Search This Blog

18.2.14

தூக்குத் தண்டனை ரத்து! உடனே விடுதலை செய்க! - கி.வீரமணி


சாந்தன், முருகன், பேரறிவாளன் தூக்குத் தண்டனை ரத்து!
உச்சநீதிமன்ற மகுடத்தில் பதிக்கப்பட்ட மனிதநேய மரகதக்கல் தீர்ப்பு இது!

நீதியரசர்களைப் பாராட்டுகிறோம்- பாராட்டுகிறோம் - வாழ்த்துகிறோம்!
23 ஆண்டுகள்  தண்டனை பெற்றவர்களை உடனே விடுதலை செய்க!

பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனை ரத்து
ராஜீவ்காந்தி கொலை வழக்கு என்ற பெயரில் குற்றவாளிகளாக ஆக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் 23 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் நிலையில், அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று ரத்து செய்திருப்பது - வரலாற்றுப் புகழ் மிக்க தீர்ப்பு  என்றும் உச்சநீதிமன்ற மகுடத்தில் பதிக்கப்பட்ட மரகதக்கல் என்றும் கூறி, மூவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் (போதிய சட்ட நியாய முறைகளைக் கடைப்பிடிக்காத நிலையில்) சாந்தன், முருகன், பேரறிவாளன் என்ற மூவரின் தூக்குத் தண்டனையை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மாண்பமை ஜஸ்டீஸ் திரு. ப. சதாசிவம் அவர்கள் தலைமையில் அமைந்த அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பின் மூலம் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது;  இது மிகப் பெரிய வரலாற்றுப் புகழ் பெறக் கூடிய நியாயத் தீர்ப்புகளில் முதன்மையானது ஆகும்! நீதி வழங்குவதில் தாமதிக்கப்பட்ட நீதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்ட நீதியாகி விடும் கொடுமை உண்டு என்பது அரிய நீதித் தத்துவங்களுள் மிகவும் முக்கியமானதாகும்.
அந்த அடிப்படையிலும், மனிதநேயம் பூத்துக் குலுங்கும் வகையிலும்  உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும் சக நீதிபதிகளும் அளித்த இத்தீர்ப்பை நாடே பாராட்டி வரவேற்கும் என்பது உறுதி! உறுதி!! நீதியரசர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து செய்துள்ள இந்த நீதித் தீர்ப்பு நியாயத்தை அடிப்படையாகக் கொண்ட நேர்மை கொழிக்கும் சிறப்புக்குரியதாகும். பாதிக்கப்பட்டு 23 ஆண்டுகள் சிறையில் வதியும் அந்த காளைப் பருவத்தினர்கள், ஏதோ மகிழ்ச்சியாக உல்லாசமாகத்தான் அங்கே இருக்கிறார்கள்; எனவே அவர்களது சிறைத் தண்டனையைக் குறைக்கவே கூடாது! என்று மத்திய அரசின் சார்பில் வாதிட்ட மத்திய அரசு வழக்குரைஞரின் வாதம் வேதனையூட்டிய வெட்கப்பட வேண்டிய - உள்ளம் இருக்க வேண்டிய  இடத்தில் பள்ளம் இருந்த வாதங்களாகும்.

அவைகளைப்  புறந்தள்ளி, நாடே போற்றும் நல்ல தீர்ப்பை அளித்த அந்த நீதி அரசர்கள் இருக்கும் திக்கு நோக்கி வாழ்த்துகிறோம் பாராட்டுகிறோம்! உச்சநீதிமன்றத்தின் மகுடத்தில் பதிக்கப்பட்ட மனிதநேய மரகதக்கல் இது!
இத்தனை ஆண்டுகள் சிறையில் தண்டிக்கப்பட்டு காலத்தைக் கழித்த அவரவர்களின் விசாரணைபற்றி பல புதிய புதிய தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், அவர்களை விடுதலை செய்யவும்  நீதித்துறை - உச்சநீதிமன்றம் முன்வர வேண்டும் என்பது நமது வேண்டுகோளாகும்.

தமிழ்நாடு அரசும் இப்பிரச்சினையில் முக்கியக் கவனம் செலுத்தி, அவர்களை முற்றிலும் விடுதலை செய்ய முயற்சிக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.


-----------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் "  விடுதலை"
18.2.2014  சென்னை

12 comments:

தமிழ் ஓவியா said...


காளஹஸ்தி சிவன் கோயிலா காமக் களியாட்டக் கூடாரமா?


சிறீகாளஹஸ்தி, பிப்.18- சிறீகாளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் சென் னையைச் சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் வன்முறை செய்ய முயன்ற 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம், சித் தூர் மாவட்டத்தில் உள்ள சிறீகாளஹஸ்தி சிவன் கோவிலில், ஆந்திர மாநி லம் மட்டுமின்றி தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் தின மும் சர்ப்ப தோஷ பரிகார பூஜை செய்து வருகிறார்கள்.

சென்னையை சேர்ந்த இணையர் தங்களது 20 வயது மகளுடன் கடந்த சனிக்கிழமை (15-ஆம் தேதி) சிறீகாளஹஸ்தி சிவன் கோவி லுக்கு அவர்கள் சிறீகாள ஹஸ்தியில் உள்ள ஒரு தனி யார் விடுதியில் தங்கினர். 15-ஆம் தேதி மாலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். அப் போது பூஜை பொருட்கள் விற்கும் இளைஞர் ஒருவர், அவர்களிடம் என்ன பூஜை செய்ய வந்துள்ளீர்கள் என கேட்டார். அதற்கு அவர்கள் தனது மகளின் திருமண தடை நீங்க, பரிகார பூஜை செய்ய வந்துள்ளோம் என் றனர். உடனே அந்த இளை ஞர், குறைந்த கட்டணத் தில் பரிகார பூஜை செய்ய ஏற்பாடு செய்வதாக கூறியத ற்கு அவர்களும் சம்மதித் தனர். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பூஜை செய்தால் மிகவும் நல்லது என அந்த இளைஞர் கூறினார். அதன் படி நள்ளிரவு அவர்களை கோவில் வளாகத்தில் உள்ள வீரபத்திரசாமி கோவில் சன்னதி அருகே அழைத்துச் சென்றார். அங்கு, ஏற்கெ னவே 2 வாலிபர்கள் இருந் தனர். அந்த கோவில் அருகே அந்த இளம்பெண்ணை அமர வைத்தனர். தோஷம் உள்ளவர்கள் மட்டும் தான் இங்கு இருக்க வேண்டும். மற்றவர்கள் இங்கிருந்து சென்று விடுங்கள் என கூறி பெற்றோரை அனுப்பி விட்டனர்.

இளைஞர்களில் ஒருவர் திடீரென இளம் பெண் ணின் வாயை பொத்தினார். பின்னர் 3 பேரும் அந்த பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் வன்முறை செய்ய முயன்றதாக கூறப்படு கிறது. அந்த பெண், கூச்சல் போட்டார்.

மகளின் சத்தம் கேட்டு அவரது பெற்றோர் ஓடிவந்தனர். அதற்குள் அந்த வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் சிறீகாளஹஸ்தி நகர காவல் நிலையத்தில் முறையீடு செய்தனர். காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து விசா ரணை நடத்தினர். சிறீ காளஹஸ்தியை அடுத்த சூரமாலையை சேர்ந்த சுப்பிரமணியம் (வயது 25), சிறீகாளஹஸ்தியை சேர்ந்த பாட்ஷா, காந்தி என்ற 3 பேரை கைது செய்தனர். மக் களிடையே மூடநம்பிக்கை உள்ளவரை இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கும்.

Read more: http://viduthalai.in/e-paper/75490.html#ixzz2tj2VASz2

தமிழ் ஓவியா said...


சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் வாழ்க!


தந்தை பெரியாரின் உற்ற தோழராகவும், கொள்கைப் பயணத்தில் சக பயணாளி களில் ஒருவருமான சிந் தனைச் சிற்பி. ம. சிங்கார வேலர் அவர்கள், சுயமரி யாதை சமதர்மத்தைச் செதுக் கிய அரும்பெரும் சிந்தனை யாளர் ஆவார்!

பச்சை அட்டைக் குடி அரசு ஏட்டில் தகத்தகாய பொன்னாக ஒளி வீசும் - கைவல்யம் அவர்களின் சிந்தனைப் பொறியைத் தீட்டும் கட்டுரை ஒருபுறம்.

சிங்காரவேலரின் பொதுவுடைமை, சமதர்ம, மூடநம்பிக்கைகளை எதிர்த்த, அறிவியல் ஆய்வு வெளிச்சத்தைப் பாய்ச்சிடும், காலத்தை வென்ற கருத் துக்கள் மறுபுறம் என்பது சுயமரியாதை இயக்க வரலாறு, பிரபல கம்யூனிஸ்ட் பேராசிரியரும் சிறந்த நாடாளுமன்றவாதியுமான பேராசிரியர் ஹிரேன் முக்கர்ஜி அவர்கள் எழுதிய ஒரு நூலில், இன்னும் 500 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இந்திய வரலாற்றில் பேசப்படும் இருபெரும் இந்தியத் தலைவர்கள் தந்தை பெரியாரும், ம. சிங்காரவேலரும் தான் என்று சரியாகக் கணித்து எழுதியுள்ளார்கள். அவரது 155ஆவது பிறந்த நாளான இன்று அவரது சிந்தனைகளை செயலாக்கிட, ஒத்தக் கருத்துள்ளவர்கள் ஓரணியில் திரண்டு ஜாதி, மத, கடவுள் மூடநம்பிக் கைகளை முறியடித்து, புதிய உலகம் காண்போமாக!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

18.2.2014

சென்னை

Read more: http://viduthalai.in/e-paper/75493.html#ixzz2tj2d5kEn

தமிழ் ஓவியா said...



ஹாட்ரிக்

சென்னை - சேத்துப்பட் டில் உள்ள விநாயகர் கோயி லில் உண்டியல் மூன்றாவது முறையாக உடைக்கப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப் பட்டு உண்டியல் முட் புதரில் வீசி எறியப்பட்டது.

நம்பித் தொலையுங்கள்!

நடக்கவிருக்கும் நாடா ளுமன்றத் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று இதுவரை இந்துமுன்னணி முடிவு செய் யவில்லையாம் - சொல்லு கிறார் அதன் மாநில அமைப் பாளர் ராம. கோபாலன்.

யாத்திரை

யாத்திரை என்று சொன் னாலே அத்வானியின் ர(த்)த யாத்திரைதான் நினைவிற்கு வந்து தொலைகிறது (சோம நாதபுரத்திலிருந்து அந்த யாத்திரையைத் தொடங்கிய போதே அதன் உள்நோக்கம் புரிந்தது. யாத்திரை சென்ற இடங்களில் எல்லாம் மதக் கலவரங்கள்! இப்பொழுது தமிழ்நாட்டிலே காந்தியாரை படுகொலை செய்த கூட்டத் தின் வாரிசுகள் ஒரு யாத் திரையைத் தொடங்கி உள் ளனர். வீடுதோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை என்று அதற்குப் பெயராம்.

இதன் பொருள் இல்லம் தோறும் மதவெறியூட்டல் - உள்ளம்தோறும் மனுதர்மச் சிந்தனைக்குப் புத்துயிர் ஊட்டல்! தந்தை பெரியார் மண்ணில் இவுர்களின் சித்து விளையாட்டுகள் பலிக்கப் போவதில்லை பலிக்கவும் விடமாட்டோம்!

தப்புத்தாளம்

சென்னை அண்ணா சதுக்கம் - பூவிருந்தவல்லி செல்லும் வழித்தடம் எண் 25ஜி பேருந்து நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு வந்து கொண்டிருந்தபோது தனி யார்க் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறி, தாளம் போட்டு, பாட்டுப்பாடி ஆபாச வார்த்தைகளை அள்ளிக் கொட்டினார்கள் நடத்துநர் பாண்டியன் அவ் வாறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட போது நடத்துநரை மாண வர்கள் தாக்கியுள்ளனர்.

மாணவர்களே, நீங்கள் எல்லாம் படித்துப் பட்டம் பெற்று வேலைக்குச் சென்று சம்பாதித்து நம்மைக் காப் பாற்றுவார்கள் என்று ஒவ் வொரு நொடியும் கனவு கண்டு கொண்டிருக்கும் பெற்றோர்களின் தலையில் மண்ணை அள்ளிப் போட்டு விடாதீர்கள்.

நம் இனத்து மக்கள் எல்லாம் கல்வி உரிமை பெற்று, உத்தியோகப் படிக்ககட்டுகளில் மதிப்புப் பெற வேண்டும் என்பதற்காக அயராது பாடுபட்டாரே தந்தை பெரியார். பாடுபட்டுக் கொண்டிருக் கிறதே திராவிடர் கழகம் அவர்களின் எதிர்ப்பார்ப்பு களைப் பொய்த்துப் போகச் செய்ய வேண்டாமே! நீங்கள் போடுவது தாளமா? அல்ல அல்ல - தப்புத் தாளம்!

கா(ம)ள கஸ்தி!

காளகஸ்தி கோயிலில் சாமி கும்பிடச் சென்ற பக்தையை பக்தர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர்கள் கைது செய்யப்பட் டுள்ளனராம். கோயில்களை விபச்சாரக்கூடம் என்று காந் தியார் சொன்னது தவறாகி விடக் கூடாதல்லவா! காஞ் சிபுரம் தேவநாதன்கள் நாட் டில் இன்னும் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார் கள். என்பதற்கு மேலும் இது ஓர் எடுத்துக்காட்டே!

Read more: http://viduthalai.in/e-paper/75492.html#ixzz2tj2v6Ocw

தமிழ் ஓவியா said...


காரணம்

வட நாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலா ஷைகளையும் புரிந்து கொள்ள முடியாத வாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகை கள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம். - (விடுதலை, 28.8.1963)

Read more: http://viduthalai.in/page-2/75495.html#ixzz2tj3MeHR5

தமிழ் ஓவியா said...


சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ரத்து தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து


சென்னை, பிப்.18- டெசோ கூட்டங்களின் வாயி லாகவும் - பிரதமருக்கு எழுதிய பல்வேறு கடிதங் களின் வாயிலாகவும் - விடுத்த ஏராளமான அறிக்கைகளின் மூலமாகவும் - இறுதியாக திருச்சியில் நேற்று முன் தினம் நடைபெற்ற திராவிட முன் னேற்றக் கழகத்தின் பத் தாவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத் திற்கு ஒரு வெற்றி யாக - உச்ச நீதி மன்றத்தின் இன்றைய தீர்ப்பின் மூலம் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகி யோரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டு அவர் களுக்கு வாழும் உரிமை கிடைத்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இன்று நேற்றல்ல! கடந்த பல ஆண்டுக் காலமாகவே நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தூக்குத் தண்டனையே ரத்து செய்யப் பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறேன். என் தலைமையிலே கழக ஆட்சி இருந்த போது நான் எடுத்த முயற்சியாலும், நான் கொடுத்த வேண்டுகோள் களின் அடிப்படையிலும் தூக்குத் தண்டனையிலிருந்து விடுபட்ட தியாகு, கலிய பெருமாள், நளினி ஆகி யோரைப் போல இன் றைக்குத் தூக்குத் தண்டனை யிலிருந்து விடுபட்டுள்ள சாந்தன், பேரறிவாளன், முரு கன் ஆகிய இந்த மூவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சிறப்பான தீர்ப் பினைத் தொடர்ந்து, உச்ச நீதி மன்றத்தின் பரிந்துரையை ஏற்று, இவர்கள் ஏற்கெனவே இதுவரை அனுபவித்த தண்டனைக் காலத்தினை மனதிலே கொண்டு, உடனடி யாக அவர்களை மத்திய, மாநில அரசுகள் விடுதலை செய்ய வேண்டுமென்று வலியுறுத்துவதோடு, அவ்வாறு அவர்கள் விடு தலை அடைவார்களேயா னால் நான் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவேன் என்ப தையும் தெரிவித்துக் கொள் கிறேன்

Read more: http://viduthalai.in/page-3/75513.html#ixzz2tj3ZBPbr

தமிழ் ஓவியா said...


கலைஞர் சட்டசபைக்கு வந்தார்

சென்னை, பிப்.18- தமிழக சட்டமன்ற வளாகத்திற்கு தி.மு.க. தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கலைஞர் அவர்கள் இன்று வருகை தந்து கையெழுத்திட்டு சென்றார்.

தி.மு.க. தலைவர் கலைஞர் சட்டசபைக்குள் வருவதற்கு வசதி ஏற்படுத்தி தரவில்லை என்று கூறி சட்டசபைக்குள் செல்லாமல் அங்குள்ள லாபியில் கையெழுத்திட்டு வருகிறார். இதேபோல் இன்று (18.2.2014) காலை 10.20 மணிக்கு கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்தபோது, சட்டசபை வருகை பதிவேட்டில் கையொப்பமிட காலை 10.40 மணிக்கு சட்டசபைக்கு வந்தார். அவரை வாசலில் தி.மு.க. சட்டமன்ற உறுப் பினர்கள் ஜெ.அன்பழகன், செங்குட்டுவன், சக்கரபாணி, பெரியகருப்பன், சாக்கோட்டை அன்பழகன் உள்பட எம்.எல்.ஏக்கள் வரவேற்று சட்டசபை வளாகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்களை வெளியேற்றம் செய்தனர். அவையில் துரைமுருகன் சஸ்பெண்ட் குறித்து விளக்கம் கேட்க திமுக உறுப்பினர்கள் முயற்சித்தனர். திமுகவினர் பேச அனுமதி மறுக்கபட்டதால் பேரவைத் தலைவர் இருக்கை அருகில் சென்று ஒலி முழக்கமிட்டனர். ஒலி முழக்கமிட்ட தி.மு.க உறுப் பினர்கள் அனைவரும் உடனடியாக வெளி யேற்றப்பட்டனர். கூட்டத் தொடர் முழுவதும் புறக்கணிப்பு

சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு சபைக்கு வெளியே தி.மு.க. கொறடா சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சிகளே கூடாது என்ற முறையில் செயல்படுவது ஜனநாயக விரோத செயல். எங்கள் கருத்துக்களை சொல்ல அனு மதிக்காததால் இந்த கூட்டத் தொடர் முழுவதையும் தி.மு.க. உறுப் பினர்கள் புறக்கணிப்பது என்று முடிவு செய்துள்ளோம். - இவ்வாறு அவர் கூறினார்.

புதிய தமிழகம்- ம.ம.க வெளிநடப்பு

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை சட்ட மன்றத்தில் இருந்து பேரவைத் தலைவர் வெளியேற்றி யதை கண்டித்து புதிய தமிழக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அஸ்லாம்பாஷா உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர்.

கலைஞர் பேட்டி

சட்டமன்ற வளாகத்தில் வெளியேயும்- அண்ணா அறிவாலயத்திலும் செய்தியாளர்களுக்கு கலைஞர் அளித்த பேட்டி வருமாறு:-

செய்தியாளர் :- கச்சத் தீவு இந்தியாவுக்கு சொந்தம் இல்லை என்று மத்திய அரசு மீண்டும் உச்ச நீதி மன்றத்தில் சொல்லியிருக்கிறதே?

கலைஞர் :- அது தவறான வாதம். அதை ஏற்றுக் கொள்வதற்கு இல்லை.

செய்தியாளர் :- தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகனை பேரவையிலிருந்து அய்ந்து நாட்கள் இடை நீக்கம் செய்திருப்பது பற்றி?

கலைஞர்:- இந்த அரசின் அவை நடவடிக்கை களில் அது ஒன்று. இந்த ஆட்சியில் இப்படித் தான் தொடர்ந்து சில முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிலே ஒன்று தான் இது. செய்தியாளர் :-பொதுவாக இந்த ஆட்சியில் எதிர்க் கட்சிகள் பேரவையில் பேசுவதற்கு அனுமதி தரப் படுகிறதா?

கலைஞர்:- நீங்களே இந்தக் கேள்வியைக் கேட்டால், அதற்கு என்ன அர்த்தம்?

செய்தியாளர் :- இன்னொரு கேள்வி?

கலைஞர் :- கேள்வி நேரம் இங்கே இல்லை. அது அவைக்கு உள்ளே தான் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றது. (கலைஞரைச் செய்தியாளர்கள் அவைக்கு வெளியே சந்தித்த போது, பேரவைக்குள் கேள்வி நேரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது) செய்தியாளர் :- பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை உச்சநீதி மன்றம் விடுவித்திருப்பது பற்றி?

கலைஞர் :- இது பற்றி என்னுடைய அறிக்கையை நான் ஏற்கெனவே வெளி யிட்டிருக்கிறேனே? செய்தியாளர் :- இவர்கள் மூவரையும் மத்திய, மாநில அரசுகள் விடுதலை செய்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா?

கலைஞர் :- சாத்தியக் கூறுகள்என்ன, வழி வகைகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் நான் ஏற்கனவே விரிவாக எழுதியிருக்கிறேன். கழக ஆட்சியின் போதும் நடத்திக் காட்டியிருக்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-3/75523.html#ixzz2tj3nhlPE

தமிழ் ஓவியா said...


சட்டமன்றத்தில் இன்று:


சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்பட ஏழு பேர் விடுதலை செய்யப்படுவர்
முதலமைச்சரின் அறிவிப்புக்கு அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் வரவேற்பு


சென்னை, பிப்.19- ராஜீவ்காந்தி கொலை வழக்கு என்ற பெயரில் குற்றவாளி களாக ஆக்கப்பட்ட பேரறி வாளன், முருகன், சாந்தன் உள்பட 7 பேர் விடுதலை செய்யப்படுவதாக சட்ட மன்றத்தில் இன்று முதல மைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பை சட்டமன்றத் தில் அனைத்து கட்சிகளும் வரவேற்றன. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் முதலமைச்சரின் இந்த அறிவிப்பை கண்டித்து வெளி நடப்பு செய்தனர்.

சட்டமன்றத்தில் இன்று (19.2.2014) காலை 10 மணி யளவில் அவை கூடியதும் கேள்வி - பதில் நிகழ்வு நடைபெற்று முடிந்ததும், சிறப்புக் கவன ஈர்ப்பு தீர் மான அடிப்படையில் முத லமைச்சர் விதி 110- இன் கீழ் ஒரு அறிவிப்பை வாசிப் பார் என பேரவைத் தலை வர் ப. தனபால் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கீழ்க்கண்ட அறி விப்பை வாசித்தார்:

இந்த வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பினால் புலனாய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தடா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண் டனை வழங்கப்பட்டதால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 435-இன்படி தமிழ் நாடு அமைச்சர வையின் முடிவு குறித்து மத்திய அர சுடன் கலந்தாலோசிக்கப் பட வேண்டும். எனவே, மத்திய அரசின் கருத்தி னைப் பெறும் வகையில், திருவாளர்கள் சுதேந்திர ராஜா என்கிற சாந்தன், சிறீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தமிழ் நாடு அமைச்சரவையின் முடிவு மத்திய அரசுக்கு உடனடி யாக அனுப்பி வைக்கப்படும்.

மத்திய அரசு 3 நாள் களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432-இல் மாநில அரசுக்கு அளிக் கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச் சரவைக் கூட்டத்தில் எடுக் கப்பட்ட முடிவின்படி, திருவாளர்கள் சுதேந்திர ராஜா என்கிற சாந்தன், சிறீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகி யோர் விடுவிக்கப்படுவார் கள் என்பதை இந்த மாமன் றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சட்ட மன்றத்தில் இன்று முதல மைச்சர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/75554.html#ixzz2tp0Y8xpJ

தமிழ் ஓவியா said...

7பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் உத்தரவு மகிழ்ச்சி : கலைஞர்


சென்னை, பிப்.19- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முரு கன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண் டனையை ஆயுள் தண் டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப் பளித்தது. அவர்களை விடு தலை செய்யும் முடிவை மாநில அரசு மேற்கொள்ள லாம் எனவும் அந்த தீர்ப் பில் கூறியிருந்தது.

எனவே, இன்று சட்ட சபையில் முதல்வர் ஜெய லலிதா முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் உட னடியாக விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்க வேண் டும் என்று மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள் ளார். இதுகுறித்து திமுக தலைவர் கலைஞர் செய்தி யாளர்களிடம் கூறும்போது, 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் உத்தரவு மகிழ்ச்சி அளிக் கிறது. 7 பேரையும் விரை வில் விடுதலை செய்ய மத் திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். மத்திய அரசு ஒப்புதல் வழங்கினால் மகிழ்ச்சி என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/75557.html#ixzz2tp0oJKMu

தமிழ் ஓவியா said...

திடீர்க் காதல்!

பொதுவுடைமைச் சிற்பி ம. சிங்காரவேலரின் பிறந்த நாளில் அவரது சிலைக்கு பி.ஜே.பி.யினர் மாலை அணிவித்தனர் என்பது சேதி. திடீரென்று பாபு ஜெக ஜீவன்ராம் - கான்சிராம், ம. சிங்காரவேலர்கள் மீதெல்லாம் பி.ஜே.பிக்குக் காதல் பீறிட்டுக் கிளம்பியுள்ளது பார்த்தீர்களா? எல்லாம் தேர்தல் ஜுரம்தான்.

Read more: http://viduthalai.in/e-paper/75555.html#ixzz2tp0zKdlI

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

கவனச் சிதைவோ!

செய்தி: காஞ்சிபுரம் உலக ளந்த பெருமாள் கோயில் தேர் சக்கரம் உடைந்தது! சிந்தனை: உலகை அளந்த வருக்கே இந்தக் கதியா? ஒருக்கால் உலகை அளந்து கொண்டிருந்தபோது கவ னச் சிதைவால் இது நடந்து விட்டதோ!

Read more: http://viduthalai.in/e-paper/75555.html#ixzz2tp15lop7

தமிழ் ஓவியா said...


பிஜேபி என்ன ஊழலுக்கு அப்பாற்பட்டதா?


மதவாத எதிர்ப்புக் கை கொடுக்குமா என்ற ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது ஒரு நாளேடு.

அந்த நாளேட்டுக்கு மட்டுமல்ல; இதே கருத்தைக் கொண்டுள்ள எவருக்கும் நாம் சொல்லக் கூடிய ஒரு பதில் - கண்டிப்பாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மதவாத எதிர்ப்பு என்பது கை கொடுத்தே தீரும். காரணம் இது தந்தை பெரியார் அவர்களால் பக்குவப்படுத்தப்பட்ட பகுத்தறிவுப் பூமி. இந்த வினாவைத் தொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குள்ளாகவே கூட இந்த வினாவை எழுப்பிப் பார்த்திருக்க வேண்டாமா?

இன்னும் சொல்லப் போனால் ஊழலைவிட மிகப் பெரிய ஆபத்தானது மதவாதம் ஆகும்.

அதே நேரத்தில் மதவாதத்திற்குக் காரணமான பிஜேபி ஒன்றும் ஊழலுக்கு அப்பாற்பட்டதல்ல. அதற்காக வெகு தூரம் சென்று ஆய் வுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.

பிஜேபி ஆட்சி செய்த கருநாடக மாநிலத்தில் என்ன நடந்தது? ஊழலின் ஒட்டு மொத்த உறைவிடமாக அது விளங்கவில்லையா? ரெட்டி சகோதரர்கள் அடித்த கொள் ளைக்கு அளவுண்டா? ஏன் முதல் அமைச்சர் பி.எஸ். எடியூரப்பா செய்த ஊழல் பட்டியல்தான் சாதாரண மானதுதானா?

நடந்து முடிந்த தேர்தலில் தென்னகத்தில் ஆட்சி புரிய வாய்ப்புக் கிடைத்த ஒரே மாநிலமாகவிருந்த கருநாடக மாநிலத்தில் ஆட்சியைப் பறி கொடுத்ததே!

வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது நடந்ததே சவப் பெட்டி ஊழல் - மக்கள் மறந்து விட்டார்களா? அகில இந்திய பிஜேபியின் தலைவர் பங்காரு லட்சுமணன் இலஞ்சப் பணத்தை வாங்கி மேசையின் அறையில் திணித்தது வரை தெகல்கா நிறுவனம் அம்பலப்படுத்தியதா இல்லையா?

மற்றொரு அகில இந்திய பிஜேபியின் தலைவர் நிதின் கட்காரிமீது ஊழல் புகார் வந்ததன் பின்னணியில் மறுபடியும் தலைவராக வர முடியாத இடத்துக்குத் தள்ளப் படவில்லையா? சோதனை செய்ய வந்த வருமானவரித் துறை அதிகாரிகளை மிரட்டியவர் தானே அவர்? மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று அதிகாரிகளை மிரட் டிய செய்தி வெளி உலகத்திற்கு வந்து சேரவில்லையா?

ஏன் அவ்வளவு தூரம் போவானேன்? பிஜேபியின் இன்றைய பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடியின் குஜராத் ஆட்சியில்தான் என்ன வாழ்கிறது?

குஜராத் மாநில பெட்ரோலிய நிறுவனம் 2009ஆம் ஆண்டு முதல் தவறான முறையில் செயல்பட்டதால் 5000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஏடுகள் சொல்லவில்லை; இந்தியத் தலைமைக் கணக்கு மற்றும் தலைமை அதிகாரியின் அறிக்கை அம்பலப் படுத்தியதா இல்லையா?

தேவையற்ற முறையில் சலுகைகள் வழங்கப்பட்ட நிறுவனங்களில், கவுதம் அதானி மின்னாற்றல், ரூயாயின் எஸ்ஸார் குழுமம், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் ஆகியவை அடங்கும். சொல்லுவது இந்தியத் தலைமை தணிக்கைத் துறை என்பது குறிப்பிடத் தக்கதாகும். மதவாதம் ஒரு பக்கம், ஊழல் இன்னொரு பக்கம் எனும் ஆபத்தான இரட்டை குழல் துப்பாக்கிதான் பிஜேபி என்பதை மறந்து விடக் கூடாது.

இன்னும் சொல்லப் போனால் ஊழலைவிட மிகவும் ஆபத்தானது மதவாதம். நாட்டு மக்களை மதவாதக் கண் ணோட்டத்தோடு பார்த்து, அன்றாடம் நாட்டு மக்களி டையே கலவரத்தையும், பதற்றத்தையும் உருவாக்கக் கூடிய ஓர் ஆட்சி தேவையா?

2002இல் குஜராத்தில் நரேந்திர மோடியின் ஆட்சியில் என்ன நடந்தது என்பதை அப்பட்டமாக தெரிந்த நிலையிலும் கட்டு விரியனை எடுத்துக் காதுக்குள் விட விரும்புவார்களா?

1992இல், அயோத்தியில் என்ன நடந்தது? 450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களான இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலத்தை, பட்டப்பகலில் ஆயிரக்கணக்கான சங்பரிவார் இந்துத்துவ வன்முறைக் கும்பல் கூடி, இடித்துத் தரை மட்டமாக்கவில்லையா?
கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, அசோக்சிங்கால் முதலிய முக்கிய தலைவர்கள் தலைமையேற்று இந்த அட்டூழியத்தைச் செய்து முடிக்கவில்லையா? இந்துக்கள் அலிகள் அல்ல - ஆண்கள் என்பதற்கு அடையாளம்தான் பாபர் மசூதி இடிப்பு என்று - உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று அடையாளம் காட்டப்பட்ட நரேந்திர மோடி அப்பொழுது சொன்னாரா இல்லையா?

ஆளும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் மீது ஊழல் புகாரை மட்டும் சொல்லி, அதைவிட பல மடங்கு ஊழலும், மதவெறியும் கொண்ட பிஜேபியை ஆட்சியில் அமர்த்துவதைவிட தற்கொலை வேறு ஒன்று உண்டா?

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் ஏடுகள், ஊடகங்கள் கூட இதனைப் புரிந்து கொள்ளவில்லை என்றால், அதை விட வேதனை எதுவாக இருக்க முடியும்?

Read more: http://viduthalai.in/page-2/75563.html#ixzz2tp1QuG7E

தமிழ் ஓவியா said...


மோடி ஸ்வாமிகளின் தனிமை உபதேசம்


- குடந்தை கருணா

இமாச்சல பிரதேசத்தில் பேசிய மோடி, தனக்கு குடும்ப வாழ்க்கை இல்லாததால், தான் ஊழல் செய்து பணம் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், குடும்ப சூழல் இல்லாதவர் மட்டுமே,ஊழலை ஒழிக்க முடியும் என ஊழல் ஒழிப் புக்கு புதிய இலக்கணத்தை உதிர்த் துள்ளார் மோடி ஸ்வாமிகள்.

மோடி ஸ்வாமிகளிடம் சில கேள் விகளை கேட்கும் விரும்புகிறோம்.

1. ஊழலை ஒழிக்க குடும்ப ஸ்தர்களால் முடியாது என்பதால் தான், அத்வானியை பிரதமர் வேட் பாளராக பாஜக அறிவிக்கவில்லையா?

2. பிரதமர் மட்டுமே முடிவு செய்து, ஊழலை ஒழிக்க முடியுமா?

3. ஏனைய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், என அனைவரும் குடும்ப சூழல் இல் லாதவர்களாக இருக்க வேண்டுமா?

4.மோடி ஸ்வாமிகளின் கருத்தை, பாஜக ஏற்றுக் கொள்கிறதா?

5. இல்லற வாழ்க்கை இல்லாத வர்களுக்குத்தான் இம்முறை பாஜக சார்பில் வேட்பாளராக வாய்ப்பு தரப்படுமா?

6. அத்வானி, சுஸ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஷி போன்றோர் இம்முறை வேட்பாளர்களாக போட் டியிடுவார்களா?

7. எந்த ஆய்வின் அடிப்படையில் மோடி ஸ்வாமிகள் இந்தக் கருத்தை உபதேசிக்கிறார்?

8. எனக்கு குடும்ப வாழ்க்கை கிடையாது, முதல்வர் பதவியில் மாத ஊதியமாக ஒரு ரூபாய் தான் பெறு கிறேன் எனக் கூறியவர் தான்,கடந்த பதினேழு ஆண்டுகளாக சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றப் படிகளில் ஏறி வருகிறார். அதற்கு மோடி ஸ்வாமிகளின் விளக்கம் என்ன?

9. யோகேந்திர யாதவ் மோடி ஸ்வாமிகளிடம் கேட்ட கேள்வியான, அதானி குழுமத்திற்கு அதிகப்படி யான சலுகைகள் அளிக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பதற்கு மோடி ஸ்வாமிகளின் பதில் என்ன?

அண்மையில் ஒரு திரைப் படத்தில் ஒரு வசனம் வரும். வெள் ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று வசனம் வரும். அது போலத்தான் இருக்கிறது மோடி ஸ்வாமிகளின் பேச்சு.

Read more: http://viduthalai.in/page-2/75567.html#ixzz2tp1ss9mW