Search This Blog

12.5.11

பார்ப்பனர்களைப் பார்த்தீர்களா? பாடம் கற் றுக் கொள்வீர் தமிழர்களே!


பார்ப்பனர்களைப் பாருங்கள் - காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்பவர் யார்? ஒரு கொலைக் குற்றத்தில் பிணையில் வெளியில் திரிந்து கொண்டு இருக்கக் கூடியவர்.

அவர்மீதுள்ள கிரி மினல் குற்றங்கள் 302, 120-பி, 34, 201 ஆகியவை.

கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுச் சதி, பொய்யான சாட்சியங்களைச் சமர்ப்பித்தல், கொலை.

ஜெகத்குரு பரமாச்சார்யா மீதுதான் இத்தகைய குற்றச்சாற்றுகள்.

61 நாள்கள் வேலூர் மத்திய சிறைச் சாலையில் கம்பி எண்ணியிருக்கிறார்.

இவருடைய சீடர் ஜூனியர் விஜயேந்திர சரஸ் வதியோ 31 நாள்கள் சிறை யில் கம்பி எண்ணினார். சென்னை ஆயிரம் விளக் குக் காவல் நிலையத்தில் நாள்தோறும் மூன்று வாரம் கையொப்பம் போட்டு வந்தார். சென்னையை விட்டு வெளியூர் செல்லக் கூடாது என்பது நீதிமன்ற உத்தரவு.

இவ்வளவு சங்கை கெட்டுப் போன பிறகும்கூட பார்ப்பனர்கள் அவரைக் கொஞ்சம்கூட விட்டுக் கொடுக்கிறார்களா - பார்த்தீர்களா?

பெரியவாள் என்ற அந்த வார்த்தையில் கொஞ்சமாவது குறைத்துக் கொள்கிறார்களா - பார்த்தீர்களா?

இந்திரா காந்தியின் பேரன் வருண்காந்திக்குக் கல்யாணத்தை நடத்தி வைக்க இங்கிருந்து அழைக்கப்பட்டுள்ளார்.

இவ்வளவுக்கும் தெய்வத் தன்மைபற்றி எப்படியெல்லாம் பிரஸ்தா பிக்கிறார் தெரியுமா?

அவாள் நடத்தும் இந்த மாதம் - காமகோடி பத்திரிகையைப் பார்த்தால் தெரியுமே! (என்ன செய் வது, கண்டவற்றையும் படித்துத் தொலைக்க வேண்டியுள்ளதே!)

கேள்வி: தெய்வத் தன்மை யாருக்கு ஏற்படும்? ஜெயேந்திரர் பதில்: இறை வனையே நினைத்துக் கொள்க, புலன்களை முழு மையாக அடக்கிக் கொண்டவர்களுக்குத் தெய்வத் தன்மை ஏற்படும்

சபாஷ்! எப்படிப்பட்ட பதில் பார்த்தீர்களா? இவர் எப்படியெல்லாம் புலன் களை அடக்கியவர் என் பதைப் பார்ப்பனப் பெண் எழுத்தாளரான (மறைந்த) அனுராதா ரமணனைக் கேட்டாலே தெரியுமே! கண்ணீரும் கம்பலையுமாக தொலைக்காட்சியில் காம கோடியால் தான் பட்ட அவமானத்தை வெளிப்படுத்தினாரே!

ஸ்ரீரங்கத்து உஷா, சென்னை மைதிலி போன் றவர்களைக் கேட்டால் பெரியவாளின் புலனடக்கம் எத்தகையது என்பது வெளிச்சமாகத் தெரியுமே!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் தெய்வீக சங்கம நிகழ்ச்சிகளுக்குப் பெரிய வாளுக்கு அழைப்பாம்!

பார்ப்பனர்களைப் பார்த்தீர்களா? பாடம் கற் றுக் கொள்வீர் தமிழர்களே!

-------------- மயிலாடன் அவர்கள் 12-5-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: