Search This Blog

11.3.15

இதுதான் வால்மீகி இராமாயணம்-57

இதுதான் வால்மீகி இராமாயணம்
இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.


அயோத்தியா காண்டம்

பதின்மூன்றாம் அத்தியாயம் தொடர்ச்சி

பரதன் சோலையைவிட்டுப் புறப்பட்டபோது இராமன் அங்கிருந்து நடந்து வந்ததையுணர்ந்து தானும் காலால் நடந்து வந்தனனென்று கூறியதற்கேற்ப கங்கையை விட்டுப் புறப்பட்ட போதும் காலாலேயே நடந்து போயினன் என்கின்றார் கம்பர். உண்மை ஈதன்று. பரதன் இராமனைக் காணும்வரை தேரிலேயே சென்றதாக வால்மீகி கூறுகிறார்.

பரத்துவாசன் விருந்திலே விருந்தினர் புலாலருந்தி சாராயங்கள் பலவற்றைக் குடித்ததையும், பலவகைப் புலால் மலை மலையாகக் குவிந்திருந்ததையும் பிற ஆபாசங் களையும் கம்பர் மறைத்தார்.


இராமன் சீதையோடு கொஞ்சிக் குலாவி நீர்விளை யாடித் தான் சுவைத்துப் பார்த்த இனிய புலாலை அவளுக்கூட்டிய வரலாற்றையெல்லாம் கம்பர் மறைத்த தோடு நில்லாமல், பரதனைக் கொல்லத்துணிந்த இலக்கு வனை அரசாட்சி விருப்புடையனென இராமன் கண்டித்ததையும், தன் குற்றம் வெளிப்பட்டதுணர்ந்த இலக்குவன் நாணிப் பேச்சை மாற்றப்பார்த்ததையும் முற்றிலும் மறைத்துவிட்டார் கம்பர். இவ்வரலாறுகளை யெல்லாம் தமிழ் உலகினர் உணர்ந்தால் உண்மையு ணர்ந்து, இழிதொழில் இராமனையும் பாதகனாகிய இலக்குவனையும் வெறுத்து இகழுவரன்றோ? அது கோடரிக்காம்பாகிய கம்பர் கருத்து மாற்றத்தாலல் லவா? அதனாலேயே அவற்றை மறைத்து இலக்குவனையும் இராமனையும் மிக நல்லவர்களாக இவர் காட்டுகிறார்.

சந்திரசேகரப் பாவலரவர்களுக்கு அய்ய வினா

அய்யா, தாங்கள் குடிஅரசுப் பத்திரிக்கையில் தொடர்ச்சியாக எழுதிவரும் இராமாயணக் கட்டுரையில் கண்டுள்ள விஷயங்கள் பெரும்பாலும் எனக்கு உடன்பாடாயிருந்தாலும் சில அய்யங்கள் நிகழ்வதால் ஓர் அய்யத்தை மாத்திரம் வினாவாகத் தங்கள் கவனத்துக்குக் கொண்டுவரத்துணிவு கொண்டுள்ளேன்.

கேகயநாட்டரசன் மகளாகிய கைகேயியைத் தசரத மன்னருக்கு மணஞ்செய்யப் பேசுங்கால், அரசன் மன்ன னுக்காக மணம் பேசவந்தவர்களை நோக்கி, நும் மன்ன ருக்கு மூத்த மனைவியர்களிருக்கிறார்கள். அவர்களிலும் மூத்தவள்பால் பிறக்கும் புத்திரனுக்கே அரசுரிமையாகுமே தவிர என் புத்திரியின்பால் பிறக்கும் புத்திரனுக்கு பட்டம் (அரசுரிமை) இல்லை யாகையால், பெண்தர இசையேனென்று மொழிந்தது தெரிந்த தசரதன், தனக்குக் கைகேயியை மணஞ்செய்து கொடுத்தால் அவள்பால் பிறக்கிற குழந்தை (புத்திரனு)க்கே அரசுரிமை அளிப்பதாக வாக்குறுதி செய்ததன் பேரில் கைகேயிக்கும் தசரதனுக்கும் மணம் நடந்ததாயும் இந்த நடவடிக்கைகள் வசிஷ்டருக்கும், சுமந்திரருக்கும் தெரியுமென்றும் தங்கள் ஆராய்ச்சியில் முடிவுகட்டியிருக்கிறீர்கள்.
                        ------------------ தொடரும்      ----      24-02-2015
Read more: http://viduthalai.in/page-3/96762.html#ixzz3Sf62Ju58
*************************************************************************************

இதுதான் வால்மீகி இராமாயணம்
இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.


அயோத்தியா காண்டம்

பதின்மூன்றாம் அத்தியாயம் தொடர்ச்சி

இதனால் கலியாணம் நிறைவேறிய பின் மக்கட் பேற்றுக்காக அஸ்வமேதயாகம் பண்ணினார்களென்றும், அதன் பின்னர் இராமன், பரதன், இலட்சுமணன், சத்துருக்கன், முதலிய நாலுமக்களைப் பெற்றார் களென்றும் தெரிந்தாலும் அஸ்வமேத யாகம் கைகே யியைக் கலியாணம் செய்து எவ்வளவு ஆண்டுகளுக்குப் பின் என்பது நிச்சயமாகத் தெரியவில்லை.
தங்கள் கட்டுரையில் கைகேயிக்கும் பரதனுக்கும் மேற்குறித்துள்ள தசரதன் கொடுத்த வாக்குறுதி தெரிய வராது என்றும், வாக்குறுதிப்படி அரசுரிமை பரதனுக்குரித் தாயுள்ளதை அந்த வழியின்றி வேறு வழியில் தசரதனிடம் பெற்றுப் பரதனுக்கு அரசுரிமையடையச் செய்தாளென்றும் முன் தான் கொடுத்த உறுதிமொழிப்படி அரசுக்குரிமையுள்ள பரதனுக்கு அரசுரிமையடையச் செய்தாளென்றும், முன் தான்கொடுத்த உறுதிமொழிப்படி அரசுக்குரிமையுள்ள பரதனுக்கு வேறு வழியிலாவது தன்னிடமிருந்து அரசைப் பெற முயற்சித்த கைகேயியைத் தசரதன் மனம்போனவாறு வருத்தமாக இழிமொழிகளால் பேசியும் எப்படியும் கடைசிவரை இராமனுக்கு அரசுரி மையைக் கொடுக்க முயன்றானென்றும், அதற்கு உடந் தையாக அடிமுதல் முடிவரை குருவான வசிஷ்டரும், மந்திரியான சுமந்திரரும் உண்மை வழிதப்பி இருந்தார்களென்றும் ஆதலால் அவர்கள் மூவரும் இழிதகைமை யாளர்களென்றும், பல இடங்களில் எடுத்துக்காட்டி யிருக்கிறீர்கள். மேற்சொல்லி வாக்குறுதி கைகேயிக்கும் பரதனுக்கும் அவர்கள் பால் அன்புகொண்ட அயோத்தி வாழ் மக்களுக்கும் தெரியா திருக்க முடியாது என்பதே நமக்குள்ள உறுதி. இது விஷயமாகத் தங்கள் கட்டுரையில் மேற்கண்டவர்களுக்குத் தெரியாமலிருப் பதற்குச் சரியான காரணம் காட்டப்படவில்லை.

தங்கள் ஆராய்ச்சியில் சிறுசிறு வாக்கியங்களுக்கும் இடம் காலம் முதலிய பாகுபாட்டைக் கொண்டும், அறிவிற்கு எது சரியென்று ஒப்புக்கொள்ளலாமென் பதைக் கட்டுரை பார்க்கும் அறிவாளிகள் பலர் ஏற்கும்படியான வழியில் விரிவுரை செய்தும் ஆராய்ச் சிக்கு அரண்செய்து போகிற தாங்கள், இந்த இராமாயணக் கதைக்கே இதுதான் ஆரம்பம் என் சொல்லும்படியான ஓர் இடத்தில் ஏற்படுகிற அய்யத் தை தாங்கள் தீர்த்து வைக்க முற்படுவீர்களென்று எதிர் பார்த்து இந்த அய்யவினாவைக் குடிஅரசின் வாயிலாகத் தெரிவித்திருக்கிறேன். எழுதிய என்பால் காய்தல் உவத்தலின்றியும் அய்யந்தீர்த்துக்கொள்ள அவா வுற்ற அன்பனென்றும் கருதி அமைந்த விடையளிப்பீர்களாக.
மு.சண்முகம்
சண்முகம் அவர்களுக்கு மறுமொழி
நண்பர் சண்முகம் அவர்கள் விடுத்த அய்ய வினாக்களைக் கண்ணுற்றேன். அன்புகூர்ந்து அவரை அயோத்தியா காண்டம் கட்டுரை பதினான்கைப் பார்க்க வேண்டுகின்றோம்.
                   ----------------- தொடரும் 27-02-2015
Read more: http://viduthalai.in/page-3/96954.html#ixzz3SxF5r8K8
*******************************************************************************
இதுதான் வால்மீகி இராமாயணம்

அயோத்தியா காண்டம்
பதினான்காம் அத்தியாயம்

பரதன் இராமனைச் சிரமத்துடன் இன்னானென வறிந்து அவனடியில் வீழ்ந்தான். பரதனை இன்னானெனச் சிரமத்துடன் அறிந்த இராமன் அவனைத்தூக்கி, குழந்தாய்! நீ ஏன் இங்கே வந்தாய்? உன்னைவிட்டுத் தந்தை பிரிந்திருக்கமாட்டாரே; ஆகையால் உன்னைப் பிரிந்ததால் அவர் இறந்துவிட்டாரா? அதனால் பகைவர்கள் உன்னிடமிருந்து நாட்டைப் பிடுங்கிக் கொண்டனரா? அல்லது குடிகள் உன்னிடம் அன்பு குறைந்து, கைகேயி என்னைக் காட்டிற்குப் போகச் சொன்னதற்காக உன்னை நகரத்திலிருந்து துரத்தி விட்டார்களா? அல்லது தந்தைக்குப் பணிவிடை செய்ய மனமில்லாமல் வந்து விட்டனையா? தந்தை நலமாக இருக்கிறாரா? அல்லது தம் வாக்கைத் தவறமுடியாததால் நேர்ந்த துன்பங்களால் பச்சாதாப மடைந்து அவருக்கு ஏதாவது நோய் உண்டாயிற்றா? உன் தாய் கைகேயி தன் எண்ணப்படிக் காரியம் முடிந்து சுகமாக இருக்கிறாளா? நீ உன் மனைவியரை இன் சொற்களால் மகிழ்வித்து நலம் புரிகின்றனையா? அவர்கள் பிற ஆண்களுடன் கலந்து பேசாமல் மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கின்றனையா? அவர்கள் சொல்வதை உண்மையென்று நம்பாமலிருக்கிறாயா? மிகவும் சஞ்சலமான தன்மையுடையவர்களாகையால் மறைபொருள்களை அவர்களுக்குச் சொல்லாமலிருக்கிறாயா?

உன் மனைவியர் சம்போக சுகத்தைக் கொடுப்பதனாலும் நற்பிள்ளையைப் பெறுவதனாலும் பயன் படைத்திருக்கின்றனரா? என்று மடமடவென்று பரதனுடைய மறுமொழியை எதிர்பாராமலே பல கேட்டுக் கொண்டே போனான். பரதன், மூத்த பிள்ளையாகிய உமக்கே அரசு உரியது. தந்தை உம்மைப் பிரிந்த கவலையால் நான் கேகய நாட்டிலிருக்கும்போதே உயிரை விட்டார். நானும் தம்பியும் உத்திரகிரியைகள் செய்துவிட்டோம். நீங்கள் செய்ய வேண்டும் என்றான். இராமன், தந்தையே இறந்தீரா? என் செய்வேன்? பிணச் செயல்களைப் பக்கத்திலிருந்து செய்த பரதனும் தம்பியும் நலம் பெற்றனர் என்று கதறினான். சுமந்திரன் அவர்களை ஆற்றங்கரைக்கு அழைத்துப்போனான். இராமன் தம்பியோடும் தண்ணீரில் இறங்கிக் குளித்துத் தண்ணீரைக் கையிலெடுத்துக் கொண்டு, தந்தையே நாங்கள் கொடுக்கும் இந்தத் தண்ணீர் தங்களைச் சேர்ந்து உமக்கு மகிழ்ச்சியைத் தரட்டும் என்று தர்ப்பணம் செய்தான்.

பின் அவன் குடிசைக்கு வந்து தம்பிமார்களைப் பற்றிக்கொண்டு அவர்களுடன் அலறி அழுதான். அது கேட்டுப்பரிவாரங்கள் அங்கேவந்து சேர்ந்தன. வசிட்டன் அரசன் மனைவியரை அழைத்து வந்தான். கோசலை சுமித்திரையையும் மற்ற அரசமனைவியரையும் பார்த்து இராமன் தசரதனுக்குத் தர்ப்பணம் பண்ணியிருக்கும் இடத்தில் புலம்பினாள். அவள், இதோ புங்கைப் பிணணாக்கை இராமன் பிண்டமாக வைத்திருக்கிறான். இதை மன்னர் பிரானாகிய தசரதர் எப்படி உண்பார்? என அலறத் தசரதனடைய மனைவியர் அனைவரும் அவளைத் தேற்றினார்கள். இராமன் தன் தாய்மார்கள் எல்லோரையும் தனித்தனி வணங்கினான். அவர்கள் அவனைக் கண்டு அழுதனர். இராமன் பின் வசிட்ட முனிவனைக் கண்டு வணங்கி அருகில் உட்கார்ந்தான். அனைவரும் சூழ இருந்தார்கள்.

                       ---------------------தொடரும்...
3-3-2015
Read more: http://viduthalai.in/page-2/97162.html#ixzz3TKASa0hG

************************************************************************************

அயோத்தியா காண்டம்

பதின்நான்காம் அத்தியாயம் தொடர்ச்சி

இராமன் தன்னை அழைத்துப்போகவே பரதன் வந்திருக்கிறான் என்பதையுணர்ந்து, அவன் வந்த காரணம் வினாவினான் பரதன் பாவியாகிய கைகேயி சொல்லைக் கேட்டு உமக்கு உரிய அரசை அறிவில் லாமல் தசரதர் எனக்குத் தந்துவிட்டார். நீர் வந்து முடிசூட்டிக்கொள்ள வேண்டும். உம்மை அழைத்துப் போகவே நம் தாய்மார்களெல்லாரும் வந்திருக்கிறார்கள் என்றான். இராமன் உன்னைப்போலும் உத்தமன் நாட்டுக்கு ஆசைப்பட்டு அண்ணனுக்குத் தீங்கு செய் வானோ? இருந்தாலும் தந்தையின் கட்டளையின்றி நான் எதையும் ஏற்றுக்கொள்ளேன் என்று புகன்றான்.

மறுநாள் காலையில் பரதன் நீர் கொடுத்த அரசை நான் உமக்குத் திரும்பக் கொடுக்கின்றேன். கைகே யியைச் சமாதானப்படுத்தியிருக்கிறேன். அந்தப்புரப் பெண்கள் களித்து உம்மை உபசரிக்க நீர்முடிசூடும் என்று வேண்டினன். அதற்கு இராமன், நம் தந்தை கட்ட ளையை நாம் மீறுதல் கூடாது. ஆதலின் நீ கவலைப் படாமல் அயோத்தி சென்று நாட்டை ஒப்புக்கொள் என்றனன் பரதன். இறந்த நம் தந்தையைப் பற்றி குற்றம் சொல்லக்கூடாதுதான். ஆனால் எவன்தான் ஒரு பெண்ணுக்காக நீதியைவிட்டுக் கொடுத்துப் பாவியா வான்? மூத்தவராகிய உமக்கன்றோ நாடு? தந்தை பாவம் செய்தால் அதைத் தீர்ப்பது மகன் கடமையல்லவா? ஆதலின் நீர் வந்து உமக்குரிய நாட்டை ஒப்புக் கொள்ளும் என்று மறுபடியும் வேண்டி நின்றான். இராமன் அதற்கு இணங்காதது கண்டு, தாய்மார்களும் ஏனையோரும் இராமனை வேண்டி னார்கள்.

அப்போது இராமன், பரதா! நம் தந்தை உன் பாட்ட னாராகிய கேகய மன்னரிடம் கைகேயியிடம் பிறந்த வனுக்கே அரசாட்சியைக் கொடுக்கிறேனென்று இந்தச் சுல்கத்தைப் பிரதிக்ஞை செய்தனர். மேலும் தேவாசுரப்போரில் கைகேயிக்கு இரண்டு வரங்களையும் தந்தார். பிறகு உன் தாய் இரண்டு வரங்களைக் கேட்க அதன்படி உனக்கு நாட்டையும் எனக்குக் காட்டையும் தந்தார் தசரதர்; ஆதலின் நம் பிதா கைகேயியிடத்தில் பட்டிருக்கிற கடனை நீ எனக்காகவாது தீர்க்க வேண்டும். நீ நாடாள்; நான் காடாள்கிறேன். நீ மக்களை ஆள்; நான் மிருகங்களை ஆள்கிறேன்.

நீ குடை நிழலிலிரு. நான் மரநிழலிலிருக்கிறேன் என்றனன். அவ்வேளையில் சாபாலி முனிவன், இராமா! யார் யாருக்குத் தந்தை? இவ்வுடலுக்குக் காரணம் சுக்ல சுரோணிதங்களே. அதிலும் ஒருவாறு உடலுக்குக் காரணமான தசரதருடல் பிணமாக அய்ந்து பூதங்களிலும் கலந்து விட்டது. ஆதலின் நீ தந்தை சொற்படி நடக்கி றேனென்பதில் பயனில்லை. அரசாட்சியை ஏற்றுக் கொள்.
                     ---------------------- தொடரும் --   ”விடுதலை” 6-3-2015

37 comments:

தமிழ் ஓவியா said...

பிற்படுத்தப்பட்டோருக்கான தனி அமைச்சகம் - தனியார்த் துறைகளிலும் - இட ஒதுக்கீடு! அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டுத் தீர்மானங்கள்


பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தேவை
இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசமைப்பு அதிகாரம் அவசியம்

பிற்படுத்தப்பட்டோருக்கான தனி அமைச்சகம் - தனியார்த் துறைகளிலும் - இட ஒதுக்கீடு!

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டுத் தீர்மானங்கள்


புதுடில்லி, மார்ச் 11_ பிற்படுத்தப்பட்டோருக்கான தனி அமைச்சகம், தனியார்த் துறைகளிலும் இட ஒதுக் கீடு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் புதுடில்லியில் நேற்று (10.3.2015) சிறப்புடன் நடைபெற்ற அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் 4 ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

அகில இந்திய பிற்படுத்தப்பட்டவர்கள் கூட்ட மைப்பின் 4 ஆவது மாநாடு புதுடில்லியில் கான்ஸ் டிடியூசன் கிளப்பில் உள்ள துணை சபாநாயகர் அரங்கில் நடைபெற்றது.

10.3.2015 பிற்பகல் 3 மணியளவில் மாநாடு தொடங்கியது. அகில இந்திய பிற்படுத்தப்பட்டவர்கள் கூட்டமைப்பின் செயல் தலைவர் ஜெ.பார்த்தசாரதி அனைவரையும் வரவேற்றார்.

தீர்மானங்கள்

அகில இந்திய பிற்படுத்தப்பட்டவர்கள் கூட்ட மைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி தலைமை வகித்தார். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசமைப்பு அதிகாரங்கள் வழங் கப்படவேண்டும்; இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும். இதர பிற்படுத்தப்பட்டவர்கள் நலனுக்காக தனி அமைச்சகம் மற்றும் தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுத் தீர்மானங்களாக நிறைவேற்றப் பட்டன. மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையிலுள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்கள் நாட்டின் கட்டமைப் பில் முக்கியப் பங்காற்ற வேண்டிய தேவை உள்ளது என்பதை உணர்த்தும் வகையில், இந்த நான்கு திட்டங்களையும் விளக்கும் வகையில் துண்டறிக்கை கள் மாநாட்டு பங்கேற்பாளர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வழங் கப்பட்டன.

நீதிபதி ஈசுவரய்யா

தேசிய பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஆணையத் தின் தலைவர் நீதிபதி வி.ஈசுவரய்யா மாநாட்டுத் தொடக்க உரை ஆற்றினார். தேசிய பிற்படுத்தப்பட்ட வர்கள் ஆணையம் அரசமைப்பு அதிகாரங்களைப் பெறவேண்டும் என்பது உள்ளிட்ட நான்கு தீர்மானங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேற்கண்ட கோரிக்கைகளை அடைவதில் அனைத்து மாநிலங்களில் உள்ள இதர பிற்படுத்தப் பட்டவர்களையும் ஒருங்கிணைக்கின்ற கூட்டமைப் பின் பங்களிப்பை நீதிபதி ஈசுவரய்யா வெகுவாகப் பாராட்டினார்.


தமிழ் ஓவியா said...

நாடாளுமன்றத்தின் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் குழுவின் தலைவர் ராஜென் கோகெயின்

நாடாளுமன்றத்தின் இதர பிற்படுத்தப்பட்ட வர்கள் குழுவின் தலைவரும், சிறப்பு விருந்தினரு மாகிய நாடாளுமன்ற உறுப்பினர் ராஜென் கோகெயின் கூறுகையில், கூட்டமைப்பின் சரியான அணுகுமுறைமூலம் நாடாளுமன்றக் குழுவின் உறுதியைப் பெற்றுள்ளது. கூட்டமைப்பின் கோரிக்கைகளை இதர பிற்படுத்தப் பட்டவர்களுக்கான நாடாளுமன்றக்குழு நாடாளு மன்றத்தில் எழுப்பும் என்றும் கூறினார்.

தேசிய பிற்படுத்தப்பட்டவர்கள் ஆணையத்தின் உறுப்பினர் எஸ்.கார்வேந்தன், மத்தியஅரசின்கீழ் இயங்கக்கூடிய பல்வேறு மத்தியப் பல்கலைக் கழகங் களில் பணி வாய்ப்புகளில் ஆசிரியர் அல்லாத பணி யிடங்களில்கூட இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்கிற புள்ளிவிவரங்களை அளித்தார். கூட்டமைப்பின் செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டி.தேவேந்தர் கவுட் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முழு ஆதரவை அளிப்பதாகக் கூறினார். மும்பை மேலவை உறுப்பினர் மகாதேவ் ஜாங்கர் கூட்டமைப்பின் குறிப்பிடத்தக்க பிரச்சினைகளில் நன்கு பணியாற்றி உள்ளதாகவும், கூட்டமைப்பின் கோரிக்கைகளை பிரதமரிடம் கொண்டு சென்று உரிய நடவடிக்கைகளை எடுப்ப தாகவும் உறுதியளித்தார்.
கூட்டமைப்பின் துணைத்தலைவர் அசோக் கேஆர் சர்கார் நன்றி கூறினார்.

மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா

நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங் களவையில் இரண்டு முக்கிய மசோதாக்கள் குறித்த விவாதம் மற்றும் வாக்களிப்பதில் பலரும் முழுமையாக கவனம் செலுத்தியதால், மாநாட்டு நிறைவு விழாவில் பங்கேற்க வேண்டியவர்கள் கலந்துகொள்ள முடி யாமல் போனது. இருந்தபோதிலும், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, நாடாளுமன்ற உறுப்பினர் ஹூக் கும்தேவ் நாராயண் யாதவ் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டமைப்பு முன்வைத்துள்ள நான்கு திட்டங்கள் குறித்தும் மக்களிடம் கொண்டு செல்லவேண்டும். தனியார்த் துறையில் இடஒதுக்கீடு குறித்து மக்களிடையே கொண்டு செல்லவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள்.

பங்கேற்பாளர்களை மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் பாராட்டினர்.

கூட்டமைப்பின் நான்காவது மாநாடு மற்றும் கருத்தரங்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மாநாட்டில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் பங்கேற் பாளர்களால் விரிவாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அசாம், மேற்கு வங்கம், பிகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராட் டிரம், தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் சார்பிலும் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்று கூட்டமைப்பின் ஒற்றுமையை வெளிப் படுத்தினார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/97673.html#ixzz3U4s69aY8

தமிழ் ஓவியா said...

மாட்டிறைச்சி விற்பனையாளர்களுக்கு தீர்வு அளிக்க மறுக்கும் பாம்பே உயர்நீதிமன்றம்


மும்பை, மார்ச் 11_ 9.3.2015 அன்று பாம்பே உயர்நீதிமன்றத்தில் மும்பை புறநகர் மாட் டிறைச்சி விற்பனையாளர் கள் நலச்சங்கத்தின் சார் பில் மாட்டிறைச்சித் தடை யால் பாதிப்புக்குள்ளாகும் வணிகர்கள் நலனைக் கருத்தில் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள் ளனர். ஆனால், பாம்பே உயர்நீதிமனறம் மாட்டி றைச்சி விவகாரம் மத ரீதியிலான அல்லது கவு ரவ ரீதியிலான பிரச்சி னையாக உள்ளதாகக் கருதவேண்டாம் என்று நீதிமன்றம் கூறி வணிகர் கள் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி வி.எம்.கானடே கூறும்போது, மாட்டிறைச்சிக்குத் தடைச் சட்டம் நடை முறைக்குக் கொண்டுவரப் பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் கடமையாற்றும் நிலையில் உள்ளனர். ஆகவே, இப்பிரச்சி னையை மத ரீதியாகவோ, கவுரவப் பிரச்சினையா கவோ எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றார்.

அரசிதழில் வெளி யிடாமல், மகாராட்டிர விலங்குகள் காப்பு (திருத்த) புதிய சட்டத் தின்படி மாடுகளைக் கொல்வதற்கு தடை விதிக்க முடியாது என்று மும்பை புறநகர் மாட் டிறைச்சி விற்பனையாளர் கள் நலச்சங்கத்தின் சார் பில் உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், நீதிமன்ற அறிவிக்கையின்மூலமாக ஏற்கெனவே அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது என்று கூறிய அரசு வழக் குரைஞர் அரசிதழின் நகலையும் உயர்நீதிமன் றத்தில் ஒப்படைத்தார். அதன்பிறகு, பாம்பே உயர்நீதிமன்றம் அவ் விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்டதோடு, புதிய சட்டத்தை நடை முறைப்படுத்த அதிகாரி கள் கடமைப்பட்டுள்ளனர் என்றும் கூறிவிட்டது.

பாரதீய கவ்வான்ஷ் ரக்ஷன் சன்வர்த்தன் பரிஷத் என்கிற அமைப் பின் சார்பில் புதிய சட்டத்தை நடைமுறைப் படுத்தக் கோரி அளிக்கப் பட்ட மனுவில் தலையிட வேண்டுமாய் மாட்டி றைச்சி வணிகர்கள் கோரி யிருந்தனர்.

மகாராட்டிர மாநிலம் முழுமையாக இறைச்சி வெட்டுமிடங்களில் மாட் டிறைச்சிக்குத் தடைவிதிக் கும் புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த உத் தரவிடக் கோரி பாம்பே உயர்நீதிமன்றத்தில் பார தீய கவ்வான்ஷ் ரக்ஷன் சன்வர்த்தன் பரிஷத் என்கிற அமைப்பின் சார் பில் மனு அளிக்கப்பட் டிருந்தது.

இதுதொடர்பான விசாரணையின்போது, பாம்பே உயர்நீதிமன்றம் மும்பை காவல் ஆணை யர் மற்றும் மும்பை மாநகர ஆணையர் ஆகி யோருக்கு பாம்பே உயர் நீதிமன்றத்தின் சார்பில் அளிக்கப்பட்ட உத்தரவில் எருதுகள், வண்டி மாடு கள் ஆகியவைகளைக் கொல்வதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று புதிய சட்டத்தை நடை முறைப்படுத்த வலியுறுத் தும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மாட்டிறைச்சி வணிகர் கள் கோரிக்கையான மாட் டிறைச்சித் தடைச்சட்டத் தில் தலையிடக்கோரிய மனுவின்மீது பாம்பே உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

Read more: http://viduthalai.in/e-paper/97676.html#ixzz3U4shzhzy

தமிழ் ஓவியா said...

உயிர் ஒன்று - உடல் மூன்று



ஆட்சி, பிரபுத்துவம், ஜாதி உயர்வு இவை மூன்றும், உயிர் ஒன்றும், உடல் மூன்றுமாயிருக்கின்றன.
_ (குடிஅரசு, 3.11.1929)

தமிழ் ஓவியா said...

அய்ந்து பெண் அமைச்சர்கள் போர்க்கொடி!


மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியை எதிர்த்து மத்திய பெண் அமைச்சர்கள் அய்வர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அருண்ஜெட்லிமீது பிரதமர் நரேந்திர மோடியிடம் இதுகுறித்துப் புகாரும் கூறியுள்ளனர்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ருதிராணி இதுபற்றிக் கூறியதாவது:

பள்ளிக் கல்விக்கு கேட்கப்பட்ட நிதியோ 12 ஆயிரத்து 896 கோடி ரூபாய்; நிதியமைச்சரோ கேட்கப்பட்ட தொகை யிலிருந்து ஓராயிரம் கோடி ரூபாயை வெட்டியுள்ளார் என்று கூறியுள்ளார்.

மத்திய பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளதாவது:

பிரதமரின் கனவுத் திட்டமான பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் திட்டத்துக்கு வெறும் 97 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோலவே, ஒருங் கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்குக் கேட்கப்பட்டுள்ள தொகையைவிட 8 ஆயிரத்து 300 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையில் மட்டுமே ரூபாய் 11 கோடி நிதி வெட்டப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி குமுறியுள்ளார்.

நீர்வளத் துறையில் 9 ஆயிரத்து 64 கோடியை நிதியமைச்சர் வெட்டித் தள்ளியுள்ளார் என்று மத்திய அமைச்சர் உமாபாரதி கூறியுள்ளார்.

சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா இந்தத் துறைக்கான தொகை நிதிநிலை அறிக்கையில் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல, உணவுப் பதப்படுத்துதல் துறையிலும் நிதி வெட்டப்பட்டுள்ளதாக வேதயைத் தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர்.

இந்த அய்ந்து பெண் அமைச்சர்களும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் புகார் செய்துள்ள நிலையில், பிரதமர் தெரிவித்த கருத்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.

என்னிடம் சொல்வதைவிட, நிதியமைச்சரிடமே உங்கள் குறைபாடுகளைச் சொல்லி நிவாரணம் தேடுங்கள் என்று கூறி, தம் பொறுப்பைத் தட்டிக் கழித்து வழக்கம்போல, தமது வெளிநாட்டுப் பயணத்தில் கவனம் செலுத்தினார்.

பரிதாபத்திற்குரிய இந்த அய்ந்து பெண் அமைச்சர் களும் உள்ளுக்குள் குமுறுவதைத் தவிர வேறு மார்க்கம் அறியாதவர்களாகத் திகைத்து நிற்கின்றனர்.

இதில் குறிப்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன? பாதிப்புக்கு ஆளானவர்கள் அய்வரும் பெண்கள். பாரதீய ஜனதாவில் பெண்களுக்குரிய இடம் இதுதான்; இந்துத்துவா கொள்கைப்படி பெண்கள் உயிருள்ள ஒரு ஜீவனே கிடையாதே! எந்த வயதிலும் ஆணுக்குக் கட்டுப்பட்டு அடங்கிக் கிடக்கவேண்டியவர்கள் பெண்கள் என்பதுதானே மனுதர்மம்.

பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று சொல்லுவது தானே பகவத் கீதை. அந்தப் பகவத் கீதையை தேசியப் புனித நூலாக அறிவிக்கப் போகிறோம் என்று சொல்லுகிற ஆட்சிதானே மத்தியில் இருக்கிறது!

கல்வியிலும், குழந்தைகள் நலத்துறையிலும் கைவைக் கிறார்கள் என்றால், இந்த ஆட்சியைப்பற்றி எடை போட்டுப் பார்க்கவேண்டும். அதேநேரத்தில், சமஸ்கிரு தத்தைப் பரப்புவதிலும், கங்கை நீரைச் சுத்தப்படுத்துவதிலும் காட்டும் ஆர்வத்தை, அவற்றைவிட அதிமுக்கியமான துறைகளின்மீது காட்ட மறுப்பது ஏன்? அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள இந்துத்துவா எண்ணம்தான் இப்படிச் செயல்பட வைக்கிறது.

மத்திய அரசுக்கு நிதி நெருக்கடி இருக்கிறது என்றால், பல்லாயிரம் கோடி ரூபாயை அந்நியச் செலாவணியாக ஈட்டித் தருகிற மாட்டிறைச்சியை முடக்கும் வேலையில் ஈடுபடுவார்களா?

பசு மாட்டையும், காளை மாட்டையும் உணவுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்கிற அவர்களின் இந்துத்துவா உணர்வுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்களே தவிர, நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்தோ, பசுவதைத் தடை சட்டத்தால் பாதிக்கப்படுகிற மக்களைப்பற்றியோ, கோடிக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பை பறி கொடுப் பவர்களைப்பற்றியோ கிஞ்சிற்றும் கவலைப்படுவதில்லை.

இந்துத்துவாவைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கும் இந்தப் பெண் அமைச்சர்கள் இந்த சந்தர்ப்பத்திலாவது அவர்கள் தங்களைப் பிணைத்துக் கொண்டிருக்கும் கட்சியின் இந்துத்துவா கொள்கை பெண்களுக்கும், நாட்டு மக்கள் வளர்ச்சிக்கும் எந்தளவு முட்டுக்கட்டையானது என்பதை உணர முன்வர வேண்டும்; சிந்தித்தும் பார்க்கவேண்டும்.

தங்களுக்கு என்று வந்தால்தான் தலை வலியும், வயிற்று வலியும் என்று நினைக்கலாமா? அப்படி வந்த நேரத்திலாவது உண்மை நிலையை உணர்ந்து பார்க்கவேண்டாமா?

நிதியமைச்சரும் கைவிரித்துவிட்டார்; பிரதமரும் கைவிரித்துவிட்டார்! அடுத்து இந்த அய்ந்து பெண் அமைச்சர்களும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தைச் சந்திக்கவேண்டியதுதான் பாக்கி; அவர் எப்படிப்பட்டவர்?

கணவனைவிட அதிகம் படித்த பெண்கள், அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் கணவன்மார்கள் சொல்லுவதற்குக் கட்டுப்படுவதில்லை. அந்த நிலையில், கணவர்கள், மனைவிகளை விவாகரத்துச் செய்யவேண்டும் என்று சொன்னாரே - அவரிடம் நியாயம் எங்கிருந்து கிடைக்கப் போகிறது?

இந்திய நாட்டுப் பெண்களும் சிந்திக்கவேண்டிய தருணம் இது.

Read more: http://viduthalai.in/page-2/97683.html#ixzz3U4tB1JS1

தமிழ் ஓவியா said...

முதுமையே போ...! போ...! முதிர்ச்சியே வா...! வா...!

முதுமை என்பது வயதின் வளர்ச்சி என்றாலும், நமக்கு உழைக்கச் சக்தி அளிக்கும் உடல் உறுப்புகளின் தளர்ச்சி யல்லவா!

வாழ்க்கை நீளவேண்டுமென்று விரும்புவோரும் சரி,

வாழ்க நீங்கள் பல்லாண்டு என்று வாழ்த்துவோரும் சரி,

ஒரு முக்கிய கருத்தை மறந்து விடக்கூடாது.

ஆயுள் நீளுவது நல்லது; மிகப் பெரும்பாலோர் விரும்புவது, வேண்டு வது, அதற்காகவே!

ஆனால், உடல்நலம் - உடற்கட்டு - செயல்படும் வகையில் அமைவது அதைவிட முக்கியமானது - அடிப் படையானது!

அறிஞர் அண்ணா கூறினார்: தமிழின் முதுபெரும் வரலாறு மட்டும் பெருமைப்படத்தக்கது அல்ல; அதன் சீரிளமை மிகவும் முக்கியம். அதில் படிந்த பழைமை ஒட்டடைகளையும், பாசிக் குப்பைகளையும் நீக்கி, புதிய இளமைப் பொலிவுடன் தமிழ் என்றும் திகழவேண்டும்; பகுத்தறிவு அடிப்படை யில் பட்டதாரி இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா வில் ஆற்றிய ஆங்கிலப் பேருரையில் குறிப்பிட்டார். அதற்குப் பழைய கிரேக்கத்து மாஜி கடவுள்களின் கதை களையும் ஒப்பிட்டிருந்தார்!

கிரேக்கக் காதல் கடவுளான பெண் கடவுள், தன் காதலனான மற்றொரு கடவுளின் வாழ்வு எப்போதும் அழி யாததாக - மறையாததான வாழ்வாக இருக்க வரம் கேட்டு வாங்கியதாம்!

Immortality எப்போதும் இருப்பது - சாவு அண்டாத வாழ்க்கையைக் கேட்டுப் பெற்றார், மகிழ்ந்தார்.

ஆனால், காலம் ஏற ஏற, முதுமை அவரைத் தாக்குவது தவிர்க்க முடியாததாகி விட்டது.

இளமையைத் துறந்து, முதுமையை அடைந்து, வாழும் தொல்லை அப்போதுதான் புரிந்தது! முதுமை அண்டா இளமையை அல்லவா நாம் யாசகமாய் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும் என்று தவறுக்காக மிகவும் வருந்தினாளாம்!

இப்படி ஒரு கதை கிரேக்கப் புராணங்களில்!

மேலும் மேலும் ஆயுள் நீள வேண்டும் என்று விரும்பும் நாம், பலருக்குப் பயன்படும் இளமைத் துடிப் புடன் அந்த வாழ்க்கை அமைந்தால் தானே அது விரும்பத்தக்கது?

இன்றேல் உறவுக்கும், ஊருக்கும், உலகத்திற்கும் கூடுதல் சுமைதானே!

முதுமை ஒருபுறம் இருந்தாலும், முதிர்ச்சி - வயது, பல்வேறு கசப்பான - இனிப்பான - துவர்ப்பான - பல்சுவை அனுபவங்கள் காரணமாக கற்ற பாடங்களால் நாம் பெறுகிறோம்.

அதனை பாடப் புத்தகமாக்கி, ஒரு நல்லாசிரியனாகி போதிக்கவேண்டும்; அதன்மூலம் கொடுத்தலின் காரண மாகப் பெறும் மகிழ்ச்சியை பெரு ஊதியமாகக் கருதிப் பெருமிதம் கொள்ளவேண்டும் என்று நினைக் கிறோம்!

தமிழ்ப் பெரியார் திரு.வி.க. பார்வை இழந்த நிலையிலும், முதிர்ச்சி தந்த பாடங்களை டாக்டர் மு.வ. என்று அழைக்கப் பெற்ற மு.வரதராசனார் அவர்களிடம் கூறி, அவர் கேட்டு எழுதிட, இரண்டு நூல்கள் கவிதை வடிவத்தில் வந்தன.

முதுமை உளறல்
படுக்கைப் பிதற்றல்
சிறந்த அறவுரைகள் அவை.

மிகுந்த தன்னடக்கத்தினால் திரு.வி.க. அத்தகைய தலைக்கனமில் லாத் தலைப்புகளை தந்து உயர்ந்தார் - சிந்தனை வள்ளலாக!

அவை, உளறலும் அல்ல; பிதற்றலும் அல்ல!

தந்தை பெரியார் அவர்கள் 95 ஆண்டுவரை - கடுமையாக உழைத்தார் - பயணித்தார் - பல மணிநேரம் சிங்கமென கர்ஜித்தார்!

சிந்தனை, உரையில், எழுத்தில் எவ்வித தடுமாற்றமும் இன்றி - மறதி நோயே தாக்காமல் - கணினிபோல் செய லாற்றி அதிசய சாதனை படைத்தார்!

அவரது ஆரம்ப கால சிந்தனைகள் அறிவியல் சாதனைகளாகிய செய்தி களை நாங்கள் மேலைநாட்டு ஏடுகளி லிருந்து படித்துக் காட்டியபோது - 1973, டிசம்பர் 19 (இறுதிப் பேருரை ஆற்றிடப் போகுமுன்) வேனில் பயணித்த நிலை யில் என்ன சொல்லி வருந்தினார் தெரியுமா?

நாளை எழுதுகிறேன்.


- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/97687.html#ixzz3U4tL0HnS

தமிழ் ஓவியா said...

பன்றி இறைச்சியை முஸ்லிம்கள் வெறுத்தாலும்
இஸ்லாமிய நாடுகளில் பன்றி இறைச்சிக்குத் தடையில்லை



இது இந்தியா போன்ற ஜனநாயக நாடல்ல, மன் னராட்சி நடக்கும் நாடு.

இது இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாடும் அல்ல. மதச்சார்புடைய நாடு. ஒரு இஸ்லாமிய நாடு.

இஸ்லாமியர்கள் பன்றிக் கறியை 'ஹராம்' என சொல்லி விலக்கி விடுவார்கள். பெரும்பா லும், பன்றிக் கறியைக் கண்ணால் பார்ப்பதைக் கூட தவிர்த்துவிடுவார்கள். ஆனால், அத்தகைய கட்டுப்பாடுகள் உடைய ஒரு இஸ்லாமிய நாடான UAE ல் பெரும்பாலான 'ஹைப்பர் மார்க்கெட் டுகளில்' பன்றி இறைச்சி தாராளமாக கிடைக்கும்.'For Non Muslims' என பெரிதாக அறிவிப்பு பலகை வைத்து விடுவார்கள்.

ஒரு மதச்சார்புள்ள நாட்டில் அவர்கள் மார்க் கத்திற்கு எதிரான ஒரு இறைச்சி விற்பனையா கிறது. பன்றி இறைச்சியை விருப்ப உணவாக சாப் பிடுபவர்களை இங்கு யாரும் தடுப்பது கிடை யாது. அடுத்தவன் தட்டில் என்ன இருக்க வேண்டும்? அவன் என்ன சாப்பிட வேண்டும்? என இங்கு யாரும் சட்டம் போட்டுத் தடுக்கவில்லை.

ஆனால் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என சொல்லிக்

கொள்ளும் இந்தியாவில் ஒரு மாநிலத் தில் மாட்டு இறைச்சிக்கு தடை விதித்து தங்கள் மதச் சார்பின்மையை(?!) உல கிற்கு பறைசாற்றுகின்றார்கள்.

அடுத்தவன் என்ன சாப்பிட வேண் டும் என சொல்வது அரசாங்கத்தின் வேலையா?

ஒரு உணவுப் பொருளை மக்களின் ஆரோக்கியம் கருதி அரசாங்கம் தடை செய்தால் அது வரவேற்கத்தக்கது. மற்றக் காரணங்களுக்காக தடை செய்வதாக இருந்தால் அது தனி மனித உரிமை மீறல்.

எனக்கு மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கம் இல்லை. அதனால் நான் நல்லவன் என்றும் மாட்டிறைச்சி சாப்பிடும் என் நண்பன் கெட்டவன் என்றும் அர்த்தம் இல்லை.

அவன் சாப்பிடும் உணவு அவன் விருப்பம் சார்ந்த விஷயம். அதில் யார் தலையிட முடியும்?

சாதி, மதம் இதை தூக்கி ஓரம் வைத்து விட்டு இதை படியுங்கள் புரியும். புரியாவிட்டால் மேலுள்ள படத்தை மீண்டும் ஒருமுறை பாருங்கள்!

- நம்பிக்கை ராஜ் முகநூல் பக்கத்திலிருந்து

தகவல்: ந.விவேகானந்தன், செஞ்சி.

Read more: http://viduthalai.in/page1/97643.html#ixzz3U4uZbQdo

தமிழ் ஓவியா said...

ஆதரிப்பது...


எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொது மக்கள் ஆதரிப்பது, கொள்ளியை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது போலாகும்.
(குடிஅரசு, 18.5.1930)

தமிழ் ஓவியா said...

தெருக்கள், பொதுஇடங்களுக்கு சூட்டப்பட்ட சாதிப் பெயர்களை நீக்கக்கோரி வழக்கு

மதுரை, மார்ச் 10_ தமிழகத்தில் தெருக்கள், பொது இடங்களுக்கு சூட் டப்பட்ட ஜாதிப் பெயர்களை நீக்கக் கோரும் மனுவுக்கு தமிழக அரசு பதி லளிக்க சென்னை உயர் நீதிமன்ற மது ரைக்கிளை திங்கள்கிழமை உத்தர விட்டது.

திருச்சியைச் சேர்ந்த டாக்டர் அம்பேத்கர் பவுண்டேசன் நிர்வாகி பொன்தம்மபாலா இம்மனுவை தாக்கல் செய்துள்ளார். மனு விவரம் _ தமிழகத்தில் சாலைகள், தெருக்கள், பொது இடங்களுக்கு சூட்டப்பட்ட ஜாதிப் பெயர்களை நீக்குவதற்கு உரிய தீர்மானங்களை நிறைவேற்றுமாறு உள்ளாட்சி மன்றங்களுக்கு 1978இல் அரசு உத்தரவிட்டது. இதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து அறிக்கை அளிக்குமாறு அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், அந்த உத்தரவை உள்ளாட்சி மன்றங்கள் நிறைவேற்றவில்லை. திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ள முகவரிகளில் சாதிப்பெயர்கள் இடம் பெற்றிருந்ததை சுட்டிக்காட்டி, அவற்றை நீக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு 2014 செப்.15 இல் புகார் அனுப்பினேன். அந்தப் புகார் மனு, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட் டது. அதன்பிறகும் ஜாதிப் பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தமிழகத்தில் பொது இடங் கள், தெருக்களுக்கு சூட்டப்பட்ட ஜாதிப் பெயர்களை நீக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இம்மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வா ணன், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங் கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசா ரணைக்கு வந்தது. மனுவுக்கு தலை மைச் செயலர், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச் சித் துறை செயலர்கள் பதிலளிக்க நீதி பதிகள் உத்தரவிட்டனர். விசாரணை மார்ச் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது.

Read more: http://viduthalai.in/page1/97635.html#ixzz3U4vHAXF8

தமிழ் ஓவியா said...

எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், புலியூர் முருகேசன்களை பிற்போக்குச் சக்திகள் அச்சுறுத்திய நிலை

இப்பொழுது புதிய தலைமுறைப் பணியாளர்களை
தாக்கிய இந்துத்துவ அடிப்படைவாதிகள்

காவல்துறை துணை போகலாமா? மீண்டும் நெருக்கடி காலமா?
முற்போக்கு சக்திகளை ஒன்று திரட்டி முறியடிப்போம்

எழுத்தாளர்களையும், ஊடகத் துறையினரை யும் தாக்கும் அடிப்படைவாதிகளை முற்போக்கு சக்திகள் ஒன்று திரட்டி முறியடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நம் நாடு ஜனநாயக நாடு என்று இந்திய அரசியல் சட்டத்தின் படி அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் கடந்த 9 மாதங்களுக்குமுன் அமைந்த பா.ஜ.க. ஆட்சி என்னும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரின் ஆட்சியின் கீழ் அத்தன்மை வேகவேகமாக மாற்றப்பட்டு நவீன ஹிட்லரிச பாசீச ஆட்சியாக அவ்வாட்சி மாறி வரு கிறதோ என்ற அய்யம், பரவலாக எங்கும் எழுந்துள்ளது!

கருத்துரிமையைப் புறக்கணிப்பதா?

அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, மதச் சுதந்திர உரிமை - எல்லாம் மெல்ல மெல்லக்கூட அல்ல - வெகு வேகமாக காணாமற் போகிறதோ என்ற நிலை, தீ பரவுவது போல பரவி வருகிறது!

மோடி அரசுக்குத் தாளம் போட்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு முதலியவை மத்திய அரசின் இரயில்வே, மற்றும் பொது பட்ஜெட் மூலம் பறிக்கப்பட்டாலும் வாய் மூடி மவுனியாக தமிழக அரசும், தமிழ்நாட்டின் பெரும்பான்மை எம்.பி.க்களான 37 பேர்களும் (மாநிலங்கள் அவை 10 ஆக கூடுதல் உறுப்பினர்களும்) ஆளுங் கட்சி பலத்துடன் மத்திய அரசிடமிருந்து நிதி ஆதாரம் உட்பட பலவற்றைப் பெறும் சூழ்நிலை இருந்தும், வேறு சில காரணங்கள் காரணமாக மவுனத்தையும் தலையாட்டுதலையும், நடத்திடும் போக்கு நிலவுகிறது. ஆர்.எஸ்.எஸ்.

இந்துத்துவா ஆட்கள் எண்ணிக்கையில் வெகு குறைவாக இருந்தாலும் தமிழ்நாட்டில், கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரத்திற்கு எதிராக வன்முறைக் களத்தில் இறங்கி, எழுத்தாளர்களை மிரட் டியும், அடித்தும், உதைத்தும், ஆட்சி இயந்திரமும் அத் தகைய வன்முறையாளர்கள் பக்கம் சாயும் நிலையும்கூட இருக்கிறது என்பது வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரியதாகும்!

திருச்செங்கோடு எழுத்தாளர் பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் ஆகியோர் அப்படிப்பட்ட கொடு மைக்கு ஆளாகும் நிலையிலும் ஆட்சி, காவல்துறை குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தவறி யுள்ளனர்!
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகளே எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டது மிகவும் வெட்கக் கேடானது.

ஜாதி அரசியலால் லாபம் பெறலாம் என்ற அற்பத்தன ஆசையோ என்னவோ இதற்குக் காரணம் போலும்!

புதிய தலைமுறைப் பணியாளர்கள் தாக்கப்பட்ட கொடுமை


புதிய தலைமுறை என்ற ஒரு தனியார் தொலைக் காட்சியில் மகளிரை அழைத்து தாலிபற்றிய கருத்துக்கள் பற்றி ஒரு விவாதம் நடத்திட முனைந்தால் அவர்களை மிரட்டுவது, கேமிரா மேன்களை அடிப்பது, உடைப்பது, இதற்குக் காவல் துறை அதிகாரிகள் சிலரும் தாறுமாறாகப் பேசி - வசவுகளைப் பொழிவது எவ்வகையில் நியாய மாகும்?

புதிய தலைமுறை என்ற ஒரு தனியார் தொலைக் காட்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்று இதைஒதுக்கிவிட முடியாது.

இந்தப் போக்கு ஜனநாயக விரோத பாசிசத்தின் பச்சையான படமெடுத்தாடும் அவலம்!
இதனை திராவிடர் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

முன்பு தீபாவளி பற்றிய ஒரு கருத்துரைக்கும்கூட எதிர்ப்புக் குரல். நமது கூட்டங்கள் நடத்த முயன்றால், அதற்கு எதிராக ஒரு தயார் மனு வழமையாக காவல் நிலையங்களில் கொடுப்பது, அந்த அனாமதேயங்களின் மனுக்களை பெற்று ஏதோ பிரளயமே உருவாக இருப்பதைப் போல சில மாவட்ட காவல் துறை அதிகாரிகள் கருத்துச் சுதந்திர உரிமையைப் பறிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது!

கிருஷ்ணகிரியில் காவல்துறை ஒரு பெண் அதிகாரி தொடர்ந்து திராவிடர் கழகத்திற்கு எதிராக இப்படி ஒரு தடை முயற்சிகளைச் செய்து வரும் நிலை உண்டு.
விரைவில் நீதிமன்றத்திற்கேகூட அத்தகையவர்களை அழைக்கும் நிலையை திராவிடர் கழக சட்டத்துறை செய்யவிருக்கிறது!

இந்தக் கருத்துச் சுதந்திர பறிப்பு பற்றி முற்போக்கு சிந்தனையாளர்கள், ஒத்த கருத்து உள்ளவர்களை ஒன்று திரட்டி பல்முனைப் போராட்டங்களை அறிவிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள திராவிடர் கழகம் தயங்காது! நெருக்கடி காலம் திரும்புகிறதோ? நெருக்கடி காலத்தின் முடிவை ஆட்சியாளர்கள் மறந்து விடக் கூடாது.

சென்னை கி.வீரமணி தலைவர் திராவிடர் கழகம்
9.3.2015

Read more: http://viduthalai.in/page1/97527.html#ixzz3U4wXVXuP

தமிழ் ஓவியா said...

தாலி குறித்து விவாதம் நடத்தவே கூடாதா?


இந்து மத வெறி கும்பலுக்கு மாதர் சங்கம் கண்டனம்

சென்னை, மார்ச் 9_ தாலி குறித்து விவாதம் நடத்தக்கூடாது என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது இந்து மதவெறிகும்பல் தாக்குதல் தொடுத்துள்ளதை அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின்மாநிலத் தலை வர் எஸ்.வாலண்டினா, பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஞாயிறன்று ஒளிப்பரப் பப்பட விருந்த தாலி குறித்த விவாதநிகழ்ச்சியை ஒளிபரப்ப விடாமல் சில மதவெறி சக்திகள் தடுத்து நிறுத்தி உள்ளன. அந்த நிகழ்ச்சிஒளிபரப்பப்படாது என்று அறிவிக்கப்பட்ட பின்னரும் அந்த சமூக விரோதிகள் புதிய தலை முறை தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்பு கூடி அங்கிருந்த ஒளிப்பதிவா ளர் ஒருவரை தாக்கி விலை உயர்ந்த கேம ராவை உடைத்துள்ளனர். அத்துடன் பெண்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் சர்வதேச மகளிர் தினத்தன்று ஒரு பெண் பத்திரிகையாள ரையும் தாக்கியுள்ளது அதிர்ச்சியை தருகின்றது.

கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மதவெறி சக்தி களின் தாக்குதலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.தாலி என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்ட விஷய மல்ல. சங்ககால இலக்கி யங்கள் முதல் இன்று வரை தாலி குறித்த பல்வேறு கருத்துக்கள் பதிவு செய் யப்பட்டுள்ளன. தமிழகத் தில் ம.பொ.சி,பெரியார் போன்ற தலைவர்கள் தாலி குறித்த பல்வேறு விவாதங்களை நடத்தி கட்டுரைகளும் வெளி யிட்டு உள்ளனர். பெரியார் பெண்ணே உன்னை அடிமைப்படுத்தும் இந்தக் கயிறை அறுத்தெறி என்று பெண்ணடிமைத் தனத்தை சாடியுள்ளார்.

எனவே, தாலி குறித்து பேசவே கூடாது என்ற இந்த கலாச்சார காவலர் களின் கருத்து சுதந்திர பறிப்பு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேலும் இந்த தாக் குதல் நடைபெறும் போது காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்ததும் கண்டிக்கத்தக்கது. தமிழ கத்தில் ஜாதிய ஆதிக்க செயல்களை தமிழக காவல்துறை எப்படி கை கட்டி வேடிக்கை பார்க் கின்றதோ அப்படியே மதவெறி சக்திகளின் சமூக விரோத செயல்களையும் கை கட்டி வேடிக்கை பார்த்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதுடன் அந்த விவா தத்தினை ஒளிபரப்புவதற் கான ஏற்பாட்டினையும் செய்யவும் தமிழக அரசை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத் துகின்றது.

Read more: http://viduthalai.in/page1/97530.html#ixzz3U4x2CvsK

தமிழ் ஓவியா said...

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு அவசியமே!


மகாராட்டிர மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது சிறுபான்மை மக்களான முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க சட்டம் செய்யப்பட்டது.

இப்பொழுது அம்மாநிலத்தில் ஆளும் பொறுப்பில் இருக்கும் பி.ஜே.பி. சிவசேனைக் கூட்டாட்சி முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டைக் காலாவதி ஆகச் செய்துவிட்டது.
சிறுபான்மை மக்கள் என்றாலே பி.ஜே.பி. சிவசேனா, சங்பரிவார்க் கும்பலுக்குக் கடுமையான வெறுப்பும், வன்மமும் தான் மேலோங்கி நிற்கின்றன.

சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் குடியுரிமையின்றியும் வாழ முன் வர வேண்டும் என்று எழுதி வைத்தவர் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் தங்களின் குருநாதர் என்று போற்றித் துதிக்கும் எம்.எஸ். கோல்வால்கர்.

அப்படிப்பட்ட கொள்கையைக் கொண்டவர்கள் ஆளும் ஒரு மாநிலத்தில் இத்தகு நடவடிக்கைகள் என்பவை ஆச்சரியப்படுவதற்கில்லைதான்.

இந்தியாவை எடுத்துக் கொண்டால்கூட மேற்கு வங்கத்தில் 10 சதவீதம், கேரளாவில் 12 சதவீதம். கருநாடகத்தில் 4 சதவீதம், தமிழ்நாட்டில் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு கல்வியிலும்,வேலை வாய்ப்பிலும் முஸ்லிம் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்ற நிலையிலும்கூட முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது செல்லும் என்றே கூறப்பட்டு விட்ட நிலையில் மகாராட்டிர மாநிலத்தில் முந்தைய அரசின் முடிவை ரத்து செய்கிறது என்றால் இதன் பொருளென்ன?

உலகில் அதிக முஸ்லிம்கள் வாழக் கூடிய நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அத்தகைய ஒரு நாட்டில் அவர்கள் இரண்டாம் தரக் குடி மக்களாக நடத்தப்படுவது சரியானதுதானா?
நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா குழு தனது பரிந்துரை யில் கல்வி, வேலை வாய்ப்பில் முசுலிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடும் அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதே!
வேலை வாய்ப்பில் 5 சதவீதம் அளவுக்குத்தான் முசுலிம்கள் இடம் பெற்றுள்ளனர் என்று விசாரணை அறிக்கைகளே கூறுகின்றன. இந்த நிலையில் அவர்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வளர்ச்சி அடைய சட்டரீதியாக இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்!

16ஆவது மக்களவையில் 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில், முசுலிம்கள் வெறும் 24 பேர் மட் டுமே! இது 4.4 சதவீதமேயாகும். அவர்களின் மக்கள் தொகையோ 14 சதவீதமாற்றே.
பிஜேபி சார்பில் ஒரே ஒரு முசுலிம் கூட வெற்றி பெற முடியவில்லையே! 9 மாநிலங்களில் பிஜேபி ஆட்சி இருக்கிறது. அவற்றில் 155 அமைச்சர்கள் இருக் கிறார்கள் என்றால் அதில் இடம் பெற்றுள்ள முசுலிம் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? ஒன்றே ஒன்றுதான்.
சிறுபான்மை மக்களுக்கு இந்தியாவில் உரிய பாதுகாப்பு இல்லை; உரிய உரிமைகள் இல்லை என்பது அப்பட்டமான உண்மையாகும்.

இது ஏதோ முஸ்லிம் மக்களைச் சார்ந்த பிரச்சினையாகக் கருதி விடக் கூடாது - முடியாது. ஒட்டு மொத்தமான சமுதாயப் பிரச்சினையாகும். நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கிற சக மனிதனின் நல வாழ்வும், உரிமை வாழ்வும் கிடைக்க வழி செய்யா விட்டால் ஒரு ஜனநாயக நாட்டில்தான் நாம் வாழ்கிறோமா என்ற வினாவை எழுப்பாதா?

பொதுவாகவே மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி இடஒதுக்கீட்டில் நம்பிக்கை இல்லாத ஆட்சி என்பதைவிட அது கூடவே கூடாது என்று கருதுகிற கோட்பாட்டைக் கொண்டதாகும்.

மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை வேலை வாய்ப்பில் வழங்கினார் என்ப தற்காக சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் தானே பிஜேபியினர் என்பதை மறந்து விடக் கூடாது. இதனை எல்.கே. அத்வானி அவர்கள் தமது சுயசரிதை நூலில் தெளிவாகவே ஒப்புக் கொண்டு எழுதியுள்ளாரே.

சிறுபான்மையினருக்கு ஏதோ ஒரு மாநிலத்தில் நடந்தது தானே என்று மற்றவர்கள் பாராமுகமாக இருக்கக் கூடாது.

சமூக நீதியில் அக்கறை உள்ளவர் அத்தனைப் பேரும் ஒன்று சேர்ந்து அழுத்தமாகக் குரல் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் வீதிக்கு வந்து போராட வும் தயங்கக் கூடாது. சமூக நீதி என்பது இந்திய அரச மைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட ஒன்று; யாரோ கருணையின் அடிப்படையில் கொடுக்கிற பிச்சையல்ல.

Read more: http://viduthalai.in/page1/97543.html#ixzz3U4xCuyp6

தமிழ் ஓவியா said...

தாளமுத்து


இந்தி எதிர்ப்பு வரலாற்றில் நடராசன் - தாளமுத்து என்ற பெயர்கள் என்றென்றும் எதி ரொலிக்கும் இலட்சியப் பெயர் கள் ஆகும்.

1938 ஜனவரி 15 இல் நட ராசன் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வீரன் மரணத்தைத் தழுவினார். அது போர்க் குரலாக சென்னை சட்டசபையில் வெடித்தபோது ஆணவக்காரரான பிரதமர் ஆச்சாரியார் (ராஜாஜி) என்ன சொன்னார் தெரியுமா?

நடராசன் என்பவர் படிப்பு வாசனை அறியாத ஒரு அரி ஜன்; தன் தாய் மொழியிலும் கூட நடராசனுக்கு எழுதத் தெரியாது என்று பதிலளித்தார்.

படிப்பு வாசனையற்ற கார ணத்தால்தான் நடராசனுக்கு மர ணம் நேர்ந்தது என்று அமைச் சர் கருதுகிறாரா? என்று அப்துல் அமீர்கான் சுடச்சுடக் கேட்டார்.

படிப்பில்லாததால்தான் அந்தக் கைதி மறியல் செய்ய நேர்ந்தது. சிறையில் அவர் இறந்து போனார் என்று ராஜாஜி மமதை அடங்காமல் மறுமொழி கூறினார். அதே சென்னைச் சிறைச் சாலையில் அடுத்து இரு மாதங்கள் கழித்து தாளமுத்து என்ற நாடார் சமூகத்தைச் சேர்ந்த வீரர் மரணத்தைத் தழுவினார் (12.3.1939).

இறுதி ஊர்வலம் கண் ணீரும் கம்பலையுமாகப் புறப் பட்டது. மயானத்தில் தோழர் சி.பாசுதேவ் தலைமையில் இரங்கற்கூட்டம் நடைபெற்றது.

இந்தி எதிர்ப்பு எட்டாவது சர்வாதிகாரி எஸ்.சம்பந்தமும், தளபதி அண்ணா அவர்களும் இரங்கல் உரை ஆற்றினார்கள்.

அண்ணா அவர்கள் அப் போது பேசினார்: நடராசன் அடக்கமான காலத்து மீண்டும் இத்தகைய நிகழ்ச்சி தமிழ் நாட்டில் ஏற்படாதென நினைத் தேன். ஆனால், நாடார் குல திலகம் தாளமுத்து இறந்தது காண மனம் கலங்குகிறது. தோழர்கள் நடராசன் தாளமுத்து மரணத்தை என்னுடைய அண்ணன், தம்பி மரணம் என்றே கருதுகின்றேன். முன்பு நான் சாக்கோட்டை சுய மரி யாதை மாநாட்டில் பேசும் போது, நாடார் சகோதரர்களைத் தமிழர் அறப்போருக்கு வருமாறு வருந்தி அழைத்தேன். ஆனால், அவர்களைத் திருப்பிக் கொடுப் பதாக உறுதி கூற முடியாதெனத் தெரிவித்துத்தான் அழைத் தேன்.... நடராசனை - தாள முத்தை நாம் இழந்தோம். கண்ணீர் விட்டோம், கலங்கி னோம். நெஞ்சு துடித்தோம், நிலை தடுமாறினோம். ஆனால், இதே சமயத்தில் ஆச்சாரியார் மார்தட்டி, கருப்புக் கண்ணாடி யைத் துடைத்த வண்ணம் கலகலவெனப் பேசுவார். ஏன் பேசமாட்டார்? தமிழன் ஆச்சா ரியார் காலின்கீழ் இருக்கிறான்.

இரண்டு மணிகளை இழந் தோம். தமிழர் ஆட்சி ஏற்படும் போது இவ்விரு வீரர்களின் தியாகத்தை அடிப்படையாகக் கொண்டே அது எழுப்பப்படும். வருங்காலத்தில் விடுதலை பெற்ற தமிழகத்தில் தலைவர் பெரியாரை நடுவில் வைத்து இறந்த இரு மணிகளையும் பக்கத்தில் வைத்து உருவச் சிலை எழுப்பவேண்டும். ஏன் பெரியார் சற்றுத் தளர்ச்சி அடைந்த காலத்திலெல்லாம் இந்த இரு சமூகங்கள்தான் அவருக்கு உதவி செய்து வந் திருக்கின்றன என்று அண்ணா பேசியதை தாள முத்து மறைந்த இந்த நாளில் நினைவு கூர்வோம்.

- மயிலாடன்

குறிப்பு: மானமிகு கலைஞர் அவர் கள் சென்னையில் பெருநகர வளர்ச்சிக் குழுமம் கட்டடத்திற்கு (எம்.எம்.டி.ஏ.) தாளமுத்து- நடராசன் பெயர் சூட்டி வரலாற்றில் பதிவு செய்துள்ளார்).

Read more: http://viduthalai.in/e-paper/97720.html#ixzz3UCCU0n8C

தமிழ் ஓவியா said...

புதிய தலைமுறை அலுவலகம்முன் இன்று காலைகூட டிபன்பாக்ஸ் குண்டு வீச்சு எனும் வன்முறை!

ஒத்த கருத்துள்ளவர்கள் ஒன்று திரண்டு முறியடிப்போம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

புதிய தலைமுறை அலுவலகம் முன் இந்துத்துவா அடிப்படைவாதிகள் தொடர்ந்து மேற்கொண்டுவரும் வன்முறையைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தாலிபற்றிய விவாதம் ஒன்றினை புதிய தலை முறை தொலைக்காட்சி சில நாள்களுக்குமுன் ஏற்பாடு செய்ததை, மிரட்டி நடக்கவிடாமல் செய்ய, அந்த ஊடகவியலாளர்களான கேமிராமேன் மற்றும் சில ஊழியர்களைப் பின்புறத்தில் சென்று தாக்கி வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, கருத்துச் சுதந் திரத்தை எதிர்த்து அச்சுறுத்தல்களை மேற்கொண்டுள் ளனர்; அதுவும் மோடி அரசு மத்தியில் வந்ததை யொட்டி தங்கு தடையின்றி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மற்றும் மதவாத அமைப்புகள் வன்முறைகளில் தீவிரமாக இறங்கிவிட்டன. அவ்வமைப்புகளின் தலை வர்கள் வன்முறையை நியாயப்படுத்துவது போன்ற அறிக்கைகள் வாயிலாக அச்செயல்களைத் தூண்டு வதும் வெளிப்படையாகி விட்டது.

தாலி அணிதல் மதத்தின் கலாச்சாரமா?

தாலி அணிதல் என்பது ஒரு மதத்தின் கலாச்சாரம் என்றுகூட எவராலும் வாதிட முடியாது; காரணம், மதுரை, தேனி போன்ற சில மாவட்டங்களில் மற்றும் பல பகுதிகளில் தாலி கட்டாத வைதிக திருமணங்களே பலவும் வழமையாக (Customary Marriages) நடை பெற்று வருவது கண்கூடு.

இதை ஒரு விவாதத்திலேயே கொண்டு வரக்கூடாது என்பதற்காக அத்தகைய தொலைக்காட்சி ஊடக ஊழி யர்களைத் தாக்குவது வன்மையான கண்டனத்திற் குரியது. இது அச்சுறுத்திப் பணிய வைக்கும் பாசிச அணுகுமுறையாகும்.

இதுகுறித்து நாம் சில நாள்களுக்கு முன் (9.3.2015) அறிக்கையும் விடுத்தோம்.

புதிய தலைமுறை அலுவலகம்முன் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு!

இன்று (12.3.2015) காலை அதே அலுவலகம் (புதிய தலைமுறை) முன்பு இரண்டு டிபன்பாக்ஸ் குண்டு களை வெடிக்கச் செய்துள்ளதானது - மிகமிக வேத னைக்கும், வெட்கத்திற்கும், வன்மையான கண்டனத் திற்கும் உரிய நடத்தை கெட்ட செயல் அல்லவா?
அந்த அலுவலகத்திற்கு முன்பே தக்க பாதுகாப்பு அளிப்பது காவல்துறையின் கடமையல்லவா?

மதவறியர்களைக் கைது செய்க!

மதவெறியர்களை உடனடியாகக் கைது செய்து, கருத்துச் சுதந்திர உரிமையைக் காவல்துறையும், தமிழ்நாடு அரசும் நிலை நிறுத்த முன்வரவேண்டும்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இந்த லட்சணத்தில் இருக்கிறது என்று மற்றவர்கள் பேசுவார்களே என்ற கவலை கூடவா இந்த அரசுக்கு இருக்காது?

ஒத்த கருத்துள்ளவர் ஒன்று திரண்டு எதிர்த்திடுவோம்!

இது ஒரு தொலைக்காட்சிமீது நடத்தப்பட்ட அச் சுறுத்தல் வன்முறை என்று எடுத்துக்கொள்ள முடியாது; ஒட்டுமொத்த கருத்துச் சுதந்திரத்தின்மீது தொடுக்கப் பட்ட போர்! இதற்குத் தக்க பதிலடியை - வன்முறையால் அல்ல - ஒன்று திரண்டு ஓங்கிய குரலால், ஒத்தக் கருத்துள்ள அனைவரும் ஓரணியில் திரண்டு ஒலிக்க முன்வரவேண்டும் - முறியடிக்கவேண்டும்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
12.3.2015

Read more: http://viduthalai.in/e-paper/97725.html#ixzz3UCChV07N

தமிழ் ஓவியா said...

மாற்றுத் திறனாளிகளை அலைக்கழிக்க வைக்கக் கூடாது;

அவர்களின் பிரதிநிதிகளை முதலமைச்சர் சந்திக்கவேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியரின் மனிதநேய அறிக்கை


கண் பார்வையற்றோர் தங்கள் கோரிக் கைகளை வலியுறுத்தி தொடர் பட்டினிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களை முதலமைச்சர் சந்திக்க மறுக்கக் கூடாது; நேரத்தை ஒதுக்கி அவர்களின் பிரநிதிகளைச் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை நிறை வேற்றவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு:-

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் ஒன்பது அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி காலவரையற்ற தொடர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றனர்.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சார்பார்ப்பு முடித்து காத்திருக்கும் தகுதியுடைய பார்வையற்ற அனைவரையும் உடனடியாக பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக தகுதியுடைய 200 பார்வையற்ற பட்டதாரிகளை உடனடியாக சிறப்புத் தேர்வு நடத்தி பணி நியமனம் செய்ய வேண்டும், உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு இணங்க தமிழக அரசு உடனடியாக குழு ஏ மற்றும் பி பிரிவு பணியிடங்களில் 500 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஆவன செய்யவேண்டும். பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கவேண்டும்.

பார்வையற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசினால் வழங்கப்படுகின்ற ஊர்தி பயணப்படியினை மத்திய அரசு வழங்குவது போல் அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்கவேண்டும். பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு எழுத வரும் எழுதுனர்களுக்கு 300 ரூபாய் வழங்கி அரசாணை வெளியிட வேண்டும் எனும் கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர்.

கண் பார்வையற்றவர்களைச் சந்திக்க மறுப்பதா? முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து நேரில் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முதல மைச்சர் இதுவரை ஏற்காதது வேதனைக்குரியது. கண் பார்வையற்றவர்களைச் சந்திப்பதுகூட இந்த ஆட்சியில் இயலாத ஒன்று என்ற நிலை ஆரோக்கியமானதல்ல. மாற்றுத் திறனாளிகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் மிகவும் அக்கறை செலுத்தி வருகிறது. உலகின் மிகப்பெரிய சிறுபான்மையினர் மாற்றுத் திறனாளிகள் என்றும் அது கூறுகிறது. இந்தியா வில் மட்டும் 7 கோடிக்கும் அதிகமானோர் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.

அய்.நா.சாசனம் என்ன கூறுகிறது?

2006 ஆம் ஆண்டு ஊனமுற்றோருக்கான அய்.நா.சாசனம் விதிகளுக்கு இந்தியாவும் கையொப்பமிட்டு ஆதரவு தந்துள்ளது. மாற்றுத் திறனாளிகளின் தேவைகளைக் கருணை அடிப் படையில் நோக்கக் கூடாது. உரிமையின் அடிப் படையில் பார்க்கவேண்டும் என்றும், அவர் களுக்கு எதிரான பாரபட்சங்களுக்கு முடிவு கட்டப்படவேண்டும் என்றும் அய்.நா. சாசனம் வலியுறுத்துகிறது; அந்த வகையில் விதிகளையும் உருவாக்கியுள்ளது.

இந்திய மக்கள் தொகையில் கல்வி கற்றவர் சதவிகிதம் 64.8 என்ற நிலையில், மாற்றுத் திற னாளிகள் 49 விழுக்காடு அளவே கல்வி கற்றவர் என்ற நிலையில் உள்ளனர். தேசிய அளவில் வேலை வாய்ப்பில் 0.4 சதவிகிதமே என்பது அவர் களின் பரிதாப நிலையை விளக்கவில்லையா?

இந்தப் பரிதாப நிலை அவர்களைப் பொறுத் ததல்ல; ஒட்டுமொத்தமான சமுதாயத்திற்கே ஏற்பட்டுள்ள இழுக்கு என்றே கருதவேண்டும். ஊனமுற்றோருக்கான தனி இயக்கம் 1993 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கான விரிவான கொள்கைகளும் அறிவிக்கப்பட்டன.

இவற்றைச் சரிவரச் செயல்படுத்தியிருந்தால் மாற்றுத் திறனாளிகள் தொடர் பட்டினிப் போராட்டம் இருக்கவோ, சாலை மறியல் செய் யவோ வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது.

காவல்துறையினர் நடத்தும் முறை - கொடுமையானது!

வேறு வழியின்றி அவர்கள் அறவழிப் போராட்டங்களில் ஈடுபடும்பொழுது அவர் களைக் காவல்துறையினர் நடத்தும் முறை மனிதாபிமானமற்ற முறையில் இருப்பது கண்டிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

முதலமைச்சர் நேரத்தை ஒதுக்கவேண்டும்

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்குத் தமிழக முதலமைச்சர் நேரத்தை ஒதுக்கித் தந்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

உரிமையும், மனிதாபிமானமும் இரண்டறக் கலந்த பிரச்சினை இது. இதற்கு முன்னுரிமை தரப்படவேண்டும் என்று சமூகநீதிக்காக அயராது பாடுபட்டுவரும் திராவிடர் கழகம் வலியுறுத்துகிறது.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
12.3.2015

Read more: http://viduthalai.in/e-paper/97722.html#ixzz3UCCpReta

தமிழ் ஓவியா said...

இதுதான் இந்துத்துவா ஆட்சி

பாலியல் குற்றங்களைவிட மாட்டிறைச்சி தடைக்கு அபராதம் அதிகமாம்

மாட்டிறைச்சி வைத்திருப்போர் அல்லது விற்பனை செய்வோருக்கு அய்ந்தாண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது


புதுடில்லி, மார்ச் 12_ ஏழைகளின் புரதச் சத்து மிக்க உணவாக திகழும் மாட்டிறைச்சிக்கு மகா ராஷ்டிரத்தில் தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த திரி ணாமுல் எம்.பி., இந்தத் தடையை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தைவிட, பாலியல் வன் முறை வழக்குகளுக்கு விதிக்கப்படும் தொகை குறைவாக உள்ளதாக தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநி லத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாட்டிறைச்சி வைத்திருப் போர் அல்லது விற்பனை செய்வோருக்கு 5 ஆண்டு கள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அப ராதம் விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திரிணாமுல் எம்.பி. தெரீக் ஓப்ரியன், மகா ராஷ்டிரத்தில் மாட்டி றைச்சி விற்பனைக்குத் தடை விதித்திருப்பது குறித்து பேசும்போது, மாட்டிறைச்சி விவ காரத்தை நாம் மதம் சார்ந்த கோணத்தில் பார்க்கக்கூடாது. இந்தத் தடையால் சிறுபான்மை யினர், தலித் மக்கள் என தாழ்த்தப்பட்டச் சமூகத் தைச் சார்ந்த பலர் பாதிக் கப்படுவார்கள். வடகிழக்கு மாநில மக்கள் அனை வரும் மாட்டிறைச்சியை தங்களது முக்கிய உண வாக கொண்டிருக்கின் றனர். ஏழைகளின் புரதச் சத்துமிக்க உணவாக திக ழும் மாட் டிறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஏற்கக் கூடியதாக இல்லை.

பாலியல் வன்முறை குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு விதிக் கப்படும் தண்டனையை விட இந்தத் தடை உத் தரவு பயங்கரமானதாக உள்ளது. அதில், வழங்கப் படும் அபராதத் தொகை யைக் காட்டிலும் மாட்டி றைச்சி தடைக்கு அபரா தம் அதிகமாக உள்ளது.

இந்த தடையால் மற்ற இறைச்சிகளின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. கோழிக்கறி, மீன் உள்ளிட்டவைகளின் விலை ஏற்கெனவே அந்த மாநிலத்தில் உயர்ந்து விட்ட நிலையில் இந்தத் தடை பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். மகாராஷ்டிராவில் ஏற் கெனவே 55 சதவீத அள வுக்கு தீவன தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தச் சட் டத்தால் வயது முதிர்ந்த மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து விடும். விவ சாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் வேறொரு விலங்குக்கு தடை உள் ளது. ஆனால், குறிப் பிட்ட கடைகளில் விற் பனை செய்ய அவர்கள் அனுமதித்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

ஓப்ரியன்னின் கருத் துக்கு பாஜக எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உறுப்பினர்களுக்கு எந்த விவகாரத்தையும் எழுப்பும் உரிமை உள்ளது. ஆனால் அதனை முறையாக எழுப்ப வேண்டும். இந்த விஷயத் தில் விவாதத்துக்கு அனு மதிக்கக் கூடாது என்று மாநிலங்களவை அரசி யல் விவகாரங்களுக்கான அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/97726.html#ixzz3UCCx0ZEB

தமிழ் ஓவியா said...

பிள்ளையால் வரும் தொல்லை


ஒரு மனிதன் தான் பிள்ளை குட்டிகாரானாய் இருப்பதனாலேயே யோக்கியமாகவும், சுதந்திரமாகவும் நடந்துகொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாயிருக்கின்றான். அன்றியும், அவனுக்கு அனாவசியமான கவலையும், பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றன. - (குடிஅரசு, 12.8.1928)

தமிழ் ஓவியா said...

கா(லி)விகளின் அட்டகாசம்!
புதிய தலைமுறை அலுவலகம் மீது குண்டு வீச்சு

சென்னை, மார்ச் 12_ சென்னையிலிருந்து ஒளி பரப்பாகிவரும் புதிய தலைமுறை தொலைக் காட்சி நிறுவனத்தின் தலைமையகத்தின் மீது இன்று அதிகாலையில் வெடி குண்டு வீசப்பட்டது.

அதிகாலை மூன்று மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் டிபன் பாக்ஸ் போன்ற பாத்திரத்தில் பொருத்தப்பட்ட குண்டு களை அலுவலகத்தின் மீது வீசிவிட்டுச் சென்று உள்ளனர். இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. பொருட்களுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இதையடுத்து அந்த அலுவலகத்தின் முன்பாக பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக் கப்பட்டுள்ளனர். வெடி குண்டு நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு, அந்த வெடிகுண்டின் பாகங்கள் சேகரிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை; பொருட்களும் சேதமடையவில்லை.

சிசிடிவி கேமராக் களில் பதிவாகியிருக்கும் காட்சிகளை வைத்து, குண்டுவீசிய நபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தாலி தொடர்பான விவா தம் ஒன்று ஒளிபரப்பாகவி ருந்தது. இந்த விவாதத்தை ஒளிபரப்பக்கூடாது என இந்து அமைப்புகள் சில எதிர்ப்புத் தெரிவித்து ஞாயிற்றுக் கிழமையன்று போராட்டம் நடத்தின.

இந்தப் போராட்டத் தின்போது புதிய தலை முறை தொலைக்காட்சி யின் ஒளிப்பதிவாளர் ஒரு வர் தாக்கப்பட்டார். ஒளிப்பதிவுக் கருவி ஒன்று சேதப்படுத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர் பாக 10 பேர் கைது செய் யப்பட்டனர்

Read more: http://viduthalai.in/page-8/97767.html#ixzz3UCEWkHDl

தமிழ் ஓவியா said...

இதுதான் திருப்பதி?

திருப்பதி ஏழுமலை யான் என்றால் இந்தியா விலேயே பெரிய கல்லு முதலாளி அவர்தான். எத் தனை வேளை விருந்து படைத்தால் தான் என்ன பயன்? அவரா தின்று கொழுக்கப் போகிறார்? அவரை வைத்து அரை டன் அரை டன் கன பாடிகள் வைத்ததுதான் சட்டம்.

புனித நகரம் என்று பினாத்துகிறார்களே - அந்தத் திருப்பதியின் யோக்கியாம்சம் தான் என்ன?

இதோ சரக்கு 1

புனித நகரமாக கருதப் படும் திருப்பதி, சித்தூர் மாவட்டத்தில் மது விற் பனையில் முதலிடமாக உள்ளது என கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 415 மதுக் கடைகள் மற்றும் பார்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு சித்தூர் மாவட்டத்தில் மட்டும் ஆயி ரத்து 188 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற் றுள்ளது. இதில் சித்தூர் மாவட்டத்தில் முதலிடம் வகிப்பது புனித நகரமான திருப்பதி; அங்கு கடந்த 2014ஆம் ஆண்டு ரூ.192 கோடிக்கு விற்பனையானது. சிறீகாளஹஸ்தியில் 2013ஆம் ஆண்டு ரூ.104 கோடிக்கு விற்பனையானது. 2014ஆம் ஆண்டு ரூ.103 கோடிக்கு விற்பனையானது. (தினகரன் 26.2.2015)

இதோ சரக்கு 11

திருமலை - திருப்பதி தேவஸ்தானம் வெளியிடும் காலண்டர், பஞ்சாங்கத்தை எனது உறவினர் வீட்டில் ரெகுலராக வாங்குவார்கள். அதே போல், அவர்கள் வாங்கி யிருந்த பானு ஆண் டிற்கான பஞ்சாங்கத்தைப் பார்க்க நேர்ந்தது. அதில் 130ஆம் பக்கத்தில் மனை வாங்க - விற்க - வாகனம் வாங்க - விற்க - பயணம் செய்ய என பல நல்ல காரி யங்களுக்கு உகந்த நாள்கள் கச்சிதமாகக் குறிப்பிடப்பட் டுள்ளன. ஆனால் அந்தப் பக்கத்தின் கடைசியில் அச்சா கியிருந்த விஷயம்தான் அதிர்ச்சியைத் தந்தது. அதாவது மதுபானம் அருந்த உகந்த நாள்கள் என்ற தலைப்பில் சில நல்ல நாள்களும் தெரிவிக்கப்பட் டுள்ளன. மதிப்பிற்குரிய திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள பஞ்சாங்கத் தில், நமது பண்பாட்டுக்குப் பொருத்தமற்ற இப்படிப்பட்ட செய்தியை வெளியிடப்பட்டி ருப்பது மிகுந்த வருத்தத்தை யும், வேதனையையும் அளித் தது. இந்தத் தவறைத் திருத்த தேவஸ்தான நிருவாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும். மேலும் அடுத்த வருட புதிய பஞ்சாங்கத்தில் இது போன்ற நல்ல விஷயங்கள் இடம் பெறாமல் கவனிக்க வேண்டும். ஏ மண்டி, பாக சூஸ்துரா?

-எஸ். வத்சலா, கெங்காபுரம்

(குமுதம் ரிப்போர்ட்டர் 6.7.2003 பக்.21)

இதோ சரக்கு 111

திருப்பதியில் 20 முதல் 25 செக்ஸ் மய்யங்கள் இயங்கி வருகின்றன. இதில் 400 விபச்சார அழகிகள் உள்ளனர். இங்கு எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த மே மாதம் திருப்பதியில் 7,604 ஆண்களிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. 268 பேருக்கு எச். அய்.வி. கிருமி தொற்றியிருப் பது தெரிய வந்துள்ளது - ஆந்திர எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி சந்திரவதன் திருப்பதியில் செய்தி யாளர்களிடம் கூறினார்.
(தினத்தந்தி 21.6.2008 பக்.17)

புனித நகரத்தின் யோக் கியதைக்கான சரக்குகள், அத்தாட்சிகள் போதுமா? திருப்பதி ஏழுமலையான் ஊரில் ஒழுக்கத்திற்கோ கோவிந்தா! பண்பாட்டுக்கோ பட்டை நாமம்! - மயிலாடன்

குறிப்பு: கோயில்கள் விபச்சார விடுதிகள்!

- காந்தி மகான்

Read more: http://viduthalai.in/e-paper/97846.html#ixzz3UMisEQgI

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் சிறுபான்மையினர் யாரும் கிடையாதாம்!

அனைவரும் இந்துக்களாம்! ஆர்.எஸ்.எஸின் அடாவடித்தனம்!


நாக்பூர், மார்ச் 14_ இந்தியாவில் சிறுபான் மையினர் என்று யாரும் கிடையாது, அனைவரும் இந்துக்களே என்று ஆர். எஸ்.எஸ். இணை பொதுச் செயலாளர் தத் தாத்ரேயா ஹோசபாலே தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். கூட் டம் மராட்டிய மாநிலம், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்நிலைக் குழுவான அகில பாரதீய பிரதிநிதி சபாவின் (ஏ.பி.பி.எஸ்) மூன்று நாள் கூட்டம் நேற்று தொடங் கியது. நாடு முழுவதும் இருந்து 1,600க்கும் மேற் பட்ட உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தின் இடையே ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் இணை பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:

அனைவரும் இந்துக் களே இந்தியாவில் சிறு பான்மையினர் என்று யாருமே கிடையாது. இங்கு கலாச்சார அடிப் படையிலும், தேசிய ரீதி யிலும், டி.என்.ஏ. அடிப் படையிலும் அனைவரும் இந்துக்களே. நாங்கள் யாரையும் சிறுபான்மை யினராக கருதவில்லை. இந்தியாவில் சிறுபான்மை கருத்து இருக்கக்கூடாது. இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்களே என்று மோகன் பகவத் (ஆர்.எஸ்.எஸ். தலைவர்) 20 தடவை சொல்லி இருக் கிறார். இதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ, இல்லையோ, ஆனால் கலாச்சார, தேசிய மற்றும் டி.என்.ஏ. அடிப்படையில் அனைவரும் சமமான வர்கள் தான்.இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து கூறியதாவது:

நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் மத்திய அரசு சில திருத்தங்களை கொண்டு வந்தபின்னர், அந்த மசோதா மோச மானதாக இல்லை. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந் தஸ்து அளிக்கும் ஷரத்து 370 மீதான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிலைப்பாட் டில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார்.

எச்சரிக்கை

இந்தியாவில் நாள் தோறும் 5000 குழந் தைகள் புகையி லைக்கு அடிமையா கின்றனராம்.

பெற் றோர்களே, ஆசிரியர்களே, கவனியுங்கள்! கவனியுங்கள்!!

Read more: http://viduthalai.in/e-paper/97847.html#ixzz3UMjpdrFG

தமிழ் ஓவியா said...

போலீஸ் யோக்கியதை

உப்புசத்தியாக்கிரக சட்டமறுப்பு காலங்களில் இருந்து போலீசாருக்கு ஒரு புதிய யோக்கியதை ஏற்பட்டுவிட்டது. அதாவது போலீசு எவ்வளவு அக்கிரம மாகவும், அயோக்கியத்தனமாகவும் நடந்து கொண்டாலும் அதற்கு எவ்வித கேள்வியும், கேட் பாடும் கிடையாது என்பதாகும்.

போலீசு இலாகாத் தலைமை அதிகாரிகளுக்கும் நிர்வாக தலைவர்களுக் கும் சட்டசபை அங்கத் தினர்கள் கேட்ட கேள்வி களாலும், தேசியப் பத்திரிகைகள் வைத வசவுகளாலும், பொது ஜனங்கள் மண்ணை வாரித்தூற்றி சாபம் கொடுத்து சபித்ததாலும், புத்தியும் நாணயமும், யோக்கியப் பொறுப்பும் காப்புக்காச்சி மறத்துப் போய் விட்டதுடன் அவர்களது தோல் காண்டாமிருகத் தோலுக்கு சமமாய் போய்விட்டது.

இனி, எந்தக் காரணத்தை முன்னிட்டும் போலீசு இலாகாவை திருத்தவோ, அவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்யவோ யாராலும் முடியாது என்கின்ற பதவியை அது அடைந்து வருவதாகத் தெரிய வருகின்றது.

இது அந்த இலாகாவுக்கு ஒரு கவுரவம் தான் என்றாலும் நம்மைப் பொறுத்தவரை இனி நம்மால் போலீசு இலாகாவைத் திருத்த முடியாவிட்டாலும் போலீசு இலாகாவினால் நாமாவது திருத்துபாடடைந்து இனிமேல் இப்படிப்பட்ட விஷயங்கள் நம் கண்ணில் தென்படாமலும், காதில் கேட்கப் படாமலும் உள்ள நிலையை அடைய வேண்டியது அவசியம் என்று கருதுகின்றோம். ஏனெனில். சமீப காலத்துக்குள் இரண்டு இடங்களில் போலீசு அட்டூழியம் ஏற்பட்டு விட்டது.

ஒன்று காரைக்குடியில் ஒரு நாட்டுக் கோட்டை நகரத்து வாலிபரையும் மற்றும் இரு தோழர்களையும் தெருவில் நடக்கும் போது அடித்து துன்புறுத்தி அரஸ்ட் செய்தது. இரண்டு நீடாமங்கலத்தில் தோழர் கே. ராமையாவையும் மற்ற இரு நண்பர்களையும் தெருவில் நடக்கும் போது ஒரு நண்பரை யார் அடிக்கிறார் என்று ஒருவர் தலை நிமிர்ந்து பார்த்ததற்காக அடித்து துன்புறுத்தி அரஸ்ட் செய்து மூன்று நாள் தண்டித்து கொடுமைப்படுத்தியது ஆகிய காரியங்களுக்கும் மற்றும் அவர்கள் குடிகாரன்,

வெறிகாரன் போலும் கீழ் மக்கள் என்பவர்கள் போலும் வைவதும் நடந்து கொள்ளுவது மான காரியங்களைப் பார்த்தால் இதன் உண்மை விளங்கும்.

சுயமரியாதைக்காரர்கள் எந்த இடத்திலாவது இதுவரை போலீசு அல்லது நீதி நிர்வாக இலாகா உத்தரவுகளை மீறியோ அல்லது சட்டம் என்பதற்கு விரோதமான காரியங்களைச் செய்தோ இருந்தால் இவ்வித காரியங் களைப்பற்றி பேசவோ, எழுதவோ ஒருநாளும் வெளிவர மாட்டோம்.

அனாவசியமாய் பார்ப்பனர்கள் இடம் கூலி பெறவும் அகஸ்மாத்தாய் தங்கள் அயோக்கியத்தனமான நடவடிக்கைகளும் முட்டாள்தனமான நடவடிக்கைகளும் பிரசங்கத்தில் வெளியாய் விட்டதாகக் கருதிக் கொண்டும் இந்தப்படி நடந்து கொண்டால், அதன் எல்லை முழுவதையும் பார்த்து விடவேண்டும் என்றும் அந்த இலாகா வின் யோக்கியதையை வெளிப்படுத்திவிட வேண்டும் என்பது தான் நமது கருத்து.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 16.04.1933

Read more: http://viduthalai.in/page-7/97887.html#ixzz3UMmKQNK9

தமிழ் ஓவியா said...

தீபாவளி முட்டாள்தனம்

தோழர்களே! தீபாவளி கொண்டாடப்போகிறீர்களா? அதன் கதை தெரியுமா? பகுத்தறிவுள்ள மனிதனுக்குப் பிறந்தவர்களாய் இருந்தால் இம்மாதிரி இழிவும், பழிப்பும் முட்டாள் தனமுமான காரியத்தைச் செய்வீர்களா? தீபாவளியை விளம்பரம் செய்கின்றவர்கள் யார்? சோம்பேறியும், துரோகியும், அயோக்கியர்களுமான கழுகுக்கூட்டமல்லவா?

கதர் கட்டினால் தான் சரியான தீபாவளி என்று பல சுயநல சூழ்ச்சிக்காரர்கள் சொல்லுகிறார்கள். இது மகா மகா பித்தலாட்டமாகும். இதற்கும் பார்ப்பன அயோக்கியர் களுடன் அரசியல் அயோக்கியர்களும் சேர்ந்து அனு கூலமாயிருந்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தான் சொல்லவேண்டும். சொன்னதை எல்லாம் கேட்பதுதானா பார்ப்பனரல்லாத மக்களின் நிலை?

மலம் சாப்பிட்டால் மோட்சம் வரும் சுயராஜ்யம் வரும் என்றால் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடுவதுதான் மத தர்மமா? தேசிய தர்மமா? மதத்துக்காக மாட்டு மலம் சாப்பிடுவது போல் அரசியலுக்காக பணத்தை வீணாக்குவதா? சென்னையில் தீபாவளிக்கும், கதருக்கும் செய்யப்பட்டிருக்கும் விளம்பரம் குச்சிக்கார தாசி விளம்பரத்தையும் தோற்கடித்து விடும்போல் காணப்படுகின்றன.

இந்த செலவுகள் யார் தலையில் விடியும் தெரியுமா? புத்தி இருந்தால் பிழைத்துக்கொள்ளுங்கள். கோபிப்பதால் பயனில்லை.

குறிப்பு:- ஒவ்வொரு சுயமரியாதைச் சங்கத்திலும் நாளையே தீபாவளியைப் பற்றிப் பொதுக்கூட்டம் கூட்டி மக்களுக்கு தீபாவளிப் புரட்டையும் கதர் புரட்டையும் எடுத்துச் சொல்லக்கோருகிறோம்.

குடிஅரசு - செய்தி - 15.10.1933

Read more: http://viduthalai.in/page-7/97888.html#ixzz3UMmduRtL

தமிழ் ஓவியா said...

தோழர் ஈ.வெ.ரா.நாகம்மாள்

குடிஅரசு பத்திரிகையின் பதிப்பாளராகிய தோழர் ஈ.வெ.ரா. நாகம்மாள் அவர்கள் சென்ற ஒரு வாரமாக உடல் நிலை சரியில்லாது ஈரோடு லண்டன் மிஷன் ஆஸ்பத்திரி யில் டாக்டர் போலார்ட் அவர்களால் சிகிச்சை செய்யப்பட்டு வருகிறார்கள்.

இது சமயம் சற்று சவுக்கியமாகவிருக்கிறது விரைவில் குணமடைந்து விடலாமென டாக்டர் கூறுகிறார். தோழர் நாகம்மாள் அவர்களைப் பார்ப்பதற்கு தோழர்கள் ஆர். கே. ஷண்முகம் பி. ஏ. பி. எல். எம். எல். ஏ., சி. எஸ். இரத்தன சபாபதி எம். எல். சி. வி. எஸ். செங்கோட்டையா, முருகேச முதலியார், ஈரோடு முனிசிபால் சேர்மன் கே. ஏ. ஷேக்தாவுது சாயபு முதலிய ஆயிரக்கணக்கான பேர்கள் வந்து போனார்கள். இரண்டு மூன்று நாளாய் யாரையும் பார்க்க அனுமதிப்பதில்லை.

மாயவரத்திலிருந்து தோழர்கள் சி. நடராஜன் எஸ். சம்மந்தம், இரத்தினம், டி. சின்னையா, எஸ்.வி. லிங்கம் ஆகியவர்களும், சேலம் நடேசன், பாலுசாமி, அம்புலு, பவானிசிங், ஆகியவர்களும், திருச்செங்கோடு வரதராஜலு, ஜலாண்டாபுரம் அர்த்தனாரி, சிவலிங்கம், திருச்சி எஸ். நீலாவதி ராமசுப்பிரமணியம் ஆகியவர்களும், பாபநாசம் சாமி. சிதம்பரனார் சிவகாமி அவர்களும்,

சென்னை எஸ். குருசாமி - குஞ்சிதம் ஆகியவர்களும், தஞ்சை அய். குமாரசாமி பிள்ளை அவர்களும் மற்றும் பலரும் வந்திருக் கிறார்கள். தமிழ் நாடு ஆசிரியர் தோழர் வரதராஜலு, தோழர்கள் எம். சிங்காரவேலு, தூத்துக்குடி பெரியசாமி, முதலியவர்களிடமிருந்து தந்தியும் அநேகர்களிடமிருந்து கடிதங்களும் வந்திருக்கின்றன. ஆஸ்பத்திரியில் ஜனங் களை தாராளமாய் விடுவதில்லை.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 07.05.1933

Read more: http://viduthalai.in/page-7/97889.html#ixzz3UMmoGOPl

தமிழ் ஓவியா said...

வான நூல்களை எடுத்துக் கொண் டால் மதச் சம்பந்தமானது. புராணச் சம்பந்தமான புளுகுகள், ஆபாசங்கள், அவையும் 100-க்குத் 90 வடவன் கொண்டு வந்து ஜோசியன் பிழைக்கப் புகுத்தினதுடன் காரியத்திற்கு, அனுபவத்திற்குப் பயன்படாத குப்பைக் கூளங்களைத் தவிரத் தெரிந்து கொள்ளவேண்டிய, வளர்ச்சிக்குப் பயன்படக் கூடிய சரக்கு அதில் என்ன இருக்கிறது?

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/97889.html#ixzz3UMmuIVUy

தமிழ் ஓவியா said...

மன்னிப்புக்கோரும் ஆர்.எஸ்.எஸ்.

இந்திய வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீர் பாகிஸ்தானில் இருப்பதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப் பூர்வ இதழான ஆர்கனைசர் வெளியிட்டு இருந்தது அல்லவா?

அது புயலாக வெடித்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். வேறு வழியின்றி மன்னிப்புக் கோரியுள்ளது. மற்றவர்கள் செய்திருந்தால் அடேயப்பா எப்படி எல்லாம் குதித்திருப்பார்கள்?

கண்ணில்லையா முதல்வருக்கு?

கண் பார்வையற்றோர் கடந்த ஆறு நாட்களாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களைக் குண்டு கட்டாகக் காவல் துறையினர் தூக்கிச் செல்வதும், பார்வையற்றவர்கள் கதறுவதும் கண்ணுள்ளோர் அனைத்து உள்ளங்களிலும் ரத்தக் கண்ணீரை வர வழைக்கின்றது - கண் பார்வையற்றவர்கள்மீது கண் பார்வைபடாதா தமிழக முதல்வருக்கு?

போனுக்குக் கவசம் - தலைக்கு அலட்சியம்

கைப்பேசிகளுக்கு கவசம் போடும் வாகன ஓட்டிகள் தலைக்குக் கவசம் அணிவதில் கவலையற்றுள்ளனர். 80 சதவீத வாகன ஓட்டிகள் இந்த நிலையில்தான் உள்ளனர் என்று ஆதகங்கப்படுகிறார் மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். - நியாயமான ஆதங்கம் தானே!

சாதிக்க முடியுமா?

லண்டன் பிபிசி நிறுவனம் இந்தியாவின் மகள் என்ற ஆவணப் படத்தை வெளியிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்குப் பதிலடி என்ற பெயரில் இங்கிலாந்தின் மகள்கள் என்ற பெயரில் வீடியோ டுவிட்டரில் உலா வருகிறதாம். தயாரித்தவர் ஹர்ஷர்தர்சிங் என்பவர்; இங்கிலாந்து உட்பட மேற்கத்திய நாடுகளில் பாலியல் வன்முறை எவ்வளவு மோசம் என்று அதில் காட்டப் படுகிறதாம். இதன் மூலம் புண்ணிய பாரத பூமியில் பாலியல் வன்முறை கிடையவே கிடையாது என்று சாதிக்க முடியுமா?

ஒரு குற்றத்துக்கு இன்னொரு குற்றம் பதிலாகுமா?

Read more: http://viduthalai.in/e-paper/97909.html#ixzz3USI9rze5

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பஞ்சாங்கம்

கேள்வி: பல்லி தலையில் விழுந்தால் உயிருக்கு ஆபத்து என்கிறார்களே, உண்மையா?

பதில்: மிக உயரத்தில் இருந்து விழுந்தால் பல்லி வேண்டுமானால் மரணம் அடையலாம் - இப்படி சொல்லியிருப்பவர் காழியூர் நாராயணன் என்ற ஜோதிடர் (கல்கி 15.3.2015)

பரவாயில்லையே - ஜோதிடர்கள்கூட பகுத் தறிவைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்களே கிழியட்டும் பழம்பஞ்சாங்கம்!

Read more: http://viduthalai.in/e-paper/97910.html#ixzz3USIPHQyz

தமிழ் ஓவியா said...

காந்தியார் சிலை

செய்தி: பிரிட்டனில் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தியார் சிலை திறக்கப்பட்டது. இந்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பங்கேற்றுப் பாராட்டிப் பேசினார். சிந்தனை: பக்கத்தில் நாதுராம் கோட்சே சிலை வைப்பது பற்றி பிரிட்டன் பிரதமரிடம் வேண்டுகோள் வைத்தாரா அருண்ஜெட்லி என்பதுபற்றி தகவல் ஏதும் இல்லை

Read more: http://viduthalai.in/e-paper/97908.html#ixzz3USIc4XgM

தமிழ் ஓவியா said...

சு.சாமியின் திமிர்ப் பேச்சு!


மசூதிகள் எந்நேரத்திலும் இடிக்கக்கூடிய வெறும் கட்டடங்களாம்!

கவுஹாத்தி, மார்ச் 15_ மசூதிகள் ஒன்றும் மதம் சார்ந்த இடம் இல்லை மாறாக எந்நேரத்திலும் இடித்து தள்ளக்கூடிய வெறும் கட்டடங்கள் தான் என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி வெள்ளிக்கிழமை அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், மசூதிகள் ஒன்று மதம் சார்ந்த இடம் இல்லை. அவை வெறும் கட்டடங்கள் தான். அந்த கட்டடங்களை எந்நேரத்திலும் இடிக்க முடியும். என் கருத்தை ஏற்காத யாருடனும் விவாதிக்க நான் தயார் என்றார்.

சாமியின் கருத்துக்கு பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சாமியின் கருத்துக்கும் தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது போன்று அஸ்ஸாம் மாநில பாஜக ஒதுங்கிக் கொண்டது. சாமியின் கருத்துக்கு அஸ்ஸாம் மாநில முதல்வர் தருண் கோகாய் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அம்மாநிலத்தில் உள்ள க்ரிஷக் முக்தி சங்க்ரம் சமிதி என்ற விவசாயிகள் அமைப்பு அளித்த புகாரின்பேரில் சாமி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/97907.html#ixzz3USIizK8r

தமிழ் ஓவியா said...

தமிழக அரசின் அழைப்பை ஏற்று சர்வதேச முதலீட்டாளர்கள் வரத் தயங்குவது - ஏன்?
அரசியல் குறுக்கீடும், நன்கொடை வசூலும்தான் காரணமாம்!

சென்னை, மார்ச் 15_ தமிழக அரசின் அழைப்பை ஏற்று பன்னாட்டு முதலீட் டாளர்கள் வருவதற்குத் தயங்குகிறார்கள். அதற்குக் காரணம் அரசியல் குறுக் கீடும், நன்கொடை வசூ லும் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

சர்வதேச முதலீட்டா ளர் மாநாட்டிற்கு, பங் களிப்பு நாடாக ('பார்ட் னர் நேஷன்') இருக்க, தமிழக அரசு விடுத்த அழைப்பை, பல நாடுகள் புறக்கணித்துள்ளன. தமிழ கத்தில், அன்னிய முத லீட்டை ஈர்க்க, 'குளோபல் இன்வெஸ்டர் மீட்' என்ற பெயரில், சர்வதேச முத லீட்டாளர் மாநாட்டை நடத்த, தமிழக அரசு முடிவு செய்தது. சென்னை _ நந்தம்பாக் கம் வர்த்தக மய்யத்தில், மே, 23, 24 தேதிகளில், சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடக்க இருக்கிறது. இதன் மூலம், ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு திரட்ட, அரசு திட்டமிட் டுள்ளது. இதற்காக, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு, தமிழக அதி காரிகள் குழுவினர் சென்று, சென்னை மாநாட் டில் பங்கேற்கும்படி, முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தனர். இந்நிலையில், சென்னை, சர்வதேச மாநாடு குறித்து, முதலீட்டாளர்களின் சந்தேகத்தை தெளிவு படுத்த, சென்னை _ எழும் பூரில் உள்ள தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக மான, 'டிட்கோ' அலுவ லகத்தில், 'ஜிம் - செல்' என்ற தனிப்பிரிவு துவங் கப்பட்டுள்ளது. தொழில் துறை இணைச்செயலர் விஜய் பிங்ளே தலைமை யில் செயல்படும், தனிப் பிரிவில், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமான, 'டிக், டிட்கோ, சிப்காட், டி.என்.பி.எல்.,' என, 10 அரசு நிறுவன ஊழியர்கள் உறுப்பினர் களாக நியமிக்கப் பட்டுள்ளனர். மாநில அரசுகள், சர்வதேச முத லீட்டாளர் மாநாடு நடத்தும் போது, பல நாடுகளுக்கு, பங்களிப்பு நாடாக ('பார்ட்னர் நேஷன்) இருக்குமாறு அழைப்பு விடுப்பது வழக் கம். பங்களிப்பு நாடாக ('பார்ட்னர் நேஷன்') என்பது, முதலீட்டாளர் மாநாடு நடக்கும் போது, ஒரு நாட்டின் அரசு பிரதிநிதி, தன் தலைமை யில், 50க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களை அழைத்து வருவார்.

குஜ ராத் அரசின், 'வைபரன்ட் குஜராத்' என்ற முதலீட் டாளர் மாநாட்டிற்கு, எட்டு நாடுகள், 'பங்களிப்பு நாடாக (பார்ட்னர் நேஷன்') இருந்தன. அதன்படி, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், தைவான், மலேசியா, சிங்கப்பூர், பின்லாந்து, ஸ்பெயின், சீனா, கனடா என, 12 நாடுகளுக்கு, தமிழக அரசு, பங்களிப்பு நாடாக ('பார்ட்னர் நேஷன்') இருக்கும்படி, அழைப்பு விடுத்தது. இதில், ஜப்பான், பிரான்ஸ் என, இரண்டு நாடுகள் மட்டுமே, தமிழக அரசின், அழைப்பிற்கு இசைந்துள் ளன. மற்ற நாடுகள், தங்கள் முடிவை இது வரை தெரிவிக்கவில்லை என, கூறப்படுகிறது.

இது குறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: சர்வதேச மாநாடு ஏற் பாடு குறித்து, முதலீட்டா ளரிடம் ஆலோசனை பெறுவதற்காக, கடந்த மாதம், சென்னையில், முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் முன்னோட்ட மாநாடு நடத்தப்பட்டது. இதில், எதிர்பார்த்த அள விற்கு, முதலீட்டாளர்கள் பங்கேற்காதது, அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது தற்போது, பல நாடுகள், பங்களிப்பு நாடாக ('பார்ட்னர் நேஷன்') இருக்க இசைவு தெரிவிக் காமல், காலம் தாழ்த்தி வருகின்றன. தமிழகத் தின், தற்போதைய அரசி யல் சூழ்நிலை குறித்து, உலக நாடுகள், தெளிவாக தெரிந்து வைத்துள்ளதே இதற்குக் காரணம் என, தெரிகிறது. தமிழக அதி காரிகள், இம்மாத இறு தியில், அமெரிக்கா, ஜெர் மனி; ஏப்ரல் முதல் வாரம், சீனா, தைவான் நாடு களுக்கு சென்று, முதலீட் டாளர்களைச் சந்திக்க உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார். இதுகுறித்து, முதலீட் டாளர்கள் கூறியதாவது: தமிழகத்தில், மற்ற மாநி லங்களை விட தொழில் துவங்க சாதகமான சூழல் நிலவுகிறது. ஆனால், அர சியல் குறுக்கீடு, செயற் கையான நில விலை உயர்வு, நன்கொடை வசூல் ஆகிய காரணங்களால், தொழில் துவங்க முடியாத நிலை உள்ளது. இதற்கு, தீர்வு காணாமல், மாநாடு நடத்தினால், மட்டும் முதலீடுகள் குவியப் போவதில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

சென்னை சர்வதேச முத லீட்டாளர் மாநாட்டை விளம்பரப்படுத்த, ஆங்கி லம் உள்ளிட்ட, ஆறு மொழிகளில், தனி இணைய தளம் துவங்கப் பட இருக்கிறதாம்.

Read more: http://viduthalai.in/e-paper/97906.html#ixzz3USIs39Qg

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ். ஏட்டில் பாகிஸ்தான் எல்லைக்குள் காஷ்மீர் இருப்பதாக படம்

மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு


புதுடில்லி, மார்ச்.15_ ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகார பூர்வ ஏடான ஆர்கனைசர் ஏட்டில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியை பாகிஸ்தான் எல்லைக்குள் இருப்பது போன்ற படம் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து மாநிலங் களவையில் பிரச்சினை எழுப்பப்பட்டது. மத்திய அரசு விசாரணை மேற் கொள்வதாக உறுதியளித் துள்ளது. சங் பரிவாரங் களின் நிலைப்பாடு அது அல்ல என்றும் ஆளும் பாஜக கூறியுள்ளது.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள குலாம் நபி ஆசாத் அவை கூடியதும் ஆர் கனைசர் ஏட்டில் வெளி யாகி உள்ள படத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை பாகிஸ் தானின் ஒரு பகுதி யாகவே வெளியிட்டுள் ளது குறித்து பிரச்சி னையை எழுப்பினார்.
குலாம் நபி ஆசாத் கூறும்போது, இந்தியா வின் மகுடமாக உள்ளது ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகும். இதற் காக எண் ணிலடங்கா தியாகங்களை செய்துள்ளோம் என்றார்.

மேலும் அவர் கூறும் போது, வெளி நாட்டு இதழ்களில் பாகிஸ்தா னால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை பாகிஸ் தானின் ஒரு பகுதி என வரை படத்தில் வெளியிட்டால் அதற்காக பாஜக, ஆர். எஸ்.எஸ். அமைப்புகள் போராட்டங்கள் நடத்து கின்றன. ஆனால், ஆர் கனைசரில் வெளியிட்ட தன்மூலமாக அதை அங்கீ கரித்து விட்டனவா என் பதை அறிய விரும்புவதாக குலாம் நபி ஆசாத் கேள்வி எழுப்பி உள்ளார்.

குலாம் நபி ஆசாத் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசின் சார்பில் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் இரவிசங்கர் பிரசாத் பதில் அளித்தார். ஜம்மு மற்றும் காஷ்மீர் இந்தியாவின் ஒருங் கிணைந்த பகுதியாகவே உள்ளன. ஆர்கனைசரில் வெளியான தகவல் குறித்து நாங்கள் விசாரணை மேற்கொள்வோம் என்று கூறினார்.

அமைச்சர் இரவிசங்கர் அளித்த பதிலில் திருப்தி கொள்ளாத காங்கிரசு கட்சி உறுப்பினர்கள் நடவடிக்கை கோரி தொடர்ச்சியாக வலியுறுத் திய வண்ணம் இருந்தனர். ஆர்கனைசர் ஏட்டில் எழுதியவர்மீது நடவ டிக்கை எடுக்கும் திட்டம் உள்ளதா? என்று நாடா ளுமன்ற உறுப்பினர் எஸ் .சதுர்வேதி கேட்டார்.

துணை அவைத் தலைவர் பி.ஜே. குரியன் கூறும்போது, அமைச்சர் அய்யத்துக்கு இடமில்லா மல் பதிலில் கூறியுள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீர் இந்தியாவின் பகுதியாகும். இதை யாரும் மாற்றிவிட முடியாது என்றார்.

இதனிடையே ஆர் கனைசர் ஏடு தன்னுடைய இணைய பதிப்பில் பதி வான வரைபடத்தை மாற்றிவிட்டது. மார்ச் 15 தேதியிட்ட அச்சுப் பிரதியில் முறைகேடான வரைபடமே இடம் பெற்றுள்ளது என்று எகனாமிக் டைம்ஸ் வெளிப்படுத்தி உள்ளது.

ஆர்கனைசர் ஏட்டின் ஆசிரியராக உள்ள சிறீ பிரஃபல்ல கேட்கார் கூறும்போது, எதேச் சையாக நடந்தது என் றாலும் ஏற்கமுடியாத தவறுதான். எது எப்படி இருந்தாலும், ஆர்கனை சரில் இடம் பெற்றது ஏற்கமுடியாத தாகும் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறும் போது, சார்க் இணையத் தில் பங்ளாபீடியா இணை யத்தின் வாயிலாக அந்த வரைபடம் எடுக்கப்பட் டுள்ளது. அடுத்த இதழில் திருத்தம் வெளியிடப் படும் என்று கூறினார்.
_இந்துஸ்தான் டைம்ஸ், 13.3.2015

Read more: http://viduthalai.in/page-2/97918.html#ixzz3USJSmtTT

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி. ஆட்சிக்கு மொத்து!
மதச் சுதந்திரத்தில் வழுக்கிடும் இந்தியா அமெரிக்க செனட்டர் சாடல்

வாஷிங்டன், மார்ச்15 பொதுத் தேர்தல் நடை பெற்றுமுடிந்து கடந்த ஓராண்டாகவே மதச்சுதந் திரத்தில் இந்தியா வழுக் கிடும் நிலை ஏற்பட்டுள் ளது என்று அமெரிக்க செனட்டர் சாடியுள்ளார்.

கடந்த ஜனவரியில் இந்தியாவுக்கு வருகைதந்த போதுகூட அமெரிக்க அதிபர் ஒபாமா வெளிப் படையாகவே இது குறித்துக் கூறினார். இது போன்ற முக்கியப் பிரச் சினைகளையொட்டியே வெளியுறவுக்கொள்கை அமைகிறது. வாஷிங்டனை மய்ய மாகக்கொண்டு இயங்கக் கூடிய கிறித்தவ பழமை வாதக் குழுவின் குடும்ப ஆய்வுக்குழுவின் தலை வராக உள்ளவரும், அமெ ரிக்க செனட்டருமாகிய டோனி பெர்க்கின்ஸ் செனட்டின் துணைக்குழு வில் பேசும்போது, இந் தியா குறித்துக் குறிப் பிட்டு சொல்லும்போது:- அங்கு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அந்த நாடு மதச் சுதந்திரத்திலிருந்து வழுக்கி உள்ளது. ஆகவே, கிறித்தவர் என்று மட்டு மன்றி அந் நாட்டிலுள்ள மதச்சிறுபான்மையராக உள்ளவர்கள்மீதான செயல்கள்குறித்து அந் நாட்டை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறும் போது, பன்னாட்டு மதச் சுதந்திரச் சட்டத்திற்கே வெளியுறவுக்கொள்கையில் முன்னுரிமை அளிக்கப் படும். வெளியுறவுத் துறை யில் பணியாற்றும அலுவ லர்களிடம் இதற்கே முன் னுரிமை அளிக்க வேண் டும் என்பதையே பயிற்சி கொடுத்துவருகிறோம் என்றார்.

செனட்டர் ஸ்டீவ் டான்ஸ் என்பவர் செனட் டர் பெர்க்கின்சிடம் கேட்கும்போது, உங்கள் பார்வையில் தற்போ துள்ள (இந்திய) அரசு நிர் வாகம் மதச்சுதந்திரத்தில் தெளிவாக உள்ளதா? என்று கேட்டார்.

பெர்கின்ஸ் கூறும் போது, நான் அலுவலர் களிடம் பேசும்போது மதச்சுதந்திரம் என்கிற கருத்தில் முன்எப்போதும் இல்லாதவகையில் வெளி யுறவுக் கொள்கையில் முன்னுரிமை கொடுக்கப் பட வேண்டி உள்ளது. உண்மையைக் கூற வேண் டுமானால், இப்போது தான் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ஆகவே, செனட்டர் ஸ்டீவ் கேள் விக்கு பதில் அளிப்பதில் நான் இல்லை என்றேகூற வேண்டியுள்ளது. அந்த நாட்டில்(இந்தியாவில்) அரசால் மதச் சுதந்திரத் துக்கு முன்னுரிமை வழங் கப்படவில்லை என்று பதில் அளித்தார்.

முடிவாக, மதரீதியில் துன்புறுத்தல் குறித்த பதிவுகளைப் பார்க்கலாம். இதுகுறித்து ஆய்வு செய் துள்ளவர்களின் கருத்துப் படி, மதச்சுதந்திரம் உயர் வானதாக இல்லை. தொடர்ச்சியாகவே மதரீதி யிலான துன்புறுத்தல்கள் உள்ளன. மதத்தைக் கட்டாயப்படுத்துவது எதிர்காலத்தில் நன்றாக இருக்காது என்றார்.

புதுடில்லி சிறீக் கோட் டையில் கடந்த ஜனவரி யில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பேச்சைச் சுட்டிக் காட்டி ராபி டேவிட் நாதன் சபர்ஸ் டெயின் பேசி னார். அமெரிக்க நாட் டின் பன்னாட்டளவில் மதச்சுதந்திரத்துக்கான தூதராக சபர்ஸ்டெயின் உள்ளார். அவர்கூறும் போது, வெளியுறவுக் கொள்கையில் முக்கிய மான பங்கு வகிப்பது மதச்சுதந்திரமாகும் என்று கூறினார்.

மேலும், அவர் கூறும் போது, மதச் சுதந்திரத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் செயல்களில் சட்டரீதியாக மாறுபட்ட விளக்கங்கள் கூறுவதாக வெளிப்படையாகவே அமைந்துள்ளதாகவே நான் எணணுகிறேன்.

காலைப் பிரார்த் தனைக் கூட்டங்களில் பங்கேற்பது கட்டாயப் படுத்தப்படுகிறது. தொடக்கநிலையில் தான் செயல்படுவதற்கான அதிகாரத்தை மத்திய அரசு அளித்துள்ளது, அதன் படியே செயல்படு கிறேன் என்றார். ஆனால், உண்மைநிலை என்ன? அரசின் அனைத்து துறை களிலும் மதச்சுதந்திரம் குறித்த திட்டம் என்ன? முக்கியத்துவம் வாய்ந்த செயல் திட்டமாக அல் லவா இருக்க வேண்டும்? என்று வாதிட்டுள்ளார்.

ஒரே நேரத்தில் பல செயல்கள் நடந்துவிடு கின்றன. உண்மையல் நான் எண்ணுவது என்ன வென்றால், சட்டத்தில் உள்ளபடி, அரசு நிர்வா கம் மற்றும் அரசுத்துறை செயலாளர் மற்றும் தலைவர் ஆழமாக கவனம் செலுத்தவேண்டிய பிரச் சினையாக மதச்சுதந்திரம் உள்ளது என்று சபர்ஸ் டெயின் கூறினார்.

மத்திய அரசின் மதச் சுதந்திரம் குறித்து அமெ ரிக்க செனட்டர்கள் விவா திக்கும் அளவில் பாஜக அரசின் மதவாதச் செயல் பாடுகள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-2/97917.html#ixzz3USJjAOnf

தமிழ் ஓவியா said...

விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழா நெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.

அகோரஸ் காலமஸ் என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப் பது இந்த வசம்பைத் தான்.

கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப் பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்று நோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப் பான் என்று கூறப்படுகிறது.

சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத் தலாம்.

வசம்பை தூள் செய்து இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று தேக்கரண்டி கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.

கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது.


Read more: http://viduthalai.in/page2/97855.html#ixzz3USLcjD74

தமிழ் ஓவியா said...

கோட்டைக்குள்ளேயே குத்து வெட்டு
இந்து முன்னணியே கேட்கும் கேள்விகள்

26.1.2015 அன்று வைத்தியநாத சுவாமி ஆலய குடமுழுக்கு நடை பெற்றது. குடமுழுக்குக்கு பொருளுதவி பண உதவி செய்த ஊர் பிரமுகர்கள் மற்றும் கிராம ஆன்மீகவாதிகள் அளித்த தொகைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதற்கு முறையாக ரசீது கொடுக்கப்பட்டதா?

செயல் அலுவலரால் ஏற் படுத்தப்பட்ட திருப்பணி குழு எத் தனை? எந்த கட்சி தலைமை வகித் தனர்? அவர்கள் வசூல் செய்த தொகைக்கு கணக்கு உண்டா?

எந்தெந்த உபயதாரர்கள், ஒப்பந் ததாரர்களிடம் ஒப்பந்தம் போடப் பட்டது? யார் யார் எந்தெந்த வேலையை செய்தனர்?
எந்தெந்த வேலையை யார் யார் தனியாக செய்து முடித்தனர் என்ற விபரம்.

வைத்தியநாத சுவாமி நில குத்தகை தாரர்களிடம் ஏக்கருக்கு ரூ.15,000/- வசூல் செய்யப்பட்டது. எவ்வளவு வசூல் செய்யப்பட்டது. யாருக்கும் ரசீது கொடுக்காதது ஏன்?

எத்தனை கோடி வசூல் செய்யப்பட் டது? எத்தனை கோடி இருப்பு உள்ளது?

அர்ச்சனை சீட்டு ரூ.2 கொடுத்தால் தான் அர்ச்சனை செய்வேன் என்று கூறும்போது, லட்சக்கணக்கில் பணம் கொடுத்தவர்களுக்கு ரசீது கொடுக் காதது ஏன்?

பல தரப்பு மக்களிடம் கட்டாய வசூல் செய்த நீங்கள் ஒருவருக்குகூட ரசீது கொடுக்காதது ஏன்? கொள்ளை யர்களின் கூடாரமாக வைத்தியநாத சுவாமி ஆலயம் போவதற்கு காரணம் இந்து அறநிலைய துறையா? அரசியல் வாதிகளா? திருப்பணிக் குழுவா?
கணக்கு காட்டுவதற்கு துணிவு உண்டா?

திருக்குளத்தைப் பற்றியும் தேரடியைப் பற்றியும் ஊர் முக்கியஸ் தர்கள், அரசியல்வாதிகள்அக்கறை கொள்ளாதது ஏன்?
யாக சாலையில் ஒரு குடும்பத்திற்கு ரூ.7,000/- கொடுத்தால்தான் அனுமதி என்று கூறினீர்கள் எவ்வளவு வசூல் செய்யப்பட்டது? எவ்வளவு செலவு? எவ்வளவு இருப்பு?

அரசுப் பள்ளி ஆசிரியர்களை வைத்து கோவிலில் உட்கார்ந்து பொது வசூல் என்று வசூலித்தனர். எவ்வளவு வசூல் செய்யப்பட்டது? எந்த வங்கியில் யார் பேருக்கு போடப்பட்டது? அந்த வங்கி இருப்பு செயல் அலுவலர் உடையதா? இந்து அறநிலைய துறை யுடையதா? அரசியல்வாதியுடையதா? திருப்பணிக் குழுவுடையதா?

கோவில் சுற்று பிரகாரத்தில் உள்ள தேக்கு மரம், தென்னை மரம், நாவல் மரம், வேப்ப மரம், அத்தி மரம், இலவ மரம், வாகை மரங்களை வெட்டியதற்கு சம்பந்தப்பட்ட துறையிடம் அனுமதி பெற்றீர்களா? எந்த தேதியில் ஏலம் விடப்பட்டது? யாருக்கு ஏலம் விடப்பட்டது? யார் ஏலம் கூறினர்?

பணம் கொடுத்தவர்களுக்கு ரசீது அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை வைக்கிறது.
செலவு கணக்கை கூறவில்லை என்றால் மண்டல பூஜை அன்று இந்து முன்னணி சார்பாக அனைத்து கட்சி மற்றும் பொது மக்களை ஒன்று திரட்டி 18.03.2015 புதன்கிழமை அன்று காலை 8 மணியளவில் அடையாள உண்ணவிரதம் நடைபெறும்.

நன்கொடையாக தங்கம், வெள்ளி வழங்கியவர்கள் விவரங்களை உடனே வெளியிட வேண்டும்.
2005 தகவல் அறியும் உரிமை சட் டத்தின்கீழ் நன்கொடை வழங்கிய வர்கள் மற்றும் பொது மக்கள் தகவல் பெற உரிமை உண்டு.

சர்வே எண் 122, 123 தேரடி தனியார் நபரிடம் பட்டா கொடுத்தது, சன்மானம் பெற்றுக் கொண்ட அறநிலையத்துறைக்கும், வருவாய் துறைக்கும் கூட்டுக் கொள்ளை நடந்தது எப்படி?

தகவல்: திட்டக்குடி அறிவு

Read more: http://viduthalai.in/page3/97856.html#ixzz3USMJrOcO

தமிழ் ஓவியா said...

மோடிக்கு கார்ப்பரேட்கள் வாரி வழங்கிய நன்கொடை

பாஜகவை சேர்ந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தல் காலத்தில் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் பல நூறுகோடி ரூபாய்களை நன் கொடையாக வாரி இறைத்திருக்கின்றன. இந்தியாவில் தேர்தல் நேரத்தில் அரசி யல் கட்சிகள் நன்கொடை பெறுவது வழக்கம்.

அந்த வகையில் மக்களிடம் இருந்தும், கட்சி உறுப்பினர்களிடம் இருந்தும், தொழில் அதிபர்களிடம் இருந்து அரசியல் கட்சிகள் நன் கொடையை திரட்டுகின்றன. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எப்போ தும் ஆதரவாக செயல்படும் பாரதிய ஜனதா கட்சி, தேர்தல் நேரத்தில் அந்த நிறுவனங்களிடம் பல நூறு கோடிக் கணக்கான ரூபாயை நன்கொடையாய் பெற்றிருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.

கடந்த தில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெளிநாடுகளில் இருந்தும், தொழில் அதிபர்களிடம் இருந்தும் கோடி கணக்கான ரூபாயை நன்கொடையாக பெற்றது என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியது. பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் இதை பெரிய குற்றச்சாட்டாக தெரிவித்தார்.

ஆனால் அவருடைய பாரதிய ஜனதா கட்சியே தில்லி சட்டசபை தேர்தலையொட்டி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து அதிக நன்கொடை பெற்றது இப்போது தெரியவந்துள்ளது. டில்லி தேர்தலை யொட்டி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பாரதீய ஜனதா கட்சி மொத் தம் ரூ.60.78 கோடி நன்கொடை பெற்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கை யில் கடந்த 2013_-2014ஆ-ம் ஆண்டில் மொத்த தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடையில் பாரதிய ஜனதா கட்சி 69 சதவிகிதம் நன்கொடை பெற்றுள் ளது. அதாவது கார்ப்பரேட் நிறுவனங் களிடம் இருந்து நன்கொடை பெற்ற கட்சிகளில் பாரதிய ஜனதா கட்சி முதலிடத்தில் உள்ளது என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடை குறித்து ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது
-பாரதீய ஜனதா கட்சி கடந்த 2012-_13-ஆம் நிதி ஆண்டில் ரூ.83.19 கோடி நன்கொடை பெற்றது. இது கடந்த 2013-_2014-ஆம் ஆண்டில் ரூ.87.67 கோடியாக வும், 2014_-2015-ம் ஆண்டில் 170.86 கோடியாக உயர்ந்து விட்டது.

அதாவது பாரதிய ஜனதாவின் நன்கொடை வசூல் 2012_-2013ஆ-ம் ஆண்டை விட 2014-_2015-ஆம் ஆண்டில் இரு மடங்கு மேல் உயர்ந்திருக் கிறது. பார்தி குழுமத்தின் சத்யா எலக்ட்ரோல் அறக்கட்டளை பாரதிய ஜனதா கட்சிக்கு 3 தடவையாக கடந்த 2012_-2013ஆ-ம் ஆண்டில் ரூ.41.37 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளது.

இதேபோல் சத்யா எலக்ட்ரோல் அறக்கட்டளை காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2013-_2014ஆ-ம் ஆண்டில் 36.50 கோடியை கொடுத்து உள்ளது. சரத் பவாரின் தேசியவாத கட்சிக்கு சத்யா எலக்ட்ரோல் அறக்கட்டளை கடந்த 2013-_2014ஆ-ம் ஆண்டில் அளித்து உள்ளது.

தேசிய அரசியல் கட்சிகள் கடந்த 2013-_2014ஆ-ம் ஆண்டில் மொத்தம் ரூ. 247 கோடியை நன் கொடையாக பெற்றுள்ளன. இது கடந்த 2012_-2013-ஆம் ஆண்டை விட 158 சதவிகிதம் அதிக மாகும்.

மாநிலம் வாரியாக பார்த்தாலும் பாரதீய ஜனதா கட்சி தான் அதிக நன் கொடை வசூலித்தது தெரியவந்துள் ளது. குஜராத் மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி ரூ.23.25 கோடியை வசூலித்து முதலிடத்தில் உள்ளது. மராட்டிய மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி ரூ. 22.24 கோடியை வசூலித்து முதலிடத்தை பிடித்து உள்ளது.

இதெல்லாம் வெளிப்படையாக தெரிந்த நன்கொடைகள் மட்டுமே ஆகும். அதானி குழுமம் போன்ற பாஜக மற்றும் மோடி விசுவாச கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்லாயிரங்கோடிகளை வரி இறைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிரதிபல னாகவே, தற்போது நரேந்திர மோடி அரசு மக்கள் நலனை பின்னுக்கு தள்ளி, கார்ப்பரேட் நலனை முன்நிறுத்தி வருகிறார்.

மேலும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங் களின் தலைமை செயல் அலுவலர் போன்று செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுக்களையும் மோடியின் மீது சமூக ஆர்வலர்கள் வைக்கின்றனர்.

பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, பூடான், நேபாளம், பிரேசில், பல்கேரியா, அமெ ரிக்கா, ஜப்பான் உள்பட பல நாடுகளில் அரசியல் கட்சிகள் நன்கொடை வசூலிப்பதில் வெளிப்படைத் தன்மை உள்ளது. ஆனால், இந்தியாவில் மட்டும் அரசியல் கட்சிகள் நன்கொடை வசூலிப்பதில் மறைமுகப் போக்கை கடைப்பிடிக்கின்றன என்று ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.

Read more: http://viduthalai.in/page3/97858.html#ixzz3USMXYfNp

தமிழ் ஓவியா said...

அன்னை மணியம்மையாரும் சாவித்திரிபாய் புலேயும்

சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule, 3 சனவரி 1831 -_ 10 மார்ச் 1897) ஒரு சமூக சீர்திருத்தவாதி மற்றும் கவிஞர் ஆவார். இவர் தம் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவில் நிறுவியவர்கள் ஆவர்.

வாழ்க்கை: இவர் 1831இல் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் சிற்றூரில் விவசாய குடும்பத்தில் பிறந்தார். அக்கால வழக்கப்படி இவர்தம் 9 ஆம் வயதில் ஜோதிராவ் புலேவை (13 அகவை) 1840இல் மணந்தார்.

ஜோதிராவ் புலே அவர்கள் தமது துணைவி சாவித்திரிபாயை சாதீய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஒரு அந்தண விதவையின் யஸ்வந்த் ராவ் என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர்.

கல்விப் பணிகள்: ஜோதிராவ் புலே 1846ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்து சூத்திரர், ஆதிசூத்திரர் ஆகிய பெண்களுக்குக் கல்வி புகட்டினார். பின்னர் 1848ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.

மீண்டும் 1848ஆம் ஆண்டு புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பணி செய்தார். சுமார் 6 மாதங்களுக்குப்பின் அப்பள்ளி மூடப்பட்டு வேறோர் இடத்தில் பள்ளி தொடங்கப்பட்டது.

பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினையும், மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்று பின் வேறோர் சேலை அணிந்து கொள்வார். பல துன்பங்களுக்கு இடையில் கல்விப் பணியாற்றினார்.

பிற பணிகள்: விதவைப் பெண்களின் தலையை மொட்டை யடிப்பதைக் கண்டித்து நாவிதர்களை திரட்டி, 1863 ஆம் ஆண்டு மிகப் பெரிய போராட்டத்தினை சாவித்திரி பாய் நடத்தினார். 1870ஆம்ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தினால் அனாதை களான 52 குழந்தைகளுக்கு உறைவிடப் பள்ளியை நடத்தினார்.

கவிதை நூல்: 1892 ஆம் ஆண்டு சாவித்ரிபாய் கல்வியின் தேவை, சாதி எதிர்ப்பு ஆகிய கருத்துகளை வலியுறுத் தும் கவிதைகளான 'கவிதை மலர்கள்' என்ற நூலை வெளியிட்டார்கள். கவிதை வரிகளில் சில: கல்வி கற்றுக் கொள். போ.

சுய சார்புள்ளவராக சுறுசுறுப்பானவராக இருங்கள்: வேலை செய்யுங்கள் அறிவையும், செல்வத்தையும் திரட்டுங்கள் . அறிவில்லாதிருந்தால் இழந்து நிற்போம் அனைத்தையும் . அறிவிழந்து போனால் நாம் விலங்குகளாக ஆகிவிடுகிறோம்.

சும்மா இராதீர்கள். போய் இனியேனும் கல்வியைப் பெறுங்கள் ஒடுக்கப்பட்டோர் மற்றும் கைவிடப்பட்டோர் அனைவரது துன்பங்களையும் போக்குங்கள்.

படிக்க உங்களுக்கு வாய்த்துள்ளது ஒரு பொன்னான நேரம் எனவே படியுங்கள்!

குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்ததிலும் கல்விப் பணியில் சிறப்பாக ஈடுபட்டதிலும் சாவித்திரிபாய் புலே _- அன்னை மணியம்மையார் அவர்களை ஒத்திருப்பதைக் காண முடிகிறது. ஒருவருடைய பிறந்த நாள் (மார்ச் 10) மற்றொருவருடைய மறைந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page5/97861.html#ixzz3USNEE8D7

தமிழ் ஓவியா said...

என்று மறந்தோம்?

அறுபதைத் தொடுமுன்
அறுந்து விட்ட பம்பரம்
இளமைத் தென்றல் தேனை
எட்டி உதைத்த புத்தகம்

சுயமரியாதை ஏணியில் ஏறி
சூரியனிடம் வந்து சேர்ந்த நட்சத்திரம்
அந்தச் சூரிய வெப்பத்தில்
சுடப்பட்ட வைரக் கல்!

பெரும் பொறுப்பு மலையை
பொறுப்போடு சுமந்த தோள்!

ஏழை விட்டுப் பிள்ளைகளை
தோள் தொட்டியில் தாலாட்டிய அன்னை
எளிமை என்ற அணிகலனை

இயல்பாய்ப் பெற்ற வசீகரம்
அமைதியான தோற்றம் - அதற்குள்
அடங்கியிருக்கும் புலியின் சீற்றம்!

போராட்டப் பெருங் குணம்
போர்ப்பாட்டின் புதுமணம்!

நெருக்கடிக்கு நெருக்கடி
கொடுக்கும் கொள்கைச் சவுக்கடி
ஆழமான சிந்தனைக் கடல்
அதில் மூழ்கியிருக்கும் முழு உடல்!

தலைவரைக் காத்திடவே
தன்னலம் துறந்துள்ள தற்கொலை!

எங்கள் அன்னையே ஈடில்லா
மணியம்மையே!

என்று மறந்தோம்
உங்களை நினைப்பதற்கு?

- கவிஞர் கலி. பூங்குன்றன்
(மார்ச்சு 16 - அன்னை மணியம்மையார் நினைவு நாள் (1978).


Read more: http://viduthalai.in/page5/97862.html#ixzz3USNQd1po

தமிழ் ஓவியா said...

மார்ச்சு 8 மகளிர் நாள் சிந்தனை நினைவாக
ஹிட்லரும், சங்கராச்சாரியாரும், மடாதிபதிகளும் பெண்களை இழிவுபடுத்தி பேசுவது ஏன்?

ஆரிய கலாச்சாரத்தை நிலை நாட்டும் வெறி கொண் டிருந்த சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மன் சமூகத்தின் தூய்மையைக் காப்பாற்றும் வகையாக பெண்களை கிந்தர், கூஹே, கிர்ஹே (குழந்தைகள், சமையல், சர்ச்) ஆகியவற் றுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று முழங்கி னான். அதாவது, படி தாண்டா பத்தினிகளினாலேயே சமூகத்தின் பண்பாடு காப்பாற்றப்படும்.

படி தாண்டிவிட்டால், பெண்களின் ஒழுக்கம் கெடும் -_ மதத்தின் பெயரில், அரசியலின் பெயரில் நடக்கும் அராஜ கத்தாலும் எதேச்சாதிகாரத்தாலும் கெடாத சமூகம், பெண்கள் வெளியில் சென்றால் கெட்டுப் போகும்.

ஹிட்லர் காலம்தான் ஆச்சே என்று நினைக்காதீர்கள். இதெல்லாம் நம்ம ஊர் ஆள் ஹிட்லர் சாயலில் சொன் னது. ஒருவிசுவாசப் படையைக் கொண்ட காஞ்சி மடத்து ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் சொல்லி யிருக்கிறார்.

பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது. பணக் கஷ்டத்தால் தான் வேலைக்குச் செல்கின்றனர் என்றால் வீட்டிலிருந்தபடியே சில வேலைகள் செய்து சம்பாதிக்கலாம் (எப்படி? அப்பளம் இட்டா?) வேலைக் குச் செல்லும் பெண்களில் பத்து சதவீதம் பேர்தான் ஒழுக்கமாக இருக் கின்றனர். நமது பாரம்பர்யத்தைக் கட்டிக் காக்கின்றனர்.

காஞ்சி மடத்தில் இப்போதெல்லாம் இப்படிப்பட்ட ஆய்வுகள் செய்வதில்தான் நேரம் செலவழிகிறது என்று தோன்றுகிறது. சில மாதங்களுக்கு முன்பு விதவைகளை தரிசுநிலம் என்று சுவாமிகள் சொன்னார். இப்போது வேலைக்குச் செல்லும் பெண்களில் 90 சதவீதம் ஒழுக்கம் கெட்டவர்கள் என்கிறார். எப்படி வந்தது இந்தக் கணக்கு? எப்படி அதை நிரூபிப்பார் சாமியார்?

ஆண் களில் எத்தனை சதவீதம் ஒழுக்கமான வர்களாம்? அதற்கு ஆய்வு உண்டா அல்லது ஆண்களுக்கு ஒழுக்கமே தேவையில்லை என்ற மனுதர்ம ஸ்மிரு திகளை ஆதாரமாக்கிக் கொள்கிறாரா? சங்கர மடம் நடத்தும் ஒரு பள்ளியில் ஒரு ஆண் ஆசிரியரின் ஒழுக்கத்தைப் பற்றி புகார் வந்தபோது ஆசிரியருக்கு வக்காலத்து பேசினவர்தானே?

ஸ்மிரு திகளில் பெண்களை அடிமைப்படுத்தும் படியான, கேவலப்படுத்தும்படியான பகுதிகளை அகற்றி நல்ல அறிஞர் களைக் கொண்டு முற்போக்குச் சிந் தனைகளுடன் மறுபடி எழுதப்பட வேண்டும் என்று மகாத்மா காந்தி சொன்னார். ஆனால், இந்த வேலையை நிச்சயமாக மடாதிபதிகளிடம் விடக் கூடாது என்றும் சொன்னார்.

தெரி யாமல் தான் கேட்கிறேன், இந்த சங்கர மடங்கள் எந்த யுகத்தில் புதைந்திருக் கின்றன? ஆணுக்குச் சற்றும் இளைப் பில்லை என்றே இந்த வையகத்தை ஆள வந்தோம் என்ற புதுயுகப் பாய்ச்சலோடு, தரிசனத்தோடு புதுமைப் பெண்ணை வரவேற் றானே 50 ஆண்டுகளுக்கு முன், பாரதி என்ற கவிஞன் அவனைப்பற்றி சங்கர மடத்துக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

கற்பு நிலை யென்று சொல்ல வந்தார். இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் என்ற வார்த்தை களின் சாராம்சமும் இவர்களுக்குப் புரியாது. முற்போக்குச் சிந்தனைகள் இவர் களுடைய எதேச்சாதிகாரத்துக்கு ஒத்து வராததாலேயே பண்பாடு, கலாச்சாரம் என்ற பசப்பு வார்த்தைகளைச் சொல்லி பலவீனமானவர்களின் சிந்தையைக் குழப்புகிறார்கள்.

வேலைக்குச் செல்லும் பெண்களின் கஷ்டங்களை உணராமல் சக்தி வாய்ந்த சாதனமான தொலைக் காட்சி வழியாக மடத்தின் தலைவர் ஒருவர் இப்படிச் சொல்வது எத்தனை ஆபத்தான விஷயம்? அலுவலகத்திற்குச் செல்லும் மத்திய வகுப்புப் பெண்கள் கையில் மட்டுமே நமது பண்பாட்டைக் காப்பாற்றும் பொறுப்பு இருப்பதாக சுவாமிகள் நினைப்பதும் தெரிகிறது.

பணத் தேவைக்காக மட்டுமே பெண்கள் வேலைக்குப் போகிறார்கள் என்று நினைப்பதும் மகா கேலிக் கூத்தாக இருக்கிறது.
சுவாமிகளுக்கு உடனடித் தேவை சரித்திரத்தில், சமூகவியலில் டியூஷன். அது கிடைக்கும் வரை வாயை மூடிக் கொண்டு இருக்கட்டும்.

பெண் பாவம் பொல்லாதது.
- வாஸந்தி
நன்றி: இந்தியா டுடே

Read more: http://viduthalai.in/page7/97864.html#ixzz3USNngJrj