Search This Blog

7.12.14

விடுதலைச்சிறுத்தைகள்கட்சி தோழர்ரவிக்குமார் பச்சையான பார்ப்பனக்குரலில் பேசுகிறார்?எழுதுகிறார்? பின்னணி என்ன?

தோழர் ரவிக்குமார் யாருக்காகப் பேசுகிறார்? எதற்காக எழுதுகிறார்? பின்னணி என்ன?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் ரவிக்குமார் திராவிடர் இயக்கத்தையும், தந்தை பெரியார் அவர்களையும் சீண்டுவதில் தனி இன்பம் காண்பார் போலும்!

பல காலக் கட்டங்களில் அவர் அப்படி நடந்து கொண்ட போதெல்லாம் அதற்குத் தக்க மறுப்புகள் கூறப்பட்டும் உள்ளன.

பெரியார் எதிர்த்த சாதி வாரி கணக் கெடுப்பு எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

அதற்கு அவர் தேர்ந்தெடுத்துள்ள ஏடு  - திருவாளர் வைத்தியநாதய்யர் ஆசிரியராக இருந்து அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். ஏடாக நடத்தப்படும் தினமணி தான். (3.12.2014)


1929இல் பெரியார் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்தவர், அதனால் இப்பொழுது  ஜாதிவாரி கணக்கெடுப்புக் கூடாது என்பது இரவிக்குமார் அவர்களின் கருத்தாக தெரிகிறது.


தாழ்த்தப்பட்டவர்களின் மாநாட்டில் தான் அப்படிப் பெரியார் பேசினார் என்றும் எடுத்துக் காட்டுகிறார்.

அப்படிப் பேசும் பொழுது, பிற்படுத்தப் பட்டவர்களுக்கு மட்டும்தான் பெரியார் சொன்னாரா? தாழ்த்தப்பட்ட மக்களையும் சேர்த்துத்தானே பொதுவாக அவ்வாறு கூறினார்.

அந்நிலையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே அது பொருந்தும் என்று கூறுவது பொருத்தமானதுதானா?

அவர் எடுத்துக் காட்டியுள்ள - பகுதியின் பொருள் என்ன?

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதியை நாம் பதிவு செய்து கொண்டால் இந்து மதத்தை ஒப்புக் கொள்வதாக பொருள்படும்; இந்து மதத்தை நாம் ஏற்றுக் கொண்டால் கீழ் ஜாதி மக்கள்தானே - சூத்திரர்கள் தானே பஞ்சமர்கள்தானே என்ற பொருளில் சொல்லப்பட்டதாகும்.

அதே நேரத்தில் ஜாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்ற தந்தை பெரியார் அவர்களோ, அண்ணல் அம்பேத்கர் அவர்களோ சொன்னதுண்டா?
அப்படியானால் ஜாதி ஒழிப்புக் கொள்கையில் இருவரும் முரண்பாட் டோடு நடந்து கொண்டார்கள் என்று சொல்ல வருகிறாரா - தோழர் ரவிக் குமார்?

ஜாதியே வேண்டாம் என்பவர்கள் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்கலாமா? கடவுளே இல்லை என்பவர்கள் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்காகப் போராடலாமா? என்று பார்ப்பனர்கள் கேட்கும் விதண்டா வாதக் கேள்வியை தோழர் ரவிக்குமார் இந்தப் பிரச்சினையில் கேட்பதாகத் தான் பொருள்படும்.

ஜாதி சட்டப்படி ஒழிக்கப்படாதவரை - ஜாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது தவிர்க்கப்பட முடியாது என்பது ரவிக்குமாருக்குத் தெரியாதா? தெரிந்தி ருந்தும் இந்தப் பிரச்சினையில் ஏன் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறார்?

நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் தலையிடியாய் இருக்க நண்பர்கள் யார்? பகைவர்கள் யார்? என்று அடையாளம் காணாமல் தினமணி குதிரையின் மீது சவாரி செய்து சமூக நீதியின்மீது வாள் வீச ஆசைப்படலாமா? 
இளைஞர்களைத் தவறான வழியில் திசை திருப்பலாமா?


ஜாதிவாரி கணக்கெடுப்பு தாழ்த்தப்பட்ட வர்களுக்குப் பொருந்தும் - பிற்படுத்தப்பட்டவர்களுக்குப் பொருந் தாது என்று பார்ப்பனர்களுக்கே உரித் தான பிரித்தாளும் தந்திர மொழியில் பேசலாமா!?


கல்வி வேலை வாய்ப்புகளில் தாழ்த் தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர் களுக்கும் உரிய இடம் கிடைக்கவில்லை என்பது அவருக்குத் தெரியாதா?


11.10.1951 அன்று மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகியபோது டாக்டர் அம்பேத்கர் வெளியிட்ட அறிக்கையில் ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசின்மீது எனக்கு அதிருப்தி ஏற்படுத்திய மற்றொரு செய்தியை இப்பொழுது குறிப்பிடு கிறேன்; அது, பிற்படுத்தப்பட்ட மற்றும் தீண்டத்தகாத மக்களை இவ்வரசு நடத்தும் முறையாகும். அரசியல் சட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை என்பதற்காக நான் பெரிதும் வருந்துகிறேன்.


இப்பணியை, குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்ட குழு அளிக்கின்ற பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு மேற் கொள்ள வேண்டும் என்பதற்காக விடப்பட்டவையாகும். அரசியல் நிர்ணய சட்டம் நிறைவேற்றி ஓராண்டுக்கு மேல் ஆகி விட்டது. இதற்கெனக் குழு அமைப் பது குறித்து அரசு இதுவரை நினைத்துக் கூடப் பார்க்கவில்லை என்று பிற்படுத்தப் பட்டவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியைக் குறித்து வருந்தும் அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைக்குக் கூட எதிராக இவரால் எப்படி எழுத முடிகிறது?

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக் கீடு தேவை என்பதை வலியுறுத்தி சைமன் ஆணையத்தின்முன் அண்ணல் அம்பேத் கர் அளித்த கருத்துக்கள் அசாதாரண மானவை 128(வீவீவீ), 129, 130, 131, 132 இந்தப் பகுதிகளில் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.


பிற்படுத்தப்பட்டவர்கள் உரிய இடங்களைப் பெற்று விட்டனர். எனவே இடஒதுக்கீடு தேவையில்லை என்ற நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்புத் தேவையில்லை என்பது ரவிக்குமார் அவர்களின் நிலைப்பாடா!?உண்மை நிலை என்ன? அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எதிர்பார்த்தபடி இந்தியக் குடியரசு தலைவரால் அமைக் கப்படும்  பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் செய்யும் சிபாரிசுகளை மத்திய அரசு ஏற்று பிற்படுத்தப்பட்டவர் களுக்கு உரியது செய்யும் என்ற எதிர்ப்பார்ப்புப் பொய்த்ததா இல்லையா?


அப்படி அமைக்கப்பட்ட காகாக லேல்கர் தலைமையிலான முதல் ஆணை யத்தின் சிபாரிசு என்ன? அவை குறைந்த பட்சம் நாடாளுமன்றத்தில் வைத்து விவாதிக்கப்படக் கூட இல்லையே!

இரண்டாவது ஆணையம் பி.பி. மண்டல் தலைமையில் அமைக்கப்பட்டு, பத்து ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு திராவிடர் கழகம் எடுத்த முயற்சியால் (42 மாநாடுகள் - 16 போராட்டங்கள்) ஒத்த கருத்துள்ள தலைவர்களும், அமைப்பு களும் சேர்ந்து குரல் கொடுத்ததால், 27 சதவீத இடஒதுக்கீடு 1990இல் சமூக நீதிக்காவலர் வி.பி. சிங் அவர்களின் தனி அக்கறையால் செயல்பாட்டுக்கு வந்தது. அதுவும் வேலை வாய்ப்பில்தான் இட ஒதுக்கீடு - கல்வியில் அளிக்கப்பட வில்லை.


வேலை வாய்ப்பில் அளிக்கப் பட்ட அந்த 27 சதவீத இடஒதுக்கீட்டை யும் எதிர்த்து வழக்கு இரண்டாண்டு களுக்குப் பின்தான் 1992இல் அமலுக்கு வந்தது.
கல்வியிலோ அதற்குப் பிறகு 18 ஆண்டுகளுக்குப்பிறகுதான் செயல்பாட் டுக்கு வந்தது; அதுவும் ஆண்டு ஒன்றுக்கு 9 விழுக்காடு அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்குப்பின் 27 சதவீதம் அமல் என்ற அறிவிப்பு - அதற்குப் பிறகு அய்ந் தாண்டுகள் என்றும் காலந் தாழ்த்தப்பட வில்லையா?


1950இல் அரசமைப்புச் சட்டம் அமலுக்குவந்த 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பிற்படுத்தப்பட்டவர்களுக் கான இடஒதுக்கீட்டின் கணக்கே முதல் முதலில் திறக்கப்படுகிறது.


அரசியல் சட்டத்தில் பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை என்பதற்காக நான் வருந்துகிறேன் - என்று அண்ணல் அம் பேத்கர் குறிப்பிட்டதை மீண்டும் இந்த இடத்தில் நினைவூட்ட கோடிட்டுக் காட்ட விரும்புகிறோம்.


பிற்படுத்தப்பட்டவர்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் தன்னிறைவு பெற்றுவிட்டனர் அவர்களுக்கு இனி மேல் இடஒதுக்கீடே தேவையில்லை என்ற தோழர் ரவி முடிவுக்கு வந்து விட்டாரா?


மத்திய அரசில் 149 அரசு செயலாளர் களில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர் யாரும் இல்லை; கூடுதல் செய லாளர் 108இல் தாழ்த்தப்பட்டவர் இருவர் - பிற்படுத்தப்பட்டோர் யாரும் இல்லை.  அய்.ஏ.எஸ். அதிகாரிகள் 3251இல் தாழ்த்தப்பட்டோர் 13.9 சதவீதம், பிற்படுத்தப்பட்டோர் 12.9 சதவீதம்; குரூப் ஏ-யில் தாழ்த்தப்பட்டோர் 13 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்டோர் 5.4 சதவீதம்; குரூப் பி-யில் தாழ்த்தப்பட்டோர் 14.5 சதவீதம்; இதர பிற்படுத்தப்பட்டோர்  4.2 சதவீதம்;  மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டோர் சதவீதம் வெறும் 5.83 என்பது ரவிக்குமாருக்குத் தெரியுமா? இதுதானே நிலைமை! இன்னும் சொல்லப் போனால் தாழ்த்தப்பட்டவர்களைவிட பிற்படுத்தப்பட்டோர் சதவீதம் குறை வாகத் தான் உள்ளனர் மத்திய அரசுத் துறை களில் - இதில் குறை காண ஏதுமில்லை.


சமூக நீதித் திசையில் தாழ்த்தப்பட் டோரும் பிற்படுத்தப்பட்டோரும் கை கோர்த்து பயணிக்க வேண்டிய ஒரு அவசியமான கால கட்டத்தில், தாழ்த்தப் பட்டோரையும் - பிற்படுத்தப்பட்டோரை யும் பிளவுபடுத்தும் வகையில் பார்ப்பனத் தன்மையோடு எழுதலாமா?


ஏற்கெனவே தாழ்த்தப்பட்டவர் களுக்கு எதிராக ஜாதீய அமைப்புகள் வரிந்து கட்டிக் கொண்டு இருக்கும் ஒரு மோசமான கால கட்டத்தில், ஜாதிக் கண்ணோட்டக்காரர்களுக்கு வசதி செய்து கொடுத்து கொம்புச் சீவி விடும் வேலையில் இறங்கலாமா? எத்தகைய விபரீதமான வேலையில் ரவிக்குமார் ஈடுபட்டுள்ளார். அதுவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செய லாளர் ரவிக்குமார் என்று தினமணி வெளியிடுவதன் விஷமம் புரிய வில்லையா?


அரசியல் இடஒதுக்கீடு இல்லாவிட்டா லும், தற்போது பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக் கீடு வழங்கப்படுகிறதே, அதன் அளவை நிர்ணயிப்பதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் தானே என்று சிலர் வாதிடு கின்றனர். ஆனால் இடஒதுக்கீட்டின் அளவை இனிமேல் ஒரு போதும் உயர்த்த முடியாதபடி உச்சநீதிமன்றம் 50 விழுக்காடு என வரம்பு நிர்ணயித்து விட்டது என்று தன் கருத்தை நியாயப் படுத்த முயலுகின்றார்.


அரசமைப்புச் சட்டத்தின் இடஒதுக்கீடு எத்தனை சதவீதம்என்று வரையறுக்கப் படாத நிலையில் நீதிமன்ற ஆணை மாற்றப்பட வேண்டும் என்று சமூகநீதி யாளர்கள் அழுத்திக் குரல் கொடுக்கும்  இந்தக் கால கட்டத்தில், 50 சதவீதத்தை நியாயப்படுத்தும் போக்கில் எழுதலாமா?


தோழர் ரவிக்குமார் எந்த உலகத்தில் சஞ்சரிக்கிறார்?

50 விழுக்காட்டுக்கு மேலே போகக் கூடாது என்று கறாராக ஒன்றும் சொல்லவில்லை உச்சநீதிமன்றம் - விதி விலக்குகளும் உண்டு, வடகிழக்கு மாநிலங்களில் 80 சதவீதத்திற்குமேல் இடஒதுக்கீடு உண்டே!

ஏன், வெகு தூரம் போவானேன்? தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் சதவீதம் 69 என்பது கூடவா தெரியாது? இதனை எதிர்த்து ஆதிக்கவாதிகள் உச்சநீதிமன்றம் சென்றுள்ள நிலையில் - இப்படி எழுது கிறார் என்றால் இதன் மூலம் யாருக்குத் துணைப் போகிறார்?

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதவீதம் எந்த அடிப்படையில், அதற்கான அளவுகோல் (சிக்ஷீவீமீக்ஷீவீணீ) என்ன? புள்ளி விவரம் எங்கே? என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டாம் என்று எழுதுகிறார் என்றால், இதன் பொருள் என்ன? பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு 50 சதவீதம் கூடாது என் பதைக் குறுக்கு வழியில் சொல்லுகிறார் என்றுதானே கருத முடியும்?


ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்துவது பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பகை மையையும், மோதலையும் உருவாக்கும். அது கல்வி, வேலை வாய்ப்புகளில் உள் ஒதுக்கீடுகளுக்கான கோரிக்கையாகவும், அரசியல் தளத்தில் எண்ணிக்கை பலம் கொண்ட சாதிகளின் சர்வாதிகாரமாகவும் வெளிப்படும் என்று எழுதுகிறார்.


தோழர் ரவிக்குமார் அவர்களே, இது உங்கள் ஆசையின் வெளிப்பாடா? என்று கேட்கத் தோன்றுகிறது.


எந்தப் பிற்படுத்தப்பட்டவர் ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டாம் என்று கொடி பிடித்தார்கள்? ரவிக்குமார் சொல்லு வதுபோல எந்தப் பிற்படுத்தப்பட்டவர் இப்படியெல்லாம் பேசியிருக்கிறார்கள்?


பச்சையான பார்ப்பனக் குரலில் பேசுகிறாரே தோழர் ரவிக்குமார்?

தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட் டவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்று ஒரு பக்கத்தில் குரல் கொடுத்து இருக்கிறோம்; ஜாதி வெறியர்களை எதிர்த்து இன்னொரு பக்கத்தில் மாநாடுகளைப் போட்டுக் கொண்டு இருக்கிறோம். இன்னொரு பக்கத்தில் இப்படி எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது சரியானதுதானா?

அண்ணல் அம்பேத்கர் சிலை திறக்கப்படும் இடங்களில் எல்லாம் தந்தை பெரியார் சிலை திறக்கப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர்  மானமிகு தொல். திருமாவளவன் கர்ச்சிக்கிறார்.

தி.க. - தி.மு.க. - விசி மூன்றும் மூன்று குழல் துப்பாக்கிகள் என்று தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் பெருமிதத் துடன் குறிப்பிட்டு வருகிறார்.

இதற்கிடையிலே கிலேசம் பேசி சிக்கலை உண்டாக்கலாமா? அதுவும் தந்தை பெரியார் பெயரைப் பயன்படுத்தி ஒரு கருத்து மோதலை உண்டாக்கப் பார்ப்பது நல்லதுதானா?

இடைஇடையே இதுபோன்ற வேலை களில் இவர் ஈடுபடுவதன் பின்னணி என்ன என்பது நமக்குப் புரியவில்லை! பக்குவமும், முதிர்ச்சியும் உள்ள தலைவர்கள் நம்மிடையே இருப்பதால் இந்தச் சிறுபிள்ளை விளையாட்டுகள் எல்லாம் எடுபடாது என்ற நம்பிக்கை நமக்கு உண்டு. வாழ்க பெரியார், வாழ்க அண்ணல் அம்பேத்கர்!

குறிப்பு: இன்று அண்ணல் அம் பேத்கர் நினைவு நாள்!


தோழர் ரவிக்குமார் பார்வைக்கு ஜாதிவாரி கணக்கெடுப்புப்பற்றி அண்ணல் அம்பேத்கரின் நிலைப்பாடு என்ன?

குழம்பி நிற்கும் சமூக ஆர்வலர்கள் டாக்டர் அம்பேத்கரின் கருத்தை உற்று நோக்குங்கள்:


இந்தியாவின் மூன்றாம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1901-இல் நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பில் ஒரு புதிய வகைப்படுத்தும் முறை பின்பற்றப்பட்டது. நாட்டின் பொதுமக்கள் கருத்தினால் ஏற்கப்பட்ட சமூக வரிசைப்படி வகைப்படுத்துதல் என்பது இந்த முறை. சாதிகளின் அடிப்படையில் மக்கள் தொகையைக் கணக்கிடுவதை சாதி இந்துக்கள் கடுமையாக எதிர்த்தார்கள். சாதி பற்றிய கேள்வியை விட்டு விட வேண்டும் என்று அவர்கள் வற்புறுத் தினார்கள்.


இந்த எதிர்ப்பை மக்கள் தொகை ஆணையர் பொருட்படுத்தவில்லை. சாதி அடிப்படையில் மக்கள் தொகையைக் கணக்கிடுவது முக்கிய மானதும் அவசியமானதும் ஆகும் என்று அவர் கருதினார். ஒரு சமூக அமைப்பு என்ற முறையில் சாதியின் நன்மை தீமைகள் என்னவாயிருந்த போதிலும், சாதியை ஒரு முக்கிய அம்சமாகக் கொள்ளாமல், இந்தியாவில் மக்கள் தொகைப் பிரச்சினை பற்றி விவாதிக்க முடியாது என்று மக்கள் தொகை ஆணையர் வாதம் செய்தார்.


இன்னமும் சாதிதான் இந்திய சமூக அமைப்புக்கு அடிப்படையாக உள்ளது. சாதியைப் பற்றிய பதிவுதான் இந்திய சமூகத்தில் பல்வேறு சமூக அடுக்குகளில் ஏற்படும் மாற்றங்களை அறிவ தற்குச் சிறந்த வழிகாட்டியாகும். ஒவ்வொரு இந்துவும் (இந்தச் சொல் இதன் மிக விரிவான பொருளில் பயன்படுத்தப்படுகிறது) ஒரு சாதியில் பிறக்கிறார், சாதிதான் அவருடைய சமய, சமூக, பொருளாதார, குடும்ப வாழ்க்கையைத் தொட் டில் முதல் சுடுகாடு வரையில் தீர்மானிக்கிறது.


மேற்கு நாடுகளில் சமூகத்தின் பல்வேறு அடுக்கு களைத் தீர்மானிக்கும் விஷயங்களான செல்வம், கல்வி, தொழில் ஆகியவை பிறப்பினாலும், பரம்பரை முறையிலும் வருகின்ற அந்தஸ்துகளின் இறுக்கத்தைத் தளர்த்த உதவுகின்றன. இந்தியாவில், ஓர் ஆன்மிக, சமூகச் சார்பும் மரபு வழிப்பட்ட தொழிலும் மற்ற எல்லா அம்சங்களையும் விட முக்கியமாகின்றன.

மேற்கு நாடுகளில் மக்கள்தொகைக் கணக்குகளில் மக்களைப் பொருளாதார அல்லது தொழில் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக வகைப் படுத்துவது மக்கள் தொகை புள்ளி விவரங்களை இணைத்துத் தொகுப்பதற்கு அடிப்படையாக அமைகிறது.


இந்திய மக்கள் தொகைக் கணக்கில் சாதி, சமய வேறுபாடுகளே இது போன்ற அடிப்படையாக அமைகின்றன. ஒரு தேசிய அல்லது சமூக அமைப்பு என்ற முறையில் சாதியைப் பற்றி என்ன கருத்தைக் கொண்டி ருந்தாலும், அதைப் புறக்கணிப்பது பயனற்றது.


ஒரு தனி மனிதனின் அதிகாரப் பூர்வ மற்றும் சமூக நிலையை அடையாளங்காட்டும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக சாதி பயன்படுத்தப்படும் வரை, பத்தாண்டுகளுக்கு ஒரு முறை அதைக் கணக்கெடுப்பது விரும்பத்தகாத ஓர் அமைப்பை நிரந்தரமாக்க உதவுகிறது என்று கூற முடியாது.

---------------------- (டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு  5, பக்கம் 6-7) 

தாழ்த்தப்பட்டவருக்குத் தான் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு பிற்படுத்தப்பட்டவருக்கு இல்லை என்று அண்ணல் அம்பேத்கர் எங்காவது சொல் லியிருக்கிறாரா? - அம்பேத்கரையும் புரிந்து கொள்ளாமல் - தந்தை பெரியார் அவர்களையும் புரியாமல் திரிபுவாதத்தில் ஈடுபடுவது திரி நூலார்களோடு இருக்கட்டும் - நமக்கு வேண் டாம் நண்பர் ரவிக்குமார் அவர்களே!

----------------------------- கவிஞர் கலி. பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம்--"விடுதலை” 6-12-2014
Read more: http://viduthalai.in/page-2/92473.html#ixzz3L84NOUXG

8 comments:

தமிழ் ஓவியா said...

//சாதிவாரிக் கணக்கெடுப்பு சாதி வெறியை அதிகரிக்கச் செய்யும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பட்டியல்களை உடைத்து உட்சாதி அடையாளங்கள் மீண்டும் தலைதூக்க வழிவகுக்கும்//
இது தோழர் ரவிக்குமாரின் வாதம்.

இடஒதுக்கீடு கொடுத்ததால்தான் ஜாதி இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை நாளைக்கு இடஒதுக்கீடு வழங்குவீர்கள் என்று பார்ப்பனர்கள் முன் வைக்கும் அதே வாதத்தை தோழர் ரவிக்குமார் அவர்களும் வைத்துள்ளார். இவரின் வாதம் யாருக்கு பக்கபலமாக அமந்துள்ளது? ஒடுக்கப்பட்ட மக்களுக்கா? பார்ப்பனர்களுக்கா?

என்ன ஒடஒதுக்கீடு என்பதற்குப் பதிலாக ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுத்தால் என்று எழுதியுள்ளார். ஜாதிவாரிக் கணக்கெடுப்பு இல்லாமல் எப்படி இடஒதுக்கீடு வழங்க முடியும். இது குறித்து பெரியார் தரும் தீர்வு இதோ உங்களின் பார்வைக்கு……

ஜாதி ஒழியும் வரை

கடைசியாக நான் கூறுவது நமக்கு அழிவையும், கீழ்த் தன்மையையும், வசதியின்மையையும் கொடுக்கிற இந்த ஜாதிகள் ஒழிந்து, மக்களுக்குச் சமமான தன்மை வரும் வரை இப்போதைய பிற்பட்ட வகுப்பினருக்கு அறிவு வளர்ந்து, நாகரிகம் அடைந்து அரசியலில் கலந்து கொள்வதற்காகக் கல்வி, உத்தியோகம் முதலியவைகளில் அவரவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி விகிதாச்சாரம் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான்
----------தந்தை பெரியார் –”விடுதலை” 9.4.1950

அவரவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி விகிதாச்சாரம் அளிக்கப்பட வேண்டும் என்று பெரியார் தெளிவாக கூறியுள்ளார். இதிலிருந்தாவது ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் அவசியத்தை தோழர் ரவிக்குமார் பொன்றவர்கள் உணர்ந்து கொண்டு தங்கள் கருத்தைக் திருத்திகொண்டால் அல்லது மாற்றிக் கொண்டு குறுக்குசால் ஓட்டாமல் இருந்தாலே போதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நன்மை பயக்கும். நன்றி.

தமிழ் ஓவியா said...

தமிழின் பிறந்த நாள்!


எண்பத்தி சிந்திக்காத
மனிதர் என்பதால்தான்
எண்பத்திரண்டு
அகவைகூட
கண்பொத்தியே
நாணிச் செல்கிறது!
தமிழ்மண் பற்றிச் சதாநேரம்
சிந்திக்கையில்
தமிழ்இனம் பற்றியே
துயிலையும் சந்திக்கையில்
எண்பத்தி எண்ண
ஏது எண்ணம் உமக்கு!
விழுப்புண் பட்டுப்போன
வாழ்க்கையின் பக்கங்கள்...
அழும் தமிழினம்
அகம் மலர வைத்த
அத்தியாயங்கள்...
நான் புரட்டும்
பக்கங்களில் எல்லாம்
தமிழின் வரலாறு
வீர மணி யெனவே
ஒலிக்கிறது!
இந்த ஒலியின் நாதம்
இடையறாது தொடர்ந்து
ஒலிக்க வேண்டும்
இளமை மனத்தோடு
இனிமை வாழ்வு;
தமிழ் வாழ
முரசாய் இசைக்க வேண்டும்!
காரணம் நீங்கள்
கணக்குகளுக்கு
கட்டுப்படாத தலைவர்!

- மஸ்கட் மு. பஷீர்
மஸ்கட் 2.12.2014

Read more: http://viduthalai.in/page1/92486.html#ixzz3LJ2repHj

தமிழ் ஓவியா said...

புராணங்கள் வரலாறு ஆகாது நிகழ்வுகளே வரலாறு வரலாறை வரலாறாகவே பதிவு செய்யுங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் வரலாற்றாளர்களுக்கு அறைகூவல்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, டிச.7- சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பழைமை வாய்ந்த சென்னைப் பல்கலைக் கழகத்தில் உள்ள பெரியார் அரங்கில் இந்திய வரலாற்றுத் துறையின் சார்பில் சிறீ நாராயண குரு அறக்கட்டளையின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. வைக்கம் போராட்டத்தில் வரலாற்றுப் பரிமாணங்கள் என்கிற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கைத் தொடங்கி வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தொடக்கவிழாப் பேருரை ஆற்றி னார்கள்.

புராணங்கள் வரலாறு ஆகாது. நிகழ்வுகளே வரலாறு. வரலாறை வரலாறாகவே பதிவு செய்யுங்கள்.வரலாற்றில் இருக்கின்ற வைரங்களைத் தேடுங்கள், கோமேதகங்களை வரலாற்றில் தேடுங்கள், குப்பைகளில் தேடாதீர்கள். குப்பை யைக் கொட்ட வேண்டிய இடங்களில் கொட்டுங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் துவக்கவிழாப் பேருரையில் குறிப்பிட்டார்.

தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது

சென்னை பல்கலைக் கழகத்தின் இந்திய வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் எஸ்.குப்புசாமி தலைமையில் நடந்த விழாவிற்கு முனைவர் ஏ.சந்திரசேகர் வரவேற்றார். சிறீ நாராயணகுரு அறக்கட்டளைத் தலைவர் ஈ.வி.வாசவன், இந்திய வரலாற்றுத்துறைப் பேராசிரியர் கருணானந்தன் அறிமுக உரை ஆற்றினார்.

இந்திய வரலாற்றுத்துறை பேராசிரியை பானுமதி தருமராசன் இணைப்புரை வழங்கி நன்றி கூறினார்.

பங்கேற்றோர்

நிகழ்வின்போது திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கேரள மாநிலத்தின் முதன்மைச் செயலாளர் (பணிநிறைவு) சுதாகரன் அய்.ஏ.எஸ்., பகுத்தறி வாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, திராவிட வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் மங்களமுருகேசன், சத்திய நாராயணசிங் இந்திய வரலாற்றுத் துறை பேராசிரியர்கள், மாணவர்கள், ஆய் வாளர்கள் பங்கேற்றனர்.

தொடக்க விழா உரையில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறீநாராயணகுரு அறக்கட்டளைத் தலைவர் ஈ.வி.வாசவன், கேரள மாநில அரசின் முதன்மைச் செய லாளராக பணிபுரிந்து பணிநிறைவுபெற்ற சுதாகரன் அய்ஏஎஸ் மற்றும் ஆய்வுரை வழங்குபவர்களான முனைவர் ரசியா பர்வீன், திருக்குறள் பிரச்சார இயக்கம் சத்தியசீலன் ஆகி யோரைப் பாராட்டிப் பயனாடை அணி வித்தார். திருவொற்றியூர் சிறீ நாராயணகுரு மந்திர் தலைவர் பாஸ்கரன், இந்திய வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் எஸ்.குப்புசாமி தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து சிறீநாராயணகுரு வாழ்க்கை வரலாற்று நூலை வழங்கினார்கள்.

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவர் உரை

தமிழர் தலைவர் ஆசிரியர் தமதுரையில் குறிப்பிட்டதாவது:

ஜாதி ஒழிப்பு, தீண்டாமை அழிப்பு மிகவும் தேவையான காலக்கட்டத்தில் சிறீநாராயணகுரு பெயரில் கருத்தரங்கம் நடத்துவது பாராட்டுதலுக்குரியது. சமூக மாற்றத்துக்கான கருத்துகளை இனிவரும் தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியமான பணியாகும்.

ஆண்டுதோறும் நினைவூட்டக்கூடிய வகையில் அறக் கட்டளை அமைத்து கருத்தரங்குகள் பல்கலைக்கழகங்களில் நடைபெறுவது என்பது வெறும் சடங்காக இருந்துவிடக்கூடாது.

சமூகப்புரட்சி, சமுதாய சமத்துவம் உருவாக்க, மேடு பள்ள மற்ற சமநீதி எல்லோருக்கும் எல்லாம் என்கிற தந்தைபெரியார் தத்துவத்தை முதலில் தெரிந்து கொள்வது இரண்டாவது புரிந்துகொள்வது வேண்டும்.

நெல்சன் மண்டேலா நினைவுநாள் (5.12.2014). சமூக நீதி, மனித உரிமைப் போரைத் துவக்கி 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு, மனித உரிமைக் கருத்துக்குப் புரட்சி யாளராகத் திகழ்ந்தவர். சமூகப்புரட்சியாளர் தந்தை பெரியார் தத்துவம் மனித உரிமைப்போரில் வரலாற்றை உருவாக்கிய வரில் ஜோதி பாபுலேவுக்குப்பிறகு அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் நாளை (6.12.2014) உள்ளது.

இல்லாத பாலத்தை இருப்பதாகக் கூறி இருக்கின்ற மசூதியை இடித்தார்கள். அம்பேத்கர் நினைவுநாளையே மறைப்பதற்காக மசூதி இடிப்பு நாளாக ஆக்கிவிட்டார்கள்.

வைக்கம் போராட்டம்தான் இந்திய வரலாற் றில் முதல் மனித உரிமைப்போராட்டம். வரலாற்று பேராசிரியர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டது.

ஒரு கட்டத்தில் வைக்கம் போராட்டம் மறைக்கப்பட்டது. They also run என்பதுபோல் உரிய முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தார்கள். 1924 ஆம் ஆண்டில் வைக்கம் போராட்டம் நடைபெற்றது. வைக்கம் வீரர் என்று தந்தை பெரியார் அழைக்கப்படுகிறார்.

பல அறிஞர்கள் மத்தியில் வெளிநாட்டில் ஜாதி, தீண்டாமை குறித்து விளக்கினால், அவர்களால் விளங்கிக்கொள்ள முடிவதில்லை. வைக்கம் போராட்டம் ஏன் தேவைப்பட்டது? தேசிய அவ மானமாக இருந்தது நெருங்காமை. காட்டு மிரு கங்களிடம் நெருங்காமை இருந்தால் பாதுகாப்பு. Untouchability. Unseeable இதைவிட வேதனை யான சூழல் வேறு உண்டா? வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங்கேற்றாரா? பாதியில் திரும்பி விட்டார் என்றெல்லாம் கூறிவருகிறார்கள்.

பங்கேற்காமல் பாதியில் திரும்ப முடியுமா? என்று கேட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வைக்கம் போராட்டத்தின் பல்வேறு வரலாற்றுக் குறிப்புகள், போராட்டக்குழுவில் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப், கேசவ மேனன், டி.கே.மாதவன் உள்ளிட்ட பலரும் போராட்டக்குழுவினராக இருந்து சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடங்குவதற்கு, இந்திய தேசியக் காங்கிரசின் தேசியத் தலைவரான காந்தியிடம் அனுமதி கோரியது, அதற்கு காந்தி அளித்த பதில்கள் ஆகிய விவரங்கள், பின்னர் ராஜாஜியிடம் தலைமை ஏற்று நடத்தித் தரக் கோரியபோது, அவர் உடல்நிலை சரியில்லை என்று ஒதுங்கிக் கொண்டதும்,

பின்னர் போராட்டக் காரர்கள் போராட்டத்தை நடத்தி அனைவரும் சிறையில் அடைக்கப் பட்டபோது, குளித்தலை மாநாட்டில் இருந்த தந்தை பெரியார் அவர்களை போராட்டத்தை நடத்திட அழைப்பு விடுத்த போது, தந்தைபெரியார் அங்கு சென்றார் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை விரிவாக ஆசிரியர் அவர்கள் தம் உரையின்போது எடுத்துரைத்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரையைக்கேட்க வரலாற்றுத் துறை மட்டுமன்றி பிற துறைகளிலிருந்தும் பேராசிரியர்கள், மாணவர்கள் பெரிதும் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.

Read more: http://viduthalai.in/page1/92511.html#ixzz3LJ4Bc4NF

தமிழ் ஓவியா said...

ஒழுக்கக்கேடே வளர்கிறது

நீ இன்ன காரியம் செய்தால், உன் பாவம் மன்னிக்கப்படும்; பரிகாரமாகி விடும்; நீ பாவமற்றவனாக ஆகி-விடுவாய் என்று சொல்வதால் ஒழுக்கக்கேடே வளர்கிறது.

(விடுதலை, 23.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/92555.html#ixzz3LMdQjo22

தமிழ் ஓவியா said...

எளிய உணவு பொருட்களின் மருத்துவ குணங்கள்


மிக எளிய உணவு பொருள்களில் உள்ள மருத்துவ குணங்களால் உடலில் உண்டாகும் பல்வேறு நோய்களை தீர்க்கின்றன.

1. சர்க்கரை நோய்க்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும். சர்க்கரை நோய்க்கு முருங்கை கீரை கண் கண்ட மருந்து பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அரைத்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் குணமாகும். குறிஞ்சாக் கீரையும் சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்தாகும்.

2. மாங்கொட்டையின் விதையை உலர்த்தி, நன்றாகப் பொடி செய்து, தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், வயிற்றி லுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளி வந்து விடும். மூல நோயும் குணமாகும். மாத விடாய் அதிகமாக போவதும் நின்று விடும். கொசுக்களை விரட்ட மாம்பூக் களைப் பொடி செய்து, சாம்பிராணி போல புகைபோட்டால் கொசுக்கள் ஓடும்.

3. இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இஞ்சி சாற்றையும் வெங் காயச் சாற்றையும் சமமாகக் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும். அஜீரணத்துக்கு இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம்.

4. கொத்துமல்லி தழையை அரைத்து சர்க்கரையுடன் பால் சேர்த்து தினம் 100 கிராம் சாப்பிட மன நோய் நீங்கும். மல்லி நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளிச்சிடும். தாகத் தைத் தணிக்கும். பல் வலி, ஈறு வீக்கம் ஆகியவையும் கட்டுப்படும். இதன் விதை எண்ணெய் சுளுக்கு நீக்கி யாகப் பயன்படும்.

5. பூண்டைச் சேர்த்து எந்த வகை உணவு சாப் பிட்டாலும் வாயுத் தொல்லை, வயிற்று அடைப்பு குறையும். இதனை தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, அதைத் தேய்த்தால் வாத வலி போகும். பூண்டுத் தழையை உப்பிட்டு அரைத்து சாற்றைப் பிழிந்து தசைப் பிடிப்புக்குத் தடவ, தசைப் பிடிப்பு விட்டுப் போகும்.

6. சிரங்கு தொல்லை தீர: சிரங்கு : 100மி.லி., தேங்காய் எண்ணெய்யில் 5 வெற்றிலைகளைப் போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தடவ நல்ல குணம் கிடைக்கும்.

7. நாள்தோறும் ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லிக்கீரையை மண்ணில்லாமல் சுத்தம் செய்து, பச்சையாகவே மென்று சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவாகும். பித்தமும் நீங்கும்.

8. இரவில் பூவன் வாழைப்பழத்தை செங்குத்து வாக்கில் இரண்டாகப் பிளந்து, அதில் சீரகத்தை வைத்து மூடி வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூலநோய் நீங்கும்.

9. சீரகத்தை நல்லெண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலைவலி, பித்த மயக்கம் நீங்கும்.

10. வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து பசுமோர் கலந்து அருந்திவர வயிற்று வலி தீரும்

11. முகச் சுருக்கம் நீங்க பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.

12. தோலில் உள்ள கரும்புள்ளிகளின் மேல் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கிக் தேயுங்கள். அதில் உள்ள அமிலத்தினால் கரும்புள்ளிகள் மறையும்.

13. கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.

14. தக்காளி, கோஸ், கேரட் ஆகியவற்றை சாப்பிட்டால் முக சுருக்கம் நீங்கும்.

15. கசகசாவை நன்கு அரைத்து குழந்தையின் தொப்புளைச் சுற்றி தடவினால் குழந்தையின் அழுகை நின்றுவிடும்.

16. மெலிந்த உடல் பருக்க: . கற்கண்டை, வெண் ணெயோடு சேர்த்து நாற்பது நாள்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.

17. தொண்டை கட்டிக்கொண்டு குரல் வராமல் சிரமப் படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக குரல் சரியாகும்.

18. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட, வயிற்றின் சுற்றளவு குறையும்.

19. சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்க வைத்து மூட்டுகளில் தடவ மூட்டுவலி குறையும்.

20. கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்.

21. இஞ்சி, எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து காலையில் அருந்த சுறுசுறுப்பு ஏற்படும். எலுமிச்சை சாறைத் நாள்தோறும் பருகி வந்தால் காலரா அண்டாது.

22. சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும் மலச்சிக்கல் தீரும். நாள் பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும்.

23. துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை ஒரு குவளை எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாள்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.

Read more: http://viduthalai.in/page-7/92530.html#ixzz3LMdrDrEa

தமிழ் ஓவியா said...

நலம் தரும் அமிலங்கள்


நமது அன்றாட வாழ்க்கையில் பல வகையான சத்துகளும், வைட்டமின்களும் சேர்ந்துதான் நம்மை ஆரோக்கியமாக செயல்பட வைக்கின்றன. ஒவ்வொரு உணவில் இருந்து பெறப்படும் சத்துக்களும் ஒவ்வொரு உறுப்பைப் பாதுகாக்கிறது. சில வைட்டமின்கள் அமிலங்களாக உடலுக்குச் சத்துக்களை வழங்குகின்றன.

இவை இயற்கையாகவே சுரக்கும் தன்மை கொண்டிருந்தாலும், இவற்றில் சில மாறுபாடுகள் ஏற்படும் போது அதாவது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுரக்கும் போது பாதிப்புகள் ஏற்பட ஆரம்பிக்கிறது. உடல்நலனுக்கு இன்றியமையாத சில முக்கியமான அமிலங்கள், பயன்கள் எந்த வகையான உணவு மூலம் பெறலாம் என்பதையும் அறிந்துகொள்வோம்.

நிக்கோடிக் அமிலம்

இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை நிலைப்படுத்த நியாசின் பெரிதும் உதவுகிறது. இந்த அமிலத்தின் அளவு குறையும்போது அதிகப்படியான மனக் கொந்தளிப்பு, சத்துக்குறைபாடு, எரிச்சல், ஞாபகமறதி, போன்ற பாதிப்புகள் தாக்கக்கூடும்.

இதை அதிகரிக்க முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டு ஈரல், பாதாம் மற்றும் பருப்பு வகைகள், முழு தானியங்கள், போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வதால் அமிலத்தின் அளவை அதிகரிக்கலாம். ஒரு மனிதனுக்கு அமிலத்தின் அளவானது நாள் ஒன்றுக்கு 18மில்லி கிராம் வரை தேவைப்படுகிறது.

போத்தொடெனிக் அமிலம்

உடலுக்குத் தேவையான சத்துக்களை உற்பத்தி செய்ய போத்தொடெனிக் அமிலம் தேவை. இது மனிதனின் மூளை, நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளுக்கு மிகவும் உதவி புரிகிறது. கவனமின்மை, பல்வலி, வாந்தி மற்றும் சத்து குறைபாடு, போன்ற பாதிப்புகள் போத்தொடெனிக் அமிலம் குறைவதனால் ஏற்படுகிறது.

இதை அதிகரிக்க முழு தானியங்கள், பருப்பு வகைகள், முட்டை, மஞ்சள் கரு, ஆகிய உணவுகளை உணவில் சேர்த்தால் சரி செய்து விடலாம். ஒரு மனிதனுக்கு அமிலத்தின் அளவானது நாள் ஒன்றுக்கு 6 மில்லி கிராம்வரை தேவைப்படுகிறது.

ஆஸ்கார்பிக் அமிலம்

வைட்டமின் சி தான், அஸ்கார்பிக் அமிலம். பி, காம்ப்ளெக்ஸ், வைட்டமின்களில் முக்கியமான வைட்டமின் இது. இந்த வைட்டமின்கள் தசை வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இரும்புச்சத்தை உணவிலிருந்து உறிஞ்சுவதற்கும், புற்றுநோய் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

இந்த அமிலமானது குறையும்போது ஈறுகளில் ரத்தம் வடிதல், இரத்தசோகை போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை அதிகரிக்க மிளகை அதிக அளவு உணவில் எடுத்துக் கொண்டால் இந்தப் பாதிப்பை தவிர்க்கலாம்.

மேலும் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, முருங்கைக்கீரை, தக்காளி, கிவி பழம், முந்திரி, நெல்லிக்காய் போன்ற உணவுகளிலும் இந்த அமிலமானது நிறைந்து காணப்படு கிறது. ஒரு நாளைக்கு மனிதனுக்கு தேவையான அளவு 40 மில்லி கிராம் ஆகும்.

Read more: http://viduthalai.in/page-7/92531.html#ixzz3LMe3gW9t

தமிழ் ஓவியா said...

மருத்துவ தன்மை கொண்ட அத்தி


செந்நிற கோடுகளுடன் அமைந்து பளபளப்புடன் சிவந்த நிறத்தில் துவர்ப்பும், இனிப்பும் கலந்த சுவையுடைய பழம் இது. இதன் நடுவில் ஒரு துளையுடன் அமைந்திருக்கும். துவர்ப்புச் சுவையுடையது.

அத்திபிஞ்சு மூலவாயு, மூலக்கிராணி, ரத்தமூலம், வயிற்று கடுப்பு ஆகியவற்றை நீக்கும். காயங் களில் வடியும் ரத்தப் போக்கை உடனடியாக நிறுத்த வல்லது. வாய்ப்புண், ஈறுகள், சீழ்பிடித்தல் போன்றவைகளுக்கு அத்தி இலைச்சாறால் வாய்கொப்பளிக்க பலன் கிடைக்கும்.

அத்தியின் பட்டை, பிஞ்சு, பால், காய், பழம் ஆகியவை மருத்துவப் பயன் உடையன. சதை, நரம்பு ஆகியவற்றை சுருங்கச் செய்தல், மலமிளக்கி, காமம்பெருக்கி, சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவால் உண்டாகும் தாகம், வறட்சி உடல் வெப்பம் முதலிவை நீங்கும். பால் பித்த நோய், நீரிழிவு, சூலை, இவற்றைப் போக்கும்.

பட்டையானது கீழ்வாய்க்கடுப்பு, குருதிப்பெருக்கு, சீதக்கழிச்சல், நாற்றமுள்ள புண்கள், வெள்ளைப்படுதல் ஆகியவற்றை போக்கும். அத்திப்பால் 15மிலியுடன் வெண்ணெய், நாட்டுச் சர்க்கரை கலந்து காலை, மாலை குடித்து வந்தால் நீரிழிவு, ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் ரத்தம் வருதல் தீரும். அத்திப் பழத்தை 10 முதல் 20 வரை காலை, மாலை சாப்பிட்டு பால் குடித்து வந்தால் தாது விருத்தி உண்டாகும். ஆண்மை ஆற்றல் அதிகரிக்கும்.

ஆண்களின் மலடும் நீங்கும். நிழலில் காய வைத்து, தேனில் ஊறவைத்தும் சாப்பிடலாம். பொடியை சூரணமாக்கி 15 கிராம் சாப்பிடலாம். அத்தி மரத்தை வெட்டினால் பால் வடியும். இது துவர்ப்பு மிக்கதாக இருக்கும். அடிமரத்தின் கீழ் வேரை பறித்து நுனியை சீவிவிட்டால் பால் வடியும். இதுவே அத்தி மரத்தின் சிறப்பாகும்.

தென்னை, பனையில் பாளையில் பால் சுரக்கும். இதற்கு வேரில் சுரக்கும். இதை 300 மில்லி முதல் 400 மில்லி வரை நாள்தோறும் குடித்து வந்தால் மேக நோய் நீங்கும். நீரிழிவு குணமாகும்.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நிற்கும். உடலுக்கு சிறந்த ஊட்டச்சத்து மிக்க உணவாகும். எதிர்ப் பாற்றல் பெற்று உடல் வனப்பு பெறும். இதன் அடிமரப் பட்டையை பசுமோர் விட்டு இடித்து சாறெடுத்து 30 முதல் 50 மில்லி நாள்தோறும் இரவில் குடித்துவர பெரும்பாடு குணமாகும். மேக நோய் புண் குணமாகும்.

கருப்பை கோளாறுகள் நீங்கும். அத்தி மரத்தின் துளிர்வேரை அரைத்து 10 கிராம் பாலில் சாப்பிட நீர்த்தாரை எரிச்சல், சூடுபிடித்தல் குணமாகும். உடல் வெப்பம் குறையும். மயக்கம் வாந்தி குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-7/92529.html#ixzz3LMeE3UR8