Search This Blog

31.10.10

தீபாவளி கொண்டாடும் தமிழர்களே - அசுரன் யார் என்று தெரியுமா?

தீபாவளி கொண்டாடும் தமிழர்களே
அசுரன் யார் என்று தெரியுமா?

திராவிடர்கள், வாழ்க்கை வசதிகள், பண்பாடுகள் நிறைந்த நாகரிக இனமாக வாழ்ந்து வந்தனர். கைபர், போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு ஆரியர் கூட்டம் பிழைப்புக்கு வழிதேடி வந்தனர். செழிப்பான திராவிட நாட்டைப் பார்த்து இங்கேயே தங்கி விட்டனர். ஆரியர்கள் யாகம் என்ற பெயரால் சோமபானம், சுரபானம் போன்ற மது வகைகளைக் குடித்தும், ஆடு, மாடு, மான், குதிரை முதலிய விலங்குகளைக் கொன்று தின் றும், காமக்களியாட்டங்களை நடத்தினர்.

புலால் உண்ணாமை, பண்பாடு, நாகரிகம் நிறைந்த திராவிடர்கள் யாகத்தைத் தடுத்தனர். ஆரியர்கள் திராவிட இனத்தாரில் சிலரை போதைப் பொருள் களையும் தங்கள் இனப் பெண்களையும் கொடுத்து வசப்படுத்த ஆரம்பித்தனர். ஆரிய இனப் பெண்களின் நிறத்தை யும், உடலையும் பார்த்து பலர் அவர் களின் வலையில் வீழ்ந்தனர். அந்த துரோகிகளை இந்திரர்கள் என்று கூறி, அவர்களின் துணை-யுடன், யாக எதிர்ப்பாளர்களைக் கொன்று யாகத்தை நடத்தினர்.

ஆரியர்கள் கூறிய வேதங்கள் என்பவை, யாக நடப்புகளையும் அவர் களுக்குக் கிடைத்த உதவிகளையும் தெரிவிக்கின்றது. வேதங்களையும், கற்பனைக் கடவுள்களையும் சொன் னவர்கள் தேவர்கள் (சுரர்கள்) என்றும், வேதத்தையும் கடவுள் வணக்கத்தையும் எதிர்த்தவர்கள் அசுரர்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ரிக், அதர்வண வேதங்களில் யாகத்தைத் தடுக்கும் அசுரர்களை அழிக்கும்படி இந்திரன், சோமன், அக்னி என்பவர்களைக் கோரும் மந்திரங்கள் பலவும் உள்ளன. அவர்களால் கொலை செய்யப்பட்டதாக சாஸன், அகி, விருத்திரன், சம்பரன், சகவசு, திருபீகன் உரன், சுக்கனன், சுவசன், விபம்சன், பிய்ரு, நமுசி, ருதிக்கிரமன், அதிதிக்கவன், குதச்சணி, ஆபுதி, கிருணகரு என்ற பலம் பொருந்திய அசுரர்களின் பெயர்கள் குறிக்கப் பட்டுள்ளன.

மேலும் மேற்கண்ட அசுரர்களை அழித்த இந்திரன், சோமன், அக்னி முதலியவர்களை வணங்கி மேலும் அசுரர்களை அழிக்கும்படி வேண்டுகின்றனர். அதில் அசுரர்களின் மணிக்-கட்டை முறி, தோலைக் கிழி, முழங்கால், முழங்கை, கழுத்துக்ளை முறி, கிழித்தெறி, சின்னா பின்னப் படுத்து, அக்னி சுவாலையால் சுடு, துண்டு துண்டாக வெட்டு, நீர்ப்பானை யில் வைத்து வேகவை, பூமி விழுங் கட்டும், படுபாதாளத்தில் விழட்டும், மலை வெடித்து விழுங்கட்டும், நாச மாகட்டும், பசுவின்பால் அவர்களுக்கு நஞ்சாகட்டும், வாரிசு இல்லாமல் அழியட்டும், அவர்களது செல்வம், பசு முதலியவற்றை கொள்ளையடித்து எங்களுக்குக் கொடு என்று கேட்கின்றனர்.

இவையனைத்தையும், தேவர்கள் குடி மயக்கத்தில்தான் செய்வர். அதனால் அவர்களுக்கு சோம ரசத்தை திகட்டும் வரை கொடு என்கின்றனர். பின்னர் கற்பனையான இதிகாசங்களிலும் புராணங்களிலும் இந்த முறையே கடைப்பிடிக்கப்பட்டு திராவிடர்-களை அழித்ததாகக் கூறியுள்ளனர்.

அவற்றில் இரணியாட்சன், நரகாசுரன், கம்ஸன், சிசுபாலன், ஜராசந் தன், ராவணன், கும்பகர்ணன், இந்திர ஜித்து, கவந்தன்; பெண்பாலர் தாடகை, சூர்ப்பனகை, சிம்மிகை என்ற திரா விடர்களின் பெயர்கள் வரு-கின்றன. அவர்களுக்கு உதவிய துரோகி-களை ஆழ்வார்கள் என்றுள்ளனர். திரா விடர்கள் பூர்வகுடிகள் என்பதை ரிக்வேதம் 2710 சுலோகத்தில் அசுர குலத்தை, தாஸ இனத்தை, பழை மையாகவே தொன்று தொட்டு இங்கு வாழ்ந்து வருபவர்களை வேரோடு அழிக்கவும் என்றுள்ளது. திராவிடர் களை வேதத்தில் அசுரர், அரக்கர், தஸ்யூ, தாஸர், சூத்திரன், தைத்ரியன், யதூதனர், பிசாசு, பூதம் என்று குறித் துள்ளனர். ஆயினும் பல இடங்களில் அசுரர்கள் வலிமை மிக்கவர்கள் யோக்கியர்கள் என்றுள்ளது.

அசுரர் என்பது காரணப் பெயரே. சுரன் என்றால் சுரபானம் (மது) அருந்துபவர். அசுரன் என்றால் மது அருந்தாதவர்கள். ஆரியர்கள் தங்கள் வழக்கப்படி நல்லவற்றை கெட்டவை என்றும், நல்லவர்களைக் கெட்டவர்கள் என்று நிலைநிறுத்த மக்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லி அவை வழக்கத்திற்கே வந்துவிட்டன.

இந்த முறையில் மக்களின் மூளைக்கு விலங்கிட்டும், பல மன்னர்களின் துணையாலும் புத்தர்கள், சமணர்கள் பலரைக் கொன்றும், யாக குண்டங்களில் இட்டுக் கொளுத்தியும், கழுவேற்றியும் அழித்தனர். அசுரர் என்பவர் வலிமை மிக்க, கொல்லாமை விரதம் பூண்ட, நல்லெண்ணம் கொண்ட நாகரிகம் மிக்க திராவிடர்களையே குறிக் கிறது. அது தவறாகக் கொள்ளப்பட்டு, மக்களை நம்பவைத்துள்ளனர்.

இந்த உண்மையை, தந்தை பெரியார் அவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்து, புராண இதிகாசங்களில் சொல்லப்பட்டு நமது மக்கள் கொண்டாடும் பண்டிகைகள் நமது இன முன்னோர்களை அழித்த நாள்களே என்பதால், அவற்றைக் கைவிட்டு மானமும் அறிவும் உள்ள மக்களாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் மக்கள் மானமும் அறி வும் இல்லாமல் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாகும்.

------------------விடுதலை, 27.10.2005


**********************************

பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி!
தமிழ்க் கடல் மறைமலை அடிகள் கூறுகிறார்

வட நாட்டில் அக்காலத்திலிருந்த தமிழ் மேன் மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வடநாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்ட தொன்றாகும்.

பார்ப்பனர் தமது உயிர்க் கொலை வேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர். தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவளி என்பது தீப + ஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும். ஆதலால் தீபாவளி நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவது அன்று.

ஆசிரியர்: தமிழ்க்கடல் மறைமலை அடிகள்

நூல்: தமிழர் மதம் பக்கம்: 200-201

மறைமலை அடிகள் ஆன்மிகவாதிதான். அவரே கூறுகிறார் தீபாவளி பார்ப்பனர் புனைவு என்று. தமி ழர்களே நீங்கள் தீபாவளியைக் கொண்டாடலாமா?

சிந்திப்பீர்!

30.10.10

தமிழர்களும் - தீபாவளியும்தீபாவளி பண்டிகை என்பது ஆரியர்களின் புராணக் கதைகளில் வரும் ஒரு குட்டிக் கதை. அக்கதையின் கருத்து தேவர்கள் அசுரனைக் கொன்றதாகவும், அக்கொலையானது உலகத்துக்கு நன்மை பயக்கும் கொலையென்பதும், அதற்கு ஆக மக்கள் அந்தக் கொலை தினத்தைக் கொண்டாட வேண்டும் என்பதுமாகும்.

சாதாரணமாக தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை. அதாவது வரிசையாக விளக்குகள் வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயருள்ள பண்டிகையில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை தினத்தை நரக சதுர்த்தசி என்றும் சொல்லுவதுண்டு. இதற்கு காரணம் நரகாசுரன் என்பவன் விஷ்ணுவால் கொலை செய்யப்பட்ட நாள் என்பதாகும். இந்தக் கதை விளக்கம் என்ன வென்றால், அது மிகவும் ஆபாசமானது என்றாலும், ஆரியர்களின் இழி நிலைக்கும், தமிழர்களின் முட்டாள் தனத்துக்கும் ஆதாரத்துக்கு ஆக அதையும் ஆரியர் புராணப்படியே சற்று சுருக்கமாக விளக்குவோம்.

அதாவது இரண்யாட்சன் என்னும் ராட்சசன் ஒருவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு சமுத்திரத்தினடி யில் போய் ஒளிந்து கொண்டானாம்.

மகாவிஷ்ணு என்னும் கடவுள் அவ னைச் சமுத்திரத்தில் இருந்து வெளி யாக்கிப் பூமியைப் பிடுங்குவதற்கு ஆக பன்றி உருவமெடுத்து போய் ராட்சசனைப் பிடித்து பாய்போல் சுருட்டப்பட்டிருந்த பூமியைப் பிடுங்கி விரித்து விட்டு விட்டாராம்.

அந்த சமயத்தில் அந்த பன்றியைப் பூமாதேவி கலவி செய்ய விரும்பி கலந்தாளாம். அக்கலவியில் ஒரு குழந்தை பிறந்ததாம். அக்குழந்தைக்குத்தான் நரகாசுரன் என்று பெயராம். இவன் கசேரு என்பவளை யானை உருவத்துடன் சென்று பல வந்தமாய்ப் பிடித்து வந்து மணம் செய்து கொண்டானாம். மற்றும், இவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தானாம். தேவர்கள் விஷ்ணுவிடத் தில் முறையிட்டார்களாம்.

விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் நரகாசுரனைக் கொன்றாராம்.

நரகாசுரன் விஷ்ணுவைத் தனது சாவு நாளை உலகம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டானாம். அதற்கு ஆக விஷ்ணு அந்தத் தினத்தை உலகம் கொண்டாடும்படி செய்தாராம். இதுதான் தீபாவளியாம்.

தோழர்களே! ஆரியரின் கதை ஜோடிக்கும் சின்னப் புத்தியைப் பாருங்கள். அதை நம்பி விழாக் கொண்டாடும் உங்கள் மடப் புத்தியை எண்ணி வெட்கப்படுங்கள். ஏனெனில்,

பூமியை ஒரு ராட்சசன் பாயாக சுருட் டினான் என்றால் அப்போது எங்கிருந்து கொண்டு சுருட்டி இருப்பான்?

சமுத்திரத்திற்குள் போய் ஒளிந்து கொண்டான் என்றால் அப்போது சமுத்திரம் எதன்மேல் இருந்திருக்கும்?

கடவுளுக்குச் சக்தி இருந்தால் பூமியையும், நரகாசுரனையும் வா என்று அழைத்தவுடன் வந்திருக்காதா?

அப்படித் தான் வரவில்லையானா லும் நல்ல ஆகாரம் சாப்பிடும் ஜீவ உருவெடுக்காமல் மலம் சாப்பிடும் ஜீவ உரு எடுப்பானேன்?

அந்த அழகை பார்த்து பூமிதேவி அவனைக் கலவி செய்ய ஆசைப் பட்டாளென்றால் பூமி தேவியாகிய பாரதத் தாயின் யோக்கியதை எவ்வளவு இழிவானது. நம் பாரதத் தாயின் கற்புக்கும், காமத்திற்கும் எதை உதாரணமாகச் சொல்லிக் கொள்ளுவது? அவருடைய புத்திரர்கள் பரிசுத்த ஆவியினுடைய புத்திரர் களைக் காட்டிலும் எவ்வளவு மோச மானவர்களாய் இருந்திருக்க வேண் டும்? பூமாதேவியும் சமுத்திரமும் என்றால் இந்தியாவில் உள்ள இந்துக்களின் பாரத தேவியும் அரபிக் கடலும் வங்காளக் குடாக்கடலும் தானா? இதை அந்நியர்கள் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

இப்படிக் கொலை செய்யப்பட்ட நரகாசுரன் என்பவன் நமது தோழர்கள் முத்துரங்கம், ராமநாதன் முதலி யவர்கள் போன்றோர்களாய் இருந்தி ருந்தால்தானே கொலை செய்யப் பட்ட அவமானத்தை உலகம் கொண் டாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருப்பான்? இவற்றையெல்லாம் தமிழர்கள் பண்டிதர்கள் முதல் பாமரர்கள் வரை உணர்ந்திருந்தும் தீபாவளி பண்டிகை கொண்டாடினால் ஆரியர்கள் தமிழர்களை, தாசி மக்கள், மடையர்கள், கண்டதைப் புசிப்பவர்கள், புறமுதுகிட்டு ஓடியவர்கள், சண்டையில் சிறைபிடித்த கைதிகள், அடிமைகள் என்றெல்லாம் இன்னும் என்ன என்னமோ சொல்லுவதில் உண்மை இருக்கிறது என்றுதானே அர்த்தமாகும்? அப்படித்தானே? அந்நிய மக்கள் நினைப்பார்கள்.

ஆகவே, பாமர மக்களுக்குப் புத்தி இல்லாவிட்டாலும், பார்ப்பன அடிமைகளான பல பார்ப்பனரல்லாத காங்கிரஸ்காரர்களுக்குச் சுரணை இல்லாவிட் டாலும், மற்ற தமிழ்ப் பண்டிதர்களும், தங்களை உண்மைத் தமிழ் மக்கள் என்று கருதிக் கொண்டு இருப்பவர் களுமாவது இவற்றை நன்றாய் கவனித் துப் பார்த்து பண்டிகை கொண்டாடாமல் இருந்து மற்ற பாமர மக்களுக்கு வழி காட்ட வேண்டாமா என்று கேட்கின் றோம்.

இந்தி ஆரிய பாஷை என்றும், ஆரியப் புராணங்களை தமிழர்களுக்கு படிப்பித்து ஆரிய கதைகளைப் புகுத்தி ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டவே இந்தியைக் கட்டாயமாய் ஆரியர்கள் புகுத்துகிறார்கள் என்றும், சொல்லிக் கொள்ளுவது உண்மையானால் - அதற்கு ஆக தமிழ் மக்கள் அதிருப்தியும், மனவேதனையும் படுவது உண்மையானால் - தமிழ் மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் பண்டிதர்கள் தீபாவளி கொண்டாடுவார்களா?

----------------தந்தைபெரியார் -(விடுதலை)"குடிஅரசு" - கட்டுரை மறுவெளியீடு - 31.10.1937


*************************************************************************************

கா.சு. பிள்ளை கேட்கிறார்
தமிழர்கள் தீபாவளி கொண்டாடலாமா?

தீபாவளிப் பண்டிகை தமிழருக்கு உரியதாகத் தோன்றவில்லை. நர காசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக அப்பண் டிகை வழக்கத்தில் கொண் டாடப்படுகிறது. அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடினமாயினும், சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப் பட்டார் என்பர். ஆரியர் பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர். ஆதலில் அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்ப.

--------------- தமிழ் அறிஞர் கா. சுப்பிரமணியன் பிள்ளை அவர்கள் எழுதிய "தமிழர் சமயம்" எனும் நூல் பக்கம் 62

கா.சு. பிள்ளை பக்தர்தான் - சைவ மெய்யன் பர்தான். ஆனாலும், தீபாவளி கொண்டாடக் கூடாது என்கிறார் - பக்தர்களே சிந்திப்பீர்!

சாமியோவ் பொய்யப்பா!


பொய்யப்பா!

இன்றைக்குச் சபரிமலை அய்யப்பன் என்று வழக்கப்படும் கோயில், கடவுள் என்பதெல்லாம் ஒரு காலத்தில் புத்தர், புத்தர் விகார் என்று சொன்னால் சில ருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மையாகும்.

அய்யப்பனை சாத்தன் என் றும், சாத்தனார் என்றும் கூறுகிறார்கள். சாத்திரத்தை முற்றும் கற்றறிந்தவன் என்று பொருள். இந்தப் பெயர்கள் புத்தருக்கு உரியவையே!

பவுத்த நூலாகிய மணிமேகலையை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார் என்னும் பெயருடையவர் என்பதைக் கவனிக்கவேண் டும்.

சாத்தன் என்பதன் பொருள் அய்யன் என்பதாகும். அய்யன் என்பதற்கு உயர்ந்தோன், குரு, ஆசான் என்ற பொருள்கள் உண்டு. இந்த வகையில் சாத்த னாக அய்யனாக இருந்த புத்தர், புத்த மத வீழ்ச்சிக்குப் பிறகு அதே பெயர்களில் இந்து மதக் கடவுள்களாக, கோயில்களாக ஆக்கப் பட்டனர் என்பதுதான் ஆய்வாளர் களின் கூற்றாகும்.

பவுத்தமும் - தமிழும் என்னும் அரிய நூலில் ஆய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி இதனை ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார்.

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் இருந்த சாத்தன் (புத்தன்) உருவத்தைப் பல ஆண்டு களுக்குமுன் கோபிநாதராயர் அவர்கள் கண்டுபிடித்து, அதைப் படம் பிடித்து வெளியிட்டார்கள். அந்த உருவத்தைச் சில ஆண்டுகளுக்குமுன்பு கச்சிக் காமக் கோட்டத்தில் நேரில் சென்று பார்த்திருக்கிறேன். அது சுமார் அய்ந்தடி உயரமுள்ள கருங்கற் சிலை உருவம் - புத்தர் பெருமான் நின்ற வண்ணம் உபதேசம் செய்வதுபோல் அமைந்துள்ளது. இந்தப் புகழ் வாய்ந்த காமக் கோட்டத்துப் புத்தர் உருவச் சிலையை இப்பொழுது சென்னை அரசாங்கத்துப் பொருட்காட்சிச் சாலையில் கொண்டு போய் வைத்துவிட்டு, அஃது இருந்த இடத்தில் அய்யப்பன் உருவத்தைப் புத்தம் புதிதாகச் செய்து வைத்திருக்கிறார்கள் (மேற்கண்ட நூல் பக்கம் 175).

இதேபோல, புத்தருக்கு விநாயகன் என்ற பெயருண்டு. புத்தர் கோயில்கள் பிற்காலத்தில் விநாயகர் (பிள்ளையார்) கோயில்களாக்கப்பட்டன. கும்பகோணம் நாகேசுவரசுவாமி திருமஞ்சன வீதியில் உள்ள ஒரு விநாயகர் ஆலயத்தில் பகவரிஷி என்னும் பெயருள்ள ஒரு புத்தர் உருவம் இருக்கிறது. தஞ்சை ஜில்லாவில் உள்ள பட்டீச்சரம் சிவன் கோயி லுக்கு வெளியே பெரியதோர் புத்தர் உருவச் சிலையொன்று இருக்கிறது என்று நீண்ட பட்டியலையே தருகிறார் ஆய்வாளர் மயிலை சீனி வேங்கடசாமி.

இன்னொரு தகவலும் முக் கியமானது.

இந்து மதத்தின் ஒரு பிரிவான வைணவ மதம் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாக ஏற்றுக்கொண்டதுபோலவே, மற்றொரு பிரிவாகிய சைவ சமயமும் புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டது. சாஸ்தா அல்லது அய்யனார் என்னும் பெயருடன் புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராகச் சேர்த் துக்கொண்டு பின்னர், முருகர் அல்லது சுப்பிரமணியரோடு புத்தரை ஒற்றுமைப்படுத்திக் கொண்டது. புத்தருக்குத் தருமராசன் என்றும், விநாயகன் என்றும் பெயர்கள் உள்ளன. இப்பெயர்களை நிகண்டுகளிலும் காணோம். தருமராசன் என்னும் பெயருடன் இருந்த பவுத்தக் கோயில்களை பிற்காலத்தில், பாரதத்தில் கூறப்படும் பஞ்ச பாண்டவரைச் சேர்ந்த தருமராசன் கோயிலாக மாற்றி விட்டனர். அதுபோலவே விநாயகன் என்னும் பெயருடன் இருந்த புத்தர் கோயில்களை விநாயகர் (பிள்ளையார்) கோயிலாகவும் மாற்றிவிட்டார்கள் (அதே நூல் பக்கம் 77).

இதைவிட இன்னொரு திடுக்கிடும் தகவல் உண்டு. சபரிமலை அய்யப்பன் கோயில் ஒரு காலத்தில் புத்தர் கோயிலே என்று கேரள அரசாங்கமே உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு விட்டது என்பதுதான் அந்த அதிர்ச்சித் தகவல்.

சபரிமலைக் கோயிலில் பெண்களை அனுமதிக்கலாமா என்பது பற்றி உச்சநீதிமன்றத்தில் தொட ரப்பட்ட வழக்கில் 7.2.2008 அன்று கேரள அரசாங்கம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கேரள மாநிலத்தின் பழைய வரலாற்றை எழுதிய சில அறிஞர்கள் சபரிமலை சாஸ்தா கோயில் ஒரு காலத்தில் புத்த மத வழிபாட்டுக் கோயிலாக இருந்தது என்று கேரள அரசு தெரிவித்திருந்தது.

அர்த்தமுள்ள இந்து மதத் தின் இந்த உருட்டல், புரட்டல், பித்தலாட்டத்தைப் பார்த்தீர்களா?

சாமியோவ் பொய்யப்பா!

-------------- மயிலாடன் அவர்கள் 30-10-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

29.10.10

பக்தியால் ஒழுக்கம் வளருகிறதா?


அய்யப்பன்

அய்யப்பன் கோயிலுக்கு விரதம் இருந்து செல்லுகிறார்கள். விரதம் இருப்ப தன்மூலம் ஒழுக்கம் வளருகிறது. பயபக்தி - பத்தியம் என்பதன்மூலம் நல்ல பழக் கங்கள் வருகின்றன என்றெல்லாம் சொல்லுவதுண்டு.

விரதம் இருக்கும் நாள்களில் மட்டும் ஒழுக்கமாக இருந்தால் போதுமா? மற்ற காலங்களில் கேடுகெட்ட வகைகளில் நடக்கலாமா என்று பகுத்தறிவாளர்கள் எதிர்கேள்வி வைப்பதுண்டு. அதற்கெல்லாம் யாரும் பதில் சொன்னது கிடையாது.

சரி, அவர்கள் சொல்லுகிறபடி பார்த்தாலும்கூட, அதாவது உண்மையா என்ற கேள்விக்கு நடைமுறை பதில் வேறு விதமாகவே இருக்கின்றது.

கேரள இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருக்கக் கூடிய ஜி. சுதாகரன் சொன்ன தகவல் ஏடுகளில் எல்லாம் நிரம்பி வழிந்தது (24.4.2008).

சென்ற சீசனில் ரூபாய் நோட்டுகளை சபரிமலை கோயில் பக்தர்களே திருடிக் கொண்டு போன 67 சங்கதிகளைக் கண்டுபிடித்தோம்.

கோயிலுக்குக் காணிக்கையாக அளிக்கப்பட்ட அரிசியை கடத்திக் கொண்டு போய் கள்ளச் சந்தையில் விற்கிறார்கள். காணிக்கையாக அளிக்கப்பட்ட தங்கம் காணாமல் போய்விடுகிறது. நிருவாகத்தில் லஞ்சம், ஊழல் பெருகி வருகிறது என்று சொன்னாரே அம்மாநில கோயில் மந்திரி - இதற்கென்ன பதிலாம்?

பார்ப்பன இதழான ஜூனியர் விகடனே (7.12.2005) ஒரு தகவலை வெளியிட்டதே!

சமீபத்தில் தண்டை யார்பேட்டையில் (சென்னை) அய்யப்பன் பூஜை ஒன்று நடந்தது. அதற்கு நானும் போயிருந்தேன். நிறைய கூட்டம், பாடலும், தாளமுமாக பஜனை முடிந்து தீபாரா தனையும் காட்டப்பட்டது. அடுத்து பிரசாதம் வழங்கப்பட வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக, வெளியேறிக் கொண்டிருந்தார் கள். அப்போது திடீர் பர பரப்பு, விசாரித்தபோது தான் தெரிந்தது அங்கு வைத்திருந்த பெரிய குத்து விளக்கை யாரோ திருடிக் கொண்டுபோய் விட்டார்கள் என்று. பக்தர்கள் மனம் நொந்தாலும் பரவாயில்லை என்று விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில் மாலை போட் டிருந்த ஒரு சாமிதான் குத்துவிளக்கைத் திருடியி ருந்தது தெரிய வந்தது. வெளியே தெரிந்தால் அசிங்கம் என்று நினைத்து அப்படியே மறைத்துவிட் டோம்.

இது ஒரு சம்பவம் என்றால், போன வருடம் சபரிமலைக்கு மாலை போட்டுக்கொண்டு வந்தவர்கள் சிலரும், அடுத்தவர் பைகளில் பிக்பாக்கெட் அடித்து போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்கள் என்று கூறுகிறார் 20 ஆண்டுகளாக சபரிமலைக்குச் சென்று வரும் ராஜேந்திரன் -என்று சொல்லுவது விடுதலை அல்ல - ஜூனி யர் விகடன் (7.12.2005).

பக்தியால் ஒழுக்கம் வளருகிறதா - பம்மாத்து இல்லாமல் சொல்லுங்கள், பார்க்கலாம்.

---------------- மயிலாடன் அவர்கள் 29-10-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

28.10.10

யுனிகோட் என்ற அமைப்புக்குள் பார்ப்பன சமஸ்கிருத ஊடுருவல்!

முதல்வரின் முக்கிய கவனத்துக்கு...
ஒருங்குறி (யுனிகோட்) என்ற அமைப்புக்குள் பார்ப்பன சமஸ்கிருத ஊடுருவல்! ஊடுருவல்!!
தமிழர் தலைவர் சுட்டிக்காட்டும் ஆபத்து

யுனிகோட் (Unicode) எனப்படும் ஒருங்குறி முறையென்பது, உலகளவில் உள்ள அனைத்து மொழிகளின் எழுத்துகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட கணினி எழுத்து குறியீட்டு முறையாகும். இம்முறையில் ஒவ்வொரு மொழிக்கும் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைய கணினி, இணைய யுகத்தில் இத்தகைய ஒருங் கிணைப்பின் அவசியத்தை உணர்ந்து முக்கியமான மென்பொருள் தயாரிப்பாளர்கள் இணையதளங்கள் உள்பட அனைவரும் இக்குறியீட்டு முறையை ஏற்றுக் கொண்டுள்ளன. இதனால் தனியாக எந்த ஒரு புதிய தரவிறக்கமும் (Download) இன்றி சீனம் முதல் அரேபியம் வரை எந்தவொரு மொழி எழுத்தையும் யாரும் படிக்கலாம்; பயன்படுத்தலாம்.

தமிழ் ஒருங்குறியின் பயன்பாடு

கணினித் தமிழ் வளர்ந்த தொடக்க காலத்தில் ஆளுக்கு ஒரு எழுத்துரு, குறியீட்டு முறை என்று சிக்கல் இருந்தது. இதனால் ஒருவர் உருவாக்கிய கோப்பை (File) வேறொருவர் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. அவ்வாறு பயன்படுத்த வேண்டும் எனில் அந்தக் குறிப்பிட்ட எழுத்துரு வேண்டும். இணையம் வளர்ந்த சூழலிலும் இது பெரும் இடராகவே இருந்தது.

ஆனால் ஒருங்குறியின் வரவினால் இணையத்தில் இருந்த இடர்ப்பாடு களையப்பட்டது. இதனால் தமிழ் இணைய தளங்கள் பெருகியதோடு, உலகம் முழுக்க தமிழர்கள் ஒரே குறியீட்டு முறையைப் பயன்படுத்தி, எண்ணற்ற படைப்புகளையும், தகவல்களையும் இணையத்தில் ஏற்றி வைத்துள்ளனர். இன்றைய தலைமுறையே கணினியைப் பெருமளவில் பயன்படுத்துகிறது என்றால், வளரும் தலைமுறை முழுக்க கணினியை அடிப்படையாகக் கொண்டே மொழியைக் கற்கும் சூழல் வரும்.

ஏற்கெனவே இத்தகைய உலகளாவிய ஒதுக்கீட்டில் தமிழ் எழுத்துகளுக்கு 128 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. அந்தக் குறுகிய அளவிற்குள்ளும் அனைத்துத் தமிழ் எழுத்துகளையும் ஒருவாறாக உள்ளே கொண்டு வந்துள்ளனர்.

அதை அதிகப்படுத்தினால் அனைத்துத் தமிழ் எழுத்துகளுக்கும் தனித்தனி இடம் ஒதுக்கி எளிமையான பயன்பாட்டை உருவாக்க முடியும் என தமிழ் கணினி வல்லுநர்கள் யுனிகோட் சேர்த்தியம் (Unicode Consortium)அமைப்பிடம் முறையிட்டு வருகின்றனர்.

பார்ப்பனர் சதி!

இந்நிலையில் கடந்த 2010 ஜூலை 10ஆம் நாள், சிறீரமண சர்மா என்ற பார்ப்பனர் யுனிகோட் சேர்த்தியம் அமைப்புக்கு ஒரு பரிந்துரையை முன்வைத்துள்ளார். அதன்படி தமிழ் எழுத்துகளுக்கான இடத்தை அதிகப்படுத்தி அதில் 26 கிரந்த எழுத்துகளைச் சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

கிரந்தம் என்பது வடமொழியை (சமஸ்கிருதம்) எழுத தென்னாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த எழுத்து முறையாகும். பல்லவர் காலத்திலும், பார்ப்பனர் ஆதிக்கம் அதிகமாக இருந்த காலத்திலும் சமஸ்கிருதத்திற்கான தேவநாகரி தவிர்த்த மற்றொரு லிபியாக கிரந்தத்தைப் பயன்படுத்தி வந்தனர். தமிழின் தனித்தன்மையை ஒழிக்க ஆரியர்கள் மேற்கொண்ட சூழ்ச்சிகள்தான் மணிப்பிரவாள நடையில் எழுதியதும் கிரந்த எழுத்துகளை பிரபலப்படுத்தியதும் ஆகும்!

தமிழும் - சமஸ்கிருதமும் ஒன்றல்ல!

இவையெல்லாம் காலப்போக்கில் கழிந்து, இன்றும் தமிழ் தமிழாகவே நிலைத்து நிற்கிறது. எக்காலத்திலும் தமிழ் வடமொழியின் உள்ளீடுகளை ஏற்க முடியாது. காரணம் இரண்டும் வெவ்வேறானவை. இரண்டின் எழுத்து, ஒலிப்பு முறை, மொழிப் பகுப்பு ஆகியவை எப்போதும் ஒன்றுபோல் இருக்க முடியாது.

இன்றும் புழக்கத்தில் இருக்கும், ஜ, ஷ, ஹ, ஸ ஸ்ரீ ஆகிய கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகளிலும், யுனிகோட் முறையிலும் ஏற்கெனவே இடம் பெற்றுள்ளன. ஆனால் சிறீரமணசர்மா எனும் இந்தப் பார்ப்பனர் முன்வைத்துள்ள 26 கிரந்த எழுத்துகளை எந்தத் தமிழனும் படித்திருக்கவோ, பயன்படுத்தியிருக்கவோ முடியாது. காரணம் அடிவயிற்றிலிருந்து எழுப்பும்,g, gh, kh, chh, jh உள்ளிட்ட ஒலிகளை எக்காலத்திலும் தமிழர்கள் பயன்படுத்தியதே கிடையாது.

பச்சையான ஊடுருவல்!

சர்மாவே தனது முன்வைப்பில் எழுதியிருப்பதைப் போல சமஸ்கிருதத்தை எழுதுவதற்காக சேர்க்கப்பட வேண்டிய எழுத்துகள் தானாம் அந்த 26 கிரந்த எழுத்துகளும்!

யுனிகோட் குறியீட்டு முறையில் சமஸ்கிருதத்தின் தேவநாகரி எழுத்துக்கு முன்பே இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதில் கொண்டு போய் சேர்க்க வேண்டியதுதானே இந்த எழுத்துகளை! அல்லது கிரந்தத்திற்கென தனி ஒதுக்கீட்டைப் பெறவேண்டியது தானே! அது அவ்வளவு எளிதல்ல!

புதிதான ஒரு வரி வடிவத்தை சேர்க்க வேண்டுமா? என்று யுனிகோட் சேர்த்தியம் அமைப்பு கேட்கும் கேள்விக்கு, இல்லை, இது ஏற்கெனவே இருக்கும் தமிழ் வரி வடிவத்தை விரிவுபடுத்துவதற்கான பரிந்துரை என்று குறிப்பிட்டுள்ளார். இவை இம்மொழியில் இன்றும் பயன்பாட்டில் உள்ளனவா? என்ற கேள்விக்கு, ஆம். சில நேரங்களில் என்றும் சமஸ்கிருத எழுத்துகளை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்குப் பயன்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட தமிழ்

அதற்கு அவர் காட்டியிருக்கும் எடுத்துக்காட்டுகள்: 1951ஆம் ஆண்டு சென்னை, காமகோடி கோஷஸ்தனம் வெளியிட்டுள்ள ஸ்ரீசதாஸிவ பிரமேந்திராவின் ஸிவ மானச பூஜா கீர்த்தனாஸ் மற்றும் ஆத்ம வித்யா விலாச என்னும் நூலும், 1916ஆம் ஆண்டு வெளியான டி.எஸ். நாராயண சாஸ்திரி என்பாரின் போஜ சரிதம் என்னும் நூலுமாகும்.

இவைதான் இன்னும் புழக்கத்தில் இருக்கின்றனவாம். இதை தமிழ் ஒதுக்கீட்டில் இணைத்து விரிவாக்கப்பட்ட தமிழ் (Extented Tamil) என்ற பெயரில் அங்கீகரிக்க வேண்டுமாம். அப்படி இவ்வெழுத்துகள் தமிழ் என்ற பெயரில் இணைக்கப்பட்டால், அது விரிவாக்கப்பட்ட தமிழாக இருக்காது. படுகொலை செய்யப்பட்ட தமிழாகத் தான் (Assassinated Tamil) இருக்க முடியும்.

காஞ்சி சங்கரமடத்தின் சூழ்ச்சி!

இந்தப் பரிந்துரைக்குப் பின்னால் காஞ்சி காம கே()டிகளின் கரம்தான் இருக்கிறது என்பது அய்ய மில்லாமல் தெரியும் ஒன்றாகும். சிறீ ரமண சர்மா தந்திருக்கும் எடுத்துக்காட்டுகள் மட்டுமல்ல. இது குறித்த அவர் விவாதித்ததாகக் கூறியிருக்கும் வல்லுநர்கள் மதராஸ் சமஸ்கிருதக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் மணி திராவிட், சிறீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் வேணுகோபால் ஷர்மா போன்றவர்களாவர்.

தமிழில் மேம்படுத்த சமஸ்கிருதப் பேராசிரியர் களிடம் கேட்பானேன்? வேலிக்கு ஓணான் சாட்சியா?

இணையத்தில் தமிழ் மிகச்சிறப்பாக வளர்ந்து வருகிறது. அடுத்தடுத்த தலைமுறையினர் தமிழ் கணினியில் பெரும் சாதனைகள் செய்கிறார்கள் என்ற பொறாமையில் நடத்தப்படும் திட்டமிட்ட பண்பாட்டுப் படையெடுப்பே இது! இச்செய்தியறிந்ததும் உலகத் தமிழர்கள் கடுமையாக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

தமிழக அரசு - முதல்வரின் கவனத்திற்கு...

ஆயினும், இது குறித்த கடுமையான கண்டனமும், மறுப்பும் உடனடியாக தமிழக அரசுத் தரப்பிலிருந்து யுனிகோட் சேர்த்தியம் அமைப்புக்கு சென்றால்தான் இந்தக் கொடுமையைத் தடுக்க முடியும். தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை இப்பிரச்சினை யில் உடனடி கவனம் எடுத்து செயல்பட வேண்டும். முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் காலத்திலேயே தமிழக அரசுக்குத் தெரியாமல் கொல்லைப்புற வழியாக தமிழுக்குக் கேடு பயக்க நினைக்கும் ஆரியத்தின் சதிச்செயல் வெற்றிபெற்று விடக் கூடாது. தமிழின் வளர்ச்சிக்கு ஆரிய சமஸ்கிருதத் திணிப்பு பெரும் தடையாக அமைவதோடு, தமிழைப் பின்னோக்கி படுகுழியில் தள்ளிவிடும். உடனடி நடவடிக்கை மட்டுமல்லாது, இத்தகைய திரிபு வேலைகளும், திணிப்புகளும், பண்பாட்டுப் படை யெடுப்புகளும் எவ்வகையிலும் நிகழ்ந்துவிடாமல் இருக்க கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

பன்னாட்டுத் தமிழ் அறிஞர்களும், கணித் தமிழ்ச் சங்கம், உத்தமம் போன்ற அமைப்புகளும் இத்திணிப்பு முயற்சிக்கு தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து, இது நடக்கக்கூடாது என்று யுனிகோட் அமைப்புக்கு முறையிட்டுள்ளன. கண்டனங்கள் வெடிக்கட்டும்!

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப் பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில், பார்ப்பனர்கள் தங்களின் வழக்கமான ஊடுருவல் சதியில் ஈடுபட்டுவிட்டனர், எச்சரிக்கை! எச்சரிக்கை!!

மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் அவசர அவசரமாகத் தலையிடுவார்களாக!

தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் (Tamil Virtual University Society) முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்கள், ஒருங்குறி (யுனிகோட்) சேர்த்தியத்தின் தலைவர் டாக்டர் லிசா மூர் (யு.எஸ்.ஏ.) அவர்களுக்கு தமிழில் திணிக்கப்படும் கிரந்த எழுத்துகள்பற்றிய சதி குறித்து விரிவாக எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழர்கள் இந்தப் பார்ப்பனச் சதியை முறியடிக்க அனல் கக்கும் குரலை எழுப்புவார்களாக!


தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை
28.10.2010

---------------------"விடுதலை” 28-10-2010

தீபாவளி கொண்டாடும் தமிழர்களின் சிந்தனைக்கு..


தீபாவளிப் பண்டிகை

இவ் வருஷத்திய தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வரப் போகின்றது. பார்ப்பனரல்லாத மக்களே! என்ன செய்யப்போகின்றீர்கள்? "அப்பண்டிகைக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை" என்று சொல்லி விடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையைக் கொண்டாடப்போகின்றீர்களா? என்பது தான் "நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்" என்று கேட்பதின் தத்துவமாகும். நண்பர்களே! சிறிதும் யோசனை இன்றி யோக்கியப் பொறுப்பின்றி உண்மைத் தத்துவமின்றி சுயமரியாதை உணர்ச்சி இன்றி சுயமரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக் கொள்ளுகின்றீர்களேயல்லாமல் மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப்பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரசாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின்றீர்களே யல்லாமல் மேலும் உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடையவும், அழுக்கு மூட்டைகளுடையவும், ஜீவனற்ற தன்மையான "பழய வழக்கம்" "பெரியோர் காலம் முதல் நடந்து வரும் பழக்கம்" என்கின்றதான வியாதிக்கு இடம் கொடுத்துக் கொண்டு கட்டிப்போடப்பட்ட கைதிகளைப்போல் துடிக்கின்றீர்களே யல்லாமல் உங்கள் சொந்தப் பகுத்தறிவைச் சிறிதுகூட செலவழிக்க சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.

பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கிறீர்கள். சுதந்தரத்தையும், சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்க தயாராயிருக்கின்றீர்கள். ஆனால் உங்கள் பகுத்தறிவைச் சிறிது கூட பயன்படுத்தத் தயங்குகிறீர்கள். அது விஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்? இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது? பார்ப்பனரல்லாதார்களில் சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? புராணப் புஸ்தக வியாபாரிகள் சிலர் மாத்திரம் வாழ்ந்தால் போதுமா? கோடிக்கணக்கான மக்கள் ஞானமற்று மானமற்று கால்வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலைவதைப் பற்றிய கவலை வேண்டாமா? என்று கேட்கின்றேன்.

புராண கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள்; அதன் ஊழலை எடுத்துச்சொன்னால் காதுகளைப் பொத்திக்கொள்ளுகின்றீர்கள். "எல்லாருக்கும் தெரிந்தது தானே; அதையேன் அடிக்கடி கிளறுகின்றீர்கள்? இதைவிட உங்களுக்கு வேறு வேலை இல்லையா?" என்று கேட்கின்றீர்கள். ஆனால் காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60 நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி, மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப் புரட்டை உணர்ந்தவர் களாவார்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்களாவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள்.

பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! இந்த மூன்று மாத காலத்தில் எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள்? எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும், நேரச்செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் நீங்கள் புராணப்புரட்டை உணர்ந்து புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய் கோபிப்பதில் என்ன பிரயோஜனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச்சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? "நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய்" என்றால் அதற்கு "நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன்" என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா?

அன்பர்களே! சமீபத்தில் வரப்போகும் தீபாவளிப்பண்டிகையை பார்ப்பனரல்லாத மக்களாகிய நீங்கள் 1000க்கு 999 பேர்களுக்கு மேலாகவே எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள். துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்து துணிவாங்குவது என்பது ஒன்று; மக்கள் மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும், யோக்கியதைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததுவுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்த மற்றதும் பயனற்றதுமான வெடிமருந்து சம்மந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பார்ப்பனர் உள்பட பலர் இனாம் பிச்சை என்று வீடு வீடாய் கூட்டங்கூட்டமாய்ச் சென்று பல்லைக்காட்டிக் கெஞ்சி பணம்வாங்கி அதை பெரும்பாலும் சூதிலும், குடியிலும், செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு; இவற்றிற்காக பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது ஐந்து; அன்று ஒவ்வொரு வீடுகளிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச்செய்து அவைகளில் பெரும்பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும் வீணாக்குவதும் ஆறு; இந்தச் செலவுகளுக்காகக் கடன் படுவது ஏழு.

மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காக கடன்பட வேண்டியிருக்கின்றது என்பதும் பட்டாசு வெடி மருந்து ஆகியவைகளால் அபாயம் நேரிட்டு பல குழந்தைகள் சாவதுமான விஷயங்களொரு புறமிருந்தாலும் மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ சைன்ஸ் பொருத்தமோ சொல்லுவதானாலும் தீபாவளி பண்டிகை என்றால் என்ன? அது எதற்காக கொண்டாடப்படுகிறது என்கின்ற தான விஷயங்களுக்கு சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.


ஏனெனில் அது எப்படிப்பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய, மற்றபடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவுக்கோ அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம் இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லாவற்றையும் பொய் யென்று ஒப்புக்கொண்டாய் விட்டது. அப்படி இருக்க ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரக்கணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக்காக மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இந்தக் காலத்தில் இவ்வளவு பாராட்டுதலும், செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால், அது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

தீபாவளிப்பண்டிகையின் கதையில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது

நரகாசூரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண்சாதியாகிய சத்தியபாமை

ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளையிருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தவர்கள் என்றாவது அல்லது இவர்கள் சம்மந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்தமாதிரியான ஒரு பண்டிகை தீபாவளி என்று கொண்டாட வேண்டுமென்றாவது ஒப்புக்கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம்.

பார்ப்பனரல்லாதார்கள், தங்களை ஒரு பெரிய சமூகக்காரர்களென்றும் கலைகளிலும் ஞானங்களிலும் நாகரீகங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் தட்டிப்பேச ஆளில்லாவிடங்களில் சண்டப்பிரசண்டமாய்ப் பேசி விட்டு எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு அயோக்கியனோ "காளை மாடு கன்றுப் போட்டிருக்கின்றது" என்றால் உடனே "கொட்டத்தில் கட்டி பால் கறந்து கொண்டுவா" என்று பாத்திரம் எடுத்துக்கொடுக்கும் மடையர்களாகவே இருந்து வருவதைத்தான் படித்த மக்கள் என்பவர்களுக்குள்ளும் பாமர மக்கள் என்பவர்களுக்குள்ளும் பெரும்பாலும் காண்கின்றோமே ஒழிய "காளைமாடு எப்படி கன்றுப் போடும்" என்று கேட்கின்ற மக்களைக் காண்பது அரிதாகவே இருக்கின்றது. மற்றும் இம்மாதிரியான எந்த விஷயங்களிலும் கிராமாந்தரங்களில் இருப்பவர்களை விட பட்டணங்களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடத்தனமாகவும் பட்டணங்களில் இருப்பவர்களை விட சென்னை முதலான பிரதான பட்டணங்களில் இருப்பவர்கள் பெரிதும் மூட சிகாமணிகளாகவும் இருந்து வருவதை பார்க்கின்றோம்.

உதாரணமாக தீபாவளி, சரஸ்வதி பூஜை, தசரா, பிள்ளையார் சதுர்த்தி, பதினெட்டு, கிர்த்திகை முதலிய பண்டிகைகள் எல்லாம் கிராமாந்திரங்களை விட நகரங்களில் அதிகமாகவும் மற்ற நகரங்களைவிட சென்னையில் அதிகமாகவும் கொண்டாடுவதைப் பார்க்கின்றோம். இப்படிக் கொண்டாடும் ஜனங்களில் பெரும்பான்மையோர் எதற்காக, ஏன் கொண்டாடுகின்றோம் என்பதே தெரியாதவர்களாகவேயிருக்கின்றார்கள். சாதாரணமாக மூட பக்தியாலும், குருட்டுப் பழக்கத்தினாலும் கண்மூடி வழக்கங்களைப் பின்பற்றி நடக்கும் மோசமான இடம் தமிழ் நாட்டில் சென்னையைப் போல் வேறு எங்குமே இல்லை என்று சொல்லி விடலாம். ஏனெனில் இன்றைய தினம் சென்னையில் எங்கு போய் பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டுத்திண்ணையிலும் சரீரமில்லாத ஒருதலை உருவத்தை மாத்திரம் வைத்து அதற்கு நகைகள் போட்டு பூசைகள் செய்து வருவதும், வீடுகள் தோறும் இரவு நேரங்களில் பாரத இராமாயணக் காலக்ஷேபங்களும், பெரிய புராண திருவிளையாடல் புராணக் காலக்ஷேபங்களும் பொது ஸ்தாபனங்கள் தோறும் சதா காலக்ஷேபங்களும் நடை பெறுவதையும் இவற்றில் தமிழ் படித்த பண்டிதர்கள், ஆங்கிலம் படித்த பட்டதாரிகள், கௌரவப் பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள், பிரபலப்பட்ட பெரிய உத்தியோகஸ்தர்கள் மற்றும் பிரபுக்கள், டாக்டர்கள், சைன்ஸ் நிபுணர்கள், புரபசர்கள் முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். பார்ப்பனரல்லாதார்களில் இந்தக் கூட்டத்தார்கள் தான் "ஆரியர் வேறு தமிழர் வேறு" என்பாரும் "புராணங் களுக்கும் திராவிடர்களுக்கும் சம்மந்தமில்லை" என்பாரும் தீபாவளி வைணவப் பண்டிகை ஆனதால் சைவனுக்கு அதில் சம்பந்தமில்லை என்பாரும் பார்ப்பனரல்லாத சமூகத்தாருக்கு "நாங்கள் தான் பிரதிநிதிகள்" என்பாரும் மற்றும் "திராவிடர்களின் பழைய நாகரீகத்திற்கு மக்களை அழைத்துச் செல்லவேண்டு" மென்பாரும் பெருவாரியாக இருப்பார்கள். ஆகவே இது போன்ற "படித்த" கூட்டத்தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்மந்தமான காரியங்களை எதிர்பார்ப்பதைவிட, உலக அறிவுடைய சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதும், பிரசாரம் செய்வதும் பயன் தரத்தக்கதாகும்.

உதாரணமாக, ராமேஸ்வர தேவஸ்தானக் கமிட்டியாரின் ஒரு ரிபோர்ட் டில் மக்கள் ராமேஸ்வரத்திற்கு முந்திய வழக்கம் போல் இப்போது யாத்திரைக்கு வருவதில்லை என்றும் அதனால் வரும்படி குறைந்து விட்ட தென்றும், அதுபோலவே திருப்பதி மகந்து அவர்களின் ஒரு வருஷாந்திர ரிப்போர்ட்டில் அவ்வருஷம் திருப்பதிக்கு யாத்திரைக்காரர்கள் மிகக் குறைந்து போய் அதனால் கோவிலுக்கு முந்திய வருஷங்களைவிட பகுதி வரும்படிகூட எதிர்பார்க்க முடியாததாய் இருப்பதாகவும் குறிப்பிடப் பட்டிருப்பதனாலும், சங்கராச்சாரியார், ஜீயர் முதலிய மடாதிபதிகள் செல்லுகின்ற பக்கங்களில் எல்லாம் முன்போல் வரவேற்பு ஆடம்பரங்களும் வரும்படியும் இல்லாமல் சீக்கிரம் சீக்கிரமாக சஞ்சாரத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்புவதிலிருந்தும் பிராமண மகாநாடுகளும் சமயப் பத்திரிகைகளும் மூட்டை கட்டப்படுவதிலிருந்தும் ஒரு விதத்தில் பாமர மக்களிடை உண்மை உணர்ச்சி பரவி இருக்கின்றதென்பதை உணர முடிந்தாலும், வழிகாட்டிகளென்றும் தலைவர்களென்றும் பொது ஜனங்களின் தர்மகர்த்தாக்களென்றும் படிப்பாளிகள் என்றும் தங்களை சொல்லிக் கொள்ளுபவர்களுள் அநேகமாக சிறிது உணர்ச்சிகூடக் காணாமலிருப்பதால் அவர்களைப்பற்றி நாம் வருந்தாமல் இருக்க முடியவில்லை.

எப்படியானாலும் இந்த வருஷம் தீபாவளிப் பண்டிகை என்பதை உண்மையான தமிழ் மக்கள் திராவிடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக்கவோ கொண்டாடவோ கூடாது என்றே ஆசைப்படுகிறேன்.

அன்றியும் இத்தீபாவளிக் கதை எவ்வளவு பரிகாசத்திற்கு இடமா யிருக்கிறதென்பதையுணரும் பொருட்டு அதனையும் கீழே தருகிறேன்.

தீபாவளியின் கதைச் சுருக்கம்
ஆதிகாலத்தில் நரகாசூரன் என்று ஒரு அசுரன் இருந்தானாம். அவன் வராக அவதாரத் திருமாலுக்கும் பூமிக்கும் பிறந்தவனாம். அவன் தேவர்களை யெல்லாம் பலவாறு தூஷித்து இம்சித்து வந்தானாம். தேவர்கள் இதைப்பற்றி அவன் தகப்பனாகிய திருமாலிடம் முறையிட்டார்களாம். உடனே திருமால் நரகாசூரனைக் கொல்லுவதாக வாக்களித்தாராம். அதற்காக வேண்டி திருமால் கிருஷ்ணனாகவும் பூமி தேவி சத்தியபாமையாகவும் அவதாரமெடுத்து உலகத்துக்கு வந்து நரகாசூரனைக் கொன்று விட்டார்களாம். நரகாசூரன் சாகும்போது தான் செத்த தினத்தை உலகத்தார் கொண்டாடவேண்டுமென்று கேட்டுக் கொண்டானாம். கிருஷ்ணன் அப்படியே ஆகட்டுமென்று வாக்களித்தாராம். அதற்காகவேண்டி மக்கள் எல்லோரையும் கொண்டாடும்படி கடவுள் செய்து விட்டாராம். ஆதலால் நாம் கொண்டாடுகிறோமாம்; அல்லது கொண்டாட வேண்டுமாம். இதை நமது பகுத்தறிவுக்குப் பொருத்திப் பார்ப்போம். முதலாவது இந்தக் கதை உண்மையாய் இருக்கமுடியுமா? "எல்லா உலகங்களையும் உண்டாக்கிய நான்முகனைப் பெற்றவரும், உலகங்களையெல்லாம் காத்து வருபவரும் தேவர்கள் தலைவருமாகிய திருமாலு"க்கும் பூமி "தேவி"க்கும் (எப்படி குழந்தை பிறக்கும்? பூமி "தேவி" என்றால் உலகம் அல்லவா? அப்படித்தான் பிறந்தவன்) அவன் எப்படி அசுரன் ஆனான்? அத்தகைய மேம்பாடுடைய கடவுளுக்குப் பிறந்தவன் எப்படி தீய செயல்களைச் செய்தான்? அப்படித்தான் செய்தாலும் அவனைப் பெற்றவனாகிய திருமால் தனது மகனைத் திருத்தாமல் ஏன் கொன்றான்? அப்படியிருந்தாலும் தானே வந்துதான் கொல்லவேண்டுமோ? மேற்படி நரகாசுரனைக் கொன்றபோது அவன் தாயாகிய பூமிதேவியும் சத்திய பாமையாகப் பிறந்து உடனிருந்ததாகக் கதை கூறுகிறது. என்னே தாயின் கருணை! இவள்தான் உலகத்தை யெல்லாம் காப்பாற்றுகிறாளாம்! உலக மக்கள் செய்யும் பாவங்களை யெல்லாம் பொறுத்துக் கொள்ளுகின்றாளாம்! "பொறுமையில் பூமிதேவிபோல்" என்று உதாரணத்திற்குக் கூட பண்டிதரும் பாமரரும் இந்த "அம்மையாரை" உதாரணமாகக் கூறி வருகின்றனரே! இத்தகைய பூமி தேவியார் தனது மகனைக் கொல்லும்போது தானும் உடனிருக்கவேண்டுமென்று திருமாலைக் கேட்டுக் கொண்டாராம்! என்னே தாயின் கருணை!!

தமிழர்களாகிய நம்மையே அசுரர்களென்றும் ஆரியராகிய பார்ப்பனர்கள் தாங்களே தேவர்களென்றும் கற்பித்துக் கதை கட்டியிருக்கிற தேவஅசுரப் போராட்டத்தோடு சம்மந்தப்பட்டிருக்கிற இந்தக்கதையைத் தமிழ் மக்களாகிய நாமே கொண்டாடுகிறோம்! நாமே சிறந்த நாளாகக் கருதுகிறோம்! அந்தோ என் செய்வது? நம்மை ஏமாற்றி நம்மையே பழிக்கும் பார்ப்பனர் கட்டுக்கதையை உண்மையென நம்பி நாமே கொண்டாடி வீண் செலவு செய்வதென்றால் நமது சுயமரியாதையை என்னென்பது? நமது பகுத்தறிவை என்னென்று சொல்லுவது?

புராணங்களில் கண்டபடியே இந்தக் கதையை உண்மையென்று ஒப்புக்கொண்டு தமது பகுத்தறிவையிழந்து இந்தத் தீபாவளியைக் கொண்டாடும் நமது தமிழ் மக்களின் அறியாமையை என்னென்று கூறுவது?

சென்றது போக, இனிமேல் கொண்டாவது தீபாவளியை அர்த்தமற்ற மூடப்பழக்கத்தை நம் தலையில் நாமே மண்ணைப் போட்டுக்கொள்ளும் செயலைக்குறித்து ஒரு காசாவது, ஒரு நிமிஷ நேரமாவது செலவு செய்ய வேண்டாமென்று திராவிட மக்களாகிய உங்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

------------------------ பெரியார் ஈ.வெ.ரா. ”குடி அரசு” 01.11.1936

27.10.10

பெரியார் பற்றிய இந்தியா டுடே விமர்சனத்துக்கு ஒரு மறுப்பு


இந்தியா டுடே விமர்சனத்துக்கு ஒரு மறுப்பு
எம்.சி. ராஜா - உண்மையான வரலாற்றுப் பின்னணி


மயிலை சின்னத்தம்பி பிள்ளை ராஜா என்ற பெயர்தான் எம்.சி. ராஜா என்று அறியப்பட்டிருந்தது. 1883 ஆம் ஆண்டு ராஜா அவர்கள் மயிலை சின்னத்தம்பி பிள்ளையின் மகனாகப் பிறந்தார்.

சிலர் குறிப்பிடுவதுபோல், அவர் செயின்ட் தாமஸ் மவுன்டில் பிறக்கவில்லை. மயிலாப்பூரில் அல்லது அந்நாளில் மயிலாப் பூருடன் சேர்ந்திருந்த ராயப்பேட்டையில் பிறந்து, பின்னர் செயின்ட் தாமஸ் பகுதிக்குக் குடியேறினார். ராஜா அவர்களின் தந்தை சின்னத்தம்பி பிள்ளை ஏழ்மையான தாழ்த்தப்பட்ட வகுப்பினர். லாரன்ஸ் அசைலத்தில் மேனேஜராகப் பணியாற்றியவர். ராயப்பேட்டை வெஸ்லி மிஷன் உயர்நிலைப்பள்ளியில், வெஸ்லி கல்லூரியில் பயின்று சென்னை கிறித்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.

அரசியலில் பங்கேற்று செங்கல்பட்டு டிஸ்டிரிக்ட் போர்டு எனப்படும் செங்கல் பட்டு மாவட்டக் கழகத் தலைவரானார். ராஜா அவர்களை 1916 இல் ஆதிதிராவிட மகாஜன சபை செயலாளராக இருந்த வரை ஈர்த்தது நீதிக்கட்சிதான். சென்னை சட்டமன்றத்திற்கு 1920 இல் தேர்தல் நடைபெற்றபோது முதல் தேர்தலில் 1920 நவம்பரில் நீதிக்கட்சி வேட்பாளராக நின்றுதான் சட்டமன்றம் சென்றார். நீதிக் கட்சியின் துணைத் தலைவராக சட்ட மன்றத்தில் தேர்ந்தெடுக்கப் பெற்றார். சென்னை சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தாழ்த் தப்பட்டவர் எம்.சி. ராஜாதான். அதுவும் தேர்ந்தெடுத்தது நீதிக்கட்சிதான். இதை யெல்லாம் மறைத்து விடுகிறார்கள்.

1922 இல் தாழ்த்தப்பட்ட சகோதரர் களைப் பறையன், பஞ்சமன் என அழைத்ததை மாற்றி ஆதிதிராவிடர், ஆதி சூத்திரர் என்று தீர்மானம் கொண்டு வந்தபோது, அதனை ஏற்று நிறைவேற்றியது நீதிக்கட்சிதான். 1921-க்குப் பிறகு 1923 இல் நீதிக்கட்சியிலிருந்து வெளியேறித் தனி வழி காணவேண்டும்; தாழ்த்தப்பட்டோர் தலைவராக வேண்டும் என்று நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவர் என்பதைவிட தாழ்த்தப்பட்டோர் தலைவராக வேண்டுமென்று அனைத்து இந்திய தாழ்த்தப்பட்டோர் அமைப்பினை 1928 இல் உருவாக்கி, அதன் தலைவரானார். 1926 முதல் 1937 வரை டில்லி சட்டப்பேரவையில் விளங்கினார். 1937 இல் ஏற்பட்ட கூர்மா வெங்கட்டரெட்டி நாயுடு (கே.வி. ரெட்டி நாயுடு) அமைச்சரவையில் சென்னை மாநில வளர்ச்சித் துறை அமைச்சரானார்.

ஆனால், எம்.சி. ராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் இரண்டு சறுக்கல்கள். ஒன்று, நீதிக்கட்சி தொடங்கிய காலத்திலிருந்து இணைந்து பணியாற்றிய எம்.சி. ராஜா, குறுகிய காலத்தில் சட்டமன்ற உறுப்பினர், துணைத் தலைவர் பதவி களைப் பெற்ற எம்.சி. ராஜா, நீதிக்கட்சியையும், தியாகராயரையும் விமர்சித்தார்.

இரண்டாவது, அம்பேத்கரின் வழிக்கு மாறுபட்ட சறுக்கல். ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது தனி நியமனாக இல்லாமல், தனி ஒதுக்கீடாக மாற வேண்டும் என்று 1927 இல் மத்திய சட்ட சபையில் அகில இந்திய தாழ்த்தப்பட் டோர் உறுப்பினராக நியமனம் செய்யப் பட்டு, 1928 இல் மத்தியக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவின் அறிக்கைகள் அம்பேத்கர் அவர்களின் எழுத்துகள் ராஜாவின் அறிக்கையின் தொடர்ச்சி என்பவர்கள் அம்பேத்கரின் எண்ணம், செயலுக்கு எதிராகச் சென்ற மாபெரும் துரோகத்தை எப்படி மன்னிக்கிறார்கள் என்பது வரலாற்றாசிரியர்கள் வியக்கின்ற ஒன்று.

இந்திய தேசிய காங்கிரசின் இரண்டு வலதுசாரிகளான டாக்டர் பி.எஸ். மூஞ்சேயுடன், ஜாதவுடன் உடன்பாடு மேற்கொண்டார். ராஜா கொடுத்த ஆதரவிற்காக மூஞ்சே தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்தார். அனைத்து இந்திய அளவில் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனி தொகுதிக்காகப் போராடி வந்த வேளையில், தாழ்த்தப்பட்டோர் தலைவராக ஆன எம்.சி. ராஜா மேற்கொண்டது சறுக்கல் என்பதை விடத் துரோகம் என்று சொல்லலாம்.

எனவேதான், அதாவது அம்பேத்கருக்குச் செய்த துரோகத்தினால் தான், புனேயில் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் விளைவாகத்தான் அவருடைய முந்தைய செயல்கள் மதிப்பிழந்து போயின. எனவேதான், சுயமரியாதை இயக்கம் ராஜாவைக் கடுமையாக விமரிசனம் செய்தது.

இங்கே ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்; நீதிக்கட்சி தொடங்கிய காலத்தில் இணைந்து பணியாற்றிய, நீதிக்கட்சியிலிருந்து வெளியேறி நீதிக்கட்சியையும், தியாகராயரையும் விமரிசிக்கப்பட்ட காலத்தில் கடுமையாக விமரிசனம் செய்யவில்லை.

ஆனால், எப்போது - 1932 இல் அம்பேத்கர் செயல், எண்ணங்களுக்கு மாறாக, அகில இந்திய தாழ்த்தப்பட் டோர் மாநாட்டில் அம்பேத்கர் - இரட்டைமலை சீனிவாசனே எங்கள் பிரதிநிதி - காந்தியை நம்பாதீர்கள் என் றாரோ அந்த ராஜா, தலித்களுக்குத் தனித் தொகுதி என்ற உயிரான கொள்கையைப் பலி கொடுத்து மூஞ்சேயுடன் ஒப்பந்தம் செய்துகொண்டதுதான் அவருடைய வாழ்க்கையின் கரும்புள்ளி.

சமீபத்தில் பெருந்தலைவர் எம்.சி. ராஜா சிந்தனைகள் தொகுதி ஒன்று வே. அலெக்ஸ் தொகுத்து, தமிழில் ஆ. சுந்தரம் மொழி பெயர்த்த நூல் வெளி வந்துள்ளது. இந்நூலில் 1930 இல் ஜே. சிவசண்முகம் பிள்ளை எழுதிய, இண்டியா பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்ட The Life Select writings and Speeches of Rao Bahadur M.C. Raja வின் வாழ்க்கை, 1927 இல் எம்.சி. ராஜா அவர்கள் எழுதி வெளி யிட்ட ஆங்கில நூலினைச் சென்னை சேத்துப்பட்டுக் கூடம், ஒடுக்கப்பட்ட இந்துக்கள் என்னும் தலைப்பில் வெளி யிட்டது. அத்துடன் 1923 ஆம் ஆண்டு ஜூலை 21, 22 ஆகிய நாள்களில் கோவில் பட்டியில் ஆதிதிராவிடர் பேரவையில் ராஜா அவர்கள் பேசிய உரை ஆகியவற் றையும் இணைத்து இந்நூல் வெளி வந்துள்ளது.

இந்த உரைகளில் நீதிக்கட்சியைக் கடுமையாக விமரிசித்துள்ளார். ஆனால், தந்தை பெரியாரும் சரி, சுயமரியாதை இயக்கமும் சரி, எம்.சி. ராஜாவிற்கு அந்தக் காலங்களிலேயே தக்க பதிலை முறையாக அவர் மறுக்கவியலாதவாறு அளித்துள்ளன. குடிஅரசு வெளியிடும் தொகுதிகளில், அன்றைய நாள் குடிஅரசு படிக்க இயலாதவர்களுக்கு இன்று திராவிடர் கழகம் வெளியிட்டு அரிய சேவை செய்கிறது.

இந்த நூலைக் குறித்து அக்டோபர் 27, 2010 இந்தியா டுடே தமிழ் ஏட்டில் வரலாற்றில் மறைக்கப்பட்ட தலித் ஆளுமை என்னும் தலைப்பில், அந்நூலை விமரிசனம் செய்துள்ள விமரிசகர் தலைப் பிலேயே நீதிக்கட்சியின் தவறுகளை விமரிசனம் செய்ததால் இருட்டடிப்பு செய்யப்பட்ட எம்.சி. ராஜாவின் எழுத்துகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன என்று ஏதோ இப்போதுதான் இவை வெளி வந்தது போன்ற மாயையை உருவாக்கி உள்ளதைக் காண்கிறோம்.

------------------"விடுதலை”22-10-2010


இந்தியா டுடே விமர்சனத்துக்கு ஒரு மறுப்பு எம்.சி. ராஜா - உண்மையான வரலாற்றுப் பின்னணி

கட்டுரையின் தொடர்ச்சி...

நாம் மேலே குறிப்பிட்டவாறு 1927 இல் எழுதிய நூலைச் சேத்துப்பட்டுக்கூடம் ஒடுக்கப்பட்ட இந்துக்கள் என்னும் பெயரில் தமிழாக்கித் தன் மூன்றாவது வெளியீடாக 2006-லேயே வெளியிட் டுள்ளது. ஏற்கெனவே ஜே.சிவசண்முகம் பிள்ளை வெளியிட்டுள்ள நூல், சென்னை சட்டப்பேரவையில் 26 அக்டோபர் 1939 இல் எம்.சி. ராஜா பேசிய பேச்சுகள் ஆகியன அச்சில் வெளிவந்துள்ளன.

ராஜா அவர்கள் ஆகஸ்ட் 20, 1943 இல் இறந்தார். அவர் இறந்த பின் அல்ல, அவருடைய காலத்திலேயே வெளிவந்துள்ளன. இறந்த பின்னரும் வெளிவந்துள்ளன.

உண்மை இவ்வாறு இருக்கையில், பெரியாரைப்பற்றி அவதூறு பேசுவதில், கொச்சைப்படுத்துவதில் தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் சிலரும் சுகம் காணுகின் றனர் என்றே தோன்றுகிறது.

தந்தை பெரியாரின் வாழ்க்கை திறந்த புத்தகம். ஒளிவு மறைவு இல்லாதது. பூனா ஒப்பந்தத்தில் தான் செயல்பட்ட விதம் ஒருபோதும் மன்னிக்க முடியாதது என்று எம்.சி. ராஜா பின்னாளில் கருதியதாக காம்டே எனும் ஆய்வாளர் பதிவு செய் துள்ளதாக நூல் மதிப்பீட்டாளரே எழுதியுள்ளார்.

ஆனால், தந்தை பெரியாரைப் பொருத்தவரையில் சருக்கலோ, தவறுகளோ கிடையாது. 1947 இல் இந்திய விடுதலை குறித்து அவர் கொண்ட கருத்து, 1950 இல் குடிஅரசு கொண்ட கருத்து தெளிவானதாகவும், சரியான தாகவும் இருப்பதை 63 ஆண்டுகளுக்குப் பின்னும் மெய்ப்பிக்கப்படுகிறது.

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற பெயரில் சுயமரியாதை இயக்கம் செயல்படுத்திய திட்டங்களில் உண்மை இல்லை. வகுப்புவாத ஏகாதிபத்தியமும், ஜாதியின் கொடுங்கோன்மையுமே என்று ராஜா தவறாகக் கணித்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தந்தை பெரியார் 126 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரில் பயணங்கள் என்றும் முடிவதில்லை - பாதைகளும் எப் போதும் தவறுவதில்லை என்று எழுதியவற்றை நினைவுபடுத்திக் கொள்வது நல்லது.

தமிழர் தலைவர் குறிப்பிட்டார், கொள்கைகள் நமக்கு அடிப்படையானவை; அத்துபடியானவை. அவைகளைப் பாதுகாப்பதும், பரப்புவதும், திரிபுவாத விஷமத்தன விமர்சனங்களின் விலாவை ஒடிப்பதும்தான் நம் முன் உள்ள ஒரே பணி.

இந்தச் சிந்தனையோடுதான் இந்தியா டுடே விஷம விமர்சனத்திற்கு இங்கே பதிலளித்தோம்.

தந்தை பெரியார் தொடங்கியது கட்சி அல்ல - இயக்கம். அவர்களின் அரசியல் பதவிகள், புகழ் பெருமைகள், பாராட்டுகள் இவைகளைத் துறந்த அப்பழுக்கற்ற தூய செயல்பாடுகளே மக்களை மானமும், அறிவும் உள்ள மக்களாக ஆக்கும். அவர்தம் நன்றி பாராட்டாத பணிகளே தொண்டறமாய் அமைந்தன. பகுத் தறிவும், மனிதநேயமும் தான் அதன் வழிமுறையும் இலக்குமாக அமைக்கப் பட்டுள்ளன.

இவைதான் இன்றும், அன்றும், என்றும் தமிழர் தலைவர் குறிப்பிட்டது போல் சுயமரியாதை இயக்கம்பற்றிய உண்மைகள்.

கடவுள், மதம், ஜாதி, மொழி, நாடு என்ற எந்தப் பற்றும் இல்லாதவனாக என்னை ஆக்கிக் கொண்டு அறிவுப் பற்று, மனிதப் பற்று மட்டுமே கொண் டவனாக அந்தப் பார்வையிலேயே எதையும் பார்த்துப் பணிபுரிபவன் என்ற தந்தை பெரியாரின் விளக்கம் வீண் அபவாதங்களுக்குப் பதிலாக அமையும்.

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் எந்தக் காரியமானாலும், காரணகாரியமறிந்து செய். சரியா, தப்பா என்பதை அந்தக் காரணகாரிய அறி விற்கும், ஆராய்ச்சிக்கும் விட்டுவிட்டு, எந்த நிர்ப்பந்த சமயத்திலும் அதன் முடிவுக்கு மரியாதை கொடு என்றது.

மனிதன் சரி என்று கருதிய எண்ணங்களுக்கும், இழப்புகளுக்கும் மரியாதை கொடுப்பதுதான் சுதந்திரமாகும். சுதந்திரத்திற்கும், சுயமரியாதைக்கும் அதிக தூரமில்லை. இன்றைய சுதந்திர வாதிகள் சுயமரியாதையை அலட்சியம் செய்கிறார்கள். இது உண்மையிலேயே மூடவாதம் என்று சொல்வோம். சுய மரியாதை அற்றவர்களுக்கே சுதந்திரம் பயனளிக்காது என்பதுதான் சரியான வார்த்தையாகும் என்று குறிப்பிட்ட பெரியார் கருத்து சரியானதாகவே இன்றும் இருக்கிறது.

எனவே, எம்.சி. ராஜாவின் எழுத்துகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் வகையில் பெரியாரைக் குறை கூறு வதோ, கொச்சைப்படுத்துவதோ, உண் மையான சுய சிந்தனையாளர் பெரியாரை இழிவுபடுத்துவதோ முறையாகாது. இதுபோல் சேற்றை வாரி வீசும் பணியைத் தொடராமல் இருப்பது நல்லது.

எம்.சி. ராஜா இன்று இருந்தால், 117 வயதுக் கிழவராக, எப்படி மூஞ்சேயுடன் உடன்பாடு கண்டதற்கு வருந்தினாரோ, அதுபோல் சுயமரியாதை இயக்கம் குறித்துத் தவறாகக் கணித்ததற்கும் வருத்தம் தெரிவித்திருப்பார்.

தந்தை பெரியார் தொடர்ந்து வகுப்புரிமையை வலியுறுத்தினார் - போராடினார். 3.12.1950 திருச்சி வகுப்புரிமை மாநாட்டில் டாக்டர் நாயர் பந்தலில், எம். ரத்னசாமி தலைமையில், இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவர் தந்தை பெரியார்.

சென்னை சர்க்காரில் உள்ளது போலவே, மத்திய சர்க்காரிலும் உத்தி யோகங்களை வழங்குவதில் வகுப்புவாரி முறை அமல் நடத்தப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது. வேலை அளிப்பதில் மட்டுமன்றி, வேலை உயர்வு தரும்போதும் இந்தக் கொள்கையே பின்பற்ற வேண்டுமென இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

1950 இல் தந்தை பெரியார் போட்ட தீர்மானம் 2002 இல் அரசியல் சட்டத் தின் 85 ஆவது திருத்தமாக அரசியல் சட்ட 16 ஆவது பிரிவு திருத்தம் வாயிலாக நிறைவேறியது. 1982 இல் தந்தை பெரியார், கழகத் தலைவர் அம்மா அவர்கள் மறைந்த பிறகும், 1.1.1982 இல் மதுரை ரீகல் திரையரங்கில் நடைபெற்ற மதுரை திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாட்டில் நிறைவேறிய தீர்மானம் இது.

வேலை வாய்ப்புகளில் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குச் செய்யப்படும் இட ஒதுக்கீட்டினை அரசுத் துறையில் மட்டுமன்றி, தனியார் துறை, கூட்டுத் துறை ஆகிய துறைகளிலும் அமல்படுத்த அரசு ஆணை பிறப்பித்து நடைமுறைப்படுத்தவேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கின்றது.

அய்யா கடைசிவரை வலியுறுத்தி யது வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை. அதுமட்டுமல்லாது, தீண்டாமை, ஜாதி ஒழிப்பு என்பதை நடைமுறைப்படுத்தவே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று வலியுறுத்தினார். கலைஞர் அரசுதான் அதனை நிறை வேற்றி அய்யாவின் நெஞ்சில் வடிந்து கொண்டிருந்த குருதியைத் துடைத்தது.

தாழ்த்தப்பட்டவர் நலனில் தந்தை பெரியார் காலத்தும் சரி, அதன் பின்னும் சரி இம்மியளவும் விட்டுக் கொடுக்காமல், இட ஒதுக்கீடு, தீண் டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு என்று பாடுபட்டு வரும் ஒரே இயக்கம் திராவிடர் கழகம்தான்.

பெரியாரின் பெரும் பணிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பெரும் பணி செயலூக்கம் கொண்ட சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. விளம்பரங்கள் இல்லாமல், பதிவுகள் இல்லாமல் பெரியாரால், பெரியாரின் சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆற்றியுள்ள சாதனைகள் ஏராளம். அளவிட முடியாதது.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒன்று சொல்வோம். அன்றும், இன்றும், என்றும் உங்களைப்பற்றி உங்களுக்கு நேர்ந்த, நேர்ந்துவரும் இழிவு குறித்து, உங்களுக்கு இழைக்கப்படும் ஜாதிக் கொடுமைகள், ஜாதி வக்கிரங்களை எடுத்துக் கூறிவரும் இயக்கம் திரா விடர் கழகம். ஒரு விடுதலை என்பது மறக்கவோ, மறைக்கவோ முடியாதது. ஏதோ எம்.சி. ராஜாவைத் திட்டமிட்டு மறைத்துவிட்டதுபோல வதந்தி பொய்ப் பிரச்சாரங்கள் இதோடு நிற்கட்டும்.

திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை அவர்கள் குறிப்பிட்டதுபோல்,

அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்பதை அய்யா நம்பவில்லை. ஜாதிகள் இருக்கும்வரை தீண்டாமையை ஒழிப்பது குதிரைக் கொம்பேயாகும். அதுவே ஜாதி ஒழிக்கப்பட்டது என்று சொன்னால்தான் இந்தியாவிற்கே விடிவு காலம் என்றார். நீதிமன்றத்திலும் ஒதுக்கீடு கேட்கும் இயக்கம் தந்தை பெரியாரின் திராவிடர் கழகம், தமிழர் தலைவர் தலைமையிலான திராவிடர் கழகம்.

எம்.சி. ராஜவைப் பற்றி எழுதுவது ஆனாலும் சரி, தீண்டாமை, ஜாதி ஒழிப்புப்பற்றி எழுதுவதானாலும் சரி, அங்கே, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பெரியார் ஆற்றிய தொண்டுகளை வேண்டுமென்றே, மிகச் சிறு குழுவினர் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் மறைக்கப் பார்க்கிறார்கள். பொய்யைப் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். இதற்காகவே நம்முடைய எதிரிகளின் கையாள்களாக இவர்கள் மாறிப்போய் இருக்கிறார்கள். இதனால் இரண்டுவித ஆதாயங்கள் அவர்களுக்கு உடனடியாகக் கிடைக்கின்றன.

(1) நல்ல விளம்பரம் (2) பூணூல் திருமேனிகளோடு நெருங்கிய தொடர்பு -


அதன்மூலம் கிடைக்கிற சலுகைகள். இதனாலேயே பெரியாரைத் தாக்குகிறார்கள். பிழைக்கிறார்கள் என்று சங்கொலி பொறுப்பாசிரியர் க. திருநாவுக்கரசு பொருத்தமாக முன்பு எழுதியது நினைவிற்கு வருகிறது.

சங்கராச்சாரியாருடன் சமரசம்

எம்.சி. ராஜா 1930-களில் சங்கராச்சாரியுடன் சமரசம் செய்துகொண்டு, அவரைப் பணிந்து போற்றியதுண்டு. பெரியாரோ, அண்ணல் அம்பேத்கரோ என்றேனும் அவ்வாறு செய்ததுண்டா? சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைகளுக்கு மாறாகச் செல்வோர், கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்களைத் தாழ்த்துவதோ, இருட் டடிப்புச் செய்வதோ நோக்கம் அல்ல.

எனினும் சிலர் கேட்கலாம். யாரோ இந்தியா டுடேயில் எழுதி விட்டார்கள் என்பதற்கு இவ்வளவு விளக்கமா? என்று.

அவர்களுக்கு நாம் சொல்லும் பதில்:

நாம் இத்தகைய பொய்க் கூற்று களுக்கும், பொய்ப் பிரச்சாரங்களுக்கும் பதில் அளிக்கத் தவறிவிட்டால், இப் போதையை வழித் தோன்றல்கள், எதிரிகளின் கூற்று உண்மை என்று எண்ணி விடுவார்கள். எனவே, விளக்கம் அளித்தால் எதிர்காலம் சரியாக மதிப்பிடும்.

(நிறைவு)

---------------முனைவர் பேராசிரியர் நா.க. மங்களமுருகேசன் ”விடுதலை”23-10-2010 இல் எழுதிய கட்டுரை

26.10.10

பெரியாருக்கு தமிழர்கள் வழங்கிய அன்புப் பரிசுகளின் பட்டியல்


சீரங்கம் போகாமல் இருப்போமா?


புதுத் திருப்பம் கண்ட திருப்பத்தூருக்குப் பிறகு,

தோழர்களே, தோழர்களே,

நாம் சீரங்கத்தில் சந்திக்க இருக்கிறோம் (8.11.2010).

சீரங்க நாதனையும் தில்லை நடராஜனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ? என்று அன்று பாடப்பட்டது. அதன் பொருள் - பிஜேபி, சங்பரிவார் போல கடப்பாரை, மண் வெட்டியை எடுத்துக் கொண்டு உடைத்துத் தூள் தூளாக்குவதல்ல.

ரெங்கநாதன் - நடராஜன் என்ற உருவங்களுக்குள் புதைந்து கிடக்கும் ஆரிய ஆதிக்கப் பண்பாட்டுப் படையெடுப்பை சுக்கல் நூறாக உடைப்பது என்பதுதான்.

இந்த அரங்கநாதனும், நடராஜனும் அந்நியர் படையெடுப்புகளிலிருந்து காப்பாற்றப்படுவதற்காக பல ஊர்களுக்குத் தூக்கிக் கொண்டு அலைந்தார்கள் - பக்த சிரோன்மணிகள் என்பதெல்லாம் படு தமாஷ்!

அந்த வகையில் இதே திருவரங்கம் கோயில் 50 ஆண்டுகளாக மூடிக்கிடந்தன. காலைத் தூக்கி ஆடும் சிதம்பரம் நடராஜனே 37 ஆண்டுகள், பத்து மாதங்கள், இருபது நாள்கள் அப்ஸ்காண்ட் ஆனான். மதுரை மீனாட்சி கோயிலும் அரை நூற்றாண்டு காலம் மூடிக்கிடந்தது.

அடேயப்பா, இந்தக் கோயில்களின் மூர்த்திகளைப் பற்றி இந்தப் பார்ப்பனப் பண்டாரங்கள் எப்படியெல்லாம் கீர்த்தி பாடி வைத்திருக்கின்றன.

எத்தனை எத்தனை அற்புதங்களை இந்த விக்ரகங்களுக்குள் ஏற்றிப் போற்றி வைத்திருக்கின்றன.

வைணவர் புரியாகிய அந்த திருவரங்கம் கழகத்தின் பாசறையாக இருந்து வந்திருக்கிறது. வீறு நடைபோட்டு இயக்கப் பணியாற்றிட எத்தனையோ கருஞ்சட்டைச் சிங்கங்கள் கர்ச்சனை செய்து வந்துள்ளன.

பற்பல மாநாடுகள் - பேரணிகள் - தந்தை பெரியார் அவர்களை அழைத்து ஊர்வலங்கள் - ஒன்றல்ல - இரண்டல்ல. அரங்கநாதன் கோயிலுக்கு முன் தந்தை பெரியார் கம்பீரமாக சிலை வடிவத்தில் வீற்றிருக்கிறார்.

நீ - யார்! ஆரியப் பார்ப்பனர்களின் கலாச்சாரச் சின்னம்! மூடநம்பிக்கைகளை மொத்தமாகக் குத்தனை எடுத்தவன் நீ! நான் யார் தெரியுமா? அடித்தட்டு மக்களை கரை ஏற்ற வந்தவன்.

மூடக்கிருமிகளை முற்றிலும் அழிக்கவந்த சமூக நல மருத்துவன்! ஆரியக் கலாச்சாரத்தின் ஆணிவேர் வரை சென்று அழித்து முடிக்க வந்த அழிவு வேலைக்காரன் நான் என்று ரெங்கநாதனைப் பார்த்து சொல்வதைப்போல அய்யாவின் சிலை அங்கு. நவம்பர் 8இல் திராவிடர் எழுச்சி மாநாடு திருவரங்கத்தில்.

அன்று தந்தை பெரியார் அவர்களுக்குத் தமிழர்கள் போட்டி போட்டுக் கொண்டு அன்பளிப்புகளைக் குவித்தனர். எடைக்கு எடை எத்தனை எத்தனை வகையான பொருள்களை எல்லாம் வாரி வழங்கினர்! இறைவனுக்குத் தான் துலாபாரம் என்ற நிலையைத் துடைத்தெறிந்து இறைவன் ஏதடா? என்ற பகுத்தறிவு வினா எழுப்பிய ஈரோட்டு இறைவனுக்குத்தான் தமிழ் நாட்டு மக்கள் இத்தனை இத்தனை வகையான அன்பளிப்புகள்.

எடைக்கு எடை வெள்ளி ரூபாய் (தஞ்சை, 6.11.1957), எடைக்கு எடை நவதானியம் (லால்குடி, 24.9.1963), கார் டயர் - ட்யூப்புகள் (கள்ளப்பெரம்பூர், 2.11.1963), எடைக்கு எடை மிளகாய் (பெருவளப்பூர், 10.6.1964), எடைக்கு எடை எண்ணெய் (இடைப்பாடி, 11.9.1964), எடைக்கு எடை மஞ்சள் (ஈரோடு, 3.10.1964), துவரம்பருப்புத் துலாபாரம் (திருச்செங்கோடு, 17.10.1964), எடைக்கு எடை காய்கறி (திருவள்ளூர், 21.10.1964), எடைக்கு மேல் ஒன்றரை மடங்கு படுக்கை விரிப்புகள் (பெட் ஷீட்டுகள்) (கரூர், 25.10.1964), எடைக்கு எடை திராட்சைப் பழம் (பெங்களூர், 15.11.1964), எடைக்கு எடை இங்கிலீஷ் காய்கறிகள் (பெங்களூர், 6.11.1964), எடைக்கு எடை அரிசி (திருவாரூர், 1.12.1964), பால் துலாபாரம் (திருச்சி, 10.12.1964), எடைக்கு எடை இரண்டு காசுகள் (வ.ஆ., திருப்பத்தூர், 13.12.1964), எடைக்கு எடை சர்க்கரை (திருக்கழுக்குன்றம், 14.12.1964), பெட்ரோல் துலாபாரம் (குளித்தலை, 10.1.1965), எடைக்கு எடை காப்பிக் கொட்டை (சிதம்பரம், 16.1.1965), எடைக்கு எடை பிஸ்கட்டுகள் (பண்ருட்டி, 18.1.1965), எடைக்கு எடை மணிலா எண்ணெய் (அரகண்டநல்லூர், 19.1.1965), எடைக்கு எடை கைத்தறி நூல் (குடியாத்தம், 21.1.1965), எடைக்கு எடை நெல் (செங்கம், 22.1.1965), எடைக்கு எடை நெல் (அனந்தபுரம், 23.1.1965), எடைக்கு எடை இரு மடங்கு வாழைக்காய் (வள்ளியூர், 1.5.1965), எடைக்கு எடை பருப்பு மற்றும் உப்பு (தூத்துக்குடி, 2.5.1965), எடைக்கு எடை சர்க்கரை (அலங்காநல்லூர், 16.2.1970), எடைக்கு எடை நெல், வெங்காயம், உப்பு (பெண்ணாடம், 21.9.1970), நெல் துலாபாரம் (இலந்தங்குடி, 8.7.1972).

இவை அன்னியில் டயர் வண்டி (லால்குடி), கறவைப் பசு (தஞ்சை).

புளி, பச்சைப் பட்டாணி, மிளகாய், துவரை, கொத்துக்கடலை, உளுந்து, தேங்காய், ஆட்டுக்கிடா, தட்டைப்பயிறு, காளைக்கன்று, ரூ.3500 மதிப்புள்ள தென்னந்தோப்பு பட்டயம், பசுமாடு, எள், பச்சைப்பயறு, கோதுமை, அரிசி, கழகக் கொடிபோட்ட முக்கால் பவுன் மோதிரம், தேங்காய், உப்பு, நெல், கிழங்கு, எலுமிச்சம்பழம், வெங்காயம், ராகி, கம்பு, மலர்கள், முத்துச்சோளம், எருமை மாடு, செங்கல் ஆயிரம், விறகு 5 எடை என்று கொடுக்கப்பட்டது உண்டு.

ஒரு கடவுள் மறுப்பாளருக்கு மக்கள் அள்ளி அள்ளிக் கொடுத்து, தம் அன்பு வெள்ளத்தால் மூழ்கடித்தது - தந்தை பெரியார் என்ற மாசற்ற மாபெரும் புரட்சியாளருக்கு மட்டும்தான்.

சில இடங்களில் கோயிலில் பயன்படுத்தும் அதே சப்பரத்தில் - தேர்களில் கூட தந்தை பெரியாரை அமர வைத்து வீதி வீதியாக ஊர்வலமாக அழைத்துச் சென்றதுண்டு.

தெய்வச் சிலையை தெப்பத்தில் வைத்து அழைத்துச் சென்றதுபோல, தெய்வத்தை சில்லு சில்லாக உடைத்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுக்கும் தெப்பத் திருவிழா நடத்தப்பட்டதுண்டு.

அந்தப் புரட்சியாளர் மறைவுக்குப் பிறகும், அந்தப் புரட்சிச் சுடர் எந்த சூறாவளியானாலும் அணைந்து விடக் கூடாது என்ற எண்ணம் திராவிட மக்கள் நெஞ்சில் நின்றது.

அன்னை மணியம்மையாரும், அவர்களுக்குப் பிறகு ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களும், அணையா விளக்காக அய்யா கொள்கைகளை ஏந்திச் சென்றனர். பணிகள் தொடர்கின்றன!

தமிழ் மக்களும் அய்யாவிடம் காட்டிய அதே அன்பை - ஆதரவை அய்யாவின் சீடர்களுக்கும் காட்டி வருகின்றனர் - காரணம் அய்யா பணி தொடரப்பட வேண்டும் என்பதற்காகவே!

அதனுடைய பிரதிபலிப்புதான் தஞ்சையிலே தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை தங்கம், புதுக்கோட்டையில் எடைக்கு எடை வெள்ளி, ஒவ்வொரு ஊரிலும் இரு மடங்கு எடை அளவுக்கு ரூபாய் நாணயங்கள்.

நவம்பர் 8இல் திருவரங்கத்தில் நடைபெறும் திராவிடர் எழுச்சி மாநாட்டிலும் தமிழர் தலைவருக்கு விதவிதமான பொருள்களை எடைக்கு எடை அளித்து மகிழ இருக்கிறார்கள்.

திருப்பத்தூர் பொதுக்குழுவில் லால்குடி மாவட்டக் கழக செயலாளர் ஆல்பர்ட் அவர்கள் அந்தப் பட்டியலைத் தெரிவித்தபோது உற்சாகத்தால் தோழர்கள் பலத்த கரஒலி எழுப்பினர் (என்ன பண்டக சாலையா வைக்கப் போகிறீர்கள்? என்று குறுக்கிட்டுக் கேட்டார் கழகத் தலைவர் - ஒரே சிரிப்பொலி).

திருவரங்கத்தில் நேற்று (25.10.2010) நடைபெற்ற மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்; தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை நாணயம் (கரூர் மாவட்ட மற்றும் லால்குடி மாவட்ட கழகத் தலைவர் தே.வால்டர்), புள்ளம்பாடி ஒன்றியம் சார்பில் வெங்காயம், மண்ணச்சநல்லூர் ஒன்றியம் சார்பில் பொன்னி அரிசி, முசிறி ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தேங்காய், தொட்டியம் ஒன்றியக் கழகம் சார்பில் வாழைக்காய், துறையூர் ஒன்றிய தி.க., ப.க., சார்பில் வேர்க்கடலை, உப்பிலியாபுரம் ஒன்றிய தி.க., ப.க., சார்பில் எலுமிச்சம் பழம், லால்குடி ஒன்றிய கழகம் சார்பில் பரங்கிக்காய், பூசணிக்காய், திருவரங்கம் எஸ்.கே.பி. குடும்பத்தின் சார்பில் பொன்னி அரிசி, மாவட்ட இளைஞரணி சார்பில் 78 பொருள்கள் என்று பட்டியல் விரிந்து கொண்டே போகிறது.

கழகத் தோழர்களும், பொதுமக்களும் திராவிடர் கழகத்தின் மீதும், அதன் தன்னிகரற்ற தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் மீதும் வைத்திருக்கும் பற்று, மதிப்பு, எதிர்பார்ப்பு எத்தகையது என்பதற்கான எடுத்துக் காட்டுகள் இவை.

இதில் எந்த ஒரு பொருளும் கடுகத்தனை அளவுக்குக் கூட தனிப்பட்ட முறையில் தலைவரைச் சேரப்போவதில்லை; எல்லாம் இயக்கத்திற்கும், கல்வி நிறுவனங் களுக்கும்தான்.

ஒவ்வொரு மாநாடும் ஒவ்வொரு வகையில் களைகட்டி வருகிறது.

திருவரங்கம் வேறொரு பரிமானத்தில் பளிச்சிடுகிறது.

தில்லை போகாமல் இருப்பேனா - தில்லை நடராஜனைத் தரிசிக்காமல் இருப்பேனா என்று சொன்னது அந்தக் காலம். மூடத்தனத்தில் மூழ்கிக் கிடந்த பக்தனின் உள்ளம் அது.

திருவரங்கம் போகாமல் இருப்போமோ - திராவிடர் எழுச்சி மாநாட்டைக் காணாது இருப்போமா என்பது இன்றைய எழுச்சிச் சகாப்தத்தின் இன்னொரு முகம்.

சீரங்கம் வைணவத்தின் கோட்டையல்ல. கருஞ் சட்டைப் பாசறையின் பாடி வீடு என்பதைக் காட்ட கருஞ்சட்டைப் பட்டாளமே புறப்படு! புறப்படு!


----------------மின்சாரம் அவர்கள் 26-10-2010 “விடுதலை” யிலெழுதிய கட்டுரை

25.10.10

பெரியாரின் சிந்தனைகள் உலகை ஆள வேண்டும் -2


தமிழையும், மதத்தையும் பிரித்து விட வேண்டும்; தமிழுக்கும், கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் தள்ளி வைக்க வேண்டும்
பெரியார் கூறிய கருத்தை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் விளக்கவுரை

- தமிழையும், மதத்தையும் பிரித்துவிட வேண்டும், தமிழுக்கும்,கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் தள்ளி வைக்க வேண்டும் என்று தந்தை பெரியார் கூறிய கருத்தை எடுத்துக்காட்டி பேசினார் தமிழர் தலைவர் கி.வீரமணி.

சென்னை பெரியார்திடலில் 21.9.2010 அன்று பெரியாரின் இலக்கியப் பார்வை புதுவெள்ளம் புதுநோக்கு என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

ஆதலால்தான் தமிழுக்கு வாழ்த்துக்கூற அப்பெரியார்களும், அவர்கள் போன்றோர் கற்றார் என்று உரைக்கின்றேன். தோழர்களே! எனக்கிட்ட கட்டளையும் ஏதேனும் ஒரு சிறுபாகமாவது நிறைவேற்றப்பட வேண்டுமானால் தமிழைப் பற்றிய எனது உள்ளக் கிடக்கையை உண்மையாய் எடுத்துரைக்க வேண்டும். ஆதலால் ஏதோ நான் சொல்லுவது பற்றி நீங்கள் தவறாகக் கருதமாமல், என் கபடமற்ற தன்மையை அங்கீகரித்து உங்களுக்கு சரி என்று பட்டதை மாத்திரம் ஏற்றுமற்றதைத் தள்ளி விடுங்கள்.

என் மீது கோபுமுறாதீர்கள்!

அதற்காக என்மீது கோபமுறாதீர்கள் என்று அய்யா அவர்கள் சொல்லுகின்றார். எவ்வளவு அருமையான முன்னுரை பாருங்கள். 13.1.1936 சென்னை-பச்சையப்பன் கல்லூரி பெரிய மண்ட பத்தில் மேலும் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை.

தமிழும்-மதமும்

முதலாவதாக தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால் தமிழையும், மதத்தையும் பிரித்து விட வேண்டும். தமிழுக்கும், கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.

மத சம்பந்தமற்ற ஒருவனுக்குத் தமிழில் இலக்கியம் காண்பது மிக மிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக்கணம் கூட மதத்தோடு பொருத்தப்பட்டே இருக்கிறது. இதுதான் நிலை. (காரணம் என்ன? ஒரு பண்பாட்டுப் படை எடுப்பு மிக வேகமாக உள்ளே நுழைந்து, அந்தப் பண்பாட்டுப் படை எடுப்பு பலவிதமான உருவங்களைப் பெற்று பல்வேறு கால கட்டங் களிலே அதை அழித்து தமிழுக்குத் தனித்தன்மையே கிடையாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு சூழல்கள் வந்தன.

சமயமென்ற சூளையிலே தமிழ்நாட்டால்...

எனவே அது ஓர் அளவோடு நிறுத்தப்பட வேண்டும். ஓர் இனத்தினுடைய குரல். எனவே ஓர் இனத்தினுடைய குரல் வளையை நெரித்தால் அதற்கப்புறம் அந்த உரிமை வெளிவராது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மிக மிக அழகாகச் சொன்னார். சமயமென்ற சூளையிலே தமிழ் நட்டால் முளையாது என்று ஒரே வார்த்தையில் சொன்னார்.

ஒருவன் தமிழை வளர்க்க வேண்டும் என்று நினைக்கின்றான். ஒருவன் தமிழ் என்ற செடியை சூளையில் கொண்டு போய் நட்டுவித்தால் வளருமா? வளராது. தந்தை பெரியாருடைய சிந்தனைதான் புரட்சிக் கவிஞருடைய சிந்தனை (கைதட்டல்). தந்தை பெரியாருடைய சிந்தனைதான் அண்ணா அவர்களுடைய சிந்தனை. அதுதான் திராவிட இயக்கம். தமிழ் இலக்கணம்கூட மதத்தோடு பொருத்தப்பட்டே இருக்கிறது.

பெரியாருக்கு என்ன தமிழ் தெரியும்?

பொதுவாக என்ன சொல்லுகிறார்கள்? பெரியாருக்கு தமிழ் என்ன தெரியும்? என்று கேட்கிறார்கள். பெரியார் என்னய்யா எதை எடுத்தாலும் எதிர்த்துச் சொல்லக்கூடியவர். அவர் எல்லாவற்றிற்கும் ஓர் அழிவு வேலைக்காரர் என்று சிலர் நினைப்பார்கள்.

அய்யா மாதிரி சிந்தித்து கருத்து சொன்னவர்கள், தமிழ்ப்புலவர்களே கிடையாது (கைதட்டல்). அய்யா கட்டிலில் சாதாரணமாக உட்கார்ந்திருப்பார். பக்கத்தில் பார்த்தீர்களேயானால் பேரகராதி இருக்கும். அய்யா சும்மா இருக்கும் பொழுது என்ன செய்வார்? புரட்டிக்கொண்டிருப்பார். அகராதியில் ஒவ்வொரு சொல்லையும் அறிந்திருப்பார்.

பெரியார் படிக்காததா?

அபிதான சிந்தாமணி, அதே மாதிரி பழைய நூல்களான இராமாயணம், மகாபாரதம் இவைகளில் எத்தனை பதிப்பு இருக்கிறதோ அத்தனை பதிப்புகளையும் படித்திருப்பார். அவ்வளவும் அவர்கள் வரி, வரியாகப் படித் திருப்பார்.

கடைசி காலத்தில் 95 வயதில்கூட, அய்யா அவர்களுக்கு கண்பார்வை மங்கிப் போன நிலையிலே பொடி எழுத்துகளைக்கூட லென்ஸ் வைத்துக் கொண்டு படித்துக்கொண்டிருப்பார்.

விஞ்ஞானி கிருமியைத் தேடுவது போல....

ஒரு விஞ்ஞானி எப்படி கிருமிகளைத் தேடுவாரோ அந்த மாதிரி தமிழ் இன எதிரி நோய்க் கிருமிகள் எல்லாம் எங்கேயிருக்கிறது என்று பார்க்கிற மாதிரி பார்த்துக்கொண்டிருப்பார். மேலும் அய்யா அவர்கள் சொல்லுவதைப் படிக்கின்றேன்.

உதாரணமாக மக்கள், தேவர், நரகர் உயர்திணை என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? (இங்கே அறிஞர் பெருமக்கள் இருக்கிறார்கள். அய்யா அவர்கள் எவ்வளவு ஆழமாகப் படித்திருக்கிறார்கள், பாருங்கள். எப்பொழுது? 1936ஆம் ஆண்டில். பட்டென்று வந்து விழுகிறது பாருங்கள். பச்சையப்பன் கல்லூரியில்-அதுவும் எப்படிப்பட்டவர்கள் அய்யா பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்? நமச்சிவாய முதலியார் உட்கார்ந்திருக்கின்றார். இந்தப் பக்கம் திரு.வி.க. தலைமை தாங்குகிறார். அவர்கள் காலத்தில் அவர்களுடைய முன்னிலையில் இதைப் பேசுகிறார். சாதாரண முத்தன், முனியன், என்னை மாதிரி தமிழ் தெரியாதவனை வைத்துக்கொண்டு கூட பேசவில்லை.

நரகர் என்றால் யார்?

அய்யா கேட்டார் பாருங்கள். நரகர் என்றால் யார்? தேவர்கள் என்றால் யார்? விசயத்திற்கு வந்துவிட்டார் பாருங்கள் (பலத்த கைதட்டல்).

மேலும் அய்யா சொல்லுகின்றார்.) இனி பள்ளிக் கூடங்களில் பிள்ளைகளுக்கு, தமிழ் இலக்கியத்துக்குப் புத்தகங்கள் எவை? கம்பராமாயணம், பாரதம், பாகவதம், பெரியபுராணம், தேவாரம், திருவாய்மொழி போன்ற மத தத்துவங்களையும், ஆரிய மத தத்துவம் என்னும் ஒரு தனிப்பட்ட வகுப்பின் உயர்வைப் போதித்து (அதில் கூட அய்யா அவர்கள் பார்ப்பான் என்று வெளிப் படையாகச் சொல்லாமல், எல்லோரும் கலந்திருப்பார்கள் என்பதை அறிந்து-மற்றவர்களை சங்கடப் படுத்தக் கூடாது என்பதற்காக எவ்வளவு பண்போடு சொல்லுகிறார் பாருங்கள்)

மக்களை மானமற்றவர்களாக்கும் ஆபாசக் களஞ்சியங்களும் அல்லாமல் வேறு இலக்கியங்கள் மிதந்து காணப்படுகின்றனவா? இன்றைய பண்டிதர்களுக்கு புராண ஞானங்கள்தான்

(இவ்வளவு துணிச்சலாக அய்யா அவர்கள் கேட்கின்றார்) இன்றையப் பண்டிதர்களுக்கு உலக ஞானத்தை விட புராண ஞானங்கள்தானே அதிகமாயிருக்கின்றன? (பலத்த கைதட்டல்).

(பண்டிதர்களை வைத்துக்கொண்டே அய்யா சொல்லுகின்றார்). மேல்நாட்டுப் புலவர்கள் மேல்நாட்டு இலக்கியங்கள் ஆகியவைகளுக்கு இருக்கும்.

ஷேக்ஸ்பியர் வேண்டுமா? இங்கிலாந்து வேண்டுமா?

பெருமையும், அறிவும் நம் தமிழ்ப் புலவர்களுக்கு இருக்கிறது என்று சொல்ல முடியுமா? ஷேக்ஸ்பியர் வேண்டுமா? இங்கிலாந்து வேண்டுமா? என்றால், இங்கிலீஷ் மகனே ஷேக்ஸ்பியர் வேண்டும் என்பானாம். நாம் எதைக் கேட்பது? (அய்யா அவர்களை ஒன்றும் தெரியாதவர் என்று சொல்லுகின்றார்கள். 1936லேயே அய்யா அவர்கள் ஆழமாக அவ்வளவு சிந்தித்துச் சொல்லுகின்றார். மக்களை இந்த மாதிரி சிந்திக்க வைத்த தலைவர் யாருமே கிடையாது. அடுத்து ஒரு கேள்வியைப் போடுகின்றார்)

இந்தியா வேண்டுமா? ராமாயணம் வேண்டுமா?

இந்தியா வேண்டுமா? கம்பராமாயணம் வேண்டுமா? என்றால், உண்மைத் தமிழ் மகன் என்ன சொல்லுவான்? இரண்டு சனியனும் வேண்டாம் என்று தானே சொல்லுவான்! (பலத்த கைதட்டல்).

மேல்நாட்டில்தான் அறிவாளிகள் உண்டு என்றும், கீழ்நாட்டில் அறிவாளிகள் இல்லை என்றும் நான் சொல்ல வரவில்லை

(எவ்வளவு அறிவாளியாக, தர்க்க ரீதியாக, உண்மையைத் தயக்கமின்றி, அதே நேரத்தில் மற்றவர்கள் சங்கடப்படாமல் ஒரு எக்ஸ்ரே கருவி காட்டுகின்ற மாதிரி ஒரு சமூக நுண்ணறிவோடு சொல்லுகின்றார். பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி என்பதற்கு இதுதான் அடையாளம். அய்யா சொல்லுகிறார்).

மேல்நாட்டு அறிவாளிகள்

மேல்நாட்டு அறிவாளிகள் தாங்கள் செய்த இலக்கியங்களை மத சம்பந்த மன்னியில், கடவுள் சம்பந்த மன்னியில் பெரிதும் செய்து வைத்தார்கள். அதனால் நூற்றுக்கணக்கான மேல்நாட்டு இலக்கியங்களும், பண்டிதர்களும் போற்றப்படு கிறார்கள்.

கீழ்நாட்டில் குறிப்பாக இந்தியாவில் எத்தனை இலக்கியம் உலகத்தால் மதிக்கப்படுகின்றன? எத்தனை பண்டிதர்கள் உலகத்தால் போற்றப் படுகிறார்கள்? டாக்கூர் (ரபீந்திரநாத் தாகூர்) அவர்கள் கவிக்கு ஆக போற்றப்படலாம். ஆகவே மதம், கடவுள் சம்பந்தமற்ற இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத விஞ்ஞானத்தைப் பற்றிய இலக் கியம் ஆகியவைகள் மூலம்தான் ஒரு பாஷையும், அதன் இலக்கியங்களும் மேன்மையடைய முடியும் என்பது மாத்திரமல்லாமல், அதைக் கையாளும் மக்களும் ஞானமுடையவர்களாவார்கள்.

மலத்தில் அரிசி பொறுக்கலாமா?

கம்பராமாயணம் அரிய இலக்கிமாய் இருக்கிறதாகச் சொல்லுகிறார்கள். (அய்யா கம்பராமாயணத்தைப் படிக்கவில்லை என்று தயவு செய்து மேலெழுந்தவாரியாக நினைக்காதீர்கள். அவர் எவ்வளவு ஆழமாகப் படித்திருக்கிறார் என்பதை, மற்ற புலவர்கள் கண்களில் படாத விசயத்தை ஒன்று, இரண்டு என்று சொல்லு கின்றேன். பொதுவாக நம்மவர்கள் மாதிரி புராணத்தையும், இலக்கியத்தையும் வேறு யாரும் படித்திருக்க மாட்டார்கள். (கைதட்டல்).

இன்றைய விடுதலையைப் பார்த்தால் பிள்ளையாருக்கு எத்தனை பெண்டாட்டிகள் என்பதைப் பார்க்கலாம்) இருந்து என்ன பயன்? ஒருவன் எவ்வளவுதான் பட்டினி கிடந்தாலும் மலத்தில் இருந்து அரிசி பொறுக்குவானா? அது போல்தானே கம்பராமாயண இலக்கியம் இருக்கிறது. அதில் தமிழ் மக்களை எவ்வளவு இழிவாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது?

(தந்தை பெரியாரின் பார்வையைப் பாருங்கள். இலக்கியமாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி, தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்த வரையிலே மானத்திற்கு முதலிடம் கொடுப்பவர். தன்மானத்திற்கு இழுக்கு ஏற்பட்டால் எதைப் பற்றியும் கவலைப்படாதவர்)

தமிழரின் சரித்திர கால எதிரிகள்

தமிழரின் சரித்திர கால எதிரிகளை எவ்வளவு மேன்மையாக குறிப்பிடப்பட்டிருக்கிறது? சுயமரியாதையை விரும்புகிறவன் எப்படி கம்பராமாயண இலக்கியத்தைப் படிப்பான்? இன்று கம்பராமாயணத்தால் தமிழ் மக்களுக்கு இலக்கியம் பரவிற்றா-இழிவு பரவிற்றா? என்று நடுநிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்

(சுயமரியாதையை விரும்புகிறவர்கள் பார்க்க வேண்டும். கம்பராமாயணத்தில் குரங்கு என்று சொல்லுகின்றான். கேவலப்படுத்துகிறான். கதை நடந்ததா இல்லையா என்பது அப்புறம். அண்ணா சொல்லுவார், வில்லிருந்து புறப்பட்ட அம்பு எப்படி நேராகப் போகுமோ அது மாதிரி போகும் தந்தை பெரியார் அவர்களின் கேள்விகள் எவ்வளவு வேகமாகப் போகும் என்பதற்கு இவைதான் உதாரணம்)

இலக்கியம் பரவிற்றா? இழிவு பரவிற்றா?

இன்று கம்பராமாயணத்தால் தமிழ் மக்களுக்கு இலக்கியம் பரவிற்றா-இழிவு பரவிற்றா? என்று நடுநிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள். தமிழ் பாஷையின் பெருமை பரமசிவனுடைய டமாரத்தில் இருந்து வந்ததென்றோ, பரமசிவன் பார்வதியிடம் பேசிய பாஷை என்றோ சொல்லி விடுவதாலும், தொண்டர்நாதனை தூதிடை விடுத்ததாலும், முதலை உண்ட பாலனை அமைத்ததாலும், எலும்பை பெண்ணாக்கின தாலும், மறைக் கதவைத் திறந்ததாலும், தமிழ் மேன்மையுற்றதாகி விடாது.

(அய்யா தேவாரம், திருவாசகத்தை எல்லாம் எவ்வளவு படித்திருக்கிறார்கள் பாருங்கள். அய்யா அவர்கள் இவைகளைப் பற்றி தரவாகப் படித்ததை ஒட்டித்தானே இவ்வளவு, விளக்கமாகச் சொல்லுகின்றார்.

தமிழ்ப் பாட்டு பாடினால் கதவு திறக்குமா?

சில இடங்களில் அய்யா அவர்களே சொல்லுவார். தமிழ் மறைக்கதவைத் திறந்தது என்று சொல்லுவதற்கு அழகாக இருக்கலாமே தவிர-வேண்டுமானால் கதவைப் பூட்டிவிட்டு சாவியை எடுத்துக்கொண்டு போய்விடுங்கள்; பாட்டுப் பாடுங்கள்; மூடின மறைக்கதவு திறக்கிறதா? என்று பார்ப்போம் என்று சொல்லுவார்.

அது மாதிரி முதலை உண்ட பாலகனை என்று சொல்லுகின்றார்கள். முதலை ஒருவனைப் பிடித்துக்கொண்டு போய்விட்டால் தமிழ்ப் பாட்டு பாடினால் அந்த முதலை விட்டுவிடுமா? என்று பார்ப்போம் என்று அய்யா அவர்கள் ரொம்ப வேகமாகக் கேள்வி கேட்பார். இதில் ரொம்ப நாசுக்காக சொல்லுகின்றார்.) இந்த ஆபாசக் கதைகள் தமிழ் வளர்ச்சியையும், மேன்மையையும் குறைக்கத் தான் பயன்படும்.

பரமசிவனுக்கு உகந்த பாஷை

பரமசிவனுக்கு உகந்த பாஷை தமிழ் என்றால் வைணவனும், துருக்கனும் தமிழைப் படிப்பதே பாவமல்லவா? அன்றியும் அந்தப்படியிருந்தால் பார்ப்பான் தமிழ் மொழியைச் சூத்திர பாஷை என்றும், அதைக் காதில் கேட்பதே பாவம் என்றும் சொல்லுவானா? என்று யோசித்துப் பாருங்கள் என்று சொல்லுகிறார்.

( பரமசிவனுக்கு உகந்த பாஷை தமிழ்; ஆதிசிவன் பெற்றெடுத்த மொழி என்றெல்லாம் சொல்லுகிறார்களே-அதை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் தந்தை பெரியார் சொல்லுகின்றார் (சிரிப்பு-கைதட்டல்).

இந்தி மயமாக வேண்டுமென்று....

இன்று தமிழ்நாட்டில் வந்து, தமிழ்கற்று வயிறு வளர்ப்பவர்களாகிய பார்ப்பனர்களே இந்தி பாஷை இந்திய பாஷை ஆக வேண்டுமென்று முயற்சித்து வெற்றிபெற்று வருகிறார்கள். கோர்ட் பாஷை, அரசாங்க பாஷை ஆகியவை எல்லாம் இந்தி மயமாக வேண்டும் என்கிறார்கள். காரணம் கேட்டால் இந்தி பாஷையில் துளசிதாஸ் ராமாயணம் நன்றாய் விளங்குமென்கிறார்கள்.

தமிழ்ப் பண்டிதர்களுக்கு இதைப் பற்றிச் சிறிதும் கவலை இருந்தது என்று சொல்ல முடியவில்லை. தமிழ்ப் பண்டிதர்கள் இந்த அரசியல் வாதிகளின் கூச்சலுக்கும், பார்ப்பனர்கள் ஆதிக்கத்துக்கும் பயந்துகொண்டு வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.

செத்த பாம்பான சமஸ்கிருதத்தை....

பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ் கிருதத்தை எடுத்து வைத்துக்கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்? (அய்யா அவர்கள் எப்படி உணர்ந்து சொல்கிறார்கள் பாருங்கள். மிகப்பெரிய ஆபத்து எங்கிருந்து வருகின்றது என்று பார்க்கின்றார்) பொதுப்பணம் சமஸ் கிருதத்தின் பேரால் எவ்வளவு செலவாகின்றது? பொது ஜனங்களின் வரிப்பணம் சமஸ்கிருதத்துக்கு ஆக ஏன் ஒரு பைசாவாவது செலவாக வேண்டும்?

வானொலியில் சமஸ்கிருத பாடம்

இந்த இடத்தில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். அடுத்து முக்கியமாக நாம் செய்ய வேண்டிய வேலை ஒன்று இருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தில் இப்பொழுது 22 மொழிகள் இருக்கின்றன. 8ஆவது அட்டவணையில் உள்ளது.

அந்த அட்டவணையில் தமிழும் இருக்கிறது; சமஸ்கிருதமும் இருக்கிறது. உலகத்திலேயே பேசாத மொழி சமஸ்கிருதம்தான். செத்தமொழி.

பயிருக்கு இறைத்த வாய்க்கால் தண்ணீரை புல்லும் உறிஞ்சக்கூடிய அளவிற்கு சமஸ்கிருதத்திற்கும் கிடைத்தது. இதுவரையில் சமஸ்கிருதத்தை சும்மா வாவது செம்மொழி, செம்மொழி என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். சமஸ்கிருதம் செம் மொழி ஆனதே தமிழ் செம்மொழி ஆன பிறகுதான் உலகத்திற்குத் தெரிய வந்தது.

அகில இந்திய வானொலியைத் திறந்து கேளுங்கள். சமஸ்கிருத பாடங்கள் என்று சொல்லி தனியே ஒரு மணிநேரம் நடத்துகிறார்கள்-உஞ்சிவிருத்தி பார்ப்ப னர்கள் நடத்துகிறார்கள்.

தமிழுக்காகப் போராட வேண்டும்

வேலையே இல்லாமல் இருக்கிறார்கள் பாருங்கள். அந்தக் கிழடுகள் எல்லாம் உட்கார்ந்துகொண்டு எதையோ சொல்லிக்கொடுக்கிறார்கள். வானொலியில் அதை யாரும் கேட்பதில்லை. சமஸ்கிருத்திற்கு வானொலியில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். தமிழே எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் இங்கு இருக்கின்ற பொழுது, தமிழ்நாட்டு வானொலி சமஸ்கிருதத்தின் நேர ஒதுக்கீடான அதே அளவிற்கு தமிழ் மொழிக்கு வானொலியில் ஒதுக்க வேண்டு மென்று நாம் போராட வேண்டும். (பலத்த கைதட்டல்).

நாங்கள் கேள்வி கேட்டபொழுது....

இந்தப் பிரச்சினையை கொஞ்ச நாள்களுக்கு முன்பு நாங்கள் எழுப்பினோம். அப்பொழுது என்ன சொன்னார்கள். சமஸ்கிருதத்திற்கு மட்டும் வேறு மொழிக்கு இல்லாத தனி சலுகையை அளிக்கிறீர்கள் என்று நாம் கேட்டபொழுது, இல்லை, சமஸ்கிருதம் செம்மொழி. அதனால் அதற்கு முக்கித்துவம் கொடுக்கிறோம்.

மற்ற மொழிகள் எல்லாம் அந்த அளவிற்கு வரவில்லை என்று சொன்னார்கள். இப்பொழுது தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வந்தாகிவிட்டது. சமஸ்கிருதத்திற்கு எவ்வளவு நேரம் நீங்கள் வானொலியில் ஒதுக்குகிறீர்களோ அதைவிட அதிக நேரம் ஒதுக்க வேண்டும்.

தமிழ் உலகளவில் பேசப்படுகிறது

காரணம், தமிழ் மொழி உலகளாவிய அளவில் பேசப்படுகின்ற மொழி. உலகம் முழுவதும் 10 கோடி மக்கள் தமிழ் பேசக் கூடியவர்கள் இருக்கிறார்கள். சமஸ்கிருதம் உலகம் முழுவதும் பேசப் படுவதில்லை. மயிலாப்பூரிலேயே பேசுவதில்லை. (சிரிப்பு-கைதட்டல்). அப்படி இல்லை என்றாலும் இன்னமும் பழைய பந்தாவோடு இருக்கின்றான். (கைதட்டல்).

அவர்களுக்கு அதில் எவ்வளவு வசதி? எவ்வளவு வாய்ப்பு? தமிழ் செம்மொழிப் பாடம் என்பதை வானொலி மூலமாகவும், தொலைக்காட்சி மூலமாகவும் பரவவேண்டும். இதைக் கட்டாயமாக வலியுறுத்தி ஒரு தனி இயக்கம் நடத்துவோம். தேவைப்பட்டால் ஒரு கிளர்ச்சியும் நடத்தப்படும். (கைதட்டல்). தமிழர்களுக்குத் தேவையான ஒன்று.

மறைமலை இலக்குவனார் போன்றவர்கள் இருக்கிறார்கள். இந்த மாதிரி உணர்ச்சி பூர்வமாக இருக்கிறவர்கள் இல்லாமல் இல்லை.

சம்பள வேறுபாடு:பெரியார் போராடினார்

ஆனால், இன்று வரை இளைய தலைமுறையினர் வேலை வாய்ப்பு வருமானம் என்பதைத்தான் பார்க்கிறார்கள். ஆசிரியர் தொழில் உயர்ந்த தொழில் என்று நினைப்பதற்குப் பதிலாக அது ஏதோ தொழிற் சங்கத்தினுடைய இன்னொரு பகுதி என்று இருக்கக்கூடாது. தமிழ்ப் புலவர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்க வேண்டுமென்று பெரியாரே போராடியவர். சமஸ்கிருத ஆசிரியருக்கு ஒரு சம்பளம்; தமிழ்ப் பண்டிதர் நமச்சிவாய முதலியாருக்கு ஒரு சம்பளமா? என்று போராடியவர் பெரியார்.

இந்த உணர்ச்சிக்கு அடித்தளம் யார்? பெரியார். எனவே, பெரியார் ஊட்டிய உணர்ச்சி எவ்வளவு காலம் உயிரோட்டமோடு இருக்கிறதோ, எவ்வளவு காலம் தேவைப்படுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அதுதான் நம்மை சிறக்க வைக்கும். ஆகவே, இலக்கியத்தில் புது வெள்ளம், புதுநோக்கு தேவை.

புதுநோக்கும், புது வெள்ளமும் வந்தால் புதிய பொறுப்பும் வரும். இந்த உரையை நிறைவு செய்து, அடுத்த பொழிவை அவர்கள் எப்பொழுது நினைக்கிறார்களோ-வாய்ப்பு ஏற்படும்பொழுது எவ்வளவு விரைவாகச் செய்ய முடியுமோ, முடிப்போம்.

நான் எடுத்துக்கொண்டிருக்கின்ற செய்தியில் பகுதி கூட ஒரு பகுதிதான் முடிந்திருக்கிறது. ஆகவே, வாய்ப்பளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகின்றேன். இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

---------------------”விடுதலை” 25-10-2010

பெரியாரின் சிந்தனைகள் உலகை ஆள வேண்டும்

பெரியாரின் சிந்தனைகள் உலகை ஆள வேண்டும் என்று நினைக்கின்ற முதல் பெரியார் தொண்டன் நான்!
சென்னை சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் பேச்சு

பெரியாரின் சிந்தனைகள் உலகை ஆளவேண்டும் என்று நினைக்கின்ற பெரியாரின் முதல் தொண்டன் என்று தன்னைப் பற்றிக் கூறி விளக்கவுரையாற்றினார், திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை பெரியார்திடலில் 21.9.2010 அன்று பெரியாரின் இலக்கியப் பார்வை புதுவெள்ளம் புதுநோக்கு என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

தமிழை காட்டுமிராண்டி மொழி என்று....!

பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியின் சார்பாக அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய 132ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, அவர்களுடைய அரிய தனித்தன் மையான கருத்துகளைப்பற்றி ஒரு நல்ல ஆளுமையை நம்முடைய தோழர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாகவே தந்தை பெரியார் அவர்கள் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார், என்று சொல்லி நம்முடைய இன எதிரிகள் சொல்லுவார்கள் அவர்களுக்கும் தமிழுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. தமிழ் வளரக்கூடாது என்று நினைக்கக் கூடியவர்கள். அவர்களுக்கு ஏதோ திடீரென்று தமிழ்ப்பற்று வந்துவிட்டதைப்போல தந்தை பெரியார் அவர்கள் கூறிய தன்மையை முற்றிலும் மாற்றியாக வேண்டும் என்ற தன்மையில் இதை ஒரு சூழ்ச்சிப் பொறியாகக் கையாளுகிற வர்கள் உண்டு. துவக்கத்தில் சில பேர் பதற்ற மடைந்தால் கூட, பின்னாலே சிந்திக்கச் சிந்திக்க தெளிவாகும்.

பெரியார் மறைத்துப் பேசக்கூடியவர் அல்லர்

தந்தை பெரியார் அவர்கள் எதையும் மறைத்துப் பேசக்கூடியவர் அல்லர். தந்தை பெரியார் அவர்கள் எப்படி ஒரு தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்று சொன்னால், உலக சிந்தனையாளர்களிலேயே தந்தை பெரியாருக்கு ஒப்பாரும், மிக்காரும் இல்லை என்பதை அவருடைய அறிவுரையை ஆய்வு செய்கிற நேரத்திலே நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த காலத்தை விட, இன்றைக்கு உலகம் முழுவதும் அவருடைய மண்டைச் சுரப்பைத் தொழக்கூடிய அளவிலே இருக்கிறது.

