வீரத்தால் - விவேகத்தால் பார்ப்பனர்கள் வென்றது கிடையாது!
தந்திரத்தாலும், சூழ்ச்சியாலுமே வென்றனர்!
சேலம் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் வரலாற்றுப் பேருரை


சென்னை, டிச. 11- வீரத்தால் - விவேகத்தால் பார்ப்பனர் கள் வென்றது கிடையாது! தந்திரத்தாலும், சூழ்ச்சியாலுமே வென்றனர்! என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
7.12.2014 அன்று மாலை சேலத்தில் நடை பெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
சிறப்பான ஒரு உறுதி எடுக்கின்ற நாளாக...

மிகுந்த எழுச்சியோடு இந்த சேலம் மாநகரில் இந்த சிறப்பான காலகட்டத்தில் சேலம் செயலாற்றுகின்ற காலமாக எப்படி மாறிக்கொண்டிருக்கிறது  என்பதை காட்டக்கூடிய வகையில், அற்புதமான ஒரு நிதியளிப்பு விழா, அதுவும் பெரியார் உலகம் அமைப்பதற்காக என்ற முறையில் இங்கு என்னை அழைத்து 30 லட்சம் ரூபாயை முதற்கட்டமாகத் திரட்டி இங்கே கொடுத்திருக்கின்ற ஒரு நிகழ்வாகவும், தமிழ்நாட்டில் புகக்கூடாதவைகள் புகுந்து கொண்டிருக்கின்றன. அகற்றப்படவேண்டியவைகள் குப்பைகள், கூளங்கள் மட்டுமல்ல, நம்மை ஒற்றுமைப்படுத்த முடியாது; மக்களைப் பேதப்படுத்தி, மக்களையெல்லாம் பிளவுபடுத்தி வரக்கூடிய தீய சக்திகளையும், மதவாத, மதவெறி சக்திகளையும், ஜாதிவெறி சக்திகளையும் அகற்றவேண்டும் என்ற முறையில், சிறப்பான ஒரு உறுதி எடுக்கின்ற நாளாக, அனைவருக்கும் சுயமரியாதை வேண்டும் என்ற சுயமரியாதை நாளாக நடைபெறக்கூடியது இந்த அற்புதமான நிகழ்ச்சியாகும்.

அனைத்துக் கட்சி நண்பர்களிலேயே பலரும் இங்கே வந்து வாழ்த்து சொன்னார்கள்; அவர்கள் சொன்ன வாழ்த்து எனக்கல்ல; நீங்கள் அறிவிக்கப் போகின்ற போராட்டத்தில் எங்களுக்கு அறவழிப்பட்ட ஆதரவு உண்டு; எங்கள் ஆதரவு உண்டு என்று சொல்லக்கூடிய வகையில்தான் அனைவரும் இங்கே வந்திருக்கிறார்கள் என்பதற்காக அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில், அனைத்துக் கட்சி நண்பர்களுக்கும், ஒத்தக் கருத்துள்ளவர்களுக்கும் எங்களுடைய தலைதாழ்ந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறோம்.
சேலம், திருப்புமுனையாகக்கூட அமைந்திருக்கிறது

அருமைத் தோழர்களே, தோழியர்களே, நண்பர்களே, உங்கள் எல்லோருக்கும் தெரியாத செய்தியல்ல. இந்த சேலத்தில் மிகப்பெரிய அளவிற்கு எத்தனையோ அடக்கு முறைகள், எத்தனையோ எதிர்ப்புகள் இவைகளையெல் லாம் தாண்டி இந்த சேலம் எத்தனையோ வரலாற்றைப் படைத்திருக்கிறது. சேலம் திருப்புமுனையாகக் கூட அமைந்திருக்கிறது. இந்த சேலத்தில், 1971 ஆம் ஆண்டில், தேர்தலுக்கு முன்பாக தந்தை பெரியார் அவர்கள் நடத்திய மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு; அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். அப்பொழுது ஜனசங்கமாக இருந்த இன் றைய காவிக் கட்சியினர் பெரியார் அவர்கள்மீது செருப்பு வீசிய அந்த நிலை - இவைகளெல்லாம் நமக்கு மறக்க முடி யாதவை. ஆனால், அதனுடைய விளைவு என்னாயிற்று என்று சொன்னால், ராமனுக்குச் செருப்படியா? என்று இந்தியா முழுவதும் கேட்கக்கூடிய ஒரு மிகப்பெரிய வரலாற்றைத் தந்து, அதனால், திராவிட முன்னேற்றக் கழகமே மிகப்பெரிய தோல்வியை சந்திக்கப் போகிறது; துடைத்து வழித்தெறிய போகிறார்கள் என்று கருதிய நேரத்தில், இன உணர்வை யாராலும் இந்த மண்ணிலிருந்து அழித்துவிட முடியாது. தியாகராயர் தொட்டு, அதேபோல, டாக்டர் நடேசனார் தொட்டு, அதேபோல, டாக்டர் டி.எம். நாயரைப் பொறுத்து, பன்னீர்செல்வம் பொறுத்து, அறி வாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் இடையறாது செய்த பணி, அறிஞர் அண்ணா செய்த பணி, கலைஞர் அவர்கள் அன்றைக்கு முதல்வராக மீண்டும் வரவேண்டும் என்ற உணர்வோடு அவர்களுக்கு அன்றைக்கு இந்த மாநகரத்தில் ஏற்பட்ட அந்த நிகழ்வு, பெரியாருடைய ஊர் வலத்தின் அருகிலேயேதான் அந்த சம்பவம் நடை பெற்றது.

ராமன் செருப்பாலே அடிக்கப்பட்டான் என்பது திட்டமிட்ட செய்கை அல்ல!
இங்கே உள்ளவர்களில், வயதான தோழர்களுக்கு நினைவிருக்கும், இங்கே எத்தனையோ தோழர்கள் கையைத் தூக்குகிறார்கள்; நல்ல வாய்ப்பாக அவர்கள் சாட்சியத்திற்கு இருக்கிறார்கள். அதற்காக மிகுந்த நன்றி! பக்கத்திலேதான் அந்த நிகழ்வுகள் நடைபெற்றன. ஆனால், என்ன ஆயிற்று? இனிமேல் திராவிட முன்னேற்றக் கழகம் அரசியலில் புது வாழ்வு பெற முடியாது என்றெல்லாம் கரு திய நேரத்தில்தான், ராமன் செருப்பாலே அடிக்கப்பட்டான் என்பது திட்டமிட்ட செய்கை அல்ல. தந்தை பெரியாருக் குக் கருப்புக் கொடி காட்ட வந்த ஜனசங்கத்துக்காரர்கள் செருப்பை பெரியார்மீது வீசினார்கள். பெரியார் அவர்கள் அமர்ந்து வந்த வாகனம் நகர்ந்துவிட்டது. பிறகு நம்முடைய கருப்புச் சட்டைத் தோழர்கள்மீது விழுந்தது. அப்படி விழுந்த நிலையில், அந்த செருப்பை பிடித்தனர். எங்களு டைய தோழர்களுக்கு எது மெயின் சுவிட்ச் என்று தெரியும். அவர்கள் தனித்தனியே பொத்தான்களை அழுத்திக் கொண்டிருக்க மாட்டார்கள். எதைச் செய்தால் சரியான பதில் கிடைக்கும் என்று நினைத்தார்களோ, அதனை அடிப் படையாகக் கொண்டுதான் பின்னாலே வந்த ராமன் உருவத்தை செருப்பால் அடித்தார்கள். அந்த செருப்பை வழங்கியது, ஜனசங்கத்துக்காரர்கள். அது திராவிடர் கழகத் துக்காரனுடைய செருப்பல்ல. வரலாற்றைத் தெரிந்து கொள்ளவேண்டும். அந்த அடிப்படையில், கொஞ்சம் அமைதியாக செய்திகளை இருட்டடித்தார்கள். இரண்டு நாள் செய்திகள் சரியாக வரவில்லை. ஆனால், அதற்குப் பிறகு தேர்தல் வருகிறது.

எல்லாவற்றிலும் தந்தை பெரியாரை வழிகாட்டியாகக் கொண்டார் கலைஞர்!
கலைஞர் அப்பொழுதுதான் முதல் முறையாக முதலமைச்சராக ஈராண்டு பதவியில் இருந்தார். 1971 ஆம் ஆண்டில், இந்திரா காந்தி அம்மையார் தேர்தலை அறி வித்தவுடன், அதில், தமிழ்நாட்டிற்கும் தேர்தலை அறிவித் தார்கள். இன்னொரு செய்தியை இங்கு சொல்லவேண்டும். எல்லாவற்றிலும் தந்தை பெரியாரை வழிகாட்டியாகக் கொண்டார், அண்ணாவிற்குப் பிறகும்கூட, நம்முடைய அருமை கலைஞர் அவர்கள்.

தேர்தலை அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்; நமக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது; இப்பொழுது தேர்தலை நடத்தலாமா? வேண்டாமா? என்று கலைஞர் அவர்கள் தந்தை பெரியாரின் அறிவுரையை கேட்டார்கள்; இதே சேலத்தில் இருந்துதான் அந்த அறிவுரை சென்றது. அந்த அடிப்படையில், சட்டமன்றத் தேர்தலை அவர்கள் அறி வித்தார்கள். அன்றைய தி.மு.க. ஆட்சிக்கு வேறு எதையும் சொல்ல முடியாது என்றவுடன், ஊழலா ராமனை செருப்பால் அடித்தவர்களுக்கா உங்கள் ஓட்டு? என்று அன்றைக்குப் போஸ்டர் அடித்தார்கள்.

இன்றைக்கு மீண்டும் காவி ஒரு பேருரு எடுத்துவிட்டது என்று நினைக்கிறார்களே, அவர்களுக்காக, உங்களுக்காக நண்பர்களே சொல்கிறோம், அந்த வரலாறு நடைபெற்ற பிறகு பிறந்த இளைஞர்கள் இங்கே இருக்கிறார்கள்; நம் முடைய இளைஞர்கள் அந்த வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சொல்கிறோம்.
நீங்கள் உங்கள் அரசியலைப் பாருங்கள் என்று தந்தை பெரியார் சொன்னார்
உடனடியாக, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக இந்தப் பிரச்சாரத்தைக் கிளப்பிவிட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அந்த சம்பவத்திற்கும் ஒரு தொடர்பும் கிடையாது. இதற்காகவே, மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில், எந்த அமைச்சரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று தந்தை பெரியார் அவர்கள் தெளிவாகச் சொல்லி, நாங்கள் சுதந்திரமாக இந்தப் பணியைச் செய்கிறோம். நீங்கள் ஓட்டு வாங்கக் கூடியவர்கள்; நீங்கள் உங்கள் அரசியலைப் பாருங்கள் என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்.

வேறு வகையில் கலைஞர் ஆட்சியை வீழ்த்த முடியாது, திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த முடியாது, திராடர் இயக்கத்தை அழிக்க முடியாது என்று நினைத்த காரணத் தினால்தான், இரண்டு, மூன்று நாள்கள் பொறுத்திருந்து, திட்டமிட்ட ஒரு காரியத்தை செய்தார்கள்.
சேலத்தில் நடைபெற்ற நிகழ்வு - சேலத்துக்காரர் களுக்கு மட்டும்தான் தெரியும். அவர்கள் செய்த விளம்பரம் உலகத்திற்கே தெரிந்தது; அதற்காக நாம் அவர்களுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.
துக்ளக் இதழில் அட்டைப் படம் போட்டனர்

துக்ளக் இதழில், நண்பர் சோ (அய்யர்)  - அவர்தான் அட்டைப் படம் போட்டார்; தந்தை பெரியார் கையில் ஒரு செருப்பு; இன்னொரு கையில் ராமர் படத்தை வைத்துக் கொண்டு, ஓங்கி அடிப்பதுபோல, முகப்பு அட்டை துக்ளக் பத்திரிகையில். இன்னொரு பக்கம், கலைஞர் துண்டைப் போட்டுக்கொண்டு, பலே, பலே,  நன்றாக அடியுங்கள்! என்று சொல்வதைப்போல படத்தைப் போட்டார்கள்.

உண்மையில் கலைஞருக்கும், அந்த நிகழ்வுக்கும் சம்பந்தமில்லை. அதுதான் அப்பட்டமான உண்மை.


ராமனை செருப்பாலடித்த இவர்களுக்கா உங்கள் ஓட்டு என்று அவர்கள் கேட்டார்கள்.


ராஜகோபாலாச்சாரியாரும், பச்சைத் தமிழர் காமராசரும் இணைந்து தேர்தலில் நின்ற ஒரு கொடுமை அந்த வரலாற்றில் உண்டு. இளைஞர்கள் அதனைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக சொல்கிறேன்.
சேலம் தொகுதியில் இரண்டு ராமன்கள் நின்றார்கள். ஒரு ராமன் ஜெயராமன்; இன்னொரு ராமன் ராஜாராமன். ராமன்களும் வெற்றி பெறுவார்களா என்ற கேள்வி எழுந்தது. இனிமேல் தி.மு.க. அவ்வளவுதான் என்று நினைத்தார்கள். திராவிட முன்னேற்றக் கழக சகோதரர் கள்கூட, என்னய்யா, இப்படி செய்துவிட்டீர்கள்; எங்களுக்கு வாய்ப்பே இல்லாமல் ஆக்கிவிட்டீர்களே என்றெல்லாம் சொன்னார்கள்.

ஆனால், இன உணர்வு பிரச்சாரம் மிகத் தீவிரமாக கனன்ற காரணத்தினால், ராஜகோபாலாச்சாரியார் இறங்கி, அவர் இந்த இனத்திற்கு எதிரான பிரச்சாரத்தை செய்தார்; அந்தக் கூட்டணியில் காமராசரும் இருந்தார். (பிறகு, இதுவரையில் செய்யாத தவறை நான் செய்துவிட்டேன் என்று காமராசர் மனம் வருந்தினார்).

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், தேர்தல் முடிந்தது; அந்த கடைசி  ஒரு வாரத்தில்தான் மிகப்பெரிய மாறுதல் நடைபெற்றது. இன்றைக்கு 43 ஆண்டுகளுக்கு முந்தைய சரித்திரம் அது. வாக்குப் பெட்டியை எண்ணத் தொடங் கினார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் இனி ஆட்சிக்கு வராது; அதனுடைய கதை முடிந்துவிட்டது என்றனர்


தேர்தலுக்கு முன்பு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 138; அதற்குப் பிறகு ராமனை செருப்பால் அடித்தவர்களுக்கா உங்கள் ஓட்டு? என்று கேட்டு, அதையே கடைசி நேரத்தில் பெரிதாக ஆக்கினார்களே, எல்லோரும் நினைத்தார்கள், திராவிட முன்னேற்றக் கழகம் இனி ஆட்சிக்கு வராது; அதனுடைய கதை முடிந்துவிட்டது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். தேர்தல் முடிந்து, முடிவுகள் வெளியிடப்பட்டன. நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய இன உணர்வு வேகமாக வந்த காரணத்தினால், தி.மு.க.வினர் 184 இடங்களில் வெற்றி பெற்றார்கள் என்பது வரலாறு. சேலத்துக்காரர்கள் எவ்வளவு கெட்டிக்காரர்கள் என்பதற்கு இதுதான் நல்ல உதாரணமும்கூட.
சேலத்தில் மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கியதன் விளைவு எதிர்பாராமல் அமைந்ததுதான். ஆனால், பார்ப்பனர்களுக்கு எப்பொழுதுமே முன்புத்தி கிடையாது என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்வார். அதை அவர்கள் எடுத்ததினுடைய விளைவாக, இன உணர்வு கொழுந்து விட்டு எரிந்தது. அதனுடைய விளைவாகத்தான் ஒரு வாரத்தில் தமிழ்நாடே மாறியது, மிகப்பரிய அளவில்!

வடநாட்டு பிளிட்ஸ் பத்திரிகை எழுதியது!

பிளிட்ஸ் பத்திரிகை, கரண்ட் ஆங்கில வார பத்திரி கைகள் இவைகளெல்லாம் பம்பாயிலிருந்து அன்றைக்கு வெளிவந்த வார ஏடுகளாகும். அதில் எழுதினார்கள், என்னய்யா, தமிழ்நாட்டை நினைத்தால் அதிசயமாக இருக்கிறதே! ராமனை செருப்பால் அடிப்பதா? என்று மிகப்பெரிய அளவிற்குப் பிரச்சினையாக ஆக்கினார்கள். இதுவே வடநாட்டில் நடைபெற்றிருந்தால், எப்படிப்பட்ட சூழ்நிலை வந்திருக்கும். தமிழ்நாட்டில் ராமனை செருப்பால் அடிப்பதற்கு முன்பு 138; செருப்பால் அடித்த பிறகு 184 என்று சொன்னால், இதிலிருந்து என்ன தெரிகிறது, ராமனை செருப்பால் அடித்துவிட்டு, தேர்தலில் நின்றால், தமிழ்நாட் டில் ஓட்டுகள் அதிகமாகக் கிடைக்கும்; இடங்கள் அதிகமா கக் கிடைக்கும் போலிருக்கிறதே என்று கரஞ்சியா எழுதினார்; எதற்காக இதனை சொல்கிறேன் என்றால், நண் பர்களே, யாரையும் கொச்சைப்படுத்துவதற்காக சொல்ல வில்லை. காவிக்கு நாங்கள் சொல்லிக் கொள்கிறோம், மார் தட்டுகிறோம், தோள் தட்டுகிறோம், தொடை தட்டுகிறோம் என்று சொல்கிறீர்களே, உங்களுக்கு நாங்கள் சொல்கிறோம்,    அந்த உணர்வு இருக்கிறதே, அந்த உணர்வு, கருப்புச் சட்டைகளுடைய குரலாக மட்டுமல்ல, எங்கள் இனத்தின் சார்பாக, எக்கட்சியில் இருந்தாலும், தமிழன் தமிழனாக இருப்பான்; திராவிடன் திராவிடனாக இருப்பான். நாங்கள் ஆடாவிட்டாலும், எங்கள் சதை ஆடும்; எங்கள் உணர்வு கள் மிகவேகமாக வெளிவரும், அதுதான் மிக முக்கியம்.

எத்தனை மோடிகள் வந்தாலும், எவ்வளவு பெரிய வித்தைகள் செய்தாலும்....
தளபதி அண்ணன் அழகிரிகளுடைய உணர்வுகள் எங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றன. பட்டுக்கோட்டை தளபதி அழகிரி சொல்வார் அந்தக் காலத்தில், ஈட்டி இருக் கிறதே அது எட்டிய வரையில் பாயும்; பணம் இருக்கிறதே, அது பாதாளம் வரையிலும் பாயும்; ஆனால், எங்கள் பெரியார் ராமசாமியினுடைய கொள்கை இருக்கிறதே, அது அண்ட பிண்ட சராசரங்கள் அத்தனையும் பாய்ந்து, அதற் கப்பாலும் பாயும் என்று சொல்வார்!
ஆகவே, அந்த உணர்வுகளை நீங்கள் எத்தனை மோடி கள் வந்தாலும், எவ்வளவு பெரிய வித்தைகள் செய்தாலும், தமிழ்நாட்டை நீங்கள் மாற்றிவிட முடியாது. அமித்ஷா வரு கிறார், மோடி வருகிறார், தேடி வருகிறார், நாடி வருகிறார் ஓடி வருகிறார் என்றெல்லாம் நீங்கள் சொல்லலாம். வாருங்கள், நிறைய வித்தைகளை செய்யுங்கள். ஆனால், பெரியார் இல்லையே என்று நினைத்துவிடாதீர்கள்.

அன்று பெரியார் ஒருவராக இருந்தார்; இன்றைக்குப் பெரியார் பலராகத் தெரிகிறார். எல்லாக் கட்சிகளிலும் பெரியார் இருக்கிறார். இந்த மண்ணிலே பெரியார் என்கிற அடித்தளம் இருக்கிறதே, அது எரிமலை. நீங்கள் நெருப்பை அணைக்கலாம்; எரிமலையை அணைக்க முடியுமா? அதுதான் மற்றவர்களுக்கு!

அரசியலிலே சில விஷயங்கள், அவர்கள் மாறினார்கள்; இவர்கள் கூட்டுச் சேர்ந்தார்கள் என்று சொன்னார்கள். ஆனால், என்ன நண்பர்களே, நீங்கள் நினைத்துப் பாருங் கள், எங்களைப் பொறுத்தவரையில், இப்போது தோன்றியி ருக்கின்ற ஆபத்தை உங்களுக்குச் சுட்டிக்காட்டவேண்டும் என்பதற்காகத்தான்.

பெரியாருடைய கண்ணாடியைப் போட்டுப் பார்க்கவேண்டும்

எந்த அளவிற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று சொன்னால் நண்பர்களே, இப்பொழுது அவர்கள் நேரிடையாக இருக்கின்ற அந்தப் பணியை செய்யவில்லை. அந்த எச்சரிக்கையை சொல்லவேண்டுமானால், பெரியாரு டைய நுண்ணாடியைப் போட்டுப் பார்க்கவேண்டும். பெரியாருடைய கண்ணாடிதான், அந்த நுண்ணாடி. எனவே, அந்த நுண்ணாடியை வைத்துப் பார்த்தால்தான் உங்களுக்குச் சரியாகப் புரியும்.

நண்பர்களே, நீங்கள் நினைத்துப் பாருங்கள், நம்முடைய இனத்தினுடைய வாழ்வு, காலங்காலமாக அடிமைப்பட்டி ருந்த நாம், சூத்திரர்களாக, பஞ்சமர்களாக, பள்ளர்களாக, பறையர்களாக, சக்கிலியர்களாக, அடிமைகளாக - அதன் காரணமாக சிறுபான்மை சமுதாய மக்களாக இன்றைக்கு மாறியிருக்கின்ற நாமெல்லாம் யார்? உழைக்கின்ற மக்கள் அல்லவா! இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள் அல்லவா! அப்படிப்பட்டவர்களை ஏமாற்றுவதற்கு இப்பொழுது தந்திரங்களைக் கையாள்கிறார்கள்.
தந்திரமூர்த்தி போற்றி! போற்றி! அண்ணா அவர்கள் அழகாக சொன்னார்கள். சூழ்ச்சியினாலே, தந்திரத்தினாலே தான் ஆரியம் வென்றதாக வரலாறு உண்டே தவிர, வீரத் தால், விவேகத்தால் அவர்கள் ஒருபோதும் நம்மை வென்ற தாக வரலாறு கிடையாது. அதை எண்ணிப் பார்க்கவேண் டும். அந்த அடிப்படையை வைத்துப் பார்க்கின்ற நேரத்தில், நேரமின்மை காரணத்தினால், அவசர அவசரமாக சில செய்திகளை சொல்லுகிறேன்.

இங்கே புத்தகங்கள் விற்கப்படுகின்றன. மற்ற மற்ற மிக முக்கிய செய்திகளையெல்லாம் ஆதாரப்பூர்வமாகக் கொண்டு வந்திருக்கிறோம். சமஸ்கிருத மயத்தைப்பற்றி பல்வேறு அறிஞர்கள் கூறியதை, எப்படியெல்லாம் இந்த நாட்டில் ஆரம்ப காலத்தில் ஆரிய மயம், சமஸ்கிருத மயம் அது இன்றைக் கும் தொடரலாம் என்று நினைக்கிறார்களே, இந்தக் காலகட்டத்திலே, அதை வாங்கிப் படியுங்கள்! பரப்புங்கள்!
                      ---------------------------(தொடரும்)11-12-2014

Read more: http://viduthalai.in/page1/92665.html#ixzz3Ls8SNtWA
*************************************************************************************

திருக்குறளை ஹிந்து நூல் என்று கூறுகிறார் கோல்வால்கர்
இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா?
சேலம் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவரின் எச்சரிக்கை வினா!


சேலம், டிச. 12- திருக்குறளை ஹிந்து நூல் என்று கூறு கிறார் கோல்வால்கர் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.


7.12.2014 அன்று மாலை சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.


அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:


தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் நாங்கள் இவ்வளவு ஓட்டு வாங்கிவிட்டோம் என்கிற காரணத்தினாலே, சமஸ்கிருதத்தைக் கட்டாயம் ஆக்குவோம் என்று சொல் கிறார் விசுவ இந்து பரிஷத் தலைவர் சிங்கால்.
பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளில் ஒருவர்தான் அசோக்சிங்கால்!
இந்த சிங்கால் யார்? டிசம்பர் 6 ஆம் நாளை பாபர் மசூதி இடிப்பு நாள் என்று, அம்பேத்கருடைய நினைவு நாளையே மறைத்தார்களே! மறைப்பதற்காக பயன்படுத்துகிறார்களே என்று இங்கே உரையாற்றிய எங்கள் தோழர், தோழியர்கள் சொன்னார்களே!


உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன், மிகத் தெளி வாக, அந்த நாளையே மாற்றிவிட்டீர்களே, பாபர் மசூதியை இடித்த நாள் என்று. அந்த பாபர் மசூதியை இடித்த குற்ற வாளிகளில் ஒருவர்தான் அசோக்சிங்கால். விசுவ இந்து பரிஷத்காரர்.


அந்த விசுவ இந்து பரிஷத்தினுடைய கொள்கை என்ன? அவர்களுடைய மாநாட்டில் தீர்மானமே போட்டிருக்கிறார் கள். அண்ணல் அம்பேத்கருடைய அரிய அறிவுரையைப் பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டம்; மதச் சார்பின்மையை வலியுறுத்தக்கூடிய அரசியல் சட்டம்; சமதர்மத்தை வலியுறுத்தக்கூடிய அரசியல் சட்டம்; முழு உரிமை ஜனநாயகக் குடியரசு என்று சொல்லக்கூடிய அரசியல் சட்டம் - “Soverign, Socialist, Secular Democratic Reforms” Republic State  என்று சொல்லக்கூடிய இந்த சட்டம் - இந்த சட்டத்தையே மாற்றிவிட்டு, அரசியல் சட்ட மாக வேறொன்றை அறிவிக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மான மாகும்; அதனை நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.


இளைஞர்களே, வெறும் இணைய தளத்தினை மட்டுமே பார்த்துவிட்டு, ஏமாந்து கொண்டிருக்கின்ற என்னருமை இளைஞர்களே, தோழர்களே, நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்! வரலாற்றிலே எவ்வளவு பெரிய பயங்கரங்கள் பதுங்கி யிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.


மனுதர்மம் அரசியல் சட்டமாகவேண்டும். தீர்மானமே போட்டிருக்கிறார்கள். மனுதர்மம் இந்திய அரசியல் சட்டத்திற்குப் பதிலாக வரவேண்டும் என்று சொன்னால், அது என்ன மனுதர்மம்?


அந்த பிரம்மா ஆனவர், இந்த உலகத்தைப் படைப்ப தற்காக, தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளின்றும் உண்டான, பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்று இந்த நான்கு ஜாதிகளையும் உண்டாக்கினார். அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை, அவரவர் கடைபிடிக்கவேண்டும்.
சூத்திரனுக்கு என்ன வேலை என்றால், படிக்க உரிமை யில்லை.  அடிமைச் சேவகம் செய்வதற்காக, மேல்வருணத் தார் மூன்று பேருக்கும் அவன் அடிமைச் சேவகம் செய் வதற்காக வந்திருக்கிறான் என்று எழுதப்பட்டது மனுதர்மம்.


சமஸ்கிருதம்தான் இந்தியா - இந்தியாதான் சமஸ்கிருதமாம்!


யாருக்காவது சந்தேகம் இருந்தால், இங்கே அசல் மனுதர்மம் புத்தகம் விற்கப்படுகிறது; அதனை வாங்கிப் படியுங்கள்! அந்த மனுதர்மத்தை மீண்டும் அரசியல் சட்ட மாக்கவேண்டும் என்று துடிக்கின்ற கூட்டம், அந்தக் கூட்டத் திற்குத் தலைவர் விசுவ இந்து பரிஷத்தினுடைய அகில இந்தியத் தலைவர் அசோக்சிங்கால். அவர் நேற்று சொல் கிறார், சமஸ்கிருதம்தான் இந்தியா - இந்தியாதான் சமஸ் கிருதம். இப்படி பல பேர் சொல்லி, கவிழ்ந்திருக்கிறார்கள் ஏற்கெனவே!


இந்தியா தான்  இந்திரா - இந்திரா தான் இந்தியா என்று நெருக்கடி காலத்தில் ஒருவர் சொல்லி, அதற்குப் பிறகு அவர் காணாமல் போய்விட்டார். யாரும், யாரையும் ஒரு நாட்டை உருவகப்படுத்தும்பொழுது, இந்தியா என்றால், சமஸ்கிருதமா? அட பரிதாபத்திற்குரிய தோழர்களே, அறிவு ஜீவிகளே, உங்களுக்காக நாங்கள் கேட்கிறோம், இந்த அர சியல் சட்டத்தில் மிகத் தெளிவாக இருக்கக்கூடிய எட் டாவது அட்டவணையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?


22 மொழிகளில்  மிகவும் அதிகமாகப் பேசப்படுவது, எழுதப்படுவது என்னவென்றால், சமஸ்கிருதம்தான், என்றா இருக்கிறது?

ஏதோ தயவு தாட்சண்யத்திற்காக 22 மொழிகளில் சமஸ்கிருதத்தையும் சேர்த்திருக்கிறான். அவ்வளவுதானே தவிர, 22 மொழிகளில் சமஸ்கிருதத்தைப் பேசக்கூடியவர் கள் கிடையாது; எழுதக் கூடியவர்கள் ஒருசிலரே. அதை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆரியரிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது; வெள்ளைக்காரனால்Made Over செய்யப்பட்ட நாள் என்ற காரணத்திற்காக அந்தச் சூழ்நிலை வந்திருக்கிறது. ஆகவே, அந்த சமஸ்கிருதம்தான் என்று சொல்கிறீர்களே, அப்படியானால், மற்றவர்களுடைய உரிமைகளை நீங்கள் மதிக்கிறீர்களா? அரசியல் சட்டத்தை நீங்கள் மதிக்கிறீர்களா? அரசியல் சட்டத்தின்மீது பிரமாணம் செய்கிறார்களே, அதன் பொருள் என்ன?


தமிழ்நாட்டில், ஆறு மாதங்களில் தலைகீழாக மாறிவிட்டது!


அதுமட்டுமல்ல, நண்பர்களே, இப்படியெல்லாம் அவர்கள் சொல்வது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் மிகவும் தந்திரமான பேச்சுகள்; அதுவும், தமிழ்நாட்டை எப்படி யாவது அவர்கள் காவி மயமாக்கிவிடவேண்டும் என்று நினைக்கிறார்கள். மோடி வித்தையெல்லாம் அவர்கள் இங்கு செய்து பார்த்தார்கள். இன்னுங்கேட்டால், எங்கள் பரிதாபத்திற்குரிய சகோதரர்கள் சில பேர், அவர்களுக்குக் கைகொடுக்கத் தேர்தல் நேரத்தில் சென்றார்கள். அது பற்றி எங்களுக்கு இன்னமும் வருத்தம் உண்டு. ஆனால், நிச்சயமாக, கெட்ட குமாரன் திரும்பி வந்த கதை நாட்டிலே உண்டு. அப்படித் திரும்பி வரக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும் என்பதிலே எங்களுக்கு அசையாத நம்பிக்கை உண்டு.
இன்றைக்குக்கூட என்ன? ஆறு மாதத்திலே தமிழ் நாட்டிலே காலூன்றுவோம், காலூன்றுவோம் அதற்காக திட்டமிடுவோம் என்று சொல்கிறீர்களே, டில்லியிலிருந்து வரக்கூடிய ஒரு அரசியல் ஏடு எழுதியிருக்கிறது. ‘‘New Post’’ என்ற அது பொதுவான அரசியல் ஆய்வு ஏடாகும். அதில், தமிழ்நாட்டிலே இவர்கள் சென்று காலூன்ற வேண் டும் என்பதற்காக, கஜகர்ணம் போடுகிறார்கள்; புரிகிறது. ஆனால், ஆறு மாதத்திற்கு முன்னால், மோடியைப்பற்றி இருந்த அபிப்பிராயமும், மோடிக்குக் கிடைத்த ஆதரவும், தமிழ்நாட்டில், ஆறு மாதங்களில் தலைகீழாக மாறிவிட்டது. யார் யார் அவரோடு போனார்களோ, அவர்களெல்லாம் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எழுதுகிறது.


எங்கள் சகோதரர் வைகோ; இன்னமும் அவர் எங்கள் சகோதரர்தான்!


மிகப்பெரிய அளவிற்கு, பிரச்சார பீரங்கியாக அவர் களுக்குக் கிடைத்தது யார்? எங்கள் சகோதரர் வைகோ; இன்னமும் அவர் எங்கள் சகோதரர்தான். நாங்கள் பிரிந் திருந்தாலும், நாங்கள் கொள்கை ரத்த உறவுகள்; எங்களை யாராலும் அந்த வகையிலே மாற்றிவிட முடியாது. நீதிமன்றத்திற்குப் போய் சொல்ல முடியுமா? அண்ணன், தம்பி இல்லை என்று. அதேபோலத்தான் கலைஞர்; அதே போலத்தான் இந்த சூழ்நிலை. நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும்பொழுது, இவர்தானே மோடியை மிகப்பெரிய அளவிற்கு தூக்கிப் பிடித்தார். மோடியை அப்படி கட்டித் தழுவிக் கொண்டாரே! இன் றைக்கு அதே மோடி, யாரோ ஒரு அனாமதேயக்கார காரைக் குடி பார்ப்பான், காரைக்குடியிலேகூட கட்சியில் அவருக்கு செல்வாக்கு இல்லை என்றிருக்கின்ற ஒரு ஆள், நம்மு டைய வைகோவை பார்த்து மிரட்டலாகப்பேசக்கூடிய துணிவு எப்படி வந்தது? அதனை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டுமா? நாங்கள்தான் அதனைத் தட்டிக் கேட்டோம்.
வைகோ அவர்கள், அது பரவாயில்லை, அது போகட் டும் என்று அதனை அலட்சியப்படுத்தினார். அவருக்கு அது சரி! ஆனால், எங்களுக்கு, இந்த உணர்வு என்று நினைக்கும்பொழுது, தான் ஆடாவிட்டாலும் தனது சதை ஆடும் என்பதுபோல.


இப்பொழுது நினைத்துப் பாருங்கள் அவர்களுடைய தந்திரங்களை, அவர்கள் ஒரு பக்கத்தில் சுப்பிரமணிய சாமியை விட்டுப் பேச வைப்பது; இன்னொரு பக்கத்தில் ராஜாக்கள் குரைப்பது; அதேநேரத்தில், இன்னொரு தலைவர், இன்னமும் வைகோ எங்களோடுதான் இருக் கிறார் என்று அதை அவர் சொல்வதற்கு என்ன அவசியம்? ஆடு கிறது, பூகம்பம் வருகிறது, அதுதான்!
என் வழி தனி வழியாக இருக்கப் போகிறது என்று அறிவித்தார் டாக்டர் ராமதாஸ்


அதேபோல, டாக்டர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி யினுடைய தலைவர், அவர் அங்கே சென்றார், ஒரு இடத்திலே வென்றார், இப்பொழுது அவர் விமர்சிக்கின்ற நேரத்திலே, ஆகா, நீங்கள் விமர்சிக்கலாமா என்றார்கள். அவர் உடனே, யாரும் விமர்சிக்கலாம் என்று தெளிவாகச் சொல்லி, என் வழி தனி வழியாக இருக்கப் போகிறது என்று அவர் அறிவித்தார்.


எனவே, உங்களோடு இருக்கக்கூடியவர்கள் யார்? கேப்டன் விஜயகாந்த் என்று சொல்வீர்கள். கேப்டன் எப்பொழுதுமே மக்களோடு கூட்டு சேர்வாரே தவிர, உங்க ளோடு கூட்டுச் சேர்ந்ததாக வரலாறு கிடையாது. எனவே, மக்கள் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் என்பது இப்பொழுது தெரியும். அதுவரையில், எந்தப் பக்கம் என்று, அவரே முடிவு செய்ய முடியாது. இதுதான் அவருடைய தனித் தன்மையான அரசியல்!


இந்தக் கட்சிகளின் பெயர்களை எடுத்துப் பார்த்தீர்களே யானால், திராவிடர் கழகம் என்கிற வார்த்தை அதனுள் இருக்கும்.


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்; தேசிய முற்போக்கு திராவிட கழகம்; திராவிட முன்னேற்றக் கழகம்; இன்னுங்கேட்டால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று அண்ணாவை பொம்மையாக, முத்திரையாகப் போட்ட இடத்திலும் கூட திராவிடர் கழகம்  இருக்கும். அத னாலேதான், நாங்கள் பல நேரங்களில், திராவிடர் கழகத் தைப் பரப்புவதைவிட, பாதுகாப்பதற்கு ஆயத்தமாக வேண் டும் என்று சொல்லவேண்டிய நிலையிலும் இருக்கிறோம்.


ஆகவே, நீங்கள் நன்றாக எண்ணிப்பார்க்க வேண்டும் தோழர்களே, தந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆறு மாதங்களுக்கு முன்னால், உங்களோடு யார் யார் இருந்தார்களோ, அவர்களுக்கெல்லாம் புரிந்துவிட்டதே! சரக்கு என்னவென்று தெளிவாகத் தெரிந்துவிட்டதே!  இவர் வந்தால் ஈழப் பிரச்சினையைத் தீர்த்துவிடுவார்! இவர் வந்தால், காவிரிப் பிரச்சினையைத் தீர்த்துவிடுவார்! இவர் வந்தால், உடனே அதைச் செய்வார், இதைச் செய்வார் என்று, 202 வியாதிக்கும் ஒரே மருந்து என்று சொல்லி, மருந்து விற்கக்கூடிய, தாயத்து விற்கக்கூடியவர்களைப் போல பலர் சொன்னார்கள்; ஆனால், இப்பொழுது ஆறே மாதத்தில் புரிந்துகொண்டார்கள். தமிழ்நாட்டிலே அவர்க ளோடு யார், யார் ஆறு மாதத்திற்கு முன்பு இருந்தார்களோ, அவர்கள் இப்பொழுது இல்லை. இப்படி சொல்வது வீரமணி அல்ல; டில்லியிலிருந்து வரக்கூடிய ஒரு அரசியல் ஆய்வுக் கட்டுரையாளர்.

திடீரென்று அவர்களுக்கு
இராஜேந்திர சோழன்மீது ஒரு காதல்!

ஆகவேதான், அவர்கள் தந்திரங்களைச் செய்கிறார்கள். நேரிடையாக வர முடியாது என்று சொன்னவுடன், இப் பொழுது தந்திரங்களைச் செய்கிறார்கள். அது என்ன தந் திரம்? திடீரென்று அவர்களுக்கு இராஜேந்திர சோழன்மீது ஒரு காதல்.


இராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டு விழா வாம். இராஜேந்திர சோழன் கப்பற்படை வைத்தானாம்; இப்பொழுதுதான் தெரிகிறது இவர்களுக்கு! இதற்கு முன்பு தெரியவில்லை.


நாங்கள் சொன்னோம், இருப்பதிலேயே உருப்படியான காரியம் செய்த ஒரு சோழன் என்று சொன்னால், அவன் கரிகால் பெருவளத்தானே தவிர, கல்லணை கட்டி விவசாயிகளுக்கு வாழ்வளித்தவனே தவிர, மற்ற ராஜாக்கள் எல்லாம், பல்குடுமி பல்யாக சாலை
முதுகுடுமி பெருவழுதிகள்தான்!


அவ்வளவுதான். இப்படியெல்லாம் ராஜாக்கள் எல்லாம் மண்டியிட்டார்கள். ராஜராஜன் எந்த வகையிலும் தமிழர் களுக்குப் பாடுபட்டவன் அல்ல. ராஜேந்திரன் முழுக்க முழுக்க பல்கலைக் கழகம் அமைத்து சமஸ்கிருதப் பாடத் தைச் சொல்லிக் கொடுத்தவன் என்பதுதான் வரலாறு. ஆகவே, இங்கே ஒன்றும் டேக்ஆஃப் ஆகாது. எத்தனை விமானங்கள் மேலே கிளம்புவதற்குள் கீழே வந்துவிடு கிறது. அதேபோல்தான், இங்கேயும் அது வெளியே வரவில்லை.


திருக்குறளை தேசிய நூலாக்கவேண்டும் என்று அவர் சொல்லவில்லை!


ராஜேந்திர சோழன் முடிந்து போய்விட்டது. இப்பொழுது அடுத்ததாக ஒருத்தர் வடநாட்டிலே இருந்து வந்து, திருக்குறள் என்று சொன்னார்.
உடனே நம்மாள்கள், ஆக, திருக்குறளை வடநாட்டில் இருந்து வந்து சொல்கிறார்களே என்று மகிழ்கிறார்கள்.


திருக்குறளை தேசிய நூலாக்கவேண்டும் என்று அவர் சொல்லவில்லை. திருக்குறளை சொல்லிக் கொடுக்கவேண் டும் என்றுதான் சொன்னார். அதை உடனே நம்மவர்கள் பாராட்டினார்கள். எனக்குக்கூட அந்த விழாவிற்கு அழைப் பிதழ் வந்தது. கவிஞர் வைரமுத்து அழைப்பிதழை அனுப்பி யிருந்தார். நான் அந்த அழைப்பிதழுக்குப் பதில் எழுதி னேன். ஏனென்றால், எந்த அழைப்பிதழ் வந்தாலும், உடனே பதில் எழுதுவது எங்களுடைய வழமையாகும்.
அழைப்பிதழ் கிடைத்தது! விழா சிறக்க வாழ்த்துகிறேன்; திருக்குறளைப்பற்றி நாடாளுமன்றத்தில் ஒருவர் பேசியி ருக்கிறார் என்பதற்காகப் பாராட்டலாம். ஆனால், எச்சரிக் கையோடு இருக்கவேண்டும். இதில், முகமூடியோ அல்லது வேறுவகையான தன்மையோ உள்ளே நுழைந்துவிட்டதா என்று கவனிக்கவேண்டும் என்று எழுதினேன்.


இந்தியா முழுவதும் திருவள்ளுவருடைய வரலாறு வருமாம்....


அடுத்த நாள் மனிதவள அமைச்சராக இருக்கக்கூடிய ஸ்மிருதி இரானி அவர்கள், உடனடியாக திருவள்ளுவர் நாளைக் கொண்டாடுவோம். உடனடியாக இந்தியா முழு வதும் திருவள்ளுவருடைய வரலாறு வரும் என்று சொன் னால், அதனுடைய அடிப்படை என்ன? இதனை அவர்கள் திடீரென்று ஏற்பாடு செய்யவில்லை நண்பர்களே, அதனை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இதோ, என்னுடைய கையில் இருக்கின்ற ஆதாரத் தோடு சொல்கிறேன். யாராவது மறுப்பு சொல்வதானால், சொல்லட்டும்; சரியாக இருந்தால், திருத்திக் கொள்வதற்குத் தயாராக இருக்கிறோம். சுயமரியாதை இயக்கத்திலே தந்தை பெரியார் அவர்கள் எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததே, திருந்து அல்லது திருத்து; இரண்டே வார்த்தைதான். நீ தவறாக இருந்தால், திருந்தவேண்டும். நான் தவறாகச் சொன்னால், என்னைத் திருத்து என்பதுதான் அது.


கோல்வால்கர் எழுதிய ‘‘Bunch of Thoughts’’


இது கோல்வால்கர் எழுதிய ஞானகங்கை சர்ஜங்சாலக் - அவர்தான் அந்தக் கட்சிக்கே தத்துவ கர்த்தா! இதுதான் ஞானகங்கை, இதுதான் ஆர்.எஸ்.எஸுக்கு வழிகாட்டி நூல்.


முஸ்லிம்களை விரட்டவேண்டும்; முஸ்லிம்கள் எல்லாம் இந்த நாட்டில் இருக்க முடியாது; கிறிஸ்தவர்கள் எல்லாம் இந்த நாட்டில் இருக்க முடியாது. அவர்கள் இங்கே இருக்கவேண்டும் என்றால், இரண்டு நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்கிறார்கள்.

இஸ்லாமியர்களும்,
கிறிஸ்தவர்களும் யார்?இஸ்லாமிய சகோதரர்கள் எல்லாம் என்ன அரேபியா வில் இருந்து வந்தவர்களா? நான்கு தலைமுறைகளுக்கு முன்பு அவர்கள் யார்? முழுக்க முழுக்க உன்னுடைய இந்து மதம் என்று சொல்கிறாயே, அந்த மதத்தைச் சார்ந்தவர் கள்தானே! நீ தாழ்த்தப்பட்டவன், ஒதுங்கிப் போ! தொடாதே! என்று சொன்னாய்.  யார் கட்டிப் பிடித்தானோ, அங்கு போய் அவன் மனிதன் ஆனான். அதுதானே, மிக முக்கியம். அதை எப்படி தவறு என்று நீ சொல்ல முடியும்!
அதேபோல், கிறிஸ்தவர்கள் யார்? இஸ்ரேல் நாட்டி லிருந்தோ, பாலஸ்தீன நாட்டிலிருந்தோ வந்தவர்களா? தயவு செய்து நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.


இந்த அடிப்படையிலே ஞானகங்கை நூலில் சொல் கிறார்,
இஸ்லாமியர்கள், ராமனை கடவுளாக ஏற்றால், அவர்களையும் இந்துக்கள் என்று கருதி நாங்கள் நாட்டிலிருக்க அனுமதிப்போம்.


கிருஷ்ணனை வணங்கினால், கிறிஸ்துவர்களை நாங்கள் அனுமதிப்போம் என்று இருக்கிறதே!


இதனை யாராவது மறுக்கட்டும்.
இப்படியானால், இந்த நாட்டினுடைய மதச்சார்பின்மை பிரகடனம் என்ன ஆவது?


அந்த அடிப்படையில்தான், இன்றைக்குத் திருக்குறளை வைத்து நம்மை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்கள். நம்முடைய தமிழ் அறிஞர்களும் மேலெழுந்தவாரியாகப் பார்த்து ஏமாந்துவிடக் கூடாது. எது பாம்பு? எது பழுதை? என்று. பச்சைப் பாம்பும், பழுதையும் பார்ப்பதற்கு ஒன்றாகத்தான் இருக்கும். ஆகவே, நீங்கள்தான் அதனை தெளிவாகப் பார்த்துக் கொள்ளவேண்டும்.


திருக்குறள் எப்படிப்பட்ட நூல்! எந்த மதத் தையும் சாராத ஒரு அறநூல். உலகத்திற்கே வழிகாட்டக் கூடிய ஒரு நூல். அப்பேர்ப்பட்ட அறவழிப்பட்ட வள்ளுவனுடைய அறிவு சாதாரணமானதல்ல. வள்ளுவன் தமிழிலே அதைக் கொடுத்திருக்கிறான் என்று சொன்னால், தமிழன் எவ்வளவு பெரிய அறிவாளியாக அந்தக் காலத்தில் வாழ்ந்திருக் கிறான். தமிழ் நாகரிகம், திராவிட நாகரிகம் என்பது காலத்தால், கருத்தால் அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை. இதனை நீங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.


ஞானகங்கையில் திருக்குறளைப்பற்றி என்ன சொல்கிறார்கள்?


கோல்வால்கர் எழுதிய ‘‘Bunch of Thoughts’  என்ற நூலின் தமிழ் மொழி பெயர்ப்பான ஞானகங்கை நூலில், திருக்குறள்பற்றி என்ன சொல்கிறார்? பக்கம் 168-169 இல் உள்ளதை அப்படியே இங்கே படிக்கின்றேன்.
தற்காலத்தில் தமிழைப் பற்றி நாம் அதிகம் கேள்விப் படுகிறோம். தமிழன்பர்கள் சிலர், தமிழ் என்பது தனக்கென வேறான கலாச்சாரமுடைய தனிப்பட்ட மொழி என்று கூறுகின்றனர். அவர்கள் வேதத்தில் நம்பிக்கைக் கொள்ள மறுக்கின்றனர். திருக்குறளை அவர்கள் மறையாகக் கருது கின்றனர்! திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஒரு பழைமையான அறநூல்தான்! திருவள்ளுவர் முனிவர், அதன் ஆசிரியர் ஆவார். அவரை நாம், நமது பிராதஸ் மரணத்தில் நினைவு கூர்கிறோம். மிகப் புகழ்பெற்ற புரட்சிவாதியான வ.வே.சு. அய்யர் திருக்குறளை ஆங்கி லத்தில் மொழி பெயர்த்துள்ளார். திருக்குறளில் நாம் காண்பது என்ன? நாடெங்கும் அறிமுகமான நான்கு விதமான வாழ்க்கை முறை. சதுர்வித புருஷாத்தம், அதில் விஷயமாகக் கூறப்பட்டுள்ளது. மோட்சத்தைப்பற்றிய அத்தியாயம் மட்டும் முன்னால் வைக்கப்பட்டுள்ளது. அது எந்தக் கடவுளையும், எந்த வழிபாட்டு முறையையும் பின் பற்றுமாறு கூறவில்லை. மோட்சம் என்ற உயர்ந்த விஷயத் தைப்பற்றியே கூறுகின்றது. எனவே, எந்த ஒரு சாராரின் நூலும் அல்ல; மகாபாரதம்கூட திருக்குறள் கூறுவதுபோன்ற வாழ்க்கை முறைகளையே புகழ்ந்து கூறுகிறது. ஹிந்துக் களிடம் அல்லாது மற்ற எந்த மதத்தவரிடமும் இவ்வாறான சிறந்த வாழ்க்கை முறை நோக்கு காணப்படவில்லை. எனவே, திருக்குறள் சிறந்த ஹிந்துக் கருத்துக்களைத் தூய ஹிந்து மொழியில் எடுத்துக் கூறும் ஒரு ஹிந்து நூல் ஆகும் என்று கோல்வால்கர் கூறியுள்ளார்.

யாருடா அவன், துரோபதைக்குப் பிறந்த பயல்!


நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்கள், நாடகத்தில் நடிக்கும்பொழுது, அவரைப்பற்றி யாராவது கூச்சல் குழப்பம் செய்வார்கள்; ஏய், ராதா என்ன பேசுகிறாய்? கடவுளைப்பற்றி பேசாதே! மதத்தைப்பற்றி பேசாதே என்று சத்தம் போட்டால், உடனே ராதா அவர்கள் வசனத்தை நிறுத்திவிட்டு, யாருடா அவன், துரோபதைக்குப் பிறந்த பயல் என்று கேட்பார். இது ஒன்றேபோதும் மகாபாரதக் கலாச்சாரம் என்னவென்று தெரிந்துகொள்வதற்கு!


கூட்டுறவு சொசைட்டியை முதன்முதலில் உருவாக்கியதே துரோபதைதான்!
பெரியார் அவர்கள் சொல்வார், கூட்டுறவு சொசைட் டியை முதன்முதலில் உருவாக்கியதே மகாபாரதத்தில் துரோபதைதான் என்று!


மகாபாரதத்தைப்பற்றி மறுபடியும் ஒரு ரவுண்டு வரவேண்டும் என்றால், திராவிடர் கழகத்துக்காரன் தயாராக இருக்கிறான். இதுதான் பாரதக் கலாச்சாரம் என்று சொல்லி, இதை திருக்குறளோடு ஒப்பிட்டால், என்னய்யா அர்த்தம்? வடநாட்டில் இப்படித்தான் திருக்குறளை சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள் என்றால், இதைவிட வள்ளுவர் வடநாட்டிற்குப் போகாமல் இருந்தாலாவது பத்திரமாக இருக்கமாட்டாரா? முயற்சியை நாணயமாக செய்யுங்கள்!


கலைஞர்கூட இந்த நிலையை வரவேற்கத்தகுந்தது என்று சொல்லியிருக்கிறார். உங்களுக்கு நல்லெண்ணம் இருந்தால், திருக்குறளை தேசிய நூலாக ஆக்குங்கள் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார் இரண்டு நாள்களுக்கு முன்பு! இதனை திராவிடர் கழகம் நீண்ட நாள்களாக சொல்லிக் கொண்டிருக்கிறது என்றெல்லாம் பத்திரிகையில் எழுதியிருக்கிறார்கள்.

பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கவேண்டுமாம்!


இன்னொரு செய்தி, இப்பொழுது வந்திருக்கின்ற செய்தி! உங்களுக்கெல்லாம்கூட அதிசயமாக இருக்கும்; இப்பொழுது சில மணித் துளிகளுக்கு முன்பாக வந்த செய்தி என்னிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தொலைக் காட்சியின்மூலம் இன்று இரவு 8.30 மணிக்கு வந்த செய் தியை நான் உங்களுக்குச் சொல்கிறேன்; பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும். மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மத்திய அரசுக்கு வேண்டுகோள்!


சமஸ்கிருதத்தைக் கட்டாய மொழியாக்கவேண்டும்; பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என்று திருமதி சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத் துறை அமைச்சர் சொல்கிறார்கள்.


பகவத் கீதை என்ன சொல்கிறது?, பெண்கள் அத்தனை பேரும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று சொல்கிறது.
கீதையின் மறுபக்கம் என்று புத்தகம் எழுதியிருக்கி றோமே, அதிலே உள்ள ஒரு வரியையாவது யாரையாவது மறுக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.
ஜாதியை வலியுறுத்தித்தானே சொல்லியிருக்கிறார்கள் முழுக்க முழுக்க,
பகவான் கிருஷ்ணன் சொல்கிறான்:


நான்கு ஜாதியை நானே உருவாக்கினேன்;
சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்
நானே நினைத்தால்கூட இதனை மாற்ற முடியாது.

இப்பொழுது நமக்கிருக்கின்ற மிகப்பெரிய பிரச் சினையே, இந்த ஜாதி இழிவை ஒழிப்பதைத்தவிர வேறு கிடையாது என்று சொல்லும்பொழுது, நாம் பகவத் கீதை பிரச்சாரத்தை அனுமதிக்கலாமா? அதனை ஏற்றுக்கொள்ள முடியுமா?
எனவே, நண்பர்களே! காவி நுழைகிறது என்று சொன்னால், இளைஞர்களைப் பார்த்து, குஜராத்தைப் பாருங்கள், அதனுடைய வளர்ச்சியைப் பாருங்கள், வேலை வாய்ப்பைப் பாருங்கள் என்றெல்லாம் சொல்லி திசை திருப்பினார்கள்; நம்முடைய இளைஞர்கள் எல்லாம் ஏமாந்தார்கள். ஏற்கெனவே காஷ்மீர்முதல் கன்னியாகுமரி வரையில் காங்கிரஸ் மீது ஏற்பட்ட வெறுப்பு இருக்கிறதே, அதனை அவர்கள் தங்கள்வயப்படுத்திக் கொண்டு, அதை லாபமாக ஆக்கிக் கொண்டார்கள். யார் யாரெல்லாம் காங்கிரசோடு இருந்தார்களோ, அவர்களுக்கும் சேர்ந்து அந்த விளைவு ஏற்பட்டது. அதன் காரணமாக, மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டது. இது காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையில் நடந்துகொண்டிருக்கின்ற ஒரு செய்தி நடப்பு.


ஆகவே, இங்கு ஜாதி ஒழிப்பிற்காக மிகப்பெரிய ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்யவேண்டும். அதுமட்டுமல்ல, நண்பர்களே, பாபர் மசூதியை இடித்த நாள் நேற்று. அந்த சங்கதிகளைப்பற்றி இன்றைக்குச் சொன்னார்கள் என்றால், அவர்கள் திருக்குறளுக்கு எப்படி தவறான வியாக்கியானம் சொன்னார்களோ, அதுபோல, அதற்கடுத்து பாரதியாருக்கு விழா கொண்டாடப் போகிறோம் என்றார்கள். நிறைய பேர் அதனை நினைத்து மகிழ்ந்தார்கள்.


என் கையில் இருப்பது விஜயபாரதம் (12.12.2014) ஆர்.எஸ்.எஸ்.சினுடய வார ஏடாகும். இதுதான் அவர் களின் அதிகாரப்பூர்வமான ஏடாகும். எதைச் சொன்னாலும், திராவிடர் கழகத்துக்காரன் ஆதாரமில்லாமல் பேசமாட்டான்.
எவ்வளவு விஷமத்தனமான கருத்து!


இந்த வாரம் வந்திருக்கின்ற அந்த ஏட்டில்,
பாரத தேசம் என்று பெயர் சொல்லுவார்.
மிடி பயங்கொள்ளுவார்; துயர் பகை வெல்லுவார் என்கிற பாட்டில்,
வெள்ளிப்பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
என்கிற பாட்டின் ஒரு வரியில்,
பள்ளித்தலம் அனைத்தும் கோவில் செய்குவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
பள்ளிக்கூடங்கள் அனைத்தையும் கோவில்களாக மதிக்கவேண்டும் என்று சிலர் விளக்கம் சொல்கிறார்கள். இது தவறானது என்பதற்கு, பாரத தேசம் என்று தொடங் கும் இந்தப் பாடலிலேயே மற்றொரு சரணத்தில், ஆலை கள் வைப்போம், கல்விச் சாலைகள் வைப்போம் என்று கூறுகிறார். எனவே, பள்ளி என்று அவர் குறிப்பிடுவது, கல்விக் கூடங்களை அல்ல! நமது கோவில்களாக இருந்த மசூதி, சர்ச்சாக மாற்றப்பட்ட தலங்கள் மீட்டெடுத்து, மீண்டும் கோவில்களாக மாற்றவேண்டும் என்று பாரதி விரும்பினார் என்று எழுதியிருக்கிறார்!


இதற்கு என்னய்யா அர்த்தம்? இதுதான் பாரதியினு டைய பாட்டுக்கு புது விளக்கமா? பள்ளித் தலம் அனைத்தும் கோவில் செய்வோம் என்று பாரதி சொன்னதற்கு, இவன் பள்ளி வாசலை சொல்கிறான்; சர்ச்சை சொல்கிறான். எவ்வளவு விஷமத்தனமான கருத்து. நமக்கெல்லாம் அறிவு இருக்கிறது; பெரியார் பிறந்த மண் இது. பகுத்தறிவு இருக்கின்ற மண். இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட வியாக்கியானத்தைச் சொல்கிறானே!


மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய புத்தகத்தைப் படியுங்கள்!


இப்பொழுது இருக்கின்ற கோவில்களை எடுத்துக் கொண்டாலே, பழைய காலத்து புத்தர் கோவில்கள். சமணர் கோவில்கள். காஞ்சிபுரத்திலிருந்து பெரும்பகுதி தேறவே தேறாது. யாருக்காவது சந்தேகம் இருந்தால், சமணமும் தமிழும்! மயிலை சீனி.வேங்கடசாமி புத்தகத்தைப் படியுங் கள்! பவுத்தமும் தமிழும்! காஞ்சிபுரத்திலுள்ள ஒவ்வொரு கோவிலும், ஏன்? திருப்பதி கோவில்கூட சமணக்கோவில் என்று ஆராய்ச்சியாளர்கள் எழுதியிருக்கிறார்கள்.


ஆகவேதான், நண்பர்களே!  இதிலே, மதக்கலவரத்திற்கு வித்திடுகிறார்கள்! சும்மா இருக்க முடியுமா? எனவே, ஒரு பக்கம் ஜாதி! இன்னொரு பக்கம் மதம். இவற்றைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால், இதற்கு இளை ஞர்களே நீங்கள் பலியாகலாமா? கல்வித் திட்டத்திலே காவியை உண்டாக்கினால், மறுபடியும் குலக்கல்வித் திட் டம் வரும். குலக்கல்வித் திட்டத்தை அழித்தது பெரியார்! இந்த இயக்கம்! கருப்புச் சட்டைக்காரர்கள்! அந்தக் குலக்கல்வித் திட்டம் ஒழிந்ததினால்தான், இன்றைக்கு குப்பன் மகன் சுப்பன் பொறியாளராக இருக்கிறான்.


மருத்துவப் படிப்புப் படிக்கும் மாணவர்களே, சமஸ் கிருதம் படித்தால்தான் நீங்கள் அந்தப் படிப்பிற்கே மனு போட முடியும் என்று வைத்திருந்தார்களே, இப்பொழு துள்ள டாக்டர்களில் எத்தனை பேருக்கு இந்த விஷயம் தெரியும். இதனை ஒழித்த பெருமை, தந்தை பெரியார் சொல்லி, நீதிக்கட்சி ஆட்சியில் பனகல் அரசர் காலத்தில் இந்த உத்தரவை ரத்து செய்தார்கள்.


பெரியாருடைய கொள்கை இருக்கிறதே, அது அசைக்க முடியாத ஆயிரங்காலத்துப் பயிர்!


டாக்டருக்கும், சமஸ்கிருதத்திற்கும் என்ன சம்பந்தம்? சமஸ்கிருதமே கட்டாயம் என்று இப்பொழுது வெளிப்படை யாக வந்துகொண்டிருக்கின்ற நேரத்தில், இதனையெல்லாம் வெளிப்படையாக செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால், நண்பர்களே, நீங்கள் அதனைப் புரிந்து கொள்ளவேண்டும். எப்படிப்பட்ட கொடுமை இன்றைக்குத் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு பெரிய ஆபத்து வந்துகொண்டிருக்கிறது. எனவேதான், இதனை மறைத்து மறைத்து செய்துகொண்டிருக்கிறார்கள். விஷ உருண்டைக்கு தேன் தடவிக் காட்டுகிறார்கள். ஏமாந்து விடக்கூடாது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும். எப் பொழுதுமே எச்சரிக்கை மணி அடிக்கின்ற இயக்கம் திராவிடர் கழகம்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. எல்லோருக்காகவும் சேர்த்து நாங்கள் பேசுகிறோம்; எங்களுக்காக அல்ல. எங்களுக்கு ரயிலில் ஏறுவதும் ஒன்றுதான்; ஜெயிலுக்குப் போவதும் ஒன்றுதான். நாங்கள் பெயிலுக்காக அலைந்து கொண்டிருக்கின்றவர்கள் அல்ல. இதனை நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும். சங்கராச்சாரியா? உடனே போகவேண்டும் என்று சொல் வதற்கு. நெருக்கடி காலத்தில் நாங்கள் சிறைச் சாலைக்குச் சென்றோமே, அதனாலே என்னாயிற்று! அடக்கு முறைகளை யும் நாங்கள் சந்திப்போம்! அதேநேரத்தில், பெரியாருடைய கொள்கை இருக்கிறதே, அது அசைக்க முடியாத ஆயிரங்காலத்துப் பயிர்! இதனுடைய விழுதுகள் பலமாக இருக்கின்றன. காரணம், வேர்களும் பலமாக இருக்கிறது. இந்தக் கொள்கைகளை யாரும் இந்த மண்ணைவிட்டு பெயர்த்துவிட முடியாது!


இன்றைக்குக் கருப்புச் சட்டை இல்லாத கட்சிக்காரர்களே கிடையாது!


2025 ஆம் ஆண்டு பார் என்று சொல்கிறார்கள்! இன்னும் அய்ந்தாண்டுகாலம்கூட உன்னால் தாக்குப் பிடிக்க முடியாது; அது இப்பொழுதே புரிந்துவிட்டது. காவி மாறும்; ஆனால், கருப்பு எதன்மீது விழுந்தாலும்,  கருப் பின்மீது எந்த சாயமும் ஏறாது. இதனை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். எங்கள் தலைவர் மிகவும் கெட்டிக்காரர்; அதனால்தான் கருப்புச் சட்டையைக் கொடுத்திருக்கிறார். கருப்புச் சட்டை சாதாரணமானதல்ல. இன்றைக்குப் பெரிய ஆயுதமே அதுதான்! யாருக்கெல்லாம் அதிருப்தி வருகிறதோ, யாருக்கெல்லாம் எதிர்ப்பு வரு கிறதோ அப்பொழுதெல்லாம் கருப்புச் சட்டையை அணிந்து கொள்கிறார்கள். எல்லாக் கட்சிக்காரர்களும் கருப்புச் சட்டையை தைத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழ் நாட்டில். இன்றைக்குக் கருப்புச் சட்டை இல்லாத கட்சிக் காரர்களே கிடையாது. நீதிக்கானது அக்கருப்புடை அல் லவா? அய்யப்பனும் தைத்துவிட்டான், அதுதான் எங்களுக்கு வேதனையாக இருந்தது, பரவாயில்லை! இது அய்யப்பன் கருப்புச் சட்டையல்ல; இது முழுக்க முழுக்க எங்கப்பன் கொடுத்த கருப்பு என்று சொல்லக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கிக் காட்டிருக் கிறார் என்று சொன்னால், அது சாதாரணமானதா என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.


எனவேதான் நண்பர்களே, இந்த இயக்கம் ஆபத்து களை எடுத்துச் சொல்கிறது. நம்முடைய பணி என்பதிருக் கிறதே, அது சாதாரணமானதல்ல. எங்களை ஊக்குவிக் கின்ற சக்திகள் இரண்டுவிதமான சக்திகள்.
ஒன்று, நம்முடைய பாசறை வீரர்கள், வீராங்கனைகள், ஆதரவாளர்கள், இன உணர்வாளர்கள், கண்ணுக்குத் தெரி யாதவர்கள் பலர் உண்டு. அரசியலில் எந்தக் கட்சியிலே  இருந்தாலும், எங்கள் தோழர்கள் இங்கே வந்து ஊக்கப் படுத்தவில்லையா! உற்சாகப்படுத்தவில்லையா! அரசியலில் நாங்கள் எந்த நிலை எடுக்கிறோம், அவர்கள் எந்த நிலை எடுக்கிறார்கள் என்பது எங்களைப் பிரித்திருக்கிறதா? நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.


ஆகவேதான், எங்களுடைய அடித்தளம் என்பதிருக் கிறதே, இது தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட திரா விடர் இயக்கத்தினுடைய அடித்தளம். திராவிடத்தால் வீழ்ந் தோம் என்று யாரும் சொல்லிவிட்டுத் தப்பிவிட முடியாது. ஆரியத்தால் வீழ்ந்தோம்; திராவிடத்தால் எழுந்தோம் என்று சொல்வதுதான், மிகப்பெரிய உண்மையாக நம்மு டைய நாட்டில் இருக்கலாம்.
இதற்கு மிகத் தந்திரமாக அவர்கள் ஒரு முயற்சியை செய்திருக்கிறார்கள். அது என்ன முயற்சி? அதையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால், இதை எங்கள் மேடையைத் தவிர, வேறு மேடையில் நீங்கள் சுலபமாகப் பார்க்க முடியாது.


என் கையில் இருப்பது டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழ். சில வாரங்களுக்கு முன்னால் அதில் வந்த ஒரு செய்தி.

Saffron flew over the dravidian land times perry....


திராவிட மண்ணில் காவியினுடைய அந்த வேகமான முயற்சிகள் எப்படி நடக்கிறது என்பதைப்பற்றி எழுதும்போது,


ஆரியம் - திராவிடம் என்றெல்லாம் இனிமேல் பேச முடியாது. காரணம், நாங்கள் அமெரிக்காவிலேயே ஒரு  பெரிய ஆராய்ச்சி செய்து, கண்டுபிடித்து கொண்டு வந்துவிட்டோம். டிஎன்ஏ ஆராய்ச்சி. மரபணு ஆராய்ச்சி.
என்ன அந்த மரபணு ஆராய்ச்சி? அமெரிக்காவிலுள்ள சில நிபுணர்களைப் பிடித்து, ஆரியம் இல்லை, திராவிடம் இல்லை என்று காட்டுவதற்காக, அவர்களுடைய உத்தரவை கொண்டு வந்து இங்கே போடுகிறார்களாம்!
தயவு செய்து நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். இதற்காக அமெரிக்காவிற்குச் சென்று, மரபணு ஆராய்ச்சி செய்து சொல்கிறார்களாம். ரத்தத்தில் கலந்துவிட்டார்கள், இப்பொழுது தனியாக திராவிடன் கிடையாது; தனியாக ஆரியர் கிடையாது என்று.


பெரியாரும், அண்ணாவும் நீண்ட நாள்களுக்கு முன் பாகவே இதற்குப் பதில் சொல்லிவிட்டார்கள்.


கலந்துவிட்டீர்கள் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியுமே! இதை யாரும் சொல்லவேண்டிய அவசியமில் லையே! எப்பொழுது கலந்தார்கள்; எவ்வளவு கலந்தார்கள்; எங்கே கலந்தார்கள்; எப்படி கலந்தார்கள் என்று எல்லாமே எங்களுக்குத் தெரியுமே!  இப்பொழுது அது பிரச்சினையல்ல!
இப்பொழுது எங்களுடைய கேள்வி, ஆரியம் - திராவிடர் என்று இருக்கிறதே, அதற்கு அடையாளம் என்னவென்று சொன்னால், பெரியார் சொன்னார், அண்ணாவும் அதனை வழிமொழிந்தார் அதுதான் மிக முக்கியம்.
தெளிவாகச் சொன்னார், இது ரத்தப் பரிசோதனை அல்ல. இன்னமும் ஆரியம், நான்கு ஜாதிகளை வற்புறுத்து கிறது. இன்னமும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் களாகக் கூடாது என்று சட்டத்திற்குக் குறுக்கே அவர்கள் தடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்குப் பெயர் தான் ஆரியம்.
மாற்றம் தேவை! வளர்ச்சி தேவை! சமத்துவம், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையால் - இது திராவிடம்.
நான்கு ஜாதிகளை நான்தான் உண்டாக்கினேன் - இது ஆரியம்.
எனவே, தத்துவம்தான் அடையாளப்படுத்தக் கூடியதே தவிர, வெறும் ரத்தப் பரிசோதனை ஆராய்ச்சி அல்ல நண்பர்களே!


அவர்கள் எவ்வளவு தந்திரசாலி என்றால், நீதிமன் றத்தில் இட ஒதுக்கீடு இருக்கிறது. இட ஒதுக்கீடுக்காக சொல் கின்ற நேரத்தில், அங்கே இருக்கின்ற ஒரு உயர்ஜாதிக்காரன் வேண்டுமென்றே ஒரு கேள்வியைக் கேட்கிறார், 69 சதவிகித இட ஒதுக்கீட்டை வைத்திருக்கிறீர்களே, அதற்கு முன்பாக ஜாதிவாரியாகக் கணக்கு எடுத்திருக்கிறீர்களா? உங்களிடம் புள்ளிவிவரம் இருக்கிறதா? என்று.


உடனே, ஜாதிவாரியாகக் கணக்கெடுத்தால்தான், இட ஒதுக்கீடு என்று சொல்லும்பொழுது, அதற்கு மட்டும் ஜாதியைச் சொல்கிறோம்.
சில நேரங்களில் நோய்களுக்கு நாம் ஆண்டிபயாடிக் மருந்து கொடுக்கும்பொழுது, கிருமியைக் கொல்லுவதற்கு, அந்த மருந்தில் விஷத்தை அளவாக வைப்பதில்லையா? அதுபோல், இட ஒதுக்கீடு என்பது ஒரு மாற்று. அது ஒன்றும் நிரந்தரப் பரிகாரம் அல்ல.


உடனே இவர்கள் எழுதுகிறார்கள், ஆகா! கலைஞரும், வீரமணியும், திராவிடர் கழகமும், மற்றவர்களும் ஜாதிவாரி யான கணக்கெடுப்பு என்று கேட்கிறார்களே, ஜாதியை இப்படியெல்லாம் வலியுறுத்தலாமா? என்று.
அட புத்திசாலிகளே, உனக்கு எழுதுவதற்குத் தகுதி உண்டா உன் பேனாவால்! நீ உன்னுடைய முதுகில் பூணூல் போட்டிருக்கிறாய்! என்னுடைய முதுகு வெறும் முதுகுதான்!


உங்கள் சட்டையை கழற்றுங்கள்;
நானும் சட்டையை கழற்றுகிறேன்!என்னை ஒருமுறை சோ பேட்டி எடுத்தார். அப் பொழுது சோ அவர்கள், என்ன சார் நீங்கள் இப்பொழுது போய், ஆரியம் - திராவிடம் என்று பேசுகிறீர்களே, இப்பொழுதெல்லாம் எல்லோரும் ஒன்றாக அமர்ந்துதானே சாப்பிடுகிறோம் என்று சொன்னார்.

உடனே நான், நண்பர் சோ அவர்களே, இதற்கு நான் பதில் சொல்லட்டுமா? உங்கள் சட்டையை கழற்றுங்கள்; நானும் சட்டையை கழற்றுகிறேன் என்றேன்.

சோ அவர்கள், என்ன சார் வம்புக்கு வர்றீங்களே! என்றார்

உடனே நான், அடிதடிக்காக சொல்லவில்லை. இரண்டு பேரும் சட்டையைக் கழற்றுவோம். உங்கள் முதுகில் பூணூல் தொங்குகிறது. என்னுடைய முதுகு வெறும் முது காக இருக்கிறதே, அதற்குப் பதில் சொல்லுங்கள் என்றேன்.
சோ அவர்கள், இது நானாக விரும்பிப் போட்டுக் கொண்ட நூல் சார் என்றார்.
நீங்களா விரும்பிப் போட்டுக்கொண்டாலும், அந்த நூலுக்கு என்ன மரியாதை என்பதுதான் மிக முக்கியம் என்றேன்.


சோ, நீங்கள் அந்த நூலை வாங்கிப் போட்டுக் கொள் ளலாமே! எல்லோருக்கும் நூலை வாங்கிக் கொடுத்துப் போடச் சொல்லலாமே! என்றார்.


ராமானுஜர் நூல் வாங்கிப் போட்டு ஒன்றும் நடக்க வில்லை; நாங்கள் ஏன் பைத்திக்காரத்தனமாக நூலை வாங்கவேண்டும். இவ்வளவு பேர் நூலைப் போடுவதை விட, நீங்கள் மூன்று சதவிகிதம் பேர் நூலைக் கழற்றி விட்டால், ஒரே முதுகு, ஒரே மாதிரி ஒருமைப்பாடாக இருக்குமே, அதுதானே சுலபம் என்று சொன்னேன்.


உடனே, இதற்கு அவர் பதில் சொல்லாமல், வேறு கேள்விக்குச் சென்றுவிட்டார்.


எதற்காக இதனைச் சொல்கிறேன் என்று சொன்னால், நண்பர்களே, அந்த ஜாதி!
அந்த அடிப்படையை வைத்துக்கொண்டு இன்றைக்கு ஆரியம் - திராவிடம் என்றெல்லாம் என்ன என்று கேட்டால், அதற்கு என்ன அர்த்தம்?
இன்னமும் நீங்கள் மனுதர்மம், இன்னமும் மகாபாரதம்; இன்னமும் பாரதிதாசனை விட்டுவிட்டு, பாரதியாருக்கு மட்டும் விழா என்றால், ஆரியம் எங்கே இருக்கிறது? திராவிடம் எங்கே இருக்கிறது? என்பது புரியவில்லையா!
எனவே, நண்பர்களே! ஜாதியை ஒழித்தாகவேண்டும்; தீண்டாமையை அழித்தாகவேண்டும். ஜாதி ஒழிந்த ஒரு சமுதாயத்தை, மதவெறி நீங்கிய ஒரு சமுதாயத்தை, மனிதநேயத்தைக் கட்டிக்காக்கக்கூடிய ஒரு சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்று நினைக்கின்றோம். இந்தக் கருத்து இப்பொழுது எல்லோருக்கும் வருகிறது.

பெரியார் எப்பொழுதும் தேவைப்படுவார்!


இதோ என்னுடைய கையில் இருப்பது தீக்கதிர் ஏடு. இந்த ஏட்டில், பிரகாஷ் காரத் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் அவர்.


ஜாதியை ஒழிக்காமல் சோசலிசத்தை அடைய முடியாது என்று சொல்லியிருக்கிறார்.


இதைத்தான் நீண்ட காலத்திற்கு முன்பாக தந்தை பெரியார் சொன்னார், வருண பேதமா? வர்க்க பேதமா? என் றெல்லாம் விவாதம் செய்துகொண்டிருந்த காலம் மாறி விட்டது. இப்பொழுது வர்க்கம் முக்கியமல்ல, வர்ணம்தான் முதலிலே ஒழிக்கப்படவேண்டியது என்று சொல்லக்கூடிய கருத்து வந்திருக்கிறது என்றால், பெரியார் எப்பொழுதும் தேவைப்படுவார்; எப்படி மருந்து எப்பொழுதும் தேவைப் படுகிறதோ, அதுபோல! மருத்துவர்களும் எப்பொழுதும் தேவைப்படுவார்கள்; மருத்துவக் கல்லூரியும் எப்பொழுதும் தேவைப்படும், அதுதான் மிக முக்கியம்.


மறுபடியும் பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின்!


