Search This Blog

15.2.08

நாம் செய்யப்போவது என்ன ?

நாம் செய்யப்போவது என்ன என்பது மிகவும் பொறுப்போடு பொறுமையோடு யோசித்துச் செய்யவேண்டியிருக்கிறது, இன்று நம் நாட்டில்,

1. மேல்ஜாதி, கீழ்ஜாதி என்ற பேதமும்,
2. படித்தவன் படிக்காதவன் என்ற தன்மையும்,
3. பணக்காரன் ஏழை என்ற நிலைமையும்,
4. முதலாளி அல்லது எஜமான் தொழிலாளி அல்லது கூலி என்கின்ற முறைமையும் இருந்து வருகின்றன.

இதனால் ஏற்படும் குறைபாடு கொடுமை என்பவைகளைத் தவிர உலகில் மக்களுக்கு வேறு தொல்லை இல்லை என்றும், தொல்லைக்கு அடிப்படை இல்லை என்றும் சொல்லலாம். இவற்றுள் முற்கூறிய பெரிய ஜாதி, சின்ன ஜாதி, படித்தவன், தற்குறி (படிக்காதவன்) என்கின்ற கொடுமை அதாவது சகல குறைபாடுகளுக்கும் அஸ்திவாரமாக இருக்கும் கேடுகள் நம் நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இல்லை என்று சொல்லலாம் ஆதலால் இந்த நாட்டில் இப்போது உடனடியாக ஒரு யோக்கியன், ஒரு வீரன், ஒரு “தெய்வீக சக்தி கொண்ட மகான்” என்பவன் செய்யவேண்டிய வேலை இந்த இரண்டுமேயாகும். இந்த இரண்டிலும் முதன்மையானதாகச் செய்யவேண்டி யது முதலாவதான மேல் ஜாதி, கீழ்ஜாதி என்பதை ஒழிப்பதேயாகும் ஆகவேதான், அந்தக் கருத்தின்மீதே நம் திராவிடர் கழகம் முதலாவதாக இதனையே கருதி இதை முதல் வேலைத் திட்டமாகவும் கைக்கொண்டு இருக்கிறது.
எளவே இது விஷயத்தில் காங்கிரஸ் செய்யப்போவதைப் பொருத்தே அதோடு நாம் வைத்துக் கொள்ளும் சம்பந்தம் இருந்துவரும் என்று மேலே சொன்னோம். 78 வயது ஆனபின்பு இப்போது தான் காந்தியார் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற என்னும் தன்மையில் “பறச்சேரியில்” போய் குடிக் இருக்கப் போகிறேன் என்று சொல்லி அங்கு குபேரர்களை விட்டு “குடிசை” கட்டச் சொல்லி இருக்கிறார். இந்தச் சூழ்ச்சியை அறிந்து சேரிக்காரர்கள் காந்தியார் “குடிசை” மீது கற்கள் போட்டு, காந்திக்கும் கொடும்பாவி கட்டி இழுத்து இருக்கிறார்கள் அங்குக் காந்தியாருக்கே இந்தக் கதியானால் இங்கு இந்தச் சாதாரண காந்தி பூசாரிகளுக்கு நடக்கக்கூடிய காரியம் நடக்கவேண்டிய காரியம் என்ன என்பது யாவரும் அறிந்திருப்பார்கள்.

ஆதலால் காங்கிரஸ் பதவி ஏற்றதும் மேல்ஜாதி கீழ்ஜாதி என்கின்ற ஜாதி ஆணவம் கொடுமை ஒழிக்கப்பட வேண்டும். பிராமணாள் ஒட்டல், பிராமணாள் சாப்பிடும், பிரவேசிக்கும் இடம், என்பவைகள் ஒழிக்கப்பட வேண்டும், பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன், ஜாதி இந்து, ஜாதி குறைவான இந்து என்பனவாகியவைகள் அரசாங்க ஆதாரங்களில் நடைமுறைகளில் இருக்க இடம் வைக்கக்கூடாது. “இந்து லா” விலும் உள்ள இக்கொடுமைகள் உடளே மாகாண கவர்னர்களுக்கும், மாகாண சர்க்கார்களுக்கும் உள்ள அதிகாரங்களைப் பொருத்தவரை திருத்தப்பட வேண்டும். இவைகளைச் செய்தால் திராவிடர் கழகத்தார் காங்கிரசின் நண்பர்களேயாவார்கள். இந்தக் காரியம் செய்தால் உத்தியோகங்களைப் பற்றிக் கூட கவலை இல்லை. பார்ப்பனர்களே எல்லா உத்தியோகமும் பார்த்தாலும் சம்மதிப்பார்கள். திராவிடர்கள் தங்கள் பெரும் உத்தியோகத்தின் மூலம் இன உணர்ச்சியோடு திராவிடர்களைக் காப்பாற்றும், திராவிடர்களுக்கு உழைக்கும் தகுதி பெற்ற பிறகு பார்த்துக் கொள்ளலாம். இந்தி படிப்பித்தலும் கூட இன்று குற்றமில்லை என்போம். தமிழர்களுக்கு மானம் வந்தபிறகு ஒழிக்கப் பார்த்துக் கொள்ளலாம்.
இனி சர்.ராமசாமிக்கு மேல் சர்.ஷண்முகத்திற்குமேல் யார்தான் எந்த உத்தியோகம்தான் பார்க்க முடியும்? இவர்களால் திராவிடர்கள் வாழ்ந்த தென்ன? திராவிடர்கள் வாழ்வு உயர்ந்ததென்ன?

ஒரு சர்.சி.பி, ஒரு கனம் சாஸ்திரி, ஏன் ஒரு ஆர்.வி.கிருஷ்ணய்யர் இவர்களால் பார்ப்பனர் அடைந்ததெவ்வளவு? தமிழர்தானாகட்டும் ஒரு சாமி வேதாசலம், ஒரு மீனாட்சிசுந்தரம், ஒரு மகாமகோ கதிரேசன் இவர்கள் தமிழ்படித்த தெவ்வளவு? இவர்களால் திராவிடர் வாழ்ந்ததென்ன? ஆனால் ஒரு மு.ராகவய்யங்கார், ஒரு ரா.ராகவய்யங்கார், ஒரு மகா சாமிநாதய்யர் இவர்களால் பார்ப்பனர் தமிழ் படித்ததன்மூலம் வாழ்ந்த தெவ்வளவு?
ஆகவே இன்றைய தன்மையில் உத்தியோகமும் தமிழும் தனிப்பட்ட குடும்பத்துக்குப் கம்பெனிக்கு லாபமே தவிர, திராவிடத்திற்கு திராவிடருக்குப் பயனற்றதாகவே இருக்கிறது. எனவே திராவிடன்மந்திரி ஆக வேண்டுமென்ற கவலையும் இன்று நடக்கு இல்லை. ஜாதிக் கொடுமை, தீண்டாமை, பார்க்காமைக் கொடுமை முதலில் ஒழியட்டும். இதை காங்கிரஸ் செய்தால் நாம் காங்கிரஸ் தொண்டர்கள் என்று சொல்லிப் பெருமை அடைவோம். இல்லாலிட்டால் ஒரு மூச்சு அதுவும் சற்றேறக்குறைய கடைசி மூச்சாகவே பார்த்து விடப்போகிறோம். இதுதான் நாம் செய்யப்போவது.நம் திராவிட மாணவ, இளைஞர் தோழர்களுக்குச் சொல்லுகிறோம்.

இதே இறுதிப் போராட்டமாகக் கருதுங்கள்.இதில் இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டும்.கம்யூனிஸ்டுகளுனும் நமக்குத் தகராறு இல்லை. அவர்கள் பார்ப்பனர்கனைத் தலைவர்களாகக் கொண்டு இருக்கிறார்கள்; கதர் போடுகிறார்கள்; காந்திக்கு ஜே சொல்லுகிறார்கள்; மூவர்ணக் கொடியின் நிழலின் கீழ் நிற்கிறார்கள். தொலைந்து போகட்டும் அவர்கள் மானத்தின் வலிமை எவ்வளவு என்று கொள்ளுவோம்.

ஆனால் கம்யூனிஸ்ட் என்பவர்கள் கடவுளை, மதத்தை, பார்ப்பானை சாஸ்திரத்தை, கோயிலை, கோயில் செலவை, பார்ப்பானச் சடங்கை, கோவில், மடப்பொருளை, மடாதிபதிகளைப் பற்றி மறந்தும் பேசமாட்டோம் என்கிறார்கள். இவர்களைத் தான் நாம் “நீங்கள் எப்படி நாணயமான கம்யூனிஸ்டுகளாவீர்கள்?” என்கிறோம். ஆகையால் இவர்கள் ஜஸ்டிஸ் கட்சியார், திராவிடர்கள் ஆகியவர்களை வையாமல் இதன்மூலம் பார்ப்பனர் களுக்குக் காங்கிரசாருக்கு நல்ல பிள்ளைகளாகப் பார்க்கும் கீழ்மையை உதறித்தள்ளி விட்டு உண்மை கம்யூனிஸ்டுகளாகட்டும். நாமும் கொடி தூக்கி அவர்கள் பின் தொடரத் தயாராய் இருக்கிறோம். இல்லாவிட்டால் அதோடும் போராட முடிவு செய்துள்ளோம்.இதுதான் இன்று திராவிடர் கழகம் கைக்கொள்ளவேண்டிய கடமை என கருதுகிறோம்.,

ஆகவே நம் போராட்டத்தின் போது காங்கிரசிலும் கம்யூனிசத்திலும் இருக்கும் திராவிட தோழர்களை ஏமாந்து போய் நாம் ஒருவருர்கொருவர் முட்டிக் கொள்ளும் மூடத்தனத்தில் இறங்கித் தற்கொலை செய்துக்கொள்ள வேண்டாம் என்று வேண்டிக் கொள்ளுகிறோம்.
------------- தந்தைபெரியார் "குடிஅரசு" தலையங்கம் 6-4-1946

0 comments: