Search This Blog

5.6.08

கல்விபற்றி தந்தைபெரியார்





பணம் சம்பாதிக்கவும் வேலை பார்க்கவுமான கல்வி வேண் டாமா?

இப்போது கல்வி எதற் காகத் தேவை? மனிதன் மிருக மாக இல்லாமல், காட்டா னாக இல்லாமல் எடுத்த புத்தகம் படிப்பதற்கும், உலக விசயங்களைத் தெரிந்து கொள்ளவும் கல்வி வேண் டும். அதற்கு மேல் கல்வி வேண்டுமானால் வயிற்றுப் பிழைப்புக்கு உத்யோகம் பார்க்கவும், உடல் உழைப்பு இல்லாத வேலை செய்யத் தகுதி பெறவும் கல்வி பெற வேண்டும்.

நம் சமுதாயத்திலுள்ள இழிவுகள் ஒழிய வேண்டியது தானே முதன்மையானது?

படிப்பு அதிகமானால் இழிநிலை தானாவே மாறும். உயர்வு தாழ்வு தானே அகன்று விடும். அனைவரும் சமம் என்ற வாய்ப்பு தானா கவே ஏற்பட்டுவிடுமே.

பொதுவாக நாட்டு முன்னேற்றத்துக்கு கல்வி பயன் படுமா?

ஒரு நாட்டு மக்கள் முன் னேற்றம் அடைய வேண்டு மானாலும், அவர்கள் நாக ரிகம் பெற்று உயர்ந்த நல் வாழ்க்கை நடத்த வேண்டுமா னாலும், அரசியல், பொரு ளியல், தொழிலியல் ஆகிய துறைகளில் தகுந்த ஞானம் பெற வேண்டுமானாலும் அந்நாட்டு மக்களுக்கு முத லில் கல்வி ஏற்பட வேண் டியதே முக்கியமாகும்.

தாழ்த்தப்பட்டுக் கிடக்கும் நம் மக்களுக்குத் தாங்கள் கூறும் அறிவுரையைத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

பிள்ளைகளை எல்லாம் தவறாமல் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைப்பதுதான் உங்கள் நிலையை மாற்றிக் கொள்ளும் ஒரே வழி. கல்வியறிவும் சுயமரியாதை எண்ணமும் பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக் கும் உங்களை உயர்த்தும்.

நம் மக்கள் மான உணர்ச்சி குன்றிக் காணப்படுகிறார்கள் போல் தோன்றுகிறதே?

இன்று மக்களுக்கு உலக விசய ஞானம் இல்லை. படிப்புக் கிடைத்துவிட்டால் இவை நன்கு வந்து விட நல்ல வாய்ப்பு உண்டு. இந்த வாய்ப்பை நாம் கெடுத்துக் கொள்ளக் கூடாது. நம் மக்களுக்குப் படிப்பு இல்லை; மான உணர்ச்சி இல்லை; படித்து அறிவு வந்துவிட்டால் மான உணர்ச்சி தானாக வந்துவிடும்.

நம் நாட்டில் உலக அறிவு பெற்றுள்ள பெருமக்கள் நிலை என்ன?

உலகப் போக்கை நாம் தெரிய நேர்ந்தாலும், பார்க்க நேர்ந்தாலும் அதன் அனு பவத்தின் மேன்மையை அடையவும், பாராட்டிப் பேசவும் தயாராக இருக் கிறோமே அல்லாமல் அதை நமது வாழ்க்கையுடன், நமது நாட்டு எண்ணங்களுடன் பொருத்திப் பார்ப்பதற்குச் சிறிதும் எண்ணுவதே கிடையாது.

மற்றவர் செய்யக் கூசும் இழி தொழில்களைச் செய்து கொண்டுள்ள மக்கள் முன்னேற வழியுண்டா?

நாட்டில் ஒருவன் சாதியின் பேரால் எதற்காக இழி மகனாகவும், இழி தொழில் செய்பவனாகவும் இருக்க வேண்டும்? நாட்டில் எல்லா மக்களுக்கும் கல்வி அளித்து விட்டால் இழி தொழிலுக்கென்று ஒரு சாதி இருக்க முடியுமா? படிப் பின்மையினால்தானே இவர்கள் இழி தொழிலைச் செய்ய வேண்டியிருக்கிறது. அதனால்தானே இழி மக்க ளாகவும் கருதப்படுகின்றனர்.

கல்வி பெற்றால் இழிவு நீங்கிவிடுமா?

நாட்டில் ஒருவன் எத னால் இழி மகனாகவும், இழி தொழில் செய்பவனாகவும் இருக்கின்றான். கல்வி இன் மையின் காரணமாகத் தானே? நாட்டில் எல்லா மக்களுக்கும் கல்வி அளித்து விட்டால் சாதி தானாகவே ஒழிந்தது போலாகும்.

கல்வியின்மைதான் இழிவுகளுக்கெல்லாம் காரணம் என்கிறீர்களா?

மனிதன் வாழ்க்கையில் முன்னேற்றம், அந்தஸ்து எல்லாம் படிப்பைப் பொறுத்துத்தானே உள்ளது? ஒருவன் ஏன் பங்கா இழுப்பவனாக, பியூனாக, கான்ஸ்டபிளாக இருக்கின்றான் என்றால் படிப்பில்லாததினால்தானே? மற்றபடி வீதி கூட்டுபவனாக சலதாரைகள் கழுவுபவனாக, வெளுப்பவனாக, சிரைப்ப வனாக ஏன் உள்ளான்? படிப்பில்லாமையில்தானே?

புரியவில்லையே அய்யா!

இதைச் சிந்திக்க வேண்டும். இந்த நிர்பந்தம் எப்படி வந்தது? படிக்காததால் தானே! பார்ப்பான் ஏன் இந்த வேலை செய்வதில்லை? அவன் படித்தவன் - நீங்கள் நினையுங்கள். கக்கூசு எடுப் பவன் மகள் பத்தாவது படித்துவிட்டால் கக்கூசு எடுக்குமா? ஒட்டனின் பெண் பத்தாவது படித்தால் கூடை எடுத்து வருமா? சிந்திக்க வேண்டும்.

தாங்கள் இது பற்றி ஒன்றும் செய்ய முடியாதா?

நாட்டிலே 100 க்கு 90 பேர் தற்குறிகளாக 1000 ஆண்டுகளாய் இருந்து வந்த நிலையையும் ஒரே சாதி யாரே படித்தவர்களாக, பதவியாளராக இருந்த நிலை யையும் மாற்ற எவ்வளவோ முயற்சியின் பயனாய் ஒரு சிறிது மாறுதலை ஏற்படுத்தினாலும் கூட அதையும் பாழாக்க முயற்சிக்கின்றனரே பார்ப்பனர்.

பார்ப்பனர்களுக்குக் கல்விக் கூடங்களில் இடம் தரக்கூடாது என்று தாங்கள் கூறுவதாகக் கூறப்படுகிறதே?பிற்பட்டவர்களுக்குக் கல்விச் சலுகை அளிப்பது பற்றி பார்ப்பனர்கள் கூப்பாடு போடுகிறார்கள். சோறு இல்லாதவனுக்கு சோறும், உடை இல்லாதவனுக்கு உடையும், வீடு இல்லாத வனுக்கு வீடும் கொடுக்கப்பட வேண்டியது எவ்வளவு நியாயமோ அது போல கல்வி இல்லாதவனுக்குத்தான் கல்வி கொடுக்க வேண்டும். கற்ற கூட்டத்துக்கே கொடுக்க வேண்டும்; படிக்காத கூட்டத்துக்குக் கொடுக்கக் கூடாது என்று கூறுவது என்ன நியாயம்?

பார்ப்பனருக்குக் கல்வி தரக்கூடாது என்பது நியாயமா?

படிப்பை எடுத்துக் கொண்டால் பார்ப்பான் விட்டுப் பூனைக்குட்டி கூடப் படித்திருக்கிறதே! அதே நேரத்தில் மற்றவர்கள் எவ்வளவு படித்திருக்கின்றார்கள் என்பதைப் பாருங்கள். இதைத்தான் நாம் இன்று சிந்திக்க வேண்டும்.

சாதி ஒழிப்பை முக்கிய மாகக் கருதும் தாங்கள் இதிலெல்லாம் தலையிட வேண்டுமா?

உயர்சாதியென்று கூறிக் கொள்ளும் பார்ப்பனர்கள் 100க்கு 100 படித்தவர்களாகவும், கீழ்ச்சாதியென்று அவர் களால் அழுத்தப்பட்ட நம்ம வர்கள் 100க்கு 80 பேர்கள் படிக்காதவர்களாகவும் இருக் கையில் எப்படிச் சாதியை ஒழிக்க முடியும்? இழிவை உணரக் கூடிய அறிவு கல்வி யினால் தானே வரவேண்டும்?

கடவுள்தன்மை வாய்ந்தவர் என்றும் மகான் என்றும் சிலரை மக்கள் பாராட்டக் காரணம் யாது?
இந்தியாவின் கல்வியற்ற தன்மையும், பாமரத் தன்மை யும், மதக் கற்பனையும் எந்த மனிதனை வேண்டுமானா லும் கடவுள் தன்மையுடை யவனாகவும் மனித சக்திக்கு மீறின மகாத்மாவாகவும் ஆக் குவதற்கு மிக அனுகூல மாகவே இருந்து வருகின்றன.

இன்று கல்வி வளர்ச்சி ஓரளவேனும் பெருகுவதற்கு என்ன காரணம்?

முன்பெல்லாம் ஆட்சி பார்ப்பான் கையில் இருந்தது. பார்ப்பானே சகல ஆதிக்கத்திலும் இருந்தான். அப்பொழுது நம்மவர்கள் கல்வி கற்பது மிகவும் அரிதாயிருந்தது. இப்பொழுது ஆட்சி நம் மக்கள் கைக்குள் வந்துள்ளது. மக்களின் படிப் பறிவு வளரவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் கையில் உள்ளது. இதன் காரணமாகவே கல்வி மளமள என்று வளருகிறது.

பிறநாட்டு நிலைகளுடன் நம் நாட்டு நிலையை ஒப்பிட்டுப் பார்ப்பது தேவையல்லவா?
பேனா ஒரு சமூகத்தின் கையில் - மண்வெட்டி, கோடெறி, சம்மட்டி, ஏர் மற்றொரு சமூகத்தின் கையில் என்றால் யார் இதற்கு சம்மதிக்க முடியும்? நம் நாட்டில் பார்ப்பனச் சமுதா யத்திற்கும் நம் சமுதாயத்திற் கும் இப்படித்தானே வேற் றுமை இருந்து வருகிறது? வேறெந்த நாட்டிலாவது இப்படி உண்டா? மற்ற நாட்டிலெல்லாம் எல்லோரும் தானே எல்லாத் தொழில் களையும் வேற்றுமையின்றிச் செய்து வருகிறார்கள். நம் சமுதாயம் பட்டினி; நம் சமுதாயத்திற்குப் படிப் பில்லை; இதுதான் கடவுள் கொடுத்த வரம் என்றால் யார் ஏற்றுக் கொள்வார்கள்? யார் பொறுத்துக் கொள்வார்கள்?

படிப்பில்லாவிட்டால் மனித சமுதாயம் முன்னேறவே முடியா தென்பதுதங்கள் எண்ணமா?

வித்து மட்டும் நல்ல வித்தாக இருந்தால் போதாது. அந்த வித்தைப் பயிரிடும் நிலமும் நன் முறையில் பண்படுத்தப்பட்டு உரமூட்டப்பட்டு இருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல பலன் கிடைக்கும். வித்து நல்லதாக இருந்து பூமி உரமற்ற தானால் பலன் கிடைக்காது. அதைப் போலவே மனித சமுதாயம் நன்முறையில் வளர ஆணும் பெண்ணும் அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

(தொகுத்து பதிப்பித்தவர் : பேராசிரியர் மா. நன்னன்)

0 comments: