Search This Blog

31.5.11

பெண் சிசுக் கொலை - தீர்வு என்ன?


பெண் சிசுக் கொலை 1.20 கோடியா?

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் கருவிலேயே அழிக்கப்பட்ட பெண் சிசுக்கள் ஒரு கோடியே 20 லட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் சிசுவைக் கருவில் அழித்து வருவதால்தான் ஆண் - பெண் விகிதாசாரம் என்பது கவலைக்குரியதாக ஆகிவிட்டது.

1990ஆம் ஆண்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 906 பெண் குழந்தைகள் என்ற நிலை இருந்தது. 2005ஆம் ஆண்டிலே 1000 ஆண் குழந்தைகளுக்கு 836 பெண் குழந்தைகள் என்ற நிலைக்கு வீழ்ச்சியுற்றது. இது மேலும் வீழ்ச்சியுறலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இதில் ஒரு வெட்கக்கேடு என்னவென்றால், தனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும்; பெண் குழந்தை வேண்டாம் என்று பெண்ணாகிய ஒரு தாயே கருதுவதுதான்.

கருவில் வளர்வது பெண் குழந்தை என்றால் அதைச் சிதைத்து விடவே தாய் விரும்புகிறார் என்பது என்ன கொடுமை!

நவீன வசதிகள் நன்மைக்குப் பயன்படுத்தப் படுவதற்குப் பதிலாக, பெண் சிசுவைச் சிதைப்பதற்குப் பயன்படுத்தப்படுவது மகா மகா வெட்கக் கேடாகும்.

பெண்களை இழிவுபடுத்துவது என்பது இன்று நேற்றல்ல, அது தொடர் கதையாகவே இருந்து வருகிறது.

பகவான் கிருஷ்ணன் எழுதியது என்கிறார்களே பகவத் கீதை - அதில் என்ன சொல்லப்படுகிறது? பெண்கள் பாவயோனியில் பிறந்தவர்கள் என்றுதானே எழுதி வைக்கப்பட்டுள்ளது. மனுதர்மமும் பெண்ணை ஒரு ஜீவனாகவே ஏற்றுக் கொள்வதில்லை; அதற்குப் பதவுரை பொழிப்புரை எழுதும் சங்கராச்சாரியார்கள், சோ ராமசாமி போன்ற பார்ப்பனர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பெண்ணென்றால் ஒரு சுமை என்று கருதுகிற மனோபாவம் சமுதாயத்தில் இருந்து வருகிறது.

ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் படிப்பு, வேலை வாய்ப்பிலும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். ஆண்களைப் போலவே பெண்களும் பொருள் ஈட்டும் நிலை ஏற்பட வேண்டும் என்று தந்தை பெரியார் கூறியவற்றை - செயல்படுத்தும் பொழுதுதான் பெண்கள் என்றால் பெரும் சுமை என்ற மனப்பான்மை சமுதாயத்தைவிட்டு விலகும்.

ஆண்களைவிட பெண்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் இந்த நிலையில்கூட பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு வரதட்சணை கொடுக்க வேண்டியுள்ளது என்பது விசித்திரமான நிலை அல்லவா!

இது ஆண் என்றால் எஜமானன்; பெண் என்றால் அடிமை என்று நினைக்கும் இந்து மனப்பான்மை சுட்டெரிக்கப்பட வேண்டும். ஆண் என்றால் பலவான், பெண்ணென்றால் பலவீனமானவர் என்கிற மனப்போக்கிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஆண்களின் தசை பலம் என்பது பெண்களை ஒடுக்கும் கருவி என்ற நிலை மாற்றப்பட வேண்டும் என்றால் பெண்களும் தங்கள் உடல் பலத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியவர்களே ஆவார்கள். இந்த நவீன யுகத்தில் கராத்தே போன்ற பயிற்சிகளில் பெண்கள் ஈடுபட வேண்டும். அண்மைக் காலமாக இத்தகு பயிற்சிகளில் பெண்கள் தேர்ந்து வருவது வரவேற்கத் தகுந்ததாகும். ஆண்கள் பணியாற்றும் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்ற முடியும்; இதனை இராணுவத் துறையிலும்கூட பெண்கள் நிரூபித்தே வருகிறார்கள். விமானிகளாகவும் பெண்கள் வர ஆரம்பித்து விட்டார்கள். சட்டம் இயற்றும் அதிகார மய்யத்தில் பெண்கள் விகிதாசாரப்படி அமர்த்தப்பட வேண்டும். சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் 33 சதவிகித இடங்கள் பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்கிற சட்டம் 1996 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வருகிறதே - என்ன காரணம்?

எல்லாக் கட்சிகளிலும் உள்ள ஆண்களின் ஆதிக்க வெறியே இதற்கு முக்கிய காரணமாகும்.

நியாயமாக 50 விழுக்காடு இடங்கள் பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும். ஆண்களாகப் பார்த்து அளிப்பார்கள் என்ற எண்ணம் பெண்களுக்கு ஏற்படக் கூடாது. வீதியில் வந்து போராட வேண்டும். நாடாளுமன்றத்தை முடக்க வேண்டும்.

குமரி முதல் காஷ்மீர் வரை கிடுகிடுக்கும் போராட்டத்துக்குப் பெண்களே அழைப்புக் கொடுத்து வெற்றிகரமாக நடத்தும் பட்சத்தில், இதற்கொரு தீர்வு கிடைத்திட வாய்ப்பு உண்டு.

பூமியை பூமித்தாய் என்றும், கல்விக்குக் கடவுள் சரஸ்வதி என்றும், செல்வத்துக்குக் கடவுள் திருமகள் என்றும் போற்றும் இந்தியாவில் தான் பெண் சிசுக் கொலை பெரிய அளவில் நடந்து கொண்டு இருக்கிறது. அதனைத் தடுக்கவும், தண்டிக்கவும் சட்டம் இருந்து என்ன பயன்? அது குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டு இருக்கிறது.

ஆண்களை விஞ்சக் கூடிய அளவில் பெண்கள் கல்வியில் சாதனை படைத்து வருகிறார்கள். வாய்ப்புக் கொடுத்தால் சாதிப்பார்கள் என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?

இந்த சாதனைப் பெண்கள் போராளிகளாக மாற வேண்டும்; தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு போராட முன்வந்தால் ஆண் எஜமானத்தன்மை தகர்ந்து போய்விடும் - ஆணுக்கு நிகர் பெண் என்பது நிலை நாட்டவும் படும்! முன் வருவார்களாக பெண்கள்?

---------------"விடுதலை” தலையங்கம் 31-5-2011

காலவிரயம் என்பதில் ஆன்மீகம்தான் முதல் இடம்!


காலம் கண் போன்றது, கடமை பொன் போன்றது என்று கூறப்படுவதுண்டு. காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) ஆர். நடராஜ் இந்த வகையில் ஒரு கருத்தினைக் கூறியுள்ளார்.

எல்லாருக்கும் நேரம் ஒரே அளவாகத்தான் இருக்கிறது. எத்தனைப் பேர் எடுத்துக் கொண்ட செயலில் சாதனை படைத்திருக்கின்றனர்?

நேரத்தை செலவிடுவது குறித்து 100 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட ஒரு சிறிய புத்தகம் லட்சக்கணக்கில் விற்பனையானது.

எதை வேண்டுமானாலும் ஈட்ட முடியும். ஆனால் இழந்த நேரத்தை மீட்க முடியாது. கிடைக்கக் கூடிய வாய்ப்புகளைப் பற்றி கொண்டு முன்னேற வேண்டிய கடமை மாணவர்களுக்கு உள்ளது என்பதை உணர வேண்டும் என்று கூறியுள் ளார்.

இது வரவேற்கத்தக்க கருத்துதான்; பொருளை இழந்தால் மீண்டும் மீட்டு விடலாம்; காலத்தை இழந் தால் மீட்கவே முடியாது - அது காலாவதியான கதை தான்.

இப்படியெல்லாம் உயர் எண்ணங்களை அவ்வப் போது உதிர்க்கும் பெரிய நிலையில் உள்ளவர்கள் மூட நம்பிக்கையின் பெயரால் நாள் ஒன்றுக்கு இராகு காலம், எமகண்டம், குளிகை காலம் என்று நாள் ஒன்றுக்கு நான்கரை மணி நேரத்தை காவு கொடுக்கிறார்களே இது குறித்து இந்தப் பெரிய மனிதர்கள் எப்பொழுதாவது வாய் திறப்பதுண்டா?

நாள்களில்கூட செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை என்றால் ஆகாதவை என்று ஆணி அடித்தாற்போல நம்பித் தொலைக்கிறார்களே. இதுகுறித்து இம்மியளவாவது எதிர்ப்புக் குரல் கொடுத்த துண்டா?

மார்கழி மாதம் என்றாலே அது பீடை மாதம் என்று பிதற்றுகிறார்களே. இது குறித்து மக்களுக்குத் தெளிவை உண்டாக்கும் வார்த்தைகளை வெளியிட்ட துண்டா?

கோயில் குளம் என்று வெட்டித்தனமாகச் சுற்றி காலத்தையும் பொருளையும் நாசப்படுத்துகிறார்களே - கண்டித்ததுண்டா?

மழை பெய்வதற்காக நெருப்பில் உணவுப் பொருள்களைக் கொட்டி விரயம் செய்கிறார்களே, பல நாள்களை இதற்காக செலவழிக்கிறார்களே, இந்த அநியா யத்தைப்பற்றி எப்பொழுதாவது சுட்டிக் காட்டியிருந்தால் முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் போன்றவர்கள் காலத்தின் அருமை குறித்து கதைப் பதில் கொஞ்சமாவது அர்த்தம் இருக்கும்.

காலவிரயம் என்பதில் ஆன்மீகம்தான் முதல் இடத்தில் இருக்கிறது.
கும்பகோணம் சங்கர மடத்தில் கடந்த பத்து நாள்களாக நடைபெற்ற ஏகாதச அதிருத்ர சகஸ்ர சண்டா மகா யாகம் திங்கள் கிழமை முடிவுற்றதாக தின மணியில் இன்று செய்தி வெளி வந்துள்ளதே! பத்து நாள்கள் பாழாய்ப் போனது என்பதில்லாமல் இந்த யாகத்தால் காதொடிந்த ஊசிமுனை அளவுக்காவது ப(ய)லன் உண்டா?
ஏதோ ஒரு வகையில் மூடநம்பிக்கைக்கு மகுடம் சூட்டுபவர்கள், எந்த முற் போக்குக் கருத்தையும் கூறுவதற்குத் தகுதியற்றவர்களே!

------------------ மயிலாடன் அவர்கள் 31-5-2011 “விடுதலை” யிலெழுதிய கட்டுரை

காந்தியார் ஏன் தோல்வி அடைந்தார்?

ஏன் தோற்றார்?

கேள்வி: தோழர் காந்தியார் ஏன் தோல்வி அடைந்தார்?

பதில்: காந்தியார் அரசியலில் தலையிட்டபோது சமுக சீர்திருத்தத்தைப் பற்றியே பிரதானமாய்ப் பேசி பாமர ஜனங்களிடம் செல்வாக்குப் பெற்றார். அதாவது தீண்டாமை ஒழியாமல் சுயராஜ்ஜியம் கிடைக்காது என்றும், இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படாமல் சுயராஜ் ஜியம் கிடைக்காது என்றும், மதுபானம் ஒழியாமல் சுயராஜ்ஜியம் கிடைக்காது என்றும் சொன்னார்.

ஒவ்வொரு வீட்டிலும் ராட்டினம் சுற்றப்பட்டா லொழிய சுயராஜ்ஜியம் கிடைக்காதென்றார். நாளாக நாளாக தீண்டாமையை ஒழிப்பதை ஒரு பக்கம் பேசிக் கொண்டு மற்றொருபுறம் வருணாசிரம தர்மத்தை ஆதரித்தார், ஜாதிப்பிரிவுமுறை ஜாதிப்படி தொழில் முறை அப்படியே இருக்கவேண்டும். ஆனால் ஜாதிகளில் மேல் கீழ் வித்தியாசம் கூடாது என்று சொல்லிப் பூசி மெழுகுகிறார். பிராமணனாய் பிறந்தாலொழிய பிராமணனாக முடியாது என்று சொன்னார். அப்புறம் சுயராஜ்ஜியம் கிடைத்துவிட்டால் தீண்டாமை தானே ஒழிந்துவிடும் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார். கடைசியாக சுயமரியாதைக்காரர்கள் கிளர்ச்சியால் தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கிடைத்துவிட்ட பிறகு அதை ஒழிக்க ஹரிஜன இயக்கம் என்று ஒன்று ஆரம்பித்து அவர்களைக் கோவிலுக்குள் விடவேண்டும் என்று கிளர்ச்சி செய்து, கடைசியாக அக்கிளர்ச்சியையும், பட்டினியில் ஆரம்பித்து சட்டசபையில் கொண்டு போய்விடப்பட்டாய் விட் டது. இதனால், இனி சட்டம் ஏற்படும் வரை கோவில் பிரவேசம் முடியாது என்று தீர்மானமாய் விட்டது.

இந்து முஸ்லிம் ஒற்றுமைப் பிரச்சனையும் 21 நாள் பட்டினி விரதத்தையும் கடந்து, அதுவும் தீண்டாமை ஒழிப்பைப்போலவே, சுயராஜ்ஜியம் கொடுக்கப்பட்டு விட்டால் இந்து, முஸ்லீம் ஒற்றுமையும் தானாக ஏற்பட்டு விடும் என்றும் தோழர் காந்தியாராலேயே சொல்லப்பட்டு விட்டது. மது விலக்குப் பிரச்சனையும் சுயராஜ்ஜியம் கிடைத்தாலொழிய மதுவை விலக்க முடியாது என்று முடிவு கட்டப்பட்டது.

ராட்டின விஷயமும் சில வீடுகளில் மாத்திரம் சிறிது நாளே சுற்றி விட்டு முடிவில் கரையானுக்கும் நெருப்புக்கும் ஆளாயின. ராட்டின தத்துவமும் மாறிவிட்டது. அதாவது ராட்டினம் வெள்ளைக்காரனுடன் சண்டை போட ஒரு ஆயுதமென்றும், கதர் ஒரு தேசிய உடையென்றும் தேசிய சின்னமென்றும் சொல்லப்பட்டு விட்டது. ஆகவே காந்தியாரின் சுயராஜ்ஜிய நிபந்தனைகள் ஒன்றுகூட நிறைவேற்றப்படாமல் போய் விட்டதால் காந்தியார் வாக்குப்படியே சுயராஜ்ஜியம் கிடைக்காமல் போய் விட்டது. இதனால் காந்தியார் தோல்வியடைய வேண்டியது நியாயமே ஆயிற்று.

கேள்வி: இப்பொழுது, காந்தியார் என்ன செய்யப் போகிறார்?

பதில்: ஜெயிலுக்குப் போகப் போகிறார்.

கேள்வி: ஏன் ஜெயிலுக்குப் போகிறார்?

பதில்: வில்லிங்டன் பிரபு பேட்டி அளிக்க மறுத்த பாவத்திற்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளுவதற்காக ஜெயிலுக்குப் போகிறார். இதுவெளிப்படையான அர்த்தம்; மற்றொரு தத்துவார்த்தம் என்னவென்றால் அவர் வெளியிலிருந்து கொண்டு என்னவேலை செய்வது என்பது ஒரு பெரிய பிரச்சினையாய் விட்டது. இரண்டாவது காந்தியார் வெளியில் இருந்தால் தோல்வியை ஒப்புக் கொண்டதாக ஆகிவிடும். ஆதலால் ஜெயிலில் இருக்கும் வரை அவரை இந்தக் கேள்வி கேட்க யாருக்கும் சந்தர்ப்பம் வாய்க்காது. அன்றியும் போர் இன்னும் முடியவில்லை என்கின்ற அருத்தத்தையும் கொடுக்கும். ஆதலால் ஜெயிலில் இருப்பதே உத்தமம் என்று கருதிவிட்டார்.

கேள்வி: வில்லிங்டன் பிரபு காந்தியாரை ஜெயிலில் வைத்துவிடுவாரா?

ஜெயிலில் வைக்காவிட்டால் சர்க்கார் தோற்றுப் போய் விட்டார்கள். என்னை ஜெயிலில் வைக்க விருந்த சர்க்காருக்கு சக்தியில்லை என்று முன் ஒரு தரம் உப்பு சத்தியாக்கிரகத்தின் போது காந்தியார் சர்க்காரை பரிகாசம் செய்ததுபோல இப்போதும் பரிகாசம் செய்வார். அப்போது வில்லிங்டன் பிரபுக்கு ரோஷம் வந்து உடனே ஜெயிலில் வைத்துவிடுவார். (வைத்து விட்டார் பார்)

யாரை விட்டது காண் சுயமரியாதை எவரை விட்டது காண் என்கின்ற பல்லவிப்படி இன்றைய காந்தி வில்லிங்டன் சண்டை சுயராஜ்ஜியத்தைப் பொருத்த தல்ல, பின்னை என்னவென்றால் அது முழுச் சுயமரி யாதையைப் பொருத்ததேயாகும். எப்படியெனில் தோற்றுப் போனாலும் பரவாயில்லை. ஊரார் சிரிப்பார்களே! என்பதன் கவலை என்று ஒருவர் சொன்னது போல் ரோஷம்தான் பாதிக்கின்றது.

கேள்வி: அதென்ன அப்படிச் சொல்லுகிறீர் சுயராஜ்ஜியம் கிடைக்கவில்லையே என்ற கவலை மக்களுக்கு இருக்காதா?

பதில் : சுயராஜ்ஜியம் என்றால் என்ன என்று எனக்கும் தெரியாது. உமக்கும் தெரியாது. காந்தியாரும் இதுவரை விவரித்ததும் இல்லை; ஒத்துழையாமையின் போது ஒருவர் காந்தியாரை உம்முடைய சுயராஜ்ஜியத்துக்கு அர்த்த மென்னவென்று கேட்டார். அதற்கு பதில் காந்தியார் அது இப்போது சொல்ல முடியாது என்று சொல்லி விட்டார். கடைசியாக காங்கிரசில் முடிவு செய்யப்பட்ட பூர்ண சுயேட்சை காங்கிரசின் லட்சியம் என்பது தான் சற்று விளக்கமாக ஜனங்களுக்கு தெரிந்தது. அதென்ன வென்றால் ஆங்கிலேயர் இந்தியாவைவிட்டுப் போய்விட வேண்டியதாகும்.

கேள்வி: அப்படியானால் அது எப்பொழுது முடியக் கூடிய காரியம்?

பதில்: அது காந்தியாரின் மற்றொரு பட்டினி விரதத்துக்குப் பிறகுதான் சொல்ல முடியும்.

கேள்வி: அதுவரை நாம் என்ன செய்வது?

பதில்: அகிம்சை, ஆத்மசக்தி, சத்தியம், சத்தியாக்கிரகம் என்கின்ற கடவுள் தன்மைகளில் நம்பிக்கை இல்லாமல் கையில் வலுத்தவன் காரியம் என்பதில் நம்பிக்கை வைத்து ஜாதி, மதம், தேசம் என்கின்ற வித்தியாசமில்லாமல் உலகில் உள்ள ஏழை மக்கள் எல்லோரும் ஒன்றுகூடும் படியான மார்க்கத்தை செய்து ஏமாற்றுகின்றவர்களை ஒழிக்க முயற்சி செய்து கொண்டிருக்க வேண்டும்.

ஒரே ஒரு கேள்வி! காங்கிரசுக்காரன்

கேள்வி : கடவுள் இல்லை என்று சொல்லுகின்றீர்களே அப்படி யானால் ஒரு மனிதன் ஏன் பணக்காரனாய் இருக்கின்றான்? ஒரு மனிதன் ஏன் ஏழையாய் இருக்கிறான்.

சுயமரியாதைக்காரன் பதில்: தனி உடைமைக் கொள்கையை ஒழித்து பொதுவுடைமைக் கொள்கையை ஏற்படுத்தாததால் ஒருவன் பணக்காரனாகவும், ஒருவன் ஏழையாகவும் இருக்க முடிகின்றது.

------------------தந்தைபெரியார் - “ குடிஅரசு” - உரையாடல் - 06.08.1933

30.5.11

பார்ப்பன அர்ச்சகர்களின் காமவெறி - கோயில்கள்!

விருதுநகர் மாவட்டத்தில் உழைப்புக்கு முக்கியத்துவம் தரும் ஊர் அது. தொழிலில் உலகமே உற்று நோக்கக் கூடிய அளவுக்கு பிரமிப்பான வளர்ச்சி கண்டதற்கு தங்களின் ஆன்மிக ஈடுபாடே காரணம் என்று அந்த ஊரின் மெஜாரிட்டி சமுதாயத்தினர் உறுதி யாக நம்புகிறார்கள். அதனால், தேரோட்டம், சாமி விக்கிரக வீதி உலா, கும்பாபிஷேகம், பூஜை, புனஸ்காரங்கள் என கோயில் காரியங்களில் ஒரு குறையும் வைக்காமல் பக்தி சிரத்தையோடு செய்து வருகிறார்கள்.

மூடி மறைத்தனர்

பணம் வேண்டுமா? பத்ரகாளி கோயிலுக்கு போ! அவளிடம் முறையிடு! நீ கேட்டது கிடைக்கும் என்று சமுதாய பெரியவர்கள், பணக் கஷ்டத்தில் உழலும் தம் மக்களுக்கு ஆறுதல் கூறி அந்தக் கோயிலுக்கு அனுப்பி வைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக் கிறார்கள். இந்த அளவுக்கு பிரசித்த பெற்ற அந்தக் கோயிலில் தவறான ஒரு காரியம் நடந்து இப்போது கடும் மன உளைச்சலில் இருக்கிறார்கள் அச்சமுதாய பிரமுகர்கள். தப்பு செய்தது அய்யராச்சே! அவருக்கு சட்டப்படியான தண்டனை கிடைக்கச் செய்தால் வேதம் ஓதும் வாயால் பிராமணர்கள் நம்மை சபித்து விடுவார்களே! புனிதமான இத்திருக்கோயிலில் தெய்வ குற்றம் நடந்து விட்டதே! வெளியில் இது தெரிந்துவிட்டால் அம்மனுக்கு சக்தி இருந்தால் அவள் சன்னிதியில் இப்படியெல்லாம் இது தெரிந்து விட்டால் அம்மனுக்கு சக்தி இருந்தால் அவள் சன்னிதியில் இப்படியெல்லாம் நடக்குமா? என்று பேச ஆரம்பித்து விடுவார் களே! கோயிலுக்கு வரும் கூட்டம் குறைந்து விடுமே என்று பலவாறாக சிந்தித்து, விவாதித்து விவகாரத்தை மூடி மறைத்து விட்டார்கள். ஆனா லும் அரசல் புரசலாக அந்த சமாச் சாரம் வெளியில் கசிந்துவிட்டது.

அர்ச்சகன் ஒட்டம்

அது என்ன தெய்வ குற்றம்?

அந்தக் கோயில் பிரகாரத்தில் உள்ள அஷ்டலட்சுமியை வழிபடுவதில் ஆர்வம் காட்டுவார்கள் பெண்கள். அதற்கென்றே பிரத்யேகமாக அர்ச்சகர் ஒருவரை நியமித்திருந்தது கோயில் நிர்வாகம். அந்த அர்ச்சகரின் பெயர் முத்து சீதாராமன். (வயது 63). மணி அடித்து தீபாராதனை காட்டும் அவருக்கு விபூதி தட்டில் காணிக்கை நிறைய விழும். சாமி கொஞ்சம் குங்குமம் கொடுங்கோ, இல்ல சாமி நீங்களே வச்சு விடுங்கோ என பெண்கள் அவர்முன் பயபக்தியாக நெற்றியை காட்டி நிற்பார்கள். வயதில் முதியவர் என்பதால் அவர் கையால் குங்குமம் இட்டுக் கொள்வதை ஒரு பாக்கியமாக கருதுவார்கள். ஆன்மிகத்தின் பெயரால் பெண்களின் நெற்றியை அவர்களின் அனுமதியோடு தொட முடிந்த அந்த அர்ச்சகருக்கு அன்று ஒரு விபரீத எண்ணம் தோன்றிருக்கிறது. அதை தனியாக வந்த ஒரு சிறுமியிடம் செயல்படுத்த, அவள் போட்ட கூச்சலில் பக்தர்கள் அவரை நையப்புடைத்திருக்கிறார்கள். உடனே இந்த விவகாரத்தை அந்தச் சிறுமியின் பெற்றோரே தொலைபேசி மூலம் காவல் நிலையத்துக்கு தெரிவிக்க, கோயிலுக்கே வந்து அர்ச்சகரை அள்ளிக்கொண்டு போயிருக்கிறது காவல்துறை. கோயில் நிர்வாகமோ எதுக்கு இந்தச் சின்ன விஷயத்தை பெரிசுபடுத்துறீங்க அய்யரு இந்த வயசுல தப்பு பண்ணுவாரா? கீழே விழுந்த உங்க புள்ளய தூக்கி விட குனிஞ்சிருக்காரு, அப்ப மேல விழுந்துட்டாரு போல, ஒருவேளை அய்யரு தப்பு பண்ணியிருந்தா ஆத்தா தண்டிப்பா, அவளை நம்புங்க என்று சிறுமியின் பெற்றோரை சமாதானப் படுத்த முனைந்திருக்கிறது. பெற்றோர் அதற்கு உடன்படாமல் காவல்நிலை யத்தில் புகார் கொடுக்க ஆயத்தமா யிருக்கிறார்கள். அப்போது காவல் துறையினர் நீங்க புகார் கொடுங்க, அய்யருமேல நாங்க நடவடிக்கை எடுக்கிறோம்.

ஆனா, உங்க மக இந்த சின்ன வயசுல கோர்ட், கேஸுன்னு அலைஞ்சு தேவையில்லாம அவமானப்பட வேண்டியிருக்கும் என்று நடைமுறையை விளக்கியிருக்கிறார்கள். உடனே யோசித்த பெற்றோர். காக்கிகள் கூறியபடி சாமி கும்பிட்ட போது வீண் விவாதம் பண்ணி தகராறு செய்தார் என்று அர்ச்சகர் மீது பெயரளவுக்கு புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார்கள். பிறகென்ன? தப்பித்தோம்; பிழைத்தோம் என கோயில் பணியை ராஜினாமா செய்து விட்டு அர்ச்சகர் நடையைக் கட்டி யிருக்கிறார்.

நாம் அந்தக் கோயில் கமிட்டியின் செயலாளரைச் சந்தித்தோம். என்னமோ நடந்து போச்சு. இதையெல்லாம் எழுதி கோயில் பேரைக் கெடுத்திடாதீங்க. இப்பதான் அந்த அய்யரு வேலைல இல்லியே பக்தை ஒருவர் கொடுத்த நன் கொடைக்கு ரசீது போட்டவாறே நமக்கும் பதில் சொன்னார்.

மற்ற அர்ச்சகர்கள் மட்டும் யோக்கியர்களா?

அந்தக் கோயிலின் மற்ற அர்ச்சகர்களின் நடவடிக்கைகள் குறித்து நம்மிடம் பேசினார் கடைக்காரர் ஒருவர். அந்தக் கோயில்ல இருக்கிற அர்ச்சகர்களுக்கு பான் பராக் பழக்கம் உண்டு. ராத்திரி ஆனா தண்ணி அடிப்பானுக. அதனால கோயில்லையும் போதையிலேயே இருப்பானுக. அங்க ஆஞ்சநேயருக்கு பூஜை பண்ணுற அர்ச்சகர் ஒருத்தரு இன்னொரு அர்ச்சகருகிட்ட பேசிக்கிட்டிருந்த நானே கேட்டிருக்கேன். அவன் தீர்த்தம் கொடுப்பானாம். அத குடிக்கிற இளம் பெண் பக்தைகளோட உதடுக தீர்த்தத்தோட ஈரம் பட்டு ரொம்ப கவர்ச்சியா இருக்குமாம். அப்ப அந்த அர்ச்சகருக்கு ரொம்ப மூடாயிருக்குமாம். இதயெல்லாம் கண்ட்ரோல் பண்ணிக்கிட்டுத்தான் இந்த வேலையை பார்க்க வேண்டி யிருக்குன்னு ரொம்பவும் சலிச்சுக் கிட்டு சொன்னான். இந்த அர்ச்சகருக கையில இருக்கிற செல்போன்ல அந்த மாதிரி அசிங்கம் நெறய இருக்கு. உன் போன்ல என்ன இருக்கு? என் போன்ல என்னெல்லாம் இருக்குன்னு மாற்றி மாற்றி பார்த்துக்குவானுக. இந்த அளவுக்கு வக்கிரம் பிடிச்சு அலையற அர்ச்சகருக பூஜை பண்ணித்தான் சாமி யோட அருள் நமக்கு கிடைக்கு தாக்கும். ரொம்பக் கொடுமையா இருக்கு. சாமி பேரைச் சொல்லிக் கிட்டு இந்தக் காலத்துலயும் இன்ன மும் ஏமாத்திக் கிட்டிருக்கிறவங்கள நாமதான் அறியாமையில சாமி சாமின்னு சொல்லிக் கிட்டிருக்கோம். எல்லா அர்ச்சகரையும் நான் பொதுவா குத்தம் சொல்லல... ஆச்சாரமா இருக்கிற நல்ல அர்ச்சர்களும் இருங்காங்க என்றார்.

--------------------- - சி.என்.இராமகிருஷ்ணன் -=
நன்றி: நக்கீரன் மே 28-31 - 2011

கதரால் வரும் கேடுகள் - பெரியார்


ஆச்சாரியாரும் கதரும்


தோழர் கனம் சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சட்டசபை பட்ஜட் விவாதத்தின்போது கதர் சம்மந்தமாய் எழுந்த பிரச்சினைக்கு பதில் அளிக்கையில் " எனக்கு அதிகாரமிருந்தால் கதர் கட்டாததற்கு ஆக சர்க்கார் தொழில் இலாக்கா டைரக்டரை டிஸ்மிஸ் செய்து விடுவேன்" என்று பேசியிருக்கிறார். இது தினசரி பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றது. இதுவரை அந்த சேதிக்கு எவ்வித மறுப்பும் வரவில்லை. ஆனதால் கனம் ஆச்சாரியார் அந்தப்படி பேசியிருக்கிறார் என்பது உண்மையேயாகும்.

இதிலிருந்து காங்கரஸ்காரர்கள் உத்தியோகம் பார்ப்பதின் கருத்தும் அவர்களது நிர்வாக யோக்கியதையும் எப்படிப்பட்டது. என்பது நன்றாய் விளங்கும்.

அது ஒரு புறமிருக்க அரசாங்க சிப்பந்திகள் கனம் ஆச்சாரியார் பேச்சிலிருந்து என்ன நினைப்பார்கள் என்பதை யோசிப்போம். கதர்கட்டாத ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தர் டிஸ்மிஸ் செய்யப்படவேண்டிய அளவுக்கு அயோக்கியராக பாவிக்கப்படவேண்டியவராகிறார். கனம் ஆச்சாரியாரால் அதிகாரமில்லாத காரணத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட முடியாத உத்தியோகஸ்தர்கள் போக மற்றபடி டிஸ்மிஸ் செய்யவோ அல்லது வேறுவிதமாய் தொலைக்கவோ தொல்லை கொடுக்கவோ செய்யப்படக்கூடிய உத்தியோகஸ்தர்கள் கதி அதோகதி தான் என்பது பளிங்குபோல் விளங்குகிறது.

சர்க்கார் சிப்பந்திகள் கடமை

பொது ஜனங்கள் வரிப்பணத்தில் பொது ஜனத்தொண்டு செய்வதற்காக நியமனம் பெற்ற சிப்பந்திகள் கதர் கட்டாததற்கு ஆக டிஸ்மிஸ் செய்யப்படுவது என்றால் காங்கரஸ் ஆட்சியின் - நீதியின் யோக்கியதையை என்னவென்று சொல்லுவது! சர்க்கார் அதிகாரிகளுக்கும் சிப்பந்திகளுக்கும் சில குறிப்பிட்ட கடமை உண்டு. அக்கடமைகளில் அவர்கள் சரியாய் நடந்துகொள்கிறார்களா என்பதே நிர்வாகப் பொறுப்புடையவர்கள் கவனிக்க வேண்டிய கடமையாகும். கதர் ஒரு கட்சியாருடைய திட்டம். அது மூவர்ணக்கொடி போல் அக்கட்சிக்கு உரிய அடையாளமாகவுமிருக்கலாம். ஆனால் அதை அந்தக்கட்சி அங்கத்தினரல்லாதார் மீது திணிப்பது என்பது எப்படி நீதியாகும்; மூவர்ணக் கொடி தேசியக்கொடி அல்ல என்று சொல்ல எப்படி ஒருவனுக்கு உரிமையுண்டோ-அதை தேசியக்கொடி என்று ஏற்றுக்கொள்ளாமல் இருக்க எப்படி ஒருவனுக்கு உரிமையுண்டோ அப்படிப்போலவே கதரை ஒரு தேசாபிமானக் குறி அல்லவென்றும் அது ஒரு நீதிக்குறியோ அல்லது ராஜாங்க பக்தி குறியோ அல்லவென்றும் சொல்ல எந்த யோக்கியமான சுயமரியாதை உள்ள அதிகாரிக்கும் சிப்பந்திகளுக்கும் உரிமை உண்டு. அதை மறுத்து கனம் ஆச்சாரியார் கதர் கட்டாதவர் டிஸ்மிஸ் செய்யத்தக்கவர் என்று சொல்வதில் உண்மையிலேயே ஆச்சாரியாருக்கு கதர் அவ்வளவு பிரதானமானதும் அவசியப்படுத்தத் தக்கதுமான காரியம் என்று கருதுவாரானால் கதர் தவிர வேறு துணி நெய்யக்கூடாது என்று சட்டமூலம் தடுத்திருக்கலாம். கதரைத் தவிர வேறு துணி விற்பனை இல்லாமல் தடுத்திருக்கலாம். அப்படியெல்லாம் செய்யாமல் கதர் கட்டாதவனை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று சொல்வதானால் யோக்கியனுக்கு சர்க்கார் உத்தியோகத்தில் இடமில்லை என்று தானே அர்த்தமாகிறது.

ஆகவே காங்கரஸ் ராஜியத்தில் உத்தியோகங்களில் நேர்மையும் பந்தோபஸ்தும் இல்லாமல் போய் விட்டது என்பதே நமது முடிவு.

கதர்க் கதை

அடுத்தாப்போல் கதரைப்பற்றி சற்று யோசிப்போம். கதர் தோழர் காந்தியாரால் உபதேசிக்கப்பட்டதாகும். இந்த உணர்ச்சி காந்தியாருக்கு வரக் காரணம் என்னவெனில் வங்காள சுதேசிக் கிளர்ச்சி-பாய்க்காட் கிளர்ச்சி ஆகியவைகளைப் பார்த்து அவற்றிற்கு சிறிது முற்போக்கு கொடுத்து மக்களுக்கு பழமையில் உணர்ச்சி ஏற்படுவதற்கு ஆக தனது சொந்த புதிய கண்டுபிடிப்பு போல் வெளியிடப்பட்டதாகும்.

அந்தக்காலத்தில் திலகருக்கு சுதேசி உணர்ச்சி இருந்தது. அவர் பாய்காட்டை உபதேசித்து வந்தார். அதை பீட் செய்வதற்கு அதைவிட சுதேசீயம் கண்டுபிடிக்கவேண்டிய அவசியமும் காந்தியாருக்கு இருந்தது.

ஆனால் சுதேசியப் பொருள் பிரசாரம் என்பது இங்கிலீஷ் பொருள் பாய்க்காட் (பஹிஷ்காரத்தில் இருந்து சிறிது முற்போக்கடைந்ததாகும்) வங்காளத்தில் முஸ்லிம்களுக்கு வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டதை எதிர்த்து பார்த்து முடியாமல் போய்விட்டவுடன் சர்க்காருக்கு தொல்லைகொடுக்க ஆரம்பித்ததில் இங்கிலீஷ் சாமான் பாய்காட் பிரசாரம் ஏற்பட்டதை சில மிதவாத உணர்ச்சி உள்ளவர்கள் பாய்க்காட் பஹிஷ்காரம் என்று சொல்லுவது இங்கிலீஷ் மீது விரோத உணர்ச்சியைக் காட்டுவதாகும் என்று கருதி சுதேச சாமான்களை ஆதரிப்பது என்னும் பேரால் பாய்க்காட் பிரசாரம் செய்தார்கள். காந்தியார் இரண்டையும் விட்டு விட்டு " பாய்காட்டும் வேண்டாம் சுதேசியமும் வேண்டாம். அதில் விரோத உணர்ச்சி இருக்கிறது" என்று சொல்லி கதர் என்பது பொருளாதார திட்டமும் அவனவன் அவனவனையே நம்பி வாழும் தன் நம்பிக்கை திட்டமும் கொண்டது என்று அவனவன் ராட்டினத்தில் நூற்ற நூலை அவனவனே நெய்து கட்ட வேண்டும் என்பதாகச் சொல்லி அதற்கு மத உணர்ச்சியையும் தெய்வீக உணர்ச்சியையும் கற்பித்து பிரசாரம் செய்யத் துடங்கினார். ஆரம்பத்தில் பாமர மக்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள். படித்தவர்கள் 100க்கு 99 பேர்கள் அதை எதிர்த்தார்கள்.திலகரையும் பெசண்டையும் ஒழிக்கவேண்டும் என்று கருதின கூட்டம் மாத்திரம் இதை ஆதரித்து பிரசாரம் செய்ய முன் வந்தது. திலகர் செத்தார். காந்தியாருக்கு செல்வாக்கு அதிகமாயிற்று. பெசண்டு ஒடுங்கினார். பிறகு கதரை எதிர்த்த அரசியல் வாதிகள் பெரும்பாலோர் காந்தீயத்தில் ஐக்கியமாகிவிட்டார்கள். அப்புரம் கதர் தலைவிரித்தாடத் துடங்கி விட்டது. காங்கரஸ் சந்தாவே கதர் நூலாக ஆகிவிட்டது. திலகர் நிதியில் முக்கால் வாசி பணம் கதர் பிரசாரத்துக்கே பயன்படுத்தப் பட்டதும் அல்லாமல் கதருக்கு ஆக ஒரு நிதியும் சுமார் 3000000 முப்பது லக்ஷம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது. கதருக்கு ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு அரசியல் வாதியும் தனித்தனி அபிப்பிராயம் சொல்ல ஆரம்பித்தார்கள். என்ன பண்ணியும் திருட்டுத் தொழில் குடி சூதாட்டம் விபசாரம் கொலை கொள்ளை ஆகிய தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களைவிட கதரில் ஈடுபட்ட மக்கள் - கதர் தரிக்கிறவர்கள் மிகச் சுருக்கமாகவே குறைந்த எண்ணிக்கை உள்ளவர்களாகவே இருக்க முடிந்தது. அவைகளுக்கு உள்ள செல்வாக்கைவிட கதர் செல்வாக்கு குறைவாகவேதான் இருக்கக் கூடியதாக ஆகிவிட்டது.

காங்கரஸ்காரர் கதர் அபிமானம்

பல உற்பத்தி ஸ்தாபனங்களும் பல விற்பனை ஸ்தாபனங்களும் அதற்கனுகூலமான பலவித நிர்ப்பந்தங்களும் இருந்தும் கதர் போலீஸ் உடை தரித்திருப்பது போல் காங்கரஸ் சேவகர்கள், பிரசாரகர்கள் காங்கரசால் பதவி ஏற்றவர்கள், வயிறு வளர்ப்பு உடையவன் ஆகியவர்கள் மாத்திரம் பெரிதும் அந்த சமயங்களில் கதர் தரித்திருக்க வேண்டியதாயும் இருந்து வருகிறது. இக்கூட்டங்களிலும் அவரவர்கள் பராமரிப்பிலுள்ள பெண்டுபிள்ளைகளை சிப்பந்திகள் கதர் கட்டுவது மிகமிக ஆச்சரியப்படத்தக்க தாகவே இருக்கும்.

கதருக்கு சொல்லப்படும் பெருமைகளில் ஒரு பெருமை காங்கரஸ்காரர்களாக இல்லாவிட்டாலும் கதர் உடுத்துவது தேசாபிமானம் ஏழை அபிமானமாகும். ஆதலால் ஒவ்வொருவரும் உடுத்த வேண்டியது என்று சொல்லப்படுகிறது. ஆனால் காங்கரஸ்காரர்களில் 100-க்கு 5 - பேர் வீதமாவது கதர்கட்டி இருப்பதாக அந்தந்த மாகாண ஜில்லா காங்கரஸ் மெம்பர்கள் லிஸ்டை பார்த்து கணக்கு சொல்ல முடியுமா என்றால் எப்படிப்பட்ட காங்கரஸ் தொண்டரும் விழிக்க வேண்டியதைத் தவிர சமாதானம் சொல்ல முடியாது.

சுருக்க வழியில் உண்மை உணர வேண்டுமானால் 10 மந்திரி 10 காரியதரிசி 4 தலைவர்கள் ஆகிய 24 பதவிகளில் இருந்து காங்கரசின் பயனாய் பணம் பெற்று வாழுகிறவர்களின் குடும்பங்களின் எத்தனை பேர் மனைவி மக்கள் விவரமறியாக் குழந்தைகள் கதர் கட்டி இருக்கிறார்கள் என்பதை பார்த்தால் விளங்கிவிடும். அல்லது காங்கரஸ் பிரதம தலைவர்களில் தொண்டர்களில் எத்தனைபேர் ராட்டினம் நூற்கிறார்கள் என்று பார்த்தாலும் கதர் தத்துவத்தின் உயர் வாழ்வும் ஆதரிப்பும் எவ்வளவு என்பது விளங்கிவிடும்.

இவைகள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கதரின் யோக்கியதை என்ன என்று பார்ப்போம். சுமார் 20 வருஷகாலமாக ஒரு கோடி ரூபாய்க்கு குறையாத அளவு செலவு செய்து மீதம் 100, 200, 300 ரூபாய் சம்பள செலவில் பி.ஏ.பி.எல்., எம்.ஏ. முதலிய பட்டம் பெற்ற நபர்களை பெரிய படிப்பாளிகளை சிப்பந்திகளாய் வைத்து மாகாண மாகாணமாய் ஜில்லா ஜில்லாவாய் கதர் ஆச்சிரமங்கள் மூலம் பிரசாரம் செய்து வருஷம் பல லக்ஷம் கெஜம் கதர் உற்பத்தி செய்து கெஜம் 0-2-6 அணாவுக்கு வாங்குவதற்கு பதிலாக கதர் என்பதற்கு ஆக கெஜம் 8 அணா 10 அணா 12 அணா கொடுத்து சில மக்களாவது வாங்கத் துணிந்தும் இன்று கதரின் நிலைமை பிரதம மந்திரியார் என்பவர் தனது சிப்பந்திகளைப் பார்த்தே நீங்கள் கதர் கட்டாவிட்டால் நான் உங்களை டிஸ்மிஸ் செய்து விடுவேன் என்று கட்டாயப்படுத்தி மிரட்டி தண்டித்து கதர் கட்டச் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது என்றால் கதரின் யோக்கியதை எப்படிப்பட்டது என்பதை நாம் விளக்க வேண்டுமா என்று கேட்கிறோம்.

கதரால் வரும் கேடுகள்

காங்கரஸ்காரர்கள் காங்கரஸ் வேலைக்காக அவர்களது அரசியல் திட்டத்துக்காக (அதாவது வருணாச்சிரமம் ராஜியம் ஸ்தாபிப்பதற்கு ஆக) அவர்கள் செய்யப்போகும் காலித்தனம் போக்கிரித்தனம் ஆகியவைகளுக்கு சைனியம் சேனை திரட்டி வைத்திருப்பதற்கு ஒரு ஏமாற்றுச் சாக்காக கதர் ஸ்தாபனமும் ஹரிஜன ஸ்தாபனம் என்னும் தீண்டாமை விலக்கு ஸ்தாபனமும் வைத்து அதற்கு பொது ஜனங்களிடம் வசூலித்த பணத்தையும் சர்க்கார் வரிப்பணத்தையும் பாழாக்கி வருகிறார்கள் என்பதல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்.

1. கதரினால் 4 வேஷ்டிகளுக்கு பயன்படும் பஞ்சு ஒரு வேஷ்டி சாப்பிட்டு விடுகிறது. இதனால் நம் நாட்டு மூலப்பொருள் 100-க்கு 75 பாகம் வீணாகிறது. 2. கதர் நூற்பதால் ஒரு மனிதன் மூன்று, நாலு ராத்தல் நூற்கும்படியான நேரம் ஒரு ராத்தலுக்கே சரியாய் போய் விடுகிறது. இதனால் பாடுபடும் மக்களுடைய பாடு நேரம் 100-க்கு 75 பாகம் வீணாகிறது. 3. கதர் நெய்வதால் 4 கெஜம் நெய்யக்கூடிய நேரம் ஒரு கெஜத்துக்கு பிடிக்கிறது. இதனால் நெசவாளிகளது நேரம், பாடு 100-க்கு 75 வீதம் பாழாகிறது. 4. இவ்வளவு வீணாகியும் கதர் விலை மற்ற நூல் கைத்தறி நெசவுத்துணி கெஜம் 0-2-6 அணா 0-3-0 அணாவுக்கு கிடைத்தால் கதர் துணி கெஜம் 10 அணா 11 அணா 12 அணா போட்டு தான் வாங்கவேண்டி இருக்கிறது. இதனால் தேசத்தின் பொருளாதாரம் 100-க்கு 75 பாக பணம் நஷ்டமடைகின்றது. 5. பொது மக்கள் இவ்வளவு நஷ்டமும் கஷ்டமும் நாசமும் அடைவதினால் யாருக்காவது லாபம் உண்டா என்று பார்த்தால் யந்திரம்போல் ஒரு நாளைக்கு 10 மணி நேரத்துக்கு மேலாக 12 மணி வரை வேலை செய்தால் 1 அணா பெறக்கூடிய அளவு தான் கூலி கிடைக்கத்தக்கதாய் இருக்கிறது. 6. இவ்வளவு காரியத்தையும் பொறுத்துக்கொள்ள கதர் துணியாவது அழகானதாகவோ கெட்டியானதாகவோ வனப்பானதாகவோ இருந்து வருகிறதா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. ஆகவே இந்த நிலையில் உள்ள கதர் எப்படி ஒரு தொழில் திட்டமாகவோ பொருளாதாரத் திட்டமாகவோ ஒரு தேசிய அறிகுறியாகவோ இருக்கமுடியும் என்பது நமக்கு விளங்கவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் உள்ள கதரை கட்டாவிட்டால் டிஸ்மிஸ் செய்வேன் என்று ஆச்சாரியார் சொல்லுவது மனுதர்மக்கொடுமையை விட அதிகமான கொடுமையா அல்லவா என்று கேட்கிறோம்.

மனு 10 மூட்டை நெல்லை கொடுத்து 10 மூட்டை அரிசி கேட்கிறார் என்றால் ஆச்சாரியார் 10 மூட்டை உமியைக் கொடுத்து 10 மூட்டை அரிசி கேட்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அதிகாரிகளே! சிப்பந்திகளே!! வரி கொடுக்கும் தமிழ் மக்களே!!! மஞ்சள் பெட்டிக்கு ஜே சொன்னப் பலன் அனுபவியுங்கள்! அனுபவியுங்கள்! புத்தி வரும்வரை அனுபவியுங்கள்!

---------------------- கதர் கட்டி அலுத்தவன் என்ற பெயரில் தந்தைபெரியார் எழுதிய கட்டுரை - “குடி அரசு” - 10.04.1938

29.5.11

சர்க்காரின் மனப்பான்மையும் நமது நோக்கமும் - பெரியார்


சர்க்காரின் மனப்பான்மையும் நமது நோக்கமும்

இவ்வார சட்டசபைக் கூட்டத்தில் திரு. சத்தியமூர்த்தி சாஸ்திரியார், திரு. ராமசாமி நாயக்கர் மதத்தையும் சமூகத்தையும் தூஷித்து, பிரச்சாரம் செய்தது, சர்க்காருக்குத் தெரியுமா? அந்தப்படி அவரைப் பிரச்சாரம் செய்ய விடலாமா? என்பதாக சர்க்காரை ஒரு கேள்வி கேட்டிருப்பதாய் தெரிய வருகின்றது. அதற்கு சர்க்கார் திரு. நாயக்கர், மதத்தையும், சமூகத்தையும் தூஷித்துப் பிரச்சாரம் செய்தது எங்களுக்குத் தெரியாது என்பதாகப் பதில் சொல்லி இருப்பதாகவும் தெரிய வருகின்றது. இந்த விஷயத்தில் சர்க்கார், உண்டு அல்லது இல்லை என்ற இரண்டில் ஒன்றைச் சொல்லாமல் தங்களுக்குத் தெரியாது என்று சொல்லியிருப்பது சர்க்காரின் தந்திரத்தன்மையைக் காட்டுகின்றது. ஏனெனில், திரு.நாயக்கர் சென்ற மாதத்தில் வேலூரில் சுமார் 5,6 கூட்டங்களில் பேசி இருக்கின்றார். வேலூர் மகாநாட்டிலும், சுமார் 15, 20 தீர்மானங்களுக்கு மேலாகவே நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. இவ்வளவு சங்கதிகளையும் சர்க்கார் உத்தியோகஸ்தர்களான சுமார், 4,5 தமிழ் சுருக்கெழுத்துப் போலீஸ் அதிகாரிகள் ஒன்று விடாமல் எழுதிக் கொண்டு போயிருக்கின்றார்கள். அவைகள் சர்க்கார் குப்பைத் தொட்டியில் இன்னமும் இருக்கக் கூடுமென்றே நினைக்கின்றோம். அப்படியிருக்க, திரு. நாயக்கர் பேசியவைகள், சர்க்காருக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டது நாணயமான பதிலாகாது என்றே மறுபடியும் சொல்லுவோம்.

அன்றியும், திரு.சத்தியமூர்த்தி கேள்வி கேட்ட பிறகாவது சர்க்கார், சி.அய்.டி. ரிப்போர்ட்டுகளைப் பார்த்துப் பதில் சொல்லியிருக்கலாம். அப்படிக் கொன்று மில்லாமல் ஒரேயடியாய் தங்களுக்குத் தெரியாது என்று சொன்னதிலிருந்து சமயம் வரும்போது, அதாவது திரு. நாயக்கர் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அவசியம் வரும்போது திடீரென்று அப்பொழுதுதான் இந்த விஷயங்கள் தெரிந்தவர்கள் போல் பாவனை காட்டிபிடித்து உள்ளே போட சவுகரியம் வேண்டும் என்கின்ற எண்ணத்தின் பேரிலேயேதான் இப்படித் தந்திரமாகச் சொல்லியிருக்க வேண்டும் என்பதைத் தவிர அதற்கு நம்மால் வேறு காரணங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் நமக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. திரு.சத்தியமூர்த்தி சாஸ்திரிகளும் கூட, திரு.நாயக்கர், வேலூரில் மதத்தையும் சமூகத்தையும், தூஷித்தார் என்பதைப் பற்றிச் சட்டசபையாரிடம் போய் முட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லாமல் நேராகவே அவருக்கு நமது கருத்தை வெளிப்படுத்தி விடுகிறோம். இதன்மேல் அவர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ள அவருக்குப் பூரண சுதந்திரம் உண்டு என்பதையும் அவருக்கு ஞாபகப்படுத்துகிறோம்.

மத விஷயம்

மதவிஷயத்தில் நாம் இந்து மதமென்பதாக ஒரு மதமே கிடையாது என்பதோடு இந்துமதம் என்பதாக ஒன்றுண்டு என்றும் தாங்கள் அம்மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் நினைத்துக் கொண்டிருக்கின்ற மக்களின் உணர்ச்சியையே அடியோடு ஒழித்து, மனித சமூகத்தின் வாழ்வு,. அறிவு, மானம், அன்பு, இரக்கம், பரோபகாரம் முதலிய ஒழுக்கங்கள் ஆகியவைகளே முக்கியமானவை என்பதை உணரச் செய்ய வேண்டும் என்பதும், இதற்கு விரோதமாக போலி மதமான இந்து மதம் மாத்திரமல்லாமல், வேறு எந்தமதம் தடையாயிருந்தாலும் அவற்றையும் வெளியாக்குவதே நமது முக்கிய நோக்கமாகும்.

சமூக விஷயம்

சமூக விஷயங்களில் எந்த சமூகம் மற்றொரு சமூகத்தைவிட தாங்கள் பிறவியால் உயர்ந்தவர்கள் என்றும், எந்த சமூகமும் பொதுவாழ்க்கையில் மற்ற சமூகத்தைவிடத் தங்களுக்குச் சற்றாகிலும் உயர் பதவியும் அதிக சுதந்திரமும் அடைய பிறவியால் உரிமை உண்டு என்று பாத்தியம் கொண்டாடுகின்றதோ, எந்தச் சமூகம், சமூகத்தின் சுயமரியாதைக்கு இடையூறாய் இருக்கின்றதோ அதைத் திருத்திச் சமநிலையை ஒப்புக் கொள்ளச் செய்வதும், அது முடியாவிட்டால் அவற்றை அடியோடு அழிக்க வேண்டும் என்பதுமே எல்லா வற்றையும் விட முக்கிய நோக்கம் என்பதை வணக்கமாய் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அன்றியும் இம்முயற்சியில் ஈடுபடுவதில் கெஞ்சுவதையோ, அன்னியர் மனம் நோகுமே என்பதான கவலை கொள்ளுவதையோ, கொள்கையாய்க் கொள்ளாமல், உண்மையுடன் உள்ளதை உள்ளபடி எடுத்துக்காட்ட யாரும் பின்வாங்கக் கூடாது என்பதுவும் நமது முக்கிய நோக்கமாகும். நன்மைகளிடத்தில் விருப்பும், தீமைகளிடத்தில் வெறுப்பும் கொள்ளவேண்டியது பரிசுத்தமான மனித உணர்ச்சியெனக் கருதுவதால் அதையும் வலியுறுத்துவது அவசியமாகும்.

ஆனால் இவைகள் வெற்றிபெற பலாத்காரத்தையோ, குரோதத்தையோ, உபயோகிக்கக் கூடாது என்பது எந்நிலையிலும் ஞாபகக் குறிப்புக் கொள்கையாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

----------தந்தைபெரியார் - “ குடிஅரசு” - கட்டுரை - 10.02.1929

பார்ப்பனர்களின் தேசியம்
பார்ப்பனர்கள் என்ன நோக்கத்துடன் தேசியம் தேசியம் என்று கூப்பாடு போடுகிறார்கள் என்பதைப் பற்றி பல தடவைகளில் நாம் வெளியிட்டிருக்கிறேன். தேசியம் என்ற சூழ்ச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கு காரணமே பார்ப்பனீயமான சனாதன தர்மங்களை பலப்படுத்தவே ஒழிய வேறில்லை. தேசியம் என்கின்ற வார்த்தைக்கு அநேகமாய் மக்கள் மனதில் இத்தேசத்திய பழைய நாகரீகம் சனாதனதர்மம் பழக்க வழக்கம் என்பவைகளையே பிரதானமாகக் கொள்ளும்படி பிரசாரம் செய்து வந்ததும் அதற்காக இந்தியபுராண இதிகாசங்களை ஆதாரமாக எடுத்துக் காட்டி பிரசாரம் செய்து வந்ததும் வாசகர்கள் அறிந்ததே. இக்கருத்தைக் கொண்டேதான் கராச்சி காங்கிரஸ் சுயராஜ்ய திட்டம் ஏற்பாடு செய்திருக்கிறது. மற்றும் இந்திய நாட்டை “பாரத மாதா” (பூமிதேவி) என்று அழைப்பதும் “பாரததேசம்” என்று சொல்லு வதும் எல்லாம் இக்கருத்தை ஆதாரமாய்க்கொண்டதே ஒழிய வேறில்லை. தேசீயம் என்பதற்கு அரசியலை சம்பந்தப்படுத்திய கருத்தும் இந்தியாவின் பழைய நாகரீகத்திற்கும், பழக்க வழக்கத்திற்கும், சனாதன தர்மத்திற்கும் ஏற்ற அரசியலை ஸ்தாபிக்கச் செய்த சூழ்ச்சியே தவிர வேறல்ல.

இன்றுகூட ஆங்கில ஆட்சியானது சனாதன தர்மப்படி-மனுதர்மப்படி ஆட்சி நடத்தப்படுவதாய் இருந்தால் இன்றைய தேசீயமும் சட்டமறுப்பும், ஒத்துழையாமையும் எல்லாம் பறந்தோடிப்போகும்.

இந்தக் காரணத்தினாலேயேதான் தோழர் காந்தியும், மகாத்மா வாக்கப்பட்டார். ஆனால் இதுசமயம் காந்தியின் செல்வாக்கு வேறுவழியில் ஒரு அளவு குறைந்துபோன காரணத்தினால் அதை புதுப்பிக்கவும் காந்தியின் பிரயத்தினமோ, தயவோ சிறிதும் இல்லால் தீண்டாமை விலக்கும், ஆலயப் பிரவேசமும் கிளர்ச்சி பெற்றதன் காரணமாய் காந்தியார் இதில் பங்குபெற கருதி வலிய வந்து கலந்துகொள்ளவேண்டியேற்பட்டதாலும் “தேசீயவாதி” களான பார்ப்பனர்களுக்கு இப்போது சிறிதுகஷ்டம் ஏற்பட்டுவிட்டது. சென்னை தேசீய பார்ப்பனர்கள் இருக்குமிடம் தெரியவில்லை. தோழர்கள் சத்தியமூர்த்தி, ஏ,ரங்கசாமி அய்யங்கார், கே. பாஷ்யம் மற்றும் எத்தனையோ சென்னை பார்ப்பனர்களுடைய பேச்சையும், மூச்சையும் காணோம். தோழர் சத்தியமூர்த்தியின் விலாசமே கண்டுபிடிப்பது கஷ்டமாய் இருக்கிறது. அவருடைய முழுசேவையும் தோழர் ராஜா சர். அண்ணாமலையின் குடும்பத்தாருக்கு கண்ராக்ட்டாய் (சோல் ஏஜன்ஸி) விட்டுவிட்டார். அவரைப் பற்றி கவிபாடவும் அவர் கோரும் பொது வாழ்வு காரியங்களை காங்கிரஸ் பிரதிநிதியாய் இருந்து நிறைவேற்றிக்கொடுக்க முன்னோடும் பிள்ளையாய் இருப்பதுமே அவருடைய சுயராஜ்ய தபசாயும், அவரது பிறப்புரிமையாயும் ஆகிவிட்டது. ஆனால் தோழர் ராஜா சர். அண்ணாமலை கொடுக்கும் பணங்கள் எல்லாம் சத்தியமூர்த்திக்கே சேர்ந்தது. தோழர் ஏ. ரங்கசாமி அய்யங்காரோ சங்கராச்சாரி கூட்டத்தினர்களை ஆதரித்து அவர்களை மேன்மைப்படுத்துவதன் மூலமும் மற்றும் சில பணக்காரர்களை விளம்பரப் படுத்துவதன் மூலமும் பெருமையும், பணம் சம்பாதிப்பதே அவருடைய காங்கிரஸ் பிரசாரமாகவும், தேசீய பிரசாரமாகவும் ஆகிவிட்டது. தோழர் கே. பாஷியம் அடுத்த சட்டசபை தேர்தல் வரை தலை நீட்டமாட்டார். குட்டி தேசீய வாதிகளான ஒரு கூட்டம் அதாவது, தோழர் எம்.எஸ். சுப்பிரமணிய அய்யர் போன்றவர்கள் மேல் குறிப்பிட்ட தேசியவாதிகளின் உத்திரவுக்கு இணங்க காந்தியின் செல்வாக்கை குறைக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்கு உதாரணம் 7-3-33 ந் தேதி “தமிழ் நாட்டில் பிரசுரித்து இருக்கும் தோழர் எம்.எஸ், சுப்பிரமணிய அய்யர் பிரசங்கத்தைப்படித்துப் பார்த்தால் தெரியவரும். இந்த அவசரத்தில் தோழர் ராஜகோபாலாச்சாரி, டாக்டர் ராஜன் கூட்டத்தை நான் மறந்து விட்டதாக சிலர் சொல்லக்கூடும். ஒரு நாளும் மறக்கவில்லை. முன் கூறிய கூட்டமும் இந்தக் கூட்டமும் சகோதரர்களே ஆவார்கள். முன் கூறிய கூட்டம் வாதிக்கு வக்கீலாக இருந்து கொள்ளை அடித்தால் பின் கூறிய கூட்டம் பிரதிவாதிக்கு வக்கீலாய் இருந்து கொள்ளை அடிப்பவர்களாவார்கள். வரும்படியை சமமாக பங்கிட்டுக் கொள்ளுவார்கள்.

தோழர்கள் ராஜகோபாலாச்சாரியாரும், ராஜனும் எந்த அளவில் சீர்திருத்தக்காரர்கள் என்பதை கவனித்தால் யாவருக்கும் சுலபத்தில் உண்மை விளங்கிவிடும். ராஜகோபாலாச்சாரியும், ராஜனும் அவர்களது ஜாதி உயர் வுக்கு உரிய ஏதாவது ஒரு சின்னத்தை விட்டு இருக்கிறார்களா? என்பதைக் கவனித்துப்பாருங்கள்.

1, உச்சிக்குடிமை, 2. வடகலை, தென்கலை பிரிவுப்படி நாமம், 3. பூணூல், 4. பஞ்சகச்சம், 5, சந்தியா வந்தனம், 6. நன்மை தீமைகளில் பார்ப்பனர்க்குரிய சடங்குகள்

முதலிய காரியங்களை எவ்வளவு ஜாக்கிரதையாய் அனுஷ்டிக் கிறார்கள் என்பதும் இவர்கள் பிரசங்கங்களில் பாரதம், ராமாயணம், நாலாயிரப் பிரபந்தம், முதலிய வைணவ மத சாஸ்திர பிரசாரங்கள் எவ்வளவு நடைபெறு கின்றன என்பதும் கவனித்துப்பார்த்தால் சத்தியமூர்த்தி, ரங்கசாமி அய்யங்கார் கோஷ்டிப் பிரசாரத்துக்கு ராஜகோபாலாச்சாரி, ராஜன் கோஷ்டி பிரசாரம் ஏதாவது கடுகளவாவது இளைத்ததா என்பது விளங்கும்.

நம் தென்னாட்டில் இன்றைய பொது வாழ்வில் முன்னுக்கு வர வேண்டும் என்கின்ற ஒருவனுக்கோ அல்லது விளம்பரம் பெறவேண்டும் என்கின்ற ஒருவனுக்கோ அல்லது அதிகாரம், பதவி, சட்டசபை, ஸ்தல ஸ்தாபனங்களில் அங்கத்தினர் முதலியவை பெறவேண்டும் என்பவர் களுக்கோ அவர்கள் பார்ப்பனராயிருந்தாலும், முஸ்லீம்களாய் இருந்தாலும் கிறிஸ்தவர்களாய் இருந்தாலும், பார்ப்பனரல்லாதார்களாய் இருந்தாலும், ராஜா சர்களாய் இருந்தாலும், ஜமீன்தாரர்களாய் இருந்தாலும் பெரும்பணம் பூமி படைத்த செல்வவான்களாய் இருந்தாலும், இந்த இரண்டு கூட்டத்தில் ஏதாவதொரு கூட்டத்திற்கு அடிமையானாலொழிய அல்லது வாய்பூசினாலொழிய வேறு மார்க்கமில்லாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இப்படிப்பட்ட இவர்கள் சங்கதியே இப்படியானால் மற்றபடி வயிற்றுச்சோத்துக்கு வேறுவழி யில்லாமல் எப்படி நடந்தாவது வயிறு வளர்க்கலாம் என்ற சில தேசபக்தர்களைப்பற்றி நான் சொல்ல வேண்டுமா? என்று கேள்கின்றேன். ஆகவே இன்றைய நிலைமையைப் பார்த்தால் பார்ப்பனர்களின் தேசியம் ஓரளவுக்கு வெற்றிபெற்று வருகின்றது என்று தான் சொல்லவேண்டும். காரணம் என்ன வென்றால் பார்ப்பனரல்லாத மக்களுக்குள் தலைவர்கள் என்பவர்கள் முதல் வாலர்கள் என்கின்ற வரை சுயமரியாதையில் போதிய கவலை இல்லாமல் எப்படியாவது அவரவர்கள் தனித்த முறையில் வாழ்ந்தால் போதும் என்கின்ற சுய நலத்தன்மையானது அவர்களை மறுபடியும் கீழ் நிலைக்கு கொண்டு வரும்படி செய்கின்றது. இதற்கு நான் என்ன செய்ய முடியும்? இந்தக் காரணங்களால்தான் பார்ப்பான் ஜாதி திமிரும் பார்ப்பனரல்லாதவர்களில் உள்ள பணத்திமிரும் மொத்தத்தால் உள்ள படிப்புத்திமிரும், உத்தியோக அதிகாரத்திமிரும் எல்லாம் ஒருங்கே அழியவேண்டும் என்று சுயமரியாதை இயக்கம் சொல்லுகின்றதுபோல் தோன்றுகிறது.

--------------------- சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை - “குடி அரசு” - 19.03.1933

28.5.11

பக்தர்களே!மதவாதிகளே!பதில் சொல்லுங்கள்!


தமிழர்களின்சிந்தனைக்கு...

பேரன்புமிக்க தமிழினப் பெருமக்களே வணக்கம். இந்த துண்டறிக்கை மூலம் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி யடைகிறோம்.

தமிழன் கடவுள் நம்பிக்கையால் தன்னம்பிக்கையை இழந்தான்.


மதம், ஜாதகம், ஜோதிடம், மந்திரவாதம், கன்வென்ஷன் கூட்டங்களுக்கெல்லாம் சென்று பகுத்தறிவை பாழாக்கி வருகிறான். கற்சிலைக்கு பாலாபிஷேகம் செய்கிறான்.

பசியால் உணவு கேட்கும் குழந்தையை அடித்து விரட்டுகிறான். சாமி, மத மோதல்களால் சண்டையிட்டு மடிகிறான். அயல் நாட்டுக்காரன் சாண எரிவாயுவை கண்டுபிடிக்கிறான்.

ஆனால் நம் நாட்டுக்காரனோ, சாணத்தைப் பிடித்து கடவுளாக வழிபடுகிறான். மதுபோதைக்கு அடிமையாகி தமிழன் உழைக்கிற காசையெல்லாம் மதுக்கடையில் செலவு செய்கிறான்.

தமிழின ஜாதி, மத, மூட நம்பிக்கை போதைகளுக்கு அடிமையாகாமல் தன்னம்பிக்கையோடு பகுத்தறிவோடு உலக மக்களைப் போல் உயர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையோடு இந்த துண்டறிக்கையை வெளியிடுகிறோம். தமிழர்களே, படியுங்கள், சிந்தியுங்கள்.

உலகைப் படைத்தது கடவுள் என்றால் கடவுளைப் படைத்தது யார்?

நடமாடும் மனிதனுக்கு இருக்க குடிசையில்லை, நடமாடாத கற் சிலைக்கு கோவில் தேவையா?

ஜெபம் செய்தே நோயைக் குணப் படுத்துவதாக கூறும் பாதிரியார்கள் இருக்கும் போது கிறிஸ்துவமருத் துவமனைகளில் மருத்துவர்கள் எதற்கு?

இறைவனிடம் கையேந்தினால் அவர் இல்லையென்று சொல்வதில்லையாமே! வாங்கியவர்கள் முகவரி எங்கே?

கடவுளுக்குச் சக்தியிருந்தால் கோவிலுக்கு பூட்டும், காவலும் எதற்கு? எல்லாம் அவன் செயல் என்றால், புயலும், வெள்ளமும், நில அதிர்வும், கடல் பேரலையும் எவன் செயல்?

பில்லி, சூனியம், செய்வினை, தகடு, மந்திரம் செய்து ஒருவருக்கு சாவு ஏற்படுமென்றால், நமது மந்திரவாதி சாமியார்களை நாட்டின் எல்லைக்கு அனுப்பி எதிரிகளை கை, கால் விளங்காமலோ, சாகடிக்கவோ செய்து விட்டால் ராணுவத்துக்கு ஆண்டு தோறும் செலவாகும் ஒரு லட்சம் கோடி ரூபாய் பணத்தை மிச்சப்படுத்தலாமே!

அக்னி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பிடித்தால் அக்னி பகவானுக்கு பூசைசெய்வார்களா? அக்னியை அடித்து விரட்ட தீயணைப்பு வண்டியை அழைப்பார்களா?

பத்து அவதாரங்கள் எடுத்த கடவுள், விலைவாசியை குறைக்க, தீவிர வாதத்தை, பயங்கரவாதத்தை அழிக்க ஓர் அவதாரம் கூட எடுக்காது ஏன்?

ஜெபக்கூட்டத்தில் நாங்கள் குருடனுக் குப் பார்வை கொடுக்கிறோம் , முட வனை நடக்க வைக்கிறோம் என்று கூறுகின்ற போதகர்கள் எய்ட்ஸ் நோயாளியையும், புற்றுநோயாளியையும், ஜெபத்தால் குணப்படுத்தத் தயாரா?

அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலைகள் வெளிநாடு செல்வது எவன் செயல்?

குழந்தைகளைப் படைப்பது கடவுள் சக்தி என்றால், குடும்பக்கட்டுப்பாடு செய்தபின் அவரால் படைக்க முடியுமா?

முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்றுகோடி பேருக்கு உணவும், வேலையும் இல்லாமல் வறுமையும், ஏழ்மையும் உள்ளதே -_ ஏன்?

பசியால் வாடும் குழந்தைகளுக்குப் பால் கிடைக்காத நாட்டில் கல்லுரு வுக்கு பாலாபிஷேகம் தேவையா?

சாத்தானும், சைத்தானும், பைபிளிலும், குர் ஆனிலும் தானே உள்ளது? நேரில் கண்டவர்கள் யார்? ஆண்டுகள் பல வாகியும் ஆண்டவர்களால் இவற்றை ஒழிக்க முடியவில்லையே _ ஏன்?

எல்லாம் இறைவனால் முடியும் என்றால் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் ஏன் இடிதாங்கி வைத்துள்ளார்கள்? இடியிலிருந்து அவற்றைப் பாதுகாக்க கடவுளுக்கு சக்தியில்லையா?

தலைவிதிப்படிதான் எல்லாம் நடக்கு மென்றால் கடவுளெதற்கு?

கடவுள் உலகத்திலுள்ள எல்லாவற்றை யும் படைத்தாரென்றால் தனக்கென கோவில் உண்டாக்க முடிய வில்லையே! காணிக்கை, வரி என்று மனிதர்கள் தானே வசூலித்து உழைத்து, கோவிலை, தேவாலயங்களை, மசூதிகளை கட்டி திருவிழாக்களை நடத்துகின்றனர்?

கர்த்தர் ஊசா என்பவரை அடித்துக் கொலை செய்திருக்கிறார் (பைபிள் 11 சாமுவேல் 6-6, 7 -ஆம் வசனம்) இது தான் கருணையான இரக்கமுள்ள தேவனின் அடையாளமா? கிறித்து வர்கள் இவரை அன்புள்ள ஆண்ட வர் என்று வழிபடலாமா?

ஆயுதங்களைக் கண்டுபிடித்த வெளி நாடுகளில் ஆயுத பூஜை உண்டா?

எட்டுகிலோ கடவுள் உருவுக்கு என்ப தாயிரம் கிலோ எடையுள்ள தேர் தேவையா?

நீங்கள் வணங்கும் பிள்ளையார், ஆஞ்சநேயர் போல் உங்களுக்கு குழந்தை பிறந்தால் கொஞ்சுவீர்களா? அஞ்சுவீர்களா?

வாயிலிருந்து லிங்கமும், வெறுங்கை யிலிருந்து விபூதியும், மந்திரசக்தியால் எடுத்துக் கொடுக்கும் சாமியார்கள் வாயிலிருந்து பூசணிக்காயையும், வெறுங்கையிலிருந்து ஓர் உயிருள்ள யானையையும் எடுத்துக் கொடுப் பார்களா?

பச்சை ரத்தம் குடித்துக்காட்டும் பூசாரி பாலிடால் அல்லது ஆசிட் குடித்துக் காட்டுவாரா?

நெருப்பில் நடப்பது கடவுள் சக்தி என்றால் பக்தர்கள் அதில் படுத்து உருண்டு காட்டுவார்களா?

இயேசுவின் பிறப்பை மருத்துவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா?

தெருவில் டேப் அடித்து பாட்டுப்பாடி பிச்சை எடுக்கிற பக்கிரிசாக்கள் புனித யாத்திரை (மெக்கா பயணம்) கடமை முடிப்பது எப்போது?

நமக்கு வரும் நோய்களுக்கெல்லாம் பிரார்த்தனை, தொழுகை நேர்த்திக் கடன் செய்தால் மருத்துவரிடம் காண்பிக்காமல் நோய்கள் தீர்ந்து விடுமா?

எல்லாம் இறைவன் செயல் என்றால் இறைவனை வழிபட சபரிமலை, திருப்பதி, வேளாங்கண்ணி, நாகூர் தர்கா, மெக்கா செல்லும் பக்தர்கள் விபத்தில் உயிரிழப்பது எவன் செயல்? தன்னைத் தேடிவருபவர் களுக்கு இறைவன் கொடுக்கும் பரிசு இதுதானா?

புதிதாக கார் வாங்குபவர்கள், இது கடவுளின் பரிசு என்று எழுது கிறார்கள். பலகோடி பேருக்கு கார் கொடுக்காத கடவுள் இவர்களுக்கு மட்டும் கார் கொடுப்பது நியாயம் தானா?

நாம் பள்ளிக் கூடத்தில், உயிரியல் பாடம் படிக்கத் துவங்கும் போது எல்லா உயிர்களையும் கடவுள் படைத்தார் என்றா சொல்லித்தருகிறார்கள்?

பக்தனே நீ கைவைக்காமல் கடவுள் நகருமா?

சிவாய நமஹ என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தைத் தொட முடியுமா?

ஆடு, மாடு, கோழி, பன்றி ஆகிய வீட்டு விலங்குகளை கடவுளுக்கு பலிகொடுக்கும் பக்தர்கள் புலி, சிங்கம், சிறுத்தை ஆகிய காட்டு விலங்கு களை பலி கொடுப்பதில்லையே _ ஏன் பயமா?

ஜாதகம் பார்த்து நடக்கும் திருமண வாழ்க்கையில் தரித்திரமும், சண்டையும், சாவும், விவாகரத்தும் வருகிறதே _ ஏன்?

அன்று பேசிய, தோன்றிய கடவுள் இன்று, பேசவும் காணோம், தோன்றவும் காணோமே ஏன்?

சாமிக்கு தலை மயிரை காணிக்கை யாகக் கொடுக்கும் பக்தர்கள் ஒரு கையையோ அல்லது காலையோ காணிக்கையாகக் கொடுப்பார்களா? சாமியாடுபவர் கையில் மின்சார கம்பியை கொடுத்தால் சாமி ஆடுவாரா?

கடவுள் அருளால் நாக்கில், கன்னத்தில் வேல் குத்தும் பக்தர்கள், நெற்றி யிலோ, நெஞ்சிலோ வேல்குத்திக் காட்டுவார்களா?

தன்னையும், தமது நகைகளையும் காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுள் உங்களையும், ஊரையும், உலகத்தையும் எப்படிக் காப்பாற்றும்?

இயேசு அதோ வருகிறார் இதோ வருகிறார் என்றால் தற்சமயம் எங்கு இருக்கிறார்? எந்தத் தேதியில், எந்த இடத்தில், எத்தனை மணிக்கு வர இருக்கிறார் யாராவது கூறமுடியுமா?

அறிவாளி கண்டு பிடித்தது மின்சக்தி, அடிமுட்டாள் கண்டுபிடித்தது ஓம் சக்தி, மின் சக்தியால் கிடைக்கும் நன்மைகளுள் ஒரு துளியாவது ஓம் சக்தியால் கிடைக்கிறதா?

பாலாபிஷேகம், தேனாபிஷேகம் செய் வதன் மூலம் தான், கடவுளின் ஆசி கிடைக்கும் எனில் வழி யற்ற ஏழைக்கு, கடவுளின் ஆசி எப்படி கிடைக்கும்?

கடவுள் முன்பு அனைவரும் சமமெனில் சிறப்பு கட்டண நுழைவாயில் எதற்கு?

மதங்கள் என்பவை மனித மனதை ஒழுங்குபடுத்தத் தோன்றியவை எனில் கோயில்களும், - மசூதிகளும் ஏன் இடிக்கப்படுகின்றன?

பாவத்தின் சம்பளம் மரணமே என் றால், பிறந்த குழந்தைகளும் இறப்பது ஏன்?

நீரின் மேல் நடந்து காட்டியவரும், மோசேயை கடலில் மூழ்குவதிலிருந்து காப்பாற்றியவரும், புதைக்கப்பட்ட லாசரை எழுந்து வரச் செய்தவ ருமான இயேசு கிறிஸ்துவால் சிலுவையைத் தூக்குவதிலிருந்தும், சவுக்கடி துயரத் திலிருந்தும், அவருக்கு ஏற்பட்ட மரணத்திலிருந்தும் தம்மைக் காப் பாற்றிக் கொள்ள முடியவில்லையே _ ஏன்?

பேய், பூதம், பிசாசு, ஆவி, பில்லி சூனியம் பற்றி கூறும் மதவாதிகளும், பிழைப்புவாதிகளும் அறிவியல் ஆய்வுக்கு தயாரா? பேயை, பிசாசை, வீடியோ மூலம் படம் எடுத்துக் காட்ட முன் வருவார்களா?

பத்து அவதாரங்களை எடுத்த மகாவிஷ்ணு ஓர் அவதாரத்தை ஆஸ்திரேலியாவிலும், ஜப்பானிலும், அமெரிக்காவிலும் எடுக்கக் கூடாதா? எல்லா அவதாரமும் இந்த நாட்டிலே தானா?

பழைய ஊர்களுக்கு கடவுள் வந்ததாகக் கூறி அதற்கென்று ஸ்தல புராணங்கள் எழுதியுள்ளனர். இப் போது புதிய புதிய ஊர்கள், குடியிருப்புகள் தோன்றிக் கொண்டிருக் கின்றன. அவற்றுக்கெல்லாம் கடவுள் எழுந்தருளுவது எப்போது? ஸ்தல புராணங்கள் எழுதப்படுவது எப்போது?

இறை இல்லம் என்று வர்ணிக்கப் படுகிற மெக்காவில், புனித நாளில் பக்தர்கள் கூடியிருந்தபோது தீவிபத்து ஏற்பட்டு 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மடிந்தார்களே! உண்மையிலே இது இறைவனுடைய இல்லம்தானா? மெக்காவிற்குச் சென்றவர்களுக்குப் பணச்செலவு தானே ஆகிஇருக்கும், வேறென்ன பயன் கிடைத்தது?

கற்களில் செய்யப்பட்டு கதவுகளால் அடைக்கப்பட்டவர் கடவுள் எனில், கதவுகளுக்கு வெளியே பாதிக்கப்பட்ட வர்களுக்கு கடவுள் எப்படி உதவுவார்?

நீங்கள் ஆர்வத்துடன் கருத்தூன்றிப் படித்தமைக்கு நன்றி. இந்த கருத்துகளை ஆராய்ந்து அலசிப் பாருங்கள். சரியென்றுபட்டால், அறியாமையில் துன்புறும் தமிழர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களும் சிந்தனைத் தெளிவுபெற உதவுங்கள் என வேண்டுகிறோம். மேலும் தகவலறியவும், செயல்படவும் விரும்பினால் திராவிடர் கழக அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

-------------------நன்றி:- “விடுதலை” ஞாயிறுமலர் 28-5-2011

தனி அறையில் உதட்டோடு உதடாக முத்தமிட்ட சாய்பாபாவின் காம லீலைகள்!

சாய்பாபாவின் மறுபக்கம் 3

இந்தியாவில் தற்போதைக்கு பாபா மீது குற்றச்சாற்றுகள் எதுவும் பதிவாக வில்லை. அப்படியெனில் பெரும் பாலான பாபாவின் பாலியல் ஒழுங்கீனங்கள் மேற்கத்திய நாட்டினருடன் மட்டுமே நடந்ததா? அமெரிக்கரான ஜெட் கேயெஹார்ன் இதை மறுக்கிறார்.

பாபா தன்னை 16 வயதில் பாலியல் பலாத்காரம் செய்ததாகச் சொல்லும் அவர் மேற்கத்திய இளைஞர்கள் பயமின்றி வெளியே சொல்கிறார்கள். இந்திய சிறுவர்கள் உள் நாட்டிலேயே இருப்பதால் பயத்தில் மூச்சு விடுவ தில்லை; அவ்வளவுதான் என்கிறார். பாபாவிற்கு இந்தியாவெங்கும் செல்வாக்கு இருப்பதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

மேற்கத்திக்காரர்களில் கூட ஒருவரைத் தவிர வேறு யாரும் பாபாவுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல வில்லை. எல்லா குற்றச்சாற்றுகளும் இந்திய சட்ட வரம்பிற்கு உட் பட்ட வையாதலால் பாபாவை நீதிமன்றத்துக்கு இழுக்கும் செல்வாக்கு தங்களுக்கு இல்லை என்பதை பாதிக்கப்பட்ட வர்கள் உணர்ந்திருப்பதே காரணம் என்கிறார்கள் விமர்சகர்கள்.

தவிர, இந்தியாவில் வழக்கை பதிவு செய்தாலும் ஓரினச் சேர்க்கை வன்முறையை நிரூபிப்பது கடினம். அத்தகைய குற்றம் இ.பி.கோ. பிரிவு 377_இன் கீழ் வரும் என்றும் இதன்படி ஹோமோ செக்ஸூவல் வன்முறை (ஸோ டோமி) உறவு சட்டப்படி தவறு என்று வகைப் படுத்தப்பட்டுள்ளது என்று கிரிமினல் சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால் எழுந்துள்ள புகார்களில் எதுவுமே வன்முறை பற்றிச் சொல் லாததால் முறைகேடாக நடந்து கொண்டதை நிரூபிப்பது கடினம் என்கிறார்கள்.

ஆனால் முன்னாள் சாய்பாபா பக்தர்கள் விடுவதாக இல்லை என் கிறார்கள். ஏதாவது ஒரு வகையில் சட்ட நடவடிக்கையை முடுக்கிவிட்டால் நெருக்கடி தாங்காமல் ஏதேனும் நடக்கும் என்று அவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. பாபாவின் பக்தராக 26 வருடங்கள் இருந்த க்ளென் மெலாய் என்பவர் தற்போது பாபாவால் பாதிக்கப்பட்டவர்களை ஒன்று திரட்டி வருகிறார் ஒரு காலத்தில் பாபாவை கடவுளுக்கும் கடவுளாக ஈடுபாடு காட்டி மதித்தேன். இப்போது அவரது முகத்திரையைக் கிழிப்பதில் உறுதியாக இருக்கும் ஒருவருடன் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். என்கிறார் உறுதியோடு. ஆனால் உண்மைதான் பிடிபடாமல் நழுவுகிறது.

_ சான்ஃபிரான்ஸிஸ்கோவிலிருந்து ஆர்தர் ஜே. பயஸுடன்.

சிட்னியைச் சேர்ந்த ஹனஸ் டி க்ரேகர் 5 ஆண்டுகள் பாபாவின் தீவிர பக்தராக இருந்தார்.

நவம்பர் 12 தேதியிட்ட த சண்டே ஏஜ் என்ற பத்திரிகையில் முதல்முதலில் பாபாமீது செக்ஸ் குற்றம் சுமத்தினார்.

குற்றச்சாற்று (அவர் இந்தியா டுடேக்கு கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தின்படி): நான் அவர் காலைத் தொட்டு வணங்கியபோது அவர் என் தலையை அவரது இடுப்புப் பகுதியில் வைத்து அமுக்கினார். அவர் பிடி லேசாகத் தளர்ந்ததும் நான் என்னை விடுவித்துக் கொண்டேன். பாபா அவர் ஆடையை விலக்கி அரை குறையாக எழும்பியிருந்த அதைக் காட்டினார். நீ அதிர்ஷ்டசாலி என்று சொல்லி அவர் இடுப்பை என் முகத்தில் அழுத்தப் பார்த்தார். நன்கு யோசித்த பிறகு நான் இதைச் செய்ய இங்கு வரவில்லை என்று முடிவு செய்தேன். அவர் மனம்தான் எனக்கு வேண்டும் என்று பாபாவிடம் சொன்னேன். அவர் தன் உடைகளை களைந்துவிட்டு, அவர் மனம் என்னிடம்தான் இருப்பதாகச் சொன்னார்.

இப்படி கையும் களவுமாக மாட்டிக் கொண்டார் பாபா

என்ன நிலை? பாபாவுக்கு எதிராக க்ரேகர் காவல் துறையில் புகார் எதுவும் இதுவரை கொடுக்கவில்லை. ஆசிரம நிருவாகமோ பதில் சொல்ல மறுக்கிறது.

ஜேன் சேத்தி ம்யூனிச்சுக்குக் குடி யேறிய ஜெர்மானியர். பத்து ஆண்டுகள் பாபாவின் விசுவாசியாக இருந்தார். செப்டம்பர், 18 தேதியிட்ட ஃபோகஸ் என்ற இதழில் பாபாமீது செக்ஸ் குற்றம் சுமத்தினார்.

குற்றச்சாற்று (அவர் இந்தியா டுடேக்கு கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தின்படி):

ஒரு தனி அறையில் வைத்து பாபா என்னை அருகில் வரச் சொன்னார். என் உதட்டோடு உதடாக முத்தமிட்டார். பயப்படாதே, இது நல்ல வாய்ப்பு, இதற்காக பலர் மாதக் கணக்கில் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் கிடைக்காதது உனக்குக் கிடைத்திருக்கிறது என்றார். பேன்ட் ஜிப்பை அவிழ்த்து, அந்தப் பாகத்தில் கை வைத்தார். ஆனால் என்னுடைய அது எழும்பவில்லை. காரணம் எனக்கு செக்ஸில் ஆர்வ மில்லை.

நான் மிகவும் வெறுத்துப் போனேன். அது ரொம்ப தளர்வா இருக்கு. ஆற்றலை வீணாக்காதே என்று அசிங்கமாகப் பேசினார். அன்றுதான் அவர் சுய ரூபத்தைப் புரிந்துகொண்டேன்.

என்ன நிலை: சேத்தி ம்யூனிச்சில் பாபாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய் திருக்கிறார். ஆசிரமம் இந்த விஷயத்திலும் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.

ஸ்வீடனின் கானி லார்சான் 21 வருடங் களாக பாபா பக்தர். அவரது குற்றச்சாற்றுகளின் ஒரு பகுதி லண்டன் த டெய்லி டெலிகிராப் நாளிதழில் அக்டோபர் 20 அன்று வெளியானது.
குற்றச்சாற்றுகள் (இந்தியா டுடேயிடம் கூறியபடி):

பாபா என்னை பல தனிப்பட்ட நேர்காணலுக்காக அழைத்தார். அவர், தான் கடவு ளென்றும் எனது பிரச்சினைகளைத் தீர்க்க உதவுகிறேன் என்றும் சொன்ன போது நம்பினேன். ஆனால் அவர் எனது பிறப்புறுப்புகளைத் தொட்டு எண்ணெய் பூசிவிட்டார். மைதுனம் செய்துவிட்டார்.

அவருக்கும் அதையே செய்யுமாறு என்னையும் கேட்டார். அவர் என்னோடு பலமுறை ஓரல் செக்ஸிலும் ஈடுபட்டார். அவர் என்னிடமும் அப்படியே செய்யும்படி கேட்டபோது நான் பின்வாங்கினேன்.

நிலைமை: முறையான புகார் பதிவு செய்யப்படவில்லை. ஆசிரமம் வாய் திறக்க மறுக்கிறது.

நிழல் ஆட்டம்


சர்ச்சை என்பது சாய்பாபாவுக்கு இன்னொரு பெயர். ஒன்றுகூட நிரூபிக் கப்படவில்லையென்றாலும் அவர்மீது அடுக்கடுக்கான குற்றச்சாற்றுகள் கூறப்பட்டுள்ளன.

கோடையில் ரத்தக்களரி: 1993 ஜூன் 6 அன்று பாபாவின் ஆசிரமத்தில் துப்பாக்கிக் குண்டுகள் பறந்தன. அசம்பாவிதத்தால் நான்கு பக்தர்கள் கொல்லப்பட்டார்கள். அது தெய்வீக மனிதன்மீதான கொலை முயற்சி என்று கூறப்பட்டது.

இதுபற்றி ஏராளமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. போலீஸ் ஏன் நால்வரைக் கொன்றது? நீண்ட கால பக்தர்கள் 4 பேர் திடீரென தங்கள் கடவுளுக்கெதிராகத் திரும்பிய தேன்? 4 கொலையாளிகளும் பாபாவின் அறையில் கத்தியோடு நின்றிருந்ததால் தங்களுக்கு வேறு வழியில்லை என்று போலீஸ் தமது செயலை நியாயப் படுத்துகிறது. வழக்கம்போல் பாபா மவுனம் சாதித்தார்.

புத்தகப் பதிவு


1980_களின் நடுவில் தான் ப்ரூக் அவதார் ஆஃப் நைட் நூலை எழுதி னார். பாபாவின் 20 வருடங்களுக்கு முந்தைய காம லீலைகளை அவர் விவரித்திருந்தார். பாபாவின் பக்தர்கள் அதை மறுத்தார்கள். பணம் சம்பாதிக் கும் குறுக்கு வழி என்று குறிப்பிட் டார்கள்.

இப்போது அதன் இரண் டாம் பதிப்பு வந்திருக்கிறது.

பாபாவுக்கு எதிராக செக்ஸ் குற்றம் சுமத்தும் முன்னாள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகிறது. வெளி நாட்டவர்கள் மட்டுமின்றி இந்தியர் களும்கூட அவ்வாறு புகார் கூறுகி றார்கள். ஆனால், புகார் கூறும் யாரும் இந்தியாவில் வசிக்கவில்லை.

எந்தக் குற்றச்சாற்றுக்கும் சாய்பாபா ஆசிரமத்திடமிருந்து பதில் இல்லை.
(இந்தியா டுடே டிசம்பர் 6, 2000)

எவ்வளவு அருவருப்பான மனிதத் தன்மைக்குச் சற்றும் பொருந்தாத கேவலமான மனிதர் இந்தப் பேர் வழி என்று உணர்ந்து கொள்ள இன்னும் தயக்கமா?

ஒழுக்கத்தைப் பாழடிக்கும் பக்தி, அறிவை அபகரித்து அறியாமைக் குழிக்குள் நம்மைத் தள்ளும் பக்தி போதை யிலிருந்து விடுபட வேண்டாமா? ஆண் சேர்க்கையில் ஈடுபடும் அசல் அய்யப்பன் - இந்த சாய்பாபா

எய்ட்ஸ் நோய் தடுப்புப் பிரச்சாரம் ஒருபுறம்; மற்றொருபுறம் ஆணை ஆணே விரும்பி குழந்தை பெற்றதாக அரி _ அரன் _ புத்திரன் அய்யப்பன் என்ற ஆபாச அய்யப்பன் பூஜை அவனி எங்கும்! புட்டபர்த்தி சாய்பாபா என்ப வர் நிஜ அய்யப்பனாகவே _ அதிலும் உலக மயம், தாரளமயம், (புட்டபர்த்தி ஆசிரமத்திற்கு உரியதான) தனியார் மயம் என்பதுபோல வெளிநாட்டு ஆசாமி தேர்வு செய்து தேசிய , பன்னாட்டு அமலாக்கம் செய்து வருகிறார் போலும்!

இந்தியர்கள் என்பவர்களின் கடவுள் அவதாரங்களும், குரு, சிஷ்ய பாரம் பரியமும் எப்படிப்பட்ட யோக்கியதை உடையவர்களாக இருக்கின்றனர் என்று உலகம் நம்மீது காரித் துப்பாதா என்பதை உண்மையாக தேச பக்தி மனித பக்தி கொண்ட மக்கள், விருப்பு, வெறுப்பின்றி சிந்தித்து பக்தி போதை யிலிருந்து தெளிவு பெறவேண்டும்.

ஆரிய காட்டுமிராண்டித்தனம்


ஆண் ஆணுடன் இச்சை கொண்டு தனது காம விகாரத்தைத் தீர்த்துக் கொள்ளுவதற்கு புட்டபர்த்தி சாயிபாபா என்ற பெயரில் உலவும் பழைய சத்திய நாராணராஜு அர்த்தமுள்ள இந்து மதத்தினையேகூட முன் மாதிரியாகக் காட்டக் கூடும்.

இதோ சில ஆதாரங்கள்:


1. சூரியனுடைய ரத சாரதியின் பெயர் அருணன். இவன் இரு கால்களும் அற்ற முடவன். தாயால் அவயங் காக்கப்பட்ட முட்டையிலிருந்து வந்த இவன் இந்திர சபை வினோதங் காண் பதற்கென்று பெண் வேடம் பூண்டு அங்குச் சென்றான். இதைக் கண்ட இந்திரன் பெண் வேடத்திலிருந்த அருணனை மோகித்துப் புணர்ந்தான். இதனால் வாலி என்பவன் பிறந்தான். இந்நிகழ்ச்சியில் அருணன் வேலைக்குத் தாமதித்து வர, சூரியன் காரணம் கேட்டு நடந்ததை அறிந்து, மீண்டும் அருணனைப் பெண் வேடத்தில் வர வேண்டி, அவன் அப்படியே வர, அவனைச் சூரியன் புணர்ந்தான் _ இதனால் சுக்ரீவன் என்பவன் பிறந்தான்.

2. நாரதர் என்னும் மகரிஷி ஒரு நாள் பெண் வேடம் தாங்கியிருக்க அதைக் கண்ட கிருஷ்ண பரமாத்மா நாரதனைக் கண்டு மோகித்துப் புணர, அதன் பயனாய் 60 பிள்ளைகள் நாரதருக்குப் பிறந்தார்கள்.

3. தவ வலிமை மிக்க பஸ்மாசுரன், சிவன் தலையில் கையை வைத்து அழித்துவிட நாடியபோது மகா விஷ்ணு, மோகினி வேடம் பூண்டு பஸ்மாசுரனை மயக்கி, அவன் கையை அவன் தலையிலேயே வைத்து எரிந்து போகுமாறு செய்தபின், அந்த மோகினி வேடத்திலிருந்து விஷ்ணுவை உயிருக் குப் பயந்து அய்வேலங்காயில் ஒளிந்திருந்த சிவன் மோகித்துப் புணர, அதன் பலனாக அரிஹர புத்திரன் பிறந்தான்.

இவை ஆணை ஆண்புணரும் வழக்கம் ஆரியக் காட்டுமிராண்டிக் கற்பனைகள் என்பது புரியவேண்டும்.

திருவண்ணாமலையில் ஓர் ஏமாற்றுப் பேர்வழி!


இன்னொரு செய்தி: திருவண்ணா மலை விசிறி சாமியார் என்ற ஒரு வடநாட்டுச் சாமியாரிடம் ஓடும் நீதிபதிகளும், நிருவாக அதிபதிகளும். தலைவர்களும், டாக்டர்களும், ஏராளம் ஏராளம்! அவருக்குப் புற்றுநோய் வந்து, அவர் தனியார் மருத்துவ மனையொன்றில் அறுவைச் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார்.

அவர் திரும்பும்போதும், அந்த மருத்துவமனைக்கே பக்தர்கள் படையெடுத்து அவரிடம் ஆசி வழங்கக் கேட்டு, ஆசி பெற்றார்களாம்.

தன்னுடைய நோயையே அவர் குணப்படுத்த முடியாமல்தானே, அறுவைச் சிகிச்சைக்கு மருத்துவ மனைக்கு வந்தார். அவரிடம் உள்ள சக்தி புரியவில்லையா?

மழைக்காகக் கழுதைக்கும் -
கழுதைக்கும் கல்யாணமாம்!


மழை வேண்டி கழுதைகளுக்குத் திருமணம் செய்திடும் மக்கள் திருமணத் தடையின்றி பெண் கிடைக்க, கல்யாணி கழுதையைத் தேடி ஓடிட ஆலோசனை கூறும் கேரள ஜோதிடம், தமிழ்நாடு அரசின் குடிநீர் வடிகால் வாரியமே மழை வேண்டி யாகம் மற்றும் சில தலைவர்கள் தங்கள் ஆசைகளைப் பூர்த்தி செய்ய யாகம் என்பதெல்லாம் எவ்வளவு கேலிக் கூத்து!

21ஆம் நூற்றாண்டில் காலடி வைக்கவேண்டிய நாம் மீண்டும் இரண்டாம் நூற்றாண்டுக்கல்லவா பின்னோக்கிச் செல்லுவதாக உள்ளது! மகாமகா வெட்கக்கேடு!


மக்களே சிந்தியுங்கள்!

ஒழுக்கத்திற்கும், நாணயத்திற்கும், அறிவுக்கும் கேடு பயக்கும் பக்தி தேவையா? சிந்தியுங்கள் _ எனதருமை தமிழ்ப் பெரு மக்களே!

---------------------திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் எழுதிய
சாய்பாபாவின் மறுபக்கம் எனும் நூலிலிருந்து

பார்ப்பனர் தமிழரை அடிமையாக்குவதெப்படி?


நெருக்கடி என்றுமில்லா நெருக்கடி

நம்நாட்டுப் பார்ப்பனீயமானது "தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து இப்போது மனிதனைக் கடிக்க வந்துவிட்டது" என்பது போல் உத்தியோக வேட்டை ஆடி, பிறகு நம் பிரமுகர்களையும் நமது ஸ்தாபனங்களையும் ஒழிக்க முயற்சியெடுத்து வெற்றி பெற்று பதவியும் ஆதிக்கமும் பெற்றவுடன் இனி என்றென்றும் தமிழ் மக்கள் சமூகமே தலையெடுக்க வொண்ணாதபடி செய்வதற்கு பல வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்த முறைகளை திரை மறைவில் கையாடி வந்து இன்று வெளிப்படையாகவே வெளிவந்து ஹிந்தி என்ற கத்தியுடனும், வார்தா கல்வித்திட்டம் என்ற சூலாயுதத்துடனும் நின்றுகொண்டு தமிழர்களை வெட்டியும் குத்தியும் கொன்று புதைக்க முனைந்து விட்டது.

பார்ப்பனீயப் போராட்டம்

தமிழ் மக்களில் எவருடைய ஆக்ஷேபணையையும் எப்படிப் பட்டவர்களுடைய கூக்குரலையும், யாருடைய அழுகையையும் லசயம் செய்யாமல் ஒரே அடியாய் "சம்ஹாரம் செய்து விட்டுத்தான் அமருவேன்" என்ற ஆணவத்துடன் அது (பார்ப்பனீயம்) தலைவிரித்தாடுகிறது. தமிழனுக்கு இன்று கதி இல்லை, நாதி இல்லை, நடுத்தெருவில் பெண்டு பிள்ளைகளுடன் இழுத்துப் போட்டு உதை உதை என்று உதைத்தாலும், அடி அடியென்று அடித்தாலும், பெண்டு பிள்ளைகளை நிர்வாணத்துடன் புரட்டிப் புரட்டி மானபங்கப்படுத்தினாலும் ஏன் என்று கேட்க ஆளில்லாமல் போய்விட்டது என்று கருதும்படியான சந்தர்ப்பமும் ஏற்பட்டு விட்டது.

தமிழ்ப் பிரதிநிதிகள் துரோகம்

தமிழன் பிரதிநிதி, தமிழ் நாட்டின் பிரதிநிதி என்று வேஷம் போட்டு வெளிவந்து தமிழ் மக்களை ஏமாற்றி காசு, பணம், பதவி, பட்டம் பெற்று பெரிய மனிதனான மக்களில் பெரும்பாலோர் இன்று தம் சமூகத்தை காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கவும், உயிர் வாழவுமான இழி நிலைக்கு வந்து விட்டார்கள். தாம் தமிழர் தமிழ்மக்கள் சந்ததி என்கின்ற சாக்கை சொல்லி உத்தியோகம் பெற்று பணம் தேடி அதனால் தங்களது பிள்ளைக்கும் குட்டிகளுக்கும் உத்தியோகமும், மேன்மையும் தேடிக்கொண்ட தமிழ் மக்கள் இன்று தமிழ் மக்களுக்கு வந்துள்ள இம் மாபெரும் நெருக்கடியைப் பார்த்துக் கொண்டு அறியாதவர் போல் மாய்மாலம் செய்து எதிரிகளின் கால் பெருவிரலை சூப்பிக்கொண்டு தனது வாழ்வில் சுயநல வேலையில் ஒரு இம்மியளவும் குறைவராமல் பார்த்துக் கொள்ளும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

எதிரிகளுக்கு உதவி

அரசியல் மன்றங்களுக்கும் மற்றும் பிரதிநிதி ஸ்தாபனங்களுக்கும் தமிழன் பேரால் தமிழ் மக்கள் பிரதிநிதியாய் ஆவதற்குத் தன்னை உண்மைத் தமிழ் மகன் என்று சொல்லிக் கொண்டு தமிழர்களின் வாக்குகளைப் பெற்று பிரதிநிதி ஸ்தானம் அடைந்த தமிழ் மக்கள் இன்று தாம் தமிழ் மக்கள் என்பதை மறந்ததோடு மாத்திரமல்லாமல் தமிழர்களின் எதிரிகளிடம் சரண் புகுந்து அவ்வெதிரிகள் தமிழ் மக்களுக்குச் செய்யும் கொடிய வஞ்சகங்களை அலட்சியமாய்க் கருதி அவர்களுக்கு உதவி செய்து தன் சமூகத்தையே ஒழிக்க கத்தி தீட்டிக் கொடுப்பதான இணையில்லா இழிதொழில் செய்து வயிறு வளர்த்து வாழ வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள் என்றால், தமிழ் மக்கள் இது சமயம் சக்தியற்று நாதி அற்றுக் கிடக்கிறார்கள் என்பதற்கு இதைவிட என்ன எடுத்துக்காட்டு வேண்டும் என்று கேட்கின்றோம்.

மாஜி மந்திரிகள் என்ன செய்கிறார்கள்?

வெளிப்படையாகவே பேச ஆசைப்படுகிறோம். இன்று தமிழ் மக்களுக்கு இந்தியாவிலும், வார்தா கல்வித்திட்டத்தாலும் ஆபத்து இல்லை, கேடில்லை, தமிழன் மனிதத் தன்மையோடு வாழுவதற்கு தடையில்லை என்று எந்த தமிழ் மாஜி மந்திரியாவது கருதுகிறாரா? இல்லையே. எல்லா மாஜி மந்திரிகளும் ஒரு முகமாக இந்தியும் வார்தா கல்வித் திட்டமும் தமிழனுக்கு கேடு என்றும் தமிழன் தன்மானத்துக்கு தடையென்றும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டாய் விட்டது. இந்நிலையில் அந்த மாஜி மந்திரிகள் அக் கொடுமையிலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற என்ன முயற்சி செய்தார்கள்? செய்கிறார்கள்? செய்ய முன் வருகிறார்கள்? என்று கேட்கின்றோம்.

தமிழ் உத்தியோகஸ்தர்கள் செய்வதென்ன?

மற்றொரு சமயம் தனித்தனியாக இவர்களது சதிகளையும் வஞ்சகங்களையும் சுயநல வேட்டைகளையும் எடுத்துக் காட்டுவோம். இனி அடுத்தாப்போல் தமிழன் என்ற காரணத்தால் உத்தியோகம் பெற்று மேற்பதவி அடைந்து பெரிய பட்டம் பெற்ற தமிழனும் இன்று பெரும் பதவியில் இருக்கும் தமிழனும் இந்நெருக்கடிக்கு என்ன உதவி செய்கிறார் என்று ஒவ்வொரு பெரிய (தமிழ்) உத்தியோகஸ்தனையும் பற்றி நினைத்துப் பாருங்கள். அதைப்பற்றியும் பின்னால் எழுதுவோம்.

இன்று இரு சட்டசபையிலும் தமிழனுக்கு பிரதிநிதியாய் பார்ப்பானுக்கு காங்கரசுக்கு எதிர்க்கட்சியில் இருப்பதாய் சொல்லிக் கொள்ளும் தமிழர்களின் யோக்கியதைதான் என்ன? அதையும் பற்றி பின்னால் குறிப்பிடுவோம்.

காங்கரஸ் தமிழர்கள் நிலை என்ன?

"மற்றும் தேசத்துக்கு விடுதலை சம்பாதிக்கும் கட்சி காங்கரஸ்தான்" என்று சொல்லிக் கொண்டு பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு தமிழ் மக்கள் ஸ்தாபனத்தையே சீர் குலையச் செய்ய சம்மதித்து பார்ப்பனர்களை தஞ்சமடைந்து வயிறுவளர்க்கும் தமிழ் மக்கள் தானாகட்டும் தமிழனுக்கு ஏற்பட்ட இந்த மிகமிக நெருக்கடியான சமயத்தில் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். தோழர் டி.ஏ. ராமலிங்க செட்டியார் முதற்கொண்டு ஒவ்வொருவருடைய யோக்கியதையை முதலில் எடுத்துக்கொள்ளுவோம். இவர்கள் தான் என்ன செய்கிறார்கள்? தோழர் செட்டியார் தன்னை தமிழ் மகன் என்றும் தான் தமிழபிமானி என்றும் சொல்லிக்கொண்டு எவ்வளவு பெருமை பெற்றார் என்றெல்லாம் பார்ப்போமானால் தமிழனின் நிர்க்கதி விளங்கவில்லையா என்று கேட்கின்றோம். ஏன் இதை குறிப்பிடுகிறோம். ஏன் நமது பலவீனத்தையும் குறைகளையும் குற்றங்களையும் எடுத்துக்காட்டுகிறோம் என்று சிலர் கருதக்கூடும். ஏனெனில் நம் காலிலேயே நாம் நிற்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதை ஞாபகமூட்டவும் பாமர மக்களும் நம் வீர வாலிபர்களும், நேரடியில் அப்பெரியார்கள், பிரமுகர்கள் என்பவர்களை எதிர்பாராமல் இந் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்பதைத் தெரிவிக்கவுமே இதை எழுதுகிறோம்.

