Search This Blog

25.2.14

பக்தி - ஒழுக்கம்

பக்தி - ஒழுக்கம்

கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியாகட்டும், மோட்சமாகட்டும் வைத்துக் கொள். எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச் சொத்து. உலகத்துக்கு பொதுச் சொத்தல்ல. ஒழுக்கம், நாணயம் பொதுச் சொத்து. நான் பக்தியில்லாமல் நரகத்திற்குப் போகிறேன் என்றால் உங்களுக்கு என்ன? நான் போய் விட்டுப் போகிறேன். நான் கடவுளை நம்பவில்லை, அதைக் கொழுக்கட்டை என்று சொல்லுகிறேன்; நஷ்டமில்லை பாருங்கள். அதனாலே எனக்குப் பக்தி இல்லை என்பதனாலே, உங்களுக்கென்ன நஷ்டம்?
ஆனால் ஒழுக்கமில்லையென்றால் என்னவாகும் பாருங்கள்? நாணயமில்லை என்றால் என்னவாகும்? உண்மை உணர்வு இல்லை என்றால் என்னவாகும்? இது மூன்றும் இல்லாதது இன்னொரு மனிதனுக்குச் செய்கிற கெடுதிக்கு பேர்தானே?

ஒழுக்கமாக இல்லை என்றால், எங்கெங்கேயோ ஒழுக்கக் கேடாக நடந்து இல்லை தொல்லை பண்ணிக் கொண்டிருக்கின்றான்; நாணயமாக இல்லையெனில், யாரையோ ஏமாற்றி வேதனையை உண்டாக்கி இருக்கின்றான்; உண்மையாக இல்லையென்றால் என்னத்தையோ எவனையோ ஏமாற்றிப் பொய் பேசித் தப்பிக்க இன்னொரு தவறைக் கொண்டிருக்கிறான் என்றுதானே பொருள்? ஆகவே ஒழுக்கம், நாணயம், உண்மை என்ற உயர்ந்த குணங்களெல்லாம் பொதுச் சொத்து. மனித சமுதாயத்திலே இது கேடாக இருந்தால் சமுதாயத்துக்குக் கேடு. ஒரு மனிதன் இந்தக் காரியங்களில் குற்றவாளியாக இருந்தானானால் கண்டிப்பாக இன்னொரு மனிதனுக்குக் கேடு விளைந்திருக்கும். இது முக்கியமில்லை. பக்தி கடவுள் நம்பிக்கை மதக் கோட்பாட்டின்படி நடக்கிறது. இவைதான் முக்கியமென்றால், மக்களுக்கு என்ன பிரயோஜனம் அதனாலே?

--------------------------------தந்தை பெரியார், 24.11.1964 பச்சையப்பன் கல்லூரிப் பேருரை

16 comments:

தமிழ் ஓவியா said...


பா.வே.மாணிக்க நாயக்கர் 1871- 1931


பா.வே. மாணிக்கநாயக் கர் என்னும் பெயர் தமிழ் உலகம் அறிந்த ஒன்றாகும் அடிப்படையில் அவர் பொறியாளர் என்றாலும் தமிழ் ஆய்வில் இலக்கிய விமர்சனத்தில் வித்தகராக விளங்கியவர். சேலம் அருகே உள்ள பாகல்பட்டி என்னும் சிற்றூரில் பிறந்த வர். பா. என்னும் எழுத்து பாகல்பட்டியையும் வே. என்ற எழுத்து அவரது தந்தை யார் வேங் கடசாமி நாயக்கரையும் குறிக்கும்.

சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று நான்கு சவரன் எடையுள்ள தங்கப் பதக்கத்தைப் பெற்றார். பொதுப் பணித் துறையில் கட்டுமான பொறியாள ராகப் பணியாற்றினார்.

மேட்டூர் அணை உள்ள வரைக்கும் இவர் பெயரும் நிலைத்திருக்கும்; காரணம் மேட்டூர் அணையை நிர் மாணிப்பதற்கான இடத் தைத் தேர்வு செய்து கொடுத் தவரே இவர் தானே! ஆனால் மேட்டூர் அணை கட்டு மானப் பணி அவரிடம் அரசு ஒப்படைக்காதது அவருக் குப் பெரிய ஏமாற்றம்தான்

அவர் பட்டாளம் (படை) வீரர் மரபு வழி வந்த குடும்பத்தில் வந்ததால் அந்த நாயக்கர் என்பது குடும்பப் பெயரோடு ஒட் டிக் கொண்டது. அவரது காலத்திலேயே திருமண முறையில் பல்வேறு ஜாதி கள் அவர்தம் குடும்பத் தோடு கரைந்து விட்டன. பொறியாளர் ஒருவ ருக்கு எப்படி இத்தகு தமிழ் ஆய்வு என்று திரு.வி.க. மறைமலை அடிகள் போன் றவர்களேகூட வியந்த துண்டு. 1919இல் திருச்சியில் தமிழ்ப் புலவர் மாநாடு கூட்டப் பெற்றதில் இவரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க தாகும். கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் எனும் தலைப்பில் மறை மலை அடிகள் முன்னிலை யில் பல்லாவரத்தில் அவர் ஆற்றிய ஆய்வுரை பிர சித்தி பெற்ற ஒன்றாகும்.

ஈரோட்டில் தந்தை பெரியாருக்குச் சொந்த மான வீட்டில் இவர் குடி யிருந்தார் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள் - விவாதம் செய்து கொள்வார்கள்.

அவரைப்பற்றி தந்தை பெரியார் கூறும் தகவல் அனைவருக்கும் பயன் படக் கூடியதாகும். ஈரோட் டில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இரண்டு கொல்லர்கள் வேண்டும் என்று பெரியா ரிடம் கேட்டுக் கொண்டார், கெட்டிக்கார இருவர்களை அழைத்துவர தனது குமாஸ்தாவிடம் பெரியார் சொன்னார். கெட்டிக்காரக் கொல்லர்கள் வேண்டாம்; நான் சொல்கிற வேலை செய்பவராக இருந்தால் போதும்; கெட்டிக்காரனை அழைத்து வந்தால் அவன் நமக்கு யோசனை சொல் லத்தான் பார்ப்பான் என் றாராம். இதனை எடுத்துக் காட்டி என்னைப் பின்பற் றுபவர்கள் தங்கள் சொந்த பகுத்தறிவைக் கூடக் கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டும் என்று தூத்துக் குடி மாநாட்டில் தந்தை பெரியார் கூறியுள் ளதை நினைவூட்டுகிறோம். (குடிஅரசு 29.5.1948).

- மயிலாடன்

குறிப்பு: இன்று பா.வே. மாணிக்க நாயக்கரின் பிறந்த நாள். (1871)

Read more: http://viduthalai.in/e-paper/75936.html#ixzz2uOI431IH

தமிழ் ஓவியா said...


அதிர்ச்சியூட்டும் கொலை!


சென்னை - கேளம்பாக்கத்தையடுத்த சிறுசேரியில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணியாற்றிய உமா மகேஸ்வரி படுகொலை செய்யப் பட்டுள்ள சேதி - நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டுவதாக உள்ளது.

டில்லியிலே மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட போது டில்லிப் பெரு நகரமே பற்றி எரிந்தது. தலைநகர மக்கள் எல்லாம் திரண்டு எழுந்தனர். சட்டம், ஒழுங்கு வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஒன்றல்ல, இரண்டல்ல, தொடர்ந்து பெண்கள் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2013 டிசம்பர் வரை தமிழ்நாட்டில் பாலியல் கொடூரங்கள் 584 பாலியல் சீண்டல் 721 கடத்தல் 1379 இன்னும் பல; இதுவரை குற்றப் பத்திரிகை தாக்கல் வழக்குகள் 5861 இதில் பாலியல் வன்முறை 1751 என்று நீள்கிறது. ஆனால், நம் நாட்டு ஊடகங்கள் ஊமைகளாகி விட்டன; தொலைக்காட்சிப் பெட்டிகளும் ஓசையற்றுப் போயின. இந்த இலட்சணத்தில் உள்ள இந்த ஊடகங்கள் தான் உலகத்துக்கே உபதேசங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன என்பது எத்தகைய வெட்கக்கேடு!

மென் பொருள் நிறுவனத்தின் அருகிலேயே கொலை செய்யப்பட்ட பெண் பொறியாளரின் உடல் அழுகிய நிலையில், கண்டுபிடிக்கப்படுவதற்கே ஒன்பது நாட்கள் தேவைப்பட்டுள்ளது காவல்துறைக்கு.

நம் சமுதாயப் பெண்கள் கல்வி பெறத் தலைப்பட்டதே அண்மைக் காலம்தான். அதுவும் பொறியியல் பட்டதாரி ஆகி, வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்து ஒரு நிறு வனத்தில் பணியாற்றுவது என்பதெல்லாம் நல்ல முன்னேற்றம் - வளர்ச்சிப் போக்கு என்று கருதும் நிலை யில் பெண்களை இப்படி வக்கிர புத்தியோடு கொடூரத் திற்கும் ஆளாக்குவதை எப்படி தான் பொறுத்துக் கொள்வது!

புதிய பொருளாதாரக் கொள்கை, உலகமயம், தவறாகப் பயன்படுத்தும் அறிவியல் சாதனங்கள், நுகர்வோர் கலாச்சாரம், சினிமாக் கலாச்சாரம் உள்ளிட்ட ஊடகங்கள் பரப்பும் கீழ்த்தர வக்கிரங்கள்தான் இவற்றிற்கு மூலாதாரங்களா! மனித குலத்தின் மேன்மைக்கு ஊடகங்கள் பயன்படுமேயானால் இருகரம் குவித்து கனிவுடன் வரவேற்கச் செய்யலாம். ஆனால் எல்லாம் தலைகீழாக அல்லவா, அநாகரிகமாக அல்லவா தடம் புரண்டு குப்புற அல்லவா வீழ்ந்து கொண்டு இருக்கின்றன. மருத்துவக் கல்லூரி மாணவியும், மாணவனும் திருடு கிறார்களே! கல்வி முறை மாற்றப்பட வேண்டாமா? தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் வெட்டு, குத்து, கொலை என்பது அன்றாட வானிலை அறிக்கை போல நடந்து கொண்டு இருக்கிறது. ஊராட்சித் தலைவர்கள், கட்சிப் பிரமுகர்கள் போன்ற வர்கள் எல்லம்கூட பட்டப் பகலிலேயே படுகொலை செய்யப்படுகிறார்களே! பட்டப் பகலிலே பணப் பறிப்பு, நகைகள் பறிப்பு என்பது சர்வ சாதாரணமாக நடந்து கொண்டே இருக்கிறதே!
பெரும்பாலும் தனியே வாழும் மூதாட்டிகள் படுகொலை செய்யப்படுகிறார்கள். கழுத்து அறுக்கப்படுகிறார்கள் என்னே கொடுமை! பெண்கள் பாதுகாப்பற்று வாழும் உலக நாடுகளின் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது என்றால், அதில் தமிழ்நாடு முதலிடத்தில் நின்று தலைமை தாங்கும் தகுதியைப் பெற்று விடும்போலும்!

அரசியல் நிலைப்பாடு காரணமாக அரசியல் தலைவர்கள் கூட பெரும்பாலும் இவற்றையெல்லாம் கண்டு கொள்வதில்லை. ஏடுகள், அரசு விளம்பரங்கள் என்ற இலஞ்சக் குளியலில் மூழ்கிக் கிடக்கின்றன.

நமது முதல் அமைச்சர் ஏதோ புள்ளி விவரங்களைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

கடந்த ஆட்சியைவிட எனது ஆட்சியில் குற்றங்கள் குறைந்துள்ளதாக மனதறிந்து உண்மைக்கு மாறாகத் தகவல்களை வெளி யிடுகிறார். அப்படிப்பட்ட செய்திகளை மட்டுமே முக்கியத் துவம் கொடுத்து நமது ஊடகங்கள் செய்திகளாக வெளியிடுகின்றன.

காவல்துறைக்கு அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் ஏராள மான வகையில் சலுகைகள் எல்லாம் வாரி வழங்கப்படு கின்றன. வாகனங்கள் தொழில் நுட்ப வசதிகள் எல்லாம் செய்து கொடுக்கப்படுவதாகச் செய்திகள் கூறுகின்றன. காவல்துறைக்கு நேரிடையாகத் தேவைப்படுகின்ற பொறுப்புகளுக்கு உரியவர்களை நியமிக்காமல் காவல் துறைக்குத் துணை புரிவதற்காக பல்லாயிரக்கணக்கில் சிறப்புக் காவல் இளைஞர் படை உருவாக்கப்பட்டுள்ளது (10099) (கட்சிக்காரர்களுக்கு ஏதாவது செய்து தர வேண்டாமா?)

ஒரு பக்கத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் பல்லாயிரக்கணக்கில் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள் - சற்றும் மனிதாபிமானமின்றி.

மக்கள் நல அரசு என்பது போய், கட்சி நல அரசு என்ற மகுடம் என்னும் பாட்டையில் அரசு நடைபோடுமே யானால், அதனை வெகு விரைவில் மக்கள் புரிந்து கொள் வார்கள். கடந்த கால அரசியலை சரி வரக் கணிப்பவர் களுக்கு இதுமிக நன்றாகவே தெரியும்.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அந்த நேரத்தில் இதெல்லாம் தெரியா மல் இருக்கலாம் - கண்களை மறைக்கலாம் - போகப் போகத்தான் புரியும்; காலம் கடந்து தெரிந்து கொள்வதால் என்ன பயன்?

Read more: http://viduthalai.in/page-2/75948.html#ixzz2uOIPXhcR

தமிழ் ஓவியா said...


இழிநிலைஉலகெங்கும் உள்ள மக்கள் விஞ் ஞான அறிவியல் துறையில் தீவிர முன்னேற்ற மடைந்து கடவுள்களிடம் போட்டியிட்டு வருகையில், தமிழன் மட்டும் இன்னும் மாட்டு மூத்திரம் குடித்து, மோட் சம் போக எண்ணும்படியான காட்டு மிராண்டியாய் மானமற்று வாழ்வதேன்? புத்தரின் அறிவுப் பிரச்சாரத்தைக் கைவிட்டதன் பயனல்லவா இந்த இழிநிலை!

- (விடுதலை, 10.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/75947.html#ixzz2uOIWuKqX

தமிழ் ஓவியா said...


மோடி புளுகு -3


- குடந்தை கருணா

சென்ற ஆண்டு 2013 ஜூன் மாதத் தில், கேதார்நாத்தில் வெள்ளத்தினால் நிலச்சரிவு ஏற்பட்டு, சுற்றுலா சென்ற பல்லாயிரணக்கான மக்கள் இறக் கவும், பலர் மீள முடியாமல் தவிக்க வுமான நிலை ஏற்பட்டது. அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த அரசுகள், (தமிழ்நாடு உட்பட) பாதிக்கப்பட்ட மக்களை மீட்க உரிய நடவடிக்கை களை எடுத்தன.

ஆனால் குஜராத் மாநில அரசு சார்பில், அதன் முதல்வர் நரேந்திர மோடி நேரடியாக அங்கே சென்று ஏறத்தாழ 15000 குஜராத் மக்களை இரண்டொரு நாள்களில் விரைந்து காப் பாற்றினார் என செய்தி பரப்பினர், மோடி புகழ் பாட, பல கோடிக் கணக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட அப்கோ ஏஜென்சி (கிஜீநீஷீ கீஷீக்ஷீறீபீஷ்வீபீமீ) கஜகஸ்தான் சர்வாதிகாரிக்கும், அமெ ரிக்கப் புகையிலை அதிபர்களுக்கும் சேவை செய்யும் அமெரிக்க நிறுவன மான இந்த அப்கோ ஏஜென்சிதான், மோடிக்கு அமெரிக்க விசா கிடைக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது என்பதையும் மனதில் கொள்க. மற்ற மாநிலங்கள் பத்து நாட் களுக்கு மேல் போராடியும் வெள் ளத்தில் சிக்கித் தவித்த 40000 மக்களை காப்பாற்ற முடியாமல் திணறின, கேதார்நாத்பகுதி முழுவதும் வெள் ளத்தின் காரணமாக சாலைகள் முற்றாக சேதமடைந்த நிலையில், மோடியால் 15000 மக்களை எப்படி காப்பாற்ற முடிந்தது? மோடி இந்த சூப்பர் மேன் செயலுக்கு 80 இன்னோவா கார்களை பணியில் அமர்த்தி இரண்டு நாள் களில் 15000 பேரை காப்பாற்றினார் என கதை அளந்தது அப்கோ நிறுவனம்.

கேதார்நாத் பகுதியிலிருந்து பக்கத்தில் உள்ள டேகராடூன் என்ற ஊருக்கு சென்றால் தான் அங்கிருந்து ரயில் அல்லது விமானம் மூலம் புதுடில்லி சென்று அங்கிருந்து குஜராத் செல்ல முடியும். கேதார் நாத்திற்கும் டேகராடூனுக்கும் உள்ள தூரம் 221 கி.மீ. மலைப் பகுதி என்பதாலும், வெள்ளத்தால் சாலை கள் பாதிக்கப்பட்டதாலூம், 40 கி.மீ. வேகத்தில் செல்வதே கடினம். ஒரு முறை செல்ல 6 மணி நேரம் ஆகும். திரும்ப வர 6 மணி நேரம் ஆகும். 24 மணி நேரத்தில், காரை நிறுத்தாமல் சென்றால், இரு முறை தான் செல்ல முடியும். மோடி ஏற்பாடு செய்திருந்த 80 இன்னோவா கார்களும் ஒரு பயணத் திற்கு 720 மக்களை ஏற்றிச் செல்ல முடியும். 15000 மக்களை அழைத்து செல்ல 21 முறை செல்ல வேண்டும். ஆனால், 15000 மக்களை இரண்டு நாட்களுக்குள்ளாக 80 இன்னோவா கார்களில் ஏற்றிச் சென்று மோடி காப்பாற்றினார் என மோடி ஏற்பாடு செய்திருந்த அப்கோ நிறுவனம் மூலம் செய்தி பரப்புகிறார்கள் என்றால் இதற்குப் பெயர் தான் மோடி புளுகு. அப்பட்டமான மோசடிப் புளுகு.

Read more: http://viduthalai.in/page-2/75955.html#ixzz2uOIef3IZ

தமிழ் ஓவியா said...


ராஜீவ் கொலை வழக்கு: நளினி உள்பட 4 பேரை விடுவிக்க தடை கோரி மத்திய அரசு வழக்காம்!புதுடில்லி, பிப்.25-ராஜீவ் கொலை வழக்கில், 3 குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவுக்கு தடை பெற்ற மத்திய அரசு, மேலும் 4 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த மனு மீதான விசாரணை வரும் 27ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. மத்திய அரசின் மனு தாக்கல் செய்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார்த் லுத்ரா, இந்த சீராய்வு மனுவில் குற்றவாளிகள் 7 பேரின் பெயர் களும் இடம்பெற்றுள்ளன. முக்கியத் துவம் கருதி இந்த மனுவை அவசர அடிப்படையில் விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று சிறையில் இருக் கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும் தங்களது கருணை மனு மீது முடிவு எடுப்பதில் 11 ஆண்டு கள் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால், தூக்கு தண்டனை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கில் கடந்த 18ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதில், மூன்று பேரின் தூக்கு தண் டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை யாகக் குறைத்து உத்தரவிட்டது. மேலும் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று கூறியிருந்தது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளி யானதும், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேர் உள்பட ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் மேலும் 4 பேரையும் சேர்த்து விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. கடந்த 19ஆம் தேதி இதற்கான அறிவிப்பை முதல்வர் சட்டப்பேரவையில் அறி வித்தார். கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்யக் கூடாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தடை விதித்து கடந்த 20ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப் பித்தது. கைதிகளை விடுதலை செய்வதில் சட்ட நடைமுறைகளை தமிழக அரசு கடைப்பிடிக்க வில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டது. தமிழக அரசு சார்பில் அப்போது ஆஜரான மூத்த வழக் குரைஞர் ராகேஷ் திவேதி, மத்திய அரசின் கோரிக்கையை கடுமையாக எதிர்த்தார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு இறுதி யான முடிவை எடுக்கவில்லை. எனவே தடை விதிக்கக் கூடாது என்று வாதிட்டார்.

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நான்கு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டபோது, இதற்கு புதிய மனு தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் கூறியிருந் தது. அதன்படி, புதிய சீராய்வு மனுவை மத்திய அரசு நேற்று தாக்கல் செய்தது. நளினி, ராபர்ட் பியாஸ், ஜெயகுமார், ரவிச் சந்திரன் ஆகிய நான்கு பேரை விடுதலை செய்ய தடை கோருகிறது மத்திய அரசு.

Read more: http://viduthalai.in/page-2/75950.html#ixzz2uOImqvs5

தமிழ் ஓவியா said...


தொலைக்காட்சி அவலம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்


மதுரை, பிப்.25-சமூக சூழ் நிலைக்கு ஏற்ப வாழாமல் தொலைக்காட்சியைப் பார்த்து பாசத்தை வளர்க் கும் நிலைக்கு இளைய தலைமுறையினர் தள்ளப் பட்டுள்ளனர் என்று குன்றக் குடி பொன்னம்பல அடி களார் பேசினார்.

மதுரையில் உலக திருக் குறள் பேரவை சார்பில் திருக்குறள் விழா நடை பெற்று வருகிறது. இரண் டாம் நாள் நிகழ்ச்சியில் திருவள்ளுவர் படத்தைக் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் திறந்து வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
சங்க இலக்கியங்கள் எத்தனையோ இருந்தும் பல ஆண்டுகளாக திருக்குற ளைத்தான் மழலையர்கள் முதல் முதியோர்வரை அசைபோட்டுக்கொண்டிருக் கிறார்கள். இது திருக்குற ளுக்கு கிடைத்திருக்கும் தனித்தன்மை.

திருக்குறளைப் படித்து அதன்படி நடந்தால் வாழ்க் கையில் முன்னேறலாம். வெறும் பட்டங்கள் மட் டும் பெற்றால் வாழ்க்கை யில் உயர்வடைய முடியாது. அன்றாடம் கிடைக்கும் பட்டறிவுதான் ஒரு மனி தனை உயர்த்தும். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று சொன்னார்கள். உடலில் இருந்து மூச்சுக்காற்றை விட்டுக்கொண்டு இருக்கும் நேரத்தில் நல்ல செயல் களைச் செய்து பெயர் வாங் கிக்கொள் என்பதுதான் அர்த் தம். ஆனால் இப்போது அதனை மாற்றிவிட்டார்கள். இருக்கும்போதே சம்பாதித் துக்கொள் என்று அந்த தொனி மாறிவிட்டது.

மருத்துவர், விஞ்ஞானி, வழக்குரைஞர்கள், பொறி யாளர்களை கல்வி உரு வாக்குகிறது. ஆனால் நல்ல மனிதர்களைத்தான் கல்வி கற்றுத்தர மறந்து விட்டதோ என்று எண்ணத் தோன்று கிறது. ஏனென்றால் கல்விக் கூடத்தில் கல்லூரி முதல் வரே கொலை செய்யப்படு கிறார். கொலை செய்பவர் மாணவனாக இருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது சரியான பாதையில் போகிறோமா என்ற சந் தேகம் ஏற்படுகிறது.

தொலைக்காட்சியைப் பார்த்துதான் குடும்பப் பாசத்தை வளர்க்கும் நிலை வந்து விட்டது.

இதை மாற்றி சமூக சூழ்நிலைக்கு ஏற்ப வாழ இளைய தலை முறையினர் கற்றுக்கொள்ள வேண்டும். திருக்குறள் காட் டும்பாதையில் பயணித்தால் முன்னேற்றம் ஏற்படும். - இவ்வாறு பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழண் ணல் உள்பட பலர் பேசினர். இதில் உலக திருக்குறள் பேரவையின் முதன்மை பொதுச்செயலாளர் மணி மொழியன் தலைமை தாங் கினார். துணை செயலாளர் சொ.கு.முருகேசன், செயலா ளர் மலையப்பன், பொரு ளாளர் சீனு சின்னப்பா, செந்தமிழ்க்கல்லூரி நிர்வாகி கள் குருசாமி, அழகுமலை, அசோக்ராஜ், மார்ஷல்முரு கன், முன்னாள் துணை ஆட் சியர் கா.கருப்பையா உள் பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Read more: http://viduthalai.in/page-3/75959.html#ixzz2uOJSG7fY

தமிழ் ஓவியா said...

ஏமாற்று வேலை!

எப்பொழுதாவது எங் கேயாவது எங்கள் தரப்பில் தவறுகளோ, குற்றங்களோ இருந்தால் அதற் காக நான் தலைவணங்கி மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்கிறேன் என்கிறார் பி.ஜே.பி. தலைவர் ராஜ்நாத்சிங்!

மன்னிப்புக் கேட்க வேண்டியவர் மோடி யல்லவா!

Read more: http://viduthalai.in/e-paper/75978.html#ixzz2uTtoRCiF

தமிழ் ஓவியா said...

ன்றைய நமது கேள்வி????

அ.இ.அ.தி.மு.க. தேர் தல் அறிக்கையில் மத்திய காங்கிரஸ் கூட்டணி மற்றும் தி.மு.க.வால் தமிழகத்திற்கு இழைக் கப்பட்ட துரோ கங்கள் என்று (பக்கம் 11-13) விளாசப்பட்டுள்ளதே - அதில் சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்திடத் துடிக்கும் துரோகிகள் என்று ஏன் குற்றப் பத்திரிகைப் படிக்கவில்லை? உள்ளுக்குள் பயமோ!

Read more: http://viduthalai.in/e-paper/75978.html#ixzz2uTuAa9Ej

தமிழ் ஓவியா said...


வரலாற்றுப் பிழைகளின் குப்பைத் தொட்டியான மோடி ராஜ்ஜியம்

காந்திநகர், பிப்.26- வர லாற்று விவரங்களை தப் புத்தப்பாக குஜராத் முதல் வர் நரேந்திரமோடி பேசி வருவது ஒன்றும் தற்செய லான விஷயமல்லவோ என்று சந்தேகம் கிளம்பு மளவுக்கு அம்மாநிலப் பள்ளிப்பாடங்கள் அமைந் துள்ளன. இமாலயத்தவறு என்று சுட்டிக்காட்டுகிறார்கள்

ஆங்கில மொழி வழியில் எட்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கான சமூக அறிவியல் பாடப்புத்தகம் மொத்தம் 124 பக்கங்களைக் கொண்டதாகும். இதில் 59 பிழைகள் உள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வெறும்மாதிரிதான் என்றும், கிட்டத்தட்ட ஆங் கில மற்றும் குஜராத்தி வழிக் கல்வி ஆகிய இரண்டிற்கு மான பாடப்புத்தகங்களில் இப்படித்தான் நிலைமை உள்ளது என்று குற்றம் சாட் டுகிறார்கள் கல்வியாளர்கள். அதோடு நிற்கவில்லை, இவையெல்லாம் பிழைகள் என்று சொல்வது பிரச்சி னையைக் குறைத்து மதிப் பிடுவதாகும். இமாலயத் தவறு என்று சுட்டிக்காட்டு கிறார்கள் அந்தக் கல்வி யாளர்கள்.

யார் சுட்டுக் கொன்றது?

சில எடுத்துக்காட்டுகள், இரண்டாம் உலகப் போர் நிறைவடையும் தருணத்தில் அமெரிக்கா மீது ஜப்பான் அணுகுண்டு வீசித்தாக் கியது. நாட்டின் தந்தை என அழைக்கப்படும் காந்தி யார், அக்டோபர் 30, 1948 அன்று சுட்டுக் கொல்லப் பட்டார். (தேதியைத் தவ றாகக் குறிப்பிடும் பாடப் புத்தகத்தில் யார் சுட்டுக் கொன்றது என்ற விபரம் கவனமாக நீக்கப்பட்டிருக் கிறது).

தாதாபாய் நவ்ரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் கோபாலகிருஷ்ண கோகலே ஆகியோர் தீவிர வாதிகள் என்று அழைக்கப் பட்டனர். 1947 இல் நாடு பிரிந்த போது, இஸ்லாமிய இஸ்லா மாபாத் என்கிற புதிய நாடு உருவானது.

அதன் தலை நகராக இந்துகுஷ் மலைத் தொடரிலுள்ள கைபர்காட் அமைந்தது. ஆயிரக்கணக்கான மாண வர்கள் இவற்றை மனப் பாடம் செய்து தேர்வு எழு தத் தயாராகியுள்ள நிலை யில், ஆம்! தவறுகள் நேர்ந் துள்ளன. அவற்றைப் பட்டி யலிட்டு இணையதளத்தில் வெளியிடப் போகிறோம் என்கிறார் பள்ளி நூல்களுக் கான வாரியத் தலைவர் நிதின் பேதானி.

Read more: http://viduthalai.in/e-paper/75981.html#ixzz2uTuI00cm

தமிழ் ஓவியா said...


செய்திக் கொத்துஎன்ன சந்தோஷமோ?

எந்த ஒரு நல்ல திட்டமாக இருந்தாலும் சரி - அது தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டால், அதற்கு மூடுவிழா செய்வதுதான் இந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் சாதனை!

சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையில் பறக்கும் சாலைத் திட்டம் தி.மு.க. ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்டது. பணிகள் தொடங்கப்பட்டு, குறிப்பிட்ட அளவுக்கு முடிக்கவும் பட்டன. இந்த நிலையில், அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த நிலை யில், அந்தத் திட்டம் முடக்கப்பட்டது. அதனை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் திட்டத்தை நிறைவேற்று மாறு தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்துள்ளது செல்வி ஜெயலலிதாவின் தலை மையிலான இவ்வாட்சி.

இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ள தினமலர் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு? துறைமுகம் - மதுரவாயல் மேம் பால சாலைத் திட்டத்தில் திருப்பம் என்று தலைப் பிட்டு மகிழ்ந்துள்ளது. இதில் என்ன திருப்பம் வேண்டிக் கிடக்கிறது? வேண்டுமானால், குதர்க்கம் என்று போட்டிருக்கலாம்.

ரூ.1816 கோடியில் மேற்கொள்ளப்பட்ட, மக்கள் நலன் சார்ந்த - போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு காணக்கூடிய ஒரு திட்டத்தை ஓர் அரசு முடக்குகிறது என்றால், இதற்குப் பெயர் மக்கள் நல அரசா? இதுபற்றி எல்லாம் இந்த நாட்டு ஊடகங்கள் வாயைத் திறக்கவே திறக்காது!

இதில் அமைதி - வளம் - வளர்ச்சி என்ற தேர்தல் கோஷம் வேறு!

இத்தாலி

கேரளாவைச் சேர்ந்த மீனவர்கள் இருவரை இத்தாலி கடற்படையினர் 2012 இல் இந்தியக் கடல் எல்லைக்குள் சுட்டுக் கொன்றனர்; அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜாமீனில் வெளியில் வந்தனர். இப்பிரச்சினையில் இந்தியா - இத்தாலி ஆகிய நாடு களிடையே உரசல் ஏற்பட்ட சூழலில், குற்றவாளிகளை மரண தண்டனையிலிருந்து விடுவிக்கும் வகையில், கடற்கொள்ளைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கைப் பதிவு செய்யாமல் வேறு பிரிவுகளில் வழக்கைப் பதிவு செய்ய இந்தியா முடிவெடுத் துள்ளதாம்.

குற்றம் ஆளுக்கு ஆள், நாட்டுக்கு நாடு மாறு படக்கூடிய நிலவரத்தை இதன்மூலம் உணர முடி கிறது.

ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் விடயத்தில் மட்டும் மத்திய அரசுக்கு மாற்றுக் கண் ணோட்டம் ஏனோ?

ஞானோதயம்!

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் ஊழலைவிட மதவாதம் ஆபத்தானது என்று திரு வாய் மலர்ந்துள்ளார்.

காலங்கடந்த ஞானோதயம் என் றாலும், வரவேற்கக்கூடிய கருத்துத்தானே!

நமோ மீன்கடை

பி.ஜே.பி.யைச் சேர்ந்த திருவாளர் இல.கணேசன் அய்யர்வால் நமோ மீன்கடைகளைத் திறந்து வைத் துள்ளார். டீக்கடை திறந்தாச்சு - மீன் கடையைத் திறக்க வேண்டாமா? ஆமாம், திருவாளர் இல. கணேசன் வால் எப்பொழுது அசைவத்துக்கு மாறினார்?

இனிமேல் பார்த்தசாரதி அய்யங்கார் மிலிட்டரி ஓட்டல், கணேசய்யர் மீன் ஸ்பெஷல் கடை என்றெல்லாம் வந்தால் கூட ஆச்சரியமில்லை.

அடடே! தேர்தல் ஸ்டண்டைஎப்படி எப்படியெல் லாம் செய்யலாம் என்று கற்றுத்தருவதற்கு பி.ஜே.பி. ஒரு பல்கலைக் கழகத்தையே ஏற்படுத் தலாம். அதற்கு மோ(ச)டிப் பெயரையும் சூட்ட லாமே!

Read more: http://viduthalai.in/e-paper/75983.html#ixzz2uTuTGbaM

தமிழ் ஓவியா said...


எது குற்றம்?


குற்றம் என்பது நிர்ப்பந்தமில்லாமலே ஒரு மனிதன் தான் எதை எதைச் செய்யப் பயப்படுகிறானோ--மறுக்கிறானோ அதை மற்றொரு மனிதன் செய்தால்தான் குற்றமாகும்.
_ (குடிஅரசு, 3.11.1929)

Read more: http://viduthalai.in/page-2/75985.html#ixzz2uTug0YrX

தமிழ் ஓவியா said...

தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சோதிடப் பாடமா?

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சோதிடம் பட் டயப் படிப்புப் (Diploma) பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. ஓராண்டு படித்தால் பட்டயம் கொடுத்து விடுவார்களாம். சமயம் என்னும் சூளையில் தமிழ்நட்டால் முளையாது என்றார் புரட்சிக்கவிஞர். அதுதான் இந்த இடத்தில் நினைவிற்கு வருகிறது. பாரதியார்கூட வானநூல் பயில் சோதிடம்தனை இகழ் என்று பாடியிருக்கிறார்.

சோதிடம் அறிவியல் என்று நிரூபிக்கப்பட்டாலொழிய அதனைப் பல்கலைக் கழகத்தில் பயிற்றுவிப்பது அடிமுட் டாள்தனம் மட்டுமல்ல - மாணவர்களைப் பழிவாங்குவதும் ஆகும்.

வானியல் (Astronomy) என்பது வேறு; சோதிடம் (Astrology) என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல. பூமி சுற்றுகிறது என்று சொன்ன புரூனோவை சித்திரவதை செய்தவர்களின் வாரிசுகள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் குடிபுகுந்துவிட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.

மதுரைப் பல்கலைக் கழகத்தில் சோதிடம் கற்பிக்கப் படுகிறது என்ற நிலை ஏற்பட்டவுடன், திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தி அந்த முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. திராவிடர் கழகத்திற்கான வேலையை தஞ்சை - தமிழ்ப் பல்கலைக் கழகம் கொடுத்திருக்கிறது என்றே நினைக்கவேண்டியுள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) என்ற பிரிவு விஞ்ஞான மனப்பான்மையை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று வலியுறுத்துகிறது.
இங்கு என்னடா என்றால், ஒரு பல்கலைக் கழகமே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத்தினைக் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்துவிட்டு, குப்பைகளைக் கொண்டு வந்து நடு வீட்டில் குடியமர்த்தம் செய்கிறது.

தஞ்சைப் பல்கலைக் கழகக் கல்வியாளர்களை ஒரு கேள்வி கேட்கிறோம். சோதிடத்தில் சூரியன் என்பது கோள் என்றுதானே குறிப்பிடப்படுகிறது. உண்மையிலேயே அறிவியல் கணிப்புப்படி சூரியன் நட்சத்திரம் அல்லவா! அடிப்படையே ஆட்டம் காணும்போது அதன்மீது சோதிடம் என்ற மூடத்தனத்தின் கட்டடத்தை எழுப்பப் போகிறார்களா?

சோதிடத்தில் ராகு, கேது என்று இரு கோள்கள் சொல்லப்படுகின்றனவே - அப்படி ஏதாவது கோள்கள் உண்டா? எந்த வானியல் அறிஞர் ராகு, கேது என்ற இரு கோள்கள் உண்டு என்று கூறியிருக்கிறார்?

இன்னும் ஒரு நகைச்சுவை உண்டு; பூமியின் துணைக் கோளான சந்திரனைக் கிரகத்தின் பட்டியலில் இடம் கொடுத்து வைத்துள்ள சோதிடர்கள், மூலக்கிரகமான பூமிக்கு இடம் அளிக்கவில்லையே - இதை என்னவென்று சொல்வது!

பூமியின் துணைக் கிரகமான சந்திரனை சோதிடப் பட்டியலில் சேர்த்துக் கொண்டார்களே, அதன்படிப் பார்த் தால், சனிக்கிரகத்துக்கு 17 துணைக் கிரகங்கள் உண்டே! சோதிடத்தில் இவற்றிற்கு எந்தப் பலனையும் வைத்திருக்க வில்லையே. இந்தக் கிரகங்களுக்கெல்லாம் துணைக் கோள்கள் உண்டு என்று தெரியாத காரணத்தால் அதற் கெல்லாம் பலனைக் கிறுக்காமல் விட்டார்களோ!

விலா நொறுங்கச் சிரித்திட இன்னும் பல தகவல்கள் உண்டு. விண்ணில் 25 ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் உள்ளதாக வானியல் ஆய்வு கூறுகிறது. ஆனால், இந்தச் சோதிடர்கள் வெறும் 27 நட்சத்திரங்களுக்குள் சோதிடத்தின் கதையை முடித்துக்கொண்டு விடுகிறார்கள்.

தமிழ் ஓவியா said...


நட்சத்திரங்கள் எல்லாம் ஒரே கூரையில் பதித்து வைக்கப்பட்டதாக நினைப்பதால்தான் கிரகங்கள் அங்குப் போய்த் தங்குவதாக நினைக்கிறார்கள். ஒரு நட்சத்திரத் திற்கும், இன்னொரு நட்சத்திரத்திற்கும் கோடிக்கணக்கான மைல்கள் இடைவெளியுண்டே!

நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தொலை வில் இருக்கின்றன. ஆனால், நம் கண்களுக்கு அவை எல்லாம் ஓரிடத்தில் திரண்டு இருப்பதுபோலத் தோன்றும். வெவ்வேறு இடங்களில் முளைத்திருக்கும் மரங்கள் தொலைவிலிருந்து பார்க்கும்பொழுது கூட்டமாகத் திரண்டு காணப்படுவதை இங்கு நினைத்துக் கொள்ளலாம் என்பார் வானியல் ஆய்வாளர் பேராசிரியர் கொண்டல் சு.மகாதேவன் அவர்கள்.

பொதுவாக கிரகங்கள் என்பவைகளுக்கு ஈர்ப்பு சக்தி உண்டே தவிர, மற்றபடி அவைகளுக்கென்று எந்தவிதத் தனிக்குணமோ, ஆற்றலோ கிடையாது. அந்த ஈர்ப்புக்கூட குறிப்பிட்ட தூரத்திற்குத்தான் உண்டே தவிர, அதற்கு மேல் கிடையாது. இந்த நிலையில், 9 கோடியே 20 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் புதனோ, 4 கோடியே 20 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் வெள்ளியோ, 7 கோடியே 70 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் செவ் வாயோ 272 கோடியே 20 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தி லிருக்கும் யுரேனசோ, 435 கோடியே 30 லட்சம் தொலை வில் இருக்கும் நெப்டியூனோ பூமிக் கிரகவாசிகளை என்ன செய்யும்?

இன்னும் நவக் கிரகங்களுக்குத்தான் சோதிடம் சொல்லிக் கொண்டு திரிகிறார்களே தவிர, விஞ்ஞானிகள் புதிதாகக் கண்டுபிடித்து அறிவித்துள்ள யுரேனஸ், நெப்டியூனுக்கு சோதிடத்தில் பலன்கள் கிடையாதே!

புராணங்களைத் தவிர தமிழில் என்ன இருக்கிறது - அது அறிவியல் வளர்ச்சி பெற தமிழ்ப் புலவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று தந்தை பெரியார் கோபத்துடன் கேட்டதுண்டு.

அந்தக் கோபத்துக்குத் தாராளமாக நியாயம் உண்டு என்பதற்கு மற்றுமொரு அடையாளம்தான் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் புராணப் புளுகு மூட்டையான சோதி டத்தை சொல்லிக் கொடுக்கத் திட்டமிடப்பட்டிருப்பது.

கொஞ்சநஞ்சம் மதிப்பு விஞ்சி நிற்கவேண்டுமானால், தமிழ்ப் பல்கலைக் கழகம் சோதிடப் பாடத்தைப் பாடத் திட்டத்திலிருந்து உடனடியாக நீக்கிடவேண்டும்; இல்லை யெனில், இது மக்கள் பிரச்சினையாக்கப்படும் என்று எச்சரிக்கின்றோம்.

Read more: http://viduthalai.in/page-2/75986.html#ixzz2uTuouVeX

தமிழ் ஓவியா said...


மோடி புளுகு -4


- குடந்தை கருணா

அண்மையில் புதுடில்லியில் பேசிய நரேந்திர மோடி, விவசாயி களின் முன்னேற்றத்திற்காக குஜராத் தில் நிறைய வசதிகள் செய்யப்பட் டுள்ளன. அதேபோன்று நாடு முழு வதும், அவர்களின் முன்னேற்றத்திற்கு பிஜேபி பாடுபடும் எனப் பேசினார்.

அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள தோலிரா கிராமத்தில், மோடியின் பிரியத்துக்குரிய திட்டமான சிறப்பு முதலீடு பிராந்தியம் (Special Investment Region SIR) துவக்கப்படுகிறது.

இதற்காக விவசாயிகளின் விளை நிலங்களைக் கையகப்படுத்தி, பெரு முதலாளி நிறுவனங்களுக்கு கொடுக் கப்பட உள்ளது. இதற்கு அங்குள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரி வித்து வருகின்றனர். தோலிரா கிராமம் மட்டுமல்லாது, குஜராத் தலைநகர் காந்தி நகரிலும் போராட்டத்தை நடத்த உள்ளனர். இந்தக் கிராம மக்கள் நர்மதா பாசனத் திட்டம் மூலம் தங்களது விவசாய நிலங்களான ஏறத்தாழ முப்பதாயிரம் ஏக்கர் நிலங்களுக்குத் தண்ணீர் பெற்று வந்தனர்.

இப்போது, இவர்களது நிலங்களை கையகப் படுத்துவதற்காக, அந்த பாசனத் திட்டத்தையே மோடி அரசு நிறுத்தி விட்டது. விவசாயிகள் நிலங்களை விற்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மோடி அரசு, இதுபோன்று விவ சாய நிலங்களை கையகப்படுத்த முயல்வது புதிதல்ல; சில ஆண்டு களுக்குமுன், பாவ் நகர் பகுதியில், சிமெண்ட் ஆலை அமைத்திட, விவ சாய நிலங்களைக் கையகப்படுத்திட மோடி அரசு முயன்று, விவசாயிகள் உச்சநீதிமன்றம்வரை சென்று தடுத்து விட்டனர். சென்ற ஆண்டு, வட குஜ ராத்தில், சிறப்பு முதலீடு பிராந்தியம் துவக்கப்பட, மோடி அரசு முனைந்த போது, விவசாயிகள் போராட்டம் காரணமாக, நிறுத்தப்பட்டது.

