Search This Blog

22.5.11

புட்டபர்த்தி சாய்பாபாவின் வக்கிரமான பாலியல் லீலா விநோதங்கள் - 2

சாய்பாபாவின் மறுபக்கம் 2

சாய்பாபாவின் ஓரினச் சேர்க்கையால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர் வழக்கு

புட்டபர்த்தியின் ஓரினச் சேர்க்கை Oral Sex போன்றவைபற்றி இப்போது இந்தியா டுடே ஏட்டில் பாதிக்கப் பட்ட புதிய வெளிநாட்டு பக்தியாளர்கள் ஆஸ்திரேலியாவிலும், ஜெர்மனியிலும் வழக்குப் போடவும், இங்கிலாந்து நாட்டுப் பாராளுமன்றத்தில் முக்கிய அமைச்சரே இதுபற்றி எச்சரிக்கை விடுத்துப் பேசியதும் நமது பகுத்தறிவு மனித நேய இயக்கம் செய்யும் பணி எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளன.

டாக்டர் கோவூர் , பி.சி. சர்க்கார் அம்பலப்படுத்தினார்களே!

ஏற்கெனவே டாக்டர் கோவூர் இவரது சைக்கோ வாட்ச் வரவழைத்து கொடுத்த மோசடிபற்றி ஜப்பான் சைக்கோ கடிகார கம்பெனிக்கே எழுதி, தகவல் பெற்று அம்பலப்படுத்தினார். மெத்தப் படித்தவர்கள், பதவியாளர்களை ஏமாற்றுவது எப்படிப்பட்ட உயர்தர மோசடி என்பதுபற்றி பி.சி. சர்க்கார் என்ற மாஜிக் (தந்திர) வல்லுநர் அம்பலப்படுத்தினார்.

மோதிரம் வரவழைத்துக் கொடுப் பதை வீடியோ எடுத்து அதை பகுத் தறிவாளர்கள் பரப்பி வருகின்றனர்!

இந்தியா டுடே அம்பலப்படுத்துகிறது!


இப்போது வெடித்துக் கிளம்பியுள்ளது எவ்வளவு மோசம் என்பதனையும் இந்தியா டுடே ஏடு அம்பலப் படுத்தியுள்ளது.

நமது மக்களுக்காக அதை அப்படியே தருகிறோம் படியுங்கள்:

கண்டனத்திற்குள் கடவுள்


சாய்பாபா 75_ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடும் வேளையில், அவரது பாலியல் ஒழுங்கீனம் பற்றிய குற்றச்சாற்றுகள் நெருடுகின்றன. அவற்றிற்கு தாக்கம் இருக்குமா?

(விஜய் ஜங் தபா மற்றும் நியூயார்க்கிலிருந்து லவினா மெல்வானி, லண்டனிலிருந்து சையது ஜூபைர் அஹ்மது) நம்பிக்கை நொறுங்கினால் என்ன ஆகும்? சத்ய சாய் பாபா முன்னாள் பக்தர்கள் சிலருக்கு அவர் மீதான நம்பிக்கை சில நொடிகளில் அவ நம்பிக்கையாகிப் போனது. வெளி நாட்டில் வாழும் சில இந்தியர்கள் மற்றும் சில வெளிநாட்டுப் பக்தர்கள் பாபாவிடம் மோட்சம் நாடிவந்து நரகத்தில் காலடி வைத்தது போல் உணர்ந்து திரும்பியிருக்கிறார்கள்.

தற்போது அவர்கள் ஒன்றுகூடி, புனித அவதாரம் என்று கருதப்படும் அந்த மனிதர் சிறுவர்களையும், இளைஞர்களையும் வற்புறுத்தி சுகம்காணும் காமுகர் தான் என்பதை வெளியுலகிற்குச் சொல்லக் கிளம்பி யிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் ஜெஃப்யங். சமீபகாலம் வரை அமெரிக்காவின் தென் மத்தியப் பகுதியில் சாய்பாபா ஆர்கனைசேஷ னின் தலைவராக இருந்த இவர் தனது மகன் ஸாமை 1977 _ லிருந்து (ஸாம் 16 வயதினராக இருந்ததிலிருந்து) 1999 இன் கோடைகாலம் வரை சாய்பாபா பாலியல் பலாத்காரம் செய்தார் என்று குற்றம் சாட்டுகிறார்.

இந்த செய்தி முதலில் லண்டனில் த டெய்லி டெலிகிராபில் வெளி யானது. இந்தியா டுடே அவரைத் தொடர்பு கொண்டபோது யங் தனது குற்றச்சாட்டை உறுதிசெய்தார். என் மகனை அவர் பல வகைகளில் பலாத்காரம் செய்திருக்கிறார். பாபா என் மகன் தலையை தன் குறியில் அழுத்தி வாய் வழி செக்ஸ் அனுபவிக்க கட்டாயப்படுத்தியிருக்கிறார்., என் மகனின் குறியை பாபா சுவைக்க முயன்று அவனுக்கு பயத்தில் குறி விறைக்காதபோது கோபமடைந்து இருக்கிறார். ஸாம் தனக்கு ஆண்களோடு உறவு பிடிக்காது என்றவுடன் பாபா தன்னை ஒரு இளம் பெண்ணாக மாற்றிக் கொள்வதாகவும் பிறகு தன்னுள் ஸாம் நுழையலாம் என்றும் சொல்லியிருக்கிறார். என்கிறார் யங்.

சமீப மாதங்களில் பாபா மீது இதே போன்ற அநேக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இன்டர்நெட்டில் தற்போது சுற்றிவரும் த ஃபைன்டிங்ஸ் என்ற ஆவணத்தில் பிரிட்டிஷ்காரரும் பாபாவின் முன்னாள் பக்தருமான டேவிட் பெய்லி என்பவர் பாபா தன் முன்னாள் பக்தர்களிடம் செய்த பாலியல் அட்டூழியங்களைப் புட்டுப் புட்டு வைக்கிறார். அவரது நிரூபணம் பாபாவால் பாதிக்கப்பட்ட பலரை முடுக்கிவிட இப்போது பாபாவுக்கு எதிராக பல வெப்சைட்டுகள் இணையத்தில் உயிர்பெற்றுள்ளன.

சிகா கோவில் சாஃப்ட்வேர் என்ஜினீயராக உள்ள ஹரி சம்பத், பாபா ஆசிரமத்தின் உள் பாதுகாப்பு உறுப்பினராக 1992 _ 1995 _ இல் தொண்டு செய்தார். அவர் அங்கிருந்தபோது பாபாவின் லீலைகள் பற்றி பலவாறாகக் கேள்விப்பட்டு அதிர்ந்து தீர விசாரித்திருக்கிறார். நான் கேள்விப்பட்ட சம்பவங்கள் ஒவ்வொன் றும் உண்மை என்று உறுதியான பின்தான் இதை வெளியே அறிவிக்க முடிவு செய்தேன். என்கிறார் சம்பத்.

இத்தகைய குற்றச்சாட்டுகளை மேற்கத்திய நாடுகளில் சீரியஸாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளதால் சாய்பாபா அமைப்புகளிலிருந்து வெளியேறுவோரின் எண்ணிக்கை அங்கு அதிகரித்து வருகிறது. பிரிட்டனில் த டெய்லி டெலிகிராப் செய்தியை அடுத்து லேபர் கட்சி எம்.பி., யான டோனி கோல்மேன் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

முன்னாள் உள்துறை அமைச்சர் டாம் சாக் வில்லும் இப்பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டார். பாபா வின் ஆசிரமத்திற்கு விஜயம் செய்வது பற்றி பிரிட்டிஷ் அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இயக்கம் ஒன்று அங்கே உருவாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவிலும் த சண்டே ஏஜ் இதழில் சாய் பாபாவின் செக்ஸ் வன்முறைகள் பற்றி கட்டுரை வெளி யானது. ஜெர்மனியில் ம்யூனிச் நகரில் ஜென்ஸ் சேத்தி என்ற முன்னாள் சாய் பக்தர். தன்னை பாபா பாலியல் பலாத் காரம் செய்ததாக பப்ளிக் பிராசிக் யூட்டரிடம் புகார் பதிந்து இருக்கிறார். அமெரிக்காவில் அதிருப்தியடைந்த முன்னாள் பாபா பக்தர்கள் வெளியுறவு செயலாளர் மேடலின் ஆல்பிரைட்டின் அலுவலகத்திற்கு இ_மெயில் புகார்க் கணைகள் தொடுத்துள்ளனர்.

வாஷிங் டனில் உள்ள உள்துறை அலுவலகத்தை இந்தியா டுடே தொடர்பு கொண்ட போது டில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கும் சென்னை கவுன் சிலேட்டுக்கும் இக்குற்றச்சாட்டுகள் பற்றி தெரிவித்துள்ளோம். ஆனால் இவை இந்திய நீதிமன்றங்கள் சார்ந்த விவகாரங்களாகத்தான் படுகிறது என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.

பெரும்பாலான பாபா பக்தர்கள் இக்குற்றச்சாட்டுகளைப் பொருட் படுத்துவதில்லை.

ஒவ்வொரு அவதாரத்திற்கும் எதிரிகள் உண்டு. இயேசுவுக்குக் கூட எதிரிகள் இருந்தார்களே என் கிறார் கரீபியன் பகுதியில் வசிக்கும் இந்தியரான ஷீலா குமார். பாபா பக்தரான இவர் சாய் பால் விகாஸில் பாடமும் சொல்லித் தருகிறார். சாய் ஆர்கனைஸேஷனின் மூத்த உறுப்பினர் ஒருவர் ஒவ்வொரு குற்றச்சாட்டுகள் வரவர சாய்பாபா மேலும் மேலும் வெற்றி பெற்றவராகிறார் என்கிறார்.

பாபாவைச் சுற்றியுள்ள உள் வட்டத்தினர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளை இருவழிகளில் தாக்குகிறார்கள். முதலாவது. இவை யாவும் வெளிநாட்டினரால் கிளப்பப் பட்ட புரளிகள் என்று சுட்டிக்காட்டி இந்து எதிர்ப்பு குற்றச்சாட்டுகளாக முத்திரை குத்தி ஒதுக்குகிறார்கள்.

இரண்டாவது, பாபா எது செய்தாலும் அது பக்தனுக்குப் பாடம் புகட்டத் தான் செய்கிறார். அவர் செய்வது முறை கேடானதாகவோ, தவறானதாகவோ பட்டாலும் அவர் செய்வதற்கு அர்த்தம் இருக்கும் என்பதால் அதைக் கேள்வி கேட்கக் கூடாது என்று நியாயப் படுத்துகிறார்கள்.

இன்டர்நெட்டில் நடக்கும் யுத்தத்தையும் சாய் பக்தர்கள் இரண்டு வழிகளில் சமாளிக்கிறார்கள். முதலாவதாக இன்டர்நெட் உபயோகத்தை அறவே தவிர்க்கச் சொல்கிறார்கள். இரண்டாவது, த சாய் சிரிட்டிக் வெப் தளத்தில் பாபாவுடனான உங்கள் நேரடி அனுபவத்தை மட்டுமே நம்புங்கள் என்று வலியுறுத்துகிறார்கள்.

எதிர்ப்பாளர்கள் பாபாவின் பலவித பாலியல் முறைகேடுகளில் ஒரு ஒற்றுமை இருப்பதைச் சுட்டிக் காட் டுகிறார்கள். பாபா தனது பலி ஆடுகளை தினசரி தரிசனத்தின் போது தனியே அழைத்துப் பேசித் தேர்ந்தெடுக்கிறார் என்கிறார்கள் அவர்கள்.

தற்போது ஸ்பெயினில் வாழும் முன்னாள் பக்தரான கெய்த் ஒர்த் இப்படிக் குற்றம் சாட்டுகிறார். முதல் தனி தரிசனத்தின்போது என்னை உதடுகளால் உரசினார்....

இரண்டாம் தரிசனத்தின் போது எனது உறுப்பைத் தன் கைகளால் தடவிப்பார்த்தார். கடைசி சந்திப்பில் பலவந்தப்படுத் தினார்.

பாபா ஆசிரம பள்ளி, கல்லூரிகளில் உள்ள இளம் மாணவர்களையும் பாபா பாலியல் பாலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார். தற்போது சிங்கப்பூரில் வேலை பார்க்கும் கிருஷ்ணகுமார், என் வகுப்புத் தோழர்களில் நான்கு பேர் எப்படி பாபா அவ்வப்போது தங்கள் உறுப்பில் எண்ணெய் தடவிப் பார்ப்பார் என்று விவரித்திருக் கிறார்கள் என்கிறார்.

ஆனால் பாபாவின் மோகம் முப்பது நாள்தான். பாபா கைவிட்ட பையன்கள் மிகுந்த நையாண்டிக்கும், மன உளைச்சலுக்கும், பதற்றத்திற்கும் ஆளாவார்கள். இதை வெளியாரிடம் ஏன் பெற்றோரிடமே கூடச் சொல்ல முடியாது. ஏனெனில் அவர்களே பாபா பக்தர்களாக இருப்பதுதான் காரணம்.

------------------தொடரும் .. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் எழுதிய "சாயிபாபாவின் மறுபக்கம்" எனும் நூலிலிருந்து

1 comments:

குணசேகரன்... said...

அதிர்ச்சியான் செய்தி..
யாரைத்தான் நம்புவதோ...(பாடல்)