Search This Blog

7.6.08

ராமன் வீழ்வான் - பெரியார் வெல்வார்!

{"சனாதன தர்மம் தான் எங்கள் கொள்கை" என்று பாரதிய ஜனதா அறிவித்து விட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை, தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கை இவற்றைத் தழுவி எழுதப்பட்டுள்ள கட்டுரை இது"}

கோணிப்பைக்குள் இருந்த பூனை வெளியில் வந்தது என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு.
பாரதிய ஜனதா கட்சி என்ற பூனை இப்பொழுது வெளியில் வந்து தன் `மியாவ் மியாவ் சத்தத்தைக் கொடுத்து விட்டது.


பாரதிய ஜனதா கட்சி என்பது ஒரு அரசியல் கட்சிதான்; மற்ற அரசியல் கட்சியைப் போன்றது தான் என்று நினைத்தோ அல்லது அக்கட்சியைப் பற்றி சரிவரத் தெரிந்து கொள்ளாமலோ, அகில இந்திய அளவில் காங்கிரசுக்கு ஒரு மாற்று வேண் டாமா? அந்த வகையில் இப்பொழுது இருப்பது பாரதிய ஜனதா தானே என்று நுனிப்புல் மேயும் மக்கள் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள் - இதில் படித்த கிறுக்கர்களும் உண்டு.

யாராக இருந்தாலும் பாரதிய ஜனதா என்பது பத்தோடு பதினொன்று என்பது போன்ற அரசியல் கட்சியல்ல - அது சனாதனத்தை வருணாசிரமத்தை - பிறப்பின் அடிப்படையில் உயர்வு - தாழ்வு என்கிற ஆண்டான் அடிமை முறையைப் புதுப்பிக்கும் ஓர் ஆபத்தான அமைப்பு என்பதைத் தெரிந்து கொள் ளக் கூடிய ஓர் அரிய வாய்ப்பை அக்கட்சியின் தலைமையே அதிகாரப் பூர்வமாக அறிவித்துக் கொண்டு விட்டது.

இதனால் சகலப் பேர்களும் தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனின் 1952-இல் சென்னை மாகா ணத்துக்கு முதல் அமைச்சராக கொல்லைப்புறம் வழியாக வந்த ராஜகோபால ஆச்சாரியார் குலக் கல்வித் திட்டம் என்ற ஒன்றைக் கல்வியில் கொண்டு வந்து, அரை நேரம் படித்தால்போதும்; மீதி அரை நேரம் அவரவர்கள் குலத் தொழிலை - அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும்; பள்ளி ஆசிரியர்கள் மதியத்துக்கு மேல் மாணவர்கள் அவரவர் அப்பன் தொழிலைச் சரிவரச் செய்கின்றனரா என்பதை மேற்பார்வையிட வேண்டும் என்று ஏற்பாடு செய்தார் அல்லவா? அதை நினைவுபடுத்திக் கொண்டு விட்டால் பாரதிய ஜனதா இப்பொழுது தன்னைப்பற்றிக் கூறும் தன்னிலை விளக்கமான சனாதன தருமம் என்பது என்ன என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தபோது வெளியுறவுத் துறை அமைச்சராக யிருந்தவர் ஜஸ்வந்த்சிங்; டெல்லியில் செய்தியாளர் களைச் சந்தித்து, வெளியுறவுக் கொள்கை தொடர் பாக தம் கட்சி எடுத்துள்ள முடிவுகள் அடங்கிய ஏழு பக்கத் தீர்மானத்தை வெளியிட்டபோது, ஒரு முக்கியக் கருத்தையும் தெரிவித்து இருக்கிறார்.



இந்து ஏட்டில் (3.6.2008) வெளியான அந்தத் தகவலை தமிழக முதல் அமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் சென்னைத் தீவுத் திடலில் நடைபெற்ற தம் பிறந்த நாள் விழாவில் (3.6.2008). பொதுக் கூட்டத்தில் எடுத்துச் சொல்லி, ஒரு முக்கிய எச்சரிக்கையையும் பொது மக்களுக்கு வழங்கினார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களும், முதல் அமைச் சரின் உரையை எடுத்துக்காட்டி முக்கிய அறிக்கை ஒன்றை `விடுதலையில் வெளியிட்டுள்ளார் (4.6.2008). இந்தக் காலகட்டத்தில் இந்த மூன்றும் மிக முக்கியமானவையாகும்.

1) ஜஸ்வந்த்சிங் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்து.
2) அதுகுறித்து முதல் அமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் சென்னைத் தீவுத் திடலில் தெரிவித்த கருத்துகள்.
3) தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இவற்றைத் தொடர்ந்த பாரதிய ஜனதா வின் பார்ப்பனீய - வருணாசிரம நச்சுப் பாம்பின் நஞ்சை எடுத்து விளக்கியுள்ள விடுதலை அறிக்கை.இம்மூன்றையும் கவனத்துடன் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மக்களாலும் கவனிக்கப் பட வேண்டியவை - தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இதில் முன்னோடும் பிள்ளை யாக இருந்து மக்கள் மன்றத்தில் விழப்புணர்வுத் தீயை வேகமாக மூட்டி, இந்துத்துவா கும்பலின் பாசிச - நாஜிச - கருத்துக்களைப் பொசுக்கும் பணியும், கடமை யும் அதிகமாக இருக்கின்றன. காரணம் இது தந்தை பெரியார் பக்குவப்படுத்திய சமதர்மப்பூமி, சனாதனத்தை வீழ்த்தும் ஆயுதங்கள் இங்கு ஏராளம் உண்டு. பார்ப்பனி யத்தின் சகல கல்யாண குணங் களும் அறியப்பட்ட பூமி இது.

இந்தப் பூமிக்கு இப்பொ ழுது அதிக வேலை காத் திருக்கிறது.
அப்படியென்ன தான் ஜஸ்வந்த்சிங் சொன்னார்?
அதனை முதல் அமைச்சர் கலைஞர் வாயாலேயே தெரிந்து கொள்ளலாமே!



``ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன். இப்போது இந்தியா வில் உலகம் போற்றத்தக்க அள விற்கு நேபாளத்தில் புரட்சி நடை பெற்றிருக்கிறது. ஏறத்தாழ 200 ஆண்டு காலமாக நடைபெற்ற மன்ன ராட்சிக்கு சமாதி கட்டப்பட் டிருக்கிறது. மன்னருடைய மாளிகை ஏலம் போகுமா, அல்லது இன் றைக்கு அங்கே உருவாகின்ற குடியரசு ஆட்சிக்குச் சொந்த மாகுமா, அது யார் வாழும் இடமாக மாறும் என்கின்ற இந்தக் கேள்வி களுக்கிடையே மன்னர் என்றைக்கு வெளியேறுவார், வெளியேறுவாரா அல்லது வெளியேற்றப்படுவாரா என்ற அளவிற்கு மன்னராட்சி அங்கே தலை குப்புறக் கவிழ்ந்து மக்களாட்சிக்கு அங்கே விதை போடப்பட்டு, அது செழித்து வளர்ந்து அங்கே குளிர் தருவாக நமக்கெல்லாம் நிழல் தந்து கொண்டிருக்கிற ஓர் ஆட்சியை அங்கே நாம் காணுகிறோம். ஆனால், அந்த ஆட்சியைப் பமக்களவைத் தேர்தலில் 40 இடங் களில் கிடைத்த வெற்றிதானே அதனைத் தடுத்து நிறுத்திய சுவர்களாக ஆனது!
பழைய முயற்சிகள் - அத்தகைய மதவெறி சக்திகளால் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
சனாதன தர்மம் என்றால் ஜாதித் தர்மம் - வர்ணாஸ்ரம தர்மம்!
மனித தர்மத்திற்கு அங்கு இட மில்லை - மனு தர்மமே கோலோச்சும் நிலை உருவாகும்!
அந்நிலை மீண்டும் வர வேண்டுமா? வர விடலாமா?
சமதர்மமா - சனாதன தர்மமா?
சமதர்மமா? சனாதனா தர்மமா? பிறவி இழிவைப் பாதுகாக்கும் ஓர் ஆட்சி மத்தியில் வந்தால், அதைவிடக் கறுப்பு அத்தியாயம் கறைபடிந்த வரலாறு - நம் நாட்டிற்கு வேறு உண்டா?
இதை அனைவரும் சிந்தித்து, செயலாற்ற அரிய தருணத்தில், பொறுப்பான, பொதுநலம் பேணும் தலைவர் என்பதால், முதல் எச்ச ரிக்கை மணியை அடித்துள்ளார்.
மதச் சார்பற்ற சக்திகள் அனைத் தும் இதனைப் புரிந்துகொண்டு, செயலாற்றிடவேண்டும்.
அரசியலில் கொள்கை வயப் பட்டு அணியப்படுத்துதல்(Polarisation)ற்றி இந்தியாவிலே இன்றைக்கு நாங்கள் மதவாதத்தை வைத்து எந்தக் காரியத்தையும் செய்வோம் - அது சேது சமுத்திரத் திட்டமானா லும் அல்லது வேறு திட்டங்களா னாலும் மத அடிப்படையிலே அவைகளை அணுகுவோம் என்று தீர்மானித்து நடைபோடுகின்ற பாரதிய ஜனதா கட்சி, தனது தேசி யக் கூட்டத்திலே சில தீர்மானங் களை நிறைவேற்றியிருக்கின்றது.
7 பக்கங்கள் அடங்கிய அந்தத் தீர்மானங்களை வெளியிட்டவர் - வெளியுறவுத் துறையின் முன்னாள் அமைச்சர் மதிப்பிற்குரிய நண்பர் ஜஸ்வந்த் சிங் அவர்கள் ஆவார்கள். அந்தத் தீர்மானத்திலே அண்மை யில் நேபாள நாட்டில் நடந்த ஆட்சி முறை மாற்றத்தை இந்தியா உள்பட பல நாடுகள் வரவேற்று இருக் கின்றன. என்றாலுங்கூட, அங்கே இருக்கின்ற முற்போக்குக் கட்சிகள் எல்லாம் இணைந்து மன்னர் ஆட்சிக்கு விடை கொடுத்து ஒரு மதச்சார்பற்ற குடியரசை உருவாக்கி உள்ள இந்த நேரத்தில், அமெரிக் காவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜிம்மி கார்ட்டர் உள்பட அய்க்கிய நாடுகள் மன்றத்தில் பல பார்வையாளர்களின் கண்காணிப் பில் நடு நிலையான முறையில் நடைபெற்ற தேர்தலில்தான் நேபாளத்தின் ஜனநாயகப் புரட்சி இன்றைக்கு ஏற்பட்டுள்ளது என்று ஏடுகள் எல்லாம் குறிப்பிடுகின்ற இந்த நேரத்தில்தான் ஜஸ்வந்த் சிங் அவர்கள் பா.ஜ.கட்சியின் தீர்மான மாக வடித்தெடுக்கின்ற தீர்மானத் தில் சொல்லுகிறார். ஓர் இந்தியன் என்கிற முறையில் சனாதன தர்மத்தை நம்புகிறவன் என்கிற முறையில் நான் கீழே தள்ளப்பட் டிருக்கிறேன். மேலும், நான்கு புனித தலங்கள் இந்தி யாவில் இருக்கின்றன. அய்ந்தாவதான பசுபதிநாத் நேபாளத்தில் உள்ளது என்று குறிப்பிட்டு விட்டு, சனாதன தர்மத்தை விட மேலான மதச் சார்பின்மை வேறு எதுவுமில்லை. இது நோபாளத்தில் நடந்த எதிர்மறையான போக்கு என்று அந்தத் தீர்மானம் குறிப்பிடுகிறது.
(Mr. Jaswant Singh said: As an Indian and a believer of “Sanatan Dharma” (Hinduism), I feel diminished. . . There are four ‘dham’s (pilgrimage centres) in India and the fifth, Pashupati Nath, is in Nepal . . . There is nothing more secular than ‘Sanathan dharma’ . . . This is a negative development (in Nepal) . . . என்று மதச் சார்பற்ற கருத்துக்கு ஒரு சனாதன விளக் கத்தை அளித்துள்ளார். இச்செய்தி இன்றைய "இந்து" பத்திரிகையிலே கூட வெளிவந்திருக்கின்றது.
பிறப்பிலேயே இழிவு!



எனவே பிறப்பிலேயே இழிவைக் கற்பிக்கும் இந்தச் சனாதனத்தை எதிர்த்துத்தான் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் நாங்களும் இணைந்த திராவிடர் இயக்கம் தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கிறது. அந்த அடிப்படையிலே தான் பெரியார், அண்ணா பெயரை உச்சரித்து இந்தப் பணியைச் செய்யாவிட்டாலும் கூட மதச் சார்பற்ற அரசுதான் மக்களை அமைதி வழியில் நடத்தும் என்ற அந்தப் பேருண்மையோடு, அந்த மகத்தான தத்துவத்தை மனதிலே நிறுத்தி, இடதுசாரி இயக்கங்களும், மற்றும் மதச் சார்பற்ற இயக்கங் களும் நம்முடைய திருமதி சோனியா காந்தி அவர்களுடைய தலைமை யிலே இயங்குகின்ற காங்கிரஸ் கட்சியும், இங்கே வீற்றிருக்கின்ற தலைவர்களுடைய தலைமையிலே நடை பெறுகின்ற முற்போக்குக் கட்சிகளும் மதச் சார்பற்ற என்பதற்கு என்ன பொருளைக் கொண்டு இருக்கிறதோ, அதற்கு நேர்மாறான பொருளை ஜஸ்வந்த் சிங், பா.ஜ.க. தீர்மானத்திலே கடைந்து எடுத்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய ஆபத்து? நேபாளத்திலே - அங்கே பூத்திருக் கின்ற அந்தச் சுதந்திரப் பூவை நுகர்வதற்கு அவர்கள் தயாராக இல்லை. இதிலிருந்தே நேபாளத்தில் அவர்கள் நிறை வேற்றியிருக்கின்ற தீர்மானத்தின் அடிப்படையில் நாளைக்குத் தேர்தலிலே மதச் சார்பற்ற நிலையிலே நாம் போட்டியிடுகின்ற நேரத்தில் - நாம் மக்களை சந்திக்கின்ற நேரத்தில் மதத்தை அடிப்படையாக வைத்து, ஒரு அரசு உருவாக அவர்கள் வருவார்களேயானால் நாடு என்ன வாகும் என்பதை தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும்.

மதம் என்ற அபினுக்கு அடிமைப்படுவதா?

நான் ஏதோ தேர்தல் பிரச் சாரத்தை இந்தப் பிறந்த நாள் விழாவிலே நடத்துவதாக எண்ணிக் கொள்ளக் கூடாது. இது அடிப்படை மனிதர்களின் பிரச்சினை. இது தேர்தலுக்காகச் செய்யப்படுகின்ற பிரசங்கம் அல்ல, பிரச்சாரம் அல்ல. நாளை இந்திய மகன் வாழ்வதா - இல்லையா? அவன் மதம் என்ற அபினுக்கு அடிமைப்படுவதா - அதிலிருந்து விடுபடுவதா? என்ற அந்தக் கேள்விகளுக்கு விடையி றுக்க வேண்டும். எனவே தேர்தல், அதிலே கிடைக்கின்ற வெற்றி வேறு. ஆனால், அந்தத் தேர்தலால் ஏற்படப் போகின்ற இந்த தேசத்திற் கான மாற்றம் - எந்த மாற்றமாக இருக்க வேண்டும்? அது மதத்தைப் பயன்படுத்தி, மக்களை மிதிக்கின்ற நிலையிலே உள்ளவர்கள் ஆளு கின்ற மாற்றமா? அல்லது எதற் கெடுத்தாலும் மதம் என்று சொல்லி, மக்களுடைய வளர்ச்சியைத் தடுக்கின்ற நிலையை வீழ்த்துகின்ற அந்த மாற்றமா? எந்த மாற்றம் என்பதற்கு விடை காணுங்கள் என்று நான் இந்த பிறந்த நாள் விழாவிலே செய்தியாக அறிவிக்கிறேன்

மேற்கண்ட கலைஞர் அவர்களின் உரை - பிரச்சினைகளைத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது.
தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இது குறித்து `விடுதலையில் பின் வருமாறு எழுதியுள்ளார்.

சனாதன தர்மத்தைவிட மேலான மதச் சார்பின்மை வேறில்லையாம் - கதைக்கிறது பா.ஜ.க.!
மதத் தீவிரவாதம் - திரிபுவாதம்!

எத்தகைய கொடுமையான திரிபுவாதம்! நஞ்சினைத் தேன் என்கிறது! நரியும், நன்றியுள்ள நாயும் ஒன்று என்கிறது!

இதைவிட திட்டமிட்ட அறிவு நாணயக்கேடு அகிலத்தில் எங்கா வது காண முடியுமா?
தீவிரவாதம் - பயங்கரவாதம் - இவற்றைப் பெற்றெடுத்ததே மத வாதம் அல்லவா?
இஸ்லாமியத் தீவிரவாதம் என்பது - இந்து மதத் தீவிரவாத மாக பாபர் மசூதியை 1992 இல் இடித்துத் தள்ளிய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மதவெறி அமைப்புகளின் தீய விளைவுகள் என்பதை எவரே மறுக்க முடியும்?

மீண்டும் தலைதூக்கும் ஆபத்து!

இந்தியாவை 2004 இல் இத்தகைய மதவாதப் பாம்புகளி டமிருந்து பாதுகாத்திருக்காவிட் டால், இந்நேரம் இந்தியா வெறும் இந்து மதவெறி நாடாக - கோட்சே கும்பலின் ஆட்சிக் குட்பட்டு அவதியுறும் கொடும் காடாக அல்லவா ஆகியிருக்கும்?

கலைஞர் அவர்களின் அரசியல் வியூகத்தினால், தமிழ்நாடு - புதுவை மாநிலங்களில் நடைபெற்ற (Polarisation) இப்போது இயற் கையாகவே இதன்மூலம் ஏற்பட்டு விட்டது!
சனாதன வாதம் என்பதுதான் இந்து மதம் என்று அழைக்கப் படும் பார்ப்பன மதத்தின் மூலப் பெயர்.

அச்சொல்லையே பா.ஜ.க. பயன்படுத்தி அரசியல் அறிக்கை தயாரிக்கிறது என்றால், இதைப் புரிந்து கொள்ளவேண்டாமா?

மிகவும் பாராட்டத்தக்கது

எனவே, மதச் சார்பற்ற சக்தி கள், - முற்போக்குச் சக்திகள் இந்த ஆபத்தை உணர்ந்து ஓரணியில் நிற்கவேண்டும்.
இதைச் சொல்லவேண்டிய நேரத்தில், சொல்லவேண்டியவர் சொல்லியிருப்பது மிகவும் பாராட்டத் தக்கது.
(`விடுதலை 4.6.2008) என்று தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் குறிப்பிட் டுள்ளார்.
சனாதன தர்மமா - அது என்ன என்ற அய்யப்பாடு ஏற்படலாம்.. வர்ணாசிரம தர்மத்துக்கு இன்னொரு சொல்தான் சனாதன தர்மம்.

காஞ்சி சங்கராச்சாரியார் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி இதனைத் தெளிவு படுத்தியும் உள்ளார் ஆதாரம் தேவைப்பட்டால் வானதி பதிப்பகம் வெளியிட்ட சங்க ராச்சாரியாரின் `தெய்வத்தின் குரல் முதல் பகுதியில் `பெயரில்லாத மதம் என்ற தலைப்பிலிருந்து சனாதன தருமமே சங்கரர்தரும் நெறி என்ற தலைப்பு வரை (பக் கங்கள் 128-282) உள்ள கட்டுரைகளைப் படித்தால் வர்ணாசிரம தர்மம் என்ற சனாதன தர்மத்தின் சகல அம்சங்களும் ஒளிவு மறை வின்றித் தெரிந்து கொள்ளலாம்.

அதில் சில துண்டங்கள் எடுத்துக்காட்டுக்கு இதோ: அ) `யோசித்துப் பார்த்தால் நம் தேசத்திலும்கூட பழைய வர்ண தருமங்களில் பிடிப்புக் குறைந்து போய், எல்லாம் ஒன்றாகிவிட வேண்டும் என்ற அபிப்பிராயம் வந்த பிற் பாடுதான் இப்படி மத உணர்ச்சி குன்றி, நாஸ்திகம் அதிகமாகியிருக்கிறது என்று தெரிகிறது; சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிகிறது (பக்கம் - 162)
குறிப்பு: எல்லாம் ஒன்றாகி விட வேண்டும் அதாவது சமத்துவம் வேண்டும் என்பது சங்கராச்சாரியார் பார்வையில் நாத்திகமாகி விட்டது.

எல்லாம் ஒன்றாக ஆகி விடக் கூடாது - ஏற்றத் தாழ்வு இருந்தே தீர வேண்டும் என்பது அவர் பார்வையில் ஆஸ்திகமாக இருக்கிறது என்பதை மனதில் குறித்து வைத்துக் கொள்க.

(ஆ) தற்போது வர்ண தர்மத்தை ஒழித்துக் கட்டிவிட வேண்டுமென்பவர்கள் எத னால் இப்படிச் சொல் கிறார்கள் என்பதை முதலில் பார்க்கலாம். அவர்களுக்கு வர்ண தர்மத்தில் ரொம்பவும் ஏற்றத் தாழ்வு இருப்பது போலத் தெரிகிறது. இப்படி இருக்கக் கூடாது; எல்லா ரையும் ஒரே மாதிரி ஆக்கி, உயர்த்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

ஆனால், இது காரிய சாத்தியம் தானா? இதைத் தெரிந்து கொள்வதற்கு ஜாதி முறையில்லாத மற்ற தேசங் களைப் பார்த்தாலே போதும். எல்லாரும் சமமாகி விடுவது ஒரு நாளும் நடக்காத காரியம் என்பதற்கு அந்தத் தேசங்கள் எல்லாம் பிரத்தியக்ஷ உதா ரணங்களாக இருக்கின்றன. (பக்கம் 172-173)

குறிப்பு: இதன் மூலம் என்ன கூறவருகிறார் `ஜெகத்குரு சங்கராச்சாரியார்? ஏற்றத் தாழ்வு இருக்கத்தான் செய்யும் அதனை மாற்றுவது காரிய சாத்தியம் இல்லை என்று அடித்துக் கூறுகிறார்.
(இ) பழைய வர்ணதர்மம் நடைமுறையில் இருந்தபோது இப்படிப் புரட்சியில்லாமல் அதாவது, ஜனங்களும் அதிருப்தியில்லாமல் நாகரிகம் உயர்ந்து உயர்ந்து வளர்ந்து வந்தது ஒரு பக்கம் இருக் கட்டும். பழைய தொழில் பங்கீட்டைத் தகர்த்துக் கொண்டு (Break) புதிதாக மற்ற தேசங்களின் வழியில் நாமும் `முன்னேற்றம், `சமத் துவம் என்று எதையோ நினைத்துக் கொண்டு இப் போது புது முறையில் போக ஆரம்பித்தபின் எப்படியாக யிருக்கிறோம் என்பதையும் பார்த்தால், நம் தேசம் இப் போது எப்படியிருக்கிறது? பிரத்யட்சமாகவே பார்க் கிறோம்; ஒழுங்கீனம், பொய் புரட்டு, லஞ்சம், விபசாரம் எல்லாம் தலை துளிர்த்து விட்டன. தேசத்தில் எங்கே பார்ததாலும் கிளர்ச்சி, ஸ்டி ரைக், டெமான்ஸ்ட்ரேஷன், ஹர்த்தால், போலீஸ் தடியடி கர்ஃப்யூ (ஊரடங்கு) இது களைத்தான் பார்க்கிறோம். ஜனங்களுக்குத் திருப்தியே இல்லை என்று சர்வ நிச்சய மாகத் தெரிகிறது. (பக்கம் 183)

குறிப்பு: பிறப்பின் அடிப்படையில் உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்கிற அமைப்பு முறை இருந்தால் அவரவர்களும் அவரவர்தம் ஜாதித் தொழிலைச் செய்து கொண்டு கிடந்தால் நாட்டில் அமைதி சுபீட்சம் இருக்கும். அதற்கு மாறாக அதனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யக் கூடாது அப்படியெல்லாம் கிளர்ச்சி செய்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடும்.

இவர் சொல்கிறபடி ஜெயேந்திர சரஸ்வதி நடந்து கொள்ளாததால்தான் கொலைக் குற்றம், விபச்சாரக் குற்றம் இவைகளில் சிக்கியுள்ளாரா என்று தெரியவில்லை.


கடைசிக் கடைசியாக இந்த ஜாதி தர்மத்தைக் காப் பாற்றத் தான் நான் இருக் கிறேன்; அதனைக் காப்பாற்ற முடியாவிட்டால் மடம் இருந்து என்ன பயன்? நான் இருந்து தான் என்ன பயன்? என்று புலம்புகிறார் (பக்கம் 258-259)

திருவாளர் ஜஸ்வந்த்சிங் சொல்லும் சனாதன தர்மம் என்றால் என்ன என்பது இப் பொழுது எளிமையாகவே புரிந்திருக்க வேண்டும்.

சனாதனம் என்றால் என்ன என்று இதற்கு மேலும் புரிய வில்லையென்றால், இதைவிட எளிமையாகப் புரிந்து கொள்ளக் கூடிய ஆதாரம் ஒன்று கிடைத்திருக் கிறது.
அதிகாரப் பூர்வமற்ற முறையில் ஆர்.எஸ்.எஸ். நாளேடாக நடந்து கொண்டி ருக்கும் `தினமணி ஏட்டில் `அன்புள்ள ஆசிரியருக்கு பகுதியில் ஒரு கடிதம் வெளி யாகியுள்ளது.
அதன் தலைப்பு: `கலெக்டர் ஆஷை கொலை செய்யக் காரணம் என்பதாகும். ``வாஞ் சிநாதன், கலெக்டர் ஆஷை கொலை செய்ததற்கான கார ணம் மிகச் சரியாகச் சொல் லப்படவில்லை என்றே கருதுகிறேன்.

``ஆங்கிலச் சத்ருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத `சனாதன தருமத்தை காலால் மிதித்துத் துவம்சம் செய்து வரு கிறார்கள். ஒவ்வோர் இந்தி யனும் தற்காலத்தில் தேச சத்ரு வாகிய ஆங்கிலேயரை துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத் தையும் நிலைநாட்ட முயற் சித்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜுனன் முதலியவர்கள் இருந்து வந்த தேசத்தில் கேவலம் கோமா மிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ்பஞ்ச மனை முடி சூட்ட உத்தேசம் கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் கால் வைத்த உடனேயே அவனைக் கொல் லும் பொருட்டு, 3000 மத ராஸிகள் பிரத்தியக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையோனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ் தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை

- இப்படிக்கு ஆர். வாஞ்சி அய்யர். இக்கடிதம் வாஞ்சி நாதன் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்த போது அவருடைய சட்டைப் பையில் இருந்ததாக அறியப் படுகிறது.
- சுடர் தென்னரசு கரூர்
(`தினமணி 26.5.2008 பக்கம் 6)


சனாதன தர்மம் என்கிற வருணசிரமத்தை வெள்ளைக் காரன் அழித்து வருகிறானாம் - அதனால்தான் கலெக்டர் ஆஷை வாஞ்சிநாத அய்யர் சுட்டாராம்.
காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சே கூட, நீதிமன்றத்தில் கீதை யிலிருந்து சுலோகத்தைச் சொல்லித்தான் காந்தியார் படுகொலை செய்யப்பட் டதற்கு நியாயம் கற்பித்துக் கொண்டான்.

நான்கு வர்ணத்தையும் நானேதான் படைத்தேன். அப்படிப் படைத்தவனாகிய நானே நினைத்தாலும் அதனை மாற்றியமைக்க முடியாது என்று கிருஷ்ணன் கூறுவ தாகக் கீதை கூறுகிறது. (அத்தியாயம் 4 சுலோகம் - 13)

இந்தப் பாசிசம் பிடித்த, பாழ்ச் சிந்தனை கொண்ட, சீழ்பிடித்த பார்ப்பனியத்தின் சனாதன தர்மத்தில், பிறப்பை வைத்து ஒருவனை நிச்சயிக் கின்ற கேவலமான சனாதன தர்மத்தில் நம்பிக்கை உண்டு என்று வெளிப்படையாகக் கூறுகிற ஒரு கட்சி இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் ஆட் சிப் பீடம் ஏற அனுமதிக்கலாமா?

அப்படி அனுமதித்தால் தமிழக முதல் அமைச்சர் கலைஞர் அவர்களும், தமிழர் தலைவர் வீரமணி அவர்களும் எச்சரிக்கையுடன் சுட்டிக் காட்டியதுபோல நாடு கொடுங்காடாக சுடுகாடாக ஆகி விடாதா?

21-ஆம் நூற்றாண்டுக்கு அதைவிட மானங்கெட்ட - வெட்கங்கெட்ட நிலைதான் உண்டா?
``2009 - மக்களவைத் தேர்தல் எந்த அச்சில் சுழலப் போகிறது? ராமராஜ்ஜியமா? பெரியார் ராமசாமி ராஜ் ஜியமா? என்ற கேள்வியில் இந்தியாவே சுழலப் போகி றது. ஆம்! நமக்கு, நம் கொள் கைக்கு, நமது இயக்கத்துக்கு முக்கியமான பங்கும் பணியும் இருக்கிறது - நிச்சயமாக இருக்கிறது. ராமன் வீழ்வான் - பெரியார் வெல்வார்!

---------- நன்றி: "விடுதலை" ஞாயிறுமலர் -07-06-2008

0 comments: