Search This Blog

27.2.21

தோழர்களே! சாகத் துணிவு கொள்ளுங்கள்! - பெரியார்

இந்த திராவிட வாலிபர் சங்க ஆண்டு விழாவுக்குத் தலைமை வகித்து தலைமை முன்னுரை நிகழ்த்துவது என்கின்ற சம்பிரதாய நிகழ்ச்சிப்படி நான் ஏதாவது பேசவேண்டும். அப்படிப் பேசுவதில் திராவிடர் என்பதுபற்றியும், நீங்கள் பெரிதும் இளைஞர்கள் ஆனதால் நானும் முதியோனாய் இருப்பதால் உங்களுக்குச் சிறிது அறிவுரை வழங்குவது என்கின்ற தன்மையிலும் சில வாக்கியங்கள் சொல்வது பொருந்துமெனக் கருதுகிறேன்.
நாம் திராவிடர் -
நாம் நம்மைத் திராவிடர் என்று ஏன் சொல்லுகிறோம்?
இந்தநாடு திராவிட நாடு, நாம் இந்நாட்டு மக்கள், இந்நாட்டுப் பழங்குடி மக்கள், இந்நாட்டில் மேன்மையாய் நாகரிகத்தில் சிறந்து மானிகளாய் வீரர்களாய் வாழ்ந்தவர்கள், வீரத் திராவிடர்கள் என்ற பெயரைச் சரித்திர காலத்திற்கு முன்னிருந்து உடைய்த்தாய் இருந்தவர்கள், ஆதலால் திராவிடர்கள் என்கிறோம், இதை நானாக அல்லது நானே சொல்லவில்லை. இது இன்று மாத்திரம் சொல்லப்படவில்லை. இந்த நாட்டுச் சரித்திரம், ஏன்? உலகச் சரித்திரம் தெரிந்த காலம் முதலாய் ஆராய்ச்சி நிபுணர்களான பல அறிவாளிகளால் கண்டுபிடிக்கப்பட்ட உண்மையும் இன்றும் பள்ளிப் பிள்ளைகளுக்கு வழங்கும் சரித்திர நூல்கள் முதல் புராணங்களில் குறிப்பிட்டு இருக்கும் கற்பனை, பழிச்சொற்கள் என்பவைகள் வரையில் காணப்படும் சேதிகளுமாகும்.
பழைமைகள், பழமை சம்பவங்கள், காட்சி சாலை களுக்கும், நேரப் போக்குப் பரிகாசத்துக்கும் சென்று கொண்டிருக்கும் இந்தப் புத்துலகில் பழங்காலச் சரித்திரத்தையும் பரிகசிக்கும் புராணத்தைப் பற்றியும் கூட ஏன் சொல்லுகிறேன் என்று கேட்பீர்கள். அந்தமாதிரி அதாவது, நம்மைப்பற்றி நம் முன்னைய நிலையைப் பற்றி மேலே நான் சொன்னமாதிரியாய் இருந்து நாம் இன்று எந்தமாதிரியில் இருக்கிறோம்? பழமை நிலைமை யும் இயற்கையும் முற்போக்கில் மாற்றப்பட்டு இருக்கிறதா பிற்போக்கில் பின்னும் மோசமான நிலைமையில் கொண்டுபோய்த் தள்ளி இருக்கிறதா என்பதை சிந்திக்கவும், நாம் அதைவிடச் சிறிதாவது மேன்மையும், மனிதத்தன்மையும் அடைந்திருக் கிறோமா அல்லது கீழ்மையும், இழிநிலையும், மானமற்ற தன்மையும் அடைந்திருக்கிறோமா என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்து மேலால் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பதற்கும் ஆகவேயாகும்.
நாம் சூத்திரர்களா?
நாம் பிறவியிலோ, தன்மையிலோ, தகுதியிலோ சூத்திரர்களாக இருந்தவர்கள் அல்ல; உண்மையில் அல்ல. பின் நாம் யார்? என்றால் வீரத்திராவிடர்கள் ஆவோம். எப்பொழுது முதல் என்றால் முன் நான் சொன்னபடி உலக சரித்திரம் மனிதநூல் ஆகியவை எட்டியகாலம் முதல் என்பேன். இவை வெறும் வார்த்தையால் மாத்திரம் அல்ல. நாடு, இனம், பண்பு, நடைமுறை ஆகியவைகளால் இயற்கையைத் தழுவி திராவிடர்களானவர்கள். நமது இந்த முடிவு இதுவரை யாராலும் மறுக்கப்படவில்லை, நம் எதிரிகளாலும் மறுக்கப்படவில்லை. இந்த உணர்ச்சி நமக்குக் கூடாது என்று சொல்லும் சுயநல சமயசஞ்சீவிகளாலும் கூட மறுக்கப்படவில்லை. ஆனால் நாம்தான் நாம் திராவிடர் என்று சொல்லிக்கொள்ள, நம்நாடு திராவிடம் என்று சொல்லிக்கொள்ள, நாம் சூத்திரர்கள் அல்ல என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறோம்.
எப்படி மானமும், சுதந்திர உணர்ச்சியும் அற்ற ஒர் பெண் மற்றொரு ஆண்மகனைக் கண்ணால் பார்ப்பதால் கற்புப் போய்விடுமென்று கருதிப் பயப்படுகிறாளோ, பார்க்க வெட்கப்படுகிறாளோ அதுபோல் நாம் திராவிடர் என்று சொல்லிக் கொண்டால் நமது மதம் போய்விடும், தேசியம் போய்விடும், செல்வாக்குப் போய்விடும் என்று பயப்படுகிறோம், வெட்கப்படுகிறோம். எந்தக் காரணத்தாலேயோ நாம் சூத்திரர்கள் என்பதாக ஆக்கப்பட்டிருந்தாலும் இன்றும் சூத்திரர்களாக அதுவும் நாம் மாத்திரமல்லாமல் நம் இன்றைய ராஜாக்களும், மகாராஜாக்களும், பண்டார சன்னதிகளும், ஜமீன்தாரர்களும், ஆயிரக்கணக் கான வேலி நிலமுள்ள மிராசுதாரர்களும், பல கோடி ரூபாய் செல்வமுள்ள ராஜா, சர் முதலியவர்களும் சூத்திரர்களாக இருக்கவும் நடத்தப்படவும் இதுதான் (நாம் திராவிடர் என்று உணராததும், உணர்ந்தாலும் சொல்லிக்கொள்ளப் பயப்படுவதும்) காரணமாகும். ஆனால் இந்த இழிவு அவர்களுக்கு (அப்படிப்பட்ட பெரியவர்களுக்கு) மிக சகஜமாகி விட்டது. எப்படியோ அவர்களை அவர்களது ஆசாபாசம் அவர்களுக்குச் சகிப்புத்தன்மையை உண்டாக்கிவிட்டது. நமக்குப் பட்டம் இல்லை, பதவி இல்லை, செல்வம் இல்லை இவை பற்றிய மானமற்ற பேராசை இல்லை. எனவே நாம் ஏன் திராவிடன் என்பதை மறந்து மறைத்துக்கொண்டு நம்மைச் சூத்திரன் என்பதாகக் காரியத்தில் ஆதாரத்தில் ஒப்புக்கொள்ள வேண்டும்?
சூத்திரன் என்றால் என்ன?
சூத்திரன் என்பது தாசிமகன், ஆரியர்களின் அடிமை; ஆரியநலத்துக்கு ஆக, ஆரியர்களின் மேன்மை வாழ்வுக்காக இருப்பவன், இருக்க வேண் டியவன், இருந்தும் வருகிறவன் என்பதாகும். இதுதான் அந்த வார்த்தையின் அருத்தம். சாஸ்திரம் கடவுள் என்பவற்றின் வாக்குமாகும். ஆனால் உண்மையில் நாம் அப்படிப்பட்டவர்கள் அல்லாதவர்களாக இருக்கும்போது அந்தப் பெயரை ஏன் நமக்கு இருக்க விடவேண்டும்? என்று கேட்கிறேன்.
தோழர்களே, இக்காலத்தில் உண்மையான ஒரு தாசிமகனையே பாருங்கள். தனது தாய் தாசி என்றும், தனது வீடு, வாசல், செல்வம் தாசித்தனத்தால் வந்த தென்றும் தெரிந்தவன்கூட அவனது சுயமரியாதைக் கொதிப்பால் தாசியே உலகில் இருக்கக்கூடாது சட்டத் தில் இருக்கக் கூடாது, தன் தாய் வீட்டிற்குள்ளும் வேறொரு பயல் அவன் ஜமீன்தாரரானாலும், அவன் குருவானாலும், ஆச்சாரியானாலும், கோடீஸ்வரன் ஆனாலும் வரக்கூடாது என்று தன் தாயைச் சகோத ரியைக் கண்டிக்கிறான். வருகிறவனையும், ஏன்? வந்து கொண்டிருக்கிறவனையும் விரட்டி அடிக்கிறான், அநேகமாய் அடித்துத் துரத்தியே விட்டான். இத்த னைக்கும் அவர்களுக்குத் தேவ அடியார்கள், தேவ தாசிகள் என்று பெயர் இருந்தும் கூட. ஆனால் நம் சுயமரியாதை என்ன என்று பாருங்கள், நாம் வேசி மக்கள், அடிமை (சூத்திரர்) என்று அழைக்கப்படுகிறோம். அப்படி நம்மை அழைப்பவர்களைச் சாமி என்கிறோம். அப்படிப்பட்ட வர்களை நம்மிலும் மேலானவர்களாகக் கருதி வைதிகக் கருமங்களை (முட்டாள்தனமான, இழிவு தரும்படியான காரியங்களை) அவர்களைக்கொண்டு செய்வித்துக் கொள்கிறோம்.
அதையே வலியுறுத்தும் மார்க்கத்தை, சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்று நம்மை சொல்லிக் கொள்ளு கிறோம் வாயால் சொல்லிக்கொள்ளுவது மாத்திரமல் லாமல் மற்றவர்களுக்கும் தெரியும் படியான குறி களையும் (ஏதாவது ஒரு அடையாளத் தையும்) அணிந்துகொள்ளுகிறோம். இந்த பேதத்தையும், இழிவையும் மானமற்ற உணர்ச்சியையும் நிலை நிறுத்துவதும், பெருக்கிக் கொள்வது மான காரியங்களை நமது ஆத்மீக, லவுகீக காரியமாய்க் கருதிச் செய்து வருகிறோம். இது நியாயமா? நமக்கு இது தகுதியா? அதுவும் இந்த 20ஆம் நூற்றாண்டில் தகுமா? இதைப் பொறுத்துக் கொண்டு உயிர் வாழலாமா? என்று யோசித்துப் பாருங்கள்.
உன் சொந்த இழிவை, ஈனத்தை நீக்கிக்கொள்ளாத நீ நாட்டுக்குச் சுதந்திரம், மனித சமுதாயத்திற்கு விடுதலை ஏழைகளுக்குச் செல்வம், உண்டாக்கப் பாடுபடுகிறேன் என்றால் உன்னைவிட மடையனோ அல்லாவிட்டால் அயோக்கியனோ அல்லாவிட்டால் பித்தலாட்டக்காரனோ வேறு யார் இருக்கமுடியும். திராவிடனுடைய சரித்திரத்தில் இந்த இழி தன்மை என்றும் இருந்ததாகக் காணப்படவில்லையே!
எது தேசியம்? எது விடுதலை?
ஆயிரக்கணக்கான எச்சிலிலை கழியும் ஓட்டலுக்குள் சென்று சமமாய் இருக்க அனுமதி யில்லை. நீ பத்து லட்சக்கணக்காக செலவழித்துக் கட்டி வருஷம் லட்சக் கணக்கான செலவு செய்து பூஜை உற்சவம் செய்துவரும் கோவிலுக்குள் சென்று பிச்சை எடுத்துப் பிழைக்கும் உச்சிக்குடுமி மக்களுடன் சரிசமமாய் நின்று பிரார்த்திக்க உரிமை இல்லை என்பதாக இருந்துவரும், நடத்தப்பட்டு வரும் மக்களுக்கு தேசியமா? சுயராஜ்ஜியமா?
உண்மைத் திராவிடன் இப்படிப்பட்ட எச்சிலிலை மண்டபங்களையும், கோவில்களையும் நிர்துளியாக்கு வதையல்லவா தேசியம் சுயராஜ்ஜியம் என்று எண்ண வேண்டும்?
இன்றைய தினம் இந்த நிலையைப் பொறுத்துக் கொண்டு, இதை மாற்ற வேலை செய்பவர்களையும் எதிர்த்துத் தொல்லை விளைவித்துக்கொண்டு தேசியம், சுயராஜ்ஜியம், விடுதலை, சுதந்திரம் பேசும் திராவிடன் எவனானாலும், தம்மைச் சிறிதாவது திராவிட ரத்தம் ஊசலாடும் திராவிடன் என்று கருதுகிற எவனானாலும் அவன் எல்லாம் நம் எதிரிகளின் அதாவது வெள்ளை ஆரியர், தவிட்டு நிற ஆரியர் ஆகிய இரு கூட்டத்தினரின் லைசென்சு பெற்ற அடிமைகள் அல்லது நம்மைக் காட்டிக்கொடுக்கும் ஒற்றர்கள் என்று தூக்குமேடையில் இருந்துகொண்டு கூறுவேன்.
எது பொதுவுடைமை, இன்றைய பொது உடைமைக் காரர்கள் என்பவர்களின் யோக்கியதைதான் என்ன? வெங்கடா சலபதிக்கு (ஒரு கருங்கல் பொம்மைக்கு) பத்து லட்ச (10,00,000) ரூபாயில் கிரீடமா? மற்றும் பல குழவிக்கல், தாமிர பொம்மை ஆகியவைகளின் பேரால் நடக்கும் அட்டூழியங்களைப் பாருங்கள். ஊர்தோறும் கோவில், மணிதோறும் பூஜை, மாதந்தோறும் உற்சவம், வருஷந்தோறும் சாமி திருமணமா? இவைகளுக்குப் பண்டு எவ்வளவு? பண்டம் எவ்வளவு? பூசாரி பண்டார சன்னதி எவ்வளவு? எனவே நம் நாட்டு, இனத்தின் அறிவு, செல்வம், முயற்சி எதில் மண்டிக் கிடக்கின்றன? நம்மவர்களே ஆன கிருபானந்த வாரிகள், திருநாவுக்கரசுகள் ஆகியவர்கள் காலட் சேபமும், இசை அரசுகள் சங்கீதங்களும், நாடக மணிகள் நாடகங்களும், சினிமாக்களும், பண்டித மணிகள் வித்துவத் தன்மைகளும் இன்று எதற்காகப் பயன்படுகின்றன? இவைகள் பொதுவுடைமையின் எதிரிகள் அல்லவா? இவர்கள் எல்லோரும் தனி உடைமைக்காரர்களின் நிபந்தனை இல்லாத அடிமைகள் அல்லவா? இவைகளை அச்சுக் குலை யாமல் அசைய விடாமல் காப்பாற்ற இடம் கொடுத் துக்கொண்டு பணக்காரனைப் பார்த்து ஆத்திரப் பட்டால், குரைத்தால், பாமரத் தொழிலாளிகளை ஏமாற்றினால் பொது உடைமை ஆகிவிடுமா?
காங்கிரஸ்
காங்கிரஸ், தேசிய விடுதலைக்காரன் யோக்கி யதைதான் என்ன இதைவிட மேலானதாகிவிட்டது. எந்தத் தேசியவாதி இந்தப் பக்கம் திரும்பினான், எந்தப் பொதுஉடைமை மாநாட்டில் எந்த தேசிய மாநாட்டில் இந்த தன்மைகளை பொசுக்கிப் பொங்கல் வைக்கவேண்டுமென்று பேசப்பட்டது? தீர்மானங்கள் செய்யப்பட்டது? நினைக்கப்பட்டது? இந்த மகா உத்தமர்கள் எங்களை குறை சொல்லுவதெதற்கு? அரசாங்கத்தைத்தான் குறை சொல்லுவதெதற்கு? அரசாங்கம் இப்படியெல்லாம் செய்யச் சொல் லுகிறதா? அல்லது இவைகளைப் பற்றிப் பேசுவது ராஜத்துரோகமா? காப்பிக் கடைக்குள், கோவிலுக் குள் முன் மண்டபத்தில் பறையனை, சூத்திரனை விடக்கூடாது என்று எந்த அந்நிய ஆட்சி சட்டம் செலுத்தியது? கோவிலுக்குக் கூத்தியை வைக்கச் சொல்லி, கடவுளைத் தாசிவீட்டுக்கு அழைத்துப் போகச் சொல்லி, கல்லுக்குத் தங்கத்தில் கவசம் போட்டு வைரத்தில் கிரீடம் வைக்கச் சொல்லி எந்த அடக்குமுறை, சுரண்டல் அந்நிய ஆட்சி சொல்லிற்று?
எங்கள் கோபம்
இன்று எது ஒழிய வேண்டும்,யார் வெளியேற வேண்டும், எது மாற வேண்டும்? இவை அறியாத மக்களும், சுயநலவாதிகளும், சமயசஞ்சீவிகளும், வயிற்றுப்பிழைப்பு, பொதுஉடைமை, தேசபக்தர் குழாங்களும் எங்களை ஏன் கடிய வேண்டும். எங்களுக்கு எந்தப் பார்ப்பான் மீது கோபம்? எந்தக் கடவுள் மீது கோபம்? எந்தத் தலைவன் மீது கோபம்? எந்த ஜாதி மீது கோபம்? எந்த வெள்ளை யனிடம் அன்பு? தோழர்களே! பித்தலாட்டத்தின் மீது கோபம், முட்டாள்தனத்தின் மீது கோபம், ஏமாற்றுகிறதன்மை மீது கோபம், எங்களை இழிவுபடுத்தியும், முன்னேற வொட்டாமலும் செய்து வைத்து இருக்கும் சகலத்தின் மீதும் கோபம், இவைகளுக்கு ஆதரவளிப்பதால் வெள்ளையன் மீதும் கோபம்.
ஆகவே, எங்களை காங்கிரஸ்காரர்களும், பொது உடைமைக்காரர்களும் மற்றவர்களும் ஏன் கோபிக்க வேண்டும். ஏன் தொல்லை கொடுக்க வேண்டும்?
எங்களைத் தொல்லை கொடுப்பவர்கள் சுரண் டல்கார எங்கள் எதிரிகள் அல்லது அவர்களது நிபந்தனை அற்ற அடிமைகள் என்பவர்கள் அல்லாமல் வேறு யாராய் இருக்க முடியும்?
இளைஞர்களே! நடப்பது நடக்கட்டும் என்று நீங்கள் எதற்கும் துணிவு பெற்றுத் தொண்டாற்றவேண்டிய காலம் இது. நீங்கள் அடிபடவேண்டும். காயப்பட வேண்டும். கும்பல் கும்பலாகச் சிறைப்பட நேரிட்டாலும் மனம் கலங்காமல் நிற்கும் துணிவு பெறவேண்டும். இதற்குத் தான் திராவிட இளைஞர் கழகம் இருக்க வேண்டும்.
நாடானது விடுதலை, சமதர்மம், முன்னேற்றம், சீர்திருத்தம், கலை, கல்வி, தேசியம் என்னும் பேர்களால் மிக்க அடிமைத்தனத்திற்கும், காட்டு மிராண்டிதனத்துக்கும் போய்க்கொண்டு இருக்கிறது. வேசிக்கும் விபசாரிக்கும் தேவர் அடியாள் என்று பெயர் இருப்பதுபோல் நாட்டின் மனித சமுதாயத்தின் இழிவுக்கும், கீழ்மைக்கும், ஏழ்மைக்கும், அடிமைக்கும் அயோக்கியர்கள் ஆதிக்கத்திற்கும் மேற்கண்ட விடுதலை முதலிய பெயர்கள், ஸ்தாபனங்கள் இருந்து வருகின்றன.
தோழர்களே! துணிவு கொள்ளுங்கள், சாகத் துணிவு கொள்ளுங்கள். உங்கள் சொந்த வாழ்வு நலத்தையும், மானத்தையும் விட்டுத் தொண்டாற்றத் துணிவு கொள்ளுங்கள். இதுதான் இன்றைய திராவிட வாலிபர் கழக ஆண்டு விழாவில், இனி வெகுகாலம் வாழப்போகும் மக்களாகிய உங்களுக்குச் சாகப்போகும் கிழவனாகிய நான் வைத்துவிட்டு போகும் செல்வமாகும்.
உன் சொந்த மானத்தை விட்டாகிலும், உன் இன ஈனத்தை ஒழிப்பதற்குத் தொண்டு ஆற்று. உன் இனத்தின் இழிவை, ஈனத்தைப் போக்க உன் சொந்த மானத்தையும் பலிகொடு. இனத்தின் மானத்தைக் காக்க எவ்வகைத் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு தொண்டாற் றத்தக்க குடிமகன் இல்லாத இனம் வேர்ப்பற் றில்லாத மரம்போல்,  கோடரிகொண்டு வெட்ட வேண்டிய அவசியம் இல்லாத மரம்போல்  தானாகவே விழுந்துவிடும்
தன் இனத்திற்கு உண்மையான தொண்டாற்று பவனுக்கு அடையாளம் என்னவென்றால் அத் தொண்டால் ஏற்படும் இன்னலுக்கும், துன்பத்திற் குமே அவனது வாழ்வையும், உடலையும் ஒப்பு வித்துவிட்டவனாக இருக்க வேண்டும். இது நான் சொல்வதல்ல, குறள் வாக்கியமாகும்.

          --------------23.08.1945 அன்று திருச்சி டவுன் ஹாலில், திராவிட வாலிபர்கள் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தலைமை ஏற்று பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு- "குடிஅரசு" - சொற்பொழிவு - 01.09.1945
பேரன்புமிக்க காங்கிரஸ் தலைவர் சுவாமிநாதன் அவர்களேதாய்மார்களே! முன்னேற்றக்கழகத் தோழர்களே எம்.எஸ்.மணி அவர்களேதிரு நடராஜன்  அவர்களேமற்றும் இங்கு கூடியுள்ளகழகத் தோழர்களேஇன்றைய தினம் (08.12.1967) என்னுடைய 89ஆவது பிறந்தநாள் விழாஅதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருகிறதுஇதற்காக மாலையிலே சிற்றூண்டி விருந்து நடத்தப்பட்டதுபலஅறிஞர்கள் பெரியோர்கள் எல்லாம் வந்து என்னை வாழ்த்தினார்கள்எனக்கு முன்பு பேசியஅறிஞர்கள் என்னை வாழ்த்தியும் எனக்கு பொன்னாடை போத்தியும் மற்றும் அன்பளிப்பாகஏராளமான பொருள் தந்தும் என்னைப் பெருமைப்படுத்தினார்கள்இவைகளுக்கெல்லாம்என்னுடைய நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

எனக்கு இன்று 89ஆவது பிறந்தநாள்இந்த கூட்டத்திலே நான் பேசுவதற்கு முன்னர் சில புத்தகங்களைஅறிமுகப்படுத்துகிறேன்எனக்கு பிறந்தநாள் கொண்டாடுவதினாலேநான் சொல்லுவேன்இது ஒருபிரச்சாரத்துக்காகத்தான்என் கொள்கையை பிரச்சாரம் செய்வதற்காகத்தான்அதற்கு சாதனமாகயாரோ ஒருவருடைய பெயரை பயன் படுத்துவது சிலதில் இல்லாத பெயரை  பயன்படுத்துவது சிலர்நடக்காத காரியத்தையும் பயன் படுத்துவது எதற்காகவென்றால் இது குறித்து மக்களிடையேபிரச்சாரம் செய்வதற்குத்தான்அந்த முறையிலே என்னுடைய பிறந்தநாள் என்னும் பேராலேபிரச்சாரம் செய்வதுதான் மிக முக்கியமான இலட்சியமும் கூடஇதை அனுசரித்து முதலில் இந்தப்புத்தகங்களைத் தருகிறேன்இது ஞான சூரியன் என்கிற புத்தகம்.

இது மதத்தின் பேராலேகடவுளின் பேராலேகடவுள் சம்பந்தமான புராணங்கள்இதிகாசங்கள்தர்மசாஸ்திரங்கள் இவைகளின் பேராலேநடைபெறுகிற பித்தலாட்டங்களைகந்த புராணத்தன்மைகளை விளக்க நல்ல வண்ணம் ஏறக்குறைய 10, 12 பாரம் 150 பக்கம் இதுக்கு முன்னாலே இந்தபுத்தகம் 11 தடவை அச்சடித்துப் பரப்பப்பட்டதுஇது 40 ஆயிரம் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.யாராலும் இதைக் குற்றஞ்சொல்ல வாய்ப்பில்லாததுஇதை முக்கால் ரூபாய்க்கு 75 காசுக்குகொடுப்பார்கள்மதம் என்றால் என்னஎன்பதை மேல் நாட்டுப்புலவர் இங்கர்சால் அவர்களால்எழுதப்பட்டதுஇது 25 காசு தான்மதம் கடவுள் சம்பந்தமான முட்டாள்தனமும் பகுத்தறிவுசம்பந்தமான விஞ்ஞான நூல் மா.சிங்காரவேலு அவர்களால் எழுதப்பட்டது

இது 50 காசு, 40 காசுக்கு இங்கு கொடுப்பார்கள்இது இதிகாசங்களுடைய-தன்மைபாரத ராமாயணம்அவர்களது யோக்கியதை நாணயம் என்னாஒழுக்கமென்னாஅதற்கேற்ப அவன்பேரை வைச்சிஅனேக பித்தலாட்டக்கதைகளை உண்டாக்கியிருக்கிறார்கள்அவர்கள் பிறக்கவே இல்லைஇறக்கவே இல்லைஅவன் பேரை வைச்சிதான் பித்தலாட்டமாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்இந்நூல் என்னுடையதல்லபெரிய புலவர் கா.நமசிவாய முதலியார் பிரசிடென்சி காலேஜிலே பெரியத்தமிழ்ப் பண்டிதராக இருந்தவரின் அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைஇது 25 காசு.

கடவுளை நிந்திக்கும் கயவர்கள் யார்நாங்கள் கடவுள் கதையைத்தான் சொல்லுகிறோம்ஆனால்அந்தக் கடவுளின் கதைதான் என்னாஅவைகள்நமக்குக்கடவுள்களாஅவர்கள் சொன்ன கதையைத்தான் நாங்கள் சொல்லுகிறோம்இராமனையோஇராமாயணத்தையோபாரதத்தையோ குற்றம்சொல்றோம்ன்னாகந்தன் கதை எழுதினவன்இராமன் கதையை எழுதினவன்என்னாஎழுதினானோஅதைத்தான் நாங்கள் சொல்றோம்விளக்கம் சொல்றோம்இது 30 காசு.கடவுள் பற்றிஇங்கர்சால் என்பவர் பெரிய ஆராய்ச்சி பண்ணி எழுதியதுஇது 100 பக்கம்இது 30 காசுதான்.

கத்தோலிக்க மதகுரு ஆராய்ச்சி அவர் மதகுருவாக இருந்தபோது தான் பாதிரியாக இருந்தபோதுஅனேக மக்களை ஏமாத்தி நான் பிரச்சாரம் பண்ணிட்டேன்இப்ப எனக்கு புத்திவந்ததுநான்பண்ணின முட்டாள் தனம் என்பதற்கு என்னென்ன ஆதாரம் என ஒவ்வொரு பிரச்சினைகளைபோட்டுஅவரே பதில் எழுதுகிறார்இது 30 காசு தான். 5 அணா தான். 118 பக்கம்இது முதல்பாகம்இது அவர் எழுதின நூல் 2ஆம் பாகம்இதுவும் அதே புஸ்தகம்அந்த புஸ்தகம் ஒரு பகுதிஇந்தபுஸ்தகம் ஒரு பகுதி இதிலேஇதுவும் 5 அணா.

இது நான் எழுதின பல கட்டுரைகள் மதத்தின் பேராலேஆஸ்திகம் என்றால் என்னாதர்மம் என்றால்என்னாநாஸ்திகம் என்றால் என்னமக்களின் மீது மதமெனும் முட்டாள்தனம்எவ்வளவுபித்தலாட்டமானதுசாதி சமய வர்ணாச்சிரமம் என்கிறதுஇதில் ஆறு கட்டுரைகள் இதன் விலை 4 அணா தான்அனேக அரியவிஷயங்கள் கொண்ட புஸ்தகம் இதுகர்ப்ப ஆட்சி என்கிற புஸ்தகம்மக்கள் அதிகமாக பிள்ளை பெக்கக் கூடாதுபிள்ளை பெத்தால் ஒழுக்கம் போயிடுதுநாட்டுக்கும்கேடானதுமனிதனுடைய சுயமரியாதையும் குறைஞ்சி போயிடுது என்பதைப் பற்றி நான்எழுதியிருக்கிற பெரிய புஸ்தகம்இதன் விலை ஒரு ரூபாய்.

இராமாயணம் என்பது ஒரு புதிய கதை அல்லகந்தபுராணத்தையே மாத்தி எழுதின புத்தகம்இதுமாதிரி யாரும் உங்களுக்கு இது மாதிரி சொல்லியிருக்க மாட்டாங்கஇராமாயணம் என்பது ஒருகதைன்னே நினைக்கிறான் எவனும்தனியாக எழுதப்பட்ட ஒரு கடவுள் சங்கதீன்னு.கந்தபுராணத்தைப் பார்த்து அதிலுள்ள குறிப்புக்களை எல்லாம் வைச்சிகிட்டு பேரை மாத்திரம்மாத்திகிட்டு மற்ற சங்கதிகளை அதிலேயிருப்பதை வைச்சிகிட்டு எழுதினது தான் அதன் லட்சியமேஇராமாயணம் அதிலேயும் காதையும்முலையையும் அறுத்ததுஇதிலேயும் (கந்தபுராணத்தில்முலையையும்காதையும் அறுத்ததுஅதிலே இராவணன்இதிலே சூரபத்மன்இரண்டும் ஒரேகதைதான்இவைகள் ஆராய்ச்சியோடு எழுதப்பட்டவை.

இதுவும் என்னுடைய ஆராய்ச்சியல்லஆர்.பி.சேதுப்பிள்ளை என்கிற அரசாங்கத்துக்குத் தமிழ்இலாகாவிலே பெரிய உத்தியோகத்திலே இருந்த ஒரு புலவன்அவராலே எழுதப்பட்டது இதுஇதன்விலை 15 காசுஇது 1967ஆம் வருஷத்து ஆண்டு மலர்இதில் அனேக அறிஞர்களின் கட்டுரைகள்உள்ளதுஇது ஒண்ணரை ரூபாய்.இத்தனை புத்தகங்களிலே ஏதாவது ஒரு புஸ்தகத்தைவசதிப்பட்டவங்க வாங்கிப் படிச்சீங்கன்னா இந்தக் கூட்டத்தின் தத்துவம் என்னா என்பதையும்நீங்கள் கொஞ்சம் தெரிஞ்சிக்கலாம்நீங்கள் தெரிஞ்சிக்கிறதோடு மற்றவங்களுக்கும் எடுத்துச்சொல்லலாம்.      
        
அடுத்து நீங்கள் தெரிய வேண்டியது இதுதான்தோழர்களேஎனக்குப் பிறந்தநாள் என்பது ஒரு பெரியபிரச்சாரம் பண்ணத்தான் பிறந்தநாள் எனக் கொண்டாடுகிறார்கள்இப்ப சிலபேர் உசுரோடுஇருக்கிறவங்களுக்கும் பிறந்த நாள் எனக் கொண்டாடுறாங்கஅதைப் பாராட்டுகிறதினாலே அந்தநாளைப் பயன்படுத்துகிறாங்கஅதற்கு ஆதாரம் என்னாபிறந்தநாள் என்பதாக முதன்முதல் கடவுள்பேராலேஅந்த நாளை வைச்சி ஆரம்பிச்சாங்கஎன்னாகடவுள்ங்கிற மூடநம்பிக்கையைமக்களிடத்திலே பிரச்சாரம் பண்றதுக்காகஅதை எப்படி ஆரம்பிச்சாங்கன்னாசிவன் பிறந்த நாள்விஷ்ணு பிறந்தநாள்அப்புறம் சிவனோட மகன் கந்தன் பிறந்த நாள்அப்புறம் விஷ்ணுவோடஅவதாரங்கள் பேராலே ராமன் பிறந்தநாள்கிருஷ்ணன் பிறந்தநாள்இவனுங்க எல்லாம்இருக்கவுமில்லேபிறக்கவுமில்லே சாகவும் இல்லே (பலத்த கைத்தட்டல்). ஆனால் இருந்தான்பிறந்தான் அது பண்ணினான்இது பண்ணினான்னுகதை எழுதி அவனுங்களை விளம்பரம்பண்றதுக்காக ராமனுக்கு இராமநவமி-ன்னு ஒரு நாளைக் கொண்டாடுகிறாங்கஅதுபண்டிகையாய்ப் போயிட்டதுபழக்கத்திலே நம்ம மக்களிடத்திலேகிருஷ்ணனுக்கு அஷ்டமின்னு ஒருநாள் கொண்டாடுகிறாங்ககோகுலாஷ்டமின்னு.கந்தன் பிறந்ததுக்கு சஷ்டின்னு ஒரு நாள்கொண்டாடுகிறாங்ககந்தன் பிறந்தான்னு முருகன் பிறந்தான்னுஅப்படியே சிவன் பிறந்தான்கிறதுஆருத்திரா ன்னு கொண்டாடுவாங்க.

                இவனெல்லாம் பிறக்கவுமில்லே இருக்கவும் முடியாது.

                கடவுள்-ன்னு சொன்னாலேஅவனுக்குப் பிறப்புமில்லேஇறப்புமில்லே-ன்னு சொல்லிதான்கடவுளைப் புகுத்தினான்அப்புறம் அவன் பிரசாரம் பண்றதுக்கு அவன் பிறந்தான்வாழ்ந்தான்,செத்தான்கிறதுக்காகக் கொல்லப்பட்டான்அதனாலே இவன் செத்தான் என இப்படியெல்லாம்எழுதிட்டான்ராமன் செத்தான்னே எழுதறான் கிருஷ்ணனை இன்னொருத்தன் கொன்னான்னுஎழுதினான்இதெல்லாம் கடவுள்னு சொல்லி எழுதறது முட்டாள்தனம்ஆனால் இதைப் பிரச்சாரம்பண்றவன் கூட ஒரு உறுதியினாலே என்னா எழுதறது என்பதில்யோக்கியமானபடியா நாணயமானகதையாஎன்பதையெல்லாம் சிந்திக்காமேகதையை எழுதிட்டான்.

அதுக்கு உருவம் - அதுக்குக் கோயிலு - அதுக்குப் பண்டிகை - அதுக்குப் பொண்டாட்டி - அதுக்குவைப்பாட்டி (சிரிப்புஅதுக்குக் கல்யாணம் மற்றும் என்னென்னமோ வச்சி மக்கள் உள்ளத்திலே ஒருமூடநம்பிக்கையைப் புகுத்தறதுக்கு கடவுள்பேருன்னு சொல்லி வரிசையா பண்ணிட்டு வந்திட்டான்அதுதான்இராமன் ஒருவன் இருந்தான்அவன் பிறந்தான்னு சொல்ல முடியாதுகிருஷ்ணன்ஒருவனிருந்தான்அவன் பிறந்தான்-அவன் செத்தான்னு எவனாலேயும் சொல்ல முடியாதுஅவன்கதையின்படி அவன் மனுஷனாகவுமில்லேஅவன் கடவுளாகவுமில்லே .மனுஷனாக இருந்தால் அவன்மனுஷத்தன்மையோடு இருக்கணும் .இல்லாட்டா கடவுள் தன்மையோடு இருக்கணும்இரண்டுமில்லேகடவுள்னு சொல்றான் அவன்பொண்டாட்டியை எவனோ இழுத்துகிட்டு போயிடறான்னுஇராமாயணத்தை முடிக்கிறான். (சிரிப்பு) (ராமனைகிருஷ்ணனைக் கடவுளுங்கிறான்எவனோஅவனை வில்லால் அடிச்சான்,

அவன் செத்தான்னு எழுதறான்.இப்படியாக ஒரு முட்டாள்தனமான கருத்து எப்போதும் இருக்கும்படியாக உண்டாக்கின ஒரு தந்திரம் கடவுள் பிறந்த நாளுங்கிறதுஅதுக்குப் பின்னாலே என்னாபண்ணினான்கடவுள் சங்கதி முடிஞ்ச உடனேபக்தர்கள் பேராலே ஆரம்பிச்சான்.நாயன்மார்கள்பிறந்தநாள்ஆழ்வார்கள் பிறந்தநாள்குருநட்சத்திரம்ஆழ்வார்கள் நட்சத்திரம்நாயன்மார்கள்ஆழ்வார்கள் இந்த இரண்டுபேரும் அவனுங்க பிறந்தாங்க செத்தானுங்கன்னுஅதிலே ஆழ்வாரிலே100க்கு 5 பேர்இருந்தாங்களோ என்னமோ?அதிலே 90 பேருபெறட்டுஇருந்திருக்கமாட்டானுங்கஅந்தக் காரியமெல்லாம் நடந்திருக்காதுஅப்படி பேரு வச்சி அவனுங்க பேராலே எழுதினானுங்க.

அப்புறம் அரசியல் பித்தலாட்டம் வந்த பிறகு அரசியல் பெறட்டான கொள்கைகளைப்பரப்பறதுக்குஅதுக்கும் அந்த மாதிரியான ஆளுங்க பேராலே பொய்யும் புளுகும் பேசிக்கிறதுஅவனுங்களைப்பத்தி பிரமாதமா பேசிக்கிறதுஇப்ப கொஞ்சம் மக்கள் அறிவு பெற்றதுக்குதெளிவானதுக்குஅப்புறம்நிஜமாக உயிரோடு இருக்கிறவனை பிறந்தநாளுன்னு அவன் பேரை இப்ப பயன்படுத்தறாங்கஅந்தமாதிரி சிலபேருக்கு நடத்தறாங்கஅதனுடைய கருத்தெல்லாம் காந்தியின் கொள்கையைப்பரப்பறதுபிரசாரம் பண்ணத்தான்அது போலவேஜவகர்லாலுக்கு நடத்தறாங்கஇன்னும் பலபேருக்கும் நடத்தறாங்கமற்றும் நம்மைப் போலவே இராஜகோபாலாச்சாரி (ராஜாஜி)க்கும்நடத்தறாங்கமந்திரிமார்களுக்கும் நடத்தறாங்க.

அவர்களைப் பெரிசு பண்றதுக்காகஅவர்களுடைய கொள்கையைப் பரப்பச்செய்யணும்அதேமாதிரியாகவே எனக்கும் நடத்துகிறார்கள் என்றால்என்னுடைய கொள்கையில் ஈடுபட்டவங்கஅதாவது நம்ம கழகத்தோழர்கள் முக்கியமாகக்கழகம் நம்மகொள்கைகளை ஜனங்கள் மத்தியிலேபிரச்சாரம்பண்ண வாய்ப்பை முன் வைத்து மற்ற பெரியவங்களையும் இதைஆதரிக்கும்படியாகக்கேட்டு இதில்சேர்த்து அவர்களுடைய தயவினாலேயும் கொண்டாடி இப்படி பலபேரையும் இணைத்துஎன்னைப் பற்றியே சொல்லிக்கிட்டு போக அவர்களாலே முடியாதுநம்மகொள்கையைப்பற்றிச் சொல்லவேண்டுமானா அவர்களுக்குக் கொஞ்சம் தைரியம் வேணும்நான்கடவுளை எல்லாம் அயோக்கியப் பயலுகங்கிறேன்அவனுங்க பொண்டாட்டிகளை எல்லாம்விபசாரிகள் குச்சிக்காரிகளுங்கிறோம்அந்தக்கடவுள் காரியங்கள் எல்லாம் பெறட்டுஅயோக்கியத்தனம்கிறோம்கடவுளாவது வெங்காயமாவுது மடப்பசங்களாங்கிறோம்.இதையெல்லாம் சொல்ல அவர்களுக்குத் தைரியம் வராதுஏன்னா?

நானும்என்னை யாரும் செருப்பிலே அடிச்சாலும்உதைச்சாலும்கொன்னாலும்குத்தினாலும்என்னா பண்ணினாலும் பரவாயில்லேசங்கதிகளைச் சொல்லி வைக்க வாய்ப்பு கிடைச்சிதேன்னுதுணிஞ்சி நான் பேசறேன்ஒருத்தர்கிட்டேபோயி ஒரு ஓட்டு கேட்க மாட்டேன்எனக்குஇப்ப90வயசாகுது.எனக்கு 5 வயசு முதற்கொண்டே என்னுடைய அஞ்சாவது வயசு முதல் இன்னைக்கு90ஆவது வயசு வரையிலும் ஏதாவது ஒருத்தருக்கு நான் கொடுத்தாகொடுத்திருப்பேனே தவிர,ஒருத்தர் கிட்டே போயி எனக்கு ஒரு காரியம் செய் ஒரு காசு கொடுன்னோ நான் கேட்கமாட்டேன்கேட்டதுமில்லைகேட்காது வாழ முடியாது என்பாங்கஆனால்என்வாழ்விலேஎனக்கு இது பண்ணுஇன்ன காரியம் செய்யின்னுஎனக்கு இந்த உபகாரம் செய்எனக்கு இன்னது வேணும்ன்னுஅந்தமாதிரியான வாய்ப்பும் எனக்கில்லே.

ஆனால் நான் பிறக்கும்போதே நான் துடுக்கான பையனாகவே பொறந்திட்டேன்ரகளைகாரணமாகவே இருந்தேன்எந்தக் காரியத்திலே நான் ஈடுபட்டாலும்நான் தலைவனாதான்இருப்பேனே தவிரவெறும் மெம்பராக எதிலேயும் நான் இருப்பதே இல்லை. (பலத்த - கைத்தட்டல்நான் காங்கிரசிலே கொஞ்ச நாளிருந்தேன். (1919 முதல் 1925 வரைஅதிலேயும் நான் தலைவனாதான்இருந்தேன்என் விருப்பப்படி நடக்கலேகாங்கிரசை விட்டு விலகினேன்அந்த மாதிரி நான்துடுக்காகவே இருந்தேன்எப்படி எப்படியோ வசதி ஏற்பட்ட பிறகு நான் துடுக்காகவே பேசப் பழகிட்டேன்அதுக்குத் தகுந்த ஆராய்ச்சிகளையும் செய்தேன்எனக்குப் புத்தி இப்படிப் போயிட்டுது(சிரிப்புயாரும் கவனிக்காத சங்கதிகளைத்தான் நான் கவனிக்கிறேன் (கைத்தட்டல்).
நம்ம நாட்டிலே நான் சொல்றேனே இன்னைக்கும் ஒருவனுக்குக்கூடதான் ஏன் தேவடியா மகனாகஇருக்கிறான்பாப்பானுக்கு வைப்பாட்டி மகனாக இருக்கிறான்இவன் குச்சிகாரிமகனாகஇருக்கிறான்நாலாவது ஜாதியா இருக்கிறான் இந்த கவலையே இவனுக்கு இல்லையே(கைத்தட்டல்யாருக்காவது இருக்குதுன்னா எழுந்திரிச்சி
நின்னா நான் வணங்குகிறேன்அவனுக்கு தெரியும் காத்தாலே அவன் சாமியைக் கும்பிடுவான்நெற்றியிலே சாம்பலைப் போட்டுக்குவான்மண்னைப் பூசிக்குவான்கோயிலுக்கு போவான்சாஸ்திரங்களைப் படிப்பான்இதுக்கெல்லாம் என்னா அர்த்தம்கோயிலுக்குப் போறவங்களும் சாஸ்திரங்களைப் படிக்கிறவங்களும் நாமம் போட்டுக்கிறவங்களும் - சாம்பலடிக்கிறவங்களும்இதுக்கு என்னா அர்த்தம்ன்னாஆமாம் நான் பாப்பானுடைய வைப்பாட்டி மகன்தான் (சிரிப்புகைத்தட்டல்நான் குச்சிக்காரி மகன்தான் (மீண்டும்சிரிப்புஎன எழுதறதுக்கு இதிலே கையெழுத்துப் போடற மாதிரி (கைத்தட்டல்). அதைஏண்டா செய்றேன்னா?

அதுக்கு நான் உசுரே கொடுப்பேன்ம்பான்அடே நீ சாம்பலடிச்சிநீ நாமம் போட்டுநீ கோயிலுக்குப்போயிநீ வெங்காடஜலபதிக்கு நீ தேவடியா மகனா இருக்கிறியேநீ ஏன் சிந்தனை பண்றதில்லேநீதேவடியா மகன்மதத்திலே தேடிவயா மகன் - கோயிலிலே தேவடியா மகன் - சாஸ்த்திரத்திலேதேவடியா மகன் - குச்சிக்காரி மகன் (சிரிப்பு) (கைத்தட்டல்மன்னிக்கணும் நீங்கநான்சொல்றதுனாலே நீங்க கோவிச்சிகாதீங்கஇது பற்றி எவனுக்குமே கவலை இல்லியேஇன்றைக்குநடைபெறுகிற சட்டத்தை எடுத்துக்கிட்டா நாம நாலாவது ஜாதி நாம சூத்திரன்நாம தாசிபுத்திரன்அந்த நாய்கள் (பாப்பான்கபிழைக்கிறதுக்காகநம்ம ஆளுக இருக்கிறானே தவிரநம்மைசூத்திரன்னு இருக்குதேன்னுஎவனுக்கும் வெட்கமில்லேமுடியிலே.ஆனால் நம்மை எப்படியோகொண்டு வந்து மாட்டி வைச்சிட்டான்வெட்கப்படறதுக்கே இல்லாமேஅதிலே வெட்கபட்டா பிழைக்கமுடியும்நாமதான் அதுக்கு சத்தம் போட முடியுதுஇப்படி ஒவ்வொரு காரியத்திலேயும் கோயிலுக்குபோறான்.

நிஜமாக அவன் பாப்பானுடையவைப் பாட்டிமகன்னுதானே போறான்அவன் பக்தன்னுநினைச்சிகிட்டு போறது நம்மை ஏமாத்தித்தானேகோயிலுக்கு போறவன் பின்னே என்னாநினைச்சிகிட்டு போறான்நாம தாசி மகன் சூத்திரன்னுநான் பந்தயங்கட்டிக் கேட்கிறேனேநான்சூத்திரன்னு ஒப்புக் கொள்ளாதவன் எவனாவது கோயிலுக்கு போறானாகைத்தூக்கட்டுமேயாராவதுநான் சூத்திரன் அல்லநான் மனுஷன்னு நினைச்சிகிட்டுதான் நான் கோயிலுக்குப்போறேன் அப்படீன்னு யாராவது கைத்தூக்கட்டுமேஇல்லேநம்முடைய இழிவை நினைச்சி நான்சொல்றேன் இதெல்லாம்
இல்லேபோவான் கோவிலுக்குதிருவானைக்காவலுக்குவெங்காயத்துக்குப் போவான்அங்கேயில்லேஇந்த தாயுமானவர் சாமி கோயிலுக்கு வெங்காயத்துக்குப் போவான்சீரங்கம்ரெங்கநாதசாமி கொழுக்கட்டைசாமி அங்கே போவான்எந்தப் பேராலேசாமிகிட்டே நான்சூத்திரன்னு காட்டிக்கிறதுக்குத்தானே அங்கே போறான்வெளியிலேயேதானேநிற்கிறான்.கோயில்சாமிஇருக்கிற வாசற்படிகிட்டே தான் நிற்பான்ஏன்டா சாமியிருக்கிறகருவறைக்குள் போகலே? (சிரிப்புதுணிந்து நீ அங்கே போனா உன்னைப் பாப்பான் கல்தாகொடுப்பான்ஏன்டா தேவடியா மகனே நான் இருக்கிற இடத்துக்கு நீ சூத்திரன் ஏன் உள்ளேவந்தேம்பான்சாமி சாமி தெரியாது வந்திட்டேன்னு கன்னத்திலே போட்டுகிட்டு வெளியேவந்திடுவான்.

இந்த மாதிரி இழிநிலையை ஒத்துகிட்டு எவனாவது கோவிலுக்குப் போவானாஇல்லே.அங்கேயிருக்கிற பாப்பானையாவது கேட்பானா நீ என்னடா ஒஸ்திநான் என்னடா மட்டம்னுஅடே நீஇராத்திரி எல்லாம் மாமா வேலை பண்ணிப் போட்டு குளிக்காமல் (கைத்தட்டி சிரிப்புநீ உள்ளேவந்து புகுந்துகிட்டேநான் குளிச்சி முழுகி சுத்தமா பட்டுகட்டிகிட்டுபட்டை போட்டுகிட்டு,வந்திருக்கிறேன்என்னை ஏண்டா சூத்திரன்னு வெளியே நில்லுங்கிறீயான்னு கேட்க வேண்டாமாஅவன் என்னா பண்ணினாலும் அவன் பிராமணன் தான்ஜாதியை தர்மத்தைக்காக்கபொண்டாட்டியை விட்டுக்கொடுத்து பிழைச்சாலும் அவன் பிராமணன்திருடினாலும் அவன்பிராமணன்கொள்ளை அடிச்சாலும் அவன் பிராமணன்கொலை பண்ணினாலும் அவன் பிராமணன்ஒரு பொம்பளையைக் பலாத்காரம் பண்ணினாலும் அவன் பிராமணன் பார்த்துக்கடாங்கிறானேஅவன்சூத்திரன் எவ்வளவு பக்தியோட இருந்தாலும் அவன் தாசிமகன்நாலாவது ஜாதிஇதையெல்லாம் படிங்க ஞான சூரியன் என்ற நூலைஅதுக்கு ஏன் போவானேன்?

இராமாயணத்திலேஇருக்குதே.அதைப்பார்க்க மாட்டேங்கிறான்ராமாயணத்தைத் தெருத்தெருவாவாசிக்கிறானேராமனே சொல்றான் ஆரிய தர்மம் காக்க சூத்திரனைக் கொல்லத்தான் நான்வந்தேன்ஜாதி காப்பாத்த சூத்திரனைக் கொல்லணும்அப்படீன்னல்ல சொல்றான்அது அக்கிரமமடான்னு சொன்னா கேட்கமாட்டேன்கிறான்அந்த இராமாயணத்தைத் தான் படிக்கிறானுங்கயார்இருக்கிறா அதைப் பற்றி எடுத்துச் சொல்லஎன் (உடல்நிலைமை எனக்கு இப்ப வயசு 89 ஆயிப்போச்சிஇப்பவே எனக்கு தொல்லைஇரண்டு பேரை பிடிக்காமல் என்னால் நடக்க முடியாதுஒண்ணுக்கு (சிறுநீர் கழிக்கவும்வெளியே போகனும்ன்னா உட்கார்ந்திருக்க முடியாதுநின்னுகிட்டேதான் இருக்கணும்நான்போயிட்டா நாளைக்கு எவன் சொல்வான் இதைஎல்லாம்இல்லே யார்திருந்துவா?

நான் செத்தவுடன் அவனவன் என்னை பூசை பண்ணுவானே தொலைஞ்சானே சண்டாளப்பயல்னு? (கைத் தட்டல்இருக்கிற நிலைமை மாறலியேசீர்திருத்தமாகலியேபுதுக்கோயில் கட்ட 1ஙூ(ஒண்ணரைலட்ச ரூபாய் அதுக்கு பணம் அனுப்பறான்இதிலே எவன் பிழைப்பான்பாப்பான்பிழைப்பான்அய்யங்கார் பசங்க பிழைச்சாங்கநம்ம பசங்க கெதி என்னாச்சிஅவன் கிட்டேகாசைக்கொடுத்திட்டு அவன் காலைக்கழுவித் தண்ணீர் குடிக்கிறதுசிறப்பு என்னாதாசி புத்திரனாஇருக்கிறான் அவன்ஏன் அந்தக் கோவில்அது புதுக் கோயிலு . அது கட்டின பிறகு நீ அங்கே ஒருபுதுத்தேவடியா மகனாகத்தானே ஆகப் போறே நீஎந்தக் கோயில் கட்டினாலும்நீ உள்ளேபோகிறாப்பிலே கோயிலு கட்ட முடியுமாஎதுக்குச் சொல்றேன்?கோயிலிலே சாமி இருக்கிறபக்கத்திலே சூத்திரன் வரக் கூடாது

சூத்திரன் வந்தால் சாமி தீட்டாய்ப் போய்டும் ஏன்னாநீ தீண்டாதவன்.அவன் (பாப்பான்). அப்படிசொன்னதுக்கப்புறம் சூத்திரப் பசங்க எங்கே மாறியிருக்கிறான்நம்ம மந்திரிகளும் அங்கே போயிசாமி கும்பிடறானுங்களே? (சிரிப்புபத்திரிகைக்கார திருட்டுப் பசங்களெல்லாம் அதே மாதிரிதான்.கோயிலு சாமி பற்றி பரப்பறது.

மனுஷனுடைய அறிவைப் பற்றிமானத்தை பற்றிதன்னுடைய வாழ்க்கையைப் பத்திஎன்றதேஇல்லையார் சொல்லப் போறா இது பற்றி எல்லாம் உங்களுக்குநீ இப்பமுன்பு உன் அப்பன்இருந்தான்பாட்டன் இருந்தான்உங்க பாட்டி இருந்தாள்நாசமா போனாங்க - மாறினாங்களா?அவுங்க பிள்ளைகள் எல்லாம் மாறியிருக்க வேண்டாமாஅவர்கள் பிள்ளைகளாவது மனுஷனாகஇருக்க வேண்டாமோஅவனும் தேவடியா மகனாகவே இருக்கணும்அதுவும் அவன் சூத்திரனாகவேஇருக்கணும்நாலாவது சாதியாய் இருக்கணும்அப்புறம் நீ இருந்தென்னாசெத்தென்னா?ஈனசாதியைப் பரப்பிக்க நாம ஒரு கூட்டமாநீ எத்தனைக் குட்டிபோட்டாலும்அதெல்லாம்நீயும்ஈனஜாதிதானேநாலாவது ஜாதியாகத் தானே ஆவப் போவுதுஅதைப் பற்றி எவனுமேகவலைப்படறதில்லேன்னா மனுஷனுக்கு எவ்வளவு நாளாகக் கவலை இருக்கிறதுபெரிய மனுஷன்பாருடா அந்தப் பண்டாரப் பயல் - அவன் சாமியைத் திட்டறான்அவன் மதத்தை திட்றான்அவன்அதைச் சொல்றான் - இதைச் சொல்றான் -அப்படீன்னுதான் அவன் சொல்றானே தவிர - அவன்சொல்றதிலே என்னா தப்புநம்ம யோக்கியதை எப்படிடா இருக்குதுன்னுயார் சிந்திக்கிறாஎவனும்சிந்திக்கிறதில்லே?.

இந்தஎன்பிறந்தநாளுங்கிறது நம்முடையக் கொள்கையைப் பாராட்றதுக்குநம் கொள்கையை பரப்பஒரு வாய்ப்புதான்எல்லாரும் அதுக்குத்தான் செய்றாங்கநீங்க என்னை வாழ்த்தறது அது மிக மிகசாதாரணம்தலைவர் சொன்னார்நாம வாழ்த்தறதுக்கு நமக்கு யோக்கியதை இல்லேன்னு ஜாடையாசொன்னார்நாம ஒரு பிள்ளையை வாழ்த்துறதுன்னா அதிலே என்னாஅறிவுஇருக்குதுவாழ்த்தறதுங்கிறது என்பதெல்லாம் அய்யா அது ஒரு முட்டாள் தனம் தானே?. வேறு அதிலேஎன்னாபுத்தி இருக்குதாஉன்னை ஒருத்தன் பார்த்து நீ மகாராஜனாய் இருன்னா நீ ஆயிடுவாயா?(கைத்தட்டல்நீ நாசமாபோ ன்னா நீ போயிடுவாயா? (சிரிப்பு கைதட்டல்சொல்லுங்கஅந்தவார்த்தைக்கு ஏதாவது மதிப்பு உண்டோஉண்மையைச் சொல்றேன்அதனாலே உளர்றான்னுநினைப்பீங்கநீங்கள் ஏண்டா இப்படிச் சொல்றான்னு நினைப்பீங்கநீங்கள் என்னைவாழ்த்தறதெல்லாம் முட்டாள்தனம் நான் பெரிய கூட்டத்திலேயெல்லாம் பேசியிருக்கிறேன்இதுஎன்னா சின்னக்கூட்டமாக இருக்கிறீங்கமந்திரிகள்அதிகாரிகள் ஜட்ஜ்கள் அவுங்க இருக்கிறகூட்டத்திலேயும் வாழ்த்தறதுங்கிறது ஒரு முட்டாள் தனம்னு நான் சொல்லியிருக்கிறேன்.

நாமம் போட்டுகிறது எப்படி முட்டாள் தனமோஅது போன்றது வாழ்த்தறதும் என நான்சொல்லியிருக்கிறேன்அதுக்கு என்னா அர்த்தம் சொல்லுங்களே நீங்கள் தான்இன்னும் ஒரு 100, 200 வருஷத்துக்கு இருன்னு சொன்னாஎனக்கு என்னா லாபம்ஒரு நாள் எச்சா இருக்க முடியுமாஎன்னை அவரு 100வருஷம் இருக்கனும்னா அவருக்கு வேடிக்கையா நான் சொல்லுவேன்ஏன் அய்யாஇவ்வளவு சிக்கனம்இவ்வளவு பிச்சக்காரப் புத்திஒரு ஆயிரம் வருஷமிருன்னு சொல்லே என்னாகெட்டுப்போச்சி (சிரிப்பு) (கைதட்டல்ஆயிரம் வருஷமிருன்னு சொல்றது ஒண்ணுதான்நூறுவருஷம்கிறது ஒண்ணுதான்அஞ்சு வருஷமிருங்கங்கிறதும் ஒண்ணுதான்நம்ம பேச்சினால் சாவைத்தடுத்து நாம இருக்கமுடியுமோஅது நம்மவர்களுக்குப் பழக்கமாப் போச்சி பாப்பான் பிச்சைஎடுக்கிறதுக்கு  நீ நீடுழிகாலமிரு - ஆசிர்வாதம் ஆசீர்வாதம்ன்னு பாப்பான் இதைச்சொல்லிக்கொடுத்து ஆசீர்வாதம்ங்கிற சொல்லுக்கு தமிழிலே கண்டுபிடிச்சான் வாழ்த்துறதுன்னு.மத்தது அப்படி என்னா நடக்கும்வாழ்த்தறதிலே என்னா ஆகும்நான் வாழ்த்தறதுன்னு - சொன்னாநினைச்சா நான் ஆசைப்படுகிறேன் என்று சொல்லுவதுதான்எதுக்காகச் சொல்றேன் அது ஒருமூடநம்பிக்கை.

இப்படியாக நாங்கள் திருத்தமடைய வேண்டியது காரியம் ரொம்ப இருக்குதுஏன் ரொம்பஇருக்குதுன்னாஎவனும் இதையெல்லாம் திருத்தறதுக்காகப் பாடுபடலேஎவன் வந்தாலும் இந்தமூடத்தனத்தை வளர்க்கிறதுக்குத்தான் பாடுபட்டானுங்க - சாமியாராவது பக்தனாகிறதுபுலவனாகிறது - கவிஞனாகிறதுபெரிய பிரசங்கியாகிறது - பழைய முறையைவளர்க்கிறதுக்குத்தான்அதை அதிலிருக்கிற தப்பை மக்களுக்கு எடுத்துச் சொல்லிமக்களிடையேயுள்ள அந்த முட்டாள்தனத்தைத் திருத்தி நமக்கு இருக்கிற இழிவைமாத்த வேணும்னுஎவனும் பேசமாட்டான்பேச பயப்படறான்உத்தியோகஸ் தனாயிருந்தா அவன் மேல் வேலைக்குப்போயிடுவான்அவன் அரசியல்காரனானா அவன் ஓட்டு வாங்கப்போவான்அவன்வியாபாரியாயிருந்தால் அதனாலே பணம் சம்பாதிக்க மக்களிடம் தயவு தாட்சண்யம் பாப்பான்இவனை எல்லாம் ஒண்ணு சேர்க்கமுடியுமாஇவனெல்லாம் இந்த மூடநம்பிக்கையை முட்டாள்தனமான இக்காரியத்தை கண்டிக்க முடியுமாஅதனாலேதானே இவைகள் இன்னமும்இருக்குது

வாழ்விலே இன்னமும் தாசிபுத்திரன் - சூத்திரத்தன்மை இருக்குதேநான் பிறக்கிற அன்னைக்கும்நான் சூத்திரன்தான்தாசி மகன் தான் - தாசிபுத்திரன்தான்எனக்கு இப்ப 89 வயசாச்சி இன்னும் இந்தஈன ஜாதித்தன்மைதான்மாறல்லியேஅப்படி எவனாவது மாற்ற முற்பட்டால் நான்புத்தனாயிட்டேன்நான் சமணனாயிட்டேன்புத்தன் சமணனாகிறதிலே தான் இருக்கிறான்வாயிலேதான் சொல்லலாமே தவிரகாரியத்திலே ஒண்ணும் செய்றதில்லேசாமியில்லேஅதுக்குப்பொண்டாட்டியில்லேஒண்ணுமேயில்லஅரசாங்கம் மூடத்தனத்தை வளர்த்தது - காங்கிரசுவளர்த்தது மத சம்பிரதாயம் வளர்த்தது - இலக்கியம் வளர்த்தது - மொழிவளர்த்தது - மூடத்தனத்தை.

தேசியமென்றாலே சாமியை நம்பணும்நெற்றியிலே சாம்பலடிச்சிக்கணும்ஆகவே தோழர்களேஇனிமக்களுடைய வாழ்வுக்கு மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய விஷயம்மக்கள் அடையவேண்டிய நிலைமை ஆகியவைகளை மாத்தி அமைக்கணும்மாத்தித் தான் அமைக்கணும்.ஏறக்குறைய 3000 வருஷமா இந்தப்பேரு இருக்குதுசூத்திரன் என்பது தமிழனோஆந்திரனோ,கன்னடியனோமலையாளியோ அவனெல்லாம் சூத்திரன்இன்னைக்கு இல்லே இது 4000 வருஷமாஇருக்குதுஇப்பதான் அது ஒழிய சூத்திரன்கிறது கத்தறாப்பிலே ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

முன்பெல்லாம் சொன்னா ஒழியணும்ன்னா அடிச்சே கொன்னுபோடுவாங்க.

என்னைக் கூட மூன்று மாசத்துக்கு ஒருக்கா நாலு மாசத்துக்கு ஒருக்கா உன்னைக் குத்தப் போறோம்கொல்லப் போறோம்ன்னு மிரட்டி கடிதங்கள் வருதுநேற்று முந்தாநாளு கூட (6.12.1967) பத்திரிகையிலே பார்த்தேன்சந்து பொந்திலே தெருவிலே நடைபாதையிலே இருக்கிற கோயிலைஎல்லாம் மாத்தப்போறோம்னு சொன்ன உடனே சென்னை மேயருக்கு வேலூர் நாராயணனுக்குமிரட்டி கடிதம் வந்ததுஎன்னபாப்பானுக்கு அக்கோயில்கள் தான் படிப்புக்கு பாப்பான்னு இருந்தாஅவனுக்குப் படிப்பு என்னான்னாஇந்த சமுதாயத்துக்கு விரோதமாக இருக்கிறவனைக் கொல் என்பதுதான்ஆனால் என்னைக் கொல்ல எவனுக்கும் தைரியமில்லேசில பாப்பான் என்னைஎதிர்க்கிறான்நாம(பாப்பான்இரண்டு மூணு பேரு அவனுங்களிலே (தமிழர்) 1000 பேரு, 10,000 பேரு, 1,00,000 பேரு இருக்கிறாங்கஅவுங்க முன்வந்தா நம்மை அடியோடு ஒழிச்சிக்கட்டிடுவாங்கங்கிறபயம் பாப்பானுங்களுக்கு இருக்கிறதுஇல்லாட்டா என்மீது கைவைச்சிருப்பான்கடவுள் கதைகள்பூராவும் இதுதான்எவன் உங்களுக்கு விரோதியோ அவனைக் கொல்லு.

கடவுளுடைய அவதாரங்களை எடுத்துக்கோ வேதத்தைப் பழிச்சான்அவனைக் கடவுள் கொன்னாருஜாதியைக் குறை சொன்னா அவனைக் கொல்லுமதத்தைக்குறை சொன்னா அவனைக் கடவுள்கொன்னாரு . ஏன்ராவணனை ஏன் ஒருத்தன் கொன்னான்இரணியனைஒருத்தன் ஏன்கொன்னான்இராவணனுக்கு என்னா வேலைபாப்பானை எங்கு கண்டாலும் உதைன்னான்.பாப்பான் எங்கே பிரசாரம் பண்ணினாலும் உதைன்னான்இரணியன் என்னா சொன்னான்பாப்பான் ஊட்டை எல்லாம் இடின்னான்அவன் வீட்டுக்கு நெருப்பு வையின்னான்எவனெவன்பூணூல் போட்டிருக்கிறோனோ அவனை எல்லாம் வெட்டித் தள்ளுன்னான்யாருஇரணியன்.அதன்படி சொன்னான்பாப்பானை எல்லாம் வெட்டித் தள்ளுன்னான்இரணியன் இருந்தானா?அப்படிச் சொன்னான்னாங்கிறதல்ல இப்பகதை?

பாப்பான் அவ்வளவு முன்ஜாக்கிரதையாக எழுதி இருக்கிறான் எவனாவது உன்னைக் குறைசொன்னா அவனைக் கொல்லுன்னுகடவுள் பத்தவதாரம் - எடுத்தாருங்கிறான்ஒன்பது அவதாரம்எடுத்தாருங்கிறான்ஒன்பது அவதாரமும் - சாமிக்கு - வேதத்துக்கு - பாப்பானுக்கு - கோயிலுக்கு -குளத்துக்கு - விரோதமாயிருந்தவனை - பாப்பானுடைய தர்மத்துக்கு -யாகத்துக்கு-மற்றும்பூஜைமுதலானவற்றுக்கு-விரோதமாக இருந்தவனை எல்லாம் கொன்னதுதான் அந்தபத்தவதாரக் கதைகளாகும்.

எப்படி சூரபத்மனை கொன்னான் கந்தன்கிறவன்எங்கெங்கே பாப்பானிருக்கிறானோ?அங்கேயெல்லாம் தேடிப் போயி (சூரபத்மன்உதைச்சான் - கொன்னான் - அப்படீன்னு - கதை.அதனாலே தேவர்களுக்குக்கெடுதி பண்ணினவனைக் கொன்னான் (கந்தன்இதைச் சுருக்கமாசொல்றேன்தேவர்ன்னா - பாப்பான்கெடுதிபண்ணினவன் அசுரன்அசுரன்னா - சூத்திரன்.அகராதியிலே அப்படி இருக்குதுநான் சொன்னேனே ஆரம்பத்தில் ஞானசூரியன் நூல் அதிலேஇருக்குதுமனுதர்ம சாஸ்த்திரத்திலே உள்ளது உள்ளபடியேராட்சதன்கிறவன் சூத்திரன்.அரக்கன்கிறவன் சூத்திரன்அந்தக் கதையை நாமளும் படிக்கிறோம்அந்தக் கதைப்படி தான் அவன்(பாப்பான்)நடந்துக்கிறான்இதையெல்லாம் நீங்கள் நல்லபடி சிந்திக்கணும்.

இப்ப இருக்கிற காங்கிரசு அரசாங்கம் (டில்லியில்நம்ம ஆளுங்களும் அதிலே இருக்கிறாங்கநம்மஆளு ரொம்ப பேரு இருக்கிறாங்கநான் இல்லேன்னு சொல்லல்லேஆனால் அவுக எல்லாம் கடவுளைநம்பணும்கடவுளை நம்புகிறவனுக்குத் தான் வேலைகடவுளை நம்பாதவனுக்கு அதில் வேலைஇல்லைகண்டிப்பே அப்படிதான்அதிலே (காங்கிரசிலே). அதைத் தந்திரமாக ஏற்பாடுசெய்திருக்கிறாங்கஅதுக்காக வேண்டியே காந்தி வாழ்க -ன்னு சொல்லவேண்டியது தான்கடவுளைநம்பு இராமனை நம்பு என்பதுதான்.ஜாதியை நம்பணும்வர்ணாசிரமத்தை நம்பணும்அவனவன்ஜாதி மதம்படித்தான் நடக்கணும்அப்படீன்னு காந்தி சொன்னாருன்னுசொல்லிகிட்டு அதன்படிநடக்கிறவன் தான் காங்கிரஸ்காரன்எவனாவது ஒருவன் ஜாதியில்லேமதமில்லேபார்ப்பானில்லேபறையன் இல்லேன்னு ஒருத்தன் சொன்னான்னா அவன் பலத்தினாலே அதில் ஒட்டி கிட்டுஇருக்கிறானே தவிரகாங்கிரசுக்குள்ளே அவனைக் குழியிலே தள்ளி புதைக்கத்தான் பார்ப்பான்.அப்படித்தான் வழக்கம்.

இப்ப வந்திருக்கிறது தி.மு.. (திராவிடர் முன்னேற்றக் கழகம்அரசாங்கம் தான்ஏதோ எங்களுக்குகடவுள் நம்பிக்கையில்லேநாங்கள் மதசம்பிரதாயமில்லேஅப்படீன்னு சொல்லி எப்படியோஆட்சிக்குத் தமிழ்நாட்டில் வந்திட்டாங்கமறுபடியும் அவுக கால் ஊன்றிடுவாங்கன்னு தான் தெரியுதுஏன்னா ஓட்டு அவ்வளவு பெருசா இருக்குதல்லஒரு மந்திரி ஒரு காரியம்இன்னொரு மந்திரிஇன்னொரு காரியம்இப்படி எல்லாம் காரியம் பண்ண வேண்டியிருக்குதுஆனாலும் இன்னைக்குஒரு ஆட்சி நமக்கு இருக்குதுன்னா பகுத்தறிவு ஆட்சி என்பதன் பேராலே இந்தக் கருத்துக்களுக்குஇந்த ஆட்சி இருக்குது.

ஆகவேஅருமைத் தோழர்களே!, இன்னும் மக்கள் மாறலியே இவ்வளவு வருஷமாகியும்?. இவ்வளவு நாமபிரச்சாரம் பண்ணி சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டு எத்தனை நாளாச்சி 1925லே காங்கிரசை விட்டுநான் வெளியே வந்து, 1925 லேயே குடியரசு ஆரம்பிச்சி 1925 லேயே சுயமரியாதை இயக்கம்வந்திட்டுதே. 1925 முதல் 1968 வரைக்கும் 43 வருஷமாக வேலை பண்ணுதுஎவ்வளவு பேரைமாத்துச்சி?முடியிலியேகொஞ்சம் பேரைத்தான் மாத்த முடியுதுமாத்தினாலும் அவுகஅவ்வளவு பச்சையாசுயமரியாதை இயக்கத்தில் தொடர்ந்து இருக்க முடிவதில்லை.ஆனதினாலே அருமைத் தோழர்களேஇந்த பிறந்தநாளுங்கிறது யாருடைய பேராலே இது நடக்குதோ அவுகளுடைய கொள்கை என்னமோஅதைத்தான் சொல்லுவதுஅந்த முறையிலே தான் அவர்கள் என்னைப் பாராட்டு முடிஞ்சுது.என்னைப் பாராட்டினால் அதிலே எனக்குள்ள கொள்கையும் அதுக்குள்ளே இருக்குதுஅதை எல்லாம்எனக்கே விட்டுட்டாங்கநான் என்னையே பாராட்டிக் கொள்ள முடியுமாஅதனாலே நான் என்கொள்கையைப் பிரச்சாரம் பண்றேன்என்னுடைய கொள்கை என்னா?
                மதமிருக்கக் கூடாது

                எவனொருவன் தன்னை இந்து ங்கிறானோ அவன் தன்னைப் பாப்பானுடைய வைப்பாட்டிமகன்ங்கிறதை ஒப்புக்கொள்ளுபவன் தான்நான் இதைப்பல அறிஞர்களை வைத்துக்கொண்டேசொன்னேன்நண்பர் ஜி.டி.நாயுடுகாரே சரி அப்படீன்னார்எவன் ஒருவன் தன்னை இந்துங்கிறானோஅவன் பாப்பானுடைய வைப்பாட்டி மகன் யாராயிருந்தாலும் சரிஅதாவது எவனாவது யோக்கியமாசொல்றானா மதத்தின் பேராலேகவனிக்கணும் நீங்கஇந்து ன்னு சொன்னா அதிலே ஏதாவதுநாணயமிருக்குதாஅறிவுஇருக்குதாசொல்லட்டுமே யாராவதுஇந்து மதம் ன்னா என்னாஅதுஎங்கே இருக்குதுஅது எதிலே இருக்குதுசொல்லட்டுமே யாராவது ஒருத்தன்கண்னைமூடிகிட்டுத்தான் தன்னை இந்து ன்னு முட்டாள் ஒத்துக்குவானே தவிரஅப்படீன்னா என்னடான்னுசொல்றதுக்கு எவனிருக்கிறான்.

கிருஸ்துமதம்கிருஸ்து அதன் தலைவர்அப்படீன்னா என்னாநான் கிருஸ்துமதம்அப்படீன்னாஎன்னாகிருஸ்து - எப்படி நடப்பதுபைபிள் சொன்னபடி நடக்கிறேன்அதற்கு யார் தலைவர்ஏசுபைபிள் தான்வேதம்.எப்போஏற்பட்டதுஇன்னைக்கு இரண்டாயிரம் வருஷமாகுதுஇவன்இந்துக்குஎன்னா வெங்காயமிருக்குது?அதேமாதிரி முஸ்லீமை கேளுநீ யாருநான் இஸ்லாம்உனக்குயார்தலைவன்நபிகள்நாயகம்அதுக்குஎன்னாஆதாரம்?குரான்.அது எப்போ? 1400த்தி சில்லரைவருஷமாச்சிங்கிறான்பவுத்தனை கேளு யார் தலைவன்பௌத்தனுக்கு - பௌத்தன் - புத்தன் . எப்போஇன்னைக்கு 2500 வருஷமாச்சிஎன்ன ஆதாரம்பௌத்தனுடைய உபதேசங்கள்எங்கேஇருக்குதுஇந்தா பாருன்னு காட்றான்ஒரு கிறிஸ்தவனைக் கேளுஇவ்வளவு பெரியபைபிளைக்காட்டுவான்.முஸ்லீமைக்கேளுகுரானைக் காட்டுவான். 60 ரூபாய் அந்த புஸ்தகம் . 8 ரூபாய் 10 ரூபாய், 13 ரூபாய் புஸ்தகம் குரான்கிருஸ்தவர் கொடுத்தது பழைய ஏற்பாடுபுதிய ஏற்பாடுன்னுபெரிய புஸ்தகம்சும்மா கொடுத்தாங்க எனக்குஎல்லா கதையும் அதிலே இருக்குதுஅதுமூடநம்பிக்கையோ பகுத்தறிவோ சொன்னது நடக்கிறது.

நீ சொல்ற இந்துமதம் என்கிறதுஎதிலே இருக்குதுஅந்த வார்த்தைஇராமாயணத்திலே இருக்குதா?பாரதத்திலே இருக்குதா?இல்லே சாஸ்த்திரத்திலே இருக்குதாஇல்லே வேதத்திலே இருக்குதாவெங்காயத்திலே இருக்குதாஎதிலே இருக்குதுஇந்துமதம்ன்னுஆயிரக்கணக்கான புலவன்கள்வந்திருக்கிறானுங்களே எந்தப்பயல்களின் இலக்கியத்திலே இந்துமதம் எதிலே எழுதியிருக்கிறானுங்கதமிழிலேசும்மா காத்திலே பறக்குது இந்துமதம்ன்னா எல்லாரும் போயி அதுக்கு ஆளாகணுமே. 25 கோடி, 30 கோடிமக்கள் இந்துக்கள் இருக்கிறாங்கிறான்.

இந்துக்கள் அப்படீன்னா என்னடா அர்த்தம்ன்னா இந்து அகராதியிலே எழுதறானய்யாதுணிச்சலா.இந்து மதம்னா என்னதுலுக்கனும்கிருஸ்தவனும் - அல்லாதவன் இந்து அவ்வளவுதான்எழுதினான்அதற்குரிய இலட்சியமே எழுதலேகிருஸ்துமதம்ன்னா என்னான்னு எழுதறான்ஏசுகிருஸ்துவாலே செய்யப்பட்ட உபதேசிக்கப்பட்ட அவரைப் பின்பற்றுகிற மக்களுடைய மதம்இஸ்லாம் மதம்ன்னா முகம்மது நபி அவர்களாலே குரானைப் பின்பற்றுகிற மதம்அப்படீன்னுஎழுதறான்இந்து மதம்ன்னா என்னா எழுதுவான்இந்து மதத்துக்கு என்னா ஆதாரம்பாப்பான்சொல்லுவான் வேதம் தான் ஆதாரம் ன்னுஎங்கடான்னா உன் நாக்கை அறுப்பேன் என்பான்வேதம்ன்னு சொல்லிடுவான்அதை எங்கடா பாக்கலாமான்னாஉன் கண்னைக் குத்திடுவேன் என்பான்நம்நூல் ஞான சூரியனைப் பார்த்தால் தெரியும்அதை(மூலக்கதையை)நாம படிக்கலாம்னாநாக்கைஅறுப்பேன்பான்.அது என்னடான்னு கேட்டா காதிலே கேட்கலாம்டான்னான்நீ கேட்டாஉன்காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊத்துவேம்பான்அந்த மானங்கெட்ட பசங்க அந்த இந்துமதத்துக்குசொந்தக்காரன்னு சொல்லிக்கிறாங்க.

சங்கராச்சாரி ஆரிய மதம்தான் இந்துமதம் ன்னு சொல்லிட்டான்அந்த ஆரிய மதம் தான் எப்பஏற்பட்டதுகோடிகோடிகோடி வருஷம்அதுக்கு லட்சம்லட்சம்லட்சம் வருஷங்கிறான்ஒரு கோடிவருஷத்துக்கு முன்னே மனுஷனெல்லாம் குரங்காதான் இருந்தாங்கிறான்இவன் 100 கோடிக்குமுன்னாலே வயசு அதிகமாகச் சொல்றான்அந்தரிஷி இந்தரிஷி வெங்காயரிஷிங்கிறான்அவன்எப்படா இருந்தான்னாஅவன் அந்த யுகத்திலே இருந்தான்அடுத்த யுகத்திலே இருந்தான் இந்தயுகத்திலே இருந்தானுங்கங்கிறான்அவன் வருஷம் என்னடான்னா? 16கோடி, 18கோடிவருஷங்கிறான் ஒவ்வொருத்தனுக்கும் . இந்த ரிஷிகளுக்கு வருஷம் போட்டாலே, 7,8 கோடி வருஷம்வரும்வசிஸ்டருக்கு வருஷத்துக்குக் கணக்குப் போட்டால்அந்த ரிஷிக்கு ஒரு 20 கோடி (வருஷம்)வரும்விசுவாமித்திரருக்கு 30 கோடி வயசு வரும்நாரதனுக்கு ஒரு 40 கோடி வருஷம் வரும்ஏன் எல்லாயுகத்திலேயும் அவன் (நாரதன்இருக்கிறான்இவனெல்லாம் மனுஷன் தாண்டா அவனுக்கு வயசு 100 தான்டா தப்பினால் 500 வயசுதப்பினால் வயசு 1000 வருஷம்தான்இவ்வளவு கோடி வருஷம் அவன்எப்படிடா இருந்திருப்பான்னாஅதெல்லாம் உனக்குப் புரியாதுடா என்பான். (சிரிப்புகைத்தட்டல்)

 அப்படி எல்லாம் சொல்லியிருக்கிறான் மதத்தைப் பற்றி.மதத்தையே வச்சிக்கோ உன் மதப்படி உன்யோக்கியதை என்னாகிருஸ்தவ மதப்படி கிருஸ்துவுக்கு சமானம் . இஸ்லாம் மதப்படி நபிகள்நாயகத்திற்குச் சமானம் . ஒரு சாதாரண பக்கிரிசாயபுமேல்ஜாதி கீழ் ஜாதியில்லேமற்றவன்ஒஸ்தியல்லஇந்து மதத்திலே யாருக்குச் சமானம்?எந்தப் பாப்பான் நம்பளைத் தொட்டால்குளிக்காமல் இருப்பான்எவன் நம்மை மனுஷன்னு கூப்பிடறான்எவன் நாம் தொட்டதைச்சாப்பிடுவான்இப்படியாக இவனிடத்திலே மானங்கெட்ட தன்மை இருப்பதை .இதைத் தவிர,வேறுஎதைச் சொல்றதுஆனதினாலே நமக்கு மதம்கிறதிலே நமக்கு மதமே கிடையாதுமதம்கிறசொல்லுக்கு அர்த்தமே இல்லேமதத்துக்கு ஒரு ஆதாரமே இல்லேகாந்தி சொன்னார்அவர்கிட்டேபோயி இந்து மதத்தை நான் ஒழிப்பேன் என்று சொன்னபோது அப்படி ஒரு இந்துமதமிருந்தால்தானே நீ அதை ஒழிப்பே என்றார்நீ ஏன் இப்படி எல்லாம் திட்றேநீ ஏன் இப்படிஎல்லாம் பேசறேநீ நல்ல பிள்ளையாய் இருந்தியேஇப்ப ஏன் இப்படி ஆயிட்டேன்னாரு காந்தியார்என்னைஆனா இப்படியே என்னைக் கேட்டாருநான் சொன்னேன் நான் முட்டாள்தனமாயிருந்தபோது நான் நல்ல பிள்ளையாய் இருந்தேன்இப்ப எனக்கு இந்த நாலாவது ஜாதியாமக்கள் இருப்பதில் எனக்குப் பிரியமில்லேஆனதினாலே நான் என்னை நாலாவது ஜாதியாக்குவதற்குநான் சம்மதிச்சிகிட்டு இருப்பதாஎன்றேன்.

அப்பவும் காந்தியார் என்கிட்டே சிரிச்சிகிட்டே சொன்னார்இந்து மதம்கிறது இருந்தாதானே?என்றார் மீண்டும்பின்னே எப்படிய்யா இந்துன்னு வந்ததுன்னாபவானியாவிலே இருந்தவனுக்குபவானியா எனப் பெயர் வந்த மாதிரிசிந்துநதி ஓரத்திலே குடியிருந்தவனுக்கு சிந்துன்னு பேரு வந்ததுஅந்தப் பேரை மற்றவர்களுக்கும் புகுத்திவைச்சிட்டாங்கஅந்த சிந்துங்கிறவன்தான் இந்துவாயிட்டான்இந்துன்னு இல்லேன்னு நான் சொன்னேன் காந்திகிட்டேஇதை அப்பவே (குடி அரசுலேநான்எழுதியிருக்கிறேன்இன்னைக்கு அதை இந்துன்னு ஒத்துக்கிறாங்கசங்கராச்சாரியும் - சொன்னாரு - இந்து மதம்ன்னு சொல்லாதேஆரியமதம்ன்னு சொல்லுன்னுதீர்ந்தது விஷயம்அப்புறம்நமக்குன்னு சாஸ்திரம் என்னாயிருக்குதுமதம் இப்படி ஆச்சி?

சாஸ்திரம் நமக்குஎன்னா இருக்குதுசாஸ்திரத்துக்குஎன்னா ஆதாரமிருக்குதுமனுதர்மம் ஒருசாதாரணம்மனுதர்மத்திலே உன்னை வைப்பாட்டி மகன்-ன்னு எழுதியிருக்கிறான்தொட்டாகுளிக்கணும்கிறான்உன் மூஞ்சிலே முழிச்சா குளிக்கணும்கிறான்நாம அதை (மனுதர்மத்தை)படிக்கக்கூடாதுங்கிறான்நாங்கள் தான் அதை (மனுதர்மத்தைஅச்சுப் போட்டோமே தவிரவெளியேஅதைச் சொல்லக்கூடாதென எழுதி வைச்சிருக்கிறான்நம்மை எந்தசாஸ்திரத்திலே நம்மளை அவன்ஒத்துக்கிறான்?. சைவன் பாரதத்தை - இராமாயணத்தை ஒத்துக்கிறதில்லேவைணவன்கந்தபுராணத்தை ஒத்துக்கிறதில்லேவைணவன் சிவனைக் கடவுள்ன்னு ஒத்துக்கமாட்டான்சைவன்விஷ்ணுவைக் கடவுளுங்க மாட்டான்இவனைக் கண்டால் அவன் முறைப்பான்அவனைக் கண்டால்இவன் ஏற்கமாட்டான்.

நமக்குப் பயந்து கிட்டு அவனெல்லாம் இப்ப ஒண்ணா இருக்கிறானுங்களே தவிரஇதுவரை அவனுங்கதானே ஒருத்தனுக்கு ஒருத்தன் உதைபோட்டுகிட்டானுங்கஅவனுங்களுக்குச் சாத்திரம் ஆதாரம்நமக்கு எது ஆதாரம்வைணவனைக் கேட்டால் தனக்கு நாலாயிரப்பிரபந்தம்கிறான்சைவனைக்கேட்டால் தேவாரம்திருவாசகம்-கிறான்அவனைக் கேட்டால் உன் பந்தாவைக் காட்டுங்கிறான்.இவனைக் கேட்டால் தாசன் தப்பு கொட்றாங்கிறான்எங்கிருக்குது நமக்குத்தமிழிலே தேவர்கள்என.உன் காதுக்கு ,கண்ணுக்கு அவை வரக்கூடாதுன்னுட்டான் ஒரு மதம்ன்னாஅதுக்கு ஒரு தலைவன்அதற்கு ஒருஆதாரம் அதற்கு ஒரு காலம் கொழுக்கட்டையாட்டம்ஒண்ணுமில்லாமலேயேயிருக்கிறோம்சூத்திரன்னு நாம சொல்லிக்கிறதைத் தவிரவேறு ஒண்ணுமேதெரியாதே?அதையெல்லாம் பற்றி நாம சிந்திக்கணும்நமக்கு மதமும் இல்லேசாஸ்திரமும் இல்லேஅப்புறம் கடவுள்.என்னாகடவுள் நமக்கு வெங்காயம்கடவுள்னா எவனுக்குத் தெரியும்இங்கேஇருக்கிறவங்களிலேயாருக்குத் தெரியும்கடவுள்னா என்னான்னுஅது கொழுக் கட்டையா,கருவப்பிள்ளையாவெங்காயமாஎன்னாதெரியும்?

கடவுள்னா கண்னை மூடிக்கிட்டு கும்பிடத்தெரியுமே தவிரமுட்டாள் பசங்களுக்கு கடவுள்ன்னாஎன்னான்னு தெரியும்நீங்க தெரிஞ்சா சொல்லுங்க எனக்குநீதாண்டா முட்டாள்ன்னு இங்கே என்னாபோலீஸ்காரனா இருக்கிறான்கடவுள்ங்கிறதைப் பற்றிஎழுதியிருக்கிறேன்.

கடவுளை உண்டாக்கினவன் முட்டாள்
கடவுளைப் பரப்பறவன் அயோக்கியன்
கடவுளைக் கும்பிடறவன் காட்டுமிராண்டி

இது தான் சுயமரியாதை இயக்கத்தின் இலட்சியச் சொல்காந்தி வாழ்க!, பாரதம் வாழ்க!,வந்தேமாதரம்!. வெங்காய மாதரம்கிறானே அதே மாதிரி காங்கிரஸ்காரன் சொல்கிறானே அதே மாதிரிஎங்களுக்கு கடவுள் மறுப்புஇலட்சியச் சொல்
கடவுள் இல்லை ,கடவுள் இல்லை.
கடவுள் இல்லவே இல்லை,
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்பினவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி-
எனச்சொல்லுகிறோம்ஏன் கடவுளை உண்டாக்கினவன் முட்டாள்ங்கிறோம்சும்மாசொல்லலேநாம்மதத்தைச் சொன்னேன்சாஸ்திரத்தைச் சொன்னேன்கடவுளைச்சொல்றேன்கடவுளைஉண்டாக்கினவன் முட்டாள்னா கடவுளை உண்டாக்கினவன் உன்கிட்டே என்னா சொன்னான்கடவுள்னா - என்னான்னு சொன்னான்கடவுள் இருக்கிறார்அப்புறம் அதுக்கு உருவமில்லே.கண்ணுக்குத் தெரியாதுகைக்கு சிக்காதுஇவ்வளவும் சொல்லிபோட்டுஉன் மனுசுக்கும்எட்டாதுன்னுட்டானய்யாஅவன் சொன்னவன் மனோவாக்குகாயங்களுக்கு எட்டாதவன்னுட்டான்தோழர்களேஇது கடவுள் மறுப்புஇலட்சியச் சொல்அட்டை அச்சிட்டது.
கடவுள் இல்லை கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்பதாகும்.
இந்த கடவுள் மறுப்பு அட்டை 100க்கு விலை ரூபாய்மூன்றுக்கு கொடுக்கிறார்கள் நம் இயக்கத்தார்கள்.நான் இதை எல்லாம் விளையாட்டாய்ச் சொல்லிவிட்டு ஓடறவனில்லையேகடவுளைஉண்டாக்கினவன் முட்டாள்ங்கிறதுக்குகடவுள் இருக்கிறார் உன் கைக்கு சிக்கமாட்டார்கைக்குசிக்காமல் கண்ணுக்கு உருவம் தெரியாமல் எப்படிடா அதை நம்பறதுன்னாஉன் மனசுக்கே எட்டாதுமனசுக்கும்எட்டாதுகைக்கும்சிக்காதுகண்ணுக்கும் தெரியாதுபஞ்சேந்திரியங்களுக்கும்எட்டாதவன்கிறான்நான் சொல்றேன் கண்ணுக்கு மனசுக்கு கைக்கு உடம்புக்கு சிக்காதவன் இந்தப்பயலுக்கு அவன் எப்படி சிக்கினான்? (கைத்தட்டல் சிரிப்புசொல்லுங்க.எனக்குக் கைக்குசிக்காதுன்னான் உன் கைக்குப் படாதுங்கிறான்உன் மனசுக்கும் எட்டாது என் மனசுக்கும்தெரியாதுங்கிறான்என்னைப் போலத்தானே நீயும்உன் மனசுக்கு எப்படி புரிஞ்சுதுஉன்கண்ணுக்கு எப்படித் தெரிஞ்சிதுஇப்ப தெரியலியா கடவுளைக் கும்பிடறவன் முட்டாளுன்னு.
கடவுளைப்பரப்பரவன்அயோக்கியன்னேன்உண்டாக்கினவன் சொல்றானேஅவனே சொல்றானேஅவனுக்கு (கடவுளுக்குகையில்லேகாலில்லேஉருவமில்லேபொண்டாட்டி வேணாம்நகைவேண்டாம்வீடுவேண்டாம்,ஒண்ணுமேயில்லாதவன்.அவனுக்கு ஒண்ணுமே வேண்டாம் கிறான்பரப்பரபயல் அதுக்கு உருவமடிச்சிஒருபொண்டாட்டியை வைச்சி இரண்டுகையிநாலுகையிஎன்னத்துக்காக அவன் அப்படிப் பண்றான்உருவமில்லேன்னுட்டான் உருவமடிச்சி வைக்கிறான்.உருவ மில்லேன்னா ஜனங்களை முட்டாளாக்க என்னவேணுமோ கைகாலுகாதுமூக்குவயிறுதோளுகதைகத்திகொடுவாள்ஈட்டிஇவ்வளவும் கடவுளுக்கு வச்சிஉருவம்காட்றானே!சீரங்கரெங்கநாத சாமிக்கு உறை யூரிலிருக்கிறாள் வைப்பாட்டி (நாச்சியார் அம்மாள்) (சிரிப்புவருஷத்துக்கு ஒரு தடவை வந்துட்டு போறான்ரெங்கநாதசாமி என்ன நியாயம்?

ஒண்ணும் வேண்டாம்அவனுக்கு ஒரு நாளைக்கு அஞ்சு வேளை ததியோதனம்சர்க்கரைப் பொங்கல்சட்டி அரனைவெங்காயம் - சோறு எதுக்குஎல்லாம் பாப்பான் வயிற்றிலே அறுத்து வைக்குதுஇந்தமுட்டாள் பணத்தைக் கொடுத்திட்டு முட்டாள்னு கொட்டு போட்டுட்டு வந்திடறான்அவனுக்கு(ரெங்கநாதனுக்குஎதுக்குப் பொண்டாட்டிஅவன் அங்கு இருக்கிறானாஅவள் அங்கேஇருக்கிறாளா எல்லாம் வல்ல கடவுள் - அன்பே உருவமானவர் -என்று சொல்றானேஅவன் கையிலேகொடுவாள் இருக்குசக்கரமிருக்குதுஅறுவாள் - இருக்குதுவெட்றான் - தீர்த்துக் கட்றான்கரகரன்னுஅறுக்கிறான்சிவனை எடுத்துக்கிட்டா கையிலே மளுவு இருக்குதுகொட்டாப்புளி இருக்குது.வேலாயுதமிருக்குதுசூலாயுதமிருக்குதுஇதுதானா அன்பே உருவமான கடவுளுக்கு? (சிரிப்புஆயுதமில்லாத கடவுள் எவன் இருக்கிறான்கொல்லாத கடவுள் எவன்இந்த ரெங்கநாதன் (விஷ்ணுஎத்தனை பேரைக் கொன்னான்இந்த ராமன் எத்தனை பேரைக் கொன்னான்கஇந்த கிருஷ்ணன்எத்தனை பேரைக் கொன்னான்இன்னும் மற்ற (கடவுள்கள்இவனெல்லாம் எத்தனை பேரைக்கொன்னான்இந்த நடராஜன் எத்தனைப் பேரைக் கொன்னான்இந்த முருகன் எத்தனை பேரைக்கொன்னான்இவனுங்களைஎல்லாம் அன்பே உருவமானவனுங்களாஇவனுங்க எல்லாம்அயோக்கியப் பசங்களல்லவாநல்லா கவனிங்க நீங்கஇப்படியாக பாப்பான் உலகத்தைஏய்க்கிறான்இவ்வளவு பித்தலாட்டம் ஏன்டான்னாஅவன் பிராமணன் இவன் சூத்திரன்அவ்வளவுதான்.

அப்படி இருக்கணும்னா - இவ்வளவு பேரையும் எதிர்த்தால்தான் முடியும்ஏன் அப்படி எல்லாம்இருக்கணும்என்னா அவசியம்கிருஸ்தவன் சாமி கும்பிடறான்னாகொழுக்கட்டையை வச்சாகும்பிடறான்?இல்லே முஸ்லீம் சாமி கும்பிடறான்னா பொண்டாட்டி பிள்ளைவைப்பாட்டி எல்லாம்வச்சா கும்பிடறான்சோறூட்றானாகஞ்சி ஊத்தாறானாஇல்லே சாமிக்குக் கல்யாணம்பண்றானாஅவன் எத்தனை கோடி அவன் 100 கோடி 150 கோடி இருக்கிறான்நாம அன்னக்காவடிபசங்க கோடிக் கணக்கில் முட்டாளா இருக்கிறோம்நாம கீழ்ஜாதியா இருக்கிறோம்சங்கதியேவெளியே வரக்கூடாதுங்கிறானேஅடக்கிறானேஇதையெல்லாம் நீங்க யோசனை பண்ணுங்க.

ஆனதினாலே நம்முடைய இழிவு நீங்க வேண்டுமானால் - நமக்கு அறிவு வரவேண்டுமானால் - உலகத்திலே உள்ள மக்களை போல நாமளும் சரி சமமான மக்களாக நாம ஆக வேணுமானா - இந்தக்கடவுள்மதம்சாஸ்த்திரம்இந்த கோயிலுஇந்த நாமம்இந்த சாம்பலு இந்த சடங்குகள் இவைகள்எல்லாம் ஒழிஞ்சால் ஒழிய ஒரு நாளும் முடியாது நாம முன்னேற. 3000 வருஷமா இருந்துபார்த்திட்டீங்களேகோயில் கட்டி வச்சவங்க நீங்கதானேஎந்தப் பாப்பான் ஒரு காசு கொடுத்தான்?எந்த பாப்பாத்தி சுண்ணாம்பு எடுத்து மண்ணு சுமந்திருப்பாள்நாம கட்டினதுக்கு நாம தேவடியாமகன்அவன் உட்கார்ந்துட்டு வேலை வாங்கிறதுக்காக அவன் பாப்பான் - பிராமணனா?

எனவேதான் தோழர்களே!, நம்முடைய பிரச்சாரமெல்லாம் எப்படியாவது நமக்கிருக்கும் இழிவு நீங்கிநாம மனுஷனாகணும்துலுக்கனானபிறகு மனுஷனானாலும் சரிகிருஸ்தவனான பிறகுமனுஷனானாலும் சரிஇந்தியாவுக்குள்ளே வேறே ராஜாவைக் கூட்டி வந்துவிட்டாலும் சரிஆட்சியைமாற்றியாவது ரஷ்யாக்காரனோஅமெரிக்ககாரனோ - வெள்ளைக் காரனோ - பாகிஸ்தான்காரனோ - எவனோவந்து தொலையட்டும்இந்தப் பயல் (பாப்பான்ஒழியட்டும்இந்தப் பயல் நம்மைத்தேவடியாள் மகனாக்கியப் பயல்வெளிநாட்டானை வரச் சொல்வது ராஜத்துரோகமென்பான்உன்னுடன் விசுவாசமாயிருக்க நீ என்னா எனக்கு மரியாதை பண்றே?

பாகிஸ்தானுக்கு நாம போயிட்டோம்னா அவன் அங்கே நம்மை மனுஷன் என்பான்அமெரிக்காபோனோம்ன்னா அவன் நம்மை மனுஷன்பான்ரஷ்யாவுக்குப் போய்ச் சேர்ந்தால் அவன் நம்மைமனுஷன் என்பான்இங்கு இருக்கிற நம்மை நீ மனுஷன் சமம்என்கிறீயாஇதைப்பொறுத்துகிட்டுதான் வாழணும்கிறதுக்கு என்ன அவசியம்ஒவ்வொருத்தரும் இது மாதிரி நாமநினைக்கணும்உடனே மாறிடும் விஷயமெல்லாம்.

அருமைத் தோழர்களே!, இன்றைய பிரச்சாரம் - இரவு 9 மணிக்கு மேல் சினிமா படம் இங்குகாட்டுவாங்கஇப்பமணி 9.15 (இரவுஆகிறதுநாளைக்கு வேறு எனக்குப் பேச்சு இருக்குது.இதெல்லாம் நீங்க நினைக்கணும்இந்தக் கூட்டத்துக்கு நாம வந்ததின் பலனாக இனிமேல் நாமநெத்தியிலே சாம்பலடிக்கிறதில்லை என முடிவு பண்ணிக்கவேணும்.இதைக்கேட்டு கோயிலுக்குப்போறதில்லை எனவும் ஒரு முடிவு பண்ணிக்கணும்நெற்றியிலே சாம்பலடிச்சிகிட்டு நீங்கள் உங்கள்பொண்டாட்டி பிள்ளைகளோடு கோயிலுக்குப்
போயிகண்ட பயல்கள் அங்கே வர்ராப்பிலே பண்ணிஒருத்தருக்கு ஒருத்தர் நசுக்கிறாப்பிலேபண்ணிகிட்டீங்கன்னா என்ன (பலத்த கைத்தட்டல்) (சிரிப்புஎன்னா அர்த்தம் அதுக்குஎன்னாஅந்தக் கோயிலுக்குப் போயி புதிசா என்னாப்பார்க்கப் போறீங்கநாலுதடிப் பசங்க வருவானுங்க.நாளு பொம்பளைங்க சிங்காரிச்சிகிட்டு வருவாங்கஅவுங்களை இவுங்க பாக்கலாம்இவுங்களைஅவுங்க பார்க்கலாம்முடிஞ்ச வரைக்கும் இருவரும் உரசிக் கொள்ளலாம். (கைதட்டல்சிரிப்பு).

சாமியைப் பத்தி உங்களுக்கு என்னாஉங்களுக்கு என்னா பண்ணப் போறான் அந்த சாமிஅங்கேபோனால் உங்கள் பெண் பிள்ளைகளை இன்னொருத்தன் அல்லவாகொஞ்சுவான்? (கைதட்டல்)நினைக்கணும்நீங்கள் எல்லாம்நாமெல்லாம் மனுஷத்தன்மையுடையவர் களாகணும்எந்தமனிதனாவது சொர்க்கவாசல் புகுவானய்யாமந்திரியெல்லாம் புகுறானய்யா? (சிரிப்புஎன்னடான்னா சொர்க்க வாசல்போனவருஷம் சொர்க்க வாசலில் முதல் மந்திரி புகுந்தார் முதன்முதலில்எவ்வளவு பித்தலாட்டம்பாருங்கய்யாஒரு அடைச்சிகிடந்த கதவைச் திறந்தால் அதுசொர்க்கவாசலாவேறு எவனாவது முதலிலே போயிடுவானாஒரு வெள்ளைக்காரன் பார்த்தா இதைஎவ்வளவு சிரிப்பான்நம்மைதுலுக்கன்பார்த்தா நம்மைப் பார்த்து சிரிப்பானய்யாஇப்படியேநம்மை பாப்பான் ஏய்க்கிறான்.சாமி மோகினி அவதாரமெடுக்கிறாருங்கிறான்.சாமிபொம்பளையாவது பார்க்க அன்னைக்குத் தான் ரொம்ப பேருவர்ராங்க சீரங்கத்துக்குஎந்தலோகத்திலே இது உண்டு?மானங்கெட்ட இந்தவேலைவிஷ்ணுசாமி பொம்பளையாகிறது?சிவன்சாமிஆம்பளையாகிறது இரண்டு பேரும் கலவி பண்றது குட்டி போடறது (பலத்த சிரிப்புகதைஇப்படி விஷ்ணு பொம்பளைசிவன் ஆம்பளையாகிறது - புணர்ச்சி பண்ணினதுஅவுககுட்டீபோட்டாங்கஅதுதான் இந்த அய்யப்பன் சாமியாம். (சிரிப்பு கைதட்டல்முட்டாள் பசங்ககும்பிடறாங்களேஇந்தஅய்யப்பனைசாமின்னுஇதையெல்லாம் நீங்க சிந்திக்கணுமய்யாநம்மைஉலகத்தார் பார்த்து சிரிக்காமே?. நமக்கு இருக்கிற இழிவு நம்மைப் பின் தொடராமே இருக்கணும்.

நாம (பெரியார்பிறந்த பிறகு நாமெல்லாம் இப்ப மனிதனாகிட்டோம்நாங்கள் சுயமரியாதைஇயக்கத்தை தோற்றுவித்தது 1925ல்அது தலையெடுக் கிறதுக்கு முன்னே நம்மக்கள் 100க்கு 3பேர்தானய்யா படிச்சிருந்தாங்க உங்கள் எதுக்காலேயே சொல்றேன்தமிழன் பார்ப்பானல்லாதவன் 100 க்கு 3 பேர்தான் படிப்புபாப்பான் 100 பேரிலே 100 பேரும் படிச்சிருந்தான் அப்போ. 1879இல் நான்பெறக்கறப்போநாங்கள் தலையெடுத்து ரகளை பண்ணி பார்ப்பன துவேஷியாகி படாதபாடுபட்டதுக்கு அப்புறம் தான் இப்ப 100க்கு 45 பேர் நம்மவன் படிச்சிருக்கிறான்.

இந்த நிலை இன்னைக்கு (1967இல்தானய்யாவண்ணான் கலெக்டர்பறையன் கலெக்டர்பள்ளன்கலெக்டர்இந்த மாதிரி ஒரு நிலை இன்னைக்குத் தானய்யா வந்ததுஇதுவரைக்கும்உத்தியோகத்தலைமையில் யார் இருந்தாகடைவீதி பயல் கடை வீதியில் - வண்ணான் பையன்வண்ணான் துவைக்கபரியாரி பயல் சிரைச்சிகிட்டுத்தான் இருக்கணும்சக்கிலி பயல் செருப்புதான்தைக்கணும்பறைப்பயல் தப்புதான் கொட்டணும்இப்ப தானே இவனுங்க எல்லாம் கலெக்டர்ஆனான்இப்ப (1967இல்)காமராசருக்கு அப்புறம் தானே நாங்க சண்டைபோட்டு போராடியதற்குஅப்புறம் தானே சொல்லு வாங்களே, 50 வருஷத்துக்கு முன்னே இதைப் பற்றி பேசினது யாருபறையன் கேட்கவே மட்டானேசாமி சாமி எதுவும் வேணாம்பான்.எனவே தோழர்களேநம்சுயமரியாதை இயக்கம் போட்ட கூப்பாட்டுக்குப் பிறகுதான் உயர் பதவியில் நம்மவர்கள் இன்னும்இது கொஞ்சம் கொஞ்சமாய் வளரனும்உங்களுக்குள் கட்டுப்பாடு இருக்கணும் இளைஞர்கள் எல்லாம்நம் உணர்ச்சியோடு இருக்கணும்நாளைக்கும் கூட்டமிருக்குநான் சொன்னதை நம்பாதீங்க.நல்லபடி யோசனை பண்ணுங்கசரீன்னுபட்டதை ஒத்துக்கங்க சின்ன பசங்களுக்கு சொல்றேன்நெற்றியில் சாம்பலடிக்காதேசாம்பலடிச்சா தேவடியா மகன்னுபேருகோயிலுக்குப் போகாதீங்கஇக் கூட்டத்தில் கேள்விக்கு பதிலளித்து பெரியார் அவர்கள் பேசியது:- காமராசர் இந்தத் தேர்தலில்ஜெயிச்சே ஆகணும்காமராசர் ஜெயிக்கலேன்னா நீங்களெல்லாம் நன்றி கெட்ட பசங்கன்னு ஆகணும்அவர் வந்துதான் உங்கள் பிள்ளை குட்டி எல்லாம் படிக்க முடிஞ்சுது.

எந்தக் கட்சியா இருந்தாலும் எனக்கு அக்கறையில்லைதோற்றால் அவருக்கு ஒண்ணுமில்லே.நமக்குத்தான் நன்றி விசுவாசமில்லேன்னாகும்படிப்பு ஸ்காலர்ஷிப் அவரால் தானே வந்ததுஹைஸ்கூல் வரைக்கும் ஏறக்குறைய 40 லட்சம் பேருக்குச் சம்பளமில்லா படிப்புயாரால் இதுமுடிஞ்சிதுகாமராசரால்தான்பாப்பான் என்னைக்குமே சம்பளமில்லாமல் தான் படிச்சான் - நம்பபிள்ளைகளுக்கு காமராசர் பெயரை வைக்கணும் - அவரை ஆதரிக்கணும்காங்கிரசு இன்னொருகட்சியா என்கிற கவலை வேணாம்தனிப்பட்ட முறையில் அந்த மனிதன் செய்திருக்கிற காரியம்ரொம்பஅது தான் என் கருத்து. (திராவிடமுன்னேற்றக்கழகக் காரரையும் ரொம்ப மட்டமாநினைக்காதீங்கமற்றவர்கள் பற்றிச் சொல்லுங்ககாமராசர் அவ்வளவு நல்ல காரியங்கள்செய்திருக்கிறார்இத்துடன் என் பேச்சை முடிச்சிக்கிறேன்நன்றி வணக்கம்அய்யா அவர்கள்எனக்குப் பணமும் ஒரு டைரியும் தந்ததுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

திருச்சி - தில்லை நகர் - மக்கள் மன்றத்தில் 08-12-1967 திருச்சி நகர மக்கள் குழுவினர் நடத்திய தந்தைபெரியார் 89ஆவது பிறந்த நாள் விழாவில் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ஆற்றிய நன்றிப்பேருரை:-

 நூல் - பெரியாரின் சிந்தனைத் திரட்டு
தொகுப்பாசிரியர் - து.மா.பெரியசாமி