Search This Blog

21.12.14

குறளும் பக்தி நூல்களும்- பெரியார்
இன்று குறள் மாநாடு என்னும் பேரால் இங்கு கூடியிருக்கிறோம். இன்று தமிழ் நாட்டில் திராவிடர் கழகங்களுக்கும் அதன் கூட்டங் களுக்கும் எப்படி ஒரு செல்வாக்கும், மக்கள் கூட்டங்களும் வருகிறதோ அதுபோல் குறளுக்கு, குறள் கூட்டங்களுக்கும் செல்வாக்கும், பெரும் கூட்டங்களும் வருகின்றன.


இல்லாவிட்டால் இந்தக் காலை நேரத்தில் விளம்பரம் இல்லாத இந்த மாநாட்டிற்கு, அதுவும் நான் இன்று இங்கு வருகிறேன் என்பதே யாருக்கும் தெரியாத நிலையில் இத்தனை பேர் இங்கு வந்து கூடுவதென்றால் முடியக்கூடிய காரியமா? தலைவர் அவர்களும், அறிஞர் முனுசாமி அவர்களும் குறளுக்கு இன்றுள்ள இந்த மாதிரியான செல்வாக்குக்கு என்னையும் ஒரு  காரணமாகச் சொன்னார்கள். நீங்களும் அதை ஆமோதிக்கும் அறிகுறியாய் ஆரவாரம் செய்தீர்கள். குறளுக்கிருக்கிற செல்வாக்கு, விளம்பரம் காரணமாக பல பேருக்குக் குறளின் பேரால் புத்தகம் போட, பத்திரிகை போட, பிரசாரம் தெரிய நல்ல வாய்ப்பு, வியாபாரம்,  வருவாய் இருக்கிறது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். காங்கிரசுக்காரர்கள், காங்கிரஸ் பிரசாரகர்கள் பலர்கூட, தங்கள் ஸ்தாபனத் திற்கோ, தங்கள் பேருக்கோ கூட்டம் சேருவ தில்லை என்கின்ற காரணத்தால் குறளின் பெயரை உபயோகித்துக் கூட்டம் சேர்த்துக் கொள்கிறார்கள். குறளின் பேரால் புத்தகம், பத்திரிகை, கூட்டம் நடத்துகிறார்கள். பல காங்கிரஸ் கூலிகள் காங்கிரசின் பேரால் தங்களுக்கு மதிப்பு போய்விட்டது கண்டு, தமிழ், தமிழ் கலை, தமிழ் இலக்கியம் என்னும் பேரால் விளம்பரம் பெற்று வாழ்க்கை நடத்துகிறார்கள். 


இந்த நிலைமை ஏற்பட்டதற்குக் காரணம் என்னவென்றால், 1939 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியால் தமிழுக்கு ஏற்பட்ட செல்வாக்கேயாகும்.


குறளுக்கும், தமிழுக்கும் இன்றைய தினம் உள்ள உணர்ச்சிக்கு நான் காரணம் என்பதையும், நமது திராவிடர் கழகம் என்பதையும், அடியோடு நான் ஒப்புக்கொள்ள முடியாது. ஏதாவது சிறிது காரணம் இருந்தால் இருக்கலாம். ஆனால், பெரிதும் உண்மையானதுமான காரணம் இன்று மக்களுக்கு ஏற்பட்ட விஞ்ஞானமும், பகுத்தறிவும்,  சுயமரியாதை உணர்ச்சியுமேயாகும். 1920 ஆம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரசின் மாபெருந் தலைவர்களான பானர்ஜி, மாளவியா, நேதாஜி தாதாபாய் நவுரோஜி, சங்கர நாயர், விஜயராக வாச்சாரியா, திலகர், பெசண்டு முதலிய தலை வர்கள் தலைமையில் கூட்டப்பட்ட காங்கிரஸ் மாநாடுகளில் பாராட்டப்பட்டு, நன்றி செலுத்தப் பட்டு, கடவுளுக்குப் பிரார்த்தனை செலுத்தப் பட்டு, காட்டி வந்ததான பிரிட்டிஷ் ஆட்சியானது சுமார் 200 வருட காலமாய் ஆட்சி  செய்ய நேர்ந்த காரணத்தால் நம்மக்களுக்கு ஏற்பட்ட விஞ்ஞான அறிவும், பகுத்தறிவு சுதந்திரமும் மக்களை சிந்திக்கச் செய்ததன் பயனாய் மக்கள் இன்று அந்தப் பகுத்தறிவுக் கண்களால் குறளைப் பார்க்க ஆரம்பித்ததால், இன்று குறளின் பெருமை மக்களுக்கு விளங்குகிறது.


குறள் இதுவரை ஒரு மத நூலாக, பக்தி நூலாக, பார்ப்பன நூலாகவே இருந்து வந்தது. சைவன் குறளை தங்கள் மதத்து நூல் என்றும், வைணவன் தங்கள் மதத்து நூல் என்றும், சமணன் தங்கள் மதத்து நூல் என்றும் சுய வயப்படுத்தி அதை ஒரு புராணமாகவும் பக்தி நூலாகவும் கருதியும் பிரசாரம் செய்தும் வந்தார்கள்.
 தந்தை பெரியார்

அது மாத்திரமல்லாமல் குறளுக்கு ஆரிய மத சம்பிரதாயப்படியே உரை எழுதப்பட்டு, அந்த உரையையே தமிழ் மக்கள், தமிழ்ப் புலவர்கள், தமிழ் சமயவாதிகள் ஆகிய எவரும் ஒப்புக் கொண்டு அந்த உரையே பள்ளிப்பாடமாகவும் ஆக்கப்பட்டு அதை மற்றொரு மனுதர்ம சாஸ் திரமாகக் கொள்ளும்படி செய்யப்பட்டுவிட்டது.


இந்த நிலையில் ஆக்கப்பட்ட குறளானது பாரதம்,  இராமாயணம், கீதை, மனுதர்ம சாஸ்திரம் ஆகியவைகளை விட எப்படி உயர்ந்ததாகக் கருதப்பட முடியும்?


குறளுக்கு மதிப்புரை எழுதியவர்களும், சில தமிழ்ப் பெரியார்களும் அதாவது, மனோன்மணி யம் சுந்தரம் பிள்ளை போன்றவர்களும் குறளுக் கும் மற்ற மேற்கண்ட ஆரிய நூல்களுக்கும் உள்ள பேதத்தைத் தெளிவுற எடுத்துக்காட்டி யிருந்தாலும், இந்த நாட்டில் பார்ப்பனர்களுக்கு இருந்து வந்த ஆதிக்கமானது குறளையும் ஆரியத்தையும் பிரித்துக் காணுவதே மாபெரும் துவேஷ புத்தி என்பதான நிலையை ஏற்படுத்தி விட்டதால் தமிழ் புலவர்கள் என்று வெளி வந்த எல்லா தமிழர்களும் ஆரியத்திற்கு அடிமையாகி குறளை மனுதர்ம சாஸ்திரம் போலவும், கீதைக்கு அடுத்த பெருமை பொருந்தியது போலவும் ஒப்புக்கொண்டு ஆரியக் கூலிகள் அதுபோல் பிரசாரம் செய்து வந்து விட்டார்கள்.


இந்த நிலையில் குறளுக்கு ஒரு தனிமதிப்பு எப்படி ஏற்பட முடியும்? ஒரு முஸ்லிமும் ஒரு கிறித்தவனும், ஒரு பகுத்தறிவுவாதியும் - ஒரு நாஸ்திக ஞானமுடையவனும் அதாவது ஒரு தத்துவவாதியும் இப்படி ஆக்கப்பட்ட குறளை ஏன், எதற்கு ஆக மதிக்க முடியும்?


அதிலும் ஆரிய மதமான இந்து மத பக்தன் ஒருவனுக்கு,  தன்னை ஆரிய இனம் என்று கருதி ஆரிய அடிமையாய் இருப்பவனுக்கு குறளை, பாரத இராமாயணத்தை விட அதிகமான மதிப்பு தந்து எப்படி மதிக்க முடியும்?
ஆதலால் மக்களுக்குள் இன்று தோன்றி யிருக்கும் பகுத்தறிவு உணர்ச்சியும், திராவிட இன உணர்ச்சியும், தத்துவ வளர்ச்சியும் அதாவது ``நாஸ்திக'' புத்தியுமே தான் குறளை ஆரிய வேத சாஸ்திர புராண இதிகாசத்தில் இருந்தும், அவை களை ஆதாரமாகக் கொண்ட தேவார, திருவாசக, பிரபந்தம் முதலிய சமயப் பக்தர்களின் கவிகளில் இருந்தும் பிரித்துக் காண முடிந்தது. இந்த முடிவின் காரணமாகவே குறளின் மேன்மை திடீரென்று விளங்கவும் மக்கள் பாராட்டவும் மதிக்கவும் அதனிடம் அன்பு செலுத்தவும் முடிந்தது.
குறள் பக்தி நூலல்ல;  கடவுளைக் காட்டும் எந்தவிதமான மத நூல் அல்ல, மதப்பிரசாரம் செய்யும் மதக்கோட்பாடு நூலல்ல. ஆனால், வேதசாஸ்திரம், புராணம், இதிகாசம், தேவாரம், திருவாசகம் பிரபந்தம் முதலிய எவையும் மத நூல்;  கடவுள் பெருமையைக் கூறும் வேத சாஸ் திர நூல்கள்;  பக்தி ஊட்டி மோட்சத்திற்கு அனுப்பும் பக்தி நூல்களே ஆகும்.


குறள் அப்படி அல்ல;  குறள் அறிவு நூலே ஆகும். மற்றும் கடவுளை அடைய மோட்சத் திற்கு போக மனிதனுக்கு ஒழுக்கம் தேவை யில்லை. ஏனெனில் விபசாரம் புரட்டுபித்த லாட்டம் வஞ்சகம், சூது, கொலை, கொள்ளை முதலிய கூடா ஒழுக்கமான காரியங்கள் செய்வதும், பக்தியின் பாற்பட்டதாகவும் மோட்ச சாதனமாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றன, பக்தி நூல்களிலும் சாஸ்திரங்களிலும் மத ஒழுக்க நூல்களிலும்!


இப்படிப்பட்ட காரியங்கள் எதுவும் வெறுக்கப் பட்டு உண்மையான ஒழுக்கத்தை அதாவது யாவருக்கும் பொருந்தும் சமத்துவமான ஒழுக் கத்தை போதிப்பதாக இருக்கின்றது குறள். ஆதலால் தான் குறளை பக்தி நூலல்ல, ஆஸ்திக நூலல்ல, மூடநம்பிக்கை நூலல்ல, அது ஓர் அறிவு நூல் என்றும், எல்லா மக்களும் ஏற்கக்கூடிய எல்லாமக்களுக்கும் பொருந்தக் கூடிய ஒழுக்க நூல் என்கின்றேன்.


எந்த நூலை எடுத்துக்கொண்டாலும் அதன் மதிப்பு அந்த நூலின் பயனை அளவாக கொண்டதே ஒழிய, அதை ஆக்கினவனையோ, அதில் உள்ள தெய்விகத் தன்மை'' என்பதையோ, இலக்கண இலக்கிய அளவையோ அமைப் பையோ ``அற்புதத்'' தன்மையையோ அளவாகக் கொண்டதாக ஆகாது?
ஆகவே, குறள் வெறும் ஒழுக்கத்தையும், வாழ்க்கைக்கு வேண்டிய அனுபவபூர்வமான பிரதியட்ச வழியையும் கொண்டதாகும்.


அறிவு பெற்றவன், அறிவையே முதன்மை யாகக் கொண்டவன், ஆலோசித்துப் பார்க்கும் ஆராய்ச்சித் தன்மை கொண்டவன் எவனும் குறளை மதித்தே தீருவான். குறளைப்பாராட் டியே தீருவான். சிறிதாவது பின்பற்ற குறளை வழிகாட்டியாய்க் கொண்டே தீருவான்.


ஆதலால் குறளுக்கு இன்று திராவிடர்கள் சிறப்பாக தமிழ் மக்கள் இடையில் பெருமையும் செல்வாக்கும் இருக்கிறது என்றால் இதுதான் காரணம். இந்தப் பெருமைக்கும் செல்வாக்குக்கும் நான் சிறிதும் காரணமான வனாகமாட்டேன் என்றாலும், எனக்கு ஏதாவது ஒரு சிறு பங்காவது கொடுக்கவேண்டுமென்று அறிஞர்கள் யாராவது நினைப்பார்க ளானால், அந்த சிறு பங்கு இந்த விஷயங்களை நானும் எனது கழகமும் மானாவ மானத்தைக் கவனிக்காமல், சிறுமை - பெரு மையைக் கவனிக்காமல்,  லாப, நஷ்டங்களை கவனிக்காமல், கஷ்ட சுகங்களை கவனிக்காமல், எழுதியும், பேசியும் வருகிறோமே அதற்கு ஆக இருக்கலாம். ஆனால், அதுவும் இன்று எங் களால்தான் முடிகிறது என்று சொல்ல முடியாது. அநேகர் புறப்பட்டு விட்டார்கள், இந்த வேலைக்கு. ஆதலால், குறளின் பெருமையைப் பற்றி இனி பேசுவதை நிறுத்திவிட்டு, இனி அதை காரியத்தில் கொண்டு வரும் பணியில் பிரவேசிக்க வேண்டியது தமிழர் - திராவிடர் ஒவ்வொருவரின் கடமையுமாகும். ஏனெனில், குறளுக்குப் பெருமை ஏற்பட்டு விட்டதால், இன்று குறளின் மூலக் கொள்கைகளுக்கு மாறுபாடாக நடந்து வருகிறவர்கள் எல்லாம்கூட இன்று குறள் பிரசாரத்தில் இறங்கி இருக்கிறார்கள்.


உதாரணமாக, சைவர் -வைணவர் பார்ப்பனர் - தாசிகள் - வியாபாரிகள் - வக்கீல்கள் - மந்திரி கள் - சட்டசபை மெம்பர்கள் - சில காங்கிரஸ் காரர்கள் எல்லோரும் குறளைப் பாராட்டவும், குறள் பிரசாரம் செய்யவும் புறப்பட்டுவிட்
டார்கள். இந்தக் கூட்டத்தாருக்கும், குறளுக்கும் எதில் ஒற்றுமை என்பது நமக்கு விளங்கவில்லை.


ஒரு மனிதன் தன்னை இந்து என்றும், ஆரிய தர்ம புராணங்களை பின்பற்றும் சமயவாதி என்றும் சொல்லிக்கொண்டு, புராணக் கூற்றுப்படி, மனு கொள்கைப்படி நடந்துகொண்டு, அவரும் குறளைப் பாராட்டுகிறார், போற்றுகிறார், பிரசாரம் செய்கிறார் என்றால் இதற்கு ஏதாவது பொருள் உண்டா? இக்காரியத்தில் அறிவுடைமையோ அல்லது நாணயமோ உண்டா என்று கேட் கிறேன். குறள் பிரசாரம் போதும். இனி அது பயன்படும் காரியமும், குறளுக்கு முரண்பாடற்ற காரியமும், குறள் வெற்றி பெறும் காரியமும் ஒவ் வொரு குறள் பாராட்டுவாதியும் செய்யவேண்டும்.
 

எனக்குத் தெரிகிறது, சில குறள் பாராட்டு பக்தர்கள் நமது மேடையிலும் காணப்படுவது - கம்பராமாயண, பாரத, புராண மேடைகளிலும் காணப்படுகிறது. வள்ளுவரையும் பாராட்டுவது, கம்பனையும் - வால்மீகியையும் பாராட்டுவது; குறளையும் காலட்சேபம் செய்வது, திருவிளை யாடல், பெரிய புராணங்களையும் காலட்சேபம் செய்வது; குறளில் நுண் பொருள் காணுவது, தேவார திருவாசக பிரபந்தங்களில் நுண்பொருள் கண்டு கண்ணீர் சொரிவது.


குறளை தலைகீழ் பாடம் செய்து விஞ்ஞானத் துக்குப் பொருந்த பொருள் உழைப்பது, சாம்பல் பூச்சுடன், கொட்டை கட்டிக்கொண்டு கோவி லுக்குச் சென்று குழவிக் கல்முன் நின்றும் படுத்தும் - புரளுவது; ஆரிய மத தர்ம பண்டிகைகளைக் கொண்டாடுவது; ஆரிய மதக் குறிகளை அணிந்து மத வேஷத்துடன் திகழ்வது.


யாராயும் இருந்துகொண்டு, எந்த வேஷமும் போட்டுக் கொண்டு, என்ன காரியமும் செய்து கொண்டு குறளைக் கூறிக்கொண்டு திரிவ தென்றால் இவர்கள் உண்மையில் குறள் பக்தர்கள் ஆவார்களா?


ஒரு மனிதன் உண்மையான குறள் பக்தனாக இருப்பானானால், அவன் குறளுக்கு எதிரான எல்லாக் கொள்கைக்கும் எதிரானவனாக இருக்கவேண்டும். எந்தக் கருத்துகளை - கொள் கைகளை எதிர்க்க, ஒழிக்க குறள் ஏற்பட்டதோ - குறளைப் பயன்படுத்துகிறானோ, அந்தக் கருத்து களை எதிர்த்து, கொள்கைகளை ஒழிக்க முயற்சிப்பவனாய் இருக்க வேண்டும்.


அதற்கு குறள் பக்தர்கள், குறளைப் பாராட்டுகிறவர்கள், குறள் கொள்கையைப் பரப்பு கிறவர்கள், குறளுக்கு ஆக தங்கள் வாழ்க்கையை ஒப்படைத்தவர்கள் குறள் வெற்றிக்கு ஆக சில ஆக்க வேலை செய்ய வேண்டியது எப்படி அவசியமோ அதுபோல் குறள் வெற்றிக்கு எதிரான காரியங்கள், கருத்துகள், ஆதாரங்கள், நூல்கள் ஆகியவை ஒழிய அழிவு வேலை யும் கூடவே செய்பவர்களாக இருக்கவேண்டும்.

எந்த ஒரு நல்ல, உயர்ந்த தத்துவங்கள் கொண்ட காரியத்திற்கும் நிர்மாண வேலை, நாச வேலை ஆகிய இரண்டும் செய்ய வேண்டியது இன்றியமையாததாகும். நாச வேலையை விட்டுவிட்டு நிர்மாண வேலை மாத்திரம் செய்தால் எதிர் சாதனங்கள், நிர்மாணத்தை அழித்துக்கொண்டே இருக்கும்.


கடவுளைக் காக்க கடவுளுக்கு எதிரான நாஸ்திகம்'' அழிக்கப்பட வேண்டியது எவ்வளவு அவசியமோ, பகுத்தறிவைக் காப்பதற்கு மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, சைவ, வைணவ, ஆரிய மதங்களைக் காப்பதற்கு பௌத்த மதத்தை அழிக்க வேண்டியிருந்தது எவ்வளவு அவசி யமோ, தொழிலாளி ஆட்சி ஏற்பட முதலாளிகள் ஆட்சி அழிபடவேண்டியது எவ்வளவு அவசியமோ, முதலாளிகள் ஆட்சி ஆதிக்கம் நடைபெற தொழிலாளிகள் இயக்கம் அழிபட வேண்டியது எவ்வளவு அவசியமோ, தனி உடைமை வாதிகள் காப்பாற்றப்படுவதற்கு பொதுவுடைமை வாதிகளை நாசமாக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, ஆரிய ஆதிக்க மென்னும் காங்கிரஸ் ஆட்சி நிலைப் பதற்கு - ஆதிக்கத்திலிருப்பதற்கு திராவிடர் கழகம் ஒழித்துக் கட்டப்படவேண்டியது எவ்வளவு அவசியமோ அது போலவே குறள் கருத்து, கொள்கை ஆகியவைகளை மக்களிடம் பரவச் செய்ய அது அனுபவத்தில் நடை முறையில் கொண்டு வருவதற்கு ஆரிய சாஸ்திர - புராணங்கள் அவைகளை பிரபல பிரசாரமாகக் கொண்ட தேவார, திருவாசகம், பிரபந்தங்கள், அந்த கருத்துகளை செய்கைகளை நடப்பாகக் கொண்ட மதக் கோட்பாடுகள், அவைகளின் மீது நிறுத்தப்பட்டிருக்கின்ற கடவுள்கள் முதலிய வைகள் ஒழியாமல் அழியாமல் - நாசமாக்கப் படாமல் எப்படி குறள்கொள்கை அனுபவத்தில் நடைமுறையில் ஆதிக்கம் செய்யமுடியும்?


ஆகவே, குறள் விஷயத்தில் குறளைப் பிரசாரம் செய்து மக்களிடையே பரப்புவது, குறள் நிர்மாண, குறள் ஆக்கவேலைகளாகும். அதற்கு (குறளுக்கு) எதிரான மேற்கண்ட கருத்துகளை, காரியங்களை, நூல்களை மறையச்செய்வது என்பது குறள் ஆக்கத்திற்கு ஆகச் செய்யப்படும் அழிவு வேலையாகும். ஒரு காரியத்திற்கு ஆக ஆக்க வேலையும் அழிவு வேலையும் ஒரு உடலுக்கு இரண்டு கைகளைப் போன்றதாகும். இரண்டு கையும் சேர்ந்து தட்டினால்தான் ஓசை உண்டாவது போல் - காரியம் நடைபெறுவது போல் - ஆக்கமும் அதற்கெதிரானவைகளின் அழிவும் சேர்ந்தால்தான் காரியம் வெற்றிபெறும். அழிவில் வெற்றி பெற்றவன்தான் ஆக்கத்தில் வெற்றிபெறுவான்.


ஆகவே குறளைப் பரப்ப குறளின் மேன்மையை எடுத்துச் சொல்வதும் குறள் மாநாடு கூட்டுவதும், குறள் புத்தகங்கள் - பத்திரிகைகள் நடத்துவதும் போலவே குறள் கருத்துக்கு எதிரான ராமாயணம், பாரதம் கீதை, மனுதர்மம் முதலாகியவைகளின் கேடுகளைப் பற்றி பிரசாரம்செய்ய, இவை ஒழிப்பு மாநாடு, இந்த கருத்துகளை நடப்புகளை எடுத்துக் கூறுதல் இந்த ஆதாரங்கள் ஒழியும் படி செய்தல், அதன் நடப்புகளை எதிர்த்து மக்களிடையிலிருந்து மறையும்படி செய்தல் முதலான காரியங்களை மக்கள் செய்ய வேண்டாமா?


குறளுக்கு எதிரான காரியங்களாகிய மேற்கண்ட தன்மைகளைப் பரப்புகிறவர்கள் - அதாவது மனுதர்மம், புராண, இதிகாசம் ஆகிய வைகளை பரப்புகிறவர்கள் அதற்கு ஆக எவ் வளவு முயற்சியுள்ள ஆக்கவேலையும், அதன் எதிர்ப்புகளை அழிக்கும் அழிவு வேலையும் செய்கிறார்கள் என்பதை சற்று கவனியுங்கள்.


முதலாவதாக பார்ப்பனப் பிரசாரங்களையும், பார்ப்பனப் பத்திரிகைகளின் பிரசாரங்களையும், பார்ப்பன அதிகாரிகள், வக்கீல்கள், டாக்டர்கள், ஓட்டல்காரர்கள், புரோகிதர்கள் அர்ச்சகர்கள் முதலியோரின் வேலைகளையும் சற்று கவனித்துப் பாருங்கள். அவர்கள் நம்மையும், நமது முயற்சி களையும் நமது பண்பு, முன்னேற்றம், சுதந்திரம், உரிமை ஆகியவைகளை ஒழிப்பதையும் அழிப்பதையுமே அதாவது, மாபெரும் நாச வேலையையே தங்கள் ஆக்கவேலைப் பணி யாகக் கொண்டிருக்கிறார்கள்.
 

அய்க்கோர்ட் ஜட்ஜ் பார்ப்பனர் முதல் நமது முயற்சிகளை அழிக்கும் வேலையையே தங்கள் முக்கிய வேலையாகக் கொண்டு நடக்கிறார்கள்.
இராமாயணம், கீதை, பாரதம், புராணங்கள் பிரசாரமாகத்தானே இருக்கின்றது அவர்கள் வாழ்வு. பார்ப்பனர்கள் உத்தியோக முறையில் நமக்கு எவ்வளவு கேடு செய்கிறார்கள்? அவர் களது ஆட்சியில் நமது மக்களுக்கு எவ்வளவு கேடுகள் நடக்கின்றன?


ஒரு சங்கதி எடுத்துக் கொள்ளுங்கள்; உணவு விஷயத்தில் தொழில் விஷயத்தில், நமது மக்கள் ஏழைகள் - தொழிலாளிகள் எவ்வளவு கஷ்டப் படுகிறார்கள்?


இந்த நாட்டில் எந்தப் பார்ப்பனருக்காவது உணவு, உடை, வீடு, வேலை, கஷ்டம், உண்டா? நாம் தான் ``6 அவுன்ஸ்'', ``வேலை இல்லை'', ``கூலி இல்லை'', ``பட்டினியால் சாகிறோம்'', ``பிள்ளையை விற்கிறோம்'' என்றெல்லாம் பரிதவிக்கிறோம்.


எந்தப் பார்ப்பனக் குஞ்சுக்காவது இவற்றில் ஏதாவது ஒரு விஷயத்தில் ஒரு சிறு குறைபாடோ அதிருப்தியோ கவலையோ உண்டா? காரணம் என்ன? அவர்களுக்கு மாத்திரம் எப்படி இவ்வளவு கஷ்ட காலத்திலும் அவ்வளவு நல்ல வாழ்வு நடந்து வருகிறது?


இதெல்லாம்,  மதமும் - மனுதர்மமும், இராமாயண, பாரத, கீதையும் தானே? அல்ல என்று யாராவது சொல்ல முடியுமா? நிற்க. இராமாயணத்திற்கு நம் நாட்டில் இந்தக் காலத்தில் இவ்வளவு மதிப்பு இருக்கலாமா? இராமனும், கிருஷ்ணனும், சீதையும், விபீஷணனும், அனு மாரும் நமக்குக் கடவுள்களாக இருக்கலாமா?


தேவாரம், திருவாசகம், பிரபந்தம் நமக்குப் பாராயணங்களாக இருக்கலாமா? நாமமும் விபூதிப் பூச்சும் நமக்கு பக்திச் சின்னமாகவும் இருக்கலாமா, அதுவும் இந்தக் காலத்தில்? குறள் பக்தர்களில் எத்தனை பேர் இவைகளை எதிர்த்து இவைகள் மறைந்து ஒழிய வேலை செய் கிறார்கள்? குறளைப் பேசிக்கொண்டு இந்த வேலைகளையும் செய்துகொண்டு இருப்பானா னால் வலது கையால் செய்யும் காரியத்தை இடது கையால் அழித்துக்கொண்டு போகிறான் என்றுதானே அர்த்தம்.


அட முட்டாள்தனமே! இராமாயணம் நமக்கு ஒரு தெய்வ நூலா? அதில் என்ன இருக்கிறது? திராவிட நாசத்துக்கு வழிகாட்டியாகக் கற்பிக்கப் பட்ட நூல் அது. அதற்குத் தலையும் இல்லை, காலும் இல்லை. தேவர்களுக்கு ஆக அசுரர் களை, அரக்கர்களை, இராக்கதர்களை அழிக்க கடவுள் மனிதனாக - இராமனாகப் பிறந்து அரக்க வம்சத்தை அழித்தார் என்பதுதானே சுருக்கக் கருத்து. தேவர்கள் யார்? அசுரர்கள் யார்? எந்தத் திராவிடனாவது - தமிழனாவது சிந்தித்தானா? இராமயணப்படியே பார்த்தாலும் இராட்சதர்கள் என்கிற ஒரு ஜாதியோ இனமோ பிறவியோ காணப்படவில்லையே, தேவர்களுக்கு எதிரி தானே இராட்சதன் - அசுரன் - அரக்கன் - சூரன்களாகப் பெயரிடப்பட்டிருக்கிறார்கள்.


தேவர்களுக்கு எதிரிகள் யார்? மனு தர்மப்படி நடக்காதவன், வர்ணாசிரமத்தை ஒப்புக் கொள் ளாதவன், பார்ப்பனர்களுக்கு அடிமையாக இல் லாதவன் என்றுதானே புராண இதிகாசங்களில் மனுதர்மத்தில் கூறப்பட்டிருக்கிறது.


சாதாரணமாக விபீஷணனை எடுத்துக் கொண்டால் தேவர்கள் எங்கே? ராட்சதர்கள் அனுமார்கள் எங்கே? இவர்கள் எல்லோரும் சகோதரர்களுக்கு துரோகம் செய்து எதிரிகளிடம் சரணாகதி அடைந்து கூலி பெற்றதாலேயே தேவர்களுக்கு மேம்பட்ட ஆழ்வார்களாக ஆகி இருக்கிறார்கள். சென்ற வாரம் 2 நாள் சுதேசமித் திரனைப் பார்த்தேன். அதில் 1 நாள் மித்திரனில் விபீஷணன் சரணாகதியும். மற்றொருநாள் மித்திரனில் விபீஷணன் பட்டாபிஷேகமும் என்கிற தலைப்புகளில் 4 கலம் 5 கலம் இராமா யண பிரச்சாரம் இருந்தது. இதன் கருத்து என்ன வாய் இருக்க முடியும்? நீங்களே யோசித்துப் பாருங்கள். அதுவும் இந்த சமயத்தில் பார்ப் பனர்களுக்கு அடிமையானால் சரணாகதி அடைந்தால் பதவி கிடைக்கும் பட்டாபிஷேகம் பெறலாம் என்பதுதானே கருத்து.


அந்த விசயங்களை பார்ப்பனர் நம் மக்களுக்கு பச்சையாய் சொல்லுவதற்கு பதிலாக, முதல் நாள் சரணாகதி படலமும், 2 ஆம் நாள் பட்டாபிஷேகப் படலமும் பிரச்சாரம் செய்யப் பட்டிருக்கிறது. இதற்குப் பேர் என்ன? நம் ஆக்க வேலைகளை அழிப்பதுதானே அவர்கள் நோக் கம். நாம் அந்த ஆயுதங்களை சாதனங்களை அழிக்க வேண்டாமா?


