சீறி விழுகிறார்கள் சில அரசியல்வாதிகள்! ஆத்திரப்படுகிறார்கள் சில ஆத்திகவாதிகள்! பாய்ந்து விழுகின்றனர் பா.ஜ.க., சங்பரிவார்க் கூட்டத்தினர்!
அரசியல் கட்சிகளின் அந்த வரிசையில் கம்யூனிஸ்டுகளும் இருக்கிறார்களாம்.
புதிராக இருக்கிறதா? ஆந்திர மாநிலம் திருப்பதியில் தான் இந்தக் களேபரம்! முண்டாசு கட்டி முண்டா தட்டி எழுந்திருக்கின்றனர்.
எதற்கு? அப்படி என்ன நடந்து விட்டது?
ஆந்திர மாநில எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி கூறிய ஓர் உண்மைத் தகவலுக்காகத்தான் இத்தனைக் கூத்துகளும்!
அப்படி என்னதான் அவர் கூறிவிட்டார்? அம்மாநிலத்தில் எய்ட்ஸ் தடுப்பு அதிகாரியான ஆர்.வி. சந்திரவதனன் திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசினார்.
`திருமலையில் 20 முதல் 25 செக்ஸ் மையங்கள் இயங்கி வருகின்றன. இதில் 400 விபசார அழகிகள் உள்ளனர். இங்கு எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த மே மாதம் திருப்பதியில் 7604 ஆண்களிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களில் 268 பேருக்கு எச்.அய்.வி., கிருமி தொற்றியிருப்பது தெரிய வந்துள்ளது என்று செய்தி வெளியிட்ட தினத்தந்தி (சென்னை பதிப்பு 21.6.2008 பக்கம் 17) மேலும் கூறுகிறது.
திருப்பதி நகரில் மட்டும் 3500 அழகிகள் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக திருப்பதிக்கும், திருமலைக்கும் வரும் பக்தர்களிடம் எய்ட்ஸ் நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக தமிழ்நாடு, கருநாடக மாநில எல்லைப் பகுதிகளில் இடம் பெயர்ந்து வேலை பார்க்கும் கட்டடத் தொழிலாளர்கள்தான் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இன்னொரு தகவலும் வெளியாகியிருக்கிறது.
எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி வெளியிட்ட தகவலும், அது தொடர்பான புள்ளி விவரங்களும் ஆந்திர மாநில டி.வி. சேனல்களில் நேற்று ஒளிபரப்பானது. சில சேனல்கள் கூடுதல் தகவல்களைச் சேகரித்து வெளியிட்டன. இதனால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர் என்றும் இதற்கிடையே ஆந்திர மாநில எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி சந்திரவதனனுக்கு ஆந்திர மாநில பாரதீய ஜனதா, தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன என்ற தகவல்களை விலாவாரியாக தினத்தந்தி வெளியிட்டுள்ளது.
இதனைப் படித்தால் அழுவதா, சிரிப்பதா என்று தெரிய வில்லை. எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி தன் கடமையைத் தான் செய்துள்ளார் அவர் ஒன்றும் இந்துமத விரோதியும் அல்ல.
ஓர் உண்மையை சொல்லியதற்காக அவரைப் பார்த்து உறுமுவதில் அர்த்தம் இருக்க முடியுமா? தம் கடமையை ஒழுங்காகச் செய்த ஒரு உயர் அதிகாரிமீது பாய்ந்து பிராண் டுவதில் பக்தியிருக்கலாமே தவிர - பகுத்தறிவு இல்லை.
பொதுவாக கோயில் நகரங்களில் பால்வினை நோய்கள் அதிகம் என்பது இதற்கு முன்பும்கூட அதிகாரப் பூர்வமாக வந்துள்ள தகவல்கள்தாம்.
ருயீ வநஅயீடந வடிறளே ரனேநச ஹஐனுளு வாசநயவ என்ற தலைப்பில் `தி பயோனீர் ஏடு (21.7.1997) விரிவாக வெளியிட்டதுண்டு.
சுவிட்சர்லாந்து அரசின் சார்பாக அனுப்பப்பட்ட குழு ஒன்று உத்தரப்பிரதேச மாநி லத்தில் உள்ள `புனித கோயில் கள் என்று சொல்லப்பட்ட காசி, ரிஷிகேஷ், அலகாபாத் முதலிய இடங்களுக்குச் சென்று நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளன.
ரிஷிகேஷில் 28 பேர்களும் காசியில் 11 பேர்களும் அலகா பாத்தில் 19 பேர்களும், லக் னோவில் 16 பேர்களும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந் தனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
சென்னையில் 12,13.6.1976 ஆகிய இரு நாள்களிலும் பாலியல் நோய்பற்றி ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னைப் பொது மருத்துவ மனையின் பாலியல் நோய்த் துறை இயக்குநர் டாக்டர் சி.என். சவுமினி அக்கருத்தரங்கில் கூறிய தகவல் புண்ணி யதலங்களின் புண்பட்ட யோக்கியதையை வெளிப் படுத்தக் கூடியதாகும்.
`பக்தர்கள் அடிக்கடி கூடும் புண்ணிய ஸ்தலங்களில்தான் விபச்சாரம் பெரிய அளவில் நடக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள விபச்சாரம்மூலம் சராசரி மூன்று பேர்களுக்கு இந்த நோய் பரவுகிறது என்று சொன்னாரே சென்னை பொது மருத்துவமனையின் பிரபல மருத்துவரே கூறினாரே - நாக்கைப் பிடுங்கிக் கொள்வார்களா?
இந்து மதக் கடவுள்கள் செய்யாத லீலைகளா? கற்பழிப்பு என்பது கடவுள்களிடத்தில் சர்வ சாதாரணமாயிற்றே!
நாரதர் என்ற ஆண் கடவுளும், கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளும் புணர்ந்து 60 பிள்ளைகள் பெற்றனர் என்று கூறும் இந்து மதத்தைச் சேர்ந்த பக்தர்கள் - திருப் பதியில் விபச்சாரம் பெருகு வதாகப் புள்ளி விவரத்துடன் கூறிய தம் கடமையை ஒழுங்காகச் செய்த ஒரு அதிகாரியைக் காய்தலில் பொருளில்லை. காய்தல், உவத்தலின்றி உண்மையை உணர்ந்து, புண்ணியத்தலங்கள் என்றால் ஒழுக்கச் சீர்கேடுகளின் உறைவிடம் என்பதை உணர்ந்து திருந்துதல் - திருத்துதல் என்ற நிலைக்குத் தங்களைத் தயார் படுத்திக் கொள்வதுதான் புத்தி சாலித்தனம்.
ஒழுக்கத்துக்கும் பக்திக்கும் என்ன சம்பந்தம்?
`ஆனந்த விகடனே சாட்சி!
புண்ணியதலமான திருப்பதி திருமலையில் விபச்சாரம் என்று சொல்லலாமா? அபச்சாரம் அபச்சாரம் என்று புலம்பும் பக்தர்களே! `ஆனந்த விகடன் வெளியிட்ட இந்தச் செய்திக்கு என்ன பதில்
``சட்டென்று திடுக்கிட்டு ``திருப்பதியில் நடந்த கொடுமையை பார்த்தியா? என்றாள் சுமதி.
``திருப்பதியில் என்ன நடந்தது...?
``திருப்பதிக்குச் சாமி கும்பிட வர்ற காதல் ஜோடிகளை, அந்தத் தேவஸ்தான ஆட்கள் சிலர் பார்க்கிற பார்வையே சரியில்லையாம். சமீபத்தில் தேவஸ்தான விடுதியில் தங்கிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடியைச் சின்னாபின்னாப்படுத்தியிருக்காங்க ரெண்டு பேர்.. - சுமதி.
அடப்பாவமே...
`விடுதியில் இருந்த அந்த ஜோடியில் பையனை ஏதோ காரணம் சொல்லி அனுப்பிட்டு, அந்தப் பெண்ணைத் தூக்கிட்டுப் போய்க் கற்பழிச்சிருங்காங்க. பிறகு, அந்தப் பெண்ணையும் வெளியே துரத்திட்டாங்க. பையன் ஒரு பக்கமுமா பொண்ணு ஒரு பக்கமுமா ஒருத்தரை ஒருத்தர் திருப்பதி மலையில தேடி அலைஞ்சு, கடைசியா ஒண்ணு சேர்ந்து போலீஸில் புகார் கொடுத்திருக்காங்க. இப்போ அந்த ரெண்டு ஊழியர்களையும் கைது பண்ணியிருக்கு போலீஸ்... என்றாள் சுமதி
`அடக் கொடுமையே! புனிதமான மலையில் இப்படி சில புல்லுருவிகளா? காதல் ஜோடின்னா யாருக்கும் தெரியாம வந்திருப் பாங்க. விஷயத்தை வெளியே சொல்ல மாட்டாங்கன்னு நினைச் சுட்டாங்க போல...
(`ஆனந்தவிகடன் 25.2.2007)
----------------28-6-2008 "விடுதலை" ஞாயிறுமலரில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை
Search This Blog
28.6.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment