Search This Blog

28.2.14

பிராமணாள் தெரு இருப்பதை அனுமதிக்க முடியாது!

எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த போது தெருப் பெயர்கள் ஜாதிப் பெயர்களாக இருக் கக்கூடாது என்று ஆணை ஒன்றினைப் பிறப்பித்தார். குட்டி நாயர் தெரு பெயரில்கூட, நாயர் எடுக்கப் பட்டு குட்டித் தெரு என்று பெயர்ப் பலகைகளில் எழு தப்பட்டதுண்டு. டி.எம். நாயர் சாலையும், டி.எம். சாலை என்று மாற்றப்பட் டது.

அப்படி இருக்கும் பொழுது சென்னை வேளச்சேரியில் பிராம ணர் தெரு இருப்பது எப்படி சரி? இது சட்டப்படி குற்றமல்லவா? அது பிராமணர் தெரு என்றால், மற்ற தெருக்கள் எல்லாம் என்னவாம்? சூத்திரர்த் தெரு என்று மறைமுக மாகக் கூறுவதுதானே பொருள்!

திருவையாற்றில் சூத்திரமேட்டுத் தெரு என்ற பெயரில்கூட ஒரு தெரு இருந்ததுண்டு. கழகப் போராட்டத்தின் காரணமாக அது தூக்கி எறியப் பட்டது என்பது வரலாறு!

இப்பொழுது சென்னையை அடுத்த, வேளச்சேரியில் பிராமணர் தெரு என்று முகநூல் மூலம் தெரிய வந்துள்ளது. இதுவரை அந்தப் பகுதியில் உள்ள மக்கள், குறிப்பாக திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள் இதுபற்றிச் சிந் திக்காமல் போனது ஏன்? செயல்படாமல் இருந்ததும் ஏன்?

பிராமணாள் ஓட்டல் என்ற பெயர்ப் பலகையை அழித்தது திராவிடர் கழகம். ஒரு கட்டத்தில் சென்னை திருவல்லிக்கேணியில் முரளீஸ் பிராமணாள் கஃபே என்று எழுதப்பட்டு இருந்ததை தந்தை பெரியார் கட்டளைப்படி தொடர் போராட்டம் கார ணமாக அகற்றச் செய்தவர்கள் கருஞ்சட்டையினர்.
சிறீரங்கம் - திருச்சி - திண் டிவனம் - புதுக்கோட்டைப் பகுதிகளில் இருந்த பிராம ணாள் ஓட்டல் பெயர்கள் கழகத்தின் முயற்சியால் இருந்த இடம் தெரியாமல் போயிற்று!

வேளச்சேரியில் பிராமணாள் தெரு என்று இருப்பதை அனுமதிக்க முடி யாது. பிராமணாள் தெரு என்பதன்மூலம் மற்ற தெருக்களில் வாழும் மக்கள் சூத்திரர்கள் என்று இழிவு படுத்தப்படுகின்றனர்.

சூத்திரர்கள் என்றால் யார்? மனுதர்மம் (அத்தியா யம் 8; சுலோகம் 415) என்ன கூறுகிறது?

சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும். 1. யுத்தத்தில் புறம்காட்டி ஓடுபவன் 2. யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன் 3. பிராம ணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ்செய்கிறவன் 4. விபச்சாரியின் மகன் 5. விலைக்கு வாங்கப்பட்ட வன் 6. ஒருவனால் கொடுக் கப்பட்டவன் 7. தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன் சூத்திரனா வான் என்கிறது மனுதர்மம்.

இதனை ஏற்கப் போகிறோமா? இல்லை பிராமணாள் பெயர்ப் பலகையை எடுக் கப் போகிறோமா?
             ------------------ மயிலாடன் அவர்கள்  28-02-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

காந்தியாரின் படுகொலைக்கும், சவார்க்கருக்கும் சம்பந்தமில்லையா?


சென்னையில் பல இடங்களில் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டுள் ளது. ஒட்டிய அமைப்பு இந்து மகாசபை. எதற்காக இந்த விளம்பரம்? வி.டி. சவார்க்கர் நினைவு நாளாம் (1966). அவர் சுதந்திரத்தின் தந்தையாம். மாவீரராம் - இந்திய சுதந்திர வரலாற் றில் நீண்ட வருடங்கள் சிறையில் இருந்தவராம்.

காந்தியாரின் படு கொலைக்கும், சவார்க்கருக்கும் சம்பந்தமில்லையாம். அவரின் 48 ஆவது நினைவு தினமாம். அந்தச் சுவரொட்டியில் இடம் பெற்றுள்ளன மேற்கண்ட வாக்கியங்கள்.

பல்லாவரத்தில் இந்து மகாசபையால் அனுசரிக் கப்படுகிறதாம்.
காந்தியார் படுகொலைக் கும், சவார்க்கருக்கும் தொடர்பு இல்லை. அவர் நிரபராதி என்று தீர்ப்பில் கூறப்படவில்லை என் பது ஒருபுறம் இருக்கட் டும்!
1949 பிப்ரவரி 10 ஆம் நாளன்று சிறப்பு நீதிபதி ஆத்மாசரண் வழங்கிய தீர்ப்பில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடவில்லையா?

அப்ரூவர் திகம்பர பாட்கேயின் சாட்சியத்தை வைத்து மட்டுமே சவார்க்கர் மீது குற்றம் சுமத்தப்பட் டுள்ளது. அதை வைத்து முடிவு கட்டுவது பாதுகாப் பானது அல்ல; அப்ரூவரின் சாட்சியம் பொய்யானது என்று குற்றவாளிகள் தரப் பில் நிரூபிக்கப்படவில்லை. அந்தச் சாட்சியம் மெய் யானதே - ஆனால், அதை வைத்து மட்டும் முடிவுக்கு வர முடியவில்லை என்று தான் நீதிபதி சந்தேகத்தின் பலனை சவார்க்கருக்குக் கொடுத்து விடுவித்தாரே தவிர - சவார்க்கர் நிரபராதி என்ற முறையில் அல்ல.

அ.தி.மு.க. பொதுச்செய லாளர்மீது தி.மு.க. ஆட்சி யில் தொடரப்பட்ட வழக் கில் ஜெயலலிதா விடுவிக் கப்பட்டது குறித்து திரு வாளர் சோ ராமசாமி பேசி னாரே (துக்ளக் ஆண்டு விழாவில், 14.1.2002) அ.தி. மு.க. ஆட்சியில் அதிக அள வுக்கு ஊழல் நடந்தது என் பது மறுக்க முடியாத உண்மை. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடு தலை செய்யப்பட்டிருக் கிறார், அவ்வளவுதான் என்று சோ பேசியதை இந்த இடத்தில் பொருத்திக் கொள்ளலாம்.

காந்தியார் படுகொலை வழக்கில் நீதிபதி தீர்ப்பைப் படித்து முடித்த அந்தத் தருணத்திலேயே கோட்சே உள்பட அனைத்துக் கைதி களும், நீதிமன்றத்திற்கு வந் திருந்த சவார்க்கரின் காலில் விழுந்து வணங்கினார் களே, ஏன்?
அமர் ரஹே! ஹிந்து ஹிந்தி ஹிந்துஸ்தான் கபி நாஹோகா பாகிஸ்தான்; என்று கோஷம் போட்டார் களே, ஏன்? எங்களப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதைதானே!

சவார்க்கர் இறந்த பிறகு 1966 இல் நீதிபதி கபூர் தலை மையிலான விசாரணை ஆணையத்தின்முன் சவார்க் கரின் உதவியாளர்கள் சாட் சியம் அளித்தனர். அந்தச் சாட்சிங்கள், சவார்க்கர் உயி ரோடு இருந்தபோது நடத் தப்பட்ட வழக்கில் பதிவு செய்யப்பட்டு இருந்தால், கோட்சேயோடு சவார்க் கரும் தூக்கில் தொங்கி இருப்பாரே!

சவார்க்கரைப் பொறுத்த வரை நேரில் சிக்கிக் கொள்ள மாட்டார்; பின்னணியிலி ருந்து இயக்கி, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய கோழை!

எந்த இடத்திலும் துப் பாக்கியை எடுத்துக்கொண் டுப் போய் அவர் நிற்க மாட்டார். துப்பாக்கி வழங் குவதுதான் அவர் வேலை யாக இருக்குமே தவிர, துப்பாக்கியைப் பிடித்து அவர் நேரிடையாக மாட் டிக்கொள்கிறவர் இல்லை. அதை மற்றவர்களிடம் விட்டுவிடுவார்.

இராமன் மாதிரி அம்பு எடுக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள். அதற்குப் பதிலாகத் துப் பாக்கிக் கொடுக்கிறேன். நான் இராமனை நம்பி னால் அம்பைத்தானே கொடுக்கவேண்டும். இப்பொழுது வேண்டி யது துப்பாக்கிதான் என்று சொன்னால், அதைக் கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்றவர் சவார்க்கர்; கோட் சேயின் கைகளில் கொடுக் கப்பட்டது துப்பாக்கிதானே!

அதிக காலம் சிறையில் இருந்தவராம் - சுதந்திரப் போராட்ட வீரராம் - என்ன கதையா?

அந்தமான் சிறையில் இருந்தபோது அந்த மூன் றாண்டுகளுக்குள்ளாகவே நான்கு முறை மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர் - வீராதி வீரராம்!
1911, 1913, 1918, 1925 ஆகிய ஆண்டுகளில் பிரிட் டிஷ் அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துள் ளார். 1948 மற்றும் 1950-களிலும் இனி நான் அரசி யலில் ஈடுபடுவதில்லை என்று இந்திய அரசுக்கு எழுதி தன்னை விடுதலை செய்யக் கெஞ்சிக் கூத்தாட வில்லையா?

எப்பொழுதும் அபின் மயக்கத்திலிருக்கும் இவர் தான் உத்தமப் புருஷராம். இவரின் படம்தான் பி.ஜே.பி. ஆட்சியில் இந்திய நாடா ளுமன்றத்தில் மத்திய மண்டபத்தில் திறக்கப் பட்டு பிறந்த நாளிலும், இறந்த நாளிலும் பிரதமர் முதல் மரியாதை நிமித்த மாகத் தலைகுனிந்து நிற் கின்றனர்; அந்தத் தலைக் குனிவுக்கு உண்மையிலே வேறு அர்த்தமாகத்தான் இருக்க முடியும்.

---------------------- கருஞ்சட்டை  -"விடுதலை” 27-2-2014

குறிப்பு: விரிவான தகவல்களுக்கு திரா விடர் கழக வெளி யீடான சவார்க்கர் - காந்தியார் - கோட்சே - ஆர்.எஸ்.எஸ். (எழு தியவர் கி.வீரமணி) நூலைப் படிக்கவும்.

27.2.14

வைகுண்ட ஏகாதசிக்கு போட்டி மகாசிவராத்திரி?


இந்து மதக் கடவுள் களுக்குள் போட்டிகள் உண்டு. யார் பெரியவர் என்ற மோதல்கள் எல் லாம் உண்டு. விஷ்ணுவைக் கும்பிடும் வைணவர்கள் சிவனை ஏற்க மாட்டார்கள். சிவனைக் கும்பிடும் ஸ்மார்த்தர்கள் வைணவர்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

வைணவர்கள் தங்கள் கடவுளைத் தூக்கிப் பிடிக்க வைகுண்ட ஏகாதசி என்பார்கள்; விரதம் இருப்பார்கள். விடியற்காலை ரெங்கநாதர் கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள்.

அதற்குப் போட்டிக் கடை சிவ பக்தர்கள் வைக்கவேண்டாமா? அதுதான் சிவராத்திரி அன்று விரதம் இருப்பார்கள். சிவன் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்து வார்கள். அன்று சுடுகாடு சென்று மயானக் கொள்ளை என்ற பெயரால் அங்குச் சிதறிக் கிடக்கும் எலும்பு களை எடுத்துக் கடிப்பார்கள் 

(கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று தந்தை பெரியார் ஏன் கூறினார் என்பதற் கான அடையாளம் இது).

சிவனைப்பற்றி தந்தை பெரியார் பின்வருமாறு கணிக்கிறார்:

புலித்தோல் அரைக்கு இசைத்து வெள்ளெருக்கம்பூ சடைக்கு முடிந்து சுடலைப் பொடிப்பூசி
கொன்றைப் பூச்சூடி
தும்பை மாலை அணிந்து
மண்டை ஓடு கையேந்தி
எலும்பு வடம் தாங்கி
மான், மழு, ஈட்டி, சூலம் கைபிடித்து
கோவண ஆண்டியாய் விடை (மாடு) ஏறி
ஒரு காலைத் தூக்கிக்கொண்டு
பேயோடு ஆடுகிறவன்
காட்டுமிராண்டியாய் இல்லாமல்
நகரவாசி, நாகரிகக்காரனாக இருக்க முடியுமா?
லம்பாடி நரிக் குறவனுக்கும், இந்தச் சிவனுக்கும் என்ன மாற்றம்?
சைவர்களே!
சைவப் புலவர்களே!
அருள்கூர்ந்து கூறுங்கள்.
- ஈ.வ.ரா.

                 ------------------(விடுதலை, 18.7.1956)

இந்தக் காட்டுமிராண்டிக்கால சிவனுக்குத்தான் இன்று மகா சிவராத்திரியாம்.

இவன் யோக்கியதை என்ன தெரியுமா? தாருகாவனத்து ரிஷிப் பத்தினிகளின் கற்பைச் சூறை யாடியதால், ரிஷிகள் கொடுத்த சாபத்தினால் அவன் சிசுனம் (ஆண் குறி) அறுந்து வீழ, அதனைப் பார்வதி தாங்கிக் கொண்டாளாம் - அது தான் சிவலிங்க உருவம் என்பது!

--------------------- மயிலாடன்  அவர்கள் 27-02-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

தமிழ் ஓவியாவின் வலைத்தளம்,பாராட்டுக்கள் , பாராட்டுக்கள்.

 

 

 

 ஓடிக்கொண்டிருக்கும் பெரியாரியல் இணைய நதியாய்....

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நண்பர் இணையம் இணைப்பு பி.எஸ்.என்.எல்-ல்லில் வேண்டும் என்றார். விவரங்கள் பல கேட்டார். இணைப்பையும் வாங்கினார். எத்தனையோ பேர் இணைய இணைப்பு வாங்கி , என்ன செய்வது , எப்படி அதனைத் தனக்கும் , சமூகத்திற்கும் பயன்படும் வகையில் பயன்படுத்துவது என்று இன்றும் கூடத் தெரியாது இருக்கும் நிலையில் 7 ஆண்டுகளுக்கு முன்பு இணைப்பு வாங்கி , ஒரு வலைத் தளம் ஆரம்பித்தார். எனக்குத் தெரிந்த அந்த நண்பர், மிகப்பெரிய பணக்காரர் இல்லை, பெரிய வாய்ப்பு வசதிகள் இல்லை, ஆனால் ஆழமான புரிதல் பெரியாரியலில் உண்டு.தந்தை பெரியாரின் தொண்டர்களுக்கே உரித்தான கடுமையான உழைப்பு உண்டு.  தொடர்ந்து , தொய்வில்லாமல், எந்த விதப் பலனையும் எதிர்பார்க்காமல், தான் எடுத்துக்கொண்ட கொள்கைக்காக தொடர் உழைப்பினைக் கொடுக்கும் அந்த இனிய நண்பர் பழனி வ.மாரிமுத்து அவர்கள். தமிழ் ஓவியா என்னும் பெயர் தமிழ் மணம் மற்றும் தமிழ் திரட்டிகளில் மிகவும் புகழ்வாய்ந்த பெயர்.அடுக்கடுக்கான ஆதாரங்களை அள்ளித்தரும் வலைத்தளமாய், தந்தை பெரியாரை, அண்ணல் அம்பேத்கரை, புரட்சிக் கவிஞர் பாவேந்தரை, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியை, திராவிடர் இயக்க கொள்கையை இந்த வலைத்தளத்திற்குள் சென்றால் , தெவிட்ட தெவிட்ட  தெரிந்து படிக்கலாம் என்ற வகையில் அமைந்திட்ட வலைத்தளமாய் தோழர் தமிழ் ஓவியாவின் வலைத்தளம்.

                        

                                      பல ஆண்டுகள் தொடர்ந்து காலை 4 மணி முதல் காலை 6 மணிவரை இணையத்தில் தகவல்களை ஏற்றும்  தோழர். விடுதலையில் , உண்மையில் , பெரியார் பிஞ்சுவில் வரும் செய்திகளை, தனது வலைத்தளத்தில் தரும் தோழர். ஆரம்பித்த காலத்தில் , பரம்பரைப் பகைவர்கள், பொய்ப்பெயர்களில் வந்து திட்டிக் குவித்தபோதும், ஆபாசமாய் அர்ச்சித்த போதும், தனது பணியைத் தொடர்ந்து செய்தவர். பழகுவதற்கு மிகவும் இனியவர்.  சாதி மறுப்புத்திருமணம் செய்து கொண்டவர்.நண்பரின் இணையர் தமிழரசி, மேல் மெய்ஞ்ஞானபுரத்து திராவிடர் கழகக்  குடும்பத்தினைச்சேர்ந்தவர். ஒத்த மனதினராய், ஒருமித்த கருத்தினராய், தந்தை பெரியாரின் கருத்துக்க்ளை தரணி எங்கும் கொண்டு செல்லும் ஆற்றல் மிக்க இணையருக்கு ஆக்கபூர்வமாய் ஒத்துழைக்கும் அன்புத் தங்கை தமிழரசி அவர்கள். பெரியார் பன்னாட்டு மையத்தின் தலைவர் , மதிப்பிற்குரிய சிகாகோ டாக்டர் சோம்.இளங்கோவன் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னால் , மிகப்பெரிய பணி, தமிழ் ஓவியாவின் பணி, அவரை அறிவீர்களா எனக்கேட்டார். நன்றாக அறிவேன் என்று கூறியபோது, மிகப்பெரிய அளவிலே பாராட்டினார்கள். இன்றைக்கும் உலகத்தில் இருக்கும் பெரியார் தொண்டர்கள், தமிழர் தலைவர் ஆசிரியரின்  தலைமையைஏற்றுச்செல்பவர்கள் எல்லாம் பார்த்து வியக்கும் வண்ணம் , அன்பிற்குரிய நண்பர் பழனி வ.மாரிமுத்து அவர்களின் பணி அமைந்துள்ளது. இயக்க ரீதியாக என்னைச்சுற்றி இருக்கும் பல தோழர்களைப் பார்க்கிறேன், வியக்கின்றேன். என்ன எதிர்பார்ப்பு வாழ்வில் அவர்களுக்கு, தந்தை பெரியார் சொன்ன மனித நேயக்கொள்கை வளரவேண்டும் என்பதனைத் தவிர. , தன் வீட்டுச்சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு,தன் சொந்தக் காசை செலவழித்து பொதுத்தொண்டு ஆற்றும் பெரியாரின் தொண்டர்களைப் பார்த்து பல நேரம் வியந்திருக்கின்றேன்.  . பழனி மாவட்டத்தின் பகுத்தறிவாளர் கழக மாவட்டத்த்லைவராக பணியாற்றக்கூடிய அருமையான தோழர் அவர். அவரின் பணி இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். அவருடைய உழைப்பிற்கு தலை வணங்குகின்றேன்.

"19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி " என்று தன்னுடைய வலைத்தளத்தில் பதிந்திருக்கின்றார் தமிழ் ஓவியா .

இதுவரை அவரது வலைத்தளத்திற்குள் செல்லாதவர்கள் சென்று பாருங்கள் . http://thamizhoviya.blogspot.in/. வியந்து போவீர்கள். ஓடிக்கொண்டிருக்கும் பெரியாரியல் இணைய நதியாய்- தமிழ் ஓவியாவின் வலைத்தளம்,பாராட்டுக்கள் , பாராட்டுக்கள். .

              -----------------------நன்றி.  பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மானமிகு முனைவர் வா. நேரு  அவர்கள்  அவருடைய தளத்தில் எழுதியுள்ள கட்டுரை -- மேலும் தகவல் அறிய  கீழ்கண்ட சுட்டியை சுட்டவும்

 http://vaanehru.blogspot.in/2013/12/11.htm

26.2.14

கோயிலில்பாலாபிஷேகமா?குழந்தைகளுக்குஅந்தப்பாலைப்பயன்படுத்துங்கள்!நீதிபதிகளின் உயர்வான தீர்ப்புஉயர்நீதிமன்ற நீதிபதிகளின் உயர்வான தீர்ப்பு
மதுரை,பிப்.26-பாலா பிஷேகத்துக்கு பயன்படுத்தும் பால் மூலம் ஆதரவற்ற குழந்தைகள் பலரது பசி யைப் போக்கலாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அய்யம் பாளையம் பாரதி நகரைச் சேர்ந்தவர் முத்துரத்தினம். இவர், மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:

நான், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். எங்கள் ஊரில் உள்ள பகவதி, மாரியம்மன், இளையாண்டி அம்மன் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ளது. இந்த கோவிலில், தாழ்த்தப்பட்ட வர்கள் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை. இதனால், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்து வருகிறோம்.

இந்த நிலையில் ஆடி மாதத் திருவிழாவை யொட்டி வருகிற 27.4.2014 அன்று பால்குடம் எடுத்து ஊர்வல மாகச் சென்று கோவிலுக்குள் உள்ள அம்மன் சிலைகளுக்குப் பாலாபிஷேகம் செய்ய முடிவு செய்துள்ளோம்.

அவ்வாறு செல்லும் போது எங்களை கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுக்க வாய்ப்பு உள்ளது. இதனால், பாலாபிஷேகம் நடத்த அனுமதி கேட்டு இந்து அறநிலையத்துறை அதிகாரி களுக்கு மனு கொடுத்தோம். அவர்கள் எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை.

எனவே, எங்களை கோவிலுக்குள் அனுமதித்து பாலாபிஷேகம் நடத்த அனு மதி அளிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகி யோர் முன்னிலையில் விசா ரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்குரைஞர்கள் பூமி ராஜன், கண்ணப்பன் ஆகியோர் ஆஜராகி வாதா டினர். மனுவை விசாரித்த நீதிபதிகள் உத்தரவில் கூறி இருப்பதாவது:-

நமது நாட்டில் பல் வேறு பகுதிகளில் உள்ள மக்கள் போதுமான உணவு, தங்கும் இடம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இளம் குழந்தை கள் பலர், பால் போன்ற சத்தான உணவுகள் கிடைக்காமல் உள்ளனர். பால் ஒரு அத்தியாவசிய உணவுப் பொருள் என்பதை மனு தாரரும், அவருடைய கிரா மத்தினரும் நன்கு அறிவர்.

இதுபோன்ற அத்தியா வசிய உணவுப்பொருளை இந்தியாவில் உள்ள ஏழைக் குழந்தைகள், ஆதரவற்ற வர்களுக்கு வழங்கி அவர் களது பசியைப் போக்க லாம் என்பதை மனுதாரர் அறிய வேண்டும். மனுதாரர் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை இந்து அறநிலையத்துறை அதிகாரி கள் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்தியர்களின் காலை உணவுப் பழக்கம் என்பது பற்றி கொலக்ஸ் நிறுவனம் டில்லி, மும்பை, கொல் கத்தா, சென்னையில் மூவா யிரம் பேர்களிடையே ஒரு ஆய்வினை மேற்கொண் டது. இதில் இந்தியாவில் நான்கில் ஒரு பகுதியினர் காலை உணவைத் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 72 விழுக் காட்டினர் ஊட்டச் சத்தில்லாத உணவினைச் சாப்பிடுகின்றனர் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. உலகள வில் ஊட்டச் சத்து குறைவினால் பாதிக்கப்படும் இந்தியக் குழந்தைகள் 30 சதவிகிதமாகும். இந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு வர வேற்கத்தக்கதே!

                             -----------------------------"விடுதலை” 26-02-2014
Read more: http://viduthalai.in/e-paper/75979.html#ixzz2uR2fBJ4e

ஈழத் தமிழர்கள் நீதி கேட்கும் நாள் - பிப்ரவரி 26


ஈழத் தமிழர்கள் நீதி கேட்கும் நாள் (பிப்ரவரி 26)
ஈழத் தமிழர் படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை!

அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலின் பரிந்துரைகளைச் சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் விடுத்துள்ள விரிவான அறிக்கை

உலகத் தமிழர்களால் அறிவிக்கப்பட்டு அனுசரிக்கப்படுகிற ஈழத் தமிழர்கள் நீதி கேட்கும் நாளில் (பிப்ரவரி 26) திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

2012ஆம் ஆண்டில் பிரிட்டானியப் பாராளுமன்றத்தில் கூடிய, தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய உலகின் பன்னாடுகள் சார்ந்த அமைப்புகளாலும், தொண்டு  நிறுவனங்களாலும் ஒரு முக்கிய கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராகத் திட்டமிட்ட வகையில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை பற்றி சுதந்திரமான பன்னாட்டு விசாரணை ஒன்றை அய்.நா.வின் உறுப்பினராக உள்ள நாடுகள் வற்புறுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் பிப்ரவரி  26ஆம் நாளை ஈழத் தமிழர்கள் நீதி கேட்கும் நாள் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனுசரிக்கின்றனர்.
இலங்கை அரசுக்கு அய்.நா. மனித உரிமைக் கவுன்சில் தெரிவித்துள்ள பரிந்துரைகளை சுட்டிக் காட்டுவதும், அந்த அடிப்படையில் அய்.நா. செயல்பட வேண்டும் என்று வற்புறுத்தவும் உலக நாடுகளும் அய்.நா.வுக்கு அழுத்தும் கொடுக்க வேண்டும் என்று கோரவும் இந்தச் சந்தர்ப் பத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.

இலங்கை அரசுக்கு அய்நா மனித உரிமைக்கவுன்சிலின் பரிந்துரைகள்

1.    பாதிக்கப்பட்ட மக்களிடம் வெறுப்பு விரோத மனப்பான்மை மற்றும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. காணாமல் போனவர்கள் பற்றிய விவகாரத்தில் கண் துடைப்பான விசாரணையை போலல் லாமல் சரியான முறையில் விசாரணை நடத்தவேண்டும் ; மனித உரிமை மீறல்பற்றிய விவகாரத்தில் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு ஏற்ப இலங்கை அரசு விசாரணை நடத்தவேண்டும்; மேலும் இதுவரை நடந்த சில மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு பற்றிய விசாரணையை மறு ஆய்வு செய்து அதையும் சர்வதேச சட்ட திட்டத்திற்கு ஏற்ப மறு விசாரணை செய்யவேண்டும்

2.    தற்போதுள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டம் மற்றும் தீவிரவாத செயல்கள் புரிந்தவர்கள் என்று கூறி சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ள நபர்கள் மீதான அதீத கட்டுப்பாடுகளை விலக்கி, அவர்களுக்கான சட்ட உரிமைகளை வழங்கவேண்டும்.

3.    சிறுபான்மை சமூகம் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் பற்றி பக்கச்சார்பின்றி விசாரணை நடத் தப்பட வேண்டும்; மற்றும் தாக்குதலால் பாதிக்கப்பட்ட வர்கள்  கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பிற்கு அரசு உறுதியளிக்கவேண்டும்.

 மனித புதை குழிகள்

4.    சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப் புதை குழிகள் பற்றி மனித உரிமை மற்றும் சர்வதேச சட்ட விதிகளின் படி தகுந்த விசாரணை நடத்தி, அது பற்றிய உண்மைகளை உலகிற்குக் கொண்டுவரவேண்டும். குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு கொடுக்கும், நோக்கிலோ அல்லது அவர்களை தப்பவைக்கும் செயலிலோ இறங்கக்கூடாது.

5. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிக்க வேண்டும். மேலும் சர்வதேச சட்டவிதிகளுக்கு ஏற்ப அம்மக்களின் புகார்களுக்குத் தகுந்த பதில் அளிக்க வேண்டும்; அவர்களுக்கான இழப்பீடு கொடுப்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

6.    விடுதலைப்புலிகளின் காலத்தின் போதும், இறுதிப் போருக்குப் பிறகும் இராணுவக்குழு அமைத்த நீதிமன்ற விசாரணைகளை உடனடியாக வெளியிடவேண்டும், அதே நேரத்தில் இலங்கை அதிபரின் நேரடிப் பார்வைக்கு இந்த அறிக்கையை அனுப்பி, அங்கிருந்து அதன்மீதான நடவடிக்கை குறித்து அறிக்கை வெளியிடவேண்டும்.

7.    இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் பொது மக்களின் விளைநிலங்களை ஆக்கிரமித்த இராணுவ நடவடிக்கை குறித்தும், அப்படி ஆக்கிரமித்த நிலங்களை உரிய நபர்களிடம் ஒப்படைத்து, அந்த நிலங்களில் வாழுபவர்களின் மீதான குற்றவியல் தொடர்பான விசாரணைகளை விரைந்து விசாரிக்கவும் மற்றும் அவர்கள் சமூகத்துடன் சேர்ந்து சுமுகமான வாழ்க்கை வாழ அரசு அவர்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்

8.    சர்வதேச மனித உரிமைகள் காட்டிய வழிகளின் படியும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் படியும் குழு ஒன்றினை அமைக்க வேண்டும்; அந்தக் குழுவில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த வர்களின் பிரதி நிதிகளை நியமித்து, அவர்களின் ஆலோசனைகளைத் தொடர்ந்து பெறவேண்டும். 

தேவை ஓர் உயர் ஆணையம்

9.    மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஓர் உயர் ஆணையம் ஒன்று அமைத்து,  அறிக்கைகளை உடனுக்கு உடன் மனித உரிமை ஆணையத்துக்கும் இதர விசாரணை அமைப்புகளுக்கும் தெரியப்படுத்தவேண்டும்.

10.    இறுதியாக மனித உரிமைக்குழுக்கள் இலங்கை யில் சுற்றுப்பயணம் செய்து தெரிவித்துள்ள தகவல்களின்  அடிப்படையில் விசாரணைனையைத் தீவிரப்படுத்த வேண்டும். மேலும் அரசின் நடவடிக்கைகள் எவ்வித ஒளிவு மறைவின்றி நடைபெறவேண்டும். இவற்றைக் கண்காணிக்க சிறப்புப் பிரதிநிதிகள் கொண்ட குழு ஒன்றையும் அமைக்கவேண்டும்.

பாலச்சந்திரன் கொல்லப்பட்ட கொடுமைபற்றி..

11. விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் மரணம் கொலை என்றே நிரூபணம் ஆகிறது; இராணுவ வீரர்களிடம் சரணடைந்த பாலச்சந்திரன் முதலில் நிராயுதபாணியாக ஒரு இடத்தில் அமர வைக்கப்பட்டுள்ளார். இது முதல் படத்திலும், அதே இடத் தில் மார்பு வயிறு போன்ற இடங்களில் குண்டுப்பட்டு இறந்த நிலையில் உள்ள படம் இரண்டும் ஒரே காமிராவில் எடுக்கப்பட்டது. இந்த கொடுஞ்செயல் குறித்தும், விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான ரமேஸ் என்ற துரைராஜசிங்கம் முதலில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தது குறித்து பல நேரில் கண்ட சாட்சிகளும் அலை வரிசை (சானல்) 4 வெளியிட்டுள்ள ஆவணப் படங்களிலும் காணப்படுகிறது, அதன் பிறகு வெளியான காட்சிகளில் மிகவும் கோரமாக அவர் கொலை செய்யப் பட்டு பாதி எரிந்த நிலையில் பிணமாகக் காணப்படுகிறார். இந்த கொலைச்சம்பவம் குறித்தும் சுபா என்ற இசைப்பிரியா விடுதலைப்புலிகளின் ஊடகவியலாளர் உயிரோடு சரணடைந்தும் பிறகு அவர் கோரமாக பிணமாகக் கிடந்த காட்சியும் வெளியாகி இருந்தது,  மேலும் வெள்ளைக் கொடியுடன் இராணுவ உயரதிகாரிகளின் முன்னிலையில் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள்  பிணமாக இருக்கும் காட்சிகள் வெளிவந்துள்ளன,

பத்திரிகையாளர்கள் படுகொலை

12) மற்றும் இலங்கைப் போரின் போது பல பத்திரி கையாளர்களும் கொல்லப்பட்டனர்; இதுகுறித்து பொது வான விசாரணை ஒன்றை அமைக்கவேண்டும். இந்தச் சம்பவம் குறித்து இதுவரை ஆரம்பக் கட்ட விசாரணை யைக்கூட இலங்கை அரசு துவங்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட பரிந்துரைகளை மனித உரிமை ஆணையம் அய்.நா.வுக்கு அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

மேலும் தாமதிக்காமல் மனித உரிமை அமைப்புகளும் உலக நாடுகளும், அய்.நா.வும், குறிப்பாக இந்தியாவும் இந்த மனிதஉரிமை காக்கும் பணியில் தத்தம் கடமைகளை ஆற்றிட முன்வர வேண்டும் என்றும் ஈழத் தமிழர்கள் நீதி கேட்கும் உலகத் தமிழர்கள் அறிவித்துள்ள இந்த நாளில் (பிப்ரவரி 26) வலியுறுத்துகிறோம்.

----------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம், சென்னை  - 25.2.2014

25.2.14

பக்தி - ஒழுக்கம்

பக்தி - ஒழுக்கம்

கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியாகட்டும், மோட்சமாகட்டும் வைத்துக் கொள். எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச் சொத்து. உலகத்துக்கு பொதுச் சொத்தல்ல. ஒழுக்கம், நாணயம் பொதுச் சொத்து. நான் பக்தியில்லாமல் நரகத்திற்குப் போகிறேன் என்றால் உங்களுக்கு என்ன? நான் போய் விட்டுப் போகிறேன். நான் கடவுளை நம்பவில்லை, அதைக் கொழுக்கட்டை என்று சொல்லுகிறேன்; நஷ்டமில்லை பாருங்கள். அதனாலே எனக்குப் பக்தி இல்லை என்பதனாலே, உங்களுக்கென்ன நஷ்டம்?
ஆனால் ஒழுக்கமில்லையென்றால் என்னவாகும் பாருங்கள்? நாணயமில்லை என்றால் என்னவாகும்? உண்மை உணர்வு இல்லை என்றால் என்னவாகும்? இது மூன்றும் இல்லாதது இன்னொரு மனிதனுக்குச் செய்கிற கெடுதிக்கு பேர்தானே?

ஒழுக்கமாக இல்லை என்றால், எங்கெங்கேயோ ஒழுக்கக் கேடாக நடந்து இல்லை தொல்லை பண்ணிக் கொண்டிருக்கின்றான்; நாணயமாக இல்லையெனில், யாரையோ ஏமாற்றி வேதனையை உண்டாக்கி இருக்கின்றான்; உண்மையாக இல்லையென்றால் என்னத்தையோ எவனையோ ஏமாற்றிப் பொய் பேசித் தப்பிக்க இன்னொரு தவறைக் கொண்டிருக்கிறான் என்றுதானே பொருள்? ஆகவே ஒழுக்கம், நாணயம், உண்மை என்ற உயர்ந்த குணங்களெல்லாம் பொதுச் சொத்து. மனித சமுதாயத்திலே இது கேடாக இருந்தால் சமுதாயத்துக்குக் கேடு. ஒரு மனிதன் இந்தக் காரியங்களில் குற்றவாளியாக இருந்தானானால் கண்டிப்பாக இன்னொரு மனிதனுக்குக் கேடு விளைந்திருக்கும். இது முக்கியமில்லை. பக்தி கடவுள் நம்பிக்கை மதக் கோட்பாட்டின்படி நடக்கிறது. இவைதான் முக்கியமென்றால், மக்களுக்கு என்ன பிரயோஜனம் அதனாலே?

--------------------------------தந்தை பெரியார், 24.11.1964 பச்சையப்பன் கல்லூரிப் பேருரை

சாவுக்கு பின்னும் ஜாதியை நிலைநாட்டும் சடங்குகள் - பெரியார்

மனிதன் தன் வாழ்க்கையில் குழந்தைப் பருவம் முதல் கிழப்பருவம் வரை அடையும் தன்மையும் இயற்கை யின் தத்துவமேயாகும். அவனுடைய அங்கங்கள் (உறுப்புகள்) குழந்தைப் பருவம் முதற் கொண்டு சிறிது சிறிதாக வளர்ந்து கொண்டே வருகின்றன. அந்த வளர்ச்சி அவன் உண்ணும் ஆகாரங்களையும் மன நிம்மதியான வாழ்க்கையையும் பொறுத்ததாகும். இப்படி வளர்ச்சியடையும் உடல் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வந்தவுடன், அதன் பிறகு வளருவது நின்று விடுகிறது. பிறகு அவ்வுறுப்புகளுக்குக் கொடுக்கப்படும் சக்திகளுக்கு ஏற்றவாறு இயங்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. 

அந்த உறுப்புகள் எத்தனை நாளுக்குத்தான் அப்படியே இருக்க முடியும்? அவையும் ஒரு குறிப்பிட்ட காலம்வரை இயங்கும் சக்தியைக் கொண்டவைகளாக இருக்கின்றன. நாளடைவிலேயே அங்கங்களுக்குள்ள சக்தி சிறிது சிறிதாகக் குறைவதற்கு ஆரம்பிக்கிறது. இப்படியே ஒவ்வொரு அங்கமும் பலவீனம் அடைந்து வரும் காலத்தில் மனிதன் கிழப் பருவத்தை அடைந்து கொண்டே வருகிறான். கிழப்பருவம் வளர்ச்சியடைந்து கொண்டே வந்து, முற்றிலும் கிழத்தன்மை அடைந்தவுடன், உடலின் உறுப்புகள் யாவையும் ஒருவித சக்தியும் இன்றி அங்கும் இங்கும் அசையக்கூட போதிய சிறிதளவு பலம்கூட இல்லாமல் போய்விடுகின்றன. 

அத்தன்மை வந்தவுடன் மனிதன் உடலினுள் இருக்கும் உறுப்புகளும் அதே தன் மையை அடைந்து உண்ணும் உணவை ஜீரணிக்கவும், அதைப் பக்குவம் செய்து, சத்தைக் கிரகிக்கும் உறுப்புகள் போதிய பலமும் இன்றிப் போய், உணவும் செல்வதற்கும் இல்லாமல் போய்விடுகிறது. பின்பு மனிதனுக்கு இறுதியில் எஞ்சி நிற்பது காற்று ஒன்று தான். அக்காற்று மூக்குக்கும் சுவாச உறுப்புகளுக்கும் இடையில் உள்ள துவாரத்தின் வழியே போய்வந்து கொண்டிருக்கிறது.

சுவாசிக்கும் காற்றில் மனிதன் பிராணவாயுவை உட்கொண்டு கரியமிலவாயுவை வெளியிடுகிறான். அந்த ஆராய்ச்சிப்படி இதுவரை அவன் பிராண வாயுவைக் கிரகித்து, கரியமிலவாயுவை வெளியிட்டு வருகிறான். இந்தத் தன்மையும் ஏற்பட சுவாச உறுப்புக் கள் பலமுடன் இருந்து இயங்கினால்தானே முடியும்? ஆனால் இயற்கையின்படி எல்லா உறுப்புகளும் பலவீனம் அடைந்தது போல் சுவாச உறுப்புகளும் பலவீனம் அடைய ஆரம்பிக்கின்றன. அவைகளுக்குப் போதிய அளவு அதாவது ஒரு சிறிது அளவு காற்றையாவது இழுத்து கிரகிக்கும் பலம் உள்ள வரை மனிதன் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறான் என்று கூறுகிறோமே அந்த நிலையை அடைகிறான்.

இறுதியில் அந்தப் பலம் கூட இல்லாமல் சுவாச உறுப்புகள் முற்றிலும் பலவீனம் அடைந்து விடுவதால் சிறிது கூட காற்றைச் சுவாசிக்க முடியாமல் போய் விடுகிறது. அப்போதுதான் மனிதன் இறந்து விடு கிறான் என்று சொல்லப்படுகிறது. அவன் உடலில் காற்று போய், உடல் உறுப்புகளையும், இரத்தத்தையும் சுத்தம் செய்து கொண்டு வந்ததன் காரணமாக உடலில் எந்தவிதக் கெடுதலும் ஏற்படுவதில்லை. சுவாசிக்கப் பட்ட பிராணவாயு உடம்பில் உள்ள இரத்தத்தைச் சுத்தம் செய்வதனால் செய்யப்பட்ட இரத்தம் பரவிய உடலின் தசைகள் கெட்டுப் போகாமல் இருக்கின்றன.

ஆனால் மனிதன் இறந்தவுடனோ சுவாசம் இல்லை. அதனால் உடலின் தசைகள் கெடுவதற்கு ஆரம்பிக் கின்றன. அந்தப் பிணம் எவ்வளவு நேரம் இருக்கிறதோ அதற்குத் தகுந்தபடி கெட்டுப் போய்விடும். அதைத் தகுந்தபடி எரித்துவிடாமலோ இருக்கப்பட்டு விடு மானால் அந்த உடல் அழுகிக் கொழகொழத்துப் போய் சகிக்க முடியாதபடி துர்நாற்றமடிக்க ஆரம்பிக்கிறது. அதற்கென்றே உடலைப் புதைத்தோ அல்லது எரித்தோ விடுகிறார்கள். இப்படி மனிதன் பிறந்தது முதல் இறந்ததுவரை உண்டாகும் சம்பவங்கள் அத்தனை யையும் நேரில் காணுகிறோம். சுவாசிக்கும் காற்று நின்றவுடன் உடலை அடக்கம் செய்கிறார்கள்.

இத்தன்மை மனிதன் என்று சொல்லப்படுபவர்கள் அத்தனை பேருக்கும் அவ்வித முடிவுதான். தாழ்ந்த ஜாதி என்று ஆக்கப்பட்டிருப்பவர்களுக்கும் இதே நிலைதான், மேல்ஜாதி கடவுளுக்கும், அடுத்த ஜாதி என்று ஆக்கப்பட்டிருப்பவர்களுக்கும் இந்நிலைதான். அவன் யோக்கியனானாலும், முனிவரானாலும், சித்தரானாலும், மகாபக்திமான் ஆனாலும், கடவுள் அவதாரம் ஆனாலும், தியாகி ஆனாலும், மற்றும் மந்திரியானாலும் நாட்டின் தலைவன் என்பவன் ஆனாலும். இன்னும் புலவன், சிற்பி, பாடகன், ஓவியன், மற்றும் எப்பேர்பட்ட வெங்காயமா னாலும், இந்த நிலையை அடைந்தே தீரவேண்டும்; இது இயற்கையே ஆகும். இப்படி மனிதனுக்கு மட்டுமல்ல; உயிர் உள்ளது என்று எவை எவை சொல்லப்படுகின்றனவோ அவைகள் அத்தனையும் இப்படிப்பட்ட இயற்கைத்தன்மையை அடைந்தே தீருகின்றன - மரம் பட்டுப் போய் விட்டது என்றால், அது வளர்ச்சி இன்றிப் போய்விட்டது என்பது பொருள். அதுமுதல் அந்தப் பட்டுப்போன மரம் காய்ந்துபோக ஆரம்பிக்கிறது; ஒருவித ஈரப்பசையும் இன்றி வெற்றுக்கட்டையாக ஆகிவிடுகிறது, இப்படியே உயிருள்ளது என்பவைகள் அத்தனையும் செத்துப் போகும் நிலையை அடைகின்றன.

செத்துப்போகுதல் என்பது சத்துப் போய்விடுதல் என்பது பொருள். வளருவதற்கு வேண்டிய சத்துக்கள் என்னென்னவோ அத்தனையும் இல்லாமல் போய்விட்ட பிறகு, அதாவது சத்துப்போய்விட்ட பின் அதை சத்துப் போகுதல் என்பது செத்துப் போகுதல் என்று ஆகி இருக்கிறது.
மரம் செத்துப் போனவுடன் அதை அடுப்பு எரிக்க உபயோகிக் கிறோம். நாய் மாடு, கழுதை செத்தவுடன் புதைக்காவிடில் அழுகிப் புழு, பூச்சி பிடித்து விடுகிறது. இறுதியில் அதுவும் மண்ணுடன் மக்கிப் போய்விடுகிறது. செத்துப்போனது என்ற பிறகு அதைப் பற்றி ஒன்றுமே கிடையாது. அதன் முடிவு அத்துடன் சரியாகிவிடுகிறது. இதை நாம் கேள்விப்படவில்லை; சாஸ்திரத்தில் படிக்கவில்லை. கடவுளும், வெங்காயமும் கூறியதாக நான் உங்களிடம் கூறவில்லை. நேரில் கண்டவை; நீங்களும் நேரில் காணுகிற விஷயமே அன்றி, நான் அவன் சொன் னான், இவன் சொன்னான் என்று சொல்லவில்லை; எனவே இந்த முடிவுக்குப் பிறகு என்ன இருக்க முடியும்? ஒன்றுமே கிடையாது. அத்துடன் வாழ்க்கை இறுதி யடைந்து போய் விடுகிறது.

பார்ப்பனன் தங்கள் வாழ்க்கைக்குச் சாதகமாகப் பலவழிகளைக் கையாளுகின்றான். மனிதன் இறந்தவுடன் அந்த உடலை அவரவர் மதப்படி, அதிலும் மதத்தின் உட் பிரிவாக அமைக்கப்பட்டுள்ள ஜாதிமுறைப்படி எரிக்கவோ, புதைக்கவோ வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறான். அதன்படி மக்களும் இது எங்கள் ஜாதி வழக்கம் என்று கூறிக்கொண்டு, புதைப்பவர்கள் புதைப்பதும், எரிப்பவர்கள் எரிப்பதுமாக இருக்கின்றனர்.

இதனால் என்னவென்றால் அந்தந்த ஜாதிக்காரன் அவனுடைய பின்சந்ததிகள் இன்னஜாதியைச் சேர்ந்த வர்கள் அவர்களும், அதே முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற முறையை நிலைநாட்டுவதன் மூலம் நடத்தப்படு கின்றன. எனவே மனிதன் இறந்த பின்னும் கூட பார்ப்பான் மதப்பிரச்சாரத்திற்கென்று இன்னின்ன பழக்க வழக்கம் என்று ஏற்படுத்தி இருக்கிறான்.

அத்துடன் விடவில்லை. செத்துப்போனவுடன் உடலிலிருந்து ஆத்மா என்று ஒன்று பிரிந்துவிடுகிறதாம். அது இங்கே தங்காமல் நேராக மேல்லோகம் போகிறதாம்! இவ்வளவு இயற்கைத் தன்மைகளையும் கண்டபின் ஆத்மா என்பது எங்கே இருக்கிறது? அது எப்படிப் பிரிகிறது? என்றால் அது உருவம் அற்றது, கண்ணுக்குத் தெரி யாதது என்று கூறினார்கள். அந்த ஆத்மா நேராக மேல் உலகம் சென்று அங்கு அது, இங்கு செய்த பாவபுண்ணி யத்துக்கு ஏற்றபடி தண்டனை பெறுகிறதாம். பாவம் செய்த ஆத்மா நரகத்தில் தள்ளப்படுகிறதாம். புண்ணியம் செய்த ஆத்மா மோட்சத்தில் தள்ளப் படுகிறதாம். இங்கேதான் உடல் நம் கண்முன்பாகவே எரிக்கப்பட்டது அல்லது புதைக்கப்பட்டது. உருவம் அற்ற ஆத்மா எப்படி அங்கே தண்டனை பெறும்? என்று கேட்டால் அந்த ஆத்மாவுக்கு வேறொரு உடலை மேல் உலகத்தில் கொடுக்கிறார்களாமே! அந்த உடலை இந்த ஆத்மா உடுத்திக் கொண்டவுடன் மனித உருவம் அடைகிறதாம். அதே உடலுக்கு அங்கே தண்டனை கிடைக்கிறதாம். இதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதைச் சிந்திக்க வேண்டும். பாவமோ புண்ணியமோ செய்த உடல் நம் கண்முன் இங்கே இருக்க, அங்கே வேறொரு உடல் பாவத்தின் தண்டனையையோ, புண்ணியத்தின் சுகத்தையோ அனுபவிக்கிறதாம். அப்படியானால் உண்மையில் பாவம் செய்த உடலைத் தண்டிக்க வேண்டும்; உண்மையில் புண்ணியம் செய்த உடல் சுகமடைய வேண்டும். இதை விட்டு விட்டு, ஏதும் அறியாத வேறொரு உடலை வதைப்பதும், சுகப்படுத்துவதும் என்ன நியாயம் என்று கேட்டால் உடனே இவன் நாத்திகம் பேசுகிறான் என்றுதான் சொல்லத் தெரியுமே தவிர, தக்க பதில் ஒன்றும் கூற முடியாது.

மறுபடியும் அந்த ஆத்மா உலகில் உருவம் எடுத்து வருகிறதாம்! அந்த உருவம் பாவ புண்ணியத்திற்கு ஏற்றபடித் தக்க உருவம் அடைகிறதாம். அதில் ஃபஸ்ட் கிளாஸ் (முதல்தரம்) உருவம் என்று சொல்லப்படுவது பார்ப்பன உருவம். மற்றவை எல்லாம் அதற்குக் கீழ்ப்பட்டவை. மனித உருவத்திலேயே பார்ப்பான் தவிர்த்த மற்ற கீழ்ஜாதி உருவங்கள் தரம் பிரித்து உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்பதற்குத் தகுந்தபடி அமைக்கப்பட்டிருக் கின்றன. மனித உருவத்துக்குக் கீழ் மிருக உருவம்! அதிலும் தரம் பிரித்து அமைத்து மற்றப்படி மரம், செடி, கொடி இப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன.

இதை ஏன் கூறுகிறேன் என்றால் அயோக்கியப் பார்ப்பனர்கள் தங்களை மட்டும் பெரும் புண்ணியாத் மாக்கள், மற்றவர்கள் எல்லாரும் பெரும் சண்டாளர்கள் என்பதை வாய்விட்டுக் கூறுவதற்குப் பதிலாக இப்படி எழுதி வைத்திருக்கிறார்கள் என்பதைக் கூறவேயாகும். இப்படி நம்மை எந்த விதத்தில் இழிவு படுத்தவேண்டுமோ அம்முறைகளில் எல்லாம் இழிவுபடுத்தி இருக்கிறார்கள்.

அந்த ஆத்மாதான் மேல்லோகத்தில் புண்ணியத்திற் கேற்றபடி மோட்சத்திலேயோ அல்லது பாவத்திற்கேற்றபடி நரகத்திலேயோ தள்ளப்பட்டிருக்கிறதே, பிறகு இங்கே எப்படி வந்தது? அதனதன் நல்வினை தீவினைக்குத் தகுந்தபடி மோட்சம்- நரகத்தில் போய்ச்சேருகிறது என்ற பிறகு இங்கே எப்படிக் குதித்து வரமுடியும்? அப்படி யானால் மோட்சத்திலிருந்து தப்பி ஓடிவந்ததா? நரகத்தை விட்டு ஓடிவந்து விட்டதா? அப்படி அங்கு போய்ச் சேருகிற ஆத்மா சாந்தியடைய இங்கே பார்ப்பானுக்குத் தானதர்மம் செய்தால் போதுமாம்! உடனே அது அவர்களுக்குப் போய்சேருகிறதாம்! அதை அடைந்த அவர்கள் சுகம் அடைகிறார்களாம்! என்ன முட்டாள் தனம் என்பதைச் சிந்திப்பதே இல்லை. 100-க்கு 100 முட்டாள்களாக இருப்பவர்கள்தான் இன்னமும் இதை நம்பிக்கொண்டு பார்ப்பானுக்கு அள்ளிக் கொடுக்கின்றனர். கையில் பணம் காசு இல்லை என்றால் கூட கடன் வாங்கியாவது திவசமும், கருமாதியும் செய்கிறான்.

இப்படித் திவசம் செய்வது குறிப்பிட்ட நாள் வரையிலும் என்று கூட இல்லை. இவன் உயிர் இருக்கும்நாள்வரை அவன் தகப்பனுக்குத் திவசம் செய்கிறான். பார்ப்பான் கூறி இருக்கிறபடி மேலே சென்ற ஆத்மா பிறகு என்ன உருவம் எடுத்ததோ தெரியவில்லை. அந்த உருவம் எடுத்த பிறகும் இவன் திவசம் செய்தானாகில், பார்ப்பான் கூறுகிறபடி அந்த ஆத்மா எங்கே இருந்தாலும் அந்த தானப் பொருள்கள் போய்ச்சேர வேண்டும். அப்படி இது வரை யார் அடைந்திருக்கிறார்கள்?

அப்படியே அவன் கூறுவது உண்மை என்றாலும் இக்கூட்டத்தில் உள்ள அத்தனை பேரும், ஏன் இவ்வூரில் உள்ள அத்தனை பேரும் மற்றும் இந்நாட்டு மக்கள் அத்தனை பேரும் இதற்கு முன் ஏதாவது ஒரு பிறவியில் இருந்திருக்க வேண்டும்; நாம் இல்லை என்றாலும் மற்ற சீவராசிகளாவது முதலில் மனித உருவத்தில் இருந்திருக்கவேண்டும். அவைகள் இறந்தவுடன் அதனதன் பிள்ளைகள் திவசம் கொடுப்பார்கள். அத்தனை பேருக்கும் இல்லை என் றாலும் ஒருசிலருக்காவது தன்னுடைய பிள்ளைகள் திவசம் கொடுப்பார்கள்; அப்படிக் கொடுப்பது இப்போது இவர்களுக்கு வந்து சேரவேண்டும். நியாயப்படி அதுதான் முறையாகும் - ஆனால் இதுவரை அப்படி யாரும் அடைந்ததாகக் கிடையாது. கேள்விப்பட்டது கூட இல்லை. எனவே பார்ப்பானுக்குக் கொடுத்த பின் அதை ஜீரணித்துவிடுகிறான். பிறகு எங்கே இவன் அப்பனுக்கு மேல்உலகத்துக்கு? போகமுடியும்? அப்படியே பார்ப்பான் மேல் உலகத்துக்கு அனுப்பும் சக்தி கொண்ட மந்திரம் கொண்டவனாக இருந்தால் இன்றைக்கு எவ்வளவோ காரியத்துக்குப் பயன்படும். ஆனால் அத்தனையும் புரட்டு என்பதற்கு நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறேன்.

ஒரு பார்ப்பனனிடம் ஒரு மடையன் திவசம் கொடுத்துக் கொண்டிருந்தானாம். அப்போது பார்ப்பனன் சொல்படி அந்த மடையன் ஆற்றில் உள்ள தண்ணீரைக் கையால் அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தான். அதன் காரணம் என்ன வென்றால் இவன் இறைக்கும் தண்ணீர் மேல் உலகத்திற்குப் போய் இவனுடைய முன்னோர்களுக்குப் பயன்படு கிறது என்பதாகும். அந்த அடிப்படையில் புரோகிதன் மந்திரம் கூற இவன் தண்ணீர் இறைக்கிறான்.

அப்போது அதைப் பார்த்த ஒருவன், தானும் தண்ணீரைக் கரையின் மேல் வாரி இறைத்தான். அதைக் கண்ட புரோகிதன் நீ ஏன் தண்ணீர் இறைக்கிறாய் என்றதற்கு நான் என்னுடைய ஊரில் உருளைக் கிழங்குத் தோட்டம் வைத்திருக்கிறேன். அதற்குத் தண்ணீர் இறைத்து அதிக நாள்கள் ஆகின்றன. இப்போது நீங்கள் மந்திரம் சொல்லும் போது இறைத்தால் இந்தத் தண்ணீர் என்னுடைய உருளைக்கிழங்குத் தோட்டத்துக்கு போய்ச்சேரும், என்றானாம்.

அதற்குப் புரோகிதன் அது எப்படி அவ்வளவு தூரம் போய்ச் சேரும்? என்று கேட்க அதற்கு இவன் நீங்கள் இன்றைக்கும் தண்ணீர் எங்கேயோ கண்ணுக்குத் தெரியாமல் ஒருவரும் காண முடியாத அவ்வளவு உயரத்தில் இருக்கும் மேல் உலகத்திற்குப் போகிற பொழுது இது இங்கே அடுத்த ஊரில் உள்ள என் தோட்டத்திற்குப் போகாமல் இருக்க முடியுமா? என்று கேட்டானாம். பிறகு புரோகிதன் நம்முடைய சாயம் வெளுத்தது என்று நினைத்து தலைகுனிந்து போய்விட்டானாம்.

                                  ----------------------------------தந்தைபெரியார் - “விடுதலை”, 21.2.1956

24.2.14

கடவுள்களிலும் பணக்காரக் கடவுள், ஏழைக் கடவுள் என்ன காரணம்?

ஏழைக் கடவுள்கள் 


தமிழ்நாட்டில் 38481 இந்துக் கோயில்கள் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் 2000 வருவாய் உள்ள (அதாவது பசையுள்ள) கோயில்களாம். 7000 கோயில்களில் ஒரு கால பூஜை மட்டும் நடக்கிறது. இந்தக் கோயில்களைச் சீரமைத்து வழிபாடு நடத்த ஆவன செய்ய வேண்டும் என்று விசுவஹிந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடவுள் சக்தியின் மீது நம்பிக்கை உள்ளவர்கள்தான் இப்படி சொல்லுகிறார்கள். ஒரு வேளை பூஜை மட்டும் நடந்தக் கூடிய கோயில்கள் என்று பட்டியலிட்டுப் புலம்புகின்றனர்.

அப்படியென்றால் அந்தக் கடவுள் சக்தி  இவ்வளவு தானா? மனிதர்களாகப் பார்த்து ஏதாவது ஏற்பாடு செய்தால் தான் உண்டு என்ற நிலை இருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது. ஆக கடவுள் என்பது மனிதன் தயவில் தான் வாழ வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட கோயில்களுக்குச் சென்று தான் மனிதன் வழிபாடு செய்கிறான் கடவுளே, எனக்கு அது செய், இது செய்! என்று வேண்டுகோள் வைக்கிறான் - காணிக்கை செலுத்துகிறான்.

வைத்தியரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்! என்று சொல்லுவதுபோல கடவுளே, உன் சக்தி என்ன என்பதை நிரூபித்துக் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது.கடவுளாவது மண்ணாங் கட்டியாவது அது வெறும் கல், அல்லது உலோகங்களால் ஆனது - சக்தியும் இல்லை - வெங்காயமும் இல்லை என்று நாம் சொல்லுவதைத்தான் வேறு வார்த்தைகளில் திருவாளர் வேதாந்தம் ஒரு வேளை பூஜை நடத்தப்படும் கோயில்களின் நிலைமைபற்றிப் புலம்புகிறார்.

கடவுளை மற - மனிதனை நினை என்ற தந்தை பெரியாரின் கருத்து எவ்வளவு உண்மையானது - சரியானது - உறுதியானது என்பது இப்பொழுது விளங்கி விட்டதா இல்லையா?

கடவுள்களிலும் பணக்காரக் கடவுள், ஏழைக் கடவுள் என்ற நிலையுள்ளதே - இதற்கு என்ன காரணம்? என்ன பதிலாம்? ஓ, கடவுளுக்குக்கூட தலையெழுத்து, கர்மா பலன் உண்டோ! அதன் காரணமாகத்தான் பணக்காரக் கடவுள் ஏழைக் கடவுள் என்கிற நிலையா?

சரி, அது இருக்கட்டும்; வேதாந்தம் ஏன் இப்படி சிந்திக்கக் கூடாது? 2000 பணக்கார கோயில்கள், கடவுள்கள் இருக்கின்றனவே, திருப்பதி கல் முதலாளியான ஏழுமலையானுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வங்கிகளில் தூங்குகின்றனவே, அதனை எடுத்து ஏழைக் கடவள்களுக்கு மூன்று வேளை படையல் (சோறு) போட்டு அந்த யாசகம் எடுக்கும் கடவுள்களின் வயிற்றை நிரப்பக் கூடாதா?

இந்துமதம் என்பது இந்தியா முழுவதும் இருக்கத்தானே செய்கிறது! தேசீயம், தெய்வம் இரண்டும் தானே இருகண்கள் என்றும் கூறிக் கொள்கிறார்கள். அப்படி யானால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இல்லாத சொத்துக்களா? பணமா? தங்கமா?  நிலத்தின் மதிப்பு மட்டும் ரூ.15 ஆயிரம் கோடி, கட்டடங்கள் ரூ.1500 கோடி, நகைகள் (கொள்ளையடித்தது போக) ரூ.30 ஆயிரம் கோடி பணமாக மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி, நாள் ஒன்றுக்கு உண்டியல் வசூல் மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில்  பழனிக் கோயிலுக்கு ஆண்டு வருமானம் ரூ.72,15 கோடி, சமயபுரம் மாரியம்மன்  ரூ.33,55 கோடி, திருச்செந்தூர் ரூ.19.80 கோடி, திருத்தணி முருகன் ரூ.16.09 கோடி, திருவண்ணாமலை அருணாசலம் ரூ.13.54 கோடி, சிறீரங்கம் ரெங்கநாதன் - ரூ.12.21 கோடி, மதுரை மீனாட்சி - ரூ.11.65 கோடி, இராமேசுவரம் ராமநாதன் - ரூ.9.89 கோடி, சுசீந்திரம் - ரூ.5.87 கோடி, திருவேற்காடு மாரியம்மன் - ரூ.5.65 கோடி,
இவை எல்லாம் ஓர்ஆண்டுக்கான வருமானம்.

தேசியக் கண்ணோட்டத்தோடு திருப்பதி ஏழுமலை யான் கோயில் நிதியிலிருந்து ஏழைக் கடவுள்களுக்குத் தான தர்மம் செய்யவேண்டியதுதானே.

சைவக் கோயில்களுக்கு வைணவக் கோயில்களி லிருந்தோ அதுபோல வைணவக் கோயில்களுக்கு சைவக் கோயில்களின் நிதியிலிருந்தோ நிதி உதவிடச் செய்ய விரும்ப மாட்டார்கள். இந்த இரண்டு பிரிவுகளுக்கிடை யேயுள்ள பிணக்குகளும், சண்டைகளும் ஊர் சிரித்த கதைதான் என்பதாலும், அந்தந்தப் பிரிவு கோயில் களுக்குச் சம்பந்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த பணக்காரக் கோயில்களிலிருந்து நிதியைப் பயன்படுத்தலாமே, அதை விட்டு விட்டு அரசுக்கு மனு போடுவானேன்?

உண்மை என்னவென்றால் கோயிலிலிருந்து இன் னொரு கோயிலுக்கு நிதியளிக்க ஒப்பம் அளிக்க மாட்டார்கள். கோயில் காரியம் என்பதே வணிக நிறுவனமான பின்பு அந்த மனப்பான்மை எப்படி வரும் என்று எதிர்பார்க்க முடியும்?

                    -------------------------------”விடுதலை” தலையங்கம் 24-2-2014
Read more: http://viduthalai.in/page-2/75865.html#ixzz2uFWFkDkj

ஜெயலலிதா பிறந்த நாள் - எண்ணிப்பார் கோபியாமல்!

அண்ணாவின் பெயரால் - இப்படியா?

  • ஜெயலலிதா பிறந்த நாள்: 200 புரோகிதர்களை வைத்து மஹா ருத்ர யாகம். அமைச்சர் சின்னையா கலந்து கொண்டார்.
  • 66 பெண்களுடன் கையில் தீச்சட்டி ஏந்தினார் வளர்மதி!
  • கோயிலில் தங்கத் தேர் இழுத்து வழிபட்டார் வி.பி. கலைராஜன்; முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி விசேஷ பூஜை நடந்தது?!!
இவையெல்லாம் அகில இந்திய அண்ணா திமுகவின் பொதுச் செயலாள ரும், தமிழ்நாடு முதல் அமைச்சருமான செல்வி ஜெ. ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காகவாம்! கட்சியிலே அண்ணா பெயர் இருக்கிறது கட்சியின் கொடியிலே அண்ணா உருவம் இருக்கிறது -

ஆனாலும் அண்ணாவின் பகுத்தறிவுக் கொள்கைக்கு விரோதமாக மேற்கண்ட காரியங்கள் களேபரமாக நடக்கின்றன.

அண்ணாவின் உருவத்தை கொடியில் பறக்க விடுவது கொள்கைகளைக் காற்றில் பறக்க விடத்தானோ!

கட்சியிலே திராவிட என்ற இனச் சுட்டுப் பெயர் இருக்கிறது; கட்சியின் தலைவராக ஆரியர் இருப்பதால் திரா விடத் தத்துவத்தை ஊடுருவி அழிக்கும் வேலைகள் நடக்கின்றன என்று எண்ணுவதற்கு நியாயம் இருக்கிறது.
புத்த மார்க்கத்தை ஆரியம் ஊடுருவி அழித்தது போல திராவிட இயக்கத்தின் கொள்கையை ஊடுருவி அழிக்க ஏற்பாடா என்று எண்ணுவதிலும் நியாயம் இருக் கிறது.

கட்சிப் பதாகைகளிலும் சுவரொட்டி களிலும் தந்தை பெரியார் உருவம் பொறிக் கப்பட்டு வருகிறது! ஏன்? ஏன்? ஏன்? பெரியார் படம் கொள்கையின் அடிப்படை யில் என்றால் மேற்கண்ட காரியங்கள் நடைபெறுமா?

அண்ணா தி.மு.க.வில் உள்ள ஒரே ஒரு தொண்டனாவது இதனை இந்தக் கோணத் தில் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

பதவிக்காக ஆல வட்டம் சுற்றும் தமிழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா? வேண்டுமானால் ஒன்று செய்யலாமே!

கட்சியின் பெயரிலிருந்தும், கொடியிலி ருந்தும் அண்ணாவை நீங்கி விடலாமே!

திராவிட என்ற இன அடையாளத்தை எடுத்து விடலாமே! பெரியார் உருவத்தைப் பொறிப்பதையும் தவிர்த்து விடலாமே! அப்படிச் செய்தால் அதற்குப் பெயர்தான் அறிவு நாணயம் என்பது.

அக்கட்சியில் இருக்கும் தொண்டர் களுக்கு அண்ணா என்றால் யார்? அவர் பெயர் கட்சியில் இருக்கிறதே - அவர் உருவம் கொடியில் இருக்கிறதே - யார் அந்த அண்ணா? என்று தெரிந்து கொள் வதற்கு இங்கே சில எடுத்துக் காட்டுகள்; படியுங்கள் படியுங்கள் - பகுத்துப் பாருங்கள். அப்பொழுது புரியும் 

-அண்ணாவின் பெயரைச் சொல்லி அக்கிரமம் நடப்பது!

அண்ணாவைச் சொல்லி அவரைக் கொச்சைப்படுத்தும் வேலைகள் அதிகாரப் பூர்வமாக நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். படியுங்கள் - படியுங்கள்! இதோ அண்ணா பேசுகிறார்:

திராவிடரும் - கடவுளரும்

இஞ்ஞான்றைத் திராவிடமக்கள் சிலரால் வழிபடப்படும் கடவுள் அல்லது கடவுளர், உண்மையாகவே திராவிடரின் கடவுளராகவும், திராவிட மொழிகளில் ஒன்றையாவது தெரிந்தவர்களாகவும் இருந்தால், திராவிட மக்களைக் கொண்டே திராவிட மொழிகளிலே தங்களுடைய காரியங்கள் எல்லாம் நடைபெறும்படி செய்திருப்பர். இன்றுங்கூடத் திராவிட நாட்டிலுள்ள கோயில்களில் நடைபெறும் வழிபாடு (பூசை)கள் எல்லாம் ஆரியப் பார்ப் பனரைக் கொண்டே வடமொழியிலேயே நடைபெற்று வருவது கண்கூடு. ஆகை யால், வடமொழியைத் தேனெனப்பருகி, ஆரியக் கொள்கையைக் கற்கண்டெனச் சுவைத்துத் தமிழ் மக்களைச் சூத்திரராக்கித் தமிழ் மொழியைத் தமக்கேற்றதல்லவாக்கித் தமிழர் கொள்கைக்கு இடமளியாது நிற்கும் ஒரு கடவுள், அது எத்தகையதாய் இருப் பினுஞ் சரியே, அதனிடம் எத்துணை ஆற்றல் இருப்பினுஞ்சரியே, 

அதனைத் தனது கடவுள் என்று எந்தத் திராவிட னாவது ஏற்றுக்கொள்வானா?
இனித் திராவிட மக்களுக்கு ஒரு கட வுளும், அவரைக் குறிக்கும் வேதங்கள் திராவிட (தமிழ்) மொழியிலும் இருந்தன வென்றும், ஆனால் அவை ஆரியர் சூழ்ச்சி யாலும், ஆடிப்பெருக்காலும் மறைந்தும் அழிந்தும் போயினவென்றும் சிலர் கூறுவ ரேல், அவர்தம் அக்கூற்று அறிவுடைய மக்களால் அணுவளவும் எற்றுக்கொள்ளக் கூடியதன்று என்பேன்.

ஏனென்றால், அக்கடவுளும் அவர் தம்மைப்பற்றி எழுதப்பட்ட வேதங்களும் ஆரியச் சூழ்ச்சியாலும் ஆடிப் பெருக் காலும் அழியக் கூடியனவாய் இருந்தால், அக்கடவுளை எல்லாம் வல்ல முழுமுதற் கடவுள் என்றும், அவர் இலக்கணத்தைக் கூறும் சுவடிகளை முடிந்தமுடிபைக் கூறும் வேதங்கள் என்றும் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? தன்னையும், தன்னை விளக்கும் நூல்களையும் காப்பாற்ற வகையற்ற ஒரு கடவுள், நம்மையும் மற்றும் இவ்வுலகிற் காணப்படும் அனைத்தையும் காப்பாற்றும் ஆற்றல் பெற்றுள்ளதென்பதனைக் கேட் கும், மணற்சோறு பொங்கி மகிழும் சிறுமகாரும் எள்ளிநகைப்பரே!

 ------------------------------------------------------------ திராவிட நாடு 15.10.1944


எண்ணிப்பார் கோபியாமல்!

எலக்ட்ரிக், ரயில்வே, மோட்டார், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், அதைக், கண்டுபிடிக்கும் கருவி, டார்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி. விஷப்புகை அதைத் தடுக்கும் முகமூடி, இன்ஜக்ஷன் ஊசி, இனாகுலேஷன் ஊசி இவைகளுக்கான மருந்து, ஆப் ரேஷன் ஆயுதங்கள், தூரதிருஷ்டிக் கண் ணாடி, ரேடியோ, கிராமபோன், டெலி போன், தந்தி, கம்பியில்லாத் தந்தி, போட்டோ மெஷின், சினிமாப்படம் எடுக்கும் மெஷின், விமானம், ஆளில்லா விமானம், டைப் மெஷின், அச்சு யந்திரம், ரசாயன சாமான், புதிய உரம், புதிய விவசாயக் கருவி, சுரங்கத்துக்குள் போகக் கருவி, மலை உச்சி ஏற மெஷின், சந்திர மண்டலம் வரைபோக விமானம், அணுவைப் பிளக்கும் மெஷின்,
இன்னும், எண்ணற்ற, புதிய, பயன்தரும், மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருகக மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறை கள், கருவிகள், பொருள்கள் ஆகியவை களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், இன்னமும் கண்டுபிடிக்கும் வேலையிலே ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் எல்லாம்.

ஆயுத பூசை சரசுவதி பூசை கொண்டாடாதவர்கள்!

அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம் பஸ், இந்தியாவுக்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர், இவர்களெல் லாம் ஆயுத பூசை செய்தவர்களல்லர் நவராத்திரி கொண்டாடினவர்களல்லர்.

நூற்றுக்கு நூறு பேர் என்ற அளவில் படித்துள்ள மேனாட்டில
சரசுவதி பூசை ஆயுத பூசை இல்லை!
ஏனப்பா கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?

ஓலைக் குடிசையும் கலப்பையும் ஏரும் மண்வெட்டியும் அரிவாளும் இரட்டை வண்டியும் மண்குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள்.
தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை.

கற்பூரம்கூட நீ செய்ததில்லை.

கடவுள் படங்களுக்கு அலங்காரத்துக்குப் போடும் கண்ணாடி கூட சரஸ்வதி பூசை அறியாதவன் கொடுத்ததுதான்; நீ கொண் டாடுகிறாய்.
ஒருகணமாவது யோசித்தாயா? இவ் வளவு பூசைகள் செய்து வந்த நாம், நமது மக்கள், இதுவரை, என்ன, புதிய, அதிசயப் பொருளைக் கண்டுபிடித்தோம், உலகுக்குத் தந்தோம், என்று யோசித்துப் பாரப்பா! கோபப்படாதே! உண்மை.
அப்படித்தான் கொஞ்சம் நெஞ்சை உறுத்தும். மிரளாமல் யோசி. உன்னையும் அறியாமல் நீயே சிரிப்பாய்.

உன் பழைய நாள்களில் இருந்த பேரறி ஞர்கள் தங்கள் புண்ணிய நூல்களை எல்லாம்கூட, ஓலைச் சுவடியிலேதானே எழுதினார்கள். அந்தப் பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கிலேயன் வருவதற்கு இடையே இருந்த காலத்திலே அச்சு இயந்திரமாவது கண்டுபிடித்திருக்கக் கூடாதா? இல்லையே!

சிவ நேசர்கட்கு

அன்பே சிவமானால் அன்பை வளர்க்கப் பாடுபடுவதுதானே சைவர் கடமை, வேறு எதற்கு? அன்பு வளர, அறிவு வேண்டும், பேதம் ஒழிய வேண்டும். ஆதிக்கம் செய்வோர் அழியவேண்டும். வறுமை போக வேண்டும். வாட்டம் தீர வேண்டும். ஒருவரைச் சுரண்டினால்தான் மற்றவர்கள் வாழ முடியும் என்ற முறையி லுள்ள அமைப்புகள் மாறவேண்டும். அன்பு அப்போதுதான் வளரும். அதைச் செய்ய நாடெங்கும் கோயில்கள் ஏன்? அங்கு கொட்டு முழக்கும் கூத்தும் ஏன்?

அதைக் காட்டிப் பிழைக்க ஓர் ஆரியக் கூட்டம் ஏன்? அது கட்டிவிட்ட கதைகள் ஏன்? ஆறுகாலப் பூசையும் அபிடேக விசேடமும் ஏன்? அன்பு வளர அவசியமா? அன்றி ஆலயங்களில் அடைபட்டுள்ள பொருளை வறுமை போக்கும், வளமான திட்டங்களுக்குச் செலவிடல் முறையா என்பதுபற்றிச் சிவநேசச் செல்வர்கள் சற்றே சிந்திக்கக் கூடாதா? என்று கேட்கிறேன். என் சத்தம் அவர்கள் செவி புகுமோ, புகாதோ, நானறியேன்.    - அண்ணா (திராவிட நாடு இதழ், 10.1.1943)

இப்படி எல்லாம் எழுதியவர் தான் அறிஞர் அண்ணா - அத்தகைய அறிஞரின் கருத்துக்களை வஞ்சிக்கலாமா? அவருக்குத் துரோகம் செய்யலாமா?
தெரியாமலா இவற்றைச் செய்கிறார்கள்? எல்லாம் தெரியும் - அம்மையாரைவிட அய்யாவும், அண்ணாவும் பெரிய தலைவர்களா என்ற ஆணவமா? பதவிப் போதை தலைக்கேறியதால் ஏற்பட்ட தடு மாற்றமா சிந்திப்பீர்!

----------------------- மின்சாரம் 22-2-2014 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

23.2.14

மனித வாழ்க்கைக்கு மதமும் கடவுளும் போதியதாகாது!- பெரியார்

மனித வாழ்க்கைக்கு இன்றைய மதமும், கடவுளும் போதியதாகாது
- தந்தை பெரியார்
மனித சமுதாயத்தின் கூட்டு வாழ்விற்கு ஒரு கடவுள் என்பதும், அதை அடையும் மார்க்கம் (மதம்) என்பதும் அவசியம் என்று முன்னோர்கள் கருதினார்கள். ஏனெனில், மனித சமுதாயத்தார் கூடி வாழும் பிராணி களாவார்கள். அப்படிப்பட்ட கூட்டு  வாழ்க் கைப் பிராணிக்கு ஒரு நடப்பு முறை தேவை யாகும். அதாவது ஒரு சங்கம் என்றால், அதற்கு எப்படி ஒரு நடப்பு முறைத் திட்டம் தேவையோ, ஒரு விளையாட்டு நடப்பு என்றால், அதற்கு நியதி தேவையோ, அதுபோல் பல மக்கள் சேர்ந்து வாழும் ஒரு சமுதாயத்துக்கும், விதிமுறை தேவை யாகும். அந்த நடப்பு முறை விதிகள்தான் மதம் என்றும், நெறி என்றும், மார்க்கம் என்றும் சொல்லப்படுவதாகும். அப்படிப் பட்ட மார்க்கமும், நெறியும் தவறிப் போகா மல், அதற்குக் காப்பு அளிக்க ஒரு நிர்ப் பந்தம், நிபந்தனை இருக்க வேண்டியதும் அவசியமாகும்.

எப்படியெனில் ஓர் அரசாங்கமானது, மக்களை அடக்கி ஆளவும், மக்கள் அவ்வடக்குதலுக்கு அடங்கி நடந்து வரவும், விதி, சட்டம், நீதிமுறை ஆகியவை செய்யப்பட்டு இருந்தாலும், அச்சட்டத் திலேயே இந்து சட்டப்படி, விதிப்படி, நீதிப்படி நடக்காவிட்டால், மீறி நடந்தால் அதற்கு தண்டனை இன்னது என்பதாக நிபந்தனையும் ஏற்படுத்தி, நிபந்தனை விதிக்க நீதிபதியும், அந்நிபந்தனை சரிவர ஈடேற கோர்ட்டு, ஜெயில், அபராதம் முதலி யவையும் இருப்பது போல் மதநெறியை மீறி நடக்காமல் இருப்பதற்காக வேண்டி கடவுள் தண்டிப்பார். அதற்கான மோட்சம், நரகம் என்பதாக மனிதனைப் பலப்படுத்தக் கடவுளையும் கற்பிக்க வேண்டியது அவசியம் என்று கண்டு பிடித்தார்கள்.
ஏனென்றால், இப்போது எங்கும் அரசாங்கமே இருந்து வந்தும் கூட, அரசாங் கத்துக்கு மக்களை அடக்கி ஆள சட்டம் இருந்தாலும் கூட, அரசாங்கத்திற்கு அதிக கஷ்டம் இல்லாமல் மக்களைத் தாங் களாகவே பயந்து ஒழுங்காய் நடக்கும்படி செய்ய எந்த அரசாங்கமும், மதத்தையும், கடவுளையும் பிரச்சாரம் செய்து மக்களை அவற்றிற்கு, ஆளாக்கி வருகிறது என்றா லும், மனித சமுதாயத்தை அதன் எல்லாக் காரியங்களையும் சட்டத்தினாலேயே அடக்கி ஆண்டு விட முடிவதில்லை. உதார ணமாக சர்க்கார் அறியாமல் சட்டத்தில் பட்டுக் கொள்ளாமல், மனிதன் பல தவறுதல் களைச் செய்யலாம். சமுதாயத்துக்குப் பல கடமைகளைச் செய்யாமல் விட்டும் விடலாம்.
இப்படிப்பட்ட காரியங்களுக்குச் சட் டமும், தண்டனையும் ஏற்படுத்த, பயன் படுத்த முடியாது. ஆகையால் மனிதனை தானாகவே பயந்து நடக்கும்படி செய்ய, அவன் எளிதில் புரிந்து கொள்ள முடியாத படியான மதமும், கடவுளும் பயன்படும் என்று கருதினார்கள். அந்தக் கருத்தில் ஏற்பட்ட அவை மிகமிகப் பாமரத் தன்மை யில் இருந்த காலத்தில் ஏதாவது பலன ளித்து வந்திருக்கலாம். ஆனால், அவை அதாவது அன்றைய மதமும், கடவுளும் இன்றைக்குப் போதுமானதாக பயன் அளிக் கக் கூடியதாக இல்லாமல் போய்விட்டது.

அரசாங்க சட்டத் திட்டங்கள் மனிதர் களுடைய தன்மைக்கும், அவர்களுக்கும், அறிவு வளர்ச்சிக்கான நிலைக்கு, காலத் தினுடைய மாறுபாட்டிற்கு அக்கம்பக்கத் தின் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல மாற்றி யமைக்கப்படுவது போல் இவையும் காலத்துக்கு, நிலைக்கு ஏற்ப அமைக்கப் பட்டு வரவேண்டியது அவசியமாகும்.

ஒரு கடவுள் கற்பனையானது மாறி, இன்று இந்நாட்டில் பல கடவுள்களும், ஒரு மதம் மாறி பல மதங்களும் மலிந்து விட்டன. இவை பெரிதும் உண்மையில் மனித சமுதாய நல்வாழ்வுக்காகவே ஏற்பட்டவை என்று நாம் கருதலாம் என்றாலும், இப்ப டிப்பட்ட பலப்பல என்பவை காலக்கிரமத் தில் பலரின் சுயநலத்துக்காகவும், சூழ்ச்சிக்கு ஆகவும் ஏற்படுத்தப்பட்டவை என்று வலிந்து சொல்ல வேண்டியவையாய் இருக்கின்றன என்ற போதிலும், இன்றுள்ள மதங்களும், கடவுள்களும் இன்றைய மக்களை அவர்களுடைய இன்றைய அமைப்புக்கு ஏற்றபடி, அதாவது இன்றைய மக்களுக்கும், சமுதாயங்களுக்கும் இயற்கை யாக ஏற்பட்டுள்ள ஆசாபாசம், அறிவு, ஆற்றல், வசதி, வாய்ப்பு, சுற்றுச்சார்பு சூழ் நிலை ஆகியவற்றுக்கு ஏற்றபடி மக்களை அடக்கிப் பயப்படுத்தி சமுதாய வளர்ச்சிக்கு, நலனுக்கு, எல்லையற்ற அமைதியான வாழ்வுக்கு பயன்படப் போகிறதாக இல்லா தவையாகி விட்டன.
எப்படியெனில் மனிதன் பிறவியில் மற்ற ஜீவன்களைவிட அதிகமான அறிவுத் திற மையும், சிந்தனையும், சக்தியும் கொண்ட வன் என்பதோடு மனிதனுக்கு அவை நாளுக்கு நாள் மாறுதலும், வளர்ச்சியும், அனுபவ ஞானமும், ஆற்றலும், உண்டாக் கக் கூடியவையாகவும் இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட ஓர் உயர் பிறவியான மனித சமுதாயம், பகுத்தறிவு, அனுபவ ஞானம், ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டு மேம் பாடான நிலையை அடைந்து கொண்டு போகாமல், பகுத்தறிவும், சிந்தனா சக்தியும் அற்ற மிருகத் தன்மையைவிட மோசமான தன்மையைக் கொண்டு தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளக் கூடச் சக்தியற்றதாக, போதிய உதவி பெற வாய்ப்பு இல்லாமலும், சதா கவலையுடன் வாழ்ந்து மடிய வேண் டியிருக்கிறது என்றால், அதுவும் இப்படிப் பட்ட நிலை ஏற்படாமல் இருப்பதற்கென்றே பல மதங்களும், பல கடவுள்களும் இருந்தும் இந்த மாதிரியாகப் பயனற்று மனித வாழ்க்கையானது காட்டில் துஷ்ட ஜந்துக்களிடம், சாது ஜந்துக்கள் எப்படி பயந்து ஒடுங்கி மறைந்து வாழ்கின்றனவோ, எல்லைக்கும், பலத்திற்கும், துன்பத்துக்கும் ஆளாக்கி  மடிவதுடன் மனிதனுக்கு மனிதன் அன்பற்று ஆதரவு செய்வதற்று மனிதனை மனிதன்  தின்று வாழ்கிறான் என்றால், இதற்கு ஏதாவது காரணம் இருந்துதானே தீர வேண்டும்? அல்லது இந்தக் கடவுளும், மதமும் பலனிக்க வில்லை என்று தானே கருத வேண்டும்?

இந்நிலை ஏற்பட்ட இன்றுகூட நாம், மதம் மனிதனை நல்வழியில் நடத்திச் செல்வதாகும், கடவுள் மனிதனுக்கு நல்வழி யும் நல்வாழ்வும்  கொடுத்து மனிதனது சர்வ நடத்தைக்கும் காரணபூதமாய் இருந்து நடத்திக் காப்பதாகும் என்று தானே கருதுகிறோம். மனிதனுக்கு அவனுடைய பகுத்தறிவு அனுபவ ஞான ஆற்றல் தவிர, இப்படிப்பட்ட பலமான இரண்டு சாதனங் கள் அதாவது மதமும், கடவுளும் இருந்தும் மனிதன் மேற்காட்டியபடி கீழ்மகனாய் இருக்கிறான் என்றால், இன்றுள்ள மேல் குறிப்பிட்ட மதங்களும், கடவுள்களும் பயன்படவில்லை என்றும், அவை மக் களைச் சரியாய் நடத்தப் போகிறதாய் இல்லை என்ற காரணம் தவிர வேறு எதைச் சொல்ல முடியும்? அல்லது இன்றைய மனிதத் தன்மையானது, இப்போதைய மதமும், கடவுளும் ஏற்பட்ட காலத்தில் இருந்த தன்மையை விட அதிக மாற்றமான தன்மை பொருந்திய ஒரு மேல் நிலையில் அமைந்து விட்டது என்றாவது சொல்லித் தானே ஆக வேண்டும். தலை பெருத்து விட்டது என்றாலும் சரி, அல்லது குல்லாய் (தொப்பி) சுருங்கி விட்டது என்றாலும் சரி, அதன் முடிவு தலைக்கும், குல்லாய்க்கும் பொருத்தமில்லை போதுமானதாக இல்லை என்பதாகத்தான் ஆகும்.

ஆகையால், 1948ஆம் வருடத்து ரயில் வேலையில், நேரக் குறிப்பு. 1949ஆம் ஆண்டுக்கு எப்படிச் சரியானதாக இருக்க முடியாதோ, அதுபோல், சென்ற நூற்றாண்டு என்று மாத்திர மல்லாமல், சென்ற பல நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மதங் களும், அதற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கற்பிக்கப் பட்ட கடவுளும், கடவுள் களும் இன்றைய விஞ்ஞானக் காலமாகிய 20ஆம் நூற்றாண்டுக்குப் பொருத்தமா யிருக்கும் என்று எதிர்பார்க்கலாமா? எதிர்பார்க்க முடியுமா?

மற்றும் இன்றுள்ள அப்பழைய மதத் துக்கோ, கடவுளுக்கோ, சமுதாய நெறி களுக்கோ மனிதத் தன்மைக்கோ ஒரு கடுகு அளவு சக்தி இருந்தாலும், காந்தியாரை ஓர் இந்து (ஆரிய) மதத்தைச் சேர்ந்தவன், அதிலும் பார்ப்பனன் (தன்னை உயர்பிறவி என்று சொல்லிக் கொள்பவன்) அதிலும் படித்த (பி.ஏ. படித்த) பார்ப்பனன், அதிலும் ஓர் இந்து மதத் தத்துவத்தில் பிடிவாதப் பற்றுள்ள பார்ப்பனன், அதிலும் இந்து மதத்தைக் காப்பதற்கு என்று ஏற்பட்ட சங்கத்தைச் சேர்ந்த பார்ப்பனன் இந்து மதத்தைக் காப்பதற்கு ஆக என்று கருதி சுட்டுக் கொன்றிருக்க முடியுமா? அதிலும் மிகக் கொடுமையான, மூர்க்கமான, வஞ்சக மான தன்மையில் எதிரில் நின்று அவருக்கு வணக்கம் காட்டி, பதில் வணக்கம் காட்டப் படும்போது, வள்ளுவர் அங்க இயலில் கூடாநட்பு என்ற அதிகாரத்தில் 

தொழுத கை யுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து

என்று கூறியிருக்கும் குறளுக்கு ஒப்ப காந்தியாரை கோட்சே கும்பிட்ட, கூப்பிய கைக்குள்ளாகவே ஆயுதத்தை வைத் திருந்து, அவரைக் கும்பிடுகிற பாவனை யிலேயே கொலை பாதகத் தன்மையை அடக்கி வைத்துக் கொண்டு அவரைச் சாகும்படி சுட்டுக் கொன்றிருக்க மாட்டான்.

குறிப்பு: இக்குறளின் கருத்து, நட்புக் கொள்ளத் தகுதி அற்றவர்களை நட்பாகக் கொண்டால், கும்பிடுகிற கைக் கூப்புத லிலேயே ஆயுதம் வைத்துக் கொல்லும் துரோகத்தைச் செய்வார்கள்.

அவர்கள் அழுவதாக பாவனை காட்டி, சிந்தும் கண்ணீரிலேயே விஷத்தைக் கொட்டி, நம்மைக் கொல்ல வகை செய்வார்கள்.

(குறிப்பு:  வள்ளுவர் கோட்சேயின் பக்கத்தில் இருந்து, அவன் காந்தியாரைக் கொன்ற முறையைப் பார்த்தும், அந்த ஜாதியின் இன்றைய தன்மையை நன்றாய் உணர்ந்தும், இன்றைய மக்களுக்கு அறிவு றுத்த நேற்று எழுதியது போல் இல்லையா, இந்தக் குறள்?)

இதன் கருத்து என்னவென்றால், கடவு ளையும், மதத்தையும் உண்டாக்கிக் காப் பாற்றிப் பிரசாரம் செய்து வருகின்றது. கடவுளுக்கு சமமான ஜாதி என்கிற பார்ப் பனர்களுக்கே அவர்கள் உண்டாக்கிய கடவுளும், மதமும் பயன்படாமல் அவர் களைக் கொலை ஜாதியாக ஆக்கி விட்ட தென்றால், அவை மற்றவர்க்கு அன்பு, ஒழுக்கம் உண்டாக்கப் பயன்படுமா என்ப தாகும். அதுபோலவே கடவுள், மதங்களுக் குச் சிறிதளவு சக்தி அல்லது ஆற்றலி ருந்தாலும், இன்றைய மனித சமுதாயத்தில் 100-க்கு 100 பங்காக இவ்வளவு நாணயக் குறைவு, அன்புக் குறைவு, நன்றி அறிதல் குறைவு ஆகியவை மலிந்திருப்பதுடன், மனிதனை மனிதன் தனது வாழ்வுக்கு வஞ்சித்து பதறப் பதற இம்சித்துக் கொன்று வாழ வேண்டிய அவசியம் தவிர்க்க முடியாத தன்மையில் இருக்க முடியுமா?
இன்றைய மக்களில் மதவெறியும், மதப் பிடிவாதமும், கடவுள் பக்தியும், தொண்டும் இல்லாத மக்கள் 100-க்கு ஒருவர் வீதமாவது காண முடியுமா? மதத்தின்படி வேஷம், வாழ்க்கை இல்லாதவர்கள் 100-க்கு 5 பேர் வீதமாகவாவது இருக்கிறார்களா? அது போலவே கடவுளுக்கு வணக்கம், பூசனை, கொண்டாட்டம், உற்சவம் ஆகியவற்றில் ஈடுபடாதவர்களோ, அவற்றுக்காகப் பணம், நேரம், ஊக்கம், செலவு செய்யாதவர்களோ 100-க்கு 10 பேர்களாவது இருக்கிறார்களா? இப்படியாகப் பெரும்பான்மை மக்கள் கடவுள், மதப் பற்றில் நம்பிக்கையில், நடப் பில் ஈடுபட்டிருந்தும், பல்லாயிரக்கணக் கான கோவில்கள், பல லட்சக்கணக்கான பிரார்த்தனை ஸ்தலங்கள், கடவுள் சிலைகள் இருந்தும், அவற்றுக்குச் சதா சர்வ காலமும், மனிதன் உணரும்படியாகச் செய்ய பல தன்மையில் பிரசாரம் இருந்து வந்தும், ஏன் அவை பலன் கொடுக்கவில்லை? இதிலி ருந்து நாம் முன் கண்டபடி இப்போதைய மதங்களும், கடவுள்களும் இன்றைய மனித வர்க்கத்துக்குப் போதிமரமாக இல்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது.
அதையும் மற்றொரு விஷயத்தையும் பார்த்தோமானால், அதாவது சர்க்கார் - அரசாங்கத் தன்மையையும் பார்த்தோமா னால், அதுவும் இன்றைய தன்மைக்குப் போதாது என்று தான் படும். அதாவது மக்களை அடக்கி ஆள இப்போது இருந்து வரும் சர்க்கார் சட்டங்களும், ஜெயில்களும், நிருவாகங்களும் போதவில்லை. இதற்கு உதாரணம், சில நாள்களுக்கு முன்பு மக் களுடைய சமாதானத்துக்கும், ஒழுங்குக்கும் பொறுப்பாளியான மந்திரியார் தனது அறிக்கைவொன்றில், ஜெயில்கள் நிருவாகத்துக்குப் போதியதாக இல்லை. மாகாணத்தில் உள்ள ஜெயில்கள் யாவும் நிரம்பி விட்டன. ஜெயிலுக்குப் போவதை மக்கள் பெருமையாய், வீரமாய்க் கருது கிறார்கள் என்று சொல்லித் தன்னால் இன்றைய சட்டங்களைக் கொண்டு நிரு வாகம் செய்ய முடியாமையைக் கண்ணிய மாய் தெரிவித்துக் கொண்டிருக் கிறார். மனிதனுக்கு மத ஒழுக்கம் இல்லாமல் போய், கடவுள் பயமும் இல்லாமற் போய், சட்ட மரியாதையும் இல்லாமற் போய், ஜெயில் பயமும் இல்லாமற் போய் விட்டது என்றால் சமுதாய வாழ்வு என்ன ஆகும்?
இந்தக் கேவலத் தன்மை பற்றி மக்களை வஞ்சித்து ஊரார் உழைப்பில் உண்டு வாழும் சோம்பேறிக் கூட்டத்திற்குள் கவலையிருக்காது. இந்த நிலை அப்படிப் பட்டவர்களுக்கு நல்லதும் இலாபமானது மாகும். ஆனால், பாடுபடும் மக்கள் அப்பாட் டின் நன்மையை அடைய முடியாமல், முழு நேரம் பாடு பட்டும் அரை வயிற்றுக் கஞ்சிக்குப் போதியன பெறுவதற் கில்லாமல் அவதிப்படுபவர்களும், மானத்தோடும், மரியாதை யோடும், நேர்மையோடும் வாழ வேண்டுமென்று கருதிக் கொண்டு இருக்கும் மக்களுடைய கதி என்ன ஆவது?

எண்ணெய் விளக்குக்குப் பதில் எலக்டி ரிக் விளக்கு போட்டுக் கொள்ளுவது போலும், எருமை  மாட்டு வண்டிக்குப் பதில் ஏரோப்ளேனில் போவது போலும், நம் காட்டுமிராண்டி மதம், கடவுளுக்குப் பதில் உண்மையில் அன்பு, சத்தியம், அருள் ஞானம், அருளக்கூடிய நெறியும், இறையும் அவசியமாகும். அதோடு கூடவே, ஒரு நீதியும், நேர்மையும்  கொண்ட நல்ல ஆட் சியும் நமக்கு அதிவிரைவில் வேண்டிய தாகும்.

அந்தப்படி விரைவில் ஏற்படாவிட்டால், மனித சமுதாயம் பாழுங் காட்டில் துஷ்ட மிருகங்களுக்குப் பயந்து சாது மிருகங்கள் மறைந்து வாழ்ந்து கொண்டு நாளாவட்டத் தில் அத்துஷ்ட ஜந்துக்களுக்குச் சாது ஜந்துக்கள் இரையாகி வருவது போல இரையாக வேண்டி வரும். ஆகையால், இன்றையக் கடவுளும், மதமும் மாற்றப் பட்டே ஆக வேண்டும். முடியாவிட்டால் அழிக்கப்பட்டு ஆக வேண்டும்.
--------------------------- விடுதலை நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை -"விடுதலை"- 20.11.1954

22.2.14

பெண்கள் மசோதாவில் ஏன் உள் ஒதுக்கீடு வற்புறுத்தப்படுகிறது?

18 ஆண்டுகள் ஓடி விட்டன

15ஆவது மக்களவைக் கூட்டம் முடிந்தது. முக் கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படா மலேயே அவையின் காலம் முடிந்து விட்டது. அதிக நாள் முடக்கப்பட்ட 15ஆவது  நாடாளுமன்ற கூட்டத் தொடர் என்பது ஒரு வருந்ததக்க செய்தியாகும்.

நாடாளுமன்றம் நடைபெற்ற காலத்திலும்கூட அவை சுமூகமான முறையில் நடைபெறவில்லை. தங்கள் கட்சி நினைப்பதை சாதிக்க முடியாத ஒரு நிலை இருந்தால் அவையை நடக்க விடாமல் செய்வது என்ற உத்தியை மேற்கொண்டது என்பது ஜனநாயகத்தையே கேலிக் குறியாக்கி விட்டது! உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இதுவும் ஒரு வகையான வன்முறைதான்.

குறிப்பாக 15ஆவது நாடாளுமன்றக் கூட்டத்திலாவது கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட சட்டமன்றங்கள் - நாடாளுமன்றத்தில் 33 சதவீதம் மகளி ருக்கான இடஒதுக்கீடு மசோதாவும் மரணித்து விட்டது.

1996ஆம் ஆண்டு முதல் இந்த மசோதா நிறைவேற்றப் படாமல் நிலுவையிலேயே உள்ளது. பல பிரதமர்களும் வந்தார்கள் - போனார்கள் இவ்வளவுக்கும் இது மாநிலங் களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டது. மக்களவையோ முடக்கி விட்டது. கட்சிகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் இந்தப் பிரச்சினையில் ஆண்களின் ஆதிக்க உணர்வு உக்கிரமாக இருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது.

இந்திய மக்களவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 543; இதில் பெண்களில் எண்ணிக்கை வெறும் 59 பேர்கள் தான்; அதாவது 10.7 விழுக்காடே!  தேர்தலில் போட்டியிட்ட பெண்கள் 556. அதில்  எல்லாக் கட்சிகளையும் சேர்த்து வெற்றி பெற்றவர்களோ வெறும் 59 தான். உலக நாடுகளின் வரிசையில் பார்க்கும் பொழுது இந்தியாவுக்குரிய இடம் 104 - என்பது ஆரோக்கியமானது தானா?

பெண்களுக்கு உரிமை கிடையாது என்று பேசப்படு கின்ற முஸ்லீம் நாடுகள்கூட இந்தப் பிரச்சினையில் இந்தியாவை விட முன்னேற்ற நிலையில்  தான் உள்ளன; பாகிஸ்தான் 42ஆம் இடத்தில் இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் இந்த மசோதா எதிர்க்கப்படுவ தற்குக் காரணம் - உள்ஒதுக்கீடு கோருவதுதான் என்று நொண்டிச் சாக்கு சொல்லப்படுகிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் உள் ஒதுக்கீடு இல்லை என்று சொன்னாலும் மசோதாவை எதிர்க்கக் கூடிய சூழல்தான் இருந்தது என்பதுதான் உண்மை.

இடதுசாரிகள்கூட இந்தப் பிரச்சினையைப் புரிந்து கொள்ளாதது வருந்தத்தக்கது; இந்தியக் கம்யூனிஸ்டு (மார்க்ஸிஸ்ட்) கட்சியின் மகளிர்ப் பிரிவின் முக்கிய தலை வரான பிருந்தாகாரத் அவர்களேகூட உள் ஒதுக்கீடுக்கு நாங்கள் எதிரியல்ல; ஆனால் அரசியல் சாசனத்தில் வழி யில்லை (ஃப்ரண்ட் லைன் 6.6.2008) என்று கூறி இருக்கிறார்.

33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றும் போதே உள் ஒதுக்கீட்டையும் சேர்த்துக் கொண்டால் என்ன தடை, என்ன சிக்கல்!
மனதில்தான் தடை இருக்கிறதே தவிர சட்டத்தை நிறை வேற்றுவதில் எந்தவிதமான தொழில் நுட்பத் தடையும் கிடையாதே!

ஏன் உள் ஒதுக்கீடு வற்புறுத்தப்படுகிறது? 1952ஆம் ஆண்டு மக்களவையில் பார்ப்பனப் பெண் உறுப்பினர்கள் 28.6 சதவீதம் பிற்படுத்தப்பட்டோர் 4.39 சதவீதம் 1952 முதல் நடந்து முடிந்த 15ஆவது மக்களவைத் தேர்தல் வரை பார்ப்பனப் பெண்களின் சதவீதம்தான் அதிகமாக இருந் திருக்கிறது. இந்த நிலையில் பெண்கள் மசோதாவில் உள் ஒதுக்கீடு வற்புறுத்தப்படுவது மிகவும் சரியானதே - நியாயமானதே!

உலகில் பெண்களுக்கு பாதுகாப்பாற்ற நாடுகளின் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது என்ற நிலையில், பெண்கள் பிரச்சினையை நாடாளு மன்றத்தில் எழுப்ப பெண்களால்தானே முடியும் - அந்த வலி ஆண்களுக்குத் தெரியும் என்று எதிர்ப்பார்க்கத்தான் முடியுமா? பிரதமராகவோ, முதல் அமைச்சராகவோ ஒரு பெண் வந்துவிட்டதாலேயே பெண்களுக்கு நல்லது நடந்து விடும் என்று எதிர்பார்க்க முடியாது என்பதை நிதர்சனத்தில் கண்டு கொண்டுதானே இருக்கிறோம்!

பெண்கள் மசோதாவை நிறைவேற்றிக் கொடுப்பதாக இருந்தால் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நீட்டிக்கக் கூடத் தயார் என்று அரசு தரப்பில் அறிவித்த நிலையில் கூட அதற்கு ஆதரவு தெரிவித்து எந்தக் கட்சியும் குரல் கொடுக்கவில்லையே ஏன்?

இடஒதுக்கீடு சட்டப்படி இல்லாவிட்டாலும் கட்சிகளே பெண்களைப் போதுமான எண்ணிக்கையில் நிறுத்தலாம் என்ற கருத்துக்கூட நாடாளுமன்றத்தில் பேசப்பட்டதுண்டு.

16ஆவது மக்களவைத் தேர்தலில் அதனை நடை முறையில் செய்து காட்டட்டுமே பார்க்கலாம்.

பெண்கள் வீதிக்கு வந்து போராடாதவரை இதற்குத் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.   இதில் தந்தை பெரியார் அவர்களின் கருத்துதான் சரியானதாகவும் இருக்க முடியும்!

                             ---------------------------"விடுதலை” தலையங்கம் 22-2-2014


உலகத் தாய் மொழி நாள் - இந்தி ஒழிந்த நாள்


உலகத் தாய் மொழி நாளில் இன்னொரு முக்கி யத்துவமும் நமக்கு உண்டு. இந்நாளில்தான் சென்னை மாநிலப் பிரதமராக இருந்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் அவர்களால் பள்ளிகளில் திணிக்கப் பட்ட (21.4.1938) இந்தி ஒழிக் கப்பட்ட நாள்  (21.2.1940).

இந்தி எதிர்ப்பு என்பது தமிழ், தமிழர், தமிழ்நாட் டின் வரலாற்றில் புதிய மைல்கல் - ஆரியப் பண் பாட்டுப் படையெடுப்பை புறமுதுகிட்டு ஓடச் செய்த ஒப்பற்ற புரட்சிப் போராட் டமாகும்.

சென்னை லயோலா கல்லூரியில் பேசிய பிரத மர் ராஜாஜி (24.1.1937) சமஸ் கிருதத்தைப் படிப்படியா கப் புகுத்தவே இந்தியைப் பள்ளிகளில் கொண்டு வந் துள்ளதாக வெளிப்படை யாகவே கூறினார்.

பள்ளிக் கூடங்களிலி ருந்தும், கல்லூரிகளிலிருந் தும் வெளியே வரும் மாணவர்களுக்கு நமது முன்னோர்கள் நமக்கு வைத்து விட்டுப் போன பெருமைகளின் சாவி போன்ற ஸம்ஸ்கிருதம் தெரியாவிட்டால் அது மகா பெரிய விபத்தாகும். அது பணம் இருக்கும் பெட்டி யின் சாவியைத் தொலைத்து விட்டு, சாப்பாட்டுக்குப் பிச்சை எடுப்பதற்கு ஒப் பாகும் என்று பேசினாரே!

இந்தியைப்பற்றி குடி அரசு இதழில் (7.3.1926) தமிழிற்குத் துரோகமும் இந்தியின் ரகசியமும் எனும் தலைப்பில் கட்டுரை ஒன் றினை எழுதினார் தந்தை பெரியார். - 91 ஆண்டு களுக்கு முன்பாகவே!

பிராமணரல்லாதாருக்கு ஏற்பட்ட பல ஆபத்துக் களில் ஹிந்தியும் ஒன்றாய் முடியும் போலிருக்கிறது.

பொதுவாக ஹிந்தி என் பது வெளி மாகாணங்களில் பிராமண மதப் பிரச் சாரம் செய்யக் கற்பித்துச் செய்யும் வித்தையாகி விட்டது.

இந்த ரகசியத்தை நமது நாட்டுப் பாமர ஜனங் கள் அறிவதேயில்லை. இரண்டொருவருக்கு அதன் இரகசியம் தெரிந் தாலும், பிராமணர்களுக்கு பயந்து கொண்டு தாங் களும் ஒத்துப் பாடி விடு கிறார்கள்.

யாராவது துணிந்து வெளியில் சொன் னால் இவர்களைத் தேசத் துரோகி என்று சொல்லி விடுகின்றார்கள் என்று அந்தக் கட்டுரையில் தந்தை பெரியார் குறிப்பிட்டுள் ளார்.  தந்தை பெரியார் ஆச்சாரியாரின் இந்தித் திணிப்பை எதிர்த்து போர்க் குரல் கொடுத்துக் களம் அமைத்தார் (3.6.1938) இந்தப் போராட்டத்தில் 73 பெண்கள், 32 குழந்தைகள் உட்பட 1269 பேர் கைது செய்யப்பட்டனர். நடரா சன், தாளமுத்து என்ற இரு வீரர்கள் சிறைச் சாலையில் களப்பலியானார்கள்.

இந்த இந்தி எதிர்ப்புக் காலக் கட்டத்தில்தான் சென்னையில் பெண்கள் மாநாடு கூட்டி (13.11.1938) ஈ.வெ.ரா.வுக்குப் பெரி யார் எனும் வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பட்டத்தை வழங்கிப் பெருமை பெற் றனர்.

இந்தி எதிர்ப்புதான் தமிழர்களை ஜாதிகளை மறந்து தமிழன் என்ற உணர்வின் கீழ் கொண்டு வந்து நிறுத்தியது. தமிழில் பெயர் சூட்டும் உணர்வு பிறந்தது. நமஸ்காரம் வணக் கம் ஆனது, ஸ்ரீமான் திருவாளர் ஆனதெல்லாம் இதற்குப் பிறகுதானே!

அன்று ஒழிக்கப்பட்ட இந்தி இடை இடையே தலை காட்டும் பொழு தெல்லாம் அதன் வாலை நறுக்கி வருவது திராவிடர் இயக்கம்தான்!

----------------------------- மயிலாடன் அவர்கள் 21-2-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

21.2.14

தூக்குத் தண்டனையைத் தூக்கிடுக!2011 நவம்பரில் டில்லியில்  நடைபெற்ற தூக்குத் தண்டனைபற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. கங்குலி முக்கியமான சில கருத்துக்களை எடுத்துரைத்தார்.

நமது சட்டத்தில் தூக்குத் தண்டனைக்கு இடம் தரப்பட்டுள்ளது. ஆனால் ஒருவருக்குத் தூக்குத் தண்டனை தருவது என்பது காட்டுமிராண்டித்தன மானது; வாழும் உரிமைக்கு எதிரானது; ஜனநாயக விரோதமானது; பொறுப்பற்றது. வெற்று அனுமானங் களால் ஒருவருக்கு நமது அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள வாழ்வதற்கான உத்தரவாதத்தை இது கேள்விக்குறியாக்கி விட்டது. ஒவ்வொரு நீதிபதியின் மன நிலையை பொறுத்து, அவர் முடிவெடுப்பதைப் பொறுத்து தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது என்று கருத்துத் தெரிவித்துள்ளார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பி என்று போற்றப்படும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், சட்டத்தை உருவாக்கிய அந்தக் கால கட்டத்தில் கூறிய கருத்து முக்கியமானதாகும். சாதாரண மக்கள் இயல்பாக அகிம்சையைப் பின்பற்றப் போவதில்லை என்றாலும், அகிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கருத்தை இயன்ற வரைக் கடைப்பிடிக்கவே செய்கிறார்கள். இதை மனதில் வைத்துத்தான் மரண தண்டனையை முற்றாக ஒழிப்பதே இந்தியா எடுக்கும் சரியான  முடிவாக இருக்கும் என்று சட்டத்தை உருவாக்கிய முக்கிய சிற்பியே கூறுகிறார் என்றால்; 60 ஆண்டுகளுக்குப்பிறகும், இதில் இந்தியா முடிவு எடுக்கத் தயங்குவது ஏன்?

காந்தியார் அவர்களை மகாத்மா என்று ஒப்புக் கொள்ளும் தேசியவாதிகள் இந்தப் பிரச்சினையில் காந்தியார் அவர்களின் கருத்து என்ன என்பதை அறிந்து கொண்டு அந்தத் திசையில் சிந்திக்கக் கூடாதா?

பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்ற நீதி முறை பாபிலோனியா மன்னன் ஹமுராபியின் காலத்துச் சட்டம்; பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண், உயிருக்கு உயிர் என்பது பழங்காலத்தைச் சார்ந்த தாகும். நாகரிகம் வளர்ச்சி அடைந்துள்ள இக்காலத் தில் பல்லுக்குப் பல் என்ற வாதம் கேலிக் கூத்தாகும். கண்ணுக்குக் கண் என்ற தண்டனை இருந்தால் உலகில் கண் பார்வையற்றவர்கள்தான் இருப் பார்கள் என்றாரே காந்தியார்.

உலகில் இன்று பெரும்பாலான நாடுகளிலும் தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டதே! தூக்குத் தண் டனையைச் சட்டத்தில் வைத்துக் கொண்டு இருக்கும் நாடுகள்கூட அதனைப் பெரும்பாலும் செயல்படுத்துவது கிடையாது என்பதுதான் உண்மை.

அய்.நா.வில் 2007இல் மரண தண்டனையை ஒழிப்பது தொடர்பான வாக்கெடுப்பில் தூக்குத் தண்டனை கூடாது என்று வாக்களித்த நாடுகளின் எண்ணிக்கை 104, எதிர்த்த நாடுகள் 54; வாக்கெடுப்பில் பங்கேற்காத நாடுகள் 29; அதே அய்.நா.வில் 2011இல் இதே பிரச்சினைக்கான வாக்கெடுப் பில் தூக்குத் தண்டனையை எதிர்க்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தது; தூக்குத் தண்டனைக்கு ஆதரவாக 41 நாடுகளும், எதிராக 111 நாடுகளும் வாக்களித்தன. வாக்கெடுப்பில் பங்கேற்காத நாடுகள் 34. தூக்குத் தண்டனை விதித்தால் கொலைக் குற்றங்கள்  குறைந்து போய் விடும் என்பதற்கான ஆதாரங்களும் இல்லை. பெரும்பாலும்  ஏழை எளியவர்கள் செல்வாக்கு இல்லாதவர்கள் மேல் முறையீடுசெய்யும் வாய்ப்பு இல்லாத வர்கள் தான் தூக்குத் தண்டனைக்கு ஆளாகிறார்கள்.

போபால் யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் நச்சு வாயு கசிவால் மரணம் அடைந்தோர் 22 ஆயிரம் பேர்கள், ஊனமுற்றோர் 5,74,367.

இந்த நிலைக்கு காரணமானவரை - பொறுப்பு ஏற்கவேண்டியவரை இந்திய அரசாங்கம் மிகவும் பாதுகாப்பாக விமானத்தில் ஏற்றி அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கவில்லையா? அது தொடர்பான வழக்கில், நிறுவனத்தின் வழக்குரைஞர் என்ன கூறினார்? It is an act of god, for which no human being was responsible என்று கூறவில்லையா? அந்த விபத்து கடவுளின் செயல் - அதற்கு மனிதர்கள் எவரும் பொறுப்பேற்க முடியாது என்று சொல்ல வில்லையா?
இந்தியாவில் 1999ஆம் ஆண்டு ஒரிசாவில் தொண் டூழியம் செய்து வந்த ஆஸ்திரேலிய நாட்டின் பாதிரியார் கிரகாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரு மகன்களையும் இந்துத்துவா பேர் வழிகள் உயிரோடு எரித்துக் கொன்ற வழக்கில் குற்றவாளி ரவிந்திரபால் சிங் (பஜ்ரங்தள்)குக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று மத்தியப் புலனாய்வுத் துறை கேட்டுக் கொண்டது; அந்த நேரத்தில் ஒரிசாவின் பெர்ஹாம்பூர் மறைஆயர் சரட்சந்திர நாயக், யாருக்கும் மரண தண்டனை அளிப்பதை திருச்சபை ஆதரிக்காது என்று கூறினார்.

காந்தியார் கொலை வழக்கில் நாதுராம் கோட்சே, ஆப்தே ஆகிய இருவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போது அந்தத் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்று காந்தியார் அவர்களின் மகன்கள் தேவதாஸ் காந்தி, இராமதாஸ் காந்தி ஆகியோர் உட்பட காந்தியார் அவர்களுக்கு நெருக்கமாக இருந்த சிலரும் கையொப்பமிட்டு மனு ஒன்றினை அன்றைய பிரதமர் நேரு அவர்களுக்கு அனுப்பியதுண்டு. ராஜீவ்காந்திகொலை வழக்கில் தண்டனை பெற்றவர் களுக்காக அத்தகைய மனுக்கள் வராமல் இருக்கலாம். 

உச்சநீதிமன்றம் சிறப்பான வகையில் செயல்பட்டு இருக்கிறது. இதன் முடிவில், இந்தியாவில் தூக்குத் தண்டனை ஒழிக்கப்படும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுமானால், அது மிகச் சிறந்த மனிதநேய செயல்பாடாக இருக்கும்!  தூக்குத் தண்டனை ரத்துச் செய் யப்பட வேண்டும் என்பதைத் திராவிடர் கழகம் தொடர்ந்து பல  மாநாடுகளிலும்  வலியுறுத்தியே வந்திருக்கிறது.

              -------------------------------"விடுதலை” தலையங்கம் 20-02-2014

20.2.14

மிருகமும் பக்ஷியும் மலமும் மூத்திரமும் கடவுளா?காந்தியும் காங்கிரசும் சாதித்ததென்ன?

பட்டுக்கோட்டை பொதுக்கூட்டம்
காந்தியும் காங்கிரசும் சாதித்ததென்ன?
சு.ம. இயக்கம்
மிருகமும் பக்ஷியும் மலமும் மூத்திரமும் கடவுளா?

தோழர்களே!

தோழர்கள் பொன்னம்பலம், அழகிரிசாமி ஆகியவர்கள் பேசுகையில் நீங்கள் சிரித்து ஆனந்தப்பட்டுக்கொண்டிருந்தீர்கள்.

நமது இழி நிலை

நமது கேவல நிலைமையையும், முட்டாள்தனத்தையும் நம்மைப் பார்ப்பனர்கள் எப்படி ஏமாற்றினார்கள் என்பதையும் விளக்கும்போது நமக்கு உண்மையான சுயமரியாதை உணர்ச்சி இருந்தால் சிரிப்பு வருமா? ஆத்திரமும், வெட்கமும் அல்லவா வரும்.

நமது இழிவானது நேற்று இன்று என்று இல்லாமல் ஆயிரக்கணக்கான வருஷங்களாக இருந்து வருவதால் நமது ரத்தம் வெட்கப்படுவதிற்கில்லாமல் இழிவிலேயே உறைந்து போய்விட்டது.

புரட்சி வேண்டும்

மனிதனுக்கு வெட்கமும், ரோஷமும் ஏற்படுவதற்கு ஆகவே சுயமரியாதை இயக்கம் ஏற்படுத்தப்பட்டது. சுயமரியாதை இயக்கம் மனித சமூகத்தையே மாற்றி அமைக்க ஏற்பட்டதாகும். இந்தக் காரியம் ஒரு பெரும் சமூகப் புரட்சியால் ஏற்பட வேண்டியதே ஒழிய சிரிப்பு விளையாட்டில் ஏற்படக் கூடியதல்ல. இதற்காக அனேக தொல்லைகளை அனுபவிக்க வேண்டி வரும்.

அனேக காரியங்களில் மற்றவர்களால் நாம் துன்பமும், இழிவும் அடையாமல் நம்மாலேயே நாம் இழிவுக்கும், கீழ்நிலைமைக்கும் ஆளாகிவருகிறோம். நம்மை நாம் திருத்திக்கொள்ளாமல் நமக்குள் ஒரு பெரிய மனமாறுதல் ஏற்படாமல் நமது சமூகம் மாறுதலடைவதென்பது ஒருநாளும் முடியாத காரியமாகும்.

சமூகத்தில் மேல் ஜாதி, கீழ் ஜாதி, அடிமை ஜாதி என்பவைகள் இருப்பதோடு ஆண் பெண் தன்மைகளில் உயர்வு தாழ்வும் இருந்து வருகிறது. இவை தவிர ஏழை, பணக்காரன், முதலாளி, தொழிலாளி தன்மையும் இருந்து வருகிறது.

இவற்றுள் சில இயற்கையாக ஏற்பட்டதாகவும், சில முயற்சியால் செயற்கையாக ஏற்பட்டதாகவும், இவ்வளவுக்கும் காரணம் மனிதன் அல்ல வென்றும், சர்வ வல்லமையும் சர்வ வியாபகமும் பொருந்திய கடவுளால் ஏற்பட்டதென்றும் சொல்லப்படுகிறது. இவற்றையே மேல் நிலையில் உள்ளவனும் கீழ்நிலையில் உள்ளவனும் நம்பிக் கொண்டிருக்கிறான்.

மூடநம்பிக்கை

இந்த மூடநம்பிக்கை தான் வெகுகாலமாக மனித சமூகத்தில் எவ்வித மாறுதலும் ஏற்படுவதற்கில்லாமல் தடுத்துக்கொண்டு வருகிறது.

சாதாரணமாக மனிதப் பிறவியில் கீழ் ஜாதி, மேல் ஜாதி அடிமை (பறை) ஜாதி என்பவை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. பல ஆயிரக்கணக்கான வருஷங்களாக இருந்து வருகிறது. இதற்கு ஆக நாளதுவரை யாரும் எவ்வித முயற்சியும் செய்யவில்லை.

ஏனெனில் செய்யமுடியாதபடி அவனவன் நம்பிக்கையைச் செய்து கொண்டான்.

ஜாதி வித்தியாசங்களுக்கும், ஜாதிக்கொடுமைக்கும் கடவுள் காரணம் என்று எண்ணிய பிறகு யாரால் தான் பரிகாரம் செய்ய முடியும்? எந்த மனிதனும் மற்ற ஜாதியைப்பற்றி சந்தேகப்பட்டாலும் தன் ஜாதியைப்பற்றி நம்பிக்கை யாகவும், மேன்மையாகவும் கற்பித்துக்கொண்டு மற்றவர்களைத் தாழ்த்தி பெருமையடைகிறான். சாஸ்திரங்களில் மதங்களில் அவற்றிற்கு ஆதாரங்கள் கண்டுபிடிக்கிறான். புராணங்கள் எழுதி வைத்துப் பெருமையடைகிறான்.

இந்தக் குணம் பார்ப்பான் இடமாத்திரமல்ல; எல்லா ஜாதியாரிடமும் இருந்து வருகிறது.

ஜாதி பேதம் ஒழிவதை இழிவாய்க் கருதுகிறான். ஜாதிக் கலப்பை விவசாரித்தனமாக எண்ணுகிறான். இந்த மனப்பான்மை ஜாதி ஒழிப்புக்கு எமனாய் இருக்கிறது.

அஸ்திவாரத்தில் கையை வைத்து ஜாதிகளை ஒழிப்பதற்கு இன்று இந்த நாட்டில் சுயமரியாதை இயக்கம் தவிர வேறு எந்த இயக்கமும் இல்லை என்பதை நன்றாய் ஞாபகத்தில் வையுங்கள்.

திருவள்ளுவர், கபிலர், ராமானுஜர் முதலிய புராணக்காரர்களும் பிரம்மசமாஜம், ஆரிய சமாஜம் முதலிய மத சம்மந்தமான சில புது முயற்சிகளும், மற்றும் எத்தனையோ சீர்திருத்த முயற்சிகளும் எல்லாம் உண்மையறியாமலும், உலக மெப்புக்கும் தனிப்பட்ட சமூக சுயநலத்தை முன்னிட்டும் செய்யப்பட்ட காரியங்களே தவிர, மனித சமூகத்தில் பிறவியின் பேரால் உள்ள ஜாதிபேதம் அடியோடு ஒழியத்தக்க மாதிரிக்கோ, ஒழியும் படியாகவோ செய்த காரியங்கள் அல்ல.

இதற்கு ஒரு உதாரணம் கூறுகிறேன். தயவு செய்து நடுநிலையுடன் கவனியுங்கள். ஜாதி வித்தியாசம் ஒழிய வேண்டும் என்று செய்யப்பட்டு வந்த முயற்சிகளால் இதுவரை ஜாதி வித்தியாசங்கள் குறைந்ததா அதிகப்பட்டு வந்ததா என்று யோசித்துப்பாருங்கள். நாகரீகம் என்பதே புது புது ஜாதிகள் உற்பத்தி செய்வதாகத்தான் இருந்து வருகின்றது.

ஆதலால் ஜாதியை அடியோடு ஒழிக்க எவரும் முயற்சித்ததில்லை. மற்ற பலஜாதி மக்களின் முயற்சிகள் எப்படி இருக்கின்றன என்று பார்த்தாலோ அவர்களும் தாங்கள் எப்படியாவது மேல் ஜாதிக்காரர்கள் என்று மதிக்கப்பட வேண்டும் என்கிற முயற்சிகளாகவே இருக்கின்றன. ஜாதி இல்லாதவர்களும் கலப்பு ஜாதிக்காரர்களும் தாங்கள் ஒரு கலப்பற்ற ஜாதியை சொல்லிக் கொள்ள முடியாமல் போய்விட்டதே என்று வெட்கப்படுகிறார்களே ஒழிய, தங்களைப் பொறுத்தவரை ஜாதி ஒழிந்ததே என்று யாரும் திருப்தியடைவதில்லை. இந்த தொல்லைகள் அடியோடு ஒழிய வேண்டுமானால் சுயமரியாதை இயக்கத்தில்தான் இடமிருக்கிறது; சுயமரியாதை இயக்கத்தால்தான் முடியும். மற்றபடி எப்படிப்பட்ட சீர்திருத்தவாதியானாலும் காரியத்திற்கு உதவவே உதவான்.

உதாரணமாக ஆசார சீர்திருத்தம் என்னும் பேரால் இந்தியாவில் சுமார் 50 வருஷங்களுக்கு முன்பிருந்தே பல அறிஞர்கள், மகாராஜாக்கள், பெரும் பதவியாளர்கள் முதல் எத்தனையோ பேர்கள் பாடுபட்டார்கள். ஒருவராலும் ஒரு சிறு காரியமும் செய்யமுடியவில்லை.

முந்திரிக்கொட்டை காந்தியார்

எல்லாவற்றிற்கும் மேல் முந்திரிக்கொட்டை மாதிரி தோழர் காந்தியார் புறப்பட்டார். ஜாதியைப் பற்றி பேசாமல் ங்பேசினால் பார்ப்பனர் நிஷ்ட்டூரம் வருமே என்று பயந்துசி தீண்டாமையை ஒழிக்கிறேன் என்று புறப்பட்டார். 10, 15 வருஷம் விளம்பரம் பெற்றார். பல பல லக்ஷம் ரூபாய்கள் வசூல் செய்தார். இன்று வரையில் அவர் வாயில் ஜாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று ஒரு வார்த்தைகூட சொல்ல முடியாமல் போய்விட்டது. அதற்குப் பதிலாக ஜாதிகளை (வர்ணாச்சிரம முறையை) காப்பாற்ற வேண்டியது தனது கடமை என்று சொல்லிவிட்டார்.

காரணம் என்ன? தனது மகாத்மா பட்டம் நிலைக்க வேண்டுமானால் அவர் "ஜாதிகளை காப்பாற்றுகிறேன்" என்று சொல்லித்தானாகவேண்டும் என்கிற நிலைக்கு வந்து விட்டதேயாகும்.

சுயமரியாதை இயக்கம் துணிந்து சகல ஜாதியும் ஒழிந்துதான் ஆகவேண்டும் என்று சொல்லுவதற்கு காரணம் அது மனித சமூகத்தினிடமிருந்து எவ்வித பெருமையையும் மதிப்பையும் எதிர்பார்க்கவில்லை. ஜாதி ஒழிப்புக்கு தடையாகக்கொண்டு வந்து போடப்படும் எந்த முட்டுக் கட்டையையும் லட்சியம் செய்வதில்லை.

மேல் ஜாதிக்காரர்கள் என்பவர்களின் எவ்வித சூழ்ச்சித் தொல்லை யையும் சமாளிக்கத் தயங்குவதில்லை. இந்தக் காரணங்களாலேயே சுய மரியாதைக்காரர்களால் சிறிதளவாவது வேலை செய்ய சாத்தியமாகின்றது.

நாளதுவரை ஜாதி வித்தியாசம் இருக்கவேண்டும் என்பதற்கு எதிரிகளால் ஏதாவது ஒரு யோக்கியமான காரணம் சொல்லப்பட்டதா என்று யோசித்துப் பாருங்கள்.

ஜாதி எப்படி உண்டாயிற்று

கடவுளால் ஜாதிகள் உற்பத்தி செய்யப்பட்டது என்பதும், மத சாஸ்திரங்களில் ஜாதிகள் இருக்கின்றன என்பதும் தவிர வேறு ஏதாவது சொல்லப்பட்டதா என்று யோசித்துப்பாருங்கள்.

சமீபத்தில் சென்னையில் ஒரு பார்ப்பனர் சங்கராச்சாரி என்ற பட்டத்தை உடையவர் மாத்திரம் ஜாதிக்கு இயற்கையில் ஆதாரமிருக்கிற தென்றும், பார்ப்பானையும் பறையனையும் அவனது ரத்தத்தை பரிசோதித்துப் பார்த்து கண்டுபிடித்து விடலாம் என்றும் சொன்னதாகப் பத்திரிகையில் பார்த்தேன்.

இதைத் தவிர வேறு யாரும் ஜாதி வித்தியாசத்துக்கு ஆதாரம் சொல்லவே இல்லை.

மற்றபடி அனேக ஜாதிகள் ஏற்பட்டதற்குக் காரணம் ஜாதி சங்கிரகம் என்னும் நூலில் வருணாச்சிரம முறைப்படி ஏற்பட்ட நான்கு ஜாதிகள் ஒன்றோடொன்று கலந்தும், மாறியும், கலப்பு முறையிலும், விவசாரித்தனத் தாலும் ஏற்பட்டவைகள் என்று கூறி இன்ன இன்ன ஜாதி கலந்து புணர்ந்ததால் இன்ன ஜாதி உண்டாகி இருக்கிறது என்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

இது சங்கராச்சாரி என்பவர் கூறிய அயோக்கியத்தனத்தை விட மோசமான அயோக்கியத்தனம் என்றுதான் சொல்லவேண்டும்.

ஏனெனில் இன்று உள்ள சகல உட்ஜாதியும் விவசாரித்தனத்தால் ஏற்பட்டது என்றால் இதை யார் தான் சகிக்க முடியும்?

அன்றியும் இந்த இரண்டு காரியமும் இன்று அமுலில் இல்லை. ஜாதி மாறிய புணர்ச்சிகள் தினமும் லட்சக்கணக்காக நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதன் மூலம் குழந்தைகள் பிறந்துகொண்டுதான் இருக்கின்றன.

இவைகளால் எவ்வித ஜாதியும் புதிதாய் உண்டாவதில்லை.

ஆகவே இந்த தத்துவம் வருணாச்சிரம ஜாதியான நான்கு ஜாதியின் கீழ் வராதவர்களுக்கு பெரிய இழிவை உண்டாக்குவதற்கும் பயன்படக் கூடியதாய் இருக்கின்றதே தவிர மற்றபடி ஜாதி பிரிப்பதற்கோ, அதனால் ஏதாவது பயன் உண்டாவதற்கோ பயன்படுவதில்லை.

சங்கராச்சாரி

மற்றும் ரத்தத்தைக் கொண்டு ஜாதி கண்டுபிடித்து விடலாம் என்பதும் மற்ற மக்களின் சுயமரியாதை அற்ற தன்மையை ஆதாரமாகக் கொண்டு சொல்லப்படுவதே தவிர கேட்பவர்களுக்கு மானம், ஈனம், ரோஷம், அறிவு இருக்கும் என்று ஒருவன் கருதி இருந்தால் இவ்வளவு பெரிய அயோக்கியத் தனமான வார்த்தைகள் பேச இடமே இருந்திருக்காது. இந்தப்படி ஒரு சாதனம் இருக்குமானால் ரத்தத்தை பார்த்து பரீட்சிக்கக்கூடுமானால் அப்பரீக்ஷையின்படி அந்த சங்கராச்சாரியாரே "கீழ்" ஜாதியில் குறிக்கப்பட வேண்டியவராகி விடுவார் என்பதோடு இன்றைக்கு 100க்கு 99 பார்ப்பனர்கள் கதியும் அப்படித்தான் ஆகவேண்டி வரும் என்று உறுதியாய்ச் சொல்லுவோம். ஏனெனில் உள் ஜாதிகள் ஏற்பட்டதற்குக் காரணம் கலப்புப் புணர்ச்சி என்று மற்றொரு சாஸ்திரம் சொல்லுவதேயாகும்.

ஏழ்மைக்கு பரிகாரமில்லை

இவை நிற்க, ஆண் பெண் உயர்வு தாழ்வு தன்மைகளும், முதலாளி கூலிக்காரன் தன்மைகளும் இதுபோலவே கடவுள் பெயரையும், மதத்தின் பெயரையும் சொல்லி ஏமாற்றுவதாலேயே ஏற்பட்டதே தவிர வேறில்லை.

பெண் மக்களின் நிலைமையும், கூலிக்கார ஏழை மக்களின் நிலைமையும் இன்று ஒரு மனிதனால் சகிக்கக்கூடியதாய் இருக்கிறதா என்பதை யோசித்துப் பாருங்கள். கடவுளும் மதமும் இல்லாதிருந்தால் இவர்கள் நிலைமைக்கு வேறு ஏதாவது சமாதானம் சொல்ல முடிந்திருக்குமா?

எந்த மகானாலும், எந்த அவதார புருஷனாலும் ஏழ்மைத் தன்மைக்கும், அடிமைத் தன்மைக்கும் நமது நாட்டில் பரிகாரம் சொல்லப்படவே இல்லை. மேலும் மேலும் ஏழ்மைக்கும், அடிமைக்கும் சாதகமான சாதனங்களே ஏற்பட்டு வருகின்றன.

இந்த இருபதாவது நூற்றாண்டில் கூட பழமையை எதாஸ்திதியைக் காப்பாற்ற பலமான முயற்சிகள் நடைபெறுகின்றதே ஒழிய அவற்றை மாற்றுவதற்கு எவ்வித முயற்சியும் இல்லை. ஆதலாலே தான் சுயமரியாதை இயக்கம் ஒன்றே தான் பழமைத் தொல்லைகளை ஒழித்து எதாஸ்திதித்து வத்தை அடியோடு அழிக்கவேண்டும் என்கின்றது.

காங்கிரசு

சுயமரியாதை இயக்கத்துக்கு விரோதம் எல்லாவற்றையும் விட காங்கிரசே யாகும். அது ஒரு மத பாதுகாப்பு ஸ்தாபனமே ஒழிய மற்றபடி மனித சமூகத்துக்கு அதனால் கடுகளவு பிரயோஜனமும் ஏற்படப்போவ தில்லை என்பது உறுதி. இந்த நாட்டுக்கு இயற்கையாய் ஏற்பட வேண்டிய முற்போக்கைக்கூட காங்கிரஸ் தடுத்து தேசத்தை பின்னணிக்கு கொண்டு போய்விட்டது. மற்ற நாடுகளில் இந்த 20 வருஷத்தில் ஏற்பட்ட முற்போக்குகளில் 1000ல் ஒரு பங்குகூட நமது நாட்டில் ஏற்படவில்லை. ஒரு பணக்காரத்தன்மை கொண்ட ஆட்சியை மக்களுக்காக யாதொரு காரியமும் செய்யவிடாமல் இந்த நாட்டில் தடுத்து காப்பாற்றி வருவது நமது நாட்டு மத ஸ்தாபனமாகிய காங்கிரசேயாகும். காங்கிரசுக்கு ஜாதிமதச் சண்டை தவிர வேறு என்ன கொள்கை இருக்கிறது? வேறு என்ன வேலைதான் அது செய்து இருக்கிறது? என்று யோசித்துப் பாருங்கள்.

காந்தியார் காங்கிரசுக்குள் அடி வைத்தது முதற்கொண்டு ஜாதி மதச் சண்டைகளும், ஜாதி மத பாதுகாப்புகளும், ஜாதி மத உணர்ச்சிகளும் அல்லாமல் வேறு ஏதாவது ஒரு சிறு நன்மையாவது மக்களுக்கு ஏற்பட்டதாகச் சொல்ல முடியுமா? என்று கேட்கின்றேன்.

காந்தித் திட்டம் - தீண்டாமை விலக்கு

காந்தியார் 1920ல் மனித சமூக நன்மைக்கு என்று நான்கு திட்டங்கள் வகுத்தார். அதாவது தீண்டாமை விலக்கு, இந்து முஸ்லீம் ஒற்றுமை, மது விலக்கு, கதர் இந்த நான்கும் என்ன கதி அடைந்தது.

தீண்டாமை விலக்கு என்பது தீண்டாதவர்கள் என்பவர்கள் இந்து மதத்தை விட்டு விலகினால் ஒழிய தீண்டாமை விலகாது என்கின்ற நிலைமைக்கு வந்துவிட்டது. 1923ல் நான் இதை ஒரு காங்கிரஸ் கூட்டத்தில் சொன்னபோது என்னை எல்லோரும் வெறுத்தார்கள். 1928, 29ல் நான் சொல்லும்போது சிலர் பொறுமை காட்டினார்கள்; சிலர் கஷ்டப்பட்டார்கள். ஆனால் அது இன்று இந்தியாவின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாய் முடிந்துவிட்டது. தீண்டாமை போக வேண்டுமானால் இந்து மதத்தில் இருந்துகொண்டு முடியாது; காங்கிரசிலும் முடியாது; காந்தியாராலும் முடியாது. இந்து மதத்தைவிட்டு வேறு மதத்திற்கு அதுவும் முஸ்லீம் மதத்துக்குப்போனால் தான் முடியும் என்கின்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இது சரியா தப்பா என்பது ஒரு புறமிருந்தாலும் காந்தியாரின் தீண்டாமை விலக்கு தத்துவம் இன்று இந்தியாவில் இந்த நிலையை உண்டாக்கிவிட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்து முஸ்லீம் ஒற்றுமை

அதுபோலவே இந்து முஸ்லீம் ஒற்றுமையும் இந்தியாவில் இந்து ராஜ்ஜியம் ஏற்படுவதா? முஸ்லீம் ராஜ்யம் ஏற்படுவதா என்கின்ற நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டது. 20 வருஷத்துக்கு முன் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இருந்த ஒற்றுமை கூட இன்று அடியோடு ஒழிந்துபோய் இந்து ராஜ்யத்தை விட பிரிட்டிஷ் ஆட்சியே மேல் என்று முஸ்லீம்களும், முஸ்லீம் ராஜ்யத்தை விட பிரிட்டிஷ் ஆட்சியே மேல் என்று இந்துக்களும் சொல்லும்படியான நிலைமை உண்டாகிவிட்டது.

தீண்டாமை ஒழிந்தாலொழிய சுயராஜ்ஜியம் ஏற்படாதென்றும், இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்பட்டாலொழிய சுயராஜ்யம் ஏற்படாதென்றும், தீண்டாமை ஒழியாமலும் இந்து முஸ்லீம் ஒற்றுமை இல்லாமலும் சுயராஜ்யம் கிடைத்தாலும் நான் ஏற்கமாட்டேன் என்றும் சொன்ன காந்தியார் இன்று பெரியதொரு கரணம் போட்டு தலைகீழ் மாற்றமடைந்து "சுயராஜ்யம் வந்த பிறகுதான் இந்து முஸ்லீம் ஒற்றுமை தானாகவே ஏற்படும்" என்றும் "தீண்டாமையும் தானாகவே ஒழியும்" என்றும் சொல்லிவிட்டார்.

இந்த மாதிரி அவர் சொன்ன பிறகே முஸ்லீம்களும், தீண்டாதவர்களும் ஒன்று சேர்ந்து "சுயராஜ்யம் கிடைத்தால் நம் இரு சமூகமும் இந்துக்களால் அழுத்தப்பட்டுவிடும்" என்று பயந்து "எங்களுக்கு உரிய பங்கைக் கொடுத்துவிட்டு சுயராஜ்யப் பேச்சைப் பேசுங்கள்; இல்லாவிட்டால் சுயராஜ்யமே வேண்டாம்" என்று சொல்ல வேண்டியவர்களாகி விட்டார்கள்.

இதன் பயனே இன்று தீண்டாதவர்கள் இந்துமதத்தை விட்டு விலகுவதும் முஸ்லீம் மார்க்கத்தில் போய்ச்சேருவதுமாய் ஆகிவிட்டது. தினம் தினம் பலர் சேர்ந்தும் வருகிறார்கள்.

இந்த இரண்டோடு அல்லாமல் தென்னாட்டில் பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினை முற்கூறிய இரண்டு பிரச்சினைக்கும் சிறிதும் இளைத்ததாக இல்லாமல் வளர்ந்துகொண்டே வருகிறது.

இவை எல்லாம் எந்தக் காலத்தில் வெடித்து இரத்தக் களரியை உண்டாக்குமோ என்று ஒவ்வொரு நிமிடமும் பயப்படவேண்டியதாய் இருக்கிறதே தவிர, ஏதாவது ஒரு வழியில் சிறிதாவது அடங்கிற்று என்று சொல்லும்படியான மாதிரியில் இல்லை.

ஆகவே காந்தியார் அரசியல் போர்வையை போர்த்திக்கொண்டு மத இயல் வேலையைச் செய்துவரும் ஒரு கபட சன்யாசி என்றே முஸ்லீம்களும், இந்துக்களில் பார்ப்பனரல்லாதாரும், தாழ்த்தப்பட்ட மக்களும் உறுதியாய் நம்பிவிட்டார்கள். இதற்கு ஆதாரம் பார்ப்பனர்களும், இந்து மத வெறியர்களும் காந்தியாரை ஆதரிப்பதும் அவரை மகாத்மாவாக்குவதும் ஆகிய ஒன்றே போதுமானது.

மதுவிலக்கு

மற்றப்படி காந்தியார் மதுவிலக்குப் பிரச்சினையில்தான் ஆகட்டும் எந்த அளவுக்கு வெற்றிப்பெற்றார் என்பதை யோசித்துப் பாருங்கள். மதுவிலக்கு மறியலுக்காக ஜெயிலுக்குப் போனோம். காந்தியார் எதிர்பார்த்ததற்கு மேலாகவே ஜெயிலுக்குப் போனோம். எங்கள் குடும்பத்தில் மாத்திரம் சுமார் 1000க்கு மேற்பட்ட தென்னை மரங்கள் வெட்டி எறியப்பட்டன. குடும்ப சகிதம், மனைவி தங்கை சகிதம் மறியல் செய்தோம். மற்றும் பதினாயிரக்கணக்கான பேர்களை மறியல் செய்யும்படியும் செய்தேன். எல்லாம் ஏமாற்றமாய் முடிந்தது. அரசியல் காரியங்களுக்காக நம்மை ஏமாற்றிவிட்டதாக காந்தியாரே, அவரது பிரதம சிஷ்யர்களே பெருமை அடையும்படியாக ஆகிவிட்டது. மதுவிலக்குத் திட்டம் போடும் போது நமது நாட்டில் செலவான கள்ளு, சாராயத்தைவிட இப்போது அதிகமாகவே செலவாகின்றது.

கள்ளு, சாராயக் கடை வியாபாரிகள் வீட்டிலேயே காந்தியார் தங்கவும், அவர்களையே இன்று எலக்ஷன்களில் நிறுத்தி வெற்றியை உண்டாக்கிக் கொடுக்கவும் காங்கிரஸ் உழைக்கின்றது.

சர்க்காரால் செய்த மதுவிலக்குப் பிரசாரத்தையும் காங்கிரஸ் பழிகூறி ஒழித்து விட்டது.

கடைசியாக காந்தியாரும் காங்கிரசும் இப்போதுதான் தான் இதுவரை செய்துவந்த காரியங்கள் மறியல்கள் இது விஷயமாய் சர்க்கார் உத்திரவு முதலியவைகளை மீறியவைகள் எல்லாம் முட்டாள் தனம் என்று கருதி எந்த இடத்தில் தவறு செய்ததோ அந்த இடத்திற்கு வந்திருக்கிறது.

காந்தியாரின் இன்றைய நிலை 1916ம் வருஷத்தில் இந்தியா எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலைக்குப் போயிருக்கிறது என்பதைத் தவிர வேறில்லை.

இந்த 20 வருஷ ஊக்கம், உழைப்பு, உணர்ச்சி ஆகியவை எல்லாம் அடியோடு பாழாக்கப்பட்டது. காந்தியார் இனி புதிதாக திட்டம் போட வேண்டிய நிலைக்கு வந்து மயக்கத்தில் இருக்கிறார்.

1916ம் வருஷத்தில் இருந்த அரசியல் சுதந்திரத்தை விட இன்று மோசமாகவும், மக்களுக்கு வரி அதிகமாகவும், செலவு அதிகமாகவும் இருக்கிறதே தவிர காந்தியாலோ காங்கிரசாலோ கடுகளவாவது முற்போக்கு ஏற்பட்டதாகச் சொல்வதற்கில்லை.

கதர்

கதர் விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் தோழர் காந்தியாரின் திட்டம் அடியோடு தோல்வி அடைந்து விட்டது, அவனவனுக்கு வேண்டிய உடை அவனவன் நூற்று நெய்து அணிந்துகொள்ள வேண்டுமென்பதே கதர் திட்டத்தின் தத்துவமாகும். அந்தப்படியே நானும் பிரசாரம் செய்து நானும் நூற்றுப்பார்த்தேன். லக்ஷரதிபதி தாய்மாரையும், மனைவிகளையும், மக்கள்களையும் நூற்கச் செய்தேன். கடைசியாக அக்கொள்கை மக்களை காட்டுமிராண்டித் தனமான காலத்துக்குக் கொண்டு போவதற்குச் செய்யப்படும் சூழ்ச்சியே தவிர பொருளாதாரத்துக்கும், வேறு தேச முன்னேற்றத்துக்கும் சிறிதும் சம்மந்தப்பட்டதல்ல என்பதை நன்றாய் உணர்ந்தேன். இன்று அதன் யோக்கியதையும் அப்படியே ஆகி விட்டது.

இன்று கதருக்குள்ள யோக்கியதை யெல்லாம் எலக்ஷனுக்கு ஒரு சூழ்ச்சியாகவும் சில தனிப்பட்ட ஆட்களுக்கு வயிற்றுப்பிழைப்புக்கு மார்க்கமாகவும், பகுத்தறிவும் சுயமரியாதையும் உடைய மக்களை காங்கிரசில் சேர்க்காமல் இருப்பதற்காகவும், சில அடிமைகளை வளர்ப்பதற் காகவும் ஒரு சாதனமாய் இருந்துவருகிறதல்லாமல் வேறு என்ன காரியத்துக்கு பயன்படுகின்றது என்று யோசித்துப் பாருங்கள்.

கெஜம் 2லீ அணாவுக்கு கிடைக்கும் மில் துணிக்கு பதிலாக கெஜம் 12 அணா 14 அணா போட்டு கதர் வாங்கினாலும் அதற்கு ஈடாக்க முடியாத நிலையில் இருந்து வருவதும், 18 வருஷ காலமாக கோடிக்கணக்கான ரூ. செலவு செய்து பிரசாரம் செய்தும் இந்தியா முழுதும் 1000க்கு ஒருவர் வீதம்கூட பெண்களில் 10000க்கு ஒருவர் வீதம்கூட மக்கள் வாங்கிக் கட்ட அமலுக்கு கொண்டுவரமுடியாமல் இருக்கிறதென்றால் 10000க்கு ஒரு பெண்கூட வாங்கிக்கட்ட உதவாமலும் முடியாமலும் இருக்கிறதென்றால் கதர் திட்டம் வெற்றியடைந்ததா என்று பாருங்கள்.

உப்பு சத்தியாக்கிரகம்

உப்பு சத்தியாக்கிரகத்தின் யோக்கியதையும் உடும்பு வேண்டாம் கை விட்டால் போதும் என்கின்ற மாதிரியில் இர்வின் பிரபு இடம் மண்டி போட்டு இனிமேல் சத்தியாக்கிரகம் செய்வதில்லை என்று எழுதிக்கொடுத்து விட்டு ஜெயிலில் அடைபட்டுக்கிடந்தவர்களை மீட்டுக்கொண்டு வந்ததோடு முடிவடைந்தது.

ஆகவே காந்தியாரின் திட்டங்கள் எல்லாம் அடியோடு தோல்வி அடைந்தும் அவரது மகாத்மா பட்டம் மாத்திரம் இன்று கோவில்களுக்குள்ளும், தேர்கள் மீதும், திருவிழாக்களிலும் விளங்கும்படி பிரசாரம் செய்யப்பட்டு வருகிறதில் குறைவில்லை.

இந்த நிலையில் வாலிபர்கள் பலருக்கு காங்கிரஸ் மயக்கமும், காந்தி பைத்தியமும் இன்னும் இருந்து வருவதை நான் பார்க்கிறேன்.

தேர்தல்களுக்கு காந்தி பெயரையும், காந்தியார் பேரால் வசூலித்த பணத்தையும் கொடுத்து வாலிபர்களை ஏற்படுத்தி மதப் பிரசார முறையில் வேலை செய்வதின் பயனே இந்த மயக்கத்துக்கும், பைத்தியத்துக்கும் காரணம் என்பதே எனதபிப்பிராயம்.

இப்படிப்பட்ட மூட ஜனங்கள் சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி குறைகூறுவதிலும், பழி சுமத்துவதிலும் அதிசயம் காணமுடியாது.

இந்த 10, 12 வருஷ காலமாய் சுயமரியாதை இயக்கம் செய்துவந்த வேலைகளை மக்கள் சரியானபடி உணராமல் சுயமரியாதை இயக்கம் நாஸ்திக இயக்கம், மதமற்ற இயக்கம் என்று பார்ப்பனர்கள் செய்யும் விஷமப் பிரசாரத்தைத்தான் தெரிந்துகொண்டிருக்கிறது.

கடவுளும் மதமும்

கடவுளும் மதமும் உலகில் ஆயிரம் வருஷத்துக்கு முன் இருந்ததைவிட எவ்வளவோ மறைந்தும் மாறுதலடைந்தும் சீர்திருத்தம் பெற்று இருக்கிறது. கடவுளால் மதத்தினால் பிழைக்கும்படி வாழ்க்கை ஏற்படுத்திக் கொண்ட கூட்டம் தவிர சமூகம் தவிர மற்ற இடங்களில் கடவுளும், மதமும் எவ்வளவோ குறைவடைந்து வருகின்றன.

உருவமில்லாத பெயரில்லாத கடவுள்கள் தோன்றிவிட்டன. மத சின்னமில்லாத மதங்கள் தோன்றிவிட்டன. இரண்டையும்பற்றி கவலைப் படாமல் தங்கள் தங்கள் வேலையை கவனிக்கும்படியான உணர்ச்சிகளும் தோன்றி விட்டன.

தங்களுக்கு அதைப்பற்றிய கவலை யில்லாமல் மற்றவனை ஏய்க்கவும், கட்டுப்படுத்தவும், அடிமையாக்கவும் மாத்திரமே இன்று கடவுளும் மதமும் வெகு மக்களால் கையாளப் படுகின்றதே ஒழிய வேறில்லை.

சகல துறைகளிலும் உலகம் முற்போக்கடைவது போலவே கடவுளிலும் மதத்திலும் கூட உலகம் முற்போக்கடைந்து வருகிறது. சுயமரியாதை இயக்கம் இந்த க்ஷணமே எல்லோரையுமே கடவுள் மத நம்பிக்கையை விட்டுவிடும்படி கட்டாயப்படுத்தவில்லை.

நமக்கு புரியாததும், நம்மால் அறிய முடியாததும் குணம், உருவம், சலனம் இல்லாததும் ஆன கடவுளைப்பற்றி சுயமரியாதை இயக்கத்துக்கும் கவலையில்லை.

மற்றபடி கடவுளைப்பற்றி தெரிந்துவிட்டதாகச் சொல்லுவதும் அதற்கு உருவம், பெயர், குணம், சலனம் ஏற்படுத்துவதும் அதன் மீது பொறுப்பைச் சுமத்துவதும் மனிதன் மற்றவர்களால் அடையும் கொடுமைக்கும், இழிவுக்கும் பொறுப்பாக்குவதுமான கடவுள் உணர்ச்சியையே சுயமரியாதை இயக்கம் குறைகூறுகிறது. மற்றும் கண்டதெல்லாம், நினைத்த தெல்லாம் கடவுள் என்கின்ற உணர்ச்சியையும் ஆயிரக்கணக்கான கடவுள்கள் உணர்ச்சியையும் ஒழிக்கவேண்டும் என்கின்றது.

இன்று ஒரு இந்துவால் எவை எவை எல்லாம் கடவுள் என்பதாக மதிக்கப்படுகின்றது என்றால் மரத்தில் ஒரு கூட்டம் கடவுளாக மதிக்கப்படு கிறது. புல் பூண்டுகளில் ஒரு கூட்டம் கடவுளாக மதிக்கப்படுகின்றது. மலத்தில் ஒரு கூட்டமும், பூச்சி புழுக்களில் ஒரு கூட்டமும், மிருகங்களில் பன்றி, நாய், கழுதை, மாடு முதலிய ஒரு கூட்ட மிருகமும், பக்ஷியில் கருடன், காக்காய், கோழி முதலிய ஒரு கூட்டமும், கல்லுகளிலும், மண்களிலும் ஒரு கூட்டமும், காகிதங்களிலும் எழுத்துக்களிலும் ஒரு கூட்டமும், மனிதர்களில் ஒரு கூட்டமும் இன்று மனிதனால் கடவுளாகப் பாவிக்கப்பட்டு பூஜை, வணக்கம், பலி முதலியவை செய்து ஏராளமான பொருள்கள் நாசமாக்கப் பட்டு வரப்படுகின்றது. இந்த முட்டாள் தனங்களையும் மோசடி கருத்துக்களையும் முதலில் ஒழிக்க வேண்டுமென்று தான் சு.ம. இயக்கம் சொல்லுகிறது.

இதை தைரியமாய் எடுத்துச் சொல்ல இன்று இந் நாட்டில் சுயமரியாதை இயக்கம் ஒன்றுதான் இருக்கிறது. அது இந்த மாதிரியான கடவுள் உணர்ச்சிகளை ஒழித்துத் தீருவதென்றே கங்கனம் கட்டிக்கொண்டு உயிர் வாழுகின்றது.

நாஸ்திக இயக்கம் என்று சொல்வதாலேயே அது பயந்துகொள்ளப் போவதில்லை. கடைசிவரை அது உழைத்துத்தான் தீரும். மதவிஷயத்திலும் இப்படித்தான் இருந்து வருகிறது. ஆகவே சுயமரியாதை இயக்கம் இன்னது என்றும் காங்கிரஸ் இயக்கம் இன்னது என்றும் உணர்ந்து உங்கள் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து பிறகு உங்கள் இஷ்டப்படி நடவுங்கள். விஷமப் பிரசாரத்துக்கும் ஏமாற்றும் பிரசாரத்துக்கும் ஆளாகாதீர்கள்.

------------------------------------ 23.03.1936 ஆம் நாள் திங்கட்கிழமை மாலை பட்டுக்கோட்டை போஸ்டாபீசுக்கு எதிரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் 24.03.1936 இல் முத்துப் பேட்டைக்கு அடுத்த புத்தகபுரம் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் தந்தைபெரியார் அவர்கள்  ஆற்றிய சொற்பொழிவின் விளக்கம்.- “குடி அரசு” சொற்பொழிவு 05.04.1936