அந்த அடிப்படையிலே, திராவிடர் கழகம் என்பது வெறும் மருத்துவக் கல்லூரி மட்டுமல்ல, வருமுன்னரே காப்பதற்காக எடுத்துச் சொல்லக்கூடியது. எனவே, திராவிடர் கழகம் என்கிற இந்த அமைப்பு எங்களுக்காக அல்ல நண்பர்களே, உங்கள் பிள்ளைகளுடைய எதிர் காலத்திற்காக! இளைஞர்களே, உங்களுடைய வாழ்வு வெறும் ஏமாற்றத்திற்காக ஆகிவிடக்கூடாது. இன்றைக்கு நீங்கள் கணினி மூலமாக, இணையத்தின் மூலமாக கைநிறையச் சம்பாதிக்கிறீர்கள் என்று நினைக்காதீர்கள்! நாளைக்கு இந்த முறை மாற்றப்பட்டு, மறுபடியும் பெரியாருக்கு முன், திராவிட இயக்கத்திற்கு முன்னாலே ஏற்பட்ட சூழல் மீண்டும் வருமானால், ஏகலைவன்களாக நீங்கள் ஆக்கப்படுவீர்கள். பாரதக் கதையில் ஏகலைவன் கதை என்ன? கட்டை விரலை வெட்டிக் கொடு என்று கேட்டாரா, இல்லையா துரோணாச்சாரியார்! அதுதானே குருதட்சணை என்று தெளிவாகச் சொன்னார்கள். எனவே, அந்தக் கதை திரும்பி வந்துவிடும்.
இப்பொழுதுதான் துரோணாச்சாரியார்கள் உங்களிடம் பயந்துகொண்டிருக் கிறார்கள். எந்த ஏகலவனையாவது பார்த்து இன்றைய துரோணாச்சாரிகள் கட்டை விரலை வெட்டிக் கொடு என்றால், அவன் கைகளையே வெட்டுவான், அந்த அளவிற்கு துணிவாக இருக்கக்கூடிய அறிவு, பெரியார் தந்த அறிவு. ஆகவே, அதனைப் புரிந்துகொள்ளுங்கள்.


மீண்டும் பழைய துரோணாச்சாரியார்களும், பழைய ஏகலைவன்களும் மீண்டும் வந்துவிடக் கூடாது. இதனைச் சொல்வதுதான் எங்களுடைய வேலை. இதுதான் சுயமரியாதை நாளினுடைய தத்துவம். எனவேதான், நேரிடையாக வர முடியாத எதிரிகள் மறைந்து வருகிறார்கள், மிகப்பெரிய அளவிற்கு. ஆங்கிலத்திலே Came of Pledge என்ற ஒரு வார்த்தை உண்டு. உருமாற்றம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு. பச்சை செடியில், பச்சை நிறத்தில் இருப்பார்கள். மஞ்சள் நிறமாக இருந்தால், மஞ்சள் நிறமாக மாறுவார்கள். அதுபோல, இந்தத் தமிழ் மண்ணிலே காவிகள், புதிய புதிய திட்டத்தை நுழைக்கப் பார்க்கிறார்கள்; ராஜேந்திர சோழன் உங்களுக்குக் கைகொடுக்கமாட்டான்; வள்ளுவர் கூட கைக்கொடுக்க மாட்டார். பாரதியை வைத்துக்கொண்டு நீங்கள் இப்படியெல்லாம் மிகப்பெரிய வியாக்கியானம் செய்து மதவெறியை உண்டாக்கலாம்; ஜாதி வெறியைப் புதுப்பிக்கலாம் என்று நினைத்தால், கடைசி கருஞ்சட்டைக்காரனுடைய கடைசி சொட்டு ரத்தம் இருக்கின்ற வரையில், அது நடக்காது. எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் எதையும் எதிர்கொள்ளக் கூடியவர்கள். விளைவுகளில் இருந்து தப்பவேண்டும் என்று நினைக்கமாட்டோம்.


பெரியார் சொன்னால், எந்த லட்சியத்தை நீ அடைய வேண்டுமானாலும், அதற்குரிய விலையைக் கொடுப்ப தற்குத் தயாராக இரு! அது கடுமையான விலையாக இருந்தாலும் பரவாயில்லை. இலவசமாகப் பெறாதே! அதற்குரிய லட்சியத்தைப் பெறுவதற்காக தயாராக இருங்கள்! தயாராக இருங்கள்! என்று சொன்னார்கள்.


எங்களுடைய இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் அந்த லட்சியத்தைப் பெறுவதற்காக, தங்களுடைய இன்னுயி ரையும் இழப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள். நாளைக்கு அந்தத் திட்டம் வரும். ஆனால், நாங்கள் பகுத்தறிவு வாதிகள்; எதை எப்படி எடுப்பது என்று எங்களுக்குத் தெரியும். முள்ளை எப்படி எடுப்பது? முள்ளால் எடுக்க வேண்டும் என்று சொன்னால், அந்த முள் எங்கிருந்து வரு கிறது என்பதை பெரியார் எங்களுக்குக் கற்றுக் கொடுத் திருக்கிறார். எங்களுடைய அணுகுமுறை எங்களுடைய சொந்த புத்தி அல்ல; பெரியார் தந்த புத்தி. அதனை நீங்கள் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


எனவே, தோழர்களே, இளைஞர்களே! இவ்வளவு அற்புதமான இந்த நிகழ்ச்சியை, சிறப்பாக நடத்தி, சேலத்தில் வரலாறு படைத்த அத்துணை பேருக்கும் எங்கள் மனமுவந்த பாராட்டினை கழகத்தின் சார்பில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.


மக்களுடைய உணர்வுகள் இந்த இயக்கத்தை நோக்கி எப்படி இருக்கிறது!
கடைவீதி வசூல் செய்திருக்கிறார்கள்; ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய்க்கு மேலாக, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னால், மக்களுடைய உணர்வுகள் இந்த இயக்கத்தை நோக்கி எப்படி இருக்கிறது என்பதற்கு இதைவிட அற்புதமான ஒரு அடையாளம் கிடையாது.
அப்படிப்பட்ட பணிகளைச் செய்த நம்முடைய பொதுச் செயலாளர் குணசேகரன் அவர்களுடைய அந்த வழி காட்டுதல்களிலே, அதேபோல, மற்ற திட்டங்களையெல் லாம் பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்கள் வகுத்தார் கள். அதுபோல, நம்முடைய தோழர்கள் அத்துணை மாவட்டக் கழக, மண்டலத் தலைவர்கள் அத்துணை பேரும் சிறப்பாகச் செய்தார்கள். அவர்கள் அத்துணை பேரையும் பாராட்டி, நேரமின்மை காரணத்தால், சில பெயர்களை மட்டும் சொல்கிறேன், மண்டல இளை ஞரணிச் செயலாளர் சுரேஷ் அவர்கள், ஆத்தூர் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சேகர் அவர்கள், மண்டல மாணவரணிச் செயலாளர் தமிழ்பிரபாகரன் அவர்கள், மேட்டூர் மாவட்ட மாணவரணிச் செயலாளர் ஜெயப்பிர காஷ் அவர்கள், ஒரத்தநாடு பொறியாளர் பக்ருதீன் அவர்கள், தஞ்சை பொறியாளர் செந்தூரப்பாண்டியன், ஏலாக்குறிச்சி அறிவேந்தி, தஞ்சை இளவரசன், முனியன், மேட்டூர் அழகேசன், மேட்டூர் கோவிந்தராஜ், சதீஷ், ஒரத்த நாடு நா.பிரபு, ஆத்தூர் நகரத் தலைவர் அண்ணாதுரை, தென்னங்குடிபாளையம் ஜெயராமன், பெத்தநாயக்கன் பாளையம் சம்பத், மேட்டூர் மோகன்ராஜ், பாச்சாளியூர் அய்யனார், இப்படிப்பட்ட தலைவர்களும், அதுபோல, பழனி.புள்ளையண்ணன், கவிஞர் சுப்பிரமணியம், பூபதி, கடவுள் இல்லை சிவக்குமார், அய்யா ஜவகர், கிருஷ்ண மூர்த்தி, இளவழகன், இராவணபூபதி, வடிவேல், தமிழர் தலைவர் சவுந்திரராஜன், ஆசிரியர் கந்தசாமி போன்ற அத்துணை தோழர்களுக்கும், மனமுவந்து இங்கே வந்து இதுவரையில் இருந்து கேட்டு, ஆதரவு தருகின்ற அனைத் துக் கட்சி நண்பர்களுக்கும் எங்களுடைய அன்பை, பாராட்டை, நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன்!

 வணக்கம்! நன்றி!


எச்சரிக்கை! எச்சரிக்கை! என்பதை மீண்டும் உங்களிடம் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.


அருமைத் தோழர்களே, ஒரே ஒரு முழக்கத்தை மட்டும் நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். அது என்ன முழக்கம் என்று சொன்னால், நம்முடைய இயக்கத்தைப் பொறுத்தவரையில், இனிமேல் மிகத்தெளிவாகச் சொல்ல வேண்டிய செய்திகள், மிகத்தெளிவாக இருக்கிறது. அதனைச் சொல்லித்தான் என்னுடைய உரையை நிறைவு செய்ய இருக்கிறேன். அதை மட்டும் இங்கே எடுத்துச் சொல்கிறேன். அருள்கூர்ந்து நீங்கள் திரும்பக் கூறவேண்டும்.


தனித்தன்மையால், தனித்தன்மையால்
பண்பாட்டுத் தனித்தன்மையால்
பண்பாட்டுத் தனித்தன்மையால்
நாங்கள் திராவிடர்கள், நாங்கள் திராவிடர்கள்
இந்து மதத்தில், இந்து மதத்தில்
நாங்கள் சூத்திரன், நாங்கள் சூத்திரன்
இந்து மதத்தில், இந்து மதத்தில்
நாங்கள் பஞ்சமன், நாங்கள் பஞ்சமன்
ஒழிக்கவேண்டியது எது?
உணருங்கள் பெரியோர்களே!
திராவிடத்தால், திராவிடத்தால்
நாங்கள், நாங்கள்
சமத்துவ மனிதர், சமத்துவ மனிதர்
புராணக் குப்பைகளை, புராணக் குப்பைகளை
ஆக்காதே! ஆக்காதே! அறிவியல் ஆக்காதே!
மாற்றாதே மாற்றாதே! வரலாற்றை மாற்றாதே!
வரலாற்றை மாற்றாதே!
புராணக் குப்பை மேடாக, புராணக் குப்பை மேடாக
மாற்றாதே, மாற்றாதே!
மாய்ப்போம்! மாய்போம்!
மதவெறி மாய்ப்போம்!
சாய்ப்போம், சாய்ப்போம்!
ஜாதிகளை சாய்ப்போம்!
வளர்ப்போம், வளர்ப்போம்!
காப்போம், காப்போம்!
மனிதநேயத்தை, மனிதநேயத்தை
காப்போம், காப்போம்!
ஒழிப்போம், ஒழிப்போம்!
ஜாதிகளை ஒழிப்போம்!
படைப்போம், படைப்போம்!
சமதர்மங்களைப் படைப்போம்!
ஒழிப்போம், ஒழிப்போம்!
வருண தருமத்தை, வருண தருமத்தை
ஒழிப்போம், ஒழிப்போம்!
காப்போம், காப்போம்!
சமூகநீதியை காப்போம்!
சமதர்மத்தைக் காப்போம்!
நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

                                     -------------------------- “விடுதலை”12-12-2014
Read more: http://viduthalai.in/page1/92721.html#ixzz3LsBJMIQ6