Search This Blog

29.3.15

பாண்டேவுக்கு பதிலடி! ஊன்றிப்படித்து உண்மைகளை அறியுங்கள்!!


 அன்பிற்கினிய தோழர்களே,

                                  வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே என்பவர்  ஊடகவியலாளர் அல்லது செய்தியாளர் என்ற போர்வையில்  எல்லாம் தெரிந்தவர் என்ற மமதையில்  கேள்விகள் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் நஞ்சுகளை  திராவிடர்கழகத்தலைவர் அய்யா கி.வீரமணி அவர்களிடம் வீசினார். ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்கள் அந்த நஞ்சுகளையே  மருந்தாக்கி திருப்பி பாண்டேவிடம்  கொடுத்து பாண்டேவேவை பிடித்த நோயை போக்கின்னார். பாண்டே போன்றவர்கள் தெளிவடைவதற்காகவும் ,பாண்டே போன்ற வர்கள் விதைத்த விச வித்துக்களை அகற்றவும், 


  உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற  ஆர்வத்தில் இருக்கும் நடுநிலையாளர்களும்,தோழர்களும் அவசியம் கீழ்கண்ட சுட்டியை சுட்டி படித்து உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டுகிறோம். இதோ அந்த சுட்டி 

 https://www.facebook.com/oviyathamizh 

 http://thamizhoviya.blogspot.in/

                    ***************************************** 
 http://thamizhoviya.blogspot.in/    ”தமிழ் ஓவியா”  வலைப்பூவில் உள்ள தேடு பொறியில் உங்களுக்கு ஏற்படும் அய்யங்களின் சொற்களை கொடுத்து தேடினால் உண்மைச் செய்திகள் உங்களுக்கு கிடைக்கும்.

படியுங்கள்! சிந்தியுங்கள்!!தெளிவடையுங்கள்!!!


                 **************************************************
சான்றாக  

நேற்று தந்தி தொலைக்காட்சியில்  பாண்டேயின் பார்ப்பன கூச்சலுக்கு அசராமல் விடையளித்தார் ஆசிரியர் கி.வீரமணி அய்யா.

மேலும்உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கும் நடுநிலையாளர்களும்,தோழர்களும் அவசியம் கீழ்கண்ட சுட்டியை சுட்டி படித்து உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டுகிறோம். இதோ அந்த சுட்டிகள்

 
http://thamizhoviya.blogspot.in/2010/07/blog-post_8919.html
http://thamizhoviya.blogspot.in/2011/06/blog-post_8356.html
http://thamizhoviya.blogspot.in/2014/12/6_6.html

                          ஏராளமான செய்திகள் கொட்டிக்கிடக்கின்றன :”தமிழ் ஓவியா”
 http://thamizhoviya.blogspot.in/  வலைப்பூ வில். தோழர்கள் நேரம் ஒதுக்கி படித்து உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டுகிறோம். நன்றி. வணக்கம்.

   
 

17 comments:

தமிழ் ஓவியா said...

ரவி சாஸ்திரி


ரவி சாஸ்திரி என் பவர் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் விளையாட்டுக்காரர். இப்பொழுது கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலை வராகவும் இருக்கிறார்.

அந்த ரவிசாஸ்திரிமீது மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தூர் பஜ் ரங்தள் செயலாளர் மனோஜ்பஸ்பானி இந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

எதற்காக அந்த வழக்கு? தென்னாப்பிரிக் காவில் ஜோகன்ஸ்பர்க் நகரில் இந்தியாவுக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் விளையாட் டின்போது ரவிசாஸ்திரி வருணனையாளராகச் செயல்பட்டார். அப்பொ ழுது நான் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன் என்றாலும் என்னால் மாட்டு இறைச்சி சாப்பிடா மல் இருக்க முடியாது என்று கூறிவிட்டாராம். அதனால்தான் அவர்மீது இந்த வழக்காம்.

வழக்கைத் தொடுத்த பஜ்ரங்தள் பேர்வழி என்ன கூறினார்? ரவி சாஸ்திரி மாட்டு இறைச்சி சாப்பிட்டதாக தெரிவித் துள்ளது - இந்துக்கள் மனதைப் புண்படுத்துவ தாக உள்ளது. அவர் சுய முழு நினைவோடு கூறி இருக்கிறார். இந்தியத் தண்டனைச் சட்டம் 295ஏ பிரிவின்கீழ் ரவிசாஸ்திரி யின் கருத்து மதத்தையும், மதம் சார்பான நம்பிக் கையையும் புண்படுத்து கிறது. எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி யுள்ளார். இதன் அடிப் படையில் வழக்கு ஒன் றையும் தொடுத்தார் (மாலை மலர் 24.12.2006).

சங்பரிவார்க் கூட்டம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்; பார்ப்பனர்களாலேகூட மாட்டுக்கறி சாப்பிடாமல் இருக்க முடியவில்லை. விளையாட்டு வீரர்களுக் குத் தேவையான சத்து மாட்டுக்கறியில் மிகவும் அதிகமாகவே இருக் கிறது.

பிரபல சர்.சி.வி. ராம சாமி அய்யருக்கு மாட் டின் நாக்குதான் அதிகம் பிடிக்கும் என்பதை இந் தக் கூட்டம் அறியுமா?

பிஜேபி ஆளும் கோவா மாநிலத்தையே அவர்களால் கட்டுப் படுத்த முடியவில்லை; நாங்கள் மாட்டிறைச் சியைத் தடை செய்ய மாட்டோம் என்று கோவா முதல்வர் லட்சுமி காந்த் பர்சேகர் பளார் என்று கன்னத்தில் அறைந்ததுபோல் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தப் பிரச்சினை யில் பிஜேபியும் அதன் சங்பரிவார்களும் அவமா னப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/98750.html#ixzz3Vly6YxpU

தமிழ் ஓவியா said...

மதம் தேவை இல்லை 110 ஆண்டு கால கிறித்துவ சர்ச் ஹோட்டல் ஆகிறது


நியூயார்க், மார்ச்.29_ நியூயார்ககில் 1905 ஆம் ஆண்டில் கட்டப்பட்டு கிறித்தவர்களின் நினைவுச் சின்னமாக விளங்கிவரும் சர்ச் தற்போது விடுதியாக மாற்றப்படுகிறது. மேற்கு 36ஆவது தெரு, எட்டு மற்றும் ஒன்பதாவது நிழற்சாலைகளைப் பகுதியில் உள்ள அந்த சர்சை இடித்துவிட்டு, மெக் சாம் என்கிற விடுதிக் குழுமத்தின் சார்பில் 20 அடுக்குகள், 406 அறைகள் கொண்டுள்ள புதிய விடு தியை அமைக்க உள்ளது. பிராட்டஸ்டன்ட் கிறித்த வர்கள் வழிபட்டுவந்த சர்ச் பகுதிக்குள் 1975 ஆம் ஆண்டுவரையிலும் சர்ச், சமுதாயக் கூடம் மற்றும் அரங்குகள் செயல்பட்டு வந்துள்ளன. மன நல மருத் துவத்துறை பட்ட மேற் படிப்புக்கான பகுதி இயங்கிவந்தது. 50.8 மில்லியன் டாலர் மதிப்பில் கடந்த ஆண்டில் அதை மாற்றுவதற்காக விலைக்கு வாங்கப்பட்டது. ஆனா லும், அதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டு வதற்கான அனுமதி கிடப் பில் இருந்தது. ஆய்வா ளர்கள் குறிப்பிடும்போது, நூற்றாண்டு கால பழமை வாய்ந்த சர்ச் முடிவுக்கு வருகிறது என்று குறிப் பிட்டுள்ளார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/98752.html#ixzz3VlyKVzBD

தமிழ் ஓவியா said...

தஞ்சாவூர், மார்ச் 29_ தஞ்சாவூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வு நூல் வெளியீட்டு விழா 28.3.2015 அன்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலை குழந்தை ஏசு திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது.


கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தமிழர் தலைவர் வாழ்வும், பணியும் நூல் வெளியீட்டு விழாவை தஞ்சையில் முதலாவதாக சிறப்பாக நடத்திய பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களை பாராட்டி உரையாற்றினார்.

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் வ.நேரு தொடக்கவுரையாற்றினார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பெரியார் சிந்தனை மய்ய துணை இயக்குநர் முனைவர் அதிரடி க.அன்பழகன் அறிமுக உரையாற்றினார்.

டாக்டர் இரா.இளங்கோவன் உரை

முதல் பிரதியை பெற்றுக்கொண்ட தஞ்சை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் நரம்பியல் துறைத் தலைவர் டாக்டர் இரா.இளங்கோவன் உரையாற் றினார். அவர் தனது உரையில்:

ஒப்பற்ற சுய சிந்தனை யாளர் தந்தை பெரியார் அவர்களின் கொள்கை வாரிசு ஆசிரியர் வீரமணியின் வாழ்வும், பணியும் நூலினை நம்.சீனிவாசன் மிகவும் அருமையாக கடுமையாக உழைத்து நமக்கு பல தகவல்களை திரட்டித் தந்துள்ளார். அவரை வெகுவாக பாராட்டி பல்வேறு வரலாற்று செய்திகளை எடுத்துக் கூறி உரை யாற்றினார்.

நம்.சீனிவாசன் உரை

நூலாசிரியர் பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்கள் தனது உரையில்: நம்.சீனிவாசனுக்கு பேசத் தெரியாதே அப்படி இருந்தும் ஏன் உங்களை எங்கும் பேச அழைக்கிறார்கள் என்பார்கள் அவர் சீக்கிரம் பேச்சை முடித்து விடுவார்.

அதனால்தான் என்றனர், இங்கே. மேனாள் துணைவேந்தர் அவர்களும் இன்னாள் துணைவேந்தர் அவர்களும் பேச உள்ளார்கள் அவர்கள் பேச்சைக் கேட்போம், தந்தை பெரியாரின் தத்துவவாரிசு தமிழர் தலைவர் வீரமணி அவர்களை ஆய்வு செய்து பட்டம் பெற்றது எனக்கு வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரும் பேறு என குறிப்பட்டார்.

முனைவர் நல்.இராமச்சந்திரன் உரை

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் நல்.இராமச்சந்திரன் நூலாசிரியர் நம்.சீனிவாசன் அவர்களை பாராட்டி உரையாற்றினார். அவர் தனது உரையில்: பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்கள் எளிமையானவர், பண்பானவர், விருந்தோம்பலுக்கு சிறந்தவர்.

கல்லூரிப் பேராசிரியர் தமிழர் தலைவர் வீரமணியின் பால் மிக்க மரியாதையும் அன்பும் கொண்ட அவரது தனது கடுமையான உழைப்பின் பயனாக ஒரு ஆய்வுப் பெட்டகத்தை நமக்கு தந்துள்ளார். அவர்களை வெளிநாட்டுப் பாணியில் அனைவரும் எழுந்து நின்று கையொலி எழுப்பி பாராட்டு செய்ய கேட்டுக் கொண்டார். அனைவரும் எழுந்து நின்று கையொலி எழுப்பி பாராட்டினர்.

முனைவர் ம.இராசேந்திரன் உரை

தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும், பணியும் நூலினை வெளியிட்டு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் ம.இராசேந்திரன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இவர் தனது உரையில்: இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு இவ்வளவு பேர் வந்துள்ளோம் என்றால் தஞ்சை மாவட்டத்துக்காரர் நம்.சீனிவாசன் எழுதியதாலா? இல்லை.

இந்த நூல் யாரைப் பற்றியது? தந்தை பெரியாருக்கு பிறகு இந்த இனத்திற்கு தொண்டாற்றக் கூடிய விடுதலை ஆசிரியர் வீரமணியைப் பற்றியது. அவரின் வாழ்வையும், பணியையும் விளக்கக்கூடியது அதன் காரணமாக நாம் அனைவரும் இங்கு கூடியுள்ளோம்.

தமிழர் தலைவர் அவர்கள் அய்யாவின் அடிச்சுவட்டில் நூலில் தன்னுடைய வாழ்வும் இயக்கப் பணியையும் இணைத்து நமக்கு தந்துள்ளார். பின் ஏன் இந்த நூல், ஒருவர் தன்னைப் பற்றி எழுதும்போது தயக்கம், கூச்சம் ஏற்படும். மற்றவர் எழுதும் பொழுது உள்ளதை உள்ளவாறு எழுத முடியும். அந்த அடிப்படையில் நம்.சீனிவாசன் இடஒதுக்கீடு முதல், பல்வேறு தகவல்களை 5 இயல்களாக நமக்கு தந்துள்ளார்.

இந்த நூல் வெளியீட்டு விழா தஞ்சையில் நடத்துவது குறித்து அனைவரும் பேசினார்கள். தந்தை பெரியார், அன்னை மணியம்மையாருக்கு பிறகு இந்த இயக்கத்தின் முழு பொறுப்பையும் தலைவர் வீரமணி அவர்கள்தான். ஏற்கவேண்டும் என்று தஞ்சையை சேர்ந்த கா.மா.குப்புசாமியிடம் தான் கடிதத்தை தந்துள்ளனர்.

உலகிலேயே இரண்டு நாத்திகர்கள் தந்தை பெரியார் அன்னை மணியம்மையார் பெயரால் பல்கலைக்கழகம் அமைந்துள்ளதும் தஞ்சையில்தான் ஆசிரியர் வீரமணிக்கும் தஞ்சைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே இந்த நூல் வெளியீட்டு விழாவினை தஞ்சையில் நடத்துவது பொருத்த மானதாகும் என்று உரையாற்றினார்.Read more: http://viduthalai.in/page-8/98787.html#ixzz3VlzzpD5z

nimiththigan said...

நேற்றைய தொலைக்காட்சி நிகழ்வினை நானும் பார்த்தேன். பொதுவாக மக்கள் மத்தியில் எழும் வினாக்களைத் தான் கேள்வியாளர் கேட்டார். பொதுவாழ்வில் இருப்பவர்கள் அதற்குரிய விடைகளைத் தந்தே ஆகவேண்டும். கேள்வி கேட்பதால் அவர் பார்ப்பனியம் செய்கிறார் என்றும், நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொண்டால் பகுத்தறிவாளர் என்றும் பொருளா? கடவுள் மறுப்பு என்பது வேறு, பார்ப்பனர் எதிர்ப்பு என்பது வேறு. ஒரு குறிப்பிட்ட இனத்தவரை எதிர்த்து எதிர்த்து இன்னொரு வகுப்பினரை வளர்த்துவிட்டீர்கள். அவர்கள் 'அடங்க மறு' எனும் சொற்றொடரைத் தங்களின் வேதவாக்காகக் கொண்டு அடங்காமல் திரிகிறார்கள். பாண்டே கேட்டது, பார்ப்பனர்கள் அல்லாதோர் இடையே சாதிக் கலவரம் ஏற்படும்போது தி.க. என்ன செய்கிறது என்பதே. கடவுள் மறுப்பு என்பது இந்துக் கடவுள் மட்டும்தானா என்பதே. மற்ற மதக் கடவுள்களை ஏன் பெருமளவு விமர்சனம் செய்வதில்லை என்பதே. அவர் கேட்க மறந்தது - கிருஸ்துமஸ் விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து கேக் சாப்பிடுகிறீர்கள். ரம்சானுக்கு முகமதிய சகோதரர்களுடன் கஞ்சி குடிக்கிறீர்கள், ஆனால் 'கொழுக்கட்டைக்கு' எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் எனும் வினாவினை.

மதவாதம் என்பது இந்து மதம் மட்டும்தானா? மற்ற மதத்தினருடன் (மதத்தின் பெயரால் கட்சி நடத்துபவர்கள்) கூட்டணி வைக்கும்போது மதவாதம் எங்கே போகிறது.

பொதுவாக, நம்மக்கள் அனைத்து மதத்தினருடனும் உறவினர்போல்தான் பழகி வருகின்றனர். அவரவர் வழிபாடு அவரவர் உரிமை. தாலி என்பது இடைக்காலத்தில் வந்த அடையாளச் சின்னம் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் அதை பெண்கள் அணிவதால் சமுதாயத்தில் என்ன கேடு நிகழ்ந்துவிடப்போகிறது. அல்லது தாலி அணிந்த பெண்கள் எல்லாம் அடிமைகளாக நடத்தப்படுவதாக யார் சொன்னது? அது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை அடையாளம் காட்டும் கருவியாக இருக்கலாம். ஒரு வாதத்திற்காகக் கேட்கிறேன். கிருத்துவர்கள் சிலுவை அணிவதையும், முகமதியர்கள் தாடிவைத்து தொப்பி அணிவதையும் நீங்கள் எதிர்த்ததுண்டா?

நாட்டில் பெரும்பான்மையினர் செய்யும் மூடநம்பிக்கையைத்தான் முதலில் எதிர்க்க வேண்டும் என்று வாதம் செய்கிறீர்கள். மூட நம்பிக்கையில் பெரும்பான்மை என்ன, சிறுபான்மை என்ன. மூட நம்பிக்கை மூட நம்பிக்கைதான்.

நீங்கள் எதையெல்லாம் எதிர்க்கிறீர்களோ அதெல்லாம் மூட நம்பிக்கை. நீங்கள் எதையெல்லாம் ஆதரிக்கின்றீர்களோ அவையெல்லாம் பகுத்தறிவு.

பெரியாரிடம் ஒருவர் கேட்டார். கடவுள் இல்லை என்று சொல்கிறீர்களே, உங்கள் முன் கடவுள் தோன்றினால், என்ன சொல்வீர்கள். பெரியார் சற்றும் யோசிக்காமல், 'இருக்குதுன்னு சொல்லிட்டுப்போறேன்.' என்றதாக, விடுதலையில் படித்திருக்கிறேன். எதிர் கருத்து என்பதற்காக அது எப்படி என்று கேள்வி கேட்காமல், இருந்தால் இருக்கிறது என்று சொல்வேன் என்று சொன்னதுதான் பகுத்தறிவு.

பெரியார் பகுத்தறிவாளர் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்காக அவர் சொன்னதையெல்லாம் அப்படியே ஏற்க வேண்டும் என்றால், அப்புறம் நான் எப்படி பகுத்தறிவாளன். எதையும் ஆய்ந்து பார்க்க வேண்டும்.

ஒருகுறிப்பிட்ட பிரிவினர் எப்போதோ, தீண்டாமையை ஆதரித்தார்கள் என்பதற்காக அந்த சாதியினரையே எதிர்ப்பது எப்படி சரி. வேறு உயர் சாதிகளில் தீண்டாமை கொடிகட்டிப் பறக்கிறதே, அதை நீங்கள் ஏன் கேட்கவில்லை என்றுதான் பாண்டே கேட்டார். உடனே அவரை பார்ப்பான் என்றும் பார்ப்பனியம் பேசுகிறார் என்றும் குறை சொல்லலாமா?

இவ்வளவு எழுதிய என்னைக் கூட நீங்கள் அப்படித்தான் சொல்வீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

என்னைப் பற்றி சிறு அறிமுகம். நான் கடவுளை நம்பாதவன். இருந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பவன். என் தாத்தா (தாய்வழி) திக வின் சட்டமறுப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு, சிறையில் அடைபட்டு, காச நோய் வந்து இறந்துபோனவர். என் அப்பாவின் திருமணம் தந்தை பெரியார் முன்னிலையில் நடைபெற்றதாம்.

நான் எதையும் ஆராய்ந்து பார்க்கும் பகுத்தறிவாளன்.

அன்புடன்

நிமித்திகன்

sivaje36 said...

திராவிடம் தேவையில்லை , தமிழே போதும். திராவிடம் பேரை சொல்லி தமிழனை அழித்தது போதும், பேரு தமிழ் ஓவியா , பேசுவது திராவிடம்

தமிழ் ஓவியா said...

இவர்கள் திருந்தப் போவதில்லை

நாடு முழுவதும் பசுவதை தடைச் சட்டம் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்குமாம்

ராஜ்நாத் சிங் தகவல் புதுடில்லி, மார்ச்.30- நாடு முழுவதும் பசுக் களை கொல்வதை தடை செய்து, சட்டம் கொண்டு வர மத்திய அரசு முயற் சிக்கும் என மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சமண மதத்தின் சுவதம்பர் பிரிவு தலைவர்கள் நேற்று சந் தித்து பேசினர். அப்போது அவர்கள் பசுக்களை கொல்ல தடை விதித்து சட்டம் கொண்டுவருவது டன், எருமைகள் வதை தடை சட்டத்தையும் நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொட ரில் நிறைவேற்ற வேண் டும் என்று வலியுறுத் தினர்.

அவர்கள் மத்தியில் ராஜ்நாத் சிங் பேசுகையில் கூறியதாவது:-

இந்த நாட்டில் பசு வதையை ஏற்றுக்கொள்ள முடியாது. பசுவதையை தடுப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளை யும் எடுப்போம். பசுக் களை கொல்வதற்கு தடை விதித்து சட்டம் கொண்டு வர கருத்தொற்றுமை ஏற்படுத்த கடுமையாக முயற்சி செய்வோம்.

பசுக்களை கொல்வதை தடை செய்ய நாங்கள் உறுதி கொண்டிருப்பதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அந்த வகையில் ஏற்கெனவே மத்திய பிரதேச மாநில அரசு கடுமையான சட்டம் கொண்டு வந்துள்ளது. மராட்டிய அரசும் சட்டம் கொண்டு வந்திருக்கிறது. மராட்டிய அரசு பசுவதை தடை சட்டம் இயற்றி அனுப்பி வைத்தபோது, அதை குடியரசு தலை வரின் ஒப்புதலுக்கு நாங்கள் அனுப்பி வைக்க நேரம் எடுக்கவில்லை.

பசுவதை தடை சட் டத்தை நிறைவேற்றுவ தற்கு நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் அரசுக்கு மெஜாரிட்டி இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு அரசு எப்படியெல்லாம் போரா டுகிறது என்பதை ஊட கங்கள் வாயிலாக நீங்கள் அறியலாம். 2003-ஆம் ஆண்டு நான் விவசாய துறை அமைச்சராக இருந்த போது, பசுவதைக்கு எதி ராக நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்தேன். அந்த மசோ தாவை நான் அறிமுகம் செய்தபோதே சபையில் அமளி ஏற்பட்டது. அதன் காரணமாக அப்போது அந்த மசோதாவை நிறை வேற்ற முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/98792.html#ixzz3Vsdgpbu6

தமிழ் ஓவியா said...

நாத்திகன்

நாத்திகன் என்று சொன்னால், பகுத்தறிவைக் கொண்டு கடவுள், வேத சாத்திரங்களைப்பற்றி விவாதம் செய்கிறவன் என்று பொருள்.
(விடுதலை, 26.3.1951)

Read more: http://viduthalai.in/page-2/98796.html#ixzz3Vse6PT00

தமிழ் ஓவியா said...

அமெரிக்காவில் சிறுபான்மையினர்

இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று குடியுரிமை பெற்று வாழும் இந்துக்கள், சீக்கியர்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல் மற்றும் அவர்களுக்கு எதிராக விரோதப் பேச்சுக்கள்மீது அமெரிக்காவின் முக்கிய புலனாய்வுக் குழுவான எஃப்.பி.அய் (திஙிமி) கண்காணிக்கத் துவங்கியுள்ளது. 2014 முதல் 2015 வரை தொடர்ந்து அமெரிக்காவில் வாழும் சீக்கியர்களும், இந்துக்களும் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

வழிபாட்டுத்தலங்களின் மீதும் தாக்குதல் அவ்வப்போது நடந்துவருகிறது. கடந்த மாதம் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள இந்துக் கோயில்மீது தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குறிப்பாக இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து பராக் ஒபாமா தலைமையிலான அரசு அமெரிக்காவின் புகழ்வாய்ந்த எஃப்.பி.அய் (திஙிமி) புலனாய்வுக் குழுவிடம் இந்த விசாரணையை ஒப்படைத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து அமெரிக்க சட்டத்துறை நிபுணர்கள் கூறும்போது, அமெரிக்காவின் குடியுரிமை பெற்று இங்கு வசிக்கும் அனைவரும் இந்த நாட்டின் அரசியல் சட்டவிதிகளுக்குட்பட்டு பாதுகாப்பிற்கும், சுதந்திரமாக வாழ்வதற்கும் உரிமை பெற்றவர்கள். சமீபகாலமாக சில மதத்தவர்களின் மீது நடக்கும் தாக்குதல்கள் அரசியலமைப்புச் சட்டவிதிகளை மதிக்காதவர்கள் செய்யும் செயலாகும், இந்த செயலால் சிறுபான்மையினர் அச்சத்துடன் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்கவாழ் சீக்கிய அமைப்பின் செய்தித்தொடர்பாளர் கூறும்போது அரசின் இந்த முடிவு எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. சில மாதங்களாகவே எங்களுக்குப் பாதுகாப்பின்மை போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது உண்மைதான் என்று கூறினார்.

விசாரணையைக் கையிலெடுத்த எஃப்.பி.அய் தரப்பில் கூறப்படுவதாவது, இந்துக்கள் மற்றும் சீக்கியர் களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு என்ன காரணம் என்று முதலில் கண்டறியவேண்டும், இதன் மூலமே தாக் குதல்களை நிறுத்தமுடியும். தாக்குதல்களை நடத்துப வர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறோம். வெளிநாட்டில் சிறுபான்மையராக இருக்கக் கூடியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் உள்ள இந்துத்துவவாதிகள் இந்தப் பிரச்சினை மூலம் ஒன்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் இந்துக்களைத் தவிர மற்றவர்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள்.

இந்தியாவில் இந்துக்களைத் தவிர்த்த மற்ற சிறுபான் மையினரைத் தாக்க ஆரம்பித்தால், அதன் எதிரொலி வேறு நாடுகளில் வாழும் இந்துக்களுக்கு இடையூறும் ஏற்பட வாய்ப்புண்டு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அமெரிக்க அரசு சிறுபான்மையினரை அங்கீகரிக்கிறது; அவர்கள்மீது வன்முறையை ஏவினால் அவர்களைப் பாதுகாக்க முனைகிறது.

இந்தியாவின் நிலை என்ன? இந்தியாவில் சிறுபான்மையினர் என்பதே கிடையாது - இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்களே என்று பி.ஜே.பி.யில் உள்ள முன்னணியினரிலிருந்து சங்பரிவாரங்கள் வரை அரட்டை அடிக்கின்றனர்.

அப்படி சொல்லிக் கொண்டே, ஆளும் பிஜேபி வட்டாரத்தினர் சிறுபான்மை மக்கள்மீது அவதூறு கக்கும் நெருப்புக் கணைகளை வீசுகின்றனர். அடிதடி, கொலை வரை அது நீண்டு கொண்டே போகிறது. சிறுபான்மையினர்தம் வழிபாட்டுத் தலங்களை அடித்து நொறுக்குகின்றனர். வணிக நிறுவனங்களைத் தீக்கிரையாக்கி வருகின்றனர்.

அமெரிக்க அரசின் அணுகுமுறையையும், இந்திய அரசின் அணுகுமுறையையும் ஒப்பிட்டால் இந்தியா வின் அவலம் எத்தகையது என்பது எளிதில் விளங்கி விடும். குஜராத் மாநில முதல் அமைச்சராக இருந்த போது அரசப் பயங்கரவாதத்தைக் கொம்பு சீவி சிறு பான்மை யினர்மீது ஏவிவிட்டு ஆயிரக்கணக்கானோர் பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்டனர்; அந்த முதல் அமைச்சர்தான் இப்பொழுது இந்தியாவின் பிரதமராகி இருக்கிறார்.

காரில் பயணம் செய்யும்போது நாய்க்குட்டி அடி படுவதையும் சிறுபான்மையினர் தாக்கப்படுவதையும் ஒப்பிட்டு பேசியவர் தான் இன்று இந்தியா வின் பிரதமர்; வெளிநாடுகளைப் பார்த்தாவது இந்துத் துவாவாதிகள், ஆட்சியாளர்கள் திருந்துவார்களா?

இந்தியாவில் இருப்பதைவிட வெளிநாடுகளில் சுற்றுவதையே வாடிக்கையாகக் கொண்டு விட்ட பிரதமர் நரேந்திரமோடி சில பாடங்களைக் கற்றுக் கொண்டு திரும்புவது நல்லது!

Read more: http://viduthalai.in/page-2/98797.html#ixzz3VseL4Ehn

தமிழ் ஓவியா said...

பாண்டேயின் கேள்வியும், ஆசிரியரின் அதிரடியும்

- குடந்தை கருணா

தந்தி தொலைக்காட்சியில் கேள்விக்கென்ன பதில் நிகழ்வில், நெறியாளர் ரங்கராஜ் பாண்டே, ஆசிரியரிடம் கேள்வி கேட்ட விதம் பலவித விமர்சனங்களுக்கும், கண் டனங்களுக்கும் ஆளாகியுள்ளது.

ஆனால், ரங்கராஜ் பாண்டே கேள்விகள் ஒன்றும் புதிதல்ல.

தொடர்ந்து சோ முதல் நாம் அன்றாடம் பேருந்துகளிலும், ரயில் பயணத்திலும் பார்ப்பனர்கள் நம்மிடம் கேட்கும் அதே கேள்விகள் தான்.

இந்த கேள்விகளுக்கெல்லாம் பெரியார் காலத்திலிருந்து பதில் சொல்லி, பதில் சொல்லி அலுத்து விட்டது. இருந்தாலும் அதே கேள்வியை இன்றையவரை பாண்டேயை விட்டு கேட்கிறார்கள் என்றால், காரணம் இருக்கிறது தோழர்களே.

பெரியார் எனும் அந்த மானுடத் தத்துவம், அவர்களை இன்றுவரை தூங்கவிடாமல் செய்கிறது தங்களின் ஆளுமையை தகர்த்த, தொடர்ந்து தகர்க்கும் ஒரே ஆயுதமாக, பெரியாரின் தத்துவம் விளங்குகிறதே என்ற ஆத்திரம். அவர்களின் கண்களை உண்மை நிலையிலிருந்து மறைக்கிறது.

அதனால்தான், தாலி அகற்றும் கேள்விக்கு பதில் பெறுவதற்கு முன்பாகவே, சடாரென, பர்தா, இஸ்லாமியர், கிறித்துவர் பக்கம் கேள்வி சாய்கிறது.

திராவிடர் கழகத்தின்பால், சிறுபான்மை மக்கள் கொண்டுள்ள இன உணர்வுரீதியான பிணைப்பை அறுக்க முடியுமா என்ற நப்பாசை;

பெரியாரும், இயக்கமும், எப்போதும் மிகவும் ஒடுக்கப்பட்ட, அழுத்தப்பட்ட மக்களின் பக்கம்தான் என அனைவருக்கும் தெரியும் என்றாலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன செய்தது? என்று தொடர்ந்து சொன்னால், அதன் மூலம் அந்த மக்களுக்கு எதிராக திருப்பிவிட முடியுமா என்கிற அந்த விஷ எண்ணம்;

இந்த வகையில்தான், பார்ப்பனர் களின் கேள்வி எப்போதும் இருக்கும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாமல், இங்கே தமிழ் நாட்டில் தான், இயக்க ரீதியாக, பார்ப் பனர்களின் ஆதிக்கமும் அவர்களுக்கு பாதுகாப்பு கேடயமாக விளங்கும் பார்ப்பன சனாதன ஹிந்து மதமும் கிழித்தெறியப்படுகிறது.

அந்த சிறப்பான பணி, பெரியாரின் இயக்கத் தால் நடைபெறுகிறது என்பதை பார்ப்பன பரிவாரங்களால் சீரணிக்க முடியவில்லை.

அதன் விளைவுதான், சோ முதல், அத்தனை சவுண்டிகளும் ஒரே கோரஸாக, ஒரே மாதிரியான கேள்விகளை தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆசிரியர் தக்க பதிலடி தந்தாலும், தொடர்ந்து இந்த கேள்விகள் தொடரும்.

ரங்கராஜ் பாண்டேவை தொடர்ந்து இன்னும் சில நாட்களில் அல்லது மாதத்தில் வேறு ஒரு பாண்டேவோ அல்லது பத்ரியோ, சேஷாத்திரியோ இதே கேள்வியைக் கேட்பார்கள்.

அவர்களுக்கு துணை போவதற்கு நம்மூர் தந்தி டிவி போல பல டிவிக்கள் ஆவலுடன் இருக்கின்றன.

ஆனால், அவர்கள் எந்த முறையில் வந்தாலும், எந்தக் காலத்திலும் பெரியாரின் தத்துவத்தை அசைக்கக் கூட முடியாது என்பது அவர்களுக்கு தெளிவாக தெரிகிறது.

நம்ம மக்களுக்கு புரிந்தால் சரி.

Read more: http://viduthalai.in/page-2/98804.html#ixzz3VseiVVFo

தமிழ் ஓவியா said...

மருத்துவப் பயன் அதிகம் உள்ள கோவைக்காய்

கோவைக்காயில் உடல் சூட்டைத் தணிக்கும் தன்மை உள்ளது. அத்துடன் இது உடலில் உள்ள நச்சுத் தன்மைகளை நீக்கும் குணம் கொண்டது. அதற்கேற்ற பாக்டீரியா எதிர்ப்பு சக்தி இதில் உள்ளது. கோவைக்காய் உடலில் உள்ள அதிகபட்ச சூட்டைத் தணிக்கும் தன்மை கொண்டது. தேவையற்ற உணவுப் பழக்கங்களால் வயிற்றில் ஏற்படும் சூட்டைத் தணிக்கும் தன்மை கொண்டது. ரத்தத்தைச் சுத்திகரிக்கும்!

பழைமையான ஆயுர்வேத மருத்துவ நூல்களில் கோவைக்காயில் உள்ள சிறப்பு அம்சங்கள் நமது உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவைக்காயில் உள்ள மெட்டபாலிக் தன்மைகள் நமது இதயத்துக்கு மிகவும் நல்லது. இது கல்லீரலுக்கும் நன்மை பயக்கக் கூடியது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற காய் இதுவாகும். மஞ்சள் காமாலை, ஆஸ்துமா நோயாளிகள் இதை சாப்பிட்டால் விரைவில் குணம் ஏற்படும்.

கோவைக்காயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை காரணமாக கோவைக்காய் மற்றும் செடியிலிருந்து ஆயுர்வேத மருந்துப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் பெண்களுக்கு ஏற்படும் அதிகபட்ச வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தவும், சிறுநீர் சார்ந்த நோய்களைக் குணப்படுத்தவும், வயிறு சார்ந்த செரிமான பிரச்சினை களைத் தீர்க்கும் மருந்துகளுக்கும் கோவைக்காய் பயன்படுத்தப்படுகிறது.

விடாரியாடி கஷாயம் எனப்படும் ஆயுர்வேத மருந்து கோவைக்காய் செடியிலிருந்து பெறப்படும் சாறிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்தக் கஷாயம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் சோர்வுத் தன்மையை நீக்க அளிக்கப்படுகிறது. பெண் களுக்கு ஏற்படும் பொதுவான சோர்வை போக்கவும் தரப்படுகிறது.

எடையிழப்பு போன்ற ஊட்டச்சத்து குறை பாட்டால் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும் அளிக்கப்படுகிறது. இது எக்ஸிமா எனப்படும் சருமப் பிரச்சினையைக் குணப்படுத்த மருந்தாக அளிக்கப்படுகிறது. வாய்ப்புண்ணை - குறிப்பாக நாக்கில் ஏற்படும் புண்களைக் குணப்படுத்த இது உதவுகிறது, எடை குறைக்க விரும்புவோருக்கு உணவுடன் சாப்பிட ஏற்ற மிகச் சிறந்த காய் இதுவே.

Read more: http://viduthalai.in/page-2/98837.html#ixzz3VsgjqywX

தமிழ் ஓவியா said...

மிளகின் மருத்துவ குணங்கள்

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவு உண்ணலாம் என்பது பழமொழி. அப்படியா மிளகில் அவ்வளவு விஷயம் இருக்கா என ஆச்சரியப்படுகிறீர்களா? ஆம் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறந்த மருந்து பொருளாக மிளகு விளங்குகிறது.

இவை இந்தியாவில் அதிகளவு பயிரிடப்படுகிறது. மிளகில் உள்ள வேதிப் பொருள்கள் அனைத்தும் நம்மை நோயில் இருந்து காக்கும் வேலைகளை செய்கிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வீக்கத்தை குறைக்கும் வாதத்தை அடக்கும். பசியை அதிகரிக்கும்.

நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு மிளகு சிறந்த நல்ல மருந்தாகும். வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு. நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.

இயற்கை வைத்தியத்தில் ஒன்றான மிளகு முதாதையர் காலத்தில் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது. தற்போது காலத்தில் சமையலுக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர். அதனால் அவர்களை எந்த நோயும் நெருங்கியதில்லை. தற்போதைய காலத்தில் விஞ்ஞானம் வளர வளர நோய்களும் அதிகரித்து வருகிறது.

மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக் குளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சினை களை சரி செய்கிறது.

அதாவது சரியான செரிமானம் வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது.

தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன்மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சினை எட்டிப் பார்க்காது. மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது.. எனவே, மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன்மூலம் எடையை குறைக்கலாம். மிளகு தோல் நோயை குணப் படுத்துவதற்கும் பயன்படுகிறது.

இது தோலில் காணப்படும் வெண்புள்ளிகளின் நிறமியை அழிக்கிறது. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்த வேண்டும். லண்டன் ஆராய்ச்சி ஒன்றின்படி மிளகு வெண் புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்கிறது.

ஆக்சிஜனேற்றியாக செயல்படும் மிளகு புற்றுநோய் இதயநோய், கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சினையை எதிர்த்து செயல்படும். மிளகு உடலில் பல்வேறு பாகங்களுக்கு மூலிகைகள் மூலம் நன்மைகள் புரிகின்றது.

காது வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சினைகள் பூச்சி கடித்தல், குடலிறக்கம், வலி நிவாரணம் கக்குவான் இருமல், ஆஸ்துமா, சுவாச பிரச்சினைகளை போக்க மிளகு நல்ல நாட்டு மருந்து. மேலும் பல் வலி, பல் சிதைவு போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். முன் காலத்தில் கண் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் மிளகு மருத்துவத்தைத் தான் பயன்படுத்தி வந்தனர்.

உடல் வெப்பத்தை குறைக்கும். இப்படி பல பண்புகளை கொண்டது மிளகு. நரம்புத்தளர்ச்சி, கைகால் நடுக்கம், உதறல், ஞாபகமறதி, முதுமையில் ஏற்படும் தலை சுற்றல் ஆகிய வற்றிற்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. வயிற்றுபகுதியில் என்சைம்களை தூண்டி அதிகம் சுரக்கச் செய்கிறது.

செரிமானத் தன்மையையும் அதிகரிக்க செய்கிறது. நச்சுக் கழிவுகளை உடலில் தங்க விடாமல் செய்வதால்தான் நம் முன்னோர்கள் பத்து மிளகு இருந்தால் என்ற பழமொழியை பயன்படுத்தியிருக்கிறார்கள். என்ன மிளகு வாங்கக் கிளம் பிட்டீங்களா.

Read more: http://viduthalai.in/page-2/98838.html#ixzz3VsgtCgve

தமிழ் ஓவியா said...

உற்சாகமாக இருக்க
குளிர்ந்த நீரில் குளிக்கலாம்

மனித உடலுக்குத் தண்ணீர் வைத்தியம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் உற்சாகமளிக்கக் கூடியதாகும். உங்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும் சக்தி தேவை என்று நீங்கள் எண்ணினால், உற்சாகமின்மையால் அவதிப்படுவதாக நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கு தேவையானது குளிர்ந்த நீர் வைத்தியம்தான்.

தண்ணீரில் வைத்தியம் என்றால் குளிக்கும் தொட்டியில் குளிர்ந்த நீரை நிரப்பிக் கொள்ளுங்கள். அதற்குள் இறங்கி படுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நிமிடம் தண்ணீருக்குள் உங்கள் உடல் முழுவதும் இருக்கும் விதத்தில் வைத்துக் கொண்டு உடலை ஆங்காங்கே உங்கள் கைகளால் தேய்த்து விடுங்கள். ஒரு நிமிடம் முதல் மூன்று நிமிடங்கள் வரை இப்படி குளிர்ந்த தண்ணீரில் சோப் இன்றித் தேய்த்துக் குளிக்கும்போது நிணநீர் மண்டலம் சுறுசுறுப்பாக இயங்கி உள்ளே உள்ள உறுப்புகளை சுத்தம் செய்துவிடுகிறது. இதனால் இதயமும் சுறுசுறுப்படைகிறது.

குளித்ததும் உடலை நன்கு துடைத்துவிடுங்கள். இதனால் அடுத்த பல மணி நேரம் சுறுசுறுப்பாகப் பணிபுரியலாம்.

Read more: http://viduthalai.in/page-2/98838.html#ixzz3VshGYrL2

தமிழ் ஓவியா said...

கொழுப்பை கரைக்கும் கத்தரிக்காய்

கத்திரிக்காய் உடல் வலியைப் போக்கும் தன்மை யுடையது. காய்ச்சலைப் போக்கக் கூடியது. சோர்வைப் போக்கக் கூடியது. வீக்கத்தைத் தணிக்கக் கூடியது. கொழுப்பைக் குறைக்கக் கூடியது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது. ரத்த அணுக்கள் சேர்க்கையைத் தடுக்கக் கூடியது. கண்களின் ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது.

மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த வல்லது, ஒவ்வாமையால் ஏற்படும் மயக்க நிலையைத் தடுக்க வல்லது, உறுப்புகளைத் தூண்டவல்லது. 100 கிராம் கத்தரிக்காயில் 24 கலோரி மட்டுமே ஊட்டச் சத்து அடங்கி இருப்பதால் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள உதவுவதோடு ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்தைக் குறைக்க வும் இது மிகவும் உதவியாக உள்ளது.

புத்துணர்வைத் தரும்

கத்தரிக்காயின் தோலில் உள்ள ஆன்த்தோ சயனின் என்னும் வேதிப்பொருள் உடலின் சோர்வைப் போக்கிப் புத்துணர்வைத் தரக் கூடியது, அது மட்டுமின்றி ஆன்தோ சையனின் புற்றுநோய் எனப்படும் கேன்சர் செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு தடுக்க வல்லது.

கத்தரி இலைகள் ஆஸ்துமா எனப்படும் இறைப்பு நோய், மூச்சுக் குழல் நோய்கள், சுவாச அறைக்கோளாறுகள், வலியுடன் சிறுநீர் வெளியேறுதல் ஆகியவற்றுக்கும் மருந்தாகிப் பயன் தருகின்றது. வாயில் எச்சில் சுரக்கவும் இது பயன்படுகிறது. கத்தரிச் செடியின் வேர் மூச்சிரைப்பு மற்றும் மூக்கில் தோன்றும் புண்களுக்கு மருந்தாகிறது.

கொழுப்புச் சத்தைக் குறைக்கும்

வேரின் சாறு காது வலியைப் போக்கப் பயன்படுகிறது. நோய் வாய்ப்பட்டிருக்கும்போது பத்திய உணவில் கத்தரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. கத்தரிக்காயில் இருக்கும் நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் கொழுப்புச் சத்தைக் குறைக்க உதவும் ஓர் உன்ன தமான மருந்தாகும்.

கத்தரிக்காயில் உள்ள நார்ச்சத்து பசியை அடக்கி வைப்பதால் உடல் எடை குறைவதற்கு உதவுகிறது. மேலும் இதயத்துக்கு பலத்தைத் தருவதாக அமைகிறது. கத்தரிக்காயை எண்ணெயிலிட்டுக் காய்ச்சி மேல் பூச்சாகப் பூசுவதால் ரத்தக் கசிவு குணமாகும்.

நார்ச்சத்து

கத்தரிக்காயில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந் திருப்பதால் உடலுக்கு மென்மையும், பலமும் தரவல்லது. கத்தரிக்காய் நார்ச்சத்து மிகுந்து உள்ளதால் மலச்சிக்கலைப் போக்கவல்லது மட்டுமின்றி சர்க்கரை நோயையும் தடுக்க வல்லது. கத்தரிக்காயை அரைத்து தீநீராக்கி வீக்கமுற்ற கால்களின் மீது தேய்த்துவர நாளடைவில் வீக்கம் குறைந்து விடும்.

கத்தரிக்காயைச் சாறு பிழிந்து உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் தேய்த்துவிட கால்களில் வியர்த்து இடையூறு உண்டாவது தடுக்கப்படும். பழத்தை வேக வைத்து உள்ளுக்குக் கொடுப்பதால் காளான் சாப்பிட்டு ஏற்பட்ட நச்சு முறிந்து விடும். கத்தரிக்காயை வேக வைத்து அத்துடன் போதிய பெருங்காயம், பூண்டு, உப்பு, சேர்த்து சூப் செய்து சாப்பிட வயிற்றில் சேர்ந்து துன்பம் தரும் வாயு கலையும்.

கத்தரிக்காயை வேக வைத்து அத்துடன் போதிய தேன் சேர்த்து மாலை நேரத்தில் சாப்பிட நல்ல தூக்கத்தை உண்டாக்கும் இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை அகலும்.

Read more: http://viduthalai.in/page-2/98839.html#ixzz3VshRf7lS

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் 10 இல் ஒருவருக்கு
மன அழுத்தம் உள்ளது: ஆய்வில் தகவல்

மும்பை, மார்ச் 30- இந்தியாவில் 10- இல் ஒருவர் மன அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலக அளவில் மன அழுத்தம் நோய் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. உலகில் உள்ள 5 பெண்களில் ஒருவரும், 10 ஆண்களில் ஒருவரும் வாழ்வில் ஒரு முறையாவது தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவை பொருத்தவரையில் 10 இ-ல் ஒருவருக்கு மன அழுத்தம் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோயின் அறிகுறிகளாக, செய்யும் வேலை களில் கவனம் செலுத்த முடியாமை, வெறுமையாக உணர்வது, தன்னம்பிக்கை இழப்பது, குற்ற உணர்வு, முடிவுகள் எடுப்பதற்கு சிரமப்படுவது, ஞாபக மறதி, அதிதூக்கம் அல்லது தூக்கம் இன்மை, தற்கொலை எண்ணம் போன்றவை முக்கிய அறிகுறிகளாக கூறப்படுகிறது.

இது தவிர குடிப்பழக்கம், அதிகமாக புகைப்பது கூட மன அழுத்ததின் வெளிப்பாடாக இருக்கலாம். இந்தி யாவில் மன அழுத்தம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. சரியான சிகிச்சை எடுத்துகொள்வதன் இந்த நோயை தீர்க்க முடியும்.

சமீபத்தில் விபத்துக்கு உள்ளான ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் துணை விமானி லுபிட்ஸ் கடும் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக விசாரணை யில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

இதுதான் இந்து மதம்:
செத்த பின்னும் ஜாதி

பெங்களூரு, மார்ச் 30_ புற்றுநோய் பாதிப்பால் 11 வயது ஸ்வேதா உயிரிழந்தார். ஜாதிவெறி பாதிப்பு உயிரோடு இருக்கும்போது இருப்பது மட்டுமன்றி உயி ரிழந்த பின்னரும் ஜாதிக்கொடுமை தொடர்ந்துள்ளது.

ஹென்னூர் பகுதியில் சிறுமியின் உடலை அடக்கம் செய்வதற்கு அவருடைய ஜாதியைக் காரண மாகக் கூறி இரண்டு நாள்களாக காவல்துறையினர் தலையிட்டும் அனுமதி மறுத்துவிட்டனர்.

வேறு வழியின்றி கருநாடக மாநிலத்திலிருந்து சொந்த ஊரான தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரிக்கு சிறுமி ஸ்வேதாவின் உடலைக் கொண்டு வரவேண் டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர்.

கருநாடக மாநிலத்தில் ஹென்னூர் அருகே உள்ள பாபுசபால்யா பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். ஸ்வேதாவின் உறவினரான தேவி சிக்கம்மா கூறும்போது, இதற்கு முன்னர் பல முறை எங்கள் குடும்பத்தில் உயிரிழந்தவர்களுக்கு இறுதி மரியாதையை இங்கேயே செய்துள்ளோம். ஆனால், இந்த முறை உள்ளூர் ஜாதிக்காரர்களால் நாங்கள் வேறு ஜாதிக்காரர்கள் என்று காரணம் கூறி அடக்கம் செய்வதற்கு எங்களை விடவில்லை என்று கூறினார்.

உள்ளூர்வாசிகளிடம் எவ்வளவோ பேசிப் பார்த்தும் முடியாமல் போனதால், காவல்துறை யினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினரும் சமாதானம் செய்ய முயற்சித்தும், பிடி வாதமாக அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க மறுத்து விட்டனர்.

Read more: http://viduthalai.in/page-2/98845.html#ixzz3Vshsc4n9

nimiththigan said...
This comment has been removed by the author.
க கந்தசாமி said...

பிரபல சர்.சி.வி. ராம சாமி அய்யருக்கு மாட் டின் நாக்குதான் அதிகம் பிடிக்கும் - இதற்கு என்ன ஆதாரம்?