Search This Blog

19.5.11

திராவிடர் கழகத் தலைவர் மீது இனமலரின் அடங்காத வெறி!.

நாகரிகம் தெரியுமா நரிகளுக்கு?

தி(இ)னமலர் ஏடு இன்று இப்படியொரு கார்டூனை வெளியிட்டுள்ளது.

எதைச் சொல்லியாவது திராவிடர் கழகத் தலைவர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டும் என்பதுதான் இனமலரின் அடங்காத வெறி.

தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவரைக் கொச்சைப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு, ஆத்திரம் அறிவுக்குச் சத்ரு என்கிற முறையில் நடந்துகொண்டு வருகிறது.

திராவிடர் கழகத்தை தினமலர் வகையறாக்கள் எதிர்க்கின்றன - சீண்டுகின்றன என்றால் அது நற்சான்றே தவிர வருத்தப்பட என்ன இருக்கிறது? பார்ப்பனர்கள் சரியாக இருக்கிறார்கள். நம் இனமக்களிடத்தில்தான் குழப்பமோ குழப்பம்! திராவிடர் கழகம் ஒன்றும் அரசியல் கட்சியல்ல. தேர்தலில் நிற்கக் கூடியதும் அல்ல.

வரவேற்கவேண்டியதை வரவேற்றும், எதிர்க்க வேண்டியதை எதிர்த்தும் செயல்படுவது என்பது திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு என்பது புத்தியுள்ள ஒவ்வொருவருக்கும் தெரியுமே!

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பது என்பது நாகரிகத்தின் அரிச்சுவடி! அதேபோல் நல்லது செய்தால் வரவேற்க வேண்டியது என்பது அறிவு நாணயத்தின் பாலபாடம். இவையெல்லாம் தினமலர் பார்ப்பனக் கும்பலுக்கு எங்கேயிருந்து தெரியப் போகிறது?

எங்கே சாவு வரும் - தர்ப்பணம் பண்ணிப் பணம் பறிக்கலாம் என்று கருதும் கழுகுகள் ஆயிற்றே!

தமிழ் செம்மொழியானால் வீட்டுக்கு வீடு பிரியாணி கிடைக்குமா என்று எழுதுகிற சோற்றுப் பண்டார - வயிற்றுப் பிழைப்புக் கூட்டம் இப்படித்தான் கார்ட்டூன் போடும்.

ஆளும் பொறுப்பில் இருந்த எம்.ஜி.ஆர். அவர்களை 13 வருடம் திராவிடர் கழகம் எதிர்த்துத்தான் செயல்பட்டது என்கிற பொது அறிவு கூட இல்லாததுகள் எல்லாம் பேனா பிடிக்கின்றனவே!

இப்பொழுதே தி.மு.க. ஆட்சிக்கு ஆதரவாக இருந்த அதிகாரிகள் யார் யார் என்று ஆள் காட்டி வேலையில் இறங்கிவிட்டது இந்த இனமலர் - இந்தக் கூட்டத்திடம் அரசு எச்சரிக்கையாக இல்லையானால் அரசு வாகனத்தை அதல பாதாளத்தில் இறக்கிவிட்டுவிடும் - எச்சரிக்கை!

---------------------”விடுதலை” 19-5-2011

1 comments:

தாமிரபரணி said...

/**"ஆத்திரம் அறிவுக்குச் சத்ரு" என்கிற முறையில் நடந்துகொண்டு வருகிறது.**/
தினமலர், துக்ளக், இந்து போன்ற பார்ப்பன நாளிதழ்களை பற்றிய தங்களின் விமர்சனத்தை வரவேற்கிறேன், அதற்காக சமற்கிருத வார்தைகளை பயன்படுத்தி விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன?
இது மறைமுகமாக பார்ப்பனர்களுக்கு கிடைத்த வெற்றிதான்.
நம் தமிழர்கள் எண்ணி பார்க்க வேண்டும் எங்கிருந்தோ வந்த ஆரிய நாய்ங்க இங்கு வந்து ஆதிக்கம் செய்கிறான், கோயில்களில் சமற்கிருதம்தான் ஒலிக்க வேண்டும் தமிழில் ஒலித்தால் அது தீட்டு, பார்ப்பனர்கள் மட்டும்தான் கடவுளின் சிலை அருகில் இருந்து தொட்டு பூசெய் செய்யலாம் மற்ற வகுப்பினர்கள் கடவுளின் அருகில் சென்றால் தீட்டு, மக்கள் பசியால் வாடி செத்துகொண்டிருக்கிறார்கள் ஆனால் கடவுள் என்ற பெயரில் சிலைக்கு பால், நெய் குளியல் நடத்தபடுகிறது என்ன கொடுமைடா.
ஆக வந்தேறிய பார்ப்பனன் தமிழையும், தமிழர்களையும் தமிழர்களின் தாய் நாட்டிலேயே தாழ்த்தி, அவர்களையும் அவர்களின் மொழியை மேன்மையானதாகவும் மாற்றியிருக்கிறார்கள் என்றால் நம்பமுடியவில்லை, அதை தமிழர்கள் ஏன் எதிர்க்கவில்லை, எட்டநின்று கடவுளை கும்பிடுகிறான், சமற்கிருதத்தில் அவன் ஒதும்போது இவன் எதிர்க்கவில்லை இல்லை பழகிகொண்டானா? மேலும் தங்கள் குழந்தைகளுக்கு இராமன், சிவா, கிருசுணன் போன்ற வடமொழி பெயர்களை வைத்து தங்களின் அடிமையை மேலும் உறுதிசெய்கிறான்.
இன்றைய தேவையில் இந்திய இறையாண்மையைவிட தமிழ் இறையாண்மை இன்றியமையானதாக படுகிறது. தமிழகம் இந்தியாவின் அடிமையாக இருக்கும்வரை இப்படிதான் தொடரும் போல.