Search This Blog

15.12.14

பவுத்தம், சமணக் கொள்கைகளை வீழ்த்த கற்பிக்கப்பட்டதே கிருஷ்ணாவதாரம் - கீதை!


ஊன்றிப்  படித்து உண்மையை உணருங்கள்!

பவுத்தம், சமணக் கொள்கைகளை
வீழ்த்த கற்பிக்கப்பட்டதே கிருஷ்ணாவதாரம் - கீதை!
ஆரிய சூழ்ச்சியை அம்பலப்படுத்தி, தமிழர் தலைவர் அறிக்கை


பவுத்தம், சமணக் கொள்கைகளை வீழ்த்தவே கிருஷ்ணன் அவதாரம் கற்பிக்கப்பட்டு, கீதை என்ற இடைச்செருகலை  மகாபாரதத்தில் திணித்தனர் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கீதைபற்றிய சில ஆய்வுத் தகவல்கள்

1. கீதை, மஹாபாரதத்தில் இடம் பெறவில்லை இடைச்செருகலாகத்தான் கி.பி. முதலாம் நூற்றாண்டில் நுழைக்கப்பட்டது (ஆதாரம் ஏராளம்)

2. கீதை நடந்த கதை அல்ல; வரலாறு அல்ல. கற்பனைதான். இக்கருத்தை வலியுறுத்துபவர்கள் முக்கியமாக கீதைப் பிரியர்களான இருவர்

1. அண்ணல் காந்தியடிகள் - “Gita My Mother”

2. விவேகானந்தர் - கற்பனையே (கீதையின் மறுபக்கம் பக்.12)

கீதை நுழைக்கப்பட வேண்டிய அவசியம், தேவை ஏன்?

பிரபல வரலாற்றுப் பேராசிரியரான ரோமிலா தாப்பர் Hinduism Revisited இந்துயிசத்தைப் பற்றிய மறுபக்கம் என்ற நூலில் Syndicated Hinduism  என்ற பகுதி தலைப்பில் கூறும் ஆய்வுக் கருத்துக்கள்:

கி.பி. முதலாவது ஆயிரமாண்டில் தான் பகவத் கீதை காணப்படுகிறது. அதுவும் பக்தியுகம் என்ற வரலாற்றுப் பகுப்புக் காலத்தில் ஏன் இது மஹாபாரதத்தில் இடைச் செருகலாக நுழைக்கப்பட்டது என்றால், அதற்கு ஒரு பழைமைக் கால முதலே அது நடைமுறையில்  இருந்து வருகிறது  என்று காட்டவே (“to give both antiquity and currency”)
ஆகும்.


ஏன் இப்படி ஒரு நெருக்கடி பார்ப்பனீயவாத சனாதன மதத்திற்கு, (அப்போது ஹிந்துமதம் என்ற பெயர் அதற்கு இல்லை) ஏற்பட்டது என்றால் சமண, பவுத்த, மதங்களான சிரமண மதங்கள் யாக முறைகளை எதிர்த்து பெரும் அளவு வெற்றி கண்டு செல்வாக்குப் பெறத் துவங்கின.


யாகம் போய் யோகம்

முந்தைய வேதக் கலாச்சாரம் பெரிதும் நெருப்புப் போட்டு - யாகம் வளர்த்து அதில் பிராணிகள் பசு இறைச்சிகளை அவிர்ப்பாகங்களாக உண்டு - தங்களுக் குரிய சடங்கு - பிராயச்சித்தம் வேண்டுதல் நிறைவேற்றம் இவைகளைச் செய்து, வெகு மக்களிடையே எதிர்ப் பிரச்சாரத்தினால் வேத மதம் - பார்ப்பனீயம் - ஆரியம் செல்வாக்கிழந்தது.


அதிலிருந்து மீளுவதற்குக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புது வழியைக் பெரிய மாற்றமாக (Radical Change)  யாகங்கள் மூலம் உயிர்க்கொலையை தவிர்த்து விட்டு, சமண புத்தக் கருத்துக்களை ஏற்பது போன்று யோகா முறை என்பதன் மூலம் கடவுளுடன் நேரே தொடர்பு கொள்ள லாம். அதற்கு இவை போதும் - யாகம் தேவையில்லை என்று திசை திருப்பினர்.


உண்மையில் யாகத்தின் இடத்தை யோகா பிடித்தது. இந்த யோகாகூட இது திராவிடர்களின் ஆதி மூச்சுப் பயிற்சி முறைதான் - பிற்காலத்தில் அது ஏதோ பதஞ்சலி மூலம் என்று வரலாற்றை மாற்றி திருத்தி எழுதிக் கொண்டார்கள்.
சிந்து வெளி நாகரிகத்தில்  கண்டு எடுக்கப்பட்ட கல்வெட்டு சிற்பங்களில் யோகாவிற்கு உரிய பல நிலைச்  சிற்பங்கள்அதற்குச் சான்றாக கிடைத்துள்ளன.


(இதுபற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் பல நூல்கள் வடிவாக அண்மையில் இங்கிலாந்து அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் Ph.D.,., பட்ட ஆய்வுகளாக வெளி வந்துள்ளன).


உயிர்க் கொல்லும் ஆரிய முறை யாகத்திற்கு விடை கொடுத்ததோடு - பலி (Sacrifice) என்பதற்கு பதிலாக நேரடியாகவே கடவுளை நீங்கள் வேண்டினால் காணலாம் என்று அதற்காகவே புதிய புனைவுகளை உருவாக்கினர் - அடித்தளம் யோகமாக அவர்களுக்கு கிடைத்தது! இந்த உபநிஷதங்களிலேயே இதுபற்றிய சிந்தனைகள் இழையோடி உள்ளன.


சமணம், பவுத்தம் செல்வாக்கை அழிக்கவே  கிருஷ்ணன் அவதாரங்கள்

இவை எல்லாம் சமணம், பவுத்தத்தால் இழந்த செல்வாக்கினை எப்படிப் பெறுவது என்பதற்காகவே மீண்டும் பார்ப்பனீயம் எப்படி மீட்டெடுப்பது என்ப தற்காகவே சமணம் - பவுத்தம் - என்ற சிரமண நெறிகளின் செல்வாக்கான பரவுதலைத் தடுத்து, வீழ்ந்து கொண்டி ருக்கும் பார்ப்பனீயத்தினை முக்கியமாக அதன் இரண்டு அடிப்படைகளான 1) பேத  ஜாதி - வர்ண தர்மம், 2) பெண் அடிமை என்றவை மீண்டும் நிலை நிறுத்த ஒரு ஆயுதம் - கருவி - சித்தாந்த ரீதியாகத் தேவைப்பட்டது. அப்போது கண்டுபிடிக்கப்பட்டு பார்ப்பனீயத்தால் புகுத்தப் பட்டதே கிருஷ்ண அவதாரம் கீதை என்பவையாகும்.


இதற்கு ஒரு புனிதப் போர்வை போர்த்தவே பகவான் கிருஷ்ணனே மஹாபாரதத்தில் குருச்சேத்திர போரில் இப்படி ஒரு உபதேசத்தைச் செய்தான் என்று கூறுகின்றனர்.


வர்ணக் கலப்புக் கூடாதாம்!

1. வர்ணக்கலப்புக் கூடாது என்பது வலியுறுத்தப் பட்டது; காரணம் ஜாதி வர்ணம் கட்டுதளர்ந்து வர்ணக் கலப்பு வேகமாகப் பரவியதைக் கண்டு இப்படி ஒரு மூளைச் சாயத்தை ஏற்றச் செய்யப்பட்ட பக்தி முலாம் பூசப்பட்ட தந்திர ஏற்பாடே இது!


2. பெண்ணடிமை நீக்க அவர்கள் சுதந்திரமும், சமத்துவமும் உடையவர்கள் ஆகக் கூடாது என்பதற்காகத் தான் - பாவ யோனிகள் என்று வர்ணிக்கப்பட்டு அவர்கள் நிரந்தர அடிமைகளாகவே அடுக்கு ஜாதி முறையின்படி அவர்கள் பிராம்மண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர என்ற நான்கு வர்ணப் பிரிவுக்கும் கீழே பஞ்சமர்  என்ற தாழ்த்தப்பட்டோர் அனைவருக்கும், கீழே  எல்லா குலப் பெண்களும் இருக்கும் ஏற்பாடு பாதுகாக்கப்படவே இப்படி பகவான் கிருஷ்ணனே, ஜாதிக் கடமையிலிருந்து நீங்காதே - சுவதர்மம் என்பதை யாராலும் மாற்றமுடியாது என்று கூற அதற்குரிய உபகரணங்களாக, உதவும் கருவிகளாக, கர்மம் ஆத்மா மறுபிறவி - என்பதைப் பயன்படுத்தினர்! எனவே கடவுள் கற்பனை - வெறும் அறியாமைதான். ஆனால் ஆத்மா கற்பனையோ மிக மிக ஆபத்தானது.


காரணம் இது தர்மம் - கர்மம் - ஆத்மா, பூர்வ ஜென்ம வினைப் பயன் என்பதைக் காட்டி, ஜாதி என்ற பேத தர்மத் திலிருந்து நீங்குவதற்கு - விடுதலை பெறுவதற்கு வழியே யில்லை என்பதை உறுதிப்படுத்தவே புகுத்தப்பட்டன.


ஆத்மாக்கள் பலவாம்!

அதிலிருந்து பல ஆத்மாக்கள் முளைத்து விட்டன!
ஆத்மா - ஜீவாத்மா - பரமாத்மா - அந்தர் ஆத்மா (உள்ளே உள்ள ஒரு ஆத்மா) போன்ற வேடிக்கைகள் முளைத்தன!
ஆழ்ந்து ஆராய்ந்து பாருங்கள்.
ஆத்மா - ஜீவாத்மா - பரமாத்மா!
ஆத்மா - அழிவில்லாதது என்று பொருள் கூறிவிட்டு,
பிறகு ஜீவ ஆத்மா ஏன்? பரம ஆத்மா ஏன்?
ஆத்மாவிலும் வர்ணபேதம் உண்டா?
பிறகு மனிதர்களால் பட்டங்களாகத் தரப்பட்ட மஹா ஆத்மா வராமலா இருக்கும்?


எனவே இது திட்டமிட்ட செயல் - இந்த 21ஆம் நூற்றாண்டில் இது மகுடம் தரிக்க - அதுவும் மதச் சார்பற்ற ஒரு அரசு என்று அரசியல் சட்ட ரீதியான பிரமாணம் செய்யப்பட்டுள்ள நிலையில் நடைமுறை யதார்த்தத்தில் அதை வீசி வீதியில் எறிவோம் என்று துணிந்து கூறும் அளவுக்கு கீதை எப்படி ராஷ்டீரிய கிரந்த - தேசிய புனித நூலாக ஆக முடியும்!?

தூங்கியவன் துடையில் திரித்தது லாபம் அல்லவா?


-------------------------கி.வீரமணி தலைவர்,   திராவிடர் கழகம்
சென்னை 15-12-2014

22 comments:

தமிழ் ஓவியா said...

முக்தார் அப்பாஸ் நக்வி, ஷாநவாஸ் ஹுசேன், நஜ்மா ஹெப்துல்லா எப்பொழுது மதமாற்றம்?


சங்பரிவாரின் உதிரிகள் மறு மதமாற்றம் செய்வதாகக் கூறி பிரச்சினை செய்வதை பிஜேபியின் தலைமை விரும்புவதாக இருந்தால், முக்தார் அப்பாஸ் நக்வி, ஷாநவாஸ் ஹுசேன், நஜ்மா ஹெப்துல்லா போன்ற முஸ்லிம்களையும், கட்சியின் சிறுபான்மை அமைப்பி லிருக்கும் சில கிறிஸ்துவர்களையும், சீக்கியர்களையும் முதலில் மறு மதமாற்றம் செய்யலாமே! அவர்களும் மகிழ்ச்சியாக மீடியாவுக்கு போஸ் கொடுப்பார்கள். மாநிலங்களவை உறுப்பினர், அமைச்சரவை பொதுத் துறை நிறுவனத் தலைவர் பதவிகளைக் காட்டி இப்படி ஒரு முடிவை நோக்கி அவர்களை கவர்ந்திழுக்கலாமே!

- (முக நூலில் இருந்து: - விஜய் குரோவர்)

Read more: http://viduthalai.in/e-paper/92910.html#ixzz3LxpYaMl0

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

செவ்வாய் கிரகம்

நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாய்க்கு, ஒன்றான வழிபடும் முறை களை பரத்வாஜ் முனிவர் சொல்லிக் கொடுத்தார். அதன்படி செவ்வாய், விநாயகரை நோக்கி கடும் தவம் இருந்தார். பக்திக்கு மகிழ்ந்த விநாயகர் அவர் முன்தோன்றி, செவ்வாய் நவக்கிரகங்களில் ஒன் றாக விளங்கும் வரம் கொடுத்தார். இந்த விரதம் செவ்வாய்க்கிழமையன்று சதுர்த்தி திதியில் நடந்த தால் செவ்வாய்க்கிழமை யும், சதுர்த்தி திதியும் சேர்ந்து வரும் நாளில் இவரை பூஜித்து விரதம் இருப்பவருக்கு கேட்கும் வரங்களை செவ்வாய் கொடுப்பதாக கூறப்படு கிறது. இதனால் சதுர்த்தி திதியும், செவ்வாய்க்கிழ மையும் சேர்ந்து வரும் நாளை சங்கடஹர சதுர்த்தி என்று மக்கள் வழிபட வேண்டுமாம்.

செவ்வாய்க் கிரகம் பூமிக்கு வந்து விநாயகரை நோக்கித் தவமிருந்ததா? 890 மில்லியன் மைல் தூரத்தில் உள்ள ஒரு கோள் விநாயகரை நோக்கித் தவமிருந்ததாம். செவ்வாய்க்கோள் என்ன இந்துக்களின் அஞ்சறைப் பெட்டிக்குள் அடக்கமோ!

Read more: http://viduthalai.in/e-paper/92911.html#ixzz3Lxpiyzyz

தமிழ் ஓவியா said...

குபேரனிடம் திருப்பதி ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு? தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் சரமாரி கேள்விகள்

உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையான், தனது திருமண செலவுக்காக குபேரனிடம் எவ்வளவு கடன் வாங்கினார்? என சிலர் தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டி அய்) மூலம் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளனர். இதற்கு பதில் கூற முடியா மல் திருப்பதி தேவஸ்தான அதி காரிகள் திக்குமுக் காடி வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலை யான், பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்வதற்காக குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணங்கள், இதிகாசங்கள் தெரிவிக் கின்றன. இதனால் பக் தர்கள் உண்டியல் மூலம் செலுத்தும் காணிக்கை களை குபேரனுக்கு வட்டி யாக செலுத்துகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த நம்பிக்கை யில்தான் ஏழுமலையானுக்கு பக்தர்கள் கோடிக் கணக் கில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். நடப்பு வருவாய் ஆண்டில் உண்டியல் காணிக்கை ரூ. 1,000 கோடியை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படு கிறது. இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத் தின் கீழ் சிலர் திருமலை-திருப்பதி தேவஸ்தானத் துக்கு மனு அனுப்பி வரு கின்றனர். ஏழுமலையான் தனது திருமண செலவுக் காக குபேரனிடம் எவ் வளவு கடன் வாங்கினார்? இந்தக் கடனில் பக்தர்கள் காணிக்கையாக செலுத் திய தொகையில் அவர் எவ்வளவு வட்டி செலுத்தி உள்ளார்? மீதம் உள்ள அசல், வட்டி தொகை எவ்வளவு? தேவஸ்தான நிர்வாகத் தினர் கடனை எவ்வாறு செலுத்தி வருகின்றனர்? இதுவரை பக்தர்கள் காணிக்கை செலுத்திய தொகை எவ்வளவு? என சரமாரியாக கேள்விக் கணைகளை தொடுத்து வருகின்றனர். பதில் கிடைக்காவிட்டால் நீதி மன்றத்தை அணுகப் போவதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவைச் சேர்ந்த டி. நரசிம்ம மூர்த்தி என்பவர் இதே கேள்விகளை கேட்டு தேவஸ்தானத்துக்கு சமீபத் தில் கடிதம் அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து தேவஸ் தான அதிகாரிகள் கூறும் போது, புராண, இதிகாசங் களில் ஏழுமலையான் குபேரனிடம் கடன் வாங்கியதாக கூறப்பட் டுள்ளது. ஆனால் சிலர் இதற்கு சாட்சியங்கள் தேவை என்றும், இது வரை தேவஸ்தானம் சார்பில் குபேரனுக்கு கட்டிய வட்டி குறித்து கணக்கு காட்ட வேண் டும் என்றும் ஆர்டிஅய் சட்டத்தின் கீழ் கோரி உள்ளனர். சுய விளம் பரத்துக்காக கேட்கப்படும் இதுபோன்ற கேள்வி களுக்கு பதில் அளிக்கத் தேவையில்லை என்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/92913.html#ixzz3LxpskF86

தமிழ் ஓவியா said...

மெய்ப்பிக்க முடியும்!


புராணங்கள் என்பதெல்லாம் நம்மை அடிமைப்படுத்தி நம் உழைப்பைப் பார்ப்பான் உறிஞ்சி உழைக்காது வாழவும், நம்மை முட்டாளாக ஆக்கி முன்னேற்றமடையாமல் தடுக்கவும் பார்ப்பனர்களால் கற்பனையாகச் செய் யப்பட்ட கதைகளேயாகும். இவைகளை ஆதாரங்களோடு மெய்ப்பிக்க முடியும்.
(விடுதலை, 17.3.1961)

Read more: http://viduthalai.in/page-2/92919.html#ixzz3Lxq7QGOT

தமிழ் ஓவியா said...

சிக்கலே மோடி அரசின் சாதனை!

- மு.வி.சோமசுந்தரம்

எரிமலை என்றவுடன், தீக்குழம்பும், அழிவும், அழுகுரலும் நம் சிந்தனைக்கு வரும். எரிமலைகளிலும் தரம் பிரித்துக் கூறப்படும் செயலற்றுப்போன எரிமலை (DEFUNCT) தூங்கும் எரிமலை (DORMANT) வெடிக்கும் தன்மைக் கொண்ட எரிமலை (ACTIVE) என்பவை அவை.

செழுமையையும், ஒற்றுமையையும், அமைதியையும், சீர்குலைக்கும் வகை யில் வெறுப்பு, வன்மை, மடமை என்ற தீக்குழம்பைத் தன் வயிற்றில் தக்க வைத்துக்கொண்டு தூங்கும் எரிமலை யாக இருக்கும் ஒரு அமைப்பைக் கண்டு அஞ்சவேண்டிய நிலையில் மனித நேய பற்றாளர்கள் உள்ளனர்.

குமுறும் தீக்குழம்பாக நாம் பார்க்க இருப்பது கள்ளிச்செடி என்ற ஆர். எஸ்.எஸ். என்ற அமைப்பின் ஒரு முள்ளாக உள்ள விசுவஇந்து பரிட்சத்தின் முதன்மைத் தலைவரான அசோக் ஷிங்காலின் உள்ளக்கிடக்கையும் நச்சு நினைப்பும்.

இந்திய துணைக்கண்டத்தின் இன் றைய பிரதமர் நநேரந்திர மோடி அவர்கள். அவர் இந்த பதவிக்கு வர வேண்டும் என்று ஏங்கிய தவமிருந்த நிலையை விளக்கும் வகையில் அசோக் ஷிங்கேல், அவுட்லுக் (Out Look)
9.9.2013 இதழில் அவர் அளித்த பேட்டியில் கூறி யுள்ள செய்தியாவது (தூங்கும் எரி மலையான மனநிலை)

அசோக் ஷிங்காலின் ஆசையும் ஆசியும்

இன்றைய நிலையில் எங்கள் மதக் குருக்களுக்கு, கோயில்களுக்கு, பசுக் களுக்கு, கங்கை நதிக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒரு சங்கராச்சாரியார் மேல் கொலை குற்றம் உள்ளது. வேறு ஒருவர் மேல் பாலியல் குற்றம் உள்ளது. இவையெல்லாம் இந்துமதத்தைப் புரிந்து கொள்ளாத, மதிக்காத, நாத்திக, மதச் சார்பின்மைப் பற்றி பேசுகிற ஒரு கூட்டத் தினரால் ஏற்படும் பிரச்சனைகள். சோனியா காந்தி போன்ற வெளிநாட் டவர்கள் கூட இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசுகிறார்கள். 1990க்குப் பிறகு இந்து மதத்தில் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்து மதத்தை எதிர்ப்பவர்கள் அழிக்கப்படு வார்கள். எங்கள் மதகுருக்களையும், மதத் தையும் கொச்சைப்படுத்தும் அசம்கான் போன்றவர்கள் பாகிஸ்தானில் தஞ்சம் புக வேண்டியவர்கள்.

ராமர் கோயில் கட்டுவதை ஆதரிப்ப வர்கள் புகழடைவார்கள். எதிர்ப்பவர்கள் இழிவுபடுத்தப்படுவார்கள். எங்களுக்கு அரசியல் கட்சிகளால் பயன் ஏதும் இல்லை. உண்மையில் அரசியல் கட்சிகள்தான் எங்களால் பயன் பெறுவர்.

மோடி நாட்டை வழிநடத்த வேண்டும் என்று கடவுளே விரும்புகிறார். கேதார் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குபோல 2002, கோத்ரா நிகழ்வு குஜராத்தில் ஏற்பட்ட பிறகு, இந்துக் களிடையே ஒரு வீரியம் ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆண்டுகளில் இந்துத்துவா வின் எழுச்சியைக் காணமுடியும். அதன் விளைவாக அரசியல் கட்சிகள், ராமர் கோயில் கட்ட தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு வரவேண்டி யிருக்கும் (பி.ஜே.பி. அதன் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. அதன்படி அது செயல்பட 2019 வரை கால அவ காசம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஆர். எஸ்.எஸ். தலைவர் கூறுகிறார். ஏன் தமிழ்நாட்டில் அஇஅதிமுக கூட அதன் தேர்தல் அறிக்கையில் சேதுசமுத்திரத் திட்டம் தேவை பற்றி கூறியிருக்கிறது).

ஏற்பட்டிருக்கும் இந்துத்துவா அவை அரசியல் காரணத்துக்காகவோ, தேர் தலை கவனத்தில் கொண்டோ ஏற்பட வில்லை. இந்த முறை, இந்த நாட்டின் வெளிப்பாட்டை, ராமபக்தர்கள் தான் தீர்மானிக்க உள்ளார்கள். ராமர் கோயில் கட்டுவதில் ஈடுபாடு காட்டாதவர்களுக்கு பாதிப்புதான் வந்து சேரும். அத்த கையோர் ஆட்சி அதிகாரத்தின் வாசலைக்கூட மிதிக்க முடியாது. தேர்தல் முடிவு பலரை வியப்பிலாழ்த்தும் என்பது உறுதி.

அசோக் ஷிங்காலின் ஆசை, எதிர் பார்ப்பு கை கூடிவிட்டது. அவர் விருப்பப் படியும் கடவுள் விருப்பப்படியும் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகி விட்டார். பிறகு என்ன? பலா பலன் என்ன? பலப்பல கூறலாம். எனினும் தற்போதைய நிலை யில், இந்தியாடுடே (டிசம்பர் 3, 2014) இதழில் வந்துள்ள கணிப்பை (பக்கம் 10) பார்ப்போம்.

ஆக மோடியின் எழுச்சி புத்தாயிர மாண்டில் பின்னோக்கி பாய்ச்சலை மேற்கொண்டு கடந்த காலத்துடன் தொடர்பு கொள்வதற்கான முதல் வாய்ப் பாகும். அல்லது இன்னும் கடுமையாக சொல்வதானால் கடிகாரத்தையும் நாட் காட்டியையும் பின்னோக்கி திருப்புவ தாகும். முற்போக்கை பாராம்பரியத்துடன், ஆர்வத்தை புராணங்களுடன் குழப்பிக் கொள்ளும் மனநிலை. இது மிகவும் சிக்கலாகிறது.

இது கடவுள் கொடுத்த மோடியின் ஆட்சி, அனுபவி ராஜா அனுபவி! அடுத்து வரும் அதிர்ச்சி ஆபத்து மோடி அரசு அறிவிப்புக்கு காத்திருப்போம்.

Read more: http://viduthalai.in/page-2/92922.html#ixzz3LxqfQoVY

தமிழ் ஓவியா said...

ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் குடும்ப ஓய்வூதியம் தர வேண்டும்


சென்னை, டிச.15: ஓய்வூதியம் விதிகளின் அடிப்படையில் 1 ஆண் டுக்கு குறைவாக பணியாற்றினாலும் ஓய்வூதியம் தர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் சுகாதாரத்துறையில் அலுவலக உதவியாளராக கடந்த 1987 நவம்பர் 21இல் சந்திரசேகர் பணியில் சேர்ந்தார். இந்நிலையில், கடந்த 1988 ஜூன் 13ம் தேதி சந்திரசேகர் மரண மடைந்தார். இதையடுத்து, தனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனக்கோரி சந்திரசேகரின் மனைவி ராதாபாய் சிட்டி சிவில் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் சுகாதாரத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ஒரு ஆண்டுக்கும் குறைவாக பணியாற்றியவரின் வாரி சுக்கு குடும்ப ஓய்வூதியம் தர முடியாது என்று கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த சிட்டி சிவில் நீதிமன்றம் ராதாபாய்க்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சுகாதாரத்துறை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதன்மை கணக்காளர் தாக்கல் செய்த மனுவில், ஓய்வூதிய விதி 49 (2)ல் அரசு ஊழியர் இறந்தால் அவர் ஒரு ஆண் டுக்கு குறைவாக பணியாற்றியிருந்தா லும் குடும்ப ஓய்வூதியம் வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: அரசு ஊழியர் ஒரு ஆண்டுக்கும் குறைவாக பணி செய்த நிலையில் மரணமடைந்தால் அவரது சட்டப்பூர்வ வாரிசுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க விதிகளில் இடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு 4 வாரங் களுக்குள் ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை முதன்மை கணக்கா ளருக்கு சுகாதாரத்துறை அனுப்ப வேண்டும். ஓய்வூதியம் தருவது குறித்து முதன்மை கணக்காளர் முடிவு அறிவித் தவுடன் காலதாமதம் செய்யாமல் மனுதாரருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். இந்த ஓய்வூதியம் 1989 முதல் கணக்கிடப்பட்டு 10 சதவீத வட்டியுடன் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-2/92923.html#ixzz3Lxr2nNrB

தமிழ் ஓவியா said...

வயிற்றை சீரமைக்கும் சீரகம்


சமையலில் அதிகம் பயன்படுத்தக்கூடிய பொருள் சீரகம். சீரகம் ஒரு சிறுதானியப் பயிர். மருத்துவ குணமுள்ள மூலிகையாகும். சீர் + அகம் = சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத் தன்மைக்காக உணவுப்பொருள்களில் சேர்க்கப்படுகிறது.

மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும். கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழ சாற்றுடன் சீரக குடிநீரை சேர்த்துக் கொடுக்கலாம். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். சீரகம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும். சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மசிய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாக வாய்ப்புள்ளது. கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித்துத் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.

பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை, நெஞ்செரிச்சல் தீர சீரகம் + கொத்தமல்லி + சிறிது இஞ்சி இவைகளை லேசாக வறுத்து நீரில் கொதிக்கவைத்து வடித்து தேநீர் போல வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகி வரலாம். வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம் + சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.

சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாள்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். திராட்சை ஜூஸ் உடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். இதுபோன்ற எண்ணற்ற நன்மைகள் சீரகத்தில் உள்ளன.

Read more: http://viduthalai.in/page-7/92880.html#ixzz3LxsJfwCh

தமிழ் ஓவியா said...

எளிய உணவு பொருள்களின் மருத்துவ குணங்கள் (தொடர்ச்சி)

மிக எளிய உணவு பொருள்களில் உள்ள மருத்துவ குணங்களால் உடலில் உண்டாகும் பல்வேறு நோய்களை தீர்க்கின்றன.

23. வயிற்றுவலியா? ஒரு டம்ளர் கொதிநீரில் ஒரு மேசைக் கரண்டி தேனைக் கலந்து குடித்தால் 15 நிமிடங்களில் வலி பறந்துவிடும்.

24. காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் இருமல் குணமாகும். கற்கண்டுடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும்.

25. உடல் அசதியா? முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் குணமாகும்.

26. காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் ஒரு சிட்டிகை கலந்து இரண்டு வேளை சாப்பிட குணமாகும்.

27. மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைத்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.

28. இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.

29.. சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு ஒரு டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.

30. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து மூன்று வேளை கொடுக்க குணமாகும்.

31. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து நான்கு சிட்டிகை எடுத்து இஞ்சி சாற்றுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

31. உலர் திராட்சைப் பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

32. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

33. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

34. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

35. புதினா விதையை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

36. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை உணவை சாப்பிடக் கொடுக்கக்கூடாது.

37. கேரட் சாறும், சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

38. எலுமிச்சை பழச்சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உடல்சூடு குறையும்.

39. நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

40. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

41. கொழு கொழுவென குண்டாக இருப்பவருக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு கொடுக்கவேண்டும்.

42. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைத்துக் காணப்படுபவர்கள், உடல் நலம் தேறி எடை அதிகரிக்கும்.

43. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

44. தினமும் குடிநீரைக் காய்ச்சும்போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப்பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், செரிமானத்திற்கு உதவும், வாயுவை அகற்றும், மலச் சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

45. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.

46. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

47. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

48. வெள்ளைப் பூசணிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொழுப்பு, தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

49. வால்மிளகின் தூளை பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் கலந்து சாப்பிட கபம் நீங்கும்.

Read more: http://viduthalai.in/page-7/92881.html#ixzz3LxseHQJm

தமிழ் ஓவியா said...

இருதய நோய்க்கு ஒலி அலை அதிர்வு சிகிச்சை

இருதய நோயினால் பாதிக்கப்பட்டு, உடல் தகுதி யின்மை மற்றும் வேறு காரணங்களால் சிகிச்சை செய்ய முடியாதவர்களுக்கு புதிய அதிநவீன ஒலி அலை அதிர்வு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

நெஞ்சுவலி, மாரடைப்பு, இருதய செயலிழப்பு, ரத்தநாள அமைப்பு பிரச்சினைகளுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி, பைபாஸ் மற்றும் இஇசிபி சிகிச்சை முறைகள் நடை முறையில் உள்ளது. இத்தகைய சிகிச்சையினால் இருதய ரத்தகுழாய் அடைப்புகள் சரி செய்யப்பட்டு இருதய ரத்த ஓட்டம் அதிகரிக்கப்படுகிறது.

ஆனால், உடல் தகுதியின்மை, சிறுநீரக கோளாறு, இருதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு மேற்கூறிய சிகிச்சை முறைகள் செய்ய முடிவதில்லை. மேற்கூறிய பிரச்சினை உள்ளவர்கள், பைபாஸ், ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து மீண்டும் நெஞ்சுவலி, மூச்சு திணறல் உள்ளவர்கள் நவீன ஒலி அலை அதிர்வு சிகிச்சை செய்யலாம்.

இச்சிகிச்சையானது பாதிக்கப்பட்ட இருதய தசைகளின் மீது கட்டுப்படுத்தப்பட்ட ஒலி அலை அதிர்வுகளை செலுத்துவதன்மூலம் புதிய நுண்ணிய ரத்த நாளங்களை உருவாக்கி தடைபட்ட ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது.

இந்த சிகிச்சை முறையில் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. மயக்க மருந்து கிடையாது, வலி இல்லை, உடலினுள் எந்தவிதமான மருந்துகளோ, ஊசியோ செலுத்துவது இல்லை. இந்த சிகிச்சை முறையில் இருதயத்தில் எந்த பகுதிக்கு சிகிச்சை அளிக்கவேண்டுமோ அந்த இடத்தை கணினி மற்றும் இருதய ஸ்கேன்மூலம் பதிவு செய்து அந்த இடத்தில் ஒலி அலை அதிர்வு சிகிச்சை கருவியை உடலின் மேல் மார்பு பகுதியில் பொருத்தி ஒலி அலை அதிர்வுகள் செலுத்தப்படுகிறது.

ஒலி அலை சிகிச்சையின்மூலம் பலன் பெறும் இருதய நோயாளிகள் முன்பு போல் அதிக மருந்துகள் சாப்பிட வேண்டியதில்லை. பாதிக்கப்பட்ட இருதய தசைகள் புத்துயிர் பெறுகிறது. இதனால், நோயாளிகள் மூச்சு திணறல், நெஞ்சுவலி குறைகிறது மற்றும் நடக்கும் திறன் அதிகரிக்கிறது.

இந்த சிகிச்சையை தொடர்வதற்கு முன்பு நோயாளிகள் இருதய மற்றும் ஒலி அலை அதிர்வு சிகிச்சை நிபுணரை சந்தித்து அவரது ஆலோசனைப்படி இருதய ரத்த நாளங்கள், தசைகள் மற்றும் செயல்திறனை கண்டறியும் பரிசோதனைக்கு உட்படுத்தபடுகிறார்கள்.

அதன்பின்னர் நோயாளிகளின் பரிசோதனை முடிவுகள் மருத்துவரால் ஆய்வு செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படவேண்டிய இருதய தசை பகுதிகள் கண்ட றியப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். நோயாளிகளின் தன்மைக்கேற்ப இச்சிகிச்சை அளவு முடிவு செய்யப்படுகிறது என்கின்றனர் இருதய சிகிச்சை நிபுணர்கள்.

Read more: http://viduthalai.in/page-7/92882.html#ixzz3LxsoQpvq

தமிழ் ஓவியா said...

கல்யாணம்


மனிதன் மிருகப் பிராயத்தி லிருந்தபோது காட்டுமிராண்டி யாக இருந்த காலத்தில் மனிதன் தன் மூர்க்கத்தனத்தைக் காட்டப் பெண்ணை அடக்கியாள பெண்ணைத் தனக்கு அடிமையாக்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்தக் கல்யாணம். - (விடுதலை, 10.8.1968)

Read more: http://viduthalai.in/page-2/92932.html#ixzz3M4Lhr9pD

தமிழ் ஓவியா said...பழி தூற்றுவோரைப் புறந்தள்ளி விழி திறந்து வழிநடக்கும் வித்தகர்களாக தி.மு.க.வினர் - பாசறை வீரர்கள் வீறுநடை போடட்டும்!

கட்டுப்பாடு என்கிற கவசத்தை அணிந்தால்-

காகித அம்புகளால் கழகத்தை வீழ்த்திட முடியாது!

தமிழர் தலைவர் ஆசிரியர் வேண்டுகோள் அறிக்கை

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் கருநாடகத்திலும், கேரளாவிலும் நதிகளின் குறுக்கே அணைகளைக் கட்டுவதா? - கண்டன ஆர்ப்பாட்டம்!பழி தூற்றுவோரைப் புறந்தள்ளி விழி திறந்து வழிநடக்கும் வித்தகர்களாக தி.மு.க.வினர் - பாசறை வீரர்கள் வீறுநடை போடட்டும்! துரோகங்களால் துளை போட முடியாத எந்த இயக்கத்தையும், சிறு தொல்லைகளால் தொலைத்துவிட முடியாது! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

ஜாதி - தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், பகுத்தறிவை பயன்படுத்தாமை, மதவெறி - இவற்றையெல் லாம் ஒழிப்பதை தனது மூலக் கொள்கையாய் கொண்டுள்ள ஓர் அரசியல் கட்சி - திராவிடர் கழகத்தைத் தாய்க் கழகமாகக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம்.

திராவிட நாகரிகம், பண்பாடு, மொழி இவைகளை வர லாற்றுப் பெருமையாகவும், பாரம்பரியமாகவும் கொண்ட தளம் உள்ள - பலமான வேர் உள்ள ஒரு சுயமரியாதை இயக்கத்தின் ஒரு கூறு.

யதார்த்தத்தை உணராதவர்கள் அல்ல நாம்!

வாக்கு வங்கியை எதிர்நோக்கும் எந்த ஒரு அரசியல் கட்சியும், திராவிடர் கழகத்தைப்போல் - நூற்றுக்கு நூறு - அதே இலட்சியங்களை அப்படியே கூறி, அரசியல் கட்சியை - நடத்திட முடியாது என்ற யதார்த்தத்தைஉணராதவர்கள் அல்ல நாம்!

சில விஷம விமர்சனங்கள் திராவிடம் மாறிவிட்டது; தேய்ந்து விட்டது என்றெல்லாம் கூறிடுவது - சில பல மாற் றங்கள் அதன் கொள்கை அணுகுமுறைகளில் இருப்பதைப் பயன்படுத்திக் கூறுவது, திராவிடர் இயக்கம் அரசியலில் பெற்ற வளர்ச்சியை அழிக்க எண்ணும் சூழ்ச்சிப் பிரச்சாரம் ஆகும்.

அரசியல் கட்சியாக உருவாகிவிட்டாலே, கொள்கை களில் ஓரளவுக்கு சமரசம் செய்துகொள்ளவேண்டிய நிர்ப் பந்தம் ஏற்படும் என்பதால்தான் தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் கழகம் பதவி, அரசியல் பக்கமே தலைவைத்துப் படுக்கவும் கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தார்கள்.

அண்ணாவின் கருத்துரை

என்றாலும், அவரது கொள்கை லட்சியங்களுக்கு அருகில் - நெருங்கி வந்த அரசியல் கட்சியாக மற்ற கட்சி களைவிட, திராவிட முன்னேற்றக் கழகம் அமைந்துள்ளது என்பது அதன் நிறுவனரான அறிஞர் அண்ணாவின் கீழ்க்காணும் கருத்துரை மூலம் தெளிவாகும்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஓர் அரசியல் கட்சி மட்டுமல்ல; இது ஒரு சமுதாயச் சீர்திருத்த இயக்கம். இதில் ஈடுபட்டிருக்கின்ற அத்தனைப் பேரும் யார் யார் எந்தெந்த இடத்தில் இருப்பது என்பதல்ல; யார் யார் எந்தெந்த நேரத்தில் பொறுப்புக்களை ஏற்றுக்கொள் வது என்பதும் முக்கியமல்ல; ஒவ்வொருவரும் ஒவ் வொரு பொறுப்பை ஏற்றிருப்பது இந்த இயக்கத்திலே அமைந்திருக்கின்ற போர்ப் பாசறை போன்றதாகும்.

தி.மு.க.வின் உறுப்பினர்கள் முக்கிய பொறுப்பாளர் களுக்கான பாலபாடம் இது!

தி.மு.க. என்ற அரசியல் கட்சிக்கும், நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், தி.மு.க.வின் பிரதான லட்சியம், சமூகச் சீர்திருத்தம் - அந்த லட்சியங்களை அடைய ஒரு வழி - தி.மு.க.வின் அரசியல் பங்கெடுப்பு. பதவிகள் அதற்கு ஒரு வாய்ப்பு அவ்வளவே!

ஆனால், மற்ற கட்சிகளுக்கு இந்த இலக்கு பெரும் பாலும் இருக்காது; இருந்தாலும், இருப்பதாகச் சொல்லப்பட் டாலும் அது ஊறுகாய், துவையல் போன்ற அளவேயாகும்.

1967 இல் தி.மு.க. வெற்றி பெற்றபோது, அறிஞர் அண்ணா தெளிவுபடுத்திய ஒரு கருத்தும் தி.மு.க. தோழர்கள் உள்பட அனைவரும் புரிந்துகொண்டு, மனதில் இறுத்திட வேண்டிய முக்கிய கருத்தாகும்.

10 ஆண்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி யைப் பிடித்துவிடவில்லை. இதற்குமுன் இதன் பாட்டன் 50 ஆண்டு வரலாறு பெற்ற நீதிக்கட்சி என்ற தென் னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயர் கொண்ட பார்ப்பனரல்லாதார் கட்சி - அதன் தொடர்ச்சி - புத்தெழுச்சிதான் தி.மு.க.வின் அரசியல் வெற்றி என்று செய்தியாளர்களுக்கு அண்ணா அவர்கள் கூறினார்.

இதற்கு நேர்மாறான கட்சிகள் - அரசியல் கட்சிகள் பல உள்ளன.

தமிழ் ஓவியா said...

கருப்பு - சிவப்பு என்பது வெறும் வண்ணமல்ல; தி.மு.க.வைப் பொறுத்தவரை எண்ணம், இலட்சியம், கொள்கை!

எனவேதான், திராவிடர் கழகமும், திராவிட முன் னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். இதை தி.மு.க.வின் முக்கிய பொறுப்பாளர்கள் - உணர்ந்து ஓதிட வேண்டும்.

வெறும் பதவிகளுக்காக மட்டும் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல தி.மு.க.

கருப்பு - சிவப்பு என்பது வெறும் வண்ணம் அல்ல; தி.மு.க.வைப் பொறுத்தவரை எண்ணம், இலட்சியம், கொள்கை எல்லாம்!

இதைத்தான் மிக அழகாக மிகுந்த பொறுப்புணர்ச்சி யுடன் - தி.மு.க.வின் தலைவர் கலைஞர் அவர்கள் இன்றைய முரசொலி ஏட்டில் (17.12.2014) விரிவான கடித அறிக்கையாக உடன் பிறப்புகளுக்கு எழுதியுள்ளார்.

வாசித்தால் மட்டும் போதாது - சுவாசிக்கவேண்டும்!

தாய்க்கழகமான திராவிடர் கழகம் அதனைப் பாராட்டி வரவேற்பதோடு, அதனை தி.மு.க.வினர் வாசித்தால் மட்டும் போதாது; சுவாசிக்கவேண்டும்; மனதில் பதிய வைத்துக்கொண்டு அசை போடவேண்டும். அதனை செயலில் காட்டவேண்டும்.

தி.மு.க.வின் பலம் என்பது ஆட்சியால் அளக்கப்பட வேண்டிய ஒன்றல்ல; திராவிடர் இனத்தின் மீட்சியால் அளவிடப்படவேண்டிய காலக் கடமைகளில் ஒன்று!

தி.மு.க.விற்கு எதிராக ஒரு சிறு துரும்பு தென்பட்டாலும், அதைப் பெரும் தூணாக ஆக்கி மகிழும் பார்ப்பனீய ஊடகங்களுக்கு ஆத்திரம் ஏன்?

தி.மு.க.வை அழித்துவிட்டால், தங்களது மிகப்பெரிய இன எதிரி அரசியல் களத்தில் வேறு இருக்க முடியாது என்பதற்காகத்தான் - நாளும் பல்வேறு பிரச்சினைகள் ஊதி ஊதி ஒரு பெரும் பிரச்சாரப் போரையே தந்திர மூர்த்திகள் செய்கின்றனர்; காரணம், ஆரிய மாயை அப்படிப்பட்டது!

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பவர்கள் தெளிவு பெறாத பேதையர்கள். திராவிடத்தால் எழுந்தோம் - வாழ்ந்தோம் - வாழ்வோம் என்பவர்கள் தீரம் மிக்க வீரர்கள் என்பதை தி.மு.க. தனது பிரச்சார முழக்கமாக ஆக்கி திக்கெட்டும் கொண்டு செல்லவேண்டிய தருணம் இது!

திராவிடம் - ஆரியம் என்பது தனி மனித ரத்தப் பரிசோதனையால் அல்ல, பண்பாட்டின் அடையாளம்; தனித் தன்மை! அனைவருக்கும் அனைத்தும் என்ற சமூகநீதிக் களம்!

முப்படைகளின் சக்தியைப் பெற்று செயலாற்றும் லட்சிய அரண்கள்!

இன்றைய காலகட்டத்தில் தி.மு.க.வின் அரிய காவ லர்கள் அதன் ஒப்பற்ற தலைவர் மானமிகு சுயமரியாதைக் காரரான கலைஞர் அவர்களும், அதன் லட்சியக் காவலர் இனமானப் பேராசிரியரும், அவர்களது ஆணைகளை செயல்படுத்திடும் செயல் வீரச் செம்மல் தளபதி ஸ்டாலின் ஆகிய மூவரும்தான்!

இம்மூவரும் முப்படைகளின் சக்தியைப் பெற்று செயலாற்றும் லட்சிய அரண்கள் தி.மு.க.வுக்கு.

இந்த எஃகு கோட்டைகளின் மூலபலச் சுவர்கள் - தந்தை பெரியார், அறிஞர் அண்ணா என்ற அதிர முடியாத அஸ்திவாரங்கள் அந்தக் கோட்டைக்கு உண்டு.

எனவே, பதவிச் சலசலப்புகள் - பத்திரிகைப் புரளிகள், பகடிகள் - இதன் பலத்தை ஒருபோதும் பறித்துவிட முடியாது!

பழி தூற்றுவோரைப் புறந்தள்ளி, விழி திறந்து வழிநடக்கும் வித்தகர்களாக தி.மு.க.வினர் பாசறை வீரர்கள் வீறுநடை போடட்டும்!

இயக்கத்தின் எதிர்காலத்தை எண்ணுங்கள்!

ஜாதிவெறி - மதவெறி மற்றும் பல்வேறு சூழ்ச்சிப் பொறிகள் - தி.மு.க.வை வீழ்த்திவிடக் காணும் கனவுகள் கலைந்துவிடும் என்பது உறுதி.

கட்டுப்பாடு - கட்டுப்பாடு - கட்டுப்பாடு என்ற கவசத்தை அணிந்தால், தோழர்களே மற்றவரின் காகித அம்புகளால் கழகத்தை வீழ்த்திட முடியாது!

துரோகங்களால் துளை போட முடியாத எந்த இயக்கத் தையும், சிறு தொல்லைகளால் தொலைத்துவிட முடியாது!
சூளுரையுங்கள்!

சுயமரியாதைச் சூரணத்தை உண்ணுங்கள்!

அதை வைத்தே இயக்கத்தின் எதிர்காலத்தை எண்ணுங்கள்!

உரிமையுள்ள தாய்க்கழகத்தின்

கி.வீரமணி
பொறுப்பாளன்
திராவிடர் கழகம்

சென்னை
17.12.2014

Read more: http://viduthalai.in/e-paper/92977.html#ixzz3M9mCth00

தமிழ் ஓவியா said...

தி.மு.க. தோழர்களுக்கு கலைஞர் வேண்டுகோள்!


அண்ணா இருந்தபோது அவருடைய நோக்கத்தை எப்படி நாம் நிறைவேற்றியி ருக்கிறோமோ, அதைப்போல இன்றும் அண்ணா இருக்கிறார்; உயிரோடுதான் இருக்கிறார்; அணுப் பொழுதும் நம்மை விட்டு அகலாமல் நமது இதய உணர்வோடு ஒன்றிக் கலந் திருக்கிறார்; அவரை என்றைக்கும் நாம் மறப்பதில்லை; மறக்கவும் மாட்டோம் என்பதற்கு அடையாளமாகத்தான் இந்தத் தேர்தலில் கழகத்தினர் பெறுகின்ற வெற்றி தோல் விகளைப் பொறுத்து; இயக்கத்தின் தொடக்கக் காலத்தி லிருந்து நாம் ஏற்றுக்கொண்டுள்ள அண்ணா வழியில் அயராது உழைப்போம்; ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்; இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப் போம்; வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்; மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்த அய்ம்பெரும் முழக்கங்கள் நம்முடைய நெஞ்சத்தில் என்றென்றும் ஒலித்துக் கொண்டிருக்க - கடமை உணர் வுக்கும், கண்ணிய நடவடிக்கைகளுக்கும், அண்ணா வழியை நெஞ்சாரப் பின்பற்றி, எல்லாவற்றுக்கும் மேலாக கட்டுப்பாடு குலையாமல் காக்கின்ற, பெரும் பணியில் நம் மையெல்லாம் ஆளாக்கிய தந்தை பெரியாரின் வழியை மறவாமல் பாதுகாத்தும், நமது இயக்கத்தையும் பாதுகாத்து, நம்முடைய எதிர்கால திராவிட சந்ததியினரையும், தன்மான உணர்வோடு, தலைசிறந்து வாழ்ந்திட வழிவகுத்தும், நடைபோடுவதற்கு ஜனநாயக வழியில் நாம் மேற்கொண்டுள்ள இந்தப் பணி மேலும் மேலும் சிறந்தோங்க தொய்வின்றி தொடர்ந்து நடைபோட இந்த 14 ஆவது கழகப் பொதுத் தேர்தலும் பயன்படுமாக!
நன்றி: முரசொலி, 17.12.2014

Read more: http://viduthalai.in/e-paper/92978.html#ixzz3M9n4IFoP

தமிழ் ஓவியா said...

மொழிப் பிரச்சினை: சிவாவின் கேள்வியும் - அமைச்சரின் பதிலும்!


புதுடில்லி, டிச.17- தமிழ் உள்பட 22 மொழிகள் மத்திய அரசில் அலுவல் மொழியாக ஆக்கப்படுமா என்று (3.12.2014) திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள் ளார். அதற்கு பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ இதுவரை இல்லை என்றும், அதற்கான கேள்விக்கே இடமில்லை என்றும் பதில் அளிக்கும்போது தெரிவித்துள்ளார்.

3.12.2014 நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி:

வினா எண் 1154
திருச்சி சிவா:

உள்துறை அமைச்சகம் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 8ஆம் அட்டவணையில் உள்ள அனைத்து 22 இந்திய மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவித்துள்ளதா?

2. அதற்கான அறிவிப்பு இருந்தால் அதற்கான நடவடிக்கைகளுக்கான விளக்கங்கள்வேண்டும்.

3. அப்படி இல்லை என்றாலும் அதற் கான காரணத்தை அளிக்கவேண்டும்.

மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ அளித்த பதில்:

1. இதுவரை இல்லை.
2, 3. கேள்விக்கே இடமில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/92980.html#ixzz3M9nEcqit

தமிழ் ஓவியா said...

அத்வானியின் அருள்வாக்கு!மகாபாரதத்தை வீட்டில் வைத்திருந்தால் துரதிருஷ்டமான சம்பவம் நடைபெறும் என்று பழங்காலத்திலிருந்து நம் நாட்டில் ஒரு நம்பிக்கை இருந்து வந்துள்ளது.

-டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பி.ஜே.பி. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி (14.12.2014)

Read more: http://viduthalai.in/e-paper/92982.html#ixzz3M9nPLgEW

தமிழ் ஓவியா said...

ஒழுக்கம் - ஒழுக்க ஈனம்


உலகில் ஒழுக்கமான காரியம் அல்லது ஒழுக்க ஈனமான காரியம் என்பனவெல்லாம் அவற்றைச் செய்கின்ற ஆட்களின் வலிமையையும், அறிவையும் கொண்டு மதிக்கப்படுகிறதேயல்லாமல், வெறும் காரியத்தைப்பற்றி மாத்திரம் முடிவு செய்யப்படுவதில்லை.
_ (குடிஅரசு, 4.6.1949)

Read more: http://viduthalai.in/page-2/92987.html#ixzz3M9nmgL00

தமிழ் ஓவியா said...

மதவாத மத்திய அரசைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்


சென்னை, டிச. 17_ பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இந்துத்துவப் பாசிசப் போக்கைக் கண் டித்து 23.12.2014 அன்று சென்னையில் தோழமைக் கட்சியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் என்றும் இதில் மதச் சார்பற்ற சக்திகள் பங்கேற்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு:_

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாளிலிருந்து தொடர்ச்சி யாக தமது மதவெறி மேலாதிக்க அரசியலை முதன்மைப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது. அரசியலமைப்புச் சட்டத் திற்கு எதிரான வகையி லும், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரை அச் சுறுத்தும் வகையிலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

குறிப்பாக, மய்ய அரசின் அனைத்துத் துறைகளுக்கு மான சமூக வலைதளங் களில் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்த வேண்டு மென ஆட்சியாளர்கள் அறிவிப்புச் செய்தனர். இந்திய அரசிலமைப் புச் சட்டத்தில் 21 மொழி கள் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட ஒரு மொழியை முதன்மைப் படுத்துவதன் மூலம் பிற மொழிகளைத் தாய்மொழி யாகக் கொண்ட தேசிய இனங்களை அவமதித்தன.

அடுத்து, செப்டம்பர் 5 ஆசிரியர் நாள், முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன் அவர் களின் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய அள வில் கொண்டாடப்பட்டு வருகின்றது. அவர் ஆசிரி யராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்தவர். ஆதலால் ஆசிரியப் பெருமக்களை ஊக்கப் படுத்தும் வகையில் கொண் டாடப்பட்டு வருகிறது.

ஆனால் அந்த நாளை 'குரு உத்சவ்' என்று கொண் டாட வேண்டு மென கல்வித்துறைக்கான இந் திய மனிதவள மேம்பாட் டுத் துறை அமைச்சர் அறி விப்புச் செய்தார். இதனை வெறும் பெயர் மாற்றமா கக் கருத இயலாது.

குரு என்பது ஆசிரியர்களை மட்டும் குறிக்கும் சொல் அல்ல என்பது ஆட்சியா ளர்களுக்குத் தெரியும். எனினும் இவ்வாறு பெயர் மாற்றம் செய்வதன் மூலம் ஆசிரியர்களுக்கு வழங் கப்படும் முக்கியத்துவம் குறைக்கப்படுகிறது. இந்த அறிவிப்பினால் தமிழகம் மட்டுமின்றி தேசிய அள வில் கடும் விமர்சனத்துக் குள்ளாகியது.

கீதை தேசியப் புனித நூலா?

அடுத்து, இந்தியாவில் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் வாழ்ந்து வரும் நிலையில் இந்தியா வின் தேசியப் புனித நூலாக குறிப்பிட்ட மதத் திற்குரிய, அதிலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக் குரிய நூலை, அனைத்து மதத்தினருக்கும் உரிய புனித நூலாக அறிவிக்க வேண்டுமென இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் கூறினார்.

இது வும் இந்திய அளவில் கடு மையான எதிர்ப்புக்கு உள் ளானது. மேலும் பார திய சனதாவைத் தவிர மற் றவர்கள் யாவரும் முறை தவறிப் பிறந்தவர்கள் என ஒரு பெண் அமைச்சர் பேசியதால் நாடாளு மன்றத்தின் இரு அவை களிலும் பெரும் கொந் தளிப்பு உருவானது. அத்துடன், உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக் ராவில் இந்துக்கள் அல் லாத பிற மதங்களைச் சார்ந்தோரை பல்வேறு ஆசைகளைத் தூண்டி, பாஜக இந்துக்களாக கட் டாய மதமாற்றம் செய்ய வைத்தனர்.

இந்த நடவடிக் கையும் இந்திய அளவில் பெரும் பதற்றத்தை உரு வாக்கியது. பாரதிய சனதா கட்சியின் நாடா ளுமன்ற உறுப்பினர் யோகி ஆதித்யநாத் 'மீண்டும் தாய் மதம் வாருங்கள்' என்று அழைப்பு விடுக் கிறார். இசுலாமியர்கள் இந்துக்களாக மாறினால் ரூ. 5 இலட்சமும், கிறித் துவர்கள் இந்துக்களாக மாறினால் ரூ. 2 இலட் சமும் வழங்குவதாக வெளிப் படையாக பாரதிய ஜனதா கட்சியினர் அறிவிப்புச் செய்கின்றனர்.

பாபர் மசூதி இந்தியாவின் அவ மானச் சின்னம் என்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தி னர் அறிவிப்புச் செய்கின் றனர். தாஜ்மகாலையும் இடிக்க வேண்டுமென்று கொக்கரிக்கின்றனர். இந் தியை நாடு முழுவதும் பரப்ப வேண்டுமென்று பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ராஜ்நாத் சிங் உரத்து முழங்குகிறார்.

தமிழ் ஓவியா said...

கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்தாம்

தற்போது, நவோதயா மற்றும் கேந்திரிய வித்யா லயா போன்ற பள்ளிகளி லும் மைய அரசின் பாடத் திட்டமுள்ள பள்ளிகளி லும் டிசம்பர் 25 கிறிஸ் மஸ் விழா அன்று விடு முறை இல்லையெனவும் முன்னாள் பிரதமர் வாஜ் பாய், இந்து மகா சபை யின் தலைவர் மதன் மோகன் மாளவியா ஆகியோரது பிறந்தநாளைக் கொண் டாட வேண்டுமென்றும், அவர்களின் நினைவாக கட்டுரைப் போட்டிகளை நடத்த வேண்டுமென்றும் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சார்பில் அப் பள்ளிகளின் நிர்வாகத்துக் குச் சுற்றறிக்கை அனுப்பி யுள்ளது. அத்துடன் அந்த நாளை நல்லாட்சி நாளா கக் கொண்டாட வேண்டு மெனவும் கூறியுள்ளது. இதற்கும் நாடு தழுவிய அளவில் பெரும் எதிர்ப் புக் கிளம்பியதும் அத்த கைய முடிவைக் கைவிட்டு விட்டதாக அறிவிப்புச் செய்துள்ளனர்.

இவ்வாறு ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாளி லிருந்து பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் களும், ஆர்எஸ்எஸ் இயக் கத்தைச் சார்ந்தவர்களும் தமது இந்துத்துவ மேலா திக்கக் கருத்துக்களைத் திணிப்பதிலும், மறைமுகச் செயல்திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் தீவிரம் காட்டி வருவது அரசியலமைப்புச் சட்டத் திற்கும், சனநாயகத்திற்கும், மதவெறி சக்திகள் செய்யும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. குறிப்பாக, தலித் துகள், இசுலாமியர்கள், கிறித்துவர்கள் போன்ற சிறுபான்மையினர் அனை வருக்கும் பாதுகாப்பற்ற உணர்வை மேலோங்கச் செய்கிறது.

எனவே சனநாயகத் தின் மீது நம்பிக்கை உள்ள அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல் பட வேண்டிய தேவையினை விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது. பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இத்தகைய தொடர்ச்சி யான இந்துத்துவப் பாசி சப் போக்கைக் கண்டித்து 23.12.14 அன்று சென்னை யில் தோழமைக் கட்சிக ளின் தலைவர்கள் பங்கேற் கும் மாபெரும் ஆர்ப்பாட் டத்தை விடுதலைச் சிறுத் தைகள் கட்சி ஒருங்கி ணைக்கிறது. இவ்வார்ப் பாட்டத்திற்கு மதச்சார் பற்ற சக்திகள் பெருந்திர ளாகப் பங்கேற்க வேண்டு மென விடுதலைச் சிறுத்தை கள் அழைப்பு விடுக்கிறது.

Read more: http://viduthalai.in/page-8/93007.html#ixzz3M9qJGTTl

தமிழ் ஓவியா said...

மகளிர் சுய உதவிக் குழுக்களை மத்திய அமைச்சர் மேனகா கலைப்பதாக அறிவிப்பதா?

பெண்கள் வாழ்வில் பொருளாதார மறுமலர்ச்சிக்கு வித்திட்ட

மகளிர் சுய உதவிக் குழுக்களை மத்திய அமைச்சர் மேனகா கலைப்பதாக அறிவிப்பதா?

பிரதமர் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் கருநாடகத்திலும், கேரளாவிலும் நதிகளின் குறுக்கே அணைகளைக் கட்டுவதா? - கண்டன ஆர்ப்பாட்டம்!பெண்களின் முன்னேற்றத்திற்கும், ஆளுமைக்கும் துணை புரியும் மகளிர் சுயஉதவிக் குழுக்களைக் கலைப்பதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறி யிருப்பது - கண்டிக்கத்தக்கது; பிரதமர் நரேந்திர மோடி இதில் தலையிட்டு மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடர்ந்து செயல்பட வழிவகை செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் என்பது வீட்டில் வெறும் இல்லத்தரசிகளாகவும், குறைந்த நேரத்தில் சமையல் மற்றும் பணிகளைக் குடும் பத்திற்காக செய்துவிட்டு, பெரிதும் தொலைக் காட்சியில் தமது நேரத்தைச் செலவிடும் நிலையில், வசதியற்ற ஏழை, எளிய பெண்கள் - விதவைகள் மற்றும் ஆதரவு இழந்த மகளிர் - இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை யையும், தன்னிறைவு உணர்வையும், பொருளா தார மேம்பாட்டு வசதியையும், ஆளுமையையும் ஏற்படுத்தி, பொருளாதாரத்தில் தற்சார்புத் தன்மையையும் உண்டாக்கி, மிகவும் நிம்மதியாக மகளிர் தங்கள் வாழ்க்கையை நடத்திட வழங்கப் பட்ட அருமையான வாய்ப்பு இது!

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதனை!

இது தி.மு.க. ஆட்சிக் காலத்தில், குறிப்பாக உள்ளாட்சித் துறை அமைச்சராக திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இருந்தபோது, கிரா மங்களில் உள்ள தாய்மார்கள், மகளிர் புத்தாக்கம் பெற பரவலாக ஏற்பட்ட, பயன்பெற்ற திட்டமாகும்!

இதிலும் எப்படியோ அரசியல் கண் ணோட்டம் புகுந்து, வளர்ந்துள்ள பயிர்களில் பூச்சிகள் நுழைந்ததைப்போல, முன்பே அ.தி.மு.க. ஆட்சியில் அதற்கு ஒரு பின்னடைவு ஏற்படுத்தினர்; என்றாலும், அது வலிமையாக செயல்படாவிட்டாலும், தொடரவே செய்தது; பிறகு இதை அதிமுகவினர் செல்வாக்குச் சாய லுடன் இயங்கும் ஒன்றாக மாற்றி அமைக்கப் பட்டு வருகிறது.

இதன் மற்றொரு சிறப்பு என்னவென்றால், நமது மகளிரின் ஆளுமைத் திறன் - புதைந்து கிடந்தது வெளிப்பட ஒரு நல்ல வாய்ப்பாக இந்த மகளிர் சுயஉதவிக் குழு அமைந்து, பல கிராமங் களில் ஒருவகை மறுமலர்ச்சி மகளிர் மத்தியில் ஏற்படவும் செய்தது!

குண்டைத் தூக்கிப் போடும் மேனகா!

இதற்கு வேட்டு வைப்பதுபோல மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி அவர்கள், சுயஉதவிக் குழுக்கள் கலைக்கப்படும் என்று நேற்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்!

மகளிர் முன்னேற்றப் பார்வை சிறிதுமின்றி, மேட்டுக்குடியில் வளர்ந்துள்ள சூழலில், அம்மையாருக்கு என்ன கோபமோ சுயஉதவிக் குழுக்கள்மீது என்று தெரியவில்லை!

இதற்கு முன்பு அவர் சமூகநீதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பிராணிகள் நலன் என்பதற்குத் திருப்பிவிட்ட திருப்பணியைச் செய்தவராயிற்றே!

வளர்ச்சிப் பாதைக்கு முட்டுக்கட்டை!

இப்போது இப்படி ஒரு தேவையற்ற - விரும்பத்தகாத - மகளிர் வளர்ச்சிப் பாதைக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியில் இறங்கியுள் ளார். குறிப்பாக, இது தமிழ்நாட்டையே குறி வைத்து இறங்கியுள்ளதுபோல் தோன்றுகிறது!
இதில் பிரதமர் மோடி தலையிட்டு, தடுத்து நிறுத்திடவேண்டும்.

இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டாட்சி என்பதை அமைச்சர்களுக்கு நினைவூட்ட வேண்டியது நமது கடமை மட்டுமல்ல, பிரதமர் மோடியின் அவசரக் கடமையுமாகும்.

ஆறு மாத ஆட்சியின் அல்லல்!

பாஜ.க. - மோடியின் ஆறு மாத கால ஆட்சியில் அமைச்சர்களின் பேச்சும், அறிவிப்பு களும் இவருக்குப் பெருமையை சேர்ப்ப தாகவோ, மக்களுக்கு நலன் விளைவிப்ப தாகவோ அமையவில்லை என்பது சுவர் எழுத்தாகப் பளிச்சிட்டுத் தெரிகிறது.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
18.12.2014

Read more: http://viduthalai.in/e-paper/93049.html#ixzz3MFbpWeCs

தமிழ் ஓவியா said...

கத்தோலிக்கப் பிரிவில் தாழ்த்தப்பட்டோரை அவமதிப்பதா? வாட்டிகன் தூதரகம்முன் போராட்டம்


புதுடில்லி, டிச.18_- பல் வேறு தமிழ் கத்தோலிக்க அமைப்புகளைச் சார்ந்த வர்கள் கத்தோலிக்க மதத்தில் தாழ்த்தப்பட்ட வர்கள் பாகுபாடுகளுடன் நடத்தப்படுவதை எதிர்த்து வாட்டிகன் தூதரக அலுவ லகம் முன்பாக போராட் டம் நடத்தியுள்ளனர்.

போராட்ட முடிவில் இந்திய, நேபாள நாடு களுக்கான தூதரக அலு வலர் சால்வடோர் பென் னாச்சியோவிடம் புகார் மனுவை அளித்தனர்.

விடுதலை தமிழ்ப்புலி கள் கட்சியைச் சார்ந்த குடந்தை அரசன் போராட் டத்தை தலைமையேற்று நடத்தி உள்ளார். சர்ச் விவகாரங்களில் தாழ்த் தப்பட்டவர்களிடம் ஏற்பட்டுள்ள மனக்குறை யைத் தீர்த்து வைக்காமல் இருப்பதுதான் தங்களைப் போராட்டத்தில் தள்ளி யிருப்பதாகக் கூறுகிறார்.

அவர் கூறும்போது, சர்ச் நிர்வாகத்தில் தாழ்த் தப்பட்டவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப் படுவதில்லை. கல்லறைகள் தனியாகத் தான் உள்ளன. நாங்கள் 16 கோரிக்கை களைக் கொண்டுள்ள மனுவை அளித்துள் ளோம். கத்தோலிக்கர்கள் மத்தியில் தீண்டாமை யைக் கடைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக நீக்கவேண்டும். நிர்வாகத் தில் 80 விழுக்காட்டினர் தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர் களின் ஜாதிப் பெயர்களை நீக்குமாறு கட்டாயப்படுத் தப்படுகிறார்கள் என்று கூறினார்.

போராட்ட அமைப் பாளரான வழக்குரைஞர் ஃபிராங்க்ளின் சீசர் தாமஸ் கூறும்போது, 2011 ஆம் ஆண்டு திருச்சியில் வேத பாட சாலையிலிருந்து தாழ்த்தப் பட்டவர் என்பதால் ஜி.மைக்கேல் ராஜா என் பவர் வெளியேற்றப்பட் டார். அதிலிருந்து தென் தமிழகத்தில் மோதல் ஏற்பட்டு வருகிறது. அத னால், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட் டங்களில் சில சர்ச்சுகள் செயல்பாடுகளின்றி உள் ளன. ஜாதி ரீதியான வேறு பாடுகளை வாட்டிகனும் அப்படியே கையாண்டு வருகிறது. பிரச்சினை தீரும்வரையில் போராட் டம் தொடரும் என்று அவர் கூறினார்.

இவ்வமைப்பின் செய லாளர் வினோத்குமார் கூறும்பொழுது, இலங் கைக்குத் தேர்தல் நேரத் தில் போப் செல்லவேண்டிய அவசியம் என்ன? என்று கேட்டார். பல மட்டங்களி லும் ஜாதிப் பாகுபாடுகள் கத்தோலிக்கர் மத்தியில் உள்ளன என்று கூறினார். போப் பிரான்சிஸ் இலங் கைப் பயணத்தைக் (8.1.2015) கண்டித்துத் துண்டறிக் கைகள் வழங்கப்பட்டன.

Read more: http://viduthalai.in/e-paper/93050.html#ixzz3MFc9N01l

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

அதற்கு என்ன பலன்?

காகம் தலையில் கொத்திவிட்டால் உடனே ஸ்நானம் செய்யவேண்டும். கோயிலுக்குச் சென்று விநாயகருக்குத் தீபம் ஏற்றி வழிபட்டால் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லையாம். (எது நடந்தாலும், அதன் பலன் - சுரண்டல் அவாளுக்குப் போய்ச் சேரவேண்டுமே!)

தலையில் காயம் ஏற்படும் அளவுக்குக் காயம் ஏற்பட்டு, ஸ்நானம் செய்தால் செப்டிக்குத்தான் ஆகும். ஒழுங்காக டாக்டரிடம் போவதுதான் நல்லது.

சாலையோரப் பிள்ளையார் தலையில் காகம் குந்தி சிறுநீர், மலம் கழித்துப் போகிறதே, அதற்கு என்ன பலனாம்?

Read more: http://viduthalai.in/e-paper/93051.html#ixzz3MFcGygiX

தமிழ் ஓவியா said...

வனத்துறை அரசு வளாகத்தில் கோயிலா?


ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், அந்தியூர் கஸ்பாவில் பர்கூர் சாலையில் அந்தியூர் ரேஞ்சுக்கு சொந்தமான ரேஞ்சர் ஆபிஸ் (சுமார் ஒரு ஏக்கர் அல்லது கூடுதலாகவோ, குறைவாகவோ நிலப்பரப்பு கொண்ட) உள்ளது. 8.12.2014 திடீரென்று இந்த அலுவலகத்தின் வளாகத்திற்குள் புதிய வினாயகர் கோவில் கட்டி இக்கோவிலின் வழிபாட்டு துவக்கத்தை வனத்துறையைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டு செய்துள்ளனர். அரசு சார்ந்த அலுவலகங்களில் இதுபோன்ற மதம் குறித்த எவ்வித வழிபாட்டுத் தலங்களும் அமைக்கப்படுதல் இந்திய அரசியல் சட்டத்தின் மதசார்பற்ற கொள்கைக்கு எதிராக அமையும் என்று கருதி அரசு அலுவலக வளாகங்களில் மதவழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்படுதல் கூடாது என்று இந்திய உச்சநீதிமன்றம் ஸ்டேட் ஆப் குஜராத் க்ஷி யூனியன் ஆப் இந்தியா என்று தெளிவாக தீர்ப்புரைத்துள்ளதை அதிகாரிகள் பொருட்படுத்துவதில்லை இது கண்டிப்பாக நீதிமன்ற அவமதிப்பாகும்.

Read more: http://viduthalai.in/e-paper/93052.html#ixzz3MFcPD0Mv