Search This Blog

16.3.15

பசு வதையா? மனித வதையா? 
மகாராட்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி இம்மாநிலத்தில் மாட்டிறைச்சியை வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ 5 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
1995ஆம் ஆண்டு சிவசேனா, பாரதீய ஜனதா ஆட்சிக்காலத்தில் மகாராட்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டு சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

தற்போது 20 ஆண்டுகாலம் கழித்து இந்தத் தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மகாராட்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சியை வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அந்நபருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.


மகாராட்டிர விலங்குகள் காப்பு சட்ட வரைவுக்கு ஒப்புதலை அளித்த குடியரசுத் தலைவருக்கு மகாராட்டிர முதல்வர் பட்னவிஸ் தம்முடைய டிவிட்டரில் நன்றி கூறியுள்ளார். மேலும், பசுக் கொலையைத் தடைசெய்யும் நம்முடைய கனவு நனவாகியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் இந்தத் தடைக்கு மாட்டிறைச்சி வணிகர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.


இந்தத் தடைச் சட்டம் மூலம் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஒன்றரைக் கோடி பேரின் வாழ்வு கேள்விக்குறியாகி விட்டது. பசு வதைத் தடுப்பு என்று சொல்லி ஒன்றரைக் கோடி மக்களின் வாழ்வை வதை செய்துள்ளனர்.


உணவு என்பது ஒரு தனிமனிதனின் உரிமைப் பிரச்சினை. இதனைத்தான் உண்ண வேண்டும் - இதனை நீ உண்ணவே கூடாது என்று சொல்லுவதற்கு இன்னொருவருக்கு ஏது உரிமை?


மதவெறி மனிதனை எப்படியெல்லாம் தடுமாறச் செய்கிறது என்பதற்கு இந்தச் சட்டம் ஒன்று போதாதா?


குடிமகன் ஒருவனின் மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் செய்ய இயலாத வெட்கம்கெட்ட அரசு ஏழை எளிய மக்கள் மலிவான விலையில் கிடைக்கும் சத்துணவைச் சாப்பிடாமல் தட்டிப் பறிப்பது அகங்காரம் மட்டுமல்ல -_ அடுத்தவனின் மனித உரிமையைத் தட்டிப் பறிக்கும் அடாவடித்தனமே.

இந்து மதத்தில் பசு கோமாதாவாம். கோ பூஜை அனைத்துத் தேவாதி தேவர்களைச் சென்றடைகிறதாம். பசுவின் கொம்புகளுக்கு அடியில் பிர்மா, விஷ்ணு, கொம்பு நுனியில் சர்வ தீர்த்தங்கள், கொம்புகளுக்கிடையே சிவனும் இருக்கிறானாம்.


நெற்றியில் கவுரி தேவி , மூக்குத் தண்டில் முருகன், மூக்குத் துவாரங்களில் நாகர்கள், காதுகளில் அசுவினி தேவர்கள், கண்களில் சூரிய, சந்திரர், நாக்கில் வருணன், பற்களில் வசுக்கள் (அனலன், அணியன், சோமன், தரன்,
துருவன், பிரத்தியூஷன், பிரபாசன் முதலிய பிரமன் புத்திரர்கள்), தொண்டையில் சரசுவதி, கழுத்தில் தேவேந்திரன், குளம்பின் நடுவில் கந்தர்வர்கள், கோ மூத்திரத்தில் கங்காதேவி, கால்களில் முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளனராம்.


பசு தோன்றியபோது அனைத்துத் தேவர்களும் பசுவின் உடம்பில் இடம் பிடித்துவிட மகாலட்சுமி தாமதமாக வந்து இடம் கேட்டாளாம். அவளுக்குப் பசுவின் பின்புறம் கிடைத்ததாம். (புரிகிறதா?) (சில கோவில்களில் விடியற்காலையில் பசுவின் புன்புறத்தைக் கடவுளுக்குக் காட்டும் வழக்கம் இன்றும் உண்டு.)


வீட்டில் செல்வம் சிறக்க விரும்புபவர்கள் பசுவைப் பூஜித்துப் பலன் அடைகிறார்களாம்.

கடுமையான தோஷங்கள் இருப்பவர்கள் பசுவைத் தானம் செய்வதன் மூலம் தங்கள் தோஷங்களுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாமாம்.


பாரதத் திருநாட்டில் பசுவை கோமாதா என்று பூஜிக்கிறார்களே அந்தப் பாரதப் பசுக்கள்தான்  இப்பொழுது இருக்கின்றனவா? அதிகப் பாலைக் கறக்கச் செய்வதற்காக வெளிநாட்டுப் பொலிகாளைகளை இறக்குமதி செய்து, அதன் இந்திரியத்தை இந்தியப் பசுக்களுக்குச் செலுத்திக் கலப்பினமாக்கி விட்டார்களே! உங்கள் கோமாதாவின் கற்பு என்னாயிற்று?
இவ்வளவு தகவல்களும் எப்படித் தெரியும்? கேட்டுவிட வேண்டாம். (மாலைமலர் பொங்கல் மலர் 2008 பக்கம் 8இல் இடம்பெற்றவை இவை)
இந்தக் கேள்வியைக் கேட்கத் தெரிந்தவர்களுக்கு பசுவின் ஒவ்வொரு பாகத்திலும் இன்னின்ன கடவுள் வாசம் செய்வதாகக் கண்டவர்கள் யார்? கண்டுபிடித்து எழுதியவர்கள் யார் என்று கேட்டால் முகத்தை எங்கே தூக்கி வைத்துக் கொள்வார்களாம்.


ஓவியர்கள் ரவிவர்மாவும் கொண்டைய ராஜாக்களும் இல்லாவிட்டால் இந்தக் கடவுள்கள் எங்கே? சரஸ்வதிக்கும் லட்சுமிக்கும் ஜோலிக்கை ஜாக்கெட்டைப் போட்ட பிர்மாக்கள் இந்த ஓவியர்கள்தானே _ வெட்கக்கேடு.


சரி, எப்படியோ தொலையட்டும் இவ்வளவு கடவுள்களும், கடவுளச்சிகளும் வாசம் செய்யும் இந்தக் கோமாதாவுக்குச் சீக்கு வருவது ஏன்? கோமாரி வருவது ஏன்? தொண்டை அடைப்பான் வருவானேன்?


கால்நடை மருத்துவமனைகளுக்குச் செல்லுவது ஏன்? நோய் வராமல் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வதேன் என்று கேள்வி கேட்டால்   கேட்கின்றவர்களை நாத்திகர்கள் என்று நற நற என்று பற்களைக் கடித்தால் போதுமா? யோக்கியமாகப் பதில் சொல்ல வேண்டாமா? இந்தியாவில்தான் பசு கோமாதா! மற்ற நாடுகளில் பசு எந்த மாதா?
இந்தக் கடவுள்கள் எல்லாம் உள்ளூர்க் கடவுள்கள்தானா? பசுவைக் கோமாதாவாகக் கும்பிடுகிறார்களே _ இந்தப் பாரதமாதா பெற்றெடுத்த இந்தியப் பசு  நாள் ஒன்றுக்குச் சராசரியாகக் கறக்கும் அளவு என்ன தெரியுமா?  2.29 கிலோ.


பசுவைத் தெய்வமாகக் கும்பிடாத மற்ற மிலேச்ச நாடுகளில் உள்ள பசுக்களின் தரம் என்ன?


நாள் ஒன்றுக்குப் பசு தரும் பாலின் அளவு இதோ:

அமெரிக்கா 77.26 கிலோ. கனடா 69 கிலோ, நெதர்லாந்து 63.10 கிலோ, தென்ஆப்பிரிக்கா 62.79 கிலோ, ஸ்பெயின் 61.82 கிலோ, ஜெர்மனி 67.17 கிலோ, டென்மார்க் 55.16 கிலோ, பிரிட்டன் 52.10 கிலோ, பிரான்சு 52.16 கிலோ, சுவீடன் 49.69 கிலோ, இத்தாலி 49.40 கிலோ, இசுரேல் 44.46 கிலோ.


இந்த இலட்சணத்தில் இந்தியப் பசு இலட்சுமியின் அவதாரமாம். பார்வையற்ற-வனுக்குக் கண்ணாயிரம் என்று பெயர் வைப்பதில்லையா?

இவ்வளவு பால் தரும் பசு, பால் வற்றி பலன் தராத நிலையில் உணவுக்குப் பயன்-படுத்துகிறான் மற்ற நாட்டுக்காரன்.


பாலைக் கறப்பதைவிட நம் பணத்தைக் கறக்கிற (செலவு) இந்தப் பசுவை உணவாகப் பயன்படுத்தக் கூடாதாம்.


இந்த ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கம்பெனி பசுவை உணவுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று கூக்குரல் போடுகிறார்களே. அதிகாரம் இருக்கிறது என்கிற காரணத்தால் சட்டம் போட்டுத் தடுக்கிறார்களோ?


உண்மையில் இந்து மதத்தில் புனிதமாகப் போற்றப்படுகிறதா? இந்து மத நூல்கள் பசு யாகம் நடத்தப்பட்டதுபற்றி பலபடப் பேசுகிறதே, அதற்கு என்ன பதில்?


யாகத் தீயில் உயிர்களைத் தள்ளி சித்திரவதை செய்ததைத் தடுத்தவர்தானே கவுதம புத்தர்.


கூடதந்தன் என்ற பார்ப்பான் காயடிக்காத எழுநூறு காளைகள், காயடித்த எழுநூறு காளைகள், கன்று போடாத எழுநூறு இளம் பசுக்கள், வெள்ளாடுகள் எழுநூறு, செம்மறியாடுகள் எழுநூறு முதலியவற்றை யாகத்துக்காகக் கொண்டுவந்து நிறுத்தியதைக் கேள்வியுற்ற சித்தார்த்தனான கவுதம புத்தர் அந்த இடத்திற்குச் சீடர்களுடன் சென்று வாதிட்டார்.


உங்களுக்குச் சொர்க்கம் செல்ல ஆவல் இருந்தால் நீங்களே அல்லவா பலிபீடத்தில் கழுத்தை வைக்க வேண்டும். உங்களுக்குத் தேவையானது சொர்க்கமா? சோமபானமும், ஆடுமாடுகளின் இறைச்சியா? மக்களை ஏன் ஏமாற்றுகிறீர்கள்? என்று கேட்டார்.காமராசர்

இவையெல்லாம் புராணக் கட்டுக்கதையல்ல -_ வரலாற்று அத்தியாயங்கள். எப்படி எப்படி எல்லாம் யாகத் தீயில் பொசுக்கப்பட்ட பசுக்களின் கறியைத் தின்று கொழுத்தார்கள் என்பதற்கு ஏராள எடுத்துக்காட்டுகள் உண்டு. (பெட்டிச் செய்தி காண்க) இதுபற்றி ராகுல சாங்கிருத்தியாயன் என்ன கூறுகிறார்?
பிராமணர்கள் பவுத்தர்களைத் தங்களது பலமான விரோதிகள் என்று கருதுகிறார்கள். எல்லா நாட்டிலும் உள்ள பவுத்தர்கள் பசு மாமிசம் சாப்பிடுகிறார்கள் என்ற காரணத்திற்காகவே, பசு மாமிசம் தடை செய்யப்பட்டது என்றும், பசுவையும், பிராமணர்களையும் காப்பாற்றுவது தர்மம் என்றும் பிராமணர்கள் பிரச்சாரம் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள்.
என்கிறார் வரலாற்றறிஞர் ராகுல சாங்கிருத்தியாயன் (வால்காவிலிருந்து கங்கை வரை_ பாகம் 2 பக்கம் 76)

ராகுல சாங்கிருத்தியாயன்


ஆரிய வைதிக மார்க்கத்தைப் பவுத்தம் தன் அறவழிக் கொள்கையால் வீழ்த்திய நிலையில் பிற்காலத்தில் பார்ப்பனர்கள் மாமிசம் உண்பதைத் தவிர்த்து வேறு பழக்கத்திற்கு ஆளானார்கள் என்கிறது வரலாறு.
ஆனாலும் வங்காளம் போன்ற மாநிலங்களில் பார்ப்பனர்கள் மாமிசம் சாப்பிடக் கூடியவர்களே. வங்காளப் பார்ப்பனர்களுக்கு மீன் என்றால் கொள்ளை ருசியாயிற்றே நமது குடியரசுத் தலைவர் உட்பட!.


பசுவதைத் தடுப்பு என்பது பல்வேறு பிரச்சினைப் புயல்களை வெடிக்கச் செய்யும்.


1.    ஏழைகளுக்கு மலிவாகக் கிடைக்கும் சத்துணவு தடுக்கப்படுவது.

2.    மாட்டுக்கறி வியாபாரத்தை நம்பி வாழும் மக்கள் இந்தியாவில் கோடானுகோடி பேர்களின் வாழ்க்கைப் பிரச்சினை.

3.    மாட்டிறைச்சி ஏற்றுமதி மூலம் இந்தியா பெற்றுவந்த அந்நிய செலாவணியில் பெரும் பள்ளம் விழும்.

4.    பால் வற்றிப் போன பசுக்களைப் பராமரிப்பது பொருளாதாரக் கேடுதானே?

யாரோ குறிப்பிட்ட பகுதியில் உள்ள பார்ப்பனர்கள் சாப்பிடுவதில்லை என்பதற்காக இந்தியாவில் உள்ள கோடானு கோடி மக்களின் உணவுப் பிரச்சினையில் மூக்கை நுழைப்பது பச்சையான மூர்க்கத்தனம்.
பசுவைத் தாய் (கோமாதா) என்கிற பார்ப்பனர்கள் அந்தத்தாய் செத்தால் தூக்கிக் கொண்டு போவதுண்டா?


கோவில்களில் காணிக்கையாக அளிக்கப்-பட்டு கோ சாலைகளில் விடப்படும் பசுக்கள் சரிவரப் பராமரிக்கப்படுவதில்லை என்ற கூப்பாட்டுக்கு என்ன பதில்?
அரியானாவில் செத்த பசுமாட்டுத் தோலை உரித்த அந்த்த் தாழ்த்தப்பட்டவர்களை அடித்துக் கொன்றதும் இந்த சங் பரிவார் என்பதை மறக்க முடியுமா?

தேவேந்திர பட்னவிஸ்

பசுவதைத் தடுப்புச் சட்டத்தை எதிர்த்ததற்-காக அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த பச்சைத் தமிழர் காமராசரை பட்டப்பகலில் (7.11.1966) அவர் தங்கி இருந்த வீட்டைக் கொளுத்தி, அவர் உயிரைக் குடிக்க நினைத்த அந்தக் கொலைகாரக் கும்பல் _


இன்றைக்கு ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ள நிலையில் அன்று எதிர்த்தாயே இன்று பார்! நாங்கள் அதிகாரத்திற்கு வந்துவிட்டோம்.


பசுவதைத் தடை சட்டத்தைக் கொண்டுவந்து விட்டோம் _ முடிந்தால் எதிர்த்துப் பார்! தடுத்துப் பார்! என்று சவால் விடுவதுதான் இந்த முயற்சி!
அன்று காமராசரைக் கொலை செய்யத் துடித்த நாள் நவம்பர் 7 (1966) அந்தக் கொலைகாரப் பட்டியலில் இடம் பிடித்தவர் பூரி சங்கராச்சாரி.


சாது என்ற போர்வையில் நிர்வாண சாமியார்கள் ஜனசங்கத்தினர் (இன்று அதன் பெயர் பாரதீய ஜனதா கட்சி) ஆர்.எஸ்.எஸ். கும்பல்தான் அந்தக் கொலையைச் செய்யத் துடித்தது.


அந்த நேரத்தில் தந்தை பெரியார் வெகுண்டெழுந்தார். போர்ச்சங்கு ஊதினார். மாட்டுக்கறி விருந்துகளை ஆங்காங்கே திராவிடர் கழகம் நடத்தியது.
பெரும் ஊர்வலங்களை நடத்தி கத்தியை எடுப்போம்! காவல் புரிவோம்! என்ற முழக்கங்களோடு போர்ப் பரணிகளை நடத்தி, தமிழ்நாட்டில் காவிகளின் காலித்தனங்கள் முளைக்காமல் வாலை ஒட்ட வெட்டியது.


இதெல்லாம் கடந்த கால வரலாறு. அந்தக் காமராசர் கொலை முயற்சி நிகழ்வுகளைத் தொகுத்து  காமராசர் கொலை முயற்சி சரித்திரம் என்ற நூலை தந்தை பெரியார் ஆணைப்படி ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தொகுத்து இரண்டாவது பதிப்பும் இப்பொழுது வெளிவந்துள்ளது.


கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தில் வந்துவிட்ட திமிரில் வாலை ஆட்ட ஆரம்பித்துவிட்டது. மனுதர்மக் கொடியை பூணூல் கயிற்றில் பறக்க விடுகிறது.


மாடு தின்னும் புலையா? உனக்கு மார்கழித் திருநாளா? என்று அன்று வேதியப் பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட்ட சமூகம் என்று கூறப்பட்ட நந்தனைப் பார்த்து ஏளனமாய்ப் பேசினார்கள்.


அதில் மாட்டுக்கறி தின்பவன் பறையன் _ அவன் புலையன் என்றவர்கள் இன்று பசு வதைத் தடைச் சட்டம் கொண்டு வருகின்றனர் என்றால் அந்த அடித்தட்டு மக்களின் உணவில் கை வைக்கிறார்கள் என்றுதானே பொருள்.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மட்டும் உள்ள இந்தத் தடையை இந்தியா முழுவதும் கொண்டு வர தீவிரமாக யோசிக்கிறதாம் மத்திய அரசு!
மாட்டுக்கறி உண்பவர்கள்தான் இந்தியாவில் மட்டுமல்ல -_ உலகம் முழுவதும் அதிகம். இந்தப் பெரும்பான்மை மக்களோடு சிறு நரிக் கூட்டம் மோதிப் பார்க்கத் தயாராகிவிட்டது.

நாம் தயாராக வேண்டாமா?

............-----------------------------------------------------------------------


பார்ப்பனர் நடத்திய பசுவதை
அய்தேரய ப்ராஹ்மணம் கூறுகிறது:

அய்தரேய ப்ராஹ்மணம் இரண்டாம் பஞ்சிகையின் தொடக்கத்தில் சொல்லுவதாவது:- யஜ்னேவை தேவா _- ஊர்த்வம் ஸ்வர்க்கம் லோகமாயம்ஸ்தே பியயுரஸ்மின் பியுரஸ்மின் நோத்ருஷ்ட்வா மனுஷ்யாஸ்ச ரிஷ்யஸ்சானுப் ரஞ்ஞாஸ்யந்தீதி

(அய்தரேய ப்ராஹ்மணம் த்ஷதீயபஞ்சிகா பிரதம காண்டம்)
இதன் பொருள்: 

 தேவர்கள் யாகம் செய்து ஸ்வர்க்கத்தை அடைந்தனர். ஆதலால் மனிதர்களும் ரிஷிகளும் யாகம் செய்யக்கடவர். யூபஸ்தம்பங்களையும் நாட்ட வேண்டும். யூபம்- யாகத்தில் கொல்லப்படும் உயிர்களைப் பிணிக்கும் தூண்.


தைவ்யா:- சமிதார ஆரபத்வமுத மனுஷ்யா இத்யாஹ. அன்வேனம் மாதா மன்யதாமனு பிதானுப்ராதா ஸகர்ப்யோனு ஸகா ஸயூட்ய இதிஜனித்ரை ரேவைனம் தத்ஸ மனு மதமாலா பந்த உதி சீனாம் அஸ்யபதோ நிதத்தாம ஸுர்யம் சக்ஷுர்க்ம பதாத் வாந்தப்ராண மன்வஸ்ருஜ தாந்தரி க்ஷம ஸும் திச ஸ்ரோத்ரம். ப்ருதிவீ சரீரம்

(அய்தரேய ப்ராஹ்மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)


இம்மந்திரத்தினால் பசுவின் தாய் தந்தையரைக் கேட்டுக் கொள்ளுவதாவது: இந்தப் பசுவை எனக்குக் கொடுங்கள்.


இவ்வாறு வேண்டிக் கொண்ட பின்னர் அத்வர்யு வென்னும் தலைமைப் புரோகிதனுடைய கட்டளையைப் பெற்றுக் கொண்டு பசுவை சமித்ரசாலா என்னுமிடத்திற்கு அழைத்துக் கொண்டுபோய் வடக்குத் திசையில் அப்பசுவின் கால்கள் இருக்கும்படியாகச் செய்து சமிதா வென்னும் பசுவைக் கொல்லும் புரோகிதன் முஷ்டி என்னும் குறுந்தடியால் பசுவினுடைய கழுத்தில் அடித்துக் கொலை செய்வான்.


அதன்பின் சுரா இடா ஸூனு ஸ்வதீதி என்னும் மரப்பலகையில் கொலையுண்ட பசுவின் பிணத்தைக் கிடத்தி தோல் உரித் துச் சதையை அறுத்தெடுத்து சிறிது நெருப்பிலிட்டு மீதியுள்ள மாமிசத்தைப் புரோகிதர்கள் யாவரும் பங்கு போட்டு எடுத்துக் கொள்ளுவார்கள்.


இந்தப் பசுவைப் பங்கிடும் முறை ஞானசூரியன் முதல் பாகத்தில் மேற்படி மந்திரமும் அதன் தமிழ் அர்த்தமும் எழுதியிருப்பதால் இதில் எழுதவில்லை. இம்முறை கோபத ப்ராஹ்மணம் என்னும் வேதநூலிலும் இருக்கிறது. யாகத்தில் கொலையுண்ட பசு ஸ்வர்க்கத்தை அடைகிற-தென்று கீழ்க்காணும் மந்திரம் கூறுகிறது.


பார்வை நியமான, ஸம்ருத்யும் ப்ராபஸ்யத் ஸதேவான் நான்வகாமயதைதும் தம் தேவா அப்ருவன்கம் னேஹிஸைவர்க்வத்வர் லோகம் கமயிஷ்யாம இதி


(அய்தரேய ப்ராஹ்மணம் பஞ்சிகா காண்டம் 6)


பொருள்: யாகத்திற்குக் கொண்டு வந்த பசு மரணத்தைக் காண்கிறது. மரணத்தினின்றும் தேவர்களைக் காண்கின்றது.


தேவர்கள் பசுவைப் பார்த்து, நாங்கள் உன்னை ஸ்வர்க்கத்திற்கு அழைத்துச் செல்லுகின்றோம் என்பார்கள்.


பசு கொல்லப்பட்ட பிறகு அதன் சதையை அறுத்தெடுக்க வேண்டிய முறை மந்திரமாவது:-


அந்தரே வோஷ் மாணம் வாரயத்வாதிதி பசுஷ்வேவதத் ப்ராணான் ததாதிஸ்யேன மஸ்யவக்ஷ கருணுதாத் ப்ரசஸா பாஹுசலா தோஷ்ணீ கஸ்யபேவாம் ஸாச்சித்ரேஸ்ரோணீ வகஷோரூஸ்ரேக பர்ணாஷ்டீ வந்தாஷட் விம்சதி ரஸ்ப வங்கரயஸ்தா அனுஷ்ட யோச்யா வயதாத். காத்ரம் காத்ரமஸ்யானூம்.

(அய்தரேய ப்ராஹ்மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)


பொருள்: மார்பிலிருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுத்தெடுக்க வேண்டும். பின் கால்களிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் கால்களிலிருந்து அம்பு வடிவாக இரண்டு துண்டுகளை எடுக்க வேண்டும்.


இவ்வாறு அந்த அந்த அவயவங்களிலிருந்து இருபத்தாறு துண்டுகள் அறுத்தெடுத்தபின் எல்லாவற்றையும் அறுத்தெடுத்துக் கொள்க.
பசுவின் மல மூத்திரம் முதலியவை தரையில் புதைக்கப்பட வேண்டும். அதற்குப் பிரமாணம்:-


உத்ய கோஹம் பார்த்திவம் (அய்தரேய _ - பஞ்சி 2. க 6)
பசுவைக் கொல்லும்போது ஹோதா என்னும் புரோகிதன் சொல்ல வேண்டியது:-

அத்ரிகோ சமீத்வம் ஸுசமீ சமீத்வம் சமீத்வ மத்ரிகா அத்ரிகா அத்ரகாஉர் இதித்ரிர்ப் ரூயாத்


(அய்தரேய ப்பிராஹ்மணம் பஞ்சிகா 2 காண்டம் 7)


பொருள்: நன்றாக அடித்துக்கொல்! கொல், கொல்! அடிப்பதை நிறுத்தாதே!
..............**************************************************

மாட்டிறைச்சி இந்தியாவில் எப்படி?

ஆந்திரா: உணவிற்காக மாடுகளை வெட்டும் சட்ட விதி 1977.
விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாத காளைமாடுகள், பொருளாதார ரீதியாகப் பயன்படுத்த முடியாத பசுமாடுகள் போன்றவற்றை வெட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதை மீறுபவர்களுக்கு ரூ.1000 தண்டம் மற்றும் ஓர் ஆண்டு சிறை.


அருணாசலப் பிரதேசம்: எந்தத் தடையும் இல்லை.


அஸ்ஸாம்: ஆரோக்கியமான பசுக்கள் காளைகள் போன்றவற்றை உணவிற்காக வெட்ட அனுமதி உண்டு.


பிகார்: 3 வயதிற்குட்பட்ட மாடுகளை வெட்டத் தடை. உணவிற்காக மட்டுமே மாடுகளை வெட்ட அனுமதி உண்டு.


டையூ தாமன் யூனியன் பிரதேசங்களில் மாட்டிறைச்சியை வெளியில் இருந்து கொண்டுவந்து விற்க அனுமதி. மேலும் சொந்தப் பயன்பாட்டிற்காக மாடுகளை உணவிற்காக வெட்டலாம். அவற்றை விற்பனை செய்யக்கூடாது.


டில்லி: விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாத காளை மாடுகள், பொருளாதார ரீதியாகப் பயன்படுத்த முடியாத பசு மாடுகள் போன்றவற்றை வெட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஏற்றுமதி அனுமதிக்கப்பட்டுள்ளது.

கோவா: மாட்டிறைச்சி விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளது. கன்றுகள் மற்றும் நோயுற்ற மாடுகளை இறைச்சிக்காக வெட்டத் தடை மீறினால் 6 மாத சிறை மற்றும் ரூ.1000 தண்டம்.


குஜராத்: இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவது அனுமதிக்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் பொருளாதாரப் பயன்-பாட்டில் உள்ள மாடுகளை வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதிக்கு அனுமதி-யுள்ளது. மீறினால் 6 மாத சிறை மற்றும் ரூ.1000 தண்டம்.


ஹரியானா, பஞ்சாப், ஹிமாசல் பிரதேசம்: சொந்தப் பயன்பாட்டிற்கு மாடுகளை வெட்டுவது அனுமதிக்கப்-பட்டுள்ளது. பொது விற்பனை மற்றும் பொதுப் பயன்பாட்டிற்கு மாட்டிறைச்சி விற்க அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
மீறினால் 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.1000 தண்டம். 

ஜம்மு காஷ்மீர்:  தடையில்லை. மாட்டிறைச்சியை உணவிற்காக விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்யலாம். சுகாதாரத்தைப் பேணாமல் இருந்தால் ரூ.500 தண்டம்.


கர்நாடகா: பால் வற்றிய பசுக்கள், விவசாயப் பயன்பாட்டிற்கு உதவாத மாடுகள் வெட்ட அனுமதி. உயிருடன் அடிமாடுகளை வேற்று மாநிலங்களுக்குக் கொண்டு செல்லத் தடை மீறினால் 6 மாத சிறை மற்றும் ரூ.1000 தண்டம்.


கேரளா: தடையில்லை.


மத்தியப்பிரதேசம்: விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாத காளை மாடுகள், பொருளாதார ரீதியாகப் பயன்படுத்த முடியாத பசு மாடுகள் போன்றவற்றை வெட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதை மீறுபவர்களுக்கு ரூ.1000 தண்டம் மற்றும் ஓர் ஆண்டு சிறை.

மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து, சிக்கிம்: தடையில்லை.

ஒடிசா: பால் வற்றிய பசுக்கள், விவசாயப் பயன்பாட்டிற்கு உதவாத மாடுகள் வெட்ட அனுமதி.

புதுச்சேரி: மாடுகளை இறைச்சிக்காக வெட்டத் தடையில்லை.


ராஜஸ்தான்: மாடுகளை இறைச்சிக்காக பொது இடங்களில் வெட்ட தடை செய்யப்-பட்டுள்ளது. சொந்தப் பயன்பாட்டிற்காக வெட்டலாம். விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.


இறைச்சிக்காக மாடுகளை வாகனங்களில் கொண்டுவருவது தடைசெய்யப்-பட்டுள்ளது. மீறினால் ரூ.10,000 தண்டனை இரண்டு ஆண்டு சிறை.

தமிழ்நாடு: மாட்டிறைச்சி விற்பனை தடை செய்யப்படவில்லை.


உத்தரப்பிரதேசம்: மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவது அனுமதிக்கப்-பட்டுள்ளது. மாடுகளை வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் வாகனங்கள் முழுவதுமாக மூடப்பட்டு இருக்க வேண்டும்.


மேற்கு வங்கம்: சட்ட விதிகளின்படி மாடுகளை இறைச்சிக்காக வெட்டலாம். ஏற்றுமதி செய்யலாம். பால் வற்றிய பசுக்கள் மற்றும் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படாத மாடுகள் வெட்ட அனுமதி.
 **************************************************************************************

- ----------------------------கவிஞர் கலி.பூங்குன்றன்  அவர்கள்  “உண்மை” மார்ச் 16-31 2015 இதழில் எழுதிய கட்டுரை

25 comments:

தமிழ் ஓவியா said...

புருஜ் புருஷஜ்ஞ


இதைப் படிக்கும் பொழுதே இது என்ன புதுச் சொல்? புரியவில் லையே என்ற குழப்பம் வரத்தான் செய்யும். இது ஒரு சமஸ்கிருத சொல். இதன் பொருள்: மனித னைக் கொன்று நடத்தப் படும் யாகம் என்பதாகும்.

மனுசனைக் கொன்று யாகமா? இது என்னடா கொடுமை என்று திகைக்க வேண்டாம். ஆரியப் பார்ப்பனக் கலாச்சாரத்தில் காட்டு விலங்காண்டித்தனம் என்பது சர்வ சாதாரணம்.

மனிதனையே கொன்று யாகம் நடத்திய கூட்டம் தான் - பசுவதை பற்றிக் கண்ணீர் வடிக் கிறது.

மனிதர்களைக் கொன்று யாகம் நடத் தியதற்கு ஏதாவது ஆதா ரம் உண்டா? என்ற கேள்வி எழலாம். ஆதார மின்றி என்றைக்காவது விடுதலை எழுதிய துண்டா?

யஜுர் வேதம் என் பதே முழுக்க முழுக்க யாகம் பற்றிய தாண்ட வம்தான். யஜூர் வேதம் என்னென்ன யாகங்கள் - எந்தெந்த உயிர்களைக் கொன்று நடத்தப்பட வேண்டும் என்பதற்கு ஒரு நீண்ட பட்டிய லேயே தந்துள்ளது. இதில் 30 வகை யாகங்கள் தரப்பட்டுள்ளன. அதில் 11ஆவது இடத்தில் இடம் பெற்றிருப்பதுதான் மனிதர்களைக் கொன்று நடத்தும் புருஷ ஜ்ஞ யாகமாகும்.

அரிச்சந்திரன் என்கிற அரசன் புத்திரப் பேறில் லாது வருந்திக் கொண் டிருக்கும்போது வருண தேவனின் கட்டளைக் கிணங்கி அஜீகர்த்த முனிவரின் புத்திரனான சுன:சேபன் என்பவனை விலைக்கு வாங்கி அவ னைக் கொன்று நர மேத யாகம் பண்ணத் தொடங்கியது ரிக் வேதத் தில் விரிவாக எழுதப் பட்டுள்ளது.

பசுவைக் கொல் லுவதா என்று பதை பதைக்கும் பார்ப்பனக் கூட்டம் யஜுர் வேதத் தில் கூறப்படும் கோண வம் என்னும் யாகத்தில் பசு மாடு, காளை மாடு இவைகளைக் கொல்லும் யாகம் என்று கூறப்பட் டுள்ளதே!

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஒரே கலாச்சாரம் பேசும் இந்துத்துவவாதிகளுக்கு ஒரு கேள்வி உண்டு. வங்காளத்துப் பார்ப்பனர் களுக்கு முக்கிய உணவு மீன்தானே இன்றைக் கும்? பார்ப்பனர்களுக் குள் கூட ஒரே கலாச் சாரம் - இல்லையே!

சிவன் கோயில் படையல்களை வைஷ் ணவன் சாப்பிடுவ துண்டா, சொல்லுங்கள் பார்க்கலாம். கால ஓட்டத் தில் எத்தனையோ கலாச் சாரங்கள் இருந்த இடம் தெரியாமல் புதையுண்டு போயின என்பதுதானே உண்மை. எத்தனைப் பார்ப்பனர்கள் உச்சிக் குடுமியோடு அலை கிறார்கள் - சொல்லட்டும் - பார்க்கலாம்.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/97977.html#ixzz3UYdDf7nR

தமிழ் ஓவியா said...

குரங்குப் படையின் (பஜ்ரங்தள்) மதவெறி அட்டகாசம்!

பழைமைவாய்ந்த தேவாலயம் இடிக்கப்பட்டு சிலுவை இருந்த பீடத்தில் அனுமான் சிலை குரங்குப் படையின் (பஜ்ரங்தள்) மதவெறி அட்டகாசம்!

ஹிஸ்ஸார் (அரியானா) மார்ச் 16_ அரியானா மாநி லத்தில் புதுப்பிக்கப் பட்டு வந்த தேவால யத்தை இடித்து சிலுவை இருந்த இடத்தில் அனு மான் சிலை நிறுவப்பட் டது. அந்த தேவாலயத் தின் தலைமை போதகர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அடையா ளம் தெரியாத சிலரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது -_ பஜ்ரங் தள் (குரங்குப்படை).

2014-ஆண்டு அக் டோபர் மாதம் முதல் டில்லி, ராஜஸ்தான், ஒரிசா, ஜார்கண்ட், போன்ற மாநிலங்களிலும் மங்களூரூ, வடோதரா, போபால் போன்ற நகரங் களில் உள்ள கிறிஸ்த வர்களின் மதவழிபாட் டுத்தலங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வந்தன. ஜனவரி மாதம் கிறிஸ்தவ அறக்கட்டளைகள் நடத்தும் பள்ளி ஒன்று தாக்குதலுக்கு ஆளானது. இந்தப்பள்ளி மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி படித்த பள்ளி யாகும். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அரி யானா மாநிலத்தில் உள்ள ஹிஸ்ஸார் நகருக்கு அருகில் உள்ள ஒரு தேவாலயத்தை இடித்து சிலுவை இருந்த பீடத்தில் அனுமான் சிலையும், ராமர் படமும், தேவால யத்தின் கோபுரத்தில் காவிக்கொடியும் பறக்க விடப்பட்டது. இன்னோரு கரசேவையா?

இது குறித்து கோவிலின் தலைமை போதகர் சுபாஷ் சந்த் என்பவர் கூறியதாவது, சுமார் 60 ஆண்டு பழைமையான இந்தத் தேவாலயம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. அதை சரிசெய்து புதுப்பிக்கும் பணியை கடந்த சில நாட்களாக நாங்கள் மேற்கொண்டு வந்தோம். நாங்கள் புதுப்பித்துக் கொண்டு இருக்கும் போதே பங்ரங் தள் அமைப்பினர், இப் பகுதியில் இந்துக் கோவிலைத் தவிர்த்து எதுவும் இருக்கக் கூடாது, அப்படி இருந்தால் நாங்கள் அதை உடைத் தெறிவோம் என்று மிரட்டிக்கொண்டு இருந் தனர். நேற்று ஞாயிற்றுக் கிழமை சிறப்பு வழிபாடு முடிந்த பிறகு நாங்கள் வீட்டுக்குத் திரும்பி விட்டோம். ஒரு சிலர் மாத்திரமே தேவாலயத் தில் இருந்தனர். அப் போது திடீரென 60க்கும் மேற்பட்டோர், தேவால யத்தில் நுழைந்தனர். என்ன நடக்கிறது என்ற ஊகிக்கும் முன்பே கண் ணாடிகளை உடைத்தனர். தேவாலயத்தில் உள்ள கிறிஸ்தவப் படங்கள் அனைத்தையும் உடைத் தனர். பிறகு தாங்கள் கொண்டு வந்திருந்த ராமர் படங்களை ஆங் காங்கே வைத்தனர். பிறகு சிலுவை இருந்த முக்கிய பீடம் அமைந்த பகுதியை தகர்த்துவிட்டு அங்கு அனுமார் சிலையை வைத்துவிட்டு அங்குள்ள வர்களிடம் இனிமேல் இது இந்துக்கோவில் இனிமேல் இந்த இடத் தில் கிறிஸ்தவ வழிபாட் டுத்தலம் இருந்தால் வழிபடுபவர்கள் அனை வரும் அதற்கான தக்க விலைதரவேண்டி இருக் கும் என்று மிரட்டி விட்டுச் சென்று விட் டனர்.

14 பேர்மீது வழக்கு

போதகரின் புகாரை அடுத்து அடையாளம் தெரியாத 14-பேர் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். அரியானா வில் நடந்த இந்தச் சம்பவத்தை அடுத்து அரியானாவில் கிறிஸ்த வர்கள் வாழும் பகுதி களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அரி யானா முதல்வர் எந்தவித கருத்தும் கூற மறுத்து விட்டார்.

Read more: http://viduthalai.in/e-paper/97979.html#ixzz3UYdTodIW

தமிழ் ஓவியா said...

விளை நிலங்கள் விலை நிலங்களா?

இந்தியா ஒரு விவசாய நாடு என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். விளைநிலங்கள்தான் விலை மதிப்பில்லா நிலங்கள் என்ற நிலை இருந்ததெல்லாம் உண்மைதான். ஆனால், அவை விலை நிலங்களாக மாறிப் போன கொடுமையை என்ன சொல்வது!

கிராமத்தில் ஒருவர் செல்வந்தர் என்று நினைப்பது அவர்களுக்கு நில உரிமை இருப்பதுதான். அந்தக் காலக் கணக்குப்படி ஒரு குழி நிலம் இருந்தாலே தலை நிமிர்ந்து நடப்பார்.

இந்த நிலை இன்று தலைகீழாகப் போய் விட்டது; விளை நிலங்கள் ரியல் எஸ்டேட் என்கிற வியாபார வலைக்குள் சிக்கி விட்டது. பயணம் செய்பவர்கள் பல விளம்பரப் பலகைகளைப் பார்க்கலாம்; ரியல் எஸ்டேட் விளம்பரம் - வீட்டு மனை விற்பனை என்று பதாகையைப் பார்க்க முடியும். நெல் வளர்ந்த வயல்களில் கான்கிரீட் வீடுகள் ஓங்கி நிற்கின்றன.

கிராமங்கள் நகர்ப்புறமாவது என்பது இந்த வகையில் தான் இருக்கிறது. 2001க்கும் - 2011க்கும் இடையில் 8,67,502 தமிழ் நாட்டின் விவசாயிகள் தங்களின் வேளாண் தொழிலைக் கை விட்டு விட்டனர்.

வீட்டு மனைகளாக விற்க வேண்டுமானால், அவை விளை நிலங்கள் அல்ல என்ற தடையில்லாச் சான்றிதழ் வேளாண் துறை இணை இயக்குநரிடம் பெற வேண்டும் என்றிருந்த நிபந்தனைகள் எல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய் ஆகி விட்டன.

குறிப்பாக தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் என்பது நலிந்த ஒன்றாகி விட்டது. காவிரி நீர் உரிமையைப் பறி கொடுத்ததால், நிலத்தை நம்பி வாழ்ந்த விவசாயிகள் கண்ணீர் உகுக்கும் நிலை. எத்தனை எத்தனையோ போராட்டங்கள் நடத்தப் பட்டன. அரசுகள் அனைத்துக் கட்சி மாநாடுகளைக் கூட்டித் தீர்மானங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்ட துண்டு.

அனைத்துக் கட்சிக் குழு இந்தியப் பிரதமர், குடியரசு தலைவரைச் சந்தித்து மனுக்கள் கொடுத்துக் கொடுத்து அலுத்துப் போனதுதான் மிச்சம்.

ஆணையங்கள் அமைக்கப்பட்டன - உச்சநீதி மன்றம் வரை சென்று பார்த்தாகி விட்டது; தீர்ப்புகள் எல்லாம் நியாயத்தின் அடிப்படையில், உரிமையின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு ஓரளவுப் பச்சைக் கொடிதான் காட்டப்பட்டன. ஆனால், சட்டத்தை, தீர்ப்புகளை மதிக்கும் மனப்பான்மை என்பது வற்றிப் போய் விட்டது. சட்ட ஆட்சி என்பது கேள்விக் குறியாகி விட்டது. உச்சநீதி மன்ற தீர்ப்பைக் குப்பைக் கூடையில் கசக்கி எறிந்து விட்டு கருநாடக மாநில அரசும், கேரள மாநில அரசும் அணைகளைக் கட்டும் வேலையைத் தொடங்கு கின்றன.

இதில் வெட்கப்படத்தக்கது என்னவென்றால் மத்திய அரசுக்கு உட்பட சுற்றுச்சூழல் துறை அத்தகைய சட்ட விரோத அணைகளைக் கட்டுவதற்குத் தடையில்லாச் சான்றுகளையும் வழங்குவதுதான்.

மத்திய அரசு, இதில் சட்டத்தையும், நீதிமன்ற தீர்ப்பையும் பொருட்படுத்துவதில்லை; மாறாக அரசியல் கண்ணோட்டம் என்பதுதான் எகிறி நிற்கிறது.

இதில் இன்னொன்றுண்டு; அகில இந்திய தேசியம் பேசும் கட்சிகள் இந்த விடயத்தில் மட்டும் மாநில உரிமை என்னும் கூண்டுக்குள் முகத்தைப் புதைத்துக் கொள்கின்றன.

சரி, நதி நீர் தான் கிடைக்கவில்லை; நிலத்தடி நீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றால் மின்சாரப் பஞ்சம் இன்னொரு புறத்தில் இடி தாக்குதல்.

தமிழ் ஓவியா said...


இவ்வளவையும் தாண்டி விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசையோ, எண்ணமோ எந்த விவசாயிக்குத்தான் ஏற்படக் கூடும்?

தமிழ்நாட்டில் உள்ள மூன்று கோடியே 25 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய நிலங்கள் மட்டும் ஒரு கோடியே 27 லட்சம் ஏக்கராகும். விளை நிலங்கள் காணாமற் போனது கடந்த 30 ஆண்டுகளில் 15 லட்சம் ஏக்கராகும். பாசன வசதியுள்ள நிலம் 2004ஆம் ஆண்டில் 52.44 லட்சம் ஹெக்டராக இருந்தது. அது இப்பொழுது 48 லட்சம் ஹெக்டராகக் குன்றிப் போனது.

இந்த லட்சணத்தில் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம். விவசாய நிலங்கள் விதி விலக்கல்ல. விவசாயிகளின் அனுமதியில்லாமலேயே அரசு அவர்களின் நிலங்களைப் பிடுங்கிக் கொள்ளலாம் நட்ட - ஈடு என்பது அரசு நிர்ணயித்ததுதான்.

விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கி கார்ப்ப ரேட்டுகளிடம் ஒப்படைக்கும் ஓர் அரசு மத்தியில் வந்துள்ளது. அப்படி ஒப்படைக்கப்பட்ட நிலங்களை முழுவதுமாக கார்ப்பரேட்டுகள் பயன்படுத்துவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

சிறீபெரும்புதூரில் 1000 ஏக்கருக்கு மேல் வெளிநாட்டு நிறுவனத்துக்குத் தாரை வார்க்கப்பட்டு, இன்று திடீரென்று ஆலையை இழுத்து மூடி விட்டது; அதனை நம்பி வாழ்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாளர்கள் நடுத் தெருவில் நிற்கின்றனர். திண்டுக்கல் சிப்காட்டுக்காக ஒதுக்கப்பட்ட 500 ஏக்கர் நிலம் தூங்கி வழிந்து கொண்டுள்ளது.

குஜராத்தில் துறைமுகத்திற்காக அதானிக்கு 5.47 கோடி சதுர மீட்டர் நிலம், சதுர அடி ஒன்றுக்கு ரூ.32 வீதம் தாரை வார்த்தார் அன்றைய குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடி. அதில் 98.6 லட்சம் சதுர அடிகளை மாத்திரம் பயன்படுத்திக் கொண்டு மீதி 4 கோடி சதுர அடிக்கு மேற்பட்ட நிலத்தை சதுர அடி ரூ.400க்கு விற்று கோடிக்கணக்கில் சுருட்டியது அதானிக் குழுமம்.

அதற்குக் காரணமான குஜராத் முதல்வர் மோடிதான் இப்பொழுது இந்தியாவுக்கான பிரதமர் - நாடு எங்குப் போய்க் கொண்டு இருக்கிறது?
சிந்தியுங்கள்!

Read more: http://viduthalai.in/page-2/97984.html#ixzz3UYdtcPYY

தமிழ் ஓவியா said...

உயர் தர்மம்!


இன்று பார்ப்பனர்கள் எது எப்படிப் போனாலும் தங்களுக்குப் பெரிய சாதி என்கிற பட்டம், அந்தஸ்து இருந்தால் போதும்; அதற்காக எந்தக் காரியத்தையும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்பதை உயர் தர்மமாக அல்லவா கொண்டிருக்கிறார்கள்!
(விடுதலை, 11.9.1972)

Read more: http://viduthalai.in/page-2/97982.html#ixzz3UYe7iRJP

தமிழ் ஓவியா said...

தேர்வு காலம் என்பதால் கோயில் கலை நிகழ்ச்சிகள் தள்ளி வைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கொத்த மங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு கடந்த பிப். 1-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. 7.60 லட்ச ரூபாய் செலவு செய்து ஹெலிகாப்டர் கொண்டு வந்து வானத்தில் பறக்க விட்டு பூ தூவும் நிகழ்ச்சியெல்லாம் நடந்தது. அதன் பின்னர் 48 நாட்களுக்கு மண்டகப்படிதாரர்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அன்னதானம், இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடத்துவதென தீர்மானிக் கப்பட்டது. (அவ்வாறு 48 நாட்களுக்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தவில்லை என்றால் ஊருக்கு ஆகாதாம்) அதன்படி நிகழ்ச் சிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் சல தினங்களில் நிகழ்ச் சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இதுகுறித்து கொத்தமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டியன் கூறுகையில் மண்டலாபிஷேகத்திற்கு கோவிலில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது நிறுத்தப்பட்டது உண்மைதான். கொத்த மங்கலத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியானது கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பிளஸ்டூ மற்றும் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் முழுத்தேர்ச்சி பெறுவதோடு மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் சிறப்பு பெற்று வருகின்றன.

அதற்காக கடந்த காலங்களில் பொதுத் தேர்வுக்கு சிறப்பு வகுப்பு தொடங்கினாலே பொதுத்தேர்வு எழுதும் மாணவ - மாணவியரின் வீடுகளில் கேபிள் இணைப்பு துண்டிக்கப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு வகுப்புகளுக்கு கிராமத்தினரே முன்னின்று உதவிகளை செய்வதுபோன்ற பல்வேறு வகைகளில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கல்வியல் முன்னேற்றம் காண்பதற்கும் அதிக தேர்ச்சி பெறுவதற்கும் மாணவ - மாணவியரும் அவர்கள்தம் ஆசிரியர்களும் முழு முயற்சி எடுக்கிறார்கள் என்பதோடு கிராமத்தில் உள்ளவர்கள் தேர்வுக்கு முன்னும் தேர்வு முடிவுகளுக்குப் பின்னும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பாராட்டி பரிசுகள் ஏராளமாக வழங்கி வருகிறார்கள். மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ மாணவியருக்கு ரூபாய் 50-ஆயிரமும் அதற்குக் குறைவாகப் பெறும் மாணவ மாணவியருக்கு கடந்த ஆண்டைப் போலவே எனது சார்பில் அவர்களுக்கு உரிய பரிசுகளும் வழங்க உள்ளேன். இன்னும் பலரும் பரிசுகள் வழங்கக் காத் திருக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த 5-ம் தேதியி லிருந்து பிளஸ்டூ பொதுத்தேர்வு தொடங்கி யுள்ளது. இதில் இரண்டு பள்ளிகளிலும் சுமார் 400 பேர் தேர்வெழுதுகின்றனர். இந்நிலையில் இங்குள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஒலி பெருக்கிகளைக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் மாணவர்களின் கவனம் சிதறும். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால் அத்தகைய நிகழ்ச்சிகளை பொதுத்தேர்வு முடியும் வரை நடத்துவதில்லை என கிரா மத்தினரே முடிவெடுத்துள்ளனர் என்றார்.
கிராமத்தினரின் முற்போக்கான இத்தகைய முடிவினால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

- ம.மு.கண்ணன்

Read more: http://viduthalai.in/page-2/97987.html#ixzz3UYeIEcl7

தமிழ் ஓவியா said...

சிறுநீரகத்தை காக்க நாம் அறிய வேண்டியவை!

மனித உடலில் உள்ள உறுப்புகளில் மிகவும் இன்றியமையாதது சிறுநீரகம் ஆகும். மனித உடலின் மிக முக்கிய உறுப்பாக செயல்பட்டு, சிறுநீரை பிரித்து வெளியேற்றி, உடலின் தட்ப வெப்பத்தை சீராக வைத்திருப் பதுதான் சிறுநீரகத்தின் வேலை. அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளன.

இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரிக்கும் மிக நுண்ணிய சுத்திகரிப்பு உபகரணம்தான் சிறுநீரகம் இந்த சிறுநீரகம் கருவின் நான்காவது மாதத்திலிருந்து அதனுடைய இயக்கத்தை தொடங்கி மனிதனின் மரணம் வரை இடைவிடாது இயங்குகிறது.

வயிற்றின் பின் பகுதியில் விலா எலும்பிற்குக் கீழே, பக்கத்திற்கு ஒன்றாக சற்று மேலும் கீழும் இறங்கி காணப்படுகிறது. சிறுநீரகம் சீராக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் சில மணி நேரங்களில் உயிரிழப்பு கூட நேரிட வாய்ப்புண்டு.

சிறுநீரகத்தின் செயல்பாடுகள்: இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்தத்தில் நான்கில் ஒரு பங்கு சிறுநீரகத்திற்கு சுத்திகரிக்க அனுப்பப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு அதில் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீராக வெளியேறுகிறது.

மீதி அனைத்தும் மீண்டும் இரத்தத்தில் கலந்து விடுகிறது. இதனால் உடலிலுள்ள அனைத்து கழிவுகளும் வெளி யேற்றப்படுகின்றன. இரத்தம் சுத்தமடைகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துதல் மட்டும் சிறுநீரகத்தின் வேலையல்ல. மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளை தூண்டுவதும் சிறுநீரகத்தின் வேலைதான்.

உடலின் திரவ நிலையை சம நிலையில் பராமரிக்கிறது. இரத்த அழுத்தத்தை சம நிலைப்படுத்துகிறது. இரத்த சிவப் பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான சுரப்பினை சுரக்கச் செய்கிறது. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை சமப்படுத்தும் தன்மை சிறுநீரகத்திற்கு உண்டு.

அமில, காரத்தன்மைகளையும், சோடியம் பொட்டாசியம், அம்மோனியம் போன்றவற்றை சரிவிகிதத்தில் சமன்செய்யும் பணியையும் சிறுநீரகம் சிறப்பாக செயல்படுத்துகிறது.

நெப்ரான்: இதுவே சிறுநீரகத்தின் முக்கிய வடிகட்டி. இது இரத்தத்தில் உள்ள வேதியல் பொருட்களில், தேவையுள்ள, தேவையில்லாதவற்றை பிரித் தெடுக்கிறது. சிறுநீரகத்தில் இந்த நெப்ரான்கள் பல கோடிகள் உள்ளன. மால்பிஜியன் குழாயின் மூலம் வடிகட்டி மீண்டும் உறிஞ்சி இரத்தத்துடன் கலக்க வைப்பதும், மீதத்தை சிறுநீர்க்குழாய் வழியாகவும் வெளியேற்றுகிறது.

சிறுநீரகம் சீராக செயல்படவில்லை யென்றால்: இரத்தம் அசுத்தமாகும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப் படும். தண்ணீர், யூரியா, சோடியம் மற்றும் வேதிப் பொருட்களின் சமநிலை பாதிக்கப்பட்டு, உடலின் அக, புற அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும். மூச்சுத் திணறல், நினைவிழத்தல் இரத்தக் கொதிப்பு ஆகியவை உண்டாகும்.

சிறுநீரகம் சரியாக செயல்படாததால் ஏற்படும் அறிகுறிகள்: யூரியா மற்றும் வேதிப் பொருட்கள் அதிகளவில் இரத்தத்தில் கலந்துவிடுவதால் சிறுநீர் சரியாக பிரியாது.

சிறுநீர் சரிவர பிரியாததால் மூச்சுத் திணறல், அதிக இருமல், நெஞ்சுவலி, சளியில் இரத்தம் வருதல், விக்கல், பசியின்மை, இரத்த வாந்தி, நினைவிழத்தல், குழப்பம், கை நடுக்கம், நரம்பு தளர்ச்சி, தோல் வறண்டு அரிப்பு ஏற்படுதல் போன்ற ஒருசில அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சிறுநீரகம் யாருக்கு அதிகம் பாதிப்படையும்: சிலருக்கு பிறக்கும்போதே சிறுநீரகம் சிறுத்து காணப்படும். பரம்பரையாகவும், பாதிக்கப் படலாம். இரத்தக் கொதிப்பு, பாம்புக்கடி, கதண்டு வண்டுக்கடி, மலேரியா, உயிர்க்கொல்லி மருந்து உட்கொண்டவர்கள், வயிற்றுப் போக்கு அடிக்கடி உள்ளவர்கள்,

பிரசவ காலங்களில் உண்டாகும் இரத்தப் போக்கு, அடிக்கடி கருக்கலைப்பு செய்பவர்களுக்கும், நீர் அதிகம் அருந்தாதவர் களுக்கும், மது போதை பொருட்கள் உட் கொள்பவர்களுக்கும், அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துபவர்களுக்கும், உடல் பயிற்சி யில்லாதவர்களுக்கும் சிறுநீரகம் பாதிக்க வாய்ப்புண்டு.

Read more: http://viduthalai.in/page-7/98005.html#ixzz3UYgFNVNK

தமிழ் ஓவியா said...

சிறுநீரகத்தைக் காக்க:

* உடல் பருமன் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

* புகைப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். மது, போதை பழக்கம் இருக்கக் கூடாது.

* அடிக்கடி வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள் வதை தவிர்க்க வேண்டும்.

* எளிதில் சீரணமாகும் உணவுகளை உட்கொள்வது நல்லது. சிறுநீரை அடக்குதல் கூடாது.

* தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது.

* வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பொதுவாக வாழைத்தண்டு, 3 விரலளவு எடுத்து அதனுடன் சின்ன வெங்காயம் 4, சீரகம் 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, நல்ல மிளகு 4, பூண்டு பல் 4, கொத்துமல்லி இலை தேவையான அளவு, கறிவேப்பிலை 20 இலை,

இலவங்கப்பட்டை 2 கிராம் எடுத்து 3 குவளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 1 குவளை அளவு வந்தபின் எடுத்து காலை மாலை இருவேளை என வாரத்தில் 2 நாட்கள் அருந்தி வந்தால் சிறுநீரகக் கோளாறுகளை தவிர்க்கலாம். இது பக்க விளைவில்லாத மருந்தாகும். கழிவு நீக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் சிறுநீரகங்களை பாதுகாக்க மேற்கண்ட நடை முறைகளை பின்பற்றுவது நல்லது.

Read more: http://viduthalai.in/page-7/98005.html#ixzz3UYgLsaYG

தமிழ் ஓவியா said...

அன்னை மணியம்மையார் நினைவு நாள்: மார்ச் 16

மிசா காலத்தில் எனது இணையரையும் (அ. இறையனார்) பிடிக்க உத்தரவு வந்துள்ள செய்தி காவல் நிலையத்தின் மூலமாக கிடைக்கப் பெற்றது. இவரோ அரசுப் பணியாளர்.

இவரின் பணிக்கு ஏதாவது தொல்லைகள் உண்டாகி விடும் என்ற எண்ணத்தில், இவரை வீட்டில் இருக்கவிடாமல் தெரிந்தவர் இல்லத்தில் தங்க வைத்துவிட்டு, திருப்பூரிலிருந்து அதிகாலையில் புறப்பட்டு மூன்று மணியளவில் திருச்சி பெரியார் மாளிகையை அடைந்தேன்.அன்னையாரைப் பார்த்தேன். முதலில் முகம் கழுவி சாப்பிட்டு வா என்று கூறி, பாலாவைக் கூப்பிட்டு சோறு போடு என்றார்கள். பதட்டத்தில் இருந்தாலும் பசி ருசியை அறிய வைத்தது. அருமையான வற்றல் குழம்பு அப்பளத்துடன் சாப்பிட்டு முடித்தவுடன் அம்மாவிடம் வந்தேன்.

அம்மா என் கழுத்தினைப் பார்த்து, இந்த கருகமணி மாலையைப் போட்டுக் கொண்டு வந்தாயே, உன்னை யாரும் பின்தொடரவில்லையா? என்று கேட்டுவிட்டு, உனக்குத் தைரியம் அதிகம் என்றார்கள். அந்த மாலையில் கருப்பு மணியுடன் அய்யாவின் படம் பொறித்த கல் இருக்கும்.

உட்கழுத்தில் அந்த மாலை இருக்கும். அன்றைய பெண்கள் சரசுவதி, இலட்சுமி போன்றவர்களின் உருவங்கள் பதித்த மாலையை அணிந்திருப்பார்கள். அப்பொழுதெல்லாம் என்னுடன் வேலை செய்பவர்களும், மேலதிகாரிகளும் பல வினாக்கள் தொடுத்தது உண்டு.

மானமிகு இறையனாரைப் பற்றிய செய்திகளை அம்மாவிடம் நான் கூற, பிடிபடாமல் இருப்பது நல்லது என்று சொன்னார்கள். தங்களைத் தேடி வருபவர்களின் முகபாவனை பார்த்து, நேரம் கெட்ட நேரத்தில் நுழைந்தால்கூட சாப்பிடச் சொல்ல வேண்டும் என்ற மனப் பக்குவத்தை அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

அவரின் உள்ளம் பாதிப்புக்கு ஆளாகும் போதெல்லாம், காண்டேகர் எழுதிய நாவல் வெறுங் கோயில் என்ற புத்தகத்தை பலமுறை படிப்பேன் என்றார்கள். அன்றைய காலப் பெண்களுக்கு (படித்த) அந்த நாவல் அருமருந்தாக பயன்பட்டிருக்கிறது.

கோவையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, ஈரோட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். போகும் வழியில் இல்லத்திற்கு வாருங்கள் என்றேன். அவர்கள், ஏன் உனக்கு அரசு வேலை பார்க்கப் பிடிக்கவில்லையா? என்றார்கள்.

அதற்குக் காரணம், மிசா காலம். அப்படிப் போனால் போகட்டும் என்று நான் கூற, உன் ஆசைக்கு அணை போட விரும்பவில்லை, வருகிறேன் என்று கூறினார்கள்.

அம்மாவைப் பார்க்க அக்கம் பக்கம் உள்ள மக்கள் கூடி திருப்பூரில் எங்கள் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தனர். அன்னை மணியம்மையாரோ எங்கள் வீட்டு சின்னஞ்சிறு அடுப்படியில் வந்து அடுப்புமேட்டில் உட்கார்ந்து கொண்டு எங்கள் பிள்ளைகள் பண்பொளி, இறைவி, மாட்சி, இசையின்பனிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அன்று பகலில் என் மகன் இசையின்பன் எங்கேயோ விளையாடி கல்லால் அடிபட்டு மண்டை உடைந்து கட்டுப்போட்டிருந்தான். அவனிடம், எப்படி மண்டை உடைந்தது என்று கேட்க, அவனோ, கீழே விழுந்து அடிபட்டுவிட்டது என்று சொன்னான்.

உடனே அம்மா, பொய் சொல்லாதே! கீழே விழுந்தால் இப்படி அடிபடாது என்று சொல்லிவிட்டு, பசங்களை மட்டும் நம்பவே கூடாது. பெண் குழந்தைகள் நல்ல பிள்ளைகள் என்று சொன்னார்கள்.

பிறகு தேநீர் போட்டுத் தந்து வெளியில் இருப்பவர்களுக்குக் கொடுக்கச் சொன்னார்கள். தாயன்பையே உணர்ந்திராத எனக்கு உண்மையான தாயின் வாஞ்சையுடன் தன் மகளின் இல்லத்தில் வேலையைப் பகிர்ந்து கொள்வதில் அவர்கள் ஆர்வம் காட்டிய நிலையை,

இந்த வினாடிவரையிலும் கழகமும் நம் குடும்பம் என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டவர் அன்னை மணியம்மையார் என்பதை அம்மாவிடம் அன்று உணர்ந்தேன்.

அவர்கள் நினைவாக எங்கள் இல்லத்திற்கு மணியம்மையார் மனை என்று பெயர் சூட்டப்பெற்று காலத்தாலும் நீக்கமுடியாத உறவாக எங்களுடன் தொடர்ந்து வருகிறார்கள்.

- திருமகள் இறையன்

தமிழ் ஓவியா said...

இந்துஜாவின் புரட்சி

தங்களுக்கு வரும் இணையர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற கனவு ஆண்களுக்கு மட்டும் இருக்கும் என்பதல்ல, பெண்களுக்கும் உண்டு என்பதைப் புரியவைத்துள்ளார் பெங்களூரைச் சேர்ந்த இந்துஜா.

marry.indhuja.com என்ற இணையதள முகவரி இந்துஜாவைப் பற்றியும் அவரது எதிர்பார்ப்பையும் பிரதிபலிக்கிறது.

திருமணத்திற்குப் பின் நீண்ட கூந்தல் வளர்க்காமல் ஆண்களைப் போல்தான் முடி வெட்டிக் கொள்வேன். எப்போதும் இருப்பதைப் போல எனது விருப்பப்படியே வாழ்க்கையினை வாழ்வேன். குடும்பப் பாங்கான மணமகனுக்கு முன்னுரிமை வழங்கப்பட மாட்டாது.

திருமணத்திற்குப் பின் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று கூறும் மணமகனுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என பல நிபந்தனை களைக் கூறியுள்ளார்.

இந்துஜாவின் நண்பர்களிடையே மட்டுமன்றி, உலகம் முழுவதுமிருந்து ஏராளமானோர் பாராட்டியுள்ளனர். இந்துஜாவின் இணைய தளத்தினை சுமார் 3 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இந்தப் புரட்சிகரமான முடிவுக்கு ஆதரவு தெரிவித் துள்ளனர். மேலும், பல்வேறு மகளிர் அமைப்பு களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித் துள்ளன. நாடு முழுவதிலுமிருந்து பலர் பூங்கொத்துகளையும் அனுப்பி வருகின்றனர்.

இந்தச் செய்தியினைக் குறித்து இந்துஜா, நான் திருமணத்திற்கு எதிரானவள் இல்லை. அடிப்படையிலே நான் பகுத்தறிவுவாதி என்பதால் எனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தேன்.

முதலில் இந்த இணையதளம் தொடங்கியதை எதிர்த்த எனது பெற்றோர், இப்போது என் விருப்பத்தைப் புரிந்து கொண்டனர். மிகச் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட இணையதளத்திற்கு இவ்வளவு வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

இத்தனை புதுமையினைச் செய்துள்ள இந்துஜாவின் இணையப் பக்கத்தில் அவருடைய பெயருடன் ஜாதிப் பெயரும் இடம் பெற்றிருப்பது தான் பொருந்தாமல் உள்ளது.

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?

சென்னை உயர் நீதிமன்றத்தில் 1948ஆம் ஆண்டுதான் முதன்முதலில் என்.சோமசுந்தரம் என்ற பார்ப்பனரல்லாத நீதிபதி, பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி நியமிக்கப்பட்டார் என்பதும், அதற்குமுன் பார்ப்பனரல்லாத நீதிபதியே உயர் நீதிமன்றத்தில் கிடையாது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

கருத்து

மத்திய அரசு அமல்படுத்த நினைக்கும் நிலம் கையகப்-படுத்தும் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது. தொழிலதிபர்-களுக்குச் சாதகமானது. மக்கள் விரோதச் செயல்பாடுகளில் ஈடுபடுவதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

- நிதிஷ்குமார், பிகார் முதல் அமைச்சர்

நியூயார்க், மிசேரியில் கருப்பின இளைஞர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. அமெரிக்க காவல்துறையினரின் மனநிலை, நடைமுறைகளில் மாற்றம் அவசியம்.

- பராக் ஒபாமா, அமெரிக்க அதிபர்

நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான ஆவணப்படம் வெளியாவதால் நம் நாட்டின் பெருமைக்கு எந்தக் களங்கமும் ஏற்பட்டுவிடாது. ஆவணப் படத்துக்கு, இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். இது நமக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

- ஒமர் அப்துல்லா, தலைவர், தேசிய மாநாடு கட்சி.

மத்தியில் ஆட்சிபுரியும் கட்சி இந்தியாவை காவிமயமாக்கும் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. சரஸ்வதி பூஜை, பள்ளிகளில் குரு பூஜை, பசுமாட்டை வழிபட வேண்டும், பகவத் கீதை புனித நூல் என்று கூறி வருகின்றனர்.

அவர்களுக்கு யார் இந்த உரிமையைக் கொடுத்தது? இதனைப் புரிந்து கொண்டால் மனித உரிமைகள் என்ன வென்பது தெளிவடையும்.

- சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் வாக்களிக்கும் உரிமை அடிப்படை உரிமையில்லை என தெரிவித்-துள்ளது. ஆனால் வாக்களிக்கும் உரிமை அடிப்படை உரிமைதான் என பல நீதிபதிகள் கொண்ட அந்த அமர்வில் மாறுபட்ட தீர்ப்பை நான் வழங்கியுள்ளேன்.

மக்கள் வாக்களிப்பதில் தங்களுக்கு விருப்பமில்லையென்றால் சட்டத்தின் மூலம் அந்த உரிமையை ஆட்சியாளர்கள் திரும்ப எடுத்துக் கொள்ளலாம் என்பது என்னைப் பொருத்தவரையில் அபத்தமானது. இந்த உரிமை அரசியல் சாசனத்தின் அடிப்படையானது.

- செலமேஸ்வர், நீதிபதி, உச்ச நீதிமன்றம்.

.............

சொல்றாங்க

பாதுகாப்புத் துறைக்காக நிலம் கையகப்படுத்தும்போது அதுகுறித்து நில உரிமையாளர் களிடம் ஒப்புதல் வாங்கக் கூடாது என்று நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் சேர்க்க காங்கிரஸ் மறந்துவிட்டது.

- அருண் ஜெட்லி, மத்திய நிதியமைச்சர்

சொல்றேங்க: நீங்க மறக்காம முதலாளிகளுக்கு சேவகம் பண்றீங்களே... அதைப் பெருமையா சொல்றீங்களா?

சொல்றாங்க

அய்ந்து கண்டங்களுக்கு பயங்கரவாதிகளை ஈரான் அனுப்பியுள்ளது. உலகில் பயங்கரவாதத்திற்கு ஊக்கமளிக்கும் நாடுகளில் முதன்மையான இடத்தை வகிக்கிறது அந்நாடு.

அணு ஆயுதம் இல்லாத ஈரான் உலகை பயங்கரவாதிகளின் பிடியில் சிக்க வைத்துள்ளது. அணு ஆயுதம் இருந்தால் இனி என்ன செய்யும் என்பதைக் கற்பனை செய்து கொள்ளலாம்.

-பெஞ்சமின் நெதன் யாஹு, இஸ்ரேல் பிரதமர்.

சொல்றேங்க: உங்க கூட்டணி பயங்கரவாதம்தானே பாஸ், உலக பயங்கரவாதமே! எல்லாருக்கும் ஆயுத சப்ளையும் நீங்கதானே!

தமிழ் ஓவியா said...

பெரிய கருந்துளை

விண்வெளியின் ஒரு பகுதியே கருந்துளை ஆகும். மிகவும் அடர்த்தி வாய்ந்த இதனுள் ஒளிகூட செல்ல முடியாது. தனக்கு அருகில் உள்ள அனைத்தையும் ஈர்க்கும் ஆற்றல் கருந்துளைக்கு உண்டு.

இதனால் ஏற்படும் வெப்பம் காரணமாக, ஒளித்துகள்கள் மின்னும் கதிர்களை வெளியிடும் தன்மை கொண்டவை யாக உள்ளன. இந்த ஒளிக்கதிர்கள் குவாசார் என அழைக்கப்படுகின்றன.

இத்தகு சிறப்புகள் வாய்ந்த, பூமியைவிட சுமார் 1200 கோடி அளவு பெரிய கருந்துளை ஒன்று விண்வெளியில் உள்ளது. சீனாவில் லிஜியாங் நகரில் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் 2.4 மீட்டர் குறுக்களவு கொண்ட தொலைநோக்கியின் உதவியுடன் இந்தக் கருந்துளையைக் கண்டுபிடித்து எஸ்டிஎஸ்எஸ்ஜெ0100 + 2802 என பெயர் வைத்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் சிலி நாடும் இந்தக் கருந்துளை இருப்பதை உறுதி செய்துள்ளன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருந்துளை-களி-லேயே மிகவும் பெரியதாகவும் ஒளிக்கதிர்கள் அதிக வெளிச்சம் கொண்ட-தாகவும் இருப்பது என்ற பெருமையினை இந்தக் கருந்துளை பெற்றுள்ளது.

கருந்துளையைக் கண்டுபிடித்த ஆய்வாளர்-களுள் ஒருவரான பெக்கிங் பல்கலைக்கழகப் பேராசிரியர் வூ சுபிங், பிரபஞ்சத்தில் பெருவெடிப்பு நிகழ்ந்து சுமார் 90 லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கருந்துளையை நாங்கள் கண்டு-பிடித்துள்ளோம்.

இதன்மூலம் கருந்துளைகள் எவ்வாறு தோன்றுகின்றன என்பது குறித்த ஆய்வு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

தயிர் ஷோரை தேஷிய உணவாக...

பகவான் மச்சாவதாரம் எடுத்தாரு அதனால் மீன் வதை தடை செய்யப்பட வேண்டும்.
வராக அவதாரம் எடுத்தாரு எனவே பன்றி வதை தடை செய்யப்பட வேண்டும்.

மேஷராசி அன்பர்கள் மனசு புண்படும் என்பதால் ஆடு வதை தடை செய்யப்பட வேண்டும்.

முப்பாட்டன் முருகன் கொடியில் சேவல் இடம்பெற்று இருப்பதால் கோழி வதை தடை செய்யப்பட வேண்டும்.

ஆக எல்லோரும் ஷைவத்துக்கு மாறி தயிர் ஷோரை தேஷிய உணவாக அறிவிக்க வேண்டும்.

- முகநூலில் யுவான் சுவாங்

தமிழ் ஓவியா said...

முகநூலில் கிளிமூக்கு அரக்கன்


கேள்வி :- மாட்டிறைச்சியைத் தடை செய்துள்ளதே மகாராட்டிர அரசு?

பதில் :- பசு/காளை மாட்டிறைச்சியைத்தான் தடை செய்துள்ளது. மாட்டினத்தில் தாழ்த்தப்பட்ட கருமை நிற எருமை மாட்டை வெட்டலாம் உண்ணலாம்.வெளிப்படையாகப் பார்த்தால் காவித்தனமாக இருந்தாலும் இதன் பின்னர் வியாபரத் தந்திரமொன்றுள்ளது. கோமாதா எங்கள் குலமாதா பாடும் நாம்தான், உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கின்றோம்.மராட்டியம் போன்ற பெரிய மாநிலத்தில் பசு/காளை மாட்டிறைச்சியைத் தடை செய்வதன் மூலம், உள்நாட்டுப் பயன்பாட்டை நிறுத்தி, வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து பெரும் லாபமீட்டலாம்.

உள்ளூரில் ஒரு பொருளை ஒரு ரூபாய்க்கு விற்பது லாபமா அல்லது அதே பொருளை வெளியூரில் ஒன்பது பவுண்டுகளுக்கு விற்பது லாபமா என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

காவி"யவாதம் என்பது சாக்கு, வர்த்தகம் என்பதே நிஜமான போக்கு. எருமை மாட்டிறைச்சியை விட்டுவைக்கக் காரணம், ஏற்கெனவே மராட்டியம் இந்திய அளவில் மிகப் பெரிய எருமை இறைச்சி ஏற்றுமதியாளர். லாபமில்லாத காவித்தனம் என்பதில்லை.

- முகநூலில் கிளிமூக்கு அரக்கன்

தமிழ் ஓவியா said...

ஊன்றிப் படிக்க: உண்மையை உணருக!

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

இலக்கணம்

இலக்கம்_-குறி. அஃதாவது, ஒருவன் எந்த இடத்தில் அம்புவிட வேண்டுமோ அந்த இடம் இலக்கம்; எந்த இடத்தை அடைய வேண்டுமோ அந்த இடம் இலக்கம்.

இலக்கம் தூய தமிழ்ச் சொல். எல்லே இலக்கம் என்பது தொல்காப்பிய நூற்பா. இனி அந்த இலக்கம் என்பது, அம் என்ற சாரியை குறைந்து இலக்கு என நிற்பதும், அணம் என்பதைச் சேர்த்துக் கொண்டு இலக்கணம் என நிற்பதுண்டு.

(இலக்கு+அணம்) இலக்கணம் என்றால் அதன் பொருள் எனில், இலக்கை நெருங்குவது என்பதாம். அணம்_அணுகுவது. ஈறு திரிந்த ஆகு பெயர் என்பார்கள் இதை. அண என்று மட்டும் இருந்தால் என்ன பொருள் எனில், நெருங்க என்பது.

இது செய எச்சம். (இலக்கு+அண) இலக்கண என்றால் இலக்கை நெருங்க என்று பொருள். இவ்வாறு சொற்றொடர் ஆட்சியில் வந்துள்ளதா எனில் மணிமேகலையில் 30_-வது பவத்திறம் அறுகெனப்படுவ நோற்றகாதை 18_-வது அடியில், இலக்கணத் தொடரில் (இலக்கு+அண) என வந்துள்ளது காண்க.

இதைத் தொடர்ந்தும், சொற்றகப்பட்டும் இலக்கணத் தொடர்பால் என வந்துள்ளது. இவற்றால் இலக்கணம் என்பது தூய தமிழ்ச் சொற்றொடர் என்பது பெற்றாம். இலக்கணம் என்பது லக்ஷணம் என்ற வடசொல்லினின்று வந்ததாம்.

இவ்வாறு தமிழாராய்ச்சி வல்லவர் என்று பிழையாக நம்மவரால் கருதப்படும் தெ.பொ.மீனாக்ஷி, அழகு, சேது முதலியவர்கள் கூட எழுதியும் பேசியும் வந்துள்ளார்கள்.

இவர்கள் பார்ப்பனரின் கூலிக்காக, வடமொழியினின்று வந்தது என்று பிதற்றும் ஆட்கள் என்பதையும், ஆங்கிலம் படித்து பிழைக்கத் தெரியாதென்று, தமிழ் தெரியும் என்றும் தமிழர்களை ஏமாற்றித் திரிகின்றனர் என்பதையும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும். (குயில், 8.-6.-1958)

நேயம்

இது நேசம் என்னும் வடசொல் சிதைவாம். சீவக சிந்தாமணியில் 3049_-ம் செய்யுள், நெய் போதி நெஞ்சு என வந்துள்ளதும், அது நேயம் என்பதையே குறிப்பதும் அறியாதார் பார்ப்பன, பார்ப்பன அடிவருடிகளும் கூறுவதைக் கொண்டு, நேயம் வடசொற் சிதைவு என்று கூறித் திரிகின்றார்கள்.

நெய் என்ற சொல்லினடியாகப் பண்புப் பெயர். ஆதலின் தூய தமிழ் என அறிக.

மீன்

இது கூட மீனம் என்று வடசொற் சிதைவாம். மின்னல் என்பது அல் இறுதி நிலைபெற்ற தொழிற் பெயர். அது அவ்விகுதி நிலை கெட்டு மின் என நிற்பதுண்டு. அந்நிலையில் அதை முதனிலை தொழிற்பெயர் என்பார்கள்.

அம் முதனிலையாகிய மின் என்பதும் முதல் நீண்டு மீன் என்று ஆகும். அந்நிலையில் அதை முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்பார்கள்.

எனவே, மீன் என்பதும் முதனிலை தொழிற்பெயர். அது தொழிலாகு பெயர் என்னும் கோளைக் குறிக்கும். எனவே, மீன் தூய தமிழ்ச் சொல் பெயர்.

கோள் மின்னும் மீன் சூழ் குளிர்மாமதித் தோற்றம் என்ற சான்றோர் செய்யுளையும் நோக்குக. மின்னுவது மீன் எனக் காரணப் பெயர் என்று உணர்க.

குயில் 28. 6. 1958

தமிழ் ஓவியா said...

காந்திமீதான அவமதிப்பு தொடர்கிறது
காந்தியார் பிறந்த நாள், கோவா அரசின் நாட்காட்டியில் இல்லை

பானாஜி மார்ச் 17_ கோவா அரசு தயார் செய்த நாட்காட்டி மற் றும் நாட்குறிப்பேடுகளில் காந்தியார் பிறந்தநாள் விடுபட்டிருந்தது. இதன் மூலம் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவா மாநில பாஜக அரசு, இந்த ஆண்டிற் கான நாட்காட்டி தயா ரித்து வெளியிட்டுள்ளது. இந்த நாட்காட்டியில் காந்தியார் பிறந்த நாள் குறிப்பிடப்படவில்லை. இதனால் கோவா மாநில அரசு அலுவலகங்களில் அக்டோபர் 2 ஆம் தேதி வேலை நாளாக கணக் கிடப்பட்டுள்ளது. கோவா மாநில அரசின் இந்த அவமதிப்பு நடவடிக்கைக்கு, கோவா மாநில காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள் ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர் பாளர் துர்காதாஸ் காமத் கூறும்போது, காந்தியார் பிறந்த நாளான அக்டோ பர் 2-ஆம் தேதியை கோவா மாநில அரசு விடுமுறை நாட்கள் பட் டியலிலிருந்து நீக்கி யுள்ளது.

இதன்மூலம் பாஜக அரசின் மறைமுகத் திட்டம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடக் கம்தான். வரும் காலத்தில் காந்தியாரைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட் சேவின் பிறந்த நாளை, விடுமுறை நாட்கள் பட்டியலில் சேர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார். இது தொடர் பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறும்போது, தேசத் தந்தையான காந்தி யாரின் பிறந்த நாள் தேசிய விடுமுறையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது தொடர வேண்டும். இந்த நாளை விடுமுறைப் பட்டியலிலி ருந்து நீக்கக் கூடாது. கடந்த ஆண்டும் காந்தி யார் பிறந்த நாளில் பள் ளிக்கு வருமாறு மாண வர்கள் கட்டாயப்படுத் தப்பட்டார்கள். இது போன்ற செயலைக் கை விட வேண்டும் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/98046.html#ixzz3UdyKWfqY

தமிழ் ஓவியா said...

அச்சுப்பிழை: சாக்கு சொல்லும் கோவா மாநில முதல்வர்

கோவா மாநில முதல் வர் லட்சுமிகாந்த் பார் சேகர் கூறும்போது, இந்த ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் பட்டியலில் காந் தியார் பிறந்த நாள் தவறு தலாக விடுபட்டுள்ளது. இது பதிப்பின் போது ஏற்பட்ட தவறாகும். காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் பி.சி.சாக்கோ கூறும்போது, இந்நிகழ்வு பாஜகவின் மோசமான மன நிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது. வேறு எந்த மாநில அரசாவது இது போன்ற நடவடிக் கையை எடுக்குமா? இதுபோன்ற முடிவு தேச விரோத மானது. நாட்டில் உள்ள எந்த அரசுக்கும் காந்தி யார் பிறந்த நாளை விடு முறை நாட்கள் பட்டிய லிலிருந்து நீக்கும் அதி காரம் இல்லை என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/98046.html#ixzz3UdyRGhTx

தமிழ் ஓவியா said...

மேற்கு வங்கத்தில் ஒரு கேவலம்?

மேற்கு வங்கம் நாடியா மாவட்டம், கங்கனாபூர் பகுதியில் உள்ள கிறித்தவர்கள் நடத்தும் பள்ளியுடன் கூடிய ஆசிரமத்துக்குள் புகுந்து நான்கைந்து காலிகள் கொண்ட ஒரு கும்பல் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த 70 வயது மதிக்கத்தக்க கன்னியாஸ்திரியின் கழுத்தைப் பிடித்து நெரித்து, அவரைக் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சியைக் கூட்டாகச் செய்து, பீரோவை உடைத்து உள்ளே இருந்த 12 லட்சம் ரூபாயைக் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர் என்ற தகவல் நாணித் தலை குனிய வேண்டிய ஒன்றாகும்.

குறிப்பாக மதவாத சக்திகள் தலை தூக்கிய சிறிது காலமாகவே இது போன்ற மாற்று மதத்தைச் சேர்ந்த நிறுவனங்களைச் சூறையாடுவது, அம்மதத்தைச் சேர்ந்த பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்வது என்பது தொடர் கதையாகவே இருந்து வருகின்றன.

ஆர்.எஸ்.எஸைச் சேர்ந்த பெண் சந்நியாசி சாத்வி ரிதம்பரா என்பவர் வழக்கமாக மேடைகளில் பேசுவது என்ன தெரியுமா?

இந்து ஆண்களே! முஸ்லிம் பெண்களைக் கர்ப்பிணியாக்குங்கள். அவர்கள் வயிற்றில் இந்துக் கரு ஜெனிக்கட்டும்! என்று பேசி வருகிறார். ஒரு பெண்ணாக இருந்தும் இப்படி பேசுகிறார்; எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் பெண் பெண்தானே! அந்த உணர்வை - அவர்களைப் பிடித்து ஆட்டும் அடிப்படை மதவாதம் மழுங்கடித்து விடுகிறது என்பதுதான் உண்மை.

1998 செப்டம்பர் 25 அன்று மத்தியப் பிரதேசம் ஜாடியா கிராமம் கிறித்தவர்கள் நடத்தும் ஒரு மருத்துவமனையில் என்ன நடந்தது? 17 ஆண்டுகள் ஓடி மறைந்து விட்டதால் பலருக்கு மறந்து கூடப் போயிருக்கலாம்; ஆனால் நடைபெற்ற சம்பவமோ அவ்வளவு எளிதில் மறக்கப்பட முடியாத ஒன்றே!

நள்ளிரவில் கதவைத் தட்டி உள்ளே நுழைந்த சங்பரிவார்க் காமவெறியர்கள் 4 கன்னிகாஸ்திரிகளைக் கதறக் கதறச் சூறையாடினார்களே - நினை விருக்கிறதா!?

இதுகுறித்து பிஜேபியின் மக்களவை முன்னாள் உறுப்பினர் வைகுந்தலால் சர்மா என்பவர் (எம்.பி. சர்மா) என்ன கூறினார் தெரியுமா? இப்பொழுது நினைத்தாலும் குருதி உறைந்து விடும். தேச விரோத சக்திகளுக்கு எதிரான தேசப் பற்றுமிக்க இந்து இளைஞர்களின் கோபம்! என்று இந்தக் கேவலத்தை மிகப் பெரிய தேசப்பற்றின் வீர சாதனைபோல் பேசினாரே!

மேற்கு வங்காளத்தில் நடந்ததைப் பார்த்தால் அன்று மத்தியப் பிரதேசத்தில் நடந்தது போலவே நள்ளிரவில் அதே பாணியில்தான் நடந்திருக்கிறது.

இரண்டொரு நாட்களில் அனேகமாக இதன் பின்னணித் தகவல்கள் அப்பட்டமாக வெளி வந்து விடக் கூடும்.

1992 பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகே இந்தியா முழுமையும் மதக் கலவரங்களும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் மிக அதிக மாகவே தலை விரித்தாடத் தொடங்கிவிட்டன.

இதில் வெட்கக் கேட்டுக்குப் பிறந்த அவலம் என்னவென்றால் பாபர் மசூதியை இடிப்பதற்குக் காரணமாக இருந்த பிஜேபி மற்றும் சங்பரிவார்களை சேர்ந்த பெருந் தலைவர்கள், கொஞ்சம்கூட கூச்ச நாச்சமின்றி ராஜ நடை போட்டுத் திரிந்து கொண்டு இருக்கிறார்கள். ஏன், இந்தியாவின் துணைப் பிரதம ராகவும், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக வும் ஆனார்களே! வேறு எந்த நாட்டிலாவது இந்த ஆபாசச் சகதி வழிந்தோடுமா!?

இன்று அவர்கள் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சி அதிகார பூர்வமாகவே 120 கோடி மக்கள் திறனைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து விட்டதே!

இந்த அதிகாரப் பீடத்தின் தலைமை அமைச்சராக வந்துள்ளவர் யார் என்றால், ஒரு மாநிலத்தில் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்கள் கொன்று குவிக்கப்பட்டபோது முதல் அமைச்சராக இருந்தவர்

நாடு எந்தப் பாதையில் எக்கேடு கெட்டுக் குட்டிச் சுவராகியுள்ளது பார்த்தீர்களா? இது பாரதப் புண்ணிய பூமியாம்.

இது போதாது என்று இந்தியாவையே இந்து நாடாக ஆக்கப் போகிறார்களாம். எப்படி ஆக்குவார்கள்? இரவோடு இரவாக ஒரு சட்டத்தைப் (ளிக்ஷீபீவீஸீணீஸீநீமீ) பிறப்பித்தா?

மன மாற்றத்தால் நிகழ வேண்டிய ஒன்றை மதம் பிடித்த யானைபோன்ற மனிதர்கள் ஆட்சியில் அமர்ந்தவுடன், எப்படியும் அது நிகழ வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறார்கள்.

ஏதோ ஒரு சூழலில் ஆட்சியைப் பிடித்து விட்டார்கள் - அந்தத் தவறை வெகு மக்கள் உணரத் தலைப்பட்டு விட்டனர்.
எவ்வளவு சீக்கிரத்தில் விடிவு ஏற்படுமோ, அவ் வளவுக் கவ்வளவு நாட்டுக்கும், நாகரிக வாழ்வுக்கும் நல்லது.
மக்கள் மத்தியில் மதவாதப் போக்கினைத் தோலுரிக் கும் கருத்தும் பிரச்சாரமும் திட்டமிட்ட வகையில் நடத்தி ஆக வேண்டும்; தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடுகள் - தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும் பயனை விளைவிக்கும் என்பதில் அய்யமில்லை.

Read more: http://viduthalai.in/page-2/98029.html#ixzz3UdysLeNh

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி. உறுப்பினர் சேர்க்கும் யோக்கியதை இதுதான்!

நமது கழகத் தோழர் திருவொற்றியூர் கணேசன் அவர்களுக்கு பி.ஜே.பி. குறுஞ்செய்தி ஒன்றை (எஸ்.எம்.எஸ்.) அனுப்பியுள்ளது; என்ன தெரியுமா?

From Dm Member Welcome to BJP your primary membership no is 1073426799 sms your Name, Address & Pin Code (If possible Email & Voter ID) to 09242492424 to complete the process என்பதுதான் அந்த குறுஞ்செய்தி.

திராவிடர் கழகத் தோழருக்கே குறுஞ்செய்தி அனுப்பி முதற்கட்ட உறுப்பினராக ஆகியுள்ளீர் கள். மேலும் உங்கள் முகவரி உள்ளிட்ட தகவல் களை அனுப்புங்கள் என்று தகவல் தெரிவிக் கின்றனர் என்றால், மற்றவர்களை உறுப்பினர் ஆக்குவதுபற்றிக் கேட்கவேண்டுமா?

கையில் கிடைத்த கைப்பேசி எண்களைக் கொண்டு இந்தக் கைங்கரியத்தை நடத்தி வருவது வெட்கக்கேடு அல்லவா!

பி.ஜே.பி உறுப்பினர் சேர்க்கும் யோக்கியதை இதுதான்!

போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!

உஷார்! உஷார்!

இப்படி குறுஞ்செய்தி வந்தால், சம்பந்தப்பட்ட எண்ணுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கலாமே!

Read more: http://viduthalai.in/e-paper/98075.html#ixzz3UkGS75zp

தமிழ் ஓவியா said...

தாலியாம் தாலி!

இரண்டு அறிவிப்புகள்-. ஒன்று எந்தத் தாலியைப்பற்றி நீங்கள் பேசு கிறீர்கள். தந்தைபெரியார் அவர்கள் நீண்ட காலத்துக்கு முன்னால், சாதாரணமாக திருமணங்களிலே சொன்னார். தாலியாவது வெங்காய மாவது என்றார். அதை அப்படியே வைத்து நம்முடைய உவமைக் கவிஞர் சுரதா பாட்டு எழுதினார். தாலியாம், தாலியாம் பெண்ணுக்கு வேலியாம், வேலியாவது, வெங்காயமாவது என்றார் பெரியார் என்று பாட்டு எழுதினார். எத்தனைக் காலத்துக்கு முன்னாலே? எங்கள் கூட்டங்களிலே தாய்மார்கள் வந்து இந்த அடிமைச் சின்னம் வேண்டாம். இதை விலக்கு கிறோம் என்று சொல்லி மேடை களிலே அவர்கள் அகற்றி, அந்தக் காட்சிகள் நடந்துகொண்டிருக் கின்றனவே.

கணவன் முன்னாலே இறந்து விட்டால், பின்னாலேஎங்கள் சகோ தரிகளை எல்லாம் நீங்கள் அவமானப் படுத்துவதற்குத்தானே அந்த அடிமைச்சின்னத்தை, விதவைக் கோலம் என்று ஆக்கி இருக்கின் றீர்கள். இதைவிடக் கொடுமை வேறு என்ன? எனவே, நாங்கள் சொல்லுகிறோம். அருணன் அவர்கள் சொன்னதுமாதிரி அந்த ஊடகத்திலே இரண்டு பேருக்கும் வாய்ப்பு கொடுத்து, இன்னும் கேட்டால், பளிச்சென்று பச்சையாகக்கூட சொல்லவில்லை. ஏனென்றால் பச்சையாகப் பேசுவதில் இருக்கின்ற தயக்கம். இங்கேயே இருக்கும் சாதாரணமாக, இங்கே பேசிய சகோதரர்கூட புனிதம் என்று சொன்னார். அது அவருடைய கருத்து.

புனிதமாவது புடலங்காயாவது! (கைதட்டல்)

ஒன்றும் கிடையாது. புனிதமாக இருந்தால் சேட்டுக் கடைக்குப் போய் அடகு வைப்பானா? புனிதமாக இருந்தால் ஏனய்யா டாஸ்மாக் போவ தற்கு விற்பதற்காகப் போகிறான்? அதனாலே இது போலித்தனம்.

ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில்!

ஆனால், இங்கே அவர்கள் தவறாக சொல்லவில்லை, நீண்டகாலமாக கருதி வருவதைத்தான் சொன்னார்கள். எங்களை மாதிரி ஒன்றுமில்லாத மொட்டையான ஆட்கள் இல்லை. அவர்கள் வாக்கு வாங்க வேண்டும். அவர்கள் ஓட்டு கேட்க வேண்டி யவர்கள். எங்களுக்கும் ஒன்றும் கிடையாது. ஏறினால் ரயில், இறங் கினால் ஜெயில் (கை தட்டல்). அப்படி என்றால் சரி. அவ்வளவுதான். மூன்றாவதாக கொலை செய்கிறாயா? அதுக்கும் தயார். நோயினால் ஒருவன் சாகக் கூடாது, விபத்தினால் சாகக்கூடாது. கொள்கைக்காக செத்தால், அதைவிட வேறு கிடையாது.

தாலி அகற்றும் விழா, மாட்டுக்கறி விருந்து. இதுதான் இந்துத்துவா நோய்க்கும் மருந்து என்பதை சொல்லி விடை பெறுகிறேன். வணக் கம். நன்றி. வாழ்க பெரியார், வளர்க பகுத்தறிவு.
_இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்கள்

Read more: http://viduthalai.in/e-paper/98116.html#ixzz3Upg1AAWa
தாலி அகற்றும் விழா - மாட்டுக்கறி விருந்து வாரீர்!

இந்த சென்னையிலே ஒரு தொலைக்காட்சியிலே தாலிபற்றிய ஒளிபரப்பைக் காட்டக்கூடாது என்று சொல்கிறான்? மீறினால் டிபன்பாக்ஸ் குண்டு, வெடிகுண்டு என்கிறான். ஏப்ரல்-14 அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாள். அந்த நாளில் சென்னையில் பெரியார் திடலில் தாலி அகற்றுகின்ற விழாவை எங்களுடைய பெண்கள் நிகழ்த்திக் காட்டுவார்கள். (கைதட்டல்).

ஒத்த கருத்து உள்ளவர்கள் வரலாம். அன்றைக்கு மாலையிலேயே தாலியை அகற்றிய உடன், மாட்டுக்கறி விருந்து நடைபெறும். (கைதட்டல் ஆரவாரம்) மாட்டுக்கறி விருந்துக்கு யார்யார் வருகிறீர்களோ இப்போதே ரிசர்வ் செய்து கொள்ளுங்கள். குறிப்பிட்ட அளவுக்கு மட்டும்தான் உண்டு. ஏனென்றால், நான் என்ன சாப் பிடுவது என்பதை இராமகோபாலய்யர் முடிவு பண்ணுவதா? எங்கள் வீட்டில் என்ன செய்வது, அல்லது இராமகிருஷ்ணன் வீட்டிலே, முத்தரசன் வீட்டிலே, பீட்டர் அல்போன்ஸ் வீட்டிலே. என்ன சமைப்பது என்று இவர்கள் முடிவு செய்வார்களா?

எனக்கு டயாபடிசுங்க, தித்திப்பு வேண்டாம் என்றால், அது நியாயம். அதுமாதிரி சொல்லுங்கள். பசுவைமட்டும் பாதுகாப்பார்களாம். ஏன் எருமை மாடு என்னய்யா பாவம் பண்ணியது? ஒரே விஷயம் கருப்புத் தோல் என்பதாலா? (ஆரவாரம்) சிந்திக்க வேண்டாமா? ஆகவே, தான் நண்பர்களே, நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/98116.html#ixzz3Upg5mEhs

தமிழ் ஓவியா said...

மூடத்தனத்துக்கு அளவேயில்லையா?

வகுப்பறையில் மயங்கி விழும் மாணவர்கள் அரசு பள்ளியில் பேய் பீதியாம்!

தலைவாசல், மார்ச் 19_ தலைவாசல் அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மாணவமாணவிகள் திடீர் திடீரென மயங்கி விழுவ தால், அந்த பள்ளியில் பேய் நடமாடுவதாக பீதி ஏற்பட்டுள்ளது. இதனால், புத்தகப்பையில் மந்திரித்த வேப்பிலை மற்றும் எலு மிச்சம் பழத்தை மாண வர்கள் எடுத்து வரு கின்றனர். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே புளியங்குறிச்சி ஊராட் சியில் உள்ள இந்திராநகர் பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி யில், அந்த பகுதியை சேர்ந்த 28 மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக மருதமுத்து என்பவரும், ஓர் ஆசிரியரும் பணி யாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவி கள் வகுப்பறையில் அமர்ந்து பாடங்களைப் படித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென முதல் வகுப்பு மாணவர் சஞ்சய், 2 ஆம் வகுப்பு மாணவி ரம்யா, 3 ஆம் வகுப்பு மாணவர்கள் சதீஷ், சந்தோஷ், மாணவி யுவராணி ஆகியோர் திடீரென மயங்கி கீழே விழுந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் மருதமுத்து, உடனே பெற்றோர்களை வரவழைத்து, மயங்கி விழுந்த மாணவ, மாண விகளை மருத்துவம னைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக் கும்படி கூறி இருக் கிறார்.

மாணவ மாணவிகளைப் பரி சோதித்த டாக்டர்கள் குழந்தைகளுக்கு ஒன்றுமில்லை அவர்கள் நலமாக இருப்பதாக கூறி இருக்கின்றனர். இதற்கிடையே பள்ளியில் இருந்த மற்ற மாணவர் களில், அரவிந்த், தமிழ்ச் செல்வன், தமிழ்மணி, அருண், கவுதம் ஆகியோ ரும் திடீரென மயக்கம் அடைந்துள்ளனர். உடனே ஆசிரி யர்கள், அந்த குழந்தைகளையும் அவர் களின் பெற்றோரிடம் ஒப் படைத்து சிகிச்சை அளிக்கச் சொல்லி இருக் கின்றனர். இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் மருதமுத்து கூறும்போது, ''வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் வகுப்பறைக்குள் சென்ற 1 மணி நேரத்தில் மயங்கி விழுந்து விடுகிறார்கள். இதனால், அவர்களை மருத்துவர்களிடம் காட்டி சிகிச்சை அளிக்குமாறு பெற்றோரிடம் கூறினேன். ஆனால், பள்ளியில் பேய் நடமாடுவதாக தற்போது புரளியை கிளப்பி விட்டுள்ளார்கள்" என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/98119.html#ixzz3UpgP3Gmx

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சம்பிரதாயம்

ஒரு முறை அர்ச் சனை செய்தாலே தேங் காய் பிரசாதமாகி விடும். இதை நிர்மால்யம் என் பர். மீண்டும் அந்தத் தேங்காயைப் பயன் படுத்தி செய்த உணவை சுவாமிக்குப் படைப்பது கூடாது. ஓர் ஆன்மீக இதழ்

ஏன் படைத்தால் என்ன? எப்படியும் சுவாமி சாப்பிடப் போவதில்லை. அதில் என்ன சம்பிரதாயம்?

Read more: http://viduthalai.in/e-paper/98120.html#ixzz3UpgYTcmD

தமிழ் ஓவியா said...


மாட்டாரா?
காந்தியாரைப் பற்றித் தவறுகள் பேசியதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூமீது தமிழருவி வழக்குத் தொடுத்துள்ளாராம்.
அவரைவிட ஆளும் பிஜேபி பிரமுகர்கள் காந்தியாரைக் கேவலப்படுத்தி, கொச்சைப்படுத்திப் பேசுகிறார்களே - அவர்கள்மீதும் வழக்குத் தொடுக்கப் பட வேண்டாமா? பா.ஜ.க. பாசம் இன்னும் அறுபட வில்லையோ!

Read more: http://viduthalai.in/e-paper/98118.html#ixzz3UpgwVGrl

தமிழ் ஓவியா said...

எமது 38 ஆண்டுப் பணிகள் தோழர்களுக்கு நன்றி!


நம் அறிவு ஆசான் தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் வைத்த நம்பிக் கையை, கூட்டுப் பொறுப்போடு நடத்திடும் வாய்ப்பும் கடமையும் துவங்கிய நாள் என்பதை, கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களும் ஏராளமான கழகக் குடும்பத்தினரும் நேற்று முதல் (18.3.2015) நினைவூட்டி வாழ்த்துக்களைத் தெரி வித்தனர். நம் கவிஞர் ஒரு கட்டுரைகூட விடுதலையில் (18.3.2015) எழுதியுள்ளார்.

என்னைப் பாராட்டுவதை நாம் ஏற்றுக் கொள்ளுமுன், அதற்கு முழுக் காரணமாக இருந்த, இருக்கும் எண்ணற்ற எனது கழகக் குடும்பத் தினரை அல்லவா பாராட்டி, நன்றியை நான் குவிக்க வேண்டும்!

நம் அய்யாவும், அன்னையாரும் வைத்த நம்பிக்கையை நியாயப்படுத்திட, மானம் பாராது, நன்றியை எதிர் நோக்காது, சுயநலத்திற்கு இடம் தராது, துரோகத்தால் துவளாது, எதிர்ப்பில் ஒதுங்காது எடுத்த பணியை அவர்தம் ஆணைப்படி செய்து முடிக்கும் கடமையில் என்றும் கண்ணாக இருப்பவன் உங்களின் இந்த எளிய தோழன் - தொண்டன்.

எனக்கு எவ்வளவு மன நிறைவும், மகிழ்ச்சியும் தரும் பணி இந்த அரும் பணி! அய்யா, அன்னையார் காலத்திற்குப்பின் விதைத்தது முளைத்தது. காத்தது கிளைத்தது, கிளைத்தது விளைச்சலாகியது! இதை கண்ணெதிரில் பார்த்து பூரிப்பும் மகிழ்ச்சியும் பெறுவதை விடப் பெரும் பேறு வேறு ஏது?

நம் நிறுவனங்களில் பயின்று சென்று வாழ்வில் முன்னேறியுள்ளவர்களின் மகிழ்ச்சியைக் கண்டும் கேட்டும் பெறும் உற்சாகத்திற்கு ஈடு இணை உண்டா? எடுத்துக்காட்டாக, 7.3.2015 தஞ்சை வல்லத்தில் பெரியார் நூற்றாண்டு பழைய மாணவிகள் - பெற்றோர்களாகிய குழந்தை குட்டிகளுடன் வந்து உவகைக் கூத்தாடியது போல் உற்சாகப் பொங்கலில் திளைத்த காட்சி - (எழுத்துருவில் 7ஆம் பக்கத்தில் பார்க்க) எத்தகைய மாட்சியைத் தந்தது!

நாகம்மைக் குழந்தைகள் இல்லத்தில் - ஈழத்தில் இனக் கலவரத்தில் கையில் தீக்காயம்பட்டு, அகதியாய் குடும்பத்துச் சிறுமியாய் திருச்சிக்கு வந்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் படித்து முன்னேறிய நாசரம்மா என்ற பெண் மேல் நிலைக் கல்வி முடித்து, நமது தஞ்சை வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கிலும் படித்து, பட்டயம் பெற்று, பணியும் வாழ்க்கையும் பெற்ற நிலை எய்திய பின்னர் எழுதிய நன்றிக் கடிதம் ஒன்று 7ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது!

இவைகள்தான் எமது நேரிய பணியின் மூலம் கிடைத்த மதிப்பூதியம் என்று கூற வேண்டும்! எனவே, கழகமானாலும், கல்வி நிறுவனங்களா னாலும், ஏடுகள், வெளியீட்டகங்களினாலும், எல்லா இடத்திலும் உள்ள கூட்டுக் குழு மனப்பான்மை யுடன் பணியாற்றும்(Team Spirit) எல்லோருக்கும் இவ்வெற்றியில் பங்கு உண்டு

எனவே, இன்னும் நாம் உழைத்து பெரியாரின் தத்துவங்களை உலகம் முழுவதும் கொண்டு சென்று - வெற்றியடைய வீறுநடை போட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பெரியார் உலகம் என்ற மிகப் பெரிய திட்டம் - ரூபாய் 30 கோடி முதல் 100 கோடி வரை செல வாகும் மிக பிரம்மாண்டத் திட்டம்! விரிந்து கொண்டே செல்கிறது!

பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கென - தனித் தொலைக்காட்சி துவக்கும் திட்டம் - இரண்டும் நமது முக்கிய லட்சியத் திட்டங்கள்! அனைவரது ஆதரவு ஒத்துழைப்பு, நிதி சேகரிப்பு, அவை பற்றிய விளம்பரங்களைத் திட்டமிட்டு திக்கெட்டும் செய்ய வேண்டும் முனைப்போடு! திராவிடர் எழுச்சி மாநாடுகள் 150அய் நெருங்கி விட்டன!

இதுவரை நமது கொள்கைப் பிரச்சாரம் பாயாத பகுதியில்கூட, புது வெள்ளமென - பாய்ந்து, புதிய வரலாற்றை இணைக்கிறது!

உற்சாகத்தோடு களத்தில் நின்று போராடுவோம்! வெற்றி பெறுவோம்! எப்படி அறிவியல் ஒருபோதும் தோற்காதோ அதுபோலவே பெரியார் கொள்கை என்ற பகுத்தறிவியல் ஒரு நாளும் தோற்காது; துவளாது, வென்றே தீரும்!

இது உறுதி! உறுதி!

அனைவருக்கும் எமது தலை தாழ்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
19.3.2015

Read more: http://viduthalai.in/page-2/98123.html#ixzz3UphVRQWX