Search This Blog
30.6.08
சமூக சீர்திருத்தம் பேசுகிறவர்கள் அரசியல் பேசலாமா? --கி.வீரமணி பதில்கள் -1
குற்றாலத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாமில் (16-6-2008) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில் விவரம் வருமாறு:
பெரியாரைப் பொறுத்த வரையில் - திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையிலே அய்யா அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்னாலே தெளிவாக தங்களுடைய தொண்டைப்பற்றி ஒன்றை சொல்லியிருக்கின்றார்கள். நம்முடைய தொண்டு - திராவிடர் கழகத்தினுடைய தொண்டு - கருப்புச் சட்டைக்காரனுடைய தொண்டு என்பது நன்றி பாராட்டாத நன்றியை எதிர் பார்க்காத ஒரு தொண்டாகும்.
நன்றி என்பதிருக்கிறதே...
thankles job என்று ஆங்கிலத்திலே அய்யா அவர்கள் சொல்லுவார்கள். அந்த வகையிலே பெரியாரோ இந்த இயக்கமோ என்றைக்கும் நன்றியை எதிர்பார்ப்பதில்லை. ஆனால் அய்யா அவர்கள் சொன்ன ஒன்றை நாம் அனைவரும் நினைவிலே வைத்துக்கொள்ள வேண்டும். 1933-லே குடிஅரசுவில் தந்தை பெரியார் அவர்கள் எழுதினார்.
நன்றி என்பது பயனடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பே தவிர உதவி செய்பவர்கள் எதிர் பார்ப்பது சிறுமைக் குணமேயாகும் என்று சொன்னார். எனவே அந்த வகையிலே நாம் நன்றியை எதிர்பார்த்து எதையும் செய்யவில்லை.
நன்றி கொன்றால் வரலாற்றுப் பழி
எனவே நன்றி கொன்றால் வரலாற்றுப் பழியை அவர்களே ஏற்கக் கூடிய அவசியம் இருக்கும். எனவே இந்த சமுதாயம் வளர வேண்டுமானால், அவர்களுக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே நன்றாக நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டியது - நன்றி காட்டுகின்ற பண்பை நாம் குறைத்துக் கொள்ளக் கூடாது.
அய்யா இன்னொன்றையும் சொன்னார்.: நன்றி காட்டுவது தமிழனுக்கு நஞ்சு போன்றது என்று அய்யா அவர்கள் அவருடைய மொழியில் பக்குவப்பட்டு சொல்லியிருக்கின்றார்கள் பெரியார் - நன்றியை எதிர்பார்க்கவில்லை
எனவே பெரியார் நன்றியை எதிர்பார்க்கவில்லை. நாம் நன்றியை மறக்கக் கூடாது. நன்றி மறந்தவன் மனிதனே அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பகுத்தறிவுக் கல்வியின் அவசியம்
மாணவர் கேள்வி: அறிவியல், சமூக அறிவியல், இயற்பியல், கணிதம் போன்று பகுத்தறிவுக் கல்வி என்பதை ஒரு பாடப் பொருளாக ஆக்க அரசை வற்புறுத்துவீர்களா?
தமிழர் தலைவர்: அரசை வற்புறுத்துவது என்பது ஒரு பகுதியாக இருந்தாலும், கல்வியே பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டால்தான் அது கல்வி என்றே தகுதியுள்ள பெயராக அமையுமே தவிர, வேறு அல்ல. பகுத்தறிவு இருப்பதால் தான் படிக்கவே, கற்கவே வருகிறான். ஆகவே அந்த அடிப்படையிலே பகுத்தறிவுக் கல்வி என்பது இருக்கிறதே, இன்றைய சூழலிலே இந்தக் கேள்விக்கு அவசியம் இருக்கிறது என்று சொன்னால்கூட நடைமுறையிலே பகுத்தறிவுச் சிந்தனையைத்தான் நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் அதை செய்யாவிட்டாலும் கூட தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார், மணியம்மை பல்கலைக் கழகம், பகுத்தறிவு பாடத்தை ஒரு பட்டயப் படிப்பாக பட்டப் படிப்பாக, பெரியார் சிந்தனை உட்பட ஆக்கியிருக்கிறது என்பது எல்லோருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதை அரசு பின்பற்றும் மற்ற பல்கலைக் கழகங்களும் பின்பற்றும். நீண்ட காலமாகவே மதுரையிலே இருக்கக் கூடிய யாதவர் கல்லூரியிலே பெரியார் சிந்தனைகள் - பகுத்தறிவு சிந்தனைகளை அவர்கள் ஒரு சான்றிதழ் படிப்பாக வைத்து அதை சொல்லிக் கொடுக்கின்றார்கள். ஆண்டு தவறாமல் அரசு சான்றிதழ் வழங்கி வழி காட்டுகிறார்கள். இதை விரிவாக்க வேண்டும். மற்றவர்களும் பின்பற்ற வேண்டும். அது சிறப்பானது. நிச்சயமாக வற்புறுத்துவோம்.
ஊடக வசதி இருந்தும்
பெரியார் கருத்து அதிகம் பரவவில்லையே!
மாணவர் கேள்வி: ஊடக வசதி, இன்றுபோல் இல்லாத அந்த காலத்தில் தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகள் வேகமாகப் பரவியது போல், ஊடகங்கள் வசதி அதிகம் உள்ள இந்த காலத்தில் கழகக் கருத்துகள் அதிகம் பரவாதது போல் தோன்றுகிறதே, என்ன காரணம்?
தமிழர் தலைவர்: ஊடகங்கள் தான் காரணம். முதலாவது, விஞ்ஞானம் வந்தால் நம்முடைய நாட்டில் மூடநம்பிக்கை ஒழியும் என்பது பொதுவான ஓர் உலக தத்துவம். ஆனால், நம்முடைய நாட்டில் ஊடகங்கள் வந்ததுதான் இப்பொழுது மூடநம்பிக்கை அதிகமாக வளருவதற்கே காரணமாக இருக்கிறது.
எங்கேயோ ஓர் இடத்தில் சபரி மலை கோயில் விழா நடைபெறுகிறது. அங்கு கதவு திறக்கிறது, எங்கோ ஒரு நாள் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் என்றால் ஊடகங்கள் வருவதற்கு முன்னாலே - டெலிவிஷன், வானொலி எல்லாம் வருவதற்கு முன்னாலே அது அந்த ஊரோடு அந்த நோய், அந்த மூடநம்பிக்கை அங்கே வருகிறவனோடு நின்றுபோய் விடும்.
மூடநம்பிக்கையை லைவ் டெலிகாஸ்ட்டில்
இப்பொழுது என்ன செய்கிறார்கள். டெலிவிசனைக் கண்டுபிடித்தவுடனே அதுவும் கலர் டெலிவிசன் என்றவுடனே எத்தனை கலர் புடவையோடு யார் யார் வந்திருக்கிறார்கள்? சாமிக்கு எத்தனை கலர் விருப்பமாக இருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவிற்கு அதை நேரடி அலை வரிசையில் (டுஎந கூநடநஉயளவ) எடுத்துக்காட்டி எல்லா ஊர்களில் இருக்கிறவனும் கன்னத்தில் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். ஆகவே நம்முடைய நாட்டில் விஞ்ஞான கருத்துகளை, விஞ்ஞான கருவிகளைக் கொண்டே பரப்புவதற்குப் பதிலாக அஞ்ஞானத்தையும், மூடநம்பிக்கையையும் ஊடகங்கள் பரப்புகின்ற காரணத்தால்தான் ஊடகங்கள் தான் நம்முடைய சீர்திருத்தத்திற்கு முதல் எதிரியாக இன்றைக்கு இருக்கிறது என்பதை நாம் பிரகடனப்படுத்தத் தயாராக இருக்கின்றோம்.
எப்படி ஏடுகள், ஊடகங்கள் மூடநம்பிக்கையைப் பரப்பிக் கொண்டிருக்கின்றார்களோ, அதற்கு விரோதமாக எதிராக விடுதலை, முரசொலி போன்ற ஏடுகள் எழுதுகின்றன. அதுமாதிரி நம்முடைய ஊடகங்களைத் தயாரிக்க வேண்டும்.
பெரியார் தொலைக்காட்சி வந்தால் - பிரச்சினை தீரும்
பெரியார் தொலைக்காட்சி என்பது தனியாக வந்தால்தான் இந்த வாய்ப்புகள் முழுமையாக இன்றைக்கு வரும். இருந்தாலும் மூலதனமும், வேறு சில சிக்கல்களும் அதிலே இருப்பதாலே அந்த சிக்கல்களை கொஞ்சம் சரிப் படுத்திவிட்டு, எப்படி காலந்தாழ்ந்தாலும் சிறப்பாக பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் அமைந்திருக்கிறதோ அதுபோல பெரியார் தொலைக்காட்சி வந்தால் இப்பிரச்சினைகள் தீரும்.
மக்கள் மத்தியிலே பகுத்தறிவு கருத்துகள் பரவ ஆரம்பித்தால் மூடநம்பிக்கைகள் மீது சலிப்பு ஏற்படும். புளிப்பு ஏற்படும். அதன்பிறகு மற்றவர்களும் நம்முடைய வழியைப் பின்பற்றுவார்கள்.
சேது கால்வாய் திட்டம் நிறைவேறுமா?
மாணவர் கேள்வி: சேது கால்வாய் திட்டம் நிறைவேறுமா?
தமிழர் தலைவர்: நிறைவேறியே தீரவேண்டும் (கைதட்டல்). இதை நிறைவேற்றாமல் விட மாட்டோம். ராமன் குறுக்கே நின்றாலும், இராவணப் படைகள் அதை முறியடிக்கும் (கைதட்டல்).
பா.ஜ.க. - தி.க., கொள்கைகளை ஏற்றுக் கொண்டால்...!
மாணவர் கேள்வி: பாரதீய ஜனதா கட்சி திராவிடர் கழகத்திற்கு எதிர் கட்சியாகக் கருதப்படுகிறது. பாரதீய ஜனதா கட்சியும், திராவிடர் கழகக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் ஆதரிப்பீர்களா?
தமிழர் தலைவர்: அப்படி ஏற்றுக் கொண்டால் அது பாரதீய ஜனதாவாக இருக்காது. திராவிடர் கழகமாகத்தான் இருக்கும். ஆதரிக்கின்ற பிரச்சினைக்கே இடமில்லை (கைதட்டல்).
நூலகங்களில் விடுதலை, உண்மை கிடைக்கவில்லையே
மாணவர் கேள்வி: பல மாவட்டங்களில் உள்ள நூலகங்களில் இன்றுவரை விடுதலை, உண்மை சரியாக வருவதில்லை. குறிப்பாக நகர்ப்புறங்களில் அதற்கு முடிவு என்ன?
தமிழர் தலைவர்: இந்த பிரச்சினையை புள்ளி விவர ரீதியாக எடுத்து மாநில நூலக ஆணையக் குழுத் தலைவர் அவர்களிடத்திலே கொண்டு போய் கொடுக்க அவர்கள் அதை ஆய்வு செய்து எல்லா நூலகங்களுக்கும் போடுவதற்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இன்னும் சிறிது காலத்திற்குள்ளாக இந்தப் பிரச்சினைக்கு இந்தக் கேள்விக்கு சரியான விடை, சரியான பரிகாரம் கிடைக்கும்.
ஆகவே கவலைப்பட வேண்டாம். ஆனால் எந்தெந்த நூலகங்களுக்கு வரவில்லை என்பதை உள்ளூர் தோழர்கள் எங்களுக்குக் கடிதம் எழுதி முயற்சித்தால் இன்னும் அது விரைந்து கிடைக்க வாய்ப்பு ஏற்படும். அந்த பிரச்சினையில் தெளிவாக நாங்கள் முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கின்றோம். நன்றி.
சமூக சீர்திருத்தம் பேசுகிறவர்கள்
அரசியலைப்பற்றி பேசலாமா?
மாணவர் கேள்வி: சமூக சீர் திருத்தம் பேசுகிறவர்கள் அரசியலைப்பற்றிப் பேசக் கூடாது என்று ஒரு அரசியல் கட்சித் தலைவர் சொல்லுகிறாரே இது பொருத்தமான கருத்தா?
தமிழர் தலைவர்: காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்கிற ஒரு பழமொழி உண்டு. எனவே சரியான பார்வை எதிலும் இப்படித்தான் பேசத் தோன்றும். சமுதாயத்தை சீர்திருத்தாமல் ஓர் அரசியல் அமைந்திருக்கின்ற காரணத்தால்தான் கொள்ளைக்காரர்களும், ஜாதி வெறியர்களும், மத வெறியர்களும் அரசியலை நடத்த முடிகிறது. எனவே சமுதாய சீர்திருத்தக்காரர்கள் அரசியலை திருத்தினால்தான் அரசியலே திருந்தும் என்று சொல்லக்கூடிய வாய்ப்பு முழுமையான முன்னுரிமை. சமுதாயப் பார்வை சமுதாய சீர்திருத்தக்காரனுக்குத்தான் உண்டே தவிர அரசியல்வாதிகளுக்குக் கிடையாது. சமுதாய சீர்திருத்தவாதிக்கு அடுத்த தலைமுறையைப் பற்றிக் கவலை. அரசியல் வாதிக்கு அடுத்த தேர்தலைப்பற்றிக் கவலை. ஆகவே தான் சமுதாய சீர்திருத்தவாதிக்குத்தான் முழு உரிமை, . முன்னுரிமை உண்டு.
பகுத்தறிவைப் பிரச்சாரம் செய்ய
தி.மு.க,, அ.தி.மு.க., கட்சிகளை வலியுறுத்துவீர்களா?
மாணவர் கேள்வி: திராவிடர் இயக்கம் என்று சொல்லப்படுகின்ற அல்லது அதிலிருந்து வந்ததாகச் சொல்லப்படக்கூடிய தி.மு.க., அ.தி.மு.க., போன்ற கட்சிகள் பகுத்தறிவு கருத்துகளையும் பிரச்சாரம் செய்ய நீங்கள் வலியுறுத்துவீர்களா?
தமிழர் தலைவர்: .தி.மு.க. என்றால் பகுத்தறிவு இயக்கம் என்பதை அண்ணா அவர்கள் ஏற்படுத்தி இன்றளவும் கலைஞர் அவர்கள் அந்தக் கொள்கையிலேயே வழுவாமல், நழுவாமல் தீவிரமாக இருந்து கொண்டிருக்கின்றார் (பலத்த கைதட்டல்).
இதிலே கொண்டு போய் அ.தி.மு.க.வை சேர்ப்பது இருக்கிறது பாருங்கள், அது ரொம்ப சிக்கலான விசயம். அ.தி.மு.க. கட்சிப் பெயரில் அண்ணா இருக்கிறார். பெயரில் திராவிடம் இருக்கிறது. அந்த மாதிரி ரொம்ப கட்சிகள் இருக்கிறது. விஜயகாந்த் கட்சியில் கூட திராவிட கழகம் இருக்கிறது.
இதில் தேசியம் இருக்கிறது. முற்போக்கு இருக்கிறது. பிற்போக்கு இருக்கிறது. எல்லா போக்கும் சேர்ந்து கடைசியில் கொள்கைக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுமே தவிர வேறு ஒன்றும் இல்லை (கைதட்டல்). ஆகவே அந்த நிலையில்தான் இருக்கிறது. ஆகவேதான் அவர்களை வற்புறுத்த வேண்டிய அவசியமில்லை.
அ.தி.மு.க. தலைமையே அப்படி இருக்கிறது
கல் சோறும், மண் சோறும் சாப்பிட்டுக் கொண்டு அடிப்படையே தெரியாத தலைமையே அங்கு இருக்கிறது. அந்த தலைமைக்கு கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றக் கூடியவர்களாக இருக்கின்ற வரையிலே அவர்களுக்கு வாய்ப்பில்லை.
அதனால்தான் கொஞ்சம் கொள்கை உணர்ச்சி இருக்கிறவர்கள் அதை விட்டு, வெளியே இருக்கிறார்கள். அந்த சூழ்நிலையில் இரண்டையும் ஒன்றாக வைத்துப் பார்க்கக் கூடாது. ஆகவேதான் நாம் முழுக்க முழுக்க பகுத்தறிவு கொள்கையைத் தாரளமாக வலியுறுத்துகின்றோம். பெரியாரை ஒரு முத்திரையாகப் பயன்படுத்தக் கூடாது.
பெரியார் அவர்களை ஒரு கொள்கையின் சின்னமாக மட்டுமே வைத்துப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் நாம் இந்த இயக்கத்திற்கும் சொல்லக்கூடிய ஒன்று. ஒரு காலத்திலே பெரியாரைப் பரப்ப வேண்டும், பரப்ப வேண்டும் என்கிற கவலையெல்லாம் நமக்கு இருந்தது.
இப்பொழுது பெரியாரை மற்றவர்களிடமிருந்து காப்பது எப்படி? பாதுகாப்பது எப்படி? என்கின்ற கவலைதான் நம்மை இப்பொழுது உலுக்கிக் கொண்டிருக்கிறது.
எனவே பெரியாரையும் பரப்புவோம், பெரியாரையும் பாதுகாப்போம் - இவர்களிடமிருந்து என்பதுதான் மிக முக்கியம்.
ஒன்பதாவது அட்டவணை பாதுகாப்பானதா?
மாணவர் கேள்வி: 9-ஆவது அட்டவணை பாதுகாப்பானதா?
தமிழர் தமிழர்: பாதுகாப்பான ஏற்பாடுதான். ஆனால், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பலருக்கு இன்னமும் இது விளங்கவில்லை.
கொஞ்ச காலமானால் விளங்கும். அல்லது விளங்கவைக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசாங்கத்திற்கும், உரிய முற்போக்கு சிந்தனையாளர்களைப் பெற்றுள்ள நாடாளுமன்றத்திற்கும் உண்டு.
ஆகவே அதை வலியுறுத்த வேண்டும். இது சட்டப்படித் தெளிவாக இருக்கிறது. ஒன்பதாவது அட்டவணையில் இருக்கக் கூடிய அந்தக் கருத்துகள் அதை மறுக்க இயலாத நீதிபதிகள் பார்ப்பனர்கள், உயர் ஜாதிக்காரர்கள் வேண்டுமென்றே அதற்குள்ளே ஒரு கோடு போட்டிருக்கின்றார்கள்.
இந்த ஆண்டிற்கு முன்னால்... இந்த ஆண்டிற்கு பின்னால்...
இந்த ஆண்டிற்கு முன்னால் வரையிலே, இந்த ஆண்டுக்குப் பின்னால் வரையிலே முன்னால் வரையிலே இருக்கக் கூடிய சட்டம் செல்லும். அதிலே நாங்கள் தலையிட முடியாது. ஆனால், பின்னால் இருக்கின்ற சட்டம் ஆய்வுக்குரியது என்று சொல்லுகின்றார்கள்.
பெரியார் சொன்ன மாதிரி தலைக்கொரு சீக்காய், தாடிக்கொரு சீக்காய் எப்படியிருக்க முடியும்? இருக்க முடியாது. ஆகவேதான் கோளாறு உள்ள நீதிபதிகள் குழப்பமான சிந்தனைகளுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் திருத்தப்படக்கூடிய வகையிலே காரியங்கள் நடைபெறவேண்டும். அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும்.
சில நேரங்களில் சில மனிதர்கள்...
நாடாளுமன்றத்திலே இப்பொழுது முற்போக்கு சக்திகளினுடைய கையும் ஓங்கித்தான் வருகிறது. நல்ல சிந்தனையாளர்கள் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களாக இருந்து பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள் எனவே இடைவிடாமல் வற்புறுத்தினால் தெளிவாக நாம் இதை ஏற்றுக்கொள்ள முடியும். நம்முடைய நாட்டைப் பொறுத்தவரையிலே அய்வருக்கும் தேவியாம், அழியாத பத்தினியாம் என்று சொல்லிச் சொல்லி, ஆமாமாம் என்று தலையாட்டின நாடு நம்முடைய நாடு.
ஆகவே நீண்ட காலமாக அந்தக் கருத்து இருக்கின்ற காரணத்தால்தான் இந்த சூழ்நிலை. எனவே ஒன்பதாவது அட்டவணை சட்டப்படி, நியாயப்படி சரியானது. அதை பயன்படுத்துகின்ற நீதிபதிகளின் போக்குத்தான் சில நேரங்களில் தவறானது.
நம்முடைய ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய நாவலின் தலைப்பைத்தான் எடுத்துக் காட்டிக் கொள்ளவேண்டும். சில நேரங்களில் சில மனிதர்கள். அவ்வளவுதான். வேறு ஒன்றுமே இல்லை (சிரிப்பு, கைதட்டல்).
-------- (தொடரும்)
Posted by
தமிழ் ஓவியா
2
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
வீரமணி
வீர மன்னர்களின் ஆதிக்கமெல்லாம் அழிந்திருக்க, புல்லேந்தும் பார்ப்பனர் எம்மாத்திரம்?
குறிப்பாக நான் சென்று வந்த நாடுகளுக்கும், இந்நாட்டிற்கும் வித்தியாசம் என்னவெனில் அந்நாடுகளெல்லாம் சுதந்திர வாழ்க்கையுடன் வாழும் மக்களைக் கொண்டதாக இருக்கின்றன. அங்கு உயர்வு தாழ்வு என்ற ஜாதி வேற்றுமைகள் இல்லை. பஞ்சம், பட்டினி என்ற பரிதாப நிலைமைகள் கிடையாது. மற்றவனுக்கு அடங்கி வாழும் மக்கள் அங்கே கிடையா.
ஆங்கிலேயரின் மேல் பார்வையில் இருந்தாலும், சிங்கப்பூர் மக்கள் ஒருவிதத் துன்பமுமின்றி சிறந்த நாகரிகம் நிறைந்தவர்களாக உள்ளனர்
விஞ்ஞான சாதனங்களிலும், மின்சார சாதனங்களிலும் மிக மிக மேன்மையாகவும் நம் நாட்டுமக்கள் கண்டு வியக்கும் படியான நிலையிலும் ஆச்சரியமான முறையிலும் ஒவ்வொரு துறையிலும் அதிசய அற்புதங்கள் காணப்படுகின்றன. ஏதோ வெள்ளையர்கள் கடந்த சில காலமாக நம் நாட்டினை ஆளும் வாய்ப்புக் கிடைத்ததால் நாம் அங்கு சென்று அவற்றைப் பார்த்தவுடன், இவைகளும் மனித சாதனங்களே விஞ்ஞானத்தின் பலனால் ஏற்பட்டவைகளே என்று எண்ணும் அளவுக் காவது சிறிதளவு பகுத்தறிவுவாதிகளாகவும், ஓரளவு விஞ் ஞான சாதனங்களையும், மின்சார சாதனங் களையும் கொண் டுள்ளவர்களாகவும் இருக்கிறோம். இல்லையேல், நம்நாட்டின் நிலை வெள்ளையர் ஆளுமுன் இருந்த நிலையில் இருந்து நாம் அங்கு சென்றால், இவை தான் சொர்க்கம் கடவுளின் சிருஷ்டியால் உண்டாக்கப்பட்ட இன்பலோகம், இவற்றை மனிதன்சாதிக்க முடியாது, கடவுள் ஒருவர்தான் செய்ய முடியும் என்று கண்டு வியப்படையும் அளவில் இருப்போம். ஏனெனில், அங்கு வாழும் மக்கள் அவ்வளவு சுகவாழ்க் கையை அடைகின்றனர். நான்கூட அதற்குத்தான் அங்குள்ள நம் தமிழ் மக்களிடம் நீங்கள் வைதிகர்களால் கூறப்படுகின்ற நரகலோக வாசிகளாக இருந்து, சொர்க்க லோகவாசிகளாக மாறி இருக்கிறீர்கள். இந்தச் சொர்க்க பூமியை விட்டு மறுபடியும் நரகம் வருவதற்குப் பிரியப்படாதீர்கள். இந்நாட்டுப் பிரஜைகளாகப் பதிவு செய்து கொண்டு இங்கேயே வாழும் உரிமையை அடைய முயற்சியுங்கள் என்று கூறிவந்தேன். ஏனெனில், அவ்வளவு மோசமான முறையிலும் நம் நாடு அமைந்துவிட்டது. நம் மக்கள் வாழ்க்கை நடத்துகின்ற இந்நாடே மிகவும் பரிதாபகரமான பஞ்சம் நிறைந்த நாடாகிவிட்டது. பட்டினியால் சாகும் நிலையில் உள்ள மக்களாகிவிட்டோம். கண்டவன் ஆளும் கொடுமைக்கு உள்ளாகிவிட்டோம், சுதந்திரம் என்ற பெயரால் நம் நாட்டிற்குத் தொடர்பில்லாத ஒரு கூட்டம், நம்மை மிகமிகக் கீழாக அடிமையாக்கி ஆளுகிறது. நம்மைக் காட்டிக் கொடுத்து அதைக்கொண்டு வயிறு வளர்க்கும் மோசமான ஜாதி இருந்து கொண்டு நம்மை ஒவ்வொரு விதத்திலும் முட்டாள்களாக்கி ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. அதனால் நாம் அடிமைகளாக இருப்பதும் அன்றி, உழைப்பாளிகளாகவும், பாட்டாளி மக்களாகவும், சூத்திர பஞ்சம ஜாதி என்ற இழிஜாதி மக்களாகவும் இருக்கிறோம். இந்நிலையில்தான் இன்று நம் நாட்டில் நம் நாட்டு மக்கள் வாழுகின்றனர். இதற்குக் காரணம், நம் மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறிவற்றவர்களாகவும், பகுத்தறி வில்லாத முட்டாள்களாகவும் வாழ்ந்ததே காரணம்! இவ்விதமான அறிவீனமான நிலைமைக்குக் கொண்டு வந்தவர்கள்தான் பார்ப்பனர்கள். இந்நாட்டின் வளத்தையும், உயர்ந்த நாகரிகத்தையும் கண்டு நிரந்தரமான முறையில் குடிசைகளை அமைத்துவிட்டனர். ஆடு, மாடுகள் மேய்வதற்கு ஏற்றதும், வளப்பமான முறையில் உள்ள செழுமை யான நிலங்களையும் கண்டவர்கள் இங்கேயே தங்களின் வாழ்க்கையை உறுதிப் படுத்திவிட்டனர். அன்றியும் அவர்கள் நாளடைவில் இந்தியா முழுவதும் பரவி, திராவிடத்தினுள்ளும் புகுந்து நம் பழங்குடி மக்களை வஞ்சித்து ஏமாற்றி, அவர்களின் அநாகரிகப் பழக்கவழக்கங்களைப் புகுத்தி அவற்றை நம்பும்படி செய்து, அதன்படி நம் மக்களை முட்டாள்களாகவும், பகுத்தறிவற்ற வர்களாகவும் செய்து விட்டனர். அன்று முதல் தான் நாம் உணர்ச்சியற்ற நிலைமையிலும் இருந்துவருவதால், நம்மை மிகவும் சுலபமான முறையில் ஏய்த்துப் பிழைக்க முடிகிறது. ஆனால் இதுபோன்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேறு எந்த நாட்டிலும் இருந்தது கிடையாது. அப்படி இருக்குமேயானால் சிறிது காலம் இருந்து பிறகு யாராவது ஒரு அறிவாளியால் சீர்திருத்தப்பட்டிருக்கும். குறிப்பாகக் கூற வேண்டுமானால் நம்மைவிட மிக மிக அநாகரிக முறையிலும், நாகரிகமே இன்னதென்று தெரியாத முறையிலும் இருந்து பச்சை மாமிசத்தையும், மீனையும் புசித்தவர்கள் தான் ஆங்கிலேயர்கள். அந்தக் காலத்தில்கூட நம்மக்கள், மேம்பாட்டில் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை சரித்திர வாயிலாக அறிகிறோம். அப்படி இருந்தும் நம்மை முந்தி விட்டனர் ஆங்கிலேயர்கள். அவர்களிடம் எதற்கும் பாடம் கற்கும் முறையில் அவ்வளவு மோசமாகி விட்டோம். அவர்கள் கண்டுபிடிக்கும் அதிசய அற்புதங்களையெல்லாம் நாம் மனதினாலும் நினைக்க முடியாத அளவு ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாகக் கூறினால், நம் நாட்டைத் தவிர மற்ற நாடுகள் எல்லாம் இதைப்போன்றே முன்னேறி வருகின்றன.
இதைத்தான் புரட்சிக்காலம் என்றும், ஆராய்ச்சிக்காலம் என்றும் கூறுவது, எதையும் அறிவைக்கொண்டு ஆராய்ந்து நன்மை தீமைகளை உணர்ந்தும் மனித சமுதாயத்திற்கு வேண்டிய சவுகரியங்களுக்கேற்ற பழைமையை மாற்றிய மைத்துக் கொள்ளும் நிலைமையில் உள்ளது. அதன் பலனாகத்தான் அந்நாடுகள் ஆராய்ச்சியில் மேம்பட்டு, புரட்சியின் தன்மை அடைந்து வியக்கும் அளவில் வளர்ந்து கொண்டுவருகின்றன.
ஆனால், நம் நாடோ தொன்று தொட்டே இந்த நிலைமையில் இருந்து வருகிறது. ஓரளவு நாகரிகமும், விஞ்ஞான மின்சார சாதனங்களையும் கொண்டுள்ள தென்றால், வெள்ளையர் சிறிது காலம் நம்மை ஆட்சி புரிந்ததன் பயனேயாகும். அவ்வாய்ப்பும் நமக்குக் கிட்டியிராதாயின் நாம் பழைமையில் ஊறிய பஞ்சாங்கப் பித்தர்களாகத்தான் இருக்க நேரிடும்.
ஆகவேதான் நம் நாடும், பிற நாட்டைப்போல் சுதந்திர நாடாக வேண்டும். இந்நாட்டை இந்நாட்டு மக்களே ஆளும்படியாகச் செய்யவேண்டும் என்பது திராவிடர் கழகத்தின் முதன்மையான நோக்கம். திராவிடத்தின் எல்லைக்கும் அப்பாலிருந்து எந்த அந்நியரும் உள்ளே அனுமதி இன்றிவந்து போகும் நிலைமை மாறவேண்டும். இந்நாட்டிற்குத் தொடர்பில்லாத அந்நிய பார்ப்பனர்களை இங்கிருந்து வெளியேற்றவேண்டும். வடநாட்டுக்காரர்களின் ஆட்சியினின்று பிரிந்து தனித் திராவிடத்தின் ஆட்சி அமையவேண்டும். கதவில்லா வீட்டில் கண்ட நாய்களும் புகுவதைப் போன்று அந்நியர்கள் இந்நாட்டில் புகுவதைத் தடுக்கவேண்டும். நாங்கள் இப்பபோழுது வெளிநாடுகள் சென்றபொழுது எப்படி நாங்கள் ஆள் ஒவ்வொருக்கும் அய்ந்தாயிரம் ரூபாய் செக்யூரிட்டி கட்டி அனுமதி பெற்று சென்றோமோ அதைப் போன்றே இந்நாட்டின் எல்லையைத் தாண்டி உள்ளே வருபவர்கள் எவராயிருந்தாலும் செக்யூரிட்டி செலுத்தி அனுமதிபெற்று வரவேண்டும். இவ்வித நிலைமையில் மாற்றினால் ஒழிய, நம்மக்கள் முன்னேறுவதற்கு வழியில்லை.
ஆனாலும் நான் முன்கூறியபடி இக்காலம் அறிவியல் புரட்சிக்காலம் என்று கூறியபடி, இப்பொழுது நம்நாட்டின் நிலைமையும், புரட்சியின் பலனை அனுபவித்துக்கொண்டே வருகிறது. சரித்திர காலத்திலிருந்து நம்மக்கள் அரசர்களாலும், ராஜாக்களாலும் ஆண்டு வந்ததாக அறிகிறோம். அக்காலம் முதல் வெள்ளையர்வரை நம்நாட்டினை ராஜாக்கள் ஆண்டுகொண்டுதான் இருந்தனர். ஆனால் ராஜாக்கள் ஆட்சியெல்லாம் சென்றவிடம் தெரியாமல் மறைந்து விட்டது. வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து, ஆட்சிசெய்தது போதும் உனக்கும் இந்நாட்டிற்கும் என்ன சம்மந்தம்? என்று கேட்கும்படி நிலையில் வந்து வெள்ளையனே வெளியேறு என்று கூறியவுடன், இதற்கு அவர்கள் மறுத்துப் பேசிய வார்த்தைகளில் கூட கடுமையான சொற்கள் காணப்பட வில்லை. விதவிதமான ஆயுதங்களும், இந்தியாவையே இரண்டு மூன்று குண்டுகளுக்கு இரையாக்கும் வல்லமை படைத்தவர்களையும், தரைப்படை, கப்பல்படை, ஆகாயப் படையிலும் நம்மிலும் எவ்வளவோ அதிக வல்லமை மிக்கவர் களாக இருந்தும் நம்முடைய வார்த்தையைக் கேட்டவுடன் உடனே சென்று விட்டனர்.
இதன்றியும் நம்நாட்டில் உள்நாட்டு சிற்றரசர்கள் சுமார் 650 பேர்கள் ஆண்டுவந்தார்களே அவர்கள் இப்போது எங்கே? அவர்கள் இந்திய நாட்டின் அடிமையான முறையில் தான் பதவியேற்று கவர்னர்கள் என்ற முறையில் இருந்து வருகிறார்கள். இதுமட்டுமின்றி ஜமீன்தார்கள் என்று கூறிக் கொண்டிருந்தவர்கள் எங்கே? அவர்களும் இன்றைய நிலை யில் சாதாரண மக்களைப்போன்று வாழ்க்கையைப் பெற்று வாழும் நிலைமையில் ஆக்கப்பட்டு விட்டனர். இன்னமும் செல்வந்தர்கள் என்றும் பணக்காரர்கள் என்றும் கூறிக் கொள்பவர்களுக்கும் ஆணவத்தை அடக்க சட்டமியற்றப் படவிருக்கின்றன. இவ்விதமாக ராஜாக்களும், சிற்றரசர்களும், ஜமீன்தார்களும் ஏன் என்றுகேட்டு அவர்களையே அழித்து வாழ்கின்ற நிலைமையில் உள்ளபோது இப்பார்ப்பனர்கள் எம்மாத்திரம்? வெள்ளையர்களாவது ஆயுதம் கொண்டவர்கள். அவர் களை எதிர்த்துத் துரத்திய நமக்குப் பார்ப்பனர்களின் பஞ்சாங்கமும் குழவிக்கல் சாமிகளும் என்ன செய்யும் என்று எண்ணும் நிலையையும் மக்கள் அடைந்துவிட்டனர். அவர்கள் இதுவரை தங்களின் பாதுகாப்பு கருவிகளாக மதத்தையும், சாஸ்திர புராணங்களையும் அமைத்துக் கொண்டிருந்ததால்தான் அவைகளையும் அழித்து, அவர்களையும் இந்நாட்டினை விட்டுத் துரத்த வேண்டுமென்று கூறிவருகிறோம்.
அதற்காகத்தான் நாங்கள் இவைகளில் எல்லாம் ஈடுபட்டு கடவுள்கள், சாஸ்திர, புராணங்கள் இவைகளின் ஆபாச அநாகரிகங்களை விளக்கிக் கூறி வருகிறோம். சென்ற ஆண்டில் பிள்ளையாரின் ஆபாசப் பிறவிகளையும், அதற்கு எழுதப் பட்டுள்ள அநாகரிகக் கதைகளையும் மக்களிடம் விளக்கிக் கூறியபின் அதை உடைத்தோம். இப்படி ஒவ்வொன்றி னுடைய யோக்கியதையையும் எடுத்துக் கூறி உடைத்துத் தூளாக்கி, மக்களிடம் இவற்றின்மேல் உள்ள மூடத்தன்மை களை ஒழித்து வருகிறோம். அதற்காகத்தான் இராமாயணத்தின் ஊழல்களை இப்போது விளக்கி வருகிறோம். எப்படி மக்கள் பிள்ளையாரின் ஆபாசத்தை உணர்ந்து நான் திருச்சியில் சுமார் ஒரு லட்சம் மக்கள் முன்பாக எவ்வித ஆட்சேபணையும் இன்றி உடைத்தேனோ, அதைப்போன்றே இராமாயணத்தின் ஊழலை மக்கள் யாவரும் உணர்ந்ததும் அவர்கள் முன்பாக இதை நெருப்பிலிட்டு பொசுக்கப்போகி றேன். இராமனின் படத்தைக் கொளுத்தப் போகிறேன். இப்படித்தான் ஒவ்வொரு கடவுளையும் உடைப்பதன் மூல மும், எரிப்பதன் மூலமும் மக்கள் கடவுள்கள் மீது கொண்டுள்ள மூடநம்பிக்கைகளைப் போக்க முடியும் என்ற நோக்கத் தால் செய்து வருகிறேன்.
-------------27.2.1955 அன்று தஞ்சை மாவட்டம் - குடந்தையில் தந்தை பெரியார் ஆற்றிய உரை (`விடுதலை, 16.3.1955)
Posted by
தமிழ் ஓவியா
1 comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
பெரியார்
28.6.08
விபச்சாரம் பெருகும் திருப்பதி! -- இந்து மதக் கடவுள்கள் செய்யாத லீலைகளா?
சீறி விழுகிறார்கள் சில அரசியல்வாதிகள்! ஆத்திரப்படுகிறார்கள் சில ஆத்திகவாதிகள்! பாய்ந்து விழுகின்றனர் பா.ஜ.க., சங்பரிவார்க் கூட்டத்தினர்!
அரசியல் கட்சிகளின் அந்த வரிசையில் கம்யூனிஸ்டுகளும் இருக்கிறார்களாம்.
புதிராக இருக்கிறதா? ஆந்திர மாநிலம் திருப்பதியில் தான் இந்தக் களேபரம்! முண்டாசு கட்டி முண்டா தட்டி எழுந்திருக்கின்றனர்.
எதற்கு? அப்படி என்ன நடந்து விட்டது?
ஆந்திர மாநில எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி கூறிய ஓர் உண்மைத் தகவலுக்காகத்தான் இத்தனைக் கூத்துகளும்!
அப்படி என்னதான் அவர் கூறிவிட்டார்? அம்மாநிலத்தில் எய்ட்ஸ் தடுப்பு அதிகாரியான ஆர்.வி. சந்திரவதனன் திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசினார்.
`திருமலையில் 20 முதல் 25 செக்ஸ் மையங்கள் இயங்கி வருகின்றன. இதில் 400 விபசார அழகிகள் உள்ளனர். இங்கு எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த மே மாதம் திருப்பதியில் 7604 ஆண்களிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களில் 268 பேருக்கு எச்.அய்.வி., கிருமி தொற்றியிருப்பது தெரிய வந்துள்ளது என்று செய்தி வெளியிட்ட தினத்தந்தி (சென்னை பதிப்பு 21.6.2008 பக்கம் 17) மேலும் கூறுகிறது.
திருப்பதி நகரில் மட்டும் 3500 அழகிகள் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக திருப்பதிக்கும், திருமலைக்கும் வரும் பக்தர்களிடம் எய்ட்ஸ் நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக தமிழ்நாடு, கருநாடக மாநில எல்லைப் பகுதிகளில் இடம் பெயர்ந்து வேலை பார்க்கும் கட்டடத் தொழிலாளர்கள்தான் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இன்னொரு தகவலும் வெளியாகியிருக்கிறது.
எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி வெளியிட்ட தகவலும், அது தொடர்பான புள்ளி விவரங்களும் ஆந்திர மாநில டி.வி. சேனல்களில் நேற்று ஒளிபரப்பானது. சில சேனல்கள் கூடுதல் தகவல்களைச் சேகரித்து வெளியிட்டன. இதனால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர் என்றும் இதற்கிடையே ஆந்திர மாநில எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி சந்திரவதனனுக்கு ஆந்திர மாநில பாரதீய ஜனதா, தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன என்ற தகவல்களை விலாவாரியாக தினத்தந்தி வெளியிட்டுள்ளது.
இதனைப் படித்தால் அழுவதா, சிரிப்பதா என்று தெரிய வில்லை. எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி தன் கடமையைத் தான் செய்துள்ளார் அவர் ஒன்றும் இந்துமத விரோதியும் அல்ல.
ஓர் உண்மையை சொல்லியதற்காக அவரைப் பார்த்து உறுமுவதில் அர்த்தம் இருக்க முடியுமா? தம் கடமையை ஒழுங்காகச் செய்த ஒரு உயர் அதிகாரிமீது பாய்ந்து பிராண் டுவதில் பக்தியிருக்கலாமே தவிர - பகுத்தறிவு இல்லை.
பொதுவாக கோயில் நகரங்களில் பால்வினை நோய்கள் அதிகம் என்பது இதற்கு முன்பும்கூட அதிகாரப் பூர்வமாக வந்துள்ள தகவல்கள்தாம்.
ருயீ வநஅயீடந வடிறளே ரனேநச ஹஐனுளு வாசநயவ என்ற தலைப்பில் `தி பயோனீர் ஏடு (21.7.1997) விரிவாக வெளியிட்டதுண்டு.
சுவிட்சர்லாந்து அரசின் சார்பாக அனுப்பப்பட்ட குழு ஒன்று உத்தரப்பிரதேச மாநி லத்தில் உள்ள `புனித கோயில் கள் என்று சொல்லப்பட்ட காசி, ரிஷிகேஷ், அலகாபாத் முதலிய இடங்களுக்குச் சென்று நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளன.
ரிஷிகேஷில் 28 பேர்களும் காசியில் 11 பேர்களும் அலகா பாத்தில் 19 பேர்களும், லக் னோவில் 16 பேர்களும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந் தனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
சென்னையில் 12,13.6.1976 ஆகிய இரு நாள்களிலும் பாலியல் நோய்பற்றி ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னைப் பொது மருத்துவ மனையின் பாலியல் நோய்த் துறை இயக்குநர் டாக்டர் சி.என். சவுமினி அக்கருத்தரங்கில் கூறிய தகவல் புண்ணி யதலங்களின் புண்பட்ட யோக்கியதையை வெளிப் படுத்தக் கூடியதாகும்.
`பக்தர்கள் அடிக்கடி கூடும் புண்ணிய ஸ்தலங்களில்தான் விபச்சாரம் பெரிய அளவில் நடக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள விபச்சாரம்மூலம் சராசரி மூன்று பேர்களுக்கு இந்த நோய் பரவுகிறது என்று சொன்னாரே சென்னை பொது மருத்துவமனையின் பிரபல மருத்துவரே கூறினாரே - நாக்கைப் பிடுங்கிக் கொள்வார்களா?
இந்து மதக் கடவுள்கள் செய்யாத லீலைகளா? கற்பழிப்பு என்பது கடவுள்களிடத்தில் சர்வ சாதாரணமாயிற்றே!
நாரதர் என்ற ஆண் கடவுளும், கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளும் புணர்ந்து 60 பிள்ளைகள் பெற்றனர் என்று கூறும் இந்து மதத்தைச் சேர்ந்த பக்தர்கள் - திருப் பதியில் விபச்சாரம் பெருகு வதாகப் புள்ளி விவரத்துடன் கூறிய தம் கடமையை ஒழுங்காகச் செய்த ஒரு அதிகாரியைக் காய்தலில் பொருளில்லை. காய்தல், உவத்தலின்றி உண்மையை உணர்ந்து, புண்ணியத்தலங்கள் என்றால் ஒழுக்கச் சீர்கேடுகளின் உறைவிடம் என்பதை உணர்ந்து திருந்துதல் - திருத்துதல் என்ற நிலைக்குத் தங்களைத் தயார் படுத்திக் கொள்வதுதான் புத்தி சாலித்தனம்.
ஒழுக்கத்துக்கும் பக்திக்கும் என்ன சம்பந்தம்?
`ஆனந்த விகடனே சாட்சி!
புண்ணியதலமான திருப்பதி திருமலையில் விபச்சாரம் என்று சொல்லலாமா? அபச்சாரம் அபச்சாரம் என்று புலம்பும் பக்தர்களே! `ஆனந்த விகடன் வெளியிட்ட இந்தச் செய்திக்கு என்ன பதில்
``சட்டென்று திடுக்கிட்டு ``திருப்பதியில் நடந்த கொடுமையை பார்த்தியா? என்றாள் சுமதி.
``திருப்பதியில் என்ன நடந்தது...?
``திருப்பதிக்குச் சாமி கும்பிட வர்ற காதல் ஜோடிகளை, அந்தத் தேவஸ்தான ஆட்கள் சிலர் பார்க்கிற பார்வையே சரியில்லையாம். சமீபத்தில் தேவஸ்தான விடுதியில் தங்கிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடியைச் சின்னாபின்னாப்படுத்தியிருக்காங்க ரெண்டு பேர்.. - சுமதி.
அடப்பாவமே...
`விடுதியில் இருந்த அந்த ஜோடியில் பையனை ஏதோ காரணம் சொல்லி அனுப்பிட்டு, அந்தப் பெண்ணைத் தூக்கிட்டுப் போய்க் கற்பழிச்சிருங்காங்க. பிறகு, அந்தப் பெண்ணையும் வெளியே துரத்திட்டாங்க. பையன் ஒரு பக்கமுமா பொண்ணு ஒரு பக்கமுமா ஒருத்தரை ஒருத்தர் திருப்பதி மலையில தேடி அலைஞ்சு, கடைசியா ஒண்ணு சேர்ந்து போலீஸில் புகார் கொடுத்திருக்காங்க. இப்போ அந்த ரெண்டு ஊழியர்களையும் கைது பண்ணியிருக்கு போலீஸ்... என்றாள் சுமதி
`அடக் கொடுமையே! புனிதமான மலையில் இப்படி சில புல்லுருவிகளா? காதல் ஜோடின்னா யாருக்கும் தெரியாம வந்திருப் பாங்க. விஷயத்தை வெளியே சொல்ல மாட்டாங்கன்னு நினைச் சுட்டாங்க போல...
(`ஆனந்தவிகடன் 25.2.2007)
----------------28-6-2008 "விடுதலை" ஞாயிறுமலரில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
மூடநம்பிக்கை
சுயமரியாதைத் திருமணமும் - புரோகிதத் திருமணமும்!
சென்னை, ஜூன் 28- சுயமரியாதைத் திருமணத்தையும் புரோகிதத் திருமணத்தையும் ஒப்பிட்டு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் பேசினார்.
சென்னை அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று நடந்த தொ.மு.ச. உறுப்பினர் பி.ராமமூர்த்தி இல்ல மண விழாவுக்குத் தலைமை ஏற்றுப் பேசியபோது கலைஞர் அவர்கள் இவ்வாறு ஒப்பிட்டுப் பேசினார். அதன் விவரம்:
தொண்டுக்கு - தியாகத்துக்கு
என்ன செய்யவேண்டுமோ அதை கழகம் செய்யும் நான் குடியரசு அலுவலகத்திலே ஒரு காலத்திலே பணி புரிந்தேன் என்றால், அந்த வேலைக்காக நான் அலைந்து திரியவில்லை. ஆனால் அந்த வேலை கிடைத்ததை என்னுடைய மனதிலே இதயத்திலே இன்றைக்கு பதிந்திருக்கின்ற அந்தப் பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு, அது அவைக்களமாக அன் றைக்கு இருந்தது. என்றைக்கும் இருக்கும். எல்லா இளைஞர் களுக்கும் அதைப் போல அமையும் என்ற காரணத்தி னாலேதான் சொல்லுகிறேனே அல்லாமல் வேறல்ல. இவைகள் எல்லாம் வாய்ப்புகள். நாம் வளர்வதற்கு அல்ல. தமிழர் தலைவர் எடுத்துக்காட்டியதைப்போல நம்முடைய வளர்ச்சிக்காக, எதிர்காலத்தின் வளர்ச்சிக்காக, நாம் நம்மை வருத்திக் கொள்ள வேண்டும், நம்மை தியாகங்களுக்கு ஆட்படுத்திக் கொள்ள வேண்டும், அத்தகைய தியாகங்களுக்கு ஆட்படுத்திக் கொண்ட வர்களைக் கொண்ட பாசறைதான் திராவிட இயக்கமாக, திராவிடர் கழகமாக, திராவிட முன்னேற்றக் கழகமாக, சுயமரியாதை இயக்கமாக அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரையில் பரிணமித்திருக்கிறது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
தி.மு.க. சுயமரியாதை இயக்கமாக
அன்று முதல் இன்றுவரை பரிணமித்திருக்கிறது
தமிழர் தலைவர் சொன்னார், சுயமரியாதைத் திருமணங்கள் 1948 இல் சைனாவில் தோன்றியது. அறிமுகப்படுத்தப்பட்டது என்று சொன்னார். அவர் சொல்லும்போது நான் நினைத்துக் கொண்டேன். என்னுடைய சுயமரியாதைத் திருமணம் 1944 இல் நடைபெற்றது. 13-9-1944 - அந்தத் தேதியில் நான் சுய மரியதைத் திருமணத்தை நடத்திக் கொண்டேன். என்னுடைய மைத்துனர் சிதம்பரம் ஜெயராமன், அதே நாளில், அதே நேரத்தில் தன்னுடைய திருமணத்தை புரோகிதத் திருமணமாக நடத்திக் கொண்டார். என்னுடைய திருமணத்திற்கும், அவர் திருமணத்திற்கும் சேர்த்து கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் கிந்தனார் கதா காலட்சேபத்துக்கு வந்திருந்தார். இவைகளை யெல்லாம் நான் சொல்லக் காரணம், என் திருமணம் பகுத்தறிவுத் திருமணம், நாகை விஜயராகவ நாயுடு என்ற சுயமரியாதைக்காரருடைய தலைமையில் நடைபெற்றது. அதே பந்தலில் பக்கத்தில் தாழ்வாரத்தில் என்னுடைய மைத்துனர் சிதம்பரம் ஜெயராமன் அவர்களுக்கு புரோகிதத் திருமணம் நடைபெற்றது. என் திருமணத்தில் நாவலர் நெடுஞ்செழியனும், பேராசிரியர் அன்பழகனும் மற்றவர்களும் வந்திருந்து வாழ்த்தினார்கள். என் திருமணத்திற்குப் பிறகு நான்காண்டு காலம் என்னுடைய துணைவியார் வாழ்ந்தார். அதற்குப் பிறகு நோய்வாய்ப்பட்டு அவர் மறைந்தார். சுயமரியாதைத் திருமணத் திலே அன்றைக்கு மங்கலநாண் அணிந்து கொண்டவர்கள் மூன்றாண்டு காலம் வாழ முடிந்தது. ஆனால் புரோகிதத் திருமணம் நடைபெற்றது என்னுடைய மைத்துனருக்கு. மூன்று மாதம் கூட அவருடைய துணைவியார் வாழவில்லை. அவர்கள் மறைந்து விட்டார்கள்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், சுயமரியாதை திருமணம் - புரோகிதத் திருமணம் இரண்டும் ஒரே இல்லத்தில் நடைபெற்றது. ஆனால் இரண்டு பேருடைய வாழ்க்கையும் எப்படி அமைந்தது என்பதை எடுத்துச் சொல்வதற்காகத்தான் இதைக் குறிப்பிடுகிறேனே அல்லாமல் வேறல்ல. அவரவர் களுடைய உடல் நிலைமைக்கேற்ப சூழ்நிலைக்கேற்ப வாழ்க்கை அமைகிறது. அப்படிப்பட்ட வாழ்க்கையை வைதீகத்தோடு ஜாதகத்தோடு, ஆரூடத்தோடு இணைத்து இவைகளுக்கெல்லாம் காரணம் எவையெவை என்று கற்பனை செய்து அந்தக் கற்பனைகளிலே காலத்தையோட்டி தமிழர்கள் தங்களுடைய இன உணர்ச்சி, மான உணர்ச்சி, பகுத்தறிவு உணர்ச்சி இவைகளையெல்லாம் இழந்த காலம் ஒன்று இருந்தது. அதை மாற்றியமைக்கத்தான் தந்தை பெரியார், அவர் வழியிலே பேரறிஞர் அண்ணா இவர்கள் எல்லாம் பாடுபட்டார்கள், நாங்களும் அந்த வழியிலே பாடுபட்டுக் கொண்டு இருக்கிறோம்.
- இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் பேசினார்.
Posted by
தமிழ் ஓவியா
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
கலைஞர்
27.6.08
புத்தரின் அறிவுரை காலத்தால் அழிக்க முடியாதது
பவுத்தத்தைப் பரப்பிய ஒரு மக்கள் இனம் உண்டென்றால் அவர்கள் நாகர்கள்தான் என் பதை, பவுத்த வரலாற்று இலக் கியங்களைப் படித்தவர்கள் அறிவார்கள். ஆரியர்களுடைய மிகக் கடுமையான எதிரிகள் நாகர்கள், ஆரியர்களுக்கும் - ஆரியர் அல்லாதவர்களுக்கும் கடுமையான போர், பல காலம் நடைபெற்றுள்ளது. நாகர்களை, வந்தேறிகளான ஆரியர்கள் எப்படியெல்லாம் துன்புறுத்தி னார்கள் என்பதை புராணங் களில்கூடக் காணலாம்.
புத்தரின் அறிவுரைகளை, நாகர்கள் நாடு முழுவதும் பரப்பினார்கள். எனவே தான், நாம் அனைவரும் நாகர்கள் எனப்பட்டோம். நாகர்கள் பெருமளவில் நாகபுரியிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழ்ந்ததாகத் தெரி கின்றது. எனவேதான், இந்நகரம் நாகபுரி எனப் பெயர் பெற்றுள்ளது.
நாம் தன்மானத்திற்காகவே போராடுகின்றோம். மனித இனத்தையே சரியான பாதையை நோக்கி இட்டுச் செல்ல நாம் தயாராகிக் கொண்டிருக்கின்றோம். இதற்காக எந்தத் தியாகத்தையும் செய்ய நாம் தயார். நமக்குரிய உரிமைகளை நாம் வென்றெடுப்போம். நாம் பவுத்தர்களாகி விட்ட பிறகும், நமக்குள்ள அரசியல் உரிமைகளைப் பெற்றிட என்னால் முடியும். (`பாபாசாகேப் அம்பேத்கர் வாழ்க! - விண்ணைப் பிளக்கும் அதிரொலியுடன் கைதட்டல்கள்).
நான் இந்துவாகப் பிறந்திருந்தாலும் - இந்துவாகச் சாக மாட்டேன் என உறுதி ஏற்றேன். நேற்று அந்த வாக்கை நிறைவேற்றினேன். எனக்கு அளவற்ற மகிழ்ச்சி; எல்லையற்ற இன்பம், கடுங்கொடிய நரகத்திலிருந்து விடுதலை பெற்ற உளம்பூரிக்கும் உணர்வு. கண்மூடித்தனமான தொண்டர்கள் எனக்குத் தேவை இல்லை. பவுத்த மார்க்கத்தில் இணைந் திடுபவர்கள், பவுத்த நெறிமுறைகளை மிக நன்றாகப் புரிந்து கொண்டு - உளமாற உணர்ந்து பவுத்தத்தை ஏற்றிட வேண்டும். நாம் இந்துக்களாகவே இருப்பதால்தான், நம்மால் எதையும் செய்ய முடியவில்லை.
இந்து மதத்தில் இருக்கும்வரை, எவரும் முன்னேற முடியாது. ஏற்றத் தாழ்வு என்ற கட்டுமானத்தின்மேல் கட்டப்பட்டுள்ள இந்து மதம், சிலருக்கு வேண்டுமானால் வசதியாக இருக்கலாம். குறிப்பாக, மேல் சாதியினருக்கு வசதியாக இருக்கலாம். ஆனால், மற்றவர்கள் நிலை என்ன?
ஒரு பார்ப்பனப் பெண் - குழந்தையைப் பெற்றால், அவள் குழந்தையைப் பெற்ற நாள் முதலே - எந்த உயர்நீதிமன்றத்தில் நீதிபதியின் நாற்காலி காலியாக உள்ளதோ, எப்பொழுது காலியாகுமோ என்பதைப் பற்றியே குறியாக இருக்கிறார். ஆனால், துப்புரவுப் பணி செய்யும் நம் சகோதரி, ஒரு குழந்தை பெற்றாள் எனில், தாம் பெற்ற குழந்தைக்கும் ஒரு துடைப்பக் கட்டை கிடைக்காதா? என்றே ஏங்குகின்றாள்.
இப்படிப்பட்ட விந்தையான ஏற்பாடுகள், இந்து மத சாதி அமைப்புகள் விளைவித்துள்ள கூறுகளின் வெளிப்பாடே யாகும். இதுபோன்ற தொரு அமைப்பு முறையிலிருந்து நாம் எத்தகைய முன்னேற்றத்தைக் காண முடியும்? பவுத்த மார்க் கத்தின் மூலம் மட்டுமே நாம் மேம்பாடு அடைய முடியும். நம்மடைய வழியில் நாம் போய்க் கொண்டிருக்கின்றோம். மற்றவர்கள் அவர்களுடைய வழியில் போகட்டும்.
நமக்கென ஒரு புதிய மார்க்கத்தை நாம் கண்டுள்ளோம். இந்த நாள் ஒரு நம்பிக்கைக்குரிய நாள். வெற்றிக்கு வழிகண்ட நாள். வளமான வாழ்விற்கு வழி கண்ட நாள். மாபெரும் விடுதலை நாள். இவ்வழி ஏதோ புதிய வழி அல்ல. இவ்வழி வேறு எங்கிருந்தோ இங்கு இறக்குமதி செய்யப்பட்டதுமல்ல. இம்மார்க்கம் இங்கிருந்தே தோன்றியதுதான்.பவுத்தம், இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிலை பெற்றிருக்கிறது. புத்தரின் அறிவுரைகள் காலத்தால் அழிக்கப்படாதவை.
--------------------------15.10.1956 அன்று, நாகபுரியில் அம்பேத்கர் அவர்கள் நிகழ்த்திய பேருரை. இதே இடத்தில்தான் 14.10.1956 அன்று பத்து லட்சம் மக்களுடன் அம்பேத்கர் பவுத்தத்தைத் தழுவினார்
Posted by
தமிழ் ஓவியா
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
அம்பேத்கர்
நாம் ஓர் ஆட்சியை ஆதரிப்பதும், எதிர்ப்பதும் கொள்கைக்காகவும், இனநலனுக்காகவுமே இருக்கும்!
எம்.ஜி.ஆர். அவர்களை பாராட்டுகிறோம்
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு அறிவித்ததற்காக நாம் உடனே எம்.ஜி.ஆர். அவர்களைப் பாராட் டுகிறோம் என்று அறிக்கை கொடுத்தோம். எனவே நம்முடைய அணுகுமுறை என்பது கொள்கை ரீதியானதே தவிர, தனிப்பட்ட முறையிலே விருப்பு, வெறுப்புகள் கிடையாது. எம்.ஜி.ஆர். அறிவித்ததை வரவேற்கிறோம்; எம்.ஜி.ஆர் அவர்களைப் பாராட்டுகிறோம்! என்று அறிக்கை எழுதினோம்.
இதற்காக யாராவது எம்.ஜி.ஆரை எதிர்த்தால் அவர்களை நாங்கள் எதிர்ப்போம் என்று பார்ப்பனர்களுக்கு சவால் மாதிரி நாம் தெளிவாக எடுத்துச் சொன்னோம்.
உத்தரவு போட்டது போட்டதுதான்
பார்ப்பனர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். அவர்களிடம் சென்று கேட்டார்கள். எம்.ஜி.ஆர். சொன்னார்: வீரமணி ஒரு வருடமாகப் பிரச்சாரம் செய்தார். நீங்கள் பார்ப்பன சங்கங்களை எல்லாம் வைத்துக் கொண்டு என்ன செய்தீர்கள்? உங்களுடைய காரியம் ஒன்றும் எடுபடவில்லை. நான் போட்ட உத்தரவு போட்டதுதான் என்று சொல்லிவிட்டார்.
அதன் பிறகு எம்.ஜி.ஆர். அம்பாசங்கர் கமிஷன் என்ற ஒரு கமிஷனைப் போட்டார். இதற்கெல்லாம் நாம் விடாமல் இருந்து முயற்சி பண்ணி, பிற்படுத்தப்பட்டோருடைய இட ஒதுக்கீட்டை நிலைக்க வைத்தோம்.
ஆதரிக்க வேண்டிய நேரத்தில் ஆதரிப்போம்
ஆகவே நாம் எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்ப்போம், ஆதரிக்கவேண்டிய நேரத்தில் ஆதரிப்போம். அதற்குப் பிறகு ஜானகி அவர்களது ஆட்சி ஏற்பட்டது. அடுத்து கலைஞர் அவர்களது ஆட்சி ஏற்பட்டது. கலைஞர் ஆட்சியை வேண்டு மென்றே விடுதலைப்புலிகள், அது இது என்று சொல்லி கலைத்து விட்டார்கள். கலைஞர் ஆட்சியை டிஸ்மிஸ் செய்தது தவறு என்று நாம் எடுத்துச் சொன்னோம். அந்த சூழ்நிலையில்தான் மீண்டும் தேர்தல் நடந்தது. ஜெயலலிதா வந்தார்.
சொன்னதை செய்பவர் கலைஞர்
இன்றைக்கு கலைஞர் ஆட்சிக்கு வந்தார். சொன்னதை செய்தார்; செய்வதையே சொன்னார். நல்ல வாய்ப்பாக அவரு டைய ஆட்சி அய்ந்தாம் முறையாக அமைந்தது. ஒரு பொற்கால ஆட்சியை இன்று தந்து கொண்டிருக்கக் கூடிய அற்புதமான ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அதனுடைய விளைவாக இன்றைக்கு ஒரு பெரிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. நாமெல்லாம் தலை நிமிர்ந்து நிற்கின்றோம்.
இன்றோடு அர்ச்சகர் மாணவர் பயிற்சி முடிவடைகிறது
கடைசியாக ஜாதி, சூத்திரப்பட்டம் பதுங்கிக் கொண்டிருந்த இடம் கோயில் கருவறை என்று அய்யா அவர்கள் சொன்னார் கள். இப்பொழுது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக பயிற்சி கொடுத்தார்கள். இன்றோடு அந்த மாணவர்களுக்குப் பயிற்சி முடிவடைகிறது. 69 சதவிகித இட ஒதுக்கீடு அடிப்படையில் - அதில் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், ஆதிதிராவிடர்கள் உட்பட எல்லோரும் இருக்கிறார்கள். எல்லோரும் பயிற்சியை முடித்து இன்னும் கொஞ்சநாள் ஆனவுடனே அர்ச்சகர் ஆகப் போகிறார்கள்.
நம்முடைய வாழ்நாளில் பார்க்கப் போகிறோம்
மறுபடியும் தந்தை பெரியார் நினைத்த ஜாதி ஒழிந்த, தீண்டாமை ஒழிந்த - ஒரு சமுதாயத்தை நம்முடைய வாழ்நாளிலே பார்க்கப் போகிறோம். தந்தை பெரியார் எடுத்தார். கலைஞர் சட்டத்தைத் தொடுத்தார். நம்முடைய காலத்தில் முடித்தோம் என்ற பெருமையோடு நாம் இன்றைக்கு இருக்கக் கூடிய அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கின்றோம் (கைதட்டல்). இதில் ரொம்ப மிக முக்கியமான ஒரு கேள்வி - நம்மாட்களிலேயே சில பேர் புரியாமல் கேட்கின்றார்கள். ஏங்க, கடவுள் இல்லை என்பவர்களுக்கு யார் அகச்சகராக இருந்தால் என்ன? என்று கேட்கிறார்கள். கடவுள் இல்லை என்பது கொள்கை.
சூத்திரர் என்ற பட்டம்
நான் கோவிலுக்குப் போகாதவன்; என்னுடைய அண்ணன் போகிறானே, என்னுடைய உறவினன் போகிறானே, என் மாமன் போகிறானே, என்னுடைய மைத்துனன் போகிறானே. என்னு டைய சகோதரன் பார்ப்பனிடம் கையேந்தும்போது, நீ சூத்திரன் - எட்டி நில் என்றுதானே கருவறைக்கு வெளியே நிறுத்துகின் றான். சூத்திரன் என்றால் என்ன அர்த்தம்? பார்ப்பனனுக்கு வைப்பாட்டி மகன் என்று அர்த்தம்.
எனக்கு ஒன்றும் இழிவு இல்லீங்க. என்னுடைய அண்ணனைத்தான் பார்ப்பனருக்கு வைப்பாட்டி மகன் என்று சொல்லுகின்றான் என்றால் என்ன அர்த்தம்? என் அண்ணனுக்கு இழிவு வந்தால் எனக்கு இல்லையா? ஆகவேதான் உரிமை என்கிற அடிப்படையிலே இதனைத் தெளிவாக வைத்திருக்கின்றோம்.
எனவே தந்தை பெரியார் அவர்களுடைய இந்தக் கொள்கை வெற்றி பெற்றது. பண்பாட்டுப் புரட்சி அடிப்படையிலே இன்றைக்கு நல்ல வாய்ப்பாக கலைஞர் அவர்கள் தமிழகத்திலே மட்டும் ஆட்சி அமைக்கவில்லை.
மத்தியில் மத சார்பற்ற ஆட்சி அமைய
மத்தியில் மத சார்பற்ற ஓர் ஆட்சி அமைவதற்கும் காரணமாக இருந்திருக்கின்றார். தி.மு.க. கூட்டணி சார்பில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெற்றதனாலே அங்கே பி.ஜே.பி. ஆட்சி கீழே விழுந்தது. இந்தியா ஒளிர்கிறது. நாம் வந்து விடலாம் என்று பார்த்தார்கள் - பி.ஜே.பி.யினர். தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றதாலே பி.ஜே.பி.யினர் மைனாரிட்டி ஆனார்கள். ஆட்சி அமைக்க முடியாமல் போனது.
ஆதரிக்க - வேண்டிய நேரத்தில் ஆதரிக்கிறோம்
அதனாலே மத்தியிலே அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி சோனியா காந்தி அவர்களுடைய தலைமையிலே (UPA) ஏற்பட்டது. இதில் பெண்ணுரிமைச் சட்டம், தகவல் உரிமைச் சட்டம், பெண்களைப் பாதுகாக்கின்ற சட்டம் இப்படியெல்லாம் வரும்பொழுது நாம் ஆதரிக்கின்றோம். எதிர்த்து சொல்ல வேண்டியதை சொல்கின்றோம்
பெட்ரோல் வரி உயர்வு, விலைவாசி உயர்வு, பண வீக்கம், உலகமயம், தாராளமயம் இந்தக் கொள்கைகளுக்கு பலியாகும் பொழுது அந்த அரசாங்கத்தையும் நாம் எதிர்த்து, சொல்ல வேண்டிய கருத்துகளை தெளிவாக எடுத்துச் சொல்லுகின்றோம்.
அதே மாதிரி 27 சதவிகித இட ஒதுக்கீடு வரும்பொழுது நாம் ஆதரிக்கின்றோம். இதுவரையில் மத்திய அரசாங்கத்தினுடைய கல்வி நிறுவனங்களில் கதவு திறக்கவிகலலை.
இந்த ஆட்சியில்தான் கதவு திறந்தது
இந்த ஆட்சியில் தான் கதவு திறக்கும்படியாக ஆனது. நம்முடைய போராட்டம் கலைஞர் அவர்களுடைய பேராதரவு - ஆட்சி இது அத்தனையும் வந்ததனாலே வந்தது.
தந்தை பெரியார் அவர்கள் எதை விரும்பினார்களோ அந்த சமூக நீதியும், ஜாதி ஒழிப்பும் இன்றைக்குத் தொடர்ந்து இந்த இயக்கத்தினாலே மிக ஆழமாகத் தொடர்ந்து நடந்துகொண்டி ருக்கின்றது. ஆகவே இந்த இடஒதுக்கீடு என்பது இருக்கின்றதே இதிலும் நாம் வெற்றி பெற்றிருக்கின்றோம்.
``மகளிர் உரிமை காத்த ஆட்சி மாண்பாளர்
எனவே பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு, சமூகநீதி இந்த மூன்றையும் இந்த ஆட்சிகளில் நாம் பெற்றிருக்கின்றோம். பெண்களுக்கு சொத்துரிமை கலைஞர் அவர்களுடைய ஆட்சியிலே வந்தது. கலைஞர் அவர்களுக்கு மகளிர் உரிமை காத்த ஆட்சி மாண்பாளர் என்ற பட்டத்தை நாம் கொடுத்திருக் கின்றோம். மிகப் பெரிய மனிதநேயர் என்பதையும் நாம் சொல்லி யிருக்கின்றோம். செங்கற்பட்டு மாநாட்டுத் தீர்மானம் நிறைவேற் றப்பட்டிருக்கின்றது - அதை நாம் வரவேற்றிருக்கின்றோம்.
எந்த ஆட்சியை நாம் ஆதரித்தாலும் - எதிர்த்தாலும்
எனவேதான் எந்த ஆட்சியை நாம் ஆதரித்தாலும், எந்த ஆட்சியை நாம் எதிர்த்தாலும், சமுதாய நலனுக்காக, இன நலனுக்காக, மனித நேயத்திற்காக, பகுத்தறிவு வளர்ச்சிக்காக, மூடநம்பிக்கை ஒழிப்பிற்காக என்பதுதான் அடித்தளமான செய்தி.
திராவிடர் கழகத்தின் அணுகுமுறையே இதுதான்
ஆகவே திராவிடர் கழகத்திற்கு தொடர்ந்து இந்த அணுகு முறைதான் என்பது தெளிவாகிறது. அய்யா தந்தை பெரியார் அவர்கள் 1967 தேர்தலின் பொழுது காங்கிரசை ஆதரித்துக் கொண்டிருந்தவர். திடீரென்று தி.மு.க.வை ஆதரிக்கிறார். எப்படி, இப்படி மாறிவிட்டார்? மாறிவிட்டார் பாருங்கள்; மாறிவிட்டார் பாருங்கள் என்று அய்யா அவர்களைப் பார்த்துச் சொன்னார்கள். அய்யா அவர்கள் நான் மாறிவிட்டேனா? என்று ஒரு தலையங்கத்தில் எழுதினார். அய்யா அவர்கள் 1968 போன்ற கால கட்டங்களில் எழுதியிருக்கின்றார். அய்யா அவர்களுக்கு அப் பொழுது 90 வயது. அப்படி எழுதும்பொழுது அய்யா அவர்கள் சொல்லுகின்றார்:
நீதிக்கட்சி காலத்தில் இருந்து வரிசையாக சொல்லுகின்றார்
நீதிக் கட்சிக் காலத்தில் இருந்து அவர் ஆதரித்ததை எல்லாம் வரிசையாக எடுத்துச் சொல்லிக் கொண்டே வந்தார், நான் கட்சிக் காரனாக இருந்ததில்லை; நான் கொள்கைக் காரனாகவே இருந்திருக்கின்றேன் என்று அய்யா அவர்கள் சொன்னார்கள்.
1968-இல் அய்யா அவர்கள் சொல்லுகின்றார்: நேற்று காம ராசர் ஆட்சியை ஆதரித்தேன்; இன்றைக்கு தி.மு.க.வை ஆதரிக்கின் றேன்; நாளைக்கு இப்படியே இருப்பேனா என்பதை சொல்ல முடியாது.
``நாளைக்கு யாரை ஆதரிப்பேன் என்பது எனக்கே தெரியாது!
``நாளைக்கு யாரை ஆதரிப்பேன் என்பது எனக்கே தெரியாது என்று அய்யா அவர்கள் சொன்னார் (பலத்த கைதட்டல்). யாராக இருந்தால் என்ன? நமது கொள்கைக்கு மாறாகப் போனால், நாம் எப்படி ஆதரிக்க முடியும்? ஆகவேதான் நம்முடைய அணுகு முறை என்பது இருந்திருக்கின்றதே - முழுக்க முழுக்க அது கொள்கை சார்ந்த ஒன்று. மேலெழுந்த வாரியாகப் புறத்தோற்றத் திலே கொஞ்சம் குழப்பமாக - கொஞ்சம் மயக்கமாக இருந்தாலும் கூட ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் நிச்சயமாக என்றைக்கும் நமக்கு தடுமாற்றமே கிடையாது. நம்முடைய கொள்கை தெளி வானது. மறுபடியும் நான் என் உரையை முடிக்கும் முன்பு உங்களுக்கு ஒரு செய்தியை நினைவூட்டுகின்றேன்.
பிரின்சிபில்ஸ் என்பது அடிப்படைக் கொள்கை என்பதை நான் ஆரம்பத்தில் சொன்னேன். திட்டம் என்பது அதை அடை வதற்கான வழிமுறை. வழிமுறைகள் மாறும் - நாளைக்கும்கூட.
அடிப்படைக் கொள்கைகள் ஒருபோதும் மாறாது
ஆனால், அடிப்படைக் கொள்கைகள் என்பது ஒருபோதும் மாறாது; மாற்றப்பட முடியாது. அந்த இடத்தை நோக்கி நம்முடைய பயணங்கள் தொடரும் - பயணங்கள் முடிவதில்லை. நன்றி, வணக்கம் (பலத்த கைதட்டல்). வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு! இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
---------------------குற்றாலத்தில் 16-6-2008 அன்று மாணவர்களுக்கு நடத்திய பெரியாரியல் பயிற்சி வகுப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி
Posted by
தமிழ் ஓவியா
2
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
வீரமணி
சாதி, மதம், வேதம், கடவுள் எல்லாவற்றையும் ஒழித்துத்தான் ஆக வேண்டும்!
முதலில் சாதி வித்தியாசம் என்கிற கொடுமைத் தன்மை என்பது இந்த நாட்டைவிட்டு ஒழிய வேண்டுமா, வேண்டாமா என்ற முடிவு தெரிந்துவிட வேண்டும். இரண்டாவதாக, ஒரு மனிதனுக்குக் கீழோ, மேலோ சாதி என்பது ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்தாக வேண்டும். அதற்கு மேல், சாதி வித்தியாசத்திற்கு ஆதாரமாயுள்ளவைகளை அடியோடு அழிக்க முயல வேண்டும். அப்படிச் செய்யாமல், உயர்வு தாழ்வைப் போக்கிவிடலாமென்று கருதுதல் நுனிமரத்தில் நின்று கொண்டு அடிமரத்தை வெட்டுகிற மனிதனின் முட்டாள் செய்கையையே ஒக்கும்.
சாதி ஆசாரம் என்பவை மதம் என்னும் மரத்தைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. சாதியை மதத்திலிருந்து பிரித்துத் தள்ள வேண்டும். இப்படிப் பிரிப்பதற்கு முடியாத வரையில் சாதியும் மதமும் ஒன்றோடொன்று இறுகப் பின்னிக் கொண்டிருக்குமேயானால் அந்த இரண்டையும் வீழ்த்தியேயாக வேண்டும். முன்னிருந்த அந்த உயர்ந்த சாதிக் கபடர்கள் அவ்வளவு தந்திரமாக ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத வகையில் சாதியையும், மதத்தையும் பிணைத்துப் பின்னிக் கொண்டிருக்கும்படி இறுகக் கட்டி வைத்திருக்கிறார்கள். ஆகையால் சாதியை அழிக்கத் தலைப்படுகையில் மதமும் வெட்டப்படுகிறதே என்று பயப்படாமல் சாதி மரத்தையும், மத மரத்தையும் சேர்த்து நெருப்பு வைத்துச் சாம்பலாக்க வேண்டியது தடுக்க முடியாத அவசியமாகும். இதிலும் ஒரு சங்கடம் இருக்கிறது. அதாவது, மதமானது வேதம், புராணம் என்பவைகளுடன் கட்டிப் பிணைக்கப்பட்டிருக்கிறது.
ஆதலால், இந்த வேதம், புராணங்களிலிருந்து மதத்தைப் பிரிக்க வேண்டும். இதிலும் பிரிக்க முடியாதபடி கட்டு பலமாக இருந்தால், இங்கும் இரண்டையும் சேர்த்து நெருப்பு வைக்க வேண்டியதுதான். ஆனால் இந்த வேதம், கடவுளுடன் சேர்த்துக் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது. இதிலும் பிரிக்க முடியாத பிணைப்பு இருந்தால் அந்தக் கடவுள் என்பதன் தலையிலும் கை வைத்துத்தான் ஆக வேண்டியிருக்கிறது. வேதத்தை இழுத்தால் கடவுளுக்கும் அசைவுதான் கொடுக்கும். இதில்தான் பெருத்த சங்கடப்படக்கூடும். கடவுளை அசைப்பதா என்று பயப்படக் கூடாது. எனவே சாதி, மதம், வேதம், கடவுள் எல்லாவற்றையும் ஒழித்துத்தான் ஆக வேண்டும்.
இவற்றில் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து வராது. இப்படி நாம் ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரிக்க முடியாமல் எல்லாவற்றையும் சேர்த்துக் கொளுத்தும்போது, உண்மையில் ஏதாவது சத்து இருந்தால் அது அழியாது. இப்படி நாம் சாதி வித்தியாசத்தை ஒழிக்க முற்படுகையில் மதமென்பதும் ஒழிந்து போகுமேயென்றால் அந்த மதம் நமக்கு வேண்டாம். அது இப்போதே அழிந்து போகட்டும். மதத்தைப் பொசுக்கும்போது வேதமும் பொசுங்கிப் போவதாயிருந்தால் அந்த வேதம் என்பது இப்போதே வெந்து போகட்டும். வேதத்தை ஓட்டும்போது கடவுளும் ஓடிவிடுவாரென்றால் அந்தக் கடவுள் என்பதும் இந்த நிமிஷத்திலேயே ஓடிவிடட்டும். அப்பேர்ப்பட்ட கடவுள் நமக்கு வேண்டவே வேண்டாம்.
- தந்தைபெரியார் - ‘திராவிடன்’-2.10.1929
Posted by
தமிழ் ஓவியா
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
பெரியார்
13, 8அய் கண்டால் நடுக்கமா?
மூட நம்பிக்கைகளில் எத்தனையோ வகை உண்டு. ஆற்று மணலை எண்ணினாலும் எண்ணலாம்; மூடநம்பிக்கைகளின் வகைகளை மட்டும் கணக்கிடவே முடியாது.
நேரம், காலம், நல்ல நாள், கெட்ட நாள், சகுனம், வாஸ்து, எண் ஜோதிடம், இராசிபலன் என்று ஒரு நீண்ட தூரம் மூடத்தனம் பயணித்துக் கொண்டேயிருக்கும்.
எல்லாம் கடவுள் படைப்பு என்றால், இந்த மூடத்தனங்கள் யார் படைப்பு?
அதற்கும் அவன்தான் காரணம் என்றால், அவனைவிட அயோக்கியன், பொறுப்-பில்லாதவன் வேறு ஒருவன் இருக்க முடியுமா?
சிலருக்கு 8 இராசி இல்லாத எண்ணாம்; இன்னும் சிலருக்கு 13 பீடை எண்ணாம். எட்டாம் எண்ணைப் பிடிக்காதவர்கள் 13 அய் ஏற்றுக் கொள்கிறார்கள்; 13 அய் பிடிக்கா-தவர்கள் எட்டை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த நிலையில், எந்த எண் யாரைப் பாதிக்கும்? எட்டும், பதிமூன்றும் கெட்ட சகுனங்கள் என்று யாரும் சேர்த்துச் சொல்லுவதில்லையே!
ஏதோ கண்மூடித்தனமாக எதையோ கிறுக்குத்தனமாக கோணங்கித்தனமாக, மது குடித்தவன் மதி மயங்கி உளறுவதுபோல இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதுதான் உண்மை.
சரி, இங்கு மட்டும்தான் முட்டாள்கள் இருக்கிறார்களா? முட்டாள்கள் இந்தியாவுக்கு மட்டுமே தான் சொந்தம் என்று கூற முடியாதுதான்.
13 அய் கெட்ட நாள் என்று கருதக் கூடிய முட்டாள்கள் உலகம் எங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். விஞ்ஞான பூர்வமான நிரூபணம் இதற்கு உண்டா என்று கேள்வி கேட்டால், இது போன்ற பிரச்சினைகளில் எல்லாம் விஞ்ஞானம், பகுத்தறிவு என்ற அளவுகோல்கள் எல்லாம் கூடாது - நம்பிக்கை - அய்தீகம் என்று கூறி ஓட்டமாக ஓடி-விடுவார்கள்.
இலண்டனில் அரசி குடும்பத்தில்கூட இந்த 13 மூட நம்பிக்கை இருந்திருக்கிறது. பிரிட்டீஷ் அரசி இரண்டாம் எலிசபெத்தின் தங்கை இளவரசி 1930 ஆகஸ்ட் 21 இல் பிறந்தார்.
ஆனால், பிறந்த அந்தக் குழந்தையை உடனடியாகப் பதிவு செய்யவில்லை. மூன்று நாள்கள் காத்திருந்தனராம். ஏன் தெரியுமா? பிறந்த நாளன்று பதிவு செய்திருந்தால், அந்தக் குழந்தை 13 ஆம் எண் வரிசையில் இடம்பெற நேரிட்டிருக்குமாம்.
அய்ரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகள் விஞ்ஞானத்தில் விண்ணை முட்ட வளர்ந்-திருந்தாலும், அங்கும் படித்த மூடர்கள், தன்னம்பிக்கை இல்லாத கோழைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அடுக்குமாடிக் கட்டடங்களைக் கட்டும்போது 12 ஆவது மாடிக்குப் பிறகு 13 என்று குறிப்பிட மாட்டார்களாம். மாறாக 12-ஏ என்றோ 14 என்றேதான் குறிப்பிடுவார்களாம். அறைக்குக்-கூட இந்த முறையைத்தான் கடைபிடிப்-பார்களாம்.
1965 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசி எலிசபெத் ஜெர்மனி சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். ஒரு இடத்தில் இரயில் பயணத்தை மேற்கொள்ளவேண்டியிருந்தது; டூயிஸ்பெர்க் என்பது அந்த ரயில் நிலையத்தின் பெயர்.
ராணியார் பயணம் செய்யவேண்டிய அந்த இரயில் 13 ஆவது பிளாட்பாரத்திலிருந்து புறப்படத் தயாரானது! அவ்வளவுதான் பதிமூன்றா? அய்யோ வேண்டாம் என்று அலறினார்கள். இங்கிலாந்து நாட்டு அரசியாயிற்றே - என்ன செய்தார்கள்? அந்த இரயிலை வேறு பிளாட்பாரத்திலிருந்து புறப்படும்படிச் செய்தனர்.
கிறித்தவ மதமும் இந்த மூட நம்பிக்கைக்குத் துணை போகக் கூடியதாகும். 12 சீடர்களுடன் 13 ஆவது நபராக ஏசு, இரவு உணவைச் சாப்-பிட்டார். அப்போதுதான் அவர் காட்டிக் கொடுக்கப்பட்டார் - சிலுவையிலும் அறையப்-பட்டார் - எனவே 13 என்பது மரண எண்ணாம். அப்படி என்றால், அவர் மீண்டும் எப்படி உயிர்த்தெழுந்தாராம்? மத விவகாரங்களில் இதுபோன்ற அறிவார்ந்த வினாக்களுக்கு இடம் கிடையாதே!
மாவீரன் நெப்போலியனுக்குக்கூட 13 ஆம் எண் பயம் இருந்ததுண்டாம். குறிப்பிட்ட விஷயத்தில் வீரனாக இருப்பவன். இன்னொரு விஷயத்தில் கோழையாக, மூடனாக இருக்கக் கூடாதா என்ன?
இந்த மூட நம்பிக்கை குளிர் ஜூரத்தை ஓட்டிய பகுத்தறிவுவாதி-களும் அமெரிக்காவில் இருந்திருக்கிறார்கள்.
1882 சனவரி 13 இல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 13 துணிவான பகுத்தறிவுவாதிகள் கூடினார்கள். 1882 சனவரி 13 இல் ஒரு சங்கத்தை நிறுவினார்கள். அதன் பெயரே 13 ஆவது சங்கம்(Thirteenth Club) என்பதாகும்.
ஓர் உணவு விடுதியில் 13 ஆவது அறையில் 8.13 பணிக்குத் தொடக்க விழா நடத்தி 13 மணிக்கு (அதாவது 1 மணிக்கு) விழாவினை முடித்தனர்.
சங்கத்தில் சேர நுழைவுக் கட்டம் 1.13 டாலர். ஆயுள் சந்தா 13 டாலர்.
ஒவ்வொரு மாதமும் 13 ஆம் தேதி 13 பேரும் கூடி விருந்துண்டு மகிழ்வார்கள். உறுப்பினர்களின் எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்தது. நாளடைவில் கிளைச் சங்கங்களும் உற்பத்தியாகின. இணையும் சங்கத்திடமிருந்து 13.13 டாலர் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
மூடத்தனத்தை இப்படி சவுக்குக் கொண்டு அடித்தனர்.
சென்னை மாநகராட்சிகூட வீடுகளுக்குக் கதவு இலக்கம் குறிப்பிடும்போது 13 அய் தவிர்ப்பது உண்டு.
அதற்கு விதிவிலக்காக திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் அடையாறு இல்லத்தின் பழைய எண் 13 என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயிக்கு டில்லியில் ஒதுக்கப்பட்ட இல்லத்தின் எண் எட்டாக இருந்தது. அவருக்கு எட்டாம் எண் இராசியில்லாத ஒன்றாம். அந்த எண்ணை மாற்றச் சொல்லி கோரிக்கை வைத்தாராம். உடனே 6-ஏ என்று மாற்றப்பட்டதாம். வீடு மாற்றப்படவில்லை; எண் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.
மனிதனிடம் இருக்கக் கூடிய விலை மதிக்க முடியாத பகுத்தறிவைப் பயன்படுத்த அஞ்சுவதும், தன்னம்பிக்கையைத் தூக்கி எறிவதும், மரணத்தைக் கண்டு மிரளுவதுமான குணங்கள் ஒருவரிடம் இருக்குமேயானால், அந்த மனிதன் எவ்வளவு படித்திருந்தாலும் பயனற்ற பட்டியலிலேயே வைக்கப்படவேண்டியவரே ஆவார்.
பக்தி வந்தால் புத்தி போகும் என்ற தந்தை பெரியாரின் பொன்மொழி ஒவ்வொரு ஊரின் நுழைவு வாயிலிலும் கல்வெட்டாகப் பொறித்து வைக்கவேண்டும்.
--------------- கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் "உண்மை" இதழில் எழுதிய கட்டுரை

26.6.08
துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த பொடிப்பெண்
தாம் போகும் வழிகளை மறித்துக் கொண்டிருந்த ஒருகுன்றத்தைக் குத்தி உடைத்துக் கொண்டிருந்த இரண்டு தோள்களைக் கண்டோம்.தம்மை நோக்கிச் சீறிவருகின்ற நெருப்பு மழைக்குச் சிரித்துக் கொண்டிருந்த இரண்டு உதடுகளைக் கண்டோம்.தமிழ்நெறி காப்பேன் – தமிழரைக் காப்பேன் – ஆரிய நெறியை அடியோடு மாய்ப்பேன் என்று அறையில் அல்ல – மலைமேல் நின்று மெல்ல அல்ல,தொண்டை கிழிய முழக்கமிடும் ஓர் இருடியத்தால் செய்த உள்ளத்தைக் கண்டோம்.
அதுமட்டுமல்ல
குன்றூடைக்கும் தோளும், நெருப்புமழைக்குச் சிரித்த உதடுகளும் இருடிய உள்ளமும் ஒரே இடத்தில் காண்போம். – இந்த அணுகுண்டுப் பட்டறைதாம் பெரியார் என்பது கண்டோம்.
யாரைப் புகழ்ந்து எழுதினோம்,புகழ்ந்து பாடினோம். ஆயினும் நாம் புகழ – நம் பாட இன்னும் மேலான பொருள் வேண்டுமென்று ஆராய்ந்து கொண்டிருந்தோம்.
பெரியார் செத்துக் கொண்டிருந்தார்.தமிழர் அழுது கொண்டிருந்தார்கள்.
ஆனால் பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்துபோக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு;மக்களின் மீது வைத்திருக்கும் அருள் மற்றொன்று.
ஆயினும்
காற்றிறங்கிப் பொதிமாடு போல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய ஆண்குறியினின்று முன்னறிவிப்பு இன்றி பெருகும் சிறுநீரை உடனிருந்து கலன் ஏந்திக்காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந்தொண்டால் முடியாது;அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது.பெரியார் வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப்பெண்ணை,
அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்?
பெரியார் மேடைமேல் வீற்றிருப்பார். ஓர் இலக்கம் தமிழர் அவரின் தொண்டுக்காக மல்லிகை முதலிய மலர்களாலும் வெட்டிவேர் முதலிய மணப்பொருளாலும் அழகு பெறக்கட்டிய மாலை ஒவ்வொன்றாகச் சூட்டிப் பெரியார் எதிரில் இரண்டு வண்டியளவாகக் குவிப்பார்கள்.
அதே நேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார் ஏதுங்கெட்ட வேலைக்காரிபோல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கல் தொலைவில் தனியே உட்கார்ந்து சுவடி விற்றுக் கொண்டிருப்பார்கள்.
ஒரே ஒரு மாலையை எந் துணைவியார்க்குப் போடுங்கள் என்று அந்தப் பாவியாவது சொன்னதில்லை எம் அன்னையாவது முன்னே குவிந்துள்ள மாலைகளை மூட்டை கட்டுவதன்றி – அம் மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன்றி ஓர் இதழைக் கிள்ளிக் தம் தலையில் வைத்தார் என்பதுமில்லை.
----------புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் - 10-4-1960 – “குயில்” இதழில் எழுதிய கட்டுரை.
அன்னை மணியம்மையார் பற்றி அண்ணா
அய்யா அவர்களிடம் நான் வந்து சேரும்போது, இப்போது எனக்கு என்ன வயதோ, அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு. இப்பொழுது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ, அதைவிட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன. அப்படியிருந்த அய்யாவை, கடந்த முப்பது ஆண்டுகளாகக் கட்டிக் காத்து அவரை நோயின்றி உடல் நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை மணியம்மையாரையே சேரும்.
நூல்: “அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரின் சிந்தனை முத்துகள் –பக்கம் 284
அம்மா பற்றி அய்யா
எனது காயலா சற்றுக் கடினமானதுதான். எளிதில் குணமாகாது.மூத்திர வழியிலே கற்கள் இருக்கின்றன.அவை கரைய மாதக்கணக்கில் காலமாகும்.ஒரு சமயம் ஆபரேசன் (அறுவைசிகிச்சை) தேவை இருந்தாலும் இருக்கலாம்.ஆனாலும் நான் பயப்படவில்லை.எதற்கும் தயாராக இருக்கிறேன்.மணியம்மையார் கவனிப்பும் உதவியும் அளவிடற்கரியது.
-----------பெரியார் 89-ஆவது பிறந்தநாள் “விடுதலை” மலர் – 17-9-1967
Posted by
தமிழ் ஓவியா
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
பெரியார்
உலகம் வளர்ச்சி அடையாததற்குக் காரணம்
உலக மாறுதலை வளர்ச்சிக்குப் பயன்படாமல் செய்வதும் - மனிதனுக்கு உள்ள அறிவின் சக்தியை மனித வளர்ச்சிக்கு, கவலையற்ற வாழ்வுக்கு உதவாமல் செய்வதும் - பெரிதும் கடவுள், கடவுள் சக்தி, கடவுள் செயல் என்பவை போன்ற முட்டாள்தனமான கருத்துகளும், நம்பிக்கையுமேயாகும்.
கடவுள் எண்ணமோ, மனித சக்திக்கு மேம்பட்ட தெய்வீக சக்தி என்கின்ற எண்ணமோ மனிதனுக்கு இல்லாமல் இருந்திருக்குமானால் - இன்று மனிதன் குறைந்தது இந்த 3000-4000 ஆண்டுகளில், அவனது அறிவின் பயனாய், சிந்தனா சக்தியின் பயனாய், 500 ஆண்டுகளாவது உயிர் வாழத்தக்க தன்மையை அடைந்திருப்பான்; இறக்கை இல்லாமலேயே ஆகாயத்தில் பறக்கும் சக்தியை அடைந்திருப்பான் என்பதோடு, கவலையில்லாமலேயே வாழும் தன்மையையும் அடைந்திருப்பான்.
சர்வ சக்தியுள்ள கடவுள் ஒன்று இருக்கிறது; எல்லாம் கடவுள் செயல் எனக் கருதும் மக்களில், யாருக்குத் துக்கமும் ஏமாற்றமும் கவலையுமில்லாமல் இருக்க முடிகிறது?
எனவே, மனித சமுதாய வளர்ச்சிக்கும், மனித ஜீவனுக்குத் துக்கமும் கவலையுமில்லாமல் இருப்பதற்கும், சர்வ சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கின்றார் என்கிற எண்ணம் அடியோடு ஒழிந்தாக வேண்டும்.
கடவுள் இல்லை; இல்லவே இல்லை என்கின்ற கருத்தை மக்களிடையே உண்டாக்கி, அவர்களுக்கு அறிவுத் தெளிவை உண்டாக்குவதைவிட, உலகில் ஜீவகாருண்யத் தன்மை வேறில்லை என்றே சொல்லுவேன்.
மோட்சம் என்ற சொல்லுக்குப் பொருள் என்னவென்றால், துக்க நாசம், சுகப் பிராப்தி என்றுதான் சொல்லப்படுகிறது.
இச்சொல்லுக்கு ஆதாரபூர்வமான பொருளும் (அர்த்தமும்) இதுவாகத்தான் இருந்து வருகிறது. இந்த நிலைக்கு அறிவுதான் - அதாவது, ஞானம்தான் காரணம் என்றும் காணப்படுகிறது. இதனாலேயேதான், ஞானிக்குத் துக்கமில்லை; கவலையில்லை என்று சொல்லப்படுவதோடு, ஞானிக்குக் கடவுளுமில்லை; கல்லெடுப்புமில்லை என்று சொல்லப்படுகிறது.
ஞானி என்றால் என்ன பொருள்? அவன் யார்? என்று பார்த்தால், ஞானமுடையவன் ஞானி, புத்தியுடையவன் புத்தன், அறிவை உடையவன் அறிவன் என்பதாகும். இவர்களுக்கெல்லாம் கடவுள் இல்லாமல் போனதற்குக் காரணமென்ன?
அறிவையோ, புத்தியையோ, ஞானத்தையோ, கொண்டு சிந்திப்பதாலேயே கடவுள் என்ற சொல்லே தென்படுவதற்-கில்லாமல் போய்விடுகிறது. ஞானிக்குக் கடவுள் இல்லை என்பது மாத்திரமல்லாமல், துறவிக்-குக் கடவுள் இல்லை என்று சொல்லப்படுகிறதல்லவா? அதன் பொருள் என்ன? துறவி என்றால், ஆசையற்றவன் - பற்று அற்றவன் என்பதுதான் பொருள். துறவிக்கு ஆக-வேண்டிய காரியம் ஒன்றுமில்லை; அவனுக்கு எதைப்பற்றியும் ஆசையில்லை. ஆனதால், அவனுக்குக் கடவுளைப் பற்றிய கவலை இல்லை என்பதோடு, அவனுக்குக் கடவுள் தேவையு-மில்லை; இயற்கையோடு இயைந்து கொள்ளுகிறான்.
எனவே, இயற்கையை நல்லவண்ணம் உணர்ந்து கொள்வதும், அதற்கேற்பதான வாழ்வை அமைத்துக் கொள்ளுவதுமான அறிவுதான் முன் குறிப்பிட்ட ஞானமாகும்.
எனவே, பகுத்தறிவு பெற்ற மனித சமுதாயம் மனிதத் தன்மை அடைவதற்கு பகுத்தறிவுவாதியாக - அதாவது, பஞ்சேந்திரயங்களுக்குப் புலப்படாத, தெரிந்துகொள்ள முடியாத விஷயங்களை - அவை எவையானாலும், சிந்திக்-காமலும் அவற்றைப் பற்றிக் கவலைப்-படாமலும் இருப்பதுதான் மனிதத் தன்மையாகும் என்று குறிப்பிட்டு, இதை முடிக்கிறேன்.
--------------- தந்தை பெரியார் - நூல்: கடவுள் ஒரு கற்பனையே - முதல் பதிப்பு, 1971
Posted by
தமிழ் ஓவியா
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
பெரியார்
24.6.08
தீண்டாமை
"இந்தக் கிணற்றைத் திறந்து வைக்கும் வேலையை ஒரு பெருமையெனக்கருதி நீங்கள் எனக்களித்திருந்தாலும் உண்மையில் எனக்கு அதைத் திறந்து வைக்கக் கொஞ்சமும் மனமில்லை. அல்லா மலும் இதை ஒரு சிறுமையாகவே மதித்து மிகுந்த சங்கடத்துடனேயே இந்த வைபவத்தில் கலந்து கொள்ளுகிறேன். ஆதி திராவிடர்களுக் கென்று தனிக் கிணறுகள் வெட்டுவது அக்கிரமமென்பதே எனது அபிப்ராயம். இவ்வாறு தனிக் கிணறுகள் வெட்டுவது, ஆதி திராவிடர் கள் நம்மைவிடத் தாழ்ந்தவர்கள், அவர்கள் நம்முடன் கலக்கத் தக்கவர்களல்லர் என்று ஒரு நிரந்தரமான வேலியும் ஞாபகக்குறியும் ஏற்படுத்துவதாகத்தான் அர்த்தமாகும். எதற்காக அவர்களுக்குத் தனிக் கிணறு வெட்டவேண்டும்? சிலர் ஆதி திராவிடர்களுக்கு நன்மை செய்வதாக வேஷம் போட்டு தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை நிலை நிறுத்திக் கொள்ளத்தான் இவ்வித தர்மங்கள் உதவும். நமது கிணறு குளங்களில் ஆதிதிராவிடர்களை ஏன் தண்ணீர் எடுக்க அநுமதிக் கலாகாது? பட்சிகளும் மிருகங்களும் குளங்களில் தண்ணீர் சாப்பிடுவ தில்லையா? குளங்களுக்கு எங்கிருந்து தண்ணீர் வருகிறது என்பது உங்களுக்குத் தெரியாதா? அதில் என்னென்ன வருகிறதென்பது உங்க ளுக்குத் தெரியாதா? இவ்விதத் தண்ணீரை இந்த ஆதி திராவிடர்கள் எடுத்து சாப்பிட்டுவிடுவதனால் என்ன கெடுதி ஏற்பட்டுவிடும்.'