தமிழன் செய்ய வேண்டியதென்ன?

தமிழன் என்கின்ற உண்மை உணர்ச்சி யார் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் ஒவ்வொருவரும் இந்நெருக்கடி தீரத் தங்களால் என்ன செய்யமுடியும் என்பதைப்பற்றி தீவிர யோசனை செய்ய வேண்டும். ஹிந்தியை ஒழிப்பதற்கு மாத்திரமல்ல நாம் செய்யப் போகும் போராட்டம் என்பதையும் தாங்கள் யோசனை செய்வதற்கு முன் மனதிலிருத்திக் கொள்ள வேண்டும். பார்ப்பனீயக் கொடுமையில் இருந்து நாமும், நம் பின் சந்ததிகளும் தப்புவதற்கு ஆக செய்ய வேண்டிய அரிய முயற்சிகளைப் பற்றி யோசிக்கிறோம் என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் கருதி சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்த ஆசைப்படுகிறோம். அப்படி சிந்திக்கும்போது ஒவ்வொரு தமிழ் மகனும் தனது தன்மானத்தையும் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.

பார்ப்பனர் தமிழரை அடிமையாக்குவதெப்படி?

அதாவது 100-க்கு 3 பேராயுள்ள ஒரு சமூகம் அதாவது பார்ப்பன சமூகமோ, ஆரிய சமூகமோ, வைதீக சமூகமோ அல்லது பிச்சையெடுத்து வயிறு வளர்க்கும் புரோகித சமூகமோ எதுவானாலும் சரி அந்தச் சிறு சமூகம் இவ்வளவு பெரிய மாபெரும் சமூகமாகிய பழம் பெரும் குடிகளாகிய தமிழ் மக்களை சமுதாயத்தில், பொருளாதாரத்தில் ஆத்மார்த்தம் என்பதில் இவ்வளவு கீழாக இழிவாக தாழ்மையாக அழுத்தி வைத்து ஆதிக்கம் செலுத்த முடிகின்றது என்பதைச் சிந்திக்க வேண்டும். இக்கூட்டம் 100க்கு மூன்றே எண்ணிக்கை கொண்டதாக இருந்தாலும் இந்த 100க்கு மூன்றும் கெட்டியாகவும் - கட்டுப்பாடாகவும் - தன் சமூக நலனுக்கு உயிரைத் தவிர வேறு எதையும் தியாகம் செய்து பாடுபட வேண்டும் என்கின்ற ஒரே கொள்கையை உண்மையாய் கடைப்பிடித்து கட்டுப்பாடாய் உழைக்கும் சமூகமாய் இருந்து வருவதினாலேயே 100க்கு 97 கொண்ட சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

தமிழன் நிலைமை

தமிழன் எண்ணிக்கையில் 100க்கு தொண்ணூறாய் இருந்தாலும் என்ன பயன்? அவன் பொருளாதாரத் துறையில் சர்வத்தையும் பார்ப்பானுக்கு அழுது விட்டு "மோக்ஷத்தில் இடம்" தேடிக்கொள்ள கற்பிக்கப்பட்டவனாகி விட்டான். சமுதாயத் துறையில் பார்ப்பானுக்கு தொண்டு செய்து தன்னையே பார்ப்பானுக்கு அற்பணமாக்கி பார்ப்பான் கால் கழுவிய நீரை தீர்த்தமாக உட்கொண்டு அதன் மூலம் தான் தினந்தோறும் செய்யும் "பாவத்துக்கு" மன்னிப்புத் தேடிக் கொள்ள வேண்டியவனாக ஆகிவிட்டான்.

பார்ப்பனர் உயர்வுக்குக் காரணம்

அரசியல் துறையிலும் பார்ப்பானையே தலைவனாக்கி பார்ப்பானுக்கு ஊழியனாக இருந்து பார்ப்பானை தலைமை மந்திரியாக்கி அவன் மூலம் ஆட்சி "விடுதலை" பெற அடிமைத்தொழில் செய்ய வேண்டியவனாக ஆகிவிட்டான். இப்படிப்பட்ட இந்த கேவல நிலையிலும் ஒரு தமிழனுக்கு தோன்றும் எண்ணம் மற்றொரு தமிழனுக்கு பிடிக்காது, ஒரு தமிழன் மேல் நிலையில் இருப்பது மற்றொரு தமிழனுக்கு சகிக்காது. எந்த நிலைமையிலும் ஒருவனுக்கொருவன் ஏறுமாறு நடத்தையை கொண்டவனாக இருக்கிறான். ஆனால் பார்ப்பானோ, ஆரியனோ, புரோகிதனோ அப்படியில்லை. தென்கோடி கன்னியாகுமரியில் உள்ள "ஒரு ஒழுக்கங் கெட்ட" பார்ப்பானுக்கு தன் சமூக பாதுகாப்பு விஷயமாய் மற்ற சமூக மக்களை அடக்கி ஒடுக்கி ஆதிக்கம் செலுத்தும் விஷயமாய் "ஒரு அபிப்பிராயம் தோன்றுமேயானால் அதே சமயத்தில் வடகோடி இமயமலை உச்சியில் இருக்கும் ஒரு "தவசிரேஷ்ட" பார்ப்பானுக்கு அதே அபிப்பிராயம் தோன்றி செயலில் இறங்கி விடுவான். இந்த ஒரு குணமே பார்ப்பனர் எண்ணிக்கையில் உழைப்பில் முறையே எவ்வளவு சிறிய தொகையாகவும் சோம்பேறிகளாகவும் இருந்தாலும் அவர்கள் பாடுபடாமல் மேன்மையான நிலையில் இருந்து கொண்டு மற்ற சமூகங்களின் மீது ஆதிக்கம் செலுத்தவும் மற்ற சமூகங்களை என்றென்றும் தலையெடுக்க வொட்டாமல் செய்து அழுத்தி வைக்கவும் முடிகின்றது.

ஹிந்திப்போர் நோக்கம்

இதிலிருந்து தமிழ் மக்கள் தப்பவேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டே இந்த ஹிந்திப் போரை நடத்த வேண்டுமேயொழிய கேவலம் ஹிந்தி ஒழிந்தால் மாத்திரம் போதும் என்கின்ற அற்ப ஆசையால் அல்ல என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் உணரவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

ஹிந்திப் போரானது பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க தமிழனின் தன்மானத்தைக் காக்க கிடைத்த ஒரு ஒப்பற்ற ஆயுதம் என்பதாகக் கருதி ஒவ்வொரு தமிழனும் அதில் பங்கு கொண்டு அந்த ஆயுதத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறோம்.

1922-ல் ஆச்சாரியார்

இன்று இந்நாட்டு அரசியல் தலைவராகவும், அரசாங்க முதல் மந்திரியாகவும், சமுதாயத்தில் மேல் ஜாதிக்காரர் என்பவராகவும் இருக்கிற நமது தோழர் கனம் ஆச்சாரியார் அவர்கள் ஒரு காலத்தில் அதாவது 1922ம் வருஷத்தில் திருப்பூரிலும், தர்மபுரியிலும் சொன்ன சில அகம்பாவமான வார்த்தைகளை இன்று தமிழ் மக்களுக்கு எடுத்துக் காட்டுகிறோம். (இவை முன்னமும் இரண்டொரு சமயம் எடுத்துக் காட்டிய விஷயங்களேயாகும்.)

அதாவது 1922-ல் திருப்பூர் தமிழ்நாடு மாகாண மகாநாட்டில் கோவில் பிரவேச சம்மந்தமாக வந்த தீர்மான விவாத விஷயமாகவும் தோழர் வரதராஜணலு நாயுடு அவர்கள் தலைமையில் நடத்த தர்மபுரி தாலூகா அரசியல் மகாநாட்டில் கோவில் பிரவேச விஷயமாய் வந்த தீர்மான சம்மந்தமாகவும் நடந்த வாதப்பிரதி வாதங்களில் பார்ப்பனீயத்தைத் தாக்கிப் பேசிய விஷயங்களைப் பற்றி அங்கேயே பின்னால் சாவகாசமாக நடந்த சம்பாஷணைகளின் போது ஆச்சாரியார் அவர்கள் சொன்ன வார்த்தைகளை ஞாபகமிருக்கும்வரை அப்படியே எடுத்துக்காட்ட ஆசைப்படுகிறோம். அதாவது "பார்ப்பன ஆதிக்கம் நீங்கள் கருதுகிறபடி அவ்வளவு சுலபத்தில் ஒழிக்கக்கூடியதல்ல. அதை ஒழிக்க சரித்திர காலங்களில் புத்தரால் ஒரு கை பார்த்தாய்விட்டது, புராண காலங்களில் மகாவலிமை பெற்ற பல அரசர்களாலும் ஒரு கை பார்த்தாய்விட்டது. இவ்வளவையும் சமாளித்துக்கொண்டு நீங்கள் ஒழிக்க கருதும் பார்ப்பன ஆதிக்கம் இன்று உயிர் வாழ்கின்றது. அப்படிப்பட்டதை நீங்கள் ஒழிக்க வேண்டுமென்று கருதினால் அது ஆகக்கூடிய காரியமா" என சொன்னதோடு "அப்படி பார்ப்பனராதிக்கத்தை அழிக்கும் வேலையில் ஈடுபடுகிறவர்கள் தங்களைத்தான் ஒழித்துக் கொள்வார்கள்" என்றும் சொன்னார். இவ்வளவு வலிமையுடன் அவர் பேசிய காரணம் பார்ப்பன சூழ்ச்சிக்கு இருக்கும் சக்தியையும் (தமிழ் மக்களுக்குள் இருக்கும் தன்மானமற்ற தன்மையையும்) தமிழ் மக்களுக்கு மதத்தின் பேரால் பார்ப்பனீயம் ஊட்டி இருக்கும் அடிமைத் தன்மையையும் நன்றாய் உணர்ந்து பார்த்துக் கூறியதேயாகும்.

தமிழர் விடுதலை பெற வேண்டுமானால்?

இந்த ஹிந்தி எதிர்ப்பின் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற வேண்டுமானால் அவன் சரீரத்தில் ஓடும் பார்ப்பன மத உணர்ச்சி ரத்தம் அவ்வளவும் வெளியாக்கப்பட்டு புதிய சுதந்திர அறிவு ரத்தம் பாய்ச்சப்பட்டு ஆகவேண்டும்.

ஏனெனில் பார்ப்பனீயம் இன்று ஹிந்தியை தமிழ் மக்களுக்குள் கட்டாயமாக புகுத்த வேண்டும் என்கின்ற மூர்க்கப் பிடிவாதத்தைக் கொண்டிருப்பதின் உண்மைக் கருத்து என்ன வென்றால் அரசியலுக்கு அல்ல, பொருளியலுக்காக வல்ல அல்லது பார்ப்பனர்களுக்கு வேலையில்லாத திண்டாட்டத்தை ஒழிப்பதற்கு என்பதற்காக அல்ல இவைகளுக்காக என்று சொல்லுவதும் நம்மை கருதும்படி செய்வதும் நம்மை ஏமாறச் செய்வதற்காகவே யாகும்.

ஹிந்தி புரட்டின் அந்தரங்க நோக்கம்

மற்றபடி உண்மையான காரணம் என்னவென்றால் இன்று தமிழ் மக்கள் பெரும்பாலோருக்குள் ஏற்பட்ட சுயமரியாதை உணர்ச்சியால் ஆட்டம் கொடுத்து இருக்கும் பார்ப்பனீய மத உணர்ச்சியை தமிழ் மக்களுக்குள் மறுபடியும் சரியானபடி புகுத்தி அதை கெட்டிப் படுத்தி பார்ப்பனீயத்துக்கு தமிழ் மக்களை புராண காலம் போல நிரந்தரமாய் அடிமையாக்குவதற்காகவேயாகும். அதனால்தான் சோழவந்தான் ஹிந்தி எதிர்ப்பு மகாநாட்டில் அதன் தலைவர் "ஹிந்தியை கட்டாய பாடமாக ஆக்கப்படுவதை ஒழித்தால் போதாது. ஹிந்தியை கட்டாய பாடமாக்க வேண்டும் என்பதற்கு உள்ள உள் காரணங்களை ஒழிக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

அரிய சந்தர்ப்பம்

ஆதலால் தமிழ்மக்களுக்கு ஹிந்திப் போர் ஒரு கிடைத்தற்கரிய பாக்கியம் என்றே ஒவ்வொரு தமிழ் மகனும் கருத வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். இது போன்ற ஒரு பயனளிக்கத்தக்க போராட்டம் இனி சுலபத்தில் ஏற்படும் என்று எந்த தமிழ் மகனும் லேசில் கருதமுடியாது என்பதோடு இது அவ்வளவு சுலபமானதும் அவ்வளவு பெரிய பயனை அளிக்கக்கூடியதுமான ஒரு அரும்பெரும் போராட்டமாகும். அதிக காலம் நீடிக்காது அதிக துன்பமும் தொல்லையும் இருக்காது. அதிக பண நட்டமும் கூட இருக்காது என்று சொல்லத் தகுந்த ஒரு போர் என்றே சொல்லுவோம். ஆகவே இப்படிப்பட்ட ஒரு அருமையான சந்தர்ப்பத்தை எந்த தமிழ் மகனும் இழந்துவிடாமல் ஆங்காங்கு உள்ள தமிழ் மக்கள் ஆங்காங்கு அதாவது எந்த எந்த ஊர்களில் உள்ள பள்ளிக் கூடங்களில் ஹிந்தி புகுத்தப்படுகிறதோ ஆங்காங்குள்ள தமிழ் மக்கள் இப்போதே ஹிந்தி எதிர்ப்பு கமிட்டி போட்டு அங்கத்தினர்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு ஹிந்தி எதிர்ப்புத் தலைமைக் கமிட்டியாரிடமிருந்து என்ன கட்டளை வருகிறதோ என்று எதிர்பார்த்துக் கொண்டு சகல தியாகத்துக்கும் தயாராய் இருக்க வேண்டுகிறோம்.

சென்னை எதிர்ப்பு

சென்னையில் ஒரு தோழர் உண்ணாவிரதம் என்னும் பட்டினி நோன்பு இருக்கிறார். மற்றும் பல தோழர்கள் கிளர்ச்சிக் கூட்டம் முதலியன போட்டு பேசி கிளர்ச்சி ஊர்வலம் முதலியன செய்கிறார்கள் - கூடிய சீக்கிரத்தில் இவைகள் இன்னும் ஒவ்வொரு துறையிலும் பெருகலாம். நடைமுறைக்காகவும் கிளர்ச்சிக்காகவும் என்று பல தக்க வழிகளை கமிட்டியார் ஆராய்ந்தெடுப்பார்கள். அனேகமாக சென்னை காரியங்கள் தோழர் சி.டி. நாயகம் அவர்களது ஆலோசனையிலும் மேற்பார்வையிலும் நடைபெறக் கூடும்.

இம்மாதம் முடிவுக்குள் ஹிந்தி எதிர்ப்பு கமிட்டி கூட்ட தோழர் விசுவநாதம் அவர்கள் நாள் குறிப்பார். அதற்குள் இன்னும் அனேக தொண்டர்கள் பதிவு செய்து கொள்ள ஆசைப்படுகிறோம். பெண்மணிகளும் தாராளமாய் வேண்டும்.

பண உதவி

பண விஷயத்தில் ஒவ்வொரு தமிழ் மகனும் தாராள நோக்கம் கொண்டு பணத்தை காரியதரிசி விசுவநாதம் அவர்களுக்கு அனுப்பி கொடுக்க வேண்டும். பொதுவாக காரியங்கள் ஒரு கை முறையாக நடத்தப்பட வேண்டும் என்பது நமது ஆசை. தனித்தனியாக பணம் வசூலிப்பது தனித்தனியாக அறிக்கைகள் விடுவது தனிதனியாக காரியங்கள் துவக்கப்படுவது முதலிய காரியங்கள் அவ்வளவு வலுவைக் கொடுக்கும் என்று கருத முடியவில்லை.

எதிர்ப்பு முறை

ஒவ்வொரு ஊரிலும் ஹிந்தி எதிர்ப்பு சங்கம் இருக்க வேண்டும். அவை தலைமை சங்கத்துடன் சம்மந்தம் வைத்துக் கொள்ள வேண்டும். தீவிர செயல்கள் ஆற்றுவதற்கு துணிவும் சக்தியும் உள்ள அங்கத்தினர்கள் அக் கமிட்டிகளில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கமிட்டிகள் பேரால் தொகை வசூலித்து பத்திரப்படுத்தி சிக்கனமாய் செலவழிக்கவேண்டும். தொண்டர்களையும் அவர்கள் ஆற்றும் செயல்களையும் அவர்கள் மற்ற ஜனங்களிடம் நடந்து கொள்ளும் நடத்தைகளையும் பொதுஜனங்கள் கண்ணியமாகவும் பச்சாதாபப்படும் படியாகவும் அன்பும் ஆதரவும் காட்டும்படியாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆவலோடு எதிர்பார்த்து வணக்கத்தோடு கேட்டுக் கொள்ளுகிறோம். தயார்! தயார்!! போர் நெருங்கி விட்டது!!! வெற்றி நிச்சயம்!!!!

---------------"குடி அரசு" - தலையங்கம் - 15.05.1938

27.5.11

தற்காலம் நமக்கு வேண்டியதென்ன? - பெரியார்தற்காலம் நமது நாட்டிற்கு வேண்டியது. வர்ணாசிரமமாகிற மக்களுக்குள் (ஆண்டானடிமை உயர்ந்தோன், தாழ்ந்தோன் வேறுபாடுகளை விருத்தி செய்கிற) வெறியைக் கிளப்ப மக்களுக்குள் பரப்பி வர வேண்டுமா? அல்லது மக்கள் யாவரும் பிறப் பினால் உயர்வு தாழ்வு இல்லை என்கின்ற சமத்துவக் கொள்கைகளைக் கிளப்பி அவைகளை மக்களுக் குள் பரப்பி வரவேண்டுமா? ஆகிய இந்த இரண்டு கேள்விகளைப் பற்றி நமது மக்கள் நிலைமையையும், அந்தஸ்தையும் பற்றியும் யோசித்து தற்காலம் இவ்வித வேறுபாடுகளை ஒழித்து வந்திருக்கிற அந்நிய நாட்டு மக்கள் நிலைமையையும் அந்தஸ் தையும் கவனித்துப் பார்த்தால் நம் நாட்டின் மக் களுக்கு இத்தருணத்திற்கு வேண்டியது எது என்பது விளங் காமற் போகாது.

ஆகையால் வர்ணாசிரம ஒழிந்த சமத்துவக் கொள்கையாகிற நன்மருந்தே இன்றியமையாத சாதனமாகும். ஏனெனில். நம் நாட்டு மக்களை வெகு காலமாகப் பிடித்து அடிமை, அறியாமையாகிய கொடிய நோய்வாய்ப்படுத்தி உருவழித்து வரும் சமயம், ஜாதி, ஆச்சிரமம் முதலியவைகளுக்கு தற்காலிகத்திற்கேற்ப உய்விக்கக் கூடியது அம்மருந் தேயாகும். உதாரணமாக வர்ணாசிரமப் பேதமில்லாத (பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லாத) கிறிஸ்தவ, முகம்மதிய, புத்த என்கிறவைகளுக்குட்பட்ட ஜன சமூகத்தார் இன்றைக்கும் அரசாட்சி புரிந்து வருவதும் வேற்றுமைக்குட்பட்ட நம்மவர்கள் வேற்று மைக்குட்படாத முன் சொன்னவர்களால் ஆளப்படு வோர்களாக வாழ்விலும், பேச்சிலும், எழுத்திலும் நடத்தை அனுபவம் முதலியவைகளிலும் சுதந்திரங் களை இழந்து அடிமைகளாகவும் அறியாமையில் சூழப்பட்டவர்களுமாக வாழ்ந்து வருவது நிதர்சன மாகப் பார்த்து வருகிறோம். இன்னமும் சொல்லப் போனால் உலகத்தில் சிறந்து மேம்பாடடைந்து வரும் வளர்ச்சிக்கு ஆதாரமாயுள்ள நாகரிக முதிர்ச்சியின் பயனாய் ஏற்பட்டிருக்கிற மதமொழிப்பு என்னுங் கொள்கையினால் மதமென்பதேயில்லாமல் ஒரு தேசத்தில் (ரஷ்யாவில்) பார்த்தால் மக்களுக்குள் பிறப்பினால் உயர்வு, தாழ்வு இல்லை என்பதோடு ஏழை, பணக்காரன் என்னும் வேறுபாடுகூட ஒழிந்து யாவரும் சமமென்பதைக் காண்கிறோம்.

இப்படியாக மேன்மேலும் நாகரிகம் விருத்தியாகி அதன் மூலம் மக்கள் விடுதலையடைந்து சமுகம் விருத்தியடைந்து வரும் இக்காலத்திலும் அவ்வித விருத்திகளுக்கு முள்வேலி இட்டது போலுள்ள தற்கேற்றபடியாகிற வர்ணாசிரம தர்மம் இருக்க வேண்டுமென்றும் அதன்பயனாக ஒரு சிலர் கொடுமைக்குள்ளாக்கப் பட்டுவிட்டார்கள், அவர் களை உத்தரிக்க மீண்டும் அவ்வித வர்ணாசிரமத் துக்குட்பட்ட ரீதியாக ஆதரிக்க வேண்டும், அதற்காக நிதி திரட்ட வேண்டுமென்றும், அந்நிதிக்கு எவரும் தங்களாலியன்றவைகளை என்னிடம் தாருங்கள் என்றும் சொல்லி சர்வ வல்லமையுள்ள வஸ்துவென்று சொல்லப்படுகின்றதே உருவெடுத்து வந்தது என்று வைத்துக் கொண்டாலும் அப்படிப்பட்ட ஒரு பெரியார் எவராயினும் அவரை நம்நாடு தற்போதிருக்குமிவ் வித நிலைமைகளிலும் வரவேற்கலாமா? அல்லது பகிஷ்கரிக்கலாமா? வென்பதை நமது நேயர்களுக்கே யோசித்துப் பார்க்கும்படி விட்டுவிடுகிறோம்.

இன்னமும் நாம்தான் இவ்விதம் யோசிக் கிறோமா வென்றால் வர்ணாசிரமங்களை நிலை நாட்டி வைப்பதற்கென்றே பரம்பரையாக இருந்து வருபவர்களுக்கெல்லாம் குரு அதாவது ஜகத்குரு சங்கராச்சாரியாரும் கூட இத்தகைய பெரியாரின் தன்மையைக் கண்டித்து வருகிறார், உதாரணமாக,

பூரி சங்கராச்சாரியார், தேவகோட்டையில் சில வாரங்களுக்கு முன்பு பேசியிருப்பதை வாசகர் கூர்ந்து கவனிக்க வேண்டுகிறோம்.

அதாவது காந்தி ஒரு இந்துவாக இருந்து கொண்டு தீண்டாமை யொழிப்பு பேச உரிமையில்லையென்று வேதங்களில் 259 ஆதாரங்கள் இருப்பதாகவும், விக்கிரக ஆராதனையொழிப்புக் காரரான ஆர்ய சமாஜத்தாரையும் அவர் சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்றும், வடஇந்தியாவில் ஆரிய சமாஜிகள் ஆதிதிராவிடர்களுக்கு ஆலய பிரவேசம் வேண்டுமென பலத்த பிரச்சாரம் செய்கிறார் களென்றும், மத்தியில் ஏதும் திருத்தம் செய்ய வேண்டியிருந்தால் நான் சொல்லுகிறேன். என் அபிப்பிராயம், அப்படித்தான் செய்ய வேண்டு மென்பதுதான் வீரர்கள் வழக்கமென்றும் இயேசு கிறிஸ்து, மகம்மது முதலியவர்கள் அப்படித்தான் செய்தார்களென்றும், ஆனால் காந்தியோ வருணா சிரமம் உண்டு, ஆதி திராவிடருக்குக் கோவில் பிரவேச உரிமையும் வேண்டும் என்று சொல்லுவது வீரர் வாழ்க்கையாகாதென்றும், அவர் சூழ்ச்சி செய்து மக்களை ஏய்க்கப் பார்க்கிறார் என்றும், அதற்கு ஏமாறக்கூடாதென்றும், கூறி மேலும் குறிப்பிட்டதாவது நாஸ்திகத் தலைவர்கள் பலரை எனக்கு நேரில் தெரியும். அவர்களுக்கு வேதத்தில் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக் கொண்டு அவர்கள் கொள்கையைப் பிரச்சாரம் செய் திருக்கிறார்கள். பூரி சங்கராச்சாரியார் அவர்கள் நேர்மையை நான் போற்றுகிறேன். ஆனால் காந்தியோ சூழ்ச்சி செய்கிறார் என்பதாகும்.

மற்றும் இப்பெரியார் யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு உத்தரிக்கப் போகிறார்களோ, அத் திருக்குலத்தடியார்களையே ஹரிஜனங்களென்று சொல்லப்பட்டவர்கள்கூட சென்னையிலும், கொச்சி, திருவாங்கூர் முதலிய மலையாள நாடுகளிலும் விருதுநகர் போன்ற இடங்களிலும் இன்னும் மற்ற பிரதேசங்களிலுள்ளவர்கள் ஆங்காங்கே கூட்டங் கூட்டமாகச் சேர்ந்து எங்களை உத்தரிக்கத் தாங்கள் வேண்டுவதில்லை. எண்ணாயிரம், பதினாயிரம், லட்சம் கையெழுத்திட்ட அறிக்கைப் பத்திரங்களை யும் அப்பெரியார் முன் சமர்ப்பிக்கப்பட்டும் வந்திருக் கிறது. இது மட்டுமல்ல இன்னும் இப் பெரியாருக்கு இவர் செல்லுமிடங்களிலெல்லாம் பகிஷ்காரங்களும் நிகழுமென்பதற்கு அநேக அறிகுறிகளும் காணப் படுகின்றன.

நம் நாட்டிற்கு இவ்விதமாக அவசியப்பட்டிருக்கிற இப்பெரியார் பின் எதற்காக இங்கெல்லாம் விஜயம் செய்கிறார்? யார் யார் பெயரால் யார் யாரைப் பிழைக்க வைக்கப் பார்க்கிறார்? இவ்விதச் சுற்றுப் பிரயாணங்களாலும் நிதி திரட்டல், முடிச்சு வாங்கல்களாலும் யாருடைய முன்னேற்றம் விருத்தி? யாருடைய முன்னேற்றம் பாழ்? லாபம் யாருக்கு? நஷ்டம் யாருக்கு? என்பவைகளும் நம் நாட்டு மக்களுக்கு நிலைமைக்கு வேண்டுவது யாது? என்பவைகளைச் சிந்தித்து ஏற்ற வழிகளில் அவரவர்கள் கடமைகளைச் செய்ய முற்பட வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.

------------------- தந்தைபெரியார் - “ புரட்சி” - தலையங்கம் - 04.02.1934

26.5.11

தமிழர்கள் நசுக்கப்பட வேண்டும் ஏன்? - புரட்சிக்கவிஞர்

தமிழர்கள் நசுக்கப்பட வேண்டும்


தமிழருக்கு புரட்சி மனப்பான்மை அவர்கள் தம் பகைவரால் நசுக்கப்படுவதிலிருந்து உண்டாகும்; ஆகையால் தமிழர் தம் பகையால் அடையும் எவ்விதத் தொல்லைகளையும் நான் வரவேற்கின்றேன்.

ஆயிரக்கணக்கான ஆண்டு களாகவே தமிழர் சீரழிந்து வருகின்றார்கள்; தம் சீரழிவுக்குக் காரணம் இன்னதுதான் என்பதை அவர்கள் அறிந்து வந்தும் அவர்களின் மிதமிஞ்சிய ஆத்திகப் புத்தியானது அந்தச் சீரழிவும் நல்லதே என்று திருப்தியடைய வைத்தது.

அளவு கடந்த கடவுள் வழிபாடு, அதிலிருந்து அதே வீதத்தில் அரச வழிபாடு, அதிலிருந்து எடுத்தற்கெல்லாம் பயம், பின்னர் சுயநலம் _ இந்த நோயில் தமிழர்களை ஆதி தொடங்கியே அமிழ்த்தி வந்தனர் தமிழர்களின் எதிரிகள்;

ஆதி முதல், தமிழர்க்கு எதிர்த்துப் போராடும் சக்தி உண்டாக அவர்கள் நெஞ்சுக்கு ஒரு நிமிட நேரம் வஞ்சகத்தால் செல்வாக்கைடந்த ஒரு மூளை திரைமறைவில் வேலை செய்யும்! அதன் விளைவாகப் பகிரங்க ஏதேச்சதிகாரம், தூக்குமரம், சித்ரவதைகள் இவைகளைக் கண்டபின்னும், அரச வணக்கம் _ வறுமையிற் செம்மை _ விதி இந்த நம்பிக்கை! அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற ஜபம்! நெஞ்சு , பஞ்சு படும்பாடு! நரம்புகள் துடைப்பக்குச்சி!

சென்ற நூற்றாண்டில்தான் இந்த ஏமாந்தவர் மேலும், ஏமாற்றுகிறவர் மேலும் ஆதிக்கம் செலுத்த மூன்றாவது வர்ணம் இந்தியாவில் குதித்தது. இதனால் தமிழர் தம் நிலையை அறியச் சிறிது வெளிச்சமும் தமிழரின் எதிரிகட்குத் தமது தந்திர சூழ்ச்சிகட்குத் தக்க லாபம் ஏற்படலாயிற்று.

இப்போது தமிழர் அத்தனை மோசமில்லை. காதைப் பிடித்துத் தூக்கினாலும் இப்போது தமிழன் தன் சகிப்புத் தன்மையை விட்டுக் கீ என்று கத்துகிறான்!

தமிழரின் எதிரிகள் இப்போது ஒரு தப்பு செய்திருக்கிறார்கள். அவர்கள் நினைப்பு:

அரச வணக்கம், அதிகாரி வணக்கம், பயம், சுயநலம் இவை இன்றைக்கும் தமிழன் சொத்து.

அந்தக் காலத்தில், தமிழனின் தமிழ்க் கலைகளையெல்லாம் மாய்த்து அவைகளைக் கடல் கொண்டு போனதாகத் தமிழர் களைக் கொண்டே சொல்லி வைக்க, அதை நம்பினார்கள்.

தமிழச்சி ஒருத்தியைச் சரிப்படுத்திக் கொண்டு, 8000 தமிழர்களை நமது மூதாதைகள் படுகொலை செய்து வெற்றி பெறவில்லையா? தமிழர்களைப் புகழ்வதன் மூலம் தமிழர் தலைகளைப் பலியேற்ற நினைத்ததில் இன்றுவரை வெற்றி காண வில்லை.

தேசத்தை அயலானிடம் காட்டிக் கொடுத்ததிலும், அதனால் சிறுபான்மையோராகிய நம் சுகபோகத்தைக் காத்துக் கொண்டதிலும் வெற்றி மேல் வெற்றி.

சில ஆண்டுகளாகக் கூடத் தமிழருக்குத் தைத்த குல்லாய்களுக்குத் தமிழர் மூக்கைப் பிடித்துக்கொண்டுதானே தலை தாழ்த்தினார்கள்.

காசைப் பிடுங்கிக்கொண்டு காற் செருப்பைக் காட்டும் ஆளுக்கு. எம்பெருமான் ஜீயர் திருவடிகளே சரணம் என்று சொல்லும் இருட்டில் தானே தமிழர் குடித்தனம் பண்ணுகிறார்கள்.

வந்தால் அரசபோகம், இல்லாவிடில் சென்னை கந்தசாமி கோயில் வீதியில் மூன்றணாவுக் கொரு பித்தளைச் செம்பு பார்ப்போம் ஒரு கை! எதிரிகளின் இந்த சிந்தனைகள் காலந்தவறியவை என்பது எனது அபிப்பிராயம்.

தமிழரை வஞ்சித்து வஞ்சித்து அவர்களின் ஒற்றுமையைக் கலைத்துக் கலைத்து நலி செய்து நலி செய்து பழகிய அந்த எதிரிகள், இன்று தமிழரின் மண்டையை நோக்கி ஓச்சிய கோட்டடிதான் இந்திக் கட்டாயப் படிப்பு! அநேகமாக இன்று தமிழரால் ஒரு புரட்சி ஏற்படலாம். நலிந்த ஒரு தனிமனிதன் செத்துப் போவான்; ஆனால் நலிந்த ஒரு ஜாதி சாகா: எழுச்சியுறும். இது இயற்கைச் சட்டம். எனது இன்பக் கனவு!

கனம் எஸ். இராமநாதன், கனம் சுப்ராயன், வரதராசலு, தோழர் திரு. வெ. கல்யாண சுந்தரமுதலியார் முதலியவர்கள் தங்களைத் தமிழர் என்று சரியாகவே நினைத்திருந்த காலம் உண்டு. அப்போது அவர்களால் தமிழர்கட்கு அதிக நன்மை யில்லை.

நல்ல வேளையாக இப்போது தம்மைத் தமிழரின் எதிரிகள் என்று தப்பாக நினைக் கிறார்கள். இந்தக் காலத்தில் தான் அவர்களால் தமிழர்கட்கு விசேட நலன்கள் ஏற்படப் போகிறது. ஏனெனில் இப்படிப் பட்ட கனவான்கள் தமிழர்களின் எதிர்க்கட்சியில் இல்லாவிடில் தமிழரின் உயிராகிய தமிழைக் கொல்லத் தமிழரின் இயற் பகை நாயன்மார்கட்கு ஆணவம் தோன்றியிருக்குமா? அந்த ஆணவம் இல்லாவிடில் தமிழர் மனம் துடிக்க வழியேற்படுமா?

துடிக்காத தமிழர்கள் ஒன்று படுவார்களா? நமது கனம் முதன் மந்திரியார் தமிழரின் உயிரின் மேல் தமது ஆக்ஞா சக்கரத்தை விடுவதையும் மேற்படி இந்தியைக் கட்டாய மாக்குவதையும் நான் வரவேற் கிறேன்; ஆனால் அவர் ஓர் அசந்தர்ப்பத்தில் மாட்டிக்கொண் டதாக நினைக்கலாம்.

ஏற்றசமயம் வாய்த்த போது தமிழ்த் தன்மையின் ஆணி வேரைக் களைந்துவிட வேண்டும் என்பதும் அவர் மதத்தின் ஒரு கிளை. அவ்வாறு ஆணி வேரைப் பறிப்பதன் மூலம் அடியோடு தமது செல்வாக்கைப் பறிகொடுத்து விடலாகாது என்பதும் அம்மதத்தின் மற்றொரு சாகை!

கனம் ஆச்சாரியார் ஆண் டார், அனுபவித்தார். பிள்ளை குட்டிகளைப் பெற்றார். கிருகஸ்தாச்சிரமம் திருப்தி கரமாகத் தீர்ந்தது. இனி வானப்பிரஸ்தாஸ்ரமம், பற்றற்ற இடம்! தியாகத்திற்கு ஏற்ற சந்தர்ப்பம்!

அவர் சரியாக நினைப்பதா யிருந்தால்,

விரோதிகளை அழிப்பதன் மூலம் எதுவரினும் வருக என்ற முடிவுக்குத்தான் அவர் வந்தாக வேண்டும். தமிழகத்தில் தமது செல்வாக்கை எண்ணி எத்தனை தியாகம் புரிந்தார்கள் ஆரியர்கள். ஆரிய ரத்தம் மாறிற்றா?

கடித்துக் குடிக்கும் காப்பி ஏனத்தைக் கழுவும் ஆளும் இன்னும் ஆரிய ரத்தம் இருப்பதாகக் கூறுகிறான்! முதல் மந்திரியார் தமது லட்சியத்தில் பின்னடைவார் என்று நான் வருந்தவேயில்லை.

-----(அன்றைய சென்னை ஆட்சியில் ராஜாஜி, இந்திமொழித் திணிப் புச்சட்டம் கொணர்ந்த போது எழுதப்பட்டது.) ------


------------------- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்(குடிஅரசு 10.10.1937 இதழில் வந்தது)

ஆஸ்திகன் என்றால் முழு மூடன், அயோக்கியன், பித்தலாட்டக்காரன்,


குற்றாலத்தில் பொதுக் கூட்டம்

தோழர்களே!

இன்று இங்கு பேசிய தோழர்களான பொன்னம்பலம், ஜீவானந்தம் ஆகியவர்கள் வெகு விளக்கமாகவும், எழுச்சியாகவும் பேசியதைக் கேட்டீர்கள். அவர்கள் பெரிதும் கடவுள், மதம், ஜாதி, செல்வவான்கள் ஆகிய தன்மைகள் ஒழிபட வேண்டும் என்று கருத்துப்படப் பேசினார்கள். இப்படிப் பேசியது உங்களில் அநேகருக்குப் பிடிக்காமலிருக்கலாம். சிலருக்கு மன வருத்தமும் ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால் அவர்கள் உங்களுக்கு வெறுப்போ, அதிருப்தியோ ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு பேசவில்லை. இன்றுள்ள இந்நாட்டு மக்கள் நிலையையும், உலக நிலையையும் உணர்ந்து பார்த்து இன்று நடைமுறையிலுள்ள மதம், ஜாதி, கடவுள் முதலியவைகள் ஒழியாமல் மனித சமூகத்துக்கு விமோச்சனமும், சாந்தியும் இல்லை என்பதை உணர்ந்து அதற்காகப் பேசினார்களே ஒழிய வேறில்லை.

என்னைப் பொருத்தவரை நானும் அவைகள் ஒழியப்பட வேண்டும் என்று சொல்வதோடு அவற்றையெல்லாம் ஆதரிக்கும் அரசியல் கிளர்ச்சிகளும், அரசியல்களும் ஒழிய வேண்டும் என்றும் சொல்லுபவன். ஏனெனில் அரசியலும், அரசியல் கிளர்ச்சிகளுமே மேற்கண்டதான கெடுதிகளை ஆதரித்துக் காப்பாற்றி வருகின்றன.

இந்தப்படி சொல்லுவதற்காக நீங்கள் வருத்தப்படக் கூடாது.

இந்த தேசத்து கடவுள்களின் யோக்கியதைகளை நீங்கள் சிறிது யோசித்துப் பாருங்கள். அவைகள் தானாகவே உண்டானவைகளாக இருந்தாலும் சரி, மனிதர்களாலேயே உண்டாக்கப்பட்டவைகளாகவே இருந்தாலும் சரி அவைகளால் நமது நாட்டுக்கும், மனித சமூகத்துக்கும் எவ்வளவு கேடுகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதைக் கவனியுங்கள்.

இந்த நாட்டுப் பொருளாதாரக் கேட்டுக்கும் கல்வி அறிவற்ற தன்மைக்கும் யார் ஜவாப்தாரி? என்பதை யோசியுங்கள்.

கடவுள்

இந்தக் கடவுள்கள் நம் நாட்டுச் செல்வங்கள் எவ்வளவை பாழ்படுத்துகின்றன. தென்னாட்டு கோவில்களுக்கு வருஷம் 2 1/2 கோடி ரூபாய் வருமானம். இது சர்க்கார் கணக்கு. அதற்காக மக்களுடைய பணம் செலவாவது மேற்கொண்டு 4, 5 கோடி ரூபாயாக இருக்கலாம். உங்கள் திருநெல்வேலி, மதுரை, ராமனாதபுரம், தஞ்சை ஆகிய ஜில்லாக் களை மாத்திரம் எடுத்துக் கொள்ளுங்கள் அதன் வரும்படிகளும் அதற்காக மக்கள் செய்யும் செலவுகளும் என்ன பயன் அடைகின்றன? இவ்வளவு பணம் பாழாகியும் இந்த நாட்டில் 100க்கு 8 பேர் தானே கையெழுத்து போடத் தெரிந்தவர்களாய் இருக்கிறார்கள். 100க்கு 75 பேருக்கு மெய் உழைப்பாளிகள் தரித்திரர்களாய் இருக்கிறார்கள். இத்தனை கோடி ரூபாய் பாழாகும்படியாக இருந்து கொண்டு, அனாவசியமான போக போக்கியத்தை அனுபவித்து வரும் கடவுள்கள் இந்த நாட்டு மக்களில் 100க்கு 92 பேர்களை தற்குறிகளாக வைத்து இருக்கின்றன என்று சொல்லப்படுமானால் இக் கடவுள்கள் நன்றி கெட்டவைகள் அல்லவா என்று கேட்கின்றேன். கல்விக்கும், கடவுளுக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லப்படுமானால் இக் கடவுள்களுக்காக இவ்வளவு கோடி ரூபாய்கள் செலவாகும்படி ஏன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதை யோசித்துப் பாருங்கள். வீணாக பகுத்தறிவும், யோசனையும் இல்லாமல் "சுயமரியாதைக்காரர்கள் கடவுளை வைகிறார்கள்" என்று சொல்லுவதில் பயன் என்ன? இந்திய நாட்டையே இந்தக் கடவுள்கள் தானே இக்கதியாக்கி இருக்கின்றன. கடவுள்களுக்கு பெண்டு பிள்ளை, வீடு வாசல், சொத்துக்கள், நகைகள், தாசி வேசிகள், வைப்பாட்டிகள் எல்லாம் எதற்கு? இதைப் பார்த்துத் தானே ஒவ்வொரு மனிதனும் நடந்து கொள்ளுகிறான். நமது கடவுள்களுக்கு உர்ச்சவம் என்பதெல்லாம் பெரிதும் வருஷம் தோறும் கல்யாணம் செய்வது என்பதற்கு ஆகவே நடைபெறுகின்றன. கடவுளுக்கு கல்யாணம் எதற்கு? சென்ற வருஷம் செய்த கல்யாணம் என்ன ஆயிற்று. ஏதாவது தவரி விட்டதா? அல்லது எந்தக் கோர்ட்டின் மூலமாவது கல்யாண ரத்து ஆகி விட்டதா? இது சிரிப்புக்கிடமான கல்யாணமல்லவா? இந்தக் கல்யாணங்கள் சுயமரியாதை முறைப்படி நடப்பதாயிருந்தால் நமக்கு கவலையில்லை. அப்படிக்கில்லாமல் எவ்வளவு செலவு எத்தனை கால மெனக்கேடு, எத்தனை பேர்களுக்கு கஷ்டம். பெரிய ராஜா வீட்டுக் கல்யாணத்துக்கு மேல் நடக்கின்றன. இவற்றையெல்லாம் பார்த்தால் இந்தக் கடவுள்கள் எல்லாம் ஒழியாமல் எப்படி மனிதன் சீர்பட முடியும்? எப்படி அறிவு பெற முடியும்? எப்படி இந்த நாட்டு செல்வமும், நேரமும் பயனுள்ள காரியத்துக்கு உபயோகப்படுத்தப்பட முடியும்? கோபிப்பதில் பயன் என்ன? எங்களை நாஸ்திகர்கள் என்று சுலபமாக சொல்லிவிடலாம். மற்ற நாட்டார்கள், மற்ற மதக்காரர்கள் இந்துக்களையும், இந்து கடவுள்களையும் பார்த்து நாஸ்திகர்கள், அஞ்ஞானிகள் என்று சொல்லுவதோடு மாத்திரமல்லாமல், காட்டுமிராண்டிப் பிராயமுள்ளவர்கள் என்று சொல்லுகிறார்களே. யாருக்காவது மானமோ, வெட்கமோ இருக்கின்றதா? எந்தக் கடவுளாவது இதற்காக நாக்கைப் பிடுங்கிக் கொண்டு செத்துவிட்டதா? அல்லது அவர்களை இப்படிச் சொல்ல வேண்டாம் என்றாவது சொல்லி வைத்ததா?

ஒன்றும் இல்லையே. ஆஸ்திகம், நாஸ்திகம் என்றால் அதற்கு அர்த்தமே இல்லாமல் கையில் வலுத்தவன் கதையாகத்தானே இருக்கின்றது. ஆஸ்திகன் என்றால் முழு மூடன், அயோக்கியன், பித்தலாட்டக்காரன், எண்ணத்துக்கும், பேச்சுக்கும், நடவடிக்கைக்கும் சம்மந்தமில்லாத திருட்டுப் பயல் என்றெல்லாம் சொல்லும்படியாகத்தானே மக்கள் நடந்து காட்டுகின்றார்கள். ஆதலால் தோழர்களே இந்தக் கடவுளையும், இந்த ஆஸ்திகத் தன்மையையும் ஒழிக்கப்படாமல் மனிதன் மனிதத்தன்மையை அடைய முடியாது என்பது எங்களது அபிப்பிராயமாகும். மற்றும் மனிதனுடைய இழிவும், தரித்திரமும், அதாவது ஒரு மனிதனை மற்றொரு மனிதன் இழிவாய் நடத்துவதும், ஒரு மனிதனது உழைப்பை மற்றொரு மனிதன் அனுபவித்துக் கொண்டு, உழைத்தவனை தரித்திரனாய், நோயாளியாய், அடிமையாய் வைத்திருப்பதும் கடவுள் செயல் என்று சொல்லப்படுமானால் அப்படிப்பட்ட கடவுளையாவது ஒழிக்க வேண்டாமா என்று உங்களைக் கேட்கின்றேன்.

ஆகவே நீங்கள், சுயமரியாதைக்காரர்கள் ஏன் கடவுளைப் பற்றிப் பேசுகின்றார்கள் என்பதை இப்போதாவது உணர்ந்து பாருங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன்.

அனாவசியமாய் உங்களுக்கே புரியாத வார்த்தையாகிய கடவுள் என்கின்ற வார்த்தையைக் கட்டி அழுது கொண்டு "எல்லாம் இருக்கட்டும். கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா, இல்லையா?" என்கின்ற அசட்டுத்தனமும், முட்டாள்தனமுமான கேள்வியை கேட்பதில் உங்கள் புத்தியை செலவழிக் காதீர்கள். அதனால் எங்களை மடக்கி விடலாம் என்றோ எங்களை பழிப்புக்கு உள்ளாக்கி விடலாம் என்றோ கருதி விடாதீர்கள்.

உலகம் எப்படி சிருஷ்டிக்கப்பட்டிருந்தாலும் அதைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை?

நீங்கள் எப்படிப் பிறந்திருந்தால்தான் அதைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை?

உலகில் உள்ள வஸ்துக்கள், உலகில் நடக்கும் செய்கைகள் எல்லாம் எப்படி சிருஷ்டிக்கப்பட்டது, எப்படி நடைபெறுகின்றது என்பதை எந்த மனிதனாவது அறிந்திருக்கின்றான் என்று நீங்கள் சொல்லிவிட முடியுமா? அது யாரால் எப்படி நடந்தால்தான் என்ன?

உங்களுக்கும் எனக்கும் தெரியாத விஷயம் எவ்வளவோ இருக்கிறது. இன்று பாடுபட்டாலும் தெரிந்துகொள்ள முடியாத விஷயங்களும் எவ்வளவோ இருக்கின்றன.

அவற்றைப் பற்றியெல்லாம் கேட்டுக் கொண்டும் தெரிய வேண்டும் என்று ஆசைபட்டுக் கொண்டிருக்கின்றவர்கள் சமுத்திரத்து அலைகளையும், மணலையும், மழைத் துளிகளையும் எண்ண ஆசைப்படும் மூட சிகாமணி களுக்கே ஒப்பாவார்கள்.

மக்கள் படும் கஷ்டங்கள், நமது கண்களுக்குத் தெரிகின்றன.

மற்ற மக்களால் நாம் இழிவும், துன்பமும் அனுபவிப்பதை நாம் உணர்கின்றோம். இதுவே முதலில் ஒழிக்கப்பட வேண்டும். எந்தக் காரணத்தாலானாலும் சரி, இவற்றிற்கு ஆதாரமாய் இருக்கும் கடவுள் உள்பட எல்லாம் அழிக்கப்பட வேண்டும் என்று தான் நாங்கள் சொல்லுகின்றோம்.

இது சரியா? தப்பா என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். ஆகுமா? ஆகாதா? என்பதைப் பற்றிப் பிறகு யோசிப்போம்.

மதம்

கடவுளைப் போலவே நமது மதங்களும் இருந்து வருகின்றன.

ஒரு மதத்துக்கு மேற்பட்ட மதங்கள் இருக்கின்றன என்றால், "அவைகள் இருக்க வேண்டியதுதான்" என்றால், அப்படிப்பட்டவர்கள் ஒரு கடவுளுக்கு மேற்பட்ட கடவுள்களையும் ஒப்புக் கொண்டோ, அனுமதித்தோ தான் ஆக வேண்டும்.

வேண்டுமென்றால் ஒரு மதத்தைப் பார்த்து மற்ற மதக்காரன், "உன்னுடைய மதம் மதமல்ல. என்னுடைய மதம் தான் உண்மையான மதம். கடவுளால் அனுப்பப்பட்ட அல்லது சொல்லப்பட்ட மதம்" என்று சொல்லிக் கொள்ளலாம்.

ஒரு மதக்காரனின் கடவுள் போலவேதான் மற்ற மதக்காரனின் கடவுளும் இருக்க வேண்டும் என்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது.

அவற்றிற்கு ஏதாவது பரீக்ஷைக் கருவி உண்டா?

ஒருவனுடைய கடவுளின் குணம் போலவே மற்றவனுடைய கடவுளும் இருக்க வேண்டும் என்பதற்கு என்ன அவசியம்? அதற்கு ஏதாவது நிபந்தனை உண்டா? ஒரு கடவுளை சிருஷ்டிக்க ஒருவனுக்கு உரிமை இருந்தால் பல கடவுள்களை சிருஷ்டிக்க ஒருவனுக்கு உள்ள உரிமையை யார் தடுக்க முடியும்? யாருக்கு அதிகாரம் யார் கொடுத்திருக்கிறார்கள்?

ஆதலால் ஒரு கடவுள் மதக்காரனே மகா உத்தமமானவன் என்றும் பல கடவுள் மதக்காரன் மோசமானவன் என்றும் சுலபத்தில் சொல்லிவிட முடியாது.

நாம் இங்கு மதத்தைப் பற்றி கவனிக்க வேண்டியதெல்லாம் எந்த மதமாவது மக்கள் எல்லோரையும் இன்பமாய், செழுமையாய், சமத்துவமாய் வாழ வைத்திருக்கிறதா? வாழ வைக்க முடிந்ததா? என்பதுவே யாகும்.

உலகிலுள்ள எந்த மதத்தை அனுசரிக்கின்ற மக்களுக்குள்ளும், எந்த மதத்தை அனுசரிக்கிற தேசத்திற்குள்ளும், ஏழை பணக்காரன், எஜமான் அடிமை, உழைப்பாளி உழைப்பான் பயனை அனுபவிக்கிறவன், பிரபு பிச்சைக்காரன், வித்துவான் முட்டாள், படித்தவன் தற்குறி, மெத்தை வீட்டில் இருப்பவன் ஓட்டைக் குடிசைகூட இல்லாதவன், சுகாதார வசதி உள்ளவன் சுகாதார வசதியில்லாதவன், மேல்மகன் கீழ்மகன், உழைக்காமல் சாப்பிடுபவன் உழைத்தும் பட்டினி கிடப்பவன், அளவுக்கு மிஞ்சி வேலை செய்து சம்பாதித்து பணம் மீத்து வைப்பவன் வேலையே இல்லாமல் திண்டாடுகின்றவன் என்பது போன்ற வித்தியாசங்கள் இல்லை என்று யாராவது சொல்லக் கூடுமா. இது முன் ஜன்ம கர்ம வினை என்றால் என்ன? அல்லது கடவுள் சித்தம் என்றால் என்ன? கஷ்டம் வித்தியாசம் எல்லாம் ஒன்று போல் தானே இருக்கிறது?

ஒரு மதத்தில் "ஆண்டிக்கும் அரசனுக்கும் வித்தியாசமில்லை" என்று சொல்லப்படுமானால், மற்றொரு மதத்தில் "கழுதைக்கும், மகான்களுக்கும் வித்தியாசம் இல்லை. எல்லா உள்ளத்திலும் நானே ஆத்மாவாய் இருக்கிறேன்" என்று கடவுளே சொன்னதாக அவர்கள் வேதங்கள் வேதாந்தங்கள் சொல்லுகின்றன.

இப்படிப்பட்ட சிங்காரப் பேச்சுகளால் பயனென்ன?

இவற்றால் எல்லாம் மக்களை மக்கள் ஏமாற்றத்தான் முடியுமே ஒழிய ஒரு வேளைக் கஞ்சிக்குப் போட வேண்டிய உப்பு மண்ணுக்குக்கூட உதவாது என்றுதான் சொல்லுவேன்.

நான் அனேக தேசம் பார்த்து இருக்கிறேன், பல மத மக்களையும் சந்தித்திருக்கின்றேன். எங்கும் பசிக் கொடுமை பிச்சைக்காரர் தொல்லை, பணக்காரர்கள் கொள்ளை, ஆண் பெண் பேதம், மனிதனுக்கு மனிதன் கொடுமை, வேலையில்லாத் திண்டாட்டம் முதலிய காரியங்கள் இருந்துதான் வருகின்றன.

இதற்கு எந்த மதமானாலென்ன? பட்டினி கிடப்பவனும், பட்டினி ஆக்குபவனும் இந்து மதத்தின் பேரால் இருந்தாலென்ன? கிருஸ்து மதத்தின் பேரால் இருந்தால் என்ன? இஸ்லாம் மதத்தின் பேரால் இருந்தால் என்ன? பார்சி மதத்தின் பேரால் இருந்தால் என்ன? சீக் மதத்தின் பெயரால் இருந்தால் என்ன? ஆரிய சமாஜ்யத்தின் பேரால் இருந்தால் என்ன? பிரமசமாஜ மதத்தின் பேரால் இருந்தால் என்ன? அல்லது சைவ, வைணவ, ஸ்மார்த்த முதலிய எந்தப் பிரிவு மதங்களின் பேரால் இருந்தால் என்ன? எல்லாம் மக்கள் வாழ்க்கை நிலையை ஒன்றுபோல் தானே நடத்துகின்றன.

இந்துமதமானது ஏழ்மைக்கும் கொடுமைக்கும் "அவனவனின் முன் ஜன்ம கர்மத்தின் பயன்" என்றால் மற்ற மதங்கள் "கடவுள் சித்தத்தின் பயன்" என்றுதான் சொல்லுகின்றனவே ஒழிய அதை நான் தீர்த்து விடுகின்றேன் என்னிடத்தில் ஏழை பணக்காரர் என்கின்ற பிரிவு இல்லை என்று எந்த மதமும் சொல்லுவதே கிடையாது. வேண்டுமானால் ஒவ்வொரு சிறு காரியங்களுக்கு ஒவ்வொரு மதம் அனுகூலமாக இருக்கலாம்.

ஒரு மதத்தில் தீண்டாமை இருந்தால் மற்றொரு மதத்தில் பாராமை இருக்கலாம். இப்படி ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொன்று அனுகூல மானதாக இருக்கலாம். ஆனால் இன்று உலகம் பூராவும் இருந்து வரும் பொருளாதார பேதம், சமூகக் கொடுமை முதலியவைகளுக்கு மதங்கள்தான் அனுகூலமாயும் ஆதரவாயும் இருந்து வருகின்றன என்பதை நான் உணர்கிறேன்.

மதத்தோடு சம்பந்தப்படாத ஏழ்மையும் தரித்திரமும் கொடுமையும் எங்கும் காணக் கிடைக்கவில்லை. எல்லா மதமும் சகல காரியத்தையும் ஆண்டவன் செயல் என்றுதான் சொல்லுகின்றன.

ஆனால் தனக்கு இஷ்டமில்லாத காரியங்களை மாத்திரம் அந்த குறிப்பிட்ட மனிதன் செயல் என்று சொல்லி ஆத்திரப்படுகின்றன.

இப்படிப்பட்ட குளறுபடியான மதங்கள் மக்களுக்கு என்ன பயனைத் தரும்? இது வரையாவது என்ன பயனைத் தந்து வந்தது? ஆதலால் தான் சமதர்மத்துக்கு மதம் விரோதம் என்று சொல்ல வேண்டி வருகிறது.

செல்வவான்

மற்றும் தோழர் ஜீவானந்தம் அவர்கள் செல்வவான் என்கின்ற தன்மையும் ஒழிந்தால்தான் பொருளாதாரக் கஷ்டம் ஒழியும் என்றார்.

நான் அதுவும் சரி என்றே சொல்லுவேன்.

செல்வவான்களின் செல்வங்கள் எப்படி சேகரிக்கப்படுகின்றன என்பதையும் அது எப்படி செலவழிக்கப்படுகின்றது என்பதையும் யோசித்துப் பாருங்கள்.

எவ்வளவு ஏழை உழைப்பாளி மக்களின் உழைப்பின் பயனை கொள்ளைக் கொண்டால் ஒருவன் செல்வவானாக முடியும் என்பதை யோசித்துப் பாருங்கள். அப்படிப்பட்ட பணம் அனாவசியமான கட்டடங் களுக்கும், கல்லுருவங்களுக்கும், கோட்டைகள் கட்டுவதற்கும், உலோக உருவங்களுக்கும், கல்யாண உர்ச்சவம் தேர் திருவிழா செய்வதற்கும், சோம்பேரிகளுக்கு சோறு போட்டு தடி ராமன்கள் ஆக்குவதற்கும், பால், நெய், எண்ணெய் குடம் குடமாகக் கல்லிலும், நெருப்பிலும் கொட்டுவதற்கும் வீணாக்கப்படுகின்றனவா இல்லையா?

மற்றொரு புறத்தில் கல்யாணம், கருமாதி, பிறந்த நாள், புதுமை, 60ம் கல்யாணம், திவசம், பண்டிகை முதலிய காரியங்களுக்கு பாழாக்கப் படுகின்றனவா இல்லையா?

மற்றொரு புறத்தில் தாசிகள், வேசிகள், சாராயன வகைகள், சூதாட்ட வகைகள், மோட்டார் கார்கள் என்பன போன்ற காரியங்களுக்கு பாழாக்கப் படுகின்றனவா இல்லையா?

செல்வங்களை இந்தப்படி பாழாக்கும் செல்வவான்கள் ஒழிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா?

இந்தக் குற்றாலத்தில் நான் பார்க்கின்றேன். இன்று சுமார் 100 தாசிகளுக்கு மேல் குடியேறி இருக்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் 4, 2 நாட்டுக்கோட்டை செல்வவான் உள்பட பல பிரபுக்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். பலர் கூட்டிக் கொண்டும் வந்திருக்கிறார்கள்.

சூதாடியதற்காக போலீசார் இரண்டொரு தடவை பிடித்தும் அவர்களுக்கு கப்பம் கட்டி விட்டு மறுபடியும் அதே காலக்ஷேபமாக இருக்கிறார்கள்.

இன்னும் என்ன என்னமோ நடக்கின்றன. மற்றபடி பெரிய பெரிய ஜமீன்தார், மிட்டாதார், ராஜா பட்டக்காரர், சர் பட்டக்காரர் முதலியவர்களின் யோக்கியதையை சொல்ல வேண்டுமா?

மற்றும் சுதேச ராஜாக்கள் முதலியவர்கள் சங்கதி சொல்ல வேண்டுமா? இப்படிப்பட்ட செல்வவான்கள் ஒழிவதால் யாருக்கு என்ன நஷ்டம் என்று யோசித்துப் பாருங்கள்.

மடாதிபதிகள்

கடவுளையும், மதத்தையும், செல்வவான்களையும் காப்பாற்றும் மடாதிபதிகள், குருமார்கள் யோக்கியதையை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஒவ்வொரு மடத்துக்கு ஆயிரக்கணக்கான வேலி நிலங்களும் வருஷம் பதினாயிரம் ரூபாய், லட்சம் ரூபாய் என்று சொல்லும்படியான வரும்படிகளும் இருந்து வருகின்றன.

இவை மக்களுக்கு என்ன பயனைத் தருகின்றன. அயோக்கியர்களுக்கும், சோம்பேரிகளுக்கும் குடி கேடர்களுக்குமே பயன் அளிக்கின்றன. இப்படிப் பட்ட மடங்கள் தன்மையும் குருமார் தன்மையும் அனுமதிக்கப்படலாமா?

5 லட்ச ரூபாய் செலவிட்டு ஒரு தொழிற்சாலை வைத்தால் தினம் சராசரி 2500 பேர்களுக்கு தொழிலும் நல்ல ஜீவனமும் இருக்கும்படி தொழிற்சாலைகள் கட்டலாம்.

நமது நாட்டு கோவில் பணமும், கோவில் வரும்படிப் பணமும், மடங்கள் பணமும், மடாதிபதிகள் வரும்படிப் பணமும் எல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து தொழிற்சாலைகள் கட்டினால் இந்தியாவில் பிச்சைக்காரனோ, தற்குறியோ, இழிவான மகனோ, ஒருவன் கூட இல்லாமல் எல்லோரும் சரி நிகர் சமானமான மனிதர்களாகவே காணப்படலாம்.

திருப்பதி தேவஸ்தானத்துக்கு மாத்திரம் வருஷம் 20 லட்ச ரூபாய் வரும்படி வருகின்றது. எனவே இந்த வரும்படியில் வருஷம் 4 தொழில்சாலை கட்டி 10000 பேர்கள் வீதம் நிரந்தரமாய் வேலைகள் கொடுத்துக் கொண்டே போகலாம்.

நமது தொழில்சாலை சாமான்கள் உலக சந்தைகளில் எல்லாம் கேட்ட விலைக்கு விற்கலாம்.

ஆகவே சுயமரியாதைக்காரர்கள் ஏழை மக்கள், பாமர மக்கள் இருக்கும் நிலைமையையும், படும் கஷ்டத்தையும் உணர்ந்து இதற்கு என்ன காரணம் என்பதை துருவிக் கண்டு பிடித்து, பிறகு தான் கடவுள், மதம், செல்வவான் மடாதிபதிகள் என்பவற்றைப் பற்றி குறை கூற முன் வந்தார்களே ஒழிய மற்றபடி அவர்களால் கடவுளாகவோ மத கர்த்தாக்களாகவோ, செல்வவான்களாகவோ ஆவதற்கு அல்ல என்பதை உங்களுக்குத் தெரியப் படுத்திக் கொள்ளுகிறேன்.

தோழர்களே, நாங்கள் எங்கள் அபிப்பிராயங்களைச் சொன்னோம். நீங்கள் உங்கள் அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து உங்களுக்கு சரி என்று பட்டபடிக்கு நடந்து கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடைசியாக இந்தக் கூட்டம் கூட்டி வைத்த தோழர் சிங்காரவேலு பாண்டியன் அவர்களுக்கும், இங்கு பேசிய தோழர்கள் ஜீவானந்தம், பொன்னம்பலம் அவர்களுக்கும், இவ்வளவு நேரம் மழைத் தூரலிலும், குளிரிலும் பொறுமையாக இருந்து கேட்டுக் கொண்டிருந்த உங்களுக்கும் எனது நன்றியறிதலையும் வந்தனத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

-------------------------- 06.08.1935 ஆம் நாள் குற்றாலம் அய்ந்தருவி சாலை வடபுரம் தெப்பக்குள மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு தந்தைபெரியார் அவர்கள் தலைமையேற்று ஆற்றிய உரை. - ”குடி அரசு” சொற்பொழிவு 11. 08.1935