Search This Blog

2.6.08

கலைஞர் ஆட்சியில் -தந்தை பெரியார் அவர்களுக்கு மட்டுமே!






தமிழக சட்டமன்ற மேலவைக் கூட்டுக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து கவர்னர் கே.கே. ஷா ஆற்றிய தொடக்க உரை முழுக்க முழுக்க தந்தை பெரியார் மறைவு குறித்தும், அவரது சிறப்புக் குறித்ததுமாகவுமே அமைந்திருந்தது.

(17.1.1974)

சட்டமன்றப் பதவிகளுக்கு போகாத எவருக்கும் இத்தகைய மரியாதை காட்டுவது சட்டமன்ற வரலாற்றிலேயே இதுதான் முதல் நிகழ்ச்சி.
தமிழக சட்டமன்றத்தில் தந்தை பெரியார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒருமன தாகத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

(18.1.1974)

அன்று காலை சட்ட மன்றம் கூடியதும் சபை முன்னவரும் கல்வி அமைச்சருமான நாவலர் தந்தை பெரியார் மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். பின்னர் அனைத் துக் கட்சித் தோழர்களும் தந்தை பெரியார் மறைவு குறித்து வருத்தம் தெரிவித்தும் அவரது சிறப்புகளுக்கு புகழாரம் சூட்டியும் உரை யாற்றினார்கள்.

இறுதியில் முதல்வர் கலைஞர் உரை யாற்றுகையில் தந்தை பெரியார் வலியுறுத்தி வந்த கொள்கையான அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வழி வகுக்க வேண்டும் என்பதை தமிழக அரசு சட்டமாக நிறைவேற்றியதையும் அதை செயல்படுத்த விடாமல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு தடுத்துவிட்டதையும் சுட்டிக் காட்டி தந்தைக்கு மரியாதை, தெரிவிக்கும் வகையிலாவது அச்சட்டத்தை செயல்படுத்து வதற்கான புதிய அரசியல் சட்டத் திருத்தம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டும் என்று டில்லிக்கு கோரிக்கை விடுத்தார். பின்னர் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப் பட்டு சபை மறுநாள் வரை ஒத்தி வைக்கப்பட்டது.
அரசு பொறுப்போ, பத வியோ வகிக்காத ஒரு தலைவர் மறைந்து விட்டால் சபை அனுதாபம் தெரிவித்துவிட்டு தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்துவதுதான் இதுவரை தமிழக சட்டமன்ற வரலாற்றில் இருந்து வந்த நடைமுறை. ஆனால் அரசு பொறுப்பில் எந்தப் பதவியும் வகிக்காத ஒரு தலைவரின் தொண்டைப் பாராட்டி சபையையே ஒரு நாள் முழுவதும் ஒத்தி வைத்தது காந்திக்குப் பிறகு இதுதான் முதல் முறை.


இதேபோல் இரங்கல் தீர் மானம் அன்று மேலவை யிலும் ஒரு மனதாக நிறை வேறியது.

0 comments: