Search This Blog

16.2.14

காந்தியைக் கொன்ற கூட்டம் கோலோச்சத் துடிக்கிறது - உஷார்! உஷார்!!

மாற்றுடையில் கோட்சே பட்டாபிஷேகம்!
 -
காந்தியாரைப் படுகொலை செய்த தத்துவம் ஆட்சித் தத்துவமாக மாற வேண்டுமா? காந்தியைப் படுகொலை செய்த கோட்சே மாற்றுடையில் அதிகாரப் பீடத்தில் அமர வேண்டுமா? - இதுதான் 16ஆவது மக்களவைத் தேர்தலில் மக்கள் முன் எழுந்து நிற்கும் மகத்தான கேள்வி.

காந்தியார் படுகொலை செய்யப்பட்டு 66 ஆண்டுகள் ஓடி விட்டன. அதற்குக் காரணமானவர்கள் இந்துத்துவாவாதிகள் என்பது மக்களுக்கு மறந்து போயிருக்கும் என்ற ஒரு நினைப்பு!

இந்துத்துவா சக்தி என்பதை ஆர்.எஸ்.எஸ். என்று அடையாளம் காட்டலாம்.

காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அல்ல - நாதுராம் கோட்சே இந்து மகா சபையைச் சேர்ந்தவர் என்று எத்து வேலையில் ஈடுபட்டார்கள்.

இரண்டும் ஒன்றுதான் - இன்னொரு கால கட்டத்தில் இந்த ஆர்.எஸ்.எசும், இந்து மகா சபையும் சேர்ந்து பெற்ற பிள்ளைதான் ஜன சங்கம் (1953)
கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லை இல்லை என்று இன்றுவரை கதறிக் கொண்டு இருக்கின்றனர்.

இவர்கள் கதறுவது இருக்கட்டும்; கோட்சேயின் குடும்பத்தினர் என்ன சொல்லுகிறார்கள் என்பதுதானே முக்கியம்.

அதுவும் இந்துக் குடும்பத்தைச் சேர்ந்த ஃப்ரண்ட் லைன் (Front Line) (28.1.1994) இதழே அம்பலப்படுத்தி விட்டது.

நாதுராம் கோட்சேயின் தம்பியும் காந்தியாரின் கொலைக் குற்றத்தில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலை பெற்றவருமான கோபால் கோட்சேயின் பேட்டி அந்த இதழில் வெளி வந்துள்ளதே.

கேள்வி: ஆர்.எஸ்.எஸிற்கும், நாதுராம் கோட்சேவுக்கும் சம்பந்தம் இல்லை என்று அத்வானி கூறியிருக்கிறாரே? 

கோபால் கோட்சேயின் பதில்: இது கோழைத்தனமானது அத்வானியின் கூற்றை நான் மறுக்கிறேன்; போ காந்தியைக் கொல்லு! என்று ஆர்.எஸ்.எஸ். தீர்மானம் போடவில்லை என்று வேண்டு மானால் நீங்கள் கூறலாம். ஆனால் நாதுராம் கோட்சேவுக்கும், ஆர்.எஸ்.எசுக் கும் சம்பந்தமேயில்லை என்று நீங்கள் கூற முடியாது. ஆர்.எஸ்.எஸின் பவுதிக்காரி யவா ((Baudhik Karyavah) ஆக இருந்த போது 1944இல் இந்து மகாசபையில் நாதுராம் பணியாற்றினார். 

கேள்வி: நீங்கள் ஆர்.எஸ்.எஸில் ஒரு அங்கமா?

கோபால் கோட்சே பதில்: நாதுராம், தாத்தாத்ரியா, நான், கோவிந்த் ஆகிய நாங்கள் நான்கு சகோதரர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸில் இருந்தோம். எங்கள் வீட்டில் வளர்ந்தோம் என்பதைவிட ஆர்.எஸ்.எஸில் வளர்ந்தோம் என்றே கூற வேண்டும். எங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். ஒரு குடும்பம் போன்றதாகும்.

கேள்வி: நாதுராம் கோட்சே ஆர்.எஸ். எஸில்தான் இருந்தாரா? அதைவிட்டு வெளியேறவில்லையா?

கோபால் கோட்சே: ஆர்.எஸ்.எஸில் பதிவுக் காரியவா (அறிவுப் பூர்வ பணியா ளர்) ஆக ஆனார் நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸை விட்டு தான் விலகியதாக - கொலைக் குற்றவாளியாகக் கூண்டில் ஏற்றப்பட்டபோது கோட்சே கொடுத்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார் என் பது உண்மைதான். காந்தியார் படுகொலை செய்யப்பட்ட சூழலில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கருக்கும் ஆர்.எஸ். எசுக்கும் பெரும் நெருக்கடியும் ஏற்பட்ட தன் காரணமாக அவர்அப்படி குறிப்பிட் டார். ஆனால் கோட்சே உண்மையில் ஆர்.எஸ்.எஸைவிட்டு விலகவே இல்லை என்று கோபால் கோட்சே கூறியுள்ளாரே!'

கோட்சே ஆர்.எஸ்.எஸ். தான் என்ப தற்கு இனி யாரைக் கூப்பிட்டு விசாரிக்க வேண்டும்?

இதில் இன்னொரு மர்ம முடிச்சும் உண்டு; ஆர்.எஸ்.எஸ். எனும் அமைப்பில் உறுப்பினர் சேர்க்கை உறுப்பினர் அட்டை என்பதெல்லாம் கிடையாது. அதனால் ஒரு வரை ஆர்.எஸ்.எஸ். என்று நிரூபிப்பதற் கான தடயத்தை அவர்கள் வேண்டு மென்றே வைத்துக் கொள்வதில்லை.

ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்ட தற்குப் பிறகுதான் அன்றைய உள்துறை அமைச்சர் வல்லபாய் படேலின் நிபந் தனைக்கு உட்பட்டு தான் ஆர்.எஸ்.எசுக்கு விதிமுறைகளை உண்டாக்கினர் என் பதைத் தெரிந்து கொண்டால் கோட்சேயை ஏன் அதிகாரப் பூர்வமாக ஆர்.எஸ்.எஸ். என்று சொல்ல முடியவில்லை என்பதற் கான சூட்சுமம் புலப்பட்டு விடும்.

எவ்வளவு தான் சாமர்த்திய நாடகம் போட்டாலும் அவர்களை  அறியாமலேயே உண்மையின் தூண்டிலில் சிக்கிக் கொண்டார்கள்.
கோட்சேயும், நாராயண் ஆப்தேயும் 1949 நவம்பர் 15ஆம் தேதி அம்பாலாவில் தூக்கிலிடப்படுவதற்கு முன் அவர்கள் கடைசிக் கடைசியாகப் பாடிய பாடல் என்ன? ஆர்.எஸ்.எஸ். ஷாகாவில் பாடப் படும் நமஸ்தே சதா வாத் சலே மாத்ருபூமி என்ற பாடல் தானே?

இன்னொரு எஃகு இரும்புக் கூண்டு போன்ற சாட்சியம் உண்டு. அவர்தான் காந்தியாரின் உதவியாளர் பியாரிலால்; அவர் எழுதிய நூலில் மிகத் தெளிவாகவே குறிப்பிட்டு விட்டார்.

காந்திஜி கொல்லப்படப் போகிறார் என்பதே முன்னதாகவே அறிந்திருந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வானொலிப் பெட்டிகள் முன் உட்கார்ந்து அவர்கள் விரும்பிய அந்த இனிப்பான சேதிக்காகக் காத்துக் கொண்டிருந்தனர் என்று குறிப் பிட்டுள்ளாரே இதற்கு என்ன பதில்?

கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லை என்று அந்தக் கூட்டம் கதறுவதற்குக் கனமான காரணம் உண்டு பி.ஜே.பி.யானாலும் சரி - சங்ரபரிவாரானாலும் சரி அவற்றின் லகான் என்பது ஆர்.எஸ்.எஸின் கைகளில் தானே இருக்கிறது! கோட்சே ஆர்.எஸ்.எஸ். என் பதை ஒப்புக் கொண்டால் கடையாணி கழன்று அனைத்தும் குப்புற வீழ்ந்து விடாதா?

இன்றைக்குக்கூட அத்வானி எனும் குதி ரையை அடக்கி, நரேந்திர மோடிதான் பிரதமருக்கான வேட்பாளர் என்று சாட்டை யடி கொடுத்து சரி செய்ததும் ஆர்.எஸ்.எஸ். தலைமை தானே.

ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்ற ஒருவர்தான் பி.ஜே.பி.யின் அகில இந்திய செயலாளராக வர முடியும் என்று அடிப் படை விதியாக வரைந்து வைத்துள்ளார் களே - அது மட்டுமா நாடாளுமன்ற சட்ட மன்ற வேட்பாளர்களாகத்   தேர்வு செய்யும் குழுவில் ஆர்.எஸ்.எஸின் பிரதிநிதித்துவம் கட்டாயம் (வி) ஆயிற்றே!

நாதுராம் தனது வாக்கு மூலத்தின் கடைசிப் பகுதியில் பதித்திருந்த வார்த்தை எனது இந்தச் செயலினை எதிர்காலத்தில் ஒரு நாள் நியாய உணர்வு படைத்த வரலாற்று ஆசிரியர்கள் எடை போட்டுப் பார்த்து உண்மையான மதிப்பீட்டுக்கு வந்தே தீருவார்கள் என்பதில் எனக்கு அய்யப்பாடே கிடையாது - அகண்ட பாரத் அமர் ரஹே! வந்தே மாதரம்! - என்றான்.

உண்மையான நாணயமான வரலாற்று ஆசிரியர்களோ, மண்ணாங்கட்டிகளோ - கோட்சேயை மகாவீரனாக்கும் முயற்சி நடந்து கொண்டு தானே இருக்கிறது.

நரேந்திரமோடி பிரதமருக்கான பிஜேபியின் வேட்பாளர் என்றால் இதன் ஆழமான பொருள் என்ன? கோட்சே உயிரோடு வர முடியாது என்பதால் கோட்சே யிசமான இந்துத்துவாவின் பிரதி பிம்பமாக நரேந்திர மோடி இதோ நம் கண்முன் பட்டாபிஷேகம் சூடிக் கொள்ள பரபரத்து நிற்பதைக் காணவில்லையா?

எதிர்கால சந்ததியினர் மகாத்மாவிற் கல்ல; கோட்சேவுக்கு சிலை எழுப்புவார்கள் என்று சிவசேனைத் தலைவர் பால்தாக்கரே சொன்னதுண்டே! (1992)

ஏன் மும்பை நகரத்தில், இந்தியாவின் தலைநகரமான புது டில்லியில் ஏ.பி. வாஜ்பேயி தலைமையில் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களால் நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டதே!

மே நாதுராம் கோட்சே போல்தா ஹுன் என்னும் நாடகம் பிரதீவ் தால்வி என்பவரால் எழுதப்பட்டு அரங்கேற்றப்பட் டது. நான் நாதுராம் கோட்சே பேசுகிறேன் என்பது அதன் மொழியாக்கம்.

காந்தியாரை அரக்கனாகவும், வில்ல னாகவும் கோட்சேயைக் கடவுளின் அவ தாரமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது இந்த நாடகத்தில்.

காந்தியாரைக் கொன்றதற்கான நியாயங்கள் பேசப்படுகிறதாம். கோட்சே பேசும் வசனங்கள் எல்லாம் அறிவு ஜீவியத் தன்மை சார்ந்ததாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

காந்தியார் படுகொலைக்கு மூளையாக இருந்த வீர் சவர்க்கார் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து விடுதலை பெற்றுள்ளார்.

அதே நேரத்தில் காந்தி படுகொலையில் தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது குற்றவாளிகள் எல்லாம் அங்கு வந்திருந்த வீர் - சவர்க்கார் காலில் விழுந்தனரே - ஏன்?

எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்பார்களே, அதுதான் இது. மதன்லால் தான் அப்ரூவர் - அவர் சாட்சியம் தான் கோட்சே உள்ளிட்டோர் தண்டனை பெறக் காரணம். அதே மதன்லால் வீர் சவர்க்காருக்கு காந்தியார் படுகொலையில் உள்ள சம்பந்தத்தைத் தெளிவாகக் கூறியிருந்தும் சவார்க்கார் விடுதலை செய்யப்பட்டது நீதிபதிக்கே வெளிச்சம்!

கோட்சே அக்ரானி என்ற பத்திரி கையைத் தொடங்கியபோது ரூ.15 ஆயிரம் நிதி உதவி செய்தவர் இந்த சாவர்க்கர்தான்.

அந்தப் பத்திரிகைதடை செய்யப்பட்ட 10 நாட்களுக்குள் ஹிந்து ராஷ்ட்ரா என்ற மற்றொரு பத்திரிகை தொடங்க உதவி செய்தவரும் சாவர்க்கார்தான். காந்தியார் படுகொலையில் சந்தேகத்துக்கு அப் பாற்பட்டவராக இல்லாத சவார்க் காரின் பெயர்தான் அந்தமான் போர்ட் பிளேர் துறைமுகத்துக்குச் சூட்டப்பட்டுள் ளது. நாடாளுமன்ற அவையிலும் படம் திறந்து வைக்கப்பட்டது பிஜேபி ஆட்சி யில்; சவார்க்காரின் ஒவ்வொரு பிறந்த நாளிலும்  மறைவு நாளிலும் பிரதமர் உட்பட மரியாதை செலுத்துகிறார்கள் என்றால் என்ன கொடுமை - என்ன கேவலம்!

காந்தியார் படுகொலை செய்யப்பட்ட போது ஒரு பைத்தியக்காரன் காந்தியின் உயிரைக் குடித்து விட்டான் என்றார் பிரதமர் நேரு. அந்த மதவெறியின் பைத்தி யக்காரன் - அவனைச் சேர்ந்தவர்களோ கதாநாயகர்களாக வலம் வருகிறார்களே!

உலக உத்தமர் என்று போற்றப்படும் ஒருவரைச் சுட்டுக் கொன்ற கூட்டமே இன்றைக்கு ஒரு பக்கத்தில் மதத்தின் பெயரைச் சொல்லியும், இன்னொரு பக்கத் தில் அரசியல் சூழல்களை முன்னுக்கு நிறுத்தியும் அதிகார பீடத்தில் பட்டாபிஷேகம் சூடப் போகும் ஒரு மாயையை உருவாக்கி விட்டார்கள். 

புரியும்படி சொன்னால் கோட்சே வேறு உருவில் பவனி வருகிறான். அவன் கொண்ட தத்துவம் அரசியல் மூடி அணிந்து  கோலோச்சத் துடிக்கிறது.
கோட்சே என்பதற்குப் பதிலாக மோடி என்று நாம கரணம் சூட்டப்பட்டுள்ளது. கோட்சேயின் தத்துவம் பிஜேபி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

காந்தியார் கொல்லப்பட்டு 66 ஆண்டு கள் ஆகிவிட்டதால் அடுத்த தலைமுறை யினருக்கு அதன் பின்னணி தெரியாது என்ற தைரியம் ஒரு பக்கம்.

மத்தியில் உள்ள ஆட்சியில் பல குறை பாடுகள் உள்ளன என்ற சூழல் இன்னொரு பக்கம்; இவற்றையெல்லாம் சாதகமாகப் பயன்படுத்தி, இந்த மனிதரைக் கொண்டு தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ள லாம் என்று திட்டமிடும் பண முதலைகள் மற்றொரு பக்கம்.

பணக்காரர் - பார்ப்பனர்கள் கைகளில்  முடங்கி இருக்கும் ஊடகங்கள் நாலாப் பக்கங்களிலும்; இந்த தைரியத்தில் காந் தியைக் கொன்ற கூட்டம், பாபர் மசூதியை இடித்த கும்பல், குஜராத்தில் ஆயிரக் கணக்கில் முஸ்லீம்களைப் படுகொலை செய்த கும்பல் கோலோச்சத் துடிக்கிறது - உஷார்! உஷார்!!

----------------------------------மின்சாரம் 15-2-2014 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
Read more: http://viduthalai.in/page-1/75368.html#ixzz2tR8lFgs3

26 comments:

தமிழ் ஓவியா said...


அதிசயம் ஆனால் உண்மை


- மு.வி.சோமசுந்தரம்

இணையர் என்ற அழகுத் தமிழ்ச் சொல் வாழ்வியலை விளக்கும் விழுமிய சொல்.

இணையரின் இதயங்களில் களி நடனம் நிகழ்த்தும் சலங்கை ஒலி, அக நானூறு தமிழ் அரங்கத்தில் நிகழ்த்தப் படுவதை சுவைக்காத செவி இருக்க முடியாது.

ஏன்! அய்யன் திருவள்ளுவர் ஆக்கித் தந்துள்ள ஆவின் பாலினும் மேலான முப்பாலில் மூன்றாம் நிலையில் முகிழ்ந் திருக்கும் இன்பத்துப்பாலில் மிதக்கும் குங்குமப்பூவிலான குறட்பா மூலம் இணை யரில் ஒருவரின் குரலைக் கேட்போம்;

இரு நோக்கு இவள் உண் கண்களில் உள்ளது ஒரு நோக்கு நோய் நோக்கு ஒன்று அந்நோய் மருந்து.

இத்தகைய நோக்குதல் நோயால் பாதிக்கப்பட்ட மனம் கலந்த மாந்தருள், எப்பொழும் எடுத்துக் காட்டாகக் கூறப் படும் பெற்றியைப் பெற்றவர்கள்

அம்பிகாபதி - அமராவதி
கோவலன் - மாதவி
சலீம் - அனார்கலி
ரோமியோ - ஜூலியட்
மஜூனு - லைலா

இலக்கிய உலகில் வலம் வரும் இப் பெயர்களின் நிழலொட்டி இரண்டு பெயர்கள் அறிமுகப்படுத்தப்படுகின் றனர். இவர்கள் மதாய்துபே - சுக்மோனா

இன்றைய கலிகால உலகின் காதல் மாந்தர்கள் கட்டுப்பாடு என்ற மதிலைத் தாண்டி, கண்டனம் என்ற முள்வேலிக்குள் புகுந்து வந்தவர்கள் இவர்களை அறி முகம் செய்பவர், வாரணாசியில் உள்ள ஆர்யமகிலா முதுகலைக் கல்லூரியில் ஆங்கிலத்துணைப் பேராசிரியர் முனை வர் கவிதா ஆர்யா, இவரின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம், துணிச்சலும், தியாகமும் உள்ளடக்கிய புரட்சிப்பார்வை கொண்ட கட்டுரை.

தங்களுடைய காதலுக்காக அனைத் தும் தியாகம் செய்யும் காதலர்களைப் பற்றி நூற்றுக்கணக்கான கதைகளை அறிவோம். ஆனால் மதாய் துபேயுக்கோ அல்லது மதாய் தாம்க்கோ Madai Dom இணையான ஒன்றைக் காண முடியாது. மதாய் ஒரு பார்ப்பனர் அவர் காதலித்த சுக்மோனா என்ற பெண்ணுக்காக மனப் பூர்வமாக தன்னுடைய சாதியைத் தூக்கித் தள்ளி, தாம் சாதியுடன் இணைத்துக் கொண்டார். படிக்கட்டு முறையில் அமைந்துள்ள இந்துமத ஜாதி அமைப் பில், எவரும் மேல் படிக்கட்டில் கால் வைத்தே செல்ல ஆசைப்படுவர், அத்தகை யோர் கதை தனித்தன்மை பெற்றது.

தமிழ் ஓவியா said...


மதாய் துபே, பீகார் மாநிலத்தில் பேரஜ் பூர் மாவட்டத்தில் சலிம்பூர் என்னும் சிறு கிராமத்தில் பிறந்தவர். அவர் பிறந்தது ஒரு பொருள் வசதி படைத்த ஆச்சார பார்ப்பன குடும்பத்தில். அவர்கள் கிராமத்துக்கு சிறிது வெளியில், அவர் களுக்கு விவசாய நிலம் இருந்தது. அந்த நிலத்தில் உள்ள விளைச்சலுக்குப் பாது காப்பாக இருக்கும் பணியிலேயே மதாய் துபே நேரத்தைச் செலவிட்டார். துபேயின் நிலத்துக்கு சிறிது தூரத்தில் சுடுகாடு ஒன் றுள்ளது. அந்த சுடு காட்டில் சுக்மோனா வின் தந்தை தோம் வேலை செய்து வந் தார். தோம் எனப்படுவோர், சாதியில் கீழான சாதியாகக் கருத்ப்பட்டோர். அவர்கள் சுடுகாட்டில் பிணத்தை எரிக்கும் வேலையைச் செய்து அதனால் பெறக் கூடிய வருமானத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தனர்.

சுக்மோனா, தினமும் அவரின் தந் தைக்கு, மதாய் துபே நிலத்து வழியாக உணவு எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால், சுக்மோனாவும் துபேயும், சமூக அமைப்பில் இருவேறு பிரிவை சேர்ந்த வர்களாக இருந்ததால், ஒருவருக்கொரு வர் பேசும் நிலைமை இல்லை. ஒரு நாள் சுட்டெரிக்கும் வெயிலில் சுக்மோனா வழக்கப்படி தந்தைக்கு உணவு எடுத்துச் செல்லும் வேளையில் துபே குடிசையின் எதிரில் மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டாள், சுக்மோனா, தீண்டப்படாதவர் என்ற இனத்தைச் சேர்ந்தவர் என்றிருந் தாலும் துபே அதைப்பற்றி கவலைப் படாமல் சுக்மோனாவை தன் குடிசைப் பக்க நிழலுக்கு கொண்டு வந்து தண்ணீர் கொடுத்து பாதுகாத்து உதவினார்.

இந்த நிகழ்ச்சியே அவர்களுக் கிடையே ஒரு தனித்தன்மை வாய்ந்த காதல் மலருவதற்கு வழிவகுத்தது. கடு மையான சாதிமுறை இருந்த 100 ஆண்டு களுக்கு முந்திய காலத்தில், அதனைப் பொருட்படுத்தாத, இருவரும் காதலர் களாகினர்.

அவர்கள் வாழ்ந்த கிராமமே கடும் எதிர்ப்பைக் காட்டியது. கிராம மக்கள் எண்ணத்தில் இவர்கள் காதல் சமூகத்துக்கு ஒத்துவராத ஒன்று கிராமமும், பார்ப்பன சமூகமும், ஒரு பார்ப்பன பையனுக்கும், தோம் இனத்து பெண்ணுக்கும் காதல் என்பதை எதிர்த்தது. இதுவே குடும்பத் தினரை, இந்த காதல் விவகாரத்தில் தலையிட்டு தடுத்து நிறுத்த வலியுறுத் தினர். இல்லையென்றால் ஜாதிக் கட்டுப் பாடு ஏற்படும் என்றும் அச்சுறுத்தினர். துபே உறுதியாக இருந்ததோடு சுக் மோனாவைத் திருமணம் செய்து கொள் ளப் போவதாகவும் கூறினார். கீழ்சாதிப் பெண்ணை வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளும் பழக்கம் உண்டு. இதைச் சமு தாயம் ஏற்றுக் கொண்ட ஒரு பழக்கமாக இருந்தது. ஆனால் பார்ப்பனப் பையன் கீழ்ஜாதிப் பெண்ணை மணப்பது என்பது தான் எதிர்ப்புக்கு உட்பட்ட ஒன்று. துபேயின் குடும்பத்தினர் அவரை வீட்டை விட்டுத் துரத்திவிட்டனர். ஆனாலும் துபே தன் காதலியை ஏமாற்றத்தயாராக இல்லை. இது இவர்களின் காதல் கதையில் ஒரு பகுதி.

தமிழ் ஓவியா said...


அடுத்த கட்டமான கடுமையான பகுதியைப் பார்ப்போம். மேல் சாதிப் பையன், ஏழ்மையில் உள்ள கீழ்சாதிப் பெண்களைப் பாலியல் வலையில் விழச்செய்து பிறகு அந்த பெண்களைக் கைவிட்டுச் செல்வது வழக்கமாக இருந் தது. ஆனால் துபே அத்தகைய தன்மை கொண்டவன் அல்ல என்பது சுக்மோனா வின் கருத்து, அவளின் கருத்து சரியாகவே இருந்தது. பார்ப்பனனாக இருந்தாலும், உண்மை நேர்மையுடன் சுக்மோனாவை மணக்கும் எண்ணத்தை வெளிப்படை யாக அறிவித்தார்.

சுக்மோனாவை மணப்பது பற்றி அவ ளின் தந்தையிடம் துபே, தன் எண்ணத் தைத் தெரிவித்தார். ஆனால் அவர் எண் ணத்தில் உயர்ஜாதிப் பையன்கள், கீழ்ஜாதிப் பெண்களுடைய கற்புக்கு பாதிப்பு ஏற்படுத்தி வாழ்வை அழிக்கக் கூடியவர்களாக இருந்தனர். துபே தன் வீட்டைவிட்டே வெளியேறி, அவரின் மகளை மணந்து கொள்ளத் தயாராக உள்ளதாகக் கூறியதும், சுக்மோனாவின் தந்தைக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வில்லை. அவர் சுக்மோனா, தோம் ஜாதிப்பெண் அவர் தோம் குடும்ப பழக்க வழக்கத்தில் வாழக்கூடியவள். இது பார்ப்பனர் வாழ்க்கை முறைக்கு, பன்றி வளர்ப்பவள் இவள் எப்படி பார்ப்பனப் பையனுடன் வாழ்வாள் நீ தோம் ஜாதிக்கு மாறிவிடுவாயா? என்று துபேயைப் பார்த் துக் கேட்டார்.

மதாய்துபே: நான் அப்படியே மாறி விடத் தயார் என்று பதிலளித்தார்.

தோம் சமூகமே இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. சுக்மோனாவை, துபே திருமணம் செய்து கொள்வதற்கு, தோம் சமூகத் தலைவர்கள் சில நிபந் தனைகளை முன்வைத்தனர். தோம் சாதிக்கு மாறும் சடங்குகளுக்கு உட்பட வேண்டும். ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி உணவை உண்ண வேண்டும். மது அருந்த வேண்டும். சுடுகாட்டில் பிணம் எரிக்கும் தோம் இனத்தவருக்கு உதவியாக இருக்க வேண்டும் கிராமத்தில் பிச்சை எடுக்க வேண்டும். தோம் பெண்கள் குளித்து வெளியாகும் தண்ணீரைக் குடிக்க வேண் டும், தோம் மக்கள் போல் பன்றி மேய்க்க வேண்டும், முழுங்கல் வெட்டி வரவேண் டும்.

மதாய் துபே, ஆச்சார பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவர். புலால் உண்ட தில்லை. மது குடித்ததில்லை. பிணம், அழுக்குத் தண்ணீர் போன்றவை சகிக்க முடியாதவை. ஆனாலும் சுக்மோனாவின் மேல் கொண்ட காதல், விதிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பற்றி கவலையடையச் செய்யவில்லை. நிபந்தனைகளை ஏற்று அவற்றின் படி நடந்து, தன் காதலில் வெற்றி கண்டார்.

இறுதியாக, உயர்ஜாதியிலிருந்து கீழ் ஜாதிக்கு மாறும் சடங்குகள் நடத்தப்பட் டன. அத்துடன், மதாய் துபே என்ற பெயர் மதாய் தோம் என்று மாற்றப்பட்டது. அடுத்து வந்த நாள்களில், எந்த வித வருத்தமுமின்றி தோம் வாழ்க்கையை தோம் கிராமத்தில் நடத்தி வந்தார். அவரை எவரேனும் சந்திக்கும் நேரத்தில், ஒரு பார்ப்பனருக்கு செலுத்தும் மரியாதை யுடன் விசாரித்தால், இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு ஒடுங்கி, அய்யா நான் தாய் துபே அல்ல, நான் மதாஸ் தொம்! என்று கூறுவார்.

பிறகு அவர் வாழ்ந்த சலீம்பூர் கிராம பார்ப்பன மக்கள் அவரால் அவர்கள் சமூகத்துக்கு ஏற்பட்ட களங்கத்தைச் சகித்துக்கொள்ள முடியாததால், துபே அந்தக் கிராமத்தை விட்டு, அதே மாவட் டத்தில் உள்ள கஜ்ராஜகன்ஜி கிராமத்திற்குச் சென்று விட்டார்.

ஒரு ஆங்கிலேய மன்னன், காதலுக்காக முடியைத் துறந்தான், ஷாஜகான் தன் காதலிக்கு தாஜ்மகாலைக் கட்டினான், துபேயிக்கு ஒரு ஆட்சி இல்லை, துறப்ப தற்கு ஆனால் தான் பிறந்த சமூகத்தின் கலாச்சாரத்தைத் துறந்தார். தன் பெருமை யையும், இனத்தையும் அடையாளம் காட்டும் சிறப்புகளைத் தன் காதலுக்காக முழுத்தியாகம் செய்தார்.

இது உண்மை நிகழ்ச்சி என்பதை நம்ப இயலாத நிலை ஏற்படலாம். ஆனால் இந்தக் காதலர்கள் சில பத்தாண்டுகளுக்கு முன் இருந்தார்கள். இன்றுள்ள ஜாதி கட்டுப்பாட்டைக் காட்டிலும் கடுமை யான 100 ஆண்டுகளுக்கு முன் இருந்த காலத்தில் மதாஸ் துபே, சாதி விலங்கைத் தகர்க்கும் மனத்திடத்தைப் பெற்றவர் என்பதை நிரூபித்தார்.

அந்த காதலர்கள் தங்கள் வாழ்நாளை இன்பமாகக் கழித்து 1965-ஆம் ஆண்டு அளவில் இறந்துவிட்டனர். அவர்களு டைய பிள்ளைகள் சோட்கிசசராம் கிராமத் தில் உள்ளனர், ஆனால் பெருமைமிக்க பெற்றோர்களுக்கான பெருமை சேர்க்கும் நினைவுச் சின்னத்தை அவர்கள் பெற்றி ருக்கவில்லை .

குறிப்பு: அந்த காதலரின் உண்மைக் கதையைப் படித்தவுடன், பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் குறிப்பிட்டு காட் டும் காதலனின் ஏக்க வரிகள் நினைவுக்கு வருகின்றன.
காதல் நெருப்பால் கடலுன்மேல் தாவுகின்றேன்

சாதி என்னும் சங்கிலி என் தாளைபிணைக் குதடி!

பாவேந்தர் பாடல் வரிகளில் குறிப் பிட்ட ஜாதி சங்கிலியை உடைத்து, இது உண்மையா என்று வியக்கும் வழியில் வாழ்ந்து காட்டிய மதாய் தோம் (துபே) சுக்மோனா இணையருக்கு நம் வீர வணக்கத்தை செலுத்துவோம்.

(நன்றி: தி இந்து 24-11-2013)

Read more: http://viduthalai.in/page2/75369.html#ixzz2tRBruE1J

தமிழ் ஓவியா said...


எது தமிழ்த் தேசியம்?சாதியை வளர்க்கும் தேசிய மெதுவும்
தமிழ்த் தேசிய மில்லை - சங்கத்
தமிழ்த் தேசிய மில்லை - இந்து

சாதியைக் காக்கும் எந்தத் தேசியமும்
செந்தமிழ்த் தேசியமில்லை - அதைத்
தமிழர் நேசிப்பது மில்லை!

பாக்கித்தான் வங்கமுள்ளடக்கிய இந்தியா
பழைய தமிழ்மொழியின் வீடு - அதைத்
திராவிட மென்றது வேத ஏடு - அன்றைய

திராவிட மென்ற தனித் தமிழ்ப் பாண்பாட்டை
திரும்பவும் மலரச் செய்வோமே - அதைத் தமிழ்த்
தேசிய மெனவும் சொல்வோமே!

ஆரியர்க்கு முந்திய, ஆரியக் கலப்பற்ற, அதனினு முயர்ந்த நாகரிகம் - அதுவே
உலகத்தின் முதல் நாகரிகம்- என்று

வரலாற்றாளர்கள் வாயாரப் புகழ்ந்த
சிறப்பினையுடைய நாகரிகம் சிந்து வெளித்
தமிழர்கள் வளர்த்த நாகரிகம்!

தமிழை வடக்கே அழித்தபின் ஆரியர்
தென்னகம் நோக்கி வந்தார் - அவர்க்கு
மன்னர்கள் புகலிடம் தந்தார் - இங்கே

தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம்
தமிழில் கிளைத்திடச் செய்தார் - தமிழர்மேல்
சாதிமத நஞ்சையும் பெய்தார்!

சாதிமதங்கள் தமிழர்கள் நம்மை
தனித்தனிக் குழுவாய் பிளக்கும் - தினமும்
சண்டை சச்சரவை வளர்க்கும் - அத்தீய

சாதி மதங்களைத் தேசியமெனில் அவை
தமிழரை அடிமையாக்கும் - தமிழ்
நாட்டையும் அழித்துத் தீர்க்கும்

திருத்தணி - குமரி சிறுநிலப் பகுதிக்குள்
தமிழகம் சுருங்கிய தெவரால்? - சாதி
மதங்களை வளர்த்தவர் தவறால்! - அதைத்

தேசிய மென்று கூறுவோர் இன்று
தமிழர்கள் ஒற்றுமை அழிப்போர் - தமிழர்
மொழியையும் பெயரையும் ஒழிப்போர்!- வீ. இரத்தினம், பெங்களூரு

Read more: http://viduthalai.in/page3/75372.html#ixzz2tRC9gGD8

தமிழ் ஓவியா said...


குஜராத்தில் ரூ.11க்கு மேல் நாள் வருமானம் உள்ளவர்கள் பணக்காரர்களாம்


ஓர் இணையதளத்தில்...

குஜராத்தில் ரூ.11க்கு மேல் நாள் வருமானம் உள்ளவர்கள் பணக்காரர்களாம்


குஜராத்தில் மோடி அரசு சார்பில் கடந்த டிசம்பர் மாதம் அரசின் இணையத்தில் உணவுப் பொருட்களுக்கான மானியம் பெறுபவர்கள் வறுமைக் கோட் டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது என் கிற அறிவிப்பில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 10.80க்குள் வருமானம் இருப்பவர்கள் மட்டுமே மான் யத்தில் உணவுப் பொருள் பெற தகுதி உள்ளவர்கள் என்கிற குஜராத் மாநில அரசின் அறிவிப்பு தெரிந் ததே. இந்த அறிவிப்பின்மூலம் குஜ ராத் மாநிலத்தில் உள்ள ஏழை மக்களின் ஏழ்மையைக் கேலி செய்வதாக காங்கிரசு செய்தி தொடர்பாளர் அஜய் மக்கான் கண்டித்துள்ளதும் அறிந்ததே.

இது தொடர்பாக தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள www.rs11.in என்கிற இணைய தளத்தில் நரேந்திர மோடியின் படத்துடன் கேள்வி பதில் பாணி யில் கருத்துப்படம் வெளியாகி உள்ளது. எந்த அளவில் பணக் காரன் என்பதை கேட்டு, சிப்ஸ் பாக்கெட் ஒன்று வாங்க முடிந்தால் அவன் மிகப்பெரிய செலவாளி என்றும், மாதம் ஒரு முறைக்கு மேல் சிப்ஸ் தின்றால் அம்பானி யுடன் தொடர்பில்லாதவர் என்று சொல்லிவிட முடியுமா? என்று கேட்பதுடன், சிப்ஸ் தின்னும் போது குளிர்பானம் அருந்தினா லும், ஒரே நாளில் இரு வேளை உணவு உண்டாலும் குஜராத் திலேயே அவன்தான் பணக்காரன் என்றும் கூறுவதாக உள்ளது.

மேலும், அவ்விணையத்தில் குஜராத் மாநிலத்தில் உண்மையான வாழ்வாதார நிலை என்பது ரூ.11க்கு ஒரு பாக்கெட் நொறுக்குத் தீனி, ஒரு குவளை தேனீர், பெண்கள் தலையில் போடும் ரப்பர் பேண்ட் மட்டுமே வாங்க முடியும் என் றும், ரொட்டி குருமா, குளிருக்கு சால்வை, மருந்து மாத்திரைகள் என்று மற்ற அத்தி யாவசியப்பொருட்கள் எதுவும் வாங்க முடியாது என்றும் குறிப் பிடப்பட்டுள்ளது. குஜராத்தில் கடும் உழைப்பிற்குப் பிறகு என்னதான் பெற முடியும் என்றால் 250கிராம் சர்க்கரை, இரண்டு முட்டைகள், இரண்டு ரொட்டிகள், 3கி.மீ.தூரத்திற்கு பேருந்தில் பயணம் என்கிற அளவில்தான் முடியும். இணையத்தின் தகவல்.

Read more: http://viduthalai.in/page3/75371.html#ixzz2tRCKTd1z

தமிழ் ஓவியா said...


தேவை சிந்தனை


உலகம தோனறய பனபே மனதன காடுகளல பசசை மாமசம சாபபடடு வாழநது வநதுளளான எனபதை படிததுளளோம. சககமுககக கல மூலமாக நெருபபை உணடாகக சமைதது சாபபடடனா. சைகை மூலமாகவே கருததுப பாமாறறம செயது வநத மனதன சல நூறறாணடுகளுககுப பனனரே பேசவும எழுதது வடிவைக கணடுபடிததும அசசுகள செயது படிககவும கறறுளளான.

உலகம தோனற பல லடசம கோடி ஆணடு களுககுப பனபே மனதன படிபபறவு பெறறு மனதக கடவுளகளான சவன, கருஷணன, ராமன முதலய வை கறபககபபடடு உளளன. கடவுளதான உலகததை உணடாககனான எனபது பததலாடடம அலலவா?

கடவுளுககு இவனைப போலவே மனைவகள, வைபபாடடிகள, பளளைககுடடிகளை வைதது அவைகளுககுத தனததனயாக இடமும, குடடித தேவாகளை உணடாகக அவைகளடம இவன வைததருநத கதத, வேல, அமபு முதலயவைகளை நடடு மககளைப பயமுறுதத தொழவைததுப பழைபபைத தேடிக கொணடுளளான.

மேலும இவாகளைப போலவே நாமம போடும / போடாத, மாமசம சாபபடும / சாபபடாத கடவுள களைக கணடெடுததுளளான. அதனபடியே இனங களையும பததுளளான. மனதன கடவுளகள பறந தநாளைக கொணடாடுவதால மனதன தான கடவுளைக கறபததுளளான எனபது உறுதயாகறது. மனதன கறபனைக கடவுளகளைக கறபககும முனனா கடவுள எனபதே இலலை. கடவுள ஒருவன இருநதருநதால மனதால இததனை நறம உயரம பணபுகள வேறுபாடுகள இருநதருககுமா? அதே போல நோயநொடிகள கூன, குருடு, செவடு போனற ஊனஙகள வநதருககுமா?

மனதனால கணடுபடிதத மனசாரம, எலகட ரானகஸ, தொலைககாடச, கணன, வமானஙகளை கடவுள அளககவலலை ஏன? ஆண, பெண கலவ செயயாமலேயே குழநதை பறகக வைததுளளான. ஆகவே கடவுளை மனதன தான கறபததுளளான.

காடடில வேடன கருஷணனைக கொனறுளளான. ராமன - லடசுமணன சரயூ நதயல வழுநது தற கொலை செயது கொணடுளளனா. மனதன இவை களை எலலாம தொநது கொணடால தான வாழ முடியாது எனககருதயே 19-ஆம நூறறாணடுவரை மககளுககுக கலவயைக கொடுககவலலை. சுதந தரததுககுப பன பளளகளை மூடியும முதலமைசசா ராஜாஜ காலததல பாதநேரம படிபபும பாதநேரம அபபனன குலததொழலைச செயயச சொனனா. அதுவரை சரசுவத வரவலலை.

தநதைபொயா இலலை எனறால காமராஜா வநது பளளககூடஙகளை தறககவடடிருககமாடடாகள. தறபோதும பறபடுததபபடட தாழததபபடட மககள முனனேறககூடாது எனபதறகாக வேலைவாயபபல தடை. கடவுள சலையை செயதும கோயலகள கடடி யவனை சலையைத தொடடால தடடு, அசசனை செயய கூடாதென மனுநதககதையைச சொலல உசசநதமனறததல தடைபெறறு உளளாகள.

ஓராணடு கோயலுககுப போய கோககை வைதது எதுவும நடவாதபோது மணடும மணடும அஙகு செனறு வருவதால எனன பயன? பணமும நேரமும வரயம, உன வாழநாளல இழபபைததானே பெறுகறாய.

சநத! செயலபடு. -_

- வணங்காமுடி, தருமபுரி

Read more: http://viduthalai.in/page4/75373.html#ixzz2tRCWfGfo

தமிழ் ஓவியா said...

நாத்திகம் நிலை நாட்டிய நாகேஸ்வரராவ்

- பி.இரத்தினசபாபதி

மாந்தர் இனத்தை மதியுடைய இனமாகக் காட்டுவது நாத்திகம். கடவுள் இல்லை எனத்துணிந்தவர்களுக்குக் கடவுளைத் தூக்கி நிறுத்துவோர் தந்த பெயர் நாத்திகர் அவர்கள் தந்த பெயரை ஏற்றுக்கொண்டு, நாத்திகத்தின் பகுத்தறிவு நெறியே பண்பட்ட நெறி _ சிந்தனைத் தெளிவுடைய நெறி என்பதைத் தம் வாழ்நாளில் எவ்விதச் சமரசத்திற்கும் இடங்கொடுக்காமல் எடுத்துரைத்தவர் தந்தை பெரியார்.

தம்மை நாத்திகர் என்று சொன்னால், ஆத்திகர் மிகப்பலராய் வாழும் சமுதாயத்தில் தமக்குக் கிடைக்கும் வாய்ப்பிற்கும் வசதிக்கும் பங்கம் நேருமென்று சமரசப்போக்கைக் கொண்டவர் பலர். ஆனால் வாழ்நாள் இறுதிவரை ஊடகங்கள் வாயிலாகவும் நேர்முக உரை யாடல்களிலும் தம்மை நாத்திகர் எனப் பெருமையுடன் அறிவித்தவர் அக்நெனி நாகேஸ்வரராவ் அவர்கள்.

கவர்ச்சியான தோற்றம், கடவுளர் வேடத்திற்கே பொருத்தமானவர் எனத்தேர்ந்தெடுக்கப்பட்ட முக வெட்டுக் கொண்டவர் நாகேஸ்வரராவ். எனினும் போலியாகக்கூடத் தம்மைக் கடவுள் பக்தர் என காட்டிக்கொள்ளாத கொள்கைப் பிடிப்பாளர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பினும் தமிழ்நாட்டில் பகுத்தறிவு பரப்பப்பட்ட வரலாற்றில் அவருக்குச் சிறப்பிடம் உண்டு.

தமிழ் ஓவியா said...

1951-இல் அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு நாடகம் திரைப்படமாக்கப்படுகிறது. இரண்டு முதன்மை ஆண் கதை மாந்தர்கள் அதில். ஒருவராக அந்நாளில் அண்ணாவிடம் நெருக்கமாக இருந்த கே.ஆர்.இராமசாமி நடித்தார் (ரத்னம்). இன்னொரு கதை மாந்தராக (சேகர்) நடிக்க அந்நாளிலேயே புரட்சி நடிகர் எனப்பட்டம் சூட்டப்பெற்றவர். அப்போதெல்லாம் திராவிட இயக்கக் கருத்துக்களையும், பகுத்தறிவுச் சிந்தனைகளையும் திரைப்படங்களில் வெளியிட்டுவிட இயலாது. தணிக்கைக் குழுவின் (சென்சார்) கூர்மையான கண்களை அவை உறுத்தும். 1954-_இல் வெளியான நடிகவேள் எம்.ஆர்.இராதா நடித்த ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் தந்தை பெரியாரின் சிலையைக் கூடக்காட்டுவதற்கு அன்றைய தணிக்கைக்குழு இசைவு தரவில்லையென்றால் 1951-_இன் நிலையைச் சொல்லவும் வேண்டுமோ! (அதனால் தான் மாற்றாக, புத்தர் சிலை காட்டப்பட்டதாம்)

அண்ணாவின் படமா? நமக்கேன் வம்பு என ஒதுங்கிக் கொண்டார் புரட்சி நடிகர். மறுத்து ஓடியதாக கே.ஆர். இராமசாமி அவர்கள் 1958 இல் திராவிட முன்னேற்றக் கழக மாநில மாநாட்டில் குறிப்பிட்டார். ஓர் இரவு தமிழகப் பகுத்தறிவு வரலாற்றில் அழியாத் தடம் பதித்த அண்ணாவின் திரை ஓவியம். பகுத்தறிவுக் கொள்கை களையும் பொதுவுடைமைக் கருத்துகளையும் பரப்புவ தற்காகப் படைக்கப்பட்டது ஓர் இரவு. நெருக்கடியான நேரத்தில் எதிர்ப்புக்கு உள்ளாகுமோ என அச்சப்பட்ட ஒரு கதை மாந்தராக நடிக்க 27 அகவை நிரம்பப் பெறாத ஓர் இளைஞர் முன்வந்தார். அவர் தாம் அக்னேநி நாகேஸ் வரராவ் 00 என்று தமிழ், தெலுங்குத் திரை உலகில் அழைக்கப்பட்டவர். புகழ் பெற்ற நடிகர்களெல்லாம் பயந்தோடிய போது துணிச்சலாய் பகுத்தறிவு பரப்பிய திரைப்படத்தில் நடித்த அவரை அன்றும் இன்றும் பகுத்தறிவாளர் உலகம் பாராட்டுகிறது.

ஓர் இரவும் அதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்னர் வெளியான அண்ணாவின் வேலைக்காரி யும் தமிழகப் பகுத்தறிவு வளர்ச்சி வரலாற்றில் திருப்புமுனைத் திரைப்படங்கள். அவ்வரலாற்றில் அழியாத் தடம் பதித்த பெருமை நாகேஸ்வரராவ் அவர்களுக்கு உண்டு.

தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களிலும் அவர் புகழ்க் கோபுரமாய் நின்றவர். 75 ஆண்டுகளாக 256 திரைப்படங்களில் நடித்தவர். அவர் நடித்த தேவதாஸ் இந்திய அளவில் புகழ்பெற்றது. அத்திரைப்படம் இந்தி மொழியில் ஆக்கப்பட்ட போது தேவதாஸ் பாத்திரத்தை (நாகேஸ்வரராவ்) திலிப்குமார் ஏற்று நடித்தார். இந்தி திரைப்பட உலகில் புகழ் உச்சத்தில் இருந்த நடிகர் திலிப்குமார், ஒரே ஒரு தேவதாஸ்தான் உண்டு. அவர்தான் நாகேஸ்வரராவ் என்றார் எனின் நாகேஸ்வரராவின் நடிப்பிற்கு வேறு சான்று வேண்டுமோ! அலட்டிக் கொள்ளாமல் அதே வேளை ஏற்ற பாத்திரத்தில் ஒன்றி அழுத்தமாக நடிப்பவர். அவர் நடித்த லைலா மஜ்னு 533 நாள்கள் ஓடி திரை உலகத்தில் சாதனை படைத்தது. 256 படங்களில் நடித்த நாகேஸ்வரராவ் 26 தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் சிறந்த நடிகர் என்று கருதி அழைக்கப்பட்டவர். இந்திய அளவிலும் மாநில அளவிலும் அவர் பெற்ற விருதுகள் பலப்பல. பல விருதுகளைப் பெற்ற அவர் தம் பெயரில் ரூ. 500000 (ரூபாய் அய்ந்து இலட்சம்) மதிப்பிலான விருதினை 2005 ஆம் ஆண்டு முதல் திரை உலகச் சாதனையாளர்களுக்கு வழங்கி வந்தார். அந்தப் பகுத்தறிவுப் பெருமகனார் கடந்த 22.1.2014 அன்று இயற்கை எய்தினார். நேரிலே காணும் வாய்ப்பு நீங்கி நினைவிலே எண்ணும் நிலை வந்து விட்டது. அருகியே காணப்படும் பகுத்தறிவாளர்களிடையே ஒருவர் மறைந்தமை பகுத்தறிவு இயக்கத்தவருக்குப் பேரிழப்பாகும். அப்பெருமகனாரிடம் அமைந்த பிறிதோர் அரிய பண்பு தாய்மொழிப் பற்று. பிறமொழி மோகங்கொண்டு தாய்மொழியைப் புறக்கணிக்க எண்ணும் தமிழர்கள் நாகேஸ்வரராவ் அவர்களின் மொழிப்பற்றினை அறிந்தாவது திருந்தட்டும்.

அனைத்துப் பகுத்தறிவாளர் - நாத்திகர்கள் சார்பில் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.குறிப்பு: நடிகர் நாகேஸ்வரராவ் மறைந்தபோது அவரைப்பற்றி எத்தனை எத்தனையோ தகவல்களை உலவ விட்டனர். ஆனால் அவர் தலைசிறந்த பகுத்தறிவு வாதி - நாத்திகர் என்று மட்டும் படுதாபோட்டு மறைத்து விட்டனர். இதுதான் இந்நாட்டுப் பத்திரிகா தருமம்.

Read more: http://viduthalai.in/page4/75374.html#ixzz2tRCoIC7W

தமிழ் ஓவியா said...


கடவுளை நம்புவோர் எத்தனை பேர்?

மக்கள் எந்த அளவுக்குக் கடவுள், மத நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பது பற்றிய ஒரு கருத்துக் கணிப்பு வெளி யானது. அதில், நீங்கள் எந்த அளவு மதப் பற்றாளராக இருக் கிறீர்கள்? என்ற கேள் விக்கு, ஓரளவு பற்று கொண்டுள்ளேன் என 49 சதவிகிதம் பேரும், எனக்கு மதப் பற்று இல்லை என 14 சதவிகிதம் பேரும், அதிக பற்று கொண்டுள்ளேன் என 45 சதவிகிதம் பேரும் பதிலளித்துள்ளனர்.

வழிபாட்டிடத்திற்கு அவ்வப்போது செல்வீர்களா? என்ற கேள்விக்கு, வாரத் தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை செல்வேன் என 31 சதவிகிதம் பேரும், வாரம் ஒரு முறை செல்வேன் என 38 சதவிகிதம் பேரும், மாதத்திற்கு ஒரு முறை செல்வேன் என 18 சதவிகிதம் பேரும் மாதம் ஒரு முறையாவது செல்வேன் என 9 சதவிகிதம் பேரும், இரு வாரத்திற்கு ஒரு முறை செல்வேன் என 4 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர்.

இன்றைய நாள்களில் இளைஞர் களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதா? என்ற கேள்விக்கு, சிலருக்கு உள்ளது என 45 சதவிகிதம் பேரும், அதிக மானவர் களுக்கு உள்ளது என 34 சதவிகிதம் பேரும், மிகச் சிலருக்கே உள்ளது என 21 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
18 வயது முதல் 45 வயது வரை யுள்ள இருபாலரையும் சேர்த்து 220 பேர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி களுக்கான பதில் இது.

- ஆதாரம்: தி இந்து, 16.9.2005

Read more: http://viduthalai.in/page5/75377.html#ixzz2tRDGiA4v

தமிழ் ஓவியா said...


பலியிடப்படும் பண்பாடு

- தொ. பரமசிவன், பண்பாட்டு ஆய்வாளர்


கோயில் பூசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல் போலும் வாயில் காத்து நிற்போர் வீட்டை வைத்து இழத்தல் போலும்!

பாஞ்சாலியை, கட்டிய கணவனே கொண்டுபோய் எதிரிகளிடம் சூதுக்குப் பணயமாக வைத்த காட்சியை விளக்கும் போது வெகுண்டெழுந்து பாரதி சொன் னது இது. ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு பண் பாடு உண்டு. அது அந்தச்சமூகத்தின் சுயமான அறிவு உற்பத்தி; அனுபவ உற்பத்தி!

பண்பாடு என்னும் சொல் பண்படு என்னும் சொல்லில் இருந்து வருவது. பண்படுத்தப்பட்ட நிலம் தான், அதிக விளைச்சலைத் தரும்.

ஊட்டச்சத்து மிகுந்த உணவை உற் பத்தி செய்யும். தீங்கு தராத ருசியைத் தரும். கரடு முரடாக, சமமில்லாமல் இருந்த நிலப்பரப்பைச் சமப்படுத்தி, நல்விளைச்சலுக்குப் பண்படுத்துவது என்பது ஒரு நாளில் நடைபெறுகிற சாதனை இல்லை. தலைமுறை தலை முறையாக அதற்கு உழைத்திருக்க வேண் டும். ஒரு நிலத்தைப் பண்படுத்தவே பல தலைமுறைகள் வேண்டும் என்றால், ஒரு சமூகத்தைப் பண்படுத்த எத்தனை தலை முறைகள் தேவைப்படும்?

அந்த அனுபவங்களின் பலனுக்குப் பெயர்தான் பண்பாடு. பண்பாட்டை இழப்பது என்பது நம் அறிவை இழப்ப தாகும.


தமிழ் ஓவியா said...

நம் முன்னோர்களின் அனுபவங்களை இழப்பதாகும். நம்முடைய அனுபவங் களில் உயர்வு தாழ்வு கற்பிக்கிற சில குப் பைகள் சேர்ந்திருக்கின்றன நண்பர்களே!
நாகரிகம் என்ற பெயரில் நாம் சந்திக்கிற இழப்புகள் இன்னும் நமக்கு உறைக்கவே இல்லை. உதாரணமாக ஒன்றிரண்டு பேசு வோம்... நல்லனவெல்லாம் நாம் கூடிச் சிந்திப்போம். கருப்பு நிறம் என்பது நம் நிலப்பரப்பின் சூழலியல் சொத்து.

சுட்டெரிக்கும் வெப்ப மண்டல வாசிகளுக்கு தோல் கருப்பாகதத்தான் இருக்கும், அப்படி இருந்தால் தான் அது ஆரோக்கியம். ஆனால் நமது இளைய தலைமுறை தங்கள் வருமானத்தில் பெருமளவு தோலை வெள்ளையாக்கச் செலவழிப்பது, அவாகள் தம் பண் பாடைப் புரிந்து கொள்ளவில்லை என் பதையே காட்டுகிறது.

நமது கடவுள்கள் கூட கருப்பபர்கள் தான். ஆனால் நாம் கருப்புத் தோலுடைய மணப்பெண்ணுக்கு அவளின் நிறத்தைக் காரணமாகக் காட்டி அதிக வரதட்சணை கேட்பது அவமானம் தானே?

கருப்பும், சிவப்பும் வெறும் நிறமாக இருந்தால்தான் சமூகத்துக்கு நல்லது. கருத்த தோலுடையவன் கீழ்ச்சாதிக்காரன், வறுமைப்பட்டவன், நாகரிகம் அற்றவன், படிக்கத் தகுதியற்றவன், அழகற்றவன்.

என்னும் கருத்தை உருவாக்கினால்தான் அரிசியைவிட அழகுக்கலவைகளை (க்ரீம்) அதிக விலை வைத்து விற்க முடியும் என்கிற வணிக துர்ப்புத்திக்கு நம் பணபாடு பலியாகிப் போனது.

பண்பாடு பலியாகிறது என்றால், நாமே பலியாகிவிட்டோம் என்று அர்த் தம். தமிழ்நாடு நிலநடுக்கோட்டை ஒட்டிய வெப்ப மண்டலப் பகுதி.

இங்கே வாழும் மனிதாகளுக்கு நீர்தான் முக்கியமான ஆதாரம். வெப்பம் போக்கிக்குளிர்விப்பதால் நீரைத் தண்ணீர் என்று அழைத்தனர் நம் முன்னோர். நீருக்கும், நிலத்துக்கும், தமிழர்களுக்கும் உள்ள உறவு பிரிக்க முடியாதது. நீரின் சுவை அது பிறக்கும் நிலத்தால் அமையும். நிலத்தால் திரிந்து போன நீரின் சுவையை மேம்படுத்தத் தமிழர்கள் நெல்லியினை ஒரு மருந்தாகப் பயன்படுத்தினர்.

கிணற்று நீர் உவர்ப்பாக இருந்தால் அதனுள் நெல்லி மரத்தின் வேர்களைப் போட்டு வைப்பது நமது பண்பாடு. நெல்லிக்காய் தின்று தண்ணீர்க் குடித்தால் இனிப்புச் சுவை தெரியும்.

நம் பாட்டன் விளைவித்த நெல்லிக்கு அமெரிக்கர்கள் காப்புரிமை கேட் கிறார்கள். ஒரு கூடை ஆப்பிளுக்கு ஒரு பெரு நெல்லி சமம் என்கிறது அறிவியல்.

நமக்கு நெல்லி உண்பது கேவலம். ஆப்பிள் உண்பது நாகரிகம். நெல்லியை இழக்கத் தயாராக இருப்பவர்கள் நீரைக் காப்பாற்றிக் கொள்ளப்போகிறார்களா என்ன? இயற்கையின் பேராற்றலில் திராவிடர்கள் நீரை முதன்மைப்படுத் தினர். திட உணவைவிட இளநீர், மோர், நீராகாரம் போன்றவையே நம் தட்ப வெப்பத்திற்குத் தேவையான உணவுகள.

நமக்கு வாழ்வாதாரமான நீரை எங் கிருந்தோ வந்த பன்னாட்டு நிறுவனங் களிடம் ஒப்படைத்து விட்டு, அவர்க ளிடமே தண்ணீரை விலைக்கு வாங்கிக் கொண்டு இருக்கிறோம். பாலைவிட நீரின் விலை இன்று அதிகம். உணவு விடுதிகளில் தண்ணீர் வைப் பதற்குப் பதில் இப்போது வெளிநாட்டுக் குளிர் பானங்களை வைக்கிறார்கள். கார மான உணவுக்கு ஈரமான நீரை அருந் தாமல், வேதியியல், பொருட்கள் கலந்த ஏதோ ஒரு பானத்தை அருந்துவது நாகரிக மாகி வருகிறது. கூலி கொடுத்து சூன்யம் வைத்துக் கொள்வது என்று வட தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு. பத்து ரூபாய் தந்து நாம் குளிர்பானத்தை வாங்கவில்லை. பத்து ரூபாய் தந்து நம் பண்பாட்டை விற்றுக் கொண்டிருக்கிறோம். அடிமை தேசத்தில் அடிமையாக இருப்பதைக்கூட சகித்துக் கொள்ளலாம். விடுதலை பெற்ற நாட்டில் அடிமையாக இருப்பதைவிட அவமானம் வேறென்ன இருக்கமுடியும்?

சோறும் நீரும் விற்பனைக்கு உரி யவை அல்ல! என்பது நம் பண்பாடு. பத்து ரூபாய் கொடுத்துத் தண்ணீர் வாங் குவது என்பது வெறும் காகித நோட் டோடு சம்பந்தமுடைய விஷயமல்ல.

காசு இருக்கிறவன் சுகாதாரமாக இருந்து கொள்வான், பணம் இல்லாதவன் எப்படியாவது கெட்டுப் போகட்டும் என்று சொல்கிற பணக்கார ஆதிக்கச் செயல் அது. என் தாகம் தீர்க்க இரண்டு ரூபாய் கோலி சோடாவோ, மோரோ, பதநீரோ போதுமானது. நான் செலவழிக் கிற அந்தத் தொகையும் என் சகோதர னுக்கே போய்ச் சேரும்.

- க. பழநிசாமி, தெ.புதுப்பட்டி (தமிழ் இலமுரியா டிசம்பர் 15, 2013, பக்கம் 10)

Read more: http://viduthalai.in/page5/75379.html#ixzz2tRDZSnOl

தமிழ் ஓவியா said...


கொய்யாசாப்பிடலாமே!


கொய்யாப்பழத்தில் ஊட்டச்சத்து அதிகம். ஆரஞ்சுப் பழத்திலிருக்கும் வைட்டமின் சி போல இதில் நான்கு மடங்கு அதிகம். இதைக் கடித்துச் சாப்பிடுவதால், பற்களும் ஈறுகளும் பலம் பெறுகின்றன. கொய்யாப் பழத்தால் குடல், வயிறு, ஜீரணப்பை, மண்ணீரல், கல்லீரல் ஆகியவை வலிமை பெறு கின்றன. உணவு ஜீரணமாவதற்கும் நல்லது.

இரவு உணவுக்குப் பின் நன்றாகக் கனிந்த கொய்யாப் பழங் களை சாப்பிட்டால் மலச்சிக்கலே இருக்காது. பல் முளைக்கும் குழந்தைகளுக்கு கொய்யாப் பழங்களை தினமும் கொடுத்தால் பற்கள், ஈறுகள் உறுதியாகும். கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை,களில் மருத்துவகுணங்கள் அடங்கி யுள்ளன. குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றது.

கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயத்தின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன. கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு. கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப் படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு, காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page5/75380.html#ixzz2tRDpQCfs

தமிழ் ஓவியா said...


புதிய பெயர் - பழைய கொடுங்கோல்

1935 வரை அகில இந்தியா என்று பேசி வந்த நான், வடநாட்டார் ஆதிக்கத்தை உணர ஆரம்பித்ததும் 1938-ல் திராவிட நாடு பிரிவினைக் கொள்கையை முக்கியக் கொள்கையாகக் கடைபிடிக்க ஆரம்பித்தேன். 1950 ஜனவரி 26ஆம் தேதிய பலம் 1947ஆகஸ்ட் 15ஆம் தேதியைப் போல் ஒரு விலாசம் மாற்றும் தினமேயாகும். அதே முதலாளிதான், அதே பணப் பெட்டிதான்; அதே தராசுதான்; அதே படிக்கல்தான், அதே சரக்குதான். அதே பித்தலாட்டம் தான். ஆனால், விலாசம் அதாவது டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டது மட்டும் மாற்றம் அடைகிறது. குடிஅரசு ஆட்சி என்கிற புதுப்பெயரால் பழைய கொடுங்கோல் ஆட்சியே மேலும் அதிக பலத்துடனும், மேலும் அதிகப் பாதுகாப்புடனும் 26ஆம் தேதி முதற்கொண்டு நடைபெறப் போகிறது. இந்த உண்மையைத் தெளிவாக உணரும் நாம் இதை ஏன் புரட்டு என்று எடுத்துச் சொல்லக் கூடாது? உண்மையை எடுத்துச் சொல்ல நாம் ஏன் பயப்பட வேண்டும்? அக்கிரமத்தை எடுத்துச் சொல்ல நமக்கேன் அச்சம்?
- தந்தை பெரியார் விடுதலை 20.01.1950

Read more: http://viduthalai.in/page5/75381.html#ixzz2tRE6Lx6d

தமிழ் ஓவியா said...


சிங்கப்பூரில் இவைகள் இல்லை...


காற்றை கெடுக்கும் தூசியில்லை
நாற்றம் அடிக்கும் கூவமில்லை
புவியை அழிக்கும் புகையில்லை
பொறாமை தழைக்கும் பகையில்லை
எங்கும் எதிலும் ஈ இல்லை
இங்கும் அங்கும் குப்பையில்லை
அடிமை எண்ணம் இங்கில்லை
அடிமைப் படுத்திட வாய்ப்பில்லை
முதுமக்கள் யார்க்கும் கவலையில்லை
எத்துயர் வந்தாலும் பயமில்லை
பேருந்து வாகனத்தில் நடத்துநரில்லை
வாகனச் சத்தம் கேட்கவேயில்லை
மாட்டு வண்டி பேருக்குமில்லை
ஆட்டோ ரிக்சா அறவேயில்லை
ஏசி இல்லாப் பேருந்தே இல்லை
ஓசிப் பயணம் இல்லவே இல்லை
எப்பொருளும் இங்கே விளைந்திடவில்லை
எதற்கும் இங்கே பஞ்சமேயில்லை
பிச்சைக்காரர் தொல்லையே இல்லை
பிக்பாக்கெட்காரன் பிரச்சினை இல்லை
அடையாளச் சீட்டின்றி நடமாட்டமில்லை
அணுகுண்டே விழுந்தாலும் உயிர்க்கழிவில்லை
ஆண்களின் ஆதிக்க வாலாட்டமில்லை
பெண்கள் உரிமைக்கு எத்தடையுமில்லை
தெருநாய்கள் தொந்தரவு இல்லை
கோமாதாக்கள் நடமாட்டம் இல்லை
ஆர்ப்பாட்டம் ஊர்வலம் நடப்பதேயில்லை
மறியல் உண்ணாநிலை ஒருபோதுமில்லை
கடையடைப்பு கண்ணீர்ப் புகை கண்டதேயில்லை
வேலை நிறுத்தம் வெட்டிப்பேச்சு நினைப்பேயில்லை
மின்கம்பி இணைப்புகள் புவிக்கு மேல் இல்லை
வரிசை ஒழுங்கை மீறுதலில்லை
வாழ்க்கைப் பயணம் கசந்திடவில்லை
படிக்காத மக்கள் எங்குமில்லை
உழைக்காது வாழ்ந்திட வழியேயில்லை
மனிதனை பிரிக்கும் பேதமில்லை
மதத்தின் ஆட்சி மகுடமில்லை
மந்திரி வந்தாலும் பாதை மூடவில்லை
அதிபர் ஆனாலும் ஆடம்பரமில்லை
சட்டத்தின் ஆட்சிக்கு தடையேயில்லை
சட்டத்தை மீறினால் மன்னிப்பேயில்லை
வாழ்க சிங்கப்பூர் - வளர்க சிங்கப்பூர்

- டாக்டர் க.அன்பழகன்

துணை இயக்குநர், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்

Read more: http://viduthalai.in/page5/75382.html#ixzz2tREIqVQg

தமிழ் ஓவியா said...


உலகெங்கும் நாறும் மோடி பித்தலாட்டம்


பாஜக பிரதமர் வேட்பாளர் என்று நாட்டை வலம் வரும் மோடியின் பேச்சை அமெரிக்க அதிபர் ஒபாமா கவனிப்பது போல் மோடியின் படத்தைப் போட்டு மோசடியில் ஈடுபட்ட வெட்கக்கேடான செயலை இலண்டன் பிபிசி தோலுரித்துக் காட்டி உள்ளது. ஏற்கெனவே இந்நாட்டில் உள்ள ஊடகங்களில் மட்டுமே வெளிவந்த தகவலாக இருந்தது. தற்போது உலகே கேலிக்குறியுடன் மோடியை நோக்கும் வண்ணம் பிபிசி ஊடகத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

28 சனவரி 2011 இல் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பேச்சை கவனிக்கும் போது எடுக்கப்பட்டு வெளியான ஒபாமா படத்தை தற்போது மோடியின் பேச்சை கவனிப்பதுபோல் சித்தரித்து போலிப் படத்தை முகநூல்மூலம் வெளியிட்டு பலரும் உண்மை என நம்பி பகிர்தலும் நடந்துள்ளது. இந்த மோசடியை இலண்டன் பிபிசி நிரூபித்து உள்ளது.

இதே தகவலை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சிஆர் பாட்டீல் மோடியின் ஆதரவாளரான இவர் படத்தின் தன்மை உண்மை என நினைத்து முகநூலில் பகிர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த மோசடி குறித்து என்டிடிவி, இந்தியா டுடே உள்ளிட்ட இந்திய ஊடகங் களும் வெளிச்சம்போட்டுக்காட்டி உள்ளன.

படத்தின் உண்மையும், பொய்மையும் மேலே தரப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page8/75384.html#ixzz2tREpNcpP

தமிழ் ஓவியா said...


தண்ணீர் ஒரு தகவல்

உண்ணத் தொடங்கியதுமே வயிற்றில் உணவை சீரணிக்கும் திரவம் சுரக்க ஆரம்பமாகி விடும். அத்தருணத்தில் நீர் அருந்தினால் அது சீரணத் திரவத்துடன் சேர்ந்து சீரணப் பணியைப் பாதிக்கச் செய்யும். சாப்பாட்டுக்கிடையே நீர் அருந்துவதைக் கூடுமான வரை தவிர்ப்பதே நல்லது.

Read more: http://viduthalai.in/page8/75385.html#ixzz2tRF0h4Wx

தமிழ் ஓவியா said...


பேய் மூடத்தனத்தை விரட்டு பி.சி. சர்க்கார் மகள் நடித்த திரைப்படம்


பேயை விரட்டுங்கள் (பூட்அட்ப்ஹாட்) என்கிற வங்க மொழிப்படத்தை இயக்குநர் அனுபிரட்டா தத்தா இயக்கி உள்ளார். மவ்பானி சர்க்கார் பகுத்தறிவாளராக நடித் துள்ளார். மெட்ராஸ் கபே படத்தின் நாயகன் அரிஜித் தத்தா சுவையான பாத்தி ரத்தில் நடித்துள்ளார். இப் படம் வெறுமனே மூடத் தனத்தைப்பரப்பும் பேய்க்கதை சொல்லும் படமன்று என்றும், வெகு மக்களை சிந்திக்கத்தூண் டும் படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை என்றும்கூறப்படுகிறது.

பேங்கியோ பிக்ஞான் ஜுக்திபடி சமிதி வங்காள பகுத்தறிவாளர் அமைப் பின் முன் னோடி பிரபிர் முகர்ஜி. இவர் பல நேரங்களில் மூட நம்பிக்கையாளர்களுடனான நேரடி விவாதத்தில் பங் கேற்று மூடநம்பிக்கை யினை தோலுரித்துக்காட்டி உள்ளார். இத்திரைப் படம் குறித்து பிரபிர் முகர்ஜி கூறும்போது, இந்த படம் நம்பிக்கையையும், தொழில் நுட்பத்தையும் கொண்டே எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

படத்தில் இயக்குநர் அனுபிரட்டா தத்தா கூறும் போது இந்த படம் வழக்க மான பேய் படம்போல் எடுக்கப்படவில்லை. பேய் குறித்த நம்பிக்கை உள்ள வருக்கும், பகுத்தறிவாளருக் கும் இடையே உள்ள வாதங்களை உள்ளடக்கி முற்றிலும் புதுமையான முயற்சியாக இப்படத்தை எடுத்துள்ளேன்.

இளமைக் காலந்தொட்டே பகுத்தறி வாளர் பிரபிர் முகர்ஜி எழுதிய பேய் என்று சொல் லப்படுவது ஒன்றும் இல்லை(“Bhoot Bole Kichhu nei”) என்கிற புத்தகம் உள் ளிட்ட ஏராளமாக அவரு டைய புத்தகங்களையும், கட்டுரைகளையும் படித் துள்ளதாலும், வேடிக்கை யான பேய் படங்கள், சஸ் பென்ஸ், சாகச படங்களைப் பார்த்தும் சாதாரண பேய்க் கதை சொல்லும் படமாக இல்லாமல் மாறுபட்ட கோணத்தில் எடுத்துள்ளேன் என்று கூறுகிறார்.

படத்தின் பகுத்தறிவாள ராக பாத்திரம் ஏற்று பேய் மாயையை உடைத்து எறி யும் மவ்பானி மேஜிக் நிகழ்ச் சிகளில் செய்ததுபோல் பற் பல இடங்களில் திடீரென தெரிவதும், பின் மாயமா வதுமான காட்சிகள் படத் தில் அவருக்கு கைகொடுத் துள்ளன. இந்த படத்தில் பகுத்தறிவாளர்களின் வாதத்தில் நின்று மதக் கருத்துக்களைத் தகர்க்கும் வண்ணம் என் பாத்திரம் அமைந்துள்ளது.

நான் நினைப்பது என்னவென் றால், பேய்கள் குறித்த எண் ணத்தை காண்பதைவிட அறிவைக் கொண்டே எண் ணிப்பார்க்க வேண்டும் என் கிறார் மவ்பானி.

பல்வேறு அதிசய படங்களை இயக்கிய பரன் பண்டியோபாத்யா கூறும் போது, இந்த படம், வங் காளத்திரைப்படங்களெல் லாம் காதல் படங்கள் என் பதை முறியடித்துள்ளது என்கிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/75443.html#ixzz2tXLPVtnh

தமிழ் ஓவியா said...


மோடியின் ராஜ்ஜியத்தில் காதலர்கள் பட்டபாடு பஜ்ரங்தள வெறியர்களின் அட்டூழியம்

அகமதாபாத்,பிப்.16- பஜ்ரங்தளம் மற்றும் விஸ்வ இந்து பரிஷத்(வி.எச்.பி) அமைப் பினர் கடந்த 14.2.2014 அன்று காதலர் தினத்தை கொண்டாடிய காதலர்கள் மீது அழுகிய தக்காளிகளை எறிந்தார்கள்.

குஜராத்தின் அகமதா பாத்தில் உள்ள சபர்மதி ஆற்றின் அருகே வெறியர் கள் இவ்வாறு செய்தனர். அப்போது காதலர்கள் தங் களைக் காப்பாற்றிக் கொள்ள தப்பி ஒடினர்.

அப்போது பெருமளவில் திரண்ட பஜ் ரங் தள அமைப்பினர் காத லர்களின் வாகனங்களைப் பறிக்க முயன்றனர். இந்த அட்டூழியம் குறித்து காவல் நிலையத்தில் ஏதும் புகார் செய்யப்படவில்லை. சபர் மதி ஆற்றில் நூற்றுக்கணக் கான காதலர்கள் குவிந்தி ருந்தனர். அவர்கள் காதலர் தினத்தை கொண்டாடுவதற் காக அங்கு வந்திருந்தனர்.

காதலர் தினத்தை எதிர்த்து பஜ்ரங்தளம் அமைப்பின ரும் வி.எச்.பி.யினரும் அக மதாபாத் நகரில் போராட் டம் நடத்தினர். நகர பஜ்ரங் தள தலைவரான ஜ்வாலித் மேத்தா காதலர்களைக் கடு மையாக வசை பாடினார். காதலர் தினத்தை பல மாண வர்கள் வரவேற்றனர்.

சில மாணவர்கள் மட்டும் பஜ் ரங்தள அட்டூழியத்திற்கு பயந்து அவர்களுடன் வந் திருந்தனர். இதுகுறித்து அந்த வெறி யர்கள் கூறுகையில், எங்களது போராட்டத் திற்குச் சில மாணவர்கள் ஆதரவு தந்தார்கள் என்று பெருமை பொங்க கூறிக் கொண்டனர்.

இந்த வெறியர்கள் தாக் குதல் நடத்தியபோதும் பல காதலர்கள் சபர்மதி ஆற்றில் குவிந்து தங்களது துணை யோடு பேசி மகிழ்ந்தனர். காதலர்களை தாக்கிய பஜ்ரங் தள வெறியர்களும், வி.எச். பி.யினரும் பின்னர் தங்களது வெறி அடங்காமல் காதலர் தின அட்டைகளை தாக்குதல் நடத்திய இடத்திலேயே எரித்தனர்.

காதலர்கள்மீது தாக்குதல்

அகமதாபாத் மட்டு மின்றி, ஜம்மு, அய்தராபாத் உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் பஜ்ரங்தளம் மற்றும் ஆர்.எஸ்.எஸ். பரி வார அமைப்பினர் காதலர் கள் மீது தாக்குதல்களை நடத்தினர்.

Read more: http://viduthalai.in/page-8/75424.html#ixzz2tXNc1Ssq

தமிழ் ஓவியா said...


பேராசிரியரின் இன முழக்கம்


- குடந்தைக் கருணா

திமுகவின் 10-ஆவது மாநில மாநாட்டினை துவக்கி பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரையில், இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணை யற்ற சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியாரைப் பற்றி, இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும், கூறிய கருத்துகள், சிறப்பானவை; இன்றைய கால கட்டத்திற்கு தேவை யானவை.

பெரியாரின் சுய மரியாதை இயக் கம் துவங்கி, அந்த உணர்வை நமக் குத் தரவில்லை என்றால், அண்ணா இல்லை; கலைஞர் இல்லை; நாமெல் லாம் இல்லை என்றாரே பேராசிரியர், அது அங்கே கூடியிருந்த லட்சோப லட்சம் தொண்டர்களுக்கு மட்டு மல்ல; தமிழகத்திலே வாழும் பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களாக இருக்கும் அனைவருக்கும் பொருந்தும்.

பெரியாரின் சுயமரியாதை இயக் கம், இன விடுதலை, வர்ணாசிரம எதிர்ப்பு, மனித நேயம் அனைத்தும் மனிதனை, மனிதனாக ஆக்கும் செயல்பாடு என்பதை பேராசிரியர் வரிசைப்பட எடுத்துக்கூறி, மாநாட் டிற்கு ஒரு புதிய சிந்தனையை விதைத் தார்.

வரும் நாடாளுமன்றத் தேர்த லில், நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது அரசியல் நோக்கத்தைவிட, சமுதாய நோக்கில் தான் எனப் பேராசிரியர் கூறியது பதவியை நோக்கி மட்டும் கட்சியில் சேரும் பலருக்கும் ஓர் எச்சரிக்கை! தமிழ் நாட்டின் அரசியல் நட வடிக்கைகள், கட்சிகளுக்கிடையே யான போட்டியாக அல்லாமல் ஆரியர் திராவிடர் போராட்டமாகத் தான் நடைபெற்று வருகிறது.

அதனால் தான், திமுகவை அழித் திட ஊடகங்களும், பார்ப்பனர் களும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்தப் பின்னணியை, தனது பேச்சின் மூலம், இனமானப் பேரா சிரியர் அன்பழகன், திமுகவின் தொண்டர்களுக்கு, குறிப்பாக, இளை ஞர்களுக்கு, வகுப்பு எடுத்தது போல், கூறியுள்ளார்.

பெரியாரின் சிந்தனைகளை நெஞ் சில் ஏந்தி, பேராசிரியரின் இன முழக்கம் செயல்படுத்திட இளைஞர் கள் திரளட்டும்.

Read more: http://viduthalai.in/page-2/75465.html#ixzz2tdADox97

தமிழ் ஓவியா said...


இலங்கையில் நடந்த போர்க்குற்றம் சர்வதேச அளவில் விசாரணை


அய்.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் நவநீதம்பிள்ளை பரிந்துரை

கொழும்பு, பிப்.17-இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் - இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி கட்ட போரில் பெரும் அளவில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. அப்பாவி தமிழர்களை கொத்துக் கொத்தாக ராணுவம் சுட்டுக் கொன்றது. சித்திரவதை செய்தும் கொன்றுள்ளது. இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றம் பற்றி சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. இந்த கோரிக்கையை அய்.நா மனித உரிமைகள் ஆணைய தலைவர் நவநீதம் பிள்ளை பரிந்துரை செய்துள்ளார்.

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு, விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே இறுதி கட்ட போர் நடைபெற்றது. இதில், குழந் தைகள், பெண்கள் உள்பட ஒரு லட்சத் திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். மனித உரிமைகள் மீறப்பட்டு, போர்க்குற்றம் புரிந்ததாக இலங்கை மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட ஏராளமான நாடுகள் குற்றம் சாட்டின.

இது குறித்து அய்.நா மனித உரிமை கள் ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை 74 பக்க அறிக்கையை அய்.நா. சபைக்கு அனுப்பியுள்ளார். அதில், இலங்கையில் நடைபெற்ற போரின்போது, மீறப்பட்ட மனித உரிமைகள் குறித்து விசாரணை செய்ய சர்வதேச அளவில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.

இலங்கையில், தீவிரவாத தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காணா மல் போனவர்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டும். சிறுபான்மையினரான தமிழர்களை கொன்று குவித்தவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும் என்று பரிந் துரை செய்துள்ளார்.

ஏற்கெனவே, இறுதி கட்ட போரில் 40 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப் பட்டதாக, இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்களை அய்.நா. சபை கண்டித்து இருந்தது. ஆனால் இதை இலங்கை மறுத் தது. உள்நாட்டு விவகாரத்தில் வெளி நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது. நாட்டில் அமைதியை ஏற் படுத்தும் முயற்சிக்கும் மறுகுடியமர்த் தும் பணிக்கும் இது பாதிப்பை ஏற் படுத்தும் என்றும் இலங்கை கூறுகிறது.

இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெறும் அய்.நா மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக மூன் றாவது தீர்மானத்தை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் இலங்கையில் மனித உரிமைகள் விஷயத்தில் முன்னேற்றமின்மை. உள்நாட்டுப் போர் முடிந்த பின்னர், செய்ய வேண்டிய மறுசீரமைப்பு வேலைகள் சரியாக நடைபெறாதது குறித்து இலங்கையை கண்டிக்கும் என தெரிகிறது. இந்த இரண்டு தீர்மானங் களுக்கும் இந்தியா ஆதரவு தெரிவித்து இருந்தது.

இலங்கை சென்ற இங்கிலாந்து பிரதமர் போர்க்குற்றத்திற்கு எதிரான இலங்கையின் உள்நாட்டு விசாரணை தோல்வி அடைந்ததாக குற்றம் சாட் டினார். இந்நிலையில் நவிபிள்ளையின் அறிக்கை இலங்கை அரசுக்கு நெருக் கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் உடன டியாக எந்தவித பதிலையும் தரவில்லை. போர்க்குற்றத்தை விசாரிக்க பன்னாட்டு சுதந்திர விசாரணை குழு அமைந்து விடுமோ என்று இலங்கை அரசு அச்சப்படுகிறது. இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையே வேற்றுமைகளை அகற்ற அதிக காலம் வேண்டும் என்று அமெரிக் காவின் ஆதரவை கோரியுள்ளது. மேலும், அய்.நா மனித உரிமைகள் தீர்ப்பாயம் மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் விடு தலைப்புலி ஆதரவாளர்களின் கட்ட ளைக்கு ஏற்ப இலங்கைக்கு எதிராக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டி யுள்ளது.

Read more: http://viduthalai.in/page-2/75462.html#ixzz2tdB0IIqV

தமிழ் ஓவியா said...

ஆச்சாரியார் வழியை அம்மையார் பின்பற்ற வேண்டாம்

இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம், வாரீர்! பிப்ரவரி 28ஆம் தேதி போராட்டம்!

தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந3) துறை அரசு ஆணை (நிலை) எண் 92 நாள் 11.9.2012இன்படி, +2 படித்து முடித்து சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் இதர சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளைப் படிக்கும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் கிருத்துவமதம் மாறிய ஆதி திராவிடர் மாணவர் மாணவியர்களுக்கு முழுக் கட்டணத்தையும் மத்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ் மாநில அரசு வழங்கும். இது 2011_-2012ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்தது.

ஆண்டு வருவாய் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் பெற்றோர்களின் வருமானம் இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் நிபந்தனை.

இத்தகு நிதி உதவியின் காரணமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் பல்லாயிரக்கணக்கில் பொறியியல் கல்லூரிகள் உட்பட படித்துப் பயன்பெற்றனர்.

ஆண்டாண்டுக் காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட, தீண்டத்தகாத மக்களாக வெறுக்கப்பட்டவர்கள் கல்வி வாய்ப்புப் பெற்றால்தான் சம உரிமை பெற்றவர்களாக வாழ முடியும் என்பது யதார்த்தமானதாகும்.

இந்நிலையில் ஏற்கெனவே உள்ள அரசாணை 92-க்குப் பதிலாக அரசாணை எண் 106 மற்றும் 107 என்று இரு ஆணைகள் 4.12.2013 நாளிட்டு ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறையால் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய ஆணைகளின்படி ஏற்கெனவே சுயநிதிக் கல்லூரிகளுக்கான முழுக் கட்டணங்களையும் அரசே ஏற்கும் என்பதற்குப் பதிலாக, அரசு கல்வி நிறுவனங்களில் நிர்ணயிக்கப்பட்ட தொகை மட்டுமே சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் இருபால் மாணவர்களுக்கும் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டுக் கட்டணம் ரூபாய் 40 ஆயிரம், தனியார் சுயநிதிக் கல்லூரி ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டுக் கட்டணம் ரூ.70 ஆயிரம் என்ற நிலையில் இதுவரை 70 ஆயிரம் ரூபாயை முழுமையாக அரசே ஏற்றுக்கொண்டதற்குப் பதிலாக அரசு ஒதுக்கீட்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட வெறும் ரூ.40 ஆயிரம் மட்டும்தான் தனியார் கல்லூரிகளுக்கும் அளிக்கப்படும் என்பதுதான் புதிய ஆணையின் சாரமாகும்.

இந்தப் புதிய ஆணையின் காரணமாக அரசு செலுத்தும் தொகை போக மீதியை மாணவர்களே கட்டும் நெருக்கடியும், சுமையும் ஏற்பட்டுள்ளது. கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்கள் சுயநிதிக் கல்லூரிகளிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

தமிழ்நாடு அரசின் இந்த முடிவும், போக்கும் சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானதாகும். இவ்வளவுக்கும் மத்திய அரசால் அளிக்கப்படும் உதவி நிதி இது.
மாநில அரசு மூலமாக, மத்திய அரசு ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் கல்விக்காக நிதியை வழங்குகிறது. இடையில் நந்தியாக இருந்து தமிழ்நாடு அரசு தடை செய்வது ஏன்? மத்திய அரசு கொடுக்கும் முழு நிதியையும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அளிக்காமல், அந்த நிதியை வேறு துறைகளுக்குச் செலவிடுகிறார்கள் என்ற குற்றச்சாற்றும் எழுந்துள்ளது. சமூகநீதித் திசையில் அ.இ.அ.தி.மு.க. அரசு தொடர்ந்து தவறான அணுகுமுறையை மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

ஆண்டாண்டுக் காலமாக கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்கள், முதல் தலைமுறையாக கல்லூரிகளின் படிக்கட்டுகளை மிதிக்கும்போது கால்களைத் தட்டிவிட வேண்டாம் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம். ஆச்சாரியார்தான் (ராஜாஜி) கல்வியில் கைவைத்தவர் என்ற கெட்ட பெயர் உண்டு. அந்த ஆச்சாரியார் வழியை அம்மையார் பின்பற்ற வேண்டாம். முறையான வேண்டுகோளுக்குத் தமிழ்நாடு அரசு செவி சாய்க்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இல்லையெனில், இது குறித்துக் களம் அமைக்க கழகம் தயங்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு, பார்ப்பனர் திரு வேங்கடாச்சாரியாரை நியமிக்கும்படி பிரதமர் நேரு கூறியும் ஏற்காமல், தமிழர் என்.சோமசுந்தரத்தை நியமித்த முதல்வர் ஓமாந்தூரார் ராமசாமி (ரெட்டி)யாரை தாடியில்லாத ராமசாமி (நாயக்கர்) என்று பார்ப்பனர்கள் பட்டங் கட்டியது உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

குண்டுவெடிப்பும் ஆர்.எஸ்.எஸ்.தலைவரும்


இந்தியாவில் நடைபெற்ற சில பயங்கரமான குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தக் குண்டுவெடிப்பு வழக்கில் காவித் தீவிரவாதிகளின் நேரடித் தொடர்பு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டு சாது பிரஞ்யா தாக்கூர் என்ற பெண் சாமியார், அசிமானந்தா, இந்திய ராணுவப் படையில் உயரதிகாரியாகப் பொறுப்பு வகித்த சிறீகாந்த் புரோகித் மற்றும் தயானந்த் பாண்டே போன்றோர் கைதாகி சிறையில் உள்ளனர்.இவர்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸ்.சின் நேரடித் தொடர்பிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சம்ஜோதா விரைவு தொடர்வண்டி குண்டுவெடிப்பில் கைதான அசிமானந்தா என்ற சாமியார் ஹரியானா மாநிலம் அம்பாலா சிறையில் உள்ளார்.

அசிமானந்தா சாமியார், இன்று மத்தியில் ஆட்சி அமைக்கத் துடித்துக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சியை இயக்கிக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் தான் தீவிரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமானவர் என்று பேட்டி கொடுத்துள்ளார். வழக்கம்போல இது ஒரு பொய்யான ஆதாரமில்லாத செய்தி என்றும் சில தேச விரோத சக்திகளுக்கு வளைந்து கொடுக்கும் கட்சிகளின் சதிச் செயல் என்றும் பா.ஜ.க. கூறியது. இந்தச் செய்தி பற்றி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், காரவான் இதழுக்காக இந்தச் செய்தியைச் சேகரித்த இணை ஆசிரியர் லீனா கீதா ரகுநாத் கூறியபோது,``இந்தச் செய்தி அனைத்தும் உண்மையே. இது அவரிடம் இருந்து வாய்மொழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எந்த விசாரணைக்கும் இந்தக் குரல் பதிவைக் கொடுக்கத் தயார் என்றார். ஹரியானாவில் அம்பாலா சிறையில் உள்ள அசீமானந்தாவை சிறை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் சந்தித்துப் பேட்டி எடுத்தேன். மேலும் பேட்டியை அவரது அனுமதியின் பேரில்தான் குரல் பதிவு செய்தேன் என்று கூறியுள்ளார். காரவன் இதழ் அசிமானந்தாவின் குரல் பதிவை 7.2.2014 அன்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ் ஓவியா said...

பால்நெஞ்சு பதறலையா?


- ந.தேன்மொழி

சாணிக்குப் பொட்டிட்டு
சாமியென்று கூத்தாடி
வாசலிலே குத்தவைச்சு
வாழை இலையிட்ட
எனதருமைச் சகோதரியே!

சாணியதை நீமிதித்தால்
சாமியென்று சொல்வாயா?
சாணமென்று சொல்வாயா?
மலையுடைத்துப் பாறையாக்கி
சிலைவடித்து சாமியென்றாய்

நட்டகல்லையும் விடவில்லை
நெடுமரமாய் விழுந்திட்டாய்
அம்மன்தாலி அறுந்ததென
அய்யன் சொன்னான் கோவிலிலே
ஆளுக்கொரு புதுத்தாலி
அணிந்தீர் அவசரமாய்
தன்தாலி அறுமென
தெரியாத சாமியிடம்
அடகு வைத்தாய்
உன்தாலியை சகோதரியே!

காவியுடைக் கயவர்கள்
காலடியில் சரணம்
சாமியென்று சொல்லி
அம்மணமாய் அவனாட
அவன்முன்னே மண்டியிடும்
மானமிழந்த சகோதரியே

பக்தியோடு பாம்புக்குப்
பால்வார்க்கும் பெண்ணினமே
பச்சிளம் குழந்தையை
பக்தியென்ற பேராலே
பாவியவன் ஏறிமிதிக்க
பால்நெஞ்சு பதறலையா?
பார்த்தவிழி துடிக்கலையா?
இப்படியொரு வேண்டுதலை
சாமியவள் கேட்டாளா?
கேட்கும் அவளுன்
சாமியா சகோதரியே?
எத்தனை சாமிகள்
எத்தனை ஆயுதங்கள்
பெண்மானம் தனைக்காக்க
எந்தசாமியும் வரவில்லை

எத்தனை ஆயுதங்கள்
இருந்தாலும் என்ன
எந்தசாமியும் நம்மைக்
காப்பாற்ற வாராது
சாமிக்கே காவல்
நாம்தானடி சகோதரியே
உணர்ந்து கொள்ள
இன்னும் எத்தனை
பெரியார் தேவை
சொல்லடி சகோதரியே!

தள்ளுபடி
வியாபாரம்

அர்ச்சகர்
ஆனந்த கிருஷ்ணனுக்கு ஆகம விதிகளெல்லாம் அத்துப்படி!
ஆனாலும் அதெல்லாம் இப்போது தள்ளுபடி!
ஆனந்த சயனத்திலிருக்கும் ஆதிகேசவனுக்கு வியர்க்கிறதாம்?!
ஏ.சி. எந்திரம்
கண்டுபிடித்தது
மாட்டுக்கறி உண்ணும்
மிலேச்சன் கேரியர்!
கருவாட்டு வியாபாரி
கந்தசாமியிடம்,
அதில பாருங்கோ,
ஆண்டவனுக்கு....ஹி ஹி
என்று சொல்லி ஆட்டையப் போட்டு
அதை கர்ப்பக் கிரகத்தில்
போட்ட பின்னே அலுப்பில்லாமல் போகிறது...
அர்ச்சகர் கேரியர் !

- க.அருள்மொழி, குடியாத்தம்.


கடவுள் எதற்கு?

காலைக் கடன்களைக்
கழிப்பது முதல்
இரவு படுக்கை விரித்து
இல்லாளுடன் இணைவது வரை
எல்லா வேலைகளையும்
நானேதான் செய்கிறேன்!
இடையில் எனக்கு
கடவுள் எதற்கு?

- கு.நா.இராமண்ணா, சீர்காழி


ராசிக்கல்

சாலையில்
வாகனப் புழுதியினூடே
தார்ப்பாய் விரித்து
ராசிக்கல் விற்பவருக்கும்,
தொலைக்காட்சி நிறுவனத்தின்
குளிர்சாதன அறையிலமர்ந்து
கேமராவுக்கு முன்
ராசிக்கல் விற்பவருக்கும்,
இடையே உள்ள
பொருளாதார இடைவெளியில்
நழுவி விழுகிறது
ராசிக்கல் மீதான நம்பிக்கை.

- பா.சு.ஓவியச்செல்வன், சென்னை


அவன் கடவுளாம்!

மண்ணைத் தின்பானாம்!
வெண்ணை தின்பானாம்!
பெண்ணைத் தின்பானாம்!
அவன் பெயர் கண்ணனாம்!
அவன் கடவுளாம்! நான் சொல்லல...
நான் சொல்லல...
நான் சொல்லவே இல்லை!

- ஞா.சந்திரகாந்த், திருச்சி

தமிழ் ஓவியா said...

புதிய முறையில் சிக்கன மின்சாரம்


இன்றைய உலகில் மின்சாரத்தின் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. அதற்கான உற்பத்தித் திறனோ மிகவும் குறைவாக உள்ளது. இத்தகு நிலையில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தைத் தயாரித்தனர். இதில், கிரிஸ்டலைன் சிலிகான் என்ற விலை உயர்ந்த பொருளும், பிளாட்டினத்தைவிட 10 மடங்கு அதிக விலை கொண்ட SpiroOmeTAD என்ற பொருளும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மாற்றுப் பொருளாக கேட்மியம் சல்பைட் பயன்படுத்தி குறைந்த விலையில் தயாரிக்கப்படும் சோலார் பேனல்களின் உற்பத்தித் திறனோ மிகவும் குறைந்த அளவில் உள்ளது.

தற்போது பெரோஸ்கைட் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முறையினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இது, பூமியில் அதிக அளவில் கிடைப்பதுடன், விலையும் மிகவும் குறைவு. பெரோஸ்கைட்டைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் சோலார் பேனல்கள் மிகவும் மெல்லியதாக இருப்பதால் பெரிய கட்டிடங்களில் வெயிலை மறைக்கப் பொருத்தப்படும் கருப்புக் கண்ணாடிக்குப் பதில் இதனைப் பயன்படுத்தலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். சாதாரண சோலார் பேனல்களைவிட இரு மடங்கு மின்சாரத்தை உருவாக்கி நீண்ட தூரத்துக்கு எந்தவிதப் பாதிப்புமின்றிக் கடத்தும் சிறப்பினை பெரோஸ்கைட் பேனல்கள் பெற்றுள்ளமை இதன் தனிச்சிறப்பு.

ஒரு வாட் மின்சாரத்துக்கு 46 ரூபாய் என்ற இன்றைய சோலார் பேனல்களின் விலையினை 31 ரூபாய்க்குள் கொண்டு வந்தால் உலகில் உள்ள அனைத்துக் கார்களும் பெட்ரோலை விட்டுவிட்டு சோலார் கார்களாக மாறிவிடும்.

இன்ஹேபிடேட் என்ற அறிவியல் பத்திரிகை பெரோஸ்கைட் பேனல்கள் விற்பனைக்கு வந்தால் ஒரு வாட் மின்சாரம் 6 ரூபாயாகிவிடும் என்றும், சயின்ஸ் டெக் டெய்லி என்ற தொழில்நுட்பப் பத்திரிகை நாம் நினைத்துப் பார்க்க முடியாத மின்சாரப் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளன.

ஒரு ஃபிலிம் போன்ற தகட்டில் பெயிண்ட் அடிப்பது போல இதனை உருவாக்கிவிடலாமாம். அடுத்தகட்ட வளர்ச்சியில், இது பேனலாக விற்பனை செய்யப்படாமல் சோலார் பெயிண்ட்டாக மாறவும் வாய்ப்பு உள்ளதாம். காருக்குப் புதுசா பெயிண்ட் அடித்தாலே போதும்..., பின்னர் பெட்ரோல் போடும் வேலையே இருக்காதாம்.

தமிழ் ஓவியா said...

பூப்பெய்தாத சிறு பெண் சிவனுக்கா?

- திராவிடப்புரட்சி

பூப்பெய்தாத சிறு பெண் சிவனுக்கு_ கடவுளுக்கு எப்படித் திருமணம் செய்துவைக்கப்படுகிறாள் என்பதைக் கீழ்கண்ட செய்திகள் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம். இளகிய மனம் கொண்டோர் படிக்கக்கூடாத கொடுமை இது. பல பெண்கள் தமது மூடநம்பிக்கைகளின் காரணமாக தங்கள் மகள்களுடைய கன்னிமையை தமது கடவுளர் விக்கிரகங்களுள் ஒன்றுக்குத் தாரை வார்த்துத் தந்து அர்ப்பணிக்கிறவர்களாக இருக்கிறார்கள். அந்தப் பெண்ணுக்குப் பன்னிரெண்டு வயது ஆன உடனேயே, அந்த விக்ரகம் இடம் பெற்றுள்ள வழிபாட்டுத் தலம் அல்லது மடத்துக்கு அவளை அழைத்துக்கொண்டு சகலவிதமான மரியாதைகளுடன் போவார்கள். அந்தப் பெண்ணுக்குத் திருமணம் செய்விக்கப்படுவதற்கு முந்தைய நல விழாவொன்றை அவளது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒன்றுகூடி எடுக்கின்றனர்.

அவ்விடத்தின் கதவுக்கு வெளிப்பக்கமாக, மிக கடினமான கருங்கல்லால் ஆன ஒரு சதுரமான பீடம் ஓர் ஆள் உயரத்திற்கு அமைக்கப்பட்டிருக்கும். அதைச் சுற்றிலும் மரப்பலகைகளினால் ஆன தட்டிகள் வைக்கப்பட்டு அதனுள் பீடம் கண் மறைவாக இடம் பெற்றிருக்கும். இவற்றின் மீது பல எண்ணெய் விளக்குகள் வைக்கப்பட்டு அதனுள் அவை இரவில் எரிக்கப்படும். விழாவுக்காக மரப்பலகைகளை பட்டுத் துணித் துண்டுகளால் அலங்கரித்திருப்பார்கள். வெளியே உள்ள மக்கள் உட்புறம் நடப்பவற்றைக் காணமுடியாதபடி அத்துணிகள் உட்புறம் செருகப்பட்டு மறைப்பாக அமைக்கப்பட்டிருக்கும். மேலே சொல்லப்பட்ட கருங்கல்லின் மேல், குனிந்த நிலையில் இருக்கும் ஒரு மனிதனின் உயரத்திற்கு மற்றொரு கல் இருக்கும். அதன் நடுவே உள்ள துளையில் கூர்முனையுள்ள ஒரு குச்சி செருகி வைக்கப்பட்டிருக்கும்.

அக் கன்னிப்பெண்ணின் தாயார், தனது மகளையும் உறவுக்காரப் பெண்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு மரப்பலகைகளால் ஆன அந்த இடத்திற்குள் போய்விடுவாள். பிரமாதமான பூசைகளுக்குப் பின் உள்ளே நடந்த நிகழ்வு பார்வையில் படாததால் எனக்குச் சொற்பமான அறிவே உள்ளது, அந்தப் பெண், கல் துளையுள் செருகப்பட்டிருந்த கூர்முனையுள்ள குச்சியைக் கொண்டு தனது கன்னித்திரையை தானே கிழித்துக்கொள்வாள். கசியும் குருதியை அந்தக் கற்களின் மேல் சிறிய துளிகளாகத் தெளித்துவிடுவாள். அத்தோடு அவர்களின் விக்கிரக ஆராதனையும் நிறைவடையும்.

கண்ணால் கண்ட விவரங்களை இவ்வாறு பதிந்திருப்பவர் துவார்த்தே பார்போசா.

மேற்கண்ட செயல் மூலம் நமக்குத் தெரியவருவது, கடவுளான சிவனின் பிரதிநிதிக்கு, பூப்பெய்துவதற்கு முன்னரே அப்பெண் திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கிறாள் என்பதே. இது வெளிப்படையாக ஆண்குறி (லிங்க) வழிபாட்டுடன் தொடர்புடையதாக இருக்கிறது. சிவனுக்கு இத்தகைய பெண்களைத் திருமணம் செய்து வைப்பதற்குச் சமமான ஒரு சடங்காக இது கருதிக்கொள்ளப் பட்டிருக்கக்கூடும் என்று துவார்த்தே பார்போசா தெரிவிக்கிறார்.

பிற்காலத்தில், ஒரு சுபயோக சுபதினத்தில், இதர ஆலய ஊழியர்கள் அனைவரின் முன்னிலையிலும் இந்தச் சடங்கு நிகழ்த்தப்பட வேண்டும் என்று காட்டாயமாகியிருக்கிறது.

ஆயிரக்கணக்கான பருவமெய்தாத சிறு குழந்தைகளைப் பாலியல் வல்லுறவு கொள்ளவைத்துள்ள இந்துக் கடவுள்களை நினைத்தால் இவற்றைக் கடவுள்களாக ஏற்றுக்கொள்ள முடியுமா? நாகரிகமடைந்த இந்தக் காலத்திலும், இந்து மதம் குறித்த புரிதல் இல்லாமல், தன்னை இந்துவாக _ பெருமையாகக் கருதும் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! முகநூலில் இந்தக் கொடூர செய்தியைப் பதிவு செய்திருந்தேன். அதனைப் படித்த சில தோழர்கள் இதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்கிறார்கள்!

இதற்கான ஆதாரம், முனைவர் கே.சதாசிவன் அவர்களின் ஆய்வு நூலான தமிழகத்தில் தேவதாசிகள் என்ற நூலில் உள்ளது.

அந்த நூலை அவர் சாதாரணமாக கதை வடிவில் வெளியிடவில்லை என்பது கூடுதல் சிறப்பு. நூற்றுக்கணக்கான ஆதாரங்களை அள்ளிக் கொடுத்துள்ளார் நூலில். இந்த நூலை எழுதியுள்ள கே.சதாசிவன் அவர்கள் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை மேனாள் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், கலைப்புல ஆசிரியர் குழு. இவருடைய எம்.ஃபில் மற்றும் முனைவர் பட்டப்படிப்புகள் தேவதாசி முறை பற்றியவை. சமூகவியல் மற்றும் புதைபொருள் இயல் ஆகியவற்றிலும் இவர் கல்விபுல பட்டங்கள் பெற்றவர்.

தேவதாசிகள் தொடர்பாக 145 கட்டுரைகள் எழுதியுள்ளார். 20ஆ-ம் நூற்றாண்டின் படைப்புத்திறன் படைத்த அறிவுஜீவிகள் 2000 பேரில் ஒருவர் என கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் 2001ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டவர்.