Search This Blog

28.3.15

வீணாக சீண்ட வேண்டாம் திராவிடர் இயக்கத்தை!

சீண்ட வேண்டாம்
திராவிடர் இயக்கத்தை!


தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின்  மவுசு குறைந்து விட்டது; மக்கள் சலித்துப் போய் விட்டார்கள். திராவிட பூமி, திராவிடர் கொள்கை என்பதெல்லாம் கவைக்கு உதவாதவை திராவிடக் கட்சிகளுக்கு  நாங்கள் தான் மாற்று!


கடந்த மக்களவைத் தேர்தலில் நாங்கள் (பிஜேபி) 19 சதவீத வாக்குகளை அள்ளிக் குவித்து விட்டோம் - நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாருங்கள் - நாங்கள் குபீர் பாய்ச்சல் பாயப் போகிறோம் - ஆட்சி நாற்காலி எங்களுக்கே தான் என்று பிஜேபியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிற திருவாளர் இல. கணேசன் அவர்களின் பேட்டி ஒன்று துக்ளக் இதழில் (25.3.2015) மூன்று பக்க அளவில் வெளிவந்துள்ளது.


தன்னம்பிக்கை வேண்டியதுதான்; அது தலைக்கனமாக ஆகும்போது, தலைகுப்புற வீழ வேண்டியிருக்கும்.


நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பிஜேபிக்கு 19 சதவீத வாக்குகள் கிடைத்து விட்டனவாம். சில இடங்களில் சட்டமன்ற தொகுதிகளில் திமுகவைப் பின்னுக்குத் தள்ளி விட் டார்களாம்.


எத்தனைக் கட்சிகளோடு கூட்டணி வைத்து பிஜேபி மக்களவைத் தேர்தலில் 19 சதவீத வாக்குகளைப் பெற்றது என்பதைக் கூடக் கருத்தில்கொள்ள முடியாத அள வுக்கு நிதானத்தை இழந்தது தெளிவாகவே தெரிகிறது. பிஜேபிக்கு மட்டும் கிடைத்த வாக்குகளின் சதவீதம் 5.5. தான்.


ம.தி.மு.க. அதிகாரப்  பூர்வமாகக் கூட் டணியிலிருந்து விலகுவதாக அறிவித்து விட்டது. எங்கள் கட்சித் தலைமையில் தான் தமிழ்நாட்டில் கூட்டணி என்று பா.ம.க. பட்டவர்த்தனமாக அறிவித்த பிறகு அக்கட்சியுடன் பிஜேபி கூட்டணி என்பது இல்லை என்று உறுதியாகி விட்டது. எஞ்சி யிருப்பது தேமுதிக தான்; மக்களவையில் அக்கட்சி பிஜேபியோடு கூட்டணி அமைத் துக் கொண்டது வேறு; சட்டச பையில் கூட்டுச் சேர்ந்து அது தற்கொலை செய்து கொள்ளாது என்று உறுதியாக நம்பலாம்.


தமிழ்நாட்டில் பிஜேபிக்கு உறுப்பினர் எண்ணிக்கை 21 லட்சமாம். எப்படி தெரி யுமா? மிஸ்டு கால் கொடுத்து; ஒரு முறை விலா நோகச் சிரித்து முடித்து விடுங்கள்.


இவர்களின் உறுப்பினர் சேர்க்கையின் யோக்கியதைக்கு வெகு தூரம் போக வேண்டாம். தமிழ் மாநில இந்தியக் கம்யூ னிஸ்டுக் கட்சியின் செயலாளர் தோழர் முத்தரசன் அவர்களின் கைப்பேசிக்கு பிஜேபியிடமிருந்து குறுந்தகவல் வருகிறது. என்ன தெரியுமா? நீங்கள் பிஜேபியில் முதற்கட்ட  (Primary Member Ship)  உறுப் பினராக ஆகியுள்ளீர்கள்.


அதன் எண்   xxxxx உங்களுடைய மின்னஞ்சல் உள் ளிட்ட தகவலைத் தெரிவிக்கவும் என்று குறுஞ்செய்தி வருகிறது என்றால் பிஜேபி யின் யோக்கியதையை அதன் தரங்கெட்ட தன்மையை எளிதாகவே புரிந்து கொள்ள லாம். அடேயப்பா, அவர்கள் பேசும் தார்மீகப் பண்புகள் இருக்கின்றனவே - அவை பஞ்ச பூதங்களையும் மூக்கின்மேல் விரலை வைக்கச் செய்யும்.


வெளியில் பளபளப் பாகவும் உள்ளே புரையோடிய புண்ணை யும் வைத்திருக்கும் பிஜேபியின் முகமூடி - இந்த உறுப்பினர் சேர்க்கை முறையின் மூலம் கிழிந்து தொங்கிவிட்டது.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பி.ஜே.பி.யின் உண்மையான நிலை என்ன என்பது முக்கியம்.


2011 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு 201 இடங்களில் மண்ணைக் கவ்விய பிஜேபி கட்டிய பணத்தைக் கூடத் திரும்பப் பெற முடியவில்லை; ஆம், டெபாசிட் காலி! ஓர் இடத்தில்கூட வெற்றி கிட்டவில்லை. தமிழ்நாட்டில் 2014 மக்களவைத் தேர்தலில்கூட 7 இடங்களில் போட்டியிட்ட பிஜேபிக்கு 6 இடங்களில் டெபாசிட் காலியாகவில்லையா? சிறீரங்கம் இடைத் தேர்தலிலும் டெபாசிட் பறி போயிற்றே!


சிறீரங்கம் தொகுதியில் எத் தனையோ லட்சம் உறுப்பினர்கள் பிஜேபிக்கு என்று முஷ்டியைத் தூக்கினார் களே - அவர்கள் எல்லாம் ஓட்டுப் போட்டு இருந்தால், அந்தத் தொகுதியில் பிஜேபி அல்லவா வெற்றி பெற்று இருக்க வேண் டும் - வெத்து  வேட்டுகளுக்கு ஆரவாரம் ஒரு கேடா?


இதுதான் தமிழ்நாட்டில் பிஜேபியின் உண்மையான நிலை. நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை பத்தாண்டு காலம் காங்கிரஸ் தொடர்ந்து மத்தியில் ஆட்சியில் இருந்ததால் ஏற்பட்ட விரக்தி யின் விளைவை (Anti Incumbency) அறு வடையாக்கிக் கொண்டது பிஜேபி என்பது தான் உண்மை. பிஜேபி.யின் கொள்கைக் கோட்பாடு, அதன் உத்தமத்தனம் இவற்றின்மீது கொண்ட தீராத காதலால் கட்டிப் பிடித்து முத்தமிட்டு வெற்றி பெறச் செய்து விட் டனர் வெகு மக்கள் என்று நினைக்க வேண்டாம்!


மத்தியில் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே அதன் சாயம் வெளுத்து விட்டது. நடைபெற்ற இடைத் தேர்தல் அத் தனையிலும் மரண அடி வாங்கியதுதான் மிச்சம். இந்தியாவின் தலைநகரமான டில்லியில் மக்கள் சுழற்றிய சாட்டையின் வீச்சு சாதாரணமானதுதானா?


ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் தேர்தல் களில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி பெற்ற வாக்குகள் பெரும் அளவில் சரிந்து போய் விட்டனவே. ஜம்முவை பொறுத்தவரையில் நடந்து முடிந்த மக்கள வைத் தேர்தலோடு ஒப்பிடும்போது 11 விழுக் காடு வாக்குகளை சட்டமன்ற தேர்தலில் பிஜேபி இழந்து விட்டதே!


ஜார்க்கண்டைப் பொறுத்தவரை மக்க ளவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளின் விழுக்காடு 54 என்றால் அடுத்து நடை பெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 23.41 விழுக்காடாக கீழே விழுந்து சிதறியது.


மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள பல அரசியல் கட்சிகளையும் பிஜேபியையும் ஒன்று சேர்க்க வேட்டியை மடித்துக் காட்டிக் களத்தில் குதித்த திருவாளர் தமிழருவிமணியன் அவர்கள், தேர்தல் முடிவுக்குப்பின் மோடி தலைமை யிலான ஆட்சியின் அகவுரவத்தைக் கண்டு, நான் தூக்கு மாட்டிக் கொள்ள வேண்டியதுதான்! என்று ஒரு தனியார்த் தொலைக்காட்சியில் பிலாக்கணம் பாடியது ரசிக்கத்தக்கதே!


கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாதாவாக செயல்படும் மோடி தலைமை யிலான ஆட்சி பத்து மாதங்களுக்குள் ளாகவே மக்களின் முகச் சுழிப்பிற்கு ஆளாகி விட்டது.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் திரா விடர் கட்சிகளுக்கு மாற்றாக பிஜேபிதான் என்று மார் தட்டுவது மார்புக்கும் கைக்கும்தான் வலி!

திராவிட பூமி, திராவிடர் கொள்கை என்பதெல்லாம் கவைக்கு உதவாதவை என்று எந்தத் தைரியத்தில் சொல்லுகிறார்?


இந்த ஒரு வாக்கியம் போதும் - இதனை இவர்கள் தமிழ்நாடெங்கும் பட்டி தொட்டியெல்லாம் எடுத்துப் பிரசசாரம் செய்ய வேண்டும் - அவையே அவர்களின் முழு உருவத்தையும் அம்பலப்படுத்தி விடுமே!


திராவிடர் இயக்கத்தின் கொள்கைக் கோட்பாடுகள் என்ன? பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடமாகும்! பிறப்பில் பேதம் என்பதை முற்றாக முறியடிக்கும்  கொள்கைதான் தந்தை பெரியார் அவர்களின் திராவிடக் கொள்கை.


ஆனால், பிஜேபியின் கொள்கை என்ன? பிறப்பில் பேதம் வளர்க்கும் வருணாசிரமம் தானே - ஜாதியைத் தூக்கிச் சுமக்கும் சனாதனக்குப்பை தானே!
அவர்களின் குரு நாதரான எம்.எஸ். கோல்வால்கர் என்ன கூறுகிறார்?
சிலர் ஜாதியை நீண்ட காலமாக எதிர்த்து வருகிறார்கள். பழங்காலத்தில் ஜாதி அமைப்பு முறை இருந்தது. அதன் உச்சியில்நாம் இருந்தோம். ஆனால் இந்த ஜாதி நமது முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாக இருந்தது என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை (Bunch of Thoughts) என்று கூறி இருக்கிறாரே இவர்களின் குருநாதர்.


தமிழ்நாடு அப்படியா? ஜாதியைப் பாதுகாக்கும் கடவுள்களைக் காலில் இடறி, பராக்குக் கூறும் சாஸ்திரக் குப்பைகளைச் சாம்பலாக்கி, வேதக் கோட்டைகள்மீது விவேக வெடி குண்டுகளை வீசி, மதப் பாதுகாப்புப் போர்வை என்ற பெயரில் ஜாதியை ஜமக்காளம் போட்டு மூடிக் காப்பாற்றும் அரசமைப்புச் சட்டத்தையே எரியூட்டி, சமத்துவ சமதர்ம சங்கநாதம் முழங்கும் தந்தை பெரியாரின் திராவிடப் பூமி இது என்பது இல.கணேசர்களுக்குத் தெரியாதா என்ன?


இவர்களின் அரசியல் குருநாதரான ஆச்சாரியார் (ராஜாஜி) பூணூலைப் பிடித்துக் கொண்டு பிராமணர்களே! திமுகவுக்கு - உதய சூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள்! என்று பட்ட வர்த்தனமாக வேண்டுகோள் விடவில்லையா?


வெற்றியின் கொடியை ஆச்சாரியாரின் பஸ்லுல்லா சாலைக்கு எடுத்துக் கொண்டா ஓடினார் அறிஞர் அண்ணா?


324 கிலோ மீட்டருக்கு அப்பால் திருச்சியில் இருந்த - அவர் கண்ட, கொண்ட ஒரே தலைவரான அய்யாவை -தந்தை  பெரியார் அவர்களை நோக்கித் தானே ஓடினார்!


ராஜாஜியின் ஆதரவு கிடைத்ததும் நல்ல பிள்ளைகளைப் போல அதுவரை பேசிவந்த கொள்கைகளை மூட்டை கட்டி வைத்து விட்டார்கள் என்கிறார் திருவாளர் இல. கணேசன் அய்யர்வாள்!


அது உண்மையா? அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் இறக்கிய இடி என்ன தெரியுமா?


புரோகித பார்ப்பானை அழைத்து அக்னி குண்டம் வளர்த்து மணமக்களை வலம் வரச் செய்து, அம்மி மிதித்து அருந்ததியைப் பார்க்கச் சொல்லி, அட்ட திக்குப்பாலகர் களையும், முனிபுங்கவர்களையும் சாட்சிக்கு அழைத்து மாரிக் காலத்துத் தவளைகள் என மந்திரங்களை ஓதினால் தான் திருமணம் என்ற பார்ப்பனீயப் பத்தாம் பசலிக் குப்பையைக் கூட்டித் தள்ளி, மாலை மட்டும் மாற்றினால் போதும் என்ற பகுத்தறிவுச் சுயமரியாதைத் திருமணத் திற்குச் சட்ட வடிவம் கொடுத்தாரே, முதல் அமைச்சர் அண்ணா.


அதுதான் ஆச்சாரி யாரிடம் அண்ணா சரண் அடைந்தார் என்பதற்கான அடையாளமா? திராவிடக் கொள்கையைத் துறந்ததற்கான அத் தாட்சியா?
அன்று 1937இல் இந்தியைத் திணித்த ஆச்சாரியாரையே இந்தியை எதிர்க்க வைத்ததுதான் திராவிடர் இயக்கம் என்பதை மறக்க வேண்டாம்.

1971இல் என்ன நடந்தது? சேலம்  ஊர்வலத்தில் தந்தை பெரியார்மீது ஜன சங்கத்தினர் (இன்றைய பி.ஜே.பி.)   வீசி எறிந்த செருப்புகளை - ராமன்மீது மடை மாற்றி அபிஷேகம் செய்து, ஊர்வல முடிவில் ராமனுக்கு அக்னி அபிஷேகம் செய்யப்பட்டதே நினைவிருக்கிறதா?


தேர்தல்  நேரமான அந்தக் கால கட்டத் தில் ராமனை செருப்பாலடித்த தி.க. ஆதரிக்கிற திமுகவுக்கா ஓட்டு என்று ஆச்சாரியாரும், அக்ரகாரமும் ஜனசங்கமும் அண்டங்காக்கையாகக் கத்தித் தீர்த்தனவே - முடிவு என்னவாயிற்று?


ராமனை செருப்பாலடிப்பதற்கு முந்தைய தேர்தலில் தி.மு.க.வுக்கு கிடைத்த சட்டமன்ற இடங்கள் 138, சேலம் நிகழ்வுக் குப்பின் திமுக வெற்றி பெற்ற இடங்கள் 184 என்பது நினைவிருக்கிறதா திருவாளர் இல. கணேசன் அவர்களுக்கு? அப்பொழுது அவாளின் குலதர்ம வீரர் ராஜாஜி என்ன அறிக்கை வெளியிட்டார் தெரியுமா?


தேசம் முழுமைக்கும் இன்று ஒரு துர்ப்பாக்கியம் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் துர்ப்பாக்கியம் தமிழகத்தை இரட்டிப்புத் தீவிரத்துடன் தாக்கி இருக்கிறது. மதம், சம்பிரதாயக் கட்டுப்பாடுகள், தெய்வ பக்தி இவற்றின் முழு எதிரி என்று தம்மை முழு மூச் சுடன் பகிரங்கப்படுத்திக் கொள்பவரின் திருமுன்னரே அவரது ஆசியும் அனுக் கிரகமும் பெற்றுப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறது தமிழக மந்திரிசபை; இனித் தமிழகம் ஆஸ்திகர்கள் வாழ  தகுதி இழந்து விட்டது;


இந்த ராஜ்ஜி யத்தை விட்டே வெளியேறிட வேண்டும் என்று சில மகாபுருஷர்கள் உள்படப் பலர் எண்ணத் தொடங்கி விட்டனர் (கல்கி 4.4.1971) என்று கையொப்பமிட்டே ராஜாஜி அறிக்கை வெளியிட்டாரே - ஆரியத்தின் தோல் விக்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாரே நினைவிருக்கிறதா? இந்தப் பூமி, திராவிடக் கொள்கை உடையது என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட வில்லையா?


தமிழக பிஜேபியின் தலைவராக இருந்தவர் ஒரு தாழ்த்தப்பட்டவர் (டாக்டர் கிருபாநிதி) என்ற காரணத்துக்காக அவரை அவமானப்படுத்தி வெளியேற்றியவர்கள் இந்த இல. கணேசன் வகையறாக்கள்தானே! என் கையைப் பிடித்து முறுக்கினர் ஜாதியைச் சொல்லி  திட்டினார் இல. கணேசன் என்று அந்தத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் பேட்டியே கொடுத்தாரே! (தமிழா தமிழா - ஏப்ரல் 2003).


வேண்டாம் வேண்டாம் திருவாளர் இல. கணேசன் அவர்களே! வண்டி வண்டியாக  இருக்கிறது உங்கள் சங்கதிகள் - சமாச் சாரங்கள்.

வீணாக திராவிட இயக்கத்தையும், திராவிடப் பூமியையும் சீண்ட வேண்டாம்!


                  -----------------------மின்சாரம் அவர்கள் 28-03-2015 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
Read more: http://viduthalai.in/page-1/98653.html#ixzz3Vg1je1rl

37 comments:

தமிழ் ஓவியா said...

நான் ஒரு நாத்திகர் என்னை முசுலீம் என்று அழைக்க வேண்டாம்!

-தஸ்லிமா நஸ்ரீன்

வங்கதேசத்தின் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் தி இந்து ஆங்கில நாளிதழுக்கு சுவோஜித் பக்சிக்கு அளித்த பேட்டியின்போது, என்னை முசுலீம் என்று அழைக்க வேண்டாம், நான் ஒரு நாத்திகர் என்று கூறி யுள்ளார்.

மத அடிப்படைவாதத்தால் பாதிப் புக்கு உள்ளானவரான எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் கூறும்போது, மதத்தின்மீதான விமர்சனம் என்பது முசுலீம் அல்லாத அறிஞர்கள் மட்டுமே செய்துவருவதன்று என்று கூறியுள்ளார்.

1994ஆம் ஆண்டில் பங்களாதேஷி லிருந்து எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் வெளியேறினார். இசுலாம் மதத்தின்மீது விமர்சனத்தை முன்வைத்த காரணத் தால், மதத் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்தனர். அதிலிருந்து பல ஆண்டுகளாக தொடர்ந்து வெளி நாடுகளில் தஞ்சமடைந்துள்ளார்.

அண்மைக்காலங்களில் அவர் நாடான பங்களாதேஷிலிருந்து அறிஞர்கள் ஒன்று நாட்டைவிட்டு வெளியேறு கிறார்கள் அல்லது அங்கேயே இருப்பவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்கிற நிலைமை உள்ளது.

நாத்திக இணைய எழுத்தாளர் அகமத் ரஜீப் ஹைதார் என்பவர் இணையத்தில் தன்னுடைய பிளாக்கில் தாபா பாபா என்கிற பெயரில் எழுதி வந்தார். அவர் ஷாபாக் போராட்டத் தின்போது 2013 ஆம் ஆண்டில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

அதேபோன்று நாத்திக இணைய எழுத்தாளரான அவிஜித் ராய் பங்களா பிளாக் எனும் வங்க மொழி பிளாக்காக முக்டோ-_மோனா (சுதந்திர சிந்தனை) இணையப் பக்கத்தை உருவாக்கி, நாத்திகக் கருத்துகளை எழுதிவந்தவர். அவர் இந்த ஆண்டில் கடந்த மாதம் தலைநகர் டாக்காவில் மதத்தீவிரவாதக் குழுக்களால் தாக்கப்பட்டு கொல்லப் பட்டார்.

பெண்ணுரிமையாளரும், மதசார்பற்ற மனிதநேயருமான தஸ்லிமா நஸ்ரீன் தற்போது டில்லியில் தஞ்சமடைந்து வசித்துவருகிறார்.

தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தியாளர் சுவோஜித் பக்சியிடம் நேர்காணலின்போது தஸ்லிமா நஸ்ரீன் கூறும்போது, பங்களாதேஷ் இப்போது சுதந்திர சிந்தனையாளர்களுக்கான இடத்தை மிகவும் சுருக்கிக்கொண்டு விட்டது. மற்ற மதங்களைவிட இசு லாம் மதம் மோசமாக இருப்பதில் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக இல்லை என்று கூறினார்.

கேள்வி: அவிஜித் ராய் குறித்து கூறுங்களேன்.

தஸ்லிமா நஸ்ரீன்: நீண்ட கால மாக அவிஜித் ராயை எனக்குத் தெரியும். செய்தித்தாள்கள் வெளியிடாத நாத்தி கம் மற்றும் மனிதநேயக் கருத்துகள், பணிகளை முக்டோ_மோனாவைத் தொடங்கி அவைகளுக்கான இடத்தை அளித்துவந்தார். அவிஜித் ராய் அறிவியல் எழுத்தாளர், சுதந்திர சிந்தனையாளர், ஒரு நாத்திகர், ஒரு பகுத்தறிவாளர் ஆவார்.

அவை குறித்த விவாதங்கள்மூலம் எதிரானவைகளை உடைத்து நிர்மூலமாக்க விரும்பி, தம் கருத்துகளுக்கான இடத்தை பாதுகாக்க விரும்பினார். பின்னாளில், பிளாக்கி லிருந்து கருத்துகளை நூல்களாக உருவாக்கத் தொடங்கினார். இசுலாம் உள்பட மதம்குறித்த கேள்விகளை ஒருவருக்கொருவர் எழுப்புவதற்கு முக்டோ_மோனா இணையம் நுழை வாயிலாக அமைந்தது.

பங்களாதேஷில் குறிப்பிட்ட காலத்தைக் கடந்து, சுதந்திர சிந்தனை யாளர்களுக்கான இடம் மறைந்து வருகிறது. அவிஜித் ராய் அந்த இடத்தை மீண்டும் புதிய தளத்தின்வாயிலாக நிரப் பினார். மிக உன்னதமான அவருடைய பங்களிப்புகள் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.

கேள்வி: சுதந்திர சிந்தனையாளர் களுக்கான இடம் சுருஙகியது எப் போது? எப்படி?

தஸ்லிமா நஸ்ரீன்: 1980களின் மத்தியில் ஜெனரல் ஹூசைன் எர்ஷாத் காலத்தில் இந்த மாற்றம் ஏற்படுத்தப் பட்டது. மதச் சார்பின்மைக்கான அரசமைப்புச்சட்டம் நீக்கப்பட்டு, இசுலாமிய நாடாக மாற்றப்பட்ட போது, 1969ஆம் ஆண்டில் அதை எதிர்த்து நடைபெற்ற இயக்கத்தைக் கண்ட நான் சாட்சியாக உள்ளேன். 1970களில் புதிய சுதந்திரமடைந்த நாடாக ஆனபிறகு நிலைமை முற்றிலும் மாறியது. மக்கள் தங்களின் கருத்துகளை கூற முடிந்தது.

எப்போதாவது பெண்கள் பர்தாவை அணிவார்கள். ஆனால், சமூகம் படிப்படியாக மாற்ற மடைந்தது. இசுலாமியச் சமுதாயத்தில் உள்ள பெண்கள் நிலைகுறித்தும், இசுலாம் மதத்தின்மீது நான் எழுதிய விமர்சனங்களும் அவ்வப்போது 1980களில், 1990களின் தொடக்கத்தில் அதிகமாக விற்பனையாகும் செய்தித் தாள்களில் பதிவாயின.

தமிழ் ஓவியா said...

ஆனால், அதை யெல்லாம் இப்போது நினைத்துகூடப் பார்க்க முடியாது. கருத்துகளை வெளியிடுவதில் சுதந்திரம் என்பது ஒரு காலத்தில் இருந்தது என்கிற நிலை தான் தற்போது உள்ளது.

கேள்வி: அந்த மாற்றம் எதனால் ஏற்பட்டது?

தஸ்லிமா நஸ்ரீன்: முன்னேறக் கூடிய சமுதாயத்தில் குறிப்பிட்ட பிரிவினரே அதற்கு பொறுப்பாவார்கள். 1994 ஆம் ஆண்டில் நான் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டேன். அப் போது ஒட்டுமொத்த சமுதாயமும் அமைதியாகவே இருந்தது. அப்போதே அதை எதிர்த்திருந்தால், அவிஜித் அடித்து கொல்லப்பட்டமை நடந்திருக் காது. ஹூமாயூன் ஆசாத் குறிவைக்கப் பட்டார் அல்லது அகமத் ரஜிப் ஹைதார் இசுலாத்தை விமர்சனம் செய்தமையால் கொல்லப்பட்டார்.

எது எப்படியானாலும், பங்களா தேஷ் நாட்டில் ஏற்படுகின்ற முரண் பாடுகள் மொழியின் அடிப்படையிலா, மதத்தின் அடிப்படையிலா என்பதில் முரண்பாடுகள் உள்ளன.

கேள்வி: இதில் எப்படி தீர்வு காண முடியும்?

தஸ்லிமா நஸ்ரீன்: மதத்தின் பெயரால் கல்லெறிந்து பெண்களைக் கொல்வதை நிறுத்த வேண்டும். சமத்துவத்துக்கான சட்டமாக இருக்க வேண்டுமே தவிர, மதத்துக்கான சட்டமாக இருக்கக்கூடாது.

பங்களாதேஷ் பிறக்கும்போது மதச்சார்பற்ற கொள்கையுடன் வங் காளிகளுக்கான நாடாகவே பிறந்தது. 1952லிருந்து இன்றுவரையிலும் வங்க முசுலீம்கள், இந்துக்கள், புத்த மற்றும் கிறித்தவ மதத்தவர்கள் ஆகியோர் நாட்டின் மொழியாக வங்காள மொழி இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். உருது மொழியை அல்ல.

எங்களுடைய சுதந்திரத்தை எதிர்ப் பவர்கள் பாகிஸ்தான் இராணுவத்துடன் சேர்ந்து 1971ஆம் ஆண்டில் முப்பது இலட்சம் (மூன்று மில்லியன்) மக்களைக் கொன்றார்கள். அவர்கள்தான் இப் போது பங்களாதேஷை இசுலாமிய மயமாக்குவதில் ஈடுபட்டுக் கொண்டி ருப்பவர்களாக உள்ளார்கள். சுதந்திர சிந்தனையாளர்கள், அறிஞர்களை அவர்கள்தான் கொலை செய்கிறார்கள்.

பாகிஸ்தான் நாடு மதச்சார்புள்ள நாடு. ஆனால், பங்களாதேஷ் அரச மைப்பு மதச்சார்பின்மையில் தொடர்ந்து நீடித்திருக்கவேண்டும். மதத்திலிருந்து விலகி இருக்க வேண்டும். மதரசாக்கள் மூலமாக கல்வி புகட்டுவதைவிட, மதச்சார்பற்ற கல்வியையே கட்டாயமாக நாம் அளிக்க வேண்டும். மதத்தீவிர வாதிகளின் புகலிடமாக நாடு மாறு வதற்கு அரசு இடம் கொடுக்கக் கூடாது.

கேள்வி: மதத்தின்மீதான உங்களு டைய விமரிசனம் அதிகப்படியானது என்றும், ஆத்திரத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும் மக்கள் கருது கிறார்களே?

தஸ்லிமா நஸ்ரீன்: மதம் பெண் களை ஒடுக்குகிறது. சட்டங்கள் சமத் துவத்தின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, மதத்தின் அடிப் படையில் இருக்கக்கூடாது. பெண் களுக்கு திருமண உரிமை, மணவிலக்கு உரிமை, குழந்தை பராமரிப்பு மற்றும் மரபுவழி உரிமைகள் இருக்கவேண்டும். நான் ஏற்கெனவே கூறியதுபோல், மதத்தின்பெயரால், கல்வீசிப் பெண் களைக் கொல்வதை நிறுத்த வேண்டும்.

இதுவா ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது? நாகரிகமுள்ள எல்லா நாடுகளிலும் அரசுடன் மதம் கொண்டுள்ள உறவு குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். அரசுடன் மதத்தைச் சேர்க்காமல் விடுவிக்கப்படுவதுடன் அரசுடன் சேராமல் இருக்கவும் வேண்டும். மற்ற மதங்களை ஆய்வுக்குட்படுத்தும்போது இசுலாம் மட்டும் விதிவிலக்காக இருக் கக்கூடாது.

மதச்சார்பற்ற மனிதநேயத்தின் அடிப்படையில் என்னுடைய கருத்துகள் உள்ளனவாகும். ஆத்திரத்தை ஏற்படுத் துவது என்று கூறினால், அதுதான் முழுமையாக கோபப்பட வேண்டிய தாக இருக்கும்.

தமிழ் ஓவியா said...


கேள்வி: ஆனால், உங்களுடைய எழுத்துகள் அடிப்படைவாதங்களை வலுப்படுத்துவதாக கூறப்படுகிறதே?

தஸ்லிமா நஸ்ரீன்: அரசுகள்தான் அடிப்படைவாதங்களை வலுப்படுத்தி வருகின்றன. என்னைப்போன்றவர்களை ஆதரிக்கவில்லை. மதத் தீவிரவாதிகள் என்னுடைய தலைக்கு விலை வைக்கும் போது, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல், என்மீது அரசு குறிவைத்தது.

அவாமி லீக் கட்சியும், பங்களாதேஷ் தேசியக் கட்சியும் அவர்களோடு கைகோர்த்துக்கொண்டு மக்கள்நல அரசாகத்தான்(?) செயல்பட்டு வரு கின்றன. மேற்கு வங்கத்தில்கூட இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி தலைமையிலான அரசு என்னை வெளியேற்றியது. திப்பு சுல்தான் இமாம் என்னுடைய தலைக்கு விலைகூறியதை தலைவணங்கி ஏற்றுக்கொண்டார்கள் மார்க்சிஸ்ட்டுகள். அதிலும், மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்த உடனேயே இமாமுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டார்.

கேள்வி: உங்கள்மீது கூறப்படும் மற் றொரு குற்றச்சாற்று என்னவென்றால், இசுலாமை எதிர்ப்பதன்மூலமாக நீங்கள் வலதுசாரிகளை வலுப்படுத்துவதாகக் கூறப்படுகிறதே?

தஸ்லிமா நஸ்ரீன்: முற்றிலும் முட்டாள்தனமானது. நான் இந்துமதம் உள்பட எல்லா மதங்களையும் விமரி சனம் செய்கிறேன். இந்து சாமியார் களை, கார்வா சவ்த் மற்றும் சிவராத்திரி போன்ற சடங்குகளையும், குஜராத்தில் முசுலீம்கள்மீதான ஒடுக்குமுறைகளையும் நான் எதிர்த்துள்ளேன்.

குஜராத் கலவரங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரண நிதி திரட் டிய ஷாந்தா கோஷ் கவிஞரிடம் நன் கொடையாக பத்தாயிரம் ரூபாய் தொகையை அளித்துள்ளேன். பங்களாதேஷில் இந்துக்கள்மீதான ஒடுக்குமுறைகளை நான் எதிர்த் துள்ளேன். ஜெர்மன் நாசிக்கள், போஸ் னியா, பாலஸ்தீனம் மீது யூதர்களின் ஒடுக்குமுறைகள், பாகிஸ்தானில் கிறித்தவர்மீதான ஒடுக்குமுறைகள் இவை அனைத்தையும் எதிர்த் துள்ளேன்.

பிகே, வாட்டர் மற்றும் லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆப் கிறிஸ்ட் (PK, Water and The Last Temptation of Christ) ஆகிய படங்களுக்கு ஆதரவாக எழுதியும் வந்துள்ளேன்.

தயவு செய்து என்னை முசுலிம் என்று அழைக்காதீர்கள். நான் ஒரு நாத்திகர்.

கேள்வி: இந்திய பகுத்தறிவாளர் களான நரேந்திர தபோல்கர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்தலைவர் கோவிந்த் பன்சாரே ஆகியோர் கொல்லப்பட்ட போது நீங்கள் அமைதியாகத்தானே இருந்தீர்கள்?

தஸ்லிமா நஸ்ரீன்: யார் உங் களுக்கு சொன்னார்கள்? என்னுடைய டிவிட்டரைப் பார்த்து, சரி பார்த்துக் கொள்ளுங்கள். உடனடியாக என்னு டைய கருத்தை பதிவு செய்தேன். அதனாலேயே இந்துத்துவா சக்திகள் என்னை வசை பாடினார்கள். ஆனா லும், இசுலாமிய மதத்தீவிரவாதிகளின் என்மீதான அச்சுறுத்தல் பெரிதாக உள்ளது என்பதும் உண்மை.

பல்வேறு மேற்கத்திய நாடுகளில் இருப்பதுபோல், மேற்கத்திய உலகு மட்டும்தான் இசுலாமிய அடிப்படை வாதத்தை ஆபத்து இருப்பதாக எண்ணு கிறார்களா? அதை ஏற்கமுடியாது. மேற்குலகம் இசுலாமிய அடிப்படை வாதிகளிடம் இருவேறு அணுகு முறைகளில் உள்ளன.

கேள்வி: ஒரு முசுலீம் எழுத்தாளர் என்கிற முறையில் உங்களின் எழுத்து களில் இசுலாம்குறித்த மேற்கத்திய உலகின் கற்பனைகளை எதிரொலிப் பவையாக உள்ளன. மேற்குலகத்தின் விருப்பங்களை சொல்வதற்கு உங்களைக் கட்டாயப்படுத்துகின்றனவா?

தஸ்லிமா நஸ்ரீன்: முசுலிம்கள் அவர்களின் மதத்தை விமர்சனம் செய்யும் அளவுக்கு மூளை இல்லாத வர்கள் என்று சொல்கிறீர்களா? இசுலாத்தை விமர்சனம் செய்ய முசுலீம் அல்லாத அறிஞர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளதாக எண்ணுகிறீர்களா? அப்படி பார்ப்பது, முஸ்லீம்களின் மீதான விரோதப் போக்காகவே மிக மோசமாக அமைந்துவிடும்.

கேள்வி: பங்களாதேஷ் எதிர்காலம் என்னவாக இருக்கும்?

தஸ்லிமா நஸ்ரீன்: நாட்டை ஆளுபவர்கள் முழுமையாக அழிவு வேலைகளைச் செய்துவரும் இசுலா மியத் தீவிரவாதிகளை நீதியின் முன் கொண்டுவரமாட்டார்கள். எப்படி ஆனாலும், அதுதான் கடந்த கால வரலாறு. எதுவுமே நடைபெறாது. அதுமட்டுமன்றி, இயல்பாகவே அரசியலில் தொடர்போடு உள்ளார்கள் என்பதால் இதுபோன்ற சம்பவங்கள் வரும் மாதங்களிலும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும்.

_இவ்வாறு தி இந்து ஆங்கில செய் தியாளர் சுவோஜித் பக்சி கேட்ட கேள் விகளுக்கு தஸ்லிமா நஸ்ரீன் பதி லளித்தார்.

_ தி இந்து ஆங்கில நாளிதழ், 21.3.2015

Read more: http://viduthalai.in/page2/98654.html#ixzz3VgAvq4r6

தமிழ் ஓவியா said...

பகையைப் புகைக்காதீர்!

அமெரிக்க புற்றுநோய்த் தடுப்பு அமைப்பு சார்பில் சுமார் பத்து லட்சம் பேரின் ஆரோக்கியம் ஆராயப்பட்டது. இதில் புகைப் பழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்தது.

அமெரிக்க துணைக் கண்டத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் புகைப் பழக்கத்தாலும், அதனால் ஏற்படும் நோய்களாலும் சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

உலக அய்க்கிய சுகாதார அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் புகையால் ஒவ்வொரு ஆண்டும் இறப்பவர்களின் எண்ணிக்கை சுமார் அறுபது லட்சம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

புகை பிடிப்பவர்கள், புகையை சுவாசிப்பவர்கள் எண்ணிக்கையும் இதில் அடங்கும். ஆனால் வாஷிங் டன் பல்கலைக்கழக அறிக்கையின்படி, இது மிகவும் குறைந்த மதிப்பீடு ஆகும். புகையிலையால் புதிதாக 5 நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான மருத்துவர் எரிக் ஜேகப்ஸ் கூறியதாவது:-

உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் புகை பிடிக்கும் பழக்கத்தினால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான முன்னேற்றம்.

இங்கிலாந்து மருத்துவ ஆய்வில் சுமார் 55 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் புகை பிடிக்கும் பழக்கத்தால் மரணம் அடைகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

இதுதவிர இந்த பழக்கம் காரணமாக புதிதாக அய்ந்து வகை நோய்கள் தாக்கி பலர் இறந்து இருப்பதும் கண்டறியப்பட்டது.

இந்த நோய்கள் ஆய்வின் போது கணக்கில் சேர்க்கப்படவில்லை. இதை ஆராய்ச்சியாளர்கள் தனிக் கவனம் செலுத்தி ஆராய்ச்சி செய்தனர். இதில் புகைப்பழக்கத்தால் ரத்த நாளம் சிதைவு, குடல் புண், இருதய நோய்கள், தொற்று நோய்கள் மற்றும் சுவாசம் சம்பந்தமான பல நோய்கள் வரும் வாய்ப்புகள் இரு மடங்காக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

குடலுக்கு சரியாக ரத்த ஓட்டம் ஏற்படாதநிலையில் குடிப்பழக்கம் உள்ளவர்கள் ஒருவிதமான நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைய வாய்ப்புகள் 6 மடங்கு அதிகம் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தகவல்: சீ. இலட்சுமிபதி

Read more: http://viduthalai.in/page3/98656.html#ixzz3VgBw4XBE

தமிழ் ஓவியா said...

உள்ளூரில் போனியாகாத உற்சவப்பெருமாள்!

-கி.தளபதிராஜ்

திருப்பதி மூலவர் தன் திருநாமத் திலேயே "நித்யகல்யாணப்பெருமாள்" என பெயரைக் கொண்டுள்ளதால், அவரைத் தரிசிக்கும் பக்தர்களின் திருமணத் தடை நீங்கும் என்பது அய்தீகமாம். சமீப ஆண்டுகளாக திரு மலைக்கு வந்து கல்யாண உற்சவத்தை சேவிக்க இயலாத பக்தர்களின் குறை யைப் போக்கவும, பக்தி மார்க்கம் செழிக்கவும், கல்யாண சிறீநிவாசர் எனும் மூர்த்தியை எல்லா ஊர்களுக்கும் எழுந்தருளச் செய்து, கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறதாம்.

அப்படி ஒரு வைபோக நிகழ்ச்சி மயிலாடுதுறைக்கு அருகே ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் 24.3.2015 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெருமாள் பெயரில் அர்ச்சகர் தாலியைக் கட்ட வாண வேடிக்கை காட்டப்பட்டது. நிகழ்ச்சியை வர்ணனை செய்பவர் "கோவிந்தா" "கோவிந்தா" என அழைக்கு மாறு ஒலிபெருக்கியில் அறிவித்ததையும் கவனிக்காமல் பக்தர்கள் மெய்மறந்து வாண வெடிகளை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

தமிழ் ஓவியா said...


"கோவிந்தா" சத்தம் வேகமாக எழாததைக் கண்டு கடுப் பாகிப்போன வர்ணனையாளர் "பத்துபேர் கூட 'கோவிந்தா' போட்ட தாக தெரியவில்லை. எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ!

சேர்ந்து சொல் லுங்கோ! " என மீண்டும் மீண்டும் அறிவித்ததை பார்க்கும்பொழுது பரிதாபமாக இருந்தது. சிறீதேவியையும், பூதேவியையும் ஒரே நேரத்தில் மணந்த பெருமாளையும், பெருமாளுக்காக தாலிகட்டிய அர்ச்சகரையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந் தவர்களில் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், என அரசுத்துறை அதிகாரிகளும் அடக்கம்.

யார் இந்த பெருமாள்?

மேகநாதன் என்ற அசுர (பார்ப்பனரல்லாத) மன்னனுக்கு பிறந்த பலி நீதிதவறாமல் ஆட்சி நடத்தி வந்தான். அப்போது மாலி, மால்யவான், சூமாலி என்ற அசுரர்கள், தேவர் களுடன் (பார்ப்பனர்களுடன்) போரிட அவனை அழைக்க, பலி மறுத்து விட்டதால், அவர்கள் மூவரும் சென்று தேவர்களுடன் போரிட்டு தோற்று வந்து பலி யிடம் சரணாகதி அடைந் தனர்.

அவர்களுக்காக பலி தேவர் களுடன் போராடி வெற்றிபெற்றான். தேவர்களுடன் போரிட்ட காரணத் தினால் பலிக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. தேவர்களுடன் யுத்தம் நடத்திய பாவம் நீங்க பலி கடும் தவம் புரிந்ததான். அவனது தவத்தை மெச்சிய பெருமாள் ஆதிவராக மூர்த்தியாக காட்சியளித்து பலிக்கு மோட்சமளித் தாராம்.

ஆக பார்ப்பனரிடம் போரிட்டதற்காக வருந்தி தன் பாவம் நீங்க தவம் புரிந்தற்காக அவன் தவத்தை மெச்சி பெருமாள் அளித்த காட்சிதான் ஆதிவராகமூர்த்தி. புராணப்புழுகிலும் பார்ப்பான் எவ்வளவு தெளிவாக எழுதி வைத்திருக்கிறான் என்பது புரிகிறதா? பார்ப்பனர்களிடம் போரிடுவதே தெய்வக்குற்றமாம்!

தமிழ் ஓவியா said...

நித்யகல்யாண கூத்து!

அப்படி ஆதிவராகமூர்த்தியாக பெருமாள் காட்சி புரிந்த தலத்தில் ஒரு முனிவரும் அவரது மகளும் சொர்க் கத்தை அடைவதற்காக தவம் இருந்தன ராம். சொர்க்கத்தை அடைவதற்கான "கடவுச்சீட்டு" அவரது மகளுக்கு முதலில் கிடைத்தும், அவள் திருமணம் ஆகாதவள் என்ற காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்டது.

பூலோகத் தில் இருந்த முனிவர்களிடம் நாரதர் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்ட காலவரிஷி என்ற முனிவர் அவளை மணந்து கொண்டார். அவர்களுக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தன. முனிவர் தனக்குப்பிறந்த 360 பெண்களையும் திருமணம் செய்துகொள்ளுமாறு பெருமாளிடம் வேண்டினார். பெரு மாள் ஒரு அழகிய இளைஞன் வடி வத்தில் பூலோகம் வந்தார்.

அந்த இளைஞன் ஒரு நாளைக்கு ஒரு பெண் வீதம் 360 நாட்களும் பிரம்மசாரியா கவே வந்து அப்பெண்களை மணம் புரிந்தான். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்பது இதுதானோ?. கடைசி நாளன்று அவர்கள் அனை வரையும் ஒன்றாக்கி அப்பெண்ணிற்கு அகிலவல்லி நாச்சியார் என பெயரிட்டு தன் சுய உருவமான வராக (பன்றி) ரூபத்தைக் காட்டினானாம்.

நல்ல வேளை திருமணத்திற்கு முன்னால் பெருமாள் தன் பன்றி உருவத்தை காட்டவில்லை. 360 கன்னியர்களும் சேர்ந்திருந்தால் ஆதிவராகமூர்த்தி கதி அன்றைக்கே அதோகதியாகியிருக்கும்.

பெருமாள் நிலை!

கிபி 15ஆம் நூற்றாண்டிலிருந்து 16ஆம் நூற்றாண்டுவரை விஜயநகர பேரரசர்கள் ஆண்டு கொண்டிருந்த சுமார் நூறு ஆண்டுகள்தான் இந்த திருப்பதி மலை பூஜை, புனஸ்காரம் என்று இருந்திருக்கிறது. பின்னர் பெருமாள் கேட்பாரற்று கிடந்திருக் கிறார்.

18ஆம் நூற்றாண்டில் ஆட்சி யைப்பிடித்த கிழக்கிந்திய கம்பெனிகள் மலேரியா நோயை பரப்பும் கொசுக்கள் அங்கு அதிகம் பரவியிருப்பதைக் சுட்டிக் காட்டி திருமலைக்குச் செல்வதற்கே தடைவிதித்தது. அங்கிருந்த புரோகி தர்களையும் மலையடிவாரத்திற்கு வரும்படி எச்சரிக்க, அவர்களில் பலரும் மூட்டை முடிச்சை கட்டிவிட்டனர்.

மராத்தியர் காலத்திலும் இதே நிலை தான் தொடர்ந்திருக்கிறது. பின்னர் பல ஆண்டு காலம் திரும்பிப்பார்க்கவே ஆளில்லாமல் முட்புதர் மண்டிக்கிடந்த திருப்பதி மலை செப்பனிடப்பட்டு மீண்டும் பக்தர்கள் சென்று வர ஆரம் பித்தனர். இந்த நிலையில் சில ஆண்டு களுக்கு முன்னர் தினமலரில் வந்த ஒரு செய்தி மீண்டும் பெருமாளின் மவுசு குறைந்து வருவதை சுட்டிக்காட்டியது.

தினமலர் செய்தி (17.2.2011) !

"திருப்பதி திருமலையில் உற்சவராக எழுந்தருளும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரான சீனிவாச பெருமாளுக்கு, தினமும் நித்ய கல்யாண உற்சவம் நடத்தப் படுகிறது. முன்னதாக, வெங்கடேச பெருமாள் கோவில் பிரதான வாயிலில், தினமும் அதிகாலை மாவிலை, வாழை மரம் கட்டி தோரணங்களால் அலங்காரம் செய்வது வழக்கம்.

ஆனால் நேற்று முன் தினம் பிரதான வாயிலில் கட்டப்பட்டிருந்த வாழை மற்றும் மாவிலைகள், உலர்ந்து முற்றிலும் வாடிய நிலையில் இருந்ததைக் கண்டு, பக்தர்கள் அதிருப்தி யடைந்தனர். தினம் காலையில் முறைப்படி புதிதாக தோரணங்கள் கட்டப்பட்டதா என்ற சந்தேகம் ஏற்படுவதாக பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்" என்று 2011 பிப் 17ஆம் நாள் தினமலர் வெளி யிட்டிருந்த செய்தியை பார்த்தவர் களுக்கு நித்ய கல்யாணத்தைப் பார்க்கும் கூட்டம் குறைந்து தினசரி வரும்படி குறைந்ததால் ஏற்பட்ட விளைவை புரிந்து கொள்ள முடியும்.

உள்ளூரில் சரக்கு போனியாகாததால் மலைய பெருமாளை நம்பாமல் மலேரியா காய்ச் சலுக்கு பயந்து மலையடிவாரத்திற்கு பாய்ந்த பரம்பரை இப்போது பெரு மாளையே ஊர்ஊராக இழுத்துவந்து கல்யாண வேடிக்கை காண்பித்துக் கொண்டிருக்கிறது. இப்படி பெருமாளை கொண்டு வருவதற்கு திருப்பதி தேவஸ் தானத்திற்கு பல லட்சரூபாய்களை கட்டவேண்டும் என்று சொல்லப்படு கிறது.

அதோடு இரவை பகலாக்கிய மின்னொளி, நவீன தொழில் நுட்பத் துடன் பெருமாள் கல்யாணம் பக்தர் களுக்கு டிஸ்பிளே, என செலவு கோடியைத் தாண்டக்கூடும். பொருளா தார விரயத்தோடு காலத்தையும் விரயம் செய்யும் இது போன்ற விழாக்களை நடத்த அனுமதிப்பது சரிதானா? என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தக்கூத்தை காண படித் தவர் முதல் பாமரர் வரை கூடுவதுதான் மிகுந்த வேதனை.

தமிழ் ஓவியா said...

காந்தியாரால் அல்ல - சவர்க்காரால்தான் சுதந்திரம் கிடைத்ததாம்!

வீர் சவர்க்காரின் தியாகத்தால் தான் சுதந்திரம் கிடைத்த்து காந்தி ஆங்கி லேயருக்காக இந்தியாவில் நடக்கும் சுதந்திரப்போராட்டத்தைப் பற்றிய தகவல்களை ரகசியமாகக் கூறும் உளவுப் பிரிவிற்காக பணியாற்றிவந்தார் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சாமியாரிணி பிராய்ச்சி கூறியுள்ளார்.

விஷ்வ இந்துபரிஷத் அமைப்பின் 50 ஆண்டு விழா தற்போது பல்வேறு மாநி லங்களில் கொண்டாடப்பட்டு வரு கிறது, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள் ளும் இந்துத்துவா தலைவர்களின் ஒவ்வோரு பேச்சும் சமூகத்தை பிளவு படுத்தும் வகையில் உள்ளது. உத்தரப் பிரதேசமாநிலம் பாயிரஜ் என்ற இடத் தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சாத்வி பிராச்சி கூறியதாவது:

இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் என்பது இந்துக்களின் புனிதப் போராட் டமாகும், இந்த போராட்டத்தின் விளைவை ஆங்கிலேயருக்கு உளவு பார்த்து கூற இங்கே பலர் இருந்தனர். அவர்களின் சூழ்ச்சி எல்லாம் சுதந்திரப் போராட்டத்தை மழுங்கடிப்பதாகும். இராட்டை சுற்றுவதால் எங்காவது சுதந்திரம் கிடைக்குமா? இது ஒரு ஏமாற்று வேலை;

அன்றைய கால கட்டத்தில் ஆங்கிலேயர் நடத்திய ஊடகங்கள் காந்தியை ஒரு நாயகன் போல் உலகம் முழுவதும் காட்டியது. காந்தியின் ஆங்கிலேயப் பாசத்திற்கு வெள்ளைக்காரர்கள் கொடுத்த சன் மானமாகும், அவர் ஆங்கிலேயர்களின் ஏஜெண்டாக இருந்த காரணத்தால் உலகம் முழுவதும் காந்தி ஏதோ புகழ் மிக்க தலைவர்களைப் போல் பார்க்கப் படுகிறார்.

உண்மையில் அவர் புகழ் மிக்க தலைவராவதற்குத் தகுதியற்றவர். இந்து மக்களின் அடிமைத்தளை களை ஒழிக்க அரும்பாடு பட்டவர் வீர் சவர்கார் அவர்தான் இந்தியாவின் தந்தை என்று புகழப்படவேண்டும். இந்துக்கள் அவரைத்தான் தேசத்தந்தையாக பார்க்கவேண்டும் என்று கூறினார்.

அதே நேரத்தில் அதிகம் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பிறமதத்தவரின் உரிமைகளைப் பறிக்கவேண்டும், அவர்களுக்குச் சலுகைகள் மற்றும் வாக்குரிமை கொடுக்கக்கூடாது. இதை எதிர்ப்பவர்கள் துணிச்சலிருந்தால் இந்தமேடையிலேயே என்னுடன் விவாதிக்கலாம், இஸ்லாமிய நடிகர் களின் திரைப்படங்களைப் புறக்கணி யுங்கள் என்று நான் சொன்னது நன்மைக்காகத்தான்.

அவர்கள் இந்துப் பெண்களின் மனதில் நச்சைவிதைக் கின்றனர். லவ்ஜிகாத்தின் விதை இஸ்லாமிய திரைப்பட நடிகர்களிட மிருந்துதான் ஆரம்பிக்கிறது பாகிஸ் தானில் ஒரு இந்து நடிகராக முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பசுவதையைத் தடைசெய்யக்கோரி இந்திரா காந்தியைச் சந்திக்கச்சென்ற சாமியார்கள் மீது தடியடி நடத்த உத் தரவிட்டார். அதனால் அவரது மரணம் இவ்வளவு மோசமாக இருந்தது. இந்துக்களின் மீது கைவைக்கும் அனை வரது முடிவும் இப்படித்தான் இருக்கும். மசூதிகளில் எந்த ஒரு கடவுளும் இல்லை, சுவரைப் பார்த்து வணங் குவது எப்படி கடவுள் வழிபாடாகும் ஆகவே மசூதிகள் எல்லாம் வெறும் கட் டிடங்கள் மட்டுமே என்று பிராய்ச்சி கூறினார்.

தமிழ் ஓவியா said...

திராவிடர் இயக்கத்தால் தமிழும் தமிழரும் வளர்ந்தனரா? இல்லையா?

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னையில் அன்றைய மவுண்ட்ரோட்டிலும், ஜார்ஜ் டவுனிலும் இருந்த உணவு விடுதிகளில் (Hotel and Mess) பறையர்களும், நாய்களும், குஷ்டரோகிகளும் உள்ளே நுழையக்கூடாது என்று போர்டு வைத்திருந்தார்கள்.

பிராமணரல்லாத தமிழர்கள் - அதாவது பஞ்சம, சூத்திர மாணவர்கள் விடுதிகளில் தங்கிப்படிக்க அனுமதி கிடையாது.

அடையாளம் தெரியாத நபர் என்று ஒருவரைக் குறிப்பிடுவது போல் பிராமணரல்லாதார் என்பது தான் தமிழரின் அடையாளமாக இருந்தது.

1915 - ஆம் ஆண்டில் தமிழர்கள் வெறும் 5 சதவீதத்தினர் மட்டுமே படித்திருந்தனர். திராவிடர் இயக்கம் தோன்றுவதற்கு முன்பு தமிழன் இப்படித்தான் வாழ்ந்தான்.

2000 ஆண்டு காலமாக நீடித்த இந்த பிறவி பேதத்தை மனித நேயமற்ற கொடுமையை ஒழித்து அனைவருக்கும் அனைத்தும் என்ற சமத்துவத்தை உருவாக்கவே திராவிடர் இயக்கம் தோன்றியது. தந்தை பெரியார் போராடினார்; வெற்றிவாகை சூடினார்.

தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் எனும் கொடையால் கன்னித்தமிழ் இன்று கணினித்தமிழாக வளர்ந்திருப்பதும் சுட்டுரையில் (டுவிட்டர்) இந்திய அளவில் # தமிழ் வாழ்க முதலிடம் பிடித்துள்ளதும், இந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்தில் இருந்து தமிழைக் காப்பற்றியதும், திருக்குறளை உலகறியச் செய்திருப்பதும், தமிழ் இன்று செம்மொழியாக பெருமைப்படுத்தப் பட்டிருப்பதும் திராவிடர் இயக்கத்தின் சாதனைகளே.

1) தமிழ் பெண்கள், 2) தாழ்த்தப்பட்ட தமிழர்கள், 3) பிற்படுத்தப்பட்ட தமிழர்கள் என வகைப்படுத்தி தனித்தனியே அவரவர்கள் வளர்ச்சியைக் கவனித்தால் திராவிடர் இயக்கம் தோன்றி 100 ஆண்டுகள் போராடிய பின் தமிழர்கள் அடைந்துள்ள வளர்ச்சியை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

தமிழும், தமிழரும் வளர்ந்துள்ளனர் என்பதற்குத் தமிழர் இல்லத் திருமண அழைப்பிதழே தக்க ஆதாரமாகும். 100 ஆண்டுகளுக்கு முன் தமிழர் இல்லத் திருமண அழைப்பிதழில் தமிழ் தமிழாக இருக்காது. அழைப்பிதழில் ஒரு தமிழர் கூட பட்டதாரியாக இருக்கமாட்டார். இன்றுள்ள அழைப்பிதழில் தமிழன் உயர்படிப்பும், உயர் பதவியும் பெற்றிருப்பதைக் காணலாம்.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தமிழரை உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்த்தியது திராவிடர் இயக்கம்.

லோக குரு குற்றவாளிக் கூண்டில் நிற்கும்போது தமிழன் நீதிபதி ஆசனத்தில் உட்காரும் நிலைக்கு உயர்த்தியதும் திராவிடர் இயக்கமே!

இன்றுள்ள தமிழ் நாட்டில் 12-ஆம் வகுப்புத் தேர்வில் ஆண்களை விட பெண்கள் அதிக சதவீதம் தேர்ச்சியும் அதிக மதிப்பெண்களும் பெறுகின்றனர். செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சியிலும் அந்த மாணவிகள் அளிக்கும் பேட்டியே பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்பதற்குத் தக்க ஆதாரமாகும்.

ஆண்களுக்குள்ள உரிமைகள் அனைத்தும் இன்று பெண்களுக்குக் கிடைத்துள்ளன. தமிழ் வாழ்கின்றது, தமிழன் வாழ்கின்றான், தமிழ் வளர்ந்துள்ளது, தமிழனும் வளர்ந்துள்ளான். பெரியாரின் விருப்பமும், போராட்டமும் வெற்றி பெற்றுள்ளது. வாழ்க பெரியார்.-மு.ந.மதியழகன் (சென்னை-33)


Read more: http://viduthalai.in/page5/98661.html#ixzz3VgDAEBD6

தமிழ் ஓவியா said...

மாநில அரசு இணையதளத்தில் இன்றளவும் ஜெயலலிதா தான் முதல்வர்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்று எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல மக்களும் கூட புலம்பும் நிலைதான் தமிழகத்தில் உள்ளது. அதற்கேற்பத்தான் ஆட்சியும் காட்சிகளும் உள்ளன.

தமிழகத்தில் அதிமுகவினர்தான் ஜெயலலிதாவை விடாமல் மக்களின் முதல்வர் என்று கூறி வந்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அரசுத் துறையும் கூட அவரை இன்னும் முதல்வராகவே பார்க்கிறது, பாவிக்கிறது என்பதுதான் வேடிக்கையானது.

மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்காக பூஜைகளும் சிறப்பு யாகங்களும் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஜெயலலிதா பிறந்தநாள் அன்று அரசின் சாதனை குறித்த புகைப்படக் கண்காட்சியை நடத்தினர். அதில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் படம் மருந்துக்குக் கூட வைக்கவில்லை. மாறாக ஜெயலலிதா படம்தான் நிறைந்திருந்தது.

அனைத்து அரசு அலுவலகங்களிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் இன்னும் கூட அகற்றப்படவில்லை. தற்போது தமிழக அரசின் மக்கள் செய்தி மக்கள் தொடர்பு துறை இணையதளத்தில் ஜெயலலிதாவை இன்னும் முதல்வராகவே வைத்துள்ளனர். அந்தத் தளத்தை கிட்டத்தட்ட அப்படியே போட்டு விட்டு போய் விட்டது போலவே தெரிகிறது.

எந்த ஒரு மாற்றமும் இல்லை. இந்தத் தளத்தைப் பார்த்தபோது. அதில் அமைச்சரவைப் பட்டியலில் முதல்வர் ஜெ. ஜெயலலிதா என்று போட்டு வைத்துள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் நிதியமைச்சராகவே நீடிக்கிறார். மேலும் அந்தத் தளம் முழுவதும் ஜெயலலிதா படம்தான்.

Read more: http://viduthalai.in/page5/98662.html#ixzz3VgDNz8Qw

தமிழ் ஓவியா said...

சோதிடப் புயல்!

Astronomy என்பது வான இயல். இது காரண காரியத்தை அடிப்படையாகக் கொண்டு விஞ்ஞான பூர்வமானது. Astrology என்பது சோதிடம் கூறுதலாகும். இதற்கும் அறிவியலுக்கும் சிறிதும் சம்பந்தம் கிடையாது.

ஆனால் மெத்த படித்த சிலரும் இவ்விரண் டையும் ஒன்று என்று எண்ணி குழம்புகின்றனர். Astrology சோதி டம் என்பது வெறும் புரட்டே என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. மெயில் நாளிதழில் (‘The mail’ Madras) 7_11_1981 அன்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

நவம்பர் மாதம் 11ஆம் தேதியன்று பெரும் புயல் ஒன்று தமிழ்நாட்டு கடலோரத்தையும் வங்காள தேசத்தையும் கடுமையாக தாக்கு மென்றும்; அது 1977ஆம் ஆண்டு நவம்பரில் வீசிய புயலைப் போல் பயங்கரமாக இருக்கும் என்றும்;

அப்புயலின் உச்ச கட்டம் 13ஆம் தேதியாக இருக்கும் என்றும் Indian Institute of Astrology யைச் சேர்ந்த டாக்டர். ஹிராலால் பால் என்பவர் சோதிடம் கூறியிருந்ததுடன் அரசாங்கம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார்.

ஆனால், அந்தோ பரிதாபம்! அவர் குறிப்பிட்ட நவம்பர் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி முடிய - அது அய்ப்பசி மாதமான போதி லும் (சென்னையில்) ஒரு துளிகூட மழை இல்லாமல் வெயில் அடித்து இரவில் பகல்போல நிலவும் காய்ந் தது.

தமிழ்நாட்டில் எங்கும் புயல் இல்லை. வங்காளதேசத்திலும் புயல் அடித்ததாகச் செய்தி இல்லை.
சோதிடம் பொய் என்பதற்கு சரியான ஆதாரமாகும் இது.

Read more: http://viduthalai.in/page6/98663.html#ixzz3VgDZmA9l

தமிழ் ஓவியா said...

திரு. மாளவியாவின் புரோகிதம்

பிரபல வருணாசிரம தரும வாதியாகிய பண்டித மதன் மோகன் மாளவியா அவர்களைப் பற்றி, நாம் அதிகமாக யாருக்கும் எடுத்துக்கூறத் தேவையில்லை. அவர் இங்கிலாந்து சென்றபோது, கங்கை நீரும், களிமண்ணும் மடிசஞ்சிகளும் கூடவே கொண்டு சென்ற வைதிகர் என்பது தெரியும்.

சூத்திரன் என்பவன் ஒருவன் மோட்சமடைய வேண்டுமானால் அவன் இருபத்தொரு ஜென் மங்கள் நற்குலத்தில் பிறந்து, சற்கருமங்களைச் செய்து, பிராமண பக்தனாயிருந்து கடைசியில் பிரா மணனாகப் பிறந்துதான் மோட்சம் பெறவேண்டும் என்ற பிராமணிய மதக் கொள்கையில் உறுதியான நம்பிக்கை யுடைய முதிர்ந்த வயிரம் வாய்ந்த வைதிகர் என்பது அவரு டைய போக்கை உணர்ந்தவர்கள் எல்லோருக்கும் தெரியும்.

இத்தகைய வைதிக மாளவியா அவர்கள் அரசியல் சீர்த்திருத்தத்தில் தீண்டாதவர்களுக்குத் தனித்தொகுதி அளிப்பதை அடியோடு மறுக்கின்றார் என்ற விஷயமும் தெரியாததல்ல. இப்படிப்பட்ட இவர் சென்ற சிவராத்திரி வாரத்தின்போது, காசியில் கங்கைக்கரையில் நடந்த தசாஸ்வமேதக் கூட்டத்தில் இந்துமதத்தைச் சேர்ந்த சகலவகுப்பினருக்கும் ஜாதி பேதமின்றி மந்திரதீட்சை கொடுத்தாராம்! அப்போது 150 பேர்களுக்குமேல் 500 பேர்களுக்குள் அடங்கிய தீண்டாதார்களுக்குச் சமயதீட்சை கொடுத்தாராம்!

இவ்விஷயங்கள் பத்திரிகைகளிளெல்லாம் வெளி யாகியிருக்கின்றன. என்றுமில்லாமல் இப்பொழுது திடீரெனத் தீண்டாத வகுப்பினர்மேல் திரு.மாளவியா அவர்களுக்குக் கருணைபிறந்து சமயதீட்சை அளிக்கப் புறப்பட்டது எதற்காக? அவர்கள் இந்த உலகத்தி லிருந்து கொண்டு சமத்துவம் வேண்டும் சமத்துவம் வேண்டும் என்று சொல்லிக்கொண்டு வருணாசிரம தருமத்தைக் கெடுக்க வழி தேடுகின்றனர்.

ஆகையால் அவர்களை ஒரேயடியாக மோட்ச லோகத்திற்கு அனுப்பிவிடலாம் என்ற எண்ணத்தின் பேரிலா? அல்லது அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள தீண்டாமையைப் போக்கிச் சமத்துவம் அளிக்கவா? என்று கேட்கின்றோம். அல்லது தீண் டாதவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆகையால் அவர் களைத் தனியாகப் பிரிக்கக்கூடாது.

அவர்களுக்கும், அரசியல் சீர்திருத் தத்தில் பொதுத் தொகுதிதான் அளிக்கப்படவேண்டும். இந்துக்கள் தீண்டாதார்களை வெறுத்து ஒதுக்க வில்லை. அவர்களுக்குவேண்டிய உதவிகளைச் செய்து சமத்துவம் கொடுத்து வருகின்றார்கள் என்று இந்துமகா சபைக்காரர்களும், காங்கிரஸ் காரர்களும் கூறி வருவதற்கு அடையாளமாக இக் காரியத்தைச் செய்யத் தொடங்கினாரா? என்று கேட்கின்றோம்.

இவ்வாறு சமய தீட்சை கொடுக்கப்பட்ட தீண்டாத வகுப்பினர்களை இன்று திரு.மாளவியாவின் கூட்டத்தார் உடன் வைத்து உண்ணவும் பழகவும் தயாராயிருக்கிறார்களா? என்றும் கேட்கிறோம். ஒரு நாளும் அவர்கள் இதற்குச் சம்மதிக்க மாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆகவே தீண்டாதார்களை ஏமாற்றும் பொருட்டுச் சமயத்திற்குத் தகுந்தபடி செய்யப்படும் ஒரு தந்திரந் தான் திரு. மாளவியா அவர்களால் செய்யப்பட்ட சமயதீட்சை என்பதை உணரவேண்டும்.

இவ்வாறு திரு. மாளவியா போன்றவர்கள், தீண்டா தார்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் புரோகிதங் களைக் கண்டு ஏமாறாமலிருக்குமாறு தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கு எச்சரிக்கை செய்கின்றோம். இந்துமத நம்பிக்கையும், இந்துமத வேதங்களில் நம்பிக்கையும் உள்ள எந்த இந்துக்களும்,

பிறப்பினால் எல்லோரும் சமம் என்பதை ஒத்துக் கொண்டு எல்லா வகுப்பினர்களுக்கும் சமத்துவம் கொடுக்கச் சம்மதிக்க மாட்டார்கள் என்பதை அறிய வேண்டுகிறோம். வீணாக யாரும், சமய தீட்சை, மந்திர தீட்சை என்ற பெயர்களைக் கேட்டு, வருணாசிரம தருமவாதிகளின் வலைக்குள் சிக்கிவிட வேண்டாமென மீண்டும் எச்சரிக்கை செய்கின்றோம்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 13.03.1932

Read more: http://viduthalai.in/page7/98666.html#ixzz3VgE4Hspj

தமிழ் ஓவியா said...

திருடுவதிலும் வினோதம் - எச்சரிக்கை!

ஆக்ராவில் உள்ள அஜய் சர்மா என்ற ஆயத்த ஆடை வர்த்தகர் தன்னுடைய மோட்டர் சைக்கிளை விற்க பிரபல இணையதளத்தில் படத்துடன் பதிவு செய்திருந்தார். இந்த விளம்பரத்தைப் பார்த்து பலர் வந்தனர். 22 வயது மிக்க கல்லூரி இளைஞர் போல் தோற்றமளித்த ஒருவர் அஜய் சர்மாவிடம் தனக்கு மோட்டார் சைக்கிள் வேண்டும் என்று கூறினார்.

விலை எல்லாம் பேசி முடித்த பிறகு மோட்டர் சைக்கிளை ஓட்டிப்பார்த்துவிட்டு பணம் கொடுக்கிறேன் என்றுகூறியவுடன் நம்பிக் கையுடன் அஜய் சர்மா அவரது மோட்டர் சைக்கிளைத் தந்துள்ளார்.

இதனை அடுத்து அந்த நபர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்று விட்டார், நீண்ட நேரம் வரை காத்திருந்த அஜய் சர்மா அந்த இளைஞர் மீண்டும் வராததைக் கண்டு அவரின் அலைபேசியைத் தொடர்பு கொண்ட போது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

தெரியவந்தது இதனை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கொண்ட அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் சேர்ந்து அந்த பகுதியில் தேடினார். ஆனால், அந்த இளைஞர் மோட்டார் சைக்கிளுடன் தப்பிச்சென்ற விபரம் தெரியவந்து, அவர் ஆக்ரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இணையதளத்தில் அந்த இளைஞர் போலியான முகவரி மற்றும் வேறு ஒருவரின் படத் தையும் கொடுத்து இருந்ததால் உடனடியாக அவரை அடையாளம் காண முடியவில்லை.

Read more: http://viduthalai.in/page8/98671.html#ixzz3VgF69jKz

தமிழ் ஓவியா said...

தேவாலயத்தில் வைக்கப்பட்ட அனுமான் சிலை காவல்நிலைய லாக்கப்பில்!

அரியானா மாநிலம் ஹிஸ்ஸார் புறநகரில் உள்ள ஒரு தேவாலயத்தை இடித்து அதன் பீடத்தில் அனுமார் சிலைவைத்த சம்பத்தைத் தொடர்ந்து சில இந்து அமைப்பச்சேர்ந்த அடை யாளம் தெரியாத 14 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பீடத்தில் இருந்த அனுமான் சிலையை கைப் பற்றி ஹிஸ்ஸார் புறநகர் கபாரி காவல்நிலையத்தில் சிறை வைத்தனர்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிஸ்ஸார் மாவட் டம் புறநகர் பகுதியில் பழமைவாய்ந்த தேவாலயம் ஒன்றில் பராமரிப்புப் பணி கள் நடந்து கொண்டு இருக்கும் போது அந்தத் தேவாலயம் இந்து அமைப்பினரால் தாக்குதலுக் குள்ளானது. தாக்கியவர்கள் தேவாலயத்தில் இருந்த கிறிஸ்தவ படங் களையும் சிலைகளையும் உடைத்தனர்.

அந்த இடத்தில் ராமர் படங்களும், அனு மான் சிலையும் வைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தை அடுத்து அரியான காவல்துறையினர் பஜ்ரங்க தள் அமைப்பைச் சேர்ந்த அடையாளம் தெரியாத 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து மாநில காவல்துறை இணை ஆணையர் சவுரப் சிங் கூறியதாவது, இந்த தேவாலயம் ஸ்கார்ஹார்ட் என்ற பெயரில் செயல் பட்டுவந்தது, பிறகு இது டிவில்யர்ஸ் தேவாலயம் என பதிவுசெய்யப்பட்டு புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது.

கடந்த ஒரு மாதமாக தேவாலயத்தின் போதகர் சுபாஷ்சந்திற்கு மிரட்டல்கள் வந்துகொண்டு இருந்தன. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு முடிந்து அனைவரும் திரும்பிய நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த தேவா லயம் ஊருக்கு வெளியே இருப்பதால் தாக்குதல் நடத்தியவர்களை அடை யாளம் காணமுடியவில்லை என்றார்.

மேலும் அதிரடி நடவடிக் கையாக பீடத்தில் வைக்கப் பட்ட அனுமான் சிலை ஹிஸ்ஸார் புறநகர் காபரி காவல்நிலைய லாக்கப்பில் அடைத்து வைக்கப்பட்டது. இது குறித்து காபரி காவல் நிலைய சீனியர் சப்-இன்ஸ் பெக்டர் ஊடகவியாளர் களிடம் எதுவும் கூற மறுத்து விட்டார்.

அரியானா சட்டமன்றத்தில் வெடித்த தேவாலய இடிப்பு பிரச்சனை

அரியானா சட்டமன்றத் தில் ஹிஸ்ஸார் தேவாலய இடிப்பு விவகாரத்தை காங் கிரஸ் உறுப்பினர்கள் எழுப் பினார்கள். இதற்கு பதில ளித்த முதல்வர் மனோகர் லால் கூறியதாவது: அடை யாளம் தெரியாத நபர்கள் தேவாலயத்தை இடித்து உள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்று கூறினார். ஆனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சூழ்ச்சி என்று கூறி முழக்கமிட்டனர்.

உண்மை என்ன?

அரியானாவில் விரைவில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. தற்போ தைய நிலையில் ஆளும் கட்சியான பாஜகவிற்கு மக்களிடம் ஆதரவு மிகவும் குறைந்துவிட்டது.

இதனை நிவர்த்தி செய்ய இந்துக்களின் வாக்குகளைப் பெற சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் மீது இந்து அமைப்புகள் தாக்குதல் நடத்தியிருக்கவும் வாய்ப் புள்ளதாகவும் காரணம் நீண்ட நாட்களாக பராமரிப்பு இன்றி இருந்த ஒரு கிறிஸ்தவ தேவாலயம் புதுப்பிக்கப் படும் போது நடத்தப்பட்ட தாக்குதல் சமூக மோதலை ஏற்படுத்தவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே அன்றி வேறு எந்த காரணமும் இருப்ப தாக தெரியவில்லை என்றும் தைனிக் ஜாகரன் என்ற இந்திப் பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page8/98670.html#ixzz3VgHxstLw

தமிழ் ஓவியா said...

தாலியைப்பற்றி புரட்சியாளர்அம்பேத்கரின் கருத்தென்ன?

புரட்சியாளர் அம்பேத்கர் அவர் களின் பிறந்த நாளில் (ஏப்ரல் 14) புரட்சிகரமான சிந்தனைகளை அரங் கேற்றுவதுதானே பொருத்தமானது!

தலைவரை மதிக்கிறோம் என் றால் தலைவரின் கொள்கைளை மதிப்பதில்தான் அதனைக் காட்ட வேண்டும்.

தாலியைப்பற்றிய விவாதத் தையே நடத்தக் கூடாது என்று இந்துத்துவாவாதிகள் மிரட்டும் போது, வன்முறையை ஏவும்போது, கருத்துச் சுதந்திரம் என்ற அடிப் படையில் நோக்கினாலும் சரி, பெண் ணுரிமைப் பார்வையில் பார்த்தாலும் சரி, அதனை எதிர் கொண்டு முறி யடிப்பதுதான் முற்போக்குச் சிந்தனை - அதனை வீழ்த்துவதுதானே புரட்சி! அம்பேத்கர் பிறந்த நாளில் தாலியை அகற்றுவதா என்று சில அருமைத் தோழர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆமாம். அண்ணலின் பிறந்த நாளில்தான் அவரின் இந்தப் புரட்சி கரமான சிந்தனையைத்தான் செயல் படுத்த வேண்டும்.

தாலியைப்பற்றி அண்ணலின் கருத்து என்ன? இதோ பாபாசாகேப் பேசுகிறார். சென்னை அரசாங்கத்தின் ஆணைப்படி வெளியிடப்பட்ட மலபார் அஞ்சேங்கோ (Malabar and Anjengo) கெஜட்டின் பதிப்பாசிரியர் சி.ஏ. கின்னஸ் அய்.சி.எஸ். பின்வரு மாறு சொல்கிறார்.

மருமக்கள் தாயம் என்ற முறையையும், மக்கள் தாயம் என்ற முறையையும் கடைப்பிடித்து வந்த எல்லாப் பிரிவு மக்களிடையிலும் வேறொரு திருமணச் சடங்கு முறை காணப்பட்டது. அந்தத் திருமண முறை தாலி கட்டுத் திருமணம் என்று சொல்லப்பட்டது. மலையாளி களின் திருமணப் பழக்கங்களில், இந்தத் தாலி கட்டுத் திருமணம் என்பது தனித்தன்மை வாய்ந்தது. புதுமையானது; வேறுபட்ட தன்மை யுடையது என்றெல்லாம் சொல்லப் படுகிறது. ஒரு பெண் பூப்படைவதற்கு முன் அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டுவது தான் இந்தப் பழக்கத்தின் அடிப்படையாகும். அந்தப் பெண்ணின் ஜாதி அல்லது அவளைவிட உயர் ஜாதியைச் சேர்ந்த ஒரு மனிதனால் இந்தத் தாலி கட்டப்படுகிறது.

அதற்குப்பிறகுதான் அந்தப் பெண் சம்பந்தம் என்னும் மண ஒப்பந்தம் செய்வதற்குரிய உரிமையைப் பெறுகிறாள். தாலி கட்டுகிறவன் அல்லது மணவாள னுக்கு அந்தப் பெண்ணுடன் இணையும் உரிமையை வழங்குவ தற்காகத்தான் தாலி கட்டும் திரு மணம் என்னும் சடங்கு நடத்தப் படுகிறது என்று பொதுவாகக் கருதப் படுகிறது. சத்திரியர்கள், அதற்கும் மேலாகப் பூதேவர்கள் என்று சொல் லப்பட்ட பிராமணர்கள் ஆகியோர் கீழ்ஜாதிப் பெண்களை முதலில் அனுபவிப்பதற்காக ஏற்பாடு செய் யப்பட்டதுதான் இந்தச் சடங்கு முறையின் தோற்றுவாயாக இருக்கக் கூடும் என்று சிலர் கருதுகிறார்கள். (தொகுதி (பக்.101)

(டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எழுதிய காங்கிரசும், காந்தியும் தீண்டத் தகாதவர்களுக்குச் செய்ததென்ன? என்ற நூலின் பக்.205-206)

இதற்கு விளக்கமும் வேண்டுமோ!

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எடுத்துக்காட்டிய இந்தக் கருத்துக்கும், தகவலுக்கும் பிறகு இணையதளத்தில் விளையாடும் நமது அருமைத் தோழர்கள் தெளிவு பெறுவார்களாக!

இந்து மதக் கொடுமை என்ற தளையிலிருந்து பெண்களை விடுதலை பெறச் செய்யத்தான் அன்று சட்ட அமைச்சராகவிருந்த டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்துத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார். அது நிறைவேற் றப்பட வாய்ப்பு இல்லை என்ற நிலையில் அமைச்சர் பதவியைத் தலையைச்சுற்றித் தூக்கி எறிந்தார்.

இந்தப் பின்புலத்தைப் புரிந்து கொண்ட எவருக்கும் அவர் பிறந்த நாளில் அடிமைத்தளையாம் தாலியை அகற்றுவதன் அவசியமும், பெரு மையும் அருமையாகப் புரியும்.

ஒரு புரட்சியாளர் பிறந்த நாளில் இது போன்ற புரட்சிகரத்தை அரங்கேற்ற வேண்டுமே தவிர - புளியோதரை செய்வது எப்படி? பொரி உருண்டை செய்வது எப்படி? என்பதையா கற்றுத் தர முடியும்?

சிந்திப்பீர்!

இந்த செயல் வெற்றி பெற வீங்கு தோள் கொண்டு எழுவீர்! எழுவீர்!!

- கருஞ்சட்டை

குறிப்பு: பெண்ணடிமைச் சின்னமாம் தாலியை அகற்றும் நிகழ்ச்சிகள் தாலி அறுக்கும் போராட்டம் என்று கொச்சைப்படுத்தும் சிறுமதிக் கூட்டத்திடம் எச்சரிக்கை யாக இருங்கள் தோழர்களே!!

Read more: http://viduthalai.in/e-paper/98721.html#ixzz3VgIUc8ug

தமிழ் ஓவியா said...

மதம்படுத்தும்பாட்டைப் பாரீர்!

புனித(?) நதியில் மூழ்கி 10 இந்துப் பக்தர்கள் பலி!

டாக்கா, மார்ச் 28-_ வங்காளதேசம் முஸ்லிம் நாடாக இருந்தாலும், அதன் 16 கோடி மக்களில் 10 சதவீதம் பேர் இந் துக்கள் ஆவார்கள். அங்கு தலைநகர் டாக்காவில் இருந்து 25 கி.மீ. தெற்கே பழைய பிரம்மபுத்ரா நதிக்கரையில் லங்கல்பந்த் என்ற இந்து புனித தலம் உள்ளது.

அங்கு ஆண்டு தோறும் பங்குனி அஷ்ட மியின்போது, வங்காள தேசத்தில் இருந்து மட்டு மல்லாது இந்தியா, நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்தும் ஏறத்தாழ 10 லட்சம் பேர் கூடுவது வழக்கமாம். பிரம்மபுத்ரா வில் இந்த நாளில் நீராடி தெய்வ தரிசனம் செய்வது நல்லது என இந்துக்கள் கருதுகின்றனராம்.

இந்த ஆண்டும் வழக் கம் போல நேற்று அந்த நதியில் புனித நீராடுவ தற்காக லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். அதற்காக 15 முனைகள் நீராடுவதற்கு ஏற்ற இடங் களாக அறிவிக்கப்பட் டிருந்தன. நேற்று காலை 5.45 மணிக்கு நீராடல் தொடங்கியது.

சுமார் 9 மணிக்கு புனித நீராடுவதற்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. அப்போது நதியில் புனித நீராடுவ தற்கு பக்தர்கள் ஒருவருக் கொருவர் முந்திச்செல்ல முற்பட்டபோது நெரிசல் ஏற்பட்டது. பலர் கீழே விழுந்தனர். ஒருவரை ஒருவர் மிதித்து செல்லும் நிலை உருவானது.

இந்த நெரிசலில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரி ழந்தனர். அவர்களில் 7 பேர் பெண்கள். 30 பக்தர் கள் படுகாயம் அடைந் தனர். அவர்கள் உடனடி யாக மீட்கப்பட்டு அரு கில் உள்ள மருத்துவம னைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சம்பவம் குறித்த தக வல் அறிந்ததும் நாராயண் கஞ்ச் காவல்துறை கண் காணிப்பாளர் கண்டகர் மத் உதீன், டி.அய்.ஜி., முகமது சபீக், கூடுதல் டி.அய்.ஜி. பரூக் மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

லட்சக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் அலை மோதிய நிலையில், அவர் களை ஒழுங்குபடுத்தி நீராடுவதற்கு உதவும் வகையில் தேவையான எண்ணிக்கையில் காவல் துறையினரும் தன்னார்வ தொண்டர்களும் பணி அமர்த்தப்படவில்லை என பக்தர்கள் கூறினர். இதனால்தான் நெரிசல் ஏற்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

மாவட்ட நிர்வாக அதிகாரி அனிசுர் ரகுமான் கூறும்போது, இந்த ஆண்டு வங்காளதேச தேசிய தினத்தை முன் னிட்டு விடுமுறை விடப் பட்டிருந்ததால், வழக் கத்தை விட கூட்டம் அதிகமாக கூடியது. அத னால்தான் இந்த அள வுக்கு நிலைமை ஏற்பட்டு விட்டது என கூறினார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆழ்ந்த இரங் கல் தெரிவித்துள்ளார்.

மத விழாவில் மதம் பிடித்த யானையால் பாகன் பலி!

கேரள மாநிலம் திருச் சூரில் உள்ளது கையப்ப மங்களம். இங் குள்ள சலியன்கோவில் என்ற இடத்தில் சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் திரு விழா நடைபெற்று வருகிறது.

நேற்று மாலை பட்டங்கட்டிய யானைகள் ஊர்வலமாக சென்றன. இதில் 1000க்கும் மேற் பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். விஜயகிருஷ் ணன் என்ற யானையும் பட்டம் கட்டி ஊர்வல மாக வந்தது. இதன் பாகனாக சிவசங்கரன் (வயது 51) இருந்தார்.

ஊர்வலம் கோவில் அருகே வந்தபோது விஜய கிருஷ்ணன் யானைக்கு மதம் பிடித்தது. பக்தர் களை யானை ஆவேசமாக தாக்க முயன்றது. பக்தர் கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பக்தர்களை காப்பாற்ற சிவசங்கரன் யானையின் அருகே சென்று அடக்க முயன்றார். ஆவேசத்தில் இருந்த யானை பாகன் சிவசங்கரனை தந்தத்தால் குத்தி எறிந்தது. இருந்தா லும் பாகன் மீண்டும் யானையை அடக்க முயன் றார். இதில் ஆத்திர மடைந்த யானை சிவசங் கரனை துதிக்கையால் பிடித்து சுழற்றி கீழே போட்டது. பின்னர் காலால் மிதித்தது. இதில் பாகன் சிவசங்கரனுக்கு நெஞ்சு பிளந்தது.

ரத்தவெள்ளத்தில் சிவசங்கரன் உயிருக்கு போராடினார். அங்கிருந்த கையப்பமங்களம் காவல் துறையினர் சிவசங்கரனை ஜீப்பில் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென் றனர். அங்கு போதிய மருத் துவ வசதி இல்லாததால் திருச்சூரில் உள்ள தனி யார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பல னின்றி சிவசங்கரன் பரிதாபமாக இறந்தார்.

யானைக்கு மதம் பிடித்தது குறித்து திருச்சூர் கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. அவர்கள் மயக்க ஊசி செலுத்தி யானை விஜயகிருஷ்ணனை சங் கிலியால் கட்டிப்போட்ட னர். இதுகுறித்து கையப் பமங்களம் காவல்துறை யில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

சேர்த்திடுக!

செய்தி: பால் விலை உயர் வால் ஏழைகள் பாதிக்கப் படவில்லை.
- முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

சிந்தனை: இரு முறை மின் கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்படவில்லை; போக்குவரத்துக் கட்டண உயர்வால் பொது மக்கள் பாதிக்கப்படவில்லை என் பனவற்றையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாமே!

Read more: http://viduthalai.in/e-paper/98712.html#ixzz3VgJM1HoX

தமிழ் ஓவியா said...

மனிதத் தன்மை


மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு, அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்கவேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போது தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.
(விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/98697.html#ixzz3VgJpWi6g

தமிழ் ஓவியா said...

தாஜ்மகால் யாருக்குச் சொந்தம்? இந்துத்துவாவாதிகளுக்கு மூக்குடைப்பு!


லக்னோ, மார்ச் 28- உலகின் அதிசயங்களில் ஒன்றான தாஜ்ம ஹாலை முன்னாள் சிவன் கோயில் என்று உரிமை கோரிய மனுவினை ஆக்ரா நகர உரிமையியல் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.

ஆக்ரா உரிமையியல் நீதிமன்றத் தில் ஹரி ஷங்கர் ஜெயின் மற்றும் மேலும் அய்வர், நேற்று மனு ஒன் றினை தாக்கல் செய்திருந்தனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், யமுனா நதிக்கரையில் அமைந்துள்ள ஆக்ரா நகரில் கம்பீரமாக வீற்றிருக்கும் தாஜ்மஹால் உருவாவதற்கு முன்ன தாக அந்த இடத்தில் அக்ரேஷ்வர் மகாதேவ் என்னும் கடவுளுக்கு அர்ப் பணிக்கப்பட்ட பழைமையான சிவன் கோயில் இருந்தது. எனவே, தற்போது தாஜ்மஹால் உள்ள இடத்தில் முஸ்லிம்கள் வழிபாடு செய்ய தடை விதித்து, தாஜ்மஹாலை இந்துக்களி டம் ஒப்படைக்க வேண்டும். இந்த வாதத்துக்கு தேவையான வலுவான ஆதாரங்கள் உள்ளன என அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவினை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி தள்ளுபடி செய்து விட்டதாக தெரிவித்த மனுதாரரின் வழக்கறிஞர், இந்த கோரிக்கை தொடர் பாக அலகாபாத் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக கூறினார்.

Read more: http://viduthalai.in/page-2/98705.html#ixzz3VgKAxQfq

தமிழ் ஓவியா said...

சர்ச்சைக்குரிய 66-ஏ சட்டப்பிரிவு
முன்னாள் அமைச்சர் பரத்வாஜ் கருத்துக்கு ஆ.இராசா பதில்

சென்னை, மார்ச் 28_ சர்ச் சைக்குரிய 66-ஏ சட்டப் பிரிவை தொடங்கியது நானா? என முன்னாள் அமைச்சர் பரத்வாஜ் கருத்துக்கு ஆ.இராசா பதில் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

சமூக வலைத் தளங் களில் கருத்து வெளியிடுகிற சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் 66-ஏ பிரிவு அமைந்தது என்று கூறி, உச்சநீதிமன்றம் அந்தச் சட்டப் பிரிவை ரத்து செய்து கடந்த 24- ஆம் தேதி தீர்ப்பு ஒன்றினை வெளியிட்டது.

அந்தத் தீர்ப்பினை அனைத்துத் தரப்பினரும் பெரிதும் வரவேற்கின்ற நேரத்தில், உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ள அந்த சர்ச்சைக்குரிய சட்டப் பிரி வுக்கான கருத்தை உருவாக் கியவனே நான் தான் என் பதைப் போல, முன்னாள் சட்ட அமைச்சர் பரத்வாஜ் பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்திருப்பது, எனக்குப் பெரிதும் ஆச்சரியத்தையும், அதே நேரத்தில் வருத்தத் தையும் தருகிறது.

ஒரு சட்ட முன்வரைவு ஒரு அமைச்சகத்தால் ஆய் வுக்கு பிறகு தயாரிக்கப் பட்டு, அது சட்ட அமைச் சகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பப்படும். சட்ட அமைச்சகம், அதனை விரி வாக எல்லா கோணங்களி லும் ஆய்வு செய்த பிறகே ஒப்புதல் தரும். அதற்கு பிறகு தான் அந்த சட்ட முன்வரைவு மத்திய அமைச் சரவையின் பரிசீலனைக்கு வைக்கப்படும். அமைச்ச ரவை ஒப்புதல் வழங்கிய பிறகு தான் அந்தச் சட்ட முன்வரைவு நாடாளுமன் றத்தில் தாக்கல் செய்யப் படும்.

அப்போது கூட, அந்த சட்டத்தை விவாதத்திற்கு நாடாளுமன்றம் எடுத்துக் கொள்ளலாமா? வேண் டாமா? என்பதை முடிவு செய்ய போதுமான விதி களின் பாதுகாப்பும், அவைத் தலைவரின் ஒப்புத லும் அவசியம் தேவையா கும். அந்த நிலையில் கூட, அந்த சட்ட வரைவுக்கு எதிர்ப்பு இருக்குமானால், அந்த சட்ட முன் வரைவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்ப வழி வகை உள்ளது.

இப்படி எல்லாம் படிப்படியாக அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் உட் படுத்தப்பட்ட பிறகு தான் இந்தச் சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேறியது.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவிலே கூட, இந் தச் சட்டம் தவறாக கொண்டுவரப்பட்டது என்று எந்த உள்நோக்கத் தையும் என்மீதோ, அல் லது நான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் மீதோ குற் றமாக எதுவும் கூறாத போது, சட்ட அமைச்சராக இருந்த பரத்வாஜ் சட்டம் நிறைவேற ஒரு காரணமாக இருந்துவிட்டு, இப்போது எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லாத நிலையில் என்மீது பழி சுமத்துவதைப் போல ஒரு கருத்தினை வெளியிட் டிருப்பது, அவர் வகித்த பதவிக்கு உகந்ததல்ல.

இதுபோன்ற சட்டங் கள் உருவாகும்போது, அது ஒட்டு மொத்த அமைச்ச ரவையின் முடிவாகத்தான் கருதப்பட வேண்டுமே தவிர, தனிப்பட்ட ஒருவன் மீது பழி சொல்வது ஜன நாயக நெறிமுறைகளுக்கு ஏற்றதல்ல.

இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-4/98684.html#ixzz3VgLRet2N

தமிழ் ஓவியா said...

வரவேற்கத்தக்க தீர்ப்பு
புகார்களைப் பதிவு செய்யாத காவல்துறையினர் மீது நடவடிக்கை: டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, மார்ச் 28_ பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்ய மறுக்கும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தர விட்டது.

மதுரையைச் சேர்ந்த ஜி.திருமுருகன் உள்ளிட்ட 69 பேர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம் இவ்வாறு உத்தரவிட்டார். காவல் நிலையங்களில் தாங்கள் அளித்த புகார் கள் மீது காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தர விட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந் தனர்.

இம்மனுக்களை விசா ரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு: புகார்களில் கூறப்படும் குற்றச்சாட்டு நடவடிக்கை எடுக்கத் தகுந்ததாக இருந்தால் காவல்துறை யினர் உடனடியாக வழக் குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என பலமுறை நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

இருப்பினும் காவல்துறையினர் தங்கள் விருப்பம் போல் நடந்து கொள்வது கவலையளிக் கிறது. புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யாதது புகார்தாருக்கும் வழக்கு விசாரணையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

உண்மைகளைத் திரித்து வழக்குப்பதிவு செய்வது, சாதாரண குற்றங்களை கடுமையான குற்றங்களாகவும், கடுமை யான குற்றங்களை சாதா ரண குற்றங்களாகவும் மாற்றுவது போன்ற தவ றுகளில் காவல்துறையி னர் ஈடுபடுவதாகத் தெரி கிறது. இந்திய அளவில் காவல்துறையிடம் அளிக் கப்படும் புகார்களில் பாதி யளவு பதிவு செய்யப்படு வதில்லை என புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

எனவே கீழ்க்கண்ட பரிந்துரைகளை காவல் துறைக்கு அளிக்கிறோம். புகாரில் கூறப்படும் குற் றம் வெளிப்படையாகப் புலனாகும் பட்சத்தில் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு தெரியாத போது, விசாரணை நடத்தி சம்பவம் நடந்துள் ளதா எனக் கண்டறிய வேண்டும்.

முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையென் றால் வழக்கை முடிக்க வேண்டும். வழக்கு முடிக் கப்பட்டது குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் புகார்தாரரிடம் ஒரு வார காலத்தில் தெரியப்படுத்த வேண்டும்.

இந்த கடமையில் இருந்து தவறும் காவல் துறையினர் மீது நட வடிக்கை எடுக்க வேண் டும் என உத்தரவில் குறிப் பிடப்பட்டுள்ளது. மேலும் மனுக்கள் மீதான விசா ரணை முடித்து வைக்கப் பட்டது.

நீதிபதி தனது உத் தரவில், குடும்பத்தகராறு, வணிக ரீதியான குற்றங் கள், மருத்துவ சிகிச்சை யில் கவனக்குறைவு, ஊழல், காலதாமதமாக அளிக் கப்படும் புகார் ஆகியவற் றில் முதற்கட்ட விசா ரணை நடத்தப்பட வேண் டும். விசாரணையை 7 நாள்களில் முடிக்க வேண் டும். விசாரணையில் கால தாமதம் ஏற்பட்டால் அதுகுறித்து டைரியில் பதிவு செய்ய வேண்டும். புகார்கள் அனைத்தையும் பொது டைரி, நிலைய டைரி, தினசரி டைரி ஆகியவற்றில் எழுத வேண்டும்.

இதுகுறித்து காவல் துறையினருக்கு விழிப் புணர்வு பயிற்சி அளிக்க வேண்டும். புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்வதில் தவறிழைக்கும் காவல் துறையினரைக் கண் காணிக்க குழு அமைக்க வேண்டும்.

தவறு கண்டுபிடிக்கப் பட்டால் அவர்கள் மீது நிர்வாக ரீதியாக நட வடிக்கை எடுக்க வேண் டும் என உத்தரவில் குறிப் பிடப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-4/98690.html#ixzz3VgLpQB8n

தமிழ் ஓவியா said...

கேள்வியும் பதிலும்

- சித்திரபுத்திரன் -

கேள்வி:- பெண்களுக்குப் புருஷர்கள் என்றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்.

பதில்:- கற்பு என்கின்ற வார்த்தையும், விபசார தோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படு கின்றதோ அன்றுதான் பெண்கள் முழு விடுதலையடைய முடியும்.

இன்று பெண்களிடம் புருஷர்கள் முழு விடுதலையும் பெற்றிருப்பதற்குக் காரணம் ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபசார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்துவிட்டதாலேயே சட்டப்படி முழுவிடுதலையும் பெற்று இருக்கிறார்கள்.

ஆதலால் பெண்கள் விடுதலை பெற வேண்டுமானால் ஆண்களைப் போல் நடக்க வேண்டும். மற்றபடி அப்படிக்கில்லாமல் புல் என்றாலும் புருஷன், கல் என்றாலும் கணவன் என்றோ, ஆண்கள் தங்கப் பாத்திரம் அதை யார் தொட்டாலும் கழுவக்கூட வேண்டியதில்லை. துடைத்துவிட்டால் போதும்; பெண்கள் மண்பாத்திரம் வேறுயாராவது தொட்டால் கழுவினால்கூட தீட்டுப் போகாது.

அதை உடைத்து குப்பைத்தொட்டியில் எறிந்தாகவேண்டும் என்கின்ற முறை இருக்கின்றவரை பெண்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ கிடையாது. ஆதலால் பெண்களும் தங்களை மண்சட்டி என்று எண்ணாமல் தாங்கள் தங்கப்பாத்திரம் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-4/98716.html#ixzz3VgLzS3qe

தமிழ் ஓவியா said...

குடிஅரசுக்குப் பாணம்

குடிஅரசு பத்திரிகைக்கு இந்திய அரசாங்க அவசர சட்டப்படி பாணம் போட்டாய் விட்டது. அதாவது நவம்பர் மாதம் 20ஆம் தேதிக்குள் தோழர் எஸ்.ஆர்.கண்ணம்மாள் உண்மை விளக்கம் அச்சுக்கூட சொந்தக்காரர் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும், குடி அரசு பத்திரிகையின் பிரசுரகர்த்தாவாகவும், வெளியிடுவோராகவும்,

இருக் கின்றார் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும் ஆக 2000 ரூபாய் கோயமுத்தூர் ஜில்லா மேஜிஸ்டிரேட்டிடம் ஜாமீன் கட்டவேண்டுமென்று நோட்டீஸ் சார்வு செய்யப் பட்டாய்விட்டது. இதைப்பற்றி நாம் வருத்தமடையவில்லை. கவர்ன்மெண்டார் மீதும் நிஷ்டூரப்படவுமில்லை. இதுவரையில் இப்படிச் செய்யாமல் விட்டு வைத் திருந்ததற்கு நன்றி செலுத்தவும், மகிழ்ச்சியடையவுமே கட்டுப்பட்டிருக்கிறோம்.

முதலாளிவர்க்க ஆட்சியாகிய இன்றைய அரசாங் கத்தின் சட்டப்படி குடிஅரசு ஆரம்பித்தகாலம் முதல் இந்த நிமிஷம்வரை குடிஅரசின் ஒவ்வொரு இதழிலும், ஒவ்வொருவாக்கியத்திலும் கண்டவிஷயங்கள் குடிஅரசைக் கொல்லத்தக்க பாணம்விடக்கூடத் தகுதியுடையவைகளே என்பதில் நமக்குச் சிறிதும் அய்யமில்லை. ஆதலால் இந்த அரசாங்கம் இதுவரை விட்டு வைத்தது அதிசய மேயாகும்.

குடிஅரசு தோன்றி இந்த 8 1/2 வருஷகாலமாக நாளுக்கு நாள் முற்போக்கடைந்து பணக்கார ஆதிக்க ஆட்சியை ஒழித்து சரீரத்தால் கஷ்டப்படும் ஏழை மக்கள் ஆட்சியை உண்டாக்கவேண்டும் என்கின்ற கவலைகொண்டிருக்கிறது என்பதிலும் இக்காரியம் கைகூடுவதற்கு பார்ப்பனியம், புரோகிதம், பாதிரித்தன்மை முதலியவைகளோடு இவற்றிற்கு ஆதிக்கம் கொடுத்துவரும் எல்லா மதங்களும் ஒழிய வேண்டும் என்பதிலும் கவலையுடன் உழைத்துவந்துள்ளது என்பதில் சிறிதும் ஆட்சேபணையில்லை.

இதற்காக இக்கூட்டங்களின் யோக்கியதைகளைக் கண்ணாடி போல் வெளிப் படுத்தும் தொண்டை பிரதான மாய்க் கருதி அதைச் செய்து வந்திருக்கிறது என்பதையும் நாம் மறைக்கவில்லை. இனியும் அதைத்தான் முதலில் செய்யக்காத்திருக்கிறோம் என்பதையும், தைரியமாய் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் தொண்டுகள் செய்ய இடமில்லையானால் குடிஅரசு பத்திரிகை இருக்க வேண்டிய அவசியமுமில்லை.

சிறிதுகாலத்துக்கு முன் நாம் தெரிவித்துக் கொண்டபடி, இனி நம்மால் நமது கடமையைச் செய்ய முடியாதென்று தெரிந்தால் நாம் இருப்பதைவிட இறப்பதுமேல் என்பது போல் குடிஅரசு தன் கடமையை ஆற்ற முடிய வில்லை யானால் அது எதற்காக இருக்க வேண்டும்? ஆதலால் அது மறைந்துபோக நேரிட்டாலும் ஆசிரி யன் என்கின்ற முறையில் நமக்கு கவலையில்லை.

ஆனால் பதிப்பாளர் என்கின்ற முறையிலும், பிரசுர கர்த்தா என்கின்ற முறையிலும் அதன் அத்தியந்த நண்பர்கள் என்கின்ற முறையிலும் சிலருக்குக் குடிஅரசு மறைவதில் அதிகக் கவலையி ருந்து வருகின்றதாக அறிகிறோம். ஜாமீன் தொகை கட்டவும் முயற்சிக்கிறார்கள். விஷயம் எப்படி முடியும் என்று முடிவுகட்ட முடியவில்லை. நமது உடல் நிலை இந்த 5, 6 மாதமாய் அதிகமாய் சீர்கெட்டு விட்டது.

மயக்கமும், மார்வலியும் அதிகம். கால்களில் நீர்ஏறி வீக்கம் கண்டிருக்கிறது. காதுகளும் சரியாய்க் கேட்பதில்லை. ஆதலால் எப்படி ஓய்வெடுப்பது என்று எண்ணியதுடன் இனி உயிர் வாழ்வதும் உலகுக்கு பாரம் என்றே எண்ணி னோம். இந்த நிலையில் குடிஅரசு நின்றுபோக ஏற்பட்டால் தோழர் நாகம்மாள் மறைவு ஏற்பட்டது போலவே மற்றொரு விதத்தில் நமக்கு நன்மை என்றே கொள்ளவேண்டியதாகும். ஆனால் என்ன நடக்கின் றனவோ பார்ப்போம்.

நிற்க இதன் பயனாய் குடி அரசின் கொள்கைகள் மறைந்து விடுமோ என்றாவது, அது இவ்வளவு நாள் செய்துவந்த வேலைகள் கெட்டுப்போகுமோ என்றாவதுயாரும் பயப்பட வேண்டியதில்லை. நமது கொள்கைகள் எங்கும் வேரூன்றி விட்டன. பிரச்சாரம் என்கின்ற கொடி எங்கும் பரவிவிட்டது.

குடி அரசோ சுயமரியாதைக்காரரோதான் கொள்கைகளைப் பரப்ப இருக்கிறார்கள் என்பதாக இனி கருதவேண்டியதில்லை. குடிஅரசும் சு.ம.காரரும் சொன்னதையே நாமும் திருப்பிச் சொல்லவேண்டிய காலம் வந்துவிட்டதே; என்று வெட்கப்பட்டுக்கொண்டு வேறு போர்வைக்குள் இருந்து வேறு பாஷையில் குடி அரசுக்கொள்கையைச் சொல்லவும், பிரச்சாரம் செய்யவும், வெகு தொண்டர்களும் தலைவர்களும் இந்தியாவெங்கும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆதலால் அவர்களுக்கும் இதுசமயம் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தது போலவும் ஆகும். மற்ற விவரங்கள் பல தோழர்களைக் கலந்தபிறகு வெளியாக்கப்படும். ஆதலால் கோவை ஜில்லா சுயமரியாதை (ஈரோடு) மகாநாட்டிற்கு குடிஅரசு அபிமானத் தோழர்கள் எல்லோரும் அவசியம் விஜயஞ் செய்து இது விஷயமாய் ஒரு முடிவு கட்டும் விஷயத்தில் கலந்து கொள்ள வேண்டுமாக பிரத்தியேகமாய் வேண்டிக்கொள்ளுகிறோம்.

குடிஅரசு - தலையங்கம் - 12.11.1933

Read more: http://viduthalai.in/page-4/98720.html#ixzz3VgMATHjv

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

ஜாதி என்பது வடமொழி. இதற்கு ஏற்ற சொல் தமிழில் இல்லை. எனவே, ஜாதி என்பது தமிழரிடை முன்பு இருந்த தில்லை. தமிழர்களுக்குள் ஜாதி என்பது இருந்து இருக்கு மானால் அதற்குத் தமிழில் ஒரு சொல் இருந்து இருக்க வேண் டுமே? இல்லையே! எப்படி காபி என்பது அன்னிய நாட்டுப் பொருளானதால் அதற்குத் தமிழில் சொல் இல்லையோ அதுபோல் ஜாதி என்பதற்கும் சொல் இல்லை.

ஆரிய எதிர்ப்புணர்ச்சியும் அவர்கள் கலாச்சாரப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற உணர்வும் இந்தியாவிலேயே தமிழன் என்கிறவனுக்குத் தான். தமிழ்நாட்டில்தான் இருந்திருக்கிறது... நம்முடைய கலை, சிற்பம் என்பது நாம் எவ்வளவு நாகரிகம், பண்பாடு ஆகியவைகளைப் பெற்று அந்தக் காலத்திலேயே நாம் எப்படி உயர்ந்திருக்கிறோம் என்பதைக் காட்டும். இந்தியாவின் மற்றெந்தப் பகுதியிலும் இப்படிப்பட்ட உயர்ந்த அறிவும் சக்தியும் அந்தக் காலத்தில் இருந்ததாகவே தெரியவில்லை.


Read more: http://viduthalai.in/page-4/98720.html#ixzz3VgNEsEt1

தமிழ் ஓவியா said...

புரட்சி

குடிஅரசை ஒழிக்கச் செய்த முயற்சியால் புரட்சி தோன்ற வேண்டியதாயிற்று. உண்மையிலேயே பாமர மக்களின் அதாவது பெரும்பான்மையான மக்களின் ஆட்சியாகிய குடிஅரசுக்கு உலகில் இடமில்லையானால் கண்டிப்பாகப் புரட்சி தோன்றியே தான் ஆகவேண்டும்.

அந்த அய்தீகப்படியே புரட்சி தோன்றி இருப்பதால் புரட்சியைப் புரட்சியில் பற்றுள்ள மக்கள் யாவரும் வரவேற்பார்கள் என்பதில் நமக்குச் சிறிதும் அய்யமில்லை. நமது முதலாளி வர்க்க ஆட்சியானது தனது காவலாளிகளாகிய பாதிரி வர்க்கத்திற்கு அடிமையாக இருக்கவேண்டியிருப்பதால் குடிஅரசை அதன் முதுகுப் புறத்தில் குத்திவிட்டது.

இந்தக் குத்தானது பாதிரி வர்க்கத்தை ஒழித்தால்தான் முதலாளி வர்க்கத்தை அழிக்க முடியும் என்ற ஞானபோதத்தை உறுதிப்படுத்திவிட்டது.

ஆதலால் நமது புரட்சியானது குடிஅரசைக் காட்டிலும் பதின் மடங்கு அதிகமாய் பாதிரி வர்க்கத்தை அதாவது மதப் பிரச்சார வர்க்கத்தை அடியோடு அழிப்பதையே கங்கணமாய்க் கொண்டு வெளிவர வேண்டியதாகிவிட்டது. இதன் காரணமாய்ப் புரட்சி எந்த நிமிஷத்தில் குத்துப் பட்டாலும் படலாம். எந்த விநாடியில் கொலையுண்டாலும் உண்டாகலாம்.

ஆனால் சுயமரியாதைப் புரட்சியானது இனி ஒரு நாளும் மறையாது. அது வெற்றி பெரும்வரை ஒரு கணமும் ஒய்வு கொள்ளாது என்பது மாத்திரம் உறுதி. காங்கிரஸ் காரியதரிசியான தோழர் ஜவஹர்லால் அவர்கள், தான் இதுவரை மத விஷயமாய் புரட்சி செய்யாமல் ஏமாந்து விட்டதைப்பற்றி மனமாறவருந்தியும், மதவிஷயத்தில் தான் அலட்சியமாய் இருந்த ஒவ்வொரு நிமிஷமும் முதலாளி வர்க்கத்தின் ஆதிக்கம் பலப்பட்டு வருவதற்கு இடம் கொடுத்தாகி விட்டது என்று எடுத்துச் சொல்லியும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டார்.

மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி. மதமே மனிதனுடைய சுதந்திரத்திற்கு விரோதி. மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி. மதமே மனித சமுக சமதர்மத்துக்கு விரோதி. மதமே கொடுங் கோலாட்சிக்கு உற்ற துணை.

மதமே முதலாளி வர்க்கத்துக்கு காவல். மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு. மதமே உழைப் பவனைத் தரித்திரத்தில் ஆழ்த்தி உழைக்காத வனை உச்சத்தில் வைப்பதற்கு உதவி என்கின்ற முடிவின் பேரிலேயே புரட்சித் தோன்றியிருக்கிறது என்பதில் யாருக்கும் அய்யம் வேண்டாம்.

ஆதலால் மனிதசமூகத்தில் சமதர்ம வாழ்க்கையை ஏற்படுத்த மதங்களை முதலில் அழித்தாக வேண்டும் என்று காங்கிரஸ் காரியதரிசி தோழர் ஜவஹர்லால் அவர்கள் இப்போதாவது கண்டு பிடித்ததற்கோ அல்லது தைரியமாய் வெளியிட்டதற்கோ நாம் உண்மையிலேயே மகிழ்ச்சியடை கின்றோம்.

சோம் பேறித்தனமாய் வாழ நினைத்து சுயமரியாதை இயக்க நிழலில் திரிந்தவர் களுடையவும், பட்டம், பதவி, அதிகாரம், செல்வம் ஆகியவைகள் அடையக்கருதி சுய மரியாதை இயக்கப்போர்வை போட்டுக் கொண்டி ருந்தவர் களுடையவும் ஆதரவு நம் புரட்சிக்கு இனி சிறிதும் எதிர்பார்க்க முடியாது என்பதை நன்றாய் உணர்ந்தே புரட்சி தோன்றி யிருக்கிறது.

ஆதலால் பாடுபட்டு உழைத்து ஊரானுக்குப் போட்டு விட்டு பட்டினியாயும் சமுக வாழ்வில் தாழ்மையாயும் வாழும் மக்களின் ஆதரவையே புரட்சி எதிர்பார்த்து நிற்கிறது. வெள்ளை முதலாளிகளை ஒழித்துக் கருப்பு முதலாளிகளைக் காக்கும் வேலைக்கு இன்று புரட்சி வெளிவரவில்லை. அல்லது வெள்ளை ஆட்சியை ஒழித்துக் கருப்பு ஆட்சியை ஏற்படுத்த புரட்சி தோன்றவில்லை.

அதுபோலவே இந்து மதத்தை ஒழித்து, இஸ்லாம், கிறிஸ்து மதத்தைப் பரப்ப புரட்சி தோன்றியதல்ல. அதுபோலவே, இஸ்லாம், கிறிஸ்து மதத்தை ஒழித்து இந்து மதத்தை நிலை நிறுத்த புரட்சி வெளிவரவில்லை. சகல முதலாளி வர்க்கமும், சர்வ சமயங்களும் அடியோடு அழிந்து,

மக்கள் யாவரும் சுய மரியாதையுடன் ஆண் பெண் அடங்கலும் சர்வ சமத்துவ மாய் வாழச் செய்ய வேண்டும் என்பதற்காக புரட்சி செய்யவே புரட்சி தோன்றியி ருக்கிறது. அது உயிருள்ள வரையும் அதன் கடமையைச் செய்து கொண்டு இருக்கும். ஆதலால் புரட்சியில், ஆர்வமுள்ள மக்கள் புரட்சியை ஆதரிக்க வேண்டுகிறோம்.

புரட்சி - தலையங்கம் - 26.11.1933

Read more: http://viduthalai.in/page-4/98722.html#ixzz3VgNP3VNI

தமிழ் ஓவியா said...

தமிழர் சமுதாயம் 100-க்கு 100 மக்கள் படித்தவர்களாக வேண்டும்; ஆக்கப்பட வேண்டும். பத்தாண்டு களிலாவது தமிழன் சமுதாயம் ஆணும் பெண்ணும் தன் ஜனத் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப அரசியல், தொழிலியல் முதலிய சகல துறைகளிலும் விகிதாச்சாரம் பதவி - இடம்பெற வேண்டும். தமிழனைப் பற்றிய வேறு எந்தக் காரியத்தைப் பற்றியும் சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகம் பார்த்துக் கொள்ளும்.

Read more: http://viduthalai.in/page-4/98716.html#ixzz3VgNmsOHI

தமிழ் ஓவியா said...

ரவி சாஸ்திரி


ரவி சாஸ்திரி என் பவர் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் விளையாட்டுக்காரர். இப்பொழுது கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலை வராகவும் இருக்கிறார்.

அந்த ரவிசாஸ்திரிமீது மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தூர் பஜ் ரங்தள் செயலாளர் மனோஜ்பஸ்பானி இந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

எதற்காக அந்த வழக்கு? தென்னாப்பிரிக் காவில் ஜோகன்ஸ்பர்க் நகரில் இந்தியாவுக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் விளையாட் டின்போது ரவிசாஸ்திரி வருணனையாளராகச் செயல்பட்டார். அப்பொ ழுது நான் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன் என்றாலும் என்னால் மாட்டு இறைச்சி சாப்பிடா மல் இருக்க முடியாது என்று கூறிவிட்டாராம். அதனால்தான் அவர்மீது இந்த வழக்காம்.

வழக்கைத் தொடுத்த பஜ்ரங்தள் பேர்வழி என்ன கூறினார்? ரவி சாஸ்திரி மாட்டு இறைச்சி சாப்பிட்டதாக தெரிவித் துள்ளது - இந்துக்கள் மனதைப் புண்படுத்துவ தாக உள்ளது. அவர் சுய முழு நினைவோடு கூறி இருக்கிறார். இந்தியத் தண்டனைச் சட்டம் 295ஏ பிரிவின்கீழ் ரவிசாஸ்திரி யின் கருத்து மதத்தையும், மதம் சார்பான நம்பிக் கையையும் புண்படுத்து கிறது. எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி யுள்ளார். இதன் அடிப் படையில் வழக்கு ஒன் றையும் தொடுத்தார் (மாலை மலர் 24.12.2006).

சங்பரிவார்க் கூட்டம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்; பார்ப்பனர்களாலேகூட மாட்டுக்கறி சாப்பிடாமல் இருக்க முடியவில்லை. விளையாட்டு வீரர்களுக் குத் தேவையான சத்து மாட்டுக்கறியில் மிகவும் அதிகமாகவே இருக் கிறது.

பிரபல சர்.சி.வி. ராம சாமி அய்யருக்கு மாட் டின் நாக்குதான் அதிகம் பிடிக்கும் என்பதை இந் தக் கூட்டம் அறியுமா?

பிஜேபி ஆளும் கோவா மாநிலத்தையே அவர்களால் கட்டுப் படுத்த முடியவில்லை; நாங்கள் மாட்டிறைச் சியைத் தடை செய்ய மாட்டோம் என்று கோவா முதல்வர் லட்சுமி காந்த் பர்சேகர் பளார் என்று கன்னத்தில் அறைந்ததுபோல் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தப் பிரச்சினை யில் பிஜேபியும் அதன் சங்பரிவார்களும் அவமா னப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/98750.html#ixzz3Vly6YxpU

தமிழ் ஓவியா said...

மதம் தேவை இல்லை 110 ஆண்டு கால கிறித்துவ சர்ச் ஹோட்டல் ஆகிறது


நியூயார்க், மார்ச்.29_ நியூயார்ககில் 1905 ஆம் ஆண்டில் கட்டப்பட்டு கிறித்தவர்களின் நினைவுச் சின்னமாக விளங்கிவரும் சர்ச் தற்போது விடுதியாக மாற்றப்படுகிறது. மேற்கு 36ஆவது தெரு, எட்டு மற்றும் ஒன்பதாவது நிழற்சாலைகளைப் பகுதியில் உள்ள அந்த சர்சை இடித்துவிட்டு, மெக் சாம் என்கிற விடுதிக் குழுமத்தின் சார்பில் 20 அடுக்குகள், 406 அறைகள் கொண்டுள்ள புதிய விடு தியை அமைக்க உள்ளது. பிராட்டஸ்டன்ட் கிறித்த வர்கள் வழிபட்டுவந்த சர்ச் பகுதிக்குள் 1975 ஆம் ஆண்டுவரையிலும் சர்ச், சமுதாயக் கூடம் மற்றும் அரங்குகள் செயல்பட்டு வந்துள்ளன. மன நல மருத் துவத்துறை பட்ட மேற் படிப்புக்கான பகுதி இயங்கிவந்தது. 50.8 மில்லியன் டாலர் மதிப்பில் கடந்த ஆண்டில் அதை மாற்றுவதற்காக விலைக்கு வாங்கப்பட்டது. ஆனா லும், அதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டு வதற்கான அனுமதி கிடப் பில் இருந்தது. ஆய்வா ளர்கள் குறிப்பிடும்போது, நூற்றாண்டு கால பழமை வாய்ந்த சர்ச் முடிவுக்கு வருகிறது என்று குறிப் பிட்டுள்ளார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/98752.html#ixzz3VlyKVzBD

தமிழ் ஓவியா said...

தஞ்சாவூர், மார்ச் 29_ தஞ்சாவூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வு நூல் வெளியீட்டு விழா 28.3.2015 அன்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலை குழந்தை ஏசு திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது.


கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தமிழர் தலைவர் வாழ்வும், பணியும் நூல் வெளியீட்டு விழாவை தஞ்சையில் முதலாவதாக சிறப்பாக நடத்திய பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களை பாராட்டி உரையாற்றினார்.

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் வ.நேரு தொடக்கவுரையாற்றினார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பெரியார் சிந்தனை மய்ய துணை இயக்குநர் முனைவர் அதிரடி க.அன்பழகன் அறிமுக உரையாற்றினார்.

டாக்டர் இரா.இளங்கோவன் உரை

முதல் பிரதியை பெற்றுக்கொண்ட தஞ்சை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் நரம்பியல் துறைத் தலைவர் டாக்டர் இரா.இளங்கோவன் உரையாற் றினார். அவர் தனது உரையில்:

ஒப்பற்ற சுய சிந்தனை யாளர் தந்தை பெரியார் அவர்களின் கொள்கை வாரிசு ஆசிரியர் வீரமணியின் வாழ்வும், பணியும் நூலினை நம்.சீனிவாசன் மிகவும் அருமையாக கடுமையாக உழைத்து நமக்கு பல தகவல்களை திரட்டித் தந்துள்ளார். அவரை வெகுவாக பாராட்டி பல்வேறு வரலாற்று செய்திகளை எடுத்துக் கூறி உரை யாற்றினார்.

நம்.சீனிவாசன் உரை

நூலாசிரியர் பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்கள் தனது உரையில்: நம்.சீனிவாசனுக்கு பேசத் தெரியாதே அப்படி இருந்தும் ஏன் உங்களை எங்கும் பேச அழைக்கிறார்கள் என்பார்கள் அவர் சீக்கிரம் பேச்சை முடித்து விடுவார்.

அதனால்தான் என்றனர், இங்கே. மேனாள் துணைவேந்தர் அவர்களும் இன்னாள் துணைவேந்தர் அவர்களும் பேச உள்ளார்கள் அவர்கள் பேச்சைக் கேட்போம், தந்தை பெரியாரின் தத்துவவாரிசு தமிழர் தலைவர் வீரமணி அவர்களை ஆய்வு செய்து பட்டம் பெற்றது எனக்கு வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரும் பேறு என குறிப்பட்டார்.

முனைவர் நல்.இராமச்சந்திரன் உரை

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் நல்.இராமச்சந்திரன் நூலாசிரியர் நம்.சீனிவாசன் அவர்களை பாராட்டி உரையாற்றினார். அவர் தனது உரையில்: பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்கள் எளிமையானவர், பண்பானவர், விருந்தோம்பலுக்கு சிறந்தவர்.

கல்லூரிப் பேராசிரியர் தமிழர் தலைவர் வீரமணியின் பால் மிக்க மரியாதையும் அன்பும் கொண்ட அவரது தனது கடுமையான உழைப்பின் பயனாக ஒரு ஆய்வுப் பெட்டகத்தை நமக்கு தந்துள்ளார். அவர்களை வெளிநாட்டுப் பாணியில் அனைவரும் எழுந்து நின்று கையொலி எழுப்பி பாராட்டு செய்ய கேட்டுக் கொண்டார். அனைவரும் எழுந்து நின்று கையொலி எழுப்பி பாராட்டினர்.

முனைவர் ம.இராசேந்திரன் உரை

தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும், பணியும் நூலினை வெளியிட்டு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் ம.இராசேந்திரன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இவர் தனது உரையில்: இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு இவ்வளவு பேர் வந்துள்ளோம் என்றால் தஞ்சை மாவட்டத்துக்காரர் நம்.சீனிவாசன் எழுதியதாலா? இல்லை.

இந்த நூல் யாரைப் பற்றியது? தந்தை பெரியாருக்கு பிறகு இந்த இனத்திற்கு தொண்டாற்றக் கூடிய விடுதலை ஆசிரியர் வீரமணியைப் பற்றியது. அவரின் வாழ்வையும், பணியையும் விளக்கக்கூடியது அதன் காரணமாக நாம் அனைவரும் இங்கு கூடியுள்ளோம்.

தமிழர் தலைவர் அவர்கள் அய்யாவின் அடிச்சுவட்டில் நூலில் தன்னுடைய வாழ்வும் இயக்கப் பணியையும் இணைத்து நமக்கு தந்துள்ளார். பின் ஏன் இந்த நூல், ஒருவர் தன்னைப் பற்றி எழுதும்போது தயக்கம், கூச்சம் ஏற்படும். மற்றவர் எழுதும் பொழுது உள்ளதை உள்ளவாறு எழுத முடியும். அந்த அடிப்படையில் நம்.சீனிவாசன் இடஒதுக்கீடு முதல், பல்வேறு தகவல்களை 5 இயல்களாக நமக்கு தந்துள்ளார்.

இந்த நூல் வெளியீட்டு விழா தஞ்சையில் நடத்துவது குறித்து அனைவரும் பேசினார்கள். தந்தை பெரியார், அன்னை மணியம்மையாருக்கு பிறகு இந்த இயக்கத்தின் முழு பொறுப்பையும் தலைவர் வீரமணி அவர்கள்தான். ஏற்கவேண்டும் என்று தஞ்சையை சேர்ந்த கா.மா.குப்புசாமியிடம் தான் கடிதத்தை தந்துள்ளனர்.

உலகிலேயே இரண்டு நாத்திகர்கள் தந்தை பெரியார் அன்னை மணியம்மையார் பெயரால் பல்கலைக்கழகம் அமைந்துள்ளதும் தஞ்சையில்தான் ஆசிரியர் வீரமணிக்கும் தஞ்சைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே இந்த நூல் வெளியீட்டு விழாவினை தஞ்சையில் நடத்துவது பொருத்த மானதாகும் என்று உரையாற்றினார்.Read more: http://viduthalai.in/page-8/98787.html#ixzz3VlzzpD5z

தமிழ் ஓவியா said...

நாத்திகன்

நாத்திகன் என்று சொன்னால், பகுத்தறிவைக் கொண்டு கடவுள், வேத சாத்திரங்களைப்பற்றி விவாதம் செய்கிறவன் என்று பொருள்.
(விடுதலை, 26.3.1951)

Read more: http://viduthalai.in/page-2/98796.html#ixzz3Vse6PT00

தமிழ் ஓவியா said...

அமெரிக்காவில் சிறுபான்மையினர்

இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று குடியுரிமை பெற்று வாழும் இந்துக்கள், சீக்கியர்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல் மற்றும் அவர்களுக்கு எதிராக விரோதப் பேச்சுக்கள்மீது அமெரிக்காவின் முக்கிய புலனாய்வுக் குழுவான எஃப்.பி.அய் (திஙிமி) கண்காணிக்கத் துவங்கியுள்ளது. 2014 முதல் 2015 வரை தொடர்ந்து அமெரிக்காவில் வாழும் சீக்கியர்களும், இந்துக்களும் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

வழிபாட்டுத்தலங்களின் மீதும் தாக்குதல் அவ்வப்போது நடந்துவருகிறது. கடந்த மாதம் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள இந்துக் கோயில்மீது தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குறிப்பாக இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து பராக் ஒபாமா தலைமையிலான அரசு அமெரிக்காவின் புகழ்வாய்ந்த எஃப்.பி.அய் (திஙிமி) புலனாய்வுக் குழுவிடம் இந்த விசாரணையை ஒப்படைத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து அமெரிக்க சட்டத்துறை நிபுணர்கள் கூறும்போது, அமெரிக்காவின் குடியுரிமை பெற்று இங்கு வசிக்கும் அனைவரும் இந்த நாட்டின் அரசியல் சட்டவிதிகளுக்குட்பட்டு பாதுகாப்பிற்கும், சுதந்திரமாக வாழ்வதற்கும் உரிமை பெற்றவர்கள். சமீபகாலமாக சில மதத்தவர்களின் மீது நடக்கும் தாக்குதல்கள் அரசியலமைப்புச் சட்டவிதிகளை மதிக்காதவர்கள் செய்யும் செயலாகும், இந்த செயலால் சிறுபான்மையினர் அச்சத்துடன் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்கவாழ் சீக்கிய அமைப்பின் செய்தித்தொடர்பாளர் கூறும்போது அரசின் இந்த முடிவு எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. சில மாதங்களாகவே எங்களுக்குப் பாதுகாப்பின்மை போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது உண்மைதான் என்று கூறினார்.

விசாரணையைக் கையிலெடுத்த எஃப்.பி.அய் தரப்பில் கூறப்படுவதாவது, இந்துக்கள் மற்றும் சீக்கியர் களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு என்ன காரணம் என்று முதலில் கண்டறியவேண்டும், இதன் மூலமே தாக் குதல்களை நிறுத்தமுடியும். தாக்குதல்களை நடத்துப வர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறோம். வெளிநாட்டில் சிறுபான்மையராக இருக்கக் கூடியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் உள்ள இந்துத்துவவாதிகள் இந்தப் பிரச்சினை மூலம் ஒன்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் இந்துக்களைத் தவிர மற்றவர்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள்.

இந்தியாவில் இந்துக்களைத் தவிர்த்த மற்ற சிறுபான் மையினரைத் தாக்க ஆரம்பித்தால், அதன் எதிரொலி வேறு நாடுகளில் வாழும் இந்துக்களுக்கு இடையூறும் ஏற்பட வாய்ப்புண்டு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அமெரிக்க அரசு சிறுபான்மையினரை அங்கீகரிக்கிறது; அவர்கள்மீது வன்முறையை ஏவினால் அவர்களைப் பாதுகாக்க முனைகிறது.

இந்தியாவின் நிலை என்ன? இந்தியாவில் சிறுபான்மையினர் என்பதே கிடையாது - இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்களே என்று பி.ஜே.பி.யில் உள்ள முன்னணியினரிலிருந்து சங்பரிவாரங்கள் வரை அரட்டை அடிக்கின்றனர்.

அப்படி சொல்லிக் கொண்டே, ஆளும் பிஜேபி வட்டாரத்தினர் சிறுபான்மை மக்கள்மீது அவதூறு கக்கும் நெருப்புக் கணைகளை வீசுகின்றனர். அடிதடி, கொலை வரை அது நீண்டு கொண்டே போகிறது. சிறுபான்மையினர்தம் வழிபாட்டுத் தலங்களை அடித்து நொறுக்குகின்றனர். வணிக நிறுவனங்களைத் தீக்கிரையாக்கி வருகின்றனர்.

அமெரிக்க அரசின் அணுகுமுறையையும், இந்திய அரசின் அணுகுமுறையையும் ஒப்பிட்டால் இந்தியா வின் அவலம் எத்தகையது என்பது எளிதில் விளங்கி விடும். குஜராத் மாநில முதல் அமைச்சராக இருந்த போது அரசப் பயங்கரவாதத்தைக் கொம்பு சீவி சிறு பான்மை யினர்மீது ஏவிவிட்டு ஆயிரக்கணக்கானோர் பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்டனர்; அந்த முதல் அமைச்சர்தான் இப்பொழுது இந்தியாவின் பிரதமராகி இருக்கிறார்.

காரில் பயணம் செய்யும்போது நாய்க்குட்டி அடி படுவதையும் சிறுபான்மையினர் தாக்கப்படுவதையும் ஒப்பிட்டு பேசியவர் தான் இன்று இந்தியா வின் பிரதமர்; வெளிநாடுகளைப் பார்த்தாவது இந்துத் துவாவாதிகள், ஆட்சியாளர்கள் திருந்துவார்களா?

இந்தியாவில் இருப்பதைவிட வெளிநாடுகளில் சுற்றுவதையே வாடிக்கையாகக் கொண்டு விட்ட பிரதமர் நரேந்திரமோடி சில பாடங்களைக் கற்றுக் கொண்டு திரும்புவது நல்லது!

Read more: http://viduthalai.in/page-2/98797.html#ixzz3VseL4Ehn

தமிழ் ஓவியா said...

பாண்டேயின் கேள்வியும், ஆசிரியரின் அதிரடியும்

- குடந்தை கருணா

தந்தி தொலைக்காட்சியில் கேள்விக்கென்ன பதில் நிகழ்வில், நெறியாளர் ரங்கராஜ் பாண்டே, ஆசிரியரிடம் கேள்வி கேட்ட விதம் பலவித விமர்சனங்களுக்கும், கண் டனங்களுக்கும் ஆளாகியுள்ளது.

ஆனால், ரங்கராஜ் பாண்டே கேள்விகள் ஒன்றும் புதிதல்ல.

தொடர்ந்து சோ முதல் நாம் அன்றாடம் பேருந்துகளிலும், ரயில் பயணத்திலும் பார்ப்பனர்கள் நம்மிடம் கேட்கும் அதே கேள்விகள் தான்.

இந்த கேள்விகளுக்கெல்லாம் பெரியார் காலத்திலிருந்து பதில் சொல்லி, பதில் சொல்லி அலுத்து விட்டது. இருந்தாலும் அதே கேள்வியை இன்றையவரை பாண்டேயை விட்டு கேட்கிறார்கள் என்றால், காரணம் இருக்கிறது தோழர்களே.

பெரியார் எனும் அந்த மானுடத் தத்துவம், அவர்களை இன்றுவரை தூங்கவிடாமல் செய்கிறது தங்களின் ஆளுமையை தகர்த்த, தொடர்ந்து தகர்க்கும் ஒரே ஆயுதமாக, பெரியாரின் தத்துவம் விளங்குகிறதே என்ற ஆத்திரம். அவர்களின் கண்களை உண்மை நிலையிலிருந்து மறைக்கிறது.

அதனால்தான், தாலி அகற்றும் கேள்விக்கு பதில் பெறுவதற்கு முன்பாகவே, சடாரென, பர்தா, இஸ்லாமியர், கிறித்துவர் பக்கம் கேள்வி சாய்கிறது.

திராவிடர் கழகத்தின்பால், சிறுபான்மை மக்கள் கொண்டுள்ள இன உணர்வுரீதியான பிணைப்பை அறுக்க முடியுமா என்ற நப்பாசை;

பெரியாரும், இயக்கமும், எப்போதும் மிகவும் ஒடுக்கப்பட்ட, அழுத்தப்பட்ட மக்களின் பக்கம்தான் என அனைவருக்கும் தெரியும் என்றாலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன செய்தது? என்று தொடர்ந்து சொன்னால், அதன் மூலம் அந்த மக்களுக்கு எதிராக திருப்பிவிட முடியுமா என்கிற அந்த விஷ எண்ணம்;

இந்த வகையில்தான், பார்ப்பனர் களின் கேள்வி எப்போதும் இருக்கும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாமல், இங்கே தமிழ் நாட்டில் தான், இயக்க ரீதியாக, பார்ப் பனர்களின் ஆதிக்கமும் அவர்களுக்கு பாதுகாப்பு கேடயமாக விளங்கும் பார்ப்பன சனாதன ஹிந்து மதமும் கிழித்தெறியப்படுகிறது.

அந்த சிறப்பான பணி, பெரியாரின் இயக்கத் தால் நடைபெறுகிறது என்பதை பார்ப்பன பரிவாரங்களால் சீரணிக்க முடியவில்லை.

அதன் விளைவுதான், சோ முதல், அத்தனை சவுண்டிகளும் ஒரே கோரஸாக, ஒரே மாதிரியான கேள்விகளை தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆசிரியர் தக்க பதிலடி தந்தாலும், தொடர்ந்து இந்த கேள்விகள் தொடரும்.

ரங்கராஜ் பாண்டேவை தொடர்ந்து இன்னும் சில நாட்களில் அல்லது மாதத்தில் வேறு ஒரு பாண்டேவோ அல்லது பத்ரியோ, சேஷாத்திரியோ இதே கேள்வியைக் கேட்பார்கள்.

அவர்களுக்கு துணை போவதற்கு நம்மூர் தந்தி டிவி போல பல டிவிக்கள் ஆவலுடன் இருக்கின்றன.

ஆனால், அவர்கள் எந்த முறையில் வந்தாலும், எந்தக் காலத்திலும் பெரியாரின் தத்துவத்தை அசைக்கக் கூட முடியாது என்பது அவர்களுக்கு தெளிவாக தெரிகிறது.

நம்ம மக்களுக்கு புரிந்தால் சரி.

Read more: http://viduthalai.in/page-2/98804.html#ixzz3VseiVVFo

தமிழ் ஓவியா said...

மருத்துவப் பயன் அதிகம் உள்ள கோவைக்காய்

கோவைக்காயில் உடல் சூட்டைத் தணிக்கும் தன்மை உள்ளது. அத்துடன் இது உடலில் உள்ள நச்சுத் தன்மைகளை நீக்கும் குணம் கொண்டது. அதற்கேற்ற பாக்டீரியா எதிர்ப்பு சக்தி இதில் உள்ளது. கோவைக்காய் உடலில் உள்ள அதிகபட்ச சூட்டைத் தணிக்கும் தன்மை கொண்டது. தேவையற்ற உணவுப் பழக்கங்களால் வயிற்றில் ஏற்படும் சூட்டைத் தணிக்கும் தன்மை கொண்டது. ரத்தத்தைச் சுத்திகரிக்கும்!

பழைமையான ஆயுர்வேத மருத்துவ நூல்களில் கோவைக்காயில் உள்ள சிறப்பு அம்சங்கள் நமது உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவைக்காயில் உள்ள மெட்டபாலிக் தன்மைகள் நமது இதயத்துக்கு மிகவும் நல்லது. இது கல்லீரலுக்கும் நன்மை பயக்கக் கூடியது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற காய் இதுவாகும். மஞ்சள் காமாலை, ஆஸ்துமா நோயாளிகள் இதை சாப்பிட்டால் விரைவில் குணம் ஏற்படும்.

கோவைக்காயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை காரணமாக கோவைக்காய் மற்றும் செடியிலிருந்து ஆயுர்வேத மருந்துப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் பெண்களுக்கு ஏற்படும் அதிகபட்ச வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தவும், சிறுநீர் சார்ந்த நோய்களைக் குணப்படுத்தவும், வயிறு சார்ந்த செரிமான பிரச்சினை களைத் தீர்க்கும் மருந்துகளுக்கும் கோவைக்காய் பயன்படுத்தப்படுகிறது.

விடாரியாடி கஷாயம் எனப்படும் ஆயுர்வேத மருந்து கோவைக்காய் செடியிலிருந்து பெறப்படும் சாறிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்தக் கஷாயம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் சோர்வுத் தன்மையை நீக்க அளிக்கப்படுகிறது. பெண் களுக்கு ஏற்படும் பொதுவான சோர்வை போக்கவும் தரப்படுகிறது.

எடையிழப்பு போன்ற ஊட்டச்சத்து குறை பாட்டால் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும் அளிக்கப்படுகிறது. இது எக்ஸிமா எனப்படும் சருமப் பிரச்சினையைக் குணப்படுத்த மருந்தாக அளிக்கப்படுகிறது. வாய்ப்புண்ணை - குறிப்பாக நாக்கில் ஏற்படும் புண்களைக் குணப்படுத்த இது உதவுகிறது, எடை குறைக்க விரும்புவோருக்கு உணவுடன் சாப்பிட ஏற்ற மிகச் சிறந்த காய் இதுவே.

Read more: http://viduthalai.in/page-2/98837.html#ixzz3VsgjqywX

தமிழ் ஓவியா said...

மிளகின் மருத்துவ குணங்கள்

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவு உண்ணலாம் என்பது பழமொழி. அப்படியா மிளகில் அவ்வளவு விஷயம் இருக்கா என ஆச்சரியப்படுகிறீர்களா? ஆம் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறந்த மருந்து பொருளாக மிளகு விளங்குகிறது.

இவை இந்தியாவில் அதிகளவு பயிரிடப்படுகிறது. மிளகில் உள்ள வேதிப் பொருள்கள் அனைத்தும் நம்மை நோயில் இருந்து காக்கும் வேலைகளை செய்கிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வீக்கத்தை குறைக்கும் வாதத்தை அடக்கும். பசியை அதிகரிக்கும்.

நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு மிளகு சிறந்த நல்ல மருந்தாகும். வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு. நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.

இயற்கை வைத்தியத்தில் ஒன்றான மிளகு முதாதையர் காலத்தில் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது. தற்போது காலத்தில் சமையலுக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர். அதனால் அவர்களை எந்த நோயும் நெருங்கியதில்லை. தற்போதைய காலத்தில் விஞ்ஞானம் வளர வளர நோய்களும் அதிகரித்து வருகிறது.

மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக் குளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சினை களை சரி செய்கிறது.

அதாவது சரியான செரிமானம் வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது.

தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன்மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சினை எட்டிப் பார்க்காது. மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது.. எனவே, மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன்மூலம் எடையை குறைக்கலாம். மிளகு தோல் நோயை குணப் படுத்துவதற்கும் பயன்படுகிறது.

இது தோலில் காணப்படும் வெண்புள்ளிகளின் நிறமியை அழிக்கிறது. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்த வேண்டும். லண்டன் ஆராய்ச்சி ஒன்றின்படி மிளகு வெண் புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்கிறது.

ஆக்சிஜனேற்றியாக செயல்படும் மிளகு புற்றுநோய் இதயநோய், கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சினையை எதிர்த்து செயல்படும். மிளகு உடலில் பல்வேறு பாகங்களுக்கு மூலிகைகள் மூலம் நன்மைகள் புரிகின்றது.

காது வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சினைகள் பூச்சி கடித்தல், குடலிறக்கம், வலி நிவாரணம் கக்குவான் இருமல், ஆஸ்துமா, சுவாச பிரச்சினைகளை போக்க மிளகு நல்ல நாட்டு மருந்து. மேலும் பல் வலி, பல் சிதைவு போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். முன் காலத்தில் கண் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் மிளகு மருத்துவத்தைத் தான் பயன்படுத்தி வந்தனர்.

உடல் வெப்பத்தை குறைக்கும். இப்படி பல பண்புகளை கொண்டது மிளகு. நரம்புத்தளர்ச்சி, கைகால் நடுக்கம், உதறல், ஞாபகமறதி, முதுமையில் ஏற்படும் தலை சுற்றல் ஆகிய வற்றிற்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. வயிற்றுபகுதியில் என்சைம்களை தூண்டி அதிகம் சுரக்கச் செய்கிறது.

செரிமானத் தன்மையையும் அதிகரிக்க செய்கிறது. நச்சுக் கழிவுகளை உடலில் தங்க விடாமல் செய்வதால்தான் நம் முன்னோர்கள் பத்து மிளகு இருந்தால் என்ற பழமொழியை பயன்படுத்தியிருக்கிறார்கள். என்ன மிளகு வாங்கக் கிளம் பிட்டீங்களா.

Read more: http://viduthalai.in/page-2/98838.html#ixzz3VsgtCgve

தமிழ் ஓவியா said...

உற்சாகமாக இருக்க
குளிர்ந்த நீரில் குளிக்கலாம்

மனித உடலுக்குத் தண்ணீர் வைத்தியம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் உற்சாகமளிக்கக் கூடியதாகும். உங்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும் சக்தி தேவை என்று நீங்கள் எண்ணினால், உற்சாகமின்மையால் அவதிப்படுவதாக நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கு தேவையானது குளிர்ந்த நீர் வைத்தியம்தான்.

தண்ணீரில் வைத்தியம் என்றால் குளிக்கும் தொட்டியில் குளிர்ந்த நீரை நிரப்பிக் கொள்ளுங்கள். அதற்குள் இறங்கி படுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நிமிடம் தண்ணீருக்குள் உங்கள் உடல் முழுவதும் இருக்கும் விதத்தில் வைத்துக் கொண்டு உடலை ஆங்காங்கே உங்கள் கைகளால் தேய்த்து விடுங்கள். ஒரு நிமிடம் முதல் மூன்று நிமிடங்கள் வரை இப்படி குளிர்ந்த தண்ணீரில் சோப் இன்றித் தேய்த்துக் குளிக்கும்போது நிணநீர் மண்டலம் சுறுசுறுப்பாக இயங்கி உள்ளே உள்ள உறுப்புகளை சுத்தம் செய்துவிடுகிறது. இதனால் இதயமும் சுறுசுறுப்படைகிறது.

குளித்ததும் உடலை நன்கு துடைத்துவிடுங்கள். இதனால் அடுத்த பல மணி நேரம் சுறுசுறுப்பாகப் பணிபுரியலாம்.

Read more: http://viduthalai.in/page-2/98838.html#ixzz3VshGYrL2

தமிழ் ஓவியா said...

கொழுப்பை கரைக்கும் கத்தரிக்காய்

கத்திரிக்காய் உடல் வலியைப் போக்கும் தன்மை யுடையது. காய்ச்சலைப் போக்கக் கூடியது. சோர்வைப் போக்கக் கூடியது. வீக்கத்தைத் தணிக்கக் கூடியது. கொழுப்பைக் குறைக்கக் கூடியது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது. ரத்த அணுக்கள் சேர்க்கையைத் தடுக்கக் கூடியது. கண்களின் ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது.

மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த வல்லது, ஒவ்வாமையால் ஏற்படும் மயக்க நிலையைத் தடுக்க வல்லது, உறுப்புகளைத் தூண்டவல்லது. 100 கிராம் கத்தரிக்காயில் 24 கலோரி மட்டுமே ஊட்டச் சத்து அடங்கி இருப்பதால் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள உதவுவதோடு ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்தைக் குறைக்க வும் இது மிகவும் உதவியாக உள்ளது.

புத்துணர்வைத் தரும்

கத்தரிக்காயின் தோலில் உள்ள ஆன்த்தோ சயனின் என்னும் வேதிப்பொருள் உடலின் சோர்வைப் போக்கிப் புத்துணர்வைத் தரக் கூடியது, அது மட்டுமின்றி ஆன்தோ சையனின் புற்றுநோய் எனப்படும் கேன்சர் செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு தடுக்க வல்லது.

கத்தரி இலைகள் ஆஸ்துமா எனப்படும் இறைப்பு நோய், மூச்சுக் குழல் நோய்கள், சுவாச அறைக்கோளாறுகள், வலியுடன் சிறுநீர் வெளியேறுதல் ஆகியவற்றுக்கும் மருந்தாகிப் பயன் தருகின்றது. வாயில் எச்சில் சுரக்கவும் இது பயன்படுகிறது. கத்தரிச் செடியின் வேர் மூச்சிரைப்பு மற்றும் மூக்கில் தோன்றும் புண்களுக்கு மருந்தாகிறது.

கொழுப்புச் சத்தைக் குறைக்கும்

வேரின் சாறு காது வலியைப் போக்கப் பயன்படுகிறது. நோய் வாய்ப்பட்டிருக்கும்போது பத்திய உணவில் கத்தரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. கத்தரிக்காயில் இருக்கும் நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் கொழுப்புச் சத்தைக் குறைக்க உதவும் ஓர் உன்ன தமான மருந்தாகும்.

கத்தரிக்காயில் உள்ள நார்ச்சத்து பசியை அடக்கி வைப்பதால் உடல் எடை குறைவதற்கு உதவுகிறது. மேலும் இதயத்துக்கு பலத்தைத் தருவதாக அமைகிறது. கத்தரிக்காயை எண்ணெயிலிட்டுக் காய்ச்சி மேல் பூச்சாகப் பூசுவதால் ரத்தக் கசிவு குணமாகும்.

நார்ச்சத்து

கத்தரிக்காயில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந் திருப்பதால் உடலுக்கு மென்மையும், பலமும் தரவல்லது. கத்தரிக்காய் நார்ச்சத்து மிகுந்து உள்ளதால் மலச்சிக்கலைப் போக்கவல்லது மட்டுமின்றி சர்க்கரை நோயையும் தடுக்க வல்லது. கத்தரிக்காயை அரைத்து தீநீராக்கி வீக்கமுற்ற கால்களின் மீது தேய்த்துவர நாளடைவில் வீக்கம் குறைந்து விடும்.

கத்தரிக்காயைச் சாறு பிழிந்து உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் தேய்த்துவிட கால்களில் வியர்த்து இடையூறு உண்டாவது தடுக்கப்படும். பழத்தை வேக வைத்து உள்ளுக்குக் கொடுப்பதால் காளான் சாப்பிட்டு ஏற்பட்ட நச்சு முறிந்து விடும். கத்தரிக்காயை வேக வைத்து அத்துடன் போதிய பெருங்காயம், பூண்டு, உப்பு, சேர்த்து சூப் செய்து சாப்பிட வயிற்றில் சேர்ந்து துன்பம் தரும் வாயு கலையும்.

கத்தரிக்காயை வேக வைத்து அத்துடன் போதிய தேன் சேர்த்து மாலை நேரத்தில் சாப்பிட நல்ல தூக்கத்தை உண்டாக்கும் இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை அகலும்.

Read more: http://viduthalai.in/page-2/98839.html#ixzz3VshRf7lS

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் 10 இல் ஒருவருக்கு
மன அழுத்தம் உள்ளது: ஆய்வில் தகவல்

மும்பை, மார்ச் 30- இந்தியாவில் 10- இல் ஒருவர் மன அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலக அளவில் மன அழுத்தம் நோய் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. உலகில் உள்ள 5 பெண்களில் ஒருவரும், 10 ஆண்களில் ஒருவரும் வாழ்வில் ஒரு முறையாவது தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவை பொருத்தவரையில் 10 இ-ல் ஒருவருக்கு மன அழுத்தம் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோயின் அறிகுறிகளாக, செய்யும் வேலை களில் கவனம் செலுத்த முடியாமை, வெறுமையாக உணர்வது, தன்னம்பிக்கை இழப்பது, குற்ற உணர்வு, முடிவுகள் எடுப்பதற்கு சிரமப்படுவது, ஞாபக மறதி, அதிதூக்கம் அல்லது தூக்கம் இன்மை, தற்கொலை எண்ணம் போன்றவை முக்கிய அறிகுறிகளாக கூறப்படுகிறது.

இது தவிர குடிப்பழக்கம், அதிகமாக புகைப்பது கூட மன அழுத்ததின் வெளிப்பாடாக இருக்கலாம். இந்தி யாவில் மன அழுத்தம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. சரியான சிகிச்சை எடுத்துகொள்வதன் இந்த நோயை தீர்க்க முடியும்.

சமீபத்தில் விபத்துக்கு உள்ளான ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் துணை விமானி லுபிட்ஸ் கடும் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக விசாரணை யில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.