விபீஷணன் யார்? இராவணன் தம்பி - இரா வணன் ஆபத்தான நெருக்கடியான நிலை மையில் இருக்கும் போது அவன் இராஜ்யத்தை அடைவதற்காக துர் எண்ணங் கொண்டு அண்ண னின் எதிரிக்கு, அணணனை காடடிக் கொடுப்ப தற்கு ஆக துரோக வஞ்சக எண்ணத்துடன் அண்ணன் எதிரியிடம் சரணாகதி அடைந்து காட்டிக் கொடுத்து கூலி பெற்றவன்தானே? இதை யாராவது மறுக்க முடியுமா? மறுக்க ஆசைப்படுபவர்களுக்கு நான் ஒன்று சொல் கிறேன் விபீஷணனைப் பற்றி மேலே நான் குறிப்பிட்ட சொற்கள் நான் சொல்லுவதல்ல, ``விபீஷணன் இராஜ்யத்திற்கு ஆக என்னிடம் வந்திருக்கிறான்'' என்பதை மிகத் தெளிவாக இராமன் கூறுகிறான். ``என்றால் இராவணனை நாசமடையச் செய்து அவன் இராஜ்யத்தைத் தான் அடைய வேண்டுமென்று விரும்பி என்னிடம் வந்திருக்கிறான்''


``தனது காரியம் கெட்டு விடுமே என்கின்ற பயத்தால் எனக்குக் கெடுதி செய்யாமல் இருப் பான் ஆகையால் இவனை சேர்த்துக் கொள்ள லாம்.''
``இவன் பலவானான இராவணனிடமிருந்து தனக்கு ஆபத்து வருமே என்று அறிந்து பயந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இங்கே வந்திருக் கிறான் என்று இவனுடைய தொனியாலும் வார்த்தைகளாலும் தெரிகிறது. ஆதலால் இவனை ஒப்புக் கொள்ளுவதால் யாதொரு கெடுதலும் வராது.''
``தனது மூத்தவன் துஷ்டனாயிருந்தாலும் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்கின்ற எண்ணம் எல்லோருக்கும் வராது.''


``உடன் பிறந்தவர்கள் எல்லோரும் பரதனைப்போல் ஆவார்களா?
``ராஜ்யம் பரதனுக்கு நியாயமாய் கிடைத்த தாகும். அதை வேண்டாம் என்று கருதி என் னைக் கண்டுபிடித்துவந்து எனக்கு கொடுப்பது என்றால் இது பரதனைத் தவிர வேறு யார் செய்வார்கள்?'' என்று சொல்லி விபீஷணனை ஏற்றுக்கொண்டு இருக்கிறான். இந்த வாக்கியங்கள் இந்தப்படியே வால்மீகி ராமாயணம் யுத்தகாண்டம் சருக்கம் 17-இல் இருக்கிறது. (சி.ஆர்.சீனிவாசய் யங்கார் மொழி பெயர்ப்பு யுத்த காண்டம் பக்கம் 76, 77-இல் உள்ளதாகும்.)


சுக்ரீவன் சொல்கிறான்: இந்த விபீஷணன் நன்றியற்றவன். தன் தமையன் இப்படிப்பட்ட ஆபத்தில் இருக்கும் போது அவனைக் கைவிட்டவன் - எவனைக் கைவிட மாட்டான்? என்கிறான்.


அனுமான் சொல்லுகிறான்: இராவணனுடைய முயற்சி தோல்வி அடையுமென்பதையும் தங்கள் முயற்சி வெற்றி அடையு மென்பதையும் தாங்கள் வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்கு இராஜ் யத்தைக் கொடுத்ததையும் பார்த்து, தானும் இலங்கா இராஜ்யத்தை அடையவேண்டுமென்ற எண்ணத்துடன் இங்கே வந்திருக்கிறான். ஆகவே இவனை அங்கீகரிக்கலாம் என்கிறான்.


சாம்பவன் கூறுகிறான்: விபீஷணன் நம்மை வந்தடைவதற்கு ஏற்ற காலமல்ல இது. தனது எஜமானும் சகோதரனுமான இராவணனுக்கு ஆபத்து நேர்ந்திருக்கையில் அவனைக் கைவிட இதுதானா சமயம்? எப்படி யோசித்தாலும் இவனை நம்பக்கூடாது. என்கிறான். விபீஷணன் இராமனைப்பார்த்து சொல்லுகிறான், ஸ்வாமி என்னை நம்புங்கள். ராட்சதர்களை நாசஞ் செய்வதிலும் இலங்கையைப் பிடிப்பதிலும் என் உயிருள்ள மட்டும் என்னால் கூடியதைச் செய்கிறேன். தங்கள் சைன்னியத்தில் என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்கிறான்.
(சருக்கம் - 18 பக்கம் 92)


இவ்வளவு சங்கதி எதற்கு ஆக? விபீஷணன் வாயாலேயே அவன் மனதில் இருந்த பேராசை துரோகக் கருத்துகளைப் பச்சையாகக் கொட்டி விட்டான். அதாவது, இராமனும் லட்சுமணனும் நாகபாசத்தால் கட்டுண்டு மூர்ச்சையான சமயத்தில், ``இராம - லட்சுமணர்களுடைய வீரியத்தை அண்டிநான் க்ஷேமமடையலாம் என்று இருந்தேனே, என் எண்ணங்கள் எல்லாம் வீணாகி ராஜ்யம் கிடைப்பதும் போய்விட்டதே, இராஜ்யத்தை இழந்து பரிதவிக்கிறேனே, இனி எனக்கு விபத்து ஏற்படுமே. என் சத்துருவான இராவணன் வெற்றி பெற்றுவிட்டானே!'' என்று புரண்டு அழுகிறான்.


``சுக்கிரீவன் தேற்றுகிறான்; ``விபீஷணா, துக்கப்படாதே!  இலங்கா இராஜ்யம் உனக்குக் கிடைப்பதில் சந்தேகமில்லை'' என்று சொல்லி சமாதானம் சொல்லித் தேற்றினான்.

(இவை வால்மீகி இராமாயணம் யுத்த காண்டம், சருக்கம் 49- இல் 203-ஆம் பக்கம்)


இது மாத்திரமல்லாமல் அண்ணன் உயிருடன் இருக்கும்போதே அவன் இராஜ்யத்தை அண்ணன் எதிரிகளால் தனக்கு பட்டாபிஷேகம் செய்யும்படி செய்து கொண்டு, அண்ணனின் உளவுகளையெல்லாம் இராமனுக்குச் சொல்லிக் கொடுக்கிறான். இப்படியான துரோகியும் அயோக் கியனுமான விபீஷணனைப் பார்ப்பனர்கள் அந்தக் குணங்களுக்கும் காரியங்களுக்கும் ஆகவே எவ்வளவு போற்றி புகழ்ந்து விபீஷணத் தன்மையை பிரசாரம் செய்கிறார்கள்? அதனால் எத்தனை விபீஷணர்களை உண்டாக்கிக் கொண் டார்கள். மற்றும் இராமாயணக் கதை முழுவதும் இதுபோலவேதான் துரோகம், வஞ்சனை மயமாய் இருக்கும்.  இது மாத்திரமல்லாமல் பாரதம்,  கீதை முதலியவைகளும் இப்படியே ஆபாசங்களாக இருக்கும். கீதையைப் பற்றி பேசுகையில் டாக்டர் அம்பேத்கர் ``கீதை முட்டாள்களின் பிதற்றல்கள்'' என்றார். இவற்றை யெல்லாம் நாம் நம்மிட மிருந்து அழிக்க வேண்டாமா? குறளுக்கு மதிப்பு வந்து விட்டது என்றால், மற்றவைகளை - அதாவது குறளுக்கு எதிரானவை ஒழிய வேண்டும். ஆகவே அவற்றை ஒழியுங்கள். நாமத்தையும் விபூதியையும் நாட்டை விட்டு விரட்டுங்கள். 1951- ஆம் ஆண்டு குறள் பிரசார மாக இவற்றைச் செய்யுங்கள்.''


----------------------------6.1.1951 அன்று திருச்சி தென்னூர் குறள் மாநாட்டில் தந்தை பெரியார் உரை. "விடுதலை", 13.1.1951.

28 comments:

தமிழ் ஓவியா said...

கீதையை இந்துக்களில் ஒரு பிரிவினரான சைவர்கள்கூட ஏற்க மாட்டார்களே!

தஞ்சையில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

தஞ்சாவூர், டிச.21- கீதையை இந்து மதத்தில் உள்ள வைணவர்கள் ஏற்பார்களே தவிர, சைவர்கள் ஏற்க மாட்டார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தஞ்சாவூரில் நேற்று (20.12.2014) மாலை செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அளித்த பதில்கள்

கேளவி: பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கச் சொல்கிறார்களே? அதுகுறித்து...?

பதில்: அதனைக் கண்டிக்கிறோம். அது ஒரு குறிப்பிட்ட மதத்துக்கான நூல்; அந்த பகவத் கீதை இந்து மதத்தி னுடைய நூல் என்று கூடமுழுமையாக சொல்லமுடியாது. காரணம் என்னவென்றால், இந்து மதம் என்பது பல பிரிவுகளைக்கொண்டது. எது இந்துமதம் என்பதை இன்னும் யாருமே முடிவு செய்ய முடியாது என்று உயர்நீதிமன்றத் தீர்ப்புகளே இருக்கின்றன.

அந்த வகையிலே இந்து மதத்திலே வைஷ்ணவர்கள் தான் பகவத் கீதையைச் சொல்லுகிறவர்கள். சைவர்கள் பகவத் கீதையை ஏற்கமாட்டார்கள். அதேபோல மற்றவர் களும் பல பிரிவுகள் இருக்கின்றன. அந்த வகையிலே பார்க்கும்போது, அதில் ஒன்று மத நூல், இந்து மதத்துக்கே என்றுகூட முழுமையாக உரிமை கொண்டாடப்பட முடியாத நூல்.

இரண்டாவது ஜாதி ஒழிப்பு என்பதில் தீவிரமாக இருக்கக்கூடிய இந்தக் காலக்கட்டத்திலே, ஜாதி தர்மம், ஜாதி மாற்றப்படக்கூடாது, ஆண்டவனே அதை உருவாக்கினார், கடவுளால் உருவாக்கப்பட்டது. சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் என்று சொல்லக்கூடிய நூல் கீதை!

அதற்கு அடுத்தபடியாக பெண்களையெல்லாம் பாவ யோனிகள் என்று கொச்சைப்படுத்தி, அசிங்கப்படுத்தக் கூடியது. எனவே, எந்த பெண்களாக இருந்தாலும், மேல் ஜாதிப்பெண்களாக இருந்தாலும் சரி, அதில் பார்ப்பனப் பெண்களாக இருந்தாலும் சரி ஒட்டுமொத்தமாக பெண் களையெல்லாம் பாவயோனிகள் என்று கொச்சைப்படுத்தி இருக்கக்கூடிய ஒரு நூல்.

அதைப்பற்றி விரிவாக விளக்கமாகப் பேச இருக்கின் றோம். மாலைக் கூட்டத்தில் பல்வேறு கட்சிக்காரர்கள், பக்தர்களாக இருக்கக்கூடியவர்கள்கூட அதை ஏற்க முடியாது, அதைத் திணிக்கக்கூடாது. ஏனென்றால், தனிப் பட்ட முறையில் படிப்பதோ, ஏற்பதோ, அவர்கள் பிரச்சாரம் செய்வதில் யாருக்கும் ஆட்சேபணையும் இல்லை.

ஆனால், அதே நேரத்தில் தேசிய நூல் என்று சொல்லுகிற நேரத்தில் ஒரே ஒரு நூல்தான் தேசிய நூல் என்று எப்படி அங்கீகரிக்கப்பட முடியும்? எப்படி இந்தியை இன்றைக்கு அதிகாரபூர்வமாகத் திணிக்கிறார்களோ, சமஸ்கிருதத்தைத் திணிக்கவேண்டும் என்று ஆசைப் படுகிறார்களோ அதுபோல, இதையும் அவர்கள் திணிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். முதலாவது இந்தத் தேசத்தில் பல கலாச்சாரங்கள், பன்மதங்கள், பல மொழிகள் இருக்கிற ஒரு நாட்டில் என் மதம் மட்டும்தான் ஆள வேண்டும் என்று சொல்லக்கூடிய ஒரு பாசிசப்போக்கின் இன்னொரு வெளிப்பாடு. இது; ஆகவேதான், ஒட்டு மொத்தமாக இந்தியாவே திரண்டு எழுந்து இதை எதிர்க்கிறது. அதை விளக்குவதற்குத்தான் இந்தக் கூட்டம் இன்றைக்கு போடப்பட்டிருக்கிறது. கீதையின் மறுபக்கம் என்று பல ஆண்டுகளுக்கு முன்னாலே எழுதி, பல்லாயிரக் கணக்கான பிரதிகள் பரவியிருக்கின்றன. இதுவரையிலே 21 பதிப்புகள் வந்திருக்கின்றன. எனவே, 21ஆவது பதிப்பு என்று சொல்லக்கூடிய அளவிலே அந்த நூலில் எந்த இடத்திலும் ஒரு சிறு தவறு இருக்கிறது என்பதையும் கூட யாரும் காட்ட முடியாது. இதுவரை அந்த நூல் தடை செய் யப்பட்ட நூலும் அல்ல. அதைத் தெளிவாகவே மற்றவர் களும் உணர்ந்திருக்கிறார்கள். இதற்கிடையிலே அதற்கு எந்தவிதமான மறுப்பும் யாரும் எழுதவில்லை. எனவே, அதைத் தெளிவாக விளக்குவதற்குத்தான் மாலை கூட்டம்.

கேள்வி: இந்தக்கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது இதற்கு எதிராக போராட்டம் நடத்தியிருக்கிறது இந்து மக்கள் கட்சி. அதுமட்டுமல்லாமல் நீங்கள் வந்து, நல்லபடி யாக வீடு திரும்பமுடியாது என்று பேசியிருக்கிறார்களே?

தமிழ் ஓவியா said...

பதில்: ஒவ்வொரு முறையும் சுயமரியாதைக்காரர்கள் எப்போதுமே நாங்கள் பொதுக்கூட்டத்திற்கு வரும்போதே, வீடு திரும்புவதைப்பற்றி கவலைப்படுவதில்லை. நாடு திருந்த வேண்டும் என்பதுதான் எங்களின் வேலையே தவிர நாங்கள் வீடு திரும்புகிறோமா, இல்லையா என்பதல்ல. இந்தப்பேச்சு எந்த அளவிற்கு அவர்கள் வன்முறை யாளர்கள் என்பதைக் காட்டுவதாகும். அதேநேரத்தில், இதை நான் மத்திய, மாநில அரசுகளுடைய கவனத்திற்கு மாத்திரம் உங்கள்மூலமாகக் கொண்டு செல்கிறோம். அவ்வளவுதானே தவிர, இதுவரையிலே என்னுடைய வாழ்க்கை நான்கு முறை கொலை முயற்சி செய்யப்பட்டு நான் எஞ்சிய வாழ்க்கை போனஸ் வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருக்கிறேன். சாதாரண நோயிலே சாவதைவிட, சாதாரணமாக வேறுவகையிலே விபத்திலே சாவதைவிட, இதுமாதிரி கொள்கைக்காக செத்தால், அந்தக் கொள்கை நிலைப்பதற்கு நான் கொடுத்த விலை என்ற மிகுந்த மரியாதையோடு அதை வரவேற்பேன்.

கேள்வி: பிஜேபி ஆட்சி வந்தபிறகு வைகோ வெளி வந்துள்ளாரே?

பதில்: அதிலிருந்து பிஜேபிஆட்சி எப்படி நடந்து கொண்டிருக்கிறது? எனவே, ஜனநாயக ஆட்சியா? பாசிச இட்லர்பாணி ஆட்சியா? என்பதைத் தெரிந்து கொள்ளுவ துடன், மக்கள் புரிந்து கொள்வார்கள். ஆறு மாதத்துக் குள்ளேயே தங்களை அடையாளம் காட்டிக் கொண்ட தற்காக நன்றி.

Read more: http://viduthalai.in/e-paper/93224.html#ixzz3MX1JHXsl

தமிழ் ஓவியா said...

திருமதி தயாசின்கின்

திருமதி தயாசின்கின்

நவம்பர் 26 (1949) இந்திய வரலாற்றில் - அரச மைப்புச் சட்டம் இறுதியாக் கப்பட்ட நாள் என்றால், அதே நவம்பர் 26 (1957) அரசமைப்புச் சட்டம் மதப் பாதுகாப்பு என்ற பெயரால் ஜாதி பாதுகாக்கப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டி அந்தப் பகுதியைப் பகிரங் கமாக எரிப்பதற்குத் தந்தை பெரியாரால் ஆணை யிடப்பட்ட வரலாற்றுக் குறிப்பு நாள் நமக்கு. அந்த ஜாதி ஒழிப்புப் போராட் டத்தில் கருஞ்சட்டைத் தோழர்கள் 10 ஆயிரம்பேர் பங்கு கொண்டனர் என்ற வரலாறு கேட்டால் மெய்ச் சிலிர்த்து விடும்.

இவ்வாண்டு அந்த நவம்பர் 26 அன்று தாம் பரத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மிக வும் பொருத்தமாக ஒரு நூலை எடுத்துக்காட்டிப் பேசினார். அந்த நூலின் பெயர் ‘Caste to Day’ (1962) அதன் - ஆசிரியர் தயாசின் கின்(Tayazin kin) என்ற அம்மையார். இவர் யார்?

இலண்டன்லிருந்து வெளிவந்த தி எக்னா மிஸ்ட் மற்றும் சார்டியன் இதழில் செய்தியாளராக இந்தியாவில் சிறப்பாகப் பணி புரிந்தவர். அந்த நூலி லிருந்து சில பகுதிகளை ஆசிரியர் அவர்கள் அழ காக எடுத்துக் காட்டி யிருந்தார்.

அதில் இன்னும் சில கற்கண்டு துண்டு போல சில உண்டு.

சராசரி இந்து ஒருவர் சாதியைக் கடைப்பிடிப்ப தன் நோக்கம் என்னவென் றால், அவரது மதம் அவரை அவ்வாறு செய்யச் சொல் கிறது என்று நம்புவதன் காரணமேயாகும்.

சாதிக்கு முழு ஆதா ரம், பார்ப்பனர் என்பது மலை போன்ற உண்மையா கும். வாழ்க் கையில் புதிர் போன்ற அறிவு, மந்திர தந்திர சாவி களை எல்லாம் வைத் திருப்பது பிரா மணன்தான். வெறும் மதவாதியாகக் குடியேறிய அவர்களின் ஆதிக்கம் தென்னிந்தியா போன்ற பகுதிகளில் அசைக்க முடியாததாக இருக்கிறது. மத்திய கால ஜெர்மனியில் சர்ச்சுக்கு இருந்த ஆதிக் கத்தை இத்துடன் ஒப் பிடலாம்.

சாதி மனிதனின் வாழ்க்கையை ஆள்வது மட்டுமல்ல; அவன் வாழும் சமுதாயத்தில் அவனது இடத்தையும் அதுதான் நிர்ணயிக்கிறது (பக்.6). கல்வி என்பது தங் களுக்குரிய ஒன்றே என்று பிராமணன் பரம்பரை பரம்பரையாக நினைத்துச் செயல்பட்டானே தவிர, ஜன சமுதாயத்தின் மற்ற பகுதி யினருக்கு மறுத்து, மற்றவர் களும் கல்வி தங்களுக்குரியது ஒன்று நெடுங்காலமாக ஆழமாக எண்ணி ஏற்கும் படிச் செய்யாததே நாட்டில் எழுத்தறிவு பரவுவதற்குப் பெருந் தடையாக உள்ளது (பக்.63). இந்துத்துவா பேசும் வெறி யர்களின் கண்கள் திறக்குமா? வெளி நாடு களில் இந்தியர்களின் மானம் கப்பலேறுவது பற்றி காவிக் கூட்டம் எங்கே கவலைப்படப் போகிறது!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/93221.html#ixzz3MX1eEor3

தமிழ் ஓவியா said...

ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அம்மையார் விரும்பியபடி...

திராவிடர் கழக வீராங்கனை ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அவர்களின் மரண சாசனப்படி அவரின் உடலுக்கு யாரும் மலர்மாலை வைக்கவில்லை; மாலை வாங்கி வந்தவர்களும் கட்டுப்பாடு காத்து அந்த மாலைகளை தந்தை பெரியார் சிலைக்கு அணிவித்தனர். அம்மையார் அவர்களின் விருப்பப்படி மாலைகளுக்குப் பதிலாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடை அளிக்கும் வகையில் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது. அதில் தோழர்கள் அளித்த நன்கொடை ரூ.25,021.

Read more: http://viduthalai.in/page-3/93256.html#ixzz3MX2VDSRS

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத்தின் சார்பில்
மத்திய அரசைக் கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் கருநாடகத்திலும், கேரளாவிலும் சட்ட விரோதமாக அணைகள் கட்டுவதைக் கண்டித்தும், மத்திய அரசு இதற்கெல்லாம் துணை போவதையும், வருணாசிரம நூலான பகவத் கீதை, இந்திய தேசியப் புனித நூலாக அறிவிக்கப் பட்டுள்ளதை எதிர்த்தும், திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

நாள்: 22.12.2014 (திங்கள் கிழமை) நேரம்: காலை 11 மணி

இடம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு

தலைமை: க.பார்வதி

முன்னிலை: க.திருமகள், கு.தங்கமணி, உமா, ராணி ரகுபதி, வனிதா

தொடக்கவுரை: வழக்குரைஞர் தெ.வீரமர்த்தினி

கருத்துரை: மேரி அக்சீலியா

முழக்கம்: இறைவி

Read more: http://viduthalai.in/page-3/93261.html#ixzz3MX2dLgXO

தமிழ் ஓவியா said...

மக்களுக்கு அறிவுத் தெளிவை ஏற்படுத்தியவர் பெரியார் கவிஞர் நந்தலாலா புகழாரம்

திருச்சி, டிச. 21- பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணியாளர் கூட்டமைப்பின் நான் காவது கூட்டம் நாகம்மை ஆசிரியப் பயிற்சி மய்ய அரங்கில் பெரியார் நூற் றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் 12-12-2014 வெள்ளி மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் முதலில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தின் ஒருங் கிணைப்பாளர் பேராசி ரியர் ப.சுப்பிரமணியம் அவர் கள் அறிமுக உரை நிகழ்த்தி சிறப்பு விருந்தினராய் வருகை புரிந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செய லாளர். கவிஞர் நந்தலாலா அவர்களுக்குப் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

பின்னர 15.-11-.2014 முதல் 12.-12.-2014 வரை உள்ள நாட்களில் பிறந்தநாள் கொண்டாடிய பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை தமி ழாசிரியை திலகவதி, நடன ஆசிரியை பிரான்ஸிட்டா, முதுகலை பொருளியல் ஆசிரியை இருதய இச பெல்லா, பெரியார் மணி யம்மை பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் உடற் பயிற்சி ஆசிரியை லெட்சுமி,

அலுவலக உதவி யாளர் செல்வி. யாழினி, பெரியார் மருந்தியல் கல் லூரியின் ஆய்வக உதவி யாளர் தனலட்சுமி, சின் னப் பொண்ணு, மகேஸ்வரி. பெரியார் சமூகதொடர் கல்வியியல் கல்லூரியின் அலுவலக உதவியாளர் கீதா, நாகம்மை ஆசிரியப் பயிற்சி மய்யத்தின் பணியாளர் சரஸ்வதி ஆகியோர் தங்கள் பிறந்த நாளை சீரும் சிறப்புமாக கொண்டாடி மகிழ்ந்தனர். அனைவருக் காகவும் பிறந்த நாள் கேக் வெட்டி பயனாடை அணி வித்து சிறப்பு செய்யப் பட்டது.

நிகழ்ச்சியில் பிறந்த நாள் கொண்டாடிய பெரி யார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியை திலகவதி பேசிய பொழுது தினமும் பல்வேறு பணிகளுக் கிடையே மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கும் ஆசிரியப் பெருமக்கள் தங்கள் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு இது போன்ற கொண்டாட்டங் களும், நிகழ்ச்சிகளும் உறு துணை செய்வதாகக் கூறினார்.

மேலும் முது கலை பொருளியல் ஆசிரியை திருமதி இருதய இச பெல்லா பேசுகையில், வயிற்றுக்கும், சிந்தைக்கும் விருந்தளிக்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி இருப்பதாகக் கூறியதோடு இந்த பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெறுவ தற்கு வழி வகை செய்ய வேண்டுமென்று வளாக ஒருங்கிணைப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசி ரியை லெட்சுமி தனது மலரும் நினைவுகளை எடுத்துக்கூறி நமது கல்வி வளாகம் தம்மை குடும் பத்தில் ஒருவராக நினைத்து சுக துக்கங்களில் அரவ ணைத்து நடத்தியதாக நெகிழ்ச்சியோடு கூறினார்.

பெரியார் மருந்தியல் கல்லூரி அலுவலக உதவி யாளர் சின்னபொண்ணு பேசுகையில்:_

இப்பிறந்தநாள் கொண் டாட்டம் ஒரு புதுவித அனுபவம் என்று கூறி இவ்வாய்ப்பை ஏற் படுத்தித் தந்த பணியாளர் கூட்ட மைப்பு மற்றும் ஒருங்கி ணைப்பாளருக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து பெரியார் கல்விக் குழுமங்களின் இயக்குநர் இராதாகிருஷ் ணன் வரவேற்புரை நிகழ்த் தினார். நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் நந்தலாலா சமூகம் உயர்த்திப் பிடித்த விசயங் களைப் போட்டு உடைத்து மக்களுக்கு அறிவுத் தெளி வை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார் அவர் தான் பெண்களுக்கு முழு உரிமை யும் பெற்றுத்தர போராடி வென்றவர்.

அத்தகைய பெரியாரைப் பற்றி படிப் பவரும் பின்பற்றி நடப்ப வரும் தன்னை சரி செய்து கொள்கின்றனர் என்று கூறி ஆசிரிய மாணவர் உறவு எப்படி இருக்க வேண்டும், வகுப்பறை நிர்வாகம் குறித்த தகவல்கள் பகுத்தறிவு சிந்தனையின் அவசியம் போன்றவற்றைத் தமக்கே உரிய நகைச்சுவை நயத்தோடு எடுத்துரைத் தார்.

நிகழ்ச்சியின் இறுதி யில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியின் துணை முதல்வர் வி.திலகம் நன்றி கூற விழா இனிதே நிறை வுற்றது. நிகழ்ச்சியில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளா கத்தில் உள்ள கல்வி நிறு வனங்களின் முதல்வர்கள் துணை முதல்வர்கள் தலை மையாசிரியர்கள், பேராசி ரியர்கள், ஆசிரிய, ஆசிரி யைகள், அலுவலகப் பணி யாளர்கள் உட்பட திரளா னோர் கலந்து கொண் டனர்.

Read more: http://viduthalai.in/page-7/93230.html#ixzz3MX33u9ex

தமிழ் ஓவியா said...

பகவத் கீதையை இந்தியாவின் தேசியப் புனித நூலாக அறிவிப்பதா? கண்டனக் கூட்டம்

நாட்டினுடைய அடிப்படைக் கொள்கைகளுக்கு மிகப்பெரிய அறைகூவல் ஏற்பட்டிருக்கிறது! தமிழர் தலைவர் ஆசிரியர் எச்சரிக்கை உரை

தஞ்சையில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றுகிறார்

தஞ்சை, டிச.21_ இப்பொழுது மிகப்பெரிய ஒரு அறைகூவல் இந்த நாட்டினுடைய அடிப்படைக் கொள்கைகளுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று தஞ்சையில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்தியாவின் தேசிய புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதா? கண்டனப் பொதுக்கூட்டம் 20.12.2014 சனி அன்று மாலை 6 மணிக்கு தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்றது.

கூட்டத் தலைவரை மாநில கலைத்துறை செய லாளர் ச.சித்தார்த்தன் முன்மொழிந்தார். தஞ்சை மாநகரச் செயலாளர் சு.முருகேசன் வழிமொழிந்தார். அனைவரையும் வரவேற்று தஞ்சை மண்டலத் தலைவர் வெ.ஜெயராமன் உரையாற்றினார்.

தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் தலைமை யேற்று உரையாற்றினார். தலைமைச் செயற்குழு உறுப் பினர் இராசகிரி கோ.தங்கராசு, கழகப் பொதுச் செயலாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பெ.வீரை யன், குடந்தை மாவட்டத் தலைவர் வை.இளங் கோவன், தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருண கிரி, குடந்தை மாவட்டச் செயலாளர் க.குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து கீதையைத் தோலுரிக்கும் தொகுப்பு நூல்களைப் பெற்றுக்கொண்டவர்கள்

தலைமைக் கழகப் பேச்சாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் தொடக்கவுரையாற்றினார். மூத்த வழக்குரைஞர் தஞ்சை இராமமூர்த்தி, விடுதலை சிறுத் தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் வீரன். வெற்றி வேந்தன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செய லாளர் அய்யனாபுரம் சி.முருகேசன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் இரா.திரு ஞானம், திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் பணிக் குழு செயலாளர் எல்.கணேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இறுதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

ஆசிரியர் தமதுரையில் குறிப்பிட்டதாவது:

மிகப்பெரிய ஓர் அறைகூவல் இந்த நாட்டினுடைய அடிப்படைக் கொள்கைகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டம் என்பது ஏதோ ஒரு நூலைப் பொறுத்தது என்பதல்ல; நூல்களால் ஏற்பட்டிருக்கிற ஆபத்தை மக்களுக்கு விளக்கக்கூடிய ஒரு அடிப் படையானது. அதைத்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கண்டன கூட்டத்திற்காக நன்கொடை வசூல் செய்த தோழர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து பாராட்டினார். கண்டனக் கூட்டத்தில் மண்டல இளைஞரணி செயலாளர் சோம.நீலகண்டன் - தேவி ஆகியோரின் குழந்தைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவுச்செல்வன் என்று பெயர் சூட்டினார். இதன் மகிழ்வாக, அவர்கள் ரூ.1000 நன்கொடை அளித்தனர்.


தமிழ் ஓவியா said...

இங்கே, கீதையின் மறுபக்கம், கீதையைப்பற்றிய நூல்களை ஆயிரம் படிவங்களை மக்கள் மத்தியில் நாங்கள் பரப்புகிறோம் என்று தோழர்கள் சொல்லி, எப்பொழுதுமே தஞ்சை மாவட்டத்தைப் பொறுத்த வரையில், தஞ்சை மாவட்டம் என்று சொன்னால், பழைய தஞ்சை மாவட்டம் குடந்தை, பட்டுக் கோட்டை போன்ற மாவட்டங்களையெல்லாம் இணைத்ததுதான். அப்படிப்பட்ட இந்த மாவட் டத்தின் சார்பில், குறுகிய காலத்தில் தோழர்களுக்குச் சொன்னவுடன், பம்பரமாகச் சுழன்று, தேனீக்களையே தோற்கடிக்கக்கூடிய அளவிற்கு, பணிகளை வெகுசிறப்பாக செய்து, மக்கள் மத்தியில் அந்த நூல் களைக் கொண்டு சென்று, 1100 பிரதிகளுக்கு மேலாக இந்தக் குறுகிய காலத்தில் அவர்கள் பரப்பியிருக் கிறார்கள் என்று சொல்லும்பொழுது, இது ஒன்றே, தோழர்கள் எவ்வளவு ஆயத்தப்படுத்தியிருக்கிறார்கள் மக்களை என்பதற்கு அடையாளம்.

ஒரு போர் நடைபெறுவதற்கு முன்பு, ஆயத்தங்கள் தேவை. அவர்கள் சொன்னார்கள், Sappers Miners படை என்று பின்னாலே வரக்கூடிய ராணுவம், போரிடுவதற்கு முன்பாக, ஆயத்தங்களை முன்படை செய்யும். அதைத்தான் திராவிடர் கழகம் செய்து கொண்டிருக்கிறது என்று அண்ணா அவர்கள் சொன் னதை அவர்கள் குறிப்பிட்டார்கள். அதைப் போலத்தான் திராவிடர் கழகத்தினுடைய இந்தப் பணி என்பதிருக்கிறதே, இது ஏதோ ஒரு புத்தகத்தைப்பற்றிய ஆய்வுரை அல்லது ஆய்வரங்கம் என்று தயவு செய்து நினைக்காதீர்கள் என்று கூறி, மேலும் பல்வேறு கருத்துகளை எடுத்துக் கூறினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். (முழு உரை பின்னர்).

இறுதியாக தஞ்சை மண்டலச் செயலாளர் மு.அய் யனார் நன்றி கூறினார். கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் திருவாரூர் மண்டலத் தலைவர் இராயபுரம் கோபால், க.கணபதி, மாநில விவசாயத் தொழிலாளரணி செயலாளர், திருச்சி மண்டலத் தலைவர் ஆரோக்கியராஜ், திருச்சி மாவட்டத் தலைவர் மு.சேகர், திருத்துறைப்பூண்டி மாவட்டத் தலைவர் முருகையன், நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், திருவாரூர் மாவட்டத் தலைவர் மோகன், அறந்தாங்கி மாவட்டச் செய லாளர் இளங்கோவன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் ச.அஜிதன் மற்றும் அனைத்துக் கட்சி சான்றோர்கள், பேராசிரியர்கள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், வணிகப் பெருமக்கள், தாய்மார்கள், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

தமிழ் ஓவியா said...


கீதை நூல் தொகுப்பு

கீதை பற்றிய நான்கு நூல்களை தமிழர் தலைவர் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டவர்களின் விவரம் வருமாறு:

விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கே.ஆர்.பன் னீர்செல்வம், உரத்தநாடு நகர தி.மு.க. செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், தஞ்சை நகர தி.மு.க. அவைத் தலைவர் ஆறுமுகம், சர்வேயர் ஆர்.ராசசேகர்

சாலியமங்கலம் ராசராசன், பொறியாளர் தனபால், திருவோணம் ஒன்றிய ம.தி.மு.க. பொறுப்பாளர் இராதாமணாளன், கீழையூர் ஒன்றியத் தலைவர் ரெங்கநாதன், திருத்துறைப்பூண்டி மாவட்டத் தலை வர் முருகையன், திருத்துறைப்பூண்டி கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கலைமணி இளையபாரதி ஆகியோர் நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.

நூல் வெளியீடு

திருக்குறளும் - மனுதர்மமும் என்ற நூலினை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட, தஞ்சை மூத்த வழக்குரைஞர் தஞ்சை இராமமூர்த்தி பெற்றுக்கொண்டார்.

திருக்குறளும், மனுதர்மமும் என்ற புதிய நூலினை 20.12.2014 அன்று தஞ்சையில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டார்.

நூல்களைப் பெற்றுக்கொண்டவர்கள்:

தஞ்சை மூத்த வழக்குரைஞர் தஞ்சை இராமமூர்த்தி

தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் செல்வம்

திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொறுப்பாளர் செல்லக்கலைவாணன்

திருவோணம் ஒன்றிய ம.தி.மு.க. பொறுப்பாளர் பின்னை இராதா மணாளன்

சி.பி.அய். முத்து உத்திராபதி

மாவட்ட ப.க. துணைச் செயலாளர் ஆசிரியர் தங்கவெற்றிவேந்தன்

தமிழ் ஓவியா said...

மாநில ப.க. துணைத் தலைவர் மா.அழகிரிசாமி

நல்லாசிரியர் ஈச்சங்கோட்டை பாலசுப்பிரமணியன்

தலைமை ஆசிரியர் முத்துமாணிக்கம்

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகப் பேரா சிரியர்கள் சாமிநாதன், குமார்.

தமிழர் தலைவர் பாராட்டு

டிசம்பர் 20 அன்று தமிழர் தலைவர் அய்யா அவர் கள் பங்கேற்கும் கண்டனப் பொதுக்கூட்டத்திற்காக 13.12.2014 அன்று முதல் 19.12.2014 வரை மொத்தம் ஏழு நாள்கள் தஞ்சாவூர் மாநகரத்தில் கடைவீதி வசூலில் (ரூ.20,000) ஈடுபட்ட கழகத் தோழர்களை 20.12.2014 அன்று தஞ்சையில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாராட்டி சிறப்பு செய்தார்.

மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாவட்டத் துணைச் செயலாளர் ச.சந்துரு, மாவட்ட ப.க. செயலாளர் கோபு.பழனிவேல், மாநகரச் செயலாளர் சு.முருகேசன், மாவட்ட இளைஞரணித் தலைவர் அள்ளூர் இரா.பாலு, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் வே.ராஜவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.வெற்றிக்குமார், மாவட்ட மாணவரணி தலைவர் வெ.நா.அழகிரி, மாவட்ட மாணவரணிச் செயலாளர் இரவி.தர்மசீலன், நகர மாணவரணித் தலைவர் ஆ.மதன்ராஜ்,

மேஸ்திரி முருகேசன், உரத்தநாடு ஒன்றிய மாணவரணி துணைச் செயலாளர் அண்ணா.மாதவன், தஞ்சை நகர மாணவரணி அமைப்பாளர் அண்ணா.மணி கண்டன், தஞ்சை ஒன்றிய இளைஞரணி தலைவர் அ.தனபால், தஞ்சை த.கிருஷ்ணமூர்த்தி, பெரியார் சித்தன், இராமலிங்கம், ஆயங்குடி தாமரைச்செல்வன், மாநகர துணைத் தலைவர் கரந்தை டேவிட், திருவையாறு ஒன்றிய அமைப்பாளர் விவேக விரும்பி, ஓட்டுநர் மணி, பிள்ளையார்பட்டி மு.தமிழரசன், அரவிந்தகுமார், கார்த்திக், ச.சிந்தனையரசு, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் வே.தமிழ்ச்செல்வன் ஆகியோர் பாராட்டப் பெற்றனர்.
விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு விழா குழுவின் சார்பில் பயனாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது.

கலை நிகழ்ச்சிக்குப் பாராட்டு

தொடக்கத்தில் கலை நிகழ்ச்சி நடத்திய தெற்கு நத்தம் பெரியார் நேசன், குமரவேலு, அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கக் காவலர் மேல உளூர் இரவிச்சந்திரன் ஆகியோரும் பாராட்டப் பெற்றனர்.

பெயர் சூட்டல்

பேராவூரணி சோம.நீலகண்டன் - தேவி ஆகியோரின் குழந்தைக்கு அறிவுச்செல்வன் என தமிழர் தலைவர் பெயர் சூட்டினார். இதன் மகிழ்வாக ஆயிரம் ரூபாய் நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

வழக்குரைஞர் ராமமூர்த்திக்கு வாழ்த்து

தமிழர் தலைவரின் நெருங்கிய நண்பரும், வழக்குரைஞருமான தஞ்சை இராமமூர்த்தியின் 81 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, அவருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்து மக்கள் கட்சி காலிகளின் மிரட்டல்!

தஞ்சையில் கூட்டம் நடைபெறும் என்பதை அறிந்த இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள், தமிழர் தலைவர் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் செய்வோம் என்று கூறியதால், கழகத் தோழர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் ஒரு பரபரப்பை உருவாக்கியது. தமிழர் தலைவருக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் கருத்துகளைத் தெரிவித்ததும், கூட்டத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பினை உருவாக்கியது.

Read more: http://viduthalai.in/page-8/93263.html#ixzz3MX3LoZFJ

தமிழ் ஓவியா said...

நதி நீர்ப்பிரச்சினையில் தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டெடுப்போம்

வர்ணாசிரம நூலான - பெண்களை இழிவுபடுத்தும் கீதையை எந்த நிலையிலும் அனுமதிக்க முடியவே முடியாது!

சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்

சென்னை, டிச.22- நதி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகப் போராடுவோம்! இந்து மத நூலான வர்ணாசிரமத்தை வலியுறுத்தும் பெண்களை இழிவுபடுத்தும் கீதை புனித நூலாக தேசிய அளவில் அறிவிக்கப்பட்டுள்ளதை ஏற்க மாட்டோம். இது தொடக்கம்தான் - எங்கள் போராட்டம் தொடரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.

திராவிடர் கழக மகளிரணி சார்பில் சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கின்ற வகையில் இந்திய அரசியல் சட்டத்தின் விதிகளுக்கு முரணாகவும், நியாய விரோதமாகவும், உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கொடுத்த சிறப்பான அம்சங்களை தீவிரமாக விடைகொடுத்து அனுப்பக்கூடிய வகையிலும், கேரள அரசு மிகத் தீவிரமான ஒரு முறையிலே அணையை உயர்த்துவதற்கு குறுக்கே தடையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

இதற்கு எவ்விதத்திலும் உச்சநீதிமன்றத்தினுடைய ஆதரவு, நியாயமான தீர்ப்பு தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று சொன்ன உடனே, குறுக்குசால் ஓட்டுவதைப்போல, அவர்கள் வேறுவகையிலே அவர்கள் காட்டு வனப் பகுதியிலே நாங்கள் சுற்றுசூழலுக்கு ஆராய்வு செய் கிறோம் என்று அனுமதி கேட்டு, வழங்கி இருக்கிறார்கள்.

மத்திய அரசின் போக்கு

அந்த அனுமதியை வழங்கிய மத்திய அரசினுடைய வன இலாகா, சுற்றுசூழல்துறையினுடைய போக்கை வன்மையாக இந்த கண்டன ஆர்ப்பாட்டம் கண்டிக்கிறது. இரண்டாவதாக காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்போகிறோம் என்று கர்நாடகா தீவிரமான முடிவு களைச் செய்திருக்கிறது. ஏற்கெனவே உச்சநீதிமன்றத் தினுடைய ஆணைப்படி சிறப்பாக காவிரி நதிநீர் ஆணையத்தினுடைய மேலாண்மைக்குழுவை மத்திய அரசு அமைத்திருந்தால், இந்தப்பிரச்சினையிலே, இவ்வளவு தீவிரமான நடவடிக்கைகளிலே கர்நாடக அரசு இறங்குவதற்கு அதற்கு துணிவு வந்திருக்காது. மாறாக, மத்தியிலே இருக்கிற மோடி அரசு ஏற்கெனவே இருந்த காங்கிரசு அரசு வஞ்சித்தது என்று சொல்லிக்கொண்டு இந்த மக்களுடைய வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த மோடி அரசு அதற்கு அண்ணனாகத்தான் இதிலே நடந்து கொள்ளுகிறது என்பது வேதனைக்கும், கண்டனத்துக்கும் உரியது.

எனவே, காவிரி ஆற்றில் ஏற்கெனவே வறண்ட காவிரிப்பகுதியில், டெல்டா பகுதியில் விவசாயிகள் டில்லியிலேகூட சென்று ஆர்ப் பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். அந்த விவசாயி களைக்கூட சந்திக்க மோடிக்கு நேரமில்லை. பிரதமர் சந்தித்திருக்க வேண்டாமா? பிரதமர் அவர்களிடத்திலே வாக்குகளை வாங்குவதற்காக தமிழ்நாட்டுக்கு மற்ற இடங்களில் ஓடோடி வரு கிறாரே, அதே நேரத்தில் விவசாயிகளுடைய நலனைப் பாதுகாக்கிற அரசு மத்திய அரசு என்று சொன்னால், அவர்களுடைய கோரிக்கைகள் என்னவென்று சொல்லி டில்லியிலே அவர் வந்திருக்க வேண்டாமா? அதுமட்டுமல்ல, தடுப்பணை கட்டுவதற்கு எந்தவித ஆட்சே பணையும் அவர்கள் செய்வதற்குத் தயாராக இல்லை. மாறாக அதற்குத் தாங்கள் பச்சைக் கொடி காட்டுவதைப்போல நடந்துகொள்கிறது மத்திய அரசு. எனவே, அதை வன்மையாகக் கண்டிக்கக்கூடிய நிலையிலே, ஏற்கெனவே உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்புப்படி காவிரி ஆணையத்தினுடைய மற்றொரு பகுதியை மேலாண்மைக் குழுவை அவர்கள் நியமிக்க வேண்டும். அவர்கள் அதைச் செய்யாமல், கர்நாடகத்திலே மீண்டும் பாஜக ஆட்சி ஏற்ப டுவதற்கு இதை ஒரு வாய்ப்பாக அரசியல் கண்ணோட்டத்தோடு பார்த்துக் கொண்டிருக் கிறார்கள்.


தமிழ் ஓவியா said...

கீதை புனித நூலா?

அதேபோல, முழுக்க முழுக்க இந்துத்துவா ஆட்சிதான் இப்போது நடைபெறுகிறது என்று சொல்லக்கூடிய அளவிலே இந்து மதத்திலேயே ஒரு பிரிவினரால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கக் கூடிய பகவத்கீதை என்கிற நூல் இருக்கிறதே - அது சாதாரணமாகவே பல்வேறு மக்களைக் கொச்சைப்படுத்துகிற ஜாதியை நிலைநாட்டுகிற சூத்திரர்களும், வைசியர்களும், பெண்களும் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று இழிவு படுத்துகின்ற ஒரு நூலாகும். எனவே அதற்குச் சரியான நல்ல நூல் என்கிற தகுதி கூட இல்லாத நேரத்தில், திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததைப் புறக்கணித்துவிட்டனர். நாட்டிலே நோட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் நாங்கள் அதைச் செய்வோம். நாங்கள் யாருடைய சொல்லைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம், எங்களுக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்ற சர்வாதிகார மோடி அரசு இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

அதுமட்டுமே அல்ல. நேற்று வந்திருக்கிற இன்னொரு செய்தி - இந்தப் போராட்டம் அறிவித்தபிற்பாடு இந்தித்திணிப்பிலே அவர்கள் இன்னும் தீவிரமாக, ஏடிஎம் பணம் எடுக்கின்ற இடத்திலே அத்தனை படிவங்களையும் இந்தி யிலேதான் அமைக்க வேண்டும் என்று சொல்லி யிருக்கிறார்கள். இந்தித்திணிப்பை இன்னும் வேகமாக வங்கித்துறைகளிலே மற்றவைகளிலே காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நான்கு பிரச்சினைகளிலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். தமிழர்களுடைய உரிமைகள் பறிபோகின்றன.

எனவே, இவைகளை வலியுறுத்தித்தான் பெண்கள் விழிப்புணர்வோடு வருகிறார்கள் தமிழ்நாட்டில் என்பதற்கு அடையாளமாகத்தான், திராவிடர் கழகத்தினுடைய மகளிரணி இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்துகிறது. இது இங்கே மட்டும் நடைபெறக்கூடிய போராட்டம் அல்ல. ஒவ்வொரு மாவட்டத் தலைவநகரங்களிலும் இதே நேரத்திலே தமிழ்நாடு முழுக்க நடந்துகொண்டிருக்கிறது. மகளிரே தலைமைத் தாங்கி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல்

இந்தி எதிர்ப்புப் போராட்டம் அந்தக் காலத்திலே, 1938இலே வெற்றி பெற்றதற்கும் மகளிர் முன்னாலே நின்றதுதான் அடிப்படையான காரணமாக இருந்தது.

எந்தப் போராட்டமாக இருந்தாலும் மகளிர் ஈடுபட்டால், அந்தப் போராட்டம் நிச்சயம் வெற்றியைத்தான் தரும் என்பது இருக்கிறதே, அது நடைமுறையிலே நாம் பார்த்த ஒன்று. அந்த வகையிலே இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் என்பது மத்திய, மாநில அரசுகளுடைய கவனத்தை ஈர்ப்பது என்பது மட்டுமல்லஅரசுகள் அலட்சியமாக இருக்கக் கூடாது. நம்முடைய மாநில அரசைப் பொருத்தவரையிலே எவ்வளவுப் பெரிய பிரச்சினையாக இருந்தாலும் , மற்ற மாநிலங்களிலே அனைத்துக் கட்சியைக் கூட்டுகிறார்கள். அவர்களுடைய கருத்து களைக் கேட்கிறார்கள். அவர்கள் அனைவரும் சென்று பிரத மரைச் சந்திக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டிலே இருக்கிற அரசோ, இதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் தங்களை அரசு இருக் கிறது என்று வலியுறுத்திச் சொல் வதற்குக்கூடத் தயங்கி தயங்கிச் செய்யக்கூடிய பரி தாபமான ஒரு நிலையிலே இருக்கிறது.

எனவே, மத்திய, மாநில அரசுகளுடைய கவனத்துக்கு இதைக் கொண்டு வரவேண்டும். அவர்களடைய போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம். எனவே, இது ஒரு முதல் கட்டம்.

உரிமைகளைக் காப்போம்!

தமிழ்நாட்டிலே இந்தப் பிரச்சினைகள் இப்போது கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளில் பல்வேறு வடிவமாக போராட்டங்களை அரசுகள் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை திராவிடர்கழகத்தின் சார்பில் மட்டுமல்ல, தமிழ் இன உணர்வாளர்களின், மாநில உரிமைகளைக் காப்போம் என்ற உணர்வாளர்களின்சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் பேசும்போது குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/e-paper/93279.html#ixzz3MeFbIsHf

தமிழ் ஓவியா said...

ஒகேனக்கல் உங்களை அழைக்கிறதுஇளைஞர்களே! இளைஞர்களே! மாணவர்களே, மாணவர்களே, இளைஞர்களே, இளைஞர்களே! உங்களுக்கு ஓர் அழைப்பு! எதற்கு? அறிவு விருந்துண்ண!

ஒகேனக்கல்லில் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை காத்திருக்கிறது.

டிசம்பர் 27,28,29 ஆகிய மூன்று நாட்களிலும் ஒப்புயர்வற்ற உலகத் தலைவரான சிந்தனச் சீலரான தந்தை பெரியாரியல் பயிற்சிப் பட்டறை அது.

திராவிடர் இயக்கத்தில் பிற்காலத்தில் சுடர்விட்ட தலைவர்கள் சிந்தனையா ளர்கள், எழுத்தாளர்கள் சொற்பொழி வாளர்கள் எல்லோரும் ஈரோட்டில் தந்தை பெரியார் அவர்களே முன் னின்று நடத்திட்ட இத்தகு பயிற்சிப் பட்டறைகளில் தயாரிக்கப்பட்டவர்கள் தான் என்பதை மறந்து விடாதீர்கள்!

பயிற்சிப் பட்டறை நடத்துவது என்பது திராவிடர் கழகத்திற்கே உரிய தனிச் சிறப்பான முத்திரையுமாகும்.

திராவிட தமிழ் மண்ணில் காவிக் கூட்டம் கால் வைத்து பார்க்கலாம் என்ற மனப்பால் குடித்துக் கொண்டி ருக்கும் இந்தக் கால கட்டத்தில், தமிழின இளைஞர்கள், மாணவர்கள் வார்த்தெடுக்கப்பட்ட போர்க் கருவி களாக உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

ஆகவே, அருமை இளைஞர்களே, மாணவர்களே! இந்த மூன்று நாட் களிலும் நீங்கள் இருக்க வேண்டிய இடம் ஒகேனக்கல்! ஒகேனக்கல்!! ஒகேனக்கல்!!!

தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மூன்று நாட்களும் தங்கி வகுப்புகளை எடுக்க இருக்கிறார். இது ஓர் அரிய வாய்ப்பு! கழக முன்னணியினரும் பேராசிரியர் களும் தொடர்ந்து வகுப்புகளை, பல முக்கிய தலைப்புகளில் நடத்துவார்கள்; உங்களுக்கு ஏற்படும் அய்யங்கள் எல்லாம் அவ்விடத்திலேயே களை யப்படும்.

தருமபுரி மாவட்ட கழகப் பொறுப் பாளர்கள் விரிவான முறையில் ஏற் பாடுகளை செய்து வருகின்றனர். மாலை நேரங்களில் அருகில் உள்ள ஊர்களில் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடுகள் வேறு.
குறும்படங்கள் உண்டு; களப் பணிப் பயிற்சிகளும் உண்டு. இந்த மூன்று நாட்களும் உங்கள் வாழ்வில் பெரும் திருப்பு முனையாக அமையும் -

இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்! சேலம், தருமபுரி, கிருட்டிணகிரி, திருப் பத்தூர், வேலூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதியினர், கழகப் பொறுப்பாளர்கள் இளைஞர் களை, மாணவர்களை அனுப்பி வைக்கக் கோருகிறோம்.

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/93295.html#ixzz3MeG3qwRu

தமிழ் ஓவியா said...

ஒகேனக்கல் உங்களை அழைக்கிறதுஇளைஞர்களே! இளைஞர்களே! மாணவர்களே, மாணவர்களே, இளைஞர்களே, இளைஞர்களே! உங்களுக்கு ஓர் அழைப்பு! எதற்கு? அறிவு விருந்துண்ண!

ஒகேனக்கல்லில் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை காத்திருக்கிறது.

டிசம்பர் 27,28,29 ஆகிய மூன்று நாட்களிலும் ஒப்புயர்வற்ற உலகத் தலைவரான சிந்தனச் சீலரான தந்தை பெரியாரியல் பயிற்சிப் பட்டறை அது.

திராவிடர் இயக்கத்தில் பிற்காலத்தில் சுடர்விட்ட தலைவர்கள் சிந்தனையா ளர்கள், எழுத்தாளர்கள் சொற்பொழி வாளர்கள் எல்லோரும் ஈரோட்டில் தந்தை பெரியார் அவர்களே முன் னின்று நடத்திட்ட இத்தகு பயிற்சிப் பட்டறைகளில் தயாரிக்கப்பட்டவர்கள் தான் என்பதை மறந்து விடாதீர்கள்!

பயிற்சிப் பட்டறை நடத்துவது என்பது திராவிடர் கழகத்திற்கே உரிய தனிச் சிறப்பான முத்திரையுமாகும்.

திராவிட தமிழ் மண்ணில் காவிக் கூட்டம் கால் வைத்து பார்க்கலாம் என்ற மனப்பால் குடித்துக் கொண்டி ருக்கும் இந்தக் கால கட்டத்தில், தமிழின இளைஞர்கள், மாணவர்கள் வார்த்தெடுக்கப்பட்ட போர்க் கருவி களாக உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

ஆகவே, அருமை இளைஞர்களே, மாணவர்களே! இந்த மூன்று நாட் களிலும் நீங்கள் இருக்க வேண்டிய இடம் ஒகேனக்கல்! ஒகேனக்கல்!! ஒகேனக்கல்!!!

தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மூன்று நாட்களும் தங்கி வகுப்புகளை எடுக்க இருக்கிறார். இது ஓர் அரிய வாய்ப்பு! கழக முன்னணியினரும் பேராசிரியர் களும் தொடர்ந்து வகுப்புகளை, பல முக்கிய தலைப்புகளில் நடத்துவார்கள்; உங்களுக்கு ஏற்படும் அய்யங்கள் எல்லாம் அவ்விடத்திலேயே களை யப்படும்.

தருமபுரி மாவட்ட கழகப் பொறுப் பாளர்கள் விரிவான முறையில் ஏற் பாடுகளை செய்து வருகின்றனர். மாலை நேரங்களில் அருகில் உள்ள ஊர்களில் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடுகள் வேறு.
குறும்படங்கள் உண்டு; களப் பணிப் பயிற்சிகளும் உண்டு. இந்த மூன்று நாட்களும் உங்கள் வாழ்வில் பெரும் திருப்பு முனையாக அமையும் -

இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்! சேலம், தருமபுரி, கிருட்டிணகிரி, திருப் பத்தூர், வேலூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதியினர், கழகப் பொறுப்பாளர்கள் இளைஞர் களை, மாணவர்களை அனுப்பி வைக்கக் கோருகிறோம்.

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/93295.html#ixzz3MeG3qwRu

தமிழ் ஓவியா said...

ஏழே மாதத்தில் விரக்தி ராஜினாமா செய்வேன் மோடி அறிவிப்பு


டில்லி, டிச.22- ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சங் பரிவார் தலைவர்கள் மீதான அதிருப்தியாலும், சங்பரிவார்களின் அழுத்தத்தாலும் பிரதமர் நரேந்திர மோடி, தன் பதவியை ராஜினாமா செய்வேன் எனக் கூறிய தாக செய்திகள் வெளி யாகி உள்ளன.

இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறிய வர்களை, தாய் மதத்திற்கு மாற்றும் முயற்சியில், ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு, சங் பரிவார் அமைப்புகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. காந்தியாரைச் சுட்டுக் கொன்ற கோட் சேவின் சிலையை, நாடு முழுவதும் வைக்கப் போவ தாக, இந்து அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

சில மாநிலங்களில், பா.ஜ.க., மூத்த தலைவர் கள் பலரும், சிறுபான்மை யின மக்கள் மீது, வேறுபாடு பாராட்டும் வகையில் பேசி உள்ளனர். இதனால், அந்த அமைப் புகள் மற்றும் அவற்றின் செயல்பாட்டில்அதிருப்தி அடைந்த பிரதமர் மோடி, பதவியை ராஜினாமா செய்யப் போவதாக, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கள் சிலரிடம், கூறியதாக செய்திகள் வெளி வந் துள்ளன.

மகாராட்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான மகா ராஷ்டிர மாநிலத்தில் வெளியாகும், 'மகாராஷ் டிரா டைம்ஸ்' என்ற பத் திரிகையில், இந்த செய்தி வெளியாகி உள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/93287.html#ixzz3MeGT0um1

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஆத்மா

பிள்ளையார் வழிபாட்டில் அருகம்புல் ஏன் தெரியுமா? அது விதை போடாமல் வளரக் கூடியது. இதுபோலவே மனிதனின் ஆத்மா வுக்கும் விதை கிடையாது என்கிறது ஓர் ஆன்மிக இதழ்.

அப்படியா! மனி தனுக்குத்தானே ஆத்மா? அந்த மனிதன் விதை யில்லாமலா தானாகத் தோன்றினான்?
செத்த உடலை உயி ரில்லை என்கிறோம் - அதன்பின் ஆத்மா எங்கே வந்து குதித்தது?

Read more: http://viduthalai.in/e-paper/93296.html#ixzz3MeGdOq2a

தமிழ் ஓவியா said...

கோட்சே இந்தியாவின் முதல் தீவிரவாதி
சமாஜ்வாதி கட்சி செயலாளர் அசம் கான்

பெரேலி, டிச .22- நாதுராம் கேட்சேயை புகழும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சமாஜ்வாதி கட்சி செயலாளர் அசம் கான் கடுமையாக தாக் கியுள்ளார். நாதுராம் கோட்சே நாட்டின் முதல் பயங்கரவாதி என்று கூறி யுள்ள அவர் காந்தியை யாரை படுகெலை செய்த கோட்சேவை "மகிமைப் படுத்தும்" இந்து மகா சபாவின் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்திய அரசியல மைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், தனது பொறுப்பை உணராம லும் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமர் கோவில் கட்டுவோம் என்று பேசிய உத்தரப் பிரதேச ஆளுநர் ராம் நாயக்கை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்யவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மதமாற்றம் தொடர் பான விவகாரத்தில் பிர தமர் மோடி பதவி விலகப் போவதாக உறுதிப்படுத் தப்படாத தகவல் வெளி யாகியுள்ளது பற்றி அசம்கான் கூறுகையில், ஒரு போதும் மோடி அவ் வாறு செய்யமாட்டார். நாட்டில் அதிபர் ஆட்சி முறையை விரும்பும் மோடி, அதை சாதிக்கும் விதமாக அரசியல் சட் டத்தில் மாற்றங்களை செய்ய முயற்சிக்கிறார் என்று அவர் சாடியுள் ளது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/93291.html#ixzz3MeGp2LUu

தமிழ் ஓவியா said...

பாஜவுக்கு வாக்களிக்காவிட்டால்
வீடுகளை இடித்து விடுவேன்!

எம்எல்ஏவின் மிரட்டல் வீடியோ வெளியானது

கோடா, டிச.22:ராஜஸ்தானில், பாஜவுக்கு வாக்களிக்காவிட்டால் வீடுகளை இடித்து விடுவேன் என்று கூறும் பாஜ எம்எல்ஏவின் மிரட்டல் வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள லாத்புரா தொகுதியின் பாஜ எம்எல்ஏவாக இருப்பவர் பவானி சிங் ரஜாவத். இவர், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின்போது தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது, பாஜவுக்கு வாக்களிக்காவிட் டால், சட்டவிரோதமாக கட்டப் பட்ட வீடுகளை இடித்து விடுவேன் என்று வாக்காளர்களை அவர் மிரட் டியதாக தெரிகிறது. இந்த மிரட்டல் வீடியோ தற்போது வெளியாகி ராஜஸ் தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று, நைன்வா பகுதியில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதற் காக, கோடா மாவட்ட துணை எஸ்பியை, அப்பகுதி பாஜ பிரமுகர் பிரமோத் ஜெயின், கடுமையாக பேசி யுள்ளார். இது குறித்த ஆடியோவும் தற்போது வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக, புகார்கள் அளிக்கப்பட்டால் மட்டுமே, நட வடிக்கை எடுக்க முடியும் என்று கோடா எஸ்பி தேஜ்ரா சிங் கூறினார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பாக, மருத்துவ அதிகாரியை கோடா பாஜ எம்எல்ஏ பிரகலாத் குன்ஜல் மிரட் டிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-2/93302.html#ixzz3MeHEbN4O

தமிழ் ஓவியா said...

வளர்ச்சியற்றவர்கள்


பெண்களுக்கும், ஆண்களுக்கும் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவதால், சிறு வயதிலேயே அவர்கள் தலைமீது குடும்பப் பொறுப்பு விழுந்துவிடுகிற காரணத்தினால், சுதந்திரம் அற்றுக் கவலை, தொல்லை இவை களுக்கு ஆளாகிப் போதிய வளர்ச் சியற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள்.
(விடுதலை, 13.9.1972)

Read more: http://viduthalai.in/page-2/93297.html#ixzz3MeHNAfwU

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழமெங்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் கருநாடகத்திலும், கேரளாவிலும் நதிகளின் குறுக்கே அணைகளைக் கட்டுவதா? வர்ணாசிரம நூலான கீதை தேசியப் புனித நூலா?

மத்திய அரசைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழமெங்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம்

சென்னை, டிச. 22- தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் கருநாடகத்திலும், கேரளாவிலும் நதிகளின் குறுக்கே அணைகளைக் கட்டுவதைக் கண்டித்தும், மத்திய அரசு இதற்கெல்லாம் துணை போவதோடு, வர்ணாசிரம நூலான கீதை தேசியப் புனித நூலாக அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்தும், வங்கித்துறையில் இந்தித் திணிப்பை எதிர்த்தும் இன்று (22.12.2014) தமிழகம் முழுவதும் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் மத்திய அரசைக் கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினார்.

கருநாடகத்திலும், கேரளாவிலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் சட்ட விரோதமாக அணைகள் கட்டுவதைக் கண்டித்தும் வருணாசிரம நூலான கீதை இந்திய தேசிய புனித நூலாக அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்தும் திராவிடர் கழகத்தின் சார்பில் டிசம்பர் 22-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடந்த 16.12.2014 அன்று அறிக்கை விடுத்தார்.

தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம்

அதன்படி இன்று தமிழகமெங்கும் மாவட்டத் தலை நகரங் களில் திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

தமிழர் தலைவர் பங்கேற்பு

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (22.12.2014) காலை 11 மணிக்கு நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டக் கண்டன உரை நிகழ்த்தினார். திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆர்ப்பாட்ட விளக்க உரையாற்றினார். பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்று சிறப்பித்தார்.

முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் க.திருமகள் மற்றும் மகளிரணி தோழியர்கள் உமா, ராணி ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில வழக்குரைஞரணி அமைப்பாளர் வழக் குரைஞர் தெ.வீரமர்த்தினி தொடக்கவுரையாற்றினார். பெரியார் களம் இறைவி மற்றும் மகளிரணி தோழியர்கள் ஆர்ப்பாட்ட ஒலி முழக்கங்களை எழுப்பினர். நிறைவாக பொதுக்குழு உறுப்பினர் கு.தங்கமணி குணசீலன் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராஜன், கழக வடமாவட்டங்களின் அமைப்பு செயலாளர் வெ.ஞானசேகரன், சென்னை மண்டல செயலாளர் பன்னீர் செல்வம், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் தமிழ் சாக்ரடீஸ், மடிப்பாக்கம் ஜெயராமன், பேராசிரியர் பெரியாரடியான், வழக்குரைஞர் சென்னியப்பன், பெங்களூரு கழகத் தோழர்கள் அரங்கநாதன் தோழியர் சொர்ணா ஆகியோர் பங்கேற்றனர்.
ஒலி முழக்கங்கள்!

ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் உரிமைகள் கோரும் ஆர்ப்பாட்டம்!

புனித நூலா? புனித நூலா?
கீதை புனித நூலா? புனித நூலா?
தேசிய நூலா? தேசிய நூலா?
கீதை - தேசிய நூலா? தேசிய நூலா?

பாவயோனியில் பிறந்தவர்கள்
பெண்கள் என்று கூறுகின்ற கீதை புனித நூலா?

பிறப்பில் பேதம் கற்பிக்கும்
கீதை புனித நூலா?

கண்டிக்கிறோம் - கண்டிக்கிறோம்
பிஜேபி அரசை
கண்டிக்கிறோம்

வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டை
மீட்டெடுக்கும் போராட்டம்!

காவிரியாற்றின் குறுக்கே
தடுப்பணையா?
தமிழ்நாட்டை வஞ்சிக்க,
தரைமட்டமாக்கும்
தடுப்பணையா? தடுப்பணையா?

முல்லைப் பெரியாற்றின் குறுக்கே
தடுப்பணையா? தடுப்பணையா?
தரைமட்டமாக்கும்
தடுப்பணையா?

சட்ட விரோதம்! சட்டவிரோதம்!
தடுப்பணை கட்டுவது
சட்டவிரோதம்
தலையிடு! தலையிடு!
மத்திய அரசே தலையிடு!

வஞ்சிக்காதே! வஞ்சிக்காதே!
கருநாடக அரசே!
கேரள அரசே
தமிழ்நாட்டை வஞ்சிக்காதே!

மத்திய அரசே மத்திய அரசே
தலையிடு! தலையிடு!
சட்டவிரோத
கருநாடக அரசின் கேரள அரசின்
நடவடிக்கைகளை
தடுத்து நிறுத்து! தடுத்து நிறுத்து!

போராடுவோம்! போராடுவோம்!
வெற்றிகிட்டும் வரை போராடுவோம்!

குரல் கொடுப்போம்! குரல் கொடுப்போம்
தமிழ்நாட்டு உரிமைக்கு
குரல்கொடுப்போம்! ர் உயரட்டும்! உயரட்டும்!
கோரிக்கைகள் நிறைவேற
கோடிக் கைகள் உயரட்டும்!
ர் தமிழா, தமிழா, ஒன்றுபடு!
தமிழர் உரிமையை
வென்று விடு! வென்று விடு!

Read more: http://viduthalai.in/page-3/93278.html#ixzz3MeHor8Vs

தமிழ் ஓவியா said...

கற்பூரவல்லியின் மருத்துவ குணங்கள்


கற்பூரவல்லி ஒரு சிறந்த கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வல்லியும் நட்டு வளர்த்தனர். இரண்டும் விஷக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டவை. கற்பூரவல்லியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் எந்த வகையான பூச்சிகளும் தென்னையைத் தாக்காது.

கற்ப மூலிகையில் கற்பூரவல்லிக்கு சிறந்த இடமுண்டு. இதனால் தான் இதன் பெயரும் கூட கற்பூர வல்லி என்று அழைக்கப் படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனை வருக்கும் ஏற்ற மருந்தாக கற்பூரவல்லி அமைகிறது.

இந்தியாவில் தமிழகம் கேரளா, கருநாடகா பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் இலை வட்ட வடிவமாக பஞ்சு போன்று காணப்படும். இதில் காரத்தன்மை கொண்ட நீர்ச்சத்து நிறைந்துள்ளது.

கற்பூரவல்லி இலைகளை காய வைத்து பொடி செய்து அதனுடன் காய்ந்த தூதுவளை, துளசி பொடிகளை சம அளவு எடுத்து புட்டியில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் காலை வேளையில் குழந்தை களுக்கு ஒரு சிறு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், ஈளை போன்றவை நீங்கும்.

சளியின் அபகாரம் குறையும். கற்பூர வல்லி இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் காய்ந்த வேப்பிலை, வில்வம், அத்தி இலை, துளசி இலை, தும்பை இலை, தூதுவளை, ஆடாதோடை, நெல்லி, கீழாநெல்லி இவற்றை சம அளவு எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, மஞ்சள்தூள், தனியா பொடி கலந்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளையும் வேளைக்கு இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு அருந்தி வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மூச்சுக் கிளைக்குழல்களில் தொற்றுநோய்களின் தாக்குதல் ஏதுமின்றி பாதுகாக்கும்.

கற்பூரவல்லி இலை, தூதுவளை, வல்லாரை, இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி அதில் 1 ஸ்பூன் அளவு எடுத்து 100 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 50 மில்லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நுரையீரல் பாதிப்பு நீங்கும். மூச்சுக்குழல் அடைப்பு சீராகும் .

கற்பூரவல்லி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைக் கம்மல் குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-7/93294.html#ixzz3MeIDgs25

தமிழ் ஓவியா said...

எளிய உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் (தொடர்ச்சி)


மிக எளிய உணவு பொருட்களில் உள்ள மருத்துவ குணங்களால் உடலில் உண்டாகும் பல்வேறு நோய்களை தீர்க்கின்றன.

50. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், செரிமானமின்மை மாறும்.

51. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

52. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

53. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

54. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

55. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

56. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

57. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

58. பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

59. புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தை களுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

60. பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

61. கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பிணி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். 62. சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

63. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

64. இலவங்கப் பூ சூரணத்தை முலைப்பால்விட்டு உறைத்து நெற்றியில் பற்றிட ஜலதோஷம் போகும்.

65. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

66. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

67. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

68. நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

69. நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 குவளை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

70. இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்த வும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப்படுத்த முன்னோர் கூறியது இது.

71. மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

72. கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத் தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

73. வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

74. ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

Read more: http://viduthalai.in/page-7/93298.html#ixzz3MeINE7Hz

தமிழ் ஓவியா said...

ஒரு கொள்கை வீராங்கனையின் வீரஞ்செறிந்த இலட்சியப் பயணம் - நமது சிறப்பு செய்தியாளர்

சென்னைப் பெரியார் திடலில் நேற்று (21.12.2014) முற்பகல் நடைபெற்ற அந்த நிகழ்வு இப்பொழுது நினைத்தாலும் அதிசயமானதாகவும், பெருமிதமாகவும் இருக்கிறது.

திராவிடர் கழக மூத்த இலட்சிய வீராங்கனை மானமிகு ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அவர்களின் மறைவையொட்டி நடைபெற்ற அந்த நிகழ்வுதான் அது.

மரணம் அடைவதற்கு முன்னதாக அவர் எழுதி வைத்தார் ஒப்பில்லா மரண சாசனம் ஒன்றை. உயிருடன் இருக்கும்போதே மரணத்தைப் பற்றி நினைப்பதே கூட அமங்கலமானது என்று கருதக்கூடிய அல்லது அச்சத்தின் காரணமாக அப்படி நினைக்கத் தயங்குகின்ற ஒரு சமூக அமைப்பில், இப்படியும் இருக்கிறார்கள் என்பதுதான் இதில் உள்ள தனிச் சிறப்பு.

நேற்று காலை 10.30 மணியளவில் பொது மருத்துவ மனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் பெரியார் திடலுக்குக் கொண்டுவரப்பட்டு, பெரியார் நினைவிட நுழைவு வாயிலில் வீராங்கனையின் உடல் பொது மக்கள் மரியாதை செலுத்திட வைக்கப்பட்டது.

அம்மையாரின் உடலுக்குக் கழகக் கொடியைப் போர்த்தி, இலட்சிய முத்திரையுடன் தன் வீரவணக்கத்தைச் செலுத்தினார் கழகத் தலைவர். நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்காக வைக்கப்பட்டிருந்த உண்டியலில் நன் கொடையையும் செலுத்தினார்.

தனது உடலுக்கு மாலைகளை அணிவிக்கச் செய்யாமல், அதற்குப் பதிலாக மாலைக்கு ஆகும் அந்தத் தொகையை திருச்சி - நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடையாக அளியுங்கள் என்ற அம்மையார் தமது மரண சாசனத்தில் குறிப்பிட்டு இருந்த வேண்டுகோளும் காப்பாற்றப்பட்டது. இந்தத் தகவல் தெரியாமல் மாலை வாங்கிவந்தவர்கள் கூட, கட்டுப்பாடு காத்து, அந்த மாலைகளை தந்தை பெரியார் சிலை, நினைவிடங்களில் வைத்தனர்.

நாகம்மையார் இல்லத்துக்காக நன்கொடைக்கான உண் டியல் ஒன்று வைக்கப்பட்டது. மாலைக்குப் பதில் நன்கொடை அளித்தனர். அந்தத் தொகை மட்டும் ரூ.25,021 ஆகும்.

நாம் எதைச் செய்தாலும் அது யாருக்காவது பயனுள்ள தாக இருக்க வேண்டுமே! மாலை வைத்தால் சிறிது நேரத்தில் குப்பைத் தொட்டிக்குத்தானே போகும். என்னே சிந்தனை! எத்தகைய அறிவுத் துடிப்பை இயக்கத் தோழர்கள் மத்தியிலே பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் விதைத்துச் சென்றுள்ளார்.

இயக்கத் தோழர்கள் குடும்பம் குடும்பமாகவும், பல தரப்புப் பெருமக்கள் சாரை சாரையாகவும் அம்மையாருக்கு வீர வணக்கம் செலுத்தி, நாகம்மையார் இல்லத்துக்கு நன்கொடையையும் அளித்தனர்.இரங்கல் கூட்டம் கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்றது. அம்மையாரின் மரணசாசனத்தை கழக மாணவரணி மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் படித்தார், தொடர்ந்து கழக வழக்குரைஞர் அருள்மொழி வீரமர்த்தினி, கழகத் தலைவர் இரங்கல் அறிக்கையினைப் படித்தார்.

தமிழ் ஓவியா said...

இரங்கல் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பிரச்சார செயலாளர் வழக்குரை ஞர் அருள்மொழி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு, ஆனூர் செகதீசன், நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால், நக்கீரன் இதழ் துணை ஆசிரியர் லெனின், வழக்குரைஞர் விஜயகுமார் (கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி) ஆகியோர் உரைக்குப் பிறகு, ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அவர்கள் பெயர்த்தி ஆனி கிரேஷ் நன்றி உரையாற்றினார்.

இலட்சிய வீராங்கனையின் உருவப்படத்தைத் திறந்து வைத்து நிறைவுரையாக கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உரை, இலட்சிய தீபத்தின் சுடராக வும், கழகத்தின் பீடு நடையை முரசடித்து வெளிப்படுத்தும் கம்பீரமாகவும், பெருமிதம் பீறிடும் உரையாகவும் வளமான சொல்லாக்கத்துடன் பெருகி வந்தது என்றே சொல்ல வேண்டும்.

ஒரு துக்க நிகழ்ச்சியைக் கொள்கை விழாவாக திராவிடர் கழகத்தவரைத் தவிர வேறு யாரால் நடத்த முடியும்? என்ற தலைவரின் கேள்வி அர்த்தம் மிக்கது.

பெரியாருக்குப் பிறகு இயக்கம் இருக்குமா என்று கேள்வி கேட்டவர்கள் உண்டு. இருக்கக் கூடாது என்று எண்ணிய எதிரிகள் உண்டு. இயக்கம் எப்படி இருக்கிறது - எந்த அளவு கொள்கை நேர்த்தியுடன் ஒளிவீசுகிறது - மிளிர்கிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒன்று போதாதா?

மரண பயம் என்பது மத நம்பிக்கையாளர்களுக்கு உண்டு. காரணம் நரகம் நம்பிக்கைகளால் ஏற்படுத்தப்பட்ட பயமே! இவற்றில் எள் மூக்கு முனை அளவும் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவு எனும் பலமும் செறிவும் கொண்ட வர்கள் மரணத்தைக் கண்டு பயப்படமாட்டார்கள் - என்பதற்கு மனோரஞ்சிதம் அம்மையாரின் மரண சாசனம் தலைசிறந்த எடுத்துக்காட்டு.

சொல்லுவதுபடி வாழ்வதும் - வாழ்வதுபடி சொல்லு வதும் என்பதுதான் தந்தை பெரியார் ஈன்றெடுத்த இந்த சுயமரியாதை இயக்கத்தின் அறிவு நாணயம் கமழும் பாலபாடமாயிற்றே.

தமிழ் ஓவியா said...

டார்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம் அவர்கள் திராவிடர் மாணவர் கழகத் தலைவர்; நான் அதன் செயலாளர் பொறுப்பாளர்களாகிய நாங்கள் ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்வோம் என்று தீர்மானம் போட்டோம். தந்தை பெரியார் அவர்கள் கூட என்ன இப்படி உணர்ச்சி வயப் பட்டு தீர்மானம் நிறைவேற்றி விட்டீர்களே - தீர்மானத் தின்படி நடந்து கொள்வது எளிதானதா?
சொல்லாமல் செய்து காட்டும்வரை பொறுமை காட்டி இருக்கலாமே! யோசிக்க வேண்டாமா என்று ஒரு தந்தையின் இடத்தி லிருந்து கேட்டபோது எங்கள் முடிவில் தீர்மானமாகத்தான் இருக்கிறோம் - செய்து காட்டுவோம் என்று தந்தை பெரியார் அவர்களிடம் சொன்ன பொழுது, பெரிதும் மகிழ்ந்தார்கள்.

நம் முன் பல தளங்கள் - களங்கள் உள்ளன; இந்தக் காலகட்டத்தில் நல்ல தளபதிகளை இழந்து வருவதைக் கண்டு திடுக்கிடும் நிலை என்றாலும், நம் பயணம் தொய்வின்றித் தொடரும்!

நம் பாதை பெரியார் பாதை - பெரியார் பாதை என்பது நாளை உலகப் பாதை - அதில் பீடு நடைபோடுவோம் என்று சூளுரைத்தார்கள்.

மிகப்பெரிய அளவில் கூடியிருந்த பெருமக்கள் ஆசிரியர் அவர்களின் உரையை உள்வாங்கியிருந்த நிலையில் உறைந்து காணப்பட்டனர். குறிப்பாக இந்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியாக அமைந் திருந்தது.

இலட்சியப்படி வாழ்ந்தால் இந்த இயக்கத்தில் சமூகத்தில் எத்தகைய மரியாதை காத்திருக்கிறது என்ற கொள்கை ஓட்டமும் அவர்களுக்குள் இருந்திருக்கலாம்.

சென்னைப் பொது மருத்துவமனையில் அம்மை யாருக்கு மிகுந்த மனிதநேயத்துடன் கவலை எடுத்துக் கொண்டு கடமையாற்றிய மருத்துவர் ஆனந்த் அவர்க ளுக்கும், உடல்நிலை குறித்துத் தகவல்களைத் தந்து கொண் டிருந்த மருத்துவர் சத்தியராஜ் அவர்களுக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

வீரவணக்கம்! வீரவணக்கம்!! கொள்கை வீராங் கனைக்கு வீரவணக்கம்! என்று கழகத் தலைவரே உணர்ச்சிப் பெருக்குடன் முழக்கமிட, அதனைத் தொடர்ந்து அம்மையாரின் உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு, சென்னை பொது மருத்துவமனைக்குக் கொடையளிக்கப் புறப்படத் தயாரானது.

வீரவணக்கம்! வீரவணக்கம்!! இயக்க வீராங்கனைக்கு வீரவணக்கம்! கொள்கைப் போராளிக்கு வீரவணக்கம்! என்று தோழர்கள் முழக்கமிட்ட வண்ணம் ஆம்புலன்சும் நகர ஆரம்பித்தது. பெரியார் திடல் நுழைவு வாயில் வரை கழகத் தலைவர் அவர்களுடன், தோழர்கள் அணிவகுத்து வந்து அந்தக் கொள்கை வீராங்கனைக்குப் பிரியா விடை கொடுத்தனர்.

கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பெரியார் திடல் மேலாளர் ப.சீத்தாராமன், அம்மையாரின் பெயரன், பெயர்த்தி ஆகியோர் சென்னைப் பொது மருத்துவ மனைக்கு உடன் சென்று, உரிய வகையில் இலட்சிய வீராங்கனை ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அவர்கள் உடலை ஒப்படைத்தனர்.

வாழ்க வீராங்கனை மனோரஞ்சிதம்! வாழ்க தந்தை பெரியார்!! வெல்க திராவிடர் கழகம்!!!

Read more: http://viduthalai.in/page-8/93318.html#ixzz3MeIrUXac

தமிழ் ஓவியா said...

தச்சார்பற்ற - சமூகநீதியைக் காப்பாற்றுகின்ற - ஜாதி, தீண்டாமையை ஒழிக்கின்ற அணியை உருவாக்குவோம்!

விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் அறிவிப்பு


சென்னை, டிச.23- சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சமூக நல்லிணக்கத்திற்கு அச் சுறுத்தலாக உள்ள ஆர்.எஸ்.எஸ்.-பாஜக இந்துத்துவ மதவெறி ஃபாசிசப் போக்குகளைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமா வளவன் தலைமையில் இன்று (23.12.2014) நடைபெற்றது.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர்.நல்லகண்ணு, தமிழ் மய்யம் நிறுவனர் ஜெகத் கஸ்பார், தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் உஸ்மான் அலி, பேராசிரியர்கள் அருணன், அ.மார்க்ஸ், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாறன், எஸ்டிபிஅய் தெகலான் பாகவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியரசு உள்பட ஏராள மானவர்கள் பல்வேறு அமைப்புகளிலிருந்தும் ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டதாவது:

சரியான நேரத்தில்

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முயற்சி. ஏதோ விடுதலை சிறுத்தைகள் மட்டும் இயங்குகிறார்கள் என்று யாரும் கருத வேண்டாம். இந்த மேடையிலே உயர்த்தப் பட்ட கைகள் எப்போதும் தாழாது, எப்போதும் ஓயாது. எப் போதும் வீழாது. இந்தக்கைகள் பதவிக்காக உயர்த்தப்பட்ட கைகள் அல்ல. மாறாக கொள்கைக்காக, இலட்சியத்துக்காக, இந்த நாட்டின் மனிதநேயத்துக்காக, நல்லிணக்கத்துக்காக, ஒரு புது உலகத்தை உருவாக்குவதற்காக, அதோடு பாய்ந்து வரக்கூடிய கொடுமைகளை எல்லாம் தடுத்து நிறுத்துவ தற்காக இந்தக் கைகள் எந்த நேரத்திலும் எந்தக் கருவி களை வேண்டுமானாலும் ஏந்தக்கூடிய கைகளாகவும் ஆகும் என்பதுதான் மிக முக்கியம்.

தமிழகத்திலே அமைதிப்பூங்காவாக இருக்கிற இந்த இடத்திலே இருந்து கிளம்ப வேண்டும். தமிழகம்தான் இந்தியாவுக்கு வழிகாட்ட வேண்டும். தமிழகத்தையே பெரியார் மண்ணாக இருக்கக்கூடிய இந்த மண்ணை பாபா சாகிப் அம்பேத்கர் அவர்களுடைய கொள்கைக்கு இதுதான் தலைசிறந்த விளைநிலம் என்று சொல்லக் கூடிய இந்த மண்ணை, அதுபோலவே புரட்சியாளர்களுக்கெல்லாம் இதுதான் தலைசிறந்த மண் என்று சொல்லக்கூடிய இந்த மண்ணை காவி மண்ணாக்க வேண்டும் என்ற முயற்சிகள் ஒருபக்கத்திலே தீவிரமாக பல வடநாட்டுத்தலைவர்களைக் கொண்டுவந்து, இறக்குமதி செய்து, இங்கே யாராவது கிடைப்பார்களா என்று தேடித்தேடிப்பார்த்து, யார் கிடைப்பார்கள் என்று ஓடிப்பார்த்து அவர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். மத்தியிலே அவர்கள் ஆட்சியிலே அமர்த்தப் பட்டிருக்கிறார்கள். நாம் இங்கிருக்கக்கூடிய அணியினர் அன்றைக்கே எச்சரித்தோம். ஆனாலும் ஏமாந்தார்கள். ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டோன் புலி வேஷம் போட்டு ஆடுகிறான்; புல் அளவேனும் பொதுமக்களுக்கு மதிப்பேனும் தருகின் க்ஷறானா? என்று புரட்சிக் கவிஞர் கேட்டார். 6 மாதத்தில் அவர்களின் மறைமுகத் திட்டங்களை வெளிப்படையாகச் செய்வதற்குத் திட்டமிட்டு செய்கிறார்கள்.

மத சார்பற்ற புதிய அணி

திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் போன்ற அமைப்புகள், இடது சாரிகள், முற்போக்கு சிந்தனையாளர்களாக இருக்கின்ற மற்ற சிறு பான்மை மக்கள் அத்தனைப்பேரையும் ஒருங்கிணைத்து மதசார்புக்கு அப்பாற்பட்ட மதசார்பற்ற ஒரு அணி, மத வெறியை மாய்த்து மனித நேயத்தைக் காக்கக்கூடியவகையிலே ஒரு சிறப்பான Secular, Social Justice, Caste and Untouchability Eradication Front
என்று சொல்லக் கூடிய மதச்சார்பற்ற, சமூகநீதியைக் காப்பாற்றுகின்ற ஜாதியை தீண்டாமையை ஒழிக்கின்ற ஒரு மகத்தான அணி ஒன்றை விரைவில் ஏற்படுத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். அதைக் கூட்டு வதற்குத் தயாராக இருக்கிறோம். அதற்காக அச்சாரமாகத்தான் இங்கே நம்முடைய தலைவர்கள் கைகளை உயர்த்தி இருக்கிறார்கள்.

உயர்த்தப்பட்ட இந்தக் கைகள் உரிமைகள் கோரும் கைகளாக மாறும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. கோரிக்கைகள் ஒன்று தான். கோடி கைகள் பலவாக இருந்தாலும்!

இந்தக்கூட்டம் ஓர் எச்சரிக்கை மணி அடிக்கும் கூட்டம். - இவ்வாறு தமிழர் தலைவர் தம் பேச்சில் குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/e-paper/93358.html#ixzz3MjJlLrzG

தமிழ் ஓவியா said...

மீண்டும் இந்தி மொழித் திணிப்பா? கட்டாய மதமாற்றச் சட்டமா?


மீண்டும் இந்தி மொழித் திணிப்பா? கட்டாய மதமாற்றச் சட்டமா?

தி.மு.க. தலைவர் கலைஞர் கண்டனம்


சென்னை, டிச.23_ மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வரப்படும் என்றும், இந்தித் திணிப்புக் குறித்தும் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆட்சி மொழிப்பிரிவு பொதுத் துறை வங்கிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பணப் பரிவர்த்தனைகளுக் காக வாடிக்கையாளர் களுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்கள், செல் போன் குறுந்தகவல்கள் இந்தி மொழியில் இருப் பதை உறுதி செய்யுமாறு அந்தக் கடிதத்தில் அறி வுறுத்தப்பட்டிருப்பதாக ஏடுகளில் செய்தி வந் துள்ளன. இது போலவே ஏ.டி.எம். இயந்திரங்களில் வழங் கப்படும் ஸ்லிப்களிலும் இந்தி மொழியைப் பயன் படுத்த வேண்டுமென்று வங்கிகளுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்தி ருக்கிறது. மேலும் வங்கி களின் இணையதளங்கள் மற்றும் மொபைல் விண் ணப்பங்களிலும் இந்தி மொழியைப் பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதாகச் செய்தி வந்துள்ளது. நாம் எத் தனை முறை கண்டனம் தெரிவித்த போதிலும், சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணிப்பதில் பா.ஜ.க. அரசுதொடர்ந்து இதுபோன்ற நடவடிக் கைகளில் ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

மத மாற்றம்

மேலும் கேரளாவில் 8 குடும்பங்களைச் சேர்ந்த கிறித்தவர்களை விசுவ இந்து பரிஷத் அமைப் பினர் இந்து மதத்திற்கு மாற்றியதாக செய்தி வந் துள்ளது.

குஜராத், உத் தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் உள்ள ஏழையெளிய இஸ்லாமி யர்களையும், கிறித்தவர் களையும் இந்துக்களாக மத மாற்றம் செய்யும் முயற்சியிலே சங் பரிவார் அமைப்புகள் ஈடுபட்டுள் ளன. பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான திரு. வெங்கைய நாயுடு கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் தயாராக இருப்பதாகப் பயமுறுத் தியிருக்கிறார். இதே கருத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் அவர் களும் கொல்கத்தாவில் தெரிவித்திருக்கிறார். பா.ஜ.க.வின் தலைவரான அமித்ஷா அவர்களும் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை தேசிய அளவில் கொண்டு வர பா.ஜ.க. தயாராக இருப் பதாகக் கூறியிருக்கிறார்.

பொதுத் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க. மக்களிடம் கொடுத்த உறுதிமொ ழிக்கு மாறாக தற்போது பல வகைகளிலும் நடந்து கொள்வது நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப் தியை ஏற்படுத்துகின்றது. இதனை பிரதமர் மோடி அவர்களும், மத்திய அர சும் கண்டும் காணாமல் இருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித் துக் கொள்வதோடு, மத் திய அரசு இப்படிப்பட்ட செயல்களை இனியாவது திருத்திக் கொள்ள வேண் டுமென்று வலியுறுத்து கிறேன். இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/93360.html#ixzz3MjKA0KWq

தமிழ் ஓவியா said...

முடிந்த பாடில்லை...

மேனாட்டார் புதிது புதிதான விஞ்ஞான ரகசியங்களையும், இயந்திரங்களையும் கண்டுபிடிப்பதில் ஊக்கங் காட்டி வருகின்றனர். நம் நாட்டிலே புல்லிலும், பூண்டிலும் கடவுளைத் தேடி அவற்றின்பால் பக்தி செலுத்தும் வேலையும் மோட்ச வழி ஆராய்வதும் இன்னும் முடிந்தபாடில்லை.
(விடுதலை, 7.8.1950)

Read more: http://viduthalai.in/page-2/93341.html#ixzz3MjKnKpLw