Search This Blog

6.5.11

வைதீகப் பார்ப்பானை நம்பலாமா? லவுகீகப் பார்ப்பானை நம்பலாமா?


வைதீகப் பார்ப்பானை நம்பலாமா? லவுகீகப் பார்ப்பானை நம்பலாமா என்ற கேள்விக்குத் தந்தை பெரியார் மிக அழகாக நச்சென்று பதில் சொன்னார்.

வைதீகப் பார்ப்பானை நம்பலாம் - காரணம் அவன் கையில் இருக்கும் ஆயுதம் என்னவென்று நமக்கு மிக நன்றாகவே தெரியும்.

ஆனால் லவுகீகப் பார்ப்பான் அப்படியல்ல - அவன் எந்த ஆயுதத்தை வைத்திருப்பான் - எப்பொழுது தாக்குவான் என்பதே தெரியாது. (தொழுத கையுள்ளும் படை ஒடுங்குமே!)

நிகழ் காலத்திலேயே இத்தகு பார்ப்பனர்களை கண்ணுக்கெதிரே நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

பார்ப்பனர்கள் வட்டாரத்தில் பெரிய ஞான வித்வான்கள் யார் என்றால் சோவும், ஞாநியும்தானாம். இதிலிருந்தே அவாள் நிலை எந்தத் தரத்தில் உள்ளது என்பதை ஒரு வகையில் தெரிந்து கொள்ளலாம்.

குமுதத்தில் கொஞ்ச காலம் தன் எழுத்து வண்டியை ஓட்டினார். தான் எழுதியதாக இருந்தாலும் அதனை எடுத்தாள எழுத்தாளருக்கு உரிமை குமுதத்தில் கிடையாது என்று கூறி தன் மானம் பொத்துக் கொண்டு கிளம்பி குமுதத்தை விட்டு வெளியேறினார். தன்மானத்தில் சேதாரம் ஏற்பட்டு அதன் பின் அதே குமுதத்தில் ஓ போட்டுப் பையை நிரப்பிக் கொண்டார்.

இப்பொழுது கரெக்டான இடத்துக்கு, கல்கிக்கு வந்து ஓ போட ஆரம்பித்துவிட்டார்.

யாரைப் பற்றி எழுதினால், சீண்டினால் விளம்பரம் கிடைக்குமோ, பத்திரிகை விலை போகுமோ அவர்களைப் பற்றிதான் எழுதுவார். அதில் ஒரு விதி விலக்கு . . . பார்ப்பனர்களைப் பற்றி எழுதிட அவர் பேனா மக்கார் பண்ணிவிடும்.

தி.மு.க.வைப் பற்றி எழுதினால்தான் சரியாக இருக்கும். இன்றைய மார்க்கெட் நிலவரம் இதுதான் என்பதைப் பிடித்துக் கொண்டு தம் பேனாவை முடுக்கிவிட்டு வருகிறார். கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் கவிஞர் கனிமொழி பங்குதாரரா, இயக்குநரா என்பதைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எழுதுவது எந்த வகையைச் சேர்ந்தது?

கனிமொழி ராசாவைச் சந்தித்தார்; கலைஞர் தொலைக்காட்சியில் கனிமொழிபற்றி அதிகம் ஒளிபரப்பாகிறது என்பதெல்லாம் கனிமொழியின்மீது குற்றப் பத்திரிகை படிப்பது எப்படி சரியாகும் என்று சோவேகூட நழுவி விட்டார்
.
ஆத்திரம் அலைமோதும்போது அடிப்படை விடயத்தில் கூட ஞானசூன்யமாக இருப்பவர்களுக்குப் பெயர்தான் ஞாநியோ?

கனிமொழிக்கும் அவர்தம் சகோதரர்கள் மற்றும் மாறன் குடும்பத்தினருக்குமிடையே பிரித்தாளும் நச்சு வேலை பார்ப்பனர்களுக்கே உரித்தான சிண்டு முடியும் தனம் அல்லாமல் வேறு என்னவாம்?

கனிமொழியை எப்படியும் கைது செய்ய வேண்டும் - அரசியல் நிலை எப்படியிருந்தாலும் நீதிபதி கனிமொழியை சிறைக்குத்தான் அனுப்புவார் என்னும் முறையில் அடக்கப்பட முடியாத வெறுப்பின் மீது குதிரை சவாரி செய்யும் போக்கிரித்தனத்தை இவரின் எழுத்துகளில் காண முடிகிறது.

இவரே நீதிபதியாகி வரிந்து கட்டிக் கொண்டு எழுதுகிறார்.

கொலைக் குற்றத்தில் சம்பந்தப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார்களின் வழக்கில் மொத்தம் 187 சாட்சிகளில் 81 பேர் பிறழ் சாட்சியாக மாறிவிட்டார்களே - இதன் பின்னணி என்ன? இடையில் கைமாறியது என்ன? என்று இவர் எழுதியதுண்டா? கொலையுண்ட சங்கர்ராமனின் மனைவியே பல்டி அடித்து விட்டாரே - இது குறித்துப் பரப்புரை செய்ததுண்டா ஞாநிகள்?

அறிவு நாணயம் இருந்தால் கல்கியில் அடுத்த இதழில் - இவர் இது பற்றி எழுதட்டுமே பார்க்கலாம். எவ்வளவு வக்கிர புத்தி படைத்தவர் இந்த எழுத்தாளர் என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக் காட்டுப் போதுமானது.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பொன்னுசாமி அவர்களின் அருமை மகன் நாவரசை அண்ணாமலைப் பல்கலைக் கழக விடுதியில் சக மாணவனான ஜான் டேவிட் குரூரமான முறையில் கொத்துக் கறியாக்கி, மூட்டை கட்டிக் கொண்டு போய்த் தூக்கி எறிந்தான் என்பது எவ்வளவு பெரிய கொடூரமான செயல்!

....சீ.. இப்படியும்கூட மாணவனா - மனிதனா? என்று மனம் படைத்தவர்கள் ஆத்திரப்பட்டார்கள். ஆனால், உச்சநீதிமன்றம் 10 ஆண்டுகளுக்குப்ப் பின் மீண்டும் தண்டனை விதித்தது எப்படி சரியாகும் என்று வினா எழுப்புகிறார் இந்த ஞா . . . நீ!

சக மாணவனைக் கொடூரமாகக் கொலை செய்த பேர்வழிக்காக வக்காலத்து வாங்கும் ஒரு மனிதன் வக்கிர புத்தி படைத்த ஆசாமி என்பதல்லாமல் வேறு என்னவாம்?

இப்படி எழுதக்கூடியவர் யாராக இருந்தாலும் சைக்கோ பட்டியலில்தான் வைக்கப்பட வேண்டும்.
------------------”விடுதலை” 5-5-2011

0 comments: