Search This Blog

31.3.08

"கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி"

"நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்" என்ற தலைப்பில் "உண்மை" மூன்றாவது இதழ் முதல் கட்டுரையில் "கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்' என்ற கருத்திற்கு விளக்கமும், நான்காவது இதழ் இரண்டாவது கட்டுரையில் "கடவுளைப் பரப்பினவன் அயோக்கியன்" என்ற கருத்திற்கு விளக்கமும் எழுதியிருந்தேன் . இந்த மூன்றாவது கட்டுரையில் "கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி" என்ற கருத்திற்கு விளக்கம் எழுத ப்படுகிறேன்.

பொதுவாகச் சொல்கிறேன், உலகிலேயே கடவுளை வணங்குகிற எவனும் கடவுள் என்றால் என்ன? அது எப்படிப்பட்டது? அதன் தன்மை என்ன? குணம்என்ன? என்பனவாகிய விஷயங்களை உணர்ந்தோ, அல்லது உணர்ந்ததன் படியோ வணங்குவதே இல்லை ; மற்றெப்படியென்றால் "கடவுளை" மனிதனாகவே கருதிக்கொண்டு மனிதகுணங்களையே அதற்கு ஏற்றிக்கொண்டு , தான் எப்படி நடந்து கொண்டான், தான் எப்படி நடந்து கொள்ளுகிறான், தான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பவைகளைப் பற்றிக் கவலைப்படாமல் தான் நடந்துகொண்ட கூடாத்தன்மைகளுக்குப் பரிகாரம் (பாவ மன்னிப்பு) தேடும் முறையிலும், நியாயமோ பொருத்தமோ விகிதமோ இல்லாமல் தனக்கு வாழ்வில் எல்லாத் துறைகளிலும் உயர் நிலையே வேண்டுமென்கின்ற பேராசையுடனுந்தாம் கடவுளை வணங்குகிறான்.

இப்படிப்பட்டவனை அயோக்கியன் என்று சொல்லாவிட்டாலும் அறிவாளி என்று சொல்ல முடியுமா?

இப்படிப்பட்ட இவர்கள் வணங்கும் கடவுளை, இவர்களை, இன்றைய நம் ஜனநாயக ஆட்சிக்கும், ஆட்சிப் பிரஜைகளுக்கும், பிரதிநிதிகளுக்கும் ஒப்பிட்டுச்சொல்ல வேண்டுமே ஒழிய யோக்கியர் கள், அறிவாளிகள் என்று எப்படிச் சொல்லமுடியும்? இம்மாதிரியான கடவுள் வணக்கம் உலகில் ஏற்பட்டபின் இதன் பயனாக இயற்கையான யோக்கியமான மனிதன் என்று சொல்லக்கூடிய ஒரு மனிதனாவது தோன்ற முடிந்ததா? இருக்க முடிந்ததா? பொதுமக்கள் பயமில்லாமல் வாழமுடிந்ததா? அல்லது கடவுள்களோ, கடவுள்கள் வீடுவாசல் சொத்துக்களாவது மக்கள் பயமில்லாமல் வாழமுடிந்ததா? இது பொது விளக்கமாகும்.

இனி நமது மக்கள் கடவுளை வணங்குவதன் மூலம் எவ்வளவு காட்டுமிராண்டிகள், மடையர்கள் என்பதைப் பற்றி ளக்குகிறேன்.

நான் பந்தயம் கட்டிச் சொல்லுவேன், நம் மக்களில் (இந்துக்கள் என்பவர்களில்) கடவுளை வணங்குகிறவர்களில் ஒருவர்கூட அறிவாளரோ, யோக்கியரோ, உண்மை அறிந்தவரோ இல்லை ! இல்லை !! இல்லவே இல்லை!!! என்று கூறுவேன்.

ஏனெனில் எப்படிப்பட்ட கடவுள் பக்தனும் கடவுள் என்று கல்லைத் தான் , மனித உருவத்தைத்தான்,மாடு, குரங்கு, மீன், ஆமை, பன்றி, கழுகு, யானை முதலிய உருவங்கள் கொண்ட கல்லைத்தான் வணங்குகிறான். அவற்றிலும், மிகமிக முட்டாள்தனமாக வணங்கப் படும்போக்கு என்னவென்றால் ஒருதலை, இரண்டு தலை, மூன்று தலை, நான்குதலை, அய்ந்து தலை, ஆறுதலை, ஆயிரம் தலையும் அவைபோன்ற கைகளும் உடைய மனித உருவங்களையும், மற்றும் தலை மனிதன், உடல், மிருகம், முதலிய உருவங்கள் கொண்ட லைகளையும் வணங்குகின்றான் என்பதே.

கடவுள் இருப்பதற்கு இப்படிப்பட்ட தோற்றங்கள் எங்கு இருக்கின்றன? ஒவ்வொரு அயோக்கியனும் ஒவ்வொரு கூற்றைக் கற்பித்தால், பலப்பல முட்டாள்கள் இதை ஏற்பது என்றால், இதை வணங்குவது என்றால் இது முட்டாள் காட்டுமிராண்டித்தனமா அல்லவா என்று தான் கேட்கிறேன்.

மற்றும் கடவுள்களுக்குப் பெண்டாட்டி, பிள்ளை, வைப்பாட்டி முதலியவைகளுடன் பூசை செய்து வணங்குவது முதலிய காரியங்களும், கடவுள் மற்றவன் (மனிதனின்) மனைவியைக் கெடுத்தான், மற்றவனைக் கொன்றான், மற்றவனை ஏய்த்து மோசம் பண்ணினான், திருடினான், பதினாயிரம் பெண்டாட்டி, பதினாயிரம் காதல் என்றெல்லாம் கதை கட்டி, அதைத் திருவிழாவாக்கி வணங்குவதும் காட்டுமிராண்டித்தனமா? அறிவுடைமையா? என்று கேட்கிறேன்.

மற்றும் பலர் ஒரு வேளை உணவுக்கும் திண்டாட, தலைக்கு எண்ணெய் இல்லாமல் வருந்த , தினம் அய்ந்து வேளை ஆறுவேளை பொங்கல் அக்கார வடிசில் முதலியன படைத்தல், பால் நெய் தேன் தயிர் இளநீர் எண்ணெய் அபிஷேகம் என்னும்பெயரால் கல்லுகளின் தலையில் கொட்டிச் சாக்கடைக்கு அனுப்புதல் வடிகட்டிய முட்டாள்தனமா? கடவுள் வணக்கமா ? என்று அழுத்திக் கேட்கிறேன். இவற்றால் , இந்த முட்டாள் தனமான கடவுள் வணக்கத்தால் நலம் பார்ப்பனர்க்கு அல்லாமல் (மற்ற யாருக்கும் முட்டாள் பட்டம் அல்லாமல்) பயன் உண்டா? என்று கேட்கின்றேன்.

மேலும் இதற்காக ஏற்படும்பொருள் செலவு , நேரச் செலவு எவ்வளவு? இந்த நிலை ஒருபுறமிருந்தாலும் நம் மக்கள் இப்படியே போய்க் கொண்டிருந்தால் நமது பின் சந்ததிகளின் நிலை என்ன ஆவது? என்று கேட்டு இதை முடிக்கிறேன்.

--------------------- தந்தைபெரியார்- "உண்மை" 14-5-70

"கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்"

"கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்" என்பதற்கு இவ்விளக்கம் எழுதப்படுகிறது. கடவுளைப் பரப்புகிறவன் எவனுமே "கடவுள்தத்துவத்திற்கு" ஏற்பக் கடவுளைக் கற்பித்துக் கொண்டு பரப்பு கிறவன், அல்லது பிரசாரம் செய்பவன், அல்லது கற்பித்துக்கொள்பவன், அல்லது கடவுளுக்காகவென்று கதைகள் புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள் எழுதினவன்கள் மற்றும் அதற்கு ஆகக்கோவில்கள் கட்டி அவற்றுள் உருவங்கள் வைத்தவன்கள், கடவுளுக்காகவென்று பூசைகள் உற்சவங்கள் பண்டிகைகள் முதலியவைகளை நடத்து கிறவன்கள் செய்கிறவன்கள் யாவருமே நாணயத்தையோ , யோக்கியத் தையோ, ஒழுக்கத்தையோ ஆதாரமாக வைத்துக் கடவுளைப் பரப்புவதில்லை, நடத்துவது இல்லை.

"கடவுளுக்கு உருவமில்லை குணமில்லை" என்று ஆரம்பித்துக் "கடவுள் சர்வவல்லமையுடையவர், சர்வத்தையும் அறியக்கூடிய சக்தி (சர்வஞ்ஞத்துவம்) கொண்டவர்" "கருணையே வடிவானவர்" "அன்பு மயமானவர் " "அவரின்றி அணுவும் அசையாது" என்பன போன்ற கடவுளின் எல்லாக் குணங்களையும் சக்திகளையும் , தன்மைகளையும் அடுக்கடுக்காகக் கடவுளுக்குக் கற்பித்து மக்களை நம்பச் செய்விட்டு இந்தக் குணங்களுக்கும் தன்மைக்கும் மாறான குணங்களை, தன்மை களை அதற்கு ஏற்றி அதற்காகக் கோவில்கள் கட்டியும், உருவங்கள் உண்டாக்கி வைத்தும், நடவடிக்கைகளை ஏற்றியும், அவைகளை ஆதாரமாய்க் கொண்டு பூசை, உற்சவம், பண்டிகை முதலியவைகளைக் கொண்டாடச் செய்வதன் மூலம் கடவுளைப் பரப்புவதென்றால் இக்காரிய முயற்சியில் ஈடுபட்ட மக்கள் அயோக்கியர்களா அல்லவா என்று சிந்தித்துப் பார்க்கும்படி கேட்கிறேன்.

இக்கூட்டத்தார் மக்களை ஏய்க்க வல்லாமல் வேறு எக்காரியத்திற்காக இக்காரியங்களில் ஈடுபடுகிறார்கள், ஈடுபடவேண்டியவர்களானார்கள் என்று சொல்லமுடியுமா? இவர்கள் தங்கள் சுயநலத்திற்காக , தங்கள் பிழைப்பிற்காக இக்காரியங்களைச் செய்யும் அயோக்கியர்களாக முட்டாள்களாக இருந்து வருகிறார்கள் என்பதல்லாமல் வேறு கருத்து, காரணம் என்ன சொல்லமுடியும்?

இன்று இந்தப்படியான அயோக்கியர்களால் பரப்பப்பட்டிருக்கும் எந்தக் கடவுளை எடுத்துக் கொண்டாலும் அதற்கு வீடு,உணவு, பெண்டாட்டி, வைப்பாட்டி, குழந்தை குட்டிகள் , நகைகள் , சொத்துக்கள், கல்யாணம், உற்சவம், ஊர்வலம் முதலியவை செய்து கூட்டத்தை கூட்டி ஆயிரம், பல ஆயிரம், இலட்சம், பல லட்சம், ரூபாய்கள் செலவு ஏற்படும்படியும் அதுபோலவே மக்களுக்கும் நாள் கணக்கில் மெனக்கேடு ஏற்படும்படியும் செய்வதோடு கோடிக்கணக்கான மக்களை இழிசாதி மக்கள்களாகவும் இருக்கும்படி செய்கின்றனர்.

" அன்பும் கருணையும்,ஒழுக்கமும் உள்ள கடவுள்கள்" யுத்தம் செய்ததாகவும் கோடிக்கணக்கான, மக்களை ஆண்களை, பெண்களை கொன்று குவித்ததாகவும், வெட்டி வீழ்த்திச் சித்திரவதை செய்து நாசமாக்கியதாகவும் விபசாரம் செய்ததாகவும் , நடப்பில் நடத்திக் காட்டிப் பரப்புவதென்றால் இப்படிப் பரப்புகிறவர்கள் அயோக்கியர் களா அல்லவா என்று மறுபடியும் கேட்பதோடு இதற்கு இரையாகிற வர்களை முட்டாள்களாக மானமற்றவர்களாக ஆக்கு கிறார்கள் அல்லவா என்று திரும்பவும் கேட்கிறேன். இப்படிக் கடவுளைப் பரப்பும் அயோக்கியர்களால் எத்தனை எத்தனை கோடி மக்கள் மடையர் களாகிறார்கள் என்பதை அறிவாளிகள் முதலில் சிந்திக்க வேண்டும்.

சாதாரணமாக இந்தியாவை எடுத்துக்கொண்டால் சிறப்பாக இந்துக்களை எடுத்துக்கொண்டால் சுமார் 40 கோடி மக்களும் இந்த விஞ்ஞான காலத்தில் டாக்டர் எம்.ஏ. பி.ஏ. ( ஈச்ஷஞ்ச்சு, ங.அ., ஆ.அ.,) படித்த மக்களும் புலவர்கள் வித்வான்கள், மகாமேதாவிகள் என்று கூறப்படும், கூறிக்கொள்ளும் மக்களும் இக்காரியங்களில் பரம முட்டாள்களாக இருப்பதற்குக் கடவுளைப் பரப்பினவர்களும், பரப்பிவருபவர்களும் இப்படிப்பட்ட கடவுள் கதை எழுதினவர்களும் இந்தக் கடவுள் களுக்குக் கோவில் கட்டி உருவம், உற்சவம், நடப்பு தேர், திருவிழா நடத்தும் அயோக்கியர்களுமல்லாமல் வேறு யாராய்இருக்க முடியும்?

இந்த மடையர்கள் எவ்வளவு துணிவோடு ஆண் பெண் கடவுள் களைக் கற்பித்து அவற்றிற்கு விபசாரத் தன்மைகளை (ஒழுக்க ஈனங்களை)க் கற்பித்துப் பரப்புகிறார்கள்! என்றால் இவர்களை எத்தனை முறை அயோக்கியர்கள் என்று கூறவேண்டும்! என்பதை வாசகர்களே தீர்மானித்துக் கொள்ள விட்டு விடுகிறேன்.

இப்படி நான் எழுதுவதில் சிலர் மனம் புண்படாதா? என்று கேட்கலாம். அயோக்கியர்கள் மனம், மடையர்கள் மனம் புண்படுமே என்று பார்த்தால் ஒரு சிலரால் முட்டாள்களாக ஆக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களை அறிவாளிகளாக ஆக்க வேறு வழி யாராவது சொல்லட்டுமே பார்க்கலாம்!

" கோவில்கள் கள்ளர் குகை " என்று கூறிய கிறிஸ்து கொல்லப் பட்டாலும் இன்று அவரை நூற்றுக்கணக்கான கோடிமக்கள் "கடவுளுக்கு" மேலாகக் கருதுகிறார்கள். " கடவுளுக்கு உருவம் கற்பித்து வணங்குகிறவர்கள் முட்டாள்கள் மடையர்கள்" என்று கூறிய முகம்மது நபியைச் சிலர் துன்புறுத்தினார்கள் என்றாலும் இன்று அவரைப் பல பத்துக்கோடி மக்கள் கடவுளைவிட மேலாக கருதுகிறார்கள் , இவ்வளவு ஏன்? நம் கண் முன்னால் " கோவில்கள் குச்சுக்காரிகள் விடுதி" என்று கூறிய காந்தியை இன்று பார்ப்பனர் உட்பட ஏராளமான மக்கள் மகாத்மா என்கிறார்கள்.

உயிருக்குத் துணிந்து உண்மையை எடுத்துக்கூற மக்கள் இல்லாததால் இன்று நம் நாட்டில் இவ்வளவு முட்டாள்களும், அயோக்கியர்களும், காட்டுமிராண்டிகளும் தோன்றி இந்த விஞ்ஞான காலத்திலும் இருந்து வர இடம் ஏற்பட்டதே தவிர வேறு காரணம் என்ன? சிந்தியுங்கள் மற்றும் இந்தப்படியான நம்மை உலகம் - அறிவுலகம் எப்படிப்பட்டவர்கள் என்று கருதும் என்பதையும்

சிந்தியுங்கள்.

எவ்வளவோ பொறுமைக்கு மேல்தான் இந்த விளக்கத்திற்கு வந்திருக்கிறேன்.

---------------------- தந்தைபெரியார்- "உண்மை" 14-4-70

'ஓ போடலாமே!'

தோழர் ஞானி - `ஆனந்த விகடனை விட்டு `குமுதம் கிளைக் குத் தாவியுள்ளார்.
இவர் `குமுதம் கிளைக்குத் தாவி யதுகூட அவரின் அறிவு நாண யத்தின் சேதாரத்தைத்தான் வெளிப் படுத்தும்.

அவர் சில நாள்கள் `தீம்தரிகிட என்ற ஒரு இதழை நடத்திப் பார்த்தார் - 1982-இல் மூன்று, இதழ்கள்.
1985-இல் ஆறு இதழ்கள், 2002-இல் மீண்டும் துளித்தது, வழக்கம்போல் கண் மூடி விட்டது. கொள்வார் இல்லாமையால் கடையைக் கட்டிக் கொண்டு விட்டார்.

ஏப்ரல் - மே 2002 இதழில் ஒரு அறிவிப்பைக் கொடுத்தார்.

`தீம்தரிகிட இதழில் வெளியாகும் படைப்புகள் அந்தந்த படைப்பாளர்களுக்கே உரிமை உடையவை. தீம்தரிகிட இதழில் வெளியானவற்றை மேற்கோள் காட்டி எவரும் பயன்படுத்தலாம்; குமுதம் குழும இதழ்களைத் தவிர - என்பதுதான் அந்த அறிவிப்பு.சரி, எதற்காக அந்த அறிவிப்பு? அதே இதழின் 22-ஆம் பக்கத்தில் அதற்கான காரணம் கூறப்பட்டது.

குமுதம் இதழில் ஆசிரியர் குழு பிரசுர விவரங்கள்பற்றிய குறிப்பில் படைப்பாளிகளின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் அறிவிப்பு சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. குமுதம் இதழில் வெளிவரும் படைப்புகளின் உரிமை குமுதத்தில் வெளியீட் டாளருகே உரியதாம்.
திரும்ப அதை நூலாகவோ, வேறு எந்தவிதத்திலோ படைப்பாளி பயன்படுத்த வேண்டுமென்றால், குமுதம் வெளியீட்டாளரிடம் அனுமதி பெற வேண்டுமாம். அதாவது குமுதத்தில் எழுதும் பிரபஞ்சன், பாலகுமாரன், அப்துல்கலாம் யாரானாலும் சரி, அவர்கள் எழுதியதன் உரிமை குமுதத்துக்குப் போய் விடுகிறது! பிரபஞ்சனின் சிறு கதைகள் தொகுப்பாக வெளி வரும் போதோ தொலைக் காட்சிக்குத் தரப்படும் போதோ அவர்தான் எழுதிய கதைக்குக் குமுதத்திடம் போய் அனுமதி கேட்க வேண்டும் என்று இதற்கு அர்த்தம். நடைமுறையில் இதைப் பின்பற்றுகிறார்களா என்பது முக்கியமல்ல. இப்படி அறிவிப்பு செய்ததே தவறானது. படைப்பாளிகள் சார்பாக இதற்கான தார்மிக எதிர்ப்புதான் எங்கள் அறிவிப்பில் உள்ள நிபந்தனை உள்ளபடியே மனிதன் சுயமரியாதைச் சூடு பறக்கத்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டதற்காக ஒரு `ஓ கூடப் போடலாம்.

அது சரி.. அப்படிப்பட்ட எழுத்தாளரின் உரிமையை ஊனப் படுத்தும் குமுதத்தில் சேர்ந்து கொண்டு இப்பொழுது `ஓ போடுகிறாரே அது எப்படி?

ஓகோ! எழுத்தாளரின் உரிமை `காசுக்குச் சலாம் வைத்து விட்டதோ! ஞானியின் சுயமரியாதை இப்பொழுது; எங்கே போய் முக்காடு போட்டுப் பதுங்கிக் கொண்டது? தார்மீகம் தார்பூசிக் கொண்டு விட்டதா?

தான் மட்டுமே எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாத கம்பீரமான எழுத்தாளர் என்பது போல காட்டிக் கொண்டவரின் கவட்டுத்தனம் இப்பொழுது அம்பலமாகி விட்டதே!

சரி... இன்னொரு செய்தி; இவ்வார குமுதத்தில் (2.4.2008) `நாறும் தேச பக்தியைப்பற்றி அலசிவிட்டு, இடை இடையே சில பெட்டிச் செய்திகளையும் உலவவிட்டுள்ளார்.
அதில் ஒன்று.. கலைஞர் மகள் கனிமொழியைப் பற்றியது. ஞானி யின் ஒரே இலக்கு கலைஞர்மீது பாணம் தொடுப்பதே!திராவிட இயக்கக் கொள்கையில் அழுத்தமான ஒருவர் ஆட்சிப் பொறுப்பில் இருப்பது மகா பெரிய ஆபத்து என்ற அச்சத்தில் அவாள் வட்டாரத்தால் ஏவப்படும் `நஞ்சுதோய்ந்த அம்புகள் அவை.

`துக்ளக் `கல்கி, `தினமணி வரிசையில் இவரும் இருக்கிறார் என்பதுதான் இதன் பொருளும் - உண்மையுமாகும்.

``தன் மகள் கனிமொழி ஓர் இந்து பெண் என்று அறிவித்திருக்கும் கலைஞர் கருணாநிதியும் இந்துவா? அப்படியானால் நாத்திகர் களுக்குக் கடவுள் கிடையாது. மதம் மட்டும் உண்டா? அப்படி ஒரு நாத்திகக் கோட்பாடு ஏற்கெனவே உள்ளதா? அல்லது கலைஞர் கண்டருளியதா? - இதுதான் இவ்வார `குமுதத்தில் தோழர் ஞானி உதித்திருக்கும் பூச்செண்டு! இந்தப் பிரச்சினை எங்கிருந்து கிளம்பியது?

மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவில் இந்தத் தடவை இந்துக்களுக்கு இடம் தரப்படாதது கண்டு அதிர்ச்சி அடைந்ததாக ஒருவர் எழுதிட அதற்குப் பதில் அளிக்கும் வகையில் கலைஞர் `முரசொலியில் (19.3.2008) எழுதினார்:

`கடந்த முறை மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்ற போது திருச்சி சிவா கனிமொழிஆகிய இரண்டு இந்துக்களைத் தானே நிறுத்தினோம் என்ற கலைஞர் அவர்களின் இந்தப் பதிலை வைத்துதான் ஞானி பேனாவைச் சொடுக்கியுள்ளார்.

நாத்திகத்துக்குக் கடவுள் கிடையாது; மதமும் கிடையாதுதான் ஆனால் இந்திய அரசமைப்புச் சட்டப்படி என்ன நிலைமை?

நாத்திகன் என்று சொன்னாலும் அவர் இந்துதான். பவுத்தன் என்று சொன்னா லும் அவனும் இந்துதான், சீக்கியன் என்று சொன்னாலும் அவனும் இந்துதான். அப்படி அரசமைப்புச் சட்டம் இந்தியாவில்! கலைஞரை நோக்கிக் கணையைத் தொடுக்கக் கிளம்பும் முன் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள இந்தப் பார்ப்பனீயத்தை பட்டை கழற்றிருக்க வேண்டாமா? தோலை உரித்துத் தொங்க விட்டிருக்க வேண்டாமா? மூலத்தை விட்டு விட்டு நிழலோடு சண்டை போடுவதா வீரம்? ஊருக்கு இளைத்தவர் கலைஞர் தானா? அக்கிரகாரத்தின் கண்களுக்குக் கலைஞர் கருவேலமுள்ளா?
அதேபோல விண்ணப்பங்களில் ஜாதி என்ற இடத்தில் எதையும் போடாமல் கோடு கிழித்தாலும் அதனை எப்படி கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள் தெரியுமா?

உயர்ஜாதி (Forward Community) என்ற பட்டியலில்தானே அடைக்கிறார்கள்?
இதைப்பற்றியெல்லாம் இவாள் எழுத மாட்டார்கள் - காரணம், இவையெல்லாம் பார்ப்பனீயத்தைக் கட்டிக் காக்கும் கோட்டைக் கொத்தளங்களாயிற்றே! இந்து மதத்தில் கடவுள் மறுப்பாளன் நாத்திகனல்ல; வருணா சிரமத்தை எதிர்ப்பவன்தான் நாத்திகன் என்பதை திருவாளர் `ஞானியார் சுவாமிகள் அறிவாரா!

புரியவில்லையென்றால் மரணமடைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி `சுவாமிகளின் ``தெய்வத்தின் குரல் இரண்டாம் தொகுதியை (பக்கம் 407-08) கொஞ்சம் புரட்டிப் பார்க்கட்டும் - அப்படியே மனுதர்மத்தையும் கொஞ்சம் துழாவட்டும்! (அத்தியாயம் இரண்டு சுலோகம் II).

கலைஞரும் சரி, கவிஞர் கனிமொழியும் சரி நாத்திகர்கள்தான். அதற்கு ஞானிகளின் சான்றிதழ்கள் தேவையில்லை.


--------"மயிலாடன்" அவர்கள் "விடுதலை" 30-3-2008 இதழில் எழுதியது.

30.3.08

கடவுளை உண்டாக்கியவன் முட்டாள்

கடவுளை உண்டாக்கியவன் முட்டாள்; பரப்பியவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று நான் கூறிவருவது கண்டு பார்ப்பனர் நெருப்பின் மீது நிற்பது போல் துள்ளுகிறார்கள், துள்ளிக் குதிக்கின்றார்கள். அப்பாவிகளையும், கூலிகளையும் பிடித்து நம்மீது ஏவி விடுகிறார்கள்.

பெரும், பெரும் போராட்டங்கள் நடத்தப்போவதாகப் பூச்சாண்டி காட்டுகிறார்கள். இதை நான் வரவேற்கின்றேன்; எதிர்பார்க்கின்றேன்; போராட்டம் துவங்கினால் எனது மேற்கண்ட பிரசார வேலைக்கு உதவியாகும் என்பதோடு மேலும் இத்தொண்டு செய்ய உற்சாகமூட்டி ஊக்கமளிக்கும் என்று கருதுவது தான்.

கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்பதற்காகக் கோபித்துக் கொள்ளும் சிகாமணிகளே! நான் கடவுளை "உண்டாக்கியவன் முட்டாள்" என்றால் எதற்காக நீங்கள் கோபித்துக் கொள்ளவேண்டும்? உண்டாக்கியவன் முட்டாள் என்றால் உண்டாக்கியவன் யார்? அச்சொல் யாரைக் குறிக்கிறது? கோபிக்கிறவனே நீ கடவுள் உண்டாக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்கிறாயா? கடவுளை உண்டாக்கியவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக் கொள்கிறாயா? உனது முட்டாள்தனத்தைக் காட்டத்தான் கோபிக்கிறாய். ஆத்திரப்படுகிறாய். நிற்க, உன் ஆத்திரத்திற்குக் காரணம், ஆதாரம் என்ன?

முண்டமே! நீ நினைக்கும் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்கிறாயா? அல்லது, அது ஒருவனால் கண்டுபிடிக்கப்பட்டது என்கிறாயா? அல்லது , கடவுள் யாராலும் உண்டாக்கப் படாமல், யாராலும் கண்டு பிடிக்கப்படாமல் தானாக, இயற்கையாக, கடவுள் இஷ்டப்படி கடவுளே தோன்றிற்று என்கிறாயா? நான் சொல்வதில் உனக்கு ஆத்திரம், கோபம் வருவதாயிருந்தால், எதற்காக வரும்? நான் சொல்வதைக் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று நீ கருதினால்தானே உண்டாக்கியவனை நான் முட்டாள் என்கிறேன் என்று நீ கோபிக்கவேண்டும்!

மற்றும், கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று கருதுகிறவனுக்குத்தானே கோபம், ஆத்திரம் வர வேண்டும்! நீ கோபிப்பதால் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்பதை நீ ஒப்புக்கொள்கிறாய் என்று தானே அர்த்தம்! அது மாத்திரமல்லாமல் , நீ கோபிப்பதால் கடவுளையும் அவமதிக்கிறாய் என்று தானே கருத்தாகிறது!

இப்போது நீ நினைத்துப்பார் ! கடவுள் உண்டாக்கப்பட்டதா! (கிரியேஷனா? (Creation) அல்லது கடவுள் கண்டுபிடிக்கப்பட்டதா? (இன்வென்ஷனா? (Invention) அல்லது கடவுள் இயற்கையாய்த் தோன்றினதா? நேச்சரா? (Nature) இதை முதலில் முடிவு செய்து கொள். நான் சொல்வதன் கருத்து கடவுள் கண்டு பிடிக்கப்பட்டதுமல்ல. தானாகத் தோன்றியதுமல்ல, முட்டாளால் உண்டாக்கப்பட்டது என்பதாகும். அதை அதாவது கடவுளை ஒரு மனிதன் உண்டாக்கினான். என்பதாக நீ நினைத்தாலோ அல்லது அதை நீ ஒப்புக் கொண்டதாலோ தானே கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்றால் நீ கோபித்துக் கொள்ளவேண்டும்!

நீ இருப்பதாகக் கருதிக்கொண்டிருக்கும் கடவுள் ஒருவராலும் உண்டாக்கப்பட்டதல்ல. " தானாக சுயம்புவாகத்தோன்றியிருக்கிறது" என்பது தான் இன்று கடவுள் நம்பிக்கைகாரர்களின் கருத்து ஆக இருக்கிறது. ஆகையால் நான் கடவுளை உண்டாக்கியவனை முட்டாள் என்பதோடு அதற்காகக் கோபிப்பவனை இரட்டை முட்டாள் என்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்.

இப்படி நான் சொல்வதால், கடவுளால் எவன் பெரிய ஜாதி யாய் இருக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறானோ, அவனுக்கும் கடவுள் பேரால் பொறுக்கித் தின்ன வேண்டுமென்று கருதிக் கொண்டிருக்கிறவனுக்கும், கடவுளால் தனது அயோக்கியத்தனங்களை மறைத்துக்கொள்ள வேண்டியவனுக்கும் தாம் கோபம் வரவேண்டும்.

அதை நான் சமாளித்துக் கொள்கிறேன்.

--------------------- தந்தைபெரியார்.-"உண்மை" 14.-3-70

29.3.08

வைப்பாட்டிக் கதை

சென்னையில் ஒரு பொதுக் கூட்டத்தில் சிறீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பார்ப்பனர் கோரும் சுயராஜ்யம் வந்துவிட்டால் பார்ப்பனரல் லாத சிறீகளை பார்ப்பனர் தங்களுக்கு வைப்பாட்டிகளாக இருக்க வேண்டும் என்று சட்டம் செய்து விடுவார்கள் என்று சொன்னதாகவும், அது பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கே அவமானமாய் விட்டதாகவும், சிறீமான் சீனிவாசய்யங்கார் ஒரு கூட்டத்தில் நீலிக் கண்ணீர் விட்டார். இதைப் பார்த்து அவரது இரண்டொரு பார்ப்பனரல்லாத சிஷ்யர்களும் பின்பாட்டுப் பாடி தங்கள் சமூகத்திற்கு அவமானம் ஏற்பட்டு விட்டதாக கூலி மாரடித்துக் கொண்டார்கள். இவர்கள் உண்மையிலேயே நாயக்கர் சொன்னதற்காக மாரடித்துக் கொண்டார்களா? அல்லது அய்யங்காரின் உப்புக்காக மாரடித்துக் கொண்டார்களா? என்பதைக் கவனிப்போம். பார்ப்பனரல்லாதார் சிறீகளைப் பார்ப்பனர்கள் வைப்பாட்டிகளாக இருக்க சட்டம் செய்து விடுவார்கள் என்று சொன்னதில் என்ன தப்பு. இதற்கு முன்னமே அந்த சட்டம் அமுலில் இருக்கிறதை இவர்கள் அறிந்தும் இன்றுதான் இதை நாயக்கர் சொல்லக் கேட்டவர்கள் போல் பாசாங்கு செய்கிறார்கள். இந்து உலகத்தில் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு என்ன பெயர் கொடுத்திருக்கிறார்கள். இந்துவாயிருந்தால் பிராமணன், சத்திரியர், வைசியர், சூத்திரன், பஞ்சமர் என்கிற ஐந்து வகுப்பில்தான் சேர வேண்டும். "கலியுகத்திலோ ட்சத்திரியரும் வைசியரும் இல்லை" என்கிறார்கள். ஓட்டல்களிலும் பிராமணன் சூத்திரன் என்றுதான் எழுதுகிறார்கள். ஆதலால் மீதி இருப்பது பிராமணன், சூத்திரன், பஞ்சமன் ஆகிய மூன்று வகுப்பார்கள். இதில் பார்ப்பனர் தவிர மற்றவர்கள் தங்களை பிராமணர் என்று சொல்லிக் கொள்ள முடியாது. அய்யங்கார் சிஷ்யர்கள் தங்களைப் பஞ்சமர்கள் என்றும் சொல்லிக் கொள்ள மாட்டார்கள். ஆகவே இவர்கள் சூத்திரர் என்பதை மறுக்க முடியாது. சூத்திரன் என்றால் யார்? இந்து மதத்திற்கும் வருணாசிரமத்திற்கும் ஆதாரமான மனுதர்ம சாஸ்திரம், எட்டாம் அத்தியாயம் 415, 417 -வது சுலோகங்களில் சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்றும், வைப்பாட்டி மகன் என்றும் எழுதியிருப்பதோடு இவர்கள் வசமுள்ள பொருள்களை பலாத்காரமாகவும் பார்ப்பனர் எடுத்துக் கொள்ளலாம் என்றும், நமது பின் சந்ததிகளையும் கட்டுப்படுத்தும்படி எழுதி வைத்திருக்கிறார்கள். இது ஏன்? நமது நாட்டில் சில பாகத்தில் மாத்திரம் அமுலில் இல்லை என்றால் பார்ப்பனர் கோரும் சுயராஜ்யம் இல்லாததால்தான் என்கிற பொருள் கொண்டே அன்று சொன்னோம் என்றும் உறுதியாய்ச் சொல்லுவோம். ஆனால் சில பாகத்தில் இன்னமும் அமுலில் வைத்துக் கொண்டும் நமது சகோதரிகளை தங்கள் வைப்பாட்டி களாக்கிப் பிள்ளைகள் பெற்று உலகத்திலுள்ள ஓட்டல்களுக்கும் காப்பிக் கடைகளுக்கு மெல்லாம் எச்சில் எடுக்கவும், எச்சில் கிண்ணம் கழுவவும் அடிமைகளை வினியோகித்துக் கொண்டுதான் வருகிறார்கள். இதனால் இந்த சிங்கங்களுக்கு மானக்கேடு வரவில்லையா? அந்த சகோதரிகள் இவர்களுடைய சகோதரிகள் அல்லவா? கிராமத்து ஜனங்கள் இந்தியன் பினல்கோட் சட்டத்தைப் பற்றி வேடிக்கையாய்ப் பேசிக் கொள்வார்கள். அதாவது, ஒரு மனிதனை ஒரு மனிதன் செருப்பாலடிப்பதாய்ச் சொன்னால் ஆறு மாதம் தண்டனை. அடித்து விட்டால் ஒரு மாதம்தான் தண்டனை என்பார்கள்.(அதென்னவென்றால் அடித்தால் அது அசால்ட்டு குற்றமாய் விடுகிறதாம். சொன்னால் அது மான நஷ்டக் குற்றமாகி விடுகிறதாம்.) அதுபோல் நமது சகோதரிகளை வைப்பாட்டிகளாய் வைத்துக் கொண்டிருப்பவர்கள் மேல் கோபமில்லாமல் அவர்கள் பின்னால் திரிந்து வயிறு வளர்த்துப் பெருமை பெற்றுக் கொண்டு இக்கொடுமையை வெளியிலெடுத்துச் சொன்னவன் மேல் கோபப்படுவதானால் இந்த சிப்பாய்களின் கோபத்தின் மதிப்பென்ன? என்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும். சட்டசபையில் மலையாளக் குடிவார மசோதாவைப் பற்றி சிறீமான் கே.வி. ரெட்டி அவர்கள் பேசும் போது "நமது பெண்கள் ருதுவானால் அவர்களை முதல் முதல் பார்ப்பனர்தான் புணர வேண்டும் என்கிற சட்டம் மலையாள நாட்டில் அமுலில் இருக்கிறது" என்று சொன்னாரே அதைக் கேட்ட போது இந்த வீரர்களுக்கு மானக்கேடு ஏற்படவில்லையா என்று நாம் கேழ்க்கிறோம். இந்த சிப்பாய்களை பார்ப்பனர் காசும் பார்ப்பனர் தயவும் இன்னம் என்ன என்ன செய்யச் சொல்லும் என்பதை பொறுமையுடன் கவனிப்போம்.

----------------தந்தைபெரியார் - "குடிஅரசு"- 5.9.26

பார்ப்பனியத்தை ஒழிப்பதென்றால் என்ன?

பிராமணீயத்தை ஒழிப்பது என்பதில் பார்ப்பனர்களை ஒழிப்பது என்பதும் அவர்களுக்குப் போகும் பிச்சைக் காசையும் பிச்சைச் சாமான் களையும் நிறுத்துவதும் என்பதே நமது கருத்து என்பதாகப் பலர் அபிப்பிராயப்படுவதாகக் கற்பனை செய்து கொண்டு பார்ப்பனரினால் வயிறு வளர்க்கும் சில பார்ப்பனரல்லாதாரும் , சில பார்ப்பனரும், பார்ப்பனப் பத்திரிகைகளும், "பிராமணன்" என்கிற பார்ப்பன வருணா சிரம தர்ம பத்திரிகையும் கூச்சல் போடுகின்றதுகள். பிராமணீயத்தை ஒழிப்பது என்பதை நாம் எந்தக் கருத்தின் பேரில் தொடங்கினோம் என்றால் நம்மைவிடப் பார்ப்பனன் உயர்ந்தவன் என்று எண்ணுவதும், அவன் பிழைப்புக்காக ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருக்கும் வஞ்சக சாஸ்திரங்களையும், பொய்ச் சுருதிகளையும், புரட்டு ஆகமங்களையும் நம்புகிற மூடநம்பிக்கையையும் நமது மனதை விட்டு அகற்றுவதும், நம்மை விடப் பஞ்சமன் என்பவன் தாழ்ந்தவன் என்று எண்ணுவதை ஒழிப்பதுமாகிய தத்துவத்தைத்தான் முதன்மையாகக் கருதித் தொடங்கினோமேயல்லாமல் வேறல்ல. உதாரணமாக, பார்ப்பனனை நாம் ஏன் "சுவாமி" என்று கூப்பிட வேண்டும்? அவனைக் கண்டால் நாம்தான் முதலில் கும்பிட வேண்டும் என்னும் மனப்பான்மை நம்மிடத்தில் ஏன் இருக்க வேண்டும்? பார்ப்பனரும் ஏன் அதை எதிர்பார்க்க வேண்டும்? அவனுக்குப் பணம் கொடுப்பதும் சாப்பாடு போடுவதும் புண்ணியம் என்று ஏன் நாம் நினைக்க வேண்டும்? இது போன்ற பல உயர்வுகள் நம் போன்ற நம்மிலும் பல வழிகளில் தாழ்ந்தவனாயிருக்கிறவனுக்கு பார்ப்பனனாகப் பிறந்தான் என்கிற காரணத்திற்காக ஏன் கொடுக்க வேண்டும்? அல்லாமலும் நம்மை விட எந்த விதத்திலும் தாழ்மையில்லாதவனையும் நம்மிலும் பல விதத்தில் உயர்குணங்கள் கொண்டவனையும் போலிப் பிறவிக் காரணமாக நாம் ஏன் தாழ்ந்தவன் என்று சொல்ல வேண்டும்? அவன் நம்மைக் கும்பிடும்படி ஏன் நாம் எதிர்பார்க்க வேண்டும்? ஒருவனை நாம் தொட்டால் தோஷம் என்று நாம் ஏன் நினைக்க வேண்டும்? ஆகிய இப்பேர்ப்பட்டதான அஞ்ஞானத்தை, மூட நம்பிக்கையை, கொடுமையை, அகம்பாவத்தை, கொலை பாதகத்தை, வஞ்சகத் தத்துவத்தை ஒழிப்பதல்லாமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனர் மேல் துவேஷங் கொண்டு செய்வதல்ல என்பதை உறுதியாய்த் தெரிவித்துக் கொள்ளுகிறோம். உதாரணமாக, பார்ப்பனனுக்கு பிச்சைக் கொடுப்பதை நாம் வேண்டாமென்று சொல்ல வரவில்லை. ஆனால் அவனுக்குக் கொடுப்பது புண்ணியம்; மோட்சத்திற்கு கொடுக்கும் விலை என்கிற மூடநம்பிக்கையின் பேரில் கொடுத்து ஏமாறாதீர்கள் என்று நாம் சொல்லுகிறோம். கஞ்சிக்கில்லாமல் கஷ்டப்படுகிறான், பாடுபட்டுத் தின்பதற்கு யோக்கியதை இல்லா நிலையில் இருக்கிறான் என்று காணப்பட்டால் கண்டிப்பாய் அவனுக்கு உதவ வேண்டியது மனித தர்மமென்றே சொல்லுவோம். இந்த நிலை "ராமணனிடம்' கண்டாலும் சரி 'பஞ்சமனிடம்' கண்டாலும் சரி உடனே உதவ வேண்டியது மனிதனின் ஆண்மையிலும் சுயமரியாதையிலும் பட்டதென்று கூடச் சொல்லுவோம். உப்பற்ற கஞ்சி கண்டு 8 நாள் ஆன மனிதன் தெருவில் உயிர் போகுந் தருவாயில் இருக்கும் போது "பாயாசத்திற்கு குங்குமப்" போதவில்லை; அக்காரவடிசிலுக்குப் பச்சைக் கற்பூரம் போதவில்லை என்ன சமாராதனை செய்து விட்டான் லோபிப் பயல்"என்று சொல்லுகிற காளைத் தடியர்களுக்கு சாப்பாடு போடுவது தர்மம் என்று எண்ணுகிற முட்டாள்தனத்தை விட வேண்டும் என்பதையும்தான் பிராமணீயத்தில் இருந்து விடுபட்டதென்று சொல்லுகிறோம்.

"ராமணன்' என்கிற ஒரு பத்திரிகை 'பஞ்சாங்கப்' பிராமணர் களை உண்மைப் பிராமணர்கள் தாழ்வாய்க் கருதுவதாகவும், அவர்களுக்கு அவ்விழிதொழில் கூடாதென்றும், அவர்கள் வேறு தொழிலில் பிரவேசிக்க வேண்டுமென்றே தான் விரும்புவதாகவும், ஜம்பமாய் எழுதிவிட்டுப் பார்ப்பனர் "இவ்விழிதொழில்"செய்வதற்குப் பார்ப்பனரல்லாதார் காரணஸ்தராயிருக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்ளும் 'தமிழ்நாடு' பத்திரிகை மீது சீறி விழுவதன் காரணம் இன்னதென்று தெரியவில்லை. தவிர பார்ப்பனர்களில் இவ்விழி தொழிலில் ஜீவித்து வருபவர்கள் பதினாயிரத்திலொருவர்கூட இல்லை என்றும், மற்றவர்கள் எல்லாம் கெளரவமான தொழிலில் வாழ்கிறார்கள் என்றும் ஜம்பம் பேசிக் கொள்ளுகிறது. ஆனால் சிறீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகளோ ஏதோ பதினாயிரத்தில் ஒருவர்தான் உத்தியோகம் காப்பி ஓட்டல் முதலிய இழி தொழில்களில் இருக்கிறார் கள்; மற்றவர்கள் எல்லாம் மகா பரிசுத்த பிராமணீயத் தொழிலாகிய பஞ்சாங்கத் தொழிலில் இருக்கிறார்கள்; அவர்களிடத்தில் பார்ப்பனரல் லாதாருக்குத் துவேஷம் ஏன் இருக்க வேண்டும்? என்று பேசியிருக்கிறார். ஆதலால், உத்தமமான தொழில் இன்னது, இழி தொழில் இன்னது என்பதுகளிலேயே இவ்விரு பார்ப்பனர்களுக்கும் வித்தியாசமிருப்பதால் நாம் இதில் கலந்து கொள்ள இஷ்டமில்லை. ஆனாலும் பதினாயிரத்தில் ஒருவன்தான் பஞ்சாங்கப் பிராமணன் என்பதை மாத்திரம் நாம் மறுக்கிறோம்.

இன்றைய தினம் உத்தியோக முறையில் உயர்ந்த ஸ்தானம் வகித்தும், மாதம் பதினாயிரம் இருபதினாயிரம் சம்பாதித்து வரும் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவரான சிறீமான்கள் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள், நரசிம்மேஸ்வர சர்மா அவர்கள், சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள், எஸ். சீனிவாசய்யங்கார் அவர்கள், டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரிகள், மகா மகாகனம் பட்டம் பெற்ற சிறீனிவாச சாஸ்திரிகள், சர். சிவசாமி அய்யர் அவர்கள் முதலியவர்கள் உட்பட அநேக சாதாரண உத்தியோகப் பிராமணர்களும், அரசியல் பிராமணர்களும், சன்னிதானங்கள், மடாதிபதிகள், மகந்துகள் என்று சொல்லத்தகுந்த பல வைதீகப் பிராமணர்களும், சிலர் பஞ்சாங்கப் பிராமணர்களின் சந்ததிகள், சிலர் பஞ்சாங்கப் பிராமணர்களின் பிள்ளைகள், பலர் பஞ்சாங்கப் பிராமணர்களின் சகோதரர்கள், பலர் உத்தியோகத்திலும், வைதீகத்திலும், பஞ்சாங்கத்திலுமாக மூன்றிலும் வயிறு வளர்க்கிறவர்கள் என்பதை மாத்திரம் தெரியப்படுத்திக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. "பிராமணன்" உண்மையிலேயே இந்த 'இழி தொழிலாகிய' பஞ்சாங்கத் தொழிலைச் செய்வதிலிருந்தும் மூட நம்பிக்கையில் பார்ப்பனரல்லாத மக்களை இறக்கி அவர்களால் வயிறு வளர்க்கும் தொழிலிலிருந்தும் "ராமணர்களை'க் கடைத் தேற்றி "ராமணன்'சொல்லுகிறபடி அவர்களை 'கெளரவமான' வாழ்க்கையில் நடக்கும்படி செய்யும் பிரசாரத்திற்கு நம்மையும் அழைத்தால் நாமும் ஒத்துழைக்கத் தயாராயிருக்கிறோம்.

நாம் பிராமணீயத்தை விட்டவர்கள் பெயர்களைப் போட்டு வருவது போலவே பஞ்சாங்கத் தொழிலாகிய 'இழிதொழிலை விட்ட பிராமணர்' பெயர்களையும் வாரா வாரம் "ராமணன்' பத்திரிகை கொண்டு வெளிவருவானானால் நாம் பிராமணனை மிகுதியும் போற்றுவோம். அதில்லாமல் எழுத்தில் மாத்திரம் காட்டுவதில் என்ன பயன்? தாசிகளைக் கேட்டால்கூட அவர்கள் தங்கள் தொழில் இழி தொழிலென்று ஒப்புக் கொள்ளுகிறார்கள். ஆனால் இருட்டானவுடன் தெருவில் நடப்பவனைப் பார்த்து கண்ணடிப்பதில் பின் வாங்குவதில்லை. வக்கீல்களும் அது போலவே தங்கள் தொழிலை இழி தொழில் என்று ஒப்புக் கொள்ளுகிறார்கள். ஆனால் தாசிகள் புருஷர்களைத் தேடுவது போல் வாயிற்படியிலும் ரயில்வே பிளாட்பாரத்திலும் காத்திருந்து கட்சிக்காரர்களைத் தேடுவதில் குறைவில்லை. அதுபோல பிராமணனும் பஞ்சாங்கத் தொழில் இழி தொழில் என்று வாயில் ஒப்புக் கொண்டதைப் பற்றி நாம் மிகுதியும் சந்தோஷப்பட முடியவில்லை. அது காரியத்தில் காட்டி தனது சமூகத்தாருக்கு அத்தொழில் இல்லாமல் செய்ய பிரயத்தனப் படுவானானால் அத்தொழிலின் பலனாய் மூட நம்பிக்கையில் ஈடுபட்டுச் சுயமரியாதை இன்றிக் கிடக்கும் கோடிக் கணக்கான பார்ப்பனரல்லாத மக்களுக்குச் சுயமரியாதைக்கு வழிகாட்டின பலம் பார்ப்பனர்களுக்கு கிடைக்குமென்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

--------------------தந்தைபெரியார்- "குடி அரசு"- 19.9.26

திராவிடர் கழகம் முன்வைக்கும் கேள்வி

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையை அடுத்த எறையூர் என்ற கிராமம் அண்மைக்காலமாக ஊடகங்களில் அடிபட்டு வருகிறது.

அந்த ஊரில் வாழும் கிறித்தவர்களுக்குள் பிளவுகள் ஏற்பட்டு, அது பகையாகி ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்ளும் அளவுக்கு, அளவு கடந்து போயிற்று! காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி இரு மனித உயிர்களும் பலியாகிவிட்டன.

பிரச்சினை என்ன? அவ்வூரில் உள்ள கத்தோலிக்கர்களுக்கு உரிய ஆலயமான தூய செபமாலை அன்னை ஆலயத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கிறித்தவர்கள் அவமதிக்கப்படு கிறார்கள் - புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது குற்றச்சாட்டு. அப்படிப் புறக்கணிப்பவர்கள் யார்? வன்னியக் கிறித்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் - தங்களுக்கென்று தனி ஆலயம் ஒன்றை உருவாக்கிக் கொண்டனர்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆலயத்தைத் தனிப் பங்காக அறிவிக்கவேண்டும்; ஒரு பாதிரியார் இந்த ஆலயத்துக்கு வந்து பிரார்த்தனைகள் நடத்தவேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை.

கோரிக்கை, துண்டு அறிக்கைகளாகவும், சுவரொட்டிகளாகவும் உருப்பெற்று கடைசியில் உண்ணாவிரதப் போராட்டமாகவும் மாறியது.

ஒவ்வொரு நாளும் பிரச்சினைகள் முற்றிய சூழ்நிலையில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கிறித்தவர்கள் தாக்கப்பட்டனர். காவல்துறை வந்தது; கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் துப்பாக்கிச் சூடுவரை நடைபெற்றுள்ளது.

கிறித்தவர்களைப் பொறுத்தவரை ஆலய நிருவாகம் என்பது அரசு போல நடத்தும் நிருவாக அமைப்புகள் எல்லாம் தடபுடலாக உண்டு. இருந்தும் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு ஒரு சுமூக மான முடிவை ஏற்படுத்தாமல் போனது மிகவும் ஆச்சரியத்திற் குரியது.
மறை மாவட்டம் என்கிற அமைப்புகள் எல்லாம் இருந்தும்கூட அவர்களால் ஏன் சிக்கல்களைத் தீர்க்க முடியவில்லை என்பது அறிவார்ந்த, நியாயமான கேள்வியாகும்.
இந்து மதத்தில் நிலவும் தீண்டாமை, ஜாதிக் கொடுமை என்னும் பயங்கர நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத்தானே ஜாதி, தீண்டாமை இல்லாத வேற்று மதத்திற்குத் தாவினர்? அப்படிச் சென்ற பிறகும்கூட, இந்து மதத்தின் இந்தக் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து அவர்களால் தப்பிக்க முடியவில்லை என்கிற போது, இந்து மத நோயின் கொடூரம் எத்தகையது என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

ஜாதி, தீண்டாமை என்பது கிறித்தவ மதத்தின் சித்தாந்தம், கோட்பாடுகளில் இல்லாத நிலையில் இதனை அனுமதிப்பது எப்படி?

இந்தியாவில் நிலவும் ஜாதி, தீண்டாமை இவற்றிலிருந்து முற்றிலுமாக கிறித்தவ மதம் விலகி இருக்கவேண்டும் என்று போப் தலையிட்டு கூறிய நிலையெல்லாம் உண்டே! அப்படியிருந்தும் இந்தியாவில் உள்ள பங்குத் தந்தைகள், ஆயர்கள், இதில் ஏன் போதிய கவனம் செலுத்தவில்லை? ஒருக்கால் அவர்களையும் அந்த இந்து மத ஜாதி நோய் படாதபாடுபடுத்து கிறதோ! முதலியார் கிறித்தவர், நாடார் கிறித்தவர் என்று உத்திப் பிரித்து வாழுவது யதார்த்தமானதாகவே இருக்கிறது.

இந்த நிலையில், இவர்கள் மதம் மாறப் போகிறார்கள் என்ற ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அப்படியே மதம் மாறினாலும் அப்படிச் செல்லுகிற இடத்திலாவது இந்த ஜாதி, தீண்டாமை நோயின் தாக்குத லிலிருந்து விடுபடுவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
இந்து மதத்தைச் சேர்ந்த சில பிரசங்கிகள், மீண்டும் இந்து மதத்திற்கு வருமாறு அழைப்புக் கொடுக்க முன்வந்துள்ளனர். இந்து மதத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தாஜா செய்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது என்கிற யுக்தியாகக் கூட இது இருக்கக்கூடும்.

இந்த முயற்சியில் அவர்கள் ஈடுபடுவதற்கு முன் ஒரு கேள்விக்கு விடையளிக்க அவர்கள் கடமைப்பட்டுள்ளனர். இந்து மதத்திற்கு அவர்கள் வந்தால், எந்த ஜாதியில் சேர்த்துக் கொள்வார்கள் என்பது ஒரு கேள்வி; ஜாதியில்லை என்றால், இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது. ஏதாவது ஒரு ஜாதியைச் சொல்லி அதில் சேர்த்துக் கொள்வதாகக் கூறினால், மறுபடியும் ஜாதி என்னும் புதைச் சேற்றில் அதிகாரப்பூர்வமாக மாட்டிக்கொள்ளத்தானே செய்வார்கள்?

ஜாதி ஒழிப்பு என்பது இந்த நாட்டில் எவ்வளவு அவசியம் என்பதை இப்போதாவது எல்லாத் தரப்பினரும் உணரவேண்டும். உணர்வார்களா? உணர்ந்து செயல்பட முன்வருவார்களா?
உண்மையான ஜாதி ஒழிப்பு இயக்கமான திராவிடர் கழகம் இந்தக் கேள்வியை முன்வைக்கிறது.

------"விடுதலை" தலையங்கம் 28-03-08

28.3.08

சீதை இராவணனுடன் சம்மதித்தே சென்றாள் !

மாரீசன்தான் மான் உருவம்கொண்டு வந்துள்ளான் என்ற செய்தி தெரிந்ததும் அந்த மானைப் பிடிக்கச் சீதை தன் கணவனைக் கட்டாயப்படுத்தி அனுப்புகிறாள்.

லட்சுமணன், 'இராமனுக்கு ஆபத்து வராது. ஆகவே, உன்னைத் தனியேவிட்டுப் போகமாட்டேன்' என்று தடுத்துக் கூறியும் அவனைக் கண்டபடி திட்டிப்பேசி அந்த இடத்தைவிட்டு அகலச் செய்கிறாள். இதன் மர்மம், தான் தனியே இருக்க வேண்டும்; அங்கு இராவணன் வரவேண்டும் என்ற முடிவை முன்கூட்டியே தீர்மானித்துக்கொண்டு தன் கணவனையும் கொழுந்தனையும் துரத்திவிட்டுத் தான் மட்டுமே தனியே இருக்கிறாள்.

இராவணன் காமப்பித்தனைப்போல் சீதையை வர்ணிக்கிறான். உடல் உறுப்புகள் அத்தனையும் ஒன்றையும்விடாது அவைகளுக்கு ஒப்புவமை கூறுகிறான்.

ஆடையினுள் மறைந்திருக்க வேண்டிய அங்கங்களாகிய தொடை, பின்தட்டு, ஸ்தனங்கள் இவைகளுக்கும், அங்க உவமை கூறும் அளவுக்கு அந்த அங்கங்கள் இராவணனுக்குத் தெரிந்திருக்கின்றன!

இத்தனையும் பேசிய இராவணனுடன், 'முறுவல் கொண்டு பேசுகிறாள்; அழுது படைக்கிறாள்; "உள்ளே வாருங்கள், உட்காருங்கள்; சாப்பிடுங்கள்" என்று உபகாரம் செய்கிறாள்.

அவள் அவனுக்கு உபசரிக்கும் பொழுது, "வாயிற் படியின் வழியே தன் கணவனும், கொழுந்தனும் வருகிறார்களா என்று திரும்பிப் திரும்பிப் பாத்துக்கொண்டே உபசரிக்கிறாள்" என்று கூறபப்படுகிறது.

பிறகு இராவணன், வா என்னுடன் என்கிறான்; இவள் சம்மதித்தே அவனுடன் சென்றாள் என்பதற்கு ஆதாரங்கள் பல உண்டு. இவளுக்கும் அவனுக்கும் நடந்த மேற்கண்ட சம்பாஷைணைகளும் காட்சிகளும் மட்டும் அல்ல.

சீதை சம்மதித்துச் சென்றதற்கு ஆதாரம்

தனக்கு எவ்வளவோ மரியாதை செய்து, உபசரித்து, பிரியமாய்ப் பேசிய சீதையிடத்தில் ....... ஆசை மேலிட்டு, 'தன் ரோஹினியைப்பிடிப்பதுபோல் இடது கையால் சீதையின் தலைமயிரையும், வலது கையால் தொடைகளையும் சேர்த்துப்பிடித்தெடுத்தான் (சி.ஆர்.சீனிவாசய்யங்கார். மொழி பெயர்ப்பு, ஆரண்ய காண்டம், சர்க்கம் 49, பக்கம் 151) மேலும் தொடைகளைத் தூக்கிப் பிடித்து எடுத்து ரதத்தில் வைத்தான் என்று 157 ஆம் பக்கத்திலும் மற்றும், சீதையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் ஜடாயுவை அறைந்தான் என்று 165 ஆம் பக்கத்திலும் காணப்படுகிறது.

இவ்விதம் இராவணன் சீதையைத் தொட்டு எடுத்தான் என்பதற்கு ஆதாரம் உள்ளது. தொட்டு எடுத்திருப்பானாகில், சீதை இராவணனுக்கு உடன்பட்டவள் என்றே பொருள்படும்.

காரணம், இராவணன் தன்மேல் இஷ்டப்படாத பெண்ணைத் தொடுவானாகில், அவன் தலை சுக்கு நூறாகிவிடும் என்பதாக ஒரு சாபமும், உடம்பு தீப்பற்றி எரிந்துவிடும் என்று மற்றொரு சாபமும் இருக்கின்றன. இந்த சாபங்கள் ஒன்றாகிலும் இராவணனைப் பாதிக்காமல் இருக்குமானால் அவள் இஷ்டப்பட்டாள் என்றுதான் பொருள்படும். இதன் படியே இராவணனுக்குத் தலைவெடிக்கவும் இல்லை, உடல் தீப்பற்றி எரியவும் இல்லை. ஆகவே, சீதை இராவணனுடன் செல்வதற்கு உடன்பட்டாள் என்றே பொருள்.

மேலும், சீதை இராவணனுடன் செல்லுகையில், அவனுடைய மடியின்மேல் இவள் உட்கார்ந்திருக்கையில் அவளுடைய முகம் 'காம்பறுந்த தாமரை மலரைப்போல் இருந்தது. அவளுடைய ஆடைகள் காற்றால் அடிக்கப்பட்டு இராவணன் மேல் - புரண்டன' (பக்கம் 167) என்று கூறப்படுகிறது.


இலங்கைக்குக் கொண்டு சென்றபின், தன் அந்தப் புரத்தில் வைத்தான் (பக்கம் -173) என்று கூறப்படுகிறது.

சீதைக்கும், ராவணனுக்கும் சம்பந்தம் ஏற்பட்டது

'விசித்திரமாக அமைக்கப்பட்ட தங்கப் படிக்கட்டுகளில் இராவணன் சீதையுடன் ஏறும்போது, துந்துபி அடிப்பது போல் சப்தம் உண்டாயிற்று.'

(பக்கம் 155, சர்க்கம் 55)

குறிப்பு : எனவே, இருவரும் மாடியில், அந்தப்புரத்திற்கு சென்றடைந்து விட்டனர். அதுவும் இருவரும் மாடியில் 'ஏறும்பொழுது' துந்துபி அடிப்பதைப் போல் இருந்ததாம். இருவர் நடையும், அதாவது இராவணன் எவ்வளவு சந்தோஷமாகவும், ஒய்யாரமாகவும், ஆனந்தமாகவும், கம்பீர நடையுடன் காலடி எடுத்து வைத்தானோ, அதேபோல் சீதையும் ஒய்யார நடையுடன், இருவரும் ஒருவர் தோளின்மேல் ஒருவர் கையைப் பிடித்து அணைத்துக் கொண்டு ஏறி இருக்கவேண்டும். அந்தக் காலடியின் சப்தம் துந்துபி அடிப்பதைப்போல் இருந்திருக்கிறது. அன்றியும், இனியும் மேலே நடப்பதைக் கவனிப்போம்.

இராவணனைப் பார்த்து சீதை, 'பிறகு வருவதைப் பார்த்துக் கொள்வோம். இப்போது கிடைக்கும் சுகமே பெரியதென்று நினைக்கிறாயே' (பக்கம் 171) என்று கேட்கிறாள். இதனால், இராவணன் சீதையிடம் சுகம் அனுபவித்துவிட்டான்! ஆராய்ந்து பார்த்தால் அவளிடம் சுகம் அனுபவிக்கும் நேரத்தில் இவ்வார்த்தைகளைச் சீதை இராவணனிடம் கூறுவது நன்கு தெரியும்.

இதற்கு இராவணன் சமாதானம் கூறுகையில், 'சீதே! அக்கினி சாட்சியாக உன் கையைப் பிடித்த கணவனைக் கைவிடுவது அதர்மமென்றெண்ணி வெட்கப்படுகிறாயோ? நம் இருவருக்கும் நேர்ந்த சம்பந்தம் தெய்வகதியால் ஏற்பட்டது. இது ரிஷிகளால் ஒப்புக் கொள்ளப்பட்டது' (பக்கம் 177) என்று சமாதானம் கூறுகிறான். சீதை வருத்தப்படுவதாகவோ, ஆத்திரப்படுவதாகவோ கூறவில்லை. வெட்கப்படுகிறாளாம் விருப்பம் இல்லாவிட்டால் வெட்கப்படுவது தான் விருப்பமில்லை என்பதைக் காட்டும் அறிகுறி போலும்! ஆத்திரமோ, கோபமோ கொண்டிருப்பாளாகில் விருப்பம் இல்லை என்று கூறலாம்.

எனவே, சீதையிடம் இராவணன் செய்த காம லீலைகளுக்கும் அவள் உட்பட்டிருக்கிறாள். ஆனால், பெண்களின் இயற்கைக் குணப்படி வெட்கப்பட்டிருக்கிறாள்.

மேலும் ஆரண்யகாண்டம் 55 ஆவது சர்க்கம் 678 ஆவது பக்கத்தில் தாத்தா தேசிகாச்சாரியார். மொழி பெயர்ப்பில் கூறப்படுவதாவது - 'இனி நீ நாணமுறற்க. இதனால் தர்மலோபமொன்றுமிலது. உனக்கும் எனக்கும் இப்பொழுது தெய்வத்தினாலே சேர்க்கை நேர்ந்தமையின் இதுவும் தர்மமேயாகும. இஃது ரிஷிகளாலும் உகுக்கப்பட்டது' என்று கூறப்படுகிறது.

'இனி நீ நாணமுறற்க' இதன் பொருள் என்னவென்றால் இனிமேல் எதற்காக வெட்கப்பட வேண்டும்? உனக்கும் எனக்கும் தெய்வகதியால் சேர்க்கை நேர்ந்துவிட்டது. என்கிறான். அதாவது காரியம் முடிந்துவிட்டது. இனிமேல் வெட்கப்பட்டு என்ன பலன் என்ற கருத்தில் இராவணன் கூறுகிறான். எனவே இருவருக்கும் சேர்க்கை நேர்ந்தது என்பதை இதன்படி உறுதிப்படுத்தலாம்.

மேலும் இராவணன் கூறியதாக அதே மொழி பெயர்ப்பாளர் இந்தச் சம்பவத்திற்குக் குறிப்புத் தருகையில் 'இராவணன் பிராட்டியாரை முன்போலவே தாசனாகச் செய்து கொள்ளும்படி விண்ணப்பம் செய்தான்பூ என்கிறார். அதாவது முன்போலவே என்பதைக் கவனிக்க வேண்டும். அதாவது இருவருக்கும் சம்பந்தம் ஏற்பட்ட முன் சம்பவத்தைப் போலவே இனி மேலும் இருக்க வேண்டும் என்ற கருத்தில் வேண்டினான் என்கிறார். ஆகவே, மொழி பெயர்ப்பாளரின் ஆராய்ச்சியின் படியும் சீதைக்கும் இராவணனுக்கும் சம்பந்தம் ஏற்பட்டுவிட்டது என்பது உறுதி.

(கானகத்தில் சீதையை விட்டுப் பிரிந்த இராமன், சீதையை நினைத்துக் காமத்தால் மனம் உருகிப் பேசுகின்றவைகளையும், இலட்சுமணனிடம் கூறும்போது, தான் சீதையுடன் அனுபவித்த இன்பத்தை வெட்கமின்றி விளக்குவதையும் ஆரண்ய காண்டத்தில் கண்டுள்ளவைகளை எடுத்துக் கூறினேன்)

இனி, கிஷ்கிந்தா காண்டத்தில் லட்சுமணனிடம் ராமன் கூறுகின்றான்;

என்னிடம் இன்பங்களை அனுபவித்தாள்!

அவளுடன் சுகித்திருக்க, ஏகாந்தமாய் வந்த இடத்தில் அவளைக் கவர்ந்து சென்றானே! இப்படிப்பட்டவளிடம் போகங்களை அனுபவிப்பார்கள் பாக்கியசாலிகள்!

சீதையுடன் சுகிப்பதே போதும்; ராஜ்யம் தேவையில்லை.

--------தந்தைபெரியார்-நூல்:"இராமாயணக்குறிப்புகள்"

கூப்பிட்டால் வந்துவிடுவார் கொடுத்தால் சாப்பிட்டு விடுவார்

தந்தை பெரியார் அவர்கள் ஆறு மாதச் சிறைத் தண்டனைக்குப் பிறகு, 13.6.1958ஆம் தேதி விடுதலை ஆனார். வெளியானவுடன் சுற்றுப் பிரயாணம் பற்றி ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களின் விளக்க அறிக்கை பின்வருமாறு:

பெரியார் அவர்கள் விடுதலை ஆனவுடன் தங்கள் தங்கள் ஊருக்கு வரவேண்டும் என்பதாக ஒரு மாதமாகவே பலர் கடிதங்கள் எழுதி வழிச் செலவுக்குப் பணமும் பல பேர் அனுப்பியிருக்-கிறார்கள். இந்த இரண்டு மூன்று நாள்களாகப் பல தந்திகளும், செக்குகளும், டிராப்ட்களும் வந்தவண்ணமாய் இருக்கின்றன.

பெரியார் உடல் நிலையைப் பற்றி, பெரிய நோய் ஒன்றும் இல்லாவிட்டாலும் அவரது 80 வயதே அதாவது மூப்பு என்பதே ஒரு பெரிய நோய் அல்லவா? அதிலும் பெரிய டாக்டர்கள் பலர் அவர் உடல்நிலை பற்றிப் பயப்படும்படியாகக் கூறி பெரியாரைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்! இனி அவரைப் பயணம் செய்யும்படியோ, பேசும்படியோ விடா-தீர்கள்! கண்டிப்பாய் விடாதீர்கள்! என்பதாக ஒரே கருத்தாய்க் கூறி வருகிறார்கள்.
பெரியார் அவர்கள் தனது மூப்பினால் வேறு எந்தக் காரியமும் செய்ய முடியா-விட்டாலும், தனது மூப்பு, பிரயாணத்திலோ - பேச்சிலோ தனக்கு முடிவு தரவாவது உதவட்டுமே என்கிறார்.

இதற்கு ஆக அவரைத் தற்கொலை செய்து கொள்ளும்படி விடலாமா? அல்லது நாமாவது அவரது முடிவை அவசரப்படுத்தலாமா?

ஆகையால், அவர் இனி அதிகப் பிரயாணம் செய்யாமலும் அதிகம் பேசா-மலும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியதாகும்.

பெரியார் தமிழர்களின் பொதுச் சொத்து, பொதுச் சொத்து நாதி அற்றதாகும் என்கின்ற அறிவு மொழிப்படி அவரை விட்டுவிடாமல் எல்லோரும் தங்கள் சொந்தச் சொத்தைக் காப்பாற்றுவது போல் கவலையுடன், காப்பாற்றியாக வேண்டும்.

அரசாங்கத்தாரால் நம் மக்களுக்கு இப்போது ஏற்பட்ட அக்கிரமமான கொடு-மைக்கும் கொலைக்கும் பெரியார் அவர்கள் சென்னை முதல் கன்னியாகுமரி வரை எல்லா மாவட்டங்களுக்கும் சென்று மக்களைப் பாராட்டி ஆறுதல் கூறவேண்டி இருக்கிறது. மக்கள் பெரும்பாலும் எய்தவனை விட்டு-விட்டு அம்பை (வாளியை) நொந்து கொண்டு இருக்கிறார்கள்! இதற்குப் பரிகாரமாகத் தவறான வழியில் செல்லத் தூண்டப்-படுகிறார்கள். இத்தவறான நிலைக்கு ஆளா-காமல் மக்களை நடத்த வேண்டி இருக்கிறது. இது பெரியாரால் தான் ஆகும் மற்றவர்-களுக்குப் பெரிதும் விஷயமே புரியவில்லை என்றுதான் கருதவேண்டி இருக்கிறது.

ஆகையால், ஒரு மாவட்டத்திற்கு ஒரு வாரத்தில் இரண்டு நாள்கள் வீதம் அழைப்-பது என்கின்ற தன்மையில் அந்தந்த மாவட்டத்-தார் முடிவு செய்து கொண்டு அந்தப்படி அழைத்தால், தேதி குறிப்பிடுவதை நான் கவனித்துத் தேதி கொடுக்கிறேன்.
அழைப்பைக் குறைத்தால் பெரியார் அவர்களை பத்திரிகைக்கும், நூல்களுக்கும் ஏதாவது எழுதிக் கொண்டிருக்கும்படி செய்யலாம். மாநாடுகளை மாதத்திற்கு ஒன்று நடத்தினாலே போதுமானது ஆகும். அதுவும் அனுமதி பெற்று நடத்துவது பயன்படத் தக்கதாகும்.
இதை மாவட்டத் தோழர்கள் உணர வேண்டுகிறேன்.

பெரியாருக்கு ஒரே வேளை உணவுதான், இரண்டு வேளை பால் இப்படித்தான் சிறையில் (ஆஸ்பத்திரியில்) பழக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதைக் கண்டிப்பாய் யாரும் தவறாமல் பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன்.

கூப்பிட்டால் வந்து விடுவார், கொடுத்தால் சாப்பிட்டு விடுவார்.
இது இரண்டிலும் அவர் குழந்தையே ஆவார்.

ஆகையால் தோழர்கள் அருள்கூர்ந்து இதைக் கருத்தில் கொள்ளப் பணிவாய் வேண்டுகிறேன்.

------------------அன்னை மணியம்மையார்-- விடுதலை, 8.6.1958

23.3.08

செல்வி ஜெயலலிதாவும் செல்வி மாயாவதியும்

திராவிட இயக்கம் அதுவும் அண்ணா பெயரையும் இணைத்துக் கொண்டு, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - அதுவும் அகில இந்திய அண்ணா திமுக என்ற பெயரில் உள்ள ஒரு அமைப்புக்குத் தலைமைப் பொறுப்பில் இருக்கக் கூடியவர் செல்வி ஜெயலலிதா. ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு இருப்பவர் களுக்கு, அக்கட்சியின் அடிப்படைக் கொள்கையைத் தெரிய வேண்டும்!

அவசர அவசரமாக அன்றைய கட்சியின் பொதுச் செயலாளர் ப.உ. சண்முகம் அவர்களிடம் பெற்றுக் கொண்டதை ஒரு வார காலத்திற்குள் படித்து முடித்து கரைத்துக் குடித்து விட்டு, அக்கட்சியில் சேர்ந்து, உடனடியாக கொள்கைப் பரப்புச் செயலாளராகத் தாவிப் பிடித்தவர் அவர். அதனுடைய கேடு இன்று வரை எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது.

அண்ணா திமுக என்கிறபோது அண்ணா யார்? அவர் கொள்கை யாது? அவர் யாரைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்? அந்தத் தலைவரின் சித்தாந்தம் என்ன?
தி.க.வையும் - திமுகவையும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று எதற்காக அறிஞர் அண்ணா சொன்னார்?

அண்ணாவின் `ஆரியமாயை நூல் என்ன கூறுகிறது?
`தீ பரவட்டும் என்ன பேசுகிறது? `இலட்சிய வரலாறு பகர்வது என்ன? `நீதி தேவன் மயக்கம் நாடகத்தின் உள்பொருள் என்ன? `சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்? என்ற நாடகத்தை எழுதி அதில் அறிஞர் அண்ணா அவர் களே காகபட்டராக நடித்ததன் பின்புலம் என்ன?

அண்ணா எழுதிய `விதைக்காது விளையும் கழனியப் படித்ததுண்டா? `நிலையும் நினைப்பும் கேள்விப்பட்டதது தான் உண்டா? `புராண மதங்கள் புரியுமா?
இவைபற்றி ஒட்டு மொத்தமாகவே தெரிந்து கொள்ளாதவர், தெரிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டாதவர்தான் அகில இந்திய அண்ணா திமுகவின் பொதுச் செயலாளராம்! எப்படியிருக்கிறது?

`இந்து மதம்பற்றி அறிஞர் அண்ணாவின் பார்வை என்ன - கருத்து என்ன? அம்மையார் அறிவாரா?

இதோ அண்ணா எழுதுகிறார்?``நாம் யாருக்கும் மேல் அல்ல, யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் அய்யர்மார் வேண்டாம்! நம்மிடையே தரகர்கூடாது, தர்ப்பை ஆகாது. சேரியும் கூடாது, அக்கிரகாரமும் ஆகாது - யோகயாகப் புரட்டுகள், மனிதர் யாவரும் சரி நிகர் சமானமாக வாழ்வோர் என்று கூறுபவர் எப்படி தம்மை `இந்து என்று கூறிக் கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை, சூத்திரன் என்று கூறிக் கொள்ள எப்படித்தான் மனம் இடந்தரும்? எப்படித் தான் துணியும்? `இந்து மதம் என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாய முறை, மதக் கதை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவைகளை அலசிப் பார்த்த பிறகு யாருக்குத்தான் தன்னை ஓர் `இந்து என்று கூறிக் கொள்ள மனம் இடந்தரும்? பாம்பை எடுத்துப் படுக்கையில் விட்டுக் கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? மதி துலங்கும் விஷயங்களை விட்டு, மதி கெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழு வாரா? மீள மார்க்கம் தேடுவதைவிட்டு, மாளவழி தேடிக் கொள்வாரா? விடு தலைக்கு வழி பிறந்த பின்னர் அடிமை முறிச் சீட்டில் கையொப்பமிடுவாரா? நாம் திராவிடர் என்று தெரிந்த பிறகு, திராவிடர் தன்னிரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் `இந்து மார்க் கத்தில் போய்ச் சேர இசைவாரா? வீரத் திராவிடர் என்ற உணர்ச்சி வீறிட்டு எழப் பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்து பாரார்! அதன் இடுக்கில் போய்ச் சேரார்! இழிவைத் தேடார்
- போதுமா இவை அத்தனையும் அறிஞர் அண்ணா அவர்களால் அடுக்கி அடுக்கிக் கூறப்பட்டவையாகும் (நூல்: `ஆரிய மாயை
)

அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரில் இணைத்துக் கொண்டு இருப்ப வர்களுக்கு இவை எல்லாம் தெரிந்திருக்க வேண்டாமா? ஒருக்கால் இவற்றைத் தெரிந்திருந்தால், இந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டார்கள் என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. டாக்டர் நமது எம்.ஜி.ஆர். என்பது இ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடு; அந்த ஏட்டிலே அண்ணா வுக்கு எதிராக, அவரின் எழுத் துகளுக்கும் கருத்துக்களுக்கும் மாறாக எப்படி பேனா பிடிக்க முடிகிறது? பலகட்சிகளையும் சுற்றிப் பார்த்து வந்தவர்கள் எல்லாம், திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு நடத்திய ம.பொ.சி.யின் சீடர்களாக யிருந்தவர்கள் எல்லாம், அண்ணா பெயரால் நடக்கும் ஒரு கட்சியின் அதிகாரப்பூர்வ ஏட்டின் நாற்காலியில் அமர்ந்து அண்ணாவின் சிந் தனைகளை கொச்சைப் படுத்திக் கொண்டு இருக் கிறார்களே!
எடுத்துக்காட்டாக அவ்வேட்டின் (18.3.2008) ஏழாம் பக்கத்தைக் கொஞ்சம் புரட்டிப் பார்க்கட்டும்!

இந்து மதத்தை கலைஞர் கருணாநிதி இழித்துப் பேச லாமா? விமர்சனம் செய்ய லாமா? என்று எழுத்தாணி பிடிக்கிறார்களே - அது எப்படி? அம்மையாரின் `இந்துமத சீலத்தை உயர்த்திப் பிடிக்கிறார்களே - அக் கட்சியில் மருந்துக்காவது அண்ணாவின் தம்பிமார்கள் இருக்கிறார்களா?

மேலே எடுத்துக்காட்டப் பட்டுள்ள அண்ணாவின் எழுத்துகளில் `யோகம் `யாகம் பற்றியெல்லாம் விமர் சிக்கப்பட்டுள்ளதே!


இந்த நிலையில் திருக்கடை யூர் சென்று வழிபடுவதும், யாகங்கள் நடத்திடுவதும் கண்டிப்பாக அண்ணாவின் கொள்கைகளைக் காலில் போட்டு இடறுவதுதானே! இதனை எடுத்துச் சொன்னால் எரிச்சல் வருவானேன்? உண்மை சுடுகிறதோ, - கருத்துகள் கடுகடுக்கின்றனவோ.
அண்ணா திமுகவில் ஆரியத் தலைமை அண்ணா சொன்ன கொள்கைகளின் ஆணி வேரை வெட்டுகிறது - திராவிடச் சித்தாந்தத்தின் அடித்தளத்தின்மீது வெடி குண்டுகளை வீசுகிறது!
தன்னையும் அறியாமல் சட்ட மன்றத்தில் `ஆம் நான் ஒரு பாப்பாத்தி! என்று சொன்ன ஆரிய அகங்காரம் அவரை ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கிறது. அத னால் தான் `சோ வீட்டுக்கும், பாலச்சந்தர் வீட்டுக்கும், முக்தா சீனிவாசன் வீட்டுக்கும், அம்மையார் ஓடோடிச் சென்று ஆசீர்வாதம் பெற்றுக் கொள்கிறார்.
ஆசீர்வாதம் வழங்குவது என்றாலும் ஆரியர்கள்தானே வழங்க வேண்டும், அந்தத் தகுதி சூத்திராளுக்குக் கிடை யாதே!

பெரியார் பிறந்த நாளிலும், நினைவு நாளிலும், அண்ணாவின் வரலாற்று நாள்களிலும் வெளியில் வந்து சிலைகளுக்கு மாலை அணிவிக்கவோ, நினைவிடங்களில் மலர் வளையம் வைக்கவோ, செல்வி ஜெயலலிதாவுக்கு மனம் வராது. ஆனால் தமது பிறந்த நாள் ஆசீர்வாதம் வாங்க மட்டும் அய்யர்மார்களைத் தேடித் தேடி ஓட முடியும்!
சரி.. இந்த அம்மையா ராவது பார்ப்பனக் குலத்தில் உதித்த குலக் கொழுந்து!
உத்தரப்பிரதேச மாநில முதல் அமைச்சர் செல்வி மாயாவதிக்கு என்ன வந்தது? பதவிக்காகப் பார்ப்பனர் களைப் பக்கத்தில் இழுத்து வைத்துக் கொண்டதோடு தந்தை பெரியார் அவர்களைப் புறக்கணிக்கத் தயாராகி விட்டாரே!

பகுஜன் சமாஜ் என்று ஒரு கட்சியைக் தொடங்கினார் கான்ஷிராம்.
தாழ்த்தப்பட்டோர், பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்தாம் இந்த நாட்டில் பகுஜன் - பெரும் பான்மை மக்கள் - இவர்கள் கைகளில்தான் ஆட்சி அதி காரம் வர வேண்டும் என்ற உன்னதமான உரிமைக் கொடி யைத் தூக்கிப் பிடித்தார்.
தந்தை பெரியார் பிறந்த நாளை `பெரியார் மேளா என்ற பெயரில் உ.பி.யின் தலை நகரான லக்னோவில் கோலா கலமாகக் கொண்டாடினார் (1995 செப்டம்பர் 17).
பதவிக்காக அந்தக் கொடியைத் தலைகீழாகப் பிடிக்கத் தொடங்கி விட் டாரே! மாயாவதி? `பகுஜன் போய் `சர்வ ஜன் என்று குரல் வந்து விட்டதே.

இது அடிப்படையிலேயே கான்ஷிராமின் கருத்தினைச் கருவறுப்பது ஆகாதா?
இன்னும் ஒருபடி மேலேயும் (உண்மையில் தாழ் வான) சென்று உ.பி.யில் பெருந் தலைவர்கள் பட்டிய லிலிருந்து தந்தை பெரி யாரைத் தூக்கி எறிந்து இருக்கிறாரே! 2007 டிசம்பர் 6 நாளிட்ட `தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின் முதல் பக்கச் செய்தி என்ன தெரியுமா?
“Periyar Goes off Govt List of Great Leaders”
உள்ளே இடம் பெற்ற செய்தி என்ன?

``உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றம் மாபெரும் தலைவர் களின் பட்டியலிலிருந்து தந்தை பெரியாரின் பெயரை நீக்கும் திருத்தத்துடன் சட்ட மசோதாவை கடந்த டிசம்பர் மாதத்தில் நிறை வேற்றியுள்ளது. பார்ப்பனர்களின் வலியுறுத்தலுக்கு முதல்வர் மாயாவதி பணிந்து விட்டதையே இந்நிகழ்ச்சி காட்டுகிறது.

இவ்வாறு திருத்தப்பட்ட மசோதா சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சந்தில் சிந்து பாடுவது போன்று, இப் பட்டியலில் ராமர் ,கிருஷ்ணர் ஆகிய கடவுள் களின் பெயர்களையும் சேர்க்க வேண்டும் என்று பா.ஜ.க. உறுப் பினர்கள் ஹூக்கும் சிங்கும் ஓம்பிரகாஷ் சிங்கும் கோரினர். இந்த இரு இதிகாச நாயகர்கள் இடம் பெறாத இந்திய கலாசார நாகரிகம் முழுமையானதாகவே இருக்காது என்று அவர்கள் கூறினார்கள்.
கடந்த மாதம் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் பேரணி யில் தந்தை பெரியாரின் புதிய ராமாயணம் பற்றிய பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. இதனை யொட்டி இந்து மதத்தையே பகுஜன் சமாஜ் கட்சி இழிவுபடுத்தி விட்டது என்ற பிரச்சாரத்தை பா.ஜ.க.வினர் அவிழ்த்துவிட்ட னர். இதனால் எழுந்த பொது மக்களின் கடுமையான விமர் சனங்களைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி தந்தை பெரியாரை முன்னிலைப் படுத்தும் செயலில் தயக்கம் காட்ட நேர்ந்தது.

ஆனால் எந்த நிர்பந்தத் தினாலும் இச்சட்டதிருத்த மசோதா கொண்டுவரப்படவில்லை என்றும், மக்களின் உணர்வு களையும், மத நம்பிக்கை களையும் மதிப்பவர் முதல்வர் மாயாவதி என்பதாலேயே கொண்டு வரப்பட்டது என்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் நசீமுதீன் சித்திக் கூறினார். பகுஜன் என்ற முழக்கத்தை சர்வஜன் என்று மாற்றிக் கொண்டு பார்ப்பனர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கூறத் தொடங்கி விட்ட மாயாவதி பார்ப்பனர்களை திருப்தி செய்ய தந்தை பெரியாரின் பெயரை மாபெரும் தலைவர் பட்டியலில் இருந்து நீக்கியதில் வியப்பேது மில்லை. என்றாலும் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத சூத்திரர்கள் சங்கம் போன்ற அமைப்புகள் உத்தரப் பிரதேசத்தில் உருவாகி தந்தை பெரியாரின் கருத்துகளைப் பரப்பி வருவது நமக்கு மன நிறைவளிக்கிறது.``
இதுதான் `டைம்ஸ் ஆப் இந்தியா நாளிட்டுள்ள செய்தி.

தமிழ்நாட்டிலே பார்ப்பனத் தலைமை திராவிட இயக்கத்தின் போர்வையில் பார்ப்பனர் அல்லாதார் எழுச்சித் தீயை அணைக்க முற்படுகிறது என்றால் உத்தரப்பிரதேசத்திலே அரசிய லின்பெயரால் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த அம்மையார், வந்த பாதையை மறந்து விட்டு, நிறுவனர் கான்ஷி ராமுக்கு நாமம் சாத்தி விட்டு பார்ப்பனர்களின் பக்கம் குடை சாய்ந்துவிட்டாரே!

பார்ப்பனத் தலைமையும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முதல்வரும் கரம் கோர்த்து வருகிறார்கள்!
இதற்குள் காவிக் கொடி யினர் காவடி எடுத்து வரு கிறார்கள்.
இந்தச் சக்திகளை நிர் மூலப்படுத்துவது எப்படி? இதனைச் செய்யாவிட்டால் மீண்டும் மனுதர்மச் கொடி தான் நாட்டில் பட்டொளி வீசிப் பறக்கும்?
சிந்திக்க வேண்டிய நேரம் - செயல்பட வேண்டிய நேரம் இது. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் இந்த இருபெரும் தலைவர்கள் மூட்டிய கனல் - ஆம், அது ஒன்றுதான் இந்தச் சக்தி களைச் சுட்டெரிக்கும்.

தந்தை பெரியாரின் சீடர் அறிஞர் அண்ணாவின் நூற் றாண்டு விழா - இந்த வருடம் செப்டம்பர் 15-இல் தொடங் குகிறது!

அறிஞர் அண்ணாவை அண்ணா திமுகவிடமிருந்து காப்பாற்ற வேண்டும். அண் ணாவின் தம்பிகள் எங்கி ருந்தாலும் இதுபற்றிச் சிந்திப் பார்களாக! அய்யாவின் தொண்டர்கள் இந்த நேரத் தில் நினைவூட்டக் கடமைப் பட்டுள்ளனர்.

வாழ்க பெரியார்!
வாழ்க அண்ணா!

நன்றி: ------------22-3-2008 "விடுதலை" ஞாயிறு மலரில் "மின்சாரம்" எழுதிய கட்டுரை

நமக்கு இருக்கும் சூத்திரப் பட்டம் ஒழியவேண்டும்

காங்கிரசாரை நான் கேட்கிறேன்! அந்நியனாகிய வெள்ளையனுக்கு நாம் அடிமையாக இருக்க வேண்டும் என்றா அல்லது அவன் போக வேண்டாமென்றா நான் சொல்லுகின்றேன்? தேர்தலுக்குக் கூட நாங்கள் நிற்கவில்லையே எங்களுக்கு வேண்டியதெல்லாம் நமக்கு இருக்கும் சூத்திரப் பட்டம் ஒழியவேண்டும். நமது நாட்டை வேறு எந்த நாட்டானும்,ஆரியனும் சுரண்டக்கூடாது. நாடிமுத்துவோ, வடபாதி மங்கலம் மைனரோ, காமராஜரோ மற்றும் எந்தத் திராவிடரோ சூத்திரர்களாக இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கவலை.

காங்கிரசிலுள்ள திராவிடத் தோழர்களே, ஏன் எங்களுக்கு இடையூறு செய்கின்றீர்கள்? வெள்ளையன் எங்களுக்கு வேண்டாம், அவன் எதற்கும் எங்களுக்குத் தெவையில்லை. நாட்டை ஆண்டுவந்த நாங்கள், வெள்ளையன் வந்தபிறகு, பியூனாக, பட்லராக, கான்ஸ்டேபிளாக இருக்கின்றோம். ஆனால் பிச்சை எடுத்தக் கூட்டத்தார், இன்று ஹைபோர்ட் ஜட்ஜாக, அட்வகேட் ஜனரலாக, மந்திரியாக, சங்கராச்சாரியாக, பகவான்களாக இருக்கின்றனர். பார்ப்பனர்கள் ஜட்ஜ் முதலிய பெரிய பதவிகளில் இருக்கின்றார்கள். அதனால் அவர்களுக்கு வெள்ளையன் இருப்பதால் நஷ்டமொன்றுமில்லை. எங்களுக்குத்தான் முதலில் வெள்ளையன் வெளியே போகவேண்டுமென்ற கவலை, ஏனனில் வெள்ளையனுக்கும் ஆரியனுக்கும் நாங்கள் தான் அடிமைகளாக இருக்கின்றோம்.

காங்கிரஸ் தோழர்களே! எங்களைச் சந்தேகிக்க வேண்டாம் வெள்ளையன் வெளியேறினால், பார்ப்பானுடைய உயர்வுக்கும், நமது தாழ்மைக்கும் அறிகுறியாகிய உச்சிக்குடுமி பூணூல் ஆகியவைகளைக் காங்கிரசிலுள்ள திராவிடத் தோழர்களாகிய நீங்கள் தான் கத்திரிக்கப்போகின்றீர்களென்பது ஆரியனுக்கும் தெரியும் ஏன்! அது பாடுபடாத கூட்டம். கடுகளவாவது நாங்கள் உங்கள் விரோதிகளல்ல’அணுக்குண்டு காலத்தில், இந்த அதிசய காலத்தில் நீங்கள் இதை உணரவில்லையென்றால் பின்பு எப்பொழுது நீங்கள் உணரப்போகின்றீர்கள். எச்சில் காப்பிக் கடைகளில் திராவிடன் நுழையக்கூடாது என்று இந்தக்காலத்திலா சொல்லுவது?

நாம் பாடுபடுகின்றோம். மண்வெட்டி எடுத்தப் பூமியைத் திருத்தி உழுது, பயிரிட்டுப் பாடுபடுகிறோம். அப்படியிருக்க ஏன் நமக்கு இந்த இழிவு? யாரை நாம் வஞ்சித்தோம்? இந்த மானமற்றத் தன்மை போவதாக நாம் பாடுபட்டால், நாம் துரோகிகளா?அகிம்சையே தங்கள் அடிப்படைக் கொள்கை என்று பெருமை பேசிய காங்கிரஸ் பதவி ஏற்புக்குப் பிறகு எங்கள் மாநாட்டுப் பந்தல்கள் நெருப்புக்கிரையாக்கப்பட்டன. கண்போனது, கால்வெட்டப்பட்டது. ஆகிம்சா மூர்த்திகளாகிய காங்கிரஸ்காரர்களே! இந்தக் கொடுமைகளை நீங்கள் செய்யலாமா? இது நேர்மையா? சிந்தித்துப் பார்த்து நீங்களே தீர்ப்பளியுங்கள் காங்கிரஸ்காரர்களை விட நாங்கள் பின் வாங்கியவர்களா? நாங்களும் அப்படியே செய்தால் நாடு என்ன கதியாகும்? திராவிடர்களுக்குத்தானே கஷ்டம் ஏற்படும்.

கம்யூனிஸ்ட் தோழர்களே! எங்களிடத்தில் உங்களுக்கு ஏன் சந்தேகம்? கம்யூனிஸ்ட், காங்கிரஸ்காரர்களால் எங்களுக்கு எவ்வளவு தொந்தரவு, வெள்ளையன் வாழ வெண்டுமென்றா நாங்கள் சொல்லுகின்றோம்? சுயராஜ்யம் வந்துவிட்டதாகச் சொல்லிக் கொள்ளும் காங்கிரசார் சுயராஜ்ய காலத்தில் இப்படிச் செய்தால் இதை மக்கள் எப்படிச் சகிப்பார்கள்? காந்தியார்கூட சொல்லிவிட்டாரே ‘வெள்ளையன் மேல் சந்தேகம் வேண்டாம், அவன் நல்லவனாகிவிட்டான்” என்று! இது தானா சுயராஜ்யம்? கம்யூனிஸ்ட் கட்சியார், மில்லிலும், எஞ்சினிலும் வேலை செய்யும் தொழிலாளர்களையே தொழிலாளர்களாகக் கருதுகின்றார்கள். சரீரத்தினால் பாடுபடும், சூத்திரப்பட்டம் தாங்கிய நாலுகோடி மக்களும் தொழிலாளர்களல்லவா?

சூத்திரனைக், கூலி இல்லாமல் பார்ப்பனன் வேலை வாங்கலாம் என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்லுகின்றதே, இது கடவுளின் கட்டளையாம். திராவிடச் சங்கம் என்றால் சூத்திரன் சங்கம் என்றுதானே கருத்து? இதற்குத்தானே, இப்படிச் சொல்ல வெட்கப்பட்டுத்தானே பார்ப்பனரல்லாதார் சங்கம் என்றும் சொன்னோம்? ஏன் இந்த இழிவான பெயர்கள் நமக்கு? பார்ப்பனன் வேண்டுமென்றால் தங்கள் சங்கத்தைச் சூததிரனல்லாதான் சங்கம் என பெயர் வைத்துக் கொள்ளட்டுமே. நாம் ஏன் நம்மை பார்ப்பனரல்லாதான் என்று அழைத்துக் கொள்ளவேண்டும்? நமக்குச் சொந்தப் பெயரில்லையா?

நாம் திராவிடர்கள் அல்லவா? பிராமணன் உயர்வானவனென்று யக்ஞவல்யர், நாரதர், பராசரர் சொன்னது இன்று இந்து சட்டமாகக் காட்சியளிக்கின்றதே. சட்டத்திலே, சாஸ்திரத்திலே, நடத்தையிலே, பிறவியிலே நாம் சூத்திரராயிற்றே. “கடவுளாலே கொடுக்கப்பட்டது” என்று சொல்லப்படும் இந்தச் சூத்திரப் பட்டத்தைத் தாங்கி நிற்பவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்யும் தொழிலாளர்களாகிய திராவிடர்களல்லவா? நாம் எப்பொழுது இந்தச் சூத்திரப்பட்டத்தை ஒழிப்பது? கம்யூனிஸ்ட் தோழர்களே சூதுகள், தந்திரங்கள் ஒழியவேண்டும். நயவஞ்சகமாக இவ்வளவுநாள் நடந்த இந்த ஆட்சி பிரிட்டிஷ் ஆட்சியா? இது பிரிட்டிஷ் நாட்டுஆட்சி அல்ல. இந்த பேதங்கள் அங்கேயில்லை. பார்ப்பனர் நூற்றுக்கு நூறு வாழ வசதி செய்து கொடுத்தது இந்த ஆட்சி. சூத்திரன் படித்தால் ராஜாவுக்குக் கேடு, பட்டத்துக்குக்கேடு என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்வதுபடி நடந்தது இந்த ஆட்சி. பிராமணன் உடலால் உழைக்கக்கூடாது என்பதற்காகத்தான் அவனுக்கு ஜட்ஜ் (நீதிபதி) முதலிய உயர்ந்த உத்தியோகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வெள்ளையன் பார்ப்பானுக்கு உடந்தையாக இருக்கின்றான்.

இது வெள்ளை ஆரியனுக்கும், மஞ்சள் ஆரியனுக்கும் உள்ள ஒப்பந்தம்தான். இனி ஏற்படப்போவது கூட அந்த ஒப்பந்தம்தான் மற்றப் பேர்களெல்லாம் தந்திரம். இதை இரண்டுவருடத்துக்கு முன்பே நான் சொல்லி விட்டேன். அம்பேக்கரும், ஜின்னாவும் இப்போழுது சொல்லுகிறார்கள்
, இன்றைய சமுதாய அமைப்பைக் காப்பாற்றுவதுதான் சுயராஜ்யம். இதற்கு ஒரு உதாரணம், திருவையாற்றிலே, சாப்பாட்டில் பேதம் கூடாது என்று சொன்ன காலத்திலே, மகாகனம் சாஸ்திரியார்.பி.எஸ். சிவசாமி ஜயர், டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரியார் முதலியோர்
“நாம் செய்து கொண்ட உடன்படிகை மீறுகின்றாயே” என வெள்ளையனைக் கேட்டார்கள்.
இதைத்தான் நாம் உடைக்கவேண்டும்.வெளளையன் இந்த நாட்டை விட்டுப் போய்விடுகிறேன் என்று சொல்லுவது , மற்ற வல்லரசுகளிடம் அவன் செய்து கொண்ட ஒப்பந்தம், சண்டை நீங்கியவுடன்அவரவர்கள் நாட்டை அவரவர்களிடம் விட்டுவிடவேண்டும் என்று நிபந்தனை செய்து கொண்டார்கள். அந்தப்படி அமெரிக்கன், பிலிப்பைன்ஸ் நாட்டை விட்டுவிட்டான். அதைப்போலவே பிரஞ்சுக்காரனும் வியட்நாம் நாட்டை விட்டுவிட்டான். ஆனால் நமது நாட்டை நம்மிடம் விடாமல் வெள்ளையன் தந்திரம் செய்கின்றான். காங்கிரஸ் அவனை வெளியே விடாமல் தடுத்து நிற்கின்றது. காங்கிரஸ் ஏன் அவனிடம் பேரம் பேசுகின்றது? நாட்டை ஆள நமக்குத் தகுதி இல்லையா?

நாட்டில் ஆட்சிக்கு முட்டுக்கட்டையாக, ஒற்றுமைக்கு விரோதமாக எவன் ஜாதிப்பட்டம் வைத்திருக்கின்றானோ, எவன் பெயருக்குப் பின்னால் ஜாதியைக் குறிப்பிடும் வால் வைத்திருக்கின்றானோ, அவனுக்கு 6-மாத தண்டனை விதிக்கட்டுமேபெருவாரியான ஜாதிமத பாகுபாடுள்ள நாட்டிலே ஒரே கொள்கையையுடைய ஒரு இனம், அதுவும் நூற்றுக்கு, 60க்கு மேல் மெஜாரிட்டியாகவுள்ள இடத்தைத் தங்களுக்கென முஸ்லீம்கள் தனியே பிரித்து கொள்ளுகிற தென்றால், இதில் என்ன தவறு? இது என்ன முட்டுக்கட்டை- நாடு என்ன பிளந்துபோகும்? நாடு என்ன வெடித்துப்போகும்? இதற்கு எதிர்ப்பு இருக்கின்றது என்றால் இது வெள்ளையனும், ‘ஆரியனும் உண்டாக்குகிற கலகம். இங்கு இருக்கின்ற பிணக்கு, ஆபாசம் வெள்ளையனுக்குத் தெரியாதா? பார்ப்பான் என்று ஒரு ஜாதியும், பறையன் என்று ஒரு ஜாதியும் இருப்பதும், ஹோட்டலுக்குள் ஒரு ஜாதிக்காரன் போகக்கூடாது என்பதையும் பார்த்து வெள்ளைக்காரன் சிரிக்கமாட்டானா?

கும்பகோணத்தில் 18-8-1946 – ஆம் தேதி காங்கேயன் பார்க்கில் தந்தைபெரியார் ஈ.வெ.ரா. உரை (‘குடிஅரசு’ தலையங்கம; 9-10-1946)

22.3.08

பார்ப்பனீயத்தை நீக்கிய கல்யாணங்கள்

சேலம் அடுத்த தாதம்பட்டி என்னும் கிராமத்தில் பல்ஜிய நாயுடு வகுப்பைச் சேர்ந்த வீடுகளில் மூன்று கல்யாணங்கள் வெகு விமரிசையாய் நடந்தன. அம்மூன்று கல்யாணங்களுக்கும் பார்ப்பன புரோகிதர்கள் இல்லாமல் பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே முகூர்த்தம் செய்விக்கப்பட்டது. இவைகளில் ஒரு கல்யாண வீட்டுக்காரருக்கு மாத்திரம் ஆரம்பத்தில் நாம் ஏன் இதை முதன் முதலாகச் செய்ய வேண்டும், மற்றும் யாராவது செய்து பிறகு நாம் செய்யலாம் என்கிற எண்ணம் மனதுக்குள்ளாக இருந்திருக்கிறது. அதற்கேற்றாப் போல் அவர் ஒரு பார்ப்பனப் புரோகிதரையும் தருவித்து விட்டார். ஆனால் மற்ற இரண்டு கல்யாண வீட்டுக்காரரும் தைரியமாய்ச் செய்ய ஆரம்பித்த பிறகும் ஈரோட்டிலிருந்து கல்யாணத்திற்கு வந்திருந்த சிறீமான்களான கோவிந்த நாயக்கர், வெ.முத்து நாயக்கர், ரா. துரைசாமி நாயக்கர், வெ. எல்ல நாயக்கர், எ.எல்ல நாயக்கர், கே. ராமசாமி நாயக்கர், ஈ.வெ.ராமசாமி நாயக்கர் முதலிய இன்னும் பல கனவான்கள் சொன்ன பிறகும் தான் தருவித்த பார்ப்பனப் புரோகிதருக்கு ஏதோ பணம் கொடுத்தனுப்பிவிட்டு அவரும் பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே தனது வீட்டு முகூர்த்தத்தையும் நடத்திக் கொண்டார்.

ஆகவே, இந்த மூன்று கல்யாணங்களும் எவ்வித சடங்கும் பார்ப்பன சம்பந்தமில்லாமலே இனிது நிறைவேறிற்று. அதோடு அங்கு வந்திருந்த மற்ற பந்து மித்திரர்களும் தங்கள் வீட்டு சுபா சுப காரியங் களையும் இனி பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே செய்து கொள்வது என்னும் அபிப்பிராயத்தையும் தெரிவித்துக் கொண்டார்கள்.

இந்த வகுப்பார் பார்ப்பனீயத்தை நீக்கி கல்யாணம் செய்த கெளரவம் சேலம் தாதம்பட்டிக்கே கிடைத்ததோடு மற்றவர்களுக்கும் வழி காட்டின பெருமையும் அவர்களுக்கு கிடைத்ததைப் பற்றி நாம் மிகுதியும் மகிழ்ச்சி அடைகிறோம். அதோடு இதற்கு முக்கியமாய் நின்று வேலை செய்த சிறீமான்கள் எல்ல நாயக்கர், கே. ராமசாமி நாயக்கர் முதலிய கனவான்களையும் பாராட்டுகிறோம்

----------- தந்தைபெரியார்- "குடிஅரசு" 21.11.1926

இராமாயணக் காலம் - பொய்!

இராமாயணம் நடந்த காலம் இராமாயணப்படி திரேதாயுகம், துவாபர யுகம் இவ்விரண்டிற்கும் முறையே 12,96,000; 8,64,000 ஆண்டுகள். மொத்தம் 21,60,000 ஆண்டுகள். ஆகவே இப்போது நடக்கும் கலியுகத்தை நீக்கி இராமாயணம் நடந்து 21,60,000 ஆண்டுகள் ஆகின்றன என்று கொள்ளலாம். புத்தர் பிறந்த இன்றைக்கு 2550 ஆண்டுகள் தான் ஆகின்றன. இவ்விதம் 2500 ஆண்டுக்குள் இருந்த புத்தரைப் பற்றி திரேதாயுகத்தில் (21,00,000 ஆண்டுகளுக்கு முன்) நடந்த இராமாயணத்தில் காணப்படுவன பற்றி ஆதாரங்களுடன் கீழே தரப்படுகின்றன:-

(சி.ஆர்.சீனிவாசய்யங்கார் மொழிபெயர்ப்பு)

1. இராமனைப் பார்க்க வந்த பரதனிடம் ராமன் கேட்கும் பொழுது 'பவுத்தன் சார்வாகன் முதலிய நாஸ்திக பிராமணர்களுடன் பழகாமலிருக்கிறாயா? புராணங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் பெரியோர்களுடைய சம்பிரதாயப் பரம்பரைப்படி அர்த்தம் செய்யாமல் கேவலம் தர்க்கத்தைப் பிரயோகித்து அவை இகத்திலும், பரத்திலும் பயனற்றவை என்று வாதிப்பவர்கள் அவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.

(அயோத்தி காண்டம் 100ஆவது சர்க்கம் 374 ஆவது பக்கம்)

2. ராமன் ஜாபாலி என்ற புரோகித ரிஷியிடம் கூறும்பொழுது, 'திருடனும் பவுத்தனும் ஒன்றே; பவுத்தனுக்கும், நாஸ்திகனுக்கும் பேதமில்லை' என்று சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

(மேற்படி காண்டம், 106 ஆவது சர்க்கம்; 412 ஆவது பக்கம்)

3. சீதையைத் தேடிச் சென்ற அனுமான் இலங்கையில் சீதை இருந்த வனத்திற்குச் சற்று தூரத்திற்கப்பால் புத்தர் ஆலயம் போல் கட்டப்பட்ட ஒரு உப்பரிகையைக் கண்டார்.

(சுந்தரகாண்டம் 15ஆவது சர்க்கம்; 69 ஆவது பக்கம்)

4. வாலியிடம் இராமன் கூறும்பொழுது, 'பூர்வத்தில் ஒரு பவுத்த சன்யாசி உன்னைப் போல் கொடிய பாவத்தைச் செய்து அதற்காக மாந்தாதா சக்கரவர்த்தியால் கடின தண்டனை விதிக்கப்பட்டான்;' என்று சொன்னதாகக் குறிக்கப்பட்டுள்ளது.

(கிஷ்கிந்தா காண்டம் 18 ஆவது சர்க்கம் 69 ஆவது பக்கம்)5. இராமனுக்கு தசரதன் பட்டாபிஷேகம் செய்ய நகரை அலங்கரிக்கும்பொழுது 'வெளுத்த மேகம் போன்ற தேவாலயங்கள், நாற்சந்தி மண்டபங்கள், வீதிகள், புத்தரின் ஆலயங்கள், மதிற்சுவரின்மேல் கட்டப்பட்டிருக்கும் நாற்கால் மண்டபங்கள்..... முதலிய இடங்களில் கொடித் துணியுள்ள துவஜங்களும், கொடித் துணியில்லாத துவஜங்களும் எடுத்துக் காட்டப்பட்டன எனக் குறிக்கப்பட்டுள்ளது.

(அயோத்தி காண்டம் 6ஆவது சர்க்கம் 23,24 ஆவது பக்கங்கள்)

21 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகச் சொல்லப்படும் இராமாயணக் கதையில் 2500 ஆண்டுக்குள் இருந்து வந்த புத்தரைப்பற்றி கூறுகிற சேதியைக் கொண்டு ஆராய்ந்தால் இராமாயணக் கதை 2500 ஆண்டுகளுக்குள்ளாகவே எழுதப்பட்டிருக்க வேண்டும். அதனால் இராமாயணக் காலம் (திரேதா யுகம்) என்பது பொய்யேயாகும்.

-----தந்தைபெரியார்- நூல்: "இராமயணக்குறிப்புகள்"

கட்சிக்காரன் பணத்தைக் கையாடிய ஓர் பிராமண வக்கீல்

இரண்டொரு வாரங்களுக்கு முன்புதான், சென்னை ஹைக்கோர்ட் வக்கீல் சிறீமான் எம்.ஆர். சுந்தரம் ஐயர் என்கிறவர் ஆறுமாதக் கடுங்காவலும் 1000 ரூபாய் அபராதமும் பெற்றிருந்ததை எழுதியிருந்தோம். இந்த வாரம், மற்றொரு பிராமண வக்கீலின் தண்டனையைப் பற்றி எழுத நேர்ந்திருக்கிறது. அதாவது:-

சென்னை ஹைக்கோர்ட் வக்கீல் சிறீமான் ஏ. துரைசாமி ஐயர் என்பவர் தனது கட்சிக்காரன் பணத்தைக் கையாடியதாக அவர் மீது ஓர் வழக்கு ஏற்பட்டு ருஸூவானதின்பேரில், அவர் இனிமேல் வக்கீல் வேலையே செய்ய லாயக்கில்லையென்று சொல்லி அவருடைய பெயரை வக்கீல் ஜாப்தாவிலிருந்து நீக்கிவிடுமாறு ஹைக்கோர்ட் ஜட்ஜ் தீர்ப்புச் செய்துவிட்டார். கட்சிக்காரன் பணத்தைக் கையாடாத வக்கீல், வக்கீல் வேலைக்கே லாயக்கில்லையென்று ஓர் பழமொழி சொல்லுவதுண்டு. அதற்கேற்றாற் போலவே நமது பக்கங்களில் கட்சிக்காரன் பணத்தைக் கையாடாத வக்கீல்கள் மிகவும் அபூர்வம். இப்பொழுது எத்தனையோ வக்கீல்கள் கட்சிக் காரர்களின் பணத்தைப் பல வழிகளிலும் சாப்பிட்டுவிட்டு கல்லுப் போலிருக்கிறார்கள். அப்படியிருக்க, சிறீமான் ஏ. துரைசாமி ஐயருக்கு மாத்திரம் ஏன் இந்த தண்டனை ஏற்பட்டதோ தெரியவில்லை.

உலகத்தில் எத்தனையோ பேர்கள் திருடினாலும், கொலை செய்தாலும், போர்ஜரி செய்தாலும், அகப்பட்டுக் கொள்வதினாலும், போலீஸாருக்கும், நியாயாதிபதிகளுக்கும் லஞ்சம் கொடுக்காததாலும், நன்றாய்க் குண்டுப் புரட்டு புரட்டத் தெரிந்த வக்கீல் வைக்காத தினாலும், தண்டனையடைய நேர்வது போல், ஐயோ பாவம்! நமது ஐயர்வாளும் சிக்கிக் கொண்டார் போலும்.

----------------தந்தைபெரியார்- "குடிஅரசு"-10.1.1926

பெரியார் பார்வையில் கல்வி

இப்போதுள்ள கல்விக்கூடம் எதற்காக இருக்கிறது? மக்கள் அறிவு பெறவேண்டும், ஒழுக்கமுடையவர்களாக இருக்கவேண்டும், என்பதற்காக கல்வி கற்கவில்லை; கல்வித் திட்டமும் இவைகளைப் போதிப்பதாக இல்லை; அவர்கள் படிப்பதெல்லாம் பிழைப்பதற்கு, மண்வெட்டி எடுக்காமல் பேனா பிடித்தெழுதிச் சம்பாதிக்கும்படியான வழியைத் தேடுவதற்கேயாகும். இந்த வழியை அடையத் தாமதம் ஏற்படவே, பொதுவாழ்வில் புகுவதற்கு ஆரம்பிக்கின்றனர். அதில் இறங்கி அதன்மூலம் எப்படியாவது மேலே போய்விட முயற்சிக்கின்றனர். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளைக் கல்வி கற்க வைப்பதன் காரணம், தன்பிள்ளை புத்திசாலி ஆகவேண்டும், அறிவாளியாக வேண்டும் என்று வெளியில் மட்டும் கூறுகிறார்களே தவிர, உம்நோக்கமெல்லாம் பையன் உத்தியோகத்திற்குப் போய்ச் சம்பாதித்தால் நம் வாழ்க்கையைக் கஷ்டமின்றிக் கழிக்கலாம் என்பதற்காகத்தான். பையன் படித்து முடித்தவுடன் உத்தியோகத்தில் அமர்ந்தால் அவன் தன் பகுத்தறிவுக்குத் தகுந்தபடி நடந்து கொள்ள முடியாது. பாதிரி வேலையில் அமர்ந்தால் எப்பொழுதும் கடவுளின் பெருமையைப் பரப்புவதிலே இருக்கவேண்டும். போலீஸ்காரனாக அமர்ந்தால், அவன் சாத்வீகனாக இருந்தாலும், அதிலும் ஆத்திரத்துடன் தயவு, தாட்சண்யமின்றிப் பிறரைக் கண்டிப்பவனாக இருக்கவேண்டும் - அதைப் போன்றே, வேலையைப் பொறுத்து அவன் ஒழுக்கம் அமைகிறது. யோக்கியன் நாணயஸ்தனாக இருப்பவன் குறைந்த சம்பளம் வரும் உத்தியோகத்திற்கு வந்தால், அதைக் கொண்டு அவனுடைய குடும்ப ஜீவனம் நடப்பதற்கு வழிஇல்லை. ஆகவே, பகவான் இவ்வளவு கொடுத்தார் என்று சும்மா இருப்பானா? இவன் சும்மா இருந்தாலும் இவன் பெண் பிள்ளைகள் சும்மா இருப்பார்களா? அடிக்கடி ஏதாவது தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பர். இவன் அத்தொல்லை பொறுக்காமல் முதலாளியிடம் போனஸ் கொடுக்கும்படி கேட்பான். அதிகச் சம்பளம் கொடுத்தால் நல்லதுதான் என்பான். இப்படி ஒவ்வொன்றாகப் பார்த்து அதுவும் போதவில்லையென்றால் எங்கே கிடைக்கிறதோ அங்கங்கே கைநீட்டி வாங்குவதற்கு ஆரம்பித்துவிடுகிறான். பிறகு அவன் வாழ்க்கை லஞ்சத்திலேயே கழிகிறது. இந்த நாட்டில் யோக்கியன், நாணயஸ்தன் இருப்பதாகக் காண முடியவில்லை. படிப்பாளி என்று கூறப்படும் இத்தனைபேரும் அறிவாளி என்று கூறமுடியுமா? அவர்கள் எல்லாம் பெரிய உத்தியோகத்தில் அமர்ந்திருக்கலாம்; அதிகச் சம்பளம் வாங்கலாம்; கொழுத்த பணக்காரர்களாகவே இருக்கலாமேயன்றி அறிவில் சிறந்தவர்கள் என்று கூறமுடியுமா? எனவே, கல்வியென்பது மனிதனைப் பெரிய உத்தியோகஸ்தனாக்கவும், பணம் சம்பாதிக்க ஒரு வழியாகவும் மட்டும் தான் உள்ளது; ஆனால் அறிவாளியாக்கப் போதியதாக இல்லை. மனிதனுக்கு கல்வி அவன் அறிவாளியாகும் இலட்சியத்திற்கு அடிப்படையாக அமைய வேண்டும்.

-------- தந்தைபெரியார் அவர்கள் 9.3.1956 அன்று திராவிட மாணவர் கழக சார்பில் அண்ணாமலை நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை

பார்ப்பனர்கள் ஒத்துழையாமை

தென்காசி சிவன் கோவிலில் பார்ப்பனர்களின் வேத பாராயணத்தைப் போலவே தமிழ் மக்களின் தேவாரப் பாராயணமும் செய்யப்பட வேண்டும் என்பதாகக் கருதி தேவாரப் பாராயணம் ஆன பிறகு பிரசாதம் கொடுக்கப்பட வேண்டும் என்று தேவஸ்தான போர்டாரும் கமிட்டியாரும் தர்மகர்த்தாக்களும் உத்திரவு போட்டதினால் அப்பேர்ப்பட்ட சுவாமி தெரிசனமும் பிரசாதமும் தங்களுக்கு வேண்டியதில்லை என்று சொல்லி அதோடு ஒத்துழையாமையும் பஹிஷ்காரமும் செய்து அவ்வூர் பார்ப்பனர்கள் எல்லாம் ஒன்று கூடி பார்ப்பன சிறீகள், புருஷர்கள், குழந்தை குட்டிகள் சகிதம் யாரும் அக் கோவிலுக்குப் போகக் கூடாது என்றும், சுவாமியை தரிசிக்கக் கூடாதென்றும் பரிசாரகம் முதலிய வேலையைச் செய்யக் கூடாது என்றும், சுவாமி தங்கள் வீதிக்கு எழுந்தருளி வந்தாலும் ஒவ்வொரு பார்ப்பனரும் வீதி தெருக் கதவை அடைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் செய்து கொண்டு அந்தப்படி அமுலிலும் நடத்தி வருகிறார்கள் என்கின்ற விபரம் அறிய மிகவும் சந்தோஷமடைகிறோம். ஏனெனில் பார்ப்பனர்கள் பஹிஷ்காரம் செய்த வேலைகளை ஆதி சைவ குருக்கள் பட்டமார்களைக் கொண்டு கோவிலதிகாரிகள் வேலை வாங்கி வருகிறார்கள். இது போலவே மற்ற ஊர்களிலும் உள்ள பார்ப்பனர்களும் மற்ற கோவில்களோடும் சுவாமிகளோடும் ஒத்துழையாமையும் பஹிஷ்காரமும் செய்து விடுவார்களேயானால் நமது தெய்வங்களைப் பிடித்த சனியனும் நமது மதங்களைப் பிடித்த கிரகங்களும் அடியோடு ஒழிந்து யோக்கியமானதும் உண்மை யானதுமாக விளங்கும்.

---------------- தந்தைபெரியார் - "குடிஅரசு" 12.12.1926

ஆரிய மாயையில் மாயாவதி அகப்பட்டதால்

இந்தியா முழுவதும் தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகள் பரவி வருகின்றன என்பதை இங்கு பெருமையோடு தோழர்கள், தோழியர்கள் எடுத்துச் சொன்னார்கள். அதே நேரத்தில் அதற்குரிய அறை கூவல்களும் ஆரியம் விடாமல் தொடர்ந்து நமக்கு இடையூறு செய்து கொண்டிருக்கின்றது.

உங்களுக்கெல்லாம் அதிர்ச்சியடையக் கூடிய செய்தி ஒரு செய்தி. நமக்கு எல்லோருக்குமே அதிர்ச்சி அடையக்கூடிய செய்தி ஒன்று பத்திரிகையில் வந்திருக்கிறது.

கன்சிராம் நடத்திய ஆட்சி

உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி அரசை கான்சிராம் அவர்கள் முன்னின்று நடத்திய நேரத்திலே, தந்தை பெரியார் அவர் களுடைய கொள்கைகளை அவர் தெளிவாகப் புரிந்துகொண்டு நடத்தினார்.

இந்தியாவிலே அய்ந்து புரட்சியாளர்கள் உண்டு. அவர்களிலே ஜோதி பாஃபுலே, அடுத்து தந்தை பெரியார். அடுத்து மராட்டியத்தைச் சார்ந்த சாகுமகராஜ் அவர்கள். அவர்தான் மராட்டியத்திலே முதன்முதலாக இட ஒதுக்கீடு வழங்கியவர்கள். சமுதாயத்திற்கு வழிகாட்டிய ஒரு சிற்பி அவர்.

அதே போல டாக்டர் அம்பேத்கர், அதேபோல கேரளத்தைச் சார்ந்த நாராயணகுரு என்று அய்ந்து பேரை அறிவித்திருந் தார்கள். கன்சிராம் அவர்கள் சிறப்பாக ஆட்சியை நடத் தினார்கள். அதன் காரணமாக மாயாவதி தலைமை தாங்கிய பி.ஜே.பி. ஆதரவோடு கூடிய ஆட்சியை கொஞ்சம் ஆட்டிப் பார்த்தார்கள். ஆட்சி போனாலும் பரவாயில்லை என்ற துணிச்சலை கன்சிராம் அவர்கள் தந்தார்கள்.

ஆரிய மாயையில் மாயாவதி அகப்பட்டதால்

ஆனால், இன்றைக்கு அதே இயக்கம் அந்த உணர்வை அடித்தளமாகக் கொண்டிருந்தாலும் கூட, பார்ப்பனர்கள் ஆரிய மாயை உள்ளே புகுத்தியதினுடைய விளைவு அவர்களையும் வசப்படுத்திக் கொண்டு விட்டது. உத்தரபிரதேச முதலமைச்சர் மாயாவதி அவர்கள் ஆரிய மாயைக்கு சிறைப்பட்டுவிட்டதினாலே எப்படிப்பட்ட ஒரு சூழல் வந்திருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கெல்லாம் வியப்பாக இருக்கும். என்னு டைய கையிலே இருக்கின்ற ஏடு தி டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற பத்திரிகை.
தமிழகத்தில் உள்ள ஏடுகளில் வரவில்லை

இந்த செய்தி தமிழகத்திலுள்ள ஏடுகளில் வரவில்லை. லக்னோவைச் சார்ந்த தந்தை பெரியார் கொள்கைமீது பற்று கொண்ட ஒரு முன்னாள் மேயர் ராவோஜி குப்தா என்பவர் இருக் கிறார். அவர் தமிழ் பேசுவார். தமிழிலே கையெழுத்து போடுவார். அவர் சென்னை வரும்பொழுதெல்லாம் என்னை சந்திப்பார்.

இப்பொழுது கூட ஒரு வாரத்திற்கு முன்னாலே வந்து என்னை சந்தித்தார். ஒரு பெரிய அறைகூவலை ஏற்பாடு செய்ய வேண்டும், சந்திக்கவேண்டும். அதற்கு நீங்கள் வரவேண்டும் என்றெல்லாம் அழைத்த நேரத்திலே இந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரி கையை எனக்குக் கொடுத்தார்கள்.

பெரியார் பெயரை நீக்கியிருக்கிறது

இந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா டிசம்பர் 6 ஆம் தேதி வந்த ஏடு. அதாவது மூன்று மாதங்களுக்கு முன்னாலே வந்த ஏடு. இந்த ஏட்டிலே உள்ள செய்தியைச் சொல்லுகின்றேன். உத்தரபிரதேசத் திலே மாயாவதி அரசு ஏற்பட்டது என்றெல்லாம் நாம் மகிழ்ந்து கொண்டிருக்கின்ற நேரத்திலே அங்கு சட்டமன்றத்தில் ஒரு எதிர்ப்பைக் கிளப்பியவுடனே பார்ப்பனர்கள் வழி நடத்தக் கூடிய ஆட்சியாக மாயாவதி ஆட்சி அமைந்திருக்கின்ற காரணத்தினாலே தந்தை பெரியார் பெயரை சிறந்த தலைவர்கள் என்ற பட்டியலிலிருந்து மாயாவதி அரசு நீக்கிவிட்டது. எல்லோரும் அதிர்ச்சியும், வெட்கமும், வேதனையும் படக்கூடிய அளவிலே இருக்கக் கூடிய ஒரு செய்தி.
உத்தரபிரதேச அரசாங்கம் ஒரு அய்ந்து பேரை சிறந்த தலைவர்கள் என்று ஒரு பட்டியலை உருவாக்கிக் காட்டியி ருக்கிறது. அந்தப் பட்டியலிலே பெரியார் பெயரையும் அவர்கள் அமைத்திருந்தார்கள்.

கவுதம புத்தர், ஜோதி பாஃபுலே, பீமராவ் அம்பேத்கர், நாராயணகுரு, கன்சிராம் என்று வரிசையாகப் பெயரை வைத் திருந்தார்கள். இதில் மகாத்மா காந்தி பெயர் கூட கிடையாது என்றெல்லாம் இந்தப் பத்திரிகையில் சொல்லி இன்னொரு செய்தியை மகிழ்ச்சியோடு இந்தப் பத்திரிகைகாரர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.

பார்ப்பனர்கள் வற்புறுத்தல் காரணமாக

சட்டமன்ற எதிர்க்கட்சியின் வற்புறுத்தல் காரணமாக மாயாவதி அரசாங்கத்தின் சார்பில் சிறந்த தலைவர்கள் என்ற பட்டியலில் இருந்த பெரியார் பெயரை மாயாவதி நீக்கவிட்டார்.
பெரியார் பெயரை நீக்கினால்தான் சட்டமசோதா கொண்டு வர முடியும் என்று உத்தரபிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் பார்ப்பனர் உட்பட எல்லா பார்ப்பனர்களும் சேர்ந்து முயற்சி எடுத்தவுடனே மாயாவதி அதற்கு அடிபணிந்து பெரியார் சிறந்த தலைவர் இல்லையென்று நீக்கிவிட்டார். கன்சிராம் பெயரை மாத்திரம் வைத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் முடிவு செய்ததாக இந்த இதழில் செய்தி வெளியிட்டிருக்கின்றார்கள்.

`டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை முன் பக்கத்திலும் இந்த செய்தி. உள் பக்கத்திலேயும் இந்த செய்தியை வெளியிட்டு மகிழ்ச்சி அடைந்திருக்கிறது.

அரசாங்கங்கள் வரும் - போகும்
அய்யா அவர்கள் இதுபோன்ற ஆயிரம் எதிர்ப்புகளை தாண்டி வரலாற்றை நிலை நாட்டக் கூடிய தலைவர் அவர்கள்------சென்னை - பெரியார் திடலில் 16-3-2008 அன்று காலை நடைபெற்ற அன்னை மணியம்மையார் நினைவுநாளில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரை

21.3.08

காந்தியை ஆராதிக்கும் அறிவுஜீவிகளின் சிந்தனைக்கு...

பெண்களின் எழுச்சிக்கும் விடுதலைக்கும் உழைப்பவர்களில் நான் தலைசிறந்தவன். பெண்களின் நிலையை உயர்த்துவதற்கு என்னாலான அனைத்தையும் நான் செய்திருக்கிறேன். அதை குறித்து நான் பெருமைப்படுகிறேன்.

ஒரு மராட்டியனின் கையில் காந்தி தனது முடிவை சந்தித்து இருக்கக் கூடாது என்ற உங்களின் கருத்தோடு நான் முற்றிலும் உடன்படுகிறேன். அதையும் விட மேலாக இத்தகைய கேவலமான செயலை யார் செய்திருந்தாலும் அது தவறுதான் என்றும் சொல்கிறேன். நான் காந்திக்கு எந்த விதத்திலும் கடமைப்பட்டவன் அல்ல. எனது அறிவு, உளத்திண்மை, மற்றும் சமூக வளர்ச்சியில் அவரது பங்கு எதுவும் இல்லை. எனது இருப்பிற்காக நான் கடமைப்பட்டிருக்கிற ஒரே மனிதர் கவுதம புத்தர் மட்டுமே. இருப்பினும் காந்தி கொல்லப்பட்டதை அறிந்த போது நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

அவர் என் மீது கொண்டிருந்த ஆழமான வெறுப்பையும் பொருட்படுத்தாமல் சனிக்கிழமை காலை பிர்லா இல்லத்திற்குச் சென்றேன். அவரது உடலை எனக்கு காட்டினார்கள். என்னால் காயங்களை காண முடிந்தது. அவை சரியாக அவரது இதயத்தின் மீது இருந்தன. அவரது உடலைக் கண்டு நான் மிகவும் நெகிழ்ந்து விட்டேன். இறுதி ஊர்வலத்தில் சிறிது தூரம் உடன் சென்றேன். என்னால் தொடர்ந்து நடக்க இயலாத காரணத்தினால் வீடு திரும்பி விட்டு, பின்னர் நேரடியாக யமுனை ஆற்றங்கரையில் உள்ள ராஜ்காட்டிற்கு சென்றேன். ஆனால் கூடியிருந்த கூட்டத்தை தாண்டி, என்னால் தகனம் நடந்த இடத்திற்கு அருகில் செல்ல முடியவில்லை.

எனது சொந்தக் கருத்து என்னவெனில், சிறந்த மனிதர்கள் தங்கள் நாட்டிற்கு சிறந்த தொண்டு அளிப்பவர்கள் என்ற போது, சில நேரங்களில் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் தடையாகவும் திகழ்கின்றனர். இந்த சூழலில் எனக்கு ரோமானிய வரலாற்றில் நடைபெற்ற ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. சீசர் கொல்லப்பட்ட செய்தி சிசேரோவிற்கு சொல்லப்பட்ட போது, அச்செய்தியை கொண்டு வந்த தூதரிடம் சிசேரோ, “ரோமானியர்களிடம் சொல்லுங்கள், உங்கள் விடுதலைக்கான நேரம் வந்துவிட்டது” என்று கூறினார்.

காந்தியின் கொலைக்காக ஒருவர் வருத்தப்படும் அதே நேரத்தில், சீசர் கொல்லப்பட்ட போது சிசேரோ வெளிப்படுத்திய உணர்வுகள் தங்கள் மனதிலும் எதிரொலிப்பதைத் தவிர்க்க இயலாது. காந்தி இந்த நாட்டிற்கு ஒரு நல்ல ஆபத்தாக மாறிவிட்டிருந்தார். அனைத்துவிதமான சுதந்திர சிந்தனைகளையும் அவர் நெரித்து விட்டார்.

திரு.காந்தி அவர்களைப் புகழ்வதைத் தவிர வேறு எவ்வகையிலும் சமூகத்தை வழிநடத்தக்கூடிய சமூக, ஒழுக்க நெறிகளை ஏற்றுக்கொள்ளாது, சமூகத்தின் கேடுகெட்ட மற்றும் தன்னலம் கொண்டவர்களின் கலவை யாக இருக்கும் காங்கிரசை அவர் சேர்த்துப் பிடித்துக் கொண்டிருந்தார். அத்தகைய ஒரு மனிதருக்கு ஒரு நாட்டை வழிநடத்தும் தகுதி இல்லை. ‘தீமையிலும் சில நேரம் நன்மை விளையக் கூடும்’ என்று பைபிளில் கூறப்பட்டுள்ளதைப் போல, திரு. காந்தி அவர்களின் மரணத்திலும் நன்மை விளையக் கூடும் என நான் நினைக்கிறேன். ஒரு கனவு மனிதரிடம் கொண்டிருந்த தளையிலிருந்து இது மக்களை விடுவிக்கும்; தங்களைப் பற்றி சிந்திக்க வைக்கும். தங்களின் தகுதிக்கேற்ற நிலையில் நிற்கும் நிலைக்கு அது அவர்களைத் தள்ளும்.

பிப்ரவரி 8, 1948
அலிப்பூர் சாலை

குறிப்பு : காந்தியாரின் மறைவையொட்டி தமது கருத்தை டாக்டர் அம்பேத்கர் பதிவு செய்துள்ள குறிப்பு

-------- நன்றி:"தலித்முரசு"

திருக்குறளும்-பெரியாரும்

"பெரியார் ஒருமுறை என்னிடம் திருக்குறளுக்குப் புத்துரை எழுதும்படித் தூண்டினார். அப்போது கடவுள் வாழ்த்து என்பதை மாற்றி மனித இனத்தின் குறிக்கோள் என்று அதற்குத் தலைப்புத் தரவேண்டும்" என்றும் கூறினார்.

நான் திருவள்ளுவரையும் உயர்வாக மதிக்கிறேன். உங்களையும் உயர்வாக மதிக்கிறேன். உங்களுக்காக திருவள்ளுவரின் கொள்கையைப் பொய்ப்பிக்க விரும்பவில்லை. அதேபோல், திருவள்ளுவருக்காக உங்களுடைய கொள்கை யையும் பொய்ப்பிக்கவும் நான் விரும்பவில்லை. உங்கள் இருவருடைய கொள்கையும் ஒன்று என்று நான் எப்போது நினைக்கிறேனோ அப்போது எழுதுகிறேன் என்று பெரியாரிடம் சொன்னேன்.

இதை நான் பாரதிதாசனிடம் கூறியபோது, பெரியார் சொன்னது கிட்டத்தட்ட சரிதான். முழுக்கவும் சரி இல்லை. ஆனால் பெரியார் சொன்ன குறிக்கோளின் அடிப்படையிலேயே தொடக்க கால சித்தாந்தமே அடங்கி இருக்கிறது. நடுவில் ஆரியம் கலந்ததால் அதன் தோற்றங்களெல்லாம் மாறி இருக்கின்றன. சைவ சித்தாந்தத்தைப் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு படித்தால், திருவள்ளுவருடைய கருத்துக்குப் போகலாம் என்று குறிப்பிட்டார். பாரதிதாசன் கூறிய இந்த விளக்கம், எனக்குப் பிற்காலத்தில் கை கொடுத்து உதவியது. இந்த அடிப்படையில் தான், நான் திருக்குறளுக்கு உரை எழுதத் தொடங்கினேன்.

பாரதிதாசன் இப்போது உயிரோடிருந்தால், அந்த உரையை விரும்பி வரவேற்றிருப்பார். நல்ல குறிக்கோளை நாடிச் செல்லும் உள்ளப்பண்பு தான், நாகரிகத்தின் வளர்ச்சியாக அமைந்தது என்று காந்தியடிகள் லண்டனில் குறிப்பிட்டார். கடவுளுக்கு அவர் கொடுத்த விளக்கமும், திருக்குறளில் கடவுள் வாழ்த்துக் கொள்கையும் ஒன்று தான் என்பது என் கருத்து.

-க.அப்பாதுரையார், (நூல்: பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம் பக்கம் 306.)

20.3.08

பார்ப்பனர்கள் டாக்டருக்கு படிக்கலாமா?

சோமயாகம் நடைபெறும் செய்தி கேட்டு விஷ்ணு அங்கே வருகிறார். யாகமே உருவான விஷ்ணு தனுஸோடு அதாவது வில்லோடு வந்து நிற்கிறார். எப்படித் தெரியுமா?
வில்லின் வளைந்த மூங்கில் பாகத்தின் ஒருமுனை தரையில் இருக்கிறது. இன்னொரு முனை விஷ்ணுவின் தாடையில் இருக்கிறது. இந்த முனைகளுக்கிடையே தான் நாண் எனப்படும் கயிறு இழுத்துக் கட்டப்-பட்டுள்ளது. வில்லை தன் தாடை மூலமாகவே நிலைநிறுத்தி ஸ்டைலாக நிற்கிறார் விஷ்ணு.

அவரது கோரிக்கைதான் என்ன?.... யாகத்தின் சோமரஸம் முழுவதும் எனக்கே கிடைக்கணும். மற்ற தேவதைகளுக்குக் கொடுக்கக்கூடாது..
என்னடா இது... விஷ்ணுவே இப்படி பண்ணுகிறாரே.... என யாகம் நடத்துபவர்கள் முழிக்க...

அந்த நேரத்தில் தான் சில கறையான் பூச்சிகள் வில்லின் மீது ஏற ஆரம்பித்தன.
விஷ்ணுவுடைய வில்லின் நாண் வழியாக ஏறத் தொடங்கிய கறையான்கள், மெல்ல, மெல்ல ஏறி... விஷ்ணுவின் தாடைப் பகுதியை நெருங்கின. அந்த இடத்தில் மூங்கிலோடு நாண் பிணைக்கப்பட்டிருந்ததல்லவா?

கறையான்கள் சரசரவென நாணை தின்ன ஆரம்பிக்க.. திடீரென நாண் அறுந்தது. இழுத்து வளைத்துக் கட்டப்பட்டிருந்த வில்லின் மூங்கில் படாரென மேல் நோக்கி வேகமாக விசையோடு எழும்ப...
அஷ்வனஸ் யய்யஸ்ய சிரப்பரதிததாம்
அவாப்யேமஸ வஷுட்கார...
அதாவது அந்த கணத்திலேயே விஷ்ணு-வின் தலை மூங்கில் மேலெழும்பிய வேகத்தில் மேல் நோக்கி பிய்த்து எறியப்பட்டது.

யாகத்தின் உருவே ஆன விஷ்ணுவின் தலை கழுத்திலிருந்து பிய்த்து எடுக்கப்பட்டு மேலே பறந்தது. இதைப் பார்த்தவர்களுக்கு அய்யோ... அபச்சாரம் ஆகிவிட்டதே... விஷ்ணுதான் யாகம். யாகம் தான் விஷ்ணு. அப்படிப்பட்ட விஷ்ணுவின் தலையே தனியே போனது என்றால் யாகம் பாதியிலேயே சிதைத்து போய்விடும்... என்ற கலக்கம், பயம்.
சோமயாகம் மறுபடிஎந்த பங்கமும் இல்லாமல் தொட வேண்டுமென்றால்.. விஷ்ணுவின் பிய்ந்த தலை மறுபடி கழுத்தோடு ஒட்ட வைக்கப்பட வேண்டும். அதற்கு வைத்யம் பார்க்க வேண்டும். யார் வைத்யம் பார்ப்பார்கள்?....

வேதத்தில் வேதகாலத்தில் வைத்யம் பார்ப்பதெற்கென்று தனியாகவே இருந்தனர். அவர்கள் அஸ்வினிகுமாரர்கள் என அழைக்கப்-பட்டனர். இவர்கள் அஸ்வினி தேவதை-களாகவும் கருதப்பட்டனர்.

யாகம் நடத்தும் பிராமணர்கள் நேராக அஸ்வினி குமாரர்களிடம் ஓடினார்கள்.
இதுபோல விஷ்ணுவின் தலை அவருடைய தனுசு அறுந்ததால் மேல் நோக்கி பிச்சுண்டு போயிடுத்து. தயவு செய்த உபகாரம் பண்ணணும் என விண்ணப்பித்தனர்.

அஸ்வினி குமாரர்கள் வேத டாக்டர்கள். நூற்றுக்கணக்கான வைத்ய முறைகளையும்.. இப்போது சொல்கிறோமே ஆபரேஷன் அது போன்ற பல வைத்ய சாஸ்த்ரம் அறிந்தவர்கள். அப்பேர்ப்பட்ட வைத்தியர்கள் ஃபீஸ் வாங்காமல் இருந்து விடுவார்களா என்ன?....
சரி.. நாங்கள் தைல வைத்ய சாஸ்திரப்பட விஷ்ணுவின் தலையை ஒட்ட வைக்கிறோம். யாகத்துக்கு மறுபடி எந்தத் தடங்கலும் வராம பாத்துக்கறோம்.

ஆனா, இதுக்குப் பிரதியுபகாரமாய்... யாகத்துல எங்களையும் சேத்துண்டு சோம ரஸத்துல கொஞ்சம் எங்களுக்கும் தரணும். இதுக்கு நீங்க ஒத்துண்டா... நாங்க ஆபரே-ஷனை ஆரம்பிக்கிறோம்...

என நிபந்தனை விதித்தார்கள் வைத்யம் பார்க்கும் அஸ்வினி குமாரர்கள். அவர்களுக்கும் சோமரஸம் மீது அவ்வளவு ஆசை.

வேறு வழி இல்லாமல், சரி, சோம யாகத்தில் அஸ்வினி தேவதைகளுக்கும் ஒரு பங்கு தருகிறோம்... என உறுதி கொடுக்-கப்பட்டப பிறகுதான். விஷ்ணுவின் தலையை தைலம் தடவி கழுத்தோடு ஒட்ட வைத்-தார்களாம் அஸ்வினி குமாரர்கள்.
சரி.. இந்தக் கதையை நான் எதற்கு சொன்னேன் என்றால்...
தஞ்மாது ப்ராமணேன பேடஜம்
நகார்யம்...

வைத்யம் என்பது ரத்தம் பார்க்கும் ஒரு தத்வம். அதாவது மனுஷனை வெட்டி அருவருப்பான இடத்தில் இடத்தில் கைவைத்து இந்த வைத்யத்தை மேற்கொள்ள வேண்டும் இதையெல்லாம் பிராமணர்கள் செய்யக்கூடாது. பிராமணனாய் பிறந்தவன் வைத்ய சாஸ்திரமே கற்கக்கூடாது.

என்பது வேத நிபந்தனை இதனால் தான் அஸ்வினி குமாரர்களிடம் பிராமணர்கள் ஓடினார்கள். இன்றும் கூட வங்காள மாநிலத்தில் மருத்துவர்களை அஸ்வினி குமார்... என்றே அழைக்கிறார்கள்.

ஆக... பிராமணன் டாக்டருக்கு படிக்கக்கூடாது என்பதயும் வேதம் முன்மொழிந்து வழிமொழிகிறது. ஆனால் இன்று அப்படியா நடக்கிறது?....


(நக்கீரன் வெளியிட்ட 'சடங்குகளின் கதை' நூலில்...)

பெரியாரின் பெருவெற்றி

சென்னை, மார்ச் 18- ஒரு தகுதி யான தத்துவம் எதுவென்ப தற்கும், வெற்றி பெற்ற ஒரு தத்துவத்தின் மாட்சிமையை அறிந்து கொள்வதற்கும் நமக்கு பெரியாரியல் ஒரு சமகால உதாரணமாகத் திகழ்கிறது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன்.திங்களன்று சென்னை பல்கலைக் கழக தத்துவத் துறையின் சார்பில், நவீன தத்துவ சிந்தனையும் தமிழ் மரபும், என்கிற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் முக்கிய விருந்தினராகப் பங் கேற்று அவர் வழங்கிய சிறப்புரையாவது:

தமிழர்களாகிய நாம் நமது முன்னோடிகள் படைத்தளித்து விட்டுப் போன இலக்கியங் களின் பெருமையையும், அதன் தொன்மையையும் பலவாறாக பாராட்டிப் பேசுவதில் காணு கிற சுகத்தை அத்தகைய இலக்கியங்களை நவீன காலத் திற்கேற்ப நமது தலை முறையில் வடித்தெடுப்பதில் காண தவறி வருகிறோம். நமக்கு, நமது முன்னோர்கள் விட்டுச் சென்றது போன்ற படைப்புகளை தற்காலத்து சூழ்நிலைகளை மையப் படுத்திய இலக்கியங்களை நமக்கு பின்வரும் தலை முறைக்கு தந்துவிட்டுப் போவது நமது கடமையல்லவா. அவர் களும் தொல்காப்பியத்தையும், சங்க இலக்கியத்தையும் தான் தனது பாரம்பரிய இலக்கியப் பெருமைக்கு தேடிப் போக வேண்டுமா என்பதை யோசிக்க வேண்டும்.

விடுதலை உணர்வோடு வெள்ளையர்களை எதிர்த்த போது மக்களிடம் சுதந்திர வேட்கையை தூண்டிவிட நேர்ந்தது. அதற்கு வலுசேர்க்க மண்ணின் பெருமைகளை முன்வைத்த வேளையில், அதோடு தொடர்புடைய மொழியின் பெருமையையும் பேச நேர்ந்தது. தாய்மொழி மீதான பற்றுதல் ஏற்பட இதுதான் அடிப்படை.

ஆங்கில இலக்கியங்களில் பழமையானது. இடைப் பட்டது. நவீனம் என மூன்று பகுதிகள் உண்டு. தமிழ் இலக் கியத்தைப் பொறுத்தவரை முதல், இடை, கடை என புத்திசாலித்தனமாக பிரித்தனர். நமக்கு கடை என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை தான். நவீனம் நம்மிடம் இல்லை.

இதற்கான காரணத்தை நாம் இன்னொரு கோணத் திலும் பார்க்க வேண்டி இருக் கிறது. கம்பனும், வள்ளுவனும், சங்க இலக்கியப் புலவர் பெரு மக்களும் இன்றைய படைப் பாளிகளை தொடக்கத்தி லேயே பயமுறுத்தி விடுகிறார் கள். இவர்கள் செய்யாத எதை நாம் சாதித்துவிடப் போகி றோம் என்கிற பெருமூச்சி லேயே இன்றைய தலைமுறை பிரமித்து நின்று விடுவதும் தமிழில் நவீனங்கள் வருவதற்கு தடைக்கற்களாக இருக்குமோ என நான் சந்தேகிக்கிறேன்.

ஒரு குறிப்பிட்ட காலம் வரை தத்துவம் என்றாலே அவை சமயம் சார்ந்த கருத்து களாகத்தான் இருந்தன. சமண சமய கருத்துகளும், சைவ சித்தாந்தங்களும் நமது பழைய இலக்கியங்களில் மேலாதிக்கம் செய்திருப்பதை காண முடியும். வடக்கில் தோன்றிய கௌதம புத்தர் மனிதகுலத்திற்கான வாழ்க்கை நெறிமுறைகளைத் தான் போதித்தார். அவரும் இறப்பிற்குப் பின் என்ன நடக்கிறது என்கிற ஆய்வில் ஈடுபட்டார். உறுதியான விடை அவருக்கும் கிட்டவில்லை. ஆனால் அவரை வழிகாட் டியாகக் கொண்டு, பின்வந்த வழித்தோன்றல்கள் மறுபிறவி என்பதை முன்வைத்தனர். புத்தர் அவ்விதம் கூறவில்லை.
கடந்த காலத்தின் அனுப வங்களும், எதிர்காலத்தின் மீதான அனுமானங்களும் தத் துவங்களாக கருதப்படுகின் றன. அடிமைச் சமுதாயத்தி லிருந்தவர்கள் அடுத்துவரும் முதலாளித்துவ சமுதாயம் குறித்தும், முதலாளித்துவ சமுதாயத்தவர் அடுத்து வரும் சமதர்ம சமுதாயம் குறித்தும் முன்கூட்டியே கூறுவது தத்துவங்களாக கூறப்பட்டன. பின்னர் அதுவே பின்னோக்கிப் போய் முந்தைய சமுதாய நிலைகளைப் பற்றி கூறுவதும் தத்துவமாகியது.

ஆனால், இன்றைக்கு தத்து வம் என்பது சொல்கிறவனுக்கு புரிகிறதோ இல்லையோ கேட் பவனுக்கு விளங்கிக் கொள்ள இயலாது எதுவோ அது எல் லாமே தத்துவமாகக் கருதப் படுகின்றன. தகுதியான இலக்கியம் என்பது அதனை கேட்கிற வாசிக்கிறவனை அவன் இருக் கும் நிலையிலிருந்து கொஞ்ச மேனும் மேம்படுத்த வேண்டும் என்பதுபோல தத்துவமும் அது யாருக்காக படைக்கப்படு கிறதோ அந்த மனிதகுல மேம் பாட்டிற்குப் பயனுள்ளதாக அமைய வேண்டும். மனிதனை வாழ வைக்க எது வழி காட்டுகிறதோ அதுதான் தத்துவம். ஒரு தத்துவத்தை சொல்கிறவர் அதற்கு தானே வழிகாட்டியாக நின்று, வாழ்ந்தும் காட்ட வேண்டும்.
அந்த வகையில், மனிதன் இறந்தபின் அவன் சுகம் காணும் தத்துவங்கள் எதனை யும் கூறாமல் அவன் வாழும் போதே மனிதனுக்குரிய மாண் புகளோடு வாழ வழிகாட்டிய பெரியாரியலும்,
`தான் சொன்ன தத்துவத்திற்கு தானே உதாரணமாக வாழ்ந்தும் காட்டிய தந்தை பெரியாரும் நமக்கு சமகாலத்தின் சாலச் சிறந்த உதாரணம்.

தமிழகத்தில் இன்றைக்கு சாதாரண மனிதன்கூட தன் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை சேர்த்துக் கொள்ள கூச்சப்படுகிறான். சுயமரியாதை உணர்வும், பகுத்தறியும் மனப் பான்மையும் பாமரனிடம்கூட பட்டொளி வீசுகிறது. அதுவே தமிழகத்தை `தாண்டினால் அரசியல் தலைவர்கள் முதல் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் வரை இன்றைக்கும் பெயருடன் சாதிப் பெயரையும் சேர்த்தே அமைத்துக் கொள்கின்றனர்.

தந்தை பெரியாரின் தத்துவங்கள் மனிதனையும் அவனது முன்னேற்றத்தையும் அடி நாதமாகக் கொண்டு அமைந்து இருந்த காரணத்தாலேதான் அவை அவர் காலத்திலேயே வெற்றி பெற்றது. இத்தகைய பெருமை வேறுபல தத்துவ வாதிகளுக்கு அமையாமல் போனதற்கு காரணம் அவர்கள் மனிதனை மறந்ததே. பகுத்தறிவு வாதமும், பொதுவுடைமை வாதமும் இன்னும் நூறாண்டு களானாலும் தத்துவத்துறையில் தனித்து நின்று கோலோச்சும் என்பதற்கு அவை மனித முன்னேற்றத்தை மையப்படுத்தி இருப்பதே காரணம்
என்றார் தா. பாண்டியன்.

-------"விடுதலை" 13-3-2008

19.3.08

இவர்தான் பெரியார்

ஒருமுறை ஈரோட்டில் தமிழிசை மாநாடு நடந்தது. பெரியார், அண்ணா எல்லோரும் கலந்துக்கிட்டாங்க. மேடையில் பெரியார் எதையோ எழுதிக்கிட்டிருந்தார். அப்பப் பட்டக்காரர் வர்றார்... பட்டக்காரர் வர்றார்னு ஒரே பரபரப்பு. பட்டக்காரர்னா, தமிழக அமைச்சரா இருந்த சர்க்கரை மன்றாடியாரின் அப்பா நல்லதம்பி சர்க்கரை மன்றாடியார்.
மேடையிலிருந்து கீழே இறங்கி வந்த பெரியார், வாங்க எஜமானரே...ன்னு பட்டக்காரரை வணங்கி வரவேற்றுவிட்டு, திரும்பவும் மேடைக்கு வந்து எழுத ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்தில் இந்தியாவின் முதல் நிதியமைச்சராக இருந்தவரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் வந்தார். பெரியார் மேடையில் உட்கார்ந்தபடியே ஒரு வணக்கம் போட்டு, வாங்க சண்முகம்னு சொன்னதோடு சரி. எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. மாநாடு முடிந்ததும், பெரியார் தனித்திருந்தபோது அவரிடம் கேட்டேவிட்டேன். என்னங்கய்யா, பட்டக்காரர் வந்த போது பரபரப்பா வரவேற்றீங்க. உலகப்புகழ் பெற்ற சண்முகம் செட்டியாரை சாதாரணமா வரவேற்றீங் களே?ன்னு கேட்டேன். அதற்குப் பெரியார் சொன்ன பதில் இன்னமும் மனசிலே தங்கியிருக்கு.
அங்கேதான் நீ சரியாப் புரிஞ்சிக்கணும். பட்டக்காரர் படிக்காதவர். அவரை வாசலில் நின்று வரவேற்று உபசரித்தால்தான் நம்ம அன்பு அவருக்குப் புரியும். நம்ம மனசை வெளிப்படையான நடவடிக்கைகள் மூலம் அவருக்கு காட்டணும். ஆனால், ஆர்.கே.எஸ். படித்தவர். பெரிய அறிஞர். ஒரு சின்ன வணக்கத்திலேயே என் அன்பு உண்மையாகவும் முழுமையாகவும் வெளிப்பட்டதை அவர் புரிஞ்சுக்குவார் என்று பெரியார் சொன்னதில் மிகப் பெரிய தத்துவத்தைக் கண்டேன்.

- அண்மையில் மறைந்த முன்னாள் சட்டமன்றத் தலைவர் க.இராசாராம் (நக்கீரன், 16.2.2008 இதழில்)

ஜோதிடப்புரட்டு

மாட்டுச் சாதகத்தையும், மனிதச் சாதகத்தையும் அவனிடம் காட்டினால்
எது மாட்டுச் சாதகம்? எது மனிதச் சாதகம் என்று அவனுக்குச் சொல்லத் தெரியாது. அண்ணன் சாதகத்தையும், தங்கையின் சாதகத்தையும் புரிந்து கொள்ள அவனால் முடியாது. இருவருக்கும் அவன் கலியாணப் பொருத்தம் சொல்லுவான்.கடவுளாலேயே சொல்ல முடியாதே! கடவுள் சிலை முன்னால் சிவப்பு – விபூதிப் பொட்டலம் கட்டிப் போட்டு எடுத்தால் மாறுதலாகத் தீர்ப்புக் கிடைக்கிறதே!

நமக்குத் தன்மான உணர்ச்சி வேண்டும். எனவே நாம் சொந்தப் புத்தியோடு சிந்திக்க வேண்டும். இந்த 1958-லும் காட்டுமிராண்டித்தனமாய் நடக்கக் கூடாது. தன்மான உணர்ச்சி வேண்டும். அந்த உணர்ச்சி உள்ளவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் வேகமாக முன்னேற வேண்டும். கொஞ்சம் சறுக்கி விழுந்தோமானால் படு பாதளத்துக்குப் போய்விடும்.வெள்ளையனைப் பாருங்கள். காட்டுமிராண்டியாய் இருந்தவன் திருந்தி முன்னேறியுள்ளான்.

ஆரியனோ அக்கா- தங்கையைக் கட்டிக் கொண்டவன். ராமனும்- சீதையும் அண்ணன் தங்கை முறை. அது அவர்கள் பழக்கம். அப்படிப்பட்ட ஆரியர்களும் திருந்தியிருக்கிறார்கள். ஆனால் நாமோ இன்னும் திருந்தவில்லை. சாஸ்திரம் பார்ப்பது, சகுணம் பார்ப்பது, பூ வைத்துக் கேட்பது எவ்வளவு இழிவான தன்மை?பொருந்தம் என்றால் ஆண் பெண்னைப் பார்க்க வேண்டும். பெண் தன்னைக் கட்டிக் கொள்ளப் போகும் ஆணைப் பார்க்க வேண்டும். ஒருவருடைய குணத்தை மற்றவர் புரிந்து கொள்ள வேண்டும்.நாம் வண்டிக்கு ஒரு மாடு வாங்க வேண்டுமானால் இருக்கின்ற மாட்டுக்குப் பொருந்துமாறு எவ்வளவு கஷ்டப்பட்டு ஜோடி சேர்க்கிறோம்?

சாதாரணமாக நாய் குட்டி போட வேண்டுமானால் நல்ல ரக நாயாகப் பார்த்துத் தானே சேர்க்கிறோம். அதுபோல் தானே குதிரையும்? ஆனால் மனிதனுக்கு ஜோடி சேர்ப்பதற்கு மாத்திரம் ஏன் அழுக்குப் பிடித்த பார்ப்பனிடம் போய் கேட்க வேண்டும்?மருமகளின் குணம் மாமியாருக்குத் தெரியாது. கணவனின் குணங்கள் மனைவிக்குத் தெரியாது. ஜாதகத்தில் கொண்டு போய் கொடுத்து விட்டு வீட்டைப் பார்த்துப் பரவாயில்லை என்று கூறி வந்து விட்டால் திருமணம் திருமணம் தீர்ந்து போயிற்றா?

திருமணம் செய்து கொள்பவனுக்கு ஜாதகமே இருக்காது. சோதிடம் பார்ப்பவன் ஜாதகம் இல்லையென்றால் பரவாயில்லை என்று கையைநீட்டு என்பான். இப்படி கையை நீட்டிப் விரலைப் பார்த்துப் பொருத்தம் கண்டுப்பிடித்தால் அந்த அர்த்தம்? தாய் பெயரைச் சொல்லிப் பூ போட்டால் சாமி "ஏண்டா தாய் பெயரைச் சொல்கிறாய்?" என்று கூறிப் பூவை எடுத்து எறிந்து விடுமா? இல்லை அக்கா, தங்கை பெயரைச் சொன்னால் ''என்னை என்ன சோதித்துப் பார்க்கிறாயா?" என்று அடித்து விரட்டுமா? அந்தச் சாமி- கழுதை, நாய்குட்டிப் பெயரைச் சொன்னால் இது மிருகத்தின் பெயர் என்று கூறுமா? இப்படி இந்த 1958- ஆம் ஆண்டிலுமா நாம் இத்தகைய பைத்தியங்களாகக் காட்டிக் கொள்வது?

-------தந்தைபெரியார்-நூல்:"வாழ்க்கைத் துணைநலம்"

18.3.08

இராமாயணத் தொடரா?

இன்று அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாள் (16.3.1978) - வரலாற்றுக் குறிப்பு நாள்! அவர்தம் புகழைப் பொருளோடு உயர்த்திப் பிடிப்பதில் `இராவண லீலாவுக்கு முக்கிய இடம் உண்டு.

ஒவ்வொரு விஜயதசமியன்றும் புதுடில்லியில் ராம்லீலா மைதானத்தில் (இதற்காகவே இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது) ஆண்டுதோறும், வரலாற்றுக் கண்ணோட்டத்தில் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் இராவணன், இந்திரஜித், கும்பகர்ணன் உருவங்களுக்கு எரியூட்டி விழா கொண்டாடுகிறார்கள். `ராம்லீலா வட இந்தியாவின் கலாச்சாரத் திருவிழாவாகவே ஆக்கப்பட்டு விட்டது.

இராமாயணம் ஆரிய - திராவிடப் போராட்டம் என்று நேரு, விவேகானந்தர் போன்றவர்களே கூறியிருக்கிறார்கள். அப்படி யிருக்கும் போது, ஒரு சார்பாக இராமாயணப் பாத்திரங்களான திராவிட இனத்தவர்களை எரிப்பதை விழாவாக கொண்டாட லாமா? இது திராவிடர்களை இழிவுபடுத்துவது ஆகாதா என்ற தன்மான வினாவை எழுப்பியதோடு அல்லாமல், அவர்கள் இராவ ணாதிகளின் உருவங்களைச் செய்து வைத்துக் கொளுத்துவது போலவே இராமனாதிகனை (இராமன், சீதை, இலட்சுமணன்) உருவங்களைக் கொளுத்தும் எதிர்வினை செயலில் ஈடுபட்டவர் அன்னை மணியம்மையார் அவர்கள்.

அவர்கள் அதற்கு `ராம் லீலா என்று பெயர் கொடுத்தனர் என்றால் அன்னையார், இங்கே `இராவண லீலா என்று பெயர் கொடுத்தார். அன்னையாரின் இந்தச் செயல் வரலாற்று ஓட்டம் முழுவதுமே முக்கிய குறிப்பாகப் பதிவு செய்யப்பட்டு விடும்.

அத்தகைய அன்னையாரின் வரலாற்றுக் குறிப்பு நாளான இன்று - தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையிலிருந்து ஒரு பிரபல தொலைக்காட்சியில் இராமாயணத் தொடர் அரங்கேற்றப்படுகிறது என்பது வேதனைப்படத்தக்க ஒன்றுதான்.
நவீன தொழில் நுட்பத்தில் மிகப் பிர்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டு, ஞாயிறுதோறும் ஒளிப்பரப்பாகிறதாம்.

அண்மையில் என்.டி.டிவி இராமாயணத் தொடரை ஒளிபரப்பத் தொடங்கிய போதே அதனைக் கண்டித்து இருக்கிறோம்.

தமிழர்களைக் கொச்சைப்படுத்த தமிழ்நாட்டிலேயே கைலாகு கொடுக்கப்படுகிறது. கேட்டால் வியாபாரம் என்பார்கள். மீன் விற்ற காசு கவிச்சியா அடிக்கப் போகிறது என்று சமாதானம் கூடச் சொல்வார்கள்.

அதுவும் காவிக் கூட்டம் ராமராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் என்று தோள் தட்டி, தொடை தட்டி வன்முறை ஆயுதத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டுள்ள இந்தக் கால கட்டத்தில் இந்த இராமாயண தொடராம்.

ராமன் பாலம் என்று சொல்லி தமிழர்களின் நீண்ட நாள் கனவுத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை கலைத்திட காவிகள் தினவெடுத்துக் கிளப்பியுள்ள இந்தப் பருவத்தில் இராமாயணம் தொடர் ஒளிபரப்பு தமிழ்நாட்டில் என்றால் இது ஏதோ எதேச்சையாக நடந்ததாகக் கருத முடியாது. இதன் பின்னணியில் ஒரு நோக்கம் உறுதியாக இருக்கிறது என்று கருதிட இடம் உண்டு. இது பிறகு வெளிப்படக் கூடும்.
பார்ப்பனர்கள் எப்பொழுதும் எதிர் எதிரே நின்று வீரப் போர் புரிந்தது கிடையாது - கிடையவே கிடையாது.

எதிரிகளுக்கு நம்மிடமிருந்து மலிவாகவே ஆள்கள் கிடைப் பார்களே! தந்தை பெரியார் காலத்துக்குப் பிறகும் இது தொடருகிறதே - தொடரலாமா? தந்தை பெரியார் ஒரு கால கட்டம் - ஒரு திருப்பம் என்றாரே அறிஞர் அண்ணா, அதனையெல்லாம் அறியாதவர்களா இவர்கள்?

அரசியல் பின்னணியா? வியாபாரப் பின்னணியா? எந்தப் பின்னணியாகத்தான் இருந்தால் என்ன? தமிழர்களுக்குக் கேடு செய்வது என்ற திட்டம் மட்டும் நூற்றுக்கு நூறு உண்மை!
மீண்டும் இராவண லீலாக்கள் தேவையா? அன்னையாரின் நினைவு நாள் இந்த வினாவை இப்பொழுது எழுப்பியிருக்கிறது!


-------------- மயிலாடன் அவர்கள் "விடுதலை" 16-3-2008 இதழில் எழுதிய கட்டுரை

இராமாயணத்தை விமர்சிப்பவர்களின் தலையைக் கொண்டுவருபவர்களுக்கு தங்கம் தருவதாக காவிக்கூட்டம் கூப்பாடு போட்டது.தமிழ்நாடே கொந்தளித்து கண்டணம் தெரிவித்தது. ஆனால் வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது என்பார்களே அதுபோலே இன்று யாரால் முன்னேறினார்களோ
அவர்களே தனிமனிதரின் தலையை அல்ல ஒட்டுமொத்த தமிழர்களின் தலைக்கு விலை பேசிக்கொண்டுள்ளார்கள்.தமிழர்கள் எல்லா நேரமும் ஏமாறமாட்டார்கள் என்பதை அவர்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள். எவ்வளவு தொழில்நுட்பத்துடன் இராமாயணத்தை ஒளிபரப்பினாலும் மலத்தில் அரிசி பொறுக்குவதற்கு சமம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ளும் காலம் வரும்.

ஜோதிடப்புரட்டு

மாட்டுச் சாதகத்தையும், மனிதச் சாகத்தையும் அவனிடம் காட்டினால்
எது மாட்டுச் சாதகம்? எது மனிதச் சாதகம் என்று அவனுக்குச் சொல்லத் தெரியாது. அண்ணன் சாதகத்தையும், தங்கையின் சாதகத்தையும் புரிந்து கொள்ள அவனால் முடியாது. இருவருக்கும் அவன் கலியாணப் பொருத்தம் சொல்லுவான்.கடவுளாலேயே சொல்ல முடியாதே! கடவுள் சிலை முன்னால் சிவப்பு – விபூதிப் பொட்டலம் கட்டிப் போட்டு எடுத்தால் மாறுதலாகத் தீர்ப்புக் கிடைக்கிறதே!

நமக்குத் தன்மான உணர்ச்சி வேண்டும். எனவே நாம் சொந்தப் புத்தியோடு சிந்திக்க வேண்டும். இந்த 1958-லும் காட்டுமிராண்டித்தனமாய் நடக்கக் கூடாது. தன்மான உணர்ச்சி வேண்டும். அந்த உணர்ச்சி உள்ளவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் வேகமாக முன்னேற வேண்டும். கொஞ்சம் சறுக்கி விழுந்தோமானால் படு பாதளத்துக்குப் போய்விடும்.வெள்ளையனைப் பாருங்கள். காட்டுமிராண்டியாய் இருந்தவன் திருந்தி முன்னேறியுள்ளான்.

ஆரியனோ அக்கா- தங்கையைக் கட்டிக் கொண்டவன். ராமனும்- சீதையும் அண்ணன் தங்கை முறை. அது அவர்கள் பழக்கம். அப்படிப்பட்ட ஆரியர்களும் திருந்தியிருக்கிறார்கள். ஆனால் நாமோ இன்னும் திருந்தவில்லை. சாஸ்திரம் பார்ப்பது, சகுணம் பார்ப்பது, பூ வைத்துக் கேட்பது எவ்வளவு இழிவான தன்மை?பொருந்தம் என்றால் ஆண் பெண்னைப் பார்க்க வேண்டும். பெண் தன்னைக் கட்டிக் கொள்ளப் போகும் ஆணைப் பார்க்க வேண்டும். ஒருவருடைய குணத்தை மற்றவர் புரிந்து கொள்ள வேண்டும்.நாம் வண்டிக்கு ஒரு மாடு வாங்க வேண்டுமானால் இருக்கின்ற மாட்டுக்குப் பொருந்துமாறு எவ்வளவு கஷ்டப்பட்டு ஜோடி சேர்க்கிறோம்?

சாதாரணமாக நாய் குட்டி போட வேண்டுமானால் நல்ல ரக நாயாகப் பார்த்துத் தானே சேர்க்கிறோம். அதுபோல் தானே குதிரையும்? ஆனால் மனிதனுக்கு ஜோடி சேர்ப்பதற்கு மாத்திரம் ஏன் அழுக்குப் பிடித்த பார்ப்பனிடம் போய் கேட்க வேண்டும்?மருமகளின் குணம் மாமியாருக்குத் தெரியாது. கணவனின் குணங்கள் மனைவிக்குத் தெரியாது. ஜாதகத்தில் கொண்டு போய் கொடுத்து விட்டு வீட்டைப் பார்த்துப் பரவாயில்லை என்று கூறி வந்து விட்டால் திருமணம் திருமணம் தீர்ந்து போயிற்றா?

திருமணம் செய்து கொள்பவனுக்கு ஜாதகமே இருக்காது. சோதிடம் பார்ப்பவன் ஜாதகம் இல்லையென்றால் பரவாயில்லை என்று கையைநீட்டு என்பான். இப்படி கையை நீட்டிப் விரலைப் பார்த்துப் பொருத்தம் கண்டுப்பிடித்தால் அந்த அர்த்தம்? தாய் பெயரைச் சொல்லிப் பூ போட்டால் சாமி "ஏண்டா தாய் பெயரைச் சொல்கிறாய்?" என்று கூறிப் பூவை எடுத்து எறிந்து விடுமா? இல்லை அக்கா, தங்கை பெயரைச் சொன்னால் ''என்னை என்ன சோதித்துப் பார்க்கிறாயா?" என்று அடித்து விரட்டுமா? அந்தச் சாமி- கழுதை, நாய்குட்டிப் பெயரைச் சொன்னால் இது மிருகத்தின் பெயர் என்று கூறுமா? இப்படி இந்த 1958- ஆம் ஆண்டிலுமா நாம் இத்தகைய பைத்தியங்களாகக் காட்டிக் கொள்வது?

-------தந்தைபெரியார்-நூல்:"வாழ்க்கைத் துணைநலம்"

இராமாயணம் ஆரிய - திராவிடப் போராட்டம்

இன்று அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாள் (16.3.1978) - வரலாற்றுக் குறிப்பு நாள்! அவர்தம் புகழைப் பொருளோடு உயர்த்திப் பிடிப்பதில் `இராவண லீலாவுக்கு முக்கிய இடம் உண்டு.

ஒவ்வொரு விஜயதசமியன்றும் புதுடில்லியில் ராம்லீலா மைதானத்தில் (இதற்காகவே இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது) ஆண்டுதோறும், வரலாற்றுக் கண்ணோட்டத்தில் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் இராவணன், இந்திரஜித், கும்பகர்ணன் உருவங்களுக்கு எரியூட்டி விழா கொண்டாடுகிறார்கள். `ராம்லீலா வட இந்தியாவின் கலாச்சாரத் திருவிழாவாகவே ஆக்கப்பட்டு விட்டது.

இராமாயணம் ஆரிய - திராவிடப் போராட்டம் என்று நேரு, விவேகானந்தர் போன்றவர்களே கூறியிருக்கிறார்கள். அப்படி யிருக்கும் போது, ஒரு சார்பாக இராமாயணப் பாத்திரங்களான திராவிட இனத்தவர்களை எரிப்பதை விழாவாக கொண்டாட லாமா? இது திராவிடர்களை இழிவுபடுத்துவது ஆகாதா என்ற தன்மான வினாவை எழுப்பியதோடு அல்லாமல், அவர்கள் இராவ ணாதிகளின் உருவங்களைச் செய்து வைத்துக் கொளுத்துவது போலவே இராமனாதிகனை (இராமன், சீதை, இலட்சுமணன்) உருவங்களைக் கொளுத்தும் எதிர்வினை செயலில் ஈடுபட்டவர் அன்னை மணியம்மையார் அவர்கள்.

அவர்கள் அதற்கு `ராம் லீலா என்று பெயர் கொடுத்தனர் என்றால் அன்னையார், இங்கே `இராவண லீலா என்று பெயர் கொடுத்தார். அன்னையாரின் இந்தச் செயல் வரலாற்று ஓட்டம் முழுவதுமே முக்கிய குறிப்பாகப் பதிவு செய்யப்பட்டு விடும்.

அத்தகைய அன்னையாரின் வரலாற்றுக் குறிப்பு நாளான இன்று - தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையிலிருந்து ஒரு பிரபல தொலைக்காட்சியில் இராமாயணத் தொடர் அரங்கேற்றப்படுகிறது என்பது வேதனைப்படத்தக்க ஒன்றுதான்.
நவீன தொழில் நுட்பத்தில் மிகப் பிர்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டு, ஞாயிறுதோறும் ஒளிப்பரப்பாகிறதாம்.

அண்மையில் என்.டி.டிவி இராமாயணத் தொடரை ஒளிபரப்பத் தொடங்கிய போதே அதனைக் கண்டித்து இருக்கிறோம்.

தமிழர்களைக் கொச்சைப்படுத்த தமிழ்நாட்டிலேயே கைலாகு கொடுக்கப்படுகிறது. கேட்டால் வியாபாரம் என்பார்கள். மீன் விற்ற காசு கவிச்சியா அடிக்கப் போகிறது என்று சமாதானம் கூடச் சொல்வார்கள்.

அதுவும் காவிக் கூட்டம் ராமராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் என்று தோள் தட்டி, தொடை தட்டி வன்முறை ஆயுதத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டுள்ள இந்தக் கால கட்டத்தில் இந்த இராமாயண தொடராம்.

ராமன் பாலம் என்று சொல்லி தமிழர்களின் நீண்ட நாள் கனவுத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை கலைத்திட காவிகள் தினவெடுத்துக் கிளப்பியுள்ள இந்தப் பருவத்தில் இராமாயணம் தொடர் ஒளிபரப்பு தமிழ்நாட்டில் என்றால் இது ஏதோ எதேச்சையாக நடந்ததாகக் கருத முடியாது. இதன் பின்னணியில் ஒரு நோக்கம் உறுதியாக இருக்கிறது என்று கருதிட இடம் உண்டு. இது பிறகு வெளிப்படக் கூடும்.
பார்ப்பனர்கள் எப்பொழுதும் எதிர் எதிரே நின்று வீரப் போர் புரிந்தது கிடையாது - கிடையவே கிடையாது.

எதிரிகளுக்கு நம்மிடமிருந்து மலிவாகவே ஆள்கள் கிடைப் பார்களே! தந்தை பெரியார் காலத்துக்குப் பிறகும் இது தொடருகிறதே - தொடரலாமா? தந்தை பெரியார் ஒரு கால கட்டம் - ஒரு திருப்பம் என்றாரே அறிஞர் அண்ணா, அதனையெல்லாம் அறியாதவர்களா இவர்கள்?

அரசியல் பின்னணியா? வியாபாரப் பின்னணியா? எந்தப் பின்னணியாகத்தான் இருந்தால் என்ன? தமிழர்களுக்குக் கேடு செய்வது என்ற திட்டம் மட்டும் நூற்றுக்கு நூறு உண்மை!
மீண்டும் இராவண லீலாக்கள் தேவையா? அன்னையாரின் நினைவு நாள் இந்த வினாவை இப்பொழுது எழுப்பியிருக்கிறது!


-------------- மயிலாடன் அவர்கள் "விடுதலை" 16-3-2008 இதழில் எழுதிய கட்டுரை
இராமாயணத்தை விமர்சி

பாசிசத்தின் இரட்டைப் பிள்ளைகள்!

நீரோ மன்னன் என்று உச்சநீதிமன்றத்தால் விமர்சிக்கப் பட்ட குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டுமாம்!


அவரைப் போல நேர்மையானவர் வேறு யாரும் கிடையாதாம்!


நஞ்சை தேன் என்று விற்கும் ஆபத்தான ஆசாமியான `சோ ராமசாமி, தமிழ்நாட்டில் `மோடி `மஸ்தான் சரக்கை அவிழ்த்துக் கொட்டி ஆழம் பார்க்கிறார்.


ரஜினி அரசியலுக்கு வந்தால் குஜராத்தைவிட தமிழ்நாடு ஒரு படி மேலே போகும் என்று ரஜினியின் மூக்கைச் சொரிகிறார்.


மோடிக்கு 40 வகையோடு விருந்து படைக்கிறார் செல்வி ஜெயலலிதா


`சோவின் வீடு தேடி ஓடுகிறார் ஜெயலலிதா. நாட்டில் ஏதோ நடக்கிறது; தமிழர்களே, எச்சரிக்கை!


கேள்வி: நரேந்திரமோடி பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைவராகவோ, பிரதமராகவோ வாய்ப்புண்டா?
பதில்: எதிர்காலத்தில் அந்தப் பொறுப்பை ஏற்பதற்கான தகுதி படைத்தவராகத் தான், நான் அவரைக் கருதுகிறேன்.
(`துக்ளக் 2.1.2008 பக்கம் 12)

`எதனால் குஜராத்தில் மீண்டும் பா.ஜ.க., ஆட்சி சாத்தியமாயிற்று? பா.ஜ.க.வினர் காட்டிய முனைப்பு அத்வானி போன்ற அகில இந்தியத் தலைவர்களின் பிரச்சாரம்; அருண்ஜேட்லி போன்றவர்களின் உழைப்பு; இவை எல்லாவற்றிற்கு மேலாக நரேந்திர மோடி மக்களிடையே பெற்றிருக்கிற நம்பகத் தன்மை, அவருடைய நிர்வாகத்தில் குஜராத் கண்டிருக்கும் முன்னேற்றம் - இவைதான் பா.ஜ.க.வின் இந்த வெற்றிக்குக் காரணம்...
``வேறு எந்த மாநில முதல்வருக்கும் இப்படிப்பட்ட பெருமை கிட்டியதில்லை. மோடி ஆறு வருடங்கள் ஆட்சி புரிந்தும் - அவரை வெறுத்து, தூஷித்து, கரித்துக் கொட்டி பிரச்சாரம் செய்கிற அரசியல் வாதிகளும், பத்திரிகைகளும், டெலிவிஷன் சேனல்களும் மிகக் கடுமையாக முனைந்தும் - ஒரு ஊழல் குற்றச்சாட்டைக் கூட அவர்மீது சுமத்த அவர்களால் முடியவில்லை. இன்றைய சீர்கெட்ட அரசியலில், ஒரு மாநில முதல்வர், இப்படிப்பட்ட நேர்மையாளராகத் திகழ முடியும் - என்று நரேந்திரமோடி நிரூபித்திருக்கிறாரே, அதுதான் அவரது மிகப் பெரிய வெற்றி (`துக்ளக் 2.1.2008 தலையங்கம் பகுதியில் உள்ளவை)
``துக்ளக் வயது 38 என்ற விழாவில், குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடியை சிறப்பு விருந்தினராக அழைத்து (14.1.2008) சென்னை காமராசர் நினைவு அரங்கத்தில் திருவாளர் `சோ ராமசாமி பேசுகையில் குறிப்பிட்டதாவது:

``சாதாரணமாக சிலர் நல்லவர்களாக இருப்பார்கள். நான்கூட நல்லவன்தான். யாருக்கும் என்னால் கெடுதல் உண்டா!
இதுகூட நல்ல போடியம் தான். இதனால் யாருக்கும் கெடுதல் கிடையாது. அதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்? ஆனால் அசாத்திய திறமையும், முழு நேர்மையும் சேர்ந்த ஒரு அரசியல்வாதியாக மோடியைப் பார்க்கிறோம். (பலத்த கைதட்டல்) அதனால்தான் அவர் வென்றார். இவரைப் போய் மரண வியாபாரி என்று சொன்னார்கள். (சிரிப்பு) ஆமாம். நான் இப்போது உங்களிடையே மரண வியாபாரியை அழைக்கிறேன்.
தீவிரவாதத்திற்கு மரண வியாபாரி (பலத்த கைதட்டல்) ஊழலுக்கு மரண வியாபாரி (பலத்த கைதட்டல்) ஆதாயத்திற்குச் சலுகை காட்டும் அணுகுமுறைக்கு மரண வியாபாரி (பலத்த கைதட்டல்) நிர்வாகத் திறமையின்மைக்கு மரண வியாபாரி; (பலத்த கைதட்டல்) அதிகார வர்க்கத்தின் அலட்சியப் போக்கிற்கு மரண வியாபாரி (பலத்த கைதட்டல்) - இப்போது உங்களிடையே பேசுவார் (பலத்த கைதட்டல்).
- `துக்ளக் 5.3.2008 பக்கம் 17

பாசிசத்தின் இரட்டைப் பிள்ளைகள் ஒன்றுக்கொன்று கை கொடுத்திருக்கின்றன.
அண்மையில் `தி நேம் ஈஸ் ரஜினிகாந்த் என்ற பெயரில் ஒரு நூலை வெளியிட்டுப் பேசிய `சோ கீழ்க்கண்ட `முத்திரைகளைப் பொறித்தார்.

``மகாபாரதத்தில் எந்தவொரு முடிவையும் தனித்து எடுக்காதே என்று கூறப்பட்டுள்ளது. சிறந்த நிர்வாகத்திற்கான இலக்கணம் இது. இதைத்தான் நரேந்திரமோடி செய்தார். அதனால்தான் அவரால் ஜெயிக்க முடிந்தது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாடு குஜராத்தைவிட ஒருபடிமேலே போய் விடும்
- (`தீக்கதிர் 8.3.2008)

இவ்வாறெல்லாம் சோ திருவாய் மலர்ந்து அருளியுள்ளார்.
இதைவிட ஆபத்தான வேலையை வேறுயாரும் செய்ய முடியாது `சோ என்ற அபாயகரமான பார்ப்பனரால் மட்டுமே இதுபோன்ற பித்தலாட்டங்களை அரங்கேற்ற முடியும்.
விஷத்தைத் தேன் என்றும், விரியன் பாம்பை விழுது என்றும் சாக்கடையைச் சந்தனமென்றும், நரியை நாயென்றும் ஆள் மாற்றிக் காட்டி அடித்துக் கொண்டு போகும் வேலையை இந்த நவீன வெங்கண்ணாவால்தான் செய்து காட்ட முடியும். `ஹிந்துத்துவம் என்பது மத ரீதியானது அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டே கூறியிருக்கிறது என்று (`துக்ளக் 2.1.2008 பக்கம் 4) (சம்பந்தப்பட்ட நீதிபதி வெங்கடாசரிய்யா தான் கூறியதைத் தப்பாக லியாக்கியானம் செய்து கொண்டார்கள் என்று பின்னால் கருத்துக் கூறியுள்ளார் என்பது வேறு விஷயம்) எடுத்துக்காட்டி தன் பூணூலை ஒரு முறை உருவிக் கொண்டு எழுதும் இதே `சோ ராமசாமி இவர் தூக்கிப் பிடிக்கும் திருவாளர் நரேந்திரமோடியை `நீரோ மன்னன் என்று அதே சுப்ரீம் கோர்ட்டு அடையாளப்படுத்திக் காட்டியதே அதை ஏன் வசதியாக மறைக்கிறார்? பேச நா இரண்டுடையாய் என்று ஆரிய மாயைபற்றி (ஆபுடுபே கருத்து) அறிஞர் அண்ணா சொன்னது பொய்யாகிப் போய் விடக் கூடாது அல்லவா?

நல்லாட்சி நடத்தி விட்டாராம் - நேர்மையான மனிதராம் - அதனால்தான் மக்கள் வாக்களித் தார்களாம் - குஜராத்தில் வெற்றி பெற்று விட்டாராம் - அடேயப்பா, எப்படியெல்லாம் துள்ளிக் குதிக்கிறார்!

கொடுங்கோலர்கள் வெற்றி பெற்று நீண்ட காலம் ஆட்சி செய்தது இல்லையா? ஹிட்லர் கூட ஜெர்மனியில் வெற்றி பெற்ற வன்தான். இடிஅமீனும் கால் நூற்றாண்டுக் காலம் ஆட்சி செய்தது உண்டு. எட்டு லட்சம் கம்யூனிஸ்டுகளை கொன்று குவித்த சுகார்தோகூட 30 ஆண்டு காலம் ஆட்சி சிம்மாசனத்தில் வீற்றிருந்து உறுமினான்.
சோவுக்குப் பிடித்தமான பாரத கதைப்படி துரியோதனன் - தாயாதிகளைக் காட்டுக்கு அனுப்பி 14 ஆண்டு காலம் ஆட்சி செய்யவில்லையா!

இவற்றையெல்லாம் நியாயப் படுத்தி விட்டல்லவா மோடியைத் தூக்கி மொட்டைத் தலையில் தூக்கி வைத்து ஆட வேண்டும்.
பார்ப்பான் ஒருவரைப் புகழ் கிறான் என்றால், அவனை மிக வும் விழிப்பாகப் பார்க்க வேண் டும். அதுவும் பார்ப்பனரல்லா தார் ஒருவரைப் பார்ப்பான் புகழ்ந்தால் மேலும் விழிப்பாக எச்சரிக்கையாக நோக்க வேண் டும். நரேந்திரமோடி ஒரு பார்ப் பானாகயிருந்தால் - அவர்களுக்கு வசதியாக இருந்திருக்காது. பார்ப் பனரல்லாதாராக இருப்பதால் நம்மோடு மோதவிட அவர்களுக் குப் பெரும் வசதியாகப் போய் விட்டது. அண்ணனைக் காட்டிக் கொடுத்த விபீஷணனுக்குத் தானே `ஆழ்வார் பட்டம்! 2000 முசுலிம்கள் மோடியின் ஆட்சியில் கொல்லப்பட்டனர் (அரசாங்கக் கணக்கு இவ்வளவு தான் - உண்மையில் படுகொலைக்கு ஆளானவர்கள் பல்லாயிரமாக இருக்கக் கூடும்;) நாசமாக்கப் பட்ட சொத்தின் மதிப்பு 681 கோடி ரூபாய்.

ஆகா, இதைவிட நல்லாட்சி ஆரியத்தின் பார்வையில் வேறு எதுவாகத்தான் இருக்க முடியும்?
படுகொலை செய்யப்பட்ட வர்களில் பத்து பேர் பார்ப்பனர் களாகயிருந்தால் இந்தத் துக்ளக் பார்ப்பன ரத்தம் எந்த டிகிரிக்குச் கொதிப்பேறியிருக்கும்!

ஈழத்தில் படுகொலை செய்யப் படுபவர்கள் தமிழர்கள் என்கிற போது இவர்களின் அங்கமெல் லாம் ஆனந்தக் கடலில் மிதக் கிறது. குஜராத்தில் முசுலீம்களின் தலைகள் பனங்காய்களாகச் சீவி எறியப்படும்போது இந்த இட் லரின் ரத்த உறவு கொண்டவர் களுக்கு இன்பச் சுற்றலா செல்வது போலிருக்கிறது!

ஹிட்லர்கூட சைவம்தான். அவன் சொல்வானாம் `நான் யூதர்களைத் தவிர வேறு யாரை யும் கொல்லுவதில்லையென்று. நரேந்திர மோடி சிறுபான்மை யிரைத்தவிர வேறு யாரையும் கொல்லுவதில்லை.

குஜராத்தில் இதே நரேந்திர மோடி ஆட்சியில் `பொடா சட்டத்தில் கீழ் கைது செய்யப் பட்டவர்கள் 287 பேர்கள் என் றால் அதில் 286 பேர்கள் முசுலிம் கள், ஒருவர் சீக்கியர்; எந்த இனம் பாதிப்புக்கு - படுகொலைக்கு ஆளாக்கபட்டுள்ளதோ, அந்த இனத்தைச் சேர்ந்தவர்களே `பொடா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றால் - இதைவிட `நேர்மையான ஆட் சியை எங்கே போய்தான் தேட முடியும்?

புதுடில்லியில் பொடா சட் டம் பற்றிய மக்கள் தீர்ப்பாயத் தில், குஜராத்தில் `பொடா அத்து மீறல்கள்பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பல வெளி வந்தன.
குஜராத்தில் மனித உரிமை களுக்காகக் குரல் கொடுத்து வரும் வழக்கறிஞர் மேமோன் அங்கு கூறினார். குஜராத்தில் பொடா பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அல்ல; பயங்கரவாதி களைத் தயார் செய்யும் சட்டம் என்றார் (Production of Terrorist Act) இன்னொரு திடுக்கிடும் தகவலையும் அவ்வழக்கறிஞர் வெளியிட்டார். `பொடாவில் இந்துக்கள் கைது செய்யப்பட கூடாது என்று தனி சட்டம் இருக்கிறதா என்று கேட்டேன். இதற்கு குஜராத்தில் உள்துறை அமைச்சரிடமிருந்து பதில் ஏதும் இல்லை என்றாரே!

நடுநிலை தராசுக்கோல் நரேந்திரமோடி ஆட்சி என்ப தற்கு இதுவும் எடுத்துக்காட்டு தான் - `சோ சொல்கிறாரே - பிர்மாவின் நெற்றியில் பிறந்த கூட்டம் சொல்லும்போது ஏற் றுத் தொலைக்கத் தானே வேண் டும். `சோ விவரிக்கும் மோடியின் நல்லாட்சிக்கு சாட்சியங்களை வேறு எங்கும் தேட வேண்டிய தில்லை. குஜராத் காவல்துறை உதவி டைரக்டர் ஜெனரல் ஸ்ரீகுமார், நானாவதி கமிஷன் முன் சொன்ன சாட்சியமே போது மானது. - அதுதான் பொருத்த மானதும்கூட! மோடியின் முகத்திரையைக் கிழிக்க அவர் அதிகாரத்து உட்பட்டுப் பணி யாற்றிய காவல்துறை அதிகாரி யின் கைகளே சரியானவை கூர்மையானவையும்கூட! பாதிக்கப்பட்ட முசுலிம்கள் காவல்துறைக்குப் புகார் கொடுத்தும் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருந்தன. அவர்கள்மீது முதல் தகவல் அறிக்கை (FIR) போடப்பட்டு இருந்தும் உடனே விடுதலை செய்யப்பட்டனர். அரசுத் துறை யின் வழக்கறிஞர்கள் (பப்ளிக் பிராசிக்கூட்டர்) இதற்குத் துணை போனார்கள். குஜராத்தில் ஊடகங்களும் கலவரங்களைத் தூண்டி விடுவதில் அக்கறை செலுத்தினர். நான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டும் அரசு ஏற்றுக் கொள்ளவில்லை

- இவ்வளவும் முதல் அமைச்சர் நரேந்திரமோடியின் காவல்துறை உதவி டைரக்டர் ஜெனரலால் அதிகாரப்பூர்வமாக கே.ஜி. ஷா மற்றும் ஜி.பி. நானா வதி கமிஷன்முன் கொடுக்கப் பட்ட வாக்குமூலங்கள்.

இதுதான் - சோவின் பார்வை யில்: ``ஆதாயத்துக்குச் சலுகை காட்டும் அணுகுமுறைக்கு மோடி ஒரு மரண வியாபாரி என்ற விமர்சனம். கைதட்டினார்களாம் காமராசர் அரங்கில். ஏன் தட்ட மாட்டார்கள்? பார்வையாளர் களாக பொது மக்கள் அனுமதிக் கப்பட்டு இருந்தால் கைதட்டு வேறு மாதிரியாகத்தான் இருந் திருக்கும்.

அழைப்புக் கொடுத்து, பொறுக்கி எடுத்துக் கூட்டப் பட்ட கூட்டமாயிற்றே! அக்ர காரத்து அம்மாமிகளும் கிச்சு களும், வைத்திகளும் கணிசமாகக் கூடியிருந்தால் கைதட்டலை எடுத்துக் கொடுக்க மாட்டார் களா? போதும் போதாதற்கு பதவியும், பணமும் கையில் கிடைத்து விட்டால் எதிரிகளின் கால்கள் எங்கே என்று தேடிக் கொண்டு ஓடும் வீடணர்களுக் குத்தான் இந்த நாட்டில் பஞ்சமா?

நரேந்திரமோடியின் `திருக் கல்யாண குணத்திற்கு ஒரே ஒரு நறுக்கு! அதையும் காவல்துறை உதவி டைரக்டர் ஜெனரல் ஸ்ரீகுமார் தான் கமிஷன் முன் கூறியிருக்கிறார்.
முதல் அமைச்சர் நரேந்திர மோடி கவுரவ யாத்திரை என்ற ஒன்றைத் தொடங்கினார். அதில் அவர் பேசிய கண்ணியம் வழியும் சொற்கள் இதோ:
``நாங்கள் அகதி முகாம்கள் நடத்தி முஸ்லிம்களுக்கு பிள்ளை பெறும் வாய்ப்பு களை ஏற்படுத்திக் கொடுக்க விரும்ப வில்லை. இவ்வாறு இனப் பெருக்கம் செய்யும் மக்களுக்கு பாடம் படித்துக் கொடுக்க வேண்டும்

ஒரு நாலாந்தர பேர் வழிகூட இத்தகு நரகல் சொற்களை உச்சரித்து இருக்க மாட்டான். ஆனால் முதல் அமைச்சர் மோடி உச்சரித்து இருக்கிறார். அதற்கு இந்த `சோ சபாஷ் போடுகிறார்.
பாம்புக்கும் பச்சைக் கொடிக் கும் வித்தியாசம் தெரியாத மக் களை ஏமாற்றி விடலாம் என்கிற தினவில் இப்படியெல்லாம் இவர்களால் பேச முடிகிறது - எழுதவும் முடிகிறது.
நரேந்திரமோடி நடத்தியது அடால்ஃப் ஹிட்லரின் அசல் பாசிச ஆட்சி என்பதற்கு அவர் நடத்திய ஆட்சியில் கோத்ரா வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையே போதுமானது!
நரோடா பாட்டியா என்னும் இடத்தில் 58 பெண்களும் குழந் தைகளும் கொடூரமான முறை யில் கொல்லப்பட்ட வழக்கில் குஜராத் காவல்துறையின் குற்றப் பத்திரிகை என்ன கூறுகிறது?
`வகுப்பு மோதல்களின் மோச மான விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல், இந்துக்களின் கொந்தளிப்பு என்ன விளைவு களை உருவாக்கும் என்பது பற்றிக் கவலைப்படாமல் முஸ் லிம்கள் கோத்ரா ரயில் பெட் டிக்குத் தீ வைத்தார்கள் என்று ஒரு அரசின் காவல்துறை குற்றப் பத்திரிகையில் கூறுகிறது. என் றால், அந்த அரசு இந்துக்களுக் காக உள்ள அரசு என்பதும், இந்துக்களின் கொந்தளிப்பை நியாயப்படுத்தக் கூடிய நிலையில் உள்ளது என்பதும் தெரியவில் லையா! அத்தோடு நின்றுவிட வில்லை. ``கோத்ரா வன்முறைக்கு பதில் தரும் நோக்கத்தோடு தான் இந்த வன்முறைகள் நடந்தன என்றும் குற்றப் பத்திரிகை கூறு கிறது. ஒரு அரசே இந்துக்களின் வன்முறை நடவடிக்கைகளுக்கு இவ்வளவு வெளிப்படையாக வக்காலத்து வாங்கும் நிலையில், அம்மாநிலத்தில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு எந்தக் கதியில் இருக்கும்? ஒவ்வொரு நிமிடமும் மரண பயங்கரமும், அச்சுறுத்தல் பாம்பும் முசுலிம் மக்களின் கழுத்தை வளைத்துப் பிடித்து இறுக்கிக் கொண்டு தானே இருந்திருக்கும்.
இந்த யோக்கிய சிகாமணி மோடிதான் சென்னை காமராசர் அரங்கிலே கூறியிருக்கிறார்.
``என்னைப் பொறுத்தவரை அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில், வளர்ச் சித் திட்டங்களை நிறைவேற் றுவதுதான் மதச் சார்பின்மை என்று புனித புத்தர் போல புன் சிரிப்போடு வார்த்தைமலர்களைக் கசங்காமல் உச்சரித்து இருக்கிறார்.

நெஞ்சிலே நஞ்சும் உதட் டிலே தேனும் ஒழுகும் வஞ்சகப் பாம்புகள் இதுவும் பேசும் - இதற்கு மேலும் பேசும்!

குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியை காமராசர் அரங்கில் பேசுமாறு அழைப்பதற்கு முன் திரு. சோ ராமசாமி பயன் படுத்திய சொற்கள் என்ன?

``ஆதாயத்திற்குச் சலுகை காட்டும் அணுகுமுறைக்கு மரண வியாபாரி! என்று பராக்குச் சொன்னார் அல்லவா - அதற்காக பார்வையாளர்கள் பலத்த கை தட்டியதாக `துக்ளக் எழுதுகிறது அல்லவா! இதற்கும் எடுத்துக்காட்டு உண்டு. 14 பேர்களை கைகளை யும், கால்களையும் கட்டி, பெஸ்ட் பேக்கிரியில் துடிதுடிக்க எரித்தனரே இட்லரின் வாரிசுகள் - அது தொடர்பான வழக்கினை விசாரித்தவர் எஸ்.யூ. மஹிதா என்ற விரைவு நீதிமன்ற நீதிபதி. உச்சநீதிமன்ற மேல் முறையீ ட்டில் நீதிபதிகள் துரைசாமி ராஜு, மற்றும் அர்ஜித் பசாயத் ஆகியோர் விரைவு நீதிமன்றம் குற்றவாளிகள் 21 பேர்களையும் விடுதலை செய்ததை மிகவும் கடுமையாகக் குறை கூறியுள் ளனர். குஜராத் மாநில உயர்நீதி மன்றமும் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்குத் தப்பவில்லை.

``சட்டத்தின் பார்வையில் குற்றவாளி கள் விடுவிக்கப்பட்டது விடுதலையே அல்ல. தீர்ப்புரை என்ற பெயரால் விரைவு நீதி மன்றத்தின் முடிவுகள் மதிக்கத்தக்கவை யல்ல; நம்பிக்கைக்கு உரியவையும் அல்ல

- இதைவிட வேறு எதனால் உச்சநீதி மன்றம் சாற்ற முடியும்?
இப்படி உச்சநீதிமன்றத்தால் ஆழமான குட்டு வைக்கப்பட்ட அந்த விரைவு நீதிமன்ற நீதிபதி எச்.யூ. மஹிதா இருக்கிறாரே - அவருக்குப் `பூர்ண கும்பம் கொடுத்து, பெரும் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தவர்தான் - ஆதாயத்துக்காக சலுகை காட் டாத சான்றோர் என்று `சோ ராம சாமியால் குளிப் பாட்டப்பட்ட நரேந்திர மோடி.

குஜராத் மின்வாரியத்தில் ஆலோசகர் என்ற பதவியில் அமர்த்தி மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம், கார், தொலைப் பேசி வசதி மற்றும் உதவியாளர் என்ற சகல சந்தோஷமான ஏற் பாடுகளை முதல் அமைச்சர் செய்து கொடுத்திருக்கிறார் என் றால் இதைவிட ஆதாயத்துக் காகச் சலுகை காட்டாத ஒரு வரை `ஏழு லோகம் சென்றாலும் தேடிக் கண்டுபிடிக்க முடியுமா, என்ன! அதோடு நிறுத்தவில்லை திருவாளர் `சோ, ரஜினிபற்றி நூல் வெளியிட்டு, ரஜினி அரசி யலுக்கு வர வேண்டும் என்றும், அப்படி அவர் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாடு குஜராத்தை விட ஒருபடி மேலே போய் விடும் என்றும் கூறியிருக்கிறார்.
ரஜினியை மோடியாக்கி தமிழ் நாட்டிலும் ரண களங்களை உண்டாக்க வேண்டும் என்பது சோவின் வெறி! ரஜினி `சோ விஷயத்தில் எதற்கும் எச்சரிக் கையாக இருப்பது நல்லது. நல் லது சொல்வது போல நட்டாற் றில் இறக்கி விடும் இந்தப் பார்ப் பனரிடம் கொஞ்சம் விலகியிருப் பதுகூட நல்லது.

கடித்தவுடனே ஆளை சாகடிக்கும் பாம்புக்குப் பெயர் இந்த நாட்டில் நல்ல பாம்பு!
எந்த வழியிலோ தமிழ் நாட்டை குஜராத் ஆக்க வேண் டும் - அதன் மூலம் தந்தை பெரி யாரின் சிந்தனைகள் வேரோடி நிற்கும் இந்தப் போக்கை மாற்ற வேண்டும் என்ற எண்கணத்தின் ஊறல் எடுத்து எதை எதையோ அவர் சக்திக்கு உட்பட்டுச் செய்து பார்க்கிறார் `சோ (என்ன செய்வது, பார்ப்பனர்களுக்கு இப் போது கிடைத்திருக்கும் பெரிய தலைவர் இவர் தான்!)

செல்வி ஜெயலலிதாவும் `சோவை வீடு வரை சென்று பார்க்கிறார். (வேறு எந்த வீட் டுக்குத்தான் செல்வார். அப்ப டியே சென்றாலும் அக்கிரகாரப் பேர்வழிகளின் வீடாகத் தானே இருக்கும்!) ஏற்கெனவே இந்துத் துவா மனப்பான்மை உள்ள அம் மையார் அதற்குப் பயன்படக் கூடும் என்பது சோவின் எண்ண மாகவும் இருக்கலாம். 40 வகை பதார்த்தங்களோடு மோடிக்கு விருந்து வைத்து, தன் காவிப் பாசத்தையும் செல்வி ஜெய லலிதா வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.

ராமன் கோயிலை அயோத் தியில் கட்டாமல் வேறு எந்த நாட்டுக்குப் போய் கட்ட முடியும் என்று கேள்வி கேட்டவர் - கரசேலைக்கு பச்சைக் கொடி காட்டியவர் ஜெயலலிதா என்ப தால், திராவிட இயக்கப் போர் வையில் தமிழ் மண்ணில் பார்ப் பனீய பாசிச விதைகளைத் தூவும் ஒரு வேலையில் ஒரு கூட்டம் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது.


தமிழர்களே, எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!

------------15-3-2008 "விடுதலை" ஞாயிறு மலரில் "மின்சாரம்" அவர்கள் எழுதிய கட்டுரை