Search This Blog

21.2.09

மூன்று சதவீத இடஒதுக்கீடு போதும் என்று பார்ப்பனர்கள் சொல்லித் தொலைக்கக் கூடாதா?


விழித்திருக்கும்போதே விளையாடும் பேர்வழிகள்!



விழித்திருக்கும் போதே விளையாடும் பேர் வழிகளைப் பற்றி புரட்சிக் கவிஞர் பாடியதுண்டு.
அது இப்பொழுது நம் கண்முன்! அதுவும் இடஒதுக்கீடு என்றால், நம் எதிரிகள் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள், எந்தத் தகிடுதத்தங்களையும் கூச்ச நாச்சமின்றி செய்யத் தயங்காதவர்கள். ஆயிற்றே!

அது அவர்களின் குருதியில் பூத்த சங்கதி. மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பம் போடாமலேயே வழக்குத் தொடர்ந்து வெற்றியும் (செண்பகம் துரைசாமி) பெற்ற வெங்கண்ணா பரம்பரையாயிற்றே.

2008-ஆம் ஆண்டு டிசம்பரில் மாநிலங்களவையில் அவசர அவசரமாக ஒரு மசோதா நிறைவேறியிருக்கிறது. அது நிறைவேற்றப்பட எடுத்துக் கொள்ளப்பட்ட நேரம் இரண்டே நிமிடங்கள்தான். மசோதாவின் பெயர் தாழ்த்தப்பட்டோர் பணியிடங்கள் மற்றும் சேவைகளுக்காக, இடஒதுக்கீடு (reservataion postand services) மசோதாவாகும்.

இது மசோதா அல்ல - தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்குச் சுருக்கு மாட்டும் தூக்குக்கயிறு.

தகுதி வாய்ந்தவை என்று பட்டியல் போட்டு வைத்துள்ள 47 நிறுவனங்களில் இவர்களுக்கு உள்ளே நுழையாதே! என்ற அச்சுறுத்தல் விளம்பரப் பலகையாகும்.

அய்.அய்.டி.கள் 7, அய்.அய்.எம்.கள் 7; அலகாபாத் பல்கலைக் கழகம், அலிகார் பல்கலைக் கழகம், தேசிய தொழில் நுட்ப நிறுவனங்கள் 10, புதுச்சேரி ஜிப்மர், வாரணாசி இந்துப் பல்கலைக் கழகம், டெல்லி பல்கலைக் கழகம், மருத்துவக் கல்வி மற்றும் சந்திகர் ஆராய்ச்சிக்கான முதுகலைப் பட்டப் படிப்பு நிறுவனம், விசுவ பாரதி (மேற்கு வங்காளம்) கோல்கத்தா விக்டோரியா நினைவகம், தேசிய நூலகம், இந்திய அருங்காட்சியகம், புதுடில்லி இந்தியப் போர் நிறுவனம் இவைகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது - கிடையவே கிடையாது.

இதற்குச் சூட்டப்பட்டுள்ள பெயர் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாம் (institute of national importence) இப்படி ஒரு பட்டியலைத் தயாரித்தவர்கள் யார்? எந்தக் குழு தயாரித்து? அப்படி தயாரிக்க ஆணை பிறப்பித்தது யார் அல்லது எந்த அமைப்பு?
அதெல்லாம் யாருக்கும் தெரியாது. ஒன்று மட்டும் தெளிவாகத் தெரியும் உயர் மட்டத்தில் உள்ள பார்ப்பனரின் சேட்டைகள், திரைமறைவுச் சதிகள் பின்னணியில் என்பது மட்டும் பகல் சூரியன் போன்ற உண்மையாகும். இந்த 47 கல்வி நிறுவனங்களோடு முற்றுப் புள்ளியா? இல்லை; தேவைப்பட்டால் இந்தப் பட்டியலை நீட்டிக் கொள்ளலாம்; அரசு அனுமதி பெற வேண்டுமா? நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டுமா? அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது.

எல்லா நிறுவனங்களின் தலைகள் எல்லாம் பூணூல் களாயிற்றே!)
2004-இல் அய்க்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தபோது குறைந்தபட்ச செயல் திட்டம் (cmp) ஒன்று வகுக்கப் பட்டது.

அதன் அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர் மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பணியிடங்கள் மற்றும் சேவை மசோதா ஒன்று 2004-இல் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

திரு. சுதர்சன் நாச்சியப்பன் அவர்களின் தலைமையிலான அரசுப் பணித்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2005 ஜூன் மாதத்தில் அக்குழு சமூகநீதிக் கண்ணோட்டத்தில் பலன் உள்ள அம்சங்கள் நிரம்பிய அறிக்கையினை அளித்தது.

எடுத்துக்காட்டாக, இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றாமல் தவறு செய்யும் அதிகாரிகளுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை - ரூ.50 ஆயிரம் தண்டத் தொகை அல்லது இரு தண்டனைகளும் சேர்த்து வழங்கிட பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவற்றை தூரத் தூக்கி வைத்துவிட்டு, பார்ப்பனீய சக்திகள் 47 நிறுவனங்களுக்கு விதி விலக்கு அளிக்கும் ஒரு மசோதாவைத் தயாரித்து வெறும் இரண்டு நிமிடங்களில் மாநிலங்களவையில் நிறைவேறச் செய்து விட்டது. ஆண்டாண்டு காலமாக உரிமை மறுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் நக நுனியில் மறைத்து வைத்திருந்த விஷத்தின் மூலம் சாகடிக்கப்பட்டு விட்டன.

இந்தச் சதி எப்படி நடைபெற்றது? அய்.அய்.டி. அய்.அய்.எம். போன்ற அமைப்புகளின் இயக்குநர்களாக இருக்கக் கூடிய பார்ப்பனர்களின் முயற்சியில் இது நடந்திருக்கிறது.
பிரதமரிடம் அவர்கள் ஒன்றுபோல வைத்த அழுத்தம் என்ற கண்ணிவெடியில் பிரதமர் சிக்கியிருக்கிறார் என்று தெரிகிறது.

இந்த 47 தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அளித்தால் தகுதியும் திறமையும் இதயம் வெடித்துச் செத்துப் போய்விடும் என்று மூக்கால் அழுது காரியம் சாதித்திருக்கிறார்கள்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் குறைந்த பட்ச திட்டமெல்லாம் நமது பிரதமருக்கு எங்கே தெரியப் போகிறது?

இப்படி ஒரு மசோதா தயாரிக்கப்பட்டதே அதன் அமைச்சரவையிலும் வைக்கப்பட்டதே - அதனை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த புள்ளிகள் சமூகநீதிக் காற்றை சுவாசித்துக் கொண்டவர்கள் கவனிக்காமல் எப்படி குறட்டை விட்டனர்?

நினைத்தால் வேதனையாக இருக்கிறது. நம் மக்களின் நிலை இந்த நிலையிலா இருக்கிறது என்று வேதனைப்பட வேண்டியுள்ளது.

விதி விலக்கு அளிக்கப் பட்ட 47 நிறுவனங்களின் பட்டியலை பார்த்த பிறகு தான் அய்யய்யோ! மோசம் போய் விட்டோமே! என்று கதற ஆரம்பித்துள்ளனர்.
தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அனைவருக்கும் சேர்த்து ஒரே மசோதாவாகக் கொண்டு வரவே திட்டமிடப்பட்டன.


இடஒதுக்கீடு என்பது பொதுப் பிரச்சினையாக இருப்பதால் ஒரே வகையான சட்டத்தின் கீழ் கொண்டு வந்து விடலாம் என்கிற நல்லெண்ணத்துடன்தான் அவ்வாறு கூறப்பட்டது.
அதெல்லாம் முடியவே முடியாது, தாழ்த்தப்பட்டோ ருக்கும், மலைவாழ் மக்களுக்கும் (sc; sT) தனி மசோதா தேவை என்று அடம் பிடித்தனர். கடைசியில் நிலைமை என்ன? கோட்டை விடப்பட்டது.

இந்தத் துறை என்பது பிரதமரின் அதிகார எல்லைக்கு உட்பட்ட முக்கியத் துவம் வாய்ந்த ஒன்றாகும். இணை அமைச்சராக பிரதீவ் ராஜ் சவுகான் என்பவர் இருக்கிறார். தாழ்த்தப்பட் டோர் நாடாளுமன்றக் குழு இருக்கிறது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 120 பேர்களுக்கு மேல் இருக்கிறார்கள். இவ்வளவு இருந்தும் மூன்று விழுக்காடு உள்ள பார்ப்பனர்கள் கண்களில் மிளகாய்த் தூள் தூவுகின்றனர் என்றால், இந்த நிலையை என்ன சொல்ல!

நேற்று கிடைத்துள்ள கடைசித் தகவல். தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள் தேசிய ஆணையத்தின் தலைவர் பூட்டாசிங் அவர் கள் குடியரசுத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

இராணுவத்திலும் நீதித்துறையிலும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு இடஒதுக்கீடு தேவை என்று வலியுறுத்திக் கடிதம் எழுதியுள்ளார். வரவேற்கத்தக்க கருத்தாகும்.
தாழ்த்தப்பட்டோரைப் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள மசோதாவின் அபாயத்தை உணர்ந்த நிலையில் கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு இத்தொடரிலேயே சில திருத்தங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாழ்த்தப்பட்டோருக்கும் மலைவாழ் மக்களுக்கும் இட ஒதுக்கீடு பிரச்சினை கம்பியில் நடப்பது போல் இருக்கும் பொழுது, பிற்படுத்தப்பட்டோருக்கான மசோதாவின் கதி என்ன என்ற கேள்வி கலக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.

இத்துறை இணை அமைச்சர் பிரதிவிராஜ் சவுகானை நேற்றைய தினம் பிற்படுத்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த வர்கள் (சில அமைச்சர்கள் உள்பட) சந்தித்து, அறி முகப்படுத்தப்படவிருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கான மசோதா தாழ்த்தப்பட்டோருக்குரிய அனைத்து அம்சங்களுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் 200-க் கும் மேற்பட்ட பிற்படுத்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந் தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சமூக நீதியில் ஒன்றுபட்டு இவர்கள் குரல் கொடுப்பார்களேயானால் நாடாளுமன்றத்தின் அஸ்தி வாரமே ஆட்டம் காணுமே!
மூன்று சதவீதக் கூட் டத்தை எதிர்த்து இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தான் 97 சதவீத மக்கள் போராடுவதோ!

மூன்று சதவீதம் உள்ள எங்களுக்கு மூன்று சதவீத இடஒதுக்கீடு கொடுத்தால் போதும் என்று இந்தப் பார்ப்பனர்கள் சொல்லித் தொலைக்கக் கூடாதா? சொன்னால் போதுமே - அந்தக் கணமே இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்பட்டு விடுமே!

------------------மின்சாரம் அவர்கள் 21-2-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

2 comments:

Unknown said...

//மூன்று சதவீதம் உள்ள எங்களுக்கு மூன்று சதவீத இடஒதுக்கீடு கொடுத்தால் போதும் என்று இந்தப் பார்ப்பனர்கள் சொல்லித் தொலைக்கக் கூடாதா? சொன்னால் போதுமே - அந்தக் கணமே இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்பட்டு விடுமே! //

பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டு விட்டால் பார்ப்பான் பொழப்பில் மண் விழுந்துவிடுமே?

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திருநாவு