Search This Blog

31.1.08

மோடிக்கு பதிலடி

கேள்வி: `மனித மலத்தை சுமந்தால் மோட்சம் கிடைக்கும் என்று மோடி சொன்னது பற்றி?

பதில்: தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது தமிழக சட்டமன்றத்தில் அதை எதிர்த்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, `தேவதாசி முறை கலாச்சார அடையாளம், நம் பண்பாடு, அதை ஒழிக்கக் கூடாது என்றார்.

கோபமாக எழுந்த முத்துலட்சுமி ரெட்டி `இத்தனை நாள் அந்த கலாச்சாரத்தை நாங்கள் சுமந்தோம், கொஞ்ச நாட்களுக்கு உங்கள் வீட்டுப் பெண்கள் சுமக்கட்டும் என்றார். சத்தியமூர்த்தி வாயடைத்துப் போனார்.

மோடிக்கும் அதே பதில்தான். மோட்சம் கிடைப்பதற்கு நீங்களும் கொஞ்ச காலம் மலம் சுமந்து பாருங்களேன் .

-----------"குமுதம்"-30.1.2008 இதழில் அரசு பதில்கள் பகுதியிலிருந்து

29.1.08

டாக்டர் கோவூரின் சவாலை ஏற்கத்தயாரா?

கடவுள் சக்திக்கு வக்காலத்து வாங்கும் சங்கராச்சாரி முதல் சாய்பாபா வரை மதவாதிகள் எவரும் சந்திக்க முடியாத கோவூரின் சவால்கள் வருமாறு :

1. முத்திரையிடப்பட்டுள்ள உறையின் உள்ளே ஒரு கரன்சி நோட்டின் வரிசை எண்ணைப் படித்துக் காட்டுக.

2. ஒரு கரன்சி நோட்டினைப் போன்று மற்றொரு கரன்சி நோட்டினை உண்டாக்கிக் காட்டுக.

3. கடவுள் துணையால் பாதத்தில் எவ்விதப் புண்ணோ, கொப்பளமோ ஏற்படாமல் அரை நிமிட நேரம் எரியும் தணலில் அசையாமல் நின்று காட்டுக.

4. நான் கேட்கும் ஒரு பொருளை ஒன்றுமில்லாமல் (சூனியத்தில்-வெற்றிடத்தில்) இருந்து உண்டாக்கிக் காட்டுக.

5. மனோபலத்தைப் பயன்படுத்தி ஒரு திடப் பொருளை அசைத்தோ, வளைத்தோ காட்டுக.

6. தொலைவில் உணர்தல் ஆற்றலைப் பயன்படுத்தி மற்றொருவன் நினைப்பதை வெளியில் எடுத்துக்கூறுக.

7. பிரார்த்தனை, அத்மபலம், புனித தீர்த்தம், விபூதி, ஆசீர் வாதம் இவை போன்றவற்றின் மூலம் துண்டிக்கப்பட்ட ஒர் உடல் உறுப்பை ஓர் அங்குல நீளம் வளரச் செய்து காட்டுக.

8. யோக சக்தியால் ஆகாயத்தில் எழுப்பிக் காட்டுதல் அல்லது மிதப்பது போல் செய்து காட்டுக.

9. யோக சக்தியால் அய்ந்தே மணிதுளி அய்ந்து நிமிடம் இதயத் துடிப்பை நிறுத்திக் காட்டுக.

10. நீரில் நடந்து காட்டுக.

11. உன் உடலை ஓர் இடத்தில் இருக்க வைத்துவிட்டு வேறு ஓர் இடத்தில் இவ்வுடலை உருவாக்கிக் காட்டுக.

12. யோக சக்தியால் அரை மணி நேரம் சுவாசிப்பதை நிறுத்திக் காட்டுக.

13. ஆழ்நிலை தியானத்தாலோ, வேறு எவ்வகை தியானத்தாலே படைப்பாற்றல் மிக்க நுண்ணறிவையோ, பேரறிவையோ பெருக்கிக் காட்டுக.

14. நிழற்படம் பிடிப்பதற்காக ஓர் ஆவி அல்லது ஒர் பேயினை நேரில் தோன்றச் செய்க.

15. நிழற்படம் பிடிக்கும்போது படத்தாளில் பதிவாகாதவாறு உன்னை மறைத்துக் காட்டுக.

16. மறுபிறவியின் விளைவாலோ, நல்ல அல்லது கெட்ட ஆவிபிடித்து இருப்பதாலோ உனக்குத் தெரியாத மொழியினைப் பேசிக்காட்டுக.

17.பூட்டப்பட்ட அறையிலிருந்து தெய்வீக ஆற்றலால் வெளியே வந்த காட்டுக.

18. மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொருளை கண்டுபித்துக் காட்டுக.

19. வெறும் நீரை பெட்ரோலாகவோ, ஒயினாகவோ மாற்றிக் காட்டுக.

20. ஒயினை ரத்தமாக மாற்றிக் காட்டுக.

21. ஜோதிடமும், கைரேகை சா°திரமும் விஞ்ஞான ரீதியிலானவை என்று உரிமை பாராட்டி ஏராளமான ஏமாந்த சோணகிரிகளை ஏமாற்றி வரும் ஜோதிடர்களும், கைரேகை வல்லுநர்களும் பின்வரும் சவாலை ஏற்பார்களா? மிகச் சரியாக அட்சதீர்க்காம்சங்களுக்கு இணங்க துல்லியமான பிறந்த நேரம், பிறந்த இடம் இவற்றோடு கணிக்கப்பட்டு தரப்படும் 10 ஜாதகங்கள் அல்லத கைரேகை பதிவுகளிலிருந்து இவை ஆண்களுடையன, இவை பெண்களுடையன, இவை இறந்தவர்களுடையன, இவை உயிரோடு இருப்பவர்களுடையன என்று அய்ந்த விழுக்காடு பிழைக்குட்பட்டு தேர்ந்ததெடுத்துக்காட்டுக.

என் சவால்களை ஏற்க அற்புதம் செய்பவர்கள் எனப்படுவோர் எவரேனும் முன் வருக. ஏற்ற என்னை வென்று ரூ.நூறாயிரம் பரிசு பெறுக.-டாக்டர் கோவூர்.

தான் செய்து காட்டும் அற்புதத்தைப் புலனாய்வுக்கு உட்படுத்த அனுமதிக்காதவன் ஓர் அயோக்கியன்! ஓர் அற்புதத்தைப் புலனாய்வு செய்யும் மனத் துணிவற்றவன் ஏமாளி!! சரி பார்ர்தல் இன்றியே ஓர் அற்புதத்தை அப்படியே நம்பத் தயாராய் இருப்பவன் முழு மூடன்!!-டாக்டர். கோவூர்.

இதுவா தமிழ்வருடப் பிறப்பு?

வருஷம் - 1. ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ணமூர்த்தியை நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கிறீரே எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்று கேட்க,

அதற்குக் கண்ணன் நான் இல்லாப் பெண்ணை வரிக்க என் உடன்பட்டுத்தான் (60,000) வீடுகளிலும் பார்த்து, கண்ணன் இல்லா வீடு கிடைக்காததினால், கண்ணனிடம் வந்து அவர் திருமேனியில் மய்யல்கொண்டு, அவரை நோக்கி நான் தேவரீரிடம் பெண்ணாய் இருந்து ரமிக்க எண்ணங் கொண்டேன் என்றனர்.

கண்ணன் யமுனையில் நாரதரை ஸ்நானஞ் செய்ய ஏவ, முனிவர் அவ்வகை செய்து ஒரு அழகுள்ள பெண்ணாயினர். இவளுடன் கண்ணன் அறுபது வருஷம் ( புண‌ர்ந்தது )கிரீடித்து அறுபது குமாரரைப் பெற்றனர். அவர்கள் பெயர் பிரபவ முதல் அக்ஷய இறுதியானவர்களாம்.
இவர்கள் வருஷமாம் பதம் பெற்றனர்.

2. (6). பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய இவ்விருபதும் உத்தம வருஷங்கள். சர்வஜித்த, சர்வதாரி, விரோதி, விகிர்தி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பராபவ இவ்விருபதும் மத்திம வருஷங்கள், பிலவங்க, கீலக, சவுமிய, சாதாரண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராக்ஷஸ, நள, பீங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரவுத்ரி, துன்மதி, துந்துபி, உருத்ரோத்காரி, இரத்தாக்ஷி, குரோதன், அக்ஷய இவ்விருபதும் அதம வருடங்களாம்.
------ ஆதாரம்: "அபிதான சிந்தாமணி" பக்கம் 1392

இப்படிப்பட்ட ஆபாசத்தை இதுநாள் வரை தமிழ் புத்தாண்டு என்று கடைபிடித்தது வெட்கம், மகா மகா வெட்கம். தை முதல் நாளே தமிழனுக்கு தமிழ் புத்தாண்டு என்பதை தமிழக முதல்வர் சுயமரியாதைக் கலைஞர் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டுகிறோம்.

இலஞ்சம்-ஊழல் ஒழிய

இன்று நாட்டில் இலஞ்சம்-ஊழல் கருவரையிலிருந்து, கல்லறை வரை தலைவிரித்தாடிவருகிறது.இதை ஒழிக்க முடியாமல் பல நாடுகள் திணறி வருகின்றன. தினந்தோறும் நாளிதழ்களில் இலஞ்சம்-ஊழல் பற்றி செய்திகள் அதிகமாக வந்து கொண்டே இருக்கிறது.இதைத் தடுப்பதற்கு பெரியார் உயிரோடு இருந்த போது தனது 95 ஆவது பிறந்த நாள் மலரில் பல யோசனைகளை சொல்லியிருந்தார்.அதில் ஒருசிலவற்றை அரசுகள் நடைமுறைப்படுத்தி கடைப்பிடித்து வருகின்றன.பெரியார் சொல்லிய அனைத்து யோசனைகளையும் அரசு கடைப்பிடித்தால் இலஞ்சம்-ஊழலை முற்றாக ஒழிக்கமுடியும் என்ற நம்பிக்கையில் பெரியாரின் ஆலோசனைகளை இங்கு பதித்துள்ளேன். உரியவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்;இதோ பெரியார் தரும் ஆலோசனைகள்:

--நல்ல சம்பளத்தில் துப்பு கண்டுபிடிக்கும் பிரிவு ஒன்றை நியமித்து, அதற்கு இரண்டு அதிகாரிகளையும் நியமிக்க வேண்டும். இந்த இலாக்காவிற்கென்று ஒரு தனிப்பத்திரிக்கை ஏற்பாடு செய்து பெயர் விபரத்தோடு பிடிக்கும் கேசுகளை விளம்பரப்படுத்த வேண்டும்.

--பிடிக்கப்பட்ட வழக்குகளை விசாரிக்க தனிக்கோர்ட் வேண்டும்.சிறைத்தண்டனை குறைவாகவும்,அபராதம் அதிகமாகவும் போட்டுத் தண்டிக்க வேண்டும்.

--குற்றவாளிகளைத் தண்டிப்பதாலும், குற்றம் கண்டு பிடிப்பவர்களுக்கு தக்க சன்மானம் கொடுப்பதாலும்தான் குற்றங்களை குறைக்க முடியும்.

--நாகரிக காலம்,நாகரிக ஆட்சி என்றால் மக்களிடம் குற்றம் அணுகாமல், மக்கள் குற்றம் செய்யாமல் காப்பது தானே ஒழிய குற்றவாளிகளை கவுரவமாய் நடத்தி குற்றம் செய்ய வசதியும் ஊக்கமும் கொடுப்பது நாகரிக ஆட்சி அல்ல.

--ஆகவே நாட்டில் குற்றங்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால் குற்றவாளிகள் பெருகாமல் குறைக்க வேண்டுமானால் துப்புக் கண்டுபிடிக்க தரமான சி.அய்.டி. அமர்த்தப்படவேண்டும்.

--குற்றவாளிகள் எளிதில் தப்பித்துக் கொள்ள முடியாமல் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

--குற்றம் கண்டால் கடினமான தண்டனை அளிக்க வேண்டும்.

--இந்த மூன்றும் இல்லாததால்தான் குற்றங்கள் பெருகுகின்றன. குற்றவாளிகள் பெருகு கின்றனர்.

-----தந்தைபெரியார்-95 ஆவது பிறந்த நாள் "விடுதலை" மலரிலிருந்து

25.1.08

பெரியார்தான் முன்னோடி

தமிழகத்தில் முதன் முதலில் கர்ப்பத்தடைப் பிரச்சாரம் செய்தவர்,அரசாங்கத்தை அப்படிச் செய்யச்சொன்னவர் பெரியாராகத்தான் இருப்பார் போலும். 1928 லேயே இது பற்றி எழுதினார்.அப்போது அது "அநேகருக்கு திடுக்கிடும்படியான செய்தியாய் இருந்தது;ஆனால் இப்போது சிறிதுகாலமாய் அது எங்கும் பிரஸ்தாபிக்கப்படும் ஒரு சாதாரண சேதியாய் விட்டது"என்று பெரியார் 1930 இல் எழுதினார்.இது மதவிரோதம் என்றும்,கடவுளின் சித்தத்திற்கு எதிரானது என்றும் அன்று கடுமையாக எதிர்க்கப்பட்டது.பெரியாரோ இது பெண்விடுதலைக்கு ஒரு முன் தேவை என்றார். மக்கள் தொகைப் பெருக்க கண்ணோட்டத்திலிருந்து அல்ல பெண்ணிய நோக்கிலிருந்து கர்ப்ப ஆட்சி பற்றி பேசினார்.

----------நூல்:"பெரியாரின் பெண்ணியம்" பக்கம் 57

----நன்றி:jaathiolippu.blogspot.com

17.1.08

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து என்பது பொதுமக்கள் இடையில் அண்மையில் செல்வாக்குப் பெற்றுவி ட்டது.

இதற்குக் காரணம் பொங்கல்விழா தமிழர்கள் விழாவாகக் கருதப்பட்டு வருவதேயாகும்.உண்மையில் இன்று தமிழர்களுக்கு தமிழர் விழா என்று சொல்லத்தக்க வண்ணமாக பொங்கல் விழாவைத்தவிர வேறு விழா எதுவுமே இல்லை என்றே சொல்லலாம்.ஆகவே தமிழர்கள் இந்த உண்மைக் காரணத்தினாலே பொங்கல் நாளை பொங்கல் விழாவாகக் கொண்டாடுவதோடு அதைத் தனிப் பெரும் தமிழ் நாளாகவும் கொண்டாட வேண்டியவர்கள் ஆனார்கள். இப்படிப்பட்ட இந்தக் கொண்டாட்ட விழா நாளில், தமிழ்மக்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் வாழ்த்தைப் பெற, அனுப்ப ஆசைப்படுவது தமிழர் இயல்பேயாகும்.அந்த முறையில் நான் ஒவ்வொரு தமிழருக்கும் பொங்கல் வாழ்த்தாக நல்வாழ்த்து"திராவிடநாடு" மூலம் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

என்ன வாழ்த்து என்றால் தமிழர்கள் யாவரும் ஒன்றுபட்டு, தமிழருக்கு இன்றுள்ள இழிவும் குறைபாடுகளும் நீங்கி, மனிதப் பண்பு பெற்று, மானமுள்ள மக்களாக வாழ வேண்டும் என்பதான வாழ்த்துதல்தான்.

------------ ஈ.வெ.ராமசாமி --14-1-1949

குறிப்பு: அண்ணா நடத்திய "திராவிடநாடு" பொங்கல் மலருக்குத் தந்தைபெரியார் கைப்பட எழுதிய பொங்கல் வாழ்த்து இது.

11.1.08

பெரியார் பார்வையில் உடை

ஆன்களும் பெண்களும் ஒரே மாதிரியாக லுங்கி கட்ட வேண்டும்.ஜிப்பா போட வேண்டும்.உடைகளில் ஆண்--பெண் வித்தியாசம் இருக்கக் கூடாது.ஒரே மாதிரி உடை என்று சொல்லுகிறபோது அனாவசியமான ஆடம்பரத்தை ஒழிக்க வேண்டும்.ஆண்களைப்போலவே தாங்களும் ஆகவேண்டுமே என்றில்லாமல் வீண் அலங்காரம் செய்து கொண்டு திரிவது பெண் சமுதாயத்தின் கீழ்ப் போக்குக்குத்தான் பயன்படும்.

நம்நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை வேகமாகத் தடுத்து வருவது அவர்களது புடவை,நகை,துணி, அலங்கார வேசங்கள்தான் என்பதை 'அவர்கள்' உணரவேண்டும்.

பெண்கள் எல்லாம் ஆறடி ஏழடி என்று கூந்தலை வளர்த்துக் கொள்ளுவது அநாகரிகமும்--தேவையற்ற தொல்லையுமாகும்.ஆண்களைப் போலவே பெண்களும் கிராப் வைத்துக்கொள்ள வேண்டும்

-------------நூல்: "பெரியார் ஒரு வாழ்க்கை நெறி"

5.1.08

தூய தமிழில் பேசுவது எதற்காக?

தூய தமிழில் பேசுதல்-மற்ற வேற்று மொழிச்சொற்களை நீக்கிப் பேசுவதால், நம்முடையே உள்ள இழிவுகள் நீங்குவதோடு,மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு, நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்புக் கெடுவதோடு, அம்மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துக்கள், கேடுபயக்கும் கருத்துக்கள் நம்மிடைப் புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால்தான்.

--------------தந்தைபெரியார்-நூல்:"மொழி-எழுத்து"

4.1.08

அய்யம் போக்கும் பெரியார்

4.திராவிடர் கழகம் ஏன்?
-----------------------
நேற்று தோழர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது பெரியாரின் தொண்டறத்தை மிகவும் வியந்து போற்றினார். ஒரு சில அய்யப்படுகளையும் எடுத்து வைத்தார். அவற்றிற்கு தகுந்த விடையை கூறிய பிறகு மேலும் மேலும் பெரியாரின் பெருமையை புகழ்ந்தார். அந்தத் தோழர் கேட்ட முக்கியமான வினாவைப் பற்றி மட்டும் இங்கு பார்ப்போம்.


நாம் வசிப்பதோ தமிழ்நாடு,நாமோ தமிழர்கள் அப்படியிருக்குபோது பெரியார் நமது இயக்கத்துக்கு தமிழர்கழகம் என்று பெயர் வைக்காமல் திராவிடர்கழகம் என்று பெயர் வைத்தது ஏன்?
இக்கேள்வியானது இப்போது எழுப்பப்பட்ட புதிய கேள்வியல்ல. பெரியார் சுயமரியாதை இயக்கத்தையும், ஜஸ்டிஸ்கட்சியையையும் இணைத்து 1944 ஆம் ஆண்டில் சேலத்தில் திராவிடர்கழகம் என்று பெயர் வைத்தபோது ஒரு சில தோழர்களால் எழுப்பப்பட்டது.அப்போதே அதற்கு தெளிவான விளக்கத்தை பெரியார் அளித்தார். அவ்விளக்கத்தை ஏற்கமறுத்து அந்த ஒரு சில தோழர்கள் வெளியேறினார்கள்.(வெளியேறிய தோழர்கள் நிலையைப் பார்த்தால் தமிழ் சமுதாயாத்திற்கு பயனின்றி போனார்கள் என்பது ஒரு சோகமான வேதனைதான்).தமிழர்கழகம் என்று பெயர் வைக்காமல் திராவிடர் கழகம் என்று பெரியார் ஏன் பெயர் வைத்தார் என்பதை பார்ப்போம்.

"பார்ப்பனரல்லாதார் என்கிற பெயர் ஒரு பெரும்பான்மை மக்கள் ஒரு சிறுபான்மை மக்கள் அல்லாதார் என்கிற பெயரால் அழைப்பதாக இருப்பதாலும்,அது அவ்வளவு சரியில்லை ஆதலாலும், மேலும் இந்நாட்டு மக்கள் அல்லாத அந்நியர்களும், பார்ப்பனர் அல்லாதார் என்ற தலைப்பின் கீழ் வரக்கூடுமாதலாலும்,தென் இந்தியர் என்கிற தலைப்பில் தென் இந்தியாவில் வாழும் எல்லா மக்களும் வரக்கூடுமாதலாலும்,இது தவிர்த்துத் தமிழர்கள் என்று அழைப்பதாயிருந்தாலும், அந்தத் தலைப்பிலும் தமிழ்ப் பண்பு இல்லாத தமிழ் கலாச்சாரத்துக்கு வேறுபட்ட தமிழ் பேசும் பார்ப்பனர்கள் எல்லோரும் புகுந்து கொள்ளக்கூடுமாதலாலும், மக்களை இனத்தின் பேராலேயே ,கலாச்சாரத்தின் பெயராலேயே ஒற்றுமைப்படுத்த முடியும் என்பதாக அனுபவத்தால் கண்டதாலும் பார்ப்பனரல்லாதார் கழகத்தை ஜஸ்டிஸ்கட்சியை திராவிடர் கழகம் என்கிற பெயரால் அழைக்க வேண்டி ஏற்பட்டது".
----------தந்தைபெரியார்-"விடுதலை"-23-01-1950
தமிழர்கழகம் என்று பெயர் வைத்தால் பார்ப்பனர்களும் மற்ற அந்நியர்களும் வந்து இயக்கத்தில் சேர்ந்து தொல்லை கொடுப்பார்கள். அதோடு நம்மை (வைப்பாட்டிமகன் போன்ற)இழிவுபடுத்துபவனுடன் நாம் எப்படி ஒன்றாக இருக்கமுடியும்,அதுமட்டுமல்லாமல் நமக்கும்,நம்மை விட எல்லாவிதத்திலும் உயர்ந்தவன் என்று இன்றும் கூட சொல்லிக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களும் தமிழர்கள் என்ற போர்வையில் உள்ளே வரவிடாமல் தடுப்பதற்காகத்தான் ஒரு கேடயமாகத்தான் திராவிடர் கழகம் என்று பெரியார் பெயர் வைத்தார்.
இதற்கு கண்ணெதிரில் நடந்த சம்பவத்தை உதாரணமாக கூறவேண்டுமானால் "திராவிடர்" என்ற சொல்லிலுள்ள "ர்" என்ற எழுத்தை நீக்கி விட்டு இயக்கம் ஆரம்பித்ததின் விளைவு ஜெயலலிதா போன்ற பார்ப்பனர்கள் பொறுப்புக்கு வந்து திராவிட இயக்க கொள்கைக்கு எதிராக செயல் பட்டுக்கொண்டிருப்பதை நாளும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ஆக நமக்கு திராவிடர் என்ற சொல் ஒரு பாதுகாப்பு கேடயமாக உள்ளதால் திராவிடர் கழகம் என்று பெயர் வைத்தார் பெரியார்.பார்ப்பனர்கள் பார்ப்பனத்தன்மையிலிருந்து ஒரு வேளை மாறி மனிதர்கள் ஆகும் போது திராவிடர் என்ற சொல்லும் மாறும். அதுவரை திராவிடர் என்ற சொல்லாக்கம் தொடரவேண்டும்.
------------------------தொடரும்...

3.1.08

பெரியார் தாடி வளர்த்தது ஏன்?

சென்றமுறை 1929-இல் நான் மலாயா வந்தபோது தாடியில்லாமலிருந்தேன்.மலாயாவிலிருந்து நாகபட்டிணத்துக்கு கப்பலேறிச் செல்கையில் கப்பலில் சவரம் செய்வித்துக் கொள்ள கொடுக்குப் பிடித்து நிற்க வேண்டியிருந்தது.இந்த தொந்திரவு தாளாமல் கப்பலில் நான் சவரம் செய்வித்துக் கொள்வதையே விட்டு விட்டேன்.அதனால் நாகபட்டிணத்திற்கு நான் பத்து நாளைய தாடியுடன் சென்று இறங்கினேன். இன்று 25 வருசத் தாடி என் தாடி.

------தந்தைபெரியார்-சிங்கப்பூர்"தமிழ்முரசு"-8-1-1955

2.1.08

அய்யம் போக்கும் பெரியார்

4.திராவிடர்

தோழர்களுக்கு பெரியாரின் வேண்டுகோள்

கழகத்தோழர்களும்,பொதுமக்களும் பார்ப்பனர்களின் பாதகமானச் செயலுக்கு நாம் பரிகாரம் தேடுவது என்பதற்காக எந்தவிதமான பலாத்கார,இம்சையான,நாசமான செயலிலும் ஈடுபடாமல், பார்ப்பனர்கள் தங்கள் கொடுமைச் செயலின் பயனை அனுபவிக்கும் வண்ணம்-அதாவது தாங்கள் செய்தது தப்பு என்று உணரும் வண்ணம் அவர்களை நாம் வெறுப்பதாகக் காட்டிக் கொள்ளவேண்டும்.
----அவர்கள் உறவை நீக்க வேண்டும்.
----அவர்கள் சம்பந்தத்தை வெறுக்க வேண்டும்.
----கூடுமானவரை அவர்களுடன் பேசுவதையும் நிறுத்திகொள்ள வேண்டும்.
----அவர்களை நாம் வேலைக்கு வைத்துகொள்ளக் கூடாது.
----அவர்களிடமும் நாம் எந்த வேலைக்கும் இருக்கக் கூடாது.
----பார்ப்பன வக்கீல்களைப் பகிஷ்கரிக்க வேண்டும்.
----அவர்களிடம் எந்தவிதமான வியாபார சம்பந்தமும் வைத்துகொள்ளக் கூடாது.
----அவர்கள் உண்டி நிலையங்களுக்கு அறவே நாம் செல்லக் கூடாது.

----அவர்களைக் கண்டிப்பாக-நமது நன்மை, தீமை காரியங்களுக்கு அழைக்கவோ,சம்பந்தப்படுத்தவோ கூடாது. எல்லாவற்றையும்விட அவர்கள் பூஜை செய்யும்-தொண்டு செய்யும் எந்தக் கோயிலுக்கும், தொழுகை இடத்திற்கும் நாம் செல்லவே கூடாது.

----அவர்களுக்கு உணவுப்பண்டங்கள் விற்பதோ, கொடுப்பதோ கூடாது.

----நமது வண்டி வாகனங்களில் அவர்களை(பார்ப்பனர்களை) ஏற்றக்கூடாது.இன்னும் உள்ள எவ்வித சம்பந்தங்களிலிருந்தும் நாம் விலகி நிற்க வேண்டும்.

----எல்லாவற்றையும்விட பார்ப்பனப் பத்திரிக்கைகளை பகிஷ்காரம் செய்யும்படி பிரச்சாரம் செய்ய வேண்டும்.
----------------தந்தைபெரியார்-"விடுதலை"15-12-1957.

அன்புத்தோழர்களே,
பெரியார் வேண்டுகோள் விடுத்து 50 ஆண்டுகள் முடிந்துவிட்டது.ஆயினும் இன்னும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் முழுமையாக ஒழிந்து விடவில்லை என்பதை நாட்டி நடக்கும் பல சம்பவங்கள் நமக்கு உணர்த்துகிறது.
பார்ப்பனர்களின் ஆதிக்கம் முற்றாக ஒழிவதற்கு பெரியாரின் மேற்கண்ட வேண்டுகோளை இனியாவது கறாராக கடைப் பிடிப்போம்.ஒவ்வொரு ஆண்டும் பெரியார் இதுதான் இந்த ஆண்டு வேலைத்திட்டம் என்று அறிவித்து அதன்படி செயல்படுவார். அதுபோல் நாமும் 2008 ஆம் ஆண்டு முதல் மேற்கண்டபெரியாரின் வேண்டுகோளையே வேலைத்திட்டமாக ஏற்று செயல்படுவோம்.
அனைவருக்கும் 2008-ஆம் ஆண்டு மற்றும் தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்.