Search This Blog

24.2.14

கடவுள்களிலும் பணக்காரக் கடவுள், ஏழைக் கடவுள் என்ன காரணம்?

ஏழைக் கடவுள்கள் 


தமிழ்நாட்டில் 38481 இந்துக் கோயில்கள் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் 2000 வருவாய் உள்ள (அதாவது பசையுள்ள) கோயில்களாம். 7000 கோயில்களில் ஒரு கால பூஜை மட்டும் நடக்கிறது. இந்தக் கோயில்களைச் சீரமைத்து வழிபாடு நடத்த ஆவன செய்ய வேண்டும் என்று விசுவஹிந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடவுள் சக்தியின் மீது நம்பிக்கை உள்ளவர்கள்தான் இப்படி சொல்லுகிறார்கள். ஒரு வேளை பூஜை மட்டும் நடந்தக் கூடிய கோயில்கள் என்று பட்டியலிட்டுப் புலம்புகின்றனர்.

அப்படியென்றால் அந்தக் கடவுள் சக்தி  இவ்வளவு தானா? மனிதர்களாகப் பார்த்து ஏதாவது ஏற்பாடு செய்தால் தான் உண்டு என்ற நிலை இருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது. ஆக கடவுள் என்பது மனிதன் தயவில் தான் வாழ வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட கோயில்களுக்குச் சென்று தான் மனிதன் வழிபாடு செய்கிறான் கடவுளே, எனக்கு அது செய், இது செய்! என்று வேண்டுகோள் வைக்கிறான் - காணிக்கை செலுத்துகிறான்.

வைத்தியரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்! என்று சொல்லுவதுபோல கடவுளே, உன் சக்தி என்ன என்பதை நிரூபித்துக் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது.கடவுளாவது மண்ணாங் கட்டியாவது அது வெறும் கல், அல்லது உலோகங்களால் ஆனது - சக்தியும் இல்லை - வெங்காயமும் இல்லை என்று நாம் சொல்லுவதைத்தான் வேறு வார்த்தைகளில் திருவாளர் வேதாந்தம் ஒரு வேளை பூஜை நடத்தப்படும் கோயில்களின் நிலைமைபற்றிப் புலம்புகிறார்.

கடவுளை மற - மனிதனை நினை என்ற தந்தை பெரியாரின் கருத்து எவ்வளவு உண்மையானது - சரியானது - உறுதியானது என்பது இப்பொழுது விளங்கி விட்டதா இல்லையா?

கடவுள்களிலும் பணக்காரக் கடவுள், ஏழைக் கடவுள் என்ற நிலையுள்ளதே - இதற்கு என்ன காரணம்? என்ன பதிலாம்? ஓ, கடவுளுக்குக்கூட தலையெழுத்து, கர்மா பலன் உண்டோ! அதன் காரணமாகத்தான் பணக்காரக் கடவுள் ஏழைக் கடவுள் என்கிற நிலையா?

சரி, அது இருக்கட்டும்; வேதாந்தம் ஏன் இப்படி சிந்திக்கக் கூடாது? 2000 பணக்கார கோயில்கள், கடவுள்கள் இருக்கின்றனவே, திருப்பதி கல் முதலாளியான ஏழுமலையானுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வங்கிகளில் தூங்குகின்றனவே, அதனை எடுத்து ஏழைக் கடவள்களுக்கு மூன்று வேளை படையல் (சோறு) போட்டு அந்த யாசகம் எடுக்கும் கடவுள்களின் வயிற்றை நிரப்பக் கூடாதா?

இந்துமதம் என்பது இந்தியா முழுவதும் இருக்கத்தானே செய்கிறது! தேசீயம், தெய்வம் இரண்டும் தானே இருகண்கள் என்றும் கூறிக் கொள்கிறார்கள். அப்படி யானால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இல்லாத சொத்துக்களா? பணமா? தங்கமா?  நிலத்தின் மதிப்பு மட்டும் ரூ.15 ஆயிரம் கோடி, கட்டடங்கள் ரூ.1500 கோடி, நகைகள் (கொள்ளையடித்தது போக) ரூ.30 ஆயிரம் கோடி பணமாக மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி, நாள் ஒன்றுக்கு உண்டியல் வசூல் மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில்  பழனிக் கோயிலுக்கு ஆண்டு வருமானம் ரூ.72,15 கோடி, சமயபுரம் மாரியம்மன்  ரூ.33,55 கோடி, திருச்செந்தூர் ரூ.19.80 கோடி, திருத்தணி முருகன் ரூ.16.09 கோடி, திருவண்ணாமலை அருணாசலம் ரூ.13.54 கோடி, சிறீரங்கம் ரெங்கநாதன் - ரூ.12.21 கோடி, மதுரை மீனாட்சி - ரூ.11.65 கோடி, இராமேசுவரம் ராமநாதன் - ரூ.9.89 கோடி, சுசீந்திரம் - ரூ.5.87 கோடி, திருவேற்காடு மாரியம்மன் - ரூ.5.65 கோடி,
இவை எல்லாம் ஓர்ஆண்டுக்கான வருமானம்.

தேசியக் கண்ணோட்டத்தோடு திருப்பதி ஏழுமலை யான் கோயில் நிதியிலிருந்து ஏழைக் கடவுள்களுக்குத் தான தர்மம் செய்யவேண்டியதுதானே.

சைவக் கோயில்களுக்கு வைணவக் கோயில்களி லிருந்தோ அதுபோல வைணவக் கோயில்களுக்கு சைவக் கோயில்களின் நிதியிலிருந்தோ நிதி உதவிடச் செய்ய விரும்ப மாட்டார்கள். இந்த இரண்டு பிரிவுகளுக்கிடை யேயுள்ள பிணக்குகளும், சண்டைகளும் ஊர் சிரித்த கதைதான் என்பதாலும், அந்தந்தப் பிரிவு கோயில் களுக்குச் சம்பந்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த பணக்காரக் கோயில்களிலிருந்து நிதியைப் பயன்படுத்தலாமே, அதை விட்டு விட்டு அரசுக்கு மனு போடுவானேன்?

உண்மை என்னவென்றால் கோயிலிலிருந்து இன் னொரு கோயிலுக்கு நிதியளிக்க ஒப்பம் அளிக்க மாட்டார்கள். கோயில் காரியம் என்பதே வணிக நிறுவனமான பின்பு அந்த மனப்பான்மை எப்படி வரும் என்று எதிர்பார்க்க முடியும்?

                    -------------------------------”விடுதலை” தலையங்கம் 24-2-2014
Read more: http://viduthalai.in/page-2/75865.html#ixzz2uFWFkDkj

6 comments:

தமிழ் ஓவியா said...


முத்துராமலிங்க தேவர் பேசுகிறார்

காவ்யா வெளியீடான, பசும்பொன் களஞ்சியம் என்ற நூலைப் படித்துக் கொண்டிருந்தபோது, அதில் 12.6.1949-இல் தேவர் உரை (பக்கம் 61) என்ற பகுதி அவரு டைய பேச்சு, ஆச்சரியத்தைக் கொடுத்தது - அதில் அவர் குறிப்பிடுவது இதுதான்:

ஆன்மீகத்தின் பெயரைச் சொல்லி சுய நலமிகள் கோயில் கட்டுவதும், கும்பாபி ஷேகங்கள் செய்வதும், ருத்ராட்சங்கள் அணிவதும், விபூதி, காவியாடை தரிப்பதும் மொட்டையடித்துப் பண்டாரமாகி, பண் டாரம் மடாதிபதியாகி, சிஷ்ய பரிவாரங்களும் சூழ, மறைவில் திரவிய ஆசை,

பெண் ஆசை இவை போன்ற ஆசைகளில் பல தீய செயல்கள் செய்வதும் மலிந்துபோய் நிற்கின்றன. ஆன்மீகத்தை வயிறு பிழைக்கும் ஒரு கருவியாகக் கொண்ட போலிகள் மலிந்த காலமிது! என்று குறிப்பிட்டுள்ளது.

தந்தை பெரியாரின் காலத்தாலழியாத கருத்துக்களை முத்துராமலிங்க தேவரும் பேசியிருப்பதைக் கண்டு அய்யாவின் கருத்து ஆன்மீகவாதிகளின் போக்கையும் எப்படி மாற்றி இருக்கிறது என்பதை எண்ணி எண்ணி உள்ளம் மகிழ்ந்தேன்.

- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர், குடந்தை

Read more: http://viduthalai.in/page-2/75867.html#ixzz2uIDXodcl

தமிழ் ஓவியா said...


நமது உடலின் வியக்கத்தக்க செயல்பாடுகள்


முழுமையான வாழ்நாள் என்பது 120 ஆண்டுகள் நலமுடன் வாழ்வது.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.

மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர்.

நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது.

நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது.

நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.

உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

கைரேகையைப்போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு. ர் கண் கொடையில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன.

900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.

மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே. அதில் கெராட்டின் சத்து உள்ளது, இது காண்டா மிருகத்தின் கொம்புகளில் காணப்படுவதாகும்.

இறப்பிற்குப் பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.

Read more: http://viduthalai.in/page-7/75895.html#ixzz2uIEDTM4H

தமிழ் ஓவியா said...


பா.வே.மாணிக்க நாயக்கர் 1871- 1931


பா.வே. மாணிக்கநாயக் கர் என்னும் பெயர் தமிழ் உலகம் அறிந்த ஒன்றாகும் அடிப்படையில் அவர் பொறியாளர் என்றாலும் தமிழ் ஆய்வில் இலக்கிய விமர்சனத்தில் வித்தகராக விளங்கியவர். சேலம் அருகே உள்ள பாகல்பட்டி என்னும் சிற்றூரில் பிறந்த வர். பா. என்னும் எழுத்து பாகல்பட்டியையும் வே. என்ற எழுத்து அவரது தந்தை யார் வேங் கடசாமி நாயக்கரையும் குறிக்கும்.

சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று நான்கு சவரன் எடையுள்ள தங்கப் பதக்கத்தைப் பெற்றார். பொதுப் பணித் துறையில் கட்டுமான பொறியாள ராகப் பணியாற்றினார்.

மேட்டூர் அணை உள்ள வரைக்கும் இவர் பெயரும் நிலைத்திருக்கும்; காரணம் மேட்டூர் அணையை நிர் மாணிப்பதற்கான இடத் தைத் தேர்வு செய்து கொடுத் தவரே இவர் தானே! ஆனால் மேட்டூர் அணை கட்டு மானப் பணி அவரிடம் அரசு ஒப்படைக்காதது அவருக் குப் பெரிய ஏமாற்றம்தான்

அவர் பட்டாளம் (படை) வீரர் மரபு வழி வந்த குடும்பத்தில் வந்ததால் அந்த நாயக்கர் என்பது குடும்பப் பெயரோடு ஒட் டிக் கொண்டது. அவரது காலத்திலேயே திருமண முறையில் பல்வேறு ஜாதி கள் அவர்தம் குடும்பத் தோடு கரைந்து விட்டன. பொறியாளர் ஒருவ ருக்கு எப்படி இத்தகு தமிழ் ஆய்வு என்று திரு.வி.க. மறைமலை அடிகள் போன் றவர்களேகூட வியந்த துண்டு. 1919இல் திருச்சியில் தமிழ்ப் புலவர் மாநாடு கூட்டப் பெற்றதில் இவரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க தாகும். கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் எனும் தலைப்பில் மறை மலை அடிகள் முன்னிலை யில் பல்லாவரத்தில் அவர் ஆற்றிய ஆய்வுரை பிர சித்தி பெற்ற ஒன்றாகும்.

ஈரோட்டில் தந்தை பெரியாருக்குச் சொந்த மான வீட்டில் இவர் குடி யிருந்தார் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள் - விவாதம் செய்து கொள்வார்கள்.

அவரைப்பற்றி தந்தை பெரியார் கூறும் தகவல் அனைவருக்கும் பயன் படக் கூடியதாகும். ஈரோட் டில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இரண்டு கொல்லர்கள் வேண்டும் என்று பெரியா ரிடம் கேட்டுக் கொண்டார், கெட்டிக்கார இருவர்களை அழைத்துவர தனது குமாஸ்தாவிடம் பெரியார் சொன்னார். கெட்டிக்காரக் கொல்லர்கள் வேண்டாம்; நான் சொல்கிற வேலை செய்பவராக இருந்தால் போதும்; கெட்டிக்காரனை அழைத்து வந்தால் அவன் நமக்கு யோசனை சொல் லத்தான் பார்ப்பான் என் றாராம். இதனை எடுத்துக் காட்டி என்னைப் பின்பற் றுபவர்கள் தங்கள் சொந்த பகுத்தறிவைக் கூடக் கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டும் என்று தூத்துக் குடி மாநாட்டில் தந்தை பெரியார் கூறியுள் ளதை நினைவூட்டுகிறோம். (குடிஅரசு 29.5.1948).

- மயிலாடன்

குறிப்பு: இன்று பா.வே. மாணிக்க நாயக்கரின் பிறந்த நாள். (1871)

Read more: http://viduthalai.in/e-paper/75936.html#ixzz2uOI431IH

தமிழ் ஓவியா said...


இழிநிலைஉலகெங்கும் உள்ள மக்கள் விஞ் ஞான அறிவியல் துறையில் தீவிர முன்னேற்ற மடைந்து கடவுள்களிடம் போட்டியிட்டு வருகையில், தமிழன் மட்டும் இன்னும் மாட்டு மூத்திரம் குடித்து, மோட் சம் போக எண்ணும்படியான காட்டு மிராண்டியாய் மானமற்று வாழ்வதேன்? புத்தரின் அறிவுப் பிரச்சாரத்தைக் கைவிட்டதன் பயனல்லவா இந்த இழிநிலை!

- (விடுதலை, 10.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/75947.html#ixzz2uOIWuKqX

தமிழ் ஓவியா said...


ராஜீவ் கொலை வழக்கு: நளினி உள்பட 4 பேரை விடுவிக்க தடை கோரி மத்திய அரசு வழக்காம்!புதுடில்லி, பிப்.25-ராஜீவ் கொலை வழக்கில், 3 குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவுக்கு தடை பெற்ற மத்திய அரசு, மேலும் 4 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த மனு மீதான விசாரணை வரும் 27ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. மத்திய அரசின் மனு தாக்கல் செய்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார்த் லுத்ரா, இந்த சீராய்வு மனுவில் குற்றவாளிகள் 7 பேரின் பெயர் களும் இடம்பெற்றுள்ளன. முக்கியத் துவம் கருதி இந்த மனுவை அவசர அடிப்படையில் விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று சிறையில் இருக் கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும் தங்களது கருணை மனு மீது முடிவு எடுப்பதில் 11 ஆண்டு கள் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால், தூக்கு தண்டனை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கில் கடந்த 18ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதில், மூன்று பேரின் தூக்கு தண் டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை யாகக் குறைத்து உத்தரவிட்டது. மேலும் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று கூறியிருந்தது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளி யானதும், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேர் உள்பட ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் மேலும் 4 பேரையும் சேர்த்து விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. கடந்த 19ஆம் தேதி இதற்கான அறிவிப்பை முதல்வர் சட்டப்பேரவையில் அறி வித்தார். கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்யக் கூடாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தடை விதித்து கடந்த 20ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப் பித்தது. கைதிகளை விடுதலை செய்வதில் சட்ட நடைமுறைகளை தமிழக அரசு கடைப்பிடிக்க வில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டது. தமிழக அரசு சார்பில் அப்போது ஆஜரான மூத்த வழக் குரைஞர் ராகேஷ் திவேதி, மத்திய அரசின் கோரிக்கையை கடுமையாக எதிர்த்தார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு இறுதி யான முடிவை எடுக்கவில்லை. எனவே தடை விதிக்கக் கூடாது என்று வாதிட்டார்.

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நான்கு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டபோது, இதற்கு புதிய மனு தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் கூறியிருந் தது. அதன்படி, புதிய சீராய்வு மனுவை மத்திய அரசு நேற்று தாக்கல் செய்தது. நளினி, ராபர்ட் பியாஸ், ஜெயகுமார், ரவிச் சந்திரன் ஆகிய நான்கு பேரை விடுதலை செய்ய தடை கோருகிறது மத்திய அரசு.

Read more: http://viduthalai.in/page-2/75950.html#ixzz2uOImqvs5

தமிழ் ஓவியா said...


தொலைக்காட்சி அவலம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்


மதுரை, பிப்.25-சமூக சூழ் நிலைக்கு ஏற்ப வாழாமல் தொலைக்காட்சியைப் பார்த்து பாசத்தை வளர்க் கும் நிலைக்கு இளைய தலைமுறையினர் தள்ளப் பட்டுள்ளனர் என்று குன்றக் குடி பொன்னம்பல அடி களார் பேசினார்.

மதுரையில் உலக திருக் குறள் பேரவை சார்பில் திருக்குறள் விழா நடை பெற்று வருகிறது. இரண் டாம் நாள் நிகழ்ச்சியில் திருவள்ளுவர் படத்தைக் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் திறந்து வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
சங்க இலக்கியங்கள் எத்தனையோ இருந்தும் பல ஆண்டுகளாக திருக்குற ளைத்தான் மழலையர்கள் முதல் முதியோர்வரை அசைபோட்டுக்கொண்டிருக் கிறார்கள். இது திருக்குற ளுக்கு கிடைத்திருக்கும் தனித்தன்மை.

திருக்குறளைப் படித்து அதன்படி நடந்தால் வாழ்க் கையில் முன்னேறலாம். வெறும் பட்டங்கள் மட் டும் பெற்றால் வாழ்க்கை யில் உயர்வடைய முடியாது. அன்றாடம் கிடைக்கும் பட்டறிவுதான் ஒரு மனி தனை உயர்த்தும். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று சொன்னார்கள். உடலில் இருந்து மூச்சுக்காற்றை விட்டுக்கொண்டு இருக்கும் நேரத்தில் நல்ல செயல் களைச் செய்து பெயர் வாங் கிக்கொள் என்பதுதான் அர்த் தம். ஆனால் இப்போது அதனை மாற்றிவிட்டார்கள். இருக்கும்போதே சம்பாதித் துக்கொள் என்று அந்த தொனி மாறிவிட்டது.

மருத்துவர், விஞ்ஞானி, வழக்குரைஞர்கள், பொறி யாளர்களை கல்வி உரு வாக்குகிறது. ஆனால் நல்ல மனிதர்களைத்தான் கல்வி கற்றுத்தர மறந்து விட்டதோ என்று எண்ணத் தோன்று கிறது. ஏனென்றால் கல்விக் கூடத்தில் கல்லூரி முதல் வரே கொலை செய்யப்படு கிறார். கொலை செய்பவர் மாணவனாக இருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது சரியான பாதையில் போகிறோமா என்ற சந் தேகம் ஏற்படுகிறது.

தொலைக்காட்சியைப் பார்த்துதான் குடும்பப் பாசத்தை வளர்க்கும் நிலை வந்து விட்டது.

இதை மாற்றி சமூக சூழ்நிலைக்கு ஏற்ப வாழ இளைய தலை முறையினர் கற்றுக்கொள்ள வேண்டும். திருக்குறள் காட் டும்பாதையில் பயணித்தால் முன்னேற்றம் ஏற்படும். - இவ்வாறு பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழண் ணல் உள்பட பலர் பேசினர். இதில் உலக திருக்குறள் பேரவையின் முதன்மை பொதுச்செயலாளர் மணி மொழியன் தலைமை தாங் கினார். துணை செயலாளர் சொ.கு.முருகேசன், செயலா ளர் மலையப்பன், பொரு ளாளர் சீனு சின்னப்பா, செந்தமிழ்க்கல்லூரி நிர்வாகி கள் குருசாமி, அழகுமலை, அசோக்ராஜ், மார்ஷல்முரு கன், முன்னாள் துணை ஆட் சியர் கா.கருப்பையா உள் பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Read more: http://viduthalai.in/page-3/75959.html#ixzz2uOJSG7fY