Search This Blog

13.2.14

கிரிக்கெட் சூதாட்டம்: அய்.பி.எல். கிரிக்கெட்டைத் தடை செய்க!


தமிழர் தலைவர் அறிக்கை
ஊழல், லஞ்சம் என்பது பற்றி மக்கள் மத்தியில் பெரிய அளவுக்கு பிரச்சினை இருந்து வருகிறது. ஊழல், லஞ்சம், பேரம், சூதாட்டம் எங்கு நடந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியது தான் - சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வும் வேண்டியது தான்.

ஆனால் நம்நாட்டு ஊடகங்கள் அரசியலில் நடை பெறும் ஊழல்களைப் பற்றித்தான் ஓங்காரக் கூச்சல் போடுகின்றன.

திறமையைப் பயன்படுத்தித் தீரவேண்டிய விளையாட் டில் கூட சூதாட்டம் நடைபெறுகிறதே!. விளையாட்டுகளில் கிரிக்கெட் சூதாட்டம் (மேட்ச் பிக்ஸிங்) தான் பிரதான மானது.

மற்ற விளையாட்டுகளில் சூதாடுவது கொஞ்சம் கடினம்! கிரிக்கெட்டில் அதற்கு தாராளமான அளவு இடம் உண்டு. மேலும் பணம் காய்ச்சித் தொங்கும் மரமாக -  சந்தையாக அது ஆகிவிட்டதால் சூதாட்டம் பெரிய அளவிற்கு சூடு பிடிக்கிறது. எத்தனையாவது ஓவரில் எந்த பந்தை எப்படி வீச வேண்டும்? எப்படி அவுட்டாக வேண்டும்? என்பது வரை முன்னதாகவே முடிவு செய்யப்படுகிறது. இதற்கு உடன் படும் விளையாட்டுக்காரர்களை வெட்கம் கெட்டவர்கள் என்றுதான் கூறிட வேண்டும்.

பார்ப்பனர் - பணக்காரர் - பனியாக்களின் முக்கூட்டு ஒப்பந்தம் - இதில் புகுந்து விளையாடுவதால் கமுக்கமாக அமுக்கி விடுகிறார்கள்.

சூதாட்டம்

இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கக் கூடிய சீனிவாசன் அவர்களின் மருமகன் குருநாத் மெய்யப் பன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பொறுப் பாளர் ஆவார். அதே போல ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் ராஜ் குந்தரா உள்ளிட்டோர் அய்பிஎல் அணிகளின் மீது பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டுள் ளனர் என்பது நீதிபதி முகுல்முத்கல் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குருநாத் மெய்யப்பரின் மாமனார் - இப்பொழுது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் என்பதையும் தாண்டி, அகில உலக அமைப்பின் தலைவராகவும் பெரிய பதவிக்குச் சென்றுள்ளார். கிரிக்கெட்டை பொறுத்தவரை உயர்ஜாதிப் பார்ப்பனர் களின் தனி உடைமையாகவே பெருமளவுக்கு ஆகிவிட் டது. இல்லாவிட்டால் இந்திய மண்ணுக்குரிய ஹாக்கிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல், அந்நிய நாட்டு விளை யாட்டான கிரிக்கெட்டை முதன்மைப் படுத்துவார்களா?  இங்கு மட்டும் சுதேசியம் காணாமல் போய்விடும்.

டெண்டுல்கர் என்ற பார்ப்பனரைத் தேர்ந்தெடுத்து மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்ததோடு பாரத ரத்னா பட்டமும் வழங்குகிறார்கள் என்றால் இதன் பொருள் என்ன?

கிரிக்கெட்டில் கூட உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்தவர்கள் கபில்தேவும், தோனியும் அணித்தலைவராக இருந்தபோதுதானே!

இவர்கள் இருவரும் பார்ப்பனர் அல்லாதார் என்பதால் பாரத ரத்னா மட்டும் டெண்டுல்கருக்கு.

எல்லாம் வருண பேதம் தான்!
பண மழை கொட்டுகிறது

இந்தக் கிரிக்கெட் விளையாட்டுக்காரர்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறார்கள்.

ஏ பிரிவுக்காரர்களுக்கு (7 பேர்) ஓர் ஆண்டு சம்பளம் ரூ.50 லட்சம். பி - பிரிவிலும் ஏழு பேர்; அவர்களுக்கு ஆண்டுச் சம்பளம் ரூ.35 லட்சம். சி - பிரிவினர் மூவருக்கு ஆண்டுச் சம்பளம் ரூ.20 லட்சம்.

இதோடு முடியவில்லை. உள்நாட்டில் விளையாடினால் நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சம்; வெளிநாட்டில் விளையாடினால் நாள் ஒன்றுக்கு ரூ.2.40 லட்சம்.
அணியில் இடம் பிடித்தால் போதும், விளையாடாமல் இருந்தாலும் அந்தத் தொகை கிடைத்துவிடும். இது அல்லாமல் விளம்பரம்மூலம் கிடைப்பதோ கோடிக்கோடி ரூபாய்கள். ஆண்டு ஒன்றுக்கு மொத்த குத்தகை.

அய்.பி.எல். கிரிக்கெட்டை விடக் கேவலமானது ஒன்று கிடையாது; விளையாட்டுக்காரர்களை (விளையாட்டு வீரர்கள் என்று கிரிக்கெட்டைப் பொறுத்தவரை நாம் கூறுவது கிடையாது!) ஏலம் எடுக்கிறார்கள் என்பதைவிட, இவர்கள் ஏலம் போகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.  இது எத்தகைய கேவலம்! முதலில் அய்.பி.எல். கிரிக்கெட்டைத் தடை செய்யவேண்டும்.

பண்பாட்டுப் படையெடுப்பு

பார்ப்பனர்கள் கையில் ஊடகங்கள் இருப்பதால், காற்றடித்துப் பறக்க விடுகிறார்கள். அதன் தீய விளைவு நம் ஊரில் வயல்வெளிகளில்கூட நம் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துவிட்டனர். நம் மண்ணுக்குரிய சடுகுடு காணாமல் போய்விட்டதே!

நம் இளைஞர்களைப் பீடித்த நோயாகவே கிரிக்கெட் ஆகிவிட்டது. இதுவும் ஒருவகையான கலாச்சாரச் சீரழிவு தான். செண்டை மேளம் என்று கேரளாவிலிருந்து இப் பொழுது இறக்குமதி ஆகிவிடவில்லையா? எளிதில் அயல் கலாச்சாரத்திற்கு விலை போவதில் தமிழர்களை அடித்துக் கொள்ள உலகில் வேறு யாரும் கிடையாதோ - வெட்கக் கேடு, நம் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை இதிலும் ஏற்படுத்தவேண்டும்.

-----------------கி.வீரமணி  தலைவர்,   திராவிடர் கழகம் சென்னை, 12.2.2014

42 comments:

தமிழ் ஓவியா said...


சபாஷ், உயர்நீதிமன்றம்! இடிக்கப்படுகிறது ஒரு கோவில்!

சென்னை,பிப்.12-உயர் நீதிமன்ற நுழைவாயிலில் எம்ஜிஆர் நினைவாக கட் டப்பட்ட அம்மன் கோயிலை இடித்துவிட்டு அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் அதிகாரி களுக்கு உத்தரவிட்டனர்.

பொதுநல வழக்கு

சென்னையில் உள்ள சாலையோர கோயில்களை இடிக்கக் கோரியும், உயர் நீதிமன்ற நுழைவாயிலில் சாலையோரம் உள்ள எம்ஜிஆர் நினைவாக கட் டிய கோயிலை இடிக்கக் கோரியும் உயர்நீதிமன்றத் தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உயர்நீதி மன்றம் ஏற்கெனவே விசா ரித்து, சாலையோர கோயில் களை இடிக்க உத்தரவிட் டது. இதைத் தொடர்ந்து எம்ஜிஆர் நினைவாக கட் டிய கோயிலை இடிக்கும் படி அதன் அறங்காவலர் காந்தா சீனிவாசனுக்கு மாநக ராட்சி தாக்கீது அனுப்பியது. இதை ரத்து செய்யக்கோரி காந்தா சீனிவாசன் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், முன்னாள் முதல் வர் எம்ஜிஆர் வெளிநாட் டில் சிகிச்சை பெற்றபோது அவர் குணமடைய இந்த அம்மன் கோயில் கட்டப் பட்டது. அதன்பிறகு அவர் குணமடைந்து சென்னை திரும்பினார். அவர் நினை வாக அவர் பெயரில் இந்தக் கோயில் உள்ளது. இதை இடிக்கக் கூடாது. மாநக ராட்சி அனுப்பிய தாக்கீதை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி கள் அக்னிகோத்ரே, சசித ரன் ஆகியோர் விசாரித்து அளித்த தீர்ப்பு வருமாறு:

வழக்கு தள்ளுபடி

சாலையோரம் உள்ள அனைத்து கோயில்களை யும் இடிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. அதன் அடிப் படையில்தான் மனுதார ருக்கு மாநகராட்சி தாக்கீது அனுப்பியுள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை. எனவே மனுவைத் தள்ளு படி செய்கிறோம். இந்தக் கோயிலை மாநகராட்சி இடிக்கலாம். இந்தக் கோயில் அனுமதியில்லாமல் கட்டப் பட்டுள்ளது என்று தெளி வாக தெரிகிறது. உயர்நீதி மன்ற வளாகத்தின் சுற்றுச் சுவரையொட்டி கோயில் உள்ளது. கோயில், மசூதி, தேவாலயம் ஆகியவற்றை தனியார் இடத்தில் வைக்க உரிமையுள்ளது. பொதுமக் கள் பாதிக்கும் வகையில் வைக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பல்வேறு தீர்ப்புகளில் கூறி யுள்ளது. மத ரீதியான கட்டடங்களை பொது இடத் தில் கட்ட யாருக்கும் உரிமை யில்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கி றோம். - இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

இந்த உத்தரவை நடை முறைப்படுத்தாததால் மாநக ராட்சி அதிகாரிகள் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை அதே நீதிபதிகள் நேற்று (11.2.2014) விசாரித்து, எம்ஜிஆர் நினைவு கோயிலை அதிகாரிகள் 12 ஆம் தேதிக்குள் இடித்து விட்டு அதன் அறிக்கையை தாக் கல் செய்யும்படி அதிகாரி களுக்கு உத்தரவிட்டனர்.

Read more: http://viduthalai.in/e-paper/75128.html#ixzz2t9pNu8y4

தமிழ் ஓவியா said...


தேசிய மயமாக்கப்பட்ட வங்கி இலச்சினையில் கடவுளர் படமா?


பாங்க் ஆப் இந்தியா என்னும் தேசிய மயமாக் கப்பட்ட வங்கியின் இலச் சினை அடையாளத்தில் சிங்கம், சூலத்துடன் ஒரு பெண் உருவம் இருப்ப தான படத்துடன் இலச் சினை உள்ளது. நாடு விடுதலை அடை வதற்குமுன் 1906 இல் தொடங்கப்பட்ட வங்கி யில் இந்துமத கடவுள் படத்துடன் தனியாரால் மும்பையில் தொடங்கப் பட்டு, பின்னர் 1969 இல் தேசியமயமாக்கப்பட்டது. மதசார்பற்ற நாட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் இலச்சினையில் இதுபோன்ற ஒரு சார்புள்ள மத சின்னம் இடம் பெற லாமா? வாடிக்கையாளர்கள் ஒரு மதத்தை மட்டும் சார்ந் தவர்களாகவா உள்ளனர்? வங்கி நிர்வாகம், மத்திய அரசு சிந்திக்குமா?

அய்ந்து ரூபாய், பத்து ரூபாய் நாணயங்களிலும் கூட இந்து மதக் கடவுள் களின் உருவங்கள் பொறிக் கப்பட்டுள்ளன. இதற்குப் பெயர்தான் மதச்சார்பற்ற அரசாம்!

Read more: http://viduthalai.in/e-paper/75127.html#ixzz2t9q9Iax3

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வும் தினமணியும்!

ஆசிரியர் தகுதித் தேர்வும், சலுகைகளும்! எனும் தலைப்பில் தினமணியில் சிறப்புக் கட்டுரை ஒன்று தீட்டப்பட்டுள்ளது (11.2.2014, பக்கம் 8).

தமிழக அரசியல்வாதிகள், ஆந்திராவில் உள்ளது போல ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக 5 சதவிகித மதிப்பெண் சலுகை வழங்கவேண்டும் என அறிக்கை வெளியிடுகின்றனர். ஜாதிகளைத் தாங்கிப் பிடிக்கும் அரசியல்வாதிகள், அதனால் தரமான, நிறை வான கல்வி குறைபட்டுப் போகுமென தெரிந்திருந்தும் வேண்டுமென்றே குரல் கொடுப்பது வேதனையளிப் பதாக உள்ளது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதன்மூலம் 60 விழுக்காடு மதிப்பெண் வாங்குபவர் 59 விழுக்காடு மதிப்பெண் வாங்குபவரைவிட அறிவாளி, தகுதியானவர் என்று கூறுகிறார்களா?

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதுதான் தகுதியின் அளவுகோலா? தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, தங்கப்பதக்கம் பரிசு பெறுவோர்தான் நாட்டில் பிரகாசமாக சாதனைகளைப் பொறித்துக் கொண்டு திரிகிறார்களா?

மதிப்பெண் அடிப்படையில்தான் தகுதி -திறமை நிர்ணயிக்கப்படும் என்றால், இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க ஒரு அம்பேத்கர் நமக்குக் கிடைத் திருக்கமாட்டார் என்று உச்சநீதிமன்ற நீதிபதி இரவீந்திரன் கூறியதை மறுக்கமுடியுமா?

மதிப்பெண் போடுவது குறித்து இதே தினமணியில் (9.12.2013) ஒரு செய்தி வெளிவந்ததே!
பிளஸ்-2 மற்றும் 10 ஆம் வகுப்பு விடைத்தாள்களைத் திருத்துவதில் கவனக்குறைவாக இருந்த 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை விளக் கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விடைத்தாள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த 5600 மாணவர்களில் 4000 மாணவர்களின் மதிப்பெண் மாறியது என்று செய்தி வெளியிட்ட தினமணியில்தான் ஆசிரியர் தகுதித் தேர்வில், மதிப்பெண்தான், தகுதி - திறமைக்கு அடை யாளம் என்று வாதிடப்படுகிறது.

இதில் இடைக்குத்து - ஜாதியைத் தாங்கிப் பிடிக்கும் அர சியல்வாதிகள் தகுதியைப்பற்றிக் கவலைப்படுவதில்லையாம். சமூகநீதி என்பது அவ்வளவு அலட்சியமாகப் போய்விட்டதா?
இப்படி எழுதுகிறவரோ, கட்டுரை வெளிவந்துள்ள தினமணியோ உண்மையிலேயே ஜாதி ஒழிப்பு வீரர்கள் தானா? ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்பதால் தான் ஜாதி காப்பாற்றப்படுகிறதா? ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் மறுநாள் காலையிலேயே ஜாதி ஒழிந்துவிடுமா?

தினமணி ஆசிரியரின் பூணூலைக் கழற்றச் செய்யட் டும் பார்க்கலாம். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதப் பாதுகாப்பு என்ற போர்வையில் ஜாதி காப்பாற்றப்படுகிறதே - அதனை நீக்கவேண்டும் என்று தினமணியில் தலை யங்கம்கூட எழுதவேண்டாம் - ஒரு சிறப்புக் கட்டுரையை எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் பிரச்சினையைத் திசை திருப்பி வேறு எங்கோ இழுத்துச் செல்லும் எத்து வேலையை தினமணியின் சிறப்புக் கட்டுரை செய்கிறது.

தாழ்த்தப்பட்டவருக்கும், பிற்படுத்தப்பட்டவருக்கும் தகுதி மதிப்பெண் 60 விழுக்காடு என்பதை மாற்றி 55 விழுக்காடு என்று தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவை யில் அறிவித்தார். அதனை நாம் வரவேற்றோம். அதே நேரத்தில், 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற தகுதித் தேர்வுக்கு மட்டும்தான் பொருந்தும் என்பது என்ன நியாயம் - என்ன நேர்மை?

அதே ஆசிரியர் தகுதித் தேர்வுதானே - அதில் ஏன் பாரபட்சம்? இதனை எப்படி நியாயப்படுத்துகிறார்கள்? அதைப்பற்றி தினமணியின் சிறப்புக் கட்டுரை மூச்சு விடாமல் வழவழா கொழ கொழா என்று முக்கால் பக்கம் கட்டுரை எழுதுவது ஏன்?

பிளஸ்-2 படித்து அதற்குமேல் ஆசிரியர் பயிற்சி இரண்டாண்டு படித்து பட்டயம் பெற்ற பிறகு, மறுபடியும் ஒரு தகுதித் தேர்வு என்பது போக்கிரித்தனம் அல்லவா!

ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றதற்கான பட்டயம் அளித்து - ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர் என்று சான்று வழங்கிய நிலையில், மறுபடியும் தேர்வு என்றால், அரசு, தான் நடத்திய தேர்வையே, தான் வழங்கிய சான்றிதழையே, தானே கொச்சைப்படுத்துவது ஆகாதா?

இந்தத் திசையில் தினமணிகள் ஏன் சிந்திப்பது இல்லை? கல்வி, வேலை வாய்ப்பு என்றால், அதில் எந்த வகையிலாவது சமூகநீதியை, இட ஒதுக்கீட்டைக் கொச்சைப்படுத்துவது - குறுக்குச்சால் ஓட்டுவதுதான் பூணூல்களின் வேலை.

அதைத்தான் இப்பொழுதும் தினமணி செய்திருக்கிறது.

Read more: http://viduthalai.in/page-2/75133.html#ixzz2t9qdT3o0

தமிழ் ஓவியா said...


உங்கள் பயணம் எங்கே செல்கிறது அத்வானிஜி!


- குடந்தையான்ஆர்.எஸ்.எஸ் எனது வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் தந்தது; அதன் தொடர்ச் சியாக, 55 ஆண்டுகளாக அரசியல் பயணம் மேற்கொள்கிறேன். அந்த பயணம் இன்னும் முடிவு பெற வில்லை என பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் எல்.கே.அத்வானி தனது பிளாக்கில் 9.2.2014 அன்று கருத்து தெரிவித்துள்ளார்.

அத்வானி அவர்களே! உங்கள் பயணத்தின் ஒன்றாக, நீங்கள் ரதயாத் திரை ஒன்றை துவங்கினீர்கள். எதற் காக அந்த பயணம்? யாருடைய நன் மைக்காக? யாரை எதிர்த்து? இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, அரசி யல் சட்டம் 340 பிரிவின்படி அமைக் கப்பட்ட மண்டல் குழு பரிந்துரை யின் அடிப்படையில் வேலை வாய்ப் பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் ஆணையை அன்றைய பிரதமர் வி.பி.சிங் அறிவித்தவுடன், உங்களது ரத யாத்திரையை துவக்கி னீர்கள். அயோத்தியில் ராமனுக்குக் கோவில் கட்ட வேண்டும் என்பதற் காக அந்த யாத்திரை என்று சொன் னாலும், இட ஒதுக்கீட்டை எதிர்க்க வேண்டும் என்பது உங்களது நோக் கம்; ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்களின் நோக்கம். அந்த யாத்திரையின் முடி வில் 400 ஆண்டு கால பழைமைச் சின்னமான பாபர் மசூதி இடிக்கப் பட காரணமாக இருந்தீர்கள். நாடு முழுவதும் கலவரம் ஏற்பட்டு, பல்லா யிரக்கணக்கானோர் உயிர் இழந்தனர். உங்கள் வாழ்வில் என்ன அர்த்தத்தை இந்த ர(த்)த யாத்திரை தந்தது?

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீங்களும் குற்றம் சாட்டப்பட்டவ ராக சேர்க்கப்பட்டீர்கள். அதன் பின் மத்தியில் ஆட்சியில் உள்துறை அமைச்சராகவும், துணை பிரதமராக வும் இருந்தீர்கள். குற்றம் சாட்டப்பட் டவரே நாட்டின் உள் துறை அமைச் சராக இருக்கலாமா என உங்கள் மன சாட்சியை எப்போதேனும் கேட்டு, விடை கண்டதுண்டா? சட்டத்தின் ஓட்டையை வைத்து, அந்த வழக்கில் இருந்து எப்படியெல்லாம் தப்பிக்க லாம் என்று தான் கருதினீர்களே தவிர, தைரியமாக, நாங்கள் பாபர் மசூதி இடிப்பில் சம்மந்தப்பட்டிருக் கிறோம் என்று உண்மையை சொல் வதற்கு, உங்கள் ஆர்.எஸ்.எஸ். பள்ளி, கற்றுத் தரவில்லையே.

ஆனால் தமிழ் நாட்டிலே, 1957 இல் அரசியல் சட்ட எரிப்பு நடந்தது. ஜாதிப்பிரிவை காப்பாற்றும் அரசி யல் சட்ட பிரிவை எதிர்த்து, அந்த எரிப்பு நடந்தது. பெரியாரின் கட்ட ளையை ஏற்று, ஆயிரக்கணக்கில் ஆண்களும், பெண்களும், சிறுவர் களும் பங்கேற்று, மூன்றாண்டு வரை கடும் சிறை வாசத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றனர். கைதான ஒரு சிறுவனை எச்சரிக்கை செய்து விடுதலை செய்ய லாம் என நினைத்த நீதிபதி, அந்த சிறுவனிடம், நீ கொளுத்தியது காகி தம் தானே எனக் கேட்கிறார். ஆமாம் என்று சொன்னால், அவனை விடுவிக் கலாம் என்பது நீதிபதியின் எண்ணம். அந்த சிறுவன் என்ன சொன்னான் தெரியுமா அத்வானி அவர்களே! நான் கொளுத்தியது, அரசியல் சட்டத்தில் ஜாதியை காப்பாற்றும் பிரிவுதான் என்று சொன்னான்.

அந்த சிறுவனுக்கு இருந்த தெளி வும், உணர்வும், துணிவும், அறிவு நாணயமும் உங்களிடத்தில் இல்லையே. காரணம், சிறுவன் படித்தது பெரியார் பள்ளியில். நீங்கள் படித்தது ஆர்.எஸ்.எஸ். பள்ளியில்.

உங்களது வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தது ஆர்.எஸ்.எஸ். தான் என்று சொல்கிறீர்களே. 2005 இல் பாகிஸ் தான் சென்ற போது, ஜின்னா சிறந்த மதச்சார்பின்மை கொள்கை கொண்ட வர் என்று சொன்னதற்காக, ஆர்.எஸ்.எஸ். உங்களை கடுமையாக சாடி, நீங்கள் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலகினீர்களே.

2005 செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தின் முடிவில் பேசும்போது, ஆர்.எஸ்.எஸின் அனுமதி இல்லாமல் தனது கட்சியினால் எந்த ஒரு முடிவும் மேற்கொள்ளப்பட முடியாது என்ற எண்ணத்தை இந்த நிகழ்ச்சி உறுதிப் படுத்திவிட்டது என்றும், நாம் கொண் டிருக்கும் இந்தக் கண்ணோட்டத்தி னால், பா.ஜ.க.வுக்கோ அல்லது ஆர்.எஸ்.எசுக்கோ எந்த நன்மையும் ஏற்படாது என்றும் சொன்னீர்களே; இதுவும் ஆர்.எஸ்.எஸ்சால் உங்கள் வாழ்க்கையில் கிடைத்த பயன் என எடுத்துக் கொள்ளலாமா?

பின்னர் மே 2009 இல் ஆர்.எஸ்.எஸின் கட்டளையால், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் இழந்து, அக்டோபர் 2011-லேயே, நீங்கள் பிரதமர் வேட்பாளாராக பாஜக சார்பில் போட்டியிட முடியாது என ஆர்.எஸ்.எஸ். கட்டளையிட்டு, இறுதில் ஜூன் 2013 இல் கட்சியில் அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுவதாக அறிவிக்கும் அளவுக்கு, ஆர்.எஸ்.எஸ் உங்களை தள்ளிவிட்டுள்ளதே; இந்தப் பயணம் இன்னும் முடியவில்லை என நீங்கள் கூறுவதைப் பார்த்தால், இந்த பயணத்தில் தாங்கள் எங்கே செல்வீர்கள் என்று தெரிய வில்லை.

ஒரு வேளை, பாஜகவிலிருந்து நீங்கள் விலகுவதற்கும், ஆர்.எஸ்.எஸ். உங்களுக்கு வழிகாட்டும் என நினைத் தால் தவறில்லையே, அத்வானிஜி.

Read more: http://viduthalai.in/page-2/75138.html#ixzz2t9qnAod1

தமிழ் ஓவியா said...


மனித சமூகம் தேய்ந்ததேன்?பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெறவேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் தேய்ந்து கொண்டே வருகின்றது.
(விடுதலை,16.6.1935)

Read more: http://viduthalai.in/page-2/75132.html#ixzz2t9r0J7cD

தமிழ் ஓவியா said...

மோடியின் நல்லிணக்க கார்ப்பரேட் கூட்டணியை இஸ்லாமியர்கள் நம்பி ஏமாற மாட்டார்கள்

அகமதாபாத், பிப். 12- நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதை கருத்தில் கொண்டு இஸ் லாமியர்கள் மீது அக்கறை யுள்ளவர் போல் மோடி கபட வேஷமிட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக சில சுயநலம் கொண்ட பணக் கார இஸ்லாமியர்கள் இயங்கி வருகின்றனர். இவர் களை ஒட்டு மொத்த இஸ்லா மியர்களும் நம்புவதற்கு தயாராக இல்லை. மோடியின் கார்ப்பரேட் கூட்டணியை அவ்வளவு எளிதாக நம்பி ஏமாற மாட்டோம் என்று குஜராத்தில் வாழும் இஸ்லா மிய மக்கள் தெரிவித் துள்ளனர்.

குஜராத்தில் பிப்.7ஆம் தேதி உம்மத் வர்த்தகக் கண் காட்சி மற்றும் வர்த்தகர்கள் மாநாடு துவங்கியது. குஜராத்தில் இப்படியொரு கண்காட்சி நடப்பது இதுவே முதன்முறையாகும். குஜராத் தில் தொழிலதிபராக இருக் கக்கூடிய ஜாபர் சரேஷ்வாலா என்பவர் இந்தக் கண் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந் தார். உள்நாடு மட்டுமன்றி துபாய் உள்ளிட்ட வெளி நாடுகளிலிருந்தும் பல நிறு வனங்கள் இந்தக் கண் காட்சியில் கலந்து கொள்ள வுள்ளதாக அறிவிக்கப் பட்டது. சமுதாயங்களுக் கிடையே நல்லிணக்க வர்த்தகம் என்ற மய்யக்கருத் தை அடிப்படையாகக் கொண்டு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தாக மாநாட்டு அமைப் பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், மோடியின் நெருக்கத்தை பெறுவதற் காகவே இந்த மாநாடு நடத் தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த மாநாட்டின் மூலம் இந்து - முஸ்லிம் வர்த்தகர் களிடையே எவ்வித மாற்ற மும் ஏற்படப்போவதில் லை என்றும், 2002ஆம் ஆண்டு தாங்கள் (முஸ்லிம்) தாக்கப்பட்டதை மக்கள் மறக்கமாட்டோம்.
யார் இந்த ஜாபர்?

தமிழ் ஓவியா said...


இந்த மாநாட்டிற்கு முக்கிய காரணமாக விளங்கக் கூடிய ஜாபர் சரேஷ்வாலா என்பவர் குஜராத்தில் மிகப்பெரிய தொழிலதிபராக உள்ளார். இவர் பர்சோலி மோட்டார்ஸ் என்ற பெயரில் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார்களை விற்பனை செய்து வருகிறார். அதேசமயம், தொழிலில் பல்வேறு முறை கேடுகளில் அவர் ஈடுபட் டுள்ளார். இதனை இந்தியப் பங்குச்சந்தை வாரியமான செபி கண்டுபிடித்து, கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி,பர் சோலி கார்ப்பரே சன் லிமிடெட்டுக்கு வழங் கப்பட்ட அங்கீகாரத்தை தேசிய பங்குச்சந்தை வாரி யம் மற்றும் மும்பை பங்குச் சந்தை வாரியத்திலிருந்து ரத்து செய்வதாக அறிவித்தது. இந்த தகவல் வாட்ச்அவுட் இன்வெஸ்டார்ஸ் என்ற வலைதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.

இதேசெய்தி, குஜராத் டெய்லி மற்றும் குஜராத் சமாச்சார் ஆகிய செய்தித் தாள்களில் மாநாடு துவங் கும் நாளன்று வெளியிடப் பட்டது.இப்படியொரு களங்கம் கொண்ட நபர் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி, முஸ்லிம் களை பூரிப்பில் ஆழ்த்தும் வகையில் பேசியுள்ளார். அவர் பேசுகையில், இந்துக் களும், முஸ்லிம்களும் வளர்ச்சியின் இருசக்கரங்கள். முஸ்லிம்கள் பெரிய தொழில்களை கொண்டுள் ளனர். அவர்கள் மிகப்பெரிய வளர்ச்சியைக் கொண்டு வந்துள்ளனர். முஸ்லிம் இளைஞர்களும், பெண் களும் மிகப்பெரிய திறமை யைக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு பொருத்த மான தளம் வேண்டும்.

வேலையைத் தேடுவ தற்குப் பதிலாக பிறருக்கு வேலை வாய்ப்பை வழங்கக் கூடிய நிலைக்கு வர வேண் டும். நாட்டின் வளர்ச்சிக்கு ஒற்றுமை மிகவும் அவ சியம். முஸ்லிம் இளைஞர் களின் திறமையை வளர்க்க தனது அரசு உதவி செய்யும் என்று திடீர் கரிசனத்தோடு பேசியி ருக்கிறார்.

2002இல் மோடி

ஆனால், இதே மோடி கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற மிகப்பெரிய கலவரத்தில் இஸ்லாமிய மக்கள் கொன்று குவிக்கப்பட்டு உறவுகளை, உயிர்களை இழந்த நேரத்தில் பேசியது வேதனையின் உச்சம். கலவரத்திற்குப் பிறகு மோடி நடத்திய கவுரவ் யாத்திரையின் போது, மெக்சானா மாவட்டத்தின் பகுசார்ச்சியில் 2002ஆம் ஆண்டு செப்.9ஆம் தேதி அவர் பேசியதாவது, சகோ தரர்களே, நிவாரண முகாம் களை நாம் தொடர வேண்டுமா? குழந்தைகளை உற்பத்தி செய்யும் மய்யங் களை நான் திறக்க வேண்டு மா? குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை கடைப்பிடிப் பதன் மூலம் நாடு முன் னேற்றத்தை அடைய வேண்டும். நாம் அய்ந்து பேர், அவர்களோ 25! குஜராத் தில் குடும்பக் கட்டுப் பாட்டை அமல்படுத்த முடி யாதா? நம்முடைய வழியில் யார் தடை போடுவது? எந்த மதப்பிரிவு நம் வழியில் குறுக்கிடுகிறது? உதவிகள் ஏழைகளுக்குச் சென்று சேரா தது ஏன்? சிலர் குழந்தை களை உற்பத்தி செய்தால், அவர்களது பிள்ளைகள் சைக்கிளுக்கு பஞ்சர் போடு வதையே செய்வார்கள் என்று பேசி னார்.

அவரது தற்போதைய பேச்சைக் கேட்கும்போது, இஸ்லாமியர்கள் மீதான திடீர் கரிசனம் ஏன் என்று கேட்காமல் இருக்க முடிய வில்லை. இப்படியான ஒருவருடன் சேர்ந்துள்ள ஜாபர் போன்றோருக்கு, சிறுபான்மையினரின் கண் ணியமும், உறுதியும் புரியப் போவதில்லை .சிறுபான் மையினர்களின் கேள்வி களுக்கு அரசுகளால் ஒரு போதும் தீர்வு காணப்பட்ட தில்லை. மேலும், நாடாளு மன்ற ஜனநாயகம் என்பது முரண்பாடுகளை அதிகரிக்க மட்டுமே செய்திருக்கிறது. சில அரசியல் கட்சிகள் முதலாளிகளுக்கு ஆதரவாக வும், சில கட்சிகள் பெரும் பான்மையினருக்கு ஆதர வாகவும் உள்ளன. 2002ஆம் ஆண்டு மோடி பெரும்பான் மையினரின் உதவியுடன் சிறுபான்மையினரைக் கொன்றுகுவித்து வெற்றி கண்டார். இதுபோன்ற துரோகிகளை சரேஷ்வாலா போன்றோர் தூக்கிப் பிடித்து வருகின்றனர்.

மிகப்பிரம்மாண்டமாக துவங்கப்பட்ட இந்த மாநாட்டில், சொற்ப அளவி லான வர்த்தகர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இதற்கு காலியாக இருந்த நூற்றுக்கணக்கான இருக்கை கள் சாட்சி. மேலும், முஸ்லிம்களின் வர்த்தகக் கண்காட்சியை குஜராத்தில் ஏற்படுத்தி, தன்னை இஸ்லாமிய மக்கள் மீது அக் கறையுள்ளவனாகக் காட்டிக் கொள்ளும் மோடி மற்றும் அவரது கைக்கூலிகளாக மாறி வரும் ஜாபர் சரேஷ் வாலா போன்றோரின் கபட நாடகத்தையும், 2002ஆம் ஆண்டு அனுபவித்த வலி களையும் இஸ்லாமியர்கள் ஒருபோதும் மறக்கமாட் டார்கள் என்று குஜராத்தின் உண்மை என்ற இணைய தளம் தெரிவித்துள்ளது.

(நன்றி: தீக்கதிர் - 12.2.2014)

Read more: http://viduthalai.in/page-3/75142.html#ixzz2t9r7nndc

தமிழ் ஓவியா said...


எப்பொழுதுமே ஆசிரியர் கி.வீரமணி அவர்களை தலைவராகத்தான் பார்த்து இருக்கிறேன்


பத்மபூசன் விருதுபெற்ற தடயவியல் அறிஞர் டாக்டர் ப.சந்திரசேகரனின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். (சென்னை, 11.2.2014)

- டாக்டர் சந்திரசேகரன்

சென்னை, பிப். 12- எசுபிள னேடில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நேற்று 11.2.2014 மாலை 6.30 மணிக்கு தடய வியல் அறிஞர் பத்மபூஷன், டாக்டர் ப.சந்திரசேகரன் (முன்னைத் தலைவர் சென்னை ஒய்.எம்.சி.ஏ) அவர்களின் 80 ஆம் ஆண்டு நிறைவுப் பாராட்டு விழா ஒய்.எம்.சி.ஏ வின் சார்பாக ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்ற தலைவர் முனைவர் அவ்வை. நடராசன் தலைமையில் நடைபெற்றது.

செயலாளர் கெ.பக்தவச் சலம் வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியை தொகுத்து வழங் கினார். முன்னாள் உள் துறை செயலாளர் (மிசோராம் அரசு) வி.ஏ.வாசுதேவராஜூ அய்.ஏ. எஸ். பாராட்டுரை வழங்கினார். தமிழர் தலை வர் கி.வீரமணி அவர்கள் பாராட்டுரை வழங் கினார். பேராசிரியர் ப.சந்திர சேகரன் ஏற்புரை நிகழ்த் தினார். ஒய். எம்.சி.ஏ பட்டி மன்ற இணைச் செயலாளர் பு.சீ.கிருட்டிண மூர்த்தி நன்றி யுரையாற்றி னார். ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்ற பொதுச் செயலா ளர் எஸ்.எட்வின், ஆபிரகாம், பி.இராசா பிரபாகரன், ஜே. எஸ். அன்பு (கிளைத் தலை வர்), ஆ.டேனிஸ் பெசானியோ (உதவிச் செயலாளர்) உள் ளிட்ட ஏராளமான ஒய்.எம். சி.ஏ தோழர்கள் மற்றும் பல அறிஞர் பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பாராட்டரங்கம்

ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்ற செயலாளர் கெ.பக்தவச்சலம் வரவேற்புரையில் குறிப்பிட் டதாவது:- ஒய்.எம்.சி.ஏ வின் இந்த கட்டடம் 125 ஆண்டு கள் பழைமையானது. இது அண்ணா உள்ளிட்ட பல் வேறு அறிஞர்கள் பேசிய அரங்கமாகும். இங்கு 80 ஆம் ஆண்டு நிறைவு பாராட்டு விழா பெறும் முனைவர் டாக்டர் ப.சந்திரசேகரன் தற்போது பெங்களூருவில் அலுவலகம் அமைத்து தடய வியல் துறையில் சிறப்பாக பணியாற்றி வருகின்றார். தடயவியல் துறை காவல் துறையோடு சேர்ந்து இயங்கி வருகிறது. இந்தியாவிலேயே தடயவியல் துறையில் முன் னோடியாக திகழ்பவர் சந் திரசேகரன் என்று பல்வேறு சிறப்புகளை எடுத்துக் கூறி னார்.

முனைவர் அவ்வை நடராசன் (ஒய்.எம்.சி.ஏ பட் டிமன்றத் தலைவர்) தலை மையுரையில் குறிப்பிட்ட தாவது:- அய்ம்பது, அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றலோடு தமிழகத்தில் ஆசிரியர் அவர்கள் பல நிகழ்ச்சிகளில் ஒய்.எம்.சி.ஏ வில் பங்கு கொண்டு பெரு மிதம் அடைந்திருக்கிறார்கள்.

குற்றம் சார்ந்த மருத்து வவியல் டாக்டர் சந்திரசேக ரன் தடயவியல் துறையில் துப்பு துலக்குவதற்கு வேதி யியல் துறையின் விளக்கத் தோடு மருத்துவத்துறையை சேர்த்து பல்வேறு நுணுக்கங் களை கண்டுபிடித்து சிறப் பாக செயல் ஆற்றிவருபவர் நம்முடைய தமிழர் சந்திர சேகரன் என்று பல்வேறு செய்திகளை எடுத்துக் காட் டினார்.

சிறப்பு விருந்தினர்க ளுக்கு விழாகுழுவின் சார் பில் சிறப்பு செய்யப்பட்டது. ஒய்.எம்.சி.ஏ.வின் பொதுச் செயலாளர் எஸ்.எட்வின் தமதுரையில்: டாக்டர் சந்திர சேகரன் ஒய்.எம்.சி.ஏ.வில் 45 ஆண்டுகளுக்கு மேல் பணி யாற்றி இருக்கிறார். ஒய்.எம். சி.ஏ வின் வளர்ச்சிக்கு உறு துணை புரிந்துள்ளார். தந்தை பெரியார் விட்டுச்சென்ற பணியை தொடர்ந்து செய்து வருபவர் தமிழர் தலைவர் ஆவார் என பல்வேறு தக வல்களை எடுத்துக்கூறினார்.

வாசுதேவராஜூ அய்.ஏ.எஸ் பாராட்டுரையில் குறிப்பிட்டதாவது:

தடயவியல் துறையில் பல்வேறு நுணுக்கங்களை கண்டுபிடித்து, பத்மபூஷன் விருதை பெற்று விளங்கு கின்றார் டாக்டர் சந்திரசேக ரன், எனக்கு அவரை 60 ஆண்டுகளாகத் தெரியும்.

அண்ணாமலை பல் கலைக் கழகத்தில் நாங்கள் இருவரும் இருவேறு துரு வங்களாக செயல்பட்டோம். அவர் இயற்பியல் துறையில் ஷிமீநீக்ஷீமீணீக்ஷீஹ் நான் பொருளாதார துறையிலே ஷிமீநீக்ஷீமீணீக்ஷீஹ் கல்லூ ரியில் பொது ஷிமீநீக்ஷீமீணீக்ஷீஹ் பிரி வில் நாங்கள் போட்டியிட்ட தில் அவர் 14 ஓட்டுகள், பெற்று வெற்றி பெற்றார். எனக்கு 13 ஓட்டுகள் கிடைத் தன. கொள்கை, சித்தாந்தம் என்பதை விட நட்பு என்பது வேறு, தடயவியல் துறையில் விஞ்ஞானியாக திகழ்ந்தவர் தமிழகத்திலேயே மட்டுமல் லாமல் இந்திய நாட்டிலேயே முதன்மையானவராக திகழ்ந்தார்.

இன்று தமிழ்நாட்டில் தடயவியல் துறை முழுவது மாக செயல்படுகிறது என் றால் அதற்கு டாக்டர் சந்திர சேகரன் தான் காரணம். இவர் உழைப்பால் உயர்ந்தவர் என கூறினார்.

ஏற்புரை

ஏற்புரை வழங்கி சந் திரசேகரன் குறிப்பிட்ட தாவது: என் உயிரினும் மேலான நண்பர் வீரமணி அவர்களே, தமிழர்களின் தலைவர் என்பதை நிரூ பித்துகாண்பித்து விட்டீர்கள். அவ்வை அவர்களை மறக் கவே முடியாது. இந்த விழா என்னுடைய நண்பர்களை பார்க்க ஒரு வாய்ப்பாகும்.


தமிழ் ஓவியா said...

சமூகநீதிக்காக பாடு பட்ட பெரியார் தோட்டத் தில் வளர்ந்த செடிகளில் நானும் ஒருவன். இது பெரி யார் போட்ட பிச்சை முத் தையா செட்டியார் பழகிய விதம். காமராசர் அவர்களி டம் நட்பு, அண்ணா அவர்களிடம் பழ கிய நட்பு. அப்படிபட்ட தலை வர்களைப் பார்த்து, கண்டு, கேட்டு, பழகி வந்தவன் நான். அப்போதிருந்தே வீரமணி அவர்களை தலைவராகத் தான் பார்த்து இருக்கிறேன். என் வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான நாள் இந்த அன்பும் பண்பும், நட்பும் மறக்க முடியாது. பெரியார் இல்லை என்றால் நான் இந்த நிலையில் இருந்திருக்க முடி யாது என்று கூறும் போது சந்திர சேரனின் கண்கள் ததும்பின (பலத்த கைத்தட்டல்).

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் பாராட்டு

இங்கே சிறப்பாக நினைவுகூர்ந்து உள்ளத்தில் இருக்கின்ற உணர்வுகளை யெல்லாம் அலை அலையாய் கொட்டி அமர்ந்துள்ள எனது வகுப்பு நண்பர் பல்கலைக் கழகத் தோழர், அறை நண் பர், ஆகிய இத்தனை அமைப் புகளும் சேர்ந்த ஒரு தோழ ரான பேராசிரியர் வாசு தேவ ராஜூ அய்.ஏ.எஸ். அவர்களே, அதே போன்று இந்த நிகழ்ச் சியிலே சிறப்பான வகை யிலே நம் அனைவரையும் வரவேற்று இந்த ஒய்.எம். சி.ஏ. பட்டிமன்றம் என்ற இந்த நிகழ்ச்சியை நீண்ட காலமாக அலுப்பு சலுப்பின்றி நடத்திக் கொண்டிருக்கின்ற என்னு டைய நண்பர் ஆற்றல் மிகு செயலாளர் அய்யா பக்தவச் சலனார் அவர்களே, அவருக்கு பெருந்துணையாக இருந்து இந்த நிகழ்ச்சியி னுடைய எளிய நிகழ்ச்சியாக மாற்றி சிறப்பாக நடத்திக் கொண்டிருப்பதற்கு காரண மான பொதுச் செயலாளர் எஸ்.எட்வின் ஆபிரகாம் தோழர் அவர்களே! அறி வார்ந்த அவையினர் அவர் களே, தோழர்களே, தோழியர் களே, நண்பர்களே, உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கம். இந்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியான நிகழ்ச்சி எனக்கு பல பணிகள் இருக் கும் சுற்றிக்கொண்டே இருப் பேன். இந்நிகழ்ச்சி இருப் பதை அறிந்தவுடனே எவ்வ ளவு சிரமம் இருந்தாலும் பணிச் சுமை இருந்தாலும் இந்நிகழ்ச்சியில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று நான் எண்ணினேன். அவ ருக்கும் எனக்கும் உள்ள நட்பு பல பேருக்குத் தெரியாது. சந்திரசேகரன் என்னுடைய 60 ஆண்டுகால நண்பர். 60 ஆண்டுகால பழைய நண்பர் களை இந்த தருணத்திலே சந்திப்பது என்பது வாழ்க் கையில் கிடைத்தற்கரிய மிகப் பெரிய மகிழ்ச்சி. பிரிந்தவர் கள் கூடினால் பேசவும் நீளுமோ? என்று அந்தக் காலத்தில் பெருமையாக சொல்லுவார்கள். அந்த வகை யிலே நாங்கள் பிரிந்தவர்கள் அல்ல. நாங்கள் இணைந்தவர் கள் அதுதான் மிக முக்கியம். எந்தப் பணி, யாரெல்லாம் அந்த இடத்திலே அமரக் கூடாது என்று நினைத்தார் களோ அந்த இடத்திலே நம்மையெல்லாம் அமர வைத்து, நாமெல்லாம் வர வேண்டும் என்பதற்காகத் தான் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் வாழ்நாள் முழுக்க பாடுபட்டார். (பலத்த கைதட்டல்).

தமிழ் ஓவியா said...

அந்த விருப்பம் சமூக நீதி யிலே பூத்த மலர்களாக பூத்து, காய்ந்து கனிந்தவர் களாக இருக்கக்கூடிய ஒரு புதிய தடயவியல் அறிஞர் என்று சொல்லக்கூடிய அந்த இடத் திற்கு அந்த காலத்துல நினைக்க முடியாத இடத்துல நம்முடைய அருமை தோழர் வந்திருக்கிறார் என்று சொன் னால், எவ்வளவு பெரிய சாதனை. கதவு திறந்த பிறகு தான் நாம் வகுப்பறையில் உட்கார முடியும். பெரியா ருக்கு முன் கல்விக் கதவே திறக்கல. இதைத்திறந்து பெரியார் செய்த மிகப்பெரிய பணி தொடர்ந்து நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அய்யா டாக்டர் மாரி முத்து வந்திருக்கிறார். என் னுடைய வகுப்பு தோழர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே துணைவேந்தர் கோவை பல்கலைக் கழகத்தி னுடைய துணைவேந்தராக இருந்து இன்றைக்கு வேக மாக வந்திருக்கிறார். ஒவ் வொருத்தரையும் பார்த்தீர் களேயானால் ரொம்ப பெரு மையாக உள்ளது. வாசுதேவ ராஜூ அவர்களை பார்த்தீர் களேயானால் நூலகத்தில் அவருக்கும் எனக்கும் போட்டி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் புது புத்தகங்களை நாங்க உடனே படிச்சு பேராசிரியர் மத்தியில நாங்கள் மிகப்பெரிய அள வில் இருக்கோம் என்கிற அளவுக்கு அறை நண்பர் என்று சொல்லும்போது உங் களுக்கு சொன்னால் எத்த னையோ செய்திகளை சொல் லனும். ஏன்னா அவ்வளவு உணர்ச்சிபூர்வமான ஒரு நிகழ்ச்சியாய் இருக்கிறது.

நட்பு என்று சொல்லும் போது அதுல உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். நான் திராவிடர் கழகத்துக்காரன் பெரியாருடைய தொண்டன் உங்களுக்கு தெரியும். அதற்கு ஒன்றும் விளம்பரம் தேவை யில்லை. அந்த மாதிரி அந்த அறை நண்பர் நாங்க என்னுடைய அறை நண்பர் வாசுதேவராஜு அவர்கள் பாதி கம்யூனிஸ்டு பாதி காந் தியம், எல்லாமே கலந்தவர் அவர். அந்த தீவிரமான உணர்வு படைத்தவர். தெளி வாய் இருப்பார். அந்த கொள் கையில் ஒன்றும் மறைக்க மாட்டார். இன்னொரு நண்பர் தீவிரமான காங்கிரஸ்காரர் கதர்சட்டை, கதர் வேட்டி இதை தவிர அவர் வேற போட மாட்டாரு, நான் கருப்பு சட்டைக்காரன் நாங்க மூன்று பேரும் மற்ற நண்பர்கள் இன்னொரு நண்பர் வந்தார் அவர் புனித மான கம்யூனிஸ்டுகாரர் அவர் சிறைச்சாலைக்கெல் லாம் போயி ரொம்ப நாள் கழிந்த பிறகு வந்து சேர்ந்தார். ராஜகோபாலன் என்று அவரது பெயர். காந்தி என்று கம்யூனிஸ்டு கட்சியிலே அழைப்பார்கள். அவர் பேரா சிரியராய் இருந்தவர். இப்படி பல பேர் இருக்கோம். இதில் வேடிக்கை என்னவென்றால் பல நண்பர்கள் வருவார்கள். எல்லாமே அவருகூட நாங் கள் அவரை அறிந்த வகை யிலே எனக்கு இரண்டு மூன்று ஆண்டுகள் குறைந்த பட்சம் கூடுதலா டாக்டர் சந்திரசேகரன் அவர்களை நான் அறிவேன். எப்படி என்று சொன்னால் எனக்கு விடுதியில் இடம் கொடுக்க மாட்டேன்னு வார்டன் ஒருத்தர் சொன்னாரு.

அவர் தத்துவ பேராசிரியர் ஏன் இடம் கொடுக்கவில்லை உங்களுக்கு தெரியும். அவர் இராமானுஜ ஆச்சாரியார் நான் வீரமணி. இதிலே உங்களுக்கு எளிதாக புரிந்து விடும். இடம் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாரு. அப்ப நாங்கள் எல்லாம் முதல் தலைமுறை. டாக்டர் சந்திரசேகரனானா லும், வாசுதேவராஜ் ஆனா லும் எங்களை பொறுத்த வரையில் நாங்க மத்தவங்க சொன்ன மாதிரி எங்களுக்கு முன்னாடி எல்லாம் பாரம் பரியமா இல்லை. நாங்கள் எப்படி பல்கலைக் கழகத் துக்கு வந்தது என்பதற்கு பல இடத்தில் அலைந்து தான் அந்த மனுவை எப்படி பூர்த்தி செய்வது அப்படி நினைக்கிற அளவுக்கு தேடி கண்டுபிடித்து வந்தவர்கள் முதல் தலைமுறை.

அந்த வகையிலே சந்திர சேகரன் எனது நீண்ட கால நண்பர் அவருடைய இந்த விழாவிலே பங்கேற்று பாராட்டுவதிலே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என மேலும் பல்வேறு இளமை கால நிகழ்வுகளை எடுத்துக் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/75145.html#ixzz2t9rWwvT4

தமிழ் ஓவியா said...


நடைபாதைக் கோயில்கள்


சென்னை உயர்நீதி மன்ற வாசல் அருகில் நீதி கருமாரியம்மன் கோயில் ஒன்று சட்ட விரோத மாகக் கட்டப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்ட நேரத்தில் அவர் குணம் அடைய வேண்டி அந்தக் கோயில் கட்டப்பட்டதாம் (கருமாரி என்ன மிகப் பெரிய டாக்டரா?)

சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய் யப்பட்ட பொது நல வழக் கின் அடிப்படையில் அனுமதியின்றிக் கட்டப் பட்ட அக்கோயிலை உடனே இடித்துவிட்டு 12.2.2014-க்குள் நீதிமன்றத் திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டுமென்று நீதிபதி கள் அக்னி ஹோத்திரி, சசி தரன் அடங்கிய அமர்வு ஆணை பிறப்பித்தது. இதன்மீது மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய ஆணையை நிறுத்தி வைக்குமாறு மாநகராட்சி சார்பில் கோரப்பட்டதை ஏற்று நீதிமன்றம் இரண்டு வார கால அவகாசம் கொடுத்துள்ளது.

இதன்மீது மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இதே மாநகராட் சியில் இதற்குமுன் மேய ராக வேலூர் நாராயணன் அவர்கள் இருந்த காலத் தில் நடைபாதைக் கோயில் கள் அகற்றப்படவில் லையா? அதற்குப்பின் உள்ளாட்சித் துறை அமைச் சராக ப. உ. சண்முகம் அவர்கள் இருந்த கால கட்டத்தில் (அ.இ.அ.தி. மு.க. ஆட்சியில்) நடை பாதைக் கோயில்கள் இடிக்கப் படவில்லையா? உச்சநீதிமன்ற நீதிபதி கள் டல்வீர் பண்டாரி எம்.கே. ஷர்மா ஆகி யோர் 14.9.2010 அன்று தெளிவாக, திட்டவட்ட மாக ஒரு ஆணையைப் பிறப்பித்தனர். அனுமதி யின்றிப் பொது இடங் களில் கட்டப்பட்டுள்ள கோயில்களை உடனடி யாக அகற்ற வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்ப்பு. பல மாநிலங்கள் இதுபற்றித் தகவல் தெரி விக்கவில்லை. இரண்டு வாரங்கள் மீண்டும் அவ காசம் அளிக்கப்படுகிறது. அதனை நிறைவேற்றாத மாநில அரசுகளின் செய லாளர்கள் உச்சநீதிமன் றத்திற்கு நேரில் வந்து தகவல் தெரிவிக்க வேண் டும் என்று அவ்விரு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறி இருந்தனர்.

சட்ட விரோத கோயில்கள் அதிகமாகக் கட்டப்பட்டிருக்கிறது தமிழ் நாட்டில்தான். தமிழ்நாட் டில் 77450, குஜராத்தில் 15,000, ராஜஸ்தான் 58,253 கோயில்கள் இந்தப் பட்டியலில் வருகின்றன. அருணாச்சலப்பிரதேசத் தில் சட்ட விரோத கோயில் ஒன்றுகூடக் கிடையாது என்று நீதிபதிகள் பாராட் டவும் செய்தார்கள்.

தமிழ்நாடு அரசு இந்தப் பிரச்சினையில் இதுவரை எடுத்த நடவ டிக்கை என்ன? உச்சநீதிமன்றமே தெளிவாக ஆணை பிறப் பித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தற் போது அளித்த ஆணை யைச் செயல்படுத்த வைப்பதில் உறுதியாக இருக்கும் என்று எதிர்ப் பார்க்கப்படுகிறது. - மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/75206.html#ixzz2tFW6ulu7

தமிழ் ஓவியா said...


கல் முதலாளி!


திருப்பதி ஏழுமலை யான் கோவிலில் கடந்த திங்கள்கிழமை மட்டும் உண் டியல் வசூல் ரூ.2.45 கோடி யாம். மக்களுக்குப் பகுத் தறிவு தேவை என்பதற்கு இது அடையாளம்; பக்தி பெருகிவிட்டது என்று மகிழ்ச்சி அடைவது, மருத் துவமனைகள் (நோய்கள் பெருகியதால்) அதிகரித்து விட்டது என்று மகிழ்ச்சி அடைவது போன்றதாகும்.

எல்லாம் வல்ல கடவுள் என்று சொல்லிக்கொண்டு, அதற்கு நிதி கொடுப்பது - கடவுளைக் கேலி செய்வது ஆகாதா? இந்தப் பணத்தால் ஒரு சல்லிக் காசு ஏழுமலை யான் என்ற பொம்மைக்குப் பலன் உண்டா? அது உயிர் உள்ள ஒன்றா? ஆறுகால் கன்றுக்குடி என்று சொல்லி வித்தை காட்டிப் பணம் பறிப்பவனுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம்?
தினமலர் பக்தி மலரின் கருத்து:

கோவில்களில் கூட்டம் அதிகரித்துவிட்டது; கோவி லில் முக்கிய நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடக் கின்றன... மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது பக்தி நெறி செழித்திருப்பதுபோல தெரிகிறது. இது பொய்த் தோற்றம். இந்நாளில் இருக் கும் பக்தி, வழுக்கல் நிலத் தில் வடித்த மாளிகை என்று கூறியிருப்பதை நினைவூட் டுகிறோம். நாட்டில் உள்ள 10 கோடி ஏழைகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.3200/- வங்கி மூலம் அளிக்கும் திட்டத்தை - இந்தக் கோவில் நிதிகளிலி ருந்து எடுத்துக் கொடுக்க லாமே! நாட்டில் இருவகை முதலாளிகள் - ஒன்று, தொழில் முதலாளிகள்; இன் னொன்று ஏழுமலையான் போன்ற கல் முதலாளிகள்.

(இன்னொரு கூடுதல் தகவல்: ஏழுமலையான் தன் கலயாணத்துக்காக குபேரனி டம் கடன் வாங்கினானாம் - அதனை அடைக்கத்தான் இந்த உண்டியல் வசூலாம்! கடவுளே கடன்காரனா? பேஷ், பேஷ் நன்னாயிருக்குப் போங்கோ!).

Read more: http://viduthalai.in/e-paper/75215.html#ixzz2tFWVzoOX

தமிழ் ஓவியா said...


தெரிந்து கொள்க!


பல துறைகளில் வசதிகள் இருக்கத்தான் செய் கின்றன. அந்த வசதிகள் இருப்பது எத்தனைப் பேர் களுக்குத் தெரியும்?

“May I Help You” என்று எழுதப்பட்டு இருக்கும்; அங்குள்ளவரிடம் சென்று உதவி கேட்பதற்கு நம் மக்களுக்கோ ஒரு வகை தயக்கம். இந்தச் சபைக் கோழைத்தனத்தைத் தூக்கி எறிய வேண்டும்.

ரயிலில் பயணம் செய்வோர்களுக்குச் சில தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும்! குறிப்பாக பெண்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்களோடு தொடர்பு கொள்ளலாம். 044-25353999 மற்றும் 9003161710 இந்த உதவி (Help Line) 24 மணி நேரத்திற்கும் கிடைக்கும் - முதலில் பெண்கள் கைப்பேசியில் இவற்றைப் பதிவு செய்து கொள்ளட்டும்.

Read more: http://viduthalai.in/e-paper/75208.html#ixzz2tFWdpSMA

தமிழ் ஓவியா said...


இப்பொழுதே மிரட்டலா?மோடி மற்றும் பிஜேபியின் மதவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கருத்தை பதிவு செய்பவர்கள்மீது சிறிதும் சகிப்புத்தன்மை இல்லாமல் மிரட்டுபவர்கள் உள்ளனர். இவர்கள் சமூக தளங்களான டிவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் கருத்திடுபவர்களில் குறிப்பிட் டவர்களை மய்யப்படுத்தி தொடர் தாக்குதலும் நடத்துகின்றனர். அப்படிப்பட்டவர்கள்மீது சைபர் குற்றச் சட்டப்படி (அய்.டி.) நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரசு செய்தி தொடர்பாளர் அஜய் மக்கான் உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேவிடம் புகார் கொடுத்துள்ளார். மேலும், அண்மையில் மூத்த பெண் ஊடகவியலாளர் ஒருவர் எழுதியதற்காக அச் சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளார். அதேபோல், காங்கிரசு பிரச்சார ஊழியரான அசீபா ஆமின் என்பவர்மீது சமூக ஊடகங்கள்மூலம் ஆபாசமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இதுபோன்ற தாக்குதல்கள் அதிகாரத்துக்கு வருவதற்கு முன்பாகவே மிரட்டுகிறார்கள். இவர்களை அடையாளம் காணவேண்டும் என்கிறார் காங்கிரசு செய்தி தொடர்பாளர் அஜய் மக்கான்.

Read more: http://viduthalai.in/e-paper/75214.html#ixzz2tFWsPA1s

தமிழ் ஓவியா said...


அய்.நா.சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிச்சயமாக நிறைவேற்றப்படும்


இங்கிலாந்து உறுதி

லண்டன், பிப். 13- இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிக் கட்ட போரில் ஆயிரக்கணக் கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித் தது. இந்த போர்க் குற்றம் குறித்து உலக நாடுகளும், அய்.நா.வும் கடும் கண் டனம் தெரிவித்தன.

அதை தொடர்ந்து அய்.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெ ரிக்கா ஏற்கனவே இரண்டு தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட் டன. இந்த நிலையில் அடுத்த (மார்ச்) மாதம் ஜெனீவாவில் அய்.நா.மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடக் கிறது. அதில், அமெரிக்கா சார்பில் இலங்கைக்கு எதி ராக மூன்றாவது தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

அதில், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும், பத்திரிகைகள் மற்றும் ஊட கங்களுக்கு சுதந்திரம் வழங் குவதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட் டுள்ளது.

இலங்கைக்கு எதிராக அய்.நா.வில் கொண்டு வரப் படும் இந்த தீர்மானம் நிச் சயமாக நிறைவேற்றப் படும் என இங்கிலாந்து நம்பிக்கை தெரிவித்துள்ளது.

போர்க்குற்றம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எந்த விதமான முன்னேற்ற நடவ டிக்கையும் மேற்கொள்ள வில்லை. எனவே, இங்கி லாந்து அரசு உலக நாடுகளு டன் இணைந்து சர்வதேச விசாரணைக்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள் ளது. இந்தத் தகவலை தமி ழர்களுக்கான அனைத்துக் கட்சி குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/75211.html#ixzz2tFX1olwB

தமிழ் ஓவியா said...


மனிதன்


மனிதன் என்பதற்கே பொருள், விசயங்களை ஆராய்ந்து பார்த்து, நன்மை - தீமை என்பதை உணர்ந்து, சகல துறைகளிலும் மேலும் மேலும் வளர்ச்சி அடைகிற தன்மை உடையவன் என்பதேயாகும். - (விடுதலை, 26.3.1951)

Read more: http://viduthalai.in/page-2/75216.html#ixzz2tFXPgHbN

தமிழ் ஓவியா said...


கேள்விக்கென்ன பதில்?


- குடந்தையான்

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி எல்லோரையும் கேள்வி கேட் கிறார். ஆனால் மற்றவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் தராமல் இருப்பது சாமர்த்தியம் என நினைக்கிறார். யோகேந்திர யாதவ், சமூக இயலாளர்; தற்போது ஒரு அரசியல் கட்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். சில கேள்விகளை தனது டிவிட்டர் வாயிலாக அவர் மோடியை நோக்கி, 10.2.2014 அன்று தொடுத்துள்ளார். 1. அதானி குழுமத்திற்கு, மோடி அரசில் நிறைய சலுகைகள் தரப்பட் டுள்ளன. மோடிக்கும், அதானி குழுமத்திற்கும் உள்ள உறவு என்ன? 2. தற்போது மோடி மேற்கொள் ளும் கோடிக்கணக்கான ரூபாய் விளம் பர செலவுகளுக்கு யாரிடமிருந்து பணம் பெறப்பட்டது? இது குறித்து பிஜேபியிடம் வெளிப்படையான தன்மை இல்லையே? 3. நீதிமன்றத்தால் குற்றவாளி என தண்டிக்கப்பட்ட பாபுலால் பொகாரியா இன்னமும் மோடியின் அமைச்சர வையில் நீடிக்கிறாரே.

மோடி எப்படி அரசியலில் குற்றவாளிகள் நுழை வதை தடுப்பேன் எனக் கூற முடியும். 4. விவசாயிகள் தற்கொலை, குழந்தைகள் இறப்பு விகிதம், பள்ளி கல்வி தரம் இவற்றில் குஜராத் மாநி லம் பின் தங்கியுள்ளதே? இந்த கேள்விகளுக்கெல்லாம், மோடியிடமிருந்து எந்த பதிலும் வரப் போவதில்லை. 2007ஆம் ஆண்டு ஆங்கிலத் தொலைக்காட்சியில் கரன் தபார் கேட்டகேள்விக்கு பதில் தர முடியாமல் மோடி வெளியேறினார்.

தற்போது, அகமதாபாத்தில் தேநீர் கடையினை உருவாக்கி, அதில் காணொலி காட்சி முறையினை மிகுந்த பொருட் செலவில் உருவாக்கி உள்ளார் மோடி. நாடு முழுவதும் பல இடங்களிலிருந்து அவரிடம் கேள்வி கேட்டு பதில் பெறலாம் என விளம்பர யுக்தியை புகுத்தியுள்ளார். இந்த முறையில் எந்த ஊரிலும் தேநீர் கடை யாரும் நடத்தவில்லை. மோடி போன்ற கார்ப்பரேட் ஏஜெண்டுகள் தான் இம்மாதிரி கடையை நடத்த முடியும் என்பது வேறு செய்தி. முதலில் யோகேந்திர யாதவ் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லட் டும். பிறகு தேநீர் சாப்பிடலாம்.

Read more: http://viduthalai.in/page-2/75221.html#ixzz2tFXay8Rv

தமிழ் ஓவியா said...


முட்டாள்தனம் உனக்கு மட்டும்தான் சொந்தமா?

இஸ்ரேலில் கன்னி மேரி சிலை ஒன்று பேசிய தாக வந்த தகவல் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் லெபனான் எல் லையை ஒட்டியுள்ள டர்ஷிஹா என்ற சிறிய நகரத்தில் ஒசாமா கவுரி என்ற குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவரது வீட்டின் வரவேற்பறையில் உள்ள கன்னி மேரி சிலை சமீப காலங்களாக பளபளப் புடன் இருப்பதை, மனைவி அமிரா பார்த்துள்ளாராம்.

இதனை சுத்தம் செய்த சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் அந்த சிலையில் எண்ணெய்த் தன்மை தென்பட்டுள்ளதாம். அத்துடன் கன்னி மேரி சிலை தன்னிடம் பேசியதாகவும், தன்னை பயப்பட வேண்டா மென்று கூறிய தாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்தத் தகவல் வெளியே கசிந்து விடவே, நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து பார்வையிடுகின்றனர்.

மேலும் சிலையின் கன்னத்தில் ஒரு கண்ணீர் துளி திரண்டு வெளிப்பட்டதாகவும், கடந்த வாரம் மட்டும் 2,000க்கும் மேற்பட்டோர் வந்து இந்த சிலையை பார்த்து சென்றுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் என்பதுதான் இந்தச் செய்தி. இது போன்ற மூடநம்பிக்கைகளைப் பரப்புவது எல்லா மதத்திலும் உண்டு;

ஒரு சில நாள்களில் வந்த இடம் தெரியாமல் போய் விடும். சென்னையில்கூட சிலுவைக் குழந்தை என்று ஒரு புரூடா கிளம்பி சில நாள்களில் கப்சிப்! பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று புரளி கிளப்பி விடப்படவில்லையா? ஆர்.எஸ்.எஸ். காரர்களும் சந்திராசாமியும் சேர்ந்துதானே அந்தப் பித்தலாட் டத்தை அரங்கேற்றினர். பிள்ளையார் கொழுக்கட்டை தின்பதாக நிரூபித்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்று சென்னை அண்ணா சாலையில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் டாம் டாம் அடித்தாரே!

இதுபோன்ற வெளி நாட்டுத் தகவல்களை தந்தை பெரியாரிடம் யாராவது சொன்னால் முட்டாள்தனம் என்பது உனக்கு மட்டும்தான் சொந்தமா? என்று கேட் பார். அதுதான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.

மதம் என்றாலே அற்புதங்களைக் கிளப்பி விட்டு, அதை நம்பும் பாமர மக்களின் முட்டாள் தனத்தில்தானே உயிர் வாழுகிறது!

Read more: http://viduthalai.in/e-paper/75257.html#ixzz2tLFBwFNG

தமிழ் ஓவியா said...


பணியாளர் நியமனக் குழுக்களில் பிற்படுத்தப்பட்டோருக்குக் கட்டாய பிரதிநிதித்துவம்


கழகத்தின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுகிறது

பணியாளர் நியமனக் குழுக்களில்

பிற்படுத்தப்பட்டோருக்குக் கட்டாய பிரதிநிதித்துவம்

மத்திய அரசு ஆணைபுதுடில்லி, பிப்.14- சமூக நீதிக்கள போராளி களின் நீண்ட நாள் கோரிக் கைகளுள் ஒன்றான பணி யாளர் தேர்வு குழுக்களில் பிற்படுத்தப்பட்டோர் உட் பட அனைத்து சமூகத்தின ருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் புதிய ஆணையை மத்திய பணியாளர் நிர்வாக சீர்திருத்த அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

1995-ஆம் ஆண்டு வெளியிட்ட ஆணையின் படி மத்திய அரசின் சி மற்றும் டி பிரிவில் பத்து மற்றும் அதற்கு மேற்பட்ட பணியாளர்களைத் தேர்வு செய்யும் பணியாளர் தேர் வாணைக் குழுக்கள் மற் றும் ஆணையங்களில் தாழ்த் தப்பட்ட/பழங்குடி/இதர பிற்படுத்தப்பட்ட/பிரிவில் ஒரு பிரதிநிதியும் சிறு பான்மை சமூகத்திலிருந்து ஒரு பிரதிநிதியும் கட்டா யம் இடம் பெறவேண் டும் என அறிவிக்கப்பட்டி ருந்தது அவ்வாறு தேர்ந் தெடுக்கப்படுவர்களில் பெண்கள் இல்லாத பட் சத்தில் பொதுப்பிரிவைச சேர்ந்த ஒரு பெண்ணுக்குக் குழுவில் இணைந்து ஆலோசனை கூற வாய்ப் பளிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆணை தற் போது மறுஆய்வு செய் யப்பட்டு, புதிய ஆணை நேற்று (13.02.14) மத்திய பணியாளர் மற்றும் நிர் வாக சீர்திருத்த அமைச்ச கத்தால் வெளியிடப்பட் டது.

இந்தப் புதிய ஆணை யின் படி மத்திய அரசின் சி மற்றும் டி பிரிவில் 10 அல்லது அதற்கு மேற் பட்ட பணியாளர்களைத் தேர்வு செய்யும் போது தேர்வாணைக்குழுக்களில் தாழ்த்தப்பட்ட/பழங் குடி/இதர பிற்படுத்தப் பட்ட மற்றும் சிறுபான்மை பிரிவினர் ஒவ்வொன்றுக் கும், அனைவரும் கட்டா யம் இடம் பெற்றிருக்க வேண்டும். அவர்களில் பெண்கள் இல்லையெனில், பொதுப் பிரிவில் இருந்து ஒரு பெண் இடம் பெற வேண் டும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

மேற்கண்ட அறிவிப்பினை பொதுத் துறை நிறுவனங்கள், மத் திய அரசினால் நடத்தப் படும் வங்கிகள், மத்திய அரசின் அலுவலகங்கள், உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையம், பிரதம அமைச்சர் அலுவலகம் மற்றும் குடியரசுத் தலை வர் அலுவல கம் உள் ளிட்ட அனைத்திற்கும் பொருந்தும் என்று அறி விக்கப்பட்டுள்ளது. குறிப்பு: இதுவரை தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமே பிரதிநிதித்துவம் இருந்து வந்தது. இப்பொ ழுது அனைத்துப் பிரிவின ருக்கும் பிரதிநிதித்துவம் என்பது வரவேற்கத்தக்க தாகும்.

Read more: http://viduthalai.in/e-paper/75254.html#ixzz2tLFNWYTv

தமிழ் ஓவியா said...


வளர்கிறது

நீ இன்ன காரியம் செய்தால், உன் பாவம் மன்னிக்கப்படும்; பரிகாரமாகி விடும்; நீ பாவமற்றவனாக ஆகி-விடுவாய் என்று சொல்வதால் ஒழுக்கக்கேடே வளர்கிறது.
- (விடுதலை, 23.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/75259.html#ixzz2tLFp2cbF

தமிழ் ஓவியா said...


ஓராண்டில் நூறாண்டுச் சாதனை?


- குடந்தையான்

தமிழக அரசின் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வரியில்லா பட்ஜெட் என பெருமை யோடு கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2012-13 ஆண்டில் 4.14 விழுக்காடு தான்.

இது இந்திய அளவின் 4.9 விழுக் காட்டை விட குறைவு. இதற்கு முன்னர் ஜெயலலிதா முதல்வராக இருந்த 2005-06 ஆண்டில் தான் இந்த நிலை இருந்தது.

கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் ஒட்டு மொத்த பொருளா தார வளர்ச்சி (GDP) 2009-10-ல் 10.8 விழுக்காடாகவும், 2010-11-ல் 13.12 விழுக்காடாகவும், நாட்டிலேயே முன்னணி மாநிலமாக திகழ்ந்தது. ஆனால், ஜெயலலிதா தலைமையி லான அதிமுக ஆட்சியில், பொருளா தார வளர்ச்சி 2011-12-ல் 7.42 விழுக் காடாக குறைந்து, தற்போது 4.14 விழுக்காடாக வீழ்ச்சியடைந்துள் ளது. தமிழகத்தில் நிலவும் மின் வெட்டின் காரணமாக, தொழில் துறை கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தப் பிரச்சினையை, அரசு முறை யாக எதிர்கொள்ள வில்லை. அவ்வாறு செய்திருந்தால், குறு, சிறு தொழில் முனைவோருக்கு உதவியாக இருந் திருக்கும்; இந்த அளவுக்கு வீழ்ச்சி இருந்திருக்காது என மத்திய அரசின் திட்டக்குழு உறுப்பினர் அபிஜித் சென் கருத்து தெரிவித்துள்ளார். இத்தகைய பொருளாதார வீழ்ச்சி காரணமாக, தமிழ் நாட்டின் வேலை வாய்ப்பும் பெருமளவு பாதிக்கப்பட் டுள்ளது.

இந்த விஷயங்களையெல் லாம், இங்கே உள்ள ஊடகங்கள் எதுவும் விவாதிப்பது இல்லை; தங் களை நடு நிலை ஊடகங்கள் என கூறிக்கொண்டு, கருத்துத் திணிப்பை அரசுக்கு சாதகமாக வெளியிடுவதில் மிகுந்த அக்கறையோடு செயல்படு கின்றன.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, இந்த அளவுக்கு, இந்தியா வின் மற்ற மாநிலங்களைக் காட்டி லும், மிக மோசமான வீழ்ச்சியை அடைந்துள்ளது பற்றி, தமிழக நிதி அமைச்சர் கண்டு கொள்ள வில்லை; ஆனால் என்ன? ரூ.200 கோடிக்கு, மாடு வாங்கவும், ஆடு வாங்கவும் நிதி ஒதுக்கியுள்ளார். ஆடு, மாடு மேய்த்த நம் திராவிடர்கள், கல்வி கற்று மேம்பாடு அடைய வேண்டும் என பெரியார் போராடினார்.

நீதிக்கட்சியும், காமராசரும், மக்கள் கல்வி கற்று முன்னேறிட திட்டங்கள் தீட்டினர். ஆனால், அம்மையார் ஆட்சியில் மீண்டும் மாடு, ஆடு மேய்த்திடுவது தான் வளர்ச்சி எனக் கருதி, நிதி ஒதுக் கப்பட்டுள்ளது. ஓராண்டில், நூறாண்டு சாதனை என்பது இது தானோ?

Read more: http://viduthalai.in/page-2/75269.html#ixzz2tLFxD3bP

தமிழ் ஓவியா said...


சூனியமும் புராதன மதங்களும்!


சூனிய வித்தையை விடுவதென்றால் நமது புண்ணிய புராதன நூல்களைத் தூர எறிவதாகும் என்று சர்.தாமஸ் மோர் கூறினார். என்னுடைய அபிப்பிராயத்தில் அவர் கூறியது முற்றிலும் சரியே.

ஜான் வெஸ்லி என்பவர் பேய் பிசாசுகளிலும், சூனிய வித்தைகளிலும் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். இது சம்பந்தமான சட்டங்கள் எல்லாம் இங்கிலாந்தில் ரத்தாகி அநேக ஆண்டுகளுக்குப் பின்னும் இவர் தம் நம்பிக்கையை வற்புறுத்தியிருக்கிறார். இந்த ஜான் வெஸ்லி என்பவர்தான் முதன் முதலாக நூதன மாதிரி கோவில் ஸ்தாபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூ இங்கிலாந்தில் ஒரு பெண் சூனிய வித்தைக்காரி என்பதற்காகவும், அவள் நரியாக மாறினாள் என்பதற்காகவும் குற்றம் சாற்றப்பட்டாள். இந்த நிலையில் அவளைச் சில நாய்கள் கடித்துவிட்டன. நியாய ஸ்தலத்தின் உத்திரவின்படி ஏற்பட்ட மூன்று பேர் கூடிய கமிட்டியார் அவளைச் சோதனை செய்தனர்.

அவர்கள் அவளுடைய ஆடையை விலக்கி சூனியக் காரியின் சூட்சம ஸ்தானத்தைத் தேடினார்கள். அதாவது, அந்த விசேஷ இடத்தில் குண்டூசியால் குத்தினால் வேதனை உண்டாகாதாம். அவள் தான் ஒரு போதும் நரியாக மாறின தில்லை என்று மறுத்தாள். கமிட்டியார்கள் செய்த சிபார்சின் பேரில் அவள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப் பட்டாள்.

இவ்வட்டூழியங்கள் எல்லாம் (இங்கிலீஷ் சர்ச்சிலிருந்து பிறந்தவர்களான) ப்யூரிட்டன் பிரதர்ஸ் என்று சொல்லப் பட்ட கடவுளை வணங்க தைரியமாக கடல் கடந்து இங்கிலாந்தி லிருந்து அமெரிக்கா சென்று தம் சகோதரர்களைக் கொடுமைப்படுத்திய கிறிஸ்தவர்களால் செய்யப்பட்டன.

கோடைகாலத்தில் பனியுண்டாக்கியதற்காகவும், மூடு பனியால் விளை பொருள்களைக் கெடுத்ததாகவும், புயல், பீர், சாராயம் முதலியன கசப்படைந்ததற்காகவும், ஒரு பாவமும் அறியாத மனிதர்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர். எவனும் எந்தக் குற்றத்துக்காவது உள்ளாகி தண்டனை அடையாமல் இருக்க முடியவில்லை. குற்றம் சாட்டப்பட்ட எல்லோரும் தண்டிக்கப் பட்டனர். எல்லோருடைய ஜீவனும் ஆபத்துக் கிடமான தாகவே இருந்தது.

ஒவ்வொருவனும் மற்றவனுடைய இரக்கத்தை எதிர்பார்த்தவனாக இருந்தான். இந்த நம்பிக்கை பேய், பிசாசு உண்டு; சூனிய வித்தை உண்டு; சூனிய வித்தைக்காரர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை மிக வேரூன்றி இருந்தபடியால் இதன் உண்மையைச் சந்தேகிக்கும் எவன்பேரிலும் அவ நம்பிக்கை வைக்கப்பட்டது. பேய், பிசாசு இல்லை என்று எவன் சொன்னாலும் அவனைத் தெய்வ நிந்தனையுடைய துஷ்டன் என இகழ்ந்து வந்தனர்.

(கர்னல் ஆர்.ஜி.இங்கர்சால் எழுதிய பேய்-பூதம் பிசாசு என்ற நூலில்) தகவல்: குன்னம் ராமண்ணா

Read more: http://viduthalai.in/page-5/75304.html#ixzz2tLGpVO4S

தமிழ் ஓவியா said...


பார்ப்பான் உருவில் கடவுள்!


தோழர்களே! நான் கூறுகிறேன்! ஜாதி ஒழிந்தால் கடவுள் ஒழியும், பார்ப்பான் பூசை செய்யும் கோவிலுக்கு இனி எந்தத் தமிழனும் போகக் கூடாது.

சாமியும் பார்ப்பானுக்கு அனுகூலமாகத்தான் இருக் கின்றது. எப்படி நாம் பார்ப்பானை தொடக்கூடாதோ அதுபோல சாமியையும் தொடக் கூடாது. எப்படி பார்ப்பான் ஜாதியில் உயர்ந்தவனோ அது போல கடவுளும் உயர்ந்தது. பார்ப்பானும் பூணூல் போட்டிருக்கின்றான். கடவுளும் போட்டிருக்கிறது. பார்ப்பானுக்கும் உச்சிக்குடுமி. கடவுளுக்கும் உச்சிக்குடுமி.

பார்ப்பான் நாம் சமைத்ததை உண்ண மாட்டான்; கடவுளும் நாம் சமைத்ததை உண்பது கிடை யாது. பார்ப்பானும் நம் கண்முன் உண்ணாமல் மறைவாக உண்பான்; கடவுளும் அப்படியே. பார்ப்பானுக்கும் பஞ்சகச்சம், கடவுளுக்கும் பஞ்சகச்சம். பாப்பாத்தி தாருபாச்சி கட்டுகின்றாள், கடவுளச்சியும் அப்படியே கட்டுகின்றாள்.

பார்ப்பான் வீட்டிற்குள் நாம் செல்லக்கூடாது. அதுபோல் கடவுள் கோயிலுக்குள் நாம் செல்லக்கூடாது. இப்போது கூறுங்கள் , கடவுளும் பார்ப்பானும் அழிக்கப்பட வேண்டியவர்களா இல்லையா? என்று படித்தவர்களை கேட்கின்றேன்; பக்திமான்களைக் கேட்கின்றேன்; கடவுள் உருவம், குணம் ஒன்றும் இல்லாதவன்;

அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் வியாபித்திருப்பவன் என்றெல்லாம் கூறிவிட்டு குழவிக்கல்லில் கடவுள் மகத்துவம் இருப்பதாக கூறி பெண்டாட்டியும், பிள்ளைக்குட்டிகளும் கற்பித்திருக் கின்றீர்களே இது எவ்வளவு பித்தலாட்டம்? வெள் ளைக்காரனும், சாயபுவும், கிறிஸ்தவனும் கூறுவதுபோல ஒரு கடவுளா உங்களிடத்தில் உள்ளது?

எனவே, இந்த நாட்டில் கடவுளுக்கும், கடவுள் தன்மைக்கும், மதிப்பிருந்தால் கடவுளர்களின் தாலிகள் அறுக்கப்படுமா? நகைகள் களவாடப்படுமா? அதே இடத்தில் அவர்களை ஏன் கடவுள் பிடித்து நிறுத்தக் கூடாது? இவற்றிலிருந்து கடவுளோ, கடவுள் தன்மையோ இந்த நாட்டில் இல்லாமல் போய்விட்டது என்பதுவும் அத் தனையும் பித்தலாட்டமென்பதுவும் புலனாக வில்லையா?

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-5/75306.html#ixzz2tLH9zYra

தமிழ் ஓவியா said...


பால்ய விவாகம்!


குழந்தை: என்னடி அம்மா! நேற்று என் கழுத்தில் போட்டிருந்த நகையைக் காணோமே! அதை யார் எடுத்தார் கள்?

தாய்: அடிப்பாவி! அது நகையல்ல; தாலி, அதை ராத்திரி அறுத்தாய் விட்டது.

குழந்தை: எனக்குத் தெரியலையே!

தாய்: ராத்திரி 11 மணி இருக்கும்; நீ அப்போது தூங்கி விழுந்து கொண்டிருந்தாய்; ஆதலால் உனக்குத் தெரிய வில்லை. குழந்தை: அதை ஏன் அறுத்தார்கள்?

தாய்: அத்தாலியைக் கட்டின உன் புருஷன் இறந்து விட்டானல்லவா? அதனால் அறுத்து விட்டார்கள்!

குழந்தை: அவன் போனால் போகட்டுமே! வேறு யாரையாவது கட்டச் சொல்றதுதானே! அதை ஏன் எனக்குத் தெரியாமல் கழட்டிக் கொண்டாய்? அதை மறுபடியும் என் கழுத்தில் போட்டால் தான் சாப்பிடுவேன் ஊ! ஊ!! ஊ!!!

குடிஅரசு, 1-4-1928

Read more: http://viduthalai.in/page-5/75307.html#ixzz2tLHIwQ30

தமிழ் ஓவியா said...

மாணவர்களுக்கு அண்ணா அறிவுரை

நமது கலாச்சாரமும் நாகரிகமும் முதிர்ந்ததுதான் ஆனால் அவற்றின்மீது வடுக்களும், சுருக்கங்களும் ஏற்பட்டு உருக்குலைந்து போயிருக்கின்றன.

ஆகவே, நமது கலாச்சாரம், நாகரிகம் ஆகியவற்றில் உயர்ந்த அம்சங்களை ஆராய்ந்து கண்டுபிடித்து, பிறநாடு களின் சாதனைகளில் நமக்குத் தேவையானவற்றைத் தாராளமாகப் பின்பற்றி முன்னேற்ற வேண்டும்.

இப்படிச் செய்யாமல் நாம் வடுக்களையும், சுருக்கங் களையும் அழுகிப்போன பகுதிகளையும் நீண்ட காலத்துக்கு மூடி மறைத்து வைத்திருந்தோம். புதிய எண்ணம் கொண்ட பெரியார் போன்றவர்களையும் கண்டித்து வந்தோம்.

பட்டம் பெற்றுவிட்ட நீங்கள் சமுதாயத்தை மாற்றி அமைப்பதிலும் சமுதாயத்தில் தாழ்ந்து கிடப்பவர்களுக்கு நம்பிக்கை ஒளி உண்டாக்குவதிலும் அனைவருக்கும் புதுவாழ்வு மலரச் செய்வதிலும் பாடுபட வேண்டும்.

- 18.11.1967ஆம் நாள் அன்று
அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அண்ணா

Read more: http://viduthalai.in/page-5/75307.html#ixzz2tLHR82va

தமிழ் ஓவியா said...


என்னாகும்?


சகுனம் பார்க்கிறோமே! சாப்பிடும்போது சகுனமோ, ராகு காலமோ பார்க்கிறோமா? நீதிமன்றத்தில் ராகு காலம் பார்த்தால் என்ன ஆகும்? - (விடுதலை, 21.12.1954)

Read more: http://viduthalai.in/page-2/75325.html#ixzz2tOZ7A3rE

தமிழ் ஓவியா said...


ஜனநாயகம் என்பது இதுதானா?


இந்திய நாடாளுமன்றம் படும்பாட்டை நினைத்தால் இதுதான் ஜனநாயகம் போலும் என்ற கேள்வி எழத்தான் செய்யும்; ஜனநாயகம் என்ற ஒன்று உண்மையிலேயே நடைமுறையில் இல்லை; ஆனாலும் ஜனநாயகம் என்ற ஒன்று இருப்பதாக நம்பிக் கொண்டு இருக்கிறோம். அதனால்தான் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள் இந்த நாட்டைப் பிடித்த மூன்று பேய்களுள் ஜனநாயகமும் (மற்றது ஜாதி, கடவுள்) ஒன்று என்று கூறினார்.

தெலங்கானா பிரச்சினை தொடர்பாக இந்தமுறை கூடிய நாடாளுமன்ற இரு அவைகளும் ரண களமாகக் காட்சியளிக்கின்றன. ஒலி பெருக்கி உடைப்பு, மிளகுப் பொடித் தூவல் (ஸ்பிரே) கத்தி என்ற சமாச்சாரங்கள் எல்லாம் அரங்கேறியுள்ளன.

என் இதயத்தில் ரத்தம் கசிகிறது என்று பிரதமர் கூறும் அளவுக்கு நிலைமைகள் அநாகரிகத் திசையில் வேகமாக சுழன்று கொண்டு இருக்கின்றன. தெலங்கானா பிரச்சினையாகவே இருக்கட்டும்; மசோதா மீது இரு தரப்பு வாதங்களும் வைக்கப்படட்டும், கடைசியில் வாக்கெடுப்புக்கும் விடப்படட்டும்; அதன் முடிவில் தீர்மானிக்கப்படட்டும், அதுதானே நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது.

மசோதாவையே தாக்கல் செய்ய விட மாட்டோம் - இரகளை செய்வோம் என்ற ரீதியில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் செயல்படுவார்களேயானால், இதைவிட அநாகரிகம், பண்பாடற்ற செயல் வேறு எதுவாகத்தான் இருக்க முடியும்?

இவ்வளவுக்கும், சட்டமன்றம், நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந் தெடுத்து அனுப்பிய வாக்காளர் பெருமக்களும் அவற்றை பார்த்துக் கொண்டு தானிருக்கின்றனர். நம்மைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்கள் நம்மைப்பற்றி என்னதான் நினைப்பார்கள் என்ற நிதானமின்றி நடந்து கொள்கிறார்கள் என்றால், அதன் பலனை மறுமுறை தேர்தலில் நிற்கும் பொழுது அனுபவிக்க நேரிடும் என்று எச்சரிக்க வேண்டியது நமது கடமையாகும்.
இதில் காங்கிரஸ் என்றோ, பிஜேபி என்றோ இனம் பிரித்துப் பார்ப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு தொடரே முழுமையாக நடக்க முடியாத அளவுக்கு ரகளையில் ஈடுபட்டவர்கள்தான் இந்த பிஜேபியினர்.

சட்டசபையிலும், நாடாளுமன்றத்திலும் அமர்ந்து கொண்டு கைப்பேசிமூலம் ஆபாசப் படங்களைப் பார்க்கின்றனர் நமது மாண்புமிகு உறுப்பினர்கள் என்றால், சட்டசபை என்பதை வேறு வகையான இடமாக மாற்றிக் கொண்டு விட்டார்கள் கனம் உறுப்பினர்கள் என்று தானே பொருள்!

நாடாளுமன்றத்திலேயே வன்முறைக் கலாச்சாரம் தலை தூக்குகிறது என்றால், உள்ளாட்சி மன்றங்கள் வரை அது நீள்வதற்குக் கேட்கவா வேண்டும்?

ஊராட்சி மன்றங்கள், நகராட்சி மன்றங்கள், மாநகராட்சி மன்றங்களும் இத்தகைய வன்முறைக் கலாச்சாரங்களை அரங்கேற்றிக் கொண்டுதான் இருக்கின்றன.

உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைக் குரியதாக இந்தியா பேசப்படுவதுண்டு; அது அவப் பெயராக மாறும் சூழல் இப்பொழுது ஏற்பட்டு விட்டதே!

வன்முறை, நாட்டில் வளர்ந்துவிட்டது என்று பொதுவாகக் குறை கூறுவதுண்டு; நாடாளுமன்றமே வன் முறைக் களமாக மாறும் நிலையில், வீதிகளில் வன் முறைகள் கத்தியைத் தீட்டுவதைக் கேட்கவா வேண்டும்? சட்டத்தை உருவாக்குபவர்களே, அதனைக் கட்டிக் காக்க வேண்டியவர்களே கத்தியைத் தூக்கிக் கொண்டு நாடாளு மன்றத்தில் முண்டாதட்டும் பொழுது, அதனுடைய பாதிப்பு கடைக்கோடி குடிமகனுக்கும் சென்று அடையாதோ!

சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் எப்படியும் நடந்து கொள்ளலாம், எதையும் பேசலாம்? அதனை யாரும் கட்டுப்படுத்த முடியாது - நீதிமன்றமும் தலையிட முடியாது என்ற வானளாவிய அதிகாரமும், மகத்துவமும் மக்களின் பிரதிநிதித்துவ மன்றங்களுக்கு இருக்கின்றன என்பதற்காக அதனைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளலாமா?

என்ன தவறு செய்தாலும் உறுப்பினர்களைத் தண்டிக் கும், கண்டிக்கும் போக்கு பொதுவாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. அதில் ஒரு மாற்றுச் சிந்தனை தேவைப்படும் காலம் வந்து விட்டது. என்பதில் அய்யமில்லை. ஒவ்வொரு கூட்டத் தொடருக்கு முன்னதாக சபாநாயகர் அனைத்துக் கட்சித் தலைவர் களையும் அழைத்துப் பேசுகிறார். அவை நடவடிக்கை களுக்கு ஒத்துழைக்க வேண்டுகோள் விடுக்கிறார். அங்குத் தலையை ஆட்டிவிட்டு, வழக்கம்போல அவையை நடத்தவிடாமல் புலியாட்டம் போடுவது கட்சிகளுக்கு, தலைவர்களுக்கு அழகல்ல - அழகேயல்ல!

Read more: http://viduthalai.in/page-2/75326.html#ixzz2tOZFeHVr

தமிழ் ஓவியா said...


48 நாள் மண்டல ஆட்சி


ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடிய வில்லை என்ற காரணத்தைச் சொல்லி டில்லி முதல்வர் பதவியிலிருந்து விலகி உள்ளார் அர்விந்த் கெஜ்ரிவால். ஊழல் என்கிற ஒரு விஷயத்தை முன்னிறுத்தி அன்னா ஹசாரே துவக்கிய போராட்டத்தின் பயனை, கெஜ்ரிவால் அறுவடை செய்தார்.

ஆம் ஆத்மி கட்சியை துவக்கி, டில்லி ஆட்சியைக் கைப்பற்றினார். பதவி ஏற்ற நாள் முதல், கெஜ்ரிவாலும் அவரது அமைச்சர்களும் அரசாங் கத்தை நிர்வகிக்கும் முறை கடும் விமர்சனத்துக்குள்ளானது. டில்லி காவல்துறை அதிகாரிகளை நீக்கம் செய்திட வேண்டும் என வலியுறுத்தி, நாடாளுமன்றம் முன்பாக முதல்வர் கெஜ்ரிவால் மூன்று நாட்கள் மறியல் நடத்தி, சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படக் காரணமானார்.

கட்சி நடத்த வேண்டிய போராட்டத்தை, மாநிலத் தின் முதல்வர் என்ற தகுதியில் நடத் தினார். கட்சியின் சட்ட மன்ற உறுப் பினர் வினோத் பின்னி, தனக்கு அமைச்சர் பதவி தரவில்லை எனக் கூறி போராட்டம் நடத்தினார்; அரவிந்த் கெஜ்ரிவால்மீது விமர்சனம் செய்து, இறுதியாக கட்சி நடவடிக்கைக்கு ஆளானார்.

சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி, சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, ஆப்பிரிக்க நாட்டிலிருந்து வந்த பெண் கள் மீது வன்முறைத் தாக்குதலில் ஈடு பட்டு, கடும் கண்டனத்திற்கு உள்ளா னார். மக்கள் தம் குறைகளை நேரில் அளித்திடலாம் எனக்கூறியதும், கட்டுக் கடங்காத கூட்டம் கூடியதால், அந்த மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சியை முற்றாக ரத்து செய்தார் கெஜ்ரிவால். இந்த செயல் அர்விந்த் கெஜ்ரிவாலின் நிர்வாகத் திறமையின்மையை காட்டி யது. இறுதியாக, லோக்பால் சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றுவேன் என சபதம் செய்தார்.

மத்திய அரசின் ஒப்புதலோடு தான் டில்லி சட்ட மன்றத்தில் லோக்பால் சட்டத்தை அறி முகப்படுத்த முடியும் என ஆளுநர், அரசியல் சட்ட விதிமுறைகளைக் கூறியும், அதனை சட்ட ரீதியாக சந்திக் காமல், சட்டமன்றத்தில் மசோதாவை அறிமுகப்படுத்த முயன்று, அதில் தோல்வி கண்டவுடன், முதல்வர் பதவியிலிருந்து விலகி உள்ளார்.

அரசாங்கம் நடத்துவதற்கு, ஊழல் எதிர்ப்பு எனும் ஒற்றை முழக்கம் மட்டுமே போதாது என்பதை 48 நாள்கள் மண்டல ஆட்சி நடத்திய கெஜ்ரிவாலும் அவரது கட்சியினரும் இப்போதாவது உணர்ந்தால் அவர் களுக்கும், நாட்டிற்கும் நல்லது.

- குடந்தையான்

Read more: http://viduthalai.in/page-2/75334.html#ixzz2tOaBnqHI

தமிழ் ஓவியா said...


தர்மத்தின் நிலை


நாட்டுக்கோட்டை நகரத்தாருள் முக்கியஸ்தரான ஸ்ரீமான் சர். அண்ணாமலை செட்டியார் அவர்கள் 20 லட்சம் ரூபாய் கல்விக்காக தர்மம் செய்திருப்பதாக அறிகின்றோம். ஆனால் அத்தருமம் எவ்வளவு தூரம் நாட்டிற்கோ அல்லது பார்ப்பனரல்லாத மக்களுக்கோ உபயோகப்படும் என்பது அறியக் கூடாததாகவே இருக்கின்றது.

தவிர பார்ப்பனர் எந்த ஒரு சிறிய தர்மம் செய்தாலும் அது தங்கள் இனத்தாரைத் தவிர வேறு யாருக்கும் உபயோகப் படாதபடியே செய்வது வழக்கம். ஆனால் பார்ப்பனரல்லாதாரில் பெரிதும் குறிப்பாய் நாட்டுக் கோட்டை நகரத்தார் செய்யும் தருமங்கள் ஒவ்வொன்றும் பார்ப்பனரைப் போல் தமது சமுகத்தாராகிய பார்ப்பனரல்லாதாருக்கே உபயோகப்படும்படி செய்யா விட்டாலும் முழுதும் பார்ப்பனர்களுக்கே உபயோகப் படும்படி செய்வதே வழக்கமாகி வருகிறது.

கோவில்கள், வேதபாடசாலைகள், சத்திரங்கள், அறுபதாம் கல்யாணங்கள் முதலியவைகளில் செலவிடும் பணங்கள் போகும் வழிகளை அறிந்தவர்கள் தான் உண்மையை உணரலாம். அதோடு கூடவே, இப்படிப் பார்ப்பனருக்கே பெரிதும் தருமஞ் செய்த பல நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் கோடீஸ்வரர்களாயிருந்து பாப்பராகிவிட்டதையும் அறியலாம். இப்படி இவர்கள் பாப்பர்களாவதில் யாரும் வருத்தப்பட நியாயமிருப்ப தாகவும் தெரியவில்லை. ஏனெனில் இவர்கள் எந்த சமூகத்தாரிடம் இருந்து நல்வழியிலேயோ, கெட்ட வழியிலேயோ இப்படி கோடிக் கணக்கான பணம் சம்பாதித்தார்களோ அந்த சமூகத் தாருக்குத் துரோகம் செய்து பார்ப்பனரல்லாத மக்களை வஞ்சித்துப் பிழைக்கும் ஒரு சமூகத்தாருக்கே அதைச் செலவு செய்வதானால் அப்படியவர்கள் தண்டனை அடைய வேண்டியது கிரமமா அல்லவா! ஆதலால் நமது சர். அண்ணாமலை செட்டியார் செய்திருக்கும் இந்த 20 லட்ச ரூபாய் தர்மமானது மேல்கண்ட குற்றத்திற்கு ஆளாகாமல் இருக்கத்தக்க மாதிரியில் தமது தர்மப் பணங்கள் முழுதும் உபயோகப்படும்படியாக தக்க ஏற்பாடும் செய்ய வேண்டும் என்று சர். அண்ணாமலை செட்டியார் நன்மையையும் பார்ப்பனரல்லாதார் நன்மையையும் நமது நாட்டின் நன்மையையும் உத்தேசித்து வேண்டிக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 08.04.1928

Read more: http://viduthalai.in/page-7/75359.html#ixzz2tOaZs1TA

தமிழ் ஓவியா said...

இன்னுமா சந்தேகம்? இரகசியம் வெளியாய் விட்டது

பார்ப்பனர்கள் காங்கிரஸின் பேராலும் தேசியத்தின் பேராலும் ஸ்ரீ வரதராஜுலு போன்ற ஆசாமிகளைச் சுவாதீனம் செய்து கொண்டு பார்ப்பனரல்லாதாருக்குக் கெடுதி செய்து வருவதைப் பற்றியும் சென்ற சட்டசபைத் தேர்தல் முடிந்த வுடன் காங்கிரசுக்கும் தேசியத்திற்கும் விரோதமாய்ப் பொய்க் கால் மந்திரிகளைச் சிருஷ்டித்ததும், அவர்களை ஆதரித்ததும் பார்ப்பனரல்லாதார்களுக்குக் கெடுதி உண்டாகச் செய்யவே என்பதாகவும் பலமுறை எழுதிவந்திருக்கின்றோம். இதற்கு சரியான ருசு கொடுக்க சமீபத்தில் சென்னை சட்டசபையில் விலக்கப்பட்ட மந்திரியாகிய ஸ்ரீமான் ரங்கநாதமுதலியார் சொன்ன வாசகமே போதுமானதென்று நினைக்கின்றோம். அவர் சொன்னதாவது 1926-ல் நாங்கள் மந்திரி பதவிகளை ஏற்றுக் கொண்டவுடன் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் எங்களை ஆதரிப்பதாக காங்கிரஸ் கட்சியாரிட மிருந்து ஒப்பந்தம் வெளியாயிற்று. அந்த ஒப்பந்த நிபந்தனை என்னவென்றால் ஸ்தல ஸ்தாபனங்களுக்கும், கமிட்டி களுக்கும் மற்ற நியமனங் களுக்கும் ஜஸ்டிஸ் கட்சியாரை நியமிக்காமல் இருக்க வேண்டும் என்பது தான், இந்த வாசகம் ஸ்ரீமான் எ. ரங்கநாத முதலியார் அவர்கள் சொன்னதாக 23.03.1928இல் சுதேச மித்திரனிலேயே இருக்கிறது.

இதைக் காங்கிரஸ் கட்சி சட்டசபைத் தலைவர்கள் ஸ்ரீமான்கள் சாமி வெங்கிடாசலமும், சத்தியமூர்த்தியும் சட்ட சபையில் மறுக்க வில்லை என்பதினாலேயே இது உண்மை என்பது ஒரு சிறிதும் சந்தேகமில்லை. இப்படி இருக்க ஜனாப் அமீத்கான் சாயபு காங்கிரஸ் கட்சியாருக்கு அம்மாதிரி நிபந்தனை செய்து கொள்ள யாரும் அதிகாரம் கொடுக்கவில்லை என்பதினா லேயே ஸ்ரீரங்க நாத முதலியார் சொல்வது பொய்யாகி விடுகிறதா? என்பதை வாசகர்களே யோசித்துப் பார்த்துத் தேசியமென்பதும், காங்கிரசென்பதும்பார்ப்பனரல்லாதாருக்கு ஆபத்தா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டுகிறேன்.

- குடிஅரசு - கட்டுரை - 25.03.1928

Read more: http://viduthalai.in/page-7/75360.html#ixzz2tOaqvG00

தமிழ் ஓவியா said...


லோகோபகாரியின் மயக்கம்


31-05-1928 தேதி லோகோபகாரியின் தலையங்கத்தில் மணவயது மசோதாவைப் பற்றி எழுதுகையில் குழந்தை களுக்கு மணம் செய்து வைக்கும் முறையைக் கண்டித்து சில ஆண்டுகளாகவே நாட்டில் கிளர்ச்சி ஏற்பட்டிருக் கின்றது. இது நன்று, ஆனால் இது விஷயத்தில் பொது ஜனங்களுக்கு அறிஞர்களின் பிரச்சாரத்தால் நல்லறிவு தோன்றுமாறு செய்தலே நல்வழியாகும். தற்காலத்தில் இதுமுடியாத காரியமாகத் தோன்றுகிறது. ஆயினும் இவ்விஷயத்தில் அரசாங்கத்தார் சட்டம் போடுதல் பொருத்தமுடைய செயலல்லவென்று நமக்குத் தோன்றுகிறது, என்று எழுதி விடு கின்றது. இப்படி எழுதி இருப்பதானது சீர்திருத்தக்காரருக்குத் தலையையும் அதன் விரோதிகளான பார்ப்பனர்களுக்கு வாலையும் காட்டுவது போல் இருக்கின்றது.

குடிகளால் சரி செய்து கொள்ள முடியவில்லை என்று தன்னாலேயே ஒப்புக் கொள்ளப்பட்டதும் உண்மையிலேயே மனித சமூகத்துக்குக் கேடு உண்டாக்குவதுமான விஷயம் சர்க்காரால் சரி செய்யப்பட நேருவதில் லோகோபாகாரிக்குக்கு உள்ள கஷ்டம் இன்னது என்பது நமக்கு விளங்கவில்லை.

கடைசியாக இந்தச் சட்டம் அமலுக்கு வரும் பொழுது வயது நிர்ணயம் முதலிய விஷயங்களில் பலவித தொல்லை விளையும் என்று எழுதுகின்றது. மனிதன் தன் சொத்தை அடையும் விஷயத்திலும், உத்தியோகம் பெறும் விஷயத் திலும் மற்றும் அனேக விஷயத்திலும் வயது நிர்ணயம் குறிக்கப் பட்டிருக்கின்றது. இவைகளில் என்ன தொல்லைகள் விளைந்து மக்களைக் கெடுத்துவிட்டது என்பது விளங்க வில்லை. வேறு மதஸ்தர்கள் என்பவர்களுக் காகிலும் வயது கண்டு பிடிக்கும் விஷயம் சற்று கஷ்டமாக இருக்கலாம்.

இந்துக்கள் என்போர்களுக்கு அதிலும் பார்ப்பனர்கள் என்போர்க்கு வயது கண்டுபிடிப்பதில் தொல்லை விளைய காரணமில்லை என்றே சொல்வோம். ஏனெனில், அவர்கள் ஜோசியம், ஜாதகம் என்னும் ஒரு வித மூடநம்பிக்கை யுள்ளவர்களானதால் கண்டிப்பாய்க் கணக்கு வைத்திருக்க முடியும். அதோடு சர்க்கார் பிறப்பு இறப்புகளைப் பதிவு செய்து வருவதால் ஜாதகத்தைப் புரட்டி விடுவார்கள் என்கின்ற பயமும் வேண்டியதில்லை.

எனவே இனியாவது லோகோபகாரிச் சீர்திருத்த விஷயங்களில் இம்மாதிரி வழவழப்பையும், இரண்டு பேருக்கும் நல்லவராகப் பார்க்கும் தன்மையையும் விட்டுத் தைரியமாய் ஒரு வழியில் நின்று மக்களுக்கு உதவ வேண்டுமாய் ஆசைப்படுகின்றோம்.

- குடிஅரசு - கட்டுரை - 10.06.1928

Read more: http://viduthalai.in/page-7/75361.html#ixzz2tOaxFC3l

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

உங்கள் (தாழ்த்தப்பட்டவர்கள்) தலைமேல் கால் வைத்து ஏறிப் போகிறவர்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பீர்களானால் உங்கள் கொடுமை சீக்கிரத்தில் கவனிக்கப்படும். இல்லாவிட்டால் நீங்கள் படிக்கல்லாக விழுந்துகிடக்க வேண்டியதுதான்.

Read more: http://viduthalai.in/page-7/75361.html#ixzz2tOb4QJvR

தமிழ் ஓவியா said...


அருப்புக்கோட்டை சுயமரியாதை கேஸ் விடுதலை


அருப்புக்கோட்டையில் சுகாதார வாரக் கொண் டாட்டம் நடைபெற ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் ஒரு பார்ப்பனர் தன்னைத்தானே அக்கிராசனாதிபதியாக தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆசனத்திலமர்ந்து நடவடிக்கை ஆரம்பிப் பதற்காக முதலில் ஒரு பார்ப்பனரல்லாத வாலிபர் பாட ஆரம்பித்தவுடன் அக்கிராசனத்திலிருந்த பார்ப்பனர் கோபம் கொண்டு முதல் முதல் சூத்திரன் பாடக் கூடாது; பிரா மணன் தான் பாட வேண்டும் என்று சொல்ல, உடனே அங்கி ருந்த கூட்டம் சூத்திரன் என்று சொன்னதற்காக அக்கிரா சனரை மன்னிப்புக் கேட்கும்படி கேட்கவே, அக்கிராசனர் மன்னிப்பு கேட்காததால் கூட்டத்தார் அத்தனை பேரும் சுய மரியாதைக்கு ஜே! ராமசாமி நாயக்கருக்கு ஜே! என்று சொல்லிக் கொண்டு கலைந்து போய்விட்டார்கள். பிறகு எவ்வளவு தூரம் மன்னிப்பு கேட்டுக் கொண்டும் கூட்டம் கூடவே இல்லை. இதனால் ஆத்திரம் கொண்ட ஒரு பார்ப்பன சுகாதார இன்ஸ்பெக்டர் பார்ப்பன போலீசின் உதவி பிடித்து, பல பார்ப்பனரல்லாத வாலிபர்களின் மேல் கேஸ் தொடுத்து, அதாவது அரசாங்க உத்தியோகஸ்தரின் வேலையை செய்ய வொட்டாமல் தடுத்ததாகவும் மற்றும் சிலகுற்றங்களும் சுமத்தி அரஸ்டு செய்து ஜாமினில் விடவும் மறுத்து சிறைச் சாலையில் இரவெல்லாம் அடைத்து வைத்து கேஸ் தொடர்ந்தார்கள். கேசுக்கு மதுரையிலிருந்து வக்கீல்கள் பீசில்லாமல் போய் பல வாய்தாக்கள் ஆஜராகி கேஸ் நடத்தினார்கள். கடைசியில் குற்றவாளிகள் இன்னார் என்று சரிவர அடையாளம் காட்டவே முடியாமல் போய் விட்டது. அப்படி இருந்தும் அதிகாரிகளின் மனப்பான்மையை அறிந்த மேற்படி வாலிபர்கள் கேஸை வேறு கோர்ட்டுக்கு மாற்ற ஆசைப்பட்டார்கள். கடைசியாய்க் கேசு தள்ளுபடியாகி விட்டதாக அருப்புக்கோட்டையிலிருந்து தந்தி வந்திருக்கின்றது.

அனாவசியமாய் ஒரு இரவு முழுவதும் அடைத்து வைத்திருந்ததற்காக போலீசு அதிகாரிகள் மீது நஷ்டத்திற்கு விவகாரம் தொடர வேண்டும் என்கின்ற எண்ணம் அவ்வூராருக்கு இருப்பதாகத் தெரிய வருகின்றது. அதற்காகப் பலர் பொருளுதவி செய்ய முன் வருவதாகவும் தெரிய வருகின்றது. என்றாலும் விடுதலை அடைந்த விஷயத்திற்காக வாலிபர்கள் பதினொரு வரையும் பாராட்டுவதுடன் இந்த கேசுக்குப் பொருள் கருதாது தங்கள் கஷ்ட நஷ்டத்தையும் கருதாது வந்து உதவி செய்த மதுரை வக்கீல்களுக்கு நமது நன்றியறிதலைத் தெரிவித்து கொள்ளுகின்றோம்.

- குடிஅரசு - கட்டுரை - 10.06.1928

Read more: http://viduthalai.in/page-7/75362.html#ixzz2tObCY3eK

தமிழ் ஓவியா said...


மகிழ்ச்சியில் திளைத்தேன்!சிறீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு முன் கடவுளை மற மனிதனை நினை கடவுள் இல்லை என்ற பகுத்தறிவு வாசகங்களுடன் கம்பீரமாக அமர்ந்திருக்கும் பெரியார்'.பக்தியின் பெயரால் ஏமாற வருபவர்களுக்கு புத்தி தெளியவைக்க பெரியாரை அமரவைத்த தி.க.வினருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்..... (கடந்த வாரம் சிறீரங்கம் தொகுதிக்கு சென்ற போது துணிச்சல் பெரியாரை பார்த்து மகிழ்ச்சியில் திளைத்தேன்.)

- வினிஷர்பனா

Read more: http://viduthalai.in/page2/75370.html#ixzz2tRBiTdMF

தமிழ் ஓவியா said...


எது தமிழ்த் தேசியம்?சாதியை வளர்க்கும் தேசிய மெதுவும்
தமிழ்த் தேசிய மில்லை - சங்கத்
தமிழ்த் தேசிய மில்லை - இந்து

சாதியைக் காக்கும் எந்தத் தேசியமும்
செந்தமிழ்த் தேசியமில்லை - அதைத்
தமிழர் நேசிப்பது மில்லை!

பாக்கித்தான் வங்கமுள்ளடக்கிய இந்தியா
பழைய தமிழ்மொழியின் வீடு - அதைத்
திராவிட மென்றது வேத ஏடு - அன்றைய

திராவிட மென்ற தனித் தமிழ்ப் பாண்பாட்டை
திரும்பவும் மலரச் செய்வோமே - அதைத் தமிழ்த்
தேசிய மெனவும் சொல்வோமே!

ஆரியர்க்கு முந்திய, ஆரியக் கலப்பற்ற, அதனினு முயர்ந்த நாகரிகம் - அதுவே
உலகத்தின் முதல் நாகரிகம்- என்று

வரலாற்றாளர்கள் வாயாரப் புகழ்ந்த
சிறப்பினையுடைய நாகரிகம் சிந்து வெளித்
தமிழர்கள் வளர்த்த நாகரிகம்!

தமிழை வடக்கே அழித்தபின் ஆரியர்
தென்னகம் நோக்கி வந்தார் - அவர்க்கு
மன்னர்கள் புகலிடம் தந்தார் - இங்கே

தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம்
தமிழில் கிளைத்திடச் செய்தார் - தமிழர்மேல்
சாதிமத நஞ்சையும் பெய்தார்!

சாதிமதங்கள் தமிழர்கள் நம்மை
தனித்தனிக் குழுவாய் பிளக்கும் - தினமும்
சண்டை சச்சரவை வளர்க்கும் - அத்தீய

சாதி மதங்களைத் தேசியமெனில் அவை
தமிழரை அடிமையாக்கும் - தமிழ்
நாட்டையும் அழித்துத் தீர்க்கும்

திருத்தணி - குமரி சிறுநிலப் பகுதிக்குள்
தமிழகம் சுருங்கிய தெவரால்? - சாதி
மதங்களை வளர்த்தவர் தவறால்! - அதைத்

தேசிய மென்று கூறுவோர் இன்று
தமிழர்கள் ஒற்றுமை அழிப்போர் - தமிழர்
மொழியையும் பெயரையும் ஒழிப்போர்!- வீ. இரத்தினம், பெங்களூரு

Read more: http://viduthalai.in/page3/75372.html#ixzz2tRC9gGD8

தமிழ் ஓவியா said...


குஜராத்தில் ரூ.11க்கு மேல் நாள் வருமானம் உள்ளவர்கள் பணக்காரர்களாம்


ஓர் இணையதளத்தில்...

குஜராத்தில் ரூ.11க்கு மேல் நாள் வருமானம் உள்ளவர்கள் பணக்காரர்களாம்


குஜராத்தில் மோடி அரசு சார்பில் கடந்த டிசம்பர் மாதம் அரசின் இணையத்தில் உணவுப் பொருட்களுக்கான மானியம் பெறுபவர்கள் வறுமைக் கோட் டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது என் கிற அறிவிப்பில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 10.80க்குள் வருமானம் இருப்பவர்கள் மட்டுமே மான் யத்தில் உணவுப் பொருள் பெற தகுதி உள்ளவர்கள் என்கிற குஜராத் மாநில அரசின் அறிவிப்பு தெரிந் ததே. இந்த அறிவிப்பின்மூலம் குஜ ராத் மாநிலத்தில் உள்ள ஏழை மக்களின் ஏழ்மையைக் கேலி செய்வதாக காங்கிரசு செய்தி தொடர்பாளர் அஜய் மக்கான் கண்டித்துள்ளதும் அறிந்ததே.

இது தொடர்பாக தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள www.rs11.in என்கிற இணைய தளத்தில் நரேந்திர மோடியின் படத்துடன் கேள்வி பதில் பாணி யில் கருத்துப்படம் வெளியாகி உள்ளது. எந்த அளவில் பணக் காரன் என்பதை கேட்டு, சிப்ஸ் பாக்கெட் ஒன்று வாங்க முடிந்தால் அவன் மிகப்பெரிய செலவாளி என்றும், மாதம் ஒரு முறைக்கு மேல் சிப்ஸ் தின்றால் அம்பானி யுடன் தொடர்பில்லாதவர் என்று சொல்லிவிட முடியுமா? என்று கேட்பதுடன், சிப்ஸ் தின்னும் போது குளிர்பானம் அருந்தினா லும், ஒரே நாளில் இரு வேளை உணவு உண்டாலும் குஜராத் திலேயே அவன்தான் பணக்காரன் என்றும் கூறுவதாக உள்ளது.

மேலும், அவ்விணையத்தில் குஜராத் மாநிலத்தில் உண்மையான வாழ்வாதார நிலை என்பது ரூ.11க்கு ஒரு பாக்கெட் நொறுக்குத் தீனி, ஒரு குவளை தேனீர், பெண்கள் தலையில் போடும் ரப்பர் பேண்ட் மட்டுமே வாங்க முடியும் என் றும், ரொட்டி குருமா, குளிருக்கு சால்வை, மருந்து மாத்திரைகள் என்று மற்ற அத்தி யாவசியப்பொருட்கள் எதுவும் வாங்க முடியாது என்றும் குறிப் பிடப்பட்டுள்ளது. குஜராத்தில் கடும் உழைப்பிற்குப் பிறகு என்னதான் பெற முடியும் என்றால் 250கிராம் சர்க்கரை, இரண்டு முட்டைகள், இரண்டு ரொட்டிகள், 3கி.மீ.தூரத்திற்கு பேருந்தில் பயணம் என்கிற அளவில்தான் முடியும். இணையத்தின் தகவல்.

Read more: http://viduthalai.in/page3/75371.html#ixzz2tRCKTd1z

தமிழ் ஓவியா said...


கடவுளை நம்புவோர் எத்தனை பேர்?

மக்கள் எந்த அளவுக்குக் கடவுள், மத நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பது பற்றிய ஒரு கருத்துக் கணிப்பு வெளி யானது. அதில், நீங்கள் எந்த அளவு மதப் பற்றாளராக இருக் கிறீர்கள்? என்ற கேள் விக்கு, ஓரளவு பற்று கொண்டுள்ளேன் என 49 சதவிகிதம் பேரும், எனக்கு மதப் பற்று இல்லை என 14 சதவிகிதம் பேரும், அதிக பற்று கொண்டுள்ளேன் என 45 சதவிகிதம் பேரும் பதிலளித்துள்ளனர்.

வழிபாட்டிடத்திற்கு அவ்வப்போது செல்வீர்களா? என்ற கேள்விக்கு, வாரத் தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை செல்வேன் என 31 சதவிகிதம் பேரும், வாரம் ஒரு முறை செல்வேன் என 38 சதவிகிதம் பேரும், மாதத்திற்கு ஒரு முறை செல்வேன் என 18 சதவிகிதம் பேரும் மாதம் ஒரு முறையாவது செல்வேன் என 9 சதவிகிதம் பேரும், இரு வாரத்திற்கு ஒரு முறை செல்வேன் என 4 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர்.

இன்றைய நாள்களில் இளைஞர் களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதா? என்ற கேள்விக்கு, சிலருக்கு உள்ளது என 45 சதவிகிதம் பேரும், அதிக மானவர் களுக்கு உள்ளது என 34 சதவிகிதம் பேரும், மிகச் சிலருக்கே உள்ளது என 21 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
18 வயது முதல் 45 வயது வரை யுள்ள இருபாலரையும் சேர்த்து 220 பேர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி களுக்கான பதில் இது.

- ஆதாரம்: தி இந்து, 16.9.2005

Read more: http://viduthalai.in/page5/75377.html#ixzz2tRDGiA4v

தமிழ் ஓவியா said...


கொய்யாசாப்பிடலாமே!


கொய்யாப்பழத்தில் ஊட்டச்சத்து அதிகம். ஆரஞ்சுப் பழத்திலிருக்கும் வைட்டமின் சி போல இதில் நான்கு மடங்கு அதிகம். இதைக் கடித்துச் சாப்பிடுவதால், பற்களும் ஈறுகளும் பலம் பெறுகின்றன. கொய்யாப் பழத்தால் குடல், வயிறு, ஜீரணப்பை, மண்ணீரல், கல்லீரல் ஆகியவை வலிமை பெறு கின்றன. உணவு ஜீரணமாவதற்கும் நல்லது.

இரவு உணவுக்குப் பின் நன்றாகக் கனிந்த கொய்யாப் பழங் களை சாப்பிட்டால் மலச்சிக்கலே இருக்காது. பல் முளைக்கும் குழந்தைகளுக்கு கொய்யாப் பழங்களை தினமும் கொடுத்தால் பற்கள், ஈறுகள் உறுதியாகும். கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை,களில் மருத்துவகுணங்கள் அடங்கி யுள்ளன. குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றது.

கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயத்தின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன. கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு. கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப் படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு, காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page5/75380.html#ixzz2tRDpQCfs

தமிழ் ஓவியா said...


சிங்கப்பூரில் இவைகள் இல்லை...


காற்றை கெடுக்கும் தூசியில்லை
நாற்றம் அடிக்கும் கூவமில்லை
புவியை அழிக்கும் புகையில்லை
பொறாமை தழைக்கும் பகையில்லை
எங்கும் எதிலும் ஈ இல்லை
இங்கும் அங்கும் குப்பையில்லை
அடிமை எண்ணம் இங்கில்லை
அடிமைப் படுத்திட வாய்ப்பில்லை
முதுமக்கள் யார்க்கும் கவலையில்லை
எத்துயர் வந்தாலும் பயமில்லை
பேருந்து வாகனத்தில் நடத்துநரில்லை
வாகனச் சத்தம் கேட்கவேயில்லை
மாட்டு வண்டி பேருக்குமில்லை
ஆட்டோ ரிக்சா அறவேயில்லை
ஏசி இல்லாப் பேருந்தே இல்லை
ஓசிப் பயணம் இல்லவே இல்லை
எப்பொருளும் இங்கே விளைந்திடவில்லை
எதற்கும் இங்கே பஞ்சமேயில்லை
பிச்சைக்காரர் தொல்லையே இல்லை
பிக்பாக்கெட்காரன் பிரச்சினை இல்லை
அடையாளச் சீட்டின்றி நடமாட்டமில்லை
அணுகுண்டே விழுந்தாலும் உயிர்க்கழிவில்லை
ஆண்களின் ஆதிக்க வாலாட்டமில்லை
பெண்கள் உரிமைக்கு எத்தடையுமில்லை
தெருநாய்கள் தொந்தரவு இல்லை
கோமாதாக்கள் நடமாட்டம் இல்லை
ஆர்ப்பாட்டம் ஊர்வலம் நடப்பதேயில்லை
மறியல் உண்ணாநிலை ஒருபோதுமில்லை
கடையடைப்பு கண்ணீர்ப் புகை கண்டதேயில்லை
வேலை நிறுத்தம் வெட்டிப்பேச்சு நினைப்பேயில்லை
மின்கம்பி இணைப்புகள் புவிக்கு மேல் இல்லை
வரிசை ஒழுங்கை மீறுதலில்லை
வாழ்க்கைப் பயணம் கசந்திடவில்லை
படிக்காத மக்கள் எங்குமில்லை
உழைக்காது வாழ்ந்திட வழியேயில்லை
மனிதனை பிரிக்கும் பேதமில்லை
மதத்தின் ஆட்சி மகுடமில்லை
மந்திரி வந்தாலும் பாதை மூடவில்லை
அதிபர் ஆனாலும் ஆடம்பரமில்லை
சட்டத்தின் ஆட்சிக்கு தடையேயில்லை
சட்டத்தை மீறினால் மன்னிப்பேயில்லை
வாழ்க சிங்கப்பூர் - வளர்க சிங்கப்பூர்

- டாக்டர் க.அன்பழகன்

துணை இயக்குநர், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்

Read more: http://viduthalai.in/page5/75382.html#ixzz2tREIqVQg

தமிழ் ஓவியா said...


உலகெங்கும் நாறும் மோடி பித்தலாட்டம்


பாஜக பிரதமர் வேட்பாளர் என்று நாட்டை வலம் வரும் மோடியின் பேச்சை அமெரிக்க அதிபர் ஒபாமா கவனிப்பது போல் மோடியின் படத்தைப் போட்டு மோசடியில் ஈடுபட்ட வெட்கக்கேடான செயலை இலண்டன் பிபிசி தோலுரித்துக் காட்டி உள்ளது. ஏற்கெனவே இந்நாட்டில் உள்ள ஊடகங்களில் மட்டுமே வெளிவந்த தகவலாக இருந்தது. தற்போது உலகே கேலிக்குறியுடன் மோடியை நோக்கும் வண்ணம் பிபிசி ஊடகத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

28 சனவரி 2011 இல் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பேச்சை கவனிக்கும் போது எடுக்கப்பட்டு வெளியான ஒபாமா படத்தை தற்போது மோடியின் பேச்சை கவனிப்பதுபோல் சித்தரித்து போலிப் படத்தை முகநூல்மூலம் வெளியிட்டு பலரும் உண்மை என நம்பி பகிர்தலும் நடந்துள்ளது. இந்த மோசடியை இலண்டன் பிபிசி நிரூபித்து உள்ளது.

இதே தகவலை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சிஆர் பாட்டீல் மோடியின் ஆதரவாளரான இவர் படத்தின் தன்மை உண்மை என நினைத்து முகநூலில் பகிர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த மோசடி குறித்து என்டிடிவி, இந்தியா டுடே உள்ளிட்ட இந்திய ஊடகங் களும் வெளிச்சம்போட்டுக்காட்டி உள்ளன.

படத்தின் உண்மையும், பொய்மையும் மேலே தரப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page8/75384.html#ixzz2tREpNcpP

தமிழ் ஓவியா said...


தண்ணீர் ஒரு தகவல்

உண்ணத் தொடங்கியதுமே வயிற்றில் உணவை சீரணிக்கும் திரவம் சுரக்க ஆரம்பமாகி விடும். அத்தருணத்தில் நீர் அருந்தினால் அது சீரணத் திரவத்துடன் சேர்ந்து சீரணப் பணியைப் பாதிக்கச் செய்யும். சாப்பாட்டுக்கிடையே நீர் அருந்துவதைக் கூடுமான வரை தவிர்ப்பதே நல்லது.

Read more: http://viduthalai.in/page8/75385.html#ixzz2tRF0h4Wx