Search This Blog

12.2.09

பெரியாரைச் சந்தித்த பின்


என்னய்யா... என்னங்கோ

1968ஆம் ஆண்டு பெரியாருக்கு இப்படியொரு ஆசை. தமிழ்நாட்டு சுயமரியாதைக் குடும்பங்-களையெல்லாம் திருச்சி தேவர் மன்றத்திற்கு வந்து சிறப்பிக்க அழைத்தார். முதலில் கலந்துரையாடல், அதன்பின் பிரியாணி விருந்து ஏற்பாடு. இதில் மனைவி மக்களுடன் கலந்து கொண்ட சைலசு விசயகுமார் மதுரை தென்னக இரயில்வேயில் முதன்மைப் பயணச்சீட்டு ஆய்வாளராக இருந்து தற்போது ஓய்வு. அவருக்கு நேர்ந்த அனுபவம் மறக்க முடியாது.

பெரியாரிடம் தன் குடும்பத்தை பெரியகுளம் சா.வெ. அழகர்சாமி துணையுடன் அறிமுகம் செய்ய, மூத்த பையனை அழைத்து உங்க பேரு என்னாங்கோ? - என பெரியார் கேட்க, பையனோ இரணிய இராவணன் என வெடிக்கிறான். பெயரைக் கேட்டதுமே, அய்யாவுக்கு வாய் நிறைந்த சிரிப்பு.

என்ன? என்ன? மறுபடியும் சொல்லுங்கோ என்கிறார். உடனே விசயகுமார் பக்கம் திரும்பி, அதென்ன ரெட்டைப்பேரு? என வினவுகிறார். அதற்கு விசயகுமார் என் மகனுக்கு இராவணன் என்றே முதலில் பெயரிட்டேன். பிறகு புராணத்தில் இராவணன் சிவபக்தன் என குறிப்பைப் படித்ததும், கடவுளை முழுமையாக மறுத்த இரணியன் பெயர் நினைவுக்கு வரவும், வீரத்திற்கு இராவணன் என்றும், கடவுள் எதிர்ப்புக்கு இரணியனும் சேர்ந்தே இருக்கட்டும் எனப் பெயரிட்டேன் என்றதும் பெரியார் என்னய்யா! என்னைவிட தீவிரமா இருக்கீங்க என்று சொல்லிவிட்டு கடகடவென பலமாகச் சிரித்தார்.


தங்களது பூர்விகம்?

கோலார் தங்கவயல்

அடடே! அப்படீன்னா தங்களுக்கு பண்டிதர் அப்பாத்துரையைத் தெரியுமா?

நல்லாத் தெரியுமுங்க. அவர்தான் எனக்கு உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர். 1957இல் தங்கவயல் பவுத்த சங்கத்தில் இந்தச் சாந்தாவை அவர் தலைமை வகிக்க மணம் முடித்தேன்

மகிழ்ச்சிங்க! அவர் புத்தர் அருளறம் என்ற அருமையான நூலை எழுதியவர் அப்புத்தகம் கிடைக்குமாய்யா!

அய்யா, அப்புத்தகம் என்னிடம் இருக்கு! நான் மதுரை பெத்தானியபுரம் பகுத்தறிவு கழகச் செயலன். SRMU ராமச்சந்திரன் அண்ணாச்சி தலைவர். இரண்டே நாள். அப்புத்தகம் தங்களிடம் நேரிடையாக ஒப்படைக்கப்படும் என்றார். அதன்படியே செய்தார்.

பெரியார், குழந்தைகள் நால்வரையும் கவனமா படியுங்கோ என வாழ்த்தி அனுப்பினார். பெரியார் வாக்கு உண்மையானது.

மூத்தவன் இரண்ய இராவணன் M.B.B.S.. MD, இளையோன் சாக்கியசிம்மன் M. Tech., மூன்றாவது மலர் M.A. - ஆயுள் காப்பீட்டுக் கழக மேலாளர், நான்காவது வனமாலா M.B.B.S. DCH என சிறக்க வாழுகின்றனர்.

பெரியாரைச் சந்தித்த பின் மானமிகு விசயகுமாரிடம் பெரும் மாற்றம், தன் பிள்ளைகளை வாடா போடா வாடி போடி என்று அழைத்தவர், அதற்குப் பிறகு இன்று வரை என்னய்யா என்னங்கோ தான்!


------------- சந்தனத்தேவன் அவர்கள் உண்மை பிப்ரவரி 1-15 2009 இதழில் எழுதியது

5 comments:

போலி மதச்சார்பின்மை said...

Poli matha saarpinmai pesum naaikale! cristeena pathiyum muslimma pathiyum mudugja ethavathu solli paarungada!!!!!!1

Unknown said...

மதம் என்ற பெயரில் அருவருக்கத்தக்க வகையில் பின்னூடம் இட்டிருக்கும் வெறியனை கண்டிக்கிறேன்.

மதவாதிகள் இதை ஏற்றுக் கொள்கிறார்களா?

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Thamizhan said...

தந்தை பெரியார் அவர்கள் மேடையில் தான் சிங்கம்.நேரிலோ தங்கம்.
அனைவர்க்கும் அவ்வளவு மரியாதை.
பொறுமையாகப் பேசுவார்.சொல்வதைக் குறுக்கிடாமல் கேட்டுப் பதில் சொல்லுவார்.
ஒன்றுமே இல்லாத சாதாரண நம்மிடமா இவ்வளவு பெரிய தலைவர் இவ்வளவு நேரம் இப்படி அன்புடன் பேசினார் என்பது வாழ்நாளில் மறக்க முடியாததாகி விடும்.
எதிர் கருத்து சொல்பவர்களுக்கும் பொறுமையாகக் கேள்வி பதில் விளக்கமாகப் பொறுமையாகச் சொல்லுவார்.

தமிழ் ஓவியா said...

matham பிடித்த வெறியனை கண்டித்த தமிழ் $ தமிழன் அய்யாவுக்கு நன்றி