தி(இ)ன மலரின் திரிநூல்தனம்
தினமலரான இனமலருக்குச் சதா திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களைப் பற்றித்தான் கவலை!
அதுவும் சரிதானே, - பார்ப்பனர்களுக்குத் தங்களின் எதிரி யார் என்று சரியாகத் தெரிந்திருக்கிறது. பாழாய்ப் போன இந்தத் தமிழர்களுக்குத்தான் விவரம் போதவில்லை.
(1) ஏப்ரல் 25 ஆம் தேதி தினமலரில் தனபாலுக்கு இதோ ஒரு டவுட்.
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவில்லையெனில், இனி காங்கிரஸ் கட்சி தமிழ் மண்ணை அறவே மறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டே தீரும்.
டவுட் தனபாலு: சட்டசபைத் தேர்தலில் 63 தொகுதிகளை அள்ளிக் கொடுத்து, காங்கிரஸ் பேரியக்கத்தை தமிழகத்தில் வளர்த்தே தீரணும்னு உங்க சகோதரர் கட்சி முடிவெடுத்து . . . அப்படி இருக்கும் போது, நீங்க சொல்றது எப்படி நிறைவேறும்னு புரியலையே
(தினமலர் 25--.4-.2011)
இதில் திராவிடர் கழகத்தின் நிலை என்ன என்பதை தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை வாயிலாகத் தெரிவித்திருக்கிறாரே (15.-3.-2011). நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு காங்கிரசுக்கு 63 இடங்களைக் கொடுக்கத் தேவையில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளதே.
உண்மை இவ்வாறு இருக்க ஒரு மாதம் 9 நாள்கள் கழித்து இப்படி தினமலர் எழுதுகிறதே - என்ன ஞான பிரகாசம்!
இனமலர் தனபாலுக்கு இன்னொரு டவுட்
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: வன்னிப் பகுதியில் இலங்கை அரசு அப்பாவி மக்களான ஈழத் தமிழர்களை ஆயுதங்கள் மூலம் கொன்றிருக்கிறது. சொந்த நாட்டு மக்கள் மீதே அந்த மண்ணுக்குரிய தமிழர்கள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தியது.
டவுட் தனபாலு: அப்படியா?
ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தாது என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறதா உங்க சேய்க் கழகத் தலைவர்தான் சொன்னாரு. அதன் அடிப்படையில்தானே அவர் உண்ணாவிரதத்தையே முடிச்சாரு. அப்படி அவர் சொன்னது உண்மை யில்லையா? (தினமலர் 8-.5.-2011)
உத்தரவாதம் கொடுத்தது உண்மை தான். அதன்படி நடந்து கொள்ளவில்லை என்பதும் அதைவிட உண்மைதான். அதனைத்தான் திராவிடர் கழகத் தலைவர் இடித்துக் காட்டிச் சொல்லியிருக்கிறார்.
இப்படி உத்தரவாதம் கொடுத்ததற்கு மாறாக நடந்து கொண்ட ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக்கு என்று திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு கட்சிகளும் குரல் கொடுக்கின்றன.
அது சரி ராஜபக்சேவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டுமா- வேண் டாமா? இதில் தினமலரின் நிலை என்ன? அதனை வெளிப்படுத்த முடியுமா?
(3) திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: இலங்கையில் இப்படி ஒரு இனப்படுகொலை நடந்ததற்காக இந்தியா தான் முதன் முதலில் ராஜபக்சேவை கண்டித்திருக்க வேண்டும். ஆனால் இந்தியா அதனைச் செய்யவில்லை. இந்திய அரசின் போக்கை வரலாற்றிலே என்ன என்று நினைப்பர்?
டவுட் தனபாலு: தமிழகத்தில் இருந்த ஆட்சியாளர்களும், தலைவர்களும் மத்திய அரசை வலுவா வற்புறுத்துல. அதனால், மத்திய அரசு ஒண்ணும் செய்யலை _ ன்னு நினைப்பாங்க. வேற எப்படி நிணக்கச் சொல்றீங்க.
(தினமலர் 7-.5.-2011)
திராவிடர் கழகமோ, தி.மு.க.வோ மத்திய அரசை வற்புறுத்தலையாம் . . . தினமலர் பத்திரிகை தமிழ்நாட்டில் இருந்துதான் வெளியாகிறதா?
எத்தனைப் போராட்டங்களை திராவிடர் கழகம் நடத்தியிருக்கிறது. எத்தனை பேரணிகளை, மாநாடுகளை நடத்தி, தீர்மானங்கள் வாயிலாக திராவிடர் கழகம் மத்திய அரசை வலியுறுத்தியிருக்கிறது.
மதுரை, கரூர், பட்டுக்கோட்டை, திருவரங்கம், திருப்பத்தூர் என்று எத்தனை இடங்களில் மாநாடு கூட்டி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம்.
திராவிடர் கழகத்தின் இந்த நடவடிக்கையைப் பற்றி ஒரே ஒரு வரி செய்தி வெளியிட மனம் வராத பார்ப்பன ஏடு, மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்கி எழுதுகிறது என்றால், இதற்குப் பெயர்தான் பூணூல் புத்தி என்பது!
முதல் அமைச்சர் கலைஞரே உண்ணாவிரதம் இருந்து மத்திய அரசை வற்புறுத்தவில்லையா?
திருமாவளவன், பேரா. சுப.வீரபாண் டியன் போன்றவர்கள் வீராவேசமாகக் குரல் கொடுக்கவில்லையா? சகோதரர் வைகோ குரல் கொடுக்கவில்லையா?
இதற்கு மேல் மத்திய அரசை எப்படி வற்புறுத்த வேண்டும் என்று இனமலர் எதிர்பார்க்கிறது? அதனைச் சொல்லட்டுமே!
பேச நா இரண்டுடையாய் போற்றி என்று ஆரியர் பற்றி அறிஞர் அண்ணா அவர்கள் ஆரிய மாயை நூலில் அழகுற படம் பிடித்துக் காட்டினாரே. அதனை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
------------------மின்சாரம் அவர்கள் 14-5-2011 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
2 comments:
மனுதர்மம்
வழக்கம் போலவே தினமலர் வளரும் சமூக நீதிச் செடியின் மீது நெருப்புத் துண்டங்களை அள்ளிக் கொட்டுகிறது.
அண்ணா பல்கலை துணை வேந்தர் மன்னர் ஜவகர்: வரும் 16 ஆம் தேதி முதல், பொறியியல் விண்ணப் பங்கள் வழங்கப்படுகின்றன. இதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இரண் டரை லட்சம் விண்ணப்பங் கள் அச்சடிக்கப்பட்டுள்ளன
டவுட் தனபாலு: ஏன் ரெண்டரை லட்சத்தோட நிறுத்திட்டீங்க . . .? பிளஸ் 2 பாஸ் பண்ணின ஆறேகால் லட்சம் பேரையும் இன்ஜினீ யரிங்ல சேர்த்துக்க வேண்டி யதுதானே . . . அதான். அந்தப் படிப்புக்கு எந்தத் தகுதியும் தேவையில்லைன்னு ஆகிப் போச்சே. (தினமலர் 14.5.2011)
தி.மு.க. ஆட்சியில் பொறி யியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்குத் தகுதி மதிப்பெண்கள் கடந்த ஆண்டு 2010-2011 அறிவிக் கப்பட்டன.
பொதுப் பிரிவுக்கு 50 விழுக்காடு மதிப்பெண்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு 45 விழுக்காடு மதிப்பெண்கள்; பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர்களுக்கு 40 விழுக் காடு மதிப்பெண்கள். தாழ்த் தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்கு 35 விழுக்காடு மதிப்பெண்கள் என்று அறிவிக்கப்பட்டன.
இதன் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்காக விண்ணப்பித் தோர் எண்ணிக்கை 1, 63, 131. இதில் பொதுப் பிரிவினர் களுக்குக் கிடைத்த இடங் கள் 5,662; மீதி இடங்கள் பிற்படுத்தப் பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர், தாழ்த்தப் பட்ட, மற்றும் மலைவாழ் குடும்பங்களைச் சேர்ந்த வர்களுக்குக் கிடைத்தன.
இவர்கள் எல்லாம் யார்? முதல் தலைமுறையாக பொறி யியல் கல்லூரிகளில் காலடி எடுத்து வைத்தவர்கள்
போதும் போதாதற்கு - தொழிற்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கிடையாது என்று வெறும் ஆணையாக அல்ல; சட்டத்தையே முதல் அமைச்சராக இருந்த கலை ஞர் நிறைவேற்றிவிட்டார். நீதி மன்றம் வரை சென்று முட்டிப் பார்த்தார்கள். முடிய வில்லை. கலைஞர் சமூக நீதிச் சிம்மாசனத்தில் அந்தச் சட்டம் இன்று வரை ஒளி வீசும் மரகதக் கல்லாகவே நிகழ்கிறது.
பொறுக்குமா பூணூல் கோத்திரக் கும்பலுக்கு? தினமலரின் அவுட்டுத் திரி ஆத்திரக் கூத்து ஆடாதா?
அதன் வெளிப்பாடாகத் தான் டவுட் தனபாலாக இன்று தினமலரில் வெளி வந்திருக்கிறது.
தகுதி திறமை போய் விடுமாம்! என்ன அந்த தகுதி, திறமை? தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கா பொறி யியல் பட்டதாரி சான்றி தழைக் கொடுக்கப் போகி றார்கள்?
எனக்கு வேதமும் தெரி யாது, வெங்காயமும் தெரி யாது என்று சொல்லும் தந்திரியைத்தானே அய்யப் பன் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கிறார்கள்?
கருமாதி மந்திரத்தைக் கல்யாண வீட்டில் சொல்கிற பார்ப்பானுக்கெல்லாம் தகுதி தேவையில்லை.
சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதுதான் பார்ப்பனர்களின் மனுதர்மம். இவற்றிற்கு மாறாக நடந்த காமராசரை ராட்சசர் என்ற னர். இப்பொழுது கலைஞ ரையும் அதே பார்வையில பார்க்கின்றனர். தமிழா, இன் னும் எவ்வளவு காலத்துக்கு ஏமாறப் போகிறாய்?
- மயிலாடன் -"விடுதலை”14-5-2011
நாகரிகம் தெரியுமா நரிகளுக்கு?
தி(இ)னமலர் ஏடு இன்று இப்படியொரு கார்டூனை வெளியிட்டுள்ளது. (கார்டூனைப்
பார்க்க http://viduthalai.in/new/page-8/9738.html சுட்டவும்)
எதைச் சொல்லியாவது திராவிடர் கழகத் தலைவர் மீது சேற்றை வாரி இறைக்க
வேண்டும் என்பதுதான் இனமலரின் அடங்காத வெறி.
தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவரைக் கொச்சைப் படுத்துவதாக நினைத்துக்
கொண்டு, ஆத்திரம் அறிவுக்குச் சத்ரு என்கிற முறையில் நடந்துகொண்டு
வருகிறது.
திராவிடர் கழகத்தை தினமலர் வகையறாக்கள் எதிர்க்கின்றன - சீண்டுகின்றன
என்றால் அது நற்சான்றே தவிர வருத்தப்பட என்ன இருக்கிறது? பார்ப்பனர்கள்
சரியாக இருக்கிறார்கள். நம் இனமக்களிடத்தில்தான் குழப்பமோ குழப்பம்!
திராவிடர் கழகம் ஒன்றும் அரசியல் கட்சியல்ல. தேர்தலில் நிற்கக் கூடியதும்
அல்ல.
வரவேற்கவேண்டியதை வரவேற்றும், எதிர்க்க வேண்டியதை எதிர்த்தும்
செயல்படுவது என்பது திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு என்பது புத்தியுள்ள
ஒவ்வொருவருக்கும் தெரியுமே!
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பது என்பது நாகரிகத்தின்
அரிச்சுவடி! அதேபோல் நல்லது செய்தால் வரவேற்க வேண்டியது என்பது அறிவு
நாணயத்தின் பாலபாடம். இவையெல்லாம் தினமலர் பார்ப்பனக் கும்பலுக்கு
எங்கேயிருந்து தெரியப் போகிறது?
எங்கே சாவு வரும் - தர்ப்பணம் பண்ணிப் பணம் பறிக்கலாம் என்று கருதும்
கழுகுகள் ஆயிற்றே!
தமிழ் செம்மொழியானால் வீட்டுக்கு வீடு பிரியாணி கிடைக்குமா என்று
எழுதுகிற சோற்றுப் பண்டார - வயிற்றுப் பிழைப்புக் கூட்டம் இப்படித்தான்
கார்ட்டூன் போடும்.
ஆளும் பொறுப்பில் இருந்த எம்.ஜி.ஆர். அவர்களை 13 வருடம் திராவிடர் கழகம்
எதிர்த்துத்தான் செயல்பட்டது என்கிற பொது அறிவு கூட இல்லாததுகள் எல்லாம்
பேனா பிடிக்கின்றனவே!
இப்பொழுதே தி.மு.க. ஆட்சிக்கு ஆதரவாக இருந்த அதிகாரிகள் யார் யார் என்று
ஆள் காட்டி வேலையில் இறங்கிவிட்டது இந்த இனமலர் - இந்தக் கூட்டத்திடம்
அரசு எச்சரிக்கையாக இல்லையானால் அரசு வாகனத்தை அதல பாதாளத்தில்
இறக்கிவிட்டுவிடும் - எச்சரிக்கை!
---------------"விடுதலை” 19-5-2011
Post a Comment