Search This Blog

29.2.08

ஜாதியை ஒழிக்க விரும்புவோர் ஜாதி மறுப்புத் திருமணம் செய்யவேண்டும்!

ஜாதியை ஒழிக்க விரும்புவோர் ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய வேண்டுமென இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன் பேசினார்.நாளை விடியும் சிற்றிதழின் 10 ஆண்டு பணிகள் - ஓர் மீள் பார்வை நிகழ்ச்சி அய்க்கப் அரங்கில் நடைபெற்றது. அப் போது பேசிய சி.மகேந்திரன்,

"அரசியல் இலக்கியப் பின்புலம் இல்லாமல் ஒரு இதழை நடத்து வது பெரும் சிரமம். ஆனால் இவ்விதழை தனி மனிதராக 10 ஆண்டுகள் நடத்தி வருவது சாதனைதான். தமிழ்ச் சமூகம் குறித்து எல்லோரும் கவலைப் படுகிறார்கள். ஆனால் உழைப்பு குறைவாக இருக்கிறது. பலரும் இயங்கிக் கொண்டே, இருக்கும் போதுதான், ஒரு சமூகம் விழிப்பு ணர்வுடன் இருக்கும்.

இந்தி எனும் ஒரு மொழியே கிடையாது. வட இந்தியாவின் பல்வேறு மொழிகளையும் சிதைத்து உருவான மொழி தான் இந்தி. சமஸ்கிருதத்தை எதிர்த்து சமரசம் செய்து கொள்ளாமல் நிமிர்ந்து நிற்கிற ஒரே மொழி தமிழ்தான்! மொழி குறித்து சில பொது வுடமைக்காரர்கள் கூட தவறாக எண்ணுகின்றனர். பொருளா தார வளர்ச்சிக்கு உழைப்பு எவ்வளவு முக்கியமோ, அது போல சமுதாய மேம்பாட்டிற்கு மொழி முக்கியம்.
தமிழர்களின் பண்டைக் கால அறிவு, ஆற்றல்கள் மிகவும் அற்புதமானவை. இன்றைக்கு இடையில் வந்த ஜாதியால் தமிழன் பிளவுபட்டு நிற்கின் றான். ஜாதி மறுப்புத் திருமணங் கள் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் ஜாதி ஒழியும். நான் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவன்.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்த தோழர்கள் தொடர்ந்து போராடத் தயங்குகின்றனர். அவர்களுக்கு ஒரு குழந்தை வருகிற போது மீண்டும் அவர்கள் இருவரில் எந்த ஜாதி பலமிக்கதோ அதில் ஒட்டிக் கொள்கிறார்கள். ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்தவர்கள் ஒருங்கிணைய வேண்டும். அவர் களுக்குள் உதவிக் கொள்கிற, உணர்வுகளைப் பாதுகாத்துக் கொள்கிற அமைப்புகள் வேண்டும்.

கருப்பையை வெட்டி எறியாமல் பெண் விடுதலை பெற முடியாது எனத் துணிச்ச லாகச் சொன்ன ஒரே தலைவர் உலகில் பெரியார் மட்டுமே! மொத்தத்தில் மனுதர்மத்தைத் தகர்க்காமல் சமூகம் மேன்மை யுற முடியாது" என சி.மகேந்திரன் பேசினார்.

------------------- "விடுதலை"-27.2.2008

28.2.08

ஓணம் பண்டிகையின் பின்னணி என்ன?

(ஓணம் பண்டிகை என்பதும், அதுபோன்ற தசாவதாரம் என்பதெல்லாம் ஆரியர்கள் திராவிடர்களை அழித்த சூழ்ச்சிதான் என்பதை எடுத்துக்காட்டும் கட்டுரை இது).
மலையாள நண்பர்கள் கொண்டாடும் ஓணம் திருவிழாபற்றி முத்தமிழ் அறிஞர் முதல்வர் கலைஞர் அவர்கள் ஒரு அருமையான கருத்தினை எடுத்து வைத்துள்ளார்: (முரசொலி, 5.2.2008).

கேரள நாட்டை மாவலி மன்னன் என்பவன் ஆண்டு வந்தான். மக்கள் தேவைகளை உணர்ந்து அவற்றை நிறைவு செய்து ஆட்சி புரிந்தான். அவன் ஆட்சியில் சாதனை இல்லாத நாள்களே இல்லை. அவனை அப்படியே விட்டுக் கொண்டு போனால் பிறகு அவனை வெல்ல முடியாமல் போய்விடும். தேவாதி தேவர்கள் ஆட்சிக்கு வர முடியாமல் ஆகிவிடும். அதனால் அவனை உடனடியாக ஒழிக்கவேண்டுமென்று திருமாலிடம் போய் முறையிட்டார்கள். உடனே திருமால், மாவலி மன்னனை தந்திரமாக மாளச் செய்துவிட்டார். அவன் சாகும்போது திருமாலிடம் ஒரு வரம் கேட்டான். நான் இறந்த நாளை ஓணம் பண்டிகையாகக் கொண்டாடவேண்டும். அன்று நான் கேரளாவுக்கு வந்து என் நாட்டு மக்களைச் சந்தித்து அவர்களுடன் குதூகலமாக இருக்கவேண்டும் என்று கேட்டான். திருமாலும் அதற்கு இணங்கி அவ்வாறே அருள் புரிந்தார். அந்த நாள்தான் மாவலி மன்னன் புகழ்பாடும் ஓணம் பண்டிகை - பூத உடலைப் புதைத்தார்கள் - மாவலியின் புகழ் உடலை அந்தப் புல்லர்களால் புதைக்க முடிந்ததா? முடியவில்லை என்பதால்தான் ஓணம் விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது என்று முதலமைச்சர் கலைஞர் எழுதியுள்ளார்.

இந்த மாவலிச் சக்ரவர்த்தி கதையை மராத்தியத்தில் 19 ஆம் நூற்றாண்டில் சமூகப் புரட்சியாளர் ஜோதிபாபூலே அவர்களால் அந்த நாட்டின் சுயமரியாதை இயக்கம்போல் - தோற்றுவிக்கப்பட்ட - சத்திய சோதக் சமாஜ் என்ற உண்மை விளக்க இயக்கம் என்ற சமுதாயப் புரட்சி இயக்கம் பிரச்சாரம் செய்தபோது,

ஆரியர்கள் சூத்திரர்களை எப்படி அழித்தனர் என்பதற்கான உருவகம்தான் 10 அவதார கதைகள்; அதில் வாமன அவதாரம் - மாவலி மன்னனின் மண்ணைப் பறித்த சூழ்ச்சி எப்படிப்பட்டது என்பதை பார்ப்பனரல்லாத மக்கள் சூத்திரர்கள், ஆதி சூத்திரர்கள் அறிய வேண்டும் என்று விளக்கி, மாவலி மன்னனை நினைத்து - மாவலிச் சக்ரவர்த்தியின் திருவிழாவை - பண்பாட்டுப் புரட்சி விழாவாக, பார்ப்பனரல்லாத சூத்திர, ஆதி சூத்திரர் எழுச்சி நாளாகக் கொண்டாடவேண்டும் என்று பரப்பி, மராத்திய மாநிலம் முழுவதிலும் அவரது காலத்திலும், அவருக்குப் பின்னும் கொண்டாடிடச் செய்தனர்.

தந்தை பெரியார் அவர்கள் எப்படி தீபாவளி போன்ற விழாக்கள் நம்மை - நரக அசுரனை, கிருஷ்ணன் (தேவர்களுக்குத் தலைவர்) சூழ்ச்சியால் கொன்றான் என்பதைப்போல மாவலி ராஜாவை வீழ்த்தியதை நினைவூட்டி மாவலி ராஜாவுக்கு விழா எடுப்போம் என்றார் - 1880 -களில் மராத்திய மாபெரும் சமூகப் புரட்சியாளர் ஜோதிபாபூலே.
அதுபோன்ற ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை மிகவும் துல்லியமாக விளக்கியுள்ள ஈரோட்டுக் குருகுலத்தின் இணையற்ற மாணவர் மானமிகு சுயமரியாதைக்காரரான நமது கலைஞர் அவர்கள்.

பத்து அவதாரங்கள் ஆரியர்களின் சூழ்ச்சியே!
10 அவதாரங்கள் என்பது, இதே ஆரியம் நம்மை அழித்த கதைதான் என்பதை தந்தை பெரியார் அவர்களும் விரிவாக விளக்கியிருக்கிறார்கள்.
(ஜோதி பாபூலே கருத்தினை அறியாமலேயே அது இவரது சிந்தனையில் உதித்ததாகும்).
ஜோதி பாபூலேபற்றிய ஆய்வு செய்ய வந்து, பிறகு மராத்தியத்திலேயே குடியேறிவிட்ட சமூக விஞ்ஞானியான திருமதி கெயில் ஆம்வெட் (Gail Omvedt) அம்மையார் இதுபற்றி,
The Culmination was Phule’s emphasis on Bali-Raja, King Bali. This was in a sense his reply to the elite’s use of Ram, Ganabathi, or Kali; it was a symbol that united Maharastrian peasant masses with the tales of Ariyan Invasiouns. (“Cultural Revolt in a Colonial Society” - The Non-Brahmin Movement in Western India; 1873 to 1930) என்ற நூலின் 114 ஆம் பக்கம். என்று எழுதியுள்ளார்!

இதன் தமிழாக்கம்: இதன் முடிவாக, மகாத்மா ஜோதிபா பூலே, மாவலி அரசரை உயர்த்திக் காட்டினார். சமுதாயத்தில் உயர்மட்டத்தினர், ராமன், கணபதி, காளி ஆகியோரைப் பற்றிப் பெரிதாகப் பேசினர்; அந்த அடையாளங்களைக் கொண்டு, ஆரியர் படையெடுப்பைப் பற்றிய கதைகளைக் கூறி உழவர்களை - பாமர மக்களை - திரட்டினார்கள். அதற்கு மாற்றாக, பூலே மாவலியின் அடையாளத்தை முன்வைத்தார். அதுபோல, முதல்வர் கலைஞர் அவர்கள் இந்த ஓணம் பண்டிகையையொட்டி, உருவகப்படுத்தி ஆரியம் தமிழராட்சிக்கு எதிராக புதிய மாவலிக் கதையை மீண்டும் நடத்திட திட்டமிடுகிறது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், தமிழன் ஏமாறமாட்டான்; தமிழர்கள் பலியாகமாட்டார்கள் என்பதைக் காட்டவேண்டிய மகத்தான கடமை உணர்வு நம் ஒவ்வொரு தமிழனின் உயிர்க் கடமையாகும்.
தமிழா விழி, எழு, உணர்வு கொள்!

---------தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள் 5.2.2008 "விடுதலை" நாளிதழில் எழுதிய கட்டுரை

27.2.08

பெரியார்,அம்பேத்கர் பார்வையில் "தேசியம்"

1. தோழர்களே! கடவுள் மதம் ஜாதீயம் தேசாபிமானம் என்பவை எல்லாம் மக்களுக்கு இயற்கையாக, தானாக ஏற்பட்ட உணர்ச்சிகள் அல்ல. சகல துறைகளிலும் மேல்படியிலுள்ளவர்கள் தங்கள் நிலை நிரந்தரமாயிருக்க ஏற்ப்படுத்திக் கொண்டிருக்கும் கட்டுப்பாடான ஸ்தாபனங்களின் மூலம் பாமர மக்களுக்குள் புகுத்தப்பட்ட உணர்ச்சிகளேயாகும். இந்தப்படி புகுத்தப்பட வேண்டிய அவசியமும் காரணமும் என்னவென்று பார்த்தால், அவை முற்றும் பொருளாதார உள் எண்ணத்தையும், அந்நியர் உழைப்பாலேயே வாழவேண்டும் என்கின்ற உள் எண்ணத்தையும் கொண்ட பேராசையும், சோம்பேறி வாழ்க்கைப் பிரியமுமேயாகும்.

தேசியம் என்பதும் முற் கூறியவற்றைப் போன்று ஒரு போலி உணர்ச்சிதான். ஏனென்றால், தேசிய உணர்ச்சி என்பதானது இன்று உலகப் பொதுமக்கள் அதாவது உலகில் எங்கும் பெரும்பான்மையான மக்கள் பாமரராயும், தொழில் இன்றியும், தொழில் செய்தாலும் ஜீவனத்திற்க்கும் வாழ்விற்க்கும் போதிய வசதிகள் இன்றியும் கஷ்டப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய நிலைமைக்குப் பரிகாரம் தேடுவதைத் தடைப்படுத்தவும் ஆங்காங்குள்ள செல்வந்தர்களாலும் அதிகாரப்பிரியர்களாலும் சோம்பேறி வாழக்கைச் சுபாவிகளாலும் கற்பிக்கப்பட்ட சூழ்ச்சியாகும். தேசியம் என்பதும் மனிதனுக்கு ஒரு மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தையாக ஆகிவிட்டது.

தோழர்களே! முடிவாக ஒன்று கூறுகிறேன். சரீரத்தினால் நெற்றி வியர்வை சொட்ட கஷ்டப்படும் மக்களைப் பாருங்கள். அவர்களுக்கு கல்வி, மனிதத்தன்மை மானம் இல்லாமல், செத்திருப்பதையும் பாருங்கள். வேலையில்லாமல் திண்டாடும் மக்களையும் அவர்களது பெண்டு பிள்ளைகளின் பட்டினியையும், கொடுமையையும் பாருங்கள். வீடுவாசல் இல்லாமல் மூட்டை முடிச்சுகளைத் தலையில் சுமந்து கொண்டு கஞ்சிக்கு ஊர் ஊராய்த் திரியும் கூலி மக்களைப் பாருங்கள். இவ்வித மக்கள் உலகில் எங்கெங்கு யார் யாரால் கஷ்டப்படுத்தப் படுகிறார்கள் என்பதையும் பாருங்கள் உயர்ந்தவன் - தாழ்ந்தவன், பார்ப்பான் - பறையன், முதலாளி - தொழிலாளி, குரு - சிஸ்யன், மகாத்மா - சாதாரண ஆத்மா, அரசன் - குடிகள், அதிகாரி - பிரஜை என்பவை முதலாகிய பாகுபாடுகளை இடித்துத் தள்ளித் தரைமட்டமாக்குங்கள்.அதன்மீது தேசம், மதம், ஜாதி என்கின்ற பாகுபாடு இல்லாததாகிய மனித சமூகம் சமஉரிமை -சமநிலை என்கிற கட்டடத்தைக் கட்டுங்கள். இதைச் செய்ய நீங்கள் உலகத்திலுள்ள கஷ்டப்படும் எல்லா மக்களுடனும் ஜாதி, மதம், தேசம் என்கிற வித்தியாசம் இல்லாமல் பிரிவினைக்கு ஆளாகாமல் ஒன்று சேருங்கள். அப்போது நீங்கள் கண்டிப்பாய் வெற்றி அடைவீர்கள்.

1932 இலங்கையில் தந்தை பெரியார் ஆற்றிய உரை


2. உழைக்கும் வர்க்கங்களை ஆட்கொண்டிருக்கும் மூன்றாவது நோய் ‘தேசியம்' என்ற முழக்கத்திற்கு அவர்கள் மிக எளிதில் மயங்கிவிடுவதாகும். தொழிலாளர் வர்க்கத்தினர் எல்லா வகைகளிலும் வறியர்களாக இருக்கின்றனர்; தங்களுடைய மிகக் குறைந்தபட்சத் தேவைகளையே நிறைவேற்றிக் கொள்ள இயலாதவர்களாக இருக்கின்றனர். அப்படி இருக்கும்போது, தேசியம் என்று கூறப்படும் லட்சியத்துக்காக தங்களிடமிருக்கும் எல்லாவற்றையும் பல நேரங்களில் தியாகம் செய்து விடுகின்றனர். தாங்கள் இவ்வளவு தியாகம் செய்யும் அந்தத் தேசியம் வெற்றி பெற்றுவிடும்போது, அது தங்களுக்கு சமூக சுதந்திரத்தையும், பொருளாதார சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துமா என்று அறிய அவர்கள் ஒருபோதும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அது மட்டுமல்ல, தேசியம் வெற்றிவாகை சூடி அதிலிருந்து உதயமாகும் ஒரு சுதந்திர அரசு, இவர்களது எண்ணற்றத் தியாகங்களால் கருவாகி உருவான அரசு, இவர்களது முதலாளிகளின் ஆதிக்கத்துக்கு உள்ளாகி, இவர்களுக்கே பகையானதாக மாறிவிடுவதைப் பல நேரங்களில் பார்த்திருக்கிறோம். தொழிலாளர்கள் தங்களை இலக்காக்கிக் கொள்ளும் மிக மிகக் கொடிய சுரண்டல் வகையைச் சேர்ந்ததாகும் இது.

-------பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அகில இந்தியத் தொழிற்சங்கத்தின் சார்பில், 1943 செப்டம்பர் 8 முதல் 17 வரை டில்லியில் நடைபெற்ற கூட்டத்தில், இறுதி நாள் ஆற்றிய உரையிலிருந்து

26.2.08

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏன்? அம்பேத்கர் விளக்கம்

அரசமைப்புச் சட்டத்தின் 15வது பிரிவில் புதிய இணைப்பு (திருத்தம்) தேவை என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த விரும்பத்தகாத சூழலுக்கு மூலகாரணம், நீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டு தீர்ப்புகள்தான். இந்தத் தீர்ப்பை வழங்கியது, சென்னை உயர்நீதிமன்றம்.

1. சென்னை (எதிர்) திருமதி செண்பகம் துரைராஜன் 2. வெங்கட்ராமன் (எதிர்) சென்னை அரசு. இந்த இருவரின் வழக்குகளால், அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்ற நிலை உருவாகியுள்ளது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசுப் பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்ற கருத்தை மய்யமாகக் கொண்டு நீதி மன்றம் தன்னுடைய தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன் விளைவாக, சாதி ரீதியான அரசாணை (Communal G.O.) உருவானது. இந்த அரசாணை செல்லாது என்று சட்ட வல்லுனர்களும், நமது மேதகு நாடாளுமன்ற அங்கத்தினர்களும் கூக்குரலிடுகின்றனர்.

அரசியல் அமைப்புச் சட்டம் 16(4) பிரிவு, மாநில அரசுகள் தங்கள் விருப்பப்படி அல்லது எழுந்துள்ள தேவைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் அதிகாரத்தை முழுவதுமாக வழங்குகிறது. இந்த 16(4) பிரிவு, அரசமைப்புச் சட்டத்தின் 29ம் பிரிவுடன் முரண்படுவதால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு தரக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது.

மேலும், ‘சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது கூடாது; அது முற்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களிடையே பாரபட்சத்தைத் தோற்றுவித்துவிடும்' என்று உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்துள்ளது. நான், உச்ச நீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகளையும் கூர்ந்து படித்தேன். இந்த இரண்டு தீர்ப்புகளும் மிகுந்த அதிருப்தியைத் தருகிறது.

இந்தத் தீர்ப்புகள், நமது அரசியல் சாசனத்தின் பிரிவுகளோடு ஒத்துப் போகவில்லை. இது, என்னுடைய வாதம். உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்புகளுக்காக நான் வருந்துகிறேன். (நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம். சபாநாயகர் இடைமறித்து, அம்பேத்கர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறார். ஆனால், அம்பேத்கர் அதைப் பொருட்படுத்தவில்லை)

அரசியல் சட்டப் பிரிவு 29(2)இல், ‘மட்டும்' என்ற வார்த்தையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் வழங்கப்பட்ட தீர்ப்பாகவே இவற்றை நான் கருதுகிறேன். மதம், இனம் அல்லது ஆண், பெண் பேதம் ஆகியவற்றை ‘மட்டும்' அடிப்படையாகக் கொள்ளக் கூடாது. இது 29(2)இன் பொருள். இங்கு "மட்டும்' என்ற வார்த்தை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவனிக்கவில்லை என்பது என்னுடைய வாதம்.

‘சாதியற்ற இந்துக்கள்' என்று இந்நாட்டில் எவரும் இல்லை. ஒவ்வொரு இந்துவுக்கும் சாதி உண்டு. பார்ப்பனர், மகராட்டா, குன்பி, கும்பார் அல்லது ஒரு தச்சன் இவர்களில் யாரும் சாதியை விட்டு வாழும் இந்துவாக இல்லை.

இந்த நாட்டில், பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்ட சாதியினராக இந்து மதத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்து மதத்தின் பன்னெடுங்கால கொடுமைக்கு ஓர் இடைக்காலத்தீர்வாக, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு மூலம் சில உரிமைகள் வழங்குவது மிகவும் அவசியமாகிறது. இதைக் கருத்தில் கொள்ளும் போது, நமது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓர் அதிருப்தியான தீர்ப்பாகும்.

நான், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்குக் கட்டுப்பட்டவனாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அந்தத் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை. இது, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ள சுயேச்சையான உரிமை. இதை விட்டுவிட நான் தயாராக இல்லை. இதுவே என்னுடைய அழுத்தமான முடிவாகும்.


மேலும், அரசமைப்புச் சட்டத்தின் 46வது பிரிவு, பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து வகையான நலன்களை உறுதிப்படுத்தவும் மேம்படுத்தவும் மாநில அரசுகளுக்கு போதிய அதிகாரத்தை நிர்ணயித்துள்ளது.

இந்த அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டிய தேவை, நாடாளுமன்றத்திற்கு எழுந்துள்ளது. நாடாளுமன்றம் 16(4) மற்றும் 29 ஆகிய பிரிவுகளை விரிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் பிரிவு 15 போதிய விளக்க இணைப்பு (சட்டத் திருத்தம்) சேர்க்கப்பட வேண்டும். இது, ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான உயர்வை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க உதவும்.
--------'பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 15 பக்கம் : 331

சுயமரியாதை இயக்கம் சாதித்தது என்ன?

85 ஆண்டுகளுக்குமுன்
சுயமரியாதையைப்பற்றிச் சொல்ல வந்த கலைஞர் அவர்கள் தாம் ஒரு மிக மிகப் பிற்படுத்தப்பட்ட இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்ததைச் சுட்டிக்காட்டி, அந்தக் கால கட்டத்தில் நாதசுர வித்வான் சிவக்கொழுந்து அவமதிக்கப்பட்டதை எடுத்துக்காட்டினார்.

1923-ஆம் ஆண்டில் சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்பற்றி முடிவெடுக்க தந்தை பெரியார், டாக்டர் வரதராசலு நாயுடு முதலியோர் கானாடு காத்தானில் சுயமரியாதை இயக்க வீரர் வை.சு. சண்முகம் இல்லத்தில் கூடியிருந்தனர்.

அன்று அந்தவூரில் ஒரு செட்டியார் வீட்டுத் திருமணம் - திருமண ஊர்வலத்தில் அந்தக் காலத்தில் பேர் பெற்ற நாதசுர வித்வானான சிவக்கொழுந்துவின் நாதசுர இசை இடம் பெற்றிருந்தது. பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் கே.வி. அழகிரிசாமியும் அப்பொழுது அங்கே வந்திருந்தார். அழகிரியோ பெரும் இசைப் பிரியர். திருமண ஊர்வலத்தில் நிகழ்ந்த நாதசுர இசையை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.

நாதசுரவித்வான் இடுப்பில் ஜரிகைக்கரை பட்டு வேட்டி கட்டிக் கொண்டு, வியர்வையைத் துடைப்பதற்காக தோளில் துண்டு ஒன்றைப் போட்டு இருந்தார். (நாதசுரம் வாசிப்பது என்பது எளிதானதல்ல - மூச்சை அடக்க வேண்டும் - அதனால்தான் பார்ப்பனர்கள் இந்தக் கலையின் பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை)

அந்த நேரத்தில் நாட்டுக் கோட்டை செட்டியார் வகுப்பைச் சேர்ந்த வாலிபன் ஒருவன் நாதசுர வித்வான் சிவக்கொழுந்து அவர்களின் எதிரே வந்து, `தோளில் போட்டிருக்கும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு வாசிக்க வேண்டும். மரியாதை இல்லாமல் துண்டைத் தோளில் போட்டுக் கொள்ளக் கூடாது! என்று ஆணவமாக அரற்றினார்.

நாதசுர மேதை சிவக்கொழுந்து அவர்களோ மிகவும் அடக்கமாக `அய்யா இது ஒன்றும் அங்கவஸ்திரம் அல்ல - நாதசுரம் வாசிக்கும் பொழுது அதிகமாக வியர்க்கும், அதைத் துடைத்துக் கொள்ளத்தான் துண்டைத் தோளில் போட்டுக் கொண்டுள்ளேன் என்று கூறியபிறகும் அந்த ஆசாமி விடுவதாகயில்லை.

அந்தக் கூட்டத்தில் இருந்த சுயமரியாதை வீரர் அழகிரி அவர்கள், `சிவக்கொழுந்து துண்டை எடுக்காதே! நீங்கள் தொடர்ந்து வாசியுங்கள்! என்று கம்பீரமாகக் குரல் கொடுத்தார்.
இந்தத் தகவலை வை.சு. வீட்டில் இருந்த தந்தை பெரியாரிடம் ஓடிப் போய்த் தெரிவித்தார் பட்டுக்கோட்டை அழகிரி.

தந்தை பெரியார் அவர்களும் அழகிரிக்குப் பச்சைக் கொடி காட்டினார். `விடாதே, துண்டை எடுக்காமல் வாசிக்கச் சொல்; கல்யாண வீட்டார் அனுமதிக்கா விட்டால், அவரை இங்கே அழைத்து வாருங்கள்; வாசிக்கச் சொல்லி அவருக்கு உள்ள பணத்தை நாம் கொடுத்து விடலாம்! என்றார். அஞ்சா நெஞ்சன் அழகிரிக்குக் கேட்க வா வேண்டும் - சிட்டாகப் பறந்து அந்த இடத்திற்குச் சென்று மீண்டும் ஓங்கித் தன்மானக் குரல் கொடுத்தார்.

திருமண வீட்டார், பெரியார் இருந்த இடத்திற்கே வந்து கெஞ்சினார்கள். ஜாதி. திமிரில் நீங்கள் நடந்துத் கொள்வதற்கெல் லாம் நாங்கள் பணிந்து போக வேண்டுமா? நாங்கள் சிவக் கொழுந்தை அழைத்துக் கொள்கிறோம். நாதசுரம் இல்லாமல் ஊர்வலத்தை நடத்திக் கொள்ளுங்கள் என்று கறாராகக் கூறி விட்டார் தந்தை பெரியார்.

மேள தாளம் இல்லாமல் கல்யாண ஊர்வலம் செல்லுவது கவுரவக் குறைவு என்று கருதிய திருமண வீட்டார், மனதைத் திடப்படுத்திக் கொண்டு, சிவக்கொழுந்து துண்டைத் தோளில் அணிந்து கொண்டுதான் நாதசுரம் வாசிப்பார். விருப்பம் உள்ளவர்கள் இருங்கள்! பிடிக்காதவர்கள் சென்று விடுங்கள் என்று கூறி விட்டனர்.

வித்துவான் சிவக்கொழுந்து துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தார்.
சுயமரியாதை இயக்கம் சாதித்தது என்ன?
சுயமரியாதை இயக்கம் நம் மக்களுக்கு எப்படியெல்லாம் சுயமரியாதையை மீட்டுத் தந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக, இன்றைக்கு 85 ஆண்டுகளுக்கு முன் நாட்டுக்கோட்டை செட்டியார் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வை எடுத்துக் காட்டினார் திராவிட இயக்கத்தின் இன்றைய மூத்த தலைவரான முதல்வர் கலைஞர் அவர்கள். நாதசுர சக்ரவர்த்தி என்று போற்றப்படும் திருவாவடு துறை ராஜரத்தினம் அவர்கள் கடைசி வரை `விடுதலையைப் படித்து வந்த சுயமரியாதைக்காரர் ஆவார்.
சுயமரியாதை இயக்கம் - திராவிட இயக்கம் என்ன செய்தது என்று நாக் கூசாமல் பேசும் சில மே(ப)தைகளும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்குச் சமர்ப்பணம் தான் கலைஞர் அவர்களின் இந்த எடுத்துக்காட்டு.


ராம ராஜ்ஜியமா? பெரியார் ராமசாமி ராஜ்ஜியமா?
இன்றைக்கு இந்து ராஜ்ஜியம் அமைக்கப் போகிறோம் - ராம ராஜ்ஜியம் அமைக்கப் போகிறோம் என்று கூறிக் கொண்டு புறப்பட்டு இருக்கும் ஒரு காவிக் கூட்டத்தின் தத்துவத்தை நிர்மூலமாக்க தந்தை பெரியார் அவர்களின் அந்தச் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவங்களும், கோட்பாடுகளும்தான் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல - இந்தியா முழுமைக்குமே தேவையாகும்.
ஆம், இன்று பிரச்சினையே அயோத்திராமன் ராஜ்ஜியமா - ஈரோடு பெரியார் ஈ.வெ.ராமசாமி ராஜ்ஜியமா என்பதுதானே!
மயிலாடுதுறையில் அண்ணா அவர்களின் உருவச் சிலையைத் திறந்து வைத்த (1969) முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள், பெரியார் தேவைப்படுகிறார் - என்று அழுத்தமாகச் சொன்னார்; என்றும் தேவைப்படுகிறார் என்பதை மானமிகு கலைஞர் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

----- தி.க.பொதுச்செயலாளர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதிய "திராவிட இயக்கத்தின் திருவிழா" கட்டுரையிலிருந்து ...விடுதலை 24-2-2008

25.2.08

இவர் தாம் பெரியார்

சிவந்தமேனி, தடித்த உடல், பெருத்த தொந்திம் நல்ல உயரம், வெளுத்த தலை மயிர், நரைத்த மீசை, நடுத்தரமான தாடி, திரண்டு நீண்ட மூக்கு, அகன்ற நெற்றி, உயர்ந்து மயிரடர்ந்த புருவங்கள், ஆழமான கண்கள், மெதுவான உதடுகள், செயற்கைப் பற்கள், ஒரு சாதாரண மூக்குக் கண்ணாடி. பெசண்ட் அம்மையாரின் தலைமயிர், பர்னாட்ஷாவின் தாடி, தாகூரை விட அழகான மூக்கும், இவர்கள் இருவரையும் விட அழகான உருண்டை முகம், ஒரு தனியான முக வெட்டு, என்னமோ ஒரு விதமான கவர்ச்சி. இடுப்பில் எப்போதும் ஒரு நான்கு முழத் துணி, காலில் செருப்பு. முக்கால் கையுடன் ஒரு மாதிரியான வெள்ளைச் சட்டை. அதில் வரிசையான நூல் பொத்தான்கள். பழங்காலத்து முழுக் "கோட்டு"க்கும் இக்காலத்து சட்டைக்கும் நடுவில் ஒரு நூதனமான உடுப்பு, வெளிப் புறத்தில் மூன்று பாக்கட்டுகள். உட்புறத்தில் (பணப்பை வைத்துக் கொள்வதற்காக) கட்டாயம் ஒரு பாக்கட். வெளிப்பைகளில் செய்தித்தாள்கள், சில கடிதங்கள், பொதுக்கூட்டங்களில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்கள், இரண்டொரு சிறு புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள், நாட்குறிப்பு, ஒரு சிறு கத்தி-ஆகிய சகல சாமான்களும் நிறைந்து எப்போதும் உப்பிக்கொண்டே இருக்கும். வெளிப்புறத்துக்கு மேல் ஒரு பவுண்டன் பேனா சொருகப்பட்டிருக்கும். உட்புறப் பையில் ஒரு மணிப்பர்ஸ். அதன் அறையொன்றில் ஒரு கடிகாரம். இவ்விதமான சட்டைக்கு மேல் போர்த்தியிருப்பது ஒரு ஐந்து முழப் போர்வை. அநேகமாக ஆரஞ்சு அல்லது காப்பி நிறத்தில். இந்த உடைகள் பெரும்பாலும் அழுக்காகவே இருக்கும். சட்டைப்பைகளின் ஓரங்கள் அடிக்கடி கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கும். கையில் எப்போதும் ஒரு மொத்தமான தடி. பிடிக்கும் பக்கம் வளைந்திருக்கும். கையில் ஒரு தோற்பெட்டி. அதற்கு பூட்டுமில்லை; சாவியுமில்லை. மிக அந்தரங்கமான சொந்த கடிதங்கள் முதல், பழைய செய்தித்தாள்கள், பட்டையாக நசுக்கப்பட்ட பற்பசை, மிக பழைய பல் ப்ரஷ், மைப்பெட்டி, சோப், கடிதத்தாள், உறைகள் வரையில் எல்லாம் இப்பெட்டிக்குள் தான். சட்டைப் பைகளில் உள்ள குப்பைகள், ஏதாவது ரிக்கார்டுகள் மிகுந்துவிட்டால், அவைகளில் சில இப்பெட்டிக்குள் வந்துவிடும். இரண்டு மூன்று மாதங்களுக்குள் ஒரு முறை பெட்டி மூட முடியாமலே மாட்டிக் கொண்டால், இப்பெட்டி காலி செய்யப்படுவதுண்டு. இம்மாதிரி உருவத்தோடும், உடையோடும், வாலிப நடையோடும் கையிற் பிடித்த தடியுடன் இதோ தெரிகிறாரே, இவர் தான் பெரியார். தமிழரின் தலைவர். ஈரோட்டு இராமசாமியார். *****

பெரியாரின் பொறுமை யாவராலும் போற்றக்கூடியது. எவ்வளவு கிளர்ச்சியான நிகழ்ச்சிகளிலும் சரி, எதிர்பாராத சம்பவங்களிலும் சரி பொறுமையை மட்டும் இழக்கமாட்டார். கடுங்சொற்களை பயன்படுத்தமாட்டார். சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு (1929) ஒரு சமயம் மன்னார்குடியில் மிகப்பெரிய ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். பார்ப்பனீயத்தால் மக்களுக்கு நேர்ந்துள்ள கெடுகளைப்பற்றிச் சொல்லிக் கொண்டே வந்தார். அவர் பேசும் மேடைக்கு கீழே ஒரு 'பிராமணர்' உட்கார்ந்து கொண்டு சரமாரியாக கேள்விகளை எழுதி அவரிடம் கொடுத்துக்கொண்டே இருந்தார். கூட்டத்தில் உள்ள பொதுமக்கள் கடுங்கோபம் கொண்டு அப்பிராமணரைச் சீறிக்கொண்டே இருந்தனர். பெரியார் அவர்களை அடக்கிக்கொண்டே ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கூறி வந்தார். பல கேள்விகள் ஆகி விட்டன. எழுதிக் கொண்டே இருக்கும் போது பென்சில் முனை ஒடிந்து விட்டது. பேசிக் கொண்டிருந்த பெரியார் அதனைக் கவனித்து விட்டார். தம் பேனாவை எடுத்து, உறையை அதன் பின் புறம் போட்டார். "அய்யா! இதனால் எழுதுங்கள்" என்று கொடுத்து விட்டு பேச்சைத் தொடர்ந்தார். 'பிராமாணர்' வெட்கிப் போய் விட்டார். மேலே எழுத முடியவில்லை. கூட்டம் முடிந்தது. மோட்டாரில் ஏறி இருந்த பெரியாரிடம் கூட்டத்தை நெருக்கித் தள்ளிக் கொண்டு அப்பிராமணர் வந்தார். "நாயக்கர்வாள்! என்னை மன்னிக்க வேண்டும். எதிரிகள் தங்களைப் பற்றி கூறுவது முற்றும் தவறு. நீங்கள் மகாப்பெரியவர். நமஸ்காரம்" என்று கூறி விட்டுப் போனார்.

மற்றொரு சமயம் பெரியாரும் தோழர் கண்ணப்பரும் மதுரைக்குச் சென்று கொண்டிருந்தார்கள். மூன்றாம் வகுப்பு வண்டியில் இவர்களோடு பிரயாணம் செய்த ஒரு பிராமணர் கண்ணப்பரோடு வாதம் புரிந்து கொண்டிருந்தார். கண்ணப்பர் சில கடுமையான சொற்களைச் சொல்லி விட்டார். உடனே, பெரியார் இடைமறித்து, அவரை நோக்கி "ஏன் இவ்வாரு பேசுகிறீர்கள்? பொறுமையாய் பதில் கூறினால் தானே அவருடைய தப்பெண்ணங்களை மாற்றி, நம் பக்கம் அவரை திருப்பலாம்? சந்தேகங்களை விளக்கி, உண்மையை உணர்த்த வேண்டிய இம்மாதிரியான நல்ல சந்தர்ப்பங்களை வீணாக்கலாமா?" என்றார். அதற்கு அப்பிராமணர் பெரியாரைப் பார்த்து, "பெரியவரே, நீங்கள் சொல்வதை இவர் கேட்கமாட்டார். இவர்களெல்லாம் அந்த இராமசாமி நாயக்கன் கூட்டத்தை சேர்ந்தவர்கள்; இப்படித் தான் பேசுவார்கள்" என்றார். இருவருக்கும் உண்டான சிரிப்பை மறைத்துக் கொண்டார்கள். பிறகு கண்ணப்பர் அடுத்த வாண்டியில் ஏறிவிட்டார். பெரியார், வண்டியிலுள்ள கக்கூசுக்குள் சென்றிருந்தார். இந்நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் அந்த அய்யரை நோக்கி, "இவர் யார் தெரியுமா? இவர் தான் இராமசாமி நாயக்கர்; நீங்கள் என்ன அப்படிப் பேசி விட்டீர்களே" என்று சொல்லிவிட்டார். பெரியார் வெளியில் வந்தார். அய்யர் எழுந்து நின்று வணங்கியபடியே, "அய்யா! தங்களை யாரென்று தெரியாமல் பேசிவிட்டேன்; மன்னித்துக் கொள்ளுங்கள். தங்களைப் பற்றி அவதூறாக பேசுபவர்கள் அனைவரும் பொய்யர்கள். தங்களுடைய நற்குணமும், பொறுமையும் எவருக்கும் வராது. தாங்கள் அவசியம் ஒரு தடவை என் வீட்டிற்கு வர வேண்டும். நான் காரைக்குடியில் 'இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்ட்'டாக இருக்கிறேன்" என்று கேட்டுக்கொண்டார்.

(சாமி சிதம்பரனார் எழுதிய "தமிழர் தலைவர்" என்ற புத்தகத்திலிருந்து. முதற் பதிப்பு 1939.)

ஆஸ்திகமும், நாஸ்திகமும்

1. ஆஸ்திகம் என்று உண்டானதோ, அன்றே நாஸ்திகமும் உண்டாயிற்று.

2. ஆஸ்திகம் அறியாமை, பயம், சுயநலம் இவற்றில் முளைத்தது; நாஸ்திகம் அறிவின் விசாரணையில் முளைத்தது.

3. ஆஸ்திகம் அறிவைப் பாழ்படுத்துகிறது. நாஸ்திகம் அறிவை ஓங்கச் செய்கிறது.

4. ஆஸ்திகம் உலகை மிருகநிலைக்கு அழைத்துச் செல்கிறது; நாஸ்திகம் அதை நாகரிக நிலைக்கு அழைத்துச் செல்கிறது.

5. ஆஸ்திகம் மக்களை அவமதிக்கிறது. நாஸ்திகம் மக்களை மேன்மைப்படுத்துகிறது.

6. ஆஸ்திகம் மக்களை அழிய வைக்கும்; நாஸ்திகம் மக்களை வாழ வைக்கும்.

7. ஆஸ்திகத்தால் வறுமை, பிணி முதலியன ஓங்கும்; நாஸ்திகத்தால் அவை அழியும்.

8. ஆஸ்திகமும் நாஸ்திகமும் என்றும் தீராப்பகை கொண்டன.

9. ஆஸ்திகத்திற்கு அறியாமையும் அரசாங்கமும், முதலாளித்வமும் துணை.
நாஸ்திகத்திற்குப் பகுத்தறிவே (விஞ்ஞானம்) துணை.

10. ஆஸ்திகம் அழியக்கூடியது; நாஸ்திகம் என்றும் அழியாதது.

11. ஆஸ்திகம் சில சமயம் நாஸ்திகத்தைப் புறம்பே அழிக்கும்; ஆனால், நாஸ்திகமோ ஆஸ்திகத்தை உள்ளும் புறமும் அழிக்கவல்லது.

12. ஆஸ்திகத்தின் வெற்றி தற்காலிக வெற்றியாகும், நாஸ்திகத்தின் வெற்றியோ நிலை பெற்ற வெற்றியாகும்.

13. ஆஸ்திக நாஸ்திகப் போராட்டத்தின் லாப நஷ்டக் கணக்கு. ஆஸ்திகத்திற்குத் தோல்வியும், நாஸ்திகத்திற்கு வெற்றியும் சரித்திர முறைப்படி இதுவரை உண்டு. இனியும் உண்டு.

14. ஒரு மதத்தின்படி அதனை நம்பாத மற்ற மதங்கள் நாஸ்திகமானபடியால், எல்லா மதத்தையும் நம்பாத முழு நாஸ்திகமே நன்மையளிக்கும்; பெருமையளிக்கும். ஆகையால், அம்முழு நாஸ்திகமே எங்கும் பரவுக! ஒங்குக!!

-------------- அறிஞர் அண்ணா (திராவிடநாடு 31.10.1943)

24.2.08

“நடைப்பாதைக்கோயில்களை எல்லாம் சிறிதும் தயக்கமின்றி இடித்துத்தள்ளுங்கள்”

இந்த மாபெரும் விழாவில் ஒன்றே ஒன்றை மட்டும் கூறி அமையவிரும்புகிறேன். பெரியாருக்கு தியாகி மான்யம் கொடுப்பது பற்றி யோசிக்கப்படுமா என்று சட்டசபையில் கேட்கப்பட்டது. அப்பொழுது முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், “இந்தத்தமிழக அரசே பெரியாருக்குக் காணிக்கை என்று கூறினார்கள். அவ்வளவு தூரம் வேண்டாம்-இந்த அரசை நான் உங்கள் சார்பாக கேட்டுக்கொள்வதெல்லாம், “நடைப்பாதைக்கோயில்களை எல்லாம் சிறிதும் தயக்கமின்றி இடித்துத்தள்ளுங்கள்” என்று; இதை இடிப்பதால் பக்தர்கள் மனம் புன்படாதா என்று உடனே கொதித்து எழுவார்கள். அவர்களுக்கெல்லாம் நான்கூறுவேன். இப்படிக் கொதித்து எழுபவர்கள் போலிப் பகதர்கள்; மத்த்தைப் பற்றி, ஆகமத்தைப்பற்றி அறியாத அறிவிலிகள். ஆகமத்தில் என்ன கூறியிருக்கிறது என்றால், 31 கலச நீராட்டி, மதச் சடங்குகளோடு நிறுவப்பட்டவுடன்தான் அந்தச் சிலை வடிவாக இருக்கின்ற சாமிக்குத் தெய்வீக சக்தி வருகிறது. இவ்வாறு நான் கூறவில்லை. உச்ச நீதிமன்றத்தில் அர்ச்சகர் வழக்கின்போது ஜஸ்டிஸ் பாலேகர் அவர்கள் கூறினார். ஆகவே, ஆகமத்தின்படி இவை ஆலயங்கள் இல்லை- நமக்கோ அதைப்பற்றிக் கவலையே இல்லை-போக்குவரத்திற்கோ இடைஞ்சல்-இந்த நிலையில் இடித்தால் யாருக்கு நஷ்டம்? இந்த அரசு தயங்கக் கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன்.

எந்தெந்தக் கொள்களைகளுக்காக வாழ்ந்து மடிந்தாரோ அந்தக் கொள்களைகளைப் பின்பற்றி நட்டப்பதுதான் அய்யாவுக்குச் சிறந்த அஞ்சலியாகும். அஞ்சல் தலையோடு நின்றுவிடக்கூடாது என்று கூறி அமைகிறேன்.

(17-9-78 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற “தந்தைப் பெரியார் நூற்றாண்டு விழா’வில் கலந்து கொண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு மோகன் அவர்கள் ஆற்றிய உரை)

முட்டுக் கட்டைகளை ஒழித்தாலொழிய நாம் முன்னேற முடியாது

இன்று தமிழர் சமுதாயம்தான் உலகிலேயே காட்டுமிராண்டி வாழ்வு வாழ்ந்து வருகிற சமுதாயமாக இருக்கிறது. உலகிலுள்ள 280 கோடி மக்களில் யாரும் இவ்வளவு பிறவி இழிவான நிலையில் முட்டாள்தனமாக வாழ்பவர்களில்லை. நமது நாட்டைப் பிடித்துள்ள ‘நோய்கள்' மூன்று. அவை : 1. கடவுள், மதம், சாஸ்திரங்கள் 2. சாதி 3. ஜனநாயகம் என்பன. நம்மை அரித்துவரும் நோய்கள்: 1. பார்ப்பான் 2. பத்திரிகைகள் 3. அரசியல் கட்சிகள் 4. தேர்தல்கள் 5. சினிமா ஆகிய இவைகள் ஒழிக்கப்பட்டாலொழிய நமது வாழ்வு சீர்படாது என்று, நான் இங்கு மட்டுமல்ல வடநாட்டிலும், கன்னட, கேரள மாநிலங்களிலும் லட்சக்கணக்கான பொது மக்கள் கூடிய கூட்டங்களில் ஆண்டுக்கணக்காக எடுத்துரைத்து வந்திருக்கிறேன்.

அதுபோலவே, நமது வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் தடையாக மேலும் முட்டுக்கட்டைகளாக மூன்று சாதனங்கள் இருக்கின்றன என்பதையும் எடுத்துக்காட்டி வருகிறேன். அவை, அம்முட்டுக் கட்டைகள்: 1. முன்னோர்கள் சொன்னபடி நடக்க வேண்டும். 2. முன்னோர்கள் (பெரியவர்கள்) எழுதியபடி நடக்க வேண்டும் 3. பெரியவர்கள் நடந்தபடியே நாமும் செல்ல வேண்டும் என்பவைகளாகும். இவை, ‘முட்டுக்கட்டைகள்' என்று சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் சொன்னார் என்றாலும், அதற்குப் பிறகு, இன்று இந்த ‘இருபதாம் நூற்றாண்டின் புத்தர்களாக' விளங்கும் கருஞ்சட்டைக்காரர்கள்தாம் சொல்லுகிறார்கள். ஆனால், இந்த நாட்டிலுள்ள பெரும் ‘பிரபல' பார்ப்பனத் தலைவர்கள் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், திரு. ராசகோபாலாச்சாரியார், கே.எம். முன்ஷி, சங்கராச்சாரியார் போன்றவர்கள் எங்கு எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும், இம்முட்டுக்கட்டைகளை ஆதரித்து, வலியுறுத்தி அதாவது ‘நாம் எக்காரியத்திற்கும் நமது முன்னோர் சொன்ன, காட்டிய, எழுதிய வழிப்படியே நடக்க வேண்டும்' என்று பேசி வருகிறார்கள்.

இப்படி இவர்கள் பேசுவது ஏதோ, நமது முன்னோர்கள் எக்காலத்திற்கும் எந்த நிலைமைக்கும் பொருந்தக்கூடிய வகையில் ‘சர்வரோக நிவாரணி' தயாரித்து வைத்துள்ளதைப் போன்று சொல்லி வருகிறார்கள். மக்களுக்குச் சிந்தனா சக்தியும், அறிவும், விஞ்ஞான உணர்வும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான், இவர்கள் இப்படிப் பேசிவருவதன் உள்நோக்கமாகும். ‘முன்னோர்கள், பெரியவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்' என்று கேட்டால் "ரிஷிகள், மகான்கள், தெய்வீக புருஷர்கள், ஆதர்சன ஆச்சாரியர்கள் இவர்கள் தாம்' என்பார்கள்; மற்றும் அவதாரங்களையும் குறிப்பிடுவார்கள்.

இவர்களெல்லாம் யார்? எப்போதிருந்தார்கள்? எங்கிருந்தார்கள்? அதற்கென்ன ஆதாரம்? சரித்திரத்திற்கும் இவர்களுக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா? என்றெல்லாம் ஆராய்ந்தால் இது மாபெரும் புரட்டு - அதுவும் இமாலயப் புரட்டு என்பது தெளிவாக விளங்கும். இந்த ரிஷிகள், தெய்வீகர்கள், மகான்கள் ஆகியவர்களுக்கு ஏதாவது ஆதாரம் உண்டா என்றால் - புராணங்கள், வேதங்கள், ஸ்மிருதிகள், சுருதிகள் என்று ஏதோ கறையான் பிடித்த சிலவற்றைக் காட்டக் கூடும். அதை நுணுகி ஆராய்ந்தவர்களுக்குத்தான் தெரியும். அதிலுள்ளவைகள் எல்லாம், ‘பைத்தியக்காரனுக்குக் கள் ஊற்றினால் அவன் எப்படியெப்படி உளறுவானோ அப்படியே இருக்கின்றன'வென்று. இப்படி முன்னோர்கள் சொன்னது, எழுதியது, நடந்தது என்பதை வெறும் வாயினால் மாத்திரம் பார்ப்பனர்கள் கூறிக் கொண்டிருக்கவில்லை. இந்நாட்டில் 100க்கு 84 போராக உள்ள ‘இந்துக்களுக்கு' உரிய சட்டமாகிய இந்து ‘லா'விலும் நுழைத்துப் பலப்படுத்திப் பாதுகாத்து வருகிறார்கள்.

இந்து ‘லா'வின் அடிப்படைகளில் ஒன்று, சுமார் 20 ரிஷிகள் (ஸ்மிருதிக்காரர்கள்) சொன்னதாகும். நாரதர், பராசரர், யாக்ஞவல்கியர், விஸ்வாமித்திரர், வசிஷ்டர், மனு போன்றவர்கள் என்ன கருத்துக் கொண்டார்களோ அதைக் காட்டித்தான் இன்று அய்க்கோர்ட், சுப்ரீம் கோர்ட் போன்ற நீதிமன்றங்களில் தீர்ப்புகள் எழுதப்படுகின்றன. இந்த ரிஷிகள் சுத்த அனாமதேயங்களாகவே இருக்கிறார்களே; இவர்களைப் பற்றி ஆதாரங்கள் உண்டா என்று தேடினால், அவை அறிவிற்கொவ்வாத ஆபாசக் களஞ்சியங்களாகவே இருக்கின்றன.

இத்தனை ரிஷிகள், முனிவர்கள், தெய்வீகப் புருஷர்கள், ஆண்டவனின் அவதாரங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், மகாத்மாக்கள் தோன்றி ‘மகிமைகள்' புரிந்திருந்துங்கூட, நாம் இன்றைக்கும் வளையாத குண்டூசி செய்யக்கூடக் கற்றுக் கொள்ளவில்லையே, ஏன் என்றால் என்ன பதில் கூறமுடியும்? எனவே, பெரியோர்கள் சொன்னது, பெரியோர்கள் எழுதியது, பெரியோர்கள் நடந்தது என்பதாகிய பிரச்சாரம் செய்வது, நம்மை முழு மூடர்களாக நிரந்தரமாக இருக்கச் செய்வதற்குத்தானேயொழிய வேறில்லை.

ஆகவே, இம்மூன்று முட்டுக் கட்டைகளை ஒழித்தாலொழிய, நாம் முன்னேற முடியாது என்பது உறுதி. இல்லாவிடில், தேங்கிய சாக்கடையாக நமது சமுதாயமும் அதில் புரண்டு இன்பங் காணும் பன்றிகளாக நம் மக்களும் இருக்க வேண்டியிருக்குமென்பது உண்மை. எனவே, முட்டுக் கட்டைகளை ஒழிக்க வேண்டியது, தமிழ் மக்களின் முக்கிய முதற் பணியாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.


-------------- தந்தைபெரியார் "விடுதலை" தலையங்கம் - 22.5.1959

22.2.08

இராமன் மது மாமிசம் சாப்பிட்டதற்கான சான்று இதோ:

கேரளத்தில் மாவலியின் நல்லாட்சிக்குக் கேடு நினைத்தோர், திட்டமிட்டு செயல்பட்டது போலவே - மாவலி மன்னனை வீழ்த்தியது போல; இங்கும் இந்த ஆட்சியைத்தான் ஒழித்துவிடவும், அழித்து விடவும் விஷ்ணுவைத் தேடுவதற்கு மாறாக, விஷ்ணுவைப் போன்று வேறொரு தேவனைத் தேடி அலைகிறார்கள். நேரடியாக அவர்களுக்கு விழி முன்னே விஷ்ணு தென்படாத காரணத்தால் விஷ்ணுவின் அவதாரம் தானே ராமன், அந்த ராமனைப் பயன்படுத்தி இந்த ஆட்சியை விழுங்கி விடுவோம் என்று வில்லை வளைக்கிறார்கள்.

எந்த வித உபாயத்தினால் அந்த மந்த மதியினர்; நம் மீது மோதுகிறார்கள் என்பதை நினைத்துப் பார்த்திடுவதும் - நிதானமாக சிந்திப்பதும் - நமக்கும் நமது பாசறையினருக்கும் மிகத் தேவை எனி னும்; நம்மைப்பற்றி நச்சுக் கருத்துகளைப் பரப்பி நாம் ஏதோ மக்கள் மத்தியிலே நடமாடவே கூடாதவர்கள் என்ற தோர ணையிலே நாக்கறுப்போம் - தலை யறுப்போம் என்கிற வன்முறை மிரட்டல் களை வாரியிறைத்துக் கொண்டு இருக்கி றார்களே; அவர்களின் வஞ்சக சூழ்ச்சியை அறியாமல் அவர்களது பேச்சில், எழுத்தில் மயங்கித் தடுமாறி குழப்பமடைபவர் களைத் திருத்தித் தெளிவடையச் செய்ய வேண்டியது நமது நீங்காக் கடமை யாவதால் இன்றைய இந்த நீட்டோலை தேவைப்பட்டது. அதனால் உனக்கும் உன் வாயிலாக உடன்பிறப்புகளுக்கும், அவர் கள் வாயிலாக, ஆத்திகர், நாத்திகர், பக்த சிரோமணிகள், பகுத்தறிவு வாதிகள் - அனைவருக்கும் ஓர் ஆரோக்கியமான விவாதத்திற்கான அழைப்பை இக்கடித வாயிலாகத் தருகிறேன்.

இராமனைக் கருணாநிதி இழித்துரைத்தார் - இராமன் மது அருந்தியதாகக் கூறுகிறார் - அதனால் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் - பதவி துறக்க வேண்டும் - என்று பதறித் துடிக்கிறார்கள். அய்யோ பாவம்; நான் அவர்களுக்கு விளக்கமாகக் கூறிவிட்டேன். வால்மீகி எழுதிய ராமா யணம் என்ன சொல்கிறது? முதறிஞர் ராஜாஜி எழுதிய சக்ரவர்த்தி திருமகன் என்ற ராமாயண ஆய்வு நூல் என்ன சொல்கிறது?

அதில் எல்லா பகுதிகளையும் நான் சாட்சியத்துக்காக பயன்படுத்த விரும்ப வில்லை. இதோ . . .

சீதையைத் தேடி வந்த அனுமான், அவளை அசோக வனத்தில் கண்டு, அவ ளைப் பிரிந்த இராமன்படும் துன்பத்தை இதோ: சிறீமத் வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம் ஸர்க்கம் 37 வர்ணிக்கிற விதத்தை மாத்திரம் கண்டால் போதும்:-

தேவியாரைப் பிரிந்த நிலையில் இராம ருக்குத் தூக்கமே கிடையாது. எப்போதாவது தேகம் அலுத்துத் தூங்கினாலும் சீதே என்ற மதுரமான வார்த்தையைச் சொல்லிக் கொண்டே விழித்துக் கொள்கிறார். தங்கள் நினைவால் மது, மாமிசம் அருந்துவதை விட்டு விட்டார். வானப் பிரஸ்தருக்கு உகந்த பழம், கிழங்கு களையே சாயங் காலத்தில் புசிக்கிறார்.


உடன்பிறப்பே, தலையும் நாக்கும் வேண்டும் என்று துடியாய்த் துடிப்பவர்கள்; அதைப் பிடித்துக் கொண்டு குதியாய்க் குதிப்பவர்கள் - அம்மையின் விரிவால் அய்யன் துயருற்று அதுவரை அருந்தி வந்த மதுவையும், மாமிசத்தையும் விட்டு விட்டார் என்பதற்குப் பொருள் என்ன கூறுவரோ? யானறியேன்!

உடன்பிறப்பே, ராஜாஜி எழுதிய சக்கர வர்த்தித் திருமகன் நூலில் அவர் எழுதி யுள்ளதை அப்படியே தருகிறேன்.
ராமனே! தசரத சக்கர வர்த்தியின் புத்திரனாவாய், உத்தம குலத்தில் பிறந்த நீ, பேரும் புகழும் அடைந்த நீ ஏன் இப்படிச் செய்தாய்? உன் நற்குணங்களும் ஒழுக்க மும் உலகம் அறிந்த விஷயம். இப்படியி ருக்க நான் வேறொருவனிடம் யுத்தம் செய்து கொண்டு அதில் மனம் முற்றிலும் செலுத்தி வந்த சமயத்தில் என் கண் களுக்குத் தென்படாமல் மறைந்து நின்று என் மேல் பாணம் விட்டு என்னைக் கொன்றாய். உன்னைப் பற்றி ஜனங்கள் சொல்லும் புகழ் மொழிகளுக்கு இது முற்றிலும் விரோதமா யிருக்கிறதே? தருமம், சத்திய பராக்கிரமம் முதலிய உத்தம குணங்களை எல்லாம் பெற்றவன் என்று கீர்த்தி பெற்றாயே! இப்போது அவையெல்லாம் என்னவாயின? என்னைக் கொன்று நீ என்ன லாபம் பெறுவாய்? யோசிக்காமல் இந்த அதரும காரியம் செய்தாய். என் மனைவி உன்னைப் பற்றி என்னை எச்சரித்தாள்; அவள் பேச்சைத் தட்டி விட்டு வந்தேன். நீ வேஷதாரியென் றும், துன்மார்க்கன் என்றும், புல்லால் மூடப் பட்ட பாழுங்கிணறு போன்ற பாவி என்றும் தெரியாமல், மனைவியின் பேச்சைக் கேளாமல், நான் என் தம்பியை எதிர்த்து யுத்தத்துக்கு வந்தேன். உனக்கு நான் என்ன தீமை செய்தேன்? உன்னுடன் யுத்தம் செய்யவா நான் வந்தேன்? அதரு மத்தில் இறங்கி, என்னை மறைந்து நின்று கொன்றாய். நல்ல அரச குலத்தில் பிறந்து பெரும் பாவத்தைச் செய்தாய். நிரபராதி யைக் கொன்றாய். நீ அரச பதவிக்குத் தகுந்தவனல்ல. மோசக்காரனான உன் னைப் பூதேவி மணக்க விரும்பமாட் டாள். நீ எப்படி தசரதனுக்கு மகனாகப் பிறந்தாய்? தருமத்தை விட்டு நீங்கின நீசனால் கொல்லப் பட்டேன். என் கண் ணுக்கு முன் நின்று நீ யுத்தம் செய்திருந் தாயேல் இன்றே நீ செத்திருப்பாய். என்னை நீ வேண்டிக் கொண்டிருந்தால் ஒரே நாளில் சீதையை உன்னிடம் அழைத்து வந்து விட்டிருப்பேனே? பிறந்த வர்கள் இறப்பது விதி. ஆயினும் நீ முறை தவறி என்னைக் கொன்றாய். உன் குற்றம் பெருங்குற்றம். இவ்வாறு தேவேந்திர குமாரனான வாலி மரண அவஸ்தையில் ராமனைக் கண்டித் தான். வாலியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ராமன் என்ன பதில் சொல்ல முடியும்? ஏதோ சொன்னதாகவும் அதைக் கேட்டு வாலி சமாதானப்பட்டதாகவும் வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் சாரம் இல்லை என்று விட்டுவிட் டேன். பெரியோர்கள் மன்னிப்பார்கள். ராமாவதாரத்தில் ஆண்டவனும் தேவியும் சகிக்க வேண்டிய துக்கங்களில் இந்தத் தவறும் பழியும் ஒன்று.

இராமன் தவறு செய்ததாகவே ராஜாஜியும் கருதியதால்; ராமனின் சமாதானம் வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டு இருந்தாலும் அதில் சாரம் இல்லை என்று ராஜாஜி விட்டுவிட்டதாக ராஜாஜியே எழுதியுள்ளார்.

உடன்பிறப்பே,

ஆதாரங்கள் இல்லாமல் நான் எதையும் சொல்லவில்லை. யாரைப் பற்றியும் சொல்லவில்லை! உள்ளங்கை நெல்லிக் கனி போன்ற உண்மை என்னவென்றால்; பா.ஜ.க. ஆட்சியில பிரதமர் வாஜ்பாய் அவர்களால் அனுமதிக்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டம்; அந்த ஆட்சி தொடராத காரணத்தால் இடையில் நின்று போய்; இப்போது இன்றுள்ள மத்திய ஆட்சியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் வழிகாட்டும் தலைவர் திருமதி சோனியா காந்தி, பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் ஆகியோரின் பெரு முயற்சியினால் தொடரப்பட்டு அப்பணி யில் தம்பி டி.ஆர்.பாலுவின் அயரா முயற்சியால் அத்திட்டம் வளர்ந்து வரும் நிலையில்; திடீரென இராமனையும், இராமர் பாலத்தையும் இடையிலே புகுத்தி திசை திருப்பியவர்கள் யார் என்பதையும் நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள இக் கடிதத்தில் காணப்படும் கருத்துக்களும், எடுத்துக் காட்டுகளும் மெத்தவும் பயன்படும் என்று நம்புகிறேன் - எனவே உடன் பிறப்பே! இதனை நீயும் படி! பிறரும் படித்து உண்மை உணர்ந்திட உதவிடு!

(இதில் நான் குறிப்பிட்டுள்ள சிறீமத் வால்மீகி ராமாயணம் - சுந்தர காண்டம் - சிறீ உ.வே.சி.ஆர். சீனிவாச அய்யங்கார், பி.ஏ., அவர்களால் மொழி பெயர்க்கப் பட்ட நூல் ஆகும்- 1962 ல் தியாகராயநகர் - தி லிட்டில் பிளவர் கம்பெனி பதிப் பித்தது) மது என்றால் கள்ளோ, சாராயமோ அல்ல, தேன் என்று பொருள்படும் என்கிறார் நண்பர் சோ. அப்படியானால் மது விலக்கு சட்டம் என்பதற்கு தேன் விலக்குச் சட்டம் என்று பொருளா என்பதை அவர்தான் விளக்க வேண்டும்!

சீதையைப் பிரிந்த வேதனையில் இராமன் தேன் அருந்துவதை நிறுத்தி விட்டான் என்று வால்மீகி எழுதியிருப் பதாக இவர்கள் சொல்கிறார்களா?


-------------- 28.9.2007 -"முரசொலி"இதழில் உடன் பிறப்புக்கு டாக்டர் கலைஞர் அவர்கள் எழுதிய மடல்

21.2.08

யார் இங்கு மறப்பார் பெரியாரை?

பெரியார் ஒருவர்தான் பெரியார்
அவர் போல் பிறர் யார் பெருமைக்கு உரியார் - தந்தை பெரியார்

பகைவர் தமை காட்டி வதைத்த கூர் ஈட்டி
தமிழர் புகழ்நாட்டி வாழ்ந்த வழிகாட்டி - தந்தை பெரியார்

மாட்டைத் தீண்டுவான் ஆட்டைத் தீண்டுவான்
மனிதனைத் தீண்ட மறுத்தானே!

நாட்டை உலுக்கினான் பெரியார் அவர் தொண்டன்
நரிகளின் வாலை அறுத்தானே!

கோடை எழில் கொஞ்சும் பெண்களை உலகினில்
கொடியவன் கூட்டில் அடைத்து வைத்தான்!

காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரை
கிழவன்; துடைத்து வைத்தான் - தந்தை பெரியார்

மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!

வானம் உள்ள வரை வையம் உள்ள வரை
யார் இங்கு மறப்பார் பெரியாரை - தந்தை பெரியார்

-------------------கவிஞர் காசி ஆனந்தன்

கருத்துக்கருவூலம் வீரமணி

நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர்களுடைய அரும்முயற்சி இன்னும் நூறாண்டுகளுக்குப் பிறகு திராவிட இயக்கத்தைப்பற்றி தெரிந்துகொள்ள - தந்தை பெரியாரைப் பற்றி தெரிந்துகொள்ள - அண்ணாவைப்பற்றி தெரிந்து கொள்ள எங்கெங்கு இருந்து ஆதாரங்கள் திரட்டப்பட்டன, எப்படியெல்லாம் நம்முடைய வரலாறு முன்னால் இருந்தது, பின்னால் அமைந்தது என்பதையெல்லாம் இன்னும் நூறாண்டு களுக்குப் பிறகு தெரிந்துகொள்ள வேண்டுமென்றாலும், அதற் கான கருவூலமாக நம்முடைய வீரமணி அவர்கள் விளங்குகி றார்கள் என்று சொன்னால், அதை யாராலும் மறுக்க முடியாது.
இதோ என் கையிலே உள்ள இந்தப் புத்தகம் செங்கல்பட்டு முதல் தமிழ் மாகாண சுயமரியாதை மாநாடு, 1929 - ஒரு வர லாற்றுத் தொகுப்பு. நான் நிச்சயமாகச் சொல்கிறேன். அவர் மாத் திரம் இன்றைக்கு திராவிடர் கழகத்திலே தந்தை பெரி யாரு டைய வழித்தோன்றலாக அமையாமல் இருந்திருப்பாரேயா னால், இந்தப் புத்தகம் எனக்குக் கிடைத்திருக்காது (கைதட்டல்).

இதிலே உண்மைகள் வரலாற்றுச் சான்றுகள், இங்கே நடைபெற்ற மாநாடு, அந்த மாநாட்டிலே கலந்துகொண் டவர்கள், அவர்களைப்பற்றிய விவரங்கள் எதுவும் எனக்குக் கிடைத்திருக்காது. இதிலே சவுந்தரபாண்டியனாருடைய உருவத்தைப் பார்க்கிறேன். வி.வி. ராமசாமி நாடார் உருவப் படத்தைப் பார்க்கிறேன், அவ்வளவு ஏன்? இதே செங்கல் பட்டிலே இருந்த வேதாசலம் முதலியார் படத்தையும் அதிலே பார்க்கிறேன். வேதாசல முதலியார் உங்களுக்குத் தெரியும். வேலைக்காரி படத்திலே அறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம். அந்த வேதசால முதலியார் அந்த மாநாட்டிலே கலந்துகொண்டார். ஒரு முக்கிய பொறுப்பேற்றார் என்கின்ற இந்தச் செய்தியெல்லாம் எங்கள் சிந்தையைச் செதுக்கச் செய்கின்ற செய்திகளாகும்.

விஷயங்களை சேமித்து வைப்பதிலே வீரமணியிடத்திலே பாடம் படிக்கவேண்டும்
இந்தச் செய்திகள் எல்லாம் காணாமல் போயிருக்கும்
. இப்படிப்பட்ட புத்தக தொகுப்பு மாத்திரம் இல்லாவிட்டால், நான் உலகத்தில் உள்ள எல்லாக் காட்சிகளையும் ஒப்பிட்டு இப்படிச் சொல்லவேண்டுமேயானால், அவர் என்னைப் பாராட்டியதற்காக, நான் அவரை பாராட்டுவதாக அர்த்தமல்ல. உலகத்திலே உள்ள எல்லா கட்சி அமைப்புகளைப்பற்றியும் சொல்லவேண்டுமேயானாலும், எந்த ஒரு அமைப்பிலும் இவ் வளவு விஷயங்களை சேகரித்து வைத்து, அதை எதிர் காலத்திற்குத் தரக்கூடிய இந்த ஆற்றல், நம்முடைய வீரமணி யாருக்கு இருப்பதைப்போல வேறு யாருக்கும் இருப்பதாக நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். அவரிடத்திலே எங்களைப் போன்ற கட்சிகளெல்லாம் இதற்காகப் பாடம் படிக்கவேண்டும் என்று எங்களுடைய முன்னோடிகள்கூட இங்கே வந்திருக் கிறார்கள், மூத்த தம்பிமார்களெல்லாம் வந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம்கூட இன்றுமுதல் பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அடக்கத்தோடு அவர்களை எல்லாம் நான் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

-------------------- (செங்கற்பட்டு விழாவில் முதலமைச்சர் கலைஞர், 18.2.2008)

இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்பதில் என்ன தப்பு?

இராமாயணம் அவரவர் சாதிகளையும், பிரிவுகளையும் தானே நிலைநாட்டுகிறது?

ஒரு இடத்தில் அனுமார் இராமன் காலில் விழுகிறான். இராமன் அனுமாரைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு மன்னிப்புக் கேட்கிறான். ‘நீயோ ஒரு பிராமணன். நான் க்ஷத்திரியன். என் காலில் வந்து விழலாமா? இந்தப் பாவத்தை நான் எங்கே போய்த் தீர்ப்பேன்?” என்று கூறுகிறான்.

இராமன் அயோத்தியில் இருந்து காட்டுக்குப் புறப்படும் சமயம், “என் பணத்தையும், சொத்துக்களையும், என்னிடத்தில் இப்போது இருக்கும் மாடுகளையும் கொண்டு வாருங்கள். முழுவதையும் பிராமணருக்குக் கொடுத்து விடுகிறேன்!” என்பதாகச் சொல்லுகிறான்.

சீதை, “என் நகைகள் முழுவதையும் கொண்டு வாருங்கள். பிராமணனுக்குக் கொடுத்து விட்டுப் போனால் புண்ணியம்” என்பதாகச் சொல்கிறாள்.

சூர்ப்பனகை, ‘என்னைத் திருமணம் செய்துகொள்’ என்று கேட்கும்போது, ‘நீ ஒரு சாதி, நான் ஒரு சாதி, எப்படித் திருமணம் செய்து கொள்வது?’ என்கிறான்.

ஒரு இடத்தில் தாடகை மகனை இலட்சுமணன் கொன்றுவிட்டு, ‘இந்தப் பாவத்திற்கு என்ன செய்வேன்?’ என்று வருத்தப்பட்டுக் கொள்கிறான். அதற்கு இராமன், ‘சூத்திரனைத் தானே கொன்றாய், அதனால் பாவமில்லை கவலையை விடு’ என்று கூறுகிறான்.

சம்பூகன் ஒரு சூத்திரன். அவன் தவம் செய்ய உரிமையில்லை என்று கூறி அவனைக் கண்டங் கண்டமாக வெட்டி விடுகிறான். இப்படி எங்கு பார்த்தாலும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வருணாசிரம தர்மம் தாண்டவ மாடுகிறது. இப்படி இருக்கும் இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்பதில் என்ன தப்பு?”

-------- தந்தைபெரியார், ‘விடுதலை’ 13.9.1956

பார்ப்பனரை வெறுப்பது சரியா? தப்பா?

மகாபாரதத்தில் பீஷ்மர் யுதிஷ்ட்ரரைப் பார்த்துப் பின்வருமாறு சொல்கிறார்:-

“கல்வியறிவுள்ள பிராமணர்களை வணங்குவது தான் மன்னனுடைய முதற் கடமை. ஒருவன் தன் உயிரையும், தன் குழந்தைகளின் உயிரையும் காப்பாற்றுவது போலவே பிராமணர்களைக் காப்பாற்ற வேண்டும். தன் பெற்றோர்களை வணங்கி மரியாதை செய்வது போலவே பிராமணர்களை வணங்கி மரியாதை செய்ய வேண்டும். பிராமணர்கள் திருப்தியோடிருந்தால் நாடு முழுவதுமே செழிப்போடிருக்கும்; பிராமணர்கள் கோபங் கொண்டாலோ, அதிருப்திப்பட்டாலோ, நாட்டிலுள்ள யாவுமே அழிந்து போய்விடும். பிராமணர்கள் நினைத்தால் கடவுளை கடவுளற்றதாகச் செய்து விடலாம்; கடவுளற்றதைக் கடவுளாக ஆக்கி விடலாம். அவர்களால் புகழப்படுகிறவர்கள் சிறந்து வாழ்வார்கள்; இகழப்படுகிறவர்கள் துன்பத்துக்காளாவார்கள்.”

என்ன அருமையான உண்மை, பார்த்தீர்களா? மகாபாரதம் ஓர் முழுக் கற்பனை. இக்கதை நடைபெற்றதாகக் கூறப்படுவது ஏறத்தாழ 5,000 ஆண்டுகளுக்கு முன்னர்! ஆதலால் தான் கற்பனை! இதை முதன்முதல் வடமொழியில் எழுதியவர் வியாசர். இந்நூல் எழுதப்பட்டே ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம். ஆனால், மேலே கண்ட வாக்கியங்கள் இன்றைக்கும் உண்மை. 100-க்கு 100 பங்கு உண்மை! உலகில் நிலைத்துவிட்ட அனுபவ உண்மைகளில் ‘பீஷ்மர்’ என்பவர் பெயரால் கூறப்படுகின்ற இந்தப் பொன்மொழியும் ஒன்றாகும். பார்ப்பனர் நினைத்தால், தங்களுக்குப் பயன்படும் மனிதனாகத் தோன்றினால் ஒரு சாதாரண நாலாந்தரப் போக்கிரியை ‘கிருஷ்ண பரமாத்மா’வாக ஆக்கியது போல், ஒரு சாதாரண மனிதனை ‘மகாத்மா’ ஆக்கி விடுவார்கள்; அதே ஆள் தங்களுக்கு இனிப் பயன்பட மாட்டான் என்று கருதினால் உடனே அதே ‘மகாத்மாவை’ சுட்டுக் கொன்று விடுவார்கள்! செத்த மகிழ்ச்சிக்காக மிட்டாய் வழங்கிக் குதூகலப்படுவார்கள்! திராவிட நரகாசூரனைக் கொலை செய்து அந்த நாளைக் கொண்டாட்ட (தீபாவளி) நாளாகச் செய்துவிட வில்லையா? அதுபோலத் தான். இப்போது இதைப் படியுங்கள்; இது காந்தியார் கொள்கை!

“நான் பெரியவன் ஆகிவிட்ட பிறகு இந்தியாவிலும் தென் ஆப்பிரிக்காவிலும் பலர் நல்ல எண்ணத்தின் பேரிலேயே, நான் பூணூல் போட்டுக் கொள்ளும்படிச் செய்ய முயன்றார்கள். ஆனால், அவர்கள் முயற்சி வெற்றியடையவில்லை. சூத்திரர்கள் பூணூல் போட்டுக் கொள்ளக் கூடாது என்றால், மற்ற வருணத்தினருக்கு மட்டும் அதைப் போட்டுக் கொள்வதற்கு என்ன உரிமையிருந்தது என்று விவாதித்தேன். பூணூல் போட்டுக் கொள்வது அநாவசியமான பழக்கம் என்பது என் கருத்து. ஆகையால் அதை அணிய வேண்டும் என்பதற்குப் போதுமான நியாயம் இருப்பதாக (வைசியனான) எனக்குத் தோன்றவில்லை... இந்து மதமும் இந்தியாவும் இன்றுள்ள நிலைமையில் ஆன்மீகப் புனர் வாழ்வுக்குச் சின்னமான இந்தப் பூணூலை அணிந்து கொள்ளத் தங்களுக்கு உரிமையுண்டு என்று இந்தக்களால் காட்ட முடியுமா என்று சந்தேகப்படுகிறேன். இந்து மதத்திலிருந்து தீண்டாமை ஒழிந்து, உயர்வு-தாழ்வு என்ற வேற்றுமைகளெல்லாம் நீங்கி, அதில் இப்போது மலிந்து கிடக்கின்ற பல்வேறு தீமைகளும் வேஷங்களும் ஒழிந்த பிறகு தான் இந்துக்களுக்குப் பூணூல் அணியும் உரிமை ஏற்பட முடியும். ஆதலால் பூணூல் அணிந்து கொள்வது என்ற கருத்தையே என் மனம் வெறுக்கிறது” (பக்கம் 397 - சத்திய சோதனை-காந்தியார் சுயசரிதை-மொழிபெயர்ப்பு ரா.வெங்கட்ராஜலு).

படித்தீர்களா? இப்போது சொல்லுங்கள். பூணூல் அணிவதை வெறுத்த காந்தியார் மராத்திப் பார்ப்பான் (கோட்சே) கையினால் சுட்டுக் கொல்லப்பட்டதில் தவறென்ன? வியப்பென்ன? அதிர்ச்சி என்ன? பீஷ்மரின் போதனையை மீண்டும் ஒரு தடவை படித்துப் பாருங்கள்! ஆம்! பார்ப்பனரை எதிரிகளாக்கிக் கொள்கிறவனுக்கு இராவணன் மரணம் தான்; இரணியன் முடிவுதான்; நரகாசுரன் சாவுதான்; காந்தியார் கதி தான்! சிவாஜியின் அரசாங்கம் அழிந்தது யாரால்? மராட்டியர் வரலாற்றைப் படித்துப் பார்த்தால் தெரியும்.

சிவாஜி பார்ப்பன சூழ்நிலையிலேயே வளர்ந்தார். அரசாங்கத்திலும் ராஜ்யத்திலும் பார்ப்பனரே பெருகிக் கிடந்தனர். அவர் மன்னர் பதவி ஏற்றபோது இராணுவத்தளபதியைத் தவிர்த்து அவரது மந்திரிகள் அனைவரும் போர் வீரனான சிவாஜியை ‘க்ஷத்திரியன்’ ஆக்கினால் தான் அரசனாக முடியும் என்று கூறி, கற்பனைப் பரம்பரைக் கதை ஒன்றைத் திரித்து, அவருக்குப் பூணூல் அணிவித்தார்கள். நாடு முழுவதிலிருந்தும் 50,000 பார்ப்பனர் மனைவி மக்களோடு தருவிக்கப்பட்டு பவுனாகவும் உணவாகவும் வழங்கப்பட்டனர். தலைமைப் புரோகிதனான கங்குபட்டனுக்கு மட்டும் ஒரு லட்ச ரூபா பரிசு! பட்டஞ்சூட்டு விழாவின் மொத்தச் செலவு ஏழு கோடி ரூபாவாம்! இவ்வளவு பச்சைப் பார்ப்பன சிவாஜியின் அரசாங்கம்கூட நிலைத்திருக்க முடியவில்லை. அது ஒரு ‘இராமாயணம்’.

மதத் துறையைத்தான் எடுத்துக் கொள்வோம். புத்தர் நெறி (பவுத்தம்) இந்து மதத்தை ஒழித்து விடும் என்பதைக் கண்ட பார்ப்பனர் பவுத்த சங்கத்திற்குள்ளேயே நுழைந்தனர். புத்தர் ஏமாந்தார். என்ன ஆயிற்று? அவர் வீட்டுக்குள் நுழைந்த நல்ல பாம்பு அவரது குழந்தையை (புத்த நெறியை)க் கடித்து நஞ்சை ஏற்றிக் கொன்றுவிட்டது. இன்று உலகத்திலுள்ள பவுத்தர் எண்ணிக்கை 15 கோடி! இதில் புத்தர் பிறந்த (இந்தியா) நாட்டிலுள்ளவர்கள் 2 (இரண்டே) லட்சம்! அதாவது 750-இல் ஒரு பங்குதான், இந்தியாவில்! போதுமா? இன்னும் வேண்டுமா?

நாகசாகித் தீவில் விழுந்த அணுகுண்டின் நச்சுக் காற்று இருபதாண்டுகளுக்குப் பிறகுகூட இன்றும் அங்குள்ள மக்களுள் ஆபத்தான நோய்களை உண்டாக்கிக் கொண்டிருக்கிறதாம்! இந்தியாவில் 2,000 ஆண்டுகட்கு முன்பு விழுந்த ஆரிய அணுகுண்டின் நச்சுக் காற்றுத்தான் இன்றுள்ள சாதி! இன்றுள்ள நெற்றிக்கோடு! இன்றுள்ள சமஸ்கிருதம்! இன்றுள்ள கோவில்! இன்றுள்ள புராண-இதிகாசம்! இன்றுள்ள ‘பிராமண பக்தி!’ 'இந்து சமுதாயம்' என்பது அக்கிரகாரத்தின் கைப்பிடிக்குள் அடங்கியிருக்கின்ற மிளகாய்ப்பொடி! எதிர்த்தால் கண் போச்சு! எந்த அரசாங்கம் ஆரியக் கலாச்சாரத்தை - அதாவது ஆதிக்கத்தை - ஏற்றுக் கொள்கிறதோ, அந்த அரசாங்கத்தைத் தான் பார்ப்பன (நச்சுக்காற்று) சக்தி வாழவிடும்! இல்லையேல், அரசாங்க நிர்வாகத்துக்குள் புகுந்தே அழிந்துவிடும்! மூவேந்தர் ஆட்சி அழிந்ததும் இவ்வாறே.

மந்திரிகள், உயர்தர அதிகாரிகள் போன்ற ஆதிக்க நாற்காலிகளில் அக்கிரகார சக்திக்கு இடமில்லையானால் வெளிநாட்டானை அழைத்து வந்தாவது அந்த ஆட்சியை அழித்தே தீரும். 31 ஆண்டுகள் இந்நாட்டில் பாதிரியாக இருந்து, நாடு முழுதும் சுற்றிய ‘அபேடுபாய்’ என்ற பிரெஞ்சுப் பாதிரியார் 160 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய தம் நூலில், “பார்ப்பனர் வடிகட்டிய அயோக்கியர்கள்; இரட்டை நாக்குப் படைத்தவர்கள்; எந்த ஈனச் செயலுக்கும் துணிந்தவர்கள்” என்றெல்லாம் அக்கிரகாரத்தின் மீது ‘லட்சார்ச்சனை’ செய்தாரே! அவருக்கு அன்றிருந்த துணிச்சலில் லட்சத்தில் ஒரு பங்கு கூட இன்றைய ‘வீரத் தமிழனுக்கு’ இல்லையே!

இப்போது கூறுங்கள், பார்ப்பனரை வெறுப்பது சரியா? தப்பா?


----"சுயமரியாதை" இதழ் 1961-ல் வெளியிட்ட பொங்கல் மலரில் குத்தூசி குருசாமி எழுதிய கட்டுரை

20.2.08

சடங்கு முறைகளைக் கைவிட வேண்டும்

மனிதனின் துன்பத்திற்கும் மகிழ்ச்சியற்ற தன்மைக்கும், அவனுடைய சொந்த தீய நடத்தையே காரணமாகும். துன்பத்துக்கான காரணத்தைப் போக்குவதற்காக புத்தர் பஞ்சசீலத்தைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.
பஞ்சசீலத்தில் பின்வரும் நெறிகள் உள்ளன: 1. எந்த உயிரையும் அழிப்பதையும், அழிவுக்குக் காரணமாயிருப்பதையும் தவிர்த்தல் 2. களவு செய்யாமல் தவிர்த்தல் அதாவது, ஏமாற்றுவதின் மூலமோ வன்முறையின் மூலமோ பிறர் பொருளைத் தனதாக்கிக் கொள்வதையும் தன்னிடம் வைத்துக் கொள்வதையும் தவிர்த்தல் 3. பொய் சொல்லாமல் தவிர்த்தல் 4. காமம் தவிர்த்தல் 5. மது தவிர்த்தல்.

உலகில் நிலவும் துன்பத்திற்கும் மகிழ்ச்சியற்ற தன்மைக்கும் மனிதனுக்கு மனிதன் இழைக்கும் அநியாயமே காரணம் என்பது புத்தரின் கருத்து. இந்த அநியாயத்தை எப்படி நீக்குவது? இதற்கு அவர் கூறிய வழி, உயரிய எண்வகைப் பாதை. இந்த எண்வகைப் பாதையின் அம்சங்கள்:

1. நல்ல கருத்துகள் அதாவது மூட நம்பிக்கையிலிருந்து விடுதலை
2. நல்ல நோக்கங்கள், அறிவு மற்றும் நேர்மையுள்ள மனிதனுக்குத் தகுந்தவையான உயர்ந்த
நோக்கங்கள்
3. நல்ல பேச்சு; அதாவது பணிவு, திறந்த உள்ளம், உண்மை
4. நல்ல நடத்தை, அதாவது, அமைதியான நேர்மையான, தூய்மையான நடத்தை
5. நல்ல வாழ்க்கை வழி, அதாவது எந்த உயிருக்கும் தீங்கு ஏற்படுத்தாதது
6. விடா முயற்சி, அதாவது, மற்ற ஏழு அம்சங்களிலும்
7. விழிப்பாகவும், செயல் துடிப்புடனும் இருந்தல்
8. நல்ல சிந்தனை, அதாவது, வாழ்க்கையின் அதிசயங்கள் பற்றித் தீவிரமாகச் சிந்தித்தல்.

உன்னத எண்வகைப் பாதையின் நோக்கம், உலகில் நன்னெறியின் அரசை நிறுவி அதன் மூலம் உலகிலிருந்து மகிழ்ச்சியற்ற தன்மையையும் துன்பத்தையும் ஒழிப்பதாகும். நற்செய்தியின் மூன்றாவது பகுதி ‘நிப்பான' கோட்பாடு ஆகும். ‘நிப்பான கோட்பாடு' உன்னத எண்வகைப் பாதைக் கோட்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். நிப்பானம் இல்லாமல் எண்வகைப் பாதை நிறைவு பெறாது.

எண்வகைப் பாதை கைகூடுவதற்கு என்னென்ன இடையூறுகள் உள்ளன என்பதை ‘நிப்பான கோட்பாடு' கூறுகிறது. இந்த இடையூறுகளில் முக்கியமானவை பத்து. புத்தர் இவற்றைப் பத்து ஆசவங்கள், தளைகள் அல்லது இடையூறுகள் என்று குறிப்பிடுகிறார்.

முதலாவது இடையூறு, தான் என்ற மாயை. ஒரு மனிதன் முற்றிலும் தன்னைப் பற்றிய எண்ணத்திலேயே ஆழ்ந்து, தன்னுடைய மனதின் ஆசைகளை நிறைவு செய்யும் என்று, தான் நினைக்கிற ஒவ்வொரு அற்ப விஷயத்தையும் துரத்திச் சென்று கொண்டிருக்கும் வரை அவனுக்கு மேன்மையான பாதை கிடைக்காது. அளவிடற்கரிய முழுமையில், தான் ஒரு நுண்ணிய பகுதி என்ற உண்மையைக் காண்பதற்கு அவனுடைய கண்கள் திறந்தால்தான் தன்னுடைய தற்காலிகத் தனித்தன்மை எவ்வளவு நிலையற்றது என்பதை அவன் உணர்ந்தால்தான், இந்தக் குறுகிய பாதையில் நுழைவதே கூட அவனுக்குச் சாத்தியமாகும்.

இரண்டாவது இடையூறு, சந்தேகமும் தீர்மானம் இன்மையும் ஆகும். வாழ்க்கையின் பெரும் புதிரை விடுவிப்பதற்கு ஒருவனுடைய கண்கள் திறக்கும் போதும், ஒவ்வொரு தனித்தன்மையின் நிலையாமையை அவன் உணரும்போதும் அவனுக்குத் தனது செயல்கள் பற்றி சந்தேகமும் தீர்மானம் இன்மையும் எழுகின்றன.

செய்வதா? செய்ய வேண்டாமா? என்கிற தடுமாற்றமும், தன்னுடைய தனித்தன்மையே நிலையற்றதாயிருக்கும்போது, எதையும் ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எழுந்து அவனைத் தீர்மானமற்றவனாகவும் செயலற்றவனாகவும் ஆக்குகின்றன. ஆனால், வாழ்க்கைக்கு இது சரிப்பட்டு வராது. அவன் தனது ஆசிரியரைப் பின்பற்றுவதென்றும், உண்மையை ஏற்பதென்றும், அதற்கான முயற்சியில் இறங்குவதென்றும் முடிவு செய்து கொள்ள வேண்டும்; இல்லையென்றால் அவன் முன்னேற முடியாது.

மூன்றாவது இடையூறு, சடங்குகளின் சக்தியை நம்பியிருப்பதாகும். ஒருவன் எவ்வளவு நல்ல முடிவுகள் செய்து கொண்டாலும், அவை எவ்வளவு உறுதியாக இருந்தாலும், அவன் சடங்கு முறைகளைக் கைவிட்டாலன்றி, புறத்தே செய்யும் செய்கைகளும், புனிதச் சடங்குகளும், புரோகிதர்களின் சக்திகளும் தனக்கு எந்த வகையிலேனும் உதவும் என்ற நம்பிக்கையை விட்டாலன்றி, எந்தப் பயனும் ஏற்படாது. இந்த இடையூறுகளை ஒருவன் கடந்தால்தான் நீரோட்டத்தில் அவன் இறங்கியிருப்பதாகவும், விரைவிலோ, தாமதமாகவோ அவன் வெற்றிபெற முடியும் என்று கூற முடியும்.


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 3 பக்கம் : 447

இராமநவமி அன்று இராமனை எரிக்க வேண்டும்

பகுத்தறிவாளர் கழக மாநாடு என்ற பெயரில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. இதில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதை விளக்கிச் சிறிது கூறுகின்றேன். நடைபாதைக் கோயில்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பது ஒன்று; அரசாங்கம் தீவிரமாக முயற்சி எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். அடுத்து வடநாட்டில் ‘ராமநவமி' அன்று ‘ராமலீலா' என்ற பெயரில் தமிழ் மக்கள் - திராவிடர்களின் மனதைப் புண்படுத்தும்படி ராவணன், கும்பகர்ணன் முதலானோர் கொடும்பாவியை எரிக்கின்றார்கள். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள், ஜனாதிபதி போன்றவர்கள் கலந்து கொள்கின்றார்கள். நாம் பல தடவை கண்டித்தாகி விட்டது. இனி, நாமும் பதில் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

சூத்திரனான சம்புகன் தவம் பண்ணினான்; கடவுளைக் காண முயன்றான். இதன் காரணமாக வர்ணாசிரம தருமம் கெட்டு விட்டது என்றும், இதனால் ஒரு பார்ப்பனப் பையன் இறந்து விட்டான் என்றும் கூறி, ராமன் சம்புகனை வெட்டினான். துண்டு துண்டாக வெட்டிக் கொன்றான். எனவே, இப்படிப்பட்ட ராமனை நாமும் ராமநவமி தினத்தில் எரித்து, வடவருக்கு உணர்த்துவது பற்றி யோசிக்க வேண்டும். அடுத்து, இந்து மதத்தில் இருந்து விலக வேண்டும் என்பது. இந்து மதம் என்ற பெயரில் ஏராளமானவர்கள் உள்ளோம். அத்தனை பேரும் விலக ஒப்புக் கொள்வார்களா என்பது வேறு.

இன்றைக்கு நாம் சூத்திரர்கள் என்பதும், இழி ஜாதி என்பதும் சட்டப்படி, சாஸ்திரப்படி இருக்கின்றது. இன்றைக்குப் பார்ப்பான் யாரும் நம்மை சூத்திரர் என்று சொல்ல அஞ்சி, அடங்கி விட்டான். இன்றைக்கு ஜாதி இழிவை யாரும் பகிரங்கமாகக் கூறவும் முன்வரவில்லை. இப்படி இருந்தும் நமது சூத்திரப் பட்டமும், ஜாதி இழிவும் நீங்கவில்லையே! காரணம் என்ன? பார்ப்பானே அடங்கி விட்டான்; ஜாதி இழிவு பற்றி எவரும் கூறவும் முன்வரவில்லை என்று சொன்னேன். இந்த நிலையில் நம்மிடம் உள்ள இழிதன்மைக்கும், சூத்திரப் பட்டத்திற்கும் யார் மீது குற்றம் கூறுவது? நம்மை நாமேதான் தாழ்த்திக் கொண்டு இழிதன்மையில் உள்ளோம்.

தோழர்களே! இன்றைக்கு கடவுள் இருப்பது இடைவிடாத பிரச்சாரம் காரணமாக உலகில் இருக்கின்றதே ஒழிய, உண்மையில் எவரிடமும் கடவுள் நம்பிக்கை இல்லை. எனவே, நம்முடைய இழிவுக்கு இன்று கடவுள் நம்பிக்கை காரணமாகவும் இல்லை. இன்று நமக்கு உள்ள இழிவு நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்டதுதான் என்று மீண்டும் கூறுகின்றேன். இனி மதத்தையோ, கடவுளையோ, பார்ப்பான்களையோ திட்டுவது மூலம் ஒன்றும் பிரயோசனம் இல்லை. உங்கள் இழிவு நீக்கத்திற்கு இனி அது பயன்படாது. நாம் மனிதனாகணும். நாம் ஈன ஜாதியாகாமல் இருக்க வேண்டும். சூத்திரன் அல்லாதவனாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆகும்.

நமது இழிவும், சூத்திரப் பட்டமும் இன்று சட்டத்தில் இருக்கின்றதே! இப்படிச் சட்டத்தில் இருக்கும்போது கடவுளையும், பார்ப்பானையும் திட்டி என்ன பிரயோசனம்? அறிஞர்கள் சிந்திக்க வேண்டும். இனி நாம் சும்மா இருந்தால் பிரயோசனம் இல்லை. நாம் இன்று இந்து மதத்தின் பட்டியலில் உள்ளோம். நாம் இந்த இந்து மதப்படிதான் சூத்திரன். இது மாற வேண்டுமே! இது கடினமான பிரச்சினை. இதற்குப் பரிகாரம் தேடியாக வேண்டும். சட்டப்படி நீங்கள் சூத்திரன்கள். இந்தச் சட்டம் இந்தியா பூராவுக்கும் உள்ளது. இதனை மாற்றுவது எளிதல்ல. ஒருகால் தமிழகம் தனியாகப் பிரிந்தால் நாம் மாற்றலாம். இதற்குப் பிரிவினை பிரசாரம் செய்ய வேண்டும்.

உடனடியாக நமது ஜாதி இழிவு மாற, நாம் இந்து மதத்தில் இருந்து விலகிவிட வேண்டும். அதற்காக நாம் இந்துவல்ல என்று ஒவ்வொருவரும் விளம்பரப்படுத்திவிட வேண்டும். இந்து அல்ல என்று கூறி விட்டால் - இஸ்லாமாகவோ, கிறித்துவனாகவோ மாறினால், அப்போதும் மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டு விடுவோம். எனவே, அவைகளும் பயன்படாது. எனவே, அறிஞர்கள் சிந்திக்க வேண்டும். இது, இன்றைக்குப் பெரிய சிக்கல். மக்கள் சிந்திக்க வேண்டும். மதம் விலகத் துணிய வேண்டும். இதற்கு என்றே ஒரு மாநாடு போட்டு, மதம் விலக ஏற்பாடு செய்ய உத்தேசித்து உள்ளேன். அதற்கு என்று பாரம் அச்சடித்து, அதனைப் பூர்த்தி செய்து, கையொப்பம் வாங்கி, கெசட்டில் போடவும் ஏற்பாடு செய்ய வேண்டி வந்தாலும் வரும்.

எனவே, நமது இழி நிலை மாற, நாம் இந்து மதத்தில் இருந்து நீங்கிக் கொள்ள வேண்டும். அடுத்து நம் மக்களுக்கு இன்று இருந்து வரும் தீண்டாமை இழிவு, நாம் கோயிலுக்குப் போவது மூலம்தான் உள்ளது. குளித்து மூழ்கி கோயிலுக்குப் போனாலும் கர்ப்பக் கிரகத்துக்கு வெளியேயே நீங்கள் நிற்கின்றீர்கள். ஏன் இப்படி நிற்கின்றீர்கள்? நீங்கள் தாழ்ந்தவர்கள், தீண்டப்படாதவர்கள்; அதற்கு மேல் போனால் கோயிலின் புனிதத்தன்மை கெட்டு விடும் என்பதை ஒத்துக் கொண்டே நிற்கின்றீர்கள். எனவே, நம் மக்களின் இழிவும், தீண்டாமையும் நீங்கவும் மக்கள் கோயிலுக்குப் போவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

-------- தந்தைபெரியார் அவர்கள் 22.7.73 அன்று பெரம்பலூர் வட்ட பகுத்தறிவாளர் கழக 2ஆம் ஆண்டு மாநாட்டில் ஆற்றிய உரை

தமிழனுக்குக் கடவுளே இல்லை

இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்குள் தோன்றியதுதான் இந்தக் கடவுள் சங்கதி. அதுவும் இந்தக் கடவுளை நமது ஆள் உண்டாக்கவில்லை. வெள்ளைக்காரன்தான் இந்தக் கடவுளையே உண்டாக்கியவன். அதைப் பார்ப்பான் ஒன்றுக்குப் பத்தாகப் பெருக்கி விட்டான். ஒரு கடவுள் பெயர் கூடத் தமிழ்ப் பெயரே கிடையாது. இங்கு இருக்கிற கடவுள்களின் பெயர்கள் எல்லாம் வடமொழிச் சொற்கள்தான். கடவுள் என்ற சொல்லே தமிழில் கிடையாது. தமிழனுக்குக் கடவுளே இல்லை. இன்றைக்கும் தமிழ்ச் சொல்லில் உள்ள ஒரு கடவுளும் கிடையாது.

வெள்ளைக்காரனும் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில்தான் கடவுளைக் கற்பித்தான். அந்தக் கடவுளுக்கு நிறம் மஞ்சள் வர்ணம் என்றும் சொன்னான். அந்தக் கடவுளைக் காட்டு மனிதன் சிங்காரித்தான். அதற்கு உடை என்னடா என்றால் புலித்தோல் என்றான். தலை எல்லாம் சடை. காது எல்லாம் பெரிய ஓட்டை. நகைகள் எல்லாம் பாம்புகள். குடி இருக்கிற இடமோ சுடுகாடு. கையில் இருக்கிற கருவிகளோ மண்டை ஓடுகள். இவை எல்லாம் மனிதனுக்கு இருக்கக் கூடிய யோக்கியதையா? இவை எல்லாம் காட்டுமிராண்டித்தனமான சின்னங்கள் அல்லவா?

வெள்ளைக்காரனைப் பார்த்துதான் பார்ப்பான் இங்குக் கடவுளை உண்டு பண்ணினான். வெள்ளைக்காரன் கடவுள் ஜுபிடர்; பார்ப்பான் அதற்கு கொடுத்த பெயர் இந்திரன். வெள்ளைக்காரன் - மைனாஸ்; பார்ப்பான் வைத்த பெயர் எமன். வெள்ளைக்காரன் - நெப்டியூன்; பார்ப்பான் - வருணன். வெள்ளைக்காரன் - லூனஸ்; பார்ப்பான் - சந்திரன். வெள்ளைக்காரன் - சைனேஸ்; பார்ப்பான் - வாயு. வெள்ளைக்காரன் - அப்பல்லோ; பார்ப்பான் - கிருஷ்ணன். வெள்ளைக்காரன் - மெர்குரி; பார்ப்பான் - நாரதன். வெள்ளைக் காரன் - மார்ஸ்; பார்ப்பான் - கந்தன். இப்படியாக வெள்ளைக்காரனைப் பார்த்து காப்பி அடித்தவன்தான் இந்தப் பார்ப்பான். அப்படிக் காப்பி அடித்த கடவுள்களுக்கும் கதைகள் எழுதி, புராணங்கள் எழுதி, பார்ப்பான் வயிறு வளர்க்க ஆரம்பித்து விட்டான். அதை அப்படியே தமிழன் நம்பி ஏற்றுக் கொண்டு விட்டான்.

அப்படி ஏற்றுக் கொண்ட கடவுள்களில் ஒன்றுதான் இந்த விநாயகன். விநாயகன் என்ற சொல்லே தமிழ் கிடையாது. கடவுளுக்கு நாட்டில் என்ன பொதுவாக இலக்கணம் சொல்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாது - கைக்குச் சிக்காது புத்திக்கும் எட்டாது என்கிறான். அப்படியானால் எப்படிக் கடவுளை நம்புவது என்று கேட்டால், நம்பு என்கிறான். நம்பு என்பதில்தான் கடவுளை வைத்து இருக்கிறான். கிறித்துவனும், துலுக்கனும் அதைத்தான் சொல்கிறான். கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு எப்படி உருவத்தை உண்டாக்கினான்? கருணையே வடிவானவர் என்கிறான். அவன் கையில் ஏன் சூலாயுதம்? வேலாயுதம்? அரிவாள், மண்வெட்டி, கோடாரிகள் எல்லாம்? இவை எல்லாம் கருணையின் சின்னங்களா? கொலைகாரப் பசங்களுக்கு இருக்க வேண்டிய கருவிகள் எல்லாம் கடவுளுக்கு எதற்கு? கடவுளுக்கு ஒழுக்கத்தையாவது நல்ல முறையில் கற்பித்து இருக்கிறானா? எந்தக் கடவுள் இன்னொருத்தனுடைய மனைவியை கெடுக்காமல் இருந்திருக்கிறான்? விபச்சாரம் செய்யாத கடவுள் ஒன்றாவது உண்டா? இருந்தால் சொல்லட்டுமே, ஏற்றுக் கொள்கிறேன். கடவுள் பிறப்பைப் பற்றி தான் எழுதி வைத்து இருக்கிறானே கொஞ்சமாவது யோக்கியம் வேண்டாமா? விநாயகன் பிறப்பு எவ்வளவு ஆபாசமானது!

இன்றைக்கு நாம் சூத்திரர்களாக இருக்கிறோம் என்றால், அது பார்ப்பானால் மட்டுமல்ல - நாமே அதை ஒத்துக் கொண்டு இருக்கிறோம். பார்ப்பான் நம்மைச் சூத்திரன் என்று சொல்லப் பயந்து விட்டான். ஆனால், நாமே நாம் இந்து என்று ஒப்புக் கொண்டு, கோயில்களுக்குச் செல்வதன் மூலமாகவும், நெற்றியில் சாம்பலைப் பூசிக் கொள்வதன் மூலமாகவும் சூத்திரன் என்பதை ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். இன்றைக்கு இருக்கிற அரசாங்கம் நமது அரசாங்கம் என்று பேர். என்னத்துக்காக இந்தப் பண்டிகைகளுக்கு எல்லாம் லீவு விட வேண்டும்? நம்மை இழி மகன் என்று முத்திரைக் குத்திக் கொள்ளவா? துணிச்சலாக இந்த லீவுகளை எல்லாம் கேன்சல் செய்ய வேண்டும். இந்த அரசாங்கங்கூட, இந்த இடிந்து போன கோயில்களை எல்லாம் பழுது பார்த்துப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறது. என்ன அர்த்தம்? நம்மை என்றென்றும் இழிமக்களாக்கச் செய்யும் முயற்சிதானே இது? வெட்கப்பட வேண்டாமா?

எங்களுடைய இயக்கம் இந்த நாட்டில் தோன்றிப் பாடுபடவில்லை என்றால், இந்தக் கடவுளைச் செருப்பாலடித்து, சாத்திரங்களைக் கொளுத்தி எரிக்கவில்லை என்றால், நமக்குப் படிப்பு ஏது? உத்தியோகம் ஏது? இன்றைக்கு நூற்றுக்கு நூறு தமிழனாக இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்களே! இது எப்படி வந்தது? நம்முடைய முயற்சியால் அல்லவா?

29.8.73 அன்று சிதம்பரத்தில் விநாயக சதுர்த்தி கண்டனப் பொதுக் கூட்டத்தில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரை

நீதி கெட்டது யாரால்? நூலை எழுதியது யார்?

1959 -நான் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன். 1958-இல்தான் அய்யாமீது அய்க்கோர்ட் அவமதிப்பு வழக்கும் அவர்கள் அளித்த வரலாற்றுப் பெருமை வாய்ந்த அறிக்கையும், உயர்நீதி மன்றத்தில் பல வழக்குகளிலும் பார்ப்பன நீதிபதிகளின் மனு தர்ம மனப்பான்மையுடன் ``ஒரு குலத்துக்கொரு நீதிப் பாங்குடன் தீர்ப்புத் தந்தவைகளையெல்லாம் தொகுத்து ஓர் கட்டுரையாக - ஆதாரப்பூர்வமாக எழுதி ``நீதி கெட்டது யாரால்? என்று தலைப்பிட்டு அய்யா அவர்களிடம் காட்டினேன். அதை மிகவும் கவனத்துடன் படித்த தந்தை பெரியார் அவர்கள் அதனைப் பாராட்டிவிட்டுச் சொன்னார்கள்.

``இது கொஞ்சம் கடுமையாக இருக்கிறது. ஆனால், விசயங்கள் மிகவும் சிறப்பானவை. விளைவுகள் இதற்கு ஏற்படலாம். நீங்களோ மாணவர். உங்களுக்குத் தொல்லை வரக்கூடாது என்று நான் கருதுவதால் இது என் பெயரிலேயே, நான் எழுதியதாக வெளியிட-லாம். அப்போது அதற்கு வெயிட்டும் அதிகம் ஏற்படும். சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் - கன்டெம்ப்ட் என்று என்னைச் சாரட்டும் - என்று கூறி அதை அவர்கள் எழுதுவதாகத் திருத்தம் செய்யச் சொன்னார்கள். அப்படியே சில சொற்கள் மாற்றம் உட்பட, செய்து எழுதினேன். விடுதலையில் தலையங்க அறிக்கையாக ``நீதி கெட்டது யாரால் என்ற தலைப்பில் வெளி வந்தது. அதனை வாசகர்கள் பலரும் பாராட்டினர்.

வேலூரில் ஒரு கழகப் பிரமுகர், அய்யாவுக்கு மிகவும் வேண்டியவர். அவரும் அவரது நண்பர்களும் அய்யா அவர்களிடம் சென்று இந்த அறிக்கைக்காக நேரில் பாராட்டுத் தெரிவித்தார்கள். (அவர் என்னைப்பற்றி எக்காரணத்தாலோ கொஞ்சம் வெறுப்பை வளர்த்துக் கொண்டவர் - அதுவும் அய்யா அறிந்ததே). அய்யா அவர்கள் சிரித்துக் கொண்டே, அவர்கள் புகழ்ந்து கூறி முடிக்கும் வரை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்து-விட்டு அதுபற்றி ஒரு செய்தி தெரியுமா உங்களுக்கெல்லாம், அவ்வறிக்கையை நான் எழுதவில்லை. அதை எழுதியது யார் தெரியுமா? வீரமணி.

அது கடுமையாக இருப்பதால் சட்டத்தின் விளைவிலிருந்து அவரை விடுவிக்க நானே என் பெயரைப் போட்டு வெளியிட்டு விட்டேன் என்றார். எதையும் ஒழிக்காத ஒளி அல்லவா அவர்.
இந்தத் தொண்டர் நாதனை தூய தலைவனைப் போல வேறு எங்கே பார்க்க முடியும்-?

------ தி.க.தலைவர் கி. வீரமணி
(விடுதலை பொன்விழா மலர், 1984)

19.2.08

சாதியை ஒழிப்பதென்பது மிகுதியும் சமதர்மமும் பொதுவுடைமைத் தன்மையும் கொண்டதாகும்.

ரொக்க சொத்துக்களும் பூமி சொத்துக்களும் அநேகமாய் பார்ப்பனர் முதலாகிய உயர்ந்த சாதிக்காரர்களிடமும் லேவா தேவிக்காரர்களிடமுமே போய்ச் சேரக் கூடியதாய் இருப்பதால், உயர்ந்த சாதிக்காரர்கள் என்பவர்களையும் கண் வைத்துக் கொள்ளை அடிக்கப் பட்டிருப்பதாகத் தென்படுகிறது.

ஆகவே, இவற்றிலிருந்து இந்த முறையை உயர்ந்த சாதித் தத்துவத்தையும், பணக்காரத் தத்துவத்தையும் அழிப்பதற்கே கையாளப்பட்டதாக, நன்றாய்த் தெரியவருகின்றது. உலகத்தில் பொதுவாக யாவருக்கும் ஒரு சமாதானமும் சாந்தி நிலையும் ஏற்பட வேண்டுமானால், இந்த முறையைத்தான் கடைசி முயற்சியாக ஏதாவதொரு காலத்தில் கையாளப்பட்டே தீரும் என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகமில்லை.

அன்றியும், இன்று இந்தியாவிற்கு வெளியில் உள்ள வேறு பல நேரங்களில் இம்முறைகள் தாராளமாகக் கையாளப்பட்டும் வருகின்ற விஷயமும் யாவரும் அறிந்ததேயாகும். மற்றும் பல நாடுகளில் விடுதலைக்கு இம்முறைகளையே கையாள முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இங்கிலாந்து முதலிய நமக்கு முக்கியமான நாடுகளில்கூட இம்முறைகளைப் புகுத்த ஒரு பக்கம் பிரச்சாரமும், மற்றொரு பக்கம் அதைத் தடுக்க முயற்சிகளும் நடந்து வருகின்றன. இவற்றின் உண்மைகள் எப்படி இருந்தாலும் கொஞ்ச காலத்திற்கு முன் இம்முறைகளைப் பாவம் என்றும், நரகம் கிடைக்கும் என்றும் மிரட்டி ஏய்த்துக் கொண்டிருந்ததெல்லாம் போய், இப்போது இது நாட்டுக்கு நல்லதா? தீமை விளைவிக்காதா? என்கின்றவை போன்ற தர்மஞானம் பேசுவதன் மூலம்தான் இம்முயற்சிகளை அடக்கப் பார்க்கிறார்களே ஒழிய, இது சட்ட விரோதம், பாவம், கடவுள் செயலுக்கு மாறுபட்டது என்கின்ற புரட்டுக்கள் எல்லாம் ஒருபக்கம் அடங்கிவிட்டன.

ஆனாலும் இந்தத் தர்ம சாஸ்திர ஞானமும் யாரால் பேசப்படுகின்றது என்று பார்ப்போமேயானல், பார்ப்பனராலும், பணக்காரராலும், அதிக நிலம் வைத்துக் கொண்டிருக்கும் பெரிய நிலச்சுவான்தார்களாலும் இவர்கள் தயவால் அரசாட்சி நடத்தும் அரசாங்கத்தாலுந்தானே தவிர, உண்மையில் சாதி ஆணவக் கொடுமையால் தாழ்த்தப்பட்டும், முதலாளிகள், லேவாதேவிக்காரர்கள் கொள்ளையால் கஷ்டப்படுத்தப்பட்டும், நிலச் சுவான்தாரர்கள் கொடுமையால் துன்பப்படுத்தப்பட்டும் பட்டினி கிடக்கும் ஏழை மக்களுக்கு இம்முறையைத் தவிர வேறு முறையில் தங்களுக்கு விடுதலை இல்லை என்கிற உணர்ச்சி பெருகிக் கொண்டேதான் இருக்கின்றதே தவிர, சிறிதும் குறைந்ததாக இல்லை.

அன்றியும், இம்முறையை நாமும் - அதாவது நம் நாட்டு மக்களும், அநேகமாய் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் இன்னும் கையாடிக் கொண்டுதான் வருகின்றோம். உதாரணமாக, இன்றையச் சமுதாயச் சீர்திருத்தக் கொள்கையோ, சாதி ஒழிப்புக் கொள்கையோ, சுயமரியாதைக் கொள்கையோ, சுயராஜ்யம் கேட்கும் கொள்கையோ, பூர்ண சுயேச்சைக் கொள்கையோ ஆகியவைகள் எல்லாம் இந்தச் சமதர்ம பொதுவுடைமைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டதேயாகும். அதாவது, இவையெல்லாம் பலத்தையும் கிளர்ச்சியையும் சண்டித்தனத்தையும் அடிப்படையாகக் கொண்டு கொடுக்க இஷ்டமில்லாதவனிடத்தில், இணங்க இஷ்டமில்லாதவனிடத்தில் தட்டிப்பிடுங்குவதோ, வலுகட்டாயமாகப் பறிப்பதோ ஆகிய குறியைக் கொண்டதேயாகும். அதிலும் சுயராஜ்யமோ, பூரண ரவிடுதலையோ கேட்பதைவிட - அடையக் கைக் கொண்டிருக்கும் இன்றைய முயற்சியைவிட, சாதியை ஒழிப்பதென்பது மிகுதியும் சமதர்மமும் பொதுவுடைமைத் தன்மையும் கொண்டதாகும்.
----------தந்தைபெரியார் "குடி அரசு" தலையங்கம் 4-1-1931

இராமாயணக் கதை தமிழனை இழிவுபடுத்துகிறது-

இராமன் தமிழன் அல்லன்; இராமன் நமிழ் நாட்டவனுமல்லன்; அவன் வடநாட்ட-வன்; இராமன் கொன்ற மன்னன் இராவணனோ-தென்னாட்டவன்.

இராமனிடம் தமிழர் பண்பு (குறள் பண்பு) என்பது சிறிதும் இருந்ததாக இல்லை; இராமன் மனைவியும் அதுபோலவே வடநாட்டவள்.

அவளிடம் தமிழ்ப்பெண் பண்பு இல்லவே இல்லை.
அதில் தமிழ்நாட்டு ஆண்களைக் குரங்கு, அரக்கன் என்று குறிப்பிட்டு இருக்கிறது.
தமிழ் நாட்டுப் பெண்களை அரக்கி என்று குறிக்கப்பட்டு இருக்கிறது.
இராமாயணப் போராட்டத்தில் ஒரு பார்ப்பனர்கூட சிக்க(கிடைக்க)வே இல்லை. போரில் ஒரு வடநாட்டானோ, ஆரியனோ, பார்ப்பானோ (தேவரோ) சிக்கவே இல்லை.
கொல்லப்பட்டவர்கள், செத்தவர்கள் எல்லோரும் தமிழ் நாட்டவர்களே ஆவார்கள்.
இராவணன், இராமன் மனைவியைக் கொண்டு போனதற்காக இலங்கைக்கு ஏன் நெருப்பு வைக்க வேண்டும்? இராமாயணக் கதை தமிழனை இழிவுபடுத்துவது தவிர, அதில் வேறு கருத்து இல்லை. தமிழ்நாட்டில் இராமாயணத்தையோ, இராமனையோ வைத்திருப்பதானது மனித சுயமரியாதைக்கும், இன சுயமரியாதைக்கும், தமிழ் நாட்டுச் சுயமரியாதைக்கும் மிகமிகக் கேடும், இழிவுமானதாகும்.

இராமாயண இராமன், சீதை ஆகியவர்-களைப் பொறுத்தவரைக்கும் கடுகளவாவது கடவுள் தன்மை என்பது காணப்படவில்லை. நாடு சுதந்திரம் பெற்றவுடன் நாட்டிலுள்ள இடங்களுக்கும், பல ஸ்தானங்களுக்கும் வெள்-ளையர் பெயர்களை மாற்றி இந்நாட்டவர் பெயர்களை வைத்தது போலும்;
வெள்ளையர் உருவங்களைப் பெயர்த்து அப்புறப்படுத்தியிருப்பது போலும்;
தமிழன் சுயமரியாதை உணர்ச்சி பெற்ற பிறகு, தமிழர்களை இழிவுபடுத்திக் கீழ்சாதி மக்களாக்கிய ஆரியச் சின்னங்களையும், ஆரியக் கடவுள்கள் என்பதான உருவங்-களையும் அழித்து ஒழிக்க வேண்டியது சுத்த இரத்த ஓட்டமுள்ள தமிழன் கடமையாகும்.

--------- தந்தைபெரியார் -- "விடுதலை" அறிக்கை-29.7.1956

இராமாயணம் புனைந்ததன் இலட்சியம்

இந்நாளில் வெளியிடப்படும் வால்மீகி இராமாயணங்களின் புதிய பதிப்புகளில் மாறுதல்கள் செய்துகொண்டு வருகிறார்கள். உண்மையை மறைத்து விடுகிறார்கள். இராமாயணத்தின் உட்கருத்து என்ன? ஆரியர்-கள் தமக்கு உரிமையில்லாத நாட்டில் தாம் வாழ்வதற்கு வழிதேட முயன்றதைப்போலவே இராமாயணம் அமைந்திருக்கிறது; பார்ப்பனர்-ஆரியர்கள் மானம் அவமானத்துக்கு கவலைப்-படுவதாகவோ, நேர்மை, ஒழுக்கம், நீதியுடைய மக்களாகவோ இராமாயணத்தில் சுட்டிக்காட்-டப்பெறவில்லை. மானத்தை விற்றேனும் உயிரைக் காப்பாற்ற வேண்டும்; வாழ்க்கை நடத்தவேண்டும் என்றே பார்ப்பனரைச் சிந்தரித்து எழுதிவைத்துள்ளனர். இராவண-னைக் கொல்ல வேண்டுமானால், அவனைச் சீதைமூலம் சுவாதினப்படுத்த வேண்டும்; சீதையைக் கெடுத்தவன் என்ற காரணத்தைக் காட்டி அவனைத் தொலைக்க வழி வகுக்-கலாம் என்று முன் கூட்டியே தீர்மானித்-திருப்பதாகத் தெரிகிறது. இராமன் ஒரு பேடியே. நேர்மை, ஒழுக்கம் இவற்றால் காரியம் சாதிக்க வழி கிடையாது என்பது அவர்கள் கருத்து. பேடித்தனமாக, சூதாக-மறைந்து நின்றே இராமன் தாடகையைக் கொன்றிருக்கிறான். வாலியையும் மறைந்திருந்தே-மரத்தின் மறைவில் ஒளிந்திருந்தே கொன்றிருக்கிறான். இராவண-னையும் அப்படித்தான்; இராவணனுடைய அந்தரங்க விஷயங்களையும் (மறைபொருளையும்) இன்னும் பிற செய்திகளையும் விபீஷணன் மூலம் அறிந்து கொண்ட பிறகே, இராவணன் தம்பியான விபீஷணனுக்கு இலஞ்சத்தைக் (நாட்டாட்சி) கொடுத்தே-இராவணனைக் கொன்றிருக்கிறான். இராமனுக்கும், இராவணனுக்கும் நடந்த போர் நேருக்கு நேர் நின்று சட்டையிட்ட போர் என்பதற்கில்லை. பார்ப்பனர் ஏமாற்று வாழ்வு, தங்கள் நன்மைக்காக ஒழுக்கக் கேடான காரியங்களைச் செய்துகொள்ளலாம். சுயநல வாழ்வுக்கு வேண்டிய புரட்டுகளை-பித்தலாட்டங்களை ஒரு மார்க்கமாக அமைந்துக் கொள்ளலாம் என்பதே அவர்களது குறிக்கோள். அதற்காகவே கடவுள்களைப் படைத்து, அவைகளுக்குப் பல அவதாரங்கள் உண்டு என்று புளுகித் தாம் வழுதியவற்றைப் பண்ணிய சரித்திரம் எனச்-சொல்லித் தமிழர்களை ஏமாற்றி வாழ்ந்து வருகின்றனர். வேத சாஸ்திர இதிகாசம் அனைத்தும் இயற்கைக்கு மாறானவை. அவற்றை எல்லாம் சிந்தத்துப் பார்ப்பதும்-பகுத்தறி-வைக் கொண்டு ஆராய்வதும் மதத்துக்கே விரோதம், வகுப்புத் துவேஷம், நாத்திகம் என்று நம்மேல் பழி சுமத்துவார்கள்.

34 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னோம். திருப்பூரில் 1922ல் காங்கிரஸ் மாநாடு நடந்தது; வாசுதேவ அய்யர் தலைமை தாங்கினார். நான் அப்போது தான் தமிழ்நாடு காங்கிரசின் தலைவனாக ஆக்கப்பட்டேன். அதுவரை தமிழ்நாடு காங்கிரசின் காரியதரிசியாக இருந்தேன். அம்மாநாட்டில் நான் ஒரு தீர்மானம் கொண்டுசென்றேன். இந்து மதத்திலே சாதி வேற்றுமையும், தீண்டாமையும் இடம் பெறுகின்றன. அத்தீர்மானத்தைப் பல வகையில் பார்ப்பனர்கள் தடைசெய்ய முயற்சி செய்தார்கள். இந்து மதத்தில் சாதி இடம் பெறுவதாக ஒப்புக் கொள்ளவில்லை. இராமாணத்தில் பல இடங்களில் சாதி குறிப்பிடப்படுகிறது. சூத்திரன் தவம் செய்ததற்காகக் கொல்லப்-படுகிறான். பார்ப்பான் என்று 1000 இடங்-களுக்கு மேல் இராமாயணத்தில் வருகிறது.

-----தந்தைபெரியார் அங்கேரிபாளையத்தில், 11.8.19576-ல் சொற்பொழிவு விடுதலை-17.8.1956

இராமாயணத்தில் அவரவர் சாதி-களையும், பிரிவுகளையும் தானே நிலை-நாட்டுகிறது. ஒரு இடத்தில் அனுமார், இராமன் காலில் விழுகிறான். இராமன் அனுமாரைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு மன்னிப்புக் கேட்கிறான். நீயோ ஒரு பிராமணன், நான் ஷத்ரியன், என் காலில் வந்து விழலாமா? இந்தப் பாவத்தை நான் எங்கே போய்த் தீர்ப்பேன் என்று கூறுகிறான். இராமன் அயோத்தியிலிருந்து காட்டுக்குப் புறப்படும் சமயம், என் பணத்-தையும், சொத்துக்களையும், என்னிடத்-தில் இப்போதிரு-க்கும் மாடுகளையும் கொண்டு-வாருங்கள். முழுவதையும் பிராமணருக்குக் கொடுத்து விடுகிறேன் என்பதாகச் சொல்லு-கிறான். சீதை, என் நகைகள் முழுவதையும் கொண்டுவாருங்-கள். பிராமணனுக்குக் கொடுத்து-விட்டுப் போனால் புண்ணியம் என்பதாகச் சொல்-கிறாள். சூர்ப்பனகை, என்னைத் திருமணம் செய்துகொள் என்று கேட்கும்-போது, நீ ஒரு சாதி, நான் சாதி, எப்படித் திருணம; செய்து கொள்வது? என்கிறான். ஒரு இடத்தில் தாடகை மகனை இலட்சுமணன் கொன்று-விட்டு, இந்தப் பாவத்திற்கு என்ன செய்வேன் என்று வருத்தப்பட்டுக் கொள்-கிறான். அதற்கு இராமன் சூத்திரனைத்தானே கொன்றாய், அதனால் பாவமில்லை. கவலையை விடு என்று கூறுகிறான். சம்புகன் ஒரு சூத்திரன். அவன் தவம் செய்ய உரிமை-யில்லை என்று கூறி அவனைக் கண்டங்-கண்டமாக வெட்டி விடுகிறான். இப்படி எங்கு பார்த்தாலும், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வருணாசிரம தர்மம் தாண்டவமாடுகிறது. இப்படி இருக்கும் இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்பதில் என்ன தப்பு, ஓட்டு கேட்க இதைக் காட்டி உங்களை ஏமாற்றுகி-றோமா? இதைச் செய்து யாராவது வயிறு வளர்க்கிறோமா?

------ தந்தைபெரியார் மேலகற்கண்டார் கோட்டையில் சொற்பொழிவு-விடுதலை 13-9-1956

இவர்தான் பெரியார்

( தந்தைபெரியார் அவர்கள் தன்னிலை விளக்கமாக தன்னைப்பற்றி அவ்வப்போது கூறியவைகளை கீழே கொடுத்துள்ளோம்.)

நான் யார்?

எனது குடும்பம் ஒரு வைதீகக் குடும்ப-மாகும்; குடும்பத்தில் எவ்வளவோ கோயில் கட்டுதல், சத்திரம் கட்டுதல், அன்னதானம் செய்தல் முதலிய பல காரியங்கள் செய்திருப்-பதோடு, இந்தத் தர்மங்களுக்குச் சொத்துக்-களும் எழுதி வைத்திருக்கிறார்கள் என்றபோதிலும், அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த நான் இன்று பல மக்களால் ஒரு புரட்சிக்காரனென்றும், தீவிரக் கிளர்ச்சி செய்கிறவன் என்றும் சொல்லப்படுகிறேன். காரணம் என்னவென்றால், நம்முடைய கீழ்மை நிலைமைக்குக் காரணமாய் இருக்கும் அடிப்-படையில் நான் கை வைப்பதால்தான். அது என்னவெனில், எவ்வளவு காலத்திற்கு நாம் இந்து மதத்தையும், இந்துக் கடவுள்களையும், இந்து சாஸ்திரம், புராணம் வேதம், இதிகாசம் முதலியவகைளயும் நம்பிப் பின்பற்றிக் கொண்டு இருக்கிறோமோ, அதுவரையில் - நாம் தாழ்த்தப்பட்டவர்களாகவும், பிற்படுத்தப்-பட்டர்களாகவும், சம உரிமைக்கு அருகதை அற்றவர்களாகவும் இருப்பதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியவே முடியாது. அம்மாதிரி, அவைகளில் இருந்து வெளி-யேறாமல், அவைகளை நம்பிப் பின்பற்றி நடந்து வந்தவர்களில் ஒருவராவது - அவர்கள் வேறு வழிகளில் எவ்வளவு முயற்சித்-தவர்களாய் இருந்தாலும், எவ்வளவு பெரியவர்களாகி இருந்தாலும் - அவர்களுக்கு ஏற்பட்ட இழிவிலிருந்து தப்பித்துக் கொண்ட-வர்கள் எவருமே இலர் என்பதை ஒவ்வொரு சீர்திருத்தவாதி என்பவனும் நன்றாக உணரவேண்டும் என்று சொல்லி வருகிறேன்.

(கான்பூரில் 29, 30, 31.12.1944இல் சொற்பொழிவு, குடிஅரசு, 13.1.1945)

நான் எப்படி?

நான் ஒரு சுதந்திர மனிதன்; எனக்குச் சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம் உணர்ச்சி ஆகியவை-களால் பரிசீலனை செய்து, ஒப்புக்கூடிய-வைகளை ஒப்பி, தள்ளக் கூடியவைகளைத் தள்ளிவிடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரிலேதான் எதையும் தெரிவிக்கிறேன். எப்படிப்பட்ட பழமை விரும்பிகளாலும் இதற்கு இடம் கொடுக்க வில்லையானால் அது நியாயமும் ஒழுங்குமாகாது.

(திருப்பூரில் சொற்பொழிவு, புரட்சி, 17.12.1933)

நான் சொல்வது கட்டளையா?

நான் சொல்வன எல்லாம் எனது சொந்த அபிப்பிராயங்கள்தாம் என்று சொல்வதோடு, நான் ஒரு சாதாரண மனிதன்தான். நான் எவ்விதத் தன்மையும் பொருந்திய ஒரு தீர்க்கதரிசியல்லன். ஆகையால், தனி மனிதன் என்கின்ற முறையில்தான் என்னுடைய அபிப்பிராயங்களையும் - நான் பார்த்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவத்தில் அறிந்தது-மானவைகளைத்தான் - அதிலும் எனக்குச் சரி என்று பட்டதைத்தான் உரைக்கின்றேன். ஒரு பெரியார் உரைத்துவிட்டார் என நீங்கள் கருதி அப்படியே அவைகளைக் கேட்டு நம்பிவிடு-வீர்களானால், அப்பொழுது - நீங்கள் யாவரும் அடிமைகளே! நான் உரைப்பதை நீங்கள் நம்பாவிட்டால், பாவம் என்றாவது, தோஷம் என்றாவது அல்லது நரகத்துக்குத்-தான் போவீர்கள் என்றாவது சொல்லிப் பயமுறுத்தவில்லை. யார் உரைப்பதையும் நாம் கேட்டு, வேத வாக்கு என அப்படியே நம்பிவிட்டதனால்தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கின்றோம்.
ஆகவே, நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள்! உங்களுக்கு அவைகள் உண்மை-யென்று தோன்றினால் அவைகளை ஒப்புக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள். உண்மையெனப் புலப்படுமாகில், அவைகளை உண்மையென ஒப்புக் கொள்வ-தில் மட்டும் பிரயோசனம் இல்லை; அவைகளை அனுஷ்டானத்தில் கொண்டு வந்து அதன்படி நடக்க முயற்சியுங்கள். எனது சொநத் அனுபவங்களை நானறிந்து உங்களுக்கு உரைப்பதுதான் என்னுடைய விடுதலை. அவைகளை ஆராய்ந்து அறிவது, அதன்படி நடப்பதுதான் உங்கள் விடுதலை.

(விடுதலை, கட்டுரை 8.10.1951)

பெரியார் பார்வையில். ......... .....

கற்பனை:

மோட்சமும் நரகமும் மோசக்காரர்கள்
கற்பனை
மறுஜெனமம் என்பது மயக்கத்தின் கற்பனை
நிலைமைக்குத் தக்கப்படியே நீதியும் ஒழுக்கமும்;
காலத்துக்குத் தக்கபடி கடவுள்கள் கற்பிக்கப்படுகின்றனர்
- விடுதலை 21.1.1961

கடவுள்

கடவுள் கண்டுபிடிக்கப்பட்டது மல்ல;
தானாகத் தோன்றியிருப்பதுமல்ல;
அது முட்டாளால் உண்டாக்கப்பட்டது.

நூல்: பெரியார் சிந்தனைகள் பக் 1301

நம்பிக்கை

கையாலாகாதவனுக்குக் கடவுள் துணை
அறிவில்லாதவனுக்கு ஆண்டவன் செயல்
தவற்றை உணர முடியாதவனுக்குத் தலைவிதி

- `குடியரசு 13.12.1931

பேதம் ஒழிய:

கடவுள் ஒழிந்தால் பார்ப்பான் ஒழிவான்
பார்ப்பான் ஒழிந்தால் மதம் ஒழியும்
மதம் ஒழிந்தால் சாதி ஒழியும்
சாதி ஒழிந்தால் மக்களிடையே இருக்கிற பேதம் ஒழியும்.

`விடுதலை 31.3.70

அறிவு உள்ளவனுக்கு:

அறிவு இருப்பவர்களுக்கு மதம் கிடையாது!
அறிவு இருப்பவர்களுக்கு கடவுள் கிடையாது!
அறிவு உள்ளவனுக்குச் சாதி கிடையாது!

`விடுதலை 1.4.66

பார்ப்பானின் ஆயுதம்:

பார்ப்பானுடைய ஆயுதம் கடவுள்
இன்னொரு ஆயுதம் மதம்
இன்னொரு ஆயுதம் சாத்திரம்
இன்னொரு ஆயுதம் சாதி

- `விடுதலை 4.10.1961

சமபங்கு - சம அனுபவம்

பொதுவுடைமை வேறு
பொதுவுடமை என்பது சம பங்கு என்பதாகும்
பொதுவுரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்

- `குடியரசு 25.3.1944

பண்டிகை:

என் புத்திக்குட்பட்ட வரையில் இந்தப் பண்டிகை, உற்சவம், முதலியவைகள் எல்லாம் புரோகிதர்களான பார்ப்பனர்களும், ஆட்சிக்காரர்களான அரசர்களும் கலந்து கண்டுபிடித்துச் செய்த தந்திரமென்பதே எனது அபிப்பிராயம்.

- `குடியரசு 20.10.1929

கவர்னர் பதவி

கவர்னர் பதவி என்பதே சில ஆடுகளுக்குக் கழுத்தில் தொங்கும் ஒன்றரை அங்குல நீளமுள்ள இரண்டு சதைத் துண்டுகள் போல் எதற்கும் பயன்படாத ஒரு வேலையாகும். மற்றும் சொல்லப்பட வேண்டுமானால் கவர்னர்கள் என்பவர் கள் சனநாயகத்தைப் பொறுத்தவரை, அனாமதேயப் பேர் வழிகளேயாவார்கள். சற்று ஏறக்குறைய இராட்டிரபதி பதவியையும் இதற்கே ஒப்பிடலாம். இந்தக் கவர்னர்கள், இராட்டிரபதிகள் பதவிகள் வெள்ளை யானையைக் கட்டிக் காப்பதுபோல், ஒரு அரசாங்கத்துக்கு வீண் பளுவேயாகும்.
- `விடுதலை 31.12.1965

ஊராட்சிமன்றம்

ஊராட்சி மன்றம் என்பது ரோடு போடுதல், விளக்கு போடுதல், வீதி கூட்டுதல் போன்ற காரியங்களைச் செய்ய ஏற்பட்டதென்றால், அதை இதன் நிர்வாகியே செய்துவிட்டுப் போகலாமே. அதற்கு மக்கள் பிரதிநிதிகள் தேவையில்லையே. பின் ஏன் என்றால் சமுதாயத்தில் மக்களிடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகளை அகற்றவும், பொது அறிவைப் பெருக்க வும், மூடநம்பிக்கைகளான பழக்க வழக்கங்களை ஒழிக்கவுமே யாகும்.
- `விடுதலை 31.12.1964

துணிந்து தொண்டு செய்ய:

உங்கள் மனத்தை நீங்கள் பரிசுத்தமாக வைத்துக் கொண்டு தைரியமாகப் பேச வேண்டும். பொது வாழ்வில் மானத்தைப் பார்க்காதீர்கள். எவ்வளவு தூரம் உணர்ச்சியோடு உறுதியோடு உங்கள் மனமறிய நீங்கள் குற்றமற்றவர்களாக நல்ல ஒழுக்க முள்ளவர்களாக இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு துணிந்து தொண்டாற்ற முடியும்.

- `குடிஅரசு 30.9.1944

பகுத்தறிவாளர்கள்

பகுத்தறிவாளர்கள் ஒரு குடும்பம் போன்று பழக வேண்டும். சுயநல உணர்ச்சி அற்றவர்களாகக் குற்றம் அற்றவர்களாகக், கூடுமான வரைக்கும் மற்றவர்களுக்குப் பயன்படக் கூடியவர்களாக இருக்க வேண்டும். மக்களிடம் உண்மையாகவே அன்பு காட்ட வேண்டும். பகுத்தறிவு என்பது ஒரு பெரிய உன்னதமான உயரிய தத்துவமாகும்.

- `விடுதலை 30.1.1973

அடிமைத்தத்துவம் ஒழிய:

உலகில் மனிதவர்க்கத்திற்கு அடிமைத்தத்துவம் ஒழிய வேண்டுமானால் பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும் கொடுமையும் ஒழிய வேண்டும். இது ஒழிந்த நிலையே சமத்துவம் சுதந்திரம் என்னும் முளை முளைக்கும் இடம்.

- `குடிஅரசு 22.8.1926

பெண் விடுதலைக்கு

உண்மையாகப் பெண்கள் விடுதலை வேண்டுமானால், ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்ப்பந்தக் கற்புமுறை ஒழிந்து இரு பிறப்பிற்கும் சமமான சுயேச்சைக் கற்பு முறை ஏற்பட வேண்டும். கற்புக்காக பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான நிர்ப்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும்.
கற்புக்காக புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்கிற வேண்டும் என்கின்ற கொடுமையான மதங்கள் சட்டங்கள் மாய வேண்டும்.
கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு, காதலும், அன்பும் இல்லாத வனுடன் இருக்க வேண்டும் என்கின்ற சமூகக் கொடுமையும் அழிய வேண்டும்.

- குடியரசு 8.11.1928

பெண் உரிமை

வன்மை, கோபம், ஆளும் திறம் ஆண்களுக்குச் சொந்த மென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது வீரம், வன்மை, கோபம் ஆளுந்திறம் புலிக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை. நாம் வேண்டும் பெண்ணுரிமை என்பது என்னவெனில் ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண் மக்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும்.

- குடியரசு 12.2.1928

புதுமை-பகுத்தறிவு பெயர் சூட்டவேண்டும்

நம்மைப் பொறுத்தவரையில் தமிழர்-களைப் பொறுத்தவரையில் நம்முடைய பெயர்கள் என்பவைகள் எப்படி இருந்து வந்தன என்றால், மதச்சார்பு அற்றதாக, மதத்திற்கு ஏற்பட்டு வெறும் பெயமுட்டுக் குறிச்சொல் என்கிற முறையிலே தான் இருந்து வந்திருக்கின்றன. மத சம்பிரதாயத்தின் அடிப்-படையிலே தமிழர்களுக்குப் பெயர் இருந்த-தில்லை; தமிழ்ப் பெயர்களைப் பார்த்தால் இது நன்றாகத் தெரியவரும். இன்னும் சொல்லப்-போனால், தமிழர்களின் நூல்களில்-2000, 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நூல்களில் மதம் இருக்காது. அது போலவே தமிழர்களின் சரித்திரப் பெயர்களை எடுத்துப் பார்த்தாலும் அதிலே மத-கடவுள் சார்புப் பெயர்கள் இல்லை. சேர, சோழ, பாண்டியர்கள் என்பவர்களிலும் முற்-பட்ட மூவேந்தர்களிலும் மதப் பெயர்கள் இல்லை.

நாளாக ஆக, மத ஆதிக்கம் வந்து குவிந்து விட்டது. மத, புராண, கடவுள் சம்பந்தமான காரியங்களுக்குச் செல்வாக்கு ஏற்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் இந்துமத ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்கிற தன்மையில் இந்தப்படியான மதப் பெயர்-களைப் புகுத்திவிட்டார்கள்.

அதுவும் குறைந்தது இந்த 50 ஆண்டு காலத்துக்குள்ளாக ரொம்பவும் புகுந்து விட்டது. அதுவும் இந்து மத சம்பந்தமான பெயர்கள் அதிகமாக ஏராளமாக புகுந்த-தெல்லாம் பெண்களிடத்தில் தான் ஆகும். எந்தப் பெண்களுக்கும் கடவுள் பெயர் மத சம்பந்த-மான பெயர் என்று வந்து புகுந்து-விட்டது.

இந்தப்படியாக, மனித நபரைக் குறிக்கும் குறியீட்டுச் சொல் என்பது மதப் பெயர்களைக் கொண்டதாக ஏன் ஆகிவிட்டது என்றால், மதத்திற்கு-மத ஆதிக்கம் வளர்வதற்கு இதை-இந்தப்படியான பெயர் சூட்டுவது என்பதை ஒரு பிரச்சார சாதனமாக வைத்துக்-கொண்டார்கள்.
நீங்கள் சாதாரணமாகப் பார்த்திருக்கலாம், இந்தப் பெயர் சூட்டுவது என்பதிலே கூட இந்து மதத்தின் வர்ணாசிரம முறை இருந்து வந்திருக்-கிறது. அழகான பெயர்கள் எல்லாம் மேல் சாதிக்காரர்கள் என்பவர்கள் வைத்துக் கொள்ளு-வதும் அதாவது, மேல் சாதித் தன்மை-யைக் குறிக்கும் கடவுள் மத சம்பந்தமான பெயர்களை மேல் சாதிக்காரர்கள் என்பவர்கள் வைத்துக் கொள்ளுவது என்றும், அந்த மேல்சாதித் தன்மையைக் குறிக்கும் பெயர்களை கீழ் சாதி மக்கள் என்போர்-அதாவது சூத்திரர், பஞ்சமர் எனப்படுவோர்கள் மேல்சாதிக்கு உரிய பெயர்களை வைத்துக்கொள்ளக்கூடாது-வைத்துக் கொள்வது பாவம் என்றும் கருதப்-பட்டு வந்தது. சாதாரணமாக இராமன், கிருஷ்ணன், லட்சுமி, சரசுவதி, பார்வதி என்கிற பெயர்களை மேல்சாதிக்காரர்கள் பெயரா
கவும், கருப்பன், மூக்கன், வீரன், காட்டேரி, பாலாயி, கருப்பாயி என்பது போன்ற பெயர்-கள் கீழ்சாதி மக்கள் வைத்துக்கொள்ள வேண்டிய பெயர்கள் என்பவைகளாகவும் இருந்து வந்திருக்கின்றன.

வர வர மதத்திற்கும், மதத்தன்மைக்கும் எதிர்ப்பும், தங்களுடைய இழிவையும் பற்றிய மான உணர்ச்சியும், மக்களுக்கு ஏற்பட-ஏற்பட, இந்தப்படியான எதிர்ப்பை ஒழிப்பது என்கிற முறையில், எல்லோரும் எல்லாப்பெயர்-களையும் வைத்துக்கொள்ளலாம் என்கிறதான நிலைமை வந்தது.

சாதாரணமாக, இந்த இழிசாதி மக்கள் என்பவர்களின் பெயர்களுக்குக் கடைசியில் சாமி, அப்பன் என்ற சொற்கள் வரக்கூடாது. ஏனென்றால், மேல்சாதிக்காரர்கள் என்பவர்கள் பெயர் சொல்லிக் கூப்ழடும் போது இழிசாகு மகனை சாமி என்றும், அப்பன் என்றும் கூப்பிட வேண்டியிருக்காது என்பதால், அது மேல்சாதிக்காரர்களின் அந்தஸ்துக்கு மட்டம் என்பதால், அந்தப்படியான பெயர்களை இழிசாதி மக்கள் வைத்துக் கொள்ளக்கூடாது; அப்படியே வைத்துக்கொண்டாலும்அந்த சாமி அப்பன் என்ற சொல்லை விட்டுவிட்டு, மேல்சாதிக்காரர்கள் ராமா, கந்தா என்று தான் அழைப்பார்கள். இப்படியாகப் பெயர்கள் என்பவைகள் கடவுளின் பேராலும், மத சாத்திர சம்பிரதாயத்தின் பேராலும், அவை வகுத்த வர்ணாசிரம மேல்-கீழ் சாதிமுறை பிரகாரமே வழங்கி வந்து, மேற்கண்டவை-களுக்கு இவைகள் ஒரு பாதுகாப்பாகவும், ஆதாரமாகவும், அஸ்திவாரமாகவும் நின்று நிலவி வருகின்றன.
இன்னும் பல பெயர்களைப் பார்த்தால் மிக ஆபாசமாக இருக்கும். வைக்கப்படுகிற பெயர் கடவுள் பெயராக இருக்கிறதா என்று தான் கவனிப்பார்களே தவிர, அப்படி வைக்கப்-பட்டிருக்கிற பெயர்களுக்கு என்ன அர்த்தம்? அது மிக ஆபாசமான அர்த்தமுடை-யதாக இருக்கிறதே என்ற கவலைப்பட மாட்டார்கள்.

சாதாரணமாக, ஆதிகேசவலு, குஞ்சதபாதம், குஜலாம்பாள், துரோபதை என்கிறதாக-வெல்லாம், பெயர் வைக்கின்றார்களே! அந்தப் பெயர்களின் பொருளை விரித்துப் பார்த்தால் அதில் எவ்வளவு பாசமும், அறிவற்றதுமான காரியங்கள் இருக்கின்றன!.
இப்படியாக மத, சாத்திர, கடவுள் அடிப்படையிலேயே வளர்ந்து வந்த பெயர்-முறைகள் இன்று கொஞ்சம் மறையத் தொடங்-கியிருக்கின்றன. மக்கள் சமுதாயத்துக்கு மான உணர்ச்சியும், இந்தக் கடவுள், மத சாத்திரங்கள் எனபவைகளின் பேரால் தாங்கள் அழுத்தப்-பட்டும், அடிமைப்படுத்தப்பட்டும், இசூஷீட்தி மக்களாக்கப்பட்டும் இருக்கிறதை, கடவுள், மத, சாத்திரத் துறையிலே இழிசாதி மக்கள், பொருளாதாரத் துறையிலே ஏழைமக்கழ் அறிவுத் துறையிலே கீழ் மக்கள் என்பதாக இருக்கிற நிலைமையை உணர்ந்து, மக்கள் தங்கள் இழிவையும், ஏழ்மையையும், அடிமை-யையும் ஒழிக்க வேண்டும்; இவைகளிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்கிற மான உணர்ச்சி, பகுத்தறிவு உணர்ச்சி ஏற்பட்டு வருவதால், இந்தப்படியான தங்கள் இழிவு-க்கும், ஏழ்மைக்கும், கீழ்நிலைக்கும் காரணமாக எந்தெந்த அமைப்பு முறைகள் இருக்கின்றன-வோ அந்த அமைப்பு முறைகளை மாற்ற வேண்டும்-ஒழிக்க வேண்டும் என்கிற தன்மையில் தான் திருமணத்-துறை, சாதித்துறை, கிரகப் பிரவேசம் என்கிற புதுமனை புகுவிழா சங்கதி, திருவிழாத்துறை, சங்கீத இலக்கியத்துறை எல்லாத் துறை-களிலும் மாற்றம் ஏற்படுத்தும் முயற்சி-கிளர்ச்சி நடத்து-வது போல, இந்தப் பெயர்த்துறையிலம் இது-மாதிரியான மாறுதல் உணர்ச்சியோடு காரியம் நடத்ததப்படுகின்றது.

சாதாரணமாக குழந்தைகள் பிறக்கும் போதிலிருந்தே இந்த மாதிரி பெயர் வைத்து-விட்டால் நல்லது. அதுவே பழக்கத்தில் வந்து விடும். இப்போது என் பெயரையே எடுத்துக்-கொள்ளுங்களேன். இது இந்து மதம் என்கிற-தன் சார்புப் பெயர்தான். இவைகளை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகிற எனக்கே இந்தப் பெயர் இருக்கிறது. இந்தப் பெயர் கூடாதுதான்-ஆனால் இந்தப் பெயராலேயே 73 வருடம் இதையே என்னைக் குறிக்கும் குறியீடாகக் கொண்டு வந்தாகி விட்டது. அதுமட்டு-மல்லாமல்; இந்தப் பெயர் என்பது மிகவும் விளம்-பரமாகிவிட்டது; யார் ராமசாமியா! அட!. அது தான் இந்த ஆள்! என்கிற மாதிரி ஒரு முக்கியமானதாகிவிட்டது. இனி பெயரை மாற்றுவது என்றால், இனி ஏற்படுத்துகிற புதுப்பெயர் என்பது இந்தப் பெயர் அளவில் என்னைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாக இருக்க முடியாது. புதுப் பெயரால்-பெயர் வைக்கிற தத்துவத்தின்படி. இன்னாருக்கு இந்தப் பெயர் என்ற புரிந்து கொள்ளுகின்ற மாதிரியில் முடியாது. ஆகவேதான், சொல்கிறேன். குழந்தையாய் இருக்கும் போதே புதுமைப் பெயர், பகுத்தறிவு சான்ற பெயர் சூட்டவேண்டும் என்று இனி வருங்கால சந்ததிகளை உலகத்துக்கு அறிமுகப்படுத்துவதே புதுமை-யான பகுத்தறிவான பெயராக ஆரிய மத, சாத்திர, கடவுள் தன்மை கொண்ட பெயர் அற்றதான மாதிரியில் வைக்கவேண்டும் என்று கூறிக்கொண்டு, இந்தக் குழந்தைக்கு இன்ப நிலா என்று பெயர் சூட்டுகிறேன்.

(15.03.1953) அன்று உளுந்தூர்பேட்டை பெயர் சூட்டு விழாவில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரை. 23.3.1953 விடுதலை இதழிலிருந்து வெளியானது)

சாதி ஒழிய வேண்டுமா? வேண்டாமா?

இன்றைய இலட்சியம், முயற்சியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சாதி ஒழியவேண்டும் என்பது ஒரு சாதாரண சங்கதி. ஆனால் அது பிரமாதமான செயலாகக் காணப்படுகிறது. பிறவியில் யாவரும் தாழ்ந்தவர்கள் அல்ல; எங்களுக்கு மேல் எவனும் இல்லை; எல்லோரும் சமம் என்ற நிலை நமக்குத்தான் அவசியமாகத் தோன்றுகிறது.
ஒருவன் மேல்சாதி; ஒருவன் கீழ்சாதி; ஒருவன் பாடுபட்டே சாப்பிட வேண்டும்; ஒருவன் பாடுபடாமல் உட்கார்ந்து கொண்டு சாப்பிடவேண்டும் என்கிற பிரிவுகள் அப்படியே இருக்க வேண்டுமா?

இதைக் காப்பாற்றிக் கொடுப்பதுதான் அரசாங்கம். இதை ஒழிக்க வேண்டும். எல்லாச் சாதியும் ஒரு சாதிதான் என்கிறோம். நாம் இந்த ஒரு காரியம்தான் இவ்வளவு பெரிய கிளர்ச்-சியை உண்டாக்கி விட்டது.

இது கிளர்ச்சிக்கு உரிய காரியமா? மற்ற நாட்டில் இதுபோல் சொன்னாலே சிரிப்பான். ஏன்? பிறவியில் என்ன பிரிவு இருக்கிறது என்பான்.

நான் ஏன் சூத்திரன்? நான் ஏன் வைப்-பாட்டி மகன்? நான் ஏன் கீழ்சாதி? இதற்குப் பரிகாரம் வேண்டும் என்றால் குத்துகிறேன் என்றான்; வெட்டுகிறேன் என்றான் என்றால் குத்தாமல் வெட்டாமல் இருக்கிறதுதான் தப்பு என்றுதானே எண்ண வேண்டியுள்ளது? குத்தினால் என்ன செய்வாய்?

முதுகுளத்தூரில் நூறுபேரைக் கொன்று இரண்டாயிரம் வீட்டைக் கொளுத்தினானே என்ன செய்தாய்? என்ன செய்ய முடிந்தது? யாரோ நாலுபேர் மீது வழக்குப் போட்டால் தீர்ந்துவிடுமா? எரிந்த வீடு வந்துவிடுமா? செத்தவனும் வந்து விடுவானா? குத்துவேன்-வெட்டுவேன் என்று சொன்னான் என்றால் எப்போது சொன்னான்? எந்த மாதிரி சொன்னான்? அந்த யோக்கியப் பொறுப்பே கிடையாது. நான் சொல்வதைவிட மந்திரி பக்தவத்சலம் அவர்களே நல்லபடி சொல்லி-யிருக்-கிறார். ராமசாமி; குத்துகிறேன் என்றான்; வெட்டுகிறேன் என்றான் என்று சிலர் சொன்னபோது, எப்போது சொன்னான்? எங்கு சொன்னான்? கடுதாசியைக் காட்டு, என்றதும் ஒருவனையும் காணோம். ஓடிவிட்டார்கள். பேப்பரில் வந்திருக்கிறது என்றார்கள். சி.அய்.டி.ரிப்போர்ட்டில் (உளவுத் துறை அறிக்கையில்) அது போலக் காணவில்லையே என்றார்; ஒருவருமில்லை ஓடிவிட்டார்கள். குத்தினால், வெட்டினாலொழிய சாதி போகாது என்ற நிலைவந்தால் எந்த மடையன் தான் சும்மா இருப்பான்?

ஆண்மையாக ஜாதி இருக்க வேண்டியது-தான் எடுக்க முடியாது என்றாவது சொல்லேன்!
ஆறு மாதமாகக் கிளர்ச்சி நடக்கிறது. 750 பேரைக்கைது செய்து தண்டித்தாகி விட்டது ஒன்றும் சொல்லாமல்.

குத்துகிறேன் வெட்டுகிறேன் என்றான் என்று சொல்லி மிரட்டி நம்மை அடக்கி-விடலாம் என்றால் என்ன அர்த்தம்? இந்த மிரட்டலுக்குப் பயந்து விட்டு விடக்கூடிய முயற்சி அல்ல நம்முயற்சி. விட்டுவிட்டால் நாம் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆவோம்! மானமற்ற கோழை என்பதைத் தவிர வேறு இல்லை.

சாதி ஒழிக்க வேண்டும் என்றால் அதுபற்றி அக்கறையில்லை. குத்துகிறேன் என்கிறானே அதற்கு என்ன பண்ணுகிறாய் என்றால் என்ன அர்த்தம்?

இரண்டில் ஒன்று கேட்கிறேன்; சாதி ஒழிய வேண்டுமா? வேண்டாமா? (ஒழிந்தே தீர வேண்டும்! என்ற இலட்சக்கணக்கான மக்களின் முழக்கம்) ஒழிய வேண்டும் என்றால் சட்டத்தையும், வெங்காயத்தையும் நம்பினால் போதுமா? எதைச் செய்தால் தீருமோ அதைச் செய்தால் தானே முடியும்? (சொல்லுங்கள் செய்கிறோம்! என்று இலட்சக்கணக்-கானவர்-கள் உறுதிமொழி) சட்டத்தின் மூலம் தீராது. பார்லிமெண்டின் மூலம் தீராது என்றால் வீட்டில் போய் படுத்துக்கொள்ள வேண்டியது-தானா?

அரசாங்கம் யாருக்கு? பார்ப்பானுக்கும் வடநாட்டானுக்கும் தானா? தந்திரமாகப் பித்தலாட்டமாக அரசியலை அமைத்துக் கொண்டு யோக்கியன் அங்குப் போகமுடியாத-படி சட்டம் செய்து கொண்டு தொட்டதற்-கெல்லாம் சட்டம் இருக்கிறது; தண்டனை இருக்கிறது; ஜெயில் (சிறை) இருக்கிறது என்றால், மானங்கெட்டு வாழ்ந்தால் போதும் என்று எத்தனைபேர் இருப்பார்கள்? வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியில்லை யென்பவன் இருப்பான்; இரண்டில் ஒன்று பார்க்கிறோம்; இல்லாவிட்டால் சாகிறோம்; சாகிற உயிர் சும்மா போகாமல் உடன் இரண்டை அழைத்துக்--கொண்டு போகட்டும் என்கிறோம்.

சாதி ஒழிய வேண்டும் என்பதற்கு எவனும் பரிகாரம் சொல்வதில்லை; நம்மை அடக்கப் பார்க்கிறார்கள். பார்ப்பனப் பத்திரிகைகளின் போக்கிரித்தனம் அது.
ஏண்டா அடிக்கிறாய் என்றாலே கொல்-கிறான், கொல்கிறான் என்று சப்தம் போட்டு மிரட்டுவதா? அடக்கி ஒழிக்க முயற்சி செய்வதா? இன்றுவரை யாரை, எப்படி, எந்த ஊரில் செய்வது என்று முடிவு செய்யவில்லை. ஆனால் அப்படிப்பட்ட அவசியம் வந்தால் தயாரா? என்றுதான் கேட்கிறேன் (தயார்! தயார்! என்ற லட்சகணக்கான குரல்) நாலு பேர் சாவது, ஜெயிலுக்குப் (சிறைக்குப்) போவ-தென்றால் போகிறது. என்ன திருடி விட்டா போகிறோம்? இல்லை ஒரு குடும்பம் பிழைத்தால் போதும் என்று போகிறோமா? நீ கீழ்சாதி, அதுதான் சாஸ்திரம், அதுதான் வேதம், அதைத்தான் ஒத்துக்கொண்டிருக்க வேண்டும் என்றால் 100 க்கு 97 பேராக உள்ள திராவிடர் ஆகிய நாம் எதற்கு இழிமக்களாக இருக்க வேண்டும்? ஆகவே நடப்பது நடக்-கட்டும்; பயமில்லை! பயந்து கொண்டு முயற்சியைக் கைவிட்டு விடப் போவதில்லை. அந்த மாதிரி அவசியம் வந்தால் செய்து தீர வேண்டும்.

இந்த இரண்டு வருடத்தில் இருபது இடங்களில் எனக்குக் கத்தி கொடுத்துள்ளார்-கள். எதற்குக் கொடுத்தார்கள்? என் கழுத்தை அறுத்துக் கொள்ளவா? இல்லை... முத்தம் கொடுக்கவா? இல்லை, விற்றுத் தின்னவா? உன்னால் ஆகும்வரை பார்; முடியாவிட்டால் எடுத்துக் கொள்! மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதன் அறிகுறியாகத்தானே? காந்தி சிலை உடைக்க வேண்டும் என்றேன். உடனே சம்மட்டி கொடுத்தார்கள்! இப்படி மக்கள் ஏராளமாக ஆதரவு தருகிறார்கள். இவ்வளவு மக்கள் ஆதரவு நம்பிக்கை, அன்பு, செல்வாக்கு உள்ளது. இதை என்ன செய்வது? இதை உணர்ந்து அவனவன் திருந்துவதா; இல்லை கடைசி நிமிடம் வரட்டும் என்று ரகளைக்குக் (கலகத்துக்கு) காத்திருப்பதா? செல்வாக்கைத் தப்பாக உபயோகிக்க மாட்டேன்.
நானும் அவசரக்காரனல்ல! நம் பேச்சைக் கேட்க ஆள் இருக்கிறது என்பதற்காக வெட்டு குத்து என்று சொல்ல மாட்டேன். வேறு மார்க்கம் இல்லை என்றால் என்ன செய்வது? கொலை அதிசயமா? பத்திரிகையில் தினம் பார்க்கிறீர்களே! மாமியாரை மருமகன் கொன்றான்: மனைவியைப் புருஷன் கொன்-றான்; அப்பன் மகனைக் கொன்றான் என்று. அவசியம் என்று தோன்றுகிறபோது நடக்-கிறது! செய்து விட்டுத் தப்பித்துக் கொள்ள-லாம் என்று செய்கிறவன் 100க்கு 10 பேர்தான் இருக்கும். 100க்கு 90 பேர் செய்துவிட்டு வருவதை அனுபவிப்பது என்று செய்கிறவர்கள்-தான். தப்பான காரியத்திற்கு என் தொண்டர்-களை உபயோகப்படுத்த மாட்டேன். அந்த அளவு உணர்ச்சி வந்துவிட்டது என்பதை அரசாங்கம் தெரிந்துகொள்ள வேண்டும்; பொதுவேஷம் போடுகிறவன் தெரிந்து கொள்ள வேண்டும்.

3-11-1957 அன்று தஞ்சையில் எடைக்குஎடை
வெள்ளி நாணயம் வழங்கிய மாநாட்டில் பெரியார்
சொற்பொழிவு : (விடுதலை 8-11-1957)

அம்பேத்கர் ஒரு நாஸ்திகர்

அம்பேத்கர், உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இவ்வளவு பெரிய அறிஞராக விளங்கக் காரணம் என்ன? படிப்பு, திறமை என்று சொல்வதெல்லாம் இரண்டாவதுதான். அவரைவிடப் படித்தவர்கள், திறமை உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் அம்பேத்கர் பெரிய அறிவாளியாக விளங்கக் காரணம் அவரது படிப்பு, திறமை என்பவை மாத்திரமல்ல; அவருடைய படிப்பும் திறமையும் நமக்குப் பயன்படுகிற தன்மையில் இருப்பதால்தான் அவரை அறிவாளி என்று சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் படிப்புத் திறமையெல்லாம் வேறு விதத்தில் பயன்படுத்தப்படுகிறது.

அம்பேத்கர் ஒரு நாஸ்திகர். அவர் இன்றல்ல; நீண்ட நாளாகவே நாஸ்திகர். ஒன்று சொல்லுகிறேன். உலகத்தில் யார் யார் பெரிய அறிவாளிகளாக இருக்கிறார்களோ, அவர்களெல்லாரும் நாஸ்திகர்கள்தான். நாஸ்திகராக இருக்கிறவர்கள்தான் ஆராய்ச்சியின் சிகரமாக, அறிவு பிரகாசிக்கக் கூடிய மனிதராக ஆக முடிகிறது. அவர் தனது சொந்த அறிவை உபயோகித்து, தான் கண்டதைத் தைரியமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். நம் நாட்டில் அறிஞர் கூட்டம் என்பவரெல்லாரும் எடுத்துச் சொல்லப் பயப்படுவார்கள். அவர் இதுபோலல்லாமல் தைரியமாக எடுத்துச் சொல்லி வந்திருக்கிறார். இப்பொழுது அதிசயமாக உலகம் பூராவும் நினைக்கும்படியான சம்பவம் ஒன்று நடந்தது. அதுதான் அம்பேத்கர் புத்த மதத்தில் சேர்ந்தது. இப்போது பேருக்குத்தான் அவர் புத்த மதத்தில் சேர்ந்ததாகச் சொல்கிறாரே தவிர, அம்பேத்கர் வெகுநாட்களாகவே புத்தர்தான்.

1930 - 35லேயே சாதி ஒழிப்பில் தீவிர கருத்துள்ளவராக இருந்தார்; சாதி ஒழிப்புக்காக பஞ்சாபில் ("ஜாத் பட் தோடக் மண்டல்' என்று கருதுகிறேன்) ஒரு சபை ஏற்படுத்தியிருந்தார்கள். என்னைக்கூட, அதில் ஓர் அங்கத்தினராகச் சேர்த்திருந்தார்கள். அந்தச் சபையினர் சாதி ஒழிப்பு மாநாடு என்பதாக ஒரு மாநாடு கூட்ட ஏற்பாடு செய்து, அந்த மாநாட்டுக்கு அம்பேத்கர் அவர்களைத் தலைமை வகிக்கக் கேட்டுக் கொண்டார்கள். அவரும் ஒத்துக் கொண்டு தலைமை உரையாக 100 பக்கம் ஆங்கிலத்தில் எழுதினார். அதில் பல ஆதாரங்களை எடுத்துப்போட்டு, சாதி ஒழிய இந்து மதமே ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். இதைத் தெரிந்து அவரிடம் "உங்கள் மாநாட்டுத் தலைமை உரையை முன்னாடியே அனுப்புங்கள்' என்று கேட்டு வாங்கிப் பார்த்தார்கள். அதில் ஆதாரத்தோடு இந்து மதம் ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். அதைப் பார்த்துவிட்டு, “உங்கள் தலைமையுரை எங்கள் சங்க மாநாட்டில் படிப்பதற்கு ஏற்றதாக இல்லை. இது சாதி ஒழிப்புச் சங்கமே தவிர, இந்து மத ஒழிப்புச் சங்கமல்ல; ஆகையால் நீங்கள் இந்து மதம் ஒழிய வேண்டும் என்கிற அந்த ஒரு அத்தியாயத்தை நீக்கிவிட வேண்டும்'' என்று அம்பேத்கரிடம் கேட்டார்கள்.

அதற்கு அம்பேத்கர் " சாதி ஒழிப்பிற்கு இந்து மதம் ஒழிய வேண்டும்' என்கிறதுதான் அஸ்திவாரம். அதைப் பேசாமல் வேறு எதைப் பேசுவது? ஆகையால் அதை நீக்க முடியாது என்று சொல்லிவிட்டார். பின் மாளவியா ஏதேதோ சமாதானமெல்லாம் சொன்னார். அதற்கும் அவர், “நான் தலைமை உரையைப் பேசுகிறபடி பேசுகிறேன்; நீங்கள் வேண்டுமானால் அதைக் கண்டித்து மாநாட்டில் பேசுங்கள்; தீர்மானம் வேண்டுமானாலும் போடுங்கள், நான் முடிவுரையில் அதுபற்றிப் பேசுகிறேன்'' என்று சொல்லிவிட்டார். பிறகு மாநாடே நடக்காமல் போய்விட்டது.

நான் அம்பேத்கரிடம் அந்தப் பேச்சை வாங்கி, "சாதியை ஒழிக்கும் வழி' என்று தமிழில் புத்தகமாகப் போட்டு வெளியிட்டேன். அவர் அப்போதே அவ்வளவு தீவிரமாக இருந்தார். நாம் ராமாயணத்தைப் பற்றி வாயால் பேசிக் கொண்டிருக்கும் போதே, அதாவது 1932இலேயே அவர் ராமாயணத்தைக் கொளுத்தினார். அந்த மாநாட்டுக்கு என். சிவராஜ் தான் தலைவர். இதெல்லாம் "குடியரசில்' இருக்கிறது. நான் 1930இல் ஈரோட்டில் நடந்த சீர்திருத்த மாநாட்டிற்கு அம்பேத்கரை அழைத்தேன். என்ன காரணத்தாலோ அம்பேத்கர் வரவில்லை. அவருக்குப் பதிலாக எம்.ஆர். ஜெயகர் வந்திருந்தார். அம்பேத்கர் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அந்தச் சமயத்தில்தான் அம்பேத்கர் இஸ்லாம்ஆகப் போகிறேன் என்று சொன்னார். நானும் எஸ். ராமனாதனும் இங்கிருந்து தந்தியடித்தோம். “தயவு செய்து அவசரப்பட்டு சேர்ந்து விடாதீர்கள். குறைந்தது ஒரு லட்சம் பேராவது கூட பின்னால் வந்தார்கள் என்றால்தான் அங்கும் மதிப்பிருக்கும்; இல்லாவிட்டால் மவுலானார் சொல்கிறபடித்தான் கேட்க வேண்டும். அவர்களோ கை வைக்கக் கூடாத மதம் (perfect religion) என்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். எவனுக்குமே கை வைக்க உரிமையில்லை என்பவர்கள். வெறும் தொழுகை அது இது எல்லாம் உங்களுக்கு ஜெயில் போலத்தான் இருக்கும். தனியே போவதால் அங்கும் மரியாதை இருக்காது'' என்று தந்தியில் சொன்னோம். அதன் பிறகு யார் யாரோ அவர் வீட்டிற்குப் போய் மதம் மாறக் கூடாதென்று கேட்டுக் கொண்டார்கள். பத்திரிகையில் வந்தது. அப்போதே அவர் மதம் மாறுவதில் தீவிர எண்ணம் வைத்திருந்தார். எப்படியோ கடைசியாக, இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார். என்றாலும் அவர் ஏற்கனவே புத்தர்தான்.----- தந்தைபெரியார் அவர்கள் 28.10.1956 அன்று, வேலூர் நகராட்சி மன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவு

18.2.08

பெரியார் சிந்தனைகள்

மோட்சமும் நரகமும் மோசக்காரர்கள் கற்பனை
மறுஜெனமம் என்பது மயக்கத்தின் கற்பனை
நிலைமைக்குத் தக்கப்படியே நீதியும் ஒழுக்கமும்;
காலத்துக்குத் தக்கபடி கடவுள்கள் கற்பிக்கப்படுகின்றனர்

- விடுதலை 21.1.1961

கடவுள்
கடவுள் கண்டுபிடிக்கப்பட்டது மல்ல;
தானாகத் தோன்றியிருப்பதுமல்ல;
அது முட்டாளால் உண்டாக்கப்பட்டது.
நூல்: பெரியார் சிந்தனைகள் பக் 1301
நம்பிக்கை
கையாலாகாதவனுக்குக் கடவுள் துணை
அறிவில்லாதவனுக்கு ஆண்டவன் செயல்
தவற்றை உணர முடியாதவனுக்குத் தலைவிதி

- `குடியரசு 13.12.1931

பேதம் ஒழிய:கடவுள் ஒழிந்தால் பார்ப்பான் ஒழிவான்
பார்ப்பான் ஒழிந்தால் மதம் ஒழியும்
மதம் ஒழிந்தால் சாதி ஒழியும்
சாதி ஒழிந்தால் மக்களிடையே இருக்கிற பேதம் ஒழியும்.

`விடுதலை 31.3.70

அறிவு உள்ளவனுக்கு:
அறிவு இருப்பவர்களுக்கு மதம் கிடையாது!
அறிவு இருப்பவர்களுக்கு கடவுள் கிடையாது!
அறிவு உள்ளவனுக்குச் சாதி கிடையாது!

`விடுதலை 1.4.66

பார்ப்பானின் ஆயுதம்:
பார்ப்பானுடைய ஆயுதம் கடவுள்
இன்னொரு ஆயுதம் மதம்
இன்னொரு ஆயுதம் சாத்திரம்
இன்னொரு ஆயுதம் சாதி

- `விடுதலை 4.10.1961
சமபங்கு - சம அனுபவம்
பொதுவுடைமை வேறு
பொதுவுடமை என்பது சம பங்கு என்பதாகும்
பொதுவுரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்

- `குடியரசு 25.3.1944

பண்டிகை:
என் புத்திக்குட்பட்ட வரையில் இந்தப் பண்டிகை, உற்சவம், முதலியவைகள் எல்லாம் புரோகிதர்களான பார்ப்பனர்களும், ஆட்சிக்காரர்களான அரசர்களும் கலந்து கண்டுபிடித்துச் செய்த தந்திரமென்பதே எனது அபிப்பிராயம்.

- `குடியரசு 20.10.1929

கவர்னர் பதவி
கவர்னர் பதவி என்பதே சில ஆடுகளுக்குக் கழுத்தில் தொங்கும் ஒன்றரை அங்குல நீளமுள்ள இரண்டு சதைத் துண்டுகள் போல் எதற்கும் பயன்படாத ஒரு வேலையாகும். மற்றும் சொல்லப்பட வேண்டுமானால் கவர்னர்கள் என்பவர் கள் சனநாயகத்தைப் பொறுத்தவரை, அனாமதேயப் பேர் வழிகளேயாவார்கள். சற்று ஏறக்குறைய இராட்டிரபதி பதவியையும் இதற்கே ஒப்பிடலாம். இந்தக் கவர்னர்கள், இராட்டிரபதிகள் பதவிகள் வெள்ளை யானையைக் கட்டிக் காப்பதுபோல், ஒரு அரசாங்கத்துக்கு வீண் பளுவேயாகும்.

- `விடுதலை 31.12.1965

ஊராட்சிமன்றம்

ஊராட்சி மன்றம் என்பது ரோடு போடுதல், விளக்கு போடுதல், வீதி கூட்டுதல் போன்ற காரியங்களைச் செய்ய ஏற்பட்டதென்றால், அதை இதன் நிர்வாகியே செய்துவிட்டுப் போகலாமே. அதற்கு மக்கள் பிரதிநிதிகள் தேவையில்லையே. பின் ஏன் என்றால் சமுதாயத்தில் மக்களிடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகளை அகற்றவும், பொது அறிவைப் பெருக்க வும், மூடநம்பிக்கைகளான பழக்க வழக்கங்களை ஒழிக்கவுமே யாகும்.

- `விடுதலை 31.12.1964

துணிந்து தொண்டு செய்ய:

உங்கள் மனத்தை நீங்கள் பரிசுத்தமாக வைத்துக் கொண்டு தைரியமாகப் பேச வேண்டும். பொது வாழ்வில் மானத்தைப் பார்க்காதீர்கள். எவ்வளவு தூரம் உணர்ச்சியோடு உறுதியோடு உங்கள் மனமறிய நீங்கள் குற்றமற்றவர்களாக நல்ல ஒழுக்க முள்ளவர்களாக இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு துணிந்து தொண்டாற்ற முடியும்.

- `குடிஅரசு 30.9.1944

பகுத்தறிவாளர்கள்
பகுத்தறிவாளர்கள் ஒரு குடும்பம் போன்று பழக வேண்டும். சுயநல உணர்ச்சி அற்றவர்களாகக் குற்றம் அற்றவர்களாகக், கூடுமான வரைக்கும் மற்றவர்களுக்குப் பயன்படக் கூடியவர்களாக இருக்க வேண்டும். மக்களிடம் உண்மையாகவே அன்பு காட்ட வேண்டும். பகுத்தறிவு என்பது ஒரு பெரிய உன்னதமான உயரிய தத்துவமாகும்.

- `விடுதலை 30.1.1973

அடிமைத்தத்துவம் ஒழிய:

உலகில் மனிதவர்க்கத்திற்கு அடிமைத்தத்துவம் ஒழிய வேண்டுமானால் பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும் கொடுமையும் ஒழிய வேண்டும். இது ஒழிந்த நிலையே சமத்துவம் சுதந்திரம் என்னும் முளை முளைக்கும் இடம்.

- `குடிஅரசு 22.8.1926

பெண் விடுதலைக்கு
உண்மையாகப் பெண்கள் விடுதலை வேண்டுமானால், ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்ப்பந்தக் கற்புமுறை ஒழிந்து இரு பிறப்பிற்கும் சமமான சுயேச்சைக் கற்பு முறை ஏற்பட வேண்டும். கற்புக்காக பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான நிர்ப்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும்.
கற்புக்காக புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்கிற வேண்டும் என்கின்ற கொடுமையான மதங்கள் சட்டங்கள் மாய வேண்டும்.
கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு, காதலும், அன்பும் இல்லாத வனுடன் இருக்க வேண்டும் என்கின்ற சமூகக் கொடுமையும் அழிய வேண்டும்.

- குடியரசு 8.11.1928

பெண் உரிமை

வன்மை, கோபம், ஆளும் திறம் ஆண்களுக்குச் சொந்த மென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது வீரம், வன்மை, கோபம் ஆளுந்திறம் புலிக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை. நாம் வேண்டும் பெண்ணுரிமை என்பது என்னவெனில் ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண் மக்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும்.
- குடியரசு 12.2.1928

17.2.08

வருமானவரி பற்றிய விளக்கம்

இந்த மாதம் அரசு ஊழியர்கள் சம்பளப்பட்டியலுடன் அவரவர்களது வருமானம் பற்றிய விபர அறிக்கையை தாக்கல் செய்தால்தான் இம்மாதம் ஊதியம் பெறமுடியும் என்ற நிலையில் அது பற்றிய விபரங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு சிலர் எவை எவை வருமானத்துக்கு உட்பட்டவை என்பது பற்றி விரிவாக விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.வருங்கால வைப்பு நிதி வட்டி வருமானத்தில் வருமா வராதா? என்பது உட்பட காரசார விவாத்திற்கிடையில் "வருமானவரி"விலக்கு எதுக்கெல்லாம் உண்டு என்பது பற்றி "நாணயம் விகடன்" இதழ் வெளியிட்டுள்ளது. நமது அன்பர்களின் பயன் கருதி அதை அப்படியே இங்கு தந்துள்ளோம்.

இந்திய வருமான வரிச் சட்டத்தின் (1961)படி, உருவானதுதான் 80---சி பிரிவு. இதன்கீழ் ஒரு நிதி ஆண்டில், பல்வேறு முதலீட்டுத் திட்டங்களின் மூலம் அதிகபட்சம், ஒரு லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்குப் பெறமுடியும்.

பணியாளர்கள் பிராவிடன்ட் ஃபண்ட்

அரசுத்துறை ஊழியர்கள் அவர்களுக்கான அரசு பிராவிடன்ட் ஃபண்டில் செய்யும் முதலீட்டுக்கு வரிச்சலுகை உண்டு. பொதுத்துறை, தனியார் நிறுவனங்-களில் பணிபுரிபவர்களுக்குச் சம்பளத் தொகை-யில் 12%, பணியாளர் பிராவிடன்ட் ஃபண்டாக (E.P.F. -Employees Provident Fund) பிடிக்கப்படுகிறது. வருமான வரி கட்டுவதிலிருந்து இந்தத் தொகைக்கு முழுவிலக்குப் பெறலாம். தனியார் நிறுவனம் என்கிறபோது, பிடிக்கப்படும் தொகைக்கு இணையாக நிறுவனமும் பணம் செலுத்தும் என்பதால், இது பணியாளர்களுக்கு இரட்டை லாபத்தை அளிப்பதாக இருக்கிறது.

இந்த முதலீடு மற்றும் சேமிப்பு, வரிச் சலுகையை அளிப்பதோடு, வரி கட்டுபவர் மற்றும் அவரது குடும்-பத்துக்கு நிதிப் பாதுகாப்பையும் அளிப்பதாக இருக்கிறது. மேலும், விரும்பும்பட்சத்தில் தனியார் நிறு-வன ஊழியர், இந்த 12%-க்கு இணையாக மேலும் 12%-ஐ தன் சம்பளத்தில் பிடித்துக்கொள்ள நிறுவனத்திடம் கேட்டுக்கொள்ளலாம். இந்தக் கூடுதல் தொகைக்கு நிறுவனம் தன் பங்காக எதையும் செலுத்தாது. அதே நேரத்தில், இந்தக் கூடுதல் முதலீட்டுக்கு வரிச்சலுகை கிடைக்கும். இதுபோன்ற சலுகை அரசு ஊழியர்-களுக்கும் இருக்கிறது. இப்படிச் சேரும் பி.எஃப். தொகையை விதிமுறைகளுக்கு உட்பட்டு தேவைக்கு எடுத்துக்கொள்ள முடியும்.

இந்த முதலீட்டுக்கு தற்போது 8.5% வட்டி தரப்-படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை இதற்கான ரசீதை பி.எஃப். அலுவலகம் அளிக்கிறது. இதைப் பெற்று பணியாளர்கள், தங்களிடம் பிடிக்கப்படும் தொகை கட்டப்படுகிறது என்பதை உறுதி செய்துகொள்வது நல்லது.

தனியார் துறை பணியாளர்களைப் பொறுத்தவரை, சம்பளம் 6,500 ரூபாய்க்கு மேற்படும்போது, பிராவிடன்ட் ஃபண்டுக்கு பணம் செலுத்துவது கட்டாயமில்லை. ஆனால், எல்லோரும் செலுத்துவது நல்லது. இந்த முதலீடு மற்றும் அதன் மூலமான லாபத்துக்கும் வரி கிடையாது!

பொது பிராவிடன்ட் ஃபண்ட்

பணியில் இல்லாத சுய தொழில் செய்பவர்களுக்கு ஏற்ற திட்டம் பொது பிராவிடன்ட் ஃபண்ட் (P.P.F- Public Provident Fund). இந்தத் திட்டத்தில், ஏற்கெனவே நிறுவனத்தால் பி.எஃப். பிடிக்கப்படும் பணியாளர்களும் முதலீடு செய்யலாம். இதற்கான வட்டி 8%. இதில் முதலீடு செய்யும் அனைவரும் வருமான வரிச் சலுகையைப் பெறலாம்.

இந்த முதலீட்டை தபால் அலுவலகம், பொதுத்துறை வங்கிகளில் மேற்கொள்ளலாம். நிதி ஆண்டில் குறைந்த-பட்சம் 100 ரூபாய், அதிகபட்சம் 70,000 ரூபாய் என்ற அளவில் முதலீடு செய்து, வரிவிலக்குப் பெறலாம். இந்தக் கணக்கை தனிநபர்கள், மைனர்கள், ஹெச்.யூ.எஃப். பெயரில் தொடங்கலாம். தனி நபர்கள், தங்கள் பெயர், மனைவி பெயர், குழந்தைகளின் பெயரில் செலுத்-தப்படும் பி.பி.எஃப். தொகைக்கு வரு-மான வரிவிலக்குப் பெறலாம்.

பி.பி.எஃப். முதலீட்டில் கிடைக்கும் லாபத்துக்கும் வரி கிடையாது. நிதி ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே (ஏப்ரல்) முதலீடு செய்ய ஆரம்பித்தால், முழு ஆண்டுக்கும் வரி இல்லாத வட்டி லாபத்தை அனு-பவிக்க முடியும். பி.பி.எஃப். முதலீட்டை 15 ஆண்டுகளுக்கு முன் முடிக்க முடியாது. அதே நேரத்-தில், ஆறு ஆண்டுகள் கழித்து முதலீட்டில் ஒரு பகுதியை நிபந்தனைகளுக்கு உட்பட்டு எடுத்துக்-கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதேபோல், இத்தொகை-யிலிருந்து கடனும் வாங்கமுடியும்.

ஆறாவது ஆண்டிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்து பி.பி.எஃப். திட்டத்தில் மறு முதலீடு செய்வது மூலம் வருமான வரிச்சலுகையைப் பெறுவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

ஆயுள் காப்பீட்டு பாலிசிகள்

பொதுவாக, இந்தியாவைப் பொறுத்தவரை ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் (Life Insurance Policies) என்பது முதலீடு, குடும்-பத்தினர் பாதுகாப்பு, வரிச் சேமிப்பு கருவி என மூன்-றும் கலந்ததாக இருக்கிறது. இதனால், பாலிசி முடி-வில் பணப்பலன் கிடைக்கும் எண்டோவ்மென்ட் பாலிசிகள்தான் அதிக அளவில் எடுக்கப்படுகின்றன.

பாலிசி இறுதியில் பணப் பலன் எதுவும் இல்லாத டேர்ம் பாலிசியை எடுப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். ஆனால், இந்த இரு திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கும் வரிச் சலுகை உண்டு. பாலிசி க்ளைம் மூலம் கிடைக்கும் தொகை அல்லது பணப் பலனுக்கு வருமான வரி கிடையாது. மேலும், தன் பெயரில், மனைவி பெயரில், பிள்ளைகள் பெயரில், ஹெச்.யூ.எஃப். பெயரில் எடுத்திருக்கும் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கான பிரீமியத்துக்கும் தனிநபர் விலக்குப் பெறலாம். முக்கியமாக கவனிக்க வேண்டியது, பாலிசித் தொகையில் 20%-க்கு மேல் பிரீமியம் இருந்தால், வரு-மான வரிவிலக்குப் பெறமுடியாது.

இந்த பாலிசிகளை அட-மானம் வைத்து கடன் வாங்குவது மூலம் சொத்து வாங்குவது, கல்வி, திருமணம் போன்றவற்றுக்கான தேவையை எளிதில் நிறைவேற்றிக்கொள்ள முடியும். பர்சனல் லோனுக்கான வட்டியோடு ஒப்பிடும்போது, இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான கடன் வட்டி குறைவாகவே இருக்கிறது.

யூலிப்

பங்குச் சந்தை சார்ந்த காப்பீட்டுத் திட்டமான யூலிப் முதலீட்டாளருக்கு ஆயுள் காப்பீட்டை அளிப்பதோடு, வருமானத்தையும் அளித்து வருகின்றன. இந்த பாலிசிகள் முற்றி-லும் பங்குச் சந்தை சார்ந்தது, முற்றிலும் கடன் சார்ந்தது, இரண்டும் கலந்தது என்பன போன்று பல வாய்ப்புகளுடன் இருக்கின்றன. முதலீட்டாளர் தன் வயது மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்து ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ரிஸ்க்குக்கு ஏற்ப ரிட்டர்ன் இருக்கும். நிதி முதலீடு, பங்குச் சந்தை பற்றி ஓரளவுக்கு விவரம் தெரிந்தவர்கள் மட்டும் இந்த யூலிப் பாலிசிகளை எடுப்பது நல்லது. குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை, இந்த யூலிப் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் யூனிட்களின் என்.ஏ.வி. மதிப்பைக் கவனித்துவருவது அவசியம்!

தேசிய சேமிப்புப் பத்திரங்கள்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, வரிச் சேமிப்புக்காக இந்தியர்கள் அதிக முதலீடு செய்தது தேசிய சேமிப்புப் பத்திரங்களில்தான் (National Saving Certificates). வட்டி விகிதக் குறைவுக்கு பிறகு அதில் முதலீடுசெய்வது கணிசமாகக் குறைந்துவிட்டது. 8% வட்டி வருமானம் அளிக்கும் இதில் செய்யப்படும் முதலீட்டை ஆறு ஆண்டுகள் கழித்துதான் எடுக்கமுடியும். வட்டி வருமானத்துக்கு வரி கட்டவேண்டும் என்பதும் இதனைப் பலரும் விரும்பாததற்கு முக்கியக் காரணம். இதில் தனிநபர்கள் மற்றும் ஹெச்.யூ.எஃப்-கள் முதலீடுசெய்து வரிச்சலுகை பெறலாம்.

வருமான வரியைச் சேமிக்க 80-சி பிரிவின் கீழ் இருக்கும் இதர திட்டங்கள் பற்றி...!

வரி சேமிப்பு வங்கி டெபாசிட்கள்

வங்கிகளில் செய்யப்படும் ஐந்தாண்டு கால ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கும் வருமான வரிச் சலுகை உண்டு. இத்திட்டத்தை அனைத்து வங்கிகளும் கொண்டுள்ளன. வட்டிவிகிதம் சுமார் 8.5% தொடங்கி 10.5% வரை வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. டெபாசிட் மூலமான வட்டிக்கு வரி செலுத்தவேண்டும். இதில், தேசிய சேமிப்புப் பத்திர முதலீட்டைவிட வட்டி அதிகமாகக் கிடைக்கும். பி.எஃப். முதலீட்டைவிட, அதிக வட்டி வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றாலும், வட்டி வருமானத்துக்கு வரிகட்டவேண்டும் என்பது பாதகமான அம்சம்!

வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வெளியிடும் இ.எல்.எஸ்.எஸ் (E.L.S.S) ஃபண்டுகளில் முதலீடு செய்தாலும் வரிச்சலுகையைப் பெறமுடியும். இதனை தனி நபர்கள் மற்றும் ஹெச்.யூ.எஃப். பெயரில் மேற்கொள்ளலாம். இந்த முதலீட்டை மூன்று ஆண்டுகளுக்கு எடுக்கமுடியாது. இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதியில் 65% பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது என்பதால், மேலே கூறப்-பட்ட முதலீட்டுத் திட்டங்களைவிட, அதிக ரிட்டர்னைக் கொடுத்துவருகிறது. அதேநேரத்தில், பங்குச் சந்தைக்கான ரிஸ்க்கையும் கொண்டிருக்கிறது. இந்த ஃபண்டுகள் மூலம் கிடைக்கும் டிவிடெண்டுக்கு வரி கிடையாது. மேலும் முதலீட்டை மூன்றாண்டு கழித்து எடுக்கும்போது நீண்டகால மூலதன ஆதாய வரி, பூஜ்ய சதவிகிதம்தான்.

வீட்டுக் கடனை திரும்பச் செலுத்துதல்

வீட்டுக் கடனில் திரும்பச் செலுத்தப்படும், அசலில் ஒரு நிதி ஆண்டில் ஒரு லட்சம் ரூபாய் வரை, வரிச்சலுகை பெறலாம். வீடு அல்லது ஃப்ளாட் வாங்கும்போது மனைக்குக் கட்டும் முத்திரைத்-தாள் கட்டணத்துக்கும் வரிச்சலுகை இருக்கிறது. இதனைப் பத்திரப்பதிவு நடந்த நிதி ஆண்டில் கோரிப் பெறவேண்டும். வீட்டை மாற்றிக் கட்டுதல், புதுப்பித்தல், பழுதுபார்த்தல் போன்றவற்றுக்கான கடனுக்கு வரிச்சலுகை கிடையாது. மேலும், மனை வாங்குவதற்கும் வரிச் சலுகை இல்லை.

வீட்டுக் கடனுக்கான வட்டியில், ஓராண்-டில் 1.5 லட்சம் ரூபாய்வரை, வரிச்சலுகை பெறலாம்.

இதர சேமிப்புத் திட்டங்கள்

இந்த வாய்ப்புகளைப் போலவே, தபால் அலுவலகத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior citizen Savings Scheme) மற்றும் தபால் அலுவலக டைம் டெபாசிட் (Post Office Time Deposit) ஆகிய இரு திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கும் 80-சியின் கீழ் வருமான வரிச்சலுகை உண்டு என்று அண்மையில் மத்திய அரசு அறிவித்துள்ளது.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் 55-60 வயதுக்கு உட்பட்ட விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்.) பெற்றவர்கள், 60 வயதான மூத்த குடிமக்கள் சேர்ந்து பயன்பெறலாம். பொதுத்துறை வங்கிகளிலும் இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது.

ஆண்டுக்கு 9% வருமானம் அளிக்கும் இந்த முதலீடு ஐந்தாண்டுகளுக்கானது. ஒரு ஆண்டில் குறைந்தபட்ச முதலீடு ஆயிரம் ரூபாய். அதிகபட்ச முதலீடு 15 லட்சம் ரூபாய். ஆனால், அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய்க்குத்தான் வரி-விலக்குப் பெற முடி-யும். இத்திட்டத்தின் மூலமான வட்டி வருமானத்-துக்கு வரி பிடித்தம் இருக்-கிறது.

இந்தத் திட்டம் வங்கிகளின் வழக்கமான ஃபிக்ஸட் டெபாசிட் உடன் ஒப்பிடும்போது, சற்று லாபகரமானது என்று சொல்லாம்.

தபால் அலுவலக டைம் டெபாசிட்டில் குறைந்த-பட்ச முதலீடு 200 ரூபாய். அதிகபட்சத்துக்கு எல்லை இல்லை. இந்தத் திட்டத்தில் 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகள் என முதிர்வுக் காலம் இருக்கிறது. இவற்-றுக்கு முறையே 6.25%, 6.5%, 7.25% மற்றும் 7.5% வட்டி தரப்படுகிறது. ஐந்து ஆண்டுகால முதலீட்டுக்கு மட்-டுமே வரிச்சலுகை தரப்படுகிறது. இந்தத் திட்டத்தை விட, வழக்கமான வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு லாபகரமானதாக இருக்கும்.

கல்விக் கட்டணம்

கல்விக்காகச் செலவிடுவதை ஒரு முதலீடாக மத்திய அரசு கருதுவதால், அதற்கும் வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. தனிநபர், அவருடைய துணை, குழந்தைகள் அல்லது ஹெச்.யூ.எஃப். உறுப்பினர் போன்றோருக்கு கட்டும் கல்விக் கட்டணத்துக்கு வரிச்சலுகை இருக்கிறது. மேலே குறிப்பிட்டவர்கள் இந்தியாவில் ஏதாவது பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி அமைப்பில் முழு நேரமாகப் படிப்பதற்காகச் செலுத்தும் கல்விக் கட்-டணத்துக்கு வரிவிலக்குக் கோரலாம். தனிநபரின் இரு குழந்தைகளுக்குத்தான் இவ்வாறு வரிச்சலுகை கிடைக்கும்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல... மாதச் சம்பளக்காரர்களுக்கும் பிப்ரவரி மாதத்திலேயே ஜுரம் அடிக்க ஆரம்பித்துவிடும். அவர்களுக்கு தேர்வு ஜுரம் என்றால், மாதச் சம்பளக்காரர்களுக்கு வருமான வரி ஜுரம்! எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற அளவுக்குக் குழம்பிப் போயிருக்கிறார்கள். வருமான வரிச் சட்டப் பிரிவு 80 சி-யின் கீழ் வரும் முதலீட்டுத் திட்டங்கள் தவிர, வேறு சில முதலீடு மற்றும் செலவுகளுக்கும் வருமானவரி விலக்குப் பெறமுடியும். அவை பற்றிய விவரங்கள்..!

மருத்துவக் காப்பீடு 80 D

மருத்துவச் செலவு மிகவும் அதிகரித்துவிட்ட இன்றைய காலகட்டத்தில், மாதச் சம்பளக்காரர்களுக்கு மருத்துவக் காப்பீடு என்பது அவசியமாகியிருக்கிறது. வருமானவரிச் சட்டப் பிரிவு 80 D-ன் கீழ், தனி நபர் அல்லது ஹெச்.யூ.எஃப்-க்காக ஓராண்டில் இந்த பாலிசிக்குச் செலுத்தப்படும் பிரீமியத்தில், 15,000 ரூபாய்க்கு வருமானவரியிலிருந்து விலக்குப் பெறலாம். இதுவே மூத்த குடிமக்கள் என்றால் 20,000 ரூபாய் அனுமதிக்கப்படுகிறது.

தனிநபர் ஒருவர், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் செலுத்தும் மெடிக்ளைம் பாலிசிக்கான பிரிமீயத்துக்கும் வரிவிலக்குப் பெறமுடியும். சில பெரிய நிறுவனங்கள், தங்களின் ஊழியருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தங்களின் சொந்தச் செலவிலேயே மருத்துவக் காப்பீட்டை எடுத்துத் தருகிறார்கள். அதுபோன்ற நிலையில், அலுவலகம் எடுத்துள்ள பாலிசியின் மூலம் எந்தெந்த நோய்களுக்கு சிகிச்சை பெறலாம் என்ற விவரத்தை அறிந்து, அதில் இல்லாத நோய்களுக்கு சிகிச்சை பெறும் பாலிசியை எடுத்து, அதற்கான பிரீமியத் தொகைக்கு வரிச் சலுகை பெற்றுக்கொள்ளலாம். வரிவிலக்குப் பெற பிரீமிய ரசீதின் நகலை பணிபுரியும் நிறுவனத்திடம் ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும்.

மருத்துவச் சிகிச்கைக்கான செலவு - 80 DD

தனிநபரோ அல்லது அவரைச் சார்ந்தவர்களோ (Dependant) அல்லது ஒரு ஹெச்.யூ.எஃப். குடும்பத்தில் யாராவது உறுப்பினரோ செயல்பட முடியாத அளவுக்கு உடலில் ஊனமுற்று (Disability) அதற்கான சிகிச்சைக்காகச் செலவு செய்தால், அதற்கும் வரிச்சலுகை பெறலாம். இந்தவகையில் ஓராண்டில் 50,000 ரூபாய் வரை வரிவிலக்கு கிடைக்கும். மிகவும் தீவிரமான ஊனத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், 75,000 ரூபாய் வரை வரிச்சலுகை பெறலாம். வரி கட்டுபவரைச் சார்ந்திருக்கும் (Dependant) அவருடைய மனைவி/கணவன், குழந்தைகள், பெற்றோர், சகோதர-சகோதரிகள் போன்ற-வர்களுக்கான மருத்துவச் சிசிச்சைக்கும் இந்தச் சலுகை உண்டு. 80% அல்லது அதற்கு மேல் செயல்பட இயலாமல் இருப்பவரைத்தான் செயல்-பட இயலாதவர் என்று சட்டம் சொல்கிறது. எனவே வரிச்சலுகை பெற, அங்கீகரிக்கப்பட்ட மருத்-துவ அதிகாரியிடமிருந்து, அதற்குரிய படிவத்தில் சான்-றிதழ் வாங்கி கொடுக்கும்பட்சத்தில்தான் இந்த வரிச்-சலுகையைப் பெறமுடியும்.

தீவிர நோய்களுக்கான சிகிச்சை - 80 DDB

மத்திய நேரடி வரி வாரியம், சில தீவிர நோய்களுக்குப் பெறப்படும் சிகிச்சைக்கான செலவுகளுக்கு வரிவிலக்கு பெறலாம் எனச் சொல்லியுள்ளது. அந்த வகை நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டால், ஓராண்டில் அதிகபட்சம் 40,000 ரூபாய்க்கு வரிச்சலுகை பெறமுடியும். இதுவே, மூத்த குடிமக்கள் என்கிறபோது, 60,000 ரூபாய் வரை சலுகை இருக்கிறது. நரம்பு சம்பந்தமான நோய்கள், எய்ட்ஸ், கேன்சர், சிறுநீரகக் கோளாறு போன்றவை தீவிர நோய்கள் பட்டியலில் இருக்கின்றன. இப்பிரிவில் வரிச்சலுகை பெற, வருமான வரி தாக்கல் படிவத்துடன் அரசு மருத்துவரிடமிருந்து பெற்ற சான்றிதழையும் இணைத்துக் கொடுப்பது அவசியம்.

கல்விக் கடனுக்கான வட்டி - 80 E

தனி நபர் ஒருவர் தனக்காகவோ, உறவினர்களுக்காகவோ இந்தியாவில் உயர்கல்வி படிப்புக்காக அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனம் அல்லது வங்கியிடமிருந்து வாங்கிய கல்விக் கடனுக்கான வட்டியை திரும்பச் செலுத்துவதில் 80 E பிரிவின் கீழ் வரிச்-சலுகை பெறலாம். உயர்கல்வி என்பது பட்டப்-படிப்பு, பட்டமேற்படிப்பு (பொறியியல், மருத்துவம், மேலாண்மை) போன்றவற்றைக் குறிக்கும். வட்டி கட்டத் தொடங்கியதிலிருந்து 7 ஆண்டு வரை, வட்டி கட்டி முடிக்கும் வரைக்கான காலம்... இரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரை வரிச்சலுகை உண்டு.

உடல் ஊனமுற்றவர்களுக்கு வரிச்சலுகை - 80 U

வரி கட்டும் ஒருவர் உடல் ஊனமுற்று இருந்தால், அவரின் வரிக்கு உட்பட்ட வருமானத்தில் ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரித் தள்ளுபடி பெறமுடியும். மிகவும் தீவிரமான உடல் ஊனமானால் இந்தத் தொகை 75,000 ரூபா-யாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த வரித் தள்ளுபடியைப் பெற, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அதிகாரி-யிடமிருந்து அதற்-குரிய ஆவணத்தில் சான்-றிதழ் பெறுவது அவசியம்!

-------------- ----------------நன்றி : நாணயம் விகடன்