Search This Blog

10.1.18

ஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன?

நியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி

சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந்த ராஜாஜி சொல்லியிருக்கிறாரே, அதற்கு என்ன பதில் என்ற வினா வைத் தொடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஆண்டாள் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள், ஆண்டாள் தேவதாசியாக இருந்தாள் என்று எழுதப்பட்ட ஒரு நூலிலிருந்து எடுத்துக்காட்டிக் கூறிய கருத்துக்கு இந்துத்துவவாதிகள் கடுமையாக வைரமுத்துமீது சேற்றை வாரி இறைக்கும் நிலையில், நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு திராவிடர் கழகத் தலைவர் தெரிவித்த கருத்து வருமாறு:
நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு இன்று (10.1.2018)  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொலைபேசிமூலம் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:

செய்தியாளர்: தொலைபேசி உரையாடலை, நீங்கள் கேட்டுக்கொண்டுதான் இருந்திருப்பீர்கள் என்று நினைக் கிறோம்; என்னதான் எழுத்தாளராக இருந்தாலும் சரி,  பேச் சாளராக இருந்தாலும் சரி இந்து மதத்தை அவமதிக்கக்கூடிய வகையில் அவர்கள் பேசினால், அவர்கள் எப்படி பேசுகிறார் களோ, அதே வகையில் எங்களுடைய எதிர்வினைகள் இருக்கும் என்று அவர் சொல்லியிருக்கிறார், இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: இந்து மதத்திற்கு இவர் எப்போது காப்பி ரைட் வாங்கினார்; இந்து மதத்திற்கு பேடண்ட் ரைட் வாங்கி யவரா இவர்? இந்து மதத்திற்கு ஏதாவது பெயர் உண்டா? அது அந்நியர்கள் வைத்த பெயர் ஆயிற்றே, அதற்காக வெட்கப்படவேண்டாமா?
சந்தேகம் இருந்தால், சங்கராச்சாரியாரிடம் போய் கேட்டுப் பாருங்கள், தெய்வத்தின் குரலில் பதிவு செய்திருக் கிறார். இந்து மதம் என்ற பெயரை வெள்ளைக்காரர்கள், வெளிநாட்டுக்காரர்கள் வைத்த பெயர் என்று அவரே சொல்லியிருக்கிறார்.
யார் இந்து என்று இவர் எப்படி சொல்வார்? இந்து மதத் தில் கடவுள் இல்லை என்று சொல்பவர்களும் இந்துதான்; கடவுள் உண்டு என்று சொல்கிறவர்களும் இந்துதான்.
இந்து மதத்தில் கடவுளையே தூக்கிப் போட்டு, கடவுளின் கண்களில் காலை வைத்தவர்கள் எல்லாம் உண்டே!  அந்தப் புராணத்திற்கு எல்லாம் இவர் என்ன பதில் சொல்கிறார்? அதுமட்டுமல்ல, இராஜகோபாலாச்சாரியார் என்கிற இராஜாஜி அவர்கள், ஆண்டாள் பாத்திரமே ஒரு கற்பனை பாத்திரம் என்று சொல்லியிருக்கிறாரே அது இவருக்குத் தெரியுமா? ஆண்டாள் பக்தர்கள் பல பேருக்கு இது தெரி யாதே!
அரசியல் சட்ட உரிமைப்படி கருத்துக் கூற உரிமை உண்டு. இவருக்கு வேண்டுமானால், அந்தக் கருத்தை மறுப்பதற்கு உரிய உரிமை இருக்கலாம்.
நம்முடைய கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள், அது இன்னொரு நூலில் இருந்து எடுத்து சொல்லப்பட்டது என்று தெளிவாகவே சொல்லியிருக்கிறார்.
வேண்டுமென்றே இவர்கள் அதைத் திரும்பத் திரும்ப சொல்வது என்று சொன்னால், இவர்கள் இதை வைத்து தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு பத்து ஓட்டுக்கூட வாங்குவதற்கு யோக்கியதை இல்லாதவர்கள்; இப்படி குறுக்கு வழியில் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள்.
செய்தியாளர்: வைரமுத்து சொன்னார், அதற்கு நானும் பேசினேன் என்று சம்பந்தப்பட்டவர் சொல்கிறார். அவர் பேசியதற்கு எதிர்வினை என்று சொல்கிறார்.  எழுத்தாளர் களோ, கவிஞர்களோ தங்களுடைய சுதந்திரமான கருத்து களை சொல்லக்கூடாது என்று அவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியிருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா?

தமிழர் தலைவர்: இவர் யார் எதிர்வினை சொல்வதற்கு? இவருக்கு என்ன உரிமை உண்டு? வைரமுத்து சொன்ன கருத்தை மறுத்து சொல்வதற்கு, கூட்டம் போட்டு சொல்லட் டும். இவர் என்ன காப்பி ரைட் வாங்கியிருக்கிறாரா? பேடண்ட் வாங்கியிருக்கிறாரா? அரசியல் சட்டம் வழங்கி யிருக்கிற பேச்சுரிமை, கருத்துரிமையை மறுக்க, இவருக்கும் சரி, இவர் பாட்டனாருக்கும் உரிமை கிடையாது.

செய்தியாளர்: அப்படியானால், ஒரு விஷயத்திற்கு, எதிர்வினை ஆற்றக்கூடிய உரிமை எல்லோருக்கும் உண்டு என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். அதேசமயம், இதற்கு எதிர்வினை ஆற்றக்கூடாது என்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: எதிர்வினை என்பது தாறுமாறாக பேசுவது என்பதல்ல; கருத்தை கருத்தால் மறுக்க வேண்டும் என்பதுதான் சரியான எதிர்வினையாகும்.

செய்தியாளர்: ஒரு சிலர் தங்களுடைய நம்பிக்கையாக ஆண்டாளைத் தொழுது கொண்டிருக்கிறோம்; வைரமுத்து அவர்கள் ஆண்டாளைப்பற்றி தவறாகப் பேசியது எங்களு டைய மனதைப் புண்படுத்துகிறது என்று சிறீவில்லிப்புத் தூரிலிருந்து வந்த ஜீயரும் சொல்லியிருக்கிறார்; அதேதான் இவரும் சொல்லியிருக்கிறார். அப்படியானால், ஒரு குறிப் பிட்ட சிலருடைய மனதை புண்படுத்தவேண்டும் வகையில் ஏன் பேசவேண்டும்? அதனால்தான் நாங்கள் எதிர்வினை ஆற்றிக் கொண்டிருக்கிறோம் என்று அவர்களுடைய தரப்பு வாதமாக வைக்கிறார்களே?
தமிழர் தலைவர்: அது தவறு. ஏன் என்று கேட்டால், வைரமுத்து அவர்கள், ஒரு ஆராய்ச்சியாளர் எழுதிய நூலில் இருந்து சொல்லியிருக்கிறார். அந்த நூலுக்கு இதுவரையில் மறுப்புரை சொல்லியிருக்கிறார்களா இந்த வீராதி வீரர்கள்! சூராதி சூரர்கள்! அதற்கு யோக்கியதை இல்லாதவர்கள்!
'ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார்கோவில் ஆண்டி' என்று சொல்வதுபோன்று - வைரமுத்துவை மாட்ட வைத் திருக்கிறார்கள்.
அந்த ஆய்வாளர் சொன்ன கருத்துக்கு மறுப்பு எங்கே? இவர்கள் யாரிடம் கோபித்துக் கொள்ளவேண்டும் - ஆய்வாளரிடம் அல்லவா கோபித்துக் கொள்ளவேண்டும் - அது ஜீயராக இருக்கட்டும்; ஆயராக இருக்கட்டும் - அங்கே போய் அல்லவா முட்டிக்கொள்ளவேண்டும். அதை விட்டுவிட்டு, இங்கே பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
ஆகவே, கருத்து சுதந்திரம் இன்னொருவரின் நூலில் எழுதப்பட்டு இருக்கிறது என்று சொல்வதற்கு, வைரமுத்து அவர்களுக்கு முழு உரிமை உண்டு. அந்தக் கருத்து சுதந் திரத்தை மறுப்பது எதிர்வினையாகாது. அதை சொன்னால், நாங்களும் எங்களுடைய கருத்தை தெளிவாக சொல்வதற்குத் தயாராக இருக்கிறோம்.
ஆகவேதான், முதலில் நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லட்டும்; ஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே, அதற்கு இவர்களு டைய பதில் என்ன?
செய்தியாளர்: நீங்கள் ஒரு கேள்வியை எழுப்பியிருக் கிறீர்கள்? அப்படி பார்த்தால், மதம், பண்பாடு, கலாச்சாரம் இவை எல்லாமும் பொதுவழியில் இருக்கும்பொழுது, அதன் மீதான விமர்சனங்கள்  இப்பொழுது இருக்கக்கூடிய பல் வேறு சமயங்களில் மறுக்கப்படுகிறதா? அல்லது விமர்சனங் கள் இருக்கக்கூடாது என்று நிறைய பேர் வலியுறுத்துவதாக நீங்கள் பார்க்கிறீர்களா?

தமிழர் தலைவர்: சமயத்தினுடைய வரலாற்றை எடுத்துக் கொண்டால், அவர்கள் யாரும் சகிப்புத்தன்மையை காட்டி யதே கிடையாது. ஆனால், பிற்காலத்தில் அவர்களே மண் டியிட்டு ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்.
அதற்கு உதாரணம் சொல்லவேண்டுமானால், சமணர் களைக் கழுவேற்றியவர்கள் என்ன சொல்கிறார்கள்? அது என்ன சகிப்புத் தன்மையா? அதேநேரத்தில், கிறித்துவ மதத்தில்,  போப்கள், பழைய தவறுகளை நாங்கள் சரி செய்கிறோம் என்று சொல்கிறார்கள். வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள்.
அறிவியல் கருத்துகளை அன்றைக்கு மறுத்தவர்கள், கலிலியோவை மறுத்தவர்கள், புரூனோவை எரித்தவர்கள் பிற்காலத்தில் அதற்காக வருத்தம் தெரிவிக்கவில்லையா?  ஆகவே, வெற்றி பெற்றது பகுத்தறிவா? அல்லது மத நம் பிக்கையா?
அறிவியல் ரீதியாக, உலகம் தட்டை என்று சொன்னதை, இன்றைக்கு உருண்டை என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார் களே!

                  ------------ இவ்வாறு நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். ---’விடுதலை’’ 10-01-2018

1 comments:

தமிழ் ஓவியா said...

ஆண்டாளைப் பற்றி அவதூறாக ஆபாசமாக குறிப்பிட்டதாக ஆர்ப் பாட்டம் செய்கிறார்களே! இந்த ஆண்டாள் எழுதாத ஆபாசமா?


கீழே உள்ள சுட்டியை சுட்டி அறிந்து கொள்ளுங்கள்

https://thamizhoviya.blogspot.in/2018/01/blog-post_0.html

https://thamizhoviya.blogspot.in/2012/03/blog-post_25.html

https://thamizhoviya.blogspot.in/2014/01/blog-post_2.html

https://thamizhoviya.blogspot.in/2012/07/blog-post_6389.html

https://thamizhoviya.blogspot.in/2011/10/blog-post_10.html

https://thamizhoviya.blogspot.in/2013/08/blog-post_3814.html

https://thamizhoviya.blogspot.in/2010/08/blog-post_1585.html

https://thamizhoviya.blogspot.in/2009/12/blog-post_6510.html

https://thamizhoviya.blogspot.in/2011/02/blog-post_02.html

https://thamizhoviya.blogspot.in/2010/01/blog-post_11.html

https://thamizhoviya.blogspot.in/2008/05/blog-post_7954.html

https://thamizhoviya.blogspot.in/2013/11/blog-post_14.htm