Search This Blog

23.6.08

இவர்களுக்கு மூளை என்ற ஒரு உறுப்பு இருக்கிறதா?



2008 ஆம் ஆண்டிலும் இப்படி ஒரு செய்தி என்றால் இந்த மக்களை என்ன வென்று சொல்வது? அட அயோக்கியப் பதர்களா! உங்களுக்கு மூளை என்ற ஒரு உறுப்பு இருக்கிறதா? ஏன் இவ்வளவு கோபம் என்று கேட்கிறீர்களா? கீழே உள்ள செய்தியைப் படியுங்கள்:

" ஊட்டி மலை ரயில் பாதையில் தொடரும் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க கிடா வெட்டி ரயில்வே ஊழியர்கள் நேற்று பூஜை நடத்தினராம்.

ஊட்டி மலை ரயில் பாதையில், கடந்த மே 11 ஆம் தேதி தண்டவாளச் சீரமைப்பு பணிக்கு ரயில்வே ஊழியர்கள் 8 பேர் டிராலி மூலம் சென்றனர். குன்னூர் அருகே திடீரென டிராலி தறிகெட்டு ஓடி, 3 ஊழியர்கள் பலியாகினர். கடந்த மே மாதத்தில் ஒரு நாள், இன்ஜின் கோளாறால், ஒரு முறை மலை ரயில் நடுவழியில் நின்றது. குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில், அதிகளவில் மலை ரயில் பாதையில் விபத்துகள் ஏற்படுவதால், ரயில்வே துறை ஊழியர்கள், அதிகாரிகள் மூடத்தனமாக தெய்வ குற்றம் காரணமாக மலை ரயில் பாதை யில் தொடர்ந்து பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாகக் கருதி, பரிகார பூஜை நடத்த திட்ட மிட்டனர். நேற்று காலை குன்னூர் ரயில் நிலையத்தில் காலை 4 மணி முதல் 6 மணி வரை பரிகார யாக பூஜைகள் நடத்தப் பட்டதாம்.

குன்னூர் ரயில் நிலைய முன் பதிவு மய்யத்தில் பூஜை செய்த பின், திருஷ்டி பூசணிக்காய் கட்டப்பட்டதாம். மலை ரயிலுக்கு மாலை அணிவித்து தீபம் காட்டப்பட்டதாம். ரயில்வே ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் பலர் பங்கேற்றனராம். பின்னர் குன்னூர்-காட்டேரி இடையேயுள்ள முனீஸ்வரன் கோயிலில் கிடா வெட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதாம்".


இதுதான் இன்றைய அனைத்து நாளிதழ்களில் வந்த செய்தி.

இப்படி பூஜைகள் செய்தபின்பு விபத்து நடக்காதா? நடந்தால் பொறுப்பேற்றுக் கொள்வது யார்? ரயில்வே ஊழியர்களா? முனிஸ்வரனா?

இந்திய அரசாங்கத்தின் மதச்சார்பின்மையை கேவலப்படுத்திய இந்த ரயில்வே ஊழியர்கள் அதற்கு உடந்தையாயிருந்த அதிகாரிகள் அனைவரின் மீதும் கண்டிப்பான நடவடிக்கை தேவை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நாளை வேறு பிரச்சனைக்கு ஒரு கிறித்துவ அதிகாரி கிறுத்துவ முறையில் சடங்குகள் செய்வார் அதை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா? இப்படியே ஒவ்வொரு மதக்காரர்களும் கிளம்பிவிட்டால் என்ன ஆவது? ஆளும் அரசுகள் சரியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அதோடு சரியான வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுத்து அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். மீறுபவர்கள் மீது கடுமையான தண்டணை வழங்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற காட்டுவிலங்காண்டிதனம் ஒழியும். அரசின் மதச்சார்பின்மை காக்கப்படும்.

0 comments: