Search This Blog
16.2.09
வேதங்களை எழுதியது யார்?கடவுளா? மனிதனா?
கற்பனைக்கேற்றவாறு கதைப் புனைவு
என்றும் சிரஞ்சீவியாகிய கடவுள் யாவற்றையும் படைத்தார் என்றும், அவர் உயிர், உயிரில்லாத பொருள் அனைத்திலும் புகுந்து நிற்பதோடு, எல்லாப் பொருள்களுக்கும் அவர்தான் இருப்பிடம் என்றும், எல்லாப் பொருள்களும் அவருள் அடங்கி இருந்தது என்றும், அதர்வண வேதம் கூறுகிறது. ஆதியில் எண்ணம் இருந்ததாகவும், உலகத்தைப் படைக்க வேண்டும் என்ற ஆசை இந்த எண்ணத்திற்கு ஏற்பட்டதாகவும், இதன் விளைவாக இப்பிரபஞ்சம் தோன்றியதாகவும் இவ்வேதம் கூறுகிறது.
பிரம்மணா என்ற வேதம் பிரபஞ்சத்தைப் படைக்க சிருஷ்டிகர்த்தா ஒருவன் உண்டு என்று கூறி அதிலிருந்து பரிணாம வளர்ச்சியை விளக்க ஆரம்பிக்கிறது.
ஆதிப் பிரபஞ்சமனைத்தும் வெள்ளக்காடாக இருந்தது என்றும், அந்த வெள்ளத்தில் ஒரு பொன்முட்டை மிதந்து கொண்டிருந்தது என்றும், இந்தப் பொன்முட்டைதான்.
கடவுள் என்றும் ரிக்வேதம் கூறுகிறது. இரணிய கர்ப்பம் இதுதான் என்று ரிக்வேதம் கூறுகிறது. எனவே, பொன்முட்டையாக ரிக் வேதத்தில் காட்சியளிக்கும் கடவுள் உலகத்தைப் படைத்தார் என்று இவ்வேதம் கூறுகின்றது.
சமண மதம் இதற்கு நேர்மாறாக, உலகத்திற்கு ஆதியும் அந்தமும் இல்லை என்றும், அதற்குக் காலம் என்பது இல்லை என்றும் எப்பொழுமே இருந்துள்ளது: எப்பொழுதுமே இருக்கும் என்றும் கூறுகின்றது.
நெறி வழி உள்ளவன் இன்பத்தை அனுபவிக்கும், அதற்கு நேர்மாறாகத் தீய செயலில் ஈடுபடுபவன் துன்பத்தை அனுபவிக்கவுமான இடமே உலகம் என்றும் சமண மதம் கூறுகின்றது.
மேல் உலகம் யுருத்வா என்றும், அதில் கடவுள்கள் வசிக்கிறார்கள் என்றும், கீழ் உலகமாகிய அதோஎன்ற நரகத்தில் பாவம் செய்தவர்கள் தள்ளப்படுகிறார்கள் என்றும் அந்தச் சமண மதம், மேலும் கூறுகின்றது. புண்ணியம் செய்தவர்களின் ஆத்மா கடவுள் வசிக்கும் யுருத்வாவைக் கடந்து மேலே ஆகாயத்தில் சென்று அங்கு தர்மமும் அதர்மமும் இல்லை என்றபடியால் அசைவற்று அப்படியே சாஸ்வதமாக நிற்குமாம் அவர்கள் ஆத்மா.
வேதாந்தத் தத்துவமும் பல உலகங்களைப் பற்றிக் கூறுகின்றது.
இப்பிரபஞ்சத்தில் இவ்வுலகம் நீங்கலாக ஈரேழு உலகங்கள் உண்டென்றும் - இவைகளில் மேல்ஏழு - கீழ்ஏழு உலகங்கள் உண்டு என்றும், இவை அனைத்தையும் ஆளும் கடவுள் விரத் என்றும், அவர் கீழ் உள்ள, ஒவ்வொரு உலகத்திற்கும் அதிபதியாக உள்ளவரை விஸ்வா என்றும் வேதாந்தக் தத்துவம் கூறுகின்றது.
வேதங்களை எழுதியவர்கள் மனிதர்களே! எனவே அவருடைய கற்பனை எவ்வாறெல்லாம் அவர்களை இழுத்துச் சென்றதோ, அவ்வாறெல்லாம் எழுதி அவைகளைத் தெய்வ வாக்கு என்று கூறியும் இவற்றை எதிர்ப்பவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று கூறியும் மூடநம்பிக்கையைத் திணித்தனர்.
------------------------- நூல்: - ஏ.எஸ்.கே அவர்கள் எழுதிய “ கடவுள் கற்பனையே புரட்சிகர மனித வரலாறு”
Labels:
மூடநம்பிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment