Search This Blog

2.6.08

கலைஞரின் உழைப்புப்பற்றி அண்ணா






எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாலே எளியோருக்காக நடத்தப்படும் இயக்கம் - எளிமையிலேயே இருக்க வேண்டும் என்று யாரும் கருதக் கூடாது. அது நோத்தியான நிலை. அதிலே ஈடுபட்ட ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையிலே அடைகிற நேர்த்தியான நிலை மட்டுமல்ல. அவர்களின் கூட்டு முயற்சியாலே கழகம் அடையும் நேர்த்தியான நிலை மட்டுமல்ல - அதன் மூலம் நாடு அடையும் நேர்த்தியான நிலைதான் - நிச்சயமாக எளிய குடும்பத்திலே பிறந்தவர்கள் - எளியோர்களுக்காக நடத்தப்படும் ஒரு இயக்கம் - எளியோர்களாக இருந்தவர்களை நேர்த்தியான நிலைக்குக் கொண்டு வந்தது என்று வரலாற்றிலே பொறிக்கப்படத்தக்க ஒரு சாதனை நமக்குக் கிடைக்க வேண்டும். அப்படிக் கிடைக்க வேண்டுமென்றால் - கருணாநிதியைப் போல் இந்தத் திறமைகளைப் பெற வேண்டும் என்பது போல் இந்தத் திறமைகளை எப்படிப் பெற்றார் என்பதைப் பற்றியும் நாம் ஆராய வேண்டும். ஒரு நாளைக்குக் கருணாநிதி எத்தனை மணி நேரம் தூங்குகிறார் என்பதை யாராவது அவருக்குத் தெரியாமல் பார்த்தால்தான் இந்தத் திறமை பெற்றதன் அடிப்படை உழைப்பு என்பதை உணர்வீர்கள்.

உழைக்காமல் இந்தத் திறமை வந்து விடவில்லை. உழைக்காமல் ஒரு திறமை வராது. சில பேருக்கு வரலாம். சாதுக்களுக்கும் சன்னியாசிகளுக்கும். அதுகூடச் சில வருடங்களுக்குப் பிறகு நிலைப்பதில்லை என்ற அந்த வட்டாரத்தில் உள்ளவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். நம்மைப் போன்ற சாமான்ய மக்கள் உழைப்பின் மூலம்தான் அந்தத் திறமையைப் பெற முடியும்.

------------ கலைஞரின் 46-ஆம் ஆண்டு பிறந்த நாள் `முரசொலி’ மலரிலிருந்து

0 comments: