Search This Blog

28.2.09

இலங்கை போரை நிறுத்துக 5 கண்டங்களைச் சேர்ந்தவர்கள் போர்க்குரல்!

இலங்கையில் உடனடியாகப் போரை நிறுத்தி விட்டு தமிழர்கள் வாழும் பகுதி களில் தன்னாட்சி அதி காரத்துடன் கூடிய அரசை அமைக்கப் பேச்சு வார்த் தைகளைத் தொடங்க வேண்டும் என்று 5 கண்டங்களைச் சேர்ந்த 50 கட்சிகள் அங்கம் வகிக்கும் ஃபோர்த் இன் டர்நேஷனல் என்ற அமைப்பு இலங்கை அரசைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

ஆம்ஸ்டர்டாம் நகரில் பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற்ற ஃபோர்த் இன்டர்நேஷனல் அமைப் பின் பன்னாட்டுக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்படுவதற்குக் காரணமான போரை இலங்கை அரசு உடனே நிறுத்தவேண்டும். விடு தலைப்புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து கொள்ள வேண்டும். தமிழர்கள் வாழும் பகுதி களில் தன்னாட்சி அதி காரத்துடன் கூடிய இடைக்கால அரசை ஏற் படுத்துவதற்கான பேச் சுகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் உழைப்பாளர் கட்சி களின் தலைவர்களான நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்று அத்தீர் மானத்தில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

இந்தத் தீர்மானத் தைக் கொண்டு வந்து நிறைவேற்றிய உழைப் பாளர் கட்சிகள் அனைத் தும் மெக்சிகோ, இலங்கை, ஜப்பான், பிரான்ஸ், ஜெர் மனி, இங்கிலாந்து, இத்தாலி, அமெரிக்கா, தென் னாப்பிரிக்கா, கனடா, பிலிப் பைன்ஸ், பிரேசில், கிரீஸ், போர்ச்சுகல், அல் ஜீரியா, ஸ்வீடன், டென் மார்க் உள்ளிட்ட நாடு களில் செயல்பட்டு வருபவை ஆகும்.

இலங்கையைச் சேர்ந்த நவசம சமாஜ கட்சித் தலைவர் முனைவர் விக்ரமபாகு கருண ரத்னே என்பவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இலங்கை இனப்படு கொலை குறித்து விவா திக்கப்பட்டது. வன்னிப் பகுதியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப் படுவது குறித்து கருண ரத்னே விரிவாக விளக்கினார். அங்கு நடைபெறும் நிகழ்வுகள் குறித்துப் பல் வேறு நாடுகளின் தலை வர்களும் விளக்கங் களைக் கேட்டுத் தெளிவு படுத்திக்கொண்ட பிறகே தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. பிரான்ஸ் நாட்டின் தொழிற்சங்கத் தலைவர் பியரி ரோசர், பெல்ஜியம் நாட்டின் தொழிற்சங்கத் தலைவர் எரிக் டவுசைன்ட் ஆகியோரும் இத் தீர்மானத்தில் கையெழுத்திட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

--------------- "விடுதலை" 28-2-2009

இட ஒதுக்கீடு - இன்றைய நிலை என்ன?

இட ஒதுக்கீடு என்பது சமூகநீதி என்ற பொருளில் இன்று பரவலாகப் பேசப்படுகிறது. இது உண்மைதான். மக்கள் தொகையில் மிகப்பெரும்பான்மையினரான தாழ்த்தப்பட்ட மக்கள், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோர் சமூக நிலையில் கீழே தள்ளப்பட்டுள்ளனர்.

இது மதத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட ஜாதி அமைப்பு முறை என்னும் திட்டமிட்ட சதியால் உருவாக்கப்பட்ட அவலமான நிலை.

கல்வி என்பதுதான் இருளை விரட்டி வெளிச்சத்தைத் தரும் உன்னதக் கருவி. ஆனால், பெரும்பாலான மக்களான இவர்களுக்கு கடவுளைக் காட்டி, மதத்தைக் காட்டி, சாஸ்திரத்தைக் காட்டி கல்வி மறுக்கப்பட்டது. இருட்டுப் பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய் உருட்டித் தள்ளப்பட்டனர்.


இந்த மக்கள் விடுதலை பெற வேண்டுமானால், வளர்ச்சி பெறவேண்டுமானால், அவர்களின் சமூக நிலை உயரவேண்டுமானால், கல்வி வாய்ப்பு முன்னுரிமையாக அளிக்கப்படவேண்டும்; அரசுப் பணிகளில் உரிய வாய்ப்பு அளிக்கப்படவேண்டும். இதனைத்தான் சமூகநீதி (Social Justice) என்று கூறி வருகிறோம்.


நேற்று (27.2.2009) சென்னை தேவநேய பாவாணர் நூலகக் கட்டடத்தில் நடைபெற்ற, நீதியரசர் திரு. ஏ.கே. ராஜன் அவர்களால் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழாவுக்குத் தலைமை வகித்த - திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சமூகநீதி என்ற சொல் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் கூறப்பட்டு இருப்பதை எடுத்துக்காட்டினார்.

We, the people of India having solemnly resolved to constitute India into a Sovereign Socialist Secular Democratic Republic and to secure to all its citizens: Justice, social economic and political; Liberty of thought, expression, belief, faith and worship; Equality of status and of opportunity; and to promote among them all.

Fraternity assuring the dignity of the individual and the unity and integrity of the nation... என்ற அரசமைப்புச் சட்டத்தின் பகுதியை எடுத்துக்காட்டி சமூகநீதிக்கு (Social Justice) முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளதை எடுத்து விளக்கினார்.

சமூகம், பொருளாதாரம், அரசியல் என்று தனித்தனியாக அரசமைப்புச் சட்டத்தில் பகுத்துக் காட்டி கூறப்பட்ட பிறகு, சமூகநீதி என்பதில் பொருளாதாரம் என்ற அளவுகோலைக் கொண்டு வந்து திணிப்பதில் என்ன நியாயம் என்ற அறிவார்ந்த வினாவை எழுப்பினார்.


நேற்று நடைபெற்ற அந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய நீதியரசர்கள் பி. சண்முகம், ஏ.கே. ராஜன், பேராசிரியர் சச்சிதானந்தம் ஆகியோரும், உச்சநீதிமன்றம் புதிதாகத் திணித்துள்ள கிரீமிலேயர் என்ற பொருளாதார அளவுகோல் என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று நிறுவினர்.

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைத் திணிப்பவர்கள் திறந்த போட்டியில் (Open Competition) அதே அளவுகோலைக் கொண்டுவர மறுப்பது ஏன்? அங்கும் இந்த அளவுகோலைக் கொண்டுவரவேண்டும் என்ற ஒரு கருத்தை வலியுறுத்தினால், அதற்கான மக்கள் கருத்தை ஒன்று திரட்டினால், கிரீமிலேயர் என்ற பேச்சின் பக்கமே தலை வைத்துப் படுக்கமாட்டார்கள். நீதியரசர் ஏ.கே. ராஜன் அவர்கள் தெரிவித்த இந்தக் கருத்தினை சமூகநீதியாளர்கள், பிரச்சாரகர்கள், நாடெங்கும் கொண்டு சென்றால், நற்பயன் விளைவிக்கும். இந்தக் கருத்தினை தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களும், கழகச் சொற்பொழிவாளர்களும் தொடர்ந்து பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கின்றனர் என்றாலும், ஒரு பரவலாக அனைத்துத் தரப்பினரும் - தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிந்தனையாளர்களும், தலைவர்களும், எழுத்தாளர்களும் ஒரு தீவிரத் தன்மையுடன் மக்கள் மத்தியிலே கொண்டு செல்வது சரியானதாகவிருக்கும்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கக்கூடிய ஜஸ்டிஸ் திரு. கே.ஜி. பாலகிருஷ்ணன் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பொருளாதார அளவுகோல் (கிரீமிலேயர்) கொண்டுவரப்படவேண்டிய காலம் வந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளதைக் கவனத்தில் கொண்டால், வருமுன் தடுக்கும் நோக்கத்தோடு தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், சமூகநீதியாளர்களும் இணைந்து பலமான குரலை நாடு அதிரும் அளவுக்குக் கொடுத்தால்தான் சமூக அநீதியின் படையெடுப்புத் தடுக்கப்படும்.

சமூகநீதிக்கான அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்ட பகுதிகள் சாதகமாகவிருந்தாலும், அவற்றிற்குத் தவறான வியாக்கியானங்களைக் கொடுத்து, திரிபு செய்பவர்கள் நீதிபதிகளாகவே இருக்கின்றனர் என்ற கருத்தையும் தமிழர் தலைவர் பதிவு செய்யத் தவறவில்லை.

சட்டம் என்பது வியாக்கியானம் செய்யப்படும் தன்மையைப் பொறுத்துத்தான் உள்ளது என்று தந்தை பெரியார் அவர்கள் பல்லாண்டுகளுக்கு முன்பாகவே தொலைநோக்கோடு குறிப்பிட்டதையும் இந்த நேரத்தில் கவனிக்கவேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தை நீதிபதிகளிடமிருந்து காப்பாற்றவேண்டும் என்ற ஒரு நிலை உருவாகியிருப்பது - கவலைக்குரிய ஒன்றாகும்.

இட ஒதுக்கீட்டின் காரணமாக பலன் பெற்றவர்களே கூட, இந்தப் பிரச்சினையில் இப்பொழுது எழுந்து நிற்கும் பிரச்சினையின் ஆபத்துகளைப் புரிந்துகொள்ளாமலிருப்பது - இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு சாதகமான தன்மையாகும்.

இட ஒதுக்கீடு காரணமாக, கல்வி பெற்றதையும், உத்தியோகம் பெற்றதையும் மறந்துவிட்டு, அப்படி பெற்றது என்பது தமது தகுதிகள் குறைவாக பிறரால் மதிக்கப்பட நேரிடும் என்ற தவறான எண்ணத்தில், தாழ்வு மனப்பான்மையில்தான் அவ்வாறு நடந்துகொள்கின்றனர்.

பாமர மக்களைப் புரிய வைப்பதைவிட, படித்தவர்களை (பாசாங்கு தூக்கக்காரர்களை) புரிய வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டிய கடமையும் சமூகநீதியாளர்களுக்குக் கூடுதல் சுமையாக இருந்து வருகிறது.

நேற்றைய நூல் வெளியீட்டு விழா - பல வகைகளிலும் புதிய எழுச்சியை, உணர்ச்சியை உருவாக்கிக் கொடுத்தது என்றே சொல்லவேண்டும். நூலாசிரியர் நீதிபதி ஏ.கே. ராஜன் அவர்களால் எழுதப்பட்ட சமூகநீதி தொடர்பான அந்த ஆங்கில நூல் தமிழில் மொழி பெயர்க்கப்படவேண்டும் என்று தமிழர் தலைவர் அவர்களும், நீதியரசர் பி. சண்முகம் அவர்களும் கூறிய கருத்து செயல்படுத்தப்பட்டால், வெகுமக்கள் மத்தியில் சமூகநீதி உணர்வுகள் பரவிட வெகுவாகத் துணை புரியும் என்பதில் அய்யமில்லை.


-------------------- "விடுதலை"தலையங்கம் 28-2-2009

பாரதியஜனதா தூக்கிப் பிடிக்கும் பிதாமகனின் பாரதிய பண்பாடு இதுதான்.

முட்டுச் சந்தில் பா.ஜ.க.



பாரதிய ஜனதாவின் அரசியல் ஒரு முட்டுச் சந்தில் நின்று கொண்டு இருக்கிறது.

அதன் முக்கிய கூட்டணி கட்சி என்பது அய்க்கிய ஜனதா தளம்; அதன் செய்தித் தொடர்பாளர் சிவானந் திவாரி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்:

நாங்கள் பா.ஜ.க.வின் கூட்டணியில் இருந்தாலும், அத்வானியை முன்னெடுத்துச் செல்வதை ஏற்பதாகயில்லை என்று கறாராகவே கூறியிருக்கிறார்.

பா.ஜ.க.வோ 15-ஆவது மக்கள வைத் தேர்தலில் தங்கள் கட்சிக்கான பிரதமர் வேட்பாளராக அத்வானியை முன்னிறுத்தியுள்ளது.

இதற்கிடையே முன்னாள் குடியரசு துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் பிரதமராவற்கான வேட்பாளர் தானே என்று மார்தட்டி நிற்கிறார், எனக்கு அந்தத் தகுதியில்லையா? என்று கேட்கிறார்.

இந்தியாவில் இருக்கக் கூடிய தொழிலதிபர்கள், பணத் திமிங்கலங்கள் - ரத்தன் டாட்டா, அனில் அம்பானி, சுனில் மிட்டல் போன்றவர்கள் - நரேந்திரமோடிதான் பிரதமராக வர வேண்டும் என்று கொடி பிடிக்கின்றனர்.

மக்களவைக்குத் தேர்தல் நடைபெற்று தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பிரதமர் பதவியை, முன்னதாகவே அறிவிப்பது என்ன ஜனநாயகம்? என்ற கேள்வியும் இன்னொரு பக்கத்தில் எழுந்துள்ளது. இங்கு என்ன அதிபர் தேர்தலா நடக்கிறது?

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முதல் குற்ற வாளியாக இருக்கக் கூடியவர் - இந்தியாவுக்கான பிரதமரா? என்ற வினா விவேகம் படைத்தவர்கள் மத்தியில் எழுந்து நிற்கிறது. குற்றச்சாற்று என்றால் சாதாரணமானதல்ல - இ.பி.கோ 147,153(ஏ) 149, 153(பி) மற்றும் 505 - கலவரம் விளைவித்தல், மக்களிடையே மத மோதலை உருவாக்குதல்; சட்ட விரோதமாகக் கூடுதல், ஒரு சமூகத்துக்கு விரோதமாக இன்னொரு சமூ கத்தைக் குற்றம் செய்யத் தூண்டுதல் - இது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பவர் தான் இந்தியாவின் பிரதமர் என்றால் இதைவிடத் தலைக்குனிவு வேறு எதுவாகத்தான் இருக்க முடியும்?

இந்தக் கல்யாணத் திருக்குணங்கள் உள்ளவர்தான் இந்தப் பாரதப் புண்ணிய பூமிக்கு மிகப் பொருத்தமான பிரதமர் என்கிறது சோ கூட்டம்!

பாபர் மசூதியை இடிக்கச் சொல்லி அத்வானி தூண்டுதல் செய்து உரையாற்றியதற்கு வீடியோ சாட்சியமெல்லாம்கூட உண்டு.


இந்தியாவில் இருக்கும் நீதிமுறைக் குறைபாடும், நிருவாகத்தின் ஊனத்தாலும்தான் இது போன்ற மனிதர்கள் எல்லாம் சிறையில் இருப்பதற்குப் பதிலாக வீதியிலே உலா வந்து கொண்டி ருக்கிறார்கள்.

தனிப்பட்ட பண்புகளை எடுத்துக் கொண்டாலும் - அத்வானியின் மருமகள் இவருக்குக் கொடுத்த சான்றிதழே போதுமானது. முன்னாள் பிரதமர் வாஜ்பேயிக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.என். சுதர்சனுக்கும் அவர் எழுதிய கடிதம் இதோ:

கனத்த மனதுடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். பாரதிய ஜனதா புதிய தலைவராக அத்வானி தேர்வு செய்யப்பட்டார் என்று கேள்விப்பட்டதும், சில பழைய நினைவுகள் என் மனதில் நிழலாடின. அந்தச் சம்பவங்களை வார்த்தைகளால் என்னால் விளக்க முடியாது.

ஒவ்வோர் இந்தியனும், ஒவ்வோர் இந்துவும் சமூகத்தில் உள்ள அவமானத்தால் தலை தொங்கவிட வைக்கும் நிகழ்ச்சிகள் அவை. பொருளாதார ரீதியிலும், ஒழுக்கரீதியிலும், மற் றும் ஒவ்வொரு வழியிலும் அத்வானி ஒரு முழுமையான ஊழல்வாதி. நல்ல நடத்தையில் லாத அவரைக் கட்சியில் இருந்து நீக்குவதற்குப் பதிலாக அவரைக் கட்சித் தலைவர் ஆக்கியுள்ளீர்கள். அவரது நடவடிக்கைகள் பற்றி பொது மக்களுக்கு இன்னமும் தெரியாது.

இன்று குறிப்பிடும் விஷயங்கள்பற்றி ஏற்கெனவே தங்களுக்குத் தெரிவித்துள்ளேன்.

இந்தத் தகவல் வெளியே வந்தால் பாரதிய ஜனதா பற்றிய கவுரவமும் தகர்ந்து போகும். மாமனாருக்கும் மருமகளுக்கும் இருக்க வேண்டிய நல்லுறவு மீதான நம்பிக்கையைப் பொது மக்கள் இழந்து விடுவார்கள். அத்வானி மாமனராக இருந்த போதிலும் அந்த உறவின் புனிதத்தை ஒரு போதும் புரிந்து கொண்டதில்லை. என்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கொடுமைப்படுத்தினார். பொது வாழ்வில் அவர்பற்றிய மதிப்பீட்டுக்கும், வீட்டில் அவர் நடந்து கொள்ளும் முறைக்கும் சம்பந்தமேயில்லை

(ஆதாரம்: Times of India 29.11.2004)


பாரதியஜனதா தூக்கிப் பிடிக்கும் பிதாமகனின் பாரதிய பண்பாடு இதுதான்.

அத்வானி - சிவசேனைத் தலைவர் பால்தாக்கரேயின் மோதல் இன்னொரு பக்கத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. மும்பைப் பொதுக் கூட்டத்திற்குச் சென்ற அத்வானி சிவசேனைத் தலைவர் பால்தாக்கரேயைச் சந்திப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை - இதுகுறித்து பல்வேறு யூகங்கள் பேசப்படுகின்றன.

தேசியவாத காங்கிரசுடன் தனி ஆலாபரணத்தை சிவசேனா தலைவர் நடத்திக் கொண்டிருக்கிறார்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை போயஸ் தோட்டத்தின் கதவு கருணை காட்டாதா என்று கண் விழித்துக் காத்திருக்கின்றது பா.ஜ.க..

பா.ஜ.க.வின் இந்திய செயலாளர் திருநாவுக்கரசர் பச்சையாகவே கட்சியின் ஆசையை மனந்திறந்து வெளியிட்டுள்ளார்.

வலுவிழந்து போன காங்கிரசுக்கு அழைப்பு விடுக்காமல் அடுத்து ஆட்சி அமைக்கும் பா.ஜ.க.வை அழைத்திருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார். பா.ஜ.க. மாநில வழக்கறிஞர்களின் கூட்டத்திலேயே இப்படி மனந் திறந்திருக்கிறார்.

பா.ஜ.க.வுடன் அதிமுக கூட்டணி அமைத்து 27 இடங்களை வென்றோமே என்று பழைய நெல்லைக் குத்திக் காட்டுகிறார்.

அதிமுக பொதுச் செய லாளர் வெளிப்படையாக காங்கிரசுக்கு அழைப்பு விடுத்த நிலையிலும், அம்மா - தாயே! என்று யாசகம் கேட்கும் அளவுக்கு பா.ஜ.க. பட்டுப் போய்க் கிடக்கிறது.

காங்கிரசையே கூடுதல் சுமை - எக்ஸ்ட்ரா - லக்கேஜ் என்று சொன்ன செல்வி ஜெயலலிதா, பா.ஜ.க.வை எந்த இடத்தில் நிற்க வைத்துப் பார்ப்பார் என்று தெரியாதா?

தேர்தல் முடிவுகளுக்குப் பின் அம்மையார் எடுக்கும் முடிவு வேறாகயிருக்கலாம்; ஜெயலலிதாவைப் பொறுத்த வரையில் பதவிக்காக சுயநலனுக்காக எந்த கோட்டையும் தாண்டக் கூடியவராயிற்றே! அதுவும் அக்கட்சியில் இருந்த - இன்னும் சொல்லப் போனால் - அம்மையாரை அரியணையில் அமர வைக்க ஒரு கட்டத்தில் காரணமாகவிருந்த திருநாவுக்கரசருக்குத் தெரியாமலா இருக்கும்?

கொள்கை ரீதியாகப் பார்க்கும் பொழுது இந்துத்துவா அணியில் செல்வி ஜெயலலிதா இருப்பதுதான் நூற்றுக்கு நூறு சரியாக இருக்க முடியும்.

தேர்தலில் இலாபம் என்ற கண்ணோட்டத்தில் பா.ஜ.க. வின் கூட்டு இடிக்கிறதே - என்ன செய்ய!

இன்னொன்றும் இதில் உண்டு. பிரதமர் நாற்காலியின்மீது ஜெயலலிதா அம்மையாருக்கு ஒரு கண்ணிருக்கிறது. தேவேகவுடாவுக்கு பரிசுச் சீட்டு விழுந்தது மாதிரி விழாதா என்ற ஆசையில் அண்ணாந்து பார்த்து கொட்டாவி விட்டுக் கொண்டு இருக்கி றார். அப்படியிருக்கும்போது அத்வானியைப் பிரதமராக அறிவித்துள்ள பா.ஜ.க.வுடன் எப்படி கூட்டுச் சேர மனம் இடம் தரும்?

எது எப்படியிருந்தாலும் ஜெயலலிதாவின் அதிமுக வுடன் கூட்டுச் சேர்பவர்களுக்கு எப்பொழுதுமே ஒரு அபாயம் இருந்து கொண்டே யிருக்கும்.

அதற்குச் சாட்சியம் - முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயிதான். ஜெயலலிதாவுடன் தாம் கூட்டணி சேர்ந்து கொண்டு ஆட்சி செய்த காலம் எனது நிம்மதியைத் தொலைத்த காலம் என்று ரத்தக் கண்ணீர் வடித்து பேட்டி கொடுத்ததை மறந்து போய் விட முடியுமா?

பா.ஜ.க.வைப் பொறுத்த வரை தன்வசம் இருந்த பல மாநில ஆட்சிகளைப் பறி கொடுத்திருக்கிறது. புதிதாக கருநாடகம் கிடைத்தாலும் எடியூரப்பா ஆட்சி குறைந்த கால அளவிலேயே மக்களின் வெறுப்பு நெருப்பில் வெந்து கொண்டிருக்கிறது. சங்பரிவார்கள் போடும் ஆட்டம் சகிக்க முடியவில்லை. வெகு மக்கள் மத்தியில் கடும் வெறுப்பு மேலோங்கி நிற்கிறது. இந்துத் தலிபான்களாக சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் போட்டுக் காட்டுகின்றனர். சட்டமன்றத்திற்கு நாளைக்கே தேர்தல் வைத்தாலும் ஆட் டம் காலி என்ற நிலையில் குறுகிய காலத்திலேயே வாக்காளர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்த்து விட்டார் இடையூறப்பா!

மாற்றுக் கட்சிகளை விலைக்கு வாங்கும் சந்தையில் அது இறங்கியுள்ளது; இதற்கு ஆபரேசன் லோட்டஸ் என்று பெயராம். மைசூர் மாவட்டம் மாண்டியா நக ராட்சியில் வெறும் இரண்டே உறுப்பினர்கள் பா.ஜ.க.வுக்கு இப்பொழுது அந்த நகராட்சி பா.ஜ.க.வின் கையில். எப்படித் தெரியுமா? மதச் சார்பற்ற ஜனதா தளம் 24, காங்கிரஸ் 5, சுயேட்சைகள் -6 அத்தனைப் பேரும் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர். எப்படியிருக்கிறது?

ராமன் கோயிலைக் கட்டியே தீருவோம் என்று வில் அம்புடன் தேர்தல் களத்தைச் சந்திக்க இருக்கிறது பா.ஜ.க. சமூக, பொருளாதாரக் கொள்கைகள், திட்டங்கள் கைவசம் இல்லை ராமனைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளதால் கூட்டணி கட்சிகள் முகம் சுளிக்கின்றன.

இது அவர்களுக்கு எதிர் விளைவைத் தான் ஏற்படுத்தும் என்பதை இன்றைக்கே எழுதி வைத்துக் கொண்டு விடலாம்.

அதுவும் ராமன் கோயில் என்று சொல்லி இன்னொரு மதக்காரர்களின் வழி பாட்டுத்தலத்தை இடித்த வன்முறையாளர் - இந்தக் குற்றத் துக்காகச் சிறைக் கொட்டடியில் இருக்க வேண் டிய ஒருவர் - என்ன தைரியம் இருந்தால், பாபர் மசூதியை இடித்ததோடு அல்லாமல் அதே இடத்தில் கலவரத்தைத் தூண்டுவதற்காகவே ராமன் கோயிலைக் கட்டுவோம் என்று சொல்லுவார்? இதனை எப்படி அனுமதிக்க முடியும்? என்ற சூறாவளிக் கேள்வி இந்தக் கூட்டத்தின் அஸ்தி வாரத்தையே கலகலக்கச் செய்து விடுமே!

கட்சிகளுக்கு அப்பாற் பட்ட மக்களிடம் ஒரு கருத்து குத்திட்டு நிற்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடித்தளமான மதச் சார் பின்மையில் நம்பிக்கை இல் லாத இந்தக் கூட்டம் ஆட் சிக்கு வந்தால் இந்தியாவே குஜராத்தாக மாறிவிடும் அபாயம் தலைக்கு மேல் தொங்கும் என்று உறுதியாக நம்புகிறார்கள்.

இவ்வளவு பலகீனங்கள் பா.ஜ.க. பக்கம் இருந்தாலும், இன்றைய ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸின் நிலை என்ன? அது என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யவில்லை? என்ற நேர்மையான கேள்விகள் மக்கள் மன்றத்தில் உண்டு.

குறைந்தபட்ச செயல் திட்டத்தில் உறுதி அளித்த தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை.

மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான - இவர்கள் விஷயத்தில் காங்கிரஸ் நடந்து கொண்டிருக்கும் இந்தப் போக்கு - காங்கிரசின் வேருக்குள் ஒளிந்திருக்கும் பார்ப்பனியத்தின் நச்சுக் கொடுக்கைத்தான் அடையாளம் காட்டும்.

பா.ஜ.க. ஒன்றும் சமூகநீதிக்காக உயிரை விடும் கட்சியல்ல; வி.பி. சிங் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்ததே - சமூகநீதிக்காவலராக வி.பி.சிங் இருந்த காரணத்தால்தானே.

அதே நேரத்தில் காங்கிரஸ் செய்திருக்க வேண்டிய ஒன்றை செய்யத் தவறியதால் அதன் பலனை எதிர்க்கட்சிகள் அனுபவிக்கும் ஆபத்தினை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்னும்கூட குடிமூழ்கி விடவில்லை. குடியரசுத் தலைவர் மூலமாக அவசரச் சட்டங்களை இயற்றி (Ordinance) பெரும்பான்மை வாக்காளர்களான தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டோ ரின் நல்லெண்ணத்தைக் காப்பாற்ற எப்படியும் முயற்சிக்க வேண்டும். முயற்சிப் பார்களா?

--------------- மின்சாரம் அவர்கள் 28-2-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய அரசியல் ஆய்வுக் கட்டுரை

27.2.09

உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் நுழையும் படி போலீசாருக்கு உத்தர விட்டது யார்?


உயர்நீதிமன்றத்தில் காவல்துறை - வழக்கறிஞர்கள் மோதல்

வழக்கறிஞர்கள் பணிக்குத் திரும்பவேண்டும்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

* நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் ஆணை
* சட்டத்துக்கு மேம்பட்டவர்கள் யாருமில்லை - குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும்
* மருத்துவமனையில் இருந்த நிலையிலும் முதலமைச்சரின் மின்னல் வேகச் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை


சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் - காவல்துறை மோதல் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற ஆணை மற்றும் நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில், கடந்த 19 ஆம் தேதி (பிப்ரவரி 2009) நடைபெற்ற விரும் பத்தகாத வன்முறை, வழக்கறிஞர்கள் - போலீஸ் துறையினர் மோதல்பற்றி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ் ணன், நீதிபதி சதாசிவம், ஜே.எம். பாஞ்சால் ஆகி யோர் கொண்ட ("பெஞ்ச்") அமர்வுக்குமுன் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது விசாரணையை ஏற்று விசாரித்த நீதிபதிகள், உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் நுழையும் படி போலீசாருக்கு உத்தர விட்டது யார்? என்பதுபற்றி 24 மணிநேரத்துக்குள் இந்த நீதிமன்றத்திற்குத் தமிழக அரசு தெரிவிக்க வேண்டுமெனக் கூறி, அடுத்த நாள் (26.2.2009) விசாரணையைத் தள்ளி வைத்தனர்.

தலைமை வழக்கறிஞரின் விளக்கம்

நேற்று, மீண்டும் விசாரணை நடந்துள்ளது. 6 பக்க அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்தது. அரசு வழக்கறிஞரிடம், ஆயு தம் ஏந்திய 200 காவலர்கள் அந்த வளாகத்திற்குள் நுழைந்தது யாருடைய ஆணையின் பேரில்? என்று கேட்ட கேள்விக்கு - காலை 9 மணிக்கு டெபுடி கமிஷ னரும், துணைக் கமிஷன ரும்தான் அந்த முடிவை எடுத்துள்ளனர் என்று கூறி விலாவாரியாக சம்பவங் களை விளக்கினர்.

வாதாடிய திரு. ஜி.இ. வாகன்வதி என்ற தலைமை அரசு வழக்கறிஞர் (சொலி சிட்டர் ஜெனரல்) குறிப்பிட்ட தாவது:

122 போலீஸ் மற்றும் தீயணைப்புப் பணியாளர்கள், ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, 77 வழக்குரைஞர் கள், 10 நீதிமன்றப் பணி யாளர்கள், 4 செய்தியாளர் கள், 3 சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்பட பலரும் அடிபட்டு காயமுற்றுள்ளனர் என்ற தகவலையும் பெஞ்ச் முன்னால் எடுத் துக் கூறியுள்ளார்.

வழக்கறிஞர்கள் அளித்த தகவல்கள்


மூத்த வழக்குரைஞர் திரு. ஹரிஷ் சால்வே, காவல்துறையினர் வெறி பிடித்தவர்கள்போல் ஆனார்கள் என்று குறிப்பிட்டு (மனு தாரர்களுக்கு ஆஜரானவர்) உள்ளார்.

மற்றொரு மூத்த வழக் குரைஞர் திரு. கே.கே. வேணுகோபால், போலீஸ் கற்களை வீசி, தடியடியை மேற்கொண்டது என்று கூறி, உடனே தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் நீதிபதி, போலீஸ் கமிஷனருக்கு தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு - காவல் துறையினர், நீதிமன்ற வளாகத்திற்குள் எப்படி அனுமதியின்றி நுழைந்துள்ளார்கள் என்று கேட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு மூத்த வழக்குரைஞர் கே. சுப்பிரமணியம் ஒரு குறிப்பிட்ட வாதத்தை எழுப்ப முயன்ற போது, தலைமை நீதிபதி குறுக்கிட்டு, கோர்ட் ஹாலுக்குள் நுழைந்து அங்கு விசாரணை நடைபெறாத வண்ணம் வழக்கறிஞர்கள் நடந்துகொள்ளவேண்டிய அவசியம் கிடையாது; சட்டத்திற்கு மரியாதை ஏற்படுத்தவேண்டியவர்கள் அவர்கள் என்று குறிப்பிட் டுள்ளார்கள்.

தலைமை நீதிபதியின் ஆணை

விசாரணைக் குழு (Inquiry Panel) இதுபற்றி, அனுமதியின்றி நுழைந்து விட்ட காவல்துறை அதிகாரிகள்மீது உரிய நடவடிக்கை எடுப்பதுபற்றி ஆராயவேண்டும்.

அதேபோல, வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு (மார்ச் 2 ஆம் தேதி) நீதிமன்றங்களுக்குத் திரும்பவேண்டும்.

மீண்டும் மார்ச் 3 ஆம் தேதி விசாரணை தொடரும் என்று அறிவித்துள்ளார் தலைமை நீதிபதி அவர்கள்.

நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா விசாரணை

அந்த பெஞ்ச் ஆணையில், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திரு. ஸ்ரீ கிருஷ்ணாவை ஒரு நபர் விசாரணைக் குழுவாக நிய மித்து, 2 வாரங்களுக்குள் அவர் விசாரணை நடத்தி, பரிந்துரைகளைத் தரவேண் டும்; அவருக்கு உதவியாக 2 சி.பி.அய். காவல்துறை அதிகாரிகள் துணை புரிவர் என்றும்,

விசாரணைக்கு வசதியாக, சென்னை உயர்நீதி மன்றச் சம்பவங்களில் தொடர்புடைய 5 மூத்த போலீஸ் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்!

மோதல் சம்பவத்தின் போது, உயர்நீதிமன்ற வளாகத்தில் சேதப்படுத்தப்பட்ட காவல் நிலையத்தை உச்ச நீதிமன்ற ஆணை இல்லாமல் சீர்படுத்தக்கூடாது; மோதல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க உயர்நீதி மன்றம் அனுமதித்த குழு கலைக்கப்படுகிறது.

எனினும், வாகனங்கள், உயர்நீதிமன்றச் சொத்து களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழு தனது பணியைத் தொடரலாம்.

வழக்கறிஞர்களுக்கு வேண்டுகோள்

பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாவதைக் கவனத்தில் கொண்டு, அவர்களின் நலன் கருதிப் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பும்படி வழக்கறிஞர்களை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணையை ஏற்று, தமிழக அரசு, அதில் குறிப் பிடப்பட்ட 5 காவல்துறை அதிகாரிகள் சென்னையை விட்டு உடன டியாக மாறுதல் (Transfer) செய்து விட்டது!

மருத்துவமனையில் உள்ள முதலமைச்சரின் விரைந்த செயல்பாடுகள்

மருத்துவமனையில் உள்ள முதல்வர் - அந்த ஆணை அரசுக்கு வந்த வுடன் அதனை மின்னல் வேகத்தில் அன்று மாலையே செயல்படுத்தியது மிகவும் வரவேற்கத் தக்கது!

நிதியமைச்சர், சட்ட அமைச்சர் போன்ற அனைவரையும் உடனே அழைத்து, அவ்வாணையைச் செயல்படுத்த என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்ய ஆணையிட்டார்கள்.

தமிழ்நாடு அரசு 25 லட்ச ரூபாய் டெபாசிட் செய்யவேண்டும் - சில நிவாரணங்கள் செய்ய என்பதற்கும் உடனடியாக ஆணை பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், வழக் குரைஞர்களான நண்பர்கள் - உச்சநீதிமன்ற ஆணையினை மதித்து, உடனடியாக வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு தமது நீதிமன்றப் பணிகளுக்குத் திரும்ப வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

சில காவல்துறை அதிகாரிகள் அதீதமாக நடந்து கொள்வதுபற்றியும், குற்றம் புரிந்தவர்களைக் கண்டறியவும்தான் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் போடப்பட்டுள்ளது! இரண்டு வாரங்களில் அந்த அறிக்கை விசாரணை முடிந்து, பரிந்துரை வந்தவுடன் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள்மீது - அது காவல்துறையாயினும், காவல் நிலையத்திற்குத் தீ வைத்து, தீயணைப்பு வீரர்களை செயல்படாமல் தடுத்தது போன்ற செயல்களுக்குக் காரண மான தீயசக்திகள் யாராயினும் அவர்கள்மீது உரிய சட்ட நடவடிக்கை தவிர்க்க இயலாத ஒன்று.

சமூக நலனில் அக்கறை உள்ளோரின் கடமை!

தவறு செய்தவர்கள் காவல்துறையில் சிலர் உள்ளதால், மொத்த காவல் துறையையே கண்டிப்பதோ அல்லது அதைச் செயல் இழக்க, விரக்தி அடைந்து நமக்கென்ன வந்தது என்று ஒதுக்குவதோ, கண்டும் காணாதபடி நடந்து கொள்ளும் நிலைமைக்குத் தள்ளப்படும் அபாயகரமான ஒரு நிலைமை உருவாவதை சமூகநலன், பொதுநலன் அக்கறை உள்ள எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது!

சட்டத்திற்கு மேம்பட்டவர்கள் யாருமில்லை


வழக்கறிஞர்களிலும் தவறு செய்யும் சிலர், தங்களை சட்டத்திற்கு மேம்பட்டவர்கள் என்பது போன்ற நினைப்பில், அத் தொழிலுக்குரிய சில மரபு வழிப்பட்ட மரியாதை, கட் சிக்காரர்களுக்கு (Clients) தாங்கள் ஆற்றவேண்டிய கடமை ஆகிய இவைகளைப் புறக்கணித்துவிடக் கூடாது.

அத்துடன் சில அரசியல் கட்சிகளுக்கு இவர்கள் பகடைக் காய்களாகிவிடக் கூடாது.

சமூகநீதியால் விளைந்த இந்த இளம் பயிர்களை, அவர்கள் வளர்ந்துவரும் காலங்களை அழித்துவிடத் திட்டமிட்டு கண்ணிவெடி வைக்கும் ஆதிக்கச் சக்திகளிடம் இவர்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது!

காவல் நிலைய எரிப்பு போன்ற சமூக விரோதச் செயல்களை எவரும் நியாயப்படுத்திடவும் முடியாது; கூடாது!

நீதிமன்ற வளாகத்துக்குக் காவல்நிலையம் வர மூலகாரணம் எது?

முன்பெல்லாம் இல்லாத காவல்நிலையம் அங்கு ஏற்பட எது மூலகாரணச் சம்பவம் என்று சற்றுப் பின்னோக்கி யோசித்தால், அது விளங்கும்.

நீதிமன்றத்திற்கு வந்து திரும்பும்போது பலர் குத்திக் கொலை செய்ய முயன்ற (கூலிப்படையால்) நிலைமை யெல்லாம் மலிந்ததால்தானே அங்கு காவல் நிலையம் ஏற்படுத்த வேண்டுகோள் விடுத்திருக்க முடியும்; தலைமை நீதிபதி - நீதிமன்ற அனுமதியோடுதானே அங்கு காவல் நிலையம் திறக்கப்பட்டது!

உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் காவல் நிலையம் எப்படி வந்தது? உத்தரவிட்டது யார்? என்று உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி கேட்டபோது,

தமிழ்நாடு அரசு சார்பாக வாதாடிய கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் ஜி.இ. வாகன்வதி, 2007 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பினைப் படித்துக் காட்டினார்; அதில், 252 பேர்களைக் கொண்ட காவல் நிலையம் ஒன்றினை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் அமைத்திட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது; ஆகவே, அதனைக் குறைத்திட இயலாது என்று குறிப்பிட்டார். (ஆதாரம்: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 27.2.2009)

சு.சாமி வருகை - அதன் பின்னணி குறித்து விசாரணை தேவை

எல்லாவற்றிற்கும் மேலாக விசாரணையில் - இம்மாதம் 17 ஆம் தேதி, சுப்பிரமணிய சுவாமி நீதி மன்றம் வந்ததன் விளைவாக இத்தொடர் சம்பவங்கள் உருவாகியுள்ளன என்பதால், விசாரணையை அதனை வைத்தே தொடங்குவதும், உண்மைகளைக் கண்டறிவ தும் விசாரணைக் கமிஷனுக்கு அவசியம் ஆகும். நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அவர்களுக்கு அனைத்துத் தரப்பினரும் முழு ஒத்துழைப்புக் கொடுப்பர் என்பது உறுதி!

தமிழக முதல்வர் மருத் துவமனையில் இருந்து கொண்டே, அமைதி திரும்பவும், பரிகார நடவடிக்கைகளைத் தங்கு தடை, தாமதம் சிறிதுமின்றி எடுத்து வருவதும் மிகவும் பாராட்டத்தக்கதாகும்.


---------------- "விடுதலை” 27.2.2009

விடுதலைப்புலிகள் ஆயுதத்தைக் கீழே போட வேண்டுமா? ஒரு விவாதம்

எந்த வகையில் சரியோ!

கேள்வி: ஆயுதம் ஏந்திய போராளிகளுடன் எந்த நாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தாது. எனவே, விடுதலைப்புலிகள் ஆயுதத்தைக் கீழே போடாத வரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு நாம் இலங்கை அரசை வற் புறுத்த முடியாது என்று ப. சிதம்பரம் கூறியுள்ளாரே?

பதில்: கரெக்ட், சரியாகப் பேசியிருக்கிறார். அகில இந்திய கட்சிகளில் காங்கிரஸ் ஒன்றுதான் சரியான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது.

துக்ளக், 4.3.2009, பக்கம் 11


விடுதலைப்புலிகள், ஈழத் தமிழர்கள் பற்றியவை என்றால், அவர்களுக்கு எதிர்ப்பாக எது சொல்லப்பட்டாலும், சோவைப் பொறுத்த வரை கரெக்ட்தான்.

தான் நேசிக்கும், சுவாசிக்கும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அத்வானி, டில்லியில் ம.தி. மு.க. நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு பேசியதைக் குறை கூறியுள்ளார். இதே துக்ளக் இதழில். அந்த அளவுக்குத் தமிழர்கள் மீது கண்மூடித்தனமான காழ்ப்பு! அத்வானியாக இருந்தாலும், ஈழத் தமிழர் பிரச்சினையில் வேறு குரலாகப் பேசினால் சோவைப் பொறுத்த வரையில் வெறுப்புதான்!

ஆயுதம் தாங்கிய போராளிகளுடன் எந்த அரசும் பேச்சுவார்த்தை நடத்தாது என்று மாண்புமிகு ப. சிதம்பரம் அவர்கள் முன்மொழிந்ததை திருவாளர் சோ, வழிமொழிந்துள்ளாரே - கரெக்ட் என்று சான்றிதழ் கொடுத்துள்ளாரே!

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் பிரிவினை கோரி ஆயுதம் தாங்கிப் போராடுகிறார்களே - அவர்களோடு இந்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லையா? பேச்சுவார்த்தை நடத்த வந்தபோது அவர்கள் கைகளில் ஆயுதங்கள் ஏதும் இல்லை என்று சமாதானம் சொல்வார்களோ!

பூடான் தலைநகரான திம்புவில் விடுதலைப்புலிகள் மற்றும் போராளி அமைப்புகளோடு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தாரே அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி (1985), இலங்கை அரசின் சார்பில் அதிபர் ஜெயவர்த்தனேயின் சகோதரர் எச்.டபிள்யூ. ஜெயவர்த்தனே தலை மையிலான தூதுக்குழு பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டதே, அந்தக் காலகட்டத்தில் எல்லாம் விடுதலைப்புலிகளோ மற்ற போராளிக் குழுக்களோ ஆயுதம் தாங்கியதைக் கைவிட்ட காலகட்டமா?


இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கு மிடையே நார்வே அரசு சமாதானப் பேச்சு வார்த்தை நடத்திய துண்டே - அப்பொழுது என்ன விடுதலைப்புலிகள் ஆயுதங் தாங்கிகளா கக் கண்களுக்குத் தெரிய வில்லையா?

இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கக் கூடிய ஒருவர், அப்படிப் பேசுவதும், அதனை அறிவு ஜீவி என்று அக்ரகாரம் மெச்சும் ஆசாமி கரெக்ட் கரெக்ட் என்று இப்படி தாளம் போடுவதும் எந்த வகையில் சரியோ!

--------------- "விடுதலை" - 27-2-2009

பெரியாரியக்கத்தின் முக்கிய வேலை


நமது வேலை

"மதச் சம்பந்தமான கடவுள், புராணம், இலக்கியச் சம்பந்தமான விஷயங்களில் மக்களுக்கு உள்ள மூட நம்பிக்கைகளைப் போக்கித் தெளிவு ஏற்படுத்தி, அவர்களை ஒழுக்கம் உள்ளவர்களாக, மான உணர்வுள்ளவர்களாக ஆக்குவதே நமது முக்கிய வேலை."

-------------------- தந்தைபெரியார் - "விடுதலை", 2.4.1973

26.2.09

இந்துத்துவா தாலிபன்கள்


இந்தியத் தாலிபன்கள்!



பர்தா அணியவில்லை; முகங்களை மறைக்கவில்லை என்று கூறி இஸ்லாமிய சகோதரிகள் மீது காஷ்மீரில் ஆசிட் ஊற்றினார்கள். மலர்ந்தும் மலராத பல மங்கைகளின் ரோஜா முகங்கள் கோரமாக வெந்து போயின. அந்தச் சகோதரிகள் மதக் கோட்பாடுகளை மதிக்கவில்லை என்பது குற்றச்சாட்டு.

இதேபோன்று ஆப்கனிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் இஸ்லாமிய சகோதரிகள் எத்தனை எத்தனையோ சோதனைகளுக்கு உள்ளாகி வருகிறார்கள். பெண்கள் படி தாண்டக்கூடாது; படிக்கக்கூடாது என்று பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் பல நூறு பள்ளிகளை தாலிபன்கள் மூடிவிட்டனர்.


சினிமா தியேட்டர்கள் இல்லை. வீடுகளில் தொலைக்காட்சி கள் இல்லை என்ற நிலையில், இன்றைக்கும் ஆப்கனிஸ்தானில் பல நூறு கிராமங்கள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றன. ஆமாம்! அத்தகைய இரும்புத் திரைகளின் காவலன் - தாலிபன் என்ற தீவிர வாத இஸ்லாமிய அமைப்புத்தான்.

அந்தத் தாலிபன்களுக்குப் போட்டியாக இங்கேயும் இந்துத்துவா தாலிபன்கள் உருவாகி வருகிறார்கள். இடைப்பட்ட காலத்தில் ஆப்கனிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை எட்டிப் பிடித்த தாலிபன்கள் உலக அதிசயமான மாபெரும் புத்தர் சிலையையே உடைத்து நொறுக்கினர். தேவாலயங்கள் தீக்கிரை யாக்கப்பட்டன.

அதே திருப்பணிகள் கர்நாடகாவில் பி.ஜே.பி. ஆட்சியில் அமர்ந்ததும் அரங்கேறின. இங்கேயும் தேவாலயங்கள் தாக்கப் பட்டன. ஏசுபிரானின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. கிறிஸ் துவ மதப் பிரச்சாரக் கூட்டங்கள் கலவரக் காடுகளாயின. பைபிள்கள் கொளுத்தப்பட்டன.

கடந்த ஆண்டு கர்நாடகாவில் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்றனர். அவர்களுடைய பஸ் வழிமறித்து நிறுத்தப்பட்டது. மாணவர்களும் மாணவிகளும் ஒன்றாகப் பயணிப்பது சமய விரோதம் என்றனர். பிற மத மாணவர்களோடு இந்து சமய மாணவர்களும் மாணவிகளும் எப்படி ஒன்றாகச் செல்லலாம் என்று தாக்கினார்கள் இந்துத்துவா தாலிபன்கள்.


அண்மையில் மங்களூர் நகரின் இரவு விடுதிக்குள் காவித் தாலிபன்கள் நுழைந்தனர். அங்கிருந்த இளம் பெண்களை அடித்தனர். அவமானப்படுத்தினர். அந்த நள்ளிரவில் அவர்களை வெளியே துரத்தினர்.

ராம் சேனா என்ற இந்துத்துவா அமைப்பு இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டே நடத்தியது. உள்ளூர்த் தொலைக்காட்சிகள் இந்தக் கோரத் தாக்குதல்களை ஒளிபரப்பியபோது கர்நாடகம் கலங்கிப் போனது.

ராம் சேனாவுக்கும் பி.ஜே.பி.க்கும் சம்பந்தமில்லை என்றார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. இந்துத்துவா போட்ட பல குட்டிகளில் அதுவும் ஒரு குட்டி என்பது அவருக்குத் தெரியாமலா இருக்கும். முன்னர் தேவாலயங்கள் தாக்கப்பட்ட போதும் எடியூரப்பா இப்படித்தான் வாதம் செய்தார். மதமாற்றத்தைத்தான் எதிர்த்தனரே தவிர, வேறு விபரீதங்கள் நடைபெறவில்லை என்று வாதிட்டார்.

கர்நாடகாவில் அடிக்கடி இத்தகைய நிகழ்வுகள் நடை பெறுவது இந்தியாவிற்கே தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கின்றன. அவமானங்களைத் தேடிக் கொடுத்திருக்கின்றன.

இந்த நிகழ்வுகள் ஏதோ தற்செயலாக நடந்தவை அல்ல. தனித்தனியான நிகழ்வுகளும் அல்ல. இந்திய சமூகத்தையே இப்படி வன்முறையில் சுத்தம் செய்வது என்று இந்துத்துவா சக்திகள் முடிவு செய்திருக்கின்றன. மாநிலத்திற்கு மாநிலம் அதன் களங்களும் போர் முறைகளும் மாறி இருக்கின்றன. ஆனால் காவிக் கலவரக்காரர்கள் ரகசியமாக இணைந்தே செயல்படு கின்றனர்.

மங்களூர் இரவு விடுதித் தாக்குதலை நடத்திய ராம்சேனாவின் தலைவர் பிரமோத் முத்தலிக் சரியான கிரிமினல். ஏற்கனவே அவர் மீது 45 வழக்குகள் நிலுவையில் நிற்கின்றன. அவர்தான் இளைய தலைமுறை யைச் சிலுவையில் அறையும் செயல்களைச் செய்கிறார். அவர் ஓர் இந்துத்துவா அமைப்பின் சேனைத் தலைவர் என்பதால், கர்நாடக அரசு அவரைக் கண்டு கொள்வதில்லை.

மராட்டிய மாநிலத்தில் இஸ்லாமிய வழிபாட்டுத் தளங்கள் மீது குண்டுகள் வெடித்தன. அதற்கும் காரணம் தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகள் என்று சொல்லிக் கொண்டே வந்தனர். ஆனால் உண்மை ஒரு நாள் வெளிச்சத்திற்கு வந்தது. நாடு நன்கு அறிந்த மாலேகாவ்ன் குண்டு வெடிப்புகளுக்குக் காரணம் ரகசியமாக இயங்கும் இந்துத்துவா சக்திகள் என்பது அம்பலமானது. அந்தச் சக்திகளின் மூளை பலம் சில ராணுவ அதிகாரிகள் என்பது தெரிந்தபோது நாடே அதிர்ந்து போனது.

அந்த மாலேகாவ்ன் குண்டு வெடிப்பு நிகழ்வு பற்றி ராம் சேனைத் தலைவர் பிரமோத் முத்தலிக் அண்மையில் என்ன சொன்னார் தெரியுமா? மாலேகாவ்ன் சம்பவங்கள் இனி நாட்டில் நடைபெறப் போகும் சம்பவங்களுக்கு முன்னோடி. இந்துக்கள் ராணுவ அவதாரம் எடுக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. ஒவ்வொரு தாய்மாரும் சமையல் கரண்டியை ஏந்துவதற்குப் பதிலாக (இஸ்லாமியருக்கு எதிராக) வெடிகுண்டுகளை ஏந்தினால் என்ன நடைபெறும்? என்று அந்த ராம் சேனைத் தலைவர் நெருப்பு வைத்தார்.

ராம்சேனையின் துணை அமைப்பாக இந்து ஜனஜாக்குருதி சமிதி என்றஅமைப்பை உருவாக்கி இருக்கிறார். அந்த அமைப்பிற்கு இளைஞர்கள் திரட்டப்படுகிறார்கள். அந்த அமைப்பின் ரகசிய மாநாடு நடைபெற்றது.அந்த மாநாட்டில் பல்வேறு கொலைக் கருவிகள்தான் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன.

கர்நாடகாவில் நடந்த இந்த மாநாட்டில் சட்ட மன்ற பி.ஜே.பி. உறுப்பினர் யோகேஷ் பட்டும் பெஜாவர் மடத் தலைவரும் உடுப்பி இந்துத்துவா தலைவரான விஸ்வேஷ் தீர்த்தாவும் கலந்து கொண்டனர். அத்தகைய ரகசிய மாநாடு மங்களூர் விடுதித் தாக்குதலுக்கு முன்னரும் மீண்டும் நடைபெற்றிருக்கிறது.

இதிலிருந்து என்ன தெரிகிறது? வெவ்வேறு பெயர்களில் இயங்கினாலும் இந்துத்துவா அமைப்புகளுக்கு இடையே இணைப்பும் தொடர்பும் இருக்கிறது. இப்போது பி.ஜே.பி. ஆட்சி பிறந்த மாநிலங்களில் அந்த அமைப்புக்கள் பகிரங்கமாகச் செயல்படுகின்றன. சிறுபான்மை இனமக்கள் மீது சீறிப்பாயும் வன்முறைப் பயிற்சிகள் இடம் பெற்று வருகின்றன. களங்கப்பட்ட அந்த நெஞ்சங்கள் இந்தியாவைத் தூய்மைப்படுத்தப் போகின்றனவாம்.

எப்படி ஆப்கனிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் பெண்களைக் கொத்தடிமைகளாக வைத்திருக்க தாலிபான்கள் முயற்சிக் கிறார்களோ, அதே காரியங்களைத் தான் இங்கே ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யின் சங்பரிவாரங்கள் செய்கின்றன.

பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் குழந்தைத் திருமணங்கள் சர்வசாதாரணமாக நடை பெறுகின்றன. இளம் விதவைச் சகோதரிகளுக்கு மறுமணம் தேவையில்லை. அது இறைவன் விதித்த விதி என்கிறார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் மும்பையில் தர்ம ரட்சமஞ்ச் என்ற அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. அந்த நிறு வனம் அறநெறிப் பாதுகாப்புக் குழுவாம். காஞ்சி சங்கராச்சாரியர் உள்பட ஏராளமான இந்து மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


அது மட்டுமல்ல. மத்தியில் ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்றனர். ஆனால், பி.ஜே.பி. தான்ஆட்சியில் அமரவேண்டும் என்று பகிரங்கமாகச் சொல்ல வெட்கப்பட்டனர்.

இன்னொரு அதிரடிக் கோரிக்கையையும் வெளியிட்டனர். இந்தியாவின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதம்தான் இருக்க வேண்டும் என்றனர்.


மங்களூர் இரவு விடுதித் தாக்குதலும் மும்பையில் கூடிய காவிப் பெரியவர்களின் அறைகூவலும் நாடு எந்தத் திசையில் செல்லவேண்டும் என்பதனைக் கோடிட்டுக் காட்டியிருக்கின்றன.

----------------------------நன்றி: - - சோலை - "குமுதம் ரிப்போர்ட்டர்", 13.2.2009

தந்தை பெரியார் அவர்கள் "படிக்காதவர்" என்று சொல்லப்படுவது சரியா?


தந்தை பெரியார் அவர்கள் "படிக்காதவர்" என்று சொல்லப்படுவது எந்தப் பொருளில் என்றால் - பள்ளிக்கூடத்தில் - கல்லூரியில் - பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படித்துப் பட்டம் பெறாதவர் என்ற அந்தப் பொருளில்தானே ஒழிய, வேறில்லை.


அய்யாவைப்போல் எப்போதும் சதா படித்துக்கொண்டும், ஆய்வு செய்துகொண்டுமே இருந்த ஒரு பொது வாழ்க்கைத் தலைவரை எளிதில், எங்கும், எவரும் காண முடியாது!

தந்தை பெரியார்தம் உற்ற நண்பரான பொறியாளர் - மொழி அறிஞர் - மேட்டூர் அணை தற்போது இருக்கும் இடத்தை முதலில் தேர்வு செய்த பெருமகனார் பொறியியல் அறிஞர் பா.வே. மாணிக்க நாயக்கர் அவர்கள், "ஆரிய நாகரிகம் - திராவிட நாகரிகம்" என்ற தலைப்பில் எழுதியுள்ள ஓர் கட்டுரையில்,

ஆங்கிலத்தில் வழங்கும் Lord-Lady என்ற இரண்டு சொல்லையும் எடுத்துக்கொள்கின்றார்.

இந்த இரண்டு சொற்களின் அடிநிலைக் கருத்து (Etymological meaning) என்ன? என்பதைக் காணும் வகையினால், ஆரியர்களின் ஆண் - பெண் பற்றிய வழக்காற்றை விளக்குகின்றார்:

“Lord” (லார்டு) என்னும் ஆங்கிலச் சொல்லின் அடிநிலைக் கருத்து (Anglo Saxon) ஆங்கிலோ சாக்சன்படி,

"ரொட்டி மாவைக் காத்துக் கொண்டிருப்பவன் என்பதாகும்! இதைப்போன்றே “Lady” என்ற சொல்லின் அடிநிலைக் கருத்து (Etymologically) ரொட்டி மாவைப் பிசைவதைப்போல பெண்கள் ஆண்களை வருத்துகின்றனர் என்ற கருத்தைக் கூறுகின்றார்! அதே சமயத்தில் தமிழில் வழங்கும் ஆண் - பெண், தலைவன் - தலைவி, காதலன் - காதலி போன்ற தமிழ்ச் சொற்களின் சிறப்புகளைச் சுட்டுகின்றார்!

பெரியார் பேருரையாளர் ந. இராமநாதன் அவர்கள்,

"ஆண்", "பெண்" என்ற வழக்காற்றில் உள்ள இரண்டு சொற்களின் அடிநிலைக் கருத்துக்குச் சென்று ஆய்வு செய்கிறார்-

"ஆண்" என்ற சொல்லின் கருத்து ஆளுமை உடையவன் என்பதாகும்.

"பெண்" என்ற சொல் - பெட்பை உடையது என்ற கருத்தில் வழங்கப்படுகிறது!

"பெட்பு" என்பது விரும்பப்படும் தன்மை. பெண் என்ற சொல்லின் அடிக்கு வேறு ஒரு கருத்தும் சொல்லப்படுகின்றது. பேணுமை உடையது எதுவோ அதனைப் பெண் என்றே தமிழர் கூறினர் என்று கூறலாம்!

பயன்படுத்தப்படும் பொருளைச் சுட்டிச் சொல்லி, பிறகு அந்தப் பொருளே மாறி கையாளப்படுவதும் உண்டு.

எடுத்துக்காட்டாக, நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் அரசுகள் சமர்ப்பிக்கும் வரவு - செலவுத் திட்டம் - "பட்ஜெட்” (Budget) என்று அழைக்கப்படுகிறது!

அத்திட்டத்தை எழுதி, அச்சிட்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க அதனை ஒரு தோல் பையில் வைத்து நிதியமைச்சர் எடுத்து வந்தார். பட்ஜெட் என்றால், பையில் உள்ள பொருள் என்று பொருள்படும்.

பிறகு நாளடைவில், வரவு - செலவுத் திட்டமே "பட்ஜெட்” என்றே ஆகிவிட்டதல்லவா?

பழைய தமிழ் இலக்கியங்களில் - அநேகமாக தொல்காப்பியத்தில் "பெண்டாட்டி" என்ற சொல், கணவனை - ஆணைக் குறித்தது என ஓர் சொற்பொழிவில், செந்தமிழ்க் காவலர் டாக்டர் அ. சிதம்பரநாதனார் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது!

"கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை". கற்பு என்பது - சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது, மாறாக நடக்காமை என்பதைத்தானே குறிக்கும்?

இப்போது இது பெண்ணடிமைக்குப் பாதுகாப்பான அரணாக அல்லவோ ஆக்கப்பட்டுவிட்டது! ஆண் ஆதிக்கக் கொடி பறக்க "ஒரு குலத்துக்கொரு நீதியாக" அல்லவா ஆக்கப்பட்டுவிட்டது! என்னே கொடுமை! என்னே விந்தை!

"நாற்றம்" என்ற சொல்லுக்கு "வாசனை" - நல்ல மணம் என்பது தான் உண்மையான பொருள். ஆனால், தற்போது வழக்கில் அது வாசனையாக பயன்படுத்துவதில்லை. மாறாக கெட்ட வாடை என்பதைத் தான் குறிக்கிறது.

துர்நாற்றம் என்று ஒரு சொல் இருந்தபோதிலும், நாற்றம் என்றவுடன் மூக்கைப் பிடித்துக்கொள்கிறோமே!

"மதம்" என்ற சொல்லே பல விரும்பத்தகாத வெறித்தனத்தை அடிப்படையாகக் கொண்ட சொல்தானே!

"மதமான பேய் பிடியாதிருத்தல் வேண்டும்" என்று வடலூர் - வள்ளலார் எச்சரித்தது சரிதானே!

ஒரு பொருள் ஒரு மொழியினரால் பயன்படுத்தப்படும்போது, அவர்களுடைய மொழிச் சொல்லாக இல்லாத பிறமொழிச் சொல் வந்து கலந்து, புழக்கத்தில் இருந்ததால் அவை படையெடுப்பு என்றே பொருள்.

நம் மொழிச் சொற்களையேகூட பிறமொழிச் சொல்லாக நினைத்துப் பயன்படுத்தி, நம் பொருளை அந்நியப்படுத்தும் கொடுமையும் வழக்கில் உள்ளதே!

"பூசை" என்பது வடமொழி "பூஜை" என்று எழுதப்படுகிறது! அதுபற்றி சுனித்குமார் சாட்டர்ஜி என்ற வங்காளத்தைச் சார்ந்த பிரபல மொழி அறிஞர்; அது பூ செய் "பூக்களைப் போட்டு வணங்குதல்" என்ற தமிழ்ச் சொல்லே வேர்ச்சொல் என்று தமது ஆராய்ச்சியில் கூறியுள்ளார்!

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள், "வந்தவர் மொழியா செந்தமிழ்ச்செல்வமா?" என்று தமது "குயில்" வார ஏட்டில் எழுதி வந்தார் - அது நூலாகவும் வந்துள்ளது. அதனையும் காண்க.

சொற்களும் சிந்தனை ஊற்றைப் பெருக்கச் செய்யும். சொல்லை வைத்தே ஆராய்ந்த தந்தை பெரியார் என்ற பேராசானிடம் நான் கற்ற பாடம் அது!

----------------கி.வீரமணி அவர்கள் எழுதி வரும் வாழ்வியல் சிந்தனைகளிலிருந்து ஒரு கட்டுரை - "விடுதலை" 26-2-2009

விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்டிவிட்டு அரசியல் தீர்வு -நடக்காது!


உலகநாடுகளும்,அய்.நா.வும்வேண்டுகோள்விடுத்தும்
போரைநிறுத்தமறுப்பதுஇலங்கைஅரசுதானே?

விடுதலைப்புலிகளைமுற்றாகஒழித்து
விட்டுஅரசியல்தீர்வுஎன்பதுநடக்காதகாரியம்

உடன்பாட்டுக்குவரமறுக்கும்சிங்களஅரசுக்குப்

பொருளாதாரத் தடை உள்பட அனைத்து
நிர்ப்பந்தங்களையும் ஏற்படுத்தவேண்டும்

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை


உலக நாடுகள் மற்றும் அய்.நா. உள்பட வேண்டுகோள் விடுத்தும், போரை நிறுத்த முன்வராத இலங்கை அரசுக்குப் பொருளாதாரத் தடை உள்பட அனைத்து நிர்ப்பந்தங்களையும் ஏற்படுத்த உலக நாடுகள் முன்வரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

இலங்கையில், ஈழத் தமிழர்களை, தீவிரவாதத் தடுப்பு என்ற ஒரு பொய்க் காரணத்தைக் கொண்டு, பூண்டோடு அழிக்கவும், சொந்த நாட்டிலேயே அவர்களை நிரந்தர அகதிகள் முகாமில் - கட்டாய வேலை செய்ய வைக்கும் கொத்தடிமைகளாக்கிடவுமான (Concentration Camps) ஒரு நிலையை சிங்கள இராஜபக்சேவும், அவரது இராணுவமும் அன்றாடம் செய்து வருகின்றன!

உலக நாடுகள் கூறியும் ஏற்காத சிங்கள அரசு

அங்கு நடைபெறுவது பச்சையான இனப்படுகொலைதான் என்பதை உலக நாடுகள் தங்களது கண்களை அகலமாகத் திறந்துகொண்டு பார்ப்பதோடு, இந்தப் போர் நிறுத்தப்பட்டு, அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, துரித முடிவு காணவேண்டும் என்பதை

அமெரிக்கா,

இங்கிலாந்து உள்பட அய்ரோப்பிய நாடுகள்,

அய்.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன்

இவர்கள் வெளிப்படையாகக் கூறியும், சிங்கள இராணுவம் தனது போரை நிறுத்தாமல், விடுதலைப்புலிகளை அழித்து விட்டோம், அழித்துவிட்டோம்! என்று கூறி, நாளும் ஆயிரக் கணக்கில் தமிழர்களைப் பலியாக்கி வருகிறது.

அய்ரோப்பிய கூட்டமைப்பின் முக்கிய அறிக்கை

நேற்றுகூட இலங்கைப் போர் குறித்து, அய்ரோப்பிய கூட்டமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்,

இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக அய்ரோப்பிய ஒன்றியம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அங்கு உருவாகியுள்ள மனித அவலங்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் கொல்லப்படுவது தொடர்பாக ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளது.

விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்துக்கும் இடையில் சமரசம் செய்து வைக்க அமெரிக்கா, அழைக்கவில்லை என்றாலும், தற்போதைய போரை முடிவுக்குக் கொண்டுவர தேவையான எல்லா உதவிகளையும் செய்யும் என்று கூறியுள்ளது அமெரிக்கா.

சண்டித்தனம் செய்வது யார்?

தொப்புள்கொடி உறவுள்ள நமது தமிழ்நாடு இந்திய யூனியனின் ஒரு முக்கிய மாநிலம். தமிழ் மக்கள் இந்தியக் குடிமக்கள் என்ற முறையில், இரு தரப்பும் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று இந்தியக் குடியரசுத் தலைவர் தமது உரையில் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளின் அரசியல் பேச்சாளர் போர் நிறுத்தத் தினை ஏற்று பேச்சுவார்த்தைக்கு வரத் தயார் என்று அறிவித்துள்ள நிலையில், அதை ஏற்க மறுத்து, கேலி பேசி, அவர்கள் தோல்வியால் இப்படி கூறுகிறார்கள் என்று கூறும் இலங்கை அரசுதானே இப்போது சண்டித்தனம் செய்கிறது. விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துவிடுவோம் என்று அவர்கள் காணும் கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை என்பது உலகறிந்த உண்மை!

அவர்கள் கொரில்லா முறையில் ஈடுபட்டால், இலங்கை அரசுக்கு எப்போதும் நிம்மதியோ, வெற்றியோ இருக்காது!

இந்தத் தோல்வி - குழப்பங்களால் வெறிபிடித்து அலையும் சிங்கள அரசு - சிங்கள இராணுவம் "கொத்து குண்டுகளை" (Cluster Bombs) வீசி கூட்டம் கூட்டமாய் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிக்கிறது.

நிரந்தர அகதிகளாக்க ஏற்பாடா?

ஏவுகணைமூலம் வீசப்படும் இக்குண்டுகள் சிறியவை; அதில் 2 ஆயிரம் குண்டுகள் வரை உள்ளே வைக்கப்பட்டு வீசப்படுகின்றன. என்னே கோரம்! எவ்வளவு கொடுமை! அய்.நா. உரிமை விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலாளர் சர் ஜான் ஹோம்ஸ் இலங்கையில் மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் செய்துள்ளார். வவுனியா பகுதியில் இலங்கை அரசு ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்புப் பகுதிகளைப் பார்வையிட்டார். அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்தார்.

அப்படி ஆய்வு செய்த நிலையில் அவர் கூறியுள்ளார்: அகதி களாக வாழும் அப்பாவித் தமிழர்களின் நிலைமை கவலை யளிப்பதாக இருக்கிறது. அவர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் விரைவாக மேற்கொள்ளுமாறு இலங்கை அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் தெரிந்துகொள்ளவேண்டியது என்ன? அகதிகளாக அடக்கப்பட்டுள்ள மக்களுக்குக்கூட தேவையான உதவிகளை, வசதிகளை இலங்கை அரசு செய்யவில்லை என்பது விளங்க வில்லையா?

எந்த வகையிலும் ஈழத் தமிழர்களை ஒழிப்பது, அல்லலுக்கு ஆளக்குவது என்பதுதான் அந்த அரசின் வெறிபிடித்த நோக்காக இருக்கிறது என்பதையும் புரிந்துகொண்டால், அங்கு என்ன செய்யப்படவேண்டும் என்கிற எண்ணமும், உணர்வும் ஏற்படாமல் போகாது. இத்தோடு தமிழர்களை நிரந்தர அகதிகளாக்கிட அய்க்கிய நாடுகளின் சபையும், வேறு சில நாடுகளும் முயற்சிக்கின்றன; இது மறைமுகமான இன அழிப்பு முயற்சியாகும். விடுதலைப்புலிகள் தான் அவர்களை மனிதக் கேடயங்களாக்கி வெளியேற அனுமதிக் காமல் தடுக்கிறார்கள் என்ற ஒரு திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரத்தை உலகம் முழுவதும் செய்கின்றது சிங்கள அரசு. அதனை மற்ற நாடுகளும் - சிந்தனா சக்தி சிறிதுமின்றி கிளிப்பிள்ளைப்போல பேசுகின்றன!

சர்வதேசப் பார்வையாளர்கள் முன்னிலையில் தமிழர்களை ஒப்படைக்கத் தயார் என்று விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளாரே - தமிழர்களைக் கேடயமாக விடுதலைப்புலிகள் வைத்திருந்தால் இப்படி கூற முன்வருவார்களா?

விடுதலைப்புலிகள் சில ஆயிரங்களே உள்ளதாக இலங்கை அரசு கூறுகிறது; பல லட்சக்கணக்கில் சுமார் 3 முதல் 4 லட்சம் தமிழர் களை அவர்கள் விருப்பத்திற்கு மாறாக தடுத்து நிறுத்துதல் (மனிதக் கேடயமாக) இயலுமா? ஒருபோதும் முடியாது. அந்த மக்கள் அங்கேயே - சொந்த மண்ணிலேயே தங்களது வாழ்க்கை அழிந் தாலும் பரவாயில்லை என்றெண்ணித்தானே இருக்கிறார்கள்!

போர் நிறுத்தத்தை ஏற்காத தரப்பின்மீதுதானே நிர்ப்பந்தங்கள் தேவை?

இருதரப்பில் ஒரு தரப்பு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு முன்வரும்போது, ஏற்காதவர்கள்மீதுதானே உலக நாடுகள் உரிய பொருளாதாரத் தடை, புறக்கணிப்பு, உதவிகளை நிறுத்தி வைத்தல் போன்ற கடும் நடவடிக்கைகளை எடுப்போம் என்று கூறவேண்டும்!

ராஜாவை மிஞ்சும் விசுவாசிகள்!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி. சோனியா காந்தி அவர்களை நேரில் சந்தித்து இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவைத் துணைக் குழு, நிலைமைகளை விளக்கியபோது அவர்கள் அதைக் கேட்டு உரிய நடவடிக்கை எடுத்து உதவுவதாக சொன்ன முறையில் உண்மையான ஆதரவு நிலவரம் இருந்தது.

அதன் ஒரு பிரதிபலிப்பு - தென் மாநிலங்களில் ஈழத் தமிழருக்கு மருந்து, உணவு முதலிய பொருள்களை காங்கிரஸ் கட்சி வசூலிக்கவேண்டும் என்ற அவரது அறிவிப்பை, நாம் மனதாரப் பாராட்டி வரவேற்கிறோம்!

அவருக்குள்ள மனிதநேயம் ஆட்சியில் உள்ள சில அதிகாரிகள், சில அமைச்சர்களுக்கு இல்லாதது மிகவும் வருத்தத்திற்கும், வேதனைக்கும் உரியது. காரணம், இராஜாவை மிஞ்சும் இராஜ விசுவாசிகளாக அவர்கள் இருப்பதே!

விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்டிவிட்டு அரசியல் தீர்வு -நடக்காது!

அங்கு விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்டிவிட்டு அரசியல் தீர்வு என்பது ஏமாற்று வித்தை; எவரும் ஏற்கவே முடியாது! நடைமுறை சாத்தியமும் அல்ல.


---------------- "விடுதலை" - 25.2.2009

25.2.09

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் இணைப்பும், ஒற்றுமையும் மிகவும் தேவை

பிரித்தாளும் சதிக்குப் பலியாகக் கூடாது!

சமூகநீதி இட ஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பொதுவானது. இரு பிரிவினர்களுக்கும் இட ஒதுக்கீட்டின் விழுக்காடு தனித்தனியாக வரையறுக்கப்பட்டுள்ளது. யார் பங்கையும் யாரும் எடுத்துக்கொள்ள முடியாது.

இந்த இரு பிரிவினரும்தான் மக்கள் தொகையில் 80 விழுக்காட்டுக்கும்மேல். இரு பிரிவினருக்கும் பொதுவான இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் ஒருங்கிணைந்து செயல்பட்டால் எந்த அதிகாரவர்க்கமும், கொம்பர்களும் இட ஒதுக்கீட்டில் கை வைக்கத் துணியமாட்டார்கள்.

நாடாளுமன்றத்தை எடுத்துக்கொண்டால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்களின் எண்ணிக்கை என்பது 300-க்கு மேலாகும். இந்தப் பிரச்சினையில் 300 உறுப்பினர்களும் எழுந்து நின்றால், இவர்களின் சமூகநீதி உரிமையில் கைவைக்க யாருக்குத் துணிவு வரும்?

தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிரச்சினை வரும்போது, நமக்கென்ன வந்தது என்று பிற்படுத்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோருக்குப் பிரச்சினை வந்தால் நமக்கென்ன என்று தாழ்த்தப்பட்டவர்களும் ஒதுங்கி நின்றால், மாடுகளை சிங்கம் பிரித்த கதையாகத்தானே ஆகும்.

ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். இட ஒதுக்கீடு அறவே கூடாது என்பதுதான் பார்ப்பனர்களின், உயர்ஜாதி ஆதிக்கக்காரர்களின் ஒரே எண்ணமாகும்.

40 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட முதல் நிலை (Class I Officers) அதிகாரிகளின் கூட்டம் டில்லியில் 1990 இல் கூடி நிறைவேற்றிய தீர்மானம் என்ன?

தாழ்த்தப்பட்டவர்கள் உள்பட அனைவருக்கும் உள்ள இட ஒதுக்கீடு நீக்கப்படவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி னார்களே - மறந்துபோய்விட்டதா?

இந்த மனப்பான்மை அதிகாரிகள் மட்டத்தில் மட்டுமல்ல - நீதித்துறையிலும்கூட இருக்கிறது என்பது வெளிப்படை.

இந்திரா - சகானி வழக்கில் (மண்டல் குழுப் பரிந்துரைகள் பற்றிய வழக்கு) ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பில் தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் மோதவிடும் ஒரு சன்னமான வேலை செய்யப்பட்டதே.

தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கூடாது என்று கூறப்பட்டது.

வழக்கோ பிற்படுத்தப்பட்டவர்களுக்கான - வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு சம்பந்தப்பட்டதாகும். இதில் தாழ்த்தப் பட்டவர்கள் எங்கே வந்தனர்? எதற்காக தாழ்த்தப்பட்டவர் களுக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கூடாது என்கிற பிரச்சினை அங்கே வந்தது? சம்பந்தம் இல்லாமல் அப்படி ஒரு தீர்ப்பை வழங்கியதன் நோக்கம் என்ன?

மண்டல் குழுப் பரிந்துரை அமலாக்கப்பட்டதால்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இப்படி ஒரு சங்கடம் வந்தது என்று விவரம் தெரிந்த தோழர்கள்கூட விமர்சனம் செய்யும் ஒரு நிலையை உச்சநீதிமன்றமே உருவாக்கியது என்பதை மறந்து விடக்கூடாது.

தாழ்த்தப்பட்டோருக்கு நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப்படுகிறது. அதேநேரத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு சட்டப்படி அளிக்கப்பட வேண்டிய அந்த வாய்ப்பு இதுகாறும் அளிக்கப்படவில்லை. ஏனிந்த பாரபட்சம்? மக்களவைத் தலை வரின் அதிகாரத்தின்கீழ் உள்ள செயல்பாடு இது - எத்தனையோ முறையீடுகள் அவரிடம் கொண்டு செல்லப்பட்டும், அதனை ஒரு பொருட்டாகவே அவர் எடுத்துக்கொள்ளவில்லை - காரணம் அவர் ஒரு சட்டர்ஜி என்பதுதான்.

ஆணை வடிவத்தில் (ஜி.ஓ.) இருந்த இட ஒதுக்கீடு சட்டமாக (Act) கொண்டுவரவேண்டும் என்ற எண்ணத்தில் மசோதா கொண்டு வரும்போது, ஆணையாக இருந்தபோது, தாழ்த்தப் பட்டவர்களுக்கு இருந்த வாய்ப்புகள் சட்டமாக வரும்போது தடுக்கப்படுகின்றன என்றால் - இதன் நோக்கம் என்ன?

47 நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்ற ஒன்றைத் திணித்து, எந்தவித விவாதத்துக்கும் இடம் அளிக்காமல் இரண்டே நிமிடங்களில் மசோதாவை குரல் வாக்கெடுப்புமூலம் நிறைவேற்றுகிறார்கள் என்றால், இதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சியையும், திட்டமிட்ட வகையில் செய்யப்படும் சதியையும் கவனிக்கவேண்டுமே!

இத்தகு சதிகள், சூழ்ச்சிகள் முறியடிக்கப்படவேண்டுமானால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் இணைப்பும், ஒற்றுமையும் மிகவும் தேவை என்பதை உணரவேண்டும். இரு சமூகத் தலைவர்களுக்கும் இதில் அதிகப் பொறுப்பு இருக்கிறது. ஏனெனில், நமது எதிரிகள் நாணயமற்றவர்கள். நாம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!


-------------------"விடுதலை" தலையங்கம் -25-2-2009

மனிதச் சங்கிலியில் பார்ப்பனர்கள் கலந்து கொள்வதில்லை ஏன்?


பரம்பரைத் தொழில்

இலங்கைத் தமிழருக்காக மனிதச் சங்கிலின்னு ஒன்னு நடந்தது. இந்த மாதிரி தமாஷ் எல்லாம் அப்பப்போ நடக்கும். ஒருத்தன் கைய இன்னொருத்தன் புடிச்சிக்கிட்டு நிக்கிறது. அது வேற ஒன்னுமில்லே....பக்கத்தில நிக்கிறவன், நம்ம பாக்கெட்ல கைய விட்டுப் பர்ஸை எடுத்திறக் கூடாது பாருங்க, அதுக்குத்தான்

-துக்ளக் சோ, 14.01.2009 துக்ளக் ஆண்டுவிழாவில் (ஜெயா தொலைக்காட்சி ஒளிபரப்பியது)


என்ன செய்வது...அவரவர் தொழில் அவரவர்க்கு நினைவு வரும்.

என்று "கருஞ்சட்டைதமிழர்" விமர்சித்திருந்தது.


அதோடு மனிதசங்கிலியில் மற்ற ஜாதிக்காரர்களின் கையைப் பிடித்துக் கொண்டு நிற்க வேண்டியிருக்கும், இதனால் தொட்டால் தீட்டு ஏற்படும் என்ற காரணத்தினாலும் "சோ" மனிதச் சங்கிலியை தமாஷ் என்று சொல்லி தமிழர்களை இழிவு படுத்துகிறார். பார்ப்பனக்குறும்புகளில் இதுவும் ஒன்று.

பார்ப்பனர்களை வெறுப்பது சரியா?


அண்ணா சொன்னார்!

1953-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் பூதான இயக்கத் தலைவர் ஆச்சாரிய வினோபாவேயை சந்தித்தார்.

வினோபா: வேதியர்களை ஏன் வெறுக்க வேண்டும்? சர்ச்சிலுள்ள ஆண்டவனைத் தொழுது பூசை செய்யும் கிறித்துவ பாதிரியார் களைப் போன்றவர்களே இவர்களும்!

அண்ணா: அய்யா! வேதியரும் பாதிரியாரும் ஒன்றல்ல. அங்கே எவரும் பாதிரியாராக ஆகலாம் இங்கே யாரும் வேதியராக முடியாது

பகுத்தறிவாளர்கள் டாட்டா அல்லது பை, பை (Bye, Bye) என்று சொல்லுவது சரியா?



கேள்வி : குழந்தைகள் பள்ளிக்குப் புறப்படும்போதும் அல்லது வேறு எங் காவது வீட்டை விட்டு வெளியே செல் லும்போதும், குழந்தைகள் பெரியவர் களுக்கு டாட்டா அல்லது பை, பை (Bye, Bye) என்று சொல்லுகிறார்களே; அதற்கு மாற்றாக தமிழ்ப் பண்பாட்டு வழக்கம் ஏதேனும் உள்ளதா? கூறினால் தமிழர்களுடைய (நம்முடைய) குழந்தைகள் பின்பற்ற வாய்ப்பாக அமையும்.



பதில் : அம்மா, அப்பா! போய்வருகிறேன் என்று சொல்லலாம்; அது போதுமே!


---------------பிப்ரவரி 15-28 2009 "உண்மை" இதழில் கி.வீரமணி அவர்கள் அளித்த பதில்

24.2.09

"நான் கடவுள்" திரைப்படம் - ஒரு பகுத்தறிவுப் பார்வை




மனநிலை பாதிக்கப்பட்டோர், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் வளர்ந்தவர், பிணம் எரிக்கும் தொழில் செய்பவர், பிழைப்புக்காகக் கஞ்சா விற்கும் பெண் என்று சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் வாழ்க்கையைப் பாசாங்கில்லாமல் படம்பிடித்துக் காட்டுவன இயக்குநர் பாலாவின் படங்கள்.



இம்முறை அவர் கோயில், குளம், சர்ச், மசூதி என்று சகல கடவுள் கடைகளின் முன்பும் தட் டேந்தியபடி தர்மம் கேட்கும் பிச்சைக்காரர் களோடு வந்திருக்கிறார். ஊர்விட்டு ஊர் வந்து, மாநிலம் விட்டு மாநிலம் வந்து தங்கள் பாவங்களைப் போக்கிப் புண்ணியம் பெறக் கடவுளைத் தரிசிக்கும் கூட்டத்தில் யாருக்கும் புரிவதில்லை வாசலில் வரிசை கட்டி அமர்ந்திருக்கும் யாருக் கும் கடவுள், தன் கடைக்கண் பார்வையை வீசி, கருணை காட்டவில்லை என்பது! இதை மண்டையிலடித்துப் புரியவைக்கிறார் பாலா.

ஜோதிடர்கள் பேச்சைக் கேட்டு, தனது மகனை 14 ஆண்டுகள் காசியில் ஒரு சத்திரத்தில் விட்டுவிட்டுப் போனபிறகு மறந்தும் காசிப்பக்கம் தலைவைத்தும் படுக்காத ருத்ரனின் தந்தை (அழகன் தமிழ்மணி),காசியில் தர்ப்பணம் பண் ணும் பார்ப்பனர் உதவியுடன் கங்கைக் கரை களில் சாமியார்கள் மத்தியில் தேடுகின்றார். எரிந்து கொண்டிருக்கும் சிதைக்கு ஆசி வழங் கியபடி அமர்ந்திருக்கும் ருத்ரா (ஆர்யா)வைப் பார்த்து, இவனே தன் மகன் என அடையாளம் காட்டுகிறார் தந்தை. அகோரி எனும் சாமியார் கூட்டத்தைச் சேர்ந்தவன் ருத்ரா என்றும், அவனைப் போலிருக்கும் சாமியார் கூட்டத்தவர் உறவை அறுத்தவர்கள் என்றும் ருத்ரனின் தந்தையிடம் விளக்குகிறார் பார்ப்பனர். பின்னர் ருத்ராவின் குருவைச் சந்தித்து நிலைமையை விளக்கி தென்தமிழ்நாட் டின் மலைக்கோவில் நகரத்துக்கு அழைத்துச் செல்கின்றனர் ருத்ராவை! எப்போது என்னிடம் திரும்பிவர வேண்டும் என்பது உனக்கே தெரியும். நானே கடவுள் (அஹம் பிரம்மாஸ்மி) என்பதை உணர்ந்தவன் நீ. உனக் கிருக்கும் உறவுகளை அறுத்து எறிந்துவிட்டு வா என்று வழியனுப்பி வைக்கிறார் குரு.

தொடர்வண்டியில் தமிழகம் வரும்போதும் வீட்டினுள் நுழைந்தபின் விநோதமாய்ப் பாக்கும் தாயை அலட்சியப்படுத்தி விட்டும் தன் போக்கில் பூஜைசெய்துவிட்டு கஞ்சா அடித்து நேரடியாகக் கடவுளாக மாறிவிடுகிறார் ருத்ரா.

இன்னொரு பக்கம் ஊனமுற்றவர்கள், மன நிலை பிறழ்ந்தோர், கண் தெரியாதவர்கள் என மனிதர் களை தட்டிக்கொட்டி உருப்படிகளாகத் தயார் செய்து பிச்சையெடுக்க வைத்து பிழைப்பு நடத்தும் முதலாளி தாண்டவன் மற்றும் அவன் கீழ் இருக்கும் சில்லறை ஏஜென்டுகள். இவர்களுக்கு பாதுகாப்பும் ஆள் சப்ளையும் செய்யும் காவல்துறை. இதில் ஒரு சில்லறை ஏஜென்டான முருகனின் (கிருஷ்ண மூர்த்தி) கண்ணில் பாட்டுப்பாடிப் பிச்சையெடுக்கும் நாயகி அம்சவள்ளி (பூஜா) பட, தனது உருப்படிகளுக்குள் ஒன்றாக்கிக் கொள்கிறான். கஞ்சா தேடி சாமியார்கள் உலவும் இந்த மலைக் கோயிலுக்கு வந்து அங்கேயே குடி கொண்டு விடுகிறார் ஆர்யா. அதே மலையில் இருக்கும் மாங்காட்டுச் சாமியாரிடம் தினப்படி தன் பாவக்கணக்கைத் தீர்க்க மனறாடியபடி, தன் தொழிலைத் தொடர்கிறான் முருகன்.

இந்நிலையில் காவல்துறை ஆய்வாளரின் அறிமுகத்தோடு மொத்தமாக பிச்சைக்காரர்களை எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள வருகிறான் சபரி மலையின் பிச்சைக் குத்தகைதாரான மலையாளி ஒருவர். அவர் சொல்லும் யோசனை நல்லதாய்ப் பட முருகனின் கூட்டத்திலிருந்து வேண்டிய உருப்படிகளை அள்ளிக்கொள்ளச் சொல்லி அனுப்பிவிடுகிறான் தாண்டவன். ஒன்றாய்க் குடும்பம்போல இருந்து பிச்சை யெடுக்கும் கூட்டத்தி லிருந்து பகுதிபேர் பிரித்துச் செல்லப் படுகிறார்கள்.

அங்கு, தான் பார்த்த குருட்டுப் பெண்ணான அம்சவள்ளிக்கு பத்து லட்ச ரூபாய்க்கு வியா பாரம் பிடித்து வருகிறான் மலையாளி. மிகக் கொடூரமான முகஅமைப்பு கொண்ட ஒருவ ருக்கு விற்பதற்காக அம்சவள்ளியை அனுப்பத் தாண்டவன் முடிவு செய்கிறான். அது தெரிந்த முருகன் அம்சாவை இழுத்துச் சென்று மாங் காட்டுச் சாமியிடம் விட்டுச்செல்ல, அவன் நான் கடவுள் இல்லை; மேலே ஒருத்தன் இருக்கிறான் என்று ருத்ராவிடம் அனுப்புகிறான். மலையாளி யைக் கொன்று இழுத்துச்சென்று அந்த நேரத்தில் அம்சாவை விடுவிக்கிறான் ருத்ரா. பின்னர் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு ருத்ரா காவலில் வைக்கப்பட்டு, தாண்டவன் பழிவாங்க வேண்டும் என்ற தூண்டுதலால் வழக்கிற்கும், ருத்ராவுக்கும் தொடர்பில்லை என்று விடுவிக்கப்படுகிறான். இதற்கிடையில் விற்பனைக்கு இணங்க மறுத்து வியாபாரத்தைக் கெடுத்த அம்சவள்ளியின் முகத் தைச் சிதைத்து அலங்கோலப்படுத்தி, அங்கஹீ னப் படுத்துகிறான் தாண்டவன். வழக்கிலிருந்து விடுபட்டு வெளிவரும் ருத்ரா தாண்டவனுக்கு தண்டனை கொடுக்கிறான். தனக்கு இப்பிறவியிலி ருந்து விடுபட வாய்ப்புக் கேட்கும் அம்சவள்ளி யின் கழுத்தை அறுத்து, எரித்து விடுதலை தருகிற ருத்ரா, இறுதியில் தன் குருவை வந்தடைகிறான்.

முதல் பாதி வரை கதாபாத்திர அறிமுகம், பின்னர் யார் வில்லன் என்று அடையாளப் படுத்தும் போதே, கடைசியில் அவன் கொல்லப்படுவான் என்பது தெரிந்துவிடுகிறது.

அஹம் பிரம்மாஸ்மி என்கிறார்; சமஸ்கிருத மந்திரங்கள், பூஜைகள், மண்டையோட்டு மாலை, மனிதனைத் தின்னும் அகோரி வகை சாமியார்கள், இம்மையிலிருந்தும், மறுமையிலி ருந்தும் விடுதலை கொடுப்பதாக சொல்கிறார்கள் என்றெல்லாம் நாம் குழம்ப வேண்டியதேயில்லை. இதெல்லாம் கதாநாயகனுக்கான பின்புலமே தவிர, கதை அதுவன்று.

தனது காலடியிலேயே கர்ணகொடூரமாகச் சிதைக்கப்பட்டு, இழிநிலையாக்கப்பட்டு, பிச்சை யெடுக்க வைக்கப்பட்டிருக்கும் மனிதர்களுக்குக் கொஞ்சமும் கருணை காட்டாதது கடவுளா? நெற்றி நிறைய விபூதியும், கடவுள் படங்களுக்கு பக்கத்திலேயே அமர்ந்தபடி மனிதர்களை உருப் படிகளாகக் கணக்குப் பண்ணும் தாண்டவன் பக்தன்தானே? பழமும் தேங்காயும் தந்து வழிபட்டு தன் பாவக் கணக்கை பைசல் பண்ண ஏங்கி நிற்கும் முருகன் கதாபாத்திரத்தையும் கடவுள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்? இத்தனைக் கொடுமையையும் அனுபவிக்கும்படி தங்களைப் படைத்ததுதான் கருணையே வடிவான கடவுளா என்று அம்சவள்ளி கேட்கும் கேள்விக்கு என்ன பதில்? இவைதான் மக்கள் மனதில் பதியும் செய்திகள்.

கதாநாயகன், நாயகியை அகோரமாகக் காட்டவும், அவர்களுக்கு காதல் பாடல் வைக்காததும் திரைத்துறையில் துணிச்சலான செய்திகள் என்றால், கதாநாயகியைவிட பிச்சையெடுப் போரைக் கண்காணிக்கும் திருநங்கையை அழகானவராகக் காட்டியதும், அவரை அக்கா என்று கதாநாயகியை அழைக்க வைத்ததும் உண்மையில் பாராட்டுக்குரியவை. பண்பாட்டிற்குரியவை.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி வேடமிட்டு பிச்சையெடுப்போரை வைத்து, காவல்துறை, சமூகம், இன்றைய சினிமா என்று சமூக விமர்சனம் செய்யும் காட்சிக்கு திரையரங்கில் பெரும் வரவேற்பு. அதே வேளையில் கடவுள் வேடமிட்டுப் பிச்சை யெடுக்கும் முருகனின் உருப்படிகள் செய்யும் விமர்சனத்தின் கடவுள் உருவங்கள் காணாமல் போகின்றன. முக்குமுக்கென்று முக்கி மருத மலைக்கு நீங்க வந்துபாருங்க என்று பாடுபவரைக் கிண்டலடிப்பதில் தொடங்கி, முருகன், சிவன், பார்வதி என்று கடவுளரைக் கிண்ட லடிக்கும்போது அரங்கம் அதிர்கிறது.

இங்க பாரு, இந்தப் பயல நம்பவே கூடாது, சின்ன வயசிலேயே உள்பாவாடையக் களவாண்டு போன பய என்று கிருஷ்ணனை அறிமுகப்படுத்த, அவன்தான் இன்னிக்கு இளம்பெண்களுக்கு ஹீரோ என்று ஒரு குத்தல் வேறு!

இவன வச்சு ஆட்சியையே புடிச்சிட்டாங்க என்று இராமனை அறிமுகப்படுத்திவிட்டு, ஒவ் வொருவருக்கும் ஒரு இலாகா என்று ஒதுக்கும் பட்டியலில் முதலில் அய்யனாருக்கு காவல் துறையும், பின்னர் குடிச்சே அழியட்டும் என்று டாஸ்மாக் துறையும் ஒதுக்கப்படுகிறது. இப்படி வெளிப்படையான நக்கல் தமிழ்த்திரையில் இதுவரை வந்ததேயில்லை எனும் அளவிற்கு, கடவுளரைக் கண்டந்துண்டமாக்கும் இந்தக் காட்சிக்கு திரையரங்கில் கைத்தட்டல் பிளக்கிறது.

எல்லாத்தையும் மேல இருந்து ஒருத்தன் பார்த்துக்கிட்டுதான் இருக்கான் என்பவரிடம் ராமப்பனாக வரும் கவிஞர் விக்ரமாதித்யன் பார்த்துகிட்டு புளுத்தினான்.... தேவடியாப் பய என்று வெளிப்படையாகத் திட்டும்போது அரங்கத்திலிருந்து வரும் ஆதரவு, மக்கள் மனநிலையைக் காட்டுகிறது.


சடை வச்சவனெல்லாம் சாமின்னு சொல்லிட்டு அலையுறான்

கல்லைக் கண்டாலும் சாமி; கை கால் இல்லைன்னாலும் சாமி; பேசினாலும் சாமி; பேசாட்டாலும் சாமி - எவன்டா சாமி

நாங்களே போலீசுக்குப் பயந்து சாமியார் வேசத்திலே திரியுறோம்

இவங்கள மாதிரிதான் ஒருத்தன் வடநாட்டில் இருந்துகிட்டு சி.எம்.மோட தலையைக் கொண்டு வான்னு சவால் விடுறான் என்று கடவுள்களையும், சாமியார்களையும் சுளுக்கெடுக்கும் வசனங்கள் நறுக்கென்று ஆங்காங்கே தைக்கிறது. எம்.ஜி.ஆரைப் பார்த்து, அண்ணே நீங்க பாடுனது எல்லாம் ரசிச்சு ஓட்டைத்தானே போட்டான். ஒருத்தனும் திருந்தலையே என்று சிவாஜி வேடமிட்டவர் கேட்பதில் தொடங்கி, அம்பானின்னா யாருடா? என்பவனிடம், செல்போன் விக்கிறவங்க... உனக்குத் தெரியாது என்று விளக்கம் சொல்லும் இடம்வரை ஒவ்வொரு வசனமும் அழுத்தம். வசனம் ஜெய மோகன் என்று தலைப்பில் வருகிறது. இந்த ஆர்.எஸ்.எஸ். காரரா இப்படி எழுதியிருக்கிறார் என்று வியப்படைய வேண்டும். காசு கொடுத்தால் கடவுள் இல்லை; கடவுள் இல்லை என்று சுமங்கலி படத்தில் பாட்டெழுதவும் முடியும் என்று காட்டிய வாலியைப் போல ஜெயமோகனும் எழுத்து வியாபாரிதானே! ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.


அநியாயத்தைத் தட்டிக்கேட்க மேலே இருந்தா ஒருத்தன் இறங்கி வருவான். அப்படிக் கேட்கிற நீதான் கடவுள்; அவதாரம் என்று நந்தா படத்தில் பாலா வைத்த வசனத்தின் விரிவு தான் நான் கடவுள். மற்றபடி அஹம் பிரம் மாஸ்மியெல்லாம் ஒட்டிக்கொண்டவைதான். எவனைக் கூப்பிட்டாலும் கடைசியில் மனிதன் தான் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் இறுதியில் அவர் சொல்வது!

கடுமையான சித்ரவதையால் சிதைக்கப்பட்ட அம்சவள்ளிக்கு கழுத்தையறுத்து ருத்ரா விடுதலை தருவது சரியா? - வாழவழியற்றோருக்கு மரணம்தான் பரிசா? என்னும் கேள்வி கருணைக்கொலை சரியா? தவறா? என்பதைப் போல சூழலைப் பொறுத்து விடை தரவேண்டிய கேள்வியாகும்.

படத்தின் வெற்றிக்கு அடிப்படையான அற்புத நடிப்பை வழங்கிய ஆர்யா, பூஜா, தண்டவனாக நடித்தவர், பிச்சைக்காரர்கள் வேடமேற்ற அனைத்து நடிகர்கள். இசையில் நம்மை படத்தோடு ஒன்றச் செய்த இளையராஜா அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். பாலாவிடம் நாம் எதிர்பார்க்க இன்னும் நிறைய இருக்கிறது; ஏனெனில் சமூகத்தில் இன்னும் அழுக்கு நிறைய இருக்கிறது.

--------------- நன்றி:- சமா.இளவரசன் அவர்கள் "உண்மை" பிப்ரவரி 15-28 2009 இதழில் எழுதிய திரை விமர்சனம்

ஆஸ்கார் விருது பெற்ற "ஸ்மைல் பிங்கி" போன்ற குறும்படங்கள் தான் நாட்டுக்குத் தேவை

ஸ்மைல் பிங்கி!

திரைப்படத் துறையில் உலக அளவில் பெருமைக்கு உரியதாகப் பேசப்படுவது ஆஸ்கார் விருதாகும். இது கிடைத்தற்கரிய ஒன்றாக மதிக்கவும் படுகிறது. இந்த விருது இந்தியாவுக்கு இதுவரை கிடைத்திடவில்லை என்றும், முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்லம்டாக் மில்லியனர் என்ற திரைப்படம் எட்டு ஆஸ்கார் விருதுகளைத் தட்டிச் சென்றது என்றும் பெருமையாகப் பேசப்படும் நேரம் இது.

இந்தப் படத்தில் சிறந்த இசை அமைப்பு, சிறந்த பாடல் ஆகிய இரண்டுக்குமான ஆஸ்கார் விருதுகளை தமிழகத்தைச் சேர்ந்த தமிழரான ஏ.ஆர். ரகுமான் பெற்றிருக்கிறார் என்பது தமிழ்நாடும், தமிழர்களும் பெருமைப்படத்தக்க சாதனையே என்பதில் அய்யமில்லை. அந்த வகையில் நமது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட - வெறும் 39 நிமிடங்களே ஓடும் குறும்படம் ஒன்றுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கப் பெற்றுள்ளது என்பது குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய ஒன்றாகும்.

ஸ்மைல் பிங்கி என்பது இந்தக் குறும்படத்துக்கான தலைப்பாகும்.

உத்தரப்பிரதேசத்தில் உண்மையாகவே நடைபெற்ற நிகழ்வினை மய்யமாக வைத்து உருவாக்கப்பட்ட சித்திரம் இது.

உத்தரப்பிரதேசம் மிர்சாபூர் மாவட்டத்தில் ரம்பூர் தபாஹி என்னும் கிராமத்தில் பிறந்த பெண்தான் பிங்கி.

பிறவியிலேயே உதடு பிளவுபட்ட பெண்ணாகப் பிறந்த அந்தப் பெண் உற்றார் உறவினரால் வெறுக்கப்பட்டவள்தான்.

தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தபோது அந்தப் பெண்ணுக்கே தன்மீது வெறுப்புப் பீறிடுகிறது. யாருடனும் பேச முடியவில்லை; பழக முடியவில்லை; விளையாட்டுப் பருவத்தில் சகக் குழந்தைகளுடன் விளையாடவும் முடியவில்லை - வெறுக்கப்படும் ஒரு பொருளாக ஆன நிலைதான்.

அய்ந்து குழந்தைகளோடு பிறக்கிறாள் - ஏழைக் குடும்பம்; இவள் ஏன் பிறந்தாளோ? என்று தந்தையே நொந்து கொள்ளும் நிலைமை.

அந்த நேரத்தில் தான், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு சமூக சேவகர் அங்கு வந்து சேர்கிறார்.

இது ஒன்றும் நோய் அல்ல - எளிமையான அறுவை சிகிச்சைமூலம் சரி செய்துவிடலாம் என்று அந்தக் கிராமத்தில் நம்பிக்கையை ஊட்டுகின்றார்; விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் அந்தக் கிராமத்திலே பிங்கியும் ஒருவர்.

அந்தச் சமூக சேவைக்காரர் இலவசமாக பிங்கிக்கு அறுவை சிகிச்சை செய்திட ஏற்பாடு செய்கிறார். 45 நிமிட அறுவை சிகிச்சைக்குப் பின் பிங்கியின் முகமே அழகின் சிரிப்பாக மலர்ந்து விடுகிறது - தன் முகத்தை கண்ணாடியில் பார்க்கிறாள் பிங்கி; அடடா, அப்படி ஒரு ஆனந்தம் அந்தச் சிறுமிக்கு!

மேல் நாடுகளில், பிறந்த நான்காவது நிமிடத்திலேயே இத்தகைய குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்து விடுகின்றனர். அப்படி ஒரு குறைபாடு தனக்கு இருந்ததாகவேகூட பிற்காலத்தில் அத்தகையவர் களுக்குத் தெரிவதில்லை.

ஆண்டு ஒன்றுக்கு இத்தகு குழந்தைகள் இந்தியாவில் 35 ஆயிரம் பிறக்கின்றனவாம். போதிய விழிப்புணர்வு இல்லாததால் சக மக்களிடமிருந்து விலகி வாழும் அவலம் அவர்களுக்கு ஏற்படுகிறது.

இந்தத் திரைப்படம் புதிய விழிப்புணர்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல; சமூகத்திற்கே ஏற்படுத்தி விடுகிறது.

ஏதோ விதிப் பலன்; போன ஜென்மத்தில் நாம் செய்த பாவம் நமக்கு இப்படி ஒரு பிள்ளை பிறந்திருக்கிறது என்று தங்களுக்குத் தாங்களே நொந்து கொண்டும் சமாதானம் செய்துகொண்டும் மகிழ்ச்சியான வாழ்வைத் தொலைத்துக் கொண்டவர்கள் மத்தியிலே இந்தத் திரைப்படம் ஒரு புதிய வெளிச்சத்தை ஏற்படுத்துகிறது என்பதில் அய்யமில்லை.


இவ்வளவுக்கும் இந்தக் குறும்படத்தின் ஓட்டம் வெறும் முப்பத்து ஒன்பதே நிமிடங்கள்தானாம்.

பிரேசில் நாட்டுக்காரரான இயக்குநர் மேஹன் மைலான் என்ற பெண்மணி - யதார்த்தமான நடப்பினை மையப்புள்ளியாக்கி இப்படி ஒரு படத்தைத் தயாரித்து ஆஸ்கார் விருதினையும் பெறச் செய்துள்ளார் என்பது சிந்திக்கத்தக்கதாகும்.

உலகின் நடப்புகளில் இதுபோன்று எத்தனை எத்தனையோ யதார்த்தங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றைக் கருவாகக் கொண்டு திரைப்படங்களை எடுப்பதன்மூலம் விழிப்புணர்வை ஊட்ட முடிகிறது - புதிய திருப்பத்தைக் கொடுக்க முடிகிறது என்பதுதான் இதில் பாராட்டப்பட வேண்டிய மிக உயர்ந்த அம்சமாகும்.

இதில் இன்னும் முக்கியமான மகிழ்ச்சி. இந்தக் குறும்படத்தின் கதாபாத்திரமான பிங்கி என்ற பாத்திரம் கற்பனையல்ல; உண்மையிலே அப்படி ஒரு பெண் இருக்கிறார்; அந்தப் பெண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்.

ஆஸ்கார் விருது விழா வழங்கும் லாஸ்ஏஞ்சல்சுக்கு தம் தந்தையார் மற்றும் அறுவை சிகிச்சையைச் செய்த டாக்டர் ஆகியோர்களுடன் சென்று, ஸ்மைல் பிங்கி குறும்படத்துக்கு ஆஸ்கார் விருது வழங்கப்படும் காட்சியையும் நேரில் பார்க்கிறார் என்பது, எத்தகைய உணர்ச்சியின் விளிம்பு - ஆனந்தத்தின் ஆகாயப் பயணம்!

ஒரு காலத்தில் அருவருக்கப்பட்ட பிங்கி - இன்று அனைவராலும் கட்டியணைத்து முத்தம் பொழியப்படுகிறாள்.

கர்ம வினையும் அல்ல; கடவுளின் கட்டளையும் அல்ல - மனிதனின் மிக உயர்ந்த அறிவுத் திறன் எதையும் சந்தித்து, எதையும் சாதிக்கும் என்ற தன்னம்பிக்கையை ஊட்டும் இத்தகு குறும்படங்கள் தான் நாட்டுக்குத் தேவை.

குத்துப்பாட்டும், அடிதடியும் குலை குலையாய்த் தொங்கும் தமிழ்நாட்டுத் திரைப்படங்களின் போக்கு சிரிக்கத்தக்கதாக இருக்கிறது; "ஸ்மைல் பிங்கி" படமோ சிந்திக்கத்தக்கதாக விருக்கிறது - பாராட்டுகள்!

திராவிடர் கழகம் என்றைக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கும்.




தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக
இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றினால்

அந்தச்சட்டத்தைதிராவிடர் கழகம்கொளுத்தும்!

சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்

தொல்.திருமாவளவன் - சுப. வீரபாண்டியன் ஆகியோரும் பங்கேற்றனர்


தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மத்திய அரசு சட்டத்தை நிறைவேற்றினால், திராவிடர் கழகம் அதைக் கொளுத்தும் என்று தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறினார்.

மத்திய அரசின் மசோதா தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் தலையில் விழுந்த பேரிடி என்று தொல். திருமாவளவன் கூறினார். தமிழர் தலைவர் ஆசிரியர் மிகச் சரியான தருணத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தியுள்ளார் என்று சுப. வீரபாண்டியன் கூறினார்.

திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்கான மசோதாவில் சமூகநீதிக்கு எதிரான சரத்துகள் சேர்க்கப்பட்டதைக் கண்டித்தும், சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளு மன்ற நிலைக்குழு பரிந்துரை சிபாரிசுகளை இணைத்தும் காலம் தாழ்த்தாமல் இந்த மசோ தாவை, இந்தக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றி கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமை காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவும் திராவிடர் கழகத்தின் சார்பில் அதுவும் 24 மணி நேரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (24.2.2009) காலை 11 மணிக்கு சென்னை அரசு பொது மருத்துவமனை எதிரில் உள்ள மெமோரியல் ஹால் முன்பு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களது தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தோரை வரவேற்று திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் பேசினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை, கழகப் பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொல். திருமாவளவன்

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ஆர்ப்பாட்டத்தில் பேசியதாவது:

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டில் மத்திய அரசு தேவையற்ற பல குழப்பங்களைச் செய்துள்ளது. ஏற்கெனவே உள்ளதிலேயே கை வைத்துவிட்டது மிகுந்த வேதனை அளிக்கிற ஒரு செயலாகும்.

தலையில் இடி விழுந்த செய்தி இது

ஏறத்தாழ 47 நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்ற நிலையை மத்திய அரசு உரு வாக்கியிருப்பது ஏழை, எளிய மக்களின் தலையில் இடி விழுந் ததைப் போன்ற ஒரு செயலாகக் கருதுகின்றோம்.

இதுபோன்ற கருத்து எதிர்காலச் சந்ததியினரை மிகப்பெரிய கொடுமையில் ஆழ்த்தக்கூடிய ஒன்றாகும்.

நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அய்யா அவர்கள் உரிய நேரத்தில் இந்தப் பிரச்சினையை வெளிக்கொணர்ந்து மக்களுக்குத் தெரிவித்திருக்கின்றார்.

குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இது ஆறுதல் அளிக்கக் கூடிய செய்தி யாகும்.

தமிழர் தலைவர் வழியில் போராடுவோம்

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட சமூகத்தினர் ஒன்று சேர்ந்து நம்முடைய தமிழர் தலைவர் அய்யா அவர்களுடைய வழியிலே விடுதலைச்சிறுத்தைகளும் இணைந்து போராடுவோம். வந்துள்ள ஆபத்தைத் தடுப்பதற்காகத்தான் ஆசிரியர் அய்யா அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

எம்.பி.க்களும் வற்புறுத்தவேண்டும்

தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 எம்.பி.க்கள் ஒற்றுமையாக இருந்து இட ஒதுக்கீட்டில் தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வரக்கூடிய இந்த ஆபத்தை நாடாளுமன்றத்திலே எடுத்துச் சொல்லி தடுத்திட வேண்டும். இதிலே அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்கவேண்டும்.

நம்முடைய தமிழர் தலைவர் அவர்களுடைய தலைமையிலே இட ஒதுக்கீட்டை சமூகநீதியைப் பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்றார்.

தமிழர் தலைவர் உரை

அடுத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய சிறப்புரை வருமாறு:-

உயர் ஜாதிக்கார பார்ப்பன ஆதிக்கத்தினர் இட ஒதுக்கீட்டை ஒழிக்க தந்திரமான முறையில் இறந்த சடலத்திற்கு அலங்காரம் செய்வது போன்ற காரியத்தை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

தமிழகம் என்றைக்கும் முதலிடம்

இட ஒதுக்கீடு, சமூக நீதி என்றால் என்றைக்கும் தமிழகம் தான் முதலிடம் வைத்து வழிகாட் டியாக இருந்து கொண்டிருக்கின்ற மாநிலமாகும்.

இன்றைக்கு 47 கல்வி நிறுவ னங்களில் இட ஒதுக்கீட்டை மூடியிருக்கிறது மத்திய அரசு. கதவு முழுவதும் ஓட்டையைப் போட்டு வைத்து விட்டு கதவை சாத்தி வைத்திருக்கின்றோம் என்றால் அது முறையானதா? அதை ஏற்க முடியுமா?

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட சகோதரர்களை பிரித்தாளும் முயற்சியில் உயர் ஜாதிக்கார ஆதிக்க வர்க்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோரின்
கண்களில் மிளகாய்ப் பொடி


தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் துவியுள்ளனர். இவர்களிடமும் பிளவு மனப்பான்மையை உருவாக்குகின்றனர்.

47 கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு உள்ளே புக முடியாது. சுதர்சன நாச்சியப்பன் தலைமை யிலான பரிந்துரையை உதா சீனப்படுத்தினர். 2008 டிசம்பர் 23இல் மாநிலங்களவையில் இந்த இட ஒதுக்கீடு மசோதா அவசர அவசரமாக - ஒதுக்கப்பட்டு இரண்டே நிமிடங்களில் நிறை வேற்றப்படக் காரணம் என்ன?

செய்த கோளாறுகள் என்னென்ன?

தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களின் நலத் துறைக்கு இந்த மசோதா அனுப்பப்படவில்லை. பழங்குடி யினரின் அமைச்சகத்திற்கும் இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட வில்லை. தாழ்த்தப்பட்டோர் நலனுக்காகச் செயல்பட்டு வரும் சட்டரீதியான அமைப்பான பூட் டாசிங் தலைமையிலான தேசிய ஆணையத்தின் கவனத்திற்கு இந்த மசோதா கொண்டு செல்லப்பட வில்லை.

இது ஒரு அப்பட்டமான சட்ட மீறலான செயலாகும். மேலும், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கண்களுக்குக் கூட இது காட்டப்படவில்லை.

இந்திய அரசமைப்பின் சட்டம் 338இன் துணைப் பிரிவு 9இன்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கொள்கைகளை உருவாக்கும்பொழுது மத்திய மாநில அரசுகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையத்தின் கருத்தினைக் கேட்கவேண்டும்.

இந்த சட்ட நடைமுறையையும் கண்மூடித் தனமாகத் தூக்கி எறிந்துவிட்டு மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளது என்பது எவ்வளவு பெரிய அநீதி - கொடுமையாகும்.

கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையிலே வை என்பது போல மத்திய அரசு இத்தகைய கொடுமையான செயலை செய்துள்ளது.

மரண அடிபோல்

தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு மரண அடி கொடுத்துள்ளது. சமூக நீதிக்கு மாபெரும் கேட்டினை மத்திய அரசு செய்துள்ளது.

45 நாள்களுக்கு உள்பட்ட மத்திய, மாநில அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட் டுள்ளது. அவசர காலங்களில் ஏற்படும் குறிப்பிட்ட மத்திய மாநில அரசு வேலைக்கான பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது.

47 கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது

அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் பிரிவைச் சார்ந்த பதவிகளுக்கு இட ஒதுக்கீடு கூடாது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அய்.அய்.டி., அய்.அய்.எம். மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற 47 கல்வி நிறுவனங்களில் இட ஒதுக் கீடு கிடையாது. சம்பந்தப்பட்ட துறைக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட வில்லை.

சட்டத்தைக் கொளுத்துவோம்

நாங்கள் சொல்லுகின்ற இந்தக் கருத்துக்களை மீறி சட்டத்தை நிறைவேற்றினால் அந்த சட் டத்தை வீதிகளில் போட்டு கொளுத்துவோம் (பலத்த கைதட் டல்).

திராவிடர் கழகம் என்றைக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களைப் பிரித்தாள முடியாது.

அதேபோல கிரிமீலேயர் என்பதன் மூலம் தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்ட வர்களையும் பிரித்தாள நரித்தந்திரத்தை கையாண்டுள்ளனர்.

தமிழக அரசு விழிப்போடிருக்க வேண்டும்

தமிழக அரசும் இதில் விழிப்போடு இருந்து கண்காணித்து இந்த ஆபத்துகளைத் தடுத்திட வேண்டும். தட்டினால் திறக்கப்படும் என்கிறார். அப்படித் திறக்கா விட்டால் கதவுளை உடைத்தெறியவும் நாங்கள் தயங்கமாட் டோம்.

சமூக நீதி என்பது அரசமைப்புச் சட்டத்தில் உள்ள சலுகை அல்ல, அது ஏதோ பிச்சை அல்ல. அது உரிமை; உரிமை.

அந்த உரிமையை நிலைநாட்டுகின்ற வரை திராவிடர் கழகம் தொடர்ந்து போராடும்.

சுப. வீரபாண்டியன்

அடுத்து, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தனது உரையில், நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் சொன்னது போல தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை என்றைக்கும் பிரிக்கவே முடியாது. அவர் சொன்னது போல கத்தரிக்கோலின் இரு கத்திகளிடையே சிக்கினால் என்ன ஆகும் என்பதை உயர் ஜாதியினர் எண்ணிப் பார்க்க வேண்டும். எப்பொழுதும் நாம் விழிப்பாக இருக்க வேண்டும். மிகச் சரியான நேரத்தில் நம்முடைய தமிழர் தலைவர் இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தியுள்ளார் என்றார்.

முன்னதாக க.பார்வதி, செ.வை.ர. சிகாமணி, கோ.வீ. ராகவன், ஆவடி இரா.மனோகரன் ஆகியோர் ஆர்ப்பாட்ட ஒலி முழக்கங்களை அரை மணி நேரம் முழங்கினர்.


----------------- நன்றி:-"விடுதலை" 24-2-2009

சிவராத்திரி என்றால் என்ன? எப்படி ஏற்பட்டது?


சிவராத்திரி

சிவராத்திரி என்பது ஒரு பட்டினித் துக்கநாள் ஆகும். வைஷ்ணவர்கள் சுவர்க்கம் வேண்டி, பட்டினி கிடக்கும் வைகுண்ட ஏகாதசியைப்போல சைவர்கள் என்று கருதக்கூடியவர்கள் சிவன் ராத்திரியும் (கைலாச யாத்திரை, சமாதி) பட்டினி விரதவிழா. தை, மாசி போன்ற காலங்களில் குளிர் நிறைந்துள்ளபடியால், உடல் அங்கங்கள் இயக்கம் தடுமாறும்; உண்ணும் உணவு போன்றவை சரியானபடி ஜீரணம் ஆகாமல் இருக்கும்; வயிற்று இரைச்சல் போன்ற வயிற்றுக்கோளாறு உண்டாகும்.

ஆனால், இந்தச் சிவராத்திரி விரத மகிமைப்பற்றிக் கூறப்படும் புராணக் கதைகளோ அறிவுக்கும், இயற்கைக்கும், மக்கள் நடப்பு-பண்பாடுகளுக்கும் பொருந்தாதவை ஆகும். இந்த விரதம் பற்றிக் கூறப்படும் புராணக் கதையைப் பாருங்கள்!

முன்னொரு சமயம் ஊரும் பேரும் இல்லாத ஒரு வேடன் வேட்டைக்குச் சென்றானாம். அவனுக்குக் காலைமுதல் இரவு வரை காட்டில் அலைந்தும் எந்த விலங்கும் அவனுக்குத் தென்படவில்லை யாம். இரவு நெருங்கும் நேரமானதால் விலங்குகள் நடமாட்டம் ஆரம்பித்தன. ஒரு புலி இந்த வேடனைக் கண்டுவிட்டது. இவனைப் பின் தொடர்ந்து வந்தபடியால், அவன் உயிர் தப்ப ஓடி, ஒரு பெரிய வில்வமரத்தின் மேல் ஏறிக்கொண்டானாம். அப்போது மழையும் பெய்தது. அந்தப் புலியும் விடாமல் துரத்தி வந்து அவன் ஏறியிருந்த மரத்தின் கீழ் தங்கல் போட்டது. புலியும் அவன் இறங்குகிறானா என்று பார்த்துகொண்டே கீழே படுத்து இருந்தது. வேடன் பசி மயக்கத்தில் அதிகக்களைப்பு அடைந்து, வீடு செல்ல எண்ணியபடியால், அந்தப் புலியை விரட்ட, அந்த வில்வமர இலை களைக் கொத்து கொத்தாய் பறித்து அந்தப் புலியின் மேல் வீசினான். மழையின் காரணத்தால் அந்த இலைகளில் உள்ள ஈரப்பசையால் புலிக்குப் பக்கத்தில் உள்ள குத்துக்கல் மீது அந்த இலைகள் விழுந்தன. அது ஒரு சிவலிங்கமாம்; அன்று இரவு வேட்டை கிடைக்காததால் அந்த வேடன் பகல் முழுதும் பட்டினி.

(வேடர்கள் பொதுவாக காலையில் பழைய உணவு சாப்பிட்டு விட்டு வேட்டைக்கு வந்து வேட்டையாடிய விலங்கைக் கொண்டுசென்று, இரவு சமைத்துச் சாப்பிடுவது வாடிக்கையாதலால், பகல் முழுதும் பட்டினி என்பது சாதாரணம் தான்) அவன் மாலை மழையில் நனைந்து குளித்தது போல் ஆயிற்றாம்; அவன் புலியை விரட்ட மரத்திலிருந்து கீழே போட்ட வில்வ இலைகள் மழையின் நீரால் நனைந்து, அவனை அறியாமல் , அவன் அறியாத லிங்கத்தின் மீது விழுந்தனவாம். எனவேதான் அன்று சிவராத்திரி, இரவில் லிங்கபூசை செய்தது போல் ஆயிற்றாம். அவன் இவ்விதம் செய்தது சிவனைக் கும்பிடவேண்டும் என்ற எண்ணமில்லாமல் போனாலும், சந்தர்ப்ப வசத்தால் பகல் முழுதும் பட்டினி கிடந்தது, சிவராத்திரி - பகல் உபவாசம் இருந்தது போல் ஆயிற்றாம். புலியை விரட்ட மழைத் தண்ணீரால் நனைந்த வில்வ இலைகள் லிங்கத்தின் மீது தற்செயலாய் விழுந்தபடியால், அதைக் குளிப்பாட்டி, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ததுபோல் ஆயிற்றாம். இதனால் அவன் வான் உலகை அடைந்தானாம்.


அடுத்த கதை

ஒரு பார்ப்பன வாலிபனைப் பற்றியது. இவன் சுத்த அயோக்கியனும் ஒழுக்கக்கேடனும் ஆவானாம். இதனால் ஊரைவிட்டுத் துரத்தப்பட்டானாம். காலை முதல் இரவு முடிய உண்ண உணவு இல்லாமல், பசியால் வாடிய அவன் இரவு வந்ததும் ஒரு சிவன் கோயிலை அடைந்தானாம். அப்போது அந்த கோயில் அர்ச்சகன் பொங்கல் படையலை அந்த ஈசுவரன் சிலை முன் வைத்து விட்டு வெளியில் சென்று இருந்தான். இந்தப் பார்ப்பன வாலிபன் யாரும் இல்லாத சமயம் அங்கு சென்றபடியால் அவற்றை எடுத்து உண்ண ஆசைப்பட்டு, என்னென்ன பலகாரங்கள் இருக்கின்றன என்பது தெரியாதபடியால், இருண்ட வெளிச்சமாக இருந்ததைக் கருதி, கோயிலில் இருந்த விளக்கின் திரியை தூண்டிவிட்டானாம். அப்போது திரும்பி வந்த அர்ச்சகன் பார்ப்பன இளைஞன் பலகாரங் களை மூட்டை கட்டுவதைக் கண்டு. ஆத்திரத்தில் அவனை அடித்துக் கொன்றான். அன்று மகாசிவராத்திரியாம்.

ஒழுக்கங்கெட்ட அந்தப்பார்ப்பான், காலை முதல் இரவு வரை பட்டினி இருந்தது மகாசிவராத்திரி பகல் உபவாசம் ஆனதாம். திருட எண்ணி, பிரசாதங்களை பார்ப்பதற்கு விளக்கு வெளிச்சத்தைத் தூண்டியது சிவராத்திரியில் ஈசுவரலிங்க சிலைக்கு தீபாராதனை செய்தது போலவும் பிரசாத நிவேதனம் செய்தது போலவும் ஆனதாம். இதனால் பார்ப்பன பூசாரியால் கொல்லப்பட்டதும் நேராக சிவலோகம் சென்றானாம். சிவராத்திரியில் மனிதக்கொலை; அவன் கொலை செய்தது எந்தப் புண்ணியத்தைச் சேர்ந்ததோ? கொலை செய்த அர்ச்சகனுக்கு எந்த லோகம் அளிப்பதோ? என்பது எல்லாம் அதில் கூறப்படவில்லை. மனிதனுக்குப் பிறப்பு அடுத்து இறப்பு வருவது இயற்கைத்தத்துவம் என்பது உண்மை. உலகில் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இயல்பாய் தெரிந்த உண்மையாகும். ஆனால், இந்த சிவராத்திரிகள் விரதங்களின் முக்கிய அடிப்படை, பகலை அடுத்து இரவு வருவதுபோல் , மனிதருக்குப் பிறப்பை அடுத்து இறப்பு வருவது என்பதுதானாம். இதைத் தெரிந்து கொள்ள பூசையும் விரதமும் வேண்டுமா? என்று தான் நாம் கேட்கின்றோம். இந்தபாழும்அர்த்தமற்ற-பொய்யான - ஒரு காசுக்கும் உதவாத நமக்கு இழிவையும் அவமானத்தையும் தருவதான பண்டிகைகளும், உற்சவத்திற்கும், பூசைக்கும், சடங்குக்குமாகப் பொருளையும் பணத்தையும் விரயப்படுத்துவது மக்களின் அறியா மையும், சுயநலக்காரர்களின் சூழ்ச்சியும், புரோகிதர்களின் ஆதிக்கமும் தந்திரமுமே ஆகும். இவைகளை உடனடியாக ஒழிக்கவேண்டும்.


---------------- தந்தைபெரியார் - நூல்: "இந்துமதப் பண்டிகைகள்" - பக்கம்: 6-9

தமிழ் இலக்கியத்தில் ஜாதி எதிர்ப்பு





பண்டைத் தமிழ் மக்கள் பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்பதையே கோட்பாடாகக் கொண்டிருந்தனர். சங்ககாலத் தமிழகத்தில் ஜாதிப் பிரிவினைகள் இருந்தாலும் ஒருவரையொருவர் மதித்து, ஒருமைப்பாட்டுப் பண்புடன் விளங்கினர் என்பதை அறியமுடிகின்றது. இருப்பினும், பிறப்பால் உயர்வு - தாழ்வு வரையறுக்கப்படும் இழிவைப் போக்கும் வகையில் கல்வி கற்பதையும், கலப்பு மணத்தையும் முன்வைத்துத் தம் ஜாதியெதிர்ப்புச் சிந்தனையை மிக மென்மையாகச் சங்கப்புலவர்கள் தம் பாடல்களில் வெளிப்படுத்தியுள்ள திறத்தை ஆங்காங்கே காணமுடிகிறது. ஆரியப்படை கடந்த பாண்டிய நெடுஞ்செழியன் புறநானூற்றில்,

"வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவனும் அவன்கண் படுமே"

என்று பாடியிருப்பது, ஜாதியொழிப்புச் சீர்திருத்தத்தின் முதல்குரலாக ஒலிக்கிறது என்று கூறலாம். பிறப்பால் தாழ்ந்த வகுப்பால் தோன்றிய ஒருவன் கல்வியறிவும் பெற்றால், அச்சிறப்புக் காரணமாக உயர்ந்த வகுப்பினர்க்குரிய சமுதாயத் தகுதியை அடையலாம் என்பதே இப்பாடற்பகுதியின் கருத்தாகும். கல்வியின் சிறப்பை வலியுறுத்துவதற்காக இப்பாடல் புனையப்பட்டிருந்தாலும், ஜாதியால் தீர்மானிக்கப்பெறும் உயர்வுதாழ்வு வேறுபாட்டைக் களைய வேண்டுமானால் கல்வி கற்பதே உகந்ததாகும் என்னும் தீர்வையும் முன்வைத்துள்ளது. இதன் வாயிலாக இப்புலவனின் ஜாதிமறுப்புச் சிந்தனையையும் அதன் தீர்வின் திசைநோக்கிப் பயணப்பட்டிருக்கும் பாங்கையும் அறியமுடிகிறது. கற்பதன்மூலம் ஜாதியால் ஏற்படும் உயர்வு தாழ்வு வேறுபாடு மறையும் என்றும் இதே கருத்தை,

"எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடிக் கற்றோரை மேல்வருக என்பர்"

என்று 'வெற்றிவேற்கையும்' எடுத்துக் காட்டியிருக்கிறது. இதே "கருத்தை நாலடியாரும், கடைநிலத்தோர் ஆயினும் கற்றறிந்தோரைத் தலைநிலத்து வைக்கப் படும்"

என்று சுட்டிக் செல்கிறது. சங்க இலக்கியம் சுட்டும் சமுதாயத்தில் தொழில்களின் அடிப்படையில் சில பிரிவினர் தாழ்ந்த நிலையினராகக் குறிக்கப் பெற்றுள்ளனர். அவர்களிடையே ஒருமைப்பாட்டுணர்வு நிலவியதால் ஜாதிப்புன்மை இல்லையென்று கூறலாம். எனவேதான் சங்ககாலப் புலவர்களிடையே ஜாதி எதிர்ப்புச் சிந்தனை மென்மையாக இழையோடுகிறது.

மணிமேகலை காட்டும் சமுதாயத்தில்தான் வருணப்பாகுபாடு பாராட்டும் நிலையை வெளிப்படையாகக் காணமுடிகிறது.

"நால்வேறு வருணப் பாகுபாடு காட்டி
இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த
குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன
சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்"


எனவரும் பகுதி, இடுகாட்டில்கூட வருணப்பாகுபாடு பாராட்டும் நிலை அக்காலச் சமுதாயத்தில் நிலவியதைத் தெளிவுபடுத்துகிறது. ஜாதிமுறையின் அடிப்படையில் மக்கட் சமுதாயம் பிளவுபட்டு நிற்பதைக் கண்ட சாத்தனார், வைதிகப் புராண இதிகாசங்களில் காணப்படும் ஜாதி குறித்த செய்திகளைத் தாக்குகிறார். அந்தணர்கள் வேள்வியில் கொலை செய்வதற்காக வைத்திருந்த பசுவை ஆபுத்திரன் கடத்தி வைத்துக் கொள்கிறான்; அதனைக் கண்ட அந்தணர்கள் அவனை ஒவ்வாத செயல் செய்தவன் என்று இழித்தும் பழித்தும், அவன் பிறப்பை அவமதித்தும் பேசுகின்றனர். அவர்களை நோக்கி,

"ஆண்மகன் அசலன் மான்மகன் சிருஞ்சி
புலிமகன் விரிஞ்சி புரையோர் போற்றும்
நரிமகன் அல்லனோ கேச கம்பளன்
ஈங்கிவர் நுங்குலத்து இருடி கணங்கள் என்று
ஓங்குயர் பெருஞ்சிறப்பு உரைத்தலும் உண்டால்
ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ?"

என ஆபுத்திரன் வினவுகின்றான். ஆவயிற்றில் பிறந்த அசலமுனிவன், மான்வயிற்றில் பிறந்த சிருஞ்சி, புலிவயிற்றில் பிறந்த விரிஞ்சி, நரி வயிற்றில் பிறந்த கேசகம்பளன் ஆகியோரை உயர் அறவோர் கூட்டத்தினர் என்று நீங்கள் போற்றுகின்றீர்; விலங்குகளின் வயிற்றில் பிறந்த இவர்கள் உயர்ஜாதியினராகக் கருதப்பெறும் நிலையில், இனிய பாலைத் தருகின்ற பசுவோடு தொடர்புடைய நான் மட்டும் எப்படி இழிகுலத்தவன் ஆக முடியும் ஆகமுடியும் என்று புரட்சிக்குரல் எழுப்புகின்றான். இதன் மூலம், பிறப்பின் அடிப்படையில் ஏற்படும் ஜாதி வேறுபாடுகளைப் பாராட்டும் மனநிலைக்குச் சாவுமணி அடிப்பது தெளிவாகப் புரிகிறது.

---------------- முனைவர் ச.முருகேசன் அவர்கள் "உண்மை" பிப்ரவரி 15-28 2009 இதழில் எழுதிய கட்டுரை

23.2.09

தாழ்த்தப்பட்டோரையும், பிற்படுத்தப்பட்டோரையும் பிரித்து தனித்தனியாக மசோதா கொண்டு வருவது பிரித்தாளும் சூழ்ச்சியே!


* தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் திடுக்கிடத்தக்க சதிப்பின்னல்கள்!
* 47 கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடையாதாம்!
* தாழ்த்தப்பட்டோரையும், பிற்படுத்தப்பட்டோரையும் பிரித்து தனித்தனியாக மசோதா கொண்டு வருவது பிரித்தாளும் சூழ்ச்சியே!

இன்னும் இரண்டு நாள்கள்தான் நாடாளுமன்றக் கூட்டம்
அதற்குள் இரு மசோதாக்களையும் புதிய வடிவத்தில் கொண்டு வருக!

சென்னையில் நாளை காலை இதனை
வலியுறுத்தி எனது தலைமையில் ஆர்ப்பாட்டம்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள மிக முக்கிய அறிக்கை


47 கல்வி நிறுவனங்களை - தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என்று பட்டியலிட்டு, அவற்றில் இட ஒதுக்கீடு கிடையாது என்ற சமூகநீதிக்கு எதிரான கருத்துக்களை நீக்கி, புதிய வடிவில் மசோதாவைக் கொண்டு வர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


14ஆவது மக்களவையின் கடைசித் தொடர் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. புதன்கிழமையோடு அது முற்றுப் பெறுகிறது. இந்த நிலையில் மகாசிவராத்திரி என்ற பெயரில் திங்கள்கிழமை நாடாளுமன்றத்திற்கு விடுமுறையாம்! (வாழ்க மதச்சார்பின்மை!)

இன்னும் இருநாள்களே!

மீதி இருக்கும் இரு நாள்களில் பெரும்பகுதி மக்களான தாழ்த்தப்பட்டோர் மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான இரு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டாக வேண்டும். அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தேசியக் குறைந்தபட்ச திட்டத்தில் (National Common Programme) ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று இது (2004 டிசம்பர்).

அதன்படி தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான (பணிகள் மற்றும் சேவைகள்) இட ஒதுக்கீடு மசோதா 2004 என்பது மக்களவையில் அறிமுகப் படுத்தப்பட்டது. அப்பொழுது கிளம்பிய சில எதிர்ப்பின் காரணமாக, திரு. ஈ.எம்.சுதர்சன் நாச்சியப்பன் தலைமையில் அமைந்த பணி யாளர் துறையைச் சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுதர்சன் நாச்சியப்பன் குழுவின் முக்கியப் பரிந்துரைகள்

அந்தக் குழு பல முக்கியமான பரிந்துரைகளை இணைத்திருந் தது; இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் தவறு செய்யும் அதிகாரி களுக்கு மூன்றாண்டு சிறை அல்லது 50 ஆயிரம் ரூபாய் அப ராதம் அல்லது இவை இரண்டும் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.

அப்படி என்ன அவசரமோ!

ஆனால், அந்தக் குழு பரிந்துரைத்த முக்கியமானவற்றை எல்லாம் உதாசீனம் செய்துவிட்டு, 2008 டிசம்பர் 23இல் மாநிலங்களவையில் இந்த மசோதா அவசர அவசரமாக (ஒதுக்கப்பட்ட நேரம் இரண்டே நிமிடங்கள்) நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன் வழக்கமாகக் கடைப்பிடிக்கப்படவேண்டிய சட்டரீதியான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதிலிருந்தே இதன் பின்னணியில் உயர் ஜாதியினரின் கைகள் இருக்கின்றன என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

கமுக்கத்தின் இரகசியம் என்ன?

அ. தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களின் நலத் துறைக்கு (Ministry of Social Justice and Empowerment) இந்த மசோதா அனுப்பப்படவில்லை.

ஆ. பழங்குடியினரின் அமைச்சகத்துக்கும் (Ministry for Tribal Affairs)அனுப்பி வைக்கப்படவில்லை.

இ. தாழ்த்தப்பட்டோர் நலனுக்காகச் செயல்பட்டுவரும் சட்ட ரீதியான அமைப்பான தேசிய ஆணையத்தின் (National Commission for Scheduled Castes) கவனத்திற்கு இந்த மசோதா கொண்டு செல்லப்படவில்லை. இது ஒரு அப்பட்டமான சட்ட மீறலாகும்.

ஈ. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கண்களுக்கும் காட்டப்படவில்லை.

இந்திய அரசமைப்பின் சட்டம் 338இன் துணைப் பிரிவு 9இன்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான (SC) கொள்கைகளை உருவாக் கும்போது மத்திய மற்றும் மாநில அரசுகள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையத்தின் கருத்தினைக் கேட்க வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தையும், நடைமுறைகளையும் கண்மூடித்தனமாகத் தூக்கி எறிந்து, மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப் பட்டுள்ளது என்பது எவ்வளவு பெரிய அநீதி - கொடுமை!

அடிப்படையே தவறு!

இன்னும் இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது இந்த மசோதா மனித வள மேம்பாட்டுத்துறையின் சார்பாகத் தான் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்; அதற்கு மாறாக பிரதமரின் கீழ் செயல்படும் நாடாளுமன்றப் பணிகள் குறித்த அமைச்சரகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

திடீர் சேர்க்கைகள் உள்ளே நுழைந்த பின்னணி என்ன?

2004 டிசம்பரில் முதல் முதலாக மக்களவையில் இந்த மசோதா வைக்கப்பட்ட போது இடம் பெற்றிராத சில பகுதிகள் - தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கும், சமூக நீதிக்கும் மரண அடி கொடுக்கும் வகையில் சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

1. 45 நாள்களுக்கு உள்பட்ட மத்திய மாநில அரசு வேலைகளில் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது.

2. அவசர காலங்களில் ஏற்படும் குறிப்பிட்ட மத்திய மாநில அரசு வேலைக்கான பணி நியமனங்களில் இடஒதுக்கீடு கிடையாது.

3. அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவைச் சார்ந்த பதவிகளுக்கு இட ஒதுக்கீடு கூடாது.

4. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த (அய்.அய்.டி., அய்.அய்.எம். மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் போன்றவை) 47 கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாது.

இத்தகைய பகுதிகள் இணைக்கப்பட்டு தாழ்த்தப்பட்டோரின் தலையில் இடியைப் போட்டுள்ளனர்.

பின்னணியில் இருந்த கைகள் யாருடையவை?

இப்படிப்பட்ட அபாயகரமான பிரிவுகளைச் சேர்த்தது வெளியில் தெரியக்கூடாது; கமுக்கமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற சூதான எண்ணத்தின் காரணமாகத்தான் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு இந்த மசோதா திட்டமிட்டே அனுப்பி வைக்கப்படவில்லை என்பது வெளிப்படையாகும்.

இதன் பின்னணியில் இருக்கும் கைகள் யாவை என்பது முக்கிய மாகும். 2008இல் கவுஹாத்திக்கு (அசாம் மாநிலம்) பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் சென்றிருந்த போது அய்.அய்.டி. இயக்குநர்கள் பிரதமரைச் சந்தித்து, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் இடஒதுக்கீடு அளித்தால் தகுதி கெட்டுப்போய் விடும் என்று உபதேசித்த பின்னணியில் தான் இது நடந்திருக்கிறது என்று தெரிய வருகிறது.

அந்த அய்.அய்.டி. இயக்குநர்கள் எல்லாம் யார்? சமூக நீதியை ஒழிக்க கங்கணம் கட்டியுள்ள பார்ப்பனர்கள்தானே அல்லது உயர் ஜாதிக்காரர்கள்தானே என்பது சொல்லாமலேயே விளங்கும்.

எல்லோர் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டனரே!


நாடாளுமன்றத்தில் நூற்றுக்கு மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருந்தும், அவர்களுக்காக ஆணையம் இருந்தும், எல்லோர் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு, இப்படி மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்றால், 2009ஆம் ஆண்டிலும் பார்ப்பனர்கள் எப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். மத்திய அமைச்சரவை இதனை எப்படி ஏற்றுக் கொண்டது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

கற்க வேண்டிய பாடம்


இதில் மிக முக்கியமாகப் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று உண்டு. 2004 டிசம்பரில் இந்த மசோதா மக்களவையில் வைக்கப்பட்ட போது - தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு மசோதாவாகத்தானிருந்தது. இடஒதுக்கீடு என்று வரும்போது தாழ்த்தப்பட்டோர் மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான பொதுவான அம்சம் என்பதால் இரு பிரிவினரையும் சேர்த்தே அவ்வாறு உருவாக்கப்பட்டது.

பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இரையாவதா?

ஆனால் இதரப் பிற்படுத்தப்பட்டோரை நீக்கிவிட்டு, தாழ்த்தப் பட்டோர் மற்றும்மலைவாழ் மக்களுக்காக தனி மசோதாவாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சில தலைவர்கள் வற்புறுத்திய தவறான காரணத்தால் தனித்தனியாக மசோதாவை நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இது ஒரு பிரித்தாளும் (Divide an Rule) தன்மைக்குப் பலியான சோகமாகும். தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் ஒன்றாக நிற்கும் பட்சத்தில், அந்தப் பலத்தின் வலிமையைத் தெரிந்து ஆதிக்க வாதிகள் தங்கள் வால்களை ஆட்ட முன்வரமாட்டார்கள். பிற்படுத் தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் இரு கைகள்; ஒன்றுக்கு மற் றொன்று எதிரி அல்ல. காலம் காலமாக உயர்ஜாதியினரின் சூழ்ச்சி வலையில் நம் மக்கள் பலியாவது இன்றுவரை தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது.

இன்னும் இரண்டே நாள்கள்தான்

14ஆவது மக்களவையின் கடைசிக் கூட்டத் தொடரிலேயே (வரும் செவ்வாய், புதனுக்குள்) தாழ்த்தப்பட்டோருக்கும் பிற்படுத் தப்பட்டோருக்குமான இரு மசோதாக்களையும் இடையில் இணைக்கப்பட்ட ஆபத்தான சரத்துக்களை அறவே தூக்கி எறிந்து, திரு. சுதர்சனம் நாச்சியப்பன் அவர்களின் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்த சிபாரிசுகளையும் இணைத்து, காலதாமதம் செய்யாமல் குறுக்குச்சால் ஓட்டாமல் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டுமாய் மத்திய அரசை வலியுறுத்துகின்றோம். அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் - ஏன் எதிர்க்கட்சிகளும்கூட கோடானு கோடி தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதியைப் பாதுகாத்துக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்!


இதனையொட்டி, நாளை 24.2.2009 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் எனது தலைமையில் நடைபெறும். அனைத்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைவாழ், சமூகநீதி அமைப்புகளும் வந்து கலந்து கொள்ள வேண்டுகிறோம். இதில் தவறு நேர்ந்தால், அடுத்து இரண்டொரு மாதங்களில் வரவிருக்கும் தேர்தலில் மக்களைச் சந்தித்து வாக்குகள் கோரும் போது, மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான இந்த மக்களின் தீர்ப்பு வேறு மாதிரியாகவே இருக்கும் என்றும் எச்சரிக்கின்றோம்.


------------------- "விடுதலை" - 23.2.2009