பெரியாருடைய கருத்துகள் எந்தத்துறையாக இருந்தாலும்....!

தந்தைபெரியாருடைய கருத்துகள் அது மொழித்துறையாக இருக்கட்டும், அல்லது சமுதாயத் துறையாக இருக்கட்டும்; அல்லது பொரு ளாதாரத் துறையாக இருக்கட்டும். வேறு எந்தத் துறையாக இருந்தாலும் மனிதவாழ்விற்கு எவை எவை எல்லாம் பயன்படுகின்றனவோ, தொடர்பு டையதோ அவை அத்துணைத் துறைகளிலும் தந்தை பெரியார் அவர்களுடைய சிந்தனை பாயாத இடமில்லை. அவரது மூச்சுக்காற்று நுழையாத இடமே இல்லை.

தந்தை பெரியார் அவர்கள் எல்லாத்துறையிலும் சிந்தித்திருக்கின்றார். காரணம் அவர் பள்ளிக் கூடத்திலிருந்தோ, கல்லூரியிலிருந்தோ வந்தவரல்லர்.

அவருடைய பட்டறிவு, பகுத்தறிவு, உலக ஞானம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மனிதர்களுடன் பழகி, அவர்களுடைய பட்டறிவிற்கு ஏற்ப பிரச் சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமே என்ற ஒரு நாணயமான, அக்கறையும், கவலையும் கொண்ட மாமனிதர் தந்தை பெரியார் அவர்கள்.

ஓய்வறியா உழைப்பு

எனவே, அவர்களுடைய உழைப்பைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் ஓய்வறியா உழைப்பு. 95 ஆண்டு காலம் வரையிலே அய்யா அவர்கள் அவருக்கு ஏற்பட்ட உபாதை, அதற்காக அவர்கள் ஏற்பாடு செய்துகொண்ட மருத்துவமுறை அவை எல்லாம் உங்களுக்குத் தெரியும். இந்த அரங்கத்திற்கு அதை விளக்கிக்கொண்டிருக்க வேண்டிய அவசிய மில்லை.

ஓய்வெடுத்துக்கொள்கிறேன்!

90 வயதைத் தாண்டியநிலை. எனவே, அவர்கள் நான் ஓய்வெடுத்துக்கொள்கின்றேன், உட்கார்ந்து கொள்கின்றேன் என்று அவர் நினைத்திருந்தால், சொல்லியிருந்தால் யாரும் குற்றம் சொல்லியிருக்க மாட்டார்கள்.

ஒரு சாதாரண உடல்நலக்குறைவு என்று சொன்னாலே மக்களை சந்திப்பதற்குக் கூச்சப்படு கின்றவர்கள் நாம். ஆனால், தந்தை பெரியார் அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை.

இறுதி மூச்சு அடங்குகிறவரை தொண்டறம்

பிளாஸ்டிக் வாளியில், கண்ணாடி பாட்டிலில் ஒரு ரப்பர் குழாயை இணைத்து அந்தக் குழாயை தனது உடலிலே ஓர் உறுப்பாக வைத்துக்கொண்டு ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல; அய்ந்தாண்டு காலம் இந்த மக்களுக்கு இடையறாமல் தொண்டறம் செய்தவர்.

அந்த நிலையிலே தனது இறுதி மூச்சு அடங்குகிற வரை உரையாற்றிய பெருமை உலகத்தில் வேறு எந்தத் தலைவரும் பெறாத ஒரு தொண்டறமாகும்.

ஒப்புவமை இல்லாத சிந்தனை

எனவே, ஓய்வறியா உழைப்பு, ஒப்புவமை இல்லாத சிந்தனை அவருடைய சிந்தனை என்பது இரவல் வாங்கப்பட்டதோ, அல்லது மற்றவர் களிடமிருந்து காப்பி அடிக்கப்பட்டதோ அல்ல.

மாறாக ஒப்பற்ற சுயசிந்தனையாளர். அதனால்தான் அவர் மறைந்த பிற்பாடு இன்றைக்கு உலகம் உள்ளளவுக்கும் பேசப்படுகின்றார். அதிக மான அளவுக்கு தந்தை பெரியாரைப்பற்றி ஆய்வு செய்கின்றனர்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகையிலே, ஒவ்வொரு இடத்தில், ஒவ்வொரு வகையான மனிதர்கள் மத்தியிலே பதிவுகள் நடந்து கொண்டி ருக்கிறது. ஆகவே அப்படிப்பட்ட நிலையிலே ஒப்புவமை இல்லாத சிந்தனை.

துணிவு இருக்குமா? உலகத்தில் இந்த இரண்டு அம்சங்கள் உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஓய்வறியாமல் உழைக்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள். அதே போல ஒப்புவமை இல்லாத சிந்தனையாளர் களாகவும் இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட வர்கள்கூட உண்மையை அஞ்சாது கூறத்துணிவு உள்ளவர்களாக இருப்பார்களா, என்று சொன் னால், இருக்க மாட்டார்கள்.

அய்யா அவர்களே அடிக்கடி பேசும்பொழுது சொல்லுவார். எனக்குத் தெரிந்த இந்தச் செய்தி. எனக்கு மட்டும்தான் தெரியும் என்று நினைக் காதீர்கள்.

என்னை விட அதிகமாக செய்தி தெரிந்தவர்கள் நாட்டில் இருக்கிறார்கள். நான் அதை ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் அப்படி சொன்னால் நம்முடைய சுயநலத்திற்குக் கேடு என்று கூட அஞ்சுவார்கள். பயப்படுவார்கள்.

நான் எதைப்பற்றியும் கவலைப்படாதவன்

நான் எதைப் பற்றியும் கவலைப்படாதவன். இழப்பதற்கு எனக்கு ஒன்றுமில்லை. காரணம், நான் எதையும் விரும்புகிறவன்அல்ல.ன் விரும்புகிறவர்கள் தான் இழப்பதற்காக வருத்தப்பட வேண்டுமே தவிர, விரும்பாதவர்களுக்கு இழப்பதற்கு என்ன இருக்கிறது என்ற ஒரு தலைசிறந்த தத்துவ ஞானியாக தந்தை பெரியார் அவர்கள் திகழ்ந்தார்கள்.

ஆகவே, உண்மைகளை அஞ்சாது வெளியிடும் துணிவு பெற்றவர், தன்னலம் சிறிதும் புகாத தன்னேரில்லா தலைவர்.

சிலருக்குப் பொதுத் தொண்டு

சிலருக்குப் பொதுத் தொண்டு தன்னலம் கலந்த ஒன்று. ஆனால் தந்தை பெரியார் அவர்களுடைய பொதுத்தொண்டை நீங்கள் எந்தக் கோணத்தி லிருந்து பார்த்தாலும் அதில் கொஞ்சம் கூட, சுயநலம், தன்னலம் குறுக்கிட்டதே கிடையாது. எனவே தந்தை பெரியாரின் தொண்டு தன்னிக ரில்லாத தொண்டு. இது நான்காவது அம்சம்.

அய்ந்தாவதைத் தெளிவாகச் சொல்ல வேண்டு மானால், அவர் ஒரு முழுப் பகுத்தறிவுவாதி. மனித நேயம்தான் அவருடைய சிந்தனைக்கே அடிப்படை. சிறு குழந்தைப் பிராயத்திலிருந்து தன்னுடைய உற்றத்து நிகழ்வுகளிலேயிருந்து எல்லாவற்றிலும் தந்தை பெரியார் அவர்கள் மனிதநேயத்துடன் கொண்டு சென்றார்.

அவர் ஒரு பூரண பகுத்தறிவுவாதி

எதையும் வெட்கப்படாமல், கூச்சப்படாமல் உண்மைகளை நிர்வாணத் தன்மையிலே பார்த்த தலைசிறந்த ஒரு பகுத்தறிவுவாதி. தன்னை அறிமுகப்படுத்தும்பொழுது தந்தை பெரியார் தன்னை ஒரு பூரண பகுத்தறிவுவாதி என்று சொன்னார்.

நாங்கள் எல்லாம் பகுத்தறிவுவாதிகள்தான். ஆனால் மனஒதுக்கீடு இல்லாமல் மென்ட்டல் ரிசர்வேசன் என்று சொல்லுகிறார்களே, இதைப் பற்றி நம்மை நாமே ஒரு கேள்வி கேட்டுக் கொண்டால் நாம் முழுப்பகுத்தறிவு வாதியா என்றால் அவ்வளவு எளிதாக முழுப்பகுத்தறிவுவாதி என்று சொல்ல முடியாது. பகுத்தறிவாளர்கள் என்று சொல்லுகிறவர்கள் கூட முழு பகுத்தறிவுவாதி என்று சொன்னால் அதற்கு விடை கிடைக்குமா? என்றால் சங்கடமான ஒன்றுதான். நமக்கு ஏதோ ஒரு வகையிலே ஆசாபாசம் இருக்கும். நான் அதைச் சொல்ல முடியவில்லை. மனித நேயத்தோடு....

தந்தை பெரியார் அவர்களுக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. சோதனை செய்கிற மருத்துவர் எந்தவித உணர்ச்சிக்கும் ஆளாகாமல், சோதனைக்கு ஆட்கொண்டிருக்கின்ற நபர் ஆணா, பெண்ணா என்று கவலைப்படாமல், நோயைப் பற்றியே பரிசீலிக்கக் கூடிய மனப்பக்குவத்தை எப்படி பெற்றிருப்பாரோ அதுபோல ஒரு நபரைப் பார்க்காமல் மனிதநேயத்தோடு எந்தப் பிரச்சி னையையும் அணுகுவார்.

இலக்கியம் என்று சொன்னால் என்ன நினைக்கிறார்கள்? யாரோ சில பேர் கூடி படிக்கிறார்கள். புலவர் பட்டம் பெற்று வருவது அல்ல. இலக்கு+இயம்=இலக்கியம். வார்த்தையைக் காப்பாற்றுவதற்கு நம்முடைய புலவர்கள் போராடியிருக்கின்றார்கள்.

இலக்கியம் என்பதே வடமொழி என்று சொல்லியே போராட்டம் ஆரம்பித்துவிட்டது. அதற்குப் பிறகு இலக்கு+இயம்= இலக்கியம்- குறிக்கோள் என்று எல்லாம் வந்துவிட்டது.

ஆனால் அதன்பிறகு இலக்கியம் என்பது ஒரு நூலைப் போட்டுக்கொண்டு ஒரு வளையத்தைப் போட்டுக்கொண்டு ஒரு வட்டத்தை வரைந்து கொண்டிருப்பார்கள்.

இலக்கியம் என்றால் அவர் கவிதை எழுத வேண்டும். இலக்கியம் என்றால் அவர் ஆராய்ச்சி யாளராக இருக்கவேண்டும் என்று நினைப் பார்கள்.

நான் தமிழ் தெரியாதவன்

ஆனால், ரொம்ப பேர் நினைப்பார்கள். நான் தமிழே தெரியாதவன் என்று பெரியார் சொல்லுவார். அவர் மாதிரி உண்மையைப் பேசக்கூடிய தலைவரே கிடையாது. அவர் அடக்கத்திற்காகவும் அய்யா சொல்லவில்லை. அடக்கத்திற்காக சில பேர் பேசுவார்கள்.

ஆனால் அய்யா அவர்கள் இயல்பான அடக்கத்தைப் பெற்றவர்கள். அவர் மாதிரி அடக்க உணர்வு படைத்த தலைவர் உலகத்தில் கிடையாது. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்துவிடும்

என்று வள்ளுவர் சொல்லுவது போன்ற நிலையில் உள்ளவர். பெரியாருக்கு என்ன தமிழ் தெரியும்? என்று கேட்டவர்கள் உண்டு. பெரியார் ஏன் தமிழில் கை வைக்கிறார் என்று சொல்லு வதுண்டு.

பெரியாரின் இரங்கல் இலக்கியம்

மறைந்த புலவர் அய்யா இராமநாதன் அவர்கள் எழுதிய பெரியாரியல் தொகுதி பாடங்களை வெளியிட்டிருக்கின்றோம்.

பெரியாருடைய மொழி எழுத்துச் சீர்திருத்தங்களை தனியே எடுத்து வைத்துக் கொண்டு பார்க்க வேண்டும். இரங்கல் இலக்கியம் என்ற ஒரு பகுதியை அய்யா அவர்கள் எழுதியிருக்கின்றார்.

தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்விணையர் நாகம்மையார் மறைவு, அதே மாதிரி அவருடைய தாயார் சின்னத்தாயம்மாள் மறைவு. அவர்களைப் பற்றி பெரியார் என்ன எழுதி யிருக்கின்றார் என்பதைப் படிக்க வேண்டும்.

பெரியார் பற்றி பெரியார் என்ற நூலை எழுத வேண்டும். அவருடைய சுயசரிதையை மற்றவர்கள் எளிதில் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற் காகத்தான் இந்த ஆண்டு இந்த நூலை வெளி யிட்டிருக்கின்றோம்.

இலக்கியம் என்றால் என்ன? மேலை நாட்டு அறிஞர்கள் சொல்லியிருக்கின்றார்கள். அவர்கள் அறிவை சுதந்திரமாக விட்டதினாலே அவர் களுடைய விளக்கங்கள், அவர்களுடைய வரையறைகள் தெளிவாக இருக்கும்.

எமர்சன் என்ற அறிஞர் சொன்னார். சிறந்த எண்ணங்களுடைய உயர்ந்த தொகுப்புதான் இலக்கியம்.

அந்த சிறந்த எண்ணம். நல்ல தொகுப்புகளாக அமைகிறதோ அதுதான் இலக்கியம். தனியே மேடை அமைத்து விவாதம் வைத்து இது இலக்கியம், இது இலக்கியம் அல்ல என்று சொல்ல முடியாது.

ஒரு காலத்தில் புதுக்கவிதை எழுதியவர்களை ஒதுக்கித்தான் வைத்திருந்தார்கள். சிறுகதைகள் பற்றி எல்லாம் விவாதங்கள் இருந்தது. ஆகவே, இதில் நுணுக்கமான முறையில் அறிவைப் பெற்றவனோ இல்லை. நான் பெரியாருடைய மாணவன். அவ்வளவுதான் இன்னமும் நான் பெரியாரைப் படித்துக்கொண்டிருக்கின்ற மாணவன். பெரியாருடைய சிந்தனைகள் உலகத்தை ஆள வேண்டும் என்பதில் குறியாக இருக்கிற முதல் தொண்டன் (பலத்த கைதட்டல்).

80 ஆண்டுகளுக்கு முன்னாலே அரசியல் சமுதாய பிரச்சினைகளை கேட்க வேண்டுமென்று நினைத்தால் எப்படியிருக்கும்?

பெரியார் என்ற ஆசிரியர் வகுப்பெடுத்தால்....

தந்தை பெரியார் என்ற ஆசிரியர் வகுப்பெடுத்து மாணவர்கள் கேட்டால் எப்படியிருக்கும் என்பதற்கு ஆதாரம்தான் குடிஅரசு தொகுப்புகள்.

எனவே, யார் யாருக்கு வாய்ப்பு இருக்கிறதோ அவர்கள் அத்துணை பேர் வீட்டிலும் குடிஅரசு தொகுப்புகள் இருக்கவேண்டும். இருந்தால் மட்டும் போதாது. உங்களுடைய வேலைகளை எல்லாம் முடித்து விட்டு, வாய்ப்புக் கிடைக்கும்பொழுது குடிஅரசு தொகுப்புகளை கொஞ்சம், கொஞ்சமாகப் படிக்க வேண்டும். இதில் பல்வேறு செய்திகள் இருக்கும்.

ஒரு பெரிய பேரங்காடி. சூப்பர் மார்க்கெட் என்று சொல்லுகிறோம். அல்லவா? அந்தப் பேரங்காடிக்குப் போனால் பல்வேறு பொருள்கள் இருக்கும். யாருக்கு எது தேவையோ அவற்றை வாங்கிக் கொள்கின்றோம்.

சிந்தனைப் பேரங்காடி

தந்தை பெரியாரின் குடிஅரசு தொகுப்புகளைப் பார்த்தால் அது ஒரு சிந்தனைப் பேரங்காடி மாதிரி. பூங்காக்களில் எப்படி பல மலர்கள் இருக்கிறதோ அதுபோல ஏராளமான கருத்துகளைக் கொண்ட மிகச்சிறப்பானதாக இருக்கும்.

குடிஅரசு தொகுதிகளை அச்சிடும்பொழுது எழுத்துப் பிழையோ, மற்றதோ வந்துவிடக்கூடாது என்பதற்காக கவனமாகப் படித்துக்கொண்டிருப்பேன்.

குடிஅரசு தொகுப்பு

இது சமீபத்தில் வந்த குடிஅரசு தொகுப்பு. இதை படித்துக்கொண்டிருக்கின்றபொழுது மிக முக்கியமான செய்திகள் தென்பட்டன.

தந்தை பெரியார் அவர்கள் எழுதியது பாடம் மாதிரி நமக்கு. முதலில் இதைப் புரிந்து கொண்டால், இலக்கியம் மற்றது வரும். 13.1.1936இல் சென்னை பச்சையப்பன் கல்லூரி பெரிய மண்டபத்தில் திரு.வி.க தலைமையில் நடைபெற்ற தமிழ்த்திருநாள் (பொங்கல்) விழாவில் தமிழ் வாழ்த்து எனும் பொருளில் தந்தை பெரியார் ஆற்றிய உரை அந்தக் காலத்தில் எல்லாம் அய்யா அவர்களுக்கு செயலாளர்கள் எல்லாம் கிடையாது.

அய்யாவே எழுதிக்கொடுப்பார்

அய்யா அவர்கள் பேசி முடித்துவிட்டு, அவரே இரவோடு இரவாக எழுதி குடிஅரசு அலுவலகத்திற்கு கொடுத்து அவரே புரூஃப் பார்ப்பார். அப்படி உழைத்த மாமேதை அவர்கள்.

முதலில் இதை அடிப்படையாக தெரிந்து கொண்டால் எப்படி அய்யாவின் கருத்துகள் புது வெள்ளம் பாய்கிறது, புது நோக்கு எப்படி அமைகிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

-------------------------------தொடரும் "விடுதலை” 23-10-2010என்னை மகிழ்ச்சியாக வரவேற்றது போல மகிழ்ச்சியாக வழியனுப்ப மாட்டீர்கள்
பெரியார் கூறிய கருத்தை விளக்கி தமிழர் தலைவர் பேச்சு

என்னை வரவேற்ற மாதிரி எனது உபன்யாச முடிவில் எனக்கு மகிழ்ச்சியான வழியனுப்பு செய்யமாட்டார்கள் என்றே நினைக்கிறேன் என்று தந்தை பெரியார் கூறிய கருத்தை விளக்கி தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்கள்.

சென்னை பெரியார்திடலில் 21.9.2010 அன்று பெரியாரின் இலக்கியப் பார்வை புதுவெள்ளம் புதுநோக்கு என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

இந்த செய்திகளை எல்லாம் பதிவு செய்ய வேண்டுமென்று விரும்புகின்றோம். உங்களுக்கு வசதி எப்படி என்பதைப் பார்த்து, எனக்கு வசதியான நாளைப் பார்த்து இதே அமைப்பின் சார்பாக ஒரு தொடர் சொற்பொழிவாக ஆக்குவதற்கு தயாராக இருக்கிறோம். (கைதட்டல்).

இதில் அய்யா அவர்கள் பேசுகிறார். பள்ளி, கல்லூரிகளுக்கே போகாத தந்தை பெரியார் அவர்களுடைய பெயராலே இன்றைக்குப் பல்கலைக்கழகமே அமைந்துவிட்டது.

பெரியாரின் ஒப்பற்ற சுயசிந்தனை

உலகத்தில் ரொம்ப அதிசயமான ஒரு நிலை. தந்தை பெரியார் ஆரம்பப் பள்ளிக் கூடத்திற்குக் கூட ஒழுங்காகப் போனதில்லை. அப்பேர்ப்பட்ட தலைவர் அவர்.

தந்தை பெரியாரின் ஒப்பற்ற சுயசிந்தனைக்கு உலகத்தில் எவ்வளவு பெரிய அங்கீகாரம் என்பதைப் பார்க்க வேண்டும். இன்றைக்கு 21ஆம் நூற்றாண்டு தொழில் நுட்பத்தில் உச்சக்கட்டம். எப்படி 18ஆம் நூற்றாண்டில் தொழில்புரட்சி ஏற்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் அந்தத் தொழில்புரட்சி விரிவானது. 20ஆம் நூற்றாண்டில் அது வேறு ஒரு உருவத்தை எடுத்தது.

21ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்பப் புரட்சி

21ஆம் நூற்றாண்டில் மின்னணு தொழில்நுட்ப புரட்சியாக திருப்பம் ஏற்பட்டு வளர்ந்தது. அறிவியல் ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக கேடிசஅயவடி கூநஉடிடடிபல-தகவல் தொழில்நுட்பத்துறையில் வளர்ந்திருக்கிறதோ அதே மாதிரி தந்தை பெரியார் அவர்களுடைய சிந்தனையில் இருக்கிறது.

அய்யா அவர்கள் பேசுகிறார்: அன்புள்ள தலைவர் அவர்களே! தோழர்களே! நீங்கள் இவ்வளவு பெரிய கரகோஷம், ஆரவாரம் செய்து (அந்தக் காலத்தில் பார்த்தீர்களேயானால் கைதட்டல் என்று போடமாட்டார்கள். கர கோஷம் என்றுதான் போடுவார்கள். நமஸ்காரம் தான் இருக்கும். அபேட்சகர் இருப்பார். அய்யா அவர்களின் இயக்கம் திராவிடர் இயக்கம் வந்ததினாலேதான். இவை எல்லாம் மாறியிருக்கின்றன).

எனக்கு மகிழ்ச்சியான வழியனுப்பு செய்யமாட்டார்கள்

என்னை வரவேற்ற மாதிரி எனது உபன்யாச முடிவில் எனக்கு மகிழ்ச்சியான வழியனுப்பு செய்ய மாட்டீர்கள் என்றே நினைக்கின்றேன். (கைதட்டல்).

(அதாவது, ஒழுங்காக அனுப்பப் போவதில்லை என்று அய்யா அவர்களே சொல்லுகின்றார். இந்த மாதிரி சொல்லுகிற தலைவரைப் பார்க்க முடியாது. எல்லோரும் என்ன சொல்லுவார்கள்? நீங்கள் பாராட்டி வழியனுப்பி வைப்பீர்கள் என்று தான் நினைப்பார்கள்) ஏனெனில் தமிழ் பாஷையில் வாழ்த்து கூறுதல் இலேசானதல்ல (இது ஒன்றே போதும் பிஎச்.டி.,க்குரிய தலைப்பாகும். ரொம்ப ஆழமாக சிந்திக்க வேண்டியது (கைதட்டல்)

அதிலும் என்போன்ற தமிழ் பாஷைக்கு வல்லின, இடையின எழுத்து பேதமும், பிரயோகமும் பாஷையின் இலக்கண, இலக்கியத்தை அறியாதவன், (உண்மையை அய்யா அவர்கள் அப்படியே சொல்லுகிறார்கள் பாருங்கள். அய்யா அவர்களுக்கு பெரிய ற ன போடுவதா? சின்ன ர ன போடுவதா? என்பதைப் பற்றிக் கவலை இல்லை. கருத்து போய் சேருகிறதா இல்லையா?

அய்யா அவர்களை கூந சுநஎடிடவ என்ற ஆங்கிலப் பத்திரிகையை நடத்தினார். இராமநாதன் அவர்களும், அய்யா அவர்களும் சேர்ந்துதான் நடத்தினார்கள்.

பெரும்பாலும் இராமநாதன் ஆங்கிலத்தில் எழுதுவார். தமிழில் இருக்கின்ற அய்யாவின் கருத்துகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பார். அய்யா அவர்களுக்கு உதவி ஆசிரியராக இருந்தவர். ஆங்கிலத்தில் நன்றாக எழுதக்கூடியவர்.

ஒரு கட்டம் வரையிலும் கூந சுநஎடிடவஇல் இரண்டு பேருடைய பெயரும் இருக்கும். இராமனாத னுடைய பெயர் அதற்குப் பிறகு இருக்காது. வெறும் அய்யா பெயர் மட்டும்தான் இருக்கும். நு.ஏ.சுயஅயளயஅல என்ற பெயர்தான் இருக்கும். புரூஃப் ரீடிங்கிற்கு ஆள்கேட்டால்.....

அய்யா அவர்களிடம், அய்யா, பத்திரிகைகளில் எழுத்துகள் தவறுதலாக வருகின்றன. இன்னும் கொஞ்சம் புரூஃப் ரீடிங்கிற்கு ஆள் போட வேண்டும் என்று சொல்லுவார்கள்.

பத்திரிகை அதிக அளவுக்குப் போகவில்லை. ஏகப்பட்ட நட்டத்தில் இருக்கிறது. இது தொடருமா? இல்லையா? என்பது தெரியவில்லை. ஆகவே, இங்கிலீஷ் எழுத்தில் புரூஃப் ரீடிங் சரியில்லை, எழுத்துகள் தவறுதலாக இருக்கிறது என்றுதானே சொல்லுகின்றார்கள்? இங்கிலீஷ் பத்திரிகை உலகம் பூராவும் போறதில்லையா?

அரசாங்கத்தார் படிக்கிறார்களே என்று சொல்லுவதுண்டு. அய்யா அவர்களும் வெள்ளைக் காரர்கள் படிக்க வேண்டும், அரசாங்கம் நமது கருத்துகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கஷ்டப்பட்டு பத்திரிகையை நடத்துகிறேன் என்று அய்யா அவர்கள் சொல்லுவார்கள்.

புரூஃப் ரீடர்ஸ் தேவை என்று அய்யா அவர்களிடம் கேட்டதற்கு அய்யா அவர்கள் சொன்ன பதில் ரொம்ப எதார்த்தமான பதில். இங்கிலீஷ் தெரிந்தவனே கரெக்ட் பண்ணிக் கொள்வான்.

அய்யா சொன்னாராம். இங்கிலீஷ் தெரிந்தவன் அதைக் கரெக்ட் பண்ணி படித்துக்கொள்வான். இதைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகின்றீர் என்று சொன்னாராம். (சிரிப்பு-கைதட்டல்).

பத்திரிகை நடத்தும் பொழுது இந்த மாதிரி துணிச்சலாக சொல்லுகிற ஒரு தலைவரைப் பார்க்க முடியாது.) அய்யா சொல்லுகிறார், தமிழ் பாஷைக்கு வல்லின, மெல்லின, இடையின எழுத்து பேதமும், பிரயோகமும், பாஷையும், இலக்கண-இலக்கியம் அறியாதவரும் தமிழ் பாஷையைக் கெடுத்து கொலை செய்து வருபவர் என்ற பழியைப் பெற்றவருமான நான் (அய்யா தன்னைப் பற்றிச் சொல்லுகிறார். இவர்தான் தமிழைக் கொலை செய்கிறவர், தமிழைக் கெடுக்கிறவர் என்று அய்யா அவர்கள் மீது குற்றம் சொல்லுவதை ஒப்புக் கொண்டு சொல்லுகின்றார்).

தமிழ் வாழ்த்துக்கு தகுதிக்கு உடையவனோ என்று பாருங்கள். அன்றியும் தமிழைப் பற்றி அபிப்பிராயங்களில் பண்டிதர்களுக்கும், எனக்கும் எவ்வளவோ வேறுபாடான கருத்துகள் இருந்து வருவதும் அறியாததல்ல.

பண்டிதர்கள் சொல்லுகின்ற கருத்து நேர்எதிரான கருத்து. எனவே, என்னைப் போய் தமிழ் வாழ்த்துக் குரியவன் என்று சொல்லுவது அறியாததா என்று சொல்லுகின்றார்.

பொறுப்பும்-பொருளும் இல்லாத....

நீங்களெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், வாழ்த்துவது என்பதை இவ்வளவு சாதாரணமாகக் கருதுபவன் அல்ல. வாழ்த்துதல் என்றால், பார்ப்பனர்கள் ஏதோ மஞ்சளையும், அரிசியையும் கலந்து, பொறுப்பும், பொருளும் இல்லாத ஒன்றின் பெயரைச் சொல்லி, (அய்யா அவர்கள் பயன்படுத்துகின்ற வார்த்தையை நீங்கள் கவனிக்க வேண்டும். அய்யா அவர்கள் தேவையில்லாமல் ஒரு வார்த்தையைக் கூட பயன்படுத்தமாட்டார்). ஆசிர்வாதம் செய்துவிட்டு ஏதோ பெற்று வயிறு வளர்ப்பது மாதிரி வாழ்க்கையை அவ்வளவு ஏமாற்றமாக நினைப்பவனும் அல்ல. இந்த தத்துவத்தை ரொம்ப பேர் புரிந்துகொள்ளக் கூடிய ஒரு அற்புதமான தத்துவம். காலம் காலமாக கல்லில் செதுக்கி வைக்கப்படக் கூடிய ஒரு தத்துவம்.

ஆனால் வாழ்த்துதலின் அவசியத்தையும், அதன் பொருளையும் நான் உணர்ந்தவனே ஆவேன். தகுதியும், பொறுப்பும் உடையவர்களே வாழ்த்த வேண்டும். வாழ்த்துபவர்கள் தங்களுக்குப் பொறுப்பு இருப்பதை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும்

(நீ நன்றாக இரு என்று ஒருவரை சொன்னால் அய்யா அவர்களுடைய எண்ணப்படி- அவர் நன்றாக இருக்கும்படியாகப் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு சொல்கிறவருக்கு இருக்க வேண்டும். (கைதட்டல்).

இவன் நாசமாகப் போக!

இவன் நாசமாகப் போக மாட்டானா என்று நினைத்துக்கொண்டே ரொம்ப பேர் நன்றாக இரு என்று சொல்லுகின்றான். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது சாதாரணம்). தமிழை வாழ்த்திவிட்டு தமிழுக்கு இடுக்கண் ஏற்படும் பொழுது கலையற்றவர்களும், (எவ்வளவு அழகாக அய்யா அவர்கள் சொல்லுகிறார்கள் பாருங்கள்) எவ்வித உதவியும், ஆதரவும் அளிக்கத் தகுதி அற்றவர்கள் வாழ்த்திப் பயன் என்ன? என்று கேட்கின்றார்.

தமிழ் வாழ்க என்று சொன்னால்....

எனவே, தமிழ் வாழ்க என்று நாம் சொன்னால் அதற்கு ஒரு பொறுப்பேற்க வேண்டும். தமிழுக்கு எப்பொழுதுதெல்லாம் இடையூறு ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் தலை கொடுப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். அதற்கு விலை கொடுப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். அதைத் தடுப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். இந்த மாதிரி சிந்தனையை யாரும் அவ்வளவு எளிதில் கேட்டிருக்க மாட்டார்கள்.

பெரியார் வாழ்க என்று நாம் சொல்லுகின்றோம்! பொறுப்போடு சொல்லுகின்றோம். சில பேர் எங்களிடம் கூட கேட்பார்கள். என்னங்க, பெரியார் இறந்துவிட்டார், நீங்கள் வாழ்க என்று கோஷம் போடுகிறீர்களே என்ற கேட்பார்கள். பெரியார் இறக்கவில்லை. ஈ.வெ.ராமசாமி என்கிற பெயரில் பெரியார் என்று அழைக்கப்பட்ட ஒரு தனி நபர். அவ்வளவுதான்.

பெரியார் என்பது ஒரு தத்துவம்!

பெரியார் என்பது காலம் காலமாக வாழக்கூடிய ஒப்பற்ற ஒரு தத்துவம் (கைதட்டல்). தலைவர்கள் மறைவதுண்டு. தத்துவங்கள் மறைவதில்லை. அப்படிப்பட்ட ஒரு சூழலில் ரொம்ப அழகாக சொல்லுகின்றார். மேலும் சொல்லுகிறார். கட்டளையிடப்பட்டுவிட்டேன்!

ஆகவேதான் இங்கு வாழ்த்துவதற்குத் தகுதியைக் கருதாமல், மூப்பையும், நரையையுமே கருதி கட்டளையிடப்பட்டு விட்டேன் என்று கருதுகின்றேன். (சிரிப்பு கைத்தட்டல்). (அய்யா அவர்கள் தன்னைத் தாழ்த்திக் கொண்டு எப்படி சொல்லுகிறார் பாருங்கள்). எனக்கு வயதாகிப் போய்விட்டது. அதற்காக என்னை வாழ்த்துக்கு கூப்பிட்டிருக்கின்றீர்கள் என்று அய்யா அவர்கள் சொல்லுகின்றார். (சிரிப்பு). அய்யா அவர்கள் எவ்வளவு அடக்க மாகச் சொல்லுகிறார் என்று பாருங்கள். இமயம் போன்ற தலைவர் எப்படிச் சொல்லுகிறார் பாருங்கள். அய்யா உண்மையைச் சொல்லு கின்றார்.

தமிழில் எந்த அளவும் பள்ளியில் பயின்றவன் அல்ல. தமிழைப் பற்றி, தமிழ் மக்கள் நலம், தமிழ் மக்கள் தன்மதிப்பு என்பதல்லாமல் வெறும் வார்த்தையைப் பற்றியே பிடிவாதம் கொண்டவன் அல்ல. தமிழுக்காக எவ்வித தொண்டு புரிந்தவனும் அல்ல. தமிழுக்கு வாழ்த்து கூற தலைவரும் எனது நண்பருமான தோழர் திரு.வி.கலியாணசுந்தரம் முதலியார் அவர்களும், தமிழ்ச் சங்க அமைப்பு தோழர் க.நமச்சிவாய முதலியார் அவர்களும், மற்றும் அவர்கள் போன்ற பெரியோர்களே உண்மையில் தகுதி உள்ளவர்கள். (நான் இல்லை) தலைவர் கலியாணசுந்தர முதலியார் அவர்களின் தமிழ்த்தொண்டை நானே நன்றாய் அறிந்தவன். அவரது தமிழ்த்தொண்டிற்கு எடுத்துக்காட்டு வேண்டுமானால் நானே ஆவேன். (சிரிப்பு- கைதட்டல்).

அற்புதமான செய்தி

(இது அற்புதமான செய்தி. யாரும் இந்த மாதிரி சொல்ல மாட்டார்கள்). கலியாணசுந்தரனா ருடைய சிறப்பு, பெருமை இவை யாவற்றையும் வேறு யாரும் சொல்ல வேண்டியதில்லை. என்னை மாற்றினார் பாருங்கள், அது தான் சிறப்பு என்று அய்யா அவர்கள் சொல்லுகின்றார். (கைதட்டல்). ஒவ்வொரு வரியும் மிக முக்கியம் இதைவிட இலக்கியச் சுவை வேறொன்றுமே கிடையாது. இதைவிட புதிய வெள்ளத்தை வேறு எங்கும் காண முடியாது. இதைவிட புதிய நோக்கையும் வேறு எங்கும் காண முடியாது.

அதனால்தான் நான் தலைப்பு கொடுக்கும் பொழுது, புது வெள்ளம், புது நோக்கு என்று கொடுத்தேன். தலைவர் கலியாணசுந்தரனார் அவர்களின் தமிழ்த்தொண்டை நானே நன்றாய் அறிந்தவன். அவரது தமிழ்த் தொண்டுக்கு எடுத்துக்காட்டு வேண்டுமானால் நானே ஆவேன்.

நான் தமிழை கொலை புரிவது நான் தமிழ் பேசுவதும், எழுதுவதும், தமிழை கொலை புரிவது மாதிரியானலும், நான் பல பத்திரிகைகள் நடத்துவதும், சுமார் 50, 60 புத்தகங்கள் வெளியிட்டதும் தலைவர் கலியாண சுந்தர முதலியார் அவர்கள் தமிழ் பாஷையில், நவசக்தி முதலிய பத்திரிகைகளின் தொண்டே யாகும். (கைதட்டல்).

திரு.வி.க. வழியாக அவர்களின் தேசபக்தன் பத்திரிகைக்குப் பிறகே தமிழ் அரசியல் மேடைகளை கைப்பற்றிற்று என்றே சொல்லு வேன். தமிழ் எப்பொழுது அரசியல் மேடை களைக் கைப்பற்றியது? திரு.வி.க அவர்களின் தேசபக்தன், மற்றும் நவசக்தி போன்ற பத்திரிகைகளுக்குப் பிறகேயாகும்.

தமிழ் பாஷையை காதில் கேட்டால்...

அப்பத்திரிகைகள் என்னை விட மோசமான வர்களின் தமிழ் பாஷையும், அரசியலை உணரவும், தமிழ் பேசவும் செய்து விட்டதால் தமிழ் பாஷையை காதில் கேட்டால் தோஷம் என்று கருதும் ஜாதியாலும் தமிழில் கலந்து கொள்ளவும் தமிழை வேஷத்திற்காக மதிக்கவு மாகச் செய்துவிட்டது. (சிரிப்பு-கைதட்டல்)

(அவன் உண்மையாக மதிக்கிறானா-இல்லையா என்பது அல்ல. தமிழை மதித்தால்தான் நமக்குப் பெருமை. தமிழைப் பாராட்டினால்தான் நமக்குப் பெருமை என்று ஒரு காலகட்டத்தை உண்டாக் கினார்கள். பார்ப்பனர்களுக்கு உள்ளுக்குள் தமிழ் நீஷ பாஷை. உள்ளுக்குள் துவேஷம், தமிழில் பேசக்கூடாது என்று நினைக்கிற வர்களுக்கு கூட இப்படி ஏற்பட்டிருக்கிறது. அய்யா அவர்கள் மேலும் எவ்வளவு அழகாக சொல்லு கிறார்கள் பாருங்கள்).

தமிழுக்கு தொண்டாற்றிய தமிழ்ச் செம்மல்கள்

பெரியார் க.நமச்சிவாய முதலியார் அவர்களது உழைப்பும், தமிழுக்கு மிகப்பெரிய தொண்டும் தமிழர்கள் மறக்க முடியாததுமான தொண் டாகும். பெரியார் க.நமச்சிவாய முதலியாரின் மிகுந்த முயற்சி இல்லாதிருந்திருக்குமேயானால் (இன்றைக்குப் பார்த்தீர்களேயானால் இவர்களை எல்லாம் நினைத்தே பார்ப்பதில்லை. இவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரிவதில்லை. இவர்கள் மாதிரி தமிழுக்குத் தொண்டாற்றிய தமிழ்மொழி தொண்டறச் செம்மல்கள், செம்மொழி செம்மல்களை வருகாலத் தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும். மற்ற நாட்டு இலக்கியங்களில் அவர்களுடைய அறிஞர்களை எப்படி உயர்த்துகிறார்கள், அவர்களைப் பற்றி ஆய்வு செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

கலைஞர் நிச்சயம் செய்வார்

கலைஞர் அவர்களுடைய ஆட்சியிலே நிச்சயமாகச் செய்வார்கள் (கைதட்டல்). ஏனென்றால் அவர் இதிலே நுண்மாண் நுழைபுலத்தோடு தெளிவாக நோக்கக் கூடியவர்கள். தமிழ் தாத்தா உ.வே.சா.தான் எல்லாம் செய்தார் என்று சிலர் சொல்லுவார்கள். செய்யலாம்.

க.நமச்சிவாய முதலியாருக்கு என்ன சம்பளம்? மற்றவர்களுக்கு என்ன சம்பளம்? பெரியார் போராடி வாங்கித்தந்தார். இந்தத் தகவலே பல பேருக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரியுமா? என்ற புத்தகத்தில் நாங்கள் எடுத்துப்போட்டு, இந்தக் குறிக்கோள்களை எல்லாம் எடுத்துச்சொல்லியிருக்கின்றோம். அய்யா சொல்லுகிறார் பெரியார் நமச்சிவாய முதலியார் அவர்களின் உழைப்பும், தமிழுக்கு மிகப்பெரிய தொண்டும், தமிழர் மறக்க முடியாததுமான தொண்டாகும்.

பகிரங்கமாக அய்யாவின் கருத்து

பெரியார் நமச்சிவாய முதலியார் அவர்களின் துணிந்த முயற்சி இல்லாதிருந்திருக்குமேயானால் இன்று தமிழ்ப் பாடப் புத்தகங்கள் பெரிதும் ஆரிய உபாத்தியாயர்களால் ஆரியமும், தமிழும் விபச்சாரித்தனம் செய்து பெற்ற பிள்ளைகளைப் போல இடம்பெற்றிருக்கும். (பகிரங்கமாக அய்யா அவர்கள் அடித்துவிட்டார் பாருங்கள்)

------------(தொடரும்) ---”விடுதலை”- 24-10-2010