தற்போது, தோலிரா கிராமப் பகுதிகளில் 920 சதுர மீட்டர் விளை நிலங்களை ஏறத்தாழ 15000 விவசாய குடும்பங்களை விரட்டி, கையகப் படுத்திட மோடி அரசு முனைந்து, அதற்கான சட்ட அறிவிப்பையும் செய்துள்ளது. மாற்றாக, வேறொரு பகுதியில் நிலங்கள் விவசாயிகளுக்கு தரப்படும் எனவும் மோடி அரசு கூறுகிறது. அண்மையில் மத்திய அரசு நிறை வேற்றியுள்ள, நில கையகப்படுத்தும் சட்டம் 2013, நிலங்களுக்கு, சந்தை விலையைக் காட்டிலும் நான்கு மடங்கு, பணம் தர வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால், இந்த சட்டத்திற்குப் புறம் பாக, 2011 சந்தை விலையை மட்டுமே தர முடியும் என மோடி அரசு, விவ சாயிகளை அச்சுறுத்துகிறது. இத்தகைய, விவசாயக் கொள் கையை நிலை நாட்டும் மோடி தான், விவசாயிகளின் நலனுக்காக பாடு பட்டு வருவதாக, புதுடில்லியில் கதைக்கிறார்.

Read more: http://viduthalai.in/page-2/75991.html#ixzz2uTv5PkME

தமிழ் ஓவியா said...


உண்டியலில் காணிக்கை ஏன்? வருமான வரிகட்டுவது நல்லது: கமல்சென்னை, பிப்.26-வருமான வரித் துறை அலுவலகம் சார்பில், தேசிய கலை விழா, சென்னையில், இரண்டு நாள் கள் நடக்கிறது. நேற்று, முதல் நாள் விழாவை, தமிழக- புதுவை மாநில வருமான வரித் துறை முதன்மை ஆணையர், ரவி தலைமை தாங்கினர். இயக்குநர் ஜென ரல் ஜெய்சங்கர், முதன்மை ஆணையர்கள் பிரதீப் ஆர் சேத்தி, மிஸ்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், சிறப்பு விருந் தினராக பங்கேற்ற, நடிகர் கமல்ஹாசன் பேசியபோது,

கடவுளுக்கு, உண்டிய லில் காணிக்கை செலுத்து வதை விட, வருமான வரி செலுத்தினால், நாட்டு மக்க ளுக்கு உடனடியாக பயன் கிடைக்கும். நான் நேர்மை யாக வரி செலுத்தி வருகி றேன். சிலர், வரிகட்டும் போது மட்டும், வீரபாண்டிய கட்டபொம்மன் போல, பேச முயல்கின்றனர்.

வரியினால், நடைமுறைப் படுத்தப்படும் திட்டங்க ளால், பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை நினைத்துப் பார்த்தால், வரி யின் முக்கியத்துவமும், நாட்டு நலத் திட்டங்களுக்கு உதவியதில், வரி செலுத்து வோரின் பங்கும் தெரியும் வரும்என்று தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-8/76024.html#ixzz2uTvUUyKA

தமிழ் ஓவியா said...


குஜராத் மதுவிலக்கின் லட்சணம் மனைவியை எரித்துக் கொன்ற குடிகாரன்

அகமதாபாத், பிப். 26- குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகரில் உள்ள சுனாராவாட் பகுதியில் திங்கள் அன்று இரவு குடிக்கப் பணம் தராத மனைவியை உயிருடன் எரித் துக் கொலை செய்தான். சுனாராவாட் பகுதியைச் சேர்ந்த அமித் வசானி, இவ ரது மனைவி பூனம், இவர் களுக்கு இரண்டு குழந்தை கள் உள்ளன. குடிப்பழக்கம் உள்ள அமித் அன்றாடம் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து சண் டையிடுவார். கடந்த ஞாயிறு மாலை தனது மனைவியிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவரது மனைவி பணம் இல்லை என்று கூறி யுள்ளார். இந்நிலையில் இரவு முழுவதும் சண்டையிட்ட அமித், திங்கள் கிழமையன்று காலை, தூங்கிக்கொண்டு இருந்த தனது மனைவி மீது, மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து விட்டு ஓடி விட்டார். உடல் முழுவதும் எரிந்த நிலையில் அலறிக் கொண்டு இருந்தவரை அரு கில் உள்ள உறவினர்கள் மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனை யில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் திங்கள் கிழமை மாலை உயிரிழந்தார். பூனம் தனது மரண வாக் குமூலத்தில் கூறியிருப்பதா வது நீண்ட காலமாகவே அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு வீட் டிற்கு வந்து துன்புறுத்துவார். வேலைக்குச் செல்வதும் கிடை யாது நான் அவ்வப்போது கூலிவேலைக்குச்சென்று கொண்டுவரும் பணத்தை யும் பிடுங்கிக்கொண்டு குடித் துவிட்டு வருவார். ஞாயிற்றுக்கிழமை மாலை வேலை இல்லா ததால் என்னிடம் பணம் இல்லை, இந்த நிலையில் மாலை என்னிடம் வந்து குடிக்க பணம் கேட்டார். நான் இல்லை என்று கூறியும் கேட்காமல் என்னை அடித்து துன்புறுத்தினார். பிறகு வெளியே சென்று விட்டார். திங்கள் கிழமை காலை வீட் டிற்கு வந்தவர் திடீரென மண்ணெண்ணெய் பாத்தி ரத்தை எடுத்து என்மீது வீசி னார், என் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் பரவியது.

உடனே தீக்குச்சியை பற்றவைத்து என்மீது வீசி விட்டு ஓடிவிட்டார், தீப்பற்றி யதும் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை, அதற்குள் என்மீதிருந்த ஆடைமீது பற்றிக்கொண்டு என் உடல் முழுவதும் தீ பர வியது. அதற்குள் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் என் அலறல் ஒலி கேட்டு என்னை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். என்று காவல்துறையினரிடம் மரண வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/76027.html#ixzz2uTvcWTMA