Search This Blog

22.2.14

பெண்கள் மசோதாவில் ஏன் உள் ஒதுக்கீடு வற்புறுத்தப்படுகிறது?

18 ஆண்டுகள் ஓடி விட்டன

15ஆவது மக்களவைக் கூட்டம் முடிந்தது. முக் கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படா மலேயே அவையின் காலம் முடிந்து விட்டது. அதிக நாள் முடக்கப்பட்ட 15ஆவது  நாடாளுமன்ற கூட்டத் தொடர் என்பது ஒரு வருந்ததக்க செய்தியாகும்.

நாடாளுமன்றம் நடைபெற்ற காலத்திலும்கூட அவை சுமூகமான முறையில் நடைபெறவில்லை. தங்கள் கட்சி நினைப்பதை சாதிக்க முடியாத ஒரு நிலை இருந்தால் அவையை நடக்க விடாமல் செய்வது என்ற உத்தியை மேற்கொண்டது என்பது ஜனநாயகத்தையே கேலிக் குறியாக்கி விட்டது! உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இதுவும் ஒரு வகையான வன்முறைதான்.

குறிப்பாக 15ஆவது நாடாளுமன்றக் கூட்டத்திலாவது கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட சட்டமன்றங்கள் - நாடாளுமன்றத்தில் 33 சதவீதம் மகளி ருக்கான இடஒதுக்கீடு மசோதாவும் மரணித்து விட்டது.

1996ஆம் ஆண்டு முதல் இந்த மசோதா நிறைவேற்றப் படாமல் நிலுவையிலேயே உள்ளது. பல பிரதமர்களும் வந்தார்கள் - போனார்கள் இவ்வளவுக்கும் இது மாநிலங் களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டது. மக்களவையோ முடக்கி விட்டது. கட்சிகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் இந்தப் பிரச்சினையில் ஆண்களின் ஆதிக்க உணர்வு உக்கிரமாக இருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது.

இந்திய மக்களவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 543; இதில் பெண்களில் எண்ணிக்கை வெறும் 59 பேர்கள் தான்; அதாவது 10.7 விழுக்காடே!  தேர்தலில் போட்டியிட்ட பெண்கள் 556. அதில்  எல்லாக் கட்சிகளையும் சேர்த்து வெற்றி பெற்றவர்களோ வெறும் 59 தான். உலக நாடுகளின் வரிசையில் பார்க்கும் பொழுது இந்தியாவுக்குரிய இடம் 104 - என்பது ஆரோக்கியமானது தானா?

பெண்களுக்கு உரிமை கிடையாது என்று பேசப்படு கின்ற முஸ்லீம் நாடுகள்கூட இந்தப் பிரச்சினையில் இந்தியாவை விட முன்னேற்ற நிலையில்  தான் உள்ளன; பாகிஸ்தான் 42ஆம் இடத்தில் இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் இந்த மசோதா எதிர்க்கப்படுவ தற்குக் காரணம் - உள்ஒதுக்கீடு கோருவதுதான் என்று நொண்டிச் சாக்கு சொல்லப்படுகிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் உள் ஒதுக்கீடு இல்லை என்று சொன்னாலும் மசோதாவை எதிர்க்கக் கூடிய சூழல்தான் இருந்தது என்பதுதான் உண்மை.

இடதுசாரிகள்கூட இந்தப் பிரச்சினையைப் புரிந்து கொள்ளாதது வருந்தத்தக்கது; இந்தியக் கம்யூனிஸ்டு (மார்க்ஸிஸ்ட்) கட்சியின் மகளிர்ப் பிரிவின் முக்கிய தலை வரான பிருந்தாகாரத் அவர்களேகூட உள் ஒதுக்கீடுக்கு நாங்கள் எதிரியல்ல; ஆனால் அரசியல் சாசனத்தில் வழி யில்லை (ஃப்ரண்ட் லைன் 6.6.2008) என்று கூறி இருக்கிறார்.

33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றும் போதே உள் ஒதுக்கீட்டையும் சேர்த்துக் கொண்டால் என்ன தடை, என்ன சிக்கல்!
மனதில்தான் தடை இருக்கிறதே தவிர சட்டத்தை நிறை வேற்றுவதில் எந்தவிதமான தொழில் நுட்பத் தடையும் கிடையாதே!

ஏன் உள் ஒதுக்கீடு வற்புறுத்தப்படுகிறது? 1952ஆம் ஆண்டு மக்களவையில் பார்ப்பனப் பெண் உறுப்பினர்கள் 28.6 சதவீதம் பிற்படுத்தப்பட்டோர் 4.39 சதவீதம் 1952 முதல் நடந்து முடிந்த 15ஆவது மக்களவைத் தேர்தல் வரை பார்ப்பனப் பெண்களின் சதவீதம்தான் அதிகமாக இருந் திருக்கிறது. இந்த நிலையில் பெண்கள் மசோதாவில் உள் ஒதுக்கீடு வற்புறுத்தப்படுவது மிகவும் சரியானதே - நியாயமானதே!

உலகில் பெண்களுக்கு பாதுகாப்பாற்ற நாடுகளின் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது என்ற நிலையில், பெண்கள் பிரச்சினையை நாடாளு மன்றத்தில் எழுப்ப பெண்களால்தானே முடியும் - அந்த வலி ஆண்களுக்குத் தெரியும் என்று எதிர்ப்பார்க்கத்தான் முடியுமா? பிரதமராகவோ, முதல் அமைச்சராகவோ ஒரு பெண் வந்துவிட்டதாலேயே பெண்களுக்கு நல்லது நடந்து விடும் என்று எதிர்பார்க்க முடியாது என்பதை நிதர்சனத்தில் கண்டு கொண்டுதானே இருக்கிறோம்!

பெண்கள் மசோதாவை நிறைவேற்றிக் கொடுப்பதாக இருந்தால் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நீட்டிக்கக் கூடத் தயார் என்று அரசு தரப்பில் அறிவித்த நிலையில் கூட அதற்கு ஆதரவு தெரிவித்து எந்தக் கட்சியும் குரல் கொடுக்கவில்லையே ஏன்?

இடஒதுக்கீடு சட்டப்படி இல்லாவிட்டாலும் கட்சிகளே பெண்களைப் போதுமான எண்ணிக்கையில் நிறுத்தலாம் என்ற கருத்துக்கூட நாடாளுமன்றத்தில் பேசப்பட்டதுண்டு.

16ஆவது மக்களவைத் தேர்தலில் அதனை நடை முறையில் செய்து காட்டட்டுமே பார்க்கலாம்.

பெண்கள் வீதிக்கு வந்து போராடாதவரை இதற்குத் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.   இதில் தந்தை பெரியார் அவர்களின் கருத்துதான் சரியானதாகவும் இருக்க முடியும்!

                             ---------------------------"விடுதலை” தலையங்கம் 22-2-2014


35 comments:

தமிழ் ஓவியா said...


அழியும் மொழிகள்


1,000 வருடங்களாக மொழி அழிவதும், புது மொழி உண்டாவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சில வருடங்கள் முன்பு அந்தமான் தீவில் வயதான பெண்மணி ஒருவர் இறந்துபோனார். அவர் பேசிய 'போ மொழியும் அவருடன் அழிந்துபோனது. அந்த மொழி தெரிந்த கடைசி ஆள் அவர். '65,000 வருடக் கலாசாரம் துண்டுபட்டது என்று பத்திரிகைகள் எழுதின.

100 வருடங்கள் முன்பு ஹீப்ரு மொழி, அழிவின் வாசலில் நின்றது. இன்று 9 மில்லியன் மக்கள் அந்த மொழியைப் பேசுகிறார்கள். அவர்களுக்கு 'இஸ்ரேல் என்ற ஒரு நாடு கிடைத்ததுதான் காரணம். 50 வருடங்கள் முன்பு, ஹவாய் மொழி அழிவு நிலையில் இருந்தது. இன்று அதை மீட்டெடுத்துவிட்டார்கள்.

நவீனத் துருக்கிய மொழியின் வயது 80. இந்த மொழியில்தான் ஓர்ஹான் பாமுக் நாவல் எழுதி நோபல் பரிசு பெற்றார். தமிழுக்கு அழிவு வெளியே இருந்து வரப்போவது இல்லை. தமிழர்களால்தான் வரும். போலந்தில் பிறந்த ஒருவர் போலந்து மொழியில் படிப்பார். ரஷ்யாவில் பிறந்த ஒரு ரஷ்ய மொழியில் படிப்பார். டென்மார்க்கில் பிறந்த ஒருவர் டேனிஷ் மொழியில் படிப்பார். ஆனால், தமிழ்நாட்டில் பிறந்த ஒருவர் தமிழ் படிக்காமலேயே மேல்படிப்பு படித்து வேலை தேடிக்கொள்ளலாம். இந்த நிலைமை தமிழ்நாட்டில் இருந்தாலும், புலம்பெயர் சூழல் ஆரோக்கிய மானதாக இருக்கிறது.

அறிவகம் என்ற அமைப்பின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ் பாடத்திட்டத்தின் கீழ் 3,000 புலம்பெயர் தமிழ்ச் சிறார்கள் ஆண்டுதோறும் தேர்வு எழுதுகிறார்கள். இதனால் ஒரு லாபமும் அவர்களுக்கு கிடையாது. ஆர்வம் தான் காரணம். வைதேகி ஹெர்பர்ட் எனும் அமெரிக்கப் பெண்மணி, 12 சங்க நூல்களை ஆங்கிலத்தில் எளிமையாக மொழிபெயர்த்திருக்கிறார். 2,000 வருடங்களாக ஒருவரும் செய்திராத சாதனை இது. அமெரிக்கத் தமிழர் குமார் சிவலிங்கம், குழந்தைப் பாடல்களையும் குழந்தைக் கதைகளையும் அச்சு/ஒலி புத்தகங்களாக ஆங்கிலத்திலும் தமிழிலும் அழகான படங்களுடன் உலகத் தரத்தில் வெளியிட்டிருக்கிறார். தமிழின் எதிர்காலம் ஒருபக்கம் பிரகாசமாகவும், இன்னொரு பக்கம் இருள் நிறைந்ததாகவும் உள்ளது. எந்தத் திசையைத் தமிழர்கள் தேர்வு செய் வார்கள் என்பது ஊகம்தான்!

- ஆனந்தவிகடன் - 5.2.2014, பக்கம் 30-31

Read more: http://viduthalai.in/page2/75785.html#ixzz2uC8IEnA1

தமிழ் ஓவியா said...


இப்படியும் ஒரு சிறுவன்!


மும்பையில் தான் விருப்பப்பட்டபடி சொன்ன நாளிலேயே உயிரை இழந்து தனது உடல் உறுப்புகளை கொடை செய்த 9 வயது சிறுவனின் பரிதாபமான சம்பவம் நடந்துள்ளது.

விக்கிரமசிங்கபுரத்தில் பொன்நகரை சேர்ந்த மதுரா கோட்ஸ் பணி நிறைவு அலுவலர் நல்லசிவன் - பிச்சம்மாள் மகன் ராமசுப்பிரமணியனுக்கும் - கும்பகோணம் ராஜகோபால் காந்தாமணி மகள் கோமதி ஈஸ்வரிக்கும் திருமண மானது. ராமசுப்பிரமணியன் மும்பையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது ஒரே மகன் நரேன் பிரகாஷ் (9). இவன் மும்பையில் தனியார் பள்ளியில் நன்றாக படித்துள்ளான்.

இந்த மாணவனின் பள்ளியில் கடந்த 3 வாரங்களுக்கு முன் குருதிக் கொடை முகாம் நடந்தது. அதில் பல்வேறு மாணவர்கள் பங்கேற்று குருதிக் கொடை செய்துள்ளனர். மாணவன் நரேன் பிரகாஷ் சிறுவன் என்பதால் அவன் குருதிக்கொடை வழங்கவில்லை. வீட்டில் தன் பெற்றோ ரிடம் வந்து அப்பா என்னை குருதிக் கொடை செய்யவிடமாட்டேன் என்று சொல்லி விட்டார்கள் எதற்காக என கேட்டுள்ளான்.

அப்போது ராமசுப்பிரமணியன் 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் குருதிக் கொடை மற்றும் உடல் உறுப்பு கொடை யளிக்க செய்ய முடியும் என கூறியுள்ளார். இது குறித்து அதிக ஆர்வம் கொண்ட நரேன் பிரகாஷ் தனது வீட்டில் உள்ள இணைய தளத்திலும் உடல் உறுப்பு களின் தானம் குறித்து தானாகவே தெரிந்து கொண்டு அவன் அப்பாவிடம் குருதிக் கொடை தான் செய்ய முடியாது. அதற்கு வயது போதாது என்று கூறினீர்கள்.

ஆனால் உடல் உறுப்புகள் கொடையளிப்பதற்கு வயது கிடையாதாமே எனவே அப்பா, அம்மா, நாம் மூவரும் சென்று கண்டிப் பாக உடல் உறுப்புகளை கொடை யளிக்க வேண்டுமென தொடர்ந்து தன் தந்தையிடம் வலியுறுத்தியுள்ளான். அதற்கு அவனது தந்தை ராமசுப்பிர மணியன் வரும் சனிக்கிழமை அன்று தான் எனக்கு விடுமுறை அப்போது மூவரும் சென்று உடல் உறுப்புக்களை கொடை அளித்து படிவங்களை விண் ணப்பித்து விடுவோம் என கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி சறுக்கு விளையாடிக் கொண்டிருந்த நரேன் பிரகாஷ் கீழே விழுந்ததில் கையை தரையில் ஊன்றியதால் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக மும்பையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள் ளான். கையில் பிளேட் வைத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் திடீரென உடல் நிலை மோசமானதால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவன் பரிதாப கமாக இறந்தான். மாணவன் விருப்பப்படி என்று அவன் உடல் உறுப்புகளை கொடையளிக்க எண்ணினானோ அன்று மூளைச்சாவு ஏற்பட்டவுடன் உடனடியாக அவரது கல்லீரல் ஒரு சிறுமிக்கு தானமாக கொடுக் கப்பட்டது. மேலும், மாணவனின் கண்கள், சிறு நீரகங்கள் கொடையளிப்பதற்காக பத்திர மாக வைக்கப்பட்டுள்ளது.

நரேன் பிரகாஷ் உடல் வி.கே.புரம் பொன்னநகருக்கு கொண்டு வரப்படு கிறது. கொடையளிக்க விருப்பப்பட்டு படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டிய நாளிலேயே தனது உயிரை இழந்து உடல் உறுப்புகளை கொடையளித்த சிறுவன் நரேஷ் பிரகாஷ் நிலையை உறுப்பினர்கள் எடுத்துக் கூறும்போது மிகவும் பரிதாபமாக இருந்தது. இருந்தாலும் சிறுவன் நரேன் பிரகாஷ் சிறுமி மூலமாக வாழ்கிறான் என்பதாலும், கண்கள் மற்றும் சிறுநீரகம் மூலம் மற் றொருவர் வாழ்வார்கள் என்பது அவர் களது குடும்பத்தினரை தலை நிமிர்ந்து வாழச் செய்கிறது.

Read more: http://viduthalai.in/page2/75787.html#ixzz2uC8W13uq

தமிழ் ஓவியா said...


இணையத் தொடர்பு இல்லாமல் போனில் பேஸ்புக்

போன் எதுனா இருக்கா உங்ககிட்ட? இனி அது போதும் முகப் புத்தகத்தில் முழுக. ஆம் இணையம் இன்றி பயன்படுத்தலாம் முகப்புத்தகத்தை. முழுக்க முழுக்க மிக எளிதான வழிதான் தேவை இதற்கு.அட வெறும் 1100 இருந்த போதுமுங்க.

இது இந்தியாவுக்கு மட்டும் இப்போது. முதலில் உங்கள் அலைபேசியில் இருந்து *325# அல்லது (or *fbk#). இதற்கு உங்களிடம் இணையத் தொடர்பு தேவை இல்லை. கட்டணம் ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் மட்டும்.
கீழே உள்ள படங்களை பாருங்கள் புரியும்.
Facebook India ஆனது Fonetwish உடன் இணைந்து இந்த வசதியை இந்தியர்களுக்கு வழங்குகிறது.
முதலில் உங்கள் User name, Password என்று வரிசையாக செல்ல வேண்டும். இந்த வசதி இப்போது ஏர்டெல், ஏர்செல்,ஐடியா, டோகோமோ நிறுவனப் பயனர்களுக்கு இது கிடைக்கும்.

இதற்கு ஒரு நாளுக்கு வெறும் ஒரு ரூபாய் மட்டுமே போதும் என்று சொல்லப்பட்டு உள்ளது. (தமிழன் இலவசமா எதிர் பார்ப்பான்னு தெரியல விடுங்க). இதன் மூலம் எளிதில் சாட் செய்யலாம், உங்கள் செய்திகளை பகிரலாம்.

இணையத் தொடர்பு இல்லாத நேரங்களில் இது பெறும் உதவி செய்யும். ஆபத்தான நேரங்களில் கூட இது உதவலாம். மிக அருமையான வசதி. பயன்படுத்தி பார்ப்போமே.
- பிரபு கிருஷ்ணா

Read more: http://viduthalai.in/page2/75786.html#ixzz2uC8r25kS

தமிழ் ஓவியா said...


இருவர் உரையாடல்!


இருவர் உரையாடல்!

அவன்: ஒரு நாட்டுக்கும், இன்னொரு நாட்டுக்கும், எல்லைத் தெய்வம் இருக்குன்னு சொல்றாங் களே அது நிலப்பகுதியில் மட்டுமா இருக்கும்?

இவன்: ஏன் இப்படி கேட்கறெ?

அவன்: இலங்கை கடற்படை நம்ம தமிழக மீனவர்களுக்கு தொல்லைக் கொடுக்கிறார்களே கடலில் எல்லைத் தெய்வம் இருந்து நம்ம மீனவர்களை தாக்காமல் காக்கக் கூடாதான்னுதான்!

இவன்: ஆ: !? !? !?

- கோ. கலியபெருமாள், மன்னார்குடி

Read more: http://viduthalai.in/page4/75788.html#ixzz2uC9BRGwP

தமிழ் ஓவியா said...

பெரியார் ஒரு சகாப்தம்

கடந்த ஞாயிறு 26.1.2014 அன்று விஜய் டி.வி.யில் நீயா? நானா? நிகழ்ச்சியில் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற தலைப் பில் விரிவாகப் பேசப்பட்டது. திரும்பத் திரும்ப அனைவ ராலும் பாராட்டப்பட்ட தலைவர் பெரியார் மட்டும்தான்.

ஜாதி வெறி பிடித்த ராஜாஜி அல்லது மற்ற பார்ப்பனர் கள் பெயர் ஒரு தடவைகூட வரவில்லை. ஆனால் கிழக்குப் பதிப்பகத்தின் பார்ப்பான் மட்டும் மோடியின் எழுத்துக்களைப் படிப்பானாம். அந்த நிகழ்ச்சியின் மூலம் அன்றும், இன்றும், என்றும் நமது பெரியார் தான் சிறந்த தலைவராகப் போற்றப்படுவார்.
- வாசக நேயர் ஒருவர்

Read more: http://viduthalai.in/page4/75788.html#ixzz2uC9LvlhW

தமிழ் ஓவியா said...

அதிசய மனிதர்

போலியோ என்னும் நோயைக் கண்டுபிடித்த டாக்டர் ஜோனஸ் சால்க், தனது கண்டுபிடிப்பு உரிமைக்கான காப்புரிமையைக் கோரவில்லை - உண்மையிலேயே அதிசய மனிதர்தான்.

Read more: http://viduthalai.in/page4/75788.html#ixzz2uC9acEoU

தமிழ் ஓவியா said...


சிகாகோவில் சு.சாமிக்கும், ராம்தேவுக்கும் தடை


சிகாகோ பரஸ்பர நம்பிக்கைக்குழு சு.சாமி, யோகா குரு ராம்தேவ் இவர்களின் தலையீட்டைக் கண்டித்து பிரச்சினை எழுப்பியது. சிகாகோ பரஸ்பர நம்பிக்கைக் குழு வானது சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த நாள் விழாவை ஆதரிப்பதை ஏன் திரும்பப் பெற்றுக் கொண்டது என்பதற்கான விளக்கத்தை அளித்துள்ளது.

அமெரிக்க விஸ்வஹிந்து பரிஷத்தும் வெளிநாடு வாழ் பாரதிய ஜனதா கட்சியின் நண்பர்கள் என்ற அமைப்பும் ஆதர வளித்து விவேகானந்தரின் விழாவை நடத்துவதால் அந்த சிகாகோ அமைப்பு விவேகானந்தரின் விழாவுக்கு ஆதர வளிப்பதைத் திரும்பப்பெற்றுக் கொண் டதாக அறிவித்துள்ளது.

அப்படிச் செய்ததன் மூலம் உலக மதங்களின் பார்லிமெண்ட் குழு, இந்திய பாரதிய ஜனதா கட்சிக்கும் உலக பாரதிய ஜனதா கட்சியின் நண்பர்கள் என்ற அமைப் புக்கும் உள்ள தொடர்பை விளக்கமாகவும் துல்லியமாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதுவுமல்லாமல் இந்திய பாரதிய ஜனதா கட்சியானது அமெரிக்காவால் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை செய்யப்பட்ட நரேந்திரமோடியினால் தலைமையேற்று நடத்தப்படுவதாகவும் அது கூறியுள்ளது.

அமெரிக்க ஹிந்து நிறுவனம் என்னும் ஹிந்து ஆதரவு அமைப்பு விவேகானந் தரின் விழாவுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டதற்குக் கண்டனம் தெரிவித் துள்ளது.

உலக மதங்களின் பார்லிமெண்ட் குழுவானது பி.ஜே.பி மற்றும் சிறுபான் மையினருக்கு எதிரான பேச்சாளர்கள் குறிப்பாக இரண்டு நபர்கள் சுப்பிரமணிய சாமியும், சுவாமி ராம்தேவும் அந்த விழா வில் கலந்து கொண்டு பேச இருப்பதை தடைக்கான காரணமாகச் சுட்டிக் காட்டியுள்ளது.

அதனால் தான் சி.றி.கீ.ஸி என்னும் அமைப்பின் நிர்வாக இயக்குநர் மேரி நெல்சன் என்பவர் ஆதரவைத் திரும்பப் பெறுவதற்கான காரணத்தைக் குறிப்பிடும் போது முக்கியப் பேச்சாளரான டாக்டர் சு.சாமி, பி.ஜே.பி.யின் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

சு.சாமியின் கவுரவ விரிவுரையாளர் பதவிக்கு வேட்டு

இந்திய முஸ்லிகள் இந்து மதத்தின் பழைமையை அங்கீகரிக்க மறுப்பதால் அவர்களின் ஓட்டுரிமையைப்பறிக்க வேண்டும் என்றும் மசூதிகளை இடிக்க வேண்டும் என்றும் பேசிய திமிர்ப் பேச் சினால் சு.சாமியின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் கவுரவ விரிவுரையாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அப்பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்தினால் பெரும்பான் மையான வாக்குகள் வித்தியாசத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

உலக மதங்களின் பார்லிமெண்ட் குழுவின் துணைத் தலைவர் அட்டர்னி பிளிஸ் குயூரர் என்பவரும் மதக் கல்வியின் பேராசிரியர் ராபர்ட் செல்லர் என்பவரும் சுவாமி ராம்தேவ் என்பவர் மேற்கண்ட நிகழ்ச்சிக்குத் தலைமை விருந்தினர் என்பதோடு நரேந்திர மோடியின் ஆதர வாளர் என்றும் மோடியின் பிரச்சாரத்தில் இந்தியாவில் ஈடுபட்டுள்ளார் என்றும் கூறி மேற்கண்ட விழாவிற்கு ஆதரவை வாபஸ் பெற்றதற்கான காரணத்தைக் கூறியுள் ளனர்.

உலக மதங்களின் பார்லிமெண்ட் குழு வானது அமெரிக்க விஸ்வஹிந்து பரிஷத் தன் வலைத்தளத்தில் சீக்கியர்களும் ஜைனர்களும், புத்தமதத்தினரும் இந்துக் களே என்று கூறியுள்ளதைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளது.

மற்ற மதங்களுக்கு எதிரான நடவடிக் கைகளால் அமெரிக்க ராஜீயத்துறை 2001 ஆம் ஆண்டிலிருந்து விஸ்வஹிந்து பரி ஷத்தை ஒரு தீவிரவாதக்குழு என்று அறி வித்துள்ளது.

- (இந்து 3.10.2012 பக்கம் 10)

Read more: http://viduthalai.in/page4/75789.html#ixzz2uC9m0eM8

தமிழ் ஓவியா said...


அப்பனை! தூஷித்தவன் ராமன்


- பா.வே. மாணிக்கநாயக்கர் (B.E. M.O.I.M.I.E.)

வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் 53வது சர்க்கம் ஸ்லோகங்கள் கருத்து- வால்மீகி ராமன் மனக்காட்சியால் சொல்வது:- ஓ இலக்குமணா! இப்போது தசரத மகாராஜா மிகுந்த துயரத்துடன் படுத்துக் கொண்டிருக்கிறார்.

கைகேயியோவென்றாலங்கு தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டு மகிழ்வடைந்தவளாய் இருப்பதற்குரிய வள். அதாவது: அந்த தேவியாகிய கைகேயி அரசாட்சியடைய வேண்டியதன் பொருட்டு வந்த பரதனைப் பார்த்ததும் தசரத மகா ராஜா தன் உயிரை விடும்படி செய்ய மாட்டாளா என்ன?

உதவியற்றவனும், கிழவனும் (தலை மகனாகிய) என்னாலும் பிரிவுபட்டவனும் காமத்தில் அமிழ்ந்தோனும், கைகேயியின் கையிற் சிக்கியவனும் ஆகிய தசரதன் என்ன செய்யப் போகிறான்?

இந்தத் துயரத்தையும், அரசனுடைய (தசரதனுடைய) அறிவு கெட்ட மருட் சியையும் பார்க்கிறபோது, அறம் பொருள் இரண்டையும்விட இன்பமே (காமம்) பெரிதென்பது என்னுடைய கருத்து.

ஓ இலக்குமணா! படிப்பில்லாதவனுங் கூட மனுஷன் என்கிற ஒருவன் எவன்தான், பெண் பொருட்டாக, விருப்பத்தைப் பின்பற்றுகின்ற புதல்வனாகிய என்னை என் அப்பனைப் போல விட்டுவிடுவான்?

எவன் அறம், பொருளைக் கைவிட்டு, இன்பத்தைக் கடைப்பிடிக்கிறானோ அவன் தசரத அரசனைப் போல, விரைவில் இம்மாதிரி துயரத்தை அடைவான்.

(கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் பக்கம் 41-42-44).

Read more: http://viduthalai.in/page4/75790.html#ixzz2uCA0ZEem

தமிழ் ஓவியா said...


விஞ்ஞானமும் மூடநம்பிக்கைகளும்


இந்திய சமுதாயத்தில் ஆழ வேரூன்றி யிருக்கும் மூடநம்பிக் கைகளை ஒழித்து, அவர்களை பகுத்தறிவுச் சிந்தனைக்கு வழி திருப்பி விடும் பெரும் பொறுப்பு விஞ் ஞானிகளுக்கு இருக்கிறது. இந்த அடிப் படையில் ஒரு விஞ்ஞானி சித்து வேலை களை நம்பிக் கொண்டிருக்கக் கூடாது. இந்த ஏமாற்றுகளும் விஞ்ஞானமும் இணைந்து போக முடியாது. சமுதாய சீர்திருத்தம், சுகா தாரம், குடும்பக் கட்டுப்பாடு ஆகிய வற்றை வலியுறுத்துவதுதான் மூடநம்பிக் கைகளை ஒழித்து விஞ்ஞான மனப்பான் மையை உருவாக்க ஒரே வழியாகும். இந்தியாவில் விஞ்ஞானம் என்பது ஏதோ ஓட்டளவிலும் தொழில் ரீதியாகவும் இருக் கிறதே தவிர, விஞ்ஞான மனப் பான்மை வாழ்வியலில் எதிரொலிக்கவில்லை. சோத னைச் சாலையில் விஞ்ஞானியாக இருக் கிறார்கள். வீட்டுக்கு வந்ததும் விஞ்ஞானத் திற்கு நேர் எதிரான பழக்க வழக்கங்கள், சிந்தனை களை கைக்கொள்கிறார்கள். இது முற்றிலும் ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

(பெங்களூர் பல்கலைக் கழகத்தில் விஞ் ஞானமும், மூடநம்பிக்கைகளும் என்ற தலைப்பில் இந்திய அரசுத்துறை செயலாள ரும், விஞ்ஞான தொழில் வளர்ச்சிக் கழக இயக்குநருமான டாக்டர் நாயுடம்மா).

Read more: http://viduthalai.in/page4/75791.html#ixzz2uCABjG2C

தமிழ் ஓவியா said...


சோதிடத்தைப்பற்றி ஆச்சாரியார்!


அஜந்தாவுக்கும் எல்லோராவுக்கும் போகும் வழியில் கவர்னர் ஜெனரலுக்கு (ராஜாஜிக்கு) அவுரங்காபாத்தில் வரவேற்பொன்று அளித் தனர். வரவேற்புரையில் அவரை அளவுக்கு மீறி வரம்பின்றிப் புகழ்ந்து வைத்தனர். ராஜாஜியின் முழுப்பெயரில் உள்ள எழுத்துக்களைக்கூட்டி, அதை வைத்து நம்பர் ஜோசியம் கூறுவதாக - அவரை ஒரேயடியாகப் புகழ்ந்து நல்ல பலன் களாகவே கூறினர். இவைகளுக்கு ராஜாஜி பதிலளித்துப் பேசு கையில், உண்மையைக் கூற வேண்டுமானால், நான் ஜோசியத்தை நம்புவ தில்லை; எனக்கு அதில் நம்பிக்கை இல்லை; அதை நம்பக் கூடாது என்று உங்களையும் நான் எச்சரிக்கிறேன். ஜோசியத்தில் அப்படியே ஏதாவது இருந்தாலும் அதை நட்சத்திரங்களைக் கொண்டு எதிர்காலத்தை அறிவதாகக் கூறுவது சிறிதுகூட அறிவுடைமையாகாது. மாலையை அணிவித்து வரவேற்புரையும் கூறினீர்கள். இவற்றில் மாலையைத்தான் நான் ஏற்றுக் கொள்வேன். ஏனெனில், அதை நான் என் கழுத்திலிருந்து எடுத்துவிட முடியும்; நீங்கள் கூறிய புகழுரைகள் என்னைக் கவலைக்குள்ளாக்குகின்றன

(ராஜாஜி மேற்கு வங்கத்தின் முதல் கவர்னராக இருந்தபோது அவருடைய ராணுவச் செயலாளராக இருந்த டாக்டர் பீமனேஷ் சாட்டர்ஜி எழுதிய ராஜாஜி யுடன் ஆயிரம் நாட்கள் (ஜிலீஷீணீஸீபீ பீணீஹ் ஷ்வீலீ ஸிணீழீணீழீவீ) என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது).

Read more: http://viduthalai.in/page5/75797.html#ixzz2uCATN8hW

தமிழ் ஓவியா said...


கடிதம்மூடநம்பிக்கைக்கு அளவே யில்லையா? செய்தியை (30.1.2014, பக்.1 பதிப்பு திருச்சி) படித்தேன்

அதில், ஏழு விளக்கு ஏற்றி வைத்து பரிகாரமாக வழிபட வேண்டும் என்ப தற்குப் பதிலாக, ஏன் எட்டு விளக்கு ஏற்றினால் என்னவாம்? என்றும், யாருக் குத் தெரியும்? என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

புத்தர் எட்டுக் கொள்கைகளை போதித்தார். புத்தரின் இந்த எட்டுக் கொள்கைகளை எதிர்த்து இந்துத்துவா வால் முன் வைக்கப்பட்ட சொற்றொ டர்தான் எட்டுக் குட்டிச் சுவர்! என்ப தாகும். இதனடிப்படையில்தான் வாகன எண்களைத் தேர்வு செய்வதில் கூட்டுத் தொகை எண் எட்டு என்பது வரக் கூடாது என வாகன ஓட்டிகள் விரும் புவதாகும். திருச்சி நவல்பட்டு தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய முதல் குலுக்கலில் வீடு பெற்றவர் திரும்ப ஒப்படைத்த தால்தான் அவ்வீடு மறு குலுக்கலில் எனக்குக் கிடைத்தது என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

-தி. அன்பழகன், திருச்சி

Read more: http://viduthalai.in/page6/75798.html#ixzz2uCSoncC7

தமிழ் ஓவியா said...


இனித்த கனி எது?


(சந்திரமோகன் நாடகத்தில்)

இடம்: காகப்பட்டர் ஆசிரமம்

இருப்போர்: காகப்பட்டர், ரங்கு

நிலைமை: (காகப்பட்டர் பழம் சாப்பிட்டுக் கொண்டே ஓலைச்சுவடி களைப் படித்து இரசித்துக் கொண் டிருக்கிறார்.

ரங்கு, குரு சாப்பிடும் பழத்தின் சுவையை எண்ணிய படி ஏக்கத்துடன் இருக்கின்றான். காகப்பட்டர், சுவடியிலே எதையோ படித்துப் பெரிதும் இரசித்தபடி)

காகப்பட்டர்: ரங்கு! எவ்வளவு அருமை, எவ்வளவு இனிமையாக இருக்கு தெரியுமோ!
(குரு பழத்தின் சுவையைத்தான் கூறுகிறார் என்று எண்ணிக் கொண்டு)

ரங்கு: எனக்கெப்படி ஸ்வாமி தெரியும். (பெரு மூச்செறிகிறான்)

(குரு, ரங்குவின் கண்கள் பழத்தின் மீது செல்வது கண்டு, நிலைமையைப் புரிந்து கொண்டு, புன்னகை புரிந்து)

காக: மண்டு!

என்ன சொல்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ளாமலேயே பேசு கிறாயே-

ரங்கு: பழத்தின் இனிமையைத் தான் சொல்கிறீர்; புரிகிறது நன்னா- ஆனா பழத்தை நீர் சாப்பிட்டா, இனிமை, எனக்கா தெரியும் - சுவாமி!

காக: பைத்தியக்காரா! பழத்தின் இனிமையை அல்லடா நான் சொல்வது, வேணுமானா, இரண்டு பழம் சாப்பிட்டுத் தொலையேன். வேண் டாம்னு சொல்வேனா?

சொன்னாத்தான் நீ கேட்கப் போறாயா? நான், பழத்தின் இனி மையைக் குறித்துச் சொல்லவில்லை.

இந்தப் பழைய சுவடி இருக்கே..
நம்ம குல ரட்சகர்,

சட்டதிட்ட கர்த்தா மனு,

அவர் வகுத்து வைத்திருக்கும் -

அற்புதமான ஏற்பாடுகளைப் படிக்கப்படிக்க, சிந்திக்கச் சிந்திக்க, அவைகளோட தத்துவங்களை அலசிப் பார்க்கப் பார்க்க, அடடா! எவ்வளவு இனி மையா இருக்கு தெரியுமோ...

ரங்: அதைச்சொல்றேளா?

காக: கேவலம், பழத்தோட இனி மையைப் பத்தி நான் பேசறதாக எண்ணிண்டிருக்கே...

ரங்: நான் என்ன கண்டேன் சுவாமி! பழம் சாப்டிண் டிருந்தீர்...

காக: அதிலே என்னடா மதுரம் இருக்கு...

மண்டு?

மனு செய்திருக்கிற ஏற்பாடு, நமது குலத்துக்கு என் றென்றும் மதுரமான வாழ்வளிக்கும் கற்பகவிருட்சம்?

- க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி (மாமனிதர் அண்ணா நாளிதழ் - பேராசிரியர் க.அன்பழகன்)

Read more: http://viduthalai.in/page7/75801.html#ixzz2uCT8m2iu

தமிழ் ஓவியா said...


கடவுள் புத்திசாலியா? யோக்கியமானதா?


ஒரு தகப்பன் பல குழந்தைகளைப் பெற்று விட்டு அவனது வீட்டின் புறக்கடையில் ஒரு கிணற்றை வெட்டி அக்கிணற்றுக்குச் சுற்றுச்சுவர் கட்டாமல் விட்டு விட்டுக் குழந்தைகளைப் பார்த்துக் கிணற்றிற்குச் சுற்று (பாதுகாப்பு)ச் சுவர் கட்டவில்லை; நீங்கள் புத்தி இருந்தால் பிழைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வானேயானால் அத்தகப்பன் யோக்கியமான அறிவாளியான தகப்பன் ஆவானா?

அப்படித்தானே இன்று கடவுள் மக்களில் அயோக்கியர்களைப் படைத்துவிட்டுப் பாதுகாப்பில்லாமல் செய்து அவர்களிடம் மக்களைத் தொல்லைப்படச் செயகிறார்!

துஷ்ட மிருகங்களைப் படைத்து அவைகளிடம் சாது மிருகங்களைத் தொல்லை அனுபவிக்கும்படிச் செய்கிறார். கசாப்புக் கடைக்காரர்களைப் படைத்து அவர்களிடம் ஆடு மாடுகள் பலியாகும்படிச் செய்கிறார். மீன் பிடிக்கும் வலையர்களைப் படைத்து அவர்களிடம் தினமும் பலப் பல கோடி மீன்களைப் பலியாகும்படிச் செய்கிறார். பெண்களைப் படைத்து அவர்கள்மீது பலப்பல ஆண்களை ஆசைப்படும்படிச் செய்கிறார் - தந்தை பெரியார்.

ஆகவே, இவைகளிலிருந்து கடவுள் எவ்வளவு கருணாநிதி! எவ்வளவு புத்திசாலி! எவ்வளவு யோக்கியன்! கடவுளை நம்புகிற மக்களே, நீங்களே கூறுங்கள்.

Read more: http://viduthalai.in/page7/75800.html#ixzz2uCTIbv8J

தமிழ் ஓவியா said...


தேவாரம்தேவாரம் பாடப்பட்டதன் நோக்கமே பிறரைத் துன்புறுத்துவதுதான் என்பதனைத் தேவாரத்தை நடுநிலையுடன் படிக்கும் எவரும் எளிதில் உணர்ந்து கொள்வார். வேதாரத்தைப் படிக்கும்போது ஒரு வைணவன் பக்கத்தில் நிற்க மாட்டான் - ஒரு சமணன் நிற்க மாட்டான் - ஒரு புத்தன் நிற்க மாட்டான் - இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சமரச சன்மார்க்கம் பேசும் ஒரு சைவன்கூட அதன் பக்கத்தில் நிற்க மாட்டான் - அந்த அளவுக்கு வசைமொழிகளை வாரி வாரி இறைத்திருக்கிறார்கள். தேவாரத்தைப் பாடிய திருஞானசம்பந்தரும் பிற நாயன்மாரும்! தெருச் சண்டைக்கு நிற்பவன் வாயில்கூட வராத வசைமொழிகள் பல தேவாரம் பாடிய நாயன்மார்கள் வாயினின்றும் வந்திருக்கின்றனவே!

Read more: http://viduthalai.in/page8/75804.html#ixzz2uCTp7nbI

தமிழ் ஓவியா said...


கடவுள் இல்லை


ஒரு காலத்தில் கடவுளை நான் நம்பிய துண்டு. கடவுளை நோக்கிப் பிரார்த்திப் பதால் அவர் நமது வேண்டுகோளைக் கேட்டு நமக்கு நன்மை செய்கிறாரென நம்பினேன். நன்மையான தர்ம கைங் கர்யஞ் செய்கிறவர்களுக்குக் கடவுள் நன்மையையே செய்கிறார் என்றும், துஷ்டர்களை அடியோடு அழித்து நிக்கிர கஞ் செய்கிறாரென்றும் எண்ணினேன். இந்த நம்பிக்கையில் நான் மகா உறுதி கொண்டிருந்தேன். ஆனால் படிப்படியாக என் நம்பிக்கை குறைந்து கொண்டு வந்து இப்பொழுது. அந்த நம்பிக்கையே எனக்கில்லாமல் போய் விட்டது. இந்த மாய வஞ்சகம் நிறைந்த ஒரு உலகத்தை ஆண்டு நடத்திக் காப்பாற்றி வரும் ஒரு கடவுளை நான் எப்படி நம்ப முடியும்? அக்கடவுள் மகா அன்புடையவர் மகா கருணாநிதி. சத்தியவந்தர், சர்வ வல்லமை யுள்ளவர். எங்கும் பரம் பொருளாக நிறைந்திருப்பவர் என்பனவற்றை நான் எப்படி நம்பக் கூடும்? மகா தயாநிதி சத்தியமே ஒரு உருவான மெய்க் கடவுள் இருந்தால் இந்த உலகத்தைச் சிருஷ்டித் திருக்க முடியுமா? இந்த உலகம் அநீதி நிறைந்தது. சமத்துவத்திற்குப் பரம விரோதியாய் இருக்கிறது. சகல கொடுமை களுக்கும் உறைவிடம்; மிருகத்தனமானது.

வஞ்சகம், சூது, ஏமாற்றம் முதலியவை உருவெடுத்த மனிதர்கள் நிறைந்தது. இந்த நாசமான உலகத்தைச் சத்தியவந்தரான கடவுள் உண்டு பண்ணியிருக்க முடியுமா? பல ஆயிரக்கணக்கான கொடியர் இவ்வு லகில் ஜீவிக்கிறார்கள் இன்னும் பலர் முட்டாள்கள். அவர்களுக்கு மூளை என் பதே கிடையாது. அன்பு சத்தியம் நிறைந்த இருதயத்தை இழந்த துஷ்டர்கள் பல ஆயிரம் ஏழைகளை இம்சிக்கும் ராக்ஷதர் களும், சத்தியவந்தரைத் தொல்லைப் படுத்தி, அடக்கி, நசுக்கி, மண்ணுக்கு இரையாக்கும் மிருகத்தனம் படைத்தவர் களும் இன்னும் பல ஆயிரம் கொள்ளை யடிக்கும். திருடர்கள் பலர் சுய நலமே உருக் கொண்ட தீயர்கள் எத்தனையோ லக்ஷம். இந்தச் சுயநலப் பேய்களே மகா சொகுசாக, உல்லாச வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். ஏழைகளை வஞ்சித்து இம்சித்துத் துன்புறுத்துகிறார்கள். ஏழை களின் கதியோ அதோ கதி தான். அவர்கள் மானமிழந்து அடிமைகளாகி, தரித்திரத்திற் குள்ளாகி, உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றிப் பசியால் வாடி மடிகின் றனர். முடிவில் மண்ணோடு மண்ணாய்ப் போகிறார்கள். உலகில் இந்தக் கொடு மைகள் ஏன்? சத்தியமும், உண்மையும் உருக்கொண்ட ஒரு தெய்வம் இந்தக் கொடிய உலகத்தை உண்டு பண்ணி யிருக்க முடியுமா?

வேதங்கள் பொய்: சத்தியம் என்பது என்ன? சத்தியம் எங்கிருக்கிறது? வேதங் களிலாவது உண்மை இருக்கிறதா அல்லது நம்பிக்கையாவது உண்டா? வேதங்களில் சத்தியத்தைக் கண்டுபிடித்து விட்டதாகச் சிலர் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் வெறும் பொய்க்கூற்று. அவர்கள் ஏதோ மாயையில் மூழ்கி அவ்வாறு அல்லற்படுகிறார்கள் வெறும் மதவெறி கொண்டவர்களே உண்மையி ருப்பதாக உளறிக் கொண்டிருப்பதுண்டு. புத்த பகவானோ, கிறிஸ்துவோ, மகமது நபியோ உண்மையைக் கண்டுபிடித் திருக்கிறார்களா? அவர்கள் கண்டுபிடித்த சத்தியம் எங்கே? அந்தச் சத்தியம் மறைந் துவிட்டதா? அல்லது அதைப் போதிக்கப் புறப்பட்டவர்கள் திரித்து, சத்தியத்தையே மறைத்துவிட்டார்களா? இவர்கள் மனி தர்களைப் பாகுபாடு படுத்திப் பிரித்து வைத்தது ஏன்? சத்தியமென்றால் ஒற்று மையின்றிப் பல பாகுபாடுகள் உண்டு பண்ணிச் சுயநலத்துடன் வாழ்வதென்று அர்த்தமா?

லாலாஜி வாழ்க்கை: இவ்விதம் கூறும் நான் ஏன் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு வந்தேனெனக் கேட்கலாம். உண்மையைக் கூறுமிடத்து நான் சுயநல நோக்கங் கொண்டே பொது சேவையில் ஈடுபட்டேனென்று கூறுவேன். அதாவது நான் உள்ளவரை ஏதேனும் ஒரு காரியம் செய்து கொண்டிருக்க வேண்டும். இது மனித சுபாவம்; ஒரு குணம் அது சதா என்னைக் கிளர்ச்சி செய்யத் தூண்டிக் கொண்டிருக்கிறது.

- லாலாலஜபதி

Read more: http://viduthalai.in/page8/75803.html#ixzz2uCTwqSO6

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க. என்னும் மூடநம்பிக்கைக் கூடாரம் ஜோதிடர்களை நம்பி ஓடுகின்றனர்


ராஜ்காட், பிப்.23- ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோதிடர்களுக்கு அர சியல்வாதிகளால் யோகம் தான். அந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்றில்லாமல் குஜராத் மாநிலத்திலிருந்தும் மோடி போன்றவர்களின் ஆதரவு ஜோதிடர்களுக்கு உள்ளது என்று கூறப்படுகிறது.

ராஜ்காட்டில் அரசு அலு வலகங்களுக்குப் பின்புறமாக ஒரு சந்து அதில் இரண்டு அறைகளுடன் கூடிய இருட்டு உலகம். அங்கே துரிதகதியில் ஆட்கள் வருவதும் போவது மாக இருக்கிறதாம். அங்கே உடல்தளர்ந்து, வயது முதிர்ந்த, பார்வை இழந்த 80 வயது முதல் 90 வயதுக்குள் உள்ள பிரணாப் குமார் பட்டா என்பவர் ஆருடம் கணித்துக் கூறுபவராக உள் ளார். இவர் வாரணாசியில் ஜோதிடத்தைப் பயின்ற வராம். இவரை அந்த ஊரில் பெயர் சொல்லிக் கேட்டால் யாருக்கும் தெரியாதாம். ஆனால் குருஜி என்று கேட் டால் யார் வேண்டுமானா லும் சொல்லி விடுவார்களாம்.

மூத்த பாஜக தலைவர் ஒருவர் மோடிஜோதிடத் தைப் பெரிதும் நம்புவ தாகக் கூறுகிறார் . முன்னாள் முதல்வர் சிமன்பாய்பட் டேல், சபில்தாஸ் மேத்தா உட்பட பலரும் பட்டாவி டம் ஆருடம் கேட்பது உண் டாம். சாதாரண ஆளிலிருந்து முதல்வர்கள் வரையிலும் அரசியல் பிரபலங்களி டையே மிகுந்த செல்வாக்கு பெற்ற ஜோதிடராம். இவர் வசுந்தரா ராஜி எப்படியும் பிரதமர் ஆவார் என்கிறார். ஆனால், தேதி, நேரம் எல் லாம் தெரியாது என்கிறார்.

பட்டாவிடம் வாடிக்கை யாளர்களாக வரும் பிரபலங் கள்குறித்து கேட்டதற்கு அவர் கூற மறுத்ததுடன் ஜாதகத்துடன் வாருங்கள், பணம் கொடுங்கள், கேள்வி கேளுங்கள், பதிலைப் பெற்று இடத்தைக் காலி செய்யுங்கள் என்கிறார். என் கதவுகள் எல்லோருக்கும் திறந்தேவுள்ளது என்கிறார்.

மோடி ஜோதிடத்தை அறிய, தொழிலாக இருப்ப வர்களைமட்டும் நாடாமல் பொழுதுபோக்காக உள்ள வர்களையும் நாடுகிறாராம். அப்படி பொழுதுபோக்காக ஜோதிடம் சொல்பவர் தேஜாஸ் மேத்தா என்பவர். இவர் அமெரிக்காவில் இயங் கும் ஸ்டெம்-செல் கம் பெனியின் உரிமையாளராம். குஜராத்தில் ஜனசங்கத்தைத் தோற்றுவித்தவரும், ஜோதி டருமாகிய யசோதர் மேத்தா வின் பேரன்தான் தினேஷ் மேத்தா. மாநில நீர்ப்பாசனத் துறை ஊழியர் பி.சி.படேல் என்பவர் மோடிக்கு மூன்று நிகழ்ச்சிகளுக்கு நேரம் கணித்து சொல்லியுள்ளார். அவர் அமைச்சரவையில் உள்ளவர்களும் அவ்வப் போது நேரம் குறித்துத்தரச் சொல்வார்களாம்.

ஜோதிடர்களை நம்பி குறிகேட்பதும், எண்ணியல் பார்த்துப் பெயரில் மாற்றம் செய்வதும், குறித்த இடங் களுக்குச் செல்வதைத் தவிர்ப்பதும் என்று மூட நம்பிக்கையின்பிடியில் அரசியல்வாதிகள் பலரும் சிக்கிக்கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட அரசியல் பிரபலங்களின் வரிசையில் இந்தியா முழுவதுமிருந் தும், பலரைப்பற்றியும் தக வல்கள் வெளிவந்துள்ளன. இந்த பட்டியலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, கரு நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முன்னாள் பிரதமர் தேவகவுடா, அவர் மகன் குமாரசாமி, முன்னாள் முதல்வர் ஷட்டர் என்று பட்டியல் நீளுகிறதாம். மேற் கண்ட செய்திகளை ஆங் கில நாளேடு ஒன்று விவர மாக வெளியிட்டுள்ளது. மோடி தரப்பில் பதில் வருமா?

இந்திய அரசியலில் தற் போது நவீன தொழில்நுட்ப யுக்திகளைக்கொண்டு களம்காணுவதும், சமூக வலைதளங்கள், திட்ட மிடப்பட்ட நிகழ்ச்சிகள், நவீன, திட்டமிடப்பட்ட பிரச்சாரக் கூட்டங்கள் என்று பல்துறை, ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள் வதுமாக இருந்தாலும், 30-40 ஆண்டுகளாக இல்லாத தொழில்நுட்பங்களுடன் இன்னமும், தம் கொள்கை, தம் கட்சி, செயல்பாடுகளை, வாக்காளர்களை நம்பாமல் ஜோதிடர்களையும், ஜோதி டத்தையும் நம்பி அவர்கள் பின் செல்லும் மோடி போன்ற அரசியல்வாதிகள் சாதிக்கப் போவதுதான் என்ன? என்று விவரம் தெரிந் தவர்கள் கேட்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page1/75815.html#ixzz2uCUdaUhF

தமிழ் ஓவியா said...


மோடி ஒரு பொய்யர் சிறுபான்மை மக்கள் அவரைப் பார்த்து பயப்படுகின்றனர் மாயாவதி குற்றச்சாட்டுடில்லி, பிப்.23- பாஜக வின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி ஒரு பொய் யர் என்றும், அவரைப் பார்த்து சிறுபான்மையினர் பயப்படுவதாகவும் குற் றம் சாட்டியுள்ளார் பகுஜன் சமாஜ் கட்சித் தலை வர் மாயாவதி. நாடாளு மன்ற வளாகத்தில் செய்தியாளர் களைச் சந்தித்தார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறிய தாவது:-
நரேந்திர மோடி கூறு வதில் சிறிய அளவிலேதான் உண்மை இருக்கிறது. பெரும்பாலானவை பொய் தான். மக்கள் தவறாக வழி நடத்தப்படுகின்றனர். நாட்டின் அடுத்த பிரதமராக விடாமல் அவரை தடுக்க கடும் முயற்சிகள் நாங்கள் மேற்கொள்வோம். சிறு பான்மையின மக்கள் அவரை பார்த்து பயப்படு கின்றனர். ஒருவேளை அவர் பிரதமரானால் முஸ் லீம்கள் தாங்கள் பாது காப்பாக இருக்க முடியாது என்பதை உணர்ந்துள்ள னர். சிறுபான்மையின மக்களாகிய நாம் அவரை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும். அதே போல், மூன்றாவதுஅணி மற்றும் பிற அணிகளால் நாட்டிற்கு எதையும் செய்ய முடியாது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/75816.html#ixzz2uCUo1Neo

தமிழ் ஓவியா said...


குஜராத் வளர்ச்சியா? மோடி புளுகு - 2


பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டவுடன், குஜராத் மாநிலம் ரேவாரி கிராமத்தில் 15.9.2013 அன்று பேசிய மோடி, இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள கட்ச் பகுதிகளில் காவல் புரியும் நமது இராணுவ வீரர்களின் பயன் பாட்டிற்கு, நர்மதா ஆற்றிலிருந்து குடிநீர் வருவதற்கு தன்னுடைய முயற்சிதான் காரணம் என்றும், இராணுவ வீரர்கள் மீது அதிக அன்பும் மதிப்பும் இருக்கும் காரணத்தினால், 700 கிலோமீட்டர் தூரத்திற்கு, குழாய் அமைத்து, தண்ணீர் செல்ல, தான் ஏற்பாடு செய்த தாகவும் பேசினார், மோடி. இதில் உண்மை இருக்கிறதா? கட்ச் பகுதிக்கு, குழாய் மூலமாக குடி நீர் வழங்கும் மிகப் பெரிய திட்டம் 4700 கோடி ரூபாய் செலவில் சர்தார் சரோவர் அணை மற்றும் மாகி குழாய் திட் டத்தின் மூலாமக 1999-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.

மாகி குழாய் திட்டத்தின் மூலமாக நர்மதா ஆற்று நீர், ஆறு மாவட்டங்களில், 29 நகரங்களுக்கும், 1467 கிராமங்களுக்கும், 880 கோடி ரூபாய் செலவில், குடிநீர் தரப்பட்டதை, 2001ஆம் ஆண்டு ஏப்ரலில் அப்போதைய குஜராத் முதல்வரான கேசுபாய் படேல் அறிவித்துள்ளார். ஏப்ரல் 2002-க்குள் கட்ச் பகுதிக்கும் இந்த திட்டம் சென்றடையும் என்றும் அறிவித்தார் கேசுபாய். 22.1.2001 அன்று, மாகி குழாய் திட்டம் கதாதா மாவட்டத்தில் துவக்கப்பட்டது. துவக்கியவர் கேசுபாய் படேல். ஆசிய வளர்ச்சி வங்கியின் 600 கோடி ரூபாய் கடனில், இத்திட்டம், கட்ச் பகுதிக்கும் சென்றடைந்தது 2002 ஆம் ஆண்டு. 7.10.2001 அன்றுதான், நரேந்திர மோடி, குஜராத் மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002-இல் இத்திட்டம் கட்ச் பகுதிக்கும் ஏறத்தாழ 500 கிலோ மீட்டர் பாதையை கடந்து சென்றது, இறுதி யாக எல்லைப் பகுதிக்கு சுமார் நூறு கி.மீ. தூரம் உள்ள பாதையை 2004-ல் முடித்திருக்க வேண்டும். ஆனால், நிர்வாகத் திறமை மிக்க? மோடி ஆட்சியில், நூறு கி.மீ. கடக்க பத்து ஆண்டுகள் ஆகியது. இறுதி யாக ஆகஸ்டு 2013-இல் தான் இராணுவ வீரர்கள் இருக்கும் எல்லைப் பகுதிக்கு இக்குடிநீர்த் திட்டம் சென்றடைந்தது. கேசுபாய் படேல் முதல்வராக இருந்து 1999-இல் துவக்கப்பட்ட இந்த குடி நீர் திட்டத்தை, மொத்தம் உள்ள 600 கி.மீ. தூர குழாய் திட்டத்தில், 500 கி.மீ. வரை கேசுபாய் படேல் ஆட்சிக் காலத்திலேயே முடிக்கப் பட்ட ஒரு திட்டத்தை, அக்டோபர் 2001-இல் முதல்வ ரான மோடி, தானே துவக்கியதாக 2013இல் கூறுகிறார் என்றால், இதற்குப் பெயர் தான் மோடி புளுகு.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/75819.html#ixzz2uCUzolsl

தமிழ் ஓவியா said...


ஊ.பு.அ.ச.


இதன் விரிவாக்கம் ஊ.பு.அ. (WPA) சவுந்தர பாண்டியன் ஆகும். தந்தை பெரியார் அவர்கள் முயற் சியால் செங்கற்பட்டில் 1929ஆம் ஆண்டு நடை பெற்ற முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டின் தலைவர் இவர் - அதனைத் தொடர்ந்து சுயமரியாதை இயக்கத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டவர்.

1928ஆம் ஆண்டு முதல் 1930ஆம் ஆண்டு வரை இராமநாதபுரம் மாவட்ட ஜில்லா போர்டு தலைவராக இருந்தார். 1943-1947 கால கட்டத்தில் மதுரை மாவட்ட ஜில்லா போர்டு தலைவராக விளங்கினார். மூன்று முறை சென்னை மாநில சட்ட மன்ற உறுப்பினராக இருந் தார். டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் இவர் கொறடாவாகவும் பணி யாற்றினார். இராமநாதபுரம் மாவட்ட ஆட்சிக் கழகத் தலைவராக பாண்டியனார் இருந்தபோது பிறப்பித்த அவரின் ஆணை வரலாற் றில் என்றும் பேசப்படக் கூடிய ஒன்றே!
இந்த ஜில்லாவிலுள்ள சில மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஆதி திரா விடர்களைத் தமது பஸ் களில் ஏற்றிக் கொண்டு போவதில்லையென்றும், டிக்கெட்டில் ஆதிதிராவி டர்களுக்கு டிக்கெட் கொடுக் கப்பட மாட்டாது என்று நிபந்தனை ஏற்படுத்தியி ருப்பதாகவும் அறிகிறோம். இவ்வழக்கம் பிரயாணி களுக்கு இடைஞ்சல் உண்டு பண்ணத் தக்கதாகவும், மிக அக்கிரமமானதாகவும் இருக் கிறது. ஆகவே மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஏதேனும் ஒரு சமூகத்தாரை பஸ்ஸில் ஏற்றிச் செல்ல மறுக்கவோ, டிக்கெட்டில் மறுப்பு விதிகள் அச்சிடவோ செய்தால் அவர்களுடைய லைசென்சு ரத்து செய்யப் படும் என இதனால் எச்சரிக்கை செய்கிறோம்.

இந்த சுற்றுக் கடிதம் கிடைத்த ஒரு வாரத்துக்குள் அந்தத் தடை விதி நீக்கப் பட்டதா அல்லவா என்று சாம்பிள் டிக்கெட்டுடன் ரிப்போர்ட் செய்துகொள்ள வேண்டும் என்று அந்தக் காலத்தில் பாண்டியனார் ஆணை பிறப்பித்தார் என் றால் அது என்ன சாதார ணமா! வளர்ந்த இந்தக் கால கட்டத்தில்கூட தேநீர் கடை களில் இரட்டை கிளாஸ் முறை இருக்கிறது என்றால் இன்றைக்கு 80 ஆண்டு களுக்கு முன் இப்படி ஓர் ஆணை பிறப்பிப்பதற்கு எத்தகைய கொள்கை உரமும், துணிவும் இருக்க வேண்டும். நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாற்றம் பெற்ற சேலம் மாநாட்டில் (1944) தந்தை பெரியாருக்கு எதிராக ஒரு குழு செயல் பட்ட நிலையில், அவர்க ளுக்கு பாண்டியனார் உறு துணையாக இருப்பார் என்று பேசப்பட்ட நிலையில், அது உண்மையில்லை என்று தந்தை பெரியார் பக்கமே உறுதியாக நின்றார்.

1929ஆம் ஆண்டு செங்கற்பட்டு மாநாட்டில் ஜாதிப் பட்டங்களைத் துறக்க வேண்டும் என்ற தீர்மானத் தின் அடிப்படையில் அது வரை அவர் பெயருக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டி ருந்த ஜாதி வாலை அறுத் தெறிந்தார். இந்தியாவி லேயே பெயருக்குப் பின் னால் ஜாதிப் பட்டத்தைப் போட்டுக் கொள்ள வெட் கப்படும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் அதற்குப் பாண்டியனார் போன்றவர் கள் வழி காட்டியல்லவா! - மயிலாடன்

குறிப்பு: இன்று பாண்டிய னாரின் நினைவு நாள் (1953).

Read more: http://viduthalai.in/page1/75769.html#ixzz2uCW6lQVI

தமிழ் ஓவியா said...


பெரியாரின் மண்ணில் ஒழிந்து போன தேவதாசி முறை கருநாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை!


கருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என்ற பெய ரில் படிப்பறிவில்லா மக் களை ஏமாற்றி இந்தக் கொடூரம் நடந்து வருகிறது. தமிழகத்தில் தந்தை பெரியார் தலைமையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட் டியார் மற்றும் மூவலூர் இராமாமிர்தம் அம்மை யார் போன்றோர் நடத்திய சமூகப்போரின் காரணமாக பெண்களுக்கு ஏற்பட்ட தேவதாசி அவலம் தமிழகத் தில் இருந்து வேரோடு அழிந்து போனது. இதற்காக இன்றும் பெண்கள் தந்தை பெரியாருக்கு நன்றி தெரி விக்கின்றனர்.

ஆனால் கடந்த ஆண்டு வாய்ப்பிழந்த பெண் நடிகை ஒருவர் தேவதாசி ஆவது அவர் அவர்களது விருப்பம் என்று ஒரு கல்வி நிலையத்தில் நடந்த கருத் தரங்கில் கூறி தேவதாசி முறை என்னவோ பெண் களுக்குப் புனிதமான ஒரு சடங்கு போலவும், ஆல யங்களில் நடக்கும் புனிதப் பணியை அறியாமை கார ணமாக சிலர் (பெரியார் பெயரைக்குறிப்பிடாமல்) எதிர்த்தனர். அவர்களுக்கு நமது கலாச்சாரத்தின் மீது பொறாமையும் மதத்தின் காழ்ப்புணர்வும் உண்டு என்று கூறியிருந்தார். இது அப்போதே மிகவும் சல சலப்பை ஏற்படுத்தியது.

அவரின் ஆபாசமான கூற்றை உச்சநீதிமன்றமே ஓங்கி அறைந்து தேவதாசி முறை இந்த நாட்டின் மிகப் பெரிய அவமானம் என்று கூறி இருக்கிறது. கருநாடக மாநிலம் ஹரப்பனல்லி வட்டத்தில் உத்தரங்கமல அடிவிமல நகரி என்ற பகுதியில் உள்ள துர்க்கை கோவிலில் இன் றும் தேவதாசி முறை நடந்து வருகிறது. இது குறித்து பல முறை அரசுக்குத் தெரியப் படுத்தியும் இது கலாச்சார பழக்கம்; இது திருவிழா அன்று மாத்திரம் நடக்கும் விழாவாகும் இதனால் யாரும் பாதிக்கபடவில்லை என கூறி நகர நிர்வாகமும் இந்தச் கோவில் தேவதாசி விழாவை சிறப்பாக நடத்தி வந்தது. போராடும் உளியம்மா

இந்தக் கோவிலின் முதிய தேவதாசியான உளி யம்மா என்பவர் நீண்ட காலமாக இந்தப் பழக்க வழக்கத்திற்கு எதிராக போராடி வந்தார். ஆனால் நகர நிர்வாகம் மற்றும் பிர பலங்களின் தலையீடு கார ணமாக அவரால் எதுவும் செய்யமுடியாமல் இருந்தது. இந்த நிலையில் சோசியல் லைஃப் என்ற பொது நல அமைப்பு உளியம்மா விற்கு உதவமுன்வந்தது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு எஸ் எல் பவுண்டே சன் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய் தது அதில் உதரங்கமல துர்க்கையம்மன் கோவிலில் நடந்து வரும் பாரம்பரிய தேவதாசி முறையையும் சின்னாபின்னமாக்கப் படும் பெண்களின் வாழ்க் கைப் பற்றியும் குறிப்பிடப் பட்டிருந்தது.

உச்சநீதிமன்றம் சாட்டை! சமூகத்தின் மிகவும் கொடிய பழக்கமாக இன் றும் தொடரும் இந்த அவ லத்தை அறிந்ததும், உச்சநீதி மன்றமே ஒருமுறை அதிர்ந்து போனது, தேவதாசியாக மாற்றப்படும் விழா (13.02.14) அன்று இரவு நடைபெறும் நிலையில் உச்சநீதிமன்றம் நீதிபதி சதாசிவம் தலைமையில் இந்த மனுவை விசார னைக்கு எடுத்துக்கொண்டு இந்த மனு மீது நீதிபதி கீழ்க்கண்ட உத்தரவை வழங்கியுள்ளார்;

இந்த சம்பவம் குறித்து கருநாடக தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவில் குறிப் பிடப்படுவதாவது : இந்த நூற்றாண்டிலும் தேவதாசி முறை தொடர்கிறது என் பது இந்திய நாட்டிற்கு ஒரு அவமானச் சின்னமாகும், இந்த சம்பவம் பற்றி உட னடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், இந்த சம்பவம் நடைபெறுவ தைத் தடுத்து இதனால் பாதிக்கப்பட்ட பெண் களை மீட்க நடவடிக்கை எடுக்க கூறியும், இதற்கு முன்பான பதிவு செய்யப் பட்ட வழக்குகள் பற்றியும் விவரம் கேட்டுள்ளது. சமூக நீதிக்கான கி.வீர மணி விருதுவழங்கும் விழாவில் மராட்டிய மாநில பொதுப்பணித் துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜகன் புஜ்பால் கூறியதை இங்கு மீண்டும் நினைவு கூர்கி றோம். சமூகத்தில் பெண் கள் தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படும் அவலங்கள் இன் றளவு குறைந்த பாடில்லை, இதனை களைய இன்றும் பெரியார் இந்தியா முழு வதும் தேவைப்படுகிறார் என்று கூறினார். இன்று உச்சநீதிமன்றத்தின் உத்தர வின் படி அவரின் வார்த்தை உண்மையானது.

இப்பொழுதுள்ள கரு நாடக முதல் அமைச்சர் சித்தாராமையா பகுத்தறிவு வாதி அவர் தலையிட்டு இந்தக் கொடுமைக்கு முடிவு கட்டுவார் என்று எதிர்ப் பார்க்கப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page1/75770.html#ixzz2uCWGPSKT

தமிழ் ஓவியா said...


மோடியின் திருவிளையாடல்கள்!


மோடியின் திருவிளையாடல்கள்!

மோடி பயன்படுத்தும் அதானியின் தனியார் விமானம்

அகமதாபாத்: அய்ந்து ஆயிரம் கோடி ரூபாய் இழப் புக்கு மத்திய தணிக்கைத் துறை ஏற்கெனவே அதானியை குற்றம் சாட்டியுள்ளது.

பிரபல தொழிலதிபர் களான முகேஷ் அம்பானி, கவுதம் அதானி ஆகியோ ருக்கு சாதகமாக மோடி செயல்பட்டுவருவதாக மத் திய தணிக்கைத்துறை மோடி மீது குற்றம் சாட்டியுள்ள நிலையில் தொடர்ந்து அவர் செல்லுமிடமெல் லாம் அதே தொழிலதிபர் களுக்குச் சொந்தமான நிறு வனத்தின் விமானத்தைத் தான் பயன்படுத்துகிறா ராம். இணையத்தில் அவர் களுக்கு ஆதரவாக ஏன் எங் கள் பணத்தை பயன்படுத் துகிறீர்கள் என்று ஆசாத் ஹிந்துஸ்தானி என்பவர் இணையத்தில் கேட்கிறார்.

நரேந்திர மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்காத 5 மாணவர்கள் நீக்கமாம்

வதோத்ரா: குஜராத் மாநிலம் வதோத்ரா நகரில் கடந்த 15-ஆம் தேதி உள் ளூர் விளையாட்டு மைதா னம் திறப்பு விழா நடை பெற்றது. ஏராளமான மாண வர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில், மாநில முதல்வரும், பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட் பாளருமான நரேந்திர மோடி மைதானத்தை திறந்து வைத்தார். இந்நிலையில், வதோத்ரா பள்ளியில் உள்ள 5 மாணவர்கள் பள்ளியில் இருந்து அதிரடியாக நீக்கப் பட்டுள்ளனர். மோடி பங் கேற்ற விழாவை புறக் கணித்ததால் அவர்களை நீக்கம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு பெற்றோர் சங்கம் கடிதம் எழுதியுள் ளது. சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் பள்ளியின் முதல் வர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அரசியல் ஆதாயத்துக்காக பள்ளி மாணவர்களை மோடி பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி யுள்ளது.

Read more: http://viduthalai.in/page1/75772.html#ixzz2uCWQ18b0

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்கள்


பார்ப்பனர்கள் இந்நாடு எவ்விதச் சமுதாய மாறுதலும் அடையக் கூடாது என்ற தன்மையினையே தங்கள் மூலாதாரக் கொள்கையாகக் கொண்டுள்ளனர்.

- (விடுதலை, 30.12.1972

Read more: http://viduthalai.in/page1/75759.html#ixzz2uCWffxES

தமிழ் ஓவியா said...


குஜராத் வளர்ச்சியா? மோடி புளுகு -1
நரேந்திரா தாமோதர்தாஸ் மோடி, (பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் முழுப் பெயர்), மற்ற மாநிலங்களில் பேசுகையில், குஜராத்தில் மின் உற்பத்தி தன்னி றைவு பெற்றுவிட்டதாக கூறி வரு கிறார். இதில் உண்மை இருக்கிறதா?

பாஜகவின் விவசாயிகள் சங்கமாக இருக்கும், பாரதீய கிசான் சங், விவ சாயிகளுக்கு, தடையில்லா மின்சாரம் வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறது. மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக குஜராத் இருந்தால், ஏன், விவசாயிகள் இப்படி ஓர் போராட்டத்தை நடத்த வேண்டும்?

தனியார் நிறுவனங்களில் இருந்து அதிக விலை கொடுத்து 15,300 மெகா வாட் மின்சாரத்தை குஜராத் அரசு வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியா விலேயே, அதிக விலை கொடுத்து மின்சாரத்தை தனியார் நிறுவனங் களிடமிருந்து வாங்கும் மாநிலமாக குஜராத் முதலிடம் வகிக்கிறது.

தமிழ் நாட்டில், முதல் 100 யூனிட் வரை, ஒரு யூனிட் ஒரு ரூபாய் என்கிற நிலையில், குஜராத்தில், ஒரு யூனிட் ரூ. 3.60 ஆக உள்ளது. 200 யூனிட் வரை தமிழ் நாட்டில் ரூ.1.50 என் றால், குஜராத்தில் ரூ.4.25 ஆக உள் ளது. இதை மேலும் உயர்த்திட குஜ ராத் அரசிடம் தனியார் நிறுவனங்கள் கோரி வருகின்றன.

குஜராத்தில், பாஜகவிற்கு இந்த தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தான் அதிக நன்கொடைகளை தந்துள் ளன என்பதை தேர்தலை பற்றிய ஆய்வு செய்த சனநாயக சீரமைப்பு சங்கம் என்ற அரசு சாரா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

குஜராத்தில் மின் இணைப்பு கேட்டு வந்த மூன்று லட்சம் விண் ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 3945 விண்ணப்பங்களுக்குத் தான், மின் இணைப்பு தரப்பட்டுள்ளன.

2011 கணக்கெடுப்பின்படி, குஜ ராத்தில், மின்சாரம் இல்லாத 11 லட்சம் வீடுகள் உள்ளன. அதில் 9 லட்சம் வீடுகள், கிராமத்தில் தான் உள்ளது என பாரீஸில் வாழும் சமூக ஆய்வாளர் கிறிஸ்டபர் ஜாபரிலெட், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக் கையில் 17.4.2013 எழுதிய கட்டுரை யில் குறிப்பிட்டுள்ளார்.

இது தான், குஜராத்தில் மின் உற்பத்தி பற்றிய நிலை.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page1/75768.html#ixzz2uCWnRwDC

தமிழ் ஓவியா said...


எனது பெற்றோர் விடுதலையை தடுக்காதீர்கள் ராகுல், பிரியங்காவுக்கு, நளினியின் மகள் வேண்டுகோள்


லண்டன், பிப்.22- எனது பெற் றோர் விடுதலையாவதை தடுக்காதீர்கள் என ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு நளினியின் மகள் ஹரித்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் தூக்குதண்டனை விதிக்கப் பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை கடந்த 18-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து இந்த 3 பேர் உள்பட, ராஜீவ் கொலை தொடர்பாக சிறையில் இருக்கும் 7 பேரும் விடுவிக் கப்படுவர் என தமிழக அரசு அறி வித்தது.
ஆனால் இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க இடைக் காலதடை விதித்தது.

இந்தநிலையில் முருகன்-நளினியின் மகளான ஹரித்ரா லண்டனில் தொலைக் காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

கடந்த 23 ஆண்டுகளாக எனது பெற் றோர் என்னுடன் இல்லாததால் நான் மிகப்பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறேன். உச்சநீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் முடிவுகளால், எனது பெற்றோர் எனக்கு திரும்ப கிடைப் பார்கள் என மிகுந்த மகிழ்ச்சி அடைந் தேன். ஆனால் தற்போது அதற்கு தடை விதிக்கப்பட்ட செய்தி கேட்டு நான் மிகுந்த ஏமாற்றமும், குழப்பமும் அடைந்துள்ளேன்.

எனது பெற்றோர் எனக்கு திரும்ப கிடைப்பதற்கான ஒரு வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. நாம் மிகவும் நேசிக்கும் ஒருவரை இழப்பதால் எவ்வளவு வேதனை ஏற்படும் என்பது, ராகுல் காந்தி மற்றும் பிரியங்காவுக்கு தெரியும். எனவே இந்த வாய்ப்பை அவர்கள் (ராகுல், பிரியங்கா) தடுக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.

எனது பெற்றோர் விடுதலையா னால், அதுவே நீங்கள் எனக்கு செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும். எனவே எனது பெற்றோர் விடுதலையை தயவு செய்து தடுக்காதீர்கள் என நான் உங்களை பணிந்து வேண்டுகிறேன். இவ்வாறு ஹரித்ரா கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/75766.html#ixzz2uCWwNJbj

தமிழ் ஓவியா said...


பல்லாவரத்துப் பண்டிதர்


திரு. வேதாசலம் அவர்கள் சென்னை குகானந்த சபையில் சமீபத்தில் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கரையும் அவர் நண்பர்களையும் சுயமரியாதை இயக்கத்தையும் பற்றி மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசினதாகவும் சுத்த சைவ ரத்த ஓட்டம் உள்ளவர்கள் இன்னமும் இவர்களைக் கொல்லாமல் இருக்கலாமா என்பதாக சபையோர்களைக் கேட்டதாகவும் தமிழ்நாடு திராவிடன் பத்திரிகைகளில் காணப்படுகின்றது.

அதே கூட்டத்தில் திரு. வேதாசலத்தைத் திருவாளர்கள் தண்டபாணிப் பிள்ளை, ராமனாதன், கண்ணப்பர் முதலிய பலர் பல கேள்விகள் கேட்டதாகவும் பதில் சொல்ல இயலா மல் திக்குமுக்காடியதாகவும் கடைசியாக கண்ணீர் விட்டு அழுததாகவும் மற்றும் பல விதமாய் காணப்படுகின்றது.

அன்றியும், சிற்சில விஷயங்களில் திரு. வேதாசலம், நாயக்கரைத்தாக்க உண்மைக்கு மாறாக சில கற்பனைகள் செய்துகொண்டு போனதாகவும் அதை அக்கூட்டத் திலேயே வெளியாக்கி அவர் அவமானமடையச் செய்த தாகவும் திராவிடனில் காணப்படுகின்றது.

அவைகள் அடுத்த வாரத்திற்குள் திரு. வேதாசலம் அவர்களால் மறுக்கப்படாத வரை குடிஅரசில் அவைகளை எடுத்து எழுதி தக்க சமாதானங்கள் வெளியாக்கப்படும்.

- குடிஅரசு - தலையங்கம் - 29.07.1928

Read more: http://viduthalai.in/page1/75743.html#ixzz2uCXWUZxm

தமிழ் ஓவியா said...

பழியோரிடம் பாவமோரிடம்

காலஞ்சென்ற தமிழ் தேசிய கவி சி. சுப்பிரமணிய பாரதியவர்களின் தேசிய நூல்களின் முதலிரண்டு பாகங் களை சென்னை அரசாங்கத்தால் அராஜக நூல்களென்று பறிமுதல் செய்திருப்பதாகத் தெரிகிறது. அந்நூல்கள் பறிமுதல் செய்யப்படுவதற்கு காரணம் ஜஸ்டிஸ் கட்சியார் தான் என்று தமிழ்நாடு பத்திரிகை ஜஸ்டிஸ் கட்சியார் மீது வீண் பழி சுமத்துகிறது.

சென்னை அரசாங்கத்தார் மேற்படி நூல்களைப் பறிமுதல் செய்வதற்கு முன்னரே பர்மா அரசாங்கத்தார் பறிமுதல் செய்தனரே அதற்கு யார் காரணம் என்று தமிழ்நாடு கூறுமா? பர்மா அரசாங்கம் பறிமுதல் செய்த புத்தகத்தை சென்னை கவர்மெண்டாரும் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற ஒரு அரசாங்க முறை இருந்து வருவதால் மேற்படி நூல்களை சென்னையில் பறிமுதல் செய்ததற்கு பர்மா கவர்மெண்டார் தான் காரணம் என்று சுதேசமித்திரன் பத்திரிகையும் கூட சொல்லியிருக்கிறது.

ஆகவே இந்த பறிமுதலுக்கு ஜஸ்டிஸ் கட்சியார் எந்த விதத்திலும் காரணமாயிருக்கவில்லை. பறிமுதல் செய்யப் பட்ட மேற்படி ஸ்ரீசுப்பிரமணிய பாரதியாரின் நூல்களில் ராஜீயத்தைவிட பார்ப்பனீயமே மிகக் கடுமையாகக் கண்டிக்கப்பட்டிருப்பதால் அவை பறிமுதல் செய்யப்பட்ட தற்கு யார் காரணமாயிருந்திருக்கலாம் என்பதை அறிந்தும் அறியாததுபோல் ஜஸ்டிஸ் கட்சியாரை தமிழ்நாடு தாக்கு வதைப் பார்த்தால் அதைக் கோடாரிக்காம்பு என்று சொல்லு வதா அல்லது பழியோரிடம் இருக்க பாவத்தையோரிடம் சுமத்துகிற தென்பதா?

- குடிஅரசு - கட்டுரை - 30.09.1928

Read more: http://viduthalai.in/page1/75743.html#ixzz2uCXfuzlj

தமிழ் ஓவியா said...


விஸ்வ நேசன்

திருவாளர்கள் கா. சுப்பண்ண ஆச்சாரியார் அவர்களும், ந.நல்லய்ய ஆச்சாரியார் அவர்களும் ஈரோட்டிலிருந்து விஸ்வ நேசன் என்பதாக ஒரு புதிய வாராந்திர பத்திரிகை நடத்துவதாக ஏற்பாடு செய்து வருவதாகத் தெரிகின்றது.

அது சீக்கிரத்தில் வெளியா கலாமென்றும் நினைக்கின்றோம். அப்பத்திரிகையானது ஏனைய சில சமூகப் பத்திரிகைகள் போலவும் அரசியல் புரட்டுப் பத்திரிகைகள் போலவும் வயிற்றுப் பிழைப்புப் பத்திரிகைகள் போலவும் அரைத்த மாவை அரைத்துக் கொண்டே இருக்கின்றது என்பது போல் ஒவ்வொரு விஷயத்திலும் பார்ப்பனர் களையும் அவர்களது சமய பழக்க வழக்கங்களையும் பின்பற்றிக் கொண்டு கண்மூடித்தனமாய் நடப்பதாக இல்லாமல் சுதந்திரத்துடன் தனது சொந்த அறிவுக்கு மரியாதை கொடுத்து தற்காலம் நமது மக்களுக்கு வேண்டிய தான வழிகளில் செல்லும் என்பதாக உறுதிகொண்டு அதை வரவேற்கின்றோம்.

அன்றியும் அதன் அதன் பத்திராதி பராக இருக்கப் போகும் திரு. கா. சுப்பண்ண ஆச்சாரியார்வர்கள் ஒத்துழையாமை காலத்தில் ஈரோட்டில் சர்க்காரின் அக்கிரம உத்திரவை மீறி சிறை சென்றவர். இப்போதும் தொழிலாளர் விஷயமாகவும் ஈரோட்டில் சர்க்காரால் போடப்பட்ட அநியாய உத்தரவை மீறினதாக கைது செய்யப்பட்டு, திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கர் முதலியவர்களுடன் விசாரணை யிலிருப்பவர்.

எனவே இப்பேர்ப்பட்ட அவரது ஆதிக்கத்தில் அப்பத்திரிகை நடைபெறும் வரையில் அது பெரிதும் சுய மரியாதைக் கொள்கைகளையே ஆதாரமாய்க் கொண்டு நடைபெறும் என்பதும் நமது உறுதி. ஆதலால் இத்தகைய பத்திரிகையைப் பொதுமக்கள் ஆதரிக்க வேண்டுகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 02.09.1928

Read more: http://viduthalai.in/page1/75744.html#ixzz2uCXoISCK

தமிழ் ஓவியா said...

அந்தோ பரஞ்சோதி சுவாமிகள் பிரிந்தார்...

சிதம்பரம் பொன்னம்பல மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ பரஞ்சோதி சுவாமிகள் சிலநாள் உடல் நலங்குன்றியிருந்து நிகழும் அக்டோபர் மாதம் 10ஆம் நாள் புதன் கிழமையன்று அந்தோ! இம் மண்ணுலகை விட்டுப் பிரிந்தார். சுவாமிகள் தென் மொழியிலும் வடமொழியிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர். தாம் மடாதிபதியானதும் காலநிலைமைக்குத் தக்கபடி மடத்து வேலைகளுடன் பொது நலத்திற்கான வேலைகளையும் கவனித்து உழைத்து வந்தார்.கதர், மதுவிலக்கு, தீண்டாமை விலக்கு, முதலியவைகளை பல இன்னல்களுக்கிடையிலும் உபதேசித்து வந்தார். ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து சிதம்பரம் தச்சன் குளத்தையும் ஞானப்பிரகாசர் குளத்தையும் வெட்டியும், படிகட்டியும் சிதம்பர வாசிகளுக்கு உதவினவர்.

சிதம்பரம் நகர பரிபாலன சபையில் ஓர் ஆதி திராவிட சகோதரிக்கு ஸ்தானம் வாங்கிக் கொடுத்ததும் நம் சுவாமிகளே, ஆதலின் இத்தகைய பெரியாரின் பிரிவாற்றாது தவிக்கும் தமிழ் மக்கள் அனைவருக்கும் சிறப்பாக சிதம்பரவாசிகளுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் நமது ஆழ்ந்த அனு தாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 21.10.1928

Read more: http://viduthalai.in/page1/75744.html#ixzz2uCXvZrI1

தமிழ் ஓவியா said...


திரு.சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்


திரு செட்டியார் அவர்களைக் குறித்து நான் விரிவாக ஒன்றும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவரை நீங்கள் என்னைவிட நன்கறிவீர்களென்றே நினைக்கிறேன். திரு. செட்டியார் பேசியதை மறந்து அதற்கு விரோதமாக நடப்பவரல்லர் (நகைப்பு) பள்ளிக் கூடத்தில் சிறுவர்களுக்கு சூரியனை பூமி சுற்றுகிறது. அதனால் இரவும் பகலும் வருகின்றது என்று பல சாஸ்திரீயமான விஷயங்களைப் போதித்து விட்டு வீட்டுக்குச் சென்றதும் மறுநாள் ஆசிரியர் கிரகணம் என்று நூறுதரம் தலைமுழுகி தர்ப்பைப் புல்லால் தர்ப்பணம் செய்வதும் இதற்குப் பொருத்தமான உதாரணமாகும்.

(நகைப்பு) மகாத்மா காந்தி வந்து திரு. செட்டியார் வீட்டில் தங்கியிருந்தபோது அவர் காந்தியிடம் நம் நாட்டிலிருந்து மதசம்பந்தமான மூடப் பழக்கங்கள் என்று ஒழிகின்றதோ அன்றுதான் விடுதலையுண்டாகு மென்று தைரியமாய்க் கூறினார்.

நம்நாட்டு மூட பழக்கவழக்கங்களைத் தைரியமாகக் கண்டித்து, மேனாட்டு மேலான கொள்கைகளைச் சிலாகித்து, நேர்மையாக எங்கு வேண்டுமானாலும் பேசுவதற்கும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்கும் அவர் ஒரு போதும் பின் வாங்கியதில்லை. கும்பகோணத்தில் கூடிய நாடார் வகுப்பார் மகாநாட்டில் அவருக்கு வாணிபச் செட்டிமார்கள் வாசித்துக் கொடுத்த பத்திரத்திற்குப் பதிலளிக்கும்போது அவர் பிறர் தம்மைக் குறித்து என்ன சொல்லுவார்கள் என்பதைக் கவனியாது தைரியத்துடன் அவ் வகுப்பாரிடத்துள்ள குறைகளையும் மூடநம்பிக் கைகளையும் வெளியிட்டுத் திருத்த முயன்றது பாராட்டத் தக்கதேயாம்.

சமீபத்தில் திரு, செட்டியார் இந்தியா சட்ட சபையில் பெண்களுக்கும் சொத்துரிமை அளிக்கப்பட வேண்டுவதையும் மற்ற வித்தியாசங்களை ஒழிக்க வேண்டிய அவசியத்தையும் வற்புறுத்தித் தீர்மானமொன்று கொண்டு வர உத்தேசித்திருப்பதாகக் கூறினார். அக் கமிட்டியில் திரு. செட்டியார் அவர்களும் ஒருவராயிருக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்டபோது அவர் அதற்கு ஒப்புக் கொண்டு தம்மாலான வகையிலெல்லாம் அவ்வியக்கத்திற்கு உதவியளிப்பதாக வாக்களித்தார்.

திரு. செட்டியார் தம்மைக் குறித்து பிறர் என்ன சொல்லிக் கொள்ளுகின்றார்கள் என்பதைப் பொருட்படுத்தாது தம் மனசாட்சியின் படி நடப்பவர் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய மாசற்ற மனத்துடன் அறிவாற்றலும் பொருந் தியவர்களுள் நம் நாட்டிலிருக்கும் பெரியார்களில் திரு. செட்டியார் முக்கியமானவர். நீங்கள் அவர் அந்நாட்டிலும் இந்நாட்டிலும் செய்துள்ள வேலைகளைப் புகழ்ந்து பாராட்டுவதைவிட அவருடைய அபிப்பிராயத்தை அறிந்து அதனைப் பின்பற்ற முயல்வதுதான் உசிதமாகும்.

இன்று திரு. செட்டியாரைக் குறித்து சில வார்த்தைகள் சொல்ல இக்கூட்டத்தில் எனக்கு சந்தர்ப்பமளித்ததற்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தாருக்கு என் நன்றியறிதலையும் சந்தோஷத் தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

- குடிஅரசு - சொற்பொழிவு - 16.09.1928

Read more: http://viduthalai.in/page1/75746.html#ixzz2uCY2bWI6

தமிழ் ஓவியா said...


சுயமரியாதைப் பிரச்சாரங்கள்


சுயமரியாதைப் பிரசாரங்கள் சுயமரியாதைப் பிரச்சாரங்கள் பல இடங்களில் நடந்து வருவதாகச் செய்திகள் எட்டுகின்றன. அவற்றில் பேசுகிறவர்கள் பல மாதிரி பேசுவதாகவும் அதைக்கேட்கிறவர்கள் பல விதமாய் அர்த்தம் செய்து கொள்ளுவதாயும் சிற்சில சமயங்களில் விபரீத அர்த்தம் ஏற்பட்டு விடுவதாகவும் தெரிய வருகிறது.

அவ்விபரீதத்தை நிறுத்துவதற்காக குறைந்தது பதினைந்து நண்பர்களை தயார் செய்யும் பொருட்டு ஈரோட்டில் ரயில்வே ஸ்டேஷனுக்கடுத்த திரு. வெங்கட்ட நாயக்கர் தோட்டத்திலுள்ள ஒரு கொட்டகையில் சுய மரியாதைப் பிரச்சார போதனைக் கூடம் என்பதாக ஒரு ஸ்தாபனம் ஏற்படுத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டி ருக்கிறது.

அதில் ஒரு மாத காலத்திற்கு, தினமும் இரண்டு காலம் ஒவ்வொரு மணி நேரம் உபந்யாசங்களின் மூலமும், மற்றும் சம்பாஷணை, குடி அரசில் கண்ட வியாசங்கள் முதலியவை மூலமாகவும் கற்பித்துக் கொடுக்க முடிவு செய்திருக் கிறோம். காலாவதியொன்றுக்கு பதினைந்து பேர்களை சேர்த்துக் கொள்ளக்கூடும்.

அவர்களில் சௌகர்ய மில்லாதவர்களுக்கு இலவச சாப்பாடு போடப்படும். இஷ்டமுள்ளவர்கள் தெரிவித்துக் கொண்டால் ஏற்றுக் கொண்ட விஷயத்துக்கும் வர வேண் டிய விபரத்துக்கும் மற்ற நிபந்தனைகள் விபரத்துக்கும் தெரிவிக்கப்படும்.

- ஈ.வெ.ராமசாமி

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 22.07.1928

Read more: http://viduthalai.in/page1/75747.html#ixzz2uCYCOQRV

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

சமுதாயத் தொண்டில் முதலானதும் முக்கியமானது மான ஜாதியொழிப்பை எடுத்துக் கொண்டால் இராமனின் முதல் செய்கையும் கடைசிச் செய்கையும் ஜாதியைக் காப்பாற்றப் பிறந்து, ஜாதியைக் காப்பாற்றி விட்டுச் செத்ததேயாம்.நம் நாட்டில் சமுதாயச் சீர்திருத்த வேலையோ, ஒழுக்கம் பற்றிய பிரச்சார வேலையோ, பகுத்தறிவுப் பிரச்சார வேலையோ ஓர் அளவுக்காவது நடக்க வேண்டுமானால் இராமாயணம் முதலில் ஒழிக்கப் படல் வேண்டும்.

Read more: http://viduthalai.in/page1/75747.html#ixzz2uCYJgffW

தமிழ் ஓவியா said...


புகழ்ந்து பேசுவதுதான்!

ஒரு மனிதனுடைய சொந்தத் துக்காக என்று ஒன்று இருக்கு மானால், அது அவன் இறந்த பின் அவனை மற்றவர்கள் மறக்காமல் புகழ்ந்து பேசுவது தான்.

(விடுதலை, 31.3.1950

Read more: http://viduthalai.in/page-2/75864.html#ixzz2uIDOrbRp

தமிழ் ஓவியா said...


முத்துராமலிங்க தேவர் பேசுகிறார்

காவ்யா வெளியீடான, பசும்பொன் களஞ்சியம் என்ற நூலைப் படித்துக் கொண்டிருந்தபோது, அதில் 12.6.1949-இல் தேவர் உரை (பக்கம் 61) என்ற பகுதி அவரு டைய பேச்சு, ஆச்சரியத்தைக் கொடுத்தது - அதில் அவர் குறிப்பிடுவது இதுதான்:

ஆன்மீகத்தின் பெயரைச் சொல்லி சுய நலமிகள் கோயில் கட்டுவதும், கும்பாபி ஷேகங்கள் செய்வதும், ருத்ராட்சங்கள் அணிவதும், விபூதி, காவியாடை தரிப்பதும் மொட்டையடித்துப் பண்டாரமாகி, பண் டாரம் மடாதிபதியாகி, சிஷ்ய பரிவாரங்களும் சூழ, மறைவில் திரவிய ஆசை,

பெண் ஆசை இவை போன்ற ஆசைகளில் பல தீய செயல்கள் செய்வதும் மலிந்துபோய் நிற்கின்றன. ஆன்மீகத்தை வயிறு பிழைக்கும் ஒரு கருவியாகக் கொண்ட போலிகள் மலிந்த காலமிது! என்று குறிப்பிட்டுள்ளது.

தந்தை பெரியாரின் காலத்தாலழியாத கருத்துக்களை முத்துராமலிங்க தேவரும் பேசியிருப்பதைக் கண்டு அய்யாவின் கருத்து ஆன்மீகவாதிகளின் போக்கையும் எப்படி மாற்றி இருக்கிறது என்பதை எண்ணி எண்ணி உள்ளம் மகிழ்ந்தேன்.

- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர், குடந்தை

Read more: http://viduthalai.in/page-2/75867.html#ixzz2uIDXodcl

தமிழ் ஓவியா said...


நமது உடலின் வியக்கத்தக்க செயல்பாடுகள்


முழுமையான வாழ்நாள் என்பது 120 ஆண்டுகள் நலமுடன் வாழ்வது.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.

மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர்.

நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது.

நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது.

நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.

உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

கைரேகையைப்போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு. ர் கண் கொடையில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன.

900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.

மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே. அதில் கெராட்டின் சத்து உள்ளது, இது காண்டா மிருகத்தின் கொம்புகளில் காணப்படுவதாகும்.

இறப்பிற்குப் பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.

Read more: http://viduthalai.in/page-7/75895.html#ixzz2uIEDTM4H

தமிழ் ஓவியா said...

வேலை நேரத்தை மாற்றி பார்த்தால் சர்க்கரை நோய் வரும்

ஒரு மனிதனின் உணவுத் திட்டம், தூக்கம் ஆகியவை குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ச்சியாக இல்லாமல் அடிக்கடி மாறும் போது உடலை கண்டிப்பாக சர்க்கரை நோய் தாக்கும். உடலுக்கான செயல்பாடுகள் நேர் கோட்டில் இருந் தால் தான் இடையில் வரும் தடைகளை முன் கூட்டியே உணர்ந்து அதனால் தடுக்க முடியும்.

அடிக்கடி பாதையை மாற்றிக் கொண்டே இருப்பது போல் உணவு, உறக்கம் மற்றும் அன்றாட செயல்பாடுகளுக்கான நேர முறையில் மாறும் போது உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயை உடல் சந்திக்கிறது என்கிறார் சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் எம்.ஜி.யுவராஜ்.

மேலும் இவர் கூறுகையில், அமெரிக்காவின் ஹார் வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இரவு அல்லது பகலில் வேலை செய்யும் போது சர்க்கரை நோய் தாக்கு வது கண்டறியப்பட்டுள்ளது. உடல் எடை கூடுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரம் பகலில் வேலை மறு வாரம் இரவுப் பணி என மாறும் போது சர்க்கரை நோய் தாக்கும். மாதத்திற்கு 4 நாட்கள் வரை இரவுப் பணியில் வேலை செய்யும் பெண்கள் உடல் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர்.

தூங்கும் நேரம் மாறும் போதும் இரவு நேரத்தில் கண் விழித்து வேலை பார்க்கும் போதும் ஹார்மோன் செயல் பாட்டில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் இன்சுலின் ஹார் மோன் வேலை செய்வது குறைகிறது. தூக்கம் கெடும் போது அதிக பசியைத் தூண்டுகிறது. இதன் காரணமாக அதிக உணவு எடுத்துக் கொள்வதால் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகிறது.

பகல் மற்றும் இரவுப் பணி என வேலை மாறுவதால் குறித்த நேரத்துக்கு உடற்பயிற்சி செய்ய முடியாது. இரவு நேர வேலையால் உடற்பயிற்சி பாதிப்பதுடன் தூக்கம் கெட்டு மனக்குழப்பத்துக்கு ஆளாக நேரிடும். பகலில் வேலை பார்ப்பவர்கள் மாலை நேர வேலை பார்க்கும் போது பெரிய பாதிப்பு ஏற்படாது.

எனவே பெண்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் ஒரே வேலை பார்ப்பது போல் சூழலை மாற்றிக் கொள்ள வேண் டும். தவிர்க்க முடியாமல் வேறு நேரத்தில் வேலை பார்க் கும் சூழல் அமைந்து விட்டால் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யக் கூடாது. நடந்து கொண்டே வேலை பார்க்க வேண்டும்.

தேநீர், காபி, பிஸ்கட் ஆகியவற்றை தேவையற்ற நேரத்தில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். வேலை நேரத்தில் பதற்றம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம், என்கிறார் யுவராஜ்.

Read more: http://viduthalai.in/page-7/75895.html#ixzz2uIEWMgPQ