Search This Blog
18.2.09
நரேந்திரமோடி விழாவில் "சோ"வின் பேச்சுக்கு எதிர்ப்பு
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்ற விழாவில், சோ பேசும்போது பயங்கர ரக ளையும், அமளியும் ஏற்பட்டன.
நரேந்திர மோடி எழுதிய "கல்வியே கற்பகத்தரு" என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், "சோ" ராமசாமி பேசுகையில்,
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பாரதீய ஜனதாவிற்கு தற்போது "பிரமை" வந்துள்ளது. விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடக்கும் போரை நிறுத்தவேண்டுமென்று கூறி தமிழர்களைக் காக்கவேண்டுமென்று நினைக்கிறார்கள் என்ற கருத்தை எப்படியாவது நான் இந்த நிகழ்ச்சியில் நுழைத்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் நுழைத்துவிட்டேன் என்றார்.
இதையடுத்து "சோ" தனது பேச்சை ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார். அப்போது அரங்கத்தில் இருந்த சிலர் "சோ" சொன்ன கருத்துக்கு எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், "சோ" தனது பேச்சை நிறுத்தாமல், உங்கள் மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன். இதே கருத்தை யாழ்ப்பாணத் திலும், நான் சொல்லியிருக் கிறேன் என்று தனது பேச்சை ஆங்கிலத்தில் ஆவேசமாக பேசத் தொடங்கினார். ஆனால், சோவின் கருத்தை எதிர்த்தவர்கள் தொடர்ந்து எதிர்ப்புக் குரல் கொடுத்து கொண்டிருந்தனர். அதேபோல் "சோ" தமிழில் பேசவேண்டும் என்று சொன்னவர்களும் தங்களது கோஷத்தை நிறுத்தவில்லை. இதனால், அரங்கத்திற்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் கூச்சல், குழப்பம் நீடித்தது. அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்றுவிட்டனர்.
காவல்துறையினர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். உடனே "சோ" தனது பேச்சை நிறுத்திக்கொண்டு இருக்கையில் அமர்ந்துவிட்டார். பின்னர் அரங்கத்தில் அமைதி நிலவியது.
---------------நன்றி: "விடுதலை" 18-2-2009
Labels:
பார்ப்பனியம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
சோ வின் பேச்சை அவர்கள் ஆதரவாளர்களே பொறுத்துக் கொள்ளமுடியாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறர்கள்.
உண்ணாவிரதம் இருந்த வக்கீல்களை தரக்குறைவாகப் பேசிய சுப்பிரமணிய சாமியை உதைக்காமல் கொஞ்சவா செய்வார்கள்?
பார்ப்பன நாரதர்கள் சு.சாமியும், சோ வும் . அவர்கள் சென்ற இடமெல்லாம் கலவரங்கள்தான். முதலில் அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Post a Comment