"நீங்கள் எனக்களித்த வரவேற்புப் பத்திரத்தில் உங்களுக்காக நான் அதிகவேலை செய்திருப்பதாகச் சொல்லிப் புகழ்ந்திருக்கிறீர்கள். அது கொஞ்சமும் உண்மையல்ல. உங்களை உத்தேசித்து நான் ஒரு காரியமும் செய்யவேயில்லை. ஆதி திராவிடர் முன்னேற்றத்திற்கு உழைப்பதாய் நினைத்துக் கொள்வதும் ஆதி திராவிடர்களுக்கு உழைப்பதாய்ச் சொல்லுவதும் வேஷத்திற்காகத்தான் உழைக்கிறவர்களும் பேசுகிறவர்களுமாயிருப்பார்களென்பது எனது அபிப்பிராயம். அதாவது, இந்தியாவின் நன்மைக்காக ஐரோப்பியர்கள் இந்தியாவை ஆளுகிறார்கள் என்பது போலத்தான் ஆகுமேயல்லாமல் வேறல்ல.நான் அப்படி நினைக்கவேயில்லை."
'பறையர்' என்கிற ஒரு ஜாதிப் பெயர் நம் நாட்டிலிருப்பதால்தான் சூத்திரர்' என்கிற ஒரு ஜாதிப் பெயர் நம் நாட்டிலிருக்கிறது. பறையர்' என்கிற ஜாதிப் பெயரை விட சூத்திரர்' என்கிற ஜாதிப் பெயர் மிக்க இழிவானது. இந்து சாஸ்திரப்படி, பறைய ஸ்திரீகளில் பதிவிரதைகளும், சரியான ஒரே தாய்க்கும், தகப்பனுக்கும் பிறந்தவர்களுமிருக்கலாம். சூத்திரர்களில் அப்படி யிருக்க இடமேயில்லை. ஏனென்றால் சூத்திரச்சி' என்றால் தாசி, வேசி என்றுதான் பொருள். சூத்திரன்' என்றால் தாசி மகன், வேசி மகன் என்றுதான் பொருள். இதை ஒப்புக்கொள்ளாதவன் இந்து ஆகமாட்டான் என்பது சாஸ்திர சம்மதம். ஆகையால் என் போன்ற சூத்திரன்' என்று சொல்லப்படுபவன் பறையர்கள்' என்று சொல்லப்படுவோர்களுக்கு உழைப்பதாகச் சொல்லுவதெல்லாம் சூத்திரர்கள்' என்று தம்மை யாரும் கருதக்கூடாது என்பதற்காகத் தானேயல்லாமல் வேறல்ல. ஆகையால், எனக்காக நான் பாடுபடு வதென்பது உங்கள் கண்ணுக்கு உங்களுக்காகப் பாடுபடுவதாய்த் தோன்றுகிறது. உங்களைத் தாழ்மையாய் கருதும் ஸ்திரீகளும், புருஷர் களும் தாங்கள் பிறரால் உங்களைவிடக் கேவலமாய் தாழ்மையாய்க் கருதுவதை அறிவதில்லை. அந்நியர்களைத் தாழ்ந்தவர்களாக நினைக்கும் அறியாமையால், தங்களை மற்றவர்கள் தாழ்மையாய் நினைப்பது தங்களுக்கு ஈனமாய்த் தோன்றுவதில்லை.
இந்த லட்சணத்தில் உங்களிடம் தப்பிதம் கண்டுபிடித்து, உங்கள் உடம்பில் துர்வாடை அடிக்கிறது, நீங்கள் ஸ்நானம் செய்வ தில்லை, துணி துவைப்பதில்லை, மாட்டு மாமிசம் சாப்பிடுகிறீர்கள், மதுவருந்துகிறீர்கள், இதை விட்டுவிடுங்கள் என்று ஞானோபதேசம் செய்கிறார்கள். நீங்கள் வேஷ்டி துவைக்காமலும் குளிக்காமலும் இருப்பதற்கு யார் ஜவாப்தாரி என்பதை அவர்கள் உணருவதில்லை. உங்களுக்குக் குடிக்கவே தண்ணீரில்லையென்றால் குளிப்பதெப்படி. வேஷ்டி துவைப்பதெப்படி? அழுக்கும் நாற்றமும் உங்கள் கூடவே பிறந்ததா என்று கேட்கிறேன். குளிக்கவும், வேஷ்டி துவைக்கவும், பல் துலக்கவும் தண்ணீர் கொடுக்காமல் மகந்துகள் என்போரையும், சங்கராச்சாரிகள் என்போரையும் கொண்டு வந்து வீட்டிலடைத்து வைத்துவிட்டால் அவர்கள் துணி அழுக்கில்லாமல் இருக்குமா? அவர்கள் உடம்பும் வாயும் நாற்றமடிக்காமலிருக்குமா? என்று யோசித்துப் பாருங்கள். நாமே ஒருவனை பட்டினி போட்டுவைத்து, அவன் இறந்துபோன பிறகு பட்டினியினால் இறந்துபோய் விட்டான் பாவி என்று சொன்னால், யார் பிபாவிபீயென்பதை நினைத்துப் பாருங்கள். அல்லாமலும், மாடு தின்பதும், மதுவருந்துவதும், நீங்கள் பறையர்களாயிருப்பதற்குக் காரணமென்று சொல்லுவது கொஞ்சமும் யோக்கியமான காரியமல்ல. மாடு சாப்பிட்டுக் கொண்டும் மதுவருந் திக்கொண்டும் இருக்கிறவர்கள்தான் இப்பொழுது உலகத்தையே ஆண்டு கொண்டிருக்கிறார்கள். தவிரவும், நீங்கள் மாடு சாப்பிடுவதன் குற்றம் உங்களைச் சேர்ந்ததல்ல. உங்களை மற்றவர்களைப் போல சரியானபடி சம்பாதிக்கவும், தாராளமாய் சாப்பிடவும், தெருவில் நடக்கவும், தாராளமாய் எங்கும் போய் வேலை செய்து சம்பாதிக் கவும் வழியில்லாமல் செய்துவிட்டதால் கொஞ்சப் பணத்தில் அதிக ஆகாரம் ஆகக் கூடியதான மாட்டு மாமிசத்தைப் புசிக்க வேண்டிய தாயிற்று. மாட்டு மாமிசத்தை அநுமதிக்கும் மதத்தைச் சேர்ந்த மகமதி யரும் கிறிஸ்தவரிலும் கூட சிலர் கைப்பணந் தாராளமாய்க் கிடைப்ப தாயிருந்தால் நாங்கள் மாட்டுமாமிசம் சாப்பிடுகிற வழக்கம் இல்லை என்று சொல்லுகிறார்கள்.
ஆதலால், நமது நாட்டார் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு தரித்திரந்தான் முக்கியக் காரணம். அல்லாமலும், மாட்டு மாமிசம் சாப்பிடுவது ஆடு, கோழி, மீன், பன்றி இவைகளைவிட என்ன அவ்வளவு அதிகமான பாவமாய்ப் போய்விட்டது. கோழியும், மீனும், பன்றியும் எச்சிலையும், பூச்சு புழுக்களையும் , அழுக்கு களையும், மலத்தையும் சாப்பிடுகிறது. இப்படியிருக்க இதைச் சாப்பிடுகிற வட நாட்டு "ராமணர்கள்' முதல் தென்னாட்டு சூத்திரர்கள்' வரை நல்ல ஜாதியும், தொடக்கூடியவர்களாயுமிருக்கும்போது, புல்லும் பருத்திக் கொட்டையும், தவிடும், புண்ணாக்கும் சாப்பிடுகிற மாட்டிறைச்சி சாப்பிடுவதனால் மாத்திரம் எப்படி ஒரு மனிதன் தாழ்ந்தவனாவான். அப்படிப் பார்த்தாலும் மாடு சாப்பிடுகிறவர்களை யெல்லாம் பிதொடாதே' , பிதெருவில் நடக்காதே' , குளத்தில் தண்ணீர் சாப்பிடாதே, ஊருக்குள் குடியிருக்காதே என்று சொல்லுகிறார்களா? இது வீணாய், வேண்டுமென்றே உங்களைத் தாழ்த்தி வைப்பதற்காகச் சொல்லும் ஒரு யோக்கியப் பொறுப்பற்ற காரணமேயல்லாமல் உண்மையான காரணமல்ல என்பதுதான் எனது முடிவு. மதுவையும் மாட்டு மாமிசத்தையும் தள்ள வேண்டும் என்பதை நான் ஆட்சேபிக்க வரவில்லை. மதுவையும் மாட்டு மாமிசத்தையும் தள்ளினால்தான் உங்கள் ஜாதி உயரும் என்று சிலர் சொல்லும் அயோக்கியத் தனமான காரியத்தை நான் ஒப்புக்கொள்ள முடியாது. ஜாதி உயரு வதற்காக மதுவையும் மாட்டு மாமிசத்தையும் விடுங்களென்று கேட்க மாட்டேன். அதற்காக நீங்கள் விடுவதும் அவ்வளவு அவசியமில்லை. நம் நாட்டில் தென்னை, பனை மரங்களில் ஊறும் கள்ளும், காய்ச்சும் சாராயமும் வெளிநாடுகளிலிருந்து வரும் சாராய தினுசுகளும் சென்னை மாகாணத்தில் மாத்திரம் சுமார் 15,20 கோடி ரூபாய் பொரும்படியானதையெல்லாம் நீங்களேவா குடித்து விடுகிறீர்கள்? யாராவது நம்புவார்களா? ஒருக்காலும் நம்பமாட்டார்கள். ஆதலால், ஜாதி உயர்வை உத்தேசித்து இவற்றை விட்டுவிட வேண்டுமானால் மற்றவர்கள் முதலில் விடட்டும்.
மதுபானம் மனிதனின் ஒழுக்கத்திற்கு விரோதமென்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன் . மதுவிலக்குக்காக நானும் சிறிது தொண்டு செய்திருக்கிறேன்.ஆனால், ஜாதி உயர்வுக்கு எல்லா ஜாதியாரும் சாப்பிடும் மதுவிலக்கு ஒன்றும் தடை செய்வதில்லை. ஆகையால், மதுவிலக்கும் மாமிச விலக்கும் ஜாதி உயர்வுக்கு அவசியம் என்று சொல்வது வேண்டுமென்றே சொல்லும் பொய். அல்லாமலும் உங்களிடமும் சில குற்றங்கள் இருக்கிறதை சொல்லாமலிருக்க முடிய வில்லை. அதாவது, நீங்களாகவே உங்கள் ஜாதிக்கு இழிவு சம்பாதித்துக் கொள்ளுகிறீர்கள். அநாவசியமாய் யாரைக் கண்டாலும் சுவாமி' என்று கும்பிடுகிறீர்கள். நீங்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் உங்கள் ரத்தத்தில் கலந்திருக்கிறது. அதை மாற்றிவிட வேண்டும் . ஒரு மனிதனைப் பார்த்தால் அவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்கிற எண்ணம் உங்கள் மனதில் உதிக்க வேண்டும். சுயமரியாதையில் கவனமில்லாத ஜாதியாரை உயர்த்தி னாலும் உயராது. அவனவனுக்கே, தான் மனிதன் என்கிற உணர்ச்சி வரவேண்டும். நீங்கள் இனிமேல் யாரையும் சுவாமி என்று கூப்பிடக் கூடாது. வேண்டுமானால் ஐயா என்று கூப்பிடுங்கள். நீங்களாகவே பதுங்குவதும் ஒதுங்குவதுமான துர்க்குணங்கள் உங்களை விட்டுப் போகவேண்டும். அன்றுதான் நீங்கள் சமத்துவமாக நடத்தப்படுவீர்கள்.
-------------------- காரைக்குடி-சிராவயலில் நடைபெற்ற காந்தி வாசக சாலையின் ஆண்டு நிறைவு விழா மற்றும் காந்தி கிணறு திறப்பு விழாவில் 6-4-26 - ந்தேதி ஆற்றிய சொற்பொழிவு -- "குடிஅரசு"-25.4.26
Posted by
தமிழ் ஓவியா
2
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
பெரியார்
23.6.08
சுயமரியாதைக்காரர் ஒழுக்கம்...
``சுயமரியாதைக்காரர்கள் பொது வாக மனித சமுதாயத்திற்கும், சமூக சமத்துவ வாழ்வுக்கும் ஏற்றதையே ஒழுக்கமாகக் கொண்டு, முக்கியமாய் மனித சமுதாயத்திற்கு ஏற்ற வண்ணம் அன்னியனுக்கு உதவி செய்வதும், அன்னியனுக்குத் தொந்தரவில்லாமல் நடந்து கொள்வதையே ஒழுக்கமாய்க் கருதுவார்கள்.’’
------------------------தந்தைபெரியார் - "குடிஅரசு", 24.11.1940
Posted by
தமிழ் ஓவியா
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
பெரியார்
பிரார்த்தனையால் நோய் தீருமா? -ஆய்வு முடிவுகள்
(1800 நோயாளிகளை வைத்துப் பரீட்சித்துப் பார்த்ததில் கண்ட விஞ்ஞான முடிவு இதோ)
மாற்று இதய ரத்தக் குழாய் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 1,800 நோயாளிகளைக் கணக்கில் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு ஒன்றின்படி பிரார்த்தனைகளால் எவ்விதத் தாக்கமும் (பயனும்) இல்லை எனத் தெரிய வந்துள்ளது.
ஆய்வாளர்களின் கூற்று
சில நோயாளிகளிடம் அவர்கள் குணமாவதற்குப் பிரார்த்தனை நடக்கிறது எனக் கூறப்பட்டது. மேலும் சில நோயாளிகளிடம் அவர்களுக்காகப் பிரார்த்தனை நடக்கலாம் எனக் கூறப்பட்டது. இவ்விரண்டு பிரிவினரில், பிரார்த்தனை நடத்தப்படலாம் எனச் சொல்லப்பட்டவர்களைவிட, பிரார்த்தனை நடக்கிறது எனச் சொல்லப்பட்டவர்கள் மோசமாகக் காணப்பட்டனர். இந்த வேற்றுமை ஏன் என்பதை விளக்க முடியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
ஆய்வுக்கு உள்ளான நோயாளிகள், அமெரிக்க நாட்டில் உள்ள ஆறு மருத்துவமனைகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். முதலாவதாக, இவர்களில் 604 பேர்களிடம், அவர்களுக்காகப் பிரார்த்தனை நடத்தப்படலாம் அல்லது நடத்தப்படாமலும் இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. ஆனால், உண்மையில் அந்த 604 பேர்களுக்கும் பிரார்த்தனை நடந்தது.
597 நோயாளிகளிடம்
வேறு 597 நோயாளிகளிடம், அவர்களுக்காக பிரார்த்தனை நடக்கலாம், நடக்காமல் போகலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், உண்மையில் அவர்களுக்காகப் பிரார்த்தனை நடக்க வில்லை. மற்றும் ஒரு பிரிவைச் சேர்ந்த 601 நோயாளிகளிடம், அவர்களுக்காகப் பிரார்த்தனை நடக்கும் எனக் கூறப்பட்டதுடன், அவ்வாறே நடந்தது.
கிறிஸ்தவர்களின் பிரார்த்தனை
துறவியர் மடங்களிலும் (மொனாஸ்டரீஸ்), பிற இடங்களிலும் உள்ள மூன்று கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பிரார்த்தனை நடத்தினர். அவர்களில் இரு பிரிவினர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்; ஒரு பிரிவினர் புராடஸ்டன்ட் கிறிஸ்தவர்கள் ஆவர். பிரார்த்தனைப் பாடல்களை எழுதி அவர்களிடம் அவற்றைக் கொடுத்தனர். அத்துடன், யாருக்காகப் பிரார்த்திக்கிறார்களோ அவர்களுடைய பெயரின் முன்பகுதி முழுமையாகவும், பின்பகுதியின் முன் எழுத்தும் (இனிஷியல்) தரப்பட்டன.
சிகிச்சைக்குப் பின் சிக்கல்!
முதலாவது பிரிவில் பிரார்த்தனைக்கு உள்ளான (அதாவது பிரார்த்தனை செய்யப்பட்ட) 604 பேர்களில் 52 விழுக்காட்டினர், அறுவைச் சிகிச்சைக்குப் பின் சிக்கல்களுக்கு உள்ளாயினர். இவர்களிடம், இவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யப்படலாம் எனக் கூறப்பட்டு, அவ்வாறே பிரார்த்தனையும் செய்யப்பட்டது. இரண்டாவது பிரிவில் பிரார்த்தனைக்கு உள்ளான 597 பேர்களில், 51 விழுக்காட்டினர் சிக்கலுக்கு உள்ளாயினர். இவர்களிடம், இவர்களுக்காகப் பிரார்த்தனை நடக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால், பிரார்த்தனை அவர்களுக்காக நடக்கவில்லை. மூன்றாவது பிரிவில், 601 நோயாளிகளில் 59 விழுக்காட்டினர், அறுவை சிகிச்சைக்குப் பின்பு சிக்கலுக்கு உள்ளாயினர். இவர்களிடம், இவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யப்படும் எனக் கூறி, அவ்வாறே நடத்தப்பட்டது. முப்பது நாள்களுக்குப் பின்பு, இறந்தவர்களின் விகிதமும், பெரிய சிக்கலுக்கு உள்ளானவர்களின் விகிதமும் மேற்காணும் மூன்று பிரிவு நோயாளிகளிடமும் முந்தைய போக்கிலேயே இருந்தன. இந்த ஆய்வு முடிவுகள் அமெரிக்காவின் `ஹார்ட் ஜர்னல் எனும் இதழில் மார்ச் 31-இல் வெளியிடப்பட்டுள்ளன.
---------------------'தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்' 1.4.2006

இவர்களுக்கு மூளை என்ற ஒரு உறுப்பு இருக்கிறதா?
2008 ஆம் ஆண்டிலும் இப்படி ஒரு செய்தி என்றால் இந்த மக்களை என்ன வென்று சொல்வது? அட அயோக்கியப் பதர்களா! உங்களுக்கு மூளை என்ற ஒரு உறுப்பு இருக்கிறதா? ஏன் இவ்வளவு கோபம் என்று கேட்கிறீர்களா? கீழே உள்ள செய்தியைப் படியுங்கள்:
" ஊட்டி மலை ரயில் பாதையில் தொடரும் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க கிடா வெட்டி ரயில்வே ஊழியர்கள் நேற்று பூஜை நடத்தினராம்.
ஊட்டி மலை ரயில் பாதையில், கடந்த மே 11 ஆம் தேதி தண்டவாளச் சீரமைப்பு பணிக்கு ரயில்வே ஊழியர்கள் 8 பேர் டிராலி மூலம் சென்றனர். குன்னூர் அருகே திடீரென டிராலி தறிகெட்டு ஓடி, 3 ஊழியர்கள் பலியாகினர். கடந்த மே மாதத்தில் ஒரு நாள், இன்ஜின் கோளாறால், ஒரு முறை மலை ரயில் நடுவழியில் நின்றது. குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில், அதிகளவில் மலை ரயில் பாதையில் விபத்துகள் ஏற்படுவதால், ரயில்வே துறை ஊழியர்கள், அதிகாரிகள் மூடத்தனமாக தெய்வ குற்றம் காரணமாக மலை ரயில் பாதை யில் தொடர்ந்து பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாகக் கருதி, பரிகார பூஜை நடத்த திட்ட மிட்டனர். நேற்று காலை குன்னூர் ரயில் நிலையத்தில் காலை 4 மணி முதல் 6 மணி வரை பரிகார யாக பூஜைகள் நடத்தப் பட்டதாம்.
குன்னூர் ரயில் நிலைய முன் பதிவு மய்யத்தில் பூஜை செய்த பின், திருஷ்டி பூசணிக்காய் கட்டப்பட்டதாம். மலை ரயிலுக்கு மாலை அணிவித்து தீபம் காட்டப்பட்டதாம். ரயில்வே ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் பலர் பங்கேற்றனராம். பின்னர் குன்னூர்-காட்டேரி இடையேயுள்ள முனீஸ்வரன் கோயிலில் கிடா வெட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதாம்".
இதுதான் இன்றைய அனைத்து நாளிதழ்களில் வந்த செய்தி.
இப்படி பூஜைகள் செய்தபின்பு விபத்து நடக்காதா? நடந்தால் பொறுப்பேற்றுக் கொள்வது யார்? ரயில்வே ஊழியர்களா? முனிஸ்வரனா?
இந்திய அரசாங்கத்தின் மதச்சார்பின்மையை கேவலப்படுத்திய இந்த ரயில்வே ஊழியர்கள் அதற்கு உடந்தையாயிருந்த அதிகாரிகள் அனைவரின் மீதும் கண்டிப்பான நடவடிக்கை தேவை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நாளை வேறு பிரச்சனைக்கு ஒரு கிறித்துவ அதிகாரி கிறுத்துவ முறையில் சடங்குகள் செய்வார் அதை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா? இப்படியே ஒவ்வொரு மதக்காரர்களும் கிளம்பிவிட்டால் என்ன ஆவது? ஆளும் அரசுகள் சரியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அதோடு சரியான வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுத்து அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். மீறுபவர்கள் மீது கடுமையான தண்டணை வழங்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற காட்டுவிலங்காண்டிதனம் ஒழியும். அரசின் மதச்சார்பின்மை காக்கப்படும்.
Posted by
தமிழ் ஓவியா
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
மூடநம்பிக்கை
விஷ்ணுவுக்கும், லட்சுமிக்கும் நடந்த சம்பாஷணை!
மகாவிஷ்ணுவான சிறீ ரங்கம் ரங்கநாதர் : அடீ என் அருமைக் காதலியாகிய லட்சுமி! இந்த உலகத்திலும், மேல் உலகத்திலும் உள்ளவர்களுக்கெல்லாம் அய்சுவரியம் கொடுத்துவரும் செல்வ தெய்வமாகிய உன்னையே நான் மனைவியாய் கொண்டிருந்தும் என்னையே நீ சாப்பாட்டிற்கு லாட்டரி சீட்டு போடும்படியாய் செய்துவிட்டாயே! இது யோக்கியமா?
லட்சுமியான சிறீ ரங்கநாயகி: நாதா! என் பேரில் என்ன தப்பு? நீங்கள் என் ஒருத்தியோடு மாத்திரம் இருந்தால் பராவாயில்லை! இன்னமும் எத்தனையோ பேர்களை மனைவியாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இதெல்லாம் நீர் நன்றாய் நெய்யும் தயிரும் சாப்பிட்டதால் உமக்கு கொழுப்பு ஏறியதினால் தானே? உங்கள் பக்தர்களுடைய பெண்களையெல்லாம் கூட கைவைத்து விட்டீர்கள்! இப்படிப்பட்ட உம்மை சாப்பாட்டிற்கு லாட்டரி போடும்படியாக ஏன் செய்யக்கூடாது?
விஷ்ணு: அய்யய்யோ! அதனாலா இப்படி செய்து விட்டாய்? நான் இதை ஒரு தப்பாக நினைக்கவே இல்லையே! இப்படி செய்வதும் ஒரு லட்சுமிகடாஷம் என்று தானே நினைத்திருந்தேன். உனக்கு கோபமாயிருந்தால் நாளைய தினமே அவர்களையெல்லாம் விரட்டியடித்து விடுகிறேன்.
லட்சுமி: விளையாட்டுக்குச் சொன்னேன். கோபித்துக் கொள்ளளாதீர்கள்! இன்னும் எத்தனை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள்! எனக்கு அதைப்பற்றி கவலையில்லை!
விஷ்ணு: பின்னயேன் லாட்டரி சீட்டு போடச் செய்தாய்?
லட்சுமி: வேறு சிலருக்கு அதாவது லாட்டரி சீட்டு போடுபவர்களுக்கு செல்வத்தை கொடுப்பதற்காக, லாட்டரி சீட்டின் மூலமாய் செல்வத்தை கொடுப்பதற்காக லாட்டரி சீட்டின் மூலமாய் செல்வத்தை சேர்ப்பதற்கு அப்படிச் செய்யச் சொன்னேன்.
விஷ்ணு: அப்படியானால் அது எனக்கல்லவா அவமானமாய் இருக்கிறது! எங்கு பார்த்தாலும் சிறீரங்கம் ரங்கநாதர் லாட்டரி சீட்டு என்று அல்லவா பணம் வசூல் செய்கிறார்கள்! இந்த அவமானத்தில் உனக்கும் பங்கில்லையா?
லட்சுமி: அடேயப்பா! இதில் தானா உமக்குப் பெரிய அவமானம் வந்துவிட்டது. உங்கள் பேருக்கு உங்கள் முன்னால் பொட்டுக்கட்டி உங்கள் தாசியென்று பெயரும் செய்து கண்ட கண்ட பசங்கள் எல்லாம் கொளுத்துகிறார்களே! அதிலில்லாத அவமானம் தானா உமக்கு லாட்டரி சீட்டில் வந்துவிட்டது? புக்தர்களின் பெண்களை தாங்கள் கைப்பற்றுவதும் தங்கள் தாசிகளை பக்தர்கள் அனுபவிப்பதும் தங்களுக்கும் பக்தர்களுக்கும் உள்ள பந்தத்துவமாகும்.
விஷ்ணு: அதெல்லாம் தான் இப்போது நமது உண்மை பக்தர்களாகிய சுயமரியாதைக்காரர்கள் தோன்றி சட்டசபை மூலமும், குடிஅரசு மூலமும் நிறுத்தி நமது மானத்தைக் காப்பாற்றி விட்டார்களே! இனி என்ன பயம்? ஏதோ சில கெழடு கிண்டு இன்னம் கொஞ்ச நாளைக்கு இருக்கும். அப்பறம் நம்ம பேரால் இந்த அவமானமான காரியமாகிய அக்கிரமங்கள் நடக்காது.
லட்சுமி: அப்படியானால் அது போலவே இந்தக் காரியமும் (அதாவது லாட்டரி சீட்டு போட்டு நமக்கு சோறு போடும் காரியமும்) அவர்களாலேயே சீக்கிரம் நிறுத்தப்பட்டு விடும். கவலைப்படாதீர்கள். இன்னும் கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக் கொண்டிருந்தால் போதும்!
------------------------------- சித்திரபுத்திரன் என்ற புணைப்பெயரில் 09-03-1930 குடிஅரசு இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது. பெரியார் களஞ்சியம் - 2-வது தொகுதி… பக்கம்:162
Posted by
தமிழ் ஓவியா
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
பெரியார்
22.6.08
பெரியாரின் வெற்றி
தந்தை பெரியார் அவர்கள் - பெரியார் திடலில் நல்லடக்கம் செய்யப்பட்டபோது - அப்போதும் முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள்,
தந்தை பெரியார் அவர்கள் தமது வாழ்நாளின் இறுதியில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்று விரும்பினார்; அதற்காகப் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் பிரகடனம் வெளியிட்டிருந்தார். இன்று அவரது விருப்பம் நிறைவேற்றி வைக்கப்படாத நிலையில் நாம் அவரை அடக்கம் செய்கிறோம். பெரியாரின் நெஞ்சில் ஒரு முள் போல அந்த நிறைவேற்றப்படாத அறிவிப்போடு சேர்த்து அவரை நாம் அடக்கம் செய்கிறோம்
- என்று கண்களில் நீர் பனிக்க - துக்கம் தொண்டையை அடைக்க தழுதழுத்த குரலில் கூறினார்.
2006ல் தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றபின் மளமளவென்ற பெரியார் கொள்கைகள் பலவற்றை - திராவிடர் இயக்கக் கொள்கைகள் பலவற்றை நிறைவேற்றி வைப்பதில் தீவிரம் காட்டினார் கலைஞர்.
அதனையொட்டி -
பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாக - அவர் காலத்திலேயே நிறைவேற்றப்படாமல் போய்விட்ட - அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அவரது இறுதி ஆசையை சட்டமாக்கினார்.
சட்டமாக்கியதோடு நின்றுவிடவில்லை. அவர் திருவண்ணாமலை, பழநி, மதுரை, திருச்செந்தூர், திருவரங்கம், திருவல்லிக்கேணி ஆகிய ஆறு இடங்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை அமைத்துத் தந்தார். இந்தப் பள்ளிகளில் தலித்துகள் உள்ளிட்ட அனைத்துச் சாதிகளைச் சேர்ந்த பெற்றோரும் தங்களது பிள்ளைகளைச் சேர்க்க ஆர்வம் காட்டினர்.
இன்று தமிழகத்தின் பல்வேறு கோயில்களிலும் அர்ச்சகர்களாக இருக்கும் எத்தனை பேருக்கு அர்ச்சனைக்குரிய மந்திரங்கள் முழுமையாகத் தெரியும் என்பது சந்தேகத்துக் குரியதே! எத்தனை பேர் முறையாக இதற்காக சிறந்த குருக்களிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பதும் கேள்விக்குரியதே.
ஆனால் -
கலைஞர் அரசு உருவாக்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில், கோயிலின் அமைப்பு முறைகள், வேதங்கள், ஜோதிடம், அர்ச்சனை செய்யும் முறை, ஆகமங்கள், கிரந்தம், திருக்குறள், பன்னிரு திருமறைகள், சைவத் தமிழ் இலக்கியங்கள், தேவாரம், திருவாசகம் போன்றவை கற்பிக்கப்பட்டு, பயிற்சியும் அளிக்கப்படுகிறது!
ஒரு சாதியினர் மட்டுமே அர்ச்சகர் ஆகமுடியும் என்ற உயர்சாதி ஆதிக்கத்தின் அடிப்படையில் அர்ச்சகர்கள் ஆனவர்கள், மன்னனுக்குப் பிறகு அவரது மகன் மன்னன் ஆவது போல - பரம்பரை பாத்தியதையின் பெயரால் - முறையான பயிற்சியோ - சமயப் பற்றோ - அது தொடர்பான விஷய ஞானமோ இல்லாமலே, ஆட்டமேடிக் அர்ச்சகர்களாக வாய்ப்புப் பெற்று தங்களுக்குத் தெரிந்த அளவில் மந்திரம் சொல்லி அர்ச்சித்து வந்தார்கள். பொதுமக்களும் - தங்களுக்குப் புரியாத சமஸ்கிருத மொழியில் அர்ச்சனை நடத்தப்படுவதால் கண்ணை மூடிக் கொண்டு - கண்மூடித்தனமாக - நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே வழிபட்டு வந்தார்கள்.
கலைஞர் அரசு - அர்ச்சகர்களுக்கு உரிய தகுதிகளோடு - திறமை மிக்க அர்ச்சகர்களை உருவாக்கித் தந்திருக்கிறது.
அதுமட்டுமா?
இந்தப் பள்ளிகளில் படிக்கும் பலரும் பட்டதாரிகளாகவும், ஜோதிடம், இசை, சிற்பக்கலை என ஒவ்வொரு துறையில் தேர்ந்தவராகவும் உள்ளனர் என்று ஆனந்தவிகடன் (25.6.2008) ஏடு பெருமையோடு குறிப்பிடும் அளவுக்கு இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பல்துறை வித்தகர்களாகவுமிருக்கிறார்கள்.
இது பெரியாரின் வெற்றி
- என்ற தலைப்பிட்டு விகடன் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை வருமாறு:-
பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கிவிட்டேன் என்று முதல்வர் கருணாநிதி நெகிழ்ச்சியோடு அறிவித்த திட்டம்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம். இதையடுத்து தமிழகத்தில் திருவண்ணாமலை, பழனி, மதுரை, திருச்செந்தூர், திருவரங்கம், திருவல்லிக்கேணி ஆகிய ஆறு இடங்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் அமைக்கப்பட்டன.
எப்படி இருக்கிறது அர்ச்சகர் பயிற்சி என்று அறிய, முதல் ஆண்டு பயிற்சியை முடித்த திருவண்ணாமலை பள்ளிக்குச் சென்றோம்.
எட்டாம் வகுப்பு பாஸ் செய்திருந்தாலே போதும், இந்தப் பள்ளியில் சேர்ந்து விடலாம். ஆனால், இந்தப் பள்ளியில் படிக்கும் பலரும் பட்டதாரிகளாகவும் ஜோதிடம், இசை, சிற்பக் கலை என ஒவ்வொரு துறையில் தேர்ந்தவராகவும் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற சமூக நீதிக்கான போராட்டத்தில் கிடைத்த பல வெற்றிகளில் இது முக்கியமானது. இவ்வளவு சிறப்பான திட்டத்தின் பயனை அனுபவிக்கும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவன் என்பதில் எனக்கு நிறைய மகிழ்ச்சி.
இப்பயிற்சியில் நான் அடிப்படையாகக் கற்றுக் கொண்ட விஷயம் ஒழுக்கம். பூசை செய்யும் முறைகளில் ஆகம விதிகளையும் நெறி முறை களையும் கற்றுக் கொண்டேன். வாழ்க்கையிலும் அவற்றைக் கடைப்பிடிப்பேன் என்கிறார் விஜயசங்கர் என்கிற மாணவர்.
இப்படியொரு புரட்சிகரமான மாற்றத்தில் என்னுடைய பங்களிப்பும் சிறிய அளவிலாவது இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இதனாலேயே நான் படித்துவந்த பி.காம்., படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, இந்தப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்திருக்கிறேன் என்கிறார் பிரபாகரன்.
நாங்கள் இந்தப் பயிற்சியில் கோயிலின் அமைப்பு முறைகள், வேதங்கள், ஜோதிடம், அர்ச்சனை செய்யும் முறை, ஆகமங்கள், திருக்குறள், பன்னிரு திருமுறைகள், சைவத் தமிழ் இலக்கியங்கள், தேவாரம், திருவாசகம் என பலவற்றைப் படித்துள்ளோம். தமிழ், சமஸ்கிருதம் என இரு மொழிகளிலும் பூசை செய்ய எங்களால் இயலும். என்றாலும், தமிழில் அர்ச்சனை செய்வதையே நான் சிறப்பாகக் கருதுகிறேன் என்கிறார் தர்மேந்திரன்.
இம்மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியங்களைப் புலவர் மு.சொக்கப்பனும், சைவ ஆகமங்களை எஸ்.எஸ்.ராமகிருஷ்ண னும் போதிக்கின்றனர்!
- என்கிறார் விகடன் கட்டுரையாளர் சுப.தமிழினியன்!
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆனால் - கோயிலின் புனிதம் கெடும் - சாமிக்குப் புரியாது - ஆகமங்களுக்கு அது விரோதமானது என்று இதுவரை கூப்பாடு போட்டு வந்த குறுக்குச்சால் ஓட்டிகள் இனியாவது தங்களது பழைய - துருப்பிடித்த - மூடநம்பிக்கைகளை கைவிட்டு - பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல - என் பதை ஒப்புக் கொண்டு - இந்தப் புதுமையை புரட்சியை வரவேற்கத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புவோமாக!
---------- நன்றி: `முரசொலி 22.6.2008
Posted by
தமிழ் ஓவியா
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
பெரியார்
பெண்களைப் பொதுக்கூட்டங்களுக்கு அழைத்து வருவது மாநாடுகளுக்கு அழைத்து வருவது என்ற வழக்கத்தைத் தமிழ்நாட்டில் புகுத்தியவர் பெரியார்
நாகம்மையார் உயிரோடு இருக்கும் வரையிலும் ஈ.வெ.ரா.வின் வீடு எப்போழுதும் ஒரு விருந்துக் கூட்டமாகவே விளங்கும். அவர் எத்தனைப் பேரானாலும் முன்னெச்சரிக்கை இல்லாமல் வீட்டுக்குச் சாப்பாட்டுக்கு அழைத்துப் போவார். எந்த நேரத்தில் எவர் சென்றாலும் இரவு 12- மணியானாலும் "சாப்பிட வாருங்கள் இலை போட்டாயிற்று என்பது தான் அம்மையாரின் முதல் உபச்சாரம்".
நாகம்மையாரின் கொள்கைகள் இரண்டே. ஒன்று ஈ.வெ.ரா. எக்காரியஞ் செய்தாலும் அதற்குத் தானும் துணை நிற்பது. இரண்டு தன் இல்லத்திற்கு வரும் எல்லோருக்கும் சோறு போடுவது. இந்த இரண்டு கொள்கைகளையும் அவர் இறக்கும் வரையிலும் தவறாமல் பின்பற்றி வந்தார். எவ்வளவு பேர் மிகுதியாக உட்கார்ந்து சாப்பிடுகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவருக்கு மகிழ்ச்சி. அடுத்தபந்திக்கு இன்னும் அதிகமான பேர் வரமாட்டார்களா? என்பதே அவருடைய கவலையாக இருக்கும். ஈ.வெ.ரா.வைச் சதா "வையும்" ஆண்களாலும் வீட்டுக்கு வந்தால் உடனே சாப்பாடு போட்டு விட்டு தான் வேறு வேலை பார்ப்பார்.
இன்று தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் நாகம்மையாரைப் பற்றி நன்கறிவார்கள். சீர்திருத்தவாதிகள் அனைவரும் நன்குணர்வார்கள். ஈ.வெ. ரா.வின் அரசியல் சமூக எதிரிகளும் அம்மையாரிடம் மதிப்பும், அன்பும் பாராட்டி வந்தனர். ஈ.வெ.ரா.வின் பொதுவாழ்க்கைக்குக் காரணம் அம்மையாரின் அருங்குணங்களேயென்பதை எவரும் மறுக்க முடியாது.
திரு.வி. கலியாணசுந்தர முதலியார் அவர்கள் 1933- இல் ஈரோட்டில் நாகம்மையாரின் உருவப் படத்தை திறந்து வைத்த போது கூறியதாவது:
"செல்வச் செருக்கில் மூழ்கிக் கிடந்த அம்மையார்! தேச நலத்தின் பொருட்டு அச்செல்வங்களையெல்லாம் உதறித் தள்ளிவிட்டார். அம்மையார் ஏட்டுக் கல்வி அதிகம் பெறாவிடினும், உலக அறிவில் உயர்ந்து விளங்கினார்.
கணவனுடைய தேசத் தொண்டிற்கும் பின்னர் அவர் புரிந்த சமூகச் சீர்திருத்தத் தொண்டிற்கும் பெருந்துணையாய்த் தம் கணவருடன் ஒத்துழைத்தார். விருந்தோம்பலில் அம்மையாருக்கு இணையானவர் எவருமிரார். தம் இல்லத்திற்கு வருந்தொண்டர்ககட்கு இனிய முகத்துடனும், இன் சொல்லுடனும் இன்னமுது படைத்துவந்ததை எவரும் மறுத்துக் கூற முடியாது.
ஒருசமயம் நானும் நாயக்கரும் திருநெல்வேலிக்குப் பிர்சார நிமித்தம் சென்று விட்டு ஈரோட்டுக்கு இரவு 12-30 மணிக்கு வந்தோம். அன்னம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அய்யப்பாட்டுடனே வந்தோம். அப்பொழுது அம்மையார் அன்புடன் வரவேற்று உடனே அறுசுவையுடன் அமுது படைத்ததை யான் என்றும் மறவேன்.
நாகம்மையாரும், இராமசாமியும் இறுதிவரையிலும் வாழ்ந்த வாழ்வு இன்பகரமானதாகும். அது எல்லோராலும் பாராட்டக் கூடியதாக இருந்தது. பெண்மக்களைப் பொதுக்கூட்டங்களுக்கு அழைத்து வருவது மாநாடுகளுக்கு அழைத்து வருவது என்ற வழக்கத்தைத் தமிழ்நாட்டில் புகுத்தியவர் ஈ.வெ.ரா. அவர்களேயாவர்.
"காதலர் இருவர் கருத்தொருமித்து
ஆதரவுபட்டதே இன்பம்"
என்னும் அவ்வையார் சொல்லுக்கு இவர்கள் வாழ்க்கையே எடுத்துக்காட்டாகும்.
----------------------- சாமி.சிதம்பரனார் அவர்கள் எழுதிய "தமிழர் தலைவர்" என்ற நூலில் இருந்து..... பக்கம்- 46
Posted by
தமிழ் ஓவியா
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
பெரியார்
ஒரு ஆபீசருக்கும் குடியானவனுக்கும் சம்பாஷணை!
குடியானவன் : என்ன சார் தங்களிடம் தனித்துச் சற்று நேரம் பேச வேண்டும் என்கின்ற எண்ணம். ஏனென்றால் நாம் இருவரும் வெகு நாள் சினேகமல்லவா? ஆதலால் சில விஷயங்களை தெரிவிக்க வேண்டும் என்கின்ற ஆசை எனக்கு உண்டு.
ஆபீசர் : ஆ!ஆ! பேஷாப் பேசலாம். இப்பொழுதே வாருங்கள். என்ன விஷேம்?
குடியானவன் : விசேஷம் ஒன்றும் இல்லை. கோபித்துக் கொள்ளக் கூடாது. இந்த விஷயத்தில் மனம் பொறுக்கவில்லை. அதனால் தங்களிடம் சொல்லித் தீரவேண்டும் என்கின்ற கவலை கொண்டு விட்டேன்.
ஆபீசர் : என்ன இவ்வளவு யோசிக்கிறீர்கள். கோபம் என்ன வந்தது தாராளமாய்ச் சொல்லுங்கள். என்ன விசேஷம்?
குடியானவன் : கொஞ்சகாலமாகத் தங்களுடைய சம்சாரத்தின் நடத்தை சரியாய் இல்லை. எந்நேரம் பார்த்தாலும் நம்ம வீட்டுத் தையல்காரனிடமே சகவாசம் வைத்துக் கொண்டிருக்கிறதாகத் தெரிகிறது. சில சமயங்களில் அந்தத் தையல்காரன் அந்த அம்மாளை அடிக்கிறதாகவும் தெரிய வருகிறது. இதைப்பற்றி பலவிதமாகவும் ஊரிலும் பேசிக் கொள்கிறார்கள். இதைத் தங்களிடம் தெரிவித்து விட வேண்டும் என்று துணிந்து விட்டேன். மன்னிக்க வேண்டும்.
ஆபீசர் : இதில் மன்னிக்க வேண்டிய சங்கதி ஒன்றுமில்லையே! தாங்கள் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம். ஏனென்றால் அந்த கழுதையை
என் சம்சாரம் அல்ல என்று விலக்கிப் பல வருஷமாகி விட்டது. எப்பொழுது ஒரு கான்ஸ்டபிளை இழுத்துக் கொண்டு போய் இரண்டு மாதம் வரையில் காணாமல் இருந்தாளோ அன்று முதலே இனி அவள் என்னுடைய சம்சாரமல்ல என்பதாகத் தீர்மானித்து விட்டேனே! இது தங்களுக்குத் தெரியாது?
குடியானவன் : இந்த விஷயமெல்லாம் எனக்குத் தெரிய வருகின்றது. ஆனால் அந்தம்மாள் தங்கள் வீட்டில் தங்களுடன் தானே இருக்கிறார்கள்?
ஆபீசர் : அதனாலென்ன? முன்பு அவளை அடித்துக் கொண்டு போன கான்ஸ்டேபிள் அவளிடம் இருந்த நகையைப் பிடுங்கி கொண்டு விரட்டி விட்டு விட்டான். அவள் இந்த ஊர்ச்சத்திரத்தில் வந்து திண்டாடுவதாகக் கேள்விப்பட்டேன். நேரில் போய்ப் பார்த்தேன். அவள் அழுதாள். அதற்கு நான்
நீ என்றைக்கு ஊரை விட்டு ஓடினாயோ அன்று முதலே உன்னை என் சம்சாரமல்ல என்று தீர்மானித்து விட்டேன். இனிமேல் எனக்கும் உனக்கும் புருஷன் பெண் ஜாதி என்கிற பாத்தியமும் இல்லை என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டேன். பிறகு அவள் வருத்தப்பட்டதைப் பார்த்து மறுபடியும் உனக்கு என்னிடம் வரப் பிரியமிருந்தால் உன்னை ஒரு தாசி மாதிரியாகக் கருதி உன்னிடம் நேசம் வைத்துக் கொள்கிறேன். இஷ்டமிருந்தால்
என்னோடு வா என்று சொன்னேன் அவளும் வந்தாள். நானும் அவளை வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய் விட்டேன். இப்போது அவளை ஒரு
தாசி மாதிரியாகத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரு
தாசி வீட்டுக்கு நான் போவதற்குப் பதிலாக என் வீட்டிற்கு வரவழித்துக் கொள்கிறேன். அடிக்கடி அவள் போய் விட்டு வருவதற்குப் பதிலாக என் வீட்டிலேயே இருக்கும்படி சொல்லி விட்டேன். குழந்தைகள் வீஷயத்திலும் ஓடுவதற்கு முன் பிறந்த குழந்சைகள் என் சொந்தக் குழந்தைகள் மாதிரிதான் வைத்திருக்கிறேன். திரும்பி வந்ததற்குப் பின் பிறந்த குழந்தைகளை தாசிக்குப் பிறந்த குழந்தை மாதிரி தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். தவிர என் குழந்தைகளையும் அவளே பார்த்துக் கொள்ளும்படியாயக் கேட்டுக் கொண்டேன். அவளும் தன் குழந்தைகள் மாதிரியே பார்த்துக் கொள்ளுகிறாள். அந்த விதத்தில் அவள் உத்தமி என்றே சொல்லுவேன்.
குடியானவன் : அப்படியானால் அடிக்கடி டெய்லர் (தையல்காரன்) வீட்டில் இருக்க காண்கிறேனே அதன் காரணம் என்ன?
ஆபீசர் : என்னமோ காரணம் இருக்கலாம். அதைப் பற்றி நமக்கு
ஏன் கவலை? நாமே அவளை ஒரு தாசிப் போல் நினைத்து தாசியை வைத்துக் கொண்டிருக்கிறது போலவே கருதிக் கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க நமக்கு அனாவசியமான கவலை எதற்கு? அவள் எங்கு போனால் நமக்கென்ன? என்று நான் அதில் என் நேரத்தை சிறிதும் வீணாக்குவதேயில்லை. ஆனால் அந்த டெய்லரிடம் அடிப்படுவதாகச் சொல்லுகின்றீர்களே அதைக் கேட்க நமக்குச் சற்று பரிதாபமாகத்தான் இருக்கின்றது. என்ன செய்யலாம்? பாவம் அந்த டெய்லர் ஒரு சமயம் இவளைத் தன் சம்சாரமாக நினைத்துக் கொண்டிருக்கலாம். அவளும் அவனைத் தன் புருஷனாக நினைத்துக் கொண்டிருந்தாலும் இருக்கலாம். அப்படியிருந்தால் அடிக்க வேண்டியதும், அடிபட வேண்டியதும் நியாயம் தானே. நானும் அவளை என் சம்சாரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது அதைத்துக் கொண்டு தான் இருந்தேன். அதற்கு என்ன செய்யலாம்?
குடியானவன் : சரி, சார்! இப்போழுது தான் தங்களுடைய கொள்கை (பிரின்சிபில்) எனக்கு விளங்குகிறது. அனாவசியமாய் தங்கள் நேரத்தைக் கெடுத்ததற்காக மன்னிக்க வேண்டும். நான் போய் வருகிறேன்.
ஆபீசர் : சரி போய் விட்டு வாருங்கள். இதைத் தவிர வேறு விஷயமில்லையே?
குடியானவன் : இல்லை.
------------------------29-07-1928- குடிஅரசு இதழில் தந்தை பெரியார் அவர்கள் சித்திர புத்திரன் என்ற புனைபெயரில் எழுதியது.
Posted by
தமிழ் ஓவியா
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
பெரியார்
21.6.08
இந்துக்களின் மனம் புண்படுகிறது என்று பேசுகிறவர்கள் ஊன்றிப் படித்து உணர வேண்டிய உண்மை
பக்தியும் - புத்தியும்!
பக்தி இருக்கும் இடத்தில் புத்தி இருக்காது என்பது தந்தை பெரியார் அவர்களின் பொன்மொழி. இந்தக் காலத்துக்குப் பொருத்தமாகச் சொல்வதென்றால் பெட்ரோல் மொழி! (பொன்னைவிட இப்போது கச்சா எண்ணெய்க்குத்தானே மதிப்பு அதிகம்)
பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
பெரியர் 1920-களிலேயே ஏறத்தாழ 80 வருடங்களுக்கு முன்பே கடவுள் இல்லை என்று முழக்கமிட்டார்.
இன்று பல்வேறு ஆய்வுகளில் புத்திசாலித்தனம் உள்ளோருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை - என்ற உண்மை - அதாவது பெரியார் பொன்மொழி நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
தினமலர் (19-6-2008) இதுகுறித்து வெளியிட்டிருக்கும் செய்தி வருமாறு:
புத்திசாலிகளும், அதிக நினைவாற்றலும் கொண்டவர்கள் கடவுள் நம்பிக்கை மற்றும் மத நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உல்ஸ்டர் பல்கலைக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் தகவல், சர்வதேச அளவில் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
புத்திசாலித்தனம் மிக்கவர்கள், அதிக நினைவாற்றல் கொண்டவர்களில் பெரும்பாலானோர் இறை நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பதாகவும், மத சம்பிரதாயங்களை கைவிட்டு விடுவதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நூற்றாண்டில், இறை நம்பிக்கையும், மத நம்பிக்கையும் பெரிதும் குறைந்து வருவதற்குக் காரணம், புத்திசாலிகள் மற்றும் நினைவாற்றல் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதே என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல, இதற்கு முன், இனம் மற்றும் பாலின அடிப்படையில் மத நம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனம் கொண்டோர் குறித்து நடத்தப்பட்ட ஆய்வும் சர்ச்சை கிளப்பியது.
மற்றவர்களைவிட, புத்திசாலித்தனம் கொண்டவர்கள் குறைந்தளவே இறை நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
புத்திசாலித்தனம் உள்ளவர்களில் 3.3 சதவிகிதத்தினர் மட்டுமே இறை நம்பிக்கை, மத நம்பிக்கை கொண்டிருப்பதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், பிரிட்டனில் ஓர் ஆய்வில், 69 சதவிகிதம் பேர் இறை நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க தேசிய விஞ்ஞான அகடமியில் நடத்தப்பட்ட ஆய்வில், இதில் இடம் பெற்றிருப்போரில் வெறும் 7 சதவிகிதம் பேர் மட்டுமே இறை நம்பிக்கையும், மத நம்பிக்கையும் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர், லின், ஆரம்பப் பள்ளி மாணவர்கள் மத்தியில் இறை நம்பிக்கை பெரிய அளவில் உள்ளது. ஆனால், இவர்கள் பருவ வயதுக்கு வரும்போது, புத்திசாலித்தனம் அதிகரித்து, இறை நம்பிக்கையைக் கைவிடுகின்றனர்.
ஏராளமானோர் கடவுள் இருப்பது உண்மைதானா என்பது உட்பட பல்வேறு சந்தேகங்களுக்கு ஆளாகின்றனர். மற்வர்களைவிட நன்றாகப் படிப்போரும், அதிகம் படித்தோரும் இறை நம்பிக்கையைக் கைவிடுகின்றனர்.
இதற்குக் காரணம், அவர்களுக்கு புத்திசாலித்தனமும், நினைவாற்றலும் அதிகரித்து இருப்பதே. அதேபோல, பொதுமக்கள் மத்தியிலும் புத்திசாலித் தனமானோர் மத்தியிலும் இறை நம்பிக்கை இல்லை என்று விளக்கியுள்ளார்.
- என்பது ஆய்வுகளின் மூலம் வெளிப்பட்டுள்ள உண்மை!
"எதற்கெடுத்தாலும், இந்துக்களின் மனம் புண்படுகிறது என்று பேசுகிறவர்கள் ஊன்றிப் படித்து உணர வேண்டிய உண்மை இது!"
--------------- நன்றி: "முரசொலி", 20.6.2008

பதிலடி
19.6.08
இழிவுகளை அடியோடு நீக்க இந்து மதத்தை விட்டொழியுங்கள்
இந்த நாட்டில் மருத்துவக் குலத்தவராய் நீங்கள் ஒரு பெருங்கூட்டமாக மனித சமுதாயத்திற்கே மிகவும் பயன்படக்கூடிய தொழிலைக் கொண்டு பழங்குடி மக்களின் கூட்டமாக விளங்குகிறீர்கள். ஆனால் இந்த நாட்டு இந்து சமுதாயத்திலே மிகவும் தாழ்மையாகக் கருதப்படுகிறீர்கள். எவ்வளவுக்கெவ்வளவு தாழ்வை இழிவை மறைத்து வைக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு கேடுதான் சூழும். நன்றி நலமற்ற மக்கள் சமுதாயத்திலே பெருங்கூட்டமான நீங்கள் மிகவும் தாழ்மையாகக் கருதப்படுகின்றீர்கள்.
நீங்கள் முடி எடுக்கிறவர்கள் என்றும், சவரம் செய்கிறவர்கள், முக அலங்காரம் பண்ணுகிறவர்கள் என்றும் சொல்லப்படுகிறீர்கள். இவற்றில் இழிவு சிறிதளவாவது இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால், நீங்கள் அத்தொழிலைச் செய்கிறீர்கள் என்பதற்காக, உங்களை இழிவாகக் கருதுவதுதான் மடமை. இன்று பெரிய ராஜாக்களும் சவரம் செய்து கொள்ளுகிறார்களே! ஆகவே இத்தகைய இழிவு வகுப்பிற்கு ஏற்பட்ட இழிவே தவிர, தொழிலுக்கு ஏற்பட்ட இழிவு அல்ல. உதாரணமாக, பார்ப்பனர் அத்தொழிலைச் செய்தாலும் அவர்களுக்கு இழிவு இல்லை. இப்பேர்ப்பட்ட சூழ்ச்சி, இழிவான எண்ணம் உலகில் நம்நாடு என்று சொல்லப்படும் இத்தேசத்திலன்றி வேற்று நாட்டில் எங்கும் கிடையாது.
மேல் நாட்டிலே ஒரே குடும்பத்தில் ஒருவன் கவர்னராக இருப்பான்; அவன் தம்பி செருப்புத் தைக்கும் கடையை வைத்து வியாபாரம் செய்வான்; மற்றொருவன் முடி கத்திரிப்பான்; மற்றொருவன் பாதிரியாக இருப்பான். ஆனால் முறைப்படி காரியாதிகள் நடைபெற்றுவரும் இப்பாழும் நாட்டிலே, தகப்பன் செய்து வந்த தொழிலையே மகன் செய்ய வேண்டிய நிலையும், அதன் காரணமாக சமுதாயத்திலே உயர்வு அல்லது தாழ்வு என்ற பட்டத்தைச் சுமக்கும் நிலையும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் தாண்டவமாடுகிறது. இந்த மாதிரி நம்மை இழிவு செய்யும் நிலை நிலைத்து இருப்பது, நம்முடைய கையாலாகாத் தனத்தை விளக்குகிறதே தவிர, எதிரிகளுடைய, நம்மை மோசம் செய்பவர்களுடைய பலத்தையோ, அல்லது வீரத்தன்மையையோ விளக்குவதாக இல்லை.
நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ள இந்து மதத்தால் தான் நீங்கள் இகழப்படுகிறீர்கள். உண்மையாகவே உங்களைப் பிடித்துள்ள இழிவு நீங்க வேண்டுமானால், அம்மதத்தை இழுத்து எறியுங்கள். வேண்டுமானால் தனிப்பட்ட மனிதன், இந்து மதத்தின் பெயராலேயே தங்கள் இழிவைப் போக்கிக் கொள்ளலாம் என்று ஏமாற்றிக் கொண்டு திரியலாம். ஆனால், தாசி மகன், வேசி மகன், கோயிலுக்குள் சிற்றுண்டிச் சாலைக்குள் பிரவேசிக்கக் கூடாத இழிநிலையோன் என்பதான பட்டங்கள் என்றும் நிலைத்திருக்கும்.
இந்துக்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்களிலே பார்ப்பனரல்லாதாரிலே, தேவாங்கர்கள், கம்மியர்கள் தங்களைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்வதாலேயும், படையாச்சிகள், நாயுடுகள், நாடார்கள் தங்களை சத்திரியர்கள் என்று சொல்லிக் கொள்வதிலேயும், இன்னும் இது போன்ற போலிப் பட்டங்களைச் சூட்டிக் கொள்வதிலும் பெருமை கொள்கிறார்கள். அதற்கு மாறாக, நாவிதர், கம்மாளர், பறையர், படையாச்சி, நாடார் என்று சொல்லிக் கொள்வதால் என்ன குடி முழுகிவிட்டது என்று கேட்க ஆசைப்படுகிறேன். பெயரில் என்ன இருக்கிறது? நாமெல்லோரும் தமிழர்- திராவிடர். நமக்குள் ஜாதி வேற்றுமை உணர்ச்சி இல்லை என்பதான மனப்பான்மை ஏற்பட வேண்டுமானால், சாதியை மாற்றி ஆரியமாக்கக் கூடாது. திராவிடர்களாகிய நமக்குள்ளே கூட்டு வளர்ச்சி வளர வேண்டும்.
தோழர்களே! ஒரு அய்ந்து வருடத் திட்டம் போட்டுக் கொள்ளுங்கள். உங்களை சமுதாயத்தில் தாழ்மையாகக் கருதுகிறவர்களுக்கு நீங்கள் உதவி செய்வதில்லை - தொண்டாற்றுவதில்லை என்ற உறுதியை ஏற்படுத்திக் கொண்டீர்களானால், இழிவுகளைப் பறக்கடிக்க ஒற்றுமையோடு, உள்ளத்துணிவோடு அந்த அய்ந்து ஆண்டுத் திட்டத்தை செவ்வனே செய்து முடித்தீர்களானால் - புரோகிதன் உங்களை அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்து வைப்பான்.
ஆகையினால், சமுதாயத்தின் பெயராலே, தொழிலின் பெயராலே உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழிவுகளை நீக்க, மதத்தை உடைத்தெறியுங்கள். எதிரிகளை பகிஷ்கரியுங்கள். இம்மாநாட்டை பண்டிகையாக நினைத்துப் போய்விடாதீர்கள். இந்து மத உணர்ச்சியை ஒழித்து, காரியத்தில் இறங்குங்கள் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். நான் இந்துவல்ல, இந்தியன் என்றும் சொல்லிக் கொள்ள மாட்டேன். இந்து மதத்திற்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்ற முடிவிற்கு ஒவ்வொரு மருத்துவ வாலிபனும் வந்து, அதன்படி தொண்டாற்ற முற்பட்டால்தான் ஏதாவது பயன் விளையும்.
---------------- சென்னை மாநில 3ஆவது மருத்துவக் குழு மாநாடு திறப்பு விழாவில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரை ‘குடியரசு' 27.5.1944
Posted by
தமிழ் ஓவியா
1 comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
பெரியார்
Subscribe to:
Posts (Atom)