Search This Blog

7.6.08

'சோ'வின் பூணூல் பாசம்



கேள்வி: மத்தியில் இதுவரை ஆண்ட அரசுகளில், முதலிடம் எதற்குக் கொடுக்கலாம்? கடைசி இடம் எந்த அரசுக்குக் கொடுக்கலாம்? பதில்: 1977-79 வரை ஆண்ட மொரார்ஜி தேசாயின் ஜனதா அரசு - முதலிடம். வி.பி. சிங்கின் தேசிய முன்னணி அரசு கடைசியிடம்.
(`துக்ளக் 4.6.2008 பக்கம் 26)

திருவாளர் `சோ ராமசாமி அய்யர் வேறு எப்படித்தான் எழுதுவார்? மொரார்ஜி தேசாய் முதுகில் பூணூல் தொங்குகிறது; வி.பி. சிங் அப்படி அல்லவே? அதுவும் மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒன்றான பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு அளிக்க ஆணை பிறப்பித்தவராயிற்றே!

அத்தகைய ஆணையைப் பிறப்பித்த நேரத்தில் - மறக்காமல் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா ஆகிய தலைவர்களின் கனவு நனவாகிறது என்று மறக்காமல் குறிப்பிட்டுப் பிரகடனப்படுத்தியவராயிற்றே!

அதற்காக அவரது ஆட்சியை பா.ஜ.க., கவிழ்த்த போது - சமூக நீதிக்காக நூறு பிரதமர் நாற்காலிகளை இழக்கத் தயார் என்று சங்கநாதம் செய்தவராயிற்றே - பொறுக்குமா பூணூல் கூட்டத்துக்கு?

சரி, மொரார்ஜி தேசாயின் ஜனதா அரசைப் புகழ்ந்து தள்ளுகிறாரே திருவாளர் சோ - ஜனசங்கத்தைக் கலைத்து விட்டு ஜனதாவுடன் கரைந்து போனதாகக் கூறிய ஒரு கூட்டம் மீண்டும் தம் வேடத்தைக் கலைத்து விட்டு வெளியேறி பாரதிய ஜனதா கண்டதே - அது மொரார்ஜி தேசாய் செய்த தப்பா - வாஜ்பேயி - அத்வானி கம்பெனி செய்த தப்பா - அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசைப் பாராட்டுகிறாரோ திருவாளர் சோ - ஏன் இந்த இடத்தில் நழுவல்?

-----------நன்றி: "விடுதலை" ஞாயிறுமலர் -07-06-2008

